கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1994.01

Page 1
M{
"MALLIKAN"
TPROGRESSIWE
*ae|-",.*|-*.歴 密密
墨霞
. ***...*"*)".*) T:험,험國的. 공로
*)彩虹|-墨
„h)'''.M.''++; 議(議政
**
சிற்பாச்சாரியார் ஜீவ
 
 
 

河密炎炎 墨
NTHLY MAGAZINE
yol uno o sego – synsløst, * 661
|-
臺臺臺榮臺炎※※※
p~__-__--_- ----------)--~~~~=++~~~~*
னம்

Page 2
Na مخصصح
~~ ... a-narra-AM
RANI GRINDING MILLS 219, MAN STREET, MATALE
PHONE: O 66 - 24 25
X
举
VIJAYAGENERAL STORES
| (AGRO SERVICE CENTRE)
- DEALERS : AGRO CHEMICALS, SPRAYERS, FERILIZER & VEGETABLE SEEDS
No. 85, Sri Ratnajothy Sarawanamuthu Mawatha. (Wolfendhal Street, ) COLOMBO-13.
f
PHONE: 27 0 1 1
'. qALTSSLSLqLAqSASASASiLeSqS qqq LSLSqLASLLASASLSALALLSLLBBS ~~~~ MWww"
i

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினையக லைகளில் உள்ளம்
ஈடுபட்டென்றும் நடப்பவர் பிற, ானநிலை கண்டு துள்ளுவார்"ர்
"Malikal' Progreestye Monthly Magazine
243 ܫ ஜனவரி - 1994
29-வது ஆண்டு
புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்!
இந்த இதழுடன் மல்லிகையின் ஆண்டு இருபத்தொன்பதாக அதிகரிக்கின்றது. இந்த இருபத்தொன்பதாவது ஆண்டுத் தொடச்க இதழை ஆண்டு மலராக வெளியிடலாம் என உத்தேசித்திருந்தோம். ஆனால் தொடர்புகளற்ற நிலையில், பல வசதியீனங்களுக்கு மத்தி யில் ஆண்டு மலர் வெளியிடுவது சாத்தியமற்றதாகப் போய்விட்டது.
நாம் நம்பிக்கையை இழக்கவில்லை. அடுத்த ஆண்டு- 1995 ல்மல்லிகையின் 30 வது ஆண்டு. அடுத்த ஆண்டில் ஆண்டு மலரை வெளியிடலாம் என ஆசைப்படுகின்றோம். நம்பிக்கைதானே வாழ் வின் ஜீவ ஊற்று.
பலர் மல்லிகைப் பந்தல் வெளியீடுகளைத் தொடர்ந்து வெளி யிடலாமே? என ஆலோசனை சொல்லுகின்றனர். நமக்கு அது விருப் பம்தான். அதே சமயம் மாசா மாசம் திட்டமிட முடியவில்லை. ஒவ் வொரு முறைக்கும் ஒவ்வொரு தட்டுப்பாடு நிலவும். திடீர்ச் சிரமங் கள் இடையிடையே குறுக்கிடும். இவைகளைக் கடந்து வருவதற்குள் வாரங்கள் ஒடிவிடும். திட்டம் கைவசம் இருக்கும்; நடைமுறை காணா மலே போய்விடும். முன்னர் சூழ்நிலை சாதகமாக இருந்த காலத் தில் ஒராண்டுத் திட்டம் போட்டால் குறைந்க பட்ாம் 90 சதவீதம் நடைமுறைப்படுத்த முடிந்தது. வருஷ முடிவில் ஒரளவு திருப்திப் படக் கூடிய மன இருந்தது. இந்த இரண்டு. மூன்று வருடங்களில் திட்டமிடுவதில் சரி பாதியைக் கூடச் செயல்படுத்த முடிவதில்லை. திடீர்ச் சங்கடங்கள் நம்மை அலைக்கழித்து விடும். சூழ்நிலை நம் மைத் திக்குமுக்காட வைத்துவிடும்.
முப்பது வருடங்கள் என்பது சும்மா இலேசுப்பட்ட் சங்கதியில்லை. ஒரு சிற்றேடு, தனிமனித உழைப்பை நம்பி இந்த மண்ணில் வெளி வரும் மாசிகை முப்பது வருடங்களைத் தொட்டு நின்று நிலைக் கின்றது என்பதே ஒரு வரலாற்றுச் சாதனைதான்.

Page 3
மக்களினது நம்பிக்கையும் இடையறாத தொடர்புதான் இதைச் சாத்தியமாக்கியுள்ளது.
எல்லாவற்றையும் விட மகிழ்ச்சியான சம்பவமொன்று சென்ற மாசம் நடைபெற்றது. மஸ்லிகையின் உழைப்பாளியாக விளங்கும் திரு. கா. சந்திரசேகரத்திற்குப் பேராசிரியர் கா சிவத்தம்பி தலை மையில் பாராட்டு விழா நடைபெற்றது. மல்லிகை வரலாற்றிலேயே இடம் பெறக் கூடிய சம்பவமாகும். சிற்றிலக்கிய ஏடொன்று தனக் காக உழைத்த உழைப்பாளியைக் கெளரவித்தது பெருமைக்குரிய தாகும். அதைவிட, இப்படியான செயலைச் செய்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து ஒத்துழைத்த இலக்கிய றெ,ஞ்சங்களுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும்.
கடைசியாக 94 பிறந்து விட்டது. சுவைஞர்களுக்கு புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
- ஆசிரியர்
வாழ்த்துகின்றோம்
மல்லிகையின் நீண்ட கால அபிமானியும் துடிப்பு மிக்க இளம் பத்திரிகையாளருமான -
நண்பர் என். வித்தியாதரன் அவர்களுக்கும்
கிெல்வி ரட்ணகலா அவர்களுக்கும் 10 - 12 - 93 அன்று மாலை இளங் கலைஞர் மன்றத்தில் வெகு சிறப்பாகத் திருமணம் நடைபெற்றது.
நண்பர்கள், உறவினர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர் கள், பல்கலைக் கழகத்தினர் உட்படப் பெருந் தொகையானவர் கள் வந்திருந்து மணவிழாவைச் சிறப்பித்தனர்.
மல்லிகையின் சார்பாக புதுமணத் தம்பதிகளை மனதார வாழ்த்துகின்றோம்.
- ஆசிரியர் LLLLLL LLLLLLLLSLLLLLL
2
 

பல மாதங்களாகவே இந்தப் பிரதேசம் தொடர்பற்றுத் துண்டிக் கப்பட்டுள்ளது.
இந்தப் பிரதேசத்து மக்களுக்குக் கடிதங்கள் வந்து சேரவில்லை. காரணங்கள் பலவாறாகச் சொல்லப்படுகின்றன.
இத்தச் சமாதானங்கள் நியாயத்துக்குட்பட்டவையல்ல.
ஒரு பிரஜையின் அடிப்படை உரிமை தகவல் தொடர்புகளைப் பெற்றுக் கொள்வது. அது இங்கு மீறப்படுகின்றது.
தகுந்த தபால் தலை ஒட்டப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட தபால் கத்தோரில் சேர்க்கப்படும் கடிதங்கள் உரிய விலாசதாரரிடம் நேர காலத்திற்குச் சேர்க்கப்பட வேண்டியதுதான் சர்வதேச விதி.
சட்டபூர்வமாக அனுப்பப்படும் கடிதங்கன் கூட, இங்கு உரிய காலங்களில் வந்து சேர்வதில்லை. இதனால் பாமர சனங்கள் படும் கஷ்டங்கள், சங்க டங்கள் ஏராளம் - ஏராளம் !
விட்டுக்கொரு மகன், அல்லது மகள் இன்று வெளிநாட்டு வாசியாகி வாழ்கின்றனர். அவர்கள் அனுப்பும் பணத்தைக் கொண்டு தான் இன்று இங்கு பல வீடுகளில் சோற்றுப் பானைகள் அடுப் பேறுகின்றன. கடித வரவு தடை ப்பட்டதனால் எத்தனையோ குடும் பங்கள் தினசரி வாழ்க்கைக்கே அல்லாடுகின்றன.
ஓய்வூதிய சம்பளப் பட்டியல் நேரகாலத்திற்குக் கிடைப்பதில்லை முக்கியமான வங்கி கொடுக்கல் - வாங்கல் சம்பந்தப்பட்ட பத்தி ரங்களின் காலக் கெடுக்கள் முடிவடைந்து விடுகின்றன. வெளி பூர், வெளிநாட்டுத் திருமண அழைப்பிதழ்கள் பிந்திக் கிடைக்கின்றன சஞ்சிகைகளுக்குக் கதை, கட்டுரை, கவிதை நேர காலத்திற்குக் கிடைப்பதில்லை. நேர் முகப் பரீட்சை அழைப்புகள் பரீட்சைத் திகதி முடிந்த பின்னரே சம்பந்தப்பட்டவர்களுக்கு வந்து சேருகின்றன.
இப்படி எத்தனையோ குழறுபடிகள் கடித வரவு தடைப்படுவ தால் ஏற்பட்டு விடுகின்றன.
கடிதங்களைத் தாமதப்படுத்துவதினால் ஒரு இனத்தின் நியாய மான உணர்வுகளை மழுங்கடித்து விட இயலாது. இதனால் இன் னும் மன ஓர்மமே பெருகும். இதைச் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்வது நல்லது, ..

Page 4
நாடு முழுவதும் புகழ்ச்சிகள் கூறும்
கை வண்ணம் கண்டபோது.
எஸ். சிவலிங்கராஜா
திருநெல்வேலி சிவன்கோயில் தேர் வெள்ளோட்ட விழா நடை பெறுகின்றது. அடியார்களோடு அடியேனும் "பக்தி நிலையில்" தேரின் அசைவை, அதன் அழகை, அதன் அமைப்பைப் பார்த்துப் பிரமித்து நிற்கிறேன். ஏறத்தாழ தஞ்சைப் பெரிய கோயிலின் அமைப்பை ஒத்ததாகத் தேரின் மேற்பகுதி தெரிகின்றது. ஒ ங் கி உயர்ந்து கெம்பீரமாக ஆடி அசைந்து வரும் தேரின் வனப்பு என்னை ஈக்கின்றது. பக்தியினால் மாத்திரமன்றி அ ச் சித் திர த் தேரைப் பலதடவை சுற்றி வருகிறேன்.
வண்மைக் கவிஞர் கனவினைப் போல வல்லவன் ஆக்கிய சித் திரத் தேரை ஊரெல்லாம் கூடி இழுத்து வருகின்றது. அந்தச் சித் திரத் தேரை நிர்மாணித்த ஸ்தபதியைப் அதிற் பேசாப் பொருளைப் பேச வைத்து , சித்திர வேலைப்பாடுகளைச் செதுக்கிய கரங்களைக் காண வேண்டுமென்று அவாவுறுகிறேன்.
சென்ற காலத்தின் சிறப்பையும், நிகழ்காலத்தின் திறனையும், வருங்காலத்தின் பயனையும் உணர்ந்து வாழும் துர்க்கா துரந்தரி பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி, இச் சித்திரத்தேர் சமைத்த ஸ்தபதி திருநெல்வேலி ஆறுமுகம் சிற்பாலய அதிபர் உயர்திரு ஜீவரத்தினம் ஆச்சாரியார் எனக் கூறி வாழ்த்துரைக்கின்றார். அந் தக் கலைஞனோடு அள்வளாவ வேண்டும் என்ற எண்ணம் அன்று அரும்பாகியது.
அற்புதமான ஓர் கவிஞனின் பேனா வில் இருந்து பீறிய வார்த் தைகள் ஏற்படுத்தும் உணர்வினைத் தேரும் தேர்ச் சிற்பமும் எனக்கு ஏற்படுத்தின. சிற்றுளியைக் கைப்பிடித்துக் கல்லொன்றைக் கடவு ளாக்கிய சிற்பிகளைப் பற்றிப் படித்திருக்கிறேன். படிப்பித்திருக்கி றார்கள். மரக் கட்டைகளைக் கடவுளர்களாக்கிக் கதை கூறவைத்த இச் சிற்பக் கலைஞர்களைப் பற்றிப் படிக்கவில்லையே. ஒருவரும் படிப்பிக்கவில்லையே என்ற கவலையும் அடிமனதை நெருடிக் கொண்டிருந்தது.
 

நெற்றியிலே முட்டை வடிவமான ஓர் சந்தனப் பொட்டு, சந்த னப் பொட்டின் நடுவே ஒர் குங்குமத் திலகம். இவற்றிற்குப் பின் னணியிலே லேசான விபூதிப் பூச்சு, அழகாகச் சட்டமிடப்பட்ட மூக் குக் கண்ணாடி. மெல்லிய மேகவண்ண் அரைக்கைச் சேட் அதனி டையே முகிலில் மறையும் மூன்றாம் பிறையாய்த் தெரியும் பூனூல். செந்தளிப்பான ஓர் "மனிதனை' ஒருநாள் கம்பன் கழகத்திலே கண்டேன். கவிதையை ரசிப்பது போலவே கலைஞர்களையும் ரசிக் கும் நண்பர் ஜெயராஜ் இவர்தான் ஜீவரத்தினம் ஆச்சாரியார் என்று அறிமுகஞ் செய்து வைத்தார்.
திருநெல்வேலிச் சிவன் கோயில் தேர் பற்றியும், தேர்ச் சிற்பங் கள் பற்றியும் எங்கள் உரையாடல் வளர்ந்தது. அன்றிலிருந்து ஆறுமுகம் சிற்பாலயத்திற்குச் சென்று வருவேன். முதல் நாட் காலை சும்மா கிடந்த மரக்குற்றி ஒன்று மறுநாட் காலை சூரனாகக் கம்பீர மாக நிமிர்ந்து நிற்கும். செதுக்கியபடி நிலத்திலே வீழ்ந்து கிடக்கும் கயிலாய வாகனத் தலைகள் இராம பாணத்தினால் அறுந்து வீழ்ந்த இராவணத் தலைகளை நினைவுபடுத்தும் கொத்து வேலைகள் அற் புதமாக நிகழ்ந்து கொண்டிருக்ரும். ஆறுமுகம் சிற்பாலயத்தில் நேரம் போவதே தெரியாமல் எனது கால்கள் நின்று விடுவது வழக்கமாகிவிட்டது.
எங்கள் பழக்கம் நட்புறவாகியது. எனக்கு அவர் மூத்தவரா னார். அவருக்கு நான் இளையவனானேன். இனிமையான ஓர் மனிதன் ஸ்தபதி ஜீவரத்தினம் ஐயா அவர்கள். ஜீவரத்தினம் ஐயா என்றுதான் நான் அன்போடு அழைப்பேன். இக் கட்டுரையிலும் ஆறுமுகம் சிற்பாலய அதிபர் ஆ. ஜீவரத்தினம் ஆச்சாரியார் ஜீவ ரத்தினம் ஐயா என்றே குறிப்பிடப் பெறுவார்.
1938 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 16 ஆம் திகதி விநாயகர் ஆறுமுகம் ஆச்சாரியாருக்கும் அவரது அன்பு மனையாள் பொத் னம்மாவிற்கும் இரண்டாவது புதல்வராகப் பிறந்தார். வட்டாரத் கல்வி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கலாகேசரி தம்பித் துரை இவருக்கு நேரே மூத்தவர். கந்தசாமி, துரைராசா, சிவலிங் கம் ஆகியோர் இவருக்கு இளையவர்கள். அனைவரும் சிற்பக்கலை வல்லுநர்கள்.
திருநெல்வேலி சைவப் பள்ளிக்கூடத்திலே ஆரம்பக் கல்வியைக் கற்றுத் தேறியபின் திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியிலே சேர்ந்து கல்விபயின்றார். திரு. சிவபாதசுந்தரம், திரு. இராஜ நாயகம், வித்து வான் வேந்தனார் முதலியோரைத் ፵ 9 á} Ö6Ù6ሁ ጠፊFሐ” யர்களாக அடிக்கடி நினைவு கூருகிறார்.
திரு. இராஜநாயகம் ஆசிரியரின் அன்புக்குரிய மாணவனாகத்
திகழ்ந்தமையை எண்ணி மகிழாத நாட்சளே இல்லையெனலாம். அவரிடம் வரன்முறையாகக் கற்ற திரிகோண கணிதமே தமது
尋

Page 5
தேர்ச்சிற்ப நிர்மாணத் திறனுக்கு அத்திவாரமாக அமைந்தது என்று சொல்லி மகிழ்வார்.
தமது தந்தையாரையே குருவாகக் கொண்டு சிற்பக்கலை  ைdப் பயின்று கொண்டார். பின்னர் மாமல்லபுரம் கணபதி ஸ்தபதி, காரைக்குடி சிறிநிவாஸ் ஸ்தபதி, மாயாவரம் ஏகாம்பரம் ஸ்தபதி, கும்பகோணம் ஏகாம்பரம் ஸ்தபதி ஆகியோரிடம் சிற்பக்கலை நுட் பங்களைக் கற்றறிந்து கொண்டார். ஒரு வருடகாலம் வரை இந்தி யாவிலே தங்கியிருந்து சிற்ப நுட்பங்களை அறிந்த ஜீவரத்தினம் ஐயா அவர்கள், தாய்லாந்து, பாங்கொக் முதலிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள சிற்பங்களைக் கண்டறிந்து ஆழ்ந்த அனுபவம் பெற்றார். இந்தோனேஷியாவுக்குச் சென்று அங்கு நிறுவப்பட வுள்ள பிள்ளையார் கோயிலுக்கு நிலையம் கோலி அத்திவாரமிட்டு வள்துள்ளார்.
சிற்பக்கலை ஞானமும் அழகியல் அனுபவமும் அதியுயர்ந்த மானுடப்பண்பும் கொண்ட ஜீவரத்தினம் ஐயா யாழ்ப்பாணக் குடா நாட்டில் மாத்திரம் நூறு தேர்களுக்கு மேல் உருவாக்கியுள்ளார். ஆறுமுகம் சிற்பாலயத்தின் சிற்பிகளுடன் இணைந்து அவர் ஆக்கிய தேர்கள் ஈழத்துச் சிற்பக்கலை வரலாற்றில் நீக்க முடியாது நிலை பெற்றிருக்கும் தன்மை வாய்ந்தவை,
தகப்பனார் ஆறுமுகம் ஆச்சாரியாரின் ஆசீர்வாதத்துடன் அவ சின் மேற்பார்வையின் கீழ் சகோதரன் தம்பித்துரையுடன் இணைந்து முத்துமாரி அம்மன் தேர் உருவாக்கத்துடனேயே இவ تا ۶ رضوی وم
து திருப்பணி' தொடங்குகின்றது.
திருநெல்வேலிச் சிவன்கோயில் தேர், நாச்சிமார்கோயில் தேர் பறளாய் முருகமூர்த்தி தேர், இணுவில் சிவகாமியம்மன் தேர், கலட்டி அம்மன்கோயில் தேர், புன்னாலைக்கட்டுவன் ஆயக் கடவை தேர், பழங்கிணற்றடிப் பிள்ளையார் தேர், புங்குடுதீவு கண்ணகை அம்மன் தேர், முதலிய பல கோயில்களின் தேர்களின் புதுமையும் பொலிவும் தமக்கு மனத்திருப்தியைத் தந்தன என்று நிறைவுறுகிறார்.
குடாநாட்டிற்கு வெளியே திருக்கேதீஸ்வரத்தின் ஐந்து தேர் கள். திருக்கோணமலை வில்லுான்றிக் கந்தசாமிகோயில் தேர், கொழும்பு முத்து விநாயகர் ஆலயத் தேர், கண்டி கட்டுக்கலைப் பிள்ளையார் தேர், நீர்கொழும்பு சித்திவிநாயகர் ஆலயத் தேர் முதலியன இவரின் கைவண்ணத்தில் உருவான தேர்களிற் குறிப் பிடக்கூடியன. மலேசியாவில் ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்து பதினான்கு இரதங்கள் உருவாக்கியுன்ௗார். இவரது மலேசிய இர தங்களையும், திருக்கே திஸ்வரத் தேர்ச் சிற்பங்களைத் தமிழகத்துச் சிற்பிகள் மனந்திறந்து பாராட்டியுள்ளனர்.
சிற்பச் சக்கரவர்த்தி, சிற்பராஜசிம்மன், சிற்பரத வித்தகர், சிற்பகேசரி. சிற்ப கலாமணி முதலிய பல பட்டங்கள் பெற்ற ஜீவரத்தினம் ஐயா அவர்கள் சிற்ப சாஸ்திரங்களிலும் அழகியலமி சங்களிலும் ஒருங்கே கவனஞ் செலுத்துகின்றார்.
6

வாரி வற்றியது
பேச்சும் சிரிப்பும். இவ்வகண்ட உலகில் வாழும் அத்தனை ஜீவராசிகளுக்குள்ளும் மானுடத்திற்கு மாத்திரம் ஆண் டவனால் அளிக்கப்பட்ட சிறப் புச் சலுகை
அச்சலுகையைப் பயன்படுத் துவோர் பலவிதம்.
"பல சின்னஞ் சிறுகதைகள் பேசி" வாணாளை வீண் நாளாக் கும் வேடிக்கை மனிதர் ஒரு ബ്
இயல்பாற்றல் இன்மையால் தம் உண்மை நிலை வெளிப்ப டாதிருக்க பேச்சும் சிரிப்பும் அற் றிருப்பதே "சீரியஸ்' என எண் ணும் கற்றார் எனப்படுவோர் மற்றொரு வகை.
ஒருவகையில் மேற்சொன்ன இருவரும் அச்சலுகையின் பய னறியாதாரே.
இவ்விரு நிலையின் பிழை யையும் சுட்டவே வள்ளுவன், *பயனில சொல்லாமை", "செர்ல் வன்மை" என இரண்டு அதிகா ரங்கள் செய்தான்.
மொத்தத்தில் ஆண்டவனின் இச்சலுகையைச் சரியாய்ப் பயன் படுத்தியோர் தொகை மிகக் குறைவே. V
இவ்வகையில் தன் இயல் பாற்றலையும் ஆழக் கல்வியை யும் உட்பலமாயும், பேச்சையும் சிரிப்பையும் ஆ யு த மா யும் கொண்டு மேற்சொன்ன வேடிக் கையாளர்களை வீழ்த்தி தன் வாடிக்கையாளர்களாக்கி அத் தனை பேர் நெஞ்சை யும் உயர்த்தி அதிலமர்ந்த பெருமை
இ. ஜெயராஜ்
6u T if u T ri சுவாமிகளையே
சார்ந்தது.
வாரி - கடல். சிலருக்குப் பெயர்ப் பொருத்தம் இயல்பாய் அமைந்து விடுகின்றது. "யாரி" ல் வரும் மரியாதைப் பன்  ைம விகுதி மற்றைய சமயத்துறை சார்ந்தார் போன்று தமக்குத் தாமே 'அடக்கத்துடன்" வைத் துக் கொண்டதல்ல. அவர் அறி வும் ஆழமும் பண்பும் சீலமும் தெய்வப் பொலிவுங் கண்டு மற் றோரின் பனம் பிறந்தது.
அதனால் கிருபானந்தவாரி இயல்பாய் வாரியார் ஆனார்.
இருந்தால் நற்பணிகளுக்கா கத் தம்மிடம் பொருள் பறிக்கவருவார் எனத் தெரிந் தும் 'போனாரோ" எனக் கலங்கிய செல்வர்கள்.
கட்சிபேதமும் சுயநலமும் (அபூர்வமாக) இன்றி அஞ் சலி செலுத்திய அரசியற் தலைவர்கள்.
பல்கலைக் கழகப் பல்லக் கால் இறங்கவும்மாட்டோம் மற்றவரை ஏமாற்றவும்மாட் டோம் என்ற தம் ஆத்ம வாசகத்தை ஆச்சரியமாகத் துறந்து பாமரர்களின் பண் டிதரான வாரியாரை கெளர வித்து மனந்திறந்து அஞ்சவி செலுத்திய அறிவியலாளர் கள்.
ஆபாசங்களை அஃறிணைக ளாய் நின்று எழுதும் நிரு பர்களின் (கழுகார், ஆந்தை யார், கரடியார் கட்டுரை களும்

Page 6
ந டி கை களின் முதுகு கொண்டு முகமறியும் அறி வுப் போட்டிகளும் என இச் *ச மூ க முக்கியத்துவங்க ளுக்கு அதிக பக்கங்களை ஒதுக்கிவரும் இன்றைய தமி ழக சஞ்சிகைகள் இவர் மர ணத்திற்குக் கொடு த் த முக்கியத்துவம். இப்படி,
பகுத்தறிவில்லாத பாமரர் கள், சுய்நலமே வாழ்வான செல் வர்கள், தேசத்தைவிட கட்சியே முக்கியமாய் ஆன தலைவர்கள், வியாபாரமே முக்கியமான பத்தி ரிகைகள் என நெறிப்பட்டிருக் கும்" தமிழகத்தை ஒரு நிமிடம் உயர் நிலையில் நிறுத்திய அவர் மரணமே அவர் வாழ்வின் வெற் றியை வெளிப்படுத்திற்று.
கிட்டத்தட்ட எழுபதாண்டு தமிழ் சமயப்பணி, பல நூறு ஆலயத்திருப்பணி, அனாதைச் சிறுவர், முதியவர்க்காற்றிய நற் பணி, மூவாயிரத்துக்கு மேற் பட்ட ஏழை மாணவரை உயர் கல்வியாளர்களாக்கிய கல்விப் பணி என பலவாய் விரியும் அவர் புகழுக்கு மேற்சொன்ன அனைவரதும் ஒரு நிமிட ஒடுக் கமே உண்மைச் சாட்சி.
ஈழத்தோடு அவர் தொடர்பு நீண்டது. கண்ணியத்தேடும், கெளரவத்தோடும், பக்தியோ டும் போற்றப்பட்டது. அவர் புகழ் அ ள வா ய் நிலைக்கப் போவது.
கற்றோரை உவப்பிக்கவே கல்வியெனும் இன்றைய கல்வி யாளர்களின் மூடக் கொள்கை யிலிருந்து துணிவாய் விலத்தி நின்றவர்.
தேவை பற்றி, நோயா ளிக்கே மருந்து, பசித்தவனுக்கே உ ன வு, களைத்தவனுக்கே ஒய்வு என்பது போல் பாமர
முடிவெடுத்தவர். அதனா ல் தமிழ் உ ல கம் முழுவதையும் தொட்டவர்.
ஒரு பேராசிரியர் காலத்தை
ஆட்சேபிப்பதே காலேட்சேபம் என் ஒருமுறை சொன்னதாய் எனக்கு ஞாபகம். காலத்தை
ஆட்சேபித்த ஒரு மனிதனுக்காக இத்தனை மதிப்பு? இத்தனை வரவேற்பு? இத்தனை கண்ணிர்? சிரிப்பாய் இருக்கிறது. சொல் விளையாட்டு வேண்டாம் என்ற வர்களின் சொல் விளையாட்டு,
பணக்காரர்களின் விருந்து
போ ல பசியில்லாதவர்களுக்கு
இவர்கள் விருந்து வைத்துக் கொண்டிருக்க பசித்தவனைத் தேடிப்போய் விருந்திட்ட வள் ளண்மையே அவரைத் தெய்வ மாய் உயர்த்திற்று.
அதனால்தான் மிக வேக மாய் சமுதாயத்தைத் துளைத்து கடைசிப் பாமரன்வரை செல் லும் அரசியல், சினிமா, விளை யாட்டு போன்ற இ ன்  ைற ய ஊடகங்களால் சென்றவர்கள் செல்லாத அளவிற்கு மக்களிடம் தன் சொல் வன்மையாற் சென் pitif.
இதனால் அவரின் குளிப்பும், சாப்ட் டும் கூட பத்திரிகைகளுக் குச் செய்தியாயிற்து.
எனவே அவர் பற்றிய செய்திக ளைப் புதிதாய் இங்கே சொல்ல வேண்டியதில்லை. பின் அவர் புகழைச் சுருங்கச் சொல்வது எப்படி?
ஒருவனது மரணமே அவன் வாழ்விற்கு அத்தாட்சி என்றான் ஓர் அறிஞன்.
அவர் பிறந்து வாழ்ந்த தமிழ் நாட்டில், வாரியார் இறந் தார் என்றதும். கதறித்துடித்த னர் பல்லாயிரக் கணக்கான
னுக்கே கல்வி எனத் துணிந்துபாமரர்கள். O

உலகெங்கும் சர்வவியாபகமாகக் கிளம்பியுள்ள சமகாலப் பிரச்சினைகள் போரினாலும் அரசியல் பிரச்சினைகளாலும் இடம் பெயரும் மக்களினதும், அகதிகளினதும் வாழ்க்கை அவலம் ஆகும். இன்று நமது மண்ணில் அரசு நடத்தும் ப்ோரினால் தம் சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்து வாழ்வோரை "அகதிகள்" ான்று சொல்வதற்கு ஐக்கிய நாட்டு சாசனம் இடம் கொடுக்குமா என அலசுகின்றார்" யார்க்கெடுத்துரைப்பேன்’ நாடக ஆசிரியர் குழந்தை ம. சண்முகலிங்கம். அவர் நாடகத்தினூடு தருகின்ற செய்தி எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியதே. இடம் பெயர்ந்து நிவாரண உதவியில் வாழ்ந்தாலும், சோகம் விடுத்து, சோம்பி யிராது ஏற்கனவே பழகிப்ப்ோன சீரழிந்த பழக்கங்களைத் திருத்தி சுதந்திர வாழ்வுக்கு தம்மைத் தயார்ப்படுத்துமாறு அவர் அறை கூவல் விடுக்கிறார்.
மண் சுமந்த மேனியர் 1, மற்றும் 2 ஊடக தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய பிரக்ஞையை மக்கள் மனதில் உந்தித்தள்ளி உரிமைக்கான போராட்டம் பற்றிய முழுமையான விளக்கத்தையும், அவசியத்தையும் முன்வைத்த சண்முகலிங்கம் இன்று போராட்டம் விளைத்த புதிய பிரச்சினைகளுக்கு தானும்
“யார்க்கெடுத்துரைப்பேன்" ஒரு நாடக அரங்கியல் பார்வை
கந்தையா யூனிகணேசன்
எழுத்தாளன் என்ற முறையில் முகங்கொடுத்து, மக்களையும் சுதந்திரத்தினால் பெறக்கூடியவாழ்வைப் பெறும் தகுதிக்கு ஆளாக் கவும், முயற்சி செய்கிறார். இந்த வகையில் "அன்னை இட்ட தீ நாடகம் தொடர்ந்து எழுதப்பட்டது.
நெருக்கடி காலத்துக்குள்ளும் படித்தல் வேண்டும், மற்றவ ருக்கு உதவியாக ஒத்தாசை புரியவேண்டும், மூட நம்பிக்கைகளைச் களைய வேண்டும், அடக்கு முறைகளை எ தி ரீ க்க வேண்டும். பொது இடங்களைத் துப்பரவாகப் பேண வேண்டும் போன்ற எண்ண அலைகள் நாடகத்தினுாடு விரவியுள்ளன. உண்மையில் கண்ட கண்ட இடங்களில் மலசலங் சுழித்தல், எச்சில் உமிழ்தல் போன்றவற்றை தவிர்க்க ஆசிரியர் விடுக்கும் வேண்டுகோள் பொது வாக நாட்டில் நிகழும் சீர்கேடுகளை இப்போது ஒழிக்க வேண்டும் என்பதனையே குறிகாட்டி நிற்கிறது என்றால் மிகையாகாது.

Page 7
இன்னும் ஒருபடி மேலே சென்று நாடகம் வலியுறுத்தும் செய்தி யான இடம் பெயர்ந்த நிலையிலும் சோம்பியிராது முயற்சி வேண்டும்" என்பது ஆசிரியர் பயன்படுத்தும் வெளிநாட்டுக் கவிதை வரிகளினால் கருத்தாழத்துடன் வெளிப்படுத்தப்படுகிறது.
"அவனை / தெருச்சந்திகளில் நீங்கள் காணலாம் ! அவன் இன்னமும் பத்திரிகை விக்கிறான்/ ஆயினும் இன்னமும் சோர்வறியான்" சமூகத்தையே பிரதான பாத்திரமாகவும், சமூகத்தில் வாழும் பிரதிநிதிகளையே வகைமாதிரிப் பாத்திரங்களாகவும் தெரிவு செய் யும் ஆசிரியரிடம் தனித்தனியான பாத்திர வார்ப்பையும், பாத்தி ரங்களை முறையாக வளர்த்தெடுப்பதனையும் எதிர்பார்க்க முடிய வில்லை. கி. மு. 300 இல் வாழ்ந்த கிரேக்க அறிஞர் அரிஸ்டோட்ட லின் நாடக விமர்சன பாரம்பரியம் வளர்த்தெடுத்த தனிநபர் பாத்திர வார்ப்பையும் வளர்ச்சியையும், வகைமாதிரிப் பாத்திரங் களூடாகப் படைக்கப்படும் இன்றைய மோடிப்படுத்தப்பட்ட நாட கங்களில் எதிர்பார்ப்பது நாடகக் கலையின் வரலாற்றுப் போக்கை மறுதலிப்பதாக ஆகிவிடும் என எண்ணத் தோன்றுகிறது. இன் றைய நாடகங்களில் அதுவும் சண்முகலிங்கத்தின் நாடகங்களில் பொதுவாகச் சமூகமே பிரதான பாத்திரமாகிறது. இந்நாடகத்தில் இடம் பெயர்ந்து வரும் சமூகமும், இடம் வழங்க மறுக்கும் சமூக மும், அதிகார வர்க்கமும் சந்திக்கிறார்கள். எல்லாமே வகை மாதிரியாக தெரிவு செய்யப்பட்டவை. சமூகத்தில் குறுக்குவெட் டாக இடம்பெயர்வோராக 3 குடும்பங்கள் காட்டப்படுகின்றன. இடம்பெயர்ந்து (அகதியாகி) நிர்க்கதிக்குள்ளாகும் மக்கட் கூட்டம் தத்தம் தனித் தனிப் பாடுகளையே மட்டும் பிரதானப்படுத்தாது, நன்றாகத் திரண்டு பாடுபட்டு புதிய வாழ்வை எதிர்கொள்ளத் தயாராகுதல் என்பது பாத்திர வார்ப்பு மற்றும் பாத்திர வளர்ச் சியின் பாற்பட்டதே. மகாகவியின், மீண்டும் தொடங்கும் மிடுக்கு, கவிதை, நாடகத்தின் கருவை நன்கு பார்ப்போர் மத்தியில் எறி கிறது. இது காட்சிப்படுத்தலின் பகைப்புலத்தில் பிரமாண்டமான கற்பனையை பார்ப்போரிடிம் தூண்டுகிறது. "களத்துக்குள்ளே காலை வைத்து ஏலேலங்கடி ஏலோ" பாடல் துரித கதியில் மேடையை வைத்திருக்கிறது.
மேடையில் வீசப்பட்ட துரிதகதி "உலகநாதன்' எனும் சம நிலையான பாத்திரத்தினால் வீசப்படுகிறது.
மக்களெல்லாம் தத்தமது வீடுகள், சொத்துகள், தோட்டங் கள், வயல்கள், கடல் என்பன பறிபோன நிலையில் புலம்புகிறார் கள்; சோர்கிறார்கள் துவள்கிறார்கள். இந்த நிலையில் பாத்தி ரங்களின் சோர்வைக் குறிக்கும் உத்தியாக உலகநாதன் பாத்திரம் நெறியாளருக்கு உதவுகிறது. உலகநாதன் மக்களை உலுப்பும் இடத்தில் நெறியாளன் தன் நோக்கில் வெற்றி பெறுகிறார்.Tஎழுத் தாளர் கையாளும் மொழிநடை மொழியியலாளரின் ஆய்வுக்கும். அது வழங்கும் செய்தி சமூகவியலாளரின் ஆய்வுக்கும் உரியது.
"கூடை கூடையாக குவியல் குவியலாகக் மீனையும் றாலை யும் நண்டையும் கணவாயையும் அளைஞ்ச கைகள்" "எத்தனை லட்சம் கோடி வெத்திலையளை இந்தக் கை பாலை அளைஞ்சிருப்பன்"
10

'பயிர் எங்களுக்கு வெறும் பயிரில்லையே அது எங்கடை உயிரல்லவோ உறவல்லவோ!' - **அங்கை திண்ட கீரை வாழ்க்கை தானும் இங்கை வராது" '.காகம் குருவி இறாஞ்சின கூனிக்கருவாடு கூட இண் டைக்குக் கண்ணுக்குமில்லை" இதேவேளை நாடக ஆசிரியர் தரும் புதிய வசன வீச்சுக்கள் இளைய பாத்திரங்களின் வாயூடு வெளிப்படும் இடங்களில் புதுக் கவிதையை நினைவூட்டுகிறது.
'பச்சை போர்த்துக் குளிர்ச்கியாய் இருந்த் எங்கடை தோட்ட நிலமெல்லாம் எரிகாயப் பட்டுப்போய்க் கிடக்கும்" W
'கடற்கரையெல்லாம் நிர்வாணமாய்க் கிடக்கும்"
உயிர்த் துடிப்பையும், உணர்வையும் பாய்ச்சும் வரிகளை யதார்த்தமாக சமூக நோக்குடனும் சிந்தனையுடனும் வழங்கும் ஆசிரியர் சமூகச் சீர்கேடுகளையும் மூட நம்பிக்கைகளையும் சாட வும் தவறவில்லை. ராஜன்: கிணத்திலை தண்ணி அள்ளிப் புளங்கலாமோ எண்டு
கேட்கத்தான். கமலம்: தம்பியவை இதிலை ஒரு அம்மனை வச்சுக் கும்பிட்டு
வாறம். அவ குற்றம் பொறுக்கமாட்டா. கருணா: நாங்கள் துப்பரவாய்ப் புளங்குறம் ராஜன்: அம்மனுக்கு ஒரு பிழையும் செய்யமாட்டம், கமலம்: நீங்கள் சொல்லுவியள் உங்கை வந்திருக்கிறவை
ஆராரோ, எவரெவரோ?
கமலம்: துப்பரவாய்ப் புளங்காட்டில் கிணத்துக்கை பாம்பு பூச்சி விழுந்திடும். பொல்லாத அம்மன் குற்றம் பொறுக்காது. சமூகத்தின் அதிகார வர்க்கம் இரு பாத்திரங்களில் குறிக்கப்
படுகிறது. கோயில் முதலாளியும், விதானை யாரும் தங்களுக்குள் ஒரு உறவும், சமூகத்துடன் இன்னொரு உறவுமாகப் படைக்கப் படுகிறார்கள்
“Lisivu –Trži genpGurrrub
படுமரத்துக் காட்டோரம்
நிக்கிறாராம் சுடலையாண்டி
நீலவிழி வாடாமே" ாண் அறிமுகமாகின்றார் விதானையார். ஒரளவுக்கு கூத்துப் பாரம்பரியத்தினை இது நினைவூட்டுகிறது. கோயில் முதலாளியின் நடிப்பும் ஓரளவு மனோரதியப் பாங்கான நடிப்பில் அமைக்கப் பட்டிருக்கின்றது. நாடக வடிவம் யதார்த்த வகையல்லாத ஒரு மோடிப்படுத்தப்பட்ட ஒன்று ஆகையால் சகலவிதமான மோடி களுக்கும் இடம் கொடுக்கிறது.
1

Page 8
ஆனாலும் இரண்டு எதிரிடையான போக்குகளை இங்கு காண்கின்றோம். "அகதி" எனும் கருத்தை முன்வைக்கப் புதிய கவிதை அமைப்பில் கவிதை வரிகளும் பின்னர் குறியீட்டு முறை யிலமைந்த தொலைப்படுத்தும் உத்தியாக நாட்டார் பாடல்களும் பயன்படுகின்றன. இவை இரண்டு வடிவங்களும் பார்வையாளரி டம் தோற்ற வைக்கும் உணர்வுகளின் சமபலம் பற்றி ஆராய்வு செய்ய வேண்டிய தேவையுள்ளது.
இதேபோலவே திருவாசகத்துள் ஊறிநின்று ஆசிரியர் பொருத் தமாகக் கையாண் ட போதும் அந்த வரிகள் நாடக முழுமைக்கும் அதன் வளர்த்தெடுப்புக்கும் ஆற்றும் பணியின் காத்திரத்தன்மை பற்றியும் விவாதிக்க வேண்டியுள்ளது. திருவாசகப் பின்னணி தரு கின்ற பண்பாட்டு சமய தத்துவ உணர்வு இரசிக்கக் கூடியதே. இந்த இரசனைக்கு மேலாக அதன் பங்களிப்பு நா ட க த் துள் அமைய வேண்டிய தேவையுள்ளது. அதாவது கதைப் பின்னலு டன் திருவாசக வரிகளின் பின்னல் எவ்வளவு தூரம் கலைத்துவ மாக உள்ளது என்பதே அக்கேள்வியாகும்.
இன்னும் ஒன்றையும் இங்கு குறிப்பிடுதல் பொருத்தமுடைத்து. அம்பலக்கிழவன் வீசும் அங்க வீச்சுக்கள், குழந்தை ம. சண்முக லிங்கம் அவர்களின் சமூகப் பார்வைகளைப் பார்ப்போருக்கு வழங் கினாலும், அந்த வரிகள் நாடக முழுமையுடன் பிணைந்து ஒட்டி உறவாடும் போது தான் தாடகச் சுவை தென்படும்.
சேக்ஸ்பியர், இப்சென், பிறெச்ட் ஆகியோரின் நாடக ஆக்கங் கள் தரும் சுவையை, வசனங்கள் சொற்கள் குறியீடுகள் படிமங் கள் வழங்கும் ஆழமான உணர்வை இங்கு நினைவூட்ட விரும்பு கின்றேன்.
நெறியாள்கையின் அடிப்படையில் பார்க்கும் போது நாடகத் தின் பிரதான உணர்வைப் பாதிக்கும் ஒரு கட்டம். மரியநாயகம் கொல்லைக்கிருக்கும் காட்சி, ஏற்கனவே "வளவுக்கிருக்கிறது. பனைக்கிருககிறது" என பார்ப்போரை சிரிப்பில் ஆழ்த்துகிறார் ஆசிரியர். நெறியாளர் மேலும் ஒருபடி மேலே சென்று பாத்திரம் மலசலம் கழிககும் தன்மையில் காட்சிப்படுத்துகின்றார். இதனால் பார்ப்போரிடத்து ஆரம்பத்திவிருந்த தொற்றவைத்த உணர்வு அகற்றப்படுகின்றது. இது நாடகத்துடன் ஒன்றுதலுக்குக் குந்நகம் விளைவிக்கின்றது. இதற்கும் பிறெக்டினது 'பராதீனப் படுத்தும்" உத்திக்கும் தொடர்பு எந்த வகையிலும் இல்லை. ஏனெனில் பார்ப்போனைச் சிந்திக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் நாட கத்துடன் பார்ப்போணை ஒன்றிவிடாது பிரக்ஞை பூர்வமாக காட் சிகளை நகர்த்தினார் பிறெக்ற். இந்த நாடகத்தில் இந்தக் குறிப் பிட்ட காட்சி மூலம் சிரிப்பின் உச்சத்துக்கு பார்ப்போரைச் கொண்டு வருவதினால் எப்படிச் சிந்திக்க வைக்க முடியும்? ஒரு வேளை கிரேக்க மகிழ்நெறி நாடகங்களால் விளைந்த உணர்ச்சிக் சுழிவு" இங்கு சாத்தியமாகலாம், அதுதான் நோக்கமெனில் இத னால் தவறு நேர இடமில்லை. ஆனால் நாடகத்தின் தோக்கம் அதுவல்ல ஏனெனில் இந்த நாடகங்களை "அரசியல் நாடகங்கள்" என்றே நாம் கருத முடியும், "அரசியல்" எனும் பரந்த கருத்தின் அடிப்படையில் சமூக மாற்றம் பற்றி நாடகம் சிந்திக்கின்றது.
12

இங்கு சமூக மாற்றம் பற்றிக் கூறும் "அரசியல் அரங்கு" நிதானம் இழக்கிறது. ஆகவே ஆசிரியரும், நெறியாளரும் தமக்குள் ஓர் இணை வைக் கண்டாக வேண்டும். இங்கு இருவருமே ஒருவர்? ஆதனால் நாடகத்தை உணர்தலிலும் வெளிப்படுத்தலிலும் பிசகு இருக்க வேண்டிய கஷ்டம் இல்லை என்பதே யதார்த்த நிலை மையாகும்.
இடம் பெயர்ந்த நிலையிலும் வீடுகளை இழந்த கஷ்டத்திலும் பெண்களை வாழவைக்க முடியாத அவலம், சிறுகச்சிறுகச் சேமித்து பெண் பிள்ளை சீதனத்துக்காகக் கட்டிவைத்த வீடு குண்டினால் சிதைந்த அவலம், இரண்டு வீடுகளை வைத்துக் கொண்டு குடிபுக முன்னம ஒரு வீட்டில் குடியிருந்த் அகதிக் கிழவன் செத்தவீட் டைத் துடக்காக்கி அமங்கலமாக்கிப் போகப் போறார்களே என அந்தரப்படும் கோயில் முதலாளியார், எந்த நேரமும் அலம்பும் அம்பலக்கிழவன் நிதானமாய் நடக்ரும் உலகநாதன், சிறிவரும் இளைஞர்கள், அதிகார விதானையார். தண்ணி அள்ளவும் வீட் டில் மற்றவரை அண்டவும் விடாத கமலம், எனப் பலவகைத் தன்மையுடன் நாடகப் பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன. கோயில் முதலாளியின் இரண்டு வீட்டுக் குறியீடு சில கேள்விகளை எழுப்புகின்றது. ஆனால் முழுமையின் படிமமாக இது வளர்த் தெடுக்கப் படவில்லை. இதேபோலவே வீட்டை இழந்து மனத் தாக்கலாகி இருக்கும் "மாஸ்டர்" பாத்திரம் மற்றைய பாத்திரம் களுடன் இறுதி வரையும் நாடசத்தின் முழு உறுப்புடன் பின்னிப் பிணைக்கப்படாமலேயே சடை சிக் கட்டததில் மட்டும் நாடக ஓட்டத்துடன் இணைக்கப்படுகிறது. ஆனாலும் வீ டு பற்றிய ஏதாவது குறிப்பு வேறு பாத்திரங்கள் கூறியவுடன் தனது சுயா தீனம் இழக்கும் மாஸ்டர் பாத்கிரம் மனதில் நிற்கும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளது.
ஒரு வறுமை அாங்குக்கு இலக்கணமாக அதிக ஆர்ப்பாட்ட மில்லாத மேடைப் பொருட்களுடன் எளிமையாக நிகழ்த்தப்பட் டது நாடகம். கண்னனின் ஆாவார மற்ற இசையும் நாடகத்தின் அடிப்படையாக எளிமையுணர்வை இயம்பி நிற்கின்றது. நாடக அரங்கை விட்டு வெளியே வந்தாலும்,
*ஊரெங்கும் உன்சேனை நீ நடுவே பரதேசி" எனும் பாடல் இசையும் மனதில் இசைபாடுகிறது.
அமைப்பியல் வாதிகளின் கோட்பாட்டின்படி பல பிரச்சினை களையே இன்றைய காலக் கலை படைக்கின்ற நிலைமையில் சமூகம் உள்ளது. ஏனெளில் இன்றைய மனிதன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பல. எனவே இன்றைய நாடக ஆசிரியனும் இன் றைய காலகட்டத்தின் உற்பத்தி ஆகும். சமூகப் பிரக்ஞையுள்ள வெற்றிகரமான இன்றைய கலைஞனுரடாக இன்றைய கலை விதி களையும் நாம் நிலைநிறுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் இலக்கி பம் கண்டதற்கே இலகசணம் இயம்ப முடி யும். ஒரு நவீன படைப்பு ஒரு நல்ல இலக்சணமாகவும் அமையும். குழந்தை ம சண்முகலிங்கம் என்ற இன்றைய பிரதான நாடக ஆசிரியர் படைத்தளிக்கும் நாடகங்கள புதிய சலை விதிகளைத் தோற்று க்விகுமா என்பதைக் காலந்தான் நிர்ணயிக்க வேண்டும். O
3

Page 9
*Araar Mrs vala arra Mr. Ma Más
வைராக்கியம்
1MMINISM~ MAMMAM- - 1Mo ~M~
LMATL LLA LMLqLALLLL LLLLLLLALA AL MAqqLALSL LLLLLLLLM MLqL LAL LMLMLS
திக்குவல்லை கமால்
"மேலான சகோதரர்களே, பெரியார்களே."
ஓங்கியுயர்ந்த சிரிப்பு அவ்வ ளவு லேசாக ஓய்ந்துனிடவில்லை. சுற்றயல் வீடுகளின் ஸ்தோப்பு களிலும் முற்றத்திலும் பாய் விரித்து அமர்ந்திருந்தவர்களின் உற்சாகம் த லை மேலே றி அமர்ந்து கொண்டது.
"கொஞ்சம் சந்தம் போடா மிரீங்கொ. பயானக் கேக்கியத் துக்கு' இடையில் எழுந் து நின்ற ஒருவர், உரத்த குரலில் எல்லோருக்கும் ஒரு வேண்டு கோள் விடுத்துவிட்டு மெல்லக் குந்திந் கொண்டார்.
'இது ஆகிரஸ் ஸமான் காலம் . . எங்க பாத்தாலும் பஸ்ாதுத்ான் நடந்து கொண்
டீக்கி, எல்லாப் பாவத்துக்கும் காரணம் தாரெண்டு தெரீந் தானே. ஆ செல்லுங்க பாப்
பம். ஆ , அப்ப நானே செல்லி யன். எல்லாப் பாவத்துக்கும் காரணம் பொம்புலயள். ம். நாங்க நாங்க எங்கடெங்கட
பொம்புளயளக் கொளோனும்.”*
முதலாக
காப்பாத்திக்
மீண்டும் சிரிப்பொலி இருள்
மேகத்தினூடே பாய்ந்து செல்
லும் மின்னலாகச் சனக்கூட்டத் துக்குள் ஊடுருவியது.
ஜாதி பயான் மசான் . எப்பிடியென்டா இவன் பழகிக் கொண்ட** அன்றுதான் முதன் இவரின் பேச்சைக் கேட்ட ஒருவர் அடுத்தவரிடம்
விசாரித்தார்.
'இப்ப மையத்தூட்டியல்ல எல்லாருமே இவரத்தான் கூப்பி tg til ஹஸ்ரத்மாருக்கு மாக்கட் டில்லாப் பெய்த்து" அடுத்தவர் சிறு விளக்கமொன்றை முன் வைத்தார்.
திரும்பவும் எல்லோர் கவன மும் அவர் பக்கம்.
தெரீந்தானே அந் க க் காலத்தில லூத்நபிட கூட்டத் தாரு செஞ்ச வேல"
"ப். கஹ் , கஹ்.
இடையிடையே பரிமாறும் கோப்பியைக் குடித்துக்கொண்டி ருந்த யாரோ ஒருவருக்கு புரைக் கடித்துவிட்டது. முன்னெச்சரிக் கையாக இருக்க எந்க நேரத்தில் இவர் என்னதான் சொல்லப் போகிறாரென்று யாருக்குத் தான் தெரியும்! V a
யாரும் அ  ைச ந் த தாக இல்லை. புதிது புதிதாக வந்து சேர்ந்தவண்ணம் இருந்தனர். மையத்து வீட்டில் விழித்திருப்ப தென்றால் "தாரன் பயான்?" என்று கேட்டு சனம் சேருமள வுக்கு அந்து ஜப்பார் ஸ்டார் ஆகி
விட்டார்.
இவர் ஒன்றும் ஒதிப் படிக் துக் கிழித்தவரல்ல. தானும்
14

பயான் பண்ண வேண்டுமென்ற வைராக்கியம் ஏற்பட்ட பின் தானாக முயன்று விஷயம் கால் சிரிப்பு முக்காலுமான ஒரு பணி யில் பயான் செய்யப் பழகிய வர்தான்.
*தேத் தண்ணி கே n ப் பி குடி க் கி ய வ ய் க பாத்துக் குடிங்கோ." என்றவர், அதை அடுத்தவர்கன் புரிந்து கொண் டார்கள் என்பதை அங்கீகரிக் தம் பாணியில் ஒரு கறுப்புவெள்ளைச் சிரிப்புதித்தார்.
மையத்து வீடு ஹயாத்தா கிக் கொண்டிருந்தது. மூன்றாம் கத்தம் வரையில் இரண் டு இரவு கள் நள்ளிரவுவரை லிழித்திருப் பத எப்பொழுது ஆரம்பிக்கப் பட்ட பழக்கமோ தெரியவில்லை. இழப்பினால் ஏற்பட்ட மன வேதனையில் சம்பந்தப்பட்டவர் கள் அழுந்திப் போய்விடாமல் எல்லோரும் கூடிக் கலகலப்பாக் குவது எ ன் ற வகையிலாவது நல்ல விஷயந்தான்.
'லுத் தபீட விஷயம் என் னென்டு சொன்னால், அதப் போல விஷயம் இன்னக்கி உல கத்தில நடந்து கொண்டிக்கி. அதால பொல்லாத நசலொண்டு உண்டாகீச்சி. அந்த நசல் என் னெண்டு சென்னால்."
**இது அத்து ஜப்பாரா இல் லாட்டி ஸக்காஃப் லெப்பயா?" இடையில் ஒருவரின் கேள்வியும் அதற்குப் பதிலாக ஏகோபித்த சிரிப்பும் எதிரெலித்தது.
ஸக்காஃப் லெப்பை குதிபா
ஒதுவதற்காக மிபேருக்கு ஏறி ‘னார். "என்னெண்டு சொன் னார்." எ ன் று குறைந்தது
நூறு தடவையாவது சொல்லி விடுவார். அதைத்தான் இங்கே
15
இவர் குத்திக்காட்டினார். ஸ்க் காஃப் லெப்பை மட்டுமென்ன, முபாரக் ஆலிம், தார்க்ஸாப், ஜெமீல் மாஸ்டர் போன்றவர் களும் கூட அவ்வப்போது அவ
ரது பேச்சிலே தலைகாட்டத் தவறுவதில்லை.
'எய்ட்ஸென்ட நசலுக்கு
நாகரீகமான நாட்டியல்ல லச்சக் கணக்கான மணிசரு பலியாகிக் கொண்டிருக்கி. ஒழுக்கமான குடும்ப வாழ்க்க இஸ்லாத்தில செல்லப்பட்டீக்கி."
எ ந் த த் தலைப்புமின்றி ஆராம்பிக்கப்பட்ட ப யான், எங்கெங்கோ தொட்டுத் தடவிச் சென் று பன்னிரண்டு மணி நெருங்கும் போது நிறைவுபெற்
றது. அதோடு ரொட்டி, சிச் சடி, கோப்பி பரிமாறல்.
"அத்து ஜப்பாரு மறந்து
பொகாம நாளக்கும் வாங்கொ" மையத்து வீட்டுக்காரரே இந்த
அழைப்பை விடுத்தது விளையாட்
டுக்கல்ல.
சனங்கள் அங்கிருந்து படிப் படியாக கலைந்து கொண்டிருந் தனர். அவர்கள் தங்களுக்குள் கதைத்து வியந்து கொண்ட தெல்லாம் அத்து ஜப்பார்ன் தைரியத்தைப் பற்றித்தான்.
கட்டிலில் அமர்ந் வேண்டிகேயெல்? முகத்திலும் நெஞ்சிலும் உாதித் தடவிக் கொண்டு நீட்டி நிமிர்ந்து படுத்தார் அத்து ஜப்பார். அவ ரது ம ன மோ நிகழ்ந்ததை நினைக்கத் தொடங்கியது.

Page 10
முன்பு போல் தடுமாற்ற மில்லை. பொருத்தமானத் தொடர்புபடுத்தக் கூட முடிகி றது. சிரிப்பூட்டல் கைவந்த கலை. பத்திரிகைகளில் வெளி வரும் வெள்ளிக் கிழமைக் கட்டு ரைகள். மஸாத் ஆலிம் நியாஸ் மெ ள ள வி போன்றவர்களின் பீஸ்கள்தான் ரிஹி மூலங்கள். ஐந்தாம் வகுப்புப் படித்த அறிவு கூட இல்லாமல் தேடித் தொகுக் கும் தைரியம் அவருக்குள் குடி புகுந்து அவரது படித்தரத்தை உயர்த்தியிருந்தது.
அன்றும் இப்படிப்பட்ட ஒரு நாள்தான், ள ளத்து வ ள வு ராஹிலாச்சி மெள த் தா கி ப் போய்விட்டார். உடனடியாகச் சில பொடியன்மார்கள் ஒரு மையத்து வசூல் போட்டு காரி யத்தை ஒப்பேற்றிவிட்டார்கள்.
வழக்கம்போல் விழித்திருப் பதற்காக பத்து மணிக்கெல் லாம் பள்ளத்து வளவுக்குச் சென் றார் அத்து ஜப்பார். ராஹில் கிழ வியின் முற்றத்திலே ஒரு பழைய கனாட்பு வைக்கப்பட்டு அதிலே ஒரு பெற்ரோல் மெக்ஸ் ஒளிரி, து கொண்டிருந்தது.
அடுத்தடுத்த வீட்டு செய்து நானாவும் நெய்னாவும் மப்ள ரால் காதுகளை சுற்றிக் கட்டிய படி பீடியடித்துக் கொண்டிருந் தனர். இந்தக் காட்சியையெல் லாம் மிக விரைவாகப் பதிவு செய்து கொண்ட அத்துஜப்பா சின் நெஞ்சிலே ஒரு தார்மீகக் கோபம் தீயாய்க் கொழுந்து விடத் தொடங்கியது.
கூடவே மூன்று நாட்களுக்கு முன்பு சீனாத்தான ஹாஜி விட் டுக்கு விழித்திருக்கப் போன காட்சிகள் முன்னெழுந்தன:
வேறு பாய்கள் கதிரைகள் அயல் வீ டு களிலும் இல்லையென்ற அளவுக்கு சனம். மேலதிக மின் விளக்குகளின் ஒளிப்பாய்ச்சல். அதற்கென்றே வ ய ரின் பா ஸ் ஸ்பெஷல் டியூடி பயான் பண
ணுவதற்கு நீ முந்தி நான் முந்தி  ெயன்று ஸ சுகாஃப் லெப்ப, முபாரக் ஆலிம், தார்கஷாப். எண்ணிப் பார்த்தால் இப்படி ஒன்பதுபேர்,
இதை நினைத்துப் பார்த்து அத்து ஜபாரின் நெஞ்சு பொறுக்க வில்லை. ஏதோ ஆவேஷித்தவ ராக உணர்ச்சியால் உந்தப்பட் டவராக, ஊரின் நடுச்சந்திக்கே வந்துவிட்டார். எங்கும் இருள். சந்தியும் மெளத்தாகிப்போப்.
கான் தோண்டுவதற்காசு கிண்டிப் போட்டிருந்த மண் திட்டிக்கு மேல் ஏறி நின்று நான்கு பக்கமும் பார்த்தார். சந்தடியில்லை, வீடுகளுக்குள் மாத்திரம் வெளிச் சக் கசிவு தெரிந்தது. கைகள் ரண்டையும் வாயோடு சேர்த்துத் துணை யாக்கி உரத்த குரலில் 'ஏன் டும்மா எனக்கேலா ஏன்டும்மா" என்று ஏதோ ஆபத்துப்போல் சத்தமிட்டுவிட்டு டக்கென்று பாய்ந்து ஐச தாத்தாவின் முடுக் கினுள்ளே புகுந்து கொண்டார்.
ஒரு சில நொடிகள்தான் பறந்திருக்கும். எதிர்பார்த்தது தான். எல்லாப் பக்கமிருந்தும் டோச்சும் கையுமாக தடதட வென்று வந்து நிறைந்துவிட்டார் கள். ஒரே பரபரப்பு. "எனத் தி யன் எனத்தியன்’ 'தாரன், தாரன்" இந்த இரண்டு வார்த். தைகளுமே மாறிமாறி எதிரொ
6

லித்தன. அவர்களில் ஒருவனாக அத்து ஜப்பாரும் "எனத்தியன், எனத்தியன்? தாரன், தாரன்"
மீண்டும் ஒரு தடவை அதே மண் திட்டலில் ஏறி நின்றான் அத்து ஐப்பார். தேர்தல் களத் தில் சோடா கொடுப்பதற்காக மேடைக்கு ஏறி, கீழே பார்த்த ஞாபகம் உண்டு. இருட்டுக்குள் சூ ம் அப்படியொரு காட்சி அவ ணு க்குத் தெரிந்தது.
"எல்லாரும் கொஞ்சம் கேளுங்கொ'
இந்தத் தடித்த கரகரத்த குரல், அந்தப் பகுதியிலேயே எல்லோருடனும் FromTerrast பழகும் அத்து ஜப்பாருடையது தான் என்பது யாருக்குத்தான் தெரியாமல்போகும்? ஆனால் என்ன சொல்லப் போகின்றார் என்பதுதான் எவருக்குமே தெரி யாதிருந்தது.
"நீங்கெல்லாரும் ஊட்டுக் குள்ள பூந்துக் கொண்டு படுத்தா ஏழ மையத்தூட்டியளுக்கு முழிச் சீக்கப்பொக. ஒங்களியளுக்கு நெணவு வாரல்லயா. ஏலாத வங்கட மையத்தூடென்டா மறந்துபோற போல. ஒங்கெல் லாரேம் கூட்டிக்கொணு பொகத் தான் நான் இப்பிடி சத்தம் போட்ட."
எவருமே செய்யத் துணி யாத காரியத்தை செய்துவிட்ட அதுவும் ஒரு நல்லெண்ணத்தில் செய்த அத்துஜப்பாரின் பின் னால் பக்தர்கள் போல் எல்லோ ரும் நடந்தனர். ராஹில் கிழவி என்ன பாக்கியம் செய்தாளோ தெரியவில்லை. ei o u os கொண்டுபோகும் நேரம் கூட அவ்வளவு சன ம் சேரவில்லை யென்றுதான் பேசிக் கொண் டார்கள்,
*"சரி. இப்ப எப்பிடிச்சரி சனம் வந்திட்ட, தாரன் பயான் பண்ணிய? தாரச் சரி பெய்த்து கூட்டிக்கொணு வரேனுமே.”* சனத்துக்குள்ளிருந்து நி யாய மான வேண்டுதல்.
"கூப்பிடத் தேவில்ல. ஒதிப் படிச்சவங்க, ஞாயமானவங்க வரேனும், பெரிய எடமென்டா போலினில நிப்பாங்க. இவங் கட வேலவெட்டியப் பார்த்தா எனக்கு ஏ ச் சுத் தா ன் வார, இன்ஷா அல்லா சிக் கி ர மா நானும் எல்லாருக்கும் பேசிக் காட்டியன் " " இப்படி வைராக் கியத்தோட மு ன் னெழுந்த அத்து ஜப்பார், உண்மையில் பேசவில்லை. கோபத்தில் கொற் தளித்தார். அந்தக் கொற்தளிப்பு அடங்கும்போது என்ன அதி சயம். பன்னிரண்டு மணியாகி விட்டது.
அந்தச் சம்பவம் நடத் து ஓராண்டு நகர்ந்து விட்டது. இன்று அத்து ஜப்பார் மையத்து வீடுகளில் பயான் பண்ணுவதில் கைதேர்ந்தவராகி விட்டார்.
எங்கோ மணியொலித்தது. பன்னிரண்டரைதான். எழுந்து இரண்டு மூன்று மிடறு பச்சைத் தண்ணிரைப் பருகிவிட்டு.
1ஸொபஹ"க்கு அவ்வல் தக்பீருக்கே பொகோணும். இல்லாட்டி விடியவிடிய பயான் ஸொபஹல்லாம படுக்கிய , இப் பிடிச் செல்லுவானியள்.
பெருமூச்சோடு புரண் டு படுத்தார் அத்துஜப்பார்.
7

Page 11
சிற்றுடுக்கோ பேசுதில்லை எம் தேவியரே வாருமம்மா
-எஸ். ஆனந்தன்
உடுக்கு என்று கூறும்போதே எமது மனக்கண்ணுள்ளே நிற்பது நடராசப் பெருமானின் தோற்றமல்லவா? பெருமானின் திருக்கரத் தில் உடுக்கு திகழ்வதன் காரணம் பஞ்ச கிருத்தியங்களில் ஒன்றான படைத்தல் தொழிலை குறிப்பதேயாகும். படைத்தல் தொழிலுக்கு நாதமே வித்தாக உள்ளது. இந்த நாதத்திற்கு உடுக்கையே" உரு வகித்திருக்கின்றதென்றால் இதன் பெருமை எல்லா இசைக் கருவி களையும் தாண்டி முன் நிற்கின்றதென்றால் அது மிகையாகா தென எண்ணுகின்றேன்.
இன்றும் கிராமிய மக்கள் முக்கியமாக இசை வாத்தியமாக உடுக்கையே பாவிக்கின்றார்கள். கரகம், காவடி, அங்கப்பிரதட்டை போன்ற நிகழ்வுகள் - கோயில் பொங்கல், மடை . ஏன் தினசரிப் பூசைக்குக்கூட உடுக்கை அடிப்பதை நாம் காணக் கூடியதாக இருக்கும். இந்த வாத்தியத்தை வாசிப்பவர்கள் பாட்டுக்களைப் படித்த வண்ணம் தமது முழு உடலையும் வளைத்து ஆடி அசைந்து அடிப்பதும் மற்றவர்கள் அதற்குத் தாளம் போட்டுப் பிற்பாட்டுப் படிப்பதும் பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். இது கிராமங்களுக்கே உருத்தான ஓர் தனிக் கொடை என்றுதான் என்னால் கூறமுடியும்.
கோயில்களில் மட்டுமல்ல இவர்களின் இல்லங்களில் நடை பெறும் திருமண வைபவம், குடி பூரல் போன்ற ஏனைய விசேட காலங்களிலும் ஊரே ஒன்றுகூடிப் பாடி, உடுக்கை அடித்து மகிழ் வதை இன்றும் பருத்தித்துறையில் அமைந்துள்ள எனது கூழாவடிக் கிராமத்தில் நாம் காணக்கூடியதாக உள்ளது. இங்கு கிராமியக் 56) வடிவின் உயிர்த் துடிப்பு இன்னும் குன்றாது நிமிர்ந்து மனத்தைக் குளிர்விக்கின்றது.
வேம்பு, பலா, கிழுவை போன்ற மரங்களிலேயே இதன் கொட்டுக்கள் கடையப்படுகின்றன. புளியம் வேர், வேப்பம் வேர் போன்றவற்றிலேயே அடிக்கும் சவ்வுகளை ஒட்டும் சந்திர வளை யங்களை உருவாக்கிக் கொள்வார்கள், இவ்வளையத்தில் e துவாரங்கள் போடப்பட்டு இதனுாடாகவே இரு வளையங்களை யும் இணைக்கும் கயிறு கோர்க்கப்படும். இவ்வளையங்களை இணைத்த கயிற்றின் தடுப்பகுதியில் ஒரு நாடா சுற்றப்பட்டிருக் கும். இதையே கெச்சை என்பார்கள்.
இக்கெச்சையை உடுக்கு அடிக்கும் போது இடக்கையால் பற்றி தாளத்திற்கு ஏற்ற வண்ணம் இறுக்கியும் தளர்த்தியும் வலக்கை யின் இரு விரல்களான மோதிர விரலையும் சுட்டுவிரலையும் மட் டுமே பாவித்து இக்கருவியை இதமாக வாசிப்பார்கள். இதை வாசிக்க கையில் எடுத்த உடனேயே வணங்கிக் கொள்வார்கள், பின் கணபதிக்குக் காப்பு படிப்பார்கள் பொதுவாக
"முற்தி முந்தி விநாயகனே - அப்பா
முக்கண்ணனார் தன் மகனே
18

கந்தனுக்கு முன் பிறந்த - எங்கள்
கணபதியே காத்தருள்வாய்..." என்று தொடங்கி உடுக்கின் கொட்டு, சந்திரவளையம், கெச்சை போன்றவற்றிற்கும் காப்புப் படித்துப் பின் சரஸ்வதியை நினைத்து
"வாணி சரஸ்வதியே - நீயும்
வந்துதவி செய்யேனம்மா நாவிற் குடியிருந்து - எங்கள்
நல்லோசை மங்காமலே உடுக்கில் குடியிருந்து - தாயே
உத்தமியே காத்திடுவாய். s என்று பாடி விடயத்திற்கு வருவார்கள். தற்போது உடுக்கின் பாகங்களுக்கு காப்புப் படிப்பது அருகிக் கொண்டு வருகிறது: எடுத்த கருமம் முடியும் மட்டும் தமது கை உடுக்கை மற்றவர் கையில் கொடுக்க விரும்ப மாட்டார்கள். இப்படி மாறினால் நாதம் கெட்டு விடும். உடுக்குப் பேசாது என நம்புகின்றார்கள். உடுக்கின் வளையங்ககுக்குப் பாவிக்கும் தோல் மாட்டின் சவ்வை ஆகும். அடிக்கும் பக்கத்திற்கு குடல் சவ்வைப் பாவிப் பார்கள். இது சற்றுத் தடிப்பாகவும், கருமையாகவும் இருக்கும். மறு பக்கத்திற்கு மடிச் சவ்வையே பாவிப்பார்கள். இது கண்ணாடி போன்றதாகும். மெல்லியதாகவும் இருக்கும். இதன் விட்டமாக குதிரைவால் மயிர் அல்லது அது கிடைக்காத பட்சத்தில் தங்கூசி நூலும் கட்டுவார்கள். இது கட்டுவதால் நாதம் நன்றாக இருக் கும். அதாவது கிராமிய மொழியில் எங்கள் வழக்கில் சொன்னால் "உடுக்கு நல்லாய்ப் பேசும் இந்தச் சவ்வுகளைத் தண்ணிரில் ஐந்து நிமிடம் வரை ஊற வைத்து வேப்பம் பிசின் கொண்டு சந் திர வளையங்களில் ஒட்டுவார்கள்.
உடுக்குக் கொட்டுக்களை வெண்கலம், அலுமினியம் போன்ற உலோகங்களினாலும் செய்வதுண்டு. இதற்கும் முன் கூறியது போல் மரவளையங்களையே பாவிப்பார்கள். மர உடுக்கு அண்ணளவாக 3/4 றாத்தல் மட்டிலேயே இருக்கும். உலோகக் கொட்டு சற்றுப் பாரம் அதிகமானதால் சிலர் தவிர்ப்பதுடன் நாதத்திலும் வித்தி
unter b 2.67 GBQ Gresivuntrifas Gir.
அத்தோடு காஞ்சூரை என்னும் மரத்திலும் கொட்டுக் கடை வதுண்டு. இதைப் பற்றி பருத்தித்துறை கூழாவடியைச் சேர்ந்த திரு. மு. சின்னத்துரை என்பவரை நான் விசாரித்த போது உடுக் கைப் பற்றிப் பல தகவல் தந்தவர் காஞ்சூரம் கொட்டைப் பற் றிக் கூறத் தயங்கினார். இருந்தும் எனது வற்புறுத்தலின் பேரில் இதுபற்றி சிறிது கூறினார். இந்த உடுக்கை அடித்தால் ஏனைய உடுக்குச் சவ்வுகளை உடைத்து விடுமெனவும், இதை வீட்டில வைத்திருந்தால் அந்த வீடு கெட்டு விடுமெனவும், வீட்டில் உடுக்கை வாசித்தால் அயல் அட்டைக் குடிசைகள் நாசமாகுமெனவும் கூறி பதுடன் இக் கொட்டுக்குள் யந்திர மந்திரங்கள் எழுதிப் பேய் ஒட்டுவதற்குப் பாவிப்பார்கள் எனவும் கூறினார்.
மற்றைய தோல் வாத்தியங்களுக்கு உள்ளது போன்றே இதற் கும் சிறப்புத் தாளக் கட்டுக்கள் உண்டு. இது உடுக்குத்தரு என்று கூறப்படும். இதை மனதில் உச்சரித்தே பழகுவார்கள். நான் லிசா ரித்ததில் பெரும்பாலானோகுக்குத் தருத் தெரியவில்லை. ஆனால்
19

Page 12
பாட்டிற்குச் சரியாக வாசிக்கிறார்கள். இது தருத் தெரிந்த (psir னையோரின் வாசிப்பை அடிப்படையாகக் கொண்டு இவர்களின் பரீட்சையும் இப்படி அமைந்து விட்டது.
பருத்தித்துறை கூழாவடியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன் துறையை வதிவிடமாகவும் கொண்ட திரு. வ. இரத்தினம் என்ற எனது தந்தையார் நாட்டுக் கூத்துக் கலைஞர். இவர் நடிகமணி வி. வி. வைரமுத்துவின் நண்பருமாவார். இவர் இந்த கூடுக்குத் தருவை மிகவும் அழகாகச் சொன்னார். அதை இங்கு காத்தவ ராயன் நாடகத்தை அடிப்படையாக வைத்து சிலவற்றைத் தரு கின்றேன்.
பாடல்:- அக்காளும் மாரி தங்காளும் மாரி - இங்கே
ஆயிழைமார் அக்காளுக்கு ஏழு பேராம் 1. தரு: தாந் தாத்திற் தக்க
தாங்கிறத்தில்லாலம் பாடல்: ஆனை அடிக்குமடா - சாடமகனே
எட காத்தலிங்கா - உன்னை
அலியன் தான் தீண்டுமடா
2. தரு: தத்திமி தகசம் தகதிமி தகசம்
பாடல்: இலங்கு முப்புரி நூலும் சடையும்
பஞ்சாட்சரமும் துலங்கவே வெறித்துப் பார்த்த பார்வையுடனே நாரத மாமுனி தோன்றினார்.
3. தரு: சக்கரம் தாவரம் பாடல்: ஒம் என்னும் பிரணவ மந்திரத்துக்குள்ளே
ஆதி பராசத்தி ஆதிபெண் ஆழும்.
4. தரு: த தகுத தகு தகுகு
தகு தகுகு தொம் தொம். (இதைக் காவியத் தருவெனவும் கூறுவார்கள்)
உடுக்கு வாத்தியத்தையே தனியாகக் கொண்டு ஆரவல்லி, காத்தவராயன், பவளக்கொடி போன்ற இசை நாடகங்கள் ஆடப் பட்டது. இதற்கு ஆதாரமாகக் காத்தவராயன் நாடகத்தில் தடுக் காத்தான் வரும்போது
இங்கே வித்துவான் சங்கீதமுமல்ல வேறோர் வினோதமான நாதமுமல்ல பாலர் சிற்றுடுக்கைத் தானடித்து சிறப்பாக நாடகத்தை நடத்தி வைப்போம்." என்ற பாடல் சான்று கற்பித்து நிற்கின்றது. பிற்காலத்தில் ஹார் மோனியம் மிருதங்கம் பாவிக்கின்றார்கள். இது அரிச்சந்திரா, சத்தியவான் போன்ற இசை நாடகங்களின் ஊடுருவலாக இருக்
savintuò.
இந்த உடுக்கு வாத்தியம் தற்போதைய நவீன நாடக அரம் கத்திற்குள்ளேயும் சினிமாவுக்குள்ளேயும் சிறப்பு வாத்தியமாகப் பாவிக்கப்படுவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. O
20

சிற்றிலக்கிய ஏடுகளின் வரலாற்றிலே ஒரு சரித்திரப் புதுமை
இலக்கிய உழைப்பாளிக்கு இனிமை கலந்த பாராட்டு
சிற்றிலக்கிய ஏடுகளின் வரலாற்றிலேயே சரித்திர நிகழ் வொன்று 20 - 11 - 93 சனிக்கிழமை மாலை யாழ்ப்பா ணம் எழுத்தாளர் ஒன்றியத்தில் தடைபெற்றது. மல்லிசை பில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக - கால் நூற் றாண்டுக்கு மேலாக - அச்சுக்கோப்பாளராகக் கடமை புரிந்த சகோதரர் கா. சந்திரசேகரம் அவர்களது சேவை யைப் பாராட்டி ஒரு பாராட்டு விழா நிகழ்ந்தது.
பேராசிரியர் கா. சிவத்தம்பி தலைமை தாங்கினார். மல்லிகை ஆசிரியர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
"இந்தக் கெளரவம் சகோதரர் சந்திரசேகரத்திற்கு நடக் கும் நான்காவது பாராட்டு விழாவாகும். 10-வது ஆண்டு மலர் அறிமுக விழா திரு. பா ரத்தினசபாபதி அய்யர் தலைமையில் நடைபெற்ற பொழுது, பெருங் கவிஞர் தில்லைச்சிவன் இவருக்குப் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார். இந்தச் சம்பவத்தின் புகைப்படம் மல்லி கையின் அட்டைப் படமாக வெளிவந்தது. ašr67ř மல்லிகையின் 20 - வது ஆண்டு மலர் வெளியீடு திரு. வ. இராசையா அவர்களது தலைமையில் நடைபெற்றபொழுது திரு. சபா. ஜெயராசா இவருக்கு மேடையில் மலர் மாலை அணிவித்துக் கெளரவித்தார். அதன் பின்னர் மல்லிகையின் இருபத்தைந்தாவத வெள்ளிவிழா மலர் வெளியீடு மலையக முன்னணி எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தலைமையில் நடந்தபோது முதுபெரும் எழுத் தாளர் க. தி. சம்பந்தன் இவருக்குப் யொன்னாடை போர்த்திக் கெளரவித்தார்.
இன்று இவருக்கு இவரது மல்லிகைச் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி. பொற்கிழி வழங்கப் படும் மெய்யான பாராட்டு விழா நடைபெறுகின்றது. ஒரு இலக்கியத் தொழிலாளியின் பாராட்டு விழாவிற்குப் பல்கலைக் கழகப் பேராசிரியர் தலைமை தாங்குவது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். கொழும்பி லும், யாழ்ப்பாணத்திலும் மல்லிகையை நேசிக்கும் நண் பர்கள் இந்தப் பொற்கிழி வழங்கலுக்கு மனமுவந்து பணம் தந்து உதவினர். 17, 350 இதன் மூலம் திரட்டப்பெற்
2夏

Page 13
றது. இதை ரூபா இருபத்தையாயிரமாக முழுமைப்படுத்த வேண்டும். தொடர்ந்து இதை நாங்கள் கவனத்தில் வைத் திருக்கின்றோம்!' என நேர்ச் சம்பாஷணையில் தெரிவித் தனர். வேறு சிலர் வேட்டி, சால்வை போன்றவற்றை அவருக்கு அன்பளிப்புச் செய்ததையும் நன்றியுணர்வுடன் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்" என்றார்.
விழா நாயகனுக்கு மலர் மாலை அணிவித்து தெணியான் அவர்கள் பேசும்போது 'சந்திரசேகரம் அவர்களை மல்லி கையை விடுத்துத் தனித்துப் பார்க்க இயலாது. தன்னை யும் தனது உழைப்பையும் மல்லிகைக்கு நல்கி உழைத்து வரும் சந்திரசேகரத்திற்கு இலக்கிய உலகில் பல நண்பர் கள் உள்ளனர். அவரை மனதார மதிக்கின்றனர். சில வேளைகளில் ஜீவாவை விட, சந்திரசேகரத்திற்கே நாங் கள் பயப்படுவதுண்டு" என்றார்.
செங்கை ஆழியான் பொன்னாடை போர்த்திக் கெளர வித்தார்.
அவர் பேசும் போது குறிப்பிட்டதாவது. "முதலில் இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஜீவா என்னிடம் கூறும் பொழுது இதை ஒரு விளையாட்டாகத்தான் நான் முதலில் கருதி னேன். இப்படியொரு நிகழ்ச்சியில் எனக்குச் சகோதரர் சந்திரசேகரத்தை கெளரவிக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தை நான் என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன். எப் பொழுது மல்லிகைக்குப் போனாலும் என்னை எழுதும் படி அடிக்கடி கேட்டுக் கொண்டவர் இவர். மல்லிகை போன்ற ஓர் இதழுக்குச் சந்திரசேகரம் போன்ற ஒரு உழைப்பாளி கிடைத்தது ஜீவாவுக்குக் கிடைத்த ஒரு பெரிய செல்வம்" என்றார். பொன்னாடையை "மகா ராணி க. சோமசேகரம் அவர்கள் தந்துதவினார். ரூபா 17, 350 அடங்கிய பணப்பையை வந்திருத்த அனை வரின் சார்பாக டாக்டர் எம். கே. முருகானந்தன் வழங் கினார். 'உண்மையாகவே இதற்காக நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். பல காலம் பழகியவர் சந்திரசேகரம். அவருக்கு இந்தப் பெரு விழா சகல வழிகளிலும் தகுந் தது. அவரை மனமார நேசிக்கும் பலர் இங்கு கூடியிருந்து அவரைக் கெளரவிப்பது அவருக்குக் கிடைத்த பெரும் , Gugo’’ Taiv prrr.
திரு. ச. பாலசுந்தரம். வன பிதா பிரான்ஸிஸ் ஜோசப் கவிஞர் தில்லைச்சிவன், திரு. எஸ். சிவலிங்கராசா ஆகி யோரும் வாழ்த்திப் பேசினர். தொடர்ந்து திரு. ராஜன் பூபாலசிங்கம் மலர் மாலை சூட்டினார். நிறைவாக திரு. கா. சந்திரசேகரம் அனைவருக்கும் நன்றி கூறினார். இவ் விழாவில் கணிசமான கலைஞர்கள், பெருமக்கள் கூடியிருந்து சிறப்பித்தது குறிப்பிடத் தக்கது.
- நவின்
22

இலக்கிப உற்பத்தி முறையும் பராதீனப்படுத்தப்படாத உழைப்பின் கணிப்பும்
மல்லிகைச் சஞ்சிகை அச்சுக்கோப்பாளர்
திரு. சந்திரசேகரத்தின் பாராட்டு விழா
வின் பொழுது 20 - 11-93 ஆற்றப்பட்ட உரையின் சுருக்கம்.
கார்த்திகேசு சிவத்தம்பி
இந்த வைபவம் மிகவும் அசாதாரணமானது. மல்லிகைச் சஞ்சிகையில் அதன் 'அச்சுச்சாதன உழைப்பாளி" யாகவுள்ள திரு. சந்திரசேகரம் மல்லிகையில் தொடர்ந்து 25 வருடகாலம் வேலை செய்து வந்துள்ளமையைப் பாராட்டி மல்லிகையின் ஆசி ரியர் நண்பர் டொமினிக் ஜீவா எடுக்கும் இந்த விழா மிகவும் அசாதாரணமானது. மல்லிகையோடும், மல்லிகையின் இலக்கியல் கொள்கையோடும், அது பிறந்த நாள்முதல் தொடர்பு கொண் டுள்ள எங்களுக்கு மிகுந்த திருப்தியைத் தருகிறது.
இந்த இலக்கியச் சிறு சஞ்சிகையின் இந்த முயற்சி இரண்டு முக்கிய விடயங்கள் பற்றி தமது சித்தனையை ஈர்க்கின்றது.
முதலாவது "இலக்கிய உற்பத்தி" பற்றிய ஓர் உண்மையா கும். இன்றைய உலகில், மற்றைய பொருட்கள் உற்பத்தி செய்து விநியோகிக்கப்பட்டு நுகரப்படுவதுபோல் இங்கும் ஒரு 'உற்பத்தி papald'' (Mode of Literary Propuction) Tsir us sirty airG).
இந்த இலக்கிய உற்பத்தி முறையானது நாட்டின் பொதுவான உற்பத்தி முறையிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாதது. இதற்கு ஒரு கருத்து நிலைத்தளம் உண்டு. அது பற்றி மஷறே (Macherey) ஈசின்ற்றன் (Eoytentrn) முதலியோர் எடுத்துப் பேசியுள்னளர். அவைபற்றிக் குறிப்புரை கூறுவது அல்ல எனது இப்போதைய
u Gorf.
நான் இங்கு அந்த இலக்கிய உற்பத்தி முறைமையின் "பெளதீக" யதார்க்தம் பற்றி அது எத்துணை அவசியமானது என்பதையே வற்புறுத்த விரும்புகிறேன். நூல்களைப் பொறுத்த வரையில் நாம் பிரதானமாக ஆசிரியர் - வாசகர் என்ற சமன்பாட்டுக்கே பழச் கப்பட்டுள்ளோம். இன்று, குறிப்பாகச் சஞ்சிகைகள் வளர்ந்ததன்
Sesiw6wrif ܗܝ
23

Page 14
ஆசிரியர் - Lu Bull_unrerrif - 6 T F asrt GT sáv 66ör sp Os nr *Li ris குப் பழகியுள்ளோம்.
அவ்வாறு பழக்கப்பட்டாலும் அதுபற்றி ஆழமாகச் சிந்திப்ப தில்லை. நாம் அதனைச் சிந்திக்கப்பட வேண்டாத ஒரு இருப்பு நிலை உண்மையாகவே கொள்கிறோம். அந்தப் பின்புல உழைப் புக்கள் பற்றிச் சிந்திப்பதேயில்லை.
இது அச்சு முறைமை ஏற்படுத்திய மனிதப் பராதீனம். ஆனால் விச்சுக்கு முந்திய தமிழ் இலக்கியங்க்ளின் உற்பத்தி முறைமை பற்றிச் சிந்திப்போமேயானால் இது, தொழில், தொழில்நுட்பம் வளராத காலங்களில் எத்துணைச் சிக்கலானதாக இருந்திருக்க வேண்டும் என்பதை உணர்தல் வேண்டும். உதாரணமாகக் 'கம்பன்" பாடல்களைத் தானே எழுதினர். அல்லது “கற்றுச் சொல்லி" என்னும் எழுதுவினைஞனைப் பயன் படுத்தினா? அப்படியானால் தமிழின் நீண்ட இலக்கியங்களின் படியெடுத்தவர்
கள் யாவர். அந்தக் காலத்து இலக்கிய உற்பத்தி முறைமையில்
அவர்களுக்கு எத்தகைய இடம் இருந்தது?
நமது தமிழிலக்கிய வரலாறுகளும், இலக்கிய வரலாற்றாசிரி யர்களும் இந்த இலக்கிய உற்பத்தி முறைமை பற்றிப் பேசுவதே யில்லை. இலக்கியங்கள் தான் தோன்றியா?
ஏடுகள் எவ்வாறு தயாரிக்கப்பட்டன? அவை எவ்வாறு பரப் பப்பட்டன? இவற்றைச் சார்ந்தோர் யார்? அதிர்ஷ்டவசமாக வைணவப் பாரம் பரியத்துக்கு இது ஒரு சிறிது உண்டு.
நமது தமிழிலக்கியங்களில் பெரும்பாலானவை பேணப்பட்ட வையே என்பதால் இந்தப் பிரச்சினை பெரிதாகின்றது. தமிழ் நாட்டின் "காயஸ்த' குழுவினர் யார்? பெரும்பாலான தமிழ் இலக்கியங்கள் அரசவைT இலக்கிதுங்களாக இருப்பதற்கான கார ாணம், இந்த உற்பத்திச் சாதனங்கள், அதன் உழைப்பாளிகள் அரச மையத்தைத் தான் சுற்றி இருந்தவர்களா?
நண்பர் சந்திரசேகரத்துக்கு நாம் இன்று நடத்தும் பாராட்டுத் தமிழிலக்கிய மாணவர்களிடையே இதுபற்றிய சிந்தனைக் கிளர்ச் சியை ஏற்படுத்த வேண்டும்.
திரு. சந்திரசேகரத்தின் பலம் அவர் நண்பர் ஜீவாவின் மிகப் பெரிய விமரிசகராகவும் ஊக்குவிப்பாளராகவும் விளங்குவதுதான். நம்பிம் பலர் சந்திரசேகரத்தின் இடைவிடாத தூண்டுதல் காரண மாகவே மல்லிகையில் கிரமம் தவறாது எழுதி வந்துள்ளோம்.
அத்தவகையில் மல்லிகையை "ஆக்குவது" (சோற்றை ஆக்கு வது போல்) சந்திரசேகரம் தான்.
நண்பர் ஜீவா தனது வரவேற்புரையின் பொழுது தொழிலாள வர்க்கத்துக்குரிய முக்கியத்துவத்தினைக் கொடுத்ததாகச் சொன்
TTi .
நான் இங்கு ஒன்றை மிக ஆணித்தரமாகச் சொல்ல விரும்பு கின்றேன். மார்க்ஸிஸம் என்ற சிந்தனைக் கோட்பாட்டின் அடித் தளம் அது மூளை உழைப்புக்கும் உடலுழைப்புக்குமுள்ள வேறு
盛4

பாட்டைக் காண்பதுதான். மூளையுழைப்பு மேலானது ஒன்ற கருத்து நிலையிலேயே உலகம் வளர்ந்துள்ளது. மனிதப் பராதீனம் தொடங்கியமைக்கும், தவிர்க்கப்பட் முடியாது வர்ளந்தமைக்கும் இந்த மூளையுழைப்பு - உடலுளைப்பின் வேறுபாடுதான் கார ணம். முதலாளித்துவத்தின் ளளர்ச்சி இதனைக் காட்டுகின்றது இன்று ஏற்பட்டுள்ள முகாமைத்துவப் புரட்சி (Managonal Revoin
10) என்பது இந்த மூளையுழைப்பின் முதன்மைப்பாடுதான்.
மல்லிகை திரு சந்திரசேகரத்தைப் பாராட்டுவதன் மூலம் மூளை உடல் உழைப்புச் சமத்துவத்தை வற்புறுத்துகிறது. இந்த விழாவில் நான் காணும் சிறப்பு இதுவே. திரு. சந்திரசேகரம் நீண்ட வாழ்வு பெறவும், மல்லிகை நின்று தொடரவும் என் வாழ்த்துக்கள்.
ஒரு கருத்து
பேராசிரியர் சிவத்தம்பியின் தலைமையில் அச்சுக்கோப்பாள ராகக் கால் நூற்றாண்டுக்கு மேலாக கண்ணியமாக உழைத்த நிலையில் தளம்பாத சந்திரசேகரம் அவர்களுக்கு மல்லிகைப் பந்தல் விழாவெடுத்தது. டொமினிக் ஜீவா ஒரு உழைப்பாளிக்கு விழா வெடுத்துப் புரட்சி செய்திருக்கிறார். இதுவே வரலாற்றில் முத் தான முதல் விழாவாக அமைந்துவிட்டதெனலாம்.
உடல் உழைப்பிற்கும், அறிவு உழைப்பிற்கும் பேதம் காட் L-nr.95 பெரு திலைதான் கார்ல்மாக்ஸ் கண்ட கம்யூனிசக் கோட்பாடு. இதனைச் சாதனை செய்த ஜீவாவைப் பாராட்ட வேண்டும்.
அச்சுக் கோப்பாளருக்கு கற்றுச் சொல்லி என்ற பதம் குறிா பதை பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் துல்வியமாகத் தமக்கே இயல்பான ஆழமான, ஆய்வுக் கண்ணோட்டத்துடன் கூறியிருந் திார்கள். பேனா மன்னர்கள், அம்மன்னர்கள் படையலை ஆவ லோடு உண்டு மகிழும் ஆர்வலர் பலர் கூடிய அரங்கிலே சந்திர சேகரம் என்ற உழைப்பாளி கெளரவிக்கப்பட்டார். பொன் ா-ை பூமாலை என்னாளுமுள இனிய செந்தமிழ், புகழ்மாலை இத்தியாதி கெளரவம் அவருக்கு
ஜீவாவின் ஜீவன் மல்லிகை என்ற திங்கள் இதழ் என்றிருந்த வாசக நேயர்களுக்கு ஜீவாவின் ஜீவன் சந்திரசேகரம் என்னும் உண்மை உழைப்பாளி என்பது அன்றுதான் புரிந்தது. மல்விசை பின் ஜீவ நாடியும் அன்னாரே என்ற அழுத்தம் அன்று புரிந்தது. எங்கள் கரங்களில் கண்ணுக்கும் கருத்திற்கும் விருந்தளித்து வரும் மல்லிகை மலர்ந்து மணம் பரப்ப இருந்து பணி செய்யும் தளர்வறியாத் திருவினையான் சந்திரசேகரம் உழைப்பாளிகளின் முந்திய முத்து. இத்தகைய பண்பாளர்கள் எங்கள் நாட்டின் சொத்தாக வேண்டும். இவரை அரங்கிற்குக் கொண்டு வந்த மல் விகை ஆசிரியர் பாராட்டுக்குரியவர். ..)
யாழ். கோட்ட sá síðu' usVöflu 17 ent. 角。 வேலாயுதம்
25

Page 15
s-As-"ae •-e *s-" *--
කුණ්‍යක්‍ෂාක්‍ෂණයීIඛ) Jylff60III
※
ASAMR4MNAMN AMNMNMMLM~ 4MMMN8
ச. முருகானந்தன்
சிமகாலப் பிரச்சினையைத்
தான் மையமாக வைத்து எழுத ஆராம்பித்தான். கதை எங்கெங் கெல்லாமோ தடம் புரண் டு வழமையான சாதி, சீதனம் என்ற கூட்டுக் குள் ளே யே அமைந்து விட்டிருந்தது. எனி னும் சொல்ல முடியாத ஆரோக் கியமும் நம்பிக்கையும் அந்தச் சிறுகதையை மறுபடியும் வாசிக் கும் போது அவனுக்கு ஏற்பட்
டது. ஒ. எவ்வளவு காலத் திற்குப் பின்னர் மறுபடியும் எழுதியிருக்கிறான் அவனுக்கே
புரிய அந்த அழகான தமிழ் நடை நகைச்சுவைப் பாங்கோடு மனதைத் தொடும் வண்ணம் கட்டுக்கோப்புடன் அ  ைமந்த இறுக்கமான பாணி.
நெருக்கடி இறுக்கமடையத் தொடங்கிய ஆரம்ப காலங்களில் இலங்கையை விட்டு வெளியேறி கனடா வந்தது நேற்றுப் போலி ருக்கிறது. அதற்கிடையில் பத்து வருடங்களாகி விட்டன.
அமைதியான யாழ்ப்பாணக் கிராம வாழ்வில் குறா வளி போல் நெருக்கடி வந்த பின்னர் அமைதியைத் தேடியும், சம்பா தித்துச் சீவியம் தடாத்தவும்
26
இங்கு வந்து ரொரன்றோ நக ரில் வாழ்வை ஆரம்பித்தபோது எல்லாம் ஒருவிதமான இயந்திர LD (Luuditor Gafuda as alsTibshir கவே அவனுக்குப் பட்டது. உச் சில் அம்மன் ஆலய முன்றலில் நண்பர்கள் கூடி உலக விவகா ரங்களையும், இலக்கிய அனுப வங்ளையும் பகிர்ந்து கொள் வது, அப்புத்துரை வீட்டு வேப்ப மரத்தின் கீழ் நேரம் போவது தெரியாமல் சீட்டாடுவது, இர விரவாக மேளக்கச்சேரியும் திரு விழாவும் பார்ப்பது - இப்படி எதுவும் இங்கில்லை. உாரிலிருந்து புறப்பட்ட காலத்தில் அங்கும் நிலைமை தலைகீழாக மாறிவிட் டதுதானே?
ஒரு அமைதியான அதிகா லைப் பொழுதில் கிராமத்துள் பிரவேசித்த இராணுவச் சிப்பாய் களின் நடவடிக்கையின் போது அப்பாவி அப்புத்துரை, சின் ணம்மா, பிரசாந் எனப் பலபேர் Lu 6ú Murrawg. திரவியம், ф шт ளன் போன்ற அப்பாவி இளை ஞர்கள் பலர் கைதானது, அவன் அல்லும் பகலும் அ ய ர Tது உழைத்துக் கட்டிய டு உட் படப் பல வீடுகளும் உடமைகளும் gak6GODrumraur Sráv6wmTb asawony போல் இருக்கிறது. தயாளன்,

திரவியம் முதலான இளைஞர் களுக்கு என்ன நடந்தது என்று இன்று வரை தெரியாது என போன வாரம் இலங்கையிலி ( ந்து இக்கு வந்திருந்த ஜெயா னந்தன் கூறினான். நாடே சுடு 4ாடு போல் ஆகிவிட்ட பல கதைகளை அவன் கூறக் கேட்ட போது நெஞ்சு பொருமியது. இத்தனைக்கும் மத்தியில் நெஞ் கரத்தோடு பிறந்த மண்ணுக் காக தங்களையே அர்ப்பணிக் கும் இளைஞர்களையும், யுவதி களையும் பற்றியும் ஜெயானந் தன் கூறினான்.
இலங்கையை விட்டு கனடா வந்த பின்னர் அவனது இலக்கி யப் பணி ஸ்தம்பித்து விட்டது. அங்கிருந்த போது வர்க்க முரண் பாடுகளையும், சாதியடக்கு முறைகளையும், சீதனக் கொடு மைகளையும் பற்றி பல கதை கள் படைத்துள்ளான். சி ல போட்டிகளில் பரிசில்களும் பெற் றுள்ளான். நாடறிந்த எழுத்தா ளர்களில் ஒருவனாகத் திகழ்ந்த அவனது எழுத்துப்பணி இட மாற்றத்துடன் ஸ்தம்பித்து விட் டிருந்தது. கடந்த வாரம் இங்கி ருக்கும் இலக்கிய ஆர்வலர் ஒரு வர் அவனை அணுகி, தான் ஒரு சஞ்சிகையை வெளியிட இருப்பதாகவும், அதன் முதலா வது இதழில் பிரசுரிக்க ஒரு கதை வேண்டுமென்றுக் கேட்டி ருந்தார். உறங்கிப்போயிருந்த அவனது இலக்கிய வேட்கைக்கு அவரது வேண்டுகோள் ஒரு உந்து சக்தியாக அமையவே இந்தச் சிறுகதை பிறந்தது.
எதுவும் தாமதமாகி விட வில்வை. இந்த இடத்தில் மறு படியும் எழுத்துலக வாழ்க்கையை ஆரம்பித்தால் கூட எவ்வளவோ முன்னேற முடியும் என்று தோன் றியது. எந்த இடத்தில் மறுபடி பும் இந்த ஊற்றுத்திறக்கும் என்
27
பதுதான் இதுவரை தெரியாம
லிருந்தது. இன்று தெரிந்துவிட்
டது. வெறும் வேலை, வீடு, மனைவி, காசு என்ற தவிர்க்க முடியாத நித்திய கருமங்களுக்கு அப்பால், அவனுடைய இன்றி பமையாத மறுபுறமாக இருக் கின்ற எழுத்துப்பணியில் வேக மாக மறுபடியும் செயற்படலாம் என்ற உறுதியான நம்பிக்கையை அந்தச் சிறுகதை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
மேசையிலே இருக்கின்ற காகிதங்கள், பேனை சில புத்த கங்கள் இவைதான் அவனது உலகம் போல் பட்டது அவ னுக்கு. பிறந்த நாட்டில் வீடு எரிந்தபோது எவ் வள வோ சொத்துக்களை இழந்திருக்கின் றான். அவற்றில் அவனது சிறு ததைகள், கவிதைகள், நாவல் கள் அடங்கிய புத்தகங்கள், பேப்பர்களே பெரும் இழப்பாக அவனுக்குப் படுகின்றது. அவன் ஒரு நடுத்தர அரச உத்தியோ கத்தனாக இருந்தமையினால் பிரசுரமான அவ ன து கதை களைப் புத்தகமாக வெளியிடும் வாய்ப்பு அப்போது அவனுக்குக் கிட்டவில்லை. இன்று பணம் அவனது கையில் புரள்கின்ற போதுகதைகள் அவனிடமில்லை. எனினும் இவ்வளவு நாட்கள் அவனது இலக்கிய ஊற்று, பிரச் சினைகள் மத்தியிலும், விகார மடைந்துவிட்ட மனத்திலும் பத் திரமாக இருந்ததில் மனது துள் ளிக் குதித்தது 7 FIT60s இலக்கியப் போட்டியில் பெகு மிதத்துடன் பரிசுவாங்கியது. பின்னர் நாடளாவிய ரீதியில் பரிசு வாங்கியது எல்லாமே மன தில் அரங்கேறின.
இவ்வளவு வயதிற்கும் அணு பவத்திற்கும் பின்னர் இப்போது கிட்டியிருக்கின்ற புதுப் பலத்து டன் மீண்டும் எழுத ஆரம்பித்

Page 16
தால் எவ்வளவோ சாதித்து விடலாம் என்று அவனுக்குத் தோன்றியது.
சமைத்துக் கொண்டிருக்கிற அவனது மனைவியை அழைத்து கதையை வாசித்துக் காட்ட வேண்டும் போலிருந்தது. சில விசயங்களில் அவள் வித்தியாச மானவளாகத்தான் இருந்தாள். அவளது கலாரசனைதான் அவள் மீது அவனுக்குக் காதலை ஏற் படுத்தியது. சீத ன ப் பிரச்சி ைேனயை மையமாக  ைவ த து அவன் எழுதிய கதை ஒன்றைப் பாராட்டி அவள் எழுதிய கடித மூலம் ஆரம்பித்த பேனா நட்பு இறுக்கமாகி, சந்திப்புகள், இலக் கிய உரையாடல்கள் என் று தொடங்கி, பருவக் காற்றின் சுழலிலிருந்து இருவரும் தனித்து நிற்க முடியாமல் சிக்குண்டு காதல் பிறது வளர்ந்து, பெற் றோர் நிராகரித்தும் கூட, சீத னம் எதுவுமின்றிக் கைப்பிடித்து எதிர்நீச சல் அடித்தது எல்லாம் பழங்கதை. வாழ்க்கைச் சுமை கள் அழுத்திய ஆரம்ப காலங் களில் சீதனம் அவன் மனதில் நெருடியதுண்டு.
* சந்திரா, இங்கே வாரும்' என்ற அழைப்புக்குப் பதில் குரல் இல்லாவிட்டாலும் பாத்திரங்க ளின் ஒசை. கரண்டி விழுந் , சத்தம் எ ல் லா ம் கேட்டது. அவனுக்குத் தவிப்பாக இருந்தது. சந்திரா. மீண்டும் அழுத்த மாகக் கொஞ்சம் உரத்துக் கூப் பிட்ட பின் ன ர் கரண்டியும் கையுமாக எட்டிப் பார்த்தாள்
அடுப்பில வேலை. ஏன்.?" **இத்தக் கதையை ஒருக் க்ால் வாசிச்சுப் பாரும்'
"வையுங்கோ, பிறகு வாசிக் கிறன்' அவள் மறுபடியும் சமை யலறைக்குப் போய்விட்டாள். அவனுக்கு ஏமாற்றமாகப் போய் விட்டாலும் அவளது நிலைமை புரிந்தது.
- 28
சிறிது நேரத்தில் சமயலை முடித்துக் கொண்டு அவனெ திரே
வந்தமர்ந்தாள். அவன் வாசித் துக் காட்ட ஆரம்பிதததும், "தாருங்கள்" என்று பிடுங்கி
எடுத்துக் கொண்டாள். அவள் வாசித்து முடியும் வரை அவன் ஆவலுடன் அவளையே பார்த் துக் கொண்டிருந்தான். "பரவா யில்லை" என்று ஒரு சொல் விமரிசன த் துட ன் எழுந்து சென்று துணி தைக்கும் வேலை யில் ஈடுபட்டாள். அவனுக்கு மனதில் எங்கோ அடிவிழுந்தது போலிருந்தது. கொஞ்சம கூட அவனது மனநிலைக்கு ஏற்காத ஒரு சொல் விமர்சனத்தை எப் ப . இவளால் சொல்ல முடிந் தது? "எனது சந்திராவா? அவ னால் நம்ப முடியவில்லை. எனி னும் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு மீண்டும் அவளை நாடி "கதை எப்படி?" என்றான்.
தையல் மிசினிலிருந்த பார் வையை நிமிர்த்தாமல் 'நடை நல்லாத்தானிருக்கு. ஆனா. அரைச்ச மாவையே அரைச்ச மாதிரி. சேம் ஒல்ட் தீம்..”* என்றாள்.
அவனுக்கு முகம் சுருங்கி விம்டது. எனினும் இப்போது கோபமேற்படவில்லை.
மத்தியானம் அவனால் சரி யாகச் சாப்பிட முடியவில்லை. சாப்பிட்ட பின்னர் கதையை மறுமடியும் வாசித்துப் பார்த் தான். நன்றாகத்தான்னிருந்தது. போட்டிக்கு அனுப்பினால் பரிசு கூடக் கிடைக்கலாம். நீண் ட இடைவெளிக்குப் பின்னர் பிரச வித்த தாயின் ஆரோக்கியமான குழந்தை போல உணர்ந்தான். மாலையில் சர்மா வந்திருந் தார். இடைக்கிடை சந்தித்து உலக விவகாரங்களை அலசுவது அவர்களது வழக்கம். சர்மாவும் ஒரு இலக்கிய ரசிகர். இவரிடம் காட்டினால் என்ன?

sease seabes (98.806 as
புதிய ஆண்டுச் சந்தா
DG696.25
1994-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து புதிய சந்தா விபரம் பின் வருமாறு:
1 0 - 0 ሳ ஆண்டு சந்தா ரூபா 100 - 90
தனிப் பிரதி ரூபா
(ஆண்டுமலர் தவிர,
தபாற் செலவு உட்பட) தனிப்பிரதிகள் பெற விரும்பு வோர் தகுந்த தபாற் தலைகளை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம
மல்லிகை
234 B, காங்கேசன்துறை வீதி LurrgbŮurvauserb.
ap«SX&béodoro4e తిరితిశశిథిలిచిణి*
அவன் கதையை எடுத் து அவரிடம் நீ. டினான்.
"ஒ நீண்ட இடைவெளிக் குப் பின்னர் எழுதியிருக்கிறீர் assir. 6767 குதூகலமாக
வாங்கியவர் ஒரே மூச்சில் படித்து முடித்தார். அவன் ஆவளோடு அவர் முகத்தை நோக்கினான்.
of A (objet- அழகான எழுத்து நடை அப்படியே இருக் திறது. உங்களுடைய கரு ப் பொருள் கூட அப்படியே தானி ருக்கு அவர் என்ன சொல்கி றார் என்று Hflag கொள்ள இவனுக்குச் சற்று நேரம் பிடித் தீது,
żğ
**உலகம் எவ்வளவோ மாறி
வருகுது. அதிலும் எமது தாய்
நாடான இலங்கையில் கடந்த பத்து வ ரு டங்க ளில் எத்த னையோ மாற்றங்கள், பொரு ளாதார அழிவுகளின் மத்தியிலே பலப் பல எழுச்சிகள் போன வருஷம் நான் இலங்கைக்குப் போய் லந்தோன். அங்கே இப் போது சாதி என்கிறது எல்லாம் பெரிய பிரச்சினையான விசய மில்லை, எல்லோரும் நிறைய மாறியிருக்கிறார்கள். சீதனம் கூட மருவி வருகிறது. வெளி நாட்டிலுள்ள எமது இளைஞர் கள் சீதனத்தை விருமபுகின்ற தி ல்  ைல. அதுமட்டுமில்லை பெண்கள் சுதந்திரமாகச் செயற் படுகின்ற ஒரு நிலை உருவாகி யிருக்கு போராட்டத்தில் நேர் வெற்றிகளை விட பகக வெற்றி களாக இவை எல்லாம் ஏற்பட் டிருக்கு." சர்மா ஒரு நீண்ட பிரசங்கமே செய்துவிட்டார். அவனுக்கு ஏமாற்றமாக இருந் ዶbፊmፃ•
சர்மா வி ைட பெற்று ச் சென்ற சிறிது நேரத்திற்கெல் கெல்லாம் சுகன்யா வந்துவிட் டாள். சுகன்யா சிறுவயதிலேயே கனடா வந்து ஆங்கில மூலம் கல்வி பயில்பவள். தமிழ் படிக் கும் ஆசையில் அவனிடம் பாடம் கேட்க வரும் பருவச் சிட்டு, நல்ல வாயாடியும் கூட. அவளிடம் கதையைக் கொடுத் தான்.
ஆறுதலாகத் தடங்கித் தடங்கி வாசித்து முடித்தாள். அவன் ஆவளோ டு அவளது அபிப்பிராயத்திற்காகக் காத்தி ருந்தான்.
6 அங்கிள் நன்றா எழுதியி ருக்கிறீங்க. ஆனா இந்தச் சாதி தேனம் இதற்கெல்லாம் அர்த் தம் புரியவில்லை" அவள் அழ காகச் சிரித்தாள்
O

Page 17
്നും അഞ്ചഃഅം 18ആം ܕ***ܗܝurawa தில்லைச் சிவனின் கவிதைச் சுயசரிதை
‘நான்?
ஒரு நோக்கு
", "പ്രഫുൽ ബ്","ബ"
க. சச்சிதானந்தன்
மனவோசையென்றொன்றுண்டு. அதிலிருந்துதான் கவியோசை வரும் எடுத்துக் கொண்ட பொருளின் உந்துதலால் மனத்தில் எழுவது மணவோசை. அதற்கேற்ற ஒரு செய்யுளோசை வரும்போது தான் மணவோசை கவிபோசையாகும். நாரதர், இராமன் கதை பை த காவியமாக்கும்படி வான்மீகியைக் கேட்டார் . வான்மீகிக்கு எந்தச் செய்யுளோசையில் அந்தக் காவியத்தை எழுதுவது என்ப துதான் பெரிய பிரச்சினையாய் இருந்தது. ஆற்றங்கரைக்குச் சென் து தெளிந்த நீரைப் பார்த்துச் சிந்தித்துக் கொண்டிருந்தார் எதுவுமே அவர் மனத்துக்கு வரவில்லை. சிந்தித்தார். அப்பொழுது வேட னின் அம்பால் அடிபட்ட சோடியை நினைத்து மற்றக் கிரவுஞ்சம் அலறத் தொடங்கியது. அந்த அலறலிலேதான் வான்மீகி இராமா பனக் காவியத்தின் செய்யுளோசையைப் பெற்றார். அவ்வாறே தில்லைச்சிவனுக்கு அவர் எடுத்துக் கொண்ட சுயசரிதத்துக்கு வாய்ப்பர்ன ஒரு செய்யுளோசை அவருக்கு மனவோசையாயிற்று இதுவே "நான்" என்ற அவருடைய குறுங்காவியத்தின் வெற்றிக் குக் காரணமானது நூல் முழுவதும் பரந்து கிடக்கும் இந்த ஒசையையே அடிக்கடி என் காதுகளில் கேட்கிறேன். அடிக்கடி என்வாய்,
பட்டாடை சரசரக்கும் பவுடர் நாறும்
பக்கத்தில் ஆளரவம் தெரியுமாங்கே மெத்த இளைத்தவன் போலக் கால்கை நீட்டி
மிக எளிதாய்ப் புரண்டுதுயில் போற்கிடப்பேன் சற்றிருந்து தளிர்க்கரங்கள் முதுகை நீவ
சரித்து செவிக் கினிதான தமிழின் சொல்லால் கொட்டுபனிக் குளிருள்ளே வாங்கோ என்று
குயில் கூவத் துயில்வாங்கும் கூடல் வீடே. என்று சொல்லிக் கொள்ளும்.
நான் என்பது தில்லைச்சிவனின் சுயசரிதமன்று. அது, மாசற்ற மனமுள்ள அப்பாவிக் கிராம மக்களின் ஆறுதலான இன்ப வாழ்க் கையின் சித்திரம். அதன் சில காட்சிகள் வேலணைப் பகுதிக்குப் பொருந்துமாயினும், கிராம மக்களின் அமைதியான இன்ப வாழ்க் கையை எடுத்துக் காட்டுவதனால் எந்தக் கிராமத்துக்கும் இது
30
 

பொருந்தும். நகர வாழ்க்கையில் ஏமாற்றமும், கபடமும் போலி யும், அவசரமும், போட்டியும் மனித மனத்தைத் திருப்திப்படுத்த விடாது. ஆறுதலாக, ஒரு காலைக் கதிரவனின் அழகை இரசிக்கக் கூடிய மனத்தைக் கெடுக்காது கிராம மக்கள் மாசுபடாதவர் கள். அவர்களின் முகத்தின் சிரிப்பிலே, அவர்களின் வரவேற்பிலே உள்ளும் புறமும் வேறாகாத அன்பொன்றுண்டு. நகரத்திலே நாக ரிகமாகக் கைகுலுக்குவான். ம ன த் தி லே பொறாமைக்கனல் கொழுந்துவிட்டெரிய, தலைமயிருக்குக் கறுப்பு வண்ணமிட்டு, பல் லும், வேறு அணிகளும் செயற்கையாகப் பொருத்திய ஒரு கூட் டம் நகரை அலங்கரிக்கும். இயற்கையழகோடு வரம்பில் தண்ணிர்ச் குடம் கொண்டு ஒரு கிராமக் கன்னி வருவாள். அவளும் அந்த வரம்பின் பக்கலிலே பூத்திருக்கும் மலரும் ஒன்றே. அந்த மக்களின் இனிப்பான வாழ்க்கையே "நான்" என்ற காவீபம், அது தில்லைச் சிவனை ஒரு சரவண்ையூரானாகக் கொண்டு இழைக்கப்பட்டது. இதைப் படி க்குத் தோறும் எனது வாழ்க்கையின் ஒரு பிரதியோ என்ற பிரமை கூட ஏற்படுகின்றது.
புற்று வெட்டி எலிகள் பிடித்திடப் போன நண்பர்களோடுடன் போனதும் பற்றைக் குள்லிருந்தே சிறி வந்ததோர் பாம்பைக் கண்டு பயந்தோடிச் சென்றதும் சுப்பர் தோப்பிளநீர் குடித் தயல் உள சோமன் தோட்டத் துரவினுள் போட்டவன் மப்பில் தூங்க வெள்ளி ரிப் பிஞ்சினை மடி நிறைந்தடி பட்டதும் மறப்பனோ.
சிரிக்கின்ற சினிமாப் பெண் மீதுகாதற் பித்தாகிப் பத்துச் சதக் குற்றி மூன்று. ஒற்றைக் காலிற் றவஞ்செய் துள்ளே புக்கு ஒலித்திரையில் சதிலீலா பார்த்தேன் பார்த்தேன். கழிந்து போன இளமைக்காலத்தின் இன்பத்தை நினைவூட்டி இனிக்சச் செய்கின்றது. கிராமத்து ஆசிரியர்கள் சுற்றத்தவர்கள் எல் லாருமே எதை இழந்துவிட்டோம் என்பதைத் தத்ரூபமாகக் காட்டு கின்றார்.
காலை எழுதலும் கடற்கரைப் பக்கமாய் காணும் பற்றைகள் நாடிக் கழிப்பதும் வேலையுண் திரையோடு தொடுவானில் விளங்குஞ் செங்கதிர் கண்டு மகிழ்வதும் மேலிற் குளித்தெழில் வீசை திருத்தலும் மினுக்கி நுதற்கொளி நீறுபொருத்தலும். என்பதுதான் அந்த இனித்த வாழ்க்கையின் காலைக் காலம்.
ஒரு கிராமம் எவ்வாறு அரசியலாற் பாதிக்கப்படுகின்றதென் பதற்குச் தில்லைச்சிவனின் அனுபவங்கள் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம். தில்லைச்சிவனூடாக அரசியல் வரலாறு வளர்ந்தவிதம் வெளிப்படுகின்றது. அதன் நுனியை இன்றைய நிலைக்குக் கொண்டு வந்து விடுவது மிகத் தாக்கமாகவிருக்கின்றது. வாசிக்கும் போது மனம் நைகின்றது. எல்லாத் துன்பங்களிலும் பொறுக்க முடியாத துன்பம் கழிந்து போன இன்ப நாள்களை நினைத்தல். கழிந்து
3.

Page 18
போன், அந்த இன்ப நாள்கள் இனிவருமோ என்ற ஏக்கந்தான்
எல்லாவற்றிலும் மேலாக மனதை அழுத்தும் துன்பம். அதில் வரும்
பெருமூச்சைத் தில்லைச்சிவனின் அடிகள் நெட்டுயிர்க்கின்றன.
உச்சிக்கதிர் வெயில் காயுங்காலம் உயிர்ப்படங்கிக் காற்றொதுங்கும் வேளை பச்சை உடல் வெயர் கொள்ளும் போது படுக்கக் குளிர் நிழழ் தந்தென் மக்கள் குற்ற இடிக்க உறவோடு கூடிக் குந்தியிருந்து கூழ் குடிக்க நின்ற முற்றத்து வேம்பொடு விடும் ஊரும் முள்ளி படர்ந்து பாம்பூரு தாமே.
கள்ளிலே வரும் வெறி இன்பமன்று. கள்ளுக் குடிக்கும்போது கிராம மக்களின் மனத் திருபதியும் ஆறுதலும் மனித உறவாட்ட மும் தான் இன்பம், நகரத்தலே அலங்கரிக்கப்பட்ட மேசைகளிலே காற்சட்டையோடு பளிங்குக் கிளாஸிலே கதிரையிலே இருந்து "விஸ்கி" குடிப்பதில் அந்த ஆறுதலும் திருப்தியும் மனித தேயமும் வராது. முட்டியிலே அப்பொழுது இறக்கிய கள்ளை பிளாவிலே வார்த்துக் குந்துகாலின் இடையிலே மண்ணை மேடாகக் கட்டி, அதன் நடுவே ஆரோகணித்துப் பக்கத்திலே உள்ளவரோடு ஊர்ப் புதினங்களோடு ஒவ்வொரு வாயாக இரண்டு பக்கமும் ஊதிக் குடிப்பதுதான் வெறியிலும் இன்பமுடையது. கள்ளு வார்ப்பவ னுக்கும் குடிப்பவனுக்கும் இடையே எந்த வேறுபாடுமின்றி எழும் நேயந்தான் கள்ளங்கபடமற்ற ஆன்மீக உறவு, கள்ளுக் குடிப்பது கிராம இன்பம். அந்த இழந்த இன்பம் ஏக்கமாக வெளிவருகிறது.
முட்டி நிறைந்தொழுகப் பசுங்கிள்ளை நக்க முப்பொழுதும் சுரக்கும் ஆவரசங்காட்டு கட்டையான் வடலியினிற் சேர்த்து நல்ல கற்கண்டு போலினிக்கும் கள்ளையன்றே வெட்டிய பச்சோ லையிலோர் பிளாவைக்கோலி வேண்டாம் எனா தூக்கி இனியுன் நோய்கள் எட்டியும் பாராவென்று சிரித்துச் சொல்லி இனுங் கொஞ்சம் என வார்ப்பான், இனியெப்போதோ
ஒவ்வொரு சொல்லும் அந்த இன்ப உணர்வை எழுப்ப இனி யெப்போதோ என்று வரும் ஏக்கம் நெட்டுயிர்ப்பாகின்றது.
இந்தக் காவியத்திலுள்ள செய்யுளமைப்புப் பற்றிச் சிறிது சொல்ல வேண்டும். ஒரேயளவில் சீர்பெற்று, அடிகள் ஒத்த அள வினதாய் வருவன. தன் உண்மையனுபவங்களைச் சொல்ல வாய்க் காது என்றுணர்ந்த தில்லைச்சிவன் ஓசையோடு கூடியனவும், சீர் வேறுபாடுகள் கொண்டனவுமான ஒரு செய்யுளமைப்பைக் கொண்டு இதனை எழுதியுள்ளார். வலிந்து மோனை எதுகைகளைக் சேர்ப் பதும் தேவையற்ற அடைமொழிகளைச் சுமத்துவதும் இந்தச் செய்யுள் நடையில் இல்லை.
32

முட்டி நிறைந்தொழுக என்ற கவிதையை உதாரணத்துக்கு எடுக்கலாம். முட்டி, கட்டையாண் , வெட்டிய, எட்டியும் என்பகு நான்கு எதுகைகளும் இயல்பாகவே ஒழுகுகின்றன. வலிந்து பெ ரீ பட்டனவல்ல. அடிகளின் இடையிலே மோனை பெறுவது மோனை அடிகளின் முதலெழுத்தொப்பது அடிமோனைத் தொடை இதனையே தொல்காப்பியர் அடிதொறும் தலையெழுத் தொப் பது மோனை என்று கூறினார். அவை மிக இயல்பாகப் பொரு லைச் சிதைக்காது வருகின்ற தன்மை நோக்கி நோக்கிச் சுவைக் கற்பா லது.
முட்டி- முப்பொழுதும், கட்டையாண்- கற்கண்டு, வெட்டிவேண் டாம், எட்டி - இனுங்கொஞ்சம் என்பன எவ்வளவு சரள மான அடிமோனைத் தொடைகள். அவ்வாறே உச்சிக் கதிர் வெயில் என்னும் கவிதையிலும் அமைவதை ஊன்றி நோக்குக.
கவிதை இயந்திர வார்ப்பாக ஒரேயளவு சீர்பெறும் அடிகளாக அமையாது சந்தற்பத்திற்கேற்ப அசைவு பெற்று ஒரு கால் நீண் டும், ஒருகால் குறுகியும் செல்லும் பான்மை சந்தர்ப்பத்துக்கேற்ற தான கவியின் அசைவை உணர வைக்கின்றது.
தனது செல்வ வளர்ச்சியைச் சுருக்கமாகவும் விரைவாகவு' வளர்த்தாமலும் சொல்லுவதற்காகப் பின்வரும் கவிதையடிகள் முச்சீர் பெற்று விரைவாகச் செல்லுகின்றன.
போட்ட தெல்லாம் பொன்னாய் பொலிந்ததோர் காலம் அந்நாள் மீட்டுளன கடன்கள் செந்நெல் விளைந்தது உவரில் காட்டுத் தோட்டமும் பலித்துப் பல்கால் தொடர்ந்த நட்டத்தை ஈட்ட மாட்டொடு வண் டி மோட்டார் வாகன வசதி பெற்றேன். ஆனால் நீண்ட வலையாகப் பின்வரும் அடிகள் எழுந்து நீண்டு செல்கினறன.
* "சரவணைச் சேவா மன்றத் தலைவராய் மேயசச்சி தானந்தா சிவம் சீர் சட்டத் தரணிதன் உள்ளத்துக் கரவிலான் ஊரின்பற்றால் கவிஞனேன் புலமை போற்றிக் கெளரவித்திட வென்றுற்ற காதலாலிங்கோர் நல்ல' இது போலவே காலிமுகக் கடல் போல பின்வரும் பாடல் ஒன்று அலையெறிகிறது.
"காலிமுகத் தலையெறிற்று குமுறியார்க்கும் கடற்கரையிற் பாராளும் மன்றின் முன்னே" ஒரு சில கோடுகளை மாத்திரம் கீறி ஒரு காட்சியையோ ஒரு வரையோ சித்திரிக்கும் கைவண்ணமுடைய சித்திரக்காரன் போலத் தில்லைச்சிவன் சில சொற்கோடுகளையிட்டு உயிர்ச் சித்திரம் வரைகின்றார் கவிதையிலே. ஊரின் வளத்துக்கு எட்டே எட்டு வரிகள். இலுப்பை, புளி, குளம், உழவர். ஆடு மாடு அந்தச் சொற்கோடுகள் சரவணையை அப்படியே படம் பிடிக்கின்றது* ஆணென உலக்கை விண்ணெறிந்தவர், அடியினைப் பெயர்த்துத்

Page 19
தொடக்கிய நடை. சுந்தரக்கரும் பொட்டினாற் காவல் செய்து, பலருமெனைப் படிப்பிக்க, கப்பியின் மேல் இடபருடராய் ஏறி என்றும் சொற்கோடுகளால் நீட்டாமல் வளர்த்தாமல் சலிக்காமல் பல ஆண்டுக் கதையை தத்ரூபமாக வருணிக்கின்றார். ஒவ்வொரு சிறு சம்பவத்தையும் தொடுக்கும் முறையால் வருணிக்காத பல காட்சிகள் இடையிலே தோன்றுகின்றன. சுருங்கச் சொன்னால் உயிர்த்துடிப்பான இடங்களைத் தொட்டுத் தொட்டு வரலாற்றின் தொடாத இடைவெளிகளை வாசிப்போரைக் கொண்டு நிரப்பு வித்து நீண்ட கதையை மிகச் சுருக்கமாகக் கூறியது "நான்' " என்ற காவியத்தின் மிகப் பாராட்டக் கூடிய கைவண்ணமாகும். சொற்றெரிவு பாராட்ட வேண்டிய ஒரு அம்சமாகும். எளிமை, பொருத்தம், ஒழுங்கு என்பன நான் என்னும் கா வியத் தி ன் சொற்றெரிவின் சிறப்பம்சங்களாகும். O
aaaaaaaaaaat
莎 65656)55585
25 வது ஆண்டு மலர் விற்பனைக்குண்டு எம்முடன் தொடர்பு கொள்ளவும். - விலை 75 ரூபா
அட்டைப் பட ஓவியங்கள் 20 - 00
(35 ஈழத்து பேணு மன்னர்கள் பற்றிய நூல்)
என்னில் விழும் நான் 9 - 00
(புதுக் கவிதைத் தொகுதி-வாசுதேவன்) மல்லிகைக் கவிதைகள் ... 15 - 00
(51 கவிஞர்களின் கவிதைத் தொகுதி) இரவின் ராகங்கள் ... 20 - 00
(சிறுகதைத் தொகுதி - ப. ஆப்டீன்) தூண்டில் கேள்வி-பதில் ... 20 - 00
- டொமினிக் ஜீவா ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்
(சிறுகதைத் தொகுதி - சுதாராஜ்) 30 -00 நான் 220 00) -م
(தில்லைச்சிவன் கவிதைச் சுயசரிதை)
வியாபாரிகளுக்குத் தகுந்த கழிவுண்டு:
மேலதிக விபரங்களுக்கு *மல்லிகைப் பந்தல்"
− 234 ,ே காங்கேசன்துறைவிதி
யாழ்ப்பாணம்.
MMMMMMMNMMMMMMNMNMMMM
蔷4

மலரும் நினைவுகள் -14
S L LLLLLLLA LMLqLAMLASLL LLLLSLLLLLAALSALLMLLAL LALAL MqLMLL LLLLLLLAL LALAS SA LSLALiL
தீவாத்தியார்
teA 0LA ALAqAAA AALLAAAAA AALLSLLLAAA AALLLLAAAASLLLLLAALTMLSAALLLLLAAAASLSLLALALTLALALL
- வரதர்,
சிாமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முந்திய யாழ்ப் பாணத்துக் கிராம மக்களின் வாழ்க்கை முறையை இதுவரை இந்தத் தொடரில் எழுதி வந் தேன். என்னை  ைம ய மா க வைத்து, என் நினைவுக்கு வந்த வைகளை இதுவரை எழுதிவிட் டேன். இந்தத் தொ ட  ைர நிறைவு செய்யுமுன், அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத் துக்குமுள்ள வேறு பாடுகளைப் பல துறைகளிலும் ஒரு தொகுப்பு முறையாக எழுத விரும்புகின் றேன்.
மனித வாழ்க்கைக்கு முக்கி யமான உணவையும் உடையை யும் பற்றி முதலில் பார்க்கலாம்.
உணவு விஷயத்தில் மக்க ளின் பழக்கம் இப்போது பெரிய அளவில் மாற்றம் கண்டிருக்கி sDël •
இப்போது காலையில் எழுந் தால் எனது முதல் வேலை கடைக்குப்போய் செய்திப் பத்தி ரிகையும் பாணும் வாங்கி வரு வதுதான்.
Lu nT 6öbT இல்லாவிட்டால் காலை உணவுப் பிரச்சினையைச் சமாளிக்க முடியாது என்ற அள
வுக்குப் பாணின் ஆதிக் கம் வலுத்துவிட்டது.
இந்தப் பாண் எப்பொழுது
எங்கள் மக்களுக்கு அறிமுகமா
யிற்று? - அநேகமாக இரண்டா வது மகாயுத்தக் காலத்திலாகத் தான் இருக்கும்.
1947 - ஆம் ஆண்டளவில் நான் எழுதிய " "வாத்தியார் அழுதார்' என்ற சிறுகதையில் இந்தப் பாண் வருகிறது. அப் போது பாடசாலை மாணவர் களுக்கு மதிய உணவாகப் பாண் கொடுக்கப்பட்டதாக அந் த க் கதையில் வருகிறது. எனவே 1947 ஆம் ஆண்டுக்கு முன்னரே
இங்கே பாண் வந்துவிட்டது (வரலாற்று ஆய்வுகளுக்கு சிறு கதைகளும் உதவுமென்பதற்கு
இது உதாரணம்)
யுத்த காலத்தில் அரிசித் தட்டுப்பாடு கா ர ன மா க சகோதுமை"யை அறிமுகம் செய்
தார்கள். அதற்கும் இப்போது தாங்கள் வாங்கும் "கோதுமை மா' வுக்கும் சம்பந்தமில்லை.
அது அரிசியிலும் சற்றே பெரிய தானியமாக. மணி மணியாகப் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
35

Page 20
அந்தக் கோதுமைத் தானி யத்தை எப்படி எப்படிப் பயன் படுத்தலாம் என்பதற்குப் பிரச் சாரமும் செய்தார்கள். அதனு டைய சிறந்த போஷாக்குச் சத் துப் பற்றி எடுத்துக் கூறினார் கள். அதிலிருந்து உணவு வகை களைச் செய்து கண்காட்சிகளில் வைத்துக் காட்டினார்கள்.
அதை வறுத்து ITG s இடித்து எங்கள் வீட்டில் பிட்டு அவித்தது எனக்கு நினைவிருக் கிறது. அது நல்ல வாசனையாக வும் சுவையாகவும் இருந்தது. ஆனால் அரிசிமாப் பலகாரங்க ளையே உண்டு பழகிய எங்கள் மக்களின் வாய்க்குக் கோதுமைச் சங்கதி அவ்வளவர்க ஒத்துவர வில்லை!
பிறகும் கொஞ்சக் காலம் "கட்டி அடித்தால் அது வும் பழக்கப்பட்டிருக்கலாம். ஆனால் யுத்தம் முடிய, பழையபடி அரிசி வந்து குவிந்ததும் கோதுமை கண்ணில் காணாமல் போய் விட்டது.
ஆனால் இந்தப் புதிய பல 45rrprLDTGRT *Li T 637' மட்டும் மெல்ல மெல்ல மக்களைப் பிடித் துக் கொண்டது!
யுத்தகாலத்துக்கு மு ன் பு ஒரு ‘சிங்கள மாமா உயரமான ஒரு கூடையைத் த  ைல யி ல் சுமந்து பிஸ்கட், கேக் முதலிய புதிய பலகாரங்களை றோட்டு றோட் டா க க் கூறி விற்றுக் கொண்டு போவார். கொஞ்சம் வ ச தி படைத்தவர்கள் அந்த "மாமாவிடம் புதிய பலகாரங் களை வாங்கிச் சுவைப்பார்கள். ஆனால் அவர் "பாண்" விற்ற தாகத் தெரியவில்லை. "அப்படி விற்றிருந்தாலும் யாரும் அதை ஒற நேர உணவுப் பொருளாக வங்கி உண்ணவில்லை.
அந்தக் காலத்தில் யாழ்ப் பாணத்திலே "பேக்கரி வைத்து நடத்தியவர்கள் சிங்களவர்தான். தமிழர்களுக்கு அது தெரியாத ஒரு விந்தையாக இரு ந் த காலம் அது
எங்கள் கிரரமத்தை வைத் துக் கொண்டு பார்த்தால் அந் தக் காலம் சாப்பாட்டுக்கே மக் கள் மிகுந்த கஷ்டப்பட்ட காலம்.
சிலருக்குக் காலையில் சாப் பிடும் பழக்கமே இல்லை! அதி கமானவர்களுடைய is it 60 g) உ ண வு "பழஞ்சோறு தான்! பழைய கறி, குழம்பு முதலியவற் றுடன் ச ம் பல் உப்புமிளகாய் முதலியவற்றுடனும் பழை ய சோ ற் றை உண்ணுவார்கள். (பழஞ்சோறு என்பது முதல்நாள் சமைத்த சோறு. இதைப் படுக் கப் போகும் போது சோற்றுப் பானையில் தண்ணிரை ஊற்றி வைப்பார்கள். அதுதான் பழஞ் சோறு)
சில வீடுகளில் பழஞ்சோறும் போதியளவு இருக்காது. அதற் குள் நிறையத் தண்ணீரை ஊற் றிப் பெருக்கி அந்தப் பழஞ் சோற்றுத் தணிரையே காலை உணவாகக் குடித்துவிட்டு இருப் Luri 56ir.
பழஞ்சோற்றுத் தண் ணி ருக்கு உப்பை ப் போட்டுக் கரைத்து, அதை வெங்காயம்,
பச்சை மிளகாய் எதையாவது க டி. த் துக் கொண்டு குடிப்ப துண்டு.
பழஞ்சோற்றுத் தண்ணிருக் குள் தயிரை விட்டு, வெங்கா யத்தை வெட் டி ப் போட்டு கொஞ்சமாகப் பச்சை மிளகா யையும் வெட்டிப்போட்டு, ஊறு காயையும் அதி ல் கரைத் துக் குடித்தால். அப்படிக் குடித்த
36

நினைவு வருகிறது. நாக்கில்
ஜலம் ஊறுகிறது!
பழஞ்சோற்றுத் தண்ணீரை நிலாத் கண்ணீர்" எ ன் றும் சொல்வார்கள். அதன் பொருள் இன்னமும் எனக்கு விளங்க வில்லை.
மத்தியான உணவு அரிசிச் சோறுதான். சிலருக்கு அதுவும் கஞ்சியாகத்தான் கிடைக்கும். சில சமயம் கூழாகவும் மாறும். இந்தக் கூழைப் பற்றி நிறைய எழுதலாமென்று நினைக்கிறேன். எழுதக் கூடிய பட்டறிவு எனக் கில்லை. அரிசிக் கூழ், ஒடியற் கூழ், ஊதுமாக் கூழ் என்று சில கூழ்களின் பெயர்கள் தா ன் நினைவு வருகின்றன. கூழ் "ஆனாலும் குளித்துக்குடி என்ற பழமொழியில் "ஆனாலும் என்ற சொல் கூழின் எளிமையை எதே துக் காட்டி கொண்டிருக்கிறது. ஆனால் கூழில் மிக றிச் சான கூழும் உண்டு. (விஷயம் தெரிந் தவர்கள் யாராவது கூழைப் பற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுதினால் உபயோகமாக இருக்கும்)
பலருக்கு இந்தமாதிரி மூன்று நேரமும் உணவு கிடைப்பதே கஷ்டம்
புழுக்கொடியல் பனாட்டு முதலியவற்றையும் பசிபோக்கும் உணவாகப் பலர் உபயோகித் தார்கள்.
"உணவுக்குப் பஞ்சமே தவிர பல வீடுகளில் குழந்தை குட்டி களுக்குப் பஞ்சம் இருக்காது. குடும்பக் கட்டுப்பாடு" பற்றியே கேள்விப்பட்டிராத காலம்
ஒரு குடும்பத்தில் நிறைய உறுப்பினர் இருந்ததும் சிலரு டைய உணவுக் 'கஷ்டத்துக்குக் காரணமாக இருந்தது.
அந்தக் காலத்தில் சொல்லப்
பட்ட ஒரு கதை நினைவு வரு
கிறது.
எங்களூரில் *முட்டு ፴ፓffሡዐ லிங்கம்" என்று ஒடு கிழவர் இரு ந் தார். நட்க்கும்போது இரண் டு முழங்கால்களையுப முட்டி முட்டி நடந்ததால், ருக்கு அந்தப் பெயர் வந்தது.
முன்பின் யோசியாமல் காரி செய்கிறவர்களை முட்டு இராமலிங்கம் ஒாக கொத்தரிசிச் சோற்றைத் தின்றமாதிரி" என்று சொல்வதுேை. .ெ
ஒரு சனிக்கிழமை. சனிக் இழபையென்றால் முழுக்கு நாள். ஒளவைப் பாட்டியே 'சனிநீராடு" ன்று சொல்லி வைத்தாள்.
முட்டு இராமலிங்கம் வீட் டில் ஏழெட்டுப் u Saraparésor. இாாமலிங்கத்தின் மனை வி முழு க்கு நாளுக்கென்று ஒரு கொ த் து அரிசி போ ட் டு சோறாக்கி வைத்திருந்தாள்.
முதலில் வீட்டுத் தலைவர் தான் சாப்பிடுவது வழக்கம் இராமலிங்கம் சாப்பிட உட் கார்ந்தார். மனைவி தட்டில் சோற்றையும் கறி க  ைள யும் படைத்தாள்
தட்டில் போட்ட உணவை இராமலிங்கம் T’I GILG) (p,q-dšai னைவி மீண்டும் தட்டை நிரப் பிளாள். இராமலிங்கம் Fmru’ùy G -- —frri . Slgi முடிவதைக் கண்டு மனைவி மீண்டும் போட்டாள். இராமலிங்கம் அ  ைத யும் முடித்தார்.
மீண்டும், மீண்டும்."
இப்படியே பானையிலிருந்த சோறு முழுவதும் முடிந்துவி டது. அதற்குப் பிறகுதான் இராமலிங்கம் வி ழித்துக்கொண்டு
፵7

Page 21
ஐயையோ, உனக்கும் பிள்ளை களுக்கும் இல்லாமல் எல்லாவற் றையும் தின்றுவிட்டேனே' என்று அவதிப்பட்டாராம்!
நல்ல வேளிையாக வீட்டில் அரிசி இருந்தபடியால், இராம விங்கத்தின் மனைவி அவசரம் அவசரமாக மீண்டும் சமையல் செய்து பிள்ளைகளுக்குக் கொடுத் தாராம். - இப்படி ஒரு கதை.
Firit intC) கிடைக்காவிட் டால் பச்சைத் தண்ணிரைக் குடித்துப் பசியை அடக்குவதும், சாப்பாடு கிடைத் நேரம் அளவு கணக்கின்றி வயிற்றை நிரப்புவ தும் சிலருக்குப் பழக்கப்பட்டி ருந்தது.
சாப்பாடு பற்றிய இன்னு மொரு அந்தக் காலத்துக் கதை யையும் சொல்லி வைக்கிறேன்.
இது காரைதீவில் கேட்ட கதை, காரைதீவு என்பது புரா தனப் பெயர். இப்போது அது * காரைநகர்" என்ற பெயரை நிலை நிறுத்திவிட்டது! பெயரில் மட்டுமே "நகர்' வந்ததே தவிர அங்கே இன்னும் * நகரசபை' வரவில்லை. உருவத்தில் இன்று கிராமமாகவே இருகிகின்றது. அஃதிருக்க
நான் காரைநகரில் கேட்ட கதையைச் சொல்கிறேன்.
மாரிகாலம் வந்துவிட்டால், அங்கே மாடுகள் மேயும் தரவை களிலெல்லாம் தண்ணிர் நிறைந்து விடும், மாடுகளுக்கு மே ச் ச ல் நிலம் கிடையாது, மாடுகளை வீட்டில் கட்டிவைத்துப் பராம ரிப்பது கஷ்டம்.
இதே நேரம் செம்பாட்டுப் பகுதியில் உள்ளவர்களுக்கு மாடு கள் தேவைப்படும். செம்பாடு என்பது வலி - வடக்குப் பகுதி என்று நினைக்கிறேன். அங்கே
உள்ளவர்கள் அநேகமாக நெல் விளைவிப்பதில்லை. எ ல் லா ம்
தோட்டக் காணிகள், வெங்கா யம், மிளகாய், புகையிளை முதலிய தோட்டப் பயிர்கள்
செய்வதுதான் அவர்களுடைய முக்கியமான விவசாயம். குரக் கனும் விளைவிப்பார்கள் போலி ருக்கிறது நெல் விதைப்பதற்கு காலம் சரிவருவதில்லை.
தங்களுடைய தோட்டங்க ளின் எருத் தேவையை பூர்த்தி செய்வதற்காக, செம்பாட்டுக் கமக்காரர் காரைநகருக்கு வந்து
மாரிகாலத்ல் மா டு க ைள க் கொண்டு போய் லைத்திருப் tuitita,6it. மாடுகள் போடும்
சாணி அவர்களின் தோட்டங் களுக்கு மிகவும் தேவையான எரு.
அப்படி LD nr (6 5 6o 6pr ji கொண்டு போனவர்கள் இடைக் கிடை காரைநகருக்கு "வந்து மாடுகளின் நிலைமை பற்றிச் சொல்வது வழக்கம்.
அப்படித் தான் கொண்டு போ ன மாடுகளைப் பற்றிச் சொல்வதற்காகச் செம்பாட்டுக் காரர் காரைநகரிலுள்ள மாட் டுச் சொந்தக்காரரின் வீட்டுக்கு ஒரு நாள் வந்தார். அவர் வந் ததற்கு வேறோரு உள் நோக்க மும் இருந்தது.
காரைநகர் வீட்டுக்காரர், நித்தியம் அரிசிச் சோறு தின்று அலுத்துப்போய், மாற்றத்துக் காக, அருமை பெருமையாய் அன்றைய தினம் குரக்கன் பிட்டு அவித்திருந்தார்கள்.
செம்பாட்டார் மாடுகளைப் பற்றிக் கதைத்த பின், வழக்கம் போல அவரைச் சாப்பிடும்படி சொன்னார்கள்.
38

அவரும் ஆவளோடு சாப் பிட உட்கார்ந்தார். சாப்பாட் டுத் தட்டில் அன்று தாங்கள் அருமையாகத் தயாரித்த குரக் கன் பிட்டைக் கொண்டுவந்து போட்டார்கள்,
செம்பாட்டார் திகைத்துப்
போனார். பெரிய ஏமாற்றம்
அவருக்கு.
"அட. எனக்கு முன்னம் நீ
இங்கே வந்துவிட்டாயா!' என்
றாராம் அவர்,
செம்பாட்டுக்காரரின் வீட் டில் அந்தக் காலத்தில் பெரும் பாலும் குரக்கன் பிட்டுத்தான் சாப்பாடாம். அவருடைய கடு
நின்று பிடிக்காது. குரக்கன்தான் நின்று பிடிக்கும். அவர் மாடு
களைப் பற்றிக் கதைக்கும் சாட்
டில் அரிசிச் சோறு சாப்பிடும் எண்ணத்திலே தான் அன்று காரைநகருக்கு வந்திருந்தார். அவரை முந்திக் கொண்டு குரக் கன்பிட்டு அன்று காரைநகருக்கு வந்து விட்டதைக் கண்டு அவ ருக்குப் பெரிய ஏமாற்றமும் கவலையும் ஏற்பட்டுவிட்டது!
இது வெறும் கதையாகவே இருக்கலாம். ஆனால் அந்தக் காலத்து உணவுப் பழக்கத்தைச் சற்றே "பிட்டு க் காட்டுகிற தல்லவா?
(தொடரும்)
மையான உழைப்புக்கு அ ரிசி
கடிதம்
மல்லிகை சென்ற நவம்பர் - 93 இதழ் கணம் காத்திரமாக இருந்தது. பல இலக்கியத் தகவல்களை அறியக் கூடியதாக இருந் தது. நல்ல இலக்கியத்தை இந்த மண்ணில் நட்டு வளர்க்க வேண் டுமாக இருந்தால் பாரிய சிரமத்தை மேற் கொள்ள வேண்டும். அத்தகைய சிரமத்தை நீங்கள் கடந்த காலங்களில் அடைந்திருப் பீர்கள் என மெய்யாகவே நம்புகின்றேன்.
இருபத்தைந்து ஆண்டுகளாக மல்லிகைக்குத் தனது உழைப்பை வழங்கிய சகோதரர் சந்திரசேகரத்திற்கு நீங்கள் ச மீ பத் தி ல் யாழ்ப்பாணத்தில் விழாவெடுத்துக் கெளரவித்ததைச் செய்திகள் மூலம் அறிந்து உண்மையாகவே சந்தேசாப்பட்டேன். காரணம் வேறு யாருமே இவ்விதம் பத்திரிகை உழைப்பாளியைக் கனம் பண் ணிக் கெளரவித்தது இதுவரை நடைபெறாத ஒன்றாகும்.
மல்லிகையை இன்னும் இன்னும் சிறப்பாக வெளிக்கொணர ஆவன செய்யவும். சமீப காலங்களில் புதிய புதிய எழுத்தாளர் களை மல்லிகையில் அறிமுகப்படுத்தவில்லை. புதிய எழுத்தாளர் களுக்குத் தாராளமாக இடம் கொடுங்கள். 94 - ல் மல்லிகை புதுப் பொலிவுடன் வரவேண்டும், ஆவன செய்யுங்கள். பக்கம் பக்கமாக அது மல்லிகைக்கு உதவியாக விளங்கும்.
சாவகச்சேரி, கா சாந்தகுமார்
39

Page 22
எப்படித்தான் வடித்திடுவேன்
எழுந்து வருமெண் ைத்தை
எப்படித்தான் வடித் திடுவேன்
கொழுந்து விடும் கற்பனையை
குமுறியெழும் உணர்வலையை
அழுந்தி மனம் வாடுகின்ற
ஆசையினைக் கவிபாட
எழுந்து வரு மெண்ணத்தை
எப்படித்தான் வடித்திடுவேன்.
காதல் வரும் வேளைகளும்
சானல் எழும் வேளைகளும் மோத வரும் வாழ்வலையின்
முழுத்துயர வேளைகளும் சாதலெனும் முடிவின்றேல்
சஞ்சலமே எனுமுணர்வும் வேதனையின் விளிம்பிற்கே
விரட்டுவதை நான்பாட
எழுந்து வரு மெண்ணத்தை
எப்படித்தான் எழுதிடுவேன் கவியரங்கம் வா என்று
கண்டிப்பாய்க் கூறிடுவார் நவின்றுறுதி அதன் பின்னே
நானிருந்து பாடுகையில் கவிபேர்ல மனந் தாவும்
கற்பனையும் ஓடிவிடும் தவிப்பாக நான் விழிக்கும்
சலிப்பான நேரத்தில்
எழுந்து வரு மெண்ணத்தை
எப்படித்தான் வடித்திடுவேன் எதுகை முதல் யாப்பெல்லாம்
எளிதென்றே எழுதுகையில் புது யாப்பில் அமைந்தங்கே
புரியாத கவிதை வரும் மது குடித்து மகிழ்ந்தோரின்
மழலையதில் நிறைந்திருக்கும் இதுவெல்லாம் இல்லாத
இனிதான வேளையிலே
எழுந்து வரு மெண்ணத்தை W
எப்படித்தான் வடித்திடுவேன்.
ச. மணிமாறன்
40

இரவுப் பயணிகள் - 4
இரவுப் பூச்சிகள்
-செங்கை ஆழியான்
“இந்தப் பிராணிகள் எவ் வாறு தலைகீழாக நிற்கின்றன? மண்ணில் கால்களை ஊன்றிக் கொண்டு எப்படி விண்ணில் தொங்குகின்றன? என்ற ஐயத் திற்குரிய வினாவிற்கு நீண்ட
காலமாக நெடுஞ்செவியனுக்கு விடை கிடைக்கவில்லை. அந்த இருண்ட கட்டிடத்தின் உட்
கூரை விட்டங்களைப் பின்கால் விரல்களால் பற்றிக் கொண்டு த  ைல கீழாக த் தொங்கும் பொழுது, தரையில் நடமாடும் அவர்களைப் பார்க்கும் போது அடிக்கடி இப்படியான சந்தேகம் அதற்கு வரும்.
அந்தப் பழைய காலக் கட் டிடத்தில் பெரும் கூரைப் பரப்பு அவர்கள் வாழ உகந்ததாக மாறி நெடுங்காலமாகின்றது. ஆரம்பத்தில் சுவர் மட்டத் துடன் சீலிங் அடிக்கப்பட்டிருந் தது. அதனால் அவர்கள் எது விதமான பயமுமின்றி நிம்மதி யாக வாழ முடிந்தது. இன்று இரண் டு மூன்றிடங்களில் சீலிங் குகள் உடைந்து விழுந்துவிட்டன. அதனால் ப கல் வேளைகளில்
41
பரவுகின்ற "இருள் உறக்கத் தைக் கலைத்துவிடுகின்றது.
அத்துடன் இருந்துவிட்டாற் பரவாயில்லை. தாங்கள் பல நூறாகப் பெருகி வாழ்ந்துவரும் மறைவிடத்தையும் அந்தத் தலை கீழாக நடக்கும் பிராணிகள் கண்டுகொண்டன. அப்பிராணி கள் மிகவும் ஆபத்தானவை என் பது நெடுஞ்செவியனுக்கு நன்கு அனுபவ பூர்வமாகத் தெரிந்தி ருந்தது.
தான் தொங்கிக் கொண்டி ருக்கும் இடத்திலிருந்து பார்க் கும்போது கூரையின் விட்டங் கள் சட்டங்கள் எல்லாம் அதன் உறவினர்கள் தொங்கிக் கொண் டிருப்பது தெரிகின்றது. எவ்வ ளவாகப் பெருகிவிட்டர்கள்? ஒரு பகுதியினரை வேறிடத்திற்கு அகற்ற வேண்டும்.
'மூதேவி வெளவால்கள். இங்கிருந்து வேலை செய்ய முடி யாது. ஒரே நாற்றம். மேசை யெல்லாம் எச்சம். மணியம், எப்படியாவது அதுகள் வா ற துவாரத்தைப் ப்ார்த்து முள்ளுக் கொப்புகளை வைத்து அடைச்சி

Page 23
விடடா" எ~வ னே r ஒருவன் தலைகீழாக நின்றபடி சொல்வது கேட்கிறது.
* எத்தனை தடவை அடைக் கிறது?" என்று மணியம் அலுத் துக் கொண்டான்.
நெடுஞ்செவியனுக்கு முன் னைய அனுபவம் நினைவுக்கு வர உடல் மெதுவாக நடுங்கு கிறது.
மாலைக்கருக்களில் நெடுஞ் செ வியன் வழிகாட்டியவாறு முன்னே புறப்பட ஏனையவை யும் தொடர்ந்தன. கட்டிடத் தின் வடக்குப்பக்கத்தில் பெரிய தொரு துவாரம். அத்துவாரத் தின் ஊடாக நெடுஞ்செவியன் முதலில் வெளி வந்து காற்றில் மிதந்தது. எவ்வளவு இனிமை? பறப்புச் சவ்வுகளால் உருவான பெரிய தோல் சிறகுகள் காற்றில்
அசைந்தன. நீண்ட கைவிரல் களை விரித்தபோது, விரல்க ளிற்கு இடையே இழுத்துப்
பரப்பப்பட்டுள்ள பறப்புச் சவ்வு கள் காற்றைக் குவித்து கீழே உந்தி, இலேசான அதன் உடலை மேலே உயர்த்தின.
அவை சற்று வேளை தமது இருப்பிடத்தின் வானில் அலைந் தன. பின்னர் இரு குழுக்களா கப் பிரிந்து ஒன்று மேற்குப்பக்க மாகவும் மற்றையது தெற்குப் பச்கமாகவும் விரைந்தன.
அவை கட்டிடத்தை விட்டு வெளியேறுவதைப் பார்த்துக் கொண்டிருந்த மணியம் கூரை யில் ஏறி, அவை வெளிவந்த துவாரத்தினை முட் கொப்பு களை வைத்து அடைத்ததை நெடுஞ்செவியன் காணவில்லை, அவ்வேளை அது தன் கூட்டத்தை அழைத்துக் கொண்டு ஐயனார் கோயிலைத் தாண்டியிருந்தது.
மிகையொலியை எழுப் பி ப் பறப்புத் திசையில் பரவவிட்டு, எதிர்ப்படும் தடைகளில் அந்த மிகையொலிகள் மோதி அலை களாக எதிரொலிப்பதிலிருந்து தடைகளை இனங்காணும் திறன் அவற்றிற்கு இருந்தது. நெடுஞ் செவியனுக்கு அத்திறன் மிகுதி.
இரவு முழுவதும் விட்டில் களையும், வன் டுகளையும், இர வுப் பூச்சிகளையும், பழங்களை யும் வேட்டையாடிவிட்டு கீழை வானில் வெளி ச் சம் படரத் தொடங்கிய வேளையில் அவை திரும்பி வந்தன. கட்டிடத்தை நெருங்கியதும் நெடுஞ்செவியன் சற்றுத் தாமதித்தது தன் கூட் டத்தினர் அனைவரும் உள்ளே நுழையும்வரை பார்த்திருப்பது அதன் வழக்கம்.
வழக்கம்போல நீள்சிறகுகள் வீர்ரென அவசரத்துடன் துவா ரத்தினுள் புகப் பறந்தது. அவ சரம், எதிலும் அவசரம். மிகை யொலி எ முப் பாது பழகிய பாதையினுள் புகுந்த போது தான் அந்த அனர்த்தம் நிகழ்ந் தது. துவாரத்தை மூடி வைத்தி ருந்த செடிகளின் முட்களில் அது சிக்கிக் கொண்டது. வீல் வீல் என்ற அதன் அலறல் கூட்டத் தைக் கலக்கியது. நெடுஞ்செவி யன் அருகில் வந்து பார்த்த போது, தோல் சிறகுகளில் முட் கள் குத்திப் பற்றியிருந்தன. பொத்தல்கள் விழுந்துவிட்டன. அது தப்பியும் பயனில்லை.
"என்னைக் காப்பாற்றுங் கள். என்னைக் காப்பாற்றுங் கள்."" மரண ஒலம்.
முட்களின் பிடி யிலிருந்து அதனால் விலக முடியவில்லை. தப்ப எடுத்த முயற்சிகள் அதனை முட்களில் இறுகப்பற்ற வைத் தன. முகம் கீறி இரத்தம் பீறிட் டது. எல்லாம் பயத்தில் அலறி ஒலமிட்டன.
42

நீள்சிறகுகள் இறக் கும் போது கிழக்கில் சூரியன் எழுந்
திருந்தான்.
இன்னமும் இங்கு தங்குவ தில் பவனில்லை எ ன் ப ைத உணர்ந்த நெடுஞ்செவியன் தன் கூட்டத்தினரை அழைத்துக் கொண்டு பாதுகாப்பான இடத் திற்குச் செல்ல விரும்பியது. எங்கு செல்வது? "இருள்" வேக கமாகப் பரவுகிறது. அருகிலுள்ள சோலையின் பாரிய மலைவேம் பின் கிளைகளில் தங்குவதைத் தவிர வேறு மார்க்கமில்லை. அம்மரத்தின் கிளைகளில் காய் களாக அவை தொங்கியபோது, நீள் செவியனின் மரண ஒலம் கேட்டதுபோன்ற பிரமை
"எங்காவது ஓடிவிடுவோம்" என்றது அகல்விரலன்.
மீண்டும் கருக்கல் பிறந்தது. நெடுஞ்செவியன் தன் கூட்டத் தினரை இரைதேட அனுப்பி விட்டு தாம் வாழ்ந்த பழைய கட்டிடத்தை அவதான மாக நெருங்கியது. எ தி ர்ப் படும் பொருட்களின் வடிவினை ஒலி யுணர்உறுப்பால் புரிந்துகொண்டு பறந்தது. அக்கட்டிடத்திற்குள் மீண்டும் குடியேற வேண்டும். பரம்பரை பரம்பரையாக அவர் கள் வாழ்ந்து பெருகிய இல்லம். எப்படி விட்டுவிடுவது? வெளி யிடங்கள் பாதுகாப்பானவை யல்ல. வெட்டவெளியில் கடும் வெப்ப இருளுள் சீவிக்க முடி யாது. மரநாய்கள் சத்தமின்றி ஒன்றிரண்டை அமுக்கிவிடுகின் றன. தலைகீழாக நடக்கும் பிரா ணிகள் கற்களால் தாக்குகின் றன .
கட்டிடத்தைச் தது. நீள்செவியன் இற ந் து கிடந்த துவாரம் முட்கொப்புக ளுடன் அப்படியே அறுக்கையாக இருந்தது. அதில் தொங்கிக்
சுற்றி வந்
கொண்டிருந்த நீள்செவியனின் உடலைத்தான் காணவில்லை, மணியம் எடுத்துச் சென்றிருப் பானே? சுற்றி வந்தபோது கட்டி டத்திற்குள் நுழைய இன்னொரு துவாரம் இருப்பது தெரிந்தது. முன்னதிலும் பார்க்கச் சிறிது. ஆனால் பாதுகாப்பானது.
நெடுஞ்செவியனுக்கு அளவி லாத மகிழ்ச்சி.
மீண்டும் அவை இடத்தில் குடிபுகுந்தன.
"மீண்டும் வந்திட்டுதுகள்' எனத் தலைகீழ்ப் பிராணி சத்த மிட்டது.
பழைய
"இனி என்னால் முடியாது" என்றான் மணியம். *
பின்கால்விரல்களால் விட் டத்தைப் பற்றியபடி அன்று நெடுஞ்செவியன் நிம்மதியாக உறங்கியது. எனினும் இடை யிடையே தூக்கம் கலைந்தது. இளசுகளின் சேட்டைகள் மட்டும் துரக்கக் கலைப்பிற்குக் காரண மல்ல. உடைந்து கிடக்கின்ற சீலிங் வெளிகளால் கீழிருந்து நுழையும் இரு ஸ் கதிர்களும் தூக்கத்தைக் கலைக்கின்றன முன்பு எவவளவு அறுக்கையாக அவ்விடம் இருந்தது? ஒரு பொத் தல் கிடையாது. இன்று ஐந்தாறு இடங்களில் பொத்தல்கள்.
அந்த நாள் நெடுஞ்செவிய னுக்கு நினைவிற்கு வருகின்றது. இரவு வேட்டை முடிந்து அப் பொழுதுதான் அவை த ம து வீட்டிற்குத் திரும்பி வந்து விட் டங்களில் தொங்கி இளைப்பா றத் தொடங்கின, அவ்வேளை அருகில் எங்கோ இரைச்சலுடன் ஏதோ ஒன்று தாழ்ந்து எழுந் தது. அதனைத் தொடர்ந்து பயங்கரச சத்தத்துடன் ஏதோ வெடித்தது. அந்த அதிர்வில்
49

Page 24
அக்கட்டிடம் ஒரு கணம் சிலிர்த் துக் கொண்டது. கூரை uS 6ir விட்டங்களில் பற்றியிருந்த அவற்றின் பிடிகள் எப்படிக் கழன்றன? அவை தொப் தொப் பென எப்படிக் கீழே விழுந்தன? நெடுஞ்செவியன் உட்பட அனைத் தும் பிடிகழன்று இலுப்பம் பழ மாத சிலிங்கின் மேல் விழுந்து
எழும் பின. இனந்தெரியாத பயம், எ ன் ன சத்தம்? ஏன் C)sb 5 நடுக்கம்?
அதன் பிறகுதான் ஐந்தாறு Lங்களில் சீலீங்குகள் உடைந்து சரிந்துபோயின? வெடித்துத் தொங்கியவற்றை மணியம் முற் றாக உடைத்து நீக்கிவிட்டான்'
இப்பொழுதும் அ டி க் சிடி அப்பக்கத்தில் அதே வகையான இரைச்சல் எழும்போது அவை இப்பொழுது தாமாகப் பிடிக ளைக் கழற்றிக்கொண்டு பறப் பதன் மூலம் அதிர்ச்சியைத் தாங் இக் கொள்கின்றன. தன்னை விடப் பிரமாண்டமான ஒன்று பறந்தபடி இந்த இரைச்சலை தொடர்ந்து எ முப்பு வ ைத நெடுஞ்செவியன்கண்டது. இந்த தலைகீழாக நடக்கும் பிராணிகள் அந்தப் ப வையைக் கண்டதும் 蒿 தெரியாமல் ஒடு வதையும் அலறுவதையும் அப் டியே நில த் தி ல் சரிவதையும் காணும்போது வேடிக்கையாக இருக்கிறது.
அது என்ன பறவை? ஏன் இவர்கள் மீது முட்டைகளை இடுகின்றது?
கருக்களின் பின்னர் தென் புறமாகச் செல்லும் குழுவினர் புதியதொரு பிரச்சினையைச் சொன்னார்கள். தலைகீழாக நிற்கும் பிராணிகள் நிலத்திலி ருந்து பிரகாசமான இருளைத் தொடர்ந்து பாய்ச்சுகிறார்க ளாம். அதனால் அவர்களால் வேட்டையாட முடியாதிருக்கிற
4.
தாம். நெடுஞ்செவியன் அவதா னித்தபோது மண்டைதீவுப் பக் கமிருந்து அப்படியான இருள் பாய்ச்சல் நடப்பது தெரிந்தது.
இந்தத் தலைகீழாக நடக்கும் பிராணிகள் எல்லாம் ந ம க் கு எதிராக ஏதோ சதி செய்கின் றன என அது எண்ணியது.
அடிக்கடி இரவிலும் பகலி லும் அப்பாலிருந்து வெடிச்சத் தங்கள் கேட்ட வண்ணமுமிருக் கின்றன. சுற்றாடல் அமைதி குலைந்து போனது.
*, நாங்கள் எங்காவது போய்
விடுவமே! இந்தவிடம் நாம் வாழ த் தகுந்ததல்ல, என்ன சொல்லிறியள்?' என தென்
பக்கக் குழுவிற்கு வழிகாட்டும் அகல்விரலன் மீண்டும் சேட்ட போது, நெடுஞ் சிெ வி யன் திகைத்துவிட்டான்.
"இங்கிருந்து ஓடுவதா..? இது நாம் பிற ந்த இடம்: வாழ்ந்து பெருகிய இடம். இங் கிருந்து ஒடுவதா?" என மறுத்து விட்டது.
வானில் மிதந்து செல்லும் போது நிலத்தில் ஏதேதோவெல் லாம் சீறிக்கொண்டு தீப்பிழம் பாகக் கோட்டைப்பக்கம் பாய்ந் தன. சில வானில் கிளம்பின. எங்கும் ஒலிவெள்ளம் இருளைப் பரப்பியது. அவற்றின் இரவுப் பயணம், இரைதேடல் இவற்றி னால் பாதிக்கப்பட்டன. அகல் விரலனின் வாதம் சரிதானோ என அது சில வேளைகளில் எண் ணவுந் தலைப்பட்டது. வெடிச் சத்தங்கள். தலைகீழாக நடக் கும் பிராணிகளின் ஒலங்கள். வெற்றி முழக்கங்கள்.
என்ன நடந்தாலும் இங்கி ருந்து ஒடுவதில்லை. இது எங் கள் பிரதேசம். எங்க ளது வானம்!

இங்குள்ள நிம்மதி எங்கு வரும்? இங்குள்ள சுதந்திரம் எங்கு வரும்?
கிழக்குவானில் வெளிரலு டன்'அவை தம்மிடத்திற்குத் திரும்பின.
நிம்மதியில்லை. போதிய உணவு கிட்டவில்லை. உணவு
தேட முடியவில்லை' என அகல் விரலன் குற்றம் சாட்டியது. நெடுஞ்செவியன் எதுவும் பேச வில்லை.
எங்காவது போய்விடு வோம்."
நெடுஞ்செவியனின் மெள னம் , அகல்விரலனுக்குக் கலக் கத்தைக் கொடுத்தது. அமைதி
பானது.
அவை தம் வீட்டின் கூரை விட்டங்களில் தொங்கத்தொடங் கின. பின்னங்கால்களால் பற்றி
யபடி தொங்கும் அவற்றினை நெடுஞ்செவியன் கவலையுடன் யார்த்தது. அங்கு பசியினால் அமைதியின்மை நிலவுவதைக்
கவனித்தது. என்ன இது என்ன சத்தம்?
தூரத்தில் அதற்குப் பழக் கப்பட்ட இரைச்சல் மெதுவாக எழுந்தது. தலைகீழாக நடக்கும் பிராணிகள்_மீது முட்டையிடும் பறவை. இரைச்சல் நெருங்கி விர்தது. கட்டிடத்தின்தளத்தில் நின்றிருந்த மணியம் பொம்பர்" என்று அலறியபடி வெளியே ஓடுவது தெரிந்தது. இரைச்
திகமிக அரு கில் பெரிதாகப் பயங்கரமாகக் கேட்டது. நெடுஞ் விெயின் கால்பிடிப்பைத் தளர்த் திக் கொண்டு பறந்தது. ஏனை யனவும் காற்றில் மிதந்தன. பெரும் இரைச்சலுடன் விரைந்து தாழ்ந்த பறவை பெரும் முட் ட்ைபொன்றினை அக்கட்டிடத்
செய்வது?
45
தின் மீது இட்டது: எ ன் ன பயங்கரம்? என்ன சத்தம்? அவர் கள் வாழ்ந்த கட்டிடத்தின் கூரை சிதறியது. கட்டிட்த்தின் பகுதி கள் இடிந்து சரிந்தன. எங்கும் ஒலம், மரண ஒலம் பாவிகளே? நாங்கள் என்ன செய்தோம்?
நெடுஞ்செவியன் ஒரு மூலை யில் தூக்கியெறியப்பட்டது. தன்னைச் சுதாகரித்துக்கொண்டு பார்த்தபோது தன் கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உடல் சிதறி. கிழிந்து: அடையாளம் தெரியாமல் போயிருப்பதைக் கண்டது. தம்பியவை வானில் கலக் க க் குரலெழுப்பியவாறு சஞ்சரித்தன.
அகல்விரலன் அதன் அருகில் வந்தது.
"இனியும் இங்கு இருக்கத்
தான் வேண்டுமா?"
"இனியும் இங்கு இருக்கத் தான் வேணுமா?"
இங்கு தான் எ ங் கோ ருக்க வேண்டும்' என்றது நெடுஞ்செவியன், "இது எங்கள் பிரதேசம். முட்டையிடும் பற வையைத் தாக்கியழிக்காது அதற் குப் பயந்து ஓடிப்போவது."
மீண்டும் அதே இரைச்சல் எழுகிறது. அவை ஒரு Luigi LDTeh ஒதுங்கிச் சென்றபோது, நிலத் தில் நேராக நிமிர்ந்து நின்ற பிராணிகள் அந்தப் பறவையை நோக்கி ஏதோ ஒன்றினால்
தாக்குவது தெரிந்தது. தாழ்ந்து பறவை பயத்துடன் வானில் கிளம்பிப் புள்ளியாக மறைவ தும் தெரிந்தது.
இனி இந்தப்பக்கம் 6htgrnt** என்றது நெடுஞ்செவியன்.
"அழிக்கும் வரை வரும்" என்றது கலக்கத்துடன் அகல் விரலன்.

Page 25
பிழிந்தசாறு
"கிளவுண்" சுத்தரத்துடன் ஒரு கலைக் குழு நிலாக்கால உரையாடல்.
இராணுவத்தின் யிடிக்குள் சிக்கி பல மாதங்கள் தனித்து, அண்மையில் வீடு திரும்பிய, 73 வயது நாடகக் கலைஞர் "கிள வுண்" சுந்தரத்தை சன்மார்க்க சபை சார்ந்த கலைக்குழு சந் தித்தது. நாற்பதுகளில் நாடக மேடையில் தனிமுத்திரை பதித் தவர் இவர். கலைப் பூமியாம் அளவெட்டியில் நீண்டகாலம் வசித்தவர். சித்திர ஆசிரியராகப் பணிபுரிந்தவருமல்லவா? உரை யாடல் சுவாரஸ்யமாக பலமணி நேரம் தொடர்கிறது. பிழிந்த சாறாக இதோ சில அம்சங்கள்.
அந்தக்காலத்தில் நடித்த நாடகங்களில் தனித்துவம் மிக்க ஒரு நாடகம் பற்றிக் கூற முடி யுமா? என அதிபர் எஸ். செல் லத்துரை கேட்டபோது, "பனை யரசன்’ நாடகம் பற்றிப் பல தும் பத்தும் பேசுகிறார். "பனையரசன்'" நாடகம்
அளவெட்டியில் 1940 - ல் *சபனையரசன் நாடகம் மேடை யேறியது. இராசா இராணிக் கதையல்ல. பொருளாதாரம் பற்றிய போதனைகள் இழை டிபாடிய பிரதி. சாதித் தடிப்
ஏ ரி பொன்னுத்துரை
பையும் சாடிய நாடகம், ஐம் பது ஆண்டுகளுக்கு முன் இப்ப டியான வார்ப்பு புதுமைதானே. திரு. எஸ். சிதம்பரப்பிள்ளை, பி. ஏ, பிஎஸ்ஸி. வைத்தியர் அம்பலவாணர் உட்படப் பலர் வாலி ப்பராயத்தில் முற்போக்கு நோக்குடன் முன்வைத்த புதிய ஆக்கம் இது. யாரோ ஒரு சட்ட வல்லுநர் எழுதியதாக அறிகின் றேன். இதில் "சின்னி" என்ற மிக அடிமட்ட பெண் பாத்திரம் தாங்கி நான் நடித்தேன். பஞ் சம் நிலவிய வேளையிலே, உண வுப் பிரச்சனை சாதாரண மக் களை திணற வைத்த ஒரு கால கட்டத்திலே, பனைப் பிரயோ சன உபயோகம் அநாகரிகமென மேல்மட்டத்தால் ஒருமாதிரிக் கண்ணோட்டத்துடன் புறக்க ணிக்கப்பட்ட நிலையிலே "பனன யரசன்" நாடகம் அரங்குக்கு வந் தது. தலை முதல் வேர்வரை தக்க பயன் தந்து நமது பொரு ளாதாரத்தை ஆட்டம் காண விட்டுவிடாத விருட்சம் இது! கஷ்டம் எதுவுமின்றி வளர்த் தெடுக்க வல்லதும் ஆயிற்றே என்ற சிந்தனைகளை ஞாபக மூட்டி நின்றது இந்த நாடகம்.
46

"சின் னி ப் பாத்திரத்தின் மூலம் உயர்சாதி மக்க ளி ன் கபடம், கரவுகள் பிட்டுக் காட் டப்பட்டன. அட்சர சுத்தியுடன் se-égorr_6ord GléFurr Lodi FlDrr ளித்துப் பூசை செய்யும் அந்த ணர்களின் கிறு தாக் க  ைள, போலித்தனங்களை பூ சக ர் வேடந்தாங்கிய திரு. சிதம்பரப் பிள்ளை சுவையாக நடித்துக் rr "LņGOT ITri. சின்னிப் பாத்திரத்தை நயந்த கலையரசு க. சொர்ணலிங்கம் அவர்கள் தனது பல நாடகங் களில் என்னை நாட்டுப்புறப் பெண்ணாகத் தோற்றவைத்துத் தான் புருஷனாக நடித்துள்ளார். "உன்னோடு வாய்காட்டி நடிப் பது சிரமந்தான் எ ன ஒரு நிலையில் ஒத்துக் கொண்டிருக் கிறார். எள்ளலாகவும் அதே வேளை தழுக்காகவும் பேசும் ஆற்றல் என க் கு இயல்பாக இருந்ததால் இந்த முக்கிய பாத் திரத்தை அழுத்தமாக நடித் தேன். s
திருமதி விசாலாட்சி சுந்தர மூர்த்தி சுவையான சிற்றுண்டி தேநீர் தருகிறார்; ரசித்துக் குடிக்கிறோம்.
சந்திரமதி மத்தளம் அடிக்கிறார்
அக்கால ரசிகர்கள் பற்றி உங்களது அபிப்பிராயம் என்ற வினாவை முன்வைக்கிறார் நடி கர், வெ*க்கள ஆசிரியர்கள் உத்தியோகஸ்தர் திரு, பூஞரீகாந்த ராஜ்.
முப்பதுகளில் அரிச்சந்திரன் ஆட்டக் கூத்தை சதுர மேடை யில் பார்த்திருக்கிறேன். எனது பாட்டன் காலத்தில் வட்டக் களரியில்தான் கூத்துக்கள் ஆடப் பட்டன. நாடகம் விறுவிறுப் பாக நடந்தது.
நான் தாங்கிய
பொருட்படுத்த
ஆட்டம் விரவிய நாடகமா தலால், அளவெட்டி யூர் நடி கர்கள் மத்தளம் அடிக்கக் கூடிய வர்களாய், தாளலய பிடிமா னம் மிக்கவர்களாய் இருந்தனர். சந்திரமதியாக பெண் வேட மிட்ட நடிகர், மே  ைட யி ல் தோன்றாத வேளை, வேறு நிகழ்வுகள் நடைபெறும் போது, மேடையின் வலப்புற ஓரத்தில் அமர்ந்து பக்கப்பாட்டுக்குத்தக மத்தளம் அடித்தார் அரிச்சந்தி ரனாக நடித்தவரும், இடைக் கிடை இதேபோல மிருதங்கம் வாசித்ததுண்டு, தரங்குறைந்த * முசுப்பாத்தி" ச் சுவைஞர்கள் சிரிக்க எள்ளல் செய்து பொழுது போக்க எத்தனிக்கலாம். இப்படி ஒரு நிலை அங்கு நிகழவில்லை
இதனை வேடிக்கையாக எடுக் காது நாடகத்தில் ஒன்றி ரசித் தார்கள் சுவைஞர்கள். நிஜ
வாழ்க்கையைப் பார்க்கவில்லை, நாடகம் பார்க்கிறோம் என்ற உணர்வுடன் நுகர்ந்த நிலையைத் தான் இது காட்டுகிறது. இன்று கூடப் பல கல்விமான்கள் மேடை யில் நிகழும் அசம்பாவிதங்களை மேலே சுட்டியது போன்றவற்றை கண்டு சிரித்து நக்கலடிப்பதுண்டு. நாடகத்தை, நாடகம் பார்க்கும் உணர்வுடன் பார்ப்பவன் சந்திர மதி மிருதங்கம் அடிப்பதையோ அல்லது இதுபோன்றவற்றையோ மாட்டான்! நாடக நயப்பில் ஈடுபடுவான். 50 வருடங்களுக்கு முன் உயர் தர ரசிக வட்டம் அளவெட் டியை அடுத்த பகுதிகளில் இப் படி இருந்ததே என க் கூறி வியந்தபோது, ஏ. ரி. பி. "அச்சா அச்சா" என்கிறார். நாட்டுக்கு நல்லது செப்பிய பொன்னாலைக் கிருஷ்ணன்
இளமையில் நீங்கள் விதந்த நாடகக் கலைஞர் யார்? என நாடக மாணவன் எஸ். நித்தி யானந்தன் கேட்டதுதான் தாம
47、

Page 26
தம், பொன்னாலைக் கிருஷ்ணன் என்ற 'பெயர் பொங்கி எழுந் தது அவரது உதடுகளில் இருந்து.
பொன்னாலைக் கிருஷ்ணன் எ னது குரு. பாட்டியற்றிப் பாடவல்ல வர கவி. நகைச்சுவை சிந்தி நடிப் பதில் விண்ணன். இடைக்கிடை பயூனாக வருவார். ஊருக்கு உபதேசம் செய்யும் முறையில் நகைச்சுவை இழை யோ டு ம் தனது பாட்டுக்களைப் பாடி நடிப்பார். சமூக சீர்திருத்தத் துக்காக மேடையை நன்கு பயன் படுத்தியோரில் இவரும் ஒருவர். அதனால் பாத்திரங்கள் தாங்கி ந டி க் கா த வர் எனத் தப்புக் கணக்குப் போட்டுவிடாதீர்கள். சிறு பாத்திரங்கள் பலவற்றைத் தேவை நோக்கி பபூன் வேடத்
துடனேயே நடிப்பார். சேவக னாக, தோழியாக, ஏழையாக என்று பலவற்றையும் அற்புத
மாக நடித்துக் காட்டவல்லவர்.
அப்போது ஒருவரே (இன் றைய எடுத்துரைஞர்) போலப் பல வேறு பாத்திரங்களாக மாறி நடிக்கும் நவீன உத்தி அன்றும் இருந்திருக்கிறது. பூரீகாந்தராஜ் கூற, நவீன உத்திகள் என இன் றைய நாடக உலகு கருதும் பல வற்றின் ஊற்று அன்றைய நாட கங்களில் நடைமுறையில் இருந்த தென்றார். ‘நானும் கிருஷ்ண னாகத் தோன்றி கி ருஷ்ணன் கையாண்ட உத்தியில் நாட்டுச்
செய்திகளை, நாட்டு நடப்பு களை பாடலாய்ப் பாடி நடித் திருக்கிறேன்"
நல்லது, பொன்னாலைக்
கிருஷ்ணன் பாடலில் சில வரி களைக் கூற முடியுமா? என்று வைத்தியர் மகாலிங்கம் (முன் னாள் இளம் எழுத்தாளர் சங்க
உடனுக்குடன்
உறுப்பினர்) கேட்டதுதான் தாமதம் பொக் கை வாயில் இருந்து பிறந்த வரிகள்; இதோ:
* "படிக்கும் பரிஸ்டர் அட்வக்கேற் புரொக்டர் க்குரியனவும் மெடிக்கல் மெடிசினல் மேலும் பிசிக்கல் அன் ரெக்கணிக்கல் நொடிக்கும் எலெக்ரிக்கல் நுட்பமிருந்தும் எலெக்ரோனிக்கல் படித்து பொலிரிக்கல் பற்பலவாறு பகர்தற்கு நல் பல்லரிய வகுப்பை எல்லாம் பணமளித்து பாசுபண்ணி சொல்லரிய துரைத்தனத்தார் துணைக்கருவியாகி
மண்ணில் பாண்டித்திய மடைந்தீர் கவுன்சில் பாரிலையும் அமர்ந்தீர் எஞ்சினியர் ஆயும் உறைந்தீர் நம் தேசம் விளங்க ஒர் ஊசி செய்ய போமோ?"
யந்திர மாம் மந்திரத்தை கொண்டுவந்து எங்களிடம் தந்திரமாய் சபித்ததாலே சொந்தமெலாம் இழந்துவிட்டோம் தொழில் மறந்தோம் சோம்பேறியாயும் விட்டோம்.
நாடகம் goirlso
நாடகம் சினிமாடகமாக இருக்கக் கூடாது என விமர்ச கர்கள் கூறுகிறார்களே நீங்கள்
48

இடைக்காலத்தில் அசோக்கு LonTrif, மனோகரா, சாரங்க தாரா என்று சினிமாப் பாணி யில் நாடகமாடியதாக அறிகி றோமே. என இழுத்த வேளை அது அன்றைய தேவையாய் இருந்ததால் பிரபல ந |ா ட க வல்லுநர் சரவணமுத்து உட்பட பலர் சினிமா தழுவி நாடகங்
é56ð)GT அர ங் கே ற் றினர்" என்றார்.
நீங்கள் குறிப் பிட்டது
போன்ற பல சினிமாக்கள், ரசி கர்களைத் திசைதிருப்பிக் கொண் டிருந்த காலமது. பல கிராமங் களிலும் நாடகங்களைக் கொட் டகைகளில் "ரிக்கற்றுக்கு நடாத் துவித்தவர்கள். சினிமா மாதிரி நாடகங்கள் மேடையிட்டால் தான் பணம் சேரும், நடிகர்க ளாகிய உங்களுக்கும் இ த ர கலைஞர்களுக்கும் ஊழியம் தர முடியும் என்றார்கள். நாடகம் பார்க்கும் குறைந்த வீத மக் களை (ரசிகர்களை) அவர்கள் விருப்பை பூர்த்தி செய்வதன் மூலமே தொடர்ந்தும் பார்க்க வைக்கலாம் என்ற நிலையும் இருந்தது. சினிமாவுடன் போட் டியிட்டு நாடகத்துறையை நிலை நாட்ட, ரசிகர் கூட்டத்தை கலையவிடாது தடுக்க சினிமாப் பாணியைப் பின்பற்றினோம். வெற்றி கண்டோம். இன்றைய நாடக வளர்ச்சி நிலையும் பிழை எனக் கருதப்படலாம். நாடக ரசிகர்களை மே  ைட யு டன் தொடர்ந்தும் இணைத்து வைத்
ருககக கையாண்ட தற்காலிக உத்தியே இது. எமக்கும் ஊதி யம் கிடைத் த தே. வேறு தொழில் புரியாத எங்களுக்கும் உணவு உடை. என்று இழுத்
25ftfit.
49
வாழ்க்கை பற்றி
பல நாடகக் கலைஞர்கள் சொந்தக் குடும் ப வாழ்வைப் போட்டுடைக்கிறார்கள். நீங்கள் சற்று வித்தியாசம் போல் தெரி கிறதே. என்ற வினாவுக்கு பின்வரும் பதில் வருகிறது.
நாடகம் போலச் சித்திரத் திலும் தனி ஈடுபாடு எனக்கு. ஆக பாடசாலையில் படித்து சித்திரம் உட்படப் பல பாடங் களில் பரீட்சையில் தேறிவிட் டேன். தோட்டப் பாடசாலை யில் ஆசிரியராகத் தொழில் புரியுமுன் பணம் பெற்று நடித் தேன். ஆசிரியரான பின் நடிப் புக்கு ஊதியம் பெறவில்லை. நடிப்புக் கலையை மத்திய மாகா ணத்தில் வளர்க்க முனைந்துள் ளேன். கலை இலக்கிய கர்த் தாக்கள் பின்னணியில் நின்று புடம் செய்தனர். மலை நாட் டில் கவிஞர் மன்னவன் அவர் களும், நடேஸ்வராவில் பணி புரிந்த வேளை ஏ. ரி. பி., நடிக மணி வைாமுத்துவும், ம க ர ஜனாக் கல்லூரியில் கடமையாற் றிய வேளை கவிஞர் கதிரேசர் பிள்ளையும் மற்று ம் சானா போன்றோரும் ஊக்கி உயர்த் தினர். சோர்வடையும் காலத் தில் இவர்கள் உறவு எனக்கு ஒரு ரொனிக். இதைவிட மகா கவி, அ. ந. கந்தசாமி, அ. செ. முருகானந்தன், செ. நடராஜா போன்ற எழுத்தாளர்கள் பரிச்சி யம் இளமை முதல் எனக்கு உண்டு. நடிகன் வாழ்வு நயம் பெற இலக்கியப் பின்னணியும் அவசியமே. நான் சஞ்சிகையை விரும்பிப் படிப்பவன். நாடகம் பற்றிய கட்டுரைகயை நயப்ப வன். நன்றி கூறி விடைபெறு கிறேன்.

Page 27
மல்லிகைக் குடும்பத்து
இல்லத்தரசி போல
-தெனியான்
மல்லிகைப் பணியுடன் தம்மை இணைத்துக் கொண்டு விட்ட தில் இன்று வெள்ளி விழாவுக்குரியவர்க விளங்குகிறார் அண்னர் சந்திரசேகரம் அவர்கள். மல்லிகை என்பது ஒர் இலக்கியச் சஞ் சிகை மீாத்திரமன்று அண்னர் அவர்கள் வெறுமனே அச்சுக் கோப்பாளரும் அல்லர், மில்லினசு ஒரு குடும்பம், அந்தக் குடும் பத்தின் இல்லிடமே மல்லிகைக் காரியனியம் ,
ஓர் இல்லத்துக்கு வருகின்ற ஒருவருக்கு வெற்றிலை வழங்கி உபசரிப்பது தமிழர்களுடைய ப. டைய மரபு. இன்றைய கால கட்டத்தில் தேநீர் கொடுத்து உபசரிக்கும் புதிய கலாசாரம் நாக் ரிகமடைந்த மக்கள் பத்தியில் வளர்ந்து வந்திருக்கின்றது. மல்லிசுை இல்லத்துக்குச் சென்றால் அண்ணர் வெற்றிலை வழங்குவார், ஜீவா அவர்கள் தேநீர் தருவார்.
ஈழத்து இலக்கிய உலகில் மூத்த தலைமுறை எழுத்தாளர்கள் மத்தியில் தாம் எல்லோரும் ஒரு குடும்பத்தவர்க்ள் என்னும் உணர்வு மேலோங்கி இருந்து வந்திருக்கின்றது. இந்த உணர் வின் காரணமாக, தமக்குள்ளே எழுந்த பிணக்குகள் சச்சரவுகளை அவ்வப்போதே மறந்து பாசப் பிணைப்புடன் உறவு பூண்டு நெருக்க முற்றிருந்தது. இத்தகைய ஒர் உறவு இன்று மல்லிகைக் குடும் பத்தில் மாத்திரமே பேணப்பட்டு வருகின்றது எனலாம். இந்தக் குடும்பத்துக்கென்று அமைந்த இல்லத்தில் இல்லத்தரசி போல இருந்து வருகின்றவர்தான் அண்னர் சந்திரசேகரம் அவர்கள். இல்லத்தரசியானவள் இவ்வித்துக்குள்ளே செயற்றிறனோடு கண் காணித்துக் குடும்பத்தை நிருவகிப்பதும், உறவுகளைப் பேணுவதும் அவள் தலையாய கடனமாகின்றது. ஜீவா அவர்கள் அங்கில் லாத சமயங்களில் அண்னர் அவர்கள் மேற்குறிப்பிட்ட ஓர் இல் லத்தரசியாகவே விளங்குகின்றார்.
கஸ்தூரியார் வீதியில் சலூனின் பின்புறத்திலிருந்து மல்லிகை மலரத் தொடங்கிய காலத்திலேயே மல்லிகைக் குடும்பப் பொறுப் பைக் கையேற்றுக் கொண்டவர் அண்ணர் சந்திரசேகரம் அவர் கள். அந்தக் காலம் முதல் மல்லிகைக் குடும்பத்துள்ளே நெருங்கி வந்தவர்களும் விலகிச் சென்றவர்களும் எனப் பலர் உண்டு. அத் தினை பேரையும் கண்டு. உதட்டுக்குள் மெல்லச் சிரித்த வண்ணம் மல்லிகை இல்லத்துள்ளே இருந்து கொண்டிருப்பவர் அண்ணர் அவர்கள். தோற்றத்தில் பெரிதும் மாற்றமுறாதிருப்பது போலவே, பொறுப்பிலும் மாற்றமுறாது மல்லிகையைச் சமைத்துக் கொண் டிருக்கிறார். அண்னருக்கு வெள்ளி போதுமானதல்ல. பொன்னை யும் சூட்டி நாம் மகிழவேண்டும் மகிழ்வோம்.
5 ()

விழாக்கண்ட சமூக (psön GSTITIT 14
திரு. க. முருகேசு
(இளைப்பா நிய அதிபர்)
Աp. அநாதரட்சகன்
நிலப் பிரபுத்துவ சரி தாயத்தின் (வளிப்ப" டான தீண்டான்' சாதி ஒடுக்குமுறை ரன்பE தீவிரமாக தி ல ish Lנ இருபதாம் நூற்றாண்டின் முற் L fly ஒபயில் தோன்றி, . படுத்தப்ப "ட மக் சின் சமூக முன்னோ டிகளாக சேவையா ற் ரீயவர்களில் ஒரு வர் அல்வாய் வடக்கை சேர்ந்த வரும் புத் தூரை வாழிடமாகக் 3 அர ஒன் டரி ரும் ே இை ாப்பாறிய அதி பர் திரு. க. முருகேசு ஆவார்.
வதிரிசைச் சேர்ந்த சைவப் பெரியாரும் சமூகத் தொண்டரு Inrఇf (U - ਸ਼T T அவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட தேவரை பாளிச் சமூகத்தில் பாரம்பரியத்தின் முதல் அறி எடைகளில் ஒருவர் ப்ெரியார் க. முருகேசு ஆசிரியர் அவர்கள். னையோர் கவிஞர் திரு மு செல்லையா , சைவப்புலவர் திரு. சி. வல்லிபுரம், திரு. ஆ" " செல்லத்துரை ஆகியோராவர்.
ஒடுக்கப்பட்ட- சமூகத்தின் விடி அக்காய் உழைத்த தலைவர் ரிங் வரி ைரயில் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களில் பெரி irri T. F. முருகேசு அவர்களும் ஒருவர். வடமராட்சி சமூக வே சங்கத்தின் ஸ்தாபர்களில் ஒருவராகி இருந்து. பின் சிறு பான்னமத் தமிழர் மகாசபையின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவ ராகவும் இருந்து சரி* விடுதலைக்கு தான் சார் ந்து நின்ற அமைப்
புக்களினூடாகப் பங்களிப்புச் செய்துள்ளார்.
5.

Page 28
தான் சார்ந்துள்ள சமூகத்தின் கல்வி, கலை கலாசார, அரசி யல் பொருளாதார மேம்பாட்டுக்காக பல நிறுவனங்களை மு ன் னின்று தோற்றுவித்துள்ளார். அந்தவகையில் அல்வாய் வடக்கில், யா |பூரீலங்கா வித்தியாசாலை, சமூக புனருத்தாரண ஐக்கிய சங்கம், விக்னேஸ்வரா வாசிகசாலை, நெசவு நிலையம், பன்ன வேலை நிலையம், அம்பிகா பண்டகசாலை, புத்தூரில் பூரீவிஷ்ணு வித்தியாலயம் போன்றவற்றின் ஸ் த ரா ப க முதல்வராக இருந் துள்ளார்.
பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் பேணவும், அவர்களது ஒருமித்த குரலை வெளியிடவும் என யாழ் வைத்தியர் திரு. வி. எம், முருகேசு அவர்களால் வெளியிடப்பட்ட 'தூதன்' எனும் பத்திரிகையைப் பொறுப்பேற்று, அதன் ஆசிரியராக இருந்து வெளி யிட்டவர் இப்பெரியார் . ஈழத்து எழுத்தாளர்களின் முன் வரிசை யில் திகழும் பல எழுத்தாளர்களுடைய படைப்புக்களை தனது பத்திரிகையில் பிரசுரித்து அவர்களுக்கு ஊக்கமளித்தவர். பிரபல எழுத்தாளர் கே. டானியல் அவர்களின் முதற் படைப்பு இவர் ஆசிரியராக இருந்த 'தூதன்' பத்திரிகையிலேயே வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன், பெரியார் திரு. க. முருகேசு அவர்கள் நடிகமணி
வி. வி. வைரமுத்து அவர்களின் குருவும், வளர்ப்புத் தந்தையுமா வார். நாடகத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் பல நாடகங்களை எழுதியதுடன் நெறிப்படுத்தியுமுள்ளார். நாடக ஒப்பனைக் கலையிலும் தேர்ந்த அனுபவம் வாய்க்கப் பெற்றவராக விளங்கினார். இவர் எழுதி நெறிப்படுத்திய "மதிவதனா சத்திய சீலன்' என்னும் நாடத்கதிலேயே வி. வி. வைரமுத்து அவர்கள் முதன் முதலாக மேடை அனுபவம் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்க விடயம்.
இவர் ஈழத்து முதன்மைக் கவிஞர்களில் ஒருவரும், விரிவுரை யாளரும், நாடகத்துறைக் கலாநிதியுமான திரு. காரை செ. சுந்த ரம்பிள்ளை அவர்களின் மாமனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் போஷிப்புக்கான பணிகளில் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்பட்ட இப் பெரியாரின் வாழ்வினையும் பணியினையும் கெளரவிக்கும் முகமாக அவரது எண்பத்தி மூன் றாவது வயதில் அல்வாய் வடக்கு மக்கள் 18 - 12-93 ல் பவள விழா எடுத்து வாழ்த்தினார்கள். இவ்விழாவில் இவரது சமூக வாழ்வையும், பணிகளையும் பேசும் "வட அல்வை முருகேசர்" என்ற நூலும் வெளியிடப்பட்டது.
இந் நூலினை பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் வெளி யிட்டுவைக்க, நூலுக்கான மதிப்புரையை டாக்டர் எம். கே. முரு கானந்தம் அவர்களும். அரசண்ணா அவர்களும் வழங்கினர். இப் பெரியாரை வாழ்த்தி மல்லிகை ஆசிரியர் டொமிளிக் ஜீவா அவர் கன் பேசினார். இவ்விழாவின் சிறப்புரையை தெணியான் அவர் கள் வழங்கியதோடு மற்றும் பலரும் பாராட்டுரை வழங்கினர். 9
52

தெ
லும் புதுப் பு அறிவு
y sir Syria டில் பகு இலக்கியத் 6), U1l GT உங்களுடைய (pub97u d முனையுங்கள், தேடல் முயற்சி கின்றேன். நோக்கம். அ
கருத்தாகும. இத்தத் தளத் தலாம். இதனா தித்த வற்றையு Gsre 6MT
கேள்வி கேட்பதே ஒரு கலை. அதி துக் கேள்விகள் கேட்பது வளர்ச்சிக்கு உகந்ததாகும். பல விரும்பிப் படிக்கப்படுவது தூண் தியாகும். எனவே சுவையான, தரமான, சிந்திக்கத்தக்க கேள்விகளைக் கேளுங்கள்
உண்மையான தேட
ல்லிகை மூலம் கேட்க ஏனெனில் ந ர னு ம் யிலேயே ஈடுபட்டு வரு இங்கு உபதேசம் அல்ல றிதலே அறிந்து, தெரிந்து ளிந்து கொள்வதே அடிப்படைக் இளந் தலைமுறையினர் தை நன்கு பயன் படுத் ல் நான் படித்த, சிந் அனுபவித்த, உணர்ந்த சகல உங்களுடன் பகிர்ந்து விரும்புகின்றேன்.
- 6 ordaféš gu
தூண்டில்
கு ஒரு நல்ல கதையை எப்படி
வாசிக்கிறீர்கள்? கோப்பாய், க. தவசோதி
முதலில் அந்த நல்ல கதை யைச் சுவைக்காகவும் அதனது நடை ஓட்டத்திற்காகவும் aurr6Gu பேன். பின்னர் சாவகாசமாக அதன் உத் தி நுணுக்கங்கள் பாத்திர வார்ப்பின் நெளிவு சுளிவுகளுக்காகவும் ஆறுதலாக வ சித்துச் சுவைத்து, மனசில் உள்வாங்கிக் கொள்வேன்.
0 சால்மான் ருஷ்டி எழுதிய "சாத்தானின் கவிதைகள்' என்ற நூ  ைல வெளியிட்டது சம்பந்தமாக அதன் ஆசிரியருக்கு ஈரான் மரணதண்டணை விதித்
துள்ளதாமே Guairo.72
அதன் விவர
கெருடாவில் எஸ், குணேஸ்வரன்
ஈரானிய அரசு ஃபத்வா என் கின்ற முரட்டு மரண தண்ட னையை இந்த நூலாசிரியருக்கு வழங்கியுள்ளது. இந்திய பூர்வீ கத்தைச் சேர்ந்த பிரிட்டிஷ் பிரஜை இவர், இஸ் லா மிய அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிராக இந்த நூல் எழுதப்பட் டுள்ளது என்பது மத அடிப்படை வாதிகளின் குற்றச்சாட்டு. அப் படியல்ல என்பது நூலாசிரி பரின் பதில். இதுதான் உள்ள படி பிரச்சினை.
அடுத்து, இதே தண்ட னையை பங்களாதேஷ் மத அடிப் படை வாதிகள் தஸ்லீமா நஸ்
、53

Page 29
ரீன் என்ற பெண் டாக்டருக்கு அவரது சமீபத்திய நாவலுக்காக வழங்கியுள்ளனர்" இவர் "லஜ்ஜா" என்ற நாவலை எழுதி வெளி யிட்டதற்கே இந்தக் கடும் தண்
66,
0 சமீபத்தில் யாழ்ப்பாணத் தில் வாரா வாரம் புதிய புதிய புத்தகங்கள் எ ல் லா ம் வெளிவருகிறதாமே, அதில் ஒன் றைப் பற்றிச் சொல்லுங்களேன். த ராஜவேலு நான் ரொம்பவும் மதிக்கிற கவிஞர் புதுவை இரத்தினதுரை யின் "நினைவழியா நாட்கள்" என்றொரு கவிதைத் தொகுதி சமீபத்தில் வெளிவந்துள்ளது. அவரது கவித்துவ ஆழம், சொல் வீச்சு, கற்பனைத் திறன் இக் கவிதைத் தொகுதியில் மிளிர்ந்து காணப்படுகின்றன. கால ம் கடந்தும் வாழும் கவிதைகள் இதில் ஏராளம் உண்டு. மல்லி கையில் எழுதிய பன்னிரண்டு கவிதைகள் இந்தத் தொகுதியில் இடம் பெற்றிருப்பது குறிப்பி டத்தக்க ஒன்று.
e சென்ற இதழில் குறிப்பிட்
டிருந்தீர்கள், புத்தகங்களை வெளியிடக் கூடிய சூழ்நிலை இன்று இந்த மண் ணில் நிலவுவ தாக. உண்மையாகவே வெளி யிடும் புத்தகங்கள் விற்பனையா கக் கூடிய சாத் தி யப் பாடு
D.67 LIT?
பசறை,
மானிப்பாய், எஸ். மனோகரன்
இப்படியான சந்தேகப் பிர கிருதிகள் எனது ஆலோசனை யைக் கேட்டு நடக்கத் தேவை யில்லை. தினசரி புத்தகங்களோ டும் எழுத்தோடும் புழங்கி வரு பவன் நான். கை நாடி எனக்கு விளங்கும். துணிந்து புத்தகங் களை வெளியிடலாம். பயப்ப டத் தேவையில்லை. நாம் முன்
முயற்சி எடுத்துச் சற்றுச் சிரமப் பட்டால் புத்தக வெளியீட்டில் சாதனைகள் கூடப் புரியலாம்.
0 பிரபல எழுத்தாளர் லா. ச. ராமாமிர்தம் அவர்களைச் சந்தித்துள்ளீர்களா?
க. தனேந்திரன்
1961 - ஆம் ஆண்டு நான் தமிழகத்தில் ஒரு மாதம் தங்கி யிருந்தேன். சென்னையில் பைகி ராப்ஸ் ரோடிலுள்ள தமிழ்ப் புத்தகாலயம் மேல் மாடியில் இருந்தேன். இருபது நாட்கள் தங்கினேன். சாயங்கால நேரங் களில் திரு. லா, ச, ரா. தமிழ்ப் புத் தகாலயத்திற்கு வந்து விடு வார். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொள்வோம். இப்படிப் பல நாட்கள் கதைத்துப் பேசும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.
யாழ்ப்பாணம்,
9 அடுத்த பிறவியில் பிறப்பெ டுக்கக் கூடிய சந்தர்ப்பம்
வந்தால் என்னவாகப் பிறக்க
விரும்புகிறீர்கள்?
சுன்னாகம், ம. தவமலர்
எழுத்தாளனாக - மல்லிகை ஆசிரியராக,
இ இன்றும் பார்வைக்கு இளை ஞனைப் போலக் காட்சி தருகிறீர்களே, ஏதாவது காய கல்பம் சாப்பிடுகிறீர்களா, இள மையாய் இருக்க?
நீர்வேலி, அ. சாந்தன்
மனசைத் தெளிவாக வைத் திருக்கின்றேன்; மற்றவர்களை அன்பாக நேசிக்கப் பக்குவப்பட் டுள்ளேன்; எந்த நேரமும் மக்க ளின் எதிர் காலச் சுபீட்சத்தைப் பற்றியே சிந்தித்துச் செயலாற்று கின்றேன்; மனந்திறந்து கதைக் கின்றேன்; சிரிக்கிறேன். எனது காயகல்பம் இவைகளேதான். --
54

ஏன் என்னில் பொறாமைப்படு கிள் ஹீர்கள்;  ைசமீபத்தில் ஏதாவது நல்ல சினிமாப் பட்ம் பார்த்தீர் களா? கந்தரோடை எம். சத்தியன் கொழும்பிற்குப் போயிருந்த போது தியேட்டரில் கமலின் குணா' படம் பார்த்தேன். பிரமிக்கத்தக்க படப் பிடிப்பு; நடிப்பு. சின்னத் திரையில் ரஜ னியின் "வள்ளி" பார்த்தேன். கதைத் திருப்பம் தமிழுக்குப் புதுசு. எனக்குப் பிடித்திருந்தது. கு சில ர் இங்கிருத்து வெளி வரும் நூல்கள், சஞ்சிகை களை வாங்கி வாசிப்பதில் காட் டும் அக்கறையிலும் untri di*, தமிழகத்திலிருந்து வரும் நூல் கள், சஞ்சிகைகளை வாங் வாசிப்பதில் அதிக அக்கறை காட்டுகிறார்களே? ஊர்காவற்றுறை, செல்மர் எமில்
எல்லாமே இக்கரைக்கு அக் கரை பச்சை என்ற நிலைதான். நீண்ட காலப் பழக்கமும் ஒரு காரணம். இன்று இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டு வருகின்றது. வெறும் கற்பனைச் சு கத் தி ல் மனசு குதூகலிப்பதை விட- கசப்பாக இருந்தாலும் நமது மண்ணில் நடக் கும் யதார்த்தத்தைப் புரிந்து கொள்வதில் ஒரு ஆத்ம திருப்தி இருக்கின்றது. பழைய அக்கரை"சிறந்தது என்ற மன மயக்கம் இன்று நமது சுவை ஞர்களிடம் விடுபட்டு வருவது கவனித்தால் தெரியும். கு எப்படியாவது புகழ் பெற்று
விட வேண்டுமென்பதற்காக அயராது பாடுபடுகிறேன். புகழ் என் பக்கமே திரும்பிப் பார்க்க வில்லையே!
இணுவில், க. கிவநேசன்
புகழ் விசித் தி ரமா ன பிராணி. நாம் அதன் பின்னால்
ஓடினால் அது ஒரே ஒட்டமாய்
55
ஒடி எம்மை மயக்கிவிடும். நாம் அதை மறந்து நமது துறைகளி லேயே அர்ப்பணிப்பு உணர்வு டன் உழைத்து வந்தால் அதே புகழ் எமக்குப் 96ör Gorft 6ão GOU கட்டித் தொடர்ந்து வரும். புகழைப் பற்றியே மறந்துவிடுங் கள். உழையுங்கள்; பின்னால் திரும்பிப் பாருங்கள்.
O சிலரைப் Lurrri 55ntó5) அவர் களுடன் நேசம் பாராட்டத் தோன்றுகிறது. வேறு இலரைப் பார்த்தால் அவர்களை விட்டு ஒதுங்கிப் போகச் சொல்லுகிறது, இதன் காரணம் என்ன?
கோப்பாய் to Loug5rdò
மனத் தத்துவ உண ர் வு இதற்குக் காரணமாக இருக்க Tஒலரைப் பார்த்ததும் உங்களது உள் மனம் அவர்களை நெருங்கச் சொல்லும். வேறு ஒலரைப் பார்த் ததும் அதே உள் மனம் ஒதுங்கிப் போகச் Gar T6) லும். உள் மனசே காரணம் ,
சிரமங்களுக்கு யாழ்ப்பாணத் தில் அடிக்கடி புத்தக வெளி டுவிழாக்கள் நடைபெறு கின்றனவே, இதை யோசிக்க ஆச்சரியமாகவில்லையா?
வ. ரவீந்திரன்
இ இத்தனை
மத்தியிலும்
நெல்லியடி,
ஓர் இனம் ஆரோக்கியமா கச் செயல்பட்டுக் கொண்டிருக் கின்றது என்பதற்கு_ஒரு நிதர் சன அடையாளம் இது. என்ன கஷ்டங்கள் வந்து எம்மையெல் லாம் அலைக்கழிக்கட்டுமே, இந்த மண்ணில் பிறந்த எழுத்தாளன் இதையெல்லாம் பா ர் த் துக் கிேறுங்க" மாட்டான். 1994 ஐப் பாருங்கள். இன்னும் இன்னும்

Page 30
திறமான புத்தகங்களின் வெளி யீட்டு விழாக்கள் நடைபெறும்.
டு சஞ்சிகைகள் புத்தகங்களை விரித்தால் புத்தகங்களின் விமர்சனம்தான் கண்களில் படு கிறது. ஆனால் அந்தப் புத்தகங் களை நேரில் பார்க்க முடிய வில்லை, என்ன செய்யலாம்?
மூளாய், ஆர். நரேந்திரன்
தேடல் முயற்சி தேவை. நல்ல புத்தகங்கள் சட்டென்று நமது கைகளில் வந்து விழாது. தேடித் தேடித்தான் படி க் க முயல வேண்டும். எனவே தேடிப் போங்கள். சற்றுச் சிரமப்படுங் கள். நிச்சயம் கிடைக்கும்.
0 எழுதுவதத்கு ஏற்ற நேரம்
பகலா - இரவா? தாவடி எஸ். குணசீலன்
இப்படிக் கேள்வி கேட்டு எழுதிவிட முடியாது. அது ஒவ் வெருவரினதும் சூழ்நிலையைப் பொறுத்தது. இர வி ல் தா ன் எழுத வேண்டும் என்ற கட்டா யம் இல்லை. சில ர் நல்ல வெயில் நேரத்தில் எழுதுவார் கள். இன்னும் சிலர் அக்கம் பக்கம் சந்தடி கேட்டுக் கொண் டிருக்கும் போதே ஆழ் ந் து உ ண ர் ந் து எழுதுவார்கள். எனவே எழுத வேண்டுமென்ற ஆர்வமும் உந்துதலும்தான் முக் கியம். அது இருந்துவிட்டால் எந்த வேளையிலும், எந்தச் சூழ்நிலையிலும் எழுதலாம்.
9 தமிழகத்திலிருந்து இலக்கிய
நண்பர்களின் கடிதங்கள் இப்பொழுதும் வருவதுண்டா? நல்லூர், ச. பரமநாதன்
முன்னர் அடிக்கடி வரும். நானும் அடிக்கடி தொடர்பு கொள்வேன். தபால் ஒழுங்கற்ற நிலைக்குப் பின்னர் கடிதங்களே வருவதில்லை. கொழும்பிற்குப் போனால் நான் கடித மூலம் நட்பைப் புதுப்பித்துக் கொள் வது வழக்கம்.
இ பழைய எழுத்தாளர்களின்
படைப்புக்கவைா இ ன் று பார்க்க இயலவில்லையே, ஏன் இவர்கள் எழுதுவதில் பின் நிற் கின்றனர்?
உடுவில், ஆர். ரகுநாதன்
பழையவர்களோ புதியவர் களோ இன்று எழுதவே "பஞ்சிப் படுகின்றனர் . நான் சந்திக்கும் அனைவரிட மும் நேரிடையாகக் கேட்டுக் கொண்டுதான் இருக் கின்றேன். எழுதுவதுடன் நின்று விடாது, தத்தமது பழைய ஆக் கங்களைத் தேடிப் பிடித்து நூலு ருவில் வெளியிட வேண்டியதும் முக்கியமாகும். இதை இவர்கள் அவசியம் செய்ய வேண்டும். இந் தக் குண்டடிக்குள்ளும் பாரிய அவஸ்தைக்குள்ளும் புதிய புதிய புத்தகங்களின் வெளி யீ ட் டு விழாக்களைப் பார்க்கும்போது மனசுக்கு எவ்வளவு க க ம |ா க இருக்கின்றது. அத்துடன் பழைய எழுத்தாளர்களின் ஆக்கங்கள் நூலுருப் பெற்றால் எத்தகைய சந்தோஷமாக இருக்கும். 3 3
இச் சஞ்சிகை 234 பி, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம் முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொமினிக்
ஜீவா அவர்களினால் பெற்றது. அட்டை
56
"மல்லிகைப் பந்தல்" யாழ். புனித வளன் கத்தோலிக்க அச்சகம்,
அச்சகத்தில் அச்சிடப்

********NSRMM
saaarwVase v^*
ESTATF SUPPLIERs COMMISSION AG ENTS
VARIETIES OF . CONSUMER GOODS OLMAN GOODS TN FOODS
GRANS
FOR ALL YOUR
NE E OS Wholesale & Retail
E. SITAMPALAM & SONS
223, F / FTH CROSS STREET,
COLONMEBO- 7 1 .
ASSASMMMq MM S SiiiiiS SLAMALqSiLqLALSLSeL MSeSeqSMeAieSeqLALMLLA A MMS qqS AMMSMS
i
THE ERLEST SUPPLERS
i
NAMNAsMYNYT

Page 31
. Maitikal na
། ܒ. ܐܢܵܐ
以
Complimes of
sтдт ||
 

о ва
I wop
ANKA
RERA MA WATTE BO - 13