கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2005.02

Page 1
출
|
 

|| 7

Page 2
@ർഗ്ഗ മറ്റ്രlue
Digital Colouvlad & Sudio
MAN FEATURES
digit C 需 Automatic dust & scratch correction
* Maximum 5ize: 12" x 18'Digital pine * Output Resolution: 4oodpi *Film lnput Formats: 135, IX24o, Izo, APS * Film Types: Colournegative & positive, Bow
megative, Sepia negative
* Compatible linput & Output Media:
Floppy Disk, CD-Rom, CD-R/RW, MO, ZIP, DVD-RAM, DVD-R, DVD-ROM, PC Card, CompactFlash, SmartMedia,)
k Print to Print
* Conduct sheet endee-print
*Templates: Greeting Cards, Frame Prints, Calandar Prints,
Album Prints.
ਮੰ နိy É) BRANCH
APPy LO
YPSACENTRE HAPPYPHOTO
努 85тиско w8 crocae-iss Wotocarts No. 64 Sri Sumanatissa Mw, No. 3oo, Wodera Street,
Colombo - I.Tel-o74-6Io6s. Colombo - 15.Te1 -O-So345

புத்தாண்டில் புதிதாகச் சிந்திப்போம்!
பல பாரிய அழிவுகளைக் கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் ஆரம்பித்து, அது முடிவடையாத பீதிச் சூழ் நிலையில் இப்புத்தாண்டு பிறந்துள்ளது.
மனிதப் பெருங்குலம் இத்தகைய அளப்பரிய இடர்பாடுகளையும் சர்வ நாச அழிவுகளையும் சந்தித்துச் சந்தித்துத்தான் இன்றைய இந்தக் காலகட்டத்திற்கு வந்துள்ளது.
இழப்புகள், அழிவுகள், இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்டுள்ள நாசங்களை என்னதான் விஞ்ஞான அறிவு மேம்ப்ட்டு இருந்த போதிலும் கூட, மனிதக் கண்டு பிடிப்புக்களால் தடுத்து நிறுத்த முடிவ தில்லை.
எனவே, இத்தகைய பொருள் பண்ட, மனித இழப்புக்களைச் சீரணித்துக் கொண்டு அதிலிருந்து விடுபட்டு மனுக்குலம் புதிய கோணத்தில் சிந்தித்துத் தனக்குள்ளேயே முரண்பட்டு, வேறொரு விரோத, குரோத சூழ்நிலைக்கு ஆட்பட்டு விடாமல் இந்த அவலச் சூழ் நிலையை முன்னுதாரண மாகக் கொண்டு ஓர் ஆரோக்கியமான தீர்வு நிலைக்கு வரவேண்டும் என்று விரும்பு கின்றோம்.
இயற்கையின் வஞ்சிப்பு மனுக் குலத்தை ஒன்றுபட வைக்கட்டும்
201-1/4, SRI KATHIIRESA
‘ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு
துள்ளுவர்'
4០-ចារ្យ ហ្វហឺត្រុំ
படைப்பாளிகளின் புதிய ஆக்கங்களை மல்லிகை எதிர்பார்க்கின்றது.
STREET, COLOMBO - 13. TEL: 232O721

Page 3
கடற் கோளினால் ஏற்பட்ட வரலாறு காண முடியாத பாரிய அனர்த்தங்களாலும், பேரழிவு பெரு நாசங்களாலும் பாதிக்கப்பட்டு உயிர், உடைமைகள் அனைத்தையும் இழந்துபோய்த் தவித்துப் போயிருக்கும் நமது நாட்டு மக்களுக்கும் பக்கத்துத் தேசச் சகோதரங்களுக்கும் மல்லிகையின் ஆழ்ந்த
அநுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
& Täjëj & ni.
-- ஆசிரியர் --
 

வருகை தந்த நெஞ்சங்களே, உங்களை வணங்குகின்றோம்!
இந்து மகா சமுத்திரத்தின் மத்திய பகுதியில் ஏற்பட்ட
பூகம்பத்தினால் கடல் கொந்தளித்துக் கரையோர நாடுகளை * மிகப் பாரிய நஷ்டத்திற்கு உட்படுத்திவிட்டது.
இந்த அனர்த்தங்களுக்கு மத்தியில் தான் முன் அறிவித்தலின் பிரகாரம் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 26.12.2004 ஞாயிறு அன்று மல்லிகையின் நாற்பதாவது ஆண்டு மலர் வெளியீட்டு விழா திருப்திகரமாக நடந்தேறி முடிந்தது.
பலர் தொலைபேசியில் விழாவை ஒத்தி வைக்கும் வண்ணம் ஆலோசனை வழங்கினார்கள். வேறு பலரோ விழாவுக்கு வரச் சாத்தியப்படாது எனக் கூறினார்கள்.
இத்தனை அவலங்களுக்கு மத்தியிலும் ஏற்பாடு செய்த விழாவை எப்படியும் நடத்தி முடிப்பது எனத் தீர்மானித்தோம்
இந்த அசாதரணமான துணிச்சல்தான் மல்லிகையின் நாற்பது வருவடி அநுபவமாகும்!
கணிசமானவர்கள் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தார்கள். அவர்கள் அனைவருக்கும் மல்லிகையின் மனமார்ந்த நன்றிகள்.
பாரிய நெருக்கடிகள் மிகப் பெரிய சிரமங்களுக்கு ஈடுகொடுத்து, மல்லிகையைக் கெளரவித்து யார் யாரெல்லாம் மல்லிகையின் உழைப்பை மதித்து விழாவில் கலந்து கொண்டார்களோ அவர்கள் அத்தனை பேர்களையும் மல்லிகை என்றும் நினைவில் வைத்திருக்கும். அவர்களைக் காலமறிந்து கெளரவிக்கும்.
சிரமங்கள், நெருக்கடிகள் கூட ஒருவகையில் நல்லது போலத்தான் நமக்குப் படுகிறது. பலரை வடிகட்டி, இனங்காண இவை, இப்படியான தருணங்கள் பேருதவி புரிகின்றன.
மிக்க மனநிறைவுடன் நிகழ்ந்த மல்லிகையின் நாற்பதாவது ஆண்டுமலர் வெளியீடு மிகச் சிறப்புடன் நடந்து முடிந்ததில் எமக்கெல்லாம் பரிபூரண திருப்தி என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Page 4
6GU
தாழ்விலாச் செல்வர்? இலக்கியப் புரவலர் ஹாஷிம் உமர் பற்றில் ஒரு கருத்தாக்கம்
- கம்பவாரிதி இ. ஜெயராஜ் -
கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனைப் பகுதி வாழ் மக்களுக்கு ஆமானமானதொரு கலாசார மண்டபம் இல்லை. இந்தப் பிரதேசத்துக் கலைஞர்கள் மனசு குளிரத்தக்கதான ஒரு மண்டபத்தை ஆக்கித் தரக் கூடிய வல்லமை இவரிடம் உண்டு. இதை இவரது கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.
di : - ஆசிரியர்.
உண்மையாகவே அந்தக் கோரிக்கை என்னை ஆச்சரியப்படுத்தியது. “ஹாஷிம்உமர் பற்றி அட்டைப்படக் கட்டுரை வேண்டும்.” தொலைபேசியில், ஜீவா வழமைபோலக் கட்டளைக் கோரிக்கை விடுத்தார்.
மல்லிகை அட்டைப்படத்தில் முகம் பதிக்க
புத்திஜீவிகள் பலர படும்பாட்டை நான அறிவேன். அவர்களில் பலர் தற்செயல்போல, அப்பதிவிற்கான முயற்சியாய், தம் உன்னதங்களை ஜீவாவின் முன்னிலையில் அரங்கேற்றுவதை இரசனையோடு அவதானித்திருக்கிறேன். இரும்பை விழுங்கி ஏப்பம் விடுபவர் போல, அவர்தம் முயற்சிகளைக் கண்டும் காணாமலும், “தாம் அங்கீகரிக்கப்பட்டோமா? இல்லையா?” என, அவர்கள் குழம்பும் வகையில நடந்துகொள்ளும் ஜீவாவின் டெக்னிக்கையும் கண்டு இரசித்திருக்கிறேன். அட்டைப்பட முகப் பதிவிற்காய் அறிவுலகத்தையே ஆலாய்ப் பறக்கவிடும்

ஜீவா, முதலாளித்துவத்திற்கெதிராக முனைப்போடு நீண்டகாலம் கொடி பிடித்த ஜீவா, தனிமனிதருக்குக் கொடி பிடிக்கமாட்டேன் எனத் தருக்குரைக்கும் ஜீவா, அறிவுலகம் சாராத, முதலாளியாய்த் திகழ்கின்ற, ஒரு தனிமனிதனை, மல்லிகை அட்டைப்படத்தில் பதிவாக்குகிறார். அதற்கான பதிவுக் கட்டுரை வரையும் பொறுப்பு என்னதாகிறது? கட்டுரையின் முதல்வரியிற் நான் சொன்ன ஆச்சரியத்திற்கான காரணம் இது.
郑 为 郑
ஜீவாவின் இந்த அங்கீகரிப்பே, வள்ளல் ஹாஷிம் உமர் அவர்களின் தரத்திற்கான முதற் சான்று. மிக நுணுக்கமாய் நிறுக்கின்ற ஜீவாவின் மனத் தராசில், ஏறக் காத்திருக்கின்ற, எத்தனையோ அறிஞர்களை விலத்தி முதலில் தான்கால் வைத்ததும், இலக்கியத் தரப்படிக் கற்களைத் தாங்கிய, ஜீவாவின் தராசுத் தட்டை மேலேற்றி, ஹாஷிம் உமர் கணம் காட்டியதும் எங்ங்ணம்? இம்முயற்சியில் ஜிவா சமன் செய்து சீர்தூக்கினாரா? இக்கேள்விகளுக்கு விடை காண்பதன் முன், மரபு வழிவந்த என் மனக் குறிப்பொன்று.
寿 为 郑
*
ஒரு பேரரசனின் அவை. அவன் பாண்டியனா? சோழனா? சேரனா? என்று சரியாய் நினைவில்லை,
5
நான் சொல்ல வருகிற விடயத்திற்கு அந்நினைவு அவசியமுமில்லை. யாரோ ஒரு தமிழரசன். விடயம் அவ்வளவே. உட்பகையால் இருள் சூழ்ந்து நிற்கும் ஈழத் தமிழரின் இன்றைய நிலையில், பிரிவுகள் நீக்கி இப்படி நினைப்பதுதான் சரி என்று தோன்றுகிறது. வாழும் சூழலின் பாதிப்புச் சொல்ல வந்ததை விட்டு எங்கோ இழுக்கிறது. விடயத்திற்கு வருகிறேன். அவ்வரசனின் சபைக்கு ஒருமுறை ஒளவை மூதாட்டி சென்றாள். கவிபாடும் புலவோர்க்குக் கள்ளமின்றி அள்ளிக் கொடுக்கும் வள்ளல் அவன். இச்சகம் பேசி ஏற்றி உரைக்கும் புலவர் மத்தியில், அசையா நெஞ்சுரம் கொண்ட, ஒளவையைக் கண்டதும், அரசன் அகத்தில் ஓர் குறும்பு முகிழ்த்தது. பொற்கிளி ஒன்றை வாசலில் உயர்த்திக் கட்டி, கவித் திறத்தால் அதை வீழ்த்துவோருக்கே அப்பரிசு என்று பறை சாற்றினான். தம் எழுத்தினதும், இதயத்தினதும் சுத்தியறிந்த புத்திக் கூர்மையர் எவரும், போட்டியில் கலந்து கொள்ள முன்வராது, ஒருவரையொருவர் நோக்கித் தலை கவிழ்ந்தனர். உள்ள உறுதியோடு, தளர்ந்த உடலசைத்து எழுந்தாள் ஒளவை. பொற்கிளியின் கீழ்ப்போய் நின்று நான்கு சத்தியத் தொடர்களைச் சொன்னாள். நான் சொன்னது உண்மையெனின் அறுக! எனப் பொற்கிளிக்கு உத்தரவிட்டாள்.

Page 5
(8
"தொப்'பென்று பொற்கிளி ஒளவை கையில் வீழ்ந்தது. இது கதை. ஒளவை சொன்ன அந்த நான்கு சத்தியத் தொடர்களும் யாவை? அறிவுடையார் அறிய ஆவற்படுவர். வரிசைப்படுத்துகிறேன். பகையழிக்கப் போருக்குத் துணிபவர் நூறில் ஒருவர். புன்மையழிக்கப் புலமைக்குத் துணிபவர் ஆயிரத்தில் ஒருவர். வாதழிக்க வாய்த்த சொல்வல்லார் பத்தாயிரத்தில் ஒருவர். வறுமையழிக்கும் வள்ளண்மையாளர் கோடிக்கொருவர். இந்நான்கு தொடர்களின் சத்தியம் உணர்த்தியே பொற்கிளி விழுந்ததாம். அருமையின் ஏறுவரிசையில், வீரனை விட விவேகியும், விவேகியை விட விவாதியும், விவாதியை விட விறலுடை வள்ளண்மை உடையானும், இடைத்துாரம் விரிய எங்கெங்கோ நிற்கின்றனர். அருமையின் சிகரத்தில் அமர்பவன் வள்ளலே என்று வழி மொழிகிறாள்
ஒளவை. இதோ ஒளவையின் அவ்வரிய கவிதை,
ஆர்த்த சபை நூற்ரொருவர் ஆயிரத்தொன்றாம் புலவர் வார்த்தை பதினாயிரத்தொருவர் புத்தமலர்
செந்தாமரைத் திருவே தாதா கோடிக்கொருவர் உண்டாயின் உண்டென்றறு. (தாதா வள்ளல்)
مهم
S Dages
ஒரு வீரியம்மிக்க பெண் எழுத்தாளியின் தரப்படுத்தலில் முதல்நிலை பெற்றதால், மல்லிகை அட்டையில் மாண்போடு முகம் பதிக்கிறார் ஹாஷிம் உமர். கோடிக்கொருவராய்க் குறிக்கப்படும் தகுதி, ஹாஷிம் உமருக்குக் கைகூடுமா? காண்பதே இக்கட்டுரை முயற்சி.
为 为 ★
“வள்ளண்மையாவது மண்ணாவது
எல்லாம் விளம்பரப் பிரியம்.
பத்திரிகையில் படம் வராமல் அவருக்குத் தூக்கம் வராது. தொலைக்காட்சியில் தெரிவதெல்லாம் வெறும் விலைக் காட்சியே.” ஒரு சிலரின் முணுமுணுப்புக் காதில் விழுகிறது. இவ்ஐயம் என் மனதிலும் இருக்கவே செய்தது. உரிமை பற்றி ஒருநாள் இதை அவரிடமே கேட்டேன். “விளம்பரத்தில் விருப்பம் உண்டு. அதில் தவறென்ன? என் சொந்த முயற்சியில் வந்த பணத்தில, எல்லோருக்கும் நன்மை செய்கிறேன். அதை உலகம் அறிந்தால், தேவையிருப்போர் என்னைத் தேடி வருவர். தேவையில்லாதோர் தாமும் புகழ் விரும்பியேனும் மற்றவருக்குத் தர முன்வருவர். மொத்தத்தில் விளம்பரத்தால் நன்மைதானே” வெகு சாதாரணமாய் பதில் வந்தது. "அவுட்”டாக்க

நான் சிரமப்பட்டுப் போட்ட பந்தில் "சிக்ஸர் அடித்தார். பொய்ச் சட்டை கழற்றிய வெளிப்படை யான அவர் கூற்றின் நிர்வாணத்தில், அழகிருந்தது. இது ஹாஷிம் உமர் பற்றிய முதல் தரிசனம்.
في تج نجي،
அழகிருந்தாலும் வரம்புகளற்ற விளம்பரப்பிரியம் தவறாகாதா? மனத்துள் இருந்த சிறு இருளை இரு நிகழ்ச்சிகள் தகரத்தன. அவரின் அலுவலகத்தில் ஒருநாள் கூட இருக்கிறேன். பத்திரிகை நிருபர் ஒருவர், இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின புகைப்படங்களைக் காட்டி, பிரசுரத்திற்காய் அங்கீகாரம் கோரி நிற்கின்றார். "ஆஹா! இந்தப்படம் உச்சம், இதில் என் முகம் தெளிவாய் விழுந்திருக்கின்றது. எழுத்தாளர்கள் சூழ இந்தப் படத்தில் பிரமாதமாய் இருக்கிறேன்.” தன்னைத் தானே வியக்கும் அவர் இயல்புகண்டு என்மனத்துள் சலிப்பு. தன் படங்கள் அங்கீகரிக்கப்பட்டதில் உற்சாகப்பட்ட நிருபர். முக்கியமானதொரு புகைப்படத்தைத் தூக்கிப் போடுகிறார். மிகத்தெளிவாக வந்திருந்த புகைப்படம் அது. மிக அழகான "போஸில்" ஹாவழிம் உமர் ஏழை ஒருவரிடம் எதையோ கொடுக்கிறார். இந்தப் படம் அவரால் இரசிக்கப்படும் எனும் எதிர்பார்ப்பில்,
இதைத்தான் வாரமலரில் கலரில போடப் போகிறேன். பாராட்டை எதிர்பார்த்துத் தலை சொறிகிறார்
it.
அற்புதமான
நிருபர். அதுவரை உற்சாகமாய் இருந்த ஹாஷிம் உமர் முகத்தில் சிந்தனைக் கோடுகள். ஒரு நிமிட மெளனம். பிறகு வாய் திறக்கிறார் “வேண்டாம். இந்தப்படம் போடக் கூடாது. செய்தி மட்டும் வந்தால் போதும்.” நிருபர் முகத்தில் திகைப்பு படத்தில் ஏதும் தவறா? வேண்டாதார் யாரும் 11 த்தில் விழுந்து விட்டனரா? நிருபருக்குக் குழப்பம். “சேர்! வேணுமெண்டல், தேவையில்லாத ஆட்களைக் கட் பண்ணி பிரசுரிக்கலாம்.”
“இல்லையில்லை. எக்காரணத்தைக் கொண்டும் இப்ப ம் வரவேண்டாம்.” உறுதியாய்க் கூறி விஷயத்தை
முடித்து நிருடரை அனுப்பி வைக்கிறார். அப்படம் நிராகரிக்கப் பட்ட புதிர் அவிழ1மலே போகிறார் நிருபர். உண்மையறிவும் ஆவா என்னுள்ளும் தொற்றிக் கொள்ள, "6j6ö g9ysbg5 LJ 6305il GuTL வேண்டாம் என்றீர்கள். அந்தப் படத்தில் பதிவான நிகழ்ச்சி என்ன?” - கேள்விகளைத் தொடுக்கிறேன். “ஒன்றுமில்லை. ரெம்பக் கஷ்டப்பட்ட ஒரு குடும்பத்திற்கு. நான் சொந்தமாக ஒருவீடு வாங்கி கொடுத்தபடம் அது - அவர சொல்ல, "அப்படிய ? மிக நல்ல விஷயம் தானே. விளம்பரம் தேவை தான் என்கிற நீங்கள். இந்தப் படத்தைப் போடுவதில் தவறென்ன? அது பெரிய விளம்பர(sய்தtiபா? ஏன் அதைத் தடுத்தீர்கள்?” மீண்டும் கேள்விகள் தொடுத்தேன். “அதில் ஒரு சின்னப் பிரச்சினை இருக்கிறது, வீடு வாங்குபவர்
மை

Page 6
的
படத்தில் விழுந்திருக்கிறார். படம் பேப்பரில் வந்தால், மற்றவர்களுக்கு இது அவர் தாம்ே வாங்கிய வீடு என்று தெரியவரும். அது தெரிய வந்தால் அயலில் அவருக்கு மதிப்பிருக்காது. பிறகு அந்த விட்டில் அவர் பெருமையாய் வாழ முடியாது. அதுதான் இந்தப் படம் வேண்டாம் என்றேன்." விளம்பரப் பிரியத்தைத் தூக்கியெறிந்து மனிதாபிமானம் ஓங்க மலையாய் நிமிர்ந்து நிற்கிறார் வள்ளல். இது முதல் நிகழ்வு, அடுத்தது இதைவிட என்னை ஆச்சரியப்படுத்தியது.
== .ל 5 ד"ל
அந்தப்
ஒரு மிகப்பெரிய விழாவின் கொமிற்றி உறுப்பினர்கள் உலகளாவிய தமது விழாவில், ஹாஷிம் உமரைக் கெளரவிக்கும் கோரிக்கையோடு அவரைச் சந்திக்கின்றனர். விளம்பரப் பிரியராய்த் தம்மால் கணிக்கப்பட்ட ஹாஷிம் உமர் இந்த கெளரவிப்புக்காக விழாச் செலவின் பேருந் தொகையைப் பொறுப்பேற்பார் எனும் கணிப்பு அவர்தம் மனதில், அவர்கள் கோரிக்கையைக் கேட்ட பிறகு மெளனமாய்ச் சிறிது சிந்திக்கிறார் ஹாஷிம் உமர், பிறகு பேசத் தொடங்குகிறார். "ரொம்பச் சந்தோஷம். நீங்கள் தருகின்ற கெளரவத்தை நூற்றுக் கொள்கிறேன்.' வந்தவர்கள்
முகத்தில் பிரகாசம். "ஆனால் ஒரு நிபந்தனை' - கொஞ்சம்
ଆଣ୍ଠୁ
நிறுத்துகிறார். இப்போது வந்தர்கள் முகத்தில் குழப்பம், அதைச் சிறிதும் அவதானிக்காமல் தொடர்கிறார் ஹாஷிம் உமர், "பெரிதாக ஒன்றுமில்லை, உங்கள் விழாவில் என்னை கெளரவிப்பதாய் இருந்தால் அந்த விழாச் செலவுக்கு ஒருசதம் தானும் தரமாட்டேன். கெளரவிட்ட இல்லையேன்றால் விழாவுக்கு என்ன வேண்டுமானாலும் உதவி கேளுங்கள்?' வந்தவர்கள். தம் எதிர்பார்ப்புத் தலைகீழாக, உண்மையில் பதிகைத்துப் போகிறார்கள். விளம்பரப் பிரியத்தைத் தாண்டிய அவரின் நிமிர்வு ஆச்சரியப்படுத்துகிறது. விளம்பரம் விரும்பும் சிறு மனிதனாய் முன்பு என்மனப் பாதளத்தில் வீழ்ந்து
கிடந்தவர். இப்போது சிங்கமாய்க் கர்ச்சித்துச் சிகரத்தில் ஏறி
நிற்கிறார். இது ஹாஷிம் : மர் பற்றிய மற்றொரு தரிசனம்.
கொடுப்பவர். புகழ்நாடுபவர். புகழையும் வரை ப63:றக்குள் வாங்குபவர். இவை மட்டுமே வள்ளலுக்கான தகுதிகளாருமா? கேள்விக்கு மற்றோருநாள் பதில் கிடைத்தது. ஒரு ஊடகவியலாளர "ஒப்பரேஷனுக்கIக'. இருபத்தையாயிரம் ருபா கடன் கேட்க, அவரை அனுப்பி வைத்துவிட்டு. அருகிலிருந்த நண்பரிடம், ஐம்பதாயிரம் ரூபா செக்கைக் கொடுத்து "இதை பிறகு அவருக்கு அனுப்பி வையுங்கள்? இது
நின்று
 

படவில்லை. அன்பளிப்பு என்று சொல்லுங்கள்' என்கிறார். நண்பர் முகத்தில் ஆச்சரியம். "கேட் து இருபத்தையாயிரம் ரு T. கேட்கப்பட்டது கடனாக, இரண்டையும் மீறின் இந்தச் செயல் எதற்காக?"நன்பர் கேட்கிறார். "வேறொன்றுமில்லை. அவருடைய ஒப்ரேஷனுக்கு இருபத்தையாயிரம் ரூபா ாேதாது. அhர் இனி வேறோருவரிடம் இன்னும் இருபத்தையாயிரம்'ஆபா' கடன் கேட்கவேண்டும், அதுதான் ஐம்பதாயிரத்தையும் நானே கோடுக்கிறேன். கா னாகக் கேட் தை இனாமாகக் கொடுப்பதற்கும் காரணம் இருக்கிறது. அவரால் கடனைத் திருப்பித்து முடியாது. பிற்கு என் முகத்தில் முழில்: முடியாபஸ் ஒழிந்து திரி1 வேண்டிiபூர், וניi -;וניh:};"h frkיוון ולוח அவருக்கு? அதுதான் இனாமாகவே கொடுக்கிறேன்." சோல்லிப் பிரிக்கிறார் ஹாஷிம் உமர், திகைத்து நிற்கிறார் நண்பர். இது ஹாஷிம் உபு:ரை பனிதாபிமானம் மிக்க வள்ளலாப் இனம்காட்டிய இன்னோரு தரிசனம்.
ILI
"தயையும், நட்பும்,கொடையும் பிறவிக்
குனம்' என்ற ஒளவை வாக்துக்
ற்ப, மனிதாபிமT31ம்.
கேர் ரிதாபி
வள்ளண்மை, பேருந்தன்பை:
வன்க்). இருக்கு இபஸ் III அமைந்த தததிகள், பாகிஸ்தான் பிரிவினையின் போது, குஜராத்தில் இருந்து ஆடிபெயர்ந்த
துடுப்பம் துடும்பத்தேயும். “ili :| ii?» Li (3) LI I |Li, J. Li bal *.* -ho ! Go! GIG. இலங்கையில் கால்பதித், தந்தார். இதுதான் Thir, த Iர் அவர்களின் டால்பவரலாறு, இன்றைய இவரது BTப்ெபெர சாம்ராஜ்யம், அத்திவரத்தில் இருந்து இவராலேயே அமைக்கப் பட்டது. 'ஓ.எல். வரையுமே படிப்பு. அதிலும் கணிதம் தவிர மற்றை. எஸ்கி:Tப் பாடங்களும"பெயில் அவ்வாண்டில் கனக்கில் தான் எல்லோரும் பெயில்', விட்டன்றும், தன் கணிதத் திறமையைப் பறை ச1ற்றி அவரே சொல்வார். இன்றைய புகழ் வாழ்வின் பிரகாசத்தை அதிகரிக்க,
t
பல்பூர்வபடியே படிப்பத்து யூன்றும் அவர் பேய்ச் சுவர் கட்டுவதில்லை. விதிபில் துணி போட்டு விற்று :பிலிருந்து அத்தrையயும், வெளிப்பீடயாப் எல்கிேப்படுத்து: விளம்புவார். தன்னை முன் in
சூழ்ந்திருந்த பழைய இருளின் கடுமை தேர்ந்தால் தான். է եկել "Ալել தற்போது தன்னைச் சூழ்ந்துள்ள1 புதிய ஒளியின், உண்புை:வீரியம் உ3ரப்படும் எனும் இரகசிய தெரிந்தவர். வறுமையில் இருந்து பழ0:யக்பூ வந்தவர யிலும, வழமையில் வறுமையின் பாதிபபைபு படிய விடாதவர. "வறுமைபோம் வறுாையிலுற்று வடுப்போகாது’ என்பது பழயே 1ழி, தன் மனச் செழிப்பல் டுேத் து ைத்து வறுமையை வேன்ற வள்ளல். இக்கருத்து ஆன்மை என்பதற்காம், இரு சான்றுகள் இனி,

Page 7
OO
உழைப்புத் தேடி ஒடித் திரிந்த இளமைப் பருவம், கொழும்பில் பொருள் வாங்கி, கிராமங்களில் கொண்டு சென்று விற்கும் தொழில். இவ்விளைஞனின் ஊக்கமும் ஆக்கமும், கொழும்பில் இவர் பொருள் வாங்கும் இக்பால் முதலாளியைக் கவர. அவர் அன்புக்காளாகி, பின் அவர் தொழிலில்
பாட்னர்’ ஆகுமளவுக்கு வளர்கிறார். பின்னாளில் இவரும் தனவந்தராய் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், இவரது மகளுக்கு தன் மகனைத் 'நிக்கா செய்ய, இக்பால் முதலாளியாரால் கோரிக்கை விடப் படுகிறது. தொழில் உறவாகும் வாய்ப்பு. கடல்கள் கலந்து சமுத்திர மாகும் பேறு. யாரேனும் விடுவார்களா? நிறையச் சிந்தித்து பின்“ வாய் திறக்கிறார் ஹாஷிம் உமர். “திருமண உறவு வேண்டுமென்றால் தொழில் உறவை நிறுத்திக் கொள்வோம். தொழில் உறவு தொடர வேண்டுமென்றால் திருமண உறவு வேண்டாம். உறவும் தொழிலும் ஒன்றாவதில் உடன் பாடில்லை. இணைப்பால் இரண்டும் சிதையும்” தன்முன் வளர்ந்த இளைஞனின் தெளிவு கண்டு, சிலிர்க்கிறார் இக்பால் முதலாளி. இவ்வளவு தெளிவுள்ள மனிதனை உறவாக்காமல் விடமுடியமா? தொழில் நிற்க உறவு தொடர்கிறது. வறுமையின் வடுப்ப ாத இவர் மனச் செழிப்பின் முதல் உதாரணம் இது. இது கேட்டறிந்தது. இனி சொல்லப் போவது கண்டறிந்தது.
அண்மையில் அவரது புதுமனைப் புகுவிழா. நான்கு நாள் விருந்து. கலைஞர்களை வரிசைப்படுத்தித் தனித்தனி அழைத்திருந்தார். மாளிகை என்ற அர்த்தத்தை உள்ளடக்கிய வீடு அது. விருந்து அமர்க்களப்பட்டது. வீட்டின் கலைத்தன்மையை இரசித்துப் பாராட்டினேன். நான் பாராட்ட, தன்னடக்கத்தோடு அதையேற்பார் என நினைத்தேன். என் நினைப்பைப் பொய்யாக்கினார். ஹ. ஹ. ஹ. பீடாவால் சிவந்த வாய் திறந்து பலமாய்ச் சிரிக்கிறார். “நீங்கள் சொன்னது ரொம்பச்சரி. இது திறமான வீடுதான்.” மீண்டும். தற்புகழ்ச்சி. என் முகத்தில் கொஞ்சம் அசடு வழிகிறது. அதைப் பற்றிக் கவலையே படாமல் தொடர்கிறார் அவர். “ஒரு
ஹைக்கொமிஷன்’ நாலுலட்சம் மாத வாடகை தருவதாய்க் கேட்டது. முடியாது என்று சொல்லிவிட்டேன்.” ஹ. ஹ. ஹ. மீண்டும் சிரிப்பு. “இன்னும் கூடக்கொடுக்கலாம் என்று மறுத்திட்டீங்களே?’ அவரை வியாபாரியாய்க் கணித்து அருகில் நின்ற கலைஞர் வினாத் தொடுக்கிறார். நொடியில் ஹாஷிம் உமரின் சிரிப்பு நிற்கிறது. "அப்படியில்லை அதுக்காகக் கொடுக்காமல் விடவில்லை.” அவசரமாய் மறுத்தவர், நாலுலட்சம் வாடகைப் பெறுமதியுள்ள வீட்டில் நான் இருக்கிறதும் ஒரு பெருமை தானே! அதுதான கொடுக்க வில்லை.” - சீரியஸாய்' சொல்கிறார். பெருமிதம் பொருந்திய
 

அவர் வார்த்தைகளில் பொதிந் திருந்த, வறுமையின் வடுப்படாத விழுமியம் கண்டு சிலிர்க்கிறேன்.
چ در امر
இன்றைய நிலையில் இவர் வகிக்கும், சமூக, சமய, இலக்கிய, அரசியல் சார்ந்த பதவிகளின் எண்ணிக்கை 16. இன்று அவர் கைவசம் இருக்கும் தொழில்களின் எண்ணிக்கை, ஒரு கைவிரல்களுள் அடங்காதது. இவையெல்லாம் ஹாஷிம் உமர் அவர்களின் தனித்துவப் பெருமைகள். இப்பெருமைகளுக்காக மல்லிகை அட்டைப்படம் மரியாதை வழங்கப் படவில்லை. அங்ங்னமாயின், ஐயாயிரம் ரூபாவுக்குக் குறையாமல் அள்ளிக் கொடுத்து. இலக்கிய வாதிகளிடமிருந்து இவர் வாங்கிய முதற் பிரதிகளின் எண்ணிக்கை. 353 இணைத் தாண்டியதற்காக இக்கெளரவமா? - அப்படியும் தோன்றவில்லை. பின் எதற்காகத் தான் இந்த மரியாதை? தனிமனித உழைப்பின் வெற்றிக்கு, யாரென்று பாராமல் அள்ளிக் که கொடுக்கும் வள்ளண்மைக்கு. ஜாதி;இ
மத, இன பேதமின்றி எல்லோரையும்*
நேசிக்கும் அன்பிற்கு, உண்மை உள்ளத்தின் உயர்விற்கு, அப்படித்தான் 61ன்ைனைத் தோன்றுகிறது. ஒரு மானுட நேய மனிதனை மரியாதை செய்வே, மல்லிகை அட்டைப்படப் பதிவு மரியாதை. இலக்கியக் கர்த்தாக்களுக்குச் சமனாய் ஒரு செல்வந்தருக்கு மல்லிகையில் மரியாதையா? ஒரு சில சிறுமதியாளர் சீறுவர். அவர்க்கு ஒன்று உரைப்பேன். இலக்கியம் என்பது உள கம்.
O
வள்ளண்மை என்பது அவ்வூடகத்தால் உரைக்கப்படும் உன்னதம். உளடகம் கை வந்தவரை விட உன்னதம் கை வந்தவர் எத்துணை பெரியவர்? இலக்கிய வள்ளல் ஏறிய தராசுத் தட்டு மற்றோரை வென்று தாழ்கிறது. நேர் நிற்கும் ஜீவாவின் தராசு முள், வள்ளலின் பக்கமாய் வளைந்து. தலைசாய்ந்து, மரியாதை செய்து மாண்புரைக்கின்றது. தக்காரோடு தாழ்விலாச் செல்வரையும் ஒன்றாய் வரிசைப் படுத்திய, வள்ளுவப் பாட்டனை வழிமொழிந்து, ஒரு தாழ்விலாச் செல்வரின் தரமுயர்த்த முனைகிறார் மல்லிகை ஜீவா. வாழ்த்துவோம்.
ܡܼܲܵ
# 3 *
முடிக்குமுன் ஒரு வார்த்தை, இக்கட்டுரைக்காய் ஹாஷிம் உமர் அவர்களின் உயிர்த் தோழர், சமூக ஜோதி ரபீஹற் அவர்களுடன் சிலமணி நேரம் உரையாடினேன். அவர் வள்ளலுடனான தன் தனித தொடர்புகள் பற்றி, உரைத்தவை உரைப்பின், ஹாஷிம் உமர் அவர்களின் பெருமை கடலாய் விரியும். ஆனாலுந்வே இக்கட்டுரையில் வேண்டுமென்றே அச்செய்திகளைத் தடுக்கிறேன். பண்பு மிக்க அவர்கள் நட்பின் மேன்மையை பகிரங்கப் படுத்தி, அவ்வுறவின்
உன்னதத்தைக் கொச்சைப்படுத்த
விரும்பவில்லை. இக்கட்டுரையில் பேசப்படாமையே அவர்தம் நட்பின் (oub63DLDust Lib

Page 8
09
சமூகத்தினதும், இலக்கியத்தினதும்
முன்னேற்றத்திற்கும், ஆரோக்கியத்
திற்கும் இடையூறாக உலக மயமாதலின்
இன்றைய சில எதிர்மறை அம்சங்கள் முகிழ்ந்
திருப்பது இன்றைய சாபக் கேடாகும்.
க்கி Q9 ஊடகத்துறை வளர்ச்சியினாலும்,
இலக் (UU தொடர்பு சாதனங்கள், இலத்திரனியல்
QP வளர்ச்சிகள் முதலான பன்முகப்பட்ட
ரோக்கு வளர்ச்சிப் போக்கினாலும் இன்றைய
up 9 மனிதன் பெரிதும் இயந்திர மயப்பட்டு
á ருேன ascajabat விட்டான். சுயசிந்தனைக்கு அதிக வேலை
யின்றிக் கணினி மயப்பட்டு விட்ட போக்
= d கானது நன்மைகளையும், தீமைகளையும்
பிரகலாத ஆனநத ஒருசேர உருவாக்குகின்றது. இலக்கியத்
தின் ஒரு தேய்வுப் போக்குகிற்கும், இவை கால்கோள்களாகி விடுகின்றனவா? என்ற உரத்த கேள்வியும் எழுந்துள்ளது.
தனித்துவமாகப் பேணி வளர்க்கப்பட்டு வந்த இலக்கியப் பண்பாட்டுப் பாரம் பரியங்கள் மதிப்பிழந்து போவதும், வாசகர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியும் முக்கியமான எதிர்மறை அம்சங்களாக இருக்கின்றன. இலத்திரனியல் வளர்ச்சியினால் இலக்கியம் சர்வதேசத் தரத்துடன் இணைந்து செல்லும் போக்கையும் எட்ட முடியுமென்றும் இன்னொரு அபிப்பிராயமும் உண்டு. கலை இலக்கிய கர்த்தாக்கள் நவீன சிந்தனை களையும், முற்போக்குக் கருத்துக்களையும் வளர்த்துக் கொள்ள இதனால் வாய்ப்பு ஏற்படுவதாகவும் சிலர் கூறுவர். எனினும் முதலாளித்துவப் போக்குடைய, சர்வதேச பயங்கரவாதி அல்லது சர்வாதிகாரி என்று சுட்டப்படுகின்ற அமெரிக்காவின் சிந்தனைகளின் பரம்பல் மூலம், ஏற்கனவே பேணி வளர்க்கப்பட்டுப் புதுயுகம் காணும் முயற்சியினுடனான முற்போக்கு இலக்கியத்தளங்களும், ஏமாற்றும், வஞ்சகமும் ஒழிக்கப்பட்டுப் புத்தெழிச்சியை ஏற்படுத்தும் நல்லினக்கிய இலக்கும் திசை மாறுவதாக மறுசாரார் குறிப்பிடுவர்.
இந்த இடத்தில் நாம் ஒரு நல்ல வாசகத்தை மனதில் இருத்த வேண்டும். "எந்த நன்மைக்குள்ளும் சில தீமையுண்டு; எந்தத் தீமைக்குள்ளும் சில நன்மையுண்டு" என்ற வாசகத்தையே குறிப்பிடுகின்றேன். எது எப்படியோ, மாறிக் கொண்டிருக்கிற உலகப் போக்கினைக் கட்டி நிறுத்துதல் சாத்தியமன்று. மாறும் போக்கோடு ஒன்றிணைந்து செயற்பட்டு, அதை நல்வழிப் படுத்தலே இன்றைய இலக்கியவாதியின் பணியாகின்றது.
இலக்கியப் போக்கில் எது சரி, காது பிழை என்று எடுத்தியம்பப் படுதலானது விமர்சகர்களுக்கு விமர்சகர்கள் மாறுபட்டு நிற்பதுடன், காலத்திற்குக் காலம் மாற்றம் காண்கின்றது. எழுத்தாளர்கள் இலக்கியப் பிரம்மாக்களன்றி விமர்சகர்களும், ஆய்வாளர்களும் அல்ல. எழுத்தாளர்கள் எல்லோரும் எத்தகைய இலக்கியம் படைப்

பவர்களாகவோ, எந்த அணியைச் சேர்ந்த வர்களாகவோ இருந்தாலும் அவர்கள் இந்த மண்ணிலிருந்து வளர்ச்சி கண்ட வர்கள்தான். எழுதும் ஆர்வம் சுடர் விட்டுக் கிளம்பி, பட்டறிவினாலும், பல் வேறு அக, புறக் காரணிகளாலும் அவை வளர்க்கப்பட்டு, செழுமையுற்று எழுத்
இவர்கள் இவ்வாறான வெற்றிக்கு எழுதும் ஆர்வமும், கற்பனைத் திறனும், கருத்துருவாக்கமும் இருந்தால் மட்டும் போதாது. தொடர் வாசிப்பும், எழுத்துப்
தாளர்களாக உருவா
கின்றார்கள்.
பயிற்சியும், விடாத தேடுதல் முயற்சியும், இதனால் தேவைப்படுகின்றன.
கிடைக்கின்ற தேர்ச்சியும்
எழுதத் தொடங்கும் எவரும் சமூகத்தைச் சீர்திருத்திட என்று புறப் பட்டவர்களல்ல. தம் மன உணர்வுகளை வெளிப்படுத்தவும், ஆத்ம திருப்திக்கும், புகழீட்டுவதற்கும் என்றுதான் பெரும் பாலோர் எழுத ஆரம்பிக்கிறார்கள். தமக்குப் பிடித்தவற்றையும், பிடிக்காத வற்றையும் எழுத ஆரம்பிக்கும் இவர்கள் காலவெள்ளத்தோடு ஒன்றிப்போய்த் தமக் கென ஒரு போக்கைப் பற்றிக் கொள் கின்றனர்.
எழுத்தாக்கத்தில் முதன்மையானது அழகுணர்வுதான். எட்டுதலுக்கு ஈர்ப்பு முக்கியம். அவ்வீர்ப் பானது எழுத்துருவாக்கத்தின் ரசனைத் தன்மையின் பாற்பட்டது. ஜனாஞ்சகம்’
Fు
வாசகனின் மனதை
என்ற பதம் தீண்டப்படாத பதமாகச் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது. இந்த ஜனரஞ்சகத் தன்மையை ஏன் வெறுக்க வேண்டும் ? சாதாரண வாசகனை எட்டவும், அதன் மூலம் அவனுக்கு நல்ல விடயங்களை ஊட்டிடவும் முடியு
மல்லவா? மலினப்பட்ட ஜனரஞ்சக
C8)
எழுத்துகளை ஒதுக்கலாம்; ஆபாச, அராஜகக் குப்பைகளை ஒதுக்கலாம். ஆனால் நல்ல முறையில் வாசகனை எட்டிய எழுத்தாளன் பாவிக்கும் ஜன ரஞ்சகமானது வரவேற்கத்தக்கதே. உதாரணமாக இவ்வாறு நல்ல திசையில் ஜனரஞ்சகமாக, அதேவேளை இலக்கியத் தரம் தேய்வுறாமல் எழுதுபவர்களில் செங்கை ஆழியான், செ.யோகநாதன் போன்றோரைக் குறிப்பிடலாம். கலைப் படைப்புகள் என்று கூறிக்கொண்டு உருப்படியாகவோ, அதிகமாகவோ எழு தாமலிருப்பதை விட இது மேலானது.
எமது எழுத்தாளர்களில் பலர் திற னாய்வு விமர்சனப் போக்குகளைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. இன் னொரு புறம், எமது திறனாய்வாளர் களும் கூடத் தேசிய இலக்கியம் பற்றி அதிகம் கண்டு கொள்ளாதும், தமது திற னாய்வுப் புலமையை வெளிப்படுத்தும் அம்சத்திலேயே அதிகம் கவனம் செலுத் துவதும் தெரிகிறது. சாதாரண வாசகர் களும் இலக்கியக் கோட்பாடுகள் பெருகி வருவதைக் கண்டு அதிகம் பொருட் படுத்தியதாக இல்லை. இதனால் திற னாய்வு முறைகளைத் தெரிந்தவர்கள் கூட ஆழமாகச் செல்லாது மேலோட்டயன வரையறுக்கப்பட்ட சில அம்சங்களை அடக்கிய ஆய்வுகளையே செய்தனர். பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், விமர்சன விரிவுரையாளர்களும் மட்டுயே இதைத் தெரிந்திருந்தனர். இதளையும் தம் விரிவுரைப் போதனைகளில் மட்டுமே பயன்படுத்தினார். அவ்வாய்வுகளுக்கான கட்டுகள் தேசியப் படைப்புகளிலிருந்து போதிக்கப்பட்ட மையும் குறைவாகவே உள்ளன. கலை இலக்கியத் துறைகளிலே புதிய திறனாய்வுப் போக்குகளை நாம்

Page 9
04
இனங்காணக் கூடியதாக இல்லாமைக்கும் இதுவே காரணம்.
கலை இலக்கியத் திறனாய்வு, கலை இலக்கியக் கொள்கையின் அடிப்படை யிலேயே அமைந்துள்ளன. இலக்கியக் கொள்கைகளின் வகைகளாக அகவயம், உணர்ச்சி, அழகியல், அறிவியல், சமுதாயம் ஆகிய நிலைப்பாடுகளில் அமையும் கொள்கைகளுக்கு ஏற்றவாறு திறனாய்வுக் கொள்கைகளும் அனு சரணம், பயன்பாடு, வெளிப்பாடு, புற நிலை, டுள்ளன. இவற்றினூடாக எழுதுபவனின் அனுபவம், அவனது எழுத்து உருவான சமூகப் பின்னணி, மனித நல வேட்கை, கற்பனை ஆற்றல், அவை கூறும் மனித வாழ்வு பற்றிய பொதுவான விடயங்கள், சமூகப் பின்னணியிலும், சூழலிலும் மொழி வகிக்கும் பண்பு, எழுத்தாளனது சிந்தனையையும், வாழ்க்கையையும் வலியுறுத்திப் பார்த்தல் என்பன ஆய்வுக்குட்படுகின்றன.
விடயம் எனப் பகுக்கப்பட்
தொடர்புச்
சமூகப் பொருளாதாரப் பின்னணி அடிப்படையாக அமைவது மார்க்சியத் திறனாய்வு என்றும், படிப்பவரின் அனு
பவ உணர்வை மையமாகக் கொண்டு
அமைவது மனப்பதிவுத் திறனாய்வு என்றும், எழுத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு அதன் தன்மையை ஆராய்வது உருவக் கோட்பாட்டுத் திறனாய்வு என்றும், இலக்கியத்தின் உள்ளார்ந்த அடிப்படையிலான திறனாய்வு, வரலாற் றுணர்வுடனான பகுத்தாய்வு, செய் முறைத் திறனாய்வு, பிரக்ஞை பூர்வமான திறனாய்வு, மொழித் திறனாய்வு, ஒப்பிய லாய்வு எனப் பல வகையில் ஆய்வு
முறைகள் இருப்பினும் அவற்றின் பயன்
பாடும், எழுத்தாளர்களினதும், வாசகர்
tačiai65)3 St. D
களினதும் இவை பற்றிய அ. தன்மையும் மிகச் சொற்பமாகவே இங்கே
உள்ளன.
வெகுஜன ஊடகங்கள் பலவும் இன்று வியாபார நோக்கிலானவையாகி விட்டன. மொழி பற்றியோ, இலக்கியம் பற்றியோ இவைகளுக்கு எதுவிதமான குறிக்கோளோ? அக்கறையோ? இல்லை. தமிழ் இனி மெல்லச் சாகும் என்பதை உருவாக்குவதில் இன்றைய வானொலி, தொலைக்காட்சிகளும், சினிமாக்களும் போட்டி போட்டுக் கொண்டு நிற்கும் நிலை வேதனைக்குரியது. தமிழ் மொழியை யார் முதலில் கொன்றொழிப் பது என்பதில் தான் இவர்களுக்குள்
மனிதரின் பாட்டை, ஒழுக்கங்களை, அமைதியைச் சீரழித்து, அறிவை மழுங்கடித்து, சிந்தனைத் திறனை மங்க வைத்து, சமூக மேம்பாட்டை நாசப்படுத்தி நிற்கும் இவைகள், மொழியையும் சீர்குலைத்து வருகின்றமை வேதனைக்குரியது. மொழி உச்சரிப்பினையும் இவர்கள் சிதைப்பு தோடு, பிற மொழிச் சொற்களை, குறிப் பாக ஆங்கிலத்தைக் கலந்து பேசும் 95 போலியான நாகரீகத்தை உருவாக்கி வரு
போட்டா போட்டி! Lu Gast
கிறார்கள். ஏழு வார்த்தைகள் கொண்ட ஒரு தமிழ் வசனத்தில் மூன்றுக்குக் குறை யாத ஆங்கிலச் சொற்களைப் பயன் படுத்துகிறார்கள். பொருத்தமான அழ கான நல்ல தமிழ்ச் சொற்கள் இருக்கின்ற இடத்திலேயே ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தும் இவர்கள் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். பிற மொழியினா தமது உரையாடலில் எமது சொற்கள் எதையும் பாவிப்பதில்லை.
ஆங்கிலம் சர்வதேச மொழிதான் ஆங்கில அறிவு வேண்டும்தான். ஆனால்

ஆங்கிலத்தை ஆங்கிலமாகப் படியுங்கள்; பேசுங்கள்; உரையாடுங்கள். யார் வேண்டாம் என்றது? தமிழுக்குள் ஏன் ஆங்கிலத்தைக் கலக்கிறீர்கள்? தமிழ் தமிழாக இருக்கட்டும். மொழியைக் கொல்வது தாயைக் கொல் வதற்கு ஒப்பானது. மொழி இல்லாது விட்டால் தமிழனுக்கு ஒரு நாடு தான்
எமது தாய்
எதற்கு? கொஞ்சம் சிந்தியுங்கள். புலப்
பெயர்வு இன்னொரு புறம் எமது மொழியைச் சாகடிக்கிறது.
ஒரு நாட்டின், அதன் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும், சிந்தனை வளத் திற்கும், கலாசார மேம்பாட்டுக்கும், பண் பாட்டு உயர்விற்கும், மானுட நேயத் திற்கும், பண்புகளின் உயர்ச்சிக்கும், அமைதியும் சந்தோசமும் நிறைந்த வாழ்வுக்கும் துணைபுரியக் கூடிய சக்தி மொழிக்கு உண்டு. இலக்கியக்காரர்களும் தமது தாய்மொழி மூலமே, தமது இன மக்கள் கூட்டத்தினரின் மேம்பாட்டிற் குதவிட முடிகிறது. நவீன மயமாகுதலும், பகுத்தறிவு வாதமும் எமது வாழ்வில் ஆளுமை செலுத்திட, எமது பாரம் பரியத்தில் பாரிய தாக்கங்களை ஏற் படுத்திட, எமது தாய்மொழியிலான இலக் கியங்களில் அவை தொடர்பான மாற் றங்களே வித்திட்டன எனலாம். தாய் மொழியூடாக மனதைத் தொடுவதே பல தர மக்களையும் எட்டிட ஒரே வழியாகும். உலக மயப்பட்ட பல்வேறு வகைப்பட்ட
அழகியல் விழுமியங்களை எமது
இலக்கிய வடிவங்களில் புகுத்தவும், வாழ் நிலை மாற்றங்களுக்கு வழிகாட்டும் சமூக அதிகார அடைவினை எட்டவும் பிறமொழிப் பரிச்சயம் அல்லது அம் மொழிகளிலிருந்து தமிழாக்கப்பட்ட படைப்புகளின் வாசிப்பு என்பவற்றால்
03
இலக்கியக்காரர்கள் பெற்ற அறிதலானது எமது திறனாய்வாளர்களால் எட்டப் படாமைக்கு எமது திறனாய்வின் தொய்வு நிலையை மட்டும் குற்றம் சாட்டிப் பயனில்லை. இரு கை ஓசை ஏற்படாத ஒரு புறம்போக்கு நிலை அல்லது அந் நியப்பட்டு நிற்றலே இதற்கான முக்கிய காரணமாகும்.
தேசிய பிரச்சினைகளுடன், புதிய பல்தேசியப் பிரச்சினைகளையும், உலக ளாவிய ரீதியில் ஏற்படுகின்ற சமூக மாற்றங்களையும் எமது இலக்கியங்கள் கூற வேண்டிய கடப்பாடு உண்டு. நாட்டுப் பற்று, மனிதனின் அகமுரண்பாடு, சமூக ஏற்றத் தாழ்வு பற்றியெல்லாம் எமது ஆக்கங்கள் ஆழமாகக் கூறி நிற்கும் அளவுக்கு, அழ குணர்வின் பல்வேறுபட்ட பரிமாணங் களை எட்டுவதில் எமது இலக்கியப் படைப்புகள் இன்னமும் பின்தள்ளியே நிற்பதாகக் கூறப்படுகிறது. மனித நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் சக்தியாக, மனிதனுக்கும் சமூகத்திற்கும் உள்ள உறவைத் தீர்மானிக்கும் சக்தியாக,
விடுதலை வேட்கை,
மனிதனின் தேவைக்கேற்ற சமூகத்தை மாற்றியமைக்கும் சக்தியாக இலக்கியம் உருப்பெற்றிட வேண்டியது காலத்தின்
தேவை.
இன்னொரு விடயம். சில ஊடகங் களினால் ஊனமுற்றுப் போகின்ற மொழி, உணர்வுகளை அவ்வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுக்கும் பணியில் இலக்கியவாதி களின் பங்கு முனைப்புற வேண்டிய ஒரு தேவையும் இருக்கிறது. சிந்திப்போம் செயற்படுவோம்!
பண்பாடு, கலை கலாச்சார
32 (DGGGDE St

Page 10
OG)
"6D6TSTib'
uேராசிரில்பர் மெளனகுருவின் vafiseră opri vovă.
- ப. ஆப்டீன்
அண்மையில் மெளனம் என்னும் தலைப்பில் பேராசிரியர் சி. மெளனகுரு அவர்களின் மணிவிழாச் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. மட்டக்களப்பு, பேராசிரியர் சி.மெளனகுரு மணிவிழாச் சபை' இந்நூலை வெளியிட்டிருக்கிறது. முந்நூறு பக்கங்களைக் கொண்ட இக்கனதியான நூலின் அட்டையைப் பேராசிரியரின் இளமைத் தோற்றப் புகைப்படம் அலங்கரிக்கின்றது. பேராசிரியரைப் பற்றி முழுமையாகத் தகவல்கள் பெறுவதற்கு இந்நூலில் பொதிந்துள்ள விடயதானங்கள் பெரிதும் உதவுகின்றன.
பிரதேச செயலாளர், கோறளைப் பற்று மேற்கு ஒட்டமாவடி திரு. வெ.தவராஜா அவர்களின் "பதிப்புரையும் அறிமுகவுரையும்" என்ற கட்டுரையுடன் ஆரம்பமாகிறது இக்கவர்ச்சியான நூல்.
"மரபுக் கலைகளிலே காலூன்றி, நவீன கலைகளிலே தடம் பதித்து எதிர்காலச் சந்ததியினர் மரபிலிருந்து நவீனத்துவத்தின் உச்சியைத் தொடத் தன்னை அர்ப்பணித்த ஒரு கலைஞன்." என்று அறிமுகம் செய்து வைக்கிறார் திரு. தவராஜா அவர்கள்.
நடிப்பு, திறனாய்வு, இதர எழுத்து வடிவங்கள் என்று பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வெற்றி கண்டு அறுபதாவது அகவை காணும் பேராசிரியர் ஆறு வயதிலிருந்தே நடிப்புத் துறையில் ஈடுபட்டிருக்கிறார்.
பேராசிரியர் கிழக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட கலை இலக்கியத்துறைகளில் ஈடுபட்ட பல்வேறுபட்ட கலைஞர்களின் வெற்றிக்கு உந்து சக்தியாக விளங்கியுள்ளார்.
6666):

அழகாகவும் ஒர் ஒழுங்கு முறை யாகவும் தொகுக்கப்பட்டிருக்கின்ற இச்
வாசகர்கள் இலகுவாகக் கிரகித்துக் கொள்ளும் நோக்குடன் வசதியாக ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது.
சிறப்பு மலர், மிகப் பொருத்தமாகவும்,
முதலாவது பகுதியில் பேராசிரியர் மெளனகுருவைப் பற்றிய அறிமுகம் இடம் பெற்றிருக்கின்றது. அவரது ஆரம்பக் கல்வி தொடக்கம் இடைநிலைக் கல்வி, உயர்கல்வி, பட்டப்படிப்புகள், தொழில், பாடநூல்கள் சம்பந்தப்பட்ட கட்டுரையாக்கங்கள், நூல் விபரப்
பட்டுள்ளன.
பட்டியல் முதலியன விபரமாகத் தரப்
இரண்டாம் பகுதியில் பேராசிரியர் மெளனகுருவுக்கு நெருக்கமானவர்கள்
அன்னாரது ஆளுமைகளைப் பல்வேறு
கோணங்களிலிருந்து ஆராய்ந்து எழுதி
யுள்ளனர்.
நூலின் மூன்றாவது பகுதி பேரா
சிரியர் மெளனகுருவின் ஆய்வுத்
திறமைகளைப் பற்றியும், நாடகம் சாரா
ஆய்வுகள் பற்றியும், கவிதைத் துறை
ஈடுபாடுகள் பற்றியும் ஆராய்கின்றது.
நான்காம் பகுதி மீண்டும் நாடகம்,
பற்றிப்
கவிதைத் துறைகளைப் பேசுகின்றது.
O)
விளங்கியமைக்காகத் தனித் தனியாகப் படைப்புகள் தொகுக்கப்பட்டிருக்) கின்றன.
சார்வாகன் எனும் தலைப்பில் ஒரு குறுநாவலும், வாழ்வின் சுவை, பிரசவம், வெற்றிக் குரல், ஏனோ எழுதுகிறாய், எதைப் பாட ஆகிய தலைப்புகளில் பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியான கவிதைகளும் "உலகங்கள் மூன்று' என்ற தலைப்பில் ஒரு சிறுகதையும், எறி கணைத் தாலாட்டு என்ற கவிதை நூலுக்கு பேராசிரியர் எழுதிய முன்னுரையும், இப்பகுதியில் சேர்க்கப் பட்டிருக்கும் ஆக்கங்களும் இறுதியாகக் கலாசாரப் பக்குவம் தலைப்பில் பத்தி எழுத்தும், சின்னச் சின்னக் குருவிகள், சேருவோம் ஒன்று சேருவோம் ஆகிய தலைப்புகளில் இரு இசைப் பாடல்களும் இணைக்கப் பட்டிருக்கின்றன.
நூலின் இறுதிப் பக்கங்களில் பேராசிரியர் மெளனகுருவின் சிறுவயது தொடக்கம் இற்றைவரை நடந்த, சில முக்கியமான நிகழ்வுகளின் புகைப் படங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.
இந்நூலைப் பற்றிமுடிவாகக் கூறு மிடத்து பேராசிரியர் சி.மெளனகுருவைப் பற்றி முழுமையாக ஆராய்ந்து அறிய விரும்புபவர்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம் என்று கூறுவதில்
மிகையில்லை. பேணிக் காப்பது தமிழபி.
பேராசிரியரின் படைப்புலகம் இன்றைய தேவையுமாகும்
பற்றித் தனியாக ஐந்தாம் பகுதி இடம் | பெற்றிருக்கிறது. சிறுகதை, குறுநாவல், ! கவிதை, இசைப்பா போன்ற வடிவங்களில் ஈடுபட்டுச் சிறந்து

Page 11
O3
40வது ஆண்டு மலரின் uஇஸ்விடி ! "கரையூர்' எனச் சொன்னால், தற்
தொடர்ச்சி : பொழுது அங்கு வாழ்வோர் மண்டாவைத் தான் தூக்குவார்கள். இந்தப் பெயர்
O O எப்பொழுதோ மங்கத் தொடங்கிக்
அன்றும் குருநகர் என்ற புது நாமம் புழக்கத்திற்கு வந்து விட்டது. பின்னர் வந்த கொம்பு தான் இருந்தாலும் அது கனகாத்திர
පිංගීguth மான ஆளுகையைப் பெற்று விட்டது. குருநகரின் மேற்குப் பகுதியை றெக்கிளமேசன் என அழைப்பார்கள். O ன்னொரு காலத்தில் இப்பகுதியின் மறககmகு ம்ே ஃ: 鷺
கடலை மேவிப் பெரிய நிலப்பரப்பை உண்டாக்கித்தான் அங்குள்ள விசாலமான O O O வீட்டுத் திட்டத்தை அரசு அமைத்தது. சொற்குங்கள் வடபுலத்திலேயே மிகவும் பெரிய விட்டுத் திட்டம் இதுவெனலாம்! இதற்கு மூலவ ராக இருந்தவர்களை, அன்றைய பிரபல செல்லக்கண்ணு அரசியல்வாதிகளான பொன்னம்பலம் மகாதேவாவா? அல்லது தனிப் பெருந் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலமா? என்பதை உடன் உறுதிப்படுத்த முடியாமலிருக்கின்றது. நிச்சயமாக இவர்களில் ஒருவராகத்தான் இருக்க வேண்டும்!
இந்த றெக்களமேசன் பகுதிக்கு இன்னொரு சிறப்புமுண்டு! ஏற்கனவே இருந்த நீர்ப்பரப்பை மேவுவதற்கு குப்பைகள், மண் ஆகியன பாவிக்கப்பட்டன. இதற்குச் சிறைக் கைதிகளும் பாவிக்கப்பட்டதுண்டு. குருநகருக்கு ஏறத்தாழ அரைக் கிலோ மீற்றர் தூரத்தில் யாழ்ப்பாணக் கோட்டையும், சிறைச்சாலையும் இருப்பது அனைவருக்கும் தெரியும். இலங்கையின் தென்பகுதி உட்பட மற்றும் பகுதிகளில் குற்றவாளிகளாக நீதிமன்றத்தால் தீர்ப்பிடப்பட்டுக் கைதியாக்கப்படுபவர்கள் சிலரை யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்கும் அனுப்புவது அன்றைய வழக்கமாக இருந்தது. இன மோதல் ஏற்பட்ட பின்னர் இந்த நடைமுறை தளர்த்தப்பட்டது தெரிந்த விடயமே! இத்தகைய கைதிகளில் இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.செனநாயக்காவும் ஒருவராகி அன்று யாழ் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டார். இது நிகழ்வதற்குக் காரணமாகியது ஒர் இனக்கலவரமென்கிறார்கள்! இக்கடலை மேவும் பணிக்கு அன்றைய கைதிகளிலொருவரான டி.எஸ்.செனநாயக்காவும் உதவினாரெனச் சொல்லப்படுகிறது.

இந்த றெக்ளமேசன் பகுதியில் இன்று மூன்று சிலைகளைக் காணக் கூடியதாக இருக்கின்றது. ஒருவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தாபகர் அறிஞர் சி.என்.அண்ணாத்துரை. இன் னொருவர் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அ.இ.அ. தி.மு.க) நிறுவகரும், புரட்சி நடிகருமான எம்.ஜி.ராமச்சந்திரன். இந்த இருவரும் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர்களாக இருந்தவர்கள். மற்றச் சிலை ஒரு மனித நேயம் மிக்க பொதுநலவாதியினது. அவர் தான் அமரர் மூப்பர் தமியான் ஜேம்ஸ்!
இன்றைய சமூகத்தின் கணிசமான பகுதியினருக்கு மூப்பர், கும்பா, மீசாம், குமைஞ்சான், திருந்தாதி என்ற சொற்கள் எதைச் சுட்டுகின்றனவென்பது புரிவ தில்லை. இவைகள் கத்தோலிக்க சமயத் தைச் சார்ந்த பெயர்கள். தற்பொழுது கத்தோலிக்கர் கூட இவைகளைக் கேட் டுத் தடுமாறுகின்றனர். ஊர் உலக மயமா? கின்றதல்லவா! புதியனவற்றிற்கு ஐஸ் கிறீம் கொடுத்து அடி பணிவதால் ஏற் படும் விபத்து! இருந்தாலும், மூப்பர் என்பது கத்தோலிக்க கோவில்களில் பராமரிப்பு வேலைகளைச் செய்பவரைச் சுட்டும். இவரைச் ‘சங்கிடுத்தான்' எனவும் சொல்வதுண்டு. குழந்தையொன்றின் ஞானமுழுக்கின் (ஞானஸ்னானம்) பொழுது அக்குழந்தைக்குத் தலை தொடு Luahigou (God Father) gypsigoguíair பெற்றோர் 'கும்பா’ எனச் சொந்தக்கார ராக்குவர். மங்கள நாட்களில் சந்தனம் குழைப்பதற்குப் பாவிக்கப்படும் சிறு பாத்திரத்தையும் இப்படி அழைப்பதுண்டு. 'மீசாம்" என்பது கோவிலுக்குரிய முழுப்
O)
பிரிவிற்குமுரிய பெயர் (Parish). குமைஞ்சான்' சாம்பிராணி. கத்தோலிக்க தேவாலயத்தில் அதிகாலையில் முதலாவ தாக ஒலிக்கும் மணி ஒலி திருந்தாதி.
அக்காலத்தில் யாராவது பிரச்சினை யெனக் கண்ணிர் வடித்து, போக்கிட மில்லாது தவித்தால், 'ஜேம்சிடம் போங்கள்' என்பார்களாம். அந்தளவிற்கு மத்தியில் நம்பிக்கையைப் பெருக்கி வாழ்ந்தவர்
தன்னைச் சூழ்ந்தோர்
ஜேம்ஸ். தொண்டால் மக்கள் மனதில் பதிந்த தொண்டர்.
என்றும் சிரித்த முகம், வெண்ணிற உடை, கன்ன வகிடிட்ட தலைமுடி, எறும்பு போன்ற சுறுசுறுப்பு. அகந்தை, அகங்காரமற்ற பண்போடு சேர்ந்த இயற் குணம். இதுதான் மூப்பர் ஜேம்ஸ்!
இவரது பணி பன்முகப்பட்டது. சமயம், சமூகம், உள்ளூர் அரசியல் என இவரது பெறுமானம் மிக்க பிரமாணிக்க் மான பணிகளை வகுத்துப் பார்க்கலாம்.
யாழ்ப்பாண ஆசனக் கோவில் அதாவது பெரிய கோவில் குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்காக அல்லாமல் பல்வேறு பட்ட சமூகத்தவரைக் கொண்டது. இதன் சுற்றாடலில் பல சமூகங்கள் வாழ்வதே
இதற்குக் காரணமாகும். இத்தகைய சூழ்
நிலையிலேயே ஜேமிஸ் இக்கோவிலின் மூப்பராகப் பணிபுரிந்தார். எந்தவித
காழ்ப்புணர்ச்சியோ அல்லது வஞ்சகத் தன்மையோ, வேற்றுமையோ இன்றி
இவரைப் பெரிய கோவிலைச் சேர்ந்த அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
பன்மொழிப் புலவர் அருட்திரு
ウ 666):

Page 12
20
ஞானப்பிரகாச அடிகளார் 1910இல் சஞ்சுவாங் கோவில் பங்குக் குரவராக இருந்தார். அக்காலத்தில் அருட்சகோ. குருசோ அவர்கள் புனித அந்தோனியார் சபையை ஏற்படுத்தினார். அந்நாட்களில் வயதில் இளையவராக இருந்த ஜேம்ஸ் இச்சபையில் இணைந்து உழைத்தார். இதில் உறுப்பினராக இருந்த இளை ஞர்கள் வாழ்வில் வெளிச்சத்தைக் காண வேண்டுமென்ற விழிப்புணர்ச்சியைக் கொண்டு பொருள் தேட எத்தனித்தனர். திருமணமும் செய்து கொண்டனர். இந்த நிலையில் சீரிய ஆன்மீகப் பணியை ஆற்றக் கூடிய பேறு மூப்பரை வந்தடைந் தது. புனித அந்தோனியார் சபையின் தலைவராக இளைஞர் ஜேம்ஸ் கெளர விக்கப்பட்டார். தனக்குக் கிடைத்த பதவி யைத் தனது தன்னலமற்ற செயற்பாடு களால், திட்டங்களால் பொலிவுற வைத்தார். இப்பணியை உள்வாங்கிய அருட்சகோ. குருசோ இவருக்கு மகிமை மூப்பர் என்ற கத்தோலிக்கர் மத்தியில் மிகவும் மதிக்கத்தக்க பட்டத்தைச் சூட்டி மேன்மைப்படுத்தினார்.
யேசுநாதரின் திருப்பணிக்கு ஜேம்சைத் திசை வழிப்படுத்தியவர் அக் காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கிய புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபர் அருட்திரு. சாள்ஸ் மத்தியூஸ் ஆவர். சுவாமி ஞானப்பிரகாசரின் ஞாயிறு திருப்பலிக்குத் தன்னுடன் ஜேம்ஸையும் அழைத்துச் சென்று, ஆன்மீகத் துறையில் அவரை ஊக்குவித்தார். மத்தியூஸ் சுவாமி யின் ஆங்கிலப் பிரசங்கங்களை இவர் தமிழில் மொழிபெயர்த்து, அன்று வறுமைப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுள்
Zウ Dಐಐಐಟಿ
ளிருந்த அஞ்ஞானிகளையும் கத் தோலிக்க மதத்தை ஆராதிக்கச் செய்தார். அவர்களது ஒழுக்க நெறியைச் செம்மைப் படுத்தினார்.
இன்று குடத்துள் ‘விளக்காக்கி" விடப்பட்டிருக்கும் ஜேம்ஸ் மூப்பரின் சமூகப் பணி மிகவும் விசாலமானது. இது அவரது சொந்தச் சமூகம் சார்ந்த, ஒரு முகப்பட்டதாக இருக்கவில்லை. அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக் கியதாக இருந்தது. இதனால் தான் அவரால், அன்று தான் தொழில் பார்த்த
புனித பத்திரிசியார் கல்லூரியில் கற்ற
மாணவர் களது பெயர்களை மட்டுமன்றி, அவர் களது பெற்றோர், இருப்பிடம் ஆகிய விபரங்களையும் தெரிந்து வைத்திருக்க முடிந்தது.
வட புலத்துத் தாழ்த்தப்பட்டோரைப் பொறுத்த மட்டில் ஜேம்ஸ் ஒரு திசை மானி! அந்தக் காலத்தில் அடிமட்ட, ஒடுக் கப்பட்ட சமூகங்களில் படித்தோரைக் காண்பது மிக அரிது. பாடசாலை, கச்சேரி போன்ற இடங்களில் ஏதாவது செய்து கொள்ள வேண்டுமாகில் இவர்கள் பெரிதும் அந்தரப்படுவர். இந்த அலைச் சல்களால் சோர்வுற்றுத் தமது வாழ்வின் முன்னேற்றத்தைக் கூட இவர்கள் இழந் திருக்கின்றனர். இத்தகையோருக்கு மூப்பரொரு ஆபத்பாந்தவனாக இயங்கி இருக்கிறார். இவரது அசை வியக்கத்தில், இந்த மக்கள் குழுமத்தில் நன்மை பெற்ற வர்கள் ஏராளம். அக்காலத்தில் உணவுப் பங்கீட்டுக் கூப்பன் படிவங்களைக் கூட நிரப்பத் தெரியாதவர்களாக இவர்கள் இருந்தனர். இவர்களுக்குப் பெருவிரல்

அடையாளமிடுமளவிற்குத்தான் கல்வி இருந்தது. இதையெல்லாவற்றையும் உணர்ந்து மூப்பர் மிகுந்த கரிசனத்தோடு செயல்பட்டார். அக்காலத்தில் சைவ பரி பாலனச் சபையால் நிர்வகிக்கப்பட்ட பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட சமூகங் களைச் சேர்ந்த மாணவருக்கு அனுமதி கிடைக்காது. இதனால் நிதி வசதி இருந் தும் பல மாணவர்கள் தமது கல்வியை இழந்தனர். இவர்களுக்கெல்லாம் கை கொடுத்து, அவர்களுக்கு ஒர் அந்தஸ் தைக் கொடுத்தவர் மூப்பர். தான் தொழில் பார்த்த புனித பத்திரிசியார் கல்லூரியில் மத்தியூஸ், லோங் சுவாமி களின் உதவியோடு பெரும்பான்மைத் தமிழ் சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட இந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தவிரின் பிள்ளைகளுக்குக் கல்வி வசதியைக் கொடுப்பித்தார். இன்றும் இத்தகைய மாணவர்களின் புகைப்படங்களை இக் கல்லூரியின் ஆண்டு மலர்களில் பார்க்கும் பொழுது மூப்பர் நினைவுக்கு வருகிறார். இவர் கை கொடுத்துத் தூக்கி விட்ட மாணவர்கள் கல்வியில் மட்டுமன்றி விளையாட்டுத் துறையிலும் சாதனை பெற்றதைக் கல்லூரி வரலாறு தருகின்றது.
ஜேம்ஸ்தான்
தாழ்த்தப்பட்ட இளைஞர் மத்தியில் புதிய சிந்தனைகள் கூர்ப்படைந்து, தமது அடிப்படை உரிமைகள் அடாவடித் தனங்கள் மூலமாகக் காவு கொள்ளப் படுவதை உணர்ந்த காலத்தில் அவர்கள் இந்த ஒன்றிணைவு 16.07.1927இல் ஒடுக்கப் பட்ட தமிழ் ஊழியர் சங்கமாக மலர்ந்தது.
இச்சங்கத்தில் வடபுலத்துத் தாழ்த்தப்பட்ட
ஒன்றிணைய முற்பட்டனர்.
@0
தமிழரின் முன்னேற்ற முன்னோடிகளான யோவேல் போல், எஸ்.ஆர்.ஜேக்கப் (காந்தி) ஆகியோர் மிகுந்த உற்சாகத் தோடு செயற்பட்டனர். இணைச் செய லாளர்களுள் ஒருவராக ஜேம்ஸ் சமூகப்
திற்கு மத்தியூஸ் சுவாமியும் உதவிக் கரமாக இருந்ததாக அறியப்படுகிறது.
அரசாங்க உதவியைப் பெற்று இயங் கிய பாடசாலைகளில் கூட அக்காலத்தில் மேட்டுக் குடியினரால் தீண்டாமை கன கச்சிதமாக அமுலாக்கப்பட்டு வந்தது. இது சில கிறிஸ்தவப் பாடசாலைகளிலும் பேணப்பட்டு வந்தது. ஒடுக்கப்பட் டோரின் பிள்ளைகள் நிலத்தில் இருந்து தான் கற்க வேண்டும்! இக்கொடுமையை மூப்பர் தீவிரமாக எதிர்த்தார். அவரது முழக்கம் வடபுலத்தைத் தாண்டி அரசின் காதிற்கும் எட்டியது.
இதன் நிமித்தமே, “சாதி வித்தியா சம் பாராட்டாது, அரசாங்க நன்கொடை பெறும், அத்தனை பாடசாலைகளிலும் <字óQ》 பிள்ளைகளும் சேர்க்கப்பட வேண்டும். அவர்களுக்குச் சம ஆசனம், சம போசனம் செய்யப்பட வேண்டும்’ என்ற சட்டம் 1930ஆம் ஆண்டில் உரு வாக்கப்பட்டு, அமுலுக்கும் வந்தது. இது அன்றைய சாதி வெறியருக்குப் பெருத்த சவாலாக இருந்தது. கொந்தளித்தனர். சேர்.பொன்.இராமநாதன், தேச வழமைச் சட்டத்தைத் தூக்கிப் பிடித்து வாதாடி னார். இருந்தும், ஏழை அழுத கண்ணிர் கூரம்பானது! ஆங்கிலேய அரசு தாழ்த்தப் பட்ட மக்களுக்குச் சார்பாகவே இருந்தது!
அடம்பன் கொடியும் திரண்டால்
তন্ম

Page 13
22
மிடுக்கு என்பதை இத்தகைய வகையில்
சாதித்துக் காட்டியவர் மூப்பர் ஜேம்ஸ்!
வாக்குரிமையின் பெறுமானத்தை
உணர்ந்த மூப்பர் டொனமூர் ஆணைக்
குழு முன் தோன்றித் தாழ்த்தப்பட்ட
சமூகத்தவர் அனைவருக்கும் வாக்குரிமை கொடுக்க வேண்டுமென வாதாடினார். இது கிடைத்தால் அடிமட்ட மக்கள்,
வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படு வார்கள் என வாக்குரிமையின் தாற்பரி யத்தைக் குழுவுக்கு உணர்த்தினார். வேட் பாளர்கள் வாக்காளரைத் தேடி வரு வார்கள், அடிமட்ட மக்களின் அவல வாழ்வு கண்டு கொள்ளப்படும் என்ற
தூரநோக்கு அன்றே மூப்பருக்குப் புலர்ந்
திருந்தது. நீதி கிடைத்தது.
மூதவை உறுப்பினர்களாக முதலி யார் ஏ.பி.இராஜேந்திரா, ஜி.நல்லையா ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர் களாக எம்.சி.சுப்பரமணியம், ஜி.இராஜ லிங்கம் ஆகியோரும், தாழ்த்தப்பட்ட வர்
கள் சார்பாக அரச நிருவாகத்தில் பிரதி
நிதித்துவம் வகித்திருக்கின்றனர். இவை களெல்லாவற்றிற்கும் கால்கோளிட்டது மூப்பரும் அவரது குழுவினரும் செய்த அரும்பணிகளே யென்றால் மிகை யாகாது.
குடியேற்ற p5 TLITs (Colony)
இருந்த இலங்கைக்கு புதிய அரசியல்.
திட்டமொன்றை வரையும் இலக்கோடு பிரித்தானிய அரசு சோல்பரி ஆணைக் குழுவை அனுப்பி வைத்தது. இதன் முன் சாட்சியமளிக்கத் தாழ்த்தப்பட்ட படித்த இளைஞர்களும் ஆர்வங் கொண் டனர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்
S. g6SG St
கப்படும் அநீதிகளை உள்ளடக்கிய அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்க எத் தனித்தனர். இந்த அறிக்கையைத் தயாரிப் பதில் அருட்திரு. பீற்றர்பிள்ளை அடி களாரின் பங்களிப்பைப் பெறுவதில் ஜேம்ஸ் ஊக்கம் காட்டினார். ஒடுக்கப் பட்ட மக்களின் அன்றைய அவல வாழ்க் கையை நேரில் காண வைப்பதற்காக இந்த ஆணைக் குழுவைத் தாழ்த்தப் பட்டோர் வாழ்ந்த அனைத்துக் குறிச்சி களுக்கும் அழைத்துச் சென்றனர்.
அன்றைய காலத்தில் தாழ்த்தப்பட்ட இளம் மாதர்கள் சட்டைகளை அணியக்
கூடாது என்றொரு எழுதாச் சட்டத்தை மேட்டுக் குடி விதித்திருந்தது. மீறி யோரைச் சித்திர வதைக்கு உள்ளாக்கினர்
சென்றதின் முக்கிய நோக்கம் இந்த சட்டைகளற்ற பெண்களைக் காட்டுவதே! கூட்டிச் சென்றவர்களில் எம்.சி.சுப்ர மணியம், ஆகியோரோடு மூப்பரும் சேர்ந்திருந்தார். சாதி வெறியர்கள் இவர்களது முயற்சி யைத் தடைப்படுத்த பல எத்தனிப்பு களைச் செய்தனர். இருந்தும் தோல்வி கண்டனர். எடுத்த காரியத்தை முடித்துக் கொண்டு, நெல்லியடி பஸ் நிலையத்தில்
வி. டி. கணபதிப்பிள்ளை
பஸ்ஸிற்காகக் காத்து நின்ற இந்த மக்கள் தொண்டர்களைச் சாதி வெறி கொண்ட வர்கள் தாக்கினர். பெரிய இழப்புகள்
எதுவுமின்றித் தொண்டர்கள் தப்பினர்.
1941ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களின் பிர சித்தி பெற்ற அமைப்பான சிறுபான்மைத் தமிழர் மகாசபை உருவாக்கத்திற்கு ஜேம்ஸ் மூப்பர் முன்னோடியாக இருந் தது மட்டமன்றி அதன் தலைவராகவும்

உபதலைவராகவும் இருந்து தீண்டாமைக் கெதிராகச் செயற்பட்டிருக்கிறார்.
உள்ளூர் அரசியலில் மூப்பர் உவக்கம் கொண்டிருந்தார்! யாழ்ப்பாணம் மாநகர
சபை எல்லைகள் விஸ்தரிக்கப்பட்ட
பொழுது, தோற்றம் பெற்றன. அவற்றிலொன்று
புதிய வட்டாரங்களும்
தான் கதீற்றல் வட்டாாம். தேர்தல் வந்த
பொழுது ஜேம்ஸ் மூப்பரும் ஒரு வேட் பாளராகப் போட்டியிட்டார். அமோக வெற்றி கிடைத்தது. கிடைத்த பதவியை மிகவும் நேர்மையாகக் கைக்கொண்டார். சாம்.சபாபதிக்கும், ஸி.பொன்னம்பலத் திற்குமிடையில் மேயர் பதவிப் போட்டி நடந்த பொழுது, சில தாழ்த்தப்பட்ட பிர முகர்கள் கூடக் கூறிய ஆலோசனைகளை உதறித் தள்ளிவிட்டு ஸி.பொன்னம்பலத் திற்குத் தனது வாக்கை அளித்ததாக மூப்பரோடு மிகவும் நெருக்கமானவர்கள் இன்றும் உறுதிப்படுத்துகின்றனர்.
அக்காலத்தில் தேர்தல் காலங்களில் மட்டும் வேட்பாளர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் குறிச்சிகளுக்குள் கால்
வைப்பர். இக்குறிச்சிகள் எந்தவித அபி
விருத்தியுமில்லாது மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும், போக்குவரத்துப் பாதைகள் மக்கி போட்டு நிரவப்பட்ட குச்சொழுங்கைகளாக இருக்கும். இதனால், தாழ்த்தப்பட்ட மக்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். இவை அனைத்தையும் அநுபவத்தில் கண்டறிந்த மூப்பர். இக்குறையை நீக்கி அந்த மக்களின் மனங்களில் வானுறையும் தெய்வமானார்.
இன்று யாழ் மாநகர சபைக்குள்
}}
39
இராஜேந்திரா வீதி, குருசோ விதி, சென் பற்றிக்ஸ் வீதி, மத்தியூஸ் வீதி, இராஜ சிங்கம் விதி என்ற பெயர்ப் பலகை களைக் காண முடிகின்றதென்றால், அது மூப்பரின் சலியாத உழைப்பிற்குக் கிடைத்த வெகுமதி. தாரிட்டுச் செப் பனிட்டுச் சொகுசுக் கார்கள் கூடப் போகக் கூடிய வகையில் இவைகள் இன்றும் மக்களுக்குப் பயன்படுகின்றன
ஆஸ்பத்திரிக் குழு, சிறைச்சாலைக் குழு ஆகியவற்றிலும் மூப்பரின் அரிய பணி இருந்தது.
முழு நேரப் பணியாகத் 85 LD3l பொதுப் பணியை ஆக்கும் பொருட்டு, சிலர் தமது தொழில்களை கைவிட்டிருக் கின்றனர். மூப்பரோவெனில் ஏறத்தாள அரை நூற்றாண்டு காலமாகத் தனது தொழிலைப் புனித பத்திரிசியார் கல்லூரி யில் புரிந்து கொண்டு, சிறப்பான பொதுப் பணியும் செய்து வாழ்வில் மிகவும் அருமையாகக் கிடைக்கக் கூடிய நினைவுச் சிலையொன்றையும் தனது பொதுப் பணிக்கான வெகுமதியாகப் பெற்றிருக்கிறார். ஜேம்ஸ் மூப்பர் புனித பத்திரிசி யார் கல்லூரிக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர். அங்கே கல்வி கற்று (1906) அங்கேயே கடைசிவரை தொழில் புரிந்தவர். 1916ஆம் ஆண்டு இக்கல்லூரி யின் அதிபராக இருந்த அருட்திரு ச1ள்ஸ் அடிகளாரின் உதவியாளராகத் தனது பணியைத் தொடங்கினார். அன்றிலிருந்து காலத்திற்குக் காலம் புதிதாக நியமனம் பெற்ற ஐந்து அதிபர்களின் கீழ் இவர் கடமை புரிந்தார். இவரை அன்றைய புனித பத்திரிசியார் கல்லூரியின் கணனி

Page 14
என்றால் கூட மிகையாகாது. அதிபரின்
அலுவலகத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம் மேசை மணிச் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும். இது மூப்பனா அழைப்பதற்கான அதிபர்களின் மணி யோனச. சந்தேகங்களைச் சுமுசுமாகத் தீர்த்து வைப்பதில் மூப்பர் மகா சுெட்டிக் காரன். கல்லுரரி விஷயங்கள் அனைத் திலும் நிபுணர். இந்த வகையில் மூப்பர் ஓர் எழுதுவினைஞராக மட்டுமன்றி அதிபர்களின் அந்தாங்கக் காரியதரிசி
பாகவும் செயல்பட்டுள்ளார்.
மூப்பர் தனது தொழிவை ஆரம் பித்த காலத்தில் தட்டச்சுப் பொறி பாழ்ப் பாணத்திற்கு வந்திருக்கவில்லை. பாழ் குடாவிற்கு முதன் முதல் வருகை தந்த தட்டச்சுப் பொறிகள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவையே! சாள்ஸ் மத்தியூஸ் களார் கல்லூரிக்கென அதிலொன்றை வாங்கினார். அதே நேரம் ஆங்கிலத் தட் டச்சுப் பொறிகளும் சந்தைக்கு வந்தன.
|
அதிபர் அதிலுமொன்றை வாங்கினார். ஆனால், பிரான்சியத் தயாரிப்புத் தோல்லை கொடுக்கத் தொடங்கியது. இரு வேறு தயாரிப்புகளினதும் தாழ்ப் பலகைகள் (Key Boards) வித்தியாச மானவை. இருந்தும், முப்பர் பின்னர் கிடைத்த தட்டச்சுப் பொறியையும் இயக்கக் கூடிய பயிற்சியை வெகு சீக்கிாத்தில் பெற்றுக் கல்லூரி வேலைகள் தடங்கலின்றி முன்னேற உதவினார்.
ஜேம்ஸ் மூப்பரின் வாழ்க்கை ஒரு பைபிள். ஒரு சீனத. எனவே இந்த சாண் 1று மகனுக்குச் சிலை எடுத்த குருநகர் றோக் னரமுக நிலை பத்தினர் fig, ஜேம்ஸ் மூப்பரின்
மானுடத்தை மேலுமொரு உயர்த்தியுள்ளனர்.
அணி ல இந்த இருபத் தோராம்
நூற்றாண்டிலும் குருநகரில் மட்டுமன்றி
ஈழம் முழுதிலும் பிர. வகிப்பது மானுட தேவைகளிலொன் றெனலாம்!
(சொந்தங்கள் தொடரும்)
ஆழ்ந்த துயரமடைகின்றது.
கொள்ளுகின்றோம்.
எநீ. எஸ்.
இசை உலகில் தனது தனித்துவக் குரலினிமையாலும், அபார கர்நாடக இசை ஞானத்தாலும் தனது நிரந்தர இருப்பை நிறுவி, அதன் மூலம் கர்நாடக சங்கீத வரலாற்றில் ஓர் ஒளி வட்டத்தைப் பெற்றுக் கொண்டவரான இசையரசி திருமதி. எம்.எஸ்.சுப்புலசுடிமி அவர்களினது பிரிவையெண்ணி மல்லிகை
இந்தத் தேசத்தில் வதியும் இசைக் கலைஞர்கள், கர்நாடக இசைப் பிரியர்கள், சுவைஞர்களின் சார்பாக எமது துயரத்தைத் தெரிவித்துக்
וי
ஆசிரியர்
افففف
 

密岛 ஈழத்த்ன் இலக்கிய இழப்புகள்
- செங்கை ஆழியான்
ஒரு திங்களுள் (மார்கழி 2004) இப்பாரிய இலக்கிய இழப்புகள் ஏற்பட்டுவிட்டன. ஈழத்து இலக்கிய உலகு கவிஞர் தில்லைச்சிவன், சிறுகதைப் படைப்பாளி கே.வி.நடராஜன், பல்துறை எழுத்தாளர் புத்தொளி சிவபாதம், மூதறிஞர் சொக்கன் ஆகிய நால்வரை ஒருவர் பின் ஒருவராக இழந்துவிட்டது. அவரவர் தத்தம்மளவில் ஈழத்து இலக்கியத் தடத்தில் கனதியாகக் காலடி பதித்தவர்கள். நால்வரும் மணிவிழாக் கண்டவர்கள். பவள விழா வயதினை நெருங்கிக் கொண்டிருப்பவர்களும், கடந்தவர்களும் இந்நால்வரிலுளர். அவர்களது தேவையும் வழிகாட்டலும் ஈழத்தின் இலக்கிய உலகிற்கு இன்னமும் தேவைப்படும்போது எம்மை அவர்கள் பிரிந்து சென்றுவிட்டார்கள்.
கவிஞர் தில்லைச்சிவன்
யாழ்ப்பாணத் தீவகத்தில் சரவணையூரில் 1928 ஆம் ஆண்டில் மே மாதம் முதலாம் திகதி பிறந்த தில்லையம்பலம் சிவசாமி நீண்ட காலம் ஆசிரிய ராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். தில்லைச் சிவன் என்ற புனைப் பெயரைத் தரித்துக் கனதியான கவிதைகளை இலக்கிய உலகிற்குத் தந்தவர். 1930-1940 காலத்தில் களத்து மேட்டில் சூடு மிதிக்க எருது வளைக்கும் சிறுவர்களில் ஒருவனாகத் தான் இருந்ததாகவும், வளைத்து ஒய்ந்ததும் களப்பாயில் அமர்ந்து கதையளந்ததால் ஏற்பட்ட கற்பனை வளம் தில்லைச்சிவனைக் கவிஞனாகவும், சுதாசிரியனாகவும் உருவாக்கியதாக அவர் குறிப்பிடுகிறார். பட்டனத்து மச்சினி' என்ற கவிதை மூலம் வாசகர்களினதும் விமர்சகர்களினதும் கவனத்தை தில்லைச்சிவன் ஈர்த்துக் கொண்டார். இதன் பின்னர் இவரது கவிதைகள் பல பத்திரிகைகளிலும் வெளிவந்தன. அவரது கவிதைகளின் தொகுப்புகளாகக் கனவுக்கன்னி, தாய், தில்லைச்சிவன் கவிதைகள் என மூன்று தொகுதிகள் வெளி

Page 15
வந்துள்ளன. சிறுவர்களுக்கான பாட்டுக் களையும் தில்லைச்சிவன் ஆக்கியுள்ளார். அவற்றின் தொகுப்பாகப் பாப்பாப் பாட்டுகள் (1985), பூஞ்சிட்டுப் பாப்பாப் பாட்டுகள் (1998) ஆகியன வெளிவந் துள்ளன.
கவிஞர் தில்லைச்சிவன் ஆக்கிய இரு காவியங்கள் சற்று வித்தியாச மானவை. நான்" என்ற காவியம் அவரது சுயசரிதையாகும். சுயசரிதையைக் கவிதை யில் பாடிய முதற் கவிஞர் அவர் தான்! கல்வியுலகத்தினை விமர்சிக்கும் அவரது ஆசிரியை ஆகினேன்" என்பது மற்றைய காவியமாகும். 'வேலணைத் தீவுப் புலவர்கள்" அவராக்கிய ஆய்வு தழுவிய நூலாகும். ஆவணப்படுத்திய நூல்.
வேலனைப் புலவர்களை
தில்லைச்சிவன் தன்னை ஒரு சிறு கதை எழுத்தாளராகவும் அடையாளம் காட்டியுள்ளார். "பழக்கம்" என்ற ஒற்றை யங்க நாடகம் மூலம் உரைநடைக்குள் புகுந்த தில்லைச்சிவன் 1950-1955 காலப் பகுதியில் கறுப்பனின் தியாகம், நிழல், பவானி முதலான சிறுகதைகளைத் தினகரனில் எழுதியுள்ளார். அவற்றின் பின்னர் வேலி, நீட்டு, எதார்த்தம், பிள்ளையான், பதுங்குகுழி, தண்ணீர் குற்றம் பொறுக்காது, காத்திருப்பு, கனவு பலித்தது, வள்ளி, சாதியை வென்ற அறிவு, சவாரியும் சதியும் முதலான கதைகளை
பசுஞ்சோலை,
வக்கிரம்,
மல்லிகை, ஆதவன் முதலான சஞ்சிகை களில் எழுதியுள்ளார். அவரின் சிறு கதைத் தொகுதி "காவல் வேலி" (2003) அண்மையில் வெளிவந்தது. தரமான கவிஞனாகத் தன்னை நிலைநிறுத்திய
கவிஞர் தில்லைச்சிவன் தன்னைச் சிறு கதை எழுத்தாளனாக இச்சிறுகதைகள் மூலம் இனங்காட்டத் தவறிவிட்டார். அந்தக்காலத்துக் கதைகள்' என்ற புனையாச் சிறுகதைகள் (Non Fiction Short Stories) pian, யில் தொடராக வெளிவந்தபோது
ஆனால் அன்னாரின்
பலராலும் பாராட்டப்பட்டது. சமூகவியல் ஆவணமாகக் கொள்ளத்தக்க அற்புத மான் படைப்பிலக்கியமாகக் கருதப் பட்டது. ஒரு பழைய தலைமுறையின் காலகட்டத்து வாழ்வின் பெருமைகளை யும் சிறுமைகளையும் தில்லைச் சிவனின் எழுத்தில் படிக்கும் போது அக்கால கட்டத்தில் உலாவுவது போன்ற பிரமை ஏற்படும். உரைநடை இலக்கியத்தில் அன்னாருக்குப் பெருமை சேர்க்கும் படைப்பிலக்கியம் "அந்தக் காலத்துக் கதைகள் ஆகும் என்பேன்.
எழுத்தாளர் கே.வி.நடராஜன்
胃
ஈழத்தின் மூத்த சிறுகதை எழுத்தாளர் கே.வி.நடராஜன் ஆவார். அளவெட்டியில் பிறந்து, யாழ்ப்பாணத் தின் நகரப் புறத்தில் வாழ்ந்து, தென்னை பனம்பொருள் கூட்டுறவுச் சங்கத்தின் சஞ்சிகையான 'கற்பகத்'தின் ஆசிரியராக
 

வில் நாற்பதாண்டுகளுக்கு மேலாகப் படைப்பிலக்கியத்தில் சிறுகதை எழுத் தாளராக விளங்கியவர் கே.வி.நடராஜன் ஆவார். யாழ் இலக்கிய வட்டத்தின் அதி மூத்த உறுப்பினர். யாழ் இலக்கிய வட்டம் தனது முதலாவது வெளியீடாக இவரின் "யாழ்ப்பாணக் கதைகள்' என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டது. இந்த வெளியீட்டில் இரசிகமணி கனக செந்திநாதன், "நல்லவை நிலைக்கும். மற்றவை காலத்தால் அழிந்துவிடும். கே. வி.நடராஜன் ஒரு கிராமியக் கலைஞன். அவர் எழுத்தில் என்றும் யாழ்ப்பாணம் நின்று பேசும், கதைக்கும்" எனக் குறிப் பிட்டார். யாழ்ப்பாணச் சமூகத்தின் தீட்டுப் பொருட்களென ஒதுக்கப்பட்ட பகுதிகளையும் நடராஜன் தனது படைப்பு களில் எடுத்தாண்டுள்ளார். பேசப்பட்டார். ஏசவும் பட்டார்.
பதினொரு சிறுகதைகளின் தொகுதியாக "யாழ்ப்பாணக் கதைகள்' 1965இல் யாழ் இலக்கிய வட்டத்தால் வெளியிடப்பட்டது. பின்னர் இத்தொகுதி பயிலிருந்த ஒரிரு சிறுகதைகள் நீக்கப்பட்டு புதிதாக ஒரிரு சிறுகதைகள் சேர்க்கப் பட்டு 1994இல் வெளிவந்தது. 2000 ஆம் ஆண்டில் நடராஜனின் இருபத்திரண்டு சிறுகதைகள் ஒருங்கே தொகுக்கப்பட்டுச் சென்னையில் மித்ரா நூல் வெளியீட்ட கத்தினை வெற்றிகரமாக நடத்தி வரும் எஸ்.பொன்னுத்துரை 'வேலி' எனும் பாரிய தொகுதியாக வெளியிட்டுள்ளார். 2001 ஆம் ஆண்டு மீண்டும் யாழ் இலக் கிய வட்டம் அவரின் இன்னுமொரு பதி னொரு சிறுகதைகளைத் தொகுத்து 'ஊரும் உலகமும்" என வெளியிட்டது. நாற்பதாண்டுகளில் நூற்றிற்கும் மேற்
EE?
பட்ட சிறுகதைகளை எழுதிய நட ராஜனின் எஞ்சிய சிறுகதைகள் இவை மட்டுந்தாம். பேராசிரியர் கா.சிவத்தம்பி, எஸ்.பொன்னுத்துரை, இரசிகமணி கனக செந்திநாதன், செங்கை ஆழியான் ஆகியோரின் விதந் துரைகளுக்கு நடராஜனின் சிறுகதைகள் உட்பட்டுள்ளன. 'கே.வி.நடராஜனின் யாழ்ப்பாணத்துச் சிறுகதைகள் என்ற நூலில் இடம்பெறுவன அற்புதமான கதைகள்.
ஏ.ஜே. கனகரட்னா,
சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கை முறையை அதிலுள்ள சோகத்தை இதிலுள்ள மனித உறவுகளின் தாற்பரியத்தை மிக அற்புதமாகச் சொல் கின்றன" எனப் பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிட்டுள்ளார். "இந்தக் கதைஞரின் பலம் யாழ்ப்பாணத்தின் பாமரரும் பஞ்சைகளும் கையாளும் பேச்சுத் தமிழுக்கு உயிர்ப்புக் கொடுத்துள்ளமை யாகும். வேறு எந்தப் படைப்பாளியும் இந்தத் தமிழை இவ்வளவு நேர்த்தியாகப் பதிவு செய்யவில்லை எனத் துணிந்து கூறலாம்" என எஸ்.பொன்னுத்துரை மெச்சியுள்ளார். இது சற்று மிகைப்பட்ட கூற்றாயினும் முற்றாக மறுதலிப்பதற் கில்லை. "அதிகம் அறியப்படாத, நிச்சயம் அறியப்பட வேண்டிய ஒரு கதாசிரியனின் கதைகள்' என ஏ.ஜே. கனகரட்னா குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் கே. வி.நடராஜனுக்குரிய பங்கைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. ஈழத்தின் தரமான சிறுகதைகள் பலவற்றினை இவர் பிரம்மஞானி, சாம்பல், தேர், வேலி என்பன அவரின்
படைத்தளித்துள்ளார்.
குறிப்பிடத்தக்க படைப்புகளாம். யாழ்ப் பாணச் சமூகத்தின் பொய்முக முடிகளை
DSGEE

Page 16
EE
இவரது கதைகள் கிழிக்கின்றன. கதை களின் கருப்பொருட்கள் சமூகத்தை உலுப்பிவிடக் கூடியவை. மண்வாசனை சார்ந்த எழுத்துக்கள். விபரணைகளும், மக்கள் மொழிப் பிரயோகங்களும் அவரது சிறுகதைகளுக்குச் சுவை பயக் கின்றன. சமுகத்தை நன்கு தரிசித்து தோய்ந்த சமுகப் பிரக்ஞையுடன் கலா பூர்வமாகத் தன் சிறுகதைகளைச் செப்ப மாசு என் இனிய இலக்கிய நண்பர் நட இன்று அவ சில்லை. அவரது படைப்புகளுள்ளன.
புத்தொளி சிவபாதம்
ராஜன் படைத்துள்ளார்.
இ ரசிகமணி கனசுசெந்திநாதனுக்
குப் பின்னர் நடமாடும் வாசிகசாலை
என்ற பெயருக்குப் பொருத்தமாக வாழ்ந்தவர் புத்தொளி சிவபாதமாவார். அவரிடம் இல்லாத நூல்கள் எனச் சில் வற்றினைத்தான் குறிப்பிடலாம். ஈழத்தில் வெளிவந்த அனைத்து நூல்களும் சஞ்சிகைகளும் அவரின் நூல் நிலை
5 st
யத்தில் இருக்கின்றன. பல்கலைக்கழக மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் அவரிடம் தான் ஆய்வுக்குரிய நூல் கிடைக்கும். தனது உழைப்பில் பெரும் பங்கினை நூல்கள் வாங்குவதில் அவர் செலவிட்டார். யாழ் இலக்கிய வட்டத்தின் பொருளாளராக அமரராகும் போது விளங்கினார். யாழ் இலக்கிய வட்டத்தின் உறுப்பினர்களின் படைப்புகளை நூலுரு வில் கொணர்வதில் மிக ஆர்வமுள்ளவ ராகச் செயற்பட்டுள்ளார். மாபெரும் சிறு கதைத் தொகுதியான "சுதந்திரன் சிறு கதைகள்" நூலாக்கத்தில் அவரின் பங்களிப்பினை குறைத்து மதிப்பிட முடி யாது. கொழும்பு, கண்டி, திருகோண மலை, மட்டக்களப்பு என என்னுடன் பயனப்பட்டு அவ்வவ்விடங்களில் சுதந் திரன் சிறுகதைகள் நூலிற்கு வெளியீட்டு விழாவும், அதில் சிறுகதைகள் எழுதிய அனைவருக்கும் பொன்னாடை போர்த் திக் கெளரவித்தமையும் இன்னமும் நினைவிலுள்ளன. ஒரு இலக்கிய இயக்க மாகத் தொழிற்பட்டவர் புத்தொளி.
புத்தொளிக்குப் பல்பரிமானங்க ளுள்ளன. 1932 டிசம்பர் 05 ஆம் திகதி அச்சுவேலியில் பிறந்த சிவபாதம் ஆசிரிய ராகவும், அதிபராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சமாதான நீதிபதியுமாவார். அரசியற் பேச்சாளராகவும் சமுகத் தொண் டராகவும் புத்தொளி செயற்பட்டுள்ளார். இறுதிவரை அவரை நாடி வரும் மக்களின் துயரங்களுக்கு அவர் விடிவு கானப் பாடுபட்டார். ஈழத்தில் வெளி வந்த சகல ஏடுகளிலும் கட்டுரைகளா கவும், கதைகளாகவும் எழுதியுள்ளார். இலங்கை வானொலியில் இலக்கியக் கருத்தரங்குகள் பலவற்றினை நடாத்தி
 

புள்ளார். தமயந்தி பதிப்பகம் firr நிறுவனத்தின் மூலம் சிற்பியின் உனக் காசுக் கண்ணே, பொ.சண்முகநாதனின் வெள்ளரி வண்டி, பெண்ணே நீ பெரிய வள் தான் ஆகிய நூல்களை வெளியிட் டுள்ளார். பலரது நினைவு மலர்களின் ஆசிரியராக விளங்கிப் பல தொகுப்பு
களை வெளியிட்டுள்ளார்.
புத்தொளி சிவபாதம் அவர்கள் சிறிதும் பெரிதுமாக பதினான்கு நூல்
எழுதி
பார்,
தி டிர் வெளியிட்டுள்ளார். படித்துப்
மொழியும் நாடும், மிதிலைச் செல்வி,
த்தொளி மலர்ச்சி,
அப்பலோ, மலர்சு தமிழீழம், நானை நமதே, கட்டுரைக் கதம்பம், தமிழர் தலை மகன் ஜீ.ஜீ. தமிழ்த்தாயின் கண்ணீர், தமிழர் செல்வம் செல்வா, தூக்கில் பகத்சிங், ஆசிரிய குரு சோன், சைவத் திருமண் முறைகள் என்பன அவர் எழுதிய நூல்களாகும். இவற்றினை விட இலக்கியக் கட்டுரைகள், அரசியற் கட்டுரைகள், சமயக் கட்டுரைகள், நகைச் அறிவியற் கட்டுரைகள், தகவற் கட்டுரைகள் என
சு வைக் கட்டுரைகள்,
பல்திறத்து எழுத்தாக்கங்கள் பத்திரிகை T; GF: எழுதியுள்ளார்.
புத்தொளியின் முதலாவது சிறுகதை பலிபீடத்திலே" 1951இல் தேசாபிமானி யில் வெளிவந்தது. அதன் பின்னர் பானு வின் திருமணம், வீரத்தமிழ் நங்கை, தரகர் வேலுப்பிள்ளை அம்மான், காலேஜ் காதல், சீதனமே முதலான சிறுகதைகளை எழுதியுள்ளார். புத்தொளி மிகச் சிறந்த தொரு சுவைஞர். நிறைய வாசிப்பவர். அனைத்துத் தகவல்களையும் விரல் துணியில் வைத்திருப்பவர். நூல்களைச் சேகரித்துப்
பாதுகாப்பவராக விளங்
rேர்.
சொக்கன் என்ற
சொக்கலிங்க நாவலர்
ஈழத்தின் சிறுகதை வரலாற்றில் சொக்கன் என்ற பங்கினை மதிப்பிடுவதாயின் அன்னாரின் பல்துறைப் பரிமாணத்தினையும் இணைத் துக் கவனத்திற்கு எடுக்க வேண்டிய அவசியமிருப்பதாக நான் எண்ணு கிறேன். நவீன தமிழிலக்கியத்த: சொக்கனின் பேனை தடம் பதிக்காத
படைப்பாளியின்
துறை எதுவுமேயில்லை. சொக்சுன் யாது எழுதினார்? எனக் கணக்கிடுவதிலும் i TGri; ya:Ti; கிடுவது இலகுவாகவிருக்கும். சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, கட்டுரையியல்,
எதனை எழுதவில்லை?
சமயம், வானொலிச் சித்திரங்கள், பட பாட நூல் வழிகாட்டிகள், மொழி பெயர்ப்புகள் எனப் பல துறை ஆழமாயும் கால்களை ஊன்றியுள்ளார். அவருடைய பல்துறை இலக்கியப் பங்களிப்பில் சிறு
ஒEை
நூல்கள்,
கவிலும் அகலமாபும்

Page 17
800
கதைத் துறைக்கு ஆற்றியிருக்கும் பணி
ஆறு தசாப்தங்களைக் கடந்ததாகும்.
அச்சுவேலி ஆவரங்காலில் 1930ஆம் ஆண்டு மே மாதம் 02 ஆந் திகதி பிறந்த கந்தசாமிசெட்டி சொக்கலிங்கம் யாழ்ப் பாணம் நாயன்மார்க்கட்டினைத் தன் வசிப்பிடமாகத் தேர்ந்தெடுத்துக் கொண் டதால் பெருமை பெற்றது.
சொக்கனால் நாயன்மார்க்கட்டு 1935இலிருந்து இன்றுவரை அவர் கற்பதை நிறுத்த வில்லை. பண்டிதர், பட்டதாரி, முதுகலை மானி, கலாநிதியென அவர் தன் கல்விப் புலமையை விரித்துக் கொண்டார். யாழ். இந்துக் கல்லுரரி ஆரம்பப் பாடசாலை, நாவலர் பாடசாலை, ஸ்ரான்லிக் கல்லூரி, பலாலி ஆசிரியக் கலாசாலை, பேராதனை இலங்கைப் பல்கலைக் கழகம், யாழப் பாணப் பல்கலைக் கழகம் என்பன சொக்கனை கல்வியாளனாக உருவாக்கு வதில் பெரும் பங்கும் அதனால் ப்ெருமை சமடைந்தன. ஆசிரியராக (1952 -1972), அதிபராக (1973-1982), இலங்கைக் கல்வி கொத்தணி அதிபராக (1982-1990) விளங்கியுள்ளார். அரசினர் பாடநூல் வெளியீட்டு ஆலோ
35(up யாற்றித் தமிழ், சைவநெறி ஆகிய துறை களுக்கு அளப்பரிய பங்காற்றியதோடு
நிர்வாக சேவையாளனாக,
சனைக் உறுப்பினராகக் கடமை
சைவநெறி பத்தாம் பதினோராம் பாட நூல்களின் எழுத்தாளராகவும் இருந் துள்ளார். இடையாற்று விரிவுரையாள ராகக் கோப்பாய் ஆசிரிய கலாசாலை (1976-1979), பலாலி ஆசிரிய கலாசாலை (1982-1983) என்பவற்றிலும், இடைவரவு விரிவுரையாளராக யாழ்ப்பாணப் பல் கலைக்கழகத்திலும் (1992-1993) பணி பொதுச் சேவைகளில்
அகில இலங்கைத் திருமறை மன்றத்தின் தலைவராகவும் (1989-1994), பாணத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1959),
யாழ்ப்
இலங்கைக் கம்பன் கழகம் (1963-1966), அகில இலங்கைச் சேக்கிழார் மன்றம் (1966-1973), முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் (1977-1990), யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாவிருத்திச் சங்கம் (1990 - 1997) ராகவும் தனது பணியினை ஆற்றி அவற் றினைப் பெருமைப்படுத்தியுள்ளார்.
என்பனவற்றின் செயலாள
அவர் கரங்களும் சிந்தையும் செயற்பட்ட சமுக நிறுவனங்கள் தம்மளவில் செழித் தோங்கி கலை இலக்கிய சமய வரலாற் றில் தம் முத்திரைகளைப் பதித்துள்ளன.
சொக்கன் என்ற இந்தப் படைப் பாளியை உருவாக்கியவர்களென இவர் இன்றும் நன்றியுடன் நினைவு கூறும் நாடகாசிரியர், நடிகர் அமரர் எஸ்.பி.நாக ரத்தினம், அமரர் சு.சுப்பிரமணியம், கட்டுரையாளரான த.இராஜகோபாலன், சொக்கனின் நண்பராக விளங்கிய அமரர் கவிஞர் மதுரகவி, இ.நாகராஜன், இலக் கியக் கலாரசிகர் சோ.இராமச்சந்திர ஐயர், ஈழகேசரி, ஈழநாடு, சிந்தாமணி முதலான பத்திரிகைகளின் ஆசிரியராக விளங்கி ஈழத்தின் இலக்கிய கர்த்தாக்கள் பலரை உருவாக்கக் காரணராக விளங்கிய அமரர் இராஜஅரியாத்தினம், அமரர் பண்டிதர் பொன்.கிருஷ்ணபிள்ளை என ஒரு பெரு மக்கள் கூட்டத்தை இன்றும் போற்றி வரு கின்றனர். தாமே சுயமென்று ஏற்றி விட்ட ஏணியை உதைத்துத் தள்ளிவிடும் இலக்கியவாதிகளிடையே
சொக்கன் தன்னை உருவாக்கியவர்களை
66 Kb 6)
மறக்காது நினைவு கூறுவது பெருமைக் குரிய பண்பும் பணிவுமாகும். அவ்வகை
 

யில் சொக்கனிடம் கற்றுக் கொள்ள
நிறைய விடயங்கள் எங்களுக்குள்ளன.
கலை இலக்கிய உலகில் க.சொக்க லிங்கம் பல்வேறு புனைப் பெயர்களில் தன்னை இனங்காட்டியுள்ளார். சொக்கன், வேனிலான், திரிபுராந்தகன், ஆராவமுதன்,
பிள்ளை, சோனா, சட்டம்பியார், பேய்ச்
சுடலையூர் சுந்தரம்
சாத்தன், திருவள்ளுவர், பரிமேலழகர், தேனி, கற்றுக்குட்டி, ஞானம், சாம்பவன், எதார்த்தன், பாலன் எனப் பல அவதாரங் களில் எழுதிக் குவித்துள்ளார். சொக்க னின் கவித்துவ ஆற்றல் வியப்புக்குரியது. கவிதைக்கு ஒசையும், கற்பனையும் மரபு வழிக் கவித்துவ ஆற்றலும் அவசியமான அம்சங்கள் என்பதைச் சொக்கனின் கவிதைகளைப் படிக்கும்போது உணர்ந்து கொள்ள முடியும். மரபு தெரியாமலே மரபை மீறுகின்ற இளங்கவிதையாளர் கள் சொக்கனின் கவிதைகளைப் படிக்க வேண்டும். படித்துப் பார்த்து உணர்ந்த பின் மரபை மீறிப் புதுக்கவிதை படைக்க எண்ண வேண்டும். வீரத்தாய், நசிகேதன், முன்னிச்சரவடிவழகாம்பிகை அந்தாதி, நல்லூர் நான்மணிமாலை, அப்பரின் நெடும்பா 3, நல்லூர்க் கந்தன் திருப்புகழ், சைவப் பெரியாரின்
அன்புள்ளம்,
சால்பை உரைத்திடுவோம் முதலான கவிதை நூல்களின் ஆசிரியர். நெடும்பா 3 என்பது கதைப் பாடற் தொகுதியாகும். இலங்கை இலக்கியப் பேரவையின் 1986 இல் பெற்றுக் கொண்டது. தமிழும் சைவமும்
பாராட்டுச் சான்றிதழை
அவற்றின் தூய்மையும் வளர்ச்சியும் சொக்கனின் கவிதா தரிசனத்தின் உள்ள டக்கமாகவுள்ளன. 'சொக்கன் நூலறி
புலவர். ஆகையால் செய்யுள் வடிவம்
கிருஷ்ணன் கருத்தாகும்.
80
பற்றிய முழு விளக்கம் அவரிடம் உண்டு. யாப்பின் வழுக்களைச் சொக்கனின் ஆக்கங்களில் காண்பது அரிது. ஒசை வழுக்கள் மாத்திரமன்றி வாக்கிய வழுக்களையும் சொக்கனின் எழுத்துக் களில் காணமுடியாது" என்பது கவிஞர் முருகையனின் கணிப்பீடாகும்.
ב46 וזיה;
கட்டுரையியல் கைவரப் பெற்ற வல்லுநர் சொக்கனாவார். அவர் எழுதிய கட்டுரைகளின் எண்ணிக்கை மிகமிக அதிகமாகும். அவரது கட்டுரைகளின் தொகுப்புகளாகப் பத்துத் தொகுதிகள் வரையில் வெளிவந்துள்ளன. அவை பொது விடயங்கள், ஆய்வுகள், பாடநூல் வழிகாட்டிகள் எனப் பல்வகைப்பட்டன.
அவை பாரதி பாடிய பராசக்தி, பைந்தமிழ்
வளர்த்த பதின்மர், நல்லை நகர் தந்த நாவலர், சேர் பொன். இராமநாதன் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், படிப்பது எப்படி?, ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வரலாறு, விபுலானந்த
கவியமுதம், இருபெரும் நெறிகள்,
இலக்கணத் தெளிவு, இந்து நாகரிகம்
எனப் பலவாறாக விரியும். நீண்ட காலமாக ஈழத்தில் நிலைத்து வரும் சமய மரபினைத் தமது காலத்தில் தொடர்ந்து பேணும் வகையிலும் சமயக் கருத் துக்களை யாவரும் விளங்கும் வகை யிலும் எழுதச் சொக்கனால் தான் முடியு மென்பது பேராசிரியர் ப. கோபால சொக்கனின் 'ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வரலாறு மிக ஆழமான ஆய்வு நூலாகக் காணப் படுகிறது. ஈழத்தின் நாடக வரலாற்றினை ஆராய்வோர் சொக்கனின் இந்த நூலைத் தாண்டிக் காலடி எடுத்து வைக்க முடி யாது. இந்த ஆய்வு ல் 1978ஆம்
S (DGSEDB

Page 18
802
ஆண்டுக்குரிய இலங்கை சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றுக்
கொண்டது.
நாடகங்களை நடிப்பதற்கும், படிப்ப தற்குமுரிய கலை இலக்கியமாக எழுத் திட்ட நாடகாசிரியர் சொக்கனாவார். வரலாற்றுக் கதாபாத்திரங்களையும், இலக்கியக் கதாபாத்திரங்களையும் தன் நாடகப் பிரதிகளில் உயிரோட்டமாக நட மாடவிட்டவர் சொக்கனாவார். பொது வாக அவரது வரலாற்றுப் படைப்புகளில் அழகு தமிழும், கம்பீரமான தமிழும்,
செந்தமிழும் விளையாடும். அலுப்புக்
களைப் பின்றி ஆற்றொழுக்காகத் தமிழைத் தன் நாடகங்களில் உரையாட
சிலம்பு பிறந்தது, கிரிக்காவலன், தெய்வப் பாவை,
விட்டுள்ளார். சிங்க
மாருதப்புரவல்லி, மானத் தமிழ் மறவன் என்பன அவரது நாடக நூல்களாகும். இலங்கைக் கலைக் கழகத் தமிழ் நாடகக் குழுவின் முதற் பரிசினை 1960இல் சிலம்பு பிறந்தது என்ற நாடகப் பிரதியும், 1961இல் சிங்ககிரிக்காவலன் என்ற நாடகப் பிரதியும் பெற்றுக் கொண்டன. மானத்தமிழ் மறவன் என்ற நாட்டுக் கூத்து நூல் இலங்கை இலக்கியப் பேரவையின் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற இன்னொரு நூலாகும். துரோகம் தந்த பரிசு என்ற நாடகத்தினை எனது மாணவக் காலத்தில் தினகரன் வார மலரில் வாசித்து வியந்துள்ளேன்.
ஈழத்து நவீன நாவல் வரலாற்றில்
சாதியத்தினைக் கருவாகக் கொண்டு முதன் முதல் படைத்த பெருமை சொக்கனுக்குரியதே! அவரது "சீதா அவ் வாறு சிறப்புப் பெறும் நாவலாகும். செல்லும் வழி இருட்டு,
passe):
ஞானக்
சலதி என்பன சொக்கன் சலதியில் அன்னாரின் உரைநடை மிகவும் கம்பீர
கவிஞன், படைத்தளித்த நாவல்கள்.
மானது. வர்ணனைகள், உரையாடல்கள் என்பன மிக எளிமையாகவும் அதே வேளை கவிதைக்குரிய ஒசையும் கற்பனை வளமும் கொண்டவையாகவும் விளங்குகின்றன. சலதி நாவல் இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசினை 1987 இல் பெற்றுக் கொண்டது. சத்திய ஜித்ரேயின் சொக்கனால் தமிழாக்கப்பட்டுள்ளது. ஈழத்து வாச கனுக்குப் புதியதொரு களத்தை அது அறிமுகப்படுத்தியது.
"பகத்சிங்?
ஈழத்துச் சிறுகதை இலக்கிய வரலாற்றில் சொக்கன் முன்னோடிச் சிறு கதையாளர்களில் ஒருவராவார். பழைய இலக்கியப் பரிச்சயமும், நவீன இலக் கியத் தெளிவும் கொண்டவர். இதனால் அவரது சிறுகதைகளில் அவ்வாற்றல் காணப்படும். ஈழகேசரியில் 1947 இல் "கனவுக் கோயில்" என்ற வரலாற்றுக் கதையுடன் அறிமுகமாகும் சொக்கன், அதனைத் தொடர்ந்து கவிஞன் பலி, குட்டை நாய், மாணிக்கம், கற்பரசி, தீர்ப்பு, கூனல், பனித்துளி, தாமரையின் ஏக்கம், மறுபிறவி, காதலும் உரிமையும், வினோத நண்பன், பிள்ளைப் பாசம் முதலான சிறுகதைகளைப் படைத் துள்ளார். இவை அனைத்தும் ஈழகேசரி "மறு மலர்ச்சி"யில் பொன்னுச்சி என்றொரு சிறுகதை வெளிவந்துள்ளது. இவை ஆரம்பச் சிறுகதைகளாயினும் அக்கால
யிலேயே வெளிவந்துள்ளன.
கட்டத்தில் பலராலும் விதந்துரைக்கப் பட்ட கதைகளாகவுள்ளன.
கோயில்,
கனவுக்
கவிஞன் பலி, ஞாபகச்

சின்னம், தீர்ப்பு, கற்பரசி ஆகியன சரித்திரக் கதைகளாகவும், ஏனையவை சமூகக் கதைகளாகவும் உள்ளன. இவற்றில் கனவுக் கோயில், குட்டை நாய் என்பன குறிப்பிடத்தக்கவை. தனது பதி
னோழாவது வயதில் ஈழத்துச் சிறுகதை
சொக்கன் இன்றும் சிறுகதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார். பழைய எழுத்தாளர் சோ. சிவபாதசுந்தரம், சம்பந்தன், இலங்கையர்கோன், சு.வே. வரதர், கனகசெந்திநாதன் வரிசையில் சொக்கன் இடம் பெற்றவர். பின்பு பொன்னுத்துரை, டானியல், டொமினிக் ஜீவா சந்ததியோடு ஒன்றானவர். அதைத் தொடர்ந்து யோகநாதன், பெனடிக் பாலன், செங்கை ஆழியான், செம்பியன் செல்வன் காலத்தில் அவர்களுடன் நின்றவர். இப்போதும் புதிய இளமை | யுடன் எழுதிக் கொண்டிருப்பவர் என பேராசிரியர் நந்தி குறிப்பிட்டமை | முற்றிலும் ஏற்புடையவை. 'நல்ல சிறு கதைகள் எப்படி இருக்க வேண்டுமென்று யாராவது கேட்டால் அதற்கு வரை தேடி
மண்டையை உடைத்துக் கொண்டிராமல் சொக்கன்
விலக்கணம்
எழுதிய தபாற்காரச் சாமியார், குரு, பிரியாவிடை, இருவரும் அழுதனர், உறவுமுறை போல இருக்க வேண்டும் என்று சுலபமாகச் சொல்லி
ஆசிரியர்,
விடலாம்? எனச் சொக்கனின் "கடல்" என்ற சிறுகதைத் தொகுதிக்கான விமர்
சனத்தில் 'சிற்பி குறிப்பிட்டுள்ளார்.
அவர் குறிப்பிடாதது சொக்கனின் சிறு கதைகளில் 'கடல் மிக முக்கியமானது ! என்பதாகும். இச்சிறுகதைத் தொகுதி 1972 ஆம் ஆண்டிற்கான இலங்கை |
சாகித்திய மண்டலப் பரிசிற்குரிய
萨1 வரலாற்றில் காலடி எடுத்து வைதத
808)
தாகியது. கதாசிரியரின் படைப்பனுபவத் தினையும் சமூகப் பார்வையையும் ஆழ மாகப் புலப்படுத்தும் சிறுகதை கட லாகும். அச்சிறுகதைக்காகச் சொக்கன் என்றும் பேசப்படுவார்.
சொக்கன் பல்வேறு பரிசில்களும் விருதுகளும் பெற்றுத் தன் இலக்கிய ஆளுமையை நிலைநாட்டியவர். கடைசி ஆசை (1946) மின்னொளிச் சஞ்சிகை யின் சிறுகதைப் போட்டியில் முதற் பரிசினையும், தபாற்காரச் சாமியார் (1966) வீரகேசரிச் சிறுகதைப் போட்டியில் முதற் பரிசினையும் தமதாக்கிக் கொண்டவை. பூரீலழரீஆறுமுகநாவலர் சபை தமிழ் மா மணி என்ற பட்டத்தையும், இந்து கலா, சார அமைச்சு இலக்கியச் செம்மல் என்ற நல்லூர் தமிழிசைச் சபை குகபூரீ என்ற பட்டத்தையும் வழங்கித் தம்மைக் கெளரவப்படுத்திக் கொண்டன. இவற்றோடு தமிழுக்கும், சமயத்திற்கும், சமூகத்திற்கும் தொண் டாற்றிய வகையால், 'சொக்கலிங்க நாவலர்' என்ற பட்டத்திற்குத் தகுதி யானவர் இவர் என்பது எனதும் பலரதும்.
பட்டத்தினையும்,
அபிப்பிராயம்.
Clarcüтслcuлтш5icto
மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் கிடைக்குமிடம் நீயூபுக் லாண்ட் 52C, நோர்த் உஸ்மான் ரோடு, சென்னை - 17.
ノ
665); অষা

Page 19
09
சுடலை ஞானம்!
- லோகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி
முழுவதும் கிடுகுகளால் அமைக்கப்பட்ட குடிசை. அதன் முன்பே ஒரு சிறிய பந்தல். அந்தப் பந்தல் காலிலே சாய்ந்து கொண்டு சிந்தித்தவாறு, ஒரு காலை மடித்து நிலத்தில் ஊன்றி மறுகாலைக் கீழே கிடத்தி நீட்டிக் கொண்டிருந்தான் அந்தக் குடிசைக்குச் செந்தக்காரனான மணியம்.
அடிக்கடி “லொக்கு லொக்கு" என்று இருமிக் கொண்டிருந்தான். அது அவன் ஒரு ஆஸ்துமா நோயாளி என அடையாளம் காட்டுவது போல் இருந்தது.
மணியத்திற்கு இப்போது ஐம்பத்தி மூன்று வயதாகிறபோதும் அவனது ஆஸ்துமா நோயினால் அவதியுற்று, வறுமை வாட்டி மெலிந்து, கறுத்துப் போன உடலும் அறுபது வயதிருக்கும் என்று சொல்லக் கூடியளவிற்கு அவன் தோற்றம் அமைந்திருந்தது.
தான் இருமுவதையும் பொருட்படுத்தாது பீடி பிடித்துக் கொண்டிருந்தான். அது மணியத்தின் மனைவி லெட்சுமிக்கு எரிச்சலை உண்டு பண்ணியிருக்க வேண்டும்.
“லொக்கு லொக்கெண்டு இருமுது. அதுக்குள்ள விடி குடிக்கிறத்தப் பாரு. இந்த இளவடிச்ச வீடியக் குடிக்காதை குடிக்காதையெண்டு சொன்னாக் கேட்டால் தானே..! என்னத்தையோ பண்ணு னான் என்ன. ஒண்டச் சொன்னா மனிசன் கேட்டு நடக்க வேணும்.!" என்று சொல்லி அலுத்துக் கொண்டவளாக எரிச்சல்பட்டுக் கொண்டாள்.
"நானும் இந்தப் பழக்கத்தைக் கைவிட வேணுமெண்டுதான் நினைக்கிறன், ஆனா கன காலமாய்ப் பழகிப் போன பழக்கமாச்சே. கொஞ்சம் கொஞ்சமாய்த்தான் விடவேணும்” என்ற மணியத்தை நோக்கி,
།

“சரி, எப்பிடியோ இந்தப் பழக் கத்தைக் குறைக்கப் பாருங்கோ. மத்தி யானமாகப் போகுது. புள்ளையஞக்குத் தின்றதுக்கு ஒண்டுமில்ல. யிலையும் அருளக்கா குடுத்த மையக் கிழங்கத்தான் அவிச்சி ஆளுக்கொரு துண்டாய்க் குடுத்தனான். அதுகள். எண்ர வகித்துல பிறந்து கொண்டு சாப்பாடு தண்ணிவெண்ணி யில்லாம ஒழுங்கான உடுப்பில்லாம
3 fr að) 6)
u T @ Lb
என்னமாய்க் கஷ்டப்படுகிதுகள்...! புள்ளக் குஞ்சுகளிட முகத்தப் பாக்கக் குள்ள சரியான கவலையாய் இருக்கி..! எங்களையும் எங்கட புள்ளக் குஞ்சு களையும் கடவுள் எப்பதான் கண்ண
முழுச்சிப் பார்க்கப் போறாரோ
தெரியல்ல. ம்..!" என்று நீண்டதொரு பெருமூச்சு விட்டவள்.
"இப்ப மத்தியானத்துப் பொழுதப் போக்க, பக்கத்தில ஒரு கொத்தரிசி யெண்டான கேட்டுப் பாப்பம், கூப்பன் அரிசி எடுத்துக் குடுக்கலாம், நெடுக அது களுக்கிட்டத்தான் ஒடியோடிப் போய்க் கேக்கிறது. தெரியல்ல.?’ பலதையும் எண்ணிய
என்ன சொல்லுதுகளோ
வாறு பக்கத்து வீட்டுப் பரிமளத்தின் வீட்டை நோக்கி நடந்தாள் மணியத்தின் மனைவி லெட்சமி.
அவள் பெயரில் இருந்த லெட்சுமி அவர்கள் வாழ்க்கையின் மேல் கண் பாராததால்தான் இத்தனைத் துன்பங் களும். துயரங்களும். அவலங்களும் நிறைந்திருந்தன!
லெட்சுமியும் அந்நாளில் பெயருக் கேற்ற மாதிரி லெட்சுமிகரமாகத்தான்
98
இருந்தாள், ஆனால் வறுமை அவளை கறுத்து மெலிந்து உருக்குலைத்து விட்டிருந்தது.
இதுவரை பிடித்துக் கொண்டிருந்த பீடியில், இனிமேல் பிடிக்க எதுவும் இல்லாததை உணர்ந்த மணியம் அதனைத் தூர விசினான், மணியத்திடம் இனிமேல் பிடிக்க பீடியும் இல்லை, புதியது வாங்கக் கையில் காசும் இல்லை! ல் "சங்கரப்பிள்ளையண்ணை இப்ப கடையில கடனுக்குச் சாமானுகள் தாராறு மில்ல. ம்... 12 மணியம் தன் நிலைமையை எண்ணிப் பெருமூச்சு விட்டுக் கொண்டான். இது இன்று நேற் றல்ல பல வருடங்களாக விட்டுக் கொள்ளும் பெருமூச்சு!
மணியத்திற்கும் லெட்சுமிக்கும் திரு மணமாகி இப்போது பத்தொன்பது ஆண்டுகள் ஆகிறது. அவர்கள் திருமண மாகிய புதிதில் நகை நட்டுகள், பணம் பண்டமென்று ஒரளவு வசதியாகத்தான் இருந்தார்கள். செய்து வந்த விவசாயத் தில் தொடர்ந்து நஷ்டத்துக்கு மேல் நஷ்டம் உண்டாகி கஷ்டத்தைக் கொடுத்தது. அதனால் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது; அவர்களால் ஆளப் பட்டவைகள் சகலதும் ஒவ்வொன்றாக விற்கப்பட்டன. இதனிடையில் குழந்தைகள் மட்டும் வருடத்திற்கு ஒவ் வொன்றாக உற்பத்தியாகியது.
ஆண் குழந்தை வேண்டுமென அவர்கள் கொண்ட ஆசை அடுக்கடுக் காகத் தொடர்ந்து ஆறு பெண் குழந்தை களைப் பெற வைத்தது. அதன் பின்னே ஏழாவதாக ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

Page 20
800
ஐந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்' என்கிறது பழ (ய) மொழி; மணியமோ ஆறு பெண்களை வரிசையாகப் பெற்றவ னாயிற்றே கேட்க வேண்டுமா? அவன் நிலமையை,
கொஞ்சம் கொஞ்சமாக இப்படிக் கீழ்மட்டத்திற்கு வந்து விட்டான். எனவே
கூலி வேலைகளுக்குச் சென்று வந்தான்.
சில காலம் இப்படிச் செய்து வரும்
வேலை காலத்தின் பலதரப்பட்ட கெடு
பிடிக் காரணங்களால் அவன் ஆஸ்துமா
நோயாளியாகிப் பெரிதாக ஒடியாடி
உழைக்க முடியாத நிலைமைக்கு
வந்திருந்தான்.
எனவே எத்தொழிலிலும் நீண்ட
காலம் நிலைத்து நிற்க முடியவில்லை. |
பின்பு சிலகாலம் தனக்குத் தெரிந்த
கைத்தொழிலான கதிரை, கட்டில்களுக்கு
வயர் பின்னுதல் தொழிலைச் செய்து |
ஒரு நாளைக்கு இரண்டு வேளை
உணவாக இருந்த நிலை மாறி இப்போது
ஒருவேளை உணவுக்கும் அல்லாடும்
நிலமைக்கு குடும்பம் வந்திருந்தது.
மணியத்தின் மனைவி லெட்சுமியும் சும்மா இருந்ததில்லை. தெரிந்தவர்களிடம் சென்று ஏதாவது வீட்டு வேலைகளில் உதவி செய்வாள். கிடுகு பின்னி விற்பாள், இடியப்பம், பிட்டு அவித்து விற்பாள். என்ன செய்துதான் என்ன? வறுமை அவர்களை விட்டகன்ற பாடில்லை. எல்லாம் வயிற்றுப் பாட் டிற்கே போதாத நிலைமை. மணியத்தின் வைத்தியச் செலவுகளாகக் குளிசை மருந்
E. 665); অs
தென்றும் அடிக்கடி கையைக் கடிக்கும். மணியத்தின் மூத்த மகள் கலா குடும்ப வறுமையுணர்ந்து இடை நடுவில் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு நெசவுத் தொழிற்சாலைக்குச் சென்று வருகிறாள்.
இப்போதெல்லாம் மூச்சு வருத்தக் காரன் என்று யாரும் மணியத்தை எந்த வேலைக்கும் கூப்பிடுவதில்லை. எனவே தம்பியும் தங்கையும் நல்ல வசதியாகத் தானே வாழ்கிறார்கள். ஒரு ஐயாயிரம் ரூபாய் பணம் கேட்டுப் பார்ப்போம். ஏதாவது வியாபாரமாவது செய்து பிளைத்துக் கொள்வோம் என எண்ணி அவன் உடன்பிறப்பென்று சென்று உதவி கேட்ட போது; அவனுக்கு உதவி செய்யும் மனம் அவர்களுக்கு இருக்க வில்லை. காரணம் வசதி வாய்ப்புகள் மணியத்தின் வறுமையின் தன்மையைப் புரிந்து கொள்ள மறுத்தது. போக்குச் சொல்லித் தட்டிக் கழித்து விட்டார்கள்.
சாக்குப்
உடன் பிறந்தவர்களே உதவி செய்ய மறுத்தபோது ஊர் மக்களை எப்படிக் குறை சொல்வது. தன் விதியைக் குறை கூறி நொந்து கொண்டான்.
கையில் ஒரு ரூபாய் காசு கூட இல்லை என்ன செய்வதென்று சிந்தித் தான். மார்கழி மாதம் அடிக்கடி மழை வேறு பெய்து கொண்டிருந்தது.
"சங்கரப்பிள்ளையண்ணன்ட தேத் தண்ணீர்க் கடைப் பக்கமாவது போய்ப் பாப்பம். ஆராவது வேலைக்கு ஆள்
தேடுவாங்க. ம். கடவுளே இண்டைக்

காவது ஆராவது என்னையும் வேலைக்கு கூப்பிட்டிர வேணும் என்ன. வேலை யெண்டாலும் பரவாயில்லை" என ஏழைகள் அடிக்கடி வரவழைக்கும் பெரு மூச்சொன்றையும் வரவழைத்துக் கடவுளையும் வேண்டிக்கொண்டு பந்தலில் கயிற்றுக் கொடியில் கிடந்த பழைய, நாலா பக்கமும் சுருங்கிப் போயி ருந்த சேட்டை எடுத்துப் போட்டுக்
கொண்டு உடுத்திருந்த அந்த அழுக்கேறிய
சாரனையே உதறிக் கட்டிக் கொண்டு இன்றைக்கோ? நாளைக்கோ? அறுந்து போய் விடுவேன் என்ற நிலையி லிருக்கும் செருப்பையும் காலில் மாட்டிக் கொண்டு மிகவும் சிரமப்பட்டே நடந்தான், கீழ்முச்சு மேல்மூச்சு வாங்க!
0 0 0
அடுத்தநாள், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து அப்பம் சுடத் தொடங்கியிருந்தாள் லெட்சுமி. அவளது மூத்த மகள் கலாவும் தாய் எழும்பும் போது தானும் எழும்பித் தேங்காய் துருவி, பாத்திரங்கள் கழுவிச் சிறுசிறு உதவிகள் செய்து கொடுப்பது வழக்கம்.
இன்றும் வழக்கம் போல் எழுந்து அப்பம் சுடுவதற்கு சிறு சிறு உதவி களைச் செய்து கொடுத்த கையோடு தேனீர் தயாரிப்பதற்கு அடுப்பில் தண்ணிர் வைத்து விட்டு அந்தத் தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் வாசலைக் கூட்டிக் குப்பைகளை அப்புறப்படுத்தி விட்டு வந்து எல்லோருக்குமாக தேனீர் தயாரித்து “அம்மா இத்தாங்கோ தேத் தண்ணி குடியுங்கோ." என்று ஒரு
80)
டம்ளரில் தாய்க்கு முதலில் ஊற்றிக் கொடுத்தாள். தேனீர் டம்ளரை வாங்கிக் கொண்ட லெட்சுமி வெளியே எட்டிப் பார்த்து.
'நிலம் தெளிஞ்சி விடிஞ்சி வருகிது. தங்கச்சிமாரையும் தம்பியையும் எழுப்பி அதுகளுக்கும் தேத்தண்ணிய ஊத்திக் குடுத்து நீயும் குடி பிள்ள..!"
கலா தங்கைகளையும், தம்பியையும் தட்டியெழுப்பினாள். நித்திரை விட் டெழும் போதே "அம்மா இண்டைக் குத்தான் சோதினக் காசு கட்டுற கடைசி நாள். காசு கொண்டு போகாட்டி ரீச்சர் அடிப்பாவு’ என்று புலம்பிக் கொண்டு எழும்பியது ஒரு பிள்ளை.
"சரி சரி தாறன். விடியக்குள்ள சத்தம் போடாதே" அடுப்புப் புகையைச் சுவாசித்துக் கொண்டு சொன்னாள் லெட்சுமி.
"அம்மா, இஞ்ச பாருங்கோ, என்ர காற்சட்டையை, இடுப்பால தையல் குலைஞ்சி போயிருக்கிறது. இத எப்பிடிப் போட்டுக்கொண்டு நான் பள்ளிக்குப் போற." என்று காற்சட்டையைத் தூக்கி வாசலில் வீசிவிட்டுச் சத்தமாகக் கத்திக் கொண்டு கூத்தாடினான் ஆண்டு இரண்டில் படிக்கும் லெட்சுமியின் கடைக்குட்டி மகன்.
"பிள்ள கலா, அந்தக் காற்சட்டையக் கொஞ்சம் தம்பிக்கு தைச்சுக் குடு மகள்.”

Page 21
808
“தைச்சித்தர வேணுமெண்டால் எறிஞ்ச மாதிரிப் போய் எடுத்துக் கொண்டு வா. உன்ர காற்சட்டையை. பெரிய ஆள் இவர்..? என்று பழிப்புக் காட்டிய கலா ஊசி நூலைத் தேடி யெடுக்க.
"இந்தா பிடி நான் குளிச்சிற்று வாறதுக்கிடையில தைச்சி ரெடியாய் இருக்க வேணும். இல்லாட்டி.”
“இல்லாட்டி என்னடா செய்வாய்." என்று விளையாட்டாக அடிக்கப்போக அவன் கலாவுக்கு பழிப்புக் காட்டி ஒடிப்போனான்.
“என்ட வெள்ளச்சட்டை சரியான
ஊத்தை. கழுவவுமில்லை. நான் இண்டைக்குப் பள்ளிக்குப் போக மாட்டேன்..!" என்று சட்டையைத்
தூக்கிக் கொண்டு சிணுங்கியபடி நின்றது
ஆண்டு ஐந்தில் படிக்கும் ஒரு பிள்ளை.
“நாங்க பள்ளிக்கு ஒரே அப்பம்தான் கொண்டு போறது. மற்ற பிள்யை
யெல்லாம் என்னென்ன சாப்பாடுக
ளெல்லாம் கொண்டுவந்து சாப்பிடுதுகள். பாலப்பம் சாப்பிட்டால் நித்திரை தூங்கிறதாம். சோம்பேறித்தனமாம் எண்டு
என்னோட படிக்கிற புள்ளையஸ் சொல்லுங்கள். எனக்கு இண்டைக்கு
அப்பம் வேணாம். விஸ்கட் சாப்பிட்டு
எவ்விளவு நாளம்மா. ஆசையாய் இருக்கு
தம்மா..!"
"ஒமக்கா இந்த அம்மா ஒவ்வொரு நாளும் அப்பத்தத்தைத்தான் தாறவ. படிக்கக்குள்ள எனக்கு ஒரே நித்திரை தான் வரும். அப்ப ரீச்சர் ஏசுறவ."
S. DeGSG) S2
வீட்டு நிலலமை புரியாது பேசும் பிள்ளைகளின் பேச்சைக் கேட்டு ஆத்திரம் கொள்ளவில்லை. பரிதாபப் பட்டுக் கொண்டு,
'கடவுள் உங்களையும் ஒரு காலத்தில் நல்லாய் வாழ வைப்பான். காலம் பூராவும் கஷ்டப்பட விடமாட்டான்..!" என்று, மனதிற்குள் சொல்லிக் கொண்டு, எண்ணியடுக்கிய அப்பப் பெட்டியை தானே எடுத்துக் கொண்டு போய்க் கடைக்கு கொடுத்துவிட்டு வந்து ஆளுக் கொரு பிரச்சினையோடிருந்த பிள்ளை களையும் சமாளித்து அவர்களைப் பாடசாலைக்கு அனுப்பிவிட்டுத் தானும் இரண்டு அப்பம் சாப்பிட்டு மீண்டுமொரு முறை தேனீரும் குடித்துக் கொண்டு அப்பம் சுட்டபோது பரிமாறப்பட்ட பாத்திரங்களை எடுத்து கழுவி அடுக்கி ஒழுங்குபடுத்திவிட்டுக் குடிசையின் முன்னுள்ள பந்தலின் கீழ் களைப்போடு வந்து "ஆண்டவா..!" என்று சொல்லிக் கொண்டு சம்மானம் போட்டுக் கொண்டு இருந்தாள், லெட்சுமி.
i மூத்த மகள் கலாவும், இளைய வளும் வெளிக்கிட்டுக் கொண்டு வந்து தாயிடம், "அம்மா பொயிற்று வாறம்" என்று விடைபெற்றுக் கொண்டு மூத்தவள் நெசவுக்கும், இளையவள் தையல் வகுப்புக்கும் சென்றனர்.
தனிமையாக்கப்பட்ட லெட்சுமிக்குக் கணவன் மணியத்தின் நினைவுகள் நெஞ்சிலடித்தன.
'எந்த நேரமும் இருமிக் கொண்டி ருக்கும் மனிசர். அங்க வயலுக்குள்ள

போய்க்கொண்டு என்ன செய்யிறாரோ? எல்லாம் அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம். மூச்சு வருத்தக்காரன். ஒண்டுக்குமேலாது. மாரிகாலமும் வயல் பக்கமெல்லாம் வெள்ளக்காடாகத்தான் இருக்கும். குளிர் காத்தும் ஒத்துக் கொள்ளாது. என்னபாடோ. ம்...'
நினைத்துக் கவலை கொண்டாள்.
'வயல் பக்கம் யானைகள் நிறைய நடமாடி வயலைச் சேதப்படுத்துவதால் வயல் அறுவடை முடியும் வரை சில நாட்களுக்கு காவலுக்கு வரும்படியும். வயல்ல பெரிய வேலையேதும் இல்ல. வெடிக்கட்டு வாங்கித் தாறன். பறCைல இருந்து கொண்டு வெடியக் கொழுத்திப் போட்டால் போதும் யானைகள் நிண்ட இடத்துக்கும் சொல்லாம ஓடிரும்' எனக் கூறி நேற்று மாலை ஆறு மணி போல் வயல் சொந்தக்காரரே வந்து மணியத்தை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போயிருந்தார்.
“எத்தின நாளையக் காவலோ தெரியாது. ம். எல்லாம் மனிசனுக் குத்தானே. விதிய நொந்தென்ன மதிய நொந்தென்ன ஆகப்போகுது” விரக்தியாக இருந்தது. லெட்சுமியின் உள்ளத்தி லிருந்து எழும் நினைவுகள், விரக்தியும் வேதனையும் ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்கப்பட்ட உணர்வுகள் தானே அது வறுமைக் கோட்டுக்குள்ளே கிடந்து அல்லல்படும் அவளிடம் இருந்து வெளிப்பட்டதில் என்ன ஆச்சரியமிருக் கிறது.
"பள்ளிக்கூடம் விட்டுப் பிள்கைள் பசியோட வருங்கள். என்னவாச்சும் இருக்கிறதப் போட்டுக் காச்சி வைப்பம்"
89)
என எண்ணியபடி எழுந்த லெட்சுமியை நோக்கி அப்போது அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் வந்து,
“மணியண்ணை இரவு வயலுக் குள்ள வச்சிப் பாம்பு கடிச்சி செ.த்.துப் போயி..த்தா.ர்." வந்தவர் கூறிமுடிக்க வில்லை. லெட்சுமி தலையிலும் மார் பிலும் அடித்துக் கொண்டு ஓவென ஒப்பாரி வைத்தாள்.
அவளின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் ஓடி வந்தார்கள். நடந்ததையறிந்து அனுதாபம் தெரிவித்தார்கள். ஊரெல்லாம் செய்தி பரவியது.
பகல் பன்னிரெண்டு மணிபோல் வயலுக்குக் காவலுக்குக் கூட்டிச் சென்ற வரே அவருடைய உழவு இயந்திரத்தில் மணியத்தின் உயிரற்ற உடலை விட்டுக்கு எடுத்து வந்ததோடல்லாமல் அவர்களின் நிலைமையறிந்து பரிதாபப்பட்டு சாச் செலவுக்கென்று இரண்டாயிரம் ரூபாய் பணமும் கொடுத்துவிட்டுச் சென்றார்.
அடுத்த ஊரில் வசிக்கும் மணியத் தின் அக்கா, தம்பி, தங்கை எல்லோரும் விடயம் அறிந்து குடும்பத்தோடு ஒரு வேனில் வந்து இறங்கினார்கள், பணக் காறத் தோரணையோடு.
அக்கம் பக்கத்தவர்கள். அறிந்தவர், தெரிந்தவர், உறவினர்கள், ஊரவர்க ளென்று வந்து போனார்கள், வந்து
போனவர்களில்.
"பவம் வருத்தக்கயறன் கடும் கஷ்டம்தான். புள்ள குட்டிகளும் கனக்க, அதுவும் ஒண்டு ரெண்டில்ல ஏழாம், அதில ஆறும் பொம்புளப்புள்ளை

Page 22
430) is
களாம். பட்டினி கிடக்கிற. எலாமத்தான் மூச்சு வருத்தத்தோட இந்த மழைக்குள்ள வயல் காவலுக்குப் போயிருக்கிது அந்த ஆள். பாவம்!" என்றும், "நேற்றுச் சாப்பாடு ஒண்டு மில்லாம வெள்ளாமை ப் போடியாருக்கிட்ட நூறு ரூபாய்க் காசு வாங்கி அதில அரை றாத்தல் பானும் ரெண்டு வாழைப்பழமும் விடி நெருப்புப் பெட்டியும் வாங்கிக் கொண்டு பொஞ் சாதிக்கிட்ட மிச்சக் காசக் குடுத்துப் போட்டு அந்தப் பாணையும் பழத்தையும் தான் எடுத்திற்றுப் போன வராம் அவர்ா பொஞ்சாதி சொல்லிச் சொல்லிக்
கத்துறாவு.!" என்றும், لما قط في نه
"அவர்ர தம்பி, தங்கச்சியெல்லாம் வாகனம், கடை, இதெண்டு நல்ல வசதியாய்த்தான் இருக் கிறாங்களாம். ஆனா அவங்க ஒருத்தரும் இவங்களக் கவனிக்கிறதில்லையா மெண்டு அங்க ஆக்கள் கதைச்சுக் கொண்டதில இருந்து விளங்கிது" என்றும்,
'வயல்பக்கம் கடும் தண்ணியாம். குளிர் காலத்தில குளிர் தாங்காமல் கொடிக்கிப்போய்ச் செத்தாரோ தெரி யல்ல. ! என்றும், "இவர் இருந்த பக்கம் ஆருமில்லை யாம். தனியாத்தான் இருந்திருக்கிறார். கூட்டம் கூட்டமாய் யானை வந்திருக்கும். அதைக் கண்டு பயத்தில ஏங்கிச் செத்தாரோ இல்ல, பாம்புதான் கடிச்சிச் செத்தாரோ ஆருகண்டா. இல்ல பேய்கீய் அடிச் சுதோ?" என்றும் இப்படி ஆளுக்கொரு விதமாக தங்கள் கற்பனைப்படி மணியத் தின் சாவுக்கு காரணங்கள் சொல்லிக் கெ ண்டார்கள்.
எத்தின நானைக்கெண்டு
விஸ்னஸ் அது
பத்தேக்கர் வயல்பாப்பு. கடுவே பறளில் லைட்டும், ஒரு அருவாள் கத்தியுடனும் தான் காவலுக்காக மணியம் குந்தியிருந் தான். காற்றும், மழையும், கடும் குளிர் கும்மிருட்டு, வல்லூறுகளின் గా சுற்றிவர வெள்ளம் மனித ஆரவாரமே இல்லை. இச்சூழ்நிலையில் தான் மணியம்
பிணமானான்.
வெடிக்கட்டுகளும், டோர்சு
உயிரோடிருந்த போது பசியால்
துடித்தான். நோயால் அவதியுற்றான். ஆனால் உயிரற்ற பிணமான போது.
உணர்ச்சியற்ற உடலாகித் திறக்க முடி
யாத, உண்ணமுடியாத வாய்க்குச் சடங்கு என்று சொல்லி வாய்க்கரிசி போட்டார் கள்! பழைய கந்தலாடையுடன் அலைத் தான், யாரும் கவனிக்கவில்லை. பின மான போது புதிய ஆடை வாங்கிப் போட்டு பூமாலையும் அணிவித்துப்
மணியத்தின் இறுதிச் சடங்கு முடிந் ததும் அவனின் தம்பியும், தங்கையும்
பூமிக்குள் புதைத்தார்கள்.
ஆளுக்கு ஐயாயிரமாகப் பத்தாயிரம் ரூபா பணத்தை லெட்சுமியின் கைக்குள்
திணித்துவிட்டுச் சென்றார்கள்.
மணியம் உயிரோடு இருந்த போது
அவனே சென்று கேட்டும் கிடைக்காத
அந்தப் பணம் அவன் பிணமான போது
கொடுக்கப்பட்டது. : ها نة
எப்படியோ மணியம் உயிரோடிருந்து பெறமுடியாமல் போன பணத்தைத் தன் இறப்பின் மூலம் குடும்பத்திற்குப் பெற்றுக் கொடுத்து விட்டுச் சென்றி
ருந்தான்.
 
 

480
தீர்த்தத் திருவிழாவன்று வியாபாரம்
களை கட்டிக் கொண்டது. வெறுவளவு முழுக்க நிரை குலையா நிரையில் சயிக்கிள் திரண்டு அலையலையாக அடுக்கப்பட்டேயிருந்தன. போதுமான பாதுகாப்பு ரிக்கற்று அடித்து வைக்காத
«9 காரணத்தால் ரூபன் லக்கங்களை கைலைைழ பால்மாப் :ಸ್ಥ್ದ್ದಿ: உட்புறத் துண்டுகளில் எழுதி அலுத்தே
GBeecisio போனான். ரூபனின் மாமன் வீட்டு வளவு அது. கோயில் பிரதான விதியிலே அமைந்ததன் தாற்பரியம் இப்போது தான்.
- சி.சுதந்திரராஜா
கார்களிலே கோயில் தரிசனத்திற்கு
வருகிறவர் எவருமில்லை. மோட்டார்
சயிக்கிள்களிலே கணிசமான அளவு
வந்தாலும் வளவுக்கு வெளியில் விதியோரத்தில் வரிசைக் கிரமத்தில் வைக்கப்பட்டு
இரட்டிப்பு விலை மதிப்பீட்டில் ரிக்கற் சொருகப்பட்டு இருந்தது. எல்லாக்
கைப்பிடிகளும் ஒரே பக்கவாட்டில் சரிந்து போயிருந்தன. பல வர்ணத்தில் அழகழகாகப்
புதுமெருகில் கம்பீர இராணுவ அணிவகுப்புக் காட்டிக் கொண்டிருந்தன. ரூபனின்
சகபாடிகள் பத்துப் பேர் வரையில் லிற்றர் போட்டெலோப் போத்தலில் தாகசாந்தி
செய்து சுழன்றடித்தனர். வலுக்கட்டாயமாக சயிக்கிள் பாதுகாப்பு தருவதற்கு முந்தியடித்துக் கொண்டபடி கூக்குரலிட்டுக் கூப்பிட்டார்கள்.
மாமன் மகள் மீதில் ரூபனுக்கு மோகம் இருந்தது. ஆனால் அவளோ தினுசுதினுசான புடைவைகள் தேர்ந்து ஆள்பாதி ஆடைபாதி என்பதை மாத்திரமே மெய்ப்பிப்பவள் போலிருந்தாள். சிறியரகப் பூவில் ஒருமுறை தேர்ந்தெடுத்தால் கட்டம் போட்ட பொலியஸ்ரர் வகையில் இன்னொரு தடவை தேர்ந்தெடுப்பதில் அதி சூரத்தனம் காட்டினாள். ரூபனைச் சட்டை செய்யாமல் பலவகை வாலிபர்க ளோடும் வேறு வேறு கால நேரங்களில் சிரித்துக் கனைத்துக் கதைப்பதையே விரும்பிக் கொண்டாள். ரசித்தாள். இவையெல்லாம் ரூபனைச் சோகத்தில் வாட்டி வதக்கி வைத்தது. ராஜமரியாதை தருகின்ற மோட்டர் சைக்கிள் அணிவகுப்பை ஏற்றுப் பார்வையிடுபவன் இன்றைய தினத்தின் வசூலிலே பல்வகைப் பொருட்களை வாங்கிக் கொள்ளவே கனவு கண்டு கொண்டான். தங்கைக்காரி ஜெயாவுக்குப் பட்டுப்பாவாடை வாங்கிடவும் தோன்றியது. ----كسس

Page 23
Հ6ջ
ரூபனின் ஒரே தங்கைக்காரி மீதில் சிறிய வயதிலிருந்தே முழுப்பாசமும் ! அவள் மீதே கவிய அடித்து அழுகை | வரப் பண்ணியதே இல்லை. வாழ்க்கை | யில் ஒரேயொரு நாள் மட்டுமே அவனால் | அவன்ள அழ வைத்திடக் கூடுமான தாயிருந்தது. அது அவளின் எட்டு வடச் சங்கிலியின் அடைவிலே புது ஏ-வன் சயிக்கிள் வாங்கிய நாளிலே தான் நடந்தது. ரூபனால் பள்ளிக் கூடத்திற்கோ ரீயூற்றரிக்கோ போக வரத் தேவையாயு | மிருந்தது. வெட்கமும் வேதனையும் கலிவரின் பயணங்கள் கதையிலே முரண்படும் ஒரே ஆத்மா போல் சயிக்கிள் | சவாரி இல்லாதவன் இருப்பவனிடத்தி | லிருந்து வேறுபடும் அவஸ்தை.
சும்மா கழுத்தில் தொங்கிக் கொண் டிருப்பதால் ரூபன் தெருவில் இறங்கவே முடியாமலிருந்தது. கலிபர் 115 மோட்டார் சயிக்கிளில் அமர்ந்திருந்தால் ஆண்மகன் கம்பீரம் வெளிப்படும் என்றெல்லலாம் பெண் மகள் நினைக்கின்ற வரையில்
கம்பீரத்தின் அர்த்தமே வேறு தான். அதனது அகராதியும் வேறு தான். ரூபன் செயலில் இறங்கிக் கொண்டான்.
அவன் அவள் அழுததை அன்று போல் என்றுமே கண்டறியவில்லை. காரணம் அவள் கழுத்தை மாத்திரமே அலங்கரித்த ஆபரணம் மறைந்து அவன் பாதங்கள் உந்துகிற ஈருருளிப் பொருளாகினதே. ரூபன் மறுவாரமே அடி மாட்டு விலைக்கு ஏ- வன் சையிக்கிளை விற்றுத் தள்ளிக் கொண்டான். அமைதி அவனுள் அப்போது உதயமாகியது. :
ஜெயா மீது அவன் கொண்ட பாசம் அப்போது துளிர் விட்டது. எங்கெல்லாம் சயிக்கிள் பாதுகாப்பு நிலையம் தோன்றுகிறதோ அங்கெல்லாம் அவன் பிரசன்னமாகி விடுவான். அது அவனுக்குச் சோறு போடுகிறது. வேளா வேளைக்குச் சோம்பல் நீக்கி உற்சாகப்
படுத்துகிறது.
9ggõTLITib Lrsib
s
oléagrofils 2SIMILITas gpf
அநுபவப் பயணம் வெளிவந்து விட்ட
مپ R
விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. . . . . .
 

438)
凹NMm历凹山闵亦心
:
11.
12.
3.
4.
5.
6.
17.
18.
19.
20,
21.
22.
23.
30.
31.
32.
Q
9േക് ပÁ;?)ဇံဃ ఏycడా
VSN4M
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் டொமினிக் ஜீவாவின் வாழ்கை வரலாறு (2ஆம் பதிப்பு) எழுதப்பட்ட அத்தியாயங்கள் - (சிறுகதைத் தொகுதி) சாந்தன் அநுபவ முத்திரைகள் - டொமினிக் ஜீவா கார்ட்டூன் ஓவிய உலகில் நான் - (2ஆம் பதிப்பு) சிரித்திரன் சுந்தர் மண்ணின் மலர்கள் - (யாழ் பல்கலைக்கழக 13 மாணவ மாணவியரது சிறுகதைகள்)
கிழக்கிலங்கைக் கிராமியம் - ரமீஸ் அப்துல்லாவும் முப்பொரும் தலைநகரங்களில் 30 நாட்கள் (பிரயாணக் கட்டுரை) முனியப்பதாசன் கதைகள் - முனியப்பதாசன் மனசின் பிடிக்குள் - (ஹைக்கூ) பாலரஞ்சனி
. அட்டைப் படங்கள் (மல்லிகை அட்டையை
அலங்கரித்தவர்களின் தொகுப்பு)
சேலை - முல்லையூரான் மல்லிகைச் சிறுகதைகள் - (30 சிறுகதைகள்) செங்கை ஆழியான் மல்லிகைச் சிறுகதைகள் - (41 சிறுகதைகள்) செங்கை ஆழியான் நிலக்கிளி - பாலமனோகரன் நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள் - டொமினிக் ஜீவா நாம் பயணித்த புகைவண்டி - (சிறுகதைத் தொகுதி) - ஆப்டீன் தரை மீன்கள் - ச.முருகானந்தன் கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் - செங்கை ஆழியான்
அப்புறமென்ன - குறிஞ்சி இளந்தென்றல் அப்பா - தில்லை நடராஜா ஒரு டாக்டரின் டயரியில் இருந்து - எம்.கே.முருகானந்தன் சிங்களச் சிறுகதைகள் 25 - தொகுத்தவர் செங்கை ஆழியான் இந்தத் தேசத்தில் நான் - கவிதைத் தொகுதி (பேராதனைப் பல்கலைக்கழக மாணவ, மாணவியரின் கவிதைகள்)
గీసిan ۱) تکلمlی
விலை
விலை
6fીઠoso
விலை
விலை
விலை
விலை
விலை
விலை
விலை
6ნმéთ6lა
விலை
விலை
விலை
விலை
விலை
sílsonso
6666)
விலை
விலை விலை
விலை
விலை
Undrawn Portrait for Unwritten Poetry - GLITL5sons gainsas,
வாழ்க்கை வரலாறு ஆங்கிலப் பதிப்பு டொமினிக் ஜீவா சிறுகதைகள் அச்சுத்தாளின் ஊடாக ஓர் அநுபவப் பயணம்
விலை
விலை
shaos)
150/-
250A.
14.0/-
1807
175/-
110/-
100/-
10/-
150/-
60/-
175/-
150/-. 275/-
350/-
140A
50/-
150/-
150/-
150/-,
20/-
30/-
140/-
115/-
200/-
350/-
200/-
டொமினிக் ஜீவாவின் வாழ்கை வரலாறு - 2ஆம் பாகம்
তত্ত্ব

Page 24
LGUG) is
9ILöh č50 bg5ů
- கந்தையா குமாரசாமி
'பூமடந்தை வாழப் புவிமடந்தை வீற்றிருப்பக நாமடந்தை நூலிழந்த நாள்” “.ே
கவிச் சக்கரவர்த்தி கம்பர் காலமானபோது புலவர் ஒட்டக்கூத்தர் பாடிய அர்த்தம் செறிந்த இரங்கற்பா இது. கம்பரும் ஒட்டக்கூத்தரும் சமகாலத்தவர்கள் என்பது இந்தப் பாடலிலிருந்து தெளிவாகின்றது. எனினும் அக்காலத்தில் இருவரும் எதிரும் புதிருமானவர்களாக விளங்கினார்கள் என்பது சிலரின் கூற்று.
ஒட்டக்கூத்தர் என்று அழைக்கப்படும் புலவரின் பெயர் ஆரம்பத்தில்
அம்பலக்கூத்தர் என்று வழங்கி வந்து கூத்தர் என்றே பெருவழக்கில் நின்றுவிட்டது. இவர் சோழநாட்டில் மலரி என்னும் ஊரில் தோன்றியவர் என்பதை வெண்பாவில் வரும் 'மலரி வரும் கூத்தன் தன் வாக்கு’ என்பதனால் அறியக்கூடியதாயிருக்கின்றது. சிலர் சோழநாட்டு திருவாய்மூர் அருகில் உள்ள மணக்குடி என்பதே இவரது பிறப்பிடம் எனச் சொல்கின்றனர். இவரது தந்தையார் பெயர் சிவசங்கரபூபதி எனவும் தாயார் பெயர் வண்டமர்பூங்குழலி என்றும் கூறுவர். இவர் தமிழ்ப் பற்றும் புலமையும் சைவசீலமும் உடைய செங்குந்தர் உடைய மரபைச் சேர்ந்தவராவர்.
செந்தமிழ்ப் புலமை செறிவாகப் பெற்ற புலவர் கூத்தர் பெருமானின் பெருமையைச் சோழ மன்னர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். அதனால் இவரைத் தம் அவைக்களப் புலவராகவும் ஆசானாகவும் அவர்கள் கொண்டிருந்தனர். தமிழ்க் கருவூலமாக விளங்கிய இம்மாபெரும் புலவருக்குப் பரிசுகளும் வரிசைகளும் வழங்கினர். கூத்தனூர் என்னும் ஊரையே இறையிலியாகக் கொடுத்தனர். இவ்வூர் பூந்தோட்டப் புகையிரத நிலையத்துக்கு அருகில் உள்ளது. இப்புலவர் கி.பி. 1118
முதல் கி.பி. 1163 வரை சோழ மன்னர்கள் அரசவைக்கு அணி சேர்த்தவர்.

அவர் பாடிய தக்கயாகப்பரணி பற்றிச் சுவையான ஒரு வரலாறு உண்டு. கூத்தர் கலைவாணியின் கருணைக்கு இலக்கானவர். கூத்தனூரில் கலை மகளுக்கு அவர் கட்டிய கோவில் இன்றும் நன்னிலையில் உள்ளது. அருட் கவியான கூத்தர் தக்கயாகப்பரணி, ஈட்டி எழுபது, காங்கேயன் நாலாயிரக்கோவை, அரும்பைத் தொள்ளாயிரம், மூவர் உலா, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் முதலிய நூல்களை இயற்றி உள்ளார். இவர் ஆவணித் திங்களில் இறைவனடி சேர்ந்ததாகச் சொல்லப்படுகின்றது.
கலிங்கத்துப்பரணியே தமிழில் எழுந்த முதல் பரணியாகும். போர்ச் செய்திகளைக் கவிதையாக்கிக் களம் படைத்து விட்டார் ஜயம்கொண்டார். இது முதல் குலோத்துங்க சோழ மன்ன னானவன் தனது படைத் தலைவனான கருணாகரனைக் கொண்டு கலிங்க நாட்டு அரசனான அனந்த பத்மனாதனை வென்று அவனின் நாடான கலிங்க நாட்டை வெற்றி கொண்ட செய்தியை
விரிவாக விளக்குகின்றது.
இதன் பின்னர் தோன்றிய பரணியே
தக்கயாகப்பரணி. இதனைக் கவிச்சக்கர வர்த்தியான ஒட்டக்கூத்தர் ஆக்கினார். இந்நூலில் அவரது காலம். சமயப்பற்று, புலமைச் சிறப்பு யாவையும் தெளிவாக அறியலாம். ஒட்டக்கூத்தரின் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகளில் மனம் பொறாமை காரணமாகச் சிலரால் இழுக்கான தகவல்கள் வேண்டுமென்றே கற்பிக்கப்பட்டு அனைத்தும் இடைச் செருகல்களாகவே தோற்றம் கொடுக்
438
கின்றன. ஒட்டக்கூத்தரின் பாடல்களை ஒருமுறைக்கு இருமுறை படித்தால்தான் அவற்றின் பொருள் விளங்கும்.
"மன்னன் உயிர்த்தே மலர்தலீை உலகம்" என்னும் புறநானூற்று அடியீை யும், "குமரி என்னும் நதி கடலால் கொள்ளப்பட்டது போன்ற இலக்கியத் தெளிவு, வரலாற்று மயக்கம் போன்றி பழைய மரபை ஒட்டிய புராணசி கதைகளை அறிவியல் கண்ணோட்டத் தோடு நாம் பார்க்க வேண்டும். தக்கி யாகத்தில் பகன் என்றழைக்கப்படும் சூரியன் வீரபத்திரரால் தண்டிக்கப் பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கி ஒன்று. எனவேதான் இவர் தனது தக்கயாகப் பரணியைப் பாடும்பொழுது வீரபத்திரருக்குத் தோத்திரம் பாடினார்." மானிட வீரத்தை அவர் போற்றினார்? என்பது இவரின் செய்கையிலிருந்து புரிகின்றது. இது பக்தர்களிடையேயும்,ே சில புலவர்களிடையேயும் பலத்தீ சர்ச்சையைக் கிளப்பிய போதிலும் அவர் அசைந்து கொடுக்கவில்லை. அதனால் ஆத்திரம் கொண்ட புலவர்கள் சிலர் உயிருடன் அவர் இருந்த காலத்தில் சுட்டுவிரல் நீட்ட இயலாதவர்கள், அவர் இறந்த பின்னர் வழமைப்பிரகாரம் அவ தூறான கட்டுக்கதைகளை உண்டாக்கினர் என்பதுதான் உண்மைச் சரித்திரம். 恐 'ஈட்டி எழுபது" என்ற நூலைக் அருளிச் செய்தபோது புலவர் பெருமான் பாடிய அருட்கவிகளால் வெட்டப்பட்ட? தலைகள் யாவும் உடம்புகளோடு அற்புதல்
மாக ஒட்டி உயிர்பெற்று எழுந்தமையால்?
கூத்தப்பெருமானின் ஒட்டம் என்ற அடைெ

Page 25
Հ03 மொழி (ஒட்டம் என்றால் ஒட்டியிணைந் திருப்பது அல்லது ஒட்டுதல்) தனிச் சிறப்பைத் தருவதாக கற்பிக்கப்படு கின்றது. உண்மை அதுவல்ல. பந்தயம் கூறிப் பல புலவர்களை வென்று கவி பாடியதால் - வாகை சூடியதால் அத் தகைய சொற்பதம் பாவிக்கப்பட்டுள்ளது என்பதே என் அபிப்பிராயமாகும். பத்துத் தலை இராவணன் என்று சொல்லும் போது அவன் பத்து மாகாணத் தலைவர் களுக்குத் தலைவனானவன் என்று அர்த்தம் கொள்ளாமல் அபூர்வப் பிறவி யாகச் சித்திரித்தமை போன்ற காட்சியை இது ஒத்ததாகும். தலைகள் மீண்டும் உடல்களோடு ஒட்டும் என்பதை யாரும் நம்புவதற்கில்லை. அதீத மான கற்பனை இது. உண்மையில்
வெட்டப்பட்ட
ஒட்டக்கூத்தரின் பாட்டுக்களின் திறமை யினால் பல பெயர்பெற்ற புலவர்களிடம் ஒட்டி உறவாடக் காணப்படும் வித்துவத் தலைக்கணம் ஒட்டு மொத்தமாக அகற்றப் பட்டதையே குறிக்கின்றது என்று பொருள் கொள்ளலாம். கீழ்க்காணும் பாடலை நன்றாக அலசி ஆராய்ந்து பார்த்தால் அதன் உண்மை தெரியும் :
"நிலை தந்தார் உலகினுக்கு வியாவர்க்கும் மானமதை நினைக்கத் தந்தார் கலை தந்தார் வணிகர்க்கு சீவனம்செய் திடவென்றே கையில் தந்தார் விலை தந்தார் தமிழினுக்குச் செங்குந்தர் என்கவிக்கே விலையாகத்தம் தலை தந்தார் எனக்கும் ஒட்டக் கூத்தனெனப் பெயரினையும் தான்தந்தாரே'
சங்க காலம் தொட்டுப் புலவர்கள் அரசர்களோடு நெருங்கிப் பழகி வாழ்ந்து வந்துள்ளனர் என்பதனைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்றாக அறியும். அரசன் நெடுஞ்செழியனிடம் மாங்குடி மருத னாரும், பாரியிடம் கபிலரும், அதிய மானிடம் ஒளவைப் பிராட்டியும் தனிச் சிறப்பைப் பெற்றிருந்தனர்.
அதேபோலச் சோழர் காலத்தில் முதற் குலோத்துங்கனிடம் ஜெயங் கொண்டாரும் விக்கிரச்சோழன், இரண் டாவது குலோத்துங்கன், இரண்டாவது இராசராசன் ஆகிய மூவேந்தர்களிடமும் ஒட்டக்கூத்தரும், மூன்றாம் குலோத் துங்கனிடம் சேக்கிழாரும் வாழ்ந்து வந்தனர் என்பது வரலாறு.
இம்மூவருள்ளும் ஒட்டக்கூத்தர் மட்டுமே மூன்று தலைமுறை அரசர்
களிடம் அவைக்களப் புலவராய் வீற்றி
ருந்த சிறப்பினைப் பெற்றவர் என்பது வரலாறு கூறும் மறுக்க முடியாத உண்மைகள்.
சிவபக்தராகிய ஒட்டக்கூத்தர் வாழ்: வின் பெரும்பகுதி அரச சேவையிலும் அரசர்களைப் புகழ்ந்து பாடுவதிலுமே செலவழிந்தது. கல்விவளம் மிக்க ஒருவர் செல்வச் சூழலில் இருப்பின் அவர் மனதில் சில நெருடல்கள் தோன்றவே செய்யும். அரசுப்பணி காரணமாக மன்னர் பணிக்கு முக்கியத்தும் தந்து இறை வனைப் பற்றிச் சிந்திப்பதற்கு உரிய, பொழுதை ஒதுக்காமல் மூன்று தலை முறை அரசர்களின் காலத்துக்கு இருந்த தற்காக ஒட்டக்கூத்தர் கழிவிரக்கம் கொண்டிருத்தல் கூடும். மனம், மொழி,

மெய்யால் இறை பணி செய்ய எண்ணித் தக்கயாகப்பரணியைப் புனைந்ததுடன் தம்
பெருமை முழுவதற்கும் காரணமாக |
இருந்த கலைமகளுக்கு அரிசிலாற்றங் கரையில் ஒரு கோயிலையும் கட்டினார். இந்தியாவில் கலைமகளுக்கு எனத் தனியே கட்டப்பட்ட கோயில் இது ஒன்றுதான்.
வடமொழி, வேதமரபு நன்கு கற்றவரான கவிஞர்பிரான் ஒட்டக்கூத்தர் மிக நுணுக்கமான செய்திகளைத் தக்க பிற போல் மக்களுள்
யாகப்பரணியில் கூறுகின்றார். பரணிகளைப் ஒருவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு தக்கயாகப்பரணி எழவில்லை. மாறாக வீரபத்திரராகிய கடவுளைத் தலைவராகக் கொண்டு எழுந்துள்ளது. புராணக் கதையொட்டி எழுந்த பரணி யென்றாலும் அமைப்பு, ஆழ்ந்த கவி நயம், தேர்ந்த பொருள் நயம், நல்ல பாட் டோட்டம் முதலியன கொண்டு ஒட்டக் கூத்தரின் பெரும்புலமைக்குச் சான்று பகர்வதாய்த் திகழ்கின்றது.
"ஆயிரம் யானை அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி
என்பது பரணி இலக்கியத்துக்குரிய இலக்கணம். போரில் தோல்வியுற்றவர் பெயரிலேயே இலக்கியம் அமைவது என்பதும் இந்த இலக்கிய வகைக்குரிய தனிச்சிறப்பாகும். குறைவாக உள்ள நிலைமையே பரணி பாடுவதில் உள்ள கடினத்தை எடுத்துக் காட்டும். தக்கயாகப்பரணியை இரண்டாம் இராசராச சோழன் ஆக்குவித்தானாகை யால் அவனின் வரலாறையும் சிறிது Lumi Gurionit?
எண்ணிக்கையில் 1
Հ3շ)
orན་ དང་ལྟ་༥ ད་ན་་་་་་་་་་་ དུ་ཡུ་ ༣༣( , ༈་་་༣་༡༡:
உலக நாயகனாகிய நடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ள தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன்வேய்ந்து பொன்னம்பலமாக்கிப் புகழ்கொண்ட அநபாயன் என்று சிறப்பிக்கப்படுகின்ற இரண்டாம் குலோத்துங்க சோழனுடைய திருமகனே இரண்டாம் இராசராசன் ஆவான். இம்மன்னனுக்கு சோழேந்திர சிம்மன், பரகேசரிவர்மன், எதிரிலிச் சோழன் என்ற பட்டங்கள் உண்டு. பூ மருவிய புவிமாதும்', 'பூமருவிய பொழி லேழும்", "புயல் வாய்த்து வளம் பெருக கடல் சூழ்ந்த பாரேழும்" என்று தொடங்குகின்ற மெய்க்கீர்த்திகள் இவ் வரசனுக்குரியவை. இம்மன்னனுக்குப் புவனமுழுதுடையாள், தரணிமுழு துடையாள், உலகுடைமுக்கோர் கிழானடி யாள், அவனி முழுதுடையாள், தென் னவன்கழானடியாள் என்று 5 மனைவியர் இருந்தனர். இவர்களுள் புவனமுழு துடையாள் என்பாள் பட்டத்தரசி என்று
அறியப்படுகின்றது.
ty aYas இம்மன்னன் காலத்தில் பழையாறை, தஞ்சை, உறையூர், சோழபுரம், காவிரிப்பூம்பட்டினம் ஆகிய
கங்கைகொண்ட
நகரங்கள் தலைநகரங்களாகின.
இவன் காலத்தில் வைணவர், இலகுளிசபாசுமதத்தோர்,
சைவர்,
வாமமதத்தோர் போன்றோர் கவலையற்று
ஆங்காங்கே வாழ்ந்திருந்தனர் என்பதை இவனது கல்வெட்டுக்கள் அறிவிக் கின்றன. இவன் அவனது தந்தையைப் போலவே போர்கள் எதுவுமின்றி நாட்டை அமைதியாக ஆண்டான் என்பதை உணரக்கூடியதாயிருக்கின்றது. இம்
D6656);

Page 26
438
மன்னன் தமிழின்பால் தணியாத காதல் கொண்டவனாதலால் புலவர்களை ஆதரித்தான். ஒட்டக்கூத்தர் முதுமை யடைந்திருந்ததால் இவன் காலத்தில் மிகவும் மரியாதையுடன் உபசரித்து உதவி செய்து பாதுகாத்தும் வந்தான் என்றும் தெரிகின்றது. இவ்வரசன் தக்கயாகப் பரணியின் கடவுள் வாழ்த்திலும் கூத்தரால் பலவாறு பாராட்டப்படுகின்றான். இம் மன்னனுக்கு இராசகம்பீரன், இராச புரந்தான், கண்டன், குலதீபன், சனநாதன் சொக்கப்பெருமாள், தெய்வப்பெருமாள் என்று வேறு பெயர்கள் வழங்கி வந்தன. இம்மன்னர்பிரான் கி.பி. 1162 வரை வாழ்ந்தான் என்றும், இவனின் இரண்டு குமாரர்களுள் ஒருவனே மூன்றாம் குலோத்துங்கன் என்றும் சிலர் கூறுகின்றனர்.
பலவகைச் சிறப்புக்களையும் பெற்றுள்ளதாக மதிக்கப்படுகின்ற தமிழ் உலகம் உண்மை வரலாற்றை எழுதி வைக்கும் பழக்கத்தை அறவே இல்லாத ஒரு குறையை உடையதாகும். அதனால் யார் வேண்டுமானாலும் எதையும் உண்மை வரலாறாகக் காட்டிச் செல்லும் மேற்கொள்ளுதல் மிகுதியாகிவிட்டது. இவ்வகையில் இல்லாத பெருமையை இருப்பதாகக் காட்டிக் கொள்வதால் கெடுதல் அதிகமில்லை. ஆயினும் பெருமைபெற்று விளங்கிய சிலரை அதற்கு நேர்மாறாகத் தாழ்வு படுத்தும் வகையில் கதைகளைக் கட்டிவிடுவது அவர்களில் பற்றுடையவர்களுக்கு மட்டு மல்லாமல் உண்மை காணவிழை வோர்க்கும் மனவேதனையைத் தருகின்ற ஒன்றாகும்.
ஒட்டக்கூத்தர் இயற்கையிலேயே நல்ல கவித்துவம் வாய்க்கப் பெற்றுத் தமிழைக் கரை கண்ட ஒரு பெரும் புலவர். சோழ மன்னர்கள் யாவரும் சைவர்கள் என்பதும், எந்த நிலையிலும் அவரில் எவரும் மதம் மாறியதில்லை என்பதும் வரலாறு காட்டும் உண்மைகள். அக்காலத்தில் இரு புலவர்கள் கவிச் சக்கரவர்த்திகள் என்ற பட்டப்பெயராகப் பெற்றிருந்தனர். முதலாமவர் கலிங் கத்துப்பரணி பாடிய ஜெயம்கொண்டார். இவர் முதற் குலோத்துங்கனுக்கு ஆஸ்தான புலவராய் விளங்கினார். இரண்டாமவர் ஒட்டக்கூத்தர். இவர் பின் வந்த சோழ அரசர் மூவர்க்கும் ஆஸ்தான புலவராய் விளங்கியிருக்கின்றார். கவிச் சக்கரவர்த்தி என்பதற்கு கவிகளுக் கெல்லாம் (புலவர்களுக்கெல்லாம்) அரசர் என்பதாகப் பொருள் கொள்கின்றார்கள். அப்பட்டப் பெயருக்கு அது பொரு ளன்று! புவிச்சக்கரவர்த்தியினுடைய அவையில் கவிச்சக்கரவர்த்தியாய் அமர்ந்திருப்பவர் (ஆஸ்தான புலவராய்) என்பதே அதன் பொருளாகும்.
எளிதில் பொருள் விளங்காத, கடினமான கவிகளைப் பாடுதலால், ஒட்டக்கூத்தர் கவிரட்சகர் என்றும் கெளடகவி என்றும் சொல்லப்பட்டார். இத்தகைய சிறந்த கல்விப்பெருமானைப் பற்றிச் சிலர் வாயால் சொல்லத்தகாத - காதால் கேட்கக் கூடாத கட்டுக்கதைகளை எழுதிக் காலம்போக்கிப் பொதுமக்களி டையே தவறான கருத்துக்களை விதைத்து வேரூன்றச் செய்துவிட்டதற்கு ஒட்டக்கூத்தர் மிகவும் பிரபல்யமாக

வாழ்வதைக் கண்டு மனம் பொறாமைக் காழ்ப்புணர்வே காரணமாகும்.
அவர் தன் பாடல்களில் தான் பிறந்த மரபின் பெருமையை நிலை நிறுத்தி குறிப்பிடத் தவறவேயில்லை. இது அந்தக் காலத்து மரபே.
அவற்றுள் ஒன்று :
'வனப்புறு மிளவலம் வரச்செவ் வேற்குகன் as6oT 'Luas som sól6Offio es6oT U G&Lossólu u யினப்புகழ் சேவலங் கொடிதற்
கேற்றுவெஞ் சினப்புக் கொடிதரச் செறிசெங் குந்தமே”
༽རེ། سسسسسسسسسسس
மல்லிகைப் பந்தல் , வெளியிட்டிருக்கும் புதிய நூல்கள்
(கவிதைத் தொகுதி) குறிஞ்சி இளந்தென்றல்.
Sua
(வரலாற்று நூல்) தில்லை நடராஜா
439
ጆÃ
グ
அமரர் எஸ்.வி. தம்பையா சிறுகதைப் போட்டி,
மல்லிகையின் வளர்ச்சிக்கு அபார ஒத்துழைப்பு நல்கியவரும், தொழிலதிபரும், எழுத்தாளருமான மறைந்த எஸ்.வி. தம்பையா அவர் களது ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்படவுள்ள தென்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறோம். فمد
இப்போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகள் முன்னர் வெளியிடப் படாத படைப்புகளாகவும் புல்ஸ்கப் தாளில் எட்டுப் பக்கங்களுக்கு மேற் படாமலும் அமைய வேண்டும். தபால் உறையின் இடது பக்க மூலையில் போட்டிச் சிறுகதை’ என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
முடிவு திகதி : 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி
பரிசுக் கதைகள் தகுந்த
நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும்.
முதற் பரிசு : 7000/-
இரண்டாம் பரிசு : 5000/-
மூன்றாம் பரிசு : 3000/-

Page 27
30 | - 1. ஃபாரன்ஹீட் 9/11
செப்டம்பர் - 11.
692(g
உலகத்தை ஒருகணம் உறைய ഞഖഴ്ച
நாள்! அன்று நடந்த அந்த அழிவு, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு விழுந்த பலத்த அடியாக
s с5й ○z உலக மக்களுக்கு எடுத்துச் சொன்னது. அந்த தியின் நிகழ்வால் அமெரிக்க மக்கள் மனோநிலை என்பது, அந்த நிகழ்வு நடந்த காலகட்ட ஊடகச் சித்திரிப்புக்களினூடாக, பயங்கர வாதத்திற்கு எதிரான ஒரு குரலாக பதிவாக, மாறாக நிஜத்தில் அமெரிக்க மக்கள் பரவலாக,
முணு எத்தகைய மனோநிலையை கொண்டிருந். தார்கள் என்பதற்கான ஓர் ஆவணம், ஒரு தகவல் நமக்கு கிடைக்கப் பெற்றிருக்க
வில்லை. ஆனால், அந்த குறையை நிவர்த்தி ര செய்யும் வகையிலான ஒரு ஆவணச் சினிமா (AgCl2 oM முயற்சியாக அமெரிக்க இயக்குநர் மைக்கேல் மூர் இயக்கிய ஆவணத் திரைப்படமான “LITUGiraff 9/11" (Farenheit 9/11) старић
- மேமன்கவி Y
சமீபத்தில் பார்த்த திரைப்படம் அமைந்தது.
ஹொலிவூட் உலகிலிருந்து இப்படியான ஓர் ஆவணப் படம் எப்படிச் சாத்தியமாகியது என்ற கேள்வியே இப்படத்தைப் பார்க்கும்போது எழுகின்ற முதல் கேள்வியாகும்.
உலகத் திரைப்பட உலகில் ஒர் ஆவணப் படமானது பெறாத அளவான வரவேற்பையும், வெகுசன சினிமாக்கள் பெற்றுத் தந்து கொண்டிருந்த வசூலை நெருங்கிய நிலையில் உலக சினிமா ரசகர்களிடையே பெற்ற வரவேற்பை விட, அமெரிக்க மக்கள் மத்தியில் இந்த ஆவணத் திரைப்படம் பெற்று இருக்கும் வரவேற்பு கவனத்திற்குரியதாகிறது.
இத்திரைப்படத்தைப் பற்றிய சிறப்பான ஒரு அறிமுகத்தைத் தமிழகத்திலிருந்து வெளிவரும் சினிமாவுக்கான சஞ்சிகையான நிழல்' எனும் சஞ்சிகையின் அக்டோபர் 2004 இதழில் குருபரன் என்பவர் எழுதி இருக்கிறார். அக்கட்டுரையில் குருபரன் அவர்கள் இத்திரைப்படத்தைப் பற்றி குறிப்பிடும் பொழுது, ‘ஒரு விஷயத்தைப்

பற்றி மக்கள் தாங்களாகவே உணர வைப்பது தான் ஒரு கலையின் அடிப் படையான அம்சம். இதை இப்படம் நன்றாகச் செய்துள்ளது என்கிறார்.
இன்றைய காலகட்டத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியம் கொண்டி ருக்கும் கொள்கையும், அதில் ஒளிந்து கொண்டிருக்கும் போலித்தன்மையையும் அமெரிக்க மக்களுக்குச் சிறப்பாக எடுத்துக் காட்டி இருக்கிறது என்ற வகை யில் இத்திரைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.
எந்தவொரு சிறிய அளவான
இடம் அளிக்காது - Sep 11 மற்றும் ஈராக்
கற்பனையான புனைவுக்கும்
மீதான அமெரிக்கப் படையெடுப்புப் போன்ற நிகழ்வுகள், நிகழ்ந்த காலகட்டச் செய்திகளையும் மற்றும் இயக்குநர் மைக்கல் மூர் இப்படத்திற்காகப் பலருடன் நடத்திய உரையாடல்கள், சந்திப்புகளை மட்டுமே வைத்துக் கொண்டு மிகவும் சிறப்பான முறையில் எடிட் செய்து இருப்பதன் மூலம், அமெரிக்க மக்களின் மனதில் மட்டு மல்லாமல் உலக மக்களின் மனதில் பெரும் சிந்தனை அலைகளை எழுப்பும் வகையில் கச்சிதமான முறையில் மைக்கல் மூர் இப்படத்தை இயக்கி இருக்கிறார். சிறப்பான எடிட்டிங் முறைமை இப் படத்திற்கு உயிர் ஊட்டுகிறது.
Sep. 11 நிகழ்வை எந்தவொரு இடத்திலும் இத்திரைப்படத்தில் காட்டாது, அப்படி காட்ட வேண்டிய தேவை வருகின்ற பொழுது, இக் காட்சிகளை முழுமையாக இருளாக்கி
30
இருப்பது நல்ல உத்தியாக இத்திரைப் படத்தில் செயற்படுகிறது.
மைக்கல் மூரின் முந்திய ஆவணப் LILLDITGOT Bowling for Columbine" என்ற படமும் உலகத்து ஆயுத கலா சாரத்தை பற்றிப் பேசுகின்ற ஒரு Lیال மென நிழல்' இதழில் குருபரன் எழுதி இருக்கும் அக்கட்டுரையின் மூலம் நமக்குத் தெரிய வருகிறது.
ஒரு கலைப்படைப்பானது அதுவும் இன்றைய யுகத்தில் விசுவல் மீடியா வடிவத்தினூடாக உருவாக்கம் பெறு கின்ற சினிமா என்ற கலை வடிவத்தி னுரடாக ஒரு செய்தியினை மக்களிடம் கொண்டு செல்லும் பொழுது, வெற்றி
கரமான முறையில் அச்செய்தி மக்களை
சென்றடைந்து எதிர்வினைகளை உருவாக்கும் என்பதை மைக்கல் மூர் இயக்கிய "ஃபாரன்ஹீட் 9/11" என்ற இந்த ஆவணத் திரைப்படத்தைப் பார்த்த பார்வையாளர்களிடம் உருவாக்கிய எதிர் வினைகள் நமக்கு எடுத்துக் காட்டு கின்றன.
எந்த முதலாளித்துவத்தின் உச்ச மான வளர்ச்சியின் ஊடகங்கள் அதற்கு எதிரான சிதைக்கப் பயன்பட்டனவோ, அதே ஊடகங்கள் அதே முதலாளித்துவர் சமூகத்தின் முகமூடியினை கிழிக் கவும் சிறப்பாகப் பயன்படும் என்பதை
சமூகங்களை
மைக்கல் மூரின் ஃபாரன்ஹீட் 9/11 என்ற இந்த ஆவணத் திரைப்படம் நமக்கு நிரூபித்துக் காட்டி இருக்கிறது. •
Fv , ' x var Cry G
ygieScots তত্ব

Page 28
82
2. நூல் வெளியீட்டு
உதவித்திட்டம்.
சமீபத்தில், தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் 2005 இற்கான நூல் வெளியீட்டு உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்
தாளருக்கான சந்தோசமான செய்தி!
இந்த உதவித் திட்டத்தினைக் கொண்டு நமது சகோதர சிங்கள எழுத்தாளர்கள் பல நூல்களை ஏலவே வெளியிட்டு இருக்கிறார்கள். அதே போன்று நமது தமிழ் எழுத்தாளர்கள் ஒரு சிலரே அத்திட்டத்தின் உதவிகளைக் கொண்டு தங்களது நூல்களை வெளி யிட்டு இருக்கிறார்கள்.
இன்று தமிழைப் பொறுத்தவரை அதிகளவான நூல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அதற்கு இங்குள்ள பதிப்பகங்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கிறது. எப்படி இருப்பினும் பொழுதும் இலங்கையைப் பொறுத்த வரை ஒரு நூல் வெளியிடுவதற் கான செலவு அதிகமாகவே இருக்கிறது. அதன் காரணமாகவே, இன்றும் பல படைப்பாளிகளின் படைப்புக்கள் நூல் உருவம் பெறாத நிலையில் இருக் கின்றன.
அதேவேளை, தேசிய நூலக ஆவண வாக்கல் சேவைகள் சபையின் இந்த உதவித் திட்டத்தில் உள்ள ஒரு விதியாக, ஏலவே எங்கும் பிரசுரிக்கப்படாத படைப்புகளுக்குத்தான் அந்த உதவி வழங்கப்படுகிறது. இலங்கை தமிழ்
St DeGSans
எழுத்தாளர்களைப் பொறுத்தவரை பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்த படைப்புகள்தான் அவர்கள் வசம் இருக்கின்றன! இனி இத்திட்டத் தின் உதவி பெறுவதற்காக, என்றோ எழுதியும், அல்லது எழுதியும் எதிலுமே வெளியிடாத படைப்புகளை உள்ள வர்கள் இந்த உதவித் திட்டத்தை பயன் படுத்திக் கொள்ளலாம். அதேபோல், இலங்கையைப் பொறுத்தவரை ஒலி ஒளி ஊடகங்களுக்கு எழுதப்படும் பிரதிகள் நூல் உருவம் பெறுவது என்பது ரொம்பவும் குறைவாக இருக்கிறது. அவர்களும் இந்த உதவித் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உயிருடன் இருக்கும் எழுத்தாளர்களுக்குத்தான் இந்த உதவித் திட்டம் என அச்சபையின் அதிகாரி ஒருவர் எம்மிடம் தெரிவித்தார். வாழும் காலத்தில் தமது பிரதிகளை நூல் உருவம் ஆக்க முடியாமல் மறைந்த பல எழுத்தாளர்களின் பல பிரதிகள் (குறிப் பாக, ஒலி - ஒளி ஊடக எழுத்தாளர்கள்) நம்மிடையே இருக்கின்றன. அவர்களின் பிரதிகளும் நூல் உருவம் பெற வைக்கும் சிந்தனையை மேற்குறித்த சபைகள் போன்ற நிறுவனங்களிடம் தோற்றுவிக்க நாம் முயற்சிக்க வேண்டும்.
3. ஒரு குண்டுக் கவிதை
கவிதை என்பது ஒரு செய்தியினை உணர்ச்சிக் கலவையுடன், அனுபவ வெளிப்பாடு கலந்த நிலையில் வெளிப் படுத்துவது. சில கவிதைகள் அவை சொல்ல வரும் செய்தியினை நேரடி யாகவும் சொல்வதுண்டு. சிலவேளை

செய்தியினைக் குறியீடாகவும், படிம மாகவும் சொல்வதுண்டு. ஆனால், சில கவிதைகள் சொல்ல முனைகின்ற செய்திகளை நேரடியாகச் சொல்லியும் அச்செய்தியினைச் சொல்லாதது போல், ஒருவகையான விளையாட்டைக் காட்டுவ துண்டு. அத்தகைய கவிதைகளைப் படித்து முடிகின்ற பொழுது 'அட கவிஞர் இப்படிச் சொல்லி விட்டாரே!" என ஆச்சரியத்தில் வாசக மனம் மூழ்கிப் போய்விடுவதுண்டு. அவ்வாறான ஆச்சரி யத்தைச் சமீபத்தில் படித்த ஒரு கவிதை ஏற்படுத்தியது. அக்கவிதை தமிழகத்தி லிருந்து வெளிவரும் சிறுசஞ்சிகையான கவிதாசரணின் 60வது இதழில் 'சகாரா" என்பவர் 'கோலி’ எனும் தலைப்பில் எழுதிய கவிதை ஆகும். சிறுவர்கள் விளையாடும் கோலி விளையாட்டைக் கொண்டு, இன்றைய உலகின் ஆயுத கலாசாரத்தை மிகவும் அழகாகச் சொல்லி இருக்கிறார். உங்கள் பார்வைக்கு அந்தக் கோலிக் குண்டுக் கவிதை!
கோலி
குண்டுகளில் பலவகை உண்டு பெரியது, சிறியது, நடுத்தரம், புரையுள்ளது, புரையற்றது.
வடிவத்தில் என்ன இருக்கிறது வலுத்தவனுக்குத்தான் வெற்றி.
தொலைவிலிருந்தே குறி பார்த்து அடிப்பது இலக்கு அருகில் இருப்பின் விரல் நுனி விசையால் ஏவுவது
இடையில் தொடங்கி எண்ணிக்கை கூட்டுவது நேரடியாகக் களத்தில் இறங்குவது .
உள்கூட்டு வைத்துக் கொண்டு உதவாக்கரைகளை ஜெயிக்க வைப்பது முட்டி தேயப் பழங்காச்ச வைத்து முடியாதவனிடம் அபகரித்துக் கொள்வது வேண்டியவனுக்கு விட்டுக் கொடுப்பது வேறு பிறரை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பது
குண்டுக்காக
குண்டால் குண்டை உடைப்பது என வகை பல உண்டு ஆட்டத்தில்
அடங்க மறுப்பவன் அருவருக்கப்படுவன் வீசத் தெரியாதவன் விட்டு விட்டு ஓடுபவன் போராடித் தோற்பவன் பொசுக்கென்று கோபிப்பவன் போன்றோரைத் தந்திரமாய் ஏமாற்ற,
புதிது புதிதாய் நிறையச் சேர்ந்துவிடும் அனைவரையும் ஆட்டிப் படைக்கும் அளவுக்கு
நெருங்கிப் பழகுபவனுக்கு சொன்னது கேட்பவனுக்கு ஆமாம் சாமிக்கு

Page 29
843
கெஞ்சிக் கூத்தாடுபவனுக்கு ஏமாந்த சோனகிரிக்கு எதிரியின் எதிரிக்கு பகைமையை உண்டு பண்ணி பரப்பும் பங்காளிக்கு
இரவலோ கடனோ தருவது வழக்கம்.
نالها نسبی 6O 6uیbی «l60ئی غالI56h) سطع உருள முடியாதவை சொள்ள சொள்ளையாய் மெல்ல நகர்பவை பளபளப்பிழந்தவை
பயன்படுத்த லாயக்கற்றவை
இப்படி குப்பைகளைத் தள்ளிவிட்டு விட்டு கைப்பற்றிக் கொள்ளும் கபளிகரம் செய்யும் வாழ்வுரிமைகளை உதாசீனப்படுத்தும் திமிர்த்தனத்துக்கு அளவில்லை.
எள்ள உதடு பிரியாமல் சிரிக்கிறீர்கள்? ஏகாதிபத்திய நாடுகள் விற்கும் ஆயுதம் பற்றியா சொல்கிறேன் பிள்ளைகள் விளையாடும் கோலிக் குண்டைப் பற்றித்தான் கூறுகிறேன்.
9... நம்புங்களப்பா.
čo page); ད།
0أما କଁp', VD1.
EXCELLENT
PHOTOGRAPHERS MODERN COMPUTERIZED
PHOTOGRAPHY FoR WEDDING PORTRAIT
8. CHILD SITTINGS
 

36
ஒலியும், ஒளியும் பெற்ற வானம் திருமதி ஞானம் இரத்தினம்
“குறிப்பிட்ட நிகழ்ச்சிக்குப் பதிலாக." என்ற அறிவிப்பு எப்பொழுது வானொலிப் பெட்டியில் ஒலிக்குமென ஒரு வானொலி இரசிகை தனது
இளமைக் காலத்தில் எதிர்ப்பார்த்திருந்தார். இது பாடிகளின் நிச்சயமாக வானொலி இரசிகர்களுக்கு ஆச்சரிய மாக இருக்கலாம்! இந்த அறிவிப்பைக் கேட்டதும் பல இரசிகர்கள் ஒடிச் சென்று வானொலிப் பெட்டியின் பொத்தானைத் திருகி அதன் இயக் கத்தை நிறுத்தி விடுவதுதான் இயல்பு. ஆனால் நடுவே இவரோ அதையே விரும்பிக் காத்திருந்தாராம்!
வானொலி மக்கள் மத்தியில் ஊடுருவத் தொடங்கிய காலத்தில் நாடகங்கள், உரைச் சித்திரங்கள் என்பன மிகவும் அரிதாக ஒலிபரப்பப்
பட்டன. அதற்குப் பதிலாக இசைக் கச்சேரிகள், if பேச்சுக்கள் என்பனவே ஆதிக்கம் செலுத்தின. பெரும்பாலும் இந்நிகழ்ச்சிகள் வெளியார் மூலமாக வானொலியில் ஒலிபரப்பப்படுபவை. இந்த ஒழுங்கை நிர்வாகமே செய்யும். தவிர்க்க முடியாத காரணங்களால் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்ட
ந்தக் கலைஞர்கள் குறுங்கால அறிவித்தல் ளெமுைக் ೩: தமது இப் பொழுதென்றால் அந்த நிகழ்ச்சிகளை ஒத்த ஒலிப் பதிவுகள் காப்பகத்தில் இருப்பின் அவைகளை மறுஒலிபரப்புச் செய்து நிலைமையைச் சமாளிக்
O கலாம். ஆனால் இந்த இரசிகைக்கு இத்தகை ஆவல் குயில் ஏற்பட்ட காலத்தில் இந்த வசதிகள் இருந் திருக்காது. எனவே தென்னிந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சினிமா இசைத்
e தட்டுகள் இச்சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும். - மா. பாலசிங்கம் - இன்று ப்ோல் அன்று சினிமா இசைப் பாடல்களில் வேற்று மொழி இசைக் கலப்பு இருந்ததில்லை.

Page 30
80 .
பாடுபவர்களும் வசீகரமான குரல் வளத்தைக் கொண்டவர்களாக இருந் தார்கள். எஸ்.டி.கிட்டப்பா, கே.பி.சுந்த ராம்பாள், வசந்த கோகிலம், தண்டபாணி தேசிகர், எம்.கே.தியாகராஜா பாகவதர், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகிய கர்நாடக சங்கீதத்தில் துறை போன பாடகர்கள் தான் திரைப்பாடல்களையும் பாடி னார்கள். இவர்கள் பாடல்களில் கர்நாடக இசை சிலிர்த்திருந்தது. இந்தக் கர்நாடக இசையை அதிகமாகக் கேட்க வேண்டு மென்பதுதான் இந்த இரசிகையின் விருப்பமாம்! எனவேதான் பலருக்கு இந்த அறிவித்தலை இவர் எதிர்பார்த்தாராம்!
எட்டிக் காயாக இருக்கும்
இத்தகைய சினிமா இசைத் தட்டு களை ஒலிபரப்பும் நிலை வானொலியில் இன்னொரு சந்தர்ப்பத்திலும் ஏற்படுவ துண்டு முக்கிய சில அரச அறி வித்தல்களை அறிவிப்பதற்காக ஒளி பரப்பு நேரம் நீடிக்கப்படுவதுண்டு. “முக்கியச் செய்தியொன்றை ஒலிபரப்பு வதற்காக இச்சேவை நீடிக்கப்படும்” என அறிவிக்கப்படுவதுண்டு. இதுவும் இத் தகைய இரசிகைகளுக்குத் தித்திப்பைக் கொடுக்கும்தானே! فنجان
இந்த வகையில் சங்கீதத்தில் மோகம் கொண்டிருந்த இந்த இரசிகை பிற் காலத்தில் ஒலிபரப்புத் துறையில் பல பரிமாணங்களைச் செய்தவர். 1951 ஆம் ஆண்டு நிகழ்ச்சித் தயாரிப்பாளராகக் கல்விப் பகுதிக்குள் நுழைந்த இவர் முழுத் தமிழ் சேவையின் மேலதிகப் பணிப்பாளராகவும், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் மும்
Կ ל Dagains
மொழிக்குமான நிகழ்ச்சிப் பணிப்பாள ராகவும் இருந்தவர். அடேயப்பா இந்தக் காலகட்டத்தில் கலையூடகமொன்றில் மும்மொழிகளுக்குமான அதிகாரியாக இருந்த அந்தப் பெரும் பேற்றினைப் பெற்றவர்தான் யார்?
அவர்தான் கவிஞர் இ.இரத்தினத் தின் மனைவியார் திருமதி ஞானம் இரத்தினம்.
அன்று வானொலி என்ற மக்கள் ஊடகம் அரசின் முழு ஆளுகைக்குக் கீழ்தான் இருந்தது. தனியார் சேவை களுக்கும் அனுமதி கொடுத்திருப்பதன் மூலமாகத் தற்பொழுது இந்தத் தனி ஆதிக்கம் தளர்த்தப்பட்டிருப்பது குறிப் பிடத்தக்கது. அக்காலத்தில் பெரும் பாலும் அரச சம்பந்தப்பட்ட விடயங் களே காற்றலைகளில் மிதந்து கொண்டி ருந்தன. வெளிநாட்டு வானொலிகளின் தாக்கங்களையும் உள்வாங்கிப் பாரம்பரிய இசைகளும் ஒலிபரப்பாகின. அத்தோடு கிராமிய, கல்வி நிகழ்ச்சிகளுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆரம்பத்தில் கல்விச் சேவைக்கு பாடசாலை ஒலிபரப்பு’ என்றே பெயரிட் டிருந்தனர். பின்னரே கல்விச் சேவை யானது. 1951 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதமே கல்விச் சேவை ஆரம்பிக்கப் பட்டதாம். மும்மொழிகளுக்கான ஒலி பரப்பும் ஒரே அலைவரிசையில் செய்யப் பட்டன. காலை, நண்பகல் ஒலிபரப்பு களுக்கு முறையே 15 நிமிடங்களும், உயர்கல்விக்கு 20 நிமிடங்களும் ஒதுக்கப் பட்டிருந்தன.

இந்நிகழ்ச்சிகளில் மாணவர்களது கல்வி சம்பந்தப்பட்ட விடயங்கள் - நாடகம், சித்திரம் போன்ற வானொலி வடிவங்களைப் பெற்று ஒலிபரப்பாகின.
ஞானம் இரத்தினம் தயாரிப்பாளராக இருந்த பொழுது, பாடசாலை பொது அறிவுப் போட்டி, வெண்பாப் போட்டி ஆகியவற்றைத் தயாரித்து ஒலிபரப்பி இருக்கிறார். இப்போட்டிகளின் வெற்றி யாளருக்குப் பரிசுக் கிண்ணமும் வழங் கப்பட்டதாம். அக்காலத்தில் தெல்லிப் பளை, மஹாஜனாக் கல்லூரி ஆசிரிய ரான புவனசுந்தரம் என்பவர் அடிக்கடி நாடகப் பிரதிகளை எழுதினாராம். நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி மாண வர்களும் அன்று கல்வி ஒலிபரப்பில் பங்கேற்றதாக நினைவு கூருகிறார். தமிழறிஞர் ஆர்.பி. சேதுப்பிள்ளையின்
பேச்சும் ஒலி பரப்பப்பட்டதாம்.
ஒளவை சண்முகம் என்றால் கலை உலகம் இன்னமும் இன்னாரென்பதை மறந்திருக்காது! மனிதன், இரத்த பாசம் ஆகிய சிறந்த சினிமாப் படங்களில் நடித்தவர் இவர். இவர் ஒளவையார் வேடமேற்று நடித்ததின் பின்னர்தான் ஜெமினி எஸ்.எஸ்.வாசன் கே.பி.சுந்த ராம்பாளை நடிக்க வைத்து ஒளவையார் சினிமாப் படத்தை வெளியிட்டார். சண் முகம் தமிழ்நாட்டின் நாடக வரலாற்றில் மிகவும் முக்கியமானவர். இவர் ரி.கே. எஸ்.பிறதேஸ் நாடகக் குழுவை இயக் இவரோடு இவரது தம்பி ரி.கே.பகவதியும் நடித்தவர்.
கியவர்.
இவர்களது மேடை நாடகமான தமிழ்ச் செல்வம்" என்ற நாடகம் ஞானம்
62
இரத்தினம் மூலமாக வானொலி வடிவம் பெற்று கல்வி ஒலிபரப்பில் ஒலிபரப்பப் பட்டது. கல்வி ஒலிபரப்பில் பிரதி யாக்கம் செய்தோர், நடிகர்கள் ஆகியோ ரது பெயர்களை ஒலிபரப்ப மாட்டார்கள்.
பண்டிதமணி கணபதிப்பிள்ளையும் கல்வி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய துண்டு.
பேராசிரியர் ஏ.வி.மயில் வாகனத்தை அறிவியல் உலகு இன்றைக்கும் நினைத் திருக்கும். இவர் விஞ்ஞானக் கல்விக் கான பேராசிரியர். ஆங்கிலத்திற்குள் புதைந்து கிடந்த விஞ்ஞானக் கல்வியை தமிழ் கடலுக்குள் கொண்டு வந்து சேர்த்த மாலுமியவர் அப்பொழுதெல்லாம் விஞ் ஞானம் சம்பந்தமான விஷயங்களை இவர் நிறையவே தமிழ் பத்திரிகைகளில் எழுதினார். இதனால் தமிழில் விஞ் ஞானக் கல்வி பெரும் பரப்பைக் கண்டது. விஞ்ஞான மாணவர்களுக்கு கலைக் களஞ்சியத்தைத் தேட வேண்டிய சிரமத்தை இவரது பத்திரிகைக் கட்டுரைகள் தணித்தன. இக்கால கட்டத்தில் கலைக்கதிர், மஞ்சரி என்ற சஞ்சிகைகளும் தென்னிந்தியாவி லிருந்தும் வந்ததுண்டு. இவைகளும் விஞ்ஞான விடயங்களுக்கு முக்கிய இடத்தைக் கொடுத்தன.
இலங்கை வானொலி கல்விப் பகுதிகளுள் நிகழ்ந்த, இப்பேராசிரிய ரோடு சம்பந்தப்பட்ட நிகழ்வொன்று இன்றும் பேசப்படக்கூடியதாக இருக் கின்றது! ஞானம் இரத்தினமும் சந்திப்பில் இதைப் பகிர்ந்து கொண்டார்.
8 665); অs

Page 31
58
அன்று தமிழ் தட்டெழுத்தாள ரொருவர் கல்விப் பிரிவில் கடமை புரிந்தார். இவரொரு சலியா உழைப் பாளி. தான் வாழ்வில் முன்னேற வேண்டுமென்ற கெடுவைக் கொண்டவர். அதற்காகக் கையைக் கட்டிக் கொண்டு இருக்கவில்லை! கூரையைப் பிரித்துக் கொண்டு வருமென்று! நண்பர்கள் காம காரப்படுமளவிற்கு ஒடி, ஒடி உழைத் தார். வேலைகளைப் பெறக்கூடிய இடங் களுக்கு அலுக்காது தேடிச் சென்றார். அனைவரோடும் மிகவும் பணிவாக நடந்தார்.
இவருக்குத் தலைச்சானாக மகனொ ருவர் பிறந்தார். மகன் குறித்துப் பெரும் கனவுகளை இவர் தன்னுள் வளர்த்தார். மகன் வளர்ந்து பாடசாலை செல்லும் வயதை எட்டினான். மகன் கல்வி கற்க வேண்டும். பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். இவைகளை உரிய ஆசாரத் தோடு செய்ய வேண்டும். விஜயதசமியும் வந்தது! மகனுக்கு வித்தியாரம்பம் செய்ய வேண்டும். உரத்த கல்விமானொருவரை இதற்கு ஏற்பாடு செய்தால், மகனின் எதிர்காலம் ஒளிமயமாகுமென்பது இந்தத் தட்டெழுத்தாளரின் அவா. தான் நன்மை, தீமைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஞானம் இரத்தினத்திடம் இவ்விடயத்தைச் சொன்னார். கல்விச் சேவைக்குள் பெரும், பெரும் ஞானாசிரியர்கள் வந்து போகின்றார்கள். அவர்களுள் இவர் யாரை விரும்புகிறார்? இது ஞானம் இரத்தினத்திற்குத் தடுமாற்றமாக இருந்தது.
“யாரை விரும்புகிறீர்..?
“பேராசிரியர் மயில்வாகனத்தை." தட்டெழுத்தாளர் குழைந்தார்.
அன்று கல்விச் சேவைக்குப் பொறுப்பாக இருந்த திருமதி மோனி ஜோசப், நிகழ்ச்சி உதவியாளராகவிருந்த வீ. ஏ. சிவஞானம் ஆகியோருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அவர் களும் இசைந்து தட்டெழுத்தாளரின் விருப்பத்தை நிறைவேற்றினர். அன்றைய தமிழ்ச் சூழலில் இது இமயத்தைச் சரித்த பெரும் புரட்சி! பேரா சிரியரும் ஒத்துக் கொண்டது அவரது கல்வியின் நிஜத்தைப் பிரதிபலித்தது.t
“ त। தட்டெழுத்தாளருக்கு நினைத்தது போல் வாழ்வு பலித்தது. அவரது மகனும் வாழ்க்கையில் தந்தையை விட உச்சத்தைக் கண்டுவிட்டான். இத்தகைய வகையில் தன் கீழுள்ளவர்களையும் வாழ்க்கையில் உச்சப்படுத்தும் செழுமை யான உள்ளம் கொண்டவர் ஞானம் இரத்தினம். “ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.” இந்தத் தமிழ் வாழ்விற்குத் தன்னை ஆளுமைப்படுத்திக் கொண்டி ருப்பவர்.
வானொலித் தமிழ் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களில் நிகழ்ச்சி ஒன்றிற்கு சர்வதேசப் பரிசைப் பெற்ற முதலாவது பெண் தயாரிப்பாளர் ஞானம் இரத்தினம் எனலாம்! 1965 இல் இவர் கல்வி ஒலிபரப்பிற்காகத் தயாரித்த ஒரு பாலர் நிகழ்ச்சிக்காக ஜப்பான் அரசு பரிசொன்றை வழங்கியது. இதில் சிறுவர் பாட்டுகள், பட்டிருந்ததாம்!
கதை என்பன அடக்கப்
 

கலாநிதி க.செ.நடராசா (நாவற் குழியூர் நடராசன்) 1970 இல் மேலதிகப் பணிப்பாளர் நியமனத்தைப் பெற்ற பொழுது ஞானம் இரத்தினம் தேசிய ஒலிபரப்பிற்கு மாற்றப்பட்டார். 1978 இக்கால ஜோர்ஜ் சந்திரசேகரன் போன்ற சிறந்த வானொலிக் கலைஞர்கள் இவரோடு பணி புரிந்தனர்.
அதன் பணிப்பாளரானார். கட்டத்தில் கே.எம்.வாசகர்,
1976இல் தேவி அருண்டேல் என்ற கலாசேத்ராவைச் சேர்ந்த பிரபல நர்த்தகி இலங்கைக்கு வந்தார். இவரை இலங்கை வானொலியும் அழைத்தது. இவர் வானொலிக்கு வந்த தற்கு அடையாளமாக இவரது குரலை வான் அலைகளில் மிதக்க வைக்க வேண்டும். இதன் மூலம் பிரபல நர்த்தகி யின் மூலமாக அற்புதமான நாட்டிய
ருக்மணி
விடயங்களை நேயர்களுக்கு வழங்கலாம். அப்படிச் செய்ய வேண்டுமாகில் அருண் டேலுக்குப் பேச்சு நிகழ்ச்சியை ஒதுக்க வேண்டும். அல்லது பேட்டியொன்றை எடுத்து ஒலிபரப்ப வேண்டும். வானொலிப் பேச்சாகில் 15 நிமிட மாகில், குறைந்த எட்டுப் பக்கமாவது எழுத வேண்டும். அதற்கு அருண் டேலுக்கு நேரமேது பிரதியில்லாமல் பேச விடுவதாகில் 'இடக்கு முடக்காக" வானொலிக் கட்டுப்பாடுகள் தெரியாது எதையாவது பேசிவிட்டால் அதிகாரி களுக்குச் சங்கடம்! ஒரே ஒரு வழிதான் பேட்டி! பேட்டி காண்பவர் பேட்டி கொடுப்பவரை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும். பேட்டி கொடுப்
கண்டு விட்டது.
69
பவரை என்ன ஆளுமை உச்சப்படுத் தியதோ, பேட்டி காண்பவர் அந்த விட யத்தில் தக்க புலமையைக் கொண்டவராக இருக்க வேண்டும். அருண்டேல் நர்த்தகி. அதுவும் உலகப் புகழ் பெற்றவர். அப் பொழுது இலங்கையில் சங்கீத மேதைகள் அநேகர் இருந்த போதும், நடனத்தை ஓரளவிற்காகத் தெரிந்தவர்கள் சொற்பமாகத்தான் இருந்தார்கள். இவர் கள் அபிநயம், முத்திரைகள், கர்ணம் ஜதி ஆகிய சொற்களைத் தெரிந்து வைத் திருந்தார்களே தவிர, அவைகளின் தாற் பரியங்களை விளக்கும் அளவிற்கு அவைகளில் ஞானமும், சொல்வளமும் பெற்றிருக்கவில்லை. இந்த நிலை இப் பொழுது எவ்வளவோ முன்னேற்றம் பாடசாலைகளில் நடனக் கல்வி ஊட்டப்படுகின்றது. இலங்கை பல்கலைக்கழகம் தனிப் பிரிவை ஏற்படுத்தி பட்டமளிக்கின்றது. கம்பவாரிதி இ.ஜெயராஜின் நிர்வாகத்தில் இயங்கும் கம்பன் கழகம் வருடாந்தம் விழாக்களை ஒழுங்கு செய்து நடன நிகழ்வுகளை மக்களுக்கு அளிக்கின்றது. நடனக் கலைக்குத் தன் பங்களிப்பாக சக்தி தொலைக்காட்சி ஸ்வர்ணமாலிகா வின் தயாரிப்பில் திமிதகதா" என்ற நடன நிகழ்ச்சி ஒன்றையும் நடன அபிமானி களினதும், இளம் நடனக் கலைஞர் களதும் நன்மை கருதி ஒளிபரப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது. முன் னொரு காலத்தில் சைவ மங்கையர் கழ கத்தின் ஏற்பாட்டில் நடனக் குழு வொன்று தமிழ் நாடு சென்ற பொழுது, "கொல்லன் தெருவிற்கு ஊசி விற்கப் போகிறார்கள்' என நம்மவரே நளினப்
অৰ

Page 32
G30
படுத்தினராம்! ஆனால் இன்றோ இலங்கையரான வேல் ஆனந்தன் உலகம் முழுதும் சுழன்று நடனமாடுகிறார். மகிழ்ச்சியே! எனவே, இத்தகைய விடயங் களில் செம்மையான அடக்கத்தைப் பெற்ற ஒருவரைத் தேடிப்பிடிக்க வேண்டும். எங்கு போவது? இப்போது போல் செல்லிடத் தொலைபேசி புழக்கத் தில் இருந்ததா? காலக் கெடுவும் மிகவும் குறைவாக இருந்தது. வீரமணி ஐயர், நவாலியூர் சச்சிதானந்தம் பொருத்த மானவர்கள் தான்! இவர்களைத் தேடிப் பிடிக்க முடியுமா? இப்படியாகத் தமிழ் வானொலி வட்டாரம், ருக்மணி அருண் டேலை பேட்டி காணத் தக்காரைத் தேடிய பொழுது, சி.வி.இராஜசுந்தரம் 'எவருமே தேவையில்லை. மிஸிஸ் ரெத்தினம் இருக்கிறா." என்றாராம். இராஜசுந்தரத்தின் கலைப் பரப்பை வானொலி வட்டாரம் நன்கு அறிந்திருந் தது. அந்த வசிட்டர் சொன்னதிற்கு மறு வார்த்தை இருக்க முடியுமா? பல நாட்டிய நாடகங்களை வானொலிக் கலை விழாக்களில் ஒழுங்கு செய்து அரங்கேற் றியவர். சிறந்த கலாரசிகர். இதற்குப் பின்னரும் திருமதி இரத்தினத்தை தராசில் ஏற்றி அவரது நாட்டியப் பாண் டித்தியத்தை நிறுத்திப் பார்க்க முடியுமா? சர்வதேசப் புகழ், பிரபல நர்த்தகி ருக்மணி அருண்டேலைத் தான் பேட்டி கண்டாராம். இது தனது வானொலி வாழ்வில் மறக்க முடியாத சம்பவமென இவர் பெருமிதம் கொள்கிறார். இதற் காகச் சிவியாரை நினைவுபடுத்துகிறார். கவிஞர் இ.இரத்தினத்தின் நாட்டியப் புலமை அவரது மனைவியிலும் செறிந்
অস্ত্ৰ
திருக்குமெனச் திருக்கலாம்.
'சிவியார்? நினைத்
இவரது சிபாரிசில் 1980ஆம் ஆண்டில் ருக்மணிதேவி அருண்டேல் குழுவினர் இலங்கைக்கு வந்து Show Programme flaggi Sugarlitb.
1978இல் ஹவாயில் நடைபெற்ற வானொலி சம்பந்தமான "செமினா' ரொன்றில் கலந்து கொண்டுள்ளார். வானொலி மஞ்சரியில் அம்பிகை’ என்ற புனைபெயரில் நிறையத் துணுக்குகளை எழுதி இருக்கிறார்.
அண்மையில் இவரது கணவரின் நூல் வெளியீட்டு விழா தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற பொழுது, சங்கத்தின் உப தலைவியும், பிரபல வானொலி அறிவிப்பாளருமான செல்வி சற்சொரூப வதி நாதன் வரவேற்புரை நிகழ்த்துகை யில் வானொலி அறிவிப்பு, பேட்டி காணல் போன்ற வானொலி சம்பந்தமான விடயங்களில் தன்னை நெறிப்படுத்திய வர்களில் ஞானம் இரத்தினமும் ஒருவர் என்றார். சிறந்ததொரு தமிழ் புலமை மிக்க பெண் அறிவிப்பாளரொருவரை
தமிழுலகிற்குத் தந்த ஞானம் இரத்தினத்
திற்குத் தமிழுலகு கடன்பட்டுள்ள தென்றால் மிகையாகாது.
மிதித்த இடத்துப் புல்லுக் கூடச் சாகாத அடக்கமான மாண்புறு பெண்மணி இவர். இணுவிலைச் சேர்ந்தவர். தற்பொழுது அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார்.

(80
- ૯ીવતrઈીર્દિ, ઈજીતr
இப்பொழுதுதான் நீங்கள் காய்தல் - உவத்தல் அற்ற நிலைக்கு வந்து, பண்பட்டுள்ளீர்கள் எனக் கூறலாமா?
நல்லூர். எஸ்.சிவநேசன்
நான் என்றைக்கு மல்லிகை ஆசிரியராகப் பரிணமித்தேனோ, அன்றே இலக்கியப் பக்குவ நிலைக்கு ஆட்பட்டு விட்டேன். பலர் காலம் பிந்தித்தான் இதைப் புரிந்து கொண்டுள்ளனர். இதற்கு நானென்ன செய்வது?
- O - O - O - O -
இதுவரை நீங்கள் செய்துள்ள சாதனைகள் பற்றிப் பெருமைப்பட்டதுண்டா?
வத்தளை. எம்.கல்யாணி
நின்று நிதானித்து இதைப் பற்றிச் சிந்திக்கவே எனக்கு நேரமில்லை. எனது சாதனைகள் பற்றித் தீர்மானிப்பது நானல்ல. தரமான இலக்கியச் சுவைஞர்களிடமே உங்களது கேள்விக்கான விடையை விட்டு விடுகின்றேன்.
- 0 - 0 - 0 - 0 س
உலகத்தின் உச்சத்திற்குப் போக நீங்கள் விரும்புகிறீர்களா?
தெஹிவளை. ஆர்.ராமராஜன்
இல்லை. மக்களின் காலடியில் இருக்கவே நான் ஆசைப்படுகின்றேன்.
- 0 سے 0 سے 0 - 0 -۔

Page 33
(39.
தமிழக தற்போதைய போக்கைப் பார்த்தீர்களா?
வாரச் சஞ்சிகைகளின்
கொழும்பு 6
போக்கென்ன போக்கு. வெறும் வியாபாரத் தடபுடல் போட்டி இது. பெரும் பத்திரிகையாளர்களான திரு. வ.ரா., டி.எஸ்.சொக்கலிங்கம், க்ல்கி போன்ற வர்கள் வளர்த்தெடுத்த ஊடகப் பரம்பரை இன்று சினிமாத்தனத்தால் சீரழிந்து கிடக்கிறது.
- 0 - 0 - 0 - 0 -
உங்களை மனமார வாழ்த்த விரும்பு கிறேன். நேரில் வந்தால் சந்திப்பீர்களா?
பதுளை. எம்.சரவணன்
என்னை வாழ்த்த விரும்பினால் ஒரு தொலைபேசி அழைப்பே போதும். மல்லிகையில் தொலைபேசி உண்டு. பதுளையில் இருந்து இத்தனை தூரம் மினக்கெட்டு வரக்கூடாது. அது விரும்பத் தக்கதல்ல. நானதை ஏற்கவும் மாட்டேன்.
- O - 0 - O - O -
உங்களது நாற்பது வருஷ சஞ்சிகை
@_605 அனுபவங்களைக் கொஞ்சம் சொல்லுங்களேன்? tia GuGay Gorffluunt. கே.அருள்ராசன்
'அச்சுத்தாளின் ஊடாக ஒர் அநுபவப் என்றொரு நூலில் இது சம்பந்தமாக எழுதியுள்ளேன். தயவுசெய்து அந்தப் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். - O - O - O - O -
ஒUை
է յա 6007ւծ՚
ஆர். சிவகுரு
நீங்கள் சமீபத்தில் கண்டு பெருமித மடைந்த ஏதாவது நிகழ்ச்சி ஒன்றைக் Ցճi{D(փւքսկլ0ո?
கண்டி. கே.எட்வின்
நமது நெஞ்சிற்கினிய பேராசிரியர் சந்திரசேகரம் அவர்களது மணிவிழா நிகழ்ச்சிகைக் கண்டு, நான் பிரமித்துப் போனேன். ஒரு தனிமனித பாராட்டு நிகழ்ச்சிக்கு இத்தனை ஆயிரம் மக்கள் மண்டபத்தில் குழுமியது அதிசயிக்க வைத்து விட்டது. நம்மைப்
6T 6ft 6060T
போன்றவர்கள் அரை நூற்றாண்டுக் காலத்திற்கு முன்னர் பசளையிட்டு விதைத்த செயல் இன்று அறுவடை யாகின்றது என்ற பூரிப்பு என் நெஞ்சில் மலர்ந்தது. 「龜」 - O - O - O - O -
சமீபத்தில் வெளிநாடு போகும் உத்தேசம்
2 6doTLIT? ዖ .هذ
Lo 6õTGOTITrif. கே.சட்டநாதன்
நண்பர் முருகபூபதி 2005 ஆம் ஆண்டு பொங்கல் சார்பாக விழாவெடுக் கின்றார். என்னை அழைத்திருந்தார். 40வது ஆண்டு மலர் வெளியீட்டு நெருக்கடி காரணமாக அந்த அழைப்பை என்னால் (ԼPԼ9Այ வில்லை.
- ;0 - 0 ‘‘ --^0 - 0 سے
ஏற்றுக்கொள்ள
எனது அறிவுக்கெட்டியவரை நம்பு கின்றேன், ஒரு தமிழ் எழுத்தாளனது சுய வரலாறு ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது உங்களுடையதாகத்தானிருக்குமென்று.

இதன் பெறுபேறு எப்படியாக எதிரொலிக் கிறது?
இணுவில்.
உண்மையைச் சொல்லுகிறேன்.
ܕܲܕ݂ ܕ݁ܥܕ ܕ؟
ஆர்.நல்லைநாதன்
ஆங்கிலத்தில் சுயசரிதை வெளிவந்ததன் பின்னர் என்னை முழுமையாகத் தெரிந்து கொள்ளப் புத்திஜீவிகள் முயன்று வருகின்றனர். இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகளி லிருந்து விடுமுறையில் இங்கு வரும் நமது சகோதரங்கள் தேடித் தேடி அந்தப் புத்தகத்தை வாங்கிச் செல்லுகின்றனர். கடந்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு அந்த நூலின் 16 பிரதிகளை அனுப்பி வைத்துள்ளேன். மனதில் ஒரு நிறைவு, எனக்கு.
- O - O - O - O -
LJ6o éfrses Sn
உங்களது இளமைக் காலத்திலிருந்து பல இலக்கிய நண்பர்களுடன் ஊடாடிப் பழகியிருக்கிறீர்கள். அவர்களில் பலர் இன்று மறைந்து போய்விட்டனர். வேறு சிலர் திசைக் கொன்றாகச் சிதறிப் போய் விட்டனர். இவர் களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரைத் தெரிவு செய்து நீங்கள் அவர்களது எழுத்து முறைகள், குணாம்சங்கள், கருத்து நிலைகள் பற்றி நூலொன்றை எழுதினால் என்ன?
கே.கருணாநிதி
நல்லதொரு யோசினை இது. இது பற்றி இன்னும் ஆழமாகச் சிந்தித்து நல்ல தொரு முடிவுக்கு வர முயற்சிக்கின்றேன். - O - O - O - O -
உரும்பிராய்.
(98)
தாங்கள் புலம்பெயர்ந்து கொழும்புக்கு வந்த பிறகுதான் மல்லிகை வளர்ச்சி கண்டுள்ளது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
-ड़ा"
மட்டக்குளி. பா.மோகனப்பிரியா
ஓர் அழகான வீட்டின் அத்திவாரம் நமது கண்களுக்குத் தெரியாதது இயல்பே. அதனால் வீட்டின் அழகைச் சிலாகிக்கின்றோம். ஆனால் இதற்கெல் லாம் காரணமாக விளங்கும் அத்தி வாரத்தைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் அடித்தளம் இடப்பட்டது. இங்கு நீங்கள் மாளிகை யைப் பார்த்து வியப்படைகிறீர்கள்.
- 0. س- 0 - 0 - 0 -
. . . இன்றைய இளைய தலைமுறையினர்
இலக்கியத்துறையில் அதிகம் காட்டாததன் காரணம் என்ன?
ஆர்வம்
ஹற்றன். எம்.ஜெயகெளரி
இன்றைய இளைய பரம்பரை யினருக்குப் பல்வேறு பிரச்சினைகள். வாழ்க்கை அவர்களைப் பல கோணங் களில் அலைக்கழித்து வருகின்றது. இருந்தும் எங்கள் காலத்து ஆரம்ப எழுத்தாளர்களை விட, இன்றைய வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் ஆழ மாகச் சிந்தித்து எழுதி வருகின்றனர். பலர் மொழியைப் புதுப் புதுக் கோணங்களில் நகர்த்திச் இது பாராட்டத்தக்கது.
- O - O - O - O -
செல்லுகின்றனர்.
இன்றைக்கு இந்தத் பல்வேறு பகுதிகளில்
தேசத்தின் இருந்தெல்லாம்
666): Su

Page 34
G345
புத்தகங்கள் வெளிவருகின்றன. இத்தனை நூல்களுக்கும் விற்பனைச் சந்தை உண்டா?
புத்தளம். எஸ்.செல்வராஜா
ஆர்வமும் ஒரளவு பொருளாதார வசதியுமுள்ளவர்கள் தாம் எழுதிய எழுத்துக்களைத் தொகுத்து நூலுருவில் வெளி யிட்டு விடுகின்றனர். இவர்களுக்கு அவற்றை விற்றுப் போட்ட பணத்தைத் திருப்பி எடுக்கவும் முடியாது. வியாபாரத் தொடர்புகளும் கிடையாது. அநுபவம் கற்றுத் தரும் பாடத்தைத் தெரிந்து கொள்ள முற்படும் போதுதான் இந்த மண் னில் வியாபார ரீதியாக நூல்களை வெளி யிட்டு வெற்றி காண முடியும் என்பதை இவர்கள் புரிந்து கொள்வார்கள்.
- 0 - 0 - 0 س 0 -
இந்தத் தேசத்தின் பெரிய துரதிருஷ்டம் என்னவென்றால் நவீனத் தமிழ் இலக்கியத் தின் தலைவிதியை விமர்சகர்கள்தான் நிர்ண யிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டொன்று
உண்டே. இது பற்றி உங்களது கருத்து
6Tsiroor? ۔۔۔۔
கொக்குவில். எம்.ஆனந்தன்
நமது இலக்கியப் காலத்தில் பக்கம் பக்கமாக விமரிசகர்கள் நம்முடன் செயலாற்றி வந்த காரணத் தாலும் அவர்களது நவீன இலக்கியக் கோட்பாடுகள் இந்த நாட்டுப் படைப்பாளி களுக்கு ஒத்து வந்ததன் நிமித்தமாகவும் ஒரு மயக்க நிலை இருந்ததென்பது
போராட்ட
என்னமோ உண்மைதான். என்னதான் விமரிசகர்கள் உச்ச நிலைப் பிரவேசம் கொண்டிருந்த போதிலும் கூட, படைப் பாளிதான் இந்த நாட்டின் எதிர்காலத் தலைவிதியை நிர்ணயிப்பவன் என்ற
(ւpւգաn 5 கொண்டவன் நான். உணவு வகைகளை
அசைக்க நம்பிக்கை
ஆக்கித் தருபவன் படைப்பாளி. அவற்றை உண்டு அவற்றின் 另贝 மின்மைகளை வெளிப்படுத்துபவனே விமரிசகன்.
- 0 - O - O - O -
860) 6),
எழுத்தாளர் டானியலுக்கு யாழ்ப் பாணத்தில் சிலை வைக்க வேண்டுமென மல்லிகையின் ஆசிரியத் தலையங்கத்தில் விடுத்துள்ளீர்கள். இது நியாயமா? எத்தனையோ எழுத்தாளர்கள்
கோரிக்கை
இந்த மண்ணில் தோன்றி, மறைந்துள்ள போது நீங்கள் தனிப்பட்ட ஒருவரைச் சிபார்சு செய்வது சரியா?
சுன்னாகம். எம்.கலாமோகன்
பஞ்சைப் பராதிகளைப் பஞ்சமர் என நாமமிட்டு அழைத்து வந்தது வட பிரதேசத்து ஆதிக்க வர்க்கம். இவர்களது ஆத்மக் குரலைத் தனது படைப்புக்களின் மூலம் உலகறிய வைத்தவர் தோழர் டானியல் அவர்கள். இதுதான் எனது கோரிக்கையின் உள்ளடக்கம். வேறு நாமங்களைச் சிபார்சு செய்வதில் எனக்கொன்றும் ஆட்சேபனையில்லை.
201 - 1/4, ரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103, இலக்கத்திலுள்ள U. K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
So 6696);

புத்தளம் மாவட்டத்தில் ஒரு புத்தக இல்லம் சாஹித்திய புத்தக இல்லம்
எம்.டி. குணசேனவின் ஏஜன்ட்
மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் அனைத்தையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம்
பள்ளிக்கூட மாணவர்களுக்குத் தேவையான காகிதாதிகள், பாடநூல்கள், அகராதிகள், உபகரணங்கள், இலக்கிய நூல்கள், சஞ்சிகைகள், ஈழத்து மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்திற்கும்
புத்தகக் காட்சியும் விற்பனையும்
சாஹித்திய புத்தக இல்லம் இல. 15, குருநாகல் றோட், பஸ்நிலையம், புத்தளம். தொலைபேசி தொலைநகல் : 032-66875
ஈழத்து, மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களும், பாடநூல் வெளியீட்டாளர்களும் தய்வு செய்து தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் நூல்கள்ை காட்சிக்கு வைத்து விற்பனை செய்து உதவுவோம்.

Page 35
Clearing, F & Transp
No. 96/3/7, Col Front
Colo
Si
 
 
 
 
 

February 2005
orwarding Ort Agent
insistory Building ; Street, Imbo 1 1, Lanka.
Te:542354
Fax : 542355 Hot Lille : O77 799163