கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பனிக்குள் நெருப்பு

Page 1


Page 2
Sokulub GriGri Darfu. Ab தமிழ் என்தவம் தமிழுணர்வு என் பேறு மனிதநேயம் என் மதம்
அடக்குமுறையினால்
சுதந்திரத்தையும் அதர்மத்தினால்
நியாயத்தையும் SCTEs assos
கற்பனையிலும் பார்க்க யதார்த்தம் விநோதமானதும்
digOGILITGO gaudso
உணர்ந்துகொண்டவன் வார்த்தைகளின் சுருதி சுத்தமான
நிகண்டுகளிலும் அகராதிகளிலும்
அறிந்துகொள்ளமல்
Daigig ്യpഖങ്
 

aეიNJ. 6Vrn
மித்ர வெளியீடு
32/9ஆற்காடு சாலை, சென்னை - 24
தமிழ்நாடு, இந்தியா

Page 3
unikkul Neruppu
Short-history : The Literature of the Tamil Diaspora)
hor : Espo
hra Book h June 2006
ihra 130
BN 81 - 89748 - 17 - 3
hra Books are Published by r. Pon Anura
ges: 112
trice :
னிக்குள் நெருப்பு லம்பெயர்ந்தோர் இலக்கியம்: ஒரு வரலாற்றுப்பார்வை)
விஸ், பொ
மித்ர :13O
பக்கங்கள்: 112
feoso: .
Mithra Books are Published by
Mithra Arts & Creations Pvt Ltd., 32/9 Arcot Road, Kodambakkam Chennai - 600 024. Ph : 2372 3182, 2473 5314 Email : mithra 2001 inGDyahoo.co.in

હાર્મ,
பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெறும் மண்டபத்திலிருந்து வெளியேறுகின்றேன். சற்றே முசுப்பு முறிக்கவேண்டும். இதமான நிழல் பரப்பும் மரம் என்னை அழைப்பது போலவும். அந்த நிழலைச் சுகித்து, புகை யின்பத்தைத் தேடுகின்றேன். அப்பொழுது பேராசிரியர் ம. மதியழகன் என் முன் தோன்றி, சிரிப்பினால் என்னை வசீ கரித்தார். புலம்பெயர்ந்தோர் இலக்கியங் களின் தீவிர வாசகன் அவர். மலேசியத் தமிழ் நாவல்களை ஆய்வு செய்து தமது முனைவர் பட்டத்தினைப் பெற்றவர். அவர் சுற்றி வளைக்காது, இயல்பாகவே புலம் பெயர்ந்தோர் இலக்கியம் குறித்து என்னிடம் பேசினார்: "ஐயா, எங்களுடைய மாணவர்கள் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பற்றியும் படிக் கிறார்கள். தாங்கள் இங்கு விரைவில் வந்து இரண்டு மணி நேர விரிவுரைகள் தந்தால் நமது மாணவர் பயனடைவார்கள். இந்த அழைப்பினை வைக்கவே இங்கு வந்தேன்" என்று மிகச் சடுதியாகவும் யதார்த்தமாகவும் அழைப்பு வைத்தார். அந்த அன்பையும்

Page 4
அழைப்பையும் ஏற்றேன். இந்த நூலுக்கான வித்து இவ்வாறுதான்
நாட்டப்பட்டது.
22.03.06 புதன்கிழமையன்று புதுவைப் பல்கலைக் கழகச்
சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்திலே என் பேச்சு நிகழ்ந்தது.
புதுவைக்கு யாருடன் செல்வது என்று தவித்தேன். அப்பொழுது, நண்பர் சித்தன் எனக்கு உதவ முன்வந்தார். அவர் ஒழுங்கு செய்த காரிலே, அவர் கூட, அன்று அதிகாலையில் ஓர் இலக்கியப் பயணம் துவங்கிற்று. சித்தன் தமிழ்க் கலைக்கூறுகள் பலவற்றிலும் ஈடுபாடுடையவர். எனக்கு உதவும் சகா. எனவே, அந்தப் பயணம் மிக இனிமையானது.
இரண்டு அமர்வுகளிலே, புலம் பெயர்ந்தோர் இலக்கியம் பற்றிய என் பேச்சு நிகழ்ந்தது. நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில், அதனை மிகச் சிரத்தையுடன் சித்தன் ஒலிப்பதிவு செய்தார். என் அனுமதியின்றியே நடந்த திருக்கூத்து இது!
திரும்பும் வழியில் என் பேச்சுக் குறித்து சித்தன் ஆக்க பூர்வமான விவாதத்தில் ஈடுபட்டார்: "பதிவு செய்துள்ள உங்கள் பேச்சினை அப்படியே நான் எழுதித் தருகின்றேன். இது விரைவில் ஒரு நூலாக வரவேண்டும். அட்டைப்படமும் நான் வடிவமைத்துத் தருகின்றேன்." என்று சித்தன் வற்புறுத்தினார். சித்தனின் அன்பு ஆக்கினையிலிருந்து விடுபடுவதற்காகவும் இதனை எழுதி முடித்தல் என் தர்மமாயிற்று.
சரியாக ஒரு மாதம் கழித்து, பொள்ளாச்சி இலக்கியக் கழகத்தில் உரையாற்றுமாறு என் இனிய நண்பர் சிற்பி பால சுப்பிரமணியம் அழைத்திருந்தார். அப்பொழுது அவர் என்னை அறிமுகப்படுத்தி ஆற்றிய பேச்சு, புதியவர்களுக்கு முன் என்னை முழுமையாக நிறுத்தியது. அதனையே இதற்கு ஓர் அணிந்துரை யாகப் பயன்படுத்தியுள்ளேன்.
வித்தூன்றிய பேராசிரியர் ம. மதியழகனுக்கும், இந்நூலின் அனைத்து ஆக்கங்களிலும் துணை நின்று உதவிய சித்தனுக்கும், என்னை மானுடனாய் தரிசிக்க வைத்த சிற்பி பாலசுப்பிரமணியத் திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
Gї.э. Cloл.

.lA .دناG Glir) omerulin சிற்பி பாலசுப்பிரமணியம்
நம் காலத்தின் ஒளிவு மறைவில்லாத இலக்கியப் போராளி எஸ்.பொ.
கடந்த ஐம்பத்தைந்தாண்டுகளாகத் தமிழ்ச் சிறுகதையில் உருவான சகாப்தம் எஸ்.பொ. உலக இலக்கியத்துக்குத் தமிழ் தந்தி ருக்கும் கம்பீரமான பங்களிப்பு எஸ்.பொ. இலக்கியத்தைச் சத்தியம் தேடும் யாத் திரை என்று தகவமைத்துக் கொண்டவர் எஸ்.பொ. யாழ்ப்பாணத்துச் சைவமும், பெருங்குடி வர்க்கமும் முன்வைத்த சாதியக் கோட்டையை இடைவிடாது தாக்கித் தகர்த்த எழுத்தாயுதம் எஸ். பொ. இளநீர் கலந்த பனைநுங்குச் சாறான ஈழத்தமிழில் எழுதும் எழுபது கடந்த இளைஞரை ஒரு மகா கலைஞராக அறி வதும் உணர்வதும் ஒவ்வொரு தமிழ் இலக்கிய வாசகனுக்கும் உரிய அரும் பேறு.
女 女 女

Page 5
6
எஸ். பொவை நேர்முகமாக நான் அறிந்து சில ஆண்டுகள் தானிருக்கும். ஆனால் ‘வரலாற்றில் வாழ்த’லி னுாடே நான் சஞ்சரித்த பின் இவரோடு கொண்ட நெருக்கம் இறுக்கமாகிவிட்டது.
1953 - 56 ஆம் ஆண்டுகளில் நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சிறப்பு வகுப்பில் (B.A.(Hons) பயின்றபோது முந்தைய ஆண்டில் இன்டர்மீடியட் வகுப்பில் படித்துவிட்டுச் சென்னை கிறித்தவக் கல்லூரியில் பட்ட வகுப்பில் - பயிலச் சென்றுவிட்ட எஸ். பொ. குறித்துக் கேள்விப்பட்டிருந்தேன். திருகோணமலை சோமாஸ்கந்தன், பண்டத்தரிப்பு வேல்முருகன் வழியாகவும், என் ஆசிரியர் மு. அண்ணாமலை வழியாகவும் எஸ். பொ. என்ற பேச்சும் எழுத்தும் வல்ல இளைஞரைக் குறித்து அறிந்திருந்தேன்.
‘வரலாற்றில் வாழ்தல்’ அந்த நினைவலைகளை மீட்டி விட்டது. இவருடைய வகுப்புத் தோழி ஒருவரைக் குறித்து, ’கறுப்பின் அழகுத் திரட்சி’ என்றும், ‘பவுன் நகைகள் இவருக்கு அழகு சேர்க்கவே படைக்கப்பட்டதாகத் தோன் றிற்று’ என்றும் எழுதி இருக்கிறார். அந்தத் தோழி எனக்கு முதுகலை வகுப்புத் தோழியாய் அமைந்ததும், அவரைக் குறித்து என் 'மெளன மயக்கங்கள்’ நூலில் நானும் மறை முகமாகத் தொட்டிருப்பதும் எனது முன்னோடி என்ற உரிமையையும், அன்பையும் எனக்குள் விதைத்தன.
வெகு விரைவிலேயே இவருடைய முதல் நாவல் - சரஸ்வதி வெளியீடாக வந்த - தீ’, சுடச்சுட என்னைக் கவர்ந்ததையும் இன்று வெகு இனிய அனுபவமாக நினைவு கூர்கிறேன்.
ஞானத்தைப் படைக்கவும் பகிரவும் செய்வதே, இலக்கியத்தின் தலையாய நோக்கம் என்று தெளிவுபடுத்தி யிருக்கும் எஸ்.பொ.வின் படைப்புக்களத்தில் உலைத்தீயாக எழுந்த பாலியல் நாவல் ‘தீ’ தன் ஜுவாலையால் இலக்கிய உலகை அதிர வைத்தது. இளமை நெருப்பாய்க் கனன்ற பொழுதின் பதிவாக இன்றும் பேசப்படும் வலிமை கொண்ட தாக தீ சுடர் வீசுகிறது.

ஐம்பதுகளின் (20-ஆம் நூற்றாண்டு) இறுதியில் வெப்பம் சுழற்றிய அந்த நாவல் முதல் 2006-இல் வெளிவர விருக்கும் புத்தம் புதிய நாவல் வரை இவருடைய எழுத்து வற்றாத ஜீவநதியாகப் பெருகிக்கொண்டே இருக்கிறது.
சடங்கு, வீ, அவா, ஆண்மை ஆகிய புனைகதைக் களஞ்சியங்களும், வலை, முறுவல், ஈடு முதலிய நாடகங்களும், நனவிடைத் தோய்தல், இஸ்லாமும் தமிழும், இனி முதலிய தெளிந்த கட்டுரை நூல்களும், நீலாவணனை முன் வைத்து நிகழ்த்தப்பட்டிருக்கும் இலக்கிய ஆய்வு நூலும், மொழி பெயர்ப்புகளுமாகத் தொடர் ஒட்டப்பந்தயத்தில் எஸ். பொ. வின் எழுத்துக்கள் போட்டியிட்டுக் கொண்டே வந்திருக் கின்றன.
ஆயினும், தமிழ் இலக்கிய நெடும்பரப்பில் இணை யில்லாத ஒரு சாதனை தன் வரலாற்று நூலாகிய வரலாற்றில் வாழ்தல்! உ. வே. சா. வின் என் சரித்திரம், மீனாட்சிசுந்தரம் பிள்ளை வரலாறு ஆகியவை வாழ்க்கை வரலாற்று நூல் களில் ஒரு எல்லை என்றால் இன்னொரு உச்சம் ‘வரலாற்றில் வாழ்தல்’ இரண்டாயிரம் பக்கங்களில் (மூவாயிரத்திலிருந்து இரண்டாயிரமாகச் சுருக்கப்பட்டதாம்!) விரிகிற ஈழ வரலாறு, இலக்கிய வரலாறு, சமூக வரலாறு, ஒரு தன் வரலாற்று நூலாகக் கனமும் காத்திரமும் பெற்று வெளிவந்திருப்பது இலக்கிய உலகம் கொண்டாடத்தக்க ஒரு நிகழ்வு.
மாணிக்கவாசகரின் திருக்கோவையாரைக் குறித் தெழுந்த ஒரு பழம்பாடல் கூறும்:
"ஆரணம் காண் என்பர் அந்தனர், யோகியர்
ஆகமத்தின் காரணம் காண் என்பர்; காமுகர் காமநன்னூல் அது
6767A Av ஏரணம் காண் என்பர் எண்ணர், எழுத்தென்பர்
இன்புலவர்
சீரணங் காய சிற்றம்பலக் கோவையைச் செப்டபிடினே"
அப்படித்தான் ஏறத்தாழ அறுபதாண்டுக் கால ஈழத்து மக்களின் வாழ்வியலும், இலக்கிய இயலும் பின்னிப்

Page 6
8
பிணைந்து ஒரு மகாகாவியம் போல் விளைந்து கிடக்கிறது 'வரலாற்றில் வாழ்தல்'
என்ன அபூர்வமான தலைப்பு இந்நூலுக்கு! வரலாற்றின் உள்ளும், வரலாற்றின் புறத்தும், வரலாற்றின் ஊடும் வாழ்ந்த வாழ்க்கையின் தரிசனங்கள்.
அற்புதமான இந்த வாழ்க்கை வரலாறு தமிழ் இலக்கி யத்துக்குக் கிடைத்த பெருநிதி - அருங்களஞ்சியம்.
"சில உறுதிகளினதும் சில நெகிழ்வுகளினதுமான கவலையே செம்மையான வாழ்க்கை” என்ற இவருடைய கோட்பாட்டுக்கு வாய்த்த இலக்கியம் ‘வரலாற்றில் வாழ்தல்’.
எஸ்.பொ. மார்க்சியம் பழுத்த கனிவு என்றால் மிகை யில்லை. சராசரி மார்க்சியர்கள் இந்தக் கருத்தை வியப்போடு கருதல் கூடும். ஆனால் இவருடைய ஞானச்சுடர் தகதகக்கும் பிரகடனத்தை உணர்ந்தவர்களுக்கு இந்த ஐயம் எழாது. இவருடைய எழுத்துப் பிரகடனத்தை ஒர்ந்து பாருங்கள்:
இலக்கியம் என் ஊழியம். தமிழ் என் தவம், தமிழுணர்வு என் டேறு. Lp60/225 Gpa/Ló 676ó7 Log/b. மனித விடுதலை என் மோட்சம். அடக்கு முறையின7ல் சுதந்திரத்தையும், அதர்மத்தினால் தர்மத்தையும், அநியாயத்தினால் நியாயத்தையும் விளங்கிக் கொண்டவன். கற்பனையிலும் பார்க்க யத7ர்த்தம் விநோத
A/760g// சுவையானதுமென உணர்ந்து கொண்டவன். வார்த்தைகளில் சுருதி சுத்தமான அர்த்தங்களை நிகண்டுகளிலும் அகராதிகளிலும் அறிந்து கொள்ளாமல் மண்ணின் மைந்தர்களின் பயிற்சிகளிலிருந்து கற்றவன்.”

ஒவ்வொரு தமிழ் எழுத்தாளனுடைய நெஞ்சிலும் நினைவிலும் பதிந்திருக்க வேண்டிய முத்திரை வாசகங்கள் அல்லவா இவை?
எஸ். பொ.வின் எழுத்து முதிர்ந்து கொண்டிருந்த காலத்தில் நல்ல இலக்கியம், நச்சு இலக்கியம், நசிவு இலக்கியம் என்றும், முற்போக்கு இலக்கியம், பிற்போக்கு இலக்கியம் என்றும் வகை பிரித்து வாதங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. மார்க்சியம் சார் எழுத்துக் கலைஞர்கள் முற்போக்கு இலக்கியவாதிகள் என்று தம்மை அடையாளம் காட்டுவதோடு நில்லாது எதிர் முகாமைப் பிற்போக்கு இலக்கியவாதிகள் என்று முழக்கமிட்டிருந்தார்கள். பாலியல் சார்ந்த எஸ். பொவின் கதைகளையும் பிற்போக்கு இலக்கிய மென ஏகடியம் செய்தார்கள். புகழ்பெற்ற ஈழத்து இடது சாரித் திறனாய்வாளர்கள்கூட இவரை எழுத்தாளர் வரிசை யிலிருந்து ஏனோ புறந்தள்ளினார்கள். இவர் பெயரைக் குறிப்பதில் கூடத் தயக்கம் காட்டினார்கள்.
இந்தச் சூழலின் இறுக்கத்தில் தளராது பேர்ராடிய எஸ். பொ. நான் முற்போக்கும் இல்லை, பிற்போக்கும் இல்லை; நற்போக்கு இலக்கியவாதி’ எனப் புதியதோர் போக்கை அல்லது சரியான போக்கை அடையாளம் காட்டினார்.
உண்மையில் நற்போக்கு இலக்கியங்களாகவே எஸ். பொவின் படைப்புகள் ஒளி ததும்புகின்றன. 'கடவுள் அடிமையானார்கள்’ என்றொரு கதை. ஆதியிலிருந்தே சாத்தானுக்கும் கடவுளுக்கும் போட்டி நிலவியது. கடவுள் மனிதனைப் படைத்து அவன் ஆனந்தமாய் வாழ மலை களையும், ஆறுகளையும், சோலைகளையும் படைத்தார். சாத்தான் எரிமலைகளையும், வெள்ளத்தையும், நச்சுக்கனி களையும் படைத்தான். மனிதன் இவற்றைத் தாண்டி வாழத் தலைப்படவே சாத்தான் பசியையும் காமத்தையும் படைத் தான். மனிதன் தடம்புரளாமல் இருக்கக் கடவுள் உழைப் பையும், காதலையும் படைத்தார். தீர்க்கமான சிந்தனைக்குப் பிறகு சாத்தான் மனிதர்களைப் பிரிக்க மொழிகளையும், மதங்களையும் படைத்தான். எதிர்பார்த்தபடியே மனிதன் சிதையக் கடவுள் தோல்வியை ஒப்புக்கொண்டு சாத்தானுக்கு

Page 7
10
அடிமையானார் என்பது கதை இந்த அருமையான கதையின் சாரத்தை அறிந்தால் நற்போக்கின் மையத்தை அறிந்த வர்கள் ஆவோம்.
தமிழ் மொழியை ஒரு வேலைப் போல் குறி பார்த்தும், ஒரு பூவைப் போல் உச்சி மோந்தும் எழுதும் நடையழகு எஸ். பொவின் தனித்திறம். ஒரு வெள்ளை நிற அலரிப் பூவைக் குறித்து எழுதுவார் எஸ். பொ:
"பாலாடையை அதியற்புதச் சிற்பியொருவன் செதுக்கியெடுத்து அதன் மையத்திலே தங்கத் திலகமிட்டிருக்கும் செளந்தர்யம்”
கொந்தளிக்கும் கடலைக் குறித்துக் குறும்பாக எழுது வார்: “கடல் குமட்டி வாந்தியெடுத்த கள் நுரை” எஸ்.பொ. நடையில் விண்ணன்!
எடுத்துக் கொண்ட கதைக்களத்துக்கும் சூழலுக்கும் ஏற்றபடி இவர் எழுதுகோல் விளையாடும். இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகள் எழுதியுள்ள இலக்கியப் பரப்பில் யாழ்ப்பாணத் தமிழ், மட்டக்களப்புத் தமிழ், இசுலாமியத்
தமிழ், கிறித்தவத் தமிழ், பெளத்தத் தமிழ், பாலியல் தமிழ்,
உருவகத் தமிழ், தத்துவத் தமிழ், சரித்திரத் தமிழ், பண்டிதத் தமிழ் எனத் தமிழின் சிலம்ப விளையாட்டு.
‘ஈரா’ என்னும் கதை விவாக விலக்குப் பெற்ற இசு லாமியப் பெண் நான்குமாதம் பத்து நாள் இத்தா விரதம் காப்பதைப் பற்றியது. இத்தாவை ஈரா என்பது ஈழத்து இசுலாமிய வழக்கு. மொழியின் பேச்சு நடையழகைப் பாருங்கள்:
"ஈரா இரிக்க எண்டா லேசுப்பட்ட 5ITrfudnt? தலக்கி எண்ண பூசாம, சர்வாங்கத்துலே பூணாரம் போடாம, வெள்ளப் புடவ உடுத்தி, ஆம்புளர மொகம் பார்க்காம, இரிக்க வேணும். ஈரா எண்டா அலிமா நாச்சி சொல்லுக மாதிரி செறவாசம்தான்."
‘நெறி' கதையில் புலமை நடை பொங்கி வழிகிறது:

11
"நீர் வளனும் நில வளனும் கொண்டு நாலரணு மணி செய்யும் மாஞ்சோலைச் சிற்றுாரி லிருமரபுஞ் சிறப்புற வமைந்த தமிழ்ப் பெருங்குடியில் பிறந்து.”
‘பஸ்கா இரவு’ அன்று ஏசுநாதர் தம் சீடர்களிடம் ‘இன்று இராத்திரியிலே நீங்கள் என்னிமித்தம் தவறிழைப் பீர்கள் என்று எச்சரிக்கும் வேளையில்,
“பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்று தரம் மறுதலிப்பாய்” எனக் கிறித்தவ வேதாகம மொழி களைப் பின்னிப் பின்னி “முள்" கதையை அமைப்பார்.
எந்த வகை மாதிரியான தமிழாயினும் அதை தேசிங்கு ராசன் அடக்கிய குதிரையைப் போல் கையாளும் எஸ். பொ.வின் மொழி ஆளுமை வாழ்வின் பல தளங்களிலும் பெற்ற அனுபவத்தின் விளைவு என்றும் செப்பலாம்.
புத்தம் புதுசென்று கெக்கலி கொட்டும் மேலை இலக்கியக் கற்றுச் சொல்லிகள் போல் சொந்த வேர்களை மறந்தவர் அல்ல எஸ். பொ. தமிழ் மரபின் மீது ஆழ்ந்த பற்று இவருக்கு உண்டு. அதனால்தான் மரபினை, "The Stil point of the turning wheel 6TGöIgy gy60L-uIT6Tü uGáig516)JITi.
‘தமிழ் ஊழியம், தமிழ் அக்கறை, தமிழ்த்துவம்’ என்று திரும்பத் திரும்பத் தமிழ் மரபை ஞாபகப்படுத்திக் கொள்ளுவார். தமிழ்ச் சொல்லாக்கங்களில் கூட வளாகம், வாரியம், ஒட்டுநர் என்பனவெல்லாம் பழஞ்சொற்களின் மாதிரிகளாக அமைவதை ஆர்வமுடன் வரவேற்பார். பாசாங்கு செய்யும் பொருத்தமற்ற சொல்லாக்கங்களை (முண்டக் கூவி - Trunk cal) எள்ளி நகையாடுவார்.
நன்னகரம், தந்நகரம் என்ற இரண்டு (ன, ந) எழுத் துக்கள் தமிழ் மொழியில் ஒரே ஒலியுடன் அமைந்திருப் பதை ஒர்ந்து நேமிநாதத்தைச் சான்று காட்டி 'ந' என்ற எழுத்தை முன்வைத்து ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதி யிருப்பது இவர் இலக்கணப்புலமைக்கு அடையாளம். இன்று தமிழ் இலக்கியம் படைக்கும் எத்தனை பேருக்குத் தமிழ் இலக்கணத்தின் நுட்பங்கள் தெரிந்திருக்கும்?

Page 8
12
‘எழுதுகோல் பிடித்த இலக்கியப் பொன்னுவின் விரலுக்குக் கணையாழி’ என்று காசி ஆனந்தன் ‘வீ’ என்ற கதையைச் சிலாகித்துப் பேசுவார். இன்று வழக்கிழந்து விட்ட ‘வீ’ என்ற சொல் எஸ்.பொ.வால் புத்துயிர் பெறு வதைக் காண்கிறோம். பழந்தமிழ்ச் சொல்லைப் போலவே பேச்சு வழக்குச் சொற்களையும் உயிரோட்டமாகக் கதை களில் கையாளுவார். எழுத்தாள நண்பர் ஒருவர் ‘சத்தா ராக (சாய்வான கோணத்தில்) என்ற பேச்சு வழக்கை இவர் கையாளும் திறத்தை அருமையாகச் சுட்டிக் காட்டுவார்.
"ரயில் பாதைப் பக்கம் சத்தாராக வைச்சுத்தான் ஈக்கில் வாணத்தைச் சுடுவார்கள்” என்பது அவர் வாக்கியம்.
"தமிழ் இலக்கியம் என்று வந்துவிட்டால் தமிழ் மொழி யினதும், இனத்தினதும் தனித்துவமான சில விழுமி யங்களும் மரபுகளும் இருக்கின்றன. தமிழ்ச் சொற்களை நான் உபயோகிக்கும்போது அந்தத் தமிழ் இனத்தி னுடைய அடையாளத்தைப் பேணும் ஒரு பணியிலும் ஈடுபட்டிருக்கிறேன்" என்று ஊற்றமும் அழுத்தமும் தந்து பேசுவார் எஸ். பொ.
தமிழ்நாட்டில் தமிழ் சிதிலமுற்றுச் சிதைந்து கொண் டிருக்கிறது என்றும், புலம்பெயர் தமிழர்கள் தமிழ் இலக் கியத்தை அடுத்த எல்லைக்குக் கொண்டு செல்லுவார்கள் என்றும் எஸ். பொ. அடித்துச் சொல்கிறார்.
சின்னத்திரைத் தமிழைக் கேட்டு வெந்து போகிறார் எஸ்.பொ. தமிழ் நிலத்தில் பிறந்த நாம் கொஞ்சம் கொஞ்ச மாக அந்தத் தமிழை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். சக்திவாய்ந்த ஊடகங்கள் வழியே கொத்திக் குற்றப்படும் தமிழ்மொழியைக் குறித்து இவர் கொண்டிருக்கும் கவலை கடலினும் பெரியது:
"சின்னத்திரை வளர்க்கும் தமிழைக் கடந்த எட்டு மாதங்களாகக் கண்டும் கேட்டும் சொஸ்தப்படுத்த இயலாத அளவுக்கு மனம் இடிந்துபோனேன். பண ஆதாயம் ஒன்றுக்காகத் தாய்மொழியை இவ்வளவு

13
தூரம் கொச்சைப்படுத்தக் கூடியவர்கள் உலகத்திலேயே செந்தமிழ் நாடுடைய தமிழர்கள் மட்டுமே என்கிற உண்மையை விழுங்க இயலாது அவஸ்தைப்படுகிறேன். 13-ஆம் நூற்றாண்டில் சேரர் தமிழ் மலையாள மாகியது என்பது வரலாறு. ஆனால் ஒரு பத்தாண்டு களுக்கிடையில் டி.வி.காரர்கள் தங்கிலீஷ் எனும் புது மொழியை உருவாக்காமல் ஒயமாட்டார்கள் என்ற அச்சம் என் வசத்து.”
புலம்பெயர் தமிழர்களில் பலர் எண்ணற்ற துயரங்கள் அனுபவித்தவர்கள். ஈழத்தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வாழும் நாடுகளின் மொழியை வசப்படுத்தி இலக்கியம் படைத்து வருகிறார்கள். கனடாவிலும், ஐரோப்பாவிலும், அந்நாட்டின் செழுமையான இலக்கிய அனுபவங்களையும் தமக்குள் செரித்து வருகிறார்கள். அத்துடன் அவற்றைத் தமிழிலும் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகி றாாகள.
இந்தியாவினின்று சென்ற தமிழர் தமிழை மறந்து வருகிறார்கள். இந்தியாவில் உள்ள தமிழர்களோ புதிய அனுபவங்களைப் பெற இயலாத நிலையில் இருக்கிறார்கள். இந்நிலையில் புலம்பெயர் ஈழத்தமிழர் அடுத்த அலையைத் தமிழில் படைப்பார்கள் என்பது எஸ். பொவின் ஆணித் தரமான நம்பிக்கை, காரணம், ஈழத்தின் புலம்பெயர் தமிழர் களின் உயிர் மையம் தமிழ் என்று சுட்டிக் காட்டுகிறார்:
"அவர்களுக்குத் தமிழ் தொழில் மொழியல்ல. ஊழலுக் கான கருவியல்ல. வியாபாரத்துக்கான மூலதனமல்ல. வாக்குகளை வசீகரிப்பதற்கான மேனி மினுக்கியல்ல. சிங்காரச் சொற்பொழிவுகளுக்கும் சினிமா வசனங் களுக்கும் உதவும் அங்காடிச் சரக்கல்ல. தமிழ் அவர் களுக்கு உயிர்த்துவ அடையாளம். ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்பது வாகான கோஷமல்ல; வாழ்க் கைக்கு அர்த்தம் அருளும் மந்திரம்."
女 女 女
எஸ்.பொ என்கிற மாமனிதரை அவருடைய நேரடி வாசகர்கள் அல்லாதவர்களுக்கு அறிமுகம் செய்ய "ஆண்மை’

Page 9
14
என்ற தொகுப்பில் உள்ள ஒரு கதை போதும். அது அத்தொகுப்பின் கடைசிக் கதை, பதினைந்தாவது கதை,
அது கதையல்ல, உணர்ச்சிப் பிரவாகம். இப்போது உயிருடன் இல்லாத மித்ர என்ற மகனை அணுஅணுவாக நினைவுகூரும் தந்தையின் ஆதங்கம், பெரு மிதம், அவலம்.
இதனை முழுமையாகப் பகிர்ந்து கொள்ள எஸ்.பொ. வின் குடும்பத்தை அறிதல் அவசியம். காதலித்து மணந்த ஈஸ்பரம் அம்மையார் பெற்றெடுத்த குழந்தைகளில் மூத்த வரான மேகலாவும், அடுத்த புதல்வர் அநுரவும் ஆஸ்திரே லியாவில் வசிக்கின்றனர். அநுர மருத்துவராகப் பணிபுரி கிறார். கடைசிப் புதல்வர் இந்ர சென்னையில் பதிப்பகத்தைப் பார்த்துக் கொள்கிறார். இடையில் மக்களாய் வாய்த்த மித்ரவும், புத்ரவும் இன்று இல்லை. இவர்களில் மித்ரவின் கதைதான் ஆண்மை வரிசையில் இறுதிக் கதை. ஒரு தந்தை ‘நெகிழ்ந்து நெகிழ்ந்து, அன்பே நிறைந்து நிறைந்து, ஊற்றெழும் கண்ணிரதனால். நனைந்து நனைந்து எழுதிய கதை.
மித்தி என்று செல்லமாய் அழைக்கப்பட்ட மித்ர குழந்தைப் பருவத்திலிருந்தே துறுதுறுப்பானவர். உடற்பயிற்சி யினால் தேகத்தை இரும்பாக்கிக் கொண்டவர். இசையில் ஈடுபாடு, ஒவியத்தில் ஆர்வம், புகைப்படக் கலையில் வித்தகம் பூண்டவர். எனினும் திரைப்படக்கலை பயிலச் சென்னையில் ரூ 75,000 லஞ்சம் என்றதும் அந்த நாட்டத்தை மறுகணமே மறந்தவர்.
ஆறடி உயரம், அம்மாவின் சிவப்பு. தோற்றத்தில் கம்பீரம். ஐவரில் நடுவாகப் பிறந்ததனால் நடுவிலன், ஐந்து விரலிலும் நடுவிரல் உயரம்தானே? அதனால் நீ "நெடுவிலன்’ என்று பெருமிதம் கொள்வார் எஸ்.பொ.
1974-ல் யாழ்ப்பாணத் தமிழ்மாநாடு நிகழ்ந்தது. அப்பா விடம் வற்புறுத்தி அந்த மாநாட்டுக்கு வந்தவர் மித்ர அங்கு அரங்கேற்றப்பட்ட வெறியாட்டத்தில் ஒன்பது தமிழர் கொல்லப்பட்டனர். அதன்பிறகு மித்ரவுக்குள் மாற்றங்கள் விளைந்தன. தந்தையாருக்கு இவையொன்றும் முழுமையாகத் தெரியாது.

15
1978-இல் இலங்கையில் வீசிய புயலில் எஸ்.பொவின் வீடு தகர்ந்து போகிறது. எல்லாரும் பாதுகாப்பான இடங் களுக்குப் போய்விட்டார்கள். எஸ். பொ வெளியேற முற்பட்ட போது காற்று இவரைப் பந்தாடித் தூக்கி எறிந்தது. சரியான நினைவுகூட இல்லாத நேரம். இரும்புக் கரங்கள் இரண்டு இவரை ஒரு காருக்குள் புயல் ஒயும் வரை பத்திரப்படுத்து கிறது. மறுபிறப்பு என்று இதனைக் கருதினார் எஸ்.பொ. காப்பாற்றிய கரங்கள் வளரிளம் பருவத்துக்காரனான மித்ர வுடையவை. நான் அவனில் மறுபிறப்புற்றேன் என்று கசிந் துருகினார் எஸ். பொ.
மெல்ல மெல்லப் புலனாயிற்று மித்ர ஈழ விடுதலைப் போரில் ஒரு வீரனாகி அர்ஜுனா என்ற பெயரைச் சுவீக ரித்துக் கொண்ட செய்தி. எஸ்.பொ. எழுதுகிறார்;
"நீ மித்தி, நான் அப்பா. இப்பொழுது என் திருத்தத்தை ஏற்றுக்கொள். நீ அர்ஜுனனாக உயர்ந்தபோது, நான் உன் மகன். உன் சேவகன்."
ஒருமுறை தொடையில் காயம். காலை எடுக்க நேரிடலாம் என்ற தகவல் எட்டுகிறது. பதைபதைத்துப்போய் நண்பர் ஒருவரை அனுப்பி விசாரித்தபோது, நிகழ்ந்ததை (ஒருவேளை குண்டுக் காயமாக இருக்கலாம்) மறைத்து, மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்துவிட்டதாக மித்தி கூறி விடுகிறார்.
நெருங்கிய ஒருவர் 'தம்பி இப்போது எங்கே?’ (பிரபா கரனைக் குறித்த விசாரிப்பு அது) என்று கேட்டபோது, “என் தாய் ஆயிரம் தரம் சொல்லும்படி கேட்டாலும் சொல்ல மாட்டேன்" என்று சொல்லிய நம்பிக்கைக்குரிய வீரனாக இருந்தார் மித்தி.
நெடுமாறன் ஈழம் சென்றபோது கூடவே இருந்து வழிகாட்டியதாகவும் சொல்லுவார்கள். தமிழர்களுக்கு நிகழ்ந்த கொடூரங்களையும், விடுதலைப்படைப் பயிற்சி களையும் 40 மணி நேரத் திரைப்படமாகப் பதிவுசெய்தார் மித்தி. அதன் சுருக்கப்பதிவுதான் உலகத் தமிழர் விழிகளில் கண்ணிராகவும், வெஞ்சினமாகவும் வெளிப்பட்டது என்பது வரலாறு.

Page 10
16
இந்த மகத்தான வீரன் அர்ஜுனா அப்பாவிடம் தன் அர்ப்பணிப்பு மிக்க முடிவைச் சொல்ல மிகமிகத் தயக்கம் கொண்டார். அப்பா பாசத்தால் இலட்சியத்துக்குக் குறுக்கே ஏதும் சொல்லி விடுவாரோ என்ற தயக்கம். அதனால் தான் எடுத்த முடிவை அப்பாவுக்குச் சொல்லும்படி வெளிநாட்டில் இருந்த ஒர் உறவினருக்கு எழுதிய கடிதம் நமக்குக் கிடைத் திருக்கிறது:
"எங்கட நாட்டில் பயமில்லாமல் வாழமுடியாது. எங்கட மொழியில் பேசக்கூடப் பயம். உயிர் தப்பினால் போது மென்று அகதிகளாக எத்தனையோ பேர் பிறநாடு களுக்குப் போறாங்கள். புதிய பூமியிலே முகமிழந்து, மொழியிழந்து, பிளேட் கழுவி அல்லது கக்கூசு கழுவி, வயித்தைக் கழுவி வாழ்வதும் ஒரு வாழ்க்கையா? நமது இனம் தலைநிமிர்ந்து கெளரவத்துடன் வாழக் கோவணக் கச்சை அளவு விஸ்தீரணமுள்ளதாயினும் ஒரு சுதந்தர பூமி தேவை. மற்றைப் பொடியன்கள் போராடி இந்த பூமியை வென்று தரட்டும் என்று நினைக்கக்கூடிய அளவுக்கு அப்பாவின் ஒர்மம் விழுந்து விடவில்லை. வீட்டுக்கு ஒரேயொரு போராளியாவது உருவாகவேண்டும். அதுதான் தர்மம். எஸ்பொ. வீட்டில் இந்த மித்தி."
இந்த வீர மகன் வெறும் நாட்டுப் போர்வீரனாக மட்டும் இருக்கவில்லை. பண்பாட்டுக் காவலனாகவும் இருந்திருக்கிறார். அண்ணா அநுரவிடம் வேணி காதலில் தோல்வி கண்டாள். அந்த வேணியிடம் நெருக்கமான நட்பு மித்ரவுக்கு இருந்தது. அவளுக்காக உரிமையோடு உதவும் அன்பு மித்ரவின் பண்பாக இருந்தது. இதையெல்லாம் பார்த்த ஈசுவரம் எஸ். பொவிடம் கடுகடுத்தது உண்டு. மகனைக் கவர்ந்துவிடுவாளோ என்ற கடுகடுப்பு.
இவர்கள் நெருக்கத்தைப் பார்த்த எஸ். பொ மித்ரவிடம் தனிமையில் பேசும்போது, யார் என்ன சொன்னாலும் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளத் தானே உதவுவதாகச் சொல்கிறார். மித்ர இதற்கு அளித்த பதில் ஒரு Classic. அண்ணா காதலை நிராகரித்ததால் ஏமாந்த

17
வேணிக்கு ஆறுதலாகப் பழகி வருவதாகச் சொன்ன மித்ர, ஒரு பெண்ணும் ஆணும் திருமண நோக்கமின்றி நட்பாக இருக்கமுடியாதா என்றும் அப்பாவிடம் கேட்டார்.
'நீ அப்படிப் பழகலாம். ஆனால் அவள் நெஞ்சில் காதல் இருந்தால்?’ என்று எஸ். பொ. கேட்டபோது, தான் மறுதலித்தால் வேறொருவனை அவள் மணப்பாள் என்றும் மித்ர அனுபவபூர்வமாகப் பேசுகிறார்.
தவறாகப் புரிந்து கொண்டவர் அப்பாதான் என்பதைச் சொல்லாமல் சொல்லி மித்ர உறுதியாகச் சொன்னார்:
"அப்பா எனக்கென்று சில லட்சியங்கள் உண்டு, வேளை வரும்போது சொல்லுவேன். அந்த லட்சியத்தை அடையும் வரை நான் ஒரு பிரம்மசாரி" இந்த உறுதிமொழியும், அதில் ஊன்றி நின்ற பேராண்மையும் எஸ். பொவை இப்படி எழுத வைத்தது:
"திருத்தங்களும் விடுதலைக்கான அர்த்தத்தைத் தேடி யதுமே என் வாழ்க்கை. நான் மானுஷிகத் தேடல் என்றேன். நீ மானுஷிகத்தின் கெளரவம் பற்றிய தேடல் என்று திருத்தம் போட்டாய். நான் தமிழ் ஊழியம் என்றேன். நீ தமிழ் இனத்தின் ஊழியம் என்று திருத்தம் போட்டாய்.”
女 女 r
1984-இல் அப்பா, அம்மாவையும் அழைத்துக் கொண்டு நைஜீரியாவுக்கு ஆங்கிலத்துறைத் தலைவர் பணிக்காக மீண்டும் பயணமாகிறார். அப்பாவை முத்தமிட்டு வழியனுப்புகிறார் விடுதலைப் போராளி மித்ர.
1986இல் செய்தி தெரிகிறது அப்பாவுக்கு கடல் போரில் அர்ஜுனா அமரரானார். (ஏப்ரல் 24, 1986) மாவீரனான மித்ர குறித்த செய்தி நிலைகுலையச் செய்தது தந்தையை. அலைகள் உள்ளவரை அர்ஜ"னாவின் வீரம் வாழும் என்று பெருமிதமும் பொங்கியது.
மறத்தல் கூடுமோ? யாழ்ப்பாணத்தின் தெரு ஒன்றுக்கு அர்ஜுனாவின் பெயர் சூட்டப்பட்டு நினைவு போற்றப்

Page 11
18
படுகிறது. நாளைய விடுதலை வரலாறும் இவர் புகழ் பேசும். ஆயினும் அப்பா மகனுக்கு, மித்திக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்புகிறார் ஆண்மை கதைச் சிற்பமாக,
கதை எழுத எழுத உணர்ச்சிப் பெருக்கு மேலிடுகிறது. எஸ். பொ எழுதுகிறார்:
"நீ விடுதலை வெறியன். எனவே, நான் உன் பக்தன் நீ தற்பற்றை அறுத்த மகான். எனவே, நான் உன் சேவகன். நீ மானுட புருஷார்த்தத்தின் உந்நதம். எனவே, ஆண்மையின் விசுவரூபம். ஆனாலும் மித்தி! நீ என் மகனும். அவ்வாறே உன்னை என் நெஞ்சில் நிறுத்தும் சுயாதீனத்தை எனக்கு, எனக்கு மட்டுமே, அளித்து விடு."
ஆற்றொணாத் துயரில் அலமரும் ஓர் ஆன்மாவின் தேம்பலை மித்தியின் கதை தேக்கி நிறுத்துகிறது.
சொந்த மகனைக் குறித்து ஆங்கிலத்தில் “Death, be not proud" என்று ஒரு கதையை நான் படித்திருக்கிறேன்.
மித்தியின் கதையைப் படித்த பின் "Oh, life, Be proud of a son and father” GT6ögpu LDGOg Gnîlub(yp86.png. 6î6öv606av ஏந்திய அர்ஜுனா மித்ர ஆர்ட்ஸ் கிரியேசன்ஸ் நிறுவன மாக இன்று வளர்ந்தோங்கி நிற்கிறார்.
★ ★
தொடக்கத்தில் எஸ். பொவை ஓர் இலக்கியப் போராளி என்றேன். இப்போது சொல்கிறேன்: எஸ். பொ ஒர் இனப் போராளியின் பெருமைக்குரிய தந்தையும் என்று.
&
22.4,O6 பொள்ளாச்சி இலக்கியக் கழகம் நடத்திய விழாவில் நிகழ்த்திய அறிமுகவுரை.

با نرماlی ۶۱ ق) ظاهل
சென்ற நூற்றாண்டிலே, எண்பதுகளின் கடைக்கூறில், புதிய சொற்கள் சில தமிழ் இலக்கிய உலகின் சொல்லாடலுக்கு வந்து சேர்ந்தன.
"புகலிட இலக்கியம்’, ‘ஆறாந்திணை இலக்கியம்’, ‘புலம்பெயர் இலக்கியம்", ‘புலம்பெயர்வு இலக்கியம்’ ஆகியன அவற்றுட் சில,
ஈழத்தமிழரின் புதியதான புலப்பெயர்வு களின் விளைவாக முகிழ்ந்து வரும் தமிழ் இலக்கிய வகையைப் ‘புலம் பெயர்ந்தோர் இலக்கியம்’ என வழங்கலாம் எனத் தொண்ணுறுகளின் விடியலிலேயே நான் முன்மொழிந்தேன். இது மெல்பேர்ன் நகரிலே நடைபெற்ற ஓர் இலக்கிய விழா விலே நிகழ்ந்ததாக நினைவு.
இதில் என் கெட்டிக்காரத்தனமோ, சாதுர்
யமோ துணைநின்றன என்று சொல்ல
முடியாது. ஆனால், அநுபவமும், தமிழ்ப் பக்தியும் துணை நின்றிருத்தல் சாத் தியமே.
32X) Nä)
७ ప్లై
雛
S
S } §
(ရွှံလွှဲ 妖
涵
SSS
২২ |XIბჯJჯ 罗 S C NSܓܸܐܶxܐܠܲ2ܐܠܲ5ܛܐܲܬܼ 颂堕磁 榴醒 \Nix

Page 12
பனிக்குள் நெருப்பு 20
அவுஸ்ரேலியாவில் குடியேறியுள்ள அகதிகளுடைய பிரச்சினைகளை ஆராயும் மாநாடு ஒன்று சிட்னிப் பல்கலைக் கழகத்தில் 1990ஆம் ஆண்டில் நடைபெற்றது. இலங்கை அகதிகள் சார்பாகப் பேசும் வாய்ப்பினை, அகதிகள் மேம் பாட்டிற்காக உழைத்துக் கொண்டிருக்கும் செல்வி பிலிப்பா மக்கின்டோஷ் எனக்குப் பெற்றுத் தந்தார். அவர் அகதிகள் மனுக்கள் மீதான மறுபரிசீலனை ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியவர்.
l. ဈဗ်9. - Diaspora
அந்த LDITIBITL'lly Gags. Tait "The Tamil Diaspora' 6TairSp சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இந்தப் புதிய சொற்றொடரைப் ‘புலம்பெயர்ந்த தமிழர்’ எனத் தமிழாக்கம் செய்யலாம் என்று அந்த மாநாட்டிலே கூறினேன். The Tamil Diaspora என்கிற கருத்துவம் ஈழத்தமிழர் பிரச்சினையிலே மனிதநேயர்களுடைய அநுதாபத்தினை வென்றெடுக்க உதவியது.
Diaspora என்பதற்கான அகராதி அர்த்தம் இதுதான்: Settling of the Jews among various non-Jewish communities after they had been exiled in 538 BC.
‘தேசப் பிரஷ்டம்’ செய்யப்பட்ட மக்கள் என்கிற அர்த்தக்கூறு மிக முக்கியம். விருப்பத்திற்கு மாறாக, பிறந்த மண்ணிலே வாழ்வதற்கான உத்தரவாதம் எதுவுமற்ற நிலையில், பிறிதொரு நாட்டிலே தஞ்சம்’ புகுதல் என்பதும் இந்தப் புரிதலில் இணைந்துள்ளது. அந்நியமான - தமிழ்க் கலாசாரச் சூழல்களுக்கு முற்றிலும் அந்நியமான - மக்கள் மத்தியிலே நிர்ப்பந்த வசத்தால் ஒதுங்குதல் என்கிற அவலம் இப்புரிதலில்
9|l Isl(5LO.
இந்தப் புரிதலுக்கு யூதர்களுக்கு ஏற்பட்ட அவலங் களைச் சுருக்கமாக விளங்கிக் கொள்ளுதல் சகாயிக்கும்.
பிறந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, அந்நிய சூழல்களிலே, ஓரளவில் வேண்டாத விருந்தாளிகளாக வாழத் துவங்கிய யூதர்களையே Diaspora என்ற சொல் முதலில் குறித்தது. கிறிஸ்துவிற்கு முன் 538ஆம் ஆண்டு. யூதர்கள்

21 - எஸ். பொ.
அவர்களது சொந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கப் பட்டனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, அவர்கள் தாய்நாடற்றவர்களாகப் பல அந்நியநாடுகளிலே வாழநேர்ந்தது. யூதமதம் அல்லாத வேற்றுமத சூழல்களிலே வாழ்ந் தார்கள். யூதரின் மொழியான Hebrew பயிலப்படாத சூழலி லேயே வாழ்ந்தார்கள். அப்படி இருந்தும், 2500 ஆண்டு களுக்குப் பின்னர், ஒரு யூதநாட்டை உருவாக்கினார்கள்.
இந்தப் புதிய நாட்டிலே யூத மத அநுட்டானங்கள் சுயாதீனம் பெற்றன. ஹிப்ரு மொழி அவர்களது தேசத்தின் மொழியாகச் சிறப்புப் பெற்றது. ஓர் இனத்தின் பூரண சுயா தீனத்திற்குச் சொந்த மண்ணிலே நிறுவப்படும் இறைமை சுகிக்கும் நாடு ஒன்று அவசியம் என்பது நிரூபணமாயிற்று. இதனைச் சாத்தியமாக்குவதற்கு யூத மக்கள் பட்டபாடுகள், அவதிகள், அவமதிப்புகள், அவலங்கள், சித்திரவதைகள் அனைத்தையும் வரலாறு தெரிந்தோர் அறிவர். எல்லா வற்றையும் தாங்கவும், இலட்சியத்தை நோக்கிப் பயணிக்கவும் அவர்களுக்கு உந்துசக்தியாக இருந்தது என்ன? "யூதேயம்’ என்கிற தனித்துவ அடையாளத்தைத் தொலைத்துவிடாது, பிற கலாசாரங்களிலே கரைந்து விடாது, தங்களுடன் தக்க வைத்துக்கொண்ட மனஉறுதிதான்! Diaspora பற்றிய சரியான புரிதலுக்கே இந்த விளக்கங்கள்!
யூத இனம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அநுபவித்த அவலங்களுக்கும், ஈழத் தமிழ் இனம் 1983ஆம் ஆண்டின் இனசங்காரத்திற்குப் பின்னர் அநுபவிக்கும் அவலங்களுக்குமிடையிலே, ஓர் ஒற்றுமை இருப்பதை வெள்ளைத்தோலர் நாடுகளிலே இயங்கும் மனித உரிமைக் குழுக்கள் சரியாகவே கணித்தன. வெள்ளைத் தோலர் நாடு களிலே என்பது மிகவும் அழுத்தம் பெறத்தக்கது. இந்திய அரசியல் ஆட்சியாளர் சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தை ஏற்றுக்கொள்ளும் ஒப்பந்தத்தில் இன்னமும் கையொப்பமிடவில்லை. மனித உரிமைகளை அங்கீகரிப்பதற்கு, அரசியல் ஆதாயங்களுக்கு அப்பாற்பட்ட மனித நேய உணர்வுகள் அவசியம் என நான் நம்புகின்றேன். இந்த உணர்வுகளைச் சங்கை செய்வதில், மத்தியிலே அதிகாரஞ் சுகிக்கும் அரசியலாளர் தயக்கங் காட்டுகிறார்கள்.

Page 13
பணிக்குள் நெருப்பு 22
வெள்ளைக்காரர் பாராட்டும் மனித உரிமைகள் என்கிற கோட்பாட்டின் விளைவாகவே, Tamil Diaspora என்கிற பயிற்சி அங்கீகாரம் பெற்றது. தமிழ் டயஸ்போரா என்கிற ஆட்சி வலுப்பெற்ற பொழுது, ஈழத்தமிழர்களுக்கு ஐரோப்பிய நாடுகளிலும், மற்றும் கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளிலும் அகதி அந்தஸ்தும், பின்னர் குடியுரிமை பெறும் வாய்ப்பும் ஏற்படலாயிற்று.
புதிதாகக் குடியேறிய நாடுகளிலே வாழத்தலைப் பட்ட ஈழத் தமிழர்கள், இனசங்காரத்தில் ஈடுபட்ட சிங்கள இனவெறி அரசு ஆளும் பூரீலங்காவைத் தமது நாடு என உரிமை பாராட்ட மறுத்தார்கள். வென்றெடுக்கப்பட்ட இஸ்ரேலைப் போல, வென்றெடுக்கப்பட வேண்டிய தமிழி ழத்தையே மனத்தளவிலேனும் தமது தாய்நாடாகச் சம்பா வனை செய்தார்கள். இந்நிலையில், மொழி மூலமே தங்களை அடையாளப்படுத்துவாராயினர். யூதர்களுக்கு யூதேயம் போல, ஈழத்தமிழர் தமிழ் மொழியைத் தமது இனத்துவ அடை யாளமாக முன்வைக்க வேண்டியதாயிற்று. ஈழத்தமிழர் வாழ் விலே தமிழ் மொழியின் அடையாளம் மிக முக்கியமானது என்பதை அவர்கள் புலம்பெயர்ந்து வாழத் தலைப்பட்ட பின்னரே உணர்ந்தனர் என்பது முக்கியம். உத்தியோக உயர்வுகள் நாடி ஆங்கிலத்தின் தாஸர்களாக வாழ்ந்த மயக்கங்களிலிருந்து அவர்கள் முற்றாக விழிப்படைந்ததும் இந்தக் கட்டத்திலேதான்!
இப்புதிய சூழலிலே, கலை - இலக்கிய முனைப்புகளி னாலும் முயற்சிகளினாலும் இந்தத் தனித்துவ அடையாளத் தினை முன்னெடுத்தல் ஈழத்தமிழர்களுடைய கடமையாகவும் வாய்த்தது. இதனைப் பிரசாரப்படுத்தி முன்னெடுத்தல் என் தமிழ் ஊழியத்தின் முக்கிய கூறாக மாறிற்று! புலம்பெயர்ந்து வாழ்வோர் புலம்பெயர்ந்தோர், அவர்கள் படைக்கும் இலக்கியம் ‘புலம் பெயர்ந்தோர் இலக்கியம்’ என வழங்கப் படுதல் வேண்டும் என நான் இலக்கியப் படைப்பாளி என்கிற உரிமையில் முன்மொழிந்தேன். எளிதான நியாயம். எனவே, ஏற்றுக்கொண்டார்கள்.
‘புலம் பெயர் இலக்கியம்’, ‘புலப்பெயர்வு இலக்கியம்’ என்கிற பதப் பிரயோகங்கள் உரிய அர்த்தத்தினை நிலை

23 எஸ். பொ.
நாட்ட வலுவற்றனவாக இருக்கின்றன. இலக்கியம் புலம் பெயர்ந்து விடவில்லை. புலம்பெயர்ந்து வாழ்பவர்கள், தமிழ் இலக்கியப் பரப்பிலே புதிய பங்களிப்புச் செய்யும் வகையிலும் வண்ணத்திலும் படைப்பிலக்கிய முயற்சிகளிலே ஈடுபட்டிருக்கின்றார்கள். இலக்கிய வாசகனின் சுவைப்புக்கு இவை உரியமுறையிலே சென்றடைதல் வேண்டும். இதனை வசதி செய்யப் ‘புலம்பெயர்ந்தோர் இலக்கியம்’ என்கிற சொற்றொடர் பயன்படுகின்றது.
ఏసెడిబు ܝSܐܽܧܠܼ .2
"புகலிட இலக்கியம்’ என்று எழுத்தாளர் சிலர், ஆரம்ப காலத்தில், இதனைக் குறித்தார்கள். தமிழ் இலக்கியத்திலே தோன்றும் தனிவகை இலக்கியம் என்பதைச் சுட்டுதல் வேண்டும் என்கிற எண்ணம் இதிலே தொக்கு நிற்கின்றது. புதிதாகப் புகுந்துள்ள நாட்டினை அவர்கள் புகலிடம் என்றார்கள். அகதி நிலையை ஏற்று, வாழ வசதி செய்யும் நாடு புகலிடம். அந்தப் புகலிடத்தில் வாழும் தமிழர் செய்யும் இலக்கியம் "புகலிட இலக்கியம்’ என விளங்கிக் கொண்டார்கள். இந்த விளக்கம் உண்மையின் தரிசனத்திற்கு உதவவில்லை.
புகலிடம் அளித்த பிரான்ஸ், டென்மார்க், ஜேர்மனி, இத்தாலி போன்ற நாடுகளைத் தமிழர்கள் புகலிடம் என்று சொன்னார்கள். அந்த நாடுகளிலே பயிலப்படும் சுதேச தேசிய மொழிகளிலே வளமான இலக்கியம் பல நூற்றாண்டு களாகச் செழித்துள்ளது. புகலிடத்திலே வாழும் சுதேசி களால், அவர்களது தேசிய மொழியிலே படைக்கப்படும் இலக்கியத்தை எவ்வாறு அழைப்பது?
டென்மார்க்கிலே பிறந்து மகா எழுத்தாளராக வாழ்ந்தவர் அனசன். அங்கே அவரே தேசியத் தலைவராகப் போற்றப் படுகின்றார். அவர் வாழ்ந்த கிராமம் இன்று மிகப்பெரிய சுற்றுலா மையமாகச் செழிக்கின்றது. அவருடைய கனவுலகக் கதைகள் சென்றடையாத நாடும் இல்லை; மொழியும் இல்லை. இந்தக் கதையைக் கேளுங்கள்:

Page 14
பனிக்குள் நெருப்பு 24
முன்னொரு காலத்திலே ஒரு சக்கரவர்த்தி வாழ்ந்தார்; அவருக்குப் புதிய ஆடைகள்மீது அபார மோகம். இந்த பூணார அலுவலுக்குத் தன் செல்வமனைத்தையும் செலவழித்தார். தினமும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு ஆடை அணிந்துகொண்டார். ஒருநாள் இரண்டு ஏமாற்றுக்காரர்கள் வந்தார்கள். தங்களை நெசவாளர்கள் என்று கூறிக்கொண்டு, யாரும் நினைத்துப் பார்க்கமுடியாத அற்புத ஆடையை நெய்யமுடியும் என்றும் கூறினார்கள். வித்தியாசமான அழகோடு இருப்பதோடு, அந்த ஆடையை நெய்ய பயன்படும் பொருளுக்கு அற்புதமான குணமுண்டென்று கூறி னார்கள். அது பதவிக்குத் தகுதியில்லாதவர்களுக்கும், திருத்தமுடியாத முட்டாள்களுக்கும் கண்ணுக்குத் தெரியாது என்றார்கள். இரண்டு தறி களை அமைத்துக்கொண்டு, நூல் எதுவும் ஏற்றாது, வேலை செய்வது போல் பாசாங்கு செய்தனர்.
நகரில் உள்ள அனைவரும் ஆடைக்கான அற்புத துணியைப் பற்றியே பேசினார்கள். அது தறியில் இருக்கும்போதே, சக்கரவர்த்தி அதைப் பார்க்க விரும்பினார். தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினரோடு - முன்னரே போய்ப் பார்த்த நேர்மையான இரண்டு அரச அதிகாரிகளும் இருந்தனர் - சக்கரவர்த்தி நூலிழையோ, மரவரிசையோ ஏதுமற்று நெய்து கொண்டிருக்கும் அந்த இரண்டு வஞ்சக ஏமாற்றுக்காரர்களைப் பார்க்கப் போனார்.
“இது சும்மா அற்புதமாக அல்லவா இருக்கின்றது?’ என்று முன்னரே வந்துபோன இரண்டு மதிப்பு வாய்ந்த அதிகாரிகளும் கேட்டார்கள். 'மாட்சிமையுள்ள பெருந்தகையே! எத்தகைய வடிவமைப்பு, எத்தகைய வண்ணங்கள் என்பதைப் பாருங்கள்! மற்றவர்களாலே அதனைப் பார்க்க இயலும் என்று நினைத்துக்கொண்டு, அவர்கள் காலியான தறியைச் சுட்டிக் காட்டினார்கள்.
'இது என்ன இழவு என்னால் எதையும் பார்க்க முடியவில்லையே! இது மிகவும் பயங்கரம்! நான் முட்டாளா? நான் சக்கரவர்த்தியாக இருக்கத் தகுதியற்றவனா? என்மீது விழுந்துள்ள மிகப் பயங்கரம் இதுதான்!” எனச் சக்கரவர்த்தி நினைத்தார். ‘ஓ, அது மிக அழகானது' என்று சக்கரவர்த்தி சொன்னார்.
கூடிய விரைவில் வரப்போகும் பெரும் ஊர்வலத்தில் அந்த அற்புத புதுத்துணியிலே செய்த சில ஆடைகளைச் சக்கரவர்த்தி அணிந்துகொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறினர். வாய்க்கு வாய் அதை, அழகானது, பரவசமானது, அற்புதமானது என்று அவர்கள் எல்லோரும் பிரகடனப் படுத்தினார்கள்.

25 எஸ். பொ.
சக்கரவர்த்தி தன் ஆடைகளைக் களைந்தார். ஏமாற்றுக்காரர்கள் ஒவ்வொரு புது உடையாக அவருக்கு அணிவிப்பதுபோல் பாசாங்கு செய்தனர். கண்ணாடி முன்னால் திரும்பியும் நெளிந்தும் பார்த்துக் GasTsot Lirit.
‘நல்லது, நான் தயார்’ என்ற சக்கரவர்த்தி, "எனக்கு இது சரியான அளவாக இருக்கிறதல்லவா? என்றார். அழகிய அரச குடையின்கீழ் சக்கரவர்த்தி ஊர்வலம் போனார். தெருவில் நின்றவர்களும், யன்னல் வழியாகப் பார்த்தவர்களும், "சக்கரவர்த்தியின் புதிய ஆடை அற்புதமானது அல்லவா! மேலங்கி எத்தகைய அழகிலே நீளுகின்றது! அற்புதமாகவும் கனகச்சிதமாகவும் பொருந்துகின்றது!’ என்று கத்தினார்கள்!
யாரும், தான் எதையும் பார்க்கவில்லை என்பதை மற்றவர் அறியக் கூடாது என்றே நினைத்தனர். ஏனெனில், அது தான் வகிக்கும் பதவிக்குத் தான் தகுதியற்றவர் என்பதையோ, அல்லது மிக முட்டாள் என்பதையோ காட்டிவிடுமே! சக்கரவர்த்தியின் எந்தப் புதிய ஆடையும் இந்த அளவுக்கு வெற்றி பெற்றதேயில்லை.
ஆனால், "அவர்மேல் ஒன்றுமில்லையே! என்று ஒரு சிறு குழந்தை கத்தியது! ‘ஐயகோ, ஒரு பாவமும் அறியாத இந்த அழகிய குழந்தை என்ன சொல்லுகிறது என்பதைக் கேளுங்கள்!' என்று அதன் தந்தை கத்தினான். குழந்தை சொன்னதை ஒருவருக்கொருவர் முணுமுணுத்துக் கொண்டனர்.
"ஏன் அவர் மேல் ஒன்றுமேயில்லையே!’ என்று அனைத்து மக்களும் ஒருசேரக் கத்தினார்கள். அவர்கள் சொல்வது சரி என்பதை உணர்ந்த சக்கரவர்த்தி பயந்தார்.
‘நான் இந்த ஊர்வலத்தில் இப்பொழுது போய்த்தான் ஆக வேண்டும்’ என்று தனக்குள் நினைத்துக்கொண்டார். அரண்மனைக் காரியஸ்தர்கள் அங்கே இல்லாத ஆடையை மேலும் தூக்கிப் பிடிப்பதாக அபிநயிக்க சக்கரவர்த்தி மேலும் கம்பீரமாக நடந்தார்!
சிறுவயதிலே இந்தக் கதையை அண்டர்சன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய கதை என்றே நினைத்துக் கொண்டோம். பின்னர் டென்மார்க்கில் வாழும் தர்மகுலசிங்கம், அனசன் டேனிஷ் மொழியில் எழுதிய கதைகள் சிலவற்றைத் தமிழ் செய்து 'தாய்’, ’பாட்டி’ என்கிற நூல்களாகத் தமிழ்நாட்டிலே பிரசுரிக்க நான் உதவினேன். இந்த நூல் களுக்குத் தமிழ்நாட்டிலே நல்ல வரவேற்பும் கிடைத்தது.

Page 15
பணிக்குள் நெருப்பு 26
தர்மன் தர்மகுலசிங்கம் என் இலக்கிய சகா. டென் மார்க் அரசாங்கத்தினால் அவர் துவிபாஷியாக அங்கீகரிக்கப் பட்டுள்ளார். டேனிஷ் - தமிழ் உறவினை முன்னெடுக்க G3Li6Offlaig - 35L6gp Lugst'ulusLib (Dansk Tamilsk Publikation) ஒன்றினை நடத்துகிறார். தமிழரின் நிகழ்த்துதல் கலைகளை ஐரோப்பிய நாடுகளிலே தமிழ்மொழி மூலம் முன்னெடுத்துச் செல்வதில் அயராது உழைக்கின்றார்.
டென்மார்க் நாட்டில் எழுத்தாளர் அனஸனே உச்ச தேசியத் தலைவராகக் கொண்டாடப்படுகிறார். அவர் வாழ்ந்த ஒதென்ஸா நகருக்கு நான் சென்றிருக்கின்றேன். அந்த நகரம் புனித ஸ்தலமாகக் கொண்டாடப்படுகின்றது. அனஸன்மீது டேனிஷ் மக்கள் செலுத்தும் மரியாதை என்னை பிரமிக்க வைத்தது.
தர்மகுலசிங்கம் தமிழ் செய்த அனஸனின் கதைகள் குறித்து, தமிழிலே நேரிலே விமர்சனத்தைப் பயிலுதலை வாழ்க்கையாகக் கொண்டு வாழும், தமிழ் நேயம்’ பத்திரிகை ஆசிரியரான கோவை ஞானி எழுதிய குறிப்பினை இங்கு நினைவுகூருதல் பொருந்தும்:
‘அனசன் கதைகள் குழந்தைகளுக்கான கனவுக் கதைகள்; தேவதைக் கதைகள். இவை அனைத்தும் அற்புதக்கதைகள், குழந்தைகளுக்காக மட்டுமே இவர் இந்தக் கதைகளை எழுதினார் என்று சொல்ல முடிய வில்லை. பெரியவர்களும் நுண்ணறிவோடு கொஞ்சம் முயற்சி செய்தால்தான் பல கதைகளைப் புரிந்து கொள்ளமுடியும். இந்தக் கதைகளைப் புரிந்துகொள்ள அழகுணர்வும், வியப்புணர்வும், அறஉணர்வும் இருந்தால் மட்டும் போதாது. மெய்யியல் உணர்வுந் தான் தேவைப்படுகிறது. தமிழ்ச் சூழலில் இவ்வகைக் கதைகளின் தேவையை நாம் வற்புறுத்திச் சொல்ல வேண்டியதில்லை. கடற்கன்னி (Memaid) என்கிற கனவுலகக் கதையையும் அவரே எழுதினார். அவருடைய கதைகளை வாசிக்கும் பொழுது அபூர்வமான கனவுலகின் ஊடாகப் பயணிக்கும்

27 எஸ். பொ.
சிலிர்ப்பு ஏற்படும். இந்த அற்புத இலக்கியத்தினை மூலத்தி லிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் ஆற்றல் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு உண்டு என்று சொல்வதில் பெருமைப் படுகின்றேன். டென்மார்க் நாட்டின் தலைநகரான ஹோபன் ஹேனின் பிரதான Land markஆகப் போற்றப்படுவது அவர் கற்பனையில் உருவாகி, சிற்பியின் செய்நேர்த்தியில் உருவான கடற்கன்னிச் சிலையே.
அனசனின் கதைகளை அண்டர்ஸன் எழுதிய கதை களாக ஆங்கிலத்தில் படித்தின்புற்ற பேதமை இப்பொழுதும் நினைவுக்கு வருகின்றது. அவருடைய சரியான பெயர் அனசன் என்பதுகூட, அங்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழர் களாலேதான் இன்று தமிழுக்குத் தெரியவந்துள்ளது. இந்த அனசனின் செழுமையான இலக்கியம் டென்மார்க்கில் வாழ்வோர் அநுபவிக்கும் புகலிட இலக்கியம் அல்லவா? புகலிட இலக்கியத்தின் செழுமைகளை உள்வாங்கிப் புதியன படைக்கும் எழுச்சி அங்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழர் களுக்கு ஏற்படவேண்டும். அதுதானே முறை? இவ்வாறு தான் பிரான்சில் வாழ்பவர்கள் ஹியூகோ, சாற்றே ஆகியோர் பிரிான்சில் எழுதியுள்ள இலக்கியத்தை மூலத்திலேயே சுவைத்தின்புறுகிறார்கள். இத்தாலியில் வாழும் தமிழர்கள் அல்பட்டோ மொறாவியாவின் எழுத்தை மூலத்தில் படித்தின்புறுகிறார்கள்.
இந்தச் செழுமையான இலக்கியப் பாரம்பரியங்களையே நாம் புகலிடத்து இலக்கியங்களாக அடையாளப்படுத்திப் பெருமைப்படுத்துதல் வேண்டும். புகலிடம் தந்த நாட்டில் வாழ்ந்து, தமிழிலே நாம் முயலும் இலக்கியத்தினைப் புகலிட இலக்கியம் என அழைத்தல், தமிழ் பரதேசிகளுக்குப் புது வாழ்க்கை சகாயித்த விருந்தனருடைய இலக்கிய செழு மைக்கு உரிய மதிப்பினை மறுத்தலுக்குச் சமம்.
இத்தகைய சில நியாயங்களை நான் முன்வைத்தேன். கால ஓட்டத்திலே, இப்பொழுது, புலம்பெயர்ந்தோர் இலக் கியத்தினைப் புகலிட இலக்கியம் என்று குறிப்பிடுதல் வழக் கொழிந்து விட்டது.

Page 16
பனிக்குள் நெருப்பு 28
புலம்பெயர்ந்தோர் இலக்கியத்திற்கு ஆறாந்திணை இலக்கியம் எனப் பெயர் சூட்டி அழைத்ததும் உண்டு. தமிழ்நாட்டிலே ஐந்திணைகள் இருந்தன. திணைக்குரிய மரபுகள் பேணிச் சங்க இலக்கியங்கள் படைக்கப்பட்டன. அந்நியமான பனிப்பாலையிலே இப்பொழுது தமிழர்கள் வாழத்தலைப்பட்டு விட்டார்கள். பனிப்பாலையிலே வாழும் அவர்கள் படைக்கும் இலக்கியத்தினை ஆறாந்திணை இலக் கியம் என அழைக்கலாம் என்கிற கருத்தும் முன்வைக்கப் Lull-gil.
பழந்தமிழ் இலக்கியப் பயிற்சியும், தமிழ் நேசிப்பும் இந்தப் பிரேரிப்புக்குப் பின்னால் இருக்கின்றது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால், நதிகள் பின்னோக்கிப் பாய்வ தில்லை. சருகுகள் குருத்துகளாவதில்லை. பழையன கழிதலும் புதியன புகுதலும் விதி மட்டுமல்ல, இயல்பும்! தற்காலத்திலே திணைசார்ந்து இலக்கியம் படைக்கப்படுவதில்லை. வழக் கிழந்த ஒரு போக்கினை, ஓர் அவசர தேவைக்காகக் கைப் பற்றுதல் அறிவு சார்ந்தது அல்ல. ஐந்திணை என்கிற இலக்கிய மரபு, அந்தப் பண்டைய காலத்திலேயே நானிலம் போற்றும் மரபாக மாறிற்று. பாலைத்திணை ஒழிந்தது. இந்நிலையில், பன்னூறு ஆண்டுகள் கழித்துப் பணிப் பாலை என வலிந்து பேசுதல் மகா செயற்கையானது.
نالمله P دقیمoج .
இவை பற்றி நான் தெளிவாகச் சிந்திப்பதற்கு என் அநுபவம் துணை நின்றது என்பதைச் சொல்வதற்கு நான் கூச்சப்படவில்லை. என் ஞான விடிவுக்கு நைஜீரியாவிலே நான் ஆங்கில ஆசானாகப் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு உதவியது. சுமார் எட்டு ஆண்டுகள் நைஜீரியாவில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசானாகப் பணியாற்றினேன். சரியாகச் சொல்வ தானால், ஆங்கிலத்தில் இலக்கியம் கற்பிக்கும் ஆசானாய்ச் Spill i GupGpair. I was not a teacher of English Literature, but a Teacher of Literature in English! guaiaTL9-pg5L660Lu'ay6itat வேறுபாட்டினை நைஜீரியாவிலேதான் நான் பூரணமாக உணர்ந்து கொண்டேன்.

29 எஸ். பொ.
இந்த வேறுபாடு நுட்பமானது. ஆங்கிலேயன் எழுதிய இலக்கியம் ஆங்கில இலக்கியம் - English Literature. ஆங்கிலேய னல்லாதோர் ஆங்கிலத்தில் எழுதிய இலக்கியம், ஆங்கிலத்தில் இலக்கியம் - Literature in English: இந்த ஏற்பாடு நைஜீரிய மற்றும் ஆபிரிக்க எழுத்தாளர்கள் எழுதிய இலக்கியங்களை எல்லாம் அந்நாட்டின் வகுப்பறைகளிலே கற்பிக்கும் வாய்ப் பினைச் சகாயித்துள்ளது.
நைஜீரிய நாட்டிலேதான் லத்தீன் அமேரிக்க நாடு களிலும், ஆபிரிக்க நாடுகளிலும், ஸ்பானிய, ஆங்கில, பிரெஞ்சு மொழிகளை ஊடக மொழியாகப் பயன்படுத்தி, அடிமைப் பட்ட மக்களுடைய வாழ்க்கைக் கோலங்களை மட்டுமல்ல, அவர்களுடைய புதிய சுதந்திர எழுச்சிகளையும் உள்ளடக்கிய புதியதோர் இலக்கிய உலகில் திளைக்கலானேன்.
வோலோ ஷயாங்கோ என்பவர் நைஜீரிய எழுத்தாளர். இன்று உலகத்தின் சிறந்த ஆங்கில இலக்கிய மேதைகளுள் ஒருவராகக் கணிக்கப்படுகிறார். அவர் யொரூபா இனத்தைச் சேர்ந்தவர். நாடக ஆசிரியர். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். அவர்களுடைய எழுத்தில் அப்படி என்ன சிறப்பு? நோபல்பரிசு பெறும் அளவிற்கு அவர் எழுத்துக்கள் சிறந்தது எதனால்? அவர், தன்னுடைய இனமான யொரூபா மக்களுடைய தனித்துவ கலைக்கோலங்களையும் ஆங்கில நாடக இலக்கியக் கூறுகளுடன் இணைத்தார். 'Taking Drum என்றொரு கருவி யொரூபா இனமக்களிடம் இருக்கிறது. பேசும் முரசு. அதன்மூலம், மக்களுடைய உணர்வுகளை வெளிப் படுத்தமுடியும். இந்த இசை வடிவங்களையும் யொரூபா இன மக்களுடைய கலைப்போக்குகளையும் ஆங்கில நாடகத்திலே அவர் இணைத்தார். இந்தக் கலவை ஆங்கில நாடக மேடைக்குப் புதிய சுருதி சேர்த்தது. இந்தப் புதுமை ஆங்கில இலக்கியத்தை வளப்படுத்தியது.
நைஜீரியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இனங்கள் வாழ்கின்றன. ஆனாலும், மூன்று இனங்களே முக்கியமான இனங்கள். எண்ணிக்கையில் முதலில் ஹவுஸாக்கள். அடுத்த பெரும்பான்மை இனமே யொரூபா. மூன்றாவது பெரிய இனம் இபோ இனம். இவர்கள் புத்திசாலிகளாகக் கணிக்கப்

Page 17
பனிக்குள் நெருப்பு 30
படுகிறார்கள். ஒரு காலத்தில் தனிநாடு கோரிப் போராடிய வர்கள். இன்று தேசிய நீரோட்டத்தில் கலந்து வாழ்கிறார்கள். இபோ இனத்தின் தலைசிறந்த ஆங்கில எழுத்தாளர் சீனு ஆச்சுபே என்பவர். தற்கால ஆபிரிக்க நாவலாசிரியர்களிலே சிறப்பிடம் பெற்றிருப்பவர். அவர் இந்தியாவில் நடைபெற்ற எழுத்தாளர் மாநாடுகளிலேகூடக் கலந்து சிறப்பித்திருக்கிறார். அவர் இபோ இன மக்களுடைய சடங்கு சம்பிரதாயங் களை அழியாத இலக்கியங்களிலே அமரத்துவப்படுத்தி யுள்ளார். அவராலும் ஆங்கில இலக்கியம் செழுமை பெற் றுள்ளது. ஆபிரிக்க நாட்டின் இலக்கியப் போக்குகள் பற்றிய முழுமையான பார்வையை முன்வைப்பதற்காக மேலும் சில தகவல்களைத் தருகின்றேன். முன்னர் ஆங்கிலேயர்களுடைய குடியேற்ற நாடுகளிலே ஆங்கிலம் ஆட்சி மொழியாகியது. அவர்கள் ஆங்கிலத்தில் எழுதினார்கள். அந்த இலக்கியம் ஆங்கிலஃபோன் (Anglophone) இலக்கியம் என வழங்கப் படும். ஸோயங்கோ, ஆச்சுபே ஆகியோர் இவ்வகை இலக்கி யத்தைச் செழுமைப்படுத்தினார்கள்.
அதேபோன்று ஆபிரிக்காவிலே பிரஞ்சு ஏகாதிபத்தி யமும் பல குடியேற்ற நாடுகளிலே ஆட்சி செய்தது. அங்கெல் லாம் பிரஞ்சு மொழி ஆட்சி மொழி ஆகியது. அந்நாடுகளில் வாழும் எழுத்தாளர்கள் பிரஞ்சு மொழியில் இலக்கியம் படைத்தார்கள். அவ்வகை இலக்கியம் பிரங்கஃபோன் (Francophone) இலக்கியம் என அழைக்கப்படுகின்றது. உண்மையில் ஆபிரிக்கக் கண்டத்தின் பிரஞ்சு மொழி இலக்கியம், ஆங்கில மொழி இலக்கியத்திலும் பார்க்கத் தரத்தில் உயர்ந்தவை என்பது விமர்சகர்களுடைய அபிப் பிராயமாகும். இந்த பிரங்கஃபோன் இலக்கியத்தினால் பிரஞ்சுமொழியும் இலக்கியமும் செழுமை பெற்றிருக்கின்றது என்பதும் வாஸ்தவம்.
4. అGను ఏసెడిబు
ஈழத்தமிழர்கள் முதன்முதலாக, 1983-ம் ஆண்டு இன சங்காரத்திற்குப் பின்னரே பெருமளவிலே புலம் பெயர்ந்

31 எஸ். பொ.
தார்கள். அதற்கு முன்னரும் ஈழத்தமிழரின் குடியகல்வுகள் நிகழ்ந்தன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மலேயாவுக்கு வேலைவாய்ப்புத் தேடிச் சென்றார்கள். இந்தக் குடியகல்வில் நிர்ப்பந்தம் எதுவும் இருக்கவில்லை. பொருளிட்டல் மட்டுமே உந்துதலாக இருந்தது.
தமிழ்நாட்டிலிருந்து, ஏராளமான தமிழர்கள் 'அடிமைக் கூலிகளாக ஏனைய பிரிட்டிஷ், பிரஞ்சுக் குடியேற்ற நாடு களுக்குக் கொண்டு செல்லப்பட்டமை கண்ணிர்க் கதை களாம். இப்பொழுது புதுவையில் பேசிக் கொண்டிருப்பதி னால் புதுவையை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளுதல் வசதி. இந்தப் பகுதியின் சுற்றுவட்டாரங்களிலே வாழ்ந்த தமிழ் மக்களைப் பிரஞ்சிய ஆட்சியாளர் கப்பல் கப்பலாக தங்களுடைய ஆட்சியின் கீழிருந்த மடகாஸ்கர், சீசெல்ஸ், மொரிஷியஸ் ஆகிய தீவுகளுக்கு அடிமைக் கூலிகளாக ஏற்றிச் சென்றனர். அங்கு குடியேற்றப்பட்ட தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது?
மொரிஷியஸில், இன்று தங்களுடைய தமிழ் அடை யாளத்தை வெளிப்படுத்துதல் வேண்டும் என்கிற ஆர்வம் உள்ள தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களால் தமிழ் பேச முடியவில்லை. இப்போது தமது தமிழ் அடையாளங்களையும் வேர்களையும் கண்டுபிடிக்க முயலுகிறார்கள். புதுவையில் இருந்து பிரஞ்சுக் கப்பல் ஒன்றிலே இருநூறு ஆண்களும் பதினேழு பெண்களும் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டு மொரிஷியஸில் இறக்கப்பட்டார்கள் என்பதற்கான சான்றா தாரங்கள் கிடைத்திருக்கின்றன. குடியேற்ற ஆதிக்கத்தின்கீழ் நடைபெற்ற புலம்பெயர்வு பற்றிப் பதிவான முதலாவது சாஸனம் என்று அந்த ஆவணத்தைச் சொல்லலாமா? இருநூறு ஆண்களும் பதினேழு பெண்களும் என்றால், மறைந்து தொனிக்கும் பொருள் என்ன? மிச்சம் நூற்றி எண்பத்திமூன்று ஆண்களும் சுதேசியப் பெண்களை விவாகஞ் செய்து, தங்களுடைய தமிழ் அடையாளங்களைத் தொலைத்து, தாங்கள் குடியேறிய நாட்டின் கலாசாரத்திலே கரைந்து விட்டார்கள் என்றுதானே அர்த்தம்?
பிரிட்டிஷ்காரர்கள் மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தீவு, தென்ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கு அடிமைக்கூலி

Page 18
பனிக்குள் நெருப்பு 32
களாக தமிழ்நாட்டிலிருந்து தமிழர்களைக் கொண்டு சென் றார்கள். அதே போன்று, இலங்கைக்கும் கொண்டு சென் றார்கள். இவர்கள் அங்கே புலம்பெயர்ந்தோர் இலக்கியம் படைக்கவில்லை. இதற்கான காரணம் என்ன?
அவர்களுடைய குடியகல்வின்போது நிலவிய சிந்தனை களும் தேவைகளும் வேறுபட்டிருந்தன. இலக்கியச் சல்லா பங்கள் மேட்டுக்குடியினரின் ஏகபோகமாக இருந்த காலம் அது. இன்றுள்ளது போல, இலக்கியம் மக்கள் மயப்படுத்தப் பட்ட சுவைப்புப் பொருளாக இருந்ததில்லை. கலைகள்கூட ஜாதி சார்ந்த நிகழ்த்துதல்களாகவும் ஜீவனோபாயங்களாகவும் தாழ்ந்திருந்தன. இந்நிலையில், மனிதனாய் வாழ்ந்திடல் வேண்டுமென்கிற அடிப்படை உந்துதல்களுக்கு அப்பாற்பட, தங்கள் இனத்திற்கேயுரிய கலாசாரம் மூலம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும் என்கிற எழுச்சி தோன்றவில்லை. அடிப்படைத் தேவைகள் அவர்களுடைய முழுக் கவனத்தையும் ஈர்த்தன.
இந்த விளக்கத்தைப் பொது உண்மையாகவும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. விதிவிலக்கும் உண்டு. பிரித்தா னியர் காலத்திலே அக்கால மலேயாவில் (மலேசியாவும் சிங்கப்பூரும் இணைந்த நாடு) ஏராளமான தமிழர்கள் குடியேறி னார்கள். கூலிகளாக மட்டுமல்லாமல், வேறு வேலை வாய்ப்புகள் தேடி, சுய விருப்பின் பேரிலும் குடியேறினார்கள். இவ்வாறு சென்ற குடியேற்றவாசிகளிடையே கலாசாரக் கூறுகளைத் தக்க வேண்டுமென்ற பிரீதியர்களும் தோன்றி னார்கள். தமிழ் எழுத்து முயற்சிகளும் முகிழ்ந்தன. இன்று மலேசியா, சிங்கப்பூர் நாடுகளிலே வாழும் எழுத்தாளர்கள் தங்களுடைய இலக்கியமும், புலம்பெயர் இலக்கியம் என்று கொள்ளப்பட வேண்டும் என்று என்னுடன் பல சந்தர்ப் பங்களிலும் வாதாடியிருக்கிறார்கள். அவர்கள் ஆர்வம் மெய்யான தமிழ் நேசிப்பிலே வேரூன்றியது என்பதில் சந்தேகம் இல்லை.
இந்தக் கட்டத்திலே பிறிதொரு விஷயம் நமது கவனத்
திற்குரியது. தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட வரலாறுடையது. ஈழநாட்டிலே சங்ககாலம்

33 எஸ். பொ.
தொடக்கம் தமிழ் இலக்கியப் படைப்பு முயற்சிகள் இருந்த தான குறிப்புகளை இலங்கைத் தமிழ் ஆய்வாளர் சிலர் முன்வைக்கின்றனர். சங்கச் சான்றோரில் மூவரேனும் ஈழநாட்டுத் தொடர்புடையவர்கள் என உரிமை கோருதல் அவர்களது வழக்கம். எஃது எவ்வாறிருப்பினும், பதிமூன்றாம் நூற்றாண்டில் இலங்கையின் வடபால் தமிழர்கள் பூரண இறைமை சுகித்த தமிழர் அரசினை நிறுவினார்கள். அஃது யாழ்ப்பாண இராச்சியம் என வரலாற்றாசிரியர்களாலே குறி சுடப்பட்டுள்ளது. இறைமை சுகித்த அந்தத் தமிழரசு தமிழ் வளர்ச்சியிலும் சிரத்தை ஊன்றி, அதனை முன்னெ டுத்தது. இதனால், ஈழத் தமிழர்களுடைய இலக்கியப் படைப்பு முயற்சிகள் எட்டு நூறு ஆண்டுகளின் வரலற்றினை உள்ள டக்கியது என்பது பெறப்படும்.
மலேசியத் தமிழ்த் தொடர்புகள் எவ்வளவு பழைமை வாய்ந்தன? சோழ அரசர்கள் மலேசியாவின் சில பகுதி களை வென்றெடுத்து, தமது ஆட்சியை நாட்டியது உண் மையே! ஆனால் இந்த வரலாற்று நிகழ்வு பெருந்தொகையான தமிழர்களுடைய இடப்பெயர்வை ஊக்குவிக்கவில்லை.
சிங்கப்பூர்த் தீவிலும், மலேசியத் தீபகற்பத்திலும் பிரித் தானியர் தமது ஆட்சியை நிலைநாட்டிய பின்னரே தமிழ் நாட்டிலிருந்து பெருமளவிலும், இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியிலிருந்து சிறிய அளவிலும் தமிழர்களுடைய இடப் பெயர்வுகள் நிகழ்ந்தன.
மலேசியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம் பத்திலேயே புனைகதை இலக்கியம் பற்றிய பிரக்ஞைகள் எழுந்து, படைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், அவர்களுடைய இலக்கியப் படைப்பு தமிழ் நாட்டின் இலக்கியப் போக்குகளை ஆரவாரமாக ஏற்றுப் பின்பற்றுவனவாக அமைந்தன. அவர்களுடைய எழுத்திலே, பெரும்பாலும், புதிய நாட்டின் கதைக் களங்கள் தூக்கலாக வெளிப்படவில்லை இன்னொரு அவதானிப்பும் முக்கிய மானது. தமிழ்நாட்டிலேயே இலக்கிய பங்களிப்பில் அதிகம் சாதிக்காத திராவிடக் கழகம் அறிமுகப்படுத்திய அலங்கார அடுக்குத் தமிழ் நடையை, ஒரு வகையில் தமிழுணர்வாகச்

Page 19
பணிக்குள் நெருப்பு 34
சம்பாவனை செய்து, இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி யிலேயே மலேயா வாழ் தமிழ்ப் படைப்பாளிகள் பயின்ற தாகவுந் தெரிகின்றது.
s கால ஓட்டத்தில் நிலைமைகள் மலேசியத் தமிழ் எழுத்தாளருக்குச் சாதகமாக மாறின. கு. அழகிரிசாமி, முருகு சுப்பிரமணியம் போன்றோர் மலேசியாவிலிருந்து வெளிவந்த பத்திரிகைகளிலே பணியாற்றச் சென்றார்கள். அவர்கள் தற்காலத் தமிழ் இலக்கியப் போக்குகளிலே தடம் பதித்தவர்கள்.
கு. அழகிரிசாமி தமிழ்ச் சிறுகதை வரலாற்றிலே தமக் கென ஒரு தனி இடத்தினைச் சம்பாதித்து வைத்துள்ளார். அவர் மிகச் சிரத்தையுடன் சிறுகதை எழுதும் துறையிலே மலேசியத் தமிழ் இளைஞர்களை ஊக்குவித்தார் என்பதைப் பலரும் நன்றியறிதலுடன் பாராட்டக் கேட்டிருக்கின்றேன்.
இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையிலே அக்காலத்தில் நடந்த கழுத்தறுப்புக் கைங்கரியம் மலேசியத் தமிழர்களுடைய தமிழ் முனைப்புகளுக்கு ஆதாயமாக மாறியது. வண. பிதா தனிநாயகம் அடிகளார் மலேசியப் பல்கலைக்கழகத்திற்குத் தமிழ்ப் பேராசிரியராகச் சென்றார். மலேசியாவை மையப்படுத்தியும் அவர் உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாடுகள் நடைபெறுவதற்கு உபகாரியாய் உழைத்தார்.
மலேசியாவாழ் தமிழர்கள் இந்தியர்’ என்கிற பொது அடையாளத்தின் கீழ்த் தமிழ் மொழி உரிமைகளைப் பறிகொடுக்கும் அவலத்திலிருந்து விழிப்படையச் செய்ததிலும் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுடைய பங்களிப்புக் கணிச மானது. இரண்டு தடவை மலேசியாவுக்குத் தமிழ்ச்செல வினை மேற்கொண்டு அங்கு வாழும் தமிழ்ப் படைப்பாளிகள் பலருடன் நேர்முகமாகத் தொடர்பு கெர்ண்டு இவற்றினை அறிந்தேன். மலேசியத் தமிழ்ச் செலவினை எனக்கு உவப்பாக ஒழுங்குபடுத்திச் செயற்படுத்தியவர் நண்பர் சை. பீர் முகம்மது. அவர் எழுத்தாளர்; படைப்பாளி. மலேசியா தந்த கதைஞர் களுள் சிறப்பிடம் பெறுபவர். இவருடன் இணைத்து பேரா

35 எஸ். பொ.
சிரியர் ரெ. கார்த்திகேசு, எம்.ஏ. இளஞ்செல்வன் ஆகியோ ரையும் குறிப்பிடுதல் வேண்டும். இந்த மூவருடைய சிறுகதைத் தொகுதிகளும், நாவல்களும், பிறதொகுதிகளும் மித்ர வெளி யீடாகத் தமிழ்நாட்டில் பிரசித்தமாகி பரவலான வாசகர் களைச் சென்றடைந்தன. இவர்களுடைய எழுத்துகளுக்குத் தமிழ்நாட்டிலும் வாசகர்கள் உண்டு.
நான் இந்திரா பார்த்தசாரதியுடன் இணைந்து வெளி யிட்ட பனியும் பனையும் என்கிற சிறுகதைத் தொகுதிதான் முதன்முதலாகப் புலம்பெயர்ந்தோர் இலக்கியமாகப் பிரசித்த மாகியது. இது குறித்துப் பின்னர் சற்றே விரிவாகப் பேசலாம்.
அந்தத் தொகுதியில் மலேசியா, சிங்கப்பூர் எழுத்தாளர் களுடைய சிறுகதைகளை நான் சேர்க்கத் தவறிவிட்டதாக நண்பர் பீர் முகம்மது என்னுடன் உரிமையுடன் சண்டை போட்டுக் கொண்டார். மலேசியத் தமிழ் இலக்கியம் புலம் பெயர்ந்தோர் இலக்கியம் எனத் தோன்றியுள்ள புதுக்கூறிலே இணைந்து கொள்ளமாட்டாது என நான் விளக்கினேன். தமிழ் இலக்கிய வரலாற்றிலே மலேசியத் தமிழ் இலக்கியம் தனிக் கூறாகவே முன்னெடுக்கப்படுதல் வேண்டும் என்கிற என் நியாயத்தை முன்வைத்தேன். என் விளக்கங்களை அவர் முழுமையாக ஏற்றுக் கொண்டாரோ நான் அறியேன்.
ஆனால், அவர் அரிதாக முயன்று என் தூண்டுத லாலும் துணையுடனும் வேரும் வாழ்வும் என்கிற மகுடத்தில் மலேசியாவின் சிறுகதை முயற்சிகளின் வகைகளையும் வண்ணங்களையும் காட்டும் வகையில் நாற்பத்துமூன்று சிறுகதைகளைத் தொகுத்து 1999ஆம் ஆண்டில் வெளியிட்டார். இந்தத் தொகுப்பு முயற்சியின் நீட்சியாக தொகுதி இரண்டு, தொகுதி மூன்று ஆகியவற்றையும் வெளியிட்டார். பின்னர் வந்த தொகுதி ஒவ்வொன்றிலும் இருபத்தைந்து கதைகள் அடங்கியுள்ளன. வெளிநாடுகளிலே வாழும் தமிழர்களுடைய கதைப்படைப்பு முயற்சிகளை முழுமையாக அறிந்து கொள்ள விரும்பும் ஆர்வலர்களுக்கு “வேரும் வாழ்வும்’ என்கிற தலைப்பிலே வெளிவந்துள்ள மூன்று சிறுகதைத் தொகுதி களையும் சிபார்சு செய்கின்றேன்.

Page 20
பனிக்குள் நெருப்பு 36
இவற்றுடன் ரெ. கார்த்திகேசுவின் “தேடியிருக்கும் நேரங்கள்’, ‘அந்திமகாலம்’, ‘காதலினால் அல்ல', 'சூதாட்டம் ஆடும் காலம்’ ஆகிய நாவல்களும் தமிழ்நாட்டு வாசகர் களுக்குக் கிடைத்துள்ளன. மற்றும் அவருடைய சிறுகதைத் தொகுதிகளான “மனசுக்குள்’, ‘இன்னொரு தடவை’, ‘ஊசி இலை மரம்' ஆகியவை தமிழ்நாட்டிலே பிரசுரமாகி, இலக்கிய விமர்சகர்களுடைய கவனத்தை ஈர்த்துள்ளன. பேராசிரியராக இருந்து ஒய்வு பெற்றுள்ள அவர், மலேசிய இலக்கியத்தை வளப்படுத்த சுறுசுறுப்புடன் எழுதுகின்றார்.
காலஞ்சென்ற எம். ஏ. இளஞ்செல்வன் மலேசியத் தமிழ்க் கதை வளத்திற்கு நிறை பங்களிப்புச் செய்துள்ளார். அவருடைய இளஞ்செல்வன் சிறுகதைகள்’ என்கிற சிறு கதைத் தொகுதியும், ‘வானம் காணாத விமானங்கள்’ என்கிற குறுநாவல் தொகுதியும் தமிழ்நாட்டு வாசகர்களினால் பெரிதும் வரவேற்கப்பட்டதை நான் அறிவேன்.
மலேசியாவின் கவிதைப்போக்கு இன்னமும் இலக்கண விதிகளுக்கு உட்பட்ட மரபுக் கவிதைகளாகவே வெளி வருகின்றன. 'புதுக்கவிதையை ஊக்குவிக்க இயக்கம் நடத்தி னார்கள். அதன் வெற்றி தோல்விகள் பற்றிய தகவல்கள் எனக்குக் கிடைத்திலது.
s, oતી૭ ωσοανείο
புலம்பெயர்ந்த தமிழர்களுடைய சிறுகதைகளின் முதலாவது கோவையாக வெளிவந்தது பனியும் பனையும் என்று ஏலவே கூறினேன். இது 1994ஆம் ஆண்டில் வெளி வந்தது. இந்தத் தொகுதியை உரிய முறையிலே தமிழ்நாட்டின் வாசகர்கள் மத்தியிலே பிரசித்தப்படுத்துதல் வேண்டும் என்கிற அக்கறையில் வெளியீட்டு விழா ஒன்றும் நடந்தது. அதனை என் மாணவன், 'மதுரா டிராவல் சர்வீஸ்’ தலைவர் விகேடி பாலன் கோலாகலமான வகையில் நடத்தித்தந்தார்.
அந்த விழாவிலே இந்திரா பார்த்தசாரதி, அசோக மித்திரன், ஜெயகாந்தன், சுஜாதா, சாலை இளந்திரையன்,

37 எஸ். பொ.
சாலினி இளந்திரையன், ஞானி, மாலன், கவிஞர் வைதீஸ் வரன், ஞாநி, சச்சிதானந்தன், பேராசிரியர் இராமானுஜம், வாஸந்தி, சிவகாமி, தஞ்சை பிரகாஷ் போன்ற பல பிரபல தமிழ் எழுத்தாளர்கள் கலந்து சிறப்பித்தார்கள் என்பதையும் இச்சந்தர்ப்பத்திலே மனநிறைவுடன் நினைவு கூரமுடிகின்றது. பணியும் பனையும் என்கிற சிறுகதைக் கோவையிலே அவுஸ்ரேலியக் கண்டத்தில் வாழும் ஒன்பது எழுத்தாளர் களுடைய கதைகளும், வட அமேரிக்கக் கதைகள் பத்தும் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் முப்பத்தொன்பது சிறுகதை களுள் பாக்கி இருபது கதைகளும் ஐரோப்பிய நாடுகளிலே வாழும் எழுத்தாளர்களுடைய படைப்புகளாம். ஐரோப்பிய நாடுகளிலே இங்கிலாந்து, ஒல்லாந்து, சுவிற்ஸர்லாந்து, டென்மார்க், நோர்வே, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய ஏழு நாடுகளிலே வாழும் எழுத்தாளர்களுடைய ஆக்கங்கள் இடம் பெற்றன.
இந்த நாடுகள் அனைத்திற்கும் நான் சென்றிருக்கிறேன். பெரும்பாலான கதைஞர்களுடன் நேரிலே அறிமுகமும் வைத்துள்ளேன். நான் ஐந்து கண்டத்தின் பல நாடுகளிலே பயணித்துள்ளேன். மூன்று கண்டங்களிலே பணி. 1ாற்றியுள் ளேன். இவற்றைப் பெருமைக்காகச் சொல்லவில் பல கதைகள் நடந்த இடங்களையும், அங்குள்ள சூழ்நிலைகளையும் நேரிலே அறிந்துகொள்ளும் வாய்ப்பினால் என் அநுபவங்கள் அகலித்துள்ளன. அத்துடன் புலம்பெயர்ந்த தமிழ்ப் படைப் பாளிகளுடைய பொதுவான பிரச்சினைகளிலே யதார்த்தமான அறிவும் எனக்கு உண்டு.
வரலாறு பற்றிப் பேசும் பொழுது கிறிஸ்தவ சகாப்தத் தினை வைத்துக் காலத்தைக் குறிப்பது மரபாகிவிட்டது. கி.மு, கி.பி. என்கிற வழக்கினை நீங்கள் அறிவீர்கள். ஈழத் தமிழ் இலக்கிய முயற்சிகள் பற்றிய பார்வையும் விமர்சனமும் பிறிதொரு வகையான காலவரையறையை வேண்டி நிற்கின்றது. அதனை வசதியாக அ.மு. அ.பி. எனக் குறிக்கலாம் என நான் வேடிக்கையாகச் சொல்வதுண்டு.
இதன் விரிவாக்கத்தைப் பார்ப்போம். அடிக்கு முன், அடிக்குப் பின் என இதனை விரித்துக் கொள்ளவும். அடி

Page 21
பனிக்குள் நெருப்பு 38
என்பது 1983ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலே நடந்த இன சங்காரத்தினைக் குறிக்கும். இந்த இனசங்காரம் இலங்கையில் தமிழர்களுடைய இருப்பினையும் உரிமையையும் அழித்து விடவும், சிங்கள இனத்தின் மேலாதிக்கத்தினை முழுமை யாக நிலைநாட்டிடவும் இலங்கை அரசு தொடுத்து முடித்த பயங்கர வன்முறை முயற்சி என்பதை இன்றைக்குச் சர்வ தேசிய சமூகமும் ஏற்றுக் கொண்டுள்ளது.
அந்த இனசங்காரத்தின்போது இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் தங்களுடைய வாழ்விடத்திலிருந்தும் வாழ் வியலிலிருந்தும் சடுதியாகப் பிடுங்கி எறியப்பட்டார்கள்.
இதற்கு முன்னர் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று அந்நிய நாடுகளிலே வாழவில்லையா?’ என்று நீங்கள் கேட்கலாம். சென்றார்கள்; குடியேறினார்கள். உண்மை. அடிக்கு முன்னர் நடந்த புலப்பெயர்வுக்கும், பின்னர் நடந்த புலப்பெயர்வுக்கும், பாரிய வேறுபாடு உண்டு.
முன்னர் சென்றவர்கள் தமது வாழ்க்கையின் பொருள் வசதிகளைப் பெருக்கிக்கொள்ளச் சுயவிருப்பின் பேரிலே பிறந்தநாட்டிலிருந்து குடியகன்று சென்றார்கள். புதிய நாட் டிற்கு முறைப்படியான கடவுச்சீட்டும் ‘விசாவும் பெற்றுச் சென்று குடியேறினார்கள். ஆங்கிலம் தொழில் மொழியாகப் பயிலப்படும் இங்கிலாந்து, கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளிலே மருத்துவர்களாகவும், பொறியலாளராகவும், கணக்காளர்களாகவும் அவர்கள் குடியேறினார்கள். ஆங்கில மொழி மூலம் அவ்வத்துறைகளிலே அவர்கள் பட்டம் பெற்ற வர்கள். தங்களுடைய பிள்ளைகளுக்கு வசதியான - வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க விரும்பினார்கள். அவர்களுக்குத் தமிழ் அடையாளம் ஒரு பொருட்டல்ல. அவர்கள் சுயநலத்துடன் அவ்வாறு நடந்துகொண்டார்கள் எனக் கொள்ளினும் பொருந்தும். ஆனால், அடியின்போது, இனசங்காரத்தின்போது, இலட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்விடத்திலிருந்து பிடுங்கி எறியப்பட்டார்கள். சொந்த நாட்டிலேயே ஏதிலிகளாக - அநாதைகளாக - பரிதவித் தார்கள். இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் வாழ்வதற்கான உத்தரவாதமே இல்லாமற் போயிற்று. உயிரைப் பாதுகாப்

39 எஸ். பொ.
பதுவே இலக்கு! இவர்களிலே அநேகர் படித்துப் பட்டம் பெற்றவர்கள் அல்லர். உயிரைக் காப்பாற்றுவதற்காக எந்த நாடாயினும் பரவாயில்லை, வாழ ஒரு புகலிடம் கிடைத்தால் போதும் என்று ஓடியவர்கள். தமிழ் நேசிப்புக்காகவும், தமிழ் அடையாளத்தினைப் பேண வேண்டுமென்று நினைத்ததற் காகவும் வாழும் உரிமையும் - மனித உரிமைகளும் - மறுக்கப்பட்டவர்கள். ஆயிரக்கணக்கானவர்களல்ல, இலட்சங் களுக்கும் அதிகமானோர் உயிரைப் பாதுகாப்பதற்காக பிறந்த மண்ணையும், பாராட்டிய உறவுகளையும் துறந்து ஓடி னார்கள். முறையான கடவுச் சீட்டுகள், பயணவசதிகள் எதுவுமின்றி ஓடியவர்கள். கனவுகள் எதுவும் இல்லை. திட்டங்களில்லை. சேரிடம் எதுவென்று கூடத் தெரியாது. எத்தகைய எதிர்காலமும் வாழ்க்கையும் காத்திருக்கின்றது என்பதைக் கூட அறியமாட்டார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் அவதியும் அவசரமும். இவ்வாறு புலம்பெயர்ந்து வெள்ளைத்தோலர்களின் நாகரிகம் செழிக்கும் நாடுகளிலே புகலிடம் பெற்று வாழும் ஈழத்தமிழர்களே Tamil Diaspora என்கிற சொற்றொடரால் குறிக்கப்படுகிறார்கள். அவர்களு டைய இலக்கியப் படைப்புகளையே ‘புலம்பெயர்ந்தோர் இலக்கியம்’ என்பது குறிக்கும்.
இவ்வாறு குறிக்கப்படும் புலம்பெயர்ந்தோர் தமது புகலிட நாடுகளிலே வாழ்ந்து எழுதிய முப்பத்தொன்பது சிறுகதைகளே ‘பனியும் பனையும்’ என்கிற நூலிலே தொகுக்கப் பட்டுள்ளன. இந்நூலுக்கு முன்னுரை வழங்கியவர் சுஜாதா. அவரிடமிருந்து முன்னுரை பெறுவதற்குக் காரணமும் இருந்தது. அப்போது அவர் குமுதம் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். எனவே, புலம்பெயர்ந்தோர் இலக்கி யத்திற்கு அவர் மூலம் தமிழ்நாட்டு வாசகர்கள் மத்தியில் பரவலான அறிமுகம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். நமது எதிர்பார்ப்புப் பொய்க்கவில்லை. அவர் தாராளமாகவே உதவினார். அவர் தந்த முன்னுரையிலுள்ள சில பகுதிகளை இங்கு நினைவுபடுத்துதல் பொருந்தும்:
"அன்னிய நாட்டில் வேற்றுமுக வெறுப்புகளின் மத்தியில் இரவும் பகலும் குளிரும் மழையும் கருதாது

Page 22
பனிக்குள் நெருப்பு 40
ரெஸ்டாரண்டுகளிலும் ரயிலடிகளிலும் உழைத்து இயக்கத்துக்கும் குடும்பத்துக்கும் பணம் அனுப்பி பெரும்பாலும் தனிமையில் வாழும், அறைக்கு வந்து சேர்ந்தபின் தாய்நாட்டின் பழமரங்கள் நட்டு வைத்த தோப்புக்களை அழியவிட்டுத் தொலைதூரம் வந்ததை எண்ணி ஏக்கப்படுகிறவர்களிடம் உக்கிரமான கவிதையும் கதையும் பிறப்பதில் வியப்பில்லை. ‘பனியும் பனையும்' என்று தற்செயலாகப் பொருந்தும் தலைப்புக்கு உண்டான இரண்டு சிறுகதைகளும் சிறந்து விளங்குகின்றன. ஒன்று ஆஸ்திரேலியக் கதை. மற்றது ஜெர்மனி ஒன்று கம்ப்யூட்டர் அலுவலகத்தில் நிகழ்வது; மற்றது சிறையில்.
"ஆஸ்திரேலியாவில் கம்ப்யூட்டர் திறமை இருந்தும் பொருளாதார அனிச்சியத்தால் எப்போதும் வேலை யிலிருந்து நீக்கப்படும் அபத்திரத்தில் வாழும் தமிழன் உடன் பணிபுரியும் போத்துகீசியனின் தைரியமான கருத்துக்களையும் தாய்நாட்டு ஏக்கத்தையும் வியந்து தன் விதியை எதிர்க்காமல் ஒப்புக்கொள்ள, நண்பன் வேலை இழந்து நாடு திரும்பும்போது இவன் செய்யக்கூடிய ஒரே ஒரு தீர காரியம் கணிப்பொறித் திரையில் தன் தாய்நாட்டின் பனைமரத்தை வரைந்து பார்ப்பது தான் (சந்திரிகா ரஞ்சன் - 'பனையும்) ஜிவமுரளியின் ‘பனியும்’ என்கிற கதை தமிழ்மொழிக்கு இதுவரை பரிச்சயமில்லாத சூழ்நிலையை அறிமுகப்படுத்துகிறது. ஜெர்மனியில் ஒரு சிறை. அதில் நான்கு ஆப்பிரிக்க, ஒரு இத்தாலியக் கைதிகளுடன் ஒரு இலங்கைத் தமிழன் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்து ஐநூறு ஆண்டுகளுக்குப்பின் தாங்கள் ஜெர்மனியைக் கண்டுபிடித்ததாகக் கடுப்புடன் தொனிக்கும் இந்தக் கதை அந்த நாட்டின் நாஜி மிச்சங்கள், கருணையற்ற இன்வெறி, சமுதாய அநீதிகள் இவைகளின் எதிரொலி களை பெரும் சுற்று மதில் கொண்ட இட்லர் காலத்துச் சிறையில் உணர்கிறார்கள். நேற்றும் இன்றும் நாளையும் உருளைக்கிழங்கு உண்டு தினத்தில் இருபத்து

41 எஸ். பொ.
மூன்று மணி நேரம் சிறையில் அடைபட்டுக் கிடக் கிறார்கள். ‘நான் வீட்டுக்குப் போகவேண்டும், நைஜீரியா எனது வீடு' என்று பத்து அத்தியாயங்களில் சில தலைப்புக்களை மட்டுமே கொண்ட ஜப்பான் கடவுள், இனவெறி அகதி புத்தகம் எழுதும் ராஸ்தா போன்ற பாத்திரங்கள் கொண்டு முற்றிலும் புதிய சர்வதேசப் பரிமாணம் தமிழ்க் கதைக்குக் கிடைக்கிறது.
"இந்தத் தொகுப்பில் உள்ள தமிழர்கள் வசிக்கும் உலகம் தனியானது. இவர்களுடன் பழகும் வெள்ளைக்காரர் களுக்கு நாம் எல்லோருமே கருப்பாக இருக்கும்போது ஏன் ஒருவரை ஒருவர் கருப்பு என்று சொல்லிக் கொண்டு வரதட்சிணையை கூடுதலாகக் கேட்கிறோம் என்பது புரியவில்லை. மேல்நாட்டு வெளிப்படைக் கலாசாரத்துடன் இவர்கள் ஆழ்மனதில் யுக யுகாந்திர மாகப் பதிந்திருக்கும் அடையாளங்களின் மோதல் தொகுதியின் பல கதைகளின் உட்கருத்தாக அமைந் திருக்கிறது.
“பொதுவாகவே இந்த எழுத்தாளர்களிடம் தங்கள் வட்டார வழக்கைத் தொடர்ந்து பயன்படுத்தும் பிடி வாதம் இருக்கிறது. இதனால் சில சமயங்களில் கதைகள் மற்ற நாட்டுத் தமிழர்களுக்குப் புரிவதில் சிரமமிருந்து அவைகளின் சர்வதேசத் தன்மையை இழந்துவிடு கின்றன. வட்டார வழக்கு கதைக்கு ஒரு நம்பத்தக்க நிலையை அளிக்க மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பது என் கருத்து"
நண்பர் சுஜாதாவின் குமுத'த்தனமான கேள்விக்குப் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் படைப்பவர்கள் சார்பாக நான் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
புலம்பெயர்ந்தோர் மத்தியில் முகிழ்ந்துள்ள பெரும் பாலான கதைஞர்கள் வெகுஜனப் பத்திரிகைகள் எனப் பெயர் பண்ணும் ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பத்திரிகை களின் வாசகர்களைப் பிரிதி செய்யவேண்டும் என்கிற எண்ணத்தில் எழுதுவதில்லை. அவர்களுள் பெரும்பான்மை

Page 23
பனிக்குள் நெருப்பு 42
யானவர்கள் முறையாகத் தமிழ் கற்றவர்களுமல்லர். வெகு ஜனப் பத்திரிகைகளிலே எழுத்துப் பயிற்சி பெற்றவர்களு மல்லர். அவர்கள் மண்ணின் மைந்தர்கள் பேசிய தமிழையே அறிந்தவர்கள். தங்களுடைய சுகதுக்கங்களையும், உணர்ச்சி களையும் அந்த மொழியிலேதான் பகிர்ந்து கொண்டவர்கள். உந்நதமான உறவுகளையும், அவர்கள் வழிவழியாக அநுப விக்கும் சடங்கு சம்பிரதாயங்களையும் அந்தப் பேச்சு மொழி யிலேதான் அநுபவித்தவர்கள். எனவே, அந்த மொழியே அவர்கள் படைப்பிலக்கியத்திற்கு ஏற்ற மொழியாகவும் கை தந்து உதவுகின்றது.
வாசகர் விரும்பக்கூடிய மொழிநடை என்று கற்பித்தலும் காமஞ் செப்புதலும் வியாபாரம் சார்ந்தது. கலை - இலக்கியப் படைப்புகளை வியாபாரத்துடன் இணைத்துப் பார்த்தல் புலம்பெயர்ந்தோருக்கு அந்நியமானதாகவே இருக்கின்றது. அரிதாரம் பூசாத இயல்பு! அல்லையேல் அவர்களுடைய எழுத்து சத்தியத்தைத் தொலைத்துவிடும். அவர்களுக்கு இலக்கியப் படைப்பு என்பது நெஞ்சப் பாரங்களை, குமுறல் களை அன்றேல் நெஞ்சை அடைத்து அவஸ்தைப்படுத்தும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஓர் உபாயமாகவும் ஊழிய மாகவும் அமைகின்றது. அரிதாரம், புனைவு, ஜோடனை ஆகிய அலங்காரங்கள் எதுவும் அவன் எழுத்துக்குத் தேவை யில்லை. கோடம்பாக்கத்தின் சினிமாவுக்குள் நுழைந்து கோடி கோடியாகச் சம்பாதிக்கும் கனவு அவனிடம் இல்லை. அந்தக் கனவுகளின் பலிதத்திற்கு இட்டுச் செல்லும் வழி களுள் ஒன்றாக அவன் எழுத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை. தன் இருப்பினைச் சொல்லவும், தன் அடையாளத்தினை நாளைய சந்ததிக்கு எடுத்துச் செல்லவும், தன் எழுத்துப் பயன்படாதா என்கிற ஏக்கம் அவன் எழுத்துப் பணியிலே புரையோடிக் கிடக்கின்றது. நாளைய கெளரவம் பற்றிய ஏக்கம்! இவையும் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தைத் தனி வகையாக வேறுபடுத்திக் காட்ட உதவுகின்றன என நான் நம்புகின்றேன்.

43 எஸ். பொ.
1ܗܳܝܟܘܗܶܢܘA ܣ2 .6
தத்துவங்கள் பேசுவது அலுப்புத் தருவது. எடுத்துக் காட்டு சுலபமான விளக்கத்திற்கு உதவும். ஒரு மாமாங்க காலத்திற்கு முன்னர் இ. தியாகலிங்கம் எழுதிய 'அழிவின் அழைப்பிதழ்’ என்கிற நாவலைச் சென்னையில் பிரசுரித்தேன். புலம்பெயர்ந்தோர் நாவலாகத் தமிழ்நாட்டில் முதலில் அறிமுகமாகிய நாவல் அதுதான். வெகுஜன ஊடகங்களிலே அறியப்பட்ட நண்பர் மாலனிடம் அதற்கான முன்னுரை ஒன்றைப் பெற்றுப் பிரசுரித்திருந்தேன். அவர் அதிலே எழுதிய ஒரு பகுதி இங்கு நினைவுகூரத்தக்கது:
"புலம் பெயர்தல், தட்பவெப்பம், புவியியல், மொழி, அரசியல், கலாசாரம் ஆகிய எல்லாவற்றிலும் முற்றிலு மாக மாறிப்போன ஒரிடத்தில், வாழ்க்கையை மறு படியும் ஆரம்பத்திலிருந்து துவங்கல்; போர் ஏற்படுத்திய ஆறாக் காயங்கள்; புத்திரசோகம்; பணம், படிப்பு, உறவு, எல்லாமே போர்ச்சூழலில், புலம்பெயர்தலில் அர்த்தமற்றுப் போதல்; அல்லது புதிய அர்த்தங்களைப் பெறுதல்; புதிய உறவுகள், அவற்றினூடான முரண் பாடுகள் இவையெல்லாம் இரண்டு உலகப் போர் களைக் கண்ட ஐரோப்பாவின் சிந்தனைகளைப் பெரிதும் மாற்றியமைத்தது. "இந்த நாவலும் ஐரோப்பிய அனுபவங்களைக் கொண்டதுதான். ஐரோப்பிய அனுபவங்களைத் தமிழ்ச்சிந்தனை மரபில் இருந்து விடுபடமுடியாத இளைஞன் ஒருவன் எதிர்கொள்ளும்போது ஏற்படும் சிக்கல்களைச் சித்திரிக்கும் நாவல்.” மாலன் "அழிவின் அழைப்பிதழ்’ நாவலை நன்கு அநுபவித்தே மேற்கண்டவாறு எழுதினார்.
புலம்பெயர்ந்தோருடைய நாவல்கள் சில, மாத்தளை சோமுவின் நாவல் உட்பட, அதற்கு முன்னர் வெளிவந்த போதிலும், அவை இலங்கையைக் கதைக்களமாகக் கொண்டவை. புலம்பெயர்ந்தோர் புகலிடத்தில் வாழும் தனிமையையும், அதனால் ஏற்படும் அவலங்களையும் சமூக

Page 24
பனிக்குள் நெருப்பு 44
வியற் படுதாவில் முதலில் சித்திரித்த நாவல் என்கிற பெருமை "அழிவின் அழைப்பிதழ்’ நாவலுக்கே உண்டு. இ. தியாக லிங்கம் நோர்வேயில் வாழ்கின்றார்.
தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலே எய்ட்ஸ் நோய் விழிப் புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகப் புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என்கிற விளம்பரம் மூலம் பரபரப்பு உண்டாக்கியது நினைவுக்கு வருகின்றது. இந்தப் பரபரப்புகளுக்கு ஒரு தசாப்தத்திற்கு முன்னாடியே எய்ட்ஸ் நோய் பற்றிய யதார்த்தங்களைப் பேசிய முதல் நாவல் என்கிற பெருமையும் அழிவின் அழைப்பிதழுக்கு உண்டு. எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பிரசாரகர்கள் எவ்வளவு பாமரத் தனத்துடன் செயற்படுகிறார்கள் என்பதற்கு அவர்கள் "அழிவின் அழைப்பிதழ்’ பற்றிய அறியாமையுடன் செயற் பட்டமை தெளிவாக நிரூபணஞ் செய்கின்றது. இவர்கள் கூலிக்கு மாரடியர். ஆனால், தியாகலிங்கம் சமூகப் பொறுப் புணர்ச்சியுள்ள எழுத்தாளன். புலம்பெயர்ந்தோர் மத்தியி லுள்ள எழுத்தாளர் சமூகப் பொறுப்புணர்ந்து எழுது கிறார்கள் என்பதற்கு வேறு சான்று தேவையில்லை. பின்னர் புத்தாயிரத்தின் விடியலிலே இ. தியாகலிங்கம் எழுதிய நாளை’ என்கிற நாவலும் தமிழ்நாட்டிலே பிரசுரமாயிற்று. அது நோர்வே நாட்டிலே வாழும் புலம்பெயர்ந்த தமிழர் களுடைய இளந்தலைமுறையினர் எதிர்நோக்கும் மனரணங் களையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுகின்றது.
சமூகநீதியையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் ஒரு சமுதாயத்தை உருவாக்கியுள்ள நாடுகளிலே முதன்மை யானது நோர்வே நாடு என்று போற்றப்படுகின்றது. அப்படி இருந்தும் உள்ளி (பூண்டு) மணத்திற்கும் கறுப்பு நிறத்துக்கும் பூடகமான உறவு கற்பித்து வெள்ளைக்காரச் சிறார்கள் எவ்வாறு புலம் பெயர்ந்துள்ள ஈழத்துச் சிறார்களை நோக டிக்கச் செய்கிறார்கள் என்பதை நாளை’ நுட்பமாகச் சித்தி ரிக்கின்றது. ஈழச் சிறுவர்களை 'உள்ளி மணம் மணப்பதாக வெள்ளைக்காரச் சிறுவர்கள் கேலி செய்வதாகத் தரப்படும் தகவல்கள் நமது புருவங்களை உயர்த்தச் செய்கின்றன.
இத்தகைய நாவல்களுக்குத் தமிழ்நாட்டில் அதிகமான விளம்பரங்கள் கிடைக்காதது தமிழுக்கு நஷ்டமே. கனதியான

45 எஸ். பொ.
இலக்கியத்தின் பரம்பலுக்கு ஊக்குவிப்பதாகப் பறைசாற்றும் தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் சில, மறைமுகமாகப் புலி எதிர்ப்புப் பிரசாரம் கொண்டதாகப் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் அமைதல் வேண்டுமென ஊக்கப்படுத்துவதாகவும் தோன்றுகின்றது. இந்த அநுமானம் தனிப்பட்ட அனுபவத் தையும் உள்ளடக்கியது.
பாரீஸ் நகருக்கு நான் இரண்டாவது தடவை சென் றிருந்தபோது, என்னைச் சந்தித்து உரையாடுவதற்கு ஒர் இளைஞர் தீவிர அக்கறை காட்டினார். நான் தங்கியிருந்தது கவிஞர் கலாமோகன் வீட்டிலே. ‘அடிப்படை நாகரிகத் தினை மறந்து, உறவினர்கள் வருவாயிலே ஒட்டுண்ணியாக வாழும் இவர்களை நான் வீட்டிலே அனுமதிப்பதில்லை’ என்று கலாமோகன் கறாராகச் சொல்லிவிட்டார்.
கலாமோகனின் அபிப்பிராயங்கள் அவருடையவை. எனவே, அந்த இளைஞரை நான் வெளியிலே ஒரு 'pub இல் சந்தித்தேன். அவர் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதிலளித்தேன். எது எவ்வாறிருப்பினும், கருத்து முரண்பாடுகளை ஏற்று அவற்றின் மத்தியிலே நமது ஊழியத்தினை முன்னெடுத்தல் வேண்டும் என்கிற கொள் கைக்குப் பழக்கப்பட்டவன் நான். அறிவுச் சுதந்திரத்திற்கு நான் அளிக்கும் மரியாதையாகத்தான் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. ஆனால், இரண்டு ஆண்டுகள் கழித்து என்னுடன் நடத்திய உரையாடலை 'வானத்திலே சென்ற பிசாசை ஏணிவைத்துப் பிடித்ததாகக் கதை பண்ணிப் பிரசுரித்தி ருந்தார். அதனை நான் மனோவியாதிக்காரனின் செயலென்று வாளாவிருந்து விட்டேன். அதே நண்பர், உண்மைக்குப் புறம்பான தகவல்களின் அடிப்படையில் ‘புலி எதிர்ப்பு நிலைப்பாடுடன் எழுதிய நாவல் அற்புதம் என்று, புலி எதிர்ப்பு இயக்கத்தினர் மிகைப்படு விளம்பரங்கள் கொடுத்துத் தமிழ்நாட்டிலே பிரபலப்படுத்தினார்கள்.
இதனை விரிவாகச் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. புலம்பெயர்ந்தோருடைய இலக்கியங்கள் உரிய முறையிலே தமிழ்நாட்டிலுள்ள வாசகர்களைச் சென்றடைவ தில்லை. இதனால், புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தை உரியமுறையிலே பெற்றுக் கொள்வதற்கு தமிழ்நாட்டு வாச

Page 25
பனிக்குள் நெருப்பு 46
கர்கள் சிரமமான தேடல்களை நடத்த வேண்டியிருக்கிறது. இது மிகச் சோகமான, வருத்தப்பட வேண்டிய ஒரு சூழ் நிலையாகும்.
Z. A,၅ဂ်ဇာပ- (éမှwA)ဍ)&J
புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில், இரண்டு அம்ஸங்கள் தூக்கலாக இடம்பெறுவதை நீங்கள் அவதானிக்கலாம். ஒன்று, Nostagia என்று சொல்வாார்களே அது! பிறந்தநாடு, களிலிருந்து விடுபடமுடியாத ஒருவகை ஏக்கத்தை Nostagia என நாம் விளங்கிக் கொள்ளலாம். நான் பிறந்த மண்ணைப் பற்றி நினைக்கும்பொழுது சில வாசனைகள் என் மூக்கு நுனியில் வந்து இன்றும் சுகந்தருவதான ஒருவகை மயல்! நான் மிகவும் அநுபவித்து மகிழ்ந்தது மல்லிகை வாசனை. நான் இப்பொழுது வசிக்கும் அவுஸ்ரேலியாவில், மல்லிகைப் பூக்கள் கிடைப்பது அபூர்வம். சிறுபருவத்திலே, நான் வாழ்ந்த வீட்டின் முன்னால் இருந்த மல்லிகைப் பந்தலிலே விடியற் காலை உதிர்ந்து கிடக்கும் கொள்ளையான மல்லிகை மலர் களிலிருந்து வீசிய நறுமணத்தை நினைவு மண்டலங்களுக்குக் கொண்டு வந்து மகிழ்தல். அந்த நினைவுகள்கூட மல்லிகை வாசனை நிரம்பியவையே!
நனவிடை தோய்தல்’ என்னும் நூலை நான் 1990இல் எழுதினேன். புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் இந்த வகை இலக்கியமே ஆரம்பத்தில் தோன்றும். அது ஐம்பது ஆண்டு களுக்கு முன்னர் நான் அநுபவித்து மகிழ்ந்த யாழ்ப்பாணம். அரை நூற்றாண்டுக்கு முன்னர், சிங்கள ராணுவப் படை யெடுப்பினால் யுத்த பூமியாக மாற்றப்படுவதற்கு முன்னர், அமைதி சூழ்ந்த நிலையில், யாழ்ப்பாண மக்கள் அத்தனை பேரும் உழைப்பாளிகளாக இன்புற்ற காலத்தில், உறவும், விருந்தும், மகிழ்வும் எனச் சிரித்து மகிழ்ந்த அந்த யாழ்ப் பாணம் எப்படி இருந்தது என்பது இன்றைய தலைமுறை யினருக்குத் தெரியவே தெரியாது. அதை திரும்பவும் நினைவு மண்டலத்துக்குக் கொண்டு வந்து, நான் அநுபவித்து மகிழ்ந்ததை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டேன். அதனை எழுதியமை மிக இனிது எழுதும்பொழுதே சுகாநுபவத்தினைக்

47 எஸ். பொ.
கொட்டித் தந்த படைப்பு நனவிடை தோய்தல். அஃது என் எழுத்துக்களில் classic வகை என்று விமர்சகர்கள் பலர் பாராட்டியும் உள்ளனர். இருப்பினும், அது புலம்பெயர் இலக்கியவகையின் ஆரம்ப கட்டக் குணங்குறிகளை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தியது என்பதையும் நான் உணர்வேன். இந்தக் கட்டத்தில் இன்னொன்றையும் குறிப்பிடுதல் பொருந்தும். நனவிடை தோய்தலைக் கதைத் தொகுதி என நினைத்தவர்களும் உண்டு. அது "creative essay என்கிற புதிய இலக்கிய வடிவத்தைச் சேர்ந்தது. இதனை என் படைப்புச் சாமர்த்தியமாக நான் குறிப்பிடவில்லை. புதியன படைக்கும் முனைப்புகள் புதிய இலக்கிய வடிவங்களைத் தேடும். இது தவிர்க்க முடியாதது; தேவையானது. வளர்ச்சியின் அடை யாளம். இத்தகைய புதுசுகள் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் செறிந்து வருதல் ஆரோக்கியமானது.
8. ლსoრეობ- გოია(yოო8ოA
புலம்பெயர் இலக்கியத்தின் தரிசனங்கள், பழையன வற்றை இரை மீட்டுதலுடன் நின்றுவிட மாட்டாது. அத்துடன், புதிய, நிகழ்காலப் பிரச்சனைகளும், அவற்றுக்கு அவர்கள் எவ்வாறு எதிர்வினை செய்கிறார்கள் என்பனவும் அவர் களுடைய படைப்பில் சித்திரமாகும். புலம்பெயர்ந்தோர் வாழ்க்கையில் ஆண்டுதோறும் புதுப்புதுப் பிரச்சினைகள் தலைதூக்குகின்றன. நிலையான - அங்கீகரிக்கப்பட்ட விழுமி யங்கள் கொண்டதாக - அவர்கள் வாழ்க்கை அமைவதற்கு வழியுமில்லை. புலம்பெயர்ந்தோர் வாழ்க்கையிலே மூன்று அடுக்கினர் அவதிப்பட்டு அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ளுதல் நமது புரிதலுக்கு உதவும்.
பழைய தலைமுறையினர் ஓர் அடுக்கு. பனைவளர் கிராமங்களிலே வெயிலில் குளித்து, உழைத்துப் பாடுபட்டு மகிழ்ந்தவர்கள். கடின உழைப்பினாலும், சிக்கனம் மிக்கக் கட்டுப்பாட்டு வாழ்க்கையினாலும், சேமித்த பொருள் வளத்தின்ாலும் பிள்ளைகளைப் படிப்பாளிகளாகவும் பணம் சம்பாதிக்கும் வல்லமை உள்ளவர்களாகவும் மாற்றுவதிலே

Page 26
பனிக்குள் நெருப்பு 48
தங்களையே தேய்த்துக் கொண்டவர்கள். இறுதிக் காலத்திலே பிள்ளைகளின் பராமரிப்பினாலே நிம்மதியாக வாழலாம் என்கிற கனவுகளை நெஞ்செல்லாம் சுமந்தவர்கள். பேரப் பிள்ளைகளின் வளர்ச்சிகளைக் கண்குளிரக் கண்டு ஆநந்திக் கலாம் என்கிற நம்பிக்கைகளைச் சுமந்தவர்கள். ஆனால் மேனாட்டு வாழ்க்கை முறையினால், அவர்கள் வேண்டா தவர்களாக ஒதுக்கப்படுகிறார்கள். கிடைக்கும் ஓய்வூதியத்தைக் கொண்டு முதியோர் இல்லங்களிலே வாழ்பவர்களும் இருக்கிறார்கள். தங்கள் இறுதிக் காலம் இத்தகைய அவலங்கள் நிறைந்ததாக இருக்கும் என்று கற்பனையிலேகூட எண்ணிப் பார்க்காதவர்கள். இந்த அவலமும் சோகமும் அலாதியான சுருதியை எழுப்பும். பிறந்த மண்ணின் நாகரிகங்களை நெஞ்சிலே சுமந்து, தெரியாத்தனமாகக் குடும்ப விவகாரங் களிலே உரிமையுடன் தலையிட்டு, மூக்குடைபட்டு, அந்த அவமானங்களை மூடிமறைத்து வாழும் அவர்களுடைய கண்ணிர் உலகம் தமிழிலே புதிய பாடுபொருளே. ஆசி. கந்தராசாவின் 'பாவனை பேசலன்றி’ என்கிற சிறுகதை இந்த அவலங்களை அற்புதமாகச் சித்திரிக்கின்றன. இத்தகைய வாழ்க்கைக் கோலங்களைப் புலம்பெயர்ந்தோர் இலக்கி யத்தில் மட்டுமே தரிசித்தல் சாலும்.
அடுத்தது, புலப்பெயர்விலே இலையுதிர் காலத்துச் சருகாய் அலைக்கழிக்கப்பட்டு, நெடிதுயர்ந்த இன்னல்களின் மத்தியிலே புகலிடம் ஒன்றினைத் தேடிக்கொண்ட தலை முறை. அவர்கள் அந்தப் புகலிடத்தைத் தேடிக்கொள்ளப் பட்டபாடுகளும் துயர்களும், சிலவேளைகளிலே, மாயா ஜாலக் கதைகளிலும் பார்க்கத் திகில் நிறைந்தன. புகலிடத் தேடலின் பயணத்திற்குப் பயன்பட்ட பணம் அனைத்தும் கடன்களே. அந்தக் கடன்களை அடைப்பதற்குப் புகலிடத்திலே ஒய்வு ஒழிவின்றி இரண்டு shifts வேலை பார்த்த அவலங்கள். அவர்கள் படித்த படிப்புக்குக் கொஞ்சமும் பொருந்தாத உருளைக்கிழங்கு உரித்தல், வெங்காயம் நறுக்குதல், கோப்பை களைக் கழுவித் துடைத்தல் முதலிய பணிகளை, முன்னர் அநுபவித்தறியாத கடுங்குளிரிலே உழைத்துச் சம்பாதித்தல். கொழும்பில் வந்து எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் உறவு களுடன் ஆரச்சோர தொலைபேசியிலே பேசமுடியாத வறுமை

49 எஸ். பொ.
நிலை, மனிதர்கள் நடமாடும் உலகத்தில், தன்னைச் சுற்றிலும் தனிமை வளையத்தினை ஏற்படுத்தி வாழும் கொடுமைகள். இந்த இடைக்காலத் தடைகளைத் தாண்டி, ஊரில் விட்டு வந்த உறவுகளை வரவழைத்து நெருப்புப் பெட்டி அளவு அறைகளிலே இல்வாழ்வைத் தொடரும் இன்னொரு கட்டம்.
பிறகு மெதுமெதுவாகப் பழைய, சுத்த சுயம்புவான, யாழ்ப்பாண மண்ணின் சுயநலப் புத்திகள் மதர்த்தெழும் பொழுது வீடு வாங்குதல், கார் வாங்குதல் போன்ற போட்டி பொறாமைகள். கலை - இலக்கிய சேவைகளும், இந்துமத அநுட்டான சீலங்களுங்கூட சமூக அந்தஸ்தினைப் பெறும் எலியோட்டமாகத் தரம் தாழ்ந்து போதல். இவற்றின் மத்தி யிலே புதிய வசதிகளையும், புதிய சூழலையும் அநுபவித்து வாழவேண்டுமென்கிற முரண்பாடான உணர்வுகளும் வலுப்பெற்று விடுகின்றன. இவையெல்லாம் நிரந்தரமற்ற, ஆனாலும் அநுபவங்களாகிவிட்ட வாழ்க்கைக் கோலங்கள்! இவை அனைத்துமே இலக்கியம் படைத்தலுக்கான புதிய பாடுபொருள்கள் என்பதையும் நாம் மறத்தலாகாது.
புலம்பெயர்ந்தோர்களுடைய வாழ்க்கைக் கோலங்கள் சடுதி சடுதியாக மாறும் தன்மைகளை சி.பி. அரவிந்தன் தொகுத்துள்ள பாரீஸ் கதைகள் என்ற ஒரே கதைத் தொகுதி யிலே வாசித்துணரலாம். அத்தொகுதியில் பதினைந்து சிறுகதைகள் உள. 1988இல் எழுதப்பட்ட ‘சுதந்திர அடிமை’ என்கிற கதையிலிருந்து, 2002இல் எழுதப்பட்ட ‘விடுமுறைகள்’ வரை கால ஓட்டத்திலே பிரான்சில் வாழும் புலம் பெயர்ந் தோர் வாழ்க்கையிலே ஏற்படும் கோல மாற்றங்களின் சுவையான வாசிப்பு அநுபவமாக அஃது அமைகின்றது.
மூன்றாவது தட்டினர் புகலிடம் பெற்ற நாட்டின் சூழலிலே கல்வி கற்றுத் தலையெடுக்கும் புதிய தலைமுறை யினர். அவர்கள் மிகச் சிறுவயதில் அங்கு வந்தவர்கள்; அன்றேல் அங்கேயே பிறந்தவர்கள். அவர்கள் புகலிடத்தில் வழங்கும் தொழில் மொழியிலேயே கல்வி கற்கின்றார்கள். கல்விச் சூழலிலே பாராட்டப்படும் கலாசார விழுமியங்களும், வாழ்க்கை முறைகளும் அவர்களின் வாழ்க்கைப் பார்வை களையும் போக்குகளையும் மாற்றி அமைக்கவே செய்யும்.

Page 27
  

Page 28
பனிக்குள் நெருப்பு 52
நமக்கு மகிழ்ச்சியைத்தானே தருகின்றது? ஏன் வடிவேல் இப்பொழுது ‘கமெடி உலகில் வெளுத்து வாங்கவில்லையா? எஸ். வி. சேகர் கூட ஒவ்வொரு கிழமையும், சபா நாடகத்திலே, துணுக்குத் தோரணங்கள் கட்டி மக்களை மகிழ்விப்பதாகத் தானே திருப்தி அடைகின்றார்? எத்தனை கானாப் பாட்டு களையும், குத்துப் பாட்டுகளையும் ஆட்டங்களையும் சினிமாக் காரர் சலிக்காமல் வடிவமைத்துத் தந்து கொண்டிருக் கிறார்கள்! ஏன் என்று அவர்களைக் கேளுங்கள். எங்களை மகிழ்விக்கத்தான் என்று கற்பூரம் அவித்துச் சத்தியஞ் செய்யத் தயாராக இருக்கிறார்கள். கோடிக்கணக்கான பணத்திலே புரண்டு திளைக்கும் அவர்களுடன் போட்டி போட்டு இலக்கியகாரர்களினால் பெருந்தொகையான மக்களை மகிழ்விக்க முடியுமா? மகிழ்ச்சிக்கு அப்பாற்பட்ட பணியும் பயனும் இலக்கியத்திற்கு உண்டு. அதை மகிழ்ச்சி தரும் சாதனம் என்று கொச்சைப்படுத்துதல் சரியல்ல! இலக்கி யத்தின் வேர்ச்சொல்லைக் கண்டுபிடித்து, அதற்கு இலக் கணம் சொல்வதெல்லாம் பல்கலைக்கழகங்களின் தமிழ்த் துறையினர் ஏகபோகமாகவும் பொழுதுபோக்காகவும் தொடர்ந்து வாழட்டும். உஷ், அவர்களுடைய நீள்துயிலைக் கெடுத்துவிடாதீர்கள்!
இலக்கியம் பற்றிப் புதிய புரிதலும் பார்வையும் நமக்குத் தேவை. இலக்கியம் என்பது மனித மனங்களிலே நெகிழ்ச்சியை ஏற்படுத்துதல் வேண்டும் என்பது என் அநுபவம்.
உங்களின் உடம்பிலும், உள்ளத்திலும், ஒரு ரசாயன மாற்றத்தை இலக்கியம் ஏற்படுத்துதல் வேண்டும்.
சிலசமயம், ஒரு இலக்கியப் படைப்பை வாசித்தவுடன், கண்களில் நீர் உறைநிலை அடைந்ததுபோல, கீழே விழாமல் தேங்கி நிற்பதான ஓர் அநுபவம் ஏற்படுகின்றதல்லவா? இஃது ஒருவகையான சிலிர்ப்பு நிலை என்பது உண்மை. அதனை மகிழ்ச்சி நிலை என இனங்காணுதல் சரியான அணுகுமுறை அன்று!
இயேசு சபையின் இளம் துறவியான எழில் தந்துள்ள ‘உள்மை’ என்கிற கவிதைத் தொகுதியிலே ஒரு கவிதை யுண்டு. கேளுங்கள்:

53 எஸ். பொ.
ഒ/ിബ് கடற்காற்று
2A/60 say சுமந்து வருவதில்லை கடலில் காவியமான 67/5/467 பிஞ்சுகளின் இரத்த வாடையையும் அவர்களின் விடுதலைக்கான த7கத்தையும் சுமந்து வருகிறது.
இந்தக் கவிதையை வாசித்தபோது நான் கண்ணிர் விட்டேன். ஏன்? காரணம் உண்டு என்னுடைய மகன் - என் இஷ்டன், என் நடுவிலன் - அப்படித்தான் இறந்தான்! கடலிலே சங்கமித்த அவன் உடல்கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும், அந்தக் கண்ணிரின் ஊடே இனமானப் போரிலே நாம் ஈடுபட்டுள்ளோம் என்கிற உணர்ச்சிச் சிலிர்ப்பும் ஏற்படுகின்றது.
எனவே, நீங்கள் இதனைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். இலக்கியம் கேளிக்கைக்கான ஒரு மாற்றீடு அல்ல. போதைப் பயணத்திற்குத் துணைநிற்கும் வஸ்துவல்ல. நெகிழ்ச்சியின் ஊற்று இலக்கியம். சிலிர்ப்பு, பக்தி, பரவசம் என அதனைப் பலபடச் சுவைஞன் உணர்ந்து கொள்ளலாம். இவை சுவைஞன் என்கிற சாதகனின் பக்குவத்தைப் பொறுத்தது.
பக்குவம் என்பது பலவற்றால் அமைவது. பாராட்டும் விழுமியங்கள், பட்டறிவும் படிப்பறிவும் இணைந்த ஞானம், அன்பு - தயை - தாராளம் என்கிற உணர்ச்சிகள் என இந்தப் பலவற்றின் பட்டியல் நீளமானது.
இந்தக் கட்டத்திலே நமது ரஸனையை நெறிப்படுத்த வல்ல சக்திவாய்ந்த ஊடகங்கள் என்ன செய்கின்றன? தமிழ் நாட்டிலிருந்து சுமார் இருபது மைல் அகலமுள்ள கடலால் பிரிக்கப்பட்டிருக்கும் அக்கரையில் வாழும் தமிழர்கள் - ஈழத்தமிழர்கள் - ஏன் போராடுகிறார்கள் என்கிற

Page 29
பனிக்குள் நெருப்பு 54
உண்மையை மக்களுக்குச் சொல்வதிலே இந்த ஊடகங் களுக்கு அக்கறையில்லை. ‘போராடும் புலிகள்’ ‘பயங்கர வாதிகளான புலிகள்’ என்கிற ஏக சொல்லாடல்களிலே இந்த அக்கறை தூக்கி எறியப்படுகிறது. பேட்டை ரவுடி களுடைய தாதாயிஸத்திலே, அவர்களுடைய அமானுஷ்ய சண்டித்தனங்களிலே எங்களை ஒன்ற வைப்பதின் மூலம் புறநானூறு போற்றிய மறத்தை மீட்டுத் தருவதாக விரல் சூப்பும் கோடம்பாக்கத்து பெரிய திரையினர் புரியும் சாதனைகளை மெச்சுவதற்குப் புதிதாகத்தான் தமிழில் வார்த்தைகள் உருவாகவேண்டும். இதுபற்றிப் பின்னர் கூறுவேன்.
பெரும் பணம் பார்க்கும் அவசரத்திலே, கலாசாரச் சீர்கேடுகளுக்குப் பெரிய திரையினரும், சின்னத்திரையினரும் போட்டி போட்டு விரைவு விசை கொடுக்கும் பரிதாபச் சூழலிலே, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட தமிழ் இலக்கியச் செழுமைகளை முன்னெடுத்துச் செல்வதற்குப் புலம்பெயர்ந்தோருடைய தமிழிலக்கிய வெற்றிகளை நாடவேண்டிய ஒருவித அகதி நிலை தமிழுக்கு ஏற்பட்டுள் ளதோ என எண்ணவுந் தோன்றுகின்றது.
புலம்பெயர்ந்தோருடைய இலக்கியத்தினைப் பரந்த தமிழ் வாசகர்கள் மத்தியிலே பரம்பச் செய்தலைக் கடந்த ஒரு மாமாங்க காலத்திற்கு மேலாக, என்னுடைய தமிழ் ஊழியத் திலே தலைமைக் கூறாகக் கடைப்பிடிக்கின்றேன். இதனைத் தமிழ்நாட்டில் வாழும் தீவிர இலக்கியவான்கள் பலரும் அறிவர். புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்பது, ஈழத்தில் விளைந்த எழுத்துப் படைப்புச் சாங்கங்களின் நீட்சியும் என்பதை நாம் மறந்துவிடலாகாது. பதியத்தின் செழுமை என்கிற கூறுதான் அது! இதன் காரணமாகத்தான் ஈழத்தின் என் தலைமுறை எழுத்து வல்லபங்களை மித்ரவின் சார்பாக நூல்களாக வெளியிட்டேன். அதன் தொடராகவும் நீட்சியாகவும் புலம்பெயர்ந்தோரின் படைப்புகளையும் பிரசித்தப்படுத்தினேன்.

55 எஸ். பொ.
10. 9d9a22నn
தமிழ்நாட்டு வாசகர்களுடைய கவனத்தை புலம் பெயர்ந்தோரின் இலக்கியப் படைப்புகளின்பால் வென்றெ டுப்பதற்கு தமிழ்நாட்டின் சஞ்சிகைகளின் துணையையும் நாடி னேன். கோமல்சாமிநாதன் ஈழத்தமிழ் கலைஞர்கள் - எழுத்தாளர் ஆகியோருடைய தனித்துவப் பிரச்சினைகளை அநுதாபபூர்வமாக அணுகி ஆதரிக்க முன்வந்தார். சுபமங்களா தமிழ்நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் வாழ்ந்த படைப்பாளி களின் ஆக்கங்களுக்கான பிரசுரகளமாகவும் வெளிவந்தது. அவருடைய தீர்க்கதரிசனம் மிகுந்த இந்த அணுகுமுறை யினால் ஈழத்தமிழ் எழுத்தாளர் - புலம்பெயர்ந்தோர் உட்பட - நிறையவே பயனடைந்தார்கள்.
அவ்வாறே கணையாழி மாசிகையை வித்தியாசமான வகையிலே, எழுத்தாளர்களுடைய சுயாதீனத்தைச் சங்கை செய்யும் வகையில் வெளியிடுவதிலே, கஸ்தூரிரங்கனும், என் நண்பர் இந்திரா பார்த்தசாரதியும் ஈடுபட்டிருந்தார்கள். கணையாழியும் ஈழத்தமிழர்களுடைய படைப்பு முனைப்பு களையும் முயற்சிகளையும் அங்கீகரித்து முன்னெடுக்க முனைந்தது.
ஒரு கட்டத்திலே, ‘எஸ்.பொ. கணையாழி பத்திரிகையை புலம்பெயர்ந்தோரின் இலக்கிய மாசிகையாக வெளியிட ஆவன செய்யுங்களேன்’ என்று அவர்கள் கேட்கவும் செய் தார்கள். கணையாழியின் இலட்சியமயமான இலக்கியப் பயணத்தைத் தடையின்றித் தொடர இந்த ஏற்பாடு உதவலாம் என அவர்கள் நம்பினார்கள்.
நான் தயங்கினேன். புலம்பெயர்ந்தோருடைய இலக்கி யத்தினை நெறிப்படுத்தும் ஓர் அப்போஸ்தலர் நிலைக்கு என்னை உயர்த்திக்கொள்ள நான் விரும்பவில்லை. அப்படிப் பிரகடனப்படுத்திக் கொள்வதைப் புலம்பெயர்ந்தோரில் பெரும்பான்மையினர் மனசார விரும்பமாட்டார்கள் என்பதை உளமார நான் அறிவேன். என்மீது தூவப்பட்ட இலக்கிய அவதூறுகளிலிருந்து நான் விடுபடுதல் ஆகாது என “ஜெபஞ் செய்து வாழும் எழுத்தாளர்களும் உளர். அத்துடன், புலம்

Page 30
பனிக்குள் நெருப்பு 56
பெயர்ந்தோர் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லவும் வளப்படுத்தவும் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு குழுக்கள் முயன்று கொண்டிருந்தன. அவை மறைமுகமாக அரசியற் குழுக்கள் சார்புடையனவாகவும் இயங்கின. பல்வகைத்தான சிறு பத்திரிகைகளை வெளியிடுவதிலே அவை சிரத்தை ஊன்றின. அந்தச் சஞ்சிகைகளின் எழுச்சிகள் நற்பயனைத் தரக்கூடும் என்று நான் விசுவாசமாக எதிர்பார்த்திருந்தேன். இந்த எதிர்பார்த்தலுக்கு எதிராகச் செயற்படலாகாது என எச்சரிக்கையாகவும் இருந்தேன். என் பார்வைக்கும் ஆற்றலுக்கும் அப்பாலாகவும் மேலாகவும் எழுத்து அதிசயங் களைப் புலம்பெயர்ந்தோர் சிறுசஞ்சிகைகள் மூலம் நிகழ்த்துதல் வேண்டும் என்கிற பரவசத்தில் மகிழ்தல் என் இயல்பு.
அக்காலத்திலே புலம்பெயர்ந்த தமிழர்கள் வெளியிட்டுக் கொண்டிருந்த சிறுசஞ்சிகைகளின் பட்டியல் ஆவணப் பதிவுக்கு உதவும் என்பதினால் இங்கு தருகின்றேன். விளம் பரங்களின் வருவாயை ஆதாரமாகக் கொண்டு வெளிவரும் செய்தித்தாள்களை இந்தக் கணக்கெடுப்பிலே தவிர்த்துக் கொள்ளலாம்.
அவுஸ்ரேலியாவிலிருந்து மரபு, அக்கினிக்குஞ்சு, கலப்பை ஆகிய மூன்றும் வெளிவந்தன. இவை பொற்பமிகு ஆசைகளுடன் வெளிவந்தன. இன்று கலப்பை மட்டுமே வெளிவந்து கொண்டிருக்கின்றது. பல்கலைக்கழக மாணவர் களுடைய உறவு மட்டுமல்ல, டாக்டர் கேதீஸ்வரன் அதனை வெளியிடுவதிலே காட்டும் அசாதாரண அக்கறையும் இதற்குக் காரணம். ஈழத்தின் மரபுகளைப் புலம்பெயர்ந்த இளைஞர் களுக்குக் கொண்டு செல்வதைக் கலப்பை முக்கிய நோக்க மாகக் கொண்டு வெளிவருகின்றது.
ஸ்கந்தநேவிய நாடுகளான டென்மார்க்கிலிருந்து காகம், சஞ்சீவி ஆகிய சஞ்சிகைகளும், நோர்வேயிலிருந்து சுவடுகள், சுமைகள், தத்தி ஆகிய சஞ்சிகைகளும் வெளி வந்தன. இவற்றின் இலக்கிய நோக்கும் தரமும் நம்பிக்கை ஊட்டுவனவாக அமைந்தன. ஆனால், ஒல்லாந்திலிருந்து வெளிவந்த ஒரேயொரு தமிழ்ச் சஞ்சிகையான அ, ஆ இ உண்மையில் புலம்பெயர்ந்தோர் இலக்கிய முயற்சிக்கு ஒர்

57 எஸ். பொ.
அங்கீகாரத்தினை வென்றெடுத்துத்தரும் தரத்துடன் வெளி வந்தது. அதனை வெளியிட்டவர்களை நேரிலே சந்தித்து, அதனை மீண்டும் வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இன்று நிலைமைகள் மாறிவிட்டன என்பது தான் வாஸ்தவம்.
ஜேர்மனியிலிருந்து தூண்டில், தேனி, புதுமை, கதிர், சிந்தனை, நமது குரல், வெகுஜனம், கைவிளக்கு, ஏலையா, எண்ணம், தாயகம், வெளிச்சம், தென்றல், புதுயுகம், நம்நாடு, யாத்திரை, அறுவை, அகதிகுவியம், வண்ணத்துப்பூச்சி, ஊதா, பூவரசு, அக்னி, நமது குரல், சிறுவர் அமுதம் ஆகிய இருபத்தி நாலு சஞ்சிகைகள் வெளிவந்துள்ளன. மலைப்பாக இருக் கின்றதல்லவா? ஆனால் இவற்றின் இலக்கியப் பங்களிப்பினை இன்று நாம் பூதக்கண்ணாடி கொண்டுதான் தேடவேண்டி யிருக்கின்றது. −
ஜேர்மனிக்கு அடுத்ததாக கனடா அதிக சிற்றிதழ்களை வெளியிட்டுள்ளது. தேடல், காலம், நான்காவது பரிமாணம், பார்வை, தமிழ் எழில், வீணைக்கொடி, தாயகம், நாயகம்,
தமிழ் முரசு, விழிப்பு, இனிய குரல், தேச பக்தன் என்று
இவற்றின் பெயர் விபரம் தரப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் அதிக எண்ணிக்கையில் வாழ்வது கனடா நாட்டிலேதான். அங்கு அவர்களிலே பலர் தமது பொருளா தார நிலையில் வளமானவர்களாகவும் மாறியுள்ளார்கள். இதுவே முனைப்பான உள் முரண்பாடுகள் தோன்றுவதற்கு ஏதுவாக இருந்திருக்கலாம். இனத்துவ அடையாளத்திற்குத் தமிழ்மொழியை முதன்மைப்படுத்தாது, இந்துமத அடை யாளத்தினை முதன்மைப்படுத்தும் போக்கு மேட்டுக்குடியைச் சேர்ந்த தமிழர்களுக்குத் தோதாக அமைந்துள்ளது போலவுந் தோன்றுகின்றது. அல்லையேல், கனடாவில் இந்துக் கோயில் களின் பெருக்கத்துக்கு வேறு என்ன காரணம்? இந்துக் கோயில்களை நிறுவி நடத்துதல் ஆதாயமான வியாபாரமாக அமைந்துள்ளதாகவும் கனடிய அரசு அடையாளப்படுத்தி யுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.
புலம்பெயர்ந்தோருடைய இலக்கியப் பங்களிப்பினைச் சிறக்கச் செய்வதிலே கனடாவும் பிரான்ஸும் தலைமை

Page 31
பனிக்குள் நெருப்பு 58
தாங்கும் என்றே நான் கணித்திருந்தேன். ஆனால் அண்மைக் கால வரலாறு என் எதிர்பார்ப்பு காரிய சாதனையாக மாட்டாது என்கிற அச்சத்தைத் தருகின்றது. கனடாவாழ் தமிழ் இலக்கியவாதிகள் சிலராலே தமிழ்நாட்டுச் சிறு சஞ்சிகைகள் ஒன்றிரண்டு வசதி அடைந்துள்ளதாகச் சொல்லப் படுகின்றது. யோகமுள்ளவர்கள் அனுபவிக்கட்டும். இலக்கிய வான் அதுபற்றி அக்கறைப்படமாட்டான்.
பிரான்சிலிருந்து ஒசை, மெளனம், எக்ஸில், உயிர் நிழல், கண், சமர், புன்னகை, அம்மா ஆகிய சஞ்சிகைகள் வெளிவந்துள்ளன. பிரஞ்சு மொழியின் ஆதிக்கத்தினால், ஆபிரிக்காவின் பிரங்கஃபோன் நாடுகளிலே வெளியான இலக்கியங்களை வாசித்து இன்புற்ற நான், பிரான்ஸ் நாட்டிலே புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடமிருந்து அதி சிறந்த பங்களிப்பினை எதிர்பார்த்திருக்கிறேன். ஈழத்திலே தோன்றிய இயக்கக் குழுக்களின் மோதல்களையும், பிணக்குகளையும் இன்னமும் மறக்காமல் பாராட்டி வாழ்வதால், அவர்களுடைய இலக்கியப் பங்களிப்பின் வீரியம் குன்றுகின்றதோ என்கிற சலிப்பு அவ்வப்போது எனக்கு ஏற்படுவதுண்டு. கடந்த காலப் புண்களை நோண்டிப் பார்த்துக்கொண்டே வாழ்தல் எதிர்கால ஆரோக்கியத்திற்குத் தோதானதல்ல.
இந்தச் சஞ்சிகைகளின் பட்டியலைப் பூர்த்தி செய்வ தற்காக சுவிஸிலிருந்து மனிதம், விடுதலைப் பாதை என்கிற சிற்றிதழ்கள் வெளிவந்ததான பதிவு உள்ளது. சுவிஸ் நாட்டில் வாழும் புலம்பெயர்ந்தோர் கால ஓட்டத்திலே தமது கலா சார விழுமியங்களைத் தக்க வைப்பதற்கு, வித்தியாசமான முறையிலே, நாடக ஊடகத்தினைச் சிக்கெனப் பற்றினர். தாங்கள் சமூக நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்தப்படு வதைத் தவிர்ப்பதற்காக, நாடகங்கள் மூலமாகத் தங்களை வெளிப்படுத்த முன்வந்தனர். சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரி என்ற நாடக அமைப்பினை நிறுவித் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். நான் பேர்ன் நகருக்குச் சென்றிருந்த பொழுது இந்த நாடகக் கல்லூரி அங்கத்தினரைச் சந்தித்து கலந்துரையாடும் ஒரு வாய்ப்பும் கிட்டியது.

59 எஸ். பொ.
இவர்கள் தயாரித்த நாடகங்களிலே சுவிஸ் நாட்டின் சுதேசிகளும் ஆர்வமுடன் பங்குபற்றி நடிக்கலாயினர். இவ்வாறு இரு மொழிகளும், இரு கலாசாரங்களும் உறவாடும் நாடகங்கள் மேடையேற்றப்படலாயின. பாண்டவர்களும் கிளவுஸ் முனிவரும், கடலம்மா, மலையப்பா, வில்லியம் தெல் போன்ற நாடகங்கள் அங்கு வாழும் நாடக ஆர்வலர் களைச் சென்றடைந்தன.
இந்த நாடகப் பணிகளிலே முன்னின்று தொடர்ந்து ஈடுபட்டுழைத்துவரும் அன்ரன் பொன்ராசாவுக்கு லுட்சேர்ன் கண்டோன்ட்மெண்டும் மாநகரும் இணைந்து நாடகச் சாதனையாளர் விருதை 2005ஆம் ஆண்டில் வழங்கிக் கெளரவித்த தகவலை நண்பர் அண்ணாமலை மூலம் அறிந்து மகிழ்ந்தேன்.
மீண்டும் கணையாழிக்கு வருவோம். கணையாழியை நான் பொறுப்பேற்கத் தயங்கிய பின்னர், எப்படியும் கணையாழி தனது தமிழ்ப்பணியைத் தொடரவேண்டும் என நினைத்த கஸ்தூரி ரங்கன் தசரா அறக்கட்டளையிடம் கணையாழியை நடத்தும் உரிமையை ஒப்படைத்தார். அதன் பொறுப்பாசிரியராக தமிழ் வளர்ச்சித்துறை இயக்கு நராக இருந்த இராஜேந்திரன் நியமிக்கப்பட்டார். இந்திரா பார்த்தசாரதி வீட்டிலே அவர் எனக்கு அறிமுகஞ் செய்து வைக்கப்பட்டதாகவும் இலேசான நினைவு.
சுபமங்களாவுடனும், கணையாழியுடனும் எனக்கு நெருக்கத்தையும் பிணைப்பையும் ஏற்படுத்தி வைத்தவர் கவிஞர் வைதீஸ்வரன். இவருடைய தொடர்பு எனக்கு அவுஸ்ரேலியாவிலே கிட்டியது. இ.பா. மூலம் எனக்கு சி. அண்ணாமலை அறிமுகமானார். அவர் இளைஞர். துடிப்புள்ள இலக்கிய பக்திமான். அத்துடன் நாடகத்துறை யிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். இப்பொழுது பி.பி.சி. உலகச் சேவையின் சென்னைக் கேந்திர நேயர் நல்லுறவு அலுவலராகப் பணியாற்றுகின்றார். புலம்பெயர்ந்தோர் இலக்கியப் பரம்பலுக்கான ஒரு நிறுவனமாக “மித்ர'வைச் சென்னையில் நிறுவுவதில், ஆரம்ப கட்டத்தில், இவருடைய உதவிகள் மிகக் கணிசமானவை.

Page 32
பனிக்குள் நெருப்பு 60
கணையாழியின் தொடர்பினால் இன்னொரு இளவலின் தொடர்பு எனக்கு எதிர்பாராத நிதியமாக வாய்த்தது. அவர் தஞ்சை மண்ணின் மைந்தர். தமிழிலே சக்திமிக்க கவிதைகளை இயற்றிக் கொண்டிருந்த யுகபாரதியே அவர்! கணையாழியின் துணை ஆசிரியராகப் பணியாற்ற வந்ததும் என் கணையாழித் தொடர்புகளை நீடித்து வைப் பதிலே பெரிதும் உதவினார். கணையாழி பேண விழைந்த இலக்கிய மரபுகளையும் தொடர்புகளையும் முன்னெடுத்துச் செல்வதிலே யுகபாரதி அசாதாரண சிரத்தை ஊன்றினார். என் கட்டுரைகளை வற்புறுத்திப் பெற்றுப் பிரசுரித்தார். அவருடைய தொடர்புகளினாலும், அவுஸ்ரேலிய இலக்கிய முயற்சிகளைத் தமிழ்நாட்டிலே பிரசித்தப்படுத்துதல் வேண்டும் என்பதிலே என் தீவிர ஆதரவாளராக உழைத்த பேராசிரியர் ஆ.சி. கந்தராசாவின் அக்கறையினாலும் கணையாழி அவுஸ்திரேலிய சிறப்புமலர் ஒன்றினை வெளியிட்டது. அந்தச் சிறப்புமலரிலே வந்த ஆக்கங்கள் பல்கலைக்கழக மட்டத்தில் இலக்கியம் பயின்ற இலக்கிய ஆர்வலர்களையும் கவர்ந்தமை நற்பேறாகும்.
11. 6ીeાજતા) ാങ്കGഴക്
இத்தகைய ஒரு சகாயச் சூழலிலேதான் 2002-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறைத் தலைவரும் பேராசிரியருமான C.T. இந்திரா அம்மையார் சர்வதேசக் கருத்தரங்கு ஒன்றினைச் சென்னைப் பல்கலைக்கழகத்திலே ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் கருத்தரங்கிற்கு அவுஸ்ரேலியா விலுள்ள டீக்கன்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராய்ப் Lugoofurtpollb giggs TTL grfidiah) (Prof. Judith Rodriquez of Deakins University) வருகை தந்து பங்கேற்றார். அந்த மாநாட் டிலே கணையாழி சிறப்பு மலரிலே பிரசுரமாகியிருந்த மெல்போனில் வாழும் அருண் விஜயராணியின் சிறுகதையும் ஆய்வுக்கு எடுக்கப்பட்டிருந்தது.
தமிழ் அவுஸ்ரேலிய எழுத்தாளர்களுடன் சிநேகிதத் தொடர்பு பாராட்டி வாழும் இந்திரா பார்த்தசாரதி அந்தக்

61 எஸ். பொ.
கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது நான் சென்னைக்கு வந்திருப்பதாகவும், என்னையும் அழைத்தல் மிகவும் பொருத்தமானதாக அமையும் எனவும் அவர் பரிந்துரைத்தார். பேராசிரியரின் விசேடத் தூதுவராக அழைப்பிதழை ராணி மேரிக் கல்லூரியின் ஆங்கிலத் துறையின் விரிவுரையாளராய்ப் பணியாற்றும் த. சுமதி கொண்டு வந்து தந்தார். அந்த அறிமுகம் நட்பாகக் கனிந்தது. இன்றளவும் என் இலக்கியப் பணிகளிலே அவர் மிகவும் உதவியாகவும் அநுசரணையாகவும் வாழ்கின்றார்.
புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பற்றிய அக்கறை களைப் பல்கலைக்கழக மட்டத்திலே எடுத்துச் செல்வதற்கு இந்தக் கருத்தரங்கு செப்பமான நுழைவாயிலை அமைத்தது. பின்னரும் ஒரு கருத்தரங்கு பேராசிரியர் இந்திராவின் அக்கறையினால் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்தது. அதற்கும் நான் அழைக்கப்பட்டிருந்தேன்.
த. சுமதி ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியராக வாழ்ந்த போதிலும், அவருடைய தமிழ்நேசிப்பு பிரமிப்புத் தருவது. அவர் 'தமிழச்சி’ என்னும் புனைபெயரிலே, பெரும்பாலும் தமிழ்க் கவிதைகள் எழுதுகின்றார். அவருடைய 'எஞ்சோட்டுப் பெண்’ என்கிற கவிதைத் தொகுதி, இலக்கிய வட்டாரங்கள் பலவற்றிலும் அங்கீகாரம் பெற்றது. அந்தக் கவிதைத் தொகுதி அவருக்குப் பல விருதுகளைச் சம்பாதித்துக் கொடுத்தது.
‘பனியும் பனையும்’ சிறுகதைத் தொகுதியிலுள்ள சந்திரிகா ரஞ்சனின் ‘.பனையும்’ மற்றும் மாத்தளை சோமுவின் ‘ஒரே இனம்’ என்கிற இரண்டு கதைகளின் பாடுபொருள்களை விசாரணைக்கு எடுத்து, “Migrant Psyche - as expressed in the short-stories of Chandrika and Somu”6r6šr6p ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தார்.
அவர் புலம்பெயர்ந்தோருடைய தமிழ் எழுத்துக்களிலே மூழ்கித் தமது முனைவர் பட்டத்திற்கான ஆய்வு நூலை எழுதிக் கொண்டிருக்கின்றார். அவுஸ்ரேலிய - இந்திய கவுன்சிலின் புலமைப் பரிசு பெற்று, அவுஸ்ரேலிய விஜயத்தை

Page 33
பனிக்குள் நெருப்பு 62
மேற்கொண்டு சிட்னியிலுள்ள சிட்னி பல்கலைக் கழகம், மக்குவாரி பல்கலைக் கழகம், மெல்போனிலுள்ள மொனாஷ் பல்கலைக்கழகம், லற்றோப் பல்கல்ைக்கழகம், கன்பெறா விலுள்ள அவுஸ்ரேலிய தேசியப் பல்கலைக்கழகம், பேர்த்தி லுள்ள கேர்டின் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் தமது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். அவர் வெளியிடக்கூடிய ஆய்வு நூல் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தின்மீது புதிய வெளிச்சத்தையும், பார்வை அகலிப்பையும் ஏற்படுத்தும் என நாம் எதிர்பார்க்கலாம்.
இந்தக் கட்டத்திலே சிறியதோர் திருத்தத்தினைப் பிரேரிக்க விரும்புகின்றேன். புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் அனைவரும் ஆங்கிலம் பயிலும் நாடுகளிலே குடியேறி யுள்ளதான ஒர் அபிப்பிராயம் இங்கு நிலவுகின்றது. வட அமேரிக்காவில், சிறப்பாகக் கனடாவில், அதிகமான ஈழத் தமிழர்கள் குடிபெயர்ந்து வாழ்கிறார்கள் என்பது உண்மை. வட அமேரிக்காவின் தொழில் மொழி ஆங்கிலமே. அத்துடன் இங்கிலாந்திலும் அவுஸ்திரேலியாவிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். இந்த நான்கு நாடுகளிலேதான் ஆங்கிலம் தொழில் மொழி. ஏனைய நாடுகளிலே புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் பிரஞ்சு, ஜேர்மன், இத்தாலி, நொக்ஸ், டேனிஷ் ஆகிய மொழிகளைப் பயின்று அம்மொழிகளிலே புலமையுள்ளவர்களாகப் புலம் பெயர்ந்தோர் இலக்கியத்திற்குச் செழுமை சேர்க்க முனைந் துள்ளார்கள் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
12. ദ്രവ്/
કીલ્મ) விஷயங்களை அனுமானங்களைக் கொண்டு அல்லாமல், யதார்த்த நிலைமையை எடுத்துக்காட்டாக வைத்துப் பேசுதல் விளக்கங்களை இலகுபடுத்தும். எனக்கு இனியன் ஒருவன் - என் மாணவ முறையினர் -பிரான்ஸில் வாழ்கின்றான். அவன்தான் கலாமோகன். 1986ஆம் ஆண்டிலும், பின்னர் பதினான்கு ஆண்டுகள் கழித்து 2000ஆம் ஆண்

63 எஸ். பொ.
டிலும், பாரீஸில் அவனுடன் தங்கி அவனுடைய இலக்கிய அநுபவங்களைப் பங்கிட்டு மகிழ முடிந்தது.
முதல் சந்திப்பின்போது அகதி அந்தஸ்துக்கு மனுச் செய்து, தனியனான ஒர் வாழ்க்கையை மேற்கொண்டிருந் தான். உழைத்துப் பணம் சேகரிக்கும் யாகத்திலே தன்னை எரித்துக் கொள்ளாது, பிரஞ்சு இலக்கியத்திலும் மொழியிலும் முற்றாக மூழ்கியிருந்தான். பிரஞ்சு இலக்கியங்களிலே பரந்த பயிற்சி பெறுவதின்மூலம், தமிழ் இலக்கியத்திற்குப் புதிய பரிமாணம் கொண்டுவந்து சேர்த்தல் சாலும் என முழுமை யாக நம்பி வாழ்ந்தான். தன் இலட்சியத்திலே ஜெயித்து வாழ்வதை 2000ஆம் ஆண்டில் பார்த்தபொழுது எனக்கு மிகவும் பூரிப்பாக இருந்தது.
அவனுடைய வீட்டு மொழி பிரஞ்சு. ஆபிரிக்காவி லுள்ள மாலி நாட்டுப் பெண்ணை மணந்து வாழ்கின்றான். ஆனால், தமிழுக்கும் தமிழர் படைப்பு ஒர்மத்திற்கும் வெற்றி சாதித்தல் வேண்டும் என்கிற வெறியனாகவும் அவன் வாழ்தல் சிறப்பானது. நாடகம், சிறுகதை, அங்கதம், கவிதை ஆகிய எல்லாமே அவனுக்கு வாகு. அவன் பிரஞ்சு மொழியிலும் எழுதுகிறான். அவனுடைய பிரஞ்சு மொழிக் கவிதைகள் புத்திஜீவிகள் வட்டத்திலும் அங்கீகாரம் பெற்றுள்ளது. பாரீஸில் வாழும் பிரஞ்சு மொழிப் பேராசிரியர் ஒருவர் அவனுடைய கவிதா ஆற்றலை மெச்சிப் பேசுவதைக் கேட்கப் பெருமையாகவும் இருந்தது. அவனுடைய கவிதைகள் பிரஞ்சு மொழியிலிருந்து ஏனைய ஐரோப்பிய மொழிகளிலும் மாற்றஞ் செய்யப்பட்டுள்ளன. அவனுடைய கவிதைகள் சிலவற்றை செல்வி கிறிஸ்டீன் மார்ஸ்டாண்ட் (Christine Marstand) டேனிஷ் மொழியிலே மொழிபெயர்த்தார். அது “OG IMORGEN’ என்ற மகுடத்தில் வெளிவந்துள்ளது.
இந்த டேனிஷ் நூலை, நான் சென்னையிலே அச்சிட்டு வெளியிட்டதில் ஒரு திருப்தி இச்சந்தர்ப்பத்தில் வரலாற்றுக் குறிப்பு ஒன்றினை நினைவுபடுத்துதல் பொருந்தும். 'தரங்கம் பாடித் திராட்சை சுவையானது என்கிற வழக்கு தமிழில் உண்டு. தரங்கம்பாடியைத் திராட்சையுடன் இணைத்துப் பேசும் பெருமையை அங்கு 1622இல் கோட்டை அமைத்துக்

Page 34
பனிக்குள் நெருப்பு 64
கொண்ட டேனிஷ்காரரே ஏற்படுத்தித் தந்தார்கள். அது மட்டுமல்லாமல், அவர்கள்தான் முதன்முதலாகத் தமிழ் நூலை அச்சுப் பதிப்பித்தும் தந்தார்கள். முதலாவது தமிழ் நூலை அச்சு வாகனம் ஏற்றிய பெருமை தரங்கம்பாடி மண்ணிலே நிலை கொண்டு வாழ்ந்த டென்மார்க் மக்களுக்கு உண்டு. அந்தக் கடனைத் தீர்ப்பதுபோல டேனிஷ் நூல் ஒன்றினைத் தமிழ்நாட்டில் அச்சிட்டுக் கொடுத்தேன் என்பது எனக்கு மிகவுந் திருப்தி தருகின்றது.
பிரஞ்சு மொழியில் எழுதவல்லவரான கலாமோகனின் நாடகம், சிறுகதைகள், அங்கதம், கவிதைகளாகியன தமிழிலே பிரசுரமாகியுள்ளன. அவருடைய ‘ஜெயந்தீசன் கதைகள்’ என்கிற கதைத்தொகுதியைச் சென்னையிலே வெளியிட்டேன். இந்தக் கதைத்தொகுதி புலம்பெயர்ந்தோர் வாழ்க்கையின் அவலங்களை அங்கதச் சுவையுடன் புனர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுகின்றது.
"அகதி வாழ்க்கையை மேற்கொண்ட பின்னரும், "பறைத்தமிழன்’ என்று சிங்களக் காடையர்களினால் அடி உதைபட்ட பின்னரும், புலம்பெயர்ந்த நாடுகளிலே சாதியம் பார்க்கும் கலாசாரத்தையும், ஆண்களைப் பொலிகாளைகள் என்கிற கற்பிதத்தில் சீதனச் சந்தையிலே நிறுத்தி வைப்ப தையும் பூமாலை அணிந்து வரவேற்கவேண்டுமா? - இது கேள்வி. அழுத்தமான இல்லை என்பது கலாமோகனின் மதம். தமிழர் அணியும் முகமூடிகளைக் கிழித்தெறிவதுடன், அகதி கலாசாரத்தின் போலிமுகங்களையும் கலாமோக னுடைய பேனா கூர்மையுடன் கிழித்துக் காட்டுகின்றது. சமூக அரசியல், கேள்விகளது உக்கிக் கொண்டிருக்கும் பக்கங் களைக் கிண்டல் செய்கிறது ஜெயந்தீஸன் கதைகள்." என அதுபற்றிய என் முன்னிட்டிலே குறிப்பிட்டிருந்தேன்.
கலாமோகனைப் பற்றிப் பிரஸ்தாபிக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே கனடாவில் வாழும் இன்னொரு எழுத்தா ளரான அளவெட்டி சிறீசுக்கந்தராசா பற்றிய நினைவும் வருகின்றது. "சிறீசுவின் சில கதைகள்’, ‘சிறீசுவின் சில கவிதைகள்’ ஆகிய அவருடைய படைப்புகள் இரண்டினை தமிழ்நாட்டிலே வெளியிட்டேன்.

65 எஸ். பொ.
இவரது சில கதைகள் பற்றி நான்காவது பரிமாணம் என்கிற இலக்கியச் சஞ்சிகையைச் சிலகாலம் கனடாவில் வெளியிட்ட க. நவம் வருமாறு குறிப்பிடுகின்றார்:
"ஒரே தடத்தில் செல்லாத எழுத்து முறை என வழங்கப் படும் நவீன எழுத்துப் போக்கினை நீண்டகாலமாகப் பயன்படுத்தி, புதுமை செய்து வருபவராக ஏற்கனவே அறியப்பட்ட, இவரது தீவிரமான சிந்தனைகளும் புதிய அணுகுமுறைகளும் துணிச்சலான கருத்து வெளிப்பாட்டுத்திறனும் இவருக்கு மட்டுமேயான தனித்துவமான தன்மைகள். புகலிட வாழ்வின் விநோத அனுபவங்கள் இடையிடையே ஊரின் காற்றை அங்கி ருந்தும், சில வேளைகளில் இங்கிருந்தும் சுவாசிக்கும் கரிசனை, மனவெளியிலும் மாய விசித்திரங்களிலும் மொய்க்கிற பிரமைகளின் பிரதிபலிப்பு என்கிற சூழ் முழுமை அம்சங்கள் யாவற்றையும் தனக்கே உரிய மாறுபட்ட பாணியில் குழைத்து, இவரால் அழகாக வரையப்பட்ட சின்னச்சிறு சித்திரங்கள், இவரது கதைகள்." ஒரு சிறுகதைப் படைப்பாளி இன்னொருவரின் படிப்பினை வியந்து கூறும் நாகரிகமாகவும் இந்தப் பாராட்டு அமைகின்றது.
"அதிகாலைப் புல்வெளியில் பணிநுகரும் பட்டாம் பூச்சி, தயங்கிக் கீழுதிரும் பழுத்த இலை, சுள்ளென்று கடிக்கின்ற சிற்றெறும்பு, ஆளை அடிக்கும் ஓங்கார அருவி, பாய்வதற்கு முன்னரே பயமுறுத்துகின்ற வலிமையுடனான புலியின் நகக்கண், இழைந்து ஒட்டிக் கொள்ளுகின்ற பஞ்சுப் பொதியெனத் தொடு கையில் பட்டாசாகச் சிதறுகின்ற மாயத்திரை, கானகம் அதிர நடக்கின்ற களிற்றின் பிளிறல், கால்கள் புதையக் கழுத்துவரை இறுகும் புதைமணல், சுடுமணல் தகிப்பில் பெருநெருப்பு வீசும் சூரிய வெயில், அடர் காட்டிடை அமானுஷ்யமாகக் கூட வரும் அழுத்தமான இருட்டு, மெல்ல இழைந்து குழையும் பூனையின் உடல். இவை அனைத்தின் அபூர்வமான கலவைதான் "சிறீசுவின் சில கவிதைகள்."

Page 35
பனிக்குள் நெருப்பு 66
இவ்வாறு விதந்து பாராட்டுகிறார் தற்காலத் தமிழ்க் கவிதை உலகில் ஆழ்தடம் பதித்துவரும் தமிழச்சி!
இந்த மூன்று படைப்புகளும், புலம்பெயர்ந்தோரின் புதிய படைப்புப்பாங்கங்களை அறிமுகப்படுத்துகின்றன. அவ்வத்துறையிலே தடம் பதித்த மற்றும் படைப்பாளிகளும் பாராட்டுகிறார்கள், இவை முதன்முதலாகத் தமிழ்நாட்டிலே தான் பிரசுரமாகியிருக்கின்றன. இருப்பினும், இவை மூன்றும் நூலகத்திற்குச் சிபார்சு செய்யப்படவில்லை. ஏன்? பழைமை வாதிகளுடைய பிடிகளுக்குள்ளும், பரிந்துரைகளுக்குள்ளும் சிக்குண்டு தமிழின் புதிய படைப்புப் பரிமாணங்கள் நச்சுக் கொடியுடன் கொல்லப்படுகின்றனவா?
இலக்கியப் படைப்புகள் மூலமே தமிழ் வளமடையும் என்பதை நூல்நிலையங்களுடன் தொடர்புடைய யாவரும் அறிவர். இலக்கியத் திறனை ஓய்வு பெற்ற மாஜிகளினால் சரியாக மதித்தல் சாலாது என்பது என் கருத்து. அத்துடன் வைதீகப் போக்கினையும் பார்வையையும் உடைத்தெறிந்துதான் புதுசுகள் அங்கீகாரம் பெறுதல் வேண்டும். தமிழ் இலக்கிய வயலிலே நூறு மலர்கள் மலரட்டும். அதன் தரத்தை வருங் காலம் நிர்ணயிக்கும். அவை மொட்டிலே கருகிப் போய் விடவேண்டாம். இத்தகைய ஒர் நியாயமான அக்கறை நூல் நிலையத்திற்கான நூல்கள் வாங்கும் திட்டத்துடன் சம்பந்தப் பட்டவர்களுக்கு இருத்தல் அவசியம். கட்சி சார்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு சிட்கை தமிழுணர்வும், கடுகளவு இலக்கிய நேசிப்பும் புகுந்துகொண்டாலே நிலைமைகள் சீரடைந்து விடும். புதிய எழுத்து ஆர்வங்களை ஊக்கப்படுத்துதல் தமிழின் கடமை; தமிழ்நாடு அரசின் கடமை. அதனை நடைமுறைப்படுத்தும் சாதனமாகவே நூலகங்களுக்கு நூல்வாங்கும் திட்டம் பயன் படுதல் வேண்டும். பெரும் பதிப்பகங்களின் "அடாவடி’யான பணஆதாயத்திற்குத் துணை போகலாகாது.
இத்தகைய ஒரு சகஜ நிலை உருவாகுவதின் மூலம் உலகளாவியதாக வளர்ந்துவரும் தமிழ் இலக்கியத்தினை ஊக்கப்படுத்தும் அறஞ்சார்ந்த பெருமையைத் தமிழ்நாடு சம்பாதித்துக் கொள்ளும். செந்தமிழ் விளைவுக்கும் பரம்ப லுக்கும் தமிழ்நாடுதான் ஆஸ்தான போஷகர் என்கிற

67 எஸ். பொ.
பெருமையைக் காலங்காலமாகத் தக்க வைத்துக் கொள்ளுதல் சாத்தியம்.
தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தும் நூல்நிலையங் களுக்கு நூல்கள் வாங்கும் திட்டம் பாராட்டுக்குரிய ஒன்று. சந்தேகமில்லை. ஆனால், அதன் விதிமுறைகள் புத்தாயிரத்தின் தேவைகளை உணர்ந்து புதுப்பிக்கப்படவில்லை. பல்லாண்டு களுக்கு முன்னர் வகுக்கப்பட்ட திட்டங்கள் புதிய இலக்கிய வளர்ச்சிப் பரிமாணங்களை உள்வாங்கி மீள்பார்வை செய்யப் படவில்லை. இதன் காரணமாக இங்கு ஊழல் தாண்டவ மாடுவதாகச் சிறு பதிப்பாளர் அவ்வப்போது கூச்சல் எழுப்பு வதுண்டு. இந்தக் கூச்சலை அடக்கும் கெட்டித்தனம், அதிகாரம் சுகிப்பவர்களுக்கு இருந்தே வந்துள்ளது.
இன்று பத்திரிகை ஊடகங்கள். அடைந்துள்ள மாற்றங் களினால், புதுசாக வரும் இலக்கிய ஆர்வங்களை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வருவதற்குச் சிறு பதிப்பகங்களே முன்வருகின்றன. புதிய படைப்பாளிகளுடைய ஆக்கங்களை நிராகரிக்கும் ஆணவப்போக்கு நீண்டகாலமாக நிலைத் - துள்ளது. புத்தகங்களை வகைப்படுத்தும் முறைகளிலும், அரசு நிர்ணயிக்கும் விலைகளிலும் புதிதான, புதிய வளர்ச்சிகளை ஊக்குவிக்கத் தோதான மாற்றங்கள் கொண்டுவரப்படுதல் வேண்டும். இது தமிழின் இலக்கிய ஆரோக்கியத்திற்கான அவசரத்தேவை. இல்லையேல் நல்நோக்குடன் வகுக்கப்பட்ட ஒரு திட்டம் ஊழல் பெரிச்சாளிகள் ஊதிப் பெருகும் சாக்கடையாக மாறுதலைத் தவிர்க்க இயலாது போய்விடும்.
பெரும் பதிப்பகங்கள் தங்கள் பிரசுரங்களைப் பிற்கதவு
வழியாக நூல்நிலையத் திட்டத்திற்குள் தள்ளிவிடுவதாகவும்
நீண்டகாலமாகப் புகார்கள் உண்டு. இத்திருவிளையாடல் களின் பெறுபேறு என்ன?
ஆன்மீகப் புத்தகங்கள், ஜோதிடப் புத்தகங்கள், வாஸ்து சாஸ்திரப் புத்தகங்கள், சமையற்கலைப் புத்தகங்கள் ஆகிய னவே பெருமளவிலே விற்பனையாவதாக பெரும் பதிப்ப கங்கள் முரசறைந்து கத்துவதை இந்த ஆண்டில் நடை பெற்ற சென்னைப் புத்தகக் காட்சியின்போது கேட்கக்

Page 36
பனிக்குள் நெருப்பு 68
கூடியதாக இருக்கின்றது. இத்தகைய உரிமை பாராட்டுதல் திராவிட இயக்கங்களின் அரசுகளின் மாட்சிக்கு எவ்வகையில் பெருமை சேர்க்கும்?
13. Glол$лоос
புலம்பெயர்ந்தோர் இலக்கியம் தமிழ்மொழி நடையைப் புதிய கண்ணோட்டத்திலே பார்க்கவும் உதவுகின்றது என்பதும் மனங்கொள்ளத் தக்கதே.
கலாமோகன் தமிழையும், அதன் இலக்கிய மரபையும் உள்வாங்கி பிரஞ்சு இலக்கியத்தைக்கூட வளப்படுத்துகிறான். சிறீசுக்கந்தராசா ஆங்கிலத்தில் மட்டுமல்ல, இத்தாலி மொழி யிலும் எழுதும் ஆற்றல் பெற்றவர். அவருக்கு பிரஞ்சு, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளும் தெரியும்.
இதனால் அவர்கள் பல்கலைக்கழகங்களிலே பணி யாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். ஒட்டல் வேலை - கெளரவமாகச் சொல்வதானால் - ரெஸ்டாரண்டுகளில் வேலை - செய்கிறார்கள். ஏனையோர் மகா கஷ்டமான வேலைகளை ஜீவநோபாயத்திற்காக மேற் கொண்டிருக்கிறார்கள். அந்நியச் சூழல், கொடிய குளிர், கடின வேலைகள் இவற்றின் மத்தியிலேதான் அவர்கள் இலக்கியப்படைப்பிலே ஈடுபட்டிருக்கிறார்கள். ஏன்?
அவர்கள் பணத்திற்காக, புகழுக்காக, கலை உலக எலியோட்டத்திலே ஒர் இடத்தினைச் சம்பாதிப்பதற்காக, பதவிகள் சுகிப்பதற்காக கலை - இலக்கியப் படைப்பினை ஒரு மார்க்கமாகத் தேர்ந்தெடுக்கவில்லை. அவன் தன்னையும், தன் மரபையும், இனத்துவ அடையாளத்தையும் தன்னுடன் தக்கவைத்துக் கொள்வதற்காகச் சதா போராடிக் கொண்டிருக்கின்றான். தன்னை உணர்ந்து கொள்வதற்கு அவனுக்குத் தமிழ் தேவை. அந்தத் தமிழ்ச் சுவாசத்தினை இயல்பாக்கிக் கொள்வதற்கு அவனுக்குத் தமிழ்ப் பயிற்சி தேவை. அந்தத் தமிழ்ப் பயிற்சியும், அந்த பயிற்சியின் வெற்றி தோல்விகளினால் ஏற்படும் தமிழ்ப் பக்தியுமே அவன் இலக்கு!

69 எஸ். பொ.
எத்தகைய ஒர் இரட்சண்ய யாத்திரீகமாகவே புலம்பெயர்ந்த தமிழர்களுடைய இலக்கியப்பணி அமைந்துள்ளது என்பதைத் தமிழ்நாட்டின் வாசகர்கள் உணரச் சிரமப்படுகிறார்கள் என்பதை நேரடியான இலக்கிய உறவாடல்கள் மூலமாக என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
தமிழ்நாட்டு வாசகர்கள் பெரும்பாலானவர்களுடைய இயலாமையைப் புலம்பெயர்ந்த படைப்பாளிகளான எங்களாலே அநுதாபமாக விளங்கிக்கொள்ள முடிகின்றது. அவர்களுடைய ரஸனைகள் தமிழ் மரபிலிருந்தும் இலக்கியச் சுவைப்பிலிருந்தும் பெறப்படுவன அல்ல. அவை அவர்கள் மீது திணிக்கப்படுகின்றன. கோடம்பாக்கத்துக் கனவுத் தொழிற் சாலை மாந்தர்கள் தூள், தில், கில்லி, திருப்பாச்சி என்கிற வகையிலே யதார்த்தங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கனவுலகிலே அவர்களைச் சஞ்சரிக்கச்செய்து, அவர்களுடைய சுவை யுணர்வுகளைக் கொச்சைப்படுத்தி மழுங்கடிக்கச் செய்து பணம் கறக்கிறார்கள். அவர்கள் கலைஞர்கள் என வேஷமிட்டலையும் வியாபாரிகள்.
பெரிய திரையுடன் போட்டியிட்டுச் சின்னத்திரை களும் மெகா சீரியல்கள் மூலமாகக் குடும்பங்களிலே பிறழ் வான உறவுகளும் ஆகுமானது என்கிற புதிய வேதத்தினைக் கற்பிக்க முந்தி நிற்கின்றன. பெண்களுடைய புனிதமான பொழுதுபோக்கு டி.வி. பெட்டிகளுக்கு முன்னால் அமர்ந்து குடம் குடமாகக் கண்ணிர் வடிப்பதுதான் என்பதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகளும் சின்னத்திரையினரே!
இவற்றின் மத்தியிலே விற்பனையிலே முதன்மை என்கிற அந்தஸ்தைப் பெற, பெரும் நிறுவனங்களின் பத்திரிகைகள் போட்டி போடுகின்றன. பக்கங்கள் எல்லாம் சினிமா நாயக - நாயகிகளின் படங்களும், அவர்களைப் பற்றிய கிசுகிசுக் களும், வம்பளப்புகளும்! இதுகூடப் போதாது என்று இலவச இணைப்புகளான பற்பசைகள், ஸாம்பு, பிஸ்கற் எனப் பலவும்! இந்தப் போட்டியிலே அவர்கள் தமிழையும் இலக்கிய ரஸனையையும் எவ்வளவு அதலபாதாளத்திற்குக் கொண்டு செல்லவும் தயாராக இருக்கிறார்கள். அவர்களுடைய அக்கறை பத்திரிகை Sales பற்றிய கணக்கு மட்டுமே!

Page 37
பனிக்குள் நெருப்பு 70
இந்த மும்முனைத் தாக்குதல்களிலிருந்து, தமிழிலே தரமான, ஆழமான இலக்கிய அநுபவத்தை எப்படி முன்னெ டுத்துச் செல்லமுடியும்?
இத்தகைய ஒரு பிரச்சினை தற்போதைக்கு என்றாலும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இல்லை என்பது சற்றே மன ஆறுதல். அகதிகளாக அவர்கள் உலகின் நானா பக்கமும் சிதறி ஓடிய பொழுது, நிகண்டுகளையும், மதுரைத் தமிழ்க் கையகராதிகளையும், நன்னூலையும் தூக்கிக்கொண்டு போகவில்லை. செம்மொழிப் பயிற்சியை வாலாயப்படுத்திச் சென்றவர்கள் அல்லர். எனவே, அவர்கள் இயல்பான மண்ணின் மைந்தர்கள் பயின்ற தமிழைத் தமது படைப்புக்குத் துணைப்பற்றுதல் இயல்பானதாகும்.
புலம்பெயர்ந்த தமிழன் தமிழ் உணர்வாளனாக வாழ்தல் தவிர்க்க முடியாதது. தமிழ் உணர்வினாலும், தமிழன் என்கிற அடையாளத்தைத் தக்க வைக்கும் வேள்வியினாலுமே அவன் பிறந்த நாட்டிலேயே அகதியாகி, வாழ்க்கை தேடி உதிர்ந்த சருகாக அலைக்கழிந்து, ஈற்றிலே புலம்பெயர் வாழ்வை மேற்கொண்டான். அவனுடைய தமிழ் நடவடிக் கைகள் அனைத்தும் இதன் நீட்சியே.
அவன், வாழும் அந்நியச் சூழலிலே, நினைவு மண்டலத்திற்குக் கொண்டு சேவிக்கக்கூடியது, அன்னையும் பிதாவும், அமைதிப்பூங்காவாக ஈழத்தமிழ் மண் இருந்த நிலையிலே, குடும்ப அறம் காத்து, தான் வளர்ந்தபோது, எந்தத் தமிழ் பேசினானோ, அந்தத் தமிழிலேதான்! அந்தத் தமிழ் அவனுக்கு வாகு - இயல்பு! அந்தத் தமிழைத்தான் அவன் தன் நெஞ்சிலே சுமந்து சென்றான். அஃது அவன் தாய்ப்பாலுடன் சுவைத்த தமிழ். பிறந்த மண்ணிலே சுவாசித்த தமிழ். அதற்குப் படைப்பு வீறும், வீச்சும் உண்டு. வியாபார உத்திகளுக்காக நச்’ என்றும், "சூப்பரப்பா’ என்றும், "Best கண்ணா Best என்றும் உருவாக்கப்படும் தமிழ்த் தொடர் களிலும் பார்க்க அந்தத் தமிழ் உயிருடனும், உணர்வுடனும் கலந்த தமிழ். எனவே, புலம்பெயர் இலக்கியம், எதிர் காலத்தில் மொழியியல் பற்றிய ஆய்வுகளுக்குப் புதிய பார்வையும் வெளிச்சமும் உபகரிக்கும். மரபின் தொடர்ச்சியும் மாண்பும் அப்பொழுதுதான் தெளிவாகப் புலனாகும்.

71 எஸ். பொ.
இந்தக் கட்டத்தில், என்னுடைய தனிப்பட்ட அநுபவம் ஒன்றைக் குறிப்பிடுகின்றேன். எனக்கு எல்லா சாதிகளிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். நைஜீரியாவில் நிறைய சிநேகிதிகள் இருக்கிறார்கள். அவ்வாறே சிங்களர் மத்தியிலும் நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். அத்தகைய ஒரு நண்பர் சிங்களமொழிப் பேராசிரியர். போர்த்துக்கேயர் ஆட்சி சிங்களமொழியில் ஏற்படுத்திய தாக்கங்களை விசேஷமாக ஆராய்ந்து கொண்டிருந்தார். போர்த்துக்கல் நாட்டின் தலை நகரான லிஸ்பனில் கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்து திரும்பியிருந்தார். இந்த ஆய்வினைத் தொடர மட்டக் களப்புக்கு வந்தார். என்னுடைய உதவியை நாடினார். அப்பொழுது நான் மட்டக்களப்பில் சின்ன உப்போடை என்கிற பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்தேன். போர்த்துக் கேயரின் சந்ததியினரான ‘பறங்கிகள்’ அந்தப் பகுதியில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தலைமுறைகளாகத் தமிழர் கலப்பு ஏற்பட்ட பின்னரும், அவர்களுடைய வீட்டு மொழியில் போர்த்துக்கேயச் சொற்கள் கலந்து கிடக்கின்றன. அவர்களுடைய வீடுகளில் கையாளப்படும் போர்த்துக்கேயச் சொற்களைப் பற்றிக் கள ஆய்வு நடத்தினார். பதினாறாம் பதினேழாம் நூற்றாண்டுகளில், போர்த்துக்கேய மொழியில் பயிலப்பட்ட, இன்று நிராகரிக்கப்பட்டுவிட்ட பல போர்த்துக் கேயச் சொற்களை மட்டக்களப்புப் பறங்கிகள் பயன்படுத் தியதை அறிந்து மேற்கொண்டும் ஆய்வுகள் நடத்தினார்.
சங்ககாலத் தமிழ்ச் சொற்கள் பல இன்று தமிழ் நாட்டின் தமிழிலே தொலைந்துவிட்டன. அவை செப்பமாக மலையாள மொழியிலே பயிலப்படுகின்றன. வடுகர் சொற் களும், ஆங்கிலச் சொற்களும் விரவிக் கிடக்கும் நொந்த தமிழையா செந்தமிழ் எனத் தூக்கிப் பிடிக்கப் போகின்றோம்? ஒர் உண்மைச் சம்பவம். ஒரு சமயம் ஒட்டோ ஒட்டுநர் ஒரு வரிடம் இடதுபக்கம் திரும்புமாறு சொன்னேன். அவனுக்குப் புரியவில்லை. சைகை காட்டினேன். அவன் சிரித்துக் கொண்டே, ‘left என்று அல்லது பீச்சாங்கைப் பக்கமென்று தமிழிலே சொல்லு சார்’ என்றான். தமிழ்நாட்டின் இந்தச் செந்தமிழ்ப் பயிற்சியைக் கற்று நான் தன்யனானேன்!

Page 38

gagంజ్