கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வனத்தின் அழைப்பு

Page 1
}
FT-60 %%%%%


Page 2


Page 3

வனத்தின் அழைப்பு/
அஸ்வகோஸ்

Page 4
வனத்தின் அழைப்பு
கவிதைகள்
அஸ்வகோஸ்
பதிப்புரிமை : ஆசிரியருக்கு
முதற்பதிப்பு: 1997 ஒக்ரோபர்
கணணிப்பொறியமைப்பு: சுந்தரன்
அட்டை வடிவமைப்பு: ஏ.எம்.றஷமி அட்டைப்படம் : அஜித் செனவிரட்ன
அச்சுப்பதிவு : கார்த்திகேயன் பிரைவேட் லிமிடெட், 501/2, காலி வீதி, கொழும்பு-6.
அட்டை அச்சுப்பதிவு: ரெக்னோ பிறின்ற்,
83, ஆஸ்பத்திரி வீதி, ~ தெஹிவளை.
வெளியீடு : நிகரி 2/1, மினேரிகம பிளேஸ், கல்கிஸை.
பக்கங்கள்: 72+iv
பிரதிகள்: 1000
விலை : 60/-
I I

நிகரி வனத்தின் அழைப்பு
சில குறிப்புகள்
கரியின் முதலாவக ெ வளியீடு
முதலாவது து
சரிநிகரைச் சார்ந்த நண்பர்கள் சிலரின் தனிப்பட்ட முயற்சி தான் இந்த நிகரி வெளியீட்டகம்,
கவிதைத் தொகுப் பொன்றின் வெளியீட்டுடன் வெளியீட்டுத் துறையில் முதல் காலடியை வைக்கின்றது நிகரி. எமது முதற்காலடி கவிதைத் தொகுப்பொன்றுடன் ஆரம்பித்தாலும் கலை, இலக்கியம், திறனாய்வு, அரசியல் என்பவற்றோடு தமிழில் இதுவரை உரத்துப் பேசப்படாத அறிவியல், மருத்துவம், சூழலியல், பெண்ணியம் என்று 'கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பதே நம் அவா.உங்கள் ஆதரவு தான் எங்களை உற்சாகப்படுத்தும்.
சரிநிகர் பத்திரிகையூடாக நன்கு அறியப்பட்ட நட்சத்திரன் செவ்விந்தியன், ஆத்மா, அஸ்வகோஸ், ஏ.எம்.றஷ்மி, எம்.கே.எம். ஷகீப், தேவஅபிரா ஆகியோர் இப்போது முக்கியமானவர்களாக இருக்கின்றனர். இவர்களைத் தவிர வேறும் பலர் சரிநிகரில் அறிமுகமாகி தொடர்ந்தும் எழுதி வருகிறார்கள்.
இவர்களுள் நட்சத்திரன் செவ்விந்தியனின் கவிதைத் தொகுதியான 'வசந்தம் 91 1995இல் நான்காவது பரிமாணம் பதிப்பகத்தாரால் கனடாவில் வெளியிடப்பட்டது. 'மிக அதிகாலை நீல இருள்' என்ற ஆத்மாவின் தொகுப்பு விடியல் பதிப்பகத்தாரால் 1996இல் இந்தியாவில் வெளியிடப்பட்டிருக்கிறது. அஸ்வகோஸின் தொகுப்பு நிகரி வெளியீடாக வெளிவருகிறது. இத்தோடு றஷ்மி, ஷகீப், தேவஅபிரா ஆகியோரது தொகுப்புக்களும் விரைவில் வெளிவருவது ஈழத்துக் கவிதையின் செல்நெறியின் ஒரு தளத்தை சரியாக இனங் காண உதவும் என்று நம்புகிறோம்.
III

Page 5
அஸ்வகோஸ் முற்றுகையிடப்பட்ட பூமியைச் சேர்ந்த கவிஞர். அவருடைய கவிதைகள் இரண்டாவது ஈழப்போரின் பின்னரான ஈழத்தின் வாழ்நிலை பற்றிப் பேசுபவை. உடல் சிதறி கையிழந்து காலிழந்து படுக்கையில் முடங்கி கோரமாய் கிடக்கும் படுக்கைப் புண்ணுடன் வேதனைப் பட்டு சோர்ந்தும் ஜீவன் குன்றாஇளைய மண் கண் முன் பரந்து கிடந்தது என்று முற்றுகை இடப்பட்ட தனது நிலத்தைப் பற்றியும், அந்த நிலத்தில்
காகங்கள் கரைகின்றன
சேவல் கூவுகின்றது காற்றில் மரங்கள் அசைகின்றன மரணங்கள் நிகழ்கின்றன என்று மரணம் இயல்பாகிப் போன அவலத்தைப் பற்றியும் பேசும் கவிஞர், அதனைக் கூட ‘சிதழுறும் காயங்கள் பேசும் மொழியினிலேயே பேசுகிறார்.
வனத்தின் அழைப்பு, காண்டாவனம், அவலம், நட்சத்திரங்கள் ஆகிய இவரது நீண்ட கவிதைகள் பல தளங்களைச் சுட்டுபவை. அன்னா அக்மத்தேவாவின் ‘இரங்கற் பா' என்ற நீண்ட கவிதை எப்படி சோவியத் ரஷ்யாவின் இருண்ட பக்கத்தை நம் முன்னால் நிறுத்துகிறதோ அதேபோல் இன்னொரு வகையில் அஸ்வகோஸின் கவிதைகளும் முற்றுகையிடப்பட்ட தேசத்தின் ஆன்மாவாக நம்மை உலுப்புகின்றன.
நிகரியின் இவ்வெளியீட்டை ஆதரித்து ஊக்குவிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
நன்றி நிகரி 97.10.19
I V

மலரினைச் சாத்துமென்!
இரத்தமூறிடும் கால இடுக்கில் புதைக்கப்பட்ட நண்பரின் மேலொரு மலரினைச் சாத்துமென் மரண ஊற்றில் கரைந்தவர் முகங்களைத் தேடுதல் அபத்தமேயாயினும் உயிர்களை இழந்தும் ஆழப்பாயும் வேர்களின் வீர்யம் மண் தான் அறியும் இரைச்சலை மேவி இசைக்கும் நாளில் எம் நண்பர்கள் இசைத்த கீதங்களாலொரு மலரினைச் சாத்துமென்!
17.11.1990

Page 6
அலைகள்
1. ஊர்த்தொழவாரங்களைப் பார்க்கப் போன மைந்தரின் நினைவுகளை
நான் தருவேன்
அவர்களின் முடிவினை எனக்குக் கூறுங்கள்
இத்தனை காலமும் ஏங்கித் தவித்ததன் அர்த்தமென்ன? நீங்கள் கூறுங்கள் தாய்மையின் கதறல் கேலிக்குரியதா?
கறுப்பு இரவுகளில் தனிமைச் சிறைகளில் அடங்கிப் போன அலைகளுடன் எல்லாம் முடிந்ததா?
2

. کے உங்கள் கரங்களில் உயிருடன் இருந்த ஒவ்வோர் கணத்திற்கும் அர்த்தம் கோருவேன்
ஒவ்வொரு கொலையையும் மகிழ்ந்து சொன்ன போது மனிதர்கள் இறந்து போனதாகவே எனக்குக் கேட்டது
உங்கள் வெற்றிகளைக் கொண்டாட என்னால் முடியவில்லை நீங்கள் சிரிக்கத் தானும் ஒரு பகிடி விட முடியவில்லை
3. M எம் சோகம் சிறையிருந்த காலம் போதும் செவிடராய் மெளனித்துப் போன மக்களின் செவிகளில் அலைகளை மீட்டலாம் வா நான் சிந்தனையே கோருகிறேன் இரைச்சலை எப்படி ஏற்க முடியும்? அமைதி பூத்த இந்தக் காலையில் இன்னும் நான் நிறையச் சிந்திக்க வேண்டும்.
31.12.1990

Page 7
ஏவாள்
ஆதியில் வானில் நட்சத்திரங்களும் பால் நிலவும் எழுந்தன நிலவை அடைய முடியாததென்ற குரல் ஒலித்த வண்ணமிருந்தது பால் நிலவில் மனங்கிளர்ந்ததை எவரும் மறுக்கவில்லை
நிலாவைப் பற்றிய நம்ப முடியாத ஏராளம் செவி வழிக்கதைகளை நீங்கள் அறிவீர்கள்
நினைவுகள் நிரப்பப்படாத போது ஏதேன் தோட்டத்தில் கனிகளைப் புசித்து வேட்டையாடி அலைந்தேன் ஜீவ ஐந்துகளிற்கு அவற்றின் இயல்பின்படிக்கு பெயரிட்டேன்
4

உலகம் உருண்டையானதென்று நூல்கள் கூறுகின்றன நான் பார்த்த பொழுது எதுவுமற்றும் ஜீவனற்றும் இருந்தது
அங்கு உறவுகளை வரையறுக்க வேண்டியிருந்தது வாழ்வை
நிர்ணயிக்க வேண்டியிருந்தது அந்தப் பொழுதுகள்
மறக்க முடியாதன நான் தனித்தலைந்தேன்
இன்னமும் மனிதமுகங்கள் கண்டுபிடிக்கப்படாததை நீங்கள் அறிவீர்கள் என் கண்கள் சிரிக்காதிருந்ததை யார் கண்டிருக்கக்கூடும்?
கர்த்தர் என் விலாஎலும்பினை ஒடித்தார்! என் நெஞ்சிலிருந்து ஏவாள் புறப்பட்டாள்!
உணர்வுகளையும் உள்ளத்தையும் நாங்களே சிருஷ்டித்தோம்! ஏவாள் என் இதயத்தை நிறைத்தாள்! நான் மனிதனானேன்!
O4. O3, 1991

Page 8
நீ போனாய்
நிர்மலமான வானத்தில் தனித்தலையும் பறவை தரும் வேதனையை நீதர வேண்டாம்
மீட்கப்பட முடியா வேதனை போல் என்னிளமை ஏக்கமுற வைக்கிற ஏதோ ஒன்று எங்கிருக்கிறதென் இழந்து போன நாட்கள்?
சொற்களற்று குரலற்று முகமற்று உணர்வற்று தூரத்தூர கண்காணா தேசத்தின் கல்லறை முகவரிகளைத் தேடிக் கொண்டு நீ போனாய் ஆயிரம் ஆண்டுகள் கதை பேசும் வடுக்களைத் தந்து விட்டு வெற்று வரிகளில் மயங்கி வெற்றுடலாய் நீ போனாய்
பறவையே வேண்டாம் ஒரு வேதனை போல் இருந்து விட்டுப் போ நீ பார்ப்பது நானல்ல
நான் யாரோ எதற்கோ பலியாகி விட்டவன்
O9. O2.1992
6

கீதங்கள் அழிந்த போது!
போரின் கனத்த குரல் இப்போது கேட்கவில்லை அனேகமாக எல்லோரும் போய் விட்டார்கள் எங்கு என்ற கேள்வி வேண்டாம் போரின் கனத்த குரல்
ஒலிக்கும் போது கேள்விகளைக் குறைத்துக் கொள்வோம் அது மிகவும் நல்லது இப்போதும் கேள்விகள் வேண்டாம்
நிலவு காலிக்கும் வேளையில் நீண்டதுாரம் செல்வேன் இரைச்சலை விழுங்கிய இரவு எவ்வளவு அருமையானது இது தான் என் அமைதியைப் பறித்தது.
O3. O.1990

Page 9
சலனம்
உங்களின் நேசம் என்னை அடையவில்லை அன்பு தவழ்ந்த முகத்தில் அழகு இருந்தது உங்களின் இதயத்தைக் கவரும் நோக்கமும் எனக்கில்லை கடந்து போகும் பாதசாரியில் ஒருவனாய்...! உங்களை ஏற்றிப் போற்ற என்னிதயம் அவாவவில்லை ஆயினும் உங்களின் நினைவு என்னில் பதிந்தது ஏனென்று தெரியவில்லை
மாரிகால மழையிரவில் மனந்தனித்துப் போனது இனிய நினைவுகளை ஏந்தி இதயம் நெகிழ்ந்து போனது!
23.1 O.1987
8

நீறு பூத்த இளமை
போதையூட்டும் அலைகளில் விலகுவது போல் அண்மித்துக் கொண்டு பொய்யுறக்கத்துடன் முடிந்து போன சலனத்தை நீ இன்னும் எழுது
நடந்து போனவை பற்றியென்ன சொல்ல

Page 10
தத்துவம் கலைந்த பேனைக் கூர்களின் உரசல் இசைத்தல் ஆகுமா?
ஒடிப்போனதும் நின்று போனதும் போக எஞ்சிநிற்கும்
ஓரிரு உறவுகளுடன் வாழ்வை அர்த்தப்படுத்தவென்று இன்னும் நம்பிக்கை
புத்தக உலகில் தனித்தியங்கும் மனிதர் போல் இன்னும் கொஞ்சநாட்கள் அப்பால். காடு வாவென்றதும் வீடு போவென்றதும் நீயும் உணர்ந்தவை தானே
வானத்தில் மறைந்து போன வெள்ளிகளையேன் எண்ணினேன் எனக்குப் புரியவில்லை
ஓர் உறுத்தல் குறுகிய இடைவெளியில் இரண்டாம் சிதையை முட்டினேன் பிரபஞ்ச மையமே நாமென்ற போதும் பொய்யுரைத்தேனா
உனக்கு புரியாது அலைகடலில் தத்தளிக்கும் ஜீவன்கள் அறியும்
27.04.1992
10

செவல்
எதையும் தீண்டாமல் இதயம் பரிந்ததிரும் என் கவலையெலாம் மொழி, பெயர் குட்டி கொச்சைப்படுத்திவிடும் என்பதுதான்
அமைதியான வாழ்வை கற்பனை செய்வேன் கடலின் ஓரத்தில் வாடியமைத்து என் கனவுகள்
ஆழ்கடல் செல்லும்
II

Page 11
ஆனால் நான் தூக்கி எறியப்பட்ட பாழ்பட்ட காதலன் அவளிற்கு தெரியாததல்ல மெல்லிய வேதனையும் சுவடுபதிக்குமென
என் வேதனையை ஒரு சொல்லாக ஏவுவேன் மலராகச் செல்லட்டும் என் பொருட்டு அவள் துயரப்படுவதை நான் விரும்பவில்லை
இதயம் அழுந்தித் துடிக்கும் இனி இதமான தழுவல்கள் இல்லை மனம் நெகிழ்ந்த வார்த்தைகள் இல்லை இங்கு
எவருடைய ஒலங்களும் வேண்டாம்
என்னிடம் எஞ்சிப் போன நினைவுகளை நினைவில் கொணர்வேன் என்னிதயத்தில் இரைச்சல் இல்லை இன்னமும்
என்னிதயம் இசைக்கிறது
அதோ செவல் தெரிகிறது எனக்குரிய வள்ளமும் நானுமாய் . .
29. O6.1990 12

తాGGUIT
பிதாவே உமது நிழலில் விலகியென் ஆன்மா வெகுதொலைவில் போனபின் பெறுதற்கரிய நட்பின் பிஞ்சு விரல்களைப் பற்றியவாறு உமது ஆலயத்தின் வாசலில் ஓர் அந்நியன் போல்
தூய்மையும் அமைதியுமாய் பொலிந்த மண்டபத்தில் வாய்ப்பாடுகளைப் போலிருந்த எல்லா வசனங்களையும் ஒதுக்கிவிட்டு தேம்பிநின்ற ஜீவன்களிடையே அமைதியாய் மண்டியிட்டேன்
I3

Page 12
பிதாவே,
கீதங்களால் நிரம்பிய உம் மண்டபத்தில் என்னருகே மிக இளைய குரல் உமக்குரிய கீதங்களை இசைத்தது அந்த கீதங்களைப் பாட நான் விரும்பினேன் தினமும் மரிக்கின்ற தளிர்களும் நோயால் ஜீவனை இழந்த முகங்களும் காட்டு அனலும்
வெயிலும் மனித அவலங்களும் நினைவில் எழ மடுமாதா கோயிலில் ஒதுங்கிய மனிதர்களின் ஜீவத்துடிப்பாய் எழுந்த கீதங்களில் எனை இழந்தேன்
வானத்தில் இருந்து குதித்த தேவர்களைப் போல் மனித அவலங்களிடையே நெகிழ்ந்த ஓரிரு சொற்களுடன் நாம் நேசமான பார்வைகளைத் தந்த விழிகளில் திரண்ட கண்ணிர்த் துளிகளை நினைவு கூர்வேன் அவலம் மிக்கது வாழ்வு ஆனபோதும் நாளை பற்றிய செய்தியை ஈய்ந்தோம்
பிதாவே பாவங்களின் நிமித்தம்
14

உம்முன் மண்டியிட்ட ஜீவன்களிடையே அமைதியில் தோயும் அவள் விழிகளின் செய்திகளில் நான் நிரம்பினேன் நாம் அற்புதமான உறவினைப் பின்னினோம் தன் பிஞ்சு விரல்களை என்னிடம் தந்திருந்தாள் நிறைய கதைகளைக் கூறினேன்
கவிதைகள் போலவும் மனிதர்கள் கடந்து போகையில் நான் நெகிழ்ந்தேன்
இன்றென் தசைகளில் கிளர்ச்சியில்லை வேதனை மிகுந்த நினைவுகளிற்கப்பால் அமைதியடைந்ததென் ஆன்மா பரமபிதாவே
மீளவும் என்கிடைத்தற்கரிய நட்பின் பிஞ்சு விரல்களைப் பற்றியவாறு உம் நிழலில் விலகி நான் தேடிப் பெற்ற கவிதைகள் நிறைந்த என் சோலைக்குள். .
1 O.O6.1991
I5

Page 13
இருள்
சிதழுறும் காயங்களிடையே நானிருந்தேன் சிதைந்து போன மைந்தரின் வேதனை ஒலங்கள் என்னை உறுத்தின ந்ான் வேதனையுற்றேன்
தொலைதுாரங்களில் மறைந்து போகும் மைந்தரின் முகங்களை நான் அறியேன்
அந்த முகங்களில் அறிவு இருந்ததா அழகு இருந்ததா என்று நான் கேட்கப் போவதில்லை
தியாகங்கள் மட்டுமே தெரிந்த மைந்தரின் நினைவுகளை பழிக்க என்னால் இயலவில்லை கிளர்ந்த வேகத்தில்
16

கிடைத்த பஸ்ஸிலேறிய இளந்தளிர்கள் காற்றின் திசையில் அள்ளப்பட்டவர் மேலொரு கேள்வியை எறிய என்னால் இயலவில்லை
நேற்றுங் கூட இருவர் மாண்டு போயினர் நான் விபரமாகக் கேட்கவில்லை
கருணையுள்ளோரே கேட்டீரோ காகங்கள் கரைகின்றன சேவல் கூவுகின்றது காற்றில் மரங்கள் அசைகின்றன மரணங்கள் நிகழ்கின்றன
இன்று பிறந்த பூதம் நாளைய கனவைத்தின்று தீர்த்தது காவிய இருள் கவிந்திருந்தது
காலந் தான் உருண்டது கனிகளைப் பறிக்க தொலைதுாரம் போனவரைக் காணவில்லை தொலைதுாரம் போவதற்கு கனவழிகள் சொன்னவரைக் காணவில்லை
ஒளியைத் தேடும் என் உணர்வுகளுக்கும் பதிலில்லை
2. என்னை ஒறுத்து ஒறுத்து
17

Page 14
அழித்துக் கொள்கையில் என் மகன் போயிருந்தான் தன்னை அர்த்தப்படுத்த வென்று
என் கனவுகள் வீழவும் மண்ணின் குரலிற்கு செவியீந்து போயிருந்தான்
இயலாது உன் பிரிவைத்தாங்க என்னால் இயலாது இல்லை
அவன் என்னிடம் இல்லை மண்ணின் குரலிற்கு பதிலுடன் போயிருந்தான்
என்னை உறுத்தும் நினைவுகளைச் சொல்வேன் நொந்து போன என் நாட்களின் வேதனைச் சுமையினைச் சொல்வேன் சிதழுறும் காயங்கள் பேசும் மொழியினில்
என்னைப் பேசவிடுங்கள்
இறுதியாக
என்னிடம் வந்திருந்தான் அவனது தேகம் குளிர்ந்திருந்தது இரத்த முறிஞ்ச நுளம்புகள் வரவில்லை ஈக்களை அண்ட
நான் விடவில்லை
1.12.1990 18

காலத்துயர்
போகிற போக்கில் விளம்பர வரிகளுடன் இனங்கண்டு விட்டு சம்பந்தமில்லாதது போல் போகப் போகிற மனிதரை எண்ணி சஞ்சலப்படுகிறேன்
முகமூடிகளின் நகரத் தெருக்களில் அவளைப் பற்றி பளிச்சிடும் வரியை இனியும் எழுதாமலிருக்க முடியாது
19

Page 15
சும்மா கொட்டிவிட்டுப் போகிற வார்த்தையைப் போலவா. ஆன்மாவைத் துளைத்தெடுக்கிற சேதிகளை விதைத்துப் போனவள் நம்ப முடியா சாகஸங்களை
நிகழ்த்திக் காட்டியவள்
செவ்வான விளிம்பெங்கும் பொங்கும் கடலில் கடலடியில் திரிந்தவள் கடலில் படைக்கப்பட்டதும் கரையில் மீட்கப்பட்டதும் காதோடு காதாய் காற்று வழி போனது
மீளவும் ஆசீர்வதிக்கப்பட்ட மரணத்தைத் தேடிப் போனாள் பேராறாய் கடலில் காவியமானாள்
வரலாற்று முள்ளில் செருகப்பட்ட சிறு மொட்டே நீயெண்ணாக் காலத்திற்கும் உன் ஆன்மா துடிக்கப் போகின்றது
பிதிர்களைக் கூவியழைத்து சாம்பலை கடலில் கரைத்த பிதாவே கூறும் சகோதரரே நீர் கூறும் அவள் தான் எடுத்த மண்ணை கடலில் ஏன் கரைத்தாள்?
12. O4. 1996
2O

சங்கீதம்
நாளைய கனவை இன்றே காண நான் தயாராய் இல்லை இன்று மடையன் என்பதற்காய் இவ்விரவை இழக்கவும் தயாராய் இல்லை
இலட்சியமேறிய சொற்களின் பிரலாபம் இங்கு வேண்டாம் சலிப்பையோதும் சாக்கடை ஞானிகளின் சொல்ஜாலங்கள் இங்கு வேண்டாம்
சிரிக்க மறந்த அறிஞரின் செவிகளில் என் வேதங்களை ஒதுவேன் மெய்யாகவே உங்களிற்குக் கூறுகிறேன் இன்னோர் பிறவிக்காய் ஒருகணத்தைத் தானும்
ஈய நான் தயாராய் இல்லை
என் செயல்களிற்கு விளக்கத்தை எந்நூலிலும் தேடப் போவதில்லை. அவர்கள் தெருநாய்கள் இயங்கும் விதிகளை தங்கள் நூல்களில் தேடிக் கொள்ளட்டும்
21

Page 16
அவர்கள், மறக்கவும் மறைக்கவும் முயலும் சேற்றைப் பாடுவேன்
என்னிடத்தில் எந்தச் செய்தியுமில்லை அவர்களின் வசனங்களை ஒப்புவிக்க நான் தயாராயில்லை என்றும் கூறுங்கள் எந்த அழுத்தத்தையும் நான் வெறுக்கிறேன் Gl_rm !
உன் எஜமானிடம் சொல்
நான்
கடற்கரையின் கண்வீச்சில் கரந்துறையும் சிறுநண்டு பேர் வேண்டாம்
முகம் வேண்டாம்
பிலாத்துக்களே சிலுவையில் அறையப்பட்ட நான் தேவகுமாரனில்லை
என் அவாவெல்லாம் மொழிகளைத் தாண்டி முகங்களைக்காண வேண்டும் பிரமிப்பை ஊட்டும் இன்னோர் ஜீவனை சந்திக்க வேண்டும்
நான் சொல்வேன் என் ஆத்மாவில் இரைச்சல் இல்லை இன்னமும் சொல்வேன் இன்னுமென் ஆத்மா இசைக்கிறது
J.O. 11.1990
22

குரிz/கந்த
பேரதிர்வுகளில் உயிரிழந்து சிதைவுகளை நெஞ்சிற் சுமந்து வரிகளைத் தாங்க ஏலாது முறிந்த வாழ்வுடன் இடம் பெயர்ந்துழலும் அவலம்
23

Page 17
வாவிகளில் பிணமாய்க் கரைந்து போகையில் திறந்த வெளியரங்குகளில் மலரேந்தித் துதித்தவர் புதைகுழிகளில் ஓய்ந்திருந்ததை துயில் எழுப்பி
ஊர்திகளில் வேட்டைக்கு அனுப்பியவர் நீவிர் பழையதை மறந்து போனிர் பயந்ததை வேதனையை வடுக்களை துயரங்களை மறந்தீர்
தீப்பிடித்த நகர் மீதில் படரும்" அரியப்பட்ட மனிதரின் அவச்சா
இரவுகளை பின்னேர கடலலைகளை நிலவை இழந்தாயிற்று இப்படியாய் எத்தனை பயணங்களை இழந்தாயிற்று மனங்கொண்ட நினைவுகள் அழிந்து போயின இவற்றை மன்னிக்க குரூரத்தை மறக்க இயலவில்லை போய்ப் பார் போர் இளமையை உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கிறது
3O. 11.1995
24

676ir 62/27225A a/Hzzo Gav Gz zzzz a%74 -H/
இரைச்சலிடும் சனநெரிசலில் யாரின் குரலைக் கேட்பாய்? தனித்த நெடும் இரவுகளில் எந்தக் கனவினைக் காண்பாய்?
பயணங்களும் முடிவுகளுமாய் நீள்தொலைவில் மலைகளிலும் அருவிகளிலும் நினைவுகளை நிரப்பிக் கொண்டு இந்நேரம் உன் பிறப்பினை நொந்திருப்பாய் என் நினைவுகளையும் மறக்க முயன்றிருப்பாய் நகரத்து போலிகளைக் கண்டபின் என்நினைவுகள் அருவருத்துப் போயிருக்கும் எதுவும் நானறியேன் நெஞ்சில் வேதனை மிகும் எனினும் உனை வைதிடவில்லை
அமைதியை இழந்தென் நீள் இரவுகளில் வானத்தில் ஒளிபிடித்து காதலை அல்ல வேதனையை எழுதினேன்
25

Page 18
என் நேசிப்பின் உக்கிரம் உன் ஆத்மா அறியும் இன்னுமென் உள்ளத்தில் நகரத்தின் போலிகள் ஊறவில்லை உனை இழந்தவன் ஆயினன் என்ற போதும் நேசிப்பிற்குரிய என் பெண்ணே இன்னமும் நான் நேராக நின்று பேசவே விரும்புகிறேன் என்னை ரணமாக்கிய உன் சொற்களை நினைவு கூர்வேன் காதலில் கரைந்த நினைவுகளை ஞாபகம் கொள்வேன் w எப்படி என்னால் மறத்தல் இயலும் இனிமையான சோகம் நெஞ்சில் படர்கிறது
இன்றென் ஆத்மாவை வருடுவதற்கு ஒரு செய்தியும் இல்லை வற்றிய என்னிதயம் ஊற்றெடுக்காது இன்றோர் வசந்தத்திற்காய் அவற்றின் மலர்களிற்காய் . .
மீட்டெடுத்த என் கனவுகள் மாண்டு போயின என் வசந்தம் வராமலே போய் விட்டது.
1J. O4.1990
26

இரவுகள்
நேரங்களிற்கு தமையிழந்த மனிதர்கள் ஓய்கையில் என்னிரவுகள் அதிரத் தொடங்கும்
நாய்களின் குரலழிந்து மாரித்தவளைகள் ஓங்கும் கணங்களிலென் மாரிகால இரவுகள் ஆரம்பமாகும்
பகல்களுக்கீந் தெனை மீளவும் மீட்கும் இரவுகளில் கடலின் விளிம்பில் நடந்ததை மீட்டுவேன் கரைகளில் ஆடிடும் அலைகள் விசிறிடும் திவலையில் நிறங்கள் பதிந்தன நிறங்கள் பதிகையில் தேகம் கிளர்ந்தது கடலின் விளிம்பில் அவாவிச் செல்லும் ஓடங்கள் அலைந்தன
பரலோகம் போய் குபேரருடன் கைகுலுக்கி பல்லிளித்து பாவங்கள் செய்தபின் சக்கரமேந்திய பாவனையில் கிருஷ்ண பகவான்கள்
27

Page 19
சொல்லிய கதைகளில் சொற்கள் மட்டுமே மிஞ்சிப் போனது
வெண்முகில்கள் பால்வெளிகள் தாண்டி சொர்க்கமாம் வச்சிராயுதம் விற்க இந்திரர் வருவரென்று வழிபார்த்திருந்த பகவான்கள் செய்த பரிசோதனை விளையாட்டில் மழலைக்ள் குரல்களில் கீறல் விழுந்தன
வியர்த்துக் கொட்டும் கடுங்கோடை இரவுகள் நினைவில் எழுந்தன
வியர்த்து நுளம்புகள் பிராண்டி எரிச்சலுற்று துடிக்கும் நட்சத்திரங்களை பார்க்கப் பிடிக்காமல் அறைக்குள் முடங்கி மரங்கள் மூச்சுவிடும் ஒலிகளை கேட்கப் பிடிக்காமல் செவிகளைப் பொத்திய கடுங்கோடை இரவுகள் நினைவில் எழுந்தன
மூச்சிழுத்து மழை பொழியும் இரவுகள் ஆழமானவை வெள்ளம் போடும் இரவுகளில் கனவுகள் கண்டேன்
28

விலாஎலும்பு வரிகளுடன் எலும்புபோல் ஏதோவென்று உதடுகள் அசைத்து அலைந்தது போல்
வேற்றுக்கிரகவாசிகள் தந்துதவிய லீலைகள் பட்டுத் தெறித்தது போல் காயம் பட்ட மண்ணின்
அகோர தாகத்தால் கண்கள் சொரிந்து வற்றிப்போனது போல.
இரத்தமாய் நிணமாய் கரைந்த கருவின் முகம் என்னை நெருங்கையில்
திடீரென விழிப்பு
யேசுவினருகே அறையப்பட்ட கள்வரின் முகங்களை கனவில் கண்டது எப்படிச் சாத்தியம் ? பதிலில்லாமலே
இரவு கழன்றது
வெண்ணிரவுகள் தந்த சுமைகள் தொடர புலராப் பொழுதில் பயணம் போனேன் கிராமத்தின் ஆத்மா என்னுள் நிறைகையில் நான் அழிந்தேன்
22.12.1990
29

Page 20
அந்த நாட்கள் நெருங்கி விட்டன
மயானத்தின் பரப்பில் கிடைத்த சிறுநிழலில் இருந்து சிறுகல்லால் இன்னோர் குறுணியை ஓங்கியடிக்கும் கணத்தில் பொறிதட்டியது அந்த நாட்கள் நெருங்கி விட்டன 30

வீரத்தைத் தழுவிய பெண்ணின் தேகத்தைச் சூழ்ந்த அனல் என் மணிக்கட்டின் மயிரைப் பொசுக்கிற்று
அவளின் கபாலம் வெடிக்கு முன் மண்ணில் குத்தென வீழ்ந்த இன்னோர் சிறுமியின் மரணத்தை வருடினேன் மூன்று பிடி மண் எறிவதற்கு முன் கற்பூரம் கரைந்தெரிவதையே பார்த்திருந்தேன்
அகால மரணங்கள் இல்லையெனில் காரிருள் எம்மைக் கவர்ந்து கொள்ளும் காற்றும் நெருங்கி கண்கொண்டு உறுத்திப் பார்க்கும் குல் கொண்ட மேகம் கலையும் ஆனாலும்
மண் பிளந்து தளிர் படர வியர்வைத் துளிகள் முகிலாய் மழையாய் பொழியும்
தேகத்திலிருந்து பாய்ந்த இரத்தம் உறைவதற்கு முன் நான் திருப்தியுற்றேன் அந்த நாட்கள் நெருங்கி விட்டன
)。罩2.罩990
31

Page 21
நட்சத்திரங்கள்
1.
கண்களின் சலனத்தில் திரண்ட துளியில் எத்தனை கனவுகள் ஏறிநின்று ஓலமிட்டன? எல்லாம் எங்கு மறைந்தன?
தொப்பூள் கொடியறுத்து நீண்டகாலம் போனபின் நூலிலையாய் கண்ணறியா இணைப்பின் ஈர்ப்பு மீளவும் மெல்லிதாக என்கரங்கள் அதிர்கின்றன கருப்பை அதிர்ந்தொரு தழுவல் காற்றில் அலைய அனுமதிகோரும் மகரந்த மணியின் பிரிவு 32

2. நான் கேள்விகளை இயற்றுகிறேன்; தோலின் நிறத்தையும் சதையையும் தாண்டி நீ எப்படி ஆக்கப்பட்டுள்ளாய்? என் பெண்ணே இயல்பாக நீ அதிர்கையில் நாம் எதைப்பற்றிக் கதைக்கலாம்?
உன்னைச் சிறுகுழந்தையாகக் கருதிக் கொள்கிறேன் உன்னுலகம் சிறியதென்று சொல்லிக் கொள்கிறேன்
வானம் மரணம் தூவி காத்திருக்கையில் வல்லை வெளிகளில் தினமும் பயணிக்கிறோம் நிதானமாய் ஒவ்வோர் உதையையும் காற்று எதிர்க்கிறது காற்று அதிர்ந்து இரைச்சலிட்டு கூவுகிறது.
ஆனாலும்,
ஏனிந்த மனிதர்கள் நினைவுகளைக் கொச்சைப்படுத்தி தோல் சுருக்கங்களுடன் உறைந்து போகின்றார்கள்?
3. எப்படியெல்லாம் மனிதர்கள் பிணைக்கப்படுகின்றார்கள்
33

Page 22
முகங்கள் எப்படி கணங்களில் மாறிப் போகின்றன? எத்தனை காவியங்கள் சோரம் போகின்றன? கருவழிப்புகள் மனதை உறுத்துகின்றன ஆண்டின் முடிவில் நின்று எத்தனை இதயங்கள் ஏங்குகின்றன? நல்ல மனிதர்கள் எப்படியெல்லாம் ஒடுங்கிப்போகிறார்கள? நீ அறிவாயா, மெல்லிய வருடலிற்காய் எத்தனை இதயங்கள் ஏங்குகின்றன?
4.
இவற்றைத் தாண்டியா இத்தனை குரூரங்கள் போயின வென்று கல்லூரி வாசல்களில் நின்று அதிசயப்படுகிறேன். மனிதர்கள் சலித்துப் போகின்றனர் பாழாய்ப் போன பிரிவுகள் எப்படி வருத்துகின்றன
ஆனாலும் குழந்தைகள் சந்தோசித்துக் கொள்கிறார்கள் காயங்கள் ஆறுகின்றன
5. கைக்குள் அடங்க மறுத்து கனவுகள் என்னைத்தின்றன கனவுகளை வழங்கி விட்டு காத்திருந்த இரவுகளில் நடந்ததை நீ அறிதல் கூடும் 34

நரகங்கள் கூவியழைத்து நடமாடச் செய்தன தனித்துப் போன ஒற்றையடிப் பாதையில் காற்றியற்றிய மணற்படங்களை குழப்பியபடி சென்றேன் வாழைமரங்கள் குலையைத் தள்ளின வெண்ணிரவுகள் வந்து போயின என்ன நடந்தது? விருட்சிகம் வானில் நின்றது; கொடுக்குகளைத் தயாராக்கி
6.
தோல்விகளைக் கொண்டாடி அந்நியமாய் எனக்குள் பிளவுண்டு தீவாய் ஒடுங்கி ஒதுங்கிய ஜீவனற்ற தேசத்தில் மலட்டுக் காலங்கள் எதைத்தான் ஈனும் அர்த்தமற்ற இரவுகளில் நட்சத்திரங்கள் இருந்ததை
யார் கண்டார்கள்?
இயல்பில் தோயும் உணர்வுகளை களங்கப்படுத்தி பாவங்கள் என்றுரைத்த மலட்டுக் கருத்துக்கள் எதைத்தான் செய்யும்?
சேற்றினைக் கண்டு அருவருத்து மனிதர்கள் சலித்து
தனித்து ஒதுங்கி
35

Page 23
உணர்வுகளைச் சிதைத்து வளைவுகளில் இயங்கப் பிடிக்காமல் முரண்டு பிடித்து நேராக்கிய போது கண்ணிர்த்துளிகளின் வளைவுகளேன் மறந்து போயிற்று?
7.
மனிதர்கள் தமக்காய் மட்டுமே அதிரப் பழகிக் கொள்கிறார்கள் எதிரிகள்தான் இணைந்து கொள்கிறார்கள்
sell,
கிராமங்களேன்
சிதைந்து போகின்றன?
8.
மனிதர்களைப் பெறுவதற்காக ஒளியில் விலகி இருளில் நடந்தேன் - மெல்லிய கீதங்களை இசைத்தவாறே
இரைச்சலில் கரைந்தேன் இருளால் மட்டுமே இயற்றப்பட்ட மனிதரிடையே என்னைத் தொலைத்தேன் மனிதர்களைப் பெறுவதற்காக
9. எனக்குப் பிடித்தமான பாவங்களைச் செய்து கொள்கிறேன் சேற்றில் புதைந்து புரியாதவனாய் இருந்து கொள்கிறேன் 36

தூய மனிதர்களைச் சந்திக்க நான் பிரியப்படவில்லை அந்த நம்பிக்கையும் எனக்கில்லை தூயவனாய் இருக்கவும் நான் பிரியப்படவில்லை பூமியில் எனக்குரிய இடம் அவமதிக்கப்படுவதை நான் அனுமதிக்க முடியாது மனிதர்கள் வேர்களை அறுத்து விலகிப் போகையில் என் வேர்கள் ஆழப்பாயும் அந்தப் பறவைகள் நாடிவரும் போது உலாப்போக என் சிறகுகள் முளைக்கும் பறந்து போகையில் பதிவுகளை விட்டுச் செல்ல
நான்
ஆசைப்படுகிறேன்
நீ
ஆழமான பார்வையினை தருவாயானால் எவ்வளவு அற்புதமாயிருக்கும் என் கண்கள் பனிக்க
நன்றி சொல்வேன்
1 O. மேகங்கள் விரைந்தோடுகையில் தலைமறைக்கும் நட்சத்திரங்கள் நம்பிக்கையுடன் எனக்காக இருக்கின்றன
J1. O1.1991
37

Page 24
அவலம்
பறந்து போகிறேன்ஜன்ம பூமியே உலகைப் பார்க்க வேண்டும்! இளமை உலர்வதன் முன்
உன் மேல் படர வேண்டும்.
-டிசம்பர் 93 பகுதி - அ; கிளாவி
முன்னுரிமை பெற்றவர் முன்னால் நிற்க! நலிந்தவர் பயந்தவர் ஒதுங்கிநிற்க! ஒட்டிகள் மந்திரம் ஒதுக! நுரைத்தெழும் ஜலமே வழிவிடு! மூடுண்டு போனது யாழ்நாடு வழியும் போனது எழுந்தன அவலக் குரல்கள் வானம் கேட்டது திசைகள் யாவும் கேட்டன காற்றும் மழையும் பனியும் நிலவும் இருளும் கேட்டன நீண்ட காலமாய்! போகும் பாதையில் சுழிகள் உண்டென வானம் உரைத்தது. வானொலி உரைத்தது; உயிரும் பணமும் ஈர்க்கும் கரும் பொருள் உண்டென
உரப்பையும் பயணப் பொதியும் அரைக்கால் சட்டையும் நனைந்த கோலமாய்த் தேவர்கள்
38

கண்டங்களை இணைத்த கடல் வாசிகள் பனிக்கண்டங்களில் உலவிய அதிமனிதர்கள்
வீடு வாசல் தோட்டம் துறவு மா பலா அனைத்தும் ஒப்புக் கொடுத்தோடும்
பயணிகள் பேச்சற்றுப் போனவர் கதைப்பவர் வணிகர் குழந்தைகள் பெற்றோர் எனத் தென்னை மரத்திடை அடங்கிக் கிடந்தனர்
கிளாவிக் கரை கூவி விற் போர் வியாபாரம் செய்க! கூடிக் கதைப்போர் ஒன்று சேர்க! தனித்திருப்போர் கனவு காண்க! இரவு வரட்டும்
இருளும் வரட்டும் காற்றே அமைக!
போகுமுன் பெயர்களைப் பதிவு செய்க! கடலிலே அலை மோதும் வள்ளமெழுந்து வீழும்
வரிசைகள் முக்கியம் வள்ளங்களின் எண்களும் முக்கியம் இருவராய் மூவராய் அறுவராய் எனினும் வரிசைகள் முக்கியம்
வீசும் கந்தகக் காற்றும்
39

Page 25
நாறும் சேறும் எரிச்சல் வயமாய்ப் பயணிகள் வரிசைக்கு
வள்ளத்துக்கு
இடத்துக்கு
முந்துக!
வரிசைகளை மீறுக! ஒழுங்குகளைக் கலைக்குக! காவல்துறை வரட்டும்!
அவரவர் உடமைக்கு அவரே பொறுப்பு உயிருக்கும் அவரே தான். நல்லது இனி ஒட்டிகள் வருக! தெற்கே யமனின் திசையில் பதினைந்து பதினைந்தாய் அழைத்துச் செல்க!
நோய் தரும் ஜலத்தினை வானம் ஈய்ந்தது வெற்றிடங்களை ஈய்ந்த பாரிய வெளி போர் உலாப் போன பல மாரி காலங்கள் பிஞ்சும் பூவுமாய் சிசுக்களை காவு கொண்ட ஏரி
மண்தின்ற கடலிடையே பளிச்சிடும் ஒளிப்பிசாசுகள் பயணம் நெடியதும் கொடியதும் ஊதல் காற்றும்
40.

ஜலதாரை வீசும் கடலும் குளிரும் பயமுமாய்ப் பயணம்
திடீரெனத்துள்ளிப் படகில் பூத்த மீனினை என்னிடம் தந்தாய் நான் கடலிடம் தந்ததன் உயிர் ஈய்ந்தேன்
எதிரியானவன் எப்பவும் கூட இருப்பதாய் வேதத்தில் உள்ளது
நீயென் எதிரி
நான் பேசிடவில்லை நீகாட்டிக் கொடுப்பவனாய் இருக்கலாம் நீயும் அறிவாய்
நானும் காட்டிக் கொடுப்பவனாய் இருக்கலாம்
வேதத்தில் கற்பிக்கப்பட்டதை செய்பவன் ஆனேன் நீ மட்டுமென்ன? ஜலம் வீசி ஆடும் கடல் கொடுங்குளிர் இது மழைக்கால கும்மிருட்டு கொள்ளும் கூதல்
எங்கேயந்த ஒளிப் பொட்டுக்கள்? எங்கேயந்தத் துருவநட்சத்திரம்? எங்கேயந்தக் குருசு? அவலத்தொனி அடி வயிற்றில் ஊர்ந்தது ஊழி மழையில் ஒட்டிகள் குரல்
41

Page 26
திசை தெரியா அவலம்
வானமே வழிவிடு இல்லை வானம் வழி விடவில்லை ஒரு பாட்டம் பாடியது
பாவியானவர் எம்மிடையுள்ளதாய் ஒட்டிகள் உரைத்தனர்
யாரந்தப் u urte)97? யாரந்தத் துரோகி? அவனைக் கடலில் தள்ளுக! திருவுளச் சீட்டினைப் போடுக எவனோ அவனே பாவி எவனோ அவனே துரோகி
மழை கொடியது குளிர் கொடியது மனிதர் கொடியவர் பேய் பிசாசாய் அலைபவர் மனிதர் பசித்தவர் மிகமிகப் பசித்தவர் எனைக்கடலிடம் தந்தனர் நான் அலைகளில் வீழ்ந்தேன்
பகுதி - ஆ. மாநகர்
ஆர்வத்துடன் நெருங்குகிறேன் போவதற்கு முன் எனைத் தந்து விட்டுப் போகிற அவஸ்தை
42

போய்க் கடந்த தேசமொன்றின் பெரும் பாவச்சுமைகள் இளமை தசைக்கணுக்களில் துவண்டு போன தோல்விகள் பரணில் தூங்கி விட்ட கிளர்ச்சியூட்டிய எண்ணங்கள்
பேர் பெற்ற வழிகாட்டியின் முட்டாள் சீடனே! தப்புகிற வேகத்தில் விட்டோடிப் போன நிலத்தில் படரும் முட் செடிகளாலொரு கிரீடம் செய்! பொறுப்பற்றவனும் செலவாளியும் அமைதியற்றவனுமாகி போதையில் கரைந்த நாடோடியே தென்னந் தோப்பும் சவுக்கம் காடும் மணற்பரப்பும் பரந்த கடலுமாய் நீ பெற்ற இரவுகளை எதனிடத்து காவு கொடுத்தாய்? வேர்கள் படர
நீ யாசித்த நிலத்தில்
எதைத் தான் பயிரிட்டாய்?
வனவாசத்தில் ஒதுங்கியமரக்குடில்களும் சிற்சில மனிதர்களும் போலல்லநகரம் மாளிகையும் மயக்கமுமாய் நினைவுகள்
தூற்றப்பட்ட மனிதர்க்கு புனர்ஜென்மம் கொடுத்த வரிகளை வாசித்துக்கொண்டிருந்தேன்
43

Page 27
அதல பாதாளத்தின் குரூர அழகு இது எத்தனையாவது பயணம்? இது எத்தனையாவது குகை? இது எத்தனையாவது குரல்? சந்தித்த எத்தனையாவது மனிதன் நீ?
தற்கொலையும் நிராசையும் நிறைந்த புதிர்க்கணக்கினை நீயுரைத்த பின் இரவுகளைக் கடக்க யாரும் துணைவரவில்லை எதுவரை உண்மையினை அவர்கள் கொண்டு சென்றார்கள் அதுவரை நான் வந்தேன் எங்கு வைத்து கொலை செய்தார்கள் நான் அங்கிருந்தேன் என்னால் முடியாத பேரழிவினை ஊழியில் இயற்ற எனையங்கு தயார்படுத்தினார்கள்
நீண்ட தொலைவிற்கப்பால் அந்நியமான மலையின் அந்தரில் பாதாளம் வரையில் பரவிய பிரானே ஆவி பதற அலையெறியும் கடலே கணக்குகள் மீளவும் தீர்க்கப்படுகையில் நான் அஞ்சுகிறேன் வரண்டு போன சொற்களுடன் ஒரு கவிதை முடிந்து விடக்கூடும் என்பதே!
44

பாழாய்ப் போன பிரிவின் வேகத்தில் கிராமத்து ரயில் தடங்களில் வேகத்தோடு பாயும் நதி
நெடிய பயணங்களின் முடிவில் சந்தித்த பிரியம் மிக்க பெண்களின் நெருக்கத்தில் தத்தளித்து வாழ்த்துச் செய்தியுடன் விடைகொண்டு. . போய் வருகிறேன்
ஜனசந்தடி மிக்க தெருக்களில் ஒடுகின்ற ஊர்திகளில் தெறிக்கும் கணங்கள் GL Jar Ga, 16ooTLT சிரிக்கவும் வேண்டாம் பனிபோல் கண்களில் படரும் மெல்லிய திரையில் சேதிகளை பகிர்ந்து கொள்வோம் போய் வருக!
பகுதி - இ. காட்டாறு
இடிமின்னல் மழை காற்று கடலடி புயலுடன்
எழுந்தது மாரி நீர் கோளமாய் பாயும் வெள்ளம்
ஊழி முடிவு போல்
அச்சந் தரும் கொடூர மழை ஆத்மாவில் திருப்தி
45

Page 28
சொந்த நிலத்தில் , பாதம் பதிகையில் கிளர்ச்சி
கடலும் காடும் வெள்ளமும் குளமுமாய் சட்டென விரியும் கிராமம் வயலும் தென்னையும்
மீனும் நெல்லும் நிறைந்த பூமி
நீங்கள் எங்கு சென்றீர்கள்? யாரைப் பேட்டி கண்டீர்கள்? எதை அறிந்து கொண்டீர்கள்?
ஆயுத பேரங்களின் பின் இரவில் V வங்காள விரிகுடா தாண்டும் ஆயுதங்களின் கணக்கினை விடுவோம் வனத்திடை பயிற்சியை நோய் கருதி முறித்துத் திரும்பிய முதியவரையும் விடுவோம் நியாயங் கூற ஏலா கண்ணிருடன் விரட்டப்பட்ட மக்களிடையே விடுபட்டு உதிரியாய் ஒன்றிப்போன ரசூலின் கதையினையும் விடுவோம் மெல்லவும் ஏலாமல் விழுங்கவும் ஏலாமல் எல்லைக்கப்பாலும் இப்பாலும் யாரும் உரிமை கோராப் பிரதேசத்தில் நெஞ்சைநிமிர்த்திப்போம் ஜீவியே!
எங்கு முளைத்தெழுந்தேனோ 46

அங்கு ஒரு துண்டு நிலத்தில் படருமென் வேரினை இழக்க எனக்குச் சம்மதமில்லை
பெருக்கெடுத்தோடும் வெள்ளம் வேரினை அரித்துப் போகும் காட்டாறு
மிஞ்சிய வேகத்தில் எதனையும் விட்டு வைக்கவில்லை
உயிரும் பொருளும் கல்வியும் செல்வமும் நூற்றாண்டுகால வரலாறும் அச்சமும் நாணமும் குலமும் கோத்திரமும் ஜாதியும் பேதமும் சுழித்தோடும் ஆற்றோடு தேசவழமைச் சட்டங்களும் உரிமைகளும் விதிகளும் விழாக்களும் விதிகளும் பாவமும் பாவத்தின் கூலியும் அனைத்தும் நதியின் வேகத்தில்
ஆற்றுப் படுகையில் ஆற்றோர சிறுகல்லும் பளிங்காய் ஒளிர்கையில் குருடாய் முடமாய் ஏராளம் ஜீவிகள் ஓய்கையில் இனம் புரியா இசை "கண்தெரியா இசைஞனின் பாடல்
அலைகளில் எழுகின்ற முகம்
47

Page 29
ஓவென்றிரைச்சலிடும் கடல்
தந்தையும் தாயும் வாழ்ந்தலுத்த நிலத்தில் ஒலைக்குடிலில் தனியிரவு இரவு விரிந்தது
பொழுதுகள் போய்ப் படுக்கும் பின்னிரவில் நம்பிக்கையுடன் பிரியமான முகங்களை எழுதத் தொடங்கினேன்
பகுதி - ஈ அழைப்பு
இனத்தில் பெரிய ஜாதிகள் நாங்கள் பிழைக்க வழியில்லாமலே எவர்க்கும் பெருமை கொடுக்கும் செந்நெல் விளையும் தறையை அணுகினோம்
சேர்ந்தபடியே நம்முடனே சூழ்ந்த பண்பினர் யாவருக்கும் சுறுக்கு விளையும் தறைக்கு வந்தோம் துறக்க வேண்டாம் மானிடரே! துறக்க வேண்டாம் மானிடரே!!
குறிப்பு:
'யார்க்கெடுத்துரைப்பேன்?" என்ற குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடகத்தில் வருகிற நாடோடிப்பாடல் சிறுமாற்றங்களுடன் பகுதி - ஈ: அழைப்பு ஆக வருகிறது.
13.O2.1995 48

காண்டாவனம்
.97ے புடமிடப்பட்டும் புழுதியில் கிடந்தது பேரிடப்பட்ட எழுதாக் கவியென பெருநிலம்
49

Page 30
காண்டாவனம் உக்கிர அனலெறிந்து தொடங்கிற்று!
s2.
1.
கொதிக்கும் வெயில் வீசியடிக்கும் செம்மண் புழுதி குடம் குடமாய் குடித்தும் அடங்கா விடாய் காட்டு மரச் சிற்றிலைகள் விடும் அனல் மூச்சு
எண்ணெய் காணாதலையும் தோளில் துண்டுமாய் வலித்த மேனியர் நிரம்பி வழியும் கள்ளுக் கொட்டில் அரசியல் நெடி
தெட்டந் தெட்டமாய் ஆயனின் ஞாபகம்
கலைபட்டோடி வருமுன் கழிந்த காலம் கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் நாயாறெனப் பரந்த அவன் நாடு பற்றை பறுவுகள் படர்ந்து காடாய் போனது
முன்னர் சீசனிற்கு மீன் பிடிக்க வரும் சிங்களவர் வாடிகளில் குடித்த வென்னப்புவ வடி லொறி லொறியா கொழும்பேறும் மீன் இறைச்சி மாட்டிற்கு வரும் காக்கா
50

லோங்ஸ் போட்ட பிறத்தியாருக்கு நல்ல மதிப்பு ராஜபோகம் நாகு செல்லத்தை வைத்திருந்தான் செல்லம் தனபாலை வைத்திருந்தாள் லிகோரியின் மகளை ராமு வைத்திருந்தான் செல்லமணியின் ரஜனா நாகுவிற்கு பிறந்தாள் டயனா யேசுரத்தினத்திற்கு ரனா எட்வேட்டிற்கு ராஜா ஐயகோனின் மகனிற்கு
புயலடித்து ஓய்ந்ததும் புத்தகம் வந்தது புரட்சி பற்றி கேள்விப்பட்டதும் வெள்ளையும் அமலனும் பின்னால் திரிந்தனர் பெருங்காட்டுக்குள் வீரர் சென்றனர் தளங்கள் இருந்தன தந்திரம் தெரிந்திருந்தது தளபதிகள் இருந்தனர் தம்முள் முரண்பட்டு பின்னரெலாம் வெள்ளை வெளியில் போனான் அமலனின் காத்திருப்பு கரைவலையுடன் ஆனது
2. ஆயன் காண்டாவனத்திற்கு அனலிட்டான் பெருமேகத்திரளாய் தீ
· · 51

Page 31
விலங்குகள் வெருண்டோட இருபத்தொரு நாட்கள் காட்டுத் தீ இரு குட்டிகள் தீய்ந்து செத்தன வெகுண்டெழுந்த நாகம் இருபத்தொரு நாட்களை நல்லதாகாவெனச் சபித்து எதிரியிடம் சென்றது பெரும் போரை எதிர்பார்த்து காத்திருந்தது
நாகாஸ்திரமாய்
J. தமிழோசையோ வெரித்தாஸோ கேட்டிரா காட்டுக்குடி பின்னால் கடலோசை கண்போர்ட் உறுமுஞ் சத்தம்
குளத்துப் பக்கமாய் நரியின் ஊளை தூரத்தில் எதிர்க்குரல்
இரவு
ஆயனிற்குத் தெரியும் ஆட்டுக் குட்டிகளுக்காபத் தென நோய்களைப் போலிவை பயங்கரமில்லை
இந்தியனாமி காலத்தில் மாடுகளிற்கு முன்னடைப்பான் கண்டது நிறைய செத்துப் போயின வெகுவாய் பட்டி குறைந்தது சிலோனாமி படையெடுத்ததும் கிராமம் ஓடியது
52

பட்டி இல்லாதொழிந்தது என்ன சீவியமிது ஊரே வீடற்று வெறிச்சென்றது
வாழ்ந்து பெருகிய மனிதன் பிடுங்கப் பட்டது போல் சாய்க்கப் பட்ட தென்னை தென்னை தென்னையாய் அரியப்பட்ட ஏராளம் இராணுவ பரண்கள் இராணுவ மெழுப்பிய மண்முகடு மறக்கேலா அவச்சாக்கள் கண்ணியில் காலிழந்த எருதுகள் காயம்பட்ட ஆயிரக்கணக்கான தென்னைகள் சொல்லாமல் போனவர் பேருடன் வந்தனர் எல்லோரும் சொந்தம் பேசினர் ஆலாத்தி எடுத்தனர்
காண்டாவனம் காடாய் இருந்தது சபிக்கப்பட்ட காலமானதும் காட்டில் சண்டைகள் நடந்தன மின்னல் தெறித்தது முழக்கம் கேட்டது
தளபதிகள்
தம் கரங்களை தாமே வெட்டிக் கொண்டதாய் வதந்தி பேர் பெற்ற வீரர் மாண்ட போது சனம் அபத்தமாய் கதைத்தது உண்மைகள் வதந்தியாய் பரவின சனம் பயத்துள் உறைந்தது s
53

Page 32
4.
இரவிரவாய் உடுப்புக் குளத்தில் கூத்தாடினர் மடார் யோகனும் முட்டுக்காய் கணேசனும் புள்ளையும் யேக்கப்பும் குடித்துக் குடித்து ஆடினர்
காத்தவராயன் இரவிரவாய் அலைந்தான் சம்பங்கி தேவடியாள் வீடுகளைதட்டினான் மதுரையில் நின்றான் கப்பலேறி காசிக்குப் போனான்
மூதேவி வாலாயம் செய்த முனியிடம் ஆசி பெற்றான் தாலி வைத்து சூதாடினான் வெளியில் போனான்
சோதனைச் சாவடியில் எரிச்சலூட்டும் கேள்விகள்
எங்கு போகிறாய் பதரே? எதற்கு? யாரைப் பார்க்க? தலைகுனிந்து போனான்
போகிற வழியில்
பெருநகரில் வரி கொடுத்து திரும்பும் கணேசனின் தமக்கையைக் கண்டான்
கணத்திற்குக் கணம் மாறும் செய்திகளாலான உலகத்தைக் கண்டான் களவாய்த் தோணியில் திரும்பினான்
54

குளிர்ந்த இரவில் வேட்டை ஆடினான் சிங்களக் கிராமத்தில் மாடுகள் திருடி வந்தான்
கடற்கரையில் அடையலில் ஆம்பல் கிடைத்தது கொளுத்த விலை போனது
கோடையில் அம்மாள் வருத்தம் கண்டது அம்மனின் உக்கிர கோபம் உடலெல்லாம் போட்டது துடித்துப் போனான்
வல்லத்து மாகாளி வேப்பிலையுடன் தோன்றினாள் அரங்கு அருண்டது டோலக் அதிர்ந்தது
சபை மிரண்டது ஆயன் விழித்து விழித்துப் பார்த்தான் கூத்தன் ஆடினான் கூத்தி ஆடினாள் விடியு மட்டும்
கூத்து நடந்த இரவில் ஆர் ஆருடன் ஓடிப் போயினர் பார்த்திபனின் பெண்டு பிள்ளைகளைத் தவிக்க விட்டு கண்ணனுடன் ஒடிப் போனாள் கண்ணன் மலைக்கோடிய போது திரும்பி வந்தாள் குளத்தங்கரை ஊத்து மண்ணில் பார்த்திபன் மனைவியுடன் குடி வந்தான்
55

Page 33
புள்ளையின் கவலைகள் தேங்காய் பறியல், உரியல் காலை பத்து மணி வரை பின்னர் கள்ளுக் கொட்டில் அரச நிவாரணமும் சகாய வேலையும் இரவில் பெண்டு, பின் பிள்ளைகள்,
காற்று மாறியது அமலனிற்கு மீன் பட்டது மடி மாற்றி மடி மாற்றி லட்சம் லட்சமாய் கொட்டியது
ஆயன் நாம்பன்களிற்கு காயடித்தான் காயடிக்கையில் இறந்தவை
குறை நலத்துடன் தப்பியவை போக எருதுகளை நல்ல விலைக்கு விற்றான்
பட்டி நாம்பன் ஒய்யாரமாய் உலா வந்தது பட்டி பெருகியது
5. உடல் சிதறி கையிழந்து காலிழந்து படுக்கையில் முடங்கி கோரமாய் கிடக்கும் படுக்கைப் புண்ணுடன் வேதனைப் பட்டு சோர்ந்தும் ஜீவன் குன்றா இளைய மண் கண் முன் பரந்து கிடந்தது
புண்ணியம் செய்து போன பிறவிகளிற்கு நன்றி
56

போகும் பாதையில் உங்கள் பெயர்களை
வழிகாட்டிகள் திரும்பத் திரும்ப உச்சரித்தனர்
பேரால மரத்தடி விழுதென ஆதி இருந்தது பெருங்குரலெடுத்து வெகு வேகமாய் நதி போனது நாணல் இருந்தது சேறு இருந்தது
நதி போனது நிலத்தைக் கிளரக் கிளர வீரம் விளைந்தது
இ. புரிந்து கொள்ளு மட்டும் காத்திருக்கச் சொல்லி போய் விட்டது கவிதை மீதி சொற் கூட்டத்துடன் மெய்ப் பொருளைத் தேடச் சொல்லி கடல் பொங்கி ஆர்ப்பரிக்கிறது சிறுக்கிகளைப் பற்றிய வலைஞர் பாடல் வானத்தில் செம்பருந்து கரையில் துள்ளி வீழும் மீனினம் கடுகி மடி மாற்றும் மனிதர் அலைகளிற்கப்பால் இருண்டு செல்லும் அற்புதக் குகையாய் வங்காள விரிகுடா!
2O.O3.996
57

Page 34
வனத்தின் அழைப்பு/
பகுதி 1- அலைகள்
கடலின் அழைப்பு எப்படி இருந்தது நண்ப உண்டதும் உறங்குவதுமாய் உன்னுலகினை வரைந்தாய்
கடற்கரையில் கையினைத்திருந்த கடைசி மாலையில் அடைந்த பரவசம் அன்று தத்துவம் தெரிந்திருந்தது அனுபவம் இல்லை கடல் இரைந்து கொண்டிருந்த பெளர்ணமி தினம்
இன்று வரை அந்தக் கரையில் நானும் இல்லை உன்னைப் போல் கடலிலும் இல்லை அலைகளில்.
58

ரசித்த நிலவும் முணுமுணுத்த பழைய பாடலின்
ஓரிரு வரிகளுமாய் ஓர் அரசனைப் போல் இரவுகளை வெற்றி கொண்டேன் அடிமையடிமை யென்றார்த்தது பகல்
அந்தக் கோடை கூட வந்தவர்களைக் கொண்டு போன புயல் அந்தப் பேரழிவு நான் அந்த மலையும் தனித்தழும் தீவும் நான் நான் அந்த வேதனை ஏறியேறிக் களைத்தோய்ந்த பின்னும் சாம்பல் மேட்டில் கிளம்பும் புழுதிகள் பற்றி ஏராளம் கவிதைகள் கேட்ட பின்னும் ஏனிதை எழுதினேன்
வெளிவரமுடியா வரிகளை எழுதுவது எனக்குச் சிரமமே எங்கோ குழலொன்று தனித்தொலிக்கின்றது பச்சைப் பசேல் என்ற அந்தக்காலம் மலர்களைக் காவுகொண்ட இளவேனில்
C3_frri
மீளவும் மீளவும் போர் போரின் அனர்த்தம் என்னுள் விளைந்தது நான் மாறினேன் துருவத்திலிருந்து இன்னோர்துருவத்திற்கு இடம் மாறினேன்
59

Page 35
திருப்திதரா உண்மையாய் தனிமை இகழப்பட்டதும் வெறுக்கப்பட்டதும் உண்மையாய் ஆனது
எதிர்பார்த்தது போலவே இரத்தக் கொதிப்பு அடங்கி இதயத்தில் தங்கி விட்டது
பின் இறப்பு எல்லோருக்கும் வருவது போல் வரும் வரை காத்திருப்பு
அள்ளப்படுவதற்கு முன் எளிமையான ஒரு பாதை பிரியமான வழித்துணை
(1Քւգ-Ա-ւOn" எங்கிருந்து தொடங்குவது நண்ப?
பகுதி 2 -தவம்
مHسے
புல் பூண்டுகள் பூச்சி புழுக்கள் உடலில் படர்ந்திருக்க சாம்பல் மேட்டில் கரம் கூப்பி காலுயர்த்தி அகோர தவத்தில் உறைந்து போனான்
வில்லோய்ந்து கிடந்தது நெஞ்சுக் குழிக்குள் பொங்கிய அலைகள் போர் ஆரம்பமானது இதயத்தின் ஒவ்வொரு முடுக்கிலும் 60

சுடலைப் பொடி பூசி வனங்களில் அலையும் கோர முனிகள்
வில்லும் அம்புமாய் புறப்பட்ட நினைவு வருவது போர் என்பது போல் அவனின் நினைவு நதியைப் போல் வந்தது புயலாய்ப் போனது எதை எடுத்துச் சென்றது எதைத்தான் விட்டுச் சென்றது
வானில் எப்போதாவது பறந்து போமோர் வெண்ணிறக் கூட்டம் திடீரெனத் தாக்கும் கொடூரக் குளிர்
அன்பிற்கும் குரலில்லை அவலத்திற்கும் அவள் செவி தரவில்லை வானம் பூமி இரண்டாய் பிளந்த இரவில் அவன் சிதறிக் கிடந்தான்
s2.
எழுந்து போய் விண்மீன்கள் விடிவெள்ளி என்றவாறு தென்றலில் சுகித்திரு மரணதுரதனின் கதையினை எழுதுவேன்
அந்த வாசலில் அவன் நின்றான் மரணத்தின் சிரிப்பு உயிர்ப்பற்ற செய்தியை ஈய்ந்தவன் சிரித்தான் -
61

Page 36
எப்படிச் சிரிக்காதிருக்க முடியும் முடிவற்ற மரணம் அவனை உறைக்கவில்லை அதிலவனிற்குத் திருப்தியில்லை அழுவானென்றும் நம்பமுடியவில்லை இனியும் ஏதேனும் பகிடி விட்டுச் சிரித்திடமுடியும் என்ற நம்பிக்கையும் பொய்த்து விட்டது அவன் அறிவான் கண்முன் நடந்ததை விட காணாமல் போனது எதைவிட்டுச் செல்லும் என்பதை
இ.
முகில் வரைந்த சிகரங்களில் விழுந்தடித்தேற மனிதர்கள் இல்லை மண்ணின் தழும்பில் கால் பதித்து மனிதர் போயினர்
வனத்தின் நெடும்பரப்பில் உதித்தெழுந்த சிறுகுடில்கள் உக்கிக் போயின வானம் பார்த்த பூமி குனிந்து நிற்க
பெருநகர் வீதியில் தரிசு நிலங்கள் விதைக்கப்பட்டன
எல்லைக்கப்பால் வெகு தொலைவிலும் எச்சலனமும் இல்லை ஓடிப்போனவரின் ஒரு முகமும் இல்லை அறைகூவல் கோஷங்கள்
62

நிறைந்த பழங்காலக் கூட்டங்கள் போல் அவர்களின் நினைவு விரக்தியில் தோயும் சொற்களுடன் ஒப்புவமை மிக்க நியாயங்கள்
சுருதி சேர ஏலாது பேராறுகள் பெரும் கடல்கள் தாண்டிப்போன நண்பர்களே பேசுங்கள் ஒரு முறையாவது கடலுடன் பேசுங்கள்
ref
முன்னர்
'தக்கோன் தக்கோன்' எனவுரைத்த வானம் மீண்டும் கூடிற்று கொலைச்குத்திரம் நடந்தேறிய களம் தசைநார்களின் அதிர்விலெழும் போர் பிதாமகர் தேர்த்தட்டின் கீழே பூமியில் புரண்டார் பாட்டன் சாய்ந்த சேதியில் களம் திரண்டது
அம்பணையில் முது பெரு வீரர் கிடந்தார் உடலில் குத்திய அலியின் அம்புகளை வெறுப்புடன் இழுத்தெறிந்தார் இரத்தம் ஓடியது தப்பிக்க முடியா மாயாலோகத்தின் வசனங்கள் அவரிற்குக் கேட்டன
வீரன் தலை குனிந்து நின்றான் 'பிதாமகரே
63

Page 37
நான் வெறும் கருவி கடமையைச் செய்தேன் என்னை மன்னியும்'
'மரணத்திற்குக் காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின் அழைப்பைத் தாண்டி எந்தன் மரணம் எட்டுமா கொலைச்சூத்திரங்களை மட்டும் உனக்குக் கற்பித்தவர்களிடம் சொல் விண்டுரைக்க முடியா மரணத்தின் விலையை مسي இனியும் தீர்மானிக்க வேண்டாம்
வனங்களின் கோரக்குரலுன் தசைநார்களில் அதிர்கிறது மகனே ஆயுதத்துடன் நீ நன்றாகவே பேசினாய் மனதையேன் இழந்து போனாய்
மீளமுடியா தளைகளை மீறி உயிர்நிறுத்தி குரல் தந்தவன் முன் சொல்லிழந்தவன்தலை குனிந்தான் 'மகனே! தாகமாய் உள்ளது' வில் கோர்த்து புது ஊற்றுநீர் ஈய்ந்தான் முப்பாட்டன்
ஆவி குளிர்ந்தது
வரலாறு அம்பணையில் துஞ்சியது வீரம் வழிநடந்தது
64

2.
மண்ணும் உக்கி மாசுற்றுப் போன காற்றில் எழும் அவலக் குரல்கள்
எனினும் நினைவுகள் அழிவதில்லை தன் கனவுகளை விரித்தவன் கதையினைக் காற்றும் அறியும்
வீரம் செறிந்த எத்தனை கதைகள் நம்மிடை எழுந்தன நாட்களில் நம்பிக்கை கொண்டிருந்தோம் மகிழ்ந்திருந்தோம் ரம்மி விளையாடினோம் செவ்வானம் மேற்கே சொற்ப நேரத்தில் மறைந்ததில் திருப்தியில்லை அமைதியாய் சிந்தித்தோம் பொழுதுகள் ஒன்றாய்க் கழிந்த சொற்பகாலம்
மக்கள் ஊரைவிட்டுப் போய்க் கொண்டிருந்தனர்
மரணதுரதனின் ஊர்தி காற்றில் மிதந்து வந்ததும் மரண அழைப்பினை நீ அமைதியாய் ஏற்றதும் பின்னர் கேள்விப்பட்டோம் பிற தேசங்களில் நிகழ்ந்தது போலவே
65.

Page 38
அவ்விரவிலும் அடுத்த இரவிலும் நடந்ததொன்றும் புதிதில்லை
அலையெறியும் கடலின் கரையில் மூவராய்த் தனித்திருந்த மாலையில் உன் உதடுகள் வெடித்து மரணநிழல் கவிந்திருந்ததை நினைவு கூர்ந்தேன்
பின்கதவுகள் திறந்திருக்க பாவம் நிறைந்த கனவுகளுடன் பேதை போல் தப்பிப் போயிருக்கலாம் விதியின் தத்துவங்களை உரக்கப் படித்தபடி ஒடிப் போயிருக்கலாம் இங்கேன்
உதிர்ந்து போனாய்?
26t.
தவத்தில் அமைந்தவன் உள்ளுணர்வுந்தக் கண்விழித்தான் ஏவப்பட்ட அம்பாய்ப் பாய்ந்த பன்றியின் உடலில் வீரனின் வில் பேசிற்று இரைக்காய் இன்னோர் அம்பும் தைத்தது இரைதேடி வேடனும் வந்தான் போர் ஆரம்பமானது
தாயாதிகள் உறவுகள் விட்டுப் போயின நீண்ட காலம் போல் தாயின் நினைவு வெறித்தோடிய நதியில் ஓய்ந்த கரங்கள் எனினும் போர்
66 lh

வெற்றுக்குரல்கள் ஓங்கி ஒலித்த பால்ய நாட்கள் வேட்டை விதிகளை உரக்க சொல்லி அலைந்த காடுகள் வெறித்துப் போன உறவுகள் திடத்தினைச் சிதைக்கும் நினைவுகள் எனினும் போர்
எத்தனை வீடுகள் சோகங்களாய் எஞ்சின மறுக்கப்பட்ட நிலத்தில்
காதலுடன் கால் புதைய நடக்கவெண்ணும் கனவு
கடந்த பாதையில் இருபுறமும் நம்பிக்கை தரும் எச்செய்தியும் இல்லை போர் வெறியில் பெயரிழந்த சுவடுகள் கனக்கும் இதயம் சுவரொட்டியாய் சிரிக்கும் மரணதுரதர்
சலித்துச் சகித்த ஒளியிழந்த முகங்கள் சபிக்கப்பட்டது போல் அனைத்தையும் மறந்த மக்கள் 'சலித்துப் போன தேசமே. ' கேவலாய் அவன் குரல்
எதை எதிர்ப்பது எதனுடன் இணங்குவது அவனால் முடியவில்லை தோற்றுப் போனான் வேடனின் கால்கள் மார்பில் அழுந்திக் கிடந்தன
67

Page 39
பகுதி 3 விடைபெறல்
அவனே இயற்றிக் கொண்ட தத்வ தளங்களை உதறி கீழே இறங்கியபோது வரவேற்க எவரும் இல்லை ஜனத்திரளில் கலந்தான்
நேசித்த மனிதர்களை சந்திக்க அவனிற்கு விருப்பம் அவன் நினைவுகளை பத்திரப்படுத்தினான் நன்னாரி வேர்களின் மயிர்க்கணுக்களில் அவை பதிந்து போயின மூலிகை தேடி மனிதர் வருமோர் காலத்தில் உயிர்ப்பதற்காய்
என்றுங் கூடவே இருக்கும் பரிசுத்தமான பாதி மங்காமல் இருக்கிறது
ஓசையற்றுப் போன இரவின் கணங்கள் குலுங்கும் மீண்டும் மீண்டும் அதிர்ந்ததிர்ந்து குலுங்கும்
மழை சோவெனப் பொழிந்து பூமிபூத்திருக்கும் நாளை நச்சுக் கால்களால் பூமி கன்றிப் போவதற்கு முன் அவன் புறப்படுவான்
27. O7. 1993
68

பக்கங்கள்
மலரினைச் சாத்துமென்!
அலைகள்
ஏவாள்
நீ போனாய்
கீதங்கள் அழிந்த போது.
சலனம்
நீறு பூத்த இளமை செவல்
சுலோ
இருள் காலத்துயர்!
சங்கீதம்
சூரியகந்த
என் வசந்தம் வராமலே போய்விட்டது -
இரவுகள்
அந்த நாட்கள் நெருங்கி விட்டன!
நட்சத்திரங்கள்
அவலம்!
காண்டாவனம்
வனத்தின் அழைப்பு
69

Page 40
70
குறிப்புகள்


Page 41


Page 42

என்னைஉறுத்தும் நினைவுகளைச்சொல்வேன் தொந்து போனான்நாட்களின் ர்ைத்திரிை3ைர் தொட்டிேன் சிதழுறும் காயங்கள் பேசும் மொழியினில்
ார்ரைப்சேவிடுங்க"
"அஸ்வகோஸ்
F్చ