கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவு 2007.04
Page 1
Page 2
ཐ་ན་
Page 3
தவிர்க்க முடியாத காரணங்களால் 'அறிவு இதழ்கள் எப்போதும் தாமதித்தே வரவேண்டியிருக்கிறது. இந்த 2007ம் ஆண்டின் 3வது இதழும் அப்படியே தான்.
இம்முறை புரட்சித் துறவி - விபுலானந்த அடிகளார் சிறப்பிதழாக வருகிறது அவரது பல பரிமாணங்களையும் நாலைந்து கட்டுரைகள் மூலம் வெளிக் கொணரமுடியாது.
கலைஞர் தர்மசிவராமூவின் கட்டுரைகளும் இவ்விதழில் வெளியாகியுள்ளன. அவரது சிந்தனைகள், கருத்துக்கள் கூட சில கட்டுரையில் அடக்கமுடியாது.
எமது முயற்சி அவர்களை மீண்டும் அறிமுகப் படுத்துவதுதான் என்று ஆறுதலடைய வேண்டியதே.
சிலகாலங்களுக்கு முன்னதாக வெளிவந்த கி. லஷ்மணனின் இந்தியத் தத்துவவூானம் இலங்கை அரசாலும் இந்திய அரசாலும் பாராட்டப்பட்டு பரிசுகள் பெற்ற நூல். அதில் பிரசுரமான 'சைவசித்தாந்தம் கட்டுரைகளின் முதற்பகுதி இம்முறை வெளிவந்துள்ளது தொடர்ந்து அவரது கட்டுரைகள் வெளிவரும்.
தாமரைத்தீவானின் தொடர் சுயசரிதைக் குறள் கட்டுரையும் இவ்விதழில் இடம் பெறுகின்றது. இவற்றைவிட வேறு கட்டுரைகளும், கவிதை தகவல்களும் வெளிவருகின்றன.
எமது நோக்கம் சுருக்கமான கட்டுரைகளில் விடயங்களைத் தருவதே.
இம்முறை அதில் தேறிவிட்டதாக நாம் பெருமைப்பட முடியாது.
உங்கள் அபிப்பிராயங்கள் வரவேற்கப்படும். எம்மை ஊக்குவிக்கும்.
S.P. IILD&affiliar
ஆசிரிய குழுவிற்காக) 57, பிரதான விதி, 65II. SLI. 026-22222O7
திருக்கோணமலை.
2007 - - Ο Ν. அறிவு
Page 4
છ[[ઈcય “ARIVU* - KNOWLEDGE சந்திரசேகரம்பிள்ளை ஞானாம்பிகை ஸ்தாபித - வெளியீடு 41, கல்லூரிவிதி, திருக்கோணமலை. Sandrasegarampillai Gnanambigai Establishment 41, College Street, Trincomalee
வபாருளடக்கம்
உங்களுடன் ஒரு நிமிடம்
1.
பொருளடக்கம்
நேரமில்லை - சுவாமி கெங்காதரானந்தா 2006ல் நோபல் பரிசு பெற்றோர் நினைவில் நிற்பவை - தாமரைத்தீவான் அறிவு - அருள் ஜோதிச்சந்திரன் சைவசித்தாந்தம் -(1) கி. லஷ்மணன் புரட்சித்துறவி - அட்டைப்படக்கட்டுரை ரிஷிமூலம் - வ.அ.அரசரத்தினம் கவிதையின் நான் கண்ட விபுலானந்தர் - பாலேஸ்வரி ரட்னசிங்கம்
கருமயோகம் - அருட்டிரு விபுலானந்த அடிகள்
2,
தர்மசிவராமூ - சந்தர ராம் - உள் அட்டைப்படக் கட்டுரை 13. உண்மைக்கலைஞன் - டிஅஜித்ராம்பிரேமின் 14. சில குறிப்புகள்
5. (8Ulta.
16. பிரேமின் கவிதைகள் ஒருபார்வை - அழகியசிங்கர்
எமதுஸ்தாபிதகாரணகர்த்தாக்கள் திரு.திருமதி. சந்திரசேகரம்பிள்ளை
ஞானாம்பிகை அவர்கட்கு அறிவு 2007 :59 இதழை சமப்பிக்கிறோம்
Sifa
፵በበእማ , , ........................................ ; a 2 -
நேரமில்லை
- சுவாமி லகங்காதரானந்தா
நாம் கலியுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கலியுகத்தில் ஆண்ம ஈடேற்றத்துக்குப் பஜனை இலகுவான வழிமுறையாகும். இவ்வுலகை இரண்டு வித அணுக்கள் சேர்ந்து இயக்கி வருவது போன்று ஆண்களும், பெண்களும் இந்த நாம பஜனையை உளமாரப் பாடி பயனடைய வேண்டும், பஜனை பாடுவதற்கு மனச் சங்கடங்களோ - கூச்சமோ இருக்கக்கூடாது. வாயைத் திறந்து, மன ஆழத்தில் அதனுடைய கருத்துக்கள் பதியக்கூடிய மாதிரிப் பாடவேண்டும்,
அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் உள்ளக்கசிவுடன் பஜனை பண்ணுவதால் நிறையப் பலன் உண்டு. எங்களுடைய உடலில் இருக்கின்ற எழுபத்தீராயிரம் நாடி நரம்புகளும் அதன்பால் ஈர்க்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு, புதிய பொலிவுடன் இயங்கத் தொடங்கும். அன்றாட வாழ்க்கையில் பல புதிய மாற்றங்களையும் அபூர்வ சக்தியையும் அது கொருக்கும்.
எங்களுடைய வாழ்க்கையில் கிரக நிலைகளாலும், அதன் தோஷங்களாலும், கோளாறுகள் ஏற்பட்டு பல கஷ்டங்களை அனுபவிப்பதாக முடிவு கட்டி விடுகிறோம். மேலும் பிரச்சனைகளையும் துன்பங்களையும் கூட்டிக் கொள்கிறோம். இப்படியான எண்ணத்தை நாம பஜனையால் நிச்சயமாக மாற்றமுடியும். கிரக நிலைகளையும், அதன் தோஷங்களையும் நிச்சயம் வெல்ல முடியும் என்று மகான்கள் கூறுகின்றனர். மகாத்மா போன்ற மகான்கள் தமது அன்றாட கருமத்தில் நாம் பஜனையிலும் ஜெபதியானத்திலும் தம்மை ஈடுபடுத்தி வெற்றி கண்டனர்.
இத்தகைய ஒரு சிறந்த மார்க்கத்தின் மூலம் ஆன்ம ஈடேற்றத்தை அடையமுடியாமல், இந்துக்களிடையே பரம்பரை பரம்பரையாக, பாட்டன் காலத்திலிருந்து ஒரு சொல் உபயோகத்தில் இருந்து வருகிறது. "நேரமில்லை” இந்தச் சொல்லைத் துணிந்து கூறும் அறியாமை இன்றுவரை தொடர்கிறது. இது ஒரு குறைபாடு மகாதவறும் என்றே கூறவேண்டும்.
2007 . سد و بسر
அறிவு
Page 5
உலக கருமங்களை எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொருவரும் ஆத்மீக ஒழுக்கத்திலிருந்து தவறி விடுகிறோம். இரண்டு குழந்தைகளை நான்கு குழந்தைகளை வளர்க்க முடியாமல் திண்டாடுதல் பொருள், பண்டம், பணம் இவற்றை தேடுவதிலேயே முழு நேரத்தையுமு கழித்தல் உத்தியோகம், கடமை, பட்டம், படிப்பு இப்படியாகப் பல காரணங்களைக் காட்டி, ஆத்மீக நெறியிலிருந்து தவறிவிடுகின்றனர்.
ஆத்மீக நெறியைப் பின்பற்ற கலந்துகொள்ள எமக்கு நேரமில்லை எண்று துணிந்து இந்துக்கள் கூறுகின்ற அறியாமையை என்னவென்று சொல்வது. ஒரு செயலை செயலாற்றுவதற்கு எடுத்துக் கொண்டால் உடனே பிரச்சனைகள் தோன்றிவிடும். தொடங்கும்போதும் பிரச்சனை (Problem) செயல்படுத்தும் போதும் பிரச்சனை முடிக்கும்போதும் பிரச்சனை. எல்லாமே பிரச்சனை. மனிதன் ஒரு செயலை பிரச்சனையில் தொடங்கி, பிரச்சனையில் முடிக்கிறான். இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணச் சிந்திக்கிறான். சிந்தனையில் தெளிவில்லை. தெளிவில்லாத சிந்தனையால் சொல்லில் தெளிவில்லை - செயலிலும் தெளிவற்ற நிலை, முடிவில் பிரச்சனை தீரமுடியாமல் துன்பம் அதிகரிக்கிறது.
இத்தகைய உலகில் கருமங்களில் மனம் ஒரு நிலைப்பட்டு சரியான குறிக்கோளுடன் வாழ்வதற்குப் பிரார்த்தனை மிகவும் அவசியமானது. அதற்குரியநேரத்தை நாமாகவே விரும்பி ஒதுக்கி மனவிருப்புடன் ஈடுபடவேண்டும்.
இந்துக்கள் தொன்று தொட்டு தாவர போஷணிகளாக வாழ்ந்து இடையில் ஊன் உண்ணனும் பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்துள்ளார்கள். சில அற்ப காரணங்களைக் காட்டி, எம்மால் க் கைவிட முடியாதென நினைக்கின்றனர். உடலுக்கு ஊட்டம் தேவை இதை உட்கொள்ளாவிடின் நோய் வந்து விரும் என்று தவறான கருத்தைக் கொண்டு உடலை வளர்க்கிறோம். இது ஒரு கீழான செயல்.
விட்டமின் குளிசைகளாலோ - மிருகங்களின் புலாலினாலோ உடல் வளர்ந்து விடாது. எங்களுடைய உடலும் உள்ளமும் வளரத் தேவையான உணவு அவையல்ல. இவை ஒருபோதும் ஆன்ம சக்தியைப் பெற்றுத் தரமாட்டா.
இதற்கு எடுத்துக் காட்டாக சரியான அறநெறியை மேற்கொண்ட அராபியர் போர் வீரனுடைய கதையைக் கூறுகிறேன்.
سه 4 -
፵ሰሰማ
இது
லெபனானில் - இஸ்ரேல் மக்கட்கெதிராக போரில் ஈடுபட்ட ஓர் அராபிய ரூடா வீரன் இதற்கு ஓர் நல்ல எடுத்துக்காட்டு. கமால் ஜாம்செட் என்பது அவனது பெயர். பிறப்பில் அவன் ஒரு முஸ்லிம், வாழ்க்கையில் அவன் ஒரு இந்து செயலில் அவன் ஒரு யோகி அவன் சுத்த சைவ உணவை உண்பவன், தன் நாட்டுக்காகப் போராரும் அன்றாட கடமையிலும், காலையில் இரண்டு மணிநேரமும், மாலையில் இரண்டு மணிநேரமும் தியானத்தில் ஈடுபடுவான். ஒரு முஸ்லிமாகப் பிறந்து சரியான முறையான இந்து தர்மத்தை அனுஷ்டித்ததை, நீங்கள் ஒவ்வொருவரும் ஆழமாக உணர்ந்து பார்க்க வேண்டும், செயற்படுத்தவேண்டும்.
இந்துக்களாகிய நாம் பொங்கல், தீபாவளி, வருடப்பிறப்பு ஆகிய பண்டிகைகளைக் கொண்டாருகிறோம். இப்படியான முக்கிய தினங்களில் ஏதாவது நல்ல செயலை மேற்கொள்ள வேண்டும் என்று திடசங்கற்பம் கொள்ளவேண்டும். ஆன்மீக வழியில் ஈடேறுவதற்கும் இத்தகைய சிந்தனைகள் பலனளிக்கும்.
இதேபோன்று இத்தலயாத்திரையையும் புனித தினமாகக் கொண்டு, ஓர் குரு, ஆசிரியன் என்ற நிலையில் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கட்டளை இடுகிறேன். இத்தலயாத்திரையின் பயனாக வீடு திரும்பும்பொழுது, மனத்தில் ஓர் தீர்க்கமான சங்கற்பத்தை உண்டுபண்ணிச் செல்ல வேண்டும். இதனால் பல நன்மைகளை நீங்கள் நிச்சயமாக அடைவீர்கள்.
- நன்றி - அமிர்தவர்ஷம்
அறிவு வாசகர்களுக்கு........ அறிவு சஞ்சிகை பற்றிய உங்கள் அபிப்பிராயங்களையும், ஆக்கங்களையும் எழுதி அனுப்புங்கள். அன்புடனும் ஆவலுடனும் எதிர்பார்க்கிறோம்.
(9p56 57. பிரதான வீதி, திருக்கோணமலை.
2007 Ð . ...,.,,, = 5 =
அறிவு
Page 6
2006 ஆண்டில் நோபல் பரிசு வயற்றோர்
இயற்பியல்: ஜான் சி மேத்தர் மற்றும் ஜார்ஜ் எஃப் ஸ்மூட் (அமெரிக்கா) பிரபல்சம் அதன் ஆரம்பக்கட்டத்தில் இருந்த நிலையைத் திரும்பிப் பார்ப்பதற்கும், நட்சத்திரக் கூட்டங்கள் மற்றும் நட்சத்திரங்களையும் புரிந்து கொள்ளவும் உதவும் இயற்பியல் ஆராய்ச்சி படைப்பிற்காக இவர்களிருவருக்கும் இவ்விருது வழங்கப்படுகிறது.
வேதியியல்: ரோஜர் டி. கோர்ன்பெர்க் (அமெரிக்கா) மரபணுக்களில் மரபுத் தகவல்கள் எவ்வாறு சேமிக்கப்படுகின்றன, அவை எவ்வாறு புரதம் தயாரிக்கும் செல்களுக்கு மாற்றப்பட்டு பதிவு செய்யப்படுகின்றன என்பது பற்றிய கண்டுபிடிப்பிற்காக இப்பரிசு இவருக்கு வழங்கப்படுகிறது.
உடலியல்:ஆண்ட்ரூ ஃபயர் மற்றும் க்ரொர்க் மெல்லோ (அமெரிக்கா) நோய் உயிரணுக்களை அகற்றி மரபணுச் சங்கிலியின் தனித்துவத்தை நிலைநிறுத்தும் ஆர். என்.ஏ, இனி டர்ஃபரன்ஸ் எனினும் செயல்பாட்டின் ரகசியங்களைக் கண்டறிந்தமைக்காக இவர்களிருவருக்கும் இந்நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
பொருளாதாரம் எட்மண்ட் எஸ். ஃபெல்பஸ் (அமெரிக்கா) அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் எதிர்கால பொருளாதாரத்திட்டமிடலில் கவனம் செலுத்தவேண்டிய விஷயங்களே இவரது ஆய்வின் முக்கிய மையம், பொருளாதார ஆராய்ச்சியில் பல்வேறு முக்கிய முடிவுகள் எருக்க இவரது பங்களிப்பு பெரிதும் உதவுகிறது என்று நோபல் கமிப்பு தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.
சமாதானம்: பேரா முஹமது யூனுஸ் (பங்களாதேசம்) மற்றும் பங்களாதேச கிராமீக வங்கி இருவரும் பகிர்ந்து கொள்கின்றனர். சிறுதொழில் அமைப்புக்கள் மூலம் பங்களாதேஷ் கிராமவாசிகளின் வாழ்க்கையில் புரட்சிகர மாற்றங்கள் ஏற்படுத்தியதற்காக இவ்விருது வழங்கப்படுகின்றது.
இலக்கியம்: ஆர்கன் பாமுக் துருக்கி) இவரது மை நேம் ஈஸ் ரெட் மற்றும் ஸ்னே ஆகிய நூல்களுக்காக இப்பரிசு வழங்கப்படுகின்றது.
200? 6 سه -
அறிவு
நினைவில் நிற்பவை
- தாமரைத் தீவான் சுயசரிதைத் தொடர்
ஈச்சந்தீவு :-() கரைச்சை = 1916ன் பின் மக்கள் குடியேறிய புதுச்சிற்றுரே ஈச்சந்தீவு இதன்மேற்கின் சிற்றோடைக்கப்பால் புல்பூண்டற்ற நெருங்கரைச்சை தம்பலகாமக் கோணேசர் கோயில் திருவிழாக்காலத்தில் வண்டில் ஒட்டப்பந்தயம் நடத்த வாய்ப்பான இடந்தான். ஒன்றுக்கும் உதவாத வெறும் வெளி விழிக்கெட்டியதுரம்வரை தெரியும். சில இடங்களில் உப்புப்படிவங்கள் தெரியும். அதைச்சிலர் தகட்டால் செருக்கிக்கொணர்ந்து வடிகளில் இட்டு உப்புக்காய்ச்சுவர் மாப்போல் வெள்ளையாய் இருக்கும்-கறிக்கு உதவும். அம்மாவும் காய்ச்சிப்புட்டியுள் இட்டு வைத்திருப்பா. மாரியில் நீர்பரவிநிற்பதால் குடியிருப்புக்கும் பயன்படா. கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம் என்பார்பாவேந்தர். நிலப்பற்றாக்குறை வரும்போதில் இதுவும் பயண்படலாம்?
ஓடை - தீவுக்கு முப்புறமும் ஓடைகளே அழகைத்தரும். ஒடைக்குக்கண்டல்களே அழகைத்தரும். கண்டலுக்கு மந்திகளே அழகைத்தரும், வக்காவும், (விழுதில்) கொக்கும் (நீரில்) நீர்க்காக்கையும் மேலும் மெருகூட்டும். மட்டியும், மீனும், இறாலும், ஊரியும், குதிரைப்பாச்சானும் ஓடையை நம்பியேவாழ்வன. மக்களோ அவற்றை நம்பியே வாழ்வர். உப்புநீர் பெருகலும் வற்றலும் நிகழும். கிருகு இழைப்புக்கும் ஒடைபயன்படும். பாழி தெரிந்தோர். கொளுக்கானுடன் போய் நண்டுக்கோர்வையுடன் வருவர். விறகு, வீட்டுமரத்தேவையாலும். படையினரின் பயனில் அழிப்பாலும் கண்டல் சோலையின் அழகு குறைந்து வருவதால் தீவின் அழகும் குறைந்தே வருகிறது.
பள்ளி-தாமரைவில் றோகதகபா பழம்பள்ளி, ஈச்சந்தீவுப் பிள்ளைகட்காக தாமரைவில் வெம்பினுள் 03.01.1946ல் அரசினர் பள்ளி பலகையால் கட்டப்பட்டுத் திறக்கப்பட்டு (க, கந்தையா / காந்தி) நடைபெற்றது. எஸ்.ஏ. பாய்வா ஆசிரியர் காலத்தில் (1952) அது பெற்றோரால் ஈச்சந்தீவுக்குக் கொணரப்பட்டது. இராசரெத்தின ஆசிரியர் காலத்தில் கட்டிடமானது. பின்னர் இராமலிங்கம் அசிரியர், சவுந்தரம் ஆசிரியை, திரு.திருமதி. கதிரமலை ஆசிரியதம்பதியர், சவுந்தரராசா ஆசிரியர், ஞானப்பிரகாசம் ஆசிரியர், திருமதி. காசிப்பிள்ளை ஆசிரியை, ம.இ.குரூஸ் ஆசிரியர் என்போரின் பின் யான் 1965ல் அதிபர் இடத்திற்கு தலைமையாசிரியர்) வந்தேன். பின் சீ. குணரெத்தினம் ஆசிரியர் வர யான் 1967ல் உப்பாறு சென்றேன். மீண்டும்
2007 با 7 ح அறிவு
Page 7
972ல் அதிபராகி வந்தேன். 1987ல் ஓய்வுபெற்றேன். பின்னர் சதவராசா ஆசிரியர் இருந்தார். இப்போது நா. காளிராசா அதிபர் இருக்கிறார். அ.த.க. பாடசாலை தணரெத்தினம் காலத்தில் விபுலாநந்த வித்தியாலயம் ஆனது காடழித்ததும், வேலிதிருத்தியதும், பனை நட்டதும், பெற்றோர் கட்டிடம் போட்டதும் யான் (1990ல் பல அலுவலகப் பொருட்களும் சூறையாடப்பட்டன) கட்டிடம் பெருக்கியது தவராசா சுற்றுமதிலும், பல அபிவிருத்தியும் செய்தது காளிராசா. காணிபடையினரால் கைப்பற்றப்பட்டு விடுபட்டதும் உண்டு. பாலர்பாடசாலையும் இயங்கி வருகின்றது.
கோயில் - நரசிங்கப் பிள்ளையார் கோயில் (கற்கனைக்கல் / 1936) 19ம் நூற்றாண்டின் தாமரைவில் பிள்ளையார் (ஊற்றடி) 1943ல் ஈச்சந்தீவில் ஒலைக்கோயில் தீப்பிடித்ததால் மீண்டும் கற்சுனைத்தல் சைவமகாசபை,இராசையா வைரமுத்து - காளியப்பு, ஊற்றடி ஐயர், தம்பிமுத்து, சண்முகம்பிள்ளை, சிவபாதம், ஆறுமுகதாஸ் - சிவனானம், யோகராசா (பூசகர்கள்) இளைஞர் முற்போக்குமண்றம் கோணாமலை - யான் குனரெத்தினம் பின் கோயில் நிருவாகம் 25.10.1972ல் நிரந்தரக்கட்டிடம் பின் இரண்டாம் மண்டபம். பின் 3ம் மண்டபம்.அம்பியவாகு கிணறு நீத்தார் நினைவாகச் சுற்றுமதில்கள். தெய்வேந்திரம் (17.08.1954 - 05.02.1988), சாமிநாதன் (14.02.1907 - 14.01.1983), நவரெத்தினம் (6.06.1957 - 1409.1984) திருநானம் (02.10.1962 - 13.06.1990), சுப்பிரமணியம் (6.07.1920 - 01.10.1986) பழங்கோயில் பொருள் பயன்படுத்திப்பிள்ளையார் படிப்பகம் (0.10.1974) உருவானது. மில்க்னவற் கனகராசா நூல்கள் அன்பளிப்பு (பணமும்) பல நிருவாக மாற்றத்தின் பின் 90ல் கோயில் பொருள் கறை தற்போதில் 1ம் மண்டபம் உடைக்கப்பட்டுக் கருவறை கட்டப்படுகின்றது.
கட்டையாறு:- உப்பாற்றுப்பிரிவொன்று ஒடைபோலி ஒடி 3 மைல் தொலைவிலுள்ள கிணினியா பெரியாற்றுமுனை, கப்பற்றுறைக்கடலைத் தொருகின்றது. ஈச்சந்தீவையும், தாமரைவில்லையும் (முழுங்கை முடக்குத் தோட்டம்) பிரித்துக்காட்டுவது இவ்வோடைதான்.வெட்டியமர அடிக்கட்டைகள் (கனன் பிட்டிகள்) நிரம்பக் காணப்படுவதால் நீண்ட ஆறாயிருந்தும் கட்டையாறு எனப்படுகிறது. பெருகும் - வற்றும் இருபுறத்தாலும்) ஆழம்குறைவு மட்டை ஊறப்போட்டுக்கிருகு இழைப்பர். நண்டு - இறால் பிடிப்பர் ஒரு காலக்கழிப்பிடமும் இதுவே, வெட்கண்ணா நிரம்ப உண்டு மிதிவண்டி தோளில் சுமந்து மக்கள் கிண்ணியா சென்று மீள்வர். தற்போது ஆற்றுாடாக ஒரு அனைவீதி போடப்பட்டுள்ளது. உரிமைத்தீர்வுவரினி முன்னேற்றமுண்டு.
2007
அறிவு
அறிவு
அறிவு ஊனுடல் உள்ளவரை
அறிவு வேண்டிரு மாந்தரெலாம்
அறிவு பேணிடப் பேணிவர
அறிவு பேணுதல் தானறிவார்
தான் அறிவார் Gbss60ILú
தவம் அறிவார் நானம்
வான் அறிவார் ஞான(ம்)
வாழ்வுக் கோர் எல்லை இல்லை
இல்லை இது வென்று
உண்மை அது கண்டார்
உள்ள துணர் வாரே)றே
உண்மை யுணர் வாழ்வே
அருள்ஜோதிச்சந்திரன்
வாழ்வே வந்திங்கு வாழ்வோர்
வாழ்வே வந்திரும் வாழ்வாய் வாழ்வே நொந்திட வார்க்கு
வாழ்வே வெந்தனழி ஆகும்
ஆகும் போதகம் மகிழ்வார்
போகும் போதெம் பிருவார்
சாகும் போதேங் கிடாரே
சாகா வரம் பெறுவார்
பெறுவார் பேறெல்லாம் பிறர்வாழ
தருவார்வாழ்வென்றும்தார்போற்றும் மருவா அறநெறி மார்க்கந்தான்
கருவாய்) உருவான நாள்முதலாய்
அறிவு
Page 8
சைவ சித்தாந்தம் - 1
கிலக்ஷ்மணன் சைவசித்தாந்தம் கூறும் தத்துவங்களை எடுத்து ஆராய்வதன் முனி சைவசித்தாந்தக் கருத்துக்கள் எப்போது தோன்றின? அவற்றைக்கூறும் நூல்கள் எவை என்பன பற்றிச் சற்று ஆராய்வது நன்று. எனவே, இக்கட்டுரையிலே சைவசித்தாந்தத்தின் தோற்றத்தையும், வளர்ச்சியையும், அதாவது அதன் சரித்திரத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
apléSuð QLið:
சைவ சித்தாந்தம் பெரும்பாலும் தமிழ்பேசும் மக்களிடை மட்டுமே வழங்கி வந்திருக்கின்றது.காஷமீர் சைவம் எனப்படும் சைவமதம் இந்தியாவின் வடபாகத்தில் வழங்குவதாகத் தெரிகின்றது. ஆனால், வடகோடியில் வழங்கும் கர்ஷமீர் சைவத்துக்கும் தென்கோடியில் வழங்கும் சைவ சித்தாந்தத்துக்கு அடிப்படையிலே பல வேறுபாடுகள் உள. இதைப் போலவே மைசூர்ப் பகுதியிலி வழங்கும் வீரசைவத்துக்கும் சைவ சித்தாந்தத்துக்கும் பல வேற்றுமைகளுண்டு. எனவே, இன்று சைவசித்தாந்தம் எனப் பேசப்படும் மதம் தமிழ்நாட்டில் மட்டுமே மிகுதியும் வழங்குகின்றது என்பது தெளிவு
இச்சைவ சித்தாந்தம் தமிழ்நாட்டில் எப்போது தோன்றியது? ஆதிகாலந்தொட்டே உள்ளதா அல்லது இடையிலே தோன்றியதா? முன்னொரு காலம் இந்தியா எங்கனுைம் பரவியிருந்த சைவம் இடத்துக்கிடம் ஏற்பட்ட சில வேற்றுமைகளினால் காஷ்மீர் சைவம் என வடக்கிலும், வீரசைவம் எனக் கன்னட தேசத்திலும், சைவசித்தாந்தம் எனத் தெற்கிலும் வழங்குகின்றதா? என்பன ஆராய்ச்சிக்கு Sed ĵuu6o6nj.
தமிழரது தனியுரிமை எனக் கொள்ளலாமா?
சைவசித்தாந்தம் வேறெங்கும் வழங்காது தமிழ்நாட்டில் மட்டுமே மிகுதியும் வழங்குவதால் இதனை ஆதிகாலந்தொட்டுத் தமிழருக்கேயுரிய தத்துவம் எனக் கொள்ளலாம். ஆனால், அங்ங்ணம் கொள்ளுவதிலே பெரிய இடர்ப்பாடு ஒன்று இருக்கின்றது. சைவசித்தாந்தம் கூறும் கொள்கைகள் தமிழருக்கே உரியவையாயின்
2007 = 10 - அறிவு
அக்கொள்கைகளைக்கூறும் முதனூல்கள் யாவும் வடமொழியிலேயே இருக்கின்றன. இதுதான் அந்த இடர்ப்பாடு.
வேதாகமங்கள் வடமொழியிலி எழுதப்பட்டமைக்கு விளக்கங்கள்:
வேதங்களும் ஆகமங்களும் சைவசித்தாந்தத்துக்குப்பிரமான நூல்கள். அதாவது அந்த நூல்களிலேதான் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் முதன் முதலாகக் காணப்படுகின்றன. வேதாகமங்கள் யாவும் வடமொழியில் உள்ளவை. தமிழரது தத்துவார்த்தக் கருத்துக்கள் முதன்முதலில் தமிழில் எழுதப்படாது வடமொழியில் எழுதப்பட்டமைக்குக் காரணம் என்ன என்பதே கேள்வி. இக்கேள்விக்குப்பலவிதமாக மறுமொழி கூறலாம். "தத்துவார்த்தக் கருத்துக்கள் முதன்முதலில் வடமொழியாளரிடமே காணப்பட்டன. அவர்களுள் ஒருசாராருடைய கொள்கைகளையே தமிழரும் ஏற்றுக்கொண்டனர். அதனால்தான் வடமொழி நூல்கள் சைவசித்தாந்தத்துக்குப் பிரமான நூல்கள் ஆயின" எனக் கொள்வது ஒரு விதம். இங்ங்ணம் கொள்வது சைவசித்தாந்தக் கருத்துக்கள் ஆதிகாலந்தொட்டே தமிழருடையவை என்பதற்கு மாறாகும்.
இக்கேள்விக்கு மறைமலையடிகள், கா. சுப்பிரமணியபிள்ளை போன்றோர் விசித்திரமான ஒரு பதிலைக் கூறியுள்ளனர். "ஆதியில் வேதங்களும் ஆகமங்களும் தமிழிலும் இருந்தன. இருக்கு, யசுர், சாமம், அதர்வனம் என இன்று வழங்கும் இதே பெயர்களோடு அன்று தமிழிலும் நான்கு வேதங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்றாகிய சாமவேதம் இராவணனாலே பாடப்பட்டது. காலப்போக்கில் தமிழ் வேதாகமங்கள் அழிந்துவிட்டன. வடமொழி வேதாகமங்கள் மட்டும் அழியாது நிலைத்து நின்றன. எனவே, அவைகளையே தமிழரும் தங்களுக்குப் பிரமான நூல்களாகக் கொள்ளத் தலைப்பட்டுவிட்டனர்" என்பதே அன்னோருடைய கருத்து. இன்னும் சிலர், இக்கருத்தை மேலும் விருத்தி செய்து, "வேதங்கள், உபநிடதங்கள், ஆகமங்கள் ஆகியவை முதலில் தமிழில் மட்டுமே இருந்தன. பின்னர் வந்த வடமொழியாளர் இவற்றின் அருமையை உணர்ந்து இவைகளைத்தமதுமொழியிலும் மொழிபெயர்த்து வைத்துக்கொண்டனர். தமிழில் இருந்த முதநூல்கள் அழிந்துவிட்டன. அவைகளின் இடத்தை மொழிபெயர்ப்பு நூல்களாகிய வடமொழி நூல்கள் இன்று வகிக்கின்றன." எனக் கூறுகின்றனர். மேலே எழுப்பிய வினாவுக்கு இன்னுமொருவித விடை,
2007 - 11 -
அறிவு
Page 9
வேதாகமங்கள் வடமொழியிலேதான் முதலில் எழுதப்பட்டன என்பதை ஒப்புக்கொண்டு, அவற்றை அம்மொழியில் எழுதினோர் தமிழரே எனக் கொள்வது. "வடமொழி பண்டைக் காலத்தில் பாரததேசம் முழுவதிலும் வழக்கிலிருந்தது. தமது தத்துவக் கருத்துக்கள் பாரததேசம் எங்கனுைம் பரவ வேண்டுமென விரும்பிய தமிழ்மக்கள் அவற்றைத் தமிழில் எழுதாது வடமொழியிலேயே எழுதிவைத்தனர் என்பதே இம்மூன்றாவது விடை. இத்தொடர்பிலே இன்னுமொரு சாராருடைய கொள்கையையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும். "வடமொழி ஓர் அன்னிய மொழி, அதனோரு தமிழருக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது. அது யாரோ ஒரு குறிப்பிட்ட இனத்தவருடைய மொழி. அவ்வினத்தவர் எல்லா விதத்திலும் தமிழருக்கு முற்றும் மாறுபட்டவர் எனக் கொண்டால்தான் இப்பிரச்சினைக்கு இடமுண்டு. வடமொழி குறிப்பிட்ட ஓரினத்தாரின் ஏகபோக உரிமையல்ல. அது பாரத தேசம் முழுவதுக்கும் உரிய பொது மொழி. தமிழரும் பாரததேச மக்கள். ஏனைய இந்திய மக்களுக்கு வடமொழியில் எவ்வளவு உரிமையுண்டோ, அவ்வளவு உரிமை தமிழருக்கும் உண்டு எனவே, வடமொழியும் தமிழரது மொழிதான் எனக் கொண்டால் இப்பிரச்சினைக்கு இடமிராது" என்பது அவர்களுடைய கொள்கை.
எவை முக்கியம் ? வேதங்களா? ஆகமங்களா?
இனி , சைவசித்தாந்தத்துக்கு முக்கிய ஆதாரமாகிய ஆகமங்களைப்பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுவோம். வேதங்கள், ஆகமங்கள் ஆகிய இரண்டுமே சைவசித்தாந்தத்துக்குப்பிரமான நூல்கள். இவற்றுள் வேதங்களைவிட ஆகமங்களே முக்கியமானவை என்றும், ஆகமங்களை விட வேதங்களே முக்கியம் என்றும், முக்கியத்துவத்தில் இரண்டும் சமம் என்றும் முத்திறிப்பட்ட கருத்துக்கள் உண்டு. தொகுத்து நோக்குங்கால் வேதங்களை விட ஆகமங்களே முக்கியமானவை எனக்கொள்ள இடமுண்டு. வேதங்களைப் பொதுப் பிரமாணமாகவும் ஆகமங்களைச் சிறப்புப் பிரமாணமாகவும் கொள்வது மரபு.
ஆகமம் என்பதற்கு விளக்கம் :
ஆகமம் என்ற சொல்லுக்கு, ஒன்றிலிருந்து வந்தது என்பது கருத்து. எனவே, எதிலிருந்து வந்தது என்ற வினா எழுவது இயல்பு. ஆகமங்கள் சிவனிடத்திலிருந்து வந்தவை எனக் கொள்வதே பொதுவான வழக்கம். இங்ஙனம் கொள்வது பொருந்தாது எனக் கூறி, இதற்கு வேறு வேறு விதமாகப் பொருள் கூறுவாரும் உளர். இஃதன்றி,
- 2 -
2007
அறிவு
'ஆ' என்பது பாசம். 'க' என்பது பசு, 'ம' என்பது பதி, ஆக முப்பொருளையும் கூறுவதே ஆகமம் என்றும் விளக்கம் கூறுவதும் உண்டு.
ஆகமங்களின் தொகையும் வகையும் :
சைவாகமங்கள் எல்லாமாக மொத்தம் 28.இவற்றைவிடச் சாக்தமதத்துக்குரிய சாக்த ஆகமங்களும், வைஷ்ணவ மதங்களுக்குரிய பாஞ்சராத்திர ஆகமங்களும் உள. சைவாக மங்கள் 28-இல் பத்து இறைவனால் நேரே அருளப்பட்டன எனவும், ஏனையவை இறைவழி நின்ற ஞானிகளால் ஆக்கப்பட்டன எனவும் கொள்ளுவது மரபு. ஒவ்வொரு ஆகமமும் ஒானகாண்டம், யோககாண்டம், கிரியாகாண்டம், சரியாகாண்டம் என நான்கு பகுதிகளுடையது. இவற்றுள் ஏநானகாண்டமே தத்துவக் கருத்துக்களை மிகுதியாக உடையது. ஆகமங்கள் நூல் வடிவு பெற்ற காலம் கிறீஸ்துவுக்கு ஆயிரத்தைநூறு ஆண்டுகள் முந்தியதாதல் வேண்டும் என்பது அறிஞர் கருத்து. எனவே, அதற்கு எவ்வளவோ காலத்தக்கு முன்பு தொட்டே அவை கருத்து வடிவில் இருந்திருத்தல் வேண்டும். இதிலிருந்து இவ்வாகமங்களை மூலமாகவுடைய சித்தாந்தக் கருத்துக்கள் எத்துணை பழையன என்பதை உணரலாம்.
மெய்கண்ட தேவர்.
ஆகமங்கள் யாவும் வட்மொழியில் உள்ளன என முன்பு குறிப்பிட்டோம். இவையாவும் ஒரே கருத்துடையன அல்ல. மூலப்பொருள்களின் தொகையைப்பற்றிக் கூட இவைகளுக்கிடையே கருத்தொற்றுமை கிடையாது. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு நிலையிலுள்ள ஆன்மாக்களுக்காகக் கூறப்பட்டமைதான் இதற்குக் காரணம் என அறிஞர் சமாதானம் கூறுவர். சங்கரரும் இராமானுசரும் எங்ங்ணம் உபநிடதங்களிலே காணப்பட்ட முரண்பாடுகளை நீக்கி, உபநிடதக்கருத்துக்களை வரையறை செய்து வெளியிட முற்பட்டனரோ, அங்ங்ணமே மெய்கண்ட தேவர் எனப்படுபவர் ஆகமங்களிலுள்ள முரண்பாடுகளை நீக்கி, ஆகமக் கருத்துக்களை ஒழுங்குபடுத்தித் தமிழ் மொழியில் பன்னிரண்டு சூத்திரங்களாக்கி வெளியிட்டார். வடமொழியிலுள்ள ரெளரவம் எனப்படும் ஆகமத்திலும் மெய்கண்டதேவர் கூறும் கருத்துக்களையுடைய பணி னிரணிடு சூத்திரங்கள் காணப்படுகின்றன. இதைக்கொண்டு, மெய்கண்டதேவர் அவற்றை மொழிபெயர்த்தனரேயன்றித்தாமாக எதையும் செய்யவில்லை எனச் சிலர் வாதாடுகின்றனர். இவர்களை மறுத்து, மெய்கண்டாரது பன்னிரண்டுகத்திரங்களும் வடமொழிச் சூத்திரங்களின் தமிழாக்கம்
2007 - 135 -
அறிவு
Page 10
அல்ல : அவை நேரே தமிழிலேயே முதன்முதலாக ஆக்கப்பட்டவை என வாதாடுவாரும் உளர்.
சிவதானபோதம்
மெய்கண்ட தேவர் ஆக்கிய பன்னிரண்டு சூத்திரங்களைக் கொண்ட நூலே சிவநைானபோதம் எனப்படும். தமிழிலே சைவ சித்தாந்தக் கருத்துக்களை எடுத்து விளக்கும் சாத்திர நூல்கள் பதினான்கு அப்பதினான்கு நூல்களுக்கும் நடுநாயகமாகத் திகழ்வது இச்சிவநைானபோதம், திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார் என்னும் இரணிடும் தவிர, ஏனையபதினொரு சித்தாந்த நூல்களும் இச்சிவநைான போதத்தையொட்டி இதற்குப் பின்பே ஆக்கப்பட்டவை. சிவதானபோதம் பதின்மூன்றாம் நூற்றாண்டிலே ஆக்கப்பட்டது. எனவே, சைவ சித்தாந்தத்தின் முறையான தமிழ்ச் சரித்திரம் ஒரு விதத்தில் இங்குதான் தொடங்குகின்றது எனக் கொள்ளலாம்.
திருமுறைகளும் சைவசித்தாந்தமும்:
பதின் மூன்றாம் நூற்றாணி டிலேதானி சைவசித்தாந்த தத்துவங்கள் முதன்முதலாகத் தமிழிலே முறையாக எழுதப்பட்டன என மேலே குறிப்பிட்டோம். ஆனால், இதற்குமுன் ஆக்கப்பட்ட தமிழ் இலக்கியங்கள் எத்தனையோ உளவே, அந்த இலக்கியங்களிலே சைவசித்தாந்தக் கருத்துக்கள் ஒன்றுகூடக் காணப்படவில்லையா என்ற ஐயம் எழுவது இயல்பு. சங்க காலந்தொட்டு இக்காலம் வரையுமுள்ள தமிழிலக்கியம் அனைத்திலும் தமிழ்மக்கள் இறைவனைப்பற்றியும் சமயத்தைப்பற்றியும் கொண்டுள்ள குறிப்புகள் காணப்படும் இடங்கள் எண்ணில் அடங்காதன உண்டு. சைவ சித்தாங்தக் கருத்துக்களடங்கிய முக்கியமான தமிழிலக்கியங்களை இருபெரும் பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று சாத்திர நூல்கள். இவையே மேலே குறிப்பிடப்பட்ட பதினான்கும். மற்றது தோத்திர நூல்கள், பன்னிரண்டு திருமுறைகளுமே தோத்திர நூல்கள் எனப்படுவன. திருநைானசம்பந்த சுவாமிகளது தேவாரங்கள் தொடங்கிச்சேக்கிழார்சுவாமிகள் இயற்றிய பெரியபுராணம் வரையுமுள்ளவையே திருமுறைகள் எனப்படும். இப்பன்னிரண்டுதோத்திர நூல்களும் சைவ சித்தாந்த உண்மைகளை, அனுபூதிமான்களுடைய அனுபவ வாயிலாகக் கூறுவன. இப்பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாகிய திருமந்திரத்திலே சைவ சித்தாந்தக் கருத்துக்கள் பல விளக்கமாகப் பேசப்படுகின்றன. திருமந்திரத்தை
2007 - 14 -
அறிவு
ஆக்கியவர் திருமூலர். இவரது காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டெண்பது ஆராய்ச்சியாளர் சிலரது கருத்து. எனவே, சங்க இலக்கியங்களிலே இடையிடையே காணப்படும் சைவசித்தாந்தக் கருத்துக்கள், நான்காம் நூற்றாண்டுக்கும் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குமிடைப்பட்ட காலத்தனவாகிய திருமுறைகள் எனப்படும் தோத்திர நூல்களில் அனுபூதிமான்களுடைய அனுபவ வாக்காக இடம்பெற்றுப் பதின்மூன்றாம் நூற்றாண்டில் தமிழிலே முதன் முதல் முறையான தத்துவ சாத்திர நூல்களாக வெளிப்பட்டன எனக்கொள்ளலாம்.
நரசிம்மவர்ம பல்லவன் காலத்துக் கல்வெட்டு ஒன்றில், "நான் ஒரு சைவசித்தாந்தி" என்ற வசனம் காணப்படுவதாகத் தெரிகின்றது. இவனுடைய காலம் ஏழாம் நூற்றாண்டாகும். சைவசித்தாந்தம் என்ற பெயர் முதன்முதல் வழங்கத் தொடங்கிய காலத்தை நிர்ணயிப்பதற்கு இக்கல்வெட்டு உதவக்கூடும்.
சுருக்கம்
தமிழ்நாட்டிலேயே சிறப்பாக வழங்கும் சைவசித்தாந்தக் கருத்துக்களைக் கூறும் ஆதி நூல்கள் தமிழ் மொழியில் எழுதப்பெறாது வடமொழியில் எழுதப்பெற்றமைக்குக் கொடுக்கப்படும் காரணங்கள்: வடமொழியிலுள்ள சைவாகமங்களின் விபரங்கள் : இவற்றிலுள்ள கருத்துக்களைத் தழுவி முதன்முதல் தமிழிலே முறையாக எழுதப்பட்ட சித்தாந்த நூலாகிய சிவாைனபோதத்தைப்பற்றிய விபரங்கள்: சிவஞானபோதத்துக்கு முற்பட்ட தமிழ் நூல்களுள்ளே சைவசித்தாந்தக் கருத்துக்கனிக்குறிப்பிடும் நூல்கள் ஆகியவை இக்கட்டுரையிலே தரப்பட்டுள்ளன.
(தொடரும்) - நன்றி இந்திய தத்து ஏநானம்
இந்தியத் தத்துவ ஞானம் பற்றி - சி.பி. ராமசுவாமி ஐயர்
"தொகுத்து நோக்கும் போது தத்துவ ஏநானப் பிரிவுகள் பலவற்றின் அடிப்படைகளை நுட்பமாக ஆராய்ந்து மிகத் திறம்பட ஒழுங்குபடுத்தித் தரும் ஒரு கருவூலமாக அமைந்துள்ளது. தங்களதுநூல். தங்கள் வசனநடையில் காணப்படும் தெளிவையும், விஷயத்தையும் கையாண்ட விதத்திலேயுள்ள திட்ட நுட்பத்தையும் நான் பெரிதும் பாராட்டுகிறேன்
2007 ~ - 15 - அறிவு
Page 11
அட்டைப்படக்கட்டுரை
புரட்சித்துறவி
சமூகப்புரட்சி, சமயப்புரட்சி, என்பன எல்லோராலும் செய்துவிட முடியாத வொன்றாகும். இப்புரட்சிகளை உண்டுபண்ணியதன் மூலம் இன்று உலகிலே பெரியோர் வரிசையில் விபுலானந்த அடிகளார்மதிக்கப்படுகின்றார். இன்று நாட்டின் பல பாகங்களிலும் சுவாமிகளுடைய நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுவரும் இக்கால கட்டத்தில் அடிகளாரைப்பற்றிப் பலரும் பலவாறு சிந்திக்கின்றார்கள். நாம் இங்கு அடிகளார் எந்தெந்தத் துறைகளில் புதுமையினையும், புரட்சியினையும் ஏற்படுத்தினார் என்பதனைச் சற்று சுருக்கமாய்ப் பார்க்கலாம்.
மகாகவி பாரதியின் புரட்சிப்பாடல்களால் மிகவும் கவரப்பட்டவராக அடிகளார் காணப்பட்டார்.அவர் ஆசிரியராகப் பணிபுரிந்த கால கட்டங்களில் மாணவரிடையே பாரதி கவிதைகளைப் புகட்டி வீறு கொணிடவொரு சமுதாயத்தினைக் காணவிழைந்ததன்மையினை அவதானிக்ககூடியதாகவுள்ளது. பின்சு உள்ங்களில் பாரதி கவிதைகளை விதைத்தார். முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு, "செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே" என்ற கவிதையைச் சொல்லிக் கொருத்தார். அதேபோன்று இரண்டாம், மூன்றாம், நாலாம் வகுப்புச் சிறார்களுக்கு, காக்கைச் சிறகினிலே நந்தலாலா" என்னும் பாடலையும், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு "பகைவருக் கருள்வாய் நன் நெஏந்சே” என்பதையும், ஆறாம் வகுப்பினருக்கு "வீரசுதந்திரம் வேண்டி நின்றார்" என்னும் கவிதையையும், ஏழாம் வகுப்புப் பிள்ளைகளுக்கு, "சொந்த நாட்டிலி பார்க்கடிமைச்செய்து" என்னும் கவிதையினையும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு "வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ்மொழி" என்பதையும் புகட்டுவதற்கான முயற்சி எருத்தார். இச்செயல் அடிகளாரின் சமுதாய மறுமலர்ச்சியினைக் காண விழைந்த உள்ளக் கிடக்கையினைக் காட்டுகின்றது.
சமுதாயத்திலே மக்கள் நல்ல சுதேசிகளாகவும், கல்வி அறிவுள்ளவர்களாகவும் விளங்கவேண்டுமென்பதே அடிகளாரின் அபிலாசையாக இருந்தது. இதனால் சமுதாயப் புரட்சியினை உண்டுபண்ணக்கூடிய தேசியக் கல்வி முறையினைப்
2007 - 16 - அறிவு
புகுத்தினார். பல மொழிகளில் பாணிடித்தியம் பெற்றிருந்த அடிகளார் மாணவர்களிடையே முற்மொழிப் பயிற்சியினை உண்டு பண்ணினார். சகல மாணவர்களும், தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளையும் கற்க வேண்டுமென வலியுறுத்தி அதனை மட்டக்களப்புக்கல்லடி உப்போடைச்சிவானந்த வித்தியாலயத்தில் நடைமுறைப்படுத்தியும் காட்டினார். சமூக சமயப்புரட்சிகளை உண்டுபண்றுைவதன் மூலம் வீறுகொண்டவொரு சமுதாயத்தினை உருவாக்க முடியும் என்பதைக் கண்டு கொண்ட அடிகளார், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். இல்வாழ்க்கையினைத் துறந்து துறவு வாழ்க்கை மேற்கொள்வதன் மூலமே கூடிய நேரத்தினைச் செலவிட முடியும் என்பதனைக் கண்டு கொண்ட அடிகளார் அதனைச் செய்வதற்கும் தயங்கவில்லை. ஏழை பணக்காரன் என்ற பேதமில்லாமல் சகல குழந்தைகளும் சம கல்வி அறிவினைப் பெற வேண்டுமென விழைந்தார். இவ்வாறானவொரு சமுதாயப்புரட்சியே அடிகளாரை ஏனைய துறைகளில் ஆக்கபூர்வமான பணிகளைச் செய்வதற்கும் தூண்டியது. மொழி, இலக்கியம், சமயம் ஆகிய மூன்று துறைகளும் விபுலானந்த அடிகளார் வாழ்ந்த குறுகிய காலப்பகுதியில் பெரியளவிலான மறுமலர்ச்சியினைக் கண்டன. உலகிலேயே முதல்தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய அடிகளார் உயர்மட்டத்திலும், அடிமட்டத்திலும் மாற்றங்களைச் செய்தார். இராமகிருஷ்ண சங்கத்தின் கீழ் இயங்கிய பாடசாலைகளைப் பராமரிக்கும் முகாமையாளராக அடிகளார் இருந்தமையும் இவ்வாறான செயல்திட்டங்களை மேற்கொள்ள உதவியாக இருந்தது. பத்திராதிபராக அடிகளார் இருந்தகாலை மொழி வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார். தமிழிலும், ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். வேதாந்த கேசரி, பிரபுத்த பாரத ஆகிய ஆங்கிலச் சஞ்சிகைகளினதும்,இராமகிருஷ்ண விஜயம் என்னும் தமிழ் சல்சிகையினதும் ஆசிரியராக அடிகளார் இருந்தபோது சிறந்த பணியாற்ற முடிந்தது. யாழ்ப்பாணத்திலே ஆரிய திராவிட பாஷா நிறுவனத்தை நிறுவி பிரவேச பண்டிதர், பாலபண்டிதர், பண்டிதர் ஆகிய பரீட்சைகளுக்கு மாணவர்களை ஊக்குவித்தார்.நவீன அகத்தியர் எனக்குறிப்பிடப்படும் , அடிகளார், அகத்தியர், தொல்காப்பியர், இளங்கோவடிகள், வீரமா முனிவர் போன்று தமிழ் இலக்கியப்பணி புரிந்த பெரியாராகும்.
விபுலானந்த அடிகள் எழுதிய கட்டுரைகளுள், மேற்றிசைச் செல்வம், நாகரிக வரலாறு, எகிப்திய நாகரிகம், யவனபுரத்துக் கலைச்செல்வம் முதலிய கட்டுரைகள்
2007 117 سے --
அறிவு
Page 12
பரந்த நோக்கோடு உலகமளாவிய உள்ளத்தெளிவினைக் காட்டுகின்றன. செய்யுள் இலக்கியம், வசன இலக்கியம் இரண்டு துறைகளிலும் குறிப்பிடத்தக்க அளவு நல்ல பல நூல்களை அடிகளார் இயற்றியுள்ளார். கணேச தோத்திர பல்சகம், கதிரையம்பதி மாணிக்கப்பிள்ளையார் இரட்டைமணிமாலை, சுப்பிரமணிய சுவாமி இரட்டை மணி மாலை, குமரவே ணவ மணிமாலை, ஆகியவை செய்யுள் இலக்கிய வரிசையில் இடம்பெறுகின்றன. வசன இலக்கியங்களாக, யால்நூல், மதங்கசூளாமணி, நடராசா வடிவம், உமாமகேசுரம் என்பனவும், கலைச்சொல், அகராதியில் ஒரு பகுதியும் குறிப்பிடத்தக்கன. சமுதாயப்புரட்சி ஒன்றின் மூலம் புதிய உலகினைக்கான விழைந்த அடிகளார் அதற்கேற்ப மறுமலர்ச்சிக் கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளைப் பத்திரிகைகளில் எழுதினார். இவற்றுள் இலக்கிய ஆய்வு சம்பந்தமானவை, கல்விக் கருத்துக்கள் பற்றியவை, சமய சம்பந்தமானவை, அறிவியல் சம்பந்தமானவை, வரலாறு பற்றியவை குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவையாகும். நல்ல கட்டுரையாளராகவிருந்ததோடு மாத்திரமல்லாமல், சிறந்தவொரு கவிஞராகவும் அடிகளார் விளங்கினார் என்பதற்கு அவரது கவிதைகள் சான்று பகர்கின்றன. தாம் பிறந்த மண்ணாகிய மட்டக்களப்பு மாநிலத்தில் எவ்வளவு பற்று வைத்திருந்தார் என்பதனை யாழ்நூலின் தோற்றுவாயாக அமைந்த பாடல்கள் பலவற்றுள் ஒன்றன் மூலம் கண்டு தெளியலாம்.
“தேனிலவுமலர்ப்பொழிலிற் சிறைவண்டு துயில செழுந்தரங்கத் தீம்புனலுள்நந்தினங்கள் துயில மீன் அலவன் செலவிண்றி வெண்ணிலவிற் துயில விளங்கு மட்டு நீர் நிலையுள் எழுந்ததொரு நாதம்"
இதே போன்ற கற்பனை வளத்தினை அடிகளாரின் ஏனைய கவிதைகளிலும் bIIIb,
சகல துறைகளிலும் தம் வாழ்நாளைச் செலவிட்டு புரட்சிகரமான மாற்றங்களை அவ்வவ்துறைகளில் உண்டுபண்ணியுள்ளார். மாணவனாக, ஆசிரியராக, அதிபராக, பேராசிரியராக, பத்திராதிபராக, பரீட்சகராக, எழுத்தாளராக, கவிஞனாக, நாடக ஆசிரியராக, ஆய்வாளனாகவெல்லாம் ஒரு துறவி செயற்பட்டாரென்றால் அவரது மகிமையும், ஆற்றலும் அளவிடற்கரியது அணிறோ? புரட்சித்துறவியான அடிகளாருக்குப் பிறந்த மண்ணிலே எழுப்பப்படுகின்ற நினைவாலயம் காலங்கடந்த
12 s slo7 - 18 - al
வொன்றாகவிருந்தாலும் அதனை முன்னெடுத்துச் செல்கின்ற நற்பணியில் தற்போது ஈடுபட்டுள்ளவர்கள் மிகவும் பாராட்டப்படவேண்டியவர்களே. அடிகளாரது நினைவு நூற்றாண்டிலே இப்பணி பூர்த்தி பெறுவது தமிழ் நெல்சங்கள் எல்லாருக்கும் மிக்க நிறைவினைத் தரும் நிகழ்ச்சியாகும். அடிகளார் மதுரை இயற்றமிழ் நாட்டுத் தலைமைப் பேருரையில் கூறிய "நம் தமிழ்க்குலத்தார் அனைவரும் பசியும், பிணியும், பகையும் நீங்கிப் பொருட் செல்வமும், செவிச்செல்வமும் அருட் செல்வமும் எய்தப்பெற்று மண்ணகமாந்தருக்கு அணியெனச் சிறந்து வாழ்வோமாக" என்பதனை மனங்கொள்வோமாக.
நன்றி - விபுலானந்த அடிகளார் நூற்றாண்டு விழாமலர்
எஸ். எதிர்மன்னசிங்கம், பீ.ஏ.ஆர்னஸ்
உதவிக்கல்விப்பணிப்பாளர் கலாசார அலுவல்கள் அமைச்சு
"காதலையும் வீரத்தையும் கொடைத்திறத்தையும் அருட்டிறத்தையும் முந்நாளில் இசைத்த யாழ்க்கருவியானது இப்போதுதமிழ்நாட்டில் வழக்கற்று மறைந்திருக்கிறது. அது மீட்டும் தோற்றுதல் வேண்டும். அதன் இனிய நரம்பிலிருந்து எழும் இசையானது தமிழனது செவிவழிச் சென்று முந்நாளிற்போலவே இந்நாளிலும் காதலையும் விரத்தையும், கொடைத்திறத்தையும், அருட்டிறத்தையும் மனதிலுதிக்கச் செய்ய வேண்டும். அதனால் நாடு நலமடையும்."
-விபுலாநந்த அடிகள்
2007 N·· 19 ·
அறிவு
Page 13
ரிஷிமூலம்
வ.அ. இராசரத்தினம்)
வேத காலத்தில் ரிஷிகள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் எல்லாருமே துறவிகளல்ல. பலருக்கு மனைவி மக்கள் இருந்தனர். அந்தரிஷிகளாற் கூட முற்றுந்துறக்க முடியவில்லை.
ஆனால் அந்த ரிஷிபுங்கவர்களுக்கும் மேலாகச் சகல ஆசைகளையும் துறந்த ஆனால் தமிழ் ஆசையை மட்டும் துறக்காத - சிலர் தமிழ் நாட்டிலே வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களில் இளங்கோவடிகள் முதன்மையானவர். அவரைத் தொடர்ந்து, வீரமாமுனிவர், யக்கோமே கொண்சால்வெஸ், ஆறுமுகநாவலர் என்ற வரிசையில் விபுலானந்த அடிகளாரும் சேர்ந்து கொள்கிறார்.
விபுலானந்தருக்கும் இளங்கோவடிகளுக்கும் பல வகையில் ஒற்றுமை இருக்கிறது.
ஏட்டுச் சுவடிகளில் மட்டும் இருந்த இளங்கோவின் சிலப்பதிகாரத்தை மகோ மகோபாத்யாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் அச்சுவாகன மேற்றி வெளிக் கொணர்ந்த அதே 1892ம் ஆண்டிற்றாண் சுவாமி விபுலாநந்தர், மயில்வாகனமாகக் காரைதீவிற் பிறந்தார்.
சுவாமி விபுலானந்தரின் பாடல்களைப் படிக்கும்போது, அப்பாடல்களிற் பல சிலப்பதிகார வரிப்பாடல்களை ஒத்திருப்பதை நாம் காணலாம்.
இளங்கோ அடிகளாரின் ஒசைக்கோலம், செழுமை, குளிர்மை, வினாவிடை, மடக்கு போன்ற ஒழுங்கு முறைகள் விபுலானந்தரின் பாடல்களிலுமுண்டு. இவைகளை விபுலானந்தரின் பிள்ளைப் பாடலான வெள்ளைநிற மல்லிகையிலும் காணலாம். தத்துவ விசாரஞ்செப்பும் கங்கையில் விருத்த ஒலையில், கங்கையை விழித்துப்பாடும் பாடல்களிலும் காணலாம்.
அடிகளாருக்கு யாழ்நூலை ஆக்க வழிசமைத்துக் கொடுத்தது இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரமே.
இருவருமே தமிழ்க் காதலை மேற்கொண்டவர்கள். இருவருமே சாதாரண மக்களை நேசித்தார்கள்.
2007 - 20 -
அறிவு
விபுலானந்த அடிகள், இளங்கோவைப் போலக் காவியம் பாடவில்லை. பாடியிருந்தால் அவர் நிச்சயமாகத்தன் கெழுதகை நண்பன் கந்தசாமிப்பிள்ளையின் மேற்தான் காவியம் பாடியிருப்பார் எந்த மன்னனையும் பாடியிரார்.
இளங்கோ அடிகளார் வேட்டுவர், ஆயர் இவர்களை நேசித்துப் பாடியதுபோல, விபுலாநந்தரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராக இருக்கையில் சூழவுள்ள சேரிகளுக்கும், எளியோர் வசதியுமிடங்களுக்கும் ଗଣ୍ଠୀg, அவர்களுக்குச் சேவை செய்தார். அச்சேவை காரணமாக அவர் உப்புநீரையே குடிக்க வேண்டி நேரிட்ட போதும் அதனைச் சகித்துக் கொண்டார்.சேரிமக்களோடு தொடர்பு கொண்டதால், நன்னீர்க்கேணியில் நீர் எருக்கக்கூட அவர் அனுமதிக்கப்படவில்லை!
தன் அண்ணன் செங்குட்டுவனுக்கு எதிராகத் தனக்கே அரசுரிமைவரும் என ஒரு நிமித்திகன் அரசசபையில் ஆரூடம் கூறினான் அதைக்கேட்டு வெகுண்ட இளங்கோ அண்ணனுக்குச் சங்கடம் ஏற்படாமலிருக்கவே துறவு பூண்டான் என்ற கதை நம் எல்லோருக்கும் தெரியும்.
இளங்கோ துறவுபூண்டமைக்குக் காரணத்தைத் தெரிந்து கொண்டநாம், மயில் வாகனம், ஏன் விபுலானந்தரானார் என்பதைத் தெரிந்து கொண்டோமா?
நதிமூலமும் ரிஷிமூலமும் காணமுடியாது என்று சொல்வார்கள். அம்மூலத்தைத் தேடிக் கண்டடைய முனைந்தவர்களே அப்படிச் சொல்லியிருக்கலாம்.
ஆனால் மயில்வாகனம் துறவுபூண்டகாரணத்தை நாம் ஆராய்ந்திருக்கிறோமா?
விபுலானந்த அடிகளாரின் உறவினர்களான காரைதீவு மக்களுக்கோ, அல்லது அடிகளாரோடு பல்வேறு வழிகளில் நேரடித் தொடர்பு கொண்டவர்களுக்கோ இந்த ரிஷிமூலம் தெரிந்திருக்கலாம். ஆனாற் கண்டவர் என்ற கதையாக அந்த ரிஷிமூலம் எவராலும் வெளிப்பருத்தப்படவில்லை.
விபுலானந்த அடிகளாரை எனக்குத் தெரியாது. 1947ம் ஆண்டில் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையிற் படிக்கையில், கொழும்பிலிருந்து அடிகளாரின் சடலத்தை இராமகிருஷ்ண மண்டபத்துறவிகளும், அந்தக் காலத்தில் மட்டக்களப்பின் புகழ்மிக்க அரசியல்வாதியாக விளங்கிய திரு.V. நல்லையா அவர்களும் புகையிரத
2007 - 21 -
அறிவு
Page 14
மூலம் மட்டக்களப்புக்குக் கொண்டு வந்ததையும், அன்னாரின் சடலம் ஆணைப்பந்திப் பெண்கள் பாடசாலையில் வைக்கப்பட்டு அதற்கு ஊர்மக்கள் அந்சலி செய்ததையும், பின்னர் சடலம் ஊர்வலமாகக் கல்லடிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே சமாதியிருத்தியதையும் மட்டுமே நான் அறிவேன். அதாவது அடிகளாரை நான் சடலமாக மட்டுமே கண்டேன்.
அத்தகைய நான் அடிகளாரின் ரிஷிமூலத்தை ஆராயத் தகுதியுடையவனா?
1947ம் ஆண்டு தொடக்கம் இன்று வரையும் ஒரு இலக்கிய மாணவனாக இருந்து அடிகளார் எழுதியவைகளையும், அடிகளாரைப் பற்றிப் பிறர் எழுதியவைகளையும் ஒன்றும் விடாமற் படிக்கிறவன் என்ற வகையில் தகுதியுள்ளவன் என்றே எண்ணுகிறேன். 6.
நாற்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னே அட்டாளைச் சேனையிலிருந்த ஆசிரிய கலாசாலை பிய்த்துக்கொணிடு மட்டக்களப்புப் பட்டினத்திற்கு வந்தது. அந்தக்கலாசாலையில் முதலாம் ஆண்டிலும், விருகை ஆண்டிலுமாக 101மாணவர்கள். அவர்களில் மூவர் கத்தோலிக்கர். ஒருவர் மன்னார் வங்காலையைச் சேர்ந்தவர். இரண்டாமவர் மட்டக்களப்புச் சொறிக்கல் முனையைச் சேர்ந்தவர். மூன்றாமவர் மூதூரானாகிய நான்.
நாங்கள் மூன்று பரம்பரைக் கத்தோலிக்கர் தவிர, ஆசிரிய மாணவர்களில் எப்போதோ ஞானஸ்நானம் பெற்ற வேறு சிலரும் இருந்தனர். ஆனால் அவர்கள் கத்தோலிக்கர்களாக இல்லை!
பயிற்சியை முடித்துக்கொண்டு ஆசிரியப்பணி புரிகையில் ஏநானஸ்னானம்
தம்பூர்வாசிரமத்திற்குத்திரும்பியிருந்தனர். 1962ம் ஆண்டு தனியார் பாடசாலைகளை அரசாங்கம் கையேற்றபோதுஞானஸ்னானம் பெற்றவர்களில் முக்காலே மூன்றுவீதம் பேர் தம் பூர்வாசிரமத்திற்குத் திரும்பிவிட்டார்கள் என்பதை நான் மிக நன்றாக அறிவேன்.
அப்படியாக மதமாற்றம் பெற்றவர்களும் பின்னர் தம் பூர்வாசிரமத்திற்குத் திரும்பியவர்களும் அநேகமாக மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களே. திருக்கோணமலை வட்டாரத்தைப் பொறுத்தவ்ரை இம்மதமாற்றமும், பின்னர் பழைய மதத்திற்குத் திரும்பியவர்களும் மிகமிகக்குறைவு. ஏன் இல்லையென்றுகூடச் சொல்லிவிடலாம்.
፭007 مت 22۔
அறிவு
இந்த மதமாற்றங்களின் சமுதாயப் பின்னணி என்ன?
மனித வாழ்க்கையை நான்கு வாக்கியங்களில் முடித்துவிட்ட ஜைன முனிவர்களைப் போலச் சொன்னால், மயில்வாகனம் அவர்கள் காரைதீவிற்பிறந்தார். கல்முனைக் கிறீஸ்தவப் பள்ளியிலும், பின்னர் மட்டக்களப்புப் புனித மிக்கேல் கல்லூரியிலும் கற்றுத் தன் பதினாறாவது வயதில் கேம்பிரிட்ஜ்சீனியர் பரீட்சையிற் திறமையாகச் சித்தியடைந்தார். பின்னர் (ஆங்கில) ஆசிரியப்பயிற்சியை முடித்து பரீட்சையிலும் சித்தியடைந்து கொண்டு 1917ம் ஆண்டில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் ஆசிரியரானார்.
இந்தக்கால கட்டத்தில் கத்தோலிக்கக் குருமாரிணி தியாகவாழ்வும், புனிதத்துவமும் கல்விப்பணியும் அவரைக்கவர்ந்திருக்கலாம். ஆனால் மட்டக்களப்புப் பட்டினத்தில் பல அனாதை விருதிகளை நடத்தி அனாதைப் பிள்ளைகளுக்குக் கல்வியூட்டிய அதே வேளையில் அந்த அனாதைப் பிள்ளைகளை மதமாற்றஞ் செய்ததும் அவர் மனத்தை உறுத்தியிருக்க வேண்டும். (அப்படிக்கத்தோலிக்கர்களாக மாற்றப்பட்டவர்களிற் பலர் மட்டக்களப்புத் தென்பகுதியைச் சேர்ந்தவர்களே)
ஏழ்மையும் வறுமையுமே இந்த மாற்றத்தின் பின்னணி இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று மயில்வாகனம் அவர்கள் நினைத்திருக்கவேண்டும். அந்நினைவு மாற்றியே ஆகவேண்டும் என்ற வைராக்கியமாக வளர்ந்திருக்கவேண்டும்.
நிச்சயமாகப் பண்டித மயில்வாகனனார் தனக்கு முன்னால் வந்த ஆறுமுக நாவலரின் பணியை அறிந்தே இருப்பார். அணினாரது சைவப்பணியும், தமிழ்த்தொணிரும் ஸ்தாபனரீதியாக அமைந்திருக்கவில்லை. தனிமனித முயற்சியாகவே அமைந்திருந்தது என்பதையும் அவர் அறிந்திருந்தார்.
இத்தொண்டுகளைத்தானும் தனிமரமாக நின்று செய்யாமற் கத்தோலிக்கத் துறவிகளைப்போல ஸ்தாபனரீதியாகச் செய்யவேண்டும் என்று அவர் தீர்மானித்தார்.
இந்தியாவிலே இந்து தர்மத்தின் மகத்துவம் மறக்கப் பட்டிருந்தபோது நீராம கிருஷ்ணபரமஹம்சர் தோன்றி இந்து தர்மத்தின் மேன்மையை உலகறியச் செய்தார்.
அவரினி சீடரான வீரத்துறவி விவேகானந்தரின் நிறுவனமான இராமகிருஷ்ணமிசன் உலகின் பல இடங்களில் நிறுவப்பட்டிருந்தது. இலங்கையிலும் இருந்தது.
2007 wong ۔ 2235 یت۔ அறிவு
Page 15
அந்த நிறுவனத்தின் துறவியாக ஆனாற்றான் இந்த நாட்டில் குறிப்பாக மட்டக்களப்பில் சமயத்தொண்டும், கல்வித்தொண்டும் செய்ய முடியும் என அவர் முடிவுகட்டினார். மதமாற்றத்தைத் தடுப்பதற்கும் அனாதைவிடுதிகளை அமைக்கவும் விவேகானந்த சபையே வழி எனக்கண்டார்.
வில்நைாணப்பட்டதாரியும், தமிழிலே மதுரைத் தமிழ்ப் பண்டிதருமான அவருக்குச் சுகமான வாழ்க்கை காத்திருந்தது. ஆனால் தன் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டிச் சகலத்தையும துறந்துவிட எண்ணினார். இளங்கோவைப் போல 1922ம் ஆண்டு மயில் வாகனாருக்கு முப்பது வயது நடக்கையில் அவர் மனதிலே இந்த எண்ணம் கெட்டித்து, மைலாப்பூர் இராமகிருஷ்ண மடத்திற் சேர்ந்து பிரபோத சைதன்னியராகி 1924ம் ஆண்டு சித்திரா பூரணையன்று ஞானோபதேசம் பெற்றுச் சுவாமி விபுலானந்தரானார்.
துறவியான பின்னர் கல்லடி, மணிரூர், காரைதீவு ஆகிய இடங்களிலும் பின்னர் திருக்கோணமலை,மொறக்கட்டாண்சேனை ஆகிய இடங்களிலும் இராமகிருஷ்ணமிசன்
பாடசாலைகளை ஏற்படுத்தினார்.
ஆக, மயில்வாகனனார் விபுலானந்தர் ஆனது யாழ்நூலை எழுதவல்ல. மதங்ககளாமணியை எழுதவும் அல்ல. பலகவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதுவதற்குமல்ல. ஏனென்றால் அவர் துறவியாகாமலே இவைகளைச் சாதித்திருக்கலாம். அத்தகைய திறமையும் தகுதியும் அவருக்கிருந்தது. ஆனால் அவர் துறவியானது இந்நாட்டின் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தினி இந்து மதவளர்ச்சிக்கும்,கல்வி வளர்ச்சிக்கும் இவைகளுக்கு மேலாக இந்துமத அனாதைகள் மதமாற்றஞ் செய்யப்படுவதை நிறுத்தவுமே ஆகும் என நான் கருதுகிறேன். மயில்வாகனன் விபுலாநந்தரான ரிஷிமூலம் இதுதான் என்பது என் கருத்து.
*சொல்லுதல் வல்லான் சோர்விலனஞ்சான்
துணிவுகொள் சிந்தையானவனை
வெல்லுதல் யார்க்கு மரிதெனவுரைத்த
GIDdubDaop Girls' flais5IT6
நல்லையிலுதித்த நாவலர் பெருமான்”
2007 - 24 -
அறிவு
கவிதையில் நான் கண்ட விபுலாநந்தர்
தமிழ்மணி - பாலேஸ்வரி நல்லவுரட்னசிங்கம்
விபுலாநந்தர் பற்றிப் பல ஆய்வுகளும் கட்டுரைகளும் பரவலாக எங்கும் வெளிக்கொணரப்பட்டு வரும் இவ்வேளையில் விபுலாநந்தர் பற்றிப் புதிதாக எதையாவது எழுத நினைப்பது கொஞ்சம் சிரமந்தான். இருந்தும் அந்தப் பேரறிஞரும் வித்தகருமானவர்பற்றி ஏதாவது எழுதவேண்டும் என்ற பேரவாவினால் இதை எழுத முன் வந்தேன்.
ஆசைபற்றி அறையலுற்றேன் மற்றிக் காசில் கொற்றத் திராமன் கதையரோ
என்று இராமாயணத்தை எழுதப் புகுந்த கம்பரே கூறிவைத்துள்ளார். இவ்விடத்தே அறிவில் மிகவும் சிறியவளாகிய நான் முத்தமிழ் வித்தகர்பற்றி ஏதோ சிறிது எழுத முன்வந்துள்ளேன். பிழையிருந்தால் பொறுத்தருள்க!
ஈழத்திரு நாட்டில் காலத்துக்குக் காலம் அறிஞர் பலர் தோன்றித் தம் பங்களிப்பைத் தாராளமாக நாட்டுக்கிந்து மறைந்துள்ளனர். இந்த வகையில் சமயத்துக்கும், இலக்கியத்துக்கும் தமது சேவையை அர்ப்பணித்தவர்களில் ஆறுமுகநாவலரும் சுவாமி விபுலாநந்தரும் குறிப்பிடக் கூடியவர்கள்.
ஈழத்தின் வடக்கே நாவலரும் கிழக்கே விபுலாநந்தரும் தோன்றி இந்து மதத்துக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் அளப்பரிய சேவை செய்து அவை மறையக்கூடிய அபாயம் ஏற்பட்ட வேளைகளில் அவற்றுக்குப் புத்துயிர் அளித்து அவற்றை வளப்படுத்தியதோரு மட்டுமல்லாமல் தமது பெயர்களையும் உலகுள்ளவும் அழியாப்புகழுடன் பொறித்து விட்டுச்சென்று விட்டனர்.
கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்ற முது மொழிக்கினங்க இவர்கள் தம் வாழ்வை துறவு வாழ்க்கையாக மேற்கொண்டு தூய்மையான வாழ்க்கை வாழ்ந்துதமிழ் அன்னையை அழகுபடுத்த அளப்பரிய ஆபரண மணிகளைச்
கட்டியுள்ளனர். W
بہ 25 یہ
2007 அறிவு
Page 16
வித்தகர் விபுலானந்தர் 27.03.1892ல் மட்டக்களப்புக் காரைதீவில் சாமித்தம்பி கண்ணம்மை தம்பதியருக்கு மகனாக அவதரித்து மயில்வாகனன் என்ற இயற்பெயர் சூட்டப்பட்டு, 1924ல் சுவாமி சிவானந்தா அவர்களால் ஏநான உபதேசம் செய்யப்பட்டு விபுலாநந்தர் என்ற பெயரைப் பெற்றார்.
அடிகளார் துறவியாகத் தம்மை ஆயத்தம் செய்த காலையிற்றான் அவரால் அதிகமான நூல்களைக் கற்க முடிந்தது. விவேகாநந்த ஏநானதிபம், கர்மயோகம், எநானயோகம், நம்மவர் நாட்டு ஏநானவாழ்க்கை, விவேகாநந்த சம்பாஷனைகள் என்னும் நூல்களை அடிகளார் மொழிபெயர்க்கவும் செய்தார்.
இவ்வேளையில் ஆங்கிலப் பெரும் புலவரான ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அடிகளாரைக் கவர்ந்ததால் அவற்றைப் பலமுறை விரும்பிப் படித்தார். அத்தகைய வற்றை தம் தாய்மொழியாம் தமிழிலும் ஆக்க ஆர்வங்கொண்டார்.1924ம் ஆண்டு மதுரைத் தமிழ் சங்கத்தின் ஆண்டு நிறைவு விழாவிற் கலந்து கொள்ளவும் நாடகத் தமிழ் என்னும் பொருள் பற்றி உரையாற்றவும் அடிகளாருக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
மதுரைத் தமிழ் சங்கத்தின் செயலாளராக அவ்வேளையில் இருந்த திரு.டி.சி. சீனிவாச ஐயங்கார் அடிகளாரின் விரிவுரையை ஒரு நூலாக்கித் தரும்படி கேட்டதற்கிணங்க அடிகளார் ஷேஸ்பியரின் நாடகங்களையும் தனஞ்சயரினி தசரூபத்தையும் மூலக் கருவாகக் கொண்டு சிலப்பதிகாரத்திலுள்ள நாடகநூல் முடிவுகளை ஒரளவு விளக்கிக் காட்டுவதற்கு ஏற்றதாக மதங்க சூளாமணி என்னும் நூலினை எழுதினார். மதுரைத் தமிழ் சங்க செயலாளர் இதைச் செந்தமிழ் என்னும் இதழில் தொடராக வெளியிட்டுப்பின்னர் நூலாக வெளியிட்டார்.
அடிகளாரின் கவிதைகளில் முத்திரை பதிக்கத்தக்கது ஈசன் உவக்கும் மலர் என்ற கவிதை என்பது எனது கருத்து.
வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ள லடியினைக்கு
வாய்த்த மலரெதுவோ
2007 - 26 -
அறிவு
வெள்ளைநிறப்பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி
உத்தமனார் வேண்டுவது
இப்பாடலிற் காணப்படும் சொல்நயம் பொருள்நயம் எதுகை மோனை கருத்தாழம் உணர்ச்சியைத் தூண்டும் கவிநயம் ஆகியன இந்தப் பாடலைப் படிக்கும் தோறும் உள்ளத்தில் இன்ப ஊற்றுப் பெருக்கெடுக்கவைக்கிறது.
கங்கையில் விருத்த ஒலை என்ற இவரது இன்னுமொரு பாடலை எடுத்துக் கொண்டால், நண்பன் இறந்தவேதனை அடிகளாரின் உள்ளத்தை எவ்வளவு தூரம் புண்படுத்தியுள்ளது என்பதை
கந்தசாமிப் பெயரோன் வேட்களத்திலென்னைக்
அந்த நாள் முதலாக நட்புரிமை பூண்டோம் அண்மையில் நான் வடநாடு நண்ணியதை அறிந்தே
என்று நண்பனின் நாமத்தை சுவாரஸ்யமாகக் கூறித் தொடர்ந்து நண்பனின் குணநலன்களைக் கூறும் வகை அவருக்கே சொந்தமான கவிதை நடை எனலாம்.
நம்மடிகளுறைகின்ற தவப்பள்ளியாது நற்றவத்தோர் முகவரியா தெனவினவத் தெரிந்து செம்மையுறுஞ் செய்திபொதியோலையொன்று விருக்கச் சிந்தைவைத்தா னெனவெனக்கோ ரன்பனறி வித்தான் ஒரிருநாள் கழியுமுன்னர் மார்படைப்பு நோயால் ஊனுடலம் பாரில் விழ வானுலகு புகுந்தான்
அனற் பிழம்பாய்ப் புகுந்துளத்தையுருக்கியதப் பொழுதில்
என்று தொடர்ந்துவரும் பாடல்கள் அத்தனையும் படிக்கப் படிக்கச் சுவை குன்றாமல் அடிகளாரின் துன்பத்தில் எம்மையும் பங்குகொள்ள வைக்கின்றது என்று துணிந்து கூறலாம்.
2007 ۔ 27 سے
els
Page 17
ஏன். ஷேக்ஸ்பியரின் ஆங்கிலக் கவிதையின் மொழிபெயர்ப்பைச் சற்றுப் படித்துப் பார்த்தால்,
பேரிரவில் நடந்தவெலாம் பீழையினை விளைக்கப் பேதலிக்கு முளச்சிறியேன் பேசுகின்ற மொழிகள் ஆருயிர்க்குத் தலைவனின் அருட்செவியில் வீழ்க அகத்திடையின் றிருக்க அவைபுகுதலொழிக.
என மனைவி கல்பூர்ணியா கூறியதைக் கேட்ட யூலியஸ்சீசர்,
அந்சினர்க்கு சதமரணமற்ைசாத நெல்சத் தாடவனுக் கொருமரன மவனிமிசைப் பிறந்தோர் துந்கவரென்றறிந்திருந்தும் சாதலுக்குநருங்கும் துண்மதிமூடரைக்கண்டாற் புன்னகை செய்பவன்யான்
என்ற தமிழ்மொழிபெயர்ப்பு நிச்சயமாக மொழிபெயர்ப்பாகவே தெரியவில்லை அது அடிகளாரின் சொந்த ஆக்கம் என்று கூறலாம். சுருங்கக் கூறினால் ஷேக்ஸ்பியரை விட அடிகளாரின் தமிழ்ப்பாடல் ஒருபடி உயர்ந்தே காணப்படுகின்றது. இது ஷேக்ஸ்பியரின் ஆங்கிலக் கவியைப் படித்தவர்களுக்குப் புரியும் என நினைக்கின்றேன்.
அடிகளாரின் இன்னொரு பாடலான நீரமகளிரை எடுத்துக் கொள்வோம்.
அஞ்சிறைய புள்ளொலியுமான்கன்றின் கழுத்தில் அணிமணியினின்னொலியு மடங்கியபின் நகரார் பஞ்சியைந்த வணைசேருமிடையாமற் பொழிதிற் பாணனொருந் தேரணிமிசைப் படர்ந்தனனோர் புலவன்.
தேனிலவு மலர்பொழிலிற் சிறைவண்டு துயிலச் செழுந்தரங்கத் தீம்புனலுள்நந்தினங்கள் துயில மீனலவன் செலவின்றி வெண்ணிலவிற்றுயில விளங்குமட்டு நீர்நிலையுனெழுந்த தொரு நாதம்
எப்படி வாவியில் கீதம் இசைக்கப்படுகிறது என்பதை ஒரு புலவன் வாயினாற் கூறவைப்பதோடு அந்த கீதத்தையும்,
2007 - 28 -
அறிவு
நீநி - சாச - ரீ நீலவானிலே [53]) -- ଅs[18 - id it [ଣ୍ଡିର)ର ଗାଁ ଓ ଔରା
LDMTLD — UNTU - SIT LOTGOOGO 8GAIGDIGIT (8uu மபத - நீநி - சா மலைவு தீருவோம் 5F6 – Î – 5ff g|TGo 5/TL9 (8u &j5 - LDITLD - UIT 5605 s55 (3GT LIL - Ss:5 - 6 usGDoD LTla (8u பதநி - சாச - ரீ பலரொ டாடுவோம் என்று
இப்படி அழகாக இசைத்துள்ளார். அடிகளாரின் இசைவன்மையை யாழ் நூல் நீரரமகளிர் போன்ற கவிதைகள் மூலம் உணரக் கூடியதாய் உள்ளது.
ஆறுமுகநாவலர் பற்றி அடிகளார் கவிதை வாயிலாகக் கூறுவதையும் பார்க்கலாம்.
தம்மையீன்றெடுத்த வரசியல் நாட்டிற் சைவமாஞ் சமயமும் புலவர் செம்மைசேருளத்திற் பொலிந்தமுத் தமிழும்
சீருறப் பணிபல புரிதல் இம்மையிப் பிறவிக்கியைந்தமாதவமென்
றெண்ணியே விடைபெற்று மீண்டார் எம்மையும் பயந்த வீழமா நாட்டி
னிணையிலாப் பெருநிதியணையார். என நாவலரின் புகழ் பாருகிறார்.
அடுத்து மதங்க சூளாமணியெனும் மொழிபெயர்ப்புக் கவிதையின் முதலாவது பாடலைப் பார்ப்போம்.
அங்கண்ணுலகனைத்தினையு மாடரங்க
மெனலாகுமவனி வாழும் மங்கையரையாடவரை நடம்புரியு
மக்களென மதித்தல் வேண்டும் இங்கிவர்தாம் பல கோல மெய்திநின்ற
நாடகத்தினியல்பு கூறிற்
2007 سه 229 سه
அறிவு
Page 18
பொங்குமங்க மேழாகிப் போக்கு வர
விருக்கையொரு பொருந்து மன்றே.
உலகம் ஒரு நாடகமேடை அதில் வசிப்பவர்கள் அனைவரும் நடிகர்கள் என்பதைத் தெளிவாக எளிமையான சொற்களில் எடுத்துக் காட்டியுள்ளார். இப்படியாக அடிகளார் இயற்றிய கவிதைகள் எண்ணில் அடங்கா.
அவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
1. FFGG 9_6\léGlÖ U060 14. நாச்சியார் நான்மணிமாலை 2. தேவபாணி 15. விவேகானந்த பந்சகம் 3. தேவி வணக்கம் 16. குருசரனதோத்திரம் 4. Ustad;5 17 அன்பு
5. மலர்மாலை 18. நீரரமகளிர் 6. பெருந்தேவபாணி 19. ஆறுமுகநாவலர் 7. (386୩uପିଡୀ) 20. உற்பத்தி முதல்வன் 8 யாழ்நூல் இறைவணக்கம் 21, இமயமலைச்சாரலில் 9. மகாலெட்சுமி தோத்திரம் 22. கங்கையில் விருத்த ஒலை 10. 556a OTi5tf 23. குருதேவர் வாக்கியம் 1. வாழ்த்து 24. பூஞ்சோலைக் காவலன் 12. மதங்க சூளாமணி 25. ஆங்கிலவாணி
13. திருவமர் மார்பன்திருக்கோயிற்காட்சி
எல்லாக்கவிதைகள் பற்றிய விளக்கங்களையும் எடுத்துக்கூற முடியாத நிலையில் அவரது கவிதைகளில் என் உள்ளத்தைத் தொட்டவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே சுருக்கமாக விளக்கியுள்ளேன்.
குரு வணக்கம் என்ற கவிதையிலே அடிகளார் தனக்கறிவூட்டிய குல்சித்தம்பி ஆசிரியருக்குக் குருவணக்கம் தெரிவிப்பதை இங்கே குறிப்பிடுதல் பொருத்தமாகும்.
அம்புவியிற் செந்தமிழு மாங்கிலமும் எனக்குணர்த்தியறிவு தீட்டி வம்பு செறிவெண்சலச வல்லியருள்
= 0) =
2007 அறிவு
கூட்டி வைத்த வள்ளல் குல்சித் தம் யெனும் பெயருடையோன் தண்டமிழின் கரைகண்ட தகைமை யோன்றன் செம்பதும மலர்ப்பதத்தைச் சிரத்திருத்தி எல்வநான்றும் சிந்திப்பேனே.
இப்பாடலின் கடைசி இரண்டடிகளான "செம்பதும மலர்ப்பதத்தைச் சிரத்திருத்தி
ஆசிரியரின் ஆசீர்வாதம் இருந்திருக்கு மென்பதைப் புலப்படுத்துகிறது.
அடிகளார் இயற்கை எழிலை எவ்வளவு சுவாரஸ்யமாக ரசித்துள்ளார் என்பதற்கு அவர் இமயமலைச்சாரலில் இருந்த வேளை காலை மாலைக்காட்சிகளை வர்ணிப்பதைச் சற்று உற்று நோக்குவோம்.
மேல் விழுந்த விளமழையால் வெள்ளியெனத் திகழ்வனவாம் காலையினு மாலையினுங் கதிரவனார் வேதிக்க மாலவனாராடையென வயங்குவபொன்னிறம்படர்ந்தே.
இங்கே முகில்கள் மலைமீது படிந்து பனிக்கட்டியாக உறைந்திருக்க கதிரவன் கதிர்கள் பட்டு நீலநிறமாக நீர் வடிவதை மிகவும் சுவைபடக் கூறியுள்ளார்.
இயற்கையை ரசிக்கும் அடிகளார் மாயையின் இயல்பு பற்றி என்ன கூறுகிறார் என்பதையும் பார்க்கலாம்.
மைந்த மாயையின்றன்மையை யுணர்தியோ
மன்னுநீர்க் குளத்தின்மேல் வந்த பாசியை யகற்றினாலகன்றிரும்
மறுகணத் தொன்றாகும்
இயன்றநல் விசாராத்தாற் சிந்தை தூய்மையாங் கணத்தினி லவாவிருட்
டிரைமறைத் திருமன்றே.
2007 - 31 -
அறிவு
Page 19
மாயை எப்படியானது என்பதற்கு நீரினுள் பாசியை உதாரணம் காட்டி மனம் எவ்வளவு தூரம் சலனம் அடையக் கூடியது என்பதை அழகாகக் காட்டியுள்ளார்.
அடிகளாரின் சிறந்த நூலாகிய யாழ் நூலில் அவர் எழுதிய இறைவணக்கத்தில் (Sct LTL6)
உழையிசையியமென வுருபு கொள் பரணை உமைதிரு வளநிறை யமிழ் துகு மழலை மொழியுரை குழவியை யழகறியிளமை முழுதியல் வரதனை முறை முறைபணிவாம் புழை செறி கழைகுழலிசைபொழி பொதியம் புகழுற வளருறுபுலமகள் பனுவல் இழையணி தமிழ்மகளெமதுள முறையும் இறை மகளிசையியல் வளமுறுகெனவே,
மூத்த பிள்ளையாரை யாழிசையியல் வளம்பெற வேணிரும் என இறைஞ்சுகிறார்.
இப்படியாக அடிகளாரின் கவிதைகள் அனைத்துமே தேன்சொட்டும் சுவைநிறைந்தவை இவற்றைப் படிக்கவேண்டியது எமது கடமை. அத்தோடு இவற்றை மற்றவர்களும் படித்துச் சுவைக்க உதவுவோமாக,
-நன்றி - விபுலானந்தர் நூற்றாண்டு விழா மலர்
*.அதிகார வேட்கையுடையார் பொதுமக்களுடைய பிரார்த்தனைகளை ஒருபொழுதுங் கருதுவதில்லை. சாதி சமய வேறுபாட்டினை மிகுதியும் எடுத்துப்பேசித் தம்முடைய சொந்த நலத்தைப்பார்த்துக் கொள்வர். ஆயினும் தேசபக்தர்கள் போல் நடிப்பர். ஒத்துழைப்புக்குத் தடையாக நிற்பார்கள். மேற்கே எகிப்து நாடு தொடங்கி கிழக்கே பிலிப்பைன்ஸ்தீவு ஈறாகப் பரந்து கிடக்கும் பெருநிலப்பரப்பிலே உள்ள மக்களெல்லாம் சுதந்திர முழக்கம் செய்ய, இத்தீவு மாத்திரம் அடிமைத் தளையை முத்தமிட்டு நிற்றல் தகுதியாகுமோ? உண்ண உணவும் உடுக்கத்துணியுமின்றி ஏழை மக்கள் பரிதவித்து நிற்க, நாம் நூற்றொருவர் அடங்கிய பெருமன்றமும், முப்பதின்மர் அடங்கிய முதியோர் மன்றமும் நமக்குக் கிடைத்து விட்டதென்று, பெருமை பாராட்டுதல் முறையாகுமா? படைக்கல உரிமையும், வர்த்தக உரிமையும் நாட்டிற்குச் சீவ நாடிகள் போன்றன. இவற்றைப் பறிகொடுத்த சுதந்திர மன்றங்களினாலே ஆவது என்ன? சுதந்திரம் பெறுதற்கு நாம் முயல வேண்டும். ஒன்று கூடி நின்றாற்றான் நம் முயற்சி கைகூடும். ஆதலின் இலங்கைத்தீவிலே வாழுவோராகிய நாமெல்லாம் ஒன்றுபட்டு நின்று ஏழைகளுடைய வறுமையை நீக்குவதற்கு
வழிகண்டு சுதந்திர வாழ்வு வாழ்வதற்கு முற்படுவோமாக. -விபுலாநந்தர்
9A. ~32 - 9s
2007
கரும&யாகம்
அருட்டிரு விபுலாநந்த அடிகள்
தத்தம் நிலையில் தாம் பெரியவரே! அமரருள் உய்க்கும் அடக்க நிலையும், வினைபுரி இயக்கமும், வினையொழிந்தயர்ந்த முடமுமாகிய முத்திற நிலையும் யாங்கன்று முளவெனுள் சாங்கிய நூலே!
நிலைவேறாதலினீள்புவியிடையே பலவே றாகிய வொழுக்கம் பயிலும் சத்துவ குணஞ்சார் சகிப்புமே லெனினும் அத்திற் மிலாதார்க் கதுவின் னாதே
ஆற்றலுடையான் அடங்குதலினிதே. சீற்றங் கொண்ட திறனிலா னடக்கம் வத்சகப் பொய்யென மதித்தன ருரவோர் துய்ப்பன துய்த்தோன் துறத்த லியல்பேl
ஈங்கிவர்க் கிதுதக வெனவர ராய்ந்தோர் ஆங்கவர்க் கதனையமைப்பது மரபே செய்கோல் செலுத்தலுந் தெருவினிற்குப்பை தங்கா தகற்றலுந் தமமுளொப் பனவே
ஈன்றோர்ப் பேணி,இனியன புரிந்து, வான்றோய கடவுள் மலரடி நினைந்து, வாழ்க்கைத் துணைவி மகிழ்ச்சிமீ தூரப் பொன்போற் புதல்வரைப் போற்றி, அன்பாற் சுற்றந் தழீஇ, உற்றநட்பாளர் வறியோர்க்குதவி, மாண்பொளிட்டி, ஆதுலர் சாலை யாதிய அறங்கள்
- 33 -
அறிவு
Page 20
தீதில நிறுவிச், செறுநர்த்தடிந்து, நல்லோர்ப் பரவும் நலத்தினன், அல்லோர் தம்வயிற் சாரான்: தண்புகழுரையான் தொல்லியல் வழாஅத் தூயோனவனே, இல்வாழ் வானென இசைத்தனர் நூலோர் அச்சம், பொச்சாப் பகற்றுதல் கடனே
ஒரும், பொன்னுமொப்ப நோக்கி, மாதரைத் தாயென மதிக்குந் துறவும், பிறர்க்கிதம் புரியத் தம்முயிர் வழங்கும் அறத்திறமறிந்தோர் அகத்துறை வாழ்க்கையையும், தம்மி லொக்குந் தகைமைய வாதலின் இல்வாழ்வாரிவர் - துறவோ ரிவரென, ஏற்றத் தாழ்ச்சியியம்புதல் வேண்ட தத்தம் நிலையிற்றாம்பெரியவரே.
站大火光站站站大火决站站火火站火
புத்தக சாலையிலுள்ள நூற்றுக்கணக்கான புத்தகங்களை வாசித்து முடித்துங் குங்குமஞ் சுமந்த கழுபோல ஒரு பயனும் பெறாது அலைகிற கற்றறி மூடர் உளர். தமது கைக்குக் கிட்டிய நான்கைந்து புத்தகங்களை நன்றாகப் படித்து அவற்றின் வழிநின்று இம்மை மறுமைப் பயனை அடைகின்ற புத்திமான்களுமுளர். கற்றுவல்ல மூடரிலும் கல்லா அறிஞரே சிறந்தவர்.
-விபுலாநந்த அடிகள்
2007 -34 -
அறிவு
உள் அட்டையடக் கட்டுரை
தர்மசிவராமு
- சந்தராம்
பால்ய நண்பர் தர்முசிவராமூவுடனான 43வருட அனுபவத்தில் அவரது பல பரிமாணங்களில் சிலவற்றை என்னால் எட்ட முடியவில்லை. 1955களில் படித்த இராமகிருஷ்ணமிசன் இந்துக்கல்லூரி அதிபர் அம்பலவாணரால் சிரேஷ்ட வகுப்பு மாணவர்களுக்கு பெளதீக பரிசோதனைகள் செய்து காட்டும்படி பணிக்கபட்டேன். அதன்மூலம் எனக்கு சிவராமலிங்கத்தின் தொடர்பு அவர்களது சகமாணவர்கள் மூலம் ஏற்பட்டது. மாலை வேளைகளில் திருமலைக் கடற்கரையில் விளையாடுவோம். கோட்டைச் சுவரில் வளர்ந்திருக்கும் மரவேர்களை பிடித்து கோட்டை மதிலில் ஏறுவோம். பதினான்கு பதினைந்து அடி உயர சுவர் கட்டுகளில் ஓடிவந்து கடற்கரை மணலில் பாய்ந்து விளையாடுவோம். இவற்றைக் கவனித்த எமது உபஅதிபர்சிவபால் மாஸ்டர் எங்களை நன்கு அட்வெஸ்சர் காங் என்று கிண்டலாக அழைப்பார்.
அறுபதுகளில் இந்தியா சென்ற நண்பர் சிவராமூவுடனான தொடர்பு அவர் இறப்பதற்கு பத்து பன்னிரண்டு நாட்கள் முன்வரை நீடித்தது. 25.12.1997ல் வேலூரை அண்டிய கரடிக்குடி மருத்துவமனையில் அவரை எனது நண்பர் கந்த சுவாமியுடன் நான் பார்த்து வந்தேன். சென்னை மருத்துவர்களால் கைவிட்ட நிலையிலேயே அவர் வேலூருக்கருகிலுள்ள கரடிக்குடிக்கு மாற்றப்பட்டார்.
1996ல் அவரும் நானும் இயற்கை வைத்திய வகுப்பில் சேர்ந்து படித்தோம். அப்போது 'கம்புச்சா எண்ணும் தேயிலை வைன் எமக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் பரிசோதனை நடத்துவதாகச் சொல்லி அந்த “yeast” அப்பத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி உண்டார். அவருக்கு ஏற்பட்ட கண்டுபிடிக்க முடியாத வருத்தம் சிலசமயம் இதனால் கூட ஏற்பட்டிருக்கலாம்.
பரிசோதனை செய்வது அவரது ரத்தத்தில் ஊறி இருந்தது. 1951-52 களில் பிரபல்யமான 'அதிர்ஷ்ட விஷ்வநானம்' எனும் நூலை எழுதிய பண்டிட்சேதுராமன் இலங்கை வந்திருந்த போது, எண் சாஸ்திரம் பற்றிக் கூட்டங்களில் பேசினார். பத்திரிகைகளிலும் எழுதினார். அப்படி எழுதிய கட்டுரைகளை கத்தரித்து நோட் புத்தகத்தில் ஒட்டி அதைக்கவனமாகப் படித்து கிரகித்துக் கொண்டு பல
Zልበ07 ~35 -
இiறிவு
r
Page 21
நண்பர்களுக்கும் சாத்திரம் சொன்னார். தனது பெயரையும் பலதடவைகள் மாற்றி மாற்றி வைத்து பரிசோதனை செய்தார். அதுதான் அவர் ஏகப்பட்ட பெயர்களால் குறிக்கப்படுவதன் காரணம்.
சிலசமயங்களில் பக்கம் பக்கமாக எழுதி முடித்திருந்த கட்டுரைகளை கிழித்துவிட்டு, மீண்டும் மீண்டும் புதிதாகப் புதிய பாணியில் எழுதி எழுத்திலும் பரிசோதனைகள் செய்வார். மேசையில் வைத்துத்தான் எழுதவேண்டுமென்பது அவருக்கு அவசியமில்லை. குந்தி இருந்தபடி முளங்காலில் வைத்தே சரளமாக எவ்வித கஷ்டமுமின்றி எழுதுவார். அவருடன் ஒரே அறையில் தூங்கிய சமயம் அவர் தூங்காமல் எழுதுவதை பல சமயம் கண்டிருக்கிறேன்.
படிக்கும்போது WASHINGTOH SCHOOL OFARTS எனும் தபால் மூலம் போதிக்கும் சித்திரக் கலாசாலையில் சேர்ந்து சித்திரம் கற்க ஆரம்பித்தார் அதிலும் பல பரிசோதனைகள் நிகழ்த்தினார். தனது படைப்புகளை தனி நபர் கண் காட்சியாக கண்டியில் பிரஞ்சுக்கலை பிரிவினர் அனுசரணையுடன் நடத்தியுள்ளார்.
கிளி மூக்கும், தீட்சணிய பார்வையும் ஒல்லியான தோற்றமும் உடைய சிவராமலிங்கம் (அதுதான் அவர் இயற்பெயர்) பாடசாலைக்காலத்திலும் பார்ப்பவர் எவரையும் இவர் "ஒரு வித்தியாசமானவர் என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடியவராக இருந்தார். தீட்சண்யம் பார்வையில் மட்டுமல்ல அவர்புரியும் எல்லா சொல்களிலும் இருக்கும். சுருட்டுச் சுற்றும் தொழில் புரிந்த அவரது தந்தையால் அவரது அறிவாற்றலுக்கு உதவியாக எதைவும் வழங்கப்படாவிட்டாலும் தீட்சணியமும் பிடிவாதமும் அவரைப் போன்றதே. தாயாரின் அன்பும், கனிவும், கவித்துவமும் தான் அவரிடம் அதிகம் அமைந்திருந்தது.
அப்போது இப்போதைய சாதாரணப் பொதுத் தராதரப் பரீட்சைக்குப் பதிலாக S.S.C என்ற சிரேஷ்ட பாடசாலை பரீட்சை நடந்த காலம். பரீட்சைகளினால் உண்மையான கல்வித் தராதரத்தையும் திறமையையும் அளவிட முடியாதெனக் கருதிய அவர் தனது இரண்டாவது பரீட்சை (கணிதம்) பாடத்திற்கு செல்லாமல் இருப்பதற்காக தான் அணிந்திருந்த கண்ணாடியை கல்லால் குத்தி உடைத்து விட்டுத்தாயரிடம் கணினாடி விழுந்து உடைந்து விட்டதால் பரீட்சைக்குப்
2007 - 356 - ..........: அறிவு
போகவில்லை எனச் சமாதானம் கூறினார். பின்னர் இந்தியாவில் (எழுத்து ஆசிரியர்) சிசு செல்லப்பாவிடம் தான் பட்டப்படிப்பு படிக்க விரும்புவதாகக் கூயறிய போது உனக்கேன் பட்டப்படிப்புஉனது எழுத்துக்களை வாசித்து விளங்க இங்கேBAக்களும் M.Aக்களும் தினருகிறார்களே என்று சமாதானம் சொல்லி அவரது ஆசையை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டார்.
பாடசாலையில் சக மாணவர்கள் கால்பந்து விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் சிலப்பதிகாரப் புத்தகமும் கையுமாக மைதானத்தில் வாசித்துக் கொண்டிருப்பார், வகுப்பில் நண்பர்களிடையே அதன் நயம் பற்றியும் விவரிப்பார்.
எண் சோதிடத்திலும், சோதிடத்திலும் பரீட்சயம் உள்ள அவர் தனது சாதகக் குறிப்புப் படி (20-04-1939ல் பிறந்தவர்) தனக்கு நிரந்தரமான தொழில் எதுவும் இல்லை எனக் குறிப்பிடுவார். அவர் இந்தியாவில் இருந்த சமயம் அவரது பால்ய இலக்கிய நண்பராக இருந்த சுந்தரராம சுவாமி தனது ஜவுளிக்கடயில் வேலை பார்க்கச் சொல்லி வற்புறுத்தியும் மேற்சொன்ன காரணத்தைக் காட்டி வேலையை
if(b6f'LT.
நாம் பாடசாலையில் படித்த சமயம் நண்பர்கள் கூட்டமாகச் சென்று கடல் குளிப்பது வழக்கம், ஒல்லியான அழகான உடலோரு சிறுகுண்றுகள் மேல்நின்று கடலுக்குள் ‘டைவ் பண்ணுைவார். கூட்டமாக மட்டுமே நாம் கடல் குளிப்போம். அவர் தன்னந்தனியாகச் சென்று நீந்தவும் டைவ் செய்யவும் செய்வார். நண்பர்களுடன் கடல் குளித்த சமயம் ஒரு முறை அவரது கை கடிகாரம் காணாமல் போய்விட்டது. அதைக் கண்டு பிடிப்பதற்காக அவரது தாயாருடன் நினைத்த காரியம் கூறும் அப்பாத்துரைச்செட்டியார் என்ற பெரியாரிடம் சென்று இந்தக் களவு பற்றிக்கூறினார். அதில் ஏற்பட்ட அறிமுகம் அவரிடம் அடிக்கடி சென்று ஆத்மீகம் பற்றிய விடயங்களை அளவளாவ சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியது. அவரது இந்த உறவு அவர் எழுதிய தியானதாரா என்ற அப்பாத்துரைச் செட்டியாரின் ஆத்மீக சரிதையாக மலர்ந்தது.
இலங்கையில் இருந்த காலத்தில் அவரது நண்பர் நில அளவையாளர் கோபால கிருஷ்ணனுடன் தான் அதிககாலம் தங்கியிருந்துள்ளார். கோபாலகிருஷ்ணன் முகாமிட்டு இருந்த அநேகமான இடங்களுக்கு அவரும் கூடவே செல்வார். ஊரைவிட்டு
۔ 77 35 سے
2007 அறிவு
Page 22
காணக பகுதிகளில் கூடுதலாக முகாமிட்டு இருக்கும்போது அங்கு போய் அவருடன் தங்குவதில் அவருக்கும் பெருமகிழ்ச்சி லங்காபுரிராஜா தினமணிக்கதிர் சஞ்சிகை 1985 ஜூன் 9, 16 23 திகதி இதழ்களில் வெளிவந்த கதை தனது நணிபர் கோபாலகிருஷ்ணனின் முகாம் வாழ்க்கையை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட
கதை,
இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில் அவரது வாழ்க்கை ஒரு துறவுநிலையில் வாழப்பட்டது என்று சொன்னால் மிகையாகாது. அவரது சொத்துக்கள் எனச் சொல்லப் போனால் புத்தகங்கள் மட்டுமே. நண்பர்கள் பலரும் அவருக்கு உதவிசெய்தனர். 1983ம் ஆண்டு இனக்கலவரத்தின் பின் தன் குடும்பத்தை இந்தியாவிற்குக் கொண்டு போய் விட்டு விட்டுவந்த நண்பர் கந்தசாமியின் வீட்டில் கந்தசாமி இந்தியா சென்ற போதெல்லாம் போய்வருவார். சிலகாலம் சிவராமூவின் வீட்டு வாடகையை அவரே கொடுத்து வந்தார். அவரைக் கடைசியாக உயிருடன் கண்ட இலங்கை நண்பர்களில் நானும் அவரும் அடங்குவோம். இறந்தபின் கரடிக்குடியில் அவர் புதைத்த இடத்தில் பெயர் பொறித்த பளிங்குக்கல் இலங்கையிலிருந்து எடுத்துச் சென்று நட்டார் கந்தசாமி
1.சி பாடசாலை நாட்களில் எமது நண்பர்களில் பலரும் காதலித்தனர். ஓரிருவரைத்தவிர எல்லோருடைய காதலும் தோல்வியிலேயே முடிந்தது. சிவராமூவும் ஒரு மாணவியைக் காதலித்தார். அந்த நாட்களிலேயே அவரது காதல் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று ஒருநாள் இரவு வீதியால் வரும்போதுவாய்விட்டுக் கதறி அழுதார். அவர் அப்படி அழுது கண்டது அதுவே முதல்முறை. எனக்கு துக்கம் ஒருபுறம், புதுமையாக இருந்த அந்த நிகழ்வில் அவருக்கு எப்படி ஆறுதல் சொல்லுவது என்ற சங்கடமான நிலை 4 ஏற்பட்டது.
2007 ... æms ، 338 سهB3 پر
9.Sa
உண்மைக் கலைஞன்
வன்முறை என்ற பதத்துக்கு வலிமையையே முறையாகக் கொள்ளல் என்று பொருள் காணலாம். பொதுவாக இது சரீர வலிமையைச் சுட்டுகிறது. சரீரம் சார்ந்த ஆயுதபலத்தையும்கூட. ஆனால், அபிப்பிராயங்களை ஆதாரமில்லாமல், சூழ்ச்சிகளின்மூலம் உருவாக்கும் முறைகூட வன்முறைதான். இந்தச் சூழ்ச்சிகள், கலாச்சாரமாகவும், மதம்சார்ந்த விஷயங்களாகவும் காட்டப்பட்டு விட்டால் இவை கழ்ச்சிகளே என்பது பெருவாரி மக்களுக்குத் தெரியாமல் போய்விரும், மக்களை மந்தைகளாக்கவென்றே செய்யப்பட்ட சூழ்ச்சிகள் கூட இந்த கலாச்சார மதானுஷடான முறை மூலம் இதே மக்களுடைய பார்வையில் சூழ்ச்சிகள் என்று புலனாகிவிடாமல் பண்ணப்பட்டிருக்கிறது. காலம் காலமாக எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் புதுப்புது விதங்களில் இது செய்யப்பட்டுள்ளது. பழைய கலாச்சார அமைப்புக்களையும், மதங்களையும் ஒழித்துக்கட்டும் புதிய கலாச்சாரங்களும், புதுவித அரசியல் கோட்பாடுகளும் கூட இதையே செய்கின்றன.
இவ்விடத்தில் சூழ்ச்சிகளைப் புரிந்து கொண்டுவிடுகிறவர்கள்தாம் உண்மையான கலைஞர்கள். இவர்கள் கலைப்படைப்புக்களை உருவாக்காவிட்டாலும் கூட கலைஞர்கள் தாம். நுட்பமாகப் பார்த்தால், இவர்கள் மூன்று விதங்களில் செயல்படுவதைக் காணலாம். விமர்சனம், கலாசிருஷ்டி, ஞானார்த்தம். இம்மூன்றும் வேறுவேறாகத் தோன்றினாலும் மனித மனோவிடுதலைக்கு விரோதமான சூழ்ச்சிகளையும், அந்தச் சூழ்ச்சிகளை உருவாக்கும் சமூக சக்திகளையும் அந்த சக்திகளைப் பேணுவோரையும் அம்பலப்படுத்தும் செயலில் இம்மூவரும் ஒரே வகையானோர்தாம். இதனால் இம்மூவருக்கும் ஒரே பெயராக 'கலைளுர்கள் எனலாம். இந்தக் கலைஞர்களை மட்டம் தட்டுவதற்கு சூழ்ச்சியாளர்கள் பல்வேறு உபாயங்களைக் கையாள்வதுண்டு. நான் இதற்கு இலக்காகியவன். அந்த விபரங்கள் அநாவசியமானவை.
gy
பழைமை சார்ந்த சூழ்ச்சியாளர்கள், தாங்கள் அம்பலப்பட்டு விடுவதை விரும்புவதில்லை. எனவே விமர்சனம் எதுவும் இல்லாத விதமாகவே கலைப்படைப்பும், ஞானமார்க்கமும் இருக்கவேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள். இவ்விதம் விமர்சன திருவர்டி இல்லாமல் வெளியிடுகின்றவைதாம் உண்மையான கலாச்சாரம் என்று கூறுகிறார்கள்.
2007 ー39 - அறிவு
Page 23
இவ்விதழில் உள்ள அதிரடிக் கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பின்னணி உண்டு. விசேஷமாக இப்பகுதியிலுள்ள மிக நீண்ட ஒரு கவிதை, மதுரையில் நடந்த அரசியல் மனோபாவ நாடகம் ஒன்று சம்பந்தப்பட்டது. கவிதைகளைப் படிக்கும்போது ஒரு தளமாகவும் அவற்றின் பின்னணியை அறியும்போது இன்னொரு தளமாகவும் பிரச்சனை புலனாகும்.
டி. அஜித் ராம்பிரேமிள் 1993ல் வெளிவந்த மீறல் சிறப்பிதழில் வெளியான முன்னுரை
சில குறிப்புகள்
வறட்டுத்தனமான பார்வைகளின் மூலமும், சம்பிரதாய மனோபாவங்களின் மூலமும் நெருங்கமுடியாத தளத்தில் செயல்பட்டுக்கொண்டிருப்பவர் பிரேமிள். தற்போது இவரைப் போல தீவிரமாக இயங்கக்கூடிய தமிழ் இலக்கியக்கர்த்தாக்கள் எவரும் இல்லை என்று குறிப்பிடலாம். எனினும் இவரின் படைப்புகள் பிரசுரவாய்ப்பை பெரிதும் இழந்தே இருக்கின்றன. இவரின் தீவிரமான விஷயங்களை வெளியிட தயங்கவும் செய்கிறார்கள். காரணம், இவருக்கு எதிராக பொய்ப் பிரச்சாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறவர்களாலும், இவர்களது எடுபிடிகளாலும் தாங்கள் தாக்கப்படக்கூடுமே என்பதே. இப்படி சிலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், பிரேமிளூக்கென ஒரு சிறப்பிதழை கொண்டுவர முடிவுசெய்தோம் ஆரம்பத்தில் சிறு முயற்சியாகத் தொடங்கப்பட்ட இது, பிறகு எங்களால் பிரமிக்கத்தக் அளவில் விசேஷ பரிமாணம் பெற்றது. இதற்கு பிரேமிளின் பேட்டியே முக்கிய காரணம் இவ்வகையான ஆழமான ஒரு பேட்டியை இதுவரை வேறெந்த இலக்கியக்கர்த்தாவும் தரவில்லை என்று சொல்லலாம்.
மேலும், பிரேமிளின் இதுவரையிலான, படைப்புகள் பற்றிய கட்டுரைக்காகவும், அவரிடம் கேட்கவிரும்பும் கேள்விக்காகவும் சுமார் 70 நபர்களை தொடர்புக்கொண்டிருக்கிறோம். இதில் நல்ல எழுத்தாளர்களிலிருந்து, எழுத்தாளராக காட்டிக்கொள்கிற வரிகள் ஊடாக இளந்தலைமுறை எழுத்தாளர்கள் வரை அடங்கும். இதில், பிரேமிளின் படைப்புகள் பற்றிய திட்டவட்டமான கட்டுரைகளை வெளியிட
2007 41 - அறிவு
Page 24
பெரிதும் முயற்சிசெய்தோம். எனினும், இம்முயற்சி எதிர்பார்த்த அளவு கை கூடவில்லை. ஆரம்பத்தில் கட்டுரை தருவதாக சொன்ன பலரும் பிறகு வெவ்வேறு காரணங்கள் கூறி விலகிவிட்டார்கள்." பிரேமிளை குறித்து எழுதுவது வெகுசுலபம்" என்று எழுதியவர்களும் இதில் அடக்கம்.
நட்புடன் ஆசிரியர் குழு குருநாத் கே. ரஞ்சன் போதிசத்வன்
குருநாத் கே. ரஞ்சன்
பிரேமிள் பட்டி
காலப்ரதீப் சுப்ரமணியன் : சம்பிரதாயமான ஒரு கேள்வியுடன் ஆரம்பிக்கலாமா? உங்கள் எழுத்தியக்கத்தின் ரிஷிமூலகங்கள் எவை?
பிரேமிள் நதி மூலம் ரிஷிமூலம் கேட்கக்கூடாது என்பார்கள். ஏனென்றால் அவை ரொம்பவும் எளிமையாக இருந்து விடலாம். பிரம்மாண்டமான கங்கையினி நதிமூலமான கங்கோத்ரியில் ஒரு சொட்டுநீர்தான் அவ்வப்போதுஜனிக்கிறது இதை ஞாபகத்தில் வைத்து என்பதிலைப் பார்க்க வேண்டும். என் தாயாரின் மூதாதைகளிடையே ஆசுகவிகள் இருந்திருக்கின்றனர். தாயார் கூட, எழுதப்படிக்கத் தெரிந்திருக்காவிட்டாலும் நுட்பமான ரசனையும் கவியுணர்வும் கொண்டவர். அவர் பேசும்போதும் சரி சண்டையிடும் போதும் சரி, சிலவேளைகளில் அவர் சொல்கிறவை அசாதாரணமாக இருக்கும். இயற்கை, செடிகள், பிராணிகள் மீது அவருக்கிருந்த வாஞ்சைகூட ஒரு கவியுள்ளத்தினைத்தான் காட்டுகிறது. கடுமையான வறுமை, என் ஐந்து வயதிலிருந்து அவ்வப்போது தகப்பனாரால் கைவிடப்பட்ட நிலை, அயலகத்துப் பூசகர்களின் நிலப்பறிப்புகள், நாளாந்த வன்முறைகளுக்கு இலக்காக்கும் சூழல் - இவையாவற்றினூடேயும் என் தாயாரின் இந்த ஆழ்ந்த குணாதிசயங்கள் எண்ணைச் சூழ்ந்து நீடித்திருக்கின்றன. தகப்பனார் கோணத்திலிருந்து இத்தகைய ஆழங்கள் எதுவும் கிடைத்ததில்லை. அவரால் மிகவும் வருத்தப்பட்ட என் தாயின் நிராதரவுதான் என் உணர்வுலகத்தினை நெய்திருக்கிறது என்றும், நிராதரவாக நிற்கும் சீரிய மதிப்பீடுகளைப் பாதுகாக்க முனையும் எண் எழுத்தியக்கத்துக்கு இது ஒரு மனோதத்துவ ரிஷிமூலம் ஆகலாம் என்றும் தோன்றுகிறது.
2007 ... - 42 -
૭Iાસ,
கா.க. மிகவும் ஆழமும் கருத்துச்செறிவும் கொணிட கவிதைகளை எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் கவிதை எழுதும் படி தூண்டிய ஆரம்ப உந்துதல்கள் 6ഖ? பிரேமிள் உயர்நிலைப்பள்ளியில் எனக்கு வயது சுமார் பதினைந்து இருக்கும்போது தமிழாசிரியர் பெ.பொ.சிவசேகரம் எங்கள் கிளாஸிற்கு விசித்திரமான ஹோம் ஒர்க் ஒன்றுகொடுத்தார். அப்போது பிரபலமாக இருந்த குழந்தைக்கவிஞர் அழ வள்ளியப்பா எழுதிய பூந்தோட்டம் என்ற கவிதையைப் படித்து ரசித்துக் காட்டினார். (பெ.பொ. சிவசேகரம் திருக்கோணமலைக்கவிராயர் என்ற பெயரில் கவிதைகள் எழுதியர் w என்பதை இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். மரபு மாடலில்தான். பூந்தோட்டம் குழந்தைகளுக்கான மரபு மாடல். இதே போல் எங்கள் ராமகிருஷ்ண மிஷன் ஸ்கூலுக்கு எதிரில் இருந்த பெரிய மைதானத்தைப் பற்றி ஒவ்வொருவரும் கவிதைகள் எழுதிவரவேண்டும். என்பது வேறாம் ஒர்க். இதை நான் எளிதாக நிறைவேற்றியதுடன் ஒரு வரியும் எழுதவராமல் தவித்த வேறு சில நண்பர்களுக்கும் தனியாக எழுதித் தந்து தங்கள் கவிதைகளாக ஆசிரியரிடம் தரும்படி கொருத்திருக்கிறேன். இவர்களுள் இப்போது சி.சிவசேகரம் என்ற பெயரில் நீங்கள் காணக்கூடிய அன்பர் அடங்கவில்லை - அதே கிளாஸில் அவர் இருந்தார் எனினும்) 'விளையாட்டு மைதானம் என்ற இந்த கவிதைதான் முதன்முதலில் நான் எழுதியது. அதுவரை இயற்கையாகவே ஒவியத்திறன் கொண்டவன் நான் என்பதுதான் கணிப்பு. இந்தக் கவிதையுடன் எண் புதிய திறன் ஒன்றை நானே கண்டுபிடித்திருக்கிறேன். கவிதையின் எதுகை மோனைச் சொற்களை முதலே தீர்மானித்துவிட்டு இட்டு நிரப்பும் நண்பர் ஒருவரும் கிளாஸில் இருந்தார். அவருக்கு நான் எழுதும் இயல்பான ഗ്രത്യേD வராததால் என்னை ஒரு விசித்திரப்பிரவியாக எடுத்துக் கொள்வார். வேறாம் ஒர்க்கை படித்த பெ.பொ. சிவசேகரம் தமது கிளாஸில் குட்டி பூதங்கள் நிரம்பியிருப்பதாக கிளாஸியிலேயே சொன்னபோது எண்ணிடம் கவிதை வாங்கி வேறாம் ஒர்க் பண்ணினவர்கள் என்ன நினைத்தார்களே. அவர்களுக்கு தலைவலி தீர்ந்தது எனக்கு பிரசவ வேதனைகள் ஆரம்பித்தன எனலாம். நாலைந்து வருஷங்களுக்குள் எழுத்துவில், 1960ல் என் கட்டுரை வந்தபோது எனதுசீனியர் மாணவர்கள் அதை நான் எழுதியிருக்க முடியாது என்று பெபொ.சிவசேகரத்துடன் கூறியதும், அவர் அதை மறுத்து "எந்தப் புற்றில் எந்த பாம்பு இருக்கோ?” என்றதும் என் காதுக்கு வந்திருக்கின்றன. இந்த ஆரம்பம் எனது கவிதையின் வடிவம் சம்பந்தப்பட்ட மட்டுக்குத்தான். அனுபவத்தின் ஆழமும் வாழ்வைப் பற்றிய விசாரணைகளுமாக எண் கவிதைகள் பொருள் ரீதியான மலர்ச்சி பெற மேலும் ஐந்து ஆண்டுகள் ஆயின.
2007 سے 43 سے
இ!றிவு
Page 25
அதுவரை என் ஆரம்பகால எழுத்துக்களில் மரபின் பிரதிபலிப்புகள்தான் அதிகம். இருந்தும் அதில்கூட ஒருவித புதுமைத்தொனி இருந்திருக்கிறது. துரதிஷ்டவசமாக அந்தக் காலகட்டத்துக் கவிதைகளை நான் பாதுகாக்கவில்லை. காக உங்களுடைய படைப்பு மனோநிலை பற்றி கூறமுடியுமா? படைக்கும்போது உங்கள் மனநிலை என்ன? பிரேமிள் படைக்கும் போது ஒரு ஒழுங்கமைப்பை நிறைவேற்றும் நோக்கம்தான் என்னால் உணரக்கூடிய என் மனோநிலை, கூடவே சிருஷ்டிய கரமான, ஆழ்ந்த கருத்துக்கள் தோன்றும் நிலை, இதுதான் படைப்பியக்கத்தின் முக்கியமான களம், ஆனால் இப்படி கருத்துக்கள் பளிரெனப் பிறக்கும்போது என் மனோநிலை என் அவதானத்துக்கு உட்படுவதில்லை. மீண்டும், இவ்விதம் தோன்றுகிற கருத்துக்களை ஒரு ஒருமைப்பாட்டுக்குள் ஒழுங்கமைக்கும் இயக்கமாக மனம் செயல்பரும், இதெல்லாம் திருப்திகரமாக நிறைவேறிவிட்டால், முடிவாக ஒருவிதமான சுதந்திர உணர்வு பிறக்கிறது.
காசு. எழுத்து மூலம் உண்மையை அடைதல் என்பது பற்றி உங்கள் பார்வை Gাd@্যা?
பிரேமிள்: உண்மையை அடைவதற்கு ஒரே வழி மெளனம்தான் எல்லா மார்க்கங்களும் அகந்தையின் பரிபூர்ணமான அடக்கத்தை - ஒருக்கத்தைத்தான் இந்த மெளனத்துக்கு முக்கியமான ஆதாரமாக்குகின்றன. மெளனத்தை இந்தியத்தியான முறைகள் வெளிப்படையாக வலியுறுத்தலாம். கிறிஸ்த்தவ தியானமுறை மெளனம் பற்றி ஒன்றும் குறிப்பிடாதிருக்கலாம். ஆனால் அகந்தையின் ஒடுக்கம் பற்றி எல்லா மார்க்கங்களுக்கும் ஒருமித்த பார்வையை வெளிப்படுத்துகின்றன. சரி, எழுதுவது இந்த அகந்தையின் ஒருக்கத்தைச் சாதித்து விருமா? ஒண்ணரைக்விதையை எழுதி அதை அச்சில் வரப் பார்த்துவிட்ட கவிஞர்களுக்கு அகந்தை எகிறிக் குதிப்பதுதான தெரிகிறது. பெரிய கவிஞர்களையோ எழுத்தாளர்களையோ எடுத்துக்கொண்டால், அவர்களிடமும் பலரிடத்தில் அகந்தைநாகக்காகக் கொலுவீற்றிருக்கக் காணலாம். எனவே கவிதை மூலம், எழுத்து மூலம் உண்மையை அடைதல் என்பது எனக்கு அபத்தமான கூற்றாகவே தோன்றுகிறது. ஆனால் எழுதும் போது, நேர்மையும், மன ஓர்மையும் உள்ள ஒருவன் தனது எழுத்தின் மூலம் வெளிப்படுகிறவற்றை - அதாவது தன்னை - அவதானிக்க ஒரு சாத்தியம் உண்டு. மனதின் களேபரமான ஓட்டத்தைச் சீராக்கும் வேலைக்குக் கூட எழுதுதல் ஒரு சாதனமாகும். (ஒவ்வொருவரும் காலையில் சில
- 44 -
2007 அறிவு
பக்கங்கள் எதையாவது எழுதி வருவது அன்றாட மனோவாழ்வைத் தெளிவுபடுத்த உதவும்) இருந்தும் உண்மைத் தேட்டத்தைப் பொறுத்தவரை இது எல்லாம் வெறும் அ, ஆ, தான் மிக மேலோட்டமான பயிற்சிதான். காக: படிப்பதன் மூலம் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியுமா? உண்மையை அறிய படிப்பதும் பிறர் உரையைக் கேட்பதும் உதவுமா? பிரேமிள்:கிருஷ்ணமூர்த்தியிடம் "உங்கள் உடல் மறைந்தபிறகு உங்கள் பிரக்ஞை என்னவாகும்" என்று கேட்டபோது,"அது அப்படியே போய்விடும். ஆனால் நீங்கள் நான் சொன்னவற்றுடன் தொடர்பு கொண்டிருந்தால், ஒருவேளை நீங்கள் அந்தப் பிரக்ஞையுடன் தொடர்பு கொண்டிருக்கலாம்” என்று சொன்னதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிகப் பிரச்சனைக்குரிய நுட்பமான விஷயம் வெறுமனே இண்டலக்சுவல் லெவலில் மட்டும் தீர்மானித்து முடிவு கட்ட முடியாதது Teachings என்று அவர் சொன்னபோது, தாம் சொன்ன வார்த்தைகளையும் பதிவு செய்யப்பட்ட பேச்சுக்களையும் மட்டும் சொன்னதாக நான் கருதவில்லை. Teachings என்றது, eb Level of understanding Graig 50a)TiéCSpair. BriB6f gp55) 55gdg. வரும்போது, அந்தப்பிரம்மாண்டமான பிரக்ஞையுடன் தொடர்புகொள்ளலாம் என்றே சொல்கிறார். அந்தப் பிரக்ஞை, ஜே.கே. எண்ற மனிதரினுள் இருந்த பர்ஸனலான பிரக்ஞையா என்பது அருத்த கேள்வி நிச்சயமாக, அப்படியென்றால் அதற்கு அர்த்தமே கிடையாது. எனவே, அது எல்லோருக்குள்ளும் இருக்கிற ஒரு அகண்டமான பிரக்ஞையாக இருக்க வேண்டும். அப்படியானால், ஜே.கே.யின் Teachings மூலம் மட்டும் தான் அதனுடன் தொடர்புகொள்ள முடியுமா என்பது அடுத்த கேள்வியாகிறது. அதன் மூலம் மட்டுமே முடியும் என்பது அர்த்தமற்ற ஒன்றாகும். ஆகவே Teachings என்பதை விட understanding என்பதைத்தான் அவர் அர்த்தப்படுத்தியிருக்க வேண்டும். புரிதல் என்பது நமக்குள் ஏற்படவேண்டிய ஒரு பிரக்ஞைநிலை. இதுகூட இருக்கிற இன்னும் ஆழ்ந்த ஒரு பிரக்ஞைநிலைக்கு நம்மை இழுத்துச் செல்லும். இம்மாதிரி விசாரணைகளில் ஈடுபட்டால்தான், இந்த மாதிரிப் பிரச்சனைகள் துலக்கம் பெறும். உங்கள் கேள்விக்கு இது சரியான பதிலா தெரியவில்லை. உங்கள் வார்த்தைகளை எடுத்துப்பதில் சொல்வதென்றால் படிப்பு என்பது புத்தகப்படிப்பு மட்டுமா என்பதை ஆராய வேண்டும். அநுபவமும் படிப்புதான். வாழ்க்கை என்பது எதிர்பாராத தன்மைகளைக் கொண்டது. எனவே எதிர்பார்ப்புகள் அற்ற உள்ளமே வாழ்வுடன் தொடர்பு கொள்ள லாயக்கானது எனலாமா?
2007 سہ 45 یہ
அறிவு
Page 26
பிரமிள் கவிதைகள்
ஒரு பார்வை
- அழகியசிங்கர்
பிரமிள் 1960ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருபவர், கவிதை மட்டுமல்லாமல், விமர்சனக் கட்டுரைகள், சிறுகதைகளி என்று பலவற்றிலும் சாதனைகளை வெளிப்படுத்தி இருப்பவர். இவர் எழுத்து வாசிப்பவர்களை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது. ஒருவிதத் தீவிரமான எல்லைக்குள் வாசகன் தன்னைத்தயார் செய்து கொண்டால் தான் இவர் எழுத்தை முழுமையாக உணரமுடியும். இவர் எழுத்து ஒரே தன்மையைக் கொண்டதல்ல, காலத்துக்கேற்றவாறு மாறும் தன்மையைக் கொண்டது. இவர் கவிதைகளை கூர்ந்து வாசிப்பவருக்கு 'கணினாடியுள்ளிருந்து எனிற தொகுப்பிலுள்ள கவிதைகளைப் போல் அவர் தற்போது எழுதவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். பொதுவாக ஒரு படைப்பாளியின் கவிதை தொகுதியையோ, சிறுகதை தொகுதியையோ படிக்கும்போது, ஒருசில படைப்புக்களைப் படித்து முடித்த உடனே நமக்கு ஆயாசம் ஏற்பட்டு விடும். காரணம் ஒவ்வொரு படைப்பும் வேறுவேறு சாயல்களில் ஒரே விதமாக இருப்பதாகப் பருவதால், ஆனால், பிரமிள் படைப்புக்களை கூர்ந்து கவனிப்பவர்கள், அவர் படைப்புகள் மூலம் பல மாற்றங்களைக் கொண்டு வருவது ஆச்சரியத்தையே ஏற்படுத்துகிறது. அதே போல், தமிழில் அவர் உரைநடை முக்கியத்தவம் வாய்ந்தது. படிக்கும் வாசகர்களை தன் பங்கிற்கு இழுத்துச்செல்லும் வல்லமை கொண்டது. திரும்பவும் கவிதைக்கு வரும்போது, உதாரணத்திற்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஊனம் என்ற பெயரில் அவர் எழுதிய கவிதைகள் ஒன்று. இக்கவிதை 1973ம் ஆண்டு கண்ணாடியுள்ளிருந்து என்ற தொகுப்பில் வெளியானது.
மனிதரினி பேச்சு அவனுக்குப் /பிடிபடாது / பேசாத வேளைகளில்/ ஊமையாகின்றன /பாஷைகள் /நவர்தரங்களைவிட நிறையவே பேசுவது/ அவற்றின் இடையுள்ள இருள்
இந்தக் கவிதை எழுதிய பல ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் கவிதை எழுதுவதில் பல மாற்றங்களை உண்டாக்கி இருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது. தொடர்ந்து கவிதை எழுதுவதற்கும் இந்த இயக்கத்தில் நீடிப்பதற்கும் மாற்றம் அவசியமாகப் படுகிறது. இதனால்தான் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியாத ஒரு காலத்தில் தீவிரமாக இயங்கிய பல கவிஞர்கள் இன்று முகவரி தெரியாமல் போய் விடுகிறார்கள்.
2007 - 46 -
அறிவு
தீவிரமாக படைப்பிலக்கியத்தில் இருபடும் பிரமிள் போன்ற படைப்பாளி அதிலேயே தொடர்ந்து ஈடுபடுவது உண்மையில் பிரமிக்கத்தக்கது.
பாரதியின் வசன கவிதைக்குப்பின், புதுக்கவிதை என்ற புதிய உருவை உருவாக்கியவர்களில் ந. பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், கு. ப.ராஜகோபாலன், க. ப. ராஜகோபாலன், க. நா. சு போன்ற சிலர். இவர்களைத் தொடர்ந்து எழுதிய பலரில் தனக்கென்று ஒருவர். மிகச் சிறிய வயதிலேயே இந்த சாதனைச் செய்தவர்களில் ஒருவரான இவர் இன்றும் தொடர்ந்து அந்தப் பணியைச் செய்து கொண்டிருப்பது அரிதாகப்படுகிறது. முதன்முதலில் புதியதாக யார் எழுத வந்தாலும், எழுதத் தூணிடுவதற்குக் காரணமாக மூத்தத்தலைமுறையைச் சார்ந்த கவிஞர்கள் இருப்பார்கள். உதாரணமாக ந. பிச்சமூர்த்தியின் கவிதை இயக்கத்தைத் தொடர்ந்து சிமணி, வைத்தீஸ்வரன், ஞானக்கூத்தன் உருவானது போல, புதுமைப்பித்தனைத் தொடர்ந்து பசுவய்யா, பிரமிள், தி.சோ.வேணுகோபாலன் உருவானார்கள். இப்படிச் சொல்வதுகூட நேரிடையாக, அவர்களுடைய பாதிப்பு அவர்களைத் தொடர்ந்து மற்றவர்களுக்கு ஏற்பட்டதாகச் சொல்லவில்லை. அப்படியொரு பாதிப்பு சிறிதளவாவது இருக்கலாம். பிறகு, ஒவ்வொருவரும் தனித்தனியாக அவரவர் திறமைகளுக்கு ஏற்பவேறு வேறு நிலைக்குப் போய் விட்டிருப்பார்கள், தற்போது பிரமிளின் கவிதைத்தாக்கம் அவரைப்போல எழுத முயல்கிற பல புதிய கவிஞர்களுக்கு இருப்பதைக் காணலாம். ஆனால், பிரமிளோ தொடர்ந்து தன்னை ஒவ்வொரு விதமாய் மாற்றிக்கொண்டு படைப்பிலக்கியத்தில் அவரைப் பின்பற்றுவது எளிதான காரியமாக இல்லாமல் செய்து கொண்டு விடுகிறார்.
மேலே உதாரணமாகக் குறிப்பிட்ட கவிதையிலிருந்து பெரும் மாற்றத்தை கொண்டுவந்த இன்னொரு கவிதையை இங்கு பார்ப்போம்.
லயம், ஜூலை - செப் 85ல் வெளிவந்த (3 -வது இதழ்) 'வியாதி அறிக்கை என்ற கவிதை
'எனக்கொன்றும் இல்லை, வெறும்
லிவர் ட்ரபிள் தான்
டாஸ்டாயவ்ஸ்கிக்கு? என்று ஆரம்பிக்கிறது இந்த கவிதை. ‘வியாதி அறிக்கையை ஒவ்வொன்றாகத் தொடர்ந்து அறிவிக்கிறது.
பாரதத்து கவிகளுக்கு
GJTGOtpujiq. GJATaogoua)"
வந்த பரம்பரை நோய்
2007 سے 47 ۔
அறிவு
Page 27
வந்த பரம்பரை நோய்
lé!’ என்று சொல்வதுபோல் கவிதை வேறு தளத்திற்கு நம்மை இழுத்துச் செல்கிறது. வெறும் பசி என்று சொல்லி நிறுத்தி இருந்தால், கவிதைப் படிப்பதற்கு நமக்கு எந்தச் சுவாரிசியத்தையும் உண்டாக்கி இருக்காது. இதனால் இவர் கவிதைகளை படிக்கும்போது, கவிதையையும் மீறிய ஏதோ ஒரு வசீகரத்தன்மையை கான முடிகிறது. அதனால் ஒவ்வொரு முறையும் கவிதையை வாசிக்கும்போது, நமக்கு கவிதை ஏற்படுத்தும் பரவசம் ஆச்சரியத்தைத் தருகிறது.
விருட்சம் இதழ் ஆரம்பிக்குமுன் பிரமிளிடமிருந்து ஒரு கவிதையை வாங்கி பிரசுரிக்க வேண்டுமென்ற நோக்குடன் கவிதைக்கேட்டேன். கேட்டவுடன், உடனே தாளை எடுத்து வேகமாக ஒரு கவிதையை எழுதிக் கொடுத்தார். கிரணம்' என்ற பெயரில் எழுதப்பட்ட அந்தக் கவிதையைப் படித்தபோது, வேண்டுமென்றே எண்ணைக் கிண்டல் செய்வதற்காக எழுதிக் கொருத்ததாகப்பட்டது. அதனால், முதல் இதழிலேயே வரவேண்டிய் அந்தக் கவிதையை நான் பிரசுரிக்கவில்லை. ஆனால், திரும்பவும் காலப்ரதீப் சுப்பரமணியன் மூலம் அதே கவிதையை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு படிக்க நேர்ந்தது. இன்றும் கூட அந்தக் கவிதையை முழுவதும் உள்வாங்கிக்கொள்ள முடியாவிட்டாலும் ஒரு அனுமானத்தின் மூலம் அந்தக் கவிதையை என்னால் ரசிக்க முடிந்தது. விருட்சம் 9வது இதழில் பிரசுரம் செய்தேன்.
‘ിഖ്ദ്ര ഗ്രീ8ഖരണ് ஆகாயத்தில் மிதக்கின்றன. நாற்காலி, மேஜைகள் ஊஞ்சல் ஒன்று கடல் மீது மிதக்கிறது. ‘விடிவுக்கு முன்வேளை என்கிறபோது ஏதோ ஒரு கனவுக் காட்சியை கவிதை விவரித்துக்கொண்டு போவதற்காகத்தான் ஊகிக்க முடிகிறது. முதலில் ஆகாயத்தில் எப்படி நாற்காலி, மேஜைகள் மிதக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பினால், இக்கவிதை அபத்தமாகப்படும். ஆனால் கவிதையில் 'விடிவுக்கு முன்வேளை என்று குறிப்பிட்டு இருப்பதால், ஒரு கனவு காட்சியை விவரிப்பதாக யூகிக்க முடிகிறது. இப்படியூகத்திற்கு அனுமதி அளிக்கும் கவிதையை, ஒவ்வொரு முறையும் படிக்கும்போது, நமக்கு புதுபுது அர்த்தத்தை அளிப்பதாகப்படுகிறது. இதனால் தொடர்ந்து இக்கவிதையைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் நமக்கு ஏற்படுகிறது. அதேபோல் விருட்சம் 10வது இதழில் (அக்-டிசம்பர் 90) எழுதிய பிரமிளின் கவிதைகளில் "தவளைக் கவிதை"யைப் பற்றி
- 48 -
2007 அறிவு
தென்படும் இறுக்கமான தன்மை, படிப்பவர்களைத் தீவிரமான எல்லைக்கு அழைத்துச் செல்லும். இவரது தெற்கு வாசல் என்ற கவிதையைப் படிக்கும்போது படிப்பவர்களை ஒடஒட விரட்டும் தன்மைக்கு அது கொண்டு செல்லும், இந்தக் கவிதையின் வினோதத்தன்மை என்னவென்றால், படிப்பவர் குறித்தே இக்கவிதை எழுதப்பட்டிருப்பது போல் தோற்றம் தருவது. இவருடைய இந்த இறுக்கமான தன்மை எல்லாக் கவிதைகளுக்கும் பொருந்தாது. தவளைக்கவிதையைப் படிப்பவர்கள் யாரும் சிரிக்காமல் இருக்க மாட்டார்கள். கவிதைகளின் ഴ്സിറ്റ്ലറ്റ്ലേധ உணராத என் நண்பர்கள் சிலரிடம், தவளைக் கவிதையைப் படிக்கக் கொடுத்தேன். படித்தவர்கள் எதையும் புரிந்து கொள்ளாவிட்டாலும், ஒவ்வொரு முறை விருட்சம் இதழைப் பார்க்கும் போது, தத்தரே பித்தரே கவிதை வந்த பத்திரிகைதானே என்று கிண்ணடலடித்துச் சொல்வது வழக்கம்,
'காலண்டர் என்ற கவிதையில்
காலத்தைப்பற்றி
இரண்டு
ஆரவாரமாய்
கருத்துப் பரிமாறிக் கொண்டன
'காலண்டர் எனக்கெதற்கு?
என்றார் பிச்சு,
'காலண்டர் தானெதற்கு?
என்றார் கிச்சு.
கவிதை இத்துடன் முடிந்துவிட்டது. ஆனால் பிச்சு', 'கிச்சு என்று படிக்கும் போது, இவர் யாரைச் சொல்ல வந்தார் என்பது படிப்பவருக்குப் புலப்படாது. ‘பிச்சு என்பது ந.பிச்சமூர்த்தி என்றும், கிச்சு என்பது ஜே. கிருஷ்ணமூர்த்தி என்றும் அறியும் போது, இக்கவிதைப் பொருள் பொதிந்த ஒன்றாக மாறி விடுகிறது. இன்னொரு கவிதை, முள் என்பது,
தார்போட்ட ரஸ்தாவில் சில்லென்று குத்த இன்று முள்ளில்லை குறுக்கு வழி அவன் இருக்கு வழி இவள் நின்றால் பஸ்
2007 49 س -
அறிவு
Page 28
பருத்தால் யெஸ்
பாதத்தில் முள்
பதியாதிருக்க
பதனிட்ட தோல்
ஜோரு
இந்த கவிதையில் படுத்தால் யெஸ்' என்ற வார்த்தைச் சேர்க்கை வெகு இயல்பாகவே இணைந்திருப்பதாகப் படுகிறது. பதிவிரதையைப் பற்றி இன்றைய நிலையைத் துல்லியமாக நையாண்டிச் செய்கிறது.
விருட்சம் ஜனவரி - மார்ச்சு 92 இதழில் வெளிவந்த "அற்புதம்பா என்றக் கவிதையைக் குறித்தும் சொல்வது அவசியம். இக்கவிதை விருட்சத்தில் வெளிவந்தபோது, இது கவிதையா என்ற குறிப்பிட்ட சிலரும் உண்டு. அப்படிக் குறிப்பிட்டவர்களுக்கு, இக்கவிதையைக் குறித்து எந்த விளக்கமும் அளிக்க முடியாது. ஏன் கவிதையை மேலோட்டமாக பார்க்கத் தெரிந்தவர்கள் என்று கூட ஒதுக்கி விடலாம் அவர்களை, "அற்புதம்பா என்ற கவிதை வெளிப்படையாகத் தன்னை காட்டுகிறது. அர்த்தத்தையும், சப்தத்தையும் ஒன்றாக்கிரஸவாதம் செய்கிறது. படித்தப் பிறகும் படித்தவர்களையும் அறியாமல் முறுைமுனுைக்க வைக்கிறது.
கலையே கூடக் காசுப்பா
காசேதான் கலையப்பா
எங்கே கொஞ்சம் சொல்லுப்பா
இந்தப் புத்தகம் !
மிகச் சுலபமான எளிமையான வார்த்தைகள் மூலம் சப்தத்துடன் கூடிய தீவிரத்தன்மையை இக்கவிதை புலப்படுத்துவதாகப்படுகிறது.
மேல்நோக்கிய பயணம்' என்ற நூலை 1981 - ஆம் ஆண்டு வாக்கில் நேரிடையாக பிரமிளிடமிருந்து வாங்கிப் படித்த சந்தர்ப்பத்தில் தான் எனக்கு டேவிட்சந்திரசேகரனுடன் பழக்கம், என் அலுவலகத்திற்கு ஏதோ காரணமாக வருபவர் எண்ணையும் சந்திப்பார். இத்தொகுப்பு நூலை படித்து அப்போது அவரிடம் சொன்னது இப்போதும் ஏநாபகத்திற்கு வருகிறது.
மேல்நோக்கிய பயணம்' என்ற நீண்ட கவிதையைவிட, 'வண்னத்துப் பூச்சியும் கடலும் என்ற சிறிய கவிதையை இந்தத் தொகுப்பில் நான் புரிந்துகொண்ட
2007 سے 50 ۔ے அறிவு
அக்கவிதை, மேல் நோக்கிய பயணம் கவிதையைவிட புரிவதற்கு சிரமமானது என்ற கருத்து தெரிவித்தார். இத்தொகுப்பை எடுத்து இப்போது படித்தபோது அன்று நான் புரிந்து கொண்டேன் என்பது கூட சரியா என்பது கேள்விகுறியாகி விட்டது. வணினத்துப்பூச்சியும் கடலும் ' என்ற கவிதை அமைப்புரீதியாக புரிந்துகொள்ள எளிதாக ஒரு பார்வைக்குத் தோற்றம் தந்தாலும் கவிஞர் எதைச் சொல்ல வருகிறார் என்பதில் தடுமாற்றம் இல்லாமலில்லை. அக்கவிதையைப் பார்ப்போம்.
வண்ணத்துப்பூச்சியும் கடலும்
சமுத்திரக் கரையின்
பூந்தோட்டத்து மலர்களிலே
தேன் குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி
(86aODOTT FfuU
சிறகின் திசை மீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
எண்று கவிதை வருகிறது. வண்ணத்துப்பூச்சி திசைவறி போய் விடுகிறது. கரையோர மலர்களைத் தவிர்த்து, கடல் நோக்கி அடித்துச்செல்லப்படுகிறது. காற்றால்
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்து
என்கிறபோது பாராமல் ஓயாது மலர்கின்ற மலர் எது? இக்கவிதை வேறு வேறு தளங்களில் நம்மை இட்டுச் செல்கிறது. வண்ணத்துப்பூச்சி/மலர் என்றெல்லாம் குறியீடுகளாக இக்கவிதை குறிக்கிறது. எல்லையற்ற பூஒன்றில் ஓய்ந்து அமர்கையில் வணினத்துப்பூச்சி மரணத்தைச் சந்திக்கிறது. கவிதை இங்கு வேறு ஒரு பரிணாமத்திற்குள் நழுவி விடுகிறது. இப்போது வண்ணத்துப்பூச்சிக்கு
முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது
பிரமிள் கவிதைகள் இறுகலான தன்மை கொண்டவை, அந்த இறகலான
ጛበበ7 = 51 =
ofs
Page 29
பிரமிள் கவிதைகள் இறுகலான த தன்மை சிறிதும் இளகாமல், கவிதையை இத்தொகுப்பில் உள்ள கவிதைகளில், கவிதை ஆட்படும்படி, பிரமிள் கவிதையைப்போல் இ இன்னும் சில கவிஞர்களின் கவிதைகளி குறைந்துபோய், சப்தம் மட்டுமே மின்சி நிற்
மேல் நோக்கிய பயணம் ' என்ற ஓரிடத்தில் இப்படி குறிப்பிகிறார்.
'கவிதை எழுத வாழ்வினூடே ஒரும் தர்க்கத்தின் ♔തുഗ്ഗങ്ങu് ഉ-ത്സുൾ திறன் வேண்டும். அதன் விளைவு தார்மிக உணர்வாகி வீர்யத்தின் உலையில் உருகிப் பிழம்பின் நிலையை எய்திப்பின் எழுத்தில் வரவேண்டும் " (பக்க 'சொல்', 'கலப்பு, வீழ்ந்த குரல்" 'கல்லூரிக் கரையோரம்', 'கண், முதல் முகத் 'பச்சைக்கதை, மண்டபம்', 'பியானோ, மு உறவுமுறையில் உள்ள சிக்கலை வெளிப்ப
பிரமிள் கவிதைகள் அறிவுபூ வெளிப்படுத்துகின்றன. உணர்ச்சி வேகத்தில தமிழின் துரதிருவஷ்டமான நிலை, தொகுக்கப்படாமல் புத்தக உருவாய் வராம எல்லாக் கவிதைகளும் மொத்தமாய் தொகு
நன்
2007 - 52
ண்மை கொண்டவை. அந்த இறகலான சுழற்றி, சுழற்றி இழுத்துச் செல்கிறார். யைப் படிப்பவர்கள் ஒருவித தாளகதியில் றுகலான தண்மையை வெளிப்படுத்தும் ல், கவிதை வரிகளின் தீவிரத்தன்மை
5.D.
நீண்ட கவிதையில் கவிதையைப் பற்றி
lf -4)
'கிருவுறஸ்தன் வயோதிபனாகிறான் நின் தங்கைக்கு, பசுந்தரை, மோஹினி தலிய கவிதைகள், 'ஆண் - பெண் ருத்துகின்றன.
ர்வமான நிலையை துல்லியமாய் ) அவர் கவிதைகள் எழுதுவதில்லை.
பலதரமான கவிஞர்களின் கவிதைகள் ஸ் போவது. இதுவரை பிரமிள் எழுதிய
க்கப்பட வேண்டும்.
6- மீறல் பிரேமிள் சிறப்பிதழ்
w அறிவு
Page 30
R
*
ਤੇ
는