கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவு 2006.09

Page 1
If சிவானந்חtialש
 


Page 2
அமரர். திரு. சு. வில்வரத்தினம் ܝܼ . s
 


Page 3
உங்களுடன்
2OO6, 9ീpമ്മതLdി வெளிவந்தன. 2004ம் ஆண்டு ழச சுனாமியை விட ஒரு விதத்தில் கொரு பிற்பகுதியில் இலங்கையில் பெரும் ஒரு வகையில் அறிவு வெளிவரத்த
இனி, 2007ம் ஆணிழ வருங்காலங்களில் மாதமொருமுை
அருமை நண்பர் சு.வில்வ6 நல்லுலகைப் பெரிதும் பாதித்துள் ஆக்கங்களைத் தந்துதவியர். இன்னு செய்ய இருந்தவர். அவர் இழப்பா எமது அஞ்சலிகளைச் செலுத்துகி
19ம் நூற்றாணிழல் முரீராம விவேகானந்தா மூலம் ஆற்றிய நூற்றாணிழல் வாழ்ந்த பெரியார்களில் சிறந்து விளங்கியது. அவரது பிறந் இவ்வருடக் கடைசி இதழினை அ 9ഖയ്വ് ിഞ്ഞുഖ gഖൾ 9ഖിഞ്ഞ്
57. பிரதான விதி, திருக்கோணமலை.

ஒரு நிமிடம்.
இதழ் இது. இந்தவருடம் ஆறு இதழ்களே *ம்பரில்பெரும் உயிரழிவுகளை ஏற்படுத்திய 6Diokusar diggiggfuss, 2006th carict மனிதவள இழப்புக்களை ஏற்படுத்தியது. ாமதமானதற்கு இதுவும் ஒரு காரணமே.
Iல் வசதிகள் மேம்பட்டால் அறிவை ற வெளியிட முயல்வோம்.
ரட்ணம் அவர்களின் மறைவு தமிழ் கூறும் ளது. குறிப்பாக எமக்கு சமீபகாலமாக றும் பல ஆக்கங்களையும், உதவிகளையும் லி “அறிவு” துயருகிறது. அன்னாருக்கு 8pmມື້. مہ
) கிருஷ்ணபரஹம்சர் உலகிற்கு சுவாமி தொண்டினை மறக்கமுடியாது. 20ம் ஒருவரான சுவாமி சிவானந்தரின் சேவை த தினம் செப்டம்பர் 8ந்திகதி. அறிவின் fவரது கருத்துக்களைக் கூறுவதற்கும் சிறப்பிதழாக்கியுள்ளோம்.
எஸ்பி. ராமச்சந்திரா ஆசிரியர் குழுவிற்காக,

Page 4
છ[[ઈcય “ARVU”- KNOWLEDGE சந்திரசேகரம்பிள்ளை ஞானாம்பிகை ஸ்தாபித - வெளியீடு 41, கல்லூரி வீதி, திருக்கோணமலை, Sandrasegarampillai Gnanambigai Establishment 41, College Street, Trincomalee
லபாருளடக்கம்
USSD
1. மரணத்திற்குப்பின் 3 2. தமிழ்த் திரைப்படங்கள் 7 3. தமிழ் இலக்கியம் 6 4. உலகின் உயரமான கட்டிடங்கள் 2O 5. கவிஞர் வில்வரத்தினம் சில நினைவுக்குறிப்புகள் 2f 6. உயிர்த்தெழும் காலத்திற்காய் உதித்தவனுக்காய் 24 7. சூனா - வீனா 25 8. வா மீண்டும் 26 9. போய்வா மச்சான். என் இனிய நண்பனே. 27 10. புதிது மீட்டலுக்கான மீசுரம் 3O 1. சுவாமி சிவானந்தா 32
12. சுவாமி சிவானந்தா - ஜெபயோகம் 44
எமத ஸ்தாபித காரணகர்த்தாக்கள் திரு.திருமதி. சந்திரசேகரம்பிள்ளை ஞானாம்பிகை அவர்கட்கு அறிவு - 2006 - 6" இதழை சமர்ப்பிக்கிறோம்
 
 

oyయాణిజ్రీప్రోల్ లోat .
வாழ்க்கையின் முடிவு மரணம் என்பது அனைவரும் அறிந்த விஷயம், மரணத்திற்குப் பின் என்ன்? என்பதை யாரும் அறிவதில்லை.
சுவாமி கொங்காதரானநீதT
விஷய ஞானம் இல்லாத இடத்தில் பயம், பீதி முதலிய மனக் கஷ்டங்கள் தோன்றுவது சகஜம்.
மரணம் என்று நினைக்கும் பொழுது மரணத்திற்குப் பின் என்ன நிகழ்கின்றதென்ற சரியான அறிவில் லாததால் மரண பயம் உண்டாகின்றது.
மரணம் என்பது ஜீவனைப் பொறுத்தவரையில் புதிய சக்தியும், உற்சாகமும், புது ஆற்றல், திறமையும் உயிரில் உருவாகும் ஒரு புனிதமான நிகழ்ச்சி.
பகல் முழுவதும் உழைத்துக் களைப்படைந்தவர்களுக்கு இரவு உறக்கம் களை தீர்த்துப் புத்துணர்வும், தென்பும் அளிப்பது போன்று, வாழ்நாள் முழுவதும் பல துறைகளிலும் செயலாற்றி வாழ்வில் களைப்படைந்த மனிதர்களுடைய ஜீவன் சுயமாகவே ஏற்றெடுத்த ஒரு தீர்க்க கால உறக்கம் அல்லது ஒய்வு தான் மரணம்.
பழுதடைந்த உடையை மாற்றிப் புது உடை அணிவது போன்று ஜீவன் தனது இலட்சியத்தை அடையும் வரையும் பழுதடைந்த சரீரத்தை மாற்றிப் புதுச் சரீரத்தில் நுழைய வேண்டியிருக்கின்றது.
மரணத்திற்குப் பின் உயிர் என்ன நிலையடைகின்றதென்பதைப் பற்றி இந்து சமய சாஸ்திரங்கள் விளக்கந் தருகின்றன.
கண்ணுவன், கபிலன் போன்ற மகா ரிஷிகளின் பரிணாம சிந்தாந்த சாஸ்திரங்களில் இது விஞ்ஞான பூர்வமாகத் தெளிவுபடுத்தப்
பட்டிருக்கின்றது.
நசிகேதன் நம்னைக் குருவாக ஏற்பதற்குரிய காரணம், மரணத்திற்குப் பின் ஜீவனுடைய நிலையை அறிவதற்குரிய பெரும் அறிவு ۔ 35 ۔

Page 5
அவா தான் என்பதை கடோபநிஷதம் கூறுகின்றது.
ஒரு நோயாளி நோயைக் குணப்படுத்துவதற்காக ஒரு வைத்தியரைச் சந்திக்கச் செல்கின்றான். பின்னர் சந்திக்க முடியாமல் திரும்பி வருகின்றான். மீண்டும், மீண்டும் செல்லும் பொழுதும் அதே நிலைதான்.
மருத்துவரைச் சந்திக்கும் வரையும் வருத்தமுடையவர் வருவதும் போவதுமாகிய நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மருத்துவரைச் சநீதிப்பதுதாணி நோயுடையவரினி நோக்கமாகையால் அது கைகூடும் வரையும் இவ்வாறு நிகழ்த்து கொண்டிருக்கின்றது.
ஜீவன் சிவத்துடன் ஐக்கியப் படுவதுதான் பிறவியின் நோக்கம் என்ற காரணத்தினால், ஜீவன் சுத்த சிவ நிலை அடையும் வரையும், பிறப்பு, இறப்பு என்பன நிகழ்ந்து கொண்டிருக்கும்.
உயிரைப் பற்றிய சில அடிப்படைத் தத்துவங்களைத் தெரிந்து கொள்ளும் பட்சத்தில் இவ் விஷயத்திலிருக்கும் பல சந்தேகங்கள் தீர்க்கப்பட்டு விடுகின்றன.
உயிரியல் சாஸ்திரம் :
இந்து மத உயிரியல் சாஸ்திரப்படி சகல சராசரங்களும் உயிருடையன. தூணிலும், துரும்பிலும், உயிர் ஊடுருவி நிற்கிறது. மனிதனும், மனிதனுடைய நிழலும் போன்று உயிர் பரமாத்மாவின் பிரதி பாசம். w
ஆகையால் உயிரை ஆக்கவும், அழிக்கவும் முடியாது. உயிரை உண்டாக்க முடியாத காரணத்தால் ஒரு புதுச் சரீரம் உருவாகும் பொழுது, நிலையான பழைய உயிரைத் திரும்பவும் சுவீகரிக்க வேண்டியிருக்கின்றது.
பழைய உடல் அழிந்து புதுப் புது உடல் உருவாகிக் கொண்டிருப்பதாலும், என்றும் இருக்கின்ற உயிரை அழிக்கவும் ஆக்கவும் முடியாதிருப்பதாலும் மறு பிறப்பென்பது நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.
அறிவு

IDDIGO) :
ஒரு திரவத்தின் அடிப்படையான இறுதி அணுக்களிலிருந்து
விசேஷ ரீதியில் உருவாகும் அலைநீளச் சலன சக்தியே உயிரென்று
நவீன அலைச் சித்தாந்த சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஜீவன் தேகத்திலிருந்து பிரிவது (மரணம்) ஒரே நேரத்தில் ஒரே முறையில் நிகழ்வதில்லை. ஒரு குறிக்கப்பட்ட நேரத்திற்குள் இரண்டு தரமாக ஜீவன் பிரிந்து செல்கின்றது.
முதற் தரம் நிகழ்கின்ற மரணம் தைதிக மரணம் என்று இரண்டாம் முறை நிகழ்வது கோச மரணம் என்றும் சொல்லப்படும்.
வெறும் சரீரத்திலிருந்து மாத்திரம் உயிர் பிரிந்து சரீரம் செயலற்றுப் போகும் நிலைக்கு தைதீக மரணம் என்றும், இறுதியில் பஞ்ச கோசத்திலிருந்து உயிர் பிரிவதை கோசீக மரணம் என்றும், பஞ்ச கோசத்திலிருந்து முற்றாக ஜீவன் பிரிந்தாற்றான் உண்மையான மரணம் சம்பவிக்கின்றது என்றும் கூறப்படுகின்றது.
தைதிக மரணத்திற்குப் பின் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலத்திற்குள் கோசீக மரணம் நிகழ்கின்றது.
ஆபூர்வமாகச் சில சந்தர்ப்பங்களில் கோசீக மரணம் நிகழ்வதற்கு முன், சரீரத்திலிருந்து பிரிந்து நின்ற ஜீவன் திரும்பவும் சரீரத்தில் நுழைவதுண்டு.
இதைத்தான் இறந்தவர் திரும்பவும் உயிர் பெற்ற சம்பவமாகக் கேள்விப்படுகின்றோம்.
எனவே சில சந்தர்ப்பங்களில் இவ்விதம் நிகழ்வதால் சரீரம் அதிகம் பழுதடையாத நிலையில் மரணம் சம்பவிக்கும்போது, குறைந்த ஆறு அல்லது எட்டு மணித்தியாலங்களின் பின்னர் தகனம் செய்வதுதான் உசிதமானதாகும்.
அறிவு

Page 6
முன் ஜென்மங்களைப் பற்றி அறிவதற்கு “பரிந்துவாஜ தர்சனம்’ என்ற ஒரு சாஸ்திரக் கிரந்தம் இன்றும் நடைமுறையில் இருக்கின்றது. இதை இதய சுத்தமுடையவர்கள், நாலு ஆண்டுகள் அப்பியாசித்தால்
தமது சொந்தப் பூர்வ ஜென்மங்களைப் பற்றியும், எட்டாண்டு பயின்றால் மற்றவர்களுடைய பூர்வ ஜென்மவிருத்தாந்தங்களைப் பற்றியும் அறியத்தக்க ஞானம் சித்திக்கும்.
அல்லது மூலாதார சக்தியை ஆதார சக்கரங்கள் வழியே சகஸ்ராரத்தில் ஏற்றி நிறுத்திப் பழகிய மகாயோகிகள், சித்ததில் அடங்கிக் கிடக்கும் பூர்வ ஜென்ம வாசனைகளில் சம்யமனம் செய்து பார்க்கும் பொழுது முன் ஜென்மங்களைப் பற்றிய அறிவு கிடைக்கின்றது. * (
ஜீவன் பிறவி தோறும் செய்த கர்ம பலாபலன்களுக்குத் தக்கபடி, அடுத்தடுத்துப் பிறவிகளெடுத்துச் சுக துக்கங்களை அனுபவிக்கின்றது.
முற்சென்மங்களிற் செய்த கர்ம பலன்களைப் பற்றி மனிதன்
அறிவானாகில் பாப கர்மங்களைப் புரிவதற்கு அஞ்சி வாழ்வான்.
ஆகையால் பிறவி தோறும் வினையாற்றிக் களைப்படைந்த ஜீவன் களையைத் தீர்த்துப் புத்துணர்வு பெறுவதற்காக மரணம் என்ற ஒரு இடைக்கால ஒய்வெடுப்பதைப் பற்றிச் சந்தோஷம் அடையாமல்
பயப்படுவதேன்?
- நன்றி ஞானமணிடலம் ”
9a

தமிழ்த் திரைபடங்கள் (1931 - 2005)
நிழல். ப. திருநாவுக்கரசு 1967 - ஆலயம் சிறந்த மாநில மொழிப்படத்திற்கான வெள்ளிப் பதக்கத்தையும் தமிழகத்தின் சிறந்த தமிழ் படத்திற்கான இரண்டாவது பரிசையும் பெற்றது. கலைவாணர் மறைவை ஒட்டி டி.எஸ்.துரைராஜ் 1967ல், என்.எஸ். கிருஷ்ணன் என்ற படத்தை அவர் நடித்த பல படங்களிலிருந்து தொகுத்தளித்தார்.
1968 -கலாட்டா கல்யாணம், ஊட்டி வரை உறவு, இருமலர்கள், ஒளி விளக்கு, பணமா பாசமா, குழந்தைக்காக, குடியிருந்த கோயில், எங்க ஊர் ராஜா, தாமரை நெஞ்சம் முதலிய படங்கள் 100 நாட்கள் ஒடி வெற்றி பெற்றன. தில்லானா மோகனாம்பாள் (175) வெள்ளி விழாவைக் கொண்டாடியது. தில்லானா மோகனாம்பாள் கதை, கொத்தமங்கலம் சுப்பு எழுதிய நாவல். இதனை ஏ.பி.என். திரைப்படமாக்கினார். தமிழகத்தின் நாட்டியத்தையும், நாதசுரத்தின் பெருமையையும் ஒரு சேர பிற மொழியினருக்கு எடுத்துக் காட்டிய படம் . மத்திய அரசின் சிறந்த மாநில மொழிகளுக்கான
வெள்ளிப்பதக்கத்தை இப்படம் பெற்றது.
1969 - 1969ம் ஆண்டு வெளிவந்த அடிமைப் பெண் வெள்ளி விழாக் கொண்டாடியது. சிவாஜி கணேசன் நடித்த உயர்ந்த மனிதன் படத்திற்கு தமிழக அரசின் சிறந்த படத்திற்கான விருது கிடைத்தது. தெய்வமகன் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதற் தமிழ் படம். இரு கோடுகள் படத்திற்கு மத்திய அரசின் வெள்ளிப்பதக்கார் கிடைத்தது.
1970 இவர் வாணி டு சிவாஜிகணேசன் நடித்த ராமன் எத்தனை ராமனடி படத்திற்கு மத்திய அரசின் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. எம்.ஜி.ஆர். நடித்த மாட்டுக்கார வேலன் வெள்ளி விழாவைக்
இரு கோடுகள்) கொண்டாடியது. பூரீதரின் சிவந்த மண் வெளிநாட்டில் படமாக்கப்பட்டது. வியட்நாம் வீடு படம் தமிழக அரசின் சிறந்த படத்திற்கான முதற் பரிசைப் பெற்றது.
a 7 - அறிவு

Page 7
1971- எம்.ஜி.ஆர். நடித்த ரிக்ஷாக்காரன் படம் 163 நாட்கள் ஒடியது. எம்.ஜி.ஆருக்கு பாரத் பட்டம் கிடைத்தது. நடிகை தேவிகா எடுத்த படத்தை விநியோகஸ்தர்கள் வாங்கவில்லை. அவரே தியேட்டர் எடுத்து வெளியிட்ட வெற்றிப்படம் வெகுளிப்பெண். மத்திய அரசின் வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் ஆதிபராசக்தி வெள்ளிவிழா கொண்டாடியது. புட்டண்ணாவின் இருளும் ஒளியும், சுடரும் சூறாவளியும் சிறந்த குணச்சித்திரப் படங்களாக வெளிவந்தன. ஜெமினி நிறுவனம் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தை 22 ஆண்டுகளுக்குப் பிறகு எம்.ஜி.ஆரை வைத்து நீரும் நெருப்பும் என்ற பெயரில் எடுத்து வெற்றி பெற்றனர்.
1972 - பட்டிக்காடா பட்டணமா படத்திற்கு மத்திய அரசின் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. ஏ.வி.எம்.மின் காசேதான் கடவுளடா சிறந்த பொழுதுபோக்கு படமாக வெளிவந்தது. கிருத்துவ சூழலில் விறுவிறுப்பான படமாக சிவாஜி நடித்த ஞானஒளி வெற்றி பெற்றது. வசந்த மாளிகை ராமநாயுடுவின் பெரு வெற்றி பெற்று 41 வாரங்கள் ஒடியது. w.
1973 - கே.பாலச்சந்தரின் அரங்கேற்றம் நிறைய வாதப்பிரதி வாதங்களை எழுப்பியது. எம்.ஜி.ஆரே நடித்து, இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன் பல நாடுகளில் எடுக்கப்பட்டது. 227 நாட்கள் திரையிடப்பட்டது. எஸ்.பி.முத்துராமனின் காசியாத்திரை சிறந்த பொழுதுபோக்கு நகைச்சுவைப் படமாக வெற்றி பெற்றது. சிவாஜி கணேசன் நடித்த கெளரவம் 100 நாள் ஒடிய வெற்றிப்படம். கதையும், நடிப்பும் சிறப்பாக பேசப்பட்ட படம்.
கே. ஆர் . விஜயாவை அறிமுகம் செய்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணனே நூறாவது படத்தையும் எடுத்தார். நத்தையில் முத்து சிறந்த சமூக விமர்சனப் படமாக விளங்கியது. தேசிய ஒற்றுமையை விளக்கி ஏ.சி. திருலோகச்சந்தரால் எடுக்கப்பட்ட பாரத விலாஸில் நாகேஸ்வரராவ், சஞ்சீவ் குமார் ஆகியோர் கெளரவ வேடத்தில் நடித்தனர். கவிஞர் கண்ணதாசனுக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது கிடைத்தது.
உளவியல் சிக்கலை விளக்கும் மறுபிறவி படத்தை ராமண்ணா எடுத்தார். இப்படத்தில் பகுத்தறிவாளர் டாக்டர் கோவூர் தோன்றி பிரச்சனைகளை விளக் குவார். நாடகத் துறையில் உள்ள
அறிவு ۔ 83 ۔ ۔

பிரச்சனைகளை குடும்பத்துடன் இணைத்து ராஜ்பார்ட் ரங்கதுரை வெளிவந்தது. V. V.
ஜி உமாபதி தயாரிப்பில ராஜராஜசோழன் முதல சினிமாஸ்கோப் படமாக வெளிவந்தது சூரியகாந்தி சிறந்த குடும்பச் சித்திரமாக வெளிவந்தது.
1974 - ராஜாஜியின் கதையான திக்கற்ற பார்வதி படத்திற்கு மத்திய அரசின் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. குடியினால் விளையும் குழப்பங்களை விளக்கியது இப்படம். தேசியத் திரைப்பட வளர்ச்சி நிறுவனத்தின் நிதி உதவியில் முதல் முதலாக எடுக்கப்பட்ட தமிழ்ப்படம் தாகம். இதனை புதிய அலை படமாகக் கொள்ளலாம். இயக்கம் : பாபு நந்தன் கோட்: தீர்க்க சுமங்கலி, பத்துமாத பந்தம் போன்ற குடும்பச் சித்திரங்கள் வெளிவந்தன. எம்.ஜி.ஆர் நடித்த உரிமைக்குரல் சிவாஜி நடித்த தங்கப்பதக்கம், வாணி ராணி போன்றவை வணிக ரீதியில் சாதனை புரிந்தன.
1975 - கே.பாலச்சந்தரின் அபூர்வராகங்கள் படத்திற்கு மத்திய அரசின் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு தேசிய விருது கிடைத்தது. சிறந்த கேமிராவுக்கான விருதை பி.எஸ்.லோகநாத் பெற்றார். ரஜனிகாந்தின் முதல் படம்.
1976 - தேவராஜன்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த அன்னக்கிளி தான் இளையராஜவின் முதல் படம். கிராமிய மணம் கமழும் இசைக்குக் கிடைத்த வெற்றி. மகரிஷியின் நாவலான பத்ரகாளி திரைப்படமாக வெளிவந்து பேசப்பட்டது.
1977 - சிவாஜிகணேசனின் 200 ஆவது படமான அண்ணன் ஒரு கோயில், அண்ணன், தங்கை பாசத்தை விளக்கும் படமாக வெளிவந்து 200 நாளைக் கொண்டாடியது. ஜெயக்காந்தனின் く x is நாவலான சில நேரங்களில் சில (அக்ர காலத்தில் கழுதை மனிதர்கள் பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்தது. லட்சுமிக்கு தேசிய விருது கிடைத்தது. கேரளத்தின் நவீன இயக்குனர்களில் ஒருவரான ஜான் ஆபிரகாம் தமிழில் எடுத்த படமான அக்ரஹாரத்தில் கழுதை படத்திற்கு மத்திய அரசின் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஸ்டுடியோவுக்குள் இருந்த கேமராவை
அறிவு ۔م-9 سے

Page 8
வெளியே கொண்டு வந்த பாரதிராஜாவின் முதற் படமான பதினாறு வயதினிலே கமல், ரஜனிகாந்த், ரீதேவி நடிப்பில் பெருவெற்றி பெற்றது.
பெண்ணியம் மற்றும் நவீன சினிமாவுக்கான ۔ 1978 உள்ளடக்கத்தைப் பெற்றிருந்த அவள் அப்படித்தான் (1978) படத்தை ருத்ரையா இயக்கி வெளியிட்டார். இதன் திரைக்கதையை நவீன தமிழ் எழுத்தாளரான வண்ண நிலவன் எழுதினார். இதே ஆண்டில் வெளிவந்த கிழக்கே போகும் இரயில், சிகப்பு ரோஜாக்கள் போன்றவை பாரதிராஜாவுக்கு புதிய பாதையை திறந்துவிட்டன. பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள் பெருமளவில் பேசப்பட்டது. குறைந்த செலவில் வியாபாரப் படத்திற்கான அம்சங்கள் எதுவுமில்லாமல் வெளிவந்த ஜெயபாரதியின் குடிசை புதிய வழியைக் காட்டியது. கே.பாலச்சந்தரின் நினைத்தாலே இனிக்கும் சிறந்த பொழுது போக்கு படமாக இருந்தது. ஒரே வானம் ஒரே பூமி என்ற படம் தமிழ், மலையாள மொழிகளில் தய்ாரிக்கப்பட்டது. இப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் அமெரிக்காவிலேயே எடுக்கப்பட்டன. மாற்று சினிமாவுக்கான முயற்சியாக தமிழில் எடுக்கப்பட்ட படம் பசி. இயக்கம் துரை, தமிழ்,இந்தியில் வெளிவந்தது. மத்திய அரசின் வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றது. சிறந்த நடிகைக் கான விருது ஷோபா வுக் கு அறிவிக்கப்பட்டிருந்தது. வெற்றிப் படமாகவும் ஓடிய நேரத்தில் ஷோபா இறந்தார்.
1979 - தேவராஜ் மோகன் இயக்கத்தில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படம் சிவக்குமாருக்கு 100 ஆவது வெற்றிப்படமாக அமைந்தது. புதுமைப்பித்தனின் சித்தி குறுநாவல் மகேந்திரன் இயக்கத்தில் உதிரிப்பூக்கள் ஆக வெளிவந்தது. 1979 ஆம் அண்டு மாற்று சினிமாவுக்கான முயற்சிகள் பெருமளவில் செய்யப்பட்டன.
1980 -காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் வெளிவரக் காரணமாக இருந்த ஒரு தலைராகம் வெளிவந்து, ஒரு ஆண்டு காலம் ஒடியது. டி.ஆர்.ராஜேந்திரன், ஈ. எம். இப்ராகிமுக்குமுதல் படம். மகேந்திரனின் நெஞ்சத்தைக் கிள்ளாதே 52 வாரம் ஒடித் தேசிய தமிழக அரசு விருது பெற்றது.
1981 - கே.பாலச்சந்தரின் வறுமையின் நிறம் சிவப்பு, பாரதிராஜாவின் அலைகள் ஒய்வதில்லை, பாக்கியராஜின் அந்த
அறிவு O

ஏழுநாட்கள் படங்கள் 100 நாட்களைக் கொண்டாடிய பொழுதுபோக்கு படங்களாக இருந்தன. தண்ணிர்ப் பிரச்சனையை மையமிட்டு கோமல் சுவாமிநாதன் நடத்தி வந்த நாடகமான தண்ணீர் தண்ணீர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்தது. மத்திய அரசின் வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றது என்.எ.ப்.டி.சி நிதி உதவியில் நிமாய் கோஷின் சூறாவளி வெளிவந்தது.
1982 - கே.ஹரிஹரன் இயக்கத்தில் வெளியான ஏழாவது மனிதன் மத்திய அரசின் வெள்ளிப்பதக்கம், தமிழகத்தின் அரசு விருது பெற்றது. பாரதியாரின் பாடல்கள் புதிய முறையில் இசைக்கப்பட்ட படம். மாஸ்கோ படவிழாவில் கலந்து கொண்டது. எங்கேயோ கேட்ட குரல் என்ற பஞ்சு அருணாசலத்தின் படத்தில் ரஜனிகாந்த குணச்சித்திர வேடத்தில் நடித்து தமிழக அரசின் பரிசைப் பெற்றார். இளையராஜாவின் பாடல்களுக்காக பயணங்கள் முடிவதில்லை வெற்றிகரமாக ஒடியது.
1983 . ஆதிவாசிப் பிரச்சனையை மையமாகக் கொண்ட ஒரு இந்தியக் கனவு தேசிய விருது பெற்றது. இயக்கம் கோமல் சுவாமிநாதன். வெண்மணி பிரச்சனையை மையமிட்ட கண் சிவந்தால் மண் சிவக்கும் படத்தை முறிதர் ராஜன் இயக்கினார். தேசிய விருதைப் பெற்றார்.
1984 - கே.பாலச்சந்தரின் அச்சமில்லை அச்சமில்லை மத்திய அரசின் வெள்ளிப் பதக்கம் பெற்றது. ஏ.வி.ஏம்மின் முந்தானை முடிச்சு, புதுமைப் பெண், இராஜசேகரின் மலையூர் மம்பட்டியான் 200 நாட்கள் ஒடின.
1985 - பாரதிராஜா விண் முதல மரியாதை சிவாஜிகணேசன் நடிப்பு புதிய பரிணாமத்தைக் கொண்டு வந்தது. மத்திய அரசின் வெள்ளிப் பதக்கம் பெற்றது.
986 - இயக்குனர் மணிரத்தினத்தின் மெளனராகம் (1986) வெள்ளிப்பதக்கம் பெற்றது. தேசிய அளவில் சிறந்த படமாக ஒரே ஒரு கிராமத்தில் முதற் பரிசை பெற்றது. t.
- 11 - அறிவு

Page 9
1987 - சாதிப் பிரச்சனையை புதிய கேர்ணத்தில் அணுகிய பாரதிராஜாவின் வேதம் புதிது அகில இந்திய "அளவில் சிறந்த படமாகத் தேர்வு பெற்றது. மாநில அளவிலான படங்க ့်် · §:2ဝှို f ளுக்கான வெள்ளிப்பதக்கத்தை ஃ ஃ**** வீடுபடத்திற்காக பாலுமகேந்திரா
வீடு) பெற்றார்.
அர்ச்சனா அகில இந்திய சிறந்த நடிகைக்கான விருது பெற்றார். சிறந்த நடிகருக்கான விருது நாயகன் படத்தில் நடித்ததற்காக கமலஹாசனுக்கு கிடைத்தது.
1988 - மணிரத்தினத்தின் அக்னி நட்சத்திரம் வ்ெற்றிப்படமாக ஒடியது. பூ பூத்த நந்தவனம் தமிழக அரசின் பரிசைப் பெற்றது.
1989 - பாலுமகேந்திராவின் சந்தியா ராகம் படம் அகில இந்திய அளவில் சிறந்த படமாகத் தேர்வு பெற்றது. பார்த்திபன் நடித்த புதிய பாதை மாநில படங்களுக்கான வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றது. கார்த்திக் நடித்த கிழக்கு வாசல் பெரும் வெற்றி பெற்ற பொழுது போக்கு படம்.
1990 - ஒரு வீடு இரு வாசல் அகில இந்திய சிறந்த படமாக தேர்வு பெற்றது. மணிரத்தினத்தின் அஞ்சலி மத்திய அரசின் வெள்ளிப்பதக்கத்தை பெற்றது.
199 - முதனி முதலாக தேசிய விருது (தங்கப் பதக்கம்) பெற்ற மறுபக்கம் படத்தை இயக் குநர் கே. எஸ் . சேது மாதவன் தமிழுக்கு வழங் கினார். மாநில மொழிப்படங்களுக்கான வெள்ளிப் பதக்கத்தை வண்ண வண்ணப் பூக்கள் பெற்றது.
992 - மணிரத்தினம் இயக்கிய ரோஜா அகில இந்திய சிறந்த படமாக தேர்வு பெற்றது. மாநிலப் பிரிவில் தேவர் மகன் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது.
- 12 -
&lეჭsიH
 
 
 
 

1993 கமலஹாசனின் சிறப்பான நடிப்பு, கதை போன்ற அம்சங்களில் சிறந்த படமாக மகாநதி (1993) வெளிவந்தது. இது மத்திய அரசின் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது.
tipota) 1994 - பெண் சிசுக்கொலையை முக்கிய கருப்
பொருளாகக் கொண்டு கருத்தம்மா தேசிய அளவில் சிறந்த படமாக தேர்வு பெற்றது. மாநில அளவில் நம்மவர் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது.
1995 - தியாகியின் வாழ்வை விளக்கும் பாரதி ராஜாவின் அந்திமந்தாரை வெள்ளிப் பதக்கம் பெற்றது. தேசிய அளவில் பம்பாய் சிறந்த படமாகத் தேர்வு பெற்றது. 1995 பிரான்ஸ் நாட்டு செவாலியர் விருது சிவாஜிக்கு கிடைத்தது. அதே ஆண்டு வெளிவந்த பசும்பொன் சிவாஜியின் 300 ஆவது படம் குருதிப்புனல், சதிலீலாவதி, பசும்பொன், பாட்ஷா முதலியவை பொழுது போக்குப் படங்களாக இருந்தன. ரஜனிகாந்த் நடித்த முத்து படம் ஜப்பானிய துணைத் தலைப்புடன் ஜப்பானில் வெற்றிபெற்றது.
காதல் கோட்டை படம் மத்திய அரசின் سه 1996 வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது. இப்படத்தின் இயக்குனரான அகத்தியனுக்கு முதன் மதலில் தேசிய அளவில் சிறந்த இயக்குநருக்கான விருது தமிழ் நாட்டிற்குக் கிடைத்தது. காதலன், இந்தியன் படங்களில் சிறப்பான முறையில் நடித்ததற்காக கமலஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. சிறந்த நடிகருக்கான வாழ்நாள் விருதான பால்கே விருதை சிவாஜி கணேசனுக்கு சங்கர் தயாள் சர்மா வழங்கினார். காதலன் படத்தில் பாடியதற்காக பின்னணி பாடகருக்கான விருதை உன்னிக் கிருஷ்ணன் பெற்றார்.
1997 - இவர் வாணி டு மத்திய அரசினி வெள்ளிப்பதக்கத்தை டெரரிஸ்ட் படம் பெற்றது. இருவர் படத்தில் நடித்த பிரகாஷ்ராஜுக்குக்கு சிறந்த துணைநடிகருக்கான தேசிய விருது
கிடைத்தது. y
அறிவு

Page 10
1998 - குண்டு வெடிப்பை கருப்பொருளாக கொண்ட ஹவுஸ்புல் படத்திற்கு மத்திய அரசின் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. பெல் கிரேடில் நடைபெற்ற உலகப்படவிழாவில் இருவர் படத்திற்கு விமர்சகர்கள் விருது கிடைத்தது. o
1999 - இவ்வாண்டு மல்லி படத்திற்கு மத்திய அரசின் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
2000 - புத் தாயிரமாணி டில தேசிய திரைப் ட அபிவிருத்திக் கழக நிதி உதவியில் எழுத்தாளர் பூமணி, தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை செய்யும் குழந்தைகள் பற்றி கருவேலம் பூக்கள் என்ற படத்தை வெளிக் கொண்டு வந்தார்.
200 - சகோதார பாசத்தை விளக்கும் வானத்தைப் போல மற்றும் வெற்றிக்கொடிகட்டு படங்கள் சிறந்த படத்திற்காக தேசி விருது பெற்றன. ஐஏஎஸ் அதிகாரியான ஞான இராஜசேகரன் தமிழ்க் கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் வாழ்வை விளக்கும் பாரதி என்ற படத்திற்காக மத்திய அரசின் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார். பாலா இயக்கிய சேது படமும் பதக்கம் பெற்றது. நிலாக்காலம் படத்தில் நடித்த உதயராஜ் சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேசியத் தேர்வு பெற்றார். பாராதிராஜாவுக்கு கடல்பூக்கள் படத்திரைக் கதை வசனத்திற்கான விருது கிடைத்தது. சிறந்த பின்னணிப் பாடகராக சங்கர் மகாதேவன்(கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்) தேர்வு பெற்றார். பாடகி பவதாரிணி பாரதி விருது பெற்றார்.
ஜெயக்காந்தனின் நாவலான ஊருக்கு நூறு பேர் நாவலை எடிட்டர் லெனின் இயக்கினார். இப்படத்திற்கு மத்திய அரசின் வெள்ளிப் பதக்கம் பெற்றது. இவர் தேசிய அளவில் சிறந்த இயக்குனருக்கான விருதும் பெற்றார்.
2002 - கன்னத்தில் முத்தமிட்டால் படம் வெள்ளிப் பதக்கம் பெற்றது. இதில் நடித்த கீர்த்தனா சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேர்வு பெற்றார். சிறந்த இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹற்மான் விருது பெற்றார். சிறந்த ஒளிப்பதிவு, எடிட்டிங்கிற்கான விருதையும் இப்படம் பெற்றது. ஜெயபாரதியின் நண்பா நண்பா படத்தில் நடித்ததற்காக சந்திரசேகருக்கு சிறந்த துணைநடிகருக்கான விருது கிடைத்தது.
Silsia -14

2003 . பிதாமகனில் நடித்ததற்காக விக்கிரமுக்கு தேசிய அளவில் சிறந்த நடிகருக்காக விருது கிடைத்தது. இயற்கை படத்திற்கும் தேசிய விருது கிடைத்துள்ளது. இது குறைந்த முதலீட்டில் நல்ல படங்களைத் தயாரிக்கும் நம்பிக்கையை புதியவர்களுக்கு அளித்தது.
2004 - ஆட்டோகிரா,’ப் படத்தில் பாடியதற்காக சிறந்த பின்னணிப் பாடகராக சித்ரா தேசிய விருது பெற்றார். ஊனமுற்ற இளைஞரான பிலிப் டான்சர் படத்தில் ஒரு காலுடன் பாடி ஆடி நடித்ததற்கான சிறப்பு நடிகருக்கான ஜூரி அவார்டை பெற்றார்.
2005 - இவ்வாண்டு ரஜனிகாந்த் நடித்து வெளிவந்த சந்திரமுகி படம் தென்னகம் முழுவதும் ஒடி வசூலில் சாதனை புரிந்தது. இப்படம் மணிச்சித்ரதாழ் என்ற மலையாளப் படத்தின் தமிழ் உருவாக்கம். பாபா படத்தின் தோல் வியால் துவணர் டிருந்த ரஜனிகா நீ திற்கு மீணி டும் வெற்றிப்பட வரிசையை துவக்க வழி சமைத் திருக்கிறது இது சங்கரின் அந்நியன் ஆங்கிலப் படங்களுக்கு இணையான காட்சி .சித்தரிப்புக்கள் கொண்ட படம் .2 ... ޗޗްކ*-8 (Fridipes) பல்வேறு கேமராக்களைக் கொணர் டு எடுக் கப்பட்ட பாடல் காட்சிகளும் , சணர் டைக 'காட்சிகளும்படத்திற்கு விறுவிறுப்பை ஏற்படுத்தி பெரும் வெற்றியைத்
莎匹莎gj...
-நனற்றி மனோரமா இயர்புக்
அறிவு | 115 ۔

Page 11
தமிழ் இலக்கியம்
தமிழ் இலக்கியம் மிக நீண்ட வரலாறு உடையது. தமிழின் முதல் படைப்பாகத் தொல்காப்பியம் (கி.மு. 500) கருதப்படுகின்றது. இது தமிழ் இலக்கியம், மொழி மற்றும் பழந்தமிழர் வாழ்வு குறித்த பலகட்டமைப்புகளைத் தரும் இலக்கண நூலாகும். துவக்ககாலத் தமிழ் இலக்கியங்களின் அடிப்படையாக நாட்டுப்புறப் பாடல்கள் இருந்தன.
காலத்தால் தொன்மையான தமிழ் இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் எனப்படும். இதன் காலம் கி.மு.500 முதல் கி.பி.200 வரை எனக் குறிப்பிடுவர். காலத்தால் அழிக்கப்பட்டது போக எஞ்சியவை தொகுக்கப்பட்டு “சங்க இலக்கியங்கள்’ என ஆக்கப்பட்டன. இவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனும் இரு அமைப்பில் தொகுக் கப்பட்டன. தனித் தனிப் பாடல்களின் தொகையாகிய எட்டுத்தொகையில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாட்ல், கலித்தொகை, அகநூனூறு, புறநானூறு எனும் எட்டு நூல்கள் அடங்கும். நீண்ட பாடல்களின் தொகுதியான பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, நெடுகல்வாடை, மலைபடுகடாம், குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை எனும் பத்து நூல்கள் அடங்கியுள்ளன. 473 புலவர்களால் பாடப்பட்ட இத்தொகை நூல்கள் அகம், புறம் என்ற அடிப்படையில் பாகுபடுத்தப்பட்டுள்ளன.
இக்கால கட்டத்தில் தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தக்க கட்டுக்கோப்புக்குள் இருந்தது. புலவர்கள் மரபு நிலையைக் காப்பாற்றி வந்தனர். நிலப்பகுதி, குறிஞ்சி (மலை), முல்லை (காடு), மருதம் (வயல்) நெய்தல் (கடல்), பாலை (பாலைவனம்) என ஐந்தாகப் பகுக்கப்பட்டன. அவற்றிற்கு முறையே புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் என்பன உரிப்பொருளாக அமைந்தது. ஒரு குறிப்பிட்ட அகவாழ்வைப் பாடுகின்ற புலவன் இடம், காலம், பொழுது, கருப்பொருள் போன்றவற்றை உட்படுத்தியே பாடுவான்.
கி.பி. ஒன்று முதல் கி.பி ஐந்து வரை உள்ள காலத்தில் தோன்றிய பதினெட்டு இலக்கியங்கள் நீதி இலக்கியங்கள்
அறிவு - 16 -

எனப்படுகின்றன. இவற்றில் அனைத்தும் நீதி நூல்கள் அல்ல. திருக்குறள், நாலடியார், நான்மணிக் கடிகை, சிறுபஞ்சமூலம், திரிகடுகம், ஏலாதி, இன்னாநாற்பது, இனியவை நாற்பது, பழமொழி, இன்னிலை, ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி போன்ற பன்னிரெண்டும் நீதியை வலியுறுத்துபவை. களவழி நாற்பது போர் பற்றியது. கார் நாற்பது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை எழுபது, கைந்நிலை எனும் ஐந்தும் அகம் சார்ந்து நிற்கின்றன. வாழ்க்கைக்கான நீதிகள் பலவற்றைக் கூறுவது இவ்விலக்கியங்களின் சிறப்பு.
இரண்டாம் நூற்றாண்டின் இறுதிக் கால கட்டத்தில் சிலப்பதிகாரம், மணிமேகலை எனும் இரட்டைக் காப்பியங்கள் உருவாயின. தமிழ்நாட்டு மூவேந்தர்களையும், மூன்று நகரங்களையும் கொண்ட முதல்படைப்பான சிலப்பதிகாரம் 30 படலங்கள் கொண்ட்து. இதன் வழிநூல்கள் மணிமேகலை. இதைத்தவிர சீவக சிந்தாமணி, வளையாபதி,குண்டலகேசி என்னும் காப்பியங்களும் உள்ளன. ஐஞ் சிறுங்காப்பியங்கள் எனும் ஒரு வகையும் உள்ளது.
பக்தி இலக்கியத்தால் மொழியும், இசையும் வளம் பெற்றன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், எனும் சைவ சமய அருளாளர்கள் நால்வரும் தேவாரம், திருவாசகம் எனும் தெய்வப் பனுவல்களைப் படைத்தனர். இவை நாட்டின் இசை மரபுகளைக் காத்து வரும் இசைச் செல்வமாகவும் உள்ளன. ஆண்டாள், பெரியாழ் வார், குலசேகராழி வார், திருமங்கை யாழி வார், திருப்பாணாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்ற பன்னிரெண்டு ஆழ்வார்கள் வைணவ பக்தி இலக்கியங்கள் பலவற்றை தந்தனர். இவற்றின் தொகுப்பு நாலாயிர திவ்வியப்பிரபந்தம் எனப்படும். திருப்பாவை இன்றும் மார்கழி மாத பாவை நோன்பில் பாடப் பட்டு வருகின்றது.
நந்திக்கலம்பகம் கலிங்கத்துப் பரணி, பாண்டிக்கோவை, திருக்கைலாய ஞான உலா, அழகர்கிள்ளைவிடு தூது போன்ற சிற்றிலக்கியங்களும் குறிப்பிடத்தக்கவை. காலத்தால் அழிக்கப்படாத தமிழ் இலக்கியங்களுள் ஒன்றான கம்பராமாயணம், வால்மீகி ராமாயணத்தின் தழுவல் என்றாலும் களம், பாத்திரப்படைப்பு போன்றவற்றில் மூலத்தை விடவும் சிறப்பாக அமைந்துள்ளது. 14368 பாக்களால் ஆன இக்காவியம், இலக்கிய ரசனையாளர்களுக்குப் பெரிதும் சுவையூட்டி வருகின்றது.
7 அறிவு

Page 12
கி.பி.12 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு காலத்தில் பல புராணங்களும் உரைநூல்களும் எழுந்தன. உயப்யவந்த தேவநாயனார் முதலானவர்களால் இயற்றப்பட்ட பதினான்கு நூல்கள் சைவ சாத்திரங்கள் எனப்படுகின்றன. வட மொழியில் உள்ள புராணங்களைத் தமிழில் எழுதும் முயற்சியின் அடிப்படையில் கந்தபுராணம், நளபுராணம், கூர்மபுராணம், மச்சபுராணம் போன்ற நூல்கள் உருவாயின. தல புராணங்களில் சிறந்ததாகப் பரஞ்சோதியார் இயற்றிய திருவிளையாடல் புராணம் கருதப்படுகிறது. 3360 பாடல்கள் கொண்ட விரிவான நூல் இது.
13-18 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இஸ்லாமிய, கிறிஸ்தவர்களின் தமிழ்த்தொண்டு குறிப்பிடத்தகுந்தது. முகமது நபியின் வாழ்க்கையை 5000 பாடல்களில் சீறாப்புராணமாகத் தந்தார் உமறுப்புலவர், வீரமாமுனிவரின் தேம்பாவணி, சதுரகராதி, பரமார்த்த குருவும் சீடர்களும் போன்றவை தமிழ் இலக்கியத்திற்கு வளமூட்டின. கால்டுவெல்லின் “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கிணம்’, வேதநாயகம் பிள்ளையின் சர்வசமய சமரச் கீர்த்தனை போன்றவையும் குறிப்பிடத்தகுந்தன.
19-20 ஆம் நூற்றாண்டு உரைநடை, கவிதை, நாடகம், புதினம் போன்ற வகைகளுக்குக்களனாய் அமைந்தது. போராசிரியர் சுந்தரம்பிள்ளையின் ‘மனோன்மணியம்’ நாடகம், சிறந்த செய்யுள் நாடகம் . சங்கரதாஸ் சுவாமிகள் , சம்பந்த முதலியார், வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி போன்றோர் பலசிறந்த நாடகங்களை எழுதியும்தாமே நடித்தும் வந்தனர்.
1876 இல் மாயூரம் வேதநாயகம்பிள்ளையால் முதல் நாவல் “பிரதாப முதலியார் சரித்திரம்’ எழுதப்பட்டது. இவரைத் தொடர்ந்து ராஜம் ஐயரின் “கமலாம்பாள் சரித்திரம்” மாதவையாவின் ‘பத்மாவதி சரித்திரம்” போன்றவை புது பரிணாமங்களுடன் வெளிவந்தன. வரலாற்று நாவல்களுக்குச் சிறப்புத் தந்தவர் கல்கி, இவரது பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் அழியாக் காவியங்கள். விடுதலை இயக்கத்தைப் பின்னணியாக வைத்து எழுதிய அகிலனின் படைப்புகள் குறிப்பிடத்தகுந்தவை. கோவி.மணிசேகரன், நா.பார்த்தசாரதி, சிவசங்கரி, இந்துமதி, ராஜம் கிருஷ்ணன் போன்றோர் படைப்புகள் உணர்ச்சி பூர்வமானவை. அறிவியல் கலந்த படைப்புக்களை சுஜாதா போன்றோர் எழுதி வருகின்றனர்.
= 1.8 -
இதறிவு

புரட்சிக்கவி எனும் பாராதியாரின் கனல் பறக்கும் கவிதைகள் விடுதலை வேட்கையைத் தூண்டின. பாரதிதாசன் கவிதைகள் சமுதாய சீர்திருத்த வேகம் கொண்டவை. கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை, நாமக்கல் இராமலிங்கம், சுத்தானந்த பாரதியார் போன்றோர் பலவகைக் கவிதைகளைப் படைத்தனர். கண்ணதாசன் திரைப்படப் பாடல்கள் மூலம் கவிதைகளுக்கு புது அழகு சேர்ந்தார்.
தற்காலப் படைப்பிலக்கியங்கிளில் பல புதிய உத்திகளும், வடிவங்களும் புகுத்தப்பட்டு வருகின்றன. ஹைக்கூக் கவிதைகள், அளவில் சுருங்கிய புதுக்கவிதைகள் ஒரு பக்கக் கதைகள், மாதம் ஒரு நாவல்கள் எனப் பல கோணங்களிலும் தமிழிலக்கியம் பரந்து வருகிறது. இவற்றின் போக்கில் சில வரையறைகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தற்போது ஏற்பட்டுள்ளது. -
-b6f6 DBOLDT Sòfrófið 1992 -
N
பொருளாதார இயலுக்கு “நோபெல் பரிசு” பெற்ற முதலி இந்தியர் அமர்த்தியாசென் இவர் வங்கத்தில் 1933ல் பிறந்தாா. இவர் இளமையிலே கல்வியில் சிறந்து விளங்கினார். பொருளாதார இயலுக்கு மனிதநேய வழவமைத்தவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக டிரினிடி கல்லூாயில் பேராசிரியராகப் பணியாற்றியவர். கவி.ரவீந்திரநாத் தாகூர்தான் இவருக்கு *அமர்த்தியா” என்ற பெயரைச் சூட்டியவர். இவரது பொருளாதார இயலுக்காக இந்திய சர்கார் 1999ம் ஆணிடு “பாரத ரத்னா’ விருது அளித்துக் கெளரவித்தது.
-இவரைப்பற்றிய கட்டுரை 2007ம் ஆண்டு அறிவு Iம் இதலில் வெளிவருகிறது
- 19 - அறிவு

Page 13
Q909ọ9Ų9ÐIlmssýsfỉ lụ09rı ,
ÇÇO'I 980’l L80’s L80’I LŽÍ“I SɛI“I 99 I“I 0守“一 Ş9Įol 60ĆI LZĆI 0ÇZ‘I 09ĊI £8Zos Z99 ‘I 089’s 0Şțřų £8ff;'| £8ţ's OL9’I
thłG>
| ZS 0£ɛ
{{9 -
|99 ţţ79
09
※ 姿sse 冬 s み 2se 季 を s学
ത്ത C 의 용있:二
ởıııgı
666] S66|| Ş00Ć* S00Ć* 696|| 866|| $L6|| L66|| 666|| 686|| Z66|| ! €6|| 966 s 966|| Ɛ00Z 666|| ț7L6|| 866|| 866|| ț700Z
@ņ09?
InIIIIIĠ ‘ọ9 TIIGĀög, Qńs@ ņos@ §3fffı LInsloo) TIU9 off]]|fn|g]]'Insı oạ9-ryu (Īsg) íg|Urmoņi@ ņLoss||11609' sjellų91) Q91096.9gig)ß-ış9$ Istog)||G|g)$9 1990ĪĞfio 13161ņ9Ļrinț¢ £ © ņ91096(94ígyff-ligo@ 1990Ēłto 11378)||olf off-liġ9£) șųog)ņ9|JÚJÚ, 1991,8 IĶIII?I?IIIŲJŰ off-ığ9ęsg) sẽ Lloeg)11??ss? o sugogo) 199łtos@ !plhơoặco “Işılmự119,9° (R9-ı optoņ19 ą943-1199-r Inıls is ‘ış9@ (197ā ņ1971/19) gıı9 Işıl 113,1%) LGĀỗ “LIQof six.“No spisu sırı IsiJuoĐIỆIII(UĞ o D(u9ıııı91] Q9 (aeilg9£9) os limfngi ossiltiņ9Ļı II-ig)ņ9 (Inriqi19 Ilitogolgosoɛ)ọ191ņ9619€)’yi nuose)ạ19 ĝIŲRŔ 199-Éto 111094,-6(91911 fo@‘IJOus III19ņ gồőióī£
IĘIII?I?IIIIĞ ‘s-Tigogo) q19199)||19ngo Q91096,94 g)(s-T-1109@ @
In sols||||609 osóıọ9Țı liftog)ươı ış9% Loog) llogo ‘sito”ı çı9ýrng)? IJrnls8098)(no sfiqTQ91109log) ‘zsito, quolo II(g) Trilo) Irrigodo@gios fiqia01109 llog) ‘I (19 : q1919 Lúg) Irie) 1991|19$cco ornrig)gồcos o Ion Infig)gồos
@iqi/qr-16, 1$ $@@
Į9?IĘITóijo 1991JJIÚIn-ā, Igogo@9-æ
we en ywasg want
NW NN uri ve t exc6 eK S SLSLSLS LSLSLS LSS S LLLSSe S SSS S LSLSL S LSLSLSLS SL
. CS CN ymu4
- ei eri vi uri ves N os
سہ 20۔
அறிவு

கவிஞர் வில்வரத்தினம் சில
நினைவுக் குறிப்புகள்
நேற்றுப்போல. சில நினைவுகள். வில்வனின் வயதுதானே எனக்கும். W ஞாபகத்தில் இல்லாது எத்தனையோ போய்விட்டாலும். அழியாத நினைவுகள் பலவுண்டு. சுப்பிரமணியம் வில்வரத்தினம். என் நண்பன். புங்குடுதீவு 1-ம் வட்டாரத்தில் எங்கள் வீடுகளுக்கிடையில் அதிக தூரமில்லை.
நீண்டகாலமாகப் பழகிவந்தவர்கள் நாம். எங்களுக்குள் எத்தனையோ விவாதங்கள். சர்ச்சைகள். உரக்கப் பேசிக்கொள்வோம்.
அடிக்கடி சந்திக்கத் தவறுவதில்லை. அறுபதுகளின் இறுதிப்பகுதியில், கல்லூரி நாட்களிலேயே யான் வீரகேசரிப் பத்திரிகை நிருபராகக் கடமையாற்றத் தொடங்கியபோதிலும், எழுபதுகளின் ஆரம்பத்திலேயே இலக்கியத்துறையில் ஈடுபட்டேன். அக்காலத்தில், புகழ்பெற்ற எழுத்தாளர் செ.கணேசலிங்கத்தின் “குமரன்’ சஞ்சிகை ஐந்து பிரதிகள் எனக்கு வரும்.
அதில் ஒன்றைக் கொண்டுபோய் நண்பன் வில்வனுக்குக் கொடுபபேன். தவறாது காசு தந்திடுவான். அதனை வாசித்துவிட்டுச் சந்திக்கும் போதெல்லாம் உரத்த விமர்சனம் கொட்டுவான்.
எழுத்தாளர் மு.தளையசிங்கத்தின் இறுதி ஊர்வலத்தில் வில்வன் கீதங்கள் பாடிவந்ததும், புங்குடுதீவு மணற்காடு மயானத்தில் பொன். சுந்தரலிங்கம் திருவாசகம் பாடிட எல்லோரும் கண்கலங்கி அழுது நின்றதுவும், பின்னர் புங்குடுதீவு கலட்டி பிள்ளையார் கோவில் முன்றலில் நடைபெற்ற அஞ்சலிக்கூட்டத்தில் உரையாற்ற என்னையும் வில்வன் அழைத்ததுவும் ஞாபகத்தில் வருகின்றன.
- 21 - அறிவு

Page 14
எழுபதுகளில் பலதடவை புங்குடுதீவில் இலக்கியக் கூட்டங்களை நடாத்தியிருக்கின்றேன்.
அக்கூட்டங்களில் கே.டானியல், நாவேந்தன், ஈழத்துச் சிவாநந்தன், புதுவை இரத்தினதுரை, வ.ஐ.ச. ஜெயபாலன் ஆகியோருட்படப் பலர் கலந்துகொண்டமை இன்று ஞாபகம்.
அந்தக் கூட்டங்களில் நண்பன் வில் வன் எம்முடன் கவியரங்கில் கலந்து கொள்வார். அல்லது கருத்துரை வழங்குவார். வில்வனின் மூத்த சகோதரர் கருணாகரன் அக்கூட்டங்களை நடாத்துவதற்கு எனக்கு உதவிகள் புரிந்ததையும் மறக்கமுடியாது.
அண்று, வசந் தமி புத்தக நிலையத் திலிருந்து, சீனாவிலிருந்தவரும் புத்தகங்கள், தமிழில் வெளிவந்த மாக்ஸிசப் புத்தகங்கள், தொழிலாளி பத்திரிகை உட்படப் பலதும் கொண்டுவந்து நண்பர்களுக்குக் கொடுப்பது என் வழக்கம். அவ்வேளை எத்தகைய கருத்து முரண்பாடு இருப்பினும் முகங்கோணாது. பணம் தந்து வில்வன் அவற்றையும் வாங்கிக்கொள்வான். பின்னர் அவைபற்றிய அலசல்களிலேயே எமது சந்திப்புகளின் நேரங்கள் போய்விடும்.
தான் ஏற்றுக்கொண்ட கருத்தினை உரக்கச் சொல்லி வலியுறுத்துவது வில்வனின் வழக்கம்.
அத்தகைய குணம் என்னிடத்தும் உண்டு.
இதனால் இருவரும் உரக்க வாதாடுவதைப் புதிதாகப் பார்ப்பவர்கள் என்ன சங்கதியோ.’ என ஆச்சரியப்படுவதும் உண்டு.
மனிதாபிமானமும், தொன்மை மரபு பேணலும், ஆன்மீகமும் அவன் வாதங்களில் இளையோடும்.
எப்படி நாம் பேசிக்கொண்டாலும், கள்ளமற்ற மனந்திறந்து பேசும் எம் நட்பு என்றும் தொடர்ந்தது.
அறிவு AK7 22 Adar

எண்பதுகளின் பிறபகுதிகளில் யான் பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து, பின்னர் பிரான்ஸ் வந்துவிட்டேன். இருப்பினும் அவ்வவ்பொது பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலம் நண்பனின் படைப்புகளைப் பார்த்து மகிழ்வதுண்டு. என் சகோதரர் சிறிது காலம் நடாத்திய “திருப்பம்;” சஞ்சிகையிலும் நண்பனின் எழுத்துக்கள் தொடர்ந்து வந்ததைப் பார்த்தேன். சில மாதங்களுக்கு முன்பு நண்பர் யேசுராசாவுடன் ஐரோப்பா வந்திருந்தான்.
பாரிஸில் அவனது கவிதைத் தொகுதியின் அறிமுகவிழாவும் நடைபெற்றது.
சுமார் 770 கி.மீ தொலைவில் யான் வசிக்கும் துலூஸ் நகரிலிருந்து பாரிஸ் வந்து, விழாவில் நண்பனைச் சந்தித்து உரையாடினேன்.
கண்டதும் கட்டிப்பிடித்து “எப்படியடாப்பா..” என வாஞ்சையோடு பேசியதை மறக்க முடியவில்லை. பின்னர் இன்னுமொரு சந்திப்பிலும் கலந்துகொண்டு அவனுடன் நிறையவே பேசினேன்.
என் வயது நண்பன். இடைநடுவில் போய்விட்டான்.
அடுத்தடுத்து வரும் கலை இலக்கியவாதிகளின் இழப்புக்கள் இதயத்தைக் கலங்கடிக்கின்றன.
காற்றுவெளிக் கிராமத்தின் காலத்துயர் சுமந்து கவிதைகள் தந்தவனே. முன்னணிக் கவிஞனாய் முகிழ்ந்து வந்தவனே. உன் படைப்புகள் மூலம். எங்களுடன் பேசிக்கொண்டேயிருக்கிறாய். எப்படி மறப்போம் உன்னை.? இயலாது.இயலாது.
வி.ரி.இளங்கோவன் பிரான்ஸ்
- 23 - அறிவு

Page 15
உயிர்த்தெழும் காலத்திற்காய் உதித்தவனுக்காய்.
யாழ்பாடியின் நகரின் பொன்கொடு தீவினிலே “உயிர்த்தெழும் காலத்திற்காய்’ உதித்த உதயசூரியன்
வில்வரத்தினம் இவன் நாமம்
சிந்திக்க வைக்கும் கவிவடிவங்களின் சொந்தக்காரன் வரிவடிமங்களும், புதிய கவிப்பரிசோதனைகளும் . இவன் சிந்தனைத் தளவிரிவை எடுத்தியம்பும் “காலத்துயரை’ எமக்குத்தந்து விரைந்துவிட்டாய்.
இருளறியா அகங்களையும் முகங்களையும்” கொண்டவன் “வாசிகம்” தந்த பேரறிஞன். “மானுடர்க்கான ஒன்றுகூடல்களின்’ ஒருமையம். தமிழ்வரலாறு என்றும் க.வி யின் நாமம் சொல்லும்
கனிர் என்ற பாடல் குரலின் சொந்தக்காரன் ஒ வண்டிக்காரா. ஓ வண்டிக்காரா. இன்றும் எம் காதுகளில் ஒலிக்கும் பாடல். எங்கே சென்றாய் எம் வண்டிக்கார வழிகாட்டியே?
மு.த.வின் பண்ணையில் வளர்ந்த இரத்தினம். நீ வில்வரத்தினம் தமிழ் அன்னையின் தவப்புதல்வன் தரணி மாந்தர்க்கோ பெருங்கவிஞன்
விட்டுவிடுதலை வேண்டி நின்ற எங்கள் வீட்டுக்குருவி நீ! கட்டும் தளையனைத்தையும் கண்டு பொங்கியெழுந்த “ தேசப்பற்றாளன்’
கொடுமைக்கும், துரோகங்களுக்கும் “நச்சுக்கோடாரியாய்” இருந்தாய் ஏழைகளையும், இயலாதவர்களையும் அரவணைத்து அடைக்கலம் தந்தாய்.
இளம் படைப்பாளிகளுக்கு கலங்கரை விளக்கு நீ “கூடல்” கட்டி குருவிகளை ஒன்றிணைத்த தாய். தத்துவ வாதியாய், பொதுவுடைமைவாதியாய், ஆன்மீகவாதியாய் நாடக ஆசிரியனாய் எல்லாவற்றுக்கும் எல்லாமாய் இருந்தாய்
- 24 -
அறிவு

அரசுதுறந்து ஞானம் தேடிய கெளதமரைப்போல் அலைந்தாய் நல்ல குருநாதன் தேடி. நீ இல்லா ஊர், உன்வரவை எதிர்பார்த்து “காற்றுவெளி கிராமமாய்” கிடக்கிறது:
உனக்கு அழிவில்லை நீ இறைவன் படைப்பதனால், கவி படிப்பதினால் சு.வி நீயும் இறைவன் “நெற்றி மண்ணிட்டு அனுப்புகின்றோம். என்னும் விடைதர மனமில்லை.
வி.குணபாலா (கலாசார உத்தியோகத்தர்) திருக்கோணமலை,
ஆனா - வீனா
யா/புங்குடுதிவில் சுப்பிரமணியம் - மாணிக்கம் தம்பதியரின் மகனாக 07.08.1950இல் வில்வரத்தினம் பிறந்தார். பு:தீவு முநீ சுப்பிரமணிய வித்தியாசாலையில் ஆரம்பக்கல்விபயின்றார். பின்னர் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் கல்வியைத் லதாடர்ந்தார். பின்னர் பு:தீவு மகா வித்தியாலயத்தில் கற்றுத்தேர்ந்தார். விவசாயசேவைத் திணைக்களத்தில் தொழில் பார்த்தார். பின்னர் கல்வி கலாச்சார பண்பாட்டலுவல்கள் + விளையாட்டுத்துறை அமைச்சில் (திருமலை) கலாச்சார அபிவிருத்திஉத்தியோகத்தர்ஆனார்.
1965ல் புங்குடுதீவு மகாவித்தியாலய அதிபர் மு. தளைய சிங்கத்தின் கலை இலக்கியச் சிந்தனையால் ஈர்க்கப்பட்டார். ஏ.எல். மாணவ வில்வர் மு.லயா.வின் கவிதைகளலும் கவரப்பட்டார்சிரமதானப்பணிஈடுபட்டுவேளைகளில் கூத்துப்பாய்டுக்களல் பிறரை மகிழ்ச்சிப்படுத்துவார். தாழ்ந்தோர் உரிமை உண்ணாநோன்புப் போரில் மு.த.வுடன் சு.வியும் ஈடுபட்டுச் சிறைப்பட்டதும் உண்டு. இசை கூத்துப் பயிற்சிகள் லuற்று பாடல்கள் இசையமைத்துப் பாடியதும் உண்டு. இவரின் சாச்லசய்திகேட்டு மீண்டும் ஒரு பாரதி என நம்பியிருந்தவர் போனதுதுயரமே" எனப்பல கவிஞர் வருந்தியதுமுண்டு. கவிதைத்வதாகுதிகள்:- அகங்களும் முகங்களும் 1985 /காலத்துயர் 1995/ காற்று வழிக்கிரமம் 1995/வநற்றிமன்2000/உயித்தெழும்காலத்திற்காக 2001/வாசிகம் 2005/ விடுதலை முகம் 2006/(இறப்பு 09.12.2006) விமுகம்59ம்பக்கத்தில் ஒரு சோற்றுப்பதம் “அரசு என்பதே ஒரு வன்முறைக் கட்டமைப்பு அதனோடு பேரினவாத ஆதிக்கமும் இணைந்தால் ஓரினக்கோட்பாட்டிற்குட்படுத்தும் உரிமையை இழப்பதாமாற்றினங்கள்? ஆதலால் எழுந்தோம். ஈழதேசக்காதலின் மீலதாரு கட்டுமானம் விழைந்தோம் கோழைமைஎன்பதைத்துக்கிவீசினோம். லயால்லாப்பாறையாய் போயது விழுந்தது. எதிரிமேல் கோழையாய் நாம் குனிந்தபோதவன் எம் தலையில் சுமத்திய பெரும் பாறைதான் இன்றவன்தலையில் லபாறிந்து விழுகையில் கூவியழைக்கிறான். உலகவல்லாண்மை அரசுகளை. தோள்களை உதறிச் சிலிர்த்தோம். அடிமை நுகத்தபடி நொருங்கிடும் அதிர்வு உலகெலாம் கேட்கிற காலம் வரும். ஆயினும் எமது இலக்கை அடைவதற்கு இன்னும் அதிக தூரம் உள்ளது.”
தொஞ்புே - தாைேரத்தி ല്ക്ക്
~25~ அறிவு

Page 16
வா மீண்டும்
அறிவு
வென்று கொடி நட்டவனே
வில்வா, எனைக்காணின் நின்று கதைக்காமல்
நீ போன நாள் இல்லை! இன்று யார் காண வுளார் ?
இலக்கியங்கள் பேசவுளார் ? நன்றோ இடையில் எமை
நட்டாற்றில் விட்டகதை ? ஏறினால் மேடையிலே
எல்லோரும் வாய் பிளப்பார் ! ஊறும் தமிழ் உனக்கு,
ஒடினையே எம்மை விட்டு ? ஆழமாய்ச் சிந்திப்பாய்,
அரைகள் குறைகள் எலாம் வீழ வரைந்திடுவாய்
விட்டெங்கு போயினையோ எழுதியதைக் கண்டாயேல்
இனிதாய் எடுத்துரைப்பாய் ! பழுதுனக்கும் நேர்ந்ததுவோ ?
பறந்தாயோ யாமிருக்க ? “இணைப்”பை மதித்தனையே,
ஏற்ற உரை தந்தனையே ! அணைத்தே பயிலுமுதல்
அவசரமாய் எங்குற்றாய் ? “வீடும் வெளியும்’ என
விளையாடி வந்தவன் நீ ! காடோ உறக்கம்? உனைக்
காலம் கரைத்திடுமோ ? “காலத்துயர்’ இதுவோ,
காலன் தருதுயரோ? ஞாலத்தில் நீ வாழ்வாய் !
நாம் உள்ளோம். 'வா மீண்டும் !
99
*தாமரைத் தீவான்
മ്മത്ത - 26 -

போய்வா மச்சான்.
என் இனிய நண்பனே.
நண்பா,
நின்னை நினைவுகொள எப்படி முடியும்? மறந்தால் அல்லவோ நினைவுகொள, மச்சான் எனும் வார்த்தையில் உலகத்து உறவுகள் அனைத்தையும் ஒரு சேர திரட்டித்தரும் அந்த உரிமையை எனக்குத் தந்தவன் நீ. கவிஞன் பேச்சாளன், கொள்கைப்பற்றாளன், பாடகன் என எத்தனை பல்பரிமாணங்கள்.
நீ.ஆன்மீகன். நான் மார்க்சியத்தை நேசிப்பவன். இரு துருவங்களின் இணைவு எப்படிச்சாத்தியமாயிற்று..!
புரியவில்லையே. மச்சான்? 40 வருடத் தொடர்பு. எப்படி. எப்படி. விகச்சித்துகடந்த பதினாறு வருடங்களாக சடைத்துப் பருத்த நிலையில் உனது முதற்கவிதைபோல் பொசுக்கி எரிக்கப்பட்டுவிட்டதே.
“சடைத்துப் பருத்து நிற்கும் அந்த ஆலமரத்தை பொசுக்கி எரியுங்கள்” என மல்லிகையில் முதற்கவிதை எழுதினாய். அன்றிலிருந்து உன் ரசிகன் நான். பண்ணைப் பாலத்தில். காதை வருடும் இளம் தென்றலோடு பிறை, நிலவு மறையும் வரை நீ பாடும் நீலவாணனின். “ஓ வண்டிக்காரா. ஒட்டு வண்டியை ஒட்டு” எனும் பாடல் இன்னும் என் காதில் ஒலிக்கிறதே. வண்டியோடு சேர்த்து நீயும் வேகமாக ஒடி மறைந்ததேனோ..!
இடதுசாரிச் சிந்தனை வசப்பட்ட என்னிடம் இடதுசாரிகள் பற்றி நீ கடும் விமர்சனம் வைத்தபோதெல்லாம் உன்னோடு முரண்பட்டவன் நான். போலி இடதுசாரிகள் பற்றிய எனது விளக்கத்தை நீ அங்கீகரித்தாய், அதற்காக உன்னைப் பற்றிய பெருமிதம் என்னுள் எப்போதும் இருந்தது.
-27- - ela

Page 17
“அகங்களும் முகங்களும்” தொகுப்பு வெளிவந்த காலத்தில் நாம் இவ்வளவு நெருக்கமுற்றிருக்கவில்லை. ஆயினும் அதில் வந்த கவிதைகளில் பலவற்றைப்பற்றி உன்னிடம் பிரஸ்தாபித்துள்ளேன். எனது விமர்சனத்தை ஏற்றுள்ளாய்.
“காலத்துயர்” முன்னர் வெளிவந்திருக்க வேண்டியது. ஆயினும் “காற்றுவழிக் கிராமம்’ அதனை முந்திற்று. இரண்டினதும் முதல் வாசகன் நானே. நீ ஒரு கவிஞன் என்பதை விட ஒரு கதை சொல்லி என அடையாளங்கண்டவன் நான். “ நெற்றி மண்’ தொகுப்பின் என்னுரையை நான் சிலாகித்தபோது நீ கூறினாய்’ உன் ஒருவனின் கருத்துப் போதும் நான் எழுதும் அனைத்தினதும் வெளிப்பாட்டிற்கு” 6T601 (I.
உனது " உயிர்த்தெழும் காலத்திற்காய்’ தொகுப்பான போது உன்னுடன் உடனிருந்தவன் நான், உனது கவிவரிகள் பிழையாக அச்சிடப்படக்கூடாது என்பதில் உன்னை விட அக்கறையாக இருந்தவன். ஆயினும் அப்பெருந்தொகுப்பில் சில பிழைகள் நேர்ந்துவிட்டமை உனக்கும் எனக்கும் வருத்தம்.
நீ உனது படைப் புகளை மட்டும் வெளியிட முனைந்தவனில்லை. இளம் கவிஞை கிருசாந்தியின் கவிதைத் தொகுதியை வெளிக் கொணர்ந்தவன். ஏ. மஜீத்தின் தொகுதி நிலாந்தனின் “மண்பட்டினங்கள்’ முதலிய வற்றை வெளிக்கொண உழைத்தவன். மு.த.வின் படைப்புகளை வெளியிட் பெருமுயற்ச செய்தவன். வெளியிட்டவன், கூடல் பதிப்பகத்தையும், கூடல அமைப்பையும் உருவாக்கி இளந்தலைமுறையை ஊக்கிவித்தவன்.
கெங்கேஸ், சத்தியன், துஸ்யந்தன், சுரேஸ் இன்னும் பலர் என ஒரு வளமான இளந் தலைமுைறையை உருவாக்கிட முன்னின்றவன். உன் மீது பொறாமை கொண்டோருடனும் நட்பைப் பேணியவன், சிரிப்பு, பாட்டு என நோயின் கடுமையிலும் இயல்பாய் இருந்தவன்.
&lgje - 28 -

ஒரு நல்ல மகனாய், ஒரு நல்ல தகப்பனாய், ஒரு நல்ல சகோதரனாய், ஒரு நல்ல கணவனாய் , ஒரு நல்ல மருமகனாய் ஒரு நல்ல மைத்துனனாய் உனது உறவுகளுடன் வாழ்ந்தவன். உறவுக்கும் அப்பால். ஒரு நல்ல நண்பனாக எல்லோருடனும் வாழ்ந்தவன்.
மைத்துனா..! உன் மீதான என் பிரியம் எத்தகையது? என் மீதான உனது கரிசனம் எத்தகையது? எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் எனக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை என ஆதங்கப்பட்ட உன் மன வேதனையை நீ வாய்விட்டுச் சொல்லவில்லை. உனது செயல் அதனை எனக்கு எப்போதும் உணர்த்தியபடி இருந்தது.
உனது அந்தரங்கம் புனிதமானது. அதனுள் இருந்த உண்மைகள் பலவற்றை நீ எனக்குக் கூறியுள்ளாய். நீ என்னிடம் எதையும் மறைக்கவில்லை என்று நான் நிச்சயம் நம்புகின்றேன். என் வாயைக் கட்டுப்படுத்தும் அந்த அஸ்திரத்தை நீ பிரயோகிக்கவில்லை. ஆயினும் உனது மரணம் என் மீது அந்த அஸ்திரத்தைப் பிரயோகித்துள்ளது. என்வாய் இப்போது அடைத்துப்போயுள்ளது.
உன் பிரிவு மேகலாவுக்கு, ரட் சகிக்கு, சசிபவனுக்கு மாத்திரமல்ல உனது மார்க்சியத்தை நேசிக்கும் நண்பனான எனக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு.
போய் வா மச்சான்..! என் இனிய நண்பனே...!
நந்தினி சேவியர்
a 29 -
அறிவு

Page 18
புதிது மீட்டலுக்கான ஒரு மீகரம்
(1) வெள்ளைக் கமலத்திலே வீற்றிருப்பாள் வெள்ளைக் கலை உடுத்தியிருப்பாள் கையில் வீணை தரித்திருப்பாள்
வெள்ளைக் கமலம் எதைக் குறிக்கிறது ? தூய அறிவின் மலர்வைக் குறிக்கிறது.
தூய அறிவுடையோரின் உள்ளக் கமலத்திலே அறிவரசி திகழ்ச்சி கொள்வாள் அறிவுடையோரின் கலையறிவுச் செயற்பாடுகள் தூய அறிவை எங்கும் எடுத்துச் செல்வன
தூய்மை துலங்க ஒரு யுகம் பிறக்கும். இதுவோர் கவிஞன் சொன்னது அந்த யுகம் எது ?
அது அறிவு யுகம். இருள்மை நீங்க அறிவு துலங்கும் யுகம் அறிவு என்பது ஒளியடைந்த கண் அறிவின் நோக்கு நிலை அது
அறிவு ஒரு சக்தி இயங்குநிலைச் சக்தி நுண்ணறிவுத் தொழிற்பாட்டுச் சக்தி அறிவெனும் சக்தியை நாம் கருவியாக்கினால் வாழ்வியலை கூர் தீட்டும் அறிவு யுகம் உருவாகும். அதற்குக் கடும் அறிவுழைப்புத் தேவை. சிந்தயைாம் ஆற்றல் சிறகுதைப்பும் மேலெழுகைக்கான உந்துதலும் வேண்டும். அறிவு உந்தல்
(2)
எனது மகள் அறிவுயுகத்தின் கருவியாகிய கணினியைக் கையாளுகிறாள். கணினியின் இணையவலையத் தளத்தினுள் வளையவரும் அறிவுத் தேடல் சிலந்தியாய் இயங்கி இரை கொண்டு வருவாள். உலகப் பரப்பின் நவீன கவிதைகளின் பிரதியெடுப்புகள் கொணர்வாள். நல்ல ஒவியங்கள் கொணர்வாள்.
அறிவு - 350 -

எளிய நடையில் அமைந்த தத்துவார்த்தவியங்கள் கொண்டு தருவாள் நல்லனவற்றைக் கண்டடையும் தேடலை அவள் என்னிடம் கற்றாள். அறிவின் அகலப் பரப்பின் தோட்டங்களை அவள் இன்று எனக்கு தேடித் தருகிறாள். தின்னத் தெவிட்டாத கணினித் தேம் பழங்களும், கலை ஞானங்களும் கலந்து பரிமாறி நாம் உண்ணுகிறோம்.
கணினி இன்றைய அறிவின் பரிமாற்றக் கருவியாயிற்று வீணையை மீட்டிய காலம் போய் கலைமகளின் கைவிரல்கள் இன்று கணினியை மீட்டும் காலம் வந்துவிட்டது. அறிவின் சுரங்களை சமநிலை பிசகாது அவள் மீட்டத் தொடங்கி விட்டாள். ஆதலால் அவளை அறிவு மகளென்றும் அழைக்கலாம். விண்ணளந்த விஞ்ஞானப் பறவைகளின் சிறகோசைகளை அவள் கணினியின் நுண்ணறிவு இழைகளில் வேண்டியவாறு மீட்டிக் காட்டுகிறாள். வீணையிநின்றும் விடுபட்டு பிரபஞ்சம் மேவிய அறிவின் மீசுர நரம்புகளின் மீட்டல் நிகழ்த்துகிறாள். இது அறிவு யுகத்தின் விண்ணளாவிய மீட்டல். ஆதலால் அவளை அறிவு யுகி என்றும் அழைக்கலாம். வெறும் தொழிலாளிகளாய் இல்லாது அறிவு யுகிகளாய் அமர்ந்து கணினிகள் மீட்டும் அறிவுடை மகளிர்கள் இங்கு ஆயிரம் ஆயிரம் தோன்றுக. ஆறிவின் தோற்றுவாயில்களில் திறனிகளாகுக.
(3) அறிவு யுகி ஒருத்தி வந்தமர்கிறாள் கணிப் பொறித்தட்டச்சில் கைவிரல்கள் தொடுகிறாள். அறிவின் தொடுகை அறிவுப் பரப்பை அகலிக்கிறது. கணினித் திரையில் கண்விரிக்கும் வெண்ணிதழ்களின் கூட்டிணைவு. ஒரு வெண்தாமரையாக விரிகிறது. அறிவுத் தாமரை என்றதற்குப் பெயர் இடுவோம். பொய்கையில் பூத்ததல்ல இது அறிவின் மெய்கையில் பூத்தது. மெய்யறிவுத் தாமரையில் மேவித் துலங்கும் உருவம் யாருடையது? அறிவகத்தில் குடியமர்ந்த அறிவுயுகத்துப் பெண்ணினுடையது
பேணும் நல்லறிவே பெண்ணின் குணமெனப் பேசப்படும் ஒரு யுகம் தோன்றினால் தான் அது அறிவு யுகம் எனப் பேசப்படும். ஆணும் பெண்ணும் அறிவில் நிகரெனும் காலம் வந்துற்றால்தான் அறிவுலக நாகரிகம் என்று பேசப்படுவது பொருளுடையதாகும். அறிவுலக நாகரிகம் இருபாலாரிடத்தும் அறிவுடமை உண்டா? என்றே இனிக் கணிக்கும். பொறிகளின் பொம்மை வார்ப்பாக பெண்ணைக் கணிப்பது புல்லறிவு. பொறிகளின் கையாள்கையை மீறி பெண்மை புத்துயிர்ப்பது புத்தறிவு. நாமெல்லாம் புத்தறிவுச் சக்தியை உடையவர்கள் ஆவோமாக.
۔ 351 ہے
ട്രി

Page 19
தெய்வத்தின் திருவுருவமான கலியுகத்தில் அவதரித்த ரீ சுவாமி சிவானந்தா
- நாகராஜா கணபதிப்பிள்ளை
திருகோணமலை.
சத்தியத்தைத் தேடுபவர்களுக்கும் தர்மவழியைப் பின்பற்றுபவர்களுக்கும் இல்லறவாசிகளுக்கும், சாதகள்களுக்கும், துறவிகளுக்கும் வழிதெரியாமல் மனம்போன போக்கில் வாழ்ந்து கொண்ருெட்பவர்களுக்கும் வழிகாட்டியாகவும் ஒளிகாட்டியாகவும் விளங்கும் சுவாமி சிவானந்தரின் திருவடிகளுக்கு பலகோடி வணக்கம்.
இமாலயம் ரிஷிகேசத்தில் அவர் ஏற்றி வைத்த சத்திய தர்ம ஒளியானது அவர் தொடங்கி வைத்த பிரார்த்தனை மூலமாகவும், ஆற்றிய தெய்வீக உரைகள் மூலமாகவும் எழுதிய நூல்கள் மூலமாகவும் சாந்தி வேண்டி அவர் அருளிய உலக பொதுப் பிரார்த்தனை மூலமாகவும் உலகெங்கும் பரவி இன்றும் ஒவ்வொரு இறை ஆத்மாக்களின் உள்ளத்திலும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
கீதையின் திருஉருவமாக ஸ்திதப்பிரஜ்ஞனாக வாழ்ந்த சுவாமிகளது நிரந்தர வேண்டுகோள்:-
கடவுளுடன் நாளைத் தொடங்குங்கள் கடவுளுடன் நாளைத் தொடருங்கள் கடவுளுடன் நாளை நிரப்புங்கள் கடவுளுடன் நாளை பூர்த்தி செய்யுங்கள்!
ரிஷிகேசம், கங்கை கரைபுரண்டோடும் இமயமலைச் சாரலில், இறைவன் கோயில் கொண்டிருக்கும் திருக்கைலாயம், கேதாரம், பத்திரிநாதம், கங்கோத்திரி, ஜமுனோத்திரி முதலிய தெய்வீக நிலைகளுக்குச் செல்லும் நுழைவாயில். அங்கு சென்று சிவானந்தர் ஆச்சிரமம் எங்கு என்று கேட்டால் குருடனும் வழிகாட்டுவான்.
டாக்டர் குப்புசாமி
யார் இந்த சிவானந்தர்? இந்திய, தமிழக, திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தமடைக் கிராமத்தில், அப்பைய தீட்சதர் பரம்பரையில் வந்த சிவபக்தர் வெங்கு ஐயருக்கும் பார்வதி அம்மாளுக்கும் 08:09.1887 ல் பிறந்து குப்புசாமி என நாமம் சூட்டப்பட்ட தவப்புதல்வன். சிறுபராயம் தொட்டே பிறரிடத்தில் கருணை செலுத்துபவராக வாழ்ந்த குப்புசாமி உடற்பயிற்சி செய்வதிலும் வல்லவராக வாழ்ந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய குப்புசாமி மெட்ரிகுலேசனை முடித்துக் கொண்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூாயில் பயின்று டாக்டர் பட்டம் பெற்றார்.
அறிவு -32 -

மலேயா சிங்கப்பூர் என அழைக்கப்பட்ட ஐக்கிய மாநிலங்களில் தற்போது மலேசியா என அழைக்கப்படும் நாட்டில் வாழும் பல்லாயிரக்கணக்கான றபர் தோட்டத் தொழிலாளர்கள் மருத்துவ வசதியின்றி வாழ்வதைக் கேள்வியுற்று உடனடியாகவே 1913 ஆம் ஆண்டில் அங்கு சென்று அவர்களது துன்பங்களை நேரில் கண்டு அவர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை நல்கினார். பணத்தையே மையமாக வைத்து செயல்ப்பட்ட டாக்டர்களின் மத்தியில் டாக்டர் குப்புசாமி நடுநிலை வகித்து சேவை செய்தார். குறிப்பாக அவர் ஏழைகளை இனம் கண்டு மருத்துவம் புரிந்ததோடு அவர்களுக்கு வேண்டிய பணத்தையும் கொடுத்துதவினார். நோயாளர்களோடு அன்பாகவும், தைரியமூட்டுகின்ற சந்தோசப்படுத்தும் பகிடி வார்த்தைகளையும் பேசி உற்காசப்படுத்துவார். மருந்தைவிட அவரது அன்பான வார்த்தைகள் நோயாளர்களைக் குணப்படுத்தியது.
தெய்வீகத்தை நோக்கி.
V டாக்டர் குப்புசாமி வைத்தியம் பார்த்துக் கொண்டே நோயாளர்களுடன் மற்றவர்களையும் அழைத்து பிரார்த்தனையிலும் ஈடுபடுவார். மருத்துவமனை வாடுகளுக்கும், வரமுடியாத நோயாளர்களினது வீடுகளுக்கும் சென்று தன் கைகளினாலேயே நோயாளர்களின் வாய்களில் தெய்வீகப் பிரசாதத்தை ஊட்டுவார். தெய்வீகம் அவரை மெல்ல மெல்ல ஆட்கொள்ளத் தொடங்கியது. “மருத்துவராக நான் உடலை வெட்டினேன், ஆனால் நான் யாரினதும் உடல்களில் ஆத்மாவைக் காணவில்லை’ என உணரத் தொடங்கினார். பிறப்பு, இறப்பு, நோய், துன்பம் ஆகியவைகள் மூலம் பெறும் தீமைகளை அனுபவத்தின் மூலம் அறிந்து, டாக்டர்களினால் ஒரு நோயாளிக்கு எவ்வளவு வைத்தியம் செய்தாலும், நோயாளியைத் தேற்றினாலும், அவனை இவைகளிலிருந்து காப்பாற்ற முடியாது என்ற உண்மையை உணர்ந்து கொண்டார். “ உலகப் பொருட்கள் அனைத்தும் அழியக்கூடியது, நிலையற்றது. ஒவ்வொரு பொருளிலும் மரணம் என்ற வர்ணம் தீட்டப்பட்டு இருக்கிறது, உலகியலுக்காக வாழும் உலக வாழ்க்கையில் என்ன இருக்கிறது. எதைப் பெற முடிகிறது, மக்கள் எப்படி இவ்வாழ்க்கையை நடத்த முடியும், இது பூலோக நரகம் அல்லவா’ என்ற உள்ளுணர்வு அவரைச் சிந்திக்கச் செய்தது. உண்மையைப் புரிந்து கொண்டார்.
புத்தரும் வழிகாட்டினார்.
அரண்மனையிலிருந்து வெளியுலகத்திற்கு வந்த சித்தார்த்தர் கண்ட முதற்காட்சி மூன்று காலில் சென்ற முதியவரை, முதுமையை. இரண்டாவது காட்சி நோய்வாய்ப் பட்ட மற்றுமொரு முதியவரை, மூன்றாவது கண்ட காட்சி மரணித்த ஒருவரின் பிணத்தை. இது தான் வாழ்வா என நினைத்த சித்தார்த்தரை, புரிந்துகொள்ளமுடியாத உணர்வு ஆட்கொண்டது. இச்சிந்தனையுடன் அரண்மனை நோக்கிட் போகும் வழியில், தனிமையான ஓரிடத்தில், துறவி ஒருவர் தியானம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார். வேறு எவர் முகத்திலும் காணாத அமைதியையும் - 33 - அறிவு

Page 20
பிரகாசத்தையும் அத்துறவியின் முகத்தில் கண்டார். அத்துறவி ஆசைகளைத் துறந்து நிலையான மெய்ப் பொருளைக் காணும் நிவ் ருத்தி மார்க்கத்தில் தியானத்திலமர்ந்திருக்கின்றார் என்னும் செய்தியை தேரொட்டி சன்னாவிடமிருந்து அறிந்து கொண்டார். ஆசைகள் அனைத்தையும் அகற்றி, அரண்மனை வாழ்வைத் துறந்து தானும் ஒரு துறவியாக வேண்டும் என்ற எண்ணம் அவரை ஆட்கொண்டது. ஒவ்வொரு மனிதனும் கவலைகளிலிருந்து விடுபட்டு அமைதியையும் ஆனந்தத்தையும் அடைய வேண்டுமென்ற வழியைக் கண்டாக வேண்டுமென்ற எண்ணத்தில் இரவு பகலாக தன்னை அர்ப்பணித்து தியானத்தில் அமர்ந்தார்.
பல வருடங்களின் முயற்சியில் சித்தார்த்தர் முழுநிலை எய்தினார். கெளதம புத்தராகினார். புத்தரின் வாழ்வும் வைராக்கியமும் துறவும் அவரடைந்த முழு நிறைவும் டாக்டர் குப்புசாமியின் மனத்தில் வேர் ஊன்றியது. ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டார். மனிதர்கள் படும் வேதனையும் கவலையும் அவர் மனத்தை மாற்றியது. அழியக்கூடிய ஒவ்வொன்றும் துக்கமெனக் கண்ட டாக்டருக்கு புதிய" பார்வையும் புத்துணர்ச்சியும் கிடைத்தது. அமைதியும். ஆனந்தமும் பூரணமான பாதுகாப்புள்ள தெய்வீக இல்லம் ஒன்று உண்டென நம்பிக்கை கொண்டார். இரவு பகலாக ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டார். தவம் செய்ய வேண்டும். ஞான ஒளியைக் காண வேண்டும், ஆத்ம ஞானம் பெற வேண்டும். ஒவ்வொருவரது வாழ்விலும் ஒளியேற்றும் வழியைக் காணவேண்டும். மனிதன் பிறப்பையும் இறப்பையும் கடந்து செல்ல வேண்டும் என எண்ணினார். துறவறம் மேற்கொள்வதே இதற்கு வழியெனக் 6603TLITI.
இமயம் வரவேற்றது
இந்நிலையில், ஜீவாத்மா பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்கும் இரகசியத்தினை, ஒரு யோகியாகவும். ஞானியாகவும், சித்தராகவும் விளங்கிய கடப்பை ரீபரமஹம்ச சச்சிதானந்த யோகீஸ்வரர், துல்லியமாக தமிழில் எழுதிய ஜீவட்பிரம்மைக்கி வேதாந்த ரகஸ்யம் என்ற பழைய நூல் ஒன்று டாக்டர் குப்புசாமியின் கையில் கிடைத்தது. அவள் பல அறிவுள்ள நூல்களை ஏற்கனவே படித்திருந்தாலும் அவரின் உள்ளுணர்வை விழித்தெளச் செய்த முதல் வேதாந்த சாஸ்திர நூல் இதுவேயாகும். திரும்பத் திரும்ப பல தடவைகள் இந்நூலினைப் படித்தார். அவள் உள்ளத்தில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. தன் உள்ளிருக்கும் ஆத்மனை பரம்பொருளை அறிந்து உணர்ந்து வேறுபட்ட மனிதராகவே மாறிவிட்டார். இந்நிலையிலும் அவரிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி விரைவில் நோய் மாறிவிடும் எனக் கூறி விபூதிப் பிரசாதம் கொடுப்பார். அவரது ஆன்மீக வாழ்க்கைக்கு மலேசியாவில் டாக்டராக புரிந்த பணி உதவியது. துறவறம் பூண வழிகாட்டியது. ஊள்ளேயிருந்து அழைப்பினைப் பெற்றார். உலகியல் வாழ்க்கையிலிருந்து அழைப்பினைப் பெற்றார். உலகியல் வாழ்க்கையிலிருந்து . விடுதலை பெற்றுக் கொண்டார். மலேசிய நாடு அவரை 1922ல் பாரத நாட்டிற்கு வழி அனுப்பி வைத்தது.
அறிவு ー34 -

பாரத நாடு திரும்பிய அவர் தனித்திருக்கவும், விழித்திருக்கவும் தியானம் oசய்யவும் இமயமலைக்கு வந்தார். இறைவனின் திருவருள் வழிநடத்த, பாதணிகள் இல்லாமுலும் எளிமையான உடையுடனும் பரிவ்ராஜ வாழ்க்கை முறையினை பின்பற்றி நடையாகவே கிராமம் கிராமமாக சுற்றித்திரிந்து, கிடைத்ததைக் கொண்டு வாழ்ந்தும், பல வேளைகளில் பசிகிடந்தும், வெறும் தரையில் மரங்களுக்கடியில் படுத்துறங்கியும் சாதனையில் ஈடுபட்டு வாழ்ந்தார். இவ்வாழ்க்கை அவருக்கு சமநோக்கையும், பொறுமையையும், சகித்துக்கொள்ளும் தன்மையையும், தீவிர வைராக்கியத்தையும் தந்தது.
இறுதியில், இறைவனின் அருட்கொடையாக கங்கை கரைபுரண்டோடும் இமயத்தின் அடிவாரத்திலுள்ள தெய்வீக புருஷர்கள் வாழும் ரிஷிகேசத்திற்கு 1924ல் வந்து சேர்ந்தார். பகவான் கிருஷ்ணன் கீதையில் நான் இமயமலையாகவும், கங்கையாகவும் இருக்கின்றேன் என்ற கூற்றுக்கு அமைய, டாக்டர் குப்புசாமியும் இமயமலையை தந்தையாகவும், கங்கையை தாயாகவும் ஏற்றுக் கொண்டு தனது தவ வாழ்க்கையை மேற்கொள்ளத் தொடங்கினார்.
கங்கைக் கரையில் அவரை ஆட்கொண்ட சிருங்கேரி சங்கராச்சாரியார் மடத்தைச் சேர்ந்த பூரீசுவாமி விஷ்வானந்த சரஸ்வதி அவருக்கு சந்நியாச தீட்சையை அருளினார். ஆதன்பின் கைலாச ஆச்சிரமத்தில் ரீசுவாமி விஷணுதேவானந்தஜி மகராஜ் அவர்கள் வஜ்ரஹோமம் முதலிய தெய்வீகச் சடங்குகளை நடாத்தி வைத்தார். பழையன கழிந்த புதிய பிறவியெடுத்த அவர் சந்நியாசிக்குரிய காவி உடையை குருவிடம் இருந்து பெற்று அணிந்து கொண்டார். குப்புசாமி என்ற பெயர் களையப்பட்டு, பூரீசுவாமி சிவானந்த சரஸ்வதி என்ற நாமகரணம் சூட்டப்பட்டார். ஸ்வர்க ஆசிரமம் அவரது வாழ்வின் ஆணிவேர். தாயைப் போல் சுவாமிைைய நலமுடன் கவனித்துக் கொண்டது. R
“நான் இரக்கம் கொண்ட இதயத்துடன் இரவும் பகலும் ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் தொண்டு செய்து அவர்களை துன்பத்திலிருந்து விடுவிக்க எனது சக்தியையும் நேரத்தையும் செலவிட்டேன். இத்தகைய தன்னலமற்ற தொண்டு, எனது இதயத்தையும் மனத்தையும் தூய்மைப் படுத்தி என்னை ஆன்மீகப் பாதையில் அழைத்துச் சென்றது’ - சுவாமி சிவானந்தர்.
“சுவாமி சிவானந்தாஜியின் தலை முதல் கால் வரை இதயமே
நிறைந்திருக்கின்றது”
சுவாமி சுத்தானந்த பாரதி -
1933ல் ரிஷிகேசத்தில் சுவாமி சிவானந்தர் தனது இருப்பிடத்தை கங்கைக் கரையில் லஷ்மன் ஜில்லாவுக்கு அருகாமையில் முனிகீரதி என்ற இடத்தில் அமைத்துக் கொண்டார். அவர் பல காலம் கடுந் தவத்திலும் தியானத்திலும், பிரார்த்தனையிலும் ஈடுபட்டார். யோகத்தில் உயர்நிலையை அடைந்த அவரது முகத்தில் ஆன்மீக ஒளி பிரகாசித்துக் கொண்டிருந்தது. பல நாட்கள் தன்னை மறந்து தனது அறையைவிட்டு வெளியில் வராமலேயே தியானத்தில்
ー35 〜
அறிவு

Page 21
ஈடுபட்டிருப்பார்:ஊண் உறக்கம் அற்ற நிலையில் சம்ாதியில் ஆழ்ந்து விடுவார்.
ஓய்வில்லாது சேவை செய்த ஒரு புனித ஆத்மா. அவர் தமக்காக எதையும்
செய்ததில்லை. பிறரின் பிரச்சனைகளை அறிந்து அவர்களுக்கு வழிகாட்டும் பணியில் கூடிய நேரத்தை செலவிடுவார்.
குருதேவர் காலை முதல் மாலை வரை சுறுசுறுப்பாகவே இருப்பார். சோர்வோ கோபமோ சிடுசிடுப்போ அவரிடம் காணவே முடியாது. அடக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் தான் இருப்பதோடல்லாமல் பிறரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டிருப்பார்.
காலை 3.30 மணிக்கே எழுந்திருக்கும் குருதேவர், தனது உணவிற்காக சிறிது நேரமே செலவிட்டு மிகுதி நேரங்களில் அலுவலக வேலைகளையும், பக்தர்களோடு உரையாடுவதிலும் ஈடுபட்ட பிற்பாடு நீண்ட நேரம் சாதனையிலேயே ஈடுபடுவார். மாலை 6.00 மணிவரை 2 மணி நேரம் கங்கையை நோக்கி தியானத்திலமர்ந்திருப்ப்ார். மாலை உணவு முடிந்ததும் சற்சங்க மண்டபத்திற்கு வந்து ஓம் என்ற பிரணவத்தை சொல்லி கணேச கீர்த்தனையுடன் சற்சங்கத்தை தொடங்குவார். ஓம் என்ற பிரணவம் அவரது உயிர்நாடி. ஒய்வு நேரம் கிடைத்த போதெல்லாம் தமது தொடையில் ஒம் என்று எழுதுவது அவரது வழக்கம், சற்சங்க நிகழ்வுகளின் பின் மகாமிருத்யுஞ்யை மந்திரபாராயணம் ஆர்த்தி முதலியவற்றுடன் சற்சங்கம் நிறைவுறும்.
பிரார்த்தனை - மந்திர ஜெபம்
பிரார்த்தனை அவரது உயிர். உலக மக்களை பிரார்த்தனையில் ஈடுபடுத்த அவர் அரும்பாடு பட்டார். சகல ஆபத்துக்களிலிருந்தும் ஒருவரைக் காப்பாற்றக் 8nigu
“ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸ"கந்திம் புஷ்டிவர்தனம்
உள்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷிய மாம்ருதாத்” என்ற மகாமிருத்யுஞ்ய மந்திரத்தினை தினமும் ஐபிப்பதோடு உலகெங்கும் உணர்வுபூர்வமாக ஒலிக்கச் செய்த பெருமை அவருக்குண்டு.
குருதேவர் ஏகாதசி விரதத்தில் மிகவும் ஈடுபாடுடையவள். மற்றவர்களையும் ஈடுபடச் செய்வார், ஏகாதசியன்று எதையுமே சாப்பிடவும், அருந்தவும் மாட்டார். எல்லாம் மறுநாள் துவாதசி பாறணைக்குப் பின்புதான். இன்றும் சிவாநந்த ஆச்சிரமத்தில் பின்பற்றப்படுகின்றது. ஏகாதசியன்று நாராயணாய ராம ராம, கிருஷ்ண கிருஷ்ண மந்திரங்களை ஜெபித்துக் கொண்டேயிருப்பார்.
ராம நாம யக்ஞம்
குருதேவ் மகாராஜினால் ஸ்தாபிக்கட்பட்ட விஸ்வநாதர் ஆலய மண்டபத்திற்கு அருகாமையில் உள்ள பிரார்த்தனை மண்டபத்தில் கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ஓர் அற்புதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகில் கலியுகத்தில்
அறிவு - 356 -

ந ைபெற்றுக்கொண்டிருக்கின்ற துன்பத்தில் இருந்து எம்மைக் காப்பாற்றுங்கள் என்று இறைவனிடம் வேண்டுகின்ற மக்களுக்காக சாந்தி, அமைதி வேன்டி மகாமந்திரமாகிய ராம ழந்திரத்தை ஜப யக்ஞமாக குருதேவரே தொடங்கி வைத்து ஒரு இடைவெளியுமில்லாது ஒவ்வொருநாளும் 24 மணிநேரமும் நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆணை 50 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் ரிஷிகேசத்தில் திவ்ய ஜீவன சங்க சிவானந்தர் பிரார்த்தனை மண்ட்பத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
மந்திரம்:
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே,
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே. எப்போதும் திறந்து வைக்கப்பட்டிருக்கும் இம்மண்டபத்தினுள் இம்மந்திரத்தை சிவானந்த தபோவன துறவிகள் சுழற்சி முறையில் இரவு பகலாக ஓதிக் கொண்டிருக்கின்றார்கள். அங்கு செல்லும் யாவரும் இதில் பங்குபற்றலாம். பல வருடங்களாக இதில் பங்கு பற்றும் வாய்ப்பினை பெற்ற நான் இங்கிருந்தபடியே இதனை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றேன்.
சேவையாகவே யோகாசனம் பிராணாயாமம் கற்பித்தார்:
அவர் வாழ்வில் சேவை மனப்பான்மை கொழுந்து விட்டெரிந்தது. லக்ஷ்மன் ஜுல்லா பகுதியில் பல சாதுக்கள் குளிரினாலும் சத்தில்லா உணவினாலும் நோய்வாய்ப்பட்டு துன்பப்படுவதைக் கண்டு இரக்கம் கொண்ட சுவாமிகள், பொது சேவைக்காக தபாலகத்தில் வைத்திருந்த ஒரு சிறு தொகையினைப் பெற்று அவர்களுக்கு உதவினார். ஒரு மருத்துவ மனையையும் ஸ்தாபித்து சேவை புரிந்தார். 1927 ல் சத்திய சேவாத்திரம் நிறுவினார். அவரை நாடி வந்தவர்களுக்கு யோகாசனம் பயிலுவிப்பார். சுவாமிஜி யோகாசனக் கலையில் வல்லுனராக விளங்கினார். பிராணாயாமம் என்ற சொல்லைக் கேட்டாலே எல்லோருக்கும் ஒரு பயம் ஏற்படும். சுவாமி மிகவும் அன்பாக யாரும் பயப்படத் தேவையில்லை, பிராணாயாமம் என்பது உங்களது மூச்சை இலகுவாக சமநிலைப்படுத்தி உயிராற்றல் பயிற்சியினால் நம்மை நாமே ஆட்கொள்ளும் சக்தியினைப் பெற்று இறைநிலை அடையலாம் என இலகு பிராணாயாம முறைகளை மாணவர்களுக்கு கற்பித்தார். ஆச்சிரமத்தில் மட்டுமல்ல அவரது சேவா யாத்திரையின் போது 1950ல் இந்திய மாநிலங்கள் இலங்கை முதலிய இடங்களுக்கும் சென்று கிரியா யோக முறைகள், யோகாசனங்கள், பிராணாயாமம் முதலியவைகளைக் கற்றுத்தந்ததோடு ஆன்மீகச் சொற்பொழிவுகள் மூலம் தெய்வீக உணர்வலைகளை உருவாக்கினார். பத்து வருடங்களுக்கும் மேலாக பிரசார யாத்திரையில் ஈடுபட்டார்.
குருவும் சிஷயர்களும் சந்நியாசமும்
யார் குருவாக முடியும். இமயத்தின் குரல் மூலம் சுவாமி தந்த செய்தி, ஒருவர் குருவாக வருவதற்கு இறைவனுடைய கட்டளை வேண்டும். எவன் ஒருவன்
ം 37 - else

Page 22
ரிஷிகேசத்தில் சிவாநந்த ஆச்சிரமத்தில் அவரை சமாதிவைத்த சிவானந்தர் சமாதி கோயிலில் அவரது பாதங்களைத் தொட்டு வணங்கும்போது எம்மையறியாத புத்துணர்ச்சி, காந்த சக்தி எம்மில் பாய்வது போன்ற உணர்ச்சியினை உணரக் கூடியதாகவுள்ளது. வுாழ்க்கையில் ஒரு தரமாவது ரிஷிகேசம் செல்லுங்கள். சிவானந்தரின் சமாதிக் கோயிலுக்குள் நுளையுங்கள். ரீசுவாமி சிவானந்தரை அங்கு காண்பீர்கள். மெய்மறந்து நிற்கும் உங்களை சிவானந்தர் ஆசிர்வதிப்பார்.
ராணி தேனியை சக தேனீக்கள் சென்று மொய்ப்பது போல் உலகின் பல பாகங்களிலிருந்தும் வந்து சுவாமியை தரிசித்தவர்களும், சமாதி கோயிலைத் ; தரிசித்தவர்களும், சுவாமியைப் பற்றி அறிந்தவர்களும் அவரைப் பற்றி நிறைய நூல்களும் கட்டுரைகளும் எழுதியுள்ளார்கள். உலகம் உள்ளவரை எழுதிக் கொண்டேயிருப்பார்கள். எப்படி கிருஷ்ண பகவானின் கீதையும், யேசுபிரானின் பைபிளும் உலகத்தில் பரவியுள்ளதோ அப்படியே சுவாமி சிவானந்தரின் படைப்புகளும் பரவியுள்ளன. தெய்வீகத்தை உணர்த்திக் கொண்டிருக்கின்றன.
ஓம் நமோ பகவதே சிவானந்தாய குருதேவர் சமாதியடைந்தார்
1963ம் ஆண்டு ஜூல்ை 14ம் திகதி அவரது இறுதி நாள். இரவு சுவாசிப்பதில் சிறிது சிரமம் ஏற்பட்டது. தண்ணி வேண்டி சைகை காடடடினார். சீடர்கள் வெந்நீர் கொடுக்க முயற்சித்தபோது கங்கா ஜலம் வேண்டுமெனக் கேட்டார். அது தான் அவரது கடைசி வார்த்தை. கொடுக்கப்பட்ட ஒரு டம்ளர் கங்கா ஜலம் முழுவதையும் குடித்தார். தான் நேசித்த தாயாகிய கங்கா மாதாவின் ஐலத்தைப் பருகியதும் சிறிது நேர தூக்கத்திற்கு பிற்பாடு மீண்டும் சுவாசத்தில் சிரமம் ஏற்பட்டது. டாக்டர்கள் வந்தார்கள். சுவாமிஸி வாழும்போதே தனது திவ்ய ஜீவன சங்க தலைமைப் பதவியை ஏற்று நடத்தும்படி வேண்டிய ரீமத் சுவாமி சிதானந்தஜி, சங்கத்தின் காரியதரிசி சுவாமி கிருஷ்ணானந்த மகராஜ், சுவாமி மாதவானந்தஜி, சுவாமி தேவானந்தஜி மற்றும் மூத்த சுவாமிகள், ஆச்சிரமவாசிகள் முதலியோர் சூழ்ந்து நின்று பரத்தை நோக்கி மெனமாக பிரார்த்தனை செய்தனர். இரவு 11.15 மணிக்கு குருதேவர் மூன்று தடவைகள் ஆழ்ந்த மூச்சுவிட்டார். அப்பொழுது சுவாமி சிதானந்தஜி மூன்று தடைவ “ஓம்கார” ஒலியை உரக்க எழுப்பினார். குருதேவரின் முகம் எப்பொழுதும் போல் பிரகாசித்து அடங்கியது. சுவாமி சிவானந்தர் பூத உடலை நீத்தார். உத்தராயணத்தின் இறுதி நேரம். அன்று நள்ளிரவில் உன்னத நிலையில் கிரகங்களின் ஒன்று சேர்க்கையில் பரத்தை நோக்கிப் புறப்படவிருக்கும் எந்த ஒரு யோகியும் இந்நேரத்தைத் தவறவிடமாட்டார்கள் என ஆருடத்தில் சிறந்த ஒருவரின் கூற்றுக்கமைய சுவாமி சிவானந்தரும் இந்நேரத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
சமாதி ஆலயம்:
சுவாமிஜியின் பூதவுடல் திவ்ய ஜீவன சங்க வளாகத்தினுள் விஸ்வநாத ஆலயத்திற்கருகாமையில் அவர் அமைத்த ஆச்சிரம நிழலில் சமாதி வைக்கப்பட்டு
அறிவு ۔ 40 سے

சிவானந்த சமாதி ஆலயமாக போற்றப்பட்டுக் கொண்டு வருகின்றது. இங்குள்ள சமாதி சிவலிங்கத்திற்கு பக்தர்கள் தங்கள் கைகளினாலேயே அபிஷேகம் செய்யலாம். சத்சங்கங்கமும், பிரார்த்தனையும், திருவடிப் பூசையும் அபிஷேகமும், தபோவன பெருவிழாக்களும் நடைபெறுகின்றது. பிரம்ம முமூர்த்த வேளையில் இங்குதான் சுவாமிகளும் பக்தர்களும் தியான சாதனை செய்கின்றார்கள்.
அருள்பெற்ற இலங்கை சந்நியாசிகள்
சுவாமி சிவானந்தருடைய அருள் ஆட்சியை கேள்வியுற்ற எத்தனையோ சுத்த ஆத்மாக்கள் இலங்கையிலிருந்து ரிஷிகேசம் நோக்கி யாத்திரை சென்றார்கள். அவரினது தவ வலிமையும், சந்நியாச கொடை வள்ளல், தன்மையினாலும் இலங்கையிலிருந்து சந்நியாசம் வேண்டிச்சென்றவர்களை சந்நியாசிகளாக்கினார்.
இலங்கை திருகோணமலையிலிருந்து 1952 ம் ஆண்டு பாரதத்திற்கு யாத்திரை சென்ற செல்வி செல்வநாயகி நாகரெத்தினம்பிள்ளை ரிஷிசேகம் சென்று சுவாமி சிவானந்தரைக் காணும்பேறு பெற்றார். தன்னை மறந்தாள், தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாழே என்ற மணிவாசகள் அருளிய திருவாசகத்துக்கமைய தனனை குருதேவர் சிவானந்தருக்கு அர்ப்பணித்தார். ஊர், உறவு, ஆசிரியை உத்தியோகம், சொத்து, சுகம் எல்லாவற்றையும் உதறித்தள்ளிவிட்டு, சுவாமி சிவானந்தரிடமிருந்து சந்நியாசிகத் தீட்ஷையைப் பெற்றுக் கொண்டார். குருதேவரால் சுவாமி சிவானந்த சச்சிதானந்த சரஸ்வதி என்ற குரு நாமத்தைப் பெற்றார். இலங்கையிலிருந்து சென்று சிவானந்தரிடம் துறவறம் பெற்ற முதற் பெண்மணி இவரேயாவார்.
சுவாமிஜி அம்மையாரிடம், தாயகம் திரும்பி, திருக்கோணமலையில் தெய்வநெறிக் கழகம் ஒன்றைத் தொடங்கி தொண்டாற்றும்படி பணித்தார். .தாயகம் திரும்பிய மாதாஜி என அழைக்கப்ப்டும் அம்மையார் 1953ம் ஆண்டு கார்த்திகைத் திங்கள் ஏழாம் நாள் சிவானந்த தபோவனம் என்ற பெயருடன் தெய்வ நெறிக்கழகத்தினை அமைத்து திரு.சு.நடேசன் அவர்களால் அது திறந்து 60)6)Jë 35UTUL Lg5. தபோவனத்தில் இலவச மருத்துவமனை, ஆதரவற்ற குழந்தைகளுக்கு சமய, கலாச்சாரங்களுக்கமைய வாழவும், உணவு. உடை, கல்வி வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. இத்தொண்டு சிறப்புற நடைபெற மாதாஜியுடன் ஒன்றிணைந்து செயற்பட, சிவானந்தரின் முறைவழித்தோன்றலான சுவாமி சச்சிதானந்தஜியை ரிஷிகேசத்திலிருந்து அனுப்பி வைத்தார். இந்நிலையம் வளர்ச்சியடைந்தது.
சில காலத்திற்குப் பிற்பாடு சுவாமி சச்சிதானந்தயோகிராஜ கண்டி தென்னக்கும்பராவில் பிறிதொரு சிவானந்த ஆச்சிரமம் அமைத்து நடாத்தி வந்தார். இலங்கையிலிருந்து மேலும் பலர் ரிஷிகேசம் சென்று சுவாமிஜியிடம் தீட்ஷை பெற்றார்கள். சுவாமி முக்தானந்த மாதாஜி யாழ்ப்பாணம் நல்லூரில் சிவானந்த தபோவனத்தில் தொண்டாற்றினார். மட்டக்களப்பில் ஆரையம்பதியைச்
- 41 - May

Page 23
சேர்ந்த சுவாமி நித்தியானந்தர் ரிஷிகேசத்தில் தீட்ஷை பெற்று இன்றுவரை அங்கேயே தொண்டாற்றிக் கொண்டிருக்கின்றார். சுவாமி பிரகாசமயானந்தர், சிவானந்தர் ஆச்சிரமத்தில் வாழ்ந்த பிற்பாடு இலங்கை திரும்பி தற்போது கொழும்பில் ஆத்மீகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். சுவாமி ஓம்காரானந்தா மட்டக்களப்பில் சிவானந்த தெய்வ நெறி கழகம் அமைத்து தொண்டாற்றி சமீபத்தில் சமாதியடைந்தார். சுவாமி சைத்தன்யானந்தர், மற்றும் தென்னக்கும்பராவில் சந்நியாச தீட்ஷை பெற்ற சின்னமாதாஜி, சுவாமி அறிவானந்தா, 95 வயதிலும் தன் கடமைகளை செய்து தொண்டாற்றி வரும் முக்தானந்தள் முதலியோர் சிவானந்தரின் நிழலில் வாழ்கின்றார்கள். 1950 ல் சுவாமி சிவாநந்தர் இலங்கை மண்ணில் காலடி பதித்து பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு ஆசி வழங்கினார். அவரது சந்நியாசப் பரம்பரையைப் பெற்ற நாம் பாக்கியசாலிகளே.
சுவாமிஜியின் அருள்வாக்கு
எங்கும் நிறைந்ததும், மாறுபாடு அற்றதுமான சாசுவதமான ஆத்மா ஒன்றே நிலைத்த மெய்ப்பொருள். அதுவே நம்முள் இயங்குகின்றது. ஆத்மாவை அறிவது அல்லது ஆத்மானுபூதி பெறுவதே பிறவியின் லட்சியம். இதை அடைவதற்கு சுவாமிஜி காட்டும் வழி மிக எளிமையானது அதை அவரது சொற்களிலேயே கேட்போம்: w
“தொண்டுசெய், அன்பு காட்டு, கொடு,
தூய்மை அடை, தியானம் செய். அனுபூதி பெறு, நல்லவனாக இரு, நல்லதே செய், அன்பாயிரு. கருணை காட்டு: “நான் யார்?’ என்று ஆராய்ச்சி செய், தன்னை (ஆத்மாவை) அறிந்து விடுதலை பெறு”
SERVE LOVE GIVE PURIFYMEDTATE REALISH BE GOOD DO GOOD BE KIND BECOMPASSIONATE ENQUIRE“WHOAM I?’ KNOW THY SELF AND BE FREE.
கர்ம யோகம், பக்தி யோகம், தியான யோகம். ஞான யோகம் அனைத்தின் சாரமும் இதுவே. உலகில் வாழ்ந்து கொண்டே இந்த ஞானம் எய்தலாம். அன்பு, அறிவு ஆனந்தம் இம்மூன்றினுடைய தோற்றமே கடவுள். ஆசையற்றவனே அகில உலகிலும் மிகப் பெரும் பணக்காரன். நல்லவனாக இரு, நல்லதையே செய், இதுவே தெய்வீக வாழ்க்கை,
அவருடைய தாமரைப் பாதங்களில் லோகா ஸ்மஸ்தா ஸ"கினோ பவந்து.
நன்றி. சிவானந்தர் வெளியீடுகளிலிருந்து
அறிவு - 42 -

பெறப்பட்ட செய்திகளுக்கு. அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
இந்திய யாத்திரை செய்கின்ற எவரும் ஒரு தடவையாவது ரிஷிகேசம் சென்று சுவாமி சிவானந்தர் ஆச்சிரமத்தை தரிசிக்க வேண்டும் எந்நேரமும் முகமலர்ந்து செல்கின்ற யாத்திரீகர்களுக்கு இடவசதியும், உணவு வசதியும் செய்து தருகின்றார்கள் யாரிடமும் எந்தவொரு பணத்தையும் எதிர்பார்க்க மாட்டார்கள். நாம் விரும்பினால் பட்டும் நன்கொடை கொடுக்கும் கந்தோரை தேடிப் பிடித்துக் கொடுக்கலாம். வரவேற்பு நிலையம் காலை முதல் மாலை 9 மணி வரை திறந்திருக்கும். நேரமாகினாலும் உதவுவதற்கு காத்திருக்கின்றார்கள். முன்கூட்டியே அறிவித்துவிட்டுப் போனால் நல்லது.
சிவானந்த ஆஸ்ரமத்திலும விஸ்வநாதர் ஆலயத்திலும் சமாதி ஆலயத்திலும் பிரதிஷ்டமாக செய்யப்பட்டிருக்கும் சிவலிங்கத்திற்கு நமது கைகளினாலேயே அபிஷேகம் செய்யலாம்.
ரிஷிகேசத் திற்கு இலகுவாக செல்லும் வழியானது: புகையிரதத்திலோ பேருந்து மூலமோ புதுடில்லி போகவேண்டும். ரிஷிகேசத்திற்கு புகைவண்டி மூலம் போக வேண்டுமானால், பழைய டெல்லி புகையிரத ஸ்தானத்தில் இருந்து டேராடூன் வண்டியில் ஏறி, ஹரித்துவாரம் மூலமாக ரிஷிகேசம் செல்லலாம். இதற்காக டூன் வண்டியில் விஷேச பெட்டிகள் இணைத்திருப்பார்கள். நேரம், காலம், வண்டியின் நம்பர், பெட்டியின் நம்பர் இவைகளை தெளிவாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். ரிஷிகேசத்திற்கு இந்திய றெயில்வேயின் அனேக இடங்களிலுமிருந்து குறிப்பாக தமிழ்நாடு பம்பாய்,கல்கத்தா, மற்றும் முக்கிய நகரங்களிலுமிருந்து வண்டிகளில் விஷேச பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
பேருந்தில் செல்பவர்களுக்கு டெல்லி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அடிக்கடி பேரூந்து புறப்படும். அனேகமாக ஏழு எட்டு மணிநேரம் பிரயாணம், ரிஷிகேசத்தில் இறங்கி கார் சாரதியிடமோ, ஓட்டோ சாரதியிடமோ சிவானந்த ஆச்சிரமம் என்று மட்டும் கேளுங்கள். வரவேற்பறை வாசலில் கொண்டுபோய் நிறுத்துவார்கள். இறைவனை நம்பி புறப்பட்டால் சுகமாகக் கொண்டு போய் சேர்ப்பார்.
நன்றி.
- நா. கணபதிப்பிள்ளை.
-43 - அறிவு

Page 24
ஜெயயோகம்
சுவாமி சிவானந்தா இக்கலியுகத்தில் ஜபமே கடவுளை அடையும் சுலபமான வழி. ஆசாரிய மஹானாகிய மதுசூதன சரஸ்வதி ஸ்வாமிகள், கிருஷ்ண மந்திர ஜபத்தினால் ரீ கண்ணபிரானை நேரில் கண்டு தரிசித்தார். மஹாபிரஸித்தி பெற்ற யூரீ வித்தியாரண்ய ஸ்வாமிகள், காயத்ரீ ஜபத்தினால் லோகமாதாவாகிய காயத்ரீ தேவியை நேரில் கண்டு களித்தார்.
வெள்ளையரின் விஞ்ஞான சாஸ்திரங்களின் கெட்ட கொள்கைகளினால், பரதநாட்டில் ஆங்கிலம் பயின்ற பல பெரியோர்களும் கல்லூரி மாணவர்களும், மந்திரங்களின் சக்திகளை நம்புவதில்லை. ஜபத்தை முற்றிலும் கைவிட்டு நாஸ்திகராகின்றனர். இது மிகப் பெரிய தவறு. அகந்தையில் மூழ்கி, நரகத்தை நோக்கி விரைகின்றனர். அன்னாரின் புத்தியும் மனதும் முற்றிலும் மாறி, உடனே சீர்பட வேண்டும்.
நமக்குக் கடவுள் அளித்த வாழ்க்கை மிகச் சிறியது. காலம் விரைந்தோடுகின்றது. உலகமோ, மிகப்பெரிய கஷ்டங்கள், துன்பங்கள் நிறைந்ததாயிருக்கின்றது. ஏ. கஷ்டப்படும் ஜீவர்களே, உங்களைப் பீடிக்கும் லோகாயதம், நாஸ்தீகம் என்ற அறிவின்மையை, ஞானக் கோடாரியால் வெட்டித் தள்ளுங்கள். மோட்ச சுகத்தைப் பருகுங்கள். ஜபத்தை அறவே ஒழித்து, எஞ்ஞான்றும் உண்டு, குடித்து, உறங்குவதே வாழ்க்கை என்று நினைக்கும் ஜீவர்களை புழுக்கள், மிருகங்கள் என்றே கூறவேண்டும்; சிந்தனா சக்தியுள்ள மனிதக் கூட்டத்தில் அவர்களைச் சேர்க்க முடியாது.
வேத மதத்தில் ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒரு தனிப்பட்ட ரிஷி உண்டு. அந்த ரிஷிதான் அந்த மந்திரத்தைக் கண்டுபிடித்து உலகிற்குப் போதித்தவர். ஒவ்வொரு மந்திரத்திற்கும் தனிப்பட்ட ஒரு சந்தஸ் உண்டு.இந்த சந்தஸானது மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் எனக் கூறும். மேலும், ஒவ்வொரு மந்திரத்திற்கும் தனிப்பட்ட ஒரு தேவதை உண்டு. இந்தத் தேவதையே மந்திரத்திற்கு சக்தியைக் கொடுக்கின்றது. இன்னும் ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒரு தனிப்பட்ட பீஜம் உண்டு. இந்த பீஜம் என்பது ஒரு சொல்லோ அல்லது சொற் தொடரோ ஆகும். இந்த பீஜம் ஒரு தனிச் சக்தியை மந்திரத்திற்குக் அறிவு - 44 -

கொடுக்கின்றது. இந்த பீஜச் சொல்லோ சொற்றொடரோ சாதகர் சாதகிகளுக்குத் தகுந்தபடி மாறும். பீஜமானது மந்திர சாரத்தை உள்ளடக்கியது. ஆகவே மந்திர பலன் என்பது பீஜம் அல்லது விதையினின்றும் மலரும் புஷ்பத்திற்கு ஒப்பாகும் மந்திர சக்தி என்ற புஷ்பம், மந்திரோச்சாடனத்தினால் ஆக்கப்பட்ட புதிய ஒலி சமஸ்க்காரங்களே இந்த ஒலி சம்ஸ்கார்ங்கள் சாதகனை அவன் பூஜிக்கும் தேவதைபால் செலுத்திவிடும். இனியும் மந்திர சக்தி என்ற கட்டிடத்தைப் பலப்படுத்துவதற்காக ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒரு ஸ்தம்பம் அல்லது கீலகம் ஏற்பட்டிருக்கிறது. கீலகமானது ஒவ்வொரு மந்திரத்தையும் கட்டிப்பிடித்து சாதகரீகளின் துன்பங்கள் குறைகளை அகற்றிவிட உதவுகிறது.
மந்திரங்களைக் குறித்து, குண்டலினி யோகத்தில் கூறுகின்ற மாத்திரை, பரை, பச்யந்தி, மத்திமா, வைகரி என்பவைகளைப் பற்றி இப்பொழுது நாம் விசாரணை செய்ய வேண்டியதில்லை. மந்திரத்தின் பொருளை நன்றாயறிந்து உண்மையான பாவத்துடன் (உணர்ச்சியுடன்) மானஸிகமாய் மந்திர ஜபம் செய்தால் போதும். அப்படிச் செய்தால் மந்திரத்தின் தெய்வீக பலன்களை அடையலாம். மாத்திரை, பரை, பச்யந்தி என்பவைகள் தெய்வீக நதிக்கரையில் கிடக்கும் பளிங்கு அல்லது கூழாங்கற்களுக்கே ஒப்பாகும். புத்திமான்கள் இப்பளிங்குக் கற்களைச் சட்டை செய்யாமல், மந்திர ஜபம் என்ற தெய்வீக நதியில் நன்றாய் முழுகிக் களிப்பார்கள். மந்திர ஜித்தியை அடைவார்கள்.
எல்லா மந்திரங்களுக்கும் சமசக்தி இருக்கிறது. ஆதலால் ஒரு மந்திரம் மற்ற மந்திரத்தைப் பார்க்கிலும் உயர்ந்தது அல்லது தாழ்ந்தது என்று நினைப்பது தவறு. உதாரணமாக ஒம் நமோ நாராயணய என்ற திருமாலின் மஹாமந்திரம், ஒம் நமச்சிவாய என்ற சிவபிரானின் ஐந்து எழுத்திலும் (பஞ்சாட்சரம்) சிறந்தது தாழ்ந்தது என்று கூறுவது தவறு. இதுபோலவே ராதேஸ்யாம், பூரீராம் முதலிய மற்ற மந்திரங்களையும் சமசக்தி உடையனவாகக் கருது. வால்மீகி மஹரிஷி ரீராம மந்திரத்தை மாறி உச்சரித்தே மரா, மரா என்று பிரம்ம ஞானத்தை அடைந்த விஷயம் எல்லோருக்கும் தெரியும். ஆகவே, ஒம் என்ற பிரணவ எழுத்தின் ஜபம் அல்லது சோஹம் என்ற மந்திர ஜபம், ஒம் நமோ நாராயணய, ஒம் நமச்சிவாய என்ற மந்திர ஜபங்களைக் காட்டிலும் உயர்ந்தது, தாழ்ந்தது எனக் கூறுவதும் பிழைதான். வேதங்களின் போதனைகளை ஒரு பொழுதும் குறை ーム45〜 அறிவு

Page 25
கூறாதே, சந்தேகிக்காதே, மறுக்காதே, சந்தேகப் புத்தி உன்னைக் கீழே தள்ளிவிடும். மன உறுதியற்றவன், ஜபத்தின் சக்தியை நம்புவதில்லை. ஆகையால், அவன் தெய்வீக மார்க்கத்தில் வெற்றி பெற முடியாது. இப்பேர்ப்பட்ட அறிவிலிகள் வெளிக்கு ஐம்பமாக “நான் மந்திரங்களை உச்சரிப்பதில்லை. “நான் யார்’ என்ற வேதாந்த விசாரணையை மனதில் செய்கிறேன்’ என்பார்கள் “நான் யார்? ” என்ற மாஸிக வேதாந்த விசாரணையை செய்யத்தகுந்தவர்களை நமது கைவிரலில் எண்ணி விடலாம்.
மந்திர ஜபம் செய்பவர்களுக்கு :- நமது ஜீவனை ஊக்கும் ஆத்மாவும் கடவுளும் மந்திர தேவதையும் மந்திரமும் எல்லாம் ஒன்று என்ற பாவனையுடன் ஜபத்தை ஆரம்பிக்க வேண்டும். இப்படி மந்திர ஜபம் நடக்குமானால், மந்திர ஜித்தி சீக்கிரம் கைகூடும். தேவன் அல்லது தேவி தரிசனம் கிடைத்துவிடும்.
ஸாதகனுக்கு மந்திரத்தின் பொருளே தெரியாவிட்டாலும், அவனுக்கு மந்திர ஸித்தி கிடைக்கும். ஆனால், அதிக நாள் பிடிக்கும். மந்திரத்தின் பொருள் தெரிந்து அதை உச்சரித்தால், மந்திரஸித்தி சீக்கரம் வரும். ஆகையால், கடவுளின் பெயரை அடிக்கடி உச்சரிக்கும் வழக்கத்தை உடனே தொடங்கிவிடு. அப்படிச் செய்தால், சாவு உன்னை அணுகும் காலத்தில், தேவனின் ஞாபகம் வரும்.
ஆங்கிலக் கல்வியின் ஒரு கெட்ட குணம், கடவுள் என்றால் என்ன? என்று கேட்கும் சுபாவம், கடவுளை விவரித்துக்கூறு என்று கேட்கும் சுபாவம். இத்தகைய கேள்வியின் கருத்து, கடவுளை மறுப்பதுதான். ஐம்புலன்களுக்கு எட்டுகிற பொருள்களையே விவரித்துக் கூறலாம் . ஐம் புலன் களு கி கெட் டாத பரம் பொருளை, ஆதிமூலமாயிருக்கும் முழுப் பொருளை, நம் புலன்களால் அறிய முடியுமா அல்லது எடுத்துரைக்க முடியுமா? கடவுள் யார்? என்ற கேள்வி அங்கிங்கெனாத எல்லையற்றவரை உனது சிறுபுத்தியினால் கட்டுப்படுத்துவதாகும். ஆனால், உன் சிறுபுத்திகெட்டாத இந்த மெய்ப்பொருளை, மந்திரஜபத்தினால் அடையலாம், அறியலாம், அநுபவிக்கலாம் , உணரலாம் தவிர, உனக் குக் கடவுள் கொடுத்திருக்கும். மனித புத்தியினால் விவரித்துக் கூற முடியாது.
அறிவு - 46 -

மானஸிக பூசையானது, பாஹறிய அல்லது வெளிப்படையான ஆடம்பர பூசையைக் காட்டிலும் சாலச் சிறந்தது. பாஹிய பூசையில், கடவுளை புஷ்பம், சந்தனம் கந்தம் வஸ்திராதிகளுடன் பூஜிப்பதுண்டு. மானஸிக பூசையின் மேன்மையை விளக்க மஹாபாரத்திலிருந்து ஒரு கதை சொல்வது வழக்கம்.
மானஸிக பூசையை எல்லோரும் செய்ய முடியாது. தெய்வீக வாழ்க்கையில் பல படிகளைக் கடந்த அடியார்களே மானஸிக பூசையைச் செய்யத்தகுந்தவர்கள். தேவ பூசையை ஆரம்பிப்பவர்கள், பாஹற்ய பூசையைச் செய்யத்தான் வேண்டும். இதன் பின்னர் மானஸிக பூசையைச் செய்தால், மனது பகவானிடம் ஈடுபடும், மானஸிக பூசையில் பகவானை நவரத்ன மயமான ஸிம்ஹாஸனத்தில் ஏற்றுங்கள். அவரது நெற்றியையும் அங்கங்களையும் சந்தனத்தினால் அலங்கரியுங்கள். பகவானை அர்க்கியம், பாத்யம், மதுவர்க்கம், புஷ்பம், வஸ்திரம், து பம், தீபம், கர்ப்பூரம், பழ வர்க்கங்கள், அதி ருசியான நைவேத்தியங்களாலும் உபசரியுங்கள். மானஸிக பூசையிலாவது கிருபணத்தனம் (கஞ்சத்தனம்) செய்ய வேண்டாம். ஒரு கிருபணன் (கஞ்சன்) சுவாமிக்கு மானஸிக பூசை செய்யும்போது ஒரே ஒரு சாதாரண வாழைப்பழத்தை நைவேத்யம் செய்தானாம்! ஆ, இவ்வுலகம் கிருபணர்கள் நிறைந்தது பூசையின் இறுதியில் பின் வரும் அர்ப் பணத் தைச் செயம் யதி தவறாதீர்கள் : காயேன வாசாமனசேந்திரியைர்வா புத்யாத்மநாவா பிருகிருதீஸ்வபாவாத் சமர்ப்பயாமி. அதாவது “எனது தேஹம், வாக்கு, மனது, இந்திரியங்க ளினாலும், புத்தியினாலும் , சுபாவத்தினாலும் செய்யும் சகல காரியங்களையும் பகவானுக்கே அர்ப்பணம் செய்கிறேன். இது முடிந்தது “ஒம் தத் சத் பிரும் மார்ப்பணம் அளில் து’ என்று தேவனை நமஸ்கரியுங்கள். தேவனை நீ எனக்கு அது தா, இது தாவென்று கேட்காதீர்கள். இப்படி பிரும்மார்ப்பணம் செய்தால் உங்கள் சித்தம் சுத்தியடையும். மேலும், பிரதி பலனை எதிர்ப்பார்க்காத மனப்பான்மை உங்களுக்கு ஏற்படும்.
அன்பே சக்தி. இன்பமற்ற வாழ்வு வியர்த்தம். அன்பு வாழ்வில் இன்றியமையாதது. அன்பின் வியாபகம் உலகெங்கும் இருக்கிறது. வாழ்க்கையின் ஜீவநாடி அன்பு தான். ஆகவே, அன்பினால் கொடுங்கள், எல்லோரையும் நேசியுங்கள், அன்புச் சேவையினாலும், ஜபம், சத்சங்கம், தியானத்தினாலும் அன்பைப் பெருகவிடுங்கள்.
r 47 -
அறிவு

Page 26
கடவுள் எப்பொழுதும் உங்கள் பால் இருக்கிறார். அவர் உங்களைக் காப்பாற்றுவார். கடவுளிடம் தஞ்சம் அடையுங்கள். கடவுளின் ஆசிகள் உங்கள் வாழ்க்கையில் கரை புரண்டு ஒடும். உங்கள் வாழ்க்கையும், மனது புத்தி தேஹாதிகளையும் தெய்வீகமாய்க் கடவுள் மாற்றிவிடுவார். ஆதலால் தெய்வீக மனப்பான்மையை வளருங்கள். அன்றாடம் உங்கள் எண்ணங்கள், பேச்சுக்கள், காரியங்களை வெகு ஜாக்கிரதையாய்க் கட்டுப்படுத்துங்கள். உங்களுடைய வீட்டிலும் தனியறைகளிலுங் கூடக் கடவுளின் பிரசன்யத்தை உணருங்கள். பிரார்த்தனையிலும், தியானத்திலும் வாழ்க்கையைச் செலுத்துங்கள்.
பிரார்த்தனை மனதை உயர்த்துகிறது. மனதில் பரிசுத்தத்தைப் புகுத்துகின்றது. பிரார்த்தனை செய்யும்போது கடவுளைப் புகழ்கின்றோம். இந்தத் தோத்திரத்தினால் உன் மனது கடவுளிடம் இணங்குகின்றது. நமது வாக்குகளின் தாக்கங்கள் செல்ல முடியாத, செல்லத் துணியாத இடங்களுக்கு, பிரார்த்தனை எளிதில் சென்று விடும். பிரார்த்தனை மலைகளையே தூக்கி எறிந்துவிடும். மிக அதிசயமான அற்புதங்கள் பிரார்த்தனையால் நிகழ்கின்றன. மரண பயத்தினின்றும் சாதகன் தப்புகிறான். அவன் தேவனை மிகவும் நெருங்கிவிடுகிறான். தெய்வீக உணர்ச்சியை அடைந்து ஆத்மாவின் திவ்ய அமிர்த ஆனந்த நிலையே தனதென்று அறிகிறான்.
தேவனிடம் சரண் புகுந்துவிடு. உனது உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் தேவனுக்கு அர்ப்பணம் செய். பிறகே அவர் உன்னைப் பற்றிய சகல பொறுப்புகளையும் வஹிப்பார். தேவன் இச்சைப்படி உன்னை ஆக விடு அதற்குச் சிறிதும் தடை செய்யாதே. அவர் உனது குற்றம் குறைகளையெல்லாம் நீக்கிவிடுவார். உன் தேகமாகிய புல்லாங்குழலில் அமிருதகீதம் செய்வார். தேவனது இந்த அற்புதமான திவ்ய கானத்தைக் கேட்பாய். உன் ஆத்மாவின் கானத்தையே கேட்டு அளவிலாத சந்தோஷமடைவாய் நீ.
கடவுளுக்கு s) u 8 T J fhi 56ti செய்யும் பொது, அதிபாக்கியசாலியான வில்லவர் கூட்டத்தைச் சேர்ந்த சபரியைப் போல் உன் நிவேதனங்களைக் கொடு. திரெளபதையும், கஜேந்திரனும் எந்த மனோ பாவத்துடன் கடவுளை அழைத்தார்களோ அதே பாவத்துடன் கடவுளிடம் சரண் புகு, அப்படிச் செய்தால் தேவதரிசனம் உடனே கிடைத்து விடும்.
அறிவு - 48 -

தேவனின் சாந்நித்தியத்தை எல்லாப் பொருள்களிலும், இடங்களிலும், காலங்களிலும் உணருவாய். உன் அன்பன் - கடவுளை எல்லா ரூபங்களிலும் காண். தேவனின் கணக்கற்ற நாமங்களை மனதில் சொல்லிக்கொண்டே இரு. சில சமயம், தேவனின் பெயர்களை உரத்த சங்கீர்த்தனம் செய். இன்னும் சில சமயம், மனதில் சங்கீர்த்தனம் செயப். உன் மனதை முற்றிலும் தெய்வத்திடம் கரைத்துவிடு. தேவனைப்பற்றி மெளனத்தில் சிந்தித்து ஆனந்தம் அடை.
பிரும்ம முகூர்த்தத்தில் காலை 4 மணிக்கு படுக்கையை விட்டெழுந்தால் உன் மனது தெளிவாயிருக்கும். காலை வேளைகளில், ஒரு தெய்வீக சாந்தியையும் சத்குணங்களையும் இயற்கை அன்னை பொழிகிறாள். உலகிலுள்ள மஹாத்மாக்கள், ரிஷிகள், யோகீசுவரர்கள், இவ்வேளைகளில் தியானத்தில் இறங்கி, தமது தெய்வீக சாந்தியையும் சத்குணங்களையும் உலகத்தாருக்கு வெளியிடுகின்றனர். ஆகையால் அதே பிரும்ம முகூர்த்தத்தில் நீ விழித்தெழுந்து பிரார்த்தனைகள் செய்தால் மிகவும் பலன் அடைவாய். அப்பொழுது உனது ஜகாக்ரிய சக்தியும் (மனதை ஒன்று படுத்தும் சக்தியும்) எளிதில் கிளம்பும். தியானம் தானாகவே உன்னை அடையும்.
உன் பிரபு அல்லது இஸ்ட தேவதையின் படத்தை சில நிமிஷங்களுக்கு உற்றுநோக்கி உன் கண்களை நன்றாய் மூடிவிடு. இப்பொழுது தெய்வத்தின் ஸ்வரூபத்தை மனக்கண்ணில் பார்க்க முயல்வாய். நல்ல பிரதி (copy) உன் மனக்கணில்படும் அது மற்ைய ஆரம்பித்தால் மறுபடியும் լomյLգամ: 5 அல்லது 6 தடவை படத்தைப் பார்த்து கண்களை மூடி இஷட தேவதையை மனக்கண்ணில் பார். இப்படிச் சில மாதங்கள் அப்யசித்தால் உன் இஷ்டதேவதையைப் படமில்லாமல் நினைத்தபொழுதெல்லாம் மனக்கண்ணில் பார்க்கலாம்.
படமுழுவதையும் மனக்கண்ணில் பார்க்க முடியாவிட்டால், சில பாகங்களையாவது மனதிற் பார். கடவுளின் மன உருவம் மங்கியிருந்தாலும் பரவாயில்லை. அடிக்கடி முன்னே சொன்ன பயிற்சியைச் செய்தால் இந்த மங்கின உருவம் நாளடைவில் நல்ல தெளிவான முழு உருவமாக உன் மனக்கண்ணில் தோன்றும். இந்தப் பயிற்சி கடினமாகத் தோன்றினால் வேறோரு வழி இருக்கிறது. நமது ஹற்ருத் புண்டரீகத்திலே (இதயத் தாமரையில்) ஒரு மின்னல் கொடியின் சிகரத்தின் மத்தியில் பகவான் ஜாஜ்வல்லியமாய் ஜோதி சொரூபமாய் - 49 - அறிவு

Page 27
நீங்கள் சிவனடியார் மஹாமந்திரத்தை ஜபியுங்கள். நமோ நாராயணாய’ என்ற மதி மந்திரங்களின் சக்தி மிகப் பெரிது. நன்மைகளை ஒருவராலும் விள ஜபமானது வேத சாஸ்திர அறிவு அடைய ஒரு ஊன்றுகோலாகும். ஏற்றிவிடும் ரசவாத சக்தி போன்றது போக்கும் அமுதபானமாகும். இவ் நாம் கடவுளை அறியலாம், அ6
இந்தப் புஸ்தகத்தில் ம மோஹம் அடைவதற்கு எப்ப விளக்கப்படும். முதல் அத்தியாய விளக்கப்படும். இரண்டாம் ஆ சங்கீர்த்தனையின் மகிமையும் மு அத்தியாயத்தில் பல்வ்ேறு மந் அத்தியாயத்தில் மந்திர சாதை மிகவும் உபயோகமான குறிப்புகள் மந்திர ஜபத்தினால் ஈசனை அை சுருக்கம் கூறப்படும்.
கடவுள் உங்கள் எல்லே கட்டுப்படுத்தி ஜபயோகத்தை பெறுவதற்கான ஆத்ம பலத்ை எல்லோரும் ஜபயோகத்தின் அற் நிஸ்ஸந்தேஹமான நம்பிக்கை வ இப்புண்ணிய பூமி முழுவதும் பரவு எங்கும் வெற்றி பெறக் கடவதாக! ஆசியும் அநுக்கிரஹமும் உங்க
ஓம்,
அறிவு un A

களாயின் “ஓம் நமச் சிவாய’ திருமாலின் அன்பர்களானால் “ஓம் றா மந்திரத்தை ஜபியுங்கள். இந்த ஜபம், சாதனை, சத்சங்கம் இவற்றின் ாக்கிக் கூற முடியாது. என்றாலும், பில்லாத மக்களுக்கு மோட்ஷவீட்டை ஜபம் பாமர மக்களை மோட்ஷத்திற்கு து. மரணத்தையும் அறிவின்மையையும் வாழ்க்கையிலே இல்வாழ்க்கையிலே டையலாம். வேறு வழிகளினாலன்று.
ந்திர யோகம் எடுத்துரைக்கப்படும். டி ஜபம் செய்ய வேண்டுமென்று த்தில் ஜபம் என்றால் என்ன? என்பது அத்தியாயத்தில் கடவுளின் நாம க்கியமும் உரைக்கப்படும். மூன்றாம் திரங்கள் கூறப்பெறும். நான்காம் னக்குரிய பல அநுபவ சித்தியான உள்ளன. ஐந்தாம் அத்தியாயத்தில் டந்த சில மஹான்களின் வாழ்க்கைச்
ாருக்கும் மனது, இந்திரியங்களைக் இடைவிடாது அநுஷ்டித்து ஐயம் த கொடுத்தருள்வாராக! உங்கள் புத பலத்தையும் பலனையும் பற்றி ருவதாக! கடவுள் நாமத்தின் மகிமை வதாக! ஹரிதேவரும் அவர் நாமமும் சிவன், ராமன், ஹரி, கிருஷ்ணனின் ள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்!
தத் விமத்
52 -

Page 28
திருகோணமலை கன்னியா வெ
 

ந்நீருற்று

Page 29
திருகோஒணமலை திருக்கோனே
இராவணன் வெட்டு