கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாத்ரா 2003.07-12

Page 1
With The Best Compliments
from
丽 A GALI TANK
്
سمتیے
T.
"لي
**NATAO
ASALAMK
INTERNATIONAL (PVT) LTD.
/W/7-X/WA/7OWA/ A/z//WPOW-Z CO/WS////A/W/S
όχ R互のR/Zル位/V7 午伝/V7写
163, GALLE ROAD, (OPPOSIDE AMERICAN EMBASSY) KOLLUPITIYA, COLOMBO-03, SRI LANKA.
Tel: O11 2448718, O11 2421664 FAX: 011244.8715,011 2337409 E-MAIL: ASIALINKGSLTNET.LK
*リ
 
 


Page 2
6 (b y onونوںہا கவிதைப் போடியில் பரிசு பெற்ற கவிஞர்களுக்கான பணப் பரிசினை மகிழ்ச்சியுடன் வழங்குவோர்
MPORTERS, DALERS IN TEXT LE9, ELECTRICAL GOODS & GENERAL MERCHANTS
TRADE CENTRE NO. 84, 1st FLOOR, 2nd CROSS STREET, COLOMBO - 11
Tel: 011 2330287, 011 2381412 FAX: 011 2381412 MOBILE : 0.777 316874
- །༽
 

கவிதைகளுக்கான இதழ்
ē36O6 - 1ņbrī 2003
(பரிசளிப்பு விழாச்சிறப்பிதழ்)
මුල්දීත කවරය முதல் நாள் உறை First Day Cover
එම්.එච්.එම්. අෂ්රහ් -ගුණී සමරුව எம்.எச்.எம். அஷ்ரப் நினைவாஞ்சலி M.H.M. Ashraff- Commemoration
புத்தாயிரத்தில் இலங்கையின் முதல் தமிழ்க் கவிதை இதழ்
g56flégisi(d5(5 LDT.gbg5 JD - For private circulation only
படைப்புகளுக்குப் படைப்பாளிகளே பொறுப்பாளிகள்

Page 3
யாத்ரா - 12
O2
அல் ஹாஜ். ஏ.எச்.எம்.அஸ்வர் (பா.உ) பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கொழும்பு - 7
நம் இலங்கைத் தாயகத்தில், புத்தாயிரத்தில் வெளியான 'வின்நவம்பர் 2002ஜூன் 2003 மாத 11வது இதழ் கிடைக்கப் பெற்றேன். 'யாத்ரா' சோகத்தைச் சுட்டிக் காட்டும் ஒரு புதுக் கவிதையின் நிதர்சன நிழற்படமேயாகும். வாசகக் கடவுச் சீட்டோடு உள்ளே கணனி மயப்படுத்தப் பட்டிருக்கும் வரிகளின் ஊர்வலத் தோடு, நானும் ‘யாத்ரா செய்யலானேன். கவர்ச்சி கண்ணாமூச்சி ஆடிய ஒவ்வொரு பக்கமும் நேர்த்தியான அமைப்பில், கவிதையாக இலக்கிய மணங் கமழும் பாங்கு என் மன ஏட்டில் ஆனந்தப் புஷ்பங்களை புஷ்பிக்க வைத்தது. “சிற்றேடுகளால் இலக்கியம் வளர்க்க முடியுமா?’ என அமாவாசைக் காலத்தில் மட்டும் சிலர் வினாத் தொடுப்ப துண்டு. சிற்றேடுகளால் இலக்கியம் வளர்க்க முடியும் என்பதை யாத்ரா' சொல்லிக் கொண்டிருக்கிறது என்பதற்கு, 'யாத்ரா' வின் வரிக் சுமந்து நிற்கும் கருத்துப் பொதிகளே சான்று எனலாம். 'யாத்ரா, பல திக்குகளுக்கும் பவனி வரவேண்டும் என்பது என் மன ஆசை என்றாலும் திசைகள் பலவானாலும் இலக்கு ஒன்றாகவே இருக்க வேண்டுமென்பது என் மனவோசை պւDIT«5ւD. 'யாத்ரா இப்போதைக்குச் சிற்றேடாக உலா வந்தாலும் இன்ஷா அல்லாஹ், இனிவரும் காலங்களில் அது பேரேடாக - பெருமை கூறும் நல்லேடாக மலர வேண்டும்; வளர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
ஒப்பம்
குறிப்பு:- நண்பர் மப்றுரக்கின் நூல் வெளியீட்டு விழாவில் நான் கூறிய பிரகாரம் ‘யாத்ரா'வில் வெளியான தரமான உள்நாட்டு வெளிநாட்டுக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து நூலுருவாக் கும் முயற்சியை ஆரம்பிக்க விரைவில் அவற்றை அனுப்பி வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
02.10.2003
 
 

ஏழைகளே இல்லாமல் இலங்கை சிறப்பதுவாய்
சத்தாம் ஹரஸைனைச் சந்தித்துத் தழுவுவதாய்
புதுக் காணிமூலையிலே புதையல் கிடைப்பதுவாய்
மனைவியின் சம்மதத்தில் மறுமணம் புரிவதுவாய்
சிறந்த கவிதை நூல் சாஹித்யம் பெறுவதுவாய்
எங்கள் பிரதிநிதி மக்கள் குறைதீர்ப்பதுவாய்
கனவுகள்.
பகலில் மட்டுமே வருகின்றன
«aa- గ్రంNNJn
யாத்ரா - 2

Page 4
சAவிகல்
இnதால் ܝܗܒܐ
உள்ளே இருப்பது தெரியாமல் யாரோ பூட்டிவிட்டுப் போக வெளியேற முடியாமல் தவிக்கிறது ஏதோவொன்று
தாழ்ப்பாள்களை நீக்கிவிட்டுப்பார்த்தால் ஒன்றுமே இல்லை உள்ளே
பூட்டுப் போட்டு விட்டால் எவ்வளவோ இருக்கிறது வெளியே
சத்தமாகத் திறப்பதை விட எளிதானது மெளனமாகப் பூட்டுவது
ஒரு கம்பிதான் பூட்டு ஒரு கம்பிதான் சாவி வளைப்பதில் இருக்கிறது எல்லாம்
எந்தப் பெட்டகங்களையும் திறந்து விடுகிறது காமச் சாவி
பூட்டுக்களைத் தயாரிப்பவர்களை விட
சாவிகளைத் தயாரிப்பவர்கள் பெருகி விட்டார்கள்
யாத்ரா - 12 %ళ్ల • s क्ष्ॊ : 本
 
 
 
 

Os
'யாத்ரா கவிதைப் போட்டியில் முதற் பரிசு பெற்ற கவிதை
சரியான இலக்கத்தை மறந்துவிட்டு வெவ்வேறு இலக்கங்களை பொருத்திப் பார்க்கிறார்கள் நம்பர் பூட்டுக்குச் சொந்தக்காரர்கள்
சாவி கைவசமிருக்க தொலைந்த பொருளுக்கு ஈடாவதில்லை மாற்றுப் பொருள்கள்
சாவியைத் தொலைத்து விட்டு தடுமாறுகிறவனின் கையில் மாற்றுச் சாவியைக் கொடுத்துப் பழக்கிய அந்த முதல் நபர் முக்கியமானவரல்ல
முன் வாசலை மூடி விட்டு பின் வாசலைத் திறந்தே வைத்திருக்கிறது தனிமை
ஒரே பூட்டுக்கு பல சாவிகளையும் பல பூட்டுகளுக்கு ஒரே சாவியையும் இடுப்பில் தொங்கவிட்டிருக்கிறது ஜீவிதம்
பூமியால் பூட்டப்பட்டிருக்கிறது பிரபஞ்சத்தின் மூன்றாவது அறை
உள்பக்கமும் வெளிப்பக்கமும் என
ஒரே சமயத்தில் பூட்டப்படுகின்றன மரணத்தின் கதவுகள்
யாராலும் தயாரிக்க முடியவில்லை காலத்தின் கள்ளச் சாவியை"
штфЈт - 12

Page 5
తిరyరu 696(59f9తb ஒரு ඊරිජිතdí නිරිතීන් නූ.....
எஞ்ஆதீரஷ்
யாத்ரா - 12
O6
சின்னஞ் சிறுசில் ஸினத் உன்னுடன்
சின்ன வீடு
மணலில் கட்டி
asionLDTäs GonLDTÜ
பொத்தி உந்தன்
சின்ன விரலில் நெட்டி முறித்ததும்
சத்தம் போட்டுச் சண்டை பிடித்து அத்தம் விட்டுச் சத்தியம் செய்து கத்த வீட்டு ஒறட்டி வெறுத்து அத்தமா பழமா விரல்கள் தொட்டும்
நெத்தியில் சிப்பிப்
ଗurtl"l(B வைத்துத் தத்திக் கோடு எட்டிப்பாய்ந்து பொத்திக் கண்கள் கூட்டிச் சென்று சித்தெறும்புக் காட்டில் விட்டும்
அலுப்பே இன்றி அஸரில் வந்து அலிப்பே தேயிதே ஓதித் தந்த லெப்பை மிதிவடிக் கட்டையும் ஊத்தைத் தொப்பியும் திருடிப்பிரம்படி பட்டும்
சருகு மிட்டாய் öFmbluesb eHüULib
அடுக்குச் சட்டி ஆரத்திச் செப்பு குருத்து மாலைக் குரும்பட்டிப் பதக்கம் கழுத்தில் கடிக் கலியாணம் முடித்தும்
செத்தைக் குடிலில் ஒருநாள் மார்பில் மெத்தெனச் சாய்ந்து மயங்கிக் கிடந்ததும் இத்தனை நினைவும் சட்டென வந்தது ளினத் துனையுன் துணையுடன் கண்டதும்!
 

O7
இனப்பிரச்சினையின் விளைவான யுத்தம் ஏற்படுத்திய வருத்தம். கால் நூற்றாண்டுகளாக நமது கவிதைகளில் இழையோடியது. அதன் துயரம் இரத்தமும் சதையுமாக நேரடியாகப் பேசப்பட்டது.
யுத்தம் நிறுத்தப் படுவதற்கு முன்னரே பல முன்னணிப் படைப்பாளிகள் அதனை எழுதுவதை நிறுத்திக் கொண்டார்கள். உண்மை உயிர்ச் சேதத்தைத் தரும் என்பதோ இதையே எத்தனை நாளைக்கு எழுதுவது என்ற அலுப்பு நிறைந்த வெறுப்போ அதற்குக் காரணமாக இருக்கலாம். அல்லது வேறு காரணங்களை அவர்கள் வைத்திருக்கலாம். ஆயினும் புதிய படைப்பாளிகள் அதையே தொடர்ந்து எழுதிய வண்ணமிருக்கிறார்கள்.
யுத்த நிறுத்தம் அமுலாகி ஒரு வருடம் நிறைவு பெற்ற விட்டாலும் fall கண்ணுக்குத் தெரியாத யுத்தம் ஒன்று நடைபெற்றுக் கொண்டுதாணிருக்கிறது. பாரிய அளவில் இல்லையென்றாலும் தயரங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. சிறியதோ பெரியதோ துயரம் துயரமே.
தொடர்ந்தும் இதே விடயத்தை நேரடிப் பாடுபொருளாகக் கொண்ட கவிதைகள் வெளிவருவது ரசிகர்களுக்கு ஒரு வகையில் அலுப்பை ஏற்படுத்தியிருப்பதை உணர முடிகிறது.
நமது கவிதைகள் பற்றி ஒரு சுய பரிசோதனை செய்ய வேண்டிய கால கட்டம் இத என யாத்ரா கருதுகிறது. யுத்த நோவுகளை வேறு கோணங்களில் பார்ப்பதோடு மாத்திரமன்றி வாழ்வின் அன்றாட பல்வேறு விடயங்களையும் நமது கவிதை தொட்டு நகர்வது அவசியமாகும்.
முன்னணிப் படைப்பாளிகள் வேறு ஒரு திசைக்குக் கவிதையைக் கொண்டு செல்லத் துணை நிற்க வேண்டுமென்ற வேண்டுகோளை யாத்ரா முன்வைக்கிறது.
யாத்ரா .
19

Page 6
UITதங்களில் இடறும் (U)sóT) 6}6)J6)'f'
Ꭴ8
'யாத்ரா கவிதைப்
போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கவிதை
 
 
 
 
 

O9
。・%2ク محا2ں
இருள் செறிந்த இராப் பொழுதில்
ஒளியைத் தேடித்தவித்திருந்ததென் தெரு வழியே இனிய குரலெடுத்துப் பாழச் சென்றாய் விவு வருடத்தை மாத இருபத்தோராம் நாளில்
வாசல் திறந்தேன்
நீ போனதற்கான தடயங்களின்றி இருள் நிறைந்த பெருவெளி என் கண்களில் மோதியது மின்மினிகளும் தூரத்து வானின் நட்சத்திரங்களுமின்றிக் கால்களில் இடறுண்டது என் முற்றவெளி
உனது பயணத்தின் குறியீடாகப்
பாடிச் சென்ற பாடல் சோகத்தில் துடிதுடித்த ஏதோவொன்றை இழந்து தகர்ந்த நகரின் சிதைவுகள் மீதும் குட்டிச் சுவர்களாய் எஞ்சியிருந்த குழமனைகள் மீதும் சனங்கள் எழுந்து சென்ற பூர்வீகத் தளங்கள் மீதும் பல்லாயிரம் இளைஞர்களின் புதைகுழிகள் மீதும் தடவிற்று
நிலவையழைத்து ஒளிச் சுடரொன்றினை அழைத்துத் தனித்த பயணத்திற்கொரு வழித்துணையை அழைத்து எழுந்த உன் குரல் அன்றைய இரவு நீளவும் எதிரொலித்தது
உன் குரலினைப் பின் தொடர்ந்து வெகுதூரம் வந்தேன் நான் நடந்த கால்களின் கீழே கண்ணிர் நழுவி ஒழயது சிரித்த ஒலிகளை ஊடுருவி நிலவின் தண்ணொளி பழந்தது மரங்களின் பழுத்த இலைகளை உதிர்த்தவாறு எங்கிருந்தோ வந்த காற்று யாரோ ஏற்றி வைத்த எண்ணற்ற தீபங்களை எதுவும் செய்யாமல் போயிற்று
இரவின் வானத்தின் கீழே எனை மோதி வீழ்த்தக் காத்திருந்தது என் முற்ற வெளி
யாத்ரா - 12

Page 7
ஈராக்கில் அல் பஸ்ரா நகரில் ஆண்டு தோறும் கவிதை விழா. பதினான்கு நூற்றா ண்டுகளுக்கு முன்பு போல இன்றும் கவி நர்களின் ஒன்று கூடல்.
கெய்ரோவில் மக்கள் வெள்ளிக் கிழமை தோறும் பதின்மூன்றாம் நூற்றாண்டு சூஃபிக் கவிஞர் இப்னு பரீதுடைய ஸியா ரத்துக்குச் செல்கின்றனர், அவரது கவிதை கள் பாடப்படுவதைக் கேட்க,
அரசியல் செய்திகளை வெளியிட கவிதை வலிமைமிகு சாதனம் என்பது மேலை நாட்டவர்களுக்கு ஆச்சரியமாகப்படினும் :பலாம் ஃபிரங்கியே சொல்வது போல், கவிதை அறபுக் கலாசாரத்தின் ஒன்றி ணைந்த அங்கம்.
அறபு நாடுகள் எங்கும் தொலைக்
காட்சியில், வானொலியில், நாளிதழ்களில்
கவிஞர்கள் தினம் தினம் தோன்றிய வண்ணம். தினசரிகளில் கவிதை இடம் பிடித்துக் கொள்வது அதிசயமன்று என்கி றார் யேல் பல்கலைக் கழக அறபு மொழிப் பேராசிரியர் :பஸாம் ஃபிரெங்கியே.
இப் பாரம்பரியம் இஸ்லாத்தின் தோற்றத்துக்குப் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்வதெனக் கூறும் அவர் பண்டைய நடைமுறையொன்றை விவரிக் கிறார்: “மக்காவையடுத்த சவ்க் உகாஸ் அல்லது உகாஸ் சந்தையில் ஆண்டுதோறும் பழங் குடிகளின் சந்திப்பு நிகழும். அறேபியாவின் சகல பாகங்களிலிருந்தும் கவிஞர்கள் சமூகமளிப்பர், போட்டியிட - தம் கவிதைகளை நடுவர்கள் முன் பாட. வெற்றி பெறும் கவிதை பொன்னெழுத் துக்களில் பிரதி செய்யப்பட்டு மக்காவில் - கஃபா வாசலில் வருடம் முழுவதும்
தொங்க விடப்படும். இது பண்டைய அறேபியாவின் நோபல் பரிசு' போன்றது. அல்ஜீரியாவிலிருந்து யெமன் வரை வெவ்வேறு வரலாற்றினையும் மக்களை யும் கொண்ட இரு டசனுக்கும் மேலான தேசங்களின் உத்தியோக மொழி அறபு "சமகால அர்த்தத்தில் ஒருவனது தேசமோ இனமோ எதுவாக இருப்பினும் அறபியில் எழுதுபவன் அறபிக் கவிஞனே." - இது பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் அறபிலக்கிய வேனிற்காலக் கருத்தரங்கை நடத்தி வரும் ரோஜர் அலனின் அபிப்பி ராயம். அறபி, 'முஸ்லிம்' எனும் பதங்க்ள் ஒன்றெனக் கருதப்படுவதையும் அவர் அவதானிக்கிறார். நிச்சயமாக பெரும் பான்மை அறபிகள் முஸ்லிம்களே. எனினும் லெபனானிய மனோரைட்டுகள் போல, எகிப்திய கொப்ட்டுகள் போல குறிப்பிடத்தக்க அளவு முஸ்லிம் அறபி களும் உண்டு. ஒரு பில்லியன் முஸ்லிம் களில் பத்து சதவீதத்தினரே அறபிகள்.
கவிமொழி மீதான ஈர்ப்பு அறபுக் கலாசாரத்தில் ஆழ வேரோடியுள்ளது. வரலாற்று ரீதியாகக் கவிஞன் சிரேஷ்ட மானவனாய்க் கருதப்பட்டான். அறபிக் கவிஞன் அவனது பழங்குடியின் குரல்: அதன் பாதுகாவலன்: பிரதிநிதி - எல்லா வற்றுக்கும் மேலாக அதன் உந்து சக்தி என்கிறார் ஃபிரங்கியே. அறப் எனத் தம்மை அழைத்த ஒட்டகமோட்டிகளான :பதாயின்களிடமிருந்து, அல்லது சிரிய பாலைவனத்தின் அர்பி என்ற நிலத்தி லிருந்து பழங்குடிகள் அப்பெயரைச் சுவீகாரமெடுத்தனர்.
நாடோடிக் கூட்டத்தினர் செய்தி
штфДт — 12
 

விவரணங்களுக்கும் பழங்குடி வரலாற்றின் அறபுக் கவிதைகளினூடான
956lung 56,ol
வாய்மொழிப் பதிவுகளுக்கும் கவிஞர் களையே நம்பியிருந்தனர். வெற்றிகள். தோல்விகள், திருமணங்கள், மரணங்கள் யாவுமே செய்யுளில் பதிவாகின. கவிதை பழங்குடிகளின் வரலாற்றை, கருத்துக் களை, விழுமியங்களை, பழக்க வழக்கங் களை, மரபுகளைப் பிரதிபலித்தது, Վ9լն)ւվ மக்களை அவர்களது வரலாறு, மரபு, பூர்வீகம், போர்கள், காதலொழுக்கம் முதலியவற்றை அறிந்து கொள்ள விரும்பி னால் கவிதையின் பக்கம் திரும்புங்கள் என்கிறார் ஃபிரங்கியே.
தகவல் அறிவிக்கவும் கவிதைகள் பயன்பட்டன. உதாரணத்துக்கு அல் - முராக்கிஷின் ஆறாம் நூற்றாண்டுக் கவிதை:- “ஒட்டகமோட்டியே நீ யாராகவிருப்பினும் அவர்களை நீசந்திக்க நேர்ந்தால் சஅதின் மகன் அனஸிடமும் ஹர்மலாவிடமும் இச் செய்தியைச் சொல் 'குபெய்லாவின் மனிதனைக் கொலை செய்யாவிடின் உம்மிருவரதும் உம் தந்தையினதும் , நற்பண்பு போற்றப்படும்"
“பல்வேறு பாடு பொருளும் பல்வேறு பாவினங்களுமாக நம்ப முடியாதபடி செழுமையான கவிமரபொன்று இஸ்லாத் துக்கு முற்பட்ட காலத்திலிருந்தே நிலவி வந்துள்ளது. புகழ் மாலைகள், காதற் கவிதைகள், இரங்கற் பாக்கள், மங்கல
வாழ்த்து முதலியன. குறிப்பிட்ட சந்தர்ப்
பத்துக்குரிய சிறு பாடல்களும் உள்ளன. உதாரணமாக, ஒர் வீரனின் மரணம் - இத்துறையில் பெண்கள் சிறந்து விளங்கு கின்றனர். அப்புறம் விஸ்தாரமான பல் பொருளமைந்த பாடல் - பல்வேறு பகுதி களைக் கொண்ட தோத்திரம்: களிதாவெ ன அழைக்கப்படும் பழங் குடி வைபவப் பாடல். களிதா பயணச் சடங்கை விபரிப்
本
பது. கவிஞன் தனக்குப் பரிச்சயமான சூழலை விட்டு நீங்கி, பல அபாயங்களை, ஆபத்துக்களை எதிர் கொண்டு பின்னர் தன் பழங்குடியிடம் மீண்டு, அச்சமூகத்தில் தன் உறுப்புரிமையைப் பாராட்டுவது. பாலைவனம், வனவுயிர்கள், கவிஞன் சவாரி செய்யும் குதிரை, பெரும்பாலும் ஒட்டகை பற்றிய விவரங்கள், வர்ணனை கள் விரவியிருக்கும். ஒவ்வொரு களிதாவும் பழங்குடியின் எதிரியைப் பழிப்பதாயும் அதன் தலைவர்களைத் துதிப்பதாகவும் அமையும்.
எட்டாம்நூற்றாண்டுக் கவிதை ஒன்றில், கவிஞர் அல் மஹ்தி, தன்னை ஆதரிக்கும் புரவலனின் கொடைக் குணத்தைப் பாராட்டுகிறார்:- “ஒவ்வொரு சீமானும் ஈகைக் குணம் கொண்டிராவிடினும் என் உயிர் மேல் ஆணை - இப்னு:பர்மாக் என்மீது அளவில்லா தயாளம் காட்டியுள்ளார். அவர் உள்ளங்கையில் என் பாடல்களைப் பாலாக வார்த்துள்ளேன் இடிபுயலின் மழை மேகம் போல் அவை பொழிந்துள்ளன”
"இக்கவிதைகள் செப்பமான யாப்பு வடிவங்களில், சீரிய மொழியில் பாடப் பட்டுள்ளன" என்கிறார் ஃபிராங்கியே. இவை நூறு முதல் இரு நூறு அடிகள் கொண்ட நெடுங் கவிதைகள். கவிதையின் ஒவ்வோரடியும் சம அளவினதாய் அழுத்த மான அசைகளைக் கொண்டிருக்கும்; ஒரே எதுகை அமைப்பைக் கொண்டிருக்கும்.
ஆங்கிலத்தில்: ஒரலச்சR&N79ஷ் தமிழில்: owys,
யாத்ரா - 2

Page 8
“என்னை இனிமேல் எதிர்பார்த்திருக்காதே."
கவிதையிலே மட்டும் நின்று கவிஞனாகவே வாழ்ந்து, கவிஞனாகவே மறைந்து விடுவோம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
எனது சொந்த வாழ்க்கையைக் கூடநான்மிகத்
தூய்மையாக வைத்துக் கொள்பவன்.' நான் இந்தச் சமுதாயத்தை விட்டு மேலே பறக்கவில்லை. இந்தச் சமுதாய LDš5(36mT(6 நான் இணைந்திருக்கிறேன். அவர்களின் பிரச்சனைகளோடு நாளாந்தம் கலந்து கொள்கிறேன். அதன் காரணமாகப் பலர்
என்னை நேசிக்கிறார்கள்.
ஒக்டோபர் - டிஸம்பர் 2001ல் வெளிவந்த 'யாத்ரா - 7 வது இதழில் கவிச்சுடர் அன்பு முகையதீன் அவர்களின் பேட்டி பிரசுரமாகி யிருந்தது. அப் பேட்டியில் அவர் சொன்ன வார்த்தைகள்தாம் மேலே குறிப்பிடப்பட்டவை. அவரது பேட்டியில் அவர் குறிப்பிட்ட ஒரே ஒரு கவிதை காண வர நேரமில்லை’ அக் ン கவிதையும் அவ்விதழில் பிரசுரமாகியிருந்தது. அக்கிவிதையின் இரண்டாவது வரிதான் ‘என்னை இனிமேல் எதிர்பார்த்திருக்காதே."
நான் இந்தச் சமுதாயத்தைவிட்டு மேலே பறக்க வில்லை என்று சொன்ன அன்பு, 16.09.2003 அன்று எல்லாவற்றையும் விட்டு விட்டுப் பறந்து
விட்டார். ஆனாலும் அவரது கவிதைகள் .
வாழும். அதில் அவரும் வாழ்வார்.
யாத்ரா - 2
தொழில் ரீதியாகப் பயிற்சி பெற்ற கவிஞனின்தலையாய பணி குல கெளரவத் தைக் காப்பதும் அதன் அடையாளத்தைத் தெளியவுரைப்பதும் மற்றைய கூட்டத்தின் ருடன் சொற் போர் புரிவதுமாகும். வார்த் தை சாலம் புரியும் கவிஞன் மந்திர சக்தி வாய்க்கப் பெற்றவனாய்க் கருதப் பட் டான். அவனது திறமைக்காகப் போற்றப் பட்டான். 'ஷயிர் என்ற அறபிச் சொல் காணாதவைகளை உணரக் கூடியவன் என்று பொருள் படும். எனவே, கவிஞன் உணரக் கூடியவன்: சைதன்யம் மிக்கவன் என்கிறார் அலென். “சாதாரண அர்த்தத் தையும் உப்புச் சப்பில்லாத வடிவங்களை யும் தோயச் செய்து வசீகரமிக்கதாகவும் நெகிழச் செய்வதாகவும் மாற்றும் ஏதோ வொன்று இருத்தல் வேண்டும்” என்கிறார் பிரிட்டனில் சவூதி அரேபியத் தூதராக வுள்ள கவிஞர் காஸி அல் குசைபி. "இந்த. அம்சம் பற்றி இஸ்லாத்துக்கு முந்திய அறபிகளிடம் சந்தேகமிருக்கவில்லை. அவர் கள் அதனை மாயம் - மாந்திரீகம் என்றே நம்பினர்.”
ஒவ்வொரு கவியரசனும் ‘ராவிகள்' என்றும் கற்றுச் சொல்லிகளால் சூழப்பட் டிருந்தனர். “கவிஞன் புதியதொரு கவிதை யை யாத்ததும் ராவிகள் அதனை மனனஞ் செய்தனர். மறுநாள் குதிரைகளிலோ ஒட்ட கைகளிலோ ஏறிச் சென்று அறேபியாவின் திசைகளெங்கும் அக்கவிஞனின் பிரதாபத் தைப் பிரகடனஞ் செய்தனர்” என்கிறார் ஃபிரெங்கியே. “அவன் பழங் குடிகளின் அரசியல் பேச்சாளன்: தீர்கக்தரிசி போன்று வருங்காலத்தை முன் மொழிப்வன்.”
கி.பி. 622ல் அல்குர்ஆன் அருளுப்பட்டு இஸ்லாம் ஸ்தாபிதமானதும் அறேபியா தீவிர் மாற்றத்துக்குள்ளாகிறது. பழைய நாடோடிச் சமூகங்கள் இஸ்லாமிய அரசினது கலிபாக்களது, சிவில், மதத் தலைவர்களத பரிபாலனத்தில் ஐக்கியப் படுத்தப்படுகின்றனர். பழங்குடிகளின் சிறு சைன்யங்கள் வகித்த இடத்தை ஒன்று
k
 
 

திரட்டப்பட்ட பாரிய ராணுவம் பிடித்துக் கொள்கிறது. மையப் படுத்தப்பட்ட பேர ரசு உருவாகின்றது. ஒன்பதாம் நூற்றாண் டின் பிற்பகுதியளவில் மேற்கு மத்திய தரைக் கடலிலிருந்து மத்திய ஆசியா வரை விரிந்து பரந்து வியாபித்த இராச்சியம் ஒன்றுக்குரிய மார்க்கமாக இஸ்லாம் பரிண மிக்கின்றது. ஒதல் அல்லது ஒதல்கள் என்று பொருள் படும் அல் குர்ஆன் வரிவடிவம் பெற்றமை வாய் மொழி மரபிலிருந்து எழுத்து மரபுக்கான மாற்றத்தைக் கொணர் கிறது. இந் நிகழ்வு கலாசாரத்தில் - இலக் கியப் படைப்பிலிருந்து சட்டம் வரை, மொழியியல் வரை - மாபெரும் தாக்க த்தை உண்டு பண்ணுகிறது.
அல்குர்ஆனின் எழுத்துப் பதிவு மத்திய கிழக்கின் வரலாற்றில் வியப்புக்குரியதோர் முக்கிய நிகழ்வு. மொழியிலும் வம்சா வழியிலும் - பிரமாண்ட ஆய்வுக்கும் தரவு களை நிதானமாகக் கணிக்கும் விமர்சன முறைக்கும் இது வழி சமைக்கிறது. இவை யாவும், இஸ்லாமிய சட்டத்தினதும் இறை யியலினதும் உருவாக்கத்தில் மட்டுமன்றி, இலக்கியத்திலும் இலக்கிய விமர்சனத் திலும் உட்பிரவேசிக்கின்றன என்கிறார் அலென்.
புதிய சமூக அமைப்பில் கவிஞர்கள் தம் முக்கியத்தவத்தைத்தக்க வைத்துக் கொண் டனர். முஹம்மது நபி (ஸல்) தம் சொந்தக் கவிஞரைக் கொண்டிருந்தார்கள். இக் கவிஞர் ஷ"அரா அல் றசூல் என அறிய வரப்பட்டார். ஆயிரத்தோர் இரவுகளுக் குத்தூண்டுதலாக விளங்கிய ஹாரூன் அல் ரஷீத் போன்ற கலீஃபாக்களும் சுல்தான்க ளும் அவரவர்க்குச் சொந்தமான ஆஸ்தா ன கவிஞர்களை வைத்திருந்தனர். இவர் கள் இரவு தோறும் அரண்மனைகளில் கவிதை பாடினர்.
இஸ்லாமிய கலீஃபாக்களின் காலத்தில் புலவர்கள் புரவலர்களை நாடிச் செல் கின்றனர்.கிலாபத்தின் தோற்றம் பழங் குடிகளின் பிரதிநிதியான கவிஞனை அரசவைப் புலவனாக மாற்றுகிறது.
لا2
இக்கவிஞர்கள் அடிக்கடி பயணங்களை மேற்கொள்கின்றனர்.
பத்தாம் நூற்றாண்டு அரசவைக் கவிஞர் அல் முத்னப்பி ஆங்கிலக் கவி ஷேக்ஸ் பியருடன் ஒப்பிடத்தக்கவர். இஸ்லாமிய ஆட்சியாளரையும் அவர்களது சாதனை களையும் பாராட்டி செவ்வியல் கவிதை யாத்தவர் முத்தனப்பி. பின்வரும் வரிகள், கி.பி 954ல் பைஸாந்தியாவுக்கெதிரான வெற்றியின் போது சிராஜ"த் தவ்லா வுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட முத்தனப்பி யின் கவிதையில் காணப்படுவன:- "தீர்மானிப்பவரின் தகுதிக்கேற்பவே தீர்மானங்கள் நிறைவேறும் உன்னதமானோரின் தகுதிக்கேற்பவே உன்னதங்கள் நிகழும் அற்பர்களின் பார்வையில் அற்பச் செயல்களே முக்கியம் பெறும்"
அல் முத்தனப்பிக்கு அவரது கவிதை யாற்றல் மீது அளவு கடந்த நம்பிக்கை.:- “ஆட்சியாளரின் வீரத்தை " . . . . முத்தனப்பி பாடாவிட்டால் அடுத்த வரும் தலைமுறைகள் அவனை மறந்து விடும்”
இது, ஓர் அரசனுக்கு முத்தன:ப்பி விடுக்கும் எச்சரிக்கை.
அறபுக் கவிதையின் வரலாற்றில், கவிதையின் அரசியல் பாத்திரம் மாற்ற முறாத ஒன்று. உதாரணத்துக்கு, யெமனில் பழங்குடிகளுககிடையே பிணக்குகளைத் தீர்க்கும் வழிமுறையுடன் கவிதை ஆக்க பூர்வமாக இணைந்துள்ளது. ஹார்வாட் பல்கலைக் கழக மானிடவியல் பேரா சிரியர் ஸ்டீபன் காட்டன், யெமன் பழங் குடிச் சமூகங்களைப் பற்றிக் கற்பதற்காக
இரண்டு தசாப்தங்களைச் செலவிட்டவர். பழங்குடிச் சமூகத்தில் பொதுவான
அரசியல் சொல்லாடலில் கவிதை முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் யெமன், சவூதி அரேபியா, ஜோர்தான், ஈராக் போன்ற நாடுகளில் போன்று மத்திய கிழக்கின் தேசிய அரசுகளில் இன்றும் பழங்குடி யினர் முக்கிய பகுதியினராவர். “பொது
யாத்ரா - 12

Page 9
மக்கள் மட்டத்தில் நிகழும் அரசியல் கலந் துரையாடலைப் புரிந்து கொள்ள நாம் கவிதையைத் தொட்டாக வேண்டும்’ என்கிறார் காட்டன்.
யெமனில் ஷெய்கு ஒருவர் மத்தியஸ்தம் வகிக்கும் போது, தகராறில் சம்பந்தப் பட்ட இரு தரப்பினரோடு சம்பந்தப் படாத குடிகளைச் சேர்ந்த தூதுவர் களையும் அழைப்பார். இத்தூதுவர்கள்தம் அபிப்பிராய்ங்களையும் தார்மீக நிலைப் பாட்டையும் கவிதையில் ஒலிப்பர். “தக ராறு விசாரிக்கப்படும் போது அவ்விசார ணையின் பல்வேறு நிலைகளிலும் மக்கள் கவிதை மூலம் தாம் பெற்ற அற வலிமை யுடன் விவகாரத்தைச் சீர்தூக்கிப் பார்க்க முடிகிறது” என்று அபிப்பிராயப்படுகிறார் காட்டன். “கலையும் அரசியலும், கவிதை யும் அதிகாரமும் பிரிக்க முடியாதவாறு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள் ளது என்பதை அறபுக் கவிதை காட்டு கிறது.”
" யெமன் போன்ற நாடுகளில், அரசியலுக்குப் பங்களிக்கக் கவிதையிடம் ஏதோ உண்டு - அதாவது அரசியல் செயற் பாடு என்பது மிருகத்தனமான வலிமை யைப் பிரயோகிப்பதல்ல. நீங்கள் சொல் வது அறம் திறம்பாதது, நீதியானது என்பதனை நம்பச் செய்வதாகும். மக்கள் அவ்வாறு நம்புவதற்கு மொழியின் லாவண் யத்தினால் வசீகரத் தூண்டல் பெறுகின் றனர்” என மேலும் கூறுகிறார் காட்டன்.
அரசியல் கவிதை மட்டுமன்றி, ஏனைய கவி மரபுகளும் காலங்களினூடு தலை முறை தலைமுறையாய்க் கையளிக்கப் பட்டு, புதிய வியாக்கியானங்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளன. மதுவைத் துதிக்கும் பாடல்கள், கவிஞனின் காதலிக் குச் சமர்ப்பிக்கப்படும் பாடல்கள் என இருவகைக் கவிதைகள், இஸ்லாத்துக்கு முற்பட்ட காலத்திலிருந்து வழங்கி வந்துள் ளன. உதாரணத்துக்கு, நாடோடிக் கவி ஞன் அல் ஆஷாவின் கவிதையொன்றி லிருந்த சில வரிகள்:- :Tதரr - 12
"துணிந்த, நாணமற்ற, தூர்த்தனான கசாப்புக்காரன் பின் தொடர காலையில் மதுச்சாலை சென்றேன் சுகந்தத் தளிர்க் கிளையொன்றுக்காக ஈரக் குவளையின் உலர் மதுவுக்காக சரிந்து சாய்ந்த நிலையில் என் போட்டியாளர்களை வென்று விட்டேன் மது கிடைக்கும் வரை 'இன்னும் தாரும் எனக் கேட்பதற்கு மட்டுமே அவர்கள் கண்திறக்கின்றனர்"
இவ்வகைக் கவிதையின் அடிப்படைப் பண்புகளை, மதுவைப் பாடிய பிரபல கவிஞர் கலீபா அல் வலீத் இப்னு யளிதின் எட்டாம் நூற்றாண்டுப் பாடலொன்று வெளிப்படுத்துகின்றது. மதுப்புட்டியை அழகிய பெண்ணுக்கு ஒப்பிட்டு விதியிடம் சவால் விட்டுச் சாடுகிறார் கவிஞர்:- " தெரிய வராத கவலைகளையும் பொறுப்புகளையும் அற்பமாய் விட்டுத்தள்ளு திராட்சை மகள்தரும் இன்பத்தால் விதியை மாற்று உயர்குடிப் பெண்ணின் மணநாளில் அருந்தத் துடிக்கிறேன் அவளிடமிருந்து ஒளிகாலும் அணிமணிகளில் அற்புதம் அவள் பார்ப்பதற்கு அவள் கிண்ணத்தில் ததும்பும் தழல் பளபளக்கின்றது பர்வையாளன் விழிகளுள்"
இஸ்லாத்தின் ஸ்தாபிதத்துடன் சூஃபிகள் அல்லது முஸ்லிம் ஞானிகள் மதுப்பாடல், காதல் கவதை போன்ற பழைய பாவடிவங்களை ஆன்மீக அனுப வங்களை வெளியிடப் பயன்படுத்து கின்றனர். “விசுவாசி அன்றாட உலகி லிருந்து - லெளகீக விவகாரங்களிலிருந்து விலகி இறைவனை நெருங்கப் பயணிக்கும்
பாதையின் தேடலே சூஃபித்துவம்” என
விளக்குகிறார் அலன், “ இதற்குச் சாதக னின் பிக்ஞையில் மாற்றம் நிகழ்வது அவசியம். பாடல் இசைத்தல் போன்ற
大

Dasg Glap
எங்கள் மூளைகளுக்குள் கந்தகச் சலவை
கண்களில் வளர்க்கப்படும் கறுப்புத் தீ
காதுகள்
கட்டளைகளுக்கு மட்டுமே திறப்பவை
வாய் வார்த்தைகளுக்காய் பேசாது
605
கால்
2 LibL கருவிகளாய் இயக்கம்
பொத்தானை அழுத்தி வெடிக்கும் அந்தக் கடைசி நிமிடங்களில் எங்களுக்குள்ளும் , ஒரு நிலா ஒரு கவிதை ஒரு வெண்புறா தோன்றிச் சிதறும்
இநல்vேn^9Jஷ் (fibj)
நன்றி. திண்ணை இணையத்தளம்
பல்வேறு வழிகளில் சாத்தியமாகின்றது இப்பிரக்ஞை மாற்றம்.”
சூஃபிக் கவிதை ஒட்டணி நிர்ம்பியது. இறைக் காதலை வெளியிடடிக் காதற் கவிதையின் மொழி கையாளப்படுகிறது. ஐக்கியத்துக்கான ஆசையை, தியான வழி முறைகளைக் கூற மதுப்பாடல்கள் உதவு கின்றன. சூஃபி மதுப் பாடலில் மதுவார்ப் பவர் நபிகளைப் பிரதிநிதிப் படுத்துவார்; பிரபல சூஃபிக் கவிஞர் இப்னு அல் பரீத் தமது மதுப் பாடலொன்றை இவ்வாறு தொடங்குகிறார். "காதலியின் நினைவால் மதுவருந்தினோம் திராட்சைக் கொடி சிருஷ்டிக்கப்படு முன்பே போதையில் மூழ்கிக் கிடந்தோம்
முழு நிலவு மதுக் கிண்ணம் இளம் பிறையால் வட்டமிடப்பட்ட சூரியனே மது ' அது கலக்கப்படும் போது எத்தனை நட்சத்திரங்கள் தோன்றுகின்றன
மலர்ச் செண்டு இல்லாவிடின் மதுச் சாலையை அடையாளங் கண்டிருக்க மாட்டேன் பளிச்சிடும் அதன் பளபளப்பு இல்லாவிடின் கற்பனையால் அதனைப் படம் பிடித்தல் எவ்விதம்?
இஸ்லாத்தின் கீழ் கவிஞர்கள் மரபு வடிவங்களை அப்படியே வைத்துக் கொண்டு மொழியை மீளுருவாக்கம் செய்த அதே வேளை, மேற்குடனான தொடர்பு, அறபுக் கவிதையின் சகல அம்சங்களிலும் மாற்றத்தைக் கொணர் கிறது. 1798ல் நெப்போலியன் எகிப்தை முற்றுகையிட்டதைத் தொடர்ந்து குடி யேற்றங்களின் காலம் தொடங்கிற்று. சுயநிர்ணயத்துக்கான போராட்டம்
வெடித்துக் கிளம்பி 1950களிலும் 1960 களிலும் விடுதலைப் போராட்ட இயக்கங்
யாத்ரா - 12

Page 10
மெளனத்தின்
குரல் OO
எப்போதுமே எனது குரலை நீ எழ விடுவதில்லை
நான்கு சுவர், படுக்கையறை கிணற்றடி, அடுப்பங்கரையென்று உன் வாழ்க்கைக்குள் நான் வந்த பின்
எல்லாவற்றையுமே வரையறுத்துக் கொண்டாய்
என் மொத்த எடையில் மூன்றிலொரு பங்கு மாமிசம் சிறிதளவு எலும்பு, நரம்புக் கூடுகள் பொது நிறம், புடைத்த மார்புகள் குழந்தைப் பேறு இவையனைத்தும் உள்ளவள் பொண்டாட்டி என்று புரிந்து வைத்துள்ளாய் புகையிலும் அனலிலும் புழுங்கும் இவளுக்குள்ளும் மனசொன்று இயலாமைகளால் இறுகிக் கிடப்பதை கடுகளவேனும் நீ கவனிப்பதே இல்லை.
அனுபவங்களில் கொடியதென்று கேட்டால் உன்னை சந்தித்த பின் வந்த முழுவதையும்தான் சொல்ல வேண்டியிருக்கிறது
கட்டாரிலிருந்து.
-ܠ ԱյՈֆցՈ - 12
ഋഷ്ണ"
களில் உச்சம் கொள்கிறது. இச்சம்ப வங்கள் தேசிய உணர்வைத் தூண்டி விட்டதுடன் நவீனத்துவத்தை அறிமுகப் படுத்தின. கடந்த காலத்துடன் சமூக, கலைத்துவ உரசல் ஏற்பட்டு புதிய வெளியீட்டு வடிவங்களுக்கான தேடல் தொடங்கிற்று. மேற்குலகப் பிரமாணங் களின் முக்கிய பிரதிகள் 1940களில் அறபியில் மொழிமாற்றம் பெறுகின்றன.
கலைப் படைப்பும் அறச் செயற்பாடும்
குறித்து ஜீன் பால் சார்த்தரின் இலக்கியம் என்றால் என்ன? என்ற கட்டுரை, சேர் ஜேம்ஸ் ஃபிரேசியரின், மதம் பற்றிய மானிடவியல் ஆய்வான "பொற்கிளை’ THE GOLDEN BOUGH) (1p356)Tub uj555576) விளைந்த நம்பிக்கை வரட்சியையும் விமோசன விடிவுக்கான தேடலையும் பிரதிபலிக்கும் டி.எஸ் எலியட்டின் பாழ் 15alb’ (THE WASTE LAND) (upg565uGOT gyps யில் அறிமுகமாகின்றன.
நவீன கவிதை இயக்கம் 1948ல் பக்தாதில் ஆரம்பித்ததென்கிறார் ஃபிரெங்கியே. “கவிஞர்கள் அரசியல், தேசிய பாடு பொருள் குறித்துப் பேசத் தலைப்படுகின் றனர். இரு உலக யுத்தங்களுக்கிடையே அறபு நாடுகளின் விடுதலைக்காகக் கவிதை பெரும் பங்காற்றுகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற் பகுதியில் உதுமானியப் பேரரசை வீழ்த் தும் முயற்சியில் புதியதொரு பிரக்ஞை ஏற்படுவதற்கு கவிதை உதவுகிறது. கவிதை அரசியல் தாற்றத்துக்கான ஆயுதம்.”
அறபுலகில் 1950களில் எழுதப்பட்ட கவிதை, அதற்கு முந்தியவை அனைத் திலிருந்தும் வித்தியாசப்படுகின்றது. அறபுக் கவிதை புதிய உந்துதல் பெற்று லெபனான் எழுத்தாளர் கலீல் ஜிப்ரான் போன்றோரின் ரொமாண்டிசப் போக்கி லிருந்து விலகிச் செல்லத் தொடங்கிற்று.
விடுதலைப் போராட்டத்தின் போது
அர்ப்பண உணர்வு - பொறுப்புணர்வு - d 6iram 3,69605 ( Commitment poetry) - engagement 61 Götlug Gir
ܥܰܕ݂
சார்த்தரின்

மொழிபெயர்ப்பு - மேற்கிளம்புகிறது.
7
1950களின் கவிதை அதுவரை பெறப்பட்ட
வடிவங்களைப் புறமொதுக்கி, நவீனத் துவப் பண்புகளைத் தன்வயப்படுத்திக் கொள்கிறது. மரபு ரீதியான சொல்லணி கள், தொனி முதலியவற்றைத் துறந்து,
பாடு பொருளைப் பொறுத்த வரை
அதுவரை பொருத்தமற்றவைகளாகக் கருதப்பட்டவை மீது அதன் கவனம் குவிகின்றது.
பிரபல சமகாலக் கவிஞர் ஈராக்கின் அப்துல் வஹ்ஹாப் அல் பயாத்தி 1940களின் பிற்பாதியிலும் 1950 களிலும் சுயேச்சா கவிதை இயக்கத்துக்குத் தலைமை தாங்கினார். ஈராக்கின் மன்ன ராட்சியை விமர்சித்தமைக்காக 1953ல் சிறையில் தள்ளப்பட்ட அல் பயாத்தி நாட்டிலிருந்து தப்பிச் செல்ல நிர்ப்பந்திக் கப் பட்டு, தீவாந்திர வாசத்தின் போது தொடர்ந்து எழுதியதுடன், பிரசுர முயற்சி யிலும் ஈடுபட்டார். ‘விடுதலைக்காகவும் ஏழை எளியவர்க்கு நீதி வேண்டியும் எழுத வேண்டுமென அப்போது உணர்ந்தேன்’ என ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறார் : luftë:5).
1954ல் அல் பயாத்தி எழுதிய "கிராமச் சந்தை' என்ற கவிதை ஒன்றோடொன்று இணையும் படிமங்களுடன் தொடங்கு கிறது:- "மெலிந்த நோஞ்சான் கழுதைகளாய்ச் சூரியன் வெருண்டோடுகிறான் வெறுமையை வெறுத்து நோக்குகிறான் விவசாயி
B&#FUILDrTuiu அடுத்த ஆண்டு தொடங்கும் போது இந்த பூட்சுகளை நான் வாங்குவேன்
எதுகைகளோடு காதல் கவிதை, வேட்டைப் பாடல், புகழ்ப் பாவணி என்றெல்லாம் இளங்காணப்பட்ட பாவகைகளில் அமைந்த, நவீனத்துவத் துக்கு முந்திய அறபுக் கவிதைகள் போல அன்றி, :பயாத்தியின் கவிதைக்குத் தலைப்பு உண்டு. "நவீனத்துக்கு முந்திய
بلاوجہ
அரசவைச் சூழலில் “கிராமச் சந்தை' நாகரிகமான பாடு பொருளல்ல. யோக்கியமான எந்தக் கவிஞனும் இது போன்ற பாடு பொருளால் தன் கைகளைக் களங்கப்படுத்திக் கொள்ள விரும்ப மாட்டான்’ எனக் கூறும் அலன், அறபு நவீனத்துவத்துக்கு உதாரணமாக இக் கவிதையை தம் மாணவர்க்கு எடுத்துக் காட்டுகிறார். “நம்ப முடியாதபடி அறயி யல்லாத, செவ்விலக்கியஞ் சாராத இக்கவிதை மொன்டாஜ் (montage) பாணி யில் தொடங்குகிறது. . பாலைவனக் கூடாரம், மிருகங்கள் பற்றிய வர்ணனை, அங்கில்லாத காதலி பற்றிய ஏக்கம் எனப் பழம் நினைவுகளை அசை போடும் செந்நெறிக் கவிதைக்குத் திரும்பிச் சென்றால் வித்தியாசமான வேறெதையுட் அங்கு காண முடியாது.”
அல் பயாத்தி இவ்வாறு எழுதுகிறார்: “கவிஞனின் அர்ப்பணிப்பு - பொறுப்பு - அவனை அடியாழத்திலிருந்து பற்றி எரியுமாறு தூண்ட வேண்டும். மற்றவர் கள் பற்றி எரிந்து கொண்டிருக்கையில் அவன் மறுகரையில் தியானத்தில் மூழ்கி இருக்க முடியாது.”
அறபுலகெங்கிலும் உள்ள ஏனைய
கவிஞர்களும் பொறுப்புணர்ச்சி மிக்கவர்
களே. ஈராக்கின் அல் ஸையாப், சிரியா வின் அல் கப்பானி, அடொனிஸ் (அலி அஹமத் ஸையத்தின் புனை பெயர்) சவூதி அரேபியாவின் காசி அல் குஸ்ைபி, பலஸ்தீன மஹ்மூத் தர்வேஷ் முதலா
னோர் இவ்வகைக் கவிஞர்களாவர்.
பிற கலை வடிவங்களைப் போன்று கவிதையும் நவீன தொழினுட்பத்தைக் கையகப்படுத்திக் கொண்டுள்ளது. காட் டன் கூறுவது போன்று, யெமனில் வாய் மொழி மரபை முன்னெடுப்பதற்காக கவிஞர்கள் ஒலிப்திவுக் கருவிகளை உபயோகிக்கின்றனர். இவ்வொலிப் பேழைகள் நாடு முழுவதும் ஸ்டீரியோ கடைகளில் விற்பனையாகின்றன. கவிதை எங்கும் சூழ்ந்து வியாபித்துள்ளது. யெமன் யTதரா - 12

Page 11
உன் உருகை
திருவிழாவே நடக்கவில்லை ടuിളമ്പ്രb மீசை முளைத்த நீ காணாமல் போனாய்
நெஞ்சில் கையறைந்து கதறியழுகிறது ஊர்
உன்னைப் பற்றிய ஒரு வரிச் செய்தி கூட இல்லாமல்
கரியோதயத்திலும் இருள் கவிகிறது
நீ எங்கிருக்கிறாய்?
ஆறுகளின் கரையில்.
காடுகளின் நிழலில்.
வீசியடிக்கின்ற வெப்பக் காற்றில் உன் சுவாச மூச்சும் கலந்திருக்கிறதா.
உன் வருகை கீறல் விழுந்து வெடிப்புகளாய் வளரும் சமாதானத்தைச் சரி செய்ய ஒரு கைதந்து
உதவக் கூடும்
நம்புக
نیاوکام حامد 612
штфfЈт — ир
ஒவ்வொரு
摄8
சமூகத்தின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு துறை யிலும் கவிதை இழையோடியுள்ளது, யெமன் சமூகத் தின் - அறபு தீபகற்பத்தின் - உள்ளூர்ச் செய்திகள், நாட்டுப்புற விவகாரங்கள் பற்றியெல்லாம் கவிதைகள் பிறக்கின்றன. இது பழங்குடிகளின் உலகமாக இருப்பி னும் உலக நிகழ்வுகளுடன் பரவலாக இசைவாக்கம் கொண்டுள்ளது.
யெமனின் கவிதைப் போக்குடன் மேற்குலகக் கவிதைப் போக்கை ஒப்பு நோக்கும் காட்டன் மேல் நாட்டுக் கவிஞன், யெமன் கவிஞனைப் போன்று எழுத முற்பட்டால், அவன்தர்க்கம் புரியும் கிண்டல் கவிதை எழுதுவதாய்க் கடுமையாக விமர்சிக்கப்படுவான் என்கிறார். யெதனில் கலாசார ரீதியாகப் பழங்குடி சார்ந்ததாகக் கருதப்படும் செம்மைப் படுத்தப்பட்ட (Stylized) மரபுகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு அரசினதும் குரல் செவிமடுக்கப் படுவதற்கும் பாரதூர மாகக் கொள்ளப்படுவதற்கும் அது ஒரளவுக்கு இம் மொழியில் பேசியாக வேண்டியுள்ளது. ஐரோப்பா விலும் அமெரிக்காவிலும் நவீன கவிதையின் வரலாறு அரசியல் கவிதையை ஓரங் கட்டுவதாகவே காணப்படு கிறது. அங்கு கவிதை தனி மனித உணர்விலிருந்து ஊற்றெடுக்கிறதே தவிர - சமூக மனத்திலிருந்து - பொது மக்களின் உணர்விலிருந்தல்ல - யுத்தத்தின் போது அல்லது தேசியப் பிரச்சினை வெடித்துக் கிளம்பும் போது மட்டும் அவ்வாறு நிகழக் கூடும். அரசியல். அலசல் கவிதைகக்கு எதிராகத் தன்னுணர்ச்சிக் கவிதை களே மேற்கில் முதலிடம் வகிக்கின்றன.
அறபு வாழ்வில் கவிதையின் மையம் குறித்து ஃபிரெங்கியே இவ்வாறு விளக்குகின்றார்: “அறபு மக்களிடம் - பொது மக்களிடம் - வெளிப்படுத்த முடி யாத ஏதோ ஒன்று உள்ளுறைந்து கிடக்கின்றது. மக்களால் வெளியிட முடியாததைக் கவிஞன் வெளிக் கொணர்கிறான். அம்மக்கள் கவிதை மூலம் ஆறுதல் காண்கின்றனர்: ஆன்மீக வலிமை பெறுகின்றனர். அறபிகளைப் பொறுத்த மட்டில் கவிதை ஒரு போதும் அரசியல், ஆன்மீக உள்ளீடின்றி இருந்ததில்லை."
காஸி அல் குஸ்ைபி சொல்வது போல “ கவிதை அறபிகளின் ஆன்மா. இது கவித்துவ உயர்வு நவிற்சி யன்று. ஆன்மாவைத் துன்புறுத்துவது எதுவாயினும் அது கவிதையில் வெளிப்படுகின்றது. எனவே அறபிக் கவிதையைப் படிப்பது சோம்பலான செயலாய் இருத்தல் முடியாது. அது அறபு ஆன்மாவினுள் மேற்கொள்ளப்படும் யாத்திரை.” O
大
நன்றி. ஹியுமனிட்டீஸ் இணையத்தளம்

'யாத்ரா கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கவிதை
விழிப்பும் உறங்கலுமில்லாக் கணங்களில் கடந்து போய் விடுகின்றன
argoeur b
ஒரு மயக்க நொடியில் தவற விட்டு விடுகிறோம் எல்லாவற்றையும்
எல்லாவற்றையுமே.
5L"3FjößJäb 3EDDILL DIT Lú பூத்துக் கிடக்கின்ற விருட்சங்களை பாயாய்ப் படர்ந்து • V− மிருதுவாய் சல்லாபமிடும் பூக்களை தொடரும் கடமைகளுக்கிடையிலும் காதல் சொட்டும் கண்களை
6aouao (3u சமாதானத்துக்காக நீட்டப்படும் கரங்களை எல்லாவற்றையும் எல்லாவற்றையுமே தவற விட்டு விடுகிறோம்
கோடையில் மொட்டையாய்த் தவமிருக்கும் விருட்சத்தையும்
உழைத்த களைப்பினில் காதல் சோர்ந்த கண்களையும் யுத்தத்திற்கான படையெடுப்பையும்
மட்டும்
கண் இமைக்காமல் பார்த்த பின்பு சொல்கிறோம்
M ૭6ોત્રીજી ں چryخام یونیو வசப்படவே இல்லை." 12 - யாத்ரா نمبر
‘வாழ்க்கை எமக்கு

Page 12
திைைவ/
4%/
45Z/622/
/ZA6262تی
ZAമീ
Zzെ
/தி2வை/
Zമ്മബ
ZA%2%2/۶زAA
Afzazz/
%/
'%/ ாத்ரா - 12
20.
சி.சிவசேகரத்தின் மற்றொரு கவிதைத் தொகுதி 'இன்னொன்றைப் பற்றி என்றதலைப்பில் வந்துள்ளது. 27 கவிதைகளைக் கொண்ட 52 பக்க நூலை தேசிய கலை, இலக்கியப் பேரவை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு கவிதையும் பிறந்த பின்னணி, அது இடம் பெற்ற சஞ்சிகைகள் விபரத்தைத் தன்னுரையில் அவர் தன்னுரையில் தந்திருப்பது கவிதைகளை விளங்கி இரசிக்க உதவுகிறது. விலை. 1OO.OO
ஒலிபரப்பாளர்மப்றுாக் தனது கவிதைகளைத் தொகுத்து தடை செய்யப்பட்ட கவிதை' எனும் பெயரில் தந்துள்ளார். மிக அழகிய வடிவமைப்புடன் வந்துள்ள
இத்தோகுதி ‘யாத்ராவின் ஏழாவது வெளியீடாகும்.
கவிதைகளில் சிறைக் கதவுகள் திறக்கும் சத்தமும் விலங்குகள் ஒடியும் சத்தமும் கேட்கிறது என்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். இந்தக் கையடக்க 100 பக்க நூலின் விலை. 20O.OO.
வடக்கிலிருந்து துரத்தப்பட்ட மக்களின் மற்றொரு பிரதிநிதிக் கவிஞனான முல்லை முஸ்ரியாவின் கவிதைகள் இருத்தலுக்கான அழைப்பு’ எனும் பெயரில் யாத்ராவின் எட்டாவது வெளியீடாக வந்துள் ளது. 100 பக்கங்களில் கவிஞர் எஸ்.நளிமின் ஒவியங் கள் இடம் பெற்றுள்ள நூலின் அனைத்துக் கவிதை களும் வடக்கிலிருந்து விரட்டப்பட்ட மக்களின் காய்ந்து (3LT6OT secogOoffsöTeleCDLLJIT6 TriassiT. 66606), 15.O.OO
மலையக இளங் கவிஞனான குறிஞ்சி இளந் தென்றல் என்ற புஷ்பராஜின் கவிதைத் தொகுதியான "அப்புறமென்ன” மல்லிகைப் பந்தல் வெளியீடாக வந்துள்ளது. கலைஞர் முரீதர் பிச்சையப்பாவின்
ஒவியங்கள் மெருகூட்டும் இத்தொகுதியின் கவிதைகள்
எதிர் காலத்தில் நல்ல கவிஞன் ஒருவனின் வருகைக்குக் கட்டியம் கூறுகின்றன. இந்த 86 பக்கக் கவித்ை தொகுதியின் விலை 12O.OO
 

9
சாத்தானின் சகோதரன் எனத் தன்னை அழைத்துக் கொள்ளும் சிவலிங்கம் என்கிற ஆ.கண்ணப்பன் தனது கவிதைகளைத் தொகுத்து ‘எறிகணைத் தாலாட்டு' எனும் மகுடத்தில் நூலாக்கியிருக்கிறார். மருதமுனை' ஹிஸ்ஸபாப் வெளியீடான 60 பக்கக் கவிதைத் தொகுதியின் கவிதைகளைப் பற்றி சி. மெளனகுரு அவர்கள் நீண்ட முன்னுரை வழங்கியுள்ளார். விலை
75. OO.
அல் மருதமுனை சஞ்சிகையில் வெளியான கவிதைகளைத் தொகுத்து ‘கிராமிய தூறல்கள் எனுந்தலைப்பில் நூலாக்கியுள்ளனர். 68 பக்கங்களில் வெளியாகியுள்ள இந்த நூலில் மூத்த கவிஞர்கள் முதற்கொண்டு புதியவர்கள் வரையான கவிதைகள் இடம் பிடித்துள்ளன. விரிவுரையாளர் ரமீஸ் அப்துல்லாஹ் முன்னுரை வழங்கியுள்ளார். விலை.
15O.OO
யூ.எல்.எம்.அஸ்மின் என்ற பாடசாலை மாணவன் தனது புதுக்கவிதை, மரபுக் கவிதை ஆகியவற்றைத் தொகுத்து ‘விடியலின் ராகங்கள் எனும் தலைப்பில் நூலாக்கியுள்ளார். பொத்துவில் ஸம்ஸம் இளைஞர் கழக வெளியீடாக வந்துள்ள இந்நூல் 12 பக்கங்களைக் கொண்டது. மரபுக் கவிதைகளில் ஆற்றல் பளிச்சிடுகிறது. நூலாசிரியர் தேடல் என்ற சஞ்சிகையின் ஆசிரியருங் கூட விலை. 1OO.OO
இவ்வருட சர்வதேச மகளிர் தினத்தையிட்டு மலையக வெளியீட்டகம் ‘மண்ணிழந்த வேர்கள் என்ற: லுணுகலை ரளினா புகார் என்ற பெண்மணியின் கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளது. 52 பக்கங் கள் கொண்ட இத்தொகுதி, புத்தக அடுக்கில் வைத்தால் வித்தியாசமாகத் தெரியும், மலையக இலக்கிய மேம்பாட்டுக்காக உழைக்கும் அந்தனி ஜீவாவின் முயற்சி. இந்நூல். விலை குறிப்பிடப்படவில்லை.
ملخر
%/
/MOM2هاZ
%/
øszØvà/
Zബ/
Zezona
4தியவை
4%/
نيمايic6يږtلويه * 零。
%/
4%/
452A262/
Zബ/
Afz/6262/
? ترم/محنتڑیZZ
Aáza/2/ யாத்ரா - 12

Page 13
g
įstølsbọ Toriyego 原99 g島高명(民6 g原;여고的 起Q역 splin-III/13 QQ209!!19!!0 gặ6)19 gắgoŲ0p
'goolsep Talso sợ0111@fiûb
Koĝigis-Itự sụpęsis sooloģĶI qÇıplug gọ01090 m3,99|mdogollo @ņĝopg|Ģ ĢĻ90.1908ųoŲı
Ģopļog 17. sepop ș011ĝô8 Ĥoĝkoopsgi Køb pg|IIs@lso się splimŲøšoin |pop11909||9||1 ợlıkøņņņ& qûqî9 ĝ6) b mooĝøŲbo
... sąļņaikę sp[$$TŲs& NoĝŲog
moo@olpop q@iņørog gjósolo ựøg sèrbilgilingsso Imgນີ້
@*@シーK&9シ
@congo soud (£1.8\,mộtog
总目目g shqipạ@ığụng mạsognosob sobre q@ņojeg sợIIGI gioosseg, gắ11@fi) so spligi
·ợIng ņmœIII19 ~ ფმიტmaensiç qŴms@@ họ Tā qopạimog șT@rs ogầIIGI (9n gullogrįstums (on © III1900-lugu mon
guripfi) Quesûqosgi spęđo loĝIỮg ợII løssmūgio Ilmoitoolimo@ qılmogràfàb 11ĝ-1700 sql-isp qhoog. q(9IIsp mặtpęĝĥio mœĝoblog șGją,9
o gosg QII/09fff)19 @R01101III19ņog mœŒ œŒ œ Œ œ19 msġġđịIIẾ QQ911) ņ90111ĝđù19 (108/0£9
agau&ge」g」%négé
 

நும்றுதைக் கண்டேர், ܒܶܟܤܝܟ݂ܪܶܙ27
மனங்கள் பறந்தன பட்டங்களோடு பட்டமாய் கற்பனைக்கும் காற்றுத்தானே சிறகு அலைகள் படிக் கற்கள் கால் வைத்தேற சிந்தனைகள் கடலாகும் இயற்கையின் இதத்தால் குழந்தை சிரித்தது கள்ப்பிணியின் வயிற்றுக்குள்ளும் பிராண வாயு உமிழும் காலி முகமெங்கும் ஒரே மகிழ்ச்சி அது நகர நரகுக்கு ஒரே ஒரு ஆறுதல் என் முன்னே நடக்கும் சிரிக்கும் கவிதைகள் அதை வாசித்துச் சுகித்திருந்தேன்
கொடுமை மிகு கோரமும் எரி நெருப்பாய் அப்போது சூரியன் வெடித்துச் சிதறி வானத்திலும் உதிரம் மனங்கள் வீழ்ந்து சிறகடித்துச் சாக
கரையொதுங்கின முண்டங்களும் மண்டையோடுகளும் காற்றிலெல்லாம் தீ யுத்தம் எனைச் சூழ
அரச நிழலிலிருந்தே மஹற்முதுகளைத் தீயிலெறிந்து எண்பத்தேழில் எனதூரில் காணாமல் போன அந்த நும்றுாத் சென்று கொண்டிருந்தான்

Page 14
oby paSČd
ஆறுமுகம் என்பது இவருக்குப்
-
பொருத்தமான பெயர். கவிதை, பாடல்
எழுதுவது மாத்திரமன்றி பாடுவதி லும் இசையமைப்பதிலும் பாடல் களை பல்வேறு வாத்தியக் கருவி களை சுருதி பிசகாமல் வாசிப்பதிலும் வல்லவர். பழைய பாடல்களை வாத்தியங்களில் அவர் வாசிக்கத் தொடங்கினால் கால நேரக் கவலை பgயாமல் கேட்டுக் கொண்டேயிருக் கலாம். இவையெல்லாவற்றுக்கும் மேலாக இவர் மிக நேர்மையான ஒரு பொலிஸ் அதிகாரி.
பாடசாலையில் பழக்கும் காலத்தில் ஆசிரியர் பலகையில் எழுதிவிட்டுப் போன பாடலை முழத்துக் கொடுத்துப் பாராட்டுப் பெற்றதை நமது சந்திப்பில் நினைவு கூர்ந்தார். சங்கீத வித்து வானான தந்தை சேகரித்து வைத் திருந்த இசைக் கருவிகள் அவரது உடன் பிறப்புகளாகவும் நண்பர்களா கவும் இருந்துள்ளன. எளிமை
யோடும் தோழமையோடும் பழகும்
பண்புகொண்ட இந்த மனிதாபிமானி சொல்கிறார் கேளுங்கள்.
-ܥ * 〜ァム# rrrT
e
24
பாடலைப் பூர்த்தி செய்த சம்பவம் நடந்தது 1965ல். அப்போது நான் உயர் வகுப்பில் கற்றுக் கொண்டிருந்தேன். இலக்கியப் பாடம் என்றால் எனக்கு உயிர். நான் ஒரு முஸ்லிம் பாடசாலை யில்தான் கல்வி கற்றேன். அங்கு எனக்கு இலக்கியத்தைக் கற்றுத் தந்த திரு. வை.எல்.எம் சாதிக் என்ற எங்கள் தலைமை ஆசிரியரும் ஒர் இலக்கியப் பிரியர். பாட்டுப் பிரியர். அவரிடம் கற்றதினால் இலக்கிய ஆர்வம் மேலும் வளர்ந்தது. இதன் பிறகு 1969ல் என்று நினைக்கிறேன். ரம்புக் பிட்டிய என்ற நாங்கள் வசித்த பகுதியின் கோவிலிலே சிவராத்திரி விழா ஒன்று நடந்தது. அந்த விழாவிலே விடிய விடியப் பாடல்கள் பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். தேவாரம், திருவாசகம், திருப்பல்லாண்டு, திருப்புகழ் - இவைகள் பாடிப்பாடி அலுத்துப் போனவை. சரி, வேறு என்ன செய்யலாம் என்று யோசித்த போது நான் இயற்றிய பாடல்கள் சில இருந்தன. எட்டு இசைப்பாடல்கள். இவற்றுக்கு நானே இசையமைத்திருந்தேன். அவற்றை நான் அங்கு பாடினேன். ஒரிரு பாடல்கள் ஹிந்தி திரைப் படப் பாடல்களின் மெட்டிலே
கலைப் பிரியர்.
அமைந்தவை. ஆனால் அவை யாவும் பக்திப் பாடல்கள். இவற்றை இந்து இளைஞர் மன்றத்தினால் புத்தக மாகவும் வெளியிட்டார்கள். இதுவும் எனது ஆரம்ப இலக்கிய வாழ்வில் முக்கியமான விடயம்.
நான் பாடசாலைக் கல்வியை முடித்ததற்கும் இந்தத் தொழிலுக்கு வருவதற்குமிடையில் ஏறக்குறைய பத்து வருடங்கள் நாடகங்கள் போடுவது, இசைக் கருவிகளை வாசிப்பது, இசைக் குழுவுடன் சேர்ந்து பாடல்கள் பாடுவது
என்றுதான் காலம் சென்றது. 1985ம்
ஆண்டு இனிமேல் தொடர்ந்து கவிதை எழுத வேண்டும் என்று நான் தீர்மானித் தேன். அதற்குக் கால்கோளாக அமைந்தது
حي

ஒரு நிகழ்ச்சி. சிரில் சந்திர குமார என்று என்னுடன் பொரளைப் பொலிஸில் கடமையாற்றிய ஒரு அழகிய இளைஞன் வவுனியாவுக்கு மாற்றம் பெற்றுச் சென்று அங்கே கண்ணி வெடியில் சிக்கி உயிரிழந்தான். அந்த நிகழ்ச்சி என்னை மிகவும் பாதித்தது. நான் பொலிஸ் நிலைய முன்னால் காவல் கடமையில் இருந்த பொழுது இச்செய்தி எனக்குக் கிடைத்தது. அது என்னால் தாங்க முடியாத துயராக இருந்தது. உடனே தாள்களையும் பேனையையும் எடுத்து வந்து எனது இடது தோளிலே துப்பாக்கியைச் சுமந்து கொண்டு அக்கட்டடச் சுவரில் தாள்களை வைத்து விறு விறு என்று எழுதினேன். எழுதிய பிறகு அக்கவிதையைத் திரும்பப் படித்த போது செப்பமிடும் அவசியமில்லாத ஒரு கவிதையாக அது இருந்தது. இறந்த அந்த நண்பனின் புகைப் படத்துடன் தினகரன் வார மஞ்சரியில் இரு அக்கவிதை பிரசுரமானது. அக்கவிதை யைப் படித்த பல நண்பர்கள் என்னை தொடர்ந்து
வாரங்களாக
எழுதுமாறு தூண்டினார்கள். பின்னர் டாக்டர் தாஸிம் அகமது, மேமன் கவி, பூரீதர் பிச்சையப்பா, கவின் கமல், கலைக் கமல் வளர்த் தெடுக்கப்பட்ட வலம்புரி கவிதா வட்டத் தில் இணைந்தேன். ஒவ்வொரு பெளர்ண மிச் சந்திப்பின் போதும் கவிதை
போன்றவர்களால்
ge
பாடினேன். அதன் பிறகுதான் கவிதை உலகில் நிரந்தரமாக நான் நுழைந்தேன் என்று கூற முடியும். இது வரைக்கும் எண்ணுறுக்கும் அதிகமான படல்கள், கவிதைகளை எழுதியிருக்கிறேன்.
அவற்றையெல்லாம் இன்னும் வெளியிடாமல் ஏன் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?
உங்களுக்கு துக்ககரமான ஒரு தகவலைச் சொல்லப் போகிறேன். 1990ம் ஆண்டு மட்டு நகரிலே விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தினார்கள். அது கொழும்பு நகரிலும் எதிரொலித்தது. பொரளைப் பொலிஸ் நிலையத்தில் ஒரு அட்டைப் பெட்டியில் நான் அதுவரை எழுதிய கவிதைகளையெல்லாம் பத்திரப் படுத்தி வைத்திருந்தேன். ஆனல் நான் கடமை புரிந்தது வேறு ஒரு இடத்தில். அந்த வேளையில் எனது படைப்புக்கள் யாவும் பெட்டியோடு எரிக்கப்பட்டன. எனக்குத் திருப்தி தரக்கூடிய கவிதை களையெல்லாம் நான் எழுதியது பொரளைப் பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்த போதுதான். அந்தக் கவிதைகளையெல்லாம் நான் வெளியே சமயத்தில் பெரும்பான்மையின எனது அருமை
சென்ற
நண்பர்கள் எரித்து நாசமாக்கி விட்டார்கள். அதன் பிறகு எழுதப்பட்ட கவிதைகள் மாத்திரமே தற்போது என்னிடமுள்ளன.
காக்கிஉடையில் ஒரு கலிஞன்
66
கூடியதாக இருக்க வேண்டும். 9
پلاہ
தற்போது வரும் இசைப் பாடல் களைக் கவன்யுங்கள். ஆங்கில இசைக் கருவிகளைப் புகுத்தி கேட்க முடியாத அளவுக்கு இருக்கிறது. இசை என்பது எல்லோராலும் கேட்கவும் பாராட்டப் படவும்
யாத்ரா 一 空

Page 15
எரிக்கப்பட்டது சம்பந்தமாக ஏதாவது நடவடிக்கை மேற்கொண்டீர்களா?
83 ஜூலைக் கலவரத்தின் போது நான் கண்டியிலே கடமை. புரிந்த வேளை என் கண்முன்னாலேயே எட்டுக் கொலைகள் நடந்தேறின. இது பற்றி வாய் திறந்து சொல்ல முடியாத ஊமையாகி நான் கட்டுப்பட்டுக் கிடந்தேன். அவ்வளவுதான் சொல்ல முடியும். நீங்கள் இசைப் பாடல்களும் எழுதும் கவிஞர். புதுக் கவிதைகளை எழுதியிருக்கிறீர்களா? அது பற்றிய உங்கள் கருத்து என்ன?
நான் புதுக்கவிதை எழுதமாட்டேன். என்னால் அதை எழுத முடியாது. ஏனெனில் பேனாவைத்தூக்கினால் சந்தத்துடன் மரபுக் கவிதைதான் பிரவகிக் கிறது. புதுக் கவிதை என்பது வசன அடுக்கு என்பதே எனது
அபிப்பிராயம். மகாகவி பாரதியா ரின்
பாடல்களைத் தமிழ் நாட்டிலே பாமர ஜனங்களும் பாடிக் கொண்டிருந்த போது ஆங்கில மொழி யிலே எழுதிக் கொண் டிருந்த புதுக்கவிதை யின் பிதாமகராகப் போற்றப்படும் ந. பிச்ச மூர்த்தி அவர்கள் ப்ாரதியின் பாடல்கள்ை பாணியில் நாமும் ஏன் எழுதக் கூடாது?, இந்த மக்களுக்கு விளங்கக் கூடிய வகையில் ஏன் எழுதக் கூடாது என்று அவரும் எழுதத் தொடங் கினார். அவரு க்கு மரபுக்கு கவிதை எழுத வராது. எனவே புதுக் கவிதையை அவர் கையாண் டார். அது ஏன் பிரபலமாகியது எனில் அவர் ஒரு பத்திரிகையை நடத்திக கொண்டிருந்தார். அவரது பிரசுர பலமும் பிரசார பலமும் சேர்ந்துதான் அதற்குப் பிறகு புதுக்கவிதை எழுதியவர்களுக்கு ஒர் உ ற்சாகத்தைத் தந்தது. புதுக்கவிதை இன்று எல்லாராலும் எழுதப்படுகிறது. ஆனால் போற்றப்படுகிறது என்று சொல்ல முடியாது.
சங்க காலத்திலும் சங்கமருவிய காலத் திலும் அதற்குப் பின் வந்த புலவர்களாலும் கவிஞர்களாலும் பாடப்பட்ட, இலக்கண அமைந்த அந்த மரபுக் கவிதைகள்தான் இன்னும் உயிர் வாழ்கின்றன. ஒன்று நான் சொல்கிறேன்.
முறையில்
யாத்ரா - 12
96
முக்கியமோ கவிதைக்கும்
திருப்புகழில் ஒரு பாடல். ‘ஏறுமயில் ஏறிவிளை யாடுமுகமொன்று - ஈசனுடன் ஞானமொழி பேசுமுக மொன்று - கூறுமடி யார்கள் வினை தீர்க்குமுக மொன்று - குண்டுருவ நின்ற முகமொன்று. எத்தனையோ நூற்றா ண்டுகளுக்கு முன் அருணகிரி நாதரால் எழுதப்பட்டது திருப்புகழ். இன்றும் கோவில்களிலே இதைக் கடைசியாகப்
வேல்வாங்கி
பாடுவார்கள். யாராவது இன்று சொன் னார்களா அது பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட பாடல். இதை ஏன் பாடு கிறீர்கள் என்று? இந்தியாவிலும் இலங் கையிலும் வாழும் முஸ்லிம் மக்களின் தாய் மொழி தமிழ்தான். நபிபெரு மானின் வாழ்க் கைச் சரிதத்தை "சீறாப் புராணம்" என்ற பெயரில் உமறுப் புலவர் எழுதினார். சீறாப் புராணம் பழமை யானது. இன்றைய புதுக்கவிதையே சிறந்தது என்று யாராவது கூறினால் எந்த தமிழ் கற்ற முஸ்லிமாவது ஏற்றுக் கொள்வார்களா?
அதே போன்று ஆங்கிலம் கற்ற பெஸ்கி பாதிரியார் வீரமாமுனிவர் என்ற பட்டத் தோடு "தேம்பாவணி என்ற கிறிஸ்தவ நூலை எழுதினார். அவருக்கு தமிழ் இலக்கியத்திலும் தமிழ் மொழியிலும் மரபுக் கவிதையிலும் உள்ள பற்றுத்தான் அதற்குக் காரணம். ஆங்கிலம் கற்ற அவர் ஏன் புதுக் கவிதையாக எழுதியிருக்கக் கூடாது? ஏனெனில் புதுக் கவிதைகள் என்றுமே உயிர் வாழா. காலகட்டத்துக்குப் பொருத்தமான ஒர உரை வீச்சாக அமையுமே தவிர புதுக்கவிதை கவிதை யாகாது. தமிழுக்கு எந்தளவு-இலக்கணம் அதுபோல தமிழ்க் இலக்கணம் முக்கியம். எனவே இலக்கணமற்ற தமிழ் எப்படித் தமிழ் ஆகாதோ அது போல இலக்கண மற்ற கவிதையும் கவிதையாகாது என்பது
எனது தாழ்மையான கருத்து.
ஆனால் அற்புதமான புதுக்கவிதைகள்
வந்துதானே இருக்கின்றன?
ܓܵܪܵܐ

அற்புதமான புதுக் கவிதைகள் உரை வீச்சாக வெளிவந்திருக்கின்றன. அதன் கருக்கள் போற்றக் கூடியவைதான். ஆனால் அவற்றை இசைப் பாடல்களாகப் பாட (plg-u! LDITP Lufti (pl9.u Tgl. முடியாதது எப்படிக் கவிதையாக முடியும்?
l
ஆனால் புதுக் கவிதைகள் இசைப் பாடல்களாக
இன்று புகுந்திருக்கும் பலர் புதுக் கவிஞர்கள் அல்லவா?
வந்துள்ளன. பாடல் துறையில்
தமிழ் இசையென்பது காலத்துக்குக் காலம் வேறுபட்டுக் கொண்டு மாறுபட்டுக் கொண்டு வந்திருக்கிறது. எளிமையாக இருந்தால் அதை ரசிப்பவர்கள் உண்டு. சரி. நீங்கள் சொல்வது போல் வைரமுத்து எழுதிய ஒரு பாடலைச் சொல்கிறேன். இதுஒரு - பொன் - மா - லைப் - பொழுது என்று அவர்எழுதியிருக்கிறார். பொன் என்ற இரண்டு எழுத்துக்கு ஒரு இகைத் தாளம், மா என்ற எழுத்துக்கு ஒரு இசைத் தாளம். இப்படி இசையமைத்தேதான் அந்தப் பாடலை ஒப்பேற்றியிருக்கிறார்கள். என்னைக் கேட்டால் அதை விட சிறப்பாக எழுதி நானே இசையமைத்துக் கொடுத்திருப்பேன். தற்பெருமை அல்ல. தற்போது வரும் இசைப் பாடல்களைக்
கவனியுங்கள். ஆங்கில இசைக் கருவி களைப் புகுத்தி கேட்க முடியாத அளவுக்கு இருக்கிறது. இசை என்பது எல்லோராலும் கேட்கவும் பாராட்டப் படவும் கூடியதாக இருக்க வேண்டும். 'ஆலய மணியின் ஒசையை நான் கேட் டேன்' என்பது போன்ற அந்தக் காலப் பாடல் களையும் இன்று வெளிவந்துள்ள திரைப் படப் பாடல்களையும் கேட்டுப் பாருங்கள். அது இனிமையா? இது இனிமையா? ஆங்கில இசை கொண்ட இசையமைக்கக் கூடிய இசையமைப் பாளர்கள் இல்லாதிருந்தால் புதுக் கவிதைகள் பாடல்களாக வந்திரா என்பது எனது கருத்து.
இப்படி நீங்கள் சொல்லும் போது இப்படித் தோன்றுகிறது. உங்களுக்கு வயதாகி விட்டது.
لار
97
நாகரிக வளர்ச்சியை, புதியவற்றை ஏற்றுக் கொள்ளாத தலை முறை இடைவெளிப் பிரச்சினைதான் இது என்று இளைய தலைமுறை நினைக்கக் கூடும் அல்லவா?
இன்றைய நாகரிகம் எப்படியிருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்லு கிறேன். நான் கிருலப்பனைப் பொலிஸில் கடமை புரியும் போது ஒரு இளைஞனும் ஒரு யுவதியும் வந்தார்கள். அந்த யுவதி முறைப்பாடு செய்தாள். 'பாருங்கள். இவருக்கு அவ்வப்போது 5000.00, 10,000,00 என்று அவ்வப்போது நான் கொடுத்திருக்கிறேன். இவர் இப்போது என்னை வேண்டாம் என்று சொல்கிறார்." இதுதான் இன்றைய நாகரிக, வளர்ச்சி யடைந்த சமுதாயத்தின் நிலை.
சரி. இன்றைய புதியதலைமுறை புதுக்கவிதையில்
மிப் பெரிய அளவில் ஈடுபாடு காட்டக் காரணம்
என்ன?
இன்றைய கல்வி முறையில் இருக்கும் குறைபாடுதான் அந்தக் காலத்திலே தங்கள் தாய்மொழியை மாணவர்கள் சிறப்பாகக் கற்றுக் கொள்ள
காரணம்.
வேண்டும் என்பதற்காக இலக்கணத் தோடு தமிழ் மொழியையும் தனியாக இலக்கியத்தையும் கற்றார்கள். ஒவ்வொரு தமிழ் பேசும் மாணவனும் தங்க ளது மொழியைத் தெளிவாகக் கற்றார் கள். glig5 வாய்ப்பு இப்போது இல்லை,
உங்களது கவிதை நூல் வெளி வருமா?
நிச்சயமாக எனக்கு அந்த எண்ணம் உண்டு. சமூகத்தில் நேர்மையாக வாழும் மனிதர்கள் எல்லாம் எந்தத் தொழிலைச் செய்தாலும் அவர்கள் சிறந்த பொருளாதாரத்தோடு வாழ்வது கிடையாது. எனது நிலையும் அப்படித்தான். கூடிய விரைவில் கவிதை நூலை உங்கள் முன் கொண்டு வருவேன். நிச்சயமாக, d 光
யாத்ரா - 12

Page 16
ప அழகும் இளமையும் தோதான கவர்ச்சியும் அழகுச் சருமம் மென்மையதாயுமிருக்கிற என்னுடலை நான் விற்கப்போகிறேன் என்ன விலை தருவாய் நீயதற்கு
ஒரப் பார்வைகளுடன் நீ பேருந்துத் தரிப்புக்களில்
காத்திருக்கத் தேவையில்
28
விற்பனைக்காய்
ữa Lổ
藉
கண்களால் சுவை பரும் உன் குறுக்குச் சாமர்த்தியங்கள் தேவையில்லை ஒட்டலுக்கும் உரசலுக்கும் அபயமற்ற எண் தோள்க : தவழ்வதற்கும் நீ
போறனைச் சூடு தரும் பேருந்துகளில் நெருக்குப்படத்
வாங்கிக் கொள் என்னுடலை
விற்கத்தான் போகிறேனர்
விலைகொடுத்து வாங்கிக் கொள்
கவனி
தவணைக் கொடுப்பனவும் கிடையாது வாடகைக்கும் கிட்டாது பணத்தைத் தா, பெற்றுக் கொள் கூடவே மேலதிகமாயும் 8. எதையும் கேட்காதே விற்பது, பயனற்ற வெற்றுச் சடமான உடம்பை மாத்திரம்தான் ஆத்மாவும் உள்ளமும் எனக்காக வேண்டும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆங்கிலத்தில்: CRYVgr .خا6ge தமிழில்:
خر
யாத்ரா - 2

Page 17
30
பஸ்தான்களின்
போர்க் காலப்
LLGáva36í
பாக்கிஸ்தானின் வடமேற்கு எல்லைப் பகுதி மாநிலமான பெஷாவர் பஸ்தூன் மொழி பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பழங்குடி யினர் வாழும் ஒரு மாநிலம். இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் கேளிக்கை, களியாட்டம், பொழுது போக்கு என எந்த வசதிகளும் அற்றவர்கள். இருந்தாலும் உள்ளூர் பாணியில் இசையமைக்கப்பட்ட பாரம்பரியப் பெருமை கூறும் பாடல் களுக்கு இங்கு மவுசு உள்ளது.
இந்தப் பாரம்பரியப் பெருமை கூறும் பாடல்களின் இடத்தை இப்போது அமெரிக்க எதிர்ப்புப் பாடல்கள் பிடித் துள்ளன. அமெரிக்கா தலைமையிலான ஈராக் மீதான யுத்தம் ஏற்படுத்திய அழிவுகள் ஏராளம். ஆனால் பெஷாவர் மாநிலத்தைப் பொறுத்த மட்டில் இந்த யுத்தம் உள்ளூர் இசைத் துறைக்குப் புத்துயிர் அளித்துள்ளது. இந்த மாநிலத்தில் விற்பனையாகும் பொருள்களுள் தந்போது முதலிடம் வகிப்பது அமெரிக்க எதிர்ப்புப் பாடல் களைக் கொண்ட - ஒடியோ கெசட்- ஒலி முன்னரிலிருந்தே இஸ்லாமிய மாநிலம் என அழைக்கப்படும் பெஷாவரில் இந்த ஒலி நாடாக்களின் விற்பனை வேகம் மேலும் இஸ்லாமிய
நாடாக்களாகும்.
எழுச்சிக்கு வித்திடலாம் என ஆய்வாளர்கள் சிலர் அச்சம் தெரிவிக்கும் அளவுக்குச் சூடுபிடித்துள்ளது.
இந்த ஒலி நாடாக்களை நாம் அவை வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்த தூசு தட்டி விட்டு மீண்டும் அதே இடத்தில் வைக்க எவ்வளவு நேரம் எடுக்குமோ, அதைவிடக் குறைந்த நேரத்தில் இவை விற்றுத் தீர்ந்து விடுகின்றன’ என ஒரு வர்த்தகர் தெரிவித்துள்ள கருத்து இவற்றின் விற்பனை வேகத்துக்குச் சான்று பகர்கின்றது. 1991ம் ஆண்டு அமெரிக்கா ஈராக்கைத் தாக்கிய போதும் அதன் பிறகு பத்துவருடங்கள் கழித்து ஆப்கானிஸ் தானைத் தாக்கிய போதும் தற்போதைய யுத்தத்தின் போதிலும் கூட உள்ளூர்க் கவிஞர்கள் பலர் பஸ்தூன் மொழியில் உருக்கமான பாடல்களை இயற்றினர். பஸ்தூன் மக்களுக்கு அமெரிக்க எதிர்ப்பு உணர்வையோ அல்லது இஸ்லாமிய எழுச்சி அல்லது பாடல்கள் மூலம் ஊட்ட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவ்வுணர்வுகள் ஏற்கனவே அவர்களது இரத்தத்தில் நன்றாகக் கலந்துதான் உள்ளது. சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் அமெரிக்கா ஆப் கானிஸ்தானைத்தாக்கிய போது அமெரிக்கா
உணர்வையோ கவிதைகள்,
guVn, ഋഷിപ്പ്
எழுதிய ஆங்கிலக் கட்டுரைன்யத் தழுவி:
زدمعاوند محا6 غموم مولىڅاه
штфДт — 19

வுக்கு எதிராகப் போராடுவதற்கு ஆப்கானிஸ்தானுக்கு வெளியில் இருந்து சென்றவர்களுள் பெரும் பாலானவர்கள் பெஷாவர் மாநிலத் தைச் சேர்ந்த பஸ்தூன்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
பஸ்தூன் கவிஞர்களால் இயற்றப்படும் பாடல்களில் எல் லாம் ஒரு பொதுத் தன்மை காணப் படுகிறது. ஈராக்கிய மக்களுக்கான தமது ஆதரவு அவற்றில் தெரிவிக் கப்படுவதும் அமெரிக்காவைச் சாத்தானுக்குச் சமனாக வர்ணிக்கப் படுவதுமே அப்பொதுத் தன்மை யாகும்.
துர்நாற்றம் பிடித்த குகைக்குள்ளிருந்து ஒரு பேய் வெளிப்பட்டுள்ளது மனிதகுலத்தின் சமாதானத்துக்கு அது அச்சுறுத்தலாக உள்ளது அதன் கொடூரங்களை நிறுத்த யாரும் இல்லையே.
என்று தற்போது பிரபலம் பெற்றுள்ள ஒரு பாடலின் வரிகள் அமைந்துள்ளன. இந்தப் பாடல் அடங்கிய ஒலி நாடாக்களை உள்ளூர் இசைக் கம்பனிகள் ஏராள மாகத் தயாரித்து வெளியிட்டுள்
ளன. பல்லாயிரக் கணக்கான
ஒலிநாடாக்கள் விற்றுத் தீர்ந்து
விட்டதாக விற்பனையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். உள்ளூர் இசைத் முன்னணி வகிக்கும் நிறுவனமான முகம்மத் வலி மியூசிக் சென்டர்’ உரிமையாளர் ஹாஜி முபாரக் ஜான், இந்த ஒலி நாடாக்கள் காய்ச்சலை
துறையில்
விட வேகமாக மக்களைச் சென்ற
டைகின்றன’ என்று கூறுகிறார்.
இருக்கும் தனது
சகோதரன் கடையில் கூட இவற்
قلم
கராச்சியில்
3.
றின் விற்பனை அமோகமாக இடம்பெறுவதாக அவர் கூறுகின்றார்.
பெஷாவர் மாநிலத்தில் உள்ள ஆளும் சபையான 'முத்தஹதா மஜ்லிஸ் - ஏ - அமல்" பொதுப் போக்குவரத்துச் சாதனங்களில் இசை ஒலிபரப்புக்களைத் தடைசெய்துள்ளது. இந்தத் தடையைச் சாரதிகள் யாராவது மீறினால் பயணிகள், சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் முறையிடுவது வழக்கம். அந்தளவு கடுமையாகப் பின்பற்றப் பட்டு வந்த ஒரு சட்டம் இப்போது பகிரங்கமாக மீறப்படுகிறது. ஆம்! பொதுப் போக்குவரத்துச் சாதனங்களில் தற்போது அமெரிக்க எதிர்ப்புப் பாடல்கள் பகிரங்கமாக ஒலிக்கின்றன. சாரதிகள்
மட்டுமன்றி பயணிகளும் இவற்றை உணர்வு
பூர்வமாக ரசிக்கின்றனர். ஈராக் மீதும் ஆப்கானிஸ்தான் மீதும் அமெரிக்கா நடத்திய அட்டூழியத்தை எமது மக்கள் எந்த அளவு எதிர்க்கின்றனர் என்பதற்கு இதுவே சாட்சி. பல நாட்களாக இந்தப் பாடல்களை பஸ்ஸில் ஒலிபரப்புகின்றேன், இதுவரை யாருமே எவரிடமும் முறையிடவில்லை என்கிறார் சாரதியான அஹமட் குல்.
இப்பாடல்கள் மக்களை இந்த அளவுக்குக் கவருவதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. இம்முறை இப்பாடல்களில் குறிவைக்கப் பட்டிருப்பது அமெரிக்கா மட்டுமல்ல, அறபுலக ஆட்சியாளர்களும் கூட.
ԱյՐ * TՈ - 1ջ

Page 18
ஓ. மன்னர் பஹ்தே. சிலை வணங்கிகள் உமது மண்ணில் தடம் பதிக்க
நீர் அனுமதித்து விட்டீரே அவர்கள் புனித பூமியையும் அல்லவா இப்போது அசிங்கப்படுத்துகிறார்கள்.
என்று ஆரம்பமாகும் ஒரு பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சவூதி அரேபியாவில் ஆயிரக்கணக்கான அமெரிக்
கத் துருப்புக்களுக்கு இடமளித்துள்ள இப்
ஆட்சியாளர்கள் நேரடியாகவே பாடலில் சாடப்படுகிறார்கள். இந்தப் பாடல்கள் அடங்கிய ஒலி நாடாக்களுக்கு பெரும் கிராக்கி நிலவுவதால் அவற்றின் மீள்
உற்பத்தி தற்போதுதுரிதமாக இடம்பெற்று
வருகிறது.
புரட்சிகரமான கருத்துக்களையும் இஸ்லாமிய உணர்வையும் மேம்படுத்தும் எழுதப்பட்டுள்ள இந்தப் பாடல்கள் மக்களை இவ்வளவு தூரம் கவருவதற்கு இன்னொரு காரணம் அவற்றில்
வகையில்
பிரயோகிக்கப் பட்டுள்ள இலகுவான
சொற்களாகும் என்று கூறப்படுகிறது. பாமர மக்கள் அதிகம் வாழும் இப்பிரதேசத்தில் சகலராலும் புரிந்து கொள்ளத் தக்கதாக சொற்கள் அமைந்துள்ளதோடு உள்ளூர் இசையும் அதற்கு மெருகூட்டுகிறது.
முஸ்லிம்கள் எதிர் நோக்கும் உடனடி அச்சுறுத்தல்களும் இந்தப் பாடல்களில் முன் வைக்கப் பட்டுள்ளன. ஒரு பாடல் வரிகள் இப்படி வருகின்றன.
இன்று எரிகின்றன பக்தாதும் கர்பலாவும்
நாளை உங்களிடமிருந்து பறிக்கப்படலாம் uDġisesT
. முஸ்லிம்களே ரன் உங்கள் வாள்களை துருப்பிடிக்க விட்டுள்ளிகள். штфлт - 12
சில பாடல்கள் சதாம் ஹ"ஸை னினதும் ஒஸாமா பின் லேடனினதும் புகழ்பாடுகின்றன. ஒரு பாடல் இப்படிச் சொல்கிறது.
சதாம், ஒஸாமா ஆகியோரின் அரசியல், சமய நிலைப்பாடுகள் பற்றி மக்களுக்குக் கவலையில்லை மக்கள் இவர்களை இஸ்லாத்தின் வீரர்களாகவே பார்க்கின்றனர்.
ஒரு இசை அல்பத்தின் மேலுறையில் எதிரிகளின் விமானம் மேலே வட்டமிட, சதாம் ஒரு கூடாரத் தில் தொழுது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. ... -
கொண்டிருப்பது
துணிச்சல் மிக்க சதாம்
எதிரிகளுக்கு
முகம் கொடுக்கின்றார் அவர்களின் விமானங்கள் பலவற்றை அவர் ஏற்கனவே அழித்து விட்டார்.
என்ற பாடலுடன் இந்த அல்பம் தொடங்குகிறது.
இதில் இன்னொரு விசேடமும் உண்டு. சில நாடாக்களில் உள்ள பாடல்கள் எந்தவிதமான பின்னணி இசையுமின்றி, u_1 fr_ssføér குரலோடு மட்டும் வெளியிடப்பட்டுள்ளன. இவை கூட இசையமைக்கப்பட்ட பாடல்கள் கொண்ட ஒலி நாடாக்களுக்கு விற்பனையாகின்றன. இசையை இஸ்லாம் வெறுப்பதாக நம்பும் தலிபான் களின் தீவிர
ff. - IT35
ஆதரவு மாணவர்களால் பாடப்பட்ட பாடல்களே இவை. இந்த ஒலிநாடாக்கள் விற்பனையாகும் பிரதான இடமாக இருப்பது பெஷாவர் மாநில எல்லையுல் உள்ள ஆப்கானிஸஊதான் அகதிகள் வாழும் முகாம்களே என்று அடையாளப்படுத்துகிறார் ஹாஜி முபாறக் ஜான்.
جیا

33 இந்தப் பாடல்களைக் கேட்கும் மக்கள் ஏதோ ஒரு பாடல்களை எழுதுவதும் வகையில் திருப்தி யடைகின்றனர். தமது உணர்வுகளை அவற்றைப் பாடுவதும் ஒரு நேரடியாக வெளிப்படுத்துவதாக அவர் கள் கருதுகின்றனர். புனிதப் போர் - ஜிஹாத் - எனவே, மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதைத் தவிர என்றும் சில கவிஞர்களும்
எமக்கு வேறு வழி தெரியவில்லை' என்று பிரபல கவிஞர் பாட கர்களும் முஹம்மத் வலி கூறுகின்றார். கருதுகின்றனர்.
ஹயாத் ஷா என்ற பக்தாத் பற்றி எரிகிறது பாடகர் 1991ல் இது புனித கர்பலா பூமியும் எரிகிறது போன்ற பாடல்களைப் நபிகளாரின் புனித மண்ணில் பாடி பிரபலம் பெற்றவர். குண்டு வீச்சு ‘என்னைப் பொறுத்த் என்னால் ஏதும் செய்ய முடியவில்லையே மட்டில் இது வர்த்தகம் பேய்களின் அல்ல. இது ஒரு புனிதப்
Y. ళ போர். சன்மார்க்கக் x&:' கடமை' என்று அடித்துக் கூறுகிறார். 1991 முதல் இதுவரை சுமார் ஆயிரத் துக்கும் அதிகமான அமெ ரிக்க எதிர்ப்புக் கவிதை களை எழுதிக் குவித்துள் ளார். அவற்றில் அநேக பமானவை பாடல்களாக வெளிவந்துள்ளன.
இ ந் த ப் பாடல்களையும் அவற்றின் மூலம் சொல்லப் படும்
உணர்வு பூர்வமான கருத்துக்களையும் அத * னால் தூண்டப்படும்
எழுச்சியையும் இலகு வாக
கொடிய கரங்களில் சிக்குண்டு ' எடுத்துக் நான் உதவியற்றவனாக உள்ளேன் (yD Lq-uLu FIğ5I. மக்களின் உணர்வுகளுக்கு அன் என்று மக்களின் உணர்வினை வெளிப்படுத்தும் றாடம் தீனி போடும் கவிஞர்கள், அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷைப் பற்றி இவை, நீண்டகால நோக்
: -
கொள்ள
வர்ணிக்கும் வரிகளும் மக்களைக் கவர்கின்றன . கில் பல விளைவு களை ஏற்படுத்தக் கூடி யவை புஷ் ஒரு எண்ணெய்த் திருடன் என்று அரசியல் ஆய்வா அவன் ஈராக்கிற்கு ளர்கள் ஏற்கனவே எச்சரி இரத்தத்தால் வர்ணம் பூசிவிட்டான் க்கை விடுத்துள்ளனர்.
நன்றி :
மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவது என்ற நிலைப்பாட்டிலிருந்து ஒரு படி மேலே சென்று இவ்வாறான
2 - யாத்ரா يختر
One world.net

Page 19
isŞ9& ĐơođìłGP 199Ų9uqiqi-ą @&
IŪŲŲnung) sỆqïsosh
- Q9ŲıņQ9$1|$@ $£110,999~ā 199ụ1981,9īÚự 199ų9oyo@1909&
- Q9ų,9% HIĻĢ9|JoU9suTĀTI 199ụ199Ųn-icoon
– Ģ9Ų19oC99& olloqý -a 199ų9oy9uÚIIII?)
- Q9Ųīņụurtosí%@ 199ųırmı99091ņ9ł@> q1@o@ (9ųș%@ @TòızılırīU9 qıfmı909&oltođìurto mụ@googopsiqiqi 199ų9oys@@H qıfmı 90099f90$ rngorougs qigos@
- Q9ų,9999II1919Úo șờ911@@@jo @gírnuı19@gogoșuriņIỆ
யாதரா - 12
 
 

3S
உனதின் காலடி மண் அள்ளியெறிந்தாய் வெளியே
உனதின் சுவாசக் காற்று மீளவும் அடைத்து வைத்தாயே குறுக
உனதின் கார்மேகம் கலைத்து விட்டாயப் வேறு திசைக்கு
உனதின் நிலா தேய்த்து அழித்தாயே நிதம்
உனதின் இறக்கை முறித்துப் போட்டாய் இறக்க
நான் யாரென்ற புரிதலின்றியா இத்தனை காரியமாற்றினை
சுவாசிக்கக் காற்றின்றி நீ மூர்ச்சையாகிக்
உதிைன் றnள் கிடக்கவும்
Ꮡ 1ᏍᎪ கால் வேரூன்ற மண்ணின்றி ص) نمصی)
(SN (aw'88Vn அந்தரத்தில் தொங்கவுமென
வெளித்துக்கி எனை எறிந்தனை
மாரியின்றி வரண்டும் நிலாவின்றி இருண்டும் எத்தனை காலம் அழியவென இக்கர்மம் நீ புரிந்தனை
இக்கணமெனபாலையுள் வீழ்ந்து உயிர் கொதிக்கிறாயே
அறிக தோழா இறக்கையென இயங்க இன்னுந்தான் சம்மதமெனக்கு
நீ மேலெழ
'யாத்ரா கவிதைப் போட்டியில் நான்காம் பரிசு பெற்ற கவிதை
2 - யாத்ரா لیبر

Page 20
வெளிச்சம் விழும் இடம்
எண்பதுகளின் முற் பகுதியில் புதுக்கவிதை மூலம் இலக்கிய உலகுக்கு வந்த இப்னு அஸ9மத் குறிப்பிட்டுச் சொல்லத் தக்க படைப்பாளி. தினகரன், சிந்தாமணி, வீரகேசரி
பத்திரிகைகளிலும் பல்வேறு சிற்றிலக்கிய ஞாயிறு "லங்காதீப பத்திரிகையிலும் பல
இதழ்களிலும் இவரது கவிதைகள் பிரசுரமாகி வந்த அக்காலப் பிரிவில் தலை நகரில் கவிதையை முன்னெடுத்துச் சென்ற 'வகவம்’ குழுவில் ஒரு முக்கிய அங்கமாகச் செயற்பட்டவர். 90 களில் இவரது கவிதைகள் அடங்கிய 'ராத்ரி’ என்ற சிறிய தொகுதி ஒன்றும் வெளியானது.
சிங்கள மொழிப் பரிச்சயம் காரணமாக சிங்களக் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் சார் கட்டுரைகள் போன்ற வற்றை மொழி பெயர்த்தும் வந்தார். தேசிய பத்திரிகைகளிலும்
அவை
மல்லிகை, தாயகம், குன்றின் குரல் போன்ற
சஞ்சிகைகளிலும் வெளிவந்தன. 'யாத்ரா' தொடங்கிய காலப் பிரிவிலிருந்து இன்று வரை சிங்கள மொழிக் கவிதைகள், கட்டு ரைகள் என்பவற்றை மொழி பெயர்த்து பெரும் பங்கை வழங்கி வருகிறார்.
சிங்கள இலக்கியத்தைத் தமிழில் தருவது போல தமிழ் இலக்கியப் படைப் புக்களையும் சிங்களத்துக்கு மொழி மாற்றம் செய்வதில் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார். 'விவரண’ என்ற சிங்கள மொழிச் சஞ்சிகையுடன் இணைந்து பல தமிழ் இலக்கியப் படைப்பாளிகளையும் அவர்தம் இலக்கியப் படைப்புகளையும் சிங்கள இலக்கிய உலகுக்கு அறிமுகஞ் செய்துள்ளார். இந்த வரிசையில் கைலாசபதி, தெளிவத்தை ஜோஸப், டொமினிக் ஜீவா, ராஜ பூரீகாந்தன்,
штфДт — 12
போன்ற
36
கே. டானியல், நீலாவணன், தெணியான், சி. வி. வேலுப்பிள்ளை, கே.கணேசலிங்கன், மேமன் கவி, ஒவியர்
ஈழவாணன்,
மாற்கு போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். சி.சிவசேகரம், ஜெயபாலன், சேரன் போன்றோரின் கவிதைகளும் இவரால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
1985ல் 'மாவத்த’ எனும் சிங்கள முற்போக்கு இதழுடன் இணைந்து 'ஈழத்துத் தமிழ் இலக்கிய மலர் ஒன்றை வெளியிடுவதில் முன்னின்று உழைத்தவர்.
தமிழ் இலக்கியப் படைப்பாளிகளையும் படைப்புகளையும் அறிமுகஞ் செய்தார். இதே கால கட்டத்தில் புஷ்பா ரம்லனி என்ற சிங்களப் பெண் படைப்பாளியுடன் இணைந்து பதினொரு தமிழ்ச் சிறு கதைகளை மொழி பெயர்த்து வெளிக் கொணர்வதில் முன்னின்று உழைத்தவர். 1986ல் இத்தொகுதி 'காளிமுத்துவின் பிரஜா வுரிமை' என்ற தலைப்பில் வெளியானது. இத்தொகுதியில் அ. செ.முருகானந்தன், தெணியான், ப. ஆப்தீன், ராஜ பூரீகாந்தன், என்.எஸ்.எம்.ராமையா, எஸ். யோகராசா, கே. டானியல், மலரன்பன், சிதம்பர திருச்
செந்திநாதன், நாகேசு தர்மலிங்கம், சுதந்திர ராஜா ஆகியோரது கதைகள் இடம் பெற்றிருந்தன. 1991ல் இதே சிறுகதைத் தொகுதி இரண்டாம் பதிப்புக் கண்டது. சிங்கள மொழியில் பெயர்க்கப் பட்டு
"இலங்கையின் இனப் பிரச்சினைத் தீர்விற்கான ஆக்க இலக்கியப் படைப்புகள் எனுந் தலைப்பில் பல்கலைக் கழக பட்டப் பgப்புக்கு எஸ்.ஐ. சுவர்ன சிங்ஹ என்பவர்
செய்த ஆய்வு, நூலாக்கம் பெற்றுள்ளது. இதில் இப்னு அஸ்லிமத்தின் மொழிபெயர்ப்புப் பல்ரி குறித்து ஒன்பது பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 
 
 

இப்னு அஸமேத்
37 இரண்டாந் தடவை பதிப்பிக்கப்பட்ட ஒரே தமிழ்ப் படைப்பிலக்கிய நூல் இதுவெனக் கருதப் படுகிறது.
செ. கணேசலிங்கத்தின் 'குமரனுக்கு எழுதிய கடிதங்கள்" என்ற தொகுப்பும் டொமினிக் ஜீவாவின் பதினான்கு சிறுகதைகளையும் சிங்களத்தில் மொழி பெயர்த்துள்ளார். அதுவும் நூலாக வெளியானது. சீதா ரஞ்சனி தொகுத்த தோங்காரய! (எதிரொலி) எனும் மொழி பெயர்ப்புத் தொகுதியில் இவரால் மொழி பெயர்க்கப்பட்ட ஐந்து கவிதைகள் அடங்கி யிருக்கின்றன.
இலங்கையின் இனப் பிரச்சினைத் தீர்விற்கான ஆக்க இலக்கியப் படைப்புகள்' எனுந் தலைப்பில் பல்கலைக்கழக பட்டப் படிப்புக்கு எஸ்.ஐ. சுவர்ண சிங்ஹ என்பவர் செய்த ஆய்வு, நூலாக்கம் பெற்றுள்ளது. இதில் இப்னு அஸஅமத்தின் மொழி பெயர்ப்புப் பணி குறித்து ஒன்பது பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'யாத்ராவில் தற்போது பங்களிப்புச் செய்வது போலவே "லங்கா' என்ற பத்திரிகையிலும் தனது இலக்கியப் பங்களிப்பைச் செய்து வரும் இப்னு அஸூமத், இரு மொழிகளிலும் இரண்டு சிறுகதைத் தொகுதிகளுக்காகவும் ஒரு கவிதைத் தொகுதியைக் கொண்டு வருவதற்காகவும் செயல் பட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.
கண்டி பன்விலை எனும் பகுதியில் துவான் முகம்மத் அப்துல் அஸிஸ் - புகாரி உம்மா தம்பதியரின் புதல்வனாகப் 02.07.1965ல் பிறந்த இவரது இயற் பெயர் முகம்மத் பாரூக், ஆரம்பக் கல்வியை பன்விலை விக்னேஸ்வராக் கல்லூரி யிலும் பின்னர் 1979ல் கொழும்புக்கு இடம் பெயர்ந்து வத்தளை மாபோளை அல் அஷ்ரப் ம.வித்தியாலயத்திலும் கற்றவர்.
இப்னு என்பது அறபியில் மகன் என்ற பொருள் குறிக்கும். அஸ்லிமத்தின் மகன் என்பதை தனது எழுத்துலகப் பெயராகச் சூடிக் கொண்ட இவரது தந்தையானதுவான் முகம்மத் அப்துல் அஸிஸ்தான் நாம் அறிந்த சிறந்த கவிஞரும் எழுத்தாளருமான அல் அஸ்லிமத்.
யாத்ரா - 12

Page 21

சன்னலையாவது திறந்துவை
சன்னல் வெளிச்சம் இழுத்து வரும் பாதை
ஆயிரம் இருக்கலாம் கதவு திறக்காததன் காரணம்
உள்ளிருக்கும் போது திருடு போகப் போவதில்லை நீ
கடன்காரனை விடவும் கடமைக்காரன் தாழிட்டுக் கொண்ட அருவருப்பை مسیر எந்த மொழித் திரையில் மறைப்பது
உனக்குள் நிகழும் தற்கொலைச் சந்தேகம் நீங்கவாவது சன்னலைத் திறந்து வை
அது ஒரு குட்டி வானம்
கதவைத் தட்டிப் பார்த்த ஒலி மோதிய பிச்சைக் குரல்
خر
'யாத்ரா கவிதைப் போட்டியில் ஐந்தாம் பரிசு பெற்ற கவிதை
தேடித் திரும்பிய பார்வை யாவும் கரைந்து உன் வாசற்கோலத்தை நனைத்து அசிங்கமாக்குகின்றன
உனக்கான தபாலையும் செய்தித் தாளையும் பொருட்படுத்தாது பொய் புனைந்து கொண்டிரு அல்லது உனக்கு நீயே புணர்ந்து கொண்டேனும் இரு ஆனால் சன்னலைத் திறந்து வை V−
சன்னல் ஒரு பிரபஞ்சக் குகை
சன்னலில்தான் எட்டிப் பார்க்க எத்தணிக்கிறது உலகம்
உள்ளே பழுதடையலாம் பாழாகக் கூடாது
திற எல்லாம் திற சன்னல்தான் சுதந்திரப் புள்ளி
штфfЈт — 12

Page 22
வெளிச்சம் விழும் இம்
'யாத்ரா' என்ற கவிதை இதழை வெளியிடுவது என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்த பிறகு நான் கலந்தா லோசித்த முக்கியமான நபர்களில் ஒருவர் என்.ஏ.தீரன் ஆவார். ஆர்.எம். நெளஷாத். என்ற இயற் பெயர் கொண்ட இவர் கல்முனை 'புகவம்' வெளியிட்ட தூது’ சஞ்சிகைக்கு ஆசிரியாராக இருந்தவர். அந்த அமைப் பின் செயலாளராக இருந்து செயல்படு பவரும் இவர்தான். மிகச் சிறிய வடிவில் தூது வெளிவந்த போதும் அது வெளியான கால கட்டத்தில் கவனிப்புப் பெற்ற கவிதைச் சஞ்சிகையாக, வளர்ந்து மத்தியில் பிரபல்யம்
என்ற கவிதைச்
வருவோர்.
பெற்றிருந்தது. மிகுந்த சிரமங்களுக்கு,
மத்தியில் பதினாறு இதழ்கள் வெளிவந்தன. பின்னர் எல்லாச் சஞ்சிகைகளுக்கும் ஏற்படும் துயரம் அதற்கும் ஏற்பட்டது. இந்தச் சின்னஞ் சிறிய இதழ்தான் ஒரு கவிதைச் சஞ்சிகையைக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தை என் மனதில் ஊன்றியது. -
தீரன் என்கிற நெளஷாத் வித்தியாசமாக எதையும் நோக்கும் தன்மை கொண்டவர். அவரது கவிதை களில் மட்டுமன்றி அவரது சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் றிலும் நாம் அதனை அவதானிக்கலாம். 1980களில் தமிழ் இலக்கியப் பரப்பில் தோன்றிய புதுக் கவிஞர்களில் குறிப்பிட் டுச் சொல்லத் தக்கவராக இருந்தார். பரவலாக வெளிவந்த பல்வேறு பாளிகளின் ஆக்கங்களுக்குள் நெளஷாத் தை தனித்து நாம் தரிசிக்கலாம். மனம் விட்டுப் பேசி வாய்விட்டுச் தன்மை
என்பவற்
படைப்
சிரிக்கும்
யாத்ரா - 2
40
கொண்டவரும் இயல்பில் அதீத நகைச் சுவை உணர்வு கொண்டவருமான இந்தப் படைப்பாளியின் படைப்புக்கள் காத்திரமும் தீவிரமும் உரத்துப் பேசும் பண்பும் கொண்டவை.
"மக்கத்து ராஜா எங்கள் நபி சொர்க்கத்து ரோஜா'என்ற நபிகள் பேரிலான புகழ் பாடும் ஸலவாத் மாலையை 1996ல் வெளியிட்டார். 1985ல் இடம் பெற்ற தமிழ் முஸ்லிம் இனக்கலவரத்த்ை தொடர்ந்து ‘இன்னாலில்லாஹி" என்ற தலைப்பில் ரோணியோ அச்சில் கவிதைகள் சிலதைத் தொகுத்து வெளிக் கொணர்ந்தார். "வல்லமை தாராயோ' என்ற இவரது சிறுகதைத் தொகுதி 2000ல் வெளியானது. குறிப்பிட்ட அளவு பிரதிகளே அச்சிடப்பட்ட இத்தொகுதி யில் இடம் பெற்றிருந்தவை யாவும் பரிசு பெற்ற அவரது சிறுகதைகள். அவற்றிலுள்ள சில கதைகள் என்னை ஆச்சரியப் படவைத்தன. பரவலான வாசிப்புக்கு அந்த நூல் போகாத காரணத்தால் ஒரு சிறந்த சிறுகதையாளன் என்ற அடையா ளத்தை அவர் இழந்து நிற்கிறார். கதை நகர்த்தும் பாணி மாத்திரமல்லாமல் அவர் சொல்ல எடுத்துக் கொண்ட செய்திகளும் எது குறித்துச் சொல்கிறாரோ அது குறித்த தகவல்களில் அவரது அறிவுப் பின்ன. ணரியும் வியக்க வைக்கின்றன. இவை தவிர புள்ளி' என்ற பெயரில் இலங்கையில் வெளியான முதலாவது ஹைக்கூ கவிதை இதழின் இணையாசிரியராகவும் செயல் பட்டுள்ளார்.
கவிதைகள் மூலம் அறிமுகமான தீரன் இதுவரை ஒரு கவிதைத் தொகுதியை நமக்குத் தரவில்லை. பலநூறு கவிதைகளைப் படைத்த அவரிடம் இதுபற்றிக் கேட்ட போது "மேகங்கள் விற்பனைக்குண்டு’ என்ற தனது கவிதைத் தொகுதியை விரைவில்
99&ు తgnర్తిత్ర
ܓܰܪܬܳܐ
 

Č||
நாடகப் போட்டியில் மூன்றாம் பரிசை (ரூ 20,000.00) வென்றவர். பேராதனைப் பல்கலைக் கழகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் 1997, 1998 ஆகிய இரு ஆண்டுகளிலும் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 2002ல் கொழும்பில் நடந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டிலும் பாராட்டுப் பெற்றவர்.
‘புகவம்’ என்ற புதிய கவிதா வட்டம்
வெளிக் கொணர்வதாகச் சொன்னார். தொழில் ரீதியாக அஞ்சல் அதிபராகக் கடமை செய்யும் நெளஷாத், தான் கல்முனை ஸாஹிறாவின் இலக்கியப் பாசறையில் வளர்ந்தவன் என்றும் பாவலர் பளில் காரியப்பர், ஏ. பீர்முகம்மது ஆகியோரின் இலக்கியத் தோழமையில் புடம் போடப் பட்டவன் என்றும் மகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்கிறார்.
கொக்கூர் கிழார் என்று அறியப்பட்ட அதன் உற்சாகத்தை இழந்த பிறகு, அண்மையில் சாய்ந்தமருதுவில் அபாபீல் கள் கவிதா வட்டம்’ என்ற ஒரு இலக்கிய அமைப்பை ஆரம்பித்து அதன் செயற் சபை
கா.வை. இரத்தின சிங்கம் ஐயா தனக்குத் தமிழ் கற்றுத் தந்த குரு என்றும்
குறிப்பிட்டார்.
நாடகங்களிலும் நெளஷாத்துக்கு நாட்டம் முதல்வராக செயற்படும் தீரன் உண்டு. இலங்கை ஒலிபரப்புக் இவ்வமைப்பு அவ்வப்போது வெளியிடும்
'இரண்டாவது பக்கம்" என்ற கவிதைச்
கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் அவரது
சிற்றேட்டின் வருகையில் உதவியாக
பல நாடகங்கள் ஒலிபரப் பாகியுள்ளன. அவரது இரண்டொரு நாடகங்களில் நடித்த ஞாபகமும் எனக்கு உண்டு. ஒரு கிராமத்துக் கவிதை” என்ற அவரது நாடகம் ஒன்று பல
spairaatitri.
நெளஷாத், தென் கிழக்குப் பிராந்தியத்தின் முக்கிய பரம்பரைகளில் ஒன்றான
முறை, கிட்டத்தட்ட இருபது காரியப்பர் பரம்பரையில் வந்தவர். தடவைகளுக்கும் மேல் மறு ஒலிபரப்புச் காரியப்பர்கள் வரலாறு பற்றித் தான் செய்யப் பட்டது. எழுதிய ஒரு நூல் அச்சில் இருப்பதாகச்
சொன்ன நெளஷாத் என்கிற தீரன் நாற்பது வயதைக் கடந்து நடக்கிறார். 'யாத்ராவின் பாதையில் மிகுந்த ஒத்தாசையாக இருக்கும் தீரனின் எழுத்தைப் படிக்க வேண்டும் என்றால் 'முஸ்லிம் குரல்" பத்திரிகையைக் கையிலெடுங்கள். அதில்
'பள்ளி முனைக் கிராமத்தின் கதை என்ற அவரது நாவல் - ஆம்!
பூபாளம் கவிதைச் சஞ்சிகை நடத்திய குறும்பாப் போட்டி, இலங்கை
சூழல் பத்திரிகையாளர் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டி, மித்திரன் சிறு கதைப் போட்டி என்று பல போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார். 'தினக்குரல்" தினசரியும் 'பிரான்ஸ் தமிழ்
ஒலியும் ஏற்பாடு செய்து நாவல் தொடர்ச்சியாக நடத்திய வானொலி வெளிவந்து கொண்டி ருக்கிறது. 崇
என்.ஏ.தீரன்
12 - A. MMMM - யாதரா يختر

Page 23
6) είΦεήρυώ
அதி ஈலிசு எக்கோ வுைண்டளும் மீன்பிடி மூோலகுமா இளுக்கிறது? कC@89 625तrë८९१ शg)@ ९8५r:@
ർey &&ാൻ என்று எண்ணிஞைத்தோம் இடைவில் மrஒக்கடலும் கொக்குவிப்பும் சுந்து திருடது குேன்னிலைத் குல்1648லி முடிலஇல்லை! ഠര് മy jരാജാ!!
சித்திரைக் கடலும் சித்திரை இன் பிடியும் ஒளுமென்று காத்திருந்து குோனிலைத் குன்னினோம்! மீன் ஒைத்து ஒர்ேத்தோம்! ஆன் போருே மதத்தோம்! மந்து கபடச் சொல்லி
og(rఉజ్ (8508umb
யாத்ரா - 12
q2
談※
జభజిళ్ల
விரால் மீன்கள்
மடி நூல் இடும் மோது. விேைரச்சலைப் பார்த்தால், முடிலை(பும் காணஇல்லை! முடிலையும் கானதில்லை கUயை மந்து மாத்திரம்
குைந்தது!
‘ব্যঙ্গ্যee্যা ৫৬৫৫ খ্র.
சன்6ை1 ஒலைக்கு
"లిగశాg" அடித்திருக்கிரான்' குலைவில் கைலை ஜிைத்குனர் ఆణింTuwపి
ஆற்றில் கைத்தோனிற்ை 8மால் කීර්‍ණ් ඉ)ණණ හීබි ෆිණී ෆිද්‍යහීගිණෙහි என்று விலைலை எடுத்தோம்
కాకుంoఫిబిr பீத்தல்
− கீத்குலைப் ஒமாத்திக் கொண்ட
8குானிலைத் தேடினால். அதையும் காணவில்லை
 
 
 
 

குலத்தில் கஒைருத்து ණිg(rඩ් ෆිභූණීඝණ(rō என்று தொUடம் கலைத்து இரைலைக் குத்த '; கgை எனுந்து இபடு கcடைல்ை கவீனமாளுைக்குேம் (Egi)gyvoor øygrcę. எந்து மூடிக் கொண்டது
లౌగి లాగి.
முசுழி கலைத்து முபடை எடுத்து மனை0ானுக்குத்
greigá) છહતr6છવૃતિ) દ્વાergy க6ை1க் கற்கை எடுத்தால், அதுவும் முகுந்து இருபது இருந்து, என்ன செல்ல?
இன்முைக்கு ஆக்கின சோத்துக்குக் கற8%ஜிம்
6ாலைக்கு
ஆக்க அரசியும் ககுபும் 8ஒrஜிம்
எப்படியும் 8குடிலே ඊශ්‍රාහී 89ணும் "இருக்குனல் மூ8குஜீ
நடக்குங்) ෂීරිණි
எழும்பா ஏழும்ப"
அகுபடினார் குண்ட0ல்
மழை0 கரப்மையும் அத்தாங்கையும்
8குடி எடுத்துக் கொண்டு குலத்தில் இரங்கினோம்
குத்தியும் ஒடித்தும் துரோஜீனோம்
Seg)gyöOgrey (OCC6COåD6)
இராலும் அகப்படது!!
штфДт - 19

Page 24
44
துத்தன்ட்ைட ബ്
சொந்த நாட்டை விட்டுத் துரத்தப்பட்ட
கவிஞர் அப்தாப் ஹசஸைன் லாஹூர் பஞ்சாப் சர்வ கலாசாலையின் உருது மொழி உதவிப்
பேராசிரியராகக் கடமையாற்றியவர். பரம்பரை பரம்பரையாக தமது முன்னோர்கள் வாழ்ந்து வந்த இஸ்லாமாபாத்தின் ராவல் பிண்டி அருகில் உள்ள தலகாங் என்ற நகரில் 1962ல் பிறந்தவர். அங்கேயே ஆரம்பக் கல்வி பயின்ற அவர் பின் 1978ல் லாஹருக்கு இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்தார். ஹரஸைன், உர்து, பஞ்சாபி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதும் வல்லமை பொருந்தியவர் எனினும் உர்து மொழியையே பிரதானமாகக் கொண்டிருக்கிறார். அவரது எழுத்துக்கள் அநேகமாகவும் இந்தியாவிலும் பாக்கிஸ்தானிலும் வெளியாகும் அனைத்து உர்து மொழிச் சஞ்சிகைகளில் இடம் பெற்றுள்ளன. இந்தியப் பிராந்திய மொழிகளிலிருந்தும் ஹிந்தி யிலிருந்தும் மிகப் பெருந்தொகையான கவிதை மற்றும் சிறுகதைகளை உர்து மொழிக்கு மாற்றம் செய்திருக்கிறார். பாக்கிஸ்தானின் அதி முக்கிய மான இலக்கிய அமைப்புக்களில் குறிப்பாக பாக்கிஸ்தான் எழுத்தாளர் கழகம்", "ஹல்கா - ஏ - அர்பாப் - ஏ - ஸவ்க், ஹல்கா - ஏ-தர்ஸ்னிஃப் - ஏ-அதப்,பஞ்சாபி அதயி பரிவார் போன்றவற்றில் இணைந்திருந்தார். தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் நடைபெற்ற (பாக்கிஸ்தான். துபாய், அபுதாபி) பல 'முஷாயிரா (கவியரங்கம்) க்களில் கலந்து சிறப்பித்துள்ளார். அதயி அக்பர் என்ற மாதமிருமுறை செய்தித்தாளை நிறுவியவர் இவர். குறிப்பாக இலக்கிய உலகின் செய்திகனைத்தாங்கி அது வெளிவந்தது. பாக்கிஸ்தானின் இலக்கிய எழுத்துத் தொடர்பில் ஒரு சிற்றலையையும் மனப்பாங்கில் ஒரு மாறுதலையும் அப்பத்திரிகை உண்டு பண்ணியது. டாக்டர் ஜமீல் அக்தார் மொழிபெயர்த்த இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயியின் கவிதைத் தொகுதியை பாக்கிஸ் தானில் வெளியிட்டமைக்காக நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்கப்பட்ட அஃப்தாப் : ஹசஸைன் டெல்லிக்கு வந்தது மார்ச் 2000ல்.
அஃப்தாப் ஹ"ஸைன்
நன்றி: மேகதூதம் இணையத்தளம் ஆங்கிலத்திலிருந்து தமிழில்: رۂsoںہا:9;9
本
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"புகழ் பெற்ற உர்து மொழித் திறனாய்வாளர் கமாலுத் தீன் அஹமதின் வாழ்வு மற்றும் செயற்பாடுகள் குறித்த தகவல் களைப் பெறுவதற்காக 1998ல் நான் இந்தியாவுக்கு விஜயம் இத்தகவல்கள் எனது கலாநிதிப் பட்ட ஆய்வுக்குத் தேவையாக இருந்த படியால் இந்தியாவில் மூன்று மாதங்கள் தங்க நேர்ந்தது. கமாலுத்தீன் அஹமதின் சொந்த இடமான பிஹாரிலுள்ள பாட்னாவில் நான்
செய்தேன்.
தங்கியிருந்தாலும் அடிக்கடி டெல்லிக்கும் வந்து செல்வேன். எனது எழுத்துக்கள் அநேகமாக எல்லா முக்கிய இந்தியச் சஞ்சிகையிலும் வெளியானதால் பல இந்திய சக படைப்பாளிகள் அறிமுகமானார்கள். அவர்கள் என்னுடனான பல இலக்கியச்
46
தொகுதியின் உர்து மொழிபெயர்ப்பை எனது நண்பர் டாக்டர் ஜமால் அக்தார் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அக்தார் மொழி பெயர்த் திருந்த அந்தக் கவிதைத் தொகுதியை பாக்கிஸ்தானில் வெளியிட வேண்டும் என்று அவர் விரும்பினார். அதனை வெளியிடுவதற்கான முயற்சியை நான் மேற் கொண்ட போது அதை அச்சிடு வதற்குப் பலரும் தயக்கம் காட்டியதனால் முயற்சி கைவிடப்பட்டது.
பின்னர் வாஜ்பேயியின் பாக்கிஸ் தானிய விஜயம் திட்டமிடப்பட்டது இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் மலர்ச்சி தோன்றும் சூழல் உருவானது. இரு நாட்டு எல்லைப் புறத்திலும் ஒரு நல்லெண்ண நம்பிக்கை துளிர் விட்டது. அந்தக் கவிதை
“பிராந்தியத்தில் ஓர் அமைதி மிக்க சூழலையே கனவு கண்டேன். அதற்காகவே எழுதி வந்தேன்."
சந்திப்புக்களை ஏற்படுத்தினார்கள். பல்வேறு இந்திய சர்வகலாசாலைகளிலும் பாக்கிஸ்தானின் நவீன இலக்கியம் பற்றி விரிவுரைகளும் நடத்தினேன். அதே வேளை எனது கவிதைத் தொகுதி ஒன்றும் டெல்லியில் வெளியிடப்பட்டது.
எனது சொந்த நாட்டுக்குச் சென்ற போது பாதுகாப்பு முக்கியஸ் தர்கள் இந்தியாவில் நான் நீண்ட நாட்கள் தங்கியிருந்தது குறித்து விசாரணை செய்யத் தொடங்கினார்கள். எனது நிலைமையை
அவர்களுக்கு எடுத்துரைத் தும் தொடர்ந்தும் என்னை தொந்தரவு செய்யத் தொடங்கினர். இவ்வேளை
பாக்கிஸ்தானிய படைப்பாளிகள் முன் வந்து என்னைப் பற்றியும் எனது இலக்கியப் பின்புலம் பற்றியும் அவர் களுக்கு எடுத்துச் சொன்னார்கள்.
சில நாட்களுக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் வாஜ்பேயியின் கவிதைத்
پلار
நூலை வெளியிட இது தக்க தருணம் என்று நான் ஒரு அரசியல் முக்கியஸ்தன் அல்லன். ஆனாலும் ஒரு மனிதன் என்ற அடிப்படையிலும் ஒரு ஜனநாயகவாதி என்ற அடிப்படையிலும்
எண்ணினேன்.
என்னைப் போன்ற வட்சக்கணக்கான மக்களைப் போல பிராந்தியத்தில் சமாதானச் சூழல் நிலவ வேண்டுமென்று கனவு கண்டவன். அதற்காகவே எழுதி வந்தவன். ஜான்ங் னா ஹோன் டெங்கே (நாம் போரை அனுமதிக்கப் போவ தில்லை) என்ற, இந்திய-பாக்கிஸ்தானிய நட்புறவுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட இந்தக் கவிதை நூல் பாக்கிஸ்தானையும் அதன் மக்களின் எண்ணத்தையும் வேறொரு திசையில் முன்னெடுத்துச் செல்லும் என்று நான் கருதினேன். இவ்வாறான ஒரு உணர்வு பூர்வமான சூழ்நிலையில் ஒரு வித பதற்றத்துடன் புத்தகத்தை வெளியிட்டேன்.
அதன் யாத்ரா - 2
பாக்கிஸ்தானினதும்

Page 25
மக்களினதும ஆரதரவுச் சைகையாக அதைக் கருதினேன். பாக்கிஸ்தானின் Dj; Gir சார்பிலும் குறிப்பாக பாக்கிஸ்தானின் படைப்புலகத்தினர் சார்பிலும் பிரியாவிடை வேளையின் போது ஆளுனர் மாளிகையில் வைத்து கெளரவ விருந்தாளியிடம் கையளிக் குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன். வைபவத்துக்கு பாக்கிஸ்தான் பிரதமரும் சமுகமளித்திருந்தார்.
பின்னர் நிலைமை பழைய இடத்துக்கு திரும்பியது. இராணுவத்தின் கைகளுக்கு ஆட்சி வந்தது. பாக்கிஸ் தானின் பாதுகாப்பு அமைப்பு மீண்டும் புத்தகத்தை வெளியிட்ட என்மீது பார்வையைச் செலுத்தியது. பிரதமர் நவாஸ் ஷரீபுக்காக நான் இதனைச் அவர்கள் சந்தேகம் கொண்டனர். படைப்பாளிகளுக் கிடையிலான நல்லெண்ண அடையா ளமாக அதனை நான் மேற்கொண்ட தையும் அரசுக்கும் அந்நூலுக்கும் சம்பந்தம் இருக்கவில்லை என்றும் எடுத்துரைத்தேன். ஆனால் அவர்கள் நம்ப மறுத்தனர். பிரதமர் நவாஸ் ஷரீபுக்கு எதிராக வாக்குமூலம் தருமாறு என்னைப் பலவந்தப்படுத்தினர். நான் மறுத்தேன். கராச்சியில் நடந்த ஒரு முஷாயிராவில் நான் கலந்து கொள்ளச் சென்றிருந்த போது லாஹூரில் உள்ள எனது வீட்டைச் சோதனையிட்டனர்.
இறுதியில் எனக்கு முன்னால் இரண்டு நிபந்தனைகள் வைக்கப்பட்டன. ஒன்று, பிழையான ஒரு வாக்குமூலத்தை வழங்குவது. அதனை நான் சம்பூரணமாக மறுத்தேன். இரண்டாவது, சொந்த நாட்டை விட்டு வெளியேறுவது.
சொந்த
செய்ததாக
விட்டு
நாட்டை
வெளியேறுவது துன்பம் மிகுந்தது. வேறு
வழியில்லாமல் நான் அதனையே தேர்ந்தெடுத்தேன். O
штфДт - 12
C.
u au su um su mu mu mu u mu mu a தலித்திய கனவுகள்
எல்லோரும் விவகிப் விவகிப் போனார்கள் என்னை ஏகாந்தத் துணியுடுத்திக் காண்பதற்கு
எங்கோர் மூலையில் அவர்களது அலுப்பின்றிய சிரிப்புச் சப்தங்கள் சோகங்களைக் கண்டிராத இன்பங்களைப் போல் ஒவிக்கவாயிற்று
என் ஆழ் மன அசைவுகளோ தவித்திய பாடல்களாய் எப்போதோ சாகக் கிடக்கும் ஆன்மாவைக் கிள்ளுகையில் சிமென்ட் பெஞ்ச்சுகளில் சில்வறைப் பேச்சுக்களிலோ என் வெறுப்புகளைத் தாண்டி எவன் விருப்பிலும் தோள் கொடுத்தோ நடுநிசிப் பொழுதுகளில் தேவதையின் கனவுகளோடோ லயித்துப் போயிருப்பார்கள் அவர்கள்
pസ്ക് தனத்து மிளிரும் நட்சத்திரமாய் இருள் படிந்த பொழுதுகளோடு மட்டும் உரையாடிக் கொண்டிருப்பேன்
-92த்சிரலுதீஷ்
大

ിത്രസന്ന് 25tel face
அமரர்
5Nuns 2-re
47
தெற்கில் “கத்தறகம தெய்யோ'வாய் நீ முருகா நிற்கின் றாயாமே நெடுநாளாய் - அற்புதங்கள் செய்வாயாம் அன்பரிடம்! சேவிக்க வந்தேன்யான் ஐயா முருகா அருள்!
கங்கையிலே ஆடி, கதிர்வேலா நின்பாத பங்கயத்துக் கென்றே பனிமலர்கள் மற்றுமுள்ள பூ சைப் பொருள்கள் கொணர்ந்தேன் பூ சிக்க, நான் காண ஆசை முகத்தை அருள்வாய் திரை திறந்து
ஐயர் அவர்கள் அழகுத் திரை தடவி கை கூப்ப உன்னழகைக் கண்ணாரக் கண்டுருகி காதலித்துன் பாதம் கடிமலர்கள் துரவ விடல் பேதைக்கு நீ அருளும் பேறு எனக் கைகூப்பி
இவ்வா றிறைஞ்சி இரங்கி அழுதென்ன எவ்வளவு பாவி நான்! என்றுணர்ந்தும் நின்றேங்கும் அப்பொழுதும் “ஹப்புறால” ஐயர் திரை திறவார் எப்பொழுது காண்பதினி யென்று மூச்சு விட்டால்
தீர்த்தம், திருநீறு, மற்றும் பயிற்றங்காய்ச் சோற்றுப் பிரசாதம் என்றெல்லாம் கையினிலே தந்தார்கள் பூ சை சரி முடிந்த தென்றார்கள் கந்தா இதென்ன கதை கேட்டேன் நான் ஐயா?
“எப்பொழுதும் இப்படித்தான், ஏனென்றால் நம் முருகன் தப்பே புரிந்தான் தமிழர் தலை குனிய” “எப்படி?” என்பர் இருவர் அதைக் கேட்டு "அப்படித்தான் வள்ளியம்மையால்” என்பான் மற்றொருவன
ஒன்றே ஒருவர்க்குத் தாரமெனும் நந்தமிழர் பண்புக்கு நேர்ந்த பழியை நினைந் தெங்கள் பண்டிதர் செய்த பலமான கண்டனங்கள் கண்டொழித்தான் கந்தன் கதிரமலையடைந்தான்
'தெய்வானைப் பெண்ணிருக்க செய்த பிழைக்காய் நாணி தெய்யோவாய் மாறியிந்த தெண்கதிரை தேடிவந்து வண்ணத் திரை மறைவில் வாழ்ந்து பயற்றங்காய் உண்ணுகிறான்” என்றுரைக்கும் ஊர் நான் அதற்கெதிர்ப்பே வள்ளி அழகுக்கு வாயூ றி வாய்க்காமற் பிள்ளையார் காலைப் பிடித்து மணம் புணர்ந்த பிள்ளாய் உன் பேரில் பிசகில்லை அண்ணாச்சி பிள்ளையார் விட்ட பிழை!
யாத்ரா - 2

Page 26
சிங்களத்தில்:
அரசஷ்வு ஆதிரிே
"6 ITuS6Ormsbuusofsososo தேங்காய் சம்பல் சாப்பிட்டு கரங்களால் பயனில்லை கயிறுதிரித்து நாளும் முதுகினால் பயனில்லை நுளம்புகள் ரத்தம் குடித்து என்னாலும் பயனில்லை சிறையில் வேதனையில் மூழ்கி."
இந்தக் கவிதை எந்த ஒரு கவிஞனாலும் எழுதி வைக்கப் பட்டதல்ல: கொழும்பு மெகஸின் சிறைச் சாலையில் ஒரு பெண் கைதியால் பாடப் பட்டது. இப்படி யாரேனும் ஒரு பெண் கவிதை பாடுவதும் அதைக் கூடியிருந்து பல பெண்கள் ரசித்துக் கேட்டதும் ஒரு கவியரங்கு நடப்பது போல் இருக்கும். இந்த ஒவ்வவொரு கவிதைக் குள்ளும் பெரும் பின்னணிகள் இருக்கும். அவைதான் இந்தக் கவிதைகளின் ஜீவன்.
மெகஸின் சிறைச் சாலையில் பெண் கைதிகள் பகுதியில் சுமார் 350க்கும் அதிகமான கைதிகள் உள்ளனர். இத்தொகை நாளுக்கு நாள் வேறுபடும். சிறியவர் முதல் முதியவர்கள் வரை பல்வேறு தரப்பினர்
இங்கு கைதிகளாக வைக்கப் பட்டுள்ளனர்.
இவர்கள் பல்வேறு குற்றச் செயல்களுக்காகச் சிறைப் பிடிக்கப்பட்டவர்கள்.
இவர்களுடைய படிப்பறிவு, மனநிலைகள், சமூகத் தொடர்புகள் என்பன வித்தியாசமானவை. எண்ணங்களும் மாறு பட்டவை. இவர்களிடையே பல்வேறு திறமைகளைக் கொண்டவர்களும் கலை, இலக்கிய ஈடுபாடு உடையவர்களும் உள்ளனர். இவர்கள் பாடல்களை எழுதுகின்றனர், பாடுகின்றனர். போட்டி க்காகக் கவிதைகளைத் தாளம் போட்டுப் பாடுகின்றனர். காதல். சோகம் என்பன தோய்ந்து வரும் வார்த்தைகளை உரத்த குரலில் அவர்கள் பாடுவதைக் கேட்க இனிமையாக இருக்கும்.
‘கடவுள்' என்று அழைக்கப் படும் மல்காந்தி என்ற 33 வயதடைய பெண் 14
sk
 

49
வயது முதல் ஒன்பது தடவைகள் இந்தச் சிறையில் அடைக்கப் பட்டவர். இவரது வாழ்க்கையில் அதிக காலம் சிறையி லேயே கழிந்ததாகப் பெருமைப் பட்டுக் கொள்கிறார். அவரது வாழ்க்கை அவரது வாக்கு மூலத்தில்.
"இரண்டாம் வகுப்பு வரைதான் நான் பாடசாலையில் படித்தேன். ஐந்து சகோதரர்களுக்கும் நான்கு சகோதரி களுக்கும் மத்தியில் நான் பிறந்தேன். அவர்கள் நன்றாக வாழ்கின்றனர். 13 வயதில் பக்கத்து வீட்டுப் பெண் ஒருவர் ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யவென அழைத்துச் சென்று ஒரு வெள்ளைக் காரியின் வீட்டில் வேலைக்கு விட்டார். இப் பெண் இலங்கைக்கு வந்து மாதக் கணக்கில் தங்குவார். நான்
செய்யவும் இல்லை கோபப் பட்டாலும் எனது அன்பு குறையப் போவதும் இல்லை.
வீடொன்றைச் சின்னதாய் அமைத்து முற்றத்தில் பூஞ்செடி வளர்த்து கொஞ்சி மகிழ குழந்தையொன்றைப் பெற்றெடுத்து 6JTgp(36IITGLD 560T600Tst இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்டு.”
காதலி, மனைவியானதன் பின்ன்ர் தனது காதல் கணவனைப் பார்த்துப் பாடுவதாக இக்கவிதை அமைகிறது.
//
வெளி நாட்டு வேலை வாய்ப்பு முகவர்
அவருடன் இணைந்து வாழ்ந்தேன்.
|
| ||HMHIIIIHIII|ul Ш
:
பின்னர் அவர் என்னை விட்டு விட்டுப் போய் விட்டார். அதன் பிறகு நான் மட்டக்குளியில் உள்ள ஒரு வீட்டில் "ஹெரோயின்’ போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டேன். ஒரு நாளைக்கு 45,000.00 ரூபாவுக்கு அதனை விற்பனை செய்வேன். எனக்கு 500.00 ரூபாய்கள் கிடைக்கும். இப்போது 1 மாதங்கள் சிறைத் தண்டனை கிடைத் துள்ளது. விடுதலையானால் செல்வதற்கு இடமில்லை. எங்காவது தூர இடமொன் றுக்குச் சென்று வீட்டு வேலைகளில் ஈடுபட எண்ணியுள்ளேன்."
இவ்வாறு தனது கதைச் சுருக்கத்தைக் கூறிய "கடவுள்' சொன்ன கவிதை இது. “முன்பெல்லாம் காணும் போது முகத்தில் சிரிப்பிருக்கும் இப்போதோ முகத்தில் கோபமே குடிகொள்கிறது கோபப்பட நானெதையும்
ܬܝ
நிலைய உரிமையாளராக இருந்தவர் சித்ரா ரஞ்சனி ஐம்பத்து இரண்டு வயதுடைய இவர் பணத்தைப் பெற்றுக் கொண்டு
தொழில் வாய்ப்பு வழங்காமல் மோசடி
செய்தார் என்ற குற்றச்சாட்டில் தண்டனை அனுபவித்து வருகிறார். 1999ல் சிறைத் தண்டனை விதிக்கப் பெற்ற இவர் 2018ல் விடுதலை பெறுவார். ஏழு இலட்ச ரூபாய்களை 22 தவணை களில் செலுத்தத் தவறியதால் சிறையில் நாள் கழிக்கும் இவரது தண்டனைக் காலத்தைக் குறைப்பதாகக் கூறிய இவரது வழக்கறிஞரிடம் ஒன்றரை வருடங்களுக்கு முன்பதாக 30,000 ரூபாய்களை வழங்கியதாகவும் ஆனால் வழக்கறிஞர்அதன் பின்னர் சிறைக் கூடத்தின் பக்கமே வரவில்லை என்றும் கூறுகின்றார்.
உயரமான நான்கு சுவர்களுக்குள் இவர்களது உணர்ச்சிகளைத் தடுத்து வைக்க முடியாது என்பதற்கு சித்ரா
usTg5gst is

Page 27
ரஞ்சனி தனது கடைசி மகனை நினைத்துப் பாடும் இக் கவிதையும் ஒரு சான்று. "பாழடைந்த என் இதயம்
அழுகிறது மகனே
இரவாகும் போதெல்லம் உன் ஞாபகம் மனதிலெழும் தனித்ததொரு வீட்டில் நீ தனித்திருப்பதாக என் மனம் கூறும் அம்மா! என அழைத்தபடி நிவருகிறாய் மகனே கனவில்
இரு கண்கள் போலவே நீயிருந்தாய் மகனே தனித்து உனை விட்டுவிட்டு மெளனமானேன் வந்திங்கே தனிமை வெந்து துடிக்கின்றேன் சிறைக்குள்ளே நானும் உனைக் காணும் நாள் வரையும் ஏங்கிய படி நானும்."
O
சிறைக்குள் பெண்கள் அனுபவித்து வரும் வாழ்க்கையானது மிகவும் கடினமானது
என்பதை உணர்த்துகிற கவிதைகள் இப்பெண்களால் மிக அதிகமாகப் பாடப்படுகின்றன. இவை பெண்
கைதிகளுக்கு மட்டுமல்லாது, பெண் சிறைச் சாலை அதிகாரிகளுக்கும் மனப் பாட மாகும். அவ்வாறு அவர்களது நினைவில் தங்கிய சில கவிதை வரிகள் இவை. ஊ சத்தம் வைத்தவாறு புகையிரதம் அதிகாலை நான்கு மணிக்கு வரும் பழக்க தோஷம் அவ்வேளை எழுந்திடுவேன் கடவுளை வணங்கி பைபிளையும் படித்திடுவேன் வேண்டுவதை இறைவன்தந்திடுவான்
OD
"ஷெல் கதவு திறக்க பெண் அதிகாரி வருவார் ஒன்று, இரண்டு, மூன்று என வரிசையில் நாம் செல்வோம் பாணும் சம்பலும் கிடைக்கும்
штфfЈт — 12
சந்திக்கவும்
கிடைக்கும் தேனீர் குடிப்போம் மீண்டும் மூடப்படும் ஷெல் பூட்டுப் போடப்படும் அது மீண்டும் திறக்கப்பட மூன்று மணி நேரமாகும் கடவுளை வணங்குகிறேன் தினம் கண்ணிர் தெளித்தே நான் வீடு செல்ல அனுமதிதா கடவுளே. எனை மன்னித்து.'
OO
முப்பத்தொன்பது வயதான சாந்தனி தேவிகா ஆங்கில ஆசிரியையாவார். இவர் பேராதனைப் கழத்தில் வெளிவாரி விரிவுரையாளரான சுரேஷ் திஸாநாயக்க என்பவரை 1997ல் காதலித்து
பல்கலைக்
வந்தார். 1998ல் ஜப்பான் அனுப்புவதாகக் கூறி சுரேஷ் L_u 630ʻr Lib பெற்றுள்ளார். அவர் ஜப்பான் அனுப்பவும் இல்லை: சாந்தனியை அதன் பிறகு இல்லை. இறுதியில் குற்றவாளியானார் இப்பெண். 4 லட்ச ரூபாக்களைச் செலுத்த வழியின்றி 7 வருட காலச் சிறைத் தண்டனையை அனுபவித்து
பலரிடமும்
வருகின்றார். பின்னர், சுரேஷ் தமிழ் இயக்கமொன்றைச் சார்ந்த வர் என்றும் தனது பெயரை மாற்றிக் கொண்டு தன்னைக் காதலித்து மோசடி செய்ததாகவும் சாந்தனி அறிந்து கொண்டார். சிறைக்குள் இவர் ஏனைய கைதிகளுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கின்றார். விடுதலைக்குப் பிறகு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வது இவரது எண்ணமாகும். சிறைக் கூடத்தைப் பற்றி தேவிகா இப்படிச்
சொல்கிறார்.
"இது ஒரு பல்கலைக் கழகம். கற்பதற்கு அனேக விடயங்கள் உள்ளன. முட்டாள் களும் படித்த பெண்களுமாக பல பெண்கள் உள்ளனர். முட்டாள்களுடன் இருப்பது கடினமானது. அவர்கள் அடிக் #9- மாறி விடுகின்றனர். இச்சந்தர்ப்பங் களில் மோதல்களும் ஏற்படுகின்றன. வெளிச்
حا

சமூகத்தில் காணக் கிடைக்காத, நினைக்காத எவ்வளவோ விடயங்கள் இங்கே புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இந்தப் படிப்பினைகள் முழு வாழ்க்கைக்குமே பெறுமதியானவை" என்று கூறும் அவர் எழுதிய கவிதை இது. “சிறைக் கூடம் அதிசயமானது இவள் கொள்ளைக்காரி
966it 65IT6065Trf அதோ. அங்கே இருப்பவர்கள் இரவின் மணப் பெண்கள் இவள் சிறைவாசம்: அவள் சந்தேகம் இப்படியே இரு தரப்பினர்
என்றாலும் ஒரு கூரை
வழக்கு என வந்தவர்கள்
ஆண்களும் பெண்களுமாக தினம் வருகிறார்கள் வழக்கறிஞர்கள் பல்வேறு தரப்பினர் வந்து கேட்பார்கள் துருவித்துருவி திரும்பத்திரும்ப வழக்குகள் பற்றி மேலும் என்ன பிரச்சனைகள் என்பார்கள் மிகுந்த உணர்ச்சியுடன் கேட்பார்கள் என்றாலும் கூறுவதற்கு ஒன்றுமேயிராது கூறினாலும் பயன் இராது
செல்வார்கள் மீண்டும் வருவதெனக் கூறி வருவார் மற்றொரு நாள் பல காலம் கழிந்திருக்கும் மீண்டும் வந்து விசாரிக்கும் போது அவள் விடுதலையாகிப் போயிருப்பாள் மன்னிப்பின் பேரில்”
கவிதையின் வரிகள் இவை.
"கானலின் பின்னால் துரத்திச் சென்ற மான் குட்டியாக இருந்த வேளை அமிர்தம் கண்டது போல் ஆனேன் நான் மகிழ்ந்து இதய மேடை நாயகனே நீ வந்த வேளை."
தவறு எங்கே நடந்தது' என்ற கவிதையில் அவர் இப்படிச் சொல்கிறார். “இன்னமும் வீசுகிறது
Ề DSTUçuu unt6o 6TeFLb
இருக்கிறது ஞாபகத்தில் தந்தை உங்கள் உபதேசம் சென்றது எப்போது தந்தையே திரும்பி வராப் பயணம்
தவறு நடந்ததெங்கே
நடந்ததவறுதான் என்ன?”
கே.எச் கருணாவதி 1999ல் சிறைத்தண்டனை பெற்ற கொலைக் குற்றவாளியாவார். தனது கணவனின் கொடுரச் செயல்களால் வெறுப்படைந்து அவனைக் கொன்றவர். இறக்கும் வரை சிறைவாசம் விதிக்கப்பட்டுள்ள இவர் மூன்று பிள்ளைகளின் தாயாவார். அவளது பிள்ளைகள் அவளைப் பார்ப்பதற்காக அவ்வப்போது சிறைக்கு வருவதுண்டு. அவர்கள் வராத வேளைகளில் எழும்
அவளது வேதனை இது.
"மனது அழுதாலும் பரவாயில்லை
தங்க மகனே
கண்கள் நனைந்தாலும் பரவாயில்லை தங்க மகனே
துயரங்கள் எதுவாயினும் தாங்க முடியும் என் மனதால் என்றாலும் மகனே நீ வராவிடில் வேதனையே கூடும் என் மனச் சிறையில்”
இவ்வாறு சிறைப்பட்ட பெண்களின் உணர்ச்சிகள் தொடர்ந்து கவிதைகளாக வடிக்கப்படுகின்றன. இவை பலருக்குத் தெரியாமலே சுவர்களுக்குள் சிறைப் பட்டும் விடுகின்றன. முடிந்தவரை வெளிக் கொணர்ந்த மகிழ்ச்சியானது, பலரை சிறையில் இருந்து மீட்டு வந்ததைப் போன்றது.

Page 28
59
ஜனதிபதித்த ஒரு Uடல்.
ஆங்கிலத்தில்: &\onNJ தமிழில்: சி. சிவசேgs
இதுவொரு இணையத்தளக் கவிதை
штфДт - 19
காற்றின் ஓசையும் தமக்குள் உரையாடும்றக்கூன்களின் சத்தமும் நேற்றிரவு மீண்டும் எனக்குக் கேட்டன நான் வசிக்கும் வீட்டை பூமி உலுக்குவதை உணர்ந்தேன் நேற்றிரவு கனவுகளால் என்நித்திரை கெட்டது
எனது கனவுகளில் உலகெங்கும் குழந்தைகள் இறந்தன உயில்கள் வாழாதொழிந்த மண்ணிலெல்லாம் அனைத்தும் அசைவற்று அமைதியாயின சிறு விமானங்கள் தொடர்ந்தும் பறந்தன கனிவற்ற வெறிதான கண்களுடன் சீருடைதாரித்த மனிதர் ஒவ்வொரு சாளரத்தின் மீதுஞ் சாய்ந்து
நின்றனர் h− காற்றினூடு ஆயுதங்கள் கூவிச்சென்றன என்று நேற்றிரவு கனாக் கண்டேன்
உலகெங்கும் ஒவ்வொரு மண்ணிலும் வெள்ளை, இளஞ்சிவப்பு, கறுப்பு, பழுப்பு, ஒலிவ் பச்சைநிறங்களில் சீருடை மனிதர் முகங்களையும் பூமியெங்கும் வெறிதாகக் கிடக்கும் குழந்தைகளின் உடல்களையும் காண்கிறேன் அவர்கள் போரும் பயங்கரமும் பழிவாங்கலும் பற்றி
ஒவ்வொரு மொழியிலும் பேசுவதும் ஒவ்வொரு மொழியிலும் சாவு பற்றிப் பேசுவதும் s சொற்களும் கூச்சலினதும் ஒலத்தினதும் குசுகுசுப்பினதும் குரல்களும் ஒரு பெரும் இரைச்சலாக என் காதில் விழுகின்றன
 

S3
இப்போதுநான் உங்களுடைய உரையைக் கேட்கையில் நீங்களும் அதே மொழியைப் பேசுவது கேட்கிறது தாரகைகள் ஒழிவின்றித் தொடரும் இருண்ட காரிருள் இரவில் உங்களது ஒவ்வரொரு மூச்சின் சலசலப்பும் காதில் விழுமாறான நிச்சலனத்தில் உங்களது ஒவ்வொரு இதயத்துடிப்பும் காதில் விழுமாறான அமைதியில் எங்கும் உலகு முழுவதும் உயிர்த்துடிப்புடனுள்ள இரவில் உயில் வாழும் சீவராசிகளெல்லாம் அதேதாரகைகளை நோக்குகையில் ஒரு பாலைவனத்தில் நின்றிருப்பீர்களா. யோசிக்கிறேன்
போரும் பயங்கரமும் சாவும் பழிவாங்கலும் அவை பேசப்படக்கூடிய ஒவ்வொரு மொழியிலும் வெள்ளை இளஞ்சிவப்பு கறுப்பு பழுப்பு ஒலிவ் பச்சைமுகங்கள் ஒவ்வொரு மண்ணிலும் ஒவ்வொரு நாட்டிலும் எல்லா விளக்குகளையும் அனைத்து விடக்கூடியன
நாளைக் காலை என் கதவுக்கு வெளியே ஒரு மரத்திற்கு முன் ஒரு பூஞ்சிட்டின் சிறகடிப்பில்துயிலெழுப்பப்பட விரும்புகிறேன் குழந்தைகளது பல்வேறு மொழிகளும் அழகான சருமங்களும் ஒட்டுத்துணியாக இழைத்த ஒரு போர்வையின் இதமான வெதுவெதுப்பினின்று நாளைக் காலை அவர்களது ஒலியால் துயிலெழுப்பப்பட விரும்புகிறேன் நாளைக் காலை விமானங்களின் ஒவ்வொரு யன்னல் வழியாகவும் ஆண்களும் பெண்களும் சாய்ந்து V காட்டுப் பூஞ்செடிகளின் விதைகளை எல்லா மண்களிலும் விசிற எங்கும் புது வாழ்வு வேரூன்றி ஒளிகாணுகையில் என் மேலாகப் பறக்கும் விமானங்களின் எஞ்சினின் ரீங்காரத்தால் துயிலெழுப்பப்பட விரும்புகிறேன்
காற்றின் ஓசையும் தமக்குள் உரையாடும்றக்கூன்களின் சத்தமும் நேற்றிரவு மீண்டும் எனக்குக் கேட்டன நான் வசிக்கும் வீட்டை பூமி உலுக்குவதாய் உணர்ந்தேன் நேற்றிரவு கனவுகளால் என்நித்திரை கெட்டது
o7.02.2OOз
ஃபீனிக்ஸ் ஒரு கவிஞர், கலைஞர்,சமூகநீதிக்கான செயலூக்கவாதி. கனடாவைச் சேர்ந்த யூதப்பெண்மனியான இவர் அமெரிக்காவின் கலி.போர்னியாவில் வாழ்கிறார். Racoon என்பது இரவு நேரத்து விலங்கு. பெரிய
கீரிப்பிள்ளை அளவான றக்கூனின் முகம் கறுப்பும் வெள்ளையுமாக முகமூடிக் கள்வன் போல இருக்கும். 12 - யாத்ரா ہلامہ

Page 29
முல்லை முஸ்ரிபாவின்
3960glycy
இந்தத் தொகுதிக் கவிதைகள் அனைத்தையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். ஒய்ந்த மழையைப் போல, அழுது முடித்த சமயம் போல, ஒர் ஆழ்ந்த அமைதி சூழ்ந்து கொண்டது. மனதைப் பிசையும் ஏக்கமும் இப்படியான ஒரு வாழ்தல் வந்தேகிற்றே என்கிற கழிவிரக்க முமாக. யோசனைகள் கிளைத்து. என்ன செய்யக் கூடும் இந்த வாழ்க்கையை? என்ற ஒற்றைக் கேள்வியாகி நீண்டது.
கடவுளைப் பாடிய நமது ஆழ்வார்களில் ஒருவரது பாடலில், “சொன்னால் விரோதம். ஆகிலும் சொல்வேன்." என்று வரும். அப்படியான ஒரு சங்கடம்! "எல்லாத்திக்குகளிலிருந்தும் பேய்கள் எழுகின்றன விரைந்து கண்களை இறுகமூடிக் கொண்டு அலறுகிறேன் உயிர் பதறுகிறது" என்றொரு கவிதை ஆரம்பிக்கிறது. அப்படித்தானிருக்கிறது என் நிலையும். ஆழமறியாத பள்ளத் தாக்கின் ஒரத்தில் ஆதாரம் எதுவுமற்றுக் கால் சரிவதாக உணர்கிறேன். முஸ்லிம் சகோதரர்களின் கவிதை களைப் படிக்கும் போதெல்லாம் உண்டாகிற குற்ற உணர்ச்சிதான் இது.
உலகம் முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்டவர் களோடு நம்மை இனங் கண்டு - இன வெறி, நிறவெறி, மத வெறியைக் கொண்டிருப் போரெல்லாம் மனித இனத்தின் பிற்போக்குக் கழிவுகள் என்றும் அவற்றுக்கு எதிராக உள்ள நாம்
முற்போக்காளர்கள் என்பதாகவுமிருந்த வீறெல்லாம் சரிந்து பொல பொலக்கும் கணங்கள் இவை.
நாமும் இன்னொரு மனிதனை அடக்கு முறைக்கு உட்படுத்தி இழிவுபடுத்தும் சமூகத்தின் அங்கம் என உணர நேர்கிற அவலம். இதற்குக் கழுவாய் தேடிக் கொள்ள முடியாத வனாகவும் தலை குனிந்து நிற்கும் சிறுமை. நடக்கும் எதையும் எதிர்த்து வாய் திறக்கவும் வலுவின்றி இருக்கும் நான் எப்படி இதிலெல்லாம் எனக்குப் பங்கில்லை என்று ஒதுங்கிக் கொள்ள முடியும்?
கண்ணெதிரே ஒரு கொலை நடக்கிறது. அதைத் urtöJT - 12
54
தடுப்பதற்கோ கண்டிப்பதற்கோ எந்தப் பிரயத்தனமும் எடுக்காமல் அதைக் கடந்து போய் விடுகிறேன். அந்தக் கொலையை நான் செய்யவில்லை என்று ஆசுவாசப் பட்டுக் (up Lq- u{ LDrr? அல்லது கொலையுண்டவன் அனுபவித்த
கொள்ள
கொடுமையை விட அதிகக் கொடுமைகளை
அனுபவித்துக் கொண்டிருப்பவன் நான் என்பது அந்தக் கொலைக்கான நியாயம் ஆகுமா? நடப்பவற்றில் சம்பந்தமின்றி இருப்பதன் மூலம் ஒருவர் குற்றமற்ற நிலையை அடைந்து விட முடியுமா? வதைக்கும் கேள்விகள்!
ரத்தத்தில் கை நனைத்ததில்லை நான். எனினும் ரத்தம் சிந்த வைப்பவர்களின் நிழலில்தானே தங்க நேர்கிறது எனக்கு! நடக்கும் குற்றங்கள் எல்லாருக்கும் பொது வானவைதான் - சூரிய கிரகணம் போல, நான் மட்டும் தனியே ஒளிந்து கொள்ள வழியில்லை. நண்பரின் கவிதைகள் தருகின்ற குற்றவுணர்ச்சி என்னைக் கழிவிரக்கத்திற்குட் படுத்துகிறது. மெளனத்தையே முன்னெடுக் கும் என் சமூகத்தின் பெரும்பாலானவர் களோடுதான் நானும், இந்த வாழ்க்கையை நான் என்ன செய்தல் கூடும்?
முஸ்ரிபா, 'இருத்தலுக்கான அழைப்பைத் தான் விடுத்திருக்கிறார். வாழ்தலுக்கான அழைப்பை விடுக்கும் துணிவை இந்தச் சூழல் நமக்கு அளித்திருக்கவில்லை. முதலில், இருத்தலுக்காகவேனும் ஒர் உடன்பாட்டிற்கு வந்தாக வேண்டும் என்கிற அளவுக்கு அவலச் சூழலில் இருக்கிறோம். அசையவொட்டாமல் கம்பிகளுக்கு நடுவில் இருத்தி வைக்கப் பட்ட கதகதப்பிலிருந்து நேரே கசாப்புக் கடைக்கு விரையும் புரொய்லர் கோழிகளின் வாழ்க்கை. சமீபத்தில் படித்த நாவலொன்றில் ஒரு கட்டம். சிறுவன் பிராங்கிடம் அவனது அப்பா "நீ உன்னுடைய தாய் நாட்டுக்கு உயிரைக் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்” என்று சொல்கிறார். அவனுடைய பள்ளிக் கூட ஆசிரியர் " நீ உன் கத்தோலிக்க மதத்துக்காக உயிரையும் கொடுக்க வேண்டும்’ என்று போதிக்கிறார். "எதிர்கால சந்ததி யினருக்காகச்
செத்துப் போனால் அவர்கள் நம்மை நினைவில்
"இருத்தலுக்கான அழைப்பு" வெளியீட்டு விழாவில் இடம் பெற்ற நூலாய்வுரை
大 火
 

&55
வைத்திருப்பார்கள்” என்கிறான் சகோதரன். உயிரை வைத்து வாழக்கூடச் செய்யலாம் என்ற சிறு உண்மையை அவனுக்குச் சொல்லித் தர யாருமில்லை. அந்தச் சிறுவனிஸ் குழப்பம், நாம் ஒவ்வொரு வரும் அனுபவிக்கிற குழப்பமும் கூட.
"வதை பட்டுச் சிதைகிற வாழ்வின் மீதான கவிதைகள்” என்று நூலுக்கு உப தலைப்புத் தந்திருக்கிறார் முஸ்ரிபா. ஒர் உண்மையான வாழ்தலின் துக்கம் பொறுக்க முடியாத, துக்க நிவர்த்தி தெரியாத, நம் பலரது உணர்வுகளை வார்த்தைகளில் பிடித்துக் கொண்டு விட முஸ்ரிபாவுக்கு முடிந்திருக்கிறது. வாழ்வு மீதான காதல் எல்லோருக்கும்தான் இருக்கிறது. வாழ்ந்து கொண்டிருத்தலே அதற்குச் சாட்சி. ஆனால் அவமான சில தருணங்களில் அதன் மீது அடையாளங்களை முன்னிறுத்தி வலிந்து சில ஆவேசங்களை ஏற்றி வைத்து விடுகிறோம், கோபப் படுகிறோம், போராடுகிறோம், கொலைகள் செய்கிறோம், செத்துப் போகிறோம்.
இவற்றுக்காக அல்ல: நாம் வாழ்வதற்காகவே வந்து
பிறந்திருக்கிறோம் என்பதைக் கவிஞர்களே அவ்வப்போது ஞாபகமூட்டி நிதானப் படுத்த முயற்சிக்கிறார்கள். 'கவிஞர்கள்தான் இந்த உலகத்திற்கு வாழ்வதன் நியதிகளை வழங்குகிறார்கள்' என்று ஷெல்லி சொன்னது இதயே. நல்ல கவிதைகள் மனித அனுபவத்தைச் செழுமைப் படுத்துகின்றன: வாழ்வது எவ்வாறு என்பதை மனிதர்களுக்கு அவை சொல்லித் தருகின்றன.
உயிராசையைக் கேவலமாக ஏன் நினைக்க வேண்டும்? இயல்பான விஷயமல்லவா அது வாழ்வு மீதான காதலின் விளைவு அது மண்ணும் காற்றும் வானும் ஒளியும் நீரும் மனித உறவுகளும் தரும் இன்பத்தைக் கூடிய விரைவில் துறுந்து விட வேண்டும் என்பதற்காகவா வந்து பிறந்தோம் நாம்? மனிதனின் இயல்பான நிலை மகிழ்ச்சியும் களியாட்டும் அல்லவா? மென்மையாகவும் காற்றுப் புக அனுமதித்து சங்கீதத்தை வெளிப்படுத்திய படியும் - மூங்கில்கள் அதிக காலம் வாழ்கின்றன.நமது வாழ்க்கையோ. இப்படி உயிர் வாழும் மரம். செடி, கொடிகளையும் பார்த்துப் பொறாமைப் படும் படியாக இருக்கிற்து. I み
வாழ்க்கையின் அழகு என்ன? கவிஞன் நமக்குள் பரப்புகிற மகிழ்ச்சியின் சிலிர்ப்பைப் பாருங்கள்: "வண்ணத்துப் பூச்சியின் இறக்கையாக கூடிப் பறப்போம் சிறு பூச்சியாய் கூடி மலர்வோம் ஒரு ரோஜாவாய் நான்/மெல்லெனப் பறந்துன் மடியிலமர்வேன் நீ பூவெனில். நீயெனை அனைத்து முழுசாய் விரிவாய் நானோ வண்ணத்துப் பூச்சியாயின் நீ சிறகு நான் இதழ் ரோஜாவிதழால் நான் பறக்கவும் சிறகால் நீ மலரவுமாக நாமிருவரும் ஜீவிதம் செய்தல் தகுமாக.
ཚ་རྒྱུའི་ཀུ་༤༡ ང་ཤ་༽དགའ་བ་1
;rnحال) 2سمجھی
எனக்கு இதை பிரபஞ்சம் கேட்க அலற வேண்டும் நண்பர்
களே! கவிதைகளிடம் வாருங் கள். அவரவர் இதயத் துடிப்புக் களை அவரவர்க்கே அறிமுகம் செய்பவை அவை. கவிதைகள் அப்படி என்ன தருகின்றன? முஸ்ரிபா சொல்கிறார்: "ஜீவிதம் பற்றியதான எல்லா நம்பிக்கைகளும் நட்சத்திரங்களாய் உதிர்ந்து இனியென் செய்தல் தகுமென மனமலறித் துடிக்குங்கால் ஆத்மாவுக்குள் நுழைந்து மெல்லெனச் சாந்தி சொல்லுமென் கவிதைகள் இன்னும் உயிர்ஜனிக்க” என்கிறார். துளையிட்ட தீப்புண்களி லிருந்து மூங்கில் இசையைத் தருவது போல, காயங்கள்தான் நல்ல கலைப் படைப்புக்களை வெளித் தருகின்றன என்பதற்கு முஸ்ரிபாவும் உதாரணமாகிறார். சமுதாயத்தின் மனச் சாட்சி 95 GYTs 96 கவிஞர்கள் இருக்கிறார் கள். சமுதாயத்தின் நோய்கள்
முதலில் இவர்களையே கடுமை
யாகத் தாக்குகின்றன. ஏன் இந்தச் சீரழிந்த வாழ்க்கை? என்ற கேள்வியைக் கவிஞனே முதலில் உரத்துக் கேட்கிறான். இருக்கும் கொடுமைகளை ஏற்றுக் கொள்ளாத கலகக் காரர்களாகவே கலைஞர்கள் அனைவரும் இருக்கிறார்கள். இப்படி சமூக மனதின் கூர் முனையாக கவிஞன் இருக் கிறான். இந்தக் கவிஞன் மனம் அவனது மொழி வழியாக வெளிப்படுகிறது. வாசகனின்
யாத்ரா - 12

Page 30
அக மனதுடன் அது வாசகன் அறியாமலே நுட்பமாக உரை யாடுகிறது. அந்தக் கூர்முனை அனைவரையும் சென்று சேர்கிறது. எனவே, கவிஞர்களின் மூலமாக மக்கள் மனதை அறிந்து முறைமை தெரிந்தவர்கள் வெற்றிகரமான தலைவர்களாகி றார்கள். நல்ல
கொள்கிற
கவிதைகள் நிச்சயம் நமக்கும் புற உலகுக்குமான உறவுநிலையில் மாற்றங்களை நிகழ்த்தியே தீரும். "ஒரு வரலாறு வரண்டழியலாம் என்னும் உம் மனசு அடி சுடும் நிச்சயமொருநாளில் நீருணர்க” என்கிறார் முஸ்ரிபா. வஞ்சிக்கப் பட்ட சமூகத்தின் அடி வயிற்றுத் தீ இது. நமது மூளையும் மூர்க்கமும் பொசுங்கிப் போக வேண்டாமோ? முஸ்ரிபா மேலும் கேட்கிறார்: "குருவி குரல் கிழிந்து செத்திற்றா பனங் கிழங்கின் பீலியிலும் துப்பாக்கி முளைத்திற்றா நீ முள் குத்திய மனசோடெங்கோ முகவரி தொலைந்ததாக காற்று எனக்குள் செய்திதீய்க்கும் யாமிருவர் உன் வீட்டு ரோசாச் செடியிலமர்வதும் சோடிக் குருவியாய்க் கூவிக் களிப்பதுவும் எவ்வண்ணம் என்றுரைப்பாயாக."
மனம் கூசுகிறது. குற்றவுணர்வு மேலும் அதிகரிக்கிறது.
இதில் பெரும்பாலான கவிதைகள் நானும் நீயும்' என்ற உரையாடலாகவே நிகழ்கின்றன. 'பிரிவின் புரிவு', "கிட்டிப் புள்ளு விளையாட்டு, 'ஒற்றைச் சிறகும் ஓரிதழும்", "உனதின் நான்", 'சிறகிலெழுதல், நினைந்திருத்தல்', 'வசமிழந்த உதயம்", "மகாதுயரழிக', 'மையித்தின் புலம்பல், 'வித்தியானந்தாரிகளுக்கு', 'உள் நுழையும் காற்று'. எல்லாவற்றிலும் ஊடிழையாக இந்த நான் - நீ இருமை! இதில் நீயை நானாகவும் நானை அவராகவும் புரிந்து கொள்கிறேன். நான் தமிழன், அவர் முஸ்லிம். நினைக்க வலித்தாலும் இப்படியான ஒரு உரையாடலுக்குத்தான் வந்து சேர்ந்திருக்கலாம். மறைந்த தலைவர் அஷ்ர பினது "நான் எனும் நீ'யையும் இதனோடு கொள்ளலாம்.
நான் என்ற சொல்லுக்குப் பின்னால், ஒரு மனித உயிர் இருப்பதைத்தான் எப்போதும் அர்த்தப் படுத்துகிறோம். நீ என்ற சொல்லும் மனித உயிருக்கு முன்னால் இருக்கும் மற்றொரு uUTogT - ?
S6
உயிர்தான். இந்த உயிர்களிடையேயான கிட்டிப் புள்ளு விளையாட்டில் இதயம் உடையும் சோகத்தை - வலியை சொல்கிறார் முஸ்ரிபா. அரசியல் உட்கணத்துடனும் அகத் தீவிரத்துடனும் இயங்கும் அவர் கவிதை - "கிட்டிப் புள்ளு விளையாட்டு'
ஒவ்வொரு கவிதையையும் முடித்த பிறகு அதன் தாக்குதல்களிலிருந்து மீண்டு வர நிறைய நேரம் தேவைப் படுகிறது. கவிதை - ஜீவத் துடிப்புள்ள உண்மையின் மொழி: உயிரோட் டமுள்ள பின் விளைவுகளைக் கொண்ட உண்மையின் மொழி. எளிமையும் லளிதமும் புதுமையுமான கவிஞரின் சொற் பிரயோகங்களுக்கு உதாரணமாக இதில் கவிதைகள் நியைவுள்ளன. இளைய அகதிகட்கு" - கவிதையை வாசிக்கிற போதே அதிலுள்ள வார்த்தைகளின் கனம் நம்மால் தாங்கிக் கொள்ள முடியாமற் போகிறது. பாரி மகளின் துக்கம் சொல்லும் கபிலரின் அந்த எளிய நாலு வரிகளில் இரும்பையொத்த சோகம் இறக்கி விடப் பட்டதைப போல!
'கனவுதல்', 'செவித்திருத்தல்', 'பெளர்ணமித்து', நீலாம்பரித்து', 'வனாந்தரித்து விரியும் வயலின் வெளி". என்று புதுப் புதுச் சொற்கள் கவிதையில் ஒசையின்பத்தை, நளினத்தை ஏற்படுத்துவதற்காக உருவாகியிருக்கின்றன. 'மழைத்தது, சோகித்தது' என்று வசனத்தைப் புதுமைப் படுத்துவதற்காக சுஜாதா போன்றவர் கள் இதை ஆரம்பித்து வைத்தார்கள். முஸ்ரிபா வுக்கும் கவிதையின் ஓட்டத்திற்கு ஓசை முக்கியமாகப் படுகிறது. நிலவு மரம் கவிதை நெடுகிலுமே நளினமான சொல்லாட்சிகள்.
கவிதைகளால் தொலை தூர மனங்களையும் தொட்டுக் கொள்வோம். கவிதை - நாணப்பட நமக்குச் சொல்லித் தரும். பிழைகளுக்காய் வெட்கப்பட வைக்கும். வாழ்வதற்கான தகுதியை நமக்கு வழங்கும். ஒரு ரஷ்யக் கவிஞன் சொன்னான்.
“சகோதரர்களே. இப் பூமியின் மீது மரணமும் மூர்க்கமும் ஆதிக்கம் செலுத்தினாலும் ஆண்டைகள் என அவற்றை அழைக்காதீர்கள் ஏனெனில் அனைத்துமே மாறவும்
சுவடு தெரியாமல் மறையவும் செய்கையில்
அன்பு என்ற கதிரவனோ என்றென்றும் அசையாது நிற்கும்!"

சென்ற ஆண்டுகளில் நாம் நண்பர்களாயிருந்தோம் எத்துணை அழகான நேசிப்பு அது நான் உனது கண்ணீரைத் துடைப்பவனாய் நீ என் அழுகையை அறியாதவனாய் உறுதியுற்ற நண்பர்களாய் எத்துணை ஆண்டுகள் கழித்தோம்
அன்றில் நீ எனது கனவுகளைத் திருடியிருக்கவில்லை எனது வாய்க்கு ஒரு பூட்டையும் கைகளுக்கு விலங்கையும் மாட்டி இருக்கவில்லை நீ நாம் சென்ற ஆண்டுகளில் நண்பர்களாயிருந்தோம்
பசுமையான கனவுகளைத் தாங்கி நிற்கும் அந்நாட்களினது வசந்தங்களின் ஸ்திதியில் எப்படித் தீமூண்டது ஒருமித்த மனதினனாய் வர்த்தைகளைப் பகிர்ந்து கொண்ட எமக்குரித்தான அவ்வினிய நாட்களில் யார் விஷத்தைத் தூவியது
சிந்தித்து ஒரு தீர்வினைக் காணுமுன்னமே நானும் நீயும் பெருத்த எதிரிகளாய் மாறிப் போனோம் பின்னாளில்
என் அழுகையையும் அவலங்களையுமே இரசிப்பான் வேண்டி நீ அலையத் தொடங்கிவிட்டாய்
எனக்கு விலங்கு மாட்டுவதும் என் சுதந்திரங்களைப் பறிப்பதுமே உனதின் உயர்ந்த லட்சியங்களாயிற்று என்னால் இரவுகளில் உறங்க முடியவில்லை பகல்களில் உலவ முடியவில்லை எத்துணை கொடூரமான எதிரியாய்
நீகட்டமைந்தாய்
இந்த ஆண்டில் ஒவ்வொரு நிமிடத்திலும் உன்னைப் பற்றிய அச்சங்களினூடே நான் வாழ்கிறேன் நீ மீளவும் என்னை உறுஞ்சிக் குடிக்க ஊசி கொண்டலையும்
ஒரு நுளம்பாகி வரலாம்
'ഝേ..|s. ኃ፹Jጥ
யாத்ரா - 2

Page 31
858
ஆக்ா ஷஹித் அலி பெப்ரவரி 4, 1949ல் புதுடில்லியில் பிறந்தவர். வளர்ந்தது காஷ்மீரில். முரீநகரில் காஷ்மீர் பல்கலைக் கழகத்திலும் பின்னர் டெல்லி பல்கலைக் கழகத்திலும் பயின்றவர். 1984ல் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் ஆங்கில மொழியில் பி.எச்.டி. பட்டமும் அரிசோனா பல்கலைக் கழகத்தில் எம்.எப்.ஏ. பட்டமும் பெற்றவர். “இன்றிரவு என்னை இஸ்மாயில் என்று அழை” - கஸல்களின் தொகுப்பு (Cal me Ismael Tonight: A Book of Ghazals) "sloopassir fig, GupG6).uslsoscoso" (Rooms are never finished) "gurtsoa5b86)6Org IBTG" (The country without a post office) "LD658Git Udasiila,6fgrTG 9(5 E.60L. LuscoTib" (A walk through the yellow pages) "sigopurig,60 & Dréourissir (The half-Inch Himalayas) "Gusubsidigits S6060T6. Ts6 b LDDDD a 6hsogastub" (In memory of Begum Akthar and Other poems) “எலும்புச் சிற்பம்’ (Bone Sculpture) முதலியன இவரது கவிதைத் 6gTG5856řT. “LugšßJITSUJITES (f.6T6No.6T66uugib" (T.S.Eliot as Editor) 6T6örgp நூலினதும் ஆசிரியர். “பரவசமூட்டும் பிரிநிலைகள்: ஆங்கிலத்தில் அசல் asnosoa56ir" (Ravishing disunities: Real Ghazals in English) 6T6arp தொகுதியின் தொகுப்பாளர். ஃபைஸ் அஹ்மத் ஃபைஸின் கவிதைகளைத் தெரிவு செய்து “ஒரு கலகக்காரனின் புறத் தோற்றம்: தேர்ந்தெடுத்த assificosa,6it" (The rebel's Silhoutte: Selected poems by Faiz Ahamed Faiz) என்ற மொழியாக்கத் தொகுதியையும் வெளியிட்டுள்ளார். பென்சில்வேனியா பல்கலைக்கழகம், பிரட் லோஃப் எழுத்தாளர் சம்மேளனம், இங்ரம் - மெரில் ஃபவுண்டேஷன், கலைகளுக்கான நியூயோர்க் ஃபவுண்டேஷன், ககன் ஹேய்ம் ஃபவுண்டேஷன் முதலியவற்றின் உறுப்பினராகவிருந்த ஆகாஷஹித் அலி,புஷ்கார்ட் பரிசு பெற்றவர். டெல்லி பல்கலைக் கழகம், பென்சில்வேனியா, ஸ்னி பிங்ஹம்டன், பிரிஸ்ட்டன், உட்டாற் பல்கலைக் கழகங்கள், ஹமில்ட்டன் கல்லூரி, பாருச் கல்லூரி, வாரன் வில்சன் கல்லூரி முதலியவற்றில் விரிவுரையாளராகவும் ஆசிரியராகவும் பணியாற்றியவர். ஆகாஷஹித் அலி டிசம்பர் 8, 2001ல் காலமானார்.
"புலம்பெயர்ந்தோர் அநேகருக்குள்ள சங்கடம், அவர்கள் சொந்த மண்ணை விட்டகன்றுவாழ நேர்ந்துள்ளமை மட்டுமன்று. இன்றைய உலகில் நீ புலம் பெயர்ந்தவன் உன் தாயகம் வெகு தூரத்திலில்லை. ஏச்சங்காட்டி ஏமாற்றும் பழைய மன்னனுடனான பூர்த்தியாகாத தொடர்புகள் உனக்குண்டு என்ற ஞாபகமூட்டல்களுடன் வாழுமாறு அவர்கள் விதிக்கப்பட்டுள்ளனர்." என எட்வர்ட் சேத் கூறுவது, அமெரிக்காவில் குடியேறி, ஆசிரியத் தொழில் புரிந்து கொண்டு, எழுத்துத் துறையில் ஈடுபட்டிருந்த காஷ்மீரிக் கவிஞர் ஆகா ஷஹித் அலிக்கு மிகவும் பொருந்தும். ஆங்கிலோ - இந்திய இலக்கிய அரங்கில் நன்கு அறிமுகமான கவிஞர் ஆகா ஷஹித் அலி.
ரெஹான் அன்சாரி, ராஜேந்திர போல் - இருவருடனான உரையாடலொன்றில் ஆகா ஷஹித் அலி தமது கவிதைகள் சில பற்றி S கூறியுள்ள குறிப்புகள், ஷஹித் அலியின் கவிதை பற்றிய உட் பார்வையை
வாசகர்களுக்கு வழங்குவதாக உள்ளன.
யாத்ரா - 2 ܓܰܪܬܳܐ
 

859
“விரும்புகின்றார் யாரோ நான் வா
வேண்டுமென ஒரு மொழி மறைந்து விடும் என்னோடு”
"பழம் நினைவில் வாழும் ஒருவனின் அமெரிக்க வரைபடம்” என்ற தொகுதியின் நடுவில் இடம் பெற்றுள்ள கவிதையொன்றின் வரிகள் இவை. எய்ட்ஸ் நோயினால் இறக்கும் நண்பன் பற்றிய கவிதை. அவன் பென்ஸில் வேனியா பல்கலைக் கழகத்தில் என்னுடன் படித்த பட்டதாரி மாணவன். நாம் நல்ல நண்பர்கள். கடைசியாக அவனைப் பார்த்தது, 1979ல் அவன் பட்டப் படிப்பை முடித்து வெளியேறும் போது. 1985ல் டக்சனுக்கு அவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. எனது தொலைபேசி இலக்கத்தை அவன் தேடிப் பெற்றானோ நான் அவனுக்கு எழுதினேனோ என்பது பற்றிய விபர மெதுவும் எனக்கு ஞாபக மில்லை. அவனும் அவனது காதலனும் பொஸ்டனிலிருந்து கலிபோர்னியாவுக்கு இடம் பெயர்வதாகவும் டக்சன் வழியே போகும் போது என்னைப் பார்க்க விரும்பு வதாகவும் அறிவித்தான்.
அவ்வாறே நடந்து கொண்டனர்.
அவர்கள்
ஆறு மாதங்களின் பின் மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு "ஷஹித். உன்னோடு ஒரு விடயம் கதைக்க வேண்டும்" என்றான். அவனுக்கு எய்ட்ஸ்
என்பதை அறிவிக்கத் தான் அவ்வழைப்பு என்பது எனக்குத் தெரியும். இது ஒரு வகையில் என்னைப் பாதித்தது. ஆவிகளின் சாயலைப் பெற்றுவிட்ட ஒருவன் திடீரெ னத் திரும்பி வந்து நான் பார்த்திருக்கச் சாவது போன்ற பிரமை. அப்பயங்கர நோய் அவனைக் காவு கொண்டது. நினைவுகளை அலைபாய விடுகிறேன். நூலின் இப்பகுதி யில் தலைப்புக் கவிதை இடம் பெற்றிருந் தது. அப்புறம் பல்வேறு வடிவங்களும் பாங்குகளும் கொண்ட கவிதைகளின் வரிசை. இப்பகுதிகளை ஒழுங்கமைத்த போது, நண்பனின் மரணம், அவனோடு சம்பந்தப்படாத இக்கவிதைகளை ஒருங்கி ணைத்தது. சுயேட்சையான தன்னுணர்ச்சிக் கவிதைகளை நீக்கினேன். பென்சில்வேனியா விலிருந்து வாகனத்தில் புறப்படுவது தொடக்கம் நண்பனின் மரணம் வரையான பயணத்தையும் நினைவு சம்பந்தமான பாவனையையும் ஒரே நேர் கோட்டிலல் லாமல் நெகிழ்ச்சியான ததை நடையில் உருவாக்கினேன். கவிதைத் தலைப்புகளை எடுத்து விட்டு இலக்கங்களிட்டேன். அப்புறம் அதிகம் தாக்குப் பிடிக்கும் உணர்வை ஏற்படுத்தும் இடைப்பிறவர லாகக் கவிதைகள் சிலவற்றை எழுதினேன்.
இது மீளவும் என்னை மேற்குறிப்பிட்ட வரிகளுக்குக் கொணர் கிறது. ஒரு முறை 80 வயது வயோதிபர் ஒருவரின் மரணம் பற்றிப் பத்திரிகையில்
pairns: Poets.org இணையத்தளம். ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம்:
v്ഞു ہیںا
يختر
штфЈт - 19

Page 32
படித்திருந்தேன். 'அவ் பிக்" என்ற மொழியைப் பேசிய கடைசி மனிதர் அவர். இவ்வுண்மை நீண்ட காலம் நினைவை விட்டு அகலவில்லை. "ஆகா’ என்பது துருக்கிப் பெயர். எனது முன்னோர் தந்தை வழி வணிகராக ஒன்பது தலைமுறைகளுக்கு முன் மலை யைத் தாண்டி காஷ்மீர் வந்தவர்கள். பத்திரிகைச் செய்திக்கும் எனது பூர்வீகத் துக்கும் கண்டேன். நூலின் தொன்மப் பிராந்தியம் அசல் வரலாற்றுப் பிராந்திய மன்று. அரிசோனா வின் மூட நம்பிக்கையான
தொடர்பிருக்கக்
மலைகள், காரா கோர்ம் மலைத் தொடரோ ஹிந்துகுஷ் மலைகளோ அல்ல. ஆயினும் தொன்மக் கட்டமைப்புகள் உலகெங்கும் ஒத்த அம்சங்களுடன் காணப்படுவன.
60
இவ்வாறே குரல் கவிதையினுள் பேசுகிறது: ட
"நான் இம்மொழியைப் பேசும் கடைசி மனிதன்." இனி நான் அம்மனிதரைத் தென் மேற்கு அமெரிக் காவில் இருத்துகிறேன். நினைவில் நிறுத்தப்பட இக்குரலும் இம்மொழியும் நண்பனின் மரணத்தோடு வேறு பரிமாணங்களில் விரிகின்றன.
எட்வர்ட் ஷேத், "கொன்ட்ரா பண்டல்' (Contrapuntal) பற்றிப் பேசுகிறார். அதாவது 6) உடனிகழ்வுகளுடன் படிக்கின்றோம் என்ற அர்த்தத்தில். இது சாதாரண இரங்கற் பாவான, வெறுமனே ஒரு நண்பனின்
வேண்டிய
ஒன்றைப்
மரணம் மட்டுமன்று: இனக் குழுக்களின் மரணம். நிலத் தோற்றங்க ளின் மரணம். ஒரு மொழியின் தரணம். இவை யாவும் உடனிகழ்வாக ஒர் அடர்த்தியைத் தருகிறது.
- இன்னும் நிச்சயமாக, ஒரு மனிதனின் மறைவுடன் ஒரு பிரபஞ்சமே மரணிக்கிறது.
பூமியென்பதோர் எழுத்தணிச் சுருள்
"பழம் நினைவில் வாழ்பவனின் யாத்ரா - 2
அமெரிக்க வரைபடம்” என்ற தொகுதி யின் மூன்றாம் பகுதியில் உலகின் மாபெரும் காதல் காவியங்களில்ஒன்றான லைா -
மஜ்னுரன் மூலம் பாலைவனத்தின் குறியீட்டையும் தொனிப் பொருளையும்
விரிவு படுத்த விரும்பினேன். மஜ்னூனின் பித்த நிலை அதன் பரவச நிலை
காரணமாகக் கொண்டாடப் படுவது.
லைலா என்ற பெண் மீதான மஜ்னுரனின்
ஏக்கம் அவனது அர்ப்பண உணர்வைக்
காட்டுவது.
இப்பகுதியை நான் தயாரிக்கக் காரணம் விமர்சகரும் பேட்டி காண்ப வரும் பத்திரிகையாளரும் குறிப்பிட்ட வொரு ஸ்தானத்தில் வைத்தே எம்மைப் பார்க்க விரும்புகின்றனர். நீ ஆங்கிலத்தில் எழுதும் இந்தியன். எனவே இந்தியா பற்றி, காஷ்மீர் பற்றி, பாக்கிஸ்தான் பற்றி - இப்படி ஏதாவதொன்றைப் பற்றி எழுத வேண்டும். விடயம் யாதெனில், இவனொரு பிரபஞசம்: வரலாற்றுச் சக்திகளால் உருவானவன். இவனுள் ஒரு முஸ்லிம் இருக்கிறான்: ஒர் இந்து இருக்கிறான். மேலைக் கலாசாரத்தையும் அவன் உள்வாங்கி யுள்ளான். நான் மூன்று கலாச்சாரங்களிலும் - அக்கலாச்சார மாற்றங்களில் - வளர்ந்த என்னில் குடி
மாபெரும்
Լյ ւգ սյո 6Ն
கொண்டுள்ளன.
ஒரு வகையில் நான் அறபு, உருது கலாச்சாரங்களையும்
அவை
பாரசீக, சுவீகரித்துக் கொண்டவன். எனவேதான் லைலா - மஜ்னுன் பகுதியைச் சேர்த் தேன். பாலைவனம் பற்றிய கருத்தை விரிவு படுத்தவும் அதற்கு மெருகூட்ட வும். வனாந்தரத்தில் மஜ்னுரனின் தந்தை அவனுக்கு ஆறுதல் கூறும் சித்திர மொன்றை நான் பார்த்துள்ளேன். அப்பிம்பங்களும் ஜஹாங்கீரின் நினைவுக்
குறிப்புகளும் சில வடிவங்களையும்
அலங்கார மோஸ்தர்களையும் நினைவுக்குக்
ܠܰܐ

கொணர்கின்றன. வனத்தில் சிலந்திக்கும் நரகத்துக்கும் நடக்கும் போராட்ட மொன்றை அவர் குறிப்பிடுகின்றார். சிலந்தி நாகத்தின் தலையில் குந்தி தன் கால்களை ஆழப்பதித்து நாகத்தைக் கொல்கிறது. இவ்வாறாக பூமி என்பதோர் எழுத்தணிச் சுருள்.
"என் முதுகின் மீது பலதலைமுறைகளைச் சேர்ந்த மனிதர்கள்”
இவ்வரிகளைக் கொண்ட பனி மனிதர்கள்’ என்ற கவிதையை ஒர் உடனடியான புலனுணர்வு ஆதங் கத்துடன் அணுகினேன். இதன் பெண் னிய உடன்பாடுகள் பற்றிப் பின்னரே நான் உணர்ந்தேன். இரு விடயங்கள் இக்கவிதையில் மறைந்து கிடக்கின்றன. ஒன்று, வொலஸ் ஸ்டீவன்ஸின் 'பனி மனிதர்கள்’ என்ற கவிதை. இத் தொடர் பினை நீங்கள் அறிய மாட்டீர்கள். எனினும் என்னைப பொறுத்த மட்டில் இத்தொடர்பு உண்டு. மற்றொன்று, 'வூதரிங் ஹைட்ஸ்" என்ற நாவலிலிருந்து நீண்ட காலம் என்னைப் பீடித்திருந்த வொரு காட்சி. கடும் புயல், கதை சொல்லி ஹீத்கிளிஃபுடைய வீட்டில் தங்கியிருக் கிறான். கத்தரீனின் ஆவி வந்து யன்னலைத் தட்டுகிறது. "எனக்குக் குளிராயிருக்கு: உள்ளே வரவிடு’ என்கிறது. அவன் யன்னலைத் திறக்கிறான். எப்படியோ கண்ணாடி உடைந்து விடுகிறது. அவன் ஆவியின் கரத்தைப் பற்றிக் கண்ணாடியில் இரத்தம் வழிகிறது. திகிலூட்டும் காட்சி. மாந்திரீக யதார்த்த வாதம் பற்றிப் பேசுகிறோம். மக்கள் நாவல் பற்றி யோசிக்கின்றனர். அவர் களுக்கு ஒழுங்கான விடை தேவை. ஒழுங்கான விடைகள் பதே புரொண்ட்டே (Bronte) யின் துணிபு. ஆனால் உங்களுக்கு ஒழுங்கான விடை வேண்டும். நான் என் முன்னோரையும் என்
چلار
உரசுகிறான்.
கிடையாதென்
6.
முன்னோர்களில் காணாமல் கேள்விப் படாத, காணாமல் போன பெண்களையும் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். என் தந்தை பற்றி, தந்தையின் தந்தை, அவரின் தந்தை பற்றியெல்லாம் தெரியும். ஆனால் என் பாட்டிக்கு முன் இருந்தவர்கள் பற்றி எதுவும் தெரியாது. காணாமல் போன இப்பெண்களைக் கண்டு பிடிக்க முயற்சிக்கிறேன். இவை கடினமான கேள்விகள். இவற்றுக்கு ஒழுங்கான விடைகள் கிடையா. இக்கவிதையைப் படிக்கும் போது நீங்கள் பெண்ணியத்தைக் கட்டமைக்க முடியும்.
“சூரிய ஒளிக் கதிர் ஒவ்வொன்றும் ஐந்து நிமிடம் பழசு வானத்தை நோக்கும் போது கடந்த காலத்தைக் காண்கிறேன்”
நான் நியூயோர்க்கில் இருக்கும் போது என் நண்பியின் காதலனான பெல்ஜிய நாட்டு பெளதீக மாணவன் குறிப்பிட்ட உண்மை, சூரிய ஒளிக்கதிர் ஒவ்வொன்றும் ஐந்து நிமிடம் பழசு’ என்பது. ஒவ்வொரு கவிஞனும் ஒரள வுக்கு ஒட்டுண்ணியே. எப்பொழுதும் நீ செவி மடுத்துக் கொண்டும் திரட்டிக் கொண்டுமிருக் கிறாய்" என அவன் மேலும் கூறினான். இது வசீகரமானதோர் எண்ணக் கரு வாகத்
விவகாரங்களைச்
தென்பட்டது. நான் கடந்த காலத்தையே கிளறிக் கொண்டிருக்கிறேன் என்பதா நீ சொல்லும் அர்த்தம்? எனக் கேட்டேன். இதுவே 'பாலை மீது பனி' கவிதைக்கு என்னை இட்டுச் சென்றது.
இதில் பல நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. விமானத்தில் என் சகோதரியின் புறப்பாடு, அரிசோனாவின் நிலத் தோற்றம், காட்சி முதலியன. புறப்படும் போது டக்சனில் பனி பெய்கிறது. மர்மமாகவும் விசித்திர
աՈՑցՈ — 12
என்ற
காலைக்

Page 33
കൃദ
சும்மா சொல்லாப்படாது எங்களுர் கொடுத்து வைத்த ஊர் எந்த ஊரிலிருந்து இப்படி மூன்று பேர் ஒரே சமயத்தில் ஆட்சி மன்றத்திற்கு அணிவகுத்துச் சென்றிருப்பர்?
மூன்று நோன்மதிகள் அரசியல் வானத்தில் ஏக காலத்தில் தோன்றியும். வியப்பு என்னவெனில் வீதிகளில் கூட விழவில்லை Q66flédib
9606 சீதளக் கிரணமே அற்ற செய்மதிகளா அன்றி தோன்றியும் தொழிற் படாது மறைந்து போகவிருக்கும் பொய் மதிகளா?
குறைந்த பட்சம் இந்த நிலவுகளிகளின்
பார்வையொளி
பிரதான பாதையிலுள்ள
பள்ளங்களிலாவது படக் கூடாதா?
ஆறு ஆண்டுகளுக்குப் பின்னும் அரசியல் விசும்பில்
மீண்டும்
மின்னுவதற்கென்னின் பிரதான பாதையாகிலும் பிரதான பாலமாகிலும் இம்மூன்று மதிகளின் தரமான சேவைகளை நிறுத்துப் பார்க்கும் தராசுகள் ஆகக் கூடாதா?
oorlyn9 خالدخاصوصa)
штфДт — 12
69
மாகவும் வனப்புடன் தோற்றமளிக்கிறது பனி மூடிய பாலை. உயிர் ராசிகளதும் சூழலினதும் உறவு நிலை பற்றிய அக்கறை கவிதையில் காணப்படுகிறது. சகோதரி யின் புறப்பாடு: பேகம் அக்தார் என்ற பாடகியின் மரணம். டெல்லியில் பேகம் அக்தார் பாடுவதை அடிக்கடி கேட்டிருக் கிறேன். ஒரு சந்தர்ப்பத்தில் மின்சாரம் தடைப் படுகிறது. விளக்குகள் அணைகின் றன. பூரண அமைதி. ஒலி பெருக்கியும் இயக்க மற்றுப் போகிறது. அதுவொரு திறந்த வெளி நிகழ்ச்சி. இரண்டொரு நிமிடங்களுக்கு தொலைவிலிருந்து வரு கிறது குரல். அக்தார் தன் சாரீரத்தினால் புரியும் அற்புதம் அவ்வெதிரொலியில் வெளிப் படுகின்றது. நினைவில் நிற்கும் அதன் சஞ்சாரம்.
மூடுபனியூடு வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தேன். திடீரெனக் கண்களைக் கூசச் செய்யும் வெளிச்சம். நகரத்தைப் பிரித்துக் காட்டுகிறது மூடு பனி. சகோதரியைப் பயணமனுப்பி விட்டுத் திரும்புகையில் மீண்டும் அகப்பட்டுக் கொள்கிறேன் அம் மூடு பனியினுள். 'வழுவிச் செல்லும் முடுபனிக் கதவுகள்’ என்ற வரி பிறக்கின்றது. ஒப்பற்ற நிகழ்வு. கவிதையெழும் போது உவமை, உருவகம் பற்றிய விவகாரம் குறுக்கிடுகிறது. இக் கணத்தை எதனுடன் ஒப்பிடுவது? ஒப்பிட முடியாத இன்னொரு கணத்துடன் மட்டுமே இதனை ஒப்பிடலாம். இரு கணங்கள் ஒன்றோடொன்று - அல்லது இன்னொன் றுடன் - ஒப்பிடப்பட முடியாதென் பதைக் காட்ட, இரண்டும் அருகருகே சம ஸ்திதியில் வைக்கப் படுகின்றன. இச்சம ஸ்திதி ஒரு வகை மொழி மாற்றத்தை, இடமாற்றத்தை உண்டு பண்ணுகிறது. நினைவில் நின்ற
துல்லியம்ாக
பேகம் அக்தார் பற்றிய அக்கணத்தைக்
கவிதையில் அறிமுகப் படுத்த அநேக வருடங்களுக்குப் பிறகே எனக்குத் தருணம் வாய்த்தது.
kܬܵܐ

மழையினால் ஞாபகமூட்டப்படும் நகரம்.
மழை என் மீது ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அநேக ரைப் பொறுத்த வரை அப்படித்தான் என நம்புகிறேன். எனது அன்னை லக்னோ வைச் சேர்ந்தவர். நான் கவிதையொன்றில் குறிப்பிட்டுள்ளது போல் காஷ்மீரில் நான்கு பருவங்கள் உண்டு. மூன்று மாதங்கள் கார்காலம். மூன்று மாதங்கள் வசந்தம். அது போன்றே வேனில், இலையுதிர்காலங்கள். செப்டம்பர் முதல் நாள் காற்றின் நுள்ளலை அனுபவிக்க முடியும். மாற்றத்தின் அம்சங்களை - அதாவது இலையுதிர் காலத்தின் வருகையைக் கண்ணுறலாம். மழைக் காலத்தைச் சுற்றிச் சுழலும் சாஸ்திரீய இசை ராகங்கள் பலவற்றைக் கேட்டிருக் கிறேன். இவ்விராகங்களை நான் கேட்கும் போது என் அன்னை மழைக் காலம் பற்றி, அவற்றின் மனோரதியம் பற்றிப் பேசத் தொடங் குவார். அவற்றை நானறிந்து கொள்வதற்கு வழியிருக்க வில்லை. மழை அப்படிப் பட்ட ஆக்கபூர்வமான அம்சம். மழை சூழலைக் குளிர்விக்க வேண்டுமென்பது மக்களின் அவா. மழைக் காலத்தில் காதலரால் தாங்க முடியாதது பிரிவுத் துயரம். அத்துடன் நம்ப முடியாத இவ்விசை. மழைக் காலத்துடன் சம்பந்தப் பட்ட இவ்வி ராகங்கள்.
காஷ்மீரில் மழையுண்டு. சில வேளை வெள்ளப் பெருக்கும் உண்டு. எனினும் டெல்லியில் மழை உண்டு பண்ணும் உணர்வு இங்கில்லை. ஜூலை மாதம் வேனிலின் போது நான் முதன் முறையாக டெல்லி சென்றிருந்த போது இம்மழையைக் கண்டேன். மனோரதியக் கனவுகளைத் தூண்டிவிடும் பருவம். காதலர்கள் கரங்களின் அணைப்பில் இருக்கத் துடிப்பது ஏனெனப் புரியும்.
پلاہ
அப்புறம் நான் அரிசோனா சென்றதும் இவ் வெள்ளப் பெருக்கு. அங்கு வாரக் கணக்கில் மழை. இது வழக்கத்துக்கு மாறானது. அவர்கள் பருவப் பெயர்ச்சி மழை என்கின்றனர். இச்சமயம் சில மரணங்கள் சம்பவிக்கின்றன. இந்நூற் தொகுதியை நான் ஒன்று திரட்டும் போது மூன்று பெண்களின் படிமம் என்னிட மிருந்தது. மூன்று பெண்களின் இவ்வோ
வியம் யாரோ எனக்குத் தந்தது.
மூன்று பெண்கள் - மூன்று சகோதரிகள் - பற்றிய கருத்து பல்வேறு தொன்மங்களின் மையக் கருத்தாகும். ஹிந்து புராணங்களில் இது காணப் படாதது விசித்திரமே. கிரேக்க, ஸ்கண்னேவியத் தொன்மங்களில் இதைக் காணலாம். செக்கோவிடமும் ஷேக்ஸ் பியரிடமும் காணலாம்.
திரித்துவம் பற்றிய எண்ணக் கரு பல்வேறு கலாசாரங்களில் காணப் படுவன. ருஷ்தியின் ‘வெட்கம்'(shame) என்ற கதையில் இது உண்டு. அவர் இதனை மேலை நாட்டுத் தொன்மங் களிலிருந்து இரவல் வாங்கி இந்திய மயப்படுத்துகிறார். மூன்று சகோதரி களிடம் அவர்களின் வளர்ப்புக் குழந்தை “எனது அப்பா யார்?" எனக் கேட்கும் போது அவர்கள் குரங்குகளாக உருமாறுகின்றனர். தீயதைப் பார்க் காதே, தீயதைப் பேசாதே, தீயதைக் கேட்காதே - அற்புதமான் வேடிக்கை. தனிப்பட்ட முறையில் மழை எனக்குப் பல நினைவுகளைக் கொணர்வது - எனக்கிருந்த சில காதல் உணர்வுகளை. கலாசார, தொன்மவியல், மனிதவியல் ரீதியாக, உயிர் ராசிகளினதும் சூழலினதும் உறவு நிலை ரீதியாக மழை முக்கியமானது. மழை நகரை மீளவும் ஞாபகமூட்டுகிறது. நினைக்கத் தக்க தாக்குகின்றது. இம்முன்று பெண்களும் நினைவைப் பாதுகாப் பவர்கள்.
யாத்ரா - 2

Page 34
2>Aმეო?rê δ, οήη وفانه)ده
കരിവെക്/
இது வரை காலமும் முஸ்லிம் சமூகத்தில் இருந்து வெளிவந்த பாடல்கள் அநேக மாகவும் பக்திப் பாடல்களாகவே இருந் துள்ளன. இந்தத் தளத்திலிருந்து முஸ்லிம் பாடல்கள் என்ற தளத்துக்கு பாடல்
களைக் கொண்டு வந்துள்ளனர் மூன்று
இளைஞர்கள். இலங்கையில் இடம் பெற்று வரும் இனப்பிரச்சனையின் கோரங்களால் சிதைவுண்ட ஒரு சிறுபான் மைச் சமூகத்தின் துயரம் மிகு வாழ்விய லை எடுத்தோதும் பாடல்கள் இவை.
றஹ்மான் ஹஸன், அஹ்ஸன் ஆரிஃப், மஸாஹிர் மஸ்தூக் ஆகிய மூவரும் முதன் முதலாக இன்றைய சமூகத்தின் நிதர்சன நிலையைக் காட்டும் பாடல்களைக் கொண்ட சி.டி, மற்றும் ஒலி நாடாவை காற்றுச் சுமந்து வரும் கனவுகள்’ எனும் பெயரில் வெளிக் கொணர்ந்துள்ளனர்.
பஹிமா ஜஹான், ஏ.பி.எம். இத்ரீஸ், அஹ்ஸன் ஆரிப், மஜீத் எம். நாசிக், றஹ்மான் ஹஸன் ஆகியோர் எழுதிய எட்டுப் பாடல்களை முனிப், நியாஸ், வசீம் அக்ரம், அஹ்ஸன் ஆரிப், முகம்மத் ரிஷாத், இன்சாப் சலாஹ"தீன், மஸாஹிர் ஆகியோர் பாடியுள்ளனர். திறன் மிகுந்த புதியதலைமுறைப் பாடகர்கள் வெளிவந் திருக்கிறார்கள். ஆனால் தமிழ் உச்சரிப்பு க்களில் ஆங்காங்கே பிசகு தெரிகிறது. ஆனால் இது முதல் முயற்சி என்பதை நாம்
மனதிருத்த வேண்டும். மிக அழகிய வடிவமைப்பில் வெளி வந் தி ரு க் கு ம் இப்பாடளை உள்ளடக்கிய சி.டி, மற்றும் ஒலிநாடா, இதன் பின்னணியில் கடுமை யான உழைப்பு இருப்பதைக்
6C
" கலைப் பசிக்குத்தீனி போடும் Ø(Cර්ණී.ඊජර්ථC(නිව් ෆ්‍රරෙදිරි) உள்braர்ந்த உர்ைவுக6ை(புல் නූ ගීත උපද්‍යුරි රිසිංදුරේණිOරෝපීරරුනර(r(Cගී> இந்தக் &aற்று சுoஞ்3 உத்3 p_28నరr &రctకaర6fP6b sపోcebgb.
රිසිතුර) ෆිල්ර ජීරණීතං ඡී? (Céරර්”නී.” නxCláෆිර්u. 6ంaంబ్లీజ్శ' జంజనంPతb శ్రారీలbb eరీలCt?. ఈజిaంట్లకి 6856egజీశ్రాణిక නිරිද්otෙව්දාගඊරවල්නගීත ර(රහ්ජිරන්r ෙ{ග\තීරණී
රැන්දාහී ”
காட்டி நிற்கிறது. இது ஒரு புதிய ஆரம்பம். இதனைத் தொடர்ந்து இன்னும் பல பாடல்கள் பிறப்பதற்கும் சமூகத்தின் பல்வேறு கோணங்கள் பற்றிய பார்வைகள் வெளிப்படுவதற்கும் வழி காட்டியிருக்கும் - பாராட்டவும் போற்ற வும் தகுந்த முயற்சி இது.
நிச்சயமாக இந்த முயற்சி இன்னும் பலரை செயல்படத் தூண்டக் கூடியது. அப்படியொரு முயற்சியை மேற் கொள்ள
முனையும் இளைய தலைமுறையினர்
அனுபவம் கொண்ட ஒரு சிலரிடமாவது ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது சிறப்பாகும். O
ܠܰܐ
 
 

685
93tuna.
எப்படிப் புதைத்தாலும் பிணங்கள் முளைப்பதில்லை!
டுரிஞ்சி இந்திதஞ்றR
محم۔
elsiots...
ஒரு கோடி ரூபாயை பத்து ரூபாய்க்கு விற்றுப் போனான் லாட்டரிப் பையன்!
\9ት فحاخاوح
12 - யாத்ரா حمي لار

Page 35
66. Nizar Qabbani 5 6735u?gër gjatja) i Durrat தமிழாக்கம், இணையத் தளக் கட்டுரையைத் தழுவிய "அவர்கள் கவிஞர்களுக்குப் பயப்படுகிறார்கள்”- இரண்டும்
'யாத்ரா 11வது இதழின் கனதியை அதிகரித்துள்ளது.
யமுனா ராஜேந்திரன் மொழிபெயர்த்த தஸ்லிமா றஸ்ரினின் நடத்தை , முல்லாவின் தாகம் , அமரின் பூட்டுக்களை விற்பவன்', ஏ.எம்.எம்.நளின் "எங்களது தேசப் பிரகடனும் எனது இருப்பும் , யாழவ ளின் நெருப்பெனக் கொதிக்கும் மனசு , பவரின் கரை மீன்கள்' - யாவுமே அதிர்வுகளை உண்டு பண்ணும் கவிதைகள். முல்லை முஸ்ரிபாவின் "ஹயாத்தும்மா', கனமூலை பாரிஸின் 'இஹ்ராம் தரித்த ஹாஜியும் கபனிடப்பட்ட கிராமமும் - எனக்குப் பிடித்த கவிதை கள். முல்லாவும் அமரும் சேர்ந்து ஜின்னாஹ் ஷரிபுத் தீனின் பன்முக ஆளுமை யைக் காட்டும்
முழுண்ம யான சித்திரத்தை வழங்கி யிருக்கிறார்கள்.
ஆகா ஷஹீத் அலியின் கவிதையில் - 'கவிஞர் கற்பித்தாரென. என்றே மொழிபெயர்த்ததாக ஞாபகம், கல்வி கற்பித்தாரென. என்று அச்சாகி யுள்ளது. 'உப்புத் தூன்" என கடைசி வரிக்கு முந்திய வரி அச்சாகியுள்ளது. அச்சுப் பிசாசு என்று சமாதானம ட்ையலாம். இது போன்றவற்றைத் தேர்ந்த வாசகன் திருத்தியே வாசிப்பான். எனினும் துரன்’ என்பது தூண்' தானா அல்லது தூள்' என்பதா போன்ற மயக்கம்
స్ట్రే 鬍 நேரலாம். 李エ 'யாத்ரா கவிதைப் போட்டி - 2002 சில வேை குறிப்புகள் ‘யாத்ரா'வின்
எதிர்பார்ப்பையும் உன்னத நோக்கையும் பறை சாற்றுவதாக உள்ளது. பாதங்களில் இடறும் முற்ற வெளி', 'கதவுகள், பூட்டுகள், சாவிகள்' - தலைப்புகளே அவற்றைப் படிக்கும் ஆவலைத் தூண்டி விட்டுள்ளன.
பண்ணாமத்துக் கவிராயர்
மாத்தளை.
'யாத்ரா 11, கிடைத்தது. நல்ல கனமுடைய கவிதைகளும் இலக்கியத் தகவல்களும் கிண்டல்களும் நிறைந்திருந்தன. சஞ்சிகைகள் அப்படியிருப்பது பல்திறப்பட்ட வாசகர்களை அணுக வசதியளிக்கும். தேசியவாதிகள், தனித் தனித் தாயகத்தார், இடையில் இடர்படும் இனங்கள் யாவரும் சமாதானப் பாடலைப் படிக்கும் இக்காலம் ஆளையாள் இனத் துவேசிகள் என ஆர்ப்பளிப்பதை ஊடகங்கள் உரத்துக் கூறுகின்றன. இலக்கியத்தினூடே உயர் கவிதை மூலம் கனமாக 'யாத்ரா" குரல் ஒலிப்பது மன ஆறுதலைத் தருகிறது.
ஜின்னாஹ் ஷரிபுத்தீன் நல்லதொரு நீண்ட கட்டுரை. இலக்கிய ஆய்வாகவோ பிரமிக்கத் தக்க யாதரா - 2
செயற்பாடாகவோ கணக் கெடுக்க முடியாவிட்டாலும் வர லாற்றில் நீச்சல் போட்டிருக்கிறார். துக்கமான : விஷயம்; மரபுக் கவிதை வீழ்ச்சியை
அவர் ஏற்றுக் கொண்ட மை. கவிதை மரபாகக் காலத் தோடு நீள்கிறது. மரபுக் கவிதை தமிழ் வாழும் காலம்! வரை வீழ்ச்சியடையாது. பழமையின் நீரோட்டத்தை இலக்கிய மரபு ஏற்கா விட்டால், இடையிடை அறுந்து எல்லாமே இல்லாமல் போய்விடும்.
எத்தனை நவீன சாதனங்கள் எழுந்தாலும் அச் சாதனங்கள் மரபு ரீதியாக இலக் கியங்களைப்
பாதுகாக்கும். புதுப் புதுச் சாதனங்கள். இலக்கியத்தைக் காப்பாற்றுமே தவிர, அழித்து விடாது.
ஏ.இக்பால்
தர்ஹா நகர்.
இலக்கிய நிகழ்வாகட்டும் அல்லது பிற நிகழ்வாகட்டும் - பொதுவாக எல்லா நிகழ்வுகளின் பின்னும் விமர்சனம் என்ற பெயரில் ஒர் அதிரடித் தாக்குதல் நேர்முக மாகவும் மறைமுகமாகவும் இருந் தே வருகிறது. அழைப்பிதழ் கொடு க்கப்படவில்லை என்பதிலிருந்து முன்வரிசையில், மேடையில் ஆசனம் கிடைக்கவில்லை அல்லது நன்றியுரையில் தங்கள் பெயர் தனியாகவே குறிப்பிடப்படவில்லை என்று ஆதங்கப்படுவோர் வரை இவர்களது பட்டியல் நீளு கிறது. உலக இஸ்லா மிய தமிழ் இலக்கிய
மாநாட்டிற்காக வெள் ளை மனதோடு உழைத்தவர்கள் சிந்திய வியர்வையையும் இழந்த
தூக்கத்தையும் பட்ட அவஸ்தை களையும் நாமறிவோம். உலகறியும். அதன் பின்னதான பெரும்பாலான விமர்சனங்கள் ஆரோக்கியமானவை அல்ல. தங்களுக்கு ஏதும் கிடைக்க வில்லை என்பதின் தனிப் புலம்பல் கள். அவ்வளவுதான். விட்டுவிட அவற்றை யெல்லாம் பெரிதாகப் பொருட்
ܓܰܪܬܳܐ
வேண்டியதும்தான்.
 

படுத்தாமல் இலட்சிய நோக்கு டனான இலக்கியப் பயணத்தை 'யாத்ரா' முன்ன்ெடுத்துச் செல்ல
வேண்டும். கெளரவம் கிடைக்க
வில்லை ஆதங்கத்தில் பே சு. வோ  ைர  ெய ல் ல |ாம் கிண்டலடித்துக் கொண்டிருப்பது 'யாத்ரா' வின் வேலையல்ல. அதற்கென்று வேறு பத்திரிகை, சஞ்சிகைகள் இருக்கின்றன. இன்றைய கவிதை இலக்கியச் சூழலில் ‘யாத்ரா" முன்னே காத்திருக்கின்ற கவிதை இலக் கியப் பணி மிகப் பெரியது.
என்ற
வெளிமடை ரபீக் எல்லபிட்டவத்த
.அதுவும் தமிழகத்துக்கு முதலிடம் கொடுத்தது கண்டு மிகவும் ஆச்சரியப் படுகி றேன். இதன் மூலம் படைப்பு களுக்கு 'யாத்ரா அளிக்கும் மரியா தையை உணர்கிறேன்.
எனக்கு இலங்கை வாழ் நண்பர்களோடு இலக்கிய உரை யாடல்கள் நடத்த மிகுந்த ஆவல்.
இதழ்கள் 10, 11 மிகவும்
worthful படைப்புகளைத் தாங்கி வந்துள்ளது. அதுவும் 11ன் அட்டை ப்படம் என் மனதை உலுக்கியது. தங்கள் 'யாத்ரா' மிக அருமையான லே - அவுட் கொண்டு, கண்களை உறுத்தாமல் நிறையக் கவிச் செய்தி களோடு இருக்கிறது. வாழ்த்துக்கள். விரைவில் கவிதை குறித்த எனது கட்டுரையை உங்களுக்கு அனுப்புவேன். ரா.ரஜினி புதுவை - இந்தியா
ஒரு ஜோடி வைரத் தோடுகளைக் காணப் பெற்றது போல தங்களின் ‘யாத்ரா' இரு இதழ்கள் கண்ணுற்றுக் களிப்புற் றேன். நான் காதணியான தோடு 'டன், 'யாத்ரா' வைக் குறிப்பிட்ட தற்குக் காரணம், நகை வேலைப் பாட்டுடன் ஒப்பந்தக் கூர்மையும்
67 சீர்மையும் கொண்டு தாங்கள் எழுதுகோல் உளிகளால் எழில் நகை (படைப்புகள்) செய்துள்ள நேர்த்தியைக் கண்ட நெஞ்சு வப்பே. ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களைப் பற்றிய கட்டுரை, ஜின்னாஹ்வை நிலைக் கண்ணாடி முன் நிறுத்தியது போன்று முழுமையாகத் தரிசிக்க உதவியது. யாத்ரா எனுங் கவிதை ஏட்டை விழியகத்தில் பார்த்திரார் வாழ்வின் பயன்நுகரார் - பூத்திராக் காவியப் பூக்களைக் கட்டவிழ்க்கும் இவ்விதழ்நல் ஓவியத்திற் கூட்டும் உயிர்
தத்துவக் கவிஞர் இ.பதுருத்தீன்
தொண்டியார் பேட்டை, சென்னை
கவிதைகளுக்கான இதழ் எனத் தன்னை அடையாளப் படுத்திய வெளிவந்து கொண்டிருக்கிறது ‘யாத்ரா', சமீபத் தில் 11வது ‘யாத்ரா" வெளியிடப் பட்டுள்ளது. நேரடியாக எழுத்தாளர் களிடமிருந்தும் இணையத் தளங்
வண்ணம்
களிலிருந்தும் மொழிபெயர்ப்புகள் வாயிலாகவும் பெறப்பட்ட கவிதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. இவை பல்வேறு வகைப் பரிமாணங்களில் மிளிர்கின்றன.
தாகம்’ பொருள் மிக ஆழமானது. ஆயினும் சற்று உற்று நோக்கின் விரக்தி இழையோடு வதைக் காண முடிகிறது. இதே ரகத்தைச் சார்ந்தவை யாகவே 'கரை மீன்கள், நியாயங்கள்' இணையத் தளத்திலிருந்து பெற்றுக் கொண்ட "மெய்ம்மை" மற்றும் இஹ்ராம் தரித்த
கவிதையின்
எதிரொலி
ஹாஜியும் கபனிடப்பட்ட கிராமமும், "காவு கொள்ளப்படும் கெளரவங்கள்' போன்ற கவிதைகள் காணப்படுகின்றன. மானுட நேசிப்பின் வெளிப்பாட்டினை'ஹயாத்தும்மா” கவிதை குறிப்பிடு கிறது. கட்டுரை வடிவில், கவிதை நடையில் அமைக்கப் பட்ட ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களது வாழ்வின் பலதரப்பட்ட விடயங் களை எழுத்துக்கள் ஊடாகத் தரிசிக்க முடிகின்றது. இது வரை காலமும் காப்பியங் களுக்குத்தான் உரை எழுதப்பட்டு வந்துள்ளது. உரை நடையைக் காப்பியப் படுத்திய முதல்வராக தமிழ் இலக்கிய வரலாற்றில் தடம் பதித்திருக்கும் ஜின்னாஹ் வின் பெருமைகள் பற்றிப் போலிகள் எதுவுமின்றிப் பிரசுரிக்கப் பட்டுள்ள பக்கங்கள் இரண்டு கவிதைகளை எழுதி கவிஞன்(?). எனக் கூறுவோரினதும் சுயபுத்தியின்றி பிறரது படைப்புகளுக்கு சொந்தங் கொண்டாடுவோரதும் 'ஈனத் தனம்' நகைச் சுவைப் பேட்டி ஒன்றினூடாக நக்கலாகக் கூறப்படுகிறது. நகைக் சுவையை
பாதுகாத்து வைக்கப்பட வேண்டியவை.
யாத்ரா - 2

Page 36
ரசிக்கலாம். ஆனால் காத்திரம் மிக்க கவிதை இதழுக்கு இது அவசியமா?
அனோஜா V தினக்குரல் (19.10.2003)
இலங்கைத் தமிழ்க் கவிதைப் பரப்பில் உரத்துப் பேசப்படும் பெயராக 'யாத்ரா பரிணமித்துள்ளது. .யாத்ராவின் 11வது இதழ் அண்மையில் வெளிவந்துள்ளது. - வழமையைப் போலவே இவ்விதழிலும் காத்திரமான கவிதைகள் பலவற்றைக் காண முடியும். நிஸார் கப்பானியின் மொழி பெயர்ப்புக் கவிதையான 'பின்னடைவுப் புத்தகத்திற்கான நாட் குறிப்புகள்'இஸ்லாமிய உலகின் நடை முறை அவலத்தின் குரலாக ஒலிக்கிறது. தவிர, சி.சிவசேகரம், இப்னு அஸஅமத் ஆகியோரின் மொழி பெயர்ப்புக் கவிதைகள் யாத்ராவின் இன்னொரு பரிமாணம்.
3FITLDrrgëtuair எங்கள் தேசம் (ஒக் - நவம் 2003)
வெளிப்படுத்துகிறது என்பதை ஒரு வைத்து விடுவோம். "
சிஹாப்தீனுக்கு ஒரு ாஜ வேண்டுகோள்: இதுவரை யாத்ராவி வெளியான சிறந்த உள்நாட்டு, வெளிநாட்
கவிதைகளைத் தொகுத்து ஒரு கவிதை நூல வெளியிடுவதற்கான ஒரு (செலவு மிகுந்
முயற்சியை அவர் மேற்கொள்ள வேண்டும் என்பதே இச் சின்ன வேண்டுகோள். இது ஈழத்து கவிதைத் துறையில் ஒரு மைல்கல்லாக் மட்டுமன்றி கன்னா பின்னா கவிஞர்களு புனித நூல் ஆகவும் அமையும், :, சரி, 11வது யாத்ரா இதழ் எப்
சத்ய &: 婆、楼 భభ్య தினகரன் 28.09.2003 (வாரமலர்)
என்.ஏ. தீரனின் வாலைவாருதி பற்றிய அந்தக் கொஞ்சக் கற்பனையும் நிறைய உண்மையும் கலந்த - இலக்கே இல்லாத அந்த இலக்கிய வாதியின் நேர் காணல் சிரிக்க, சிந்திக்க வைக்கிறது. இவ்வாறான அம்சங்களை 'யாத்ரா" ஏன் தெரிவு செய்கிறது? ஏனெனில் தம்பட்டம் அடிப்பவர்கள் திருந்தியதாக வரலாறே இல்லை, காலாகாலமாக அவர் களைப் பற்றி கிண்டலும் கேலியும் நிறைந்த ஆக்கங்கள் வெளியாகினாலும் அவர்கள் சொரணை இல்லாதவர்களாகவே காணப்படுகின்றார்கள். இதற்காக “யாத்ரா தனது
ܠܰܐ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெறுமதியான ஐந்து பக்கங்களை இழக்க வேண்டுமா? கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள் பற்றிய தகவல்கள், அனுபவங்கள் இளைய தலைமுறையிளருக்குப் பயனளிக்கக்
கூடியவை.
நாச்சியாதீவு பர்வீன்
பாரதி நம் தாய் மொழிக் கவிஞன். நவீன கவிதையின் சாரதி. அந்த முதுசம் இயல் பாகவே கிடைத்தது. ஆனால் இக்பாலும் ஃபைஸும் நஸ்ருலும் பிறமொழிக் கவிஞர்கள். அவர்களின் படைப்புக்கள் தமிழ் மொழியில் கோண்டு வரப்படல் வேண்டும். கொண்டு வரப்பட்ட படைப்புகளை அறிமுகப்படுத்தவும் வேண்டும். 'யாத்ரா'அதற்குப் பாலமாக அமையலாம். அவர்களின் கவிதை களைப் படிப்பதன் மூலம் நமது முஸ்லிம் கவிஞர்களின் பார்வை விரிவடை யும். உருது மூலத்திலிருந்து மகாகவி இக்பாலைப் பற்றிய கட்டுரையைத் தந்த ஹஸனுக்கு நன்றி. அவரது நல்ல சுகத்துக்கும் நீடித்த ஆயுளுக்கும் வாழ்த்துக்கள்.
வரலாற்று நாவல் என்பது ஒரு குடம் தண்ணீருக்குள் ஒரு போத்தல் பாலை ஊற்றிக் காய்ச்சுகிற வேலையாகவே தமிழில் அறிமுக மாகியது. அதை செய்யுள் நெருப்பில் போட்டு இறுகக் காய்ச்சி உறை போட்டாலும் கட்டித் தயிராக மாட்டாது. தயிர் என்ற பெயரில் அதைப் பந்திக்குப் பரிமாற முடியாது. செய்யுள் சிறைக்குள் ஜின்னாஹ் சிறைப் பிடித்திருக்கும் "வரலாற்று நாவல் அவரின் சொந்தப் படைப்பல்ல. தழுவல்! செய்யுள் வடிவம். காலத்தை அனுசரித்து வசனத்துக்கு மாறியது. அந்த வசனத்தை மீண்டும் செய்யுளாக்க வேண்டிய அவசியம் என்ன? தமிழில் இது புது முயற்சி என்றால் எந்தப் புது முயற்சிக்கும் ஒர் அர்த்தமும் அவசியமும் இருக்க வேண்டாமா? எவ்வாறாயினும் ஜின்னாஹ்வைப் பற்றிய அறிமுகமும் அவரின் தயாரிப்புகள் பற்றிய மதிப்பீடும் அவசிய மானதுதான். அவருக்கு 'யாத்ரா கட்டியிருக் கும் தலைப்பாகை" கம்பீரமாகவே இருக்கிறது. அந்த கம்பீரத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அவரிடமிருந்து சுயமான காவியங்கள் பிறக்க வேண்டும்.
வீரம் மிக்க சிரியக் கவிஞரான நிஸார் கப்பானியின் "பின்னடைவுப் புத்தகத்திற்கான அடிக்குறிப்பை அறபு மூலத்திலிருந்து ஆங்கிலத்தினூடாகத் தந்த மணிக்கு மனதாரப் பாராட்டுக்கள். உயிர்த்துடிப்புள்ள மொழி
لیہ
69
குரல் எழுப்புகிறார் கள்.
பெயர்ப்பு. அறபுலகத்தின் அமெரிக்க பாதம் தாங்கிகளுக்கு தயவு தாட்சண்யம் காட்டாத 'அக்கினிக் கவிதை'களை எழுதக் கூடிய ஆயிரமாயிரம் நிஸார் கப்பானிகள் இன்னும் பிறக்க வேண்டும்.
தஸ்லிமா நஸ்ரினின் நடத்தையை கேள்விக் குறியாக்கிய சமூகம் பதிலையே காணாமல் விமரிசனத்தை மாத்திரம் முன் வைத்த பகைப் புலனில் அவரின் நடத்தை கவிதைக்கு என்ன சொல்வார்ளோ? பிரச்சினைக்குரிய தஸ்லி மாவின் படைப்புக்களை ஒரு தரம் முழுமை யாகப் படிக் வேணும் போலிருக்கிறது. யமுனா ராஜேந்திரனுக்கு நன்றி.
இணைய தளக் கட்டுரையைத் தழுவி அபூ அயாஸ் எழுதிய அவர்கள் கவிஞர்களுக்குப் பயப்படுகிறார்கள்’ கட்டுரையின் வெட்டுமுகத் தோற்றம் கவிஞர்களின் மனச் சாட்சியை மட்டுமல்ல, உலகத்தின் மனச் சாட்சியையும் பிரதிபலிக்கிறது! அமெரிக்கக் கவிஞர்கள் மட்டுமல்ல, உலகத்தின் எந்த நாட்டு, எந்த மொழிக் கவிஞரானாலும் அநீதிக்கும் அடக்கு முறைக்கும் எதிராகவே கவிஞர்கள் அரசியலைப் பேசக் கூடாது என்று வெள்ளை மாளிகைக்குள்ளிருந்து கேட்கும் குரலுக்கு அங்கிருந்துதான் பேசுவோம்’ என்று பதிற் குரலும் கேட்கிறது. மருதூர்க் கனி தெஹிவளை
இலக்கியத் தரம் மிக்கதாய் எத்த னையோ சஞ்சிகைகள் வந்த வேகத்தில் கால நெருக்கடிக்குள் காணாமல் போன போதும் 'மல்லிகை', 'யாத்ரா'ஆகியன தாக்குப் பிடித்து நிற்பது கண்டு மகிழ்ச்சி. இவை தேச எல்லை கள் தாண்டியும் வாசிக்கப்படுகின்றன என்ப தில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
நானும் நீங்களும் பட்டிருக்கிறோம் என்பது உண்மை. இருபது வருடங்களுக்கு மேலான நமது வாழ்க்கை அதற்கு சாட்சி. அதற்காக அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிராமல் புதிய விடயங்கள் நமது கவிஞர்களின் பாடு பொருளாக வேண்டும் எனது ஆசை. அதுவே அடுத்த தலைமுறைக்கு நாம் எடுத்துக் கொடுக்கும் அடியெடுப்பாக அமையும். ரோஷான் ஏ. ஜிஃப்ரி
தோஹா - கட்டார்
காயப்
யாத்ரா - 12

Page 37
7Ο
கடைசிப் பக்கத்துக்கு முன் பக்கங்கள்
யாத்ரா - 2
'யாத்ரா கவிதைப் போட்டிப் பரிசளிப்பு விழாச் சிறப்பு மலராக இந்த இதழ் வெளிவருகிறது. அதன் நிமித்தம் மேலும் எட்டுப் பக்கங்களை இவ்விதழ் கொண்டிருக்கிறது. இந்த வருடத்தில் வெளியான இரண்டாவது இதழ் இது. அடுத்த வருடம் மூன்று இதழ்களைக் கொண்டு வர முடிந்து விட்டால் அது பெரு வெற்றியாக அமையும் என்று எண்ணத் தோன்றுகிறது. நம்மிடமிருந்து காத்திரமான படைப்புக்கள்
வெளிப்படாமையும் அதிகரித்து வரும் அச்சுச் செலவு மற்றும் தபால்
செலவுகளும் கூட நம்மைப் பின்னோக்கி இழுக்கின்றன. இறைவன்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்!
பன்னிரண்டாவது இதழ் குறித்து நமது பத்திரிகைகள் பலவும் விமர்சனக் குறிப்புக்களை வெளியிட்டிருந்தன. இந்த இதழ் தயாரித்துக் கொண்டிருக்கும் போது வெளிவந்த குறிப்புக்களை எதிரொலி'யில் சேர்த்துள்ளோம். குறிப்புக்களை வெளியிட்ட அனைத்துப் பத்திரிகைகளுக்கும் அவற்றை எழுதியோருக்கும் நாம் நன்றி சொல்லக்
கடப்பாடுடையோம். A
தினகரன் வாரமலரில் நண்பர் சத்யா எழுதிய குறிப்பு அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்களது கவனத்தில் வந்து இது வரை வெளிவந்த 'யாத்ரா கவிதைகளை நூலாக்கித் தருவதாகப் பொது மேடையிலேயே வாக்களித்தது மாத்திரமன்றி நமக்கும் கடிதம் மூலமும் அறிவித்திருந்தமை நமது ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளதோடு புது உத்வேகத்தையும் தந்துள்ளது. நண்பர் சத்யா எழுதியிருந்த குறிப்பு இவ்விதழின் எதிரொலியில் தனித்துப் பிரசுரமாகியுள்ளது. தினகரன் பத்திரிகைக்கும் நண்பர் சத்யாவுக்கும் ‘யாத்ரா வின் மனப்பூர்வ நன்றிகள்.
விமர்சனங்களுக்கெல்லாம் அப்பால் - அமைச்சர்களும் நமது இலக்கியச் சிற்றேட்டின் ஒத்தாசையுள்ள வாசகர்களாக இருக்கிறார்கள் என்பதில் நமக்குப் பெருமைதான். அமைச்சர் அஸ்வர் அவர்கள் தன்னளவில் ஒரு கலைஞராக இருப்பதால் கலைஞர்களின் நாடியோட்டத்தைப் புரிந்து செயற்படுவதில் வல்லவராகவும் இருக்கிறார். கடந்த காலங்களில் அவரது செற்பாடுகள் அதனை நிரூபித்துள்ளன. அவரது உதவியோடு அக் கவிதைத் தொகுப்பு வெளிவரும் என்று எதிர்பார்த்திருங்கள். அமைச்சர் அவர்களது கடிதம் படித்த பிறகுதான் இந்தக் குறிப்பை நீங்கள் படிக்கிறீர்கள். அவசரப்பட்டு இந்தப் பக்கத்தைப் படிப்பவர்கள் இவ்விதழின் இரண்டாம்
*s、
பக்கத்துக்கு உடனடியாகச் செல்லுங்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

7
Guntட்டியில் பரிசுக்கும் பாராட்டுக்குமெனத் தெரிவான கவிதைகளில் முதல் ஐந்து கவிதைகளும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. அடுத்த ஐந்து கவிதைகளும் அடுத்த இதழில் வெளிவரும். ஏனையவற்றில் பிரசுரத்
துக்குகந்த கவிதைகளைத் தெரிந்து பின்னர் வரும் இதழ்களில்
தரவுள்ளோம்.
கவிதை நூல்களை அறிமுகம் செய்ய விரும்புவோர் ஒரு பிரதியை அனுப்பி வைக்கலாம். நூல் குறித்த விமர்சனம் இடம்பெற வேண்டும் என்று விரும்புவோர் தயவு செய்து இரண்டு பிரதிகளை அனுப்பக் கோருகிறோம். அப்படி அனுப்பும் நண்பர்கள் விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் உள்ளவர்களாக இருப்பது மிக முக்கியம். பல இலக்கிய நண்பர்கள் சிறுகதைத் தொகுதிகளையும் நாவல்களையும் ஏனைய நூல்களையும் அனுப்பி விமர்சிக்குமாறு கோருகின்றனர். கவிதை நூல்களை மாத்திரமே அறிமுகத்துக்கும் விமர்சனத்துக்கும் நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்கிறோம்.
எதிர் வரும் இதழ்களில் சிங்களக் கவிதைகள் குறித்து சற்றுக் கவனங் கொள்ள வேண்டும் என்று எண்ணியுள்ளோம். நல்ல சிங்கள மொழிக் கவிதைகளைப் படிப்போரும் அவை குறித்த அவதானமுள்ளோரும் அவற்றை எமக்கு அனுப்பியுதவுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறோம்.
எழுபதுகளுக்குப் பிற்பாடு இலக்கிய உலகுக்கு வந்த பல கவிஞர்கள் பற்றிய தகவல்களோ குறிப்புகளோ பத்திரிகை, சஞ்சிகைகளில் வருவது மிகவும் அரிது. பல வேளைகளில் அரச சேவையில் போல சேவை மூப்பு அடிப்படையிலேயே இலக்கியத் திறனும் கணிக்கப்பட்டு வருவாதால் இவர்கள் தவிர்க்கப்பட்டே வருகின்றனர். எனவே இவ்விதழிலிருந்து அவர்கள் பற்றிய சிறிய அளவிலான ஒர் அறிமுகக் குறிப்பைத் தருவது என்று தீர்மானித்து மூவரைப் பற்றிய தகவல்கள் இடம் பெறச் செய்துள்ளோம். இது தொடரும்.
இணையத்திலிருந்து பெறப்பட்டு மொழிமாற்றஞ் செய்யப்பட்ட பல ஆக்கங்களை இவ்விதழில் நீங்கள் காணலாம். இணையத்தில் கவிதை பற்றி இறைந்து கிடக்கிறது. கவிதையும்தான். கவிஞர்கள் வரிசையில் நிற்கிறார்கள். அவற்றையும் அவர்களையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம் எனக் கருதியே இடம் பெறச் செய்துள்ளோம். அதே வேளை நமது ஆக்கங்கள் வருமிடத்து அவற்றுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
கடைசிப் பக்கத்துக்கு முன் பக்கங்கள்
யாத்ரா - 2

Page 38
ܓܠ
/2
கடைசிப் பக்கம்
உயிரோடு உள்ளவரை உங்கள் முதுகில் குத்தினார்கள் இன்று நாலாயிரத்து ஐநூற்று எண்பத்தைந்து தபாலகங்களில்
உங்கள்
முகத்தில் குத்துகிறார்கள்
リ
/ー
ܚܪ
up6ör ell'60DL 6Qug6l6ODLDÜL: E3.6TLb.6TLb. Lunarflesio
ISSN 1391 - 8907
நண்பர் இலக்கியக் குழு
வாழைச்சேனை
ஆசிரியர் அஷ்ரஃப் சிறலுதீஷ் துணையாசிரியர்கள்
గ2nnణ6లిగినిగి @lܕܶܒ છઠ્ઠીકે જુ9શ્રહન
தொடர்புகள்
YAATHRA
57, DHAN KAN ATT A RoAD MYNABOLA, WATTALA SRI LANKA
Phone; of 1-2677857 ᏐAk: O 1 1 - 2935 1 ᏰᏋ YaathraGhotmail.com
ஆண்டுச் சந்தா 160.00 காசுக் கட்டளை அனுப்புவோர்
M.S.S.Awadh Ali 6765rp 6Ljubdisg WATTALA 35UT6ö 85s535Islöö lossixDd5 கூடியதாக அனுப்பமுடியும். sIGanosoi ITu56öt Ashrof
Shihabdeen என்ற பெயருக்கு அனுப்பி
606db8b6ff). ク ܠܐ
வாழைச்சேனை நண்பர் இலக்கியக் குழுவுக்காக, கொழும்பு.13, 98ஏ. விவேகானந்த மேடு என்ற முகவரியில் அமைந்துள்ள யு.கே. பிரின்டர்ஸில் அச்சிடப்பட்டு ஹதாறோட், வாழைச்சேனையில் வசிக்கும் ஏ.ஜி.எம்.ஸதக்காவினால் வெளியிடப்பட்டது.
يئاتر
யாத்ரா - 12
 
 

இங்கெலnெe கிடைக்கும்
இஸ்லாமிக் புக் ஹவுஸ் 77, தெமடகொட றோட், கொழும்பு - 09
பூபாலசிங்கம் புத்தகசாலை 340, செட்டியார் தெரு கொழும்பு - 11
ஹாதி புக் டிப்போ 79, தெமடகொட வீதி 635 TupLDL — O9
புக் வேர்ள்ட் 41. பிரதான வீதி கல்முனை
ஹனிபா ஹோட்டல்
புத்தக நிலையம் 453, பிரதான வீதி கல்முனை
சக்தி நூல் நிலையம்
மட்டக்களப்பு
நூரி புத்தகசாலை காத்தான் குடி
மீடியா வேர்ள்ட் பீ.எம்.றோட், ஒலுவில்
எஸ்.எம்.பி. கொம்யுனிகேஷன் பிரதான வீதி, ஓட்டமாவடி
எம்.எஸ்.எஸ்.ஹமீத் 134/3, பிரதான வீதி காத்தான்குடி
கோல் மாஸ்டர் கொம்யுனிகேஷன்
எம்.பி.சி.எஸ்.றோட், ஓட்டமாவடி