கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மார்க்சியமும் தேசியமும்

Page 1
2 X 2 X-XX ჯუდ :భః:
----- ୪.***.*ଙ୍୪ ---
- - - - - - - - -------- & 8ᏕᏯ38-3883838ᏕᏕ8Ꮥ38838 S00rSeOSSS00S SOSrSeSOSOSOSOSOOSOSOOSOSOSOSOSOSOSOSOSOSeOSS OSOSOSO eSeO OeOSOSe eOS O S LL OeLeO OOO L OO L O O OLeLOOLOOLOOLOLOLOLOL ॐ OeLSLeSS00eS0e00eLS0SSLe0eSeS00eLeLS0LS0LS0S0SLSLeSLS0S0e0S0SLS0SLS0OLO0O0SLLeOLO0OOLOO - --------------- 8 & ---- ୪222222222:୪୬′′ OOOSO0L0SL00L0eLeOeOOLSLSL0LeLeSOSOSLL0OeOLOLeOLOLOOOLOLOLOLeLSOOOLOLeLOSOOOeOOOO OO OOOOOO
----------- CO XXXXXXXXXXXXXXXXXXXX * ---- 8. *
ଦ୍ଯୁ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

... ."
ဗျွိတ္တိ ::::::::::::::
ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ.
2.33-3-3-3-3-3-3-3-3-3-3-3-3-3-3-3-3-3-3-3-3-3-3-3
--------- -------

Page 2
மார்க்சிசமும் தேசியமும்.
வெளியீடு : தமிழ் கலை இலக்கிய வட்டம். - லண்டன்.
TAMIL ARTS & LITERARY CIRCLE-LONDON PO BOX4035 LONDONSW179XP
அட்டை வடிவமைப்பு : திரு. கே. கிருஸ்ணராஜா.
அச்சுப்பதிப்பு : வாசன் லித்தோ அச்சகம்.
விலை : E2.00
முதற்பதிப்பு: 1995 -04-08
(C) Tamil Arts & Literary Circle - London.
 

முன்னுர்ை
இன்றைய உலகம் பற்றி.
தொடர்ந்து வருவன ஈழபூமி பத்திரிக்கை சார்பாக நிகழ்ந்த மார்க்ஸியமும் தேசியமும் கருத்தரங்கக் கட்டுரைகள். சிவசேகரம், சிவசோதி, கேசவன் போன்றவர்கள் நிகழ்த்திய உரைகள்.
மூன்று கட்டுரைகளையும் நான் படித்தேன். இவைபற்றி முழுமையாக எழுதுவதென்பது பிறிதொரு கட்டுரைக்கான விஷயம். அதை இங்கு தவிர்க்கிறேன்.
ஈழபூமி நண்பர்களின் நோக்கம் விவாதத்தை, ஒரு கலந்துரையாடலைத் தூண்டுவது.
இந்த நோக்கத்தின் அடிப்படையில் கட்டுரைகளுக்கு வெளியில் இன்றைய உலகில் மார்க்ஸியமும் தேசியமும் குறித்து சில விஷயங்களைச் சுட்டுவது இங்கு எனது இலக்கு.
இந்த நூற்றாண்டின் இறுதியில் நமக்கு முன்னால் மிகத் தீவிரமாக இருக்கும் விவாதப் பிரச்சினைகள்: பெண்நிலைவாதம், சூழலியவியக்கம், மக்கள் அறிவியல், தேசீயம் போன்றன.
இவை அனைத்துமே ஒரு மையப் பிரச்சினையோடு, சிந்தனையோடு தொடர்ந்து உரையாடலில் ஈடுபடுகிறது. விவாதிக்கிறது.
அந்தச் சிந்தனை, அந்தப் பிரச்சினை மார்க்ஸியம் தான்.
பிரிட்டனின் அறிவார்ந்த வலதுசாரிப் பத்திரிக்கை Spectator குறிப்பிடுவதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
மார்க்ளியம் தோற்றுவிட்டதாக மிகுந்த உற்சாகம் கொண்டு நாம் ஆரவாரிக்க வேண்டாம். இன்னும் மூன்றாம் உலக நாடுகளிலும் வளர்முக நாடுகளிலும் ஒருங்கிணைந்த ஸ்தாப னமயமான மாற்றுச் சிந்தனையாக பலம் வாய்ந்து இருப்பது மார்க்லீயம்தான்.
பல்வேறு நெருக்கடிகள் மலிந்த ஐரோப்பிய நாடுகளிலும் அதன் வேர்கள் இன்னும் தீவிரமாகவே இருக்கின்றன."
ஏன் மார்க்ளியம் அவ்வாறாய் இருக்கிறது? மார்க்ஸிய அரசியல் செயல்படும் தத்துவமாக மாறுகிற, தத்துவமாக இருப்பதுதான். மனித விமோசனம் அதன் தரிசனமாக இருப்பதுதான்.
மார்க்லீயம் வெறுமனே கல்வி சார்ந்த (Academic) சமூகவியல் அல்ல, அரசியல் அல்ல,

Page 3
அமைப்பியல் அல்ல. உயிருள்ள சமூகவியல், உயிருள்ள அரசியல், உயிருள்ள அமைப்பியல்.
நிகரகுவா தேசிய விடுதலை புரட்சிக்காரன் தோமஸ் போர்ஹேவுக்கு பிறதத்துவங்களை விட மார்க்ளியம் நெருக்கமாக இருப்பது அதனால்தான்.
காலனியாதிக்கத்திலிருந்து மூளையை விடுதலை செய் என்கிற அல்ஜீரிய விடுதலைச் சிந்தனையாளன் பிரான்ஸ் பெனானுக்கு ஆப்ரிக்க விடுதலை வீரர்கள் தேசிய விடுதலைப் போராளிகள் அகஸ்டினோ, நெப்போ, அமில்கார், கேப்ரியல், நெக்ரூமா, கிரிஸ் ஹானி போன்றவர்களுக்கு மார்க்ளியம் நெருங்கி இருப்பது அதனால்தான்.
மார்க்ளியம் திட்டவட்டமாக இறுகிப்போனதாக சூத்திரங்களைச் சொல்ல முடியாது.
அந்தந்த வரலாற்றுச் சூழலின் பிரச்சினைகள் விவாதங்களுடே தான் மார்க்ளியம் பேசுகிறது. தேசீயம் பற்றியும் அவ்வாறுதான்.
தேசீயம் கலாச்சார அடையாளமா? அரசியல் அடையாளமா? மொழி சார்ந்த அடையாளமா? புவியியல் சார்ந்த அடையாளமா? மதம் சார்ந்த அடையாளமா? ஒரு மக்கள் கூட்டத்துக்கு ஒருங்கிணைந்த கலாச்சார நோக்கங்கள் உண்டா? சாதியத்தின் பங்கு என்ன?
இதில் ஏகாதிபத்தியம், காலனியாதிக்கம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் என்ன மாதிரியான பாத்திரம் வகிக்கிறது? சுமைகளை விட்டுச் சென்றுள்ளது?
இவையெல்லாம் மார்க்ளீயம் எழுப்பும் கேள்விகள். இன்றைய நாளின் உச்சபட்ச சிந்தனை வளர்ச்சியினூடே தான் இக்கேள்விக்கு பதில் காணமுடியும்.
கிட்லரின் தேசிய கலாச்சாரம் பற்றிய உரைகள் மிகப் பிரசித்தமானவை. பாசிசம் அதிலிருந்து தான் தோன்றுகிறது. இன்று நிறவெறி அரசியலின் வளர்ச்சிக்கட்டமாக ஐரோப்பிய பாசிசம் மூன்றாம் உலகநாடுகளுக்கு எதிராக எழுந்திருக்கிறது.
ஈழத்திலும் யாழ்ப்பாணத் தமிழரின் மேலாதிக்கத்துக்குள் முஸ்லீம்களும் மலையகத் தமிழரும் கிழக்கு மாகாணத்தமிழரும் படும் அவலம், துயரம் நாம் அறியாததல்ல.
இவ்வாறாய் சூழல்பற்றிய குறிப்பான (Specific) ஆய்வு இல்லாமல் தேசியம் பற்றி பொதுவாக வரையறைகளுக்கு நாம் வர இயலாது. ஐரோப்பிாவில் ஸ்டாலினிய ஆட்சிகள் வீழ்ந்த பிறகு தேசியம் ஐரோப்பாவில் நிகழ்த்தியிருக்கிற கோரம் நம் கண்முன் விரிந்திருக்கிறது. மனிதக்கூக்குரல் நம்செவிகளை அடைக்கிறது.
V ஆனந்த் பட்டவர்த்தனில் IntheName of Friends குறுந்திரைப்படம் பஞ்சாப்பில் தேசியத்தின் பெயரால் நிகழும் கொலை பற்றிப் பேசுகிறது.
மார்க்ளியம், தேசியம் பேசுபவர்களுக்கு மிகப்பலமான கேள்விகளை முன்வைக்கிறது.

மானுட விடுதலை, மானுட நேயம் எனும் அதன் தத்துவப் பார்வை சார்ந்தே அக்கேள்விகள் எழுகிறது.
அடிமையை துன்புறுத்திக் கொண்டிருக்கிற ஆண்டை அடிமைத்தனத்துக்கு எதிராகப் போராட முடியுமா? t
எதிலிருந்து விடுதலை? ஸ்வர்க்கு விடுதலை? எதற்காக விடுதலை? எதை நோக்கி விடுதலை?
இந்தக் கேள்விகள் மார்க்ளியத்தின் மையமாக இருப்பதால் தான் மார்க்ளியம் தோற்றுப் போகவில்லை.
விடுதலை பேசுகிற எவரும் மார்க்ளியத்தைக் கடந்துபோகவும் முடிவதில்லை.
மார்க்ளியத்தைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி விசாரணை செய்யமுடியாது.
மார்க்ளியம் உரையாடலை விரும்புகிறது. புரிந்துகொள்ள விழைகிறது. விடைகாண முயல்கிறது. மார்க்ளியத்தின் நோக்கமெல்லாம் மனித வீழ்ச்சியின் சேதாரத்தைக் குறைப்பது. வாழ்வை அர்த்தமுடன் வாழவேண்டும் எனப்பேசுவது. ஆகவேதான் குவேரா மார்க்ளியத்தைத் தேர்ந்தான்.
அத்தகைய விவாதத்தை, உரையாடலை இக்கட்டுரைகள் தூண்டும் என நம்புகிறேன்.
என்னை முன்னுரை கேட்ட ஈழபூமி நண்பர்களுக்கு என் அன்பையும் நன்றியையும்
தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடனும் தோழமையுடனும் யமுனா ராஜேந்திரன் லண்டன் 25.03.1994

Page 4
மார்க்சிசமும் தேசியமும் --"கலந்துரையாடலில் நிகழ்த்திய உரையின் தொகுப்பு"-
தேசியவாதத்தை பற்றிய மார்க்சிய நிலைப்பாட்டினை பார்ப்பதாக இருந்தால் ஒருவகையில் கலை இலக்கியத்தினைப்பற்றி, மதத்தினைப்பற்றி, பெண்ணுரிமை பற்றி மார்க்சிய நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்கின்றது போல் ஒரு திட்டவட்டமான வரையறை தேசியவாதத்தினைப்பற்றி இல்லை. பொதுவாக கருத்தடையைப்பற்றி கத்தோலிக்க திருச்சபையின் அபிப்பிராயம் என்ன என்றால் திட்டவட்டமாக அவர்கள் சொல்லாம். ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரையில் அல்லது பெரிவாரியான புத்தகங்களை அடிப்படையாக கொண்ட சமயங்களைப் பொறுத்தவரையில் பல இடங்களில் பிரச்சனை இல்லை. ஆனால் புதிதாக நடைமுறையில் வரும் பிரச்சனைகளுக்கு உதாரணமாக பூமி உருண்டையா? இல்லையா? போன்ற விளக்கங்கள் கொடுக்க வேண்டியிருக்கின்றது.
மார்க்சிசம் ஒருகாலமும் விறைப்பான நிலையில் இருந்து தோன்றவில்லை, அது பல்வேறு நிலவரங்களையும், நிலைகளையும் ஆராய்ந்து அதன்மூலம் ஆராய்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவதன் மூலம் எடுக்கப்பட்ட சில முடிவுகளையும் அந்த முடிவுகளை சென்றடைவதற்கான வழிமுறைகளையும் காட்டுகின்றது.
மார்க்சிசத்தில் முக்கியமான விடயம் என்னவென்றால் அதன் அணுகுமுறை அல்லது அதன் ஆராய்வுமுறையானது ஓர் விஞ்ஞான பூர்வமானது என்பதை புறக்கணித்துவிட்டு, மார்க்சிசம் என்றால் இவ்வளவுதான் என்று கூறிவிட்டு அதற்கு சரியானது எல்லாம் முற்போக்கானது மற்றவை எல்லாம் பிற்போக்கானது என்று விறைப்பாக கூறிவிட்டு செல்லவியலாது. இது எமது பிரச்சனைக்கு தீர்வாகிவிடாது. இதுதான் பல இடங்களில் ஏற்பட்ட பிரச்சனை. மார்க்சிச சிந்தனைகளை பலர் விறைப்பான முறையில் அனுஷ்டித்திருக்கின்றார்கள். இவர்கள் பிரச்சனைகளை பல்வேறு கோணங்களில் பர்க்காமல், மார்க்சிசம் எந்த விறைப்பான அணுகுமுறையை நிராகரிக்கின்றதோ அதற்கு சார்பாக அகநிலைச்சார்பையும், மாறாநிலையையும் வைத்து மார்க்சிசத்தின் வரையறைக்குள் விடயங்களை இவர்களால் உருவாக்கிக் கொள்ளக்கூடியதாக இருந்தது. இதற்கு விதிவிலக்காக பலர் இருக்கவில்லை. காரணமென்னவென்றால் மனிதரிடையே பல விதமான குறைபாடுகள் இருக்கின்றது.
தனிமனிதன் மார்க்சிசத்தை ஏற்றுக் கொள்வதனால் அவனது குறைபாடுகள் நீங்கிவிடாது. அது ஓர் நடைமுறையின் முலம்தான் பிரச்சினைகள் தீரும். எனவே பிழைகள் விடாத மார்க்ஸ்டிட்டுக்களோ அல்லது மார்க்சிச இயக்கங்களோ அல்லது மார்க்சிச அணுகுமுறைகளோ சாத்தியமில்லை.
மார்க்சிச அணுகுமுறைக்கும் விஞ்ஞான அணுகுமுறைக்கும் நிறைய வித்தியாசம் இல்லை. தூரத்தில் இருப்பவர்களுக்கு விஞ்ஞான அணுகுமுறை ஓர் திட்டவட்டமான ஓர் அசைக்க முடியாத ஓர் ஆய்வு, அதில் ஒரு பிழையும் இருக்காது என்று இருக்கலாம். ஆனால் விஞ்ஞானத்தின் வரலாற்றினை எடுத்துப் பார்த்தால் அது

இதுவரையில் ஒரு திட்டவட்டமான உண்மைகளை தரவில்லை. உதாரணமாக நியூட்டனின் விஞ்ஞான அணுகுமுறைகள் ஐசாக் இன் கண்டுபிடிப்புக்களுக்கு பின்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மனிதர்களின் 99சதவீதமான பிரச்சினைகள் நியூட்டனின் கொள்கைகளின் அடிப்படையில் தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இதுபோல் மார்க்சிசத்தை எடுத்துக்கொண்டால் மார்க்ஸ் கூறியதை வைத்துக்கொண்டு மார்க்ஸ் கூறியது இதுதான். இதற்குள்தான் மார்க்சிசம் இருக்கவேண்டும் என்று கூறுபவர் மார்க்சிசவாதி அல்ல. இந்த விடயத்தினை பொறுத்தவரை மார்க்ஸ்க்கு பிற்பட்ட "லெனினோ", "மாவோ இந்த விடயத்தினை அதாவது மார்க்சிசப் புத்தகத்தினுள், சுலோகங்களுக்குள் மார்க்சிசத்தை அடக்குவது மார்க்சிச விரோதமானது என்பதை தெளிவுபடுத்திக் காட்டியிருக்கின்றார்கள்.
இன்று உலகத்தில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சனையில் தேசியவாதத்தின் வளர்ச்சியை முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் இணைத்து பார்க்கவேண்டும். ஒரு காலத்தில் முதலாளித்துவம் தேசியவாதத்தினை ஆதரித்தது. அதே முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ச்சியடையும் போது தேசிய இன ஒடுக்கலை மேற்கொண்டு இன விடுதலையை எதிர்க்கின்றது. ஏகாதிபத்தியத்திற்கு ஒரு கொள்கையிருக்கின்றது. அதாவது தனது வசதிக்கேற்ப சில இனவிடுதலைப் போராட்டத்தினை ஆதரிக்கும் சில இனவிடுதலைப் போராட்டத்தினை எதிர்க்கும் அல்லது இன்று ஆதரித்ததை நாளை எதிர்க்கும். இதேபோல் மார்க்சிசத்தில் தேசியவாதத்தினையோ, மதத்தினையோ முற்போக்கான விடயமாக கருதவில்லை. ஆனால் இன்று சமுதாயத்தில் இருக்கின்ற மார்க்சிசம் மதம் பிற்போக்கானது என கருதி மதத்தினை அழிக்க முற்பட்டால் மார்க்சிசம் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுவிடும். மதத்தினை மார்க்சிசம் எதிரியாக கருதும் போதுதான் பிரச்சனை உருவாகின்றது. உண்மையில் மதம் எதிரியல்ல மதம் காலத்தால் அழிந்து போகக்கூடிய விடயம். மதமானது ஸ்தாபன மயப்படுத்தப்பட்டு சமுதாய முற்போக்கான விடயங்களில் எதிராக நிற்கும் போதுதான் மதம் எதிரியாக மாறுகின்றது. இந்த விடயத்தில் இருக்கவேண்டியது என்னவென்றால் மதத்தினை சமுதாய வளர்ச்சிக்கு எதிரான தன்மைகளை கொண்டிருக்கின்றது என்பதை எதிர்க்க வேண்டுமேயன்றி மக்களின் மதம் மீதான நம்பிக்கையை அல்ல. ஏனெனில் இது மக்களின் மத்தியில் நீண்ட காலமான அனுபவங்களினூடாக ஏற்பட்டு வந்த விடயம். இதனைச் சட்டங்களைப் போட்டோ அல்லது கட்டளைகளைப் போட்டு மாற்றிவிடமுடியாது. இதேபோல தேசியவாதப் பிரச்சனை மார்க்சிசத்திற்கு ஒர் முற்போக்கான விடயமாக இருக்கவில்லை. ஏனெனில் தேசியவாதமானது மக்களை பிரிக்கின்ற விடயமாகக் கருதப்படுகின்றது. ஆனால் உலகம் முழுவதும் தேசியப்பிரச்சனை இருக்கும்போது, தேசிய முரண்பாடுகள் இருக்கும் போது தேசிய அடிப்படையில் அடக்குமுறைகள் இருக்கும்போது தேசியப்பிரச்சனை இல்லையென பாசாங்கு செய்யமுடியாது. எனவே நாம் இதனை நோக்கி நகரவேண்டியுள்ளது. இதில் எந்தவிதமான தேசியவாதம் முற்போக்கானது, எந்தவிதமான தேசியவாதம் பிற்போக்கானது என்பது தெளிவான விடயங்களாக இருக்கின்றது.
ஏகாதிபத்தியம் விருத்தியடைந்த நிலையில் தெளிவாக சில விடயங்களைச் சொல்லக்கூடியதாக இருந்தது. குறிப்பாக தேசங்கள் விடுதலை பெறுவதற்கு முன் அதாவது காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் பெரும்பாலும் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக இருந்தது. இந்த

Page 5
நிலையில். எங்களிற்கு பெரிய பிரச்சனைகள் இருக்கவில்லை. பொதுவாக உலகத்தினுடைய நிலப்பரப்பினை ஏகாதிபத்திய நாடுகள் 75சதவீதத்துக்கு மேலாக நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. இந்த நிலைமையில் தேசியப் போராட்டங்கள் பற்றி ஒரு மார்க்சிசவாதிக்கு ஒரு முடிவிற்கு வருவதில் ஒரு சிரமமும் இருக்கவில்லை. பிற்பட்ட நிலைமையில் முரண்பாடுகள் வேறுவிதமாக வருகின்றது. அதாவது இரண்டு தேசிய இனங்கள் ஒரு தேசத்தில் வாழ்கின்றது. இவைகளுக்கிடையே முரண்பாடு வளர்கின்றது அல்லது இருக்கின்றது. இதனை எப்படித் தீர்க்கின்றது என்ற பிரச்சனை இங்கே எழுகின்றது.
இலங்கையைப் பொறுத்தமட்டில் இரு தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடு இருக்கின்றது. இம்முரண்பாட்டின் விருத்தியின் காரணமாக இப்போ முஸ்லிம் மக்கள் ஒரு தேசிய இனமா இல்லையா என ஒரு சிக்கலான நிலைப்பாடு தோன்றியிருக்கின்றது. இதேபோல் மலையக மக்களின் பிரச்சனையும் வந்திருக்கின்றது. இது மாத்திரமன்றி கண்டிச் சிங்களவருக்கும், தென்பகுதிச் சிங்களவருக்குமிடையே முரண்பாடு இருக்கின்றது. சில சில அரசியல் போக்குடைய பிரச்சினைகள் இருந்தாலும் அது கூட ஒரு தேசிய முரண்பாடாக வளர்ந்துவிடலாம். எனவே இவற்றை நாம் ஒரு வரலாற்றுப் போக்கில் பார்க்கவேண்டிய விடயங்களே ஒழிய இவை இவைதான் தேசிய இனங்கள் என ஸ்டாலின் வகுத்த முறைப்படிதான் தேசிய இனங்களை அடையாளம் காண முடியாது என நாம் கூறும்போது அதனை நாம் ஸ்டாலின் என்ன வரலாற்றுச் சூழ்நிலையில் வைத்தார் என்பதனை சிந்திக்காமல் மறுதலித்தல் கூடாது. ஸ்டாலின் அதனை ரஷ்ய ஏகாதிபத்தியத்திற்குள் எது தேசம், எது தேசிய இனங்கள் என அடையாளம் காண்பதற்கு வசதியாக இருந்தது என்ற வரலாற்றுச் சூழ்நிலையை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இப்படியான அடிப்படைப் பார்வையினை நாம் மறுக்கமுடியாது. ஆனால் தேசிய இனங்களை அடையாளம் காண்பதற்கு வரையறுக்கப்பட்ட அம்சங்களை வைத்துக்கொண்டு அடையாளம் காண முற்படுவோமாயின் எங்களால் பிரச்சனைகளை அடையாளம் காண முடியாது. எனவேதான் ஸ்டாலினின் வரையறுத்த விடயங்கள் தேசியங்களை அடையாளம் காண ஒரு கருவியாக எடுத்துக்கொள்ளலாமே ஒழிய அதனை ஒரு திட்டவட்டமாக வரையறையாக எடுப்போமாயின் பிரச்சனைகளை அடையாளம் காணுவதில் தவறு இழைக்கின்றோம். இந்த இடத்தில்தான் மார்க்சிசக் கண்ணோட்டத்தில் ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தினை ஆதரிப்பதோ, ஒரு தேசிய இனத்தை அடையாளம் காண்பதோ நம் சூழ்நிலைக்கேற்ப பார்க்க வேண்எடியுள்ளது. உதாரணமாக இந்தியாவில் C.P.Mக்கும், C.B.1க்கும் இந்தியாவிற்குள் தேசியம் சம்பந்தமாக எடுக்கின்ற நிலைப்பாட்டில் பல இடத்தில் வித்தியாசப்படுகின்றது. C.B.1, CP.M இனது அரசியல் சம்பந்தமான மாற்றத்தினை பின்பு விவாதிப்போம்.
மார்க்சிசம் தேசிய இனப் பிரச்சனையை ஒரு முக்கிய பிரச்சனையாக எடுத்துக்கொள்ளவில்லை. மார்க்சிசவாதிகளைப் பொறுத்தமட்டில் உலகத்தில் வர்க்க முரண்பாடு அதாவது மனிதனை மனிதன் வர்க்க அடிப்படையில் சுரண்டுகின்ற முரண்பாடே அடிப்படையான பிரதான முரண்பாடாகும். இந்த முரண்பாட்டின் விளைவாகத்தான் மற்ற மற்ற முரண்பாடுகள் சூழலுக்கேற்ப வேறு வேறு வடிவம் எடுத்திருக்கின்றது. அதனால் தேசிய அடிப்படையில் மார்க்சிசம் உலகினைப் பார்க்கவில்லை. தேசியப் பிரச்சனைகளை இவர்கள் ஓர் வர்க்க ரீதியான முரண்பாடாக

பார்த்திருப்பது முரண்பாடானதே.
இலங்கையைப் பொறுத்தமட்டில் சமசமாஜக்கட்சி தமிழரை ஒரு தனித்தேசிய இனமாகக் கருதவில்லை. ஆனால் கம்யூனிஸ்ட்கட்சி ஆரம்பத்திலிருந்தே கருதியது. ஆனபடியால்தான் தமிழரசுக்கட்சி சமஷ்டிக் கோரிக்கையை வைக்கும்போது, "இல்லை" பிரதேச சுயாட்சிதான் பிரச்சனைக்குத் தீர்வென கம்யூனிஸ்ட் கட்சி கூறக்கூடியதாக இருந்தது. காரணம் அவர்கள் தமிழர்களை தனித்தேசிய இனமாக அடையாளம் கண்டு கொண்டதே. இந் நிலைப்பாடானது காலப்போக்கில் நடைமுறை காரணங்களுக்காக மாறிவிட்டது. இவர்கள் என்று பாராளுமன்ற பாதையில் இறங்கினார்களோ அன்று அவர்களுக்கு வாக்குகள் சேகரிப்பதுதான் முக்கிய பிரச்சனையாக இருந்திருக்கின்றது. இவர்கள் பிரதேச சுயாட்சி கோரிக்கொண்டு தென்இலங்கை மக்களிடம் வாக்குகள் கேட்கமுடியாது. எனவே கொள்கை ரீதியில் பிரதேச சுயாட்சியினை ஏற்றுக்கொண்டாலும் பெருமளவில் வெளியில் கதைத்துக் கொள்வதினை நிறுத்திவிட்டார்கள். எனவே இங்கே உத்தி ரீதியான நிலைப்பாடுகள் கொள்கையினை எவ்வாறு பாதித்திருக்கின்றதை அவதானிக்கலாம். கம்யூனிஸட்கட்சி பிழையான பாதையில் போயிருக்கலாம் ஆனால் அதில் உள்ள எல்லோரையும் துரோகிகள் என நான் கூறமாட்டேன். இன்றுகூட இனவாத நடவடிக்கைகள் எழும் போது எதிராக குரல் கொடுத்தவர்கள் தொழிற்சங்கத்தினுள்ளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் இருக்கின்றார்கள். எனவேதான் கூறுகின்றேன் அவர்களில் பிழையில்லை. பிழைகள் நடந்ததிற்கான சூழலைப் பார்க்கலாமேயொழிய அதற்காக அவர்களை முற்றாக நிராகரிக்கவியலாது. ஆனால் அவர்களின் அணுகுமுறை பிழையென்பதினை வரலாறு நிரூபித்திருக்கின்றது. இவர்களின் இந்த அணுகுமுறை தமிழ் மக்களையோ சிங்கள மக்களையோ திருப்திப்படுத்தவில்லை. இதன் விளைவாக இவர்கள் வென்றெடுத்த சக்திகள் வேறு திசைக்கு செல்லவேண்டியிருந்தது. உதாரணமாக JVP தன்னை ஒரு மார்க்சிச சக்தியென கூறியிருக்கின்றது. இன்று ஒருவர் தன்னை இந்து" என்றோ "கிறிஸ்தவர் என்றோ. கூறிக்கொள்வது மறுக்கவியலாது. இதேபோல் ஒருவர் தன்னை "கம்யூனிஸ்ட்வாதி என்றோ, "ரொஸ்கி வாதி என்றோ கூறிக்கொள்வது நாம் மறுக்கவியலாது. இது அவர் அவரின் உரிமை. இதுபோல் விடுதலைப் புலிகள் தம்மை மார்க்சிசவாதிகள் என்று கூறிக்கொள்ளுகின்றார்கள். இதுபோல் மார்க்சிசவாதி என அவர் அவர்கள் முத்திரை குத்தலாம். JVPஐ பொறுத்தமட்டில் இவர்களின் மார்க்சிசம் யார் குத்தினாலும் அரிசியானால் சரி என்ற நிலைப்பாடு. அதாவது என்னமாதிரி என்றாலும் காரியம் நடந்தால் சரி என்ற நிலைப்பாடாகும். குறிப்பாக பார்த்தால் அதிகாரத்திற்கு வந்ததின் பிற்பாடு மார்க்சிசத்தினைப் பார்ப்போம் என்ற நிலைப்பாடாகும். எவ்வாறு பாராளுமன்ற இடதுசாரிகள் பிழைவிட்டிருக்கிறார்களோ அதேபோல் இவர்களும் பிழைவிட்டிருக்கின்றார்கள். அதாவது அதிகாரத்திற்கு வருவதுதான் முக்கிய பிரச்சினையே அன்றி, மற்றவை எல்லாம் அதிகாரத்திற்கு வந்தபின் பார்ப்போம் என்ற நிலைபப்ாடு. இம்மாதிரி கொள்கைக்கும் நடைமுறைக்கும் வித்தியாசம் காணக்கூடியதாக இருக்கின்றது.
தூய்மையான அரசியல் சித்தாந்தங்களை வைத்துக்கொண்டு அரசியலுக்கு வரமுடியாது. ஏனெனில் நாம் அதை மொழிபெயர்க்க வேண்டியுள்ளது. சாதாரண மக்களின் அன்றாட பாஷைக்கு கொண்டுவர வேண்டியுள்ளது. உதாரணமாக ஏகாதிபத்தியம், சுரண்டல், வர்க்கபோராட்டம் என்று கூறிக்கொள்வது ஒருவருக்கும் விளங்காது. இதனை சாதாரண மக்களின் வாழ்க்கைக்கு கொண்டுவரும்போது தமிழர் உயர்தர போராட்டமாக,

Page 6
மனிதர் உரிமைக்கான, பிரதேச உரிமைக்கான, மொழி உரிமைக்கான போராட்டமாக மாறுகின்றது. சிலவேளைகளில் இம்மாற்றத்திற்குள் நாங்கள் அமிழ்ந்து முக்கிய பிரச்சனையினை விட்டுவிட்டு இதற்குள் குறுகி சிதைந்து விடுகின்றோம். முக்கிய விடயமாக மார்க்சிசத்தினை பொறுத்தவரையில் தேசம், தேசியம் என்பது ஒன்றாகும். தேசமும் அரசும் ஒன்றாகச் சேர்ந்தது முதலாளித்துவத்தின் பின்புதான். அதற்குமுன் தமிழ் தேசம் என்றோ சிங்களத் தேசம் என்றோ இருக்கவில்லை. தமிழர்களின் நாடு என்றால் ஒரு நேரத்தில் நாங்கள் நினைப்பது போல் மூன்று பேரரசுகளாக இருந்திருக்கலாம் அல்லது அவற்றிற்கு மேற்பட்ட பேரரசுகளாகவும் இருந்திருக்கலாம். இதேமாதிரித்தான் எல்லா இடங்களிலும் நடந்திருக்கின்றது. தேசமும் அரசும் என்பதின் இணைகின்ற தன்மை முதலாளித்துவத்திற்குப் பின்பு தான் ஏற்பட்டது. முதலாளித்துவ விரித்திக்குப் பிறகு இதனைப் பற்றிய தெளிவான கண்ணோட்டத்திற்கு வரக்கூடியதாக இருக்கின்றது. தேசத்தைப்பற்றி நாங்கள் பார்க்கும்போது இங்கு எவ்வாறு முரண்பாடுகளைக் கையாளுவது என்ற அடிப்படையில் பார்க்கின்றோம். சோவியத் யூனியனில் தேசிய முரண்பாடுகள் இருந்திருக்கின்றது. இந்த முரண்பாட்டிற்கு அடிப்படையாக இருந்தது "சாரிசம்" ஆகும். சாரிசத்திற்கும் ஒடுக்கப்பட்ட தேசியங்களிற்கு இடையிலான முரண்பாட்டை எப்படித் தீர்ப்பது என்ற பிரச்சனை எழுகின்றது. சாரிசத்தினை தூக்கியெறிந்து தனியே ரஷ்யாவின் விடுதலையைப் பார்ப்பதா அல்லது சாரிசத்திற்கு உட்பட்ட அனைத்து தேசங்களின் விடுதலையைக் கொண்டு வருவதா என்ற பிரச்சனை உருவாகின்றது. இச்சூழலில் தேசிய இனங்கள் பிரிந்து செல்வதற்கான உரிமையைக் கொடுக்க வேண்டியிருந்தது. இதே சூத்திரத்தை சீனாவில் "மாவோ பாவிக்கவில்லை. சீனாவின் நிலவரம் வேறு. சீனா முழுவதும் மறைமுகமாக ஏகாதிபத்தியத்தின் கீழ் இருந்தது. இந்த அடிப்படையில் காலணிகளின் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில்லாமல் எல்லோருமே ஒரு அயல்சக்திக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அந்த இனங்களின் உரிமைகளைப் பேணுவதற்கு பிரிந்து போகின்றதை விட சுயாட்சி முறையைப் பேணுவதன் மூலம் பிரச்சனைகளை அணுகலாமென மாவோ அணுகி இருக்கின்றார்.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் மார்க்சிசவாதிகளாயிருந்தாலும் சரி, மற்றவர்களாக இருந்தாலும் சரி இந்தியா ஒரு பிரதேசமாக விடுதலை அடைந்தது. "ஹிந்தியில் இந்தியாவின் தேசிய இனப்பிரச்சனையை எவ்வாறு அடையாளம் காண்பதென்று எடுத்துக்கொண்டால் வசதியான வழிகாட்டலாக நேருவின் மொழி அடிப்படையிலான பார்வையை எடுத்துக் கொள்ளலாம். இது ஒரு விறைப்பான பார்வை. காந்தியின் இந்தியா ஒரு தேசம். அதனை மொழி அடிப்படையிலேயோ, மத அடிப்படையிலேயோ பிரிக்கமுடியாது என்ற பார்வை நீட்சிதான் நேருவின் பார்வையாகும். இந்த அடிப்படையில் பார்த்தால் கிழக்கு வங்காளமும், மேற்கு வங்காளமும் பிரிவதற்கு ஞாயமில்லை. இதேபோல் மேற்கு பஞ்சாப்பும், கிழக்கு பஞ்சாப்பும் பிரிவதற்கு ஞாயமில்லை. ஆனால் மத அடிப்படையில் பிரிந்துவிட்டது. மேலும் பிரச்சனை எவ்வாறு கையாளுவது என்று பார்க்க வேண்டி இருக்கின்றது. மொழி அடிப்படையில் தேசிய இனத்தினை அடையாளம் காணலாம். மத அடிப்படையில் அடையாளம் காண முடியாது என்று வரும்போது சீக்கியரின் பிரச்சனை வருகின்றது. சீக்கிய இனம் தன்னை ஓர் தனி இனமாக அடையாளம் காணுகின்றது. ஓர் இனம் தன்னை ஒரு தனி இனமாக அடையாளம் காண காரணங்கள் இருக்கவேண்டும். எனவே முரண்பாடுகளை எப்படித் தீர்க்கின்றோமோ அவர்களின் பிரச்சனைக்கு போதியளவு கவனம் செலுத்தி அவர்களினது தனித்துவத்தினது நம்பிக்கை, தனிமை என்தில் ஒரு நம்பிக்கை போன்ற நம்பிக்கையினை நாங்கள்

எவ்வாறு பேணுவதின் மூலம்தான் அவர்களிற்கு மற்றவர்களைப் பற்றிய ஐயப்பாடுகள் குறையும். இதனைவிடுத்து இவர்களிற்கும் மற்றவர்களிற்கும் ஒரு வித்தியாசம் இல்லையெனக் கூறி நீங்கள் எல்லோரையும் போல நடாத்தப்படுகிறீர்கள். அதனால் எல்லோரைப்போல நீங்கள் நடக்க வேண்டுமென்று வலியுறுத்தும்போது அவர்களிற்கு நம்பிக்கையின்மை, அச்சங்கள் கூடும். நேருவின் விறைப்பான பார்வை உண்மையில் சீக்கிய தேசியவாதத்தனைத் தடுக்கின்றது. சீக்கியர்களை ஒரு தேசிய இனமாக மதிக்காமல் போகும்போது அவர்களின் உணர்வு கூடுகின்றது. இதேபோல் எங்களிற்குள்ளேயும் இந்தப் பிரச்சனை வரும். எப்போது நாங்கள் முஸ்லிம்கள்ை தேசிய இனம் இல்லையெனக் கூறி கட்டளை போடுகின்றோமோ அன்று அவர்கள் தாங்கள் ஒரு தேசிய இனமென உணரத் தொடங்குவார்கள். முஸ்லிம்களை பொறுத்தவரையில் அவர்களை எங்களில் ஒருவராகக் கருதலாம். ஆனால் அதே கருதுகோலை நாங்கள் நிர்ப்பந்திக்க இயலாது. எனவே தேசம், தேசியம் என்பதில் மார்க்சிசம் பார்க்கவேண்டியது நடைமுறை என்ன, மக்களின் உணர்வுகள் என்ன, இதனைத் தீர்ப்பதற்கான வழி என்ன என்பதாகும். இதேமாதிரி மத அடிப்படையில் எடுத்துக்கொண்டால் யூகோசிலாவியாவில் அங்கே முஸ்ஸிம்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கவில்லை. அங்கே முஸ்லிம்கள் ஒரு பழைய சேபியர்கள், துருக்கியர்கள் காலத்தில் மதம் மாறியவர்கள்.
தேசம், தேசியம் எது என்பது பொறுத்தவரையில் நாங்கள் மார்க்சிசக் கண்ணோட்டத்தில் சமுதாயத்தில் என்ன மாதிரியான ஒடுக்குமுறை இருக்கின்றது என்பதைப் பார்க்கவேண்டும். என்றும் பிரதான வர்க்க அடக்குமுறைக்கு சார்பாக இந்த ஒமுக்குமுறைகள் என்ன மாதிரி ஏற்படுகின்றது என்பதனைப் பார்த்து அந்த மக்களுடைய தேவைகளை என்ன விதமாக சமூகமான முறையில் தீர்க்கமுடியும் என்ற கண்ணோட்டத்தில் முடிவுகளிற்கு வரவேண்டும். நாங்கள் இங்கு விறைப்பான முடிவுகளையோ, தீர்மானங்களையோ எடுக்க இயலாது. இதன் மூலம் தேசிய இனங்களை அடையாளம் காண்பதோ அல்லது தேசிய விடுதலை போராட்டங்கள் பற்றிய முடிவுகளிற்கு வருவதோ தவறாகும்.
சி.சிவசேகரம்
திரு. சிவசேகரம் அவர்கள் கருத்தரங்கின் போது நிகழ்த்திய உரையை ஒலிப்பதிவு நாடாவில் பதிவுசெய்து தொகுக்கப்பட்ட கட்டுரையே மேல் உள்ளதாகும்.
-வெளியீட்டகம்

Page 7
மார்க்சிசமும் தேசியமும்
·················· ··ஓர் வரலாற்றுக் கண்ணோட்டம்
தேசியம் என்பது இன்று உட்லகின் மிகவும் கவ்னத்தை ஈர்ந்திழுக்கின்ற ஒரு முக்கிய அம்சமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. தேசியம் கலந்த போராட்டங்கள் உக்கிரம் அடைந்ததும் அதனுடைய தேவையின் அடிப்படையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதும் இன்று கண்கூடாகக் காணக்கூடிய ஒன்று. தேசியம் என்பது என்ன கண்ணோட்டத்தில் பார்க்கப்படவேண்டும். அதன் எழுச்சியினை எவ்வாறு பாவிக்க வேண்டும்? தேசியத்தினைப் புறக்கணிப்பதன் மூலம் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன? என்ற பல விடயங்களை நாம் கருத்தில் எடுத்துக்கொண்டு மார்க்ஸிசமும் தேசியமும் என்ற இக்கட்டுரையைத் தொடரலாம் என்று எண்ணுகிறேன். தேசியம் பற்றிய பிரச்சனையில் மார்க்சியத்தின் பார்வை தனது வரலாற்றுத் தோல்வியையே எடுத்துக் காட்டுகின்றது என்று கூறலாம். மேற்கத்திய சிந்தனைகள் கூட தேசியம் பற்றிய பிரச்சனையில் சரியான சித்தாந்தத்தினை மார்க்ஸியத்தினைப் போலவே வளர்த்துக் கொள்ளத் தவறியிருப்பதனை காணக்கூடியதாக இருக்கின்றது. உதாரணமாக ஜேர்மன் வரலாற்றியல், லிபரலிசம் (Liberalism), டார்வின் சமூகவியல் (Socialdrwnism), நவகால சமூகவியல் (Modern Sociology) இவை அனைத்தின் தோல்வியினை விட மார்க்ஸியத்தின் தோல்வி மிகவும் மோசமானது என்றே கூறவேண்டும். காரணம் யாதெனில், மார்க்ஸிசம் ஓர் விஞ்ஞான பூர்வமான சமூக ஆய்வுகளை முன்வைத்ததுடன் அதுவே மேம்பட்ட சமூகமாற்றத்தின் மார்க்கத்தினை தாங்கி நிற்கின்றது. எனவே தேசியம் பற்றிய நிலைப்பாடுகள் மார்க்சிச பாதையில் எவ்வாறு இருந்தது எனப்பார்ப்பது இங்கே அவசியமானது. மார்க்சிசத்தின் பார்வையில் தேசியம் பற்றிய ஓர் வரையறுக்கப்பட்ட அல்லது, ஒழுங்கமைக்கப்பட்ட சித்தாந்தம் முன்வைக்கப்படவில்லை. பல முரண்பாடான, பலதரப்பட்ட நிலைப்பாடுகள் வெவ்வேறு காலத்தில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
ரோசா லக்சம் பேர்க்கின் சர்வதேச பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டுக்கு கடும் எதிர்நிலைப்பாட்டினை ஒக்ஸ்ரோ மாக்ஸிட்டுக்கள் ஆன றெனரும் ஒத்தபோவும் (Rener &Otto Bauer) தேசியத்தின் அவசியம் என்ற தத்துவத்தினூடாக முன்வைத்திருக்கிறார்கள். எனவே தேசியம் பற்றிய விளக்கத்தினை அடைவதற்கு மார்க்ஸிஸ்ட்டுக்களிடையே எழுந்த முரண்பாட்டு நிலைப்பாடுகளை பார்க்க வேண்டியுள்ளது. இங்கே மார்க்ஸினதும், எங்கல் சினதும் நிலைப்பாட்டினைப் பார்க்கும் போது இவர்கள் தங்களது வடிவமைக்கப்பட்ட அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட சித்தாந்த உருவாக்கங்களில் தேசியம் பற்றிய பிரச்சனைகளை ஒரு அவசியத் தன்மையாகக் கருதி ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை. மறுதலையாக அவ்வப்போது தேசியம் பற்றிய பிரச்சனைகள் எழுந்தபோது மேலெழுந்த வாரியாகத் தொட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இங்கு கூட ஒரு நிலையான, தொடரான நிலைப்பாட்டினை இவர்கள் வைத்திருக்கவில்லை. இவர்களின் நிலைப்பாடுகளில்
1. தேசியமும் பூர்சுவா வர்க்கத்தினால் ஓர் மத்தியப்படுத்தப்பட்ட அமைப்பின் உருவாக்கத்தின் ஓர் வெளிப்பாடே. அதாவது, தேசிய நிலையானது முதலாளித்துவத்தின் விரும்பத்தக்க ஓர் அரசியல் அம்சமாகும்.

2. சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் சோசலிசப் புரட்சியானது தேசிய எல்லைகளை உடைத்து ஓர் சர்வதேசிய நிலையை அடையும் என்று பார்த்திருக்கிறார்கள். மார்க்ஸிடம் முதலாளித்துவத்தின் வளர்ச்சி தொடர்பாக ஒரு தெளிவற்றநிலை இருந்து வந்திருக்கிறது. அதாவது, உலக முதலாளித்துவ சக்தியினது வளர்ச்சியானது, தேசிய எல்லைகளை உடைக்கத் தொடங்கியிருக்கிறது என்ற நிலையும் அல்லது பூர்சுவாக்களின் Mysification, ஓர் தேசிய ஆழுமைக்கு இட்டுச் செல்கின்றது என்ற பார்வையும் அவரிடையே ஓர் தெளிவற்ற நிலையினை எடுத்துக்காட்டுகின்றது.
3. தற்போதைய அரசியல் போராட்டங்களில் தேசிய இயக்கங்கள் பற்றியோ அல்லது தேசிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்கள் பற்றியோ ஓர் சரியான நிலைப்பாட்டினையோ அல்லது ஒர் தீர்க்கமான வரையறையினையோ எடுத்துக் கொள்வது மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் ஓர் பிரச்சனையாக இருந்திருக்கிறது.
மார்க்ஸின் படைப்புக்களில் போலந்து, ஐயர்லாந்து போராட்டங்களில் அடக்கப்படும் தேசியத்தின் தேசிய சுதந்திர போராட்டங்களை ஆதரிப்பதாக இருக்கும் அதேவேளை கிழக்கு ஐரோப்பிய தேசிய இயக்கங்களின் போராட்டங்களில் குறிப்பாக ஸ்லாவிக தேசியங்களின் போராட்டங்களுக்கு அதே அளவு ஆதரவு கொடுக்கப்படவில்லை.
இங்கு வெளிப்படையான உண்மை என்னவெனில் மார்க்ஸ் தேசியம் பற்றிய பிரச்சனையில் ஓர் தொடர்ச்சியான ஒழுங்கமைக்கப்பட்ட சித்தாந்த வேலைப்பாட்டினை மேற்கொள்ளவில்லை என்பதாகும். அவர் தேசியம் பற்றிய பிரச்சனையை ஒரு பொருளாகக் கருதியிருக்கிறாரே தவிர அதனது முக்கியத்துவத்தை அலச முற்படவில்லை. மார்க்கிஸின் இந்த ஆய்வற்ற தோல்வி நிலையானது மார்க்ஸியத்தின் வளர்ச்சியில் ஒரு பெரும் குறை என்பதை நாம் உள்வாங்கவேண்டிய கட்டுப்பாடுடையவர்களாக உள்ளோம்.
மார்க்சும் எங்கெல்சும் தேசியம் பற்றிய பிரச்சனையை மேற்கு ஐரோப்பிய நாடுகளை மையமாக வைத்துக் கொண்டே முற்றுமுழுதாகப் பாாத்திருக்கின்றார். தேசியத்தின் அடையாளத்தினை ஒர் அரசின் வடிவிலேயே இவர் நோக்கியிருக்கிறார் என்பது தெளிவு.
தேசமும் தேசியமும் உலகில் முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கில் தோன்றும் அம்சமாகவும் அது தானகவே மறைந்துவிடும் எனப் பார்த்திருக்கின்றார்கள். மற்றும் உலகம் முழுவதற்குமான சுதந்திர வர்த்தகப் பொறி முறையானது தனியார் சந்தையை உருவாக்குகையில் அதாவது ஒரு சர்வதேச பொருளாதாரம் உருவாகும் போது தேசங்களுக்கிடையிலான தடைகள் நீங்கி ஒரு ஒன்றுபட்ட உலக பொறிமுறை வளரும் என்று நோக்கியிருக்கின்றார்கள். முதலாளித்துவ அரசானது அதன் தோற்றத்திலேயே அதன் அழிவுப் பாதையினையும் இட்டுச் செல்கிறது. நவீன உலக பொருளாதார அமைப்பில் தொழிற்பிரிப்பு காரணமாக தேசியத்தின் தன்னிலை வேட்கையானது சிதைக்கப்படும் என கருதியிருக்கிறார்கள்.
மார்க்ஸின் அறிக்கை ஒன்றில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. "In proportion as antogonism between classes in the nation vanishes, the hostility of one nation to another Wil COme to an end."

Page 8
அதாவது தேசியத்திலுள்ள வர்க்க முரண்பாடு தீர்க்கப்படும் போது ஒரு தேசியத்தின்
ஆதிக்கம் இல்லாது போய்விடும். எனவே உலக சுதந்திர வர்த்தகப் பொறிமுறையில் தேசியங்களுக்கிடையிலான தொழிற்பிரிப்பு காரணமாக படிப்படியாக முதலாளித்துவத்தின் வளர்ச்சி உடைக்கப்பட்டு விடும் பட்சத்தில் தேசியம் என்பது சம்பந்தம் அற்றதாகி விடுகின்றது என்று கூறினார்கள்.
மார்க்சும் எங்கெல்சும் தேசியம் பற்றிய ஒரு தொடர்ச்சியான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்காமையும் அதன் சமூக இயங்கியலை சரிவரப் புரிந்து கொள்ளாமையும் இதற்குக் காரணம் என்று கருதலாம். அதாவது சமூகத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் பொருளாதாரத்தின் அடிப்படையில் பார்க்க முற்பட்ட தன்மையே தேசியத்தினையும் பொருளாதாரத்தின் அடிப்படையில் நோக்கத் தூண்டியது எனலாம்.
இங்கே உலக சுதந்திர வர்த்தகப் பொறிமுறையில் தேசியங்களுக்கிடையிலான தொழிற்பிரிப்பு காரணமாக படிப்படியான முதலாளித்துவத்தின் தன்மை உடைக்கப்பட்டு விடும் பட்சத்தில் தேசமும் தேசியமும் என்ற இவை இரண்டும் நவீன வரலாற்றில் சம்பந்தமற்றதாகி வருகின்றது என்று கூறியிருக்கின்றார்கள்.
மார்க்சும் எங்கல்சும் சமூகங்களிற்கிடையே எழும் அனைத்துப் பிரச்சனைகளையும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் அதாவது சமூகத்தில் இருக்கும் அனைத்து முரண்பாடுகளுக்கும் அடிப்படைக் காரணி பொருளாதாரம் தான் என்றும் சமூகத்தில் இருக்கும் கட்டுமானங்களைக் கூட நிர்ணயிப்பதுவும் பொருளாதாரம் தான் என்ற பார்வை தேசியம் பற்றிய ஆய்விலும் தென்பட்டதை அவதானிக்கலாம். இங்கே தேசியம் பற்றிய உள்ளார்ந்த மன உணர்வு என்கின்ற கரு எண்ணப்பாடு தேசியத்தில் முக்கிய அம்சமாக இருப்பதையும் அதற்கு ஓர் தனியான சமுதாய வளர்ச்சி இருப்பதனையும் இவர்கள் காணத் தவறிவிட்டார்கள்.
தேசியம் பற்றியோ அல்லது அதன் எழுச்சி பற்றியோ மார்க்சும் எங்கல்சும் ஒரு வடிவமைக்கப்பட்ட சித்தாந்தத்தினை உருவாக்கத் தவறியிருப்பதால், தேசியம் பற்றிய வெளிப்பாட்டினை ஆய்வதற்கு மற்றைய மார்க்சியவாதிகளின் அணுகுமுறைகளை பார்ப்பது அவசியமாகின்றது.
இங்கே Karl ஹ ஸ கிஇனைப் பார்க்கும் போது போலநிதிலிருநீது வெளியேறியவர்களிற்கிடையே எழுந்த தேசியம் பற்றிய விவாதங்களும் ஒஸ்ரியாவில் எழுந்த சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த கோட்பாட்டு ரீதியான விவாதங்களும் தேசியம் பற்றிய வரலாற்றுப் போக்கினையும் அதன் சமூகக் கட்டமைப்பினையும் ஆய்வதற்கு அவருக்கு உதவியாக இருக்கின்றது.
மார்க்சியத்தில் இருந்த தேசியம் பற்றிய ஓர் கருத்து ரீதியான இடைவெளியினை நிரப்புவதற்கு முனைந்திருக்கின்றார். தேசியத் தன்மை என்றால் என்ன என்ற வரையறையை கொடுப்பதற்கு முனைகையில் இவர் தேசியத்தின் கட்டமைப்பினை இரண்டு வடிவில் பார்க்கிறார். முதலாவது வரலாற்று ரீதியான மக்கள். அல்லது சமூகங்கள் ஒரு பொது அரசு அதிகாரத்தின் கீழ் ஒன்றுகூடல், இரண்டாவது

இனங்களுக்கிடையே வேறுபாடு காரணமாக அல்லது பல்வேறு இனங்களின் கலவையில் தேசியம் தோன்றலாம் என்பதாகும் என மிக எளிய வடிவில் ஹஸ்கி வெளிப்படுத்தியிருக்கிறார். இருந்தும் தற்கால தேசியத்தின் வெளிப்பாடானது முதலாளித்துவத்தின் வியாபார உற்பத்திப் பொறிமுறையின் அடிப்படையே எனவும் ஓர் சமூக உற்பத்திப் பொறிமுறையில் மொழியானது ஓர் அத்தியாவசிய அம்சம் எனவும் கருதுகிறார். ஒரு தேசியத்தை அடையாளம் காண்பதற்கு மொழியானது ஒரு திறவுகோல் என்பது இவரின் ஆய்வின் கண்ணோட்டம். ஹஸ்கி பாட்டாளிகளுக்கும் தேசியத்திற்கும் இடையே உள்ள தொடர்பு பற்றிய கேள்வியில் ஓர் நிர்ணயம் இல்லாத நிலையில் இவர் இருந்திருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்.
தேசியங்களின் பாரம்பரியமானது வெவ்வேறு பிளவுபட்ட சிக்கலான பொருளாதார அடிப்படைகளைக் கொண்டிருந்தும் கூட ஒர் தேசிய சுயாதிக்கத்தினை நோக்கிச் செல்லுகின்றதினை இவர் அறிந்திருந்தும் அது தொடர்பான ஆய்வினை மேற்கொள்ளவில்லை. ஆனால் சர்வதேசிய பாட்டாளி வர்க்கப் புரட்சியானது தேசியங்களுக்கிடையிலான தடைகள் அல்லது எல்லைகளை உடைத்தெறிந்து ஒரு சர்வதேசிய நிலையினை அடையும் என்று நம்பியிருந்திருக்கின்றார். இந்நிலையில் சர்வதேசிய ரீதியாக ஒரு பொது மொழி உருவகம் எடுக்கும் என்று நெறிப்படுத்தியிருக்கின்றார். இங்கு ஹஸ்கியின் பார்வையில் தேசியம் பற்றிய பிரச்சனையானது சர்வதேசப் புரட்சியின் வெற்றியில் தீர்க்கப்படும் என்று காண்கின்றார். ஆனால் தேசியம் பற்றிய வெளிப்பாட்டின் அரசியல் முக்கியத்துவத்தினை இவர் இங்கே தவற விட்டுச் சென்றிருப்பதனை அவதானிக்க வேண்டியுள்ளது.
மார்க்சியப் பாதையில் எழுந்த தேசியம் பற்றிய நிலைப்பாடுகளை மீளாய்வு செய்வதில் ஒஸ்ரோ மார்க்ஸிஸ்ட் குழுக்களுக்கு முக்கிய பங்கிருக்கின்றது. இதில் ஹார்ல்ரெனர்ரும் ஓதோ பாண்ஸ்சும் பெரும் பங்கினை வகித்திருக்கின்றார்கள்.
ரெனரின் ஆய்வானது முற்றுமுழுதாக ஒஸ்ரியன் அரசின் உள்கட்டமைப்புப் பற்றியே இருந்தது. இங்கே தேசியம் பற்றிய பிரச்சனையை அரசியல் அமைப்பின் சட்டதிட்டங்களில் சீர்திருத்தங்களையும் கொண்டு வருவதன் மூலம் தீர்க்கப்படலாம் என்று கூறுகின்றார். அதாவது வெவ்வேறு தேசியக் கூட்டமைப்பானது ஒரு தேசிய கலாச்சார தன்னியக்கத்தின் அடிப்படையில் ஒரு அரசியல் அமைப்பின் புனரமைப்பினை வேண்டி நிற்கின்றது என்று ரெனர் முன்வைக்கின்றார்.
இருந்தும் தேசியம் பற்றி இவரின் அடிப்படை விளக்கம் ஆனது ஒர் தேசியம் ஒரு உணர்வு பூர்வமான கலாச்சார சமூகம் என்பதாகும். இங்கே இவரது விளக்கமானது கார்ல்ஹஸ்கியின் பொருளாதார அடிப்படையில் தேசியம் பற்றிய விளக்கத்தினை மறுதலித்து நிற்கின்றது.
மேலும் ரெனர் விளக்குகைகயில் ஓர் விஞ்ஞான பூர்வமான சர்வதேசிய நிலையை அடைவதற்கு புத்திTவிகளின் தொடரான மார்க்ஸியத்தின் பிரயோகத்தின் ஊடாகவே அடையலாம். இவரின் நிலைப்பாடானது வழமையான மார்க்ஸிய வாதிகளின் நிலைப்பாடுகளிலிருந்து வேறுபட்டிருக்கின்றது. எவ்வாறனெனில் தேசியத்திற்கு ஒரு கலாச்சாரப் பெறுமதி இருக்கின்றது என்பது ஒன்று. மற்றும் வளர்ந்து வரும் சமூகங்களுக்கிடையேயான சமுதாயக் கட்டமைப்பு ஜனநாயகத் தன்மையும் வெவ்வேறு

Page 9
தேசியங்களுக்கிடையிலான பிரச்சனையை குறைந்தளவிலான அரசியல் தன்மைக்கும் ஒத்துப் போகின்ற நிலையை அடையும் என்பதாகும். ஒதோ பாண்ஸ் என்பவர் ரெனரில் இருந்து ஒரு படி மேலான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றார் என்று கூறலாம். இவர் தேசிய சமூகத்தின் உண்மை நிலைமை பற்றியும் அதனுடைய தேசிய தன்னியக்கத்திற்கான போராட்டங்கள் ஒரு தேசிய ஆதிக்கத்திற்கானவை அல்லது விடுதலைக்கான போராட்டங்களாக இருக்கின்றது என்பதை ஆய்ந்தறிவிக்கின்றார். இவர் மேலும் விளக்குகையில் தேசியம் பற்றிய பிரச்சனை சம்பந்தமான முடிவானது சர்வதேச சோசலிசப் புரட்சியில் தீர்க்கப்படும் எனப் பார்த்திருக்க முடியாது என்றும் அதனை அவ்வாறு பிற்போடல் பிழையான எடுகோள் என்றும் விபரித்திருப்பது அவர் தேசியம் பற்றிய ஒரு சரியான நிலைப்பாட்டினை எடுப்பதற்கான அறிகுறிகளாகத் தென்படுகின்றது. எங்காவது தேசியம் பற்றிய பிரச்சனைகள் எழும் போது அவை உடனுக்குடன் தீர்க்கப்படல் வேண்டும் என இவர் தெளிவாக கூறியிருக்கின்றார். இவரின் விவாதத்தில் நவீன முதலாளித்துவமானது தேசிய அரசுகளில் நம்பிக்கை அற்றதாக உள்ளன என்றும் ஏகாதிபத்தியத்தின் கீழ் ஒரு கூட்டாச்சினை அதாவது பல்தேசியங்களைக் கொண்ட அரசின் உருவகத்தினை விரும்புகின்றது. பூர்சுவாக்களின் இந்நிலையானது தேசியத் தன்மைக்குரிய குறிக்கோளுக்கு துரோகம் இளைக்கும் தறுவாயில் தொழிலாளர் வர்க்கமானது தேசிய தன்மைக்குரிய போராட்டத்தினை முன்னெடுக்கலாம் எனவும் கூறியிருக்கின்றார். சமுதாயத்தின் மாற்றமானது சோசலிஸத்தின் நிலையை அடைந்தாலும் தேசியத்திற்குரிய சில அம்சங்கள் தொடரும் என பாண்ஸ் நம்பியிருக்கின்றார். எனவே தேசியங்களின் தோற்றமானது பொருளாதார அடிப்படைக் காரணிகளில் தோன்றுகின்றது என்பதை மறுதலித்து நிற்கின்றார்.
பாண்ஸ் இன் மற்றைய சிந்தனைகள் சில கற்பனைத் தன்மையைக் கொண்டிருப்பினும் தேசியம் பற்றி அவர் வைத்த நிலைப்பாடானது சோசலிச இயக்கங்கள் முன் வைத்த கற்பனாவாதத் தன்மையை விட மிகவும் ஓர் ஜதார்த்தமான நிலைப்பாட்டினைக் கொண்டவை என்றே கூறவேண்டும். லெனின் கூட சோசலிசப் புரட்சியின் பின் தேசியங்கள் தத்தமது தேசியத் தன்மைகளை இழந்து விடும் என்று கருதியிருக்கிறார். இங்கு வெளிப்படையான பாட்டாளிவர்க்கத்தினர் எந்த ஒரு பொருளாதார அடிப்படைத் தன்மையிலும் தத்தமது தேசிய தன்மை மீதான ஆர்வத்தினைக் கொண்டிருக்கின்றார்கள் என்பது கணிப்பிடப்படவில்லை. ஆகவே பாண்ஸ் இங்கே மார்க்ஸினதும் எங்கெல்சினதும் தேசியம் பற்றிய பிழையான நிலைப்பாட்டினை திருத்தியிருக்கின்றார் என்றே கூறலாம்.
ரோசா லக்சம்பேக்ஸ் தேசியம் பற்றிய மார்க்ஸிய சிந்தனையில் ஒரு தீவிரமான நிலைப்பாட்டினை வைத்திருக்கின்றார். தேசிய அரசுகள் என்பது ஓர் இடைநிலையானது, நிலையற்றது. இதில் தொழிலாளர் வர்க்த்தினர் நேரடித் தொடர்பு எதுவும் அற்றவர்களாக இருக்கின்றார்கள். தேசியங்களுக்கிடையில் உள்ள தடைகள், எல்லைகள் மற்றும் தேசிய ஒடுக்கு முறைகளையும் தகர்ப்தற்கு குறுகியதும் சிறந்ததுமான ஓர் வழி ஒட்டுமொத்தமான ஓர் சர்வதேசிய பாட்டாளிவர்க்க புரட்சியே என்று கூறுகின்றார். இங்கே தேசியங்களின் தேசிய சுயநிர்ணயத்தினை ஓர் சர்வதேச பாட்டாளிவர்க்க நிலைப்பாட்டிலிருந்து எதிர்த்திருக்கின்றார். இவரைப் பொறுத்த மட்டில் தேசிய சுயநிர்ணயம் என்பது பொதுவாக பல்வேறு வர்க்கங்களினை அடக்கியிருக்கும் சமூகங்களில் ஆளும் வர்க்கத்தின் ஓர் விடயமாக வெளிக்காட்டி இருக்கின்றார். இவரின் இத்தீவிர நிலைபப்ாட்டினை லெனின் கடுமையாக விமர்சித்திருக்கின்றார்.

லெனினின் எழுத்துக்களுள் ஒன்றான தேசியம் பற்றிய கேள்வி (National Question) இல் தேசிய அரசிற்குரிய விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. தேசிய அரசானது பூர்சுவாக்களின் மத்தியப்படுத்தப்பட வேண்டிய அவசியத்தின் அடிப்படையிலேயே உருவாகின்றது என்றுரைக்கப்படுகின்றது. மேலும் லெனின் கூறுகையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் ஆசிய நாடுகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தேசிய அரசுகள் உருவாகியது போல் ஓர் பூர்சுவா ஜனநாயகப் புரட்சிக்குள்ளாக செல்ல வேண்டும் என்றும் ஆராய்ந்திருக்கின்றார். இத் தேசிய அரசின் தன்மை சர்வதேச பாட்டாளி வர்க்க சோசலிஸ் அமைப்பினை சிதைக்கப்படும் என்ற கருத்தினை வைத்திருக்கின்றார்.
தற்கால அரசியல் போராட்டங்களில் சோசலிஸவாதிகளின் நிலைப்பாடானதும், ஈடுபாடானதும் அனைத்து ஜனநாயகத் தன்மை கொண்ட தேசிய விடுதலை இயக்கங்களை முற்று முழுதாக ஆதரித்தலாக இருத்தல் வேண்டும் என்று தேசியம் பற்றிய கேள்வி என்ற கட்டுரையில் தெளிவாக காட்டியுள்ளார்.
சர்வதேச பாட்டாளி வர்க்க புரட்சியின் அடிப்படையில் போலந்து தேசிய சுயநிர்ணய போராட்டத்தினை எதிர்த்து ரோசா லக்சம் பேக்கும் அவர்களின் சகாக்களும் எடுத்த நிலைப்பாட்டினை லெனின் வன்மையாக விமர்சித்திருக்கின்றார். மேலும் விளக்குகையில் ஏகாதிபத்தியத்தின் கீழும் தேசிய ஒடுக்கு முறைக்குக் கீழும் ரஸ்யாவினதும் போலிசினதும் தொழிலாளர்களின் ஒன்று கூடிய சோசலிசப் போராட்டத்தினை முன்னெடுக்க முடியாது. மாற்றாக சுயநிர்ணயப் போராட்டத்தினை மறுதலிப்பதன் மூலம் எதிர்சக்திகளை வலுப்படுத்துவதாகிவிடும் என்று கூறப்பட்டிருக்கின்றது. A
சர்வதேசிய சோசலிசத்தினை நோக்கிச் செல்வதற்கு தேசியங்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தலின் ஊடாகவே முன்னெடுத்தல் வேண்டும். அல்லது ஒரு தேசியம் இன்னொரு தேசியத்தின் மீது ஆதிக்கத்தினை செலுத்தும் போது ஒன்றுபட்ட பாட்டாளிவர்க்கப் புரட்சி சாத்தியமற்றது. இங்கே தேசிய சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து போகும் உரிமை ஒன்றுதான் என்பது லெனினின் நிலைப்பாடாகும். இதில் லெனின் தேசியம் பற்றிய நிலைப்பாட்டினை வைத்து நிறுத்தியிருந்ததுடன் தேசியம் பற்றிய பிரச்சனையில் உள்ள சமூகங்கள் மீது ஒரு அபிமானத்தை காட்டியிருந்தாரே அன்றி தேசியம் பற்றிய ஒரு சித்தாந்தத்தினைப் பற்றிய ஆய்வினை வெளிக்கொணரவில்லை.
மேலும், லெனினின் நிலைப்பாட்டில் இருந்த சில தளம்பல் நிலை அதன் தேசியம் பற்றிய ஆய்வு போதியளவாக இருக்கவில்லை என்பதினைக் காணக்கூடியதாக இரு க்கின்றது. அதாவது உலகமானது ஒரு சமமான, தூய தேசிய அரசுகளின் வளர்ச்சியை முதலாளித்துவம் இட்டுச் செல்கின்றது என்றும் தூய தேசிய அரசுகள் உருவாகுகையில் தேசிய எல்லைகள் அற்றுப்போகின்றது என்பது அவரின் பிரதான நிலைப்பாடு ஆகும். இந்நிலைப்பாடு மார்க்சிடம் இருந்து லெனினால் உள்வாங்கப்பட்ட ஓர் நிலைப்பாடாகும்.
மறுதலையாக முதலாளித்துவமானது தன்னகத்தே ஓர் சமனற்ற வளர்ச்சியைக் கொண் டிருக்கின்றது. உதாரணமாக இன்றைய ஐரோப்பாவில் உள்ள ஒவ்வொரு நாடுகளிலும் தேசிய அரசினுள் அடக்கப்படும் தேசியங்களும் தேசிய சிறுபான்மை மக்கள் தேசிய சுய நிர்ணய உரிமையை வேண்டி நிற்கின்றார்கள். பிரித்தானியாவில் வேல்ஸும் ஸ்கொட்லாந்து தேசியம்.

Page 10
லெனின் பிரித்தானியாவுக்கும் ஸ்கொட்லாந்திற்கும் இடையிலான தொடர்பினை பார்த்திருக்கின்றார். ஆனால் பிரித்தானியா தன்னகத்தே ஒரு பல்தேசிய அரசு என்பதை அடையாளம் காணத் தவறியிருக்கின்றார். இன்று பிரித்தானியா ஐரோப்பியாவிலேயே மிகுந்த ஒரு பல்தேசிய அரசாகும்.
லெனினிற்குப் பின்பு இன்றுவரை ஓர் குறிப்பிடத்தக்க சித்தாந்த வளர்ச்சியானது தேசிய நிலைப்பாட்டில் உருவாகவில்லை. ஏனெனில் இரண்டு பிரதான காரணிகள் இதன் பின்னணியில் இருக்கின்றதைக் காணலாம். முதலாவதாக அரை நூற்றாண்டு காலமாக அமைப்பு வடிவமைக்கப்பட்ட மார்க்ஸிஸமானது தேசியம் பற்றிய போதியளவு சித்தாந்த வெளிப்பாடில்லாது இயங்கியிருக்கின்றது. இரண்டாவதாக எதிர்ப்பு இயக்கங்களின் மத்திய கூறு தேசியவாதமாக இருந்தது. இக்கட்டத்தில் தேசியவாதமானது நாஸிசத்தினையும் பாசிசத்தினையும் இட்டுச் செல்லும் ஓர் பயத்தினை ஏற்படுத்தி இருக்கின்றது.
ஸ்டாலின் தேசியம் பற்றிய பார்வையை அவரின் மார்க்கிசமும் தேசியமும் பற்றிய கேள்வி என்ற கட்டுரைதனைப் பார்க்கும் போது பின்வருவன புலப்படுகின்றது. 1. பொது மொழி, பொதுவான பாரம்பரியப் பிரதேசம், பொதுப் பொருளாதாரம், பொதுவான பெளதீக உருவாக்கம் இவையனைத்தும் ஒன்று சேருகின்ற பட்சத்தில் தேசியம் உருவாகின்றது.
ஸ்ராலினது வரலாற்று ரீதியான காரணிகள் ஹஸ்கி, ஹெகல் இவர்களின் கருதுகோள்களில் இருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கின்றது.
தேசிய பெளதிகமானது ஒரு பொதுவான தனித்துவத்திலிருந்து உருவானதல்ல. மேலும் பல்வேறு இதர காரணிகளினாலும் உருவாகின்றன என்பது ஆரீாயப்படவேண்டும்.
எவ்வாறு இருப்பினும் வரலாற்று ரீதியான தேசியம் என்பது ஒரு குறிப்பிட்ட தேசிய மனநோக்கு ஆனது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வரலாற்று நிலையில் எழும் ஒரு விடயமாக இருக்கலாம். ஆனால் இதனை ஒரு தேசியத்தினை அடையாளம் காண்பதற்கு ஓர் உலகளாவிய சித்தாந்தமாக்க முடியாது.
போலந்து, ரஸ்யா, ஜெர்மனி, ஒஸ்ரியா கீழ் மூன்றுபட்ட அரசாக நூற்றாண்டு காலமாக இருந்திருக்கின்றது. அங்கே ஒரு பொது பொருளாதாரமோ அல்லது பொது மொழியோ இருக்கவில்லை. ஆனால் போலந்து தேசியமாக எவ்வாறு உருவாகியது.
இங்கு ஸ்ராலின் தனது சொந்த எழுத்தினை மறந்து போலந்தினை தேசியமாகப் பார்த்திருக்கின்றார். எனவே ஸ்ராலினின் பார்வையினை மார்க்ஸிசத்தின் ஒரு கருவியாக பாவித்து தேசியங்களின் பிரச்சனையை அணுகமுடியாது.
எனவே மேலே பார்த்த வெவ்வேறு மார்க்ஸிஸவாதிகளின் தேசியம் பற்றிய பிரச்சனையில்
அவர்கள் நிலைப்பாட்டிலிருந்து மார்க்ஸிஸமானது தற்போதைய உலகில் மிகவும் முன்னணி வகிக்கும் கருத்துப்பாடான தேசியம் பற்றிய போதியளவு பார்வையினைக்

கொண்டிருக்காதது மார்க்கிஸ பாதையில் ஓர் பெரிய தோல்வி என்பதை உள்வாங்கிக் கொண்டு தேசியம் பற்றிய பிரச்சனையை பற்றி ஆய்வதற்கு மார்க்சிசத்திற்கு வெளியில் ஒரு பெரிய தேடலை நடாத்த வேண்டிய கட்டாய கடமைப்பாட்டில் நாம் இருக்கின்றோம். இதனை மார்க்சிசவாதிகள் செய்யத் தவறும் பட்சத்தில் அவர்கள் மார்க்சிசத்தினை விஞ்ஞான பூர்வமாக இயங்கியலுக்கு ஊறு வளைவிப்பதாக இருக்கும். சமூக இயங்கியலில் தேசியம் பற்றிய எண்ணப்பாடு ஒரு வலுவான அங்கமாக இருப்பதினை நாம் எல்லோரும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. எங்கெங்கு ஒடுக்குமுறை எழுகின்றதோ அங்கங்கு மார்க்சிஸம் முதலில் குரல் கொடுக்கத் தவறும் பட்சத்தில் எதிர்ச்சக்திகள் இதனை இன்னோர் எல்லைக்கு சமூகத்தை இட்டுச் செல்வார்கள்.
எனவே மேற்கூறிய விடயங்களைக் கருத்தில் கொண்டு தேசியம் பற்றிய பிரச்சனையில் உணவுபூர்வமான உண்மையான தேடலை மேற்கொள்ளுவதன் மூலம் மார்க்சிசத்தினை ஓர் உயிருள்ள, வலுவான சித்தாந்தமாக வளர்த்தெடுத்தல் வேண்டும்.
செ. சிவசோதி

Page 11
'(3 f
g5dUID
மார்க்ஸிஸம் தொடர்பான
விமர்சனக் குறிப்புகள்
- கேசவன்.
இடத்துக்கிடம், சூழலுக்கு சூழல் மாறுபட்ட பரிமாணங்களைக் கொண்ட தேசியப் பிரச்சனைக்கான தத்துவத்தை உருவாக்குவதில் சகல தத்துவவியலாளர்களும் தோல்வியையே கண்டுள்ளனர். ஒன்றுபட்ட சமூக தத்துவமாக தேசியப் பிரச்சனையை உருவாக்குவதில் உள்ள கஷ்டங்களையும் பரவலாக பலரும் அங்கீகரித்தும் உள்ளனர். இங்கு, தனக்குள் உள்வாங்கிக் கொள்ள திராணியிருந்தும், மார்க்சிசம் தனது குறுகிய போக்குகளால், ஆக்கபூர்வமற்ற தனது வரலாற்றால் தேசியபிரச்சனையை ஒரு எல்லையில் உள்ள பிரச்சனையாகவே கொண்டிருக்கிறது.
மார்க்சிசம் தேசியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது, வெறுமனே, ஒரு விபத்து அல்ல. மிகவும் குறுகிய சட்டம் போட்டு, இதுதான் மார்க்சிசம் என மார்க்சியவாதிகள் அறைந்துவிட்டதால், உலக ரீதியில் நாளுக்கு நாள், சகாப்தத்துக்கு சகாப்தம் தோன்றும் பிரச்சனைகளின் பரிமாணங்களுக்கு மார்க்சிசத்தினுள் இடமில்லாமல் போய்விடுகிறது.
ஈழம் தொடக்கம் ஸ்கொட்லண்ட் ஊடாக அசர்பைஷான். வரையும் இன்று ஒரு கூர்மையடைந்த பிரச்சனையாகவும், மாற்றத்துக்கு வேண்டிய சமூகசக்தியாகவும் விளங்கும் தேசியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமையால், உலக ரீதியில் மார்க்சிசத்தின் தோல்வியும் தவிர்க்க முடியாததாகிறது.
பெண்கள், நிற, சூழல், பிராந்திய போன்ற பல பிரச்சனைகளுடன் முக்கியமாக தேசியப்பிரச்சனை, மார்க்சிசம் தன்னை காலகாலமாக சுற்றி கட்டிவைத்துள்ள அரணை உடைத்து, ஒரு பரந்த சட்டத்தில் வைத்து பிரச்சனைகளை அணுகுவதற்கு வற்புறுத்துகிறது.
"மார்க்சிசமும் தேசியமும்" என்ற மிகவும் விரிவான பகுதியில் கால் வைத்திருக்கிறோம். மார்க்சிசம், தேசியம் - இவை சுலபமாக கடந்துவிட முடியாத விடயங்கள். ஆதலால் இவை இரண்டும் சம்பந்தப்பட்ட சில குறிப்புக்களை கூறலாம் என நினைக்கிறேன். குறிப்பாக தேசியம் சம்பந்தமான மார்க்சிசத்தின் மீதான விமர்சனக் குறிப்புகளாகக் கொள்ளலாம். சுருக்கமாக தேசியம் பற்றி மார்க்சிசம் கொண்டிருந்த நிலைப்பாடுகளைப் பார்த்தால்: முதலில், தேசியமானது முதலாளித்துவ வர்க்கத்தின் கருத்தியலாக பார்க்கப்பட்டது. ஏனெனில், தேசியக்கருத்தியல் (Bourgeoisideology) வளர்ந்து வரும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு, நிலப்பிரபுகளுக்கு எதிராக சேவை செய்தது.

இரண்டாவது, தேசிய அரசின் வளர்ச்சி, ஆரம்ப கால முதலாளித்துவத்துக்கு அவசியமானதொன்று. ஆனால், முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் தேசியம் படிப்படியாக தேய்ந்து மறைந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
மூன்றாவது, தேசியப் போராட்டம் ஒரு பிரத்தியேக வடிவிலுள்ள வர்க்கப் போராட்டம். ஆகவே இது சர்வதேச ரீதியில் நடாத்தப்பட வேண்டிய போராட்டம். வர்க்க ரீதியில் ஏற்படும் கூர்மை தேசியப் போராட்டத்தை மழுங்கடித்து விடும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 20ம் நூற்றாண்டின் உலக அரசியல் இந்த வாதங்களில் எதையுமே பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்பது யாவரும் அறிந்த விடயம். மேற்கு நாடுகளில் நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சியிலும், முதலாளித்துவத்தின் வளர்ச்சியிலும், தேசியத்துக்கு நிறையவே பங்குகள் உண்டு. ஆனால், தேசியம் வெறுமையாக முதலாளித்துவத்துடன் மட்டுமே எழுவதாகக் கொள்ளமுடியாது. ஏனெனில் முதலாளித்துவம் தன் வாசனையைப் பரப்ப முதலே சீனாவின் கெடுபிடியால் வியட்நாம், கொரியா போன்ற நாடுகளின் ஆரம்பகால வரலாற்றில் அத்தேச மக்கள் பலமான தேசிய உணர்வுகளை கொண்டிருந்தார்கள் என்பதை மேற்சொன்ன எடுகோளினால் விளக்குவது கடினமாகும்.
தேசத்தை மேற்கட்டுமானங்களில் ஒன்றாகக் கருதி அடிப்படையான உற்பத்தி முறையிலான மாற்றம் தேசியத்தை மாற்றிவிடும் அல்லது இல்லாது செய்து விடும் என்றும் மார்க்சியக் கருத்து, தேசத்தை பொருளாதாரக் காரணிகளே தீர்மானிப்பதாகக் குறைத்து மதிப்பிடுவது, வெறும் யாந்திரீகமானதாகும். இது தேசியத்தின் ஓரளவு சுயாதீனமான சக்தியை, அதன் அரசியலை, வரலாற்றை அடிப்படையில் யதார்த்தத்தை மறுக்கும் போக்காகும்.
மொஸ்கோவிலிருந்து, நம்மூர் காத்தான்குடி வரை வரலாற்றுப் போக்கு ஒருங்கமைவாக, படைக்கப்பட்ட நடு காத்திரத்துக்கேற்ப நடைபெறும் என எதிர்பார்த்து, உலகப் புரட்சிக்கான திட்டத்தில் பலவகைகளையும் நன்றாகத்திரட்டி ஒரு முழுமையான இயக்கமாக்கி செயல்படலாம் எனக் கொள்வது வரலாற்றுப் போக்குக்கு எதிரான செயல்பாடாகும்.
புரட்சிக்கான வேலைத்திட்டம் உள்ளூர் நிலைமைகளுக்கேற்ப வகுக்கப்படவேண்டும். முரண்பட்டு நிற்கும் தேசிய நிலைமைகளை முதன்மையாகக் கருதவேண்டும். தேசம் வெறுமையான மேற்கட்டுமானமல்ல. அது மொழி கலாச்சாரம் போன்று ஒரு infrastructure ஈழத்தில் தேசியம் எரியும் பிரச்சனையாக இருக்கும்போது சர்வதேசியம் என்ன சொல்கிறது என்பது முதன்மையானதல்ல. இங்கு சர்வதேசியங்கள் தான் வெறும் மேற்கட்டுமாணம், அதனால் தான் வரலாற்றில் சுலபமாக அவை தூக்கி எறியப்பட்டன.
தேசம் மேற்கட்டுமாணங்களில் ஒன்று. எனவே வரலாற்றில் நிரந்தரமில்லாத, தற்காலிகமான ஒரு வகையினை சேர்ந்ததாகும் என மார்க்சிசம் கொண்டிருந்த நம்பிக்கை மானுடத்தின் மானுடலியல் கூறுகளை, இயற்கையான போக்குகளை மறுதலித்த தொன்றாகும். தேசம் வரலாற்றில் நிரந்தரமற்றது என்பது உண்மையான போதிலும், பொய்யானதும் கூட. அதன் நிரந்தரமான, பொருள் பொதிந்த அம்சங்களைப் பார்க்க மார்க்சிசம் தவறியுள்ளது.

Page 12
தேசம் வெவ்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்பட்டு ஒரு வரலாற்று விபத்தாகத் தோன்றுகிறது. வெவ்வேறு காரணிகளும் ஒரு சீரான வகையில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் தேசத்தின் தோற்றத்துக்கு இல்லை. நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சி அல்லது இன்னோரன்ன காரணங்களினால் வரலாற்றின் ஒரு கட்டத்தில் தேசம் தோன்றுவதால், இந்த வரலாற்று உருவாக்கம் அதன் நிரந்தரமின்மையை சுட்டிக் காட்டினாலும், மாறமுடியாத அம்சமான கலாச்சார ஒழுங்கமைவு ஒரு பூச்சிய புள்ளியில் இருந்து தொடங்கிவிடுகிறது. இந்த தொடக்கப் புள்ளி சடங்குகள் சம்பிரதாயங்கள் போன்றவற்றை திரும்ப திரும்ப செய்வதற்கு வழிவிடுவதால், இந்த காலம் மீளமுடியாததாகிறது. இது வரலாற்றில் குடிகள் தொடக்கம் தேசம் வரை வளர்ந்து இன்னும் இன்னும், புதிய தொழில்நுட்ப வளர்ச்சியுடன் வளர்ந்து கொண்டு போகும் அம்சமாக உள்ளதே ஒழிய, தேய்ந்து போகும் அம்சமாக இல்லை.
இப்படியாக மானுடத்தில் பூதிந்துவிடும் அம்சங்கள் தேசியத்துக்கான பொருளை தருகிறது. இது போன்ற இயற்னிகிய்ான, மானுடலியல் அம்சங்களை விளக்குவதற்கு குறுகிய மார்க்சிச பார்வையில் இடமில்லை.
வரலாற்றுப்பொருள் முதல் வாதத்தில், நாங்கள் என்ன உற்பத்தி செய்கிறோம், என்ன சிருஷ்டிக்கிறோம் என்று அறியலாமே ஒழிய, நாங்கள் எவற்றை தீர்மானிக்க முடியாது என்று அறியவோ, எவற்றால் உருவாக்கப்படுகிறோம் என்று அறியவோ வழியில்லை.
மார்க்சிசக் கருத்தான, ஐக்கியமான வரலாற்றுப்போக்கு ஒரு கற்பனாவாதக் கருத்தாகும். இது தேசம் என்ற கருத்தாக்கத்தை வரலாற்றில் இருந்து இல்லாது செய்வதற்கான கருத்தாக்கமாகும். ஐந்து வகையான உற்பத்தி முறைகளால் வரலாறு சீராக, ஒருங்கமைவாக முன்னேறுவதாக கொள்வது தேசிய, கலாச்சார வேறுபாடுகளை குறைப்பதாகும். உண்மையில் இது முதலாளித்துவ (Bourgeois analytic reason) ஆய்வு வகைகளைச் சேர்ந்ததே. மாக்சிசத்துள் தோன்றிய இவ்வகையான போக்கு மேற்கின் Enlightenment மரபில் வேரூன்றியுள்ளது. இது கடைசியில் தனித்தன்மைகளை அழித்து சர்வதேச சோவியத் குடியரசை அமைக்கமுடியும் என்ற லெனினிசத்தின் வினோதத்திற்கு இட்டுச் சென்றது. இதன் விளைவாக சர்வதேசத்தின் பேரில் ஐரோப்பியாவை மையப்படுத்திய (Euro Centrical) கருத்துக்கள் ஒருபுறமும், ரஷ்யப் பெருந்தேசீய வாதக் கருத்துகள் மறுபுறமும் வெளிக்கிட்டதைக் காணலாம். மேலும் இதற்குமுதலே ஏங்கல்சை சிலாலிக் தேசங்களை வரலாற்று தேசங்கள் என அழைக்கவும், ஆசிய மக்களை காட்டு மிராண்டிகள் என மார்க்ஸ் அழைக்கவும் வழிகோலியது.
Enlightenment மரபின் பகுத்தறிவு வாத (Rationalist) மரபானது, உணர்வுகள், ஆளுமைகள் போன்ற மானுட அடிப்படைகளை மறுத்ததுடன் சுபாவமான அறிவு (lnstinct) உள்ளுணர்வான அறிவு (Intuitive) போன்றவற்றை செல்லத்தகாததாக்கியது. இங்கு தேசியமானது சுபாவம் - Instinctசர்வதேசியமானது மனச்சாட்சி - Conscience எப்பொழுதும் தேசிய சுபாவம், சர்வதேசிய மனசாட்சியுடன் சண்டையிட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் தேசியத்துக்கே மக்கள் சக்தி அதிகம் உண்டு.
தேசம் என்ற கருத்து வரலாற்றுக்கு எதிராக ஏற்படுத்தும் என்ற வகையில் உயர்ந்த பட்ச பொருள் முதல்வாதக் கருத்தாகும். மார்க்ஸ் நினைத்ததைவிட வரலாற்றின்

யதார்த்தம் இயங்கியல் தன்மையும் பொருட் தன்ம்ையும் கூடியது.
சர்வதேசிய மயமாக்கல் என்பது மார்க்சுக்கு எல்லாத் தனித்தன்மைகளையும் ஒன்று கலத்தல் என்று பொருள்படும்போது, இன்றைய யதார்த்தத்தில் தேசிய, பிராந்திய அபிலாசைகளை உயர்த்தி பிடிப்பது பொருளாதார சமத்துவத்துக்கு அவசியமான தொன்றாகும். அடையாளத்தின் இயங்கியல் கருத்தானது அதாவது Dialectic concept of identity நிச்சயமாக வேறுபாடுகளை கணக்கில் கொண்டிருக்கும்.
ஒன்றுடன் ஒன்று தேசங்கள் உற்பத்தியிலும் பரிமாறலிலும் தங்கியிருத்தலானது, ஐக்கியத்துக்கான வழியாக இருந்தாலும் இது கலாச்சார வேறுபாடுகளுடன் இயங்கியல் முறையில் தொடர்புபடாமல் சாத்தியப்படாது.
gsi6opu E.E.C. (Europeon Economic Community)g LogoTip 05 160oiLIT6 பொருளாதார சமத்துவம் அல்லது ஐக்கியம் தேசங்களின் கலாச்சார வேறுபாடுகளுடன் இயங்கியல் முறையில் தொடர்புபட்டுள்ளது புலனாகும். ஜேர்மனியின் வட்டிவீதமும் டென்மார்க்கின் இறைமையைப் பற்றிய வாதமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுவதால் தான் அவர்கள் பொருளாதார சமத்துவத்தையோ, பொருளாதார ஐக்கியத்தையோ பேசசுடடியதாக இருக்கிறது.
சர்வதேச பாட்டாளிவர்க்க புரட்சியின் பேரில், பகுதியான தேசிய எழுச்சிகளை புறக்கணிப்பதானது அதாவது, சர்வதேசியத்தின் பேரில் தேசியம் தியாகம் பண்ண வேண்டும் என்று கோருவது உண்மையான எதிர்கால சோசலிசத்துக்கான அனுகூலங்களை மறுப்பதாகும். மார்க்கம் எங்கெல்சுவும் Czechs, Croats, Southern Sloves போன்ற தேசங்களின் எழுச்சியினை சர்வதேச பாட்டாளிவர்க்கத்தின் பேரில் மறுத்திருந்தனர். கொம்யூனிசம் என்ற பெயரில் அமைவுற்ற பின்னரும் ஹெங்கேரியிலும், செக்கோசிலாவாக்கியாவிலும் ரஷ்ய பெருந்தேசிய வாதத்துக்கெதிராக கிளர்ச்சிகள் நடைபெற்றன. இன்றைய கிழக்கைரோப்பாவில் எல்லாத் தேசிய இனங்களும் தமது சுய அடையாளத்திற்காக போராடுகின்றன. எத்தனையோ வருட சோசலிச ஆட்சியின் முடிவு என்ன? 1989இல் போலந்தின் அரசியல் மாற்றம், ரஷ்யாவுக்கெதிரான தன்மையையும் கொண்டிருந்ததே. இத்தேசிய இனங்களின் போராட்டங்களை குறுகிய மார்க்சியத்தில் எங்கு வைப்பது? யூகோஸ்லாவியாவில் இவ்வளவு வருட சோசலிச ஆட்சிக்குப்பின் CroatSஉம், Bosniansஉம் ஒரே மொழியாக இருந்தும் கூட இன்று Serbian பெருந்தேசியத்தால் நசுக்கப்படுகிறார்களே இதை என்னென்பது? தியனமென் சதுக்கத்தில், மாணவர்கள் மீது ரதம் ஓடிய கொம்யூனிச தலைமைப்பீடம் கிழக்கைரோப்பிய எல்லா சோசலிச அரசுகளும் ரஷ்யப் பெருந்தேசிய வாதத்தின் அடிப்படையிலேயே அமைந்தன.
திஸத்தியன் போராட்டக்காரர்கள் 18 வயதும் 20 வயதுமே உடையவர்கள். அவர்களுக்கு அரசியல் தெரியாது, அவர்களை படிப்பிக்க வேண்டும் என்று கூறுகிறதே இதை என்னென்பது? இப்படியாக உலக வரலாற்றில் முக்கியமாக நம்தேசம் உட்பட்ட தேசியத்தின் முக்கியத்துவம் உணரப்படும் வேளை, ஸ்கொட்லண்ட் தானாக தீர்மானித்தால் பிரிந்து போகலாம் என்று முதலாளித்துவ வாதிகளுக்கே சொல்லும் தைரியம் உள்ளபோது, சோசலிசவாதிகள் மறுதலிப்பை என்னவென்பது?

Page 13
குறைவிருத்தி நாடுகளில் காலனியாதிக்கத்தை மூலதனம், முதலாளித்துவ வளர்ச்சியை உந்துபண்ணும். ஆகவே சோலிசத்திக்கான முன்நிபந்தனை பெறப்படும் என்றதன் பேரில் ஆதரித்தவர்கள் மூன்றாம் உலக நாடுகளில் நடைபெற்ற ஒவ்வொரு புரட்சியும் தேசியத்தை அடிப்படையாக வைத்தே நடந்த வரலாறுகளை எப்படி மறுக்கமுடியும். மெஸ்சிக்கோ, சீனா, கியூபா, வியட்நாம் போன்ற நாடுகளை உதாரணங்களாகக் கொள்ளலாம்.
எல்லா நவீன வரலாறுகளிலும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம், தேசியவிடுதலைப் போராட்டத்தில் வேர் விட்டே பெறப்பட்டிருக்கிறது அல்லது ஒரு தேசிய அடையாளத்தை (National identity) பாதுகாக்கும் போராட்டத்திலேயே பெறப்பட்டுள்ளது.
சோசலிசத்தில் 1919இலும் 1941இலும் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு போராட்டத்தினூடே போல்ஷிவிக்கட்சி, மக்கள் ஆதரவை பெருமளவில் பெற்றது. தேசியத்தினூடாகத்தான் சோவியத் சோசலிச குடியரசை ஒவ்வொரு கூட்டத்திலும் போல்ஷிவிக் கட்சியினால் பலப்படுத்த முடிந்தது. இங்கு பிரதான காரணி தேசியமே.
கிழக்கைரோப்பிய எல்லா சோசலிச அரசுகளும், ரஷ்யப் பெருந்தேசிய வாதத்தின் அடிப்படையில் அமைந்ததை எப்படி மறுக்கமுடியும். சீனாவின் சோசலிசப் புரட்சி, அகிலங்களின் (Internationaly) துணையின்றி, அதை விட 3வது அகிலத்திற்கு எதிராகவே பெறப்பட்டது. இப்படியாக உலக ரீதியான அரசியல் மாற்றத்தின் உண்மையான உந்துசக்தியாக தேசியம் திகழும்போது அதை மத்தியப்படுத்தாத ஆராய்வுகளால் நீண்ட தூரம் செல்லமுடியாது என்பதே உண்மை.
:::: இந்த கட்டுரையை தயாரிப்பதற்கு உதவியாகவிருந்த ரெஜி டெப்ரேயின் ருத்துக்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.
 
 
 


Page 14
P.O. Box 4035, London sy
 
 
 
 
 
 
 

R Farrata gr
27-73 Wigfí Stree
Palistorii Mae'r iaifio'r "E. J. (22 IT) Tel: 020.84 F2833