கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு 9

Page 1


Page 2

இலங்கை எழுத்தாளர்கள்,
ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு
தொகுதி 09
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களினி விபரம்
Umabuó 02
கலாபூஷணம் tafaflumufar
- வெளியரிடு:
*சிந்தனை வட்டம்" இல 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை 20802, ரீலங்கா. தொலைபேசி / தொலைநகல் 0094-81-2497246 275 / 2007

Page 3
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களினி விபரத்திரட்டு தொகுதி - 09
ஆசிரியர் :
பதிப்பு : வெளியீடு :
அச்சுப்பதிப்பு :
கணனிப் பதிப்பு : முகப்பட்டை :
ISBN பக்கங்கள் :
பீ.எம். புன்னியாமீன்
1ub uglia - 11.11.2007
சிந்தனை வட்டம். 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை, ரீலங்கா. சிந்தனை வட்டம் அச்சீட்டுப் பிரிவு 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை, பூரீலங்கா.
எஸ்.எம். ரமீஸ்தீன்
ஸஜிர் அஹமட் (இலங்கை)
978-955-8913-67-3
12
240/- E 5.00
Ilangai Eluththalarkal, Oodahaviyalalarkal, Kalaingarkal Viparaththirattu. Vol - 09
Subject : Brief History of Fifteen. Migrant Srilankan Writers, Journalists and Artists.
Author : Printers & Publishers:
Edition:
Language : Type Setting : Cover Disining:
ISBN
Pages :
Price :
P.M. Puniyameen,
Cinthanai Vattam CV Publishers (Pvt) Ltd, 14, Udatalawinna Madige, Udataławinna 20802, Sri Lanka.
si Edition 11 2007
Tamil
S.M. Rameezdeen
Sajeer Ahmed (SriLanka)
978-955-8913-67-3
112
240/- E 5,00
G) P.M. Puniyaneen, 2007
All Rights Reserved. No part of this l)ocumcilition mily he rent all or utilised, stored in a retrieval system, or transmitted it inty of it by y ('N, electronic, mechanical, photocopying, rccording ' tlicrwig, without le pi vir written permission of thc (thor,

சிந்தனைவட்டத்தின் 275வது வெளியீட்டில் D60 ந்திறந்து உங்களுடன்.
1960. ... 1
எனது பிறந்தநாள்.
என் பிறப்பால் நான் பெருமைப்பட்டுக் கொள்ள ஒன்றுமில்லை. எனவே இதுகாலம் வரை என் பிறந்த நாளை நான் கொண்டாடியதும் இல்லை.
ஆனாலும்.
எனக்கு விபரம் தெரிந்த காலம் தொட்டு என் பிறந்த நாளன்று ஏதாவதொன்றை சாதிக்க வேண்டும் என்பது எனக்குள் ஒரு சிறிய ஆசை. என்னை மீறிய ஒரு சக்தியைப் பற்றியோ, அல்லது என் இயலளவுக்கு அப்பாற்பட்டதொன்றைப் பற்றியோ நான் ஆசைப்பட்ட தில்லை. அப்படிப்பட்டதொன்றில் சாதனை புரிய வேண்டும் என்பது என் கற்பனையில் கூட இல்லை.
“ஒவ்வொரு மனிதனிடத்தேயும் ஏதோ ஒரு 'திறன் மறைந்தி ருக்கும். அந்தத் திறனை இனங்கண்டு கொண்டு, அதனை அபிவி ருத்தி செய்வதினூடாக சாதனைகள் புரிய முடியும்” என்பது எனது எதிர்பார்க்கை. நான் பாடசாலை மாணவனாக இருக்கும்போது என்னுள் மறைந்திருந்த எழுத்துத்திறனை என் ஆசான்களான அமரர் யோ. பெனடிக்ட்பாலன் மற்றும் ஜனாப் ஐ.ஹாஜிதீன் போன்றோர் இனங் காட்டினர். இனங்காட்டியது மட்டுமல்லாமல் என்னுள் மறைந்திருந்த திறனை வெளியே கொண்டு வந்து அதனை செப்பனிட்டனர். இதனா லேயே எழுத்துத்துறை என்பது எனக்குள் ஒரு சக்தியாக இருக்கின்றது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
03

Page 4
நான் பாடசாலையில் கற்கும் காலங்களில் (1973,1974 களில்) இளங்கதிர், இளங்காற்று, இளந்தென்றல் ஆகிய கையெழுத்து சஞ்சிகைகளை ஆசிரியராக நின்று நடத்தினேன். இச்சந்தர்ப்பத்தில் என் பால்ய நண்பரான ஏ. ஆர். எம். உவைஸ் (தற்போது அக்குரனை தேசிய பாடசாலையின் அதிபர்) பூரண ஒத்துழைப்பினை வழங்கினார். இக்கையெழுத்துச் சஞ்சிகைகளுக்கு நேரடி வழிகாட்டிகளாக என் ஆசான்களான அமரர் யோ. பெனடிக்ற்பாலன், ஜனாப் ஐ. ஹாஜிதீன் ஆகியோர் என்னை நெறிப்படுத்தினர். இக்கையெழுத்துச் சஞ்சிகை களுக்கு முகப்பட்டையை வ்ரைந்து தந்த என் மதிப்பிற்குரிய மற்று மொரு ஆசான் ஜனாப் எஸ்.ஏ. ஜெப்பார் அவர்களையும் இவ்விடத்தில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
இத்தகைய பின்னணியில் தான் 1976ம் ஆண்டுகளில் பத்திரி கைகளுக்கு துணுக்குச் செய்திகள், பழமொழிகள், நகைச்சுவைகள் போன்றவற்றை எழுதலானேன். அவைகளும் அவ்வப்போது தினகரன், தினபதி, சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளிலும், மறைந்த முற்போக்கு எழுத்தாளர் எச்.எம்.பி. மொஹிடின் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'அபியுக்தன், மற்றும் பலபிட்டிய அரூஸ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'ஜும்ஆ' ஆகிய பத்திரிகை களிலும் பிரசுரமாயின. இதிலும் ஒரு விசேடம் உண்டு. நான் எதிர் பாராத நேரத்தில் என்னால் அனுப்பப்பட்ட முதலாவது துணுக்கு இலங்கையில் நதிகள்’ எனும் தலைப்பில் 11.11.1976ம் ஆண்டு தினகரனில் பிரசுரமாகியது. இவ்வாறு முதலாவது துணுக்கு பிரசுர மானதும் என்னுடைய 16 பிறந்த தினத்தன்றாகும். இந்த எதிர்பாராத நிகழ்வே என் பிறந்த தினத்தன்று ஏதாவதொன்றை சாதிக்க வேண்டும் என்ற உணர்வினை என் மனதில் விதைத்தது.
அதேநேரம் ஒரு படைப்பிலக்கிய முயற்சியான என்னுடைய முதலாவது ஆக்கம் ஓர் உருவகக் கதையாகும். 'அரியணை ஏறிய அரசமரம்' எனும் தலைப்பில் அக்கன்னிக் கதை 1978 ஜூலை 02ம் திகதி தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமானது. என்னுடைய இந்த முதல் கதைக்கு திருத்தமிட்டுத் தலைப்பினையும் இட்டு தந்தவர் என்னுடைய மற்றுமொரு ஆசான் மடவளையைச் சேர்ந்த மிஹற்ளார் என்பவராவார்.
இவ்வாறு எழுத ஆரம்பித்த பின்பு என்னுடைய புத்தகமொன் றினை என் பிறந்தநாள் அன்று வெளிக்கொணர வேண்டும் என்ற ஆசை மாணவப் பராயத்திலேயே பதிந்துவிட்டது. அப்பதிவின் வெளிப்
04

பாடாக என்னுடைய 19து பிறந்தநாளன்று - 1979.11.11ல் தேவைகள் எனும் சிறுகதைத் தொகுதியினை கட்டுகளில்தோட்டை இஸ்லாமிய சேமநல சங்கத்தின் மூலம் வெளியிடக்கூடிய வாய்ப்புக்கிட்டியது.
1987.11.11ல் என்னுடைய சிந்தனைவட்ட வெளியீட்டு அமைப் பினை ஸ்தாபித்தேன். இதன் முதல் நூல் 1988 ஜனவரியில் வெளி வந்தது. சிந்தனைவட்டம் உருவாக்கம்பெற்ற பிறகு இன்றுவரை என்னு டைய ஒவ்வொரு பிறந்ததினத்தன்றும் ஏதோ ஒரு புத்தகத்தை வெளி யிட்டே இருக்கின்றேன்.
சிந்தனைவட்டத்தின் 100 நூல் இரட்டைத்தாயின் ஒற்றைக் குழந்தை' எனும் கவிதை நூலாகும். இந்நூல் 2000.11.11 கண்டியில் மிகப்பிரமாண்டமான முறையில் வெளியிடப்பட்டது. தனிப்பட்ட முறை யில் என்னுடைய 100 நூல் ‘இலங்கை எழுத்தாளர்கள், ஊடக வியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 04 ஆகும். இதனை 2006.11.11ல் நான் அச்சிட்டு முடித்துவிட்டேன். ஆனாலும் ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம் அந்நூலினை வெளியிட விருப்பம் தெரிவித்திருந்தமையினால் 2006.11.11ல் அப்புத்த கத்தை வெளியிடாமல் வெளியீட்டு சந்தர்ப்பத்தை ஜேர்மன் தமிழ் சங்கத்துக்கு வழங்கினேன்.
தற்போது உங்கள் கரங்களில் தவழும் சிந்தனைவட்டத்தின் 275வது வெளியீடு. இதனை என்னுடைய 47* பிறந்த தினத்தன்று அதாவது 2007.11.11ல் வெளியிடுவது குறித்து மிகவும் மகிழ்ச்சியடை கின்றேன்.
“இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர் களின் விபரத்திரட்டு 9* தொகுதியினை ‘புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - பாகம் 2 ஆக வெளியிடுகின்றேன். இத்தொகுதியில் மொத்தம் 15 புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலை ஞர்களின் விபரங்கள் இடம் பெற்றுள்ளன. இவர்களுள் ஜெர்மனியில் வாழும் அறுவரினதும், ஐக்கிய இராச்சியத்தில் வாழும் மூவரினதும், நோர்வேயில் வாழும் இருவரினதும், கனடா, டென்மார்க், பிரான்ஸ், இந்தியா ஆகிய நாடுகளில் வாழும் ஒவ்வொருவரினதும் விபரங்கள்
05

Page 5
இடம்பெற்றுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பதிவுகளும் இலங்கையிலும், சர்வதேச ரீதியிலும் பிரபல்யமடைந்துள்ள இலங்கை யின் பிரபல தேசிய பத்திரிகையான “ஞாயிறு தினக்குரலில்" 2007.08.01ம் திகதி முதல் 2007.11.04ம் திகதிவரை பிரசுரமானவை யாகும். இத்தொடரினை மனமுவந்து பிரசுரித்த “ஞாயிறு தினக் குரல் ஆசிரியர் திருவாளர் ஆர்.பாரதி அவர்களுக்கும், தினக்குரல் ஆசிரியர் குழாம் மற்றும் நிர்வாகத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். v
அத்துடன் முதலாம் பாகத்தில் 25 புலம்பெயர் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைப் பதிவாக்கியிருந் தேன். இரண்டு பாகங்களையும் சேர்த்து 40 புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களை பதிவாக்கியமை என்னுள் ஒரு மனத்திருப்தியைத் தருகின்றது. என் னால் பதிவாக்கப்பட்ட அனைவரினதும் விபரங்கள் பல தடவைகள் பரிசீலிக்கப்பட்டு, குறிப்பிட்டவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு அனைத்துத் தகவல்களும் உறுதிப்படுத்தப்பட்டவையாகும்.
- இந்த புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர் கள், கலைஞர்கள் தாம் வாழும் நாடுகளிலிருந்து தமிழ்மொழியை வளர்ப்பதற்க்ாக மிகவும் பாடுபடுகின்றார்கள். புலம் பெயர்ந்து வாழக் கூடியவர்கள் அங்கு மிக சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார் கள் என்று தாயகத்திலிருப்பவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் தான் வாழ்ந்த தேசம், உறவுகள், இனபந்தங்களைப் பிரிந்து புதிய சூழலில், புதிய காலநிலை, புதிய கலாசாரப் பின்னணி யில் வாழும் அவர்களது மனஉணர்வுகள், மன அழுத்தங்களை நாம் சிந்திக்கத் தவறிவிடுகின்றோம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எவ்வித உதவிகளும் இன்றி தானே தனதும், தனது குடும்பத்தினரதும் பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்திக் கொள்ள அவர்கள் படும் சிரமங்கள் எமக்குத் தெரிவதில்லை. இத்தனைக்கும் மத்தியில்தான் புலம் பெயர்ந் தவர்கள் இலக்கியம் படைக்கின்றார்கள், கலையுணர்வுகளை வெளிப் படுத்துகின்றார்கள். புலம்பெயர்ந்தாலும் தம் தாய்மொழியான தமிழை பாதுகாக்கவும், வளர்க்கவும் செய்கின்றார்கள். இவர்களது இச் செயலை நாம் அனைவரும் மதிக்க வேண்டும், கெளரவிக்க வேண்டும். இலங்கையில் தமிழ் இலக்கிய ஆய்வுகள், பல்கலைக்கழக ஆய்வுகள், இலக்கிய நிறுவனங்களின் ஆய்வுகளில் நிச்சயமாக
06

இவர்களது பங்களிப்புகள் ஆய்வுக்குட்படுத்தப்படல் வேண்டும். அதே நேரம், இவர்கள் பற்றிய பதிவுகள் இலங்கை இலக்கிய வரலாற்றில் நிலையான ஆவணமாக்கப்பட்டு நாளைய சந்ததியினருக்கு வழங்கப் படல் வேண்டும். .
இதனை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் இலங்கையின் தமிழ் இலக்கிய ஆய்வுப் பரப்பில் புலம்பெயர் தமிழ் இலக்கியங்கள் பற்றியும், இலக்கியவாதிகள் பற்றியும் இன்றுவரை பெரிதாக சிந்திக்கப் படவில்லை. பல்வேறுபட்ட நியாயங்களைக் கற்பித்து புலம்பெயர் இலக்கியம் என்று ஒன்றில்லை என்ற கருத்தினை ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் சிலர் திணிக்க முற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதுகளை அடுத்து ஏற்பட்ட துரித மான புலம்பெயர்வுகளும், அப்புலம்பெயர்வுகளினால் ஏற்பட்டுள்ள உணர்வுபூர்வமான சிந்தனை வெளிப்பாடுகளும் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய வீச்சு. புதிய பரிணாமம். இதனை ஆய்வுக்குட் படுத்த வேண்டியது இக்கால கட்டத்தின் தேவையாகும். சங்ககால இலக்கிய்ங்களைப் போலவோ, தாயகத் தமிழ் இலக்கியங்களைப் போலவோ இவை கடினமாக ஆராயப்பட வேண்டியதல்ல. புலம்பெயர் சூழலில் தமிழ்மொழி மறைந்துவிடக் கூடாது என்பதற்காகவும், தனது சந்ததியினருக்கும், தமிழை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்கா கவும் அந்த இலக்கியங்களை நாம் மென்மையாகவே ஆராய வேண்டி யுள்ளது.
இப்படிப்பட்ட ஆய்வுப்படிகளை இக்கால கட்டத்திலாவது மேற் கொள்ளாவிடின் எதிர்காலத்தில் ஈழத்துத் தமிழ் இலக்கியப்பரப்பில் புலம்பெயர் இலக்கியங்களின் பங்களிப்புகள் புலம்பெயர் தமிழ் ஊடகங் களின் பங்களிப்புகள், புலம்பெயர் கலைஞர்களின் பங்களிப்புகள் அப்படியே மழுங்கடிக்கப்பட்டு விடலாம். − . . .
புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு இந்த இரண்டாம் பாகத்துடன் நிறைவு பெற்று விடமாட்டாது. தொடர்ந்தும் பல பாகங்களை வெளியிட் வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. ஆனாலும் தகவல்களைத் திரட்டுவதுதான் மிக மிக சிரமமான காரியமாகவுள்ளது.
இலங்கையர்களின் தமிழ்மொழி நூல்களின் சர்வதேச ஆவணப் பதிவான நூல்தேட்டம் நூலாசிரியரும், மூத்த நூலகவியலாளரும்,
07

Page 6
அயோத்தி நூலக சேவைகளின் ஸ்தாபகருமான இலண்டனில் வசித்து வரும் திரு. என். செல்வராஜா அவர்களை 2005 செப்டெம்பரில் நான் சந்தித்த போது புலம்பெயர்ந்துள்ள ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி அவற்றை இலங்கைப் பத்திரிகைகளில் பிரசுரித்துப் பின் நூலுருவாக்கி ஆவணப் பதிவாக்கும் என் திட்டத்தைக் கூறினேன். இலங்கைத் தமிழ் நூல் களை ஆவணப்படுத்துவதில் மிகவும் ஆர்வம் கொண்டுள்ள அவர் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களை ஆவணப்படுத்தும் என் திட்டம் குறித்து மிகவும் மகிழ்ச்சி யடைந்தார். விபரங்களைத் திரட்ட தனது பூரண ஒத்துழைப்பினை வழங்கினார். இது குறித்து என்னால் வழங்கப்பட்ட விபரப்படிவங் களை தனது சொந்த செலவிலேயே 125 புலம்பெயர் எழுத்தா ளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களுக்குத் தபாலிட்டார். அது மட்டுமல்லாமல் புலம் பெயர்ந்த ஊடகங்களிலும் இது குறித்த செய்தி களை வெளியிட்டார். இந்த அடிப்படையில் பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் "உதயன்', லண்டன் குரல்’ போன்ற பத்திரிகைகளுக்கும், ‘தேசம்' சஞ்சிகைக்கும், சர்வதேச ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் தமிழ் (ஐ.பீ.சி) வானொலிக்கும், தீபம் தொலைக்காட்சிக்கும் என் நன்றி களைக் கூறிக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.
அதேபோல ஜெர்மனியில் - ஜெர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம், நண்பர்களான வ.சிவராசா, கே.அருந்தவராசா, புவனேந் திரன், ஜீவகன் அகியோரும், ‘மண் சஞ்சிகையும் புலம்பெயர் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொடர்பான படிவங்களை விநியோகித்தும், செய்திகளைப் பிரசுரித்தும் ஒத்துழைத்தனர். இதற்காகவும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் இலங்கையில் வாழும் என் எழுத்தாளர் நண்பர்களிட மிருந்து புலம்பெயர் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்க ளின் முகவரிகளைப் பெற்று நேரடியாக 113 விபரத்திரட்டு படிவங்களை நான் தபாலிட்டுள்ளேன். 48 புலம்பெயர் எழுத்தாளர்கள், ஊடகவியலா ளர்கள், கலைஞர்களுடன் நேரடியாக தொலைபேசியில் கதைத்து
விபரங்களைக் கூறியுள்ளேன். அது மட்டுமல்ல கடந்த 2007 மார்ச் மாதம் நான் லண்டன் சென்றிருந்த நேரம் லண்டனில் 27 எழுத்தா
ளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களைச் சந்தித்து நேரடியாக விபரத்திரட்டுப் படிவங்கள் வழங்கியுமுள்ளேன்.
08

இவ்வாறாக சகல நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும் கூட 40 புலம்பெயர் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் மாத்திரமே இதுவரை தமது விபரங்களைத் தந்தனர். என்னிடம் தரப்ப்ட்ட அனைத்து விபரங்களையும் நான் பதிவாக்கிவிட்டேன். இருப்பினும் நான் இது விடயத்தில் சோர்ந்து விடவில்லை. விபரங் களைத் தேடும் படலம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்ட மனம் தளராது முயற்சித்தாலும் கூட தரவுகள் துரிதமாகக் கிடைக்குமென எதிர்பார்க்க (լքtցաTՖ]. இதனால் புலம்பெயர்ந்த ஈழத்தவர்கள், இலங்கைத் தமிழர்கள், இலங்கை முஸ்லிம்கள் என்று வகைப்படுத்தி எழுதாமல் அனைத்தை யும் பொதுமைப்படுத்தி ‘இவர்கள் நம்மவர்கள்’ எனும் பொதுத் தலைப்பின் கீழ் இலங்கை மற்றும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டினை தொடர்ந்தும் எழுத முடிவெடுத்துள்ளேன். ..
‘இவர்கள் நம்மவர்கள்’ எனும் கட்டுரைத் தொடர் உங்கள் அபிமான “ஞாயிறு தினக்குரலில் 2007.11.11 முதல் ஆரம்பமாக வுள்ளது. உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ் பேசும் மக்கள் ‘ஞாயிறு தினக்குரல்' கிடைக்காதவிடத்து WWW. thinakkural.com என்னும் இணையத்தளத்தினூடாக e-peper எனும் பக்கத்தில் இதனைப் படிக்க முடியும். இவர்கள் நம்மவர்கள்’ கட்டுரைத் தொடரில் புலம்பெயர்ந்த
யத்துவம் வழங்கப்படும். அதாவது புலம்பெயர்ந்தவர்களின் விபரங்கள் கிடைக்கக்கிடைக்க இதனைத் தாமதமின்றி இத்தொடரில் சேர்த்துக் கொள்வேன். பத்திரிகைகளில் பிரசுரமாகும் 'இவர்கள் நம்மவர்கள் கட்டுரைத் தொடரின் ஆக்கங்களை புத்தகமாக வெளியிடும் போது 1. புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,
கலைஞர்களின் விபரங்கள் தனி நூலாகவும்: 2. இலங்கைத் தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலா ளர்கள், கலைஞர்களின் விபரங்கள் தனி நூலாகவும் வெளி வரும். . . . -காரணம்.
09

Page 7
இலங்கைத் தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவிய லாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு நூலினை சந்தைப்ப டுத்துவதிலும், ஆவணப்படுத்துவதிலும் மேற்கொள்ளப்படும் வழி முறைகளும், புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர் கள், கலைஞர்களின் நூலினை சந்தைப் படுத்துவதிலும், ஆவணப் படுத்துவதிலும் மேற்கொள்ளப்படும் வழிமுறைகளும் வேறுபட்டதா கும். குறிப்பாக இன்று ஈழத்துத் தமிழர்கள் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள். இங்கெல்லாம் புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு நூல்களை சந்தைப்படுத்த விசேட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனூடாக ஒவ்வொரு நாடு களில் வாழும் புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலா. ளர்கள், கலைஞர்களிடையே ஓர் இணைப்பு ஏற்பட வேண்டும் என் பதே எனது எதிர்பார்க்கையாகும். சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள். அதேபோல இச்சிறு முயற்சி ஏதாவதொரு காலகட்டத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது என்னுடைய ஆசையாகும்.
மீண்டும் இவர்கள் நம்மவர்கள்’ எனும் தொடரினை பிரசுரிக்க முன்வந்த “ஞாயிறு தின்க்குரல்" ஆசிரியர் திருவாளர் ஆர்.பாரதி அவர்களுக்கும், தினக்குரல் ஆசிரியர் பீடத்துக்கும், தினக்குரல் நிர்வாகத்தினருக்கும் என்னுடைய இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நல்லது, எனது இனிய வாசக நெஞ்சங்களே! சிந்தனை வட்டத்தின் ஏனைய வெளியீடுகளுக்கு நேசக்கரம் நீட்டி ஆதரவு வழங்குவதைப் போல இந்நூலுக்கும் ஆதரவு வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகின்றேன்.
மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
10
 
 

žážáů
寧線撤縣為義輸穩撥錢
y Afoiee irid trattri * ஆசிரியர் பாரதி இராஜநாயகம் அவர்கள் அன்புடன் வழங்கிய மதிப்புரை
கலாபூஷணம் புன்னியாமீன் காலத்தின் தேவையொன்றை நிறைவுசெய்யும் வகையில் புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களை உள்ளடக்கிய இந்நூலினை ‘புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவி யலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு இரண்டாவது பாகம் எனும் தலைப்பில் மிகவும் சிறப்பான முறையில் தொகுத்து வெளியிட்டுள்ளார். இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களை உள்ளடக்கிய நூல் வெளியீட்டுத் தொடரில் இது அவருடைய ஒன்பதாவது நூலாகும்.
en: '',
இது யாருமே துணிந்து இறங்காத, கடினமான ஒரு முயற்சி தான். இந்த அடிப்படையில் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலா ளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டின் ஒன்பது நூல்களை அவர் வெளியிட்டுள்ளமை இந்த முயற்சியில் அவர் பெற்றுக் கொண்ட வெற்றியைத்தான் பறைசாற்றுகின்றது எனக் கொள்ளலாம். சோர்வடை யாத அவரது உழைப்புக்கும், முயற்சிக்கும் கிடைத்த வெற்றி இது
புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்களுடைய விபரங்கள் எதற்காகத் தொகுக்கப்பட வேண்டும் என்ற கேள்வி இந்தச் சந்தர்ப்பத்தில் சிலரிடமாவது எழலாம்.

Page 8
புலம்பெயர்ந்தவர்கள், தாம் வாழும் நாடுகளில் கலை, 866) சாரம் மற்றும் மொழி என்பவற்றுடன் ஒன்றிப் போய்விடும் நிலையை நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பார்க்கின்றோம்.
அந்த நிலை தவிர்க்க முடியாததாகக்கூட இருக்கலாம். இந்தப் பின்னணியில் புலம்பெயர்ந்த எம்முடைய தமிழ்ச் சமூகத்துக்கு எம்மு டைய பாரம்பரியங்களைக் கொண்டு செல்லும் பொறுப்பை இவர்களே ஏற்றுக் கொள்கின்றார்கள் எனக்கூற முடியும்.
புலம்பெயர்ந்த நிலையிலும் கலை, இலக்கியத் துறைகளில் மட்டுமன்றி ஊடகத்துறையிலும் இவர்கள் காட்டும் ஈடுபாடும் அதற் காக அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதும் பாராட்டப்பட வேண்டியது. புதிய சூழல், புதிய மாற்றங்கள் என்பவற்றுக்கு மத்தியி லும், பொருளாதார நிர்ப்பந்தங்களையும் எதிர்கொண்டு எம்முடைய அடையாளங்களைப் பாதுகாப்பதிலும், அவற்றை அடுத்த தலை முறையினரிடம் கொண்டு செல்வதிலும் இவர்களுடைய பங்களிப்பு கணிக்கப்பட வேண்டியது. . . . . .
உலகம் இன்று ஒரு கிராமமாக குறுகிக் கொண்டுவரும் நிலையில் எமது சமூகம் பரந்து கொண்டு செல்கின்றது. அமெரிக்கா முதல் அவுஸ்திரேலியா வரையில் ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்றிருக்கின்றார்கள். பல்வேறு துறைகளில் இவர்கள் தம்முடைய திறமைகளை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இவர்களில் பெரும் பாலானவர்களின் முயற்சிகள் பரந்து விரிந்து வாழும் எமது தமிழ்ச் சமூகம் அறியாத ஒன்றாகவே இருந்து வருகின்றது.
இவர்களைப் பற்றியும், எமது சமூகத்துக்காக இவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்பதைப் பற்றியும் ஒரு பதிலாக மட்டுமன்றி, பரந்து வாழும் தமிழ்ச் சமூகத்துக்கு இவர்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டு செல்வதற்கான ஒரு ஊடகமாகவுமே புன்னியாமீனுடைய இந்தநூல் அமைந்துள்ளதெனக் கூறலாம்.
இந்த நூலுக்குத் தேவையான தகவல்களைத் திரட்டிக் கொள் -வதிலும், பின்னர் அவற்றை உறுதிப்படுத்துவதிலும் புன்னியாமீன் அவர்கள் எதிர்கொண்டிருக்கக் கூடிய தடைகள் அனைவராலும்
AO 12

‘புரிந்து கொள்ளக் கூடியவைதான். பலத்த சிரமங்களின் மத்தியில் கடினமானதொரு முயற்சியை மேற்கொண்டு தமிழ்ச் சமூகத்துக்கு அவசியமான ஒரு வரலாற்றுப் பதிவை புன்னியாமீன் திறம்படச் செய்திருக்கின்றார். . . . .
இந்தத் தொகுப்பிலுள்ள கட்டுரைகள் அனைத்தும் “ஞாயிறு தினக்குரல்" பத்திரிகையில் வெளியானவை. புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள், அவர்களுடைய சாதனைகள் என புலம் பெயர்வாழ்வுடன் தொடர்புபட்ட விடயங்களுக்கு “ஞாயிறு தினக்குரல்" எப்போதும் முக்கிய இடத்தைக் கொடுத்தே வந்திருக்கின்றது. அதற் காக குறிப்பிட்ட ஒரு பக்கத்தைக் கூட “ஞாயிறு தினக்குரல் ஒதுக்கி வருகின்றது. இதன் மூலமாக புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும், தாய கத்தில் வாழும் தமிழர்களுக்கும் இடையேயான ஒரு உறவுப் பால மாக 'தினக்குரல் திகழ்கின்றது. இந்தப் பின்னணியில் புன்னியாமீன் அவர்களுடைய கட்டுரைகளை வரவேற்றுப் பிரசுரிப்பதில் 'தினக்குரல் ஆர்வம் காட்டியது.
புலம்பெயர்ந்த நம் நாட்டு எழுத்தாளர்கள், கலைஞர்கள் பற்றிய விபரங்களை சுருக்கமாக அதேசமயம் சுவையாக முக்கிய
அம்சங்களைத் தவறவிடாமல் புன்னியாமீன் அவர்கள் வெளிக்கொண்டு வந்தது 'தினக்குரல்" வாசகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப்" பெற்றிருந்தது. இதனை ஒரு முக்கிய பதிவாக சேகரித்து வைத்தவர்கள் பலர்!
புன்னியாமீனின் இந்தப்பணி தொடர வேண்டிய ஒன்று. பரந்து விரிந்து செல்லவேண்டியது. இந்த முயற்சிக்கு தமிழ்ச் சமூகம் உதவி யாகவும், ஒத்தாசையாகவும் இருக்கும் என்பதுடன் நன்றியாகவும் இருக்கும். அவரது இந்தப் பணி மேலும் தொடர வாழ்த்துகிறோம்."
- பாரதி இராஜநாயகம் - ஆசிரியர் “ஞாயிறு தினக்குரல்"
68 எலி ஹவுஸ் ரோட் கொழும்பு-15 றிலங்கா
13

Page 9
உங்கள் அபிமான
*ඝනක්කුෂ්ෂ් බී’ 2A An independent Weekly voice instant
நாளைய சந்ததியின் இண்றைய சக்தி
சிந்தனை வட்டம்
மேற்கொண்ட ஆய்வின் விளைவே உங்கள் கரங்களில் தவழும்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு
தொகுதி09
14
 
 
 
 
 
 
 
 
 
 

அணிந்துரை
இன்று தமிழகத்துக்கு அப்பால் தமிழ்ப் படைப்புலகம் ஈழத்துத் தமிழர்களால் நகர்த்திச் செல்லப்படுவதை பெருமையுடன் நாம் கூறிக் கொள்ள முடிகின்றது. கட்டுப்பாடற்ற சுதந்திரச் சிந்தனை வளமும், நிதி வளமும் ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் மலிந்தி ருப்பதால் இன்று ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறையிலும், மொழிபெ யர்ப்புத்துறையிலும், வெளியீட்டுத்துறையிலும் முன்னெப்போதுமில்லாத வகையில் புலம்பெயர் தமிழரின் பங்களிப்பும் இடம்பெற்றுவருகின்றது.
கடந்த நூற்றாண்டில் ஐரோப்பிய அமெரிக்க மிசனரிகளால் எமக்காக மேற்கொள்ளப்பட்ட ‘அகராதிக்கலை இன்று புதிய பரிமா ணம் ஒன்றைப் பெற்று ஈழத்தமிழர்களினால் முன்னெடுத்துச் செல்லப் படுவதை தமிழகத்தில் மட்டுமல்ல, பிரான்ஸ், ஜேர்மன், டென்மார்க் போன்ற நாடுகளிலும் நாம் கண்டுவிட்டோம்.
கடந்த 2000ம் ஆண்டு முதல்: உலகெங்கிலும் பரந்து வாழும் ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்களைப் பதிவு செய்யும் முயற் சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் 'நூல்தேட்டம்' என்ற நூல் விபரப் பட்டியல் தொடர்வெளியீட்டு முயற்சியையும் இங்கே குறிப்பிடலாம்.
உசாத்துணை வழிகாட்டிகளின் வரிசையில் Who's Who' என்ற ஒரு வழிகாட்டி உள்ளது. இவ்வழிகாட்டி தனிநபர்களைப் பற்றிய குறிப்புக்களைத் தருவதாகும். இதைத் தமிழில் யார் எவர்" என்று
1
5

Page 10
குறிப்பிடுகின்றோம். சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் 1917இல் வழங்கிய தமிழ்ப் புலவர் சரித்திரம், ந.சி.கந்தையாபிள்ளையின் (18931967) தமிழ்ப் புலவர் அகராதி ஆகியவற்றை இத்தகைய யார் எவர் தொகுதிகளின் தமிழியல் முன்னோடிகளாகக் கருதலாம்.
நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு இலங்கையில் யாழ்ப்பாணத்தில் 1974இல் நடைபெற்ற போது அந்த மாநாட்டின் பேராளர்கள் பற்றிய விபரத்தை அவர்களின் புகைப்படம், அவரது சமூக, வாழ்க்கைக் குறிப்புகள், கல்வித்தகைமை, அவரது துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பு வகித்த பதவி, எழுதிய நூல்கள் என்று இன்னோரன்ன பல தகவல்களை அந்த யார் எவர் நூல் கொண்டி ருந்தது. தமிழாராய்ச்சி மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட இந்த ஆவணம் தவிர காலத்துக்குக்காலம் பல 'யார் எவர் நூல்களை அவ்வப்போது பலரும் தொகுத்து வெளியிட்டிருந்தார்கள்.
"ஈழத்தமிழர் யார் எவர்" என்ற மற்றொரு சிறுநூலும் என்
னைக் கவர்ந்தது. அதில் வர்த்தகத்துறையில் இலங்கையிலும்
இந்தியாவிலும் பரிணமித்த ஈழத்தமிழர் பற்றிய ஒரு சிறு நூலாக 80 களில் தமிழகத்தில் வெளிவந்திருந்தது.
கடந்த சில வருடங்களாக கொழும்புத் தமிழ்ச்சங்கம் இத்தகை யதொரு எழுத்தாளர் விபரப்பதிவேடொன்றை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்தது. அதற்கான படிவங்களும் தமிழ் எழுத்தாளர்களிடையே விநியோகிக்கப்பட்டது. புகலிட நாடுகளிலிருந்தும் ஆர்வத்துடன் பலர் தமது விபரங்களை அனுப்பியிருந்தார்கள். இத் தொகுப்பு கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் கணனியில் நீண்ட காலமாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இது நூலுருவில் வெளியிடப்படும் சாத்தியம் பற்றி அறியமுடியவில்லை.
கோலாலம்பூரிலுள்ள மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்
1959இல் தோற்றுவிக்கப்பட்டது. 1967ம் ஆண்டில் அது ஒரு நூலை வெளியிட்டிருந்தது. மலேசியாவில் தமிழ் எழுத்தாளர்கள் என்ற பெயரில் வெளியிடப்பட்ட அந்நூலில் 225 மலேசியத் தமிழ் எழுத்தாளர் களின் வாழ்க்கைக் குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. இருப்பவர்களும், மறைந்துவிட்டவர்களுமான அந்த 225 பேரும் ஏதோ ஒருவகையில்
16

மலேசிய இலக்கியத்துறைக்கும், எழுத்துத்துறைக்கும் தம் பங்கை
வழங்கியவர்களாவர். இந்நூலின் இரண்டாம் பதிப்பு 2004ம் ஆண்டு
350 எழுத்தாளர்களின் விபரங்கள் புகைப்படங்களுடன் கூடியதாக வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்தாளர்களின் பிறந்த திகதி, புனைபெயர், முகவரி, தொழில், அவர்களது இலக்கியப் பணியின்
ஆரம்பம், முக்கிய திருப்புமுனைகள், வெளிவந்த படைப்புகள், பெற்ற
விருதுகள் என மிகச்சுருக்கமாக இப்பதிவுகள் 250 பக்கங்களில் அமைந்துள்ளன.
"எம்மவர்கள் என்ற தலைப்பில் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒரு 'யார் எவர் உசாத்துணை நூலும் 2004 இல் வெளிவந்திருந்தது. ஈழத்து எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்கள் தொகுத்து, மெல்போர்ண் நகரில் உள்ள முகுந்தன் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட இந்நூலில் அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துத் தமிழ் எழுத்தா ளர்கள், ஒலிபரப்பாளர்களின் விபரங்கள் திரட்டித் தரப்பட்டிருந்தன.
‘சிங்கப்பூரில் தமிழர்களும் தமிழும் என்றொரு பாரியநூல் பற்றியும் இங்கு குறிப்பிடுவது அவசியமாகின்றது. கவிஞர் செவ்வியன் என்ற தமிழக இலக்கியவாதி தான் சிங்கப்பூர் சென்று வந்தபின்னர் சிங்கப்பூர் தமிழர்களின் வரலாறும், அங்குள்ள தமிழ் எழுத்தாளர்களின் இலக்கியப்போக்குகளும் பதிவுக்குட்படுத்தப்பட வேண்டும் என்ற ஆர்வத்தால் 664 பக்கத்தில் ஒரு நூலை எழுதி சென்னை கோதை, பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டிருந்தார். இதில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் பலரின் வரலாற்றுக் குறிப்புகள் ஏராளமாக இடம்பெற்றி ருக்கின்றன. இது ‘யார் எவர் வகையைச் சாராத போதிலும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய விபரங்களைத் தரக்கூடிய ஒரே நூல். இதுவென்று கருதியதால் இங்கு குறிப்பிட விரும்பினேன்.
இலங்கையில் மலையக வெளியீட்டகத்தின் சார்பில் அந்தனி ஜீவா அவர்கள் மலையக எழுத்தாளர்களின் சுயவிபரப்பட்டியல் ஒன்றினை 'முகமும் முகவரியும் என்ற தலைப்பில் தொகுத்திருந்தார். கண்டி, மத்திய மாகாண சபையின் இந்து கலாசார அமைச்சு, இந்: நூலை டிசம்பர் 1997இல் வெளியிட்டிருந்தது. 68 பக்கம் கொண்ட இச்சிறு நூலில் 68 மலையக எழுத்தாளர்கள் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன.
可

Page 11
நுண்கலைகளுடன் தொடர்பான கலைஞர்களின் நூலாக்கங்
கள், கெளரவிப்புகள், அரங்கேற்ற நிகழ்வுகள், ஒலி, ஒளிப்பதிவு நாடாக்கள், கலைமன்றங்கள் ஆகியவை உள்ளிட்ட சுமார் ஆயிரத்தி ஐநூறு தகவல்களை உள்ளடக்கிய நூலொன்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ‘ஈழத்துக் கலைத்துறைப் பதிவுகள்’ என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்நூல் எஸ்.சிவானந்தராஜா அவர்களால் ஏப்ரல் 2004இல் யாழ்ப்பாணத்திலிருந்து வரதர் வெளியீடாக வெளிவந் துள்ளது. 225 பக்கம் கொண்ட இந்நூலில் ஈழத்துக் கலைத்துறை தொடர்பான கலைஞர் கெளரவிப்புக்கள், நூல்கள், விஷேட மலர்கள், அமரத்துவமடைந்த கலைஞர்கள், கலைத்துறை ஆக்கங்கள் ஆகியவை பற்றிய தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் கலைஞர்கள் என்ற பெயரில் 650 பக்கங்கள் கொண்ட யார் எவர் நூலொன்றை பாரிசி லிருந்து வண்ணை தெய்வம் வெளியிட்டிருந்தார். சென்னை மணி மேகலை பிரசுரத்தினரால் 2005இன் இறுதிப்பகுதியில் இந்நூல் வெளி யிடப்பட்டுள்ளது. தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் இன்று சிதறி வாழும் பல படைப்பிலக்கியவாதிகளையும் கலைஞர்களையும் அறிமுகப் படுத்துவதாக இத்தொகுப்பு அமைந்துள்ளது.
யார் எவர் ஆவணத் தொகுப்புக்களாகவன்றி, கட்டுரை உரு வில் நமது எழுத்தாளர்களைப் பதிவுசெய்யும் நூல்கள் ஆங்காங்கே வெளிவந்தவண்ணம் உள்ளன. அவையும் எழுத்தாளர்களின் இருப்பி னை வரலாற்றுப்பதிவாக்கும் ஒரு முயற்சியே. அவற்றை இங்கு குறிப்பிடுவதாயின் ஒரு நீண்ட பட்டியலாக இவ்வுரை அமைந்து விடும் என்பதால் அவற்றைத் தவிர்த்துக்கொள்கிறேன்.
ஜேர்மனியிலிருந்தும் அண்மையில் ஒரு நூல் வெளிவந்தி ருந்தது. ஜேர்மனியில் தடம் பதித்த தமிழர்கள் என்ற தலைப்பில் வ.சிவராஜா, க.அருந்தவராஜா, பொ.நீ ஜீவகன், அபுவனேந்திரன் ஆகிய நால்வரும் இணைந்து தொகுப்பாசிரியர்களாகவிருந்து ஒரு நூலை வெளியிட்டிருந்தார்கள். ஜேர்மனி, தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் ஜூன் 2006இல் வெளிவந்துள்ள இந்நூலில், இலங்கையி லிருந்து புலம்பெயர்ந்து சென்று ஜேர்மனியில் குடியேறி வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்களில் கலை இலக்கியத்துறையில் தடம்பதித்துள்ள 24பேர் பற்றிய வாழ்க்கைக் குறிப்பும், அவர்களது துறைசார் பணிகளும்
. 18

பதிவுக்குள்ளாகியுள்ளன. ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கலை
ஞர்கள், கல்வியாளர்கள், என்று பல்வேறுதுறைகளிலும் புகலிடத்தில் பணியாற்றி வருபவர்கள் இவர்கள். இந்நூலை பதிப்பித்து வழங்கியவர் கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன்.
கலாபூஷணம் புன்னியாமீன் அவர்கள் மலையகத்தில் கட்டு கஸ்தோட்டை பகுதியில் உள்ள உடத்தலவின்னை என்ற கிராமத்தி லிருந்து பாரிய நூலியல் பணியை ஆற்றிவருகின்றார். 135 நூல்களை தனித்தும் தன் மனைவியுடனும் இணைந்து எழுதி வெளியிட்டுள்ள இவர், சிந்தனை வட்டம் என்ற தனது வெளியீட்டு நிறுவனத்தின் மூலம் 275 நூல்களை வெளியிட்டும் உள்ளார். இவர் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத் திரட்டு எனும் பாரிய தலைப்பில் இதுவரை ஒன்பது தொகுதிகளை வெளியிட்டிருக்கின்றார். இதில் இலங்கையிலுள்ள 200 முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் பற்றிய விபரங்கள் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலை ஞர்கள் விபரத்திரட்டு தொகுதிகளில் ஏழு பாகங்களாக வெளிவந் துள்ளன. அதேபோல புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவி யலாளர்கள், கலைஞர்கள் பற்றிய விபரங்கள் இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளன. இந்த விபரத்திரட்டுப் பணியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றார்.
பீ.எம்.புன்னியாமீன் அவர்களின் வெளியீட்டு நிறுவனமான சிந்தனை வட்டம் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊட்க வியலாளர்கள், கலைஞர்களின் விபரத் திரட்டு என்ற நூலின் முதலாவது தொகுதியை ஆகஸ்ட் 2004 இல் வெளியிட்டது. நவமணி இதழில், 10-08-2003 முதல் 15-02-2004 வரை முஸ்லிம் எழுத்தா ளர்கள், கலைஞர்களில் தொகுதியினரின் விபரங்களைத் தொகுத்து புன்னியாமீன் அவர்கள் வெளியிட்டு வந்துள்ளார். அவ்வாறு வெளி வந்த தொடரில் இடம்பெற்ற 36 பேரின் விபரம் முதலாம் பாகத்திலும், 41 பேரின் விபரங்கள், புகைப்படங்களுடன் இரண்டாம் பாகத்திலும் தொகுக்கப்பட்டுள்ளன. சிந்தனை வட்டத்தின் 200வது வெளியீடாக இத்தொகுதியின் மூன்றாவது பாகம் கடந்த செப்டெம்பர் 2005இல் வெளியிடப்பட்டிருந்தது. மூன்றாவது தொகுதியுடன் மொத்தம் 114 எழுத்தாளர்களின் விபரங்கள் கொண்ட கட்டுரைகளை இலங்கை
19

Page 12
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு என்ற இத்தொகுப்பு உள்ளடக்கியிருந்த நிலையில் 2005ம் ஆண்டில் அவர் என்னுடன் தொடர்புகொண்டிருந்தார்.
புலம்பெயர்ந்துவாழும் ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள், ஊடகவி யலாளர்கள் 25 பேரின் விபரங்களைத்தாங்கிய தொகுப்பொன்றினை அடுத்ததாக வெளியிடும் ஆர்வத்தை அவர் தனது உரையாடலில் என்னிடம் வெளிப்படுத்தியிருந்தார். இது தொடர்பான எட்டுப் பக்கம் கொண்ட தகவல் கோவை ஒன்றினையும் அவர் அச்சிட்டு ஏராளமான பிரதிகளை லண்டனுக்கு அனுப்பி வைத்திருந்தார். இத்தொகுப்பில் இடம்பெற விரும்பும் எழுத்தாளர்கள் படிவத்தை நிரப்பி அனுப்பி வைத்து உதவும்படி அவர் பத்திரிகை வாயிலாகவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த முயற்சியை இலங்கையில் அவர் மேற்கொள் ளும் நிலையில் பல தமிழ் எழுத்தாளர்கள் புகலிட நாடுகளிலிருந்து இலங்கை எழுத்தாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று நான் நம்பினேன். காலக்கிரமத்தில் இவ்வெழுத்தா ளர்கள் தமக்கிடையே பரஸ்பரம் தொடர்புகளை மேற்கொண்டு இலக்கி யக் கருத்துப் பரிவர்த்தனை செய்து கொள்ளவும் தமது இலக்கிய அறிவினை பரவலாக்கிக் கொள்ளவும் தமது நூல்களை இலங்கையில் பதிப்பித்து விநியோகித்துக் கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளவும் இயலும் என்றும் நம்பினேன். இந்த நோக்கத்துடன் எனக்கு திரு புன்னியாமீன் அனுப்பி வைத்திருந்த நூற்றுக்கும் அதிக மான படிவங்களை புகலிடத்து எழுத்தாளர்களுக்கும், எழுத்தாளர் சங்கங்களுக்கும் விநியோகித்திருந்தேன்.
நான் ஐரோப்பிய நாடெங்கிலும் 125 படிவங்களை அனுப்பி வைத்திருந்த போதிலும், இதுவரை குறிப்பிட்ட சில எழுத்தாளர்கள் மட்டுமே இவ்விபரக்கொத்தை பொறுப்புணர்வுடன் நிரப்பி அனுப்பிவைத் திருந்தார்கள். அனேகர் இதனைக் கவனத்திற் கொள்ளாதது கவலைக் குரிய விடயமாகும். தம்முடைய இலக்கிய இருப்பைத்தாமே முன்வந்து பதிவுசெய்யவிரும்பாமல் தமது எழுத்துக்களால் மட்டும் தம்மை இனம் காட்டமுனைந்த பலர் பற்றிய வரலாற்றை நாம் அறிவோம். அவர் களது வாழ்க்கைச் சுவடு பற்றிய பதிவே இல்லாது மறைந்து போன்து வரலாறு என்பதையும் நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
20

தமது இலக்கியப் பணிகளை பதிவுசெய்வதென்பது தற்பெரு மையாகும் என்று வாழ்ந்து மறைந்த பல நல்ல எழுத்தாளர்கள் பற் றிய தகவல்களை இன்று தேடிப்பெற்றுக்கொள்ள முடியாது ஆய்வா ளர்கள் அவலப்படுவதை தேடல் உணர்வுள்ள எவரும் புரிந்துகொள் வார்கள். தனது தாயகத்தை விட்டு இருபதாம் நூற்றாண்டின் ஆரம் பத்தில் புலம்பெயர்ந்து மலாயா, இந்தியா என்று வாழ்ந்த வேளையில் 60 நூல்களுக்கு மேல் எழுதி வெளியிட்ட ந.சி.கந்தையா பிள்ளை என்ற ஈழத்தமிழர் பற்றிய குறிப்புக்கள் எதுவும் இல்லை. அவர் பற்றிய ஒருசில விபரங்களை வைத்துத்தான் இன்றுவரை நம்மவர்கள் அவரைப்பற்றிய கட்டுரைகளை எழுதி வருகின்றார்கள். - - -
இன்று நாம் அனைவரும் போற்றும் ஆறுமுகநாவலரின் முகத் தைக்கூட நாம் அறியோம். அவருடைய புகைப்படம் எதுவுமே இன்று வரை இருந்ததில்லை. திருவள்ளுவரைப் போல, கம்பனைப் போல, ஒளவையாரைப் போல யாரோ ஒரு ஓவியனின் கற்பனையில் மலர்ந்த உருவத்தைத்தான் இன்றும் நாம் ஆறுமுகநாவலர் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை ஈழத்திலும் புலம்பெயர்ந்தும் வாழும் எமது எழுத்தாளர்களுக்கு வரக்கூடாது என்ற எண்ணத்திலேயே இத் தகைய யார் எவர் ஆவணப்பதிவுகள் தொடர்ந்தும் வெளிவருவதை வரவேற்கின்றோம்.
இலங்கையிலிருந்து விடுக்கப்பட்ட புன்னியாமீனின் அறைகூவ லுக்குச் செவிசாய்த்துத் தம் பதிவுகளை வழங்கிய 25 பேரின் விபரங் களைத் தாங்கி 174 பக்கங்களில் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 04 இது புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலா ளர்கள் கலைஞர்களின் விபரத்திரட்டு பாகம் 01ஆக நவம்பர் ‘11இல் 2006இல் சிந்தனை வட்டத்தின் 236து வெளியீடாக வெளிவந்தி ருந்தது. இந்நூலில் ஒவ்வொரு எழுத்தாளர்களினது பணிகள் பற்றியும் மிக விரிவாக 45 பக்கங்களில் தகவல்களை வழங்கியிருப்பதும், எழுத்தாளர்களின் நூல்களின் முன்னட்டைப்படம், எழுத்தாளரின் புகைப்படம், (முகவரியைப் பிரசுரிக்க அனுமதியை வழங்காதவர்கள் போக மற்றையோரின்) முகவரிகள் என்று நல்லதொரு வரலாற்றுப் பதிவினை இத்தொகுப்பில் இடம்பெறச்செய்துள்ளார். வெளியிட்டது மட்டுமல்லாது தனது செலவிலேயே ஈழத்து நூலகங்களுக்கெல்லாம் அவற்றை அனுப்பியும் வைத்திருக்கின்றார். எம்மவரது பணிகள்
21

Page 13
வரலாற்றில் அழியாது நினைவுகூரப்பட இவர் ஆற்றியுள்ள சுயநல நோக்கற்ற உதவி எம்மவரால் மறக்கப்படக்கூடாததாகும்.
ஆரம்பத்தில் தமிழ் பேசும் முஸ்லிம் எழுத்தாளர்களுடைய விபரங்களைத் தாங்கியே வெளிவந்திருந்த போதிலும் இன்று 98 தொகுதியைக் காணும் இந்நூல் தொடரின் பதிவுகள் புலம்பெயர்ந்த தமிழர்கள் வரையில் பரந்துள்ளமை வரவேற்கத்தக்கதொன்றாகும். இந்த இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் கலை ஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 04 (புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் கலைஞர்களின் விபரத் திரட்டு பாகம் 01) இவ்வாண்டு (2007) மார்ச் மாதத்தில் லண்ட னிலும், ஜேர்மனியிலும் வெளியீடு கண்டதுடன், புகலிடத் தமிழர்களால் அன்புடன் கெளரவிக்கப்பட்டார். இத்தொகுதியில் இடம்பெறாத பிற எழுத்தாளர்களின் விபரங்கள் தொடர்ந்தும் காலக்கிரமத்தில் தனித்தொ குதியாகப் பதிவுக்குள்ளாகும் என்று அன்று புன்னியாமீன் கூறிய உறுதி மொழி இன்று இந்தத் தொகுதியின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலா ளர்கள் கலைஞர்களின் விபரத்திரட்டு இரண்டாவது பாகமாகவும், இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் கலைஞர்களின் விபரத்திரட்டு என்ற பாரிய தொகுப்பின் 9வது பாகமாகவும் வெளிவரும் இந்நூலில் மேலும் 15 புகலிட படைப்பாளிகளின் விபரங்கள் ஆவணப்ப டுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் திரு பீ.எம்.புன்னியாமீன் அவர்க ளது பெயரை அவர் நல்நோக்கத்துடன் வெளியிட்டுவரும் இவ்வா வணங்கள் தமிழ் படைப்புலக வரலாற்றில் அழிக்கப்படமுடியாதவாறு பொறித்து வைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
என்.செல்வராஜா
தொகுப்பாசிரியர்: நூல்தேட்டம்,
நூலகவியலாளர், லண்டன்
01.11.2007 48, Hallwicks Rd, LUTON, Beds,
LU 29BH UNITED KINGOOM
T.P. f. Fax. 0.044-1582703786 Mobile,0044-7817 402704 E. mail : selvan (@) ntl world.com
22

Uttayas ui A strin-Asian Voice is
11 years Australia-wide 10,000 copies sep2007 FREE PoBox 3170, wheelers Hil, VIC3150, Australia T/F:+6(o)3956 0242 Email: uthayam.Goptus.net.com.au worldwide web: www.uthayam.net.
நூறு புத்தகங்களை எழுதிய சாதனையாளர்
லெ. முருகபூபதி (அவுஸ்திரேலியா)
சுவாமி விவேகானந்தர் ஒரு சந்தர்ப்பத்தில் பின்வரும் கருத் தைச் சொன்னார். “உனது வாழ்க்கையில் - உனக்குப் பின்வரும் சந்ததி உன்னை நினைவில் வைத்திருக்க முடியுமானால் ஒரு வீட் டைக் கட்டு. அல்லது ஒரு பிள்ளையை பெற்றெடு. முடியாது போனால் ஒரு புத்தகத்தையாவது எழுது.”
வீட்டைப் பார்த்து இது இன்னாருடைய வீடு- அவர் வாழ்ந்த வீடு எனச் சொல்லலாம். இது இன்னாருடைய பிள்ளை. அவரது பெயர் சொல்லும் பிள்ளை எனக் கூறலாம். இது இன்னார் எழுதிய புத்தகம்- அவர் இல்லாவிட்டாலும் அவர் எழுதிய புத்தகம் இருக்கிறது எனத் தெரிவிக்கலாம். சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கு - நாம் மேலே குறிப்பிட்ட விளக்கத்தை ஏற்றுக் கொள்ளலாம். •
ஒரு பக்கம் கடிதம் எழுதுவதற்கே சோம்பல் பட்டுக் கொண்டி ருக்கும் எம்மவர்களுக்கு மத்தியில் - அதுவும் இலங்கையில் - ஒரு மனிதர் நூறுக்கும் மேல் புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என்றால் இத்தகவல் அதிசயம் மாத்திரமல்ல - உண்மையும்தான்.
அந்தச் சாதனையாளரின் பெயர் புன்னியாமீன். இலங்கையில் மத்திய மாகாணத்தில் - கண்டிக்கு சமீபமாக வெளி உலகத்துக்கே பிரபலமில்லாத சிற்றுார்தான் “உடத்தலவின்னை”. இங்கிருந்துதான் இச்சாதனையாளர் “சிந்தனைவட்டம்” - என்ற அமைப்பின் ஊடாக சுமார் நூறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
23

Page 14
புன்னியாமீன் - எழுத்தாளர், ஊடகவியலாளர், பதிப்பாளர், இலங்கை கலாசார அமைச்சின் “கலாபூஷணம்” பட்டம் பெற்றவர். 1973ம் ஆண்டில் எழுத்துலகில் பிரவேசித்த காலம் முதல் தொடர்ந்து அயராமல் எழுதிக் கொண்டிருப்பவர். பெரும்பாலானவர்கள் எழுதத் தொடங்கிய காலத்தில் மிகவும் ஆர்வமுடன் தீவிரமாக எழுதுவார்கள். பின்னர் ஓய்வு பெற்று ‘எழுதாத எழுத்தாளர்களாகத்" திகழுவார்கள். ஆனால் புன்னியாமீன் - கதைகள், கவிதைகள் எழுதுவதுடன் நின்றுவிடாமல் அரசியல் ஆய்வு; வரலாற்று ஆய்வு, மாணவர்க ளுக்கான நூல்கள், பொது அறிவு நூல்கள், பாடவிதான நூல்கள். என நூறுக்கும் அதிகமான நூல்களை எழுதியிருக்கிறார்.
இவரது ஆற்றலையும், அயராத உழைப்பையும் கனம் பண்ணி 'மல்லிகை” சஞ்சிகை இவரது படத்தை முகப்பில் (2005இல்) பிரசுரித்தது. இவரது நூல்கள் குறித்த விரிவான ஆய்வு நூலொன்றை லண்டனில் வதியும் நூலகவியலாளர் என். செல்வராஜா அவர்களும் எழுதியுள்ளார்.
. புன்னியாமீனின் சாதனைகளில் உச்சமாகக் கருதப்படுவது அவர் தொகுத்து வெளியிடும் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் பற்றிய விபரத்திரட்டு நூல் தொகுதிகளாகும். இந்தப் பணிக்கு கடினமான உழைப்பே பிரதான மூலதனம். இந்த விபரத் திரட்டில் இதுவரையில் 9 தொகுதிகளை வெளியிட்டுள்ளார். அத்துடன், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று வாழும் படைப்பாளிகள் பற்றிய விபரத்திரட்டின் இரண்டு பாகங்களை வெளியிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் வசிக்கும் படைப்பாளிகள் எழுத்து ஊடகங்க ளுடன் ஈடுபாடுள்ளவர்கள் தம்மைப் பற்றிய விபரங்களை தமது புகைப் படத்துடன் அனுப்பி வைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றார். இந்த விபரத்திரட்டு நூல் குறித்து மேலதிக தகவல் பெற விரும்புவோருக்கு:
P.M. Puniyameen
Cinthanaivattam 14, Udatalawinna Madige, Udatalawinna. 20802. Sri Lanka
நன்றி உதயம் - அவுஸ்திரேலியா செம்டெம்பர் 2007
24

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 1 முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்:
: LITabLD 1 பதிவு 01 ஏ.யூ.எம்.ஏ. கரீம் பதிவு 02 எஸ்.எம்.ஏ. ஹஸன் பதிவு 03 அன்பு முகையதின் - பதிவு 04 ஐ.ஏ.றஸாக் பதிவு 05 முபீதா உஸ்மான் பதிவு 06 எச்.ஸலாஹதீன் பதிவு 07 எம்.எச்.எம்.அஷ்ரப் பதிவு 08 எம்.எச்.எம்.புஹாரி பதிவு 09 அப்துல் கஹற்ஹார் பதிவு 10 எஸ். முத்து மீரான் பதிவு 11 எச்.ஏ.ஸகூர் பதிவு 12 ஏ.எஸ்.இப்றாஹீம் பதிவு 13 எம்.ஐ.எம்.தாஹிர் பதிவு 14 எம்.ஜே.எம்.கமால் பதிவு 15 ஏ.எச்.எம்.யூசுப் பதிவு 16 நூருல் அயின் பதிவு 17 எம்.ஸி.எம்.இக்பால் பதிவு 18 ஆ. அலாவுதீன் பதிவு 19 எம்.இஸட் அஹற்மத் முனஷ்வர் பதிவு 20 சித்தி ஸர்தாபி பதிவு 21 ஏ.எம்.எம்.அலி பதிவு 22 எம்.எச்.எம். ஹலீம்தீன் பதிவு 23 என்.எஸ்.ஏ.கையூம் பதிவு 24 எஸ்.எம்.ஜவுபர் பதிவு 25 ஏ.எல்.எம். சத்தார் 'ኳ பதிவு 26 ஜே.எம். ஹாபீஸ் பதிவு 27 ஏ.எச்.எம். ஜாபிர் பதிவு 28 ஏ.எம்.நஜிமுதீன் பதிவு 29 எஸ்.எல்.ஏ. லத்தீப பதிவு 30 எஸ்.ஐ.எம்.ஏ. ஜப்பார் பதிவு 31 மொஹம்மட் வைஸ் பதிவு 32 எம்.எம். ஸப்வான் பதிவு 33 ஹிதாயா ரிஸ்வி பதிவு 34 என்.எம். அமீன்
பதிவு 35 மஸிதா புன்னியாமீன் பதிவு 36 கே.எம்.எம்.இக்பால் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 2
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
: Lumasib 2 பதிவு 37 எம்.பீ.எம். அஸ்ஹர் பதிவு 38 ஜிப்ரி யூனுஸ் பதிவு 39 எம்.எஸ்.எம். அக்ரம் பதிவு 40 ஏ.எச்.எம். மஜீத் பதிவு 41 ஏ.ஏ.றஹற்மான் பதிவு 42 எஸ். கலீல் பதிவு 43 எம்.எம். ராஸிக் பதிவு 44 கே. சுலைமா லெவ்வை பதிவு 45 யூ.எல்.எம். ஹவைலித் பதிவு 46 ஏ.ஆர்.ஏ.பரீல் பதிவு 47 சுலைமா சமி பதிவு 48 ரஸினா புஹார்
பதிவு 49 ஐ.எம். மாரூப் பதிவு 50 ஸெய்யித் முஹம்மத்
25

Page 15
பதிவு
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
பதிவு
பதிவு
51 ஏ.எஸ்.எம்.ரம்ஜான் 53 எம்.எம்.ஜமால்தீன்
55 முஹம்மது பெளஸ்
57 மஷரா சுஹறுத்தீன் 59 ஏ.எல்.எம். அஸ்வர் 61 முஹம்மட் கலீல் 63 எம்.யூ. முஹம்மத் பவுரீர் 65 முஹம்மட் பைரூஸ் 67 றபீக் பிர்தெளஸ் 69 எம்.எஸ்.எஸ்.ஹமீத் 71 அப்துல் ஸலாம் 73 எம்.எஸ்.றம்ஸின் 75 ஏ.எஸ்.எம். நவாஸ் 77 எஸ்.எஸ். பரீட்
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
52 அப்துல் லத்தீப் 54 ஏ. ஜபார் 56 சிபார்தீன் மரிக்கார் 58 யூ ஸெயின் 60எம்.எம்.எஸ்.முஹம்மத்
பதிவு 62 எஸ்.எல்.எம். அபூபக்கர்
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
பதிவு
64 முஹம்மத் இஸ்மாஈல் 66 எம்.ஐ.எம். முஸ்தபா 68 புர்கான் பி இப்திகார் 70 அப்துல் மலிக் 72 எம்.எச்.எம். கரீம் 74 அப்துல் அசன் 76 முஹம்மத் ஹஸனி
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 3
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பதிவு
பதிவு பதிவு
பதிவு
பதிவு
பதிவு பதிவு பதிவு பதிவு
பதிவு
பதிவு பதிவு
பதிவு
பதிவு பதிவு பதிவு பதிவு
78 கல்முனை முபாறக் 80 மாத்தளைக் கமால். 82 ஜமால்தீன் 84 முஹம்மத் சுகைப்
86 உதுமா லெவ்வை ஆதம்பாவா
88 எம். நவாஸ் செளபி 90 எம்.ஐ.எம். அன்சார் 92 எம். அனஸ் 94 பாத்திமா பீபி 96 பாத்திமா சுபியானி 98 நிஸாரா பாரூக் 100 ஏ.எல்.எம். புஹாரி 102 யு.எல்.எம். அஸ்மின் 104. எம்.ஏ. அமீனுல்லா 106 எச்.எல். முஹம்மத்
108 ஹய்ருன்னிஸா புஹாரி
110 அலி உதுமாலெவ்வை
பதிவு 112 கிண்ணியா நஸ்புல்லாஹற்
பதிவு
114 gun a lib DIT
பதிவு
பதிவு
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
: பாகம் 3 79 ஏ.எம். நஸிம்டின் 81 நூறுல் ஹக் 83 முஹம்மட் றபீக் 85 மு.மு. விஜிலி 87 ஏ.எம்.எம். ஸியாது 89 முகுசீன் றயிசுத்தீன் 91 மஸ்ஹது லெவ்வை 93 எம்.கே.எம்.முனாஸ் 95 ஸர்மிளா ஸெய்யித் 97 மொஹம்மட் சியாஜ் 99 பெளகல் றஹீம் 101 ஏ.எப்.எம். றியாட் 103 அப்துஸ்ஸலாம் அஸ்லம் 105 நயிமுத்தீன் 107 ஹஸைன் 109 எஸ்.எல். லரீப் 111 எம்.ஐ.எம். மஷஹர்
பதிவு 113 திருமதிபரீதாசாகுல் ஹமீட்
26

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 4 a ' ' ' , புலம்பெயர் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்,
: பாகம் 1
பதிவு 115 என். செல்வராஜா (ஐக்கிய இராச்சியம்) பதிவு 116 நவஜோதி ஜோகரட்ணம் (ஐக்கிய இராச்சியம்) பதிவு 117 த. ஜெயபாலன் (ஐக்கிய இராச்சியம்) பதிவு 118 பத்மாஷனி மாணிக்கரட்ணம் (ஜெர்மனி) பதிவு 119 வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்) பதிவு 120 நகுலா சிவநாதன் (ஜெர்மனி) பதிவு 121 நா.தெய்வேந்திரம் (வண்ணை தெய்வம்) (பிரான்ஸ்) பதிவு 122 வை. சிவராஜா (ஜெர்மனி) பதிவு 123. சுந்தரம்பாள் பாலச்சந்திரன் (ஜெர்மனி) பதிவு 124 சு. சண்முகம் (சண்) (டென்மார்க்) பதிவு 125 கீத்தா பரமானந்தன் (ஜெர்மனி) ኣ பதிவு 126 அடைக்கலமுத்து அமுதசாகரன் (இளவாலை அமுது) (ஐ. இ) பதிவு 127 இராசகருணா (ஈழமுருகதாசன்) (ஜெர்மனி) பதிவு 128 கே.கே. அருந்தவராஜா (ஜெர்மனி) பதிவு 129 கொண்ஸ்டன்ரைன் (ஐக்கிய இராச்சியம்) பதிவு 130 அம்பலவன் புவனேந்திரன் (ஜெர்மனி) பதிவு 131 பொ. சிறிஜிவகன் (ஜெர்மனி) பதிவு 132 கலைவாணி ஏகானந்தராஜா (ஜெர்மனி) பதிவு 133 வை. யோகேஸ்வரன் (ஜெர்மனி) பதிவு 134 அன்ரனி வரதராசன் (ஜெர்மனி) பதிவு 135 பொ. தியாகராசா (வேலணையூர் பொன்னண்ணா) (டென்மார்க்) பதிவு 136 பொ. கருணாகரமூர்த்தி (ஜெர்மனி) பதிவு 137 ஜெயாநடேசன் (ஜெர்மனி) பதிவு 138 இ.மகேந்திரன் (முல்லைஅமுதன்) (ஐக்கிய இராச்சியம்) பதிவு 139 றமேஷ் வேதநாயகம் (ஐக்கிய இராச்சியம்)
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 5
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
: பாகம் 4 பதிவு 140 அஷ்ரப் ஏ - ஸமத் பதிவு 141 எம்.எம்.எம்.மஹற்றுப் கரீம் பதிவு 142 அன்பு ஜவஹர்ஷா பதிவு 143 ஏ.எம். இஸ்லடின் பதிவு 144 எஸ்.எம். அறுஸ் பதிவு 145 எம்.ஆர்.கே. மவ்பியா பதிவு 146 எம்.யூ.எம். ஜிப்ரி பதிவு 147 ஏ.எல்.எம். ஸாம்ரி,
27

Page 16
பதிவு 148 எம்.எச்.எம். ஹாரித் பதிவு 149 அபூதாலிப்
பதிவு 150 த. மீரால்ெவை பதிவு 151 எம்.எம்.எம். கலீல் பதிவு 152 முஹம்மது பாறுக் பதிவு 153 யூ.எல். முஸம்மில் பதிவு 154 பாயிஸா கைஸ் பதிவு 155 மொஹிதீன் அடுமை
பதிவு 156 எம்.பீ. ஹசைன் பாருக் பதிவு 157 ஏ.எம்.எம். அத்தாஸ் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 6 முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் : பாகம் 5
பதிவு 158 எம்.எம். சாலிஹம் பதிவு 159 என்.எம். ஹனிபா பதிவு 160 ஏ.எம். றசீது பதிவு 161 ஏ.எல்.எம். பளில் பதிவு 162 சுலைமான் புலவர் பதிவு 163 ஏ.எம். கனி பதிவு 164 ஆ.மு. ஷரிபுத்தின் பதிவு 165 எம்.ஏ. முஹம்மது பதிவு 166 எம்.ஸி.எம். ஸ்பைர் பதிவு 167 எம்.எச்.எம். ஷம்ஸ் பதிவு 168 பீ.எம்.ஏ. சலாஹுதீன் பதிவு 169 வை. அஹ்மத் பதிவு 170 ஏ.ஸி. பிர்மொஹம்மட் − இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,
கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 7
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
. . : UT5b 6
பதிவு 171 நயீமா சித்திக் பதிவு 172 ஏ. சித்தி ஜஹானறா பதிவு 173 ஸாஹிரா நாஸிர் பதிவு 174 முகம்மது முர்சித் பதிவு 175 எம். எப். ரிம்ஸா பதிவு 176 எம். எல். லாபீர் பதிவு 177 ஹிபிஷி தெளபீக் பதிவு 178 என். எல். ரஷின் பதிவு 179 தமீம் அன்சார் பதிவு 180 ரஷித் எம். றாஸிக் பதிவு 181 ஏ.சி. றாஹில் பதிவு 182 செய்ன் தம்பி ஸியாம் பதிவு 183. எஸ்.எம். சப்ரி பதிவு 184 எம். ஏ. அமீர் ரிழ்வான்
பதிவு 185 ஏ.ஆர்.ஏ. அஸிஸ் பதிவு 186 வை.எல்.எம். றிஸ்வி பதிவு 187 எம்.எச். முஹம்மட் பதிவு 188 மொஹம்மட் அக்ரம் பதிவு 189 மு.மீ. அமீர்அலி பதிவு 190 எஸ். நஜிமுதீன் பதிவு 191 என்.பி. ஜூனைத் பதிவு 192 மல்ஹர்தீன்
பதிவு 193 றஹற்மான் ஏ.ஜெமீல் பதிவு 194 எம்.எல். இஸ்ஹாக் பதிவு 195 எஸ்.எம்.எம்.நஸிறுதீன் பதிவு 196 றிஸ்வியூ முஹம்மத் நபில் பதிவு 197 எம்.எஸ்.எம்.ஸல்ஸபீல் பதிவு 198 முகமட் இமாம் ஹன்பல் பதிவு 199 அ.கா.மு.ஹிஸ்வின் பதிவு 200 எம் .எம். கலீல்
28 نيسس

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 8 .
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
201
203
205
207
209
21
23
215
217
219
221
223
225
: பாகம் 7 என்.எம். நூர்தின் பதிவு 202 ஏ.எல் முகம்மட் முக்தார் ஆரிப் அஜ்மீர் பதிவு 204 ஏ. புஹாது ஏ.எல். ஜுனைதின் பதிவு 206 எம்.பி.எம். காஸிம் அப்துல் அஹத் பதிவு 208 எம்.யூ.எம். சனூன் மொஹமட் ரமலி பதிவு 210 எச்.எம். ஷரீப் அப்துல் ஸலாம் பதிவு 212 மருதூர் அலிக்கான் எம்.என். அப்துல் அளில் பதிவு 214 எம்.ஐ.எம்.ஐ பாவா எம்.எம். பகுர்தீன் பாவா பதிவு 216 ஏ.சிஅகமது லெவ்வை அப்துல் ரவூப் பதிவு 218 எம்.ஐ. இம்தியாஸ் ஏ.கே.எம். அன்ஸார் பதிவு 220 எம்.ஐ.எம். பாரீஸ் முஹம்மது அஸ்ஹர் பதிவு 2 எஸ்எம் உவைத்துல்லா எம்.பி. அஹமட் ஹாறுான் பதிவு 224 சுபைர் இளங்கீரன்
எம்.ரி. முகம்மது ஹஸைன்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 9
புலம்பெயர் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
226 227 228
229.
230 231 232 233
பதிவு 234 பதிவு 235
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
236 237 238
239 240
பதிவுசெய்யப்படுவோர்.
: பாகம் 2
வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்), (கனடா)
பொன்னரசி கோபாலரட்ணம், (நோர்வே) பத்மன் பசுபதிராஜா, (ஜேர்மனி)
க. சக்திதாசன் (இணுவை சக்திதாசன்), (டென்மார்க்)
ஆ.மகேந்திரராஜா, (ஜேர்மனி)
வைத்தீஸ்வரன் ஜெயபாலன், (ஐக்கிய இராச்சியம்)
முகத்தார் எஸ். ஜேசுறட்ணம், (பிரான்ஸ்)
தர்மலிங்கம் இரவீந்திரன், (ஜேர்மனி)
செல்லத்தம்பி சிறீக்கந்தராசா (ஐக்கிய இராச்சியம்) எம்.என்.எமி. அனஸ் (இளைய அப்துல்லாஹ் (ஐக்கிய இராச்சியம்)
மட்டுவில் ஞானக்குமாரன், (ஜேர்மனி)
சகாதேவன் இராஜ்தேவன் (இராஜ் கண்ணா), (நோர்வே)
மனோன்மணி பரராஜசிங்கம், (ஜேர்மனி) சி. பன்னிர் செல்வம், (இந்தியா) இராஜேஸ்வரி சிவராசா (ஜேர்மனி)
29

Page 17
இதயபூர்வமான நன்றிகள்
 

விபரத்திரட்டு
Göstodd509
31

Page 18
· Roccorn 109009/9 (o.
· 1,9334119 urnúcoog)-Ioogssnes) (g. Ļ9ositournĝņmee) (z Į9?srngig?? (I
Roccorn 199cc9f9 (†
qi-Iriņoooh (gf(909rnigoqoß9 (ç TU9C09rnigoqo (9 (ç
---- _ - -qı.199€ songo (wquo-ulqi '(t)
1,99€ su9urnĝņnes) (z@rguís@ ₪ 09-as (g.ọ919 ligi (£
- -1,9osmýgo (Iquodsi) o (zமே9ருes (
9യ9f999 (y-- --ọ9Țngosto (I s oặco9os@g? (I
qı-ırıņúcnosť (g.glo-irsas99 99 க9ழித்திா| .·-
quæ nuq' (z osrnuoft##os@- sığ snoe)· úœ95) zigo gırnlo șosựiņ~ıderı
qırmış9ề (I-|-|--|- 'too (1@oscaso------------ ựsols uformış, soos &
·9:11ffornisoபூ99ற்eெeஐoposiblemssoniae“¡9æýlı911$$đù19
dođi sin storno
32
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்)
பதிவு 226
எழுத்துத்துறை
வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டத்தில் காங்கேசந்துறை கிராமசேவகர் பிரிவினைச்சேர்ந்த திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்கள் ஈழத்து மூத்த பெண் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் 1991-ம் ஆண்டில் புலம்பெயர்ந்து கனடாவில் ‘ரொறன்ரோ நகரில் வசித்து வருகின்றார்.
1933-ம் ஆண்டு ஜனவரி மாதம் 09-ம் திகதி ஈழமண்ணில் சின்னத்தம்பி, செல்லமுத்து தம்பதியினரின் புதல்வியாகப் பிறந்த வள்ளிநாயகி காங்கேசந்துறை நடேஸ்வரக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியினையும், இடைநிலைக் கல்வியினை Holy Family Convent, (English Maha Vidyalayam) 36 b Guibortif. isr gadflou யாக நியமனம் பெற்று கோப்பாய் - ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்றார். இவர் இந்தியாவில் - கல்கத்தா SHALABAL COLLEGE இல் கலைமாணிப் பட்டம் பெற்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முதுகலைமாணிப் பட்டம் பெற்றார்.
தொகுதி 09 - கலாபூஷணம் புணர்னியாமீனி - 33

Page 19
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
மேலும், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பாக கல்வி டிப்ளோமா, நாடக டிப்ளோமா ஆகிய பட்ட்ங்களையும் பெற்றுள்ள இவர் பூரீலங்கா கல்வி நிர்வாக சேவையின் Iம் தர (SLES - III) அதிகாரியுமாவார். இவற்றுடன் யாழ்ப்பாண நாவலர் கல்லூரியில் 'பால பண்டிதர் பட்டம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலை ஆசிரியையாக தனது தொழிலை ஆரம்பித்த வள்ளிநாயகி பின்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளராகவும், அளுத்கமை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் பதில் அதிபராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
ஒய்வுபெற்ற முன்னைநாள் விரிவுரையாளரும், கல்விமானு மாகிய இவர் 1991-ம் ஆண்டில் "கனடாவுக்குப் புலம்பெயர்ந்து கனடாரொறன்ரோவில் தனது பிள்ளைச் செல்வங்களுடன் வசித்து வருகின் றார். இவரின் அன்புக் கணவர் அமரர் வே. இராமலிங்கம் அவர்கள் தலைமைத் தபாலதிபராகக் கடமை பார்த்து ஓய்வுபெற்றவர். இவரின் அன்புச் செல்வங்களுள் சசிகலா செந்திலால் கனடாவில் டாக்டராகப் பணி புரிகின்றார். மகள் கலாவாணி பாலச்சந்திரன், மகன் துளவிராம் ஆகியோரும் கனடாவில் உயர் தொழில் புரிந்து வருகின்றனர்.
பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்தே இலக்கியத்துறை வாசனையை நுகர்ந்தவர். பெற்றோரின் வாசிப்பு, இவரையும் வாசிக்கத் தூண்டியது. அப்போது தாயகத்திலிருந்தும், இந்தியாவிலிருந்தும் வெளிவரும் சஞ்சிகைகளை அதிகமாக வாசிப்பார். “இத்தகைய வாசிப்புத் தன்மையே தன்னை எழுதத் தூண்டியது' என்று குறிப்பிடும் வள்ளி நாயகியின் முதல் ஆக்கம் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் முதல் பரிசு பெற்ற சிறுகதையாக 1955ல் கலாசாலை சஞ்சிகையான ‘கலை மலரில் இடம்பெற்றது. 2வது கதை ‘ஈழகேசரியில் பிரசுரமானது.
அதிகமாக எழுத வேண்டும் என்பதைவிட அர்த்தமுள்ளதா கவும், தரமானதாகவும் எழுத வேண்டும் என்ற கொள்கையுடன் இருந்துவரும் இவரின் 65 சிறுகதைகளும், 100க்கு மேற்பட்ட கவிதை களும், 300க்கு மேற்பட்ட கட்டுரைகளும் இதுவரை பிரசுரமாகியுள்ளன. தாயகத்தில் வாழும் போது இத்தகைய ஆக்கங்கள் ஈழகேசரி, வீரகேசரி,
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு 34

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
தினகரன், இளம்பிறை, சிந்தாமணி, இலங்கை வானொலி உட்பட சில சிற்றிலக்கிய ஏடுகளில் பிரசுரமாகியும், ஒலிபரப்பாகியுமுள்ளன.
மேலும், இந்தியாவிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடனிலும் சில தமிழகச் சஞ்சிகைகளிலும் இவரின் ஆக்கங்கள் பிரசுரமாகியுள் ளன. கனடாவுக்குப் புலம்பெயர்ந்த பின்பு தொடர்ந்தும் கட்டுரை, கவிதை, சிறுகதை, குறுநாவல் என எழுதிவரும் இவரின் ஆக்கங்கள் கனடாவிலிருந்து வெளிவரும் தமிழ் சஞ்சிகை, பத்திரிகைகளிலும், வானொலி, தொலைக்காட்சிகளிலும் இடம்பெற்று வருகின்றன. '
இவர் சில வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார். இவரால் எழுதப்பட்ட 'கலிங்கத்துக் காவலன்' எனும் நாடகம் அகில இலங்கை கலைக்கழக நாடகப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. அதேபோல ‘பாற்கடல் கடைந்த கதை’, ‘இராமர் யுத்த காண்டம் போன்ற நாட்டிய நாடகங்களும் பரிசில்களை வென்றுள்ளன.
1991ம் ஆண்டு ரீலங்கா ரூபவாஹினியில் இவரின் நாட்டிய நாடகம் ஒளிபரப்பானது. அத்துடன் ரூபவாஹினியில் இவரின் பல உரையாடல்களும் இடம்பெற்றுள்ளன.
இவரால் எழுதிவெளியிடப்பட்ட சில நூல்கள் பற்றிய பதிவினை ஈழத்துத் தமிழ்நூல்களின் சர்வதேச ஆவணப்பதிவான நூல்தேட்டத்தில் திரு. என். செல்வராஜா பின்வருமாறு பதிவாக்கியிருந்தார்.
உள்ளக் கமலமடி குறமகள். (இயற்பெயர்: வள்ளிநாயகி இராமலிங் கம்). சென்னை 24: மித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ். 375/8-10 ஆர்க்காடு சாலை 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2001 (சென்னை 600024 : மித்ரா புக் மேக்கர்ஸ், (375/8-10 ஆர்க்காடு சாலை) 256 பக்கம். விலை இந்திய ரூபா 80. அளவு 17.5x12 சமீ. ISBN 1-87-6626-67-4
குறமகளின் 15சிறுகதைகள் கொண்ட தொகுதி, பிறந்த, புகுந்த சமூக ஒட்டுறவினால் ஏற்படும் தனிமனித சமூக விளைவுகளை “குறமகள் மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கின்றார். கதைக் களங்கள், புலம்பெயர்ந்த கனேடிய மண்ணில் அமைந்துள்ளன. பல கதைகள் ஈழத்து அரசியல் பிரச்சினைகளைப் பின்புலமாகக கொண்டி ருந்த போதிலும் அவை எந்த அரசியலையும் தனிப்பட்ட முறையில்
: தொகுதி 09 - கலாபூஷணம் புன்னியாமீன் - 35.

Page 20
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
சாராது மனித நேயத்தை ஆதாரமாகப் பற்றிக் கொண்டு பல அரசியல் கோட்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்குகின்றன.
-நூல்தேட்டப் பதிவு எண் 2583
இராமபாணம்: குறமகள், கனடா திருமதி வள்ளிநாயகி இராம லிங்கம். ரொரன்ரோ 1வது பதிப்பு அக்டோபர் 2001 (கனடா, அச்சக விபரம் தரப்படவில்லை)
பக்கம் 40. விலை அன்பளிப்பு. அளவு 17.5x12 சமீ. ISBN 1-876626-67-4
இளைய சமுதாயத்தினருக்கான நல்வழி புகட்டும் கட்டுரைத் தொகுதி “சுடரொளி” மாணவர் பத்திரிகையில் குறமகள் எழுதிய நான்கு
கட்டுரைகளும், தமிழர் கூட்டுறவு இல்லத்தின் வெளியீடான ‘துருவ
தாரகை”யில் எழுதிய மூன்று கட்டுரைகளும் இத்தொகுப்பில் அடங்கி
யுள்ளன. குறமகள் அவர்களின் கணவரான அமரர் இராமலிங்கம்
அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவஞ்சலி மலராக வெளியிடப்
பட்டுள்ளது.
-நூல்தேட்டப் பதிவு எண் 2454
குறமகள் கதைகள்: வள்ளிநாயகி இராமலிங்கம், யாழ்ப்பாணம் யாழ் இலக்கிய வட்டம். இலங்கை இலக்கியப் பேரவை. 1* பதிப்பு ஜனவரி 1990. யாழ்ப்பாணம் ஸ்டீனா வெளியீடு
120 பக்கம் விலை ரூபா 40. அளவு 18x12.5 சமீ.
குறமகள் கதைகள்: வள்ளிநாயகி இராமலிங்கம் சென்னை 24: மித்ர வெளியீடு, 375/8-10 ஆர்க்காடு ரோட், 1வது பதிப்பு டிசம்பர் 2000. (G36j6060T 24 Mitra Arts and Creations)
144பக்கம் விலை இந்திய ரூபா 45. அளவு 18x12.5 சமீ. (மித்ர வெளியீட்டின் 1வது பதிப்பு)
குறமகள் (இயற்பெயர்: வள்ளிநாயகி இராமலிங்கம்). பெண்களின் சமூக விடுதலைக்கான கருத்துக்களைத் தம் சிறுகதைகளில் பொறிக் கும் போது குடும்ப உறவின் பிணைப்பு அறாமல் வலுப்படும்படி சமூகப் பொறுப்புடன் எழுதுபவர். இவரது சிறுகதைகள் நம்பிக்கை
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினர் விபரத்திரட்டு 36.

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
யூட்டும் உணர்ச்சிச் சித்திரங்கள். இப்படித்தான் வாழ்ந்து முடிப்போம் எனத் தமக்கென ஒரு கருத்து நெறியினை வகுத்துச் செயற்படும் கதாபாத்திரங்களை இவரது சிறுகதைகளில் காண முடியும். செங்கை ஆழியான் (1வது பதிப்பின் பதிப்புரையில்)
நூல்தேட்டப் பதிவு எண் 554
இவற்றுடன் ‘மாலை சூட்டும் நாள் கவிதைத் தொகுதியினையும், இலங்கையில் வாழும் காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முதுமாணி பட்டப்படிப்புக்காக இவரால் எழுதப்பட்ட "யாழ்ப்பான சமூகத் தில் பெண்களின் கல்வி - ஓர் ஆய்வு எனும் நூலினையும் 2007ல் வெளியிட்டுள்ளார். மேலும், சில நினைவு தினங்களை மையமாகக் கொண்டு பின்வரும் தொகுப்புகளை தொகுத்து வெளியிட்டுள்ளார்.
1. குருமோகன் பாலர் பாடல்கள் - 1965 (LD56f) 2. அருள் நெறிக் கோவை - 1971 (தந்தை) 3. சக்தி நெறிக்கோவை - 1972 (தாய்), ' 4. பஞ்சாட்சரம் (சித்தவைத்தியம்) -1988 (ஒரு வைத்தியர்) 5. குக நெறிக்கோவை - 1990 (கணவர்) 6.
ஈழத்து ரோசா - 1997 (மகள்)
இலக்கியத் துறையைப் போலவே சமூகசேவைகளிலும் இவர் அதிகம் ஈடுபாடுமிக்கவராக காணப்பட்டுள்ளார். கனடாவிற்கு புலம்பெ யர்ந்த பின்பு தெற்காசிய பெண்கள் நிலையத்தில் புலம்பெயர்ந்த அகதிப் பெண்களின் நலஉரிமைக்காக பாடுபட்டுள்ளார். மேற்படி அமைப்பில் இயக்குனர் சபையில் பல பொறுப்புகளை சேவை அடிப் படையில் சுமார் 10 ஆண்டுகளாக மேற்கொண்டுள்ளார். அதே நேரம் கனடாவிலிருந்து வெளிவந்த செய்தித்தாளான ‘துருவ தாரகையில் ஆசிரியராகவும் இரண்டு வருடங்கள் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத் தககது. . . . .
திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்கள் குறமகள், ! இராசாத்திராம், சத்தியபிரியா, காங்கயி, சக்திக்கனல் ஆகிய பெயர்க ளில் எழுதிவருவதைப் போல பேச்சுத்துறையிலும் மிகவும் திறமை சாலி, மேடைப்பேச்சு, பட்டிமன்றம், இலக்கியவிழாக்கள், நூல் விமர்ச னங்கள் என்பவற்றில் ஈழத்திலும், கனடாவிலும் இவர் புகழ்பெற்றவர். பொதுவாக இவரின் எழுத்துக்களிலும், பேச்சுக்களிலும் ‘பண்பாடுக ளோடு கூடிய பெண்ணியம், தமிழுணர்வு, தமிழ்ஈழம், எளிமையான தமிழ்' ஆகிய வெளிப்பாடுகளை அவதானிக்கலாம்.
தொகுதி 09 - கலாபூஷணம் புண்ணியாமீன் - 37

Page 21
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
1955ல் எழுதத் தொடங்கிய இவரின் ‘இலக்கியப் பொன்விழா வினை வெகுவிமர்சையாக கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் கனடாவில் கொண்டாடியது. முத்தமிழ் வித்தகி, ஈழத்து ஒளவை, இலக்கிய வித்தகி, பெண்ணியப் போராளி என்று பல பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்ட போதிலும் கூட இவற்றை உபயோகிப்பதில் இவர் விருப்பங்காட்டுவதில்லை. ‘என் கடன் பணி செய்து கிடப்பதே' என்பது இவரின் குறிக்கோள்.
தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் தமிழர் எழுத்தாளர் சங்கம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம், யாழ் இலக்கிய வட்டம், கலை இலக்கியக்களம் , பெண்கள் ஆய்வு வட்டம் ஆகிய அமைப்புக்களில் அங்கத்துவம் பெற்றிருந்தார். கனடாவில் தமிழ் எழுத்தாளர் இணையம், கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், CTR வானொலி நேயர் வட்டம் ஆகியவற்றில் அங்கத்தவராகப் பணியாற்றி வருகின்றார். பகவான் ரீ சத்தியசாய் நிறுவனங்களுக்கு நாடகம், கவிதை (ஆங்கிலம், தமிழ் மொழிகளில்) எழுதிக் கொடுப்பதில் மன நிறைவு கொள்ளும் இவர் புலப்பெயர்வு பற்றிக் குறிப்பிடும்போது “அனேகமான எழுத்தாளர் களை யான் அறிவேன். இளம்பிறை ரஹற்மானும், எஸ். பொவும் தொடர்பில் இருந்தனர். என் கணவர், பிள்ளை, பொருள், பண்டம், உடமை, அதுவரை எழுதிய ஆக்கங்கள் எல்லாம் இழந்து வந்ததால் ஏற்பட்ட விரக்தியில் தொடர்புகளைப் பேணாது விட்டுவிட்டேன். இங்கே எழுதுபவை தான் கைவசம் இருந்து நூல்களாக்கப் படுகின்றன.” என்று குறிப்பிடும் போது ஒர் எழுத்தாளன் என்ற அடிப்படையில் உள்ளம் அடைக்கின்றது.
தன்னுடைய இலக்கியத்துறை ஈடுபாட்டுக்குக் காரணகர்த்தாக்
களாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் ஈழகேசரியின் உதவி ஆசிரியராக இருந்த உறவினர் அருளம்பலம், சோர்ந்து போகாமல் ஊக்கம் கொடுத்தவர்களான வரதர், கனக செந்திநாதன் இலக்கிய ரசனையை வளர்த்த குருநாதபிள்ளை, வித்துவான் வேந்தனார் ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்துவரும் இந்த மூத்த எழுத்தா ளரின் முகவரி :
Mrs.V. RAMALINGAM,
516-20 WADEAVE,
TORONTO. ONTARD.
- M 6 H 4H 3
'தினக்குரல் வாரமஞ்சரி: 2007.07.08 CANADA. இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு 38

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
பொன்னரசி கோபாலரட்னம்.
பதிவு - 227 )
எழுத்துத்துறை
இலங்கையில் வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டத்தில் நாயன்மார்க்கட்டு, அரியாலை கிராமசேவகர் பிரிவினைச் சேர்ந்த திருமதி பொன்னரசி கோபாலரட்ணம் 1988ல் புலம்பெயர்ந்து தனது குடும்பத்துடன் நோர்வேயில் மோலோய் நகரத்தில் வசித்து வருகின்றார்.
1955-ம் ஆண்டு ஜூலை மாதம் 09-ம் திகதி ஈழ மண்ணில் பிறந்த பொன்னரசி தனது ஆரம்பக் கல்வியை நாயன்மார்க்கட்டு மகேஷ்வர வித்தியாசாலையிலும், செங்குந்தா கல்லூரியிலும் பின்பு உயர்கல்வியினை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியிலும் பெற்றார். இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் (Open University) Diploma in Science பாடநெறியினைப் பூர்த்தி செய்துள்ளார். நோர்வேயில் Nursery Training பரீட்சையில் சித்தியடைந்து சிறுவர் கல்வி நிலையங்களில் வேலை செய்வதற்கான தகுதி சான்றிதழ் பெற்றுள்ள இவர் தற்போது ‘நோர்வேயில் தாய்மொழி ஆசிரியை யாகவும், சிறுவர் பாடசாலை உதவியாளராகவும் பணியாற்றி வருகின்
தொகுதி 09 - கலாபூஷணம் புணர்னியாமீனி - 59

Page 22
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
இவரின் அன்புக் கணவர் சீவரட்ணம் கோபாலரட்ணம் அவர்கள் ஒரு இயந்திரவியலாளர். இத்தம்பதியினருக்கு ஆசைச்கொரு மகளும், ஆஸ்திக்கு ஒரு மகனும் உளர். மகள் மருத்துவக் கல்லூரி மாணவி யாவார். மகன் கல்லூரி மாணவன்.
புலம்பெயர்ந்த பின்பே இவரது இலக்கியப் பயணம் ஆரம்பித் தது. சுமார் 17 ஆண்டுகளாக எழுத்துத்துறையில் ஈடுபாடு கொண்டி ருக்கும் இவரின் கன்னி ஆக்கம் நோர்வேயில் இருந்து வெளிவரும் ‘எமது சஞ்சிகையில் ‘வோக்ஸோய் தமிழ் சங்கம்' எனும் தலைப்பில் இடம்பெற்றது. அதிலிருந்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். அத்துடன் நோர்வேஜிய மொழியி லிருந்து சிறுவர்களுக்குத் தேவையான பல கதைகளை தமிழில் மொழிபெயர்த்துமுள்ளார்.
இவர் இதுவரை இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்:
1. கர்ச்சிக்க முடியாத frilabb.
. . . மொழிபெயர்க்கப்பட்ட சிறுவர்களுக்கான இச்சிறுகதைத் தொகுதிபற்றி கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் 2004 மே 03-ம் திகதி யாழ். தினக்குரலில் எழுதிய நூல்நயம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
எமது சிறார்களினி கல்வியறிவை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு ஒன்று எம்முனினே காத்துக் கிடக்கின் றது. தாய்மொழி அறிவை அவர்கள் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எம்மிடையே உண்டு. ஆனால் இதை நிறை வேற்றுவது எப்படி என்ற ஒரு வினாவும் எழுந்துள்ளது அதற்கான விடையைத் தேடுமுகமாகப் பல முயற்சிகளும் நடைபெறுகின்றன. சிறப்பாக எமது தாய்மொழியின் சிறப் பைச் சிறார் உணரும் வகையில் ஒரு புதிய கற்கை நெறி யைத் திட்டமிட்டுச் செயற்படுத்த வேண்டியுள்ளது
இன்று தமிழர் தமது தாயகத்தை விட்டுப் புலம் பெயர்ந்து மேலைநாடுகளிலும் வாழ்கின்றனர். அவர்கள் தாய்மொழியாம் தமிழை தமது குழந்தைகளுக்குப் “ பிற
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு 40

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
மொழி’ என்ற நிலையில் கற்பிக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். எனவே தமிழ் மொழி அறிவால் ஏற்படும் நண்மையைச் சிறார் மன திலே பதிய வைக்க வேண்டி, தாம் வாழும் நாட்டு மொழியோடு ஒரு இணைப்பு நிலையை உருவாக்கி, ஒரு கவர்ச்சி நிலையான கற்பித்தலை மேற்கொள்ள வேண்டிய தேவையும் உருவாகியுள்ளது. அவர்கள் வீட்டு மொழியாகத் தமிழைப் பேசுகின்ற நிலையும் தென்னிந்தி, யத் தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்கின்ற வேளையும் தானி புலம் பெயர் தமிழரது சிறாரின் தமிழ்மொழிப் பயிற்சியாக உள்ளது. இவ்விரு நிலைகளும் அந்தச் சிறாரின் எழுத்து, வாசிப்பு ஆற்றல்களை வளர்க்கப் போதுமானதன்று.
இந்நிலையில் பிஞ்சு முகங்களினி தேடலை உணர்ந்து தமிழ்மொழிப் பயிற்சியை அளிக்க ஒரு புதிய வழியைத் தேடும் நிலை ஏற்பட்டது. சிறாரின் நாளாந்தச் செயற்பாடுகள் நிறைவுற்று உடல் ஓய்வுபெறும் நிலையில் தூங்கச் செல்லும் வேளையில் “கதை கூறல்” என்ற கடமையைப் பெற்றோர் ஏற்றனர். சிறாரினி உள்ளத்திலே ஒரு நினைவுப் பதிவையும் கற்பனை வளத் தையும் ஏற்படுத்த “இந்தக் கதை கூறல் உதவியது. வகுப்பு நிலையில் நடைபெறும் “கதை கூறலை” விட இந்த உறக்க நிலைக்கு முன்னைய “கதை கூறல்” சிறாரை மொழியில் வசியப்படுத்த உதவியது. பெற்றோ ரின் மொழியாற்றலையும், வளத்தையும் சிறந்ததொரு குணநலமாகப் பிள்ளை இனங்கண்டு தானும் அதைப் பெற வேண்டும் என்ற ஆவல் கொள்ளவும் வாய்ப்பளித் தது. இரவு கேட்ட கதையை மீண்டும் ஒரு முறை தானாகவே படிக்க வேணடும் என்ற விருப்பையும் ஏற்படுத்தியது. இந்த விருப்பு பிள்ளையை கதைநூல்க ளைத் தேடிப் போக வைக்கும். அவ்வாறு பிள்ளை தேடிப் போகும் வேளையில் உடனடியாக அது கிடைத்து
: தொகுதி 09 - கலாபூஷணம் புன்னியாமீன் - 4.

Page 23
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம்
விட்டால் தானாகவே பிள்ளை கதையைப் படிக்க முய சிக்கும். பிள்ளையின் இத்தேடலை நன்குணர்ந்த திரும பொனினரசி கோபாலரட்ணம் ஒரு நூலை ஆக் வெளியிட்டுள்ளார். மொழிப் பயிற்றலில் பெண்மையில் ஆற்றல் தலை சிறந்தது. அதனை இவர் நிறுவியுள்ளா நோர்வே நாட்டிற்கு 1988-ம் ஆண்டு குடிபெயர்ந்து ஒ( சிறுவர் பராமரிப்பு நிலையத்திலே பணி செய்யும் வாய் புப் பெற்றதால் தனது தாய்மொழிக்கான கடமையை சிறப்பாகச் செய்துள்ளார். நோர்வே மொழியில் வழா கும் சிறுவர் கதைகளைத் தமிழிலே மொழிபெயர்த்து சிறுநூல் வடிவில் “கர்ச்சிக்க முடியாத சிங்கம்” எனி பெயரில் வெளியிட்டுள்ளார். அவருடைய செயல் எமது கடமைக்குப் பேருதவி செய்கின்றது.
புலம்பெயர்ந்து வாழும் சிறார் மட்டுமன்றிதா கச் சிறாரும் இந்நூலைப் படித்துப் பயன்பெறுவ நோர்வே நாட்டில் பிறந்து நோர்வே மொழி மூல இக்கதைகளைப் படித்த சிறுவர் தமிழ் மொழியிே மீண்டும் அக்கதைகளைப் படிக்கும் போது இருமொழ புலமையாளராக வளர வாய்ப்புக் கிடைக்கின்றது தாயகச் சிறுவர்களுக்கும் பிறமொழியான நோர்6ே மொழி கூறும் பண்பாட்டை விளங்கிக் கொள்ளவு தமிழ்மொழிக் கதைகளையும் அவற்றோடு ஒப்பிட்டு பார்க்கின்ற ஒரு ஆய்வுத் தேடல் நிலையும் உருவாகின றது. பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளைப் பே வளரும் குழந்தைகள் யாவரையும் ஊக்குவிக்க ஒரு புதி வடம் பொன்னரசியினி நூல். இந்த வடத்தில் எல்லா குழந்தைகளையும் இணைக்க முடியும்
ஏறக்குறைய ஒரு மாமாங்க கால முயற்சியே பொனினரசியினி நூலாக்கம். 15 கதைகள் நூலி அடங்கியுள்ளன. கதைகள் கூறும் செய்திகள் குழந்தையின் மனவளர்ச்சிக்கு ஏற்றவை. இணைந்துள்ள ஒவியர் ரமணியின் படங்கள் சிறாரின் கற்பனை வள
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாள்ர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு 4.

s
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம்2
இர்க்சிக்இழwதி * මෛක්‍ෂු භික්‍ෂුණී[h.
*** " x . * & ' '& ४** జ్ఞ % , క్ష్యీ, :ே xx ※。°
مگ-گھنٹ
திற்கு உதவுவனவாக உள்ளன. நோர்வே நாட்டினர் பணி பாடு கதைகளோடு இழையோடி பூமாலையின் நார்போல உறுதியாக நிற்கிறது. கதைகளில் சிறாரினி மனப்பதிவு
களாக விளங்கும் விலங்குகளின் வாழ்வியல் தெளிவுபடுத் தப்பட்டுள்ளது. மனித இயல்புகளைக் குழந்தை விலங்குக ளிலும் கண்டு கொள்ளும் உணர்வுகளை வெளிப்படுத்து வதற்கு விலங்குகளையும் பேச வைத்த நிலை குழந்தை யின் வெள்ளை உள்ளத்தினைத் தொட அது வாசிக்கும் ஆவலைத் துரணிடும். தனினோடு ஒத்த சிறாரோடு பேசத் தூண்டும் பொன்னரசியின் தமிழ்நடை இதற்குப் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. எடுத்துக் காட்டாக ஒரு சிறிய பகுதியைக் காட்டலாம்.
“தந்தையரின் இரு குழந்தைகள் ஒரு முறை அவர் கள் வீட்டில் சிறிதளவு உணவு கூட கிடைக்கவில்லை. இதனால் இப்பிள்ளைகள் உணவு தேடிக் காட்டினி நடுப்பகுதி வரை சென்றார்கள். அங்கு மிளகு கலந்து செய்த ஒருவகை பிளப்கட்டினால் ஆக்கப்பட்டிருந்த வீட்டைக் கணிடார்கள்.
இத்தகைய மொழிநடை சிறாரைக் கதையை
தொடர்ந்து வாசிக்க வழிநடத்திச் செல்லும் எல்லாக்
கதைகளிலும் இத்தகைய மொழி நடையே பரவியுள்ளது,
பொண்ணரசியின் நோர்வே மொழிப்புலமை, தமிழ் மொழி ஆற்றல், கதைகளின் கரு என்பன இணைந்து சிறாருக்கு
ஒரு நல்ல நூல் கிடைத்துள்ளது. w
தொகுதி 09 AA கலாபூஷணம் புண்ணியாமீனி - 43

Page 24
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் !
இந்நூலை முத்தமிழ் வெளியீட்டு மன்றம் இலங்கையில் வெளி யிட்டுள்ளது. முது தமிழ்அறிஞர் க. சொக்கலிங்கம் அவர்கள் நூலுக்கு அணிந்துரை வழங்கித் தலைமுறைக் கையளிப்பைச் செவ்வனே நிறைவேற்றியுள்ளார். நூலாசிரியரின் சிறிய முகவுரை அவர் செயற் பாட்டைத் தெளிவுபடுத்துகின்றது. நூல் தமிழ் கூறும் நல்லுலகச் குழந்தைகளுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. 52 பக்கங்களிலும் சிறாருக்குச் சுமையாக அமையாது உருவாக்கம் பெற்றுள்ளது கதைகளில் முன்னர் வெளிவந்த வரலாறும் செவ்வனே ஆவணப்படுத் தப்பட்டுள்ளது. நூலின் பின்னிணைப்பில் மூலக் கதைகளின் வெளியீட்டு விபரம் அமைந்துள்ளமை கற்றோர் தேடலுக்கு விடை தருகிறது.
தொகுத்து உரைக்கின் இந்த நூல் ஒரு காலத்தின் தேவையை நிறைவேற்றும் பணியின் முன்னணியில் நிற்கிறது. சிறுவர் பராமரிப்ட நிலையைச் சிறார்களின் பராமரிப்புக்குப் பொறுப்பானவர்கள் இந்நு லைத் தமது இல்லச் சிறார்களுக்கு வாசித்துக் காட்டுவது சாலவும் சிறந்தது. கதைகளைச் சிறாரே நாடகமாக நடித்துக் காட்டவும் நூல் உதவும்.
புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்துகொண்டு அந்நாடுகளிலே தாங்கள் பெறும் அவலங்களையும், அனுபவங்களையும் அந்த அனு வங்களோடு இணைந்து தம்மைப் பாதிப்புக்குள்ளாக்கும் தங்களின் தாய்நாட்டு உறவுகளையும் கருக்களாகக் கொண்டு ஏக்கம், சோகம் உருக்கம், ஏமாற்றம், வெறுமை இவற்றினிடையே ஆசை அருமைய கக் கிடைக்கும் இனிமையான அனுபவங்கள் என்பவற்றைச் சித்த ரிக்கும் கலைஞர்கள் சிலரின் வரிசையிலே திருமதி பொன்னர கோபாலரட்ணமும் குறிப்பிடத்தக்க இடத்தினை வகித்து வருகின்றா என்பதற்கு முடிவு அவள் கையில்’ என்ற சிறுகதைத் தொகுதி நல்ல எடுத்துக்காட்டு. -
அ.முத்துலிங்கம், சித்தார்தகே குவேரா, நட்சத்திரன் செவ்வி தியன், ரீதரன் முதலாம் படைப்பாளர்கள் தமது படைப்புக்களி ஏற்படுத்தியுள்ள சாதனை, புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் கொ( முடிகளாக விளங்குவது போன்ற மகத்தான படைப்புக்கள் திரும பொன்னரசியின் சிறுகதைகளும் என்று சொல்வது பொன்னரசிக் விமர்சகன் செய்யக் கூடிய தீமையும், அவர் வளர்ச்சிப் பாதையின்
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு 44

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
குறுக்கே இடப்படும் தடையும் என்ற உணர்வோடுதான் இவரின் கதைகளை அணுக வேண்டியுள்ளது. ஆனால், அவர்களின் இலக் கிய சாகசங்கள், உத்திகள், நுணுக்கங்கள், குறிப்புப்பொருள் உணர்த்தும் திறன்களுக்கு அப்பாலான ஒன்று பொன்னரசியின் சிறுகதைகளில் சுட்டிப்பான கவனத்திற்கு உள்ளாகின்றது.
அது என்ன?
பொன்னரசியின் சமூகப்பொறுப்பு வாய்ந்த உண்மையை உண்மையாக எவ்வித அலங்காரமுமின்றி எடுத்துரைக்க முற்படுகின்ற நல்லுள்ள வெளிப்பாடுதான் அது மெல்லக் கற்கும் சிறாரும் தமிழ் மொழி தேர்ச்சி பெற வேண்டிப் புதிய கற்கைநெறியை செயற்படுத்து கையில் அங்கு இந்நூல் நிச்சயமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். தமிழ்மொழிப் பயிற்றலின் அனுபவமற்ற ஆசிரியர்களால் வதைபடும் சிறார் இக்கதை நூலைப் படிப்பதால் உளம் மகிழ்வர். எதிர்காலத் தில் தமிழைப் பேணும் தலை முறையாக வளர்வர். பொன்னரசியின் தமிழ்ப் பணியை அப்போது உலகமே பாராட்டும்.
கர்ச்சிக்கமுடியாத சிங்கம் நூல் வெளிவந்ததை அடுத்து நோர்வே மோலேயிலிருந்து வெளிவரும் FJORDENTES TIDENDE எனும் பத்திரிகை இவர் பற்றிய விரிவான பேட்டியொன்றினைப் பிரசுரித்திருந்தது.
2. முடிவு அவள் கையில்:
சிறுகதைத் தொகுதியான இந்நூல் பற்றி "உதயன்' பத்திரிகை 2004-06-05-ம் திகதி பின்வருமாறு விமர்சனம்
செய்திருந்தது. விமர்சனம் செய்தவர் சோனா;
புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழரில் ஆக்கத்திறனி படைத்த பலரும் தம் உணர்ச்சி அனுபவங்களினைக் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என்ற பல வடிவங்க ளிலே வெளியிட்டுப் ‘புலம்பெயர்ந்தோர் இலக்கியம்’ என்னும் புதியதொரு வகைமையினை அறிமுகஞ் செய்து
தொகுதி 09 - கலாபூஷணம் புனினியாமீனி - 45

Page 25
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2 அதற்கு ஒரு காத்திரத் தனிமையும், வழங்கி வருகின்றார்கள். இவ்வகையில் திருமதி பொன்னரசி கோபாலரட்ணம் ‘கர்ச்சிக்க முடியாத சிங்கம்’ (நோர்வேச் சிறுவரிடையே வழங்கிவரும் கதைக ளைத் தமிழாக்கிய) பாலர் கதைத் தொகுதி ஒன்றினை முன்பு வெளியிட்டார். இன்று அவரது இரண்டாவது நூல் ‘முடிவு அவள் கையில்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இது அவரின் 19 சிறுகதைகளின் தொகுதி. 1990 தொடக்கம் 2002ம் ஆணிடு வரை நோர்வே நாட்டினர் மோலோப் எனினும் இடத்திலுள்ள தமிழர் சங்க வெளியீடான “எமது சஞ்சிகை’ (காலாண்டுச் சஞ்சிகை)யில் இவை வெளியிடப்பட்டன.
தாம் கணிடவற்றை, உணர்ந்தவற்றை உணர்த்தவேண்டும் என்று தாம் சத்தியபூர்வமாக நம்புவனவற்றைச் சிறுபிள்ளைகளுக்குச் சொல்வது போல எளிமையும் யதார்த்தமும் அமையக் கூறியி ருப்பதே பொன்னரசியின் வெற்றியென்று கூறலாம்.
எதிர்காலத்தில் பொனினரசியினர் படைப் புக்கள் பட்டை தீட்டிய வைரங்களாய் ஒளிர்வதற் குக் கால்கோளாக அமைந்த இச்சிறுகதைகளைப் படிப்பதன் மூலம் புலம்பெயரவிழைவோருக்கான எச்சரிக்கைகளை அவர்கள் பெறுவதாகிய நற்பய னும் கிட்டும் என்பது உறுதி.
ஒவியர் 'ரமணி’யின் எழிலார்ந்த சித்திரங் களும், அட்டைப்படமும் நூலின் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.
நோர்வே நாட்டு மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ள “மொழிபெயர்க்கப்பட்ட சிறுவர்களுக்கான சிறுகதைகள்’ எனும் இவரது நூல் அச்சில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு 46

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
Pon na rasis
*************
நோர்வேஜிய மொழிப்பத்திரிகையில் இடம்பெற்ற பொன்னரசியின் பேட்டி
தன்னுடைய குடும்பப் பணிகளுடன் தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ்கற்கும் பணியினைப் புரிந்துவரும் இவர் ‘வோக்ஸோய் தமிழ்ச் சங்கத்தில் அங்கத்தவராக உள்ளார். தன்னுடைய இலக்கியத் துறை ஈடுபாட்டுக்குக் காரணகர்த்தாக்கள் என்ற வகையில் தனது அன்புக் கணவர் சீவரட்ணம் கோபாலரட்ணம் அவர்களையும், மயிலங்கூடலூர் பி.நடராஜா (ஆடலிறை) அவர்களையும் அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவரின் முகவரி :
Mrs. PONNARASIGOPALARATNAM, GATE 4, NR 103 6700, MALOY NORWAY EMAIL: gopoij(a) online. no
தினக்குரல் வாரமஞ்சரி: 2007.07.08
தொகுதி 09 - கலாபூஷணம் புனினியாமீன் - 47

Page 26
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
பத்மன் பசுபதிராஜா
பதிவு 228
எழுத்துத்துறை
இலங்கையில் வடகிழக்கு மாகாணம், யாழ்ப்பாண மாவட்டம் நெடுந்தீவு கிழக்கு பன்னிரண்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு. திருமதி. பத்மன் கதிராசிப்பிள்ளை தம்பதிகளுக்கு மூத்த புதல்வனாகட் பிறந்தவர் பசுபதிராஜா. தனது மனைவி தவமணி, பிள்ளைகள் பவதா ரிணி, தனஞ்சயன், பாரிகா ஆகியோருடன் ஜேர்மனியில் உள்ள வுப்பெற்றால் (Wuppertal) நகரில் வாழ்ந்து வருகிறார்.
யாழ். நெடுந்தீவு மத்திய மகாவித்தியாலத்தில் க.பொ.த உயர்தர வகுப்புவரை கல்வி பயின்றுள்ளார். பாடசாலையில் நடை பெற்ற தமிழ்த்திறன் போட்டிகளில் தனது ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி ஈடுபட வைத்தார்கள் என்றும், அதன் வளர்ச்சிப் போக்கில் தனக்குள் உள்ள திறமையை தன்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்றும் தனது ஆசிரியர்களை நினைவு கூர்ந்து வருகிறார்.
இலங்கையில் வெளிவந்த சுதந்திரன் பத்திரிகையில் 198c களில் வெளிவந்த ‘விடுதலைச் சுவடுகள்’ என்ற கட்டுரையே இவரின்
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு 48
 

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
முதல் பிரசவமாகும். 1982ல் இலங்கை சமநீதி இயக்கம் நடத்திய இலங்கை தழுவிய கட்டுரைப் போட்டியில் மாவட்ட ரீதியாகவும், இலங்கை ரீதியாகவும் முதல் பரிசினைப் பெற்றார். இடதுசாரித்தன்மை கொண்ட இலங்கை சமநீதி இயக்கம் நடத்திய கட்டுரைப் போட்டியில் முதலிடம் கிடைத்தமை மிகப் பெரிய விருதாகும் என்று பெருமை கொள்கிறார்.
எழுத்தையும், கலையையும் இருகண்களாகப் போற்றும் பசுபதி ராஜா தாயகத்தில் பல நாடகங்களை எழுதி, நடித்து அரங்கேற்றி யுள்ளார். இவரது முதல் நாடகமான ‘சாவுமனி 1978-ம் ஆண்டு நெடுந்தீவு மத்திய மகாவித்தியாயத்தில் சரஸ்வதி அனுஸ்டான நாளின் போது மேடையேற்றப்பட்டது. சிற்பி சிந்திய இரத்தம், மட்டைக் காடு, பண்டார வன்னியன், எங்க ஊரு, கிணறு என்பன புகழ்பெற்றன.
புகலிடத்தில் விடிவின் வழி, விளக்கேற்றி வைக்கிறேன் ஆகிய நாடகங்களை எழுதி, நடித்து அரங்கேற்றியுள்ளார். வுப்பெற்றால் ரீ கமலாலய நாடக மன்றத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து மேற் கண்ட நாடகங்களை மேடையேற்றியுள்ளார்.
1997ல் இவர் எழுதிய “செங்காற்று” எனும் கவிதைத் தொகுப்பு ஜேர்மனி எசன் நகரிலிருந்து வெளிவந்த ‘தமிழருவி" பத்திரிகையின் ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டது. அவ்விழாவில் இடம்பெற்ற கவிஞர்கள் கெளரவிப்பில் பசுபதிராஜா தங்கப்பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
50 சிறுகதைகளையும், 100க்கு மேற்பட்ட கவிதைகளையும், 20 கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாரிஸ் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய “பாதை வழுவிய பாதங்கள்” எனும் சிறுகதை 3-ம் பரிசு பெற்றுள்ளது. பழைய மாணவர் சங்கம் வெளியிட்ட "புகலிட சிறு கதைகள்” என்னும் தொகுப்பில் இவரது சிறுகதை இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாடு திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் கவிதைத் தொகுப்பில் "வருத்தம்” என்னும் இவரது கவிதை இடம்பெற்றுள்ளது.
; தொகுதி 09 - கலாபூஷணம் புன்னியாமீன் - 49

Page 27
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
ஈழநாடு (பாரிஸ்), ஈழமுரசு (பாரிஸ்), தமிழன் (பாரிஸ்), தமிழருவி (ஜேர்மனி), ஈழம் (ஜேர்மனி) ஆகிய பத்திரிகைகளிலும், மண் (ஜேர்மனி), பூவரசு (ஜேர்மனி), இளைஞன் (ஜேர்மனி) ஆகிய சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.
1998ல் வுப்பெற்றால் நகரிலிருந்து "ஜனனம்” என்னும் சஞ்சிகை வெளியானது. இதன் ஆக்கத்தாரர்களில் பசுபதிராஜாவும் ஒருவராகும்.
இதுவரை இரண்டு தங்கப் பதக்கங்களையும், ஐம்பதுக்கும் மேற்பட்ட பரிசுகளையும் பெற்றுள்ளார். உலகச் சைவப் பொதுக் கழகம், வூட்ஸ் தமிழர் ஒன்றியம் (ஜேர்மனி), மகாஜன பழைய மாணவர் சங்கம் (பாரிஸ்) ஆகிய நிறுவனங்களினால் கெளரவிக்கப் பட்டுள்ளார். இவரின் முகவரி :
PPASUPATHYRAJAH HECKINGHAUSER STR-129 42289 WUPPERTAL GERMANY.
'தினக்குரல் வாரமஞ்சரி: 2007.07.15 தகவல் அனுசரணை : ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு 50

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
க. சக்திதாசன் (இணுவை சக்திதாசன்)
பதிவு 229
எழுத்துத்துறை
வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டத்தில் தாவடியில் பிறந்து, இணுவில் கிராமத்தில் வசித்துவந்த கனகசபாபதி சக்திதாசன் புதுக் கவிதை, நாடகம், அறிவிப்பு ஆகிய துறைகளில் ஈடுபாடுமிக்கவராவார். 1991ல் டென்மார்க்கிற்குப் புலம்பெயர்ந்து தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார்.
1969-ம் ஆண்டு புரட்டாதி மாதம் 18-ம் திகதி பிறந்த சக்திதா சன்: கொக்குவில் மேற்கு ஸி.ஸி.ரீ.எம் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பக்கல்வியையும், கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரக் கல்வியினையும் பெற்றார். இவருடைய தந்தையார் கனகசபாபதி ஒரு தமிழ் ஆசிரியராகவும், அதிபராகவும், சோதிடராகவும் இருந்த காரணத்தினால் சிறு வயதில் இருந்தே “சக்திதாசன்” தமிழ் வாசிப் பில் அதிக சிரத்தையுடன் கவனமெடுத்ததினால் தங்கு தடையின்றி தமிழ் இவரது நாவில் நர்த்தனமாடியது.
தொகுதி 09 - கலாபூஷணம் புனினியாமீன் - 57

Page 28
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
இயற்கையாகவே கணிரென கம்பீரமான குரல்வளம் கொண்ட இவர்; பாடசாலைக் காலத்தில் பல பேச்சுப் போட்டிகளில் பங்குபற்றி பரிசில்களையும் பெற்றுள்ளார். இணுவில் கந்தசுவாமி கோவில் இளந் தொண்டர் சபை அங்கத்தவராக இருந்த இவர்; அங்கு சமய அனுஷ்டா னங்களுடன் சமய குருமார்களுடைய தினங்கள், நவராத்திரி விழாக்கள் போன்ற தினங்களிலெல்லாம் முன்னின்று சிறப்பித்ததோடு; அங்கு தனது பேச்சாற்றலையும் வளர்த்துக் கொண்டார்.
இவர் ‘புலம்பெயர்ந்து டென்மார்க்கில் வாழ்ந்தாலும் தன்னூ ரைத் தன் பெயருடன் இணைத்து 'இணுவை சக்திதாசன்” என்ற புனைப் பெயரில் எழுதி வருவதற்கு அவர் தன் ஊரின் மீது கொண்டி ருந்த பற்று காரணமாக இருந்தது. இணுவில் கிராமம் பல ஞானிகளை, சித்தர்களை, கலைஞர்களை தன்னகத்தே கொண்டது. இறைவழிபாட் டை மிகவும் உன்னதமாக மதிக்கின்ற ஊர். அங்குள்ள ஆலயங்கள் இதற்குச் சான்று பகர்கின்றன. வசந்த காலத்தில் ஏதாவது ஒரு ஆலயத்தில் மவோற்சவம் நடந்து கொண்டே இருக்கும். அங்கு சொற்பொழிவுகளோ, கதாப்பிரங்கமோ இடம்பெறுவது அவ்வூரின் சிறப் பம்சமாகும். எங்கு சொற்பொழிவு நடந்தாலும் “சக்திதாசன்” தந்தை யாரோடு முன் வரிசையில் இருந்து செவிமடுத்து கொண்டிருப்பார். இத்தகைய சூழ்நிலைகளே இவரின் எழுத்து, கலைத் துறைகளுக்கு அடிப்படையை வழங்கியது எனலாம்.
1989ல் தாயகத்தில் வாழும் காலத்திலே புதுக்கவிதை புனை வதில் ஆர்வம் காட்டிவந்த இவர் தாயகத்தில் சில தேசிய பத்திரிகை களுக்கு எழுதியுள்ளார். ஆனாலும் புலம்பெயர்ந்த பின்பே அதிகமாக எழுதலானார். இதுவரை 200க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள் ளார். இக்கவிதைகள் IBC தமிழ் வானொலி, லண்டன் ரைம் வானொலி, TTN தொலைக்காட்சி, தீபம் தொலைக்காட்சி CTV தொலைக்காட்சி ஆகியவற்றில் ஒலி / ஒளிபரப்பாகியுள்ளன. மேலும் இவரின் கவிதைகள் 'அலைகள் இணையத்தளத்திலும் பதிவாகியுள்
66.
V− இவர் இதுவரை ஒரு கவிதைத் தொகுதியினை வெளியிட் டுள்ளார். ‘நெஞ்ச நெருடல்' என்ற அக்கவிதைத் தொகுதி 2003 வைகாசித் திங்களில் இணுவில் பொதுநூலக இலக்கிய வட்டத்தினால் இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு 52

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2 வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தை கொக்குவில் கஜன் பிரிண்டர்ஸ் அச்சிட்டது. அவ்வெளியீட்டு விழாவின் போது “அளவெட்டி அருட்கவி சீ. விநாசித் தம்பி M.A அவர்களால் இணுவை சக்திதாசனின் கவிப் படைப்பைப் பாராட்டி "வரகவி” என்ற பட்டமளித்து கெளரவிக்கப்பட்டார். மேலும், மகாவித்துவான் பிரம்பரீ மா.த.ந. வீரமணி ஐயர் பின்வருமாறு வாழ்த்தினார்:
புதுக்க விதை விதைத்து
புதுக் கவி சக்திதாசன் புதுக் கவி தை புனைந்து
புதுக்கிடும் கருப்பொருளை புதுக்கியே புளைந்த கவி
புதுமைகள் பூந்த தந்தான் புதுக்கவி ஞானநீ வாழி.
பண்டிதர் சா.வே. பஞ்சாட்சரம் அவர்கள் இணுவை சக்திதாச னின் முதல் கவி நூலை பாராட்டி வாழ்த்தும் போது:
நீரெம் விழியில்
நிறையக் கவிசொல்லி “நெருடல்” தந்த ஈர இதய எழில் கவிஞ எம்மிணுவைச்
சக்திதாசா!
சோரம் போகாச்
சுடர் பண்பாய் சுட்டிப்பாய் பாடுகின்றாய்
ஊரும் இனமும் உணர்வுன் போல்
பெற்றுய்ய உழைத்து வாழி! என்றார்.
இவருடைய கவிதைகள், உயிர்ப்புடன் கூடியவை. புதுக்கவி தையென்பதால் பாமர மக்களும் எளிதில் விளங்கிக் கொள்ளக்கூடிய விதத்தில் எளிய தமிழ் வடிவில் உடையவை. கால நீரோட்டத்தோடு
: தொகுதி 09 - கலாபூஷணம் புன்னியாமீன் - 53

Page 29
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2 ஒட்டியவையாக, பதிவு செய்யப்பட்டவையாக பெரும்பாலானவை அமைந்திருந்தன. கவிதை எழுதுவதோடு மாத்திரமல்லாமல் இவர் நடிப்புத்துறையிலும், அறிவிப்புத்துறையிலும் தனது பங்களிப்பை வழங் கிவருகின்றார். 1993-ம் ஆண்டில் முதன் முதலில் பெண் வேடத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் தற்போது பல வேடங்களிலும் நடித்து பலரது பாராட்டையும் பெற்று வருகிறார்.
இவரது நடிப்பு பற்றி டென்னிஸ் பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட்டுள்ளன. இவர் தானே எழுதி நெறியாள்கை செய்து தயா ரித்த 4 நாடகங்களை டென்மார்க்கின் பல நகரங்களிலும் மேடையேற் றியுள்ளார். எஞ்சினியர் மாப்பிள்ளை, வெளிநாட்டில் சாமியார், “தாரத்தை வென்ற தாரம்”, “வாங்க மருமக்கள் வாங்க” என்பன அந்நாடகங்களாகும்.
மேலும் இணுவை சக்திதாசன் டென்மார்க்கில் மேடை நிகழ்ச் சிகளைத் தொகுத்து வழங்கி வரும் அறிவிப்பாளராகவும் திகழ் கின்றார். டென்மார்க்கில் 'சீயலன் மாகாணத்தில் Vipperqd எனுமிடத் தில் தனது அன்பு மனைவி ராஜினி மற்றும் ஆசைச் செல்வங்க ளான கஸ்தூரி, வைஸ்னவி, மிதுாசன் ஆகியோருடன் வாழ்ந்துவரும் இவரின் முகவரி:
KSAKTHYTHIASAN KILEUANGPARKEN 36.
4390 UIPPERQD
DENMARK.
தினக்குரல் வாரமஞ்சரி: 2007.08.26
வெங்கை எமக்காளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு 54

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
ஆ. மகேந்திர ராஜா
பதிவு 250
எழுத்துத்துறை
இலங்கையில் வட மாகாணம், யாழ்ப்பாணத்தில் உள்ள வண்ணார் பண்ணையில் பிறந்தவர் ஆறுமுகம் மகேந்திரராஜா. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தமது ஆரம்பக் கல்வியைக் கற் றார். இந்தியாவின் கேரள மாநிலத்தில் எர்ணாகுளத்துக்கு அண்மித் g56i,6T GUITsuiu6) 356)g|Tifluis) (Aerounatical Engineering College) தனது உயர்கல்வியைப் பயின்றார். அத்தோடு இலண்டன் புறுனல் Gg5Tĝ6ò b'Luis at56òTý (BrunelTechnical College- London). GagÜLD6óî நோர்க்கோர்னிலுள்ள தொழில்நுட்பக் கல்வி நிலையம் (BerurTechnik Zentrum-Nordhorn) ஆகியவற்றிலும் தனது தொழில்நுட்பக் கல்வியை வளம்படுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தனது இளமைக் காலத்தில் சமூகத் தின்பால் ஈடுபாடு கொண்டவராக வாழ்ந்து வந்துள்ளார். தனது அயலிலுள்ள ஆலயங்கள், வாசிகசாலைகள், விளையாட்டுக் கழகங் கள் போன்றவற்றில் எல்லாம் பங்குகொண்டு தனது பங்களிப்பைச்
தொகுதி 09 - கலாபூஷணம் புன்னியாமீன் - 55

Page 30
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
செலுத்தி வந்துள்ளார். பதவிகள் எதிலும் பங்கேற்காது தனது கட மையை, பங்களிப்பைச் செய்வதிலேயே ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்துள்ளார். -
". இலங்கையில் ஏயர் லங்கா நிறுவனத்திலும், மின்தறித் தொழிற்சாலையிலும் கடமையாற்றியுள்ளார். விஜயராணியுடன் திரு மண வாழ்வில் இணைந்து, தேவாருண்யகஜனி என்னும் மகளுடன் ஜேர்மனியில் நோர்ட்கோர்னில் வாழ்ந்து வருகிறார். தனது மகள் தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆர்வத்தில் வீட்டில் தமிழ் கற்பித்து வருகிறார்.
1985-ம் ஆண்டு முதல் இலக்கியத்துறையில் தன்னை ஈடுபடுத் திக் கொண்டுள்ளார். இவரது முதல் ஆக்கம் நாமும் நமது கலா, சாரமும் என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. ஜேர்மனியில் வெளி வந்த “தமிழருவி” எனும் பத்திரிகையில் இவ்வாக்கம் வெளியாகியுள் ளது. நமது மதமும், கலாசாரமும் முடமென நம்மிடையே சிறைப்பட் டதே தனது முதல் ஆக்கம் வெளிவரக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழருவியில் வெளிவந்த இவருடைய ஆக்கங்கள் இரண்டு முறை பரிசு பெற்றன். 1993ல் பிரசுரமான ‘கலாசாரப் பண்பாடுகள் சமுதாயத் தூண்கள்” என்ற கட்டுரையும், 1994ல் பிரசுரமான “ஐரோப்பி யத் தமிழர்களின் யதார்த்தநிலை” என்ற கட்டுரையும் முதல் பரிசு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
விஞ்ஞானத்துறையில் கல்வி பயின்ற மகேந்திராஜா ஐரோப் பாவில் வாழ்கின்ற காலத்தில் பல விஞ்ஞானக் கருத்துக்களை, சான்றுகளைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளார். இவை யாவும் நமது முன்னோர்கள் நமக்குச் சொல்லி வைத்தவை என்பதே அந்த ஆச்சரி யத்திற்கு காரணமாகும். ஆக நமது முன்னோர்கள் என்றோ சொல்லி வைத்த விஞ்ஞான விடயங்களை இன்று உலகம் நடைமுறைப்படுத்து கின்றது என்பதில் பெருமிதம் கொள்கிறார். அதனால் இவரது ஆக்கங்கள் யாவும் (குறிப்பாகக் கட்டுரைகள்) நமது முன்னோர். சொன்ன விஞ்ஞானக் கருத்துக்களின் விளக்கங்களாகவே அமைகின் றன. இதுவரை சுமார் 60 கட்டுரைகள் எழுதியுள்ளார்.
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு 56

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2.
“கற்பு” எனும் பெயரில் இவரது முதல் கவிதை ‘தமிழருவி” பத்திரிகையில் வெளிவந்தது. இதுவரை 250 கவிதைகள் வரை எழுதி யுள்ளார். தினகரன், தமிழருவி ஆகிய பத்திரிகைகளிலும், பூவரசு,' மண் ஆகிய சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. ஐரோப்பாவில் இயங்கும் தமிழ் வானொலிகள் அனைத்திலும், ஜேர்மனி யிலும் கனடாவிலும் இணைந்து இயங்கும் ஐ.ரி.ஆர். தமிழ் வானொலியிலும் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. .
பதவிகள் பிறரிடம் உதவி கோருபவருக்குத் தேவையானது. உதவியை உதவியாகச் செய்பவர்களுக்கு பதவி ஒரு பெரிய புதை குழி. இதன் காரணமாக எந்தத் துறைகளிலும் தான் பதவிகளை ஏற்பதில்லை என்பது இவரது சுயகருத்தாகும். இவரது முகவரி:
A.MAHENDRAJAH MARRINKSKAMP - 25 48531 NORDHORN GERMANY.
'தினக்குரல் வாரமஞ்சரி: 2007.09.02 தகவல் அனுசரணை : ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்
தொகுதி 09 கலாபூஷணம் புனினியாமீனி - 57

Page 31
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
பவை ஜெயபாலன்
பதிவு 251
எழுத்துத்துறை
வடமாகாணம், கிளிநொச்சி மாவட்டம், உருத்திரபுரம் கிழக்கு கிராமசேவகர் பிரிவினைச் சேர்ந்த பன்னாலை வைத்தீஸ்வரன் ஜெயபா லன் அவர்கள் ஒரு கவிஞரும், எழுத்தாளருமாவார். ஆயிரத்துத் தொளாயிரத்து தொன்னூற்று ஐந்தாம் ஆண்டில் பிரித்தானியாவுக்குப் புலம்பெயர்ந்து தற்போது Sutton நகரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார்.
1952ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் திகதி ஈழமண்ணில் ஜனனித்த ஜெயபாலன் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, யாழ்ப் பாணம் தொழில்நுட்பக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். இவரின் அன்புத் துணைவியார் பெயர் கமலாவதி. இத்தம்பதியின ருக்கு தாயகன், ஜெயனி ஆகிய அன்புச் செல்வங்கள் உளர்.
இவர் கல்லூரி மாணவராக இருந்த காலத்திலே வாசிப்புத் துறையில் அதிக ஈடுபாடு மிக்கவராகக் காணப்பட்டார். இவரின் இந்த வாசிப்புத்திறன் இலக்கியத்தின் பால் இவரை ஈடுபட வைத்தது.
இலங்கை ஃழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு 58.
 

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
1967ம் ஆண்டில் கல்லூரியினால் வெளியிடப்பட்ட ‘மகாஜனன் மலரில் இவரது கன்னிக் கவிதை ‘காகித ஒடம்' எனும் தலைப்பில் இடம் பெற்றது.
இன்றுவரை 300க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், 4 சிறுகதைகளையும் இவர் எழுதியுள் ளார். கவிதைத்துறையிலே இவருக்கு ஈடுபாடு அதிகம்.
இவரின் இத்தகைய ஆக்கங்கள் தாயகத்தில் சுதந்திரன், தினபதி, சிந்தாமணி, வீரகேசரி போன்ற பத்திரிகைகளிலும், பல்வேறு சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
அதேபோல புலம்பெயர் நாடுகளில் லண்டன் தமிழ் வானொலி, சன்ரைஸ், அனைத்துலக ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் - தமிழ் (ஐ.பீ.ஸி), ரீ.பீ.ஸி, ஈ.ரீ.பீ.ஸி போன்ற வானொலிகளிலும், ‘தீபம்’ தொலைக் காட்சியிலும் இடம்பெற்றுள்ளன. தற்போது ஒருபேப்பர், புதினம் ஆகிய பிரித்தானியப் பத்திரிகைகளில் ஊர்வாசம், நினைவில் ஊரும் நிகழ்வு கள் என்ற தொடர் கட்டுரைகளை எழுதி வருகின்றார்.
தாயகத்தில் தான் வாழ்ந்த காலங்களில் பெற்ற அனுபவங் களை பிறருக்கும் படிப்பினையாக அமைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறுபட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.
பொதுவாக இவரின் ஆக்கங்களின் புலம்பெயர்த் தமிழ் மக்க ளின் வாழ்வியல் பண்புகள், சமூகளழுச்சி உணர்வுகள் போன்ற பல்வேறு பட்ட கருத்துக்களைக் காணமுடியும்.
ஐக்கிய இராச்சியம், மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாடாக மகாஜனக் கல்லூரி அதிபர் அமரர் ஜயரத்தினம் அவர்களின் துணைவியார் திருமதி ராணிரத்தினம் அம்மையாரின் 80வது அகவைப் பூர்த்தியை நினைவுகூரும் முத்துவிழாச் சிறப்பிதழான ‘அம்மாவின் மலராசிரியர்களின் ஒருவராகவும் கடமைபுரிந்துள்ளார்.
அதேநேரம் பிரித்தானிய மகாஜனக் கல்லூரி, பழைய மாணவர் சங்கத்தின் கலாசார செயலாளராகப் பணியாற்றிவரும் இவர் ஆண்டு தோறும் ‘கலாசார மாலை' நிகழ்ச்சிகளை நடத்துவதில் முக்கிய பங்களிப்பை நல்கி வருகின்றார்.
தொகுதி 09 - கலாபூஷணம் புன்னியாமீனி - 59

Page 32
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
சன்ரைஸ், லண்டன் தமிழ், CITV ஆகியவற்றின் பகுதிநேர செய்தியாளராகப் பணியாற்றிவரும் ஜெய்பாலன்: பவை ஜெயபாலன், ப.வை ஜெயபாலன், பன்னாலை வைத்தீஸ்வரன் ஜெயபாலன் ஆகிய பெயர்களில் எழுதி வருகின்றார். இவரால் இதுவரை 3 நூல்கள் எழுதி வெளியிடப்பட்டுள்ளன.
1. சிங்களம் தந்த சிறை (சிறை அனுபவ நூல்) - 1977 2. பாராளுமன்றத்தில் தமிழ் உரிமை முழக்கம் - 1979 3. நிழல் தேடும் தமிழன்’ (கவிதைத் தொகுதி) - 2003
இந்தக் கவிதைத்தொகுதி ஒலிநாடாவாகவும் வெளியிடப் பட்டது. நிழல் தேடும் தமிழன் எனும் கவிதை நூலின் 1ம் பதிப்பு ஐக்கிய இராச்சியம் பாலன் பதிப்பக வெளியீடாக 2003ல் வெளிவந்தது. 108 பக்கங்களுடன் 17.5x12.5cm அளவினைக் கொண்ட இந்த நூலின் விலை இந்திய ரூபாய் 30 ஆகும்.
இந்நூல் பற்றி ஈழத்துத் தமிழ் நூல்களின் சர்வதேச ஆவணப் பதிவான நூல்தேட்டம் தொகுதி 3 இல் திருவாளர் என்.செல்வராஜா அவர்கள் (பதிவு இல 2518) பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
“. தாயக உணர்வு பீறும் உள்ளத்தோடு புலம்பெயர்ந்து இலண்டனில் வாழும் இவ்வீழத்துக் கவிஞரின் முதலாவது கவிதைத் தொகுப்பு. 50 கவிதைகள் இங்கு சந்த ஓசை கெந்திடும் வார்த்தைகளால் தொகுக்கப்பெற்றுள்ளன.”
இலண்டன் அம்பாள் ஆலய கலாசார செயலாளராக கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்ந்தும் ‘முத்தமிழ் விழாவினை நடத்தி வருகின்றார்.
இந்த முத்தமிழ் விழாவில் இயல், இசை, நாடகப் போட்டிகள் இளம் மாணவர்களிடத்தே நட்த்தப்படும். இளம் சிறார்களின் தமிழ் மொழித்திறனை வளர்ப்பதே இதன் நோக்கமாகும்.
மேலும் சட்டன் தமிழ்ப் பாடசாலையை நிறுவி சட்டன் தமிழர் நலன் நிறை அமைப்பினூடாக இயக்கிவருகின்றார்.
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு 60

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
பிரித்தானியாவில் அரச பாடசாலைகளில் இரண்டாம் மொழிப் பாடமாக கற்பிக்க அங்கீகரிக்கப்பட்ட எட்டு மொழிகளோடு இவ்வாண்டு (2007) தமிழ்மொழியும் இணைக்கப்பட்டது. இதற்கான குழுவில்
இவரும் இணைந்து பணியாற்றியுள்ளார். - - -
தன்னுடைய இலக்கியத்துறை ஈடுபாட்டுக்குக் காரணமான ஆசிரியை அமரர் ரோகினி இரத்தினவேல் (மகாஜன கல்லூரி ஆசிரி யை) மற்றும் திருவாளர் ஆ.சிவனேசச்செல்வன் ஆகியோரை அன்பு டன் நினைவுகூர்ந்து வரும் இவரின் முகவரி :
Pavai JAYABALAN 47A, STANLEY RD. CARSHALTON SURREYSM54LE U.K.
தினக்குரல் வாரமஞ்சரி: 2007.09.09
தொகுதி 09 - கலாபூஷணம் புணர்னியாமீன் - 6.

Page 33
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
முகத்தார் எஸ். ஜேசுறட்ணம்
பதிவு 252
கலைத்துறை
வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டத்தில் இளவாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சந்தியாப்பிள்ளை ஜேசுறட்ணம் அவர்கள் மிகவும் பிரபல்யமான ஒரு திரைப்பட நடிகர், நாடக நடிகர், வானொலிக் கலைஞர், நாடக எழுத்தாளர், நெறியாள்கையாளர். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இலங்கையில் வானொலி நாடகங்களுக்கும், இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களுக்கும் புத்துயிர் கொடுத்த இவர் 1993ம் ஆண்டில் (ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன்) பிரான்ஸிற்குப் புலம்பெயர்ந்து தனது அன்புத்துணைவியார், ஐந்து பிள்ளைகளுடன் பிரான்ஸிலேயே வசித்து வருகின்றார்.
1931ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி சந்தியாப்பிள்ளை, மரியப்பிள்ளை தம்பதியினரின் புதல்வராக யேசுறட்ணம் இளவாலை யில் பிறந்தார். இளவாலை சென். கென்றிஸ் கல்லூரியின் பழைய மாணவரான இவர் அரச இலிகிதராகவும், பின்னர் அரச நிர்வாக சேவை அதிகாரியாகவும் பணியாற்றிவிட்டு 1984ம் ஆண்டில் தாமாகவே விருப்பு ஒய்வுபெற்றார். கொழும்பில் இவர் முப்பத்து மூன்று வருட இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு 62
 

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
காலம் பணியாற்றியுள்ளார். இக்கால கட்டங்களில் இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரங்களினால் ஐந்து தடவைகள் அகதியாக் கப்பட்ட அனுபவத்தைப் பெற்றுள்ளார். இறுதியாக 1983ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது ஜிந்துப்பிட்டிய சிவசுப்பிரமணியம் ஆலயத்தில் அகதியாக்கப்பட்ட நேரத்தில் இவரது அகதி இலக்கம் 267 ஆகும். பின்பு 1985ம் ஆண்டு முதல் எட்டு வருடங்கள் தமிழ் நாட்டில் திருச்சியிலும், சென்னையிலும் அகதி வாழ்க்கை வாழ்ந்திருக் கின்றார்.
யேசுறட்ணத்தின் கலையார்வம் கல்லூரிக் காலத்திலிருந்தே இயல்பாக வெளிப்பட்டது. இளவாலை கென்றிஸ் கல்லூரியில் கற்கும் காலத்தில் நாடகங்களில் நடித்துத் தன்னை நடிகனாக அடையாளம் காட்டினார். ஆரம்பத்தில் பெரும்பாலும் ஆங்கில நாடகங்களில் பங்கேற்றாலும் கூட பின்னர் தமிழில் தனது திறனை வெளிப்படுத் தினார்.
1966ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் திகதி இலங்கை வானொலியில் வானொலிக் கலைஞராக (பகுதிநேரம்) இணைந்தார். இதுபற்றி அவர் குறிப்பிடும் போது "...பாராளுமன்றத்திற்கு சீட்டுக் கிடைத்துவிடும். ஆனால் இலங்கை வானொலிக்குள் நுழைவது கடின மான காலமது! குரல் வளம், அதனை ஒப்புவிக்கும் இயல்பு, அதாவது Voice Enlture & Versatility in Modulation 96Didsbg. 66'LT6) 9.56i பிறகு சந்தர்ப்பங்களை நழுவவிடவே கூடாது. அழுங்கு ஆவறனை யைக் கட்டிப் பிடித்த மாதிரி. இல்லையேல் கோட்டை விட்டதுதான்.” யேசுறட்ணம் அவர்களின் இக்கருத்தானது இக்கால கட்டத்தைப் போல அரசியல் அல்லாமல் அக்காலகட்டங்களில் இலங்கை வானொலிக் கான ஒரே தகுதி 'திறமை தான் என்பதனை எடுத்துக் காட்டுகின்றது.
இலங்கை வானொலியில் இவர் பல நாடகங்களை எழுதி, நடித்து நெறியாள்கை செய்துள்ளார். இவற்றுள் 1978ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ‘முகத்தார் வீடு' நாடகம் வாராவாரம் வெள்ளிக்கிழ மைகளில் ஒலிபரப்பாகி நேயர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான மாலைநேர வானொலி நிகழ்ச்சியாக அமைந்திருந்தது.
268 வாரங்கள் ஒலிபரப்பான ‘முகத்தார் வீடு' யாழ்ப்பாணப்
: தொகுதி 09 - கலாபூஷணம் புணர்னியாமீனி - 63

Page 34
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2 பேச்சு வழக்கிலுள்ள கொஞ்சும் தமிழில் அமைந்திருந்ததுடன், நூற் றுக் கணக்கான குடும்பப் பிரச்சினைகளை யதார்த்த பூர்வமாக சித்தரித்தது. மேலும் இந்நாடகத்தில் இடையிலேயே விவசாய விவர ணங்கள் படிப்பினையூட்டக்கூடிய வகையில் சேர்க்கப்பட்டிருந்தன. இப்படி பல விடயங்கள் முகத்தார் வீட்டினுள் இழையோடியதினால் மக்கள் மத்தியிலே வரவேற்பையும், ஜனரஞ்சகத் தன்மையும் பெற்றி ருந்தது.
இந்த நாடகத்தில் உலாவந்த பாத்திரங்களான ஆறுமுகம், மனைவி தெய்வானை, மகன் வடிவேலன், சரவணை, மைனர் குடும்பத் தினர், சாத்திரி குடும்பத்தினர், சட்டம்பி குடும்பத்தினர், பரியாரியாரின் குடும்பத்தினர், தரகர் குடும்பத்தினர். இரண்டு தசாப்தங்கள் கடந்து இன்னும் மக்கள் மத்தியில் மறவாமல் இருக்கின்றதென்றால் முகத் தாரின் திறமையின் வெளிப்பாடே என்றால் மிகையாகாது. ஜேசுறட்ணத் தின் பெயருடன் ‘முகத்தார்’ எனும் பெயரும் இணைந்து ‘முகத்தார் ஜேசுறட்ணம்' என்று இன்றும் விழிக்கப்பட ‘முகத்தார் வீடு': வாசகர்க ளின் உள்ளத்துடன் ஐக்கியமானதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை.
அக்காலகட்டங்களில் வெள்ளிக்கிழமைகளில் ‘முகத்தார் விடு, சனி இரவு 'நாடகம்", ஞாயிறு பகல் 'கதம்பம்','குதூகலம் போன்ற நிகழ்ச்சிகளில் இவரின் எழுத்துக்கள் மிளிர்ந்திருந்தன. கதம்பத்தில் 123 தனி நாடகங்களையும், பருவக்காற்று தொடர் நாடகத்தையும் (52 வாரங்கள்) எழுதி, நடித்து, நெறியாள்கை செய்த இவரின் வானொலிப்பணி காலத்தால் அழியாது. இன்றும் இடைக்கிடையே இந்த நாடகங்களை இலங்கை வானொலியில் செவிமடுக்கக் கூடியதா கவுள்ளது.
வானொலி நாடகங்களைப் போலவே இவர் பல மேடை நாடகங்களை எழுதி, நடித்து நெறியாள்கை செய்துள்ளார். அவற்றுள் பிரபல்யமான நாடகங்கள் வருமாறு:
0. சண்டியன் சின்னத்தம்பி * லண்டன் மாப்பிள்ளை 9 மாடிவிட்டு மருக்கொழுந்து
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு 64

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம்2
Kopay to Dubai
மோசடி பத்தாயிரம் மண்ணோடு விளையாடும் விண்ணுலகம் சத்தியமே ஜெயம் பண்டாரவன்னியன் புரோக்கர் பொன்னம்பலம் அசோகரா
உயிரோடு காடடர்ந்து '
அதேநேரம் முகத்தார் யேசுறட்ணம் நடித்த பிரபலய்மான பிற மேடை நாடகங்களாவன:
அசட்டு மாப்பிள்ளை ஆசைமச்சான் கறுப்பும் சிவப்பும் LIFT858,60LD நம்பிக்கை
ஒரு மணித்தியாலய நாடங்கள் பின்வருமாறு:
0 Julius Ceasar
Merchant of Venice 9 அகதி ஒருவன் ஊர்வலம் வருகிறான்.
«Ο
அமரர் அகஸ்தியர் எழுதி பிறரின் இயக்கத்தில் 'அலைகளின் குமுறல்', 'எரிமலை வெடித்தபோது','கோபுரங்கள் சரிகின்றன ஆகிய நாடகங்களிலும், கே.எம்.வாசன் எழுதிய 'மனிதவலை, ‘தணியாத தாகம்', 'சுமதி (தொலைக்காட்சி நாடகம்) ஆகியவற்றிலும் முகத்தார் நடித்துள்ளார்.
ஈழத்துத் தமிழ் திரைப்படத்துறைக்கும் முகத்தார் யேசுறட் ணத்தின் பங்களிப்பு விசாலமாகக் கிடைத்துள்ளது. இலங்கையில் தயாரிக்கப்பட்ட மூன்று தமிழ்த் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். அத்திரைப்படங்களாவன. .
தொகுதி 09 - கலாபூஷணம் புண்ணியாமீனி - 65

Page 35
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
% வாடைக்காற்று
9. கோமாளிகள்
9 ஏமாளிகள்
அத்துடன் ‘பொன்மணி' திரைப்படத்துக்கு பின்னணிக் குரல் கொடுத்துமுள்ளார்.
1978.04.09ம் திகதி சிந்தாமணிப் பத்திரிகையில் கு.மு. சுந்தரம் ஆனந்தவிகடன் பாணியில் 'வாடைக்காற்று' திரைப்படத்தினை விமர்ச னம் செய்திருந்தார். அந்த விமர்சனத்தில் திரைப்படத்தில் நடித்த 10 நடிகர்களைத் தெரிவு செய்து புள்ளியிட்டிருந்தார். அதன் பிரகாரம் முகத்தார். யேசுறட்ணம் அவர்களுக்கு 65 புள்ளிகள் வழங்கப்பட்டிருந் தமையும், வாடைக்காற்றிலே சிறந்த நடிகராக யேசுறட்ணத்தை இனங் காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவை தவிர பிரான்ஸிற்குப் புலம் பெயர்ந்த பின்பு சின்னத் திரைப்படங்கள் பலதில் இவர் நடித்துள்ளார்.
சத்திய கீதை
முகத்தார் வீடு இன்னுமொரு பெண்
புயல்
முகம்
ராஜாவின் ராகங்கள்
தாகம்
. . . புலம் பெயர்ந்த பின்பு ஐரோப்பிய வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் இவரது கலைப் பணிகள் தொடர்ந்தன. தமிழ் றேடியோ தொலைக்காட்சி (TRT) நிறுவனத்திலும், ஏசியன் புறோட் காஸ்ட் கோப்பிரேஷன் (ABC) நிறுவனத்திலும் வானொலி நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராக பணியாற்றியுள்ளார். .
நூற்றுக்கணக்கான நாடகங்களை எழுதிச்சாதனை படைத் தவர் முகத்தார் யேசுறட்ணம். ஆனால், இதுவரை இவரால் எழுதப்பட்ட இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு 66

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம், 2
நாடகங்களில் 12 நாடங்கள் மாத்திரம் தொகுக்கப்பட்டு ‘முகத்தார் வீட்டுப் பொங்கல்’ எனும் பெயரில் ஒரேயொரு நூல் மாத்திரம் வெ வந்துள்ளது.
இந்நூல் பற்றி ஈழத்துத் தமிழ் நூல்களின் சர்வதேச ஆவணப் பதிவான நூல்தேட்டம் தொகுதி 2 இல் திரு. என்.செல்வராஜா அவர்கள் 1557வது பதிவாக பதிவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1999ம் ஆண்டில் தமிழ்நாடு மணிமேகலைப் பிரசுர வெளியீடாக" இந்நூலின் 1ம் பதிப்பு வெளிவந்தது. 208 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் பஞ்சாமிர்தம், நற்கனிகள், பலதும் பத்தும் என்ற மூன்று பிரிவுகளின் கீழ் 12 நாடகங்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று புலம்பெயர்ந்து தாயகத்தைவிட்டும் பிரிந்து சென்று விட்டாலும் யேசுறட்ணம் என்ற நாமம் எதிர்கால ஈழத்துச் சந்ததியின ருக்கும் தெரியவேண்டும். நிலைக்கவேண்டும். வானலைகளில் அவரால் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் எதிர்காலச் சந்ததியினருக்குத் தெரியாமல் போகலாம். எனவே ஒரு நூலுடன் மாத்திரம் தன்னைச் சுருக்கிக்கொள்ளாமல் தன்னுடைய வானலைப் பதிவுகளை பல நூற்களாக முன்வைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
ஏனெனில் நாளைய தலைமுறையினருக்கு எஞ்சப் போவது அவை மட்டுமே.
: தொகுதி 09 - கலாபூஷணம் புனினியாமீன் - 67

Page 36
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
இவரின் கலைச்சேவையில் பல விருதுகளை பெற்றுள்ளார்.
1979 ஜனாதிபதி விருது (வாடைக்காற்று திரைப்படத்தில் திறன்பட நடித்தமைக் காக இவ்விருது வழங்கப்பட்டது.) 1980 கலைமுரசு விருது 1981 முகத்தார், கெளரவ விருது 1982 விவசாய மன்னன், கெளரவ விருது 1983 கலைப் பணிச் செல்வர், (திருச்சி, தமிழ்நாடு) 1994 கலைவேள், கெளரவ விருது (பிரான்ஸ்) 1995 கலைப்பூபதி விருது (பாரிஸ் - பிரான்ஸ்) 1997 கலைமாமணி விருது (ஜேர்மனி) 1998 நகை ரசவாரி (ஜேர்மனி) 2005 முத்தமிழ்ச் செல்வர் (பிரான்ஸ்) 2005 கம்பன் பட்டயம் விருது (பிரான்ஸ்) 2007 ஈழத் தமிழ் விழி விருது (பிரான்ஸ்)
யேசுறட்ணத்தின் கலைத்துறை ஈடுபாட்டுக்குக் காரணகர்த் தாக்கள் அல்லது உந்துசக்தியானவர்கள் யார் என்று கேட்ட போது “. நான் பிறக்கும் போது கூடப்பிறந்ததோ என்னவோ, அல்லது தாயின் தாலாட்டிலே தளிர்விடத் தொடங்கியதோ தெரியவில்லை. ஆனால், மாணவப் பருவத்திலே கல்லூரி மேடைகள் தான் எனக்குக்
களம் அமைத்ததென்று கூற வேண்டும். கூடவே எனது குடும்பத்தின ரின் ஒட்டுமொத்தமான அங்கீகாரம், ஒத்துழைப்பு எனக்கு முழுமையா கக் கிடைத்தது. மேலும் ஆங்கிலத்தில் கூறுவார்கள். “For Every Success of a manthere is woman Behaind” splicist (6 s.56 lib, d.1960, உழைப்பு அதை Devotion&dedication என்றும் சொல்லலாம்.” என்று கூறும்; எழுபத்தைந்து அகவையைக் கடந்து விட்ட நிலையில் இன்றும் கலைத்தாய்க்குத் தன் நேரம் காலத்தை அர்ப்பணித்துவரும் இவரின் முகவரி:
MUKATHARJESURATNAM 2 - RUE DE LEGALITE,
95500 GONESSE 'தினக்குரல் வாரமஞ்சரி: 2007.09.23 FRANCE தகவல் அனுசரணை : வண்ணை தெய்வம் (பிரான்ஸ்) . . . . .
V− இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு 68

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
தர்மலிங்கம் இரவீந்திரன்
கலைத்துறை
வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டம், தொண்டைமானாறு, செல்வச்சந்நிதியைப் பிறப்பிடமாகக் கொண்ட தர்மலிங்கம் இரவீந்திரன் அவர்கள் ஒரு புகழ்பெற்ற வானொலிக் கலைஞராக இன்று தனது கலை முகத்தை உலகப் பரப்பெங்கும் காட்டி வருகின்றார். ஆரம்ப காலங்களில் ஒரு பட்டிமன்றப் பேச்சாளராகவும், நாடக நடிகராகவும், அறிவிப்பாளராகவும் தனது கலை இலக்கியப் பயணத்தை ஆரம்பித் திருந்தவர் இவர்.
தர்மலிங்கம், சின்னத்தங்கம் தம்பதியினரின் புதல்வரான இரவீந்திரன் தனது ஆரம்பக் கல்வியை தொண்டமானாறு மகாவித்தி யாலயத்திலும் அதன் பின்னர் பருத்தித்துறை வேலாயுதம் மகாவித் தியாலயத்திலும் அதன் தொடர்ச்சியாக கந்தரோடை ஸ்கந்தவரோ ணதயாக் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி என கல்வியைத் தொடர்ந்தவர். . .
தொகுதி 09 - கலாபூஷணம் புனினியாமீனி - 69 ۔۔۔۔۔۔

Page 37
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
1982-1989 காலப் பகுதிகளில் தான் வாழ்ந்த பிரதேசமெங்கும் அளவையியல் கற்கை நெறி ஆசிரியராக தனியார் கல்வி நிலையங் களில் பணியாற்றி வந்த இவர், கல்விச் சமூகத்தின் மத்தியில் பிரபல் யமான ஒருவராகவும் இருந்துள்ளார். .
விளையும் பயிரை முளையிலே தெரியும்' என்பார்கள். அது போலவே இவரது மாணவப் பருவ காலங்கள் இவர் எதிர்காலத்தில் ஒரு சிறந்த கலைஞராக வருவதற்கான அடையாளத்தைத் தந்திருந் தன. இவரது முதலாவது மேடைப் பிரவேசம் 1981இல் நிகழ்ந்தது. மானிப்பாய் இந்துக் கல்லூரியில் நிகழ்ந்த ஒரு பட்டி மன்றத்தில் “கல்வியா? செல்வமா? வீரமா?.’ எனும் தலைப்பினுாடே இவரது மேடைப்பிரவேசம் ஆரம்பமாயிற்று. இலங்கை கம்பன் கழக ஸ்தாப கர்களில் ஒருவரான கம்பவாரிதி திரு. ஜெயராஜ் அவர்கள் அதற்குத் தலைமை தாங்கியிருந்தார். தொடர்ந்து பல பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்த இவர், கவர்ச்சியாகவும், கருத்தாழ மானதாகவும், நயத்துடனும் தனது கருத்துக்களை முன் வைப்பதில் திறமைமிக்கவராகத் திகழ்ந்தார்.
மானிப்பாய் இந்துக் கல்லூரியில் சாரணிய இயக்கத் தலை வராகவும், மாணவ விடுதியின் தலைவராகவும், மாணவர் தலைவ ராகவும், இல்லத் தலைவராகவும் இருந்துள்ளார்.
ஜெர்மன் நாட்டிற்குப் புலம்பெயர்ந்து சென்று தனது வாழ்க்கை யை ஆரம்பித்திருக்கும் இரவீந்திரன் புலம்பெயர் மண்ணெங்கும் தனது கலை முகத்தை காட்டத் தொடங்கியிருந்தார். ஐரோப்பிய நாடுகளில் கலை, கல்வி, இலக்கிய விழாக்களில் மேடைப் பேச்சாளரா கவும், பட்டிமன்றப் பேச்சாளராகவும் தோன்றியிருக்கின்றார்.
பேச்சுத் துறையைப் போலவே நாடகத்துறையிலும் இவர் தனது கலைமுகத்தை காட்டத் தவறவில்லை. இவரது முதலாவது நாடக அரங்கேற்றம் 1981இல் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் தொடங் கியது. "பணம்’ என்ற நாடகத்தில் இவரது நாடகக் கலைப்பயணம் ஆரம்பமாகியது. ஜேர்மன் நாட்டிற்கு புலம்பெயர்ந்து வந்த பின்பும் சுமார் 25 நாடகங்கள் வரை நடித்துள்ளார்.
தான் நடித்த நாடகங்களில் ஜேர்மனி டோட்முண்ட் நகரில்
இலங்கை எழுக்காளர்கள்.ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு 70

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
நாடகக் கலைஞரும், இயக்குனருமாகிய திரு. சிவதாசன் அவர்க ளுடன் இணைந்து நடித்துப் பல மேடைகள் கண்ட “அழியாத கோலங் கள்” என்ற நாடகம் இன்றும் இவரது சிறப்பைக் கூறும்.
இரவீந்திரன் அவர்கள் ஐரோப்பிய நாடுகளில் இன்று பிரபல்ய மான மேடை அறிவிப்பாளராகவும் திகழ்கின்றார். 1981இல் மானிப் பாய் இந்துக் கல்லூரியில் நடந்த விளையாட்டுப் போட்டியில் அறிவிப் பாளராகக் கடமையாற்றியதிலிருந்து தன்னை ஒரு அறிவிப்பாளராக இனங்காட்டத் தொடங்கினார். இதுவே இன்றைய சமகாலத்திலும் இவரை ஒரு மேடை அறிவிப்பாளராக, வானொலி நிகழ்ச்சி நடத்து னராக முகமுயர வைத்திருக்கின்றது. 7 ܝ
நாவன்மை, நறுக்கென்ற பேச்சு, தெளிவான உச்சரிப்பு, அழகு தமிழ் நடையை இலகு தமிழாகக் கலந்து உரைக்கும் இவரது ஆற்றல் கேட்போரைக் கவர்ந்திழுக்கும் சிறப்பைக் கொண்டது. ஆகவே தான் இவர் இன்று புலம்பெயர்ந்து ஐரோப்பிய, கனடிய, மத்திய கிழக்கு மண்ணில் வாழும் பலதரப்பு மக்களையும் தனது வானொலி நேயர்களாக கவர்ந்து கொண்டுள்ளார்.
ஐரோப்பிய மண்ணில் பல வானொலிகளிலும் அறிவிப்பா ளராக சேவை புரிந்த இவர், ஜெர்மனியில் முதன் முதலாக ஐரோப் பிய தமிழ் வானொலி என்ற தனியான 24 மணிநேர வானொலிச் சேவையை உருவாக்கியுள்ளார். தனது அன்பு மொழியாலும், அழகு தமிழாலும் வானொலி நேயர்களை கவர்ந்து வைத்திருப்பவராகத் திகழ்கின்றார். இளையோர் முதல் வயதானவர்கள் வரை இவரது குரல் மீதான பிடிப்பை கொண்டுள்ளனர்.
இவர் ஜேர்மன் நாட்டில் முதன் முதலாகத் தொடங்கப்பட்ட தமிழ்க் கல்விச் சேவையில் 1996இல் தன்னை இணைத்துக் கொண்டு புகலிட மாணவர்களின் தாய்மொழி வளர்ச்சிக்காக இன்றும் உழைத்து வருகின்றார். ஜெர்மன் கல்விச் சேவையின் செயற்குழு உறுப்பினராக, பரீட்சைக்குழு உறுப்பினராக, பரீட்சை மேற்பார்வையாளராக, ஆண்டு விழாக்களில் அறிவிப்பாளராக பணியாற்றி வருவதோடு, கல்விச் சேவையின் மாணவர் மன்றத்திலும் பங்கெடுத்து வருகின்றார். அதேபோல ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினராகவும் ஆரம்பகாலம் முதல் இணைந்து செயலாற்றி வருகின்றார். ஜேர்மனி
தொகுதி 09 - கலாபூஷணம் புண்னியாமீனி - 7

Page 38
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
டோட்முண்ட் (Dortmund) நகரில் 1995ம் ஆண்டில் ஐரோப்பிய ரீதியில் ஒரு சைவசமயப் போட்டியை சிறுவர்களுக்காக நடாத்தியிருந்தார். இப்போட்டியை நடத்தியதன் மூலம் ரவிமாஸ்டர் என்று ஐரோப்பிய மண்ணிலும் பலராலும் அறியப்பட்டார்.
இரவீந்திரன் அவர்கள் பருத்தித்துறையை அண்மித்த வியாபாரி மூலையைப் பிறப்பிடமாகக் கொண்ட பத்மஜோதி அவர்களோடு 1985இல் இல்லறத்தில் இணைந்து கொண்டவர். தமிழ் ஆசிரியையாக கடமையாற்றிய திருமதி பத்மஜோதி தனது கணவரான இரவீந்திரனின் அனைத்துக் கலைப் பயணங்களோடும் கூடவே நடந்து அவருக்கு உந்து சக்தியாக இருந்து வருகின்றார். இவர்களின் புதல்வரான ஈழ மயுரன் தனது தந்தையின் வானொலி கலைச் சேவைக்கு தொழில் நுட்பக் கலைஞராக நின்று ஐரோப்பிய தமிழ் வானொலியின் ஒலி வடிவத்திற்கும் இனிமை கொடுத்து அதன் சிறப்பை உயர்த்தி நிற்ப தோடு தன் தந்தையின் கலைப் பயணத்திற்கும் தன் இளம் ஆற்றலை உறுதியாகக் கொடுத்து வருபவர்.
1981ம் ஆண்டு இவரின் வாழ்வில் மறக்க முடியாத ஆண்டா கும். அந்தக் காலப்பகுதியில் தான் இவரது முதலாவது பட்டிமன்றம், முதலாவது அறிவிப்பு நிகழ்ச்சி, முதலாவது நாடக அரங்கேற்றம் என்பன மானிப்பாய் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றன. இந்நிகழ்வுக ளின் உந்துதலே இன்றுவரை ஒரு நாடக நடிகராக, மேடை அறிவிப் பாளராக, வானொலி இயக்குனராக, தமிழ் வானொலி ஒன்றின் ஸ்தாபகராக, தமிழ்க் கல்விச் சேவையாளராக உயர்த்தியுள்ளது. தேசத்தின் மீதும், கலை இலக்கியத்தின் மீதும், தாய்மொழி மீதும் பற்றுறுதி கொண்ட இரவீந்திரன் அவர்களின் முகவரி:
T. RAVEENDRAN HAMMER STR 92 59075, HAMM GERMANY.
'தினக்குரல் வாரமஞ்சரி: 2007.09.15
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு 72

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
செல்லத்தம்பி சிறீக்கந்தராசா
பதிவு 254
எழுத்துத்துறை
மேல் மாகாணம், கொழும்பு மாவட்டம், கொட்டாஞ்சேனை கிராம சேவகர் பிரிவினை வாழிடமாகக் கொண்டிருந்த செல்லத்தம்பி சிறீக்கந்தராசா அவர்கள் ஒரு தமிழ் எழுத்தாளர், கவிஞர், சிரேஷ்ட வழக்கறிஞர். ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தைந்தில் ஐக்கிய இராச்சியத்துக்குப் புலம்பெயர்ந்து தனது குடும்பத்துடன் ILFORD நகரில் வசித்து வருகின்றார். இவர் பிறந்த ஊர் புலோலி: வழக்கறிஞர் பரம்பரையில் வந்தவர்.
1939-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் திகதி மாணிக்கம் செல்லத்தம்பி, காந்திமதி செல்லத்தம்பி தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த சிறிக்கந்தராசா தனது உயர் கல்வியினை சென்னைப் பல் கலைக்கழகத்தில் பெற்று 1961ல் B. Sc பட்டதாரியானார். 1987ம் ஆண்டில் லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றார். புலம்பெயர் ஈழத்துத் தமிழ் மக்களின் பிரச்சினைக் ளுக்கும், உரிமைகளுக்கும் குரல் கொடுத்து வரும் ஒரு முன்னணி வழக்கறிஞராக தற்போது பிரித்தானியாவில் கடமையாற்றி வருகின்
தொகுதி 09 - கலாபூஷணம் புனினியாமீன் - 73

Page 39
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
றார். இவருடைய தந்தையாரும் ஒரு வழக்கறிஞராக இருந்தவர். இவருடைய தமையனார் இராமச்சந்திரன் கம்பளையில் வழக்கறிஞ. ராகக் கடமைபுரிந்தவர்.
தாயகத்தில் இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களம், சட்டவரைஞர் திணைக்களம், அற்றோணிஜெனரல் திணைக்களம் ஆகியவற்றில் பணியாற்றிய காலகட்டத்தில் இவர் அதிகமாக எழுதி னார். இவரின் கன்னி ஆக்கம் ‘அடிக்குறிப்புத் தொண்டர்கள்’ எனும் தலைப்பில் 1962ம் ஆண்டில் 'தினகரன்' பத்திரிகையில் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து கட்டுரைகள், கவிதைகள் என தினகரன், வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, ஈழகேசரி, ஈழநாடு ஆகிய பத்திரிகைகளுக்கு எழுதிவந்தார்.
1978ம் ஆண்டு பெப்ரவரி 04ம் திகதி இலங்கையில் அமுல் படுத்தப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தை முழு மையாகத் தமிழில் மொழிபெயர்த்தவரும் இவரே என்பது குறிப்பிடத் தக்கது. இன்று புலம்பெயர் நாடுகளிலிருந்து வெளிவரும் சஞ்சிகை கள், பத்திரிகைகளிலும் இவர் எழுதி வருகின்றார். இறையனார், திருமுருகவேந்தன், புலோலிப்புலவன் ஆகியன சட்டத்தரணி செ. சிறீகந்தராசாவின் புனைப்பெயர்களாகும்.
L6) கவிதைகளையும், பன்னூறு கட்டுரைகளையும் எழுதி யுள்ள இவர் ஆங்கிலத்திலும், தமிழிலும் சிறந்த மேடைப் பேச்சாளர். பேர்பெற்ற கவிஞர். நிதானமான விமர்சகர். 1962ம் ஆண்டு முதல் 'இலங்கை வானொலியில் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றன. பதினைந்துக்கு மேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதியுள்ளார். 1970/1971 காலப்பகுதியில் ‘கலைக் கோலம் என்ற நிகழ்ச்சியினை வாரம்தோறும் ‘இலங்கை வானொலியில் நடத்திவந்தார். கலை, இலக்கிய, கலாசார நிகழ்ச்சியான 'இந்நிகழ்ச்சி நேயர்களிடம் அமோக வரவேற்பினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம், இவரின் வானொலி நாடகங்களை பிரபல நாடக எழுத்தாளர் 'சானா பாராட்டி ஊக்குவித்ததைத் தன் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாக இன்றும் நினைவு கூருகின்றார். புலம்பெயர்ந்த பின்பு இலண்டன் BBC ‘தமிழ் ஓசையில் பகுதிநேர ஒலிபரப்பாளராகச் செயலாற்றிய இவர் சர்வதேச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ் (IBC) வானொலி
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு 74

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2.
யில் கடந்த ஏழாண்டு காலமாக ‘உலகக் கண்ணோட்டம் எனும் நிகழ்ச்சியை வாரம்தோறும் வழங்கி வந்தார். . . '
சிறிக்கந்தராசாவின் ஆக்கங்கள் இதுவரை ஏழு நூற்களாக வெளிவந்துள்ளன. தாயகத்தில் வாழ்ந்தபோது வெளிவந்த நூல்கள் நான்கு; ' . .
சட்டமும் தமிழும் (1971) பங்காண்மைச் சட்டம் (1979) எம்.பி. ஆவது எப்படி? (1979) சட்டமும் சிரிக்கும் (1979)
புலம்பெயர்ந்த பின்பு வெளிவந்த நூல்கள் மூன்று,
5. Ethical Essence of Tamils (1993) 6. ஊர்க்காற்று (2003) 7. அவ்வையார் காட்டிய வழி (2003)
மேலும் இரண்டு புத்தகங்கள் அச்சில் உள்ளன. இப்புத்தகங் களை 2007ம் ஆண்டின் இறுதியில் வெளியிடத்திட்டமிட்டுள்ளார்.
1. பேசாதவை பேசியவை (கவிதைத் தொகுதி)
2. Scenes from Tamil Classics .
இறுதியாக வெளிவந்த இவரது இரண்டு நூல்களையும் சர்வ தேச தமிழ்நூல்களின் ஆவணப்பதிவான நூல்தேட்டத்தில் திரு.என். செல்வராஜா அவர்கள் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.
ஊர்க்காற்று. செல்லத்தம்பி சிறீக்கந்தராசா. இங்கிலாந்து: தமிழ் இசை மன்றம், 66, உவெஸ்றோ காடின்ஸ், செவன் கிங்ஸ், இல்போட், எசெக்ஸ் IG39NF, 1வது பதிப்பு, மே 2003. (சென்னை: 3DVision) 116 பக்கம், விலை: இந்திய ரூபா 75, அளவு: 18x12 சமீ.
தமிழியற் கவிதைகள் (5), பக்திக் கவிதைகள் (8), பொங்கல் கவிதைகள் (6), விடுதலைக் கவிதைகள் (28), மற்றும் தனியன்களாக (4) என்று மொத்தம் 51 கவிதைகளை இத்தொகுப்பில் தந்திருக்கிறார். இது ஆசிரியரின் முதலாவது கவிதைத் தொகுதி. கடந்த 10 ஆண்டு காலத்தில் எழுதிப் பிரசுரமானவற்றில் தேர்ந்த தொகுப்பு இதுவாகும்.
: தொகுதி 09 - கலாபூஷணம் புன்னியாமீன் - 75

Page 40
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
நூலாசிரியர் தசாவதானி மேலைப் புலோலியூர் கதிரவேற்பிள்ளை
அவர்களின் மரபில் உதித்தவர். சட்ட அறிஞர் பரம்பரையில் வந்தவர்.
1985 முதல் இலண்டனில் வாழ்ந்து வருபவர்.
(நூல்தேட்டம் தொகுதி 3 - பதிவு எண் 2483)
அவ்வையார் காட்டிய வழி. செல்லத்தம்பி சிறீக்கந்தராசா. இங்கி லாந்து: தமிழ் இசை மன்றம், 66, உவெஸ்றோ காடின்ஸ், செவன் கிங்ஸ், இல்போட், எசெக்ஸ் IG3 9NF, 1வது பதிப்பு, மே 2003. (Gastó0607: 3D Vision) 150 பக்கம், விலை: இந்திய ரூபா 75, அளவு: 18x12 சமீ
சிதறிக் கிடக்கும் தமிழ் மனங்கட்கு நம்பிக்கை, தெளிவு, பரம்பரைப் பண்புகள் மீது பாசம் கலந்த ஈர்ப்பு, ஆகியவற்றை ஊட்டுவதை பிரதான நோக்கமாகக் கொண்டு 31 சிறு கட்டுரைகளின் வாயிலாக ஒளவையார் அருளிய நீதிநூல்களின் சில பாடல்களைத் தேர்ந் தெடுத்து விளக்க முயன்றுள்ளார். இக்கட்டுரைகள் "இலண்டன் தமிழன்’ இதழில் தொடராக வெளிவந்தவை.
(நூல்தேட்டம் தொகுதி 3 - பதிவு எண் 2724)
இலக்கிய சுவைததும்ப - இலக்கிய நயத்துடன் பேசக்கூடிய ஆற்றல்மிக்க சிறீக்கந்தராசா பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள், கவியரங்கங்கள் போன்றவற்றில் தமது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ‘வித்துவான்வேலன் இலக்கிய வட்டத்தின் ஸ்தாபகரான இவர் மாதந்தோறும் இலக்கிய வட்டத்தின் சார்பாக புராதன இலக்கி யக் காவியங்களை ஆராய்ந்து, அவை பற்றி நயந்து கருத்துப் பறிமாரிக் கொள்ளும் நிகழ்வானது தாயகத்தில் கூட காணமுடியாத நிகழ்வாகும். ‘தமிழ்மீது கொண்ட பற்றும், தமிழ் இலக்கியங்கள் மீது கொண்ட காதலும் ‘தமிழன்’ புலம்பெயர்ந்தாலும் அழிக்க முடியா தவை என்பதை எடுத்துக் காட்டுவதாகவே இந்நிகழ்வுகள் அமைகின்றன.
சிறீக்கந்தராசாவின் வாழ்க்கைத் துணைவியார் 'மாதினி’. அமரர் வித்துவான் க.ந.வேலன் அவர்களின் தனியொரு மகள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறையில் பீ.ஏ. பட்டம் பெற்ற மாதினி அவர்கள் இசைக்கச்சேரி செய்தும், ஒலிநாடாக்கள் வெளியிட்டும் தமிழ்இசைப் பணிபுரிந்து வருகின்றார். இவர் இங்கி லாந்தில் அரசாங்க சேவையில் பணிபுரிகின்றார். இத்தம்பதியினருக்கு
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு 76

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
நூலாசிரியர் கலாபூஷணம் புன்னியாமீன் லண்டனுக்கு விஜயம் செய்திருந்த போது பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் வடலி பத்திரிகை ஆசிரியருடனும், திரு. சிறீக்கந்தராசாவுடனும் எடுத்துக் கொண்ட புகைப்படம்
இரண்டு அன்புச் செல்வங்கள் உள்ளனர். மகன் அருணன் சிறீக்கந் தராசா சட்டத்தரணியாவார். மகள் சாம்பவி சிறீக்கந்தராசா ஒரு டாக்ட ராவார்.
தனது இலக்கிய ஈடுபாட்டுக்குக் காரணகர்த்தாக்கள் என்ற வகையில் திருவாளர்களான கந்தமுருகேசனார், சிவன் கருணாலய பாண்டியனார், இ. இரத்தினம், வித்துவான் வேலன், இலங்கை வானொலி ஞானம் இரத்தினம் ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவரின் தற்போதைய முகவரி ;-
SELLATHAMBYSRSKANDARAJAH 66, WESTROW GARDENS
ILFORD, ESSEX,
,f% IG39NF - - - - - - - -به- - - - 6 தினக்குரல் வாரமஞ்சரி: 2007.09.30 UK.
தொகுதி 09 - கலாபூஷணம் புணர்னியாமீன் - 77

Page 41
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
எம்.என்.எம். அனஸ் (இளைய அப்துல்லாஹ்)
பதிவு 255
எழுத்துத்துறை
மேல் மாகாணம், கம்பஹா மாவட்டத்தில் ஹனுப்பிட்டிய கிராம சேவகர் பிரிவினைச் சேர்ந்த மொஹமட் நவாஸ் மொஹமட் அனஸ் அவர்கள் வடக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் புகழ்பெற்ற எழுத்தாளர், ஊடகவியலாளர், தொலைக்காட்சி அறிவிப் பாளர், தயாரிப்பாளர். தற்போது புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் ‘ஹவுன்ஸ்லோ நகரில் நிரந்தரமாக வசித்து வருகின்றார்.
1968ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி மொஹமட் நவாஸ் தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த அனஸ் 'ஒட்டுசுட்டான் மகாவித் தியாலயத்தின் பழைய மாணவராவார். 1987ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டுவரை நாவலப்பிட்டிய தாருல் உலூமில் ஹாஷிமிய்யாஹற் கல்லூரியின் பயின்றதன் காரணமாக அரபு, உருது மொழிப் பரிச்சயம் பெற்றார். w
இலக்கிய ஆர்வம் கல்லூரியில் கற்கும் காலத்திலிருந்தே இயல்பாக ஏற்பட்டது. இவரின் கன்னிச் சிறுகதை 1986ம் ஆண்டில்
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு 78
 

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2 ‘சிந்தாமணி’ பத்திரிகையில் 'பவளமலையில் ஒரு பசுந்தளிர் எனும் தலைப்பில் பிரசுரமானது. இதைத் தொடர்ந்து இன்றுவரை எழுபத்தைந் துக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், முன்னூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், நூற்றுஜம்பதுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இளைய அப்துல்லாஹற், ஹரீரா அனஸ், மானுடபுத்ரன் ஆகிய பெயர்களில் எழுதிவரும் எம்.என்.எம். அனஸின் ஆக்கங்கள் இலங்கையில் சிந்தாமணி, தினக்குரல், வீரகேசரி, தினகரன், தினபதி, ஞானம், மல்லிகை, நந்தலாலா, கொழுந்து, தினமுரசு, நவமணி, நேசன், அல்ஹஸனாத், யாத்ரா ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகை களிலும் பிரசுரமாகியுள்ளன.
1990களில் இருந்து புலம்பெயர் தமிழ் சஞ்சிகைகளுடன் இறுக்கமான தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ள இவரின் பெரும் பாலான ஆக்கங்கள் புலம்பெயர் சஞ்சிகைகளிலும், பத்திரிகைக ளிலும் இடம்பெற்றுள்ளன. ... །
இவர் இதுவரை இரண்டு புத்தகங்களை வெளிக்கொணர்ந் துள்ளார். ஒன்று "துப்பாக்கிகளின் காலம்'. இது ஒரு சிறுகதைத் தொகுதி, அடுத்தது "பிணம் செய்யும் தேசம். இது கவிதைத் தொகுதி. இத்தொகுதிக்கு 2005ம் ஆண்டு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. இவ்விரு நூல்களைப் பற்றியும் சர்வதேச தமிழ் நூல்களின் ஆவணப் பதிவான நூல்தேட்டம் தொகுதி - 03இல் நூலகவியலாளர் என்.செல் வராஜா அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
துப்பாக்கிகளின் காலம். இளைய அப்துல்லாஹம் (இயற்பெயர்) எம்.என்.எம். அனஸ். வத்தளை, 127B, ஆனந்த மாவத்தை, ஹ"ணுப் பிட்டி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2004. (கொழும்பு 13. ஈகுவாலிட்டி கிரபிக்ஸ்)
xiv, 60 பக்கம். விலை ரூபா 150. அளவு 21x15 சமீ.
இத்தொகுதியிலுள்ள 10 சிறுகதைகளும் மிருகத்தனமான யுத்தம் ஏற்படுத்திய பேரழிவுகளையும், மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய
சீரழிவுகளையும் சித்தரிக்கின்றன. இடப்பெயர்வுகளினால் அப்பகுதி மக்கள் அனுபவித்த வேதனைகள், கொடுமைகள் என்பனவற்றையும்,
தொகுதி 09 - கலாபூஷணம் புன்னியாமீன் - 79

Page 42
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
பிரித்தெடுத்துத் துரத்தப்பட்ட பின்னர் பிறந்த மண்ணை எண்ணி ஏங்கித் தவிக்கும் உள்ளங்களின் தவிப்பையும் இளைய அப்துல்லாஹற் அற்புதமாகச் சித்தரித்துள்ளார். அனுபவச் செறிவும், கதை சொல்வதில் உள்ள நேர்த்தியும் இவரது கதைகளில் ஆர்வமூட்டுகின்றன.
நூல்தேட்டம் தொகுதி 03. பதிவு எண் 2626
பிணம் செய்யும் தேசம். இளைய அப்துல்லாஹற் (இயற்பெயர் MN.M. அனஸ்). சென்னை 600018. உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் வீதி, அபிராமபுரம், 1வது பதிப்பு செப்டெம்பர் 2004 (சென்னை 600005. மணி ஒப்செட்)
286 பக்கம், விலை: இந்திய ரூபா 125. இலங்கையில் ரூபா 250. அளவு 21x13.5 சமீ.
இலண்டன் தீபம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக நீண்டகாலம் பணியாற்றித் தற்போது தாயகம் திரும்பியுள்ள அனஸ் 20 ஆண்டுக்கால ஊடகத்துறை அனுபவம் மிக்கதொரு கவிஞர், மானுடபுத்ரன், ஹரீரா ஆகிய வேறும் புனைபெயர்களிலும் எழுதி வருபவர். காலம் காலமாகத் தாம் வாழ்ந்த தாயக மண்ணிலிருந்து முஸ்லிம் மக்கள் திடீரென்று வெளியேற்றப்பட்ட சோகம் இவரது நெஞ்சைக் குடைந்து வருவதை இவரது கவிதை வரிகளில் காண முடிகின்றது. ஈழத்தின் சமகால அரசியல், சமூகவாழ்வின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தின் பல அம்சங்களை வெளிக்கொண்டு வரும் முக்கியமான ஒரு படைப்பிலக்கியம் இதுவாகும்.
நூல்தேட்டம் தொகுதி 03. பதிவு எண் 2523
ஒரு 'பத்தி எழுத்தாளன் என்ற வகையில் இவரின் பத்தி எழுத்துக்கள் தனித்துவமிக்கவை. தனக்கே உரித்தான தனிப்பாணியில் சுவையான முறையில் அவை அமைந்திருக்கும். 1997/1998 காலப் பகுதியில் “கன்னாதிரட்டி சிவத்தாருக்கு கண்டி அப்துல்லாஹம் வாத்தி யார் எழுதுவது” எனும் தலைப்பில் ‘நவமணியில் பத்தி எழுத்தை எழுதினார். 1994இல் அவுஸ்திரேலியா தமிழ் உலகம்' பத்திரிகையில் 'கொழும்பில் இருந்து அப்துல்லாஹற் வாத்தியார் எழுதுவது' என்ற 'பத்தியும், 2005இல் “சுடர்ஒளி பத்தியும் குறிப்பிடத்தக்கவை. இப்போது
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு 80

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2 .
'தினக்குரல் வாரமஞ்சரியில் 70 வாரங்களுக்கும் மேலாக பிரசுரமாகிக் கொண்டுவரும் 'ஆழ்மனத் தூறல் வாசகர்களினால் விரும்பிப்படிக்கப் படும் ஒரு 'பத்தியாகும். அதேபோல “ஞானம்' சஞ்சிகையில் வெ வரும் மற்றவை நேரில்' பத்தியையும் குறிப்பிடலாம்.
இளைய அப்துல்லாஹ்வின் அடுத்த பக்கம் அவருடைய குரல்வளத்தோடு தொடர்புபட்டது. சிறந்த பிசிறில்லாத குரல் வளத் தாலும், உச்சரிப்புச் சுத்தத்தாலும் 1992, 1993, 1994 ஆகிய மூன்று வருடங்களிலும் ‘தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்திய அகில இலங்கை அறிவிப்பாளர் போட்டியில் முதலாமிடத்தையே பெற்றார். 1991, 1992ம் ஆண்டுகளில் இலங்கை முஸ்லிம் சயம கலாசார திணைக்களம் அகில இலங்கை ரீதியில் நடத்தியபேச்சுப் போட்டியிலும் முதலாமிடத்தையே பெற்றார். சொற்பிறழாத உச்சரிப் புடன் கூடிய பேச்சுத் திறமைக்கான காரணம் என்னவென்று கேட்டபோது அவர் கூறிய பதில் “...இதற்கு மூலகாரணம் எனது பாட்டனார் தான். (தாயின் தந்தை) ஏனென்றால் அவருக்கு வாசிப்பு அறிவு இல்லை. ஆனால், அனுபவ அறிவுமிக்கவர். தினமும் காலை யிலே வாங்கிக் கொண்டு வரும் 'தினபதி பேப்பரை முழுவதும் அவருக்கு உரத்து வாசித்துக்காட்ட வேண்டும். அந்த வாசிப்புப் பயிற்சியும், பரிச்சயமும் தமிழையும், கவர்ச்சியான குரலையும் எனக்குப்
9
பரிசளித்தது. .
1996/1997 காலப்பகுதியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தா பனத்தில் ‘விடியலை நோக்கி என்ற சமாதானக் கருப்பொருளைக் கொண்ட நிகழ்ச்சியை நடத்தினார். இது தேசிய சேவையில் தரமான நிகழ்ச்சிகளிலொன்றாக அமைந்திருந்தது. இலங்கை வானொலித் தொடர்புக்கு உந்துதலாக இருந்தவர்களான பீ.எச். அப்துல் ஹமீட், வீ.என். மதியழகன், உருத்திராபதி, ஹாரிஸ் ஹாஜி, பௌசுல் ஹஸன் ஆகியோரை அன்புடன் இன்றும் நினைவு கூருகின்றார்.
2000 ஆண்டு ‘தீபம்’ தொலைக்காட்சியில் இணைந்த பின்பும் பல நிகழ்ச்சிகளை இவர் தயாரித்தளித்து வருகின்றார். இவற்றுள் 'காலைக் கதிர் பேட்டி நிகழ்ச்சி மிகவும் பிரபல்யமானது. இந்நிகழ்ச் சியினூடாக இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா உட்பட தமிழ் பேசும் மக்கள் வாழும் நாடுகளைச் சேர்ந்த முக்கிய மான அதிதிகள், அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள், கலைஞர்கள்,
தொகுதி 09 - கலாபூஷணம் புன்னியாமீன் - 8

Page 43
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
லண்டன் நகருக்கு விஜயம் செய்யும் போதும்; பிரித்தானியாவில் வாழும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், கலைஞர்களுடனும் நேரடி நேர்காணல் நிகழ்ச்சிகளை நேர்த்தியாக நடத்தி வருகின்றார். ஒரு நேர்காணல் நிகழ்ச்சியின் போது பதிலை வழங்குவதைவிட கேள்விக ளைத் தொடுப்பதே ஜீவன்மிக்கது. இந்த அடிப்படையில் இவர் கேள்வி களைத் தொடுத்து அழகான முறையிலும், பயனுள்ள முறையிலும் நிகழ்ச்சியை நகர்த்திச் செல்லும் பாங்கு மிகவும் இரசிக்கத்தக்கது.
2003ம் ஆண்டு ஐ.ஆர்.ஒ. (இலண்டன்) இங்கிலாந்தின் சிறந்த தமிழ் அறிவிப்பாளருக்கான விருதை இவருக்கு வழங்கி கெளரவித்தது.
‘எங்கள் தாயகமும் வடக்கே” (1997) என்ற இவரது ஒலிப் பதிவுக் கவிதை 1990களில் இடம்பெயர்க்கப்பட்ட முஸ்லிம்களின் வரலாறு சொல்லும் ஓர் ஆவணமாகத் திகழ்கின்றது. இந்த ஒலிப்பேழை ஈழத்துக் கவிதை உலகிலும், அரசியல் உலகிலும் இவர் மீதான கவன ஈர்ப்பைத் தேடிக் கொடுத்தது.
(a 4ain set. قees -- 2$# :پیٹ இளைய அப்துல்லாஹற்வின் 3.656S65 இத்தகைய சேவைகளை கெளர adraAfALEfißÄisan வித்து இலங்கையில் 50% ஆண்டை :á' ኃ.......!›› நோக்கி வெற்றி நடை போடும் ஒரே சஞ்சிகையான 'மல்லிகை தனது 2006 ఉ ஆகஸ்ட் இதழின் முகப்பட்டையில் இவரின் புகைப்படத்தினைப் பிரசுரித்து கெளரவித்தது.
s இவரின் அன்புப் பாரியாரின் பெயர் ஜெமீலா. இத்தம்பதியினருக்கு exadec eoos te 2 அன்புச் செல்வங்கள் உளர். ‘ஹரீரா
ஆசைக்கொரு மகள், ‘மொஹம்மட்
ஆஸ்திக்கு ஒரு மகன். இவரின் முகவரி ;-
M.N.M. ANAS · 161-163 STANES RD, UNIT-01 HOUNSLOW TW 33JZ -- 'தினக்குரல் வாரமஞ்சரி: 2007.10.07 UK. இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினர் விபரத்திரட்டு 82
 

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
மட்டுவில் ஞானக்குமாரன்
பதிவு 256
எழுத்துத்துறை
வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டம், சாவக்கச்சேரி மட்டு வில் தெற்கு கிராமசேவகர் பிரிவினைப் பிறப்பிடமாகக் கொண்ட ‘சோமசுந்தரம் நரேஸ் அவர்கள் மட்டுவில் ஞானக்குமாரன்’ எனும் பெயரில் அறியப்பட்ட எழுத்தாளராவார். தற்போது புலம்பெயர்ந்து தனது அன்பு மனைவி கிருசாந்தி, அன்புச் செல்வங்களான யணித்தா, திலீபன், காவியன், வருணன், ஒவியா ஆகியோருடன் ஜெர்மன் ஒஸ்னாபுறுாக் (Osnabruck) நகரில் வசித்து வருகின்றார்.
1969ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 08ம் திகதி ஐயாத்துரை சோமசுந்தரம், சரோஜினிதேவி தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்த நரேஸ் தனது ஆரம்பக்கல்வியை துணாவில் சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயத்திலும், இடைநிலைக்கல்வி, உயர்தரக்கல்வியினை வண்ணை வைத்தீஸ்வரன் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரி,மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆகியவற்றிலும் கற்றார். கற்கும் காலத்திலிருந்தே கலை இலக்கியத் துறை ஆர்வம் இவருக்கு இயல்பாகவே ஏற்பட்டது.
தொகுதி 09 - கலாபூஷணம் புன்னியாமீனி - 83

Page 44
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
துணாவிலில் இவருடைய வீடு அமைந்திருந்த சூழல்; வீட்டுக்கு நேர்எதிரே "துணாவில்குளம், வயல்நிலம், முருகன் கோவில், வயலில் வேலை செய்யும் பெண்களின் கிராமியப்பாடல்கள், கோவிலில் குருப்பள்ளி எழுச்சிப்பாடல்கள், குளத்தில் குதித்து நீந்தி விளையாடும் தன்வயதுச் சிறுவர்கள் இத்தகைய இயற்கைச் சூழலே இரசனை உணர்வினையும், கலை, இலக்கிய நேசத்தையும் தனக்குத் தந்தது என தனது இளமைக் காலத்தையும், தாய்மண்ணின் சுகந்தத் தையும் பற்றி அங்கலாய்க்கும் இவர் "ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு திறமையிருக்கும். அதனை இனங்கண்டு கொள்வதில் சிலர் வெற்றி காண்கிறார்கள். எனக்குள் இருந்த இலக்கியத் திறனை தனிமைச் சிறைக்குள் சிக்கிய போதுதான் நான் உணர்ந்து கொண் டேன். பின்பு ஞானகுமாரனாக அறிமுகமாகி, தமிழையும், மண்ணை யும், உலகியலையும், இயற்கையையும் மேலும் மேலும் நேசிக்கக் கற்றுக் கொண்டேன். சமூக விழிப்புணர்வுக்கு தடைகளாக இருப்பதை படிகளாக மாற்ற விரும்பினேன். முடியாததை தகர்க்க விரும்பினேன். இவ்வாறுதான் என் இலக்கியப் பயணம் ஆரம்பித்தது.” என்று கூறுகின்றார். "
இவரது கன்னி ஆக்கம் 1996இல் ‘பூவரசு (ஜெர்மனி) சஞ்சிகை யில் இடம்பெற்றது. இதிலிருந்து இன்றுவரை ஐந்து சிறுகதைகளையும், 300க்கு மேற்பட்ட கவிதைகளையும், 15க்கு மேற்பட்ட கட்டுரைகளை պb, 10வானொலி நாடகங்களையும், 15மேடை நாடகங்களையும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் தமிழ் தொலைக்காட்சி இணையம். TTN (பிரான்ஸ்), 'தீபம்’ தொலைக்காட்சி (இலண்டன்) அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ் IBC (இலண்டன்), TRT வானொலி, ABC வானொலி (பிரான்ஸ்) தமிழ்மறவன் இணையத் தளம், வெப் ஈழம் இணையத்தளம், வெப் உலகம் இணையத்தளம், ‘பதிவுகள் இணையத்தளம், தமிழ் அமுதம் இணையத்தளம், வணக்கம் மலேசியா, குமுதம் (யாழ்மணம்) ஆகிய இலக்றோனிக் ஊடகங்க ளிலும் பூவரசு (ஜெர்மனி), ஏழைதாசன் , இனியநந்தவனம் (இந்தியா), வெற்றிமணி (ஜெர்மனி), தேவி (இந்தியா), ராணி (இந்தியா) ஆகிய சஞ்சிகைகளிலும், உதயன் (கனடா) ஈழமுரசு (பிரான்ஸ்), ஈழநாடு (பிரான்ஸ்), தினக்குரல் (இலங்கை), உதயன் (இலங்கை), ஈழநாதம் (இலங்கை) ஆகிய பத்திரிகைகளிலும் இடம்பெற்றுள்ளன. س
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு 84

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
மட்டுவில் ஞானகுமாரன் இதுவரை இரண்டு கவிதைநூல் களை வெளியிட்டுள்ளார்.
1. முகமறியா வீரர்களுக்காக.
இந்நூலின் முதலாம் பதிப்பு 2000 ஆண்டில் வெளிவந்தது. மொத்தப்பக்கங்கள் 112, கிரெளன் அளவு (12.5x18.5 ச.மீ) வெளியீடு: ShT60Iud LugfüLablö, Seminar - STR - 2, 49074 Osnabruick, Germany. அச்சீடு; மலர் பிரிண்டர்ஸ் (ஐக்கிய இராச்சியம்)
இக்கவிதைத் தொகுதியில் மொத்தம் 33 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இக்கவிதைகள் ஈழமுரசு, இளைஞன், களத்தில், தமிழன் சிறி, கல்கண்டு, பூவரசு ஆகிய ஏடுகளிலும், IBC, TRT வானொலி களிலும் இடம்பெற்றவையாகும்.
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள எழுச்சிக் கவிஞர் காசிஆனந்தன் குறிப்பிட்டிருந்த கருத்துக்கள் சிந்திக்கக் கூடியவை. ‘புதுக்கவிதை” என்று சொல்லப்படும் இலக்கியத்தை ‘நறுக்குகள்’என நான் அழைக்கிறேன். உரைநடையில் ஒரு புதிய வீச்சாகவே "நறுக்கு இலக்கியம் தோன்றிற்று. ‘புதுக்கவிதை' என்பது எந்த வகையிலும் ‘பா’ (கவிதை) ஆகாது. மேனாட்டார் இதைப் ‘பா’ இலக்கியம் என்பது மெய்யே. ஆனால், மொழியின் - இலக்கியத்தின் தோற்றத்தில் தமிழ னுக்கு மிகமிகப் பிந்திய ஆங்கிலேயனும் பிரெஞ்சுக்காரனும் மொழிவ தெல்லாம் சரி என்று ஆகிவிடாது. எசுறா பவுண்டும், வால்ட்விட்மனும் இலக்கியத்தில் எங்களுக்கு வழிகாட்டத் தேவையில்லை. நறுக்கு
: தொகுதி 09 - கலாபூஷணம் புன்னியாமீன் - 85.

Page 45
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
இலக்கியமும் நல்லிலக்கியமே. பாவைப் போல ஒழுங்குற - ஒசைபடச் சொற்களைக் கொட்டாமல் சிதறலாக அள்ளி எறிவது நறுக்கு. மட்டுவில் ஞானகுமாரன் நறுக்கு இலக்கியத்தில் மனமொன்றி நிற் கிறார்.
இந்நூலுக்கு சுப. வீரபாண்டியன் (சென்னை) அவர்களும் ஈழமுருகதாஸ் அவர்களும், ரெட்ணா காத்தலிங்கம் அவர்களும் புஷ்ப வனம் குப்புசாமி அவர்களும், முகத்தான். எஸ்.ஜேசுரட்ணம் அவர்களும் வாழ்த்துரைகள் வழங்கியிருந்தனர். எஸ்.ஜே. இம்மானுவேல் ஆசியு ரையை வழங்கியிருந்தார்.
2. வசந்தம் வரும் வாசல்
இந்நூலுக்கு பழ. நெடுமாறன் வாழ்த்துரை வழங்கியிருந்தார். ‘தமிழ்மையம் இயக்குநர் ம.ஜெகத்கஸ்பாரா மதிப்புரை வழங்கியுள் ளார். கவிஞர் அறிவுமதியின் ‘பெருமித அடையாளமும், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் ஆசியுரையும் இத்தொகுதிக்கு ‘அணி சேர்க்கின்றன. கவிஞர் புதுவை இரத்தினதுரை இத்தொகுதியைப் பற்றிக் குறிப்பிடும்போது "வசந்தம் வரும் வாசலில் பரவுவது சுகந்த மணமல்ல. எம் தேசத்திற் பரவிய பிணமெரிக்கும் வாடை, தாய் மடியை விட்டுக் காலெடுத்தாலும் என் இளவல் மட்டுவில் ஞானக் குமாரனின் நெஞ்சம் மட்டும் இங்கேயே வேர்பிடித்து விளங்குகிறது.”
இந்நூலைப் பற்றி சர்வதேச தமிழ்நூல்களின் ஆவணப்பதிவான நூல்தேட்டம் தொகுதி - 03இல் திருவாளர் என்.செல்வராஜா பின்வ ருமாறு பதிவாக்கியிருந்தார்.
வசந்தம் வரும் வாசல். மட்டுவில் ஞானகுமாரன். ஜேர்மனி. uoLG6ñ6Ö Shss60IGDry6öst. Kreuzstr 16,49084, Osnabruck, Las606,16öt பதிப்பகம். 1வது பதிப்பு ஆகஸ்ட் 2004. (கொழும்பு கிறிப்ஸ்)
104 பக்கம். விலை ரூபா 150. அளவு 22x14 சமீ. தமிழர் குறித்தும், தமிழினத்திடம் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கத்துடன் எழுதியுள்ள தீந்தமிழ்க் கவிதைகள் இவை. ஆசிரியரின்
இரண்டாவது நூல். அனுபவக் கணிதல். ஆத்மாவின் உருக்கம். இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு 86

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2.
விவரிப்பு, விசாரணை, விசாரம், கண்ணியச் சிற்றம் என இறவாத கவிதைகளுக்கு வேண்டிய அனைத்து இரசாயனங்களும் இவரது கவிதைகளில் உள்ளன.
நூல்தேட்டம் தொகுதி 03. பதிவு எண் 2546
எழுத்துத்துறையைப் போல கலைத்துறையிலும் இவரின் ஈடுபாடு அதிகம். இது பற்றி ஞானகுமாரன் கூறும்போது "...படிக்கும் காலங்களிலேயே நாடகங்கள், பேச்சுப் போட்டிகள் என்று பங்கு பற்றினேன். எங்கள் ஊரில் “வளர்மதி சனசமூக நிலையம்' என்ற ஓர் அமைப்பு இருந்தது. ஒவ்வொரு ‘பெளர்ணமி தினத்தன்றும் விழாக்கள் வைப்பார்கள். போட்டிகள், பரீட்சைகள் வைத்து பரிசில்க ளை வழங்குவார்கள். கலைவிழாக்களை நடத்துவார்கள். அங்கேதான் எனது முதலாவது ஓரங்க நாடகமான வாத்தியார் அரங்கேறியது.”
இதைத் தொடர்ந்து தாய் நாட்டிலும், புலம்பெயர் தேசத்திலும் பல நாடகங்களில் இவர் நடித்துள்ளார். அதேநேரம் இவர் கொழும்பில் வாழ்ந்த சில காலங்களில் கணபதி வித்தியாலயத்தின் ஆசிரியராகவும், தனியார் கல்வி நிலையத்தில் உயர்தர மாணவர்களுக்கான கணக் கியல், வணிகம், அளவையியல் பாட ஆசிரியராகவும் கடமையாற்றி யுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் இவரது ‘கவி’ நூல் அறிமுகவிழாவில் முதற் பிரதியை திருவாளர் கா.வே. பாலகுமாரன் வாங்கிச் சிறப்பிக்க, மதிப்பீட்டுரையை பாவலர் அறிவுமதியும், கவிஞர் கிருஷ்ணா அம்பல வாணன் அவர்களும் நிகழ்த்தியதையும், இவரது கவிதைகளை பாராட் டிய பாவலர் சிவநாதன் அவர்கள் மாவீரர் நிகழ்வுக் கவியரங்கில் கவி பாட அழைத்ததையும் தன் வாழ்நாளில் பசுமையான நினைவாகக் கொண்டுள்ள இவருக்கு 'வசந்தம் வரும் வாசல் கவி நூல் வெளியீட்டு விழாவின் போது கலாநிதி கந்தவனம், கலாநிதி ஒவியர் சிவகுமாரன் ஆகியோரால் ‘மானக் கவி’ எனும் பட்டம் வழங்கி கெளரவித்தமையை பெருமையாகக் கொண்டுள்ளார்.
தன்னுடைய இலக்கிய ஈடுபாட்டுக்குத் தனது அன்புத் தந்தை யார் தந்த ஊக்கமும், வழிகாட்டல்களுமே மூலகாரணம் என்று கூறும் ஞானசேகரன் தனக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும்
தொகுதி 09 - கலாபூஷணம் புண்னியாமீனி - 87

Page 46
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
தந்து தன்னை நெறிப்படுத்திய அறிஞர்களான கவிஞன் காசி ஆனந்தன், மு. மேத்தா, புதுவை இரத்தினதுரை, சுரதா ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவரின் முகவரி ;-
MLADDUVIL GNANAKKUMARAN. GESMOLDER STR 19 C 49084 OSNABRUCK
GERMANY
fair es586) - maduvilan (al) hotmail.com
'தினக்குரல் வாரமஞ்சரி: 2007.10.14
இலங்கை "எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு 88

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
சகாதேவன் இராஜ்தேவன் (இராஜ் கண்ணா)
பதிவு 257
எழுத்துத்துறை
மேல்மாகாணம், கொழும்பு மாவட்டம், வெள்ளவத்தையைச் சேர்ந்த சகாதேவன் இராஜ்தேவன் புலம்பெயர்வின் இரண்டாம் தலை முறையைச் சேர்ந்த ஒரு இளம் எழுத்தாளர். 'இராஜ்கண்ணா’ என்ற பெயரில் புலம்பெயர் இரண்டாம் தலைமுறையினர் மத்தியிலும், இலக்கிய வாசகர்கள் மத்தியிலும் நன்கு அறிமுகமான ஈழத்தவரான இவர் 1979ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 03ம் திகதி நைஜீரியாவில் பிறந்து 1996ம் ஆண்டு முதல் நோர்வேயில் புலம்பெயர்ந்து நிரந்தரமாக வசித்து வருகின்றார்.
சகாதேவன், இராஜ இராஜேஸ்வரி தம்பதியினரின் புதல்வரா கப் பிறந்த இராஜ்தேவன் பல்கலைக்கழகம் பேர்கன், பல்கலைக்கழ கம் ஒஸ்லோ, பல்கலைக்கழகம் ஒலுசன்ட் ஆகியவற்றில்: கணனித் துறை, கணிதத்துறை ஆகிய துறைகளில் கற்றவர். (Statistisk Sentralbyraa) புள்ளிவிபரவியலாளராக தற்போது இவர் பணியாற்றி வருகின்றார்.
: தொகுதி 09 - கலாபூஷணம் புன்னியாமீன் - 89

Page 47
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
தனது சிறுவயது முதல் தமிழ்நூல்களை வாசிப்பதிலும், 1996ம்
ஆண்டிலிருந்து எழுதுவதிலும் அதிக ஆர்வம் காட்டிவந்த இவரின் கன்னி ஆக்கம் 1997ம் ஆண்டில் எமது சஞ்சிகையில் இடம்பெற்றது.
இதிலிருந்து 30 சிறுகதைகளையும், 50க்கு மேற்பட்ட கவிதைகளை யும், பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவருடைய ஆக்கங்கள் “எமது சஞ்சிகை, IBC வானொலி, ABC வானொலி, இலண்டன் டைம் வானொலி, தேன் தமிழ் ஓசை வானொலி (பேர்கன்), ஜேர்மன் தமிழ் வானொலி இணையம், Hinduisme no இணையம், ‘இந்து தீபம்', வடலி (இலண்டன்) ஆகியவைகளில் இடம்பெற்றுள்ளன.
'இராஜ்கண்ணா" இதுவரை இரண்டு நூல்களை எழுதி வெளி யிட்டுள்ளார்.
1) பிஞ்சுமனம் (சிறுகதைகள்) 2) வண்ண மலர்கள் (நல்வழிச் சிறுகதைகள்)
இவ்விரு நூல்கள் பற்றியும் ஈழத்துத் தமிழ்நூல்களின் சர்வதேச ஆவணப்பதிவான நூல்தேட்டத்தில் திருவாளர் என். செல்வராஜா அவர்கள் பின்வருமாறு பதிவு செய்திருந்தார்.
பிஞ்சுமணம்: நல்வழிச் சிறுகதைகள். இராஜ்கண்ணா (இயற்பெயர்: இராஜ்தேவன்). நோர்வே. கண்ணன் வெளியீட்டகம். Drammen SV 46060, Hareid. 1“ao ugßůL LDTjë 2003. (United Kingdom: Ayothy Library Services, 48 Hallwicks Road, Luton, LU29BH) 56 பக்கம். சித்திரங்கள், விலை குறிப்பிடப்படவில்லை. அளவு 21x14.5 சமீ.
சிறுவர்களுக்கான ஒழுக்கவியல் கருத்துக்களைப் புகட்ட முனையும் 13 சிறுகதைகளின் தொகுப்பு: 1979ல் நைஜீரியாவில் பிறந்து, நோர்வேயில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் இளைஞரான நூலாசிரியரின் கன்னி முயற்சியாக வெளிவந்துள்ளது. புகலிடத்து இரண்டாம் தலை முறையினரால் இரண்டாம் தலைமுறையினருக்கு எழுதப்படும் ஒரு தமிழ் நூல் என்ற வகையில் இந்நூல் முக்கியத்துவம் பெறுகின்றது. . . "
நூல்தேட்டம் தொகுதி 02, பதிவு எண் 1375
வண்ண மலர்கள்: நல்வழிச் சிறுகதைகள், இராஜ்கண்ணா (இயற்
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு 90

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
பெயர்: சகாதேவன் ராஜ்தேவன்). நோர்வே. கண்ணன் வெளியீட்டகம். Drammens V-4, 6060, Hareid. 16hug LugiůL JILTg8 2005. (GlaBSITQugbL 12. குமரன் அச்சகம், 361 1/2 டாம் வீதி). . . " 64 பக்கம். விலை குறிப்பிடப்படவில்லை. அளவு 21.5x14.5 சமீ.
சிறுவர்களுக்குரிய 10 நன்னெறிக் கதைகள் இந்நூலில் இடம்பெறு கின்றன. ஒவ்வொரு கதையின் இறுதியிலும் கதைக்கேற்ற சிறுவர் பாடல் வரிகள் காணப்படுகின்றன. இக்கதைகள் நெய்தல் இணையத் தளத்தில் அவ்வப்போது பிரசுரமாகியிருந்தன. .
நூல்தேட்டம் தொகுதி 04 பதிவு எண் 3373
இவரது “வண்ண மலர்கள்’ எனும் நூலுக்கு டென்ம்ார்க் ரீ அபிராமி அம்பாள் ஆலயம் ரீ அபிராமி உபாசகி அம்மா வழங்கிய ஆசியுரையில் சில வார்த்தைகள் வருமாறு:
“.உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை அபிராமியின் குழந்தைகள் அனைவருக்கும் தாய் மொழியும், தாய்நாடும், சயம நெறியும் மிகவும் முக்கியமானவை. உரிய காலத்தில் தாய்மொழியைப் பயில்வதும், சமயப் பழக்கவழக்கங்களை ஒழுங்குடன் பின்பற்றுவதும், தாய் நாட்டுக்கு சேவை செய்வ தும் முக்கியமான பணிகளாகும். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் குழந்தைகள் நம்தாய் மொழியில் எமது தமிழ் பண்பாடு உலகநீதி சார்ந்த சிறுவர் கதைகளை பயின்று பயன்பெற வேண்டும் என்ற நல்நோக்கோடு செல்வன் ராஜ் தேவன் அவர்கள் சிறுவர்களுக்குரிய குட்டிக் கதைகள் அடங்கிய வண்ண மலர்கள் என்னும் நூலை வெளியிடு கின்றார். இந்நூலை அனைத்து நம் தமிழ் குழந்தைகளும் கற்று பயன்பெற்று நம் நாட்டிற்கும், மக்களுக்கும் பணி செய்து அம்மாவின் அருளோடு தெய்வீக குழந்தைகளாக வாழ வேண்டும் என்று வாழ்த்தி அம்மா ஆசி கூறுகின்றார்.
நோர்வே நாட்டின், மோலோய் என்ற இடத்தில் இருந்து கடந்த 15 வருடங்களாக வெளிவரும் “எமது சஞ்சிகை” எனும் தமிழ்ச் சஞ்சிகையின் ஆசிரியை கோ. பொன்னரசி பின்வருமாறு குறிப்பிட்டி ருந்தார்.
தொகுதி 09 - கலாபூஷணம். புனிணியாமீன் - 9.

Page 48
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
“.வெளிநாட்டில் வளரும் தமிழ்ப் பிள்ளைகள் தமிழ் படிப்பதில் ஆர்வம் குறைந்து வரும் இவ்வேளையில் அதே வெளிநாட்டில் வளரும் இளைஞரான இராஜ் கண்ணா தமிழ் ஆர்வத்துடன், கருத்துள்ள கதைகளை எழுதிவருவது பாராட்டுக்குரியது. இக்கதைகளின் மூலம் பிள்ளைகளுக்கு அவர் நல்ல அறிவுரைகளையும் கூறி வருகிறார்.
. அவரது எழுத்தாற்றல் மேலும் வளர எமது சஞ்சிகை யின் ஆசிரியர் என்ற முறையில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். வளரட்டும் அவரது தமிழ் எழுத்துப்பணி.”
திருவாளர் யூலியஸ் அன்ரனியைப் பணிப்பாளராகக் கொண்டு நோர்வேயில் - பேர்கன் நகரிலிருந்து கடந்த 15 வருடங்களாக இயங்கிவரும் தமிழ் வானொலி: "தேன் தமிழ் ஓசை’ வானொலியாகும். இந்த வானொலியில் சிறுவர் நிகழ்ச்சி (பிஞ்சு உள்ளங்கள்), சிந்தனைச் சிறகுகள் (ஆன்மீகம்), இசையோடு இணைவோம் ஆகிய நிகழ்ச்சிக ளின் தயாரிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் பகுதிநேரமாக இராஜ் கண்ணா பணியாற்றி வருகின்றார். அதேபோல ‘நேர்காணல் நிகழ்ச்சி களையும் தயாரித்தளித்து வருகின்றார்.
இவரால் தயாரித்து வழங்கப்படும் ‘ஆன்மீக நிகழ்ச்சிகள் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றன. புலம்பெயர் தேசத்தில் ஆன்மீக சிந்தனைகளை தனது தலைமுறையினர் மத்தியில் இவர் எடுத்துக் கூறும் பாங்கு தனித்துவமானது. இவரின் ‘ஆன்மீக ஒலிபரப்பு பற்றி தமிழ்நாடு, உலக சமுதாய சேவா சங்கத்தின் மனவளக்கலை பேராசிரி யர்களான பாலசந்திரன், ஜெய்ந்தி பாலசந்திரன், ராஜசேகரன் ஆகி யோர் தேன் தமிழ் ஓசை இயக்குநருக்கு எழுதிய மடலில் கூறிய கருத்துக்களும் இங்கு ராஜ்கண்ணாவின் திறமையை பறை
சாற்றுவதாகவே அமைகின்றன.
'.புதன்கிழமை 10 ஆகஸ்ட் 2005 அன்று உங்கள் ஒலிபரப்பை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷியின் உலக சமுதாய சேவா சங்கம் கற்று தரும் மனவளக்கலைப் பயிற்சி பற்றிய அறிமுகவுரை
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு 92

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2.
யை திரு. ராஜ்கண்ணா அவர்கள் நாங்கள் சனவரி மாதம் வந்திருந்த சமயம் பதிவு செய்திருந்தார். அந்த பதிவினை ஒலிபரப்பியதை கேட்டு, மகிழ்ந்தோம். இதேபோன்ற நல்ல கருத்துக்களை ஒலிபரப்பும் உங்கள். சேவையை நிச்சயமாக பாராட்ட வேண்டும். திரு. ராஜ் கண்ணா: (ராஜன்) அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி. உங்கள் போன்ற நல்ல உள்ளங்களின் தொடர்புடன் உலக சமுதாய சேவா சங்க பேராசிரியர்களான நாங்கள் சிறந்த முறையில் தொண்டு செய்ய முடியும் என்ற நம்பிக்கை பெருகுகிறது. .
மகரிஷி அவர்களின் மாபெரும் நோக்கம் உலகம் முழுவதும் அமைதியாக, இன்பமாக, செழிப்பாக வாழ வேண்டும் என்பதே. அதற்கு தனிமனித அமைதியிலிருந்து ஆரம்பித்து, அது மலர்ந்து குடும்ப அமைதி, சமுதாய அமைதி என்று பரவி ஒரு நிலையான உலக அமைதி வேண்டும் என்று திட்டமிட்டு அவரது 95 வயதிலும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த மகத்தான தொண்டு சிறக்க மக்களிடம் உடல், உயிர், மனவளம் பெற்று இனிமையோடு வாழ தாங்கள் தங்கள் தேன் தமிழ் ஓசை மூலம் செய்து வரும் தொண்டு மிகவும் போற்றத்தக்கது. மகரிஷி சார்பில் நாங்கள் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்." . . .
யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் பீடாதிபதி முதுநிலைப் பேராசிரியர் திருவாளர் சி.க. சிற்றம்பலம் அவர்கள் ராஜ்கண்ணாவின் பிஞ்சுமனங்களுக்கு வழங்கிய மதிப்புரையிலிருந்து.
“.தம்பி இராஜ்கண்ணா மிகவும் துடிதுடிப்பு மிக்க இளைஞர். தமிழர் பாரம்பரியத்தின் விழுமியங்களை அடியொற்றி நிற்பதில் மிகவும் ஆர்வம் மிக்கவர். தம்மைப்
: தொகுதி 09 - கலாபூஷணம் புனினியாமீனி - 93

Page 49
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
போல புலம்பெயர் வாழ் இளைஞர்களும் இதனைப் பற்றி நிற்றல் வேண்டும் என்பதில் அதிக அக்கறை உடையவர். இத்தகைய நிலையை ஒருவர் வெறும் பட்டங்களைப் பெறுவ தால் எட்டிப் பிடிக்க முடியாது என்பதை உணர்ந்த இவர், இச்சிறார்களின் பிஞ்சு மனங்களில் நல்ல கருத்துக்களை விதைக்க வேண்டும் என்ற உணர்வால் அவர்களுக்கு அறி வுரை வழங்கும் விதத்தில் சிறுகதைகளைப் புனைந்துள்ளார். ஒருவன் வாழ்க்கையில் முன்னேறுவதற்குக் கல்வி அவசியம். ஆனால் கற்றபின் அதன் வழி ஒழுகுவதால் தான் அக் கல்வியின் பயன் அவனையும், அவனது சமூகத்தையும் சென்ற டைகின்றது. இதற்கு அவசியமாகிறது ஒழுக்கம். இதனை திருவள்ளுவர் “ஒழுக்கம் விழுப்பம் தருவதால் உயிரிலும் ஒம்பப்படும்” என்றார். ஒருவனுக்கு ஆளுமையைக் கொடுப்பது ஒழுக்கம். இது அவனையும் நல்வழி செலுத்துவதோடு அவனால் சமூகத்தையும் நல் வழிப்படுத்த உதவுகிறது. தனி மனித ஒழுக்கம் சமூக ஒழுக்கமாக மாறுகிறது. ஒழுக்கம் உடைய ஒரு ஆளுமைமிக்க, ஒரு ஆரோக்கிய சமுதாயத் தைக் கட்டி எழுப்புவதே இன்றைய காலத்தின் தேவையாகும். சிறுதுளி பெரு வெள்ளம் என்பதற்கமைய இராஜ்கண்ணாவின் இச்சிறு முயற்சி வெற்றிபெற்று நமது சமூகத்திற்கு நன்மை பயற்கும் என்பதே நமது அசையாத நம்பிக்கையாகும். அவரது முயற்சி வெற்றிபெற அப்பரம் பொருளை தியானிக்கின் றேன்.”
இலக்கிய, ஊடகத்துறையில் இளையவராக இவர் காணப்பட்ட போதிலும்கூட, இவரின் திறமை, முயற்சி ஆகியவற்றின் மூலம் எதிர் காலத்தில் ஒரு சிறந்த எழுத்தாளராக, ஊடகவியலாளராகப் பரிணமிப் பார் என்று எதிர்வுகூற முடியும். தன்னுடைய இலக்கிய, ஊடகத்துறை ஈடுபாட்டுக்குக் காரணகர்த்தாக்கள் என்ற வகையில் தனது அன்புப் பெற்றோர்களையும், இலண்டனில் பிரபல நூலகவியலாளரான திருவா ளர் என்.செல்வராஜா அவர்களையும் அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவரின் முகவரி;-
S. Rajdevan Drammens v-4 . 6060 Hareid,
Norway 'தினக்குரல் வாரமஞ்சரி: 2007.10.21 TP. 0047-67-420148
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு 94.

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
மனோன்மணி பரராஜசிங்கம் (பரா டீச்சர்)
பதிவு 258
எழுத்துத்துறை
வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டம், கொக்குவில் கிராம சேவகர் பிரிவினைச் சேர்ந்த திருமதி மனோன்மணி பரராஜசிங்கம் அவர்கள் இலைமறைகாயாகக் காணப்படும் ஒரு சிந்தனையாளர், எழுத்தாளர். ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதுகளில் புலம்பெயர்ந்து ஜெர்மனியில் வசித்து வருகின்றார்.
1935ம் ஆண்டு ஜூலை மாதம் 08ம் திகதி கொக்குவிலில் பிறந்த இவர் கொக்குவில் இராமகிருஷ்ணமிஷன், கொக்குவில் இந்துக் கல்லூரி, இராமநாதன் கல்லூரி, திருநெல்வெலி ஆசிரியக்கலாசாலை ஆகியவற்றின் பழைய மாணவியாவார். புலம்பெயர முன்பு வடமாகா ணத்தில் பல பாடசாலைகளில் பயிற்றப்பட்ட ஆசிரியையாகப் பணியாற் றிய இவர் பண்டிதர், வித்துவான், புலவர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளதுடன், இசை, தையல், பரதம், படவரைதல், வயலின், பின்னல்வேலை போன்ற சகல துறைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்விடத்தில் தனது ஆசான்களான திருவாளர்கள் ஆர். கந்தையா, காந்தி மாஸ்டர், பி. கந்தையா, எம்.
தொகுதி 09 - கலாபூஷணம் புனினியாமீனி - 95

Page 50
‘புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
கந்தசாமி மாஸ்டர், ஹன்டி பேரின்பநாயகம், பண்டிதர் கணபதிப் பிள்ளை, வித்வான் பொன். சிவபாதசுந்தரம், புலவர் வேந்தனார், விஸ்வநாதசர்மா, வண்ணை சோமாஸ்காந்த சர்மா ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்து வருகின்றார். அதேநேரம் இவர் ஜெர்மனிக் கும் புலம்பெயர்ந்த பின்பு தனது அறுபதாவது அகவையில் ஜெர்மன் (Deutsch) மொழிபடித்துத் தேறிச் சான்றிதழ் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.
புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறைக் குழந்தைகளிடம் 'தமிழ் மொழி மறைந்துவிடக் கூடாது. புலம்பெயர்ந்த நாடுகளின் கலாசாரம், பண்பாடு, மொழிச்செல்வாக்கு, கல்வி, இலக்றோனிக் ஊடகங்களின் செல்வாக்கு, பயன்பாடு போன்றன தமிழ் மொழியின் பயன்பாட்டினைப் படிப்படியாக குறைத்துக் கொண்டு வரும் நிலையில் தமிழாலயங்களின் பணி மிகவும் அத்தியவசியமானது. காலோசித மானது.
இந்த அடிப்படையில் மனோன்மணி அவர்கள் ஜெர்மனியில் இரண்டு தமிழாலயங்களின் தமிழ் மாணாக்களுக்குக் கல்வி புகட்டி வருகின்றார். தனது கல்விச் சேவை பற்றிக் குறிப்பிடும் பொழுது "...நான் இங்கு சைவக் கோவில்கள், பாடசாலைகளில் பாடுவேன். தேவாரப்பாராயனங்கள், சரஸ்வதிப்பூஜைப் பாடல்கள், திருவூஞ்சல் பாடல்கள், திருவிளக்குப் பாடல்கள் பாடுவதற்கு இங்கு ஆட்கள் மிகமிகக் குறைவு. இளைய சந்ததியினர் சங்கீதம் கற்றிருந்தாலும் இப்பாடல்கள் மேலும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, சிவபுரா ணம் பாடுவதற்கு ஆட்கள் குறைவு. கோவில்களில் சிவராத்திரி, நவராத்திரி பற்றியும் பாடசாலைகளில் தைத்திருநாள், சித்திரைப் புத்தாண்டு, தீபாவளி போன்ற பண்டிகைகள் பற்றியும் உரையாற்றி மாணவர்களுக்கு விளக்குவேன். இங்கு தமிழாலயங்களில் தமிழ்திறன் போட்டி, சங்கீதப் போட்டிகளுக்கு ஜேர்மனியிலும், டென்மார்க் போன்ற வெளிநாடுகளிலும் நடுவராய்ப் பணியாற்றியுள்ளேன். தமிழாலயங் களில் ஆண்டிறுதிப் பரீட்சையின் மேற்பார்வையாளராகவும், பரீட்சை வினாத்தாள் திருத்தம் செய்யவும், முத்தமிழ் மன்றம் நடத்தும் மாணவரி டையேயான போட்டிகளுக்கு நடுவராகவும் கடமையாற்றியுள்ளேன். பாடசாலைத் தேவைகளுக்கு வேண்டிய பரதம், பாட்டு, நாடகம், வில்லுப்பாட்டு போன்றவற்றையும் பழக்குவேன். இதில் நான் ஆத்ம
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு 96

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
திருப்தியடைகின்றேன்.”என்று கூறுகிறார். ஓர் இலக்கியவாதி என்ற அடிப்படையில் இவரின் கன்னியாக்கம் 1961ம் ஆண்டில் ‘சுதந்திரன்’ பத்திரிகையில் இடம்பெற்றது. நாடும் நாமும் எனும் தலைப்பிலான இந்தக் கட்டுரை ஒர் அரசியல் கட்டுரையாகும். இதிலி ருந்து நூற்றுக்கணக்கான சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விடுதலைப்பாடல்கள் போன்றவற்றை இவர் எழுதியுள்ளார்.
அண்மைக்காலத்தில் இவர் எழுதிய ‘பெருமை தரும் பெண் ணினம், ரீலங்கா அரசும்-தமிழரின் அவலமும் போன்ற ஆக்கங்கள் புத்திஜீவிகளின் வரவேற்பினைப் பெற்றன. இவரின் ஆக்கங்கள் சுதந் திரன், ஈழநாடு, வீரகேசரி, தினகரன், தீப்பொறி, மண் ஆகிய சஞ்சிகை களிலும் இடம் பெற்றுள்ளன.
அகவை எழுபதைத் தாண்டிய போதிலும்கூட தனது சமூகத் தைப் பற்றி இவர் கொண்டுள்ள உணர்வுகள் இளமைமிக்கவை. தமிழ்மொழியைப் பற்றிய இவரின் பற்று அழுத்தமானவை. இது பற்றி இவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “கனிமொழி பேசிடும் குளவியின் மழலையும், வீணையில் ஒலிக்கின்ற இன்னிசை நாதமும், காலையிற் பாடிடும் பூபாள ராகமும், மார்க்கழி மாதத்துப் பனித்துளிச் சிதறலும், தை மாதத்து நெற்புதிர் சர்க்கரைப் பொங்கலும், இரம்மியமான இளவே னிற் தென்றற் காற்றும், வானவில்லின் வர்ணஜாலமும், பூத்துக் குலுங் குகின்ற வண்ணப் பூங்கொத்துக்களும், கடல் அலைகளின் தாளச் சத்தமும், பச்சைப் பசேலென்ற இளம் நெற்பயிற் காட்சியும் இனியன என்பேன். எனினும் தமிழை என்னுயிர் என்பேன். தாய்ப்பாலுடன், தமிழ்ப்பாலும் கலந்து வளர்ந்தவள் என்பேன்.
சங்கீதம் எனது சுவாசக் காற்று. எத்தனையோ கவலைக ளுக்கும், கஷ்டங்களுக்கும் மத்தியில் ஈடுகொடுத்துக் காப்பாற்றியது சங்கீதமே.”
முன்பு போல தமிழினமும் - சிங்கள இனமும் ஒன்று சேர்ந்து வாழவும், நாட்டில் அமைதி நிலவவும், சுபீட்சம் பெருகவும் பிரார்த்திக்
: தொகுதி 09 - கலாபூஷணம் புனினியாமீன் - 97

Page 51
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - uாகம் 2
கும் இவரின் அன்புக் கணவன் பரராஜசிங்கம். சுமார் 35 வருட காலமாக இலங்கைப் போக்குவரத்துச் சபையில் பணியாற்றியவர். இத்தம்பதியினருக்கு ஏழு பிள்ளைகள். இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் இறந்துவிட்டனர். இரண்டு ஆண்பிள்ளைகளும், இரண்டு பெண்பிள்ளைகளும் ஜெர்மனியிலும், லண்டனிலும் வசித்து வருகின் றனர். “கொக்கூர் பரா’ ‘ஜெர்மனோ” ஆகிய புனைப் பெயர்களில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டமில்லாமல் எழுதிவருகின்றார்.
தனது மகனின் கல்லரை அருகே பரா டீச்சர்
'தினக்குரல் வாரமஞ்சரி: 2007.10.28
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு 98
 

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - ப்ாகம் 2
சி. பன்னீர் செல்வம்
பதிவு 259
எழுத்துத்துறை
籤
மத்திய மாகாணம், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த சின்னச்சாமி பன்னீர் செல்வம் அவர்கள் இலங்கையில் புகழ்பெற்று விளங்கிய மலையக எழுத்தாளர்களில் ஒருவராவார். 1948ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் திகதி சின்னச்சாமி - கருப்பாயி அம்மாள் தம்பதியினரின் புதல்வராக இந்தியாவில் இன்றைய புதுக்கோட்டை மாவட்டம் (அன்றைய தஞ்சை மாவட்டம்), குளமங்கலம் கிராமத்தில் பன்னிர் செல்வம் பிறந்தார். 1948ம் ஆண்டில் கைக்குழந்தையாக பெற்றோ ரால் இலங்கை மலைநாட்டின் தலைநகரான கண்டி, மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்ட இவர் தனது இருபத்தைந்து வயதுவரை இலங் கையிலே வசித்தார். பின்பு 1973ம் ஆண்டு ரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் தமிழ்நாடு திரும்பி தற்போது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் தனது குடும்பத்தினருடன் நிரந்தரமாக வசித்து வருகின்றார்.
அரசியல் விஞ்ஞானத்தில் முதுமாணிப்பட்டம் (M.A) பெற்றுள்ள பன்னீர் செல்வம் தனது ஆரம்பக்கல்வியை கண்டி/ உடிஸ்பத்துவை
தொகுதி 09 - கலாபூஷணம் புண்னியாமீன் - 99.

Page 52
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
அரசினர் முஸ்லிம் கலவன் வித்தியாலயத்தில் கற்றார். இந்தியாவில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப்பட்டம் பெற்றார்.
மக்கள் கண்காணிப்பகத்தின் பத்திரிகை, மற்றும் நூல்கள் வெளியீட்டுத் துறையின் (தனியார்) செயலாளராகப் பணியாற்றும் இவர் ருக்மணிதேவி யின் அன்புக் கணவராவார். இத்தம்பதியினருக்கு ஜெகன், விமல் ஆகிய இரண்டு பிள்ளைகள் உளர்.
1964ம் ஆண்டில் கல்லூரியில் கற்கும் காலத்திலிருந்தே இலக்கியத்துறையில் ஈடுபடத் தொடங்கிய இவரின் முதல் ஆக்கம் இலங்கை சாகித்திய மண்டல சிறுகதைப்போட்டியில் முதற்பரிசாக பொற்பதக்கம் வென்று 1965ம் ஆண்டு 'தாயின் மடியில்’ எனும் தலைப்பில் ‘வீரகேசரி’ பத்திரிகையில் இடம்பெற்றது. வான் அலைக ளில் இவரது முதலாவது ஆக்கம் 1970ம் ஆண்டு இலங்கை வானொலி யில் ஒலித்தது. இதுவரை 75 சிறுகதைகளையும், 60 கவிதைகளையும், 20 கட்டுரைகளையும், 2 குறுநாவல்களையும், 2 நாடகங்களையும், 1 நாவலையும் எழுதியுள்ளார். அச்சில் வராத பல சிறுகதைகளும், 2 நாவல்களும், மலையக மக்கள் வாழ்வை மையமாகக் கொண்ட காவியமும் கைவசமுள்ளன.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மன்றத்திற்கான பரிசினை பிரபல நாடகக்கலைஞரும் சினிமா நடிகருமான அமரர் எஸ்.வி. சகஸ்ரநாமம் அவர்களிடமிருந்து பெறுகிறார். (ஆண்டு 1987, இடம்: சென்னை)
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு 700.
 

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம்2
இவரின் இத்தகைய ஆக்கங்கள் இலங்கையில் வீரகேசரி, செய்தி, அஞ்சலி, சுதந்திரன், குன்றின்குரல், மித்திரன், தேசாபிமாணி போன்ற பத்திரிகைகளிலும், வானொலியிலும் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் கல்கி, ஆனந்தவிகடன், குங்குமம், சாவி, ராணி, அமுத சுரபி, கலைமகள், தினமணி, ரத்னபாலா, தாமரை உள்ளிட்ட சுமார் 35க்கும் மேற்பட்ட பத்திரிகைகளிலும், சிற்றிதழ்களிலும், பிரசுரமா கியுள்ளன. r . . .
స్గఢ , , ; ; 緣 .
இலண்டன் சுடரொளி வெளியீட்டுக்கழகத்தின் இரண்டாவது உலகக் கவிதைப் போட்டியில் பரிசு பெறுகிறார்.சி பன்னிர் செல்வம் பரிசு வழங்குபவர். டாக்டர் எஸ். ஞானச்செல்வன். (ஆண்டு : 2005, இடம் : சென்னை) :
பன்னீர் செல்வத்தைப் பற்றி சுருக்கமாகக் குறிப்பிடுவதானால் பழகுவதற்கு இனிய மனிதர், எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்த போதிலும்கூட, சாதாரண மனிதர். அடுத்தவர்களுக்கு ஆதர்ஷனமான ஒரு மனிதர். இலக்கியத்துறையில் எதிர்நோக்கிய சவால்களைப் பற்றி வினவியபோது அவர் கூறிய பதில் சிந்திக்க வைத்தது. ". இலங்கையில் கல்வியறிவில் பின் தங்கிய சமுகத்திலிருந்து வளர்வதற்கிடையிலான ஏகப்பட்ட தடைகள், இந்திய தமிழ்ப் பத்திரிகை உலகிற்கு ஏற்ப வளைந்து கொடுக்க முடியாத சிந்தனைகளின் விளைவாக நேர்ந்த சவால்கள்.”
இவரது இலக்கிய வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு
தொகுதி. 09 - கலாபூஷணம் புனிணியாமீன் - 10.

Page 53
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
போட்டிகளில் கலந்துகொண்டு பலதரப்பட்ட பரிசில்களை வென்றுள் ளார். எனவே இவரை 'பரிசு எழுத்தாளர் என்று அழைத்தாலும் தவறாகாது.
1965ம் ஆண்டு இலங்கை சாகித்திய மண்டலம் நடத்திய மாணவர்களுக்கான சிறுகதைப்போட்டியில் முதல் பரிசான ‘தங்கம் வென்றார். .
1968ம் ஆண்டில் இலங்கை கலைக்கழகம் நடத்திய நாடகப் போட்டியில் முதலாமிடம் பெற்றார்.
‘வீரகேசரி பத்திரிகை அகில இலங்கை ரீதியில் நடத்திய மலைநாட்டு சிறுகதைப் போட்டியில் 1967ம் ஆண்டிலும் 1970ம் ஆண்டிலும் பரிசு பெற்றார்.
1971ம் ஆண்டிலும் சாகித்திய மண்டல சிறுகதைப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார். மூன்று தடவைகள் சாகித்திய மண்டலப் பரிசில்களைப் பெற்றமைக்காக "மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் பாராட்டு விழா நடத்தி ‘பொற் பதக்கம்’ அளித்து கெளரவித்தது. இவைதவிர இவர் பெற்ற பிற பரிசில்களை பின்வருமாறு
சுருக்கமாக நோக்கலாம்.
சிறுகதைகளுக்கான பரிசில்கள்; பிரான்ஸ் நாட்டிலிருந்து ஐரோப்பிய தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் (1990) Association ofTamil Writers in Europe 'தனிநாயகம் அடிகளார் நினைவாக அகில உலக ரீதியில் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதலாமிடம் பெற்று 3000 பிராங்குகள் பரிசாகப் பெற்றார். அதேபோல குங்குமம், தின மணிக்கதிர், ராணி, ஆனந்தவிகடன், அமுதசுரபி, ரத்னபால உள்ளிட்ட பத்திரிகைகளினால் அவவப்போது நடத்தப்பட்ட சிறுகதைப்போட்டி களின் போதும் பரிசு வென்றுள்ளார்.
நாடகத்துறைக்கான பரிசு:- தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றப் பரிசுகள். வானொலி நாடகப் பரிசுகள். . . .
குறுநாவலுக்கான பரிசுகள்: சாவி, சுபமங்களா ஆகிய இதழ்கள் நடத்திய குறுநாவல் போட்டிகளின் பரிசுகள்.
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு 102

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2 .
கவிதைக்கான பரிசுகள்:- இலண்டன் 'சுடரொளி வெளியீட்டுக் கழகம் நடத்திய இரண்டாவது உலகக் கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு, பல சிற்றிதழ்கள், ஆண்டு மலர்களின் பரிசுகள். .
பன்னிர் செல்வத்தின் பாத்திரப் படைப்புகளில் உண்மையும், உயிரும் இழையோடுவதை நன்கு உணரமுடியும். மனிதநேயங்களில் நம்பிக்கை மிகுந்தவர்களே இவரின் பிரதான கதாபாத்திரங்கள்.
கலை இலக்கியங்கள் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற கொள்கைப் பிடிப்பு மிக்க இவர்; அந்த நோக்கத்துடனேயே வியாபாரச் சாக்கடைக்குள் தன்னைத் திணித்துக்கொள்ளாமல் எழுதிவருகின்றம்ை இவரின் சிறப்பம்சமாகும்.
இவரின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ள தொகுப்பு நூல்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள் (முதல் தொகுதி - வெள்ளிப்பாதசரம்) மலையகச் சிறுகதைகள் கதைக் கனிகள் (சிறுகதைத் தொகுதி) பசி (இலக்கியச் சிந்தனை வெளியீடு) சுதந்திரன் சிறுகதைகள் Dream Boa ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பில் இரண்டு கதைகள். கீழைநாட்டு கவிதை மஞ்சரி எங்கெங்கும் அன்னியமாக்கப்பட்டவர்கள்
9. பொன்விடியல் (ஆய்வு நூல்கள்)
10. புதுயுகத் தமிழர் (கவிதைத் தொகுதி)
இத்தொகுப்பு நூல்களில் பன்னிர் செல்வத்தின் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் போன்றன இடம்பெற்றுள்ளன.
கி.வா.ஜ. நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இந்தியாவில் முன்னணி இலக்கியச் சஞ்சிகைகளில் ஒன்றான 'கலைமகள் நடத்திய நாவல் போட்டியில் இவரால் எழுதப்பட்ட நாவலான 'விரல்கள் முதல் பரிசுக்குரியதாகத் தெரிவு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பு டிசம்பர் 2006 இதழில் இடம்பெற்றது. இந்த நாவல் தற்போதும் கலைமகளில்
தொகுதி 09 - கலாபூஷணம் புணர்னியாமீன் - 103

Page 54
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
பிரசுரமாகி வருகின்றது. இவர் இதுவரை இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
1. திறந்த வெளிச் சிறைகள் (சிறுகதைத் தொகுதி) 2. ஒரு சாலையின் சரிதம் (கவிதைத் தொகுதி)
மக்கள் கண்காணிப்பகம் (தமிழ்நாடு-இந்தியா) வெளியீடாக வெளிவந்த இவரின் ஒரு சாலையின் சரிதம் எனும் கவிதைத் தொகுப் பின் திறனாய்வினை கே.ஆர்.டேவிட் எழுதியிருந்தார். 2007 ஜூன் 'ஞானம்' இதழில் பிரசுரமான அத்திறனாய்விலிருந்து சில பகுதிகள்
கீழே தரப்பட்டுள்ளன. -
'..தமிழ்நாட்டில் மட்டுமல்ல இலங்கையிலும் அறியப்பட்ட கவிஞரான சி.பன்னிர்செல்வம் அவர்களின் ‘ஒரு சாலையின் சரிதம்
வெளிவந்துள்ளது.அகங்காரமற்ற அர்த்தபுஷ்டியான அட்டைப் படத்தைத் தொடர்ந்து சமர்ப்பணச் செய்தியும், அதைத் தொடர்ந்து முனைவர் இ.தேவசகாயம் அவர்களின் காத்திரமான பதிப்புரையோடு, கவிஞர் பன்னிர் செல்வம் அவர்கள் பற்றியதொரு சிறுகுறிப்பும் இடம் பெற்றுள்ளன.
“. இலங்கை மலையக மண்ணில், எனக்குள் செழுமையான சிந்தனைகளை விதைத்துவிட்டு, தேயிலைச் செடிகளுக்குள் அமரத் துவம் பெற்றுவாழும் எங்கள் தந்தையார் சின்னச்சாமி அவர்களுக்கு." என சமர்ப்பணச் செய்தி அமைந்துள்ளது. மிகவும் சுருக்கமாகவும்,
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு 104
 

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாக்ம் 2
ஆழமாகவும், இலகுவாகவும் அதேநேரம் ஒரு துளி உணர்வுகூட. சிதைவுறாத நிலையிலும் கவிஞர் தனது ஆத்ம வேதனையையும், ஆத்ம தாகத்தையும் வெளிப்படுத்தியிருப்பதானது தொப்புள் கொடி உறவுக்கூடாக 'மண்தாகம் கலந்த குருதி வழிந்து வருகின்ற ஒரு வேதனை உணர்வையே நமக்கு ஏற்படுத்துகின்றது."
முனைவர் இ.தேவசகாயம் அவர்களின் பதிப்புரையில் வன்முறைகள் பற்றி அவர் குறிப்பிட்டுள்ள விளக்கம் நமது மனதில் பதிந்து விடுகின்றது. ‘.மானிடச் சிதைவின் பல்வேறு வடிவங்க, ளைத்தான் மீறல்களின் வடிவங்கள் என்கிறோம். மீறல் என்பது வெறும் ஒற்றைச் சொல்லல்ல. ஒவ்வொரு மீறலும் மானிடத்தைச் சிதைக்கின்ற வன்முறையே." என்னும் அவரது இக்கூற்று ‘பதிப்புரை என்ற எல்லைக்குள் பதிவாகியிருந்தாலும், மனதில் பதித்துக் கொள்ள, வேண்டியதொரு தத்துவ விளக்கமாகவும் உணரப்படவும், உணர்த்தப் படவும் வேண்டிய முக்கிய கூற்றாகவும் அமைந்துள்ளது.
110 பக்கங்கள் கொண்ட இத்தொகுப்பில் 45 கவிதைகள் உள்ளடங்கியுள்ளன. 1969-2006 வரையான காலப்பகுதிகளில் எழுதப்பட்ட பல்வேறு வெளியீடுகளில் பிரசுரமான கவிதைகளே இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
பொதுவாகக் கவிதைகளில் நியாயங்களை வேண்டிநிற்கும் உணர்வுகள் அமைந்திருப்பதை அவதானிக்கலாம். ஆன்ால், பன்னீர் செல்வம் அவர்களின் அநேகமான கவிதைகளில் சராசரி நிலைக்கும் மேலால் கருத்து நிலை ஆழம் பெற்றிருப்பதையும் பகிரங்கப்படுத்தும் ஆத்மபலத்தினைக் கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
மகாகவி பாரதியாரின் கவிதைகளும் நிலைத்து வாழ்வதற்கு மேற்கூறப்பட்ட காரணங்களே அடிநாதமாய் அமைந்தனவென கவிதை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தனிமனித உணர்வுகளைப் பற்றி, மண்பற்றுப்பற்றி, அரசியல் பற்றி, நீதி பற்றி, சர்வதேசம் பற்றி பல விடயங்கள் இந்நூலில் கவிதைகளின் கருப்பொருட்களாக அமைந்துள்ளன.
கவிஞர் பன்னீர் செல்வம் அவர்களின் கவிதைகள் (அநேக மானவைகள்) குளிர்மையும், வாசனையும் மிக்க பன்னிர்த் துலிகளல்ல. தொகுதி 09 - கலாபூஷணம் புண்ணி:ாமீனி - 205 .

Page 55
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
“அவைகள் கொதித்து மிதக்கின்ற கொப்புளங்களும், ஆவியும் நிறைந்த * வெந்நீர்த்துளிகள்’ என்பதுதான் உண்மை,
தமிழுக்காகவும், தமிழ் இலக்கியத்துக்காகவும் இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டும் என்று திடசங்கற்பம் பூண்டிருக்கும் சி. பன்னிர் செல்வத்தின் இக்கூற்று அனைத்து எழுத்தாளர்களுக்கும் ஒரு படிப்பினையாகும். '.என் எழுத்துக்களுக்கு இரட்டை முகம் இல்லை. என் எழுத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் வித்தியாசத்தை நான் உணர்ந்ததில்லை. என் சொந்த உணர்வு சார்ந்த மன அரிப்பு களையும், அவலங்களையும் தீர்த்துக் கொள்ளும் கருவியாய் என் எழுத்துக்கள் இருந்ததில்லை. நான் வாழ்ந்த இலங்கை மலையகச் சமூகத்திலும், இந்திய தமிழ்ச் சமூகத்திலும் நிலவும் சாதி, மத, வர்க்க பேதங்கள், அவலங்கள், அறியாமைகள், துரோகங்கள் ஆகிய வற்றையும், சமுதாயம் குறித்த கனவுகளையும் கோபம், கவலை, ஆத்திரம், அவா ஆகியவற்றையும் என் வாழ்க்கை அனுபவம் சார்ந்து எழுத்துக்களாக்கியிருக்கின்றேன்.”
'திண்டுக்கல் இலக்கிய வீதி' என்ற அமைப்பை உருவாக்கி
மாத இதழொன்றை வெளியிட்டார். ஆனால்,பல காரணங்களினால்
அம்முயற்சி தொடரவில்லை. தற்போது ‘‘மனித உரிமைக் கங்காணி”மாத இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றுகிறார்.
தன்னுடைய இலக்கியத்துறையின் ஈடுபாட்டுக்குக் காரணமாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் கண்டி கடுகண்ணாவையைச் சேர்ந்த தனது தமிழாசிரியர் யூசுப் அவர்களையும், கண்டி மலைமுரசு’ ஆசிரியர் க.ப.சிவம் அவர்களையும், கடந்த 17 ஆண்டு களுக்கு மேலாக தனது இலக்கியப் பயணத்தில் பெரும்பங்காற்றி வரும் மலையகப்பத்திரிகை நண்பர் அந்தனி ஜீவா அவர்களையும் சகோதரர் அமரர் அய்யாக்கண்ணன், அமரர் கவிஞர் சிவானந்தன் ஆகியோ
ரையும் அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவரின் முகவரி;-
சி. பன்னீர் செல்வம்
17A / 68 urgOiqugit 6igs,
பீபிகுளம்
மதுரை 625002 தமிழ்நாடு, இந்தியா. 'தினக்குரல் வாரமஞ்சரி: 2007.11.04
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு O6

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
இராஜேஸ்வரி சிவராஜா
பதிவு 240
எழுத்துத்துறை
இலங்கையில் வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டம், உரும் பிராய் கிராமத்தில் பிறந்த இராஜேஸ்வரி அவர்கள் ஒரு நல்லாசிரியை, நல்ல கவிஞர், சிறுகதை எழுத்தாளர், சிறார்கள் மத்தியில் ஆன்மீகச் சிந்தனைகளை ஏற்படுத்தக்கூடிய கட்டுரைகளை எழுதிவருபவர், சமூ உணர்வுமிக்கவர்.
உரும்பிராய் கிராமத்தில் வல்லிபுரம், பார்வதி தம்பதியினரின் புதல்வியாகப் பிறந்த இராஜேஸ்வரி தனது ஆரம்பக்கல்வியை உரும்பிராய் சந்திரோதயா வித்தியாசாலையிலும், உயர்கல்வியை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும் பயின்றார்.
கற்கும் காலத்திலிருந்தே வாசிக்கும் பழக்கத்தில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டார். தனது பெற்றோரின் ஊக்கம் இவரின் வாசிப்புப் பழக்கத்துக்கு உந்துசக்தியாக அமைந்திருந்தது. கல்லூரிக் காலத்திலே பல பேச்சுப் போட்டிகள், விளையாட்டுப் போட்டி களில் பல்வேறு பரிசில்களை வென்றுள்ளார்.
தொகுதி 09 - கலாபூஷணம் புன்னியாமீனி - 107

Page 56
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2 1980களில் நாவற்குழி கிழக்கைச் சேர்ந்த திரு.வயிரமுத்து சிவராஜாவை திருமணம் முடித்தார். 1984ம் ஆண்டில் புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டுக்கு வந்து டியுஸ்பேர்க் நகரில் கணவர், பிள்ளைக ளுடன் வாழ்ந்து வருகிறார். திரு.திருமதி. சிவராஜா இராஜேஸ்வரி தம்பதிக்கு சிவதர்சினி (பல்கலைக்கழக மாணவி), சிவாஸ்கர் (பல்க லைக்கழக மாணவன்), சிவகாந் (கல்லூரி மாணவன்) ஆகிய மூன்று பிள்ளைகள் உளர். திருமதி இராஜேஸ்வரி சிவராஜா, தானே பிள்ளைகள் மூவருக்கும் தமிழ்மொழியைக் கற்பித்து பதினோராம் ஆண்டுவரை பரீட்சையில் தோற்றுவித்துச் சித்திபெற வைத்தமையைப் பெருமையுடன் நினைவு கூருகிறார்.
1990 முதல் 1994 வரை ஜேர்மனி டியுஸ்பேர்க் நகரில் இயங்கிவ்ந்த தமிழ்ப் பாடசாலையில் தமிழ் ஆசிரியையாகப் பணி புரிந்தார். இக்கால கட்டத்தில் பல தமிழ் மாணவர்கள் தமிழ்மொழி கற்பதற்கும், தமிழ்க்கலை, கலாச்சாரங்களைத் தெரிந்து கொள்வதற் கும் பேருதவியாக இருந்துள்ளார்.
பத்தொன்பது ஆண்டு காலமாக ஜேர்மனியில் இயங்கிவரும் ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையினூடாகத் தனது தமிழ்ப்பணியி னைத் தொடர்ந்து செய்து வருகிறார். ஆண்டுப் பொதுப் பரீட்சைக் காகப் பரீட்சை வினாத்தாள்கள் தயாரித்தல், பரீட்சை விடைத்தாள்க ளைத் திருத்தும் பணியில் ஈடுபடுதல், பரீட்சை மேற்பார்வையாளராகக் கடமையாற்றுதல் போன்ற பணிகளைச் செய்து வருகிறார்.
சுமார் 15 ஆண்டு காலமாக எழுத்தத்துறையிலும் ஈடுபட்டு வரும் இராஜேஸ்வரி புலம்பெயர்ந்த பின்பே கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் எழுதலானார். இவரின் கன்னியாக்கம் 1992இல் தமிழருவி பத்திரிகையில் இடம்பெற்றது. இதைத் தொடர்ந்து ஈழம், தமிழருவி. போன்ற ஜெர்மனிய தமிழ்மொழிப் பத்திரிகைகளிலும் மண், சிறுவர் அமுதம், பூவரசு ஆகிய ஜெர்மனிய தமிழ்ச் சஞ்சிகைகளிலும் எழுதி வருகின்றார். இவரின் பல ஆக்கங்கள் பிரித்தானியாவிலிருந்து ஒளிபரப் பாகும் சர்வதேச தொலைக்காட்சி சேவையான தீபத்திலும் ஒளிபரப்பா கியுள்ளன. அதேபோல இலண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் "இலண்டன் டைம்ஸ்’ வானொலியில் இவரின் கவிதைகள் தொடர்ந்தும் ஒலிபரப்பாகி
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்கனின் விபரத்திரட்டு 108

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2:
வருகின்றன. அத்துடன், வாழ்வியற் சிந்தனைகள், சமூகவியல் கருத் துக்கள், ஆன்மீகச் சிந்தனைகள் என பல்வேறுபட்ட கோணங்களில் கட்டுரைகளையும் எழுதிவருகின்றார். கவிதை எழுதுவதிலே இவருக்கு ஆர்வம் அதிகம். ஐரோப்பிய வானலைகளில் நன்கு அறியப்பட்ட இக்கவிஞர் பல கவியரங்குகளில் பங்கேற்று கவிமழை பொழிந்து பாராட்டுக்களைப் பெற்றவராவார். . .
இவரது அன்புக் கணவர் வ.சிவராஜா கடந்த பதினெட்டு, ஆண்டு காலமாக ஜெர்மனியிலிருந்து ‘மண்’ எனும் பெயரில் சஞ்சி கையை நடத்தி வருகின்றார். இதுவரை ‘மண் 124 இதழ்களுக்கும் மேல் வெளிவந்துள்ளது. ஜெர்மனியிலிருந்து இச்சஞ்சிகை வெளி வந்தாலும் கூட ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களி டத்தேயும் வரவேற்பினைப் பெற்ற சஞ்சிகையாகத் திகழ்கின்றது.
யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டு இலங்கையில் அகதிகளாக வாழக்கூடிய மக்களுக்கும், அதேபோல அனாதை சிறுவர் பராமரிப்பு, வயோதிபர் பராமரிப்பு நிலையங்களுக்கும் ‘மண்' சஞ்சிகை மூலமாக நிதித்திரட்டப்பட்டு இன, மத பேதமின்றி அனுப்பி உதவுகின்றனர். ஓர் இலக்கிய சஞ்சிகையான ‘மண் செய்யும் இத்தகைய சமூகப் பணியானது ஏனைய சஞ்சிகைகளுக்கும் ஒரு எடுத்துக் காட்டான முன்மாதிரியாகும். 'மண் சஞ்சிகையின் வெற் றிக்கு இராஜேஸ்வரியின் பங்களிப்பும் ஒரு முக்கிய சக்தியாகும்.
ஜேர்மனி, வீட்சே நகரில் வசித்து வரும், சங்கீத ஆசிரியை திருமதி கலைவாணி ஏகானந்தராஜா அவர்களால் 2005ம் ஆண்டு இசை இறுவட்டு ஒன்று வெளியீடு செய்யப்பட்டது. “பெற்றோரே தெய்வங்கள்” என்னும் பெயரில் வெளிவந்த இந்த இறுவட்டில் திருமதி இராஜேஸ்வரி சிவராஜா அவர்கள் எழுதிய ‘அம்மா’! அம்மா!! என்னுயிர் நீ அம்மா” என்ற பாடலும் இடம் பெற்றுள்ளது. இந்த இறு வட்டின் பத்துப் பாடலாசிரியர்களில் இவரும் ஒருவராவார். .
1997இல் ஜேர்மனி கோஸ்லார் நகரில் இயங்கி வந்த கோஸ்லார் தமிழர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட ஜேர்மனி தழுவிய கட்டுரைப் போட்டியில் பங்குபற்றி மூன்றாம் பரிசு பெற்றுள்ளார். ஜேர்மனி எசன் நகரிலிருந்து வெளிவந்த “தமிழருவி” என்ற பத்திரிகை நட்த்திய
: தொகுதி 09 - கலாபூஷணம் புனினியாமீனி - 109

Page 57
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
ஜேர்மனி தழுவிய சிறுகதைப் போட்டியில் பங்குபற்றி மூன்றாம் பரிசு பெற்றுள்ளார்.
திருமதி இராஜேஸ்வரி சிவராஜா அவர்கள், புகலிடத்தில் குடும்பத்துடன், தமிழ் சமூகத்துடன் இணைந்து தமிழ்ப்பணி ஆற்றி வரும் பெருமைக்குரியவர் ஆவார்.
இவரின் முகவரி:
ANGERTALER STR - 98 47249DUISBURG, GERMANY.
தகவல் அனுசரணை: ஜெர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு 1
 

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - цлаш 2
குறிப்புகள்
: தொகுதி 09 - கலாபூஷணம் புண்னியாமீனி - 悠

Page 58
புல்ம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 2
குறிப்புகள்
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு 12


Page 59
இலங்கை எழுத்தாளர்கள்
Giusy கலைஞர்களின் விபரத்திரட்
தொகுதி 09
| .
ஒரு பக்கக் கடிதம் எ கொண்டிருக்கும் எம்மவர்க கையில் - ஒரு மனிதர்
எழுதியிருக்கின்றார் என்றா ரமல்ல - உண்மையும்தான்
அந்தச் சாதனையா ஒரு எழுத்தாளர், ஊட இலங்கை கலாசார அை பெற்றவர். 1973ம் ஆண்டில் முதல் - தொடர்ந்து அயரா
கதைகள், கவி.ை விடாமல் - புன்னியாமீனி
| கருதப்படுவது அவர் தொகு ஊடகவியலாளர்கள், கன
நூல் தொகுதிகளாகும்.
(2.
ISBN-13 978-955-893.
 
 
 
 
 
 
 
 
 
 
 

LSLS S S S S S S S S S S S S S S S SS ________- - - =
ழுதுவதற்கே சோம்பல் பட்டுக் குளுக்கு மத்தியில் - அதுவும் இலங் நூற்றுக்கும் மேல் புத்தகங்கள் ால் இத்தகவல் அதிசயம் மாத்தி
ாளரின் பெயர் புன்னியாமீன். இவர் டகவியலாளர், வெளியீட்டாளர். மச்சின் “கலாபூஷணம்' பட்டம் எழுத்துலகில் பிரவேசித்த காலம் மல் எழுதிக் கொண்டிருப்பவர்.
தகள் - எழுதுவதுடன் நின்று ரின் சாதனைகளில் உச்சமாகக் நத்து வெளியிடும் எழுத்தாளர்கள், லஞர்கள் பற்றிய விபரத்திரட்டு