கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இவர்கள் நம்மவர்கள் 1

Page 1
- கலாபூஷணம்
 
 

Eli Leguussenge
Gloridgil-11
ரகள் பர்கள்
O1
புன்னியாமீன் -

Page 2


Page 3

66Todd5-11
இவர்கள் நம்மவர்கள் ՍՈՓՄ5 01
கலாபூஷணம் புன்னியாமீன் -
வெளியீடு: சிந்தனை வட்டம் த.பெ.இல; 01, பொல்கொல்லை, ரீலங்கா. e-mail: pimpuniyameenGyahoo.com 288 / 2008

Page 4
இல்ங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு
தொகுதி .11
ஆசிரியர் : பீ.எம். புன்னியாமீன்
பதிப்பு : 1ம் பதிப்பு - மே 2008 வெளியீடு : சிந்தனை வட்டம்.
14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை, முரீலங்கா. அச்சுப்பதிப்பு: சிந்தனை வட்டம் அச்சீட்டுப் பிரிவு
14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை, ரீலங்கா. கணனிப் பதிப்பு: எஸ்.எம். ரமீஸ்தீன்
Luisities6" : xiii-100 - 118
விலை : 200/- E 5.00
Ilangai Eluththalarkal, Oodahaviyalalarkal, KalaingarkalViparaththirattu.
Vol. 11
Subject : Brief History of Ten Srilankan Writers, Journalists and Artists.
Author : P.M. Puniyameen. Printers & Publishers: Cinthanai Vattam
CVPublishers (Pvt) Ltd, 14, Udatalawinna Madige, Udatalawinna 20802, Sri Lanka.
Edition: 1" Edition May 2008 Language : Tamil Type Setting : S.M. Rameezdeen
ISBN: 978-955-1779-12-2 Pages : xiii+100= 118
Price : 200/- E. 5.00
G) P.M. Puniyameen, 2008
All Rights Reserved. No part of this Documentation may be reproduced or utilised, stored in a retrieval System, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise, without the prior
written permission of the author.

மனந்திறந்து உங்களுடன்.
உலகவரலாற்றினை ஆராயும் மேற்கத் தைய வரலாற்று அறிஞர்கள் கி.பி. 6ம் நூற்
‘றாண்டிற்கும் கி.பி. 15ம் நூற்றாண்டிற்கும்
இடைப்பட்ட காலகட்டத்தினை இருண்ட காலம்' என வர்ணிப்பர். இக்கால கட்டத்தில்
மதரீதியான சிந்தனைகள் வியாபகமடைந்து
அவற்றை மீற முடியாதவாறு மனித சிந்தனை கள் மழுங்கடிக்கப்பட்டன. கி.பி.13-14ஆம் நூற்றாண்டுகளில் படிப்படியாக இக்கால மக்கள் மத்தியில் ஏற்பட்ட கலை உணர்வுகளும் இத னால் ஏற்பட்ட சிந்தனை விருத்தியும் இருண்ட
கால யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தன.
இதேபோல 1891 ஆம் ஆண்டு பிரான்ஸியப் புரட்சியையும், 1917 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியையும் எடுத்து நோக்கும் போது அங் கும் சிந்தனை வளர்ச்சிக்கு எழுத்தாளர்களின்
பங்களிப்பே முக்கியம் பெறுவதை அவதா னிக்கலாம். •
மேற்கத்தைய நாடுகளில் மாத்திரமல்ல,
கீழைத்தேய மூன்றாம் உலகநாடுகளிலும் இத்த கைய பண்பினை அவதானிக்கலாம்.
குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதிகளிலிருந்து எழுச்சி பெற்ற மூன்றாம் உலக நாடுகளின் தேசிய உணர்வுகள் காலணித் துவக் கொள்கைக்கு எதிராகவும், சமூக உணர்வு கள் தத்தமது 'மதம்' சார்ந்த எழுச்சிகளாகவும் வெளிப்படுத்தப்படுவதை அவதானிக்கலாம். இத்தகைய எழுச்சிகளின் பின்னணிக்கும், எழுத்தாளர்கள், கலைஞர்களின் பங்களிப்பே முக்கியம் பெற்றுள்ளன.
i

Page 5
இலங்கையின் தேசியச்மூக உணர்வுகளின் எழுச்சியின் ஆரம்பப்படிக்ளை ஆர்யும்போது அது ப்த்தொன்ப்தாம் நூற்றாண்டின் மத்திய - பகுதிவரை பின்னோக்கிச் செல்கின்றது. இத்த கைய ஆய்விளை இலங்கையின் தமிழ்மொழி ..விருத்தி தமிழைத் தாய்மொழியாகக் கொண்டி சிறுபான்மை சமூகத்தினரின் விழிப்புணர்வு என்ற பின்னணியில் ஆராயுமிடத்து அடிப்படை உணர்வுகளை ஏற்படுத்துவதில் எழுத்தாளர்க்ள் பத்திரிகையாளர்கள்,கலைஞர்களின் பங்களிப்பு பிரதான இடத்தைப்பெறுவதை வரலாற்றுஆய் வுகளிலிருந்து கண்டுகொள்ளமுடிகிறது.
பருமட்டான ஆய்வுகளின்படிபத்தொன்ய" தாம் நூற்றாண்டின் மத்திய பகுதியிலிருந்து இருபத்தோராம் நூற்றாண்டின் இக்கால கட்டம் வரை (சுமார் 160 வருடகால கட்டத்துக்குள்) இல்ங்கையில் சிறுபான்ம்ை இனத்தவர்கள் என்ற அடிப்புட்ையில் இந்து, இஸ்லாமிய மத - எழுச்சிக்கும்,சமூகவிழிப்புணர்வுக்கும்பங்காற் நிய தமிழ்மொழிமூல் எழுத்தாளர்கள், ஊடகவி: -யல்ாளர்கள், கலைஞர்களின் பங்களிப்பானது பன்னிரண்டாயிரத்துக்கும்.மேற்பட்டது என அறியமுடிகின்றது.காலமாற்றங்களுக்கு ஏற்ப் சமூகத்தின் தேவைகளை உணர்ந்து இவர்களின் பங்களிப்பு இன்றுவரை தொடர்ந்துகொண்டே
இந்த ஆய்வின் நோக்கம் ஆனால் இத்தகையோர் யார்? எவர்? எத்த கையபங்களிப்பினைதமிழ்மொழிவ்ளர்ச்சிக்காக ஆற்றியுள்ளார்கள்? போன்ற விபரங்கள்எவ்வித பதிவுகளுமின்மைக்ாரணம்ாக பிற்கால சந்ததியி னருக்கு தெரியாமல்ப்ோய் விடுகின்றன.
இது தொடர்பிலான திட்டமிடப்பட்ட அடிப்பு டையில் தொடர்முயற்சிகள் மேற்கொள்ளப்படா மலிருப்பதும் வேதனைக்குரிய் ஒரு விடப்மே.
எதிர்கால சந்ததியினருக்கு இத்தல்ைமுறை யினரும், இதற்கு முற்பட்ட தலைமுறையினரும் தமிழ்மொழி வளர்ச்சிக்காகதம் சமூக எழுச்சிக் காக எத்தகைய பணிகளை ஆற்றியுள்ளார்கள் என்பது தெரியவேண்டும்.அத்ன் ஓர் அங்கமாக எழுத்து,ஊடகம்,கிலை ஆகிய துறைகளினூடாக தமிழ்மொழிக்குத்தொண்டாற்றியவர்கள் பற்றிய விபரங்களை ஆவணப்படுத்த எத்தனிப்பதே இந்த ஆய்வின் பிரதான எதிர்பார்க்கையாகும்.
தமிழ்மொழிநூல்களின் ஆவணக் இலங்கையின் சிறுபான்மை சமூகத்தினரின் தமிழ்இலக்கியங்கள்பற்றியபதிவுகள்முறையாக்

பேணப்படாமையினாலும், அவை ஆவணப் படுத்தப்பட்ாடிையினாலும் இலங்கை தேசிய இலக்கியப்பரப்பில்தமிழ்மொழிமூலஇலக்கியப்
டிடைப்புக்களினதும், படைப்பாளிகளினதும் பரி மானம் மதிப்பீடு செய்ய்ப்படாமலே மறைந்து போய்விடுகின்றது. . . . .
மேற்கத்திய இலக்கியங்கள். மேற்கத்திய இலக்கியவாதிகளைக் கூட எடுகோளுக்காக உள்
வாங்கும் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் தமிழ் இலக்கியங்கள்.தமிழ் இலக்கியவாதிகள் பற்றிய ஆய்வுகள் உள்வாங்கப்படாமலிருக்கின்றன என்றால் உரிய பதிவுக்ள் உரிய முறையில் மீேற். கொள்ளப்படாமலிருப்பதும் பிரதான காரணங்க
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தினை எந்தவித பாகுபாடுமின்றி ஒருமுகப்ப்டுத்தவேண்டியதும்; அவற்றின் பதிவுகளைத் திரட்ட வேண்டியதும் அவற்றினை ஆவணப்படுத்த வேண்டியதும் காலத்தின் தேவையாகிவிட்டது. ஏனெனில்: தேசிய இலக்கிய நீரோட்டத்தில் எழுது தழிழ் இலக்கியங்களின் விபரங்களையும் இணைக்க வேண்டுமானால் முதலில் தமிழ் இல்கிப்பத்தில் குறிப்பாக ஈழத்தில் வெளிவந்த தமிழ்நூல்கள்' பற்றியும், நூலாசிரியர்கள் பற்றியும் பொதுவான பதிவுகள்ைமேற்கொண்டு அவற்றை ஆவணப்ப டுத்த ஆக்கபூர்வமானசெயற்பாடுகளை முன்ன்ெ டுத்தல் வேண்டும்.' , ' , ' எழுத்தாளரும், பன்னூலாசிரியருமான அல் ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களின்நூற்பதிவுகளை"சுவடிஆற்றுட் படை எனும் தலைப்பில் நான்கு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். இலங்கையில் முஸ்லிம் எழுத்தாளர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச் சிக்கு ஆற்றிய பங்களிப்பினை'சுவடி ஆற்றுட் :படை நான்கு தொகுதிகளிலும் கண்டுகொள்ள முடியும், 1850 முதல்2000 வரையிலான காலப் பகுதியில் 1977இல்நூல்கள் பற்றிய விபரங்கள் இந்நூல் தொடரில் பதிவாகியுள்ளன. இலக்கியப் பதிவு இலக்கிய ஆவணப்படுத்தலில் இது ஒரு முக்கிய கட்டமாகும். '
இதே பணியினை யாழ்ப்பாணத்தைப் பிறப் பிடமாகக் கொண்டு தற்போது புலம்பெயர்ந்து ஐக்கிய இராச்சிய்த்தில் வசித்துவரும் என்.செல் வராஜாவும்21ஆம்நூற்றாண்டில் மேற்கொண்டு வருகின்றனர். "சுவடி ஆற்றுப்பட்ை இலங்கை

Page 6
முஸ்லிம் எழுத்தாளர்களுடைய நூல்களை மாத் திரமே ஆவணப்படுத்தியது. ஆனால் என். செல் வராஜாவுடைய நூல்தேட்டம்' ஓர் இனத்தவரை மாத்திரம் மையப்படுத்தாமல் தமிழ் எழுத்தாளர் கள், முஸ்லிம் எழுத்தாளர்கள், புலம்பெயர்ந்து சென்ற எழுத்தாளர்கள் என்ற அடிப்படையில் தமிழ்மொழிமூலமாகஇலங்கையர்களால் எழுதப் பட்ட அனைத்து நூல்களையும் ஆவணப்படுத்த முயன்றுள்ளது. -
நிறுவன ரீதியாக மேற்கொள்ளப்பட வேண் டிய பாரிய பணியினை தனியொருவரால் மேற்: கொள்ள முடியும் என்பதை செயலில் காட்டி சாதனை படைத்துவரும் என்.செல்வராஜா ஈழத் தவர்களின் தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் பணியை 1990 இல் ஆரம்பித்து நூல்தேட்டம்' முதலாவது தொகுதியினை 2002இல் வெளியிட் டார். 2007 வரை ஐந்து தொகுதிகள் வெளிவந் துள்ளன.இந்த ஐந்து தொகுதிகளிலும் 'ஒரு தொகு தியில் ஆயிரம் நூல்கள் என்ற அடிப்படையில்) ஐயாயிரம் தமிழ் நூல்கள் பற்றிய விபரங்களை இதுவரை பதிவாக்கியுள்ளார். ஆறாம் தொகுதிக் கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
1885ஆம் ஆண்டில் அச்சிடுவோர் வெளியீட் டாளர் கட்டளைச் சட்டத்தின் கீழ் (179 ஆவது அத்தியாயம்) இலங்கையில் அச்சிடப்படும் நூல்க ளின் விபரங்கள் பதிவுசெய்யப்பட்டுகாலாண்டுக் கொருமுறை வர்த்தமானியின் ஐந்தாவது பிரிவாக வெளியிடப்படவேண்டும் எனநிர்ணயிக்கப்பட் டது.1949இல் இலங்கையுனெஸ்கோ அமைப் பின் அங்கத்துவ நாடாகிய பின்னர் நவீனமயப்ப டுத்தப்பட்டதேசிய நூற்பட்டியலின் தேவை வலி
யுறுத்தப்பட்டது. இதன் விளைவாக 1952 இல் இலங்கைத் தேசிய நூல் விபரப்பட்டியலுக்கான உப ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது. தேசிய நூற்பட்டியல் தொகுப்பின்முதலாவது இதழ்1962
இல் வெளிவந்தது, 1970 ஆம் ஆண்டில் 17 ஆம் இலக்க சட்ட மூலத்தின் பிரகாரம் இ லங்கை தேசிய நூலக சேவைகள் சபை ஸ்தா பிக்கப்பட்டதையடுத்து தேசிய நூற்பட்டியல் இச்சபையினாலேயே வெளியிடப்பட்டது. பின்பு 1986 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வெளி
vi
 

யிடப்படும்நூல்களுக்குSBN இலக்கம் வழங்கும் முறை ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் ISBN இலக்கத்தை வழங்கி வருவதும் இந்த தேசிய நூலக ஆவணங்கள் சேவ்ைகள் சபையேயாகும். இச்சபையானது இலங்கையில் தேசிய நூற்பட் டியலை தயாரிக்கும் போது அச்சகங்களினால் தேசிய ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டு ஆவணக் காப்பகத்தினால் கிடைக்கும் நூல்க ளையும், நேரடியாக தனது சபையிடம் ISBN இலக்கத்தைப் பெற்று அச்சிடப்ப்டும் நூல்கள்ை யும் சேர்த்துக் கொள்கின்றது. ஆரம்ப காலகஜ் டங்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்பட்டதேசிய நூற்பட்டியல் தற்போது மாதம் தோறும் வெளியிடப்படுவது குறிப்பிடத் தக்கது. இருப்பினும் தமிழ் நூல்களை அச்சிடும் அச்சகங்கள், அச்சிடுவோர், வெளியீட்டாளர் கட்டளைச் சட்டத்தினை மதித்து அச்சிடும் நூல் களின் பிரதிகளை தேசிய நூலகத்திற்கு ேே
வைக்காமையினாலும் தமிழ்மூல எழுத்தாளர் கள், வெளியீட்டாளர்கள் ISBN இலக்கத்தையும் பெற்றுக்கொள்ள கரிசனை காட்ட்ாமையினாலும் நூற்ப்ட்டியலைத் தயாரிக்கும் தேசிய நூலகத்தில் தமிழ்நூல்களைப் பட்டியிலிடக்கூடிய ஆட்ப்லம் விகிதாசார அடிப்படையில் மிகவும் குறைவாகக் காணப்படுகின்றமை காரணமாகவும் தமிழ்நூல்க ளின் பதிவு மந்தமாகவே இடம்பெறுகின்றன.
எழுத்தாளர்களின் விபரங்களை ' ஆவணப்படுத்தல் உசாத்துன்ை "வழிகாட்டிகளின் வரிசையில் "Who's who'ள்ன்ற ஒருவழிகாட்டி உள்ளது. இவ் வழிகாட்டிதனிநபர்களைப் பற்றிய குறிப்புகளைத் தருவதாகும்.இதைத் தமிழில் 'யார்எவர் என்று குறிப்பிடுவர். கன்னாகம் குமாரசுவாமிப் புலவர் 1917 இல் வழங்கிய'தமிழ்ப் புலவர் சரித்திரம் ந.சி.கந்தையாப் பிள்ளையின் (1893-1967) தமிழ்ப்புலவர்அகராதிஆகியவற்றை இத்தகைய "யார்எவர் தொகுதிகளின் தமிழியல் முன்னோடி யாகக் கருதலாம். (ஆதாரம் என்.செல்வராஜாவின்
ஐ.பீ.சி.வானொலி உரை)
1974இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான் காவது உலகத்தமிழாராய்ச்சிமகாநாட்டின்போது பேராளர்கள் பற்றிய விபரத்தை அவர்களின் புகைப்படம், அவரது சமூக, வாழ்க்கைக்குறிப்பு கள், கல்வித் தகைமை, அவரது துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பு வகித்த பதவி, எழுதிய நூல் 'கள் ப்ோன்ற தகவல்களை உள்ளடக்கியிருந்தது.
vi

Page 7
2004 ஆம் ஆண்டில் "நம்மவர்கள் என்ற தலைப்பில் அவுஸ்திரேலியாவிலிருந்து ஈழத்து எழுத்தாளர் லெமுருகபூபதி யார் எவர் உசாத் துணை நூலினை வெளியிட்டார். இந்நூலில் அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள், ஒலிபரப்பாளர்க ளின் விபரங்கள் திரட்டித்தரப்ப்ட்டிருந்தன.
மலையக எழுத்தாளர்களின் சுயவிபரப் பட் டியல் 'முகமும் முகவரியும்' எனும் தலைப்பில் அந்தனிஜீவா தொகுத்திருந்தார். மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சு 1997இல் வெளியிட்ட் இந்நூலில் 68 மலையக எழுத்தாளர்கள் பற்றிய் தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
முஸ்லிம் சமய விவகார அமைச்சராக அல் ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் கடமையாற்றியபோது 1991929394ஆம் ஆண்டுகளில் 'வாழ்வோரை - வாழ்த்துவோம்' எனும் முஸ்லிம் எழுத்தாளர் கள்,கலைஞர்கள், புத்திஜீவிகள்,ஊடகவியலாளர் களை வாழ்த்தி கெளரவிக்கும் நிகழ்ச்சியொன் றினை நடத்திவந்தார். இந்த நிகழ்வின் போது B ‘வாழ்வோரை வாழ்த் துவோம்’ எனும் மல்ர் வெளியிடப்பட்டது.இம் மலரின் நான்கு தொகுதி களிலும் 137 முஸ்லிம் எழுத்தாளர்கள், கலை ஞர்கள், புத்திஜீவிகள் , ஊடகவியலாளர்களின் விபரங்கள் பதிவாக்கப் ull-capitat.
அதேபோல் 1986 முதல் இலங்கையி லுள்ள சிரேஷ்ட எழுத் தாளர்கள், கலைஞர்
பில் கலாசார அமைச்சு ஆண்டுதோறும் நடத்தி வருகின்றது இந்த கெளரவிப்பு நிகழ்வின் போது கலாசார அமைச்சினால் வெளியிடப்படும் நினைவு நூலில் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த 25 எழுத்தாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் பதிவாக்கப்படுகின்றன. .
 
 

நுண்கலைகளுடன்தொடர்பான கலைஞர்களின் நூலாக்கங்கள், கெளரவிப்புகள்,அரங்கேற்ற நிகழ் வுகள், ஒலி, ஒளிப்பதிவுநாடாக்கள், கலைமன்றங் கள் ஆகியவை உள்ளிட்டசுமார் ஆயிரத்து ஐநூறு தகவல்களை உள்ளடக்கிய நூலொன்று 'ஈழத்து கலைத்துறைப் பதிவுகள் என்ற பெயரில் 2004 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வரதர் வெளியீடாக வெளிவந்துள்ளது. " .
க்காலங்கள் வாழ்த்தும் 300ஈழத்துக்கலைஞர் கிள்" என்ற பெயரில் 650 பக்கங்கள் கொண்ட 'யார் எவர் நூலொன்றை பிரான்ஸிலிருந்து 'வண்ணை தெய்வம் வெளியிட்டிருந்தார்.2005 இன்இறுதிப் பகுதியில் வெளிவந்த இந்நூல்தாய கத்திலும் புலம்பெயர்ந்தும் இன்று சிதறி வாழும் படைப்பிலக்கிய வாதிகளினதும் கலைஞர்களின தும் விபரங்களைக் கொண்டுள்ளது.
"யார்எவர் ஆவணத்தொகுப்புக்களாகவன்றி, கட்டுரை உருவில் நமது எழுத்தாளர்களைப் பதிவு செய்யும் நூல்கள்.ஆங்காங்கே வெளிவந்த வண் ணம் உள்ளன. ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத் துடன்இணைந்து சிந்தனை வட்டம் வெளியிட்ட 'ஜேர்மனியில் தடம் பதித்த தமிழர்கள் என்ற தலைப்பிலான நூலில் ஜேர்மனியின் புலம்பெ யர்ந்து வாழும் 24 எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்களின் விபரங் கள் பதிவாகியுள்ளன. 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிவந்த இந்த நூலின் இணையாசிரி பர்கள் வ.சிவராசா, க.அருந்தவராசா, பொ.பூரீ, ஜீவகன், அபுவனேந்திரன் ஆகியோராவர்.
இந்தஅடிப்படையில் காலத்துக்குக்காலம்'யார் எவர் நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனாலும் திட்டமிடப்பட்ட முறையில் ஒரு தொடர் முயற். சியாக இலங்கைத் எழுத்தாளர்கள்,கலைஞர்கள், ஊடகவியலாளர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு வராமை இங்கு குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒரு விடயமாகும். . . * இலங்கை எழுத்தாளர்கள், ஊட்கவியலாளர் கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர் கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி - அவற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான பணிகளை 2000 ஆண் -டில் ஆரம்பித்தேன்.இப்பணியின் முத்ற்கட்டமாக இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவிய லாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி 2003.07.27 ஆம் திகதி முதல் வாரம் தோறும் - நவமணிப் பத்திரிகையில் எழுதிவந்தேன். '

Page 8
இவ்வாறாக நவமணிப்பத்திரிகையில் பிரசுர மான 114 முஸ்லிம் எழுத்தாளர்கள், உள்டகவிய லாளர்கள், கலைஞர்களின் விபரங்களை மூன்று தொகுப்புபுத்தகங்களாக வெளியிட்டேன். பின்பு பல புத்திஜீவிகளும் எழுத்தாளர்களும் என்னோடு தொடர்பு கொண்டு முஸ்லிம் என்ற வரைய றைக்குள் மாத்திரம் இந்த ஆய்வினை மேற் கொள்ளாது இதனைப் பொதுமைப்படுத்தும்ப்டி
கேட்டுக்கொண்டார்.அதற்கமைய நான்காவது தொகுதியினை புலம்பெயர்ந்த ள்முத்தாளர்கள்
ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத் "திரட்டாக வெளியிட்டேன். .
இதுவரை மொத்தம் 275 இலங்கை எழுத் தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்க" ளின் விபரங்கள் கட்டுரை வடிவில் புகைப்படங் கள் மற்றும் சான்றுகளுடன் எழுதப்பட்டு 10 தொகுதிப் புத்தகங்களாக வெளிவந்துள்ளன.
எனது செயற்பாடுகளை மேலும் விரிவு படுத்
தும் நோக்கில் இவர்கள் நம்மவர்கள் தொடரி: னை உங்கள் அபிமான ஞாயிறு தினக்குரலில் 2007.11.11 முதல் ஆரம்பித்தேன்.
1) இவர்கள் நம்மவர்கள் தொடரில் இலங்கை யைப் பிறப்பிடமாகக்கொண்டதமிழ்மொழிமூல. எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்க ளின் விபரங்கள் இடம்பெறும் . . . .
2) அத்துடன் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர் களின் விபரங்களும் இடம்பெறும்,
3) இத் தொடரில் இடம்பெறும் ஆக்கங்க்ள் எத்தகைய தரப்படுத்தலுக்கும் உட்பட்டவையல்ல. விபரங்கள் எமக்குக்கிடைக்கும் ஒழுங்கிலே எழு தப்படுகின்றன.
4) சமகாலத்தில் வாழ்பவர்களினதும் அதேநே ரத்தில் கிடைக்கும் தகவல்களை அடிப்படையா கக் கொண்டு மரணித்தவர்களின் விபரங்களும்
5) இவர்கள் நம்மவர்கள் தொடரில் இடம்
பெறும் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவி, யலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் 100. 112 பக்கங்களைக் கொண்ட புத்தகமொன் றினை ஆக்கக்கூடிய வகையில் இடம்பெற்றதும்
966 நூலுருப்படுத்தப்படும்.

6) புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்க ளும் இவர்கள் நம்மவர்கள் தொடரிலே சேர்த்துக்கொள்ளப்படும். · ·
7) இவர்கள் நம்மவர்கள் தொடரில் இடம் பெறும் சகல தரவுகளும் ஆதாரபூர்வமாகவே எழுதப்படும்.
8) இத்தொடரில் இட்ம்பெறும் எழுத்தாளர்கள், ஊடகவியலாள்ர்கள்,கலைஞர்களின் புகைப்படங் கள் மற்றும் ஆவணங்களின்புகைப்படிப்பிரதிகள் போன்றனவும் சேர்த்துக் கொள்ளப்படும்.
9) புத்தகமாக வெளிவந்தபின் தேசிய ரீதியி லும் சர்வதேசரீதியிலும் அவை ஆவணப்படுத் தப்படும்.
இத் தொடரில் இலங்கை மற்றும் புலம்பெ யர்ந்த எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,க லைஞர்களின் விபரங்கள் இடம்பெற விரும் பின்.உரிய விபரத்திரட்டுப் படிவங்களைப் பெற்றுக்கொள்ள என்னுடன் தொடர்பு கொள்ள ճկմ). ,
சிந்தனை வட்டத்தின் ஏனைய வெளியீடுக ளுக்கு ஆதரவினைத்தரும் வாசக நெஞ்சங்க் ளான நீங்கள் இந்நூலுக்கும் ஆதரவினைத் தருவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.
மிக்கநன்றி அன்புடன்.
PM. Puniyameen. . Cinthanaivattam
14, Udatalawinna Madige, Udatalawinna 20802,
Sri Lanka. . Tp: 0094-812-493892 / 0094-812-493746
e-mail:pmpuniyameen(dyahoo.com
хі

Page 9
ஏறகெனவே பகுதிவானோர: இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 1
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
: Lurasib 1 பதிவு 01 ஏ.யூ.எம்.ஏ. கரீம் பதிவு 02 எஸ்.எம்.ஏ. ஹஸன் பதிவு 03 அன்பு முகையதின் பதிவு 04 ஐ.ஏ. றஸாக் பதிவு 05 முபீதா உஸ்மான் பதிவு 06 எச். ஸலாஹதீன் பதிவு 07 எம்.எச்.எம். அஷ்ரப் பதிவு 08 எம்.எச்.எம். புஹாரி பதிவு 09 அப்துல் கஹற்ஹார் பதிவு 10 எஸ். முத்து மீரான் பதிவு 11 எச்.ஏ. ஸகூர் பதிவு 12 ஏ.எஸ். இப்றாஹீம் பதிவு 13 எம்.ஐ.எம். தாஹிர் பதிவு 14 எம்.ஜே.எம். கமால் பதிவு 15 ஏ.எச்.எம். யூசுப் பதிவு 16 நூருல் அயின்
பதிவு 17 எம்.ஸி.எம். இக்பால் பதிவு 18 ஆ. அலாவுதீன் பதிவு 19 எம்.இஸட்.ஏ முனஷ்வர் பதிவு 20 சித்தி ஸர்தாபி
பதிவு 21 ஏ.எம்.எம். அலி பதிவு 22 எம்.எச்.எம். ஹலீம்தீன் பதிவு 23 என்.எஸ்.ஏ. கையூம் பதிவு 24 எஸ்.எம். ஜவுபர் பதிவு 25 ஏ.எல்.எம். சத்தார் பதிவு 26 ஜே.எம். ஹாபீஸ் பதிவு 27 ஏ.எச்.எம். ஜாபிர் பதிவு 28 ஏ.எம். நஜிமுதீன் பதிவு 29 எஸ்.எல்.ஏ. லத்தீப் பதிவு 30 எஸ்.ஐ.எம்.ஏ. ஜப்பார் பதிவு 31 மொஹம்மட் வைஸ் பதிவு 32 எம்.எம். ஸப்வான் பதிவு 33 ஹிதாயா ரிஸ்வி பதிவு 34 என்.எம். அமீன்
பதிவு 35 மஸிதா புன்னியாமீன் பதிவு 36 கே.எம்.எம். இக்பால் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 2
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
: UITs6d 2
பதிவு 37 எம்.பீ.எம். அஸ்ஹர் பதிவு 38 ஜிப்ரி யூனுஸ் பதிவு 39 எம்.எஸ்.எம். அக்ரம் பதிவு 40 ஏ.எச்.எம். மஜீத்
பதிவு 41 ஏ.ஏ. றஹற்மான் பதிவு 42 எஸ். கலீல் பதிவு 43 எம்.எம். ராஸிக் பதிவு 44 கே. சுலைமா லெவ்வை பதிவு 45 யூ.எல்.எம். ஹவைலித் பதிவு 46 ஏ.ஆர்.ஏ. பரீல் பதிவு 47 சுலைமா சமி பதிவு 48 ரஸினா புஹார்
பதிவு 49 ஐ.எம். மாரூப் பதிவு 50 ஸெய்யித் முஹம்மத்

பதிவு 51 ஏ.எஸ்.எம்.ரம்ஜான் பதிவு 52 அப்துல் லத்தீப் பதிவு 53 எம்.எம்.ஜமால்தீன் பதிவு 54 ஏ. ஐபார் பதிவு 55 முஹம்மது பெளஸ் பதிவு 56 சிபார்தீன் மரிக்கார் பதிவு 57 மஷரா சுஹறுத்தீன் பதிவு 58 யூ. ஸெயின் பதிவு 59 ஏ.எல்.எம். அஸ்வர் பதிவு 60 எம்.எம்.எஸ். முஹம்மத் பதிவு 61 முஹம்மட் கலீல் பதிவு 62 எஸ்.எல்.எம். அபூபக்கர் பதிவு 63 எம்.யூ. முஹம்மத் பவுர் பதிவு 64 முஹம்மத் இஸ்மாஈல் பதிவு 65 முஹம்மட் பைரூஸ் பதிவு 66 எம்.ஐ.எம். முஸ்தபா
பதிவு 67 றபீக் பிர்தெளஸ் பதிவு 68 புர்கான். பீ. இப்திகார் பதிவு 69 எம்.எஸ்.எஸ்.ஹமீத் பதிவு 70 அப்துல் மலிக் பதிவு 71 அப்துல் ஸலாம் பதிவு 72 எம்.எச்.எம். கரீம் பதிவு 73 எம்.எஸ்.றம்ஸின் பதிவு 74 அப்துல் அசன்
பதிவு 75 ஏ.எஸ்.எம். நவாஸ் பதிவு 76 முஹம்மத் ஹஸனி பதிவு 77 எஸ்.எஸ். பரீட்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 3
முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்கள் விபரம்
: LusTatsub 3 பதிவு 78 கல்முனை முபாறக் பதிவு 79 ஏ.எம். நஸிம்மன் பதிவு 80 மாத்தளைக் கமால் பதிவு 81 நூறுல் ஹக் பதிவு 82 ஜமால்தீன் பதிவு 83 முஹம்மட் றபீக் பதிவு 84 முஹம்மத் சுகைப் பதிவு 85 மு.மூ. விஜிலி பதிவு 86 யூ.எல் ஆதம்பாவா பதிவு 87 ஏ.எம்.எம். ஸியாது பதிவு 88 எம். நவாஸ் செளபி பதிவு 89 முகுசீன் றயிசுத்தின் பதிவு 90 எம்.ஐ.எம். அன்சார் பதிவு 91 மஸ்ஹது லெவ்வை
பதிவு 92 எம். அனஸ் பதிவு 93 எம்.கே.எம்.முனாஸ் பதிவு 94 பாத்திமா பீபி பதிவு 95 ஸர்மிளா ஸெய்யித் பதிவு 96 பாத்திமா சுபியானி பதிவு 97 மொஹம்மட் சியாஜ் பதிவு 98 நிஸாரா பாரூக் பதிவு 99 பெளகல் றஹீம்
பதிவு 100 ஏ.எல்.எம். புஹாரி பதிவு 101 ஏ.எப்.எம். றியாட் பதிவு 102 யு.எல்.எம். அஸ்மின் பதிவு 103 அப்துஸ்ஸலாம் அஸ்லம் பதிவு 104 எம்.ஏ. அமீனுல்லா பதிவு 105 நயிமுத்தீன் பதிவு 106 எச்.எல். முஹம்மத் பதிவு 107 ஹஸைன் பதிவு 108 ஹய்ருன்னிஸா புஹாரி பதிவு 109 எஸ்.எல். லரீப் பதிவு 110 அலி உதுமாலெவ்வை பதிவு 111 எம்.ஐ.எம். மஷஹர் பதிவு 112 கிண்ணியா நஸ்புல்லாஹம்பதிவு 113 திருமதி பரீதாசாகுல் ஹமீட் பதிவு 114 அரபா உம்மா

Page 10
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 4 புலம்பெயர் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
: LurTebb 1
பதிவு 115 என். செல்வராஜா (ஐக்கிய இராச்சியம்) பதிவு 116 நவஜோதி ஜோகரட்ணம் (ஐக்கிய இராச்சியம்) பதிவு 117 த. ஜெயபாலன் (ஐக்கிய இராச்சியம்) பதிவு 118 பத்மாஷணி மாணிக்கரட்ணம் (ஜெர்மனி) பதிவு 119 வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்) பதிவு 120 நகுலா சிவநாதன் (ஜெர்மனி) பதிவு 121 நா.தெய்வேந்திரம் (வண்ணை தெய்வம்) (பிரான்ஸ்) பதிவு 122 வை. சிவராஜா (ஜெர்மனி) பதிவு 123 சுந்தரம்பாள் பாலச்சந்திரன் (ஜெர்மனி) பதிவு 124 க. சண்முகம் (சண்) (டென்மார்க்) பதிவு 125 கித்தா பரமானந்தன் (ஜெர்மனி) பதிவு 126 அடைக்கலமுத்து அமுதசாகரன் (இளவாலை அமுது) (ஐ. இ) பதிவு 127 இராசகருணா (ஈழமுருகதாசன்) (ஜெர்மனி) பதிவு 128 கே.கே. அருந்தவராஜா (ஜெர்மனி) பதிவு 129 கொண்ஸ்டன்ரைன் (ஐக்கிய இராச்சியம்) பதிவு 130 அம்பலவன் புவனேந்திரன் (ஜெர்மனி) பதிவு 131 பொ. சிறிஜிவகன் (ஜெர்மனி) பதிவு 132 கலைவாணி ஏகானந்தராஜா (ஜெர்மனி) பதிவு 133 வை. யோகேஸ்வரன் (ஜெர்மனி) பதிவு 134 அன்ரனி வரதராசன் (ஜெர்மனி) பதிவு 135 பொ. தியாகராசா (வேலணையூர் பொன்னண்ணா) (டென்மார்க்) பதிவு 136 பொ. கருணாகரமூர்த்தி (ஜெர்மனி) பதிவு 137 ஜெயாநடேசன் (ஜெர்மனி) ... " பதிவு 138 இ.மகேந்திரன் (முல்லைஅமுதன்) (ஐக்கிய இராச்சியம்) பதிவு 139 றமேஷ் வேதநாயகம் (ஐக்கிய இராச்சியம்)
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 5
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
. . . . . . - : TBb 4 பதிவு 140 அஷ்ரப் ஏ - ஸமத் பதிவு 141 எம்.எம்.எம்.மஹற்றுப் பதிவு 142 அன்பு ஜவஹர்ஷா பதிவு 143 ஏ.எம். இஸ்ஸடின் பதிவு 144 எஸ்.எம். அறுஸ் பதிவு 145 எம்.ஆர்.கே. மவ்பியா
பதிவு 146 எம்.யூ.எம். ஜிப்ரி பதிவு 147 ஏ.எல்.எம். ஸம்ரி
xiv

இவர்கள் நம்மவர்கள், பாகற் 01
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபூஷணம் புண்னியாமீன் 01

Page 11
- f(9c09m109c090 (# Ļ9æýı9urnúœ99)Ţı??$rmee) (£ -1,99£ (1,91IrmẾsnoe) (z
Į9æsűrműg??? (I
f(909rn199cc9f9 (†
qi-Trīņotosh (gf(909rn1090909 (ç fuoco9mı99cc9f9 (ç
quooo @IŲ9 (# .qigo-IIIgi (†
*轉(Z@ņuńs@ œœ9-æ (çọ919 ugÍ (£
Į9oßmús?? (I .qlofi) o (zoặcơ9Ļ9o (z
1909rmı99cc9f9 († Ọ9rnig ús@ (I@cooosūtę (I glTrıņúơ9$ (£ glo -IIB)ஐமுடி இதிче со9tбgégéп
qiș-urqi (z Qormųossosoo&ரதிராகிகுfícaso) no gırnış şoosu ¡i-icoon
qımŲ9& (i ||, : *| ņ9o (149090998ự9æ sílı91109mŲtoo-insæ .19கதியா9ாத ஒ(9டு
||—|——|
9)īúĢĝúnţs soos@oscoso osso susuosinţsomos ossoffusiloģđùis
újdođĩ)ćırı riforn?
- (LHrætó 11)
02 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

தம்பிஐயா தேவதாஸ்
தம்பிஐயா தேவதாஸ்
பதிவு 276
எழுத்துத்துறை
மேல்மாகாணம், கொழும்பு மாவட்டம், கொழும்பு மத்திய தேர்தல் தொகுதியில், 'கொழும்பு மத்தி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த, 'ஜிந்துப்பிட்டிய கிராமசேவகர் எல்லையில் வசித்துவரும் தம்பிஐயா தேவதாஸ் ஒரு எழுத்தாளர், சிறந்த மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர்.
1951ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் திகதி க.தம்பிஐயா, த. மனோன்மணி தம்பதியினரின் புதல்வராக யாழ்ப்பாணம்- புங்குடுதீவில் பிறந்த தேவதாஸ் யாழ்/புங்குடுதீவு கணேசா - மகா வித்தியாலயம், கொ/ விவேகானந்த மகா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர் மகரகமை தேசிய கல்வி நிறுவகத்தில் கல்வி டிப்ளோமா பட்டம் பெற்றவராவார். தற்போது கொழும்பு -12 கணபதி இந்து மகளிர் வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) கலாபூஷணம் புன்னியாமீன் 03

Page 12
தம்பிஐயா தேவதாஸ்
1970களில் இவர் இலக்கியத்துறையில் ஈடுபட ஆரம்பித் தார். இவரின் கன்னி ஆக்கம் 1971ம் ஆண்டு "மல்லிகை’ இதழில் "நற்சாட்சிப்பத்திரம்' எனும் தலைப்பில் இடம்பெற்றது. இது ஒரு சிறுகதையாகும். இதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், தொடர் கட்டுரைகளை இவர் எழுதியுள ளார். ஈழத்துத் தமிழ், சிங்களத் திரைப்படங்கள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளில் இவரின் பங்களிப்பு தனித்துவமானது.
தம்பிஐயா தேவதாஸ் இதுவரை எட்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவற்றுள் மூன்று நூல்கள் மொழிபெயர்ப்பு நூல்க ளாகும். சிங்கள மொழியில் பிரபல்யமடைந்த மூன்று நாவல்களை இவர் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். அவையாவன.
1. நெஞ்சில் ஓர் இரகசியம். 2. இறைவன் வகுத்த வழி. 3. மூன்று பாத்திரங்கள்.
கருணாசேன ஜயலத்' என்பவர் இலங்கையில் சிங்கள மொழிமூலம் ஜனரஞ்சகமான ஒரு எழுத்தாளராவார். குறிப்பாக இவரின் நாவல்களில் சிருஷ்டிக்கப்படும் பாத்திரங்கள் யதார்த்தபூர் வமான உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடியவை. கருணாசேன ஜயலத்தின் நாவல்களில் 'கொழுஹதவத்த' எனும் நாவல் ஆயிரத் துத் தொளாயிரத்து எழுபதுகளில் வெளிவந்து இளம் உள்ளங்களைக் கொள்ளை கொண்டது. இது கல்லூரிக் காதலை மையமாகக் கொண்ட ஒரு நாவலாகும். சர்வதேச புகழ்பெற்ற இலங்கைத் திரைப் பட இயக்குனரான ‘லெஸ்டர் ஜேம்ஸ் பிரிஸின் இயக்கத்தில் இந்நா வல் திரைப்படமாக வெளிவந்து வெற்றிகண்டது.
கொழுஹதவத்தையின் இரண்டாம்பாகம் ‘பபா கெட்டு ஹெட்டி’ எனும் தலைப்பில் வெளிவந்தது. இந்த நாவலை பிரபல திரைப்படி இயக்குனர் “சுனில் ஆரியரட்ன திரைப்படமாக நெறிப்ப டுத்தியிருந்தார். சிங்கள வாசகர்களின் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்த இந்த இரண்டு நாவல்களையும் தம்பிஐயா தேவதாஸ் தமிழில் மொழிபெயர்த்து முறையே "நெஞ்சில் ஓர் இரகசியம், ‘இறைவன் வகுத்த வழி ஆகிய தலைப்புக்களில் தந்தார். மூல நூல்களில் காணப்பட்ட கருத்துகளில் எந்த வித மாற்றங்களும் இல்லாமல் அதே நடையில், அதே சுவையில் இவர் மொழிபெயர்த் திருந்தமை மொழிபெயர்ப்புத் துறையில் இவருக்குள்ள திறமையை
04 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (பாகம் 11)

தம்பிஐயா தேவதாஸ்
நன்கு வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. மூல நூல்களைப் போலவே பாத்திரங்களின் உணர்வு வெளிப்பாடுகள் மிகவும் சிறப் பாகக் காணப்பட்டன. இந்த இரண்டு மொழிபெயர்ப்பு நாவல்களையும் சர்வதேச தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான நூல்தேட்டத்தில் திரு. என்.செல்வராஜா பின்வருமாறு பதிவு செய்திருந்தார்.
நெஞ்சில் ஓர் இரகசியம் கருணாசேன ஜயலத் (சிங்கள மூலம்) நம்பிஐயா தேவதாஸ் (தமிழ் மொழிபெயர்ப்பு) கொழும்பு 14, வீர கேசரி பிரசுரம், 185 கிராண்பாஸ் வீதி, 1வது பதிப்பு அக்டோபர் 1976, (கொழும்பு 14, வீரகேசரி, 185 கிராண்பாஸ் வீதி) wi,290 பக்கம். விலை ரூபா 4.90 அளவு 18x12.5 சமீ.
இது "கொழுஹதவத்த' என்ற பிரபல சிங்கள நாவலின் மொழி பெயர்ப்பு. சிங்கள மொழியில் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசின் இயக்கத்தில் திரைப்படமாகவும், பின்னர் மேடைநாடகமாகவும் தயாரிக்கப்பட்டது.
| நூல்தேட்டம் தொகுதி 2 பதிவு எண் - 1845
இறைவன் வகுத்தவழி கருணாசேன ஜயலத் (சிங்கள மூலம்) நம்பிஐயா தேவதாஸ் (தமிழ் மொழிபெயர்ப்பு) கொழும்பு 14, வீரகே சரி பிரசுரம், 185 கிராண்பாஸ் வீதி, 1வது பதிப்பு ஜூன் 1978, (கொழும்பு 14, வீரகேசரி, 185 கிராண்பாஸ் வீதி) wi,224 பக்கம். விலை ரூபா 5.50. அளவு 18x12.5 சமீ.
'நெஞ்சில் ஒரு இரகசியம்' என்ற நாவலின் இரண்டாம் பாகமாகக் கருதப்படும் இந்நாவல் பின்னாளில் திரைப்படமாகவும் தயாரிக் கப்பட்டது. சிங்கள இலக்கியத்தில் பிரபல்யமான கருணாசேன ஜயலத் 45 வயதில் தான் மறைவதற்கு முன்னர் நூற்றுக்கும் மேற் "பட்ட படைப்புக்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
நூல்தேட்டம் தொகுதி 2 : பதிவு எண் - 1843
தம்பிஐயா தேவதாஸ் மொழிபெயர்த்து வெளியிட்ட் மூன்றா வது நாவல் ‘மூன்று பாத்திரங்கள் என்பதாகும். இந்நாவல் சென்னை, நியுசெஞ்சரி புக்ஸ்ஹவுஸ் (NCBH) வெளியீடாக 1979இல் வெளிவந் "தது. நாவலாசிரியர் 'கே.ஜயலத் சிங்களமொழியில் எழுதிய ‘ஷரித்த துணக்' எனும் நாவலே "மூன்று பாத்திரங்களாக தமிழில் வெளி வந்தது. இந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்குப் புறம்பாக தேவதாஸ் ஐந்து ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபூஷணம் புன்னியாமீன் 05

Page 13
bibigLIT (856MBT6ð
இலங்கை தமிழ்ச் சினிமாவின் கதை. பொன்விழாக் கண்ட சிங்கள சினிமா. சிங்கள திரை உலக முன்னோடிகள். சிங்களப் பழமொழிகள் புங்குடுதீவு வாழ்வும், வளமும்
இதில் முதல் நான்கு நூல்களும் 'நூல்தேட்டத்தில் பின்வரு மாறு பதிவாகியுள்ளன.
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை; தம்பிஐயா தேவதாஸ். கொழும்பு 7: VST பப்ளிகேஷன்ஸ், வி.எஸ்.துரைராஜா, 75 வாட் பிளேஸ், 2வது பதிப்பு, 2000, 1வது பதிப்பு, 1994 (சென்னை 600002 காந்தளகம், 834 அண்ணாசாலை) (14) 305 பக்கம், புகைப்படங்கள், விலை இந்திய ரூபா 75. அளவு 17.5 Χ 12,5 σLδ. -
இந்நூலின் முதற்பதிப்பில் 1993 வரையிலான ஈழத்துத் தமிழ்ச் சினிமாவின் வரலாறு தொகுக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டாவது பதிப்பில் 2000 வரையிலான வரலாறு மேலதிகமாகச் சேர்க்கப் பட்டுள்ளது. இதன் பெரும்பகுதி தினகரனிலும், சிறுபகுதி வீரகேசரி யிலும் வெளிவந்துள்ளது. முழுமையான தொகுப்பாக நூலுருவில். வெளிவந்துள்ளது. நூலின் சுருக்கம் கருதி, இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்புக்கள் பற்றியும், சினிமாச் சஞ்சிகைள் பற்றியும் சொல்லப்படவில்லை. இலங்கை தமிழ்ச் சினிமாவின் வரலாறு பற்றி விரிவாகக் கூறும் முதல் முயற்சி இதுவாகும்.
நூல்தேட்டம் தொகுதி 1: பதிவு எண் 301 (தொகுதி 2 பதிவு எண் 01A)
பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா: தம்பிஐயா தேவதாஸ். கொழும்பு 13. வித்தியாதீபம் பதிப்பகம், 909 புதுச்செட்டித் தெரு, GasTQpubl. 16.g. LugtiL g6T6 if 2000. (Colombo 12: Sharp Graphics (pvt) Ltd, DG2 Central Road, Colombo 12). xiii, 163 பக்கம், புகைப்படங்கள், விலை ரூபா 200. அளவு 17.5x12சமீ. (ISBN: 955-96785-0-7)
இலங்கை வானொலி அறிவிப்பாளராகவும் , தொலைக்காட்சிகளில் கல்வி மற்றும் திரைப்பட நிகழ்ச்சித்தயாரிப்
06 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)

தம்பிஜயா தேவதாஸ்
பாளராகவும் அறிமுகமான திரு. தேவதாஸ், சிங்கள இலக்கியத் திலும் நாட்டம் கொண்டவர். பல சிங்களப் புனைகதைகளைத் தமிழில் தந்துள்ளார். திரைப்படம் தொடர்பான அவரது இரண்டாவது நூல் இதுவாகும். 50 வருட சிங்களச் சினிமா வரலாற்றில் தமிழ், முஸ்லிம் கலைஞர்களின் பங்களிப்பு இங்கு பதிவுக்குள்ளாகியுள்ளது. எவ்வித பூச்சுக்களுமின்றி நேரடியாகவே தகவல்களைத் தொடர்ச்சி யாகத்தந்துள்ளார். தனி மனித முயற்சியாகத் தொகுக்கப்பட்ட சிறந்த தொரு வரலாற்று ஆவணம் இது.
நூல்தேட்டம் தொகுதி 2 பதிவு எண் 1945
இலங்கைத் திரையுலக முன்னோடிகள்: பாகம் 1 தம்பிஐயா தேவதாஸ். சென்னை 600002; காந்தளகம், 68 (834). அண்ணா சாலை. 1வது பதிப்பு 2001 (சென்னை 600002 காந்தளகம்) 245 பக்கம். புகைப்படங்கள். விலை இந்திய ரூபா 95, அளவு
• 18x12 g Lỗ.
இலங்கைத் தமிழ்ச் சினிமாவிலும், சிங்களச் சினிமாவிலும் பங்காற் றிய படைப்பாளிகளைப் பற்றிய இந்நூலில் 39 தமிழ்க் கலைஞர்கள் பற்றியதும், ஒரு சிங்களக் கலைஞர் (ஹென்றி சந்திரவன்ச) பற்றியது மான தரவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. இது இலங்கை சினிமா சம்பந்தமாக ஆசிரியர் எழுதியுள்ள மூன்றாவது நூலாகும். இந்நூலின் பெரும்பான்மையான கட்டுரைகள் ஈழத்தின் தேசிய தினசரிகளில் காலத்துக்குக்காலம் வெளியிடப்பட்டவை. . . .
நூல்தேட்டம் தொகுதி 2 : பதிவு எண் - 1341
சிங்களப் பழமொழிகள்; தம்பிஐயா தேவதாஸ். கொழும்பு 13, வித்தியாதீபம் பதிப்பகம், 90/9, புதுச்செட்டித் தெரு 1வது பதிப்பு ஏப்ரல், 2005 (கொழும்பு 13 : ஈ - குவாலிட்டி கிராப்பிக்ஸ், 315, ஐம்பெட்டா வீதி) xii, 124 ussib. 6il606u e5UT 200, e6T6. 17x 12.5 sus. (ISBN 955-96785-1-5)
யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த தேவதாஸ் பேராதனைப் பல் கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர். கொழும்பு கணபதி வித்தியா லயத்தில் ஆசிரியராகவும், இலங்கை வானொலியில் பகுதிநேர
இவர்கள் நம்மவர்கள் (பர்கம் 01) : கலாபூஷணம் புன்னியாமீன் በ7

Page 14
தம்பிஐயா தேவதாஸ்
அறிவிப்பாளராகவும், ரூபவாஹினி தொலைக்காட்சியில் செவ்வி காண்பவராகவும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத் துறைப்பகுதியில் வருகை விரிவுரையாளராகவும் கடமையாற்றுகின் றார். பிரபல்யமான மூன்று சிங்கள நாவல்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ள இவர் தொகுத்துள்ள இந்நூலில், நாளாந்த வழக்கி லுள்ள 815 சிங்களப் பழமொழிகளும் அவற்றுக்கான பொருளும் தரப்பட்டுள்ளன.
நூல்தேட்டம் தொகுதி 4 : பதிவு எண் - 3294
‘பொன்விழாக் கண்ட சிங்கள சினிமா” எனும் நூலுக்கு வட-கிழக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. 1991ம் ஆண்டு முதல் இலங்கை வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளராகவும் கடமையாற்றி வரும் இவர் 2000ம் ஆண்டு 'இதயத்தில் ஓர் உதயம்' என்ற தொலைக்காட்சி நாடகத்தைத் தயாரித்து வழங்கினார்.
தன்னுடைய கலை, இலக்கிய, ஊடகத்துறை ஈடுபாட்டுக்குக் காரணமாக இருந்தவர் என்ற அடிப்படையில் அமரர் நாகேசு தர்மலிங்கம் அவர்களை அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவர்; விஜயலக்சுமியின் அன்புக் கணவராவார். இத்தம்பதியினருக்கு சுகந், துஷயர், பிறேமானர், தாக்ஷாயினி ஆகிய நான்கு அன்புச் செல்வங்கள் உளர். இவரின் முகவரி:
Thambi Ayah Thevathas, 90/9 New Chetty Street, Colombo -13. T/P 011-2448743
08. எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு " (தொகுதி 11)

எஸ்.எச்.எம்.ஜெமீல்
எஸ்.எச்.எம். ஜெமீல்
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது எனும் ஊரினைப் பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.எச்.முஹம்மது ஜெமீல் அவர்கள் இலங்கையில் ஒரு சிரேஷ்ட எழுத்தாளர், பன்னூலாசிரியர், கல்விமான், சிறந்த ஆய்வாளர்.
1940ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி சாய்ந்தமருது ஷாஹுல் ஹமீத், முக்குலத் உம்மா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த இவர் காரைதீவு இராமகிருஷ்ணமிஷன் வித்தியாலயம், கல் முனை கார்மேல் பாத்திமாக் கல்லூரி, கொழும்பு ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். ஆங்கிலமொழி மூலம் கற்ற இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பாடத்தில் சிறப்புப்பட்டமும், பின்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வித் துறை முதுமாணிப் பட்டமும் M.A (Education) பெற்றார். அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை டிப்ளோமா பட்ட மும், ஐக்கிய இராச்சியத்தின் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறைசார் பயிற்சியையும், பல்கலைக்கழக நிர்வாகம் தொடர் பான கல்வியையும் பெற்றுக் கொண்டார்.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) கலாபூஷணம் புன்னியாமீன் 09

Page 15
ள்ஸ்.எச்.எம்.ஜெமீல்
தொழில் ரீதியாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கி லப் போதனாசிரியராகவும், “அருணாசலம் ஹோல் உதவி வோர்டனா கவும் பதவியேற்றுப் பின்பு படிப்படியாக உயர் பதவிகளை வகிக்கலா னார். கல்லூரி ஆசிரியராக, அதிபராக, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அதிபராக, வட்டாரக் கல்வி அதிகாரியாக, பிரதம கல்வி அதிகாரி uJITs (Chief Education Officer), ufoss floodies6T D-gs6i ஆணையாளராக, மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளராக, முஸ்லிம் சமய, கலாசார அமைச்சின் செயலாளராக, கல்வி, கலாசார விவகாரங்கள் அமைச்சின் மேலதிக செயலாளராக, கலாசார, சமய விவகார அமைச்சின் ஆலோசகராக. இப்படிப் பல்வேறு உயர் பதவிகளை வகித்துத் தற்போது ஓய்வுபெற் றுள்ளார். இவர் சித்தி ஆரிபாவின் அன்புக் கணவராவார். இத்தம்பதி யினரின் மகன் முஹம்மட் நஸில். இரண்டு பேரக்குழந்தைகளு டனும், தனது மனைவி, மகன், மருமகள் பாத்திமா ஷஸானா ஆகியோருடனும் தற்போது கொழும்பில் நிரந்தரமாக வசித்து வருகின்றார்.
அரசாங்க சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்பு சவூதி அரேபி யாவின் தலைநகரான ரியாத்தில் இயங்கிவரும் Srilankan International School &6) 2001 as Gröl (p56) 2004 s,856f 616DJ அதிபராகக் கடம்ையாற்றினார்.
மிக இளம் வயதிலிருந்தே தமிழ்மொழியிலும் இலக்கியத் திலும் எழுத்துத்துறையிலும் ஈடுபாடுடையவராயிருந்தார். 'எனது ஊர் எனும் தலைப்பிலான இவரது கட்டுரை தினகரன் ஞாயிறு பாலர் கழகப் பகுதியில் 1949இல் வெளிவந்தது. (அங்கத்துவ இல: 2364). பாடசாலைகளில் நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் முதற் பரிசுகளை பல முறை பெற்றுள்ளார். பேராதனைப் பல்கலைக் கழக முதலாமாண்டுப் பரீட்சையில் (1961ஆம் ஆண்டில்) தமிழ்ப் பாடத்தில் ஆகக் கூடிய புள்ளிகளைப் பெற்றமைக்காக ‘பிரான்ஸிஸ் கிங்ஸ்பெரி பரிசையும் வென்றுள்ளார்.
கொழும்பு ஸாஹிராக் கல்லூரியிற் கற்கும் காலத்தில் அக்கல்லூரியில் தமிழ் மற்றும் வரலாறு பாடங்களைப் போதித்துக் கொண்டிருந்த கார்த்திக்கேசு சிவத்தம்பி (பிற்காலத்தில் பேராசிரியர்) நடத்திக் கொண்டிருந்த வாராந்த வானொலி நிகழ்ச்சியான “இளை ஞர் மன்றம்' என்பதில் 1957இலிருந்து கிரமமாகப் பங்கு பற்றினார். அன்று ஆரம்பித்த வானொலித் தொடர்பு இன்றுவரை நீடிக்கிறது. 10 எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)

எஸ்.எச்.எம்.ஜெமீல்
ஜெமீலின் எழுத்துவன்மை மலர்ந்த இடம் பேராதனைப் பல்கலைக்கழகமாகும். முதலாவது கட்டுரை "அறிஞர் கண்ட அண் ணல் நபி(ஸல்) பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் சஞ்சிகையிலும் (1960); முதலாவது கவிதையான 'எந்நாளோ, பல்கலைக்கழக வருடாந்த மலரிலும் (1962); முதலாவது சிறுகதையான கடன் தீர்ந்தது பண்டாரவளையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த மணிக் குரலிலும் (1964) பிரசுரமாயின. இவற்றினைத் தொடர்ந்து சில சிறுகதைகளும், கவிதைகளும் வெளிவந்தாலும் அத்துறைகள் பல்க லைக்கழக வாழ்வோடு முற்றுப்பெற்றன.
இலக்கியம், வரலாறு, கல்வி, நாட்டுப்புறப் பண்பாட்டியல் எனும் துறைகளிலான ஆய்வு முயற்சிகள் வலுப்பெற்று இன்றுவரை 25 நூல்களை எழுதியுள்ளார். சுமார் 110 ஆய்வுக் கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. 50 நூல்களுக்கான பதிப்புரை, மதிப்புரை, சிறப் புரை வழங்கப்பட்டுள்ளன. வானொலியில் (பிறநாடுகளுட்பட) 130 பேச்சுக்கள், கலந்துரையாடல்கள், நிகழ்ச்சிகள் என்பவற்றிலும், தொலைக்காட்சியில் 10 நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
தினகரன், வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, நவமணி, தினக்குரல், மணிக்குரல், அல்இஸ்லாம், ஸாஹிரா, மித்திரன், அல் அரப், வளர்மதி, டெயிலிநியூஸ், ஒப்சேவர், எக்கோனோமிக்ஸ் டைம்ஸ் ஆகிய பத்திரிகை, சஞ்சிகைகளிலும்; அவ்வப்போது வெளியி டப்படும் விசேட மலர்களிலும் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற் றிய காலத்தில் அக்கல்லூரி பல புதிய இலக்கிய முயற்சிகளை மேற்கொண்டது. மாணவர்களின் எழுத்தாற்றலை வளர்ப்பதற்காக 1976 இல் ஆரம்பிக்கப்பட்ட ‘ஸாஹிரா மாதாந்தப் பத்திரிகை கிரம மாகப் பல ஆண்டுகள் வெளிவந்து, இன்றுவரை இடைக்கிடையே யாவது வந்து கொண்டிருக்கிறது.
அக்கல்லூரிப் பழைய மாணவர் சங்கம் ஆண்டுக்கொரு நூல்' எனும் திட்டத்தினை அதே ஆண்டில் தொடங்கி நான்கு வருடங்களுள் ஐந்து நூல்களை வெளியிட்டது. கவிஞர் அன்பு முகையதின், எம்.ஐ.எம்.முஸம்மில், மருதூர் ஏ.மஜீத், புலவர் மீ. அஹற்மத், எஸ்.எச்.எம். ஜெமீல், யூ.எல்.ஆதம்பாவா என்போரின் முதலாவது நூல்களை இச்சங்கமே வெளியிட்டது.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபூஷணம் பன்னியாமீன் 11

Page 16
எஸ்.எச்.எம்.ஜெமீல்
இதனைத் தொடர்ந்து பரந்த அளவில் 1983இல் இவரது ஆலோசனையில் ஆரம்பிக்கப்பட்ட 'இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம்' எனும் நிறுவனம் நூல்கள் வெளியீடு, இலக்கியக் கருத்த ரங்குகள், வெளியீட்டு விழாக்கள், பாராட்டுக் கூட்டங்கள் போன்ற வற்றை மிக உற்சாகமாகக் கிழக்கு மாகாணத்தில் நடத்திக் கொண் டிருந்தது. எஸ்.எச். எம். ஜெமீல், அ.ஸ்.அப்துஸ்ஸமத், மருதூர். ஏ மஜீத், மருதூர்க் கொத்தன், வி.எம். இஸ்மாயில், அன்பு முகையதின், பாலமுனை பாறுாக், எம்.ஏ.உதுமாலெவ்வை, பாவலர் பஸில் காரியப் பர், மாறன்-யூ-செயின், எஸ்.ஏ. ஆர்.எம். செய்யித்ஹஸன் மெளலானா, ஏ.யூ.எம்.ஏ.கரீம், ஏ.கே.எம். நியாஸ் என்போர் இப்பணியகத்தின்
நிர்வாகஸ்த்தராவார்கள்.
1986இல் இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகத்தினால் வெளியிடப்பட்ட ‘எழுவான் கதிர்கள் முக்கியதொரு தொகுப்பாகும். 1970 இன் பின் கவிதையாக்கத் தொடங்கிய தென்கிழக்குப் பிரதேசக் கவிஞர்களின் கவிதைகளை - அதாவது இளங்கவிஞர்கள் 24 பேரின் ஆக்கங்களை உள்ளடக்கியது இந்நூல்.அவர்களிற் பலரது கவிதைகள் தொகுப்பு நூலொன்றில் வெளி வந்தமை அதுவே முதற் தடவையாகும். அவர்களில் பலர் தொடர்ந்தும் எழுதி, இன்று பிரபல கவிஞர்களாயுள்ளனர். 1990களில் கிழக்கிலேற்பட்ட வன்முறைச் சூழலானது பணியகத்தின் சேவைகளை முடக்கிவிட்டது. இருந்தபோதிலும் 2000ம் ஆண்டுவரை 21நூல்களை அது வெளியிட்டுள்ளமை கவனத்திற் கொள்ளத்தக்கதாகும்.
2 எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)
 
 

எஸ்.எச்.எம்.ஜெமீல்
முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எனும் பதவியானது இவரது இலக்கியப் பணியினை மேலும் விரிவாக் குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. ஜாபிர் ஏ.காதர், ஏ.எச்.எம். அஸ்வர், லக்ஷ்மன் ஜயக்கொடி ஆகியோர் அமைச்சர்களா யிருந்த காலங்களில் அவ்வமைச்சின் செயலாளராகவும் பின்னர் ஆலோசகராகவும் கடமையாற்றிய 11 வருட காலத்தில் இவ்வமைச்சு பெருந்தொகையான நூல்களையும், மலர்களையும் வெளியிட்டதிலும் பலரது நூல்களைப் பதிப்பித்ததிலும் எழுத்தாளர் மற்றும் கலைஞர் ஊக்குவிப்பிலும் பெரும் பங்கு வகித்தார்.
இவற்றுள் மிக முக்கியமானது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றினை ஆய்வுசெய்து, ஆவணப்படுத்தி, மாவட்டரீதியான நூல் களை வெளியிட்டமையாகும். இதற்காகப் பல அறிஞர்களின் உதவி கள் பெறப்பட்டன. இவ்வாறு களுத்துறை, அனுராதபுரம், கண்டி, மாத்தளை, மாத்தறை, அம்பாறை, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்ட வரலாற்று நூல்கள், 1992-2000 ஆண்டு காலப் பகுதியில் வெளிவந் தன.
இப்பணி முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத் தினால் இன்றும் தொடர்கிறது. பொலன்னறுவை, வவுனியா, மன்னார் மாவட்டங்களினதும், அக்குறணை, பாத்ததும்பறைப் பிரதேசங்களி னதும் வரலாறுகள் நூலுருப் பெற்றுள்ளன. ஏனைய மாவட்ட நூல்களும் வெளிவரும்பொழுது பூரண வரலாறுடைய சமூகமாக முஸ்லிம்களும் திகழ முடியும்.
எஸ்.எச்.எம்.ஜெமீலின் நூல்கள் பின்வருமாறு:
எ.எம்.எ.அஸிஸ் அவர்களின் கல்விச் சிந்தனைகளும், பங்களிப்பும் (1980)
2. ஸேர். ராஸிக் ப்ரீத் அவர்களின் கல்விப்பணி (1984) 3. சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் வரலாறு (1989) 4. கல்விச் சிந்தனைகள் (1990) 5. நினைவில் நால்வர் (1993) 6. கலாநிதி ஜாயாவின் கல்விப் பணிகள் (1994) 7. சுவடி ஆற்றுப்படை - முதலாம் பாகம் (1994) 8. சுவடி ஆற்றுப்படை - இரண்டாம் பாகம் (1995) 9. கிராமத்து இதயம் - நாட்டார் பாடல்கள் (1995) 10. இஸ்லாமியக் கல்வி (1996)
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) ; கலாபூஷணம் புன்னியாமீன் 13

Page 17
எஸ்.எச்.எம்.ஜெமீல்
11. கல்விச் சிந்தனைகள் - இரண்டாம் பதிப்பு (1996) 12. சுவடி ஆற்றுப்படை - மூன்றாம் பாகம் (1997) 13. கலாநிதி பதியுத்தீன் மஹற்மூதின் கல்விப் பணிகள் (1997) 14. காலச் சுவடுகள் (1998) 15. நமது முதுசம் (2000) 16. சுவடி ஆற்றுப்படை - நான்காம் பாகம் (2001)
மொழிபெயர்ப்புகள்
17. பொது நிதியியல் (1966) 18. துவான் புர்ஹானுத்தீன் ஜாயா (1990)
தொகுப்புக்கள், பதிப்புகள்
19. அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் (1992)
20. அல்லாமா எம்.எம். உவைஸ் (1994) 21. அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் (1997)
22. கம்பஹா மாவட்ட முஸ்லிம்கள் (1998) 23. Islam in Independent Sri Lanka (1998) 24. Sri Lanka Udana (1998) 25, புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் (1999)
‘சுவடி ஆற்றுப்படை' என்பது மிகப் பயனுள்ளவொரு பணி யாகும். இந்நாட்டில் முஸ்லிம் ஒருவரினால் முதன் முதலாக 1868இல் அச்சிடப்பட்ட நூலில் தொடங்கி, 2000ஆம் ஆண்டுவரை முஸ்லிம்க ளினால் எழுதி, வெளியிடப்பட்ட அனைத்து நூல்களுமான 1977 பிரசுரங்களில் விபரங்களை இது கொண்டுள்ளது. இத்தகையதொரு பணி இதுவரை இந்தியாவிலோ, மலேஷியாவிலோ, சிங்கப்பூரிலோ கூட ஒரு முஸ்லிமால் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத் தககது.
தற்போது சுவடி ஆற்றுப் படை - ஐந்தாம் பாகத்துக்கான பணிகளை ஆரம்பித்துள்ளார். இலங்கை இலக்கிய வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியிலிருந்து இக்கால கட்டம்வரை சுமார் இரண்டாயிரத்தை எட்டிய எண்ணிக்கையில் இலக்கியவாதிகள் வாழ்ந்து மரணித்துவிட்டார்கள்.வாழ்ந்தும் வருகின் றார்கள். இருப்பினும் ஒருவர் கூடச் சிந்திக்காத மாபெரும் வரலாற்றுப் பணியினை அல்ஹாஜ் ஜெமீல் ஆற்றிவருவது வரலாற்றில் இவருக் கென்று ஒரு நிலையான பதிவினை வழங்கும் என்பது திண்ணம்.
14 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)

எஸ்.எச்.எம்.ஜெமீல்
இதேபோன்று ‘கிராமத்து இதயம்' என்பது இவரின் நாட்டுப் புறப்பாடல்கள் தொகுப்பு நூலாகும். நாடளாவிய ரீதியில் முஸ்லிம் களின் நாட்டார் பாடல்களைத் தொகுத்த முன்னோடி முயற்சியாகவும் இது பதிவாகின்றது. இலங்கை வானொலியிலும் இது தொடர் நிகழ்ச்சி யாக நடத்தப்பட்டது. 1995இல் வெளிவந்த இந்நூலுக்கு அரச சாகித் தியவிருது கிடைத்தது. வடக்கு-கிழக்கு மாகாண சபையின் 1995ம் ஆண்டுக்கான இலக்கியப் பரிசும் கிடைத்தது. இலங்கையிலும், பிறநாடுகளிலும் நடைபெற்ற பல்வேறு மாநாடுகளிற் பங்குபற்றி ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தும், சொற்பொழிவுகள் ஆற்றியுமுள்ள இவர், அவ்வாறான பல சந்தர்ப்பங்களிற் கெளரவிக்கப்பட்டுமுள்ளார்.
எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்கள் இதுவரை பெற்றுள்ள விருதுக" ளையும், கெளரவங்களையும் பின்வருமாறு அட்டவணைப்படுத்தலாம். 1. இலக்கிய ஆய்வுக்கான சாகித்திய மண்டல விருது (1995) 2. வடக்கு-கிழக்கு மாகாணசபை - இலக்கியப் பரிசு (1995) 3. ஈராக்கில், பக்தாத் நகரில் அரபு நாடுகளின் ஆசிரியர்
BibGLD6T60Tb (Federation of Teachers of Arab Countries) கேடயம் வழங்கிக் கெளரவித்தமை (1980) 4. இந்தியாவில் நடைபெற்ற 6-வது அனைத்துலக இஸ்லா
மியத் தமிழ் இலக்கியக் கழக மாநாட்டில் ‘தமிழ்மாமணி பட்டம் வழங்கிக் கெளரவித்தமை (1998) 5. திருச்சி (இந்தியா) M.I.E.T. கல்லூரியில் பொன்னாடை
போர்த்தியும், ஞாபகச் சின்னம் வழங்கியும் கெளரவித்தமை (1995) 6. மலேசியா, கோலாலம்பூரில் இயங்கும் கவிதாமாலை
இயக்கம் ‘தமிழ் அருவி" பட்டம் வழங்கிக் கெளரவித்தமை (1999) 7. அட்டாளைச்சேனை தேசியமிலாத் விழாவின் போது
‘நஜ்முல் உலூம் பட்டம் வழங்கிக் கெளரவித்தமை (1997) 8. இனங்களுக்கிடையேயான நல்லுறவு ஒன்றியம் (Inter-Recial Amity Celebrations) இரத்தினபுரியில் ‘சாமறி விருது வழங்கிக் கெளரவித்தமை (1999) 9. உடத்தலவின்னை மடிகே சிந்தனைவட்டம், மலையக கலை
கலாசார ஒன்றியம் இணைந்து கண்டியில் 'இரத்தினதீப விருது வழங்கிக் கெளரவித்தமை (2000) 10. கொழும்பு தமிழ்ச்சங்கத்தினால் கேடயம் வழங்கி,
பொன்னாடை போர்த்திக் கெளரவித்தமை (1999)
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபூஷணம் புன்னியாமீன் 15

Page 18
எஸ்.எச்.எம்.ஜெமீல்
11. அம்பாறை மாவட்டக் கரையோர ஊடகவியலாளர் சங்கத் தினால் பொன்னாடை போர்த்தி, கேடயம் வழங்கிக் கெளரவித்தமை (2000) 12. ப்ரிய நிலா கலை, இலக்கிய சங்கத்தினால் பொன்னாடை போர்த்தி, கேடயம் வழங்கிக் கெளரவித்தமை (2001) 13. அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் கெளரவம்
(1998) 14. கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ்
இலக்கிய மாநாட்டுக் கெளரவம் (2002)
எஸ்.எச்.எம். ஜெமீல் இதுவரை வகித்த, வகித்துவருகின்ற பதவிகளின், அமைப்புக்களின் பங்களிப்பினை பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
1. கலைக்கழகத்தின் முஸ்லிம் நுண்கலைப் பிரிவு (Muslim
Fine Arts Panel of Arts Council) - 56060615 2. கல்வி அமைச்சின் இஸ்லாம் பாட ஆலோசனைக்குழு
தலைவர் அகில இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் - தலைவர் கல்முனை மாவட்ட அதிபர்கள் சங்கம் - ஸ்தாபகத் தலைவர் 5. கிழக்குப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான
ஆலோசனைக் குழு - அங்கத்தவர் கிழக்குப் பல்கலைக்கழகம் - Council Member 7. கிழக்கு மாகாண இணைந்த பல்கலைக்கழகக் கல்லூரி
ஆளுனச் சபை அங்கத்தவர் 8. தென்கிழக்குப் பல்கலைக்கழகம் - நிர்வாக ஆலோசகர்
(Cosult anton Administration) 9. இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம், இக்ராஹற் தொழில்நுட்பக்
கல்லூரி - ஸ்தாபக அங்கத்தவர் 10. பல்கலைக்கழக கல்வி டிப்ளோமா வெளிவாரி மாணவர்கள்
மேற்பார்வையாளர் 11. தொழில்நுட்பக் கல்லூரி - வருகை விரிவுரையாளர் 12. தேசியக் கல்வி நிறுவகம் - வளவாளர் 13. மேலைத்தேய சங்கீதப் பரீட்சைகள் தொடர்பான அமைச்சின்
ஆலோசனைக்குழு - செயலாளர் 14, யுனெஸ்கோ (UNESCO) நிறுவனத்தின் இலங்கை
முஸ்லிம்களின் விஞ்ஞானக் கல்வியை முன்னேற்றுவதற்கான ஆய்வுக்குழு அங்கத்தினர் 16 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி II)
6.

எஸ்.எச்.எம்.ஜெமீல்
15.
16.
7.
18.
19. 20,
21.
22.
23.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை ஆலோசனைக்குழு - உறுப்பினர் இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை, ஆலோசனைக்குழு - உறுப்பினர் v இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் - ஸ்தாபகத் தலைவர் . . ரீலங்கா கணனி தகவல், தொழில்நுட்பக் கவுன்ஸில்
(CINTEC) so -phary
"SITE F60) (Board of Quazis) - D pharj (géu B6)6.560Tsiasis isositorssi) (National Integration Couns cil) உப குழு உறுப்பினர் m . . . ஏ.எம்.ஏ. அஸிஸ் பவுண்டேஷன் - தலைவர் W அரச ஆசியக்கழகம் (இலங்கைக்கிளை) ஆயுட்கால அங்கத்தவர் தென்கிழக்குப் பல்கலைக்கழக அரபு - இஸ்லாமியபீடச்
சபை - உறுப்பினர்
இங்கிலாந்து, சவூதி அரேபியா, ஈராக், அபுதாபி, ஷர்ஜா,
துபாய், இந்தியா, பஹற்ரைன், லிபியா, மோல்டா, மாலைத்தீவுகள் என்பன இவர் பயணஞ் செய்துள்ள நாடுகளாகும்.
முகவரி;-
தற்போது கொழும்பை வதிவிடமாகக் கொண்டுள்ள இவரின்
S.H.M.JAMEEL 44A, ASIRI MAWATHA, KALUBOWILA, DEHIWELA TIP: 0115767607
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபூஷணம் புன்னியாமீன் . . 1ማ ኃ......

Page 19
அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை
அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை
பதிவு 278
எழுத்துத்துறை
வட மாகாணம், யாழ்ப்பாண மாவட்டம், நல்லூர் தேர்தல் தொகுதி, நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் நீராவியடி T.101 கிராம சேவகர் பிரிவினைச் சேர்ந்த அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை அவர்கள் மூத்த சிறுகதை எழுத்தாளரும், நாடக எழுத்தாளரும், நாடகக் கலைஞருமாவார்.
1933ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி நடராசா தம்பதியினரின் புதல்வராக அராலி, வட்டுக்கோட்டையில் பிறந்த சுந்தரம்பிள்ளை கொக்குவில் இந்துக் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
1955ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு அனு மதி பெற்று 1959ஆம் ஆண்டில் கலைமாணிப் பட்டதாரியாக வெளியே றிய இவர் பட்டப்பின்படிப்பாக ‘கல்வி டிப்ளோமா' பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார். நீண்ட காலமாக ஆசிரியராகப் பணியாற்றித் தற்போது ஓய்வுபெற்று முழுநேர வாசிப்பும், எழுத்தும் என்ற அடிப்ப டையில் வாழ்ந்து வருகின்றார்.
18 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)
 

அராலியூர் ந. சுந்தரம்பிள்ள்ை
இவரின் அன்பு மனைவி மங்கையர்க்கரிசி. இவர் ஓர் ஆசி ரியை. அன்பு மகன் மணிவண்ணன். இவரும் பட்டதாரி ஆசிரியர். இருவரும் மரணித்து விட்டனர்.
“எல்லோராலும் இலக்கியம் படைக்க முடியாது. இயல்பாக அமைந்த திறமையை, படிப்பால் வளர்த்துக் கொள்ளலாம். நன்றாகப் படித்தால் தான் நல்ல இலக்கியங்களைப் படைக்கலாம்.” என்று கூறும் ந. சுந்தரம்பிள்ளையின் முதலாவது சிறுகதை 1950ஆம் ஆண்டு ‘சுதந்திரன்’ பத்திரிகையில் ‘கையொப்பம்' எனும் தலைப்பில் பிரசுரமானது. இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார்.
இவர் பாடசாலைகளில் கல்வி கற்றது ஆங்கில மொழியில். இதனால் இவரின் வீட்டிலும் சரி, பாடசாலையிலும் சரி ஆங்கில மொழி நூல்களையே வாசிக்கும்படி வற்புறுத்தி வருவார்கள். இத னால் தமிழ் நூல்கள் வாசிப்பதானால் திருட்டுத்தனமாகவே வாசிக்க வேண்டியிருந்தது.
இது தொடர்பாக ந. சுந்தரம்பிள்ளை பின்வருமாறு குறிப்பி டுகின்றார்.
“..கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற காலத் தில் எனக்குத் தமிழ் கற்பித்த மு. சின்னத்தம்பி, அ. நாகலிங்கம் ஆகியோர் எனது கட்டுரைகளுக்கு நன்று போட்டு என்னை ஊக்குவித்தனர். ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம் ஆகிய பாடங்களில் அதிக புள்ளிகள் பெறுவேன். தமிழ்க் கட்டுரைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றிருக்கிறேன். கொக்குவில் இந்துக்கல்லூரி முதல் முதலாக சஞ்சிகை வெளியிட்ட போது அதன் மாணவ ஆசிரியனாக இருந்தேன். யாழ்ப்பாணக் கல்லூரியில் பயின்ற காலத்தில் அக்கல்லூரியின் இளஞாயிறு, 'மிசனெரி சஞ்சிகைகளை எனது கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் அலங்கரித்திருக்கின்றன. "சுதந்திரன்' 'வீரகே சரி’ பத்திரிகைகளின் பாலர் கழகங்களில் எனது கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் பிரசுரமாகியிருக்கின்றன.”
s
இவரின் சிறுகதைகள் இலங்கையில் வெளிவரும் தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன. இவரால் வெளியிடப்பட்ட சிறுகதைத் தொகுப்பு யாழ்ப்பாணம்’ எனும் தலைப்
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) கலாபூஷணம் புன்னியாமீன் 19

Page 20
அராலியூர் ந. சுந்தரம்பிள்ள்ை
பில் 1999இல் வெளிவந்தது. 2005ஆம் ஆண்டு வெளிவந்த சிறுகதை எழுதுவது எப்படி? எனும் நூலில் இவரது 11 சிறுகதைகள் இடம் பெற்றிருந்தன.
நாட கத்துறையில் இவர்
சிறுகதைத் துறையினைவிட நாடகத்துறையிலே இவரின் ஈடுபாட்டினை அதிகமாக காணமுடிகின்றது. இவரது முதலாவது நாடகம் 1954 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி இழந்த காதல்’ எனும் தலைப்பில் 'அராலி சரஸ்வதி வித்தியாசாலையில் அரங்கேற்றம் கண்டது. இந்த நாடகத்தை எழுதியவரும், காநாய கனாக நடித்தவரும் இவரே.
இவரது பல்கலைக்கழக வாழ்க்கையில் தமிழ்ச்சங்க புதிய மாணவர் விவாதக்குழுவில் தலைவராக நியமனம் பெற்றார். இவரது பேச்சாற்றல் பல்கலைக்கழக நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது. 1955ஆம் ஆண்டில் பேராசிரியர் கணபதிப் பிள்ளையின் ‘சுந்தரம் எங்கே? நாடகத்தை கலாநிதி வித்தியானந்தன் தயாரித்தார். இந்த நாடகத்தில் நடித்ததே பல்கலைக்கழக வாழ்க் கையில் இவர் நடித்த முதல் நாடகமாகும். இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பல நாடகங்களில் இவர் நடித்துள்ளார்.
1959ஆம் ஆண்டு ஆசிரியரானதும் அராலியில் மேடை நாட கத் தொழிற்பாடுகளில் முழு மூச்சில் ஈடுபடலானார். 1954க்கும் 1974க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இவர் இருபது நாடகங்களை எழுதி மேடையேற்றியுள்ளார்.
இதைப் பற்றி அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
". நாங்கள் நடித்த நாடகங்கள் அனைத்துமே எங்களது அந்தக் காலச் சமுக நிலையைப் பிரதிபலித்தன. சமுக சீர்த்திருத்த நாடகங்களானாலும், சாதிப் பிரச்சினை, இனப் பிரச்சினை, அரசியல் பிரச்சினை போன்ற தீவிரமான விடயங் களை நாங்கள் எடுத்து ஆராய்வதில்லை. நாடகம் நடிப்பது தான் எங்களது பிரதான நோக்கம். அதற்கே போதுமான ஆதரவு இல்லாத சூழ்நிலையில் நாங்கள் ஆழமான பிரச்சி னைகளைக் கிளறப் போனால் மக்கள் எங்களைப் பகிஷ்க ரித்திருப்பார்கள். நாடக முயற்சிகளுக்கு முற்றுப் புள்ளி 20 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)

அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை
வைக்க வேண்டி வந்திருக்கும். என்றாலும் மக்களுக்கு
வேண்டிய கல்வி ஒழுக்கம், மனிதாபிமானம், அன்பு போன்ற விடயங்களை நாடகங்களில் அலசியிருக்கிறேன். ஒரு நல்ல கருத்தைத் தானும் சொல்லாத எதையும் நான் எழுதுவ தில்லை.” - - -
மேடை நாடகங்கள் சுமார் இரண்டு மூன்று மணிநேரத்தைக் கொண்டிருப்பதினால் மேடை நாடகப் பிரதியாக்கம் என்பது இலகு வான காரியமல்ல. இவர் இதுவரை 25 மேடை நாடகங்களை எழுதியுள்ளமை ஒரு சாதனையென்றே குறிப்பிடவேண்டும்.
வானொலி நாடகங்கள்:-
25 மேடைநாடகங்களை எழுதி அரங்கேற்றி, 1976இல் "பொலிடோலே கதி, 1977இல் ‘பணமோ பணம்’ எனும் மேடைநாடக நூல்களை வெளியிட்ட இவரின் முதலாவது வானொலி நாடகம் இலங்கை வானொலியில் 'நானே ராஜா' என்ற தலைப்பில் 1980ஆம் ஆண்டில் ஒலிபரப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்றுவரை 385க்கு மேற்பட்ட வானொலி நாடகங்களை இவர் எழுதியுள்ளார். குறுகிய காலத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை இவரது நூற்றுக்கணக்கான நாடகங்களைத் தயாரித்து ஒலிபரப்பி யமைக்கு விசேட காரணங்கள் உள்ளனவா என்று ஆராய்ந்த போது இவரின் நூல்களில் இருந்தும், கட்டுரைகளிலிருந்தும் அறிந்து கொள் ளமுடிந்த கருத்துக்களை கீழே தருகின்றேன்.
01. இவர் நாடகக் கலையை ஆங்கிலமொழியில் முறையாகக் கற்றவர். - 02. சுமார் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டு காலம் மேடை நாடகங்கள் எழுதி, நடித்து, அரங்கேற்றிய அனுபவம். 03. இவரின் முதலாவது வானொலி நாடகம் இவரது 46ஆவது
வயதில் ஒலிபரப்பாகியது. அப்போது இவரின் முதிர்ந்த அறிவும், அனுபவமும் இவரின் நாடகப் பிரதியாக்கத்துக்கு பக்க பலமாக அமைந்திருந்தன. 04. இவரது நாடகங்கள் யதார்த்தமானவை. சமகால வாழ்க்
கையைச் சித்தரிப்பவை. சமூகத்தில் சந்திக்க முடியாத மனிதர்களைப் பற்றியோ, வேண்டுமென்றே புகுத்தப்பட்ட திருப்பங்களையோ இவர் தனது நாடகங்களில் சேர்ப்ப தில்லை.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) ; கலாபூஷணம் புன்னியாமீன் 21

Page 21
அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை
05. வானொலியில் நாடகம் எழுதமுன்பே இவர் பல வகையான
இலக்கியங்களையும் படைத்திருந்தார். ܝ
உண்மையான படைப்பாற்றல் என்பது ஒரு துறையுடன் மட் டும் நின்றுவிடாது. அது பன்முக ஆற்றல் கொண்டது. இவரின் அனுபவங்களினூடாகப் பார்க்கும்போது கவிதை எழுதக்கூடியவனால் சிறுகதையும் எழுத முடியும். நல்ல சிறுகதை எழுதுபவனிடம் நாடக மும், நாவலும் எழுதக்கூடிய சக்தி இருக்கிறது. நல்ல நாடகம் எழுதுபவன் வானொலி நாடகமும் எழுதலாம். படைப்பாற்றல் உள்ள வன் எந்த இலக்கியத்தையும் படைக்க முடியும். என்பதற்கு இவரின் அனைத்துச் செயற்பாடுகளும் சிறந்த எடுத்துக்காட்டு.
அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை இதுவரை 21 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். விபரம் வருமாறு:-
வானொலி நாடகங்கள்
01. கெட்டிக்காரர்கள் - 1988 02. முதலாம்பிள்ளை - 1990
(இவை இரண்டும் முறையே, இலங்கை வானொலி தமிழ் சேவைத் தனி நாடகங்களின் முதலாம் இரண்டாம் தொகுப்பு களுமாகும். 03. வீடு - 1997 04. யாழ்ப்பாணமா? கொழும்பா? - 1998 05. எங்கள் நாடு - 2002 (பரிசு பெற்ற வானொலி நாடகங்கள்) 06. மழைவெள்ளம் - 2003 07. GupuLib - 2004
மேடை நாடகங்கள்
01. பொலிடோலே கதி - 1976 02: பணமோ பணம் - 1977
இலக்கியம் படைக்க வழிகாட்டும் நூலிகள்
01. நாடகம் எழுதுவது எப்படி? - 1997 02. வானொலி நாடகம் எழுதுவது எப்படி? - 2003 03. சிறுகதை எழுதுவது எப்படி? - 2005
உணமைச் சம்பவங்கள் கொண்ட வரலாறு
01. யாழ்ப்பாணத்தில் அந்த ஆறு மாதங்கள் - 1997 22 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)

அராலியூர் ந. கந்தரம்பிள்ளை
இலக்கிய விமர்சனம்
01. இலக்கியக் கட்டுரைகள் - 2000
02. "வீடற்றவன்' நாவலின் விளக்கமும்,விமர்சனம் - 2001
03. இலக்கிய விமர்சனம் - 2002
04. பொருளோ பொருள் நாடகத்தின் விளக்கமும் ,
விமர்சனம் - 2004
சிறுகதைத் தொகுப்பு
நாவலி
01. யாழ்ப்பாணம் - 1999
01. அக்கரைச் சீமையில் . 1994 02. ஒரு காதலின் கதை - 2001
அதேபோல இவரின் கலைத்துறை, எழுத்துத்துறைப் பணிக்
காக வேண்டி இவர் பெற்ற பரிசில்களையும் பின்வருமாறு குறிப்பிடலாம்.
0.
02.
03.
05.
07.
இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவை 2000ஆம் ஆண்டு நடத்திய பவளவிழா இலக்கியப் போட்டிகளில் வானொலி நாடகம் எழுதும் போட்டியில் முதலாம் பரிசு. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும், தேசிய ஒருங்கி ணைப்பு செயல்திட்டப் பணியகமும் ஒருங்கிணைந்து 1998 ஆம் ஆண்டு நடத்திய வானொலி நாடகம் எழுதும் போட்டியில் முதலாம் பரிசு நோர்வே நாட்டுத் ‘தமிழ் நாதம்’ வானொலி நிலையம் அகில உலக ரீதியில் நடத்திய வானொலி நாடகம் எழுதும் போட்டியில் முதலாம் பரிசு . .
நோர்வே நாட்டிலுள்ள "மொல்டே தமிழ் கலை கலாசார
மன்றம்’ அகில உலக ரீதியில் நடத்திய வானொலி நாடகம் எழுதும் போட்டியில் முதலாம் பரிசு. . . . கனடா ரொறன்ரோ பெருநகர் - ஆசிய வானொலியின் தமிழ் ஒலிபரப்புப் பிரிவினால் அகில உலக ரீதியில் நடத்திய வானொலி நாடகம் எழுதும் போட்டியில் முதலாம் பரிசு. இலங்கை வானொலி 1995ஆம் ஆண்டு நடத்திய நாடகம் எழுதும் போட்டியில் முதலாம் பரிசு. இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவை 2001ஆம் ஆண்டு நடத்திய மெல்லிசை நாடக விழாவில் ஆசிரியரது பிறந்த
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 0) : கலாபூஷணம் புன்னியாமினர் 23

Page 22
அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை
08.
09.
10.
11.
12.
மண் நாடகத்தை வேண்டிப் பெற்று மேடையேற்றியது. அதுவும் ஆசிரியருக்கு ஒரு பரிசே, வீரகேசரிப் பத்திரிகை 1997ஆம் ஆண்டு நடத்திய நாவல் எழுதும் போட்டியில் மூன்றாம் பரிசு.
அவுஸ்திரேலியாவில் உள்ள ‘விக்ரோரியா இலங்கைத்
தமிழர் சங்கம் நடத்திய இலக்கியப் போட்டிகளில் சிறு கதைக்கான முதலாம் பரிசு. முதலாம் பிள்ளை, எங்கள் நாடு, இமயம் நாடக நூல்களுக்கு வடக்கு, கிழக்கு மாகாண சபையின் பரிசுகள். 1988ஆம் ஆண்டு வீரகேசரிப் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு. இமயம் நாடகநூலுக்கு இலங்கை அரசின் சாகித்தியப் பரிசு.
இவரின் இத்தகைய சேவைகளை கருத்திற் கொண்டு இலங்
கை அரசு கலைஞர்களுக்கு வழங்கும் உயரிய விருதான ‘கலாபூஷ ணம்’ விருதினை வழங்கி கெளரவித்துள்ளது. இத்தகைய சாதனை
யாளரின் முகவரி;-
கலாபூஷணம் ந. சுந்தரம்பிள்ளை 30, கடைச்சாமி வீதி,
நீராவியடி, யாழ்ப்பாணம்.
24 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)
 

அந்தனி ஜீவ,
பதிவு 279
எழுத்துத்துறை
父郤
மேல் மாகாணத்தில் கொழும்பு மாநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட செபஸ்டியன் அந்தனி ஜீவா கடந்த நாற்பத்தைந்து ஆண் டுகளுக்கும் மேலாக எழுத்து, ஊடகம், கலை ஆகிய முத்துறைகளி லும் முழுநேரமாகத் தனது பங்களிப்பினை வழங்கிவரும் ஒரு எழுத்தாளரும், பன்னூலாசிரியரும், நாடகக்கலைஞரும், பத்திரிகையா ளருமாவார்.
1944ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி செபஸ்டியன், லட்சுமி அம்மாள் தம்பதியினரின் புதல்வராகக் கொழும்பில் பிறந்த அந்தனி ஜீவா தனது ஆரம்பக் கல்வியை கொழும்பு சுவர்ணவீதி யில் அமைந்திருந்த தமிழ் பாடசாலையிலும் பின்பு எஸ்.எஸ்.ஸி வரையிலான கல்வியினை பம்பலப்பிட்டிய சென்.மேரிஸ் கல்லூரியி லும் கற்றார். கொழும்பு, நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை டிப்ளோமா பட்டம் பெற்றுள்ள இவர் தற்போது ஒரு சுதந்திரப் பத்திரிகையாளராகப் பணியாற்றி வருகின்றார். இவரின் அன்புத் துணைவியார் ‘மேரி. இத்தம்பதியினரின் ஆசைக்கும், ஆஸ்திக்கும் ஒரே செல்வம் ‘கிருஷாந்தகுமார்’. இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபூஷணம் புனினியாமீன் 25

Page 23
அந்தனி ஜீவா
தனது இலக்கிய, பத்திரிகைத்துறையின் வழிகாட்டியாக இருந்தவர் அறிஞர் அ.ந. கந்தசாமி என்றும், மேடை நாடகத்துறை முன்னேற்றத்திற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் தயானந்த குணவர் தன என்றும் இன்றுவரை அன்புடன் நினைவு கூர்ந்துவரும் அந்தனி ஜீவாவின் கலை இலக்கியப் பணிகள் பல துறைகளிலும் வியாபித்து நிற்பதினால் அதனை சுருக்கமாகப் பின்வரும் அடிப்படையில் வகுத்து நோக்குவது இலகுவாக அமையலாம். .
1. பத்திரிகைத்துறைப் பங்களிப்பு. 2. நாடகத்துறைப் பங்களிப்பு. 3. இலக்கியத்துறைப் பங்களிப்பு.
பத்திரிகைத்துறைப் பங்களிப்பு.
ஜீவா பாடசாலையில் கற்கும் பருவத்திலிருந்தே பத்திரிகைத் துறையில் ஈடுபாடுமிக்கவராகக் காணப்பட்டார். பாடசாலை நண்பர் களுடன் இணைந்து ‘கரும்பு’ என்ற சிறுவர் சஞ்சிகையை பொறுப்பா சிரியராக இருந்து வெளியிட்டார். இதில் இரண்டு இதழ்கள் வெளி வந்தன. இதைத் தொடர்ந்து பாடசாலை நண்பர் துரைசாமியுடன் இணைந்து 'வெண்ணிலா' என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார்.
இளவயதிலிருந்தே பத்திரிகைத்துறையில் இவர் கொண்டி ருந்த ஈடுபாடு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட ‘தேசபக்தன்' பத்திரிகையில் நிர்வாக ஆசிரியராக பணிபுரியும் வாய்ப் பினை வழங்கியது. அச்சந்தர்ப்பத்தில் அறிஞர் அ.ந. கந்தசாமி பல வழிகளிலும் இவருக்கு ஆலோசனைகளை வழங்கி பல சிரேஷ்ட முற்போக்கு எழுத்தாளர்களின் தொடர்பிற்கு காரணகர்த்தாவாக இருந்துள்ளார். பின்பு “லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியனின் பிரசார பணிகளுக்கான மாத இதழான 'ஜனசக்தியில் ஆசிரியராக பணியாற்றினார். தொடர்ந்து மலையகத்தின் சிறுசஞ்சிகையான ‘குன் றின் குரல்"இல் ஆசிரியராகச் செயற்பட்டார்.
மேலும் 1970களில் தினபதி அலுவலக நிருபராகவும், தினப திப் பத்திரிகையில் முழுநேர தொழிலாளியாகவும் கடமை புரிந்துள்ள இவர் செய்தி (வார இதழ்), ஈழநாடு ஆகிய பத்திரிகைகளிலும் கொழும்பு நிருபராகவும் பணியாற்றியுள்ளார்.
1986ஆம் ஆண்டு மலையக கலை இலக்கியப் பேரவை 26 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)

அந்தனி ஜீவர்
வெளியிட்ட "கொழுந்து சஞ்சிகையின் ஆசிரியராக நின்று இன்றுவரை கொழுந்தை வெளியிட்டு வருகின்றார். “கலையையும், இலக்கி யத்தையும் வெறும் பொழுதுபோக்குக்காகவன்றி சமூக விழிப்புணர் வுக்கான ஊடகமாகக் கருதித்தன் பணியை ஆற்றும் இவர் அடிக்கடி கூறும் வாசகம் “கலை இலக்கியச் செயற்பாடுகள் எனக்க ளிப்பது ஊதியமல்ல, உயிர்.” என்பதாகும்.
இலங்கையில் தேசிய பத்திரிகைகளில் இவரின் பத்தி எழுத்துக்கள் பிரபல்யமடைந்திருந்தன. குறிப்பாக 'தினகரன்' இல் இவர் எழுதிய “நினைத்துப் பார்க்கிறேன்', 'படித்ததும் - பார்த்ததும் - கேட்டதும்' ஆகிய பத்தி எழுத்துக்கள் மிகவும் ஜனரஞ்சகம டைந்திருந்தன.
இன்றுவரை அந்தனிஜீவாவின் பத்திரிகைப் பணி தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. தற்போது 'சிறகு இணைய சஞ்சிகையின் இணையாசிரியராகவும் செயற்பட்டு வருகின்றார்.
நாடகத்துறைப் பங்களிப்பு.
பத்திரிகை ஆசிரியராகத் தன் இலக்கிய வாழ்வினுள் பிரவே சித்த போதிலும், அந்தனிஜீவா நாடகத்துறையில் ஒரு நடிகராக, நாடகாசிரியராக, நாடக இயக்குநராக தனது இளமைக்காலத்தின் பெரும் பகுதியை ஈடுபடுத்திக் கொண்டார்.
இவர் சமசமாஜக் கட்சியின் காரியாலயத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில் இலங்கையில் பிரபல்யம் பெற்ற பல சிங்கள மேடை நாடகக் கலைஞர்களின் தொடர்பு கிட்டியுள்ளது. அக்காலகட்டத்தில் இலங்கையில் சிங்கள மேடை நாடகங்கள் கொடி கட்டிப் பறந்தன. அந்தனி ஜீவாவுக்கு நாடகக் கலைஞர் களுடன் இருந்த தொடர்பின் காரணமாக சிங்கள நாடக ஒத்திகை களை மிகவும் விரும்பி பார்த்து வந்துள்ளார். அதேபோல மாலை வேளைகளிலும், ஓய்வு நாட்களிலும் சிலோன் தியேட்டர் என்ற அரங்கிற்குப் போவது இவருக்கு வாடிக்கையாகி விட்டது. அங்கு பணியாற்றிய தமிழ், சிங்களக் கலைஞர்களுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். இக்கட்டத்தில் தான் “மஞ்சள் குங்குமம்' திரைப்படத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை பணியாற் றியுள்ளதுடன், சில காட்சிகளுக்கு வசனமும் எழுதியுள்ளார். இத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஆர். முத்துசாமி பல சிங்களப்
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 0) கலாபூஷணம் புண்னியாமின் 27

Page 24
படங்களுக்கும் இசையமைத்தவராவார். இவரோடு ஏற்பட்ட நட்பு பல இசைக்கலைஞர்களுடனும் அந்தனி ஜீவாவுக்கு தொடர்பினை ஏற்படுத்தியது.
இப்படிப்பட்ட பின்னணியிலே அந்தனி ஜீவாவினால் வசனம் எழுதி, நெறியாள்கை செய்யப்பட்ட முதல் நாடகமான 'முள்ளில் ரோஜா 1970.08.23ஆம் திகதி லும்பினி மண்டபத்தில் மேடை யேற்றப்பட்டது. இந் நாடகத்தில் “மஞ்சள் குங்குமம் புகழ் ரீசங்கர், சுசில்குமார், பொஸ்கோ, செல்வராஜ், ஜெயா, கமலரீ ஆகியோர் நடித்தனர். இப்போதைய தபால மைச்சர் செல்லையா குமாரசூரியர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இவ்வாறு ஆரம்பித்த அந்தனி ஜீவாவின் நாடகத்துறைப் பணிகள் விதந்து கூறத்தக்கவை. இத்துறையிலே அதிக ஈடுபாடு கொண்ட இவர் ஈழத்து நாடக மேடையில் புதிய வீச்சுக்களையும், புதிய தரிசனங்களையும் கொண்ட நாடகங்களை மேடையேற்றி வந்துள்ளார். 1980களில் மலையகத்தில் வீதி நாடகங்களை முதன் முதலில் ஆரம்பித்தவர் எண் ற பெருமையையும் இவரே பெற்றிருக்கிறார். இந்த வீதி நாடகங்களை நடத்துவதற்கு இவர் தமிழ்நாட்டில் வீதி நாடக முன்னோ
爵
28 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)
 
 

அந்தன. ஜவ:
டியான ‘பாதல் சர்க்காரின் பயிற்சிப் பட்டறையில் 1980இல் பெற்ற தொழில்நுட்ப அறிவு மிகவும் துணைபுரிந்திருந்தது. இவரது “வெளிச் சம்', 'சாத்தான் வேதம் ஒதுகின்றது போன்ற வீதி நாடகங்கள் முக்கியமானவை. மக்களுடன் நேரடியானதும் நெருக்கமானதுமான தொடர்பினை எற்படுத்தும் சிறந்த கலை ஊடகமான தெருநாடகங்கள் அந்தனி ஜீவாவின் முயற்சியால் மலையகத்தில் புத்துயிர் பெற்ற தெனலாம். புகழ்பூத்த சிங்கள நாடகக் கலைஞர்களான தயானந்த குணவர்த்தன, ஹென்றி ஜயசேன போன்றோரினதும், தமிழ் நாடகக் கலைஞர்களான வீரமணி, சுஹைர் ஹமீட் ஆகியோரினதும் அரங்கி யல் தொடர்பு இவரது அரங்கியல் பணிகளுக்கு மெருகூட்டி யிருந்தன.
இன்று வரை சுமார் 14 நாடகங்கள் வரை இவர் மேடையேற் றியுள்ளார். நான்கு கதாபாத்திரங்களைக் கொண்ட "பறவைகள், மூன்று கதாபாத்திரங்களை மட்டுமே கொண்ட கவிதா' போன்றவை இவரது பரிசோதனை முயற்சிகளாகும்.
இவரது எழுத்தில் மலர்ந்த 'அக்கினிப் பூக்கள்’ என்ற மேடை நாடகம் தொழிலாளர் போராட்டங்களையும் வேலை நிறுத்தங்க ளையும் கருவாகக் கொண்டது. சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் இந்நாடகம் முதலில் மேடையேற்றப்பட்டது. பின்பு 16 தடவைகள் பல்வேறு இடங்களில் இது மேடையேற்றப்பட்டது. பதுளையில் நடந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மகாநாட்டின் போது மேடையேற் றப்பட்ட ‘அக்கினிப் பூக்கள்’ நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மலைநாட்டுத் தொழிலாளர்கள் உணர்ச்சி மேலீட்டால் முழக்கமிட்டு ஆர்ப்பரித்த சம்பவத்திலிருந்து இவரது நாடகங்கள் எவ்வளவு தூரம் மக்களுடன் ஒன்றிணைகின்றன என்பதை அறியமுடிகின்றது.
1974இல் இவரது சர்ச்சைக்குரிய நாடகமான வீணை அழுகின்றது என்ற சமூக நாடகம், குறிப்பிட்ட சில அரசியல்வாதி களின் தலையீட்டினால், அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டது. மீனவர் பிரச்சினைகளைக் கருவாகக் கொண்ட 'அலைகள்' என்ற நாடகம் இலங்கை கலாசாரப் பேரவையின் 1978ஆம் ஆண்டுக்குரிய தேசிய நாடகவிழாவில் இரண்டாவது பரிசினைப் பெற்றுக்கொண்டது. தற்போது அந்தனி ஜீவா மாணவர்களுக்கும், நாடகக் குழுக்க ளுக்கும் மேடை நாடகம், வீதி நாடகம் ஆகியவற்றை பயிற்றுவிப்பாள ராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபூஷணம் புன்னியாமீன் 29

Page 25
அந்தனி ஜீவா
இலக்கியத்துறைப் பங்களிப்பு.
தேசிய பத்திரிகையொன்றில் இவரது ஆக்கம் பிரசுரமானது 1960 ஆம் ஆண்டிலாகும். ‘பாட்டுக்கொரு புலவன்’ எனும் தலைப்பில் ‘சுதந்திரன்’ பத்திரிகையில் இவரது முதல் ஆக்கம் பிரசுரமாகும் போது இவருக்கு வயது பதினாறு.
இதே காலகட்டங்களில் மாணவன், தமிழருவி, திருமகன், கலைமலர், மாணவமலர், மாலைமுரசு போன்ற பல சிறுவர் இதழ் களிலும் இவரது ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன. தமிழருவி, மான வன், கலைமலர் ஆகிய இதழ்கள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் இவர் பரிசுகளை வென்றுள்ளார். வீரகேசரி, தினகரன் போன்ற தேசிய பத்திரிகைகளிலும் இவரது இளமைக்கால ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன.
ருந்த போதிலும் அந்தனி ஜீவா இதுவரை 15 சிறுகதைகை
மாத்திரமே எழுதியிருக்கின்றார் என்று அறிய முடிகின்றது. இதுவை இவரது சிறுகதைத் தொகுப்புகள் எதுவும் நூலுருவில் வெளிவர வில்லை. இருப்பினும் மலடு (ஈழநாடு), விதி (சிந்தாமணி), புருட் சலட் (சிரித்திரன்), தவறுகள் (அமுதம்), நினைவுகள் (தேசபக்தன்), ஆகிய சிறுகதைகள் அந்தனி ஜீவாவின் சிறந்த சிறுகதைகளாக கருதப்படுகின்றது.
அறுபதுகளின் ஆரம்பத்தில் இலக்கியப் பிரவேசம் :::
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ள அந் தனி ஜீவா தானாக எழுதியும், தொகுத்தும் இதுவரை 17 நூல்களை மலையக வெளியீட்டகத்தின் மூலமாகவும், பிற வெளியீட்டகங்கள் மூலமாகவும் இலங்கையிலும், இந்தியாவிலும் வெளியிட்டுள்ளார். இவரால் எழுதி வெளியிடப்பட்ட நூல்களை பின்வருமாறு சுருக்கமாக நோக்கலாம்
1) ஈழத்தில் தமிழ் நாடகம்
w 1978ம் ஆண்டில் தமிழ்நாடு - திருப்பூரில் நடைபெற்ற கலைஇலக்கிய பெருமன்ற மகாநாட்டில் கலந்துகொண்டு இவர் நிகழ்த்திய ஆய்வுரை 'ஈழத்தில் தமிழ் நாடகம்' என்ற பெயரில் தமிழ்நாட்டிலிருந்து சிவகங்கை, அகரம் வெளியீடாக 1981இல் நூலுருவில் வெளிவந்தது.
30 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)

அந்தனி ஜீவர்
2)
3)
4)
5)
6)
அன்னை இந்திரா
கல்ஹின்னை தமிழ் மன்றத்தின் 25* வெளியீடாக இந்நூல் 1985 மே மாதத்தில் வெளிவந்தது. பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் 1984 ஒக்டோபர் 31ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டதன் எதிரொலியாக அந்தனி ஜீவா தினகரன் வாரமஞ்சரியில் பல வாரங்கள் தொடராக எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.
காந்தி நடேசையர்
கண்டி, மலையக வெளியீட்டகம், நவம்பர் 1990இல் இந் நூலை வெளியிட்டது. 19ம்-20ம் நூற்றாண்டுகளில் இலங்கை யில் மலையக மக்கள் பட்ட அவலங்களிலிருந்து அவர் களை விடுவிக்கப் போர்க்குரல் எழுப்பிய முதல் வழிகாட்டி யான கோதண்டராம நடேசையர் அவர்களின் வாழ்வும், பணியும் இந்நூலில் சுருக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலையகமும் இலக்கியமும் .
மலையக வெளியீட்டகத்தின் மூலம் இந்நூல் நவம்பர் 199 இல் வெளிவந்தது. மலையக இலக்கிய வரலாற்றை அந்தனி ஜிவா இந்நூலில் விரிவாக ஆராய்ந்துள்ளார். இந்நூலுக்கு 1996ஆம் ஆண்டு அரசகரும மொழித் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட தமிழ்த்தின விழாவில் அரச இலக்கிய விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
அக்கினிப் பூக்கள் r - 'அக்கினிப் பூக்கள்', என்ற அந்தனி ஜீவாவின் புகழ்பெற்ற மேடை நாடகப் பிரதியாக்கம் கண்டி, ஞானம் பதிப்பகத் தினால் டிசம்பர் 1999 இல் நூலுருவில் வெளியிடப்பட்டது. இந்நூல் 1999ஆம் ஆண்டிற்கான அரச சாகித்திய விருதினைப் பெற்றது.
சி.வி. சில நினைவுகள்
மலையக கவிஞர் சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் பற்றி
நவமணி வார இதழில் ‘மலைச்சாரல்’ என்ற பகுதியில் மலையக மக்கள் கவிமணி சி.வி. சில நினைவுகள் என்ற தலைப்பில் அந்தனி ஜீவா அவர்கள் எழுதிய கட்டுரைத் தொடரே இந்நூலாகும். இதுவும் மலையக வெளியிட்ட கத்தின் வெளியீடாக 2002 இல் கண்டியில் வெளிவந்தது.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபூஷணம் புண்னியாமீன் 31

Page 26
அந்தனி ஜீவா
7) மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம் எழுத்தா
ளர்களின் பங்களிப்பு
இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத் தின் அனுசரணையுடன் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு, கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 22, 23, 24, ஒக்டோபர் 2002இல் நடைபெற்றது. இம்மாநாட்டில் அந்தனி ஜீவாவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையே இந்நூலாகும்.
8) மலையகம் வளர்த்த கவிதை
மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தினால் இந்நூல் டிசம்பர் 2002 இல் வெளியிடப்பட்டது. இலங்கையில் மலையக இலக்கியத்துக்கு அடிப்படையாகத் திகழ்வது கவிதை என்பதே இலக்கியத் திறனாய்வாளர்களின் கருத்தாகும். ஏனெனில் மலையக இலக்கியத்தின் முன்னோடியாக அமைந்திருப்பது மலையக மக்களின் வாய்மொழிப் பாடல் களே என்பது பொதுவான கருத்தாகும். இவ்வாய்மொழிப் பாடல்கள் இன்றும் மலையகத்தில் விருப்புடன் பாடப்பட்டு வருகின்றன. இத்தகைய பின்னணியில் எழுந்த மலையகக் கவிதைகளின் வளர்ச்சி பற்றி கடந்த கால நூற்றாண்டுக் கும் மேலாக அந்தனி ஜீவா அவர்கள் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
9) கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவை முன்னிட்டு அந்தனி ஜீவா மூலம் தொகுக்கப்பட்ட 250 பக்கங்களைக் கொண்ட நூல் இது. கண்டி மாவட்டத் தமிழர்களின் அரசியல், பொருளாதாரம், சமூகம், சமயம்,கலை, பண்பாடு, முதலான பல்துறை அம் சங்கள் வரலாற்று ரீதியில் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளது.
10) குறிஞ்சி மலர்கள்
மலையக இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்துவரும் பெண் படைப்பாளிகளின் பங்களிப்புக்கள் சரியான முறையில் பதிவுசெய்யப்படுவதில்லை என்ற ஆதங்கம் கொண்டுள்ள அந்தனி ஜீவா மூலம் 12 பெண் எழுத்தாளர்களின் சிறுக தைகளைத் தொகுத்து வெளியிடப்பட்ட நூலே இது.
32 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)

அந்தனி ஜீவர்
இந்நூல் 2000 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தில் மலையக வெளியீட்டகத்தின் மூலம் வெளிவந்தது.
11) குறிஞ்சிக்குயில்கள்
மலையக வெளியீட்டகத்தின் 21வது வெளியீடாக வெளி வந்துள்ள இந்நூலில் மலையகத்தைச் சேர்ந்த 21 பெண் கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. 2002ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 2002 இல் இந்நூல் வெளிவந்தது.
12) efDIT
இந்நூலில் 25 இலங்கை பெண் எழுத்தாளர்களின் சிறுக தைகள் அந்தனி ஜீவாவினால் தொகுக்கப்பெற்று, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திசைகள் அமைப்பின் ஏற் பாட்டில் சென்னை கலைஞன் பதிப்பகத்தினரால் 2004 இல் வெளியிடப்பட்டது. 208 பக்கம் கொண்ட இந்நூலில் இலங் கையின் மூத்த படைப்பாளிகள் முதல் இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர்கள் வரை 25 பெண் எழுத்தாளர் களின் தேர்ந்த சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அந்தனி ஜீவாவின் தாயாரின் நினைவாக அவரது மறைவின் 3ம் ஆண்டு நிறைவு தினத்தில் இந்நூல் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
13) மலையக மாணிக்கங்கள்
மலையகத்தில் தமிழ் வளர்த்தோரும், கலை வளர்த்தோரும், மலையக மக்களுக்காக உரத்த சிந்தனையை விதைத் தோரும் காலந்தோறும் அந்தனி ஜீவாவினால் பல்வேறு ஊடகங்கள், மற்றும் நூல்கள் வழியாக மீள் அறிமுகம் செய்யப்பட்டு வந்துள்ளனர். இவ்வாறு அறிமுகம் செய்யப் பட்ட மலையக மக்களின் முன்னேற்றத்துக்காக உழைத்த முன்னோடிகளில் பன்னிருவரைப் பற்றிய தகவல்களை இந்நூல் தந்துள்ளது. இந்நூல் கொழும்பிலிருந்து துரைவி வெளியீடாக செப்டெம்பர் 1998 இல் வெளிவந்தது.
14) முகமும் முகவரியும் w
1997 இல் இந்நூல் வெளிவந்தது. இந்நூலில் 68 மலையக எழுத்தாளர்களின் விபரங்கள் காணப்படுகின்றன. எழுத்தா ளரின் பெயர், புனைபெயர்கள், தொழில், பிறந்த திகதி, பிறந்த
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபூஷணம் புன்னியாமீன் 33

Page 27
அந்தனி ஜீவா
மாவட்டம், எழுதி வெளிவந்த நூல்கள், எழுதிய முக்கிய படைப்பு, சிறுகுறிப்பு, முகவரி என்பன ஒவ்வொரு பதிவிலும் இடம் பெற்றுள்ளன. இந்நூல் மத்திய மாகாண இந்து கலாசார கல்வி அமைச்சின் வெளியீடாகும்.
15) திருந்திய அசோகன் メ
அந்தனிஜீவாவின் 60வது அகவையை கொண்டாடும் நோக்கில் 2003ம்ஆண்டு நவம்பர் 26இல் பேராசிரியர் எம். சின்னத்தம்பி, கலாநிதி துரை. மனோகரன் போன்றோரின் தலைமைத்துவ வழிகாட்டலில் மணிவிழா நடத்தப்பட்டது. அந்தனி ஜீவா சிறுவயதில் எழுதி தினகரனில் வெளியான திருந்திய அசோகன் என்ற சிறுவர் நாவல், மணிவிழாவையொட்டி அன்றைய தினம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
16) நெஞ்சில் பதிந்த ஐரோப்பிய பயணம்
2003ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் அந்தனிஜீவா இலக்கியப் பயணம் ஒன்றை லண்டன், பாரிஸ் ஆகிய ஐரோப்பிய நகரங்களில் மேற்கொண்டிருந்தார். இவரது பயணக்கட்டுரை தினகரனில் பின்னர் தொடராக வெளிவந்தது. இப்பயணக் கட்டுரை ‘நெஞ்சில் பதிந்த ஐரோப்பிய பயணம்' என்ற பெயரில் சென்னை மணிமேகலைப் பிரசுரத்தினால் 140 பக்கங்களில் கறுப்பு, வெள்ளை புகைப்படங்களுடன் நூலுருவில் வெளியிடப்பட்டது.
17) "மலையகத் தொழிற்சங்க வரலாறு
மலையக எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்களின் ‘மலை யகத் தொழிற்சங்க வரலாறு' என்ற சிறு நூல் நவம்பர் 2005 இல்வெளிவந்தது. இந்நூலில் மலையகத் தொழிற் சங்க வரலாறு என்ற தலைப்பில் இரண்டாண்டு முன்னர் வீரகேசரி வார வெளியீட்டில் இவர் எழுதிய கட்டுரையொன்று சற்று விரிவுபடுத்தப்பட்டு, 24 பக்கங்களில் வெளிவந்துள்ளது.
18) சிறகு விரிந்த காலம் w
அந்தனி ஜீவாவின் கலை, இலக்கியப் பணிகளில் 45 ஆண்டு நிறைவினை முன்னிட்டு இந்நூலினை பிரித்தானியாவின் அயோத்தி நூலக சேவைகளும், கண்டி சிந்தனைவட்டமும் இணைந்து 2007 மே 26ஆந் திகதி வெளியிட்டது. இந்நூலில அந்தனி ஜீவாவினால் எழுதப்பட்ட அவரின் வாழ்க்கைக் குறிப்புகள் சுருக்கமாக பதியப்பட்டுள்ளன.
34 எழுத்தாளர்கள், ஊட்கவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)

அந்தனி ஜீவர்
மலையக கலை இலக்கியப் பேரவை என்ற அமைப்பில் சுமார் 25 ஆண்டு காலம் செயலாளராகப் பணியாற்றி வரும் அந்தனி ஜீவா மலையக வெளியீட்டகம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பிற எழுத்தாளர்களினதும் நூல்களை வெளியிட்டு, ஊக்குவித்து வருகின்றார்.
அந்தனி ஜீவாவின் கலை இலக்கியப் பணியினை கெளர விக்கும் முகமாக தமிழகத்திலிருந்து வெளிவரும் சிற்றிதழ் செய்தி எனும் சஞ்சிகையும், ‘இனிய நந்தவனம்' எனும் சஞ்சிகையும் அதே போல இலங்கையிலிருந்து வெளிவரும் "மல்லிகை’, ’ப்ரிய நிலா ஆகிய சஞ்சிகைகளும் இவரின் நிழல் படத்தை முகப்பட்டையில் பிரசுரித்துள்ளன.
கலை இலக்கிய அரங்கியல் துறையில் எஸ்.ஏ. ஜீவா, கண்டியூர் கண்ணன், மாத்தளை கெளதமன், கவிதா ஆகிய புனை பெயர்களில் ஆரம்பத்தில் எழுதி வந்தபோதிலும் இவரது படைப்புக் களின் வாயிலாக இறுதியில் அந்தனி ஜீவா என்ற பெயரே இன்று வரை நின்று நிலைத்து விட்டது.
இத்தகைய சாதனையாளரின் முகவரி:
அந்தனி ஜீவா த.பெ.இ. 32, கண்டி
தொலைபேசி: 081 5620568
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபூஷணம் பன்னியாமீன் 35

Page 28
பாலா.சங்குப்பிள்ளை
{ LIT6UIT. öIÉlg5ül faÍ1606II
பதிவு 280
எழுத்துத்துறை
மத்திய மாகாணம், நுவரெலியா மாவட்டம், நுவரெலியா தேர்தல் மாவட்டம்; அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் அட்டன் கிராமசேவகர் எல்லையில் வசித்துவரும் சங்குப்பிள்ளை பாலகி ருஷ்ணன் அவர்கள் ‘பாலா. சங்குப்பிள்ளை' எனும் பெயரில் பிரபல்ய மடைந்துள்ள ஜனரஞ்சக எழுத்தாளராவார். இவர் கே.எஸ்.பாலா, இளைய பாலா ஆகிய புனைப் பெயர்களிலும் எழுதி வருகின்றார்.
1957ம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி அட்டனைச் சேர்ந்த சங்குப்பிள்ளை, தாமரை தம்பதியினரின் மகனாகப் பிறந்த இவர் அட்டன் ஹைலன்ஸ் தேசிய பாடசாலை, கண்டி அசோகா வித்தியா 6ou Lò Saáluu6ugból6ör Lu6oopuu LDT6OOT6JJT6AJTj. G.C.E (A/L), A.S.A.A (India), AACB (Landan) ஆகிய கல்வித் தகைமைகளைப் பெற்றுள்ள இவர் அட்டன் டன்பார் வீதி, லிபர்ட்டி பில்டிங் கட்டிடத்தில் தனது தனியார் கணக்காய்வாளர் நிறுவனமான ‘சங்கப்பிள்ளை அன்கோ’ வின் உரிமையாளராகக் கடமையாற்றி வருகின்றார். இவரின் அன்புத் துணைவியார் இந்துராணி. இத்தம்பதியினருக்கு அருண் பிரசாத், சிநேகா ஆகிய இரண்டு அன்புச் செல்வங்கள் உளர்.
36 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)
 

பாலா.சங்குப்பிள்ள்ை
'அமரர் தமிழ்வாணனின் எழுத்துக்கள் தான் எனக்கு எழுது வதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தியது. அவரின் எளிமையான தமிழ் என்னையும் ஜனரஞ்சகமாக எழுத வைத்தது.” என்று குறிப்பிடும் பாலா.சங்குப் பிள்ளை கடந்த இரண்டு தசாப்த காலத்துக்கும் மேலாக எழுதிவருகின்றார். இவரின் கன்னி ஆக்கம் 1980ம் ஆண்டில் தினகரன் பத்திரிகையில் ‘புதிய திருப்பம்’ எனும் தலைப்பில் பிரசுரமானது. 1990ம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன வர்த்தக சேவை யில் இவரது முதலாவது இசையும் கதையும் ஒலிபரப்பானது.
இதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும்,150க்கு மேற்பட்ட அரசியல், விஞ்ஞான, ஆரோக்கிய, சினிமா, இலக்கக் கட்டுரைகளையும், நான்கு தொடர் கதைகளையும், 20 இசையும் கதையும் பிரதிகளையும் எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் தினக்குரல், வீரகேசரி, தினகரன், தினமுரசு, சுடர்ஒளி, மித்திரன் வாரமஞ்சரி, விஜய், மெட்ரோ நியுஸ் ஆகிய பத்திரிகைகளிலும், மல்லிகை, ஞானம், அமுது, சுவைத்திரன், ராணி (இந்தியா) ஆகிய சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
இலங்கையில் ‘துரைவி வெளியீட்டகத்தின் மூலமாக வெளி யான 'உழைக்கப் பிறந்தவர்கள் சிறுகதைத் தொகுதியிலும், மணி மேகலைப் பிரசுரமாக வெளியான மூன்று இலங்கை எழுத்தாளர் களின் சிறுகதைத் தொகுப்பிலும் இவரது சிறுகதைகள் இடம்
பெற்றுள்ளன.
பாலா. சங்குப்பிள்ளை இதுவரை இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த இரண்டு நூல்களும் சென்னை மணி மேக லைப் பிரசுரமாக வெளிவந்துள்ளன. . . . . .
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபூஷணம் புண்னியாமீன் 37

Page 29
பாலா.சங்குப்பிள்ளை
isi: *ళ్ళి*. - مجتهدهنہܙܵܛܲ % ”.S-ر g தமிழ் 8:கித்திடி விழ:
Big seasons afesti AM 3A YA Y A
20ር)5 {cፏፏ፭il {፤፧ነ&i}ሪዏg፣ህm
2{xx; *****/:il 28 - .:: ,
1. காதலுனுக்குக் கல்யாணம் (சிறுகதைத் தொகுதி) 2. ஓர் உன்னதத் தமிழனின் கதை (சிறுகதைத்
தொகுதி)
இவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதியான ஓர் உன் தைத் தமிழனின் கதை’ எனும் நூலுக்கு ‘மிதிலை அகிலன்’ ஜூன் மாத “ஞானம்' இதழில் எழுதிய திறனாய்விலிருந்து சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.
204 பக்கங்களைக் கொண்ட இத்தொகுப்பில் 13 சிறுகதைகள் உள்ளடங்கியுள்ளன. நூலின் முகப்பில் ஆசிரியரின் உரையும் கலாபூ ஷணம் பி.எம்.லிங்கம் அவர்களின் அணிந்துரையும் இடம் பெற்றுள் ளன. தவிர நூலின் பின் அட்டையில் ஆசிரியரின் புகைப்படத்தோடு அவர் பற்றியதும், அவரது படைப்புக்கள் பற்றியதுமான விபரங்கள் பதிவாகியுள்ளன.
இவரது சிறுகதைகளை ஒட்டுமொத்தமாக நோக்கும்போது இரண்டுவித படிமங்கள் தெளிவாகத் தென்படுகின்றன. ஒன்று கதைக ளின் உள்ளடக்கமும் உருவமும் சார்ந்தது. எழுத்தாளரின் கவனத்திற்
38 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)
 
 
 
 
 
 
 
 

பாலா.சங்குப்பிள்ள்ை
குட்பட்ட சம்பவங்களுக்கோ அல்லது கருத்துகளுக்கோ மிக இலகு வான மொழிநடையில் உருவம் கொடுத்து அதற்கூடாக நோகாமல் கருத்தை வெளிப்படுத்தும் இலக்கியவாண்மை.
இரண்டாவது எழுத்தாளரின் கருத்துநிலை சார்ந்தது. சமூகங் களைக் கூறுபோட்டு நிற்கின்ற சாதி, இனம், வர்க்கம் போன்ற இரும்புத்திரைகளைத் தகர்த்து பேதமற்ற ஒரு தேசியத்தை உரு வாக்க வேண்டுமென்ற முனைப்பும், அதை ஒளிவுமறைவின்றிக் கூறும் துணிச்சலும்.
மேற்கூறப்பட்ட இரண்டு விடயங்களையும் தவிர, எழுத்தா ளரின் இயங்கியல் பண்புசார்ந்த இன்னொரு விடயத்தையும் குறிப்பி டுவது அவசியமாகும். மனிதர்களுக்கிடையே பாரம்பரியமாக நிலவி வருகின்ற ஏற்றத் தாழ்வு மரபுகளையும், தங்களை இனங்காட்டிக் கொள்வதில் தயக்கமோ, சலனமோ, சபலமோ இன்றி ‘மலையகத் தமிழனான நான்.” என தனது உரையை ஆரம்பிக்கும் பாலா. சங்குப்பிள்ளை அவர்களின் தாழ்வுச்சிக்கல்களை கடந்த அல்லது களைந்த அவரது வைராக்கியம் பாராட்டுக்குரியது. ஒரு சிருஷ்டிக் கர்த்தாவின் படைப்புக்கள் வாசகர்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றதோ இல்லையோ. ஆனால், அதைப்படைக்கின்ற
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) கலாபூஷணம் புண்னியாமீன் 39

Page 30
பாலா.சங்குப்பிள்ளை
படைப்பாளி எழுதியதைப் போல் வாழ்ந்து காட்டுவதை சமூகம் எதிர்பார்க்கின்றது. சமூகம் எதிர்பார்க்கின்ற அந்த மாற்றத்தை எழுத்தாளர் பாலா. சங்குப்பிள்ளையிடம் ஏற்பட்டிருப்பதை அவரின் உரை மூலம், படைப்புகள் மூலம் உணரக் கூடியதாகவுள்ளது.
சமூகத்தின் இயங்கியலிலுள்ள மேடுபள்ளங்களை அவதா
னித்து, அவர்களுக்கொரு இலக்கியவடிவம் கொடுத்து, திரும்பவும்
அதை சமூகத்தின் பார்வைக்கு விடுகின்ற பாலா. சங்குப்பிள்ளை அவர்களின் வாண்மை பாராட்டுக்குரியது.
1998ம் ஆண்டு 05ம் மாதம் 31ம் திகதி அட்டனில் நடைபெற்ற மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் இவரின் சிறுகதைத் துறைக்காகவும், 2006 ஜனவரி 28,29ம் திகதிகளில் நுவரெலியாவில் நடைபெற்ற மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவின் போது இவரின் எழுத்தாக்கத் துறைக்காகவும், 2006 டிசம்பர் 17ம் திகதி கண்டியில் நடைபெற்ற 2006 - மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவின் போது சிறந்த ஆய்வு நூலுக்காகவும் கெளரவிக்கப்பட்டரர்.
அட்டன் இந்து நலன்புரி கழகம், அட்டன் டிக்கோயா தமிழ்ச் சங்கம், அட்டன் இந்து மாமன்றம் அகியவற்றின் செயலாளராகவும், QabruptibL SLóþěF Friuatsib, 56019 Agro Human Resources Development Foundation போன்ற அமைப்புக்களின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகின்றார். இந்த ஜனரஞ்சக எழுத்தாளரின் முகவரி;-
பாலா. சங்குப்பிள்ளை 465 ஜோதிவிலா, டன்பார் வீதி ஹட்டன்
தொலைபேசி 051-2222399 051-2222057
051-2224977
40 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)

ஜே. மீராமொஹிதீன்
ஜே. மீராமொஹிதீன்
பதிவு 281
எழுத்துத்துறை ܫ
மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், பாத்ததும்பறை பிரதேச செயலாளர் பிரிவில் உடத்தலவின்னை கலதெனிய கிராமசேவகர் வசத்தைச் சேர்ந்த ஜெய்லாப்தீன் மிராமொஹிதீன் அவர்கள், ஒரு அரசாங்க அதிகாரியும், மெளலவியும், எழுத்தாளரும், பேச்சாளரு மாவார.
ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பதாம் ஆண்டு, ஜனவரி மாதம் 28ஆம் திகதி உடத்தலவின்னை கலதெனியவைச் சேர்ந்த ஜெய்லாப்தீன், கதீஜா உம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வராகப் பிறந்த மிராமொஹிதீன் உடத்தலவின்னை க/ ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்பு மஹரகமை கபூரியா அரபுக்கல்லூரியில் பயின்று மெளலவி பட்டத் தையும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத் தையும் பெற்றுள்ள இவர் தற்போது முஸ்லிம் சமய பண்பாட்ட லுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றி வருகின்றார்.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) கலாபூஷணம் புன்னியாமீன் 41

Page 31
ஜே. மீராமொஹிதீன்
இஸ்லாமிய சமய அடிப்படையிலான கருத்துக்களையும், சமூகம் சார்ந்த கருத்துக்களையும் எழுத்துருவிலும், பேச்சுவடிவிலும் முன்வைப்பதில் இவரின் பணி சிறப்பானது. இவரின் கன்னி ஆக்கம் 1985ஆம் ஆண்டில் தினகரன் பத்திரிகையில் இடம்பெற்றது. ‘கல்வித் துறையில் முஸ்லிம்களின் எதிர்காலம் என்ன? எனும் ஆய்வு அடிப்ப டையில் பிரசுரமாகியிருந்த அக்கட்டுரையில் இலங்கையில் சிறு பான்மை சமூகத்தினராக வாழும் முஸ்லிம்களின் எதிர்கால எழுச்சியா னது கல்வியிலே தங்கியுள்ளது என்ற கருத்தினை வலியுறுத்தி எழுதியிருந்தார். அன்று அவரால் எழுதப்பட்ட பல கருத்துக்கள் இன்றும் பொருத்தமானதாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வா றாக சமூக உணர்வினைத் தூண்டக் கூடிய நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார். அவைகள் அவ்வப்போது இலங்கை யின் தேசியப் பத்திரிகைகளிலும், இலங்கை வானொலியிலும் இடம்பெற்றுள்ளன.
இலங்கை வானொலி, ரீலங்கா ரூபவாஹினி, ரீலங்கா சுயாதீன தொலைக்காட்சி (ITN) ஆகிய இலக்றோனிக் ஊடகங்க ளில் சமயம் தொடர்பான இவரின் பல செவ்விகள் ஒலி/ஒளிபரப்பாகி யுள்ளன. அதேபோல இந்த ஊடகங்களில் பல மார்க்கச் சொற்பொ ழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார்.
மெளலவி மீராமொஹிதீன் அவர்களின் தந்தை அப்துர் ரஹற்மான் உதுமான் ஜெய்லாப்தீன் அவர்கள் மிலிட்டரி பொலிஸில் நீண்டகாலம் கடமை புரிந்தவர். உடத்தலவின்னை மடிகே கிராம முன்னேற்றத்தில் பல பணிகளைப் புரிந்தவர். சுயேட்சையாக உடத் தலவின்னை கிராமசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தனது 63வது வயதில் இறையடி சேரும் வரை கிராம அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டார். தந்தை வழியிலேயே மீராமொஹிதீன் அவர்களும் ஊரின் முற்போக்கு நடவடிக்கைகள் பலதில் தனது பங்களிப்பினை நல்கியுள்ளார்.
குறிப்பாக உடத்தலவின்னையில் இடம்பெற்று வந்த மரபு ரீதியான குத்பா முறைகளை மாற்றி காலத்தின் தேவைக்கிணங்க குத்பாக்கள் இடம்பெற வழிசெய்தமை, உடத்தலவின்னை மடிகே புதிய பள்ளிவாயில் நிர்மாணம், உடத்தலவின்னை மடிகே சக்காத், சதகா குழு உருவாக்கம், உடத்தலவின்னை - மடவளையில் நடை பெற்ற தேசிய மீலாத்விழாவின் போது பொறுப்பதிகாரியாக இருந்து பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டமை போன்றவற்றைக்
42 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)

ஜே. மீராமொஹிதீன் குறிப்பிடலாம். அதேநேரம் உடத்தலவின்னை கிராமத்தின் முதல்ா வது மெளலவிப் பட்டம் பெற்ற வரும் இவரே.
இவர் அரசாங்கப் பாடசாலையில் நான்காம் வகுப்பு வரை யிலே கல்வி பயின்றார். தனது சுயமுயற்சியினால் க.பொ.த (சா! த), க.பொ.த (உத) பரீட்சைகளில் சித்தியடைந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றார். தொழில் ரீதியாக மெளலவி ஆசிரியராக நியமனம் பெற்று சிறிது காலம் க/ ஜாமி யுல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரி முதற் கலைமாணி, பொதுக் கலைமாணி பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 'இஸ்லாமிய நாகரிகத்தில் தனியார் வகுப்புக்களை நடத்தி பல பட்டதாரிகள் உருவாக்கம் பெறவும் காரணமாக இருந்தார். 1984இல் முஸ்லிம்சமய கலாசார திணைக்களத்தில் ஆராய்ச்சி உத்தியோகத் தராகப் பதவியில் இணைந்து படிப்படியாகப் பதவி உயர்வுகளைப் பெற்ற இவர்: உதவிப் பணிப்பாளர் பதவிக்காக இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட எழுத்துப் பரீட்சையில் முதலாமிடத்தைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் இணைந்த பின்பு புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்றும் நடவடிக் கைகளுக்கு பொறுப்பாக நின்று செயற்பட்டு வரும் இவர் திணைக் களத்தால் நடத்தப்படும் தேசிய மீலாத் விழாப் போட்டிகள், வெளி நாடுகளுக்குப் புலமைப்பரிசில் பெற்றுத் தரும் போட்டிகள் போன்ற வற்றுக்கும் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றி வருகின்றார்.
இதே நேரம் பள்ளிவாயில்கள் நிர்வாகம் தொடர்பான பொறுப் புக்களையும், முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத் தினால் ஆற்றி வருகின்றார். கலாசார அமைச்சினால் வழங்கப்படும் *கலாபூஷணம்’ விருது வழங்கல் நிகழ்வின் போது முஸ்லிம் கலைஞர் களை தெரிவு செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றார்.
மெலளவி ஜே. மீராமொஹிதீன் இதுவரை நான்கு புத்தகங் களை எழுதி வெளியிட்டுள்ளார். இந்நூல்கள் பற்றி ஈழத்துத் தமிழ்
நூல்களின் சர்வதேச ஆவணப் பதிவான நூல்தேட்டத்தில் திரு.
என். செல்வராஜா அவர்கள் பின்வருமாறு பதிவு செய்திருந்தார்.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபூஷணம் புன்னியாமீன் 43

Page 32
ஜே. மீராமொஹிதீன் இஸ்லாமியக் கதைகள் ஜே. மீராமொஹிதீன், உடத்தலவின்னை 20802 சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே. 1வது பதிப்பு, நவம்பர் 1989 ( அக் குறணை: நீலான் பிரின்டர்ஸ், 372/1, மாத்தளை வீதி) 76 பக்கம், விலை ரூபா 25, அளவு 21x13.5 ச.மீ
சிந்தனைவட்டத்தின் 2வது வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூல் முஸ்லிம்,சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராயிருந்த அல்ஹாஜ் மெலளவி ஜே. மீராமொஹிதீன் அவர்களால் எழுதப்பட்டது. இஸ்லாமிய அடிப்படையில் ஹதீஸ் என்பது நபி நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளும், நடைமுறை களுமாகும். இந்த அடிப்படையில் 40 ஹதீஸ்களை மையமாகக் கொண்டு அந்த ஹதீஸ்கள் புலப்படுத்தும் கருத்தினை 40 சிறுவர் கதைகளாகத் தந்துள்ளார் நூலாசிரியர். சிறுவர் கதைகளாக இவை காணப்பட்டபோதும் அனைவருக்கும் ஏற்ற நல்ல கருத்துக்களைப் போதிப்பதாக அமைந்துள்ளது. இந்நூல் 1998ல் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியிடப்பட்டுள்ளது.
(பதிவு எண்: 2162 இஸ்லாமியக் கதைகள் எனும் இந்நூல் மூன்று பதிப்புகள் வெளிவந் துள்ளமை குறிப்படத்தக்கது.
ஹஜ் வழிகாட்டி மெலளவி ஜே.மீராமொஹிதீன் (தொகுப்பாசிரியர்) கொழும்பு 2: முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், 34 மலே வீதி, 16ug LugoüL LDstjå 1999. (GæTEplbL 12. Milir Graphics, FLG 15, Dias Place) 98 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை. அளவு 13.5x11 ச.மீ
முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளுள் இறுதிக் கடமையான ஹஜ் கடமையை நிறைவேற்ற ஆண்டுதோறும் இலங்கையிலிருந்து மக்கா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அண்மைக்காலத்தில் வெகு வாக அதிகரித்துள்ளது. தற்போது இத் தொகை ஐயாயிரத்து ஐநூ றையும் தாண்டியுள்ளது. எனவே ஹஜ் கடமைகளை நிறைவேற்றச் செல்லும் பயணிகள் மக்கா, மதீனா ஆகிய நகரங்களில் தாம் தரித்திருக்கும் ஒரு மாத காலத்தில் எத்தகைய மதக் கடமைகளில் எவ்வாறு ஈடுபடவேண்டும் என்பதை விளக்கும் நூல் இது. பிரதானமாகத் தமிழ்மொழியில் இந்நூல் எழுதப்பட்டுள்ள போதிலும் தேவையான முக்கிய விளக்கங்களை சிங்களம், ஆங்கிலம் ஆகிய
44 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)

ஜே. மீராமொஹிதீன்
இரு மொழி களிலும் இந்நூலின் தொகுப்பாசிரியரும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் உதவிப் பணிப்பாளருமான அல்ஹாஜ் மெலளவி ஜே.மீராமொஹிதீன் அவர்கள் தந்திருக் கின்றார். (பதிவு எண்: 3158)
நோன்பின் மாண்பு
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ‘நோன்பின் மாண்பு' எனும் நூலினையும் இவர் எழுதி வெளியிட்டுள் ளார். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பு (உபவாசம்) பற்றி விளக்கம் தருவதாக இந்நூல் அமைந்துள்ளது.
பாத்ததும்பறை முஸ்லிம்களின் வரலாறும், பாரம்பரியமும்
2002ஆம் ஆண்டு தேசிய மீலாத்விழா பாத்ததும்பறை தேர்தல் தொகுதியில் நடைபெற்ற போது இந்நூல் வெளிவந்தது. இந்நூலின் பதிப்பாசிரியர் ஜே. மீராமொஹிதீன், எம்.எம்.எம். அனஸ், எம்.ஐ. நாகூர் கனி ஆகியோராவார். இந்நூல் பற்றி சர்வதேச தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான நூல்தேட்டம் தொ குதி - 4 இல் பின்வருமாறு பதிவாக்கப்பட்டிருந்தது.
பாத்ததும்பறை முஸ்லிம்களின் வரலாறும், பாரம்பரியமும்;~.M. மீராமொஹிதீன், M.S.M. அனஸ், S.I. நாகூர் கனி (பதிப்பாசிரியர்கள்) கொழும்பு 12: முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், 34 மலே வீதி, 1வது பதிப்பு டிசம்பர் 2002. (Colombo 12: Pritcom Ltd, 134. Hulfsdorp Street) : ix,277 பக்கம் விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21.x13.5 ச.மீ
கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் தொகுதியே பாத்ததும்பறை என்பதாகும். இங்கு மடவளை பஸார், உடத்தலவின்னை மடிகே, வத்தேகெதர, உளுகங்கை போன்ற பல முஸ்லிம் கிராமங்கள் உள்ளன. 2002 தேசிய மீலாத்விழா வைபவத்தை மையமாகக் கொண்டு இந்நூல் வெளியிடப்பட்டது. பாத்ததும்பறை தேர்தல் தொகுதியைச் சேர்ந்தவரலாற்று முக்கி யத்துவம் மிக்க மடவளை பஸார், உடத்தலவின்னை மடிகே
ஆகிய கிராமங்களின் வரலாறும், பாரம்பரியங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (பதிவு எண்: 2936)
இத்தம்பதியினருக்கு ஷாபினாஸ், ஷிபா, சுக்ரா, ஹஸன், ஹாசைன் ஆகிய அன்புச் செல்வங்களுளர். தன்னுடைய இலக்கிய
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபூஷணம் புண்னியாமீன் 45

Page 33
ஜே. மீராமொஹிதீன்
எழுத்துத்துறை ஈடுபாட்டுக்கு காரணகர்த்தாக்கள் என்ற வகை யில் கலாபூஷணம் பீ.எம்.புன்னி யாமீன் அவர்களையும், மற்றும் முஸ்லிம்சமய பண்பாட்டலுவல் கள திணைக்கள அதிகாரிகளை யும் அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவரின் தற்போதைய வதிவிட முகவரி;-
J. Meera Mohideen 214B, Modara Moratuwa. Tel:-0714253019
46 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)
 

வை. அநவரத விநாயகமூர்த்தி
வை. அநவரத விநாயகமூர்த்தி
எழுத்துத்துறை
வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டத்தில் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்போது மேல்மாகாணம், கொழும்பு மாவட் டம், தெஹிவளை - கல்கிசை தேர்தல் தொகுதியில், தெஹிவளை 540E கிராமசேவகர் பிரிவில் வசித்துவரும் பழுத்த தமிழ்ப் புலமைப் பாரம்பரியத்தில் வந்த ‘சிவநெறிச் செம்மல்" வைத்தியலிங்கம் அநவரத விநாயகமூர்த்தி அவர்கள் பவளவிழாக் கண்ட முதுபெரும் எழுத்தாளரும், ஊடகவியலாளருமாவார்.
1923ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி யாழ்ப்பாணத் தைச் சேர்ந்த இணுவில் எனும் கிராமத்தில் பரம்பரையாக சமயத் தொண்டும், தமிழ்ப் பணியும் புரிந்து வந்த குடும்பத்தில் ‘தணிகைப் புராண உரையாசிரியர் மகாவித்துவான் பொ. அம்பிகைபாகரின் புதல்வரும், இயற்றமிழ் ஆசிரியருமான அ.க.வைத்தியலிங்கம் செல்லம்மா தம்பதியினரின் கனிஷ்ட் புதல்வராகப் பிறந்த அநவரத விநாயகமூர்த்தி அவர்கள் இணுவில் ரீ அம்பிகைபாகர் சைவப்பிர காச வித்தியாலயத்தில் (தற்போது இணுவில் இந்துக்கல்லூரி) ஆரம் பக்கல்வியைக் கற்றார். . . .
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) கலாபூஷணம் புன்னியாமின் 47

Page 34
வை. அநவரத விநாயகமூர்த்தி
பின்னர் கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர்கல்வியைக் கற்றார். யாழ் இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும்போது இலண்டன் மற்றிக்குலேசன் (London Matriculation Exam) uTL-55L-55bCasiou bliss lull 65(35L. பரீட்சையில் தமிழ்மொழி, ஆங்கிலமொழி, ஆங்கில இலக்கியம், கணிதம் ஆகிய பாடங்களில் அதி விசேட சித்திபெற்றார். அத்துடன் சென்னைப் பல்கலைக்கழக தமிழ் வித்துவான் முதலாவது தேர்வுப்
பரீட்சையிலும் சித்தியடைந்தார்.
யாழ் இந்துக் கல்லூரியில் 1939ல் உயர்தர வகுப்பு மாணவ னாகக் கல்வி கற்று வரும்போது 'அந்தி மாலைக் காட்சி என்ற கட்டுரை எழுதி கல்லூரிச் சஞ்சிகையான ‘இந்து இளைஞனில் (Young Hindu) வெளியிட்டதுடன் அவர் எழுத்துலகில் காலடி எடுத்து வைத்தார். ‘வளரும் பயிரை முளையில் தெரியும்' என்பர். மாணவப் பருவத்திலேயே எழுதும் துடிப்பும், தூண்டலும் பெற்றதால் எழுத்து அவருக்கு இயற்கையிலே இயல்பாக அமைந்த உள்ளுணர்வு என்பது தெளிவு. 1939ஆம் ஆண்டில் தொடங்கிய எழுத்துப் பணி இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது அவர் தனது பதினோராவது நூலான 'ஆனந்த நடனம்' என்னும் நூலை எழுதிக் கொண்டிருக் கிறார்.
ஆம் ஆண்டில் அரசாங்க சேவையில் எழுது வினைஞ் 1944 ܫ னாகச் சேர்ந்த அநவரத விநாயகமூர்த்தி படிப்படியாக பதவி உயர்வு பெற்று இறுதியாக கல்வி அமைச்சில் நிர்வாகஅதிகாரியாகக் கடமை யாற்றி 1983ஆம் ஆண்டில் ஒய்வுபெற்றார்.
1956ஆம் ஆண்டில் திருநெல்வேலியைச் சேர்ந்தவரும், யாழ் இந்து மகளிர் கல்லூரியில் ஆசிரியையாகக் கடமையாற்றிய வரு மான அருளம்பலம் சிவயோகம் என்னும் மங்கை நல்லாளைத் தனது வாழ்க்கைத் துணைவியாக ஏற்று நடத்திய இல்லறம் என்னும் நல்லறத்தின் பயனாக சிவகுமார், சிவானுசாந்தன் என்னும் இரு புத்திரர்களும், சிவகெளரி என்னும் புத்திரியும் இவருக்கு உளர்.
தனது சமய, இலக்கிய, பத்திரிகைத்துறைகளில் வழிகாட் டியாக இருந்தவர்கள் முறையே தனது தந்தையார் இயற்றமிழ் ஆசிரியர் அ.க. வைத்தியலிங்கம், கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, முதுபெரும் பத்திரிகையாளர் எஸ்.டி. சிவநாயகம்
48 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விரத்திரட்டு - (தொகுதி 11)

வை. அநவரத விநாயகமூர்த்தி
ஆகியோர். இவர்கள் மூவரும் தற்போது அமரத்துவம் அடைந்து விட்டபோதிலும் அப்பெரியார்களை இன்றுவரை அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இணுவை மூர்த்தியின் இலக்கியப் பணிகள் பல துறைகளிலும் வியாபித்து நிற்பதினால் அதனைச் சுருக்கமாகப் பின்வரும் அடிப்படையில் வகுத்து நோக்குவது இலகுவாக அமை
6TD. Ο
1) பத்திரிகைத்துறை 2) இலக்கியத்துறை 3) சமய, சமூகப் பணிகள்
பத்திரிகைத்துறை
இலங்கையில் தமிழ்பேசும் மக்களிடையே தமிழ் பண்பாடு, கலாசாரம் முதலியவைகளைப் பரப்புவதற்கும். காலத்திற்கேற்ப புதிய கருத்துக்களைப் படைத்து தமிழ் மொழியை வளர்ப்பதற்கும் இலக்கிய சஞ்சிகைகள் குறைவாக இருந்த காலகட்டத்தில் தமிழ் இலக்கிய சஞ்சிகைகள் வெளிவர வேண்டும் என்ற துடிப்பு மிக்க இளைஞராகக் காணப்பட்ட அநவரத விநாயக மூர்த்தி அவர்கள் 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் (ஜயவருஷம், சித்திரை மாதம்) 'உதயம்' மாத சஞ்சிகையின் முதலாவது இதழை வெளியிட்டார்.
1956ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தொடர்ச்சியாக மூன்றாண்டுகள் வெளிவந்த இச்சஞ்சிகையை எத்தனையோ சோத னைகளுக்கும், தனது தனிப்பட்ட அரச பணிப்பழுவுக்கும் மத்தியில் அரசாங்கத்தின் அனுமதியுடன் கெளரவ ஆசிரியர் பொறுப்பை ஏற்று ஒரு புதிய சகாப்தத்திற்கு வித்திட்டார்.
தமிழ் இலக்கிய வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு இலக்கியம், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நகைச்சு வைகள், பாலர் மன்றம், மாதர் பகுதி முதலிய பல்வேறு அம்சங்க ளைக் கொண்டு வெளிவந்த "உதயம்' சஞ்சிகையின் செந்தமிழ் மணம் கமழும் ‘இரண்டு ஆண்டு மலர்களையும் வெளியிட்டார்.
கவிதைப் போட்டி, சிறுகதைப் போட்டி என்று போட்டிகளை நடத்தி இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்ததோடு பரிசுகளும்
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 00: கலாபூஷணம் புன்னியாமீன் 49.

Page 35
வை. அநவரத விநாயகமூர்த்தி
வழங்கி அவர்களைக் கெளரவித்தார். ‘சிற்பி சரவணபவன், கச்சாயில் இரத்தினம், கே. டானியல் போன்ற சிறுகதை எழுத்தாளர்களும் செ. வேலாயுதபிள்ளை, வன்னியூர் வேலன் போன்ற கவிஞர்களும் பரிசு பெற்று உற்சாகமடைந்து பெரும் எழுத்தாளர் ஆனார்கள்.
'உதயம் ஈழத்தில் பல புதிய எழுத்தாளர்களை உருவாக்கிய தோடமையாது அவர்கள் மத்தியில் ஒரு புத்துணர்ச்சியைத் தூண்டி விட்டது. இவ்வாறு ஈழத்து இலக்கிய உலகில் 1950களில் 'உதயம் சஞ்சிகை புரிந்த இலக்கியப் பணியைத் தமிழ்நாட்டு சஞ்சிகைகளும், ஈழத்து சஞ்சிகைகளும் திறம்படப் பாராட்டின. உதாரணத்திற்கு சில பத்திரிகைகளின் அபிப்பிராயத்தைக் கீழே இணைத்துள்ளேன்.
* சேய் நாடாகிய இலங்கையிலிருந்து வெளியாகும் உதயம் (மாதப் பத்திரிகை) தமிழ் இலக்கிய வளர்ச்சியையே குறிக்கோளாகக் கொண்டு தமிழ்ப் புத்தாண்டிலிருந்து வருகிறது. வித்துவான் பண்டிதர் க.பொ. இரத்தினம் எம்.ஏ, பி.ஓ.எல். அளிக்கும் இலக்கிய விருந்தில் வள்ளல் பாரியைப் பற்றிய கட்டுரை சுவைமிகு தமிழில் தீட்டப் பட்டு இலக்கிய மணம் வீசுகிறது.
. கல்கி (சென்னை) 1954.08.15
* தமிழ் வருடப் பிறப்பிலிருந்து உதயம் வெளிவரத் தொடங் கியுள்ளது. முதல் இதழில் ரீ பி.கோதண்டராமன், திரு. கா.பொ. இரத்தினம், ரீ.வை அநவரத விநாயக மூர்த்தி முதலியோர் நல்ல கட்டுரைகள் எழுதியுள்ளனர்.
- விந்தியா (பம்பாய்) - ஜூலை 1954 -
料 இலங்கையிலிருந்து வெளிவந்த மலர்களில் ஒரு தனி ஸ்தானத்தை உதயம் ஆண்டு மலர் பெறுகின்றது.
- வீரகேசரி (கொழும்பு) -
* “இணுவை மூர்த்தி” அவர்களின் இடையறாத முயற்சியால் வத்தளை என்ற இடத்திலிருந்து கடந்த ஓராண்டு கால மாக திங்கள் தோறும் உதயமாகி வந்து கொண்டிருக் கும் உதயத்தின் ஆண்டு மலரைப் பார்த்ததும் தமிழர் களின் இதயங்களில் நீங்காத ஒர் இடத்தை "உதயம்' பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மை புலப்படுகிறது. - சுதந்திரன் (கொழும்பு) 1955.07.10 -
50 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)

வை. அநவரத விநாயகமூர்த்தி
சஞ்சிகையின் வளர்ச்சி வெறும் சொல்லோவியங்களால் மட்டும் அமைந்து விடுவதில்லை. சிறந்த உயிர்ச்சித்திரங்களும் அதன் வளர்ச்சிக்கு இன்றியமையாத சாதனமாகும். இந்த உண் மையை நன்கு புரிந்து கொண்ட விநாயக மூர்த்தி சிறந்த சித்திரக் கலைஞர்களான சிவஞான சுந்தரத்தையும் (சிவாஜி சிரித்திரன் சுந்தர்) அம்பிகைபாகனையும் உதயத்தின் இலக்கியப் பணியில் தன்னோடு இணைத்துக் கொண்டார். சித்திரக்காரர் சிவாஜி தீட்டிய கேலிச்சித்திரங்கள் (Cartoons) வாசகர்களுடைய சிந்தனைக்கு விருந் தாக அமைந்து அவர்களுடைய பாராட்டுக்களையும் பெற்றன.
இவ்வாறு சீரும் சிறப்புமாக வளர்ச்சியடைந்து வந்த இந்தச் சஞ்சிகை, பொருளாதாரக் கஷ்டத்தினால் 1956ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் தொடர்ந்து வெளிவர முடியாது விட்டமை பெரிதும் கவலையளிப்பதாகும்.
உதயம் இலக்கியத் திங்கள் வெளியீட்டில் எழுதிவந்த சில எழுத்தாளர்களின் பெயர்களை இவ்விடத்தில் ஞாபகமூட்டுவது அர்த்தமுள்ளதாக அமையும். வித்துவான் பண்டிதர் க.பொ. இரத்தி னம், வித்துவான் க.கி. நடராஜன், வித்துவான் எப்.எக்ஸ்.ஸி. நடராசா, வை. சுப்ரமணியசிவம், லஷ்மி வேலுப்பிள்ளை, வை. அநவரத இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபூஷணம் புன்னியாமீன் 51

Page 36
வை. அநவரத விநாயகமூர்த்தி
விநாயக மூர்த்தி, செ. வேலாயுதபிள்ளை, மஹாகவி, முருகை யன், கி.வா. ஜகந்நாதன், பரமஹம்ஸதாசன், நாவற்குழியூர் நடராசன், சில்லையூர் செல்வராசன், ஈழத்துச் சோமு, அ. ந. சுந்தசாமி, கச்சாயில் இரத்தினம், தாழையடி சபாரத்தினம், கே. டானியல், பேராசிரியர் கே. கைலாசபதி. இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
இலக்கியத்துறை
அநவரத விநாயகமூர்த்தி அவர்களின் இலக்கியத்துறை செயற்பாடுகள் பற்றிய பதிவுகளைத் தேடுகையில் 1956ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 02ஆம் திகதி 'ஈழ கேசரி’ பத்திரிகையில் ‘தமிழ் வளர்க்கும் செல்வர்கள்’ எனும் தலைப்பில் இளவரசு எழுதியிருந்த கட்டுரையின் ஒரு பகுதியை அறிமுகமாகக் கொள்ளலாமெனக் கருதுகின்றேன்.
“.ஈழத்தில் அன்று தமிழ் வளர்த்த பெரியார்களிற் பலர் ஆங்கிலத்திலே பாண்டித்தியம் பெற்று அரசாங்க பதவி வகிப்பவர் களாகத் தான் இருந்தார்களென்பதை அவர்களது வாழ்க்கை வரலாறுகள் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக் கின்றன. அந்நியராட்சியின் கீழ் அப்பெரியார்கள் சேவை செய்தார்களென்றாலும் தம் தாய்மொழியின் வளர்ச்சிக்காக எத்தனையோ பல அரிய காரியங்களைச் சாதித்துள்ளார்கள். ஆனால் இன்று ஆரம்ப ஆங்கில அறிவோடு இலிகிதர்களா கப் பேனா பிடிக்கும் வாலிபர்களிடையே தானும் தமிழ்மொழி யைப் பற்றிப் பேசினால் அதற்கும் தமக்கும் வெகுதூரம் என்ற தன்மையில் விலகிக் கொள்கிறார்கள். அவர்கள் பெருமைப்படுவதெல்லாம் நீண்ட காற்சட்டையையும் நிம்மதி யாக வாயில்வைத்துப் புகைக்கும் கவின் சுருட்டையும்(சிகரட்) பற்றித்தான் என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம். தாய் மொழியைப் பேச வெட்கப்படும் அவ்வாலிபர்கள் மத்தியில் தனையர்கள் சிலர் இன்றும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களது தாய்மொழி ஆர்வத்திற்குரிய சந்தர்ப்பகாரணங் களை நாம் இங்கு ஆராய்வதிலும் பார்க்க அந்த ஆர்வத் தைப் பாராட்டுவதுதான் சாலப்பொருத்தமானது. அவ்விதம் பாராட்டுதலுக்குரியவர்களில் திரு. அநவரத விநாயக மூர்த்தியும் ஒருவராக விளங்குகிறார் என்பதை நிரூபிக்க நாம் ஆதாரம்தேடி அலைய வேண்டிய அவசியமேஇல்லை.”
52 எழுத்தாளர்கள், ஊடகவியலார்கள், கலைஞர்களின் விரத்திரட்டு - (தொகுதி 1)

வை. அநவரத விநாயகமூர்த்தி
இந்த அடிப்படையில்: மக்கள் இலக்கியம் படைக்கும் கலை ஞர்களை மதிக்க வேண்டும் என்பதை விருப்பமாகக் கொண்ட அநவரத விநாயகமூர்த்தி தனது பெயரைச் சுருக்கித் தன் பிறந்த கமான இணுவிலின் பெயரோடு அதனை இணைத்து இன்று இணுவை மூர்த்தியாக எழுத்தாளர் மத்தியில் பிரகாசிக்கின்றார்.
இணுவை மூர்த்தியின் இலக்கிய சிருஷ்டிகளில் இருந்து அவர் தமிழ் ஆர்வம் மிக்க ஒருவர் என்பதை அவதானிக்கக் கூடிய தாக இருக்கிறது. அந்த வகையில் “அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்”, “வள்ளுவன் தந்த தமிழ் மறை”, “நற்றமிழ் வல்ல நாவலன்", மக்கள் கவிஞன் பாரதி”, “சாகுந்தலத்தில் ஓர் இனிய காட்சி” போன்ற கட்டுரைகள் இலக்கிய இன்பம் தருவன. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் அவருக்குள்ள தொடர்பு அவரது கட்டுரைகளில் பரந்து விளங்கக் காணலாம். . . . .
தமிழ் நாட்டுப் பாடசாலைகளில் பத்தாம் வகுப்பு மாணவர்க ளுக்காக வெளியிடப்பட்ட ‘திரிவேணித் தமிழ்ச் செல்வம்' என்ற பாடநூலில் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் இருவரின் படைப்புக்கள் இடம்பெற்றுள்ளன. ‘ஞயம்படவுரை' என்ற பொருளில் அநவரத விநாயகமூர்த்தி எழுதிய படைப்பு அவற்றில் ஒன்று. மற்றது ஈழத்து தமிழ் அறிஞரும் முன்னாள் அமைச்சருமான சு. நடேசபிள்ளை எழுதிய ‘கடல் கடந்த தமிழ்' என்னும் கட்டுரை. அந்த நூலில் தத்துவஞானியும், முன்னாள் இந்திய ஜனாதிபதியுமான சர்வபள்ளி இராதா கிருஷ்ணன், கி.ஆ.பெ. விசுவநாதன், கி.வா. ஜகந்நாதன், சேர். சி.வி. இராமன் போன்ற அறிஞர்களின் படைப்புகளும் இடம் பெற்றிருந்தன.
அண்மையில் வெளிவந்த இணுவை மூர்த்தியின் பத்தாவது நூலானா “இலங்கை இலக்கியத்தில் இனிய முத்துக்கள்” என்பது தமிழக மணிமேகலைப் பிரசுரத்தினரின் வெளியீடு. இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய 'கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“ஆழ்ந்த அறிவு, மரபிலக்கியப் பயிற்சி, சமயப் புலமை, வரலாற்று ஞானம், இவையனைத்தும் கைவரப் பெற்ற *சிவநெறிச் செம்மல்" அவர்களின் கட்டுரைகள் இளையதல்ை முறையினருக்கு தமிழின் ஆழத்தினையும், உண்மையினை யும் உணர்த்தும் என்பதில் ஐயமில்லை.” . .
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) கலாபூஷணம் புன்னியாமின் 53.

Page 37
வை. அநவரத விநாயகமூர்த்தி
சப்ரகமுவ பல்கலைக்கழக முதுநிலைத் தமிழ் விரிவுரை யாளர் வாகீச கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்கள் மேற்குறித்த நூலுக்கு அணிந்துரை வழங்கும் போது
“.நூலாசிரியர் இணுவை மூர்த்தி ஈழத்தின் மரபுவழி இலக் கியக் கல்விப் பாரம்பரியத்தின் வழிவந்த ஒருவர். இவரது கருத்தியல் சிந்தனையோட்டத்தில் ஆழமான சைவாசார மரபுப் பிடிப்பும், தமிழ், தமிழரின் பெருமை சார்ந்த அதீத பற்றும் தாம் அவதரித்த பிறப்பு மதமான சைவத்தின் பற்று றுதி வைராக்கியமும் தொனிக்கும் ஈழத்தின் புகழ்பூத்த
நீண்டதொரு நாவலர். பாரம்பரியத்தின் சுவடுகளையும், ஒடலாவணங்களையும் எச்ச சொச்சங்களையும் மூர்த்தியின் எழுத்து நடையிலே கண்டுகளிக்கலாம்.” எனக் குறிப்பிட் டுள்ளமை கவனிக்கத்தக்கது.
சென்னை. அடையாறில் அமைந்துள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தினர் 1980ஆம் ஆண்டில் தொகுத்து வெளியிட் டுள்ள 'உலகத் தமிழ் எழுத்தாளர் யார்? எவர்?’ என்னும் நூலில் இணுவை மூர்த்தியின் இலக்கியப் பணிகள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ‘கல்கி கிருஷ்ண மூர்த்தியினால் ஆரம்பிக்கப் பட்ட சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்ப கால உறுப்பினராக அநவரத விநாயக மூர்த்தி இருந்துள்ளார்.
சமய, சமூகப் பணிகள்
இவரது இலக்கியப் பணி, சமய, சமூகப் பணிகளுடன் இணைந்ததாகவே காணப்படுகின்றது. இலக்கியத்தை வேறாகவும் சமயத்தை வேறாகவும் பிரித்து எழுதாமல் இலக்கியத்தினூடாகவே சமயத்தையும் இணைத்து எழுதி வருகின்றமை மிகவும் குறிப்பிடக் கூடிய ஒரு விடயமாகும். இலங்கையிலும், தமிழ் நாட்டிலும் வெளி வரும் சஞ்சிகைகளுக்கும், சிறப்பு மலர்களுக்கும் இலக்கியம், வர லாறு, ஆராய்ச்சி ஆகிய துறைகளில் கடந்த அறுபது ஆண்டுகளாக கட்டுரைகள் எழுதி வருகின்றார். இவைகளுள் பல சமயத்துடன் இணைந்தவையே.
1948ஆம் ஆண்டு தொடக்கம் 1951ஆம் ஆண்டுவரை
54 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (G57(5a5 11)

வை. அநவரத விநாயகமூர்த்தி
வத்தளை-உணுப்பிட்டி இந்து சன்மார்க்க சங்கத்தின் உதவிச் செய லாளராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் கல்வி அமைச்சில் கடமை யாற்றிய காலப்பகுதியில் இந்துமன்றத்தின் செயலாளராகவும், துணைத் தலைவராகவும், தலைவராகவும் சைவ சமய வளர்ச்சிக்கு அரும்பெரும் பணியாற்றியுள்ளார். சங்கத்தின் சார்பில் சமய நூல் களை வெளியிட்டது மட்டுமன்றி பாடசாலை மாணவர்களிடையே சமய அறிவைப் பேச்சுப் போட்டிகள் மூலம் பரப்புவதில் முனைப்புடன் செயற்பட்டு வந்துள்ளார். பல ஆண்டுகள் கலைமகள் விழாக்களை நடத்துவதற்கு அச்சாணியாக செயற்பட்டவர் இணுவை மூர்த்தியே. கல்வி அமைச்சின் கலைமகள் விழா என்றால் தனிச் சிறப்புடன் நடப்பதற்கு அயராது உழைத்த தொண்டன் இணுவை மூர்த்தி என்று கூறுவது மிகையாகாது.
தற்போது இணுவை மூர்த்தி சர்வதேச சமய சுதந்திரத்திற் assigOT pégj616Orissar (International Association for Religious Freedom) கொழும்புப் பிரிவின் துணைத் தலைவராகப் பணியாற்றி வரு கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய சைவத்தமிழ் பற்றுக்கு வித்திட்டவர் தனது தந்தையாரே எனக் குறிப்பிடும் விநாயக மூர்த்தி இது பற்றி மேலும் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“. இணுவையம்பதியில், வாழையடி வாழையாக சைவத் தையும், தமிழையும் பேணிக் காத்த பரம்பரையில் வந்து பிறந்தமையினால் இளமைப் பராயத்திலேயே அடியேனுக்கு சைவ சமயத்திலும் தமிழ் மொழியிலும் ஆழ்ந்த பற்று ஏற் பட்டது என்றே கூறலாம். எங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பிரசித்தி பெற்ற இணுவில் ரீ பரராஜ சேகரப் பிள்ளை யார் திருக்கோயிலுக்குத் தினமும் காலையில் சென்று வழி பாடுகள் செய்து வருவது வழக்கம். மாலையில் சிறிது தூரத்தில் அமைந்துள்ள கந்தசுவாமி கோயிலுக்கும் சென்று வழிபாடுகள் செய்துவிட்டு வந்து பாடங்களைப் படிப்பது அன்றாட வழக்கமாக இருந்து வந்துள்ளது. பாடசாலை விடு முறை நாட்களில் அபிராமி அந்தாதி திருக்குறள், நல்வழி போன்ற நூல்களில் பத்துப் பாடல்கள் தினந்தோறும் மனப் பாடம் செய்து தந்தையாருக்கு ஒப்புவிக்க வேண்டும். இவ்வாறு செய்துவர காலப்போக்கில் என்னையும் அறியாம லேயே சைவ சமயப் பற்றும் தமிழ்மொழிப்பற்றும் என்உள்ளத்
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபவனம் புன்னியாமீன் 55

Page 38
வை. அநவரத விநாயகமூர்த்தி
தில் ஆழமாக வேரூன்றிவிட்டன. இந்தச் சந்தர்ப்பத்தில் எனது இளமைப் பிராயத்தில் எனது தந்தையாருடன் திருச் செந்தூருக்கு யாத்திரை சென்று முருகன் அருள் பெற்று வந்தமையை ஒருபெரும் பேறாகக் கருதுகின்றேன்.
“.1928ஆம் ஆண்டில் எனக்கு ஐந்து வயதாக இருக்கும் போது தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகனுக்குரிய ஆறு படை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருத்தலத்திற்கு எனது தந்தையாருடன் யாத்திரை சென்று வந்தமை இன்றும் எனது நினைவில் பசுமையாக இருக்கிறது. யான் குழந்தை யாக இருக்கும்போது எனக்கு எற்பட்ட கடுமையான சளிச் சுரம் உரிய மருந்துகளைப் பாவித்து வந்ததனால் குணம டைந்தபோதும் அதன் தாக்கம் எனது பேசும் சக்தியைப் பெரிதும் பாதித்தது. அதனால் தெளிவாகப் பேச முடியாத நிலை எற்பட்டது. எனது பெற்றோர் தகுந்த வைத்தியம் செய்வித்தும் பேசும் ஆற்றலில் எதுவித முன்னேற்றமும் இல்லாமையினால் திருச்செந்தூர் முருகப் பெருமானை வேண்டுதல் செய்ததுடன் நேர்த்திக்கடனும் வைத்துவிட்டனர். அந்த நேர்த்தியை நிறைவேற்றவே என்னையும் அழைத்துக் கொண்டு தந்தையார் கந்தசஷ்டி விரத காலத்தில் திருச்செந் தூர் சென்றார். அத்திருத்தலத்தில் கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களும் தந்தையார் நோன்பிருந்து செந்தி முதல்வனை வேண்டுதல் செய்ததன் பயனாக மீண்டும் பேசும் சக்தியைப் பெற்றதாக அறிந்தேன். அதனால் காலப்போக்கில் முருகப் பெருமானிடம் தீவிர பக்தி ஏற்பட்டது.”
இதுவரை இவரின் பத்துப் புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
1) நவராத்திரியும், கலைமகள் வழிபாடும் - 1975 2) கல்விச் செல்வி - 1978 3) நக்கீரர் தந்த நன்முருகாற்றுப்படை - . 1978 4) யாழ் திருநெல்வேலி அருள்மிகு ரீ
முத்துமாரி அம்பாள் ஆலய வரலாறு - 1994 5) தேவியர் மூவர் தோத்திரப்பாடல்கள் - 1997 6) சிவயோக சுவாமிகளும், அவர் அருளிய போதனை
களும் -1998 7) திருநெல்வேலி பழங்கிணற்றடி முறி வீரகத்தி விநாய கர் ஆலய வரலாறு (இந்து சமய பண்பாட்டு அலு
56 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)

வை. அநவரத விநாயகமூர்த்தி
8) சிவநெறிச் சிந்தனைகள் 2000 9) யாழ்ப்பாணம் இணுவில்அருள்மிகு ரீபரராஜ
சேகரப்பிள்ளையார் திருக் கோயில் - 2003 10) இலங்கை இலக்கியத்தில் இனிய முத்துக்கள்
2004 س
இவரது நக்கீரர் தந்த நன்முருகாற்றுப்படையெனும் நூலினை கல்வியமைச்சு கல்வி வெளியீட்டுத் திணைக்களம், பரீட்சைத் திணைக்களம், பாடவிதான அபிவிருத்தி நிலையம், கொழும்பு தெற் குப் பிராந்திய கல்வித் திணைக்களம், இலங்கை தொலைக்கல்வி நிறுவனம் ஆகியவற்றின் இந்துமன்றம் 1978.11.08ஆம் திகதி வெளியிட்டு வைத்தது. இவ்விழாவில் பிரதம விருந்தினராக உயர் நீதிமன்ற நீதியரசர் திரு. எஸ். சர்வானந்தா கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அறிஞர் பெருமக்களின் பார்வையில் இவரைப் பற்றிய சில கருத்துக்களை சுருக்கமாக தொகுத்து நோக்குவோம்.
6.
.திரு. வை.அநவரத விநாயகமூர்த்தி அவர்கள் சைவத்தையும், தமிழையும் பாதுகாத்து வரும் அரும்பணி
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) கலாபூஷணம் புன்னியாமீன் 57

Page 39
வை. அநவரத விநாயகமூர்த்தி
யில் தம்மை இணைத்துக் கொண்டவர். பண்பட்ட அனுபவம் வாய்ந்த முதுபெரும் எழுத்தாளர், சமய நிறுவனங்கள் பல வற்றில் பொறுப்புகளை ஏற்று சமயத் தொண்டு ஆற்றிய
அனுபவம் மிக்கவர்." .
கலாநிதி ப. கோபாலகிருவுர்ணன்
கலைப்பீடாதிபதி
யாழ். பல்கலைக்கழகம்.
“.சைவத்தையும், தமிழையும் வளர்த்த ஒரு குடும்பத்தில் உதித்த ஆசிரியர் அவர்கள் தமது சிறந்த வாழ்க்கையோடு மட்டும் நில்லாது அரும்பெரும் நூல்களைக் கசடறக் கற் றுத் தனது அறிவை மேம்படுத்தியதோடு அதனை மற்றவர் களுடனும் பகிர்ந்து கொள்வதில் சிறப்படைகிறார்.”
பேராசிரியர் விக.கணேசலிங்கம் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
".பயனுள்ள பணிகளை வாழ்நாளில் செய்பவர்கள் ஒரு சிலரே. அதிலும் பதிப்புத்துறையிலும், பக்தித் துறையிலும் இணைந்த சிந்தனையோடு பயனுள்ள முறையிலே வாழ்வை அமைத்து வாழ்வோர் இன்னும் சொற்பரே! இவ்வகையில் “நல்லாருறவும் நின் பூசை நேசமும்” என்னும் கோட்பாட்டுடன் சீரான குடும்ப வாழ்வு வாழ்பவர் அன்புப் பெரியார் மூர்த்தி
அவர்கள்.
வாசிக கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் (M.A) முதுநிலை விரிவுரையாளர்,
மொழித்துறை
சப்ரகமுவ பல்கலைக்கழகம்
இணுவை மூர்த்தி என்னும் வை. அநவரத விநாயக மூர்த்தி யின் தமிழ் இலக்கியப் பணியும் சமயப் பணியும் அவர் எமது சமுதாயத்துக்குச் செய்த பெரிய உபகாரமாகும். அவருக்கு ‘சிவநெறிச் செம்மல்" என்னும் விருதினை நல் லைத் திருஞான சம்பந்தர் ஆதீன இரண்டாவது குரு மஹா சந்நிதானம் முரீலறி சோமசுந்தர தேசிகஞான சம்பந்த பரமாச் சார்ய சுவாமிகள் வழங்கியது மிகவும் பொருத்தமானது என்பதை இன்றைய சமுதாயம் ஏற்றுக் கொள்ளும்.
கவிஞர் அம்பி (இ.அம்பிகை பாகர்) Шцент ćudlanuff (Papu New Guinea)
58 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி II)

வை. அநவரத விநாயகமூர்த்தி
“சிவநெறிச் செம்மல் வை. அநவரத விநாயகமூர்த்தி அவர் கள் பழுத்த தமிழ்ப் புலமைப் பாரம்பரியத்தில் வந்தவர்.
பவளவிழாக் கண்ட முதுபெரும் எழுத்தாளர். கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக எழுத்துப் பணியில் ஈடுபட்டுள்ள சிறந்த எழுத்தாளர். சமய நிறுவனங்களில் பொறுப்பு வாய்ந்த பதவிகளை ஏற்று அரும் பெருஞ் சேவையாற்றிய சமயத் தொண்டராவார். கல்வி அமைச்சில் நிர்வாக அதிகாரியாகக் கடமையாற்றியதுடன் கல்வி அமைச்சின் இந்துமன்றத்தின் தலைவராகவும் பணி புரிந்தவர். சர்வதேச சமய சுதந்திரத்திற் கான நிறுவனத்தின் (I.A.R.F) கொழும்புப் பிரிவின் துணைத் தலைவராகப் பணியாற்றிவரும் இப்பெரியார் ‘சந்நிதி சமய சஞ்சிகையின் மதியுரைஞர்களில் ஒருவராவார்.
திரு. க. சிவஞானம் JP Garu 160T61Iý sbsru 16th, சமய சுதந்திரத்திற்கான சர்வதேச நிறுவனம், முரீலங்கா.
வாழையடி வாழையாக சைவத்தைப் பேணிக் காத்த பரம்ப ரையில் வந்துதித்தவர் திரு. அநவரத விநாயகமூர்த்தி. யாழ்ப்பாணத்தில் இணுவில் ஊரில் இவர் பரம்பரையினரே அன்றும் இன்றும் சைவத்தைப் பேணிக் காத்து வருபவர் கள் ஆவர்.
- கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி
சமயத்துறை ஈடுபாட்டினைப் போலவே சமூகத்துறையிலும்
இவர் ஈடுபாடு மிகைத்திருந்தது. கல்வி அமைச்சில் இவர் பணியாற் றிய இரண்டு தசாப்த காலகட்டத்தில் இந்து, முஸ்லிம் சமூக வேறு பாடு பாராமல் ஆசிரிய குழாத்திற்கு கணிசமான சேவைகளை வழங்கியுள்ளார். அத்துடன் கல்வி அமைச்சினால் நிறுவப்பட்ட ‘ஆசிரியர்களின் சம்பள மீளாய்வுக் குழுவிலும் அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.
பெற்ற விருதுகள்.
வை. அநவரத விநாயகமூர்த்தி அவர்களின் சமய,
சமூகப்பணிகளைப் பாராட்டி 1995.02.12ம் திகதி நல்லைத் திருஞானசம்பந்தர் ஆதீன இரண்டாவது குரு மஹா சந்தானம்
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபூஷணம் புன்னியாமின் 59

Page 40
வை. அநவரத விநாயகமூர்த்தி
கொழும்பு ஜோன் டி.சில்வா ஞாபகார்த்த மண்டபத்தில் 2005 ஜனவரி 22ந் திகதி நடைபெற்ற கலாபூஷண விருது வழங்கும் வைபவத்தில் கலாசார அலுவல்கள், தேசிய மரபுரிமைகள் அமைச்சர் விஜித ஹேரத், முதுபெரும் எழுத்தாளர் 'சிவநெறிச் செம்மல் வை. அநவரத விநாயக மூர்த்திக்கு ‘கலாபூஷணம்’ விருது வழங்கிக் கெளரவிக்கிறார்.
இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் வெள்ளவத்தை இராம கிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்ற அருள்நெறி விழா"வின் போது, 'திருநெல்வேலி ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வரலாறு' என்னும் சிறந்த நூலை எழுதி வெளியிட்ட 'சிவநெறிச் செம்மல் வை.அநவரத விநாயமூர்த்தி, இராம கிருஷ்ணமிஷன் தலைவர் சுவாமி ஆத்ம கானந்தஜியிடமிருந்து தமக்குரிய பரிசைப் பெறுவதையும், அருகில் கல்வி, உயர்கல்வி அமைச்சு மேலதிகச் செயலாளர் எஸ்.தில்லை நடராஜா நிற்பதையும் படத்தில் கணலாம்.
60 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)
 
 

வை. அநவரத விநாயகமூர்த்தி
ஹீலரீ சோமசுந்தர தேசிக ஞான் சம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் 'சிவநெறிச் செம்மல்" எனும் விருது வழங்கி கெளரவித்தார்.
இலங்கையில் கலைத்துறையின் மேம்பாட்டிற்கு ஆற்றிய மேலான சேவையினைப் பாராட்டும் வண்ணம், ரீலங்கா அரசின் சார்பாக கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங் கப்படுகின்ற ‘கலாபூஷண விருது 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் திகதி கொழும்பு ஜோன் டி சில்வா கலை அரங்கில் நடைபெற்ற விழாவில் போது கலாசார அலுவல்கள் தேசிய மரபுரி மைகள் அமைச்சர் கெளரவ விஜிதஹேரத் அவர்களால் வழங்கப் பெற்று கெளரவிக்கப்பட்டார்.
gjöfuuT G6ð6óluî6ð gə6ODDög6l6m “ASLA INTERNA- ; TIONAL 6T6 go 56,607 b 1984b systiq6) "LEARNED INDLA” என்னும் நூலை ஆங்கில மொழியில் தொகுத்து வெளியிட் டது. இந்த நூலில் இணுவை மூர்த்தியின் இலக்கிய, சமயப் பணிகள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
தணிகைப்புராண உரையாசிரியர் மஹாவித்துவான் பொன். அம்பிகைபாகர் அவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஈழத்தில் வாழ்ந்த தமிழ்ப் பெரும் புலவ்களில் ஒருவராக நன்கு மதிக்கப் பட்டவர். தாய்நாடாகிய ஈழத்தில் மட்டுமன்றி தமிழகத்திலும் இலக்கி யப் பணிகள் புரிந்தவர். வளரும் தமிழை வளம்படுத்திய தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்களின் உற்ற நண்பராக விளங்கினார். ‘கலாபூஷணம்’ ‘சிவநெறிச் செம்மல் வை. அநவரத விநாயகமூர்த்தி அவர்கள் இப்புலவர் பெருந்தகை பொன். அம்பிகைபாகர் அவர்களின் பேரனாவார் என்பது குறிப்பிடத்தக்கது. வயதில் முதிர்ந்தவரானாலும் சிறுபிள்ளை போல இனிமையாகப் பழகும் இப்பெரியாரின் முகவரி.
W.Anavarathavinayaga Moorthy. 16, 4/6 Vander Wert Place Dehiwala.
Τ/P. 0112717335
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபூஷணம் புன்னியாமீன் 61

Page 41
சாரல்நாடன்
சாரல்நாடன்
பதிவு 285
எழுத்துத்துறை
மத்திய மாகாணம், நுவரெலியா மாவட்டம், கொட்டகலை தேர்தல் தொகுதியில் கொட்டகலை கிராமசேவகர் பிரிவில் வசித்து வரும் க. நல்லையா அவர்கள் சாரல்நாடன்' எனும் பெயரில் இலங்கை இலக்கிய வாசகர்களால் நன்கு அறியப்பட்ட மூத்த எழுத்தாளரும், பன்னூலாசிரியரும், பதிப்பாசிரியருமாவார். மலைய கத்திலே பிறந்து வளர்ந்து மலையக மக்கள் மத்தியிலேயே வாழ்ந்து தேயிலைத் தொழிற்சாலையில் உயர் அதிகாரியாகக் கடமையாற்றி மலையகத் தொழிலாளர்கள் முதல் தோட்ட அதிகாரிகள் வரை பலரக மக்களுடன் நெருங்கிப் பழகி நீண்ட அனுபவங்களைப் பெற்ற இவர், தொழிலாளர்களின் ஆத்மாவைப் புரிந்து கொண்டு அவற்றை படைப்பிலக்கியங்கள் வாயிலாகவும், ஆய்வுகள் மூலமாகவும் வெளிக்கொணர்ந்தவர்.
மதுரை மேலூரைச் சேர்ந்த மு.கருப்பையா கணக்குப் பிள்ளை - சிவகங்கையைச் சேர்ந்த மு.வீரம்மா தம்பதியினரின் மகனாக சாமிமலை சிங்காரவத்தைத் தோட்டத்தில் 1944ஆம் ஆண்டில் மே மாதம் 09ஆம் திகதி பிறந்த ‘நல்லையா சாமிமலை
62 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)
 

சாரல்நாடன்
மின்னா கலவன் பாடசாலை, ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். பல்கலைக்கழக புகுமுகக் கல்விவரை கற்ற இவர், கல்வியைத் தொடராமல் கல்விக்கு முழுக் குப் போட்டுவிட்டு ஓராண்டு காலம் கண்டி அசோக்கா விடுதியில் பணிபுரிந்தார். அக்காலகட்டத்தில் தனது ஆய்வு ஆற்றலை மேம்படுத் தக்கூடிய பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தார்.
1965 காலப் பகுதியில் குடும்ப சூழல் காரணமாக சாரல்நாட னுக்கு தனது தொழிலை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத் தேவையேற்பட்டது. இதனால் சாமிமலை குயில்வத்தையில் தேயி லைத் தொழிற்சாலை அதிகாரியாகத் தொழிற்பயிற்சி பெற்று 1965ம் ஆண்டு முதல் தேயிலைத் தொழிற்சாலை உத்தியோகத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். இவரது பணி பூண்டுலோயா டன்சி னேன், புசல்லாவை- நியுபீக்கொக், கொட்டகலை- டிரேய்டன், பத்தனை. கெலிவத்தை ஆகிய தொழிற்சாலைகளில் 35 ஆண்டுகள் தொடர்ந்தன.
இவரது பதவிக்காலத்தில் தொழில்ரீதியாக பல உச்சங் களை இவர் எய்தியுள்ளார். தேயிலை ஆராய்ச்சி நிலையமும், தேசிய தேயிலை முகாமைத்துவ நிறுவனமும் இணைந்து நடத்திய தேர்வில் அகில இலங்கை ரீதியில் முதல் நிலையில் தேறிய பெருமையும் இவருக்குண்டு. அக்காலகட்டத்தில் தோட்ட சேவையா ளர் காங்கிரஸ் அமைப்பில் பொதுச்செயலாளராகவும் பணியாற்றி யுள்ளார்.
தொழில்துறையிலிருந்து 2000ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ள ‘சாரல் நாடன்' தற்போது எழுத்துத்துறையையும், பதிப்புத்துறையை யும் முழு நேரப் பணியாகக் கொண்டுள்ளார். இவர் புஷ்பாவின் அன்புக் கணவராவார். இத்தம்பதியினருக்கு ரீ குமார், ஜீவ குமாரி ஆகிய இரண்டு அன்புச் செல்வங்கள் உளர்.
இவரின் இலக்கிய ஆர்வம் கற்கும் காலத்திலே இயல்பாக ஆரம்பித்தது. ஹைலண்ட் கல்லூரி மாணவர்களிடையே இலக்கியச் சஞ்சிகைகள் சுவர்ப்பத்திரிகைகளாக அந்நாளில் அறிமுகமாகியிருந் தது. “தமிழ்த் தென்றல்” என்ற விடுதி சுவர்ப் பத்திரிகையிலும் “தமிழோசை” எனும் கல்லூரியின் சுவர்ப் பத்திரிகையிலும் சாரல் நாடன் அடிக்கடி எழுதினார்.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபூஷணம் புண்ணியாமீன் 63

Page 42
சாரல்நாடன்
இச்சுவர்ப் பத்திரிகைகளே இவரின் இலக்கிய ஆர்வத்திற்கு களம் அமைத்துக் கொடுத்தன எனலாம். பத்திரிகையில் இவரின் கன்னியாக்கம் 1958ஆம் ஆண்டு தினகரன் பாலர் கழகத்தின் ‘யாமறிந்த நாழு பேர்” எனும் தலைப்பில் பிரசுரமானது. அதிலிருந்து இன்றுவரை 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், கவிதை கள் போன்றவற்றை இவர் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலைமுரசு, மலைப்பொறி, செய்தி, தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, சுதந்திரன், மலர், ராதா, கொழுந்து, குன்றின் குரல், தேயிலை ஆகிய ஈழத்து பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் இந்தியா விலிருந்து வெளிவரும் தரமான இலக்கிய ஏடுகளான கணயாழி, தாமரை முதலான இலக்கிய சஞ்சிகைகளிலும், தேசிய சாகித்திய மலர், மத்திய மாகாண சாகித்திய மலர் போன்ற மலர்களிலும் பிரசுரமாகியுள்ளன.
இலங்கை தமிழ் படைப்பிலக்கிய வரலாற்றை நோக்கும் போது 1960 களின் ஆரம்பத்திலிருந்தே நவீன இலக்கிய முயற்சிகள் ஆரம்பமாயிற்று எனலாம். இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளி லும் தெற்குப் பகுதியிலும் இத்தகைய புதிய எழுச்சிகள் துரிதமாக இடம்பெற்ற போதிலும்கூட மத்திய மலைநாட்டில் மிக மந்தமாகவே இடம்பெற்றன. இந்த அடிப்படையில் மலையக நவீன இலக்கிய முயற்சிகளின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழும் சாரல்நாடன் அறுபதுகளில் மலையகத்தில் ஏற்பட்ட அறிவியல் விழிப்புணர்வின் காரணமாக எழுச்சிபெற்ற இலக்கியகர்த்தாக்களில் கோடிட்டுக் காட்டக்கூடிய ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1960களின் ஆரம்பத்திலிருந்து சுமார் இரண்டு தசாப்தகால மாக ஒரு படைப்பிலக்கியவாதியாக மாத்திரம் இருந்து வந்த இவர், 1980ஆம் ஆண்டுகளில் தன்னை ஓர் இலக்கிய ஆய்வாளராகவும் உயர்த்திக் கொண்டார். மலையகம் தொடர்பான ஆய்வுகளே இவரது பொதுவாழ்வின் முக்கிய பக்கங்களாக அமைந்து விட்டன.
சாரல்நாடன் இதுவரை 16 நூல்களை சுயமாக எழுதி வெளி யிட்டுள்ளார். இவரது அனைத்து நூல்களும் மலையக மக்களின் வாழ்வியல் சம்பந்தப்பட்டதாகவும், மலையக எழுச்சிக்கான சிந்தனைகளுமாகவே காணப்படுகின்றன. இவரால் 1986ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை எழுதப்பட்ட நூல்கள் பற்றிய குறிப்புக்களை சுருக்கமாக தொகுத்து நோக்குவோம்.
64 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)

சாரல்நாடன்
1. சி.வி.சில சிந்தனைகள் ; :
இது இவரது முதலாவது நூலாகும். 1986இல் கொழும்பு 6. மலையக வெளியீட்டகத்தினால், கண்டி யூனியன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு இந்நூல் வெளியிடப்பட்டிருந்தது. ஈழத்தின் குறிப் பாக மலையகத்தின் இலக்கியப் படைப்பாளியான அமரர் சி.வி. வேலுப்பிள்ளை அவர்களின் வாழ்வும் சிந்தனையும் பற்றிய நூல் இதுவாகும். அமரர் சி.வி.பற்றிய பல புதிய தகவல்களை மறக்கப் பட்ட அவரது வாழ்வின் பக்கங்களை மீட்டெடுத்து இந்நூலினூடாக சாரல்நாடன் வழங்கியுள்ளார்.
2. தேசபக்தன் கோ நடேசையர்
இந்நூல் கண்டி மலையக வெளியீட்டகத்தின் வெளியீடாக, கண்டி ரோயல் அச்சகத்தில் அச்சிடப்பட்டு, 210 பக்கங்களுடன் 1988இல் வெளிவந்தது. இலங்கை வாழ் பெருந்தோட்டத் தமிழரின் கடந்த 170 வருடகால வரலாற்றிலே யுகப்புயல் ஒன்றை ஏற்படுத்திய மாமனிதர் கோதண்டராம நடேசையரின் வாழ்க்கை வரலாறு இதுவா கும். மலையக மக்களின் இலக்கிய வரலாற்றின் தோற்றத்துக்கும், அரசியல் விழிப்புணர்வுக்கும் நடேசையர் ஆற்றிய பங்களிப்பு இந் நூலில் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நூலுக் தேசிய சாகித்திய விருது கிடைத்தது.
3. மலையகத் தமிழர்
சென்னை மலையருவி பதிப்பக வெளியீடாக வெளிவந் துள்ள இந்நூலினூடாக மலையக மக்களின் சோக வரலாற்றை ஆற்றொழுக்கான எழுத்து நடையில் சாரல்நாடன் முன் வைத்துள் ளார். 1990ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த நூல் மலையகத்தமி ழரின் ஆரம்பகால வருகையை தெளிவுபடுத்த முயற்சிக்கின்றது. குறிப்பாக மலையக தோட்டங்களுக்கு இடப்பெயர்களைச் சூட்டி அப்பெயரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருந்தமை பலரையும் கவர்ந்திருந்தது.
4. மலையக வாய்மொழி இலக்கியம்
இந்நூல் சென்னை: தேசிய கலை இலக்கியப் பேரவை யுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் ஏப்ரல் 1993இல் 88 பக்கம் கொண்டதாக வெளியிட்டிருந்தது. மலையக மக்களின் வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிட்டதும், அவர்களது வரலாற்றைப் பொதித்து வைத்திருப்பதுமான; அவர்களிடையே வழங்கிவந்த நாட்டார் பாடல்களை ஆய்வுசெய்து இந்நூலில் சிறப்புற சாரல்நாடன் இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபூஷணம் புண்னியாமின் 65

Page 43
சாரல்நாடன
தந்துள்ளார். இந்நூலில் இடம் பெற்றுள்ள 12 ஆய்வுக் கட்டுரை
களும், மலையக மக்களின் வாய்மொழி இலக்கியங்களை ஆய்வு
ரீதியாக வெளிக்கொணர்ந்துள்ளன. இந்நூலுக்கு மத்திய மாகாணச் சாகித்தியப் பரிசு கிடைத்தது.
5. மலைக்கொழுந்தி
சாரல் நாடனால் அவ்வப்போது எழுதப்பட்ட 14 சிறுகதை களின் தொகுப்பு நூல் இதுவாகும். ஈழத்து எழுத்தாளர் என்.சோம காந்தன் அவர்களின் ஒத்துழைப்புடன் சென்னை 600026: குமரன் பதிப்பகத்தின் வாயிலாக டிசம்பர் 1994இல் இந்நூல் வெளிவந்தது. இத்தொகுதியில் இடம்பெற்ற கதைகள் யாவுமே மலையகத் தேயி லைத் தோட்டங்களில் உழைக்கும் தொழிலாளர்களது யதார்த்த வாழ்க்கையைப் பிரதிபலிப்பனவாகும். கற்பனையைக் குறைத்து யதார்தத்தத்தை முன்வைப்பதில் சிறப்புப் பெறும் இக்கதைகள் வளர்ச்சியடையும் சமுதாயத்தின் சமகால வரலாற்று நிகழ்வாகவும் இருப்பதை அவதானிக்க முடிகிறது. இந்த நூல் 1994ஆம் ஆண்டுக் கான மத்திய மாகாண சாகித்திய மண்டலப் பரிசினையும் இவருக்குப் பெற்றுக்கொடுத்தது.
6. மலையகம் வளர்த்த தமிழ்
156 பக்கம் கொண்ட இந்நூல் 1990-1995 காலகட்டத்தில் சாரல்நாடன் அவர்களால் எழுதப்பட்ட 13 கட்டுரைகளின் தொகுப் பாகும். மலையக படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு மற்றொரு தளத்தில் நின்று அரும்பங்காற்றிய அமரர் துரை. விஸ்வநாதன் அவர்களால் இந்நூல் 1997இல் சென்னை 17: துரைவி பதிப்பகத்தினால் வெளியி டப் பட்டது. மலையகத்தைப் பின்புலமாகக் கொண்ட, அது தொடர் பான கலை, இலக்கியம், மொழி, பண்பாடு, நூலகம், நூலியலும் வெளியீட்டுத்துறையும், நாட்டார்வழக்கியல், சிறுசஞ்சிகைகள் போன்ற பல தலைப்புகளில் இந்நூலிலுள்ள கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 1821ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டு வரை மலையகத்தில் இடம்பெற்ற சமூக, அரசியல் இலக்கிய முயற்சிகள் தொடர்பான விரிவான தேடலின் விளைவுகளை முன் வைத்திருக்கின்றார்.
7. பத்திரிகையாளர் நடேசய்யர்
இந்த ஆய்வு நூல் டிசம்பர் 1998இல் சாரல்நாடனால் எழுதப்பட்டு கண்டி மலையக வெளியீட்டகத்தின் வாயிலாக 208 பக்கங்களில் வெளியிடப்பட்டிருந்தது. மலையகத் தொழிற்சங்கவாதி யான தேசபக்தர் கோ. நடேசையரின் பத்திரிகைத்துறைப் பங்க
66 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)

சாரல்நாடன்
ளிப்பை இந்நூலில் சாரல்நாடன் அவர்கள் விரிவாக ஆய்வு செய்தி ருந்தார். மலையக வளர்ச்சிப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தம்மையும் வளர்த்துக்கொண்டு தமிழ் இதழ்களையும். வளர்த்த கோ.நடேசையர் 14.01.1889 இல் தஞ்சாவூரில் பிறந்து 07.11.1947இல் கொழும்பில் அமரரானவர். இவரது வாழ்வின் பல பக்கங்களை இவ்வாய்வு வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. 1999ஆம் ஆண்டில் சிறந்த தேடல் முயற்சி, புலமைசார்பு என்பவற்றுக் கான் மொழி ஆய்வுக்கான இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது இந்நூலுக்கு வழங்கப்பட்டது.
8. இன்னொரு நூற்றாண்டுக்காய்
இந்நூல் கொழும்பு பெண்கள் ஆய்வு நிறுவனத்தால் 1999 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. நடேசையரின் சமகாலத்தவராக அவரோடு இலங்கையில் பணியாற்றிய சத்திய வாகிஸ்வரய்யர் என்பவரின் பங்களிப்பும் அவருக்குச் சமமாக நின்று செயலாற்றிய அவரின் மனைவி நல்லம்மாள் பற்றியும் கணிசமான தரவுகளை முன்வைத்து தமிழுக்குக் கிடைத்த ஒரு பெண் தலைமைத்துவமாக இந்நூலினுாடாக சித்தரித்துள்ளார். இந்நூல் 53 பக்கங்களைக் கொண்டது.
9. மலையக இலக்கியம்: தோற்றமும் வளர்ச்சியும்
சாரல் நாடன் தனது தொழிலிலிருந்து ஓய்வுபெற்ற பின்பு தன்னை முழுநேர இலக்கிய ஆய்வாளராகவும், எழுத்தாளராகவும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் 2000ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தன்னுடைய சொந்தப் பதிப்பகமான ‘சாரல்’ பதிப்பகத்தை ஏற்படுத்தினார். இப்பதிப்பகத்தின் மூலம் ஜூலை 2000 இல் வெளியிட்டுள்ள இந்நூலில் மலையக இலக்கியம் உருவான வரலாறு, அதன் ஆரம்ப நிலைப்பாடுகள் ஆகியவை தெளிவான முறையில் விளக்கப்பட்டுள்ளன. இந்நூலினை மலையக இலக்கியம் குறித்த ஆர்வமும், ஆவலும் உள்ளவர்களுக்கு கிடைத்த விலை மதிக்க முடியாத பொக்கிஷமென்றே குறிப்பிட வேண்டும்.
10. பிணந்தின்னும் சாத்திரங்கள்
கொட்டகலை: சாரல் வெளியீட்டகம், நவம்பர் 2001ல் வெளி யிட்டுள்ள இந்நூல் சாரல்நாடனின் குறுநாவல்களின் தொகுப்பாகும். ஜே.வி.பி. ஆயுதம் ஏந்திய கால கட்டத்தில் இலங்கையில் நிலவிய பயங்கரவாதப் பின்னணியில் மலையகத்தில் தோட்டத் தொழிலாளர் களுக்கு நேர்ந்த இன்னல்கள் பற்றிய சித்திரிப்பாகவும், கறுப்பு இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபூஷணம் புன்னியாமீன் 67

Page 44
சாரல்நாடன். "
ஜூலைக்கு இலங்கை உட்படுத்தப்பட்ட வேளையில் மலையகத்தில் ஓர் இந்தியப் பத்திரிகையாளனுக்கு நடந்ததைச் சித்திரிப்பதாகவும் அமையும் பிணந்தின்னும் சாத்திரங்கள், நம்பியவருக்காக, சமரசம், பலி ஆகியநான்கு குறுநாவல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
11. மலையகத் தமிழர் வரலாறு
மத்திய மாகாண கல்வி அமைச்சின் அனுசரணையுடன் கொட்டகலை சாரல் வெளியீட்டகம் 2003ஆம் ஆண்டில் இந்நூலை வெளியிட்டது. மலையகத் தமிழர்களின் வரலாறு மிக அழகான முறையில் ஆதாரபூர்வமாக இந்நூலில் ஆராயப்பட்டுள்ளது. இந்நூ லுக்கு 2003ஆம் ஆண்டுக்கான தேசிய சாகித்திய மண்டலப் பரிசும், மத்திய மாகாண சாகித்திய மண்டலப் பரிசும் கிடைத்தது.
இலங்கை மலையக எழுத்தாளர்களுள் மூன்று தடவைகள் தேசிய சாகித்திய மண்டலப் பரிசினையும், நான்கு தடவைகள் மத்திய மாகாண சாகித்திய மண்டலப் பரிசினையும் இவர் பெற்றுள் ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
12. பேரேட்டில் சில பக்கங்கள்
68 பக்கங்களைக் கொண்ட இந்நூல் 2004ஆம் ஆண்டு சாரல் வெளியீட்டக வெளியீடாக வெளிவந்தது. 57 பிரமுகர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் சுருக்கமாக தரப்பட்டுள்ளன.
13. கண்டி இராசன் கதை
கண்டியை ஆண்ட இறுதி மன்னன் றி விக்ரம இராசசிங் கனின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் இந்நூலில் இடம்பெற்றுள் ளன. விசேடமாக இலங்கைத் தமிழர்களின் வரலாறு, வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ள சில விடயங்களை இந்நூலினூடாக சாரல்நாடன் எடுத்துக் கூற விளைந்துள்ளார். 2004ஆம் ஆண்டு சாரல் பதிப்பக வெளியீட்ாக வெளிவந்துள்ள. இந்நூல் 72 பக்கங்களைக் கொண்டது.
14. புதிய இலக்கிய உலகம் -
இந்நூல் 1920 முதல் 1960 வரையிலான காலகட்டத்தில் மலையக இலக்கிய வரலாற்றைப் பற்றி ஆராய்கின்றது. 2006ஆம் ஆண்டு சாரல் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூல் 80 பக்கங்களைக் கொண்டது.
68 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விரத்திரட்டு - (தொகுதி 11)

8 fig subt L60.
15. குறிஞ்சித் தென்னவன் கவிதைச் சரம்
மலையக் கவிஞர் குறிஞ்சித் தென்னவனின் அனைத்து கவிதைகளையும் இந்நூலில் சாரல்நாடன் தொகுத்துத் தந்துள்ளார். 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாரல் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூல் 190 பக்கங்களைக் கொண்டது.
மேற்குறிப்பிட்ட அடிப்படையில் சாரல்நாடன் இதுவரை பல நூல்களை வெளியிட்டுள்ள போதிலும்கூட ஆய்வு ரீதியாக அவரால் வெளியிடப்பட்ட நூல்கள் புத்திஜீவிகள் மத்தியிலும், பல்கலைக்கழக மத்தியிலும் வெகுவாக விதந்துரைக்கப்படுகின்றன.
சாரல்நாடன் 60 வயதினை எய்தியமைக்காக அவரது நண்பர் களும், அவரின் பயன்பாட்டினை உணர்ந்தவர்களும் இணைந்து மணிவிழாவொன்றை 2005.01.30ஆம் திகதி நடத்தினர். அச்சந்தர்ப் பத்தில் கலாநிதி க. அருணாசலம் சாதனையாளர் சாரல்நாடன் எனும் பெயரில் ஒரு நூலினை எழுதியிருந்தார். சாரல் பதிப்பகத்தின் 13ஆவது வெளியீடாக வெளிவந்த அந்த நூல் 40 பக்கங்கள்ைக் கொண்டது. கண்டி சன் பிரின்டர்ஸ்ஸில் அச்சிடப்பட்ட அந்நூலின் ISBN இலக்கம் 955-8589-13-6
அந்நூலில் பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பி, கலாநிதி சே. யோகராசா ஆகியோர் சாரல்நாடனைப் பற்றி எழுதியிருந்த குறிப்புகளும் இடம்பெற்றிருந்தன. இந்நூலில் சாரல்நாடனுடைய மலையக வரலாற்றுப் பதிவு நூல்களைப் பற்றி கலாநிதி க. அரு ணாசலம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
“.சாரல்நாடனால் எழுதப்பட்ட ‘தலையகத் தமிழர் வரலாறு எனும் நூல் 2003ஆம் ஆண்டு வெளிவந்தது. அவர் முதன் முதலில் எழுதி வெளியிட்ட சி.வி. சிந்தனைகள் (1986)
பின்னர் வெளிவந்த தேசபக்தன் கோ. நடேயசய்யர் (1988) ஆகிய இரு நூல்களும் வரலாற்று நாயகர்களின் வரலாற்றை ஆராய்வதனூடாக மலையகத் தமிழர் வரலாற்றினை வெளிப் படுத்துகின்றன. மலையகத் தமிழர் வரலாறு' எனும் நூல் வெளிவருவதற்கு முன்னர் மலையகத் தமிழர்” எனும் சிறு நூலை 1990ல் வெளியிட்டுள்ளார். சாரல்நாடனின் இலக்கிய ஆய்வுகளாக வெளி வந்துள்ள ‘மலையகம் வளர்த்த தமிழ்", மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்’, ‘மலையக வாய்மொழி இலக்கியம் முதலிய நூல்களிலும் மலையகத்
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) கலாபூஷணம் புண்ணியாமீன் 69.

Page 45
சாரல்நாடன்
தமிழர் வரலாறு பற்றிய கருத்துக்கள் ஆங்காங்கே வெளிப் படுவதை அவதானிக்கலாம். மேற்படி நூல்களுக்கான ஆய்வு முயற்சியின் போதே சாரல்நாடன் மலையகத் தமிழர் வர லாறு, அது தொடர்பான தகவல்கள் முதலியவற்றை நிறைய அறிந்திருப்பார். ‘மலையகத் தமிழர்’ எனும் சிறு நூலில் மலையகத் தமிழரின் ஆரம்பகால வருகையைத் தெளிவு படுத்தியுள்ளார். மேற்படி ஆய்வுகளின் ஒட்டுமொத்த அறுவ டையாக "மலையகத் தமிழர் வரலாறு” எனும் நூல் அமைந் துள்ளதெனலாம். மலையகத் தமிழரின் வரலாற்றினை இயன் றவரை சுருக்கமாகவும், முழுமையாகவும் காட்ட முனைந் துள்ளதை அவதானிக்கலாம்.”
பதிப்புத்துறை
கடந்த 2003 மார்ச் 22-23ம் திகதிகளில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 61வது ஸ்தாபக விழாவின் இறுதிநாளான 23ம் திகதி சாரல்நாடன் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவொன்றை மேற் கொண் டார். அவரது நீண்ட சொற்பொழிவின் எழுத்துரு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அதிகாரபூர்வ ஏடான ஒலை 27 இல் வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியுள்ள கருத்துக்களை மீள இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
"மலையக இலக்கிய கர்த்தாக்கள் என்றறியப்பட்ட பலரின் எழுத்துக்கள் மலையக இலக்கியச்சோலையை வளம்படுத்து வதாக அந்தந்தக் காலங்களில் தோன்றி மறைந்த பத்திரிகை களிலும் சிற்றேடுகளிலும் எழுதப்பட்டன. இன்றும் இச்சிற்றேடு களில் தான் இவை உயிர்வாழ்கின்றன. படைத்த அவர்கள் தம் படைப்பின் துடிப்பை மாத்திரமே பிரதானமாக எண்ணி னர். அவற்றை மீட்டிப் பார்க்கவோ, மீளப்படைக்கவோ அவர் களுக்கு நேரம் இருக்கவில்லை. நினைப்பும் இருக்கவில்லை. அதற்கான அவசியம் இல்லாதது போலத்தான் நமது பெரும் பாலான எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன. உடல் உழைப் பாளர்களாக அறியப்பட்ட கல்வி அறிவு பெறாதிருந்த அவர் களது காலத்தில் அது சரியாக இருந்திருக்கலாம். இன்று நிலைமை வேறு. தமது காலத்தைய ஆதாரங்களாக எதை யுமே விட்டுவைக்காத அவர்களின் வாழ்க்கை முறைமை நமக்குக் கற்றுத் தந்ததெல்லாம் நம்மை ஆவணப்படுத்தலுக் காக உந்தச் செய்கின்றன."
70 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)

சாரல்நாடன் சாரல்நாடன் அவர்களின் மேற்கூறப்பட்ட சிறப்புரைப் பகுதி யின் தாக்கத்தினை அவதானிக்கையில் 2000ஆம் ஆண்டில் அவரால் உருவாக்கப்பட்ட 'சாரல் பதிப்பகம்’ மலையக இலக்கிய வரலாற் றில் ஒரு முக்கிய மைற்கல்லென்றே குறிப்பிட வேண்டும். தன்னுடைய நூல்களுடன் மலையக இலக்கியக் கர்த்தாக்களின் நூல்களையும் வெளியிடுவதில் அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகின் றார். இந்த அடிப்படையில் சாரல் பதிப்பகத்தின் மூலமாக வெளியிடப்பட்ட சில நூல்களின் விபரங்களை பின்வருமாறு நோக்கு (S6Mb.
1. விருட்சப்பதியங்கள்:
இந்நூலில் கொட்டகல ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையைச் சேர்ந்த 49 ஆசிரிய, மாணவர்களின் 49 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. 2000ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூல் 50 பக்கங்களைக் கொண்டது.
2. மனுஷர்யம
இந்நூலின் நூலாசிரியர் மல்லிகை சி. குமார் ஆவார். இவரால் எழுதப்பட்ட 12 சிறுகதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. 2001ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூல் 110 பக்கங்களைக் கொண்டது.
3. ஒரு நாடும் மூன்று மனிதர்களும்:
இது மொழிவரதனின் குறுநாவலாகும். 2001ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூல் 80 பக்கங்களைக் கொண்டது.
4. மலையக இலக்கியத் தளங்கள்:
ரீபாத ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை பீடாதிபதி சு. முரளி தரனின் விமர்சனக் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள் ளன. 2002ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூல் 112 பக்கங் களைக் கொண்டது.
5. வாழிவற்ற வாழிவு:
இந்நூல் சி.வி வேலுப்பிள்ளை அவர்களினால் 1960ஆம் ஆண்டில் எழுதப்பட்ட நாவலாகும். மலையகம் சார்ந்த முதல் நாவலாக இது கொள்ளப்படுகின்றது. 1960ம் ஆண்டுகளில் தினகரனில் தொடராக வெளிவந்த இன்நாவல் சாரல்நாட னின் தேடல் காரணமாக முதல்தடவையாக 2003ஆம்
இவர்கள் நம்மவர்கள் (பாகம் o) கலாபூஷணம் புண்னியாமீன் 71

Page 46
சாரல்நாடன்
ஆண்டு சாரல் வெளியிட்டகத்தினால் வெளியிடப்பட்டது. இந்நூல் 290 பக்கங்களைக் கொண்டது.
6. வேரருந்த மரங்கள்:
சிக்கன்ன ராஜ எழுதிய குறுநாவல் இது. 2004 فريدى ஆண்டு வெளிவந்த இந்நூல் 80 பக்கங்களைக் கொண்டது.
7. வரமும், வாழ்வும்: ·
சு. முரளிதரனின் நாட்டாறியல் கட்டுரைகளின் தொகுப்பு நூலாக இந்நூல் அமைந்துள்ளது. 2004ஆம் ஆண்டு வெளி வந்த இந்நூல் 80 பக்கங்களைக் கொண்டது.
8, தளிரே தங்க மலரே:
மொழிவரதன் எழுதிய சிறுவர் இலக்கிய நூல் இதுவாகும். 2005ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூல் 80 பக்கங்களைக் கொண்டது.
சாரல்நாடனின் படைப்புக்கள் பல்வேறு தொகுதிகளிலும் இடம்பெற்றுள்ளன. ‘சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள் (1998) தொகுப்பில் 'அழுது கழித்த இரவுகள்’ என்ற சிறுகதையும், ‘இந்த நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள் (1994) தொகுப்பில்
கனிகள் தொகுப்பிலும், துரைவி வெளியீடான மலையகச் கள் (1997) தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளன. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் வெளியிட்ட தமிழ் நாட்டார் வழக்காற் றியல் (1995) நூலில் இவரது ‘மலையக நாட்டார் பாடல்கள் என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது. Lanka and the Ramayana என்ற சினிமயாமிஷன் வெளியிட்ட ஆய்வு நூலில் மலையகத்தில் “இராம வழிபாடு” என்ற இவரது ஆங்கிலக் கட்டுரை வெளியாகியுள்ளது. இவற்றைவிட மத்தியமாகாணம் வெளியிட்ட சாகித்திய மலர்களிலும் இவரது அனேக கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
'காலஓட்டம்' என்ற சிறுகதையும், வீரகேசரி வெளியீடான கதைக்
சாரல்நாடனின் இலக்கியப் பணியினை பல இலக்கிய நிறுவ னங்களும், ஊடகங்களும் பாராட்டி கெளரவித்துள்ளன.
பெ.சு. மணி அவர்கள் எழுதிய ‘விடுதலைப் போரில் தமிழ் இதழ்கள் (மணிவாசகர் பதிப்பகம் 1998, பக். 76), தமிழ்ப் புலவர் மரபும், பாரதி மரபும்" (பூங்கொடிப் பதிப்பகம் 1995 பக். 269, 270)
72 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 1)

சாரல்நாடன்
ஆகிய நூல்களில் சாரல் நாடன் தொடர்பான குறிப்புக்களைத் தந் துள்ளார். தாமரை சி. மகேந்திரன் எழுதிய தொடர் கட்டுரையிலும், சுபமங்களாவில் கோமல் சுவாமிநாதன் எழுதிய கட்டுரையிலும், ஆ. சிவசுப்பிரமணியம் காலச்சுவட்டில் எழுதிய கட்டுரையிலும் சாரல் நாடனின் இலக்கியப்பணி குறித்துச் சிலாகிக்கப்பட்டுள்ளன.
லண்டன் சுரடொளி வெளியீட்டுக் கழகம் சிந்தனை வட்ட்த் துடன் இணைந்து வெளியிட்ட ‘மலையக இலக்கியக் கர்த்தாக் கள் தொகுதி - 01 எனும் நூலில் பிரபல நூலகவியலாளரும், பன்னூலாசிரியருமான என். செல்வராஜா (லண்டன்) அவர்கள் சாரல் நாடனைப் பற்றிய எழுதிய குறிப்புகள் 67ம் பக்கம் முதல் 74ம் பக்கம் வரை இடம்பெற்றுள்ளன. . . .
அதேநேரம் என். செல்வராஜா சாரல்நாடனைப் பற்றி நிகழ்த் திய உரை அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - ஐ பீ ஸி தமிழ் வானொலியில் 18.09.2005 ஆம் திகதி ஒலிபரப்பாகியது.
'நாவலப்பிட்டி எழுத்தாளர் சங்கம் 1991லும், இலங்கை மக்கள் பொதுப்பணி மன்றம் 1999லும் சாரல் நாடனைக் கெளரவித் துப் பெருமை கொண்டன. மட்டக்களப்பு நகரசபை அன்புமணி மூலம் 1990ல் பாராட்டும் தீர்மானம் மேற்கொண்டது. .
மல்லிகை 1991 ஆகஸ்ட் இதழில் சாரல்நாடனின் புகைப்ப டத்தை அட்டைப்படத்தில் பிரசுரித்தும் கட்டுரை வெளியிட்டும், ஞானம் சஞ்சிகை ஜனவரி 2005 இதழில் சாரல்நாடனின் புகைப்ப டத்தை அட்டைப்படத்தில் பிரசுரித்தும் கட்டுரை வெளியிட்டும் கெளர வித்தன. .
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் தமிழுக்கென ஓர். அலைவரிசையை 27.03.99ல் ஆரம்பித்தபோது அதன் முதல்நாள் நேரடி ஒளிபரப்பிலேயே சாரல் நாடனை அழைத்துப் பேட்டி கண்டது. அதேபோன்று 17.11.2004ல் “ஐ’ சனலில் முதலாவதாக ‘மலைச்சா ரல்’ நிகழ்ச்சி ஒளிபரப்பட்டபோது அதிலே கலந்துகொண்ட பெருமை சாரல் நாடனுக்கே உரியது. இலங்கை அரசினால் ‘இலக்கிய வித்தகர்' என்ற பட்டம் அளித்துக் கெளரவிக்கப் பட்ட சாரல் நாடன்
ஓர் அகில இலங்கை சமாதான நீதவானுமாவார். . . . . .
TT TTLLLLLT LLLLTTTCTLTT 0000000S00S0S 0S00L 73.

Page 47
சாரல்நாட்ன்
தன்னுடைய இலக்கிய ஈடுபாட்டுக்கு மூலகர்தாக்களாக தனது ஆசான்களான திருவாளர்கள் ந.அ. தியாகராசன், இர. சிவலிங்கம், வே. குலசேகரம், நவாலியூர் நா. செல்லத்துரை ஆகியோர்களை அன்புடன் இன்றும் நினைவுகூர்ந்து வரும் இவர்: மலையக கலை இலக்கியப் பேரவை, கொட்டகலை இலக்கிய வட்டம் ஆகியவற்றின் தலைவராகவும், ஹட்டன் தமிழ் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றி வருகின்றார்.
இவரின் முகவரி.
SARAL NADAN SARALAHAM 60 ROSITAHOUSING SCHEME KOTAGALA
T/P051-2222889.
74 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)

உடப்பூர் வீரசொக்கன்
வீ.வீரசொக்கன்
பதிவு 284
எழுத்துத்துறை 96 LabišğGODB
স্কুঞ্জ ?
வடமேல் மாகாணம், புத்தளம் மாவட்டம், புத்தளம் தேர்தல் தொகுதி, முந்தல் பிரதேச செயலாளர் பிரிவில், உடப்பு-594 கிராம சேவகர் வசத்தைச் சேர்ந்த வீரபத்திரன் வீரசொக்கன் அவர்கள் ‘உடப்பூர் வீரசொக்கன்’ எனும் பெயரில் நன்கு அறிமுகமான எழுத்தா ளரும், ஊடகவியலாளருமாவார்.
1953ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திகதி வீரபத்திரன், முத்துராக்காய் தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த வீரசொக்கன் உடப்பு தமிழ் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவராவார். தற் போது முந்தல் - பிரதேச செயலகத்தில் எழுதுவினைஞராகப் பணி யாற்றிவரும் இவர் சரோஜினிதேவியின் அன்புக் கணவராவார். இத்தம் பதியினருக்கு அஜேய் ஆனந்த், சோபிதா, பொன் சுசிதா ஆகிய மூன்று அன்புச் செல்வங்களுளர்.
இலக்கிய, ஊடகத்துறையில் உடப்பூர் வீரசொக்கன், உடப்பூரான், அலை முகிலன் ஆகிய பெயர்களில் எழுதிவரும் இவரின் கன்னியாக்கம் 1977ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையில்
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபூஷணம் புன்னியாமீன் 75

Page 48
உடப்பூர் வீரசொக்கன் ‘முத்தலச் சிறப்புப் பெற்ற முன்னேஸ்வரம்' எனும் தலைப்பில் பிரசுரமா னது.
இதிலிருந்து 20க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 300க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 500க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் இலங்கையிலி ருந்து வெளிவரும் தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பாகியுள்ளன.
வீரசொக்கனின் "கங்கை நீர் வற்றவில்லை' எனும் கவிதைத் தொகுதியில் இடம்பெற்ற இரண்டு கவிதைகளை 1990 மார்ச் 08ஆம் திகதி அப்போதைய முஸ்லிம் சமய கலாசார இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் பாராளுமன்றத்தில் ஒத்தி வைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பிரஸ்தாபித்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வுரையும், கவிதைகளும் பாராளுமன்ற “ஹன்ஸாட் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளன. அவ்வுரையையும், கவிதையையும் பின்வருமாறு சுருக்கமாக நோக்குவோம்.
. எதிரணியின் முயற்சி கானல் நீராகிவிட்டது. இதைத்தான் உடப்பூர் வீரசொக்கன் இவ்வாறு அழகான முறையில் கவிதை யொன்றை வடித்துள்ளார்.
&
“நினைவலையில்
நித்திலம்
ரீங்காரமீட்டி நினை வழங்கிய என் மலர்
கனவலையில்
கருகி கவர்ச்சியற்ற கானல் நீராகியது”
எமது ஜனாதிபதியின் திட்டங்கள் இன்று செயல்வடிவம் பெறுகின்றன. பாடசாலை அபிவிருத்தி சன்ப அமைப்பதால் பாடசா லைகளில் பல நன்மைகள் விளையும் எனக் கருதியதாலேயே இத்திட்டம் அவசரமாக அவசரகாலச் சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத் தப்படுகின்றது. 76 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)

உடப்பூர் வீரசொக்கன்
“திட்டங்கள் தீட்டி
திறம்பட செய்தால்
திறமைகள் பல பெற்றிடுவோம் . அந்த திறமையின் பல பேருண்மையால் இந்நாட்டில் திறனுடன் நாங்கள் வாழ்ந்திடுவோம்
இந்த கவிதை எமது நினைவை தெளிவாகச் சித்தரிக்கின் றது."
உடப்பூர் வீரசொக்கன் இதுவரை ஐந்து நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். ·
1) Փ-ււնւկ ரீதிரெளபதையம்மன் (பார்த்தசாரதி)
ஆலய வரலாறு
இந்நூலின் முதலாவது பதிப்பு 1989 சித்திரை மாதம் வெளி வந்தது. உடப்பு இளம் தாரகை வட்டம் வெளியிட்ட இந் நூலினை யாழ்ப்பாணம் றி விக்னேஸ்வரா அச்சகம் பதிப்பித்திருந்தது. பக்கங்கள்: 86 அளவு: 18x12 செ.மீ. ஈழத்திரு நாட்டில் அமைந் துள்ள திரெளபதையம்மன் ஆலயங்களில் உடுப்புவில் அமைந்துள்ள ஆலயமும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். வரலாற்று சிறப்புப் பெற்ற இவ்வாலயம் உடப்பின் பெருமைகளை பறைசாட்டி நிற்கின ’றது. 350 வருட காலத்து வரலாற்றைச் சொல்லும் இவ்வாலயம் பற்றி மிகவும் நயம்பட 13 தலைப்புக்களில் வீரசொக்கன் விளக் கியுள்ளார்.
2). கங்கை நீர் வற்றவில்லை.
இந்நூல் வீரசொக்கனின் முதலாவது கவிதைத் தொகுதி யாகும். இதன் முதலாவது பதிப்பு 1990 ஆகஸ்ட் மாதம் வெளிவந் தது. இளம் தாரகை வட்டம் வெளியிட்ட இந்நூலினை கொழும்பு -13 விக்டர் அச்சகத்தினர் பதிப்பித்திருந்தனர். இதன் மொத்தப் பக்கங்கள் 46, அளவு 19x12 செ.மீ விலை 15/- இலங்கையின் தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் அவ்வப்போது உடப்பூர் வீரசொக்கன் எழுதியுள்ள 49 கவிதைகள் இத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபூஷணம் புண்னியாமீன் 77

Page 49
வீரசொக்கன் الألمالاساسا ،
3) அலைகடல் ஓரத்தில் தமிழ் மணம்
இது ஓர் வரலாற்று நூலாகும். இந்நூலின் முதலாம் பதிப்பு: 1997 ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. உடப்பு இளம் தாரகை வட்டம் வெளியிட்ட இந்நூலினை புத்தளம் நூரா அச்சகம் பதிப்பித்திருந்தது. நூலின் மொத்தப் பக்கங்கள்: 163, அளவு 19x13 செ.மீ. இந்நூல் உடப்பு கிராமத்தின் வரலாற்று நூல். உடப்பு கிராமத்தின் குடியேற்றம், தொழில், பாடசாலை, இந்து ஆலயங்கள், உள்ளுராட்சித் தலைவர் கள், வில்லிசை, ஊஞ்சல்பா, கிராமத்துப் பாடல்கள் போன்ற மரபு ரீதியான கலைகள் உட்பட 25 தலைப்புகளில் வீரசொக்கன் அழகுற ஆராய்ந்து எழுதியுள்ளார். புத்தளம் மாவட்டத்தில் தமிழர்களின் இருப்பை எடுத்துக்காட்டும் தொகுப்பாகவும் இதனைக் குறிப்பிடலாம்.
4) வீராவின் கதம்ப மாலை
எழுத்தாளரும், ஊடகவியலாளருமான வீரசொக்கன் காலத் துக்குக்காலம் தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதிய கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள், கலைகள், கலைஞர் அறிமுகங்கள் ஆகிய பல்கலை அம்சங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நூலின் முதலாம் பதிப்பு 2000 ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. இளந்தாரகை வட்டம் இந்நூலினை வெளியிட் டது. அச்சுப்பதிப்பு: நூரா அச்சகம் 7, பிராதான வீதி, புத்தளம் மொத்தப் பக்கங்கள்: 156, அளவு 19x14 செ.மீ.
5) கீர்த்திமிகு உடப்பு ரீதிரெளபதையம்மன்
புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள உடப்பு எனும் கிரா மத்தில் வரலாற்றுப் புகழ்பெற்ற ரீதிரெளபதையம்மன் ஆலயத்தின் வரலாற்று முக்கியத்துவம் பற்றியும், ஆண்டுதோறும் நடைபெறும் மகோத்துவங்களின் போது நடைபெறும் மரபு ரீதியான நிகழ்வுகள் பற்றியும் 16 தலைப்புகளில் இந்நூலாசிரியர் விளக்கியுள்ளார். இந்நூலின் முதலாம் பதிப்பு: 2007 ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. உடப்பு இளந்தாரகை வட்டம் இதனை வெளியிட்டது. நூலின் அச்சுப்பதிப்பு: கெளரி அச்சகம் 207, றி ரத்னஜோதி சர்வன முத்து மாவத்தை, கொழும்பு - 13. 110 பக்கங்கள், அளவு 22x15 செ.மீ.
78 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)

உடப்பூர் வீரசொக்கன்
முண்டத்துண்டு
இவரின் ஆறாவது நூல் தற்போது அச்சில் உள்ளது. தலைப்பு "முண்டத்துண்டு. வீரசொக்கன் எழுதிய 14 சிறுகதைகள் இத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. மீனவ சமூகத்தின் வாழ்க் கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதைகள் இவை.
அதேநேரத்தில் உடப்புக்காற்று எனும் கவிதைத் தொகுதியி னையும், மண்ணின் மாணிக்கங்கள் எனும் தொகுப்பு நூலொன்றி னையும், ஊரும் புகழும் எனும் தலைப்பில் 75 கிராமங்கள் பற்றிய தகவல்களைக் கொண்ட நூலொன்றினையும் எதிர்காலத்தில் வெளி யிடும் நடவடிக்கைகளிலும் இவர் ஈடுபட்டு வருகின்றார்.
1979ஆம் ஆண்டு முதல் இவர் வீரகேசரி நாளிதழின் உடப்பு பிரதேச நிருபராக கடமையாற்றி வருகின்றார். அதேநேரம் புத்தளம், குருநாகலை மாவட்ட செய்திகளையும் திரட்டி அனுப்பி வருகின்றார். வடமேல் மாகாணத்தில் ஒரு சிரேஷ்ட செய்தியாளரான இவர் சுமார் மூன்று தசாப்த காலமாக பல்வேறு பத்திரிகைகளுக்கு ஆயிரத்துக் கும் மேற்பட்ட செய்திகள், கட்டுரைகள், விமர்சனங்கள், செவ்விகள் போன்றவற்றை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்தும் எழுதி வருகின்றார்.
1984ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து ‘அலை ஓசை’ எனும் சஞ்சிகையை பிரதம ஆசிரியராக நின்று இவர் வெளியிட்டார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுமென்ற நோக்கில் இச்சஞ் சிகை வெளியிடப்பட்டமை அவதானிக்கத்தக்கது. ஆனாலும் பொரு ளாதார நெருக்கடி காரணமாக சில இதழ்கள் வெளிவந்த இச் சஞ்சிகை நிறுத்தப்பட்டது.
சிறு வயதிலிருந்தே நாடகத்துறையிலும் இவர் ஈடுபாடு மிக்க வராகக் காணப்பட்டார். பாடசாலை கலைவிழாக்களிலும் உடப்பு ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் தீமிதிப்பு விழாவின் போது மேடையேற்றப்படும் நாடகங்களிலும் நடித்து அனுபவம் பெற் றுள்ள இவர் பிற்காலத்தில் எம்.ஏ.எஸ். நாடகமன்றத்தின் மூலம் மேடையேற்றப்பட்ட ‘தோரோட்டி மகன்’, ‘புலித்தேவன்', 'இது தான் முடிவு', 'பாசச்சுடர் முதலான நாடகங்களிலும் பிரதான பாத்திரமேற்று நடித்துள்ளார்.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபூஷணம் புண்னியாமீன் 79

Page 50
உடப்பூர் வீரசொக்கன்
“.நாடகத்துறையில் ஈடுபட்டதினால் கலாசார அமைச்சின் கீழ் இயங்கும் கலைக்கழகத்தின் உபகுழுவான தமிழ் நாடகக் குழுவில் அங்கத்தவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். இதன் காரண மாக எனக்கு அகில இலங்கை சமாதான நீதவான் பதவி கிடைத் தது.” எனக் குறிப்பிடும் வீரசொக்கன் 'ஹரிராம்ஸ்' இசைக் குழுவின் நிரந்தர அறிவிப்பாளராகவும், அவ்வப்போது பிரதேசத்தில் நடத்தப்ப டும் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகளின் அறிவிப்பாள ராகவும் பணியாற்றி வருகின்றார்.
வீரசொக்கனின் கலை, இலக்கிய, ஊடகத்துறை ஈடுபாட்டை கெளரவிக்கும் முகமாக சர்வதேச இந்து ஐயப்பதாஸ் சம்மேளனம் “கலை இளவல்’ என்ற பட்டத்தினையும், வினவித அரச சார்பற்ற நிறுவனம் “கீர்த்திபாதிய என்ற பட்டத்தினையும், அகில இலங்கை சமாதான நீதவான்கள் சங்கம் “தேச கீர்த்தி” எனும் பட்டத்தினையும், வடமேல் கலாசார ஒன்றியம் “தமிழ் மணி’ எனும் பட்டத்தினையும் வழங்கி கெளரவித்தது. 2006ஆம் ஆண்டு மே மாதம் “தடாகம்” சஞ்சிகை “கலைதீபம்” பட்டத்தை குருநாகலை மாநகர சபை மண்டபத்தில் பிரதி அமைச்சர் சேகுஇஸ்ஸதின் அவர்கள் மூலம் சூட்டி கெளரவித்தது.
தன்னுடைய கலை, இலக்கியப் பணிகளுக்கு வழிகாட்டி யாகவும், ஆலோசகர்களாகவும் இருந்தவர்கள் என்ற அடிப்படையில் உடப்பூரான் பெரி சோமாஸ்கந்தர், கே. சிறிஸ்கந்தராசா, மு. சொக்கலிங்கசாமி ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவர் இலங்கையில் இனங்களுக்கிடையில் ஒற்றுமை, |ိုးနှီး ஏற்பட வேண்டும் என்ற நன்நோக்கில் இலக்கியம் படைத் வருகின்றார்.
வீரசொக்கன் பழகுவதற்கு இனியவர். மென்மை உள்ளம் கொண்டவர். இவரின் நிரந்தர முகவரி உடப்பூர் வீரசொக்கன், 3ம் வட்டாரம், உடப்பு என்பதாகும். தொடர்பு முகவரி:
Veerasokkan, Divisional Secretriats, Mundel T/P:-031 2258689
80 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)

அகளங்கன்
நாகலிங்கம் தர்மராஜா (அகளங்கன்)
பதிவு 285
எழுத்துத்துறை
வடமேல் மாகாணம், வவுனியா மாவட்டம், வவுனியா பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த தாண்டிக்குளம் கிராமசேவகர் வசத்தில் வசித்துவரும் நாகலிங்கம் தர்மராஜா அவர்கள் ‘அகளங்கன்’ எனும் பெயரில் நன்கு அறியப்பட்ட ஒரு மூத்த எழுத்தாளரும், பன்னூலாசிரி யருமாவார்.
1953ஆம் ஆண்டு மார்கழி மாதம் 04ஆம் திகதி வவுனியா - பம்பைமடுவில் சே. நாகலிங்கம், நா. நல்லம்மா தம்பதியினரின் புதல் வராகப் பிறந்த தர்மராஜா அவர்கள் வவுனியா - பம்மைமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, வவுனியா - தமிழ் மத்திய மகாவித்தி யாலயம், யாழ்ப்பாணம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானமாணி, கணித புள்ளிவிபரவியல் துறையில் பட்டம் பெற்றுள்ள இவர் தற்போது வவுனியா, தமிழ் மத்திய மகாவித்தி யாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இவரின் அன்புப் பாரியார் த. பூரணேஸ்வரி. இத்தம்பதியினருக்கு த. அநபாயன், த. அநிந்திதை ஆகிய இரண்டு அன்புச் செல்வங்களுளர். இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) கலாபூஷணம் புன்னியாமீன் 81

Page 51
அகளங்கன்
கல்லூரியில் கற்கும் காலத்திலிருந்தே இலக்கிய ஆர்வம் இவருக்கு இயல்பாக ஏற்பட்டது. இவரின் கன்னிக் கவிதை “எடுப்பதோ பிச்சை” எனும் தலைப்பில் சுவடுகள் - கவிதைத் தொகுப்பில் (1975) பிரசுரமானது. அதிலிருந்து மூன்று தசாப்தங்களுக்கும் மேல் இடை விடாது எழுதிவருகின்றார்.
அகளங்கன் இதுவரை 20க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட கவிதை களையும், நாட்டிய நாடகங்கள், இசைப்பாடல்கள், மேடை நாடகங்கள் ஆகியவற்றையும், 18 வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் வீரகேசரி, தினகரன், ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி, தினக்குரல் போன்ற இலங்கையின் தேசிய பத்திரிகை களிலும், சிரித்திரன், சோதிடமலர், பூரணம், சுடர், செந்தழல், கொம்பறை, சுவடுகள், இந்துநெறி, வாழ்க்கை, புது ஊற்று, ஞானம், தடம், மாருதம், கவின்தமிழ், கம்பன் மலர், புது வசந்தம், கலாவதி போன்ற சஞ்சிகை களிலும் பிரசுரமாகியுள்ளன. அதேபோல இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாஹினி ஆகியவற்றில் இவரது பல ஆக்கங்கள் ஒலி / ஒளிபரப்பாகியுமுள்ளன.
கும்மி, கரகாட்டம், கோலாட்டம் போன்ற கலைவடிவங்களுக் கான பாடல்களையும், புது வருடம், பொங்கல், தொழில், கிராமியம் எனப் பல பாடல்களையும் எழுதியுள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இவரால் எழுதப்பட்ட 10 மெல்லிசைப் பாடல்கள் வரை தமிழ்ச் சேவையில் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.
1979ஆம் ஆண்டு இந்திய தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ராமமூர்த்தி அவர்களால் இசையமைக்கப்பட்ட இவரது “சேற்று வயல்க் காட்டினிலே’ எனும் பாடல் மிகவும் பிரபல்யம் பெற்றது. பல சமூக நாடகங்களும், இலக்கிய நாடகங்களும் வானொலியில் ஒலிபரப்பாகி யுள்ளன.
வானொலியில் கவிதைக் கலசம் எனும் நிகழ்ச்சியை 1998இன் பிற்பகுதியிலும், 2001, 2002 காலப் பகுதியிலும் நடத்தியுள்ளார். அதேநேரம் சர்வதேச ரீதியில் அதாவது அவுஸ்திரேலியா முத்தமிழ் முழக்கம், முத்தமிழ் மாலை ஆகிய வானொலி சேவைகளிலும், கனடா சி.டி.ஆர், பிரித்தானிய ஐ.பி.சி ஆகிய வானொலிச் சேவைகளிலும்
82 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11).

அகளங்கன்
இவரின் பல நாடகங்கள் ஒலிபரப்பாகியுள்ளன. அத்துடன் இலங்கை ரூபவாஹினியிலும் இவர் பல கவியரங்குகளில் பங்குபற்றியுள்ளார். அதேபோல இவரின் பல பேட்டி நிகழ்ச்சிகள் ரூபவாஹினியில் ஒளிபரப் பப்பட்டுள்ளன
ஒரு சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் பல கவியரங்குகளிலும் பங்கேற்றுள்ளார். 1989ஆம் ஆண்டிலிருந்து இலக்கிய, சமயத் தொடர் சொற்பொழிவுகளை இலங்கையின் பல பாகங்களிலும் ஆற்றி வருகின் றார். மகாபாரத, பெரியபுராண, கந்தபுராண தொடர் சொற்பொழிவுகளையும் மற்றும் பொதுவான சமய விடயங்களைத் தலைப்புகளாகக் கொண்ட சொற்பொழிவுகளையும் ஆற்றி வருகின்றார். அத்தோடு கந்தபுராணம், திருவாதவூரடிகள் புராணம், பிள்ளையார் புராணம், சிவராத்திரி புராணம் முதலான புராணங்களை படனம் (புராணப் படனம்) செய்தல் முறையில் பொருள் விதித்துரைக்கும் பணியினையும் ஆற்றி வருகின்றார்.
உலகத் தமிழ் கவிதைத் தொகுப்பு நூலாகிய செம்மாங்கனி யில் இவரின் “செல்லாக்காசு நாங்கள்” எனும் கவிதை வெளிவந்துள். ளமை குறிப்பிடத்தக்கது.
அகளங்கனின் முதலாவது நூல் 1977ஆம் ஆண்டு “செலி’ ‘வா'என்று ஆணையிட்டாய் எனும் பெயரில் ஒரு கவிதைத் தொகுதி யாக வெளிவந்தது. அதிலிருந்து இதுவரை 32 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். விபரம் கிழே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன.
01. *செல்” “வா? என்று ஆணையிட்டாய்
வகை - கவிதை, வெளியீடு - ஆசிரியர், பக்கங்கள் - 20, ஆண்டு 1977, விலை சதம் 50
02. *சேரர் வழியில் வீரர் காவியம்’
வகை - கவிதை, வெளியீடு - செ.சண்முகநாதன், பக்கங்கள் - 32, ஆண்டு 1982, விலை 5.00
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபூஷணம் புன்னியாமீன் ጻን

Page 52
அகளங்கண்
03
04.
05.
*வாலி’ (1ம் பதிப்பு) வகை - ஆய்வு, வெளியீடு - யாழ் கம்பன் கழகம், பக்கங்கள் . 96,
ஆண்டு 1987,
விலை 20.00
*வாலி” (2ம் பதிப்பு)
வகை - ஆய்வு, வெளியீடு - பூரீலங்கா அச்சகம் யாழ்ப்பாணம், பக்கங்கள் - 85, ஆண்டு 1989,
விலை 50.00
“வாலி” (3ம் பதிப்பு) வகை - ஆய்வு, வெளியீடு - எழுத்தாளர் ஊக்கவிப்பு மையம் மட்டக்களப்பு (பிரியா பிரசுரம்), பக்கங்கள் - 127, ஆண்டு 2006, விலை 17500
‘இலக்கியத்தேறல்”
வகை - அரசணைக்கட்டுரை,
வெளியீடு - வவு /முத்தமிழ்க் கலாமன்றம், பக்கங்கள் - 154, ஆண்டு 1988,
விலை 50.00
‘நளவெண்பா'
வகை - கதை,
வெளியீடு - வவு முத்தமிழ்க் கலாமன்றம், பக்கங்கள் - 48,
ஆண்டு 1989,
விலை 15.00
84 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)

06.
07.
O8.
அகளங்கன்
*அன்றில் பறவைகள் வகை - நாடகம், வெளியீடு - வவு /முத்தமிழ்க் கலாமன்றம், பக்கங்கள் - 97, ஆண்டு 1992, விலை 40.00
"இலக்கியச்சிமிழ் (1ம் பதிப்பு)" வகை - சிந்தனைக் கட்டுரை,
வெளியீடு - வவு /முத்தமிழ்க் கலாமன்றம், பக்கங்கள் - 126,
ஆண்டு 1992, விலை 50.00
‘இலக்கியச்சிமிழ் (2ம் பதிப்பு)" வகை - சிந்தனைக் கட்டுரை, வெளியீடு - உதயம் (மட்டக்களப்பு), பக்கங்கள் - 104, ஆண்டு 1993, விலை 50.00
*முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர்” வகை - வரலாறு, வெளியீடு - வவு /கல்வித் திணைக்களம், பக்கங்கள் - 14, r
ஆண்டு 1992,
விலை குறிப்பிடப்படவில்லை.
*தென்றலும் தென்மாங்கும்"
வகை - கவிதை,
வெளியிடு - வவு /முத்தமிழ்க் கலாமன்றம், பக்கங்கள் - 14,
ஆண்டு 1993,
விலை 10.00
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) ; கலாபூஷணம் புண்னியாமீன் 85.

Page 53
அகளங்கன்
10.
11.
12.
13.
14.
*இலக்கிய நாடகங்கள்
வகை - நாடகம்,
வெளியீடு - வவு /முத்தமிழ்க் கலாமன்றம், பக்கங்கள் - 134,
ஆண்டு 1994,
விலை 7000
‘மகாகவி பாரதியாரின் சுதநதிரக் கவிதைகள்’
வகை - ஆய்வு, வெளியீடு - தேசிய கலை இலக்கியப் பேரவை
பக்கங்கள் - 110, ஆண்டு 1994,
விலை 60.00
பன்னிரு திருமறை அறிமுகம்’
வகை - ஆய்வு,
வெளியீடு - வவு (இந்து மாமன்றம், பக்கங்கள் - 20,
ஆண்டு 1994,
விலை 2000
*ஆத்திசூடி" (விளக்கவுரை) வகை - சமயம, வெளியீடு - வவு /இந்து மாமன்றம், பக்கங்கள் - 37, ஆண்டு 1995, விலை 5.00
"கொன்றை வேந்தன்” (விளக்கவுரை) 6)/606 - JIDIшIb, வெளியீடு - வவு /இந்து மாமன்றம், பக்கங்கள் - 40, ஆண்டு 1996, விலை 7.50
86 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு
- (தொகுதி II)

அகளங்கன்
15. *அகளங்கனின் கவிதைகள்’
வகை - கவிதை, வெளியீடு - வவு /முத்தமிழ்க் கலாமன்றம், பக்கங்கள் - 100 ஆண்டு 1996, விலை 7000
16. *வாக்குண்டாம்”
660)&6 — GFLDub, வெளியிடு - வவு /இந்து மாமன்றம், பக்கங்கள் - 36 ஆண்டு 1997, விலை 7.50
17. சிவபுராணம்” 66D85 - GFLDub, வெளியீடு - வவு இந்து மாமன்றம், பக்கங்கள் - 18 ஆண்டு 1997, விலை குறிப்பிடப்படவில்லை
18. “செந்தமிழும் நாப்பழக்கம்”
வகை - பேச்சு, வெளியீடு - வவு /இந்து மாமன்றம், பக்கங்கள் - 56 ஆண்டு 1997, விலை 5.00
19. ‘நாமறிந்த நாவலர்”
வகை - சமயம், வெளியீடு - வவு /இந்து மாமன்றம், பக்கங்கள் - 12 ஆண்டு 1997 விலை 5.00
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபூஷணம் புன்னியாமீன் 87.

Page 54
அகளங்கன்
20.
2.
22.
23.
24.
*நல்வழி” (பொழிப்புரை விளக்கவுரை)
வகை - சமயம்,
வெளியீடு - வவு/இந்து மாமன்றம், பக்கங்கள்- 26
ஆண்டு 1998, விலை 10.00
“இசைப்பாமாலை”
வகை - இசைப்பாடல்,
வெளியீடு -ஆசிரியர்,
பக்கங்கள் - 48 ஆண்டு 1998,
விலை 40.00
“கவிஞர் ஜன்னாவின் இரட்டைக் காப்பியங்கள் ஓர் ஆய்வு”
வகை - ஆயவு, வெளியீடு - அன்னை வெளியீட்டகம், மருதமுனை, பக்கங்கள் - 104 ஆண்டு 1999,
விலை 100.00
“இலக்கியச்சரம்”
வகை - இரசனைக் கட்டுரை, வெளியீடு - வவு முத்தமிழ்க் கலாமன்றம், பக்கங்கள் - 259
ஆண்டு 2000,
விலை 200.00
− “வெற்றிவேற்கை” வகை - சமயம்,
வெளியீடு - வவு/இந்து மாமன்றம், பக்கங்கள் - 16 ஆண்டு 2000, விலை குறிப்பிடப்படவில்லை
88 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி I)

அகளங்கன்
25.
26.
27.
28.
29.
30.
“கூவாத குயில்கள்?
வகை - நாடகம்,
வெளியீடு-பிரியா பிரசுரம், எழுத்தாளர் ஊக்கவிப்பு மையம்.
பக்கங்கள் - 102 ஆண்டு 2001, விலை 150.00
*திருவேம்பாவை’ (உரையுடன்)
வகை - சமயம், வெளியீடு - இராமஸ்வாமி அறக்கட்டளை நிதியம், பக்கங்கள் . 30
ஆண்டு 2002, விலை 20.00
“பாரதப் போரில் மீறல்கள்”
வகை - கட்டுரை, வெளியீடு - பிரியா பிரசுரம். எழுத்தாளர் ஊக்கவிப்பு மையம். பக்கங்கள் - 75
ஆண்டு 2003,
விலை 12500
“சுட்டிக் குருவிகள்” (மழலைப் பாடல்கள்)
வகை - பாடல், வெளியீடு - பிரியா பிரசுரம், எழுத்தாளர் ஊக்கவிப்பு மையம், பக்கங்கள் - 24 ஆண்டு 2003, விலை 100.00
“சின்னச் சிட்டுக்கள்” (சிறுவர் பாடல்கள்) ,
வகை - பாடல், வெளியீடு -பிரியா பிரசுரம். எழுத்தாளர் ஊக்கவிப்பு மையம், பக்கங்கள் - 36 ஆண்டு 2005,
விலை 125.00
“நறுந்தமிழ்”
வகை - கட்டுரை, வெளியீடு -பிரியா பிரசுரம். எழுத்தாளர் ஊக்கவிப்பு மையம். பக்கங்கள் - 128
ஆண்டு 2006,
விலை 17500.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபூஷ்ணம் புண்னியாமீன் 89

Page 55
அகளங்கன்
1985ஆம் ஆண்டு கவிஞர் சூ. முரளிதரனுடன் இணைந்து “சமவெளி மலைகள்” எனும் கவிதை நூலினையும் (பக்கம் 48) வெளியிட்டார்.
அதேபோல 2005ஆம் ஆண்டு “சுனாமிப் பேரலையே” எனும் தலைப்பில் இவரது தலைமையில் இடம்பெற்ற கவியரங்கத்தில் பாடப் பட்ட 4 கவிஞர்களின் தொகுப்பு வெளிவந்தது. ஈ. மேக்ஸ் மீடியா வெளியீடாக வெளிவந்த இக்கவிதை நூல் 50 பக்கங்களைக் கொண் டது. விலை 50.00 ரூபா.
இது தவிர இவர் பல மலர்களையும், சஞ்சிகைகளையும் தொகுத்து வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அவை பற்றிய சுருக்க விபரம் கீழே தரப்பட்டுள்ளன.
01. பண்டார வன்னியன் விழா மலர் (1982)
வவுனியாவில் நடைபெற்ற பண்டார வன்னியன் விழாவின் போது வெளியிடப்பட்டது. 02. தவத்திற்கு ஆறுமுக நாவலரன்
சைவ வினா விடை தொகுப்பு (1997) O3. சுத்தானந்தம்
(வசுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் புதிய மண்டபத் திறப்பு விழா மலர் - 1999) 04. மகாகும்பாபிஷேக சிறப்பு மலர் (1999)
V− வவுனியா கந்த சுவாமி கோவில் -05 வவுனியா பல நோக்குக் கூட்டுறவுச் சங்க தசாப்த
சிறப்பு மலர் (1999) 06. வவுனியா வெளிவட்ட வீதி ஹி சிந்தா
விநாயகர் ஆலய முகபத்திரவட்ட (வேசரம்) சித்திரத் தேர் வெள்ளோட்ட விழா மலர் /(2001) 07. சுத்தானந்தம் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கப்
பொன்விழா மலர் (2003) 08. கதிராளி வவுனியா தமிழ் ம.ம. வித்தியாலயம்
கல்லூரிச் சஞ்சிகைகள் (2004, 2005) 09. மருத தீபம்
வவுனியா மாவட்ட கலாசாரப் பேரவை (2006) 10. காளி தரிசனம்
வவுனியா குருமான்காடு காளி கோவில் கும்பாபிஷேக
90 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)

அகளங்கன்
வவுனியா சிவன் கோவில் கும்பாபிஷேக மலரான சிவதத்துவ மலர் - 95, வவுனியா பிரதேச கலாசாரப் பேரவையின் மலரான கலை மருதம் - 95, வடக்குக் கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு வவுனியாவில் நடாத்திய இலக்கியப் பெருவிழா மலரான மருதநிலா - 96 ஆகியவற்றின் மலர்க்குழு உறுப்பினராகவும் கடமை
யாற்றியுள்ளார்.
பழகுவதற்கு இனிமையான சுபாவம் கொண்ட அகளங்கனின் பின்வரும் ஆக்கங்கள் ஒலி நாடாக்களிலும், இறுவட்டுகளிலும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1.
“செந்தாமரைக் குளங்கள்.
“செஞ்சோற்றுக் கடன்’ எனும் இலக்கிய நாடகம். திரு. எஸ். பூபாலசிங்கம் ஆசிரியர் அவர்களால் ஆங்கிலத்தில் Gratitude எனும் நாடகமாக மொழி பெயர்க்கப்பட்டு, K,K,ARTS Films இனரால் 15.12.2005 வ /சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் இறுவட்டு ஆக வெளியிடப்பட்டது. -
'' UTL6) 'வன்னி ஒடை இசை நாடாவில் இடம்பெற்றது. “அடங்காத பற்றுக் கொண்ட.” பாடல் 'வன்னி அருவி” இசை நாடாவில் இடம்பெற்றது. “இசைத்திட முடியாது.” பாடல் 'வன்னி ஊற்று இசை நாடாவில் இட்ம்பெற்றது. “உள்ளம் பேசும் வார்த்தை” "ட்ரெய்ன்” இசைப்பாடல் தொகுப்பில் இடம்பெற்றது. “சிரிக்கும் முல்லைகளே.” “சிறகுகள்” (CD) இசைத்தட்டில் இடம்பெற்றது.
அதேநேரத்தில் இவரால் இயற்றப்பட்டுள்ள பாடல்கள்
சில கல்லூரி கீதமாகவும், இயக்கங்களின் இயக்க கீதமாகவும்
ஒலித்து வருவதும் அவதானிக் கத்தக்கது. அந்த
அடிப்படையில் இன்றும் ஒலிக்கும் இவரின் பாடல்களின் விபரம் பின்வருமாறு:
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரிக் கீதம்.
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கக் கீதம்.
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர்
பாடசாலைக் கீதம்.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 0) கலாபூஷணம் புண்னியாமீன் 91

Page 56
அகளங்கன்
வவுனியா இந்து மாமன்றக் கீதம். வவுனியா நகரசபைக் கீதம். ; 6/ LiboldtDG LITLarso6oi doglb. வ/ ஒலுமடு பாடசாலைக் கீதம். வ! சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயக் கீதம், செ/ கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலயக்
கீதம். 0 வ கணேசபுரம் விநாய வித்தியாலய கீதம்
என்பவற்றுடன் போட்டிகளுக்கான பல இசைப் பாடல்களும் இவரால் எழுதப்பட்டுள்ளது.
அளகங்கனின் இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு
பல நிறுவனங்களும், அமைப்புக்களும் பல்வேறுபட்ட பட்டங்களையும்,
விருதுகளையும் வழங்கி கெளரவித்துள்ளன. அவை பற்றிய
விபரங்களும் கிழே சுருக்கமாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
S.
19906) வவுனியா இந்து மாமன்றம் “காவிய மாமணி” எனும்
பட்டத்தை வழங்கி கெளரவித்தது.
1993ல் இந்து கலாசார இராஜாங்க அமைச்சு “தமிழ் மணி”
எனும் பட்டத்தை வழங்கி கெளரவித்தது. w
1995ல் யாழ்ப்பாணம் திரு நெறிய தமிழசைச் சங்கம் “திரு நெறிய தமிழ் வேந்தர்” எனும் பட்டத்தை வழங்கி w கெளரவித்தது.
1997ல் ஞானப் பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள்Nகுரும காசந்நிதானம்) மெய்கண்டார் ஆதீனம் (இலங்கை) “கவிமா மணி’ எனும் பட்டத்தை வழங்கி கெளரவித்தது.
1998ல் வவுனியா நகராண்மைக் கழகம் மக்கள் சேவையில் நான்கு ஆண்டுகள் நிறைவு விழா வைபவத்தின் போது “பல்கலை எழில்’ எனும் பட்டத்தை வழங்கி கெளரவித்தது
1999ல் ഖഖങ്ങിut சுத்தானந்த ®ಹಿಟ இளைஞர் சங்கக் கலாசார மண்டபத் திறப்பு விழாவில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் “புராண படன புகழ் தாரகை” எனும் பட்டத்தை வழங்கி
கெளரவித்தது.
92 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)

அகளங்கன்
S. 1999ல் அகில இலங்கை கச்சியப்பர் கழகம் “புராணபடன வித்தகர்” எனும் பட்டத்தை வழங்கி கெளரவித்தது
> 2001ல் சாஸ்திரி கூழாங்குளம் சிவபுரம் சிவபுர சுந்தரேஸ்வரி சமேத சுந்தரேஸ்வரர் ஆலய அறங்காவரலர் சபை “சிவனருட் செல்வர்” எனும் பட்டத்தை வழங்கி கெளரவித்தது
X) 2002ல் இலங்கை இந்து மத குருபீடாதிபதி சிவாகம ஞான.
கலாநிதி அருள் ஜோதி ஸ்கந்த சாம்பசிவ சிவாச்சாரியார் அவர்களின் ஐந்தாண்டு ஞாபகார்த்த ஆன்மீகப் பெருவிழாவில் “வாகீச கலாநிதி” எனும் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
X) 2007ல் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய தீந்தமிழ்
அமுதக் கலையரங்கு வருடாந்த தமிழ் விழாவின் போது “செஞ்சொற்சிலம்பன்” எனும் பட்டம் வழங்கி கெளரவிக் கப்பட்டார்.
இதேபோல இவரின் இலக்கியச் சேவையை கெளரவித்த அமைப்புக்களின் விபரங்கள் பின்வருமாறு:
1. 1999ல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் வவுனியா மாவட்டத்தின்
முதன்மைத் “தமிழ் அறிஞராக” தெரிவு செய்தது. 2. 2000ம் ஆண்டிற்கான வடக்கு கிழக்கு மாகாண “ஆளுநர்
விருது” 2000-11-05ஆந் திகதி திருகோணமலையில் இடம்பெற்ற இலக்கிய விழாவில் கெளரவத்துடன் வழங்கப் பெற்றது. . . . . .. '' 3. வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளை யாட்டுத்துறை அமைச்சு தனது முதலாவது சாகித்திய விழாவில் (1991 திருகோணமலை) கெளரவித்தது. 4. அகில இலங்கைக் கலைக்கழகம், வவுனியா சுத்தானந்த
இந்து இளைஞர் சங்கம், வவுனியா வளாகம், இந்து மாமன்றம், வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து நடாத்திய “வன்னிப் பிரதேசத் தமிழ் இலக்கிய முயற்சிகள் பற்றிய கருத்தரங்கும், கலைநிகழ்ச்சிகளும்” எனும் நிகழ்வின் போது (31-01-2003) பொன்னாடை போர்த்தி கெளரவித்தது. . . . 5. வவுனியா மாவட்டச் செயலகம், வவுனியா பிரதேச செயலகம்,
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம், வவுனியா இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) கலாபூஷணம் புண்னியாமின் 93

Page 57
அகளங்கன்
இந்து மாமன்றம், வவுனியா நகரசபை, வைரவர் புளிங்குளம், கிராமோதய சபை, வவுனியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், பிறந்த ஊரான பம்மைமடு கிராமம், வவுனியாவில் உள்ள பல ஆலயங்கள். பாடசாலைகள் ஆகிய பல தடவைகள் பொன்னடை போர்த்தியும், பொற்கிழி வழங்கியும் பாராட்டி கெளரவித்துள்ளன. 6. வவுனியாவிற்கு வெளியேயும் அதாவது யாழ்ப்பாணம்,
மட்டக்களப்பு, மன்னார், கொழும்பு, மலையகம், திருகோணமலை போன்ற பல இடங்களிலும், இலக்கியம், சமயம் சார்ந்த பல நிகழ்வுகளின் போது கெளரவங்கள் கிடைக்கப்பெற்றன. 7. காத்தான்குடிப் பிரதேச இளைஞர் கழகங்களின் பங்கேற்றலுடன் கிழக்கிலங்கை மனிதவள மேம்பாட்டு நிறுவனமும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையமும் இணைந்து வழங்கும் தமிழ்-முஸ்லிம் நல்லுறவு இலக்கிய விழா 2003 நிகழ்வின் பொது தமிழ் - முஸ்லிம் நல்லுறவுக்காக, இலக்கிய மூலமான பங்களிப்பச் செய்தமைக்காக, கெளரவம் வழங்கப்பட்டது.
அகளங்கனின் இலக்கியத்துறை /கலைத்துறையில் புரிந்துள்ள சாதனைகளையும் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம். குறிப்பாக இவரின் இலக்கியப் படைப்புகளுக்கு கிடைத்த விருதுகள் தொகுக்கப் பட்டுள்ளன.
1. “வாலி” அய்வு நூல், 1987ல் வெளிவந்த சிறந்த
இலக்கிய நூலுக்கான பாராட்டை அகில இலங்கை இலக்கியப் பேரவை யாழ், இலக்கிய வட்டம் ஆகியவற் றிடம் பெற்றது.
2. “அன்றில் பறவைகள்’ நாடக நூல். 1992ல் வெளிவந்த சிறந்த நாடக நூலுக்கான தேசிய சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது.
3. “இலக்கிய நாடகங்கள்” நூல். 1994ல் வெளிவந்த சிறந்த நாடக நூலுக்கான வடக்குக் கிழக்கு மாகாண இலக்கிய நூற் பரிசைப் பெற்றது. இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க பரிசையும் பெற்றது (1994).
94 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விரத்திரட்டு - (தொகுதி 11)

அகளங்கன்
4. “அளகங்கள் கவிதைகள்” எனும் கவிதை நூல் 1996ல் வெளிவந்த சிறந்த கவிதை நூலுக்கான வடக்கு, கிழக்கு மாகாண இலக்கிய நூற் பரிசைப் பெற்றது. 1985ல் அகில இலங்கை ரீதியில் யாழ்ப்பாணம் ஈழ{Fசு பத்திரி கையினால் நடாத்தப்பட்ட சிறுகதைப் பொன்விழா போட் டியில் மீண்டும் ஒரு குருஷேத்திரம்” எனும் சிறுகதை 2ஆம் பரிசைப் பெற்றது.
5. 1991ல் சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு
கல்வியமைச்சு ஆசிரியர்களுக்கிடையே அகில இலங்கை ரீதியாக நடாத்திய நாடகப் பிரதியாக்கப் போட்டியில் “உருகி எரியும் கர்ப்பூரங்கள்” எனும் நாடகம் 1ஆம் பரிசைப் பெற்றது.
6. 1994ல் கலாசார அமைச்சு நடாத்திய அகில இலங்கை ரீதியான சிறுகதைப போட்டியில் “யாழ்தேவி” எனும் சிறுகதை 2ஆம் பரிசைப் பெற்றது.
7. 1995ல் மட்டக்களப்பு எழுத்தாளர் சங்கம் நடாத்திய அமரர் ரி. பாக்கியநாயகம் நினைவு நகைச் சுவைக் கட்டு ரைப் போட்டியில் “தமிழிலக்கியத்தில் நகைச் சுவை”எனும் கட்டுரை 1ஆம் பரிசைப் பெற்றது.
8. 1996ல் மாத்தறை மக்கள் சமாதான இலக்கிய அமைப்பு நடாத்திய கவிதைப் போட்டியில் “ஒற்றுமைப் பாட்டு” எனும் கவிதை சிறப்புப் பரிசைப் பெற்றது.
9. 1996ல் கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்திய பேராசிரியர் க.கைலாசபதி நினைவுக் கட்டுரைப் போட்டியில் “மகாகவி பாரதியார் காட்டும் வாழ்வியல் முறை” எனும் கட்டுரை 1ஆம் பரிசைப் பெற்றது.
10. 1996ல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட நாவற்குழியூர் நடராஜன் நினைவுக் கவிதைப் போட்டியில் “சமாதானம் துளிர்க்க வேண்டும்” எனும் கவிதை 2ஆம் பரிசைப் பெற்றது.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபூஷணம் புன்னியாமீன் 95

Page 58
அகளங்கன்
11. 1996ல் சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி அகில இலங்கை ரீதியில் ஆசிரியர்களிடையே நடத்தப்பட்ட
சிறுகதைப் போட்டியில் "துருவ நட்சத்திரம்” எனும்
சிறுகதை திறமைச் சான்றிதழைப் பெற்றது.
12. 1997ல் மேற்கூறப்பட்ட போட்டியில் “மனித தெய்வங் கள்” எனும் சிறுகதை பாராட்டுச் சான்றிதழைப் பெற்றது.
13. கலாசார அலுவல்கள், தேசிய மரபுரிமை அமைச்சு நடாத்திய அரச சேவையாளர்களுக்கான நிருமான போட்டித் தொடரின் சிறுகதை (2004ல்) எனும் போட்டியில்
“நாளைக்கும் பூ மலரும்” எனும் சிறுகதை சிறந்த ஆக்கத் துக்கான சான்றிதழைப் பெற்றது.
14. மேற்படி பாடலாக்கப் போட்டியில் “சிரிக்க விடுங்கள்” பாடலுக்கு (2006ல்) சிறப்புச் சான்றிதழ் கிடைத்தது.
இங்கு குறிப்பிட்டுக் காட்டக் கூடிய ஒரு அம்சமாகும். இவரின் இத்தகைய பணி தொட்ரும் அமைப்புகளும், அவற்றில் வகிக்கும் பதவிகளும் கீழே இடம்பெற்றுள்ளன.
1.
2.
3.
யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்மன்றத் தலைவர் . (1977). . .
வவுனியா இலக்கிய வட்டத் தலைவர் (1979). வவுனியா பிரதேச கலாசாரப் பேரவைத் தலைவர்
(1995). வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க குழு
உறுப்பினர் (1991-1999). வடக்கு கிழக்கு மாகாண கலாசாரக் குழு உறுப்பினர்
(1999). வடக்கு கிழக்கு மாகாண சாகித்தியக் குழு உறுப்பினர்
(1992).
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க உய
தலைவர்.
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க போஷகர்.
யாழ் இலக்கிய வட்டத்தின் உப தலைவர் (1980).
96 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி II)

அகளங்கன்
10.
11.
12.
13.
தமிழ்ப்பாட வாசிப்புத் துணைநூல் ஆககக்குழு (கொழும்பு மகரகம தேசியக் கல்வி நிறுவனம், வடக்கு கிழக்கு மாகாண கல்வியமைச்சு) உறுப்பினர். “வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்” அமைப்பாளர்களில் (மூவரில்) ஒருவர். இரண்டாவது உலக இந்து மாநாடு 2003 வவுனியா - மன்னார் மாவட்ட செயலாளர். வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் தலைவர்.
ஒரு சிரேஷ்ட எழுத்தாளன் என்ற அடிப்படையிலும், சமூகத்தின் துயரங்களை நாடிபிடித்துப் பார்த்து அவற்றை இலக்கிய வடிவில் முன்வைப்பவர் என்ற அடிப்படையிலும், அகளங்கனால் எழுதப்பட்ட பல்வேறுபட்ட ஆக்கங்கள் பல்கலைக்கழக மட்டத்திலும், கல்லூரிகள் மட்டத்திலும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. அது பற்றிய விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
1.
“அகளங்கன் ஆக்கங்கள் ஒரு கண்ணோட்டம்” (கலை
முதற் தேர்வுக்காக) சு. ஜெயச் சந்திரன் - கிழக்குப் பல்கலைக்கழகம்.
*அகளங்கன் ஆக்கங்கள் ஓர் ஆய்வு” (கலை முதற் தேர்வுக்காக) செல்வி க. சாந்தி - யாழ்ப் பல்கலைக்கழகம்.
*வவுனியா வாழ் தமிழ்ப் புலவர் தமிழ் மணி அகளங்
கன் ஐயா அவர்களின் பாடல்களில் ஆடலாக்கம்” வெளிவாரி நடனமாணிப்பட்டத்திற்கான ஆய்வு. திருமதி சூரிய யாழினி வீரசிங்கம் - யாழ் பல்கலைக்கழகம்
“அகளங்கனின் இலக்கியப் பணி” ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்
சிறப்புக் கலைமாணித் தேர்விற்காக செல்வி. சோபிதா
தெய்வேந்திரராசா - யாழ்ப் பல்கலைக்கழகம்
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபூஷணம் புண்னியாமீன் O7

Page 59
அகளங்கன்
5. *எழுத்தாளர் அகளங்கனின் நாடகங்கள் ஓர்
ஆய்வு”
கலை இறுதியாண்டுத் தேர்வுக்காக
செல்வி. இன்ப தேவி -சப்பிரகமுவ பல்கலைக்
கழகம்
6. *அகளங்கன் ஆக்கங்கள் ஒர் ஆய்வு”
கலை இறுதியாண்டுத் தேர்வுக்காக செல்வி. சுகிரஜனி புலேந்திரன் - சப்பிரகமுவ பல்கலைக்கழகம்
கலை, இலக்கியத்துறை போலவே ஜாதகம் குறித்தல் பார்த்தல் போன்ற துறைகளிலும் ஈடுபாடுமிக்க இவரின் முகவரி;-
அகளங்கன்
இல. 90 திருவாற்குளம், வவுனியா.
98 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)

276 277 278 279 280 281
282
283
284.
285
இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்டுரைகளும்
ダ 容躁毅虚耗艇谢辑森影。 An independent weekly voice in Tamis
இல் பிரசுரமானவையாகும். பிரசுரமான திகதிகள் கீழே தரப்பட்டுள்ளன.
தம்பிஐயா தேவதாஸ் O2.12.2007 எஸ்.எச்.எம். ஜெமீல் 25.11.2007 அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை 23.12.2007 அந்தனி ஜீவா 09.12.2007, 16.12.2007 பாலா. சங்குப்பிள்ளை 13.01.2008 ஜே. மீராமொஹிதீனி O3.02.2008
வை. அநவரத விநாயகமூர்த்தி
10.02.2008, 17.02.2008
சாரல்நாடனி 24.02.2008, 02:03.2008 வி.வீரசொக்கனி 09.03.2008
நாகலிங்கம் தர்மராஜா (அகளங்கனி)
16.03.2008
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) : கலாபூஷணம் புன்னியாமீன்

Page 60
எனும் தொடரினை பிரசுரிக்க முன்வந்த
ஞாயிறு
2zé47zszj
«x 3.කුරේල් VAGA
indent Weekly voice in armi
ஆசிரியர் திருவாளர் - பாரதி இராஜநாயகம் -
அவர்களுக்கும், தினக்குரல் ஆசிரியர் பீடத்துக்கும். தினக்குரலி நிர்வாகத்தரினருக்கும் என்னுடைய இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ക്കുമ്പുമുഞ്ഞമ gബ്ബീഗമീബ് -
pmpuniyameen@yahoo.com
100 எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 11)
 
 
 


Page 61