கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள்

Page 1
விழிப்
|L ೧ಗಿಗಾಹಿ gain
சொற்பொழிவுகளே 685াষ্ট্রে
கந்தையா
 

opišÉSIGIT
reg LIGOLLUT55
L606)
நவரேந்திரன்
-

Page 2


Page 3

விழிப் புணர்வு பற்றிய விளக் கங்க ள்
ஜே. கிருஷ்ணமூர்த்தியின் சொற்பொழிவுகளை அடிப்படையாகக் கொண்டவை
கந்தையா நவரேந்திரன்
1974

Page 4
DISSERTATION
ON
based on
J.KRISHNAMURTI's talks
KAN O AH NANMAREN ORAN
 

ஜே. கிருஷ்ணமூர்த்தி

Page 5

1972ஆம் ஆண்டு ஆடி மாதம் இருபத்தெட்டாம் நாளன்று கள்ளங்கபடக் தோயாச் சிறுமிப்பருவத்தே இவ்வுலகை நீத்த எனதருமை மருமகள் செவ்வந்தியை நினைவுகூர் நூலாக இதனை வெளியிடுகின்றேன்.

Page 6
முதற் பதிப்பு - 1974
உரிமை ஆசிரியருக்கே
திருமகள் அழுத்தகம், சுன்னகம்

முன்னுரை
உலக முன்னேற்றத்திற்குப் பெருந்துணை புரிந்த விஞ்ஞானிகளின் அயரா உழைப்பாற் ருேன்றிய கைத் தொழிற் புரட்சியின் வளர்ச்சி, மக்களின் புறவாழ்க்கை யில்-பொதுவாழ்க்கையில் - ஆக்கமுங் கேடுங் கலந்த பெருமாற்றத்தை விளைவித்துள்ளது. ஆயின், மக்களின் அகவாழ்க்கை பண்டுபோலின்றும் இன்னல்கள் பல மலிந் தனவாய்க் காணப்படுகின்றது. உலகில் இன்றுவரை நிலைத்துள்ள சமயங்களைத் தோற்றுவித்த பலரின் தத்துவ விளக்கங்களும் மதகுருமாரும் பூசாரிகளும் அவர்களின் ஒன்றற்கொன்று முரண் பட்ட சமயக் கொள்கைகள், நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதா யங்கள் முதலியனவும் மயக்கமான சூழ்நிலையை வளர்த்து வருகின்றனவேயன்றி, மக்கள் தம்மைத்தாம் உணர்ந்து தலைப்பட வழிவகுத்தில; ம யக் கமான சூழ்நிலையிலிருந்து புத் துணர்வுபெற் றுய்திபெறுதற்கு விழிப்புணர்வு இன்றியமையாதது. இவ் விழிப்புணர்வு கட்டுப்பாடற்ற, கலக்கமற்ற, தெளிந்த உள்ளத்தி லேயே அரும்பித் தழைத்தோங்கும். தாமே நுகர்ந் துணரும் உண்மை பிறிதொருவர் நுகர்வித்தறியத் துணை செய்ய முடியாது. ஒருவர் நுகர்ந்து கண்ட உண்மை இன்னுெருவருக்கு உண்மையாகாது.
இன்பதுன்பங்களிற் ருேய்வதால் ஏற்படும் விருப்பு வெறுப்புக்களாகிய பற்றுகளிற் பற்றிப் பற்றிப் படர்ந் தெழுந்து விழுந்தலையெறிந்து கலங்கி அல்லலுறும் மனம், அடங்கி ஒடுங்கி அமைதியுறும் பெருநிலை ஏற் பட்டாலன்றித் தன்னையுணரும் விழுத்தகு விழிப்புநிலை யேற்படாதென்ப. இந்நிலையின் அருமை பெருமைகளைக் கிருஷ்ணமூர்த்தியின் சொற்பொழிவுகள் உள்ளங்கை நெல்லிக்கனி போல நன்கு புலப்படுத்துகின்றனவென் பதை அவர்களின் நூல்களைப் பன்முறை படித்துப் படித்துச் சிந்தித்துச் சிந்தித்துச் சிற்றளவு தெளிவுபெற்ற என்னுள்ளம் அவர்கள் சொற்பொழிவுகளில் அமைந்

Page 7
Vi
துள்ள விளக்கக் குறிப்புக் கள் சிலவற்றை அறியும் வாய்ப் பற்ற தமிழன்பர்கள் அறிந்தின்புற வேண்டு மென்ற வேணவாவால் உந்தப்பட்டதன் விளைவே இச் சிறு நூலாக உருக்கொண்டுள்ளது. இந்நூலிற் பிழைகள் சில காணப்படுமாயின், அவை என் சிற்றறிவால் ஏற். பட்டன வாமெனக் கொள்க.
இந்நூலின் இறுதிப் பக்கங்கள் சிலவற்றில் கிருஷ்ண மூர்த்தியின் தத்துவம் பற்றிய ஆய்வுக்கு மேலும் உதவும் பொருட்டு அவரது மேற்கோள்கள் சில தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. அவை வாசகர்களுக்குப் பெரிதும் நன்மை பயக்கும் என்று நம்புகிறேன்.
கிருஷ்ணமூர்த்தியையும் அவரது தத்துவத்தையும் 'தினகரன் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்ய உதவிய 'தினகரன்' ஆசிரியர் இ. சிவகுருநாதன் அவர் , களுக்கும், எம். ஆர். சுப்பிரமணியம் அவர்களுக்கும். அணிந்துரை வழங்கிய சென்னைப் பல்கலைக் கழகத் தத்துவப் பேராசிரியர் டி. எம். பி. மகாதேவன் அவர் களுக்கும், இக்கட்டுரைத் தொகுப்பை நூல்வடிவிற் கொண்டுவரப் பலவழிகளில் ஊக்கமும் உதவியும் அளித்த அன்பர்களுக்கும், “வர்த்தகப் பெருமக்களுக்கும், இந் நூலைச் சிறந்த முறையில் அச்சிட்டு உதவிய சுன்னகம், திருமகள் அழுத்தகத்தினருக்கும், அச்சுப் பிரதிகளைப் பார்ப்பதில் எனக்கு உதவியளித்த பண்டிதர் க. சிவ லிங்கம் அவர்களுக்கும், பிரதியாக்கத்திற்கு எனக்கு உதவியளித்த சட்டக்கல்லூரியைச் சேர்ந்த செல்வி ம. செபரத்தினத்துக்கும் நன்றியறிதலுடையேன்.
கந்தையா நவரேந்திரன் 171 மகாவத்தை வீதி, கொழும்பு 14.

тє.«Pнома "б е 2 ? в
fäniwersity of fitabras
S
హైకడ
cExT at 8F ADVAC study whilosophi
UNTWERSTY CENTENARY BuildfN6 MAORAS - S. NOA
y llith Aprill 1973.A.--
ebys. T. W. P. M.AHAE0EVAN {ig::yek)
FOREWARD
J. Krishnamurthi has fulfilled the prophesy that he was a Messiah by refusing to be one. Yet, practically all through the decades of this century, his influence has been widely and deeply felt not only in this country but also in several other parts of the world. He encourages seekers after truth to free themselves from the trammels of traditions and institutions, from set habits and patterns of thought. He feels that the search for truth is one's own affair and cannot be done by another for oneself. Persons who listen to him come away refreshed and encouraged to pursue the spiritual quest in their own manner and in the way best suited to their aptitudes and talents. Indeed it is difficult to characterise in precise terms the spiritual emancipation that Krishnamurthi has been working for. He refuses to be made an Institution. But there is no gainsaying the fact that he is one of the major healing influences for the spiritual sickness of the modern world. I am glad that Sri Navarendran has brought out under suitable captions in clear and easy Tamil the nuances of Krishnamurti's thoughts and insights. Originally published as articles in a Tamil Weekly, their popularity and frequent requests for the copies of the back numbers of the Weekly containing these articles have induced the present publishers to bring them out in book form. The author and publishers deserve our congratulations on their signal service to the cause of Philosophy and Culture. I am sure the book will be well received.
Madras, 109. ( )سح27 برمصير"
11th April 1973.
Director, Centre of Advanced Study in Philosophy
University of Madras, Madras-5.

Page 8
அணிந்துரை
டாக்டர் டி. எம். பி. மகாதேவன். எம். ஏ., பி. எச். டி.
ஆணையாளர், தத்துவப் பேராய்வு நிலையம், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை - 5
ஆன்மிக மீட்பாளராய்-தேவதூதராய்-திகழ்வா ரென்ற முன்மொழிக்கிணங்க மறுத்ததின் மூலம் ஜே. கிருஷ்ணமூர்த்தி, தாமவரே - தேவதூதரே யென்பதை நிறைவேற்றியுள்ளார். இருந்தும் இருபதாம் நூற்ருண் டில் இவரது செல்வாக்கு இந்தியாவில் மட்டுமன்றி உல்கின் பல்வேறு பாகங்களிலும் பரந்தும் ஆழமாகவும் உன்னிப்பாக உணரப்படுகின்றது. பண்டு தொட்டு நிலவி வரும் மரபுகள், நிலைநாட்டப்பட்ட நிறுவனங்கள், குறிப்பிடத்தக்க பழக்கங்கள், எடுத்துக்காட் டமைப் பான எண்ணங்களென்பனவற்ருற் பொத்துண்டலையா அமைதிகொள் மனத்தாலேயே உண்மையை நாட வேண்டுமென்று உண்மையைக் காண விழைவாரை ஊக்கு கின்றர். ஒருவர் தாமே உண்மையைக் காணவேண்டு மன்றி உண்மை பிறரால் இன்னுெருவருக்குக் காட்டக் கூடிய தன்றென இவர் கருதுகின்ருர், அவர் நல்லுரை யைக் கேட்பவர் தங்கள் விருப்புக்கும் மனத்திறனுக்கும் பொருத்தமான வழிநின்று ஆன்மிகவுணர்வு பெறப் புத்துணர்வும் ஊக்கமு மளிக்கப்பட்டவராகின்றனர். ஆன்மிகத் தளை களைந்து விடுதலை பெற ஜே. கிருஷ்ண மூர்த்தி செய்யும் பணியை நன்கு வரையறுக்கப்பட்ட நுட்பம் வாய்ந்த சொற்கோவைகளாற் காட்டுதல் உண்மையிற் கடினமானதே. ஆன்மிக வழிகாட்டிக ளொவ்வொருவரும் தத்தந் தத்துவக் கோட்பாடுகளைப் பரப்பத் தனித்தனி நிலை நாட்டிய நிறுவனங்கள் போன்றவொன்றைத் தாம் நிறுவ அவர் மறுக்கின்ருர் . இன்றைய உலகில் நிலவும் ஆன்மிகப் பிணி மாற்றப்

ix
பெரிதும் உழைப்பாருளொருவர் இவரெனக் கூறுதல் மறுத்தற்கரிய கூற் ரு கும். கிருஷ்ண மூர்த்தியின் நுண்ணிய வேறுபாட்டுச் சிந்தனைகளையும் நுண்ணறிவுத் திறனையும் அடியொற்றி, படிப்போருள்ளத்தைக் கவரும் தலைப்புக்களின்கீழ் எளிமையுந் தெளிவும் பொருந்திய தமிழில் திருவாளர் நவரேந்திரன் தந்துள்ளமை குறித்து மகிழ்கின்றேன். தொடக்கத்தில் தமிழ் வார ஏடொன் றில் வெளிவந்த கட்டுரைகளிட்டிய புகழும், அக்கட்டுரை கள் வெளிவந்த ஏடுகள் தேவையென்ற தொடர்ந்த வேண்டுகோள்களும் பதிப்பாளரைத் துரண்டியமையால் அக்கட்டுரைகள் நூலுருவாக வெளிவருகின்றன. நூலா சிரியரும் பதிப்பாளரும் தத்துவ கலாசாரத் துறைகளின் உயர்வுக்குக் காரணராயமைந்த தொண்டில் ஈடுபட் டுள்ளமையால் தனிச்சிறப்புக்கும் போற்றுதலுக்கு முரியராவர். இந் நூலை மக்களுவந்தேற்ப ரென்பது என் துணிபாகும்.
டி. எம். பி. மகாதேவன் சென்னை, 1973 சித்திரை பதினென்று.
ii

Page 9
4.
:
14.
5.
1 6.
17.
8.
9.
20.
2 . .
22.
23.
24。
பொருள டக்கம்
முன்னுரை அணிந்துரை
ஜே. கிருஷ்ணமூர்த்தியின்
வாழ்க்கைக் குறிப்புக்கள் விழிப்பு நிலை என்ருல் என்ன? w « தன்னை மையமாகக்கொண்ட தொழிற்பாடு 'நான்' என்னும் தனித்தன்மை எது? மனத்தின் செயற்பாடும்
எண்ணத்தின் விளைவும் தெரிந்தனவற்ருல் மறைப்புண்ட உண்மை சிந்தனையற்ற தொழிற்பாடும் உண்மையும் இறை நம்பிக்கையும் உண்மையும் கட்டுப்பாடும் மனித ஆற்றலும் தனியொருவரும் சமூகமும் சலனமற்ற மனமும் உண்மையும் வாழ்க்கையின் நோக்கம் காணும் பொருள்களும்
காண் பானும் ஒன்ருனுல் . . சமயப் பற்றுடைய மனம் என்ருல் என்ன? எமது அகம் புறம் ஒவ்வாத் தன்மை பழையனவும் புதியனவும் ஆன்மிக போதகர் எதற்கு? அச்சம் என்ருல் என்ன? அன்பு என்ருல் என்ன? நம்பிக்கை என்றல் என்ன? ss உண்மையும் பொய்யும் பாலுணர்ச்சி பிரச்சினையாவது எப்போது? இறப்பிற்கும் வாழ்விற்கும்
இடையேயுள்ள தொடர்பு அழகும் அழகின்மையும்
பக்கம்
Wii
O
6
23
27
32
35 39 4引
48
52
55
60
65
7 Ι
74
78
82
92
97
102
Of
10

ஜே. கிருஷ்ணமூர்த்தியின்
வாழககைக குறிப்புக்கள்
சிலர் உண்மையைப் பேணிக்காக்கத் தம் பொருளை யும், புகழையும், அதிகாரத்தையும், உயிரையுந் துறந் துள்ளனர். புத்தர் தமது அரசுரிமையைத் துறந்தார்; பிக்குவாகிப் பிச்சாபாத்திர மேந்திக்கொண்டு தெருத் தெருவாகத் திரிந்தார். தென்னிந்தியாவிலுள்ள ஓர் ஏழை ஆசாரப் பிராமணக் குடும்பத்தில், ஜித்து கிருஷ்ணமூர்த்தி 1895ஆம் ஆண்டில் பிறந்தார். தம் மைப் பின்பற்றும் பல்லாயிர மக்கள் கொண்ட நல்ல நிறுவனத்தையும், டாக்டர் அன்னிபெசந்து அம்மை யாரால் அவருக்கென எழுப்பப்பட்ட ஆன்மிக நிலையத் தையுந் துறந்த இவர் உண்மையைப் பிறர் வாயிலாக அறிதல் முடியாது - தாமே அதனைத் தெரிந்து கொள்ள வேண்டும் - தெரிந்துகொள்ள முடியும் என்ற உள் ளுணர்வு உந்த, தாமே தமது சொந்த நாட்டத்தால் உண்மையைக் காண விழைந்தார்.
அசாதாரண ஆன்மிக ஒளி
கிருஷ்ணமூர்த்தியின் பால் ஆன்மிக ஒளி மிளிர்வதைக் கண்ட டாக்டர் பெ சந்து அம்மையார் இவரொரு காலத்தில் உலக வழிகாட்டியாக-தேவ தூதராகத் (Messiah) திகழ்வாரெனக் கனவு கண்டார். கிருஷ்ண மூர்த்தியின் பன்னிரண்டாம் வயதில் இவரையும், இவ ருடைய இளைய சகோதரனன நித்தியானந்தனையும் பெசந்து அம்மையார் உவந்தேற்று, இவர்களுக்கு வளர்ப்புரிமைத் தாயாக இவர்கள் உயர்வுக்குப் பெருந் தொண்டாற்றினர். பதினேழு வருடங்களுக்குள் பல் வேறு முக்கியமான நாடுகளினின்றும் தேர்ந்தெடுக்கப் பட்ட ஆண்களையும், பெண்களையும் கொண்ட உலகப் புகழ்பெற்ற குழுவாய் மலர்ந்த பெரும் நிறுவனத்தை நிறுவினர். பிரம்மாண்டமானதொரு தலைமை நிலை

Page 10
- 2 -
யத்தை அமைத்து, அங்கிருந்து கொண்டே கிருஷ்ண மூர்த்தி உலகிற்கு ஆன்மிகக் கருத்துக்களை அளிக்கவும் வழி வகுத்தார். டாக்டர் பெசந்து அம்மையார் தம் செல்வாக்கால் கிடைக்கப்பெற்ற மூல வளங்களை யெல் லாம் தங்கு தடையின்றி இதற்காகச் செலவிட்டார். கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு மிகச் சிறந்த முறையிற் கல்வி போதிக்க வழி செய்தார். பணம், சமூகத் தொடர்பு ஆகியவற்ருற் கிடைக்கக்கூடிய வசதிக ளனைத்தும் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு அளிக்கப் பட்டன. பிரமஞான சங்கத்தின் முக்கிய தலைவரான ஆயர் (Bishop) சார்ள்ஸ் லெட் பீற்றரின் (Charles Lead Beter) (up Göt GLD/Tufilu96är Lug (Prophecy ) p-6045 3 துக்கு நல்வழிகாட்ட அவ்வப்போது உலக ஆன்மிக வழிகாட்டி யொருவர் தோன்றுவார் என்ற நம்பிக்கைக் கிணங்க கிருஷ்ணமூர்த்தி அவதரித்தார் என்று பெசந்து அம்மையாருட்படப் பலரும் நம்பியிருந்தனர்.
பகவத் கீதை யில் , பஞ்சபாண்டவர்களுக்கும், துரியோதன ஞதியோருக்கு மிடையில் நடைபெற்ற பாரதப்போரின் போது, தன்னுடன் போரிடும் எதிரிகள் தனது கிளைஞர் என்பதை யறிந்து, இரத்தத் தொடர்பு கொண்ட தன்னினத்தவரையே கொன்று குவித்துப் பெறும் வெற்றிக்கொடியை நாட்டுவதைக் காட்டிலும், போர்புரியாமல் இருப்பது சாலச் சிறந்தது என மனம் மாறித் தத்தளிக்கும் நேரத்தில், கிருஷ்ண பிரான், “எவ்வெப்போது தீ  ைம க ள் பெ ரு கி, அ த ர் ம ம் வள ர் ந் து, நன்மைகள் குன்றி, த ர் ம ம் நலிந்து போகின்றனவோ, அவ்வப்போது தர்மத்தையும், உண்மையையும் நிலைநாட்ட யான் அவதாரஞ் செய் வேன்" என்று கூறியது இங்கு நினைவுகூரத்தக்கதாம். இத்தகைய கருத்துத் தோன்றியபின் பிரமஞான சங் கத்தில் ஒரு குழப்பம் ஏற்பட்டது. "குருவின் திரு aligusai' (At the Feet of the Master) at airp (Luu ரிடப்பட்ட நூல் அச் சங்கத்தால் வெளியிடப்பட்டது. 1911 இல் வெளியிடப்பட்ட இந்நூலின் ஆசிரியர்

- 3 -
கிருஷ்ணமூர்த்தியாகத்தான் இருக்க வேண்டு மென்று பலரும் எண்ணினர், இக்கருத்துப் பெரும் பரபரப்பை யுண்டாக்கியது. கிருஷ்ணமூர்த்தி ஆன்மிக மாற்றம் (Spiritual Transformation) எய்து முன்பு, மிகச் சிறிய வயதில் அவரது கைகளாலேயே இக்கைந்நூலின் உள் ளடக்கம் எழுதுவிக்கப்பட்டு, வெளிப்படுத்தப்பட்ட தெனப் பரவலாக இன்று நம்பப்படுகின்றது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு
பிரமஞான சங்கத்திலேற்பட்ட குழப்பம் பற்றிய செய்தி காட்டுத்தீபோல் எங்கும் பரவியது. இச்செய்தி யைக் கேட்டுத் திகிலடைந்த கிருஷ்ணமூர்த்தியின் தகப்பனர் தமது இரண்டு புத்திரர்களின் பாதுகாவல்ர் தாமேயென்று உரிமை பாராட்ட முடிவு செய்தார். இவ் வுரிமை வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றபோது சர் சி. பி. இராமசாமி ஐயர் வாதிக்காக GHT5ftt, பெசந்து அம்மையார் தாமே தனிநின்று எதிராக வாதாடினர். கடைசியில் இவ்வழக்கு கோமறைக் கழகத்திற்குச் செல்ல, அந்நீதிமன்றம் சகோதர இளைஞர் களே தமது பாதுகாவலரைத் தேர்ந்தெடுக்க அனுமதி அளித்துத் தீர்ப்புக் கூறியது. இருவரும் பெசந்து அம்மையார் அவர்களையே உரிமையாளராகத் தேர்ந் தெடுத்தனர். பெசந்து அம்மையார் மேலும் Gufi)Gopri தலையீடு இல்லாமலிருக்க இருவரையும் இங்கிலாந்தி லுள்ள எமிலி லூட்யைன்ஸ் (Emily Lutyens ) Gr6örp அம்மையாரின் பாதுகாப்பில் வைத்தார். இங்கிலாந் திலும் சோபோனிலும் இருவருக்கும் தனிப்பட் முறை யிலேயே கல்வி போதிக்கப்பட்டது. 'Order of the Star" என்ற நிலையத்தாரால் நிறுவப்பட்டு அதற்குக் கிருஷ்ண மூர்த்தி தலைவரானர். இவ்வாறு தேவதூதனுக்கு வேண்டிய சகல ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப் பட்டன. 1922 ஆம் ஆண்டில் கிருஷ்ணமூர்த்தியின் தம்பியான நித்தியானந்தன் கடுமையான சுகவீனமுற் றிருந்தார். அவர் குணமாவார் என்ற நம்பிக்கையில்

Page 11
- 4 -
கலிபோனியாவிற்கு இடம் மாற்றப்பட்டார். எனினும் அவர்கள் எண்ணியது நடைபெறவில்லை. 1925 ஆம். ஆண்டில் நித்தியானந்தன் இறந்தார். தம்பியின் மறைவு கிருஷ்ணமூர்த்தியை உலுக்கியதோடல்லாமல் இவ்விழப்பு ஒரு தாக்கத்தையும், அதன் விளைவாக அவருள்ளத்தே பூரண மாற்றத்தையும் உண்டுபண் ணியது. தமது எண்ணங்களையும் கோட்பாடுகளையும் மறு பரிசீலனை செய்தார். தம்முடைய எதிர்காலத் திட்டங்களை ஆழமாய் ஆராய்ந்து ஒரு செயல்முறைக் கமைய இயங்க முடிவுசெய்தார்.
சுதந்திரமான சுயசிந்தனை
1929-gh gas G. “Order of the Star'' 6T657 sp நிறுவனத்தைக் கலைத்தார். அவரது எதிர்காலத் தொண்டுக்கெனப் பெசந்து அம்மையாரால் சேர்த்து வைக்கப்பட்ட பெருந்தொகைப் பணத்தையும் இவரது நிரந்தர இருப்பிடத்துக்கென ஒல்லாந்து நாட்டில் பெறப்பட்ட பெரிய அரண்மனையையும் அதைச்சார்ந்த இடத்தையும் அவற்றிற்கு உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு அபூர்வமானதொரு வழியிற் செல்ல முற்பட்டார். மதகுருமார், சான்றேர், கல்விமான்கள் ஆகியோரின் எண்ணங்களை அடிப்படையாக அமைத்துக் கொண்டு தமது சிந்தனையை வளர்க்க விரும்பினு ரல்லர். உண்மை அனுபவத்தை எக்காலத்திலும் எச்சந்தர்ப்பத்திலும் எவராலும் வெளியிட முடியாது. அப்படி வெளியிட முற்பட்டால் அஃது உண்மை அனுபவ மாக மலராது. இவ்வனுபவத்துக்கான காரணத்தைத் தான் வெளியிட முடியுமேயன்றி, உண்மை அனுப வத்தை வெளியிட முடியாது என்ற பேருண்மையை உணர்ந்து சுதந்திரமான சிந்தனை முறையை நாடினர். ஒவ்வோர் ஆணையும் பெண்ணையும் நேரடியாக அணுகி அவர்கள்பால் அன்பு செலுத்தி, அவர்களது இன்ப துன்பங்களில் நேரடித் தொடர்புகொண்டு அவர்களைப் புரிந்துகொள்ள முற்பட்டார். பெசந்து அம்மையார்

- 5 -
கிருஷ்ணமூர்த்திமீது விவரிக்கமுடியாத அளவு அன்பு செலுத்தி வந்திருந்த போதிலும் - வருங்காலத்தில் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உலகம் கண்டிராத தேவ தூதனுகத் திகழ்வார் என்ற உறுதியான நம்பிக்கை வைத்திருந்த போதிலும் அவரின் சுதந்திரமான சுய சிந்தனைக்கும் செயலுக்கும் தடைகல்லாக நிற்க அவர் விரும்பினரல்லர். இதனல் (**Order of the Star”) தலைவர் பதவியில் இருந்து கிருஷ்ணமூர்த்தி விலக விரும்பிய போது அவர் இணக்கந் தெரிவித்ததோடு, சகல கட்டுக் கோப்புக்களையும் கட்டுப்பாடுகளையும் உடைத்தெறிந்து சென்ற கிருஷ்ணமூர்த்திக்குப் பெசந்து அம்மையார் தமது முழு ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்தார். கிருஷ்ணமூர்த்தி நூலறிவு நிரம்பப் பெற்றவரல்லர். ஆங்கில மொழியிற் பாண்டித்தியம் பெற்ற இவர் எந்தவொரு பல்கலைக்கழகப் பட்டதாரியுமல்லர். எனி னும், '' வாழ்க்கை "" என்னும் அழியாத-ஒப்பற்ற நூலிலிருந்து தம் அறிவை - பண்பை - பெருக்கிக் கொண்டு ஆயிரக்கணக்கான மக்களை நேரிற் சந்தித்து அவர்களோடு நெருங்கிப் பழகி, அவர்களது மனம், எண்ணம், செயல் ஆகியவற்றை அணுகி நின்று அவதானித்தார். எவர் பிரச்சினைக்கும் அவர் போலி யான ஆறுதல்மொழி கூறினரல்லர். ஒருவர் பிரச்சினை அவருயர்வுக்காக, அவராலேயே தீர்க்கப்படவேண்டிய தொன்ருமென்பது அவரது போதனைகளின் சார மென்றுகூடச் சொல்லலாம்.
எந்த ஒரு மனிதனுலும் இன்னுெருவன மகிழ்விக்க முடியாது என்றும் பதிலாகத் தானே தன்னுடைய பாதுகாவலன் ஆகவேண்டுமென்றும் மீட்பானது புறத்தி லிருந்து வருவதில்லையென்றும் அவர் உணர்ந்துள்ளார். உலக வழிகாட்டி என்ற பெரும் பதவியைத் துறந்து, தனக்கென எழுப்பப்பட்ட ஆன்மிக அரசையும் துறந்து, மக்களோடு மக்களாய் மக்களோடொன்றி நின்று மக்கள் இன்பதுன்பங்களில் பங்குகொண்டு, அவர்களுக் குப் புரியாத அல்லது அவர்களுக் கெட்டாத தத்துவப்

Page 12
பேருரை களையும், பொன்மொழிகளையும், வரை யறைகளையும் வீணே மொழியாமல், மக்கள் மத்தியில் சாதாரண ஒரு மனிதனுக அவர் வாழ்ந்துகொண் டிருக்கிருர். இவர் தாம் கலந்துகொள்ளும் கூட்டங்களி லெல்லாம் தாமொரு குரு அல்லரென்றும், குரு அல்லது வழிகாட்டி என்று ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண் டால் உண்மையினின்றும் அவர் வெகு தூரம் விலகிச் சென்றுவிடுவாரென்றும் மக்களை எச்சரித்து வரும் கிருஷ்ணமூர்த்தி, பிற தத்துவஞானிகளினின்றும் மாறு பட்டவராவர். தன்னைத் தானறிதல் என்பது என்றுமே புதிதானது. சாக்கிரட்டீஸில் இருந்து சாத்தர்வண்ர, (Socrates to Sartre) இந்தியாவைச் சேர்ந்த சங்கரர் முதல் ஜப்பானைச் சேர்ந்த சுயூகி வரை (Sankara to Suzuki) மேற்கும் கிழக்கும் இவ்வுலக மக்கள் நிலை பற்றிய கருத்துக்களை அளிக்கும் பெரும் சிந்தனையா ளர்களை உருவாக்கியுள்ளது. ஆயின், கிருஷ்ணமூர்த்தி சுய சிந்தனையாளனுக நின்று பல புத்தகங்களை எழுதியும் உலகின் ஐந்து கண்டங்களிலும் பேருரை நிகழ்த்தியும் மக்களுக்கு விழிப்புணர்வுபற்றி விளக்கங்களை அளித்து வருகின்ருர்,

விழிப்பு நிலை என்ருல் என்ன ?
கிருஷ்ணமூர்த்தியின் நூல்களை வாசித்தும், அவர் சொற்பொழிவுகளைக் கேட்டும் வருபவர்கள், அவர் எப்பொழுதும் தனியொருவரையே பார்த்துப் பேசு கின்ருர் என்ற உண்மையைத் தெரிந்து கொள்வர். எந்தத் தத்துவத்தையும் தான் புதிதாக வெளியிடப் போவதில்லை என்றும், தன்னை ஒரு போதகர் என்ற நிலையில் வைத்து, தான் சொல்லி வரும் விளக்கங் களுக்கு மாசு கற்பிக்க வேண்டாம் என்றும் அவர் அடிக்கடி கூறி வருவன நினைவு கூரத்தக்கதாம். என்றும் மங்காத புத்தொளி விட்டு நிலைபேறுடையதாய்ப் பிரகா சிக்கும் உண்மையுடன், ஒருவர் நேரடித் தொடர்பு கொண்டு அனுபவம் பெறவேண்டு மென்பதே அவர் நோக்கமாகும். எனவேதான் மக்கள் என்றும் நிகழ் காலத்திலேயே வாழ வேண்டும் என்று கூறிவருகின்ருர், இறந்த கால நினைவுகளும், எதிர்காலக் கனவுகளும் மக்கள் சிந்தனைக்குப் பங்கம் விளைவிக்கும் எனவும் இதனுல் நிகழ்காலத்தை மக்கள் நேரடியாக நோக்க முடியாத ஓர் அவலமான சூழ்நிலை ஏற்படும் என்றும் தமது ஒவ்வொரு சொற்பொழிவிலும் வற்புறுத்தி வரு 66ö7 (orprř.
அடிப்படைத் தத்துவம்
மனத்தின் தொடர்ச்சியான விழிப்புள்ள நிலையே கிருஷ்ணமூர்த்தியின் அடிப்படைத் தத்துவம் என்று கூறுதல் மிகைபடக் கூறியதாகாது. விழிப்புள்ள நிலை (aWareness) என்பது தவறில்லாத ஒரு நோக்கமாகும். விழிப்பு நிலை, தெளிவை உண்டுபண்ணும். ஒருவர் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டுமானல், அவர் அதனைத் திறந்த மனத்துடன் உற்றுநோக்க வேண்டுமே யல்லாது, அதுபற்றி விரித்துரைக்கவோ, குறைகூறவோ கூடாது. உண்மையை எதுவிதச் சலனமுமில்லாமல்

Page 13
- 8 -
நோக்கத் தெரியவேண்டும். ஒருவர் தம்மைத் திருத்த வேண்டும் என்ற ஆவல், அவரையே மையமாகக் கொண்ட அவாவின் செயற்பாடாகும். விழிப்புநிலை என்பது " நான் " என்பதற்ற நிலையாகும்.
தன்னைத் திருத்த வேண்டு மென்று ஒருவர் நினைப் பாரேயானல், அவரால் விழிப்பாக இருக்கவே முடி யாது. ஏனெனில் திருத்தம் என்று சொல்லும்போது கண்டித்தலும், ஒரு நிலையை அடைய வேண்டுமென்ற அவாவுஞ் சேர்ந்து செயற்படுகின்றன. தான் என்னும் தனித்தன்மையின் செயற்பாட்டைப் புரிந்துகொள்வதே விழிப்புநிலை எனப்படும். மக்களோடும், கோட்பாடுக ளோடும், பொருள்களோடும் " நான் ' என்பது கொண்டுள்ள செயற்பாடுகளைப் புரிந்து கொள்வதே விழிப்பு நிலையாகும். விழிப்புநிலை என்பது கணத்திற்குக் கணம் நிகழ்வதாகையால், அதனை நடைமுறையிற் செயற்படுத்த முடியாது. ஒன்றை நடைமுறையிற் செயற்படுத்தும் போது, அது வெறும் பழக்கமாகிவிடு கின்றது. ஆனல் விழிப்புநிலை என்பது பழக்கமாகாது.
பேரானந்தச் சூழ்நிலை Y\,
மாறெதிர்ச் செய்கை (Reaction) எதுவுமில்லாமல் எதையாவது வெறுமனே பார்க்கும் ஆற்றல் எமக் குண்டா ? மனத்தின் விருப்பு, வெறுப்புக்களுக்கும் ஆசாபாசங்களுக்கும் இடமளிக்காது, பார்ப்பவற்றை இவை இவையென என்ற எண்ணத்தின் குறுக்கீட்டால், அவற்றை உருவகம் செய்யாது-தரம் பிரியாது, வெறு மனே ஒன்றைப் பார்க்க முடிகிறதா? எப்பொழுது மாறெதிர்ச் செய்கையெதுவுமில்லாமல், மதிப்பீடெது வும் இல்லாமல், உருத்திரிபெதுவுமில்லாமல் ஒன்றை நோக்கும்போதே, பார்வையில் தெளிவு ஏற்படுகின்றது. இத்தகைய தெளிவான சூழ்நிலையுண்டாயின், காணும் பொருள் இஃதென்றும் காண்பாணிவன் என்றும் கொண்ட வேற்றுணர்ச்சி அகல அவையிரண்டும் ஒன்

- 9 -
றென்ற விழிப்புநிலை உறுதிபெறும். இப்படியான ஒரு நல்ல இதமான - அழகான பேரானந்தம் நிறைந்த சூழ்நிலையில் - விழிப்பு நிலையில் - காண்பவன், சிந்திப் பவன், அனுபவிப்பவன் என்ற போலி நினைவுகள் நிலை கொள்ளாமல் அகலும்,
DTFjp 5stalijiu jih)
மாசற்ற நல்ல விழிப்பு நிலையே, உண்மையோடு நேரடித் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையாகும். நாளாந்த வாழ்க்கையையும், வாழ்க்கை அனுபவங் களையும் சலன மில்லாது வெறுமனே நோக்கக்கூடிய விழிப்பு நிலையை அடைந்துவிட்டவர், அதற்கும் அப் பால் செல்லக்கூடிய பக்குவத்தையும், நிலையையும் தாமாகவே அடைவர். அண்மையிலிருப்பதைக் கடந்தே, தூரத்திலுள்ளதற்குச் செல்ல முடியும். மக்களிற் பலர் அண்மையி லுள்ளனவற்றைப் புரிந்துகொள்ளாமல், தூரத்திலுள்ளனவற்றை விரைந்து சென்றடைய முனைந்து முன்னிற்கின்றனர். அண்மையில் உள்ளதற் கும், தூரத்திலுள்ளதற்கும் இடையே உள்ள இடை வெளி - பிளவு - தூரம் அவற்றை மறைக்கின்றது. இடைவெளி பிரிக்கும் தூரங் குறுக்கே நில்லாதொழியின் தொடக்கமும் முடிவுமில்லாமல் இரண்டுமொன்றி ஒன் ருகும் வேளையில் தொடக்கமும் முடிவும் ஒன் ரு கி விடுகின்றன.

Page 14
தன்னை மையமா கக் கொண்ட தொழிற்பாடு
சமயங்கள் கூறியாங் கொழுகின் இன்னின்ன நற் பயன்களுண்டாகுமென்று சமயங்கள் வாக்குறுதி அளிப்ப தாலும், நரகம் பற்றித் தோற்றுவித்த பயத்தைச் சாதகமாகப் பயன்படுத்திப் பல்வகைப்பட்ட கட்டுப் பாடுகள் விதிப்பதாலும், வற்புறுத்துவதாலும் மனிதன் தன்னை நடுநாயகமாகக் கொண்ட இன்ப மூட்டாதபிற்தடைகளற்ற - அச்சுறுத்துதலற்ற தொழிற்பாட் டுக்குத் தடையேற்படுகின்றது. சமயங்கள் அறிவுறுத் தித் தடுக்கும் இம் முயற்சி தோல்வியுறும்போது, அர சியல் நிலையங்கள் சில இம் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இவையெல்லாம் வெறுங் கருத்தியற் கற்பனையை அடை விக்கின்றன. வரையறுத்து ஒடுக்கப்படுவது முதல், குற்ற வாளிகளை ஒடுக்கிச் சிறை வைப்பதுட்பட்ட உச்சநிலை வரை ஒவ்வொரு சட்ட ஆக்கமும் மனிதனின் எதிர்ப் பாற்றல் எல்லாவற்றிற்குந் தடை விதிக்கின்றது. எனினும் மக்கள் தம்மை மையமாகக் கொண்ட தொழிற்பாட்டையே செய்து வருகின்றனர். அஃ தொன்றே மக்களுக்குத் தெரிந்ததொரு செயலா யிருப் பதே இதற்காம் காரணமாகும். இதுபற்றி ஒருவர் சிந்திக்குந் தோறும் அவர் அதனை மாற்றியமைக்கவும், அதற்குப் புது மெருகு கொடுக்கவும், புது உருவம் அமைக்கவும் முனைகின்ருரன்றி அதனடிப்படையையே மாற்றியமைக்கக் கூடிய ஆழமான மாற்ற மொன்றை யும் அதற்கொரு முடிவையும் தோற்றுவிக்க முனைகின்ரு ரல்லர்.
SGTS) LDU T61 மகிழ்ச்சிக்கு வழி
தன்னை நடுநாயகமாகக் கொண்டியங்கும் தொழிற்
பாடு முற்ருக நீங்கும்போதே அகத்திலும் புறத்திலும் உண்மையான மகிழ்ச்சி ஏற்படும். பெரும்பாலோர்

- 1 -
தம்மை நடுநாயகமாகக் கொண்ட தொழிற்பாடு இயற்கையான தொன்றென்றும், அப்படிக் கொள்வதா லேற்படும் பின்விளைவு நீக்குதற்கரிய தொன்றென்றும் அஃதால் அதனை ஏற்றுக்கொள்பவரே மாற்றியமைக்க முனைகின்ருராயினமையின் அடிப்படை மாற்றத்தைத் தோற்றுவிக்க உண்மையில் முனைகின்ருரல்லரெனக் கருது கின்றனர்.
தன்னை நடுநாயகமாகக் கொண்ட தொழிற்பா டெத்தகையது? என்பதுபற்றிப் புரிந்து கொள்ளும் பொருட்டு, தன்னை நடுநாயகமாகக் கொண்ட தொழிற் பாடு பற்றி ஐயந்திரிபற நுணுகியாய்ந்து அதன் முறை மையை முழுமையாக உற்று நோக்கித் தெளிவு பெற வேண்டும். அதுபற்றிய உணர்வு பெறும்போதே அதனைப் புரிந்துகொள்ள முடியும். ஒன்றைப்பற்றி உணரும் மனமுடையாரே அதனை உணருந் தகுதி பெற்றவராவார். உள்ளதை உள்ளபடி நோக்கும் முறைமையான உள்நோக்கின்றி ஒன்றைத் தவறெனத் தள்ளி வைப்பதாலோ, அதனை விளக்குவதாலோ, மாற்றி யமைப்பதாலோ அதனை அறிந்து கொள்ள முடியாது. தன்னை நடுநாயகமாகக் கொண்ட நிலையிலிருந்து வெளிப்படும் எல்லாத் தொழிற்பாடுகளையும் பற்றி விழிப்பாயிருக்க வேண்டும். ஒருவன் தன்னை நடுநாயக மாகக் கொண்ட தொழிற்பாடு பற்றித் தெரிந்து கொண்ட அக்கணமே தன்னறிவுபெற்ற விழிப்பு நிலை அதனைக் கட்டுப்படுத்தியும் கண்டித்தும் மாற்றியமைத் தும் செயற்பட முனைகின்ருனுதலால், எதையுந் தடைக ளெதுவுமின்றி நேரடியாக நோக்க முடியா திருக்கின் முன். தன்னை நடுநாயகமாகக் கொண்ட எந்தத் தொழிற்பாடும் அழிவிலேயே முடியும். ஒருவரை ஒரு நாட்டோடோ, ஒர் இனத்தோடோ, ஒரு குழுவோடோ, ஒரு கோட்பாட்டோடோ, ஓர் எடுத்துக்காட்டோடோ தொடர்புபடுத்திக் காணுதலையே பெருவழக்காக மக்கள் கொள்கின்றனர். இவையனைத்தும் தன்னை நடுநாயக மாகக் கொண்ட தொழிற்பாடுகளேயாம். எனவே,

Page 15
இயற்கையோடும், மக்களோடும், கோட்பாடுகளோ டும், தொடர்புகாண் உறவுகளும் பந்தங்களும் தன்னை நடுநாயகமாகக் கொண்ட செயலின் விளைவுகளேயாம்.
மகிழ்ச்சி நீடிப்பு அவா
இவையெல்லாந் தெரிந்த பின்பு மனிதன் செய்ய வேண்டியதென்னை? பிற ஆற்றல்கள், தூண்டுதல்கள், வழிகாட்டும் முறைமைகள் என்பனவற்றை ஒதுக்கித் தள்ளும்போது "நான்' என்பதை நடுநாயகமாகக் கொண்ட தொழிற்பாடு தானகவே ஒய்ந்தொழியும். ஒருவன் தன்னை நடுநாயகமாகக்கொண்ட செயற்பாடு குழப்பமும் தீங்கும் உண்டாக்க வல்லது என்பதை உணர்ந்த போதும், அச் செயற்பாட்டைக் குறிப்பிட்ட சிலவற்றிற் காண்கின்றனன்றி, முற்ருக முழுமையாக அதனைக் காண மறுக்கின்றன். அச்செயற்பாடு தன்னுள் நிகழ்வதையும், அஃது குழப்பம், தீங்கு, அழிவு என்பன வற்றைத் தம்பால் கொணர்வதையும் அவதானித்தறிய முடியாதவனுயிருக்கின்ருன் . சிலவேளை அஃதேற்படுத் தும் தீங்கை உணரும்போது உடனே அதனை மாற்றி யமைக்கவும் அதற்கப்பாற் செல்லவும் முனைகின்ருனே யன்றி அஃது உருவெடுக்கும் படிமுறையைக் கவனிக் கின்ருனில்லை. 'நான்" என்னுந் தன்மையை யொரு வன் எதிர்க்கும்போதும், அஃதொன்றை அடைய முனையும்போதும் உணர்ச்சி விழிப்புள்ள நிலைமை குறுக்கிடும்போதுமே அதன் செயற்பாட்டைப் பிறர்பாற் காண்கின்ருன். மகிழ்ச்சி ஒரு முடிவுக்கு வரும்போதே, *"நான்" என்பதன் பொருண்மையை ஒருவன் உணர் கின்றன். எனினும் தொடர்ந்து மகிழ்ச்சி பெற வேண்டு மென்ற அவாவின் உந்தலால் எதிர்ப்புந் தடையும் நிகழ்கின்றன. முடிவற்ற மகிழ்ச்சி தொடர்ந்து வந்து கொண்டே இருக்கக்கூடிய குறிப்பிட்ட ஒரெல்லையைத் தேடும் நோக்கத்தினுற் தூண்டப்பட்டு உருவாக்கப் பட்ட மனத்தே, மன நிறைவும் மகிழ்ச்சியும் உண்டா கின்றன. விழிப்புநிலையில் நற்குணம் - தூய்மை -

- 13 -
புண்ணியச் செயல் ஆதியனவற்றை நாடிச் செல்லும் போதும், அவற்றைப் பெற முயலும்போதும், தன்னையே தான் புரிந்து கொள்ளக்கூடிய நிலையும் , தனது செயல் களைத் தான் புரிந்து கொள்ளக்கூடிய நிலையும் அவனுக் கேற்படுகின்றன. நற்குணம், தூய்மை, புண்ணியச் செயல் ஆதியனவற்றை விழிப்புள்ள நிலையில் உண்மை யிற் பெற முயல்பவன் நற்குணம், தூய்மை என்பன வற்றை இழக்கின்றன். பணிவு, நாடிப் பெறத்தக்க தொன்றன்று. அதுவே பணிவின் தனியழகாகும். தன்னை நடுநாயகமாகக் கொண்டு நிகழும் செயற்பாடு காலத்தின் விளைவாகும். இச் செயற்பாடு இருக்கும்வரை அசைவு தொழிற்பட்டுக்கொண்டே யிருக்கும்.
இறந்தகால அனுபவங்கள்
இறந்த காலம், நிகழ்காலம் என்பன எதிர்காலத்தோ டிணைவதை ஒருவன் உணர வல்லான். ஞாபகமே அச் செயற்பாட்டுக்கு நடுநாயகமாக ஞாபகத் தொடர்ச் சியை ஏற்படுத்துகின்றது. இதனை மிகவும் நுணுக்க மாக அவதானித்தால் இது காலம், ஞாபகம், இறந்த கால அனுபவம் என்பனவற்றின் செயற்பாடென் பதைக் காணலாம். மனம் இதிலிருந்து விடுபடுவதெவ் வாறு? தன்னை நடுநாயகமாகக் கொண்ட செயற் பாட்டை ஒருவர் பூரணமாகப் புரிந்து கொள்வாரே யானுல் அச் செயற்பாடு முடிவிற்கு வருமா என்று கேட்க இடமுண்டாம். காலத்தோடு ஒட்டி நில்லாது சிந்திக்க முடியுமா? அவன் இப்படி யிருக்கின்ருன் , இப்படி யிருந்தான், இப்படியிருப்பான் என்ற முறை மையில் வெறுமனே ஒருவனுற் சிந்திக்க முடியுமா ? ஏனெனில், அந்த எண்ணத்திலிருந்தே அவனை நடுநாயக மாகக் கொண்ட செயற்பாடே தொடங்குகின்றது. காலத்தை நடுநாயகமாகக் கொண்டு நடைபெறும் எந்தச் செயற்பாட்டுக்கும் முடிவு இல்லை ; தொடர்ச் சியே யுண்டு. தொடர்பு காண்பதொன்றே அதன் தொழிலாம்.

Page 16
- 14 -
காலத்தின் செயற்பாடு முற்ருக நிற்கும்போதே தன்னை நடுநாயகமாகக் கொண்டியங்கும் செயற்பாடு முற்றுப்பெறும். காலத்தின் அடிப்படை முற்ருக இல் லாத - காலத்தை நடுநாயகமாகக் கொண்டியங்கும் செயற்பாடு முற்றுமற்ற நிலையில் மனஞ் செயற்படக் கூடுமா ? சிற்சில வேளைகளில் மட்டுமன்றி காலத்திற்கு உட்படாத எக்காலத்திலும் மனஞ் செயற்படுமா ? என்பதே இப்போதைய பிரச்சினை. தன்னை நடுநாயக மாகக் கொண்ட செயற்பாடு எங்கில்லையோ அங்கு அன்பு உருவாகும். அன்பு காலத்தோடு ஒட்டியதன்று. அன்பை ஒருவராற் கடைப்பிடிக்க இயலாது. கடைப் பிடிக்கும்போது அது விளைவை நாடியவொன்ருய்-தன்னை நடுநாயகமாகக் கொண்டு காலத்தை அடிப்படையாகக் கொண்ட செயலாகும். எக் கட்டுப்பாட்டாலும், மன வொடுக்க முற்சியாலும் அன்பைக் காணமுடியாது ; அடையமுடியாது. இவை எல்லாம் காலத்தை அடிப் படையாகக் கொண்டமையே காரணமாகும்.
மனமும் அன்பும்
காலத்தின் செயற்பாட்டையன்றி வேறு ஒன்றையும் தெரிந்திராத மனம் அன்பை அடையாது. அன்பு ஒன்றே என்றும் புதுப்பொலிவுடன் துலங்கக்கூடியது. காலத்தின் விளைவான மனத்தால் - ஒருவராற் பேணி வளர்க்கப்பட்ட மனத்தால்-அன்பைப் பெறமுடியாது. மக்கள், 'அன்பு', 'அன்பு" என்று எப்போதும் எந் நிலையிலும் எவரோடு தொடர்புகொள்ளும்போதும் கூறு கின்றனர். மக்கள், பிள்ளைகள், மனைவி, பெற்றேர்மீதும் இயற்கையின் பாலும் அன்பு கொண்டுள்ளோமென்று கூறுகின்றனர். ஆணுல் அன்பு கொண்டுள்ளாரென்று அவருக்குத் தெரிந்த மறுகணமே அன்பு அவரை விட்டு நீங்குகின்றது. மனத்தின் முழுமையான செயற்பாட் டைப் பிறிதொன்றுடன் இணைத்தே புரிந்துகொள்ள முடியும். வாழ்க்கை என்பது ஒன்ருேடொன்று கொண் டுள்ள தொடர்பேயன்றி வேருென்றன்மையே அதற் காம் காரணமாம். தொடர்புகளை முற்ருகத் துண்டிக்க

- 15 -
முடியாது. உறவு என்பது துக்கத்தைத் தரவல்லதாக விருந்தபோதிலும் அதனிலிருந்தும் முற்ருக விலகி ஓட முடியாது. துறவு பூண்டு உறவுகளைத் துண்டித்து ஓடி மறைதலென்பது தன்னை நடுநாயகமாகக் கொண்ட செய்வினையின் விளைவேயாகும். உண்மையை எவருந் தேடிச் செல்லத் தேவையில்லை. உண்மை உள்ளுள்ளதே யன்றிப் பிரிந்திருக்கும் ஒன்றன்று. தன்னை நடுநாயக மாகக் கொண்டியங்கும் நிலையைப் புரிந்துகொள்ள மனம் விழிப்புணர்ச்சியைப் பயன்படுத்துமாயின் காலம் என்னும் சிறையில் விழுந்து உண்மையிலிருந்தும் வெகு தூரம் சென்றுவிடும். மனம் செயற்பாடு எதுவுமற்று வெறுமனே தன்னைத்தானே புரிந்துகொள்ளும் நிலை ஏற்படும்போதுதான் அன்பு மலரும்; உண்மை தாஞ கவே துலங்கும்.

Page 17
"நான்" என்னுந் தனித்தன்மை எது ?
“நான் என்னுந் தனித்தன்மை "" (SELF) என்று சொல்லும்போது ஒருவர் கருதுவதென்ன? ' நான் என்னுந் தனித்தன்மை' என்று கூறும்பொழுது கருத்து, ஞாபகம், முடிவு, அனுபவம், பலதரப்பட்ட உள் நோக்கங்கள், எண்ணங்கள் என்பனவற்றையும் அல்லது அவ்வாறற்ற உணர்ச்சி விழிப்புள்ள நிலைமையையுடைய முயற்சி, மனவிழிப்பற்ற நிலையிற் சேகரித்த நினைவுகள், இனம் சார் ந் த எண்ணங்கள், தனியொருவரைச் சார்ந்த எண் ண ங் க ள் ஆகியவற்றையே அவர் கருதுகின்ருர், ' நானென்னுந் தனித்தன்மை ' என்று கூறும்போது அவாவும் போட்டி மனப்பான்மையும் உள்ளடங்கியிருப்பதைக் காணலாம்.
நானென்ற மனப்பான்மையானது என்னைப் பிற ரிடத்திலிருந்தும் பிரிக்கின்றது. அதன் செய்கைகள் எத்துணைச் சிறப்புடையனவாயிருந்த போதிலும் அவை உறவுத் தொடர்பற்ற தனித்தன்மையையே நாடுகின் றன. நானென்ற நிலை மறைய அன்பானது எத்துணைப் பிரகாசமாக ஒளிர்கின்றதென்பதை ஒருவர் தம்மகத்தே உணரும் நிலை பல வேளைகளில் ஏற்படுகின்றது. அனுபவ மானது "நான்" என்ற தனித்தன்மையை எத்துனை அளவு பலப்படுத்துகிறதென்று முதற்கண் ஆராய்வோம்.
அனுபவம் என்குல் என்ன?
அனுபவமென்ற லென்ன ? எக்காலத்திலும் எந் நேரத்திலும் ஒருவருள்ளத்திற் பதியும் நிகழ்ச்சிகளும், அனுபவங்களும் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. சில போது அவர் அவ்வனுபவங்களுக் கேற்றவண்ணம் நடக் கின்ருர் அல்லது அவ்வனுபவங்களை யெதிர்த்துச் செயலாற்றுகின்ருர் . அவர் காணும் பொருளுக்கும்

- 17 -
கண்ட பொருளுக் கெதிராக அவர் மேற்கொள்ளும் செயலுக்குமிடையே தொடர்ச்சியான விளைவும் எதிர் விளைவுத் தொடர்பும், இவையுள்ளிட்ட கலப்புத் தொடர்பும் நிகழ்கின்றன. இஃதேபோல் உணர்ச்சி விழிப்புள்ள நிலைமையிலிருக்கும் மனத்திற்கும் விழிப் பற்ற மனத்திற்கும் இறந்தகால நினைவுகளுக்கு மிடை யிலும் தொடர்ச்சியான ஒரு கலப்புத் தொடர்பு நிகழ் கின்றது. ஒருவர் தமது இறந்த கால நினைவுகளுக் கொப்பவே தாம் காண்பனவற்றையும், உணர்வன வற்றையும் எதிர்த்துச் செயலாற்றுகின்றர். இவ்வாறு காண்பனவற்றையும், உணர்வனவற்றையும், நம்பு கின்றனவற்றையும் எதிர்த்து அவர் செயலாற்றும் போதே அவருக்கு அவை அனுபவங்களாகின்றன. எனவே கண்டனவற்றையும், உணர்வனவற்றையும், நம்புகின்றனவற்றையும் எதிர்த்து ஒருவர் செயலாற்று வதும் மறுதலிப்பதுமே அவர் அனுபவங்களாகின்றன,
ஒருவர் இன்னுெருவரைக் காணும்போது அவருள் ளத்தே மாறெதிர்ச் செய்கையொன்று உருவாகின்றது. அத்தகைய மாறெதிர்ச் செய்கைக்குப் (Reaction) பெயர் சூட்டப்படும்போது அஃது அனுபவமாகிறது. ஒன்றைக் காணும் ஒருவர் அகத்தே ஒரு மறுதலிப்பும், எதிர்ச்செயலும் நிகழும் வேளையில், இம்மறுதலிப்புக்குப் பெயர்சூட்டும் செயலும் இயற்கையாகவே நடைபெறு கின்றது. இச்செயல்களின் செயற்பாடுகள் நடந்தேறி முற்றுப் பெறும்போதே அவை அனுபவங்களாக உருப் பெறுகின்றன, ஒருவரை ஒருவர் நினைவுகூர முடியா விட்டால் அவரைக் கண்ட அனுபவத்தைக் கண்டவர் எப்படிப் பெற்றிருக்க முடியும்? இறந்த கால நினைவு களுக்கும், வரையறுக்கப்பட்ட சிந்தனைகளுக்கும், செயல் களுக்கும், சார்புடைய கருத்துக்களுக்கும் அமைய ஒருவர் எதிர்த்துச் செயலாற்ருவிட்டால் அவர் தமது அனுபவத்தை எப்படி அனுபவிக்க முடியும் ?
2

Page 18
--- 18 - است.
அவாவின் வெளிப்பாடுகள்
- ஒருவர் பிறர் ஆதரவும் பாதுகாப்பும் பெற வேண்டுமென விரும்புங்கால் ஒரு தலைவனை அல்லது குருவை அல்லது கடவுளை ஏற்றுக்கொள்ள விரும்புகிருர். இவ் விருப்புகள் எல்லாம் அவாவின் வெளிப்பாடுகளே யாம். இவ் வெளிப்பாடுகள் பல ஒன்று சேர்ந்து ஓர் ஒழுங்காய், ஓர் அமைப்பாய் உருவெடுக்கின்றன. இவ் வமைப்பிற்கும் ஒரு பெயரைச் சூட்டுகின்றர். அவற்றை எதிர்த்துச் செயலாற்றுகின்றபோதும் (REACT) புதிய தோர் அனுபவம் பிறக்கின்றது. ஒருவருக்கு ஓர் அனு பவத்தையளித்த அவர் “யான் ஓர் அனுபவத்தை அனுப
வித்தேன் '' , ' இறைவன் திருவடியைக் கண்டேன் '', *" குருவுடன் பேசினேன் '', ' இறைவன் கட்டளையிடக் கேட்டேன் ", அல்லது ' குருவுடன் பேசிலேன்",
** இறைவன் திருவடியைக் கண்டிலேன்' என்றெல்லாம் சொல்லத் தூண்டுகின்றது. இவ்வாறு அவாவே அனுபவ மாய் மாறி வருவதைக் காணலாம். ஒருவர் தமது மனம் அமைதிபெற வேண்டுமென விரும்புகின்றபோது நிகழ்வதென்ன? மனம் அமைதியுறுவது எவ்வளவு சிறப் புடையதென்று சிலபோது உணர்ந்திருந்தாலும், மன அமைதி காண மதங்களும், மதத் தலைவர்களும், வேத நூல்களும் பன்னிப் பன்னிக் கூறியவற்றிற் கிணங்க மன அடக்கத்தை - மன அமைதியை - மனத்தின் சலன மற்ற நிலையை அடைய அவர் விழைகின்றர்.
மனம் அமைதியுறும்போது அகம் எத்துணை மகிழ்ச்சி யுறுகின்றதென்பதை ஒருவரால் உணரக் கூடியதா யிருப்பதால், மன அமைதியைப் பெறவேண்டுமென்ற அவா உந்த, மன அடக்கங் கைவர முனைகின்றர். அவர் தமது மதமும், மதநூல்களும், கட்டுப்பாடுகளும், தன் னடக்கமும், தியானமும், வழிபாட்டு முறைகளும், மன வொடுக்கமும் பெறக்கூடியனவற்றைத் தெரிந்து அம் முறைமைகளை மேற்கொள்ளுமுகத்தான் வழிபாட்டா லும், தியானத்தாலும், தன்னடக்கத்தாலும் மன

- 19 -
அமைதியைப் பெற்று நன்னிலை அடைய விழைகின்ருர் . மன அமைதியைப் பெற முனையும் முயற்சியில் " நான்எனது " என்ற தனித்தன்மையுந் தானகவே நிலை நாட்டப்படுகின்றது. உண்மையை யறிய வேண்டுமென்று விரும்பும்போதும், அவ் விருப்புக்கும் அவாவே மூல காரணமாகத் தொழிற்படுகின்றது. உண்மையைப் பற்றிய தமது கருத்துக்களும், பிறரது கருத்துக்களும், வேதநூல்களிற் காணப்படும் கருத்துக்களும் ஒருவ ருள்ளத்தே யிருந்து வெளிப்படுகின்றனவாகையால், இவ் வெளிப்பாட்டிற்குக் காரணமான அவாவே வெறும் கருத்துருவில் உள்ளத்திலிருந்து வெளிப்படுகின்ற நிலையாமென்று கூறினும் அக்கூற்று மிகைபடக் கூறிய தா காது.
அனுபவமும் உண்மையும்
அனுபவிக்கும் நிலையை ஒருவரால் நினைவுகூர முடியா விட்டால் அந் நிலையை உண்மையென ஒப்புக்கொள்ள முடியாது.ஒருவர் அந்நிலையை நினைவுகூருகின்ருர், அல்லது அனுபவிக்கின்றராயின் அவ்வனுபவம் நானென்னுந் தனித்தன்மைக்கு வலியூட்டுகின்றது. எனவே "நானென் னுந் ' தனித்தன்மையானது அனுபவத்தோடு பிரிக்க முடியாதவாருென்றிய ஒன்ருகும் , ' நானென்னுந்' தனித்தன்மையானது அனுபவத்தோடு இரண்டறக் கலக்கும்போதே ' எனக்குத் தெரியும்’, ‘இறைவ னுண்டு', ' இறைவனிலன் ' என்றெல்லாம் சொல்லத் தோன்றும். எனவே, அனுபவமானது எப்பொழுதும் *" நானென்னும் ' தனித்தன்மையைப் பலப்படுத்திய வண்ணமே யுள்ளது. அனுபவமானது மனதிற் பதியப் பதிய "" நானென்ற*" தனித்தன்மையும் கூடவே மன திற் பதிந்துகொண்டே யிருக்கும்.
இதன் விளைவாகவே மக்கள் அறிவாற்றலும் இறைவன்மீது பக்திகொண்டு வழிபாடாற்றலும் மேற் கொண்டு செயல்படுகின்றனர். இவ்வாற்றல்களை மொழி ஆற்றலாலும், பேச்சுப் புலமையாலும் வெளிக்

Page 19
- 20 ܝܚ
காட்டிப் பிறரை ஈர்த்து வருகின்றனர். "நான் "" என்னுந் தன்மை மிகவும் துரிதமாகச் செயலாற்றி வருவ தால் சமயக்குருக்கள், மதத்தலைவர்கள், நம்பிக்கைகள், கட்டுக்கோப்புக்கள் ஆதியனவும் தனித்தன்மையின் உண்மையைக் காட்டும் படிமுறைபோல் எடுத்துக் காட்டப்படுகின்றன. கொள்கை வாதமும், சச்சரவுமே சமயப் போரிலும் குழப்பத்திலும் ஈடுபடச் செய்கின் றன. 'நானென்னுந்' தனித்தன்மையோடு நடை பெறும் செயற்பாடுகளை முற்ருகக் கலைத்தாலன்றி உண்மையைத் தெரிந்துகொள்ள முடியாது. இதற்காம் அனுபவத்தின் செயல் முறைகளை அறிந்துகொள்ளு முகத்தான் அவா, அனுபவம், வெளிப்பாடு என்ற செயற்பாடுகளை மனந் துறக்குமா? "நானென்னுந்' தனித்தன்மையால் அனுபவித்த சகல அனுபவங்களும் அழிவிலேயே கொண்டுபோய்ச் சேர்க்கின்றனவாதலால் அத்தனித்தன்மையை முற்ருக நீக்கவேண்டும்.
மதங்கள் கூறுவதென்ன ?
"பெரியதொன்றேடு - ஒப்பற்ற ஒன்றேடு - உன் னைத் தொடர்புபடுத்தும்போது - " நானென்னுந் self.556ir 60LDurrassyth (Identify yourself with a larger, and the self disappears) 67 687 DJ LDS Iš 366ît Gimpy கின்றன. ஆயின் தொடர்பு கொள்வதும் காண்பதும் "நானென்ற" தனித்தன்மையின் படிமுறைகளாம். பெரியதொன்று உளவென்று கூறுவதும் 'நான்' என்ற தன்மையின் வெளிப்பாடாம். இந்த 'நான்' என்ற நிலையே உள்ளத்தில் தோன்றும் அச்சம், அவா, வெறுப்பு, மனமுறிவு, இடுக்கண் ஆகியவற்றிற்கெல்லாம் காரணமாய் இருக்கின்றது. "நானென்னுந்' தனித் தன்மையற்றிருப்பதே முழுமையான அறிவாகும். *"நான்' என்பதை நீக்கலாம். ஆனல், நீக்கவேண்டு மென்ற நினைப்பு மீண்டும் 'நான்' என்பதைப் பலப் படுத்துகின்றது. புதிதாக ஒன்றைப் படைக்கும் நிலை யில் 'நான்' என்பதிராது. "நான்' என்பதில்லா

- 21 -
இடத்தில் அனுபவம் இராது. 'படைப்பு" என்பது அறிவுக்குட்பட்டதன்று. தன்னை வெளிப்படுத்துவது மன்று; எனவே, அனுபவமில்லாத-நினைவுகூரமுடியாதநிலையே மனம் இயற்கையாக அமைதிகொள்ளக்கூடிய நிலையாகும். '"நானென்னுந்' தனித்தன்மை இல்லா மையே அந்நிலைக்குக் காரணமாகும்.
** நான் ’ என்னுந் தன்மையை அழித்தற்கு மன மானது காலங் குறிக்க முடியாத என்றுமுள்ள ஆன்மிக நிலையை அடைய முயல்கின்றது. இதுவும் ' நான் "" என்பதைப் பலப்படுத்தும் ஒருவிதமான அனுபவமன்ருே? இறைவனை நம்பும் போதும் இதுவே நம்புவார் உள்ளத் தில் நிகழ்கின்றது. எனவே, எல்லா முயற்சிகளிலும் மறைமுகமாகவும் நேரடியாகவும் ' நான் "" என்னுந் தன்மை செயற்பட்டுக்கொண்டே யிருக்கிறது. மனமா னது ஒரு வட்டத்திற்குள்-தானே உருவாக்கிய ஒரு சிறைக்கூட்டிற்குள் - அசைந்து அசைந்து செயலாற் றுவதை உற்றுநோக்கவேண்டும். இதனைப் பூரணமாகத் தெரிந்துகொள்ளும்போது பிற தூண்டுதல்கள் எதுவு மின்றி இயற்கையாகவே மனம் அமைதி பெறுகின்றது. ஒவ்வொரு கணமும் 'நான்’ என்னும் தன்மையையே மனம் வலுப்படுத்துகின்றது என்பதைப் புரிந்துகொண்டு நினைப்பு ஆராய்வு காணவேண்டுமென்ற முனைப் பென்ற சலனங்களற்று மனம் சும்மா இருக்கும் பெற்றி யுறும்போதே தெளிவு ஏற்படும்.
படைப்பு நடக்கும் நில்
நம்பிக்கை, அறிவு, அனுபவம் என்பன யாவுமற்ற அமைதி பெற்றுத் தெளிந்த மனமுடையாரே ஒப்பற்ற நிலையை அடைவர். அந் நிலையில் மனமானது எதையும் படைக்கும் திறனற்று, ஓய்ந்து, தெளிந்து விளங்கும். மனமானது எதையும் படைக்காத அந்நிலையிற்ருன் உண் மையிலேயே படைப்பு நடைபெறுகிறது. இந்நிலை தொடர்பு காணும் செயற்பாடுடையதன்று. உண்மை யென்பது தொடர்பு காண்பதற்குரியதொன்றன்று •

Page 20
மனத்தூய்மையுள்ளானே நேர்மையான மனிதனுவான். நேர்மையான மனிதனுல் உண்மையை அறிந்துகொள்ள இயலாது. தூய்மை என்பது அவனைப் பொறுத்தமட்டில் " நான் " என்னுந் தன்மையை மறைக்க உதவும் ஒரு சாதனையாகக் கருதப்படுவதே உண்மையை அறிந்து கொள்ளாமைக்குரிய காரணமாகும் , ' நானென்னுந் தனித்தன்மை” எப்படிச்செயல்புரிகின்றதென்று அறிந்து கொள்வோரே அன்பு என்ருல் என்ன என்று அறிந்து கொள்ளும் ஆற்றலைப் பெறுவர். " நான் " என்னுந் தனித்தன்மை அன்போடு ஒருபோதுந் தொடர்பு கொள்ளாது. ஒருவர் ஒருவர்பா லன்புகொள்ளும்போது ** நானென்னுந் ' தனித்தன்மை மறைந்து விடுகிறது.

மனத்தின் செயற்பாடும் எண்ணத்தின் விளைவும்
மனத்தின் செயற்பாடு பற்றியும், அச் செயற் பாட்டின் விளைவு பற்றியும் பண்டைக்காலம் தொட்டுப் பலநாட்டு மதத்தலைவர் பலரும், அறிஞர்களும், ஞானிக ளும் பலதரப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளா ரெனினும், மனமென்ரு லென்ன ? என்ற வினவுக்குச் சீரிய, நேரிய விடை இதுவரை எவரும் அளித்திலர். மனத்திற்கு உருவமைப்போ, சூழலோ, இடமோ இல்லை. எவ்வித வரைவிலக்கணத்தாலும் விளக்கமுடியாத மன மானது ஒரு எடுகோளேயாகும். மனமென்று சொல்லும் போதெல்லாம் சிந்தனையோடு அதனை இணைத்துப் பார்க்கின்ருேமேயன்றித் தனியாக அதனையுணர முடிவ தில்லை. மனத்தின் முக்கிய செயல் சிந்திப்பதாகும்.
மனம் செயற்படும் முறை
மனம் செயற்படும் முறைமையை மிகவும் கூர்ந்து அவதானித்தால் அஃதொரு தனிப்படுத்துஞ் செயல் முறைமையுடையதென்பது புலணுகும். எண்ணத்தின் செயல் முறையும் இதையே அடிப்படையாகக் கொண் டுள்ளது. ஒருவர் தமது இறந்த கால நினைப்பு, அனுபவம், அறிவு, நம்பிக்கை ஆகியவற்றிற்கமையவே சிந்திக்கின்ரு ரென்பது புலனுகும். இந்த அறிவும், அனுபவமும், நம்பிக்கையும், அவருக்குத் தற்காலிகமாக ஒருவித அமைதியையும், பாதுகாப்பையும் தருவதோடல்லாமல் எண்ணச் செயற்பாட்டிற்கும் ஊக்கமளிக்கின்றன. இவையே ஈற்றில் 'நான்'," "எனது' என்ற நிலைகளையும் ஊக்குவிக்கின்றன. எனவே மனத்தின் செயற்பாடா னது தனிப்படுத்தும் செயல் முறையே என்பது உறு யாகின்றது.
ஒருவன் தன் எதிர்காலத்தில் நல்லவனுய், வல்லவ ஞய், உலகப் புகழ்பெற்ற நல்லறிஞனுய்த் திகழ விரும்பு கின்றனென நினைப்பதற்கும் ஒருவித தணிப்படுத்தும்

Page 21
- 24 -
செயல்முறையே காரணமாகும். தனித்தியங்கும் போதும் குழுவொன்றேடு கூடியியங்கும் போதும் எண்ணமானது பிரிவுணர்ச்சி (solation) உண்டு பண்ணுகின்றது. எனவே மனத்தினது செயற்பாட்டின் முக்கியத்துவம் பிரிவினை யுண்டாக்குவதாகும் ; பிரிவுணர்ச்சியையே நிலைக்கள ஞகக் கொண்டதாகும். பல்லாயிரக் கணக்கான வரு டங்களாக மதம், பண்பாடு, கலாசாரம் ஆகியவற் றின் வசப்பாடால் இத் தனிப்படுத்தும் செயல் முறைக் கமையவே மக்கள் சிந்தித்து வந்துள்ளாராதலால், மக்களொருவரோடொருவர் அன்பாய், ஒற்றுமையாய் இயங்கி, ஒத்துழைக்க முடியாதிருக்கின்றனர். இதனுல் அச்சம், பொருமை, அவா, வெகுளி ஆதியவற்ருல் தூண்டப்பட்டு, கட்டாயப்படுத்தப்பட்டு, ஒரமைப்பிற் கமைய-ஒழுங்கிற்கமைய-வாழும்படி மதங்கள் தூண்டு கின்றன. எனவே இவ் வெண்ணவமைப்பானது மக்கள் வாழ்வில் தவிர்க்க முடியாத வொன்முய் உருவெடுத் துள்ளது. எண்ணத்தின் தனிப்படுத்தும் செயல் முறையி னின்றும் விலகி உயர்ந்தெழுதல் எவ்வாறு என்று கண்டு தெளிவுற்ருலன்றி, ' நான் ' என்ற மனப்பாங்கு மேலோங்குவதைத் தடுக்க முடியாது. இம் மனப்பாங்கு வளர வளர, அமைதி கெட்டும், பகைமை வளர்ந்தும், போர் மூண்டும், சிக்கல்கள் தோன்றியும் வருமே யன்றி, அமைதியும் அதனல் மனச்சாந்தமும் ஏற்படா. அப் போது எழுந்துள்ள சிக்கல்கள் எண்ணத்தின் தனிப் படுத்தும் செயல் முறையைத் தடுப்பதெவ்வாறென்பதே யாம் . செயற்பாடாகிய ** நான் ' என்ற எண்ணத்தை அழிக்க முடியுமா? என்ற கேள்வியும் இதே சமயத்தில் எதிர் நோக்க வேண்டியுள்ளது. எண்ணமானது எதை யும் உண்டுபண்ணும் திறனற்றது. அது வெறுமனே ஒரு மாறெதிர்ச் செய்கையே (Reaction) யன்றி வேருென்றுமில்லை. இப்படிப்பட்ட எண்ணமானது தனக் கொரு முடிவைக் கொண்டுவருமா ? என்பதையே யாம்
கண்டுகொள்ள முனைய வேண்டும். '"நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். நான் இவ்வறத் திற்கமைய வாழவேண்டும் ", என்ற முறைமையில்
ஒருவன் சிந்திப்பனெனக் கொண்டால், அவன் எண்ண மானது இந்த ஒழுங்கிற்கமைய அவனைக் கட்டாயப் படுத்துகின்றது. இத்தகைய நிலையையே எண்ணத்தின்

- 25 -
மனத்தின்-தனிப்படுத்தும் செயல்முறையென முன்னே காட்டப்பட்டுள்ளது. எவனுக்கு எண்ண ஈடுபாடு இல் லையோ, எவனுக்கு பிரிவுணர்ச்சியற்ற-வகைப்படுத்தப் படாத-அன்புண்டோ, எவனுக்கு அன்பின்தெளிவும், அன்புணர்வால் ஒத்துழைப்பும், ஐக்கியமு முண்டோ அவனிடம் 'நான் "", ** எனக்கு’ என்பனவிரா.
இதுவே அறிவின் உச்சநிலையாகும்.
அன்பு வெளிப்படும் விதம்
எனவே, எங்கு மனத்தின் செயற்பாடிலதோ அங்கு தான் அன்பு வெளிப்படும். மனத்தின் செயற்பாட்டை யொழிக்க மனத்தின் செயற்படு முறையை முதற்கண் ணுணர்ந்து தெளிவுபெற வேண்டும். எம்மனத்திலும் செயற்பா டொடுங்கும்வரை அன்பு மனத்தில் அரும்புவ தொழியாது. அவாவின்மையை யுடைய மனம் விரும் பின் அவ்விருப்பம் அவாவுறு நிலையைப் பிறிதொரு வழியில் அடைய முற்படுகின்றது. சுருங்கக்கூறின், மன மானது அன்புநிறைந்த நிலையிலிருக்க விரும்பும்போதே மனமானது அந்நிலையை மறுக்கின்றது. எந்தச் சிக்கலை யும் புரிந்துகொள்ள அமைதியான அசைவற்ற கோட் பாடுகள், கொள்கைகள், நம்பிக்கைகள் ஆகியனவற் முல் வரையறுக்கப்படாத தெளிவுபெற்ற மனத்தோடு அணுக வேண்டும். மனித மனத்தாற் செய்யமுடியாதமனம் செய்ய விரும்பாத எதையும் வெறுமனே பிற அழுத்தங்களுக் காளாகாமல் நோக்குவதே முறைமையா கும். ஏதாவது ஒரு சிக்கலைப்பற்றி எண்ணத் தொடங் கும்பொழுதே, ஒப்புநோக்கல்-மதம்-கலாசாரம்-- பண்பாடு - பழக்க வழக்கங்கள் - நிலைத்த நினைப்பு ஆகியன குறுக்கிட்டு அந்தச் சிக்கலோடு கொண்டுள்ள நேரடித் தொடர்பை முறித்து விடுகிறது; மாசுபடுத்தி விடுகிறது. மனத்தின் செயற்பாட்டை உள்ளபடியே உற்று நோக்க எம்மால் முடியுமாயின் தெளிவு பிறக்கும்.
'நான்’ என்ற பிரச்சினை
ஒருவர் ஒருவரிடம் ஒரு விஞவை வினவினல், அவர் அவரது இறந்தகால நினைப்பிற்கும் தமது வளர்ப்பிற்கும்

Page 22
- 26 -
அமையச் சிந்தித்து அச் சிந்தனை தோய்ந்த விடை கூறுகின்ருர் . இந்தச் செயற்பாட்டிற்கு ' நான் ' என்ற இறுமாப்பே அடிப்படையாக இருக்கின்றது. எத்துணை உயர்ந்த பொன்மொழியும் அறிவுரையும் ஒருவருடைய சிக்கலைத் தீர்க்கா. " நான் ' என்ற பிரச்சினையை எண்ணத்தால் தீர்க்க முடியாது. எந்தப் பிரச்சினை யையும் தீர்த்தற்கு எவ்விதத் தொடர்புமற்ற உணர் வும் விழிப்புமுள்ள உள்ளம் வேண்டும். பிரச்சினை எப் படித் தீர்க்ப்படுகின்றதென்றும் எதற்காகத் தீர்க்கப் படுகின்றதென்றும் தெரிந்தால் அப்பிரச்சினை "" தான் "" என்ற எல்லைக்கோட்டிற்குள்ளேயே இன்னும் இயங்கு கின்றதென்றே கொள்ளவேண்டும். அனுபவம், அறிவு ஆதியனவற்றிற் றிரிபுற்ற மனம் சிதறுண்டு பல்வகையிற் செயற்படும். எதையும் தானே ஏற்றுந் தள்ளியுங் கற்பனை செய்து கொள்ளும் பேராற்றல் மனத்திற்குண்டு. பொருளற்ற இத்தகைய ஆற்றலெல்லாம் மனத்தி விருந்து நீங்கி மனம் வெளித்தொடர்பும் அத் தொடர்பாலாய தாக்கமுமின்றி அமைதி பெறுமாயின் அம் மனத்தினின்றும் உண்மை வெளிப்படும். எண்ண அசைவுகள் எவையுமின்றித் துய்ப்பவர் (Experience), நோக்குபவர் (observer) என்பாரற்ற நிலையில் மனம் மிகவும் அமைதியாக அசைவுகள் எதுவுமின்றி இருக்கும். அந் நிலையிலிருக்கும் மனத்தில் ஆசை, அவா, விருப்பு வெறுப்பு, குறிக்கோள் என்பவற்ருலுண்டான "" நான் ’’ என்ற முனைப்பு மறைந்து உண்மை துலங்கும். ஒரு மூலையில் இருந்து கொண்டு ஒருவர் தமது விருப்பு வெறுப்பு முதலாம் பற்றுக்களை முற்ருயொடுக்க எத் துணைத் தியாகம் செய்தாலும் அவரெண்ணம் கைகூடாது. எண்ண அசைவுகளெதுவுமில்லாத இயற்கையான அமைதி ஏற்படுமட்டும் மனத்திற்கும் சொல்லிற்கும் எண்ணத் திற்கும் அப்பாற்பட்ட எந்த உண்மையையும் அறிய முடியாது. தன்னைத்தானே அறியாத-தன்னைத்தா னறிந்த அறிவாலேற்படும் அமைதியைக் கொள்ளாத மனத்தால்-அறிவு, அனுபவம் ஆகிய கட்டுப்பாடுக ளுக்குள் இயங்கும் மனத்தால்-எந்த உண்மையையும் காண முடியாது.

தெரிந்தனவற்ருல்
மறைப்புண்ட 9) 600 60) )
பண்டுதொட்டுத் தனக்குத் தெரியாத (unknown) ஒன்றைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் மனம் ஆர்வத் துடன் செயற்பட்டு வருகிறது. இம் முயற்சி உண்மை யைக் கண்டுபிடிக்கும் குறிக்கோளுடையதா? அல்லது தெரிந்தனவற்றைத் துணைக்கொண்டு தெரியாதனவற் றைக் கண்டறிய வேண்டுமென்ற அவாவினல் உந்தப் பட்ட முயற்சியா? ஒன்றையறிந்த (Known) மனம் தெரியாதவொன்றை அறிந்துகொள்ளுமா? இறந்த காலத்தின் விளைவாகவிருக்கும் எமது மனத்தால் கால வரையறைக்கு அப்பாற்பட்ட உண்மையைக் கண்டு கொள்ள மு டி யு மா? உண்மையைத் தேடிச் செல்ல முடியுமா? உண்மை தானகவே எம்மகத்தே புலப்பட வேண்டுமன்ருே? உண்மையைத் தேடிச் செல்வானுெரு வன் தெரிந்தனவற்றை நாடிச் சென்ற வணு க வே கருதப்படுவான்.
மனத்தின் தேடல் முயற்சி
உள்ளிருந்து உண்மையைக் காணத் தூண்டிவிடுவது என்ன என்பது இப்போதைய பிரச்சினையன்று. துயரம், குழப்பம், அமைதியின்மை ஆதியனவற்றிலிருந்து நீங் கிப் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும், அமைதியாக வும் வாழவேண்டுமென்ற அவாவின் தூண்டுதல் இத் தேடுதலுக்குக் கருவாயமைந்துள்ளது. இப்படி அவாவி னல் அழுத்தப்பட்டு, உந்தப்பட்டுத் தேடுதல் முயற்சி யில் ஈடுபடும் மனம், மதங்கள்-மதத்தலைவர்கள்மதக்கோட்பாடுகள்-ஆதியனவற்றில் தஞ்சம் புகுகின் றது. எனவே உண்மையைக் காணவேண்டுமென்ருல் உண்மையைக் காணவேண்டுமென்ற தேடல் முயற்சியில் ஈடுபடுதல் கூடாது. மனம் தெரிந்தனவற்றை முதலில் அறிந்துகொள்ளவேண்டும். மனத்திற்குத் தெரிந்தவை

Page 23
- 28 -
யெல்லாம் தன்னைப்பற்றியதேயன்றிப் பிறிதொன்றில்லை. எனவே உண்மையைக் காணவேண்டுமென்ற மனம் தன்னைத்தானே அறிந்துகொள்ளவேண்டும். ஒரு வ ர் தமக்குத் தெரியாத ஒன்றைச் சிந்திக்கவல்லாரல்லர், தெரிந்தவற்றையே அவராற் தெரிந்துகொள்ளமுடியும்.
தெரிந்தனவற்றை ஒட்டியே மனம் செயற்படுகிற தென்பதே இப்போதைய ஆய்வுக்குரியதாகும். மனமா னது தன்னைத்தானே அறிந்துகொள்ள வேண்டும். அத் தோடு அதன் அசைவானது இறந்த காலத்திலிருந்து எதிர்காலத்தை நிகழ்காலத்தினுாடாக அடைகிறதென் பதையும் அறிந்துகொள்ள வேண்டும். தொடர்ச்சி யாக இடையூறு எதுவுமின்றி நிகழும் இவ்வசைவை நிறுத்த முடியுமா ? இவ்வசைவு நிறுத்தப்பட வேண்டு மாஞல், அதன் செயல்முறை, குறிக்கோள், வழிகள் ஆகியவற்றை மேலெழுந்த வாரியாக நோக்காது நுணுக்க மாக-ஆழமாக-முதலில் அறிந்துகொள்ள வேண்டும். இதனை நிரந்தரமான தொடர்ச்சியான விழிப்புணர்ச்சி யாலேயே அடைய முடியும்.
இருள் அகல ஒளி பிறக்கும்
வெளிச்சத்தைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. இருள் அகல ஒளி பிறக்கும். இருளினூடாக ஒளியைக் காண இயலாது. அதேபோல இறைவனைத் தேடுகி ருேம் என்று நாம் சொல்வதெல்லாம் வெறும் மருளே யாம், எல்லாவற்றிற்கும் முதல் குறிக்கோள் சரியாக இருக்க வேண்டுமென்பதையே யாவற்றிற்கும் முதன் மையாகக் கொள்ள வேண்டும். இருளுக்குக் காரணமா யிருக்கின்ற தடைகளை யெல்லாம் நீக்கினல் இருள் தானகவே அகலும். எனவே இருளை அகற்றுவதே எமது குறிக்கோளேயன்றி ஒளியைக் காண்பது எமது குறிக்கோளாக இருக்கக் கூடாது. ஏனெனில், ஒளியைக் காண்பதற்காகத்தான் இருளை அகற்றுகிருேம் என்ருல், இங்கு அகற்றப்படுவது எதுவுமாகாது. இருள், ஒளி என்ற இரு சொற்களையும் மாற்றி மாற்றி உபயோகிக்கும்

- 29 -
வாக்கியக் கோவையாக இம் முடிவேற்படக்கூடாது; இப்பதி லமையக்கூடாது.
குழப்பம், அமைதியின்மை, துயரம் ஆகிய பேதைமை இருள் மனத்திலிருந்து நீங்கிய பின்பே உண்மை புலப் படும். இதன் பொருட்டு உண்மையைத் தேடி அலைய வேண்டிய அவசியமுமில்லை. பேதைமையும், மூடக் கொள் கையுமாகிய அக இருள் அகல, விவேகமும் அக ஒளியும் மலரும். மூடன் ஒருவன் தான் புத்திசாலியாக, விவேக முள்ளவனக வேண்டுமென்று முயன்ருல் அம் முயற்சியே அவனைப் பெரும் பேதை ஆக்கும். பேதைமையை விவேகமாகவும், அறிவுடைமையாகவும் மாற்ற முடி யாது. மடமை நீங்கும்போது விவேகம் உருவாகும். எனவே, இவ்வாறே துயரம் , குழப்பம், அமைதியின்மை ஆதியன முற்ருக நீங்கும்போதே உண்மை துலங் கும். இதன் பின்னரே பாதுகாப்பாகவும், அமைதியாக வும் வாழ்வதற்கு ஒரு வ ர் மேற்கொள்ளும் முயற்சி அவரை அல்லற்படுத்தாது அமைதிகொள்ளும். இதை விடுத்துத் துயரம், குழப்பம், அமைதியின்மை ஆதியன வற்றிற்குக் காரணமாகவிருக்கும் மனத்தை அறிந்து கொள்ளவேண்டும். மனத்தை அறிந்துகொண்டபின் மேற்கூறிய து ய ர ம், குழப்பம் முதலியன நீங்கும். அவை நீங்க உண்மை புலப்படும் .
9.660 I LILJL Oj
அமைதி ம ன ம் தேவையற்றனவற்றை நீ க் கி த் தெளிவுபெறும். புற அழுத்தங்களாற் பாதிக்கப்படாத மனமே உண்மையை அறிந்துகொள்ளும். எதிர்கால நாட்டமெதுவுமில்லாத மனமே அமைதியுறுந் தன்மை யது. உண்மையை வருந்தி அழைக்கவேண்டியதில்லை. உண்மையைக் காண்பதற்குத் தடைகல்லாக இருக்கும். தெரிந்தனவற்றிலிருந்தும் விடுபட உண்மை தானகவே வெளிப்படும். உண்மை துலங்குவதற்குரிய மனப் பக்கு வம் ஏற்படும்போது, உண் ைம எவருடைய வேண்டு கோளையும் எதிர்பாராமல் தானகவே வெளிப்படும்.

Page 24
- 30 -
எனவே, உண்மையை எப்படிக் காண்பதென்பது பிரச் சினைக்குரியதன்று. உண்மை வெளிப்பட வழிசெய்யின் அது தானே வந்துசேரும். மன இருளை அகற்ற வருக வருக என உள்ளத்தே ஒளியை அழைப்பதாலும்- ஒளி வரவேண்டும் என்று தி யா ன ம் செய்வதாலும் ஒளி வந்துவிடாது. ஒளி உள்ளே நுழையத் தடையாயிருப் பது இருள். அந்த இருள் நீங்க ஒளி தானக வரும் . எனவே, தெரியாத ஒளியைக் கற்பனையாலும் கோட் பாடுகளாலும் கொண்டுவரும் வீண் முயற்சியை விட்டு விட்டு அகத்தே குடிகொண்டுள்ள தெரிந்த இருளை நீக்க வழி வகுத்தால் இருள் அகலும். இந்நிலையை அடையத் தொடர்ச்சியான விழிப்புணர்வு நிலவவேண்டும்.
மனமும் அமைதியும்
துக்கம், குழப்பம் ஆதியனவற்றைத் தியானம், பக்தி ஆகியவற்ருல் நீக்க முடியாது. இவை மக்களின் அன்ருடப் பிரச்சினைகளிலிருந்தும் ஒடி மறைந்துகொள்ள உதவுகின்றனவேயன்றி, உ ண்  ைம க்கு வழிகோலா. உண்மையைக் காணத் தடைகளாகவுள்ள குழப்பம், துக்கம் ஆதியனவற்றை அறிந்துகொள்ள வேண்டும். குழப்பம், துக்கம் ஆதியனவற்றை அறிந்துகொள்ளும் போது, அவை தாமாகவே நீங்குகின்றன. மனம் இயல் பாகவே அமைதிபெற வேண்டும். அ  ைம தி  ைய எக் காலத்திலும் மனத்திற் தி னி க் க இயலாது. மனம் அசைவற்று அமைதிபெற வேண்டுமானுல் அவ்வமைதி உள்ளிருந்துதான் வரவேண்டும். காற்று வீசுவது நின் முற்ருன் குளத்துநீர் அசைவற்று அமைதியாகும். காற்று வீசும்போது குளத்துநீரை அமைதிபெறச் செய்ய இய லாது. சூல்கொண்டி மேகத்திரளால் மறைக்கப்பட்ட சூரியவொளி மேகத்திரள் நீங்க விண்ணகத்தே இலங் கித் துலங்குவதுபோல, க  ைற யா ய குற்றங்களால் மறைக்கப்பட்ட உண்மையொளி அக் கறையாய குற் றங்கள் நீங்க மனத்தகத்தே பொலிவொளி விளங்கும்.

- 31 -
மதங்களும், மதத்தொடர்பான நூல்களும், உண் மையைத் தேடிப்பெறும் பொருளாக்கியதோடு, அதனைக் காண்பதற்கு வரையறைகளையும், கட்டுப்பாடுகளை யும், கோட்பாடுகளையும் தோற்றுவித்து, ம க் களை க் குழப்பங்களிலும், கஷ்டங்களிலும் தள்ளிவிட்டுள்ளன. அடையமுடியாத, ஏதோவொன்றை அடையப்போகின் ருேம் என்ற மனப்பான்மையை மக்கள் ம ன த் தி ல் வேரூன்ற விட்டுவிட்டு அதன்பின் அதை அடைவதற் கான வழிகளையும் சொல்லி மக்களை மேலும் மேலும் குழப்பத்தில் ஆழ்த்துபவை மதங்களே. உண்மையை அறிய இதுதான் வழி என்று ஒரு வழி இல்லை. வழிகள் எதுவுமற்றதே உ ண்  ைம. தெரிந்தனவற்றை மேலுந் தெரிந்துகொள்ள வழிகள் பல உள. உண்மைக்கு வழி இல்லை. மனம் தன்னைத்தானே புரிந்துகொள்ளும்போது மனஇருள் அகல்கிறது. மனஇருள் அகல ஒளி பிறக் கிறது. எனவே காண்டல் முயற்சிக்கும், கோட்பாட் டிற்கும், கட்டுப்பாட்டிற்கும் அ ப் பா ற் பட்ட தே Ք. 6ծr 6ՓւԸ ասուն .

Page 25
சிந்தனையற்ற தொழிற்பாடும் உண்மையும்
ந்ெத ஒரு செயற்பாடும் ஏதாவதொரு கருத்தையே அடிப்படையாகக் கொண்டு செயற்படும். தண்டனை என்ற அச்சத்தை அல்லது எதிர்கால நன்மை என்ற எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டே செயற்பாடு கள் நடைபெறுகின்றன. இவ்வாறு ஏதாவதொரு கருத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிற்பாடு, ஒருவரை மற்றவர்களிலிருந்து பிரித்துத் தனிப்படுத்து கின்றது. ஒருவர் அறத்தைப் பற்றிய ஏதாவதொரு கருத்தைத் தழுவி அக் கருத்தைப் போற்றி நடக்க முனைகின்றர். இப்படி ஒரு குறிக்கோளை அடைய சமயங்களும் உதவியளிக்கின்றன. " " யான் சமூகத்தில் நல்லவனுக வாழ வேண்டும் , பிறர் போற்ற ஓர் எடுத்துக்காட்டாக என் வாழ்வு அமையவேண்டும் "' என்ற குறிக்கோள்களுடன் செயற்பட முனையும் போதெல்லாம், அவற்றிற்கு அடிப்படையாக இருப்பது கருத்தியலேயாகும். எனவே, ஏற்றுக்கொண்ட கருத் துக்கும், செயற்பாட்டுக்கும் இடையே ஓர் இடைவெளி ஏற்படுகின்றது. இதனுல் காலத்திற்கேற்ற ஒரு செயற் பாடு நிகழ்கின்றது. ஒருவர் செயலால் ஒருவராக இருந்துகொண்டு, வேருெருவராக இருக்கவேண்டு மென்று முனையும்போதெல்லாம் அவரது இப்போதைய நிலைக்கும், புதிதாக மாற நினைக்கும் நிலைக்குமிடையே ஓர் இடைவெளி-பிளவு-ஏற்படுகின்றது. இதனல் அவரது முயற்சிகளெல்லாம் அவருட்டோன்றிய பிளவை நிரப்புதற்கெழுந்தனவாம். இவையே அவரது செயற் பாடுகளாகின்றன.
கருத்தும் செயற்பாடும்
கருத்தின்றி நடைபெறுவதென்ன ? கருத்தென்ற
வொன்று இல்லாதபோது இடைவெளியும் தோன்ருது.
எவன் எதுவாக இருக்கின்ருனே அவன் அதுவாகவே

ཕ-33 ---
இருப்பான். எனவே, ஒருவர் கொண்ட கருத்து, அவரது செயற்பாட்டுக்கு வேறுபட்டுள்ளது. அறிவற்ற மூட ஞெருவன் தான் அறிஞணுகவேண்டுமென்று, எப்பொழு தும் சொல்லிக்கொண்டிருப்பான், அறிவற்ற மூடனென் பதை அவன் உணராதபோது அவனது கருத்தை அடிப் படையாகக் கொண்ட தொழிற்பாடு பயனற்றதாம்.
செயற்பாடு என்பது ஒரு காரியத்தைச் செய்து முடிக்க இயங்கும் நிலையாகும். ஒரு கருத்தை நிறை வேற்ற-செயற்படுத்த முனையும்போது அங்கே ஒரு நினைவுப் படிவமே வெறுமனே நிகழ்கின்றது. அஃதாவது தொழிற்பாட்டை அடிப்படையாகக் கொண்ட எண்ணச் செயற்பாடே நிகழ்கின்றது. அவர் கெட்டவர் ; பிறர் மீது அன்புகொள்ளாதவர் : தீச் செயல் எதனையுந் துணிந்து செய்பவர் என்பனவற்றை எல்லாம் அறிந்து கொள்ளும்போது அவ்வறிவால் விளையும் விளைவு எத் தகையது? ஒன்ருக இருந்துகொண்டு வேருென்ருக மாற வேண்டுமென்று கருத்தியலி லிருந்த செயற்படும் அவ ரது போலி மயக்கத்திற் காலத்தைக் கழிக்காமல், அவர் இத்தகையர் என்ற அவரது உண்மை நிலையை அவரே உணர்வாராயின் உணர்ந்தவர்பால் அக்கணமே நிகழ்வ தெது? வெறும் வார்த்தைகளாலும், போலிச் செயல்க ளாலும் மேலெழுந்தவாரியாக அவர் ஒதுக்கித் தள்ளு கின்ருர் என்று அறிந்துகொள்ள முனையாது அவரை நேரடியாக எந்தக் கருத்தியலின் உதவியுமின்றி நோக்கும் போதே அன்பு ஏற்படுகின்றது. அவர் மாசுகள் மலிந் தவர் என்ற உண்மை நிலையை அவரே உணரும்போதும்அவதானிக்கும்போதும்-அவர் என் செய்கின்ருர் ? தூயவராகத் தன்னை மாற்ற விழைகின்ருர். அவர் தூய ராக வேண்டுமென்ற உள்ளந்தோயா வெறும் கருத்து அவர்பால் இருக்குமாயின் நடைபெறுவதென்ன? சுத்தம் என்பது மேலெழுந்த வாரியாகக் கருத்தளவில் நிற்கு மாயின் தூய்மை காணவேண்டுமென்ற செயற்பாட்டை இத்தகையர் ஒதுக்கித் தள்ளுகின்ருர், உள்ளந்தோயாக் கருத்தை அடிப்படையாகக்கொண்ட தொழிற்பாடா னது, மேலெழுந்தவாரியாக எழும் வெறும் எண்ணத்தின்
3

Page 26
- 34 -
செயற்பாடேயாம். மக்கள் தம்மை மனிதர்களாக மாற்றி, திருத்தியமைக்க மேற்கொள்ளும் எந்தத் தொழிற்பாடும் கருத்தை யடிப்படையாகக் கொண்ட செயற்பாடாகாது. இந்தச் செயற்பாடு அச்சத்தையோ ஏதாவதொரு பயனையோ எதிர்பார்த்து நிகழ்வதொன் றன்று. இத்தகைய தொழிற்பாடு காலத்தையொட்டி எழுவதுமன்று. ஏனெனில், இங்கே காலத்தையும், அத ஞல் பிளவையும், 'நான்' என்னும் தனித்தன்மையை யும் கொண்டியங்கும் மனத்தின் செயற்பாடில்லை. எந்தப் பிரச்சினைக்கும் விடைகாணும் நோக்கோடு அப் பிரச் சினையை அணுகக்கூடாது.
Ii gğ6A akauqui LD GQTqpib
** மதங்கள் விடை தருகின்றன ; மதத் தலைவர்கள் வழிகாட்டுகின்றனர், வழிபாட்டால் வினைகள் யாவும் ஒழிகின்றன. யான் இனிமேல் பயபத்தியுடன் நல்லவனுய், ஒழுக்கசீலஞய் வாழவேண்டும் " என்ற குறிக்கோள்க ளுடன் வாழ்வதாற் பெறும் பயன்களெவை? இவை யெல்லாம் எமது பிரச்சினைகளை எள்ளளவேனும் தீர்க்கா. மதத் தலைவர்களாலும், வழிபாட்டாலும் எமது பிரச் சினைகளைத் தீர்க்கமுடியுமானல், இவ்வுலகில் இத்துணை அல்லல்கள் இருக்கவேண்டியதில்லையன்ருே ? அவரவர் பிரச்சினைகளை அவரவரே தீர்க்கவேண்டும். காலத்துக்குக் காலமெழும் பிரச்சினைகளை எவ்வித குறிக்கோளுமின்றி ஆழமாக வெறுமனே அணுகவேண்டும். சும்மா பிரச் சினையை எவ்வித குறிக்கோளுமின்றிப் பார் க் கும் பொழுதும், அறிந்து உணரும்பொழுதும் பிரச்சினைகள் மறைகின்றன. மனமானது எ வ் வித சலனமுமுழுது அமைதியாக இருக்கும்போதே இது சாத்தியமாகின்றது. பிரச்சினைகள்மீது அது அன்புகொள்ளும்போது சூரியன் மறையுங் காட்சியைப்போன்று அஃதழகாக விருக்கும். பிரச்சினைகளைப் பகையாக்கி எதிர்க்க முனைய முனைய அவற்றை ஒருபோதும் அறிந்துகொள்ள முடியாது. பிரச் சினையைத் தீர்க்காவிட்டால் என்ன விளையுமோ என்ற எண்ணமே பிரச்சினையை எதிர்க்கத் தூண்டுகின்றது.

இறை நம்பிக்கையும் உண்மையும்
நம்பிக்கையென்பது உண்மையின் மறுப்பேயாம். உண்மையை யாம் அணுகாத வண்ணம் நம்பிக்கை தடைசெய்கின்றது. இறை நம்பிக்கை இறைவனைக் காட்டாது. இறை நம்பிக்கையுடையவர், இறை நம் பிக்கையற்றவர் என்ற இரு சாராரும் உண்மையை அறிய மாட்டார். உண்மையென்பது தெரியாதவொன் ருகும். எனவே தெரியாத உண்மையைப் பற்றிய நம் பிக்கை அல்லது நம்பிக்கையின்மை என்பன நான் " என்னும் தனித்தன்மையின் நிழற்படிவங்களே. இறை நம்பிக்கை கொள்வதன் உள்நோக்கமென்ன?
நம்பிக்கையின் விளைவுகள்
நம்பிக்கையென்பது ஒருவித மனநிறைவையும், ஆறுதலையும், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை யும் தருவதோடு வாழ்க்கைக்கு ஒரு முக்கியத்துவத்தை யும் தருவதாகவும் மக்கள் கருதுகின்றனர். நம்பிக்கை எவ்விதத்திலும் முக்கியமானதன்று. ஒருவர் நம்பிக்கை யுள்ளவராய் இருந்து கொண்டே பிறரைச் சுரண்டு கின்ருர் ; பிறரைக் கொலை செய்கின்ருர் ; பிறரை ஏமாற்றுகின்ருர் . பணக்காரன் இறை நம்பிக்கை யுடையவனுக இருந்துகொண்டே இரக்கமற்ற முறையில் ஏழைத் தொழிலாளியின் வயிற்றிலடித்துப் பணம் சேர்க்கின்றன். கொடிய பலமுறைகளைப் பயன்படுத்திப் பணந் தேடிக்குவித்துப் பெரும் பணக்காரணுகிய பின், கோவில் கட்டித் தேசத் தொண்டனுகவும், நல்லவ ணுகவும், வல்லவனுகவும் தன்னை உலகிற்குக் காட்டிப் பிறரை மயக்குகின்றன். கிருேஷிமாவில் அணுக் குண்டைப் போட்டவர்களும் இறைவன் தம் பக்க மிருப்பதாகவே கூறினர். உலகிலுள்ள சர்வாதிகாரி களும், பிரதம மந்திரிகளும், ஜனதிபதிகளும், அரசியற் றலைவர்களும் இறை நம்பிக்கையுள்ளவர்களே. இவர்க

Page 27
- 36 -
ளுடைய சேவையால் உலகம் உய்ந்து விட்டதா? நம்பிக்கையுடையார் நம்பிக்கையற்ருர் என்ற பிரிவினை களோ - கொள்கைகளோ வாளா நிற்கின்றன.
நம்பிக்கை ஒருவரின் உண்மைத் தன்மையை மறைக்கச் சாதனமாகப் பயன்படுத்தப்படுவதோடு மக் களைப் பிரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அவர் இந்து, அவர் இஸ்லாமியர், அவர் கிறிஸ்தவர், மற்றவர் பெளத்தர் என்று மனிதரிடையே பிளவுகள் தோற்று தற்கும் உலக அமைதியைக் கெடுத்தற்கும் காரணமாக நின்று தொழிற்படுத்துவதே நம்பிக்கையே. நம்பிக்கை கணப்பொழுது ஆறுதலை அளித்தபோதிலும் மக்க ளிடையே வேற்றுமை மனப்பான்மையும் மிருகத் தனத் தையும் சமயப் போர்களையும் குழப்பங்களையும் தோற்று வித்தற்கும் காரண கருத்தாவாக நின்று தொழிற் படுவது மஃதே யென்பதைப் பலருமறிவர்.
இறைவன் என்ருல் என்ன ?
இறைவன் என்பான் எவன்? அவன் எத்தகையன்? இறைவன் என்ற சொல்லே இறைவணுகுமா ? எவற்ரு லும் அளக்கமுடியாத காலத்திற்கும் அப்பாற்பட்ட உண் மையைக் காண்பதற்கு முதற்படியாய் நின்றுதவ மனம் கால வரையறையிலிருந்தும் விடுபட வேண்டும். இறை வனப்பற்றியோ, உண்மையைப் பற்றியோ மக்களுக் குத் தெரிந்தனவென்று கூறுதற்கொன்றில்லை. தெரிந்தன வெல்லாம் வெறும் சொற்ருெடர்களும் பிறர் அனுபவங் களுமேயாம். இவையெல்லாம் காலவரையறைக்கப்பாற் ut L- a 6760) punt d5ft. காலத்திற்கப்பாற்பட்டதை அறிந்து கொள்ளுதற்குதவியாகவுள்ள காலத்தின் செயற் பாட்டை அறிந்துகொள்ள வேண்டும். மனம் தெரிந்தன வற்றிலிருந்தும் விடுபட வேண்டும். அஃதாவது மனம் குழப்பமடையா திருத்தற்காம் பூரணமான அமைதி பெறவேண்டும். மனம் இயற்கையாக அமைதி பெற வேண்டுமேயன்றி வற்புறுத்திய கட்டுப்பாட்டால் அமைதி பெறலாகாது, நீண்ட காலப் பயிற்சியால்

- 37 -
மனத்தை ஒருவாறு அமைதிபெற வைத்தாலும், அது மேலெழுந்த வாரியாக வெழுந்த செயற்பாடேயன்றி அகத்தெளிவிலிருந்து தோன்றிய இயற்கை அமைதி யாகாது. எண்ணத்தின் பூரணத்துவத்தைப் புரிந்து கொள்ளும்போதே மனம் இயற்கை அமைதியைப் பெறுகின்றது. எண்ணத்தின் செயற்பாட்டைப் பூரண மாகப் புரிந்துகொள்ளும்போது எண்ணத்தொடர்ச்சி முற்றுப் பெறுகிறது. எண்ணத்தின் செயற்பாடு முற்றுப் பெறும்போதே அமைதி பிறக்கின்றது. மேலெழுந்த வாரியாகத் தோற்றும் நிலையற்ற மன அம்ைதி மனம் பூரண அமைதி கொள்ளும்போது புரியாத-தெரியாத உண்மை அகத்தே புலணுகின்றது. தெரியாத ஒன்றை மனத்தால் உணர முடியாது. அமைதி யொன்றைத்தான் மனத்தால் உணர-அனுபவிக்க முடியும் . பரிபூரண அமைதியைத் தவிர வேறு எதையாவது மனமானது உணரவோ அனுபவிக்கவோ செய்யுமானுல் அவ்வனு பவம் உள்ளத்தே தொழிற்பட்ட அவாவின் வெளிப் tunt LIT (5th. ۔۔۔۔۔۔
எண்ணம்-மனம்-அமைதி
எண்ணம் விழிப்புள்ள நிலையிலோ விழிப்பற்ற நிலை யிலோ செயற்படும்போதும் அசைந்துகொண்டிருக்கும் போதும் அமைதி பெருது. இறந்த கால நினைவு, விழிப் புள்ள அறிவு, விழிப்பற்ற இறந்தகால ஞாபகம் ஆகிய வற்றிலிருந்தும் நீங்கிய தனித்த நிலையே மன அமைதி யாகும். முயற்சியின் மாற்ற விளைவாக விருக்காத போதே காலத்திற்கப்பாற்பட்ட உண்மை அமைதி துலங்கும். இந் நிலையில் ஞாபகம், அனுபவமென்ற நிலை களுக்கே இடமில்லையாம். எனவே, மனம் காலத்தின் செயற்பாட்டைப் பூரண நிறைவோடு புரிந்து இயற்கை யாக அமைதி பெறும்போதே கால வரையறைக்கும் அப்பாற்பட்ட உண்மை அம் மனத்திற் றுலங்குகின்றது. இவ்வாறின்றி, சமய வழிபாட்டாலும் நம்பிக்கையாலும் மன அடக்கத்தாலும் இறைவனை-உண்மையை அறிந்து

Page 28
- 38 -
கொள்ள முடியாது. இறைவன் மனத்தோடு தொடர் புடையவனல்லன். இறைவன் " " நான் ' என்னும் தனித்தன்மையின் நிழற்படிவமல்லன். மனம் இயற்கை யாக அமைதி பெறும்போதே உண்மை புலப்படுகின் றது. உள்ளதை உள்ளபடி நோக்கும்போதே உண்மை யான பேரின்பம் பிறக்கின்றது. மனம் இயற்கையாக அமைதி பெறும்போதே அதனுள் ஒரு பேரானந்த நிலை யேற்படுகின்றது. எண்ணத்தின் செயற்பாடற்ற அந்தப் பேரானந்த நிலையிலேயே நிலையான என்றுமுள்ள-பிறப் பற்ற - முக்காலத்திலும் முழுமையாகத் துலங்கும் உண்மை நின்று துலங்கும்.

கட்டுப்பாடும் மனித ஆற்றலும்
எம்மத்தியில் எழுந்துள்ள பலதரப்பட்ட பிரச்சினைகளி லொன்ருன கட்டுப்பாடே (Discipline) மிகவுஞ் சிக்க லானது. சமூகமானது தனியொருவரைச் சமய பொரு ளாதார சமூகச் சார்புகளாற் கட்டுப்படுத்தி அவரது மனத்தை ஓர் ஒழுங்கிற்கமையத் தொழிற்பட வரை யறுத்துள்ளது. கட்டுப்பாட்டை அடிப்படையாகக் கொண்டே சமூகமானது இயங்குகின்றதென்று சொல்லு மளவுக்குக் கட்டுப்பாடு சமூகத்தில் வலுவுள்ள உன்னத மானவொன்ருகப் பற்றிப் பிடித்துள்ளது. கட்டுப்பாடு இன்றியமையாததா? கட்டுப்பாடு என்ற பிரச்சினை பற்றி நீள நினையாமல், கட்டுப்பாடு இன்றியமையா தது ; வேண்டியதன்றெனப் பதில் பகர்வதால் ஒருவர் இப் பிரச்சினைக்குத் தீர்வுகாண இயலாது. சிறு வயதில், கட்டுப்பாடுகள் இருக்கக் கூடாதென்று கருதி, நினைத் தன வெல்லாவற்றையும் செய்யக்கூடிய சூழ்நிலை வேண்டு மென்று நினைத்துச் செயற்படுவதோடல்லாமல், அவற்றையெல்லாஞ் செய்யுஞ் சூழ்நிலையே சுதந்திர மென்று அவர் கருதி வந்துள்ளார். உடற்பயிற்சி வல்லுநர் ஒருவரும் விளையாட்டு வீரர் ஒருவரும் எந் நேரமும் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதைக் காணலாம். விளையாடுவதில் அவர்கள் அளவற்ற இன் பம் பெறுவதால் அவர்கள் தமது உடலைப் பக்குவ மாகவும் தகுதியுடையதாகவும் எப்பொழுதும் வைத் திருக்கின்றனர். நல்ல ஆரோக்கியத்தைப் பெறுதற் காகக் குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளைக் கடைப் பிடிக்கின்ருர்கள். குறித்த வேளையில் தூங்குவார், கட் டுடலைக் கெடுக்குமெனப் புகைக்க மாட்டார். கண்ட வற்றையெல்லாம் உண்ணுமல் அளவோடு சிறந்தன வற்றைத் தேர்ந்தெடுத்து உண்ணுவார். அவருடைய கட்டுப்பாடுகள் தவருண முயற்சிகளோ, முரண்பாட்டி லியங்கும் முயற்சிகளோ அல்ல. உடற்பயிற்சியில் அவர் கள் பெறும் இன்பத்தின் இயற்கையான வெளிப் பாடே அக் கட்டுப்பாடுகள்.

Page 29
கட்டுப்பாடும் ஆற்றலும்
கட்டுப்பாடு, மனித ஆற்றலை - ஊக்கத்தை - வலுவை (Energy) மிகைப்படுத்துகின்றதா? அன்றிக் குறைக்கின்றதா ? எல்லா மதத்தவரும், மதத்தலைவர் கள் எல்லாரும் மனக் கட்டுப்பாடவசியமென வலி யுறுத்தி வற்புறுத்துகின்றனர். அடக்கியாளுதல், வசப் படுத்தல், எதிர்த்து நிற்றல், சரிப்படுத்தல், பொருந்த வைத்தல், நிறுத்திக் கொள்ளல், வெளிவிடாதிருத்தல் என்பனவற்றை உள்ளடக்கியதே மனக்கட்டுப்பாடாகு மென உணரக்கூடும். கட்டுப்பாடுகள் மனித ஆற்றல், வலு, ஊக்கம் ஆதியனவற்றின் விளைவை அதிகரிக்கு மாயின், அவற்றை ஏற்றுக்கொள்ள நியாயமுண்டு. ஆனல் கட்டுப்பாடுகள் மனித ஆற்றலை அடக்கி வைப்ப தோடு மனித மனத்திற்கும் பெரும் தீங்கை விளைவிக் கின்றன. கட்டுப்பாடுகள் அழிவையும் உண்டாக்குகின் றன. மக்கள் எல்லோருக்கும் ஆற்றலும் ஊக்கமு முண்டு. கட்டுப்பாடுகளால் ஆற்றல்கள் உயர் நிலையைசெழிப்பை அடைகின்றனவா ? அல்லது கட்டுப்பாடுக ளால் ஆற்றலனைத்தும் அழிந்து போகின்றனவா என்பன போன்ற வினக்களுக்குரிய விடைகளை ஆராய்ந்து பெற வேண்டும்.
பலர் தம்முடைய ஆற்றலைச் சமூகக் கட்டுப்பாட் டாலும், போலியான நடைமுறைகளாலும் அழித்து வருகின்றனர். சமூகக்கட்டுப்பாடு என்ற பெயரிலே தனியொருவரின் ஆற்றலெல்லாம் வீணுகக் கழிகின்றன. மக்கள் இளைஞர்களாக இருந்தபோது அவர்கள் நிரம் பிய ஆற்றல் உடையவராயிருந்தனர் விளையாட்டு, பேச்சு, நடத்தல், தொழில்புரியாற்றல், ஊக்கமென்பன சிறப்புடனமைந்திருந்தன. சோர்வாலும், சோம்பலா லும் ஓரிடத்திலிருக்க முடியாவண்ணம் இளைஞர் மனத் தில் சுறுசுறுப்பு இயங்கிக் கொண்டிருந்தது. மக்கள் வளர வளர அவர்களை நாடி வந்த குருமார் மக்கள் ஆற்றல்களைக் குறைக்கப் பன் முறைகளைப் பயன்படுத் தினர். பல கட்டுப்பாடுகளைத் திணித்துச் சுறுசுறுப்பை

---- 41 س----
யும் ஆற்றலையுங் கட்டுப்படுத்தினர். நாளடைவில் சமூகத்தின் பெயரால்-கட்டுப்பாட்டின் பெயரால்மக்களாற்றல்களெல்லாம் அழிக்கப்பட்டன : அழிக்கப் படுகின்றன. ஒருவன்பால் சிறிதளவு ஆற்றலிருக்கு மாயின், கட்டுப்பாடு அவ்வாற்றலைப் பெருக்கிச் செழிப் பாக்குமா ? செழிப்பாக்குமாயின் கட்டுப்பாடு தேவை யானதென்று கருதிக் கடைப்பிடிப்பதில் ஒரளவு நியாய முண்டு. கட்டுப்பாடு ஆற்றலைப் பெருக்கத் தவறிய தோடு படிப்படியாக ஆற்றலைக் குறைக்குமாயின் கட்டுப் பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று கொள்ளுங் கொள்கை பொருளற்றதாம்.
ஆற்றலென்பது எதனை?
ஆற்றல் ஆற்றலெனப் பலராற் கூறப்படும் ஆற்ற லெது ? எத்தகையது? ஆற்றலே சிந்திப்பது, உணர் வது. ஆர்வம், அவா, காமம், குறிக்கோள், வெறுப்பு ஆதியனவே ஆற்றலாம். படம் வரைதல், இயந்தி ரங்கள் கண்டுபிடித்தல், பாலங்களமைத்தல், கவிதை இயற்றல், நாட்டியம் ஆடல், கோயிலுக்குப் போதல், வணங்குதல் ஆதியனவெல்லாம் ஆற்றலுருக் கொண்ட கோவையாம். வெளித்தோற்றம், குழப்பம், சிக்கல் ஆதியனவற்றை ஆற்றல் உண்டுபண்ண வல்லது. ஒரு வழியிற் கட்டுப்படுத்தி வேறு ஒரு வழியில் ஆற்றலைப் பயன்படுத்துவது சமூக வசதிகளுக்காகவேயாம். ஒரு குறிப்பிட்ட கலாசாரம், ஒழுங்குமுறைக்கமைய ஆற்றலை உருவாக்கும்போது ஒழுக்கக்கேடாகவும் சிதறிப்போகி நறது. உண்மையைக் காண விழையாதபோது மனித ஆற்றல் அழிவுடையதாகிறது. எனவே சமூகம் மனித னைக் கட்டுப்பட்ட உரு ஆக்குகின்றது. இதனல் மனித ஆற்றல் சிதைவுறுகின்றது. வளர்ந்த பெரியோர்களுக் கெல்லாம் பெரும்பாலும் இந்நிலை ஏற்படுகின்றது.
எதையாவது செய்ய வேண்டுமென்ற ஆர்வமேற் படும்போது அதைச் செய்வதற்காம் ஆற்றலும் எழு கின்றது. தன்னைத்தானே கட்டுப்படுத்தும் கருவியாக

Page 30
- 42 -
ஆற்றலமையுங்கால் புறத்திலிருந்து வருங் கட்டுப்பாடு தேவையற்றதாம். உண்மையைத் தேடலில் ஆற்றல் தனது சொந்தக் கட்டுப்பாட்டை உருவாக்குகின்றது. அப்பொழுதுதான் மக்கள் நிறைவு பொலியப் பெற்றவர் களாகின்றனர். ஆற்றலைக் கட்டுப்படுத்தாமல்-அதன் விழிப்பூட்ட முடியுமாயின், உண்மையைக் காண முயற் சியைச் செய்ய முடியுமானல், கட்டுப்பாடு என்ற சொல் நல்ல பொருளுடைச் சொல்லாக விளங்கும்.
உண்மையும் கட்டுப்பாடும்
உண்மையைக் கட்டுப்பாட்டாலும் தன்னடக்கத் தாலும் ஒருபோதும் காண முடியாது. கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்பது மனத்தின் நிலையேயாம். நீண்ட காலக் கட்டுப்பாட்டின் விளைவே சுதந்திரமென்று மக்கள் நம்புகின்றனர். ஒன்றைப் பூரணமாகக் காண் பதே அக் காட்சிக்குரிய கட்டுப்பாடாகும். ஒன்றைப் பூரணமாகவும் தெளிவாகவும் காணச் சுதந்திரம் தேவையேயன்றிக் கட்டுப்படுத்தப்பட்ட நோக்கம் தேவையன்று. எனவே, கட்டுப்பாட்டின் முடிவன்று சுதந்திரம். சுதந்திரத்தை அறிந்து கொள்வதே அதற் காம் கட்டுப்பாடாகும். சுதந்திரம் என்பதே தொடக் கத்திலுள்ளது முடிவிலன்று. அன்புந் தனது சொந்தக் கட்டுப்பாட்டை உடையது. அதன் அழகு அதனைக் கட்டுப்படுத்த முனையும்போது அன்பு, மனத்திலிருந்து அகலுகின்றது.

தனியொருவரும் சமூகமும்
தனியொருவர் சமுதாயத்தின் வெறும் கருவியாக விருக்கின்ருரா ? அல்லது தனியொருவரே (1ndividual) சமூகமாய் அமைகின்ருரா ? என்பதே மக்கள் பலர் இப்போது எதிர்நோக்கும் பிரச்சினையாகும். தனித்த ஒவ்வொருவரும் சமூகத்தால் கட்டுப்படுத்தப்பட்டுக் கல்வி போதிக்கப்பட்டு, சமூக-அரசியல் சட்ட திட்டங் களுக்கேற்ற வண்ணம் மாற்றியமைக்கப்பட்ட கருவி களா ? அல்லது சமூகமானது தனியொருவருக்காகவே இருக்கின்றதா ? தனியொருவர் சமுதாயத்தின் வெறும் கருவியாக விருப்பாரேயாயின் சமூகமே தனியொரு வரிலும் முதன்மை யுடைத்தென்று கொள்ள வேண்டும். இவ்வாறு கொள்ளின் ஒருவர் தமது தனித்தன்மையை விட்டுச் சமூகத்திற்காக உழைக்க வேண்டும். சமூகம் தனியொருவருக்காக இருக்குமாயின் அச் சமூகமானது தனியொருவரைக் கட்டுப்படுத்தாமல், அவருக்குப்
பூரண சுதந்திரம் அளிக்க வேண்டும்.
உண்மையும் கருத்தும்
மேல்ே குறிக்கப்பட்ட பிரச்சினைபற்றி ஆராய்ந்து தெளிவு பெறுதற்கு முன், தனியொருவர், சமூகம் என்ற இரண்டிலும் எது முதன்மையுடைத்தென்ற புதிரை நீக்க வேண்டும். இப்பிரச்சினை எந்த ஒரு கருத் திலும், கொள்கையிலும் தங்கியிருப்பதன்று. அப்படி அஃதொரு கருத்தில் தங்கியிருக்குமாயின் அது வெறு மனே ஓர் அபிப்பிராயத்திற்குரிய விடயமாய் விடும். கருத்தும், அபிப்பிராயமும் மனிதரிடையே பிணக்கை யும், பகைமையையும் உண்டு பண்ணுகின்றன. உண்மை அழிவற்றது ; மறுக்கமுடியாதது. உண்மை வேறு. கருத்து வேருதலான் உண்மையைப் பற்றிய கருத்து அபிப்பிராயம் ஆகியவற்றை யாம் மறுக்கலாம். ஆயின் உண்மை உண்மையானதே. அதற்கு ஒப்புமில்லை : உயர்வு

Page 31
- 44 -
மில்லை. உண்மையை உண்மையென ஏற்கும்போது அங்கு கருத்திற்கும் அபிப்பிராயத்திற்கும் இடமில்லை. சமய நூல்கள், சடங்குகள் எல்லாம் கருத்துக்களையே அடிப்படையாகக் கொண்டெழுந்தவையாகும். உண் மையை எக்காலத்திலும் எந் நிலையிலும் விளக்க முடி யாது. அதற்குச் சொல் வடிவு கொடுக்கவும் முடியாது. உண்மைக்குச் சொல் வடிவம் கொடுக்கும்போது உண் மையின் உண்மைத்தன்மை ஒழிந்துபோம்.
நூல்களிற் காணப்படுகின்றனவற்றை ஆதாரமாகக் கொண்டு உண்மையைக் காண விழையும்போதெல்லாம் ஒருவர் உண்மையிலிருந்தும் விலகி, வெறும் கருத்து, அபிப்பிராயம் ஆகியவற்ருற் பொத்துண்டு செயலற்றுப் போகின்ருர் . எனவே, தனியொருவர், சமூகம் என்ற வற்றைத் தெளிந்து உண்மையைக் காணல் எப்படி ? உண்மையைக் காணுதற்கு நிலைக்களஞக எல்லாவகைக் கொள்கைகளிலிருந்தும் விளம்பரம் முதலியவற்றி லிருந்தும் விடுதலை பெற்று உண்மையோடு நேரடித் தொடர்பு கொள்ள வேண்டும் . அபிப்பிராயம் கருத் தாகிய துறையிலிருந்து நீங்க வேண்டும். ஆணுல் மக்கள் தம் வாழ்க்கையில் என்ன செய்கின்றனர் ? ஏதாவது ஒரு சூழ்நிலையை எதிர்நோக்கும்போது குழப்பங்களைக் களைய ஒரு தலைவன-குருவை நாடுகின்றனர். இம் முயற்சியே உலகிலெழும் சீர்கேடுகளுக்கும் குழப்பங் களுக்கும் ஏதுவாகின்றன.
. LD GATg íb i gğéfâ2Q Lqüi
குழம்பிய மனநிலையே சிக்கலை மேலும், மேலும் வளர்ந்து பெருங்குழப்பமான முடிவை யடைய வழி வகுக் கின்றது. ஒரு பிரச்சினை என்றும் அசையாமல் நிலை யாய் நிற்பதொன்ருதலால், ஒரு பிரச்சினையைத் தீர்க்க விரும்பும் மனம் அப்பிரச்சினையை முற்ருகப் புரிந்து கொள்வதோடமையாது அதனை விரைவாக அவதானிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அப்போது ஓர் அகப்புரட்சியின் இன்றியமையாமையை உணர

一45一
வேண்டும். இந்த அகப்புரட்சி ஒன்ருல்தான் புறத்தில் ஓர் அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவர முடியும். சமூகம் அசைவற்ற நிலையாய் இருப்பதால், அகப்புரட்சி யற்ற எந்தச் செயலும், எந்த மாற்றமும் அசைவற்று நிலையாக உருப்பெற்று நின்று விடுகிறது.
மக்களுக்கும் இடுக் கண்ணுக்குமிடையே யுள்ள தொடர்பு எத்தகையது? இடுக்கண் தனித்துநின்று பிரச்சினையை ஏற்படுத்துவதன்று. மக்கள் தாமே தம் பிரச்சினைகளை ஏற்பதற்குக் காரணகருத்தாக்களாக விருக்கின்றனர். அவரது அகத்திலுள்ளதே புறத்தில் வெளிவருகின்றது.இப்பிரச்சினைகள் பல நிரம்பியவராய், இடுக்கண் நிரம்பியவராய் இருக்கும்போது அவையே அவர் வாழும் சமூகமாய், உலகமாய் மாறுகின்றன. மனிதர் ஒவ்வொருவருக்குமிடையே உள்ள தொடர்பே அவரது சமூகத்தின் பயனும் விளைபொருளுமாய் முடி வடைகின்றன. ஒருவரது பிரச்சினையே - தனியொரு வரின் பிரச்சினையாய், சமூகப் பிரச்சினையாய், உலகப் பிரச்சினையாய்த் தோன்றுகின்றது. இன்றைய சமூகச் சீர் கேட்டிற்குத் தனியொருவராக அமைந்த ஒவ்வொரு வரும் காரணமாயிருக்கின்றனர். தனியொருவர் எதை யும் உருவாக்கும் திறனற்றவராய் இருக்கின்றர்.
பின்பற்றும் இயல்பின் பயன்
மக்கள் எதையும் . அகத்திலும் புறத்திலும் பின் பற்றும் இயல்புடையர். புறத்தில் ஒருவர் ஒரு தொழில் முறையைக் கற்கும் போதும், வாய்மொழியாக இன் னுெருவரோடு தொடர்பு கொள்ளும்போதும் இயல் பாகவே பின்பற்றலும் போலி நடத்தையும் அவரைப் பற்றியுள்ளன. கல்விமுறை, சமூக அமைப்பு, சமயப் பற்றுடைய வாழ்வு அனைத்திலும் பின்பற்றும் இயல்பு தொழிற்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட சமூகத்திற் கமையவும், சமயக் கோட்பாடுகளிற்கமையவும் ஒருவர் தம்மை மாற்றிக்கொள்கின்றர். எனவே, அவர், பிறர் கூறுவதை ஆராய்வற்று உடனே ஏற்று அதனைத் திருப்பித்

Page 32
- 46 -
திருப்பிக் கூறும் திறமையைப் பெறுகின்ருரேயன்றி வேறு ஒன்றையும் பெற்றிலர். அஃதாவது சரியான உளப்பாங்கு நெறிப்பட நின்று நோக்கின் ஒருவர் தனி யொருவரா யுள்ளா ரென்ற உண்மை புலனுகிறது. அவரது மறுதலிப்பெல்லாம் சமூக அமைப்பால் வரை யறுக்கப்பட்டுள்ளன. பின்பற்றல் - போலிநடத்தை என்பன எங்கு இருக்கின்றனவோ, அங்கு சிதைவும் பிரிவும் பின்விளைவாக அமையும்.
拳
எங்கு மேலாண்மை பெற்ற செல்வாக்குள்ள தலைவ னுண்டோ, அங்கு பின்பற்றலும் வலியுடன் உண்டாம் . சகல மனப்பாங்கும், மேலாண்மை புரியுமுரிமையும் செல்வாக்குள்ள தலைவன் (authority) காட்டிய வழியைப் பின்பற்றுதலும் தங்கியிருக்கின்றனவாகையால், எதை யும் தாமே உண்டுபண்ணும் இயல்பு பின்பற்றுவாரை விட்டு நீங்கி வருகிறது. எனவே, சமூக அமைப்பின் தோல்விக்கும், சமூக சீர்கேட்டிற்கும் கண்மூடித்தன மாகப் பிறரைப் பின்பற்றுவதே காரணமாம்.
உண்மை என்பதென்ன?
உண்மையென்பது பிறரால் வெளிப்படுத்தப் படுவ தன்ருதலால், பிறர் சொல்வதையும், பிறர் செய் வதையும் பின்பற்றும் இயல்பு முதலில் நீக்கப்பட வேண்டும். ஒன்றைப்பற்றிய உண்மையைக் காண வேண்டுமானல், அவ்வுண்மையைப் பிறருதவியின்றித் தாமே நேராகக் காண வேண்டும். இதை விடுத்துப் பிறரது சருத்தைப் பின்பற்றுவதால் பிறரது கருத் தையே உண்மை என்று மயங்குகின் ருேமன்றி உண் மையை உண்மையாகக் காணுேம் தனியொருவர் பிரச்சினை தனியொருவருக்காகத் தனியொருவராலேயே தீர்க்கப்பட வேண்டியதாகுமேயன்றிப் பிறரால் தீர்க்கப் பட வேண்டியதொன்றன்று. பிறர் கண்கொண்டு தமது பிரச்சினையைத் தீர்க்க முனைபவர் தமது பிரச்சினையைத் தாமே பாராராதலால் அவரால் அவர் பிரச்சினை தீர்த்தற் கரியதாம்.

- 47 -
எனவே, சமூகத்தின் சீர்கேட்டிற்கு அடிப்படைக் காரணமாயிருப்பது பிறரைப் பின்பற்றும் இயல்புதான். இத்தகைய சமூகச் சீர்கேடு மறையச் சமூகப் புரட்சி தேவையாம் . அச்சமூகப் புரட்சி ஏதாவது ஒரு கருத்தை நிலைக்களஞகக் கொண்டதாயிருத்தலாகாது. கருத்துப் புரட்சி எழுந்தால் அப்புரட்சி அக்கருத்தின் தொடர்ச்சி யிலேயே சேர்க்குமாதலால், கருத்தை அடிப்படை யாகக் கொண்டிருக்கும் புரட்சி இரத்த வெறியிலும், கொலையிலும், பெரும் குழப்பத்திலுமே கொண்டுபோய்ச் சேர்க்கும்.

Page 33
சலனமற்ற மனமும் உண்மையும்
ஒரு பிரச்சினை ஒருவருக்கு ஏற்படும்போது, அவர் கவலை கொள்கின்ருர் . பின்பு அப்பிரச்சினையை ஆராய்ந்து அதனை அறிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடுகின்ருர் . முயற்சியாலும், அப் பிரச்சினையோடு தொடர்புள்ள நுணுக்கமான ஆராய்ச்சியாலும், ஒப் புமையாலும், மனப்போராட்டத்தாலும் அவருக்கேற் பட்டுள்ள பிரச்சினையைத் தீர்த்துக் கவலையிலிருந்தும் விடுதலைபெற அவரால் முடியுமா ? என்பதே இப் போது எம்மத்தியில் ஏற்பட்டிருக்கும் சிக்கலாகும். மன்ஞ் சலனமற்றுப் பரிபூரணமாக அமைதி பெறும் போதே ஒரு பிரச்சினையை அறிந்துகொள்ளும் நிலை யேற்படுகின்றது. பிரச்சினைகளோடு ஒருவன் தொடர்பு கொள்ளக் கொள்ள அவனது மனமானது பக்குவப் பட்டு, அனுபவப்பட்டுப் பிரச்சினைகளைத் தெரிந்து தீர்க்குமென்ற திறனைப் பெறுமென்ற எண்ணம் இன்று பொதுவாகப் பரவியுள்ளது.
மனமும் உண்மையும்
மனத்திற்கும் உண்மைக்குமிடையே கிளர்ச்சிகள் குறுக்கிடாதபோதே உண்மையை நேருக்கு நேராக நோக்க முடியும். மனம் சலனமற்று நிறைந்த பொலி வோடு அமைதியைப் பெறும்போதே இது சாத்திய மாகின்றது. மனம் சலனமற்ற நிலையை அடைவது எப்படி ? கட்டுப்பாடும், தன்னடக்கமும், ஒழுங்கு மர பும், வழிபாடும் மனச் சலனத்தை இயல்பாகத் தோற்றுவிக்கா. இவை அனைத்தும் மனத்தைக் கட்டுப் பாட்டிற்குள் புகுத்தி அமைதியற்ற சலனமிக்க மனத் தைக் கட்டாயமாக அமைதிபெற வைக்கின்றன. இயற்கையாகச் சலனமற்று அமைதி கொண்ட மனத் திற்கும், கட்டாயத்தால் அமைதிபெறச் செய்யப்பட்ட மனத்திற்கும் வேறுபாடுண்டு. ஓர் ஒழுங்கு மரபாலும்,

- 49 -
ஓர் எண்ணத்தாலும், சில சொற்ருெடர்களாலும் சூழப்பட்ட மனம், அமைதிபெற்ற - சலனமற்ற மன மாகுமா ? கட்டுப்பாடுகளின் வலியால் அமைதியுற்ற மனம் உயிரற்ற மனமாகும் செயலிழந்த மனமாகும். அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டிருக்கும் அம் மனத்திற்கும் இயல்பாகவே சலனமற்று அமைதி பெறும் மனத்திற்கு மிடையேயுள்ள வேறுபாடு மிகப் பெரிதாம். மனமானது உண்மையைக் காணும்போது பூரண அமைதியை 960tகின்றது. மனம் அமைதி பெறும்போதே தெளிவு பிறக் கும். உண்மை தெரிந்த மனத்திற் குழப்பமும் புலம்பலும் பொய்யுமிரா. மனம் வரையறுக் கப்பட்ட நிலையை அறிந்து கொள்ளும்போதே உண்மையை அறியும் பக்கு வத்தை யடைகின்றது.
( gjf2an u tia g), Giorgo L tb
மன அமைதி, மனக்கட்டுப்பாட்டாலும் அவாவின் தாக்கத்தாலும் ஏற்படுவதொன்றன்று. கட்டுப்படுத் தப்பட்ட மனம் எதையும் உண்டாக்கும் திறனற்ற, மங்கி மழுங்கிய எழுச்சியற்றதாம். மனத்தை அமைதி யாக்குவது எப்படியென்பதே வினவாகும். ஒவ்வொரு பிரச்சினையிலும் தோய்ந்துள்ள உண்மையைக் காண்ப தெங்ங்ணம்? காற்று அசைவற்று முற்ருக ஒயும்போது குளம் எப்படி அமைதி பெறுகின்றதோ, அதேபோல் பூரண அமைதி பெறும்போது மனமுஞ் செயலற்ருேயும். பிரச்சினைகள் ஏற்படும்போது மனமானது கலங்குகின் றது; கிளர்ச்சியுறுகின்றது. பிரச்சினைகளைப் போக்குதற் காக ஒருவர் தம் மனத்தைச் சலனமற்ற அமைதியான நிலைக்குக் கொண்டுவர முனைகின்ருர், மனத்தின் நிழற் சாயைகளே பிரச்சினைகளாகும். மனத்தைச் செயலற்று ஒதுக்கியபின் ஒரு பிரச்சினையும் தோன்ருது, மனத்தில் நுண்ணறிவு கருக்கொண்டு, வெளிப்பட்டு நிற்கும்வரை, மனத்தை அமைதி பெற ச் செய்ய யாம் முயலும் வரை மனமானது சலனமற்று அமைதி பெருதென்பது திண்னமாகும். அசைவற்ற நிலையிலேயே விளங்கிக்
4.

Page 34
- 50 -
கொள்ளுதற்குச் சாத்தியமாகுமென்பதை மனமானது உணரும்போதே அது அமைதி பெறுகின்றது. இவ் வமைதி கட்டுப்பாட்டாலும், கடுந்தவங்களாலும், தியானங்களாலும், மனவொடுக்கத்தாலும், இறை வழிபாட்டாலும் வற்புறுத்தித் திணித்ததனற் பிறந்த வொன்றன்று. குழம்பிய மனத்தால் - குழப்பங்களா லும், பிரச்சினைகளாலும் சூழப்பட்ட மனத்தால்-தியா னம், மனவொடுக்கம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட மனத்தால்-அமைதியை ஒருபோதும் காணமுடியாது.
மன அமைதிக்கு வழி
மன அமைதிபெற விழைவோர் சலனமற்ற மனத் தைப் பெறுதற்பொருட்டு, நகரத்தைத் துறந்து கிரா மத்திற்கும், வீட்டைத் துறந்து ஆலயத்திற்கும், நாட் டைத் துறந்து மலைக்கும், காட்டுக்குஞ் சென்று ஏதோ ஒரு கோட்பாட்டைத் தழுவித் தம்மைப் பிறரிலிருந்து வேருகப் பிரித்து நம்பிக்கை என்ற கவசம் பூண்டு, தியானத்தில் உறைப்போடு ஈடுபடுகின்றனர். மனத் தைக் குழப்பக்கூடிய ஆற்றல் வாய்ந்தனவற்றை ஒதுக் கித் தள்ளி, முடிவுற்ற தியானத்தில் மூழ்கி, மனத்தை அடக்கி, அமைதிபெற நாடுகின்றனர். இவற்றை மேற் கொள்வதாலும் மனஅமைதியைப் பெற்றுக்கொள்ள முடியாது. மன அமைதிக்கும் தனித்தொதுங்குவதற் கும் ஒருவிதத் தொடர்புமில்லை. தொடர்பின் முழுச் செயற்பாட்டையும் அறிந்துகொள்ளும்போதே மனம் அமைதிபெறும். பலவற்றை நாடிச் சேகரிக்கும் பொறிக ளாகக்-கொள் கலங்களாக - இருந்துகொண்டு தனித் திருந்து தியானஞ் செய்வதின்மூலம் உண்மையைப் பெற முடியாது. சேகரிக்கும் இயல்பு மனத்தைப் பசுமை யாக்குகின்றது. மனமானது பசுமையாகவும் என்றும் புதிதாகவும் இருக்கும்போதே அமைதியை அடையலாம். சேகரிக்காத இயல்புடைய மனம் செயல் மங்கிய மனமன்று. அது மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் இயல் புடையது. சலனமற்று அமைதி கொண்ட மனம்

- 51 -
மிகவும் சுறுசுறுப்புடையது. அது எதையும் உண்டு பண்ணும் திறனுடையது. சலனமற்று இயற்கையாக அமைதிபெற்ற மனத்தில் எண்ணத்தின் வெளிப்பாடுகள் பிறவா. எண்ணமானது எந்நிலையிலும் ஞாபகத்தின் மாறெதிர்ச் செய்கையேயாகும். எண்ணத்தால் எதையும் உண்டுபண்ண (Creation) இயலாது. அதனுல் உண்டு பண்ணும் ஆற்றலை விளக்க முடியுமேயன்றி, இயற்கை யாக எதையும் உண்டுபண்ண முடியாது. *
அமைதி ஏற்படும்போது- மனஅமைதி ஏதாவ தொரு செயற்பாட்டின் விளைவாகப் பிறக்காதபோதுமன அமைதியின்போது-ஓர் அளவுக்கு மீறிய தனிப் பட்ட சிறப்புடைய பொதுநிலை கடந்த வியப்பான ஆற்றலிருப்பதை உணரலாம். இந்நிலையில் முறை, மரபு, ஒழுங்கு, ஞாபகம், கருத்து என்பனவெல்லாம் மறைந்து போகும். " நான் " என்னுந் தனித்தன்மையைப் பூரணமாக அறிந்துகொள்ளும் அமைதியான சலன மற்ற நிலையில், மனத்தால் எதையும் உண்டுபண்ண முடியும். இவ்வாறற்ற நிலையை மனஅமைதி நிலையென்று கூறுவ தா ல் பயனென்று மில்லையாம். விளைவெதுவு மில்லாத அந்த அமைதி நிலையிலேயே காலத்திற்கும் அப்பாற்பட்டு நின்று துலங்கும் உண்மை ஒளிவிடும்,

Page 35
வாழ்க்கையின் நோக்கம்
வாழ்க்கை என்ருல் என்ன ? வாழ்க்கையின் நோக்க மென்ன? என்பன போன்ற வினுக்கள் ஒருவர் வாழ்க் கையில் மனநிறைவு பெருத காரணத்தாலேயே அவர துள்ளத்தே எழுகின்றன. அவரது வாழ்க்கையிலேயே இவ்வினுக்களுக்குரிய விடைகள் அடங்கியிருக்கின்றன வாயினும், அவ்விடைகளால் நிறைவு கொள்ளா அவரது மனம் அவ்விடைகளுக்குப் பூரண விளக்கத்தைப் பெற விழைகின்றது. வாழ்க்கையில் நிறைவு பெருத காரணத் தால் மக்களின் நாளாந்த வாழ்க்கை பிடிப்பற்றதாகவும் அழகற்றதாகவும், வெறுப்புணர்வை மிகுவிப்பதாகவும் மாற்றமற்றவகையில் கழிகின்றது.
மனச்சலனமும், காரணமும்
உள்ளதை உள்ளபடியே நோக்கும் மனப்பக்குவம் பெற்றவர்-தம்பாலுள்ளவற்றேடு உள்ளவற்றில் மன நிறைவுடன் சிறப்பாக வாழும் ஒருவர்-மனம் கலக்க மற்றுத் தெளிவாயிருப்பர். கலக்கமற்றவர் மனத்தில் வாழ்க்கை பற்றியும், அதன் நோக்கம் பற்றியும் ஐயப் பாடுகள் எழா. அவரைப் பொறுத்த மட்டில் வாழ்க்கை யென்பது தொடக்கமும், முடிவுமாகவிருப்பதை அவரறிந் திருப்பதே அவரது உள்ளப்பாங்கிற்குக் காரணமாம். ஒருவர் வெறுமையாக இருக்கின்ற அவர் வாழ்க்கையின் நோக்கமென்பதென்ன என்று வினவி, அவ் வினவிற்கு விடையாக அமையும் வாழ்க்கையை அடைய முனை கின்ருர். இத்தகைய வாழ்க்கையின் நோக்கம் உண்மை தோயாத வெறும் ஆய்பண்பையடைதலேயாகும். நிறைவு பெருத உள்ளத்தாலும், சலனமுற்ற மனத் தாலும் வாழ்க்கையின் நோக்கம்பற்றித் தொடர்ந் தறிய முனையும்போது, அம்முனைதல் வெறுமையிலேயே கொண்டுபோய் விடுகின்றது. எனவே, வாழ்வை எப் படிச் செழிப் பா க்கு வது என்பதை நோக்கமாகக் கொண்டு வாழ்க்கையைச் செழிப்பாக்குவ தெப்படி என்ற வினவிற்கு விடைகாண வேண்டும்.

- 53 -
வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாயிருப்பது, இறைவ அடைவது என்று கொள்ளப்படுமானுல், இறைவனை அடைவதென்ற அந்த அவாவே, எம்மை வாழ்க்கையிலிருந்தும் தப்பி ஓடச்செய்து விடுவதோடு, இறைவனைத் தெரிந்ததொன்ரு கவும் ஆக்கிவிடுகின்றது. தெரிந்த ஒன்றைத்தான் எம்மால் நாடிச் செல்ல முடியும். இறைவன் என்று அழைக்கப்படுவதற்கு எம்மால் படிக் கட்டுகள் அமைக்க முடியுமானல் அஃது இறைவ ஞகாது. உண்மையை வாழ்வதன் மூலந்தான் தெரிந்து கொள்ளலாமேயன்றி, அதனிலிருந்தும் தப்பி ஓடுவ தஞல் அறிந்திட முடியாது. வாழ்க்கையின் நோக்க மென்ன என்று வினவும்போது, யாம் வாழ்க்கையி விருந்து தப்பியோட முனைகின்ருேமே அன்றி அதனை அறிந்துகொள்ள முனைகின்ருேமில்லை.
வாழ்வின் நிறைவு எங்கே?
வாழ்க்கையென்பது உறவும், உறவுகலந்த செயற் பாடுமாகும். உறவு (Relationship) எத்தகையது என்று விளங்காதபோது - உறவு குழம்பும்போதே - மனநிறை வைத் தரவல்ல வேறு விளக்கத்தை மக்கள் நாடுகின்ற னர். ஒருவர் தனித்து இத்துணை விரக்தி கொள்வதேன்? யாம் எம்மையே ஒருபோதும் உற்றுநோக்குவதில்லை. தம்மையே தாம் உற்றுநோக்கிப் புரிந்துகொள்ள முயல் கின்ருரல்லர். தமக்குத் தெரிந்தவற்றையே வாழ்க்கை யென்று கருதி, அவற்றைப் பூரணமாகவும், முழுமை யாகவுந் தெரிந்துகொள்வதிலேயே வாழ் க் கை யி ன் நிறைவு இருக்கின்றதென்பதையும் தாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளார். அறம் தம்மையொதுக்கி, விலக்கி உறவை முறித்துச் சென்று, வாழ்க்கையின் நோக் கத்தை அறிய முனைகின்ருர் . அவர் தம்மைப் புரிந்து, தமது செயற்பாடுகளை அறிந்து, தமக்கும் மற்றவர் களுக்குமிடையே உள்ள உறவை அறிந்து-தமக்கும் மற்ற எல்லாப் பொருள்களுக்குமுள்ள தொடர்பை யும் அறிந்துகொண்டாரானல் அவரது அந்த உறவுத் தொடர்பே தக்க பலனைத் தருவதை அறிவார்.

Page 36
- 54 -
எதையும் தேடிச்செல்லத் தேவையில்லை. அன்பை எப்படித் தேடிச்செல்ல முடியாதோ, அதேபோல் இறை வனையும் தேடிச்செல்ல முடியாது. அன்பை உறவி லேயே காணமுடியும். உறவிற்குப் புறம்பாக அன்பு தனித்திருப்பதில்லை. அகத்தே அன்பு இல்லாத காரணத் தாலேயே வாழ்க்கையின் நோக்கம் பற்றிய வினக்கள் எழும்புகின்றன.
வாழ்க்கையின் நோக்கம் .
அன்பு எங்குண்டோ அங்கு இறை நாட்டம் தேவை யற்றதொன்ருகும். அன்பே இறைவணுமென்ற நம்பிக் கைகள் தம்மை அன்பிலிருந்து பிரித்து மக்கள் மனத்தை நிரப்புவதின் விளைவாக, மக்கள் வாழ்க்கை வெறுமை யாகக் காட்சியளிக்கின்றது. எனவே, மக்கள் தமக்கு அப்பாற்பட்ட ஒரு நோக்கத்தைத் தேடுகின்றனர். வாழ்வின் நோக்கத்தை அறிந்துகொள்ளும் முகத்தான் * 'நான்' என்னும் சிறையிலிருந்து முதலில் விடுபட வேண்டும். தாமே தம்மைச் சிறையிலிட்டுப் பூட்டி, அச் சிறைக்கூடத் திறப்பையும் கையில் வைத்துக் கொண்டு, தமக்கும் அப்பாற்பட்ட இறைவனைக் கதவைத் திறந்து விடும்படி கேட்கின்றனர். திறப்பு தங்கள் கையிலிருப்பதை உண ரா து மயங்கி இத்துணைப் பயனற்ற முயற்சிகளிலெல்லாம் ஈடுபடுகின்றனர். அன்பகத்திலில்லாதவர்களே வாழ்க்கையின் நோக்கம் பற்றி ப் பேசுகின்றனர். நெருங்கிய உறவாற்ருன் அன்பைக் காணமுடியும்.

காணும் பொருள்களும் காண்பானும் ஒன்ருனுல். & O 9 9
காணும் பொருளென்று மட்டும் ஒன்றுண்டா ? அன்றி அப்பொருளைக் காண்பானுமுளன? சிந்தனை என்று ஒன்று மட்டுந்தான் உண்டா? அன்றி அச் சிந் தனையைச் சிந்திக்கும் சிந்தனையாளன் வேருெருவனு முளன ? இவ் வினக்கள் இன்று பலதரப்பட்ட அறிஞர் கள்-மதத்தலை வர்கள்-ஆகியோரிடையே பலதரப் பட்ட கருத்து வேற்றுமைகளை உருவாக்கியுள்ளன. இவ் வினக்களை மிகவும் நுணுகி ஆராய்ந்தால். பொரு ளைக் காண்பவனே, சிந்திப்பவனே இல்லையென்றும் முதன் முதலில் சிந்தனையும், அதன் பின்பு அச் சிந் தனையே சிந்திப்பவனைத் தோற்றுவிக்கின்றதென்றும் தெரியவரும். அஃது சிந்தனை, சிந்திப்பவர் என்பன வற்றிற்கிடையே ஒரு பிரிவு ஏற்படுகிறது. இப்படிப் பிரிவு ஏற்படும்போது காணும் பொருள், காண்பா னுக்கு வேருகின்றது.
எண்ணமும் பொருளும்
யாம் ஓர் எண்ணத்தையும், எண்ணம் குடிகொண் டுள்ள மனத்தையும் அவதானிக்கும்போது, அவ்வெண் ணம் மங்கிப்போய் மறைய, அங்கே காணும் பொருள் மட்டுந்தானுண்டோ ? காண்பானிலனே? ஒருவன் ஒரு மலரைப் பார்க்கின்ருன். அவன் அம் மலரைக் காணும் அக்கணத்தில் அம் மலரைக் காணுதல் என்ற செயற் பாடு மட்டுந்தான் நடைபெறுகின்றதா ? அம் மலரைக் காணும் ஒருவனுமுளன? அம் மலரின் அழ கா ன து காண்பவனது மனதிற் பதியுங்கால் "ஆகா, அம் மலர் எத்துணை அழகாகவும், சிறப்பாகவும் விளங்குகின்றது; அஃதெனக்கு வேண்டும் என்ற அவனது "எனக்கு" என்ற நினைப் பு, அந் நினைப் பால் தோன்றிய அவனது நிலை, அதனைத் தன தாக் கிக் கொள்ள

Page 37
س---- 56 س
எழுந்த அவா, அதைப் பறித்துக்கொள்ள முடியுமா என்ற அச்சம், தன்னுடைமையாக்கிக் கொள்ளும் மனப் பான்மை ஆதியன தோன்றுகின்றன.
காணும் பொருளும், காண்பானும் வேருகும் போது, அதாவது காணும் பொருளுக்கும், காண்பானுக்கும் இடையே ஓர் இடைவெளி-பிரிவினை ஏற்படும்போதே "நான்', 'எனக்கு" என்ற உணர்வும், எண்ணமும் தோன்றுகின்றன. காணும் பொருளுக்கும், காண்பா னுக்குமிடையே பிரி வினை-இடைவெளி தோன்ருத
போது 'எனக்கு", "நான்' என்ற எண் ண மும், உணர்வும் தோன்ற இடமில்லை. எண்ணத்தில் ஒருவித அசைவுமில்லாமல் "காண்பான்' என்ற பிரிவில்லா
நிலையிற்ருன் மனமானது மிகவும் அமைதியாகவும் சிதைவுபடாமலும், அசைவில்லாமலும் இரு க் கும். அப்படிப்பட்ட அசைவற்ற அமைதியான குழ்நிலையிற் ருன் மனமானது தன்னைத்தானே தெரிந்துகொள்ளும்அறிந்துகொள்ளும், புரிந்துகொள்ளும் சூழ்நிலை  ைய உண்டுபண்ணும் திறனைப் பெறுகிறது. இதை விடுத் துப் பற்றறுத்து, பந்த பாசம் ஆகியனவற்றிலிருந்தும் நீங்கிக்கொண்டு தீயனவற்றை அடக்கும் நினைப்பால் ஓர் மூலையில் உட்கார்ந்து, தியானம் செய்ய முனைந்து செபஞ் செய்யும் முகத்தான், கண்களை இறுக மூடிக் கொண்டிருப்பதால் மனம் அமைதி பெருது. கட்டாயப் பயிற்சியால் தன்னடக்க முயற்சியால், கட்டுப்பாட் டால், மதக்கோட்பாட்டால், மனக்கிளர்ச்சியை அடக்கி யொடுக்கி அமைதிகாண முடியாது.
மனமும் பிற அழுத்தங்களும்
மனமானது தன்னைத்தானே அறிந்துகொண்டு, பின்பு தானே அமைதி பெற்று அடங்கும். பிற அழுத் தங்களால் அழுத்தப்பட்டு - மதக் கோட்பாடுகளால் உந்தப்பட்டு - அடக்கப்பட்ட மனமானது, அடக்கப் பட்ட-வரையறுக்கப்பட்ட - வெற்று மனமே பன்றி இயற்கையாகத் தன்னை உணர்ந்தோய்ந்து, அமைதி

---س 57 --س-
பெற்ற மன மாகாது. இயற்கையான அமைதி பெற்றஎவ்வித வெளி அழுத்தங்களுக்கும் உட்படாத - மனத் தாலன்றி வேறு எவ்வழிகளாலும் உந்தப்பெற்ற உண்மையைக் காண இயலாது. இயற்கையாக அமைதி பெருத மனமே மதங்களையும், நம்பிக்கைகளையுஞ் சுற்றிச்சுழன்று அ வ ற்  ைற த் தோற்றுவிக்கின்றது. நம்பிக்கைகள் ஆகியவற்றை உண்டுபண்ணும் திறனுக் கப்பாற் சென்ருெதுங்கித் தானென்னுஞ் செயற் பாட்டை யழித்துத் தெளிவு கண்ட மனமே உண்மை யைக் காணும். உண்மையென்பது ஒப்பற்றது - உயர் வானது - என்றும் நிலையானது. மனதால் உண்டுபண்ண முடிந்ததெல்லாம், அவ்வுண்மையைப் பற்றிய வெறுங் கற் பனை த் தோற்றங்களே. எனவே உண்மையைக் காண முனைவோர் தத்தம் பண்பாடு, சமயம், கலா சாரம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்ருேடு ஒப்பநோக்கி, அவை மூலம் உண்மையைக் காண எடுக்கும் முயற்சிகள் வெறும் மருளை விளைக்குமன்றி உண்மையைக் காண வழிகாட்டா .
இருமைச் செயற்பாடு
காணும் பொருளுங் காண்பானும் வேருகும்போது, அங்கே ஓர் இருமைச் செயற்பாடு (Dualistic Action) நடைபெறுகின்றது. அஃதாவது இரண்டு தனிப்பட்ட செயல்முறைகள் நடைபெறுகின்றன. அனுபவம், அனு பவிப்பார் என்று பிரிந்தியங்கும் மனத்தின் நிலைமை வரைந்து வரைந்து கொண்டு போகப் போகக் கேடும் பெருகும். செயலின் விருப்பாற்றல் (will of action) என்பது எப்பொழுதும் இருமைச் செயற்பாடேயாகும். பிரிவினையையே அடிப்படையாகக் கொண்டியங்கும் இவ் விருமைச் செயற்பாடில்லா நிலையை எம்மால் வெளிப் படுத்த முடியுமா என்பதே இதுபோதெழுந்துள்ள விஞ வாகும். எண்ணுபவனே-எண்ணமாய்க்-காண்பவனே, காணும் பொருளாக - ஐக்கியப்படும் நிலையை யாம் நேரடியாக உணர்ந்தாலன்றி மேற்கண்ட விஞவுக்கு விடை காண முடியாது. எண்ணமும், எண்ணுபவனும்.

Page 38
سسسس 58 س
காணும் பொருளும் காண்பானும் - வெவ்வேருனவை, தொடர்பற்றவையென்றே யாம் எமது பொதுவறிவிற் கமைய ஏற்று வந்துள்ளோம். இது முற்றிலும் தவருன கூற்ருகும்.
யானும் அவாவும்
யான் அவாமிக்கவன்-மிருக உணர்ச்சி மிக்கவன்எதையும் என தாக்க விரும்புவன் என்பனவற்றை யானே அறிந்து கொண்டால் - இத்தகைய கெட்ட குனங்களனைத்தையும் யான் உடனே விட்டு நீங்கிச் செம்மையாக வாழவேண்டுமென எண்ணுகின்றேன் என்ற உறுதிபூண்டால், வைத்துக்கொண்டால் - உடனே யான் என்னையும், எனது எண்ணவுணர்வுகளெல்லா வற்றையும் மாற்றியமைக்க முயல்கின்றேன். இம் முயற்சியானது சிந்திப்பவனுகிய என்னையும் எனது எண் ணத்தையும், பிரிக்கும் இருமையை அடிப்படையாகக் கொண்ட மருளிற் சேர்க்கும். இரண்டும் வேறல்ல. இரண் டும் ஒன்று. காணும் பொருளும் காண்பானுமென்ற இருமை நிலையற்ற இரண்டும் ஒன்றெனக் கொள்ளும் போது அங்கேதான் தெளிவு பிறக்கும். யான் அவாவுள் ளவனென்று கொண்டால், நானும், அவாவும் இரண்டு வெவ்வேறு நிலைகளல்ல. வெறுமனே அவாவென்ற வொரு நிலேயே அங்குள்ளது. யான் அவாவுடையவ னென்று எனக்குத் தெரிந்த உடனே சமுதாயச் சட்ட திட்டங்கள் காரணமாகவோ, சமயங் காரணமாகவோ அவா உடைய எனது மனநிலையிலிருந்து என்னை மீட்க முனைகிறேன். இவ் வரையறுக்கப்பட்ட முயற்சியானது ஒரு சிறுவட்டத்திற்குள்ளேயே நடைபெறுகிறது.
இதனை இன்னும் சிறிது நுணுகி ஆராய்ந்து பார்த் தால், வரையறுக்கப்பட்ட முறையிலீடுபடும் யானே அவாவுக்குக் காரணமாய் அமைந்துள்ளேன், என்ற உண்மை புலப்படும். எனவே 'நான்-அவா’’ இரண்டும் தனித்தனியானது அல்லவென்றும் இரண்டும் ஒன்றே என்றும் உணரலாம் யான் அவாவுடையவன் என்பதை

- 59 -
யுணர்ந்து யானே அவா, அவாவே யான் என்று தரம் பிரியாமல் இரு நிலையையும் ஒன்ருகவே காணும் அந்த ஒப்பற்ற நிலையை அறிந்துகொண்ட பின்பு அதனைப் போக்க அவாவின்மையை யானடைய யான் மேற் கொண்டு எடுக்குப் முயற்சி பயனளிக்கும். அவாவே யானுகும்போதும் அல்லது யானே அவாவாகும்போதும் யான் மேற்கொள்ளும் செயலெல்லாம் அவாவாகும் போதும்-யான் என்ன செய்வேன்?
'நான் அ வா வு  ைட ய வ ன்' என்னும்போது, "நான்-அவா' என்ற இரண்டையும் வெவ்வேருகப் பிரிக்கும்போது, 'நான்' என்ற நிலை, ஈற்றில் அழிவி லேயே போய் முடிகிறது. காணும் பொருளும் காண் பானும் ஒன்ருகில் காணும் பொருளேது, காண்பார் யார் என்ற இருமை நிலை நீங்க - பூ ர ண மா க அமைதியையுடைய நல்ல நிலையை மனம் அடைகிறது. அந்நிலையே அமைதியான, அசைவுகளெவற்ருலும் மாசு படுத்தப்படாத, தெளிவான, இயற்கை அமைதி யுடைய நிலையாகும். இந்நிலையையெய்திய மனத்தாற் முன் தனக்கும் அப்பாற்பட்ட உண்மையை அறிந்து கொள்ள முடியும்.

Page 39
சமயப் பற்றுடைய மனம் என்ருல் என்ன ?
கிருஷ்ணமூர்த்தியினுடைய தத்துவத்தைப்பற்றிப் பூரணமாக ஆராய முற்படுமுன், அவரது மொழிநடைகருத்தைப் புலப்படுத்தும் செவ்விய முறைமை ஆகிய வற்றை ஒரளவேனும் தெரிந்திருத்தல் அவசியமாகும்: அவரது எண்ணத்திற்கும் அதனை விளக்க அவர் உபயோ இக்கும் சொற்ருெடர்களுக்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு இருப்பதை ஊன்றிப் படிப்போர் நன்குணர் வர். அவரது உரைநடை தெ விரி வா ன து. எவ்வித புராண மதக்குறிப்புக்கள், மேற்கோள்கள், மரபுகள், நிலைநாட்டப்பட்ட கருத்துக்கள், துறைச்சொல் வழக் குக்கள் ஆகியவற்றை எடுத்தாளாமலும், தான் உபயோ கிக்கும் மொழியின் பொலிவு குன்ருமலும் ஆங்கில மொழியை நிறை முதிர்வுடன் இவர் உபயோகிப்பதைக் கண்ட ஆங்கில மொழி வல்லுநர்கள் சிலர் இறும்பூ தெய்தினர். ஒன்றற்கொன்று சமாந்தரமாக ஒன்றை பொன்று பார்க்க வைக்கப்பட்ட கண்ணுடிகள் முடி வில்லாத தொடர்க்கோவையாக விம்பங்களைக் காட்டு வதுபோல் மக்கள் நாளாந்தம் உபயோகிக்கும் மிகவும் சாதாரணமான எளிமையான சொற்ருெடர்களாக இருந்தபோதிலும் இவர் உபயோகிக்கும் சொற்ருெடர் கள் கருத்துச் செறிவுடையனவென்பதை எவரும் நன் கறிவர். அவர் உபயோகித்த ஒரு சொல்லுக்கு இணை யாக வேருெரு சொல்லை அமைப்பது மிகவும் கடினம். இவற்ருல் அவரது ஆங்கிலப் புலமை புலப்படுகின்ற போதிலும் அவரது எண்ணம், மனம், வாக்கு ஆதியன சிக்கலற்று ஒன்ருேடொன்று ஒன்றிப்பிணைந்திருப்பதை உணரலாம்.
LD půli LouU(pů
இனி, சமயப்பற்றுடைய மனமென்ருல் என்ன?
என்பதுபற்றி அவர் தரும் விளக்கத்தைச் சிறிது ஆராய் வோம். மக்களிற் பலர் எதையும் மறுப்பதில்லை. எதை

- 61 -
யும் எண்ணிப்பாராமல் ஏற்றுக்கொள்ளுதற்கு அடை யாளமாக "ஆம்" எனத் தலையசைக்கும் இயல்பு அவர்களோடு இரண்டறக் கலந்துவிட்டது. அவர்கள் மனப்பாங்கு, சார்பு, தனிச்சிறப்புப் பண்பு ஆகியவற் றிற்கு அமையவே ஏற்றுக்கொள்கின்றனர். எனவே அவர்கள் எதை மறுத்தாலும் அம் மறுப்பானது மாறெதிர்ச் செயலாற்றலாக (Reaction) அமைகின்றதே யன்றி உண்மை மறுப்பாக அமைவதில்லை. மக்கள் பழக்கவழக்கங்கள், பண்பாடு ஆகியவற்றையும் அவற் றிற் கிணங்கிய அவர்கள் வாழ்க்கையையும் மிகவும் நுணுக்கமாக அவதானிப்போமேயானல், மக்கள் ஒரு போதும் எதையும் மனதார மறுப்பதில்லை என்ற உண்மை புலனுகும். அப்படி மக்கள் ஒன்றை மறுப்பாராகில் (Deny) அம்மறுப்பு பயத்தை அடிப்படையாகக் கொண் டுள்ளதாக விருக்கும். ' சமயப் பற்றுடைய மனம் " என்பது பற்றி ஆராய்வதற்குமுன் சமயத்தின் அடித் தளமாயுள்ள முழு அமைப்பையும் பூரணமாக மறுத்தல் இன்றியமையாததாம். ஏனெனில், மத அமைப்பானது முற்றிலும் தவருனது - எவ்வித பயனும் அர்த்தமுமில் லாதது என்பது அவர் கூற்ருகும். யாம் பின்பு கூறப் போவதைப் பூரணமாக விளங்கிக்கொள்வதற்கு அடிப் படையாக அமையப்போகும் 'மறுப்பு" என்ற சொல்லை இச் சந்தர்ப்பத்திலேயே நன்கு விளங்கிக்கொள்வது நன்மை பயப்பதாகும்.
அனுபவமும் தெளிவும்
மக்கள் எவ்வித விருப்புவெறுப்புமின்றி, எவ்வித கைம்மாறுங் கருதாமல், எவ்விதத் தண்டனைக்கும் பயப்படாமல், சூழ்நிலையின் கொள்கை அழுத்தப் பளு விற்கும் ஆளாகாது, உணர்ச்சி வசப்படாமலும் புதுமை உணர்வூட்டின்றித் தனிச்சிறப்புப் பண்புக்கமையாமலும், பகட்டில்லாமலும் சொந்தக் கற்பனை புராணக்கதை என்பவற்றை நீக்கினுலன்றி எந்த ஓர் எண்ணத்தை யும்-உணர்வையும்-பொருளையும் முழுமையாக-முற் ருக ஆராயுந் தகுதிபெற்றவராகார், சமயப்பற்றுள்ள

Page 40
- 62 -
உண்மையான மனம் நிலைநாட்டப்பட்ட சமயச் சார் பான குழு வும் உரிமை பூணுந் தன்மையதாகாது. சமயப்பற்றுள்ள மனம் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலவி விளம்பரப்படுத்தப்பட்டதன் விளைவுமன்று உண்மைச் சமயப்பற்றுடைய மனத்திற்குச் சித்தாந்தம், நம்பிக்கை ஆகியவை கிடையா. உண்மைச் சமயப்பற்றுடைய மனம் என்பது ஒர் உண்மையிலிருந்து பிறிதோர் உண்மைக்கு நகருதலாகும். எண்ணத்தின் பூரணத் தன்மையே-- பண்பே உண்மைச் சமயப் பற்றுடைய மனமாகும். உண்மைச் சமயப்பற்றுடைய மனம் என்பது மேலெழுந்த வாரியான எண்ணமோ அன்று. இந்த ஆராய்வின் பூ ர ண த் துவ மும் அவ்வனுபவத்தை மறுத்தலிலிருந் தெழும் தெளிவுமாகியவற்றை அடிப்படை யாக க் கொண்டதே உண்மைச் சமயப்பற்றுடைய மனமாகும்.
வரையறுக்கப்பட்ட மனம்
பெரும்பான்மையோருக்கு, சமயமானது வெறுஞ் சொல்லாகவும், அறிகுறியாகவும் கட்டுப்பாட்டின் விளை வாகவுமே உள்ளது. நான் ஓர் இந்து, அவர் ஒர் இஸ் லாமியர், மற்றவர் ஒரு கிறிஸ்தவர், பிறிதொருவர் பெளத்தர் என்று மக்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். குழந் தைப் பருவத்திலிருந்தே இப் பிரிவுகள் போதிக்கப்பட்டு வந்துள்ளன. இதன் விளைவாக சமயம், பண்பாடு, நம் பிக்கை, கோட்பாடு ஆகிய வேறுபாடுகளெல்லாவற் றையும் மக்கள் வேறுபட்ட உணர்வோடு ஏற்று வந் துள்ளனர். பொதுவுடைமைக் கோட்பாட்டினர் தம் இளம் பருவத்திலேயே கடவுள் இல்லை என்று ஏற்றுக் கொண்டதுபோல், கடவுளுண்டென்ற கொள்கையுடை யாரும் தத்தம் மதத்தை ஏற்று வந்துள்ளனர். ஒவ் வொரு சமயத்தவருக்கும் அவரவர் பருவந்தொட்டே அவரவர்க்குக் கல்வி போதிக்கப்பட்டு வரலாயிற்று. கடவுள் உண்டு என்று ஏற்றுக்கொள்பவருக்கும் இல்லை யென வாதாடும் மற்றவர்க்கும் அதிக வித்தியாசமில்லை. ஏனெனில், இருவருடைய நோக்கும் வரையறுக்கப்பட்ட

- 63 -
கொள்கையை ஏற்றுக்கொண்டதின் விளைவாலாயதே (Result of the conditioned mind). uth 3)üé52-UGuum கிக்கும் சொற்ருெடரையும் சொல்பவரையும் மாத்திரம் பின்பற்ருமல் - ஏற்காமல் - மறுக்காமல் - வரையறுக் கப்பட்ட மனமானது இதைப் படிக்கும்போது எப்படி இயங்குகின்றது என்பது பற்றியும் அவதானித்து வருவீர் களேயானுல் நிலைமை உங்களுக்கு விளங்கும். அந் நிலைமையை எப்படி மாற்றலாம் - நீக்கலாம் - மறுக் கலாம் என்பது பற்றி நீங்கள் அறிந்துகொள்ளமுடியும்.
முதலில் நான் ஓர் இந்து என்று கூறும்பொழுது, என் மனமானது அச்ச ம ய க் கோட்பாட்டுக்கமைய வரையறுக்கப்பட்ட மனமேயென்றும் அதிலிருந்து வெளி வரும் அனுபவங்கள் யாவும் இறந்த கால நினைவுகளால், பண்பாட்டால், அனுபவத்தால், கலாசாரத்தால் உரு வாக்கப்பட்டனவென்றும் யாம் அறிந்துகொள்ளுதல் வேண்டும். அவ்வனுபவமானது தனி யொரு வனது சொந்த அனுபவமன்று. யாரோ ஒரு ஞானி, ஓர் ஆசான் கூறியது என்றும் . ஏதோ ஒரு சமய நூலி லிருந்தும் எடுக்கப்பட்டதென்றும் எனக்குப் போதிக்கப் பட்டது. அஃதாவது என்னுள் திணிக்கப்பட்ட பிறரது அனுபவமே என்னுள் உருவாகியதேயன்றி என் சொந் தத் தெளிவால் ஏற்பட்டதன்று. நான் இன்று இந்து வாய் இருப்பது, இப்படிப்பட்ட பிறரது அனுபவம். கட்டுப்பாடு, கலாசாரம் , பண்பாடு, கோட்பர்டு ஆகியவற்ருல் உண்மையைக் காண விழையும்போது பிறர் எனக்குப் புகட்டியவண்ணமே யான் உண்மையை அறிந்து கொண்டேனேயன்றி நேரடியாக அவ்வனுப வத்தை என்னுல் அனுபவிக்கவோ உண்மையை அறிந்து கொள்ளவோ முடியவில்லை. இதை வாசிக்கும்போது உங்கள் மனம் செயற்படும் விதத்தைச் சற்றுக் கூர்ந்து அவதானியுங்கள் என்று முன்பு கூறினுேம் . அதை மீண்டும் நினைவுபடுத்திக்கொண்டு மேலே வாசியுங்கள்.

Page 41
- 64 -
Li Ji u if GDLU to Gib
உண்மை பிறரால் ஒருவருள்ளத்தே திணிக்கப்படும் இயல்புடையதன்று. அஃதொருவர் உள்ளத்தெளிவின் விளைவாக வெளிவர வேண்டும். பிறரது அனுபவம் என்ற மாசுமறு வொன்றுமின்றி வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடு சிறிதுமின்றி ஒருவர் தெளிந்த உள்ளப் புலப்பாடே உண்மை அனுபவமாகும். அத்தகைய தெளி வைத் தோற்றுவிக்கும் மனமே உண்மையான சமயப் பற்றுள்ள மனமாகும். ஒருவர் தம்மையோர் இந்து வாகவும் மற்ருெருவரை இஸ்லாமியராகவும் பிறி தொருவரைப் பெளத்தராகவும் இ ன் ஞெரு வரை க் கிறிஸ்தவராகவும் காணும், வேற்றுணர்வுசேர் மனப் போக்கு பொருளற்றதாகும். மதப்பிரிவுகள் ஒவ்வொன் றும் தத்தம் மதக் கொள்கைகளை நம்புதலும் ஏனைய மதக் கொள்கைகளை மறுப்பதுமாகிய செயலில் ஈடுபட்டுழல் வதால் ஒரு சிறைக்கூடத்திலிருந்து இன்னுெரு சிறைக் கூடத்திற்குப் போவதை ஒத்துள்ளன. முடிவற்ற பூசை களிலும் தொடர்ந்த வழிபாட்டுப் பாடல்களிலும் ஈடு படுவார் உள்ளங்கள் பயத்தை அடிப்படையாகக் கொண்டியங்கும் LDUւյւն பண்புடையனவேயன்றி அவை உண்மையான சமயப்பற்றுடைய மனமாகா. பயத்தை அடிப்படையாகக் கொண்டியங்கும் மன மானது கலங்கிய நீர்போல் தனக்கு அப்பாற்பட்டதைக் காணத் துடிப்பதின் விளைவாக ஒருபோதுங் காணும் பெற்றியுடையதன்று.

எமது s:9é}sus) LPls. ஒவவாததன 6O)
மக்கள் ஒவ்வொருவரும் தம்மைச் சுற்றி முரண் பாடும் - ஒவ்வாத்தன்மையும் (Contradiction ) மலிந் திருப்பதைக் காண்கின்றனர். ஒவ்வாத்தன்மையும் முரண்பாடும் என்றும் நிரம்பியுள்ளமையால் அமைதி யின்மையும் அச்சமும் கேடுவிளை ம ன ப்பா ன் மை யும் அகத்திலும் புறத்திலும் பரவி உலக அமைதிக்குப் பங்கம் விளைவிக்கின்றன. ஒருவர் ஒருவராக இருந்துகொண்டு வேருெருவராக இருக்கவேண்டுமென்ற அவாவால் ஏற் படும் மறுப்பு (denial) வற்புறுத்தல் (assertion) ஆகிய வற்றின் தொடர்நிலைக்கோவை ஒவ்வொருவரையுஞ் சுற்றிப் பிணிக்க முயல்கின்றது. இம்முரண்பாட்டு நிலை பிணக்கைத் தோற்றுவிக்கின்றது. பிணக்கு அமைதி யைக் குலைக்கின்றது.
முரண்பாட்டின் விளைவு
ஒருவரால் ஏற்படும் இம்முரண்பாட்டிற்கு அவர் தத்துவ விளக்கங்களையும் ஆன்மிகக் காரணங்களையுங் காட்டி ஒருவாறு அமைதி கொள்ள முனையும் முயற்சி யானது, எழுந்த சிக்கலிலிருந்து விடுபட-தப்பியோட மேற்கொள்ளும் முயற்சியேயாம் . முரண்பாடு-ஒவ் வாத் தன்மை என்று ஒருவர் கூறும்போது அவர் குறிப் பன எவற்றை? ஒருவர் இயல்பாக ஒருவராக இருந்து கொண்டு வேருேரியல்புள்ளராக மாறவேண்டுமென்ற தொடர்ச்சியான போராட்டமும் முரண்டாடும் ஏற்படக் காரணமென்ன? முரண்பா டு தோன்றும் போது போராட்டம் நிகழ்கின்றது. போராட்டம் அழிவுக்கும் கழிவுக்கும் வழிகோலும். இந்நிலையில் எதிர்ப்பையும் பகையையும் சச்சரவையும் பூசலையும் போட்டி மனப் பான்மையையும் மனக் கசப்பையும் துக்கத்தையும் தவிர வேறு ஒன்றையும் உண்டுபண்ண இயலாதாகை யால் இத்தகு நிலையைச் சரிவரப் புரிந்துகொண்டால் முரண்பாட்டை நீக்கலாம். இத்தகைய தகுதிபெற்ற நிலையிலேயே அகம் அமைதிபெறும்.
5

Page 42
- 66 -
சச்சரவும் போரும் அழிவைக் கொண்டுவருவன வென்று தெரிந்தும் தெரிந்தார் கண்ணும், மனம் ஒவ்வாத் தன்மை நிலவக் காரணமென்ன? அவாவை எதிர்க்கும் மனப்பான்மை ஏன் எழ வேண் டும்? குணவியல் பால் ஒருவராக இருந்துகொண்டு வேருேரியல்புள்ள வராக மாறவேண்டுமென்றும் ஒரு பொருளை வேண்டு மென்றும் வேண்டாமென்றும், ஒன்றை நினைவுகூர்ந்த போதும் அதனை மறக்க வேண்டுமென்ற மாறிமாறித் தோன்றும் பல்வேறு வழிகளில் ஒவ்வாத்தன்மை-முரண் பாடு என்பன வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருப்ப தைக் காணலாம். இந்நிலை தோற்றுங் காரணத்தை நுணுகி ஆராயின் ஒவ்வாத்தன்மை நிலையற்ற ஒரு நிலையில் இன்னெரு நிலையற்ற நிலையை எதிர்ப்பதேயா மென்பது புலனுகும். நிலையான ஓர் அவா ஒருவர்பால் இருப்பதாக எண்ணுகின்றபோதும் வேருேர் அவா குடிபுகுகிறபோதும் அவாக்கள் ஒன்றற்கொன்று முரண் படுகின்றனவாதலால் போராட்டம் எழுகின்றது.
அவர் நிலையானதா?
அவா நிலைபேறுடையதா? உண்மை வழிநின்று ஆராயின் எல்லா அவாக்களும் நிலையற்றனவென்பது புலணுகும். அவா க் கள் நிலையற்றனவென்று தத்துவ வழியைத் தழுவிக் கூருதபோதும் அவாக்கள் நிலையற்றன வென்ற உண்மை மறுக்கமுடியாவொன்ருகும். ஓர் அலுவ லகத்தில் பணியாற்றுமொருவர் படிப்பிற்கும், ஆர்வத் துடன் ஈடுபட்டு அவர் செய்யுந் தொழிலுக்கும் எவ்வித தொடர்புமில்லையானல் அவருள் ஒருவித முரண்பாடு ஏற் படுகிறது. இதன் விளைவாக அவருக்குத் தெரியாமலே அவருள் ஒரு போராட்டம் நிகழ்கின்றது. இதனுல் அவர் மகிழ்ச்சி மங்கிப்போகின்றது: பிடித்தமான ஒரு தொழி லைச் செய்யவேண்டுமென்ற அவா வு ந் த வேறுவேலை தேடிப்பெற்ற பின்பு முரண்பாடு மீண்டுந் தொடங்கு கின்றது. பதவி உயர்வு வேண்டும், அதிகாரியாகவேண் டும் என்று பலவெண்ணங்கள் பல்கிப் பெருகுகின்றன. இத்தகைய குறிக்கோள்கள் இவ்வுலகில் மட்டும்ன்றி,

- 67 -
ஆன்மிக உலகு என்று உயர்வாகக் கருதப்படும் உலகி லும் மேன்மைபெற்று விளங்கவேண்டுமென்ற அவா வைத் தோற்றுவிக்கின்றன.
ஆசிரியர் அதிபராகவும், சமயகுரு ஒருவர் சமய வட்டமுதல்வராய்த் திகழவும், மாணவன் ஆசிரியராக வும், என்று வாழ்க்கையில் எந்த நிலையிலுள்ளார் பாலும் போட்டியும் பூசலும் அவாவும் தொடர்ந்து வருகின்றன. இவ்வாறு ஒன்ரு கவிருந்துகொண்டு வேறென்முக வேண்டு மென்ற உறுதிபெற்ற பற்ருல் விளைந்த எண்ணங்களே ஒவ்வாத்தன்மைக்குக் காரணமாயிருக்கின்றன. எனவே வாழ்க்கையை நிலையான அவாவின் நிலைக்களமாக நோக் காமல் ஒன்றை ஒன்று எதிர்க்கும் அவாக்கோவை எனக் கொள்ளும்போது மனத்தின் முரண்பாட்டு நிலை மாறு கிறது. எனவே, வாழ்க்கையை நிலையான அவாவெனக் கொள்ளாது அதனை என்றும் மாறியவண்ணமே இருக் கும் நிலையற்ற தொடர்ச்சியான அவாக்களின் கோவை யெனக் கொள்ளின் முரண்பாடொழியும்.
மனத்தில் உறுதிபெற்ற நிலைத்த அவா இருக்கும் போதே முரண்பாடு தோன்றுகிறது. எல்லா அவாக் களும் நிலைத்தனவல்ல. அவாக்கள் சிறிதுகாலம் நிலைத்து நின்று நிலையற்றனவா மென்றும் , அசைவற்ற நிலையுள்ளன வென்றும் கொள்ளும்போதே முரண்பாடு தோன்றுகின் றது. உறுதியான நோக்கு அவாவுக்கு என்றுமேயில்லை. மனமே அவ்வாறு கொள்கின்றது. ஏனெனில் அஃதெதை யும் அடையவும் பெறவும் ஒரு கருவியாகக் கொள்கின்றது. மனநிறைவும் மகிழ்ச்சியும்
ஒருவர் ஒன்றை அடைய விரும்புகின்ருர் ஒன்றை வெற்றிகொள்ளத் துடிக்கின்ருர் நிலைத்த மனநிறை வைத் தரவல்ல முடிவான ஓர் உண்மையைக் காண விழைகின்ரு ரெனக் கொள்ளும்போது அவர் உண்மையை நாடுகின்றிலர். அவர் நாடுவதெல்லாம் நிலையானநீடித்த மனநிறைவும் மகிழ்ச்சியுமேயாகும்; இந்த மன நிறைவையும் மகிழ்ச்சியையும் கருத்து-எண்ணம்-நினைவு என்ற போர்வையாலோ உண்மை-கடவுள்என்ற மதிப்

Page 43
- 68 -
பான சொற்களின் பார்வையாலோ அவர் அடைய விரும்புகின்றர். ஆனல் உண்மையில் அவர் நாடுவன வெல்லாம் மனநிறைவும் மகிழ்ச்சியுமேயாகும். இம் மகிழ்ச்சியை உச்சநிலையில் வைத்துக் கடவுள் என்று கொள்கின்றனர். வெறியூட்டும் போதைப்பொருள்களை மகிழ்ச்சியின் கீழ்நிலையில் வைத்துள்ளனர். மனமானது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் நாடுமட்டும் உச்சநிலை யில் வைத்துப் போற்றும் கடவுளுக்கும் கீழ் நிலையில் வைத்துத் தூற்றும் போதைப்பொருள்களுக்கும் வேறு பாடு அவ்வளவு இல்லை, சமூகவழிநின்று பார்க்கும்போது குடிப்பது குற்றமுள்ளதாகக் கருதப்படுவதில்லை. சமூக வழி நின்று பார்க்கும்போது குடிப்பது குற்றமுள்ளதாய் இருக்கினும் மனநிறைவு காணவிழையும் ஒருவர் அகத் திற் ருேன்றும் அவா அதைவிடத் தீங்குவிழைவிக்கக் கூடியதன் ருே? உண்மை  ையக் காணவேண்டுமானல் நிறைந்த பொலிவோடு நேர்மையாக விருக்கவேண்டும். உள்ளத்தில் நிலைகொள்ளார் நேர்மையை வானளாவப் புகழ்வதாற் பயனேற்படாது. குறைவற்ற நிறைந்த தெளிவும் குற்றம் நீக்குதற் காந் துடிப்பும் நிலைகொள்ள வேண்டும். த்தகு மேலான நிறைவுடைத் தெளிவு இல்லாதபோது உண்மை புலப்பட இடமேற்படாது. முரண்பாடு தோற்றும் வயில்
முரண்பாட்டைத் தோற்றுவிப்பதெது? ஏதாவ தொன்றைப் பெறவேண்டும் அல்லது ஏதாவதொரு நிலையை அடையவேண்டுமென்ற அவாவே இம் முரண் பாட்டிற்குக் கார ண மா கும். மக்கள் அ னை வரும் வாழ்க்கையில் வெற்றியடைய விரும்புகின்றனர். விரும் பியதொன்றை அடையுங்கால், பெற்றதாலடையும் பயன்நிலை என்ற வழிநின்று சிந்திக்கச் சிந்திக்க முரண் பாடும் வளர்ந்துகொண்டேபோகும். மனமானது காலத் தின் விளைவேயாகும். இறந்தகாலத்தை அடிப்படையா கக் கொண்டே எண்ணமியங்குகின்றது. காலம் என்ற எல்லேக்குள்ளிருந்து எண்ணம் செயற்படும்வரை, எதிர் காலம்பற்றிச் சிந்திக்கும்வரை பெறுபேறு, நிலை என்பன

- 69 -
பற்றிய எண்ணமிருக்கும்வரை ஒவ்வாத்தன்மை நிலவும். உள்ளதை உள்ளபடி நோக்கும் ஆற்றலை இதன்பயணுய் இழக்க நேரி டு ம். ' உள்ளதை உள்ளபடி" புரிந்து கொள்ளும்வரை அழிவைத் தரும் காரணக் கூரு கவிருக் கும் முரண்பாட்டிலிருந்து விடுதலை பெறமுடியாது: எண்ணத்தின் செய்முறையை முழுமையாக அறிந்து கொள்ளுமட்டும் முரண்பாடு இருந்துகொண்டேயிருக் கும். எண்ணத்தின் செய்முறையிலேயே முரண்பாடா னது உருப்பெறுவதே இதன் காரணமாகும். ஒருவர் செய்முறையை ஒருவர் புரியாராயின் அவரது எண்ணமே முரண்பாட்டிற்கு வித்திடுகிறது. புறநோக்காகக் கொள் ளாது ஒருவர் எண்ணத்தை ஒருவரது எண்ணத்தின் செயல்முறையை - அவர் பூரண விழிப்புடன் அறியும் வரை முரண்பாடு அவரை விட்டகலாது.
மனத்தத்துவ வழிநின்று  ெவ ற் றி  ைய அடைய ஒருவர் முயலும்வரை அவர் அகப்பாதுகாப்புத் தேடும் வரை முரண்பாடு இருந்துகொண்டே இருக்கும். மக் களிற் பலர் தம்முள்ளிருந்தே தம்மையே ஆட்டியலைக் கும் இம் முரண்பாடானது எத் துணை தீங்கு தமக்கு விளைவிக்கின்றதென்பதை அறிந்திலர். இம்மட்டோ, முரண்பாட்டாலேற்படும் போராட்டம் அவர்களுக்கு உற்சாகமளிக்கும் ஆற்றலாகவும் அமைகின்றது. மக்கள் போரை விரும்புதற்கும் முரண்பாடே காரணமாகும். மனக்கசப்பு வெறுப்பு என்பன போர்விருப்பை உண் டாக்குகின்றன. ஒன்றை அடையவேண்டும் என்ற அவா இருக்கும்வரை ஒன்றில் வெற்றிபெற வேண்டுமென்ற எண்ணமிருக்கும்வரை - மனத்தத்துவ வழிநின்று பாது காப்புத்தேடல் மு ய ர் சி யி ல் ஈடுபட்டிருக்கும்வரைமுரண்பாடு அகலாது. முரண்பாடு இருக்கும்வரை மன அமைதி தோற்ருது. வாழ்க்கையின் முழுநோக்கத்தையும் அறிந்துகொள்வதற்கு மன அமைதி இன்றியமையாதது.
விழிப்புணர்ச்சி அவசியம்
காலத்தின் விளைவாம் எண்ணம் காலத்திற்கப்பாற்
பட்டதை ஒருபோதும் காணுது. ஒருவர் சிந்திக்கும் இயல்பே முரண்பாடுடையது. அவர் எப்பொழுதும்
இறந்தகாலத்தைப்பற்றி, அல்லது, எதிர்காலத்தைப்

Page 44
-- 70 -س.
பற்றிச் சிந்திக்கின்றரேயன்றி நிகழ் காலத்தைப்பற்றிச் சிந்திப்பதில்லை. நிகழ்காலத்தைப்பற்றிச் சிந்தியாமையே அவர் காலத்திற்கப்பாற்பட்டதைக் காணுமைக்குரிய காரணமாகும். நிகழ்கால விழிப்புணர்ச்சி பெறுதல் மிகவும் சிக்கலான தொன் ருகும். நிகழ்கால விழிப் புணர்ச்சி இல்லாதபோது முரண்பாடு நீங்காது. மனம் உண்மையோடு நலிவுருநின்று நேரடித் தொடர்புகொள் வது மிகவும் கடினமாயிருப்பதே காரணமாம். எண்ணம் இறந்த காலத்தின் விளைவாமாகையால் அதனுல் இறந்த காலத்தைப்பற்றியும் எதிர்காலத்தைப்பற்றியும் சிந்திக்க முடியுமேயல்லாமல் நிகழ்காலத்தைப்பற்றிய எந்த உண் மையையும் சிந்திக்குந் திறனுடையதன்று. இறந்த காலத் தின் விளைவாம் எண்ணம். ஒருவர் முரண்பாட்டை நீக்க முனையும்போது, சிக்கலான முரண்பாட்டுடன் உலகக் குழப்பம், சிக்கல் ஆகியவற்றிற்கு அவரே காரணமாக வும் அமைகின்ருர்,
எனவே தன்னறிவே அறிந்துகொள்வதற்கான முதற் படியாகும் , தன் அறிவில்லாமல் முரண்பாட்டுடன் சிக்கலும் தொடருமேயன்றி அவை குறையா. தன்னைப் பூரண நிறைவோடு அறிதற்குத் தலைவர்கள்-அறிஞர் கள் உதவி தேவையற்றதாம். "'நான்" என்னும் தனித் தன்மையை அறிவதற்கு ஆன்மிகத் தலைவனும் வழி காட்ட இயலாதவனுவான். தலைவனை ஏற்கும்போது அச்சம் உண்டாகின்றது. எனவே எண்ணத்திற்கும் எண் ணம் செயற்படுவதற்கும் ஒர் அமைப்பு இருக்கும்வரை முரண்பாடு - ஒவ்வாத்தன்மை எ ன் பன இருந்து கொண்டேயிருக்கும். ஒழுங்கிற்கும் - அமைப்பிற்கும் முரண்பாட்டிற்கும் முடிவு ஏற்பட முதலிற் தன் அறிவு இன்றியமையாதது. ‘நான்" என்னும் தனித்தன்மை யைச் சிந்தித்தல், பேசுதல், உணர்தல் என்ற நாளாந்தச் செயல்கள் ஒவ்வொன்றிலும் வைத்து அறிந்துகொள்ள வேண்டும், தன்னைத்தானே அறிந்தவன் மனமே அமைதி பெறும். அத்தகைய இயற்கையான அமைதி பெற்ற மனத்திலேயே உண்மை புலனுகும் .

பழையனவும் புதியன ഖുb
வாழ்க்கையில் உண்மையாக நடைபெறு வை வெவை? இடைவிடாத நிலையான - பற்றுறுதியான - அறைகூவலும், அவற்றின் மறுதலிப்புமே நடைபெறு கின்றன. அறைகூவல் மட்டும் என்றும் புத்தம் புதிய தாக இருக்க, மறுதலிப்பு என்றும் பழையதாகவே உள்ளது. நான் நேற்று உன்னைக் கண்டேன். இன்று நீ என்னிடம் வருகின்ருய். நேற்றிருந்ததைவிட இன்று நீ புதியவனுய், மாறுபட்டவணுய் இருந்தபோதிலும், நேற்றிருந்த உனது வடிவத்தை யே நினைவுபடுத்திப் பார்க்கின்றேன். இச்செய்கையால் யான் புதியதைப் பழையதோடு இணைத்துத் தொடர்புபடுத்துகின்றேன். புத்தம் புதிதாக உள்ளதெதையும் உள்ளபடியே ஏற்க மறுக்கின்றேன். எனவே வாழ்க்கையின் அறைகூவலுக்கு மறுதலிப்பு எ ன் று ம் வரையறுக்கப்பட்டதாகவும், கட்டுப்பட்டதாகவும் உள்ளது.
ஞாபகத்தின் மறுதலிப்பு
ஒருவர் ஒரு மலரையோ, ஒரு மரத்தையோ, ஒரு புன்னகையையோ காணும்போது, அவற்றையெல்லாம் அவர் எப்படிப் புதிதாகக் காண்கிருர்? பழைய மறுத லிப்பென்பது சிந்திப்பவர் உள்ளத்திலிருந்தே எழுகின் றது. சிந்திப்பவர் என்றும் , எப்பொழுதும் பழைய நினைவுகளிலேயே இயங்குகின்ருர். அவர் ஒரு பிரச் சினையை அணுகும்போது, அவரது இறந்த கால அனு பவங்களும், எண் ணங் களுமே செயற்படுகின்றன. எனவே அவர், அவரது பழைய பிரச்சினைக்கு வேருெரு வழியில் வந்தடைகின்ருர். இறந்தகால அனுபவம் என்ற நிலைத்து நின்ற மாசானது முற்ருக நீக்கப்பட்டாலன்றி, அவரது நோக்கும், வாழ்வும் என்றும் சிறப்பாக அமையா. அவரது நம்பிக்கைகள், பண்பாடுகள், கல்வி முறைகள் என்பன யாவும் பழைய ஞாபகத்தின் அடிப் படையிலேயே இயங்கி வருகின்றன. இந்த ஞாபகமே

Page 45
- 72 -
புதிய பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றது. ஞாபகத்தின் மறுதலிப்பே சி ந் த னை யாம். இந்த ஞாபகத்தின் மறுதலிப்பான சிந்தனைகளே புதியதை எதிர்நோக்கு கின்றது. ஞாபகம் என்ற மாசு இல்லாதபோதே புதியது தெளிவாகத் தெரியும். அனுபவம் என்பது முற்றுப் பெருதபோது மாசு இருந்து கொண்டேயிருக்கும். அணு பவம் முற்றுப்பெறும்போது மாசு படியாது. இந்நிலையை எய்தினல் வாழ்க்கை சிறப்புறும்.
சுமைதியான இடைவெளி
அன்பென்பது மாசு உடையதன்று. அன்பென்பது அனுபவமாகாது. அன்பு, என்றும் அழியாத புத்தொளி வீசிக்கொண்டிருக்கும் ஓர் ஒப்பற்ற நிலையாகும். புதி யதை என்றும் அணுக முடியுமா என்ற வினவுக்கு இது போது பதில் அளிக்க முடியும். எண்ணத்தில், உணர் வில் புரட்சி ஏற்படும்போது புதியதை அணுகுதல் சாத்தியமாகின்றது. கணத்திற்குக் கணம் நிகழும் நிகழ்ச்சிகளை ஆழமாகச் சிந்தித்து மறுதலிப்பு ஒவ்வொன் றையும் சரிவர அறிந்து கொண்டு செயலாற்றும்போதே உண்மையான தெளிவு அகத்திற்ருேன்றும் , ஞாபகம் முற்ருக முடியும்போதுதான் சுதந்திரம் பிறக்கின்றது. ஒரு ஞாபகம் முடிவுற்று இன்னுேர் எண்ணம் பின்பு உதய மாகும்போது, இவ்விரண்டு செயற்பாட்டிற்குமிடையே ஒரு பிளவு-இடைவெளி ஏற்படுகின்றது. ஆரவார மற்ற, அமைதி நிறைந்த இடைவெளியில் புதுப்பித்தல்புதியன படைத்தல் போன்ற அற்புதமான நிகழ்ச்சிகள் தடை பெறுவதை உணரக்கூடியதாயிருக்கும். இது வெறும் கருத்துக் கோட்பாடன்று - செயலிற் செய்ய முடியாத தொன்றன்று. அகத்தே எழுகின்ற ஒவ் வோர் எண்ணத்தையும், உணர்வையும் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கின், என்றுமே பழமையுருத, புத் தொளி வீசித்துலங்கும் உண்மையை அறிந்து கொள்ள லாம் .

- 73 -
புதியதில் வாழும் மனிதனின் நிலை
பழையன அகற்றிப் புதியனவற்றை வாழ்விற் கொண்டமனிதனே எதையும் உண்டுபண்ணும் திறமை யுடையவன், அவனிடமே எதையும் உண்டுபண்ணும் திறமை இருக்கும். எதையும் உண்டுபண்ணும் ஒருவனே குறைவற்ற மகிழ்ச்சியோடும் , மங்காத பேரானந்தத் தோடும் வாழ்வான். மகிழ்ச்சியுடன் வாழும் மனிதனின் உள்ளத்தில், வேற்றுமைக்கும், சமூக ஏற்றத்தாழ்வுக் கும், ஏழை, பணக்காரன் என்ற பேதத்திற்கும் இடமே யில்லை. பேரானந்த நிலையிலிருக்கும் அம்மனிதனுக்குத் தலைவர்கள் தேவையற்றவராவார். அவனுக்கு இறை வழிபாடும் தேவையற்றதாம். அந்த நல்ல நிலையில் பகைமை இராது. வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், ஒருவன் தன்னையும், தன்னேடு தொடர்பு கொண்ட சமூகத்தையும் அறிந்து கொள்ளும்போது, மகிழ்ச்சி, அன்பு என்பன அவன் வாழ்வில் தோன்றக் காணலாம். அன்பென்பது ஒரு பழக்கமாகாது; ஞாபகமுமாகாது. அன்பென்பது என்றும் புதியதாகவே காட்சியளிக்கும். ஒர் அனுபவத்தைப் பூரணமாக அறிந்து கொள்ளும் வரை பழமையாற்ருேன்றிய மாசு, புதியன அணுகா வண்ணம் தடுத்து நிறுத்தும். எண்ணம் என்ற பிடியி லிருந்து விடுபட்ட மனத்தாற்ருன் என்றும் புதியதாய் வந்துகொண்டிருக்கும் வாழ்க்கைச் சம்பவங்களை அணுக முடியும். அதிலேயே பேரானந்தம் தோன்றும் ,

Page 46
ஆன்மிக போதகர் எதற்கு?
குரு எனப்படுவா ரொருவர் தேவையானவரா? தேவையானவராயின் எதற்கு ? இன்னுெருவர் மூலமாக உண்மையைக் காண முடியுமா ? சிலர் முடியுமென்பர். இதைப் பற்றிய அபிப்பிராயத்தை வெளியிடாமல் உண் மையை ஆராய்வோம். குழம்பியிருக்கு மொருவருக்குக் குரு பேருதவியாய் இருக்கின்ருர், உண்மையெதுவென்று காட்டுவார். சாதாரணமான ஒருவரிலும் அவருக்கு வாழ்க்கையைப்பற்றிய பொதறிவு நிரம் பவுண்டு, அதிக அனுபவமுள்ள அவர் பிழையான வழிச் செல்வாரொருவ ருக்கு ஒரு தந்தைபோல் நல்லன கூறி நல்வழி காட்டு வார். வாழ்க்கைப் பிரச்சினையால் மனம் நொந்து சோர்வுற்ரு ரொருவர் குருவின் உதவியைக் கூடுதலாக எதிர் பார் க்கின் ருர், வாழ்க்கையைப் பூரணமாக அறிந்து மகிழ்வோடிருக்கும் ஒருவர் குருவை நாடிச்
செல்லார் .
மனநிறைவு தரும் குரு
என்றும் மனநிறைவு தரவல்ல குருவையே ஒருவர் தேடுவர். எனவே குருவை நாடிச் செல்வது மன நிறைவைப் பொறுத்ததாகும். ** உன்னையே நீ நம்பி யிரு", எனப் போதிக்கும் எந்தக் குருவையும் மக்கள் பொதுவாக நாடார். மக்கள் தமக்கேற்ற வண்ணம் தமது வசதிக்கேற்ற குருவைத் தேர்ந்தெடுக்கின்றனர்: தமக்கேற்படும் மனநிறைவிற்காகவே குருவைத் தேர்ந் தெடுக்கின்றவர், உண்மையைக் காணவேண்டுமென்ற நாட்டங்கொண்டவரல்லர். வாழ்க்கைப் பிரச்சினையி லிருந்தும் மனக்குழப்பத்திலிருந்தும் விடுபடவே குருவை விரும்பியடைகின்றனர். குழப்பத்திலிருந்து விடுபட எடுக்கும் இம்முயற்சியை உண்மையைத் தேடும் முயற்சி யெனத் தப்பாக அழைக்கின்றனர். குருவால் மக்கள் குழப்பங்களைக் களையமுடியுமென்ற கூற்றைச் சிறிது ஆராய்தல் நன்ரும்,

- 75 -
குழப்பத்தை வேறு எவராலும் தீர்க்க முடியுமா ? இக்குழப்பம் மறுதலிப்பின்-எதிர்செயலின்-விளைவாம். குழப்பமுற்றவரே குழப்பத்தை உண்டாக்கியவர்கள். குழப்பம் புறத்தில் மட்டுமன்று அகத்திலும் நடைபெறு கின்றது. தம்மைப்பற்றிய அறிவுப் பற்ருக்குறையின் விளைவே இக்குழப்பத்திற்கான காரணமாகும். தம்மையே தாம் அறிந்துகொள்ளாமையால் புறத்திலும் அகத்தி லும் பலதரப்பட்ட சிக்கல்களும், தொல்லைகளும், சச் சரவுகளும் ஏற்படுகின்றன. நிகழ்காலத்தோடுள்ள உறவுத் தொடர்பை அறிந்துகொண்டால் சிக்கல் தீரும். இவ் வுறவே, தொடர்பே குருவாகும். புறத்திலிருந்து வருபவர் குருவல்லர். ஒருவருக்கும் அவர் பிரச்சினைக்கும், அவர் நிகழ்காலத்திற்கும் உள்ள தொடர்பை-உறவை (Relationship) அறிந்துகொள்ளாவிட்டால் குரு மொழி வனவெல்லாம் பயனற்றனவாம். ஒருவர் பிரச்சினை தீர அவரே தம்மையறிந்து கொள்வதோடு தம்மோடு தொடர்புடைய எல்லாவற் ருே டும் தமக்கிருக்குந் தொடர்பை - உறவை அறிந்துகொள்ள வேண்டும். அஃதாவது ஒருவர் தம்மோடு தொடர்புடைய எல்லா வற்றேடுங் கொண்டுள்ள உறவுத் தொடர்பை அறிந்து கொள்ளுமளவுக்கு விழிப்புணர்ச்சி வேண்டும். விழிப்பா யிருப்பாருக்குக் குரு தேவையற்றவராவர்.
தன்ஃப்பற்றிய அறிவு
தன்னைப்பற்றிய அறிவைக் குருமொழியும் நூலறிவுந் தோற்றுவிக்கா. ஒருவன் தனக்கும் தனது மனைவிக்கு மிடையே உள்ள தொடர்பை அறிந்துகொள்ளாணுயின், தங்களிருவருக்குமிடையே எழும் எப்பிரச்சினையையும் அவஞற் தீர்க்க இயலாது. ஒருவன் தனது பிரச்சினை களுக்கெல்லாம் மூல காரணஞய் இருப்பதால் அவனே அதனைத் தீர்க்கவேண்டும். மூன்ரும் ஆளான குரு அவனது பிரச்சினையைத் தீர்க்கமாட்டார் : தீர்க்கவும் முடியாது. உண்மையைப் பிறரால் காட்டவும் முடியாது; பிறர் மூலமாக உ ண் மை  ைய அறிந்துகொள்ளவும்
முடியாது.

Page 47
- 76 -
உண்மை அசையாததொன்றன்று-அதற்கு நிலை யான வரையறுக்கப்பட்ட இருப்பிடமுமில்லை. அது பொருளற்ற ஒரு முடிவன்று. அனைவரும் ஈற்றிலடைய வேண்டிய ஒரு குறிக்கோளுமன்று. அஃது என்றும் உயிருள்ளது ; ஆற்றல் மிக்கது ; விழிப்புடையது. இத் தகையதொன்று எப்படி முடிந்த முடிவாயிருக்கும்? உண்மை என்பது அசைவற்ற புள்ளியாயின் அஃதுண்மை யாயிராது ; வெறும் அபிப்பிராயமாகவே முடிவுறும். தெரியாததே உண்மை. உண்மையைத் தேடும் மனம், உண்மையைத் தெரிந்து கொள்ளாது. மனம் தெரிந்தன வற்ருலானதே அதற்காம் காரணமாம் . இறந்த காலத்தின் விளைவே மனமாகும். காலத்தின் விளைவு அது. தெரிந்தனவற்றின் கருவியாக மனமிருப்பதால் அதனுல் தெரியாததைக் காண இயலாது. தெரிந்த ஒன்றிலிருந்து தெரிந்த இன்னென்றிற்கு அசையவே அதனுல் முடியும். மனம் உண்மையை நாடும்போது உண்மை தானென்பதின் வெளிப்பாடாகிவிடுகிறது. இறைவனைப்பற்றிச் சிந்திக்கும்போது இறைவஞனவன் சிந்தனையேயன்றி இறைவனல்லன்.
தெரிந்ததும் தெரியாததும்
தெரிந்தனவற்றையே ஒருவராற் சிந்திக்கமுடியும் ; ஆராயமுடியும். தெரியாததொன்றைப்பற்றி அவராற் சிந்திக்கமுடியாது; தெரியாதன வொன்றைப்பற்றிச் சிந்திக்க முனையும்போது, அச் சிந்தனை தெரிந்ததின் வெளிப்பாட்டையே அடைவிக்கும். எனவே, கடவுள், உண்மை என்பனபற்றிச் சிந்திக்கமுடியாது. அதைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினுல் அச் சிந்தனை இயல் பாகவே சிந்திப்பாரை வந்தடையும். தெரிந்ததையே ஒருவரால் தேட முடியும். தெரிந்தனவற்ருல் ஊறு செய்யப்படாத -சிதைவுபடாத மனத்தில்-தெரிந்தன வற்றின் விளைவு எதனுலும் தாக்கப்படாத மனத்திற் முன் உண்மை வெளிப்படும். உண்மை ஒவ்வோர் இழை யிலும் இருக்கிறது. ஒவ்வொரு கண்ணிர்த் துளியிலும் இருக்கிறது. கணத்திற்குக் கணம் அது தெரிந்துகொள்ள வேண்டியதாகும் , ஒருவரை எவரும் உண்மையிற் சேர்க்க

- 77 -
முடியாது. அப்படி எவர்ாவது ஒருவரைக்கொண்டு செல்ல முயல்வாராயின் அவர் முயற்சி தெரிந்தனவற் "றையே அடையச்செய்யும் முயற்சியாகும்.
தெரிந்தவையென்று ஒன்றுமில்லாத வெறுமையான மனத்தாற்ருன் உண்மையைக் காண இயலும் . தெரிந்தது செயற்படாத நிலையிலல்ல, உண்மை மனத்திற்கு வெளிப் படும். “தெரிந்தன’’ அறவேயற்ற மனத்திற்ருன் உண்மை வெளிப்படும் . தெரிந்தனவற்றைச் சேகரித்து முழுமை யாக வைத்திருக்கும் பண்டசாலையே மனமாகும். தெரிந் தனவற்றின் கழிவே மனமாகும். தெரியாத உண்மை மனத்தில் வெளிப்படுதற்கு மனந் தன்னைத்தானே அறிந் திருக்கவேண்டும் ; தன்விழிப்புப் பெற்றிருக்கவேண்டும். கலப்பற்ற பூரண தன்னறிவு பிறக்கும்போது தெரிந்தன என்பது முடிவடையும் . தெரிந்தவை முடிவடையும் போது மனம் தெரிந்தனவற்றிலிருந்து விடுபடுகின்றது. இந்தச் சூழ்நிலையிலேயே உண்மை எவ்வித அழைப்பும் உழைப்பும் அழுத்தமுமின்றித் தானகவே மனத்தில் வெளிப்படுகின்றது. உண்மை எவருக்குஞ் சொந்தமான தன்று. அதனை ஒருவராலும் வழிபடமுடியாது; உண்மை உருவமுடையதுமன்று. சிலை உண்மையாகாது. அழிவற்ற என்றும் புதுமெருகோடு துலங்கும் உண்மை உன்னத மானவொன்ருகும்.
Jjf 21 If G) pului FIDELIů
தன்னைத்தானே அறிந்துகொள்ளும்போது சகல பிரச்சினைகளும் தாமாகவே மறைகின்றன பிரச்சினைகள் தாமாக மறையும்போது மனத்தெளிவு பிறக்கின்றது. தெளிவு பிறக்கும்போது மனம் விழிப்புப் பெறுகிறது. மனம் விழிப்புப் பெறும்போது உண்மை தானகவே வெளிப்படுகின்றது. எனவே அறிவு, கற்றல் ஆதியன காலத்திற்கப்பாற்பட்ட, அழிவற்ற, என்றும் புதுப் பொலிவுடன் பிரகாசிக்கும் உண்மையைக் காண்பதற்குத் தடைகளாகவுள்ளன. எனவே குரு ஒருவரை ஏற்று அவர் சொற்படி நடந்தால், உண்மையை அணுகற்குப் பதிலாக உண்மையினின்றும் அளவுக்கு மீறி விலகிச் செல்ல நேரிடும்.

Page 48
அச்சம் என்ருல் என்ன?
அச்சம் ஏதாவதொன்றுடன் தொடர்பு கொண்
டிருக்குமேயன்றித் தனித்திருக்காது. தெரிந்த ஒன்றின் (Known) காரணமாகவே அச்சம் பிறக்கின்றது. (Life is relationship) வாழ்வென்பது தனித்த ஒன்றன்று. பல வற்றேடு தொடர்புடையதாகும். விளங்காத - தெரி unts (Unknown) 66it (opsid I got 60)u (Death) fiakor 5g). அச்சப்படுவது அல்லது தெரிந்தவற்றை இழக்கப் போகின்ருேமோ என்பதால் அச்சப்படுகின்றதாகிய அச்சங்களைச் சற்று ஆராய்ந்து பார்ப்பின், அச்சம் இறப்பை நினைத்தன்று. தொடர்புள்ள பொருள் களை - உறவுகளை - நினைவுகளை - நிலைமைகளை இறப் பால் இழக்க நேரிடுமே என்ற எண்னமே அச்சம் தோன்றக் காரணமென்பது புலப்படும். எனவே அச்ச மானது எப்பொழுதும் தெரிந்த ஒன்ருேடு இணைத் துள்ளதாம்.
அச்சம் உருவாகும் விதம்
"நான் ஒன்றை இழக்கக்கூடாது அல்லது அதனை அடையவேண்டுமென நினைக்கும்போதே அந் நினைவுக ளோடு அச்சமுந் தோன்றுகிறது. ஒன்ருேடொன்று கொண்டுள்ள தொடர்புணர்ச்சி நிலை யை நன்குனர முடியாமையால், அச்சம் பிறக்கிறது. ஒருவர் இன் ஞெருவரை நம்பியிருக்கும் போதும் அந் நம்பிக்கை என்னுகுமென்ற உணர்வால் அச்சம் உருவாகின்றது. அகத்தின் நொய்மை, திறமையின்மை - ஆதியனவற் றின் விளைவாக அச்சம் பிறக்கின்றது. ஒருவருக்குத் தம்மைப் பாதுகாக்கும் ஆசை எழுகின்ற போதெல் லாம் அப்பாதுகாப்புக் கைகூடுமாவென்ற ஐயம் எழு கின்றபோது அச்சமும் உடன் எழுகின்றது. பலவகைக் கோட்பாடுகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், கலாசாரங்கள், பண்பாடுகள், மதங்கள். சடங்குகள், ஆதியன எல்லாவற்றிற்கும் அச்சமே அடிப்படைக்

۔ 79 س۔
காரணமாக உள்ளது. ஒருவர் தமது பிள்ளை இறந் தால், இறந்த அப்பிள்ளைக்கு மறுபிறப்பு உண்டு-அல் லது முற்பிறப்புக் கருமமே பிள்ளையின் இறப்பிற்குக் காரணமென்று எதையெதையோவெல்லாங் கற்பித்துத் தனது கவலையை-அச்சத்தைப் போக்க முயல்வதன் மூலம் ஆறுதலடைகின்ருர் .
2. Glu s 5 si fî pî kî
ஒருவர் தமக்குப் பாதுகாப்புத் தேடிக்கொண்டிருக் கும் வரை - இன்பத்தை நாடும்வரை-சுகங்களைத் தேடி வாழ்வில் நன்னிலையடைய விரும்பும்வரை அச் சம் தொடரும். ஒருவர் தமது வாழ்க்கை குறிப்பிடத்தக்க இலக்குக் கமைவுடையதா யிருக்கவேண்டுமென்று விழை யும் வரை அவர் மனத்தே அச்சங் குடிகொண்டிருக்கும். அச்சமற்ற வாழ்வு, குறிக்கோளற்ற-பற்றற்ற-வாழ் வென்று கொள்ளப்படும். ஒருவர் குறிப்பிட்ட ஒரு முறையில் வாழவேண்டுமென எண்ணுவாராயின், அவ் வெண்ணமே அச்சத்திற்குப் பிறப்பிடமாய் அமைகிறது. குறிப்பிடத்தக்க ஓர் அமைப்புக்குத் தக வாழவேண்டு மென்பதே பல ர து கருத்தாகும். இவ்வமைப்பைக் குலைத்தெறிய முடியாதா? இவ்வமைப்பே அச்சத்தை உண்டாக்குகின்றதென்றும், அச்சமே இவ்வமைப்பைப் பலப்படுத்துகின்றதென்றும் உண்மையில் அறியும்போது, கருதிய அமைப்புத் தானே குலைந்தழியும் . அச்சத்தி னின்றும் விடுதலை பெறவேண்டும் என்பதற்காக அமைப் பைத் தகர்க்கவேண்டுமென்ற அடிப்படையிலெழுந்த எச்செயலும், பிறிதோர் அமைப்பிலும், பிறிதோர் அச்சத்திலும் புகுத்திவிடும். மனமே ஓர் அமைப்பிற்கு அமையவே இயங்குகிறது. மனமானது தானே தோற்று வித்த அமைப்பிற்கிணங்க இயங்குகிறது. எனவே மன இயக்கமும் அச்சத்தின் வழியது என்பது புலனுகின்றது. பழைய அமைப்பைப் பலப்படுத்துவதிலும், புதிய அமைப்பொன்றை அமைப்பதிலுமேயே மனத் தி ன் செயல்கள் எ ல் லா ம் முடிவடைகின்றன. இவற்றல்

Page 49
- 80 -
அச்சத்தை நீக்க மனம் மேற்கொள்ளும் செயல்களெல் லாம் அச்சத்தை நாடிச் செல்லுகின்றனவென்பது பல ஞகின்றதன்ருே?
அச்சம் வெளிப்படும் வழிகள்
அச்சம் பல வழிகளில் வெளிப்படுகின்றது. இவர், அவர் மகன், அவள் கணவர், இம்மதத்தைச் சார்ந் தவர், இந் நாட்டவர் என்று ஒருவர் தம்மைப் பல வழிகளில் தொடர்பு படுத்திக் கூறப்படுகின்ருர் . "நான்', "எனது" என்ற எண்ணம் ஒருவர் பால் உள்ளவரை அவர் பால் நிலையான அச்சமும், அவ்வச்சங் காரணமான பல தொல்லைகளும் உருவாகிக்கொண்டே யிருக்கும். தம் மோ டு எவ்வகையிலும் ஒப்பிடாத உயர்ந்த பொருளோடு தம்மை அடையாளம் (Identify) தொடர்பு காண்பாராயின், அப்படிக் காணும்வரை "நான்", "எனது" என்ற கட்டுத்தளர இடமுண்டா கிறது. ஒருவர் தமது நாட்டைப் பற்றிப் பேசும் போதும், கடவுளைப்பற்றி எவற்றையாவது கூறும் போதும், அவரை அவரே சிறிது நேரம் தற்காலிகமாக மறக்கின்றர். 'தான் ' என்ற உணர்வே தொடர்பு கொள்ளலிலிருந்து தோன்றியதாகும். தூயதாய நற் குணத்தைத் தழுவிச் செல்பவனும், 'தான்' என்ற தொடர்பிலிருந்து நீங்கியவனுவான். எனினும் அவனது மனத்தைத் தூயமனமெனக் கொள்ள இயலாது. தூய் மையைப் பின் தொடர்ந்து செல்லமுடியாமையே அதற் குக் காரணமாம். அகத்தின் ஏழ்மை, திறமையின்மை ஆதியவற்ருல் அச்சம் பிறக்கின்றதாகையால் ஒருவர் இன்னுெருவரையோ அல்லது ஒரு கோட்பாட்டையோ பின்பற்றும்போது அல்லது நம்பும்போது அச்சம் உரு வாகிறது. V
அச்சமென்பதென்ன ?
அச்சமென்பதென்ன? அச்சம் உண்டென்பதை ஏற்றுக்கொள்ளவே வேண்டும். ஒருவர் ஒன்றைக் காணு

- 81 -
கின்ருரெனும்போது அவரதை ஏற்றுக்கொள்கின்ருர்ஏற்றுக்கொண்டிலர் என்பதற்கு இடமில்லை. உண்டென்று சொல்வதொன்றைக் காணுதபோது - காணமுடியாத போதுதான் ஏற்றுக்கொள்ளல் - ஏற்றுக்கொள்ளாமை என்பன எழுகின்றன. எனவே அச்சமானது உண்டென் பதை ஏற்றுக்கொள்ளாமல் விடுவதென்பது உறுதியா கிறது. இறந்த கால நினைவுகள், நம்பிக்கைகள், கோட் பாடுகள், ஏமாற்றங்கள், தாழ்வு மனப்பான்மைகள், எதிர்ச்செயல்கள், மாறெதிர்ச்செயல்கள் ஆகிய தடை களைக் கொண்ட மனம் விழிப்பாக இருக்க முடியுமா? நோயற்ற உடலமைப்பைக் கொண்டுள்ள ஒருவனுடைய மகிழ்ச்சி ஒப்பற்றது. அஃதே போல் "நான்', 'எனது' என்பன போன்ற தடங்கலற்ற, கட்டுப்பாடற்ற-வரை யறையற்ற-தடையற்ற மனத்தைக் கொண்டுள்ளான் மகிழ்ச்சியும் ஒப்பற்றது. மனம் ஏதாவதொன்றைத் தனது விருப்பு வெறுப்புக்கமையக் கொள்ளாமல், தள்ளா மல், உணர்ச்சிவசப்படாமல், வெறுமனே உள்ளதை உள்ளபடி பார்க்கும் தன்மை பெறுமாயின் அச்சம் தானகவே அகலும் . தன்னறிவு பொலிவுடன் இருக்கும் இடத்தில் அச்சம் இராது.

Page 50
அன்பு என்ருல் என்ன?
"அன்பு" என்ற சொல்லானது பல் லா யிரக் கணக்கான ஆண்டுகளாகப் பலரால் பலவித சூழ்நிலை களில் அச்சூழ்நிலைக்கேற்ற பொருள்படக் கையாளப் Lu L-G)oit am 63) puurTai) அச்சொல்லைப் பயன்படுத்துவாரது எண்ணம், உணர்வு, குறிக்கோள் ஆகியவற்றிற்கேற்பப் பொருள் திரிபடைந்துள்ளது. இதனுல் அச்சொல்லுக்கு நிலையான கருத்தெஃதேயெனச் சொல்ல முடியா நிலை யேற்பட்டுள்ளது. 'எனக்கு நாட்டுப் பற்றுண்டு; மனைவி மீது காதலுண்டு; பிள்ளைகள் மீது பாசமுண்டு; கதை, கவிதை, கட்டுரை, காவியம் ஆகியவற்றின் மீது விருப்பமுண்டு; உயிர்கள் மீது கருணையுண்டு' என்று கூறு வதன் மூலம் அன்பு செய்வார், அவ்வன்பைப் பெறுவார் நிலைக்கேற்பப் பற்று, விருப்பம், காதல், இரக்கம், அருள், கருணை எனப் பல்வேறு பொருள்களைத் தன்னகத்தே கொண்ட பொதுச் சொல்லாக "அன்பு" வழங்கப்படு கின்றது. பத்திரிகைகளும், சஞ்சிகைகளும், வேதங் களும், மத சிோதகர் களும், நண்பர்களும், அரசியற் றலைவர்களும் பெருவழக்காய்ப் பல சூழ்நிலைகளில் அன்பு என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு உள்ள நெகிழ்ச்சியின் பல்வகைத் தோற்றத்தைக் குறிக் கும் 'அன்பு' என்னும் சொல் ஒரு பொருளுடையதா ? மனதிற் தோன்றும் எண்ணமா? என்ற ஐயமேற்பட்டுள் ளது. அன்பானது ஓர் எண்ணமாக, கருத்தாக விருந் தால்- அதனைச் சூழ்நிலைக்கேற்பத் திருத்தலாம்; பண் படுத்தலாம்; பேணி வளர்க்கலாம்; போற்றிக் கொண் டாடலாம்; வேண்டாத வேளையில் அதனைத் தள்ளியும் வைக்கலாம்; விரும்பிய வண்ணம் மாற்றியமைக்கலாம்.

- 83 -
இறைவன்பால் அன்பு
ஒருவர் இறைவன் பால் அன்பு கொண்டுள்ளாரெனில் அவருள்ளக் கருத்தென்ன? அவரது சொந்தக் கற்பனை வடிவத்தையே விரும்புகின்ருர் என்றே கொள்ளக் கூடிய தாக வுள்ளது. எனவே இறைவன்பால் பக்தி கொண்டு தொழும் ஒருவர் தம்மைத் தாமே விரும்பித் தமது ஈடேற்றம் நாடியே தொழுகின்றர் என்பதே உண்மை யாகும். எனவே இத்தகையாரன்பு விழுமிய பயனளிக் காது. மக்கள் பலரது துன்பங்களைப் போக்க முனையாது, புலன்களுக்கும் அப்பாற்பட்ட க ரு த் தி ய லுக்கு ஸ் மறைந்து கொள்ளும் ஒருவர் உலகச் சிக்கல்களையும், இடர்ப்பாடுகளையும் துடைத்தொழிக்க அன்பே முடி வான துணையாமாகையால், அன்பென்ருல் என்ன என்பதை மக்கள் ஆய்ந்தறிதல் அவசியமாகும். இவற் றைப் புறக்கணித்து, இத்தகையதென வரையறுத்துக் கூறுதல் முறையன்று. அன்பைப்பற்றி மதங்கள் ஒரு விதமாகவும், சமூகம் ஒரு விதமாகவும், புராணங்கள் வேறு விதமாகவும் வரைவிலக்கணங்கள் கூறியுள்ளன. ஒன்றுசேர்ந்து வணக்கத்தையும், பிறரோடுண்டு உறங் குவதையும், இன்னுெருவர் உணர்வைப் பரிமாறுவதை யும், நட்புப் பூண்டிருப்பதையுமே அன்பு ༥བ་མ་ཚོ། கொள்ள லாகாது.
அவ்வாருயின் அன்பு என்ருல் என்ன? அன்பானது எமக்குத் தெரியாதவொன் ருக இருப்பதாற்ருன் அஃது என்னவென்று காண விழைந்துள்ளோம். எமக்குத் தெரி யாத-புரியாத அன்பைத் தெரிந்துகொள்ள, புரிந்து கொள்ள முதற்கண் "அன் பின்மை' என்ருல் என்ன? என்பது பற்றி யாம் தெரிந்திருத்தல் அவசியமாகும். மனமானது தெரிந்தவற்றையே நிரப்பி வைத்திருக்கும் இயல்புடையதாகையால், அதனல் தெரியாதவற்றை வெளிப்படுத்தவியலாது. அன்பென்ருல் என்னவென்ற

Page 51
- 84 -
எமது ஆராய்ச்சியின் முக்கிய அம்சமாய் முதலில் தெரித்த வற்றின் (Known) மதிப்பை, முக்கியத்துவத்தைக் காண முயல்வோம். அஃதாவது எதுவித மறுப்பும், கண்டிப்பு மில்லாமல் எவ்வித கலப்பற்று-குற்றமற்றுத் தூய்மை யாகத் தெரிந்தவற்றை நோக்குவோம். இதுவரை மன தைக் குழப்பிய பல்விதமான மாறுபட்ட கருத்துக்க ளாய்த் தெரிந்தவற்றை ஒதுக்கித் தள்ளிவிட்டு, மன அமைதி ஏற்பட வழிவகுத்த, அமைதிபெற்ற, அம் மனத்தே அன்பின் தூய்மையைக் கண்டு தெளியலாம், நானெனதென்ற எண்ணமற்ற விழைவு வெறுப்பற்ற, அலைவற்றுத் தெளிந் தமைதியுற்ற மனத்தோடு அன்பை நோக்குவோம். எனவே அன்பை அறிய. அன்பை எதிர் மறையாகவே அணுகவேண்டியிருக்கிறதேயன்றி நேர் நிலையாக அணுகமுடியாது.
எண்ணம் அன்பாகாது
ஒருவர் ஒரு பொருளை விரும்புகின்ருர் அல்லது ஒரு பொருளின் மீது அன்பு செலுத்துகிருரென்று ஏற்றுக் கொண்டால், அவர் உண்மையில் அப்பொருளைப் பற்றிக் கருதுவதென்ன? அப்பொருளைத் தமதுடைமையாக்கிக் கொள்ளவே அவரு ன்  ைம யிற் கருதுகின்ரு ரென்பதே யாம். உடைமையாக்கிக் கொள்ளும் மனப்பான்மையி லிருந்தே பொருமை எழுகி ன் றது. அவர் விரும்பி உடைமையாக்கிய அப் பொருளை இழக்க நேரிடுமோ என்ற ஏக்கம் அவர் மனத்தே குடிகொள்கின்றமையால் அவ்வுடைமையைச் சட்டப்படி தமது உடைமையாக்கிக் கொள்கின்றர். இச்செயலானது அன்பை அடிப்படை யாகக் கொண்ட செயலு ம ன் று, அஃதன்புமாகாது. அன்பானது மேலீடான ம ன உணர்ச் சி யு ம ன்று. உணர்ச்சியால் பாதிக்கப்படும் கருத்துமன்று. உணர்ச்சி வ யப் பட் டி ரு த் த ல், மனவெழுச்சிவயப்பட்டிருத்தல் ஆகியன வெறும் கலவரத்தால் எழும் புலன்களாலறியும்

- 85 -
நிலையேயன்றி அவை அன்பின் விளைவுகளல்ல. இறைவன் பால் பக்திகொண்டு, அளவுக்குமீறிய ஈடுபாடு கொண்டு, கோயில்களிற் புலம்பி அழும் பக்தர்களது செய்கைக்கும், உணர்ச்சிவயப்படலும், ம ன வெழுச்சி கொள்ளலுமே அடிப்படைக் காரணங்களாம். எண்ணத்தின் செயன் முறையே-விளைவே-புலன்களாலறியும் நிலை யாகும். எண்ணமானது அன்பாகாது. எனவே, மேலீடான மன வுணர்ச்சிக்கும், மனவெழுச்சிவயப்பாட்டிற்கும் அடிமை யான எவராலும் அன்பை அறிய முடியாது; அனுபவிக்க முடியாது. உணர்ச்சியும், மனவெழுச்சியும் தம்மைத் தாமே விரிவடையச் செய்வோர் ஒருவர் செயலாகும். உணர்ச்சியால் உ ந் த ப்ப ட் ட வ ரா ல் அன்பைக் காணவோ, அனுபவிக்கவோ முடியாது. காரணம் தமது உ ண ர் ச் சிக் கும், உணர்வுக்கும் தக்க மறுதலிப்பு (Response) அவர் பா லெழவில்லையெனக் கா னு ம் பொழுது அவர் உணர்வுகளுக்குப் போக்கிடம் (Outlet) அல்லது வெளிப்பாட்டு வழி இல்லையென்று கண்டவுடன் அவர் கொடியவராகின்ருர் . உணர்ச்சிப் பெருக்கால் தமது மதத்திற்காகக் கண்ணிர் சுரக்கும் ஒருவரிடம் அன்பு இராது.
மன்னிக்கும் தன்மை
மன்னிக்கும் தன்மை அன்பா? ஒருவர் இன்னுெரு வரை அவமானப்படுத்துகிருர் அவர் அதற்காகச் சினங் கொள் கி ன் ரு ர். இத்தாக்கத்தைப் பின்பு இரக்கத் தாலோ, பிறரது கட்டாயத்தாலோ மறந்து 'உன்னை மன்னிக்கிறேன்’ என்று கூறுகின்ருர், முதலில் இத் தாக் கத்தை மனதில் விடாமற் பற்றி, பின்பு அதனை மறுத்து, விலக்கித் தள்ளுபடி செய் கி ன் ரு ர். இதிலிருந்து இன்னும், 'நானே' மையமாக, உருவமாக அமைந் துள்ளேன். 'நானே உன்னை மன்னித்தேன்' என்ருல் *நான்’ என்ற உணர்வு இன்னும் முக்கியமானதா யிருக்

Page 52
-- 86 -
கின்றது. 'மன்னித்தேன்' என்ற நோக்கு இருக்கும் வரை 'நான்' தான் முக்கியமானதாக இருக்கின்றதே யன்றி, மன்னிக்கப்பட்டவன் முக்கியமானவனல்லன். எனவே, ஏதாவதொரு குற்றத்தை நினைக்கும்போதும், சினம்கொள்ளும்போதும், பின்பு அக் குற்றத் தைசினத்தை மறுக்கும் போதும் அன்பானது அச்செயல் களிலிருந்தும் விலகிச் செல் கின்றது. அனுதாபம், மன்னிப்பு, தன்னுடைமையாக்குதல், பொரு  ைம அச்சம் ஆகியவை அனைத்தும் அன்பாகா. இவை அனைத்தும் மனத்தின் செ யற் பா டு க ளே யா ம். மனம் நடுவராய், நடுநிலைத் தீர்ப்பாளராய் (Arbiter) இருக்குமட்டும் அன்பு வெளிப்படாது. காரணம் மன மானது த ன் னு  ைட மை  ைய யே தீர்த்துவைக்கும் திறனுடையது. அத்தீர்வானதும் வேறுவிதமான தன் னுடைமையேயாம். மனத்தால் அன்பை அரும்பச் செய்ய முடியாது. அதனல் அழகை உண்டுபண்ண முடி யாது. பதிலாக, அதனல் அன்பைத் துண்டித்துச் சீர் கெடுத்துச் சிதைவுறச் செய்யவே முடியும். அன்பைப் பற்றி அழகிய கவிதை புனைய முடியும் எனினும் அக் கவிதையன்று அன் பாம். எனவே 'அன்பு" என்ற சொல் அன் பாகாது. பிறரை உண்மையாக மதிப்பார் எங்கு இல்லையோ அங்கு அன்புமில்லையாம். வேலைக் காரன், கூலியாள் என்போர் கீழோர் என எண்ணும் சிலர் மதிப்பும், மரியாதையும், அன்பும், பெருந்தன்மை யும் கொண்டாரல்லர். மேலானவர்கள் என மதிக்கும் பெரும் பணக்காரர், அலுவலகப் பொறுப்பாளர், பட்டம் பெற்ற பண்டிதர், அறிஞர் ஆகியோரை Lumrub மதிக்கிருேம் , தம்மிலும் தாழ்ந்தவரெனக் கருதப்படுபவ ரோடு பேசும்போது இழிமொழியும், மேலோரெனக் கருதுபவரோடு புகழ் மொழியும் பயன்படுத்துவாருளர். எனவே, எவர் பால் இரக்கம், பரிவு, மன்னிப்புப் பண்பு, அனுதாபம் ஆதியன இல் லையோ, அங்கு அவர் பால் அன்பிராது. வெறும் உணர்ச்சியும் உணர்வும் அகத்தே வேரூன்றவும், விரும்பும் எதையும் தன்னுடைமையாக்க வும் விழைவார் மனப்பாங்கே முளைவிடுகிறது. மன

- 87 -
வெழுச்சி, மேலீடான மனவுணர்ச்சி, தன்னுடைமையாக் கும் மனப்பான்மை ஆதியவை எல்லாம் எப்பொழுது ஒரு முடிவுக்கு வருகின்றனவோ, முற்றுப்பெறுகின்றனவோ அப்போழுதே அன்பென்ருல் என்னவென்ற உண்மையை எம்மால் உணர்ந்து தெரிந்துகொள்ள முடியும்.
அன்பும், அளவும், பண்பும்
ஒரு கொள்கையிலோ, கோட்பாட்டிலோ, மதத் திலோ இறைவனிலோ ஈடுபாடு ஏற்படும்பொழுது அவ் வீடுபாடானது வேறு உருவத் தி ல் எதையாவது எதிர் பார்க்கும். அஃது இரந்து வேண்டப் படுகின்ற ஓர் ஈடுபாடாகின்றது. கடவுள்பால் அன்பு கொண்டான் ஒரு வணு க்கு அன்பு என்ருல் என்ன என்ற உண்மை தெரியாது. ஈடுபாட்டாலும், வழிபாட்டாலும் ஒருவர் ஏதோ ஒரு முடிவை-விடையைக் காண வி ைழ யும் போதும், ஒரு பொருளைத் தன்னுடைமையாக்க நினைக் கும்போதும் அவர் செயல்கள் அவரை மனவெழுச்சி யிலும், மேலோங்கிய மனவுணர்ச்சியிலுமே ஈடுபட ச் செய்கின்றமையால் அவர் செ ய ல் கள் அன்பாகா, பிறரிடம் கருணை காட்டும் செயலிலும்கூட அவர் தமக் கோர் இலாபத்தைக் குறிக்கோளாகக் கொண்டே அவ் வாறு கருணை காட்டுகின்றர். அஃதாவது கைம் மாறு கருதியே அன்பு செய்கின்றர். நன்றி,  ைக ம் மாறு மேலோங்கிய மனவுணர்ச்சி, மனவெழுச்சி ஆகிய குணங் கள் எல்லாம் ஒருவர் மனத்திலிருந்து எப்போது நீங்கு கின்றதோ அப்போது அன்பு ஒளிர்விடும். அன்பொன்ரு லேயே உலகில் நிலவும், பொங்கியெழும் வெறிபிடித்த போக்கை மாற்ற முடியுமேயன்றி, வெறும் ஒழுங்கமைப் பாலும், ஏற்பாடு முறைமையாலும், கோட்பாடுகளா லும் மாற்றியமைக்க முடியாது. மனைவி, மக்கள், வேலைக் காரன், பெரியவன், சிறியவன், அயலவன், அன்னியன்
என்ற பேதமின்றி, பொழு  ைம யி ன் றி, அவாவின்றி

Page 53
- 88 -
தன்னுடைமையாக்கும் மனப்பான்மையின்றிப் பிறர் பால் கைம்மாறு கருதாத கருணையும், மதிப்பும், இரக்க மும் கொண்டவரே அன்பை உணரும் தகைமையுடையவ ராவர், அதன் பெ ரு  ைம  ைய த் துய்த்துணர்வர். அன்பானது ஓர் அளவுக்குள் (Quantitative) அடங்குவ தன்று. அளவிட முடியாப் பண் புக் குரிய தா கும் (Qualitative). 'யான் உலகத்தோரனைவரையும் நேசிக் கிறேன்' என்று காலத்துக்குக் காலம் உலக த்தில் தோன்றித் தம்மை அவதார புருடர்களெனச் சொல்லி வந்த ஞானிகள் உளர். ஒருவரைச் சரியாக நேசிக்கஅவர்மீது தூய அன்பு செலுத்தத் தெரிந்தாற்ருன் அனைவரையும் நேசிக்க முடியும். ஒருவரை நேசிக்க முடி யாத எங்களால் அனைவரையும் நேசிக்க முடியாது. அப்படி நேசிக்க முனைவது வெறுங் கற்பனையும், மாயையுமேயாம். ஒருவர் அன்புபூணும்போது அவ்வன்பு ஒருவர், இருவர், பலர் என்ற கட்டுப்பாடுள்ளடங்காது. இயற்கையாகவே அன்பு குடிகொண்ட உள்ளத்தாற்ருன் மக்களை எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் அனைத்தையும் நீக்க முடியும். அதன் பின்பே அவ்வன்பால் விளையும் பேரின் பத்தை உணரமுடியும்.
கடமையும், அன்பும்
அன்பு என்றல் என்ன என்பதைப் பிறரது விளக் கங்களாலும், கருத்துக்களாலும், எண்ணங்களாலும், கோட்பாடுகளாலும் தெரிந்து கொள்ள முடியாது. அன்பைப் பற்றிய விளக்கங்கள், அவை அத்துணை மேம் பட்டவரெனக் கருதப்பட்டார் வாயிலாக வந்தாலும் அவ்விளக்கங்கள் அன்பா கா. 'அன்பு" என்ற சொல் மாத்திரம் அன்பன்று. அது வெறும் சொல். அதேபோல் அன்பைப் பற்றிப் பிறர் கூறுவதெல்லாம் அன்பாகா. அன்பை ஒவ்வொருவரும் த ம் பொரு ட் டு த் தாமே தெரிந்துகொள்ள வேண்டும். அதனைப் பிறராற் போதிக்க

- 89 -
இயலாது. எனவே, அன்பு என்ருல் என்ன என்பதைக் கண்டுகொள்ளுமுன் அன் பை ப் பற்றிக் கூறிய பிறர், மதத்தலைவர்கள் ஆகியோர்களின் கூற்றுக்களை மறுத்து, விலக்கி, ஒதுக்கிய பின்னரே எவ்வித கட்டுக்கோப்புக்கும் எல்லைக்கும் வட்டத்திற்கும் அ  ைம யாது விலகிநின்று சொந்த முறையில் தெளிந்து அ னு பவி க் க முயல வேண்டும். '"நாட்டின் மீது அன்பிருந்தால் எதிரிகளைக் கொன்று குவியுங்கள்' என்று அரசினர் கூறுகின்றனர். 'இறைவன் பால் அன்பு கொண்டு, அவனருள் பெற முதலில் காமத்தை விடுங்கள்' என்று சமயங்கள் கூறு கின்றன. இ  ைவ யெ ல் லா ம் அன்பின் அடிப்படையி லெழுந்த செயல்களா? தமது விருப்பு வெறுப்புக்களுக் கேற்ற வண்ணம் அமைந்தால் மக்கள் அதை விரும்பு கின்றனர். மாருக அமையின் வெறுக்கின்றனர். எனவே, ஒன்றினின்று பிரிக்கப்பட்டவுடன், பகையும், எதிர்ப்பும் தோன்ற, அங்கு அன்பு மறைந்துபோய் விடுகின்றது. ஒருவரில் ஒருவர் தங்கி வாழும் வாழ்க்கையில் எப் பொழுதும் அச்சம், பொருமை, ஆவல், குற்ற மனப் பான்மை ஆதியவை குடிகொண்டிருக்கும். அச்சம் குடி கொண்ட இடத்தில் அன்பானது அரும்பவே அரும்பாது. எ ண் ண ம |ா ன து இறந்த காலத்துக்குரியது. அன்பு எண்ணத்தின் மாற்ற விளை வு ம ன் று. எண்ணத்தால் அன்பை உண்டுபண்ண முடியாது. அன்பென்பது என்றும் நிகழ்காலத்துக்குரியது. உண்மையில் 'அன்பு" என்ருல் என்ன என்று நமக்குத் தெரிந்திருந்தால், யாம் யாரை யும் எக்காரணங் கொண்டும் பின்பற்ற மாட்டோம்-பின் பற்ற வேண்டிய அவசியமும் ஏற்படாது. அன்பானது ஒன்றற்குள் அடங்குவதுமன்று அ  ைம வது ம ன் று. கடமை க் கா க ஒருவர் செய்யும் செயலுக்கு, அன்பே காரணம் என்று சொல்லுவது முறையா? அன் பால் செய்யும் ஒரு காரியம் கடமையாகுமா? கடமைக்காக யாம் ஒன்றைச் செய்யும்போது அங்கு அன்பு இருக்காது"

Page 54
- 90 -
கடமைக்காக யாம் ஒன்றைச் செய்யும்போது, அச்செய லில் ஈடுபாடு கொண்டு, அன்பு கொண்டு செய்வதில்லைவிரும்பிச் செய்வதில்லை. வெறும் கடமைக்காகவே அச் செயலைச் செய்கின்ருேம். அன்பிருக்குமிடத்தில் கடமை யில்லை-பொறுப்பில்லை.
பெற்றேரும், பின்ளேகளும்
பெற்றேரிற் பலர் தம் பிள்ளைகளுக்குத் தாமே பொறுப்பாளரென எண்ணி, தம் பிள்ளைகள் எவை யெவற்றையெல்லாம் எப்படிச் செய்யவேண்டுமென்றும் , தம் பிள்ளை களை எப்படி வளர்க்கவேண்டும் , எப்படி வளர்க்கக்கூடாதென்றும் வரையறை வகுக்கின்றனர். சமுதாயத்தோடு, ஊரோடு, உலகோடு ஒத்துப் போகு ங் கட்டுக்கோப்போடு வாழவேண்டும் எனத் தத்தம் பிள்ளை களைக் கட்டுப்படுத்துமுகமாக குற்றம், ஊழல், பொய், களவு, போர், பொருமை முதலியன நிறைந்த சமூகச் சிறையில் அடைத்து வளர்க்கின்றனர். இதனைப் பரா மரிப்பு என்றும் , அன்பு என்றும் கொள்ளலாமா? நெருங் கிய அன்புடைய ஒருவரை, இழக்க நேரிடும் ஒருவர் சுரக்கும் கண்ணிர் அவருக்காகவா? அல்லது இறந்தவர்க் காகவா? துக்கமானது தன்னலே தனது எண்ணத்தாற் ருேன்றிய தொன்றன்ருே? இன்னும் சற்று ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், இச் செயற்பாடெல்லாம் அவ ருள்ளேயே நிகழ்வதைக் காணலாம். அவர் சொரிந்த கண்ணிர் அவர் கற்பனையுருக்கொடுத்ததன் விளைவாகத் தோற்றியதே. "" எனது குடும்பம், எனது நண்பன், என்னுடு' என்பனவெல்லாம் ' நான் ' என்பதையே மையமாகக் கொண்ட சிறு மை சேர் போலியாகத் தோற்றியுள்ளதென்று அறியலாம். இச்செயற்பாட்டை யெல்லாம் மனதாற் காணுமல், உள்ளத்தின் உள்ளுணர் வாற் காணமுடியுமானுல் அதுவே துக்கத்தை முற்ருக நீக்க வழிகோலும், துயரமும், அன்பும் ஒன்றோடொன்று இணைந்துசெல்லா. சில சமயங்கள் துயரத்தையே குறிக் கோள் நெறியாகமாற்றி அதற்கு ஒரு குறியீடு கொடுத்து அதனையே வணங்கியும் வருகின்றனர்.

سس- 91 سس
அகத்தை நிரப்பும் அன்பு V−
பாலைவனம்போல் வரண்டு, செழிப்பற்று, பொலி வற்றுக் கிடக்கும் எமது வாழ்க்கையில் அன்பு இல்லை. காரணம் இங்கு ஆசையும், இன்பமுமே முக்கியமாகத் தொழிற்பட்டு வருகின்றன. அழகில்லையேல் அன்பில்லை. அழகான பெண், அழகான மரம், அழகான காட்சி என்று சொல்லும் போதெல்லாம் அங்கு அன்பில்லை. மனமும் உள்ளமும் அ ன் பெ ன் ரு ல் என்ன என்று உணரும்போதே அழ கே பிறக்கிறது - வெளிப்படு கின்றது. அன்பும், அதனல் ஏற்படுகின்ற அழகைப் பற்றிய உணர்வும் இல்லாத இடத்தில் நற்குணமும் தூய்மையுமிரா. மன மானது கட்டுப்பாடில்லாமல் எண்ணமில்லாமல், ஆசானில்லாமல், தலைவனில்லாமல் அன்பைப் பெறுமா? அடையுமா?
எதையாவது தேடும் மனமானது மனவெழுச்சி மிகுந்த மனமாகாது. ஆர்வம் - மனவெழுச்சி என்ரு லென்ன என்பதை அறியாதவன் அன்பை அறியான். ஏனெனில், தன்னை முற்ருக விலக்கல் - துறத்தல் எங் குண்டோ, அங்கேயே அன்பு வெளிவரும்.
அன்பானது என்றும் புதியது, செழிப்பானது, தூயது, சுறுசுறுப்பாக என்றும் நிலைபேறுடையது. அஃது எண்ணத்தின் குழப்பத்திற்கும் அப்பாற்பட்டது. தூய மனத்திலேயே அன்பு எத்தகையதென்ற உணர்வு புல ஞகும். தூய்மையற்ற இவ்வுலகத்தில் தூய்மை நிறைந்த மனத்தோடு வாழமுடியும். தன்னைத்தானே புரிந்து கொள்ளும்போது, இயற்கையாகவே அஃது ஒரு நன் முடிவையடைகின்றது. அந்நிலையில் அன்புக்கு எதிரு மில்லை; கலக்கமுமில்லை. அகம் பூரண அமைதியை அடை யும்போது அன்பானது மனத்தகத்தை நிரப் பிப் பொலி வடைகின்றது.

Page 55
நம்பிக்கை என்ருல் என்ன ?
காண்டல், கேட்டல், கருதல், நூல்கள் சமயங்களை நிலைநாட்டத் தோற்றுவித்த கொள்கைகள், சட்டதிட் டங்கள், வழிபாட்டு முறைகள் என்ற வழிகளான் வந்து சேர்ந்து நிலவும் கருத்துகளைக் குழம்பிய, தெளிவற்ற, தன்னுணர்வில்லாத மனத்தான் ஆராயாது ஏற்றுக் கொள்ளலே நம்பிக்கையாகும். நம்பிக்கையும், அறிவும் அவாவுடன் நெருங்கிய தொடர்புடையன. எனவே, நம்பிக்கை, அறிவு ஆகிய இரண்டையும் பூரண மாக விளங்கிக் கொண்டாற்ருன் அவாவின் உள்ளார்வநிலை, செயல்முறை ஆகியவற்றைக் கண்டுகொள்ள முடியும். எதையும் நம்பும் இயல்பு மனிதரிடையே மலிந்திருப் பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. நம்பிச்கைகளை மக்கள் ஏன் ஏற்றுக் கொள்கின்றனர் என்ற வினவுக்கு -விடைகாண விழையும்போது அவற்றின் குறிக்கோள் களையும், அவற்றை ஏற்றுக்கொள்வதற்கான காரணங் களையும் அறிவதோடு, அவற்றினின்றும் விடுபடுவதற் கான வழியும் புலனுகின்றது.
நம்பிக்கையின் தீயவினவு
பொதுவாக நோக்குங்கால் நம்பிக்கைகளே மனித ரிடையே வேற்றுமை மனப்பான்மையை வளர்த்து வந் துள்ளன என்ற உண்மை துலங்குகின்றது. ஒரு மதத் தினர் ஒன்றை நம்ப, மற்ற மதத்தினர் வேறென்றை நம்ப, இதன் விளைவாக மக்களுக்கிடையே நம்பிக்கை கள் காரணமாகப் பெரும் பிளவுகள் ஏற்பட்டுள்ளதைஏற்படுவதைக் காணலாம். இப்பிளவு மனப்பான்ம்ையே உலகத்தில் இன்று காணப்படும் பிணக்குகள், குழப்பங் கள், இன்னல்கள், எதிர்ப்பு மனப்பான்மைகளுந்தோன்ற வழிவகுக்கின்றது. பிரிவினை மனப்பான்மையை உண்டு பண்ணும் இந்நம்பிக்கைகளின்றி மக்கள் வாழமுடியுமா?

حس- 93 سست .
இவ்வினவுக்கு விடை காண்பதற்குமுன் ஒருவர் தமக்கும் தமது நம்பிக்கைகளுக்குமிடையே உள்ள தொடர்பைத் தெரிந்திருத்தல், அவசியமாகும்.
நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கும்-நம்புவதற் கும் காரணமாக இருப்பனவற்றுள் அச்சமும் ஒன்ருகும். ஒரு மதத்தில் - ஒரு கடவுளில் நம்பிக்கை கொள்ளா தொழியின் பேரிடர் ஏற்படுமென்ற அச்சமும், ஏக்கமும் மக்களை அச்சுறுத்துகின்றன . எனவே இந்நம்பிக்கை அச் சத்தைத் துடைத்தொழிக்கப் பயன்படுகின்றது. மனம் பற்றற்று வெறுமையாக இருக்கும்போதே அது தன்னுற்ற லோடிருக்கும். நம்பிக்கைகள், சித்தாந்தங்கள், பொன் மொழிகள், கட்டுப்பாடுகளுள் மூழ்கிய மனம் எதையும் தோற்றுவிக்குந் திறனிழந்து, நம்பியவற்றையே மீண்டும் மீண்டுங் கூறி ஆற்றல் குன்றி எழுச்சியற்றதாய் விடும்.
ஒருவர் ஒன்றை நம்பும்போது அவர் தம்மையே அறிந்து கொள்ளும் இயல்பை இழக்கின்ருர், நம்பிக்கை எதுவுமற்றவர் தம்மையே தாம் காண்பாரா? நம்பிக் கையை நீக்கியவர் காண்பதற்குரித்தாக ஏதாவதுண்டா? நம்பிக்கையோடு தொடர்புகொள்ளா மனமே தன்னைத் தான் காணும் . இந்நிலையே தன்னறிவு தோன்ற வழி வகுக்கும். நம்பிக்கை என்ற உருவில் அவா செயல்புரி வதைத் தெரிந்து கொள்ளாவிடின் வாதமும், பிணக்கும், துக்கமும், மனிதர்களுக்கிடையே நில வும் பேதமும் தோன்றிக்கொண்டேயிருக்கும். உயிர்களுக்கு அப்பாற் பட்டதோர் இறைவன் இருக்கிருன்; அவன் உயிர்களை எல்லாம் பாதுகாத்து வருகிருன்; உயிர்களின் நிகழ் காலம், இறந்த காலம் அ னை த் தும் அவன் கையிலே உள்ளன. என்ற நம்பிக்கைகளெல்லாம் முதிர்வுபெருத மனத்தினுற் தோற்றுவிக்கப்பட்டனவாம். இவ்வெண் ணங்களெல்லாம் மக்களது சொந்த விருப்பிற்கமையத் தோற்றுவிக்கப்பட்டன.

Page 56
அறிவு உண்மை காணுமா?
உண்மையைக் காண அறிவு தேவையா? " எனக்குத் தெரியும்' என்று சொ ல் ப வர் உண்மையை அலசி ஆராய்ந்து காணமுடியுமா? " "எ மக் குத் தெரியும்' என்று பெருமை கொள்ளும் அளவுக்கு அ வ ரு க் குத் தெரிந்த தெது? வரையறுக்கப்பட்ட ஓர் எ ல் லை க்கு ஸ் இருந்து யாம்பெற்ற அனுபவங்கள், தகவல்கள் ஆதியன வற்றைத் துணைக் கொண்டே தமக்கெல்லாந் தெரியு மென்று செருக்குறுகின்றனர். அறிவும், அவாவும் செயற் படும் முறை ஒன்றேயாம். 'எனக்குத் தெரியும்" என்ற மனநிலையை நுணுக்கமாக ஆராயின், தெரியுமென்ற மனநிலையும் பிரிவினையைத் தோற்றுவிக்கும். அஃதாவது "'எனக்குத் தெரியும்" என்பது, தன்னையும் மற்றவரை யும் பிரிக்கின்றது. அறிவு பிறர் மீது அன்பு செலுத்த அல்லது அயலவர்களோடு பிணக்குகளேற்படாவண்ணம் தடுக்க அல்லது அகத்தே ஆசை ஏற்படாவண்ணம் தடுக்க உதவுகின்றதா?
ஏதாவதொரு சிக்கல் புதிதாக ஒருவரை எதிர்நோக் கும்போது, அவர் தமது இறந்த கால அனுபவங்கள், இதுவரை தாம் சேகரித்து வைத்த தகவல்கள், பெரிய நூல்கள் பலவற்றிலிருந்து தாம் பெற்ற அறிவுகள் ஆகிய வற்றைத் துணைக் கொண்டே அதனைத் தீர்க்க முனைகின் ருர் . இறந்த கால அனுபவங்கள், கோட்பாடுகள் ஆகிய வற்றிற் ருேயாது செயற்படுகின்ற ம ன மே சுதந்திர மானது. அ னு பவ ங் க ள், இறந்த கால நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஒதுக்கித் தள்ளி, எழும் பிரச்சினையை நேரடியாகத் தீர்க்க முனைகின்ற மனமே உண்மையைக் காணுமியல்பைப் பெறுகிறது. த ன்ன நிவு அல்லது உணர்ச்சி விழிப்பு நிலையில் செயற்படும். பிறவற்றிற் ருேயாத சிந்தனையில் ஆழாத மனத்தின் (Unconscious

- 95 -
mind) எதிர்ச்செயல், தன்னறிவு மனத்திலும் (Conscious mind) துரிதமாகச் செயலாற்றுகிறது. மேலீடான மனந் தொழிற்படுஞ் சூழ்நிலை ஏற்படும்போது, தன்னறிவு மனத்தின் செயற்பாட்டையும் மேலீடான மனத்தின் செயற்பாட்டையும் ஓரளவு அறிந்துகொள்ள முடியும் .
மனமும் நம்பிக்கையும்
விழிப்போடிருக்கும் மனம் அமைதியாகச் சிந்திக்கும் போதும், எதையாவது உன்னிப்பாகக் கேட்டு அவதா னித்துக்கொண்டிருக்கும்போதும் பிறவற்றிற்றே யாத மேலீடான மனம் மிகவும் துரிதமாகவும், விறுவிறுப் பாகவும், விழிப்பாகவுஞ் செயலாற்றத் தொடங்குவ தால் அம் மனம் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்குரிய விடைகளையும், விளக்கங்களையுந் தானே பெற்றுக்கொள் ளும். கட்டாயப்படுத்தப்படாத மனம் சுயமாகச் சிந்திக் கும் இத்தகைய ஆற்றலைப் பெறுகிறதா? எந்த ஒரு பிரச்சினையையும் நேரடியாக அணுகி ஒன்றுக்கும் இன் னென்றுக்குமிடையே நிலவும் தனிப்படுத்தும் செயற் பாட்டை அம்மனத்தால் நீக்க முடிகிறதா? நம்பிக்கை மக்களை ஒன்று சேர்க் காது. வரையறுக்கப்பட்ட, திட்ட மிட்டு அமைக்கப்பட்ட எந்தச் சமயமும் மக்களை ஒன்று சேர்க்காது. மக்களுக்கிடையே பிரிவினைகள் ஏற்பட இம்மதங்கள் அடிகோ லுகின்றன வேயன்றி மக்களை ஒன்றுபடுத்த அவற்ருல் முடியாது. மக்களினிடையே வேற்றுமை மனப்பான்மையை வளர்த்ததன் பயணுகவே மதங்கள் உருவாகின. எனவே, நம்பிக்கை மக்களிடையே வேற்றுமை தோற்ற வழிவகுக்கின்றதென்பது உண்மை யான கூற்ருகும்.
சமாதானம், அமைதி என்பவற்றை ஏற்படுத்த எத்தகைய கூக்குரல்கள் எழுப்பினுலும் - முயற்சி எடுத் தாலும் அமைதி, சமாதானம் ஆகியவற்றை ஒருபோதும்

Page 57
سس۔ 96 --س۔
அடையமுடியாது. மனம், முரண்பாடு, பிணக்கு ஆகிய வற்றை உருவாக்கும் ஆற்றலுள்ள தாதலால் தன்னைப் பிறரில் இருந்து நம்பிக்கை வழிபாட்டு முறைகளாற் பிரித்து இயங்கும் ஒருவர் ச கோ த ரத் துவ ம், சமா தானம் என்பனபற்றிப் பேசுதலால் பயனேற்படாது. உண்மையை அறிய உண்மை யாக விழையுமொருவர் அறிவு, நம்பிக்கை ஆகி யவற் ருே டு அவா எப்படித் தொடர்பு கொண்டுள்ளது என்பதை முதற் கண் தெரிந்து கொள்ளவேண்டும். உண்மையைக் காணவிழையும் எந்த மனமும் எதையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள, சேகரிக்க, சேகரித்ததைச் செயற்படுத்த மறுக்கவேண் டும். அறிவு என்ற சுமையால் நலிவு பெற்ற மனம், ஒருபோதும், உண்மையை அறிந்துகொள்ளாது. அஃதே போல் எதையும் நம்பும் மனமும் , உண்மையைக் காணுது. 'நம்பிக்கை' என்ற அடிப்படையில் செயலாற்றும் மனத்திற் பிறந்த அறிவுக் கற்பனை உருவெளித் தோற்ற மாக இருக்குமேயன்றி உண்மையைக் காண வழிகாட் டாது. நம் பிக் கை, அறிவுத்தேக்கம் ஆகியவற்ருற் செயற்படும் மனம் ஒருபோதும் உண்மையைக் காணுது. நம்பிக்கை, அறிவு, கொள்கை, அனுபவம் ஆகிய சிக்கல் விளை தளைகளிலிருந்து விடுபட்டு, பிரிவினை மனப்பான் மைக்கு வழிகோலா மனமே உண்மையைக் கண்டறிய
வல்லது .

உண்மையும் பொய்யும்
உண்மையைத் திருப்பித் திருப்பிக் கூறுவதினுல் அஃதெப்படிப் பொய்யாகும்? பொய் என்ருல் என்ன? பொய் சொல்லுவது ஏன் தவறு? இவ்வினக்களை மேலெ ழுந்த வாரியாகப் பாராமல், சற்று ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், உண்மைக்கும், பொய்க்குமுள்ள தொடர்பு விளங்கும். ஒருவன் ஒன்றை உள்ளத்தில் அறிந்துகொள் ளும்போது அதனை அவரால் உள்ளவாறு திருப்பிக் கூற முடியுமா? உண்மை அனுபவத்தைச் சொல்லில் வடித்துக் காட்ட முடியாது. ஒருவர் தம் அனுபவத்தைக் கூறும் போது அவ்வுண்மையைப் புலப்படுத்துஞ் சொற்களுக்கு முதன்மை அளிப்பதிலேயே கவனஞ் செலுத்துகின்ருர், இதனுல் அவர் உண்மை அனுபவத்தோய்விலிருந்து விலகிச் செல்கின்றர். அவர் சொல்லில் வடிக்கக் காட்ட எடுத்த முயற்சி அவர் அவ்வனுபவத்திற்ருேய்ந்த உணர்வையேயாம். எனவே, அவர் உண்மையை மறந்து வெறும் உணர்வையே திருப்பித்திருப்பிக் கூறுவதில் தேர்ச்சி பெற்றுள்ளாராவார்.
அனுபவமும் உண்மையும்
உதாரணமாக, 'அன்பு" எத்தகையதென்பதை ஆராயப் புகின், 'அயலவனை நேசி" என்னும்போது அஃது ஒருவருக்கு உண்மை யா க ப் படுகின்றதா? அயலவனை நேசிக்கும்போதே அவ்வுண்மை அவருக்குப் புலப் படுகி ற து. எனவே 'அன்பு" என்னும் அனு பவத்தைத் திருப்பிக் கூற முடியாது. "அன்பு" என்ற சொல்லை வேண்டுமானல் பன்முறை திருப்பித் திருப்பிக் கூறலாம். எனவே, பிறரது அனுபவத்தையோ, தமது அனுபவத்தையோ, ஒருபோதும் ஒருவரால் திருப்பிக் கூற முடியாது. திருப்பித் திருப்பிக் கூறுவதனல் எப் பொருளும் உண்மையாகாது,
7

Page 58
- 98 -
பொய்யென்பது உண்மைக்கு மாழுனதொன்றன்று ஒன்றைக் கூறும்போது அது சரியா? பிழையா? என்று சீர்தூக்கி ஒப்பிட்டு வேறுபடுத்துவதால் அக்கூற்றின் உண்மையை அறிந்துகொள்ள முடியாது. ஒருவர் ஒரு பூவைப் பார்த் து "இப் பூ அழகாக இருக்கின்றது" என்று சொல்வாராணுல், அவர் உண்மையில் அம் மலரின் அழகை அனுப வித் தா ர்-அனுபவிக்கிருர்-என்று சொல்ல முடியாது. மலரின் அழகை உண்மையில் உணர் பவருக்கு மலரானது தன் னி லி ரு ந் து வேறுபட்டுத் தோன் ருது. காண்பவரும், காட் சிப் பொருளாகிய மலரும் ஒன்ருகி அங்கே காண்பான், காட்சிப்பொருள் என்னும் நிலை அகன்று இரண்டும் ஒன்ருகி விடுகின்றன. ஒருவர் ஒரு கொள்கையைத் திருப்பித் திருப்பிக் கூறுவத ஞல் அவர் ஒரு கொள்கையை-சித்தாந்தத்தை உரு வாக்கித் தாம் உருவாக்கிய ஆலயத்திற் சரண் புகுகின் றர். எனவே, வெறுஞ் சொல் உண்மையாகாது; அவ் வாறே உண்மையும் வெறுஞ் சொல்லன்று.
தன்னைத்தானே அறிதல்
ஒருவர் ஒன்றைத் திருப்பித் திருப்பிக் கூறுவதனல், அவர் தம்மைத் தாமே தம்முள்ளாற்றலால் மயக்கி விடுகின்றர். இதனுல் உண்மையிலிருந்தும் நீங்கி வெறும் மாயையையே காண்கின்ருர் . இவற்ருல் தொடர்பற்று விடுபட நேரடியாக ஒன்றை அனுபவிக்க வேண்டு மென்பது நீக்கமுடியாத வொன்ரும் , ஒருவர் நேரடியாக ஒன்றை அனுபவிக்க முதலில் தன்னைத்தானே அறிந்து கொள்வதோடு, அவர் பயன்படுத்துஞ் சொற்கள், பழக்க வழக்கங்கள், உணர்வுகள், மீட்டு மீட்டுஞ் சொல் லல் ஆகியவற்றின் செயல் முறைமையையும் அறிந்து கொண்டிருக்கவேண்டும். இவ் விழிப்புணர்ச்சியே ஒரு வருக்குப் பூரண சுதந்திரம் கொடுக்க வல்லது. இத் தகைய கட்டுப்பாடற்ற, சுதந்திர சூழ்நிலையிற்ருன் புதிது புதிதாக வரும் அனுபவங்களை அவ்வனுபவங் களில் ஒன்றியுணர முடிகிறது.

س 99 سم.
பொய்யெனப்படுவதென்ன? பொய் சொல்லுவது ஏன் குற்றமாகக் கருதப்படுகிறது? பொய்யென்பது ஒரு முரண்பாடேயாம். இம் முரண்பாடானது (contradiction) மனத்தின் தன்னறிவு நிலையில் அல்லது உணர்ச்சி விழிப்புள்ள நிலைமையில் ஏற்படலாம். பொய் யெனப்படுவதென்ன? உள்ளுணர்ச்சியின் முரண்பட்ட வெளிப்பாடே பொய்யாகும். ஒருவர் ஏன் பொய் சொல்கின்ருர் ? சிக்கலான இவ்வினவிற்கு விடைகாண, யாம் பொய்யானது உண்மையின் எதிர்ச்சொல் அல்லது உண்மையின் எதிர்ப்புறம் அல்லது எதிர்நிலையெனக் கொள்ளாமல் இரண்டையும் ஒப்புநோக்காது அவற் றைத் தனித்தனியே ஆராய வேண்டும். உண்மைக்கு எதிர்ப்புறமான இம் முரண்பாடு ஏற்படக் காரணம் யாது : யாம் ஏதோ ஒரு முறைப்படி, ஒரு திட்டப்படி ஒரு நம்பிக்கையைத் தழுவிக் கட்டுக்கோப்புடன் வாழ முயலுகின்றேம். இம் முயற்சியை நிறைவேற்றச் சீரிய முறைப்படி கட்டுக்கோப்புடன் வாழவேண்டுமென்ற ஆசை ஏற்படுகிறது. அத்தகைய முறைக்கிணங்க ஒரு நம்பிக்கையைத் தழுவி வாழாத நிலையிலேயே இவ்வாசை ஏற்படுகிறது. வாழ்க்கைக்கு ஒரு முறையும், ஒழுங்கும், கொள்கையும், நம்பிக்கையும் தேவைப்படுவதேன்?
பொய்க்கு வித்து யாது?
பாதுகாப்பிற்காகவும், பிறரிடமிருந்து நல்லெண் ணத்தைப் பெறுவதற்காகவுமே இவ்வொழுங்கு முறைப் படி ஒருவர் வாழ முனைகின் ருர் என்று கூறுதல் மிகையாகாது. எனவே, ஒருவர் ஒரு முறைப்படி வாழ முனையும் போதே முரண்பாடும் கூடவே பிறந்து விடு கிறது. எனவேதான் உண்மை, பொய்யென்ற பிளவை மனம் உண்டுபண்ணுகிறது. ஒருவர் ஒருவகை வாழ்வை மேற்கொண்டவரா யிருந்துகொண்டே வேருெருவகை யான வாழ்க்கையை மேற்கொள்ள முனையும் முயற்சியே

Page 59
- 100 -
அவரை இத்துணைச் சிக்கல்களிலெல்லாம் ஈடுபடச் செய் கிறது. இம்முரண்பாடே சகல அழிவுக்கும் மூல காரண மாக இருக்கிறது. ஒருவர் தன்னை வேறு ஒன்ருேடு பூரண மாகச் சங்கமம் 'ஆக்கிக் கொள்ளும்போது, காணும் போது (Identification) ஒருவர் தன்னுணர்விழந்து வேருென்ருேடு வேறறக் கலக்கும்போது, இம் முரண் பாடு மறைகிறது. ஒருவர் தாமென்ற உணர்விழந்து பிறிதொன் ருேடு ஐக்கியப்படும்போது இம் முரண்பா டகலத் தன்னடக்கம் (Self-enclosure) ஏற்படுகின்றது. இது நிலை தவறிய, ஒரு சார்புடைய, நடுநிலை யில்லாத நடுநிலையிலேயே கொண்டுபோய்விடும். இந்நிலை தவிர்க்க முடியாதவொரு நிலையாகும். ஒருவர் ஒன்றைச் செய்து அது வெளிவரக் கூடாதென விரும்புவாராயின் அது முரண்பாட்டை விளைக்கும். ஒருவர் தம்மை வேருெருவ ராக மாற்றவேண்டு மென்ற அவா முயற்சி இல்லாத போது அச்சம் அகலும் . அச்சம் அகல முரண்பாடு நீங்குகின்றது. ஒருவர் வாழ்க்கை பெரும்பாலும் அவரது மனநிலையை ஆதாரமாகக் கொண்டுள்ளது. மனநிலையைப் பொறுத்தே அவரது நாளாந்தப் பிரச்சினைகளை ஒருவர் எதிர்நோக்குகின்ருராதலின் அவருக்கு அந் நிலை யி ல் முரண்பாடு எழுகின்றது. முரண்பாடே பொய்க்கு வித்தா யமைகின்றது.
வாழ்வும், முரண்பாடும்
மக்கள் வாழ்க்கை பெரும்பாலும் உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றமையால், முரண் பாடானது நீக்க முடியாவொன்முகும். மக்கள் அபிப் பிராயங்களும், நினைவுகளும் அச்சத்தை உருவாக்குகின் றன. இவற்றை மூடிமறைக்க அவர்கள் மேற்கொள்ளும் முயற்சி முரண்பாடு தோற்ற வழிவகுக்கின்றது. இஃது மக்களகத்தே ஒருவகைப் போரை மூட்டி விடுகிறது. இந்த அகப்போர் நாளடைவில் அடைந்தாரூடாக வலி யொடு பரவி உலகப் போராக மூளும்போதே முரண் பாடும் முடிகின்றது. பிரச்சினைகளுக்குரிய காரணத்தை உணர முயலாது வெற்றுவேடம் போடும் செயலிலேயே

- 101 -
மக்கள் ஈடுபடுகின்றனர். மக்கள் வாழ்க்கை முரண் பாடுடைய தென்பதை அவர்கள் அறிந்து கொள்ளா ராயின் அவர்பால் தெளிவு பிறக்காது. சமாதானம் , சமாதானம் என்று ஒலமிடுவோர் வரையறுக்கப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, தனித்துவத்தை இழக்காமல் செயற்பட்டுக்கொண்டே சமூகச் சீர்கேட்டை நீக்க முனைகின்றனர். வெறும் உணர்ச்சிக்கு அடிமையாகி உணர்வு நிலையிலேயே செயலாற்று மியல்புடைய எம் மால் முரண்பாட்டை நீக்க இயலாது. ஒன்றை ஏற்றுக் கொள்கின்றவர் அதைவிடப் பிறிதொன்றைச் சிறந்த தென்று காணும்போது முன்னதை மறுத்துப் பின்னதை ஏற்றுக்கொள்கின்றனர்; இப்படி முரண்பாடானது மக்கள் வாழ்க்கையைச் சீர்குலைத்துக் கொண்டே வளர்ந்து வருகிறது. இம்முரண்பாடே பொய் தோன்றக் காரணமாயிருக்கிறது.
உண்மை வெளிப்படும் நிலை
இப்பொய்க்கு எதிர்மாருன உண்மையென்ற ஒன்றை மக்களே உருவாக்கினர். ஆயினும் உண்மை பொய்க்கு மாருனதன்று. எதற்கும் மாறனது உண்மையாகாது. * யான் உன்னை விரும்புகின்றேன்' என்று சொல்லும் போது, அக் கூற்றிலேயே பொருமை, அவா, அச்சம் ஆகியவை உடனின்று செயற்படுகின்றன. இவை முரண் பாட்டிற்கேதுவாகின்றன. எனவே, இந்த முரண்பாட் டையே முதலில் அறிந்துகொள்ள வேண்டும். எவ்வித விருப்பு வெறுப்பற்ற நிலையிலிருந்து இம் முரண்பாட்டை அவதானிக்க ஒருவருக்கு முடியுமானல் அவருக்கு உண்மை புலப்படும். ஒருவர்பாலுள்ள முரண்பாட்டின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளும்போது-அவரை அவரே நேரடியாகக் காணும் வாய்ப்பேற்படுகின்றது. அவரை அவரே நேரடியாகக் காணும் வாய்ப்பும் அவருக்கேற்படும்போது அவர் ஒருவராயிருந்து கொண்டு வேருெருவராகப் பாவனை காட்டும் போலி உருவம் மறைய, உண்மை வெளிப்படுகிறது. இந்நிலையில் பின் பற்றல், கொள்கைப்படி நடத்தல், இன்பத்தை நாடல் என்ற நிலைகள் மறைகின்றன. அவரகத்தே ஏற்படும் முரண்பாடும் மறைகின்றது.

Page 60
பாலுணர்ச்சி பிரச்சினையாவது எப்போது ? -
மக்களோடு தொடர்புகொண்ட ஒவ்வொன்றும் பிரச்சினைக் குரியதா வ தேன் ? மக்கள் தொடர்பு, வாழ்க்கைமுறை, பாலுணர்ச்சி ஆதியனவும் வேற்றுமை யுடையனவாய்க் காணப்படுகின்றன. இவ்வாறு மக்கள் ஈடுபடும் ஒவ்வொரு காரியமும் அஞ்சத்தக்கவொன்ருக மாறுவதற்காம் காரணங்கள் எவை? மக்கள் பல்வேறு துன்பங்களுள் அழுந்தக் காரணமாயிருப்பதென்ன ? பாலுணர்ச்சி பிரச்சினைக்குரியதாகத் தோன்றக் காரண மென்ன? குறிப்பிட்ட ஒரு கருத்துநிலைக்கமைய மக்கள் சிந்திப்பதாலேயே இத்துணைச் சிக்கல்களும் எழுகின்றன என்று கூறல் மிகையாகாது. மக்கள் எப்பொழுதும் குறிப்பிட்டதொரு மையத்திலிருந்து விளிம்பைச் சுற்றி யுள்ள எல்லைக்கோட்டை நோக்கியே சிந்திக்கின்றனர். ஆனல், மக்களிற் பெரும்பாலார்க்கு விளிம்பே மைய மாகவிருக்கின்றபடியால் அவர்கள் எதைத் தொட் டாலும் அது வெறுமனே ஒரு மேலெழுந்தவாரியானஆழமில்லாத-உறுதியற்ற ஒரு செயற்பாட்டில் முடிவுறு கின்றது. V
'நான்’ என்ற உணர்வு
வாழ்க்கை என்பது மேலெழுந்தவாரியானதொன் றன்று. விளிம்பில் செய்யும் ஒவ்வொரு காரி யமும் சிக்கலை விளைக்கும். "'நான்' என்ற உ ண ர்  ைவ க் கொண்ட விளிம்பில் மக்கள் வாழும்வரை பிரச்சினை நீங்காது தொடரும். மனம் என்ற எல்லைக் கோட்டிற் குள் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும்வரை பிரச்சினை களும், சிக்கல்களும் சாகாவரம் பெற்றனவாய் வாழும். குவிக்கப்பட்ட-சேகரிக்கப்பட்ட உணர்வுகளும், அவற் றின் மாறெதிர்ச் செய்கைகளும் மனத்தின் விளைவுகளே யாம். மனமே பிரச்சினைகள் எல்லாந் தோன்ற மூல காண மா யிருக்கின்றது. மேலெழுந்தவாரியாகத்

مسس۔ 103 -----
தொழிற்படும் மனத்தைப் பண்படுத்தவும் பேணி வளர்க் கவும், திருத்தவும் வாழ்நாள் முழுவதையும் மக்கள் கழித்து வந்து ஸ் ள ன ர். மனத்தைப் பண்படுத்தப் பல்லாண்டுகளாக மேற்கொண்ட முயற்சி வெறும் மனச் சிதையிலடைபட்டுழல வழிவகுத்தது. இவ்விடைவிடாத முயற்சியை மேற்கொண்டதன் பயணுய்க் கண்ட பயன் கபடம், நேர்மை என்பன அற்ற கயவரான மையே umb.
பாலுணர்ச்சிபற்றி மக்கள் கருதுவதென்ன? அஃ தொரு செய்கையா? அல்லது அது செய்கை பற்றிய எண்ணமா? பாலுணர்ச்சி செய்கையன்று. இயல்பான நிகழ்ச்சியே. உண்பது எவ்வாறு இயல்பானதோ அஃதே போல் பாலுணர்ச்சி யும் இயல்பானதாம். ஆனல், உண்பதைப்பற்றி நீளநினைக்கும்போது உண்பது ஒரு பிரச்சினையாகின்றது. அஃதேபோல் வேறு எதைப்பற்றி யும் சிந்திக்காமல் பாலுணர்ச்சிபற்றித் தொடர்ந்து சிந்தித்தவண்ணமிருக்கும்போதே அஃதொரு சிக்கலாக மாறுகிறது. எனவே, பாலுணர்ச்சி நீங்காது தொல்லை விளைக்குமொன்ரு ? அல்லது பாலுணர்ச்சி பற்றிய எண்ணம்தான் அத்தகையதா ? இன்று வெளியாகும் திரைப்படங்கள், சஞ்சிகைகள், கதைகள்,நவநாகரிகப் பெண்களின் ஆடை அலங்காரங்கள் ஆகியனவெல் லாம் பாலுணர்ச்சி பற்றிய எண்ணங்களை வளர்த்து வருகின்றன. புலங்கொளவேண்டிய பிரச்சினைகள் பல இருக்கும் போது பாலுணர்ச்சியிலேயே மக்கள் தம் எண்ணத்தையும், கவனத்தையும், புலனையும் செலுத்தி வருகின்றனர்.
DGrtph urgj Sori i fugih
மனமானது பாலுணர்ச்சி பற்றிய எண்ணத்தால் தாக்கமுறும்போது நடைபெறுவதென்ன? ஒரு வ ர் தம்மை முற்ருக மறந்திருப்பதற்குப் பாலுணர்ச்சியில்

Page 61
- 104 -
முற்றும் ஈடுபட்டு இன்பம் நுகரும் அவ்வேளை உதவு ’கின்றது. வாழ்க்கையில ஒருவர் செய்யும் ஏனையவெல் லாம் 'நான்" என்ற எல்லைக்குள்ளேயே நடைபெறு கின்றன. வாழ்க்கையில் செய்வனவெல்லாம் 'நான்" என்னும் தனித்தன்மையையே மையமாக க் கொண் டியங்குகின்றன. ஒருவரது சமயம், கடவுள், தலைவர்கள், அரசியல் பொருளாதாரச் செயற்பாடுகள், சமூகத் தொடர்புகள் ஆதியனவெல்லாம் "நான்" என்னும் தனித்தன்மையை அடிப்படையாகக் கொண்டே செயற் படுவனவாம். 'பாலுணர்ச்சி” " என்பதொன் றே 'நான்' என்னும் தனித்தன்மையை மையமாகக் கொண்டியங்காத தொன்ரும். எனவேதான் அது துய ரத்திற்குக் காரணமானதாக உருப் பெறுகின்றது. எனவே, ஒருவன் பூரணமாகத் தன்னை மறந்த நிலையிற் கிடக்கும் அந்த அனுபவத்தை மகிழ்ச்சி யென க் கொண்டு அதைப் பற்றிக்கொள்கின்ருன் , அம் மகிழ்ச்சி அவனுக்கு அருவருப்பாக மாறும் போது வேறு ஒரு விளக்கத்திலோ, முறையிலோ ஈடுபட்டுத் தனக்கேற் பட்ட அருவருப்பிலிருந்தும் விடுதலைபெற விழைகின் ருன் மனம் மீண்டும் கற்பு, சந்நியாசம் என்ற பல முறைகளைக் கண்டுபிடித்து மன எழு ச் சி  ைய யும், பாலுணர்ச்சியையும் அ ட க் க முனைகின்றது. இவை அனைத்தும் உண்மையிலிருந்து பிரிக்கும் நடைமுறைக ளாம். இவை மக்களை மீண்டும் "நான்" என்னும் சிறையிலிடுகின்றன. இவற்றின் விளைவாக எழும் துயரமும் தொல்லையும் பிரச்சினைக்குரியதாகின்றன.
பிரச்சினைக்குக் காரணம்
பாலுணர்ச்சியைப்பற்றிச் சிந்திக்கும் மனத்தின் செயற்பாட்டை எம்மால் அறிந்துகொள்ள முடியாத போது பாலுணர்ச்சி நீக்கற்கரிய பிரச்சினையாகத் தோன்றும், பாலுணர்ச்சி பற்றிய எண்ணமே பிரச்சினை

- 105 -
யெழ வழிவகுக்கின்றது. "நான் "" என்பதையும், *" எனது ”” என்பதையும், எனது மனைவி, எனது பிள்ளை. எனது சொத்து, எனது சிறப்பு, எனது வெற்றி என் பனவெல்லாம் நிலவும் வரை பாலுணர்ச்சியை அறிந்து கொள்ள முடியாது. ஒரு வழியில் "நான்', 'எனது' என்ற நிலையை வளர்த்துக்கொண்டே இன்னெரு வழியில் மக்கள் தம்மை மறந்த நிலையில் மகிழ்ச்சி பெற்று வாழ முனைகின்றனர். இவ்விரு நிலைகளும் ஒரே நேரத்தி லெவ்வாறிருக்க முடியும் ? நாளாந்த வாழ்வின் செயற் பாட்டை அறிந்துகொண்டாற்ருன் இந்த முரண் பாட்டையும் அறிந்துகொள்ள மக்களால் முடியும். "அவா " உடையார் ஒவ்வொருவரும் பிரச்சினைகளை நீக்க முடியாதவராவர். " நான் ' என்ற தனித்தன்மை நீங்கும்போதே பிரச்சினைகளும் நீங்குகின்றன. பால் உணர்ச்சியை ஒரு பிரச்சினையாக்கி அதனை நீக்க மனம் முனையும்போது பாலுணர்ச்சி மாறெதிர்ச் செயற்பா. டாகும். எனவே, பாலுணர்ச்சி பிரச்சினைக்குரியதன்று. பாலுணர்ச்சி கூடாது என்ற மனமே பிரச்சினைக்குரிய தாகும். கற்பு என்பது மனதோடு தொடர்பு கொண்ட தன்று. ஒருவனது செயற்பாடுகளை அடக்கவே மனத் தால் முடியும் . இந்த அடக்கும் முறை கற்பன்று. கற்பைப் பின்பற்ற முடியாது. அன்பு மனத்தாற்ருன் அன்பு என்ருல் என்ன என்று அறிந்துகொள்ள முடியும். ஏனெ னில், அன்பு, மனத்தோடு தொடர்புகொண்ட தொன் றன்று. எனவே பலருக்குப் பெரும் பிரச்சினையாகவுள்ள பாலுணர்ச்சியைப் போக்குதற்கு " நான் - எனது "" என்று உரிமை கொண்டாடும் மனத்தை முதலில் அறிந்து கொள்ளல் இன்றியமையாக் கடனும் .
சிந்திப்பவனும் எண்ணமும்
சிந்திப்பானெருவன் இல்லாதபோதே சிந்தித்தல் முடிவடையும். மனத்தின் முழுச்செயற்பாட்டையும்

Page 62
- 106 -
அறியும்போது சிந்திப்பவன் மறைகின்றன். சிந்திப்பவ னுக்கும் எண்ணத்திற்குமிடையே பிளவு ஏற்படும் போதே அச்சம் தோன்றுகிறது, சிந்திப்பவன் கற்பனை யுருவமாவான். விழிப்புணர்ச்சி இருக்கும்போது உண்மை த ர ன க வே வெளிப்படும். பாலுணர்ச்சிக்கு மனம் முக்கியமளிக்கும்போதே அது பிரச்சினையாகின்றது. மனம் முழுச்செயற்பாட்டையும் அறிந்து ஒரு முடிவிற்கு வரும்போது சிந்தித்தல் ஒயும். இந்நிலையிலேயே மனம் புதிதாக ஒன்றைத் தோற்றுவிக்கும் பேரானந்த நிலையை அடைகிறது புதிதாக ஒன்றைத்தோற்றுவிக்கும் நிலையே பேரானந்த நிலையாகும். ஏனெனில், தன்னைமறந்த நிலை யில் மாறெதிர்ச் செய்கைக்கு இடமில்லை. நாளாந்த மெழும் பாலுணர்ச்சிப் பிரச்சினையைத் தீர்த் தற்கு, புலன்களுக்கப்பாற்பட்ட கரு த் தி ய ல |ா ன விடை இஃதன்று. இஃதே உ ண் மை விடையாகும். மனம் அன்பை மறுக்கும்போது கற்புத் தோன்றது. அன்பில்லாக் காரணத்தாலேயே பாலுணர்ச்சி பெரும் பிரச்சினைக் குரியதாகின்றது.

இறப்பிற்கும் வாழ்விற்கும்
இடையேயுள்ள தொடர்பு
மக்கள் வாழ்விற்கும், இறப்பிற்கும் இடையே ஒரு பிரிவு-பிளவு-பிணக்கு இருக்கின்றதா? இறப்பை வாழ்விலிருந்தும் பிரித்து வேருக்கிக் கொள்ளுதற்குக் காரணம் எது ? இறப்பதற்கு யாம் ஏன் பயப்படுகின் ருேம்? வாழ்விற்கும், இறப்பிற்குமிடையே உள்ள இப் பிளவு உண்மையிலுள்ளதா ? அல்லது அது மனந் தோற்று வித்த தோற்றமா?
வாழ்வு என்பது பற்றிப் பேசும்போது, அடையாளம் உள்ள தொடர்ச்சியின் செய்முறையையே குறிக்கின் ருேம். யானும் எனது வீடும், யானும் எனது மனைவியும், யானும் எனது பணஇருப்பும், யானும் எனது இறந்த கால அனுபவங்களும் என்பனவற்றையே வாழ்க்கை யெனக் கொள்கின்ருேம். ஞாபகத்தின் தொடர்ச்சிச் செயல் முறைமையையே வாழ்க்கை என்கின்ருேம். வாழ்வில் சிக்கல்களும், சச்சரவுகளும் அனுபவங்களுமே நிரப் பியுள்ளன. இவற்றிற்கெல்லாம் ஒரு வரையறையை, எல்லையை, முடிவைக் கொண்டு வருவதே சிறப்புடைத் தாகும். எனவே, இவ்வுலக வாழ்விலிருந்து இறப்பானது தம்மைப் பிரிப்பதால் அதைக் கண்டு மக்கள் பயப்படு கின்றனர். இந்தப் பயத்தால் வாழ்வுக்கும், இறப்பிற்கு மிடையே ஒரு தொடர்பை ஏற்படுத்துகின்றனர். தொடர்பை ஏற்படுத்திய இடைவெளியை நிரப்பும் வகையில் ஏதாவது ஒரு விளக்கத்தில், தொடர்ச்சி பற்றிய நம்பிக்கையில், மூழ்கி மனநிறைவு கொள்கின் றனர்.

Page 63
- 108 -
தெரிந்தன - தெரியாதன
மறுபிறப்பில் அல்லது வேறு ஏதாவது வேறுமுறை வழிச்செல்லும் எண்ணத்தின் தொடர்ச்சியில் நம்பிக்கை கொண்டு, தெரிந்தனவற்றிற்கும் தெரியாதனவற்றிற்கு மிடையே ஒரு தொடர்பை ஏற்படுத்த முனைகின்ருேம்" தெரியாததைத் தெரிந்ததோடு இணைப்பதால் இறந்த காலத்தோடு எதிர்காலத்தைத் தொடர்பு படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றேம். வாழ்விற்கும், இறப்பிற் குந் தொடர்புப்பாலம் அமைப்பதே அடிப்படைத் தேவையாக உள்ளது. வாழ்ந்துகொண்டிருக்கும்போதே இறப்பை- முடிவைத் தெரிந்துகொள்ள முடியுமா ? வாழ்ந்துகொண்டிருக்கும்போதே இறப்பைத் தெரிந்து கொள்ள முடியுமானல் ஒரு பிரச்சனையும் எழாது. வாழ்ந்துகொண்டிருக்கும்போதே இறப்பை அனுபவிக்க முடியாதபடியாற்ருன், அதனை நினைத்து மக்கள் பயப் படுகின்றனர். இதனலேயே தெரிந்த மக்களோடும் தெரியாத இறப்போடும் ஒரு தொடர்பைக் கொணர முனைகின்றனர். இறந்த காலத்திற்கும், மனதால் கருத முடியாததும், கற்பனை செய்ய முடியாததுமான ஒன் றிற்குமிடையே தொடர்பு ஏற்படுத்த முடியுமா ? இவை இரண்டையும் பிரித்துப் பார்ப்பதற்காங் காரணம் யாது? தெரிந்தன என்ற எல்லைக்குள்ளேயே மனமானது செயற்படுகின்ற காரணத்தால் அன்ருே மக்கள் இரண் டையும் பிரித்துப் பார்க்கின்றனர்.
உண்மையைக் காணும் வழி
பெரும் அறிஞனய், நடிகனய், எழுத்தாளனய்ப் பல்வகைப் பெயரோடும், புகழோடும் வாழ்ந்த ஒருவன், இறப்பால் இச்சிறப்புக்களையெல்லாம் விட்டுப் பிரிவது சிறிது சங்கடத்தை, துயரை விளைக்கக்கூடியதே. பட்ட மும், பதவியும், பணமும், சுகமும், வாழ்வும் என்று எல்லாமே ஒரு முடிவிற்கு வரும்போது தெரியாததைப் பற்றிய பயம் ஏற்படுகின்றது. இப்பயமே தெரியாத தைத் தெரிந்ததோடு இணைத்து, அதனை அறிந்து, தொடர்பு கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகின்றது.

- 109 -
இறப்போடு இணைந்த வாழ்க்கையைத் தெரிந்துகொள்ள மக்கள் விரும்பார். பதிலாக முடிவில்லாமல் எப்படித் தொடர்வதென்பதையே தெரிந்துகொள்ள முனைகின் முர் . வாழ்வையும் , இறப்பையும் தெரிந்துகொள்ள முனைந்திலர்.
தொடர்வதைப் புதுப்பிக்க முடியாது. தொடரும் போது அங்கு புதியதிற்கும் இடமில்லை - உண்டுபண்ணும் திறனுக்கும் இடமில்லை. ஒன்று முடிவடையும் போதே, புதியது தோன்றும் . முடிவிற்றன் புதுப்பித்தல், உண்டு பண்ணல், புரியாதது புரிதல் என்பன பற்றிய அறிவு கைகூடும். இதைவிட்டு ஆசாபாசங்களையும், எண்ணங் களையும், ஞாபகங்களையும் தொடர்ச்சியாகக் கொண்டு செல்வதால் புதிய தொன்றையும் தெரிந்திட முடியாது. தொடரும் மனிதனல்-தெரியாததைக் காண இய லாது. அவனது அகத்தின் வெளிப்பாட்டை யே, அவனற் காண இயலும் . தெரிந்ததை மையமாகக் கொண்ட அவனது அகத்தில் தோன்றும் வெளிப்பாடு உண்மையன்று. வாழ்ந்துகொண்டு இருக்கும்போதே இறப்பது சாத்தியமாகுமா ? ஒவ்வொரு நாளும் இறந்து நாளைப்பொழுதைப் புதுப்பித்த வண்ணமே இருக்க முடியுமா? இந்நிலையிற்ருன் ஒரு வ ரா ல் வாழ்ந்து கொண்டே இறப்பைத் தெரிந்து கொள்ள முடியும். தொடரும் அந்த நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளியிடும்போதே - புதியது தோன்றும்போதே நிலையான, என்று முள்ள உண்மை உருவாகும்.

Page 64
அழகும் அழகின்மையும்
அழகென்பது ஒரு செயலுமன்று ; ஓர் அமைப்பு மன்று ; ஓர் உணர்வுமன்று, எளிமையின் மனவெழுச்சி காரணமாக மனமானது 'நான்' என்ற மையத்தி லிருந்து விடுபட்ட - துறந்த நிலையே அ ழ கா கும். அவாவற்ற - இன்பந் துறந்த தவமானது, திட்டமிடப் பட்ட கட்டுப்பாடு, தன்னையே மறுத்தல் ஆதியனவற்றின் பெறுபேருக இருக்காதபோதே எளிமை தோன்றும் . இத்தகைய எளிமை முடிவற்றது. இத்தகைய விழுமிய, ஒப்பற்ற நிலையை அன்பே தோற்றுவிக்கும். அன்பு தோயா வெற்றுருவாய அழகைநாடும் உள்ளுயிர்ப்பும் ஊக்கமும் "நான்' என்னுந் தனித்தன்மையா லேற் படும் இன்பதுன்பந் துறந்த தவமுமற்ற சூழ்நிலை நிலவும் அநாகரிகமாம் நாகரிகத்தை மக்களிற் பலர் படைக் கின்றனர்.
மனத்தின் செயற்பாடு
நம்பிக்கைகள், கோட்பாடுகள் ஆதியனவற்றிற்கு ஒருவர் தன்னையே பலி யா க் கிக் கொள்வாரானல், அங்கு 'தன்னைத் துறத்தல்' என்ற (self.abandonment) நிலையில்லாமற்போய்விடுகிறது. குற்றமற்ற தூயமனத் தால்தான் தெரியாததைப்பற்றி ஆய்வு நடத்தமுடியும் . "நான்' என்பதை மையமாகக்கொண்டு செயல் புரியும் எவராலும் உண்மையை உணரமுடியாது. "'நான்" என்பதைத் துற ந் த மனத்திலிருந்துதான் கருணை, பணிவு ஆகிய அன்பின் வெளிப்பாடுகளைக் காணலாம். மக்களிற் பொரும்பாலோர் தாம் படைத்ததொன்றி னுாடாகவோ, வேறு ஒன்ருேடு இன்னென்றை இணைப் பதினூடாகவோதான் அழகைத் தெரிந்துகொள்கின்

- 111 -
றனர். தோற்றுவிக்கப்பட்ட ஒன்றின் துணை கொண்டு அல்லது ஒன்றை வேருென்ருேடு தொடர்புபடுத்தியே அழகை அறிகின்றனர். ஒரு மரத்தை, ஓர் ஆற்றைப் பார்த்து அவை அழகுடையனவெனப் புகழ்கின்றனர். பொருள்கள் சிலவற்றை முன்கண்டனவற்றேடு ஒப் பிட்டுப் பார்ப்பார், அப்பொருட்களுட் சில அழகற்றன வென்று, அழகை அறிந்தார் கூறுவதுபோற் கூறுகின் றனர். ஆயின், அழகை ஒப்பிட்டறிய முடியுமா? அழகை வெளிப்படையாகத் தெ விரி வா க க் காண முடியுமா ? ஒவியம், காவியம், பூ, ஒருவர்முகம் என்பனவற்றைப் பார்த்து அவை அழகுடையன எனக் கூறுவார், அவ்வாறு கூறுதற்குத் காரணமா யமைந்தன அவர் கள் மு ன் பு பார்த்த பொருள்களின் ஞாபகங்களாய் மனத்திற்பதிந்த எண்ணங்களே யாதலால், அழகு ஒப்பிடுதலின் விளை வாய் விளைந்த தோற் ற மாம். ஒப்பிட்டுப் பார்க்கும் போது அழகு முடிவுடைய பண்பாகின்றது. அழகை விழைந்து நாடுவதும் அழகின்மையை வெறுத்தொதுக்கு வதுமாகிய செயற்பாடுகள் உருவாகி உருவாகி மறைய மறைய உணர்ச்சியற்ற நிலை உருவாகின்றது,
அழகின் ஒப்பற்ற நில
அழகெனப்படுவது யாதென்பதை அறித ந்கும் உணர்தற்கும், அழகு அழகற்றதெனக் கூடுவனவற்றைத் தனித்தனி உணர்தல் வேண்டும் , உணர்வு உணர்வாய் நின்று மறையுமியல்புடைத்து, அழகு அழகற்றதென்று உணரும் உணர்வு வேறுபாடற்றது. மக்கள் தாம் காணு மொன்றைப் பார்க்கும்போது சமூக, சமயக் கண் கொண்டு பார்க்கின்றனர். இத்தொடர்புகளற்ற-பந்த பாசமற்ற வகையில் பற்றற நின்று நோக்குந் திறன் பலருக்கில்லை. வரையறுத்த கோட்பாடுகளாற் கட்டுண்டு தன் திறனற்ற மனமுடையார் ஒன்றை அழகுடைய

Page 65
- 1 12 -
தாகவும் மற்ருென்றை அழகற்றதாகவுங் காண்கின் றனர். மனத்தின் பிழையான செயற்பாடு உணர்வை யும் நல்ல உணர்வு தீய உணர்வெனப் பாகுபடுத்திவேறுபடுத்திப் பிரிக்கின்றது. இவ்வாறு முரண்பட்ட உணர்வுகள் தோன்றி மறைந்து மாறிப் பிரிவதன் விளைவு உணர்வின் அழிவிற்குங் காரணமாயமைகின்றது.
அழகின் ஒப்பற்ற நில
பற்றுள்ளத்தால் தொடர்புடையார் பால் நெகிழும் அன்பு போலன்றி எவ்வுயிர்கள்பாலும் வரையறை, கட்டுப்பாடின்றிச் செறியும் அன்பு முற்றிக் கனிந்த அருளும் அத்தகு விழுமியதாம் கூர்ந்த மனவெழுச்சிச் செறிவும், ஆர்வமும் அழகு அழகற்றதென்று வேறு பாடுகளுக்குட்படா பிற வற் ருே டு தொடர்பில்லாத வலிமைசேர் உணர்வுமே ஒப்பற்ற அழகுணர்ச்சி மலர் விப்பன. இத்தகைய அழகுணர்ச்சியின் ஒப்பற்ற நிலையில் அழகு அழகற்றதென்ற வேறுபாடுகளுக்கும் ஒப்பிட்டு நோக்கலென்ற சிறுமைக்கு மிடமில்லை. அழகு ஒப்பும் உயர்வுமற்றதால் அழகுக் கெதிராம் அ ழ க ற் ற து மில்லையாம். o

- 113 -
கொள்கைவயப்பட்டவர் சிந்தனையற்ற பிரகிருதி யாவார். அவர் ஒரு முறையை உறுதிப்படுத்துகிருர், அவர் சொற்ருெடர்களைத் திருப்பித் திருப்பிச் சொல்வ தோடு, ஒரே தடத்திலேயே சிந்திக்கிருர் .
எங்களுடைய இதயம் வெறுமையாக இருக்கும் போதே நாம் விடயங்களைச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிருேம்.
கட்டிவளர்க்கப்படும் ஒழுக்கம் - நல்லறம் - கோர மானது. ஏனென்ருல், ஓர் ஒழுக்கத்தைக் கட்டி வளர்க் கும்போது அது ஒழுக்கமில்லாமல் போய்விடுகிறது. ஒழுக்கம் இயற்கையானது. காலம் கடந்தது. நிகழ் காலத்திலே செயற்பட்டுக்கொண்டிருப்பது,
தெளிவு எந்நிலையிலும் அவசியமாகும். உங்கள் வீட்டிற்குப் போவதற்கான வழி தெளிவில்லாம லிருந் தால் குழப்பமடையவேண்டி வரும். உங்களுடைய உணர்வுகள் பற்றிய தெளிவு உங்களுக்கு இல்லாம லிருந்தால், சுய முரண்பாடு எழும். உங்களது சிந்தனைப் போக்கை உங்களாற் சரியாக விளங்கிக்கொள்ள முடியா விட்டால், அந்தத் தெளிவின்மை மாயைக்குள் கொண்டு வந்து விடும்,
Lanka Tricotting Industries Ltd.

Page 66
- 114 -
ஒரு பிரச்சினைக்குத் தீர்வுகாண ஆசைப்படாத சுதந்திரம் அப் பிரச்சினையை விளங்கிக்கொள்ள அவசிய மாகும்.
உண்மையைக் கேட்கும்போது அதன்படி இயங்காம லிருந்தோமானல், அது எங்களுக்குள் நஞ்சாகி வரும். பின்னர் அது பரவி, மனேவியல் இடையூறுகளையும். சமநிலையில்லாமையையும், ஆரோக்கியமற்ற நிலையையும் கொண்டுவரும் .
அண்மையில் ஆரம்பிக்காமல் சேய்மையை அடைய முடியாது. அண்மையைக் கடந்துதான் சேய்மையை அடைய வேண்டும் ,
அறிவுக்கு அடிமையாவது ஏனைய பழக்கங்களுக்கும் அடிமையாவதை ஒத்ததே. இது வெறுமை, தனிமை, விரக்தி ஆகியவற்றின் பயத்திலிருந்து தப்பிக்கப் பண்ணு கிறது.
நீங்கள் உங்களைக் கண்டுபிடிப்பதற்கு உறவுகளே கண்ணுடி,
Siedles Cineradio, Front Street, Colombo,

- 115 -
அறிவு அவதானிப்பைத் தடுக்கிறது.
ஒன்றைக் குறித்து நீள நினைவதும், கற்பனை பண்ணு வதும் அவதானிப்புக்குத் தடையாகும்:
*நான் ஒன்றும் அறியாதவன், எனக்குத் தெரியாது" என்று உண்மையாகவே உணர்ந்தவனைத்தான் ஞானமும் உண்மையும் வந்தடையும்.
எதிர்காலத்தை நோக்குதல், ஒரு கொள்கைக் கோட்பாட்டுக்குப் பின்னே முயற்சி செய்தல் ஆகியன மனத்தின் மந்த நிலையையும், நிகழ்காலத்திலிருந்து தப்பிக்கும் ஆசையையும் காட்டும்.
நிறைவைத் தேடுதல் விரக்தியை வரவழைப்பதாகும்,
பதிலொன்றுக்கு ஆசைப்படாத சுதந்திர நிலையே ஒரு பிரச்சினையை விளங்கிக்கொள்வதற்கு அவசியமான நிலையாகும்,
Robert & Co., Canal Row, Fort,

Page 67
- 1 16
ஒரு கிண்ணம் வெறுமையாக இருக்கும்போது மட்டுமே உபயோகமானதா யிருக்கும். நம்பிக்கைகள், சித்தாந்தங்கள், உறுதிகள், மேற்கோள்கள் ஆகிய வற்ருல் நிரம்பிய மனம் ஆக்கத் திறனற்ற மனமாகும். இது வெறுமனே கூறியதைக் கூறும் மனமாகும்.
வாழ்க்கை என்ன அர்த்தப்படுகிறது ? வாழ்க்கை தனித்துவமான ஒன்றில்லையா? பறவைகள், செழித்திருக் கும் மரங்கள், சொர்க்கங்கள், நட்சத்திரங்கள், நதிகள்அவற்றிலுள்ள மீன்கள் எல்லாமே வாழ்க்கை, வாழ்க்கை வறுமையும், செல்வமும் உடையது. வாழ்க்கை குழுக்க ளிடையேயும், இனங்களிடையேயும், தேசங்களிடையே யும் சதா தொடர்ச்சியாக நடைபெறும் போர். வாழ்க்கை தியானம், வாழ்க்கையே நாம் சமயமென்று அழைப்பது. அது, கூடவே மனத்தின் புதையுண்டபொருமை, பேரவா, ஆசைகள், பயங்கள், திருப்திகள், ஆர்வங்கள் ஆகியவற்றை அடக்கியது. இவையும், இவை போன்ற பலவுமே வாழ்க்கை. நாம் பெரும்பாலும் வாழ்க்கையின் சிறுகோணத்தையே விளங்கிக்கொள்ள எம்மைத் தயார் செய்கிருேம். குறிப்பிட்ட சில பரீட்சை களில் சித்தியெய்தி, ஒரு உத்தியோகத்தைத் தேடி, கல்யாணம் செய்து, குழந்தைகளைப் பெற்று அதிக மதிகமாக இயந்திரங்களாக ஆகிக்கொண்டு வருகிருேம். எனவே, கல்வியின் கடமை, வாழ்க்கையின் முழுப் போக் கையும் விளங்க வைப்பதா? அல்லது வெறுமனே ஒரு உத்தியோகத்துக்குத் தயார்ப்படுத்துவதா என்பதே சிந்திக்கப்பட வேண்டியதாகும்.
Mahaluckshmi Stores, Colombo 13

-۔ 117 ~ہ
நன்னேக்கமுள்ள மனிதர்; முறை மரபுகளை வைத் திருக்கக் கூடாது.
எமது அமைப்பு தெரிந்தவற்றின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. தெரிந்ததனுாடாகத் தெரியாததை அறிய முடியாது. எனினும் நாம் முழு நேரமும் அதற் காகவே முயற்சி செய்கிருேம்.
நீங்கள் உண்மையான மகிழ்ச்சியாயிருக்கும்போதும், ஆழமான அன்பாயிருக்கும்போதும் " நான் " என்ற உணர்வு இருக்கமாட்டாது. அங்கு மகிழ்ச்சியும், மிகக்கூடிய அன்பும் மட்டும் இருக்கும். இது மட்டுமே உண்மை. மற்றவையெல்லாம் பொய்கள்.
நீங்கள் வாழ்க்கையை எது புனிதமானது, எது புனிதமற்றது என்றும் எது ஒழுக்கக்கேடு எது ஒழுக்கம் என்றும் பிரித்துப் பார்க்கிறீர்கள். இந்தப் பிரிவினை துயரத்தையும், பலாத்காரத்தையுமே தோற்றுவிக்கும். ஒன்றில் எல்லாமே புனிதமானது அல்லது ஒன்றுமே புனிதமற்றது.
தனிப்பட்ட ஒருவரது பிரச்சினையே உலகப் பிரச்சினை,
Dorai, Arul & Co., Ltd, Colombo 11.

Page 68
- 118 -
எப்போதாவது உங்கள் எல்லாச் சக்திகளையும் - உடல், உணர்ச்சி, மனம், பார்வை போன்ற எல்லாச் சக்தியின் உருவங்களையும்-திரட்டி அதனேடு முற்ருக, அமைதியாக இருக்கப் பரிசோதித்துப் பார்த்ததுண்டா ? சக்தி எந்தத் திசையில் அசைந்தாலும், அந்தச் சக்தி சிதறுகிறது. ஆனல் ஒருவரது எல்லாச் சக்திகளும் முற்ருக அசைவற்று இருக்கும்போது, அங்கே மூலமான அசைவும் இருக்கிறது. அதனல் அதுவே தீவிரமானதாகவும் இருக் கிறது. இதை நீங்கள் அடைய முடியுமாவென்று முயற் சித்துப் பாருங்கள். இதற்குக் கணிசமான புத்திக்கூர்மை யும், பிரமாண்டமான விழிப்புணர்வும் அவசியமான தாகும். இது வெறும் சந்தோஷத்துக்கும், துக்கத்துக்கும் உரிய விடயமன்றி. முயற்சியின்றி எல்லாச் சக்தியையும் திரட்ட முடியுமாக விருந்தால் மனம் பூரண சக்தி நிறைந்த தாக, எந்தவகைத் தடங்கலுமற்றதாக இருக்கும். அப் போது அங்கு ஒரு தீவிரமிருக்கும். அந்தத் தீவிரமே மூலமானதாகும்.
அறிவு எமது பிரச்சினைகளைத் தீர்க்கப் போவதில்லை. உதாரணமாக அவதாரம் என்ற ஒன்று இருக்கிறது என்றும் இறப்புக்குப் பின்னரும் தொடர்ச்சி இருக்கிறது என்றும் நீங்கள் நம்பக்கூடும். ஆனல் அது பிரச்சினை யைத் தீர்க்கப்போவதில்லை. இறப்பு உங்கள் கோட் பாடுகளுக்குள்ளோ, செய்திகளுக்குள்ளோ அல்லது நம்பிக்கைகளுக்குள்ளோ வராது. அது பெரிதும் புதிரா னது : ஆழமானது.
Maharaja Organisation Ltd.

- 119 -
எங்களை நாம் அறிவது, உலகத்தோடு நமக்கிருக்கும் நமது உறவை அறிவதாகும். அது கருத்துலகத்தோடும், மக்களோடும் கொண்ட தொடர்பை மட்டும் குறிக்காது. இயற்கையோடும், நமது ஆளுகைக்குட்பட்ட பொருட் களோடும் கொண்ட தொடர்பையும் குறிக்கும். அதுவே எமது வாழ்க்கை. வாழ்க்கை " முழுமையோடு" கொண் டிருக்கும் உறவாகும்.
எளிமையாக இருக்காமல், ஒருவர் மரங்கள், பற வைகள், மலைகள், காற்று ஆகியவற்ருேடும் உலகில் எம்மைச் சுற்றியிருக்கும் எல்லாப் பொருட்களோடும் உணர்ச்சி பூர்வமாக இருக்க முடியாது. ஒருவர் எளிமை யாக இருக்காதிருந்தால் அகத்துள்ளே இருப்பவைக ளோடு உணர்ச்சி பூர்வமாக இருக்கமுடியாது.
உள்ளவாறே அணுகினல்தான் ஒரு பிரச்சினை தீர்க் கப்பட முடியும். குறிப்பிட்ட சிந்தனை அமைப்பில், சமய, அரசியல் அல்லது வேறுவகை அமைப்பில் அணுகி ஞல் அதைப் புதிதாகப் பார்க்கமுடியாது. எனவே, நாம் எல்லாப் பொருட்களிலிருந்தும் விடுபட்டுச் சுதந்திரமாக, எளிமையாக இருக்க வேண்டும். இதுவே விழிப்புணர் வுக்கு, சொந்தச் சிந்தனைகளின் போக்கை விளங்கிக் கொள்ளும் தகைமைக்கு, எம்மை முழுமையாக உணர் வதற்கு வாயிலாக அமையும்.
Sri Thiruppathy Thirumalai - Thiruppathy Stores, Colombo 14

Page 69
- 120 -
ஒரு மனிதன் ஒரு கோட்பாட்டை வைத்துக் கொண்டு விசாரத்தைத் தொடங்கக் கூடாது. சுதந்திர மனத்தோடேயே ஆரம்பிக்க வேண்டும்.
இன்ஞெருவரைப் பின்பற்றும்போது, உங்கள் சொந்த சிந்தனையையே அழிக்கிறீர்கள். உங்கள் சுதந் திரத்தை இழக்கிறீர்கள். அரசியல் ரீதியாக மட்டுமல்ல, மனேவியல் ரீதியாக, வெளியே மட்டுமல்ல, அகத்துள் ளேயும் இழக்கிறீர்கள். ஆத்மிக, மனேவியல் விடயங் களில் எங்கே பின்பற்றுதல் இருக்கிறதோ அங்கே தெளி வின்மையும் இருக்கும். ஏனென்றல், உங்கள் சொந்த - ஆழமான - அபிலாசைகளுக்கும், தூண்டுதல்களுக்கும், உங்கள் தலைவரால் உங்கள்மீது சுமத்தப்பட்டு, நீங்கள் செய்யவேண்டும் என்று நினைப்பவைகளுக்கும் இடையில் முரண்பாடு இருக்கும். இம் மனேவியல் முரண்பாடு குழப்பத்தை உண்டாக்கும். எங்கே குழப்பமிருக்கிறதோ அங்கே அதைத் தீர்க்க முயற்சியும், முயற்சியினல் பிறழ்வும் இருக்கும். எனவே, சமய மனம் இன்னுெரு வரைப் பின்பற்றது.
பல்லாயிரம் ஆண்டுகளாய் வாழ்ந்துவந்துள்ள மனித மனம் அடிப்படையில் மாற்றமடைந்து தன் கட்டுண்ட நிலையிலிருந்து தானக விடுபடவேண்டும். அப்பொழுது தான் வாழ்க்கையின் சிக்கல்கள் நிறைந்த பல பிரச்சினை சளுக்குத் தீர்வு காணலாம்.
Tillys Hardware Stores, Colombo 10

- 121 -
அன்பு இருக்கும்போதே உண்மையான உறவும் இருக்கும். அந்த அன்பு நன்றியை நாடாது. சுயம் மறந்த நிலையிலேயே, பூரண தொடர்பிலேயே அன்பு இருக்கும். அது ஒன்ருேடோ அல்லது இரண்டோடோ கொண்ட தொடர்பு அன்று. ஒப்பற்ற ஒன்றேடு கொண்ட தொடர்பேயாம். அது சுயம் மறக்கப்படும் நிலையிலேயே நிலவும்,
நாம் அடிமைகள், நாம் விடுதலை பெறவில்லை. சமூக, மத, பொருளாதார ரீதியாக ஒரே முறையையே ஆயிரமாயிரம் தடவைகள் திரும்பத் திரும்பச் செய்து வருகின்ருேம். எமது அடிமனத்தில் ஜீவானுபவ ஆழத் தில் எவ்வித மாற்றமுமில்லை. நாம் நவீன அரக்கர்கள்.
இன்பம் ஒருபோதும் ஆனந்த நிலையை அடைவ தில்லை. ஏனென்றல், இன்பத்தில் எப்பொழுதும் பயம் தான் படிந்திருக்கிறது. இன்பம் என்பது எண்ணத்தின் விளைவு. எண்ணம் எப்பொழுதுமே பழைமையானது.
சுதந்திரம்பற்றி ஒருவர் எவ்வளவுதான் பேசிக் கொண்டாலும் எண்ணமானது ஒருபோதும் சுதந்திர மாக இருப்பதில்லை. எந்த நிலையிலும் எண்ணம் சுதந்திர மாக இருக்க முடியாது.
Esco Trading Co., 79 Prince St., Colombo 11

Page 70
一122一
உடல் ரீதியாக நாம் உணவிலும் உடையிலும், தங்கு மிடத்திலும் தங்கியிருக்கின்ருேம். ஆனல் உள்ளத்தின் ரீதியாக யாம் எதிலுமே தங்கியிருக்கவில்லை - கடவு ளிலோ சமுதாயக் கோட்பாடுகளிலோ நம்பிக்கையிலோ மக்களில்ோதானும் யாம் தங்கியிருக்கவில்லை.
ஒரு விடயம் பிரச்சினையாகும்போது அதைத் தீர்க் கும் பணியில் யாம் சிக்கி விடுகின்ருேம். இதனுல் பிரச்சினை யானது ஒரு கூண்டாகி விடுகிறது. மேலும் தொடர்ந்து ஆராய்வதற்கு - உணர்ந்தறிவதற்குத் தடை யாகி விடுகிறது.
வைத்தியரிடம் நீங்கள் சென்றதும் உங்கள் மேலுள்ள அன்பு மேலீட்டால் (பரிவுணர்ச்சி காரணமாக) அல்லவா அவர் நோவைத்தரும் சத்திரசிகிச்சையை மேற்கொள்ளு கிருர் ? அதுபோலவே நான் கூறுவதும் . அன்புக் குறைவினுலல்ல.
தியானமென்பது பயின்றறிந்து கொள்ளக்கூடிய தொன்றன்று. தியானமென்பது ஒரு வாழ்க்கை நெறி. நாட்பூராவாகவுமே பார்த்து அவதானித்துக் கற் றுணர்ந்து கொள்வதேதான் தியானமாகும். இப்படி யாக அவதானிப்பதற்குச் சலனமற்ற மனநிலை வேண்டும்.
Richardson & Co. (Ceylon) Ltd. 135, Dam Street, Colombo 11

- 123
உணர்வுக்கூர்மை இருந்தாற்ருன் அழுத்தமாகக் கட்டுண்டு கிடக்கும் மனித மூளை தனக்கே உரித்தான பழைய பாணியில் இயங்காமல் பூரண அமைதியை அடையும் ,
ஒரு முறையை - ஓர் ஒழுங்கை - ஒரு மந்திரத்தைப் பயிலும் எந்த ஒரு மனித மனமும் உண்மையைக் கண்
டறியும் ஆற்றலைப் பெருது.
உண்மை, பாதைகளற்றதொரு பிரதேசமாகும். எப்பேர்ப்பட்ட சமயங்களினலும், எவ்வித கட்சிகளின லும், எவ்வகையான வழிகளாலும் இதனை அடைய (Լքւգ Ամո Ցl,
எவ்வகையான பயமிருந்தாலும் முழுமனதுமே உற்றுநோக்கும் ஆற்றலை இழந்து விடுகிறது. யாம் சந்திரனை அடைந்துவிட்டோம். இஃதொரு வியக்கத் தக்க சாதனையாகும். ஆனல் சந்திரனுக்குச் செல்ல, இந்த மகத்தான தொழில்நுட்ப அறிவைப் பெற மனமானது எதையும் அப்படியே அங்கீகரிக்காமல் சுயாதீனமாகப் பார்க்க - அவதானிக்க - ஆராய - ஐயுற - வினவ முடியுமானதாக இருக்க வேண்டும்.
Fernando Co., 131, 2nd Cross Street, Colombo 11

Page 71
- 124 -
எந்த வகையான மனக்குழப்பமுமில்லாத விடத்
திற்ருன் ஒழுக்கத்தின் பண்பு இருக்கும். அதுவே ஒழுக்க LDIT Gaslilib.
அன்பு என்பது இன்பமன்று. பயத்துடன் எவ்வித மான தொடர்பும் அற்றது அன்பு. இது சுதந்திர மான உ ண ர் வு. நுட்பமுள்ள புத்திக்கூர்மையான மனதின் தன்மை, மூளை கடந்த காலத் தொடர்புடன் இயங்காததால் அமைதியடைந்துவிட்ட நிலை. அத்துடன் அன்பு என்ற சுதந்திரத்தைக் கண்டுவிட்ட இதயத்தின் நிலை - இதுவே தியானத்தின் அத்திவாரம்.
வாழ்வதன் உள்ளார்த்தமான அர்த்தத்தை உணர்ந்து கொண்டால், எதையோ ஒன்றைத் தொடர்ச்சி யாகத் தேடி அலைவதைத் தவிர்க்கலாமல்லவா ?
விடுதலையும், அன்பும் ஒன்ருகவே செல்லும், அன்பு ஒன்றின் பிரதிபலிப்பன்று. நீ என்னை நேசிப்பதஞல், நான் உன்னை நேசித்தால், அது வெறும் வர்த்தகமே. அது சந்தையில் வாங்கவேண்டிய ஒன்று. அன்பல்ல. அன்பு ஒன்றையும் எதிர்பார்க்காது. அந்த அன்பிலேயே விடுதலையை உணர முடியும்.
Mohan Lal C. Vasa, 207, 2nd Cross St., Colombo 11

~سے 125 -۔۔
சமுதாயம் என்பது மனிதனுக்கும், மனிதனுக் கும் இடையேயுள்ள உறவுகளே. குழப்பவேண்டாம், நிறையப் புத்தகங்களை மேற்கோள் காட்டவேண்டாம். விஷயம் வெகு சுலபமானது : எளிதானது. சமுதாயம் உனக்கும், எனக்கும், மற்றவர்களுக்கும் உள்ள உறவு களே. மனித உறவுகளே சமுதாயத்தை உருவாக்கு கின்றன. நமது இன்றைய சமுதாயம் ஆர்வங்களால் நிரப்பப்பட்டுள்ளது. பணம், அதிகாரம், சொத்து, உரிமை என்பனவே எமக்கு வேண்டியனவாக உள்ளன. இவ்வகை ஆர்வங்கள் இருக்கும் மட்டும் நாம் இந்த சமுதாயத்திலேயே தங்கியுள்ளவர்களாக இருப்போம். ஆனல் ஒருவருக்கு இவ்வகை ஆர்வம் இல்லாது, எளி மையாக, மிகவும் தாழ்மையாக இருந்தால், அவர் இவைகளினின்று நீங்கியவராயிருப்பார். எனவே ஒருவர் இவ்வகை ஆர்வங்களுக் கெதிராகப் புரட்சி செய்ய வேண்டும். இந்தச் சமுதாயத்தை உடைக்க வேண்டும்.
அதிருப்தியைப் பற்றிப் பயப்படவேண்டாம் அது பொறியிலிருந்து பிழம்பாகுமட்டும் இடம் கொடுங்கள். நீங்கள் எல்லாவற்றேடும் முடிவில்லாத அதிருப்தியோ டேயே இருக்கிறீர்கள். உங்கள் உத்தியோகம், உங்கள் குடும்பம், பணம், ஸ்தானம், அதிகாரம் முதலியவை பற்றிய அதிருப்திகள் சதா உங்களை அரித்துக் கொண் டிருக்கின்றன. எனவே, நீங்கள் உண்மையாகவே அதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பிக்கவேண்டும். கண்டுபிடிக்க ஆரம்பிக்கவேண்டும்.
W. H. Hendrick & Sons, 109, Bankshall St., Colombo 1I

Page 72
-س- 126 --سسته
வாழ்க்கை மிகப் புதிரானது புத்தகங்களில் வரும் புதிரல்ல. அல்லது மக்களின் உரையாடல்களில் வரும் புதிரல்ல. ஒருவன் தானுகவே கண்டுபிடிக்கவேண்டிய புதிர். எனவே இப்பு:திரை விடுவிக்க முதலில் சிறிய, ஒடுங்கிய, குறுகிய தன்மையை விளங்கவேண்டும். விளங்கி அதைக் கடந்து அப்பால் போகவேண்டும்.
ஏன் மக்கள் புகழ்பெற விரும்புகிருர்கள் ? புகழ், இலாபகரமாயிருப்பது முதலாவது. அத்தோடு அது பெரு மகிழ்ச்சியையும் தருகிறது. உல்கம் முழுவதும் உன்னை அறியவேண்டும் என்பதன்மூலம் உனது முக்கியத் துவத்தை உணர்கிருய். நீ புகழாக, பலராலும் தெரிந்த வராக, உலகத்தாரால் பேசப்படுபவராக இருக்கவேண்டு மென்று விரும்புகிருய். ஏனெனில், உனக்குள்ளே நீ ஒன்று மற்றவணுய் இருக்கிருய். உனக்குள்ளே வளமில்லை. இருப்பது வெறுமையே. எனவேதான் நீ வெளியே உலகப் புகழ்பெற விரும்புகிருய். ஆனல், உள்ளே வள மிருப்பின்-செழுமையும், சிறப்புமிருப்பின்-வெளியே நீ தெரிந்தவனக இருக்கிறயோ, இல்லையோ என்பது முக்கியமேயல்ல.
நீங்கள் உண்மை ஒன்று என்றும், உங்களது நாளாந்த வாழ்க்கை இன்னென்று என்றும் நினைக்கிறீர்கள். பின்னர், நீங்கள் நாளாந்த வாழ்க்கையில் உண்மையை அனுபவிக்கப் பார்க்கிறீர்கள். ஆணுல் உண்மை நாளாந்த வாழ்க்கையினின்று வேறுபட்டதா ?
Ranjana Stores, 52, Bankshall St., Colombo 11

- 127 -
என்ன உண்மை வாழ்க்கையின் சரியான பாதை என்பதைக் கண்டுபிடிப்பது முக்கியமானது. ஏனென்ருல் உண்மையே உங்கள் வாழ்க்கை. உண்மை வாழ்க்கைக்கு அப்பாற்பட்டதல்ல. எப்படிப் பேசுகிருயோ, என்ன சொல்கிருயோ, எப்படிச் சிரிக்கிருயோ-பொய்யும், வஞ்சகமும் இருக்கிறதோ எல்லாம் உங்களது நாளாந்த வாழ்க்கையின் உண்மைகள்.
ஒரு மனம் ஆசையும் அவாவும் பொருமையும் கொண்டிருந்தால், நம்பிக்கையும், மரபைப் பின்பற்றும் தன்மையுமுடையதாயிருந்தால், இரக்கமற்றதாயிருந் தால் அது மக்களைப் பழுதாக்குகிறது. அந்த மனம் தொந் தரவுகளையே உண்டாக்கும். முரண்பாடுகளையுடைய சமுதாயத்தை உருவாக்கும். மன்ம் தன்னைத் தானே உணராதவரை, அதன் செயல்களெல்லாம், அழிவையே தரும்-பகைமையுணர்வையே வளர்க்கும்.
பழக்கங்களின்படி வாழ்ந்தால் நீங்கள் வெறும் இயந் திரமே. உங்களைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் சுற்று மதிலுள், திரும்பத் திரும்ப, போனதடத்திலேயே போய்க்கொண்டிருக்க வைப்பது பழக்கங்கள். அவை சலிப்பையே தருவன. வாழ்க்கையின் சம்பவங்களுக்கு முகம்கொடுத்து, அவற்றை வெல்லும்போதே பய மின்மை வருகிறது.
Letchimi Textiles, 48, Second Cross St., Colombo 11

Page 73
- 128 -
வரப்போகும் ஏதோ ஒருவித எதிர்கால நன்மை யைக் கருதி எமது வாழ்க்கையின் வழிகாட்டிகளாக மற்றவர்கள் இருப்பதை யாம் தவிர்க்கவேண்டும்.
ஒரு புத்தகமும் சுய அறிவைத் தராது. அது சுய அறிவைப் பற்றிய செய்திகளைத் தரலாம். அது உன்னையே நீ அறிந்ததாகாது. உறவென்னும் கண்ணுடியில் மனம் தன்னையே காணும்போது, அங்கே சுய அறிவு வரும். சுய அறிவு இல்லாமல் நமது குழப்பங்களை-நாம் உரு வாக்கிய பயங்கரத் துயரத்தை-தீர்க்கமுடியாது.
பழக்கத்தின் விளைவே மனமாகும் மனமானது மரபின் பெறுபேருகும் , மனம் காலத்தின் விளைவாகும். காலமானது இறந்த காலத்தின் தொடர்ச்சியாகும். பழக்கத்திலிருந்து ம ன மா னது முற்ற க விடுபட முடியுமா? சேகரிக்கும் செயற்பாடில்லா மனத்திற்கு மரணமென்பது கிடையாது; சேகரிக்கும் செயற்பாடே பழக்கத்தையும், பின்பற்றி நடப்பதையும் தோற்றுவிக் கின்றது. w
தன்னைப்பற்றிய அறிவினலேயே ஒருவர் உண்மையை, காலவரம்பிற்குட்படாத நிலையை, இறைவனை அறியத் தொடங்குகிருர் .
General Agencies Ltd., 110, York St., Fort

- 129 -
எவ்வளவுதான் கல்வியறிவு பெற்ற பெரும் அறிவாளி யாகத் திகழ்ந்தாலும் தன்னைத்தான் அறியாத ஒருவன் அறிவற்ற ஒரு முட்டாளே ஆவான். தன்னைத்தானே அறிந்துகொள்வதுதான் கல்வியின் நோக்கமாகும். பகவத்கீதையையோ, உபநிடதத்தையோ, திருக் குர்ஆனையோ, பைபிளையோ ஒருவர் மேற்கோள் காட்டலாமெனினும் அவர் தன்னைத்தான் அறிந்து கொள்ளவில்லையெனில் அது கிளியொன்று சொன்ன தைத் திருப்பித் திருப்பிச் சொல்வதை ஒக்கும். ஆனல், ஒருவர் தன்னைப்பற்றிக் கொஞ்சமேனும் அறிந்திருப் பாராணுல் அங்கே அபாரமான புதிதாய்ப் படைக்கும் செயற்பாடு திகழ்கிறது.
கருத்தை மாற்றுதல் புரட்சி அல்ல ஏனெனில், கருத்து ஞாபக சக்தியின் விளைவே. திரும்பவும் அது ஒன் றின் எதிரொலிப்பே. கருத்துக்கள் முக்கியம் வகிக்காத போதே அடிப்படைப் புரட்சி நிகழும். தொடர்ந்து கருத்துக்கள் இல்லாமலும் போய்விடும். பகைமையி னடிப்படையிலான புரட்சி அதன் எதிர்பார்ப்பைநோக்கத்தை-இல்லாமற் செய்துவிடும். அது வெறும் எதிர்ப்பே. எதிர்ப்பு எப்போதும் ஆக்கபூர்வமானதாக இருக்கமாட்டாது.
கருத்தெதுவுமின்றி அழகை உணர்வதொன்றே அழகை நேரடியாகவும், உண்மையாகவும் காண்பதாகும்,
well wisher

Page 74
- 130 -
கருத்துக்கள் தேவையற்றன. ஏனெனில் யான் ஒரு பொருளைப்பற்றி ஒரு கருத்தையும் இன்னெருலர் அதே பொருளைப்பற்றிப் பிறிதொரு கருத்தையும் கொள்ளலாம். கருத்தைப்பற்றி மட்டும் அக்கறை கொண்டிருத்தல் சீர்கெட்ட சிந்தனை முறையைக்காட்டு கிறது. சரி பிழை பாராது, அபிப்பிராயம், கருத்து ஆகியவை இல்லாமல் உண்மையை நேராகக் காண்பதே முக்கியம் ,
அன்பென்பது உண்மையானது. அது வெறுமனே ஓர் உணர்ச்சியன்று. அன்பென்பது வெறுமனே ஒரு மேலீடான மன உணர்ச்சியன்று.
கட்டுப்படுத்தப்பட்ட மனம் ஒரு சுதந்திர மன மாகாது. அதேபோலவே ஆசைகளை அழுத்திக் கட்டுப் படுத்திய மனமும் ஒரு சுதந்திர மனமாகாது. ஆசை யின் முழுச் செயற்பாட்டையும் ஒருவர் முற்ருக அறிந்து கொள்ளும்போதே மனமானது அமைதி பெறு கின்றது. கட்டுபாடென்பது மனத்தின் செயற்பாட்டை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்-எண்ணத்திற்குள் - நம் பிக்கைக்குள்-வரையறுக்கப்பட்ட ஓர் அமைப்பிற்குள் அடக்கி வைக்கின்றது. அப்படிப்பட்ட மனம் நுண்ணறிவு பெறுவதற்கான அமைதியைப் பெறமாட்டாது. கட்டுப் பாடு என்பது மனத்தை ஓர் அதிகார உரிமைக்கு அடிபணிய வைக்கின்றது.
With the best Compliments of:- Asoka Hardware Stores, 348, Old Moor St., Colombo 12

- 131 -
ஒன்ருேடு ஒன்றை ஒத்துநோக்குதலே, கல்வி அறிவை வளர்ப்பதற்கான முறையெனப் பலர் எண்ணுகின்றனர். இது முற்றிலும் தவருகும். ஒத்துநோக்குதல் என்ற செயற்பாடு விரக்தியிலும், பொருமையிலும் கொண்டு போய் விடும். ஒத்து நோக்கல் கற்றலைத் தவிர்த்து, பயத்தை அகத்தில் நிரப்பிவிடும். கற்றல் என்ற செயற் பாட்டில் மேலாண்மையுரிமை என்பதற்கோ, சகலதும் தெரிந்தவர் என்ற அகந்தைக்கோ இடமேயில்லை. ஆசானும் சிஷ்யனும் தம்முள் ஒருவரோடு ஒருவர் ஏற்படுத்திக் கொண்டுள்ள உறவின் மூலம் கற்கின்றனர்.
மனத்தின் இயக்கமே மனத்தை அறிந்துகொள்ளத் தடையாகும். எண்ணச் செயற்பாடு முடிவுறும்போதும், இரண்டு எண்ணச் செயற்பாட்டின் இடைவெளியின் போதுமே மனத்தை நாம் அறிந்துகொள்ள முடியும். மனத்தை நிற்பாட்ட வேண்டும் என்று நாம் வெறுமனே சொல்லலாம். ஆனல் அதை இயக்குவதற்குரிய ஆசை இருக்கும்வரை அது செயலற்றுப் போகப் போவதில்லை.
உண்மையில், முரண்பாடுகள் எங்கள் பிரச்சினைகளைக் கிரகிக்க விடுமா ? அது வளர்ச்சிக்கு உதவுமா ? இவை இரண்டாந்தர முன்னேற்றத்தைக் கொண்டுவரலாம். ஆஞல், உண்மையில், சிதறச்செய்யும் தன்மைக்கு முரண் பாடல்ல காரணம். பின்னர் ஏன் முரண்பாட்டை அவசியமான தொன்ருக அழுத்த வேண்டும்?
With the best Compliments oftReimoo Sons Ltd. 88A, Main street, Colombo 11

Page 75
- 132 -
எமது மனம், இதயம், எமது முழுநிலை இவற்றின் இயக்கத்தை உற்று நோக்க, எமது உள்ளம் தங்கு தடையின்றித் தானக இயங்க வல்லதாயிருத்தல் வேண் டும். எமது மனம் எதையும் ஏற்பதும் மறுப்பதும் அல்லாததாய், ஒரு வாதத்தில் எந்தக் கட்சியினையும் சேராததாய், உண்மையை உணரவேண்டு மென்ற ஒரே நோக்கம் கொண்டு கவனம் செலுத்துவதாயிருத்தல் வேண்டும்,
நமது இருப்பு உறவு அடிப்படையிலானது: உறவின் தொகுதியே சமுதாயம், ஒருவருக்கொருவர் பயன்படும் அடிப்படையிலமைந்த இன்றைய சமுதாய அமைப்பு பலாத்காரத்தையும், அழிவையும், துயரத்தையும் தரு கிறது. புரட்சிகர அரசு என்று அழைக்கப்படுவது அடிப் படையில் இந்தப் பயன்பாட்டை மாற்றவில்லை. இது இன்னெரு தளத்தில் இன்னும் முரண்பாடுகளையும், எதிர்ப்புக்களையும் கொண்டிருக்கிறது.
அதிகமானபேர் லெளகீக பொருட்களிலிருந்து விடுதலை பெறுவதே சமயத்தின் முதலாவது படி என்று நினைக்கிருர்கள். ஆனல். உண்மை அதுவல்ல; அது மிகச் சுலபமாகச் செய்யக்கூடிய ஒன்று. எந்த நம்பிக்கை யாலும் கட்டுப்படாத, சூழ்நிலையால் பாதிக்கப்படாத, முற்ருகவும், ஒன்றில் தங்கியிருக்காததாகவும் இருக்கிற சுதந்திர சிந்தனையே முதலாவது படியாகும்.
With the best Compliments of:- Jaferjee Bros., 150 St., Joseph's Street, Grandpass

- 133 -
மனத்தைப்பற்றிய சிறிய அவதானிப்பையேனும் வைத்திருந்தால் அதை நாம் விளங்கிக்கொண்டு விடலாம்.
நுண்ணறிவு காலத்தின் சுவையினின்று நீங்கி சுதந் திரமா யியங்குவது, எப்போது மனம் 'அதிக" உணர் வின் தேவையினல் மையப்படுத்தப்படுகிறதோ அங்கே 'காலம்" தோன்றும். ஏனென்ருல் "அதிக' உணர்வே காலத்துக்குக் காரணம் ,
அவதானிப்பு ஒரு முழுமையான செயற்பாடு. அந்த அவதானிப்பு உண்மையான சுதந்திரத்தைக் கொண்டுவரும், ஆனல் நாம் உண்மையாக அவதானிக் கிருேமா? அல்லது உள்ளே குமுறும் குழப்பங்களோடு சம்பந்தப்பட்டிருக்கிருேமா ? உண்மையான அவதானிப் பில், குறிப்பிட்ட அமைப்பில் சிந்தித்தலில்லாமலேயே, உங்கள் முரண்பாடுகளை, குழப்பங்களை மறந்துபோய் விடுவீர்கள். ஆனல், நாம் ச்தா ஒன்றைப் பெறுவதற்கு முயற்சி செய்கிருேம். குறிப்பிட்ட ஒரு நிலையை அடைய, ஒருவகை அனுபவத்தைச் சிறைப்பிடிக்க, இன்னென் றைத் தவிர்க்க முயற்சி செய்கிருேம். எனவே, மனம் எப்போதும் ஏதோ ஒன்ருல் நிரப்பப்பட்டதாக இருக் கிறது. அது தனக்குள்ளே நடக்கும் போராட்டங்களி னதும், வேதனைகளினதும் ஒலிகளை அவதானிக்கும் பொருட்டாய் அமைதியடைவதில்லை.
With the best Compliments of:- S. M., R. Daniels Esq.,

Page 76
- 134 -
அன்பைச் செயற்படுத்த முனையும் மனத்தால் அன்பு செலுத்த முடியாது. அன்பு செலுத்தும்போதுஅதனேடு எதுவும் தலையீடில்லாத வேளையிலேயே - அன்பு தானகவே இயங்கும்.
கபடமற்று இருப்பது எவ்வளவு எளிமையானது. கபடமற்ற தன்மையில்லாமல் மகிழ்ச்சியாயிருப்பது இயலாதது. உணர்ச்சிகளின் இன்பம், கபடமற்ற தன்மையின் மகிழ்ச்சியன்று. அனுபவச் சுமையிலிருந்து பெறும் விடுதலையே கபடமற்ற தன்மையாகும். ஞாபக சக்தியின் அனுபவம் ஊழலையே கொண்டுவரும். அது தன்னைத் தானே உணரும் அனுபவமல்ல.
"சுயம்' , 'எனது' என்பவைகளிலிருந்து உண்மை யான விடுதலை கிடைக்கும்போதே நுண்ணறிவு சாத்திய மாகும். ' அதிகமாக "" வேண்டும் என்றும் தேவை
யின்மையாக மனம் இல்லாதிருக்கும்போது பெரிய, அகலித்த, அதிக அனுபவத்தின் ஆசையினுல் மனம் சிறைப்படாதிருக்கும்போது நுண்ணறிவு இருக்கும்.
உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள். எவ்வளவு மந்தம், முட்டாள்தனம், குறுக்கம் ; ஏனென்ருல் நீங்கள் ஆக்கபூர்வமானவர்களாக இல்லை
With the best Compliments of:- E. B. Creasy & Co., Ltd.

- 135 -
வாழ்க்கையைப்பற்றிய உண்மையானது முடிவில் லாது-ஒயாது-ஒடும் நதியை ஒத்தது. மனமானது அசைவில்லாது செயலாற்றவே முனைகின்றது.
உணர்தல் என்பது கருத்தை அடிப்படையாகக் கொண்ட இயக்கமொன்றன்று. ஒன்றைப்பற்றிக் கருத் துக்களைச் சேகரிப்பது வேறு, ஒன்றைப்பற்றிக் கற் றுணர்தல் வேறு. ஒன்றைப்பற்றிச் சேகரிக்கும் கருத் துருவமான அறிவு எப்பொழுதும் இறந்த காலத்திற்குரிய தாகும். இறந்தகாலத்தின் சுமையைத் தாங்கிநிற்கும் மனம் துயரத்தைத் தாங்கி நிற்கும் மனமாகும்.
' கருத்துக்கும் எதிர்க் கருத்துக்கும் இடையேயுள்ள முரண்பாடு தவிர்க்க முடியாததும், அவசியமானது மாகும். இவை இரண்டும் சேர்ந்து ஒருமையைக் கொண்டுவரும். அதிலிருந்து சருத்தும் எதிர்க்கருத்தும் உருவாகும். இதுபோல முரண்பாடுகள் முடிவற்றுப் போகும். அப்படியொரு முரண்பாட்டிலேயே வளர்ச்சி யும், முன்னேற்றமும் வரும் .'
உண்மை எது என்பதை அறிவதற்கு மனமானது எதுவித அசைவுமில்லாது பூரண அமைபெற வேண்டும். இந்த அமைதி நிலையே இறை வணக்கமாகும்.
With the best Compliments of:-
P. Raman & Co., Colombo

Page 77
حصص 136 مسعد ،
அவ்வப்போது காலப்போக்கினில் எம்மைப்பற்றிக் கற்றுக்கொள்ளலாம், எம்மைப்பற்றிய அறிவைச் சிறிது சிறிதாய்த் திரட்டிக்கொள்ளலாமென இருப்போமே யானுல், அது நாம் ஏற்கனவே பெற்றுள்ள அறிவின் மூலம் கற்பதை ஒக்குமேயொழிய, நம்மை நாம் இது போது உள்ளபடி கற்றுணர்வதாகாது. கற்றலில் நுண் நுணர்வு பெரிதளவில் உள்நின்று செயலாற்றுகின்றது. கடந்த காலத்தில் உருவாகிப் பின் நிகழ்காலத்தைத் தன்வசமாக்கும் கருத்தொன்றிருக்குமிடத்தில் நுண் ணுணர்வு இருப்பதில்லை.
With the best Compliments of:- Greenland Pharmacy, 68, Armour street, Colombo 12
எதையும் நேருக்குநேர் காண்பது என்பது நிகழ் காலத்திலேதான் நடைபெறக்கூடிய செயலாகும். ஆனல், நிகழ்காலத்தில் நடப்பதை நிகழவொட்டாமல், அதனின் றும் எப்போதுமே தப்பி ஓடிக்கொண்டிருப்டோமானல் அதனை நேரடியாகக் காண்பது எங்ங்னம்? தப்பிச் சென்று, ஒடி ஒளியப் புகலிடங்கள் - வாழ்க்கையில் நாம் அதற்கென்றே உருவாக்கிய ஏற்பாடுகள் - அனைத் தும் வலைக்கண்போல் ஒன்ருேடொன்று பின்னிக் கிடக் கின்றன. தப்பியோடும் பழக்கத்தில் ஊறி அந்த வலை யில் கண்களிற் சிக்குண்டு வாழ்கின்ருேம் ,
With the best Compliments of:- J. P. Vaz & Co., 53, Dam St., Colombo 12

- 137 -
காண்பவனையும் காண்பதனையும் முற்ருக இழப் பதிலேதான் அழகு இருக்கின்றது. தன்னை இழப்பதற் குக் கடுமையான எளிமை நிறைவுற்று இருத்தலவசியம். சாத்திரம், விதிவிலக்குகள், இவற்றைக் கடைப்பிடித் தாக வேண்டிய பூசாரியின் கடுமையான எளிமை அன்று; அல்லது நடை, உடை , கருத்துக்கள், உணவு ஆகியவற்றி லுள்ள எளிமை அன்று நிறைவான பணிவின் உருவமாய் விளங்கும் முழுமையான எளிமைதான் அந்தக் கடுமை யான எளிமை.
-:With the best Compliments of -ي S. & J. Twins Ltd., 321, Grandpass Road, Colombo 14
ஒன்றைத் தவறு என்று பழிக்கும்போதோ, சரி யென்று பாராட்டும்போதோ, நமது நோக்கு-பார்வை தெளிவை முற்றக இழந்து விடுகிறது. ஓயாமல் தனக் குள்ளேயே அலைபாய்ந்துகொண்டிருக்கும் மனத்தால் தெளிவுடன் எதையுங் காணமுடியாது. அப்போது யாம் உள்ளதை உள்ளபடி காணத் தவறுகின்ருேம். யாம் எமது சொந்த மனநிலையின் புறத்தோற்றத்தினையே காண்கின்ருேம். யாம் எவ்வாறு இருக்க விரும்புகின் ருேமோ அதனையே கற்பனை உருவத்தில் மனக்கண்ணுல் காண்கின்ருேம். எம்மை யாம் உள்ளவாறு காண வொட்டாமல் நம் கண்களை முற்றும் மறைப்பது அக் கற்பனை உருவமேயாகும்.
With the best Compliments of:- Elite Radio & Engineering Co., Ltd., Colombo.
IO

Page 78
- 138
வாழ்க்கையிற் செய்வதற்கு மிகவும் கடினமான செயல்களில் ஒன்று, காண்பது அல்லது கேட்பது, காண்பது, கேட்பது இரண்டும் ஒன்றே. உங்கள் கவலை கள் உங்கள் கண்களைக் குருடாக்கும்போது கதிரவன் மறையும் அழகினை நீங்கள் காணமுடியாது. நம்மிற் பெரும்பால்ோர் இயற்கையோடு தொடர்பினை இழந்து நிற்கின்ருேம்.
With the best Compliments of:- Pesons, 136, Main Street, Colombo 11
ஏதேனும் ஒரு மயக்கும் மருந்தினை உட்கொள்ளு வதனல் தற்பொழுதினிற்குப் பொருள்களை மிகத் தெளிவாகக் காணும் திறனைப் பெறலாம். ஆனல் மீண்டும் பழைய நிலையினுக்கே திரும்பிவந்து விடுவதால் அந்த மருந்தினையே மேலும் மேலும் சார்ந்து நிற்ப வர்களாகின்றேம் ஆகவே தூண்டுதல் எங்கிருந்து வந் தாலும் - கோயிலிலிருந்து - மதுவிலிருந்து - மருந்தி லிருந்து-எழுத்திலிருந்து அல்லது வாய்மொழியிலிருந்து எதிலிருந்து வந்தாலும் ஒன்றினைச் சார்ந்து நிற்கும் வாழ்வினில் நாம் தெளிவாகக் காணும் பார்வையினை யும்; அதனல், விளையும் உயிர்த்துடிப்பின் சத்தியினையும் பெறமுடியாமற் போகிறது;
With the best Compliments of:- A. K. Sangaran & Co., 387, Old moor Street, Colombo 12

- 139 -
பிரச்சினை எதுவாயினும் அதனையுணர்ந்து அதிணின் றும் விடுபடுவதற்கு நமக்கு வேண்டியது பெருமளவில் ஆர்வம் பொங்கும் குன்ருத சக்திதான். உடலது சக்தி மட்டுமின்றி ; சிந்தனையின் சக்தி மட்டுமின்றி ; எந்த உள்நோக்கத்தினையோ, உள்ளத் தூண்டுதலையோ, மயக் கும் மருந்தினையோ சார்ந்திராத சக்தி. தூண்டுதல் எதையேனும் சார்ந்து இருப்போமானல், அந்தத் தூண்டுதலே, மனத்தை மழுங்கச் செய்து, உணர்வினை மரத்துப்போகச் செய்கிறது.
With the best Compliments of:- Ceylon Rediffusion Service Ltd.
கற்றல் என்பது காலத்தில் நடைபெறுவதுதான ? ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தும் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொன்று குவித்து வாழ்வதைக் காட்டிலும், வாழ்வதற்கு நல்ல வழி ஒன்றுண்டென்பதை இன்னும் கற்கவில்லையே? பொருள் அற்றதும் அரக்கத்தனம் மிகுந்ததுமான இவ்வாழ்க்கையை உருவாக்கக் கை கொடுத்துதவிய நாம் அதனைச் சீர்படுத்த வேண்டு மானுல் நாம் மிகமிக முக்கியமானதாக உணர வேண் டியது " காலம் ' என்ற பிரச்சினைதான்.
. With the best Compliments oftSalvage, 14, Fish Market St., Galle

Page 79
ー 140ー
உண்மையைப் பிறரால் ஒருவருக்குத் திணிக்க இய லாது. உண்மை என்பது அவரவர் உள்ளத்திலிருந்தும் அரும்பி வெளிவரவேண்டும். மற்றவரது அனுபவம், கருத்து என்பனவற்ருல் மாசுபடாத மனமே உண்மை யான சமயப்பற்றுடைய மனமாகும்.
நாம் சுகங்களையும் ஸ்தானங்களையும் பாதுகாப்பை யும் நாடிக்கொண்டிருக்கும்வரை அச்சமானது எமது மனங்களிற் குடிகொண்டே யிருக்கும். அச்சமின்றி வாழ்வதென்பது ஏதாவது குறிப்பிட்ட இலட்சியத்திற் கமைய வாழாமலிருப்பதென்று பொருள்படும்.
With the best Compliments of:- Saumi Electricals, 44, Station Road, Colombo 6
மாற்ற மின்மை, நிரந்தரமின்மை மனத்தைத் தேங்க வைத்துச் சோம்பேறி யாக்குகின்றது. வரம்புகளும், கட்டுப்பாடுகளும் இல்லாது வாழ்வோடு பூரணமாக அசையும் மனத்தாற்ருன் காலத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றைத் துருவி ஆராய முடியும். இப்படிப்பட்ட மனம் தான் எதையும் உண்டுபண்ணும் திறனைப் பெறும்.
With the best Compliments of:- Kundanmals Ltd., Colombo 11

- 141 ܚܢܩܝ
நம்மில் ஏற்படவேண்டிய மாறுதல்கள் காலத்தில் தான் ஆகக்கூடியவை என்று எண்ணுகிருேம் . சீரான வாழ்வு என்னும் மாளிகையை ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாகக் கட்டி அமைக்க முடியும் என்று எண்ணுகிருேம். ஆனல் வாழ்வின் சீரோ அமைதியோ காலத்தின் விளை வன்று. ஆகவே நாளடைவிற் செய்வோம் என்ற மனப் போக்கினை நிறுத்தவேண்டும். அமைதியினை அடைய நாளை என்பது நமக்கில்லை என்பதே இதன் பொருள். சீரான வாழ்வு என்பது உடனடியாக இப்போதே நம் மிடம் தோன்றவேண்டும்.
With the best Compliments of: S. Sinnathurai & Bros., Jaffna & Colombo
ஒரு மரமோ, நட்சத்திரங்க்ளோ அல்லது ஒடு கின்ற ஆற்றின் ஒளிதெறிக்கும் தெளிந்த நீரோ, இவற் றினை தன்னை முற்றும் இழந்து காணும் மனமே அழகு என்பதனை அறிகின்றது. உள்ளபடியே நாம் காண் கின்ற நிலைதான் அன்பு நிலை, ஒன்றை மற்றென் றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன்மூலம் அல்லது மனிதன் ஒன்றுடன் ஒன்றை இணைத்துப் பொருத்துவதன் மூலம் சாதாரண அழகினை அறிகிருேம்.
With the best Compliments of: Hirani Bros., P. O. Box 1643, Colombo

Page 80
- 142 -
கருத்துருவமான வா ழ் க்  ைக த் திட்டத்தினேடு இசைந்து வாழ முற்படும்போது உங்களையே நீங்கள் ஒடுக்கிக் கொள்ளுகின்றிர்கள். உள் ள படி நீங்கள் இருப்பதுதான் மெய்யே ஒழிய, கருத் துரு வமான வாழ்க்கைத் திட்டங்கள் அல்ல ; இன்னெருவர் கருத்திற் கேற்ப, உங்களைப்பற்றிக் கற்றுணர முற்படுவீர்க ளாயின், நீங்கள் ஒரு கைமாறிய புதுப் பொருளைப் போல இரண்டாம்தர மக்களாக ஆகிவிடுவீர்கள்.
With the best Compliments of: Pooran Industries Ltd., Main Street, Colombo
உங்களை நான் அறிவேன் என்று சொல்லும்போது உங்களை நேற்று அறிந்தேன் என்றுதான் பொருள்படும். இந்தப் பொழுதில் உங்களை நான் உள்ளபடி அறிய வில்லை. நான் அறிவதெல்லாம் உங்களைப்பற்றி நான் கொண்ட கற்பனை உருவமே. என்னை நீங்கள் புகழ்ந்து கூறியவை, இகழ்ந்து கூறியவை, எனக்கு நீங்கள் இழந் தவை இவற்றின் நினைவுகள் யாவும் சேர்ந்து ஆக்கிய கற்பனை உருவம் அது. அதுபோலவே என்னைப்பற்றிய கற்பனை உருவம் ஒன்றை உங்கள் மனத்தில் உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். இந்தக் கற்பனை உருவங்களிடையே தான் உரையாடல் நிகழ்கின்றது. இவைதாம் நம் உள் ளங்கள் மெய்யாகவே கலந்து கொள்வதினைக் குறுக்கே நின்று தடை செய்கின்றன.
With the best Compliments of: Well Wisher

ܚܚܗ 143 -
நிறைகுறைகளைச் சீர் தூக்கி , அனுபவிப்பவன், எண்ணுபவன் ஆகிய ஒருவன் காணுபவனக உள்ளபோது, அழகென்பது புறத்தே காணப்படுவதாகவும், காண் பவன் அதனைப் புறத்தே கண்டு குறைநிறைகளைப் பற்றித் தீர்ப்பளிப்பதாகவும் உள்ளது. ஆகையால் அங்கே அழகு என்பது இல்லை. ஆனல் காண்பவன் இல்லாதபோது, காணப்படும் பொருள் என்பது இல்லாமல் அழகு இருக்கின்றது. ஆனல் இதனை உணர் வதற்கு மிக ஆழ்ந்த மோன அறிநிலையும், ஆராய்ச்சியும் தேவை.
With the best Compliments of: Seven Seas (Exports) Ceylon, P.O. Box 1751, Colombo
பரம்பரைப் போக்கினைத்தான் உலகம் ஏற்றுப் பின்பற்றி வருகிறது. இதுதான் மெய்ப்பொருளினை அடையும் வழி என்று வேறு ஒருவர் வழிகாட்டினல் அதனைப் பின்பற்றி அப்பொருளைத் தேடிக் கொண்டிருப் பதுதான் நம் மினுள் விளையும் சீர்கேட்டிற்கு முதற்கார ணம். சுகம் தரும் ஆன்மிக வாழ்வினுக்கு வழியை நான் காட்டுகிறேன். என்று எவரேனும் உறுதியளித்தால் அவரைப் பின்பற்றுவதில் ஒரு இயந்திரம்போல் இயங்கு கின்ருேம்.
With the best Compliments of: Geekey Ltd., 33, Bankshall St., Colombo 11

Page 81
- 144 -
மனம் மிக அமைதியாக இருந்தால்தான் கவனிக்க முடியும். உங்கள் மனம் மற்ருெருவர் சொல்வதைக் கேட்க வேண்டுமானல், அது தனக்குத்தானே பேசிக் கொண்டிராமல், தனக்குள்ளேயே ஓயாத உரையாடலில் ஈடுபட்டிராமல், தன்னுடைய பிரச்சினைகளையும் கவலை களையும் பற்றி அலைபாய்ந்துகொண்டிராமல், செவி சாய்த்தால்தான் கேட்க முடியும். அதேபோல் உங்கள் அச்சத்தினை நோக்கும்போது அதற்கு எதிர்மறையான * துணிச்சல்" என்ற பண்பின் மூலம் அதனை நீக்க முற்படாமல் அதிணின்றும் தப்பிச் செல்லும் முயற்சி யில்லாமல் அதனை உள்ளபடி நோக்க இயலுமா ?
With the best Compliments of: Broadway Electricals, 47 & 82, Keyzer St., Colombo 11
அச்சத்தினை நான் அடக்க வேண்டும், அதனை நான் அழிக்க வேண்டும், அதனை நான் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று சொல்வீர்களாயின் அவை யாவும் அச்சத்தினின்றும் தப்பியோடும் முயற்சிகளேயாகும்.
எண்ண அசைவுகள் எதுவுமின்றி உணர்வாளர் காண்பார் என்ற நிலைகளற்ற நிலையிற்ருன் மனம் மிகவும் அமைதி கொள்கின்றது. இந்த ஒப்புயர்வற்ற நிலையிற் முன் அவா, விருப்பம், குறிக்கோள் ஆகியவற்றினலான " தான் என்பது மறைந்து உண்மை துலங்கும்.
With the best Compliments of: City Cycle Stores, P. O. Box 1330, Colombo

- 145 --سی۔
பிறர் வழியில் செல்லும்படி நெருக்குவதையும், யதேச்சாதிகாரம் செலுத்துவதையும், அரசியல் துறை யில் நம்மில் பெரும்பாலோர் எதிர்க்கின்ருேம். ஆனல் நமது உள்ளத்தையும் வாழ்க்கை நெறி யினை யும் வேருெருவர் தம் கருத்துக்கு இணங்க நம்மை வளைத்து, அடக்கி, ஆட்கொள்ளுவதற்கு மனம் ஒப்பி இசைகின் ருேம் இது விந்தையிலும் விந்தையே! எனவே, ஆன்மிக வாழ்வில் பிறரை வழிபடுதல், சடங்குகள், பூசைகள் இவற்றினில் ஈடுபடுதல், சிந்தனையின்றிச் சில கருத்துக் களை மறைமொழிகளாக ஏற்றுக்கொள்ளுதல் இவை அனைத்தையும்-கருத்தளவில் அல்ல, செயல் அளவில்அறவே உதறித்தள்ளி விடுவோமானுல் சமூகத்தின் போக்கை எதிர்ப்பவர்களாய்த் தனித்து நிற்போம் : சமூகத்தின் மதிப்பை இழப்போம்.
With the best Compliments of: A. R. A. Kalaff & Sons:
சமூக மதிப்பினைப் பாராட்டும் எந்த மனிதனலும் எல்லையற்ற அளவிடற்கரிய அந்த மெய்ப்பொருளை அணுக முடியாது.
நமக்குப் புறம்பாக உள்ள எதனையும் வழிகாட்டி யாக ஏற்றுக் கொண்டு, அதனைச் சார்ந்து நின்று கொண்டு நம் உள்ளே, நமது உள்ள அமைப்பிலே ஒரு முழுப் புரட்சியினைத் தோற்றுவிப்பது இயலாத காரிய மாகும்.
With the best Compliments of: Samuel, Sons & Co., Ltd., Colombo

Page 82
一 146 一
ஒவ்வொரு போருக்கும் நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளிதாம். அதற்குக் காரணம், நம் சொந்த வாழ்க்கையின் ஆக்கிரமிப்புத் தன்மை, நமது நாட்டுப் பற்று, நமது தன்னல மனப்பான்மை, நாம் வழிபடும் தெய்வங்கள், நமது விருப்பு வெறுப்புக்கள், நம் குறிக் கோள்கள் இவையே. இவை யாவும் நம்மிடையே பிளவு களைத் தோற்றுவிக்கின்றன. நீங்களும் நானுமே அனைத் துலக அல்லல்களுக்கும், குழப்பங்களுக்கும் பொறுப் பாளிகள் நம் அன்ருட வாழ்க்கையின் மூலம் நாமே தான் இவற்றைத் தோற்றுவிப்பதில் பங்கு கொண்டுள் ளோம்.
With the best Compliments of: Navarangs, 167, Main St., Colombo
சண்டைகள், பிரிவினைக்ள், அலங்கோலம், மிருகத் தனம், பேராசை, இவை தலைவிரித்தாடும் இந்தப் பயங்கர சமுதாயத்தின் உறுப்பாகிய நாமும் இதற்குப் பொறுப்பாளிகள் என்ற உண்மையினைக் கருத்தளவில் அல்ல, பசியையும், வலியையும் எவ்வளவு செயலளவில் உணருகின்ருேமோ, அவ்வாறு செயலளவில் உணரும் போதுதான் அதற்கேற்ற செயலில் இறங்குவோம்.
With the best compliments of: S. P. Perianna Pillai & Co., 180, 2nd Cross Street, Colombo 11

- 147 -
உள்ளத்தில் தனிமையும் இடமும் இருக்க வேண்டியது மிகமிக முக்கியம். அத்தகைய உள்ளத்திலேதான் ஒரு வனுக்கு இருக்கவும், போகவும், செயல் புரியவும், பறக்க வும், சுதந்திரம் உண்டு. நற்பண்பு மலர்வதற்கு விடுதலை வேண்டும். அதுபோல இனிய நல்வாழ்வு மலர்வதற்கு இடம் வேண்டும். நாம் அரசியலில் விடுதலை பெற்றிருக்க லாம் ஆளுல் உள்ளத்தில் விடுதலை பெறவில்லை. அதனல் அங்கே இடமேதுமில்லை. அடைவதற்குரிய எந்த நற்பண்பும், நல்லியல்பும் ஒருவனது உள்ளத்தில் இந்த விரிந்த இடம் இல்லாவிடில் செயற்படுவதோ, வளர்வதோ இயலாது.
With the best Compliments of: Saravanas, 148, Main Street, Colombo
இடமும் அமைதியும் இன்றியமையாதவை; ஏனெ னில், எந்த மனம் தனிமையில் இயங்குகின்றதோ, எந்த மனம் எதனுலும் தூண்டப்படாததோ, எந்த மனம் பயிற்சிக்கு உட்படாததோ, எந்த மனம் கணக்கற்ற அனுபவங்களுக்குள் அகப்படாததோ, அந்த மனமே முற்றிலும் புதுமையான நிலை ஒன்றினை அறியும்.
With the best Compliments of: Rajah Stores, 335, Nagalagam Street, Colombo 14

Page 83
- 148 -
கடவுளென்றே, உண்மையென்றே, மெய்ப்பொரு ளென்ருே அல்லது அதனை வேறு எப்பெயர் கொண்டு அழைத்தாலும சரி, அத் த  ைக ய பொருள் ஒன்று உண்டா என்ற கேள்விக்கு விடைகூற, நூல்களாலோ, சமய குருமார்களாலோ, தத்துவமேதைகளாலோ ஒரு பொழுதும் முடியாது. அதற்கு விடை கண்டுபிடிக்க எவராலும் முடியாது நீங்களேதான் அதற்கு விடை கண்டுபிடிக்கவேண்டும். அதனுல்தான் ஒருவன் தன்னைத் தான் முதலில் அறிந்தாக வேண்டும். தன்னைத்தான் முற்றும் அறியாதிருப்பதே முதிர்ச்சியின்மை, தன்னைத் தான் அறிவதே மெய்யுணர்வைப் பெறுவதற்கு முதற் LigurG5ib.
With the best Compliments of: Santha Stores, Nagalagam St., Colombo 14
என் வாழ்வின் வேர்கள் ஊன்றிய அடிப்படை நிலையிலிருந்தே நான் முற்றும் மாறவேண்டுமென்பதை அறிகின்றேன் ; தொன்றுதொட்டு வந்த வழக்கினை இனியும் சார்ந்து வாழ்வது என்பது இயலாது அவ் வாறு சார்ந்து வாழ்ந்த தன் விளைவுதானே இன்று பூதா காரமாய் உருவெடுத்துள்ள சோம்பலும் பிறர் வழியினை ஏற்பதும், மற்றவர் சொற்படி நடப்பதும் ஆகிய எல்லாம்.
With the best Compliments of: Doraisons, Bankshall Street, Colombo 11

- 149 -
ஒரு புதிய உண்மையினைக் காணச் சிந்தனையினல் இயலாது; சிந்தனை அதனைப் பின்னர்ச் சொல்லளவில் அறிந்துகொள்ளக் கூடும். ஆனல் புதிய உண்மை ஒன்றினை, உணர்வது என்பது சிந்தனைக்கு மெய்யாக நிகழக் கூடிய தொன்றன்று. உள்ளத்தில் எழும் பிரச்சினை எதனையும் தீர்க்கும் வல்லமை சிந்தனைக்கு இல்லை. எவ்வளவோ திறமையும் தந்திரமும் சிந்தனைக்கு இருக்க லாம். எவ்வளவோ அறிவினை அது பெற்றிருக்கலாம். விஞ்ஞானத்தின் உதவி கொண்டும், மின்னணு சக்தியி ஞல் இயங்கும் செயற்கை மூளையின் உதவி கொண்டும், தேவையினுலும் கட்டாயத்தினுலும் அது உருவாக்கும் பொறிகளின் அமைப்பு எவ்வாருயினும் இருக்கலாம் ,
With the best Compliments of: Selamuttu Sivanathan & Co., Ltd.
சிந்தனை என்றுமே புதுமை வாய்ந்ததாக இருப்ப தில்லை. ஆதலால் பெரும்பிரச்சினை எதனையும் அதனல் தீர்க்க இயலாது. பழைமையில் ஊறிய மூளையினல் வாழ்க்கையின் மாபெரும் பிரச்சினையினைத் தீர்க்க (1pւգ Այո 5} .
With the best Compliments of:- Chithras, 77, Main Street, Colombo 11

Page 84
150 --س-
தனியொருவணுக உள்ள நீ யார்? தனி ஒருவன் என்பது யார் ? தனி ஒருவன் என்று சொல்வதற்கும் மனிதன் என்று சொல்வதற்கும் பொருள் வெவ்வேறு ஆகும் எனக் கருதுகின்றேன். தனி ஒருவன் எனப்படு பவன் குறிப்பிட்ட இடத்திற்கோ, ஒரு நாட்டிற்கோ, பண்பாட்டுக்கோ, ஒரு சமூகத்திற்கோ உரியவன். ஆளுல் மனிதன் என்பவனே ஒரு குறிப்பிட்ட இடத் திற்கு மட்டும் உரியவனல்லன். அவன் எங்கும் உள்ள வன். வாழ்க்கை பரந்த உலகின் ஒரு மூலையில் இருந்து கொண்டு தனி ஒருவன் செயல்படும்போது, அவனது செயல் முழுவாழ்வுடன் தொடர்புற்றதாக இருக்கின் றது. வாழ்க்கை என்று நாம் கூறும்போது முழு வாழ்க்கையினைப் பற்றிப் பேசுகின்றேமேயொழிய அதன் ஒரு பகுதியைப்பற்றி அன்று, இதைக் கருத்திற் கொள் ளல்வேண்டும். ஏனெனில், பெரியதில் சிறியது அடங்கும்.
With the best Compliments of: . C. V. Bhatt, Colombo, Jaffna, Kandy
சிறியதில் பெரியது அடங்காது; தனி ஒருவன், கட்டுண்டு துயரத்தில் மூழ்கி, தோல்வியுற்றுத் தடை யுணர்ச்சி மிக்க ஓர் அற்ப ஆசாமி தன் குட்டித் தெய்வங்களை வழிபடுவதிலும், சின்னஞ்சிறு பரம்பரைப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதிலும் மனநிறைவு கொள்ளும் சிறிய ஆள். ஆனல் மனிதன் என்பவனே உலக வாழ்வின் நலம் அனைத்திலும், துன்பம் அனைத் திலும், குழப்பம் அனைத்திலும் கருத்தும் கவலையும் கொண்டவன். -
With the best Compliments of: Leissers Ltd.

- 151 -
நானும் முட்டாள்த் தனமாக ஒரு வாழ்க்கை நெறி யினை வகுத்துக் கொடுத்து, நீங்களும் முட்டாள்த்தன மாக அதனைப் பின்பற்றுவீர்களாயின், நீங்கள் செய்வது, மற்ருெருவர் செயலைப் பார்த்து அப்படியே செய்வ தாகவும், மற்றவர்கள் வாழ்வதைப்போலவே நீங்களும் வாழ்வதாகவும், வேருெருவர் வாழ்க்கை நெறியினைப் போல் உங்கள் வாழ்க்கை நெறியினையும் அமைத்துக் கொள்வதாகவும், பிறர் சொல்வதை ஏற்றுக்கொள்வ தாகவும் ஆகிவிடும் : அப்போது அது நீங்கள், உங்க ளுக்கு ஒரு வழிகாட்டியை ஏற்படுத்திக் கொண்டு விடுவ தாகிவிடும்; அதன் விளைவாக உங்களுக்கும் உங்கள் வழிகாட்டிக்கும் இடையே ஒரு போராட்டம் ஏற்படு கிறது, வேருெருவர் இன்னதை எப்படிச் சொல்லியிருக்கி முரோ அப்படிச் செய்யவேண்டும் என்ற உணர்ச்சி உண்டாகிறது. எனினும் அவ்வாறு செய்ய உங்களால் முடிவதில்லை.
With the best Compliments of: V. T. V. Deivanayagampillai & Co., 37, 5th Cross Street, Colombo 11
குறிக்கோள், நம்பிக்கைகள் அல்லது கோட்பாடுகள் இவற்றைப் பின்பற்றுவீர்களாயின், உங்களை நீங்கள் நேரடியாகக் காண இயலாது. ஆகவே, நீங்கள் அனைத் தையும் நீக்கியவர்களாய், முற்றும் அமைதியுற்றவர் களாய், சிந்தனையில் ஈடுபட்டவர்களாய், அச்சம் அற்ற வர்களாய் இருந்தும், சாமானியமாய் அடைதற்கரிய பேரார்வம் பொங்கும் உயிர்த்துடிப்புடனும் இருக்க (upiquud nr ?
With the best Compliments of: A. V. R. A. Printing works, Colombo 11

Page 85
- 152 -
உங்களது விருப்பு வெறுப்பு, உள்ளப்போக்கு, தூண்டுதல், நெருக்கடிகள் எல்லாம் நீங்கள் பின்பற்ற முனைந்திருக்கும் வாழ்க்கை நெறியுடன் ஒரு பூசலைத் தோற்றுவிப்பதால் முரண்பாடு ஒன்று விளைகின்றது-- உங்களுக்குள்ளேயே உடன்பாடற்ற இரு நிலைகளின் எதிர்ப்பு உருவாகிறது. நீங்கள் பின்பற்றும் வாழ்க்கை நெறியின் கருத்துருவமான கோட்பாடுகள் உங்களை ஒரு புறம் இழுக்க உங்கள் அன்ருட வாழ்வின் உள்ள படியான போக்கு மற்ருெரு புறம் இழுக்க நீங்கள் வாழ்வது ஓர் இரட்டை வாழக்கையாக ஆகிவிடுகிறது.
With the best Compliments of
Lipton Ltd.
மோன அறிநிலைக்கு வேண்டியது வியக்கத்தக்க
அளவில் விழிப்புடன் இருக்கும் மனம் எவ்விதமான பிளவினுலும் துண்டாடப்படாத வாழ்க்கையின் முழு
மையை உணரும் நிலையே? மோன அறிநிலையாகும்: சிந்தனையை அடக்குவது மோன அறிநிலையன்று. ஏனெனில் சிந்தனையை அடக்குவதால் மனத்தில் போராட்டமே விளைகின்றது. ஆனல் நாம் ஏற்கனவே ஆராய்ந்து அறிந்தபடி, சிந்தனையின் அமைப்பினையும், அது முதன் முதல் உருவாகும் இடத்தினையும் உணர்வீர்களாயின் சிந்தனையின் குறுக்கீடு இராது. சிந்தனையின் அமைப் பினை உணர்வதே அதற்குரிய ஒழுங்குமுறை, அந்த ஒழுங்கு முறையே மோன அறிநிலையாகும்.
With the best Compliments of: A. S. Chatoor (Tea) Ltd., Colombo

- 153 -
வாழ்க்கையைப்பற்றிய தத்துவ அறிவு முக்கிய மன்று அன்ருட வாழ்வில் நம் உள்ளும் புறமும் நடப் Lu Goog5 உள்ளது உள்ளபடி உற்றுநோக்குவதுதான் முக்கியம். எது நடக்கின்றதோ அதனை நெருங்கிக் கூர்ந்து உற்று நோக்குவீராயின், உற்று நோக்கி ஆராய்ந்து பார்ப்பீராயின், நடப்பன யாவும் சிந்தனையிலிருந்து தோன்றிய கருத்தினை அடிப்படையாகக் கொண்டிருத் தலைக் காண்பீர்கள் சிந்தணு சக்தியுள் வாழ்க்கை முழு வதும் அடங்காது. அது முழுவாழ்க்கையின் ஒரு துண்டு தான். ஒரு துண்டினை எவ்வளவு சாமர்த்தியமாக உருவாக்கினலும் அது பழைமையிலும், வழக்கிலும், எவ் வளவு ஊறியிருந்தாலும் அது வாழ்க்கையின் ஒரு சிறு பகுதிதான்.
With the best Compliments of: S. P. S. Jayam & Co., Colombo & Madurai
உராய்வினுல்தான் சக்திக்குக் குறைபாடுகள் விளை கின்றன. இதனை ஒருமுறை கண்ட பின்னரும், மணி தன் எப்போதும் சக்தி இயங்குமிடத்தினில் உராய் வினைப் புகுத்துவதேன்? வாழ்க்கை என்னும் இந்த இயக்கத்தினில் அவன் ஏன் உராய்வினை உருவாக்கு கின்றன் ? தங்குதடையற்ற சக்தி, தூய சக்தி என்பது அவனுக்கு ஒரு வெறும் கருத்தாக மட்டும் உள்ளதா? அவனுக்கு அது மெய்யான பொருளாக இல்லையா ?
With the best Compliments of: M. I. Mi. Mohideen & Co., & Sadoon's, 114, Messenger St., 27, Quarry Road, Colombo 1

Page 86
- 154 -
அகம், புறம் இரண்டும் ஒரே இயக்கத்தினுக்கு உட்பட்டவைதாம், அகத்தின் இயக்கம்தான் புற இயக்கமாக மிளிர்கிறது, புறத்தின் இயக்கம், அகத் தினை ஊடுருவி அதனை ஏற்றவாறு இயங்கச் செய்கிறது. இவை யாவும் இவ்வாறு இயங்குவதைக் காண்பதே நமக்கு வேண்டியதெல்லாம் என்று எனக்குத் தோன்று கிறது. காண்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வோ மானல் எல்லாமே நமக்குத் தெளிவாகப் புலனகி விடு கின்றது. காண்பதற்குத் தத்துவ அறிவு வேண்டாம் குருவும் வேண்டாம். காண்பது எப்படி என்பதை உங்களுக்கு ஒருவரும் சொல்லிக்கொடுக்கத் தேவை யில்லை, நீங்கள் காண்கின்றீர்கள்-அவ்வளவுதான்.
With the best Compliments of: The Burma Teak Trading Co., Ltd.
பணிவுடன் இருப்பது என்ருல் என்ன என்பதை அறிந்த மனிதன் வீண் பெருமை கொண்ட மனிதனே ! அதைப்போலவே, வாழ்வின் நெறியினைக் கண்டு பிடிக் கவும், உள்ளதை உள்ளபடி இருப்பதைக் காணவும் , கண்டபின் அதற்கு அப்பால் போகவும்-உங்கள் மனம், இதயம், உங்கள் நரம்புகள், கண்கள் அனைத்தையும் கொடுத்து, இன்று நீங்கள் வாழும் முழு வாழ்வினையும் முற்றும் நீக்கிவிடுவீர்களானல், அழகற்ற, மிருகத்தன மான அதனை நீக்கி விடுகின்ற அந்த நீக்கத்திலேயே தான் மற்றது பிறக்கின்றது,
With the best Compliments af: Southa Stores, Colombo 11

- 155 -
சிந்தனையாகவும் உணர்ச்சியாகவும் இயங்கும் தன் இயக்கத்தினை மனம் எப்போது உணருகின்றதோ அப்போதுதான் அது அமைதியினை அடையும். சிந்தனை, உணர்ச்சி இவற்றின் இந்த இயக்கத்தினை உணர்வதற்கு அதனை உற்று நோக்கும்போது, தவறு என்று தள்ளி விடும் மனப்பான்மை இருக்கவே இருக்க முடியாது. ஏதோ ஒன்றினைப் பின்பற்றி ஒழுகும் ஒழுங்கு முறை யினைப்போல் அல்லாது, இந்த ஒழுங்குமுறை ஓரிடத் திலும் தேங்காது, தங்குதடையின்றித் தானகவே இயங்க வல்லது
With the best Compliments oft Alcoholic Anonymous, Colombo 8
உங்களிடம் திண்மையுமில்லை, தீவிரமும் இல்லை. அதற்குக் காரணம் உங்களிடம் சக்தியின் பெருக்கு இல்லாமையே, சக்தி என்பது பேரார்வம் , பேரார்வம் இன்றி எந்த உண்மையினையும் கண்டுபிடிக்க இயலாது; எந்த உண்மையினையும் கண்டுபிடிக்க, புயல் போன்ற வேகம் கொண்ட பேரார்வம் வேண்டும் ; மறைந்து நின்று மணத்தினைத் தூண்டுகின்ற ஆசை எதுவுமில்லாத பேரார்வம் என்பது ஒரளவு பயங்கரத் தன்மை வாய்ந் ததுதான் ; ஏனெனில், உங்களிடம் பேரார்வம் இருக்கு மானுல் அது உங்களை எங்கு இட்டுச் செல்லுமென்பதை நீங்களே அறிய மாட்டீர்கள்.
With the best Compliments of:
M. H. S. Hamid Esq.,

Page 87
- 156 -
நமது வாழ்க்கையின் குழப்பத்தினை நாம் உணர் வதற்கு மாபெருஞ் சக்தி நமக்கு வேண்டும். "நான் உணர்ந்தே ஆகவேண்டும் " என்ற உணர்ச்சியின் வசப் படும்போது, கண்டு பிடிப்பதற்கான ஊக்கத்தினை அதுவே தோற்றுவிக்கின்றது. ஆனல், கண்டு பிடிப்பதும் தேடுவதும் காலத்தைக் கையாளும் செயல்கள். நாம் ஏற்கனவே கண்டபடி, நம் மனத்தினைக் கட்டியுள்ள தளைகளைக் காலப்போக்கினில் அவிழ்ப்பது என்பது தக்க வழியாகாது. காலம் அதற்கு வழியாகாது, நாம் முதியவர்களாயினும், இளைஞர்களாயினும் இதோ, இப்பொழுதேதான் வாழ்க்கையின் முழு இயக்கத்தினை யும், வேருண ஓர் இயல்பினில் செயல்படும் நிலைக்குக் கொண்டுவர முடியும்.
With the best Compliments of : Nayagam Bros., 4th cross st., Colombo 11
அன்பின் தன்மை உங்களிடம் இல்லாமலிருப்பதேன்? உங்கள் இதயத்தில் இந்தச் சுடர் ஏன் ஒளிவீசவில்லை என்பதை நீங்களாகவே கண்டறிவதற்கான அந்தப் பேரார்வத்தின் சக்தியினை நீங்கள் பெருத காரணம் ஒருவேளை அச்சமாக இருக்கல்ாம். உங்கள் மனத்தையும் இதயத்தையும் மிகவும் நெருங்கி அலசிப் பார்த்திருப் பீர்களாயின் அஃது ஏன் உங்களிடம் இல்லாமற் போயிற்று என்பதைக் கண்டு அறிவீர்கள். ஏன் அஃது உங்களிடம் இல்லை என்பதைக் கண்டறிவதற்கான பேரார்வம் உங்களிடம் பிறக்குமானல், அது அங்கே இருப்பதனை அறிவீர்கள்.
With the best Compliments of: The Meihandan Press Ltd., 161, Sea Street, Colombo 11


Page 88


Page 89