கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைமுகம் 2007.07-12

Page 1
கலை இலக்கிய
 

ஜூலை - டிசெம்பர் 2007

Page 2
"கலைமுகம்" கலை இலக்கி
ஈழத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கலை 鸟 வெளிவந்து கொண்டிருக்கும் "கலைமுகம் காலாண்ட் வாசகர் பத்தையும் மேலும் உறுதிப்படுத்தி பரவல் இனைத்துக் கொள்ளும் திட்டத்தினை மீளவும் வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.
சந்தா விபரம் (தபால் செல உள்நாடு ஒருவருடம் II, Ah
இாண்டு வரும் ii II, IA
வெளிநாடு ஒருவருடம் ..
இரண்டு வரும் 酥置J.蟾 பிரதி ஒன்றின் வி ை:
--------------
சந்த மாதி விஷ்ணப்பப் படி பெயர் . முகவரி --
தொலைபேசி .-- மின் அஞ்சல் .
நான் "கலைமுகம் சஞ்சிகையின் கொள்வதில் மகிழ்வடைகின்றேன். இத்து
சந்தாவாக . S S S S S S S S S S S L L S S S S S S C காசுக்கட்டளையை (இல. காசோ
அனுப்பிவைக்கின்றேன்.
* சந்ததார்ாக இணைந்து கொள்ள விரும்பும் பின்னரப்பப்படிவத்தைப் போன்று சுயமாக
விபரங்களை அனுப்பி வைக்கலாம்.
* முகம் வருடத்திற்கு நான்கு இதழ்கள் :ெ காரனங்களால் நான்கு இதழ்கள் வெளிவர வெளிவரும் இதழ்களுடன் 5g:ITI"hiG7",
காரிக்கப்படும். * குறிக்கப்பட்டந்தா காலத்தில் இதழின் விா சந்த செலுத்தியவர்களுக்கு சந்தாக் காலம் முடிவதர்
செய்யப்படமாட்டது. " சந்தா கட்டணத்தை பனாகச் செலுத்த விரு கான்ற அலுவலகத்திாே அள் செலுத்நாம்
· நாகர் கட்டளை (MIETdET அனுப்புபவர்கள் r, guara, The Editor, Kalimugam. Titayin அனுப்புபவர்கள் "Centre f PTTi A' அனுப்புதல் பேண்டும். வங்கிக் கனக்கு மூலம் அலுப்பு விரும்புபவர்கள் "Centre for Performing Arts, AC, No. 8998501 என்றும் நடைமுறைக் கணக்கில் வைப்புச் செய்
அனுப்புதவ் வேண்டும்.
7 : :
ஆசிரியர், "கன்
 
 

யே சமூக இதழ் 总 5బెంగ్తానీ
இக்கியத்திற்காக தொடர்ச்சியாக நிச் சஞ்சிகை துே சம்ை, ரக்கும் மு:பாக சந்தாதாரர்களை
ஆரம்பித்துள்ளது என் தனை
இலங்கை ரூபாவில்
I,Ī
சந்தாதாரராக இணைந்து ன் ஒராண்டுச் ஈராண்டுச்
... - , -- οι "Θ "υ 3ia's:n II (2a.---
சந்தாதாரரின் ஒப்பம் السدس - - - - - - - - -
பார்கள் மேலே உள்ள மாதிரி படிவத்தைத் தயாரித்து தங்கள்
விரு. தவிர்க்கமுடியாத ாதுவிட்டால் அடுத்த ஆண்டு rinn, " " ", வருடர் சந்தா
அதிகரிக்கப்பட்டாலும் முன்னரே
குள் சந்தாக்கட்டணம் அதிகரிப்புச்
புகிறவர்கள் யாழ் திருமளக் எது எமது சந்தா முகவர்களிடமோ
யாழ் பிரதமதடாகத்தில் மாந்தக் பெயருக்கும், காசோலை (புெ என்னும் பெயருக்கும் எழுதி
r I. Hi t turn Nationali B: Talk, li ffrih:1." து அதற்குரிய வங்கிப் பற்றுச்சீட்
அனுப்பவேண்டிய முகவரி: முகம்", திருபதைக் காமன்றம் : பிரதான விதி, சாழ்ப்பானார்.

Page 3
காலாண்டுச் சஞ்சிகை
蟹 őOGyg5ó
கலை, இலக்கிய, சமூக இதழ்
5606) 18 முகம் O2
ஜூலை - டிசெம்பர் 2007
பிரதம ஆசிரியர் நீ. மரியசேவியர் அடிகள்
பொறுப்பாசிரியர் கி. செல்மர் எமில்
அட்டைப்பட கணினிவடிவமைப்பு அ. ஜூட்ஸன்
உட்பக்க ஒளிப்பட உதவி
ஹரிகரன்
இதழ் வடிவமைப்பு கி. செல்மர் எமில்
கணினிபக்க அமைப்பு ஜெயந்த் சென்ரர் 28, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம்.
அச்சுப்பதிப்பு ஏ. சி. எம். அச்சகம் 464, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு திருமறைக் கலாமன்றம் 238 பிரதான வீதி, யாழ்ப்பாணம், இலங்கை. Tel. & Fax: 021-222 2393 E-Mail: cpateam asitnet. Ik
Centre for Performing Arts 19-5/6. Milagiriya Avenue, Colonnbhe)--4, Sri Lanka. els () || || 2-5 97245 Fax: ( ) || || 2-55 6 7 || .
E-Mail: Saveri i dynamret.lk
கட்டுரைகள்
ஹரன்
தார்மிகி
அம்மன்கிளி முருகதாஸ்
சண்முகம் சிவலிங்கம்
மதுரா
而脑
சைத்ரிகன்
ஹரிகரன்
க. வேல்தஞ்சன்
LDélp6öT
அல்வி
கவிதைகள்
EGOTIT
செ. திருநாவுக்கரசு
岛,而即血5脑
LD, UT, LD5TGürië5ë6)Jth
சித்தாந்தன்
துவாரகன்
卵面
பஹிமா ஜஹான்
5, 63dfoUGir
த. அஐந்தகுமார்
 
 
 
 

சிறுகதை
தப்பிழான் ஐ. சன்முகன்
பத்தி
SLJföGÖT
ஆ. சுரேந்திரன்
நேர்காணல் தந்தவை -இராசரத்தினம் சடாச்சரதேவி(சந்திப்பு இராகவன்
இ. ஜீவகாருண்யன்
மற்றும் தலையங்கம்
கடிதங்கள்
விருதுகள் அஞ்சலிகள் நிக்ழ்வுகள், பதிவுகள்

Page 4
வணக்கம்!
அண்மையில் நான் வெளிநாட்டில் இருந் பொழுது ‘திருக்குறள் நூலை பார்க்க வேண்டிய ஒ தேவை ஏற்பட்டது. என்னுடைய தமிழ் நண்பரிட திருக்குறள் நூல் உண்டா எனக் கேட்டேன். நூ இல்லை. ஆனால் நீங்கள் தேடுகின்ற குறை இணையத்தில் பார்க்கலாம் தானே என்று கூறி, அந் இணைய முகவரியையும் என்னிடம் தந்தார். நானு இணையத்தளத்தைப் புரட்டிப் பார்த்து நான் தேடி குறளையும் கண்டுபிடித்தேன். இங்கு குறிப்பிடப்ப வேண்டிய ஒன்று திருக்குறளை பார்ப்பதற் முயற்சித்துக் கொண்டிருந்த பொழுது விளம்பரங்க பல கவர்ச்சியான படங்களுடன் தோன்றி என தேடலைக் குழப்பிக் கொண்டிருந்தன. குழப்பத்திலுL நிதானத்தையும் நெறிவழுவா தன்மையையும் சவா டன் சந்திக்க பண்பட்ட உள்ளங்கள் உறுதியா இருக்கவேண்டும் என்பதற்கு இது ஒரு களம். நன்ை ஒரு புறம், தீமை மறுபுறம்.
மனித கண்டுபிடிப்புக்கள் ஒளியும், இருளு கலந்தவையே. நன்மையை பயக்கவும், தீமைை விழைவிக்கவும் ஆற்றல் படைத்தவை. பயன்படுத் பவரின் மனப்பக்குவத்திலும், நோக்கத்திலுே அவற்றின் சாதக, பாதகங்கள் தங்கியுள்ளது. அணுசக்தி உலகத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கின்றதென்பது எல்லோரும் அறிந்ததே. அது, எத்தனையோ நாடுகளி குறைந்த செலவில் மின்சக்தியை மக்கள் பெறுவதற் வழிசெய்யும் பொருளாக விளங்குகின்றது. அே அணுசக்தி தான் ஹீரோசிமா, நாகசாக்கி என் அழைக்கப்படும் அழகிய ஜப்பானிய நகரங்களையு தரைமட்டமாக்கியது. ஆக, இத்தகைய கண் பிடிப்புக்களை பொதுநலனுக்காக பயன்படுத்து முறைமையும், தவறான வழிகளில் செல்லாது மணி வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக நிற்கும் கருவிகளாக கணிக்கும் ஒழுக்க முறைமையும் ஊட்டப் படவேண்டும்.
கலைகளையும், இலக்கியங்களை யும் பொறுத்த அளவில் இணையம் என்பது ஒர் அற்புதமான கொடை கலைகளையும், இலக்கியங்களையும் பற்றிய அறிவையும் ஆற்றலையும் வளர்ப்பதற்கு இணையம் போன்ற தலைசிறந்த சாதனம் இதுவரை
இருந்திருக்கவில்லையென்றே கூறவேண்
Ø "*", "}" | Sãã:ඝණ්හී%;&#ඝණ්"{", கலைமுகம் C
 
 

ط) ملاكه لحول كهر
டும். இவ்விரு துறைகளிலும் உலகளாவிய ரீதியில் பல்லினக் கலைகளும், பல்லின இலக்கியங்களும் தத்தம் துறைகளில் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதனையும், எவ்வாறு தனித்துவத்துடன் வேறுபட்டு நிற்கின்றன என்பதையும் காலதாமதமின்றி ஆசிரியன் உதவியின்றி சுயமாக பார்த்து படித்தறியக் கூடிய வாய்ப்பு இணையம் மூலம் அளிக்கப்பட்டிக்கின்றது.
இணைய யுகம் பிறந்ததால் நூல்களுடைய காலம் முடிந்து விட்டதென்றோ, ஆசிரியனுடைய தேவை குறைந்து விட்டதென்றோ பொருளன்று. உண்மையில்; நூல்களும் எவ்வித பாதிப்புமின்றி பெருந்தொகையாக அச்சேறிக் கொண்டிருக்கின்றன. ஆசிரியர்களும் காலத்துக்கு ஏற்ற சேவைகள் புரிந்த வண்ணமே இருக்கின்றனர். ஆயின், இணைய வருகையுடன் கற்கும் முறை மாறியுள்ளது. கற்கும் வேகம் கூடியுள்ளது. அறிவு விழிப்புணர்வுப் புரட்சி ஒன்று முழு உலகத்தையும் ஆட்கொண்டுள்ளது.
இப்பொழுது வெளிநாடுகளுக்குச் செல்லும் போது திருமறைக் கலாமன்றம் பற்றிய செய்திகளை நான் நூல் வடிவில் அசிட்டு காவிச் செல்வதில்லை.
2
து
s
:
நமது இணையத்தளத்தின் முகவரியைக் கொண்டு செல்லுகின்றேன். மன்றம் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு அதனைக் கொடுக்கின்றேன். அதே விதம் மன்றம் சம்பந்தமாக யாருடனும் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பின் மன்றம் பற்றிய முழுத்தகவல்களையும் அவர்கள் ஏற்கெனவே பார்த்து வைத்த பின்பு தான் சந்திப்புக்கு வருகின்றார்கள். எனக்கு ஒரு சுவையான நிகழ்ச்சி நடந்தது. அண்மையில் ஜேர்மனியில் ஒரு நண்பரைச் சந்தித்த பொழுது என்னைப்பற்றிய முழுத் தகவல்களையும் தம்முடைய த மொழியில் படங்களுடன் எனக்குக் காட்டினார். இதுதான் இன்றைய காலத்தின் முன்னேற்றம். திருமறைக் கலாமன்றமும் காலத்தின் அதிவேக தகவல் தொழில் நுட்பத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு, புதிய புதிய சிந்தனைகளுடனும் செயற்பாடுகளுடனும் கலைவழி சமூக மேம்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. காலத்து டன் ஒட்டிச் செல்வதுதான் வாழ்வின் நியதி.

Page 5
線
1so
1)
1.
S.
"The web is a Fundamental Shift 1 Organize themse/ves, and a Way from a Sm down"
சர்வதேச வலைப்பின்னலான இ பயனாளிகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. சமூக,பண்பாட்டுத்தள, பொருளாதார மாற்றரு தெற்காசிய நாடுகளில் இணையம் பற்றி சமூக வெளியிட்டுள்ளது. சில ஆய்வாளர்கள் ‘சமா எனும் எண்ணக் கருவை முதன்மைப்படுத்துகி ஆய்வுகள் உலகமயமாதலின் பின்னணியி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அணுகுவது கொண்டுள்ளோருக்கான அரசியல் ஆயுதமாக அனைத்து ஆய்வாளர்களுமே ஏற்றுக் கொண் தகவல்களை உடனுக்குடன் அனுப்ப முடி பரவலாக்கம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைக
இக்கட்டுரை இணையத்தின் இட முனைகின்ற ஒன்றல்ல. இதனுடாக விபரிக்க கைகுலுக்கிக் கொள்ளுகிற இடங்கள் மட்டுே பயன்படுத்தப்படுகின்றது. சர்வதேச ரீதியில் ஊடகமாக கடந்த எட்டு வருடங்களுக்கு’ டே அதன் பயன்பாடு பற்றி மீள்வலியுறுத்த வே கலாசார, சமூகத் தளத்தில் இணையத்தின் பிர
இக்கட்டுரை: (1). கதையாடல்களை முன்னெடுப் (2). கடந்த வருடங்களில் கதையாடல்
விளைவான தேக்கமும், (3). இணையத்தின் வருகையும் அ
„ti, ...*"**** シン * ****յքi. يمز ه. صم جهينةধ্ৰুং।। 32;|bi frażi
ജ്? a. 系玮 * * ş ونت "لا" لتلدة تنتهيونيو 2
തg
Vs.
l
* أنا جمني ؟ أمام 4} ean François Lyotard 攀 」 liward Sii N talia Kristeva
Heigri CiOX
குறித்த சமூகம் தனது நீடித்த இருப்பிற்கா இடையறாது உரையாடல்களை நிகழ்த்தவே அபெளதீக இருப்பிற்காய் (சிலவேளைகள் முன்வைக்க
கலைமுகம் 0 ஜுலை -
 
 
 
 
 
 
 

O 62gDJabT
in power toward the bottom, toward the people as they al/group of people Who Want to impose a policy top
- Pierre Omidyer /
இணையம் எண்ணிலடங்காத சேவைகளைத் தனது இணையத்தின் வருகை மூலம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிற வ்கள் பற்றி விரிவாகப் பேசப்பட்டுள்ளது. (தமிழிலல்ல :) விஞ்ஞானிகள் சங்கம் (SSA) பல ஆய்வுக் கட்டுரைகளை தானத்திற்காக தகவல் தொழில்நுட்பம் (ICT 4 Peace) கின்றனர். அங்கீலா டபிள்யூ. லிட்டில் போன்றோருடைய ல் வளர்முக நாடுகளில் இணையம்/தொழில்நுட்பம் துண்டு. ‘சமூக மாற்றம்’ தொடர்பில் தம்மை ஈடுபடுத்திக் (political weapon) இணையம் விளக்குவதை ஏறத்தாழ டுள்ளனர். (எ+கா:- மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தல், புகைப்படம்/சலனப்படத்துண்டு ஆகியவற்றின் ளுக்கான ஒருங்கிணைப்பு). ப்படியான பயன்பாடுகளைப் பட்டியலிட்டுச் சொல்ல கப்படுவது தமிழ்க் கதையாடற் புலமும், இணையமும்’ மே. இன்று அரசியல் அரங்கில் இணையம் மிக வலுவுடன் எமது வலிகளைக் கொண்டு செல்வதற்கான சக்தி வாய்ந்த மலாக இணையம் இருந்து வருகிறது. அரசியல் அரங்கில் பண்டிய தேவைகள் ஏதுமில்லை. பண்பாட்டு அரசியல், யோகம் பற்றியே நாம் அதிகம் பேச வேண்டி உள்ளது.
பதன் அவசியம். ல்களை முன்வைப்பதற்கு இருந்த மட்டுப்பாடுகளும் அதன்
அதன் விளைவான முன்நகர்வும் என்கின்ற புள்ளிகளில்
建
పrs! பேன்டி area, گی
gణిస్కానది I q :) @@@ ?
C رC
IQ f
òURSE :, ',
1.I.N.S. Regis Dribray
D-Rff 沙 ticց:: Derrida སྨན་ : :erit. Får i firx & Ffge:S m
醫毯義黏鵝權 عبح ངས་ て یا یین: taز انقلاب . بی. ؛ !![Rt.83 , K2A1 # #NoAl.,198 Mio , *ikrore 1žmuro!;.....
ாகவேண்டி, தனக்குள்ளாகவும், பிற சமூகங்களுடனும் ண்டியுள்ளது. இவ்வாறே, ஒர் தனிமனித உயிரியும் தனது ரில் பெளதீக இருப்பிற்காகவும் கூட) கதையாடல்களை வேண்டியதாயிருக்கிறது.
டிசெம்பர் 2007 3

Page 6
மையம் கொள்கிறது. அத்துடன் கவன ஈர்ப்பு பிரதியாக, இனங்காணப்பட்ட இணையக் கதை டல் களங்கள் சிலவற்றையும் நிரற்படுத்த முயற்சி கிறது.
(1) கதையாடல்கள் இருப்பிற்கான முன்நிபந்தை கதையாடல்கள் (Discourses), ஓர் சமூகத்தி கலாசார- பண்பாட்டு ரீதியிலான உயிர்ப்பு மிக்க இருப்புக் அவசியமான நிபந்தனைகளாக இருப்பவை. ‘அறிவுஜீவி கதையாடல்’, ‘கோட்பாட்டுக் கதையாடல்’, ‘தன்நிலைக கதையாடல்’, ‘அரசியல் கதையாடல்’ இப்படியாக நீளு வகைப்பாடுகள் அவற்றின் “சரி” “பிழைகள்’ என்பவற்.ை கடந்து இவற்றின் இருப்பும் உயிர்ப்புமிக்க நிகழுகையும் ட தேவையானவை.
குறித்த சமூகம் தனது நீடித்த இருப்பிற்காக வேண் தனக்குள்ளாகவும், பிற சமூகங்களுடனும் இடையற உரையாடல்களை நிகழ்த்த வேண்டியுள்ளது. இவ்வாறே, தனி மனித உயிரியும் தனது அபெளதீக இருப்பிற்க, (சிலவேளைகளில் பெளதீக இருப்பிற்காகவும் கூ கதையாடல்களை முன்வைக்க வேண்டியதாயிருக்கிறது.
வரலாறுகளில் தனது இடையீட்டைச் செய்துெ திருக்கிற, தொடர்ந்தும் தன் இருப்பை வலுவுட அடையாளப்படுத்திக் கொண்டு வருகிற ஐரோப்பிய சமூ களின் நீடித்த வலுவான கலாசார இருப்பிற்கான அடித்தல் கதையாடல்களின் நிகழ்த்துகை அன்றி வேறெதுவாக இரு முடியும்? அரிஸ்ரோட்டில், சோக்ரட்டிஸ் இல் இரு இன்றைக்கு போட்ரிலார்ட், டெலியூஸ் வரை ஐரோப்பி கதையாடல் உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிற இந்தக்கதையாடல்கள் ஐரோப்பியர்களின் வலுவான கலாச் இருப்பை நிர்ணயித்தது மாத்திரமன்றி அக்கலாசாரத்து அதீத வலுவை வழங்குபவவையாகவும் (power to the C ture) இருந்தன. காலப்போக்கில் இது ஐரோப்ட மையவாதமாகவும் (Eurocentrism) காலனித்துவ ஆக்கிரட புக்கான பின்புலத்தை, கருத்தியல் வலுவைத் தரு ஐரோப்பிய மையப்பெருங்கதையாடலாகவும் மாறிப்ே னது தனியாகப் பேசப்படவேண்டிய விடயம். எது எப் யிருப்பினும், ஐரோப்பியர்களுடைய கதையாடல் நிக துகையானது அவர்களுடைய கலாசாரம், பண்பாடுகளு (மற்றும் அரசியலுக்கும்) வலுவூட்டியிருப்பதைப் புரி கொள்வதே இங்கு அவசியம்.
கதையாடல்’ என்பதன் முக்கியத்துவத்தை ந விளங்கிக் கொள்ள முடிகிற மிகச் சமீபகால உதாரணம் ஒ6 உண்டு; மேல்விபரிக்கப்பட்ட ஐரோப்பியப் பெருங்க யாடலை மறுத்து எழுகிற சிறுகதையாடல்கள் மூல இதுவரை காலமும் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த கலா அடையாளங்கள் பல, தமது இருப்பை வலுவாக்கம் செ எத்தனிக்கின்றன. பின்காலனித்துவக் கதையாடல் இவ்வகையில் அவதானிப்புக்குரியன. (ஆப்பிரிக்க அடை ளங்கள், நீக்ரோவியல்பு பற்றிக் கதையாடுகிற ங்குகி தியோங்கோவின் நூல்கள்) அல்ஜீரியப் புரட்சியின் டே ப்ரான்ஸ் ஃபனான் பிறகு அமில்கார் கப்ரால் இவர்களுக் பின்னர் வந்து குவிகிற பின் காலனித்துவக் கதையா பிரதிகள். இவற்றினுடாய் மீள்கட்டுமானம் செய்
SDeS e AAGAAiLAYYLLLzTTrieeTtSqAMqrS
கலைமுகம்
 
 

Fார க்கு ul
hu 6tly கிற
LJIT
t ழ்த்
ககு ந்து
πιb ாறு
தை ம்,
Fார ப்ய கள்
Lif
3) T
ாது குப் -ற்
Լ1ւն
} ஜுலை - டிசெம்பர் 2007
படுகிறது. ஆப்பிரிக்கத் தன்நிலை/ அடையாளம் (Reconstructing the African Subjectivity / Identity through cultural discourses - Ngugi) இங்கும் கதையாடல்களின் வகிபாகம்’ நம் கவனிப்பைக் கோரி நிற்கிறது.
ஈழத்தமிழ்ச் சமூகம் தனது வலிகளுடன் இலகுவில் அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய இன்னொரு களம் பாலஸ்தீனம். பாலஸ்தீனியரான எட்வேர்ட் ஸெய்ட் இன் Orientalism கதையாடற்பிரதி நிகழ்த்திய இடையீட்டை, அதன் அதிர்வை இன்று வரைக்கும் உணர்ந்துகொண்டுதான் இருக்கிறோம். பாலஸ்தீனப் பிரச்சினை, இஸ்லாமியப் பண்பாடு நாகரீகம் போன்ற சிக்கற்பாடான விடயங்களில் மிகச் சரியான புரிதல்களை ஏற்படுத்திய அறிவுஜீவி அவர்.
இப்படியாகக் கதையாடல்’ என்பதன் அவசியத் துக்கான நியாயங்களை நீட்டித்துக் கொண்டு செல்லமுடியும். லத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா என்று அதன் களங்கள் விரிந்து கொண்டே செல்லும். இந்த உதாரணங்களில் இருந்து, “கதையாடல்கள்’ ஓர் சமூகத்தின் ஆரோக்கியமான இருப்புக்கு அவசியமானவை என்கிற புரிதலை எட்ட முடிகிறது.
(2) உறைந்து போன மெளனம்
துயரம் தரும் விதமாக ஈழத்தமிழ்ச் சமூகம்" தனது கதையாடல்களைச் சுதந்திரமாக முன்வைக்கும் வெளியை, கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலான காலப்பகுதியில் ஒருபோதும் கொண்டிருந்ததில்லை. கதையாடல் வெளிக்குள் ஆயுதவன்முறையின் குறுக்கீடுகள் நிகழ்ந்த வண்ணமிருந்தன. பல முக்கிய விவாதங்கள் எமது சூழலில் முன்னெடுக்கப் படாமலே போயின. இத்தனைக்கும் இலங்கைப் பெருந்தேசி யக் கதையாடல் தமிழ் அடையாளத்தின் மீது திணிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஃபூக்கோ, தெரிதா வெல்லாம் வேண்டாம், ரெஜி டெப்ரேவைக்கூட ஆழ்ந்து விவாதிக்க நமக்கு அவகாசங்களிருக்கவில்லை. எதிர்ப்பிற்கான வழியாய்ப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்த தமிழ்ச் சமூகம் அதனுடன் மாத்திரம் தேங்கிப் போயிற்று. அனைத்து உரையாடல்களும் அச்சம் தரத்தக்க வகையில் உறைந்து குளிர்த்து போயின. முக்கியமானவர்களாய்’ எமக்குச் சொல்லப்படுகிற பேரா.கா. சிவத்தம்பி போன்றவர்கள் பற்றி அ. மார்க்கஸ் முன்வைக்கிற அவதானிப்புக்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தேங்கிப் போய்விட்டோம் என்பதும் புலமைசார் பண்பாட்டு கலாசார உரையாடல்களுக்கான வெளி குறுக்கப்பட்டுள்ளது என்பதும் கொடுங் கனவென உணரப்படுகிறது.
கதையாடல்களை முன்வைப்பதற்கு ஏதுவான வெளி புலம்பெயர் சூழலிலும் தமிழர்களுக்கு வாய்க்கவேயில்லை. அப்படியிருப்பினும் எஞ்சியிருக்கிறதம் வ்ாழ்நாளுக்குள்ளாக, வலிமிகுந்த தம் கதைகளைப் பேசி விடுகிற மன அவசமும் வேட்கையும் 90 களையொட்டிய புலம் பெயர்ந்த தலைமுறைக்கு இருந்தது. புற்றீசல்கள் போல் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர் சஞ்சிகைகள் புலப்படுத்தி நிற்பதென்ன? ஆனாலும் கூட புலம் பெயர் சூழலிலும் உரையாடலுக்கான வெளி வன்முறையால் இடையீடு செய்யப்பட்ட சந்தர்ப்பங்கள் உண்டு.
இப்படியாக எமது கதையாடற் களம் என்பது அசைவுகளற்ற வெளியாக மாறிப்போயுள்ளது. மாற்றங்களை ஒரளவுக்கு தேட முயன்ற சில பத்திரிகைகள், சஞ்சிகைகள்

Page 7
போன்றவை கூட எவ்வளவு தூரம் உரையாடலைச் சாத்தியமாக்கின என்பது ஒர் கேள்வி.
(3) இணையம் வழியாகக் கதையாடல்களின் முன்னெடுப்பு
ஈழத்தில் கதையாடல் வரட்சியும் உரையாடல் உறைநிலையும் பாரதூரமானவை என்று கண்டோம். இப்படியானதொரு நிலையை மீற முனைகிற முனைப்புகள் அற்றுப் போய்விடவில்லை. இந்த முனைப்புகளுக்கான வெளிப்படு களமாக சமகாலத்தில் இணையம் மட்டுமே இருக்கிறது.
சஞ்சிகைகள் / சிறுபத்திரிக்கைகளைப் பொறுத்த வரை கொண்டு நடத்துவதற்கான சூழல், பொருளாதார வசதி, விற்பனை வலையமைப்பு, வாசகர் தளம், அடையாளம் வெளித்தெரியும் அபாயமும் உயிர்ப்பயமும், வேலைப்பளு என மட்டுப்பாடுகள் நீண்டு செல்கின்றன. இப்படியான மட்டுப்பாடுகள் சிறுபத்திரிகை சார்ந்த உரையாடல்களை ஒரு வகையில் முடிவுக்குக் கொண்டு வந்து விட்டன என்றே தோன்றுகிறது. ஈழத்துச் சூழலிலும் இதற்கு நல்ல உதாரணங் கள் உண்டு.
மேற்குறித்த மட்டுப்பாடுகள் அற்ற சுதந்திர வெளியான இணையம், சாத்தியமற்றது என எண்ணத் தோன்றுகிற உரையாடல்களைக்கூட ஈழத்துச் சூழலிலேயே நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.
எ.கா- பெருவெளி இதழ்க் குழுவினரும் முரண் வெளியும் முஸ்லிம் தேசியத்தை முன்வைத்து நடத்திய நீண்ட
វិនា ឆ្នាទៅចាំ.
90களில் மாற்றுக்களுக்கான களமாக இயங்கிய சரிநிகர் பத்திரிகையின் செயற்பாட்டாளர்களில் ஒருவரும், எழுத்தாளருமான எஸ்.கே. விக்னேஸ்வரன் தனது நேர்கான லொன்றில் பின்வருமாறு கூறுகிறார்.
தவிரவும் இலத்திரனியல் ஊடகங்களின் வருகையின் பின் (குறிப்பாக, இணையத்தின் வருகையின் பின்) பெருமளவிற்கு பத்திரிகைகள் குறைந்து போகின்றன. இலங்கையில் கூட இந்தச் சூழல் காணப்படுகிறது. இப்போது பத்திரிகை நடத்துவதைவிட இணையத்தளங்களில் பத்தி ரிகை நடத்துவதனால் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் கருத்துக்களைச் சொல்வதற்கான வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் சுய அடையாளங்களை வெளிப்படுத்தாமல் கூட கருத்துக்களை சுதந்திரமாக வைக்க முடியும். நான் நினைக் கின்றேன் இனிமேல் இணையத்தளங்களின் ஊடாகத்தான் அரசியல் ரீதியான விடயங்கள் பெருமளவு இடம்பெறப் போகின்றன."
புலம் பெயர்ந்து பெண் எழுத்தை மையமுறுத்தி இயங்குகிற றஞ்சியும் தேவாவும் தமது ‘மை’ கவிதைத் தொகுப்பு நூலுக்கான முன்னுரையில் பின்வருமாறு எழுதுகிறார்கள்.
”முன்னர் இலக்கிய ஆளுமை, எழுத்து முயற்சி என்பன சிலரின் கைகளில் இருந்த நிலை மாறி பரம்பல் நிலையைப் பெற்று வருகிறது. (இதற்கு இணையத்தளமும் ஒரு முக்கிய காரணம்)' "
புலத்தில் இயங்குகிற எஸ்.கே. விக்னேஸ்வரனும் புலம்பெயர்ந்து இயங்குகிற றஞ்சி, தேவாவும் இணையம்
_ (1) C (

தொடர்பில் சாதகமான அவதானிப்புக்களைக் கொண்டிருப் பதை இங்கு நாம் குறித்துக் கொள்ளலாம். இவர்களைப் பொறுத்தவரை கதையாடல்களை நிகழ்த்த மிகவும் அனுசர ணையான வெளியாக இணையம் இருக்கிறது. கதையாடல் களை முன்வைத்தல் என்பதற்கு இணையம் கொண்டுள்ள பின்வரும் அம்சங்கள் சாதகமாகவுள்ளன:
9 அடையாள மறைப்பு தருகிற உயிர்ப்பாதுகாப்பு. * பரவலாக உலகமெங்கும் சென்றடைதல். * சுதந்திரமான தலையீடுகளற்ற இயங்குவெளி. * மிகவும் குறைவான செலவு. * வேலைப்பளு குறைவு. * கவர்ச்சி அதிகம். * எழுத்துக்கள், படங்கள் மட்டுமன்றி பல்லூடகப்
பயன்பாடு. 9 விவாதங்களை முன்னெடுக்க உதவும் உடனடிக்
கருத்துப் பரிமாற்றம். தெற்காசிய மற்றும் ஆசிய பசும்பிக் பிராந்திய மொழிகளில் தமிழில் தான் அதிக டொட் கொம்களும் வலைப்பதிவுகளும் உண்டென்று சொல்லப்படுகிறது.
தமீ
取
in
ன
拉
a X a us r
தமிழ்மணத்தில்' 850 இற்கும் அதிகமான வலைப்பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழில் மாற்றுக்களைத் தேடுவோருக்கான வெளி யாக இணையம் மாறிப் போய்விட்டிருக்கிறது. சாரு நிவேதிதா தனக்கென்றே ஒரு வலைத்தளம் வைத்திருக்கிறார். ஜெய மோகன், அ. முத்துலிங்கம் போன்ற பெரிய எழுத்தாளர்கள் LJ GVå 36s76)6III (www.thinnai.com) LD17gg, La (www. maraththadi.com) “ L u 35)6156ir' (www. pathivukal.com) G3L u Tgirp விவாதக்களங்களில் (forums) இயங்கினார்கள். எஸ். ராமகிருஷ்ணன் அட்சரம்’ எனும் பெயரில் ஒரு வலைப்பதிவை (அதே பெயரில் ஓர் சிற்றிதழையும்) 5 L Lj ĝ6) GITT iii. 2 pp IT Lib gŞGiờT GO GIOT (WWW. aaramthinnai.com) இதழில் அ. மார்க்ஸ் போன்றோர் இயக்கினர்.
இதன் நீட்சி இணையத்தில் மேலும் பல புதியவர்களின் வருகையாக இருந்தது. புதியவர்களின் அலை டொட்கொம்களில் இயங்காமல் வலைப்பதிவுகளில் (blogs) தனது இயக்கத்தை நிகழ்த்தியது. கவிஞர்கள், பத்தி எழுத்தாளர்கள், அலட்டுபவர்கள், சமையல் குறிப்பு
ஸ்-டிசெம்பர் 2007 5

Page 8
எழுதுபவர்கள், வாசிப்பாளர்கள், புகைப்படக் கலைஞர்க எனப் பலதரப்பட்டவர்கள் உள்நுழைந்தார்கள்.
இவர்கள் தமது வெளிப்பாடுகளுக்கு தடையற்ற ஐ ஊடகமாய் இணையத்தை உணருகிறார்களென்பதை அவ ளுடைய வலைப்பதிவின் பெயர்களில் இருந்தே கண் பிடித்து விடலாம். ("வெளி’ என்ற பிரயோகம்)
எ+கா:- மிதக்கும் வெளி (சுகுணாதிவாகரின் பதிவு)
அத்துவான வெளி (அந்தராவின் பதிவு) புல் வெளி (கவிஞர் கருணாகரனின் பதிவு) முரண் வெளி (யாழ். மாணவர்களின் பதிவு) தமிழ் வெளி (வலைப்பதிவுத் திரட்டி)
கதையாடல்களை நிகழ்த்துவதற்கான முனைப்பு வேட்கையும் இவர்களிடம் உயிர்ப்புடனிருக்கிற ”பேசுதல்’, ‘முன்வைத்தல்’ என இயங்குகிறார்கள். பின்வரு உதாரணங்களைக் கவனியுங்கள்.
* எழுத்தாளர் ஷோபா சக்தியின் ‘சத்தியக்கடதா பதிவின் அடையாள வாசகம்: “அதிகாரத்தின் மு உண்மையைப் பேசுவோம்.”
* கவிஞர் கற்பகம் யசோதரவின் மற்றவர்க பதிவின் அடையாள வாசகம்: பேச.
* முரண்வெளி ஆரம்பத்தில் ‘உரத்துப் பே என்பதையும் தற்போது “கதையாடலுக்கான அழைப் என்பதையும் அடையாள வாசகமாய் வைத்திருக்கிறது.
* ஊடறு “பெண்குரல் அவிழ்க்கும் இணைய இத என்கிறது.
பேசுதல்’, ‘கதையாடல்களைக் கோருதல் ‘குரல்களை அவிழ்த்தல்’ என்கிற பிரயோகங்கள் நமக்கு புலப்படுத்தி நிற்பதென்ன?
来来
வலைப்பதிவுகள் ஏற்படுத்தும் அதிர்வலைகை மேற்கில் தெளிவாக இனங்காண முடியும். அரசியல் அரங்கி இது இன்னமும் வன்மையாக உணரப்படுகிற ஒன்று. அரசாங்கம் BlogS மற்றும் இணையத்துக்கு எதிராக செ கொண்டிருப்பவற்றைக்" கூர்ந்து கவனித்தால் ‘அதிகார பயந்து நடுங்கத்தொடங்கியிருப்பதை நாம் புரிந்து கொ6 லாம். சீனாவில் திபெத்திய வலைப்பதிவுகள் ISP க்கள இடையூறு செய்யப்படுவதுண்டு. Google தேடல் பொறி அரசின் பரிந்துரைகளுக்கு அமைவாகத் தனது Search Res ஐfilter செய்து வழங்குகிறது. இவற்றிலிருந்து சீன அரசு என் பெரும் அதிகார நிறுவனம் இணையத்தை, அதன் ெ நிகழுகிற சுதந்திரமான கருத்துப் பரிமாற்றத்தைக் கை அஞ்சுகிறது என்பதை உணரலாம். அமெரிக்கா, கனடாவி சில மாநிலங்களிலெல்லாம் வேட்பாளரின் வெற்றிை தோல்வியைத் தீர்மானிக்குமளவுக்கு வலைப்பதிவுகை செல்வாக்கு அதிகம். வலைப்பதிவாளர்களை எதிர்கால ! makers ஆக Time பத்திரிகை சித்திரிப்புச் செய்தது.
இதே Time 'இதழ் 2006ஆம் ஆண்டின் Person o year ஆக ‘உங்களைத் தெரிவு செய்திருக்கிறது. வித்தி
dj53jbaŬ pastio
 

5.
ltS நிற ழி TG6) ன்
1 / 6ði
ng
the
ffy,
ag°арао - разнibiri 2007
மானதும் புதுமையானதுமான முறையில் புகைப்பட அளவுள்ள பிரதிபலிக்கும் கண்ணாடித்தாளை முகப்பில் ஒட்டி அதில் வாசிப்பவரின் விம்பத்தை விழுமாறு செய்து - gl360TLquSai Person of the year - 2006: You 6Taigi Caption இட்டிருந்தார்கள். 'உங்களை’ 2006 ஆம் ஆண்டின் நாயகராக Time பத்திரிகை தெரிவு செய்ததற்கான முக்கிய காரணம் இணையம்’. Time இதழ்க்காரர்களின் கணிப்பின்படி முன்பொரு போதும் இல்லாத அளவுக்குத் தனி மனிதர் தற்போது முக்கியம் பெறுகிறார். தனிமனித வெளிப்பாடுக ளுக்கு இணையம் களம் அமைத்துத் தருகிறது. தவிர்க்க முடியாதவராக, முக்கியமானவராக தனிமனிதரொருவர் LD I1 g56 (56160g, Blog, Flickr, Youtube , Facebook 37 35T ஒவ்வொன்றிலும் நிகழும் தனிமனித சாதனைகளை ஆதாரம் காட்டி Time இதழ் தனது தெரிவுக்கான காரணங்களை நிரற்படுத்துகிறது. இது மேல் மத்தியதர தட்டிலிருப் போருக்கும் அதற்கு மேலுள்ளவர்களுக்கும் பொருந்திப் போகிற ஒன்று. (தமிழில் கீழ் மத்தியதர வர்க்கம், வறுமைக் கோட்டிற்குக் கீழிருப்போர் கூட அதீத பிரயாசையுடன் இணையத்தில் இயங்குகிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது)
தமிழகத்தில் வலைப்பதிவுகளின் இருப்பு என்பது தாக்க வன்மையுடைய மாற்றுாடக வெளி என்கிற அளவில் கவனிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. திராவிட, தலித்திய, மாற்றுப்பாலியல் வெளிப்பாடுகளுக்கான களமாகவும் தமிழக வலைப் பதிவுகள் விளங்குகின்றன. இவற்றுள் அதிக அதிர்வுகளை உண்டுபண்ணிய முக்கிய மாற்றுக் குரலுக்குரிய வர் ‘லிவிங் ஸ்மைல் வித்தியா, வெளிப்படையாக அறிவித்துக் கொண்டியங்கும் திருநங்கையான "இவர் தன்நிலை சார்ந்த பதிவுகளை தனது வலைப்பதிவில் எழுதி வருகிறார். ‘அரவாணி’ எனும் பிரயோகத்தைத் தமிழ்ப்படுத்தி, விரிந்த அர்த்தங்களுடன், வரலாற்று இணைப்புகளுடன் வித்தியாவால் உருவாக்கப்பட்ட ‘திருநங்கை’ எனும் பதம் பரவலாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. காலச்சுவடு/உயிர்மை போன்ற சிற்றிதழ்கள் சமீபகாலமாக இச்சொல்லைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றன.தமிழில் தனது மாற்றுப்பாலியல் தேர்வை அறிவித்து இயங்குகிற அநிருத்தன் வாசுதேவன்'போன்றவர்கள் கடக்கமுடியாத மெளனத்தை ‘லிவிங் ஸ்மைல் வித்தியா’ அநாயசமாகத் தகர்த்து எறிந்திருக்கிறார். அணங்கு (மாலதி மைத்ரி) போன்ற சிறுபத்திரிகைகளால் இவர் கவனப்படுத்தப்பட்டிருக்கிறார். மையநீரோட்ட ஊடகமான 'ஆனந்த விகடன்’ ஈழத்தைச் சேர்ந்த தமிழ்நதியின் வலைப்பதிவிலுள்ள கவிதைகளை மீள்பிரசுரம் செய்து கவனப்படுத்தியது. இங்கும் ‘மூன்றாவது மனிதன்’ இதழ் முரண்வெளியின் யாழ்ப்பாண நாட்டுக் குறிப்புகள்-1 இனை மறுபிரசுரம் செய்தது. சரிநிகரும்: கற்பகம் யசோதர, ரேகுப்தி, நிவேதா, டிசே தமிழன், மித்ரா போன்றவர்களின் வலைப்பதிவு ஆக்கங்களை மீள்பிரசுரம் செய்திருக்கிறது. (மே-ஜூன் 2007 இதழ்)
இத்தகைய நகர்வுகளை விட முக்கியமான விடயம் இணையத்தின் வழி நடைபெறுகிற கையெழுத்துத் திரட்டல், மனித உரிமைச் செயற்பாட்டாளரான திரு, தனது ஆலமரம் (http://alamaram blogspot.com) Llug@G?SOTILITAJ, LJ GoGo Tulî gi, கணக்கான இலத்திரனியல் கையொப்பங்களை திரட்டி

Page 9
ஈழத்தமிழர் பிரச்சினையை வலைப்பதிவர் உலகில் கவனம் பெறச் செய்தார். இந்தக் கையெழுத்துக்கள் பின்பு உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சி unts gairaopdig, WWEB (worldwide bloggerS-2 agg.cp65u வலைப்பதிவாளர்கள் அமைப்பு) ‘தமிழர்களின் தனிநாடு’ என்பதை அங்கீகரித்திருக்கிறது. இதன் அங்கத்தவர்கள்'ஈழம்' என்பதைத் தனிநாடாகவே கருதிக் கொள்வர்.
இவ்வாறாக வலைப்பதிவு விவாதங்கள், இணையத் தள விவாதங்கள் அனைத்தும் அவற்றின் குறை நிறைகளுடன் கூட்டாகச் சேர்ந்து புரிதல்களை அடைவதற்கும், எமது தேடல்களை விரிவுபடுத்திக் கொள்ளவும் உதவி புரிகின்றன. அத்துடன் இங்கு ஒவ்வொருத்தருமே வினைசெய் உயிரியாக (Active) பங்கேற்க முடியும் என்பதும், அப்படியான பங்கேற்புகளுக்கு இடையூறுகள் மிகமிகக் குறைவு என்பதும் மகிழ்ச்சி தருகிற விடயங்கள். *
来来来
துணைப்பிரதி-1
கவனிப்பிற்குரிய சில வலைத்தளங்கள்/பதிவுகள்.
9 llum gib ġ5 L 54p (http://appaaltamil.com )
கி.பி அரவிந்தன், கருணாகரன், தா.பாலகணேசன், வாசுதேவன், அம்புலி போன்ற பலர் இதில் எழுதுகிறார்கள். தேசிய உணர்வுடைய படைப்பாளிகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் தமிழ் களம்தருகிறது. ‘நேச மொழியில் பேசவிடு’ எனும் தலைப்பில் போராளிப் பெண்கவியான அம்புலி பத்தி எழுதுகிறார். பரதேசிகளின் பாடல்கள்’ தொகுப்பை முன் வைத்து கருணாகரன், வாசுதேவனுக்கு இடையில் நடை பெற்ற விவாதம் பிரபலமான ஒன்று.
LDpöp G is Git (http://mattavarkal.blogspot.com)
அதிர்வுகளைத் தரும் கவி கற்பகம் யசோதரவினால்
நிர்வகிக்கப்படுகிற வலைப்பதிவு இது. மிக இளம் தலை
முறைப் படைப்பாளிகள் பலர் எழுதுகிறார்கள்.
:ulu &&5Ll-g) (T6F) (http://www.satiya kadatasi.com) ஷோபா சக்தி, தியோ ஆகியோரால் நிர்வகிக்கப் படுகிற இப்பதிவு ‘அதிகாரத்தின் முன் உண்மைகளைப் பேசுவதாக’ அறிவிக்கிறது. பின் நவீன கலக, மார்க்சிய, தலித்தியக் கதையாடற் பிரதிகளை சத்தியக்கடதாசி வலை யேற்றுகிறது. இதில் இடம்பெறுகிற பின்னூட்ட விவாதங்கள் சுவாரஸ்யமானவை. ஷோபா சக்தி, சுகன், சேனன், கற்பகம் யசோதர, ஜிப்ரி ஹசன், வசுமித்ர, தமிழரசன், வ.அழகலிங்கம் ஆகியோர் இதில் எழுதுபவர்கள்.
a)GYIl gp (http://udaru.blogdrive.com)
றஞ்சி (சுவிஸ்), தேவா(ஜேர்மனி), ஆகியோரால் பெண்களின் பிரதிகளுக்காய் நடத்தப்படும் இணைய இதழ் இதுவாகும். சுகிர்தராணி, குட்டி ரேவதி, அனார், கற்பகம் யசோதர போன்ற முக்கியமான கவிஞர்கள் பலர் எழுதுகிறார்கள்.
_ ) (b Q ജൈ

õgi (http://www.keetru.com)
இங்கும் நிறையப்பேர் எழுதுகிறார்கள். கீற்றினைப் பொறுத்தவரை அது வழங்குகிற சிற்றிதழ்கள் பிரபலமா னவை. அநிச்ச, புது எழுத்து, தலித் முரசு, உங்கள் நூலகம், புது விசை, கூட்டாஞ்சோறு, ஏணி, தீம்தரிகிட, கதைசொல்லி, ாளான், அணங்கு, கவிதாசரண், குதிரைவீரன் பயணம் உள்ளிட்ட பல முக்கியமான சிறுபத்திரிகைகளின் இணையப் பதிப்புகளை (Online editions) இலவசமாகப் பார்வையிட லாம். அபிப்பிராயம் தெரிவிக்கும் வசதியும் உண்டு.
p T6ár6)6)16í (http://www.muranveli.net)
யாழ்ப்பாணத்திலிருந்து எழுதுகிற ஆமிரபாலி,சனன், ஹரி, அதீதன் ஆகியோரின் கூட்டுப்பதிவு. முரண்வெளி பின்நவீனம் சார்ந்த கதையாடல்களை முன்னெடுக்கிறது. பெருவெளியின் றியாஸ் குரானாவுடன் நடந்த விவாதம், பெண் புனைபெயர் சர்ச்சைகள், யாழ்ப்பாண நாட்குறிப்புகள் ஆகியவை முரண் வெளிக்குப் பரவலான கவனிப்பைப் பெற்றுத் தந்தவை.
சத்தியக்கடதாசி, அப்பால் தமிழ், முரண்வெளி, ஊடறு, மற்றவர்கள், கீற்று போன்றவை “கதையாடற் களங் 5ள்’ எனும் வகைப்பாட்டிற்குரியவை. கீழே நிரற்படுத்தப் படுபவவை தனி நபர்களால் நிர்வகிக்கப்படுகிற வலைப் பதிவுகள். (தேர்வு தனிப்பட்ட இரசனையின் அடிப்படையி லானது)
O தனிமையின் இசை - அய்யனார் (http://ayyanarr.blogspot.com) கவிதைகள், உரைநடைகள், அனுபவப்பகிர்வுகள், வாசிப்பு
O 'மலர்கள்' - தான்யா
(http://malarkal.blogspot.com) கவிதைகள், பெண்ணியம், கட்டுரைகள்,விமர்சனம் O ‘ரேகுப்தி - நிவேதா (http://rekupthi.blogspot.com) கவிதைகள் அனுபவப்பகிர்வுகள், பெண்ணியம், வாசிப்பு, கட்டுரைகள் O ‘டிசே தமிழன்’ - இளங்கோ (http://djthamilan.blogspot.com) கவிதைகள் அனுபவப்பகிர்வுகள், உரைநடை, வாசிப்பு, இசை, திரைப்படம் O “பெட்டையின் மனப்பதிவுகள்’- ஒரு பொடிச்சி (http://peddai.net) அனுபவப்பகிர்வுகள், பெண்ணியம், பகிடி, இசை, அரசியல், விமர்சனம் O Li - Log4Jait (http://mauran.blogspot.com) அனுபவப்பகிர்வுகள், திரைப்படம், அரசியல், தொழில்நுட்பம், வாசிப்பு O ‘வினையான தொகை' - வளர்மதி (http://vinaiaanathogai.blogspot.com) பின் நவீன நிைைலவரம், கட்டுரைகள், விவாதம் O ‘வியாபகன்' - வியாபகன் (http://viyabagan.blogspot.com)
கவிதைகள்
-ழசெம்பர் 2007 7

Page 10
O ‘மிதக்கும் வெளி' - சுகுணா திவாகர் (http://sugunadiwakar.blogspot.com) கவிதைகள், அரசியல், தலித்தியம், பின் நவீன நிலைவரம், எதிர் அழகியல், விமர்சனம், திரைப்படம், அனுபவம்
O “கரிசல்" - சன்னாசி (http://dystocia.weblogspot.us) புனைவு, பகிடி, கவிதை, இசை, திரைப்படம், அனுபவம், இலக்கியம் O “அகிலனின் கனவு’ - த. அகிலன் (http://agilankanavu.blogspot.com) கவிதைகள், அனுபவப் பகிர்வு O மதி கந்தசாமி (http://mathy.kandasamy.net/musings) அனுபவம், இலக்கிய வாசிப்பு, திரைப்படம், இை சமையல், கலைகள், கவன ஈர்ப்புகள் O இளவேனில்' - தமிழ் நதி (http://tamilnathy.blogspot.com) கவிதைகள் ,அனுபவங்கள், புனைவு O ‘அத்துவான வெளி' - அந்தரா (http://antara.blogspot.com) கவிதைகள், பெண்ணியம், பாலியல், விமர்சனம் O “பெயரிலி/அலைஞனின் அலைகள் -பெயரின் (http://wandererwaves.blogspot.com) விவாதம், பகிடி, பகிர்வு, எள்ளல். O “கொஞ்சம் கொஞ்சம் - பொறுக்கி (http://porukki.weblogspot.us)
அனுபவப் பகிர்வு, எண்ணங்கள், வாசிப்பு
இவைதவிர, இன்னும் நிறைய முக்கியமான பதி கள் உண்டு. எனது கவனிப்புக்கெட்டிய வரையில் இவர்க இரசனைக்குரியவர்கள். வலைப்பதிவுத் திரட்டிகளுக்கு (blog aggregators) செல்வதன் மூலம் மேலும் பலரை கண்டடையலாம். தமிழ் வலைப்பதிவுகளுக்கென்று ஐந்து ஆறு திரட்டிகள் உண்டு. இவற்றுள் தமிழ் மணம் (http www.thamizmanam.com) SFp t'i Luft Golgi. g5 L6 yjp LD GOOTggộ) வாராந்தர வெளியீடான ‘ங் - பூங்கா’ முக்கிய வலைப்பதி இடுகைகளைக் கவனப்படுத்துகிறது. வலைப்பதிவுகளி தரவுகள் அனைத்தையும் தமிழ் மணத்தில் பெறலாம்.
நட்சத்திரன் செவ்விந்தியன், ஆழியாள், மைதி: திருமாவளவன், கருணாகரன், பஹீமா ஜஹான் போன்ற ட படைப்பாளிகள் தமது படைப்புக்களைத் தனியான வலை பதிவுகளில் தொகுத்திருக்கிறார்கள். இவற்றை தமிழ் மண மூலம் அடைவது கடினம். இவர்களுடைய பெயர்கை யுனிகோட்டில் தட்டச்சுச் செய்து Google தேடுபொறி மூல SS GOSTL–60) L– LIGOs LD.
ஏலவே விளம்பரங்கள் மூலம் பிரபலமானவையு Web 1.0/1.5 தலைமுறைக்குரியவையுமான WWW.thinn com, www.chaaral.com, www.vaarppu.com, www.pathivuk com, www.ninnai.com G3LJ TGöIpGö)Qu LIịỏgóìu I -9}{óìapoth (g)!! தவிர்க்கப்பட்டிருந்தாலும் கூட Web 2.0 வின் வருகை முன்பான காலத்தில் அவை பெற்றிருந்த முக்கியத்துவத்: மறந்துவிட முடியாது.
Ꭶ2 ᏑᏍ Ꮗ èᎿri;>2ᏂᎥi; C
 

துணைப்பிரதி 11 பங்கேற்பு
வலைப்பதிவு இடுக்கையொன்றை வாசித்துவிட்டு அது பற்றிய உங்கள் அபிப்பிரயத்தை ‘Post a Comment பகுதியில் தெரிவிக்கும் வசதி உண்டு. உங்களுடைய அபிப்பிராயத்துக்கு வேறொருவர் பதில் எழுதி அதை நீங்கள் பார்வையிட்டு பின்னர் பதில் எழுதி. இப்படியாக விவாதம் முன்னெடுத்துச் செல்லப்படும். உங்களுடைய பெயர் மின் அஞ்சல் முகவரி மட்டும் கொடுத்தால் போதுமானது.
நீங்களும் வலைப்பதிவராக முடியும். Google Accountgairaop 606) giggllil Saigaold LDT), WWW.blogger.com, www.blogspot.com ஆகியவற்றினூடாக உங்களுக்கான வலைப்பதிவை நிறுவிக்கொள்ள முடியும். WWWWordpress. com www.blogdrive.com, www.bloghi.com Gustairgi Lugu GlyptiSigg,6triids Git (blog hosts) p 657G).
வலைப்பதிவை நிர்வகிப்பது (Manage) வடிவமைப் Lugi (customize), GTQupgig, Gò (posting/publishing) LDịöpith இற்றைப்படுத்துவது (update) தொடர்பான விரிவான விளக்கங்களை வழங்கித்தளங்களின் Help/FAQ பிரிவுகளில் பெறமுடியும்.
இணையச் சேவையை யாழ். பொது சன நூலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும். ஒரு மணித்தியால பாவனைக்கான கட்டணம் நாற்பது ரூபாய்கள்.
துணைப்பிரதி III
தொழில் நுட்ப உதவிக் குறிப்புகள்
இங்கு குறிப்பிட்டப்பட்டுள்ள வலைத்தளங்களை ub 15660) GTub Internet Explorer, Netscape, Firefox, Mozilla, Opera என எந்தவொரு இணைய உலாவி கொண்டும் பார்வையிடலாம். சில சந்தர்ப்பங்களில் எழுத்துருப் பிரச்சினை காரணமாக வாசிக்க முடியாது போயின் Encoding 9 Unicode என்பதைத் தெரிவு செய்துகொண்டு குறித்த தளத்தைப் பார்வையிடலாம்.
இணையத்தில் தமிழின் இருப்பு வெகு வேகமாக Unicode அமைப்புக்கு மாறிக் கொண்டிருக்கிறது. நாமும் பாமினி எழுத்துருவில் இருந்து விடுபட வேண்டியிருக்கிறது. இணையத்தமிழின் உச்ச பயன் பெற விரும்புவோர் My Com. puter - Control Panel - Regional Languages and setrings என்கிற Path இல் சென்று Languages என்பதில் Tamil எனும் தேர்வைச்செய்து அதை Activate பண்ணிக்கொள்ள வேண் டும். XP இற்குப் பின்னரான இயங்கு தளங்களில் இந்த வசதி உண்டு. XP இற்கு முந்தைய OS களைப் பயன்படுத்துவோர் கூடிய சீக்கிரம் XP/ அதற்குப்பிந்திய இயங்குதளப் பதிவு களுக்கு மாறிவிடுவது நன்று. XP யிலும் சிலவேளைகளில் Menu வில் Tamil எனும் Optionஇருப்பதில்லை. அப்படியான சிக்கலென்றால் Windows XP -CD யை இயக்கி குறித்த Language Componentஇனைநிறுவிக் கொள்ள (instal)வேண்டும் இந்த இடங்களில் கணினி நிபுணரொருவரின் ஆலோசனை அவசியம்.
தமிழ் வலைப்பதிவுகளில் அபிப்பிராயம் தெரிவிப்ப தற்கும் வலைப்பதிவுகளில் எழுதுவதற்கும் Unicode எழுதி -9ị Q16ìu ứ. Tavulte Soft keyman UniAria 3169!th QGuQJ+
Ꭷ3°Ꮿi1st - 1pᎧhᎯ-ᎥioᏓᏗfr 2ᏣᎤ ;" Ꮙ, ᎦᏈᏕᎿ'ᏈᏑᏐᏉ 27Ꭶ

Page 11
மென்பொருளை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். -
தரவிறக்கம் (downloading) நீண்ட நேரம் எடுக்கக் கூடுமென அஞ்சுபவர்கள் எழுத்துரு மாற்றிகளைப் (font encoders and converters) u ft Gới 35 GUIT Lib. 20. si 35 GA5ë (55') பழக்கமான முறையில் தட்டச்சு செய்து Unicode அதை எழுத்துருவாக மாற்றும் வசதியை சுரதா யாழ்வாணன் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவரது வலைத்தளத்தில் g)6Si 6nia#-g5)68) uuuʼi G)Lup Gv fTlb. WWW.Jaffnalibrary.com/tools/. unicode.htm.
அடிக்குறிப்புகள்:
1-Quoted in web 2.0' British Computer Society Journal, January2006 2-பார்க்கPolity இதழில் 2006-2007காலப்பகுதியில் வெளிவந்த கட்டுரைகள், SSA 3- தமிழ்நெற் 90களின் இறுதிப்பகுதியில் தனது சேவையை ஆரம்பித்தது. 4- பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகியவை பல தேசங்களை விழுங்கியதை கார்ல் மார்க்ஸ் காட்டு மிராண்டித் தனத்திற்கு எதிரான நாகரீகத்தின் உரிமை என்றார். பார்க்க : Marx and Engels, Collected works, Progress Publishers, 1975 Editon Vol 8, p.234,356 5-மேலும் விபரங்கள் அறிய காண்க:- 'ஏகாதிபத்தியத்துக் கெதிரான பண்பாட்டு வெடிகுண்டு. பாலைநகர் ஜிப்ரி ஹஸன், மூன்றாவது மனிதன்-18, "பின் காலனித்துவ இலக்கியப் போக்குகளும். ஹரிஹரஷர்மா - கலைமுகம் ஜுலை - டிசெம்பர் 2006, பண்பாட்டு அடையாளங்கள் சிதைதல் ஒர் ஆப்பிரிக்க இலக்கியப் பதிவு ஹரிஹரஷர்மா, மூன்றாவது மனிதன் 17, பின் காலனித்துவம்:- சில விளக்கங்கள் பேரா: சச்சிதானந்தம் சுகிர்தராஜா, கூடம், ஜூலை - டிசெம்பர் 2006
எதிர்பார்க் கலைமுகம் காலாண்டு கலை,இலக்கிய, சமூக இதழுக்கு படைப்பாளிகளிடமிருந்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், கலை இலக்கியம் சார்ந்த சமகாலநிகழ்வுகளின் பார்வைகள், தகவல்கள் என்பவற்றை எதிர்பார்க்கின்றோம்.
படைப்புகளை அனுப்பும்போது உங்கள் முகவரியை தவறாது குறிப்பிட்டு அனுப்புமாறு வேண்டுகின்றோம். முகவரியின்றி வருகின்ற படைப்புகள்
பிரசுரத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அத்துடன் உங்கள் படைப்புக்கள் எதுவானாலும் அவற்றை
Y- *—
#Rుp C భవనా);
 

3-இப்பதம் முஸ்லிம்கள், தலித்துக்கள், மலையகத்தமிழர்கள் அனைவரையும் குறித்து நிற்கிறது. உள்ளொடுக்கும் (Oppressive de-differentiation) gyüj5é5Gvaágó) p Girgit Lig5ub (inclusive) அர்த்தத்தில். 7-பின்நவீன கோட்பாட்டாளர்கள். 3-மார்க்சிசம் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் முக்கிய மான கோட்பாட்டாளர். 9-காண்க: எஸ்.கே.விக்னேஸ்வரன் நேர்காணல், மூன்றாவது மனிதன் 18, செப்ரெம்பர் 2006 10-காண்க: ‘மை’ கவிதைத் தொகுப்பு ஊடறு வெளியீடு, ஜூன் 2007. 11-thamizmanam-com-a-blog aggregator. (Date checked midJune) 12-3, T657.5: “Google Under the Gun' - Lev Grossman in TIME February 13, 2006. “Google and the china Syndrome' - Steven Levy in Newsweek, February 13, 2006 13-3, T6375: Time. Dec, 13, 2006 Person of the Year Special issue. 14- திருநங்கை என்பது பால் மாற்று சிகிச்சை மூலம் பால்மாற்றம் செய்தோரைக் (Transgender) குறிக்கப் பயன்படுகிறது. திரு (ஆண்)+நங்கை (பெண்) ஆகியவற்றின் சேர்க்கையால் வருவது. 15-காண்க: ‘தமிழர் வாழ்வில் காதல்’ சிறப்பிதழ், காலச்சுவடு, ஜூன் 2006 *இணையத்தளம்/வலைப்பதிவு என்பவற்றை விடவும் Youtube (சலனப்படங்களுக்கானது) Flickr (புகைப் படங்களுக்கானது) VR (தோற்றநிலை மெய்ம்மை) போன்றவை இணையத்தில் உண்டு. இவை கதையாடல்களை கவன ஈர்ப்புகளை நிகழ்த்துவதற்கு மிகவும் துணைபுரியக் கூடியவை எனினும் தமிழ்ச்சூழலில் இவை இன்னமும் போதியளவு பரவலடையவில்லை. இவை மிகச் சமீபத்திய வளர்ச்சிகள் ஆகும். அதிநவீன கணனி உபகரணங்களை இவை தேவைப்படுத்துகின்றன.
கின்றோம்.
தெளிவான கையெழுத்தில் அல்லது கணினியில் ரைப் செய்து அனுப்புமாறு வேண்டுகின்றோம்.
அடுத்த இதழுக்கான உங்களது ஆக்கங்களை விரைவாக அனுப்பிவையுங்கள். மற்றும் கலைமுகம் பற்றிய உங்களது கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம். ஆக்கங்கள் மற்றும் கருத்துக்களை
அனுப்பவேண்டிய முகவரி:
ஆசிரியர்,
'கலைமுகம்
திருமறைக்கலாமன்றம்,
238, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
- phణాiut 2007 . . "

Page 12
குரல் என்ற நதி அல்லது திராட்சை ரசம்
உன் குரலுக்கு இன்று நீ புரவிகளைப் பூட்டவில்லையா உன்னுடைய சொற்கள் என்பவை அறுவடை காலத்தில் பளிச்சிடுகின்ற நெற்கதிர்கள் வசந்தகாலதேன்சிட்டுக்களின் ஆரவாரிப்புக்கள் ஒரு வயல் வெளியளவு சொற்கள் இருந்தன என்னுள் எப்போதும் உனக்காக எல்லாம் பச்சைப் பசுமையாக உன் குரல் நதியுள் டொன் மீன்கள் துள்ளுவதை, குதிப்பதை மலையுச்சியிலிருந்து அந்தியென நான் ரசித்திருப்பேன் உன் குரலில் வைத்திருக்கிறாய் முத்தங்களால் நிரம்பிய மாயப் புரம் மற்றும்
பனிப் பாறைகளால் மூடுண்ட குளிர்ந்து விறைக்கச் செய்யுமோர் பெரு நீர்ப்பரப்பு அகோரப்பசி எடுக்கையில் அந்தப்புரத்தின் அரசி ஆர்வத்துடன் பருகும் அனைத்து ருசிகளும் உள்ளதுதான் உன் குரல் என்ற திராட்சை ரசம்
நான் வண்
Ο Ι
ஒரு காட்டாறு ஒரு பேரருவி ஒ7 ஆழக் கடல ஒர் அடை மழை நீர் நான் கரும் பாறை மலை
பசும் வயல் வெளி ஒரு விதை
""; స్క్రిస్ట్రోశిక్ట్క్య 'ష్ణో* -
 

ஒரு காடு
JEGốir நிலம் நான் (y உடல் காலம்
உள்ளம் காற்று கண்கள் நெருப்பு நானே ஆகாயம் நானே அண்டம் எனக்கென்ன எல்லைகள் நான் இயற்கை
நான் பெண்
O2
அது போர்க்களம் வசதியான பரிசோதனைக் கூடம் வற்றாத களஞ்சியம் நிரந்தர சிறைச் சாலை அது பலிப்பீடம்
அது பெண் உடல்
உள்ளக் குமுறல்
உயிர்த் துடிப்பு இரு பாலாருக்கும் ஒரே விதமானது

Page 13
எனினும்
பெண்ணுடையது என்பதனாலேயே எந்த மரியாதையும் இருப்பதில்லை அதற்கு SSGD என் முன்தான் நிகழ்கின்றது
என் மீதான கொலை
அறைக்கு வெளியே அலையும் உறக்கம்
துணிகளை மடித்து அலுமாரியில் அடுக்கினேன்
அறை விளக்குகளை குறைத்து வைத்தேன்
விரிப்பை நேர்த்தியாக்கி இரண்டு தலையணைகளை அருகருகே இணைத்தேன் தளர்வான இரவு ஆடையை அணிந்து கொண்டேன் விசமேறிய இரவின் பானம் என் தாகத்தின் முன் உள்ளது ருசிகள் ஊறிய கனவுகளுடன் என் உறக்கம் அறைக்கு வெளியே அலைகிறது
கலைமுகம் O ஜூ:ை
 

யறிகுவிதைதள்
உக்கிரம்
நிந்திக்கப்படுகின்ற பொழுது எவ்வாறிருக்கும் பலிபீடத்தில் நெருப்புச் சுவாலையின் தீண்டலென நீளும்பொழுதின் வதை எவ்வாறிருக்கும் அதைத் தீர்ப்பெழுதுகின்றவர்களின் மொழி ஒநாயின் கண்களைப்போல் திகிலூட்டுகின்றது இலையுதிர்கால உக்கிரத்தில் அபயம் கோரும் துடிப்புகள் துவேசங்களுக்குள் வீசப்படுகின்றன அதிகாரத்தின் கொடுங்கோன்மை தூக்குமேடைச் சடலத்தில் விறைத்திருக்கிறது உணர்ச்சிகளின் குளிர்ந்த புகைமூட்டத்தினுள் தீர்ப்பெழுதப்பட்டவனின் இருதயம் (இனியெப்போதும் கிடைக்காத) ஆழ்ந்த முத்தத்தின் ஏக்கமென மாறாத அச்சத்தோடு அலையக்கூடும் உலகைப் பார்த்துக் கூறவிரும்பிய வாழ்த்துக் கூறல் பிரியாவிடைக்கான கை அசைப்பு சிறிது உயிரிருக்கும் குரல்வளையில் உள் தணிந்திருக்கும் நீதியின் பெயரால் கழுத்தை நெரிப்பதற்காக தொங்கவிடப்பட்ட தூக்குக்கயிறு எல்லாவற்றையும் முடித்துவிடுமா பின் கட்டப்பட்ட கைகளுக்குள் வலித்து வியர்வையில் மணக்கிறது மனித உடற்சூடு அனாதரவாக்கப்பட்டபோது எங்கிருந்ததோ அவன் தேடிய கருணை அவன் அடைக்கலம் கோரும்போது எங்கிருந்ததோ கருணையின் மனச்சாட்சி

Page 14
சி னு க தை
*மாஸ்டர் சுத்திக் கும்பிட்டிட்டு வாங்கோ மத்தியானம் சாப்பிட்டிட்டுப் போகலாம்”. எதிர்பாரா; அழைப்பைக் கேட்டு வியந்து நின்றான். இருந்த இடத்தி லிருந்து எழுந்து வந்த தாடிச்சாமியார், அவன் கையை பிடித்துக் கொண்டே சொன்னார்.
ஒரு கணம் தயங்கினாலும், “சரி வாறேன் எந்த இடத்தில் சந்திக்கலாம்” எனக்கேட்டான்.
“நான் இதிலேயே இருப்பேன், இந்த இடத்துக்ே வாருங்கோவேன்’.
நேரம் பத்து மணியாகிக் கொண்டிருந்தது. தீர்த்தப் முடிந்திருந்தது. சனங்கள் பெருமளவில் கலைந்து கொண்டி ருந்தனர்.
உள் வீதியை ஒருமுறை சுற்றி வந்து மீண்டுப் ஒருமுறை சுற்றினான். மூலஸ்தானத்தைப் பார்த்துதலைமேல் கைவைத்து கும்பிட்டான். பஞ்சாலத்தி தீபாரதனை பார்த்து கண்களில் ஒற்றிக் கொண்டான். விபூதி சந்தனம் வாங்கி சனசந்தடி குறைந்த ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டான்.
காவடிகள் வந்து கொண்டிருந்தன. முதுகில் செடில் குத்தி கயிறு கட்டி பின்னால் ஒருவர் இழுத்துப்பிடிக் முன்னால் காவடியைச் சுமந்து வந்து கொண்டிருந்தவர்கள் வெறிபிடித்தவர்கள் போல ஆடினர். அதற்கேற்பவே தவில் அடிப்பவனும் தாளகதியில் அடித்துக்கொண்டிருந்தான்.
சனங்கள் தம்பாட்டிலேயே போய் வந்து கொண்டி ருந்தனர். சிலர் சுற்றிவர நின்று காவடி ஆட்டத்தையுட பார்த்தனர்.
தீர்த்தம் முடிந்து இவ்வளவு நேரமாகியும் எவ்வளவு சனங்கள்? இளைஞர்கள், குமரிகள், குழந்தைகள், நடுத்த வயதினர், வயது போய் தலை நரைத்தவர்கள் - ஆண்களு பெண்களும் கலந்த குவியலாய்.
திடீரெனக் குறுக்கே போய் மூலஸ்தானத்தை கும்பிட்டுத் திரும்பிய தாடிச்சாமியார் கீழே அமர்ந்திருந் அவனைத் தற்செயலாய் கண்டவராய், “பன்னிரெண் மணிக்கு போவோம்’ என்றார்.
அவன் தலையசைத்தான். அப்போது நேரம் ப னொன்றரை ஆகிக் கொண்டிருந்தது.
இவன் சனக்கும்பலிலேயே இலயித்திருந்தான் நிழல்களாய் அசையும் மனிதர்கள்; அவனைப் போலே அமர்ந்திருந்து எதிலெதிலோ இலயித்திருக்கும் மனிதர்கள் குசலம் விசாரிப்போர் - கை காட்டிச் செல்வோர் - ன பிடித்துச்செல்வோர் - ஏதேதோ பாடல்களை முணுமுணுத்து செல்வோர் - கண்ணீர் விட்டழுது முறையிடுவோர் அரோகரா அரோகரா எனக் கோஷம் எழுப்புவோரெனச் சனங்கள். சனங்கள். சனங்கள்.
நேரம் பன்னிரெண்டு மணியாகிக் கொண்டிருந்த தன்னைக் கலைத்து எழுந்து தாடிச்சாமியார் இருந்த இட திற்குச் சென்றான். அவனுக்கு ஏற்கெனவே அறிமுகமா இருந்த ஒருவரும் உருத்திராட்சமாலை போட்ட இளைஞர்ச இருவரும் தாடிச் சாமியாருடன்
12, .
(scoarţă: li. C
 
 
 

அவனைக் கண்டதும் தாடிச்சாமியார் போவோமா எனக் கேட்டுக்கொண்டே எழுந்து வந்து முன்னால் நடந்தார். இளைஞர்கள் இருவரும் விடைபெற்றுச் செல்ல, அறிமுகம் ஆனவரும் அவனுமாய் சாமியார் பின்னே நடந்தனர்.
சாமியாரின் எதிர்பாராத - அன்பான அழைப்புக்காக அவர் பின்னே செல்வதாக அறிமுகமானவருக்கு அவன் சொன்னான்.
“அவ்வாறே நானும் வாறேன்” அறிமுகமானவரும் அவனுக்குச் சொன்னார்.
சனக்கூட்டத்தை ஊடறுத்து மெதுவாகவே சென்ற சாமியார், இரண்டு மூன்று திருப்பங்கள்தாண்டிச் சென்று, ஒரு வீட்டின் முன் நின்று கேற்றைத் திறந்தார்.
இவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஏதோ வோர் அன்னதான மடத்திற்கே அழைத்துச் செல்கிறாரென நினைத்திருந்தான்.
வீட்டின் தாழ்வாரத்தில் நின்று “பின்னுக்கா” என்று குரலெழுப்பினார்.
“ஓம்; பின் வீட்டுக்குப் போங்கோ.” அங்கே மலர்ந்த முகங்களாய் வரவேற்பு. வயதானவர் ஒருவர், நடுத்தர வயதுடையவர் ஒருவர், அவரின் மனைவி யான பெண்மணி, இரண்டு இளம் பெண்கள் , ஒரு சிறுமி , ஒரு குழந்தை.
Oகுப்பிழான் ஐ. சன்முகன்
தாடிச்சாமியார் ஆண்கள் இருவரையும் பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தார்.
அறிமுகமானவரின் முகத்தில் ஒரு பிரகாசம் வந்த மாதிரி இருந்தது. “திருவருள்- திருவருள்- திருவருள்”உரக்கச் சொல்லி கைகளைக் கூப்பினார். மஞ்சள் நிற வேட்டியிலும், மஞ்சள் நிறச்சேட்டிலும் பொலிந்தார். கண்களின்றும் கண்ணீர் வடிய மெய் சிலிர்த்தார்.
நடுத்தர வயதுடையவரும் உணர்ச்சி வசப்படுவது தெரிந்தது.
"திருவருள் - திருவருள் - திருவருள்” அவரும் முணுமுணுத்தார்.
எங்கிருந்தோ கொண்டுவந்த மஞ்சள் பூவில், அப் போதுதான் எடுப்பித்த நீரைச் சொரிந்து, அறிமுகமானவர் நடுத்தர வயதுடையவருக்கு அவர்தான் வீட்டின் செயற்படும் முதல்வர் - ஆசீர்வாதம் வழங்கினார்.
நாடகத்தின் காட்சிகள் மாறிவிட்டன. எல்லோரும் நடிகர்களாக, அவனும் தாடிச் சாமியாரும் பார்வையாளர் களாகிப்போயினர். அறிமுகமானவர் ‘பெரியசாமி’ ஆகிப் போயிருந்தார்.
அவன் திகைத்துப் போயிருந்தான். அவருடன் அறிமுகமாகிய அருவருப்பான អ្នាខ្លះ ដ្បិតា នានាសិ வர காண்பது

Page 15
கனவா அல்லது நினைவா என மயங்கிப் போயிருந்தான். நடுத்தீர்ப்பு வழங்க வேண்டிய அவர் பக்கம் சாய்ந்த கதை அது. அதனாலேயே அவனால் மிகவும் வெறுக்கப்பட்ட மனிதர்;
விருந்துபசாரங்கள் தொடங்கின. தலைவாழை இலை போட்டு ‘பெரிய சாமியே’ நடுநாயகமாக அவனும் தாடிச்சாமியாரும் மற்றவர்களும் அவரைச் சூழ்ந்தவர்களாக. சம்பிரதாயமான சடங்குகளுடன் சாப்பாடு.; திருவருள் - திருவருள் - திருவருள் ஒலி அலைகளால் வீடு நிறைந்து கொண்டிருந்தது.
பெரியசாமி எல்லோருக்கும் ஆசீர்வாதம் வழங்கிக் கொண்டிருந்தார்.
“உங்கள் வியாபார முயற்சிகள் எல்லாம் நன்றாகத் தங்கு தடையின்றி நடக்கும். செல்வமும் - செல்வாக்கும் நிறையும்’ வயதானவர் மகிழ்ச்சியால் புல்லரித்துப் போயிருந்தார்.
“உங்கள் ஆத்மீகத் தேடல்கள் இடையறாது தொடர. திருவருள். திருவருள். நீங்கள் இறைதரிசனம் பெறப் போகிறீர்கள். நீங்கள் யோகசித்திகள் எல்லாம் பெற்று. குண்டாலாக்கினி உங்கள் வசப்படப் போகிறது” வீட்டின் செயற்படு முதல்வர் உடல் புல்லரிக்க கண்களை மூடி குருவருள். குருவருள். என கைகளை நீட்டி யாசித்தார்.
“பெரியவர் என்ன பேர் சொன்னனிங்கள். கமலினி ஆ கமலினி, வெளிநாட்டு மணாளனுடன் விரைவில் மங்களகரமான இல்வாழ்வு வாழப் போகின்றாள்’ பெரியவள் முகம் நாணத்தால் சிவக்க தலை குனிந்திருந்தாள்.
“சின்னவள் மனோகரி தானே. ஏ எல் திறமையாய் பாஸ் பண்ணி டொக்டருக்குப் படிக்கப் போறாள்’ அவள்
লু, মেলা দুৰ্গা / } } } এই প্ৰ Դ է չք) (Հ : «ք, エ 治、 tria. i. TTTT0TLL LLS S0 0kT TS L0 mmS Lc00 S0S TT 0OLSaS LLLS L0L LS tSTJJeJ 00SLmtTT0S 0LLS0S
༦,་ - Ț
:**ட் :
படிக்கிறாளோ. கலா தானே பேர். பேருக்கேற்ற பதி: பிற்காலத்தில் ஒரு கலா வித்தகியாய் வரப் போகிறாள்’ அவள் முற்றத்தில் கொய்யா மரத்தில் ஏறி விளையாடும் அணில் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“குழந்தை பகீரதி’. கண்களை மூடி ஒருகணம் நிஷ்டையில் ஆழ்ந்தார். பிறகு கண்களை விழித்து ஆகாயத்தை நோக்கி கைகளை நீட்டி “இவள் தெய்வக் குழந்தை; அன்னையின் அருளாகி பெற்றுப் பிறந்த குழந்தை. வளர்ந்து பெரியவளானதும் உலகத்திற்கே வழிகாட்டுவாள்; உண்மை களைக் கண்டு சொல்வாள்.” குழந்தை தாடிச்சாமியாரையே பார்த்துக்கொண்டிருந்தது.
”அம்மா கிருகலட்சுமி. உங்கள் கணவர்க்கு என் றுமே துணைவியாய், பூ வோடும் பொட்டோடும் சுமங்கலி யாய் நிறைவாழ்வு வாழ்வீர்கள்.” தன்னை மறந்தவராய் ‘பெரியசாமி’ சொல்லிக் கொண்டேயிருந்தார்.
திடீரென கவிந்த ஒரு மெளனம்; நிசப்தம். வீட்டின் செயற்படு முதல்வரை தன்னருகே வருமாறு கண்சாடை காட்டினார். பணிந்து நின்ற அவர் தலைமீது வலது கையை வைத்து ஏதோ முணுமுணுத்தார். “திருவருள். திருவருள். திருவருள்.”
_ (1) O ജൂഞ്ഞ .
 

கையை எடுத்து தனது மார்பில் வைத்துக் கொண்டு இந்தப் புல்லிற்கே இறைவன் இவ்வளவு கருணையைப் பாழிவானென்றால்.”
மீண்டும் அவர் தலைமீது கைவைத்து “நெல்லிற்கு வ்வளவு செய்வான்; நெல்லிற்கு எவ்வளவு செய்வான்.”
“எல்லாம் குருவருள்; எல்லாம் குருவருள்” அவர் ஸ்டாங்கமாக விழுந்து வணங்கினார். கண்களில் கண்ணீர் றைந்திருந்தது.
குழந்தை தாடிச்சாமியாரையே பார்த்துக் கொண்டி ந்தது.
அவன் அந்தரப்பட்டுக்கொண்டிருந்தான். அவன் பாக வேண்டிய கடைசி வஸ்சிற்கு நேரமாகிக் கொண்டி ந்தது.
“இந்தப் பம்பல்களுக்கிடையில் உபசரித்த விருந்தி ரிடமிருந்து எவ்வாறு விடைபெற்றுச் செல்வது?’ தாடிச் மியார் அவனையே கூர்ந்து பார்த்துதலையாட்டினார். அவர் ண்களில் ஒரு ஒளி தெரிந்தது.
கிடைத்த ஒருகண இடைவெளியில் எழுந்து நின்று ான் வரப் போகின்றேன்’ என்று எல்லோருக்கும் பொது ாய் சொன்னான்.
“திருவருள். திருவருள். திருவருள். பரியசாமி.
“பிறகு வரவேண்டும்’ என்றார் வீட்டின் செயற்படு
’ என்றார்
}தல்வர். சின்னவள் நிமிர்ந்து பார்த்தாள். அவனுடன் டவே வெளியே வந்ததாடிச்சாமியார் தலையசைத்து விடை காடுத்தார். அவர் பின்னாலேயே வந்த குழந்தை, அவனுக்கு டாட்டா சொல்லி கையசைத்துச் சிரித்தது.
சனக்கூட்டம் குறைந்து வெறிச்சோடிய கோயில் தியில் நாலைந்து பேரே அங்குமிங்குமாய் தெரிந்தனர்.
-
கே'யில் கே7:புரத்தைப் டர்த்து ஒரு கும் பி' =4 : :வி அறியாட்ல அவன் வாய் திரு آتن ز ژ و . . . ருவருள் என்று முணுமுணுத்தது.

Page 16
இலக்கியப் ஒன்றாக சங் கலந்துரைய நம்பிக்கைக திகதிகளில் ( நகரில் நடந்து என்றால் அது
@(ዐ யாழ்ப்பாண கடந்து செல் யுத்தத்தின் ச உயிர்கள் திை
தடைகளும், தொடங்கிய
11-08-2006 g அவற்றைக் முடிந்தது உ சான்று பகரு
திரு
யாழ்ப்பாண
எவ்வாறு நட வைத்ததோ, நிகழ்வாக இ இரவிலுமா! பூரித்திருந்த நிறைந்திருந் நேர ஊரடங் விட்டோம். கருத்தரங்கு பொழுதுடே
G6 இத்தகைய 6 மத்தியிலும் புத்துணர்ை மிகவும் பார் தப முன்றலில் : ஆற்றுகை உ பெற்றுக் ெ இபங்கிய ,ெ
*1:- இத்
. ". عن
n.nput f
 
 

மறைக்கலாமன்றம் நடத்திய
வருட காலத்துக்குப் பின்னர் யாழ். குடாநாட்டில் வாழும் கலை, படைப்பாளர்கள், ஆர்வலர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் 5மிக்க வைத்து, கலை, இலக்கிய விடயங்களை ாடவும், விவாதிக்கவும் வைத்து, அவர்கள் மத்தியில் மீளவும் புதிய ளை தோற்றுவித்த நிகழ்வாக கடந்த ஒகஸ்ட் மாதம் 18ஆம், 19ஆம் சனி, ஞாயிறு தினங்களில்) பகல் பொழுதுகள் முழுவதுமாக யாழ் து முடிந்த திருமறைக் கலாமன்றத்தின் ‘தமிழ் விழா அமைந்தது
மிகையாகாது. காலத்தில் கலையும், இலக்கியமும் செழித்தோங்கி வளர்ந்த த்தின் நாட்கள் அண்மைக்காலமாக வெறுமையானதாகவே கின்றது. அமைதிக்கான நாட்கள் முடிவடைந்து போய் மீளவும் த்தங்கள் தமிழ் மண்ணில் ஒலிக்கத் தொடங்கி, பெருமளவு மனித ாமும் காவு கொள்ளப்பட, இடப் பெயர்வுகளும், அவலங்களும்,
நெருக்கீடுகளுமாக தமிழ் இனத்தின் வாழ்வுப் பயணம் நகரத் காலத்துடன் எல்லாம் ஓய்ந்து போனாலும், யாழ் குடாநாட்டில் }ற்குப் பின்னர் நிலவிய பயங்கரமான சூழ்நிலைகளுக்குப் பின்னர் கடந்து மீளவும் எமது தாய் மொழிக்கு விழா எடுத்து மகிழ ண்மையில் இம் மண்ணின் தளர்ந்து போகாத நம்பிக்கைக்கு ம் எனலாம். நமறைக்கலாமன்றம் கடந்த 15-08-2007இல், 286, பிரதான வீதி, ம் என்னும் முகவரியில், நெருக்கடிகள் நிறைந்த வாழ்வுக்குள்ளும் ம்பிக்கையுடன் கலைத்தூது கலையகத்தை கட்டிஎழுப்பி திறந்து
அதே நம்பிக்கையுடனும், எழுச்சியுடனும் கலையகத்தில் முதல் }ந்த ‘தமிழ் விழாவை’ நடத்தியிருந்தார்கள். எனினும் பகலிலும், 5 எம் மொழியின் அருமை, பெருமைகளைக் கேட்டும், பார்த்தும் காலத்தின் இனிமையை இழந்து போன துயரம் மனதில் தது. ஓராண்டுக்கு மேலாக தொடர்ந்து அமுல்செய்யப்படும் இரவு கு வாழ்வால் - இரவுகளின் இனிமையை நாம் இழந்து இதனால் திருமறைக் கலாமன்றமும் இம்முறை காலையில் 5ளும், மாலையில் கலை நிகழ்வுகளுமாக பகல் னேயே தமிழ் விழாவை நடத்தியது. ரையறுக்கப்பட்ட கால - நேர இடைவெளிக்குள் நின்று கொண்டு விழாக்களை நடத்துவதில் உள்ள பல்வேறு விதமான இடர்கள் யாழ்ப்பாணத்தில் கலை, இலக்கியச் செயற்பாடுகளில் மீளவும் வ ஏற்படுத்த தமிழ் விழாவை திருமறைக் கலாமன்றம் நடத்தியது ாட்டத்தக்க விடயமாகும். ழ் விழா நடந்து கொண்டிருந்த சம நேரத்திலேயே மண்டப ருெமறைக் கலாமன்றத்தின் பருவ இதழ்களான கலைமுகம், ட்பட திருமறைக் கலாமன்ற வெளியீடுகள் அனைத்தையும் ாள்ள தனி விற்பனை நிலையம் ஒரு பக்கத்தில்
டாணத்தி :த்தக வாசிப் ை
" Book i la bio"
ால், 1றுபக்கத்தில், யாழ்

Page 17
புத்தக விற்பனை நிலையம் அதன் உரிமையாளர் தெ. ரவீந்திரனா திறக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் நீண்ட நாள்களின் பின் புதி நூல்களை, சஞ்சிகைகளை பெற்றுக் கொள்ள பெரும் வாய்ப்பாக தமிழ் விழாவுடன் இணைத்து இவ்வாறான புத்தக விற்பனையையு கண்காட்சியையும் ஏற்பாடு செய்திருந்தமை விழாவின் சிறப்புக்கு அணி சேர்ப்பதாக அமைந்திருந்தது.
தமிழ் விழா காலையில் கலை, இலக்கியக் கருத்துரைகள் கலந்துரையாடல்களாகவும், மாலையில் கலை நிகழ்வுகளாகவும் செய்யப்பட்டிருந்தது. கலை நிகழ்ச்சிகளில் நாட்டிய நாடகம், கெ இசை நிகழ்ச்சி, இசைக்கச்சேரி, கூத்துருவ நாடகம் என்பன இடம் பெற்றிருந்தன. காலை நிகழ்வுகள் மு. ப8.45 - பி. ப 1.15 மணி வை மாலை நிகழ்வுகள் பி. ப 3.00 - மாலை 6.00 மணி வரையும் எனவுட குறிக்கப்பட்டிருந்தாலும் நிகழ்வுகள் முடிவடையும் நேரங்களில் : ஏற்பட்டதையும் அவதானிக்க முடிந்தது. குறிப்பாக, கலை, இலக் கருத்தரங்கின் போது, கருத்துரையாற்றிய கருத்துரையாளர்கள் பல வழங்கப்பட்ட நேர எல்லையைத் தாண்டி தமது உரைகளை நீடித் சென்றமையும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது எனலாம்.
கலை,இலக்கியக் கருத்தரங்கு
இரு நாள்களாக நடந்த தமிழ் விழாவில் இலக்கியக் கருத் நான்கு அமர்வுகளில் எட்டுத் தலைப்புக்களில் இடம்பெற்றிருந்தது நாளில் இரு அமர்வுகளில் நான்கு தலைப்புக்கள் என்ற அடிப்படை அமைந்திருந்தன. முதலாவது நாளின் முதலாவது அமர்வு எழுத்தா ஜீவகாருண்யன் (இமையவன்) தலைமையில் அவரது தலைமைய இடம்பெற்றது. இதன் போது, 'ஈழத்தில் நவீன இலக்கிய விமர்சன தலைப்பில் திரு. க. அருந்தாகரன் கருத்துரையாற்றினார். அவரது : தொடர்ந்து பத்தி எழுத்துக்கள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் திரு குப்பிழான் ஐ. சன்முகன் கருத்துரை வழங்கினார். தொடர்ந்து கலந்துரையாடல் மற்றும் தேநீர் இடைவேளையைத் தொடர்ந்து, இரண்டாவது அமர்வு ஆரம்பமானது. கவிஞர் சோ. பத்மநாதன் த அவரது தலைமையுரையுடன் இவ் இரண்டாவது அமர்வு ஆரம்பம போது, ‘தொண்ணுாறிலிருந்து ஈழத்துத் தமிழ்க் கவிதை’ என்னும் தலைப்பில் திரு பா. அகிலன் கருத்துரை வழங்கினார். அவரது உ6 தொடர்ந்து ‘தொண்ணுாறிலிருந்து ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை’ என் தலைப்பில் கருத்துரையாற்ற வேண்டிய திரு. செ. சுதர்சன் நிகழ்வு தர முடியாத நிலையில் தனது கட்டுரையே எழுத்துருவில் அனுப் இருந்ததால் அக் கட்டுரையே அரங்கில் வாசிக்கப்பட்டது. இதை திருமறைக் கலாமன்றத்தைச் சேர்ந்த திரு. பி. சே. கலீஸ் வாசித்தி இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலுடன் முதலா கருத்துரைகள் நிறைவுக்கு வந்தது.
இரண்டாவது நாளில், முதலாவது கருத்துரை அமர்வு எழு க. சட்டநாதன் தலைமையில் அவரது தலைமையுரையுடன் ஆரம் இதன் போது ‘புலம் பெயர் இலக்கியம்’ என்னும் தலைப்பில் தி சு. குணேஸ்வரன் கருத்துரை வழங்கினார். தொடர்ந்து ‘செங்கை வகைமாதிரி நாவல்கள் ஐந்து’ என்னும் தலைப்பில் எழுத்தாளரு விமர்சகருமான திரு . அ. யேசுராசா கருத்துரையாற்றினார். இதன் செங்கை ஆழியானின் காட்டாறு, வானும் கனல் சொரியும், ஆச்சி போகிறாள், கடல்கோட்டை, வாடைக்காற்று ஆகிய ஐந்து நாவல் வகைமாதிரியாகக்கொண்டு அவர் தனது உரையை வழங்கியிருந்த தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெற்றது. அதன் பின் இரண்ட பேராசிரியர் நீ. மரிய சேவியர் அடிகளின் தலைமையுரையுடன், ஆ தலைமையில் இடம்பெற்றது. இதன் போது பின் நவீனத்துவமு
கலைமுகம் O ஜூலை
 

ப இலக்கிய இருந்தது.
மேலும்
ஏற்பாடு ளரவிப்பு,
ரயும் b நேரம்
தாமதங்கள் கியக் ர் தமக்கு துச்
துரைகள்
1. ஒடு டயில் இவை "ளர் திரு. இ. புரையுடன்
ாம்’ என்ற உரையினைத்
ானது. இதன் Lஅs
D د. حسيسيبسس - ரையைத் னும் புக்கு சமூகம்
ருந்தார். வது நாள்
ழத்தாளர் பமாகியது.
ந. ஆழியானின் b,
போது
பயணம்
556) Z 5ார்.அதனைத் : ாவது அமர்வு இ7
அவரது ம் தமிழ்ச் f
- டிசெம்பர் 2007 15

Page 18
சூழலும் என தர முடியாத இலக்கியத்த கருத்துரையா வழங்கிய உ6 முக்கியமான ஈழத்துத் தமி க. நவதர்சிணி இலக்கியக் க தொடர்ந்து க
ტ56ბს) பங்குபற்றியி இலக்கியப் ட கருத்துரைகள் கருத்துப் பரி குறிப்பிடத்த
தமி நிகழ்ச்சிகளி: * அழகியல் கை
என்னும் நாட தென்றல் ம. இடம்பெற்றி
நாடகம் அளி பெற்று 12 ே மேடையேற்
g gö『
பார்வையால் விதமான ெ மக்களுக்கிரு
தமி நிகழ்வாக இ உறுதுணைய கெளரவிப்ட
[ Ꭰ[ᎢᎶᏈᎠ ᏣᏓᏪ ᏧᎦ5ᎧᏈᎠt இடம்பெற் கரித்தாஸ்) ( கலாமன்ற இ போர்த்திக் ( கலையகம் ! விளங்கினா
கலாடமன்றத்
கலைமுகம் (
 
 
 
 
 
 

னும் தலைப்பில் உரையாற்றவிருந்து திரு. ந. ரதிக்குமார் வருகை
லையில், அதே தலைப்பில், மிக இளம் வயதில் கலை, ாத்தில் பிரகாசித்து வரும் செல்வன் ஹரிஹரசர்மா ற்றினார். எவ்வித ஆயத்தமுமின்றி அவர் தாமாக முன்வந்து ர பலரது கவனத்தையும் ஈர்த்திருந்ததை இங்கு குறிப்பிடுதல் து. அவரது உரையைத் தொடர்ந்து, ‘தொண்ணுாறிலிருந்து ழ் நாடக இலக்கியங்கள்’ என்னும் தலைப்பில் திருமதி கருத்துரை வழங்கினார். இதுவே, தமிழ் விழா - கலை, ருத்துரைகளின் நிறைவுக் கருத்துரையாக அமைந்திருந்தது. லந்துரையாடல் இடம்பெற்றது. ல இலக்கியக் கருத்தரங்கில் சில நூற்றுக்கணக்கானோரே ருந்தாலும், அவர்களில் பலரும் யாழ்ப்பாணத்தில் கலை, டைப்புலகில் செயற்பட்டு வருபவர்களாக இருந்தார்கள். )ளத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடல்கள் புதிய மாற்றங்களுக்கு வழி வகுப்பதாய் சிறப்பாக அமைந்திருந்தமை
ககது.
கலைநிகழ்ச்சிகள் ழ் விழாவில் இரு நாள்களிலும் மாலையில் இடம்பெற்ற கலை ன் போது, முதல் நாளில் திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது ல்லூரி மாணவர்கள் வழங்கிய 'உதயனைத் தடுத்த உத்தமி’ ட்டிய நாடகமும், திருமறைக் கலாமன்ற இசைப்பிரிவினர் இசைத் யேசுதாசன் தலைமையில் வழங்கிய ‘இசை நிகழ்ச்சியும் ருெந்தது. ண்டாவது நாளில், முதலாவது நிகழ்ச்சியாக திரு. தவநாதன் ழுவினரின் ‘இசைக் கச்சேரி” இடம்பெற்றது. தொடர்ந்து தமிழ் றைவு நிகழ்வாகவும், இரண்டாவது நிகழ்ச்சியாகவும் திருமறைக் தயாரித்து வழங்கிய 'கொல் ஈனுங் கொற்றம்’ என்னும் கூத்துருவ க்கை செய்யப்பட்டது. ஏற்கெனவே பலரது பாரட்டையும் மடையேற்றங்களைக் கண்டிருந்த இந்நாடகத்தின் 13ஆவது றமாக இது அமைந்திருந்தது. பல நிகழ்ச்சிகளைக் பார்வையிட ஆயிரக்கணக்கான ார்கள் இரு நாட்களிலும் அரங்கை நிறைத்திருந்தார்கள். பல்வேறு நருக்கடிகள் மத்தியிலும் கலை நிகழ்வுகளைப் பார்ப்பதற்கு க்கும் ஆர்வத்தை இது எடுத்தியம்பியது.
கெளரவிப்பு
ழ் விழா நிகழ்விற்கு அப்பால் வைத்து நோக்கத்தக்க ஒரு து அமைந்திருந்தாலும், திருமறைக் கலாமன்ற பணிகளிற்கு ாக இருந்து வரும் ஒருவரை முக்கியமான விழாவில் வைத்து தாக இது அமைந்து சிறப்பைப் பெற்றிருந்தது. முதலாவது நாள் ல நிகழ்ச்சிகளின் போது, நாட்டிய நாடகத்தைத் தொடர்ந்து
இந்நிகழ்வில், யாழ் மனித முன்னேற்ற நடுநிலைய (கியூடெக் - இயக்குநர் அருள்பணி கி. ஜோ. ஜெயக்குமார் அவர்கள் திருமறைக் }யக்குநர் நீ. மரியசேவியர் அடிகளாரால் பொன்னாடை களரவிக்கப்பட்டார். ஜெயக்குமார் அடிகள் கலைத்துது தாற்றம் பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய ஒருவராக r எனவும் தெரிவிக்கப்பட்டது.
பூேரம்ப நிகழ்வுகள் ழ் விழாவின் முதல் நாள் காலை நிகழ்வுகள் திருமறைக் தின் ஊடக இணைப்பாளரும், 'கலைமுகம் சஞ்சிகையின்
బ్రూజాబు - parubut 2007

Page 19
பொறுப்பாசிரியருமான கி. செல்மர் எமில் அவர்களின் ஆரம்ப உரையுடன் ஆரம்பமானது. தொடர்ந்து மங்கல விளக்கேற்றலும். அதனைத் தொடர்ந்து இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து என்பனவும் இடம்பெற்றது. இவற்றை திரு இ. ஜெயகாந்தன் வழங்கினார். அதன் பின் மெளன வணக்கமும், தொடர்ந்து வரவேற்புரை, வாழ்த்துரை என்பனவும் இடம்பெற்றது. இதன் போது வரவேற்புரையை திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குநர் யோ, யோண்சன் ராஜ்குமார் அவர்களும், வாழ்த்துரையை வித்துவான் புலவர் வேல்மாறனும் வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து இலக்கியக் கருத்துரைகள் ஆரம்பமானது. அவற்றின் நிறைவில் நன்றியுரையை ஜோ. ஜெஸ்ரின் வழங்கினார்.
முதல் நாள் மாலை நிகழ்வுகளிற்கு பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். சிலலிங்கராசா அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யாழ். ரில்கோ ஹோட்டல் (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் திரு. தி. ராஜ்குமார் அவர்களும், யாழ் கியூடெக் - கரித்தாஸ் நிறுவன இயக்குநர் அருள்பணி கி. ஜோ. ஜெயக்குமார் அவர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள். மங்கல விளக்குகளை விருந்தினர்கள் ஏற்றி வைக்கும் நிகழ்வு முதலாவதாக இடம்பெற, அதனைத் தொடர்ந்து இறைவணக்கம் செல்வன் தெ. சந்துருவால் பாடப்பட்டது. அதன் பின் தமிழ்த்தாய் வாழ்த்தினை இ. ஜெயகாந்தன் வழங்கினார். தொடர்ந்து மெளன வணக்கமும், அதன் பின் திருமறைக் கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவிகள் வழங்கிய வரவேற்பு நடனமும் இடம்பெற்றது. தொடர்ந்து வரவேற்புரையை கலைத்தூது அழகியல் கல்லூரி அதிபர் திருமதி பி. எவ், சின்னத்துரை அவர்கள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர், பிரதம விருந்தினர் உரைகள் இடம்பெற்றது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. மாலை நிகழ்வுகளில் நன்றியுரையை திரு. கொ. கரன்சன் வழங்கினார்.
தமிழ் விழாவின் இரண்டாவது நாள் காலை நிகழ்வுகளும் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. இதன் போது, இறைவணக்கத்தை திருமறைக் கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரி ஆசிரியை பூரீமதி சிவரஞ்சினி ரமணாவும், தமிழ்த்தாய் வாழ்த்தினை கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவிகளும் வழங்கினார்கள். தொடர்ந்து மெளன வணக்கமும், அதனைத் தொடர்ந்து வரவேற்புரை, வாழ்த்துரையும் இடம்பெற்றது.இதன் போது வரவேற்புரையை திருமதி வி. மரிய கெலன்மேரியும், வாழ்த்துரையை கலாநிதி பண்டிதர் செ. திருநாவுக்கரசும் வழங்கினார்கள். தொடர்ந்து
 

இலக்கியக் கருத்துரைகளும் நிறைவில் நன்றியுரையும் இடம்பெற்றது. நன்றியுரையை கி. செல்மர் எமில் பழங்கினார். இரு நாள் இலக்கியக் கருத்தமர்வுகளிலும் ருத்துரை வழங்கியோர், பங்கேற்றோர் அனைவருக்கும் ன்றி தெரிவிப்பதாக இவ்வுரை அமைந்திருந்தது.
இரண்டாவது நாள் மாலை நிகழ்வுகளிற்கு பிரதம பிருந்தினராக ஸ்கந்தவரோதயாக் கல்லூரி உப அதிபர் சஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் அவர்களும், சிறப்பு பிருந்தினர்களாக இலங்கை வங்கியின் வடமாகாண தவிப்பொதுமுகாமையாளர் திரு. பொ. அ. அருமைநாயகம் அவர்களும், யாழ்ப்பாணம் பூரீலங்கா ரலிக்கொம் முகாமையாளர் திரு. ந. சரவணபவன் அவர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள். ஆரம்ப கழ்வாக மங்கல விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. இதனை விருந்தினர்கள் ஏற்றி வைத்தார்கள். தொடர்ந்து இறைவணக்கம் செல்வன் செ. தர்ஷனால் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்தினை கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவிகள் வழங்கினார்கள். தொடர்ந்து மெளன வணக்கம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து லைத்தூது அழகியல் கல்லூரி மாணவிகள் வழங்கிய வரவேற்பு நடனமும், அதன் பின் வரவேற்புரையும் இடம்பெற்றது. வரவேற்புரையை திருமறைக் லாமன்றத்தின் மூத்த கலைஞரான திரு. ஜி. பி. பேர்மினஸ் பழங்கினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர், பிரதம விருந்தினர் உரைகளும், அதனைத் தொடர்ந்து லைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. மாலை நிகழ்வுகளின் போது நன்றியுரையை திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குநர் யோ, யோண்சன் ராஜ்குமார் வழங்கினார்.
அனுசரனையாளர்கள் இரு நாட்களாக இடம்பெற்ற தமிழ் விழாவிற்கான பிரதான அனுசரணையாளர்களாக யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டல் (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவனமும், பாழ்ப்பாணம் இலங்கை வங்கியும் பங்களிப்புச் செய்திருந்தன. இணை அனுசரணையாளர்களாக பாழ்ப்பாணம் பூரீலங்கா ரெலிக்கொம், மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, விஜிதா கபே ஆகியன பங்களிப்புச் செய்திருந்தன.
தமிழ் விழாவில் கலை இலக்கியக் கருத்தரங்குகளில் )
நிகழ்த்தப்பட்ட கருத்துரைகளில் எழுத்துருவில் கிடைக்கப்பெற்ற கட்டுரைகள் அடுத்த இதழில்
இடம்பெறும். /
- டிசெம்பர் 2007 17

Page 20
六ーーーーーーーーーーーーーーーーーー
அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில் ஆடிக் களித்தேன் அன்னை பூமியில் ! கற்றைக் குழலாள் கனிமொழி யருகில் காதலும் கற்பும் கலந்திடும் நிலையில் ! ஒற்றைப் பனைவளர் முற்றத் தழகில் ஒசிந்திடும் முல்லைக் கொடிப்பூ மணத்தில் 1 எற்றைக்கு மழியா இன்பத் துய்ப்பில் |၈ခဲarr# சுகமும் இணைந்ததென் னிடத்தில் !
உழைப்பு முயர்வும் ஓங்கிய வுணர்வும் உள்ளந் தெளிதரு கல்விப் புணர்வும் அழைப்பில் விருந்தும் ஆனந்த மருந்தும் அவரவர்க் கேற்றநல் லறமெனப் பொருந்தும். தழைக்கின் றதுவோர் தருமம் இதுவெனத் தமிழர் வாழ்வினுக் கணிகலன் சாலும் மலைக்குன் றெழுந்திடும் மாமதி நீழலில் மண்ணின் மதியுடன் மயங்கிக் கிடந்தேன்.
ஏர்பிடித் துழுதலால் ஏற்றம் காண்பவர் ஏற்றம் இறைத்தலால் இன்பயிர் வளர்ப்பவர் நீர்பிடித் துழுதலால் மீன்வளம் பெறுவர் நித்தமும் ஒய்விலா துழைப்பினா லுயர்பவர் போர்பிடித் துழுதலால் புறநூல் படைப்பவர் புன்னகை புரிந்துதம் இன்னுயிர் ஈபவர் யார்பிடித் திடினும் யாவர்க்குஞ் சமமென
யாங்கணு மொளிதரும் திங்களைக் கண்டேன்.
பூவளர் சோலையில் பொங்கிடும் வண்டொலி புதுமண மக்களில் தங்கிடும் சிரிப்பொலி நாவளர் வார்த்தைகள் நல்கிடும் நயவொலி நம்மிறை வன்உறை ஆலய மணியொலி காவளர் தருக்களில் கரந்துறை புள்ளொலி
காலநன் கொடையெனக் கனித்தமிழ் மொழியொ
ஆவலைத் தூண்டிடும் அத்தனை ஒலிதரும் ஆனந்த இரவினில் நிலவினில் ஆடினேன்.
மானுடர் உயர்வுறும் மார்க்கம் பலவுடன் மண்மிசை மாசறச் சுதந்திரம் மாண்புறும். கூனுடல் இன்றியே கொள்கை ஒன்றியே குவலயம் பயனுறத் தொண்டுகள் சீர்படும். வானுயர் தமிழ்மொழி வளர்மொழி யாகிட வையகம் வணங்கியே வரிசைகள் வழங்கிடும். தானுயர் வதுவுடன் தாய்நிலம் வாழ்ந்திடத் |தயைபுரி வள்ளலாய்த் தண்மதி பொழிந்ததே !
அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில் |அல்லியும் ஆம்பலும் அலர்ந்தன மகிழ்வில் !
N - - - - - - - - - - - - - - - -
O
O.
18_ തങ്ങpt, O

LSLSS SLLS G LSLS SSSSSLSLSS SLSS SLSS S S LSLCSS S SSSSBSBSS SCSS SSLSLSS SS SSBBSSSMSSSSSSS S S S S SSS S SS S SMSMSMSS S SSSCSSS SLLSGSLS N
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில் இதழ்கள் இழந்தவை இறந்தன மண்ணில் ! பற்றைக் காடுகள் பரவிய மனைகள் பாழடைந் திடக்கொடும் பாம்புகள் தங்கின. சற்றைக் கும்மணச் சாந்தியைத் துறந்து சஞ்சல வாழ்வின் சரித்திரம் தொடரும்.
வலைக்ககப் பட்டபுள் வாடுதல் போலும் ! வானுறு இடிதலை வீழுதல் போலும் ! உரற்ககப் பட்டது உலக்கைக்குத் தப்பிட உதவுவோ ரின்றியே ஒழிந்திடல் போலும் ! நிலைக்கள னCழந்துதம் நிம்மதி யழிந்துமே நீதியும் நேர்மையும் நெருங்கிடப் பெறாமலே கொலைக்கள மேகிடும் கொள்பலி யாடெனக்
குமுறிடும் நெஞ்சமோ டஞ்சுவார் தமிழர்கள்.
இனமத மொழிகளின் சமத்துவம் குன்றிட இலங்கையில் அமைதியே இல்லையென் றாகிட குணமுறை பிழைத்தவர் கொள்கைகள் வென்றிட கோயிலும் குடும்பமும் கொலைக்கள மாகிட முனைபல விருந்துநம் வாழ்வை யழித்திட முட்களும் கற்களும் மூர்க்கமாய்த் தாக்கிட தினம்பல செய்திகள் திடுக்கிட வைத்திட திரும்பவும் மனிதர்முன் தெய்வம் தோற்றதே.
ஊர்களை உயிர்களை உடைமையை யிழந்து
உள்நாட் டி னிலே இடம்பல பெயர்ந்து
வேர்களைத் தாங்கும் விழுமியந் துறந்து
வேற்றுள நாடுகள் அகதியா யலைந்து
ஆர்தரு வாரோ அடைக்கல மென்று
அல்லற் பட்டு ஆற்றுவா ரின்றி
பேர்பெற்ற தமிழர் பேயாய் நாயாய்
h பிறந்தது எதற்கோ? பேசுவாய் நிலவே !
அன்றைய நிலவினில் அமைந்தநல் வாழ்வினை
அடைந்தே தீருவோம் அதுவரை பொறுத்திடு ! இன்றைய இழிதுயர் இல்லையென்றாகிடும் இன்பமாய் தமிழிலே இன்னிசை பாடிடு !
குன்றிய தனைத்துமே கோபுர மாயெழும்
) குளிர்நிலா உனதெழிற் கோலத்தைக் காட்டிடு !
வென்றிகொள் வீரமுங் காதலும் விளைந்திடும்
வெண்ணிலா தண்ணொளி விளங்கிடச் செய்திடு
செ. திருநாவுக்கரசு
(கொழும்புத் தமிழ்ச்சங்கம் மார்ச் 2007இல்
அகில இலங்கை ரீதியில் நடத்திய மரபுக் கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கவிதை)
തഞ്ഞു - (but 2007 (

Page 21
முதுபெரும் எழுத்தாளரும், கவிஞருமான இ. முருகைய6 அவர்களுக்கு 2007 ஆம் ஆண்டிற்கான சாஹித்திய இரத்தின விருது வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் படைப்பிலக்கியத்தி ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் அரச உயர் இலக்கி
விருதுகளில் இதுவும் அடங்கும். இவ்வாண்டு நடைபெற்ற அர
தேசிய சாஹித்திய விழாவின் போது இவ்விருது வழங்கப்பட்டது இதன் போது 2006 இல் வெளிவந்து தெரிவு செய்யப்பட்ட
நூல்களுக்கான சாஹித்திய பரிசுகளும் வழங்கப்பட்டது.
இவ்வாண்டுக்கான தேசத்தின் கண் (தேச நேத்ரா) என்னு
அதி உயர் விருது பேராசிரியர் சி. தில்லைநாதன் அவர்களுக்
வழங்கப்பட்டுள்ளது. கலை, இலக்கியம், தமிழ்ப் பணிகள் மற்று தேசிய மட்டத்திலான அவரின் சேவைகளுக்காக இவ் விரு. வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு நடைபெற்ற தேசிய க6ை இலக்கிய பெருவிழாவில் இவ் விருது வழங்கப்பட்டது.
0 வடமாகாண இலக்கிய விழா 27, 28 ஒக்ரோபர் 2007 ஆகி இரு தினங்களும் வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற் போது இரண்டாம் நாள் மாலை நிகழ்வுகளின் போது திருமறை கலாமன்ற இயக்குநர் பேராசிரியர் நீ, மரியசேவியர் அடிகள் கவிஞர் சோ. பத்மநாதன், ஜனாப் க. வரிசை முகம்மது, அராலியூ ந. சுந்தரம்பிள்ளை. திரு. மா. சிதம்பரநாதன், திரு. பறுனாந் பீரிஸ் ஆகியோர் வடமாகாண கெளரவ ஆளுநர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள். இதன் போது 2006 இல் வெளிவந் சிறந்த இலக்கிய நூல்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டது.
இலக்கியக் கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ை நினைவாக ஈழத்தின் முன்னோடி சிறுகதைப் படைப்பா சம்பந்தர் பெயரால் வருடந்தோறும் வழங்கப்படும் சம்பந்த விருதின் 2006 ஆம் ஆண்டுக்கான விருது யாழ். பல்கலைக்கழ பேராசிரியர் சமாதிலிங்கம் சத்தியசீலன் அவர்களுக்கு அவ எழுதிய ‘மலாய்க் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும்’ என் ஆய்வு நூலுக்காக வழங்கப்பட்டுள்ளது. யாழ் இலக்கி வட்டத்தின் ஏற்பாட்டில் இவ் விருது வழங்கும் நிகழ்வு 18 - 11 2007இல் நல்லை ஆதின மண்டபத்தில் நடைபெற்றது.
ஈழத்தின் பெருமைக்குரிய கட்டுரையாளரும், சமூகவியல் ளருமான அமரர் அ. பொ. செல்லையா ஆசிரியர் நினைவா ஒவ்வோராண்டும் தமிழில் எழுதப்படும் சிறந்த கட்டுரைநூலுக் செல்லையா விருது வழங்கும் யாழ் இலக்கிய வட்டத்தி முடிவுக்கமைவாக இவ்வாண்டு முதல் தடவையாக பேராசிரிய எம். ஏ. நுஃமான் அவர்களுக்கு அவர் எழுதிய மொழிய இலக்கியமும்’ என்ற நூலுக்காக இவ் விருது வழங்கப்படுகிறது
விருதுகளைப் பெற்றுக்கொண்ட அனைத்து புலமையாளர்களுக்கும் கலைமுகம் தனது மனப்பூர்வமா6
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
e S SCCCMMCSCCTLL S ssrMHMM

qbs Luf 2007
ஆங்கிலம் பேசும் உலகில் மிக முக்கியமான இலக்கியப் பரிசாகக் கருதப்படும் பிரிட்டனின் மதிப்பு வாய்ந்த இலக்கியப் பரிசான புக்கர் பரிசு (BookerPrize) இவ்வாண்டு (2007) அயர்லாந்தைச் சேர்ந்த பெண் படைப்பாளியான ஆன் என்ரைட்டுக்கு வழங்கப் பட்டுள்ளது. அவர் எழுதிய 'தி கேதரிங்’ (The Gathering) என்ற நாவலுக்காகவே இப் பரிசை அவர் பெற்றுள்ளார்.
திருமணம் மற்றும் குடும்பச் சூழலில் வெறுமையை எதிர்கொள்ளும் பெண்ணின் வாழ்வுப் பயணத்தை 'தி கேதரிங்’ நாவல் விபரிப்பதாகவும் அதன் மூலம் ஒரு குடும்பத்தின் சோகத்தை பெண் ஒருவரின் பார்வைக்கூடாக இந்நாவலில் கண்டுகொள்ள முடிவதாகவும் கூறப்படுகிறது.
ஆன் என்ரைட் புக்கர் பரிசைப் பெற்றுள்ள அயர்லாந்தைச் சேர்ந்த இரண்டாவது பெண்ணாவார். புக்கர் பரிசு, எழுத்தாளர்களின் செல்வாக்கை வாசகர்கள் மத்தியில் உயர்த்துவது, புத்தகங்களின் விற்பனையை அதிகரிப்பது, இலக்கியத்தின் சிறந்த சாதனையாளர்களுக்கு பரிசளிப்பது போன்ற நோக்கங்களுக்காக 1968 இல் ஆரம்பிக்கப்பட்டது. ‘புக்கர் பொது வணிக நிறுவனம்’ என்ற சர்வதேச வணிக நிறுவனமே இப்பரிசை ஆரம்பித்தது. புத்தக நல்கை (Book Trust) என்ற சுதந்திரமான அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் இப்பரிசுக்குழு புத்தக வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுகிறது.
காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் ஆண்டுதோறும் வழங்கப்படும் இப்பரிசுக்காக போட்டியிட்டு வருவது குறிப்பி டத்தக்கது. நாவல்களுக்கு மட்டுமே இப்பரிசு வழங்கப்படுகிறது.
புக்கர் பரிசு தவிர்ந்த, 'புக்கரின் புக்கர்’ என்ற சிறப்பு விருதும் வழங்கப்படுகின்றது. அது எவ்வா றெனில், பத்தாண்டுகள் புக்கர் பரிசு பெற்றநூல்களில் அதிக விற்பனையையும், வரவேற்பையும் பெற்ற நூலுக்கே இச் சிறப்பு விருது வழங்கப்படுகின்றது. இதுவரை இப்பரிசினை 1981 இல் சல்மான் ருஷ்டி எழுதிய 'மிட் நைட்ஸ் சில்ட்ரன்’ (Midnights Children) என்ற நாவல் மட்டுமே பெற்றுள்ளது.
pa3i 2007 19

Page 22
gതുL നഴ്സ് ീaര്
ه که
நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த
போது அவர் கூறினார். நேயம் அல்லது நேசம் என்ற
சொற்களின் போலித்தனம் மிக ஆழமான அச்சத்தை ஏற்படுத்துவதாக, எதை வைத்து இப்படிச் சொல்கிறீர்கள் எனக் கேட்டேன். அவர்
‘பிள்ளைநேயப் பாடசாலைகள்’ என்ற கருத்தும் அதன் நடைமுறை அனுபவங்களும் இவ்வாறு எண்ண
வைக்கிறது என்றார்.
பிள்ளைகள் பற்றிய வளர்ந்தவர்களின்
நிலைப்பாடு என்ன? ஒரு தந்தைக்கும் பிள்ளைக்கும்
ஆசிரியனுக்கும் மாணவனுக்குமான அணுகுமுறை ஆண்டான் அடிமை என்ற பாவனையிலேயே
காணப்படுகிறது. சமூகத்தின் மூத்தோர்களிடையே
பொம்மைகளாக இருக்கும் நிலையே பிள்ளைகளுக்கு பெரும்பாலும் நேர்கிறது. இத்தகைய அதிகார மையங்களை தகர்ப்பதென்பது
சாத்தியமானதொன்றல்ல. ஒருவிதமான ஆதிக்க
மனோபாவத்தையே எமது சமூகம் வழிகாட்டல்
என்னும் பெயரில் தப்பான கற்பிதமாகக்
ങ്ങുപ త్ర6-606956r(g
O 6
கொண்டுள்ளது. இதை ஒட்டியதாகவே எல்லாச்
செயற்பாடுகளையும் தகவமைக்கின்றது.
உண்மையில் பிள்ளைகள் என்பவர்கள்
எப்படிப்பட்டவர்கள்? அவர்களின் உள்ளுணர்வு,
செயற்பாடுகள் எப்படி நிகழ்கின்றன? கேள்விகளை
அடுக்கிக் கொண்டு போகும்போது விடைகள்
வளர்ந்தவர்கள் என்பதற்கான எதிர்நிலையிலேயே
அமையும். ஆனால் வளர்ந்தவர்களை எப்படி அணுகுகின்றோமோ அவ்வாறே பிள்ளைகளையும் அணுகுகின்றோம். அவர்களின் வயதுக்கு மீறியதான
கடமைகளையும் பொறுப்புக்களையும் திணித்து அவர்கள் அவற்றை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் போது கேலி செய்கின்றோம். அல்லது
பொறுப்பற்றவர்கள் எனத்திட்டுகின்றோம். இந்தப்
போக்கு பாடசாலை, வீடு என எங்கும் நிகழ்கிறது
குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஆசிரியர்களும்
பெற்றோர்களுமே பிள்ளைகளை பிள்ளைகளாக
கையாழுகின்றனர்.
ஆசிரியர் ஒருவர் சொன்னார் “தடியில்லாமல்
தன்னால் பாடம் நடத்த முடிவதில்லை’ என்று. பாடம்
00e S DCSCMMLLCTtLLL C sks
 
 
 

இங்கு எப்படி நடத்தப்படப்போகிறது வெறும் திணிப்புத்தான் நிகழும். மாணவர்கள் என்பவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். சொல்பவற்றை மறுக்காமல் செய்யவேண்டும் என்பவை வேத வார்த்தைகளாக ஆசிரியர்களால் உதிர்க்கப்படுகின்றன. அப்படியெனில் துடிப்புடன் எதையாவது பேசிக்கொண்டும், செய்து கொண்டுமிருக்கும் பிள்ளைகள் மாணவர்கள் என்ற வரையறைக்குள் அடங்கமாட்டார்களா?
பிள்ளைகளின் இயல்பை உள்ளுணர்வை புரிந்து கொண்ட ஆசிரியர் இம்மாதிரியான முடிவுகளுக்கு ஒருபோதும் வரமாட்டார். ஒரு பிள்ளை போல் இன்னொரு பிள்ளை இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. அவரவர்களுக்கு தனித்துவங்களும் ஆளுமைகளுமுண்டு. இதனைப் புரிந்து கொண்டால் ஆதிக்க மனோபாவங்கள் ஏற்பட வாய்ப்பிருக்காது. ஒழுக்கத்தை வெறுமனே பாடமாக போதிப்பது சாத்தியமானதில்லை. நடைமுறை அனுபவங்களை அதுசார்ந்ததாக ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். பிள்ளைகளுக்கு யதார்த்தமான உலகைக் காட்டவேண்டும். எல்லாவற்றிலும் மூடுபெட்டித்தனத்தைக் கையாண்டு அவர்களது
என்ற கத்தேமும் தம் அவமதிப்புகருெம்
விபரீதன்
அறிதல் சுதந்திரத்தில் கை வைத்தல் பொருத்தமான செயலல்ல. தாழ்வான செயல்கள் சிந்தனைகளை களையத்தக்க வகையில் கற்றல் செயற்பாட்டை செயற்படுத்துவதன் மூலமாக ஆரோக்கிய மனோதிடத்தை ஏற்படுத்த முடியும். மாறாக கையில் பிரம்பை மட்டும் தூக்குவதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது.
<翌,·
அண்மையில் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவன் தனது மேல்சட்டையின் பையை கத்தரிக்கோலால் வெட்டி எடுத்துக் கொண்டான். இதனை அறிந்த ஆசிரியர் அம் மாணவனை சட்டையைக் கழட்ட வைத்து வகுப்பறையின் முன்னே நிறுத்தி அவனைக் கடந்துபோகும் ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் 'ஏன் அம் மாணவன் அவ்வாறு நிற்கிறான் எனக் கேட்கும்படி கூறிக் கொண்டிருந்தார். அந்த மாணவனும் எல்லோருக்கும் சட்டையைக் கழட்டி நிற்பதற்கான காரணத்தைக் கூறிக் கொண்டே இருந்தான்’ என
la) - pay tui 2007

Page 23
நண்பர் ஒருவர் சொல்லி வேதனைப்பட்டார்.
இச்செயற்பாடு என்ன தண்டனையா அல்லது அவமதிப்பா? அம்மாணவனின் மனம் அதை எப்படி புரிந்துகொள்ளப் போகிறது. மனித உரிமைச் சட்டங்கள் மாண்வனுக்கு ஆசிரியர் வழங்கும் தண்டனை அவனுக்கு உடல் உள ரீதியான பாதிப்பை ஏற்படுத்தக்கூடாதென்கின்றன. மாணவன் ஒருவனின் பிறழ்வான நடத்தை பற்றி பிறமாணவர்களுக்கோ ஆசிரியர்களுக்கோ தெரியாதபடி இரகசியமாகப் பேணப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றன. இவ்வாறிருக்கும் போது தண்டனை என்னும் பெயரில் செய்யப்படும் அவமதிப்புக்கள் மாணவர்களை பழியுணர்ச்சிக்குரியவர்களாக மாற்றிவிடும் ஆபத்தேயிருக்கிறது. முன்னேற்றகரமான சமூகத்திற்கான பிரைஐைகளை உருவாக்குகிறோம் என மார்தட்டிக் கொள்பவர்கள் ஏன் இழிவான சிந்தனைகளைக் கொண்டிக்கின்றார்கள்.
சமூக நலன்பற்றிப்பேசுபவர்கள் ஏன் தனிநபர்களை அவமதிக்கிறார்கள். மாணவன் முன் தன்னை ஆண்டானாகப் பாவனை செய்யும் அற்பத்தனம் ஆசிரியர் என்ற பதத்திற்கு (ஆசு + இரியர் - ஆசிரியர் ஆசு - குற்றம், இரியர் - இல்லாமல் செய்பவர்) பொருத்தமாக அமையுமா? பிள்ளைகளைப் பிள்ளைகளாகக் கையாழத் தவறுகிறோம். எம்மை அவர்களது உலகத்திற்கு வெளியேயுள்ள மாற்றுக்கிரக வாசிகள் போலக் காட்டிக் கொள்கிறோம். இத்தகைய நிலையில் எனது நண்பர் நேயம் என்ற சொல் பற்றிக் கொண்டிருக்கும் அச்சம் நியாயமானதாகவே படுகின்றது.
பிள்ளை நேயப் பாடசாலைகள் என்றால் என்ன? அவற்றின் நோக்கம் என்ன? யாழ்ப்பாண வலயக் கல்விப்பணிப்பாளர் திரு ரி. செல்வரத்தினம் அவர்கள் செயலமர்வு ஒன்றின் போது “மாணவர்கள் வீட்டில் இருப்பதைக் காட்டிலும் பாடசாலைக்கு வருவது சந்தோஷமென நினைக்க வேண்டும்” என்ற கருத்தைக் கூறியதாக அறிந்தேன். இந்தக் கூற்றே பிள்ளை நேயப்பாடசாலை என்ற கருத்தைப் புரிந்து கொள்ளப் போதுமானது என நினைக்கிறேன். அவர் வலியுறுத்துவது என்ன? மாணவன் எப்போதும் மகிழ்ச்சிகரமான சூழலிலிருந்து கற்க வேண்டும். கற்றல் என்பது மகிழ்வான அனுபவமாக இருக்க வேண்டும் என்பதே. இதற்குப் பாடசாலை மாணவர்களுக்கு அந்நியத் தன்மை கொண்டிருக்காது நெருக்கமானதாகவும் ஆசிரியர்கள் சகமாணவர்களுக்கிடையே மாணவன் ஒருவன் தன்னைப் பின்னடைந்தவனாக கருதிக் கொள்ளாத சூழ்நிலைக்குரியதாகவும் இருக்கவேண்டும். பாடசாலையை மாணவன் தனக்கு பாதுகாப்பான இடமாகவும், கற்றல் சுமையாக இல்லாது சுகமானது என்ற உணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.
மகிழ்ச்சிகரமான சூழலைப் பாடசாலையில் குறிப்பாக வகுப்பறையில் ஆசிரியராலேதான்
உருவf அன்பு இயல் ஐயமில் நேயப்
96ð) Di பெறுட
தவறு தடுப்ப தண்ட
கூடாது அல்ல; மனநி:
அமை ε) σοστής
இருந்த
கொண்
சமூகச் வழங் வாய்ப்
பெயர்
S).-6T 6) செயற்
ld T6 அத்தெ பின்ே
916) 135 தண்ட செயல்
நெருச் கொண் சமூகட் ஆசிரி செலுத் அதேே மதிப் முக்கி பிறழ்
குறை
forgs வழிப் தண்ட செய்ய
உருவ நடத்ை குடும்
LJ T ć4
புரிந்து
கலைமுகம் O ஜுலை

க்க முடியும். ஆசிரியர் பிள்ளைகள் மீது காட்டும் ம் அவர்களுக்கு வழங்கும் பாதுகாப்பும் பாக இச்சூழலை ஏற்படுத்தும் என்பதில் ல்லை. அப்போதுதான்'பிள்ளை பாடசாலை’ என்பது வெறும் கருத்தாக்கமாக பாது ஆக்கபூர்வமான செயற்பாடாக பரிமாணம் 5.
தண்டணைகள் வழங்கப்படுவதன் நோக்கம் செய்தவர்கள் மீண்டும் தவறு செய்யாமல் தற்காகவே. ஆனால் வழங்கப்படும் னையே பழியுணர்வை தூண்டுவதாக அமையக் 1. தவறு செய்தவன் தான் செய்த தவறுக்காக து குற்றத்திற்காகவே தண்டிக்கப்பட்டேன் என்ற லையைப் பெறும் வகையில் தண்டனைகள் யவேண்டும். மாறாக கொடுரமாக மனித வுகளைப்புரிந்து கொள்ளாமல் வழங்கப்படுமாக 5ால் விளைவு மோசமான எதிர்வினையையே ாடுவரும்.
பிள்ளைகளின் பிறழ்வான நடத்தைகளுக்கு காரணிகள், சூழல் மட்டுமல்லாது அவர்களுக்கு கப்படும் தண்டனைகளும் காரணமாக அமையும் புக்களுமுள்ளன. தண்டனைகள் என்னும் ல் செய்யப்படும் அவமதிப்புக்களுக்கும் உடல் தைகளுக்கும் நியாயம் கற்பிக்கும் பாடுகளும் பாடசாலைகளில் காணப்படுகின்றது. வன் ஒருவன் தவறு செய்தான் என்றால் பறுக்கான அடிப்படைக்காரணத்தை கண்டறிந்த ப தண்டனைகள் பற்றியோசிக்க வேண்டும். ாத்தில் முக்கியமாக ஆத்திரத்தில் வழங்கப்படும் னைகள் சமூகப் பொறுப்புணர்வற்ற களாகவே கருதப்பட்ட வேண்டும்.
எமது பிள்ளைகள் எத்தனை கடிகளுக்குள்ளும் துயர்களுக்குள்ளும் வாழ்ந்து எடு பாடசாலைக்கு வருகிறார்கள். ப்பொறுப்பு உள்ளவர்கள் என்ற அடிப்படையில் யர்கள் மாணவர்களின் மீது ஆழ்ந்த கவனம் ந்த வேண்டும் என்பது அவசியமானது. வேளை பிள்ளைகளும் ஆசிரியர்களுக்கு பளித்து கற்றலில் ஈடுபட வேண்டும், கல்வியின் யத்துவத்தை உணரும் பிள்ளைகள் பெரும்பாலும் வான நடத்தைகளில் ஈடுபடமாட்டார்கள்.
இந்தக் குறிப்புகளின் நோக்கம் ஆசிரியர்களை கூறுவதற்கானதல்ல. ஒவ்வொரு ஆசிரியர்களும் வர்களைப் புரிந்துணர்வுடன் அணுகி அவர்களை படுத்த வேண்டும் என்பதற்காகவே. னைகள் எப்போதும் மாணவனை தவறுகள் பாது திருத்துவதாக இருத்தால் நல்ல மனிதர்களை ாக்குகிறோம் என்று மகிழ்வுறலாம். பிறழ்வான தைகளுடன் ஒருவன் உருவாகுவானானால் பம், சமூகம், சூழல் என்பவற்றோடு ாலைகளும் காரணமாக இருக்கும் என்பதையும்
கொள்ள வேண்டும்.
டிசெம்பர் 2007 21

Page 24
LITIbrful colnflu விவசாயம் குெmடhபne
O கலாநிதி அம்மன்
பழமொழிகள் நீண்ட காலமாக மக்களிடையே வழங்கி வருகின்றன. இவை எப்போது தோன்றினவென்று தெரியாது. ஆனால் மக்கள் காலம்காலமாகப்பெற்ற அனுபவங் களின் வெளிப்பாடுகளாக இவை உள்ளன. தமிழில் பழமொழி கள் பற்றிய முதலாவது தொகுதி 'பழமொழி நானூறு எனப்படும் தொகுப்பு நூலாகும். 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலேயர் சிலர்தமிழ் பழமொழிகளைத் தொகுத்துள்ளனர். fópii G3Luñ6F616iv Lung@íîului Ti Tamil Proverbs with their English Translation என்ற தலைப்பில் 6150 பழமொழிகளைத் @g5 Tgišglg gslög Git GMT Tii. (lo" Edition 1842 Dec 25 Jaffna, 2nd Edition 1874 February 13 Madras ) 5.6). T. 95 fiss Tg5657 glispi பழமொழிகள்’ (டிசெம்பர். 2001) என்ற பெயரில் 25000 பழமொழிகளைத் தொகுத்துள்ளார்.
தமிழரிடையே பழமொழிகள் ஒத்துக்கொள்ளற்கும், கண்டிப்பதற்கும், வசைகூறுதற்கும், உண்மை உரைப்பதற்கும், மறுப்பதற்கும், உடன்படுதற்கும் வழங்கப்படுவதாக ஜோன் கசரஸ் கூறுவார். அத்துடன் நிலைமைகளை விளக்கியுரைக்க வும் புத்திகூறுதற்கும் பாரம்பரிய அறிவியலையும் நம்பிக்கை களையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைக்கவும் இவை பயன்படுகின்றமையை நாம் காணலாம்.
அந்தவகையில் விவசாயம் சம்பந்தமான பழமொழி களை இங்கு நோக்கலாம். இவை உழுதல் விதைத்தல் பராமரித்தல் அறுவடைசெய்தல் என்பவற்றுடன் நோய்கள் பற்றியும் கூறுகின்றன.
நிலத்தேர்வு பற்றிய ை:
காணி தேடினும் கரிசல்தேடு’- காணி அளவேயான
நிலம் எனினும் கரிசல் நிலத்தைத் தேடிப் பயிர் செய்ய
வேண்டும் என்பதை இதுவெளிப்படுத்துகிறது.
DŲgọ56o LusÞsÕuueko :
‘ஆழ உழுவதைக் காட்டிலும் அகல உழுவது நல்லது’- தற்போதைய விவசாயிகள் ஆழ உழுதல் பற்றியே அதிகம் பேசுவதைக்காணலாம். பழங்காலத்தைப் பொறுத்த வரை விவசாயத்தில் கூடுதலாகத் தானியங்களே விதைக்கப் பட்டன. அவற்றுக்கு அதிக ஆழத்துக்கு உழவேண்டிய தேவை இல்லை. அத்துடன் நிலம் விவசாயத்தேவைக்கு அதிகமாகக் காணப்பட்டதனால் அகல உழ நிலமும் இருந்தது. அகல உழும்போது கூடுதலான தானியங்களை விதைக்க முடியும். ’தாழ உழுதால் தளிர் ஒடும்’ என்றொரு பழமொழியும் உண்டு. இது மேற்குறிப்பிட்ட பழமொழியின் கருத்துக்கு மறுதலை யான கருத்தைக் கொண்டு காணப்படுகிறது.
‘ஏழுழவு உழுதால் எருப்போடவேண்டாம்.’
கலைமுகம் O ஐ
 
 
 

பலில் பழமொழிகள் கூகுமிழ்ப்பழமொழிகள்
கிளி முருகதாஸ்
“உழுத புலத்தில் நெல்லு
ஆகிய பழமொழிகள் உழுதலின் அவசியம் பற்றிப் பேசுகின்றன. பயிர் விளைவதற்கு எரு முக்கியமானது எனினும் உழுதல் இன்னும் பலன்தரக்கூடியது என்பதை இவை காட்டுகின்றன.
எருஇறதல் பற்றியன:
‘எரு உதவுவது போல இனத்தார் உதவமாட்டார்பயிர் விளைவதற்கு எரு முக்கியமானது என்பதனை இப் பழமொழி விளக்குகின்றது.
‘பனிக்குப்பலிக்கும் வரகு மழைக்குப்பலிக்கும் நெல்லு.
இப்பழமொழி அவ்வப்பயிர்கள் சிறப்பான விளை வைப்பெறக்கூடிய காலநிலைமைகளைக் காட்டுகிறது. வரகு, எள்ளு, அவரை போன்ற தானியங்கள் பனிக் காலத்திலேயே பூத்துக்காய்ப்பதை நாம் அவதானிக்கலாம். அதுபோலவே நெல்லுக்கு அதிக நீர்வேண்டும் என்பது நாம் அறிந்ததே.
பாரமரிப்பு மற்றும் களை எறத்தல் பற்றியன:
*களை பிடுங்காப்பயிர் கால் பயிர்.’, ‘பயிர் கிளைத் தால் ஆச்சு, களை கிளைத்தால் போச்சு.
என்ற இப்பழமொழிகள் களை பிடுங்குதலின் அவசியத்தைக் காட்டுகின்றன. களை பிடுங்கினால்தான் விதைக்கப்பட்ட பயிர் வீரியமுடன் வளரும் என்பது அறிந்ததே.
‘தன்ஆள் இல்லா வெள்ளாமையும் தான்உழாத நிலமும் தரிசு’ என்ற பழமொழி நிலமும் பயிரும் கவனமாகப் பராமரிக்கப்படவேண்டும் என்பதனைத்தெரிவிக்கின்றது.
8p16)6OLuftflueO :
'மாசி மாதத்தில் கரும்பு அறு. கரும்பு மாசி மாதத்தில் அறுத்தால் அதன் இனிமை தனி என்பர்.
‘தை எள்ளுத் தரையில் மாசி எள் மடியில் பணம். எள்ளை மாசி மாதத்தில் அறுவடை செய்தால் அதன் பயன் கூடுதலாக இருக்கும் என்பதனை இது காட்டுகின்றது.
(8bi LuíDõueo:
“ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்’
நாழி நெல்லுக்கு ஒர் அந்து என்பவை நெல்லை அந்துப்பூச்சி எவ்வாறு அழிக்கிறது என்பதனை விளக்கு வதுடன் பொதுவான ஒரு பழமொழியாகவும் இது பயன் படுத்தப்படுகிறது. aoao - paribuï 2oo7

Page 25
ija 6īö Joačub5u
‘தென்னை செழித்தால் பண்ணை செழிக்கும்.’ தென்னை ஒரு பெருந்தோட்டப்பயிராகும். அது செழித்துப் பலன் கொடுக்குமானால் விவசாயி பொருளாதார வளமுள்ள வனாகிறான் என்பதை இதுகாட்டும்.
*பருத்திச்செடியும் பாலும் உள்ளானுக்குப் பஞ்சம் இல்லை. பத்து வருசம் கெட்டவன் பருத்தி விதை. எட்டு வருசம் கெட்டவன் எள்ளை விதை. இளைத்தவனே எள்ளை விதை.
தமிழ் நாட்டில் பருத்தியும் பாலும் செல்வத்தைத் தரக்கூடியவை. அதுபோல எள்ளும் குறைந்த பராமரிப்பில் நிறைந்த பலனைத்தரக்கூடியது. எனவேதான் பொருளாதாரத் தால் இளைத்தவனை எள் விதைக்கும் படி கூறுவதைக் காணமுடிகிறது.
‘பனை வைத்தவன் பார்த்துச் சாவான். தென்னை வைத்தவன் தின்று சாவான். பனை பலனளிக்கக் காலம் எடுக் கும் என்பதனையும் தென்னை விரைவாகப் பலனளிக்கும் என்பதையும் இது தெரிவிக்கிறது.
‘பாகற்காய் விற்ற கூடை பணக்கூடை. பாகற்காய் பெரும்பாலும் அதிகவிலைக்கே விற்கப்படுவதால் இந்தப் பழமொழி ஏற்பட்டதோ என எண்ண இடமுண்டு.
ஆட்டெரு அந்தப்போகம் மாட்டெரு மறுபோகம்.’ ஆட்டெரு மாட்டெரு பயன்பாட்டு முறைகளை இது விளக் கும்.
'பசும் உரத்திலும் பழம் புழுதி நல்லது எரு அல்லது சேதனப்பசளைகளை உடனடியாக இல்லாமல் நாட்பட விட்டே பிரயோகிக்க வேண்டும் என்பர். உடனடியாக பிரயோ கிப்பதெனில் அது பயிரில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பர். ஆகவேதான் பசும் உரத்திலும் புழுதி நல்லது எனக்கூறப்பட் டுள்ளது.
6feogbaseop6Tú ubSueo:
"கொத்தைப் போல வித்தைப் பேணு’, ‘காய்ந்த
வித்துக்குப் பழுது இல்லை’ என்ற பழமொழிகள் வித்துக்
களைக் கவனமாகப் பேணினால்தான் அவை முளைக்கும்
என்பதால் அதை வற்புறுத்தினர்.
விதைத்தல் பற்றியன:
வாழையைத் தாழவை தென்னையைத்தெரியவை
வாழையை விதைக்கும்போது கிழங்கு தெரியாதபடி மண்
ணால்மூடப்பட வேண்டும். தென்னை அதாவது தேங்காயை
விை
தான்
Litq. அதி:
6it எட்( என்
நடு மெ6
அை
பிறர
காய்
காய்
பயி னப் பெt கொ
லும்
எமது தொ படு: டன்
பதி:
அறிமுக
‘அறிமுகம்’பகுதி இடமின்மை காரணமாக இந்த இதழில் { *அறிமுகம் பகுதியில் நூல்கள், சஞ்சிகைகள், ஒலி நாடா
செய்து வைக்கப்படும். இப் பகுதியில் தங்கள் படைப்புக்
வெளியீட்டாளர்கள் தம் படைப்புக்களின் இரண்டு பிரதிக
அனுப்பினால் அது தொடர்பான சிறிய அறிமுகம்
& Libén Lipid Till
C CS TTMMCTCT C seMMMS S LLS

தக்கும் போது அதன் முகப்புப் பகுதி தெரியும் படியாக தக்க வேண்டும் என்பதனை இது காட்டும். அப்போது
அவை சீராக முளைக்கும்.
'வாழையைத் தாழவை. தாழையை மேலை வை’ – வாறே வாழையை விதைக்கும்போது கிழங்கு தெரியாத மண்ணால் மூடப்பட வேண்டும் என்பதனையும் தாழை கம் தாழாதபடி நிலத்தின் மேலே வைக்கப்படல் வேண் என்பதையும் இது காட்டும்.
பத்து அடி பிள்ளை எட்டு அடி வாழை தென்னம் ளை நடும் போது 10 அடியும் வாழையை நடும்போது டு அடியும் இடைவெளி விட்டு நடப்பட வேண்டும் பதை இதுகாட்டுகிறது. ஆனால் இன்று தென்னம்பிள்ளை ம்போது 20/22 அடி இடைவெளிவிட்டு நடவேண்டு ன்பர்.
ஆமணக்கும் பருத்தியும் அடர விதைப்பானா?’இது ணக்கும் பருத்தி போன்ற பயிர்களை ஐதாக விதைத்தாலே வ அதிக பலன் தரும் என்பததைக்காட்டுகின்றன.
ஆடி பிறந்து ஒருகுழி அவரை போட்டால் கார்த்திகை ந்தால் ஒரு சட்டி கறியாகும்.
ஆடி மாதம் அவரை போட்டால் கார்த்திகை மாதம் காய்க்கும்
ஆடி வாழை தேடி நடு - ஆடியில் விதை போட்டால் கார்த்திகையில் காய் க்கும்.
ஆடி அவரை தேடிப் போடு. ஆடி விதை தேடி விதை. ஆடிப் பட்டம் தேடி விதை, ஆடிப் பருத்தி தேடிவிதை. ஆடிப் பிள்ளை தேடி விதை. (தென்னம் பிள்ளை)
இப்பழமொழிகள் ஆடி மாதம் விதைக்கும் எந்தப் ரும் பலன் கொடுக்கும் என்பதைக்காட்டுகின்றன. கார ), தொடர்ந்து வருகின்ற ஆவணி, புரட்டாதி மாதங்களில் ப்கின்ற மழையில் அவை முளைத்து அதிக பலனைக் டுக்கக் கூடியதாக இருத்தல் தொடர்ந்த அவதானிப்பினா அனுபவத்தினாலும் அறியப்பட்டுள்ளது.
ஆகவே, விவசாயம் பற்றிய இந்தப் பழமொழிகள் து பாரம்பரியத்தில் விவசாயிகளுக்கு அறிவூட்டவும் டர்ந்து அவர்களின் அடுத்த தலைமுறைகளுக்கு விளங்கப் த்தவும் பயன்படுத்தியுள்ளனர் என்பதைக் காணமுடிவது அவர்களது அனுபவத்தினூடாகப் பெற்ற அறிவியலை வு செய்துள்ளனர் என்பதைக் காணலாம்.
இடம்பெறவில்லை. அடுத்த இதழில் இடம்பெறும். க்கள் மற்றும் இறுவட்டுக்கள் என்பன அறிமுகம் களும் அறிமுகம் செய்யப்படுவதை விரும்பும் களை அனுப்பி வைக்கவும். ஒரு பிரதி மட்டும் மட்டுமே இடம்பெறும். அறிமுகக் குறிப்பு
-5.
செம்பர் 2007 23

Page 26
1DJUğ585 1D6OTıib
விறைத்துப் போன உணர்வுகளையும் சபிக்கப்பட்ட மெளனத்தின் உறுப்புகளையும் தேடி அலையும் என் விரல்கள் விடியலின் நிறங்களும் கரைந்துபோக கனத்த மாலைகளும் புழுதியான தென்றலும் என் உடலுக்காக காத்திருக்கும்
உடைந்த நீர்க்குடத்தில் முளைத்த பூச்செடியைப் பார்ப்பதற்கு ஏங்கும் கண்களை நோக்கி கட்டெறும்புகள் படையெடுக்கும் ஆறடி குழியுள் விழுவதற்கு முன்பும் கறுத்த பூனை கடந்து செல்லும் மரத்த முலையுடன் சாவைத் தொலைத்துவிட்டு சபிக்கப்பட்ட பிறவியாக நான் உன்னுடன்
9. Bഖ8
கலைமுகம் 0
 
 

வெற்றுக் காத்திருப்புகள்
புழுதிபடிந்த தெரு மதில்களுக்குப் பின்னால் சுமையாகிவிட்ட காத்திருப்புகள் கனத்த இரவில் விசிறப்பட்ட நட்சத்திரங்களில் இறுகாத கைகளை இறுக்கும் போது சத்தங்கள் மெளனிக்கத் தொடங்கும் நாளைய சோற்றுப்படுக்கைக்கான இன்றைய இரவில்
நுரைத்த கனவுகளும்
உலர்ந்த ஆசைகளும் சிலந்தி வலைகளுக்கு மத்தியில் விறைத்து போயிற்று
66Taopais asaray856ir
உலரும் என் இளமைக் கனவுகள் அஸ்தமிக்கும் சூரியனில் கறுக்கும் நிலாச் சாரல் கனக்கும் மேகங்கள் நடுவே நடுங்கும் என் விரல்கள் என் நிறமற்ற இளமைக் கனவுகள் கரையும் வர்ணங்களின்
இடையில்
நழுவித்தொங்கும்
வெறுமையாக
ன்
െ - pഴെbർ 2007 —

Page 27
erecho-shoals 66
இரண்டு
கார்த்திகைப் பறவைகள்
கவிதைத் தொகுதியை புதிய புதிய விமர்சன ஆய்வுக்கு உடீபடுத்தல்
O சண்முகம் சிவலிங்கம்
(இக்கட்டுரை, மண்டூர் கலை, இலக்கிய அவையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் திரு. மு. விமலநாதன் தலைமையில் 05-08-2007 இல் மண்டூர் இராமகிருஷ்ண கலாசார மண்டபத்தில் நிகழ்ந்த எஸ். புஸ்பானந்தனின் ‘இரண்டு கார்த்திகைப் பறவைகள் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கட்டுரையாசிரியர் ஆற்றிய நூல் ஆய்வுரையின் எழுத்துருவ வடிவமாகும்)
 
 

நான் இங்கு நிகழ்த்தப்போவது பொதுவான ரம்பரியமான மரபு ரீதியான ஒரு நூல் ஆய்வு அல்ல. தகைய ஆய்வுகள் என்னைப் பொறுத்தவரையில் காலாவதி கிவிட்டன என்றே தோன்றுகிறது. புதிய புதுவிமர்சனம் ாறு சொல்லப்படுகின்ற விமர்சனக் கண்ணோட்டத்தில் து எழுத்துக்களை பார்க்கின்ற முனைப்பு எனக்கு கொஞ்சக் vமாக ஏற்பட்டுள்ளது. கடைசியாக நான் நூலாய்வு செய்த னாரின் ‘ஒவியம் வரையாத தூரிகை’ கவிதைத் தொகுதியை ய புதிய விமர்சனம் என்று சொல்லப்படுகின்ற விமர்சனக் எணோட்டத்திற்கு உட்படுத்தினேன். அந்த வகையில் Uபானந்தனின் ‘இரண்டு கார்த்திகைப் பறவைகள்’ என்னும் தொகுதியையும் ஆய்வுசெய்யும் ஆவல் என்னுள் ழகின்றது.
புதிய புதிய விமர்சனம் என்றதும் சிலருக்கு அந்தத் ாடரே புதிராக தோன்றக்கூடும். “அதென்ன புதிய புதிய மர்சனம் ? அப்படியென்றால் பழைய புதிய விமர்சனம் என ாறு உள்ளதா?’ எனக் கேட்கக்கூடும். ஆம், பழைய புதிய மர்சனம் என ஒன்று இருந்தது; இருக்கிறது. புதிய புதிய மர்சனத்தை புரிந்து கொள்வதற்கு பழைய புதிய விமர் த்தையும் பார்ப்பது அவசியம்.
20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு சற்று முன்னதாக, 0,1940களில் அமெரிக்காவில் முந்திய விமர்சன முறையில் ருந்துவேறுபட்ட ஒரு விமர்சனக் கோட்பாட்டை முன்வைத் ர்கள். இந்த விமர்சனக் கோட்பாடு புதிய விமர்சனம் - New ticism என்று அன்று அழைக்கப்பட்டது.
பழைய, பாரம்பரிய விமர்சனம் படைப்புக்கு வெளி யுள்ள விஷயங்களையும், படைப்பு பற்றிய விமர்சனத்தில் ர்த்துக்கொண்டது. உதாரணமாக, புஸ்பானந்தனின் இந்தத் ாகுதியை பழைய பராம்பரிய விமர்சனத்துக்கு உட்படுத்தி ால் அது, புஸ்பானந்தனின் பிறந்தகமான மண்டுரை ாடாமல் விட மாட்டாது. குறைந்த பட்சம் மண்டுரின் லக்கியப் பாரம்பரியத்தை விலாவாரியாக எடுத்தோதி, அந்த லக்கியப் பாரம்பரியத்தில் புஸ்பானந்தனுக்கு உள்ள இடம் றி நிச்சயமாகப் பேசும். அதே போல புஸ்பானந்தனின் ய்யுள் தேர்ச்சி பற்றிக் குறிப்பிட வரும்போது முழு செய்யுள் ாலாற்றினையும் கொட்டி எழுதிவிடக்கூடும். அல்லது த்தொகுதியிலுள்ள புஸ்பானந்தனின் கட்டற்ற புதுக்கவிதை கையைப் பற்றிக் குறிப்பிட வரும்போது புதுக்கவிதையை 1ாற்றியோ தூற்றியோ ஒரு புராணம் பாடிவிடக்கூடும். தேபோல புஸ்பானந்தன் இந்தத் தொகுதியில் வெளிப் த்ெதும் சில அனுபவங்கள் பற்றிக் குறிப்பிட நேரும் போது ஸ்பானந்தனின் முழு வாழ்க்கைப் பின்னணியும், ஆளுமைக் றுகளையும் உளவியல் பாங்குகளையும் இணைத்துக் ாள்ளக்கூடும். கவிதைப் பொருளையும் நீட்டி சுவிங்கம் ழுக்கும். உதாரணமாக இத்தொகுப்பின் தொடக்கமாக ள்ள அந்நியோன்யம் பண்ண முடியாத / அந்நியமாய் ாழ்க்கை என்ற வரிகளிலுள்ள அந்நியமாய் என்ற சொல்லில் 5ாற்றிக்கொண்டு அந்நியமாதல் பற்றி நீட்டி அளக்கும்; ல் மார்க்ஸ் தொடக்கம் சாத்தர், அல் பட் காமுஸ் வரை துவம் பேசும். படைப்புக்கு வெளியுள்ள இந்த புறம்பான
:ெ1ங்கள் பற்றி கதை அளப்பதை நிறுத்தச் சொல்லி
ற்றுப்புள்ளி வைக்க முயன்றதே அன்றைய புதிய

Page 28
கோட்பாடு.
அமெரிக்காவின் புதிய விமர்சனக் கோட்பாடு படைப்பை மட்டுமே முன்னிறுத்தியது. படைப்பில் காணப்படுவது பற்றி மட்டுமே பேசவேண்டும் என்றது. “யாப்புக்குள் நின்று யாழ் மீட்டுபவள்’ என்று மஹாகவி மரபுக்கவிதை பற்றிச் சொன்னதை சற்று மாற்றிச் சொன்னால் படைப்புக்குள் நின்றே பரதம் செய்பவளாக அமெரிக்க ஆங்கிலேய புதிய விமர்சனத்தை உருவகிக்கலாம்.
“படைப்புக்குள் நின்று என்ன பண்ணுவது?’ என்று பழைய விமர்சகன் கேட்கக் கூடும். “படைப்புக்குள் எத்தனையோ உண்டு; அவைபற்றி பேசு’ என்றான் புதிய விமர்சகன். “என்ன உண்டு?’ என்று கேட்டான் பழைய விமர்சகன். “படைப்புக்குள், அதன் உருவம் உண்டு, உள்ளடக்கம் உண்டு. உருவத்துக்கும் உள்ளடக்கத்துக்கும் உள்ள உறவு உண்டு சொல் உண்டு, சொல்லும் முறை உண்டு. படிமம் உண்டு, படிமவியல் உண்டு, பொருள் உண்டு. பொருட்புலப்பாடு உண்டு, உணர்வு உண்டு, உணர்ச்சி உண்டு, சிந்தனை உண்டு, சிந்தனைச் சாதுர்யம் உண்டு, அங்கதம் உண்டு, இரட்டை அர்த்தம் உண்டு, நடை உண்டு, நகைச் சுவை உண்டு, வஞ்சப் புகழ்ச்சி உண்டு, வசையோடு குத்தல் உண்டு, முரணியல் உண்டு, முரண் நகையும் உண்டு. இவையெல்லாம் நீ பேசுவதற்கே உள்ள நுட்பத் திறன்கள். ஆனால் என்ன பேசினாலும் படைப்புக்குள்ளே நின்று பேசு’ என்று விடையளித்தான் புதிய விமர்சகன்.
இந்த புதிய விமர்சனத்தின் பிதாமகர்களாக அமெரிக்காவில் கிளின்த் புரூக்ஸ் (Cleanth Brooks) , ஜோண் (5Ggffai) (John Crowe), paöTGasTLb (Ransome) Ll îlaitg-G5. விம்சொவ்ற் (WK.Wimsoft) முதலியோரும் இங்கிலாந்தில் g. 61. g5)åg-L Giv (I.A.Richards), 656o65ulb 6Tubloggår (William Empson) முதலியோரும் பிரபலமாயினர். கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளில் எமது நவீன தமிழ் இலக்கிய பிதாமகர் களாகிய க.நா.சு., அ. ச. ஞானசம்பந்தன் மற்றும் பல்வேறு பல்கலைக்கழக பேராசிரியர்களும் ஐ. ஏ. றிச்சட்சையும் வில்லியம் எம்ப்சனையும் மேற்கோள்காட்டி எழுதியுள்ளமை நமது ஞாபகத்துக்கு வரலாம். எமது நவீன விமர்சனம் என்று நாம் சொல்லிக்கொண்டிருப்பது இந்த புதிய விமர்சனத்தின் அடிப்படையைக் கொண்டெழுந்தவையே. ஆனால், இவை புதிய விமர்சனத்தின் அடிப்படையைக் கொண்டவை என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. படைப்புக்குள்ளேயே நிற்க வேண்டும் என்பதை நாம் ஒரு கட்டாயமாகக் கொள்ள வில்லையெனினும், புதிய விமர்சனப் பாங்கே நம்முன் ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடியுள்ளது. மார்க்சிய விமர்சனம், சமூகப் பார்வையையும் சமூக மாற்றத் திற்கான செயலூக்கத்தையும் வற்புறுத்தினாலும், நடைமுறை யில் நம் மத்தியில் புதிய விமர்சனத்தின் சிந்தனை முறையே செயற்பட்டதெனலாம். ஏனென்றால் புதிய விமர்சனத்தி லிருந்து வேறுபடுகின்ற அடிப்படைச் சிந்தனை மாற்றம். கோட்பாட்டு மாற்றம், தத்துவ மாற்றம் இன்னும் நம் மத்தியில் ஏற்படவில்லை. ஆங்கில கல்வியோடொட்டிய - ஆங்கில இலக்கியப் பரிச்சயத்தோடொட்டிய - இந்தப் புதிய விமர்சனம், பல கோலங்களையும் அலங்கோலங்களையும் கொண்டுள்ளது.
ஆனால், மேற்கில் அப்படியல்ல. 1930 - 1940 களில்
 

தோன்றிய புதிய விமர்சனம் சுமார் 30 வருடங்களுக்குள் 1960 வாக்கில் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அந்த முப்பது நாற்பது வருடங்களுக்குள் மேற்கில் பாரிய கோட்பாட்டு தத்துவ மாற்றங்கள் உருவாயின. புதிய புதிய கோட்பாடுகள் தத்துவங்கள் பல தோன்றின. பல அறிவுத்துறைகளும் உருவாயின. நிகழ்வியல், மொழியியல், உளப்பகுப்பாய்வு, மார்க்சியம், அமைப்பியல், பின்னமைப்பியல், கட்டுடைத் தல் எனக்கூறப்படும் கோட்பாடுகளும் தத்துவங்களும் அறிவுத்துறைகளும், புதிய பிரேரணைகளை முன்வைத்தன; இவற்றின் அடிப்படையிலே புதிய புதிய விமர்சனம் தோன்றியது. புதிய விமர்சனம் என்று அழைக்கப்பட்டது; பழையது ஆயிற்று.
அதனால், இந்த புதிய புதிய விமர்சனத்தின் அடிப்படையில், அதன் பரிபாசையில் புஸ்பானந்தனின் இந்தத் தொகுதியை அணுகலாம் என்று நினைக்கிறேன். ‘புதிய புதிய விமர்சனத்தின் பிரதி, வாசிப்பு,அமைப்பாக்கம், கட்டுடைத்தல் , பிரதியின்பம் ஆகிய கருத்தாக்கங்களை இந்தத் தொகுதியில் காண்பதன் மூலம் அதைச் செய்யலாம் என்று எண்ணுகின்றேன்.
II
பிரதி என்று நாம் தமிழில் புழங்கும் சொல் ஏதோ ஒரு விதத்தில் நாம் எல்லாரும் அறிந்த சொல்தான். நகல் என்ற அர்த்தத்தில் நாம் அந்தச்சொல்லை பிரதானமாக பாவிக்கி றோம் அல்லது பாவித்தோம் என்று நினைக்கிறேன். நகல் r எடுத்தல் என்பதை பிரதி எடுத்தல் என்று இப்போது சொல்வது போல் தெரிகிறது. நீங்கள் ஒரு போட்டோ பிரதிக்காரரிடம் போய் உங்கள் கையில் உள்ள ஒரு கடிதத்தையோ, | படிவத்தையோ கொடுத்து இதில் இத்தனை பிரதிகள் தாருங்கள் என்று சொல்லக்கூடும். ‘வீரகேசரி’ மண்டூரில் எத்தனை பிரதிகள் விற்பனை ஆகின்றன என ஒருவர் வினவவும் கூடும். இதெல்லாம் Copy, Copies என்ற ஆங்கிலப் , பதத்தின் அர்த்தத்தில் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போது சொல்லப்பட்டவற்றில், பிரதி என்பது ஒரு தாளில் எழுதப் பட்ட அல்லது அச்சிடப்பட்ட எழுத்து வரிகளையோ அல்லது r எழுத்து வடிவத்தைக் குறிக்கிறது என்பதையும் அறிவீர்கள். ஸ்ரூடியோக்களில் சற்று வித்தியாசம். உங்கள் புகைப்படத்தின் எத்தனை பிரதிகள் வேண்டும் என்று புகைப்படக்காரர் கேட்கக்கூடும் அல்லது ஏதேனும் ஒரு திரைப்படத்தின் எத்தனை பிரதிகள் இலங்கைக்கு வருகின்றன என்று " திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் கேட்கக்கூடும். ஒத்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்று மற்றதன் அசல் பிரதியாக இருக்கும் என்போம். இதெல்லாம் ஒத்த சாயல் என்ற
வகையில் பிரதி என்பதற்குரிய அர்த்தம். t பிரதி என்பது வேறு அர்த்தங்களிலும் உபயோகப் படுவதை நினைவுகூர முடியும். பிரதி அதிபர், பிரதிக் கல்விப் பணிப்பாளர், பிரதி இயக்குநர் என்றெல்லாம் சொல்கிறோம். இங்கு பிரதி என்பது பதவி நிலையில், பதில் நிலை வகிப்பதைக் குறிக்கும். மேலும் பல அர்த்தங்களிலும் பிரதி
என்ற சொல் உபயோகிக்கப்படலாம்.
மற்றும் நாடகப் பிரதி என்ற தொடரைப் பயன்படுத்தி இருப்பீர்கள். நாடகப் பிரதி என்பது நாடகத்தின் உரையாடல்
8 a , محترم A கள மறறும குறடட க3ை" கானட எழுத்தாக்கம். இதனை
ਵ-2: 2007 L

Page 29
ஆங்கிலத்தில் Script என்கிறோம். Script என்பதன் தமிழாக்கமாகவும்,பிரதி என்ற சொல் உபயோகிக்கப்படுகிறது. இதுபோல Text என்ற ஆங்கிலச் சொல்லுக்கும் பிரதி என்ற சொல் தமிழ்ப் பதமாக உபயோகம் பெற்றுள்ளது. இவ்வாறு பிரதி எள்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருப்பினும், அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற பொருளை நாம் இலகுவாக சரியாகத் தீர்மானித்துக் கொள்கிறோம்.
இங்கேText என்ற ஆங்கிலப் பதத்திற்குரிய பொருள் கொண்ட பிரதி பற்றித்தான் பேசப் போகிறோம். நான் முன்பு சொன்ன ஆங்கில அமெரிக்க புதுவிமர்சனக்காரரும் Text என்ற சொல்லைத்தான் பயனபடுத்தினார்கள். அவர்கள் Text என்பதன்மூலம் ஒரு படைப்பின் எழுத்து வடிவத்தைக் கருதினார்கள். அவர்கள் ஒரு கவிதைப் படைப்பாளனின் எழுத்தாக்கத்தை கவிதையின் Text என்று குறிப்பிட்டனர். ஒரு சிறுகதைப் படைப்பின் எழுத்துருவை அதன் Text என்று குறித்துப் பேசினார்கள் அல்லது ஒரு நாவல் படைப்பின் எழுத்துருவை நாவல் Text என்று அழைத்தார்கள். Text இன் தமிழ்ப்பதம் பிரதி என்பதை மனம்கொண்டால், அவர்களுக்கு படைப்பு வேறு பிரதி வேறல்ல. படைப்புத்தான் பிரதி; பிரதிதான் படைப்பு.
புதிய புதிய விமர்சனக்காரரும் பிரதி என்ற சொல்லை உபயோகிக்கிறார்கள். ஆனால் பிரதி, எழுத்தாக்கம் அவர்களுக்கு படைப்பு ஆவதில்லை. ஏனென்றால் படைப் பின் முழுமை பிரதியில், எழுத்தாக்கத்தில் இடம்பெறு வதில்லை என்பது அவர்களுடைய கருத்து. முழுமையான படைப்பு கிடையவே கிடையாது என்பது அவர்களது வாதம். காரணம் அர்த்தம் ஒருபோதும் அறுதியானதும் இல்லை உறுதியானதும் இல்லை. அர்த்தம் சார்பு நிலை கொண்டது. அர்த்தம் நிரந்தரமானதல்ல; மாறி மாறிக் கொண்டிருப்பது. அர்த்தம் எப்போதும் தன்வயத் தன்மையுடையது. புறவயத் தன்மையற்றது. அகவயத்தன்மையின் நெருடலில் எப்படி ஒரு படைப்பு முழுமை பெறும் ? அல்லது படைப்பு என்ற சிங்காசனத்திலிருந்து புதிய புதிய விமர்சனம் கவிதைகளை யும், கதைகளையும், நாவல்களையும், அன்ன பிற எழுத்துக் களையும் கீழே உருட்டிவிட்டது. கவிதைகள் இல்லை; கவிதைப்பிரதிகள்தான் உண்டு. கதைகள் இல்லை; கதைப் பிரதிகள்தான் உண்டு. நாவல்கள் இல்லை; நாவல் பிரதிகள்தான் உண்டு. ஆய்வுகள் இல்லை; ஆய்வுப்பிரதிகள் தான் உண்டு. விமர்சனங்கள் இல்லை; விமர்சனப்பிரதிகள் தான் உண்டு எனக் கோடு கிழிக்கிறது புதிய புதிய விமர்சனம். அறுதியான, முற்று முழுதான மெய்ம்மை உலகில் இல்லை என்ற தத்துவக் கண்ணோட்டமே இந்த திருவிளையாட லுக்குக் காரணம். மெய்ம்மை, சார்பு நிலைப்பட்டது என்பது அமைப்பியல் வாதம்.
இதன்படி, புஸ்பானந்தனின் கவிதைகள் என்று சொல்வது தக்கது அல்ல; புஸ்பானந்தனின் கவிதைப் பிரதிகள் என்று சொல்வதே பொருத்தம், புஸ்பானந்தனின் கவிதைத் தொகுதி என்று சொல்வது தக்கதன்று; புஸ்பானந்தனின் கவிதைப்பிரதிகளின் தொகுப்பு என்று சொல்வதே பொருத் தம், “இதென்னடா, முதலுக்கே மோசம்” என்று சிலர் திகைப் படையக்கூடும். ஆனால், அறுதியானது எதுவும் இல்லை என்பதால் அப்படித்திகைப்படையத் தேவையில்லை; ஆராய்ந்து பார்ப்பதுதான் அவசியம்.
கலைமுகம் C ஜுலை

பேரும் பெற்ற பெருமைகளும்
பெரிதாய் அவைதரும் மகிமைகளும்
சாரம் அற்ற மாயைகளே!
சற்றும் நிலையா நிழலுருவே!
விதிக்கு எதிராம் கேடயந்தான்
வேறெதும் இல்லை இவ்வுலகில்
புவிக்கே மன்னன் என்றாலும்
மரணத்தின்கொடுங்கரம்படியும்.
s 宇 t 구, 9
மன்னர் பிடித்த செங்கோலும்
மணிகொள்முடியும் வீழ்ந்துபடும்
அன்னவற்றோடு ஏழையர் கொள்
அரிவா ளும்மண்வெட்டியதும்
ஒன்றாய்ச் சுடலைச் சாம்பலிலே
ஒருநாட் கிடத்தல் காண்பீரே
来来来
உடைவாள் கொண்டு சிலபேர்கள்
போர்க்களத்தறுவடை செய்வார்கள். படைகள் வென்ற களத்தினிலே
வெற்றிக் கொடியை நடுவார்கள்.
ஆனால் வலிய நரம்பெல்லாம்
என்றோ ஒருநாள் நிலைதளரும்
தானாய் இன்றோ நாளைக்கோ
விதிக்கு இவரின் தலைபணியும்.
வெற்றி பெற்ற வீரர்களும்
தோற்றோர்தாமும் மரணமதன்
கொற்ற வாயில் முன்னாலே
குனிந்து நிற்கும் நிலைதோன்றும்
அற்றைப் பொழுதிற் பெருமிதம் சேர்
மூச்சை அவர்கள் கைவிடுவார்.
臺臺臺
ஆயிரம் வீரர் தலைகொய்து
அண்டம் முழுதும் பிடித்தாலும்
போயதை வெற்றிக் களிப்போடு
புளூகாதீர்நீர் மேன்மேலும்
பாயிரம் பாடி வாழ்த்திசைத்துப்
பரிவுடன் போட்ட மாலைல்ெலாம் ஒரிரு கணத்துன் உடல்மேலே
வாடிக் கிடத்தல் உணராயோ?
வெற்றிக்களிப்பில் மிதப்போரும்
இரத்தம் சிந்தும் தோற்றோரும் நிற்கும் மரணப்படுக்கைக்கு
நீயும் ஒருநாள் வரல்வேண்டும். அற்றைப் பொழுதில் நீசெய்த
அறமேதுணையாய் வந்து நின்று சுற்றிய சுடலைச் சாம்பலினுள்
器
s A 号 奥
ܣܳ
爵
ଦ୍ବିତ୍ତି ・ト
需 es
s త్రి
வாசனை வீசுமென்றறிவாயே!
டிசெம்பர் 2007

Page 30
இனிவாசிப்பு’ என்ற சொல் அதுவும் இப்படித்தான் திகைப்பைத் தருமோ? பார்க்கலாம்.
பிரதி என்ற சொல்லுக்கு உள்ளது போலவே வாசிப்பு என்ற சொல்லுக்கும் சாதாரண புழக்கத்தில் பல அர்த்தங்கள் உள்ளன. எழுத்துக்கூட்டி சொற்களையும், சொற்களின் அடியாக வாக்கியத்தையும், வாக்கியங்களின் அடியாக ஒரு பிரதியையும் உச்சரித்தல் வாசிப்பு என்பதன் ஒரு அர்த்தம். ஓர் இசைக் கருவியை மீட்பதும் வாசிப்பு என்று சொல்லப் படுகிறது. ஏதாவது ஒரு மானியின் - வெப்பமானியோ, பாரமானியோ - அளவீடுகளை குறிப்பதும் வாசிப்பு என்று சொல்லப்படுகிறது. இவை தவிர ஓர் உருவகமாகவும் 'வாசிப்பு’ என்ற சொல் பயன்படும். “அவளுடைய துயரை அவளுடைய முகத்தில் வாசிக்கக் கூடியதாகவிருந்தது’ என்ற வாக்கியத்தில் வாசிப்பு உருவகமாக உள்ளது.
தமிழில் வாசிப்பு என்பதற்கு உள்ள இந்த அர்த்தங்கள் ஆங்கிலத்தில் reading என்ற சொல்லுக்கும் உண்டு. உண்மையில் தமிழில் வாசிப்பு என்பதற்கு உள்ள சில அர்த்தங்கள் reading என்ற ஆங்கிலச் சொல்லின் வழிவந்தவையே. ஆனால், புதிய புதிய விமர்சனத்தின் பரிபாஷையில் reading என்பதும் அதன் வழியாக தமிழில் வாசிப்பு என்பதும் ஒரு கலைச்சொல் ஆகிவிடுகிறது. புதிய புதிய விமர்சனத்தில் வாசிப்பு என்பது ‘அர்த்தம் கொள்ளல்’ என்ற அர்த்தத்தைப் பெறுகிறது.
எந்த ஒரு நிகழ்வையும் நாம் பல வகையில் அர்த்தம் கொள்ளலாம் அல்லது வாசிப்புச் செய்யலாம். உதாரணமாக, உன்னுடைய காதலி அல்லது உன்னுடைய காதலன் நீண்ட நாள்களாக உன்னைக் காண வராவிட்டால் நீ எவ்வளவு பாடு படுவாய்! அவளுடைய அல்லது அவனுடைய வராமைக்கு நீ ஆயிரம் அர்த்தங்கள் சொல்வாய் அல்லது இந்த வராமையை ஆயிரம் விதத்தில் வாசிப்பாய்.
அதே போல ஒரு பிரதியும் ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் அர்த்தம் கொள்ளப்படலாம் அல்லது வாசிப்பு செய்யப்படலாம். ஒரு பிரதிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் உண்டு என்பதை ஒரு பிரதிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாசிப்புகள் உண்டு என்றும் சொல்லலாம்.
சரியாகச் சொல்லப்போனால், எந்தப் பிரதியும் ஒரு போதும் ஒரே விதமான வாசிப்பை பெறுவதில்லை என்கிறது புதிய புதிய விமர்சனம். பிரதியின் வாசிப்புகள் ஆளுக்காள் வேறுபடும்; ஒரே ஆளுக்குக்கூட வெவ்வேறு தடவைகளில் ஒரே பிரதி வெவ்வேறு வாசிப்புக்களைக் கொடுக்கும். பிரதியை ஆக்கியவர் கூட தனது பிரதியில் தான் முன்பு கருதாத புதுப் புது வாசிப்புக்களைப் பின்னர் பெறக்கூடும். இந்த அவதானங்களின் அடிப்படையில், அர்த்தம் நிலையானதல்ல என்கிறார் பின்னமைப்பியல்காரரான டெறிடா (Derida); அதற்கான மொழியியல், குறியீட்டியல் காரணங்களையும் அவர் முன்வைக்கிறார்.
புஸ்பானந்தனின் இந்தக் கவிதைப் பிரதிகளிலும் நாம் அத்தகைய ஒன்றுக்கு மேற்பட்ட வாசிப்புகளைப் பெறலாம். உதாரணமாக, இதன் முதற் கவிதைப் பிரதியை _!! 3}} {
ம், அதன் முதற்பந்தியை வாசிப்போம்.
பம் பண்ன :
 
 
 

மனித வாழ்க்கை”
நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் தாளும் பேனாவும் தந்து இந்த கவிதைப் பிரதியினது பகுதியின் உங்கள் வாசிப்பை எழுதும்படி கேட்டுக்கொண்டால், நிச்சயமாக நீங்கள் ஒரே மாதிரியாக எழுதப் போவதில்லை. இந்த கவிதைப் பிரதி பகுதிக்குக்கூட பல வாசிப்புக்கள் உள்ளதை நீங்கள் அப்போது புரிந்துகொள்வீர்கள். புஸ்பானந்தனின் இந்தக் கவிதைப்பிரதி பகுதியின் என்னுடைய வாசிப்புகள் இரண்டொன்றை சொல்கிறேன்.
என்னுடைய ஒரு வாசிப்பு - “மனிதர்கள் நெருக் கமான உறவுகளை கைவிட்டு விட்டனர்.”
என்னுடைய இன்னொரு வாசிப்பு - ”மனிதர்கள் ஒருவருக்கொருவர் அந்நியராகி விட்டனர்.”
என்னுடைய பிறிதொரு வாசிப்பு - “அந்நியமாதலுக் குள் தள்ளப்படும் மனிதர்கள்.’
அந்நியோன்யம்/அந்நியம் என்ற சொற்களின் அடியாக இந்த வாசிப்பு வேறுபாடுகள் இங்கு தோன்றுகின்றன என நினைக்கிறேன். தனிமைப்படல் , அந்நியராதல், ஆதல், அந்நியமாதல் என்பன வெவ்வேறு அர்த்தத் தளங்களை சுட்டுபவை.
ஒரு பிரதிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாசிப்புகள் இருக்கலாம் என்பது உண்மையில் அதிர்ச்சியூட்டக் கூடிய ஒரு செய்தியே. ஏனெனில் ஒன்றுக்கு மேற்பட்ட வாசிப்பு என்பது கவிதையின் பொருளை அல்லது அதன் உள்ளடக்கத்தை நிச்சயமற்றதாக்கியிருக்கிறது. அதனால் உள்ளடக்கம் முக்கியமற்றதாகி விடுகிறது. இது நாம் இதுகாறும் பல விகற்பங்களுடன் பின்பற்றி வரும் ஆங்கில, அமெரிக்க புதிய விமர்சனங்களுக்கு பெரிதும் முரணானது. ஆங்கில, அமெரிக்க புதிய விமர்சனம் பிரதியை பிரதியின் உள்ளடக்கத்தை முக்கியமாகக் கருதுகின்றது; புனிதமாகக் கருதின. புதிய புதிய விமர்சனம் உள்ளடக்கத்தை உதறி விடுகிறது; பிரதியின் வேறு விடயங்களை பிரதானப்படுத்துகிறது. புதிய புதிய விமர்சனத்தின் பிரதி பற்றிய கருத்துருவம் நமக்கு திகைப்பை தந்ததுபோலவே, புதிய புதிய விமர்சனத்தின் வாசிப்பு பற்றிய கருத்துகளும் நமக்கு திகைப்பை அளிக்கக்கூடும்.
V
இனி அமைப்பாக்கம், புஸ்பானந்தனின் கவிதைப் பிரதிகளில் எப்படி உள்ளது என்பதை ஆராயலாம்.
அமைப்பாக்கம் என்பது ஒரு பிரதியின் உள்ளமைப்பை காணும் முயற்சியாகும். இது வாசிப்பிலிருந்து வேறுபட்டது; வாசிப்பைக் கடந்தது.
எந்தப் பிரதியும் - கவிதைப் பிரதியோ, கதைப் பிரதியோ, கட்டுரைப் பிரதியோ - ஒரு அமைப்புக் கொண்ட தென்பது வெளிப்படை பிரதியின் குறியீட்டியல் அமைப்பும் சரி, பொருள் அமைப்பும் சரி அமைப்பு என்ற வகையில் சிறிய சிறிய கூறுகளால் ஆனதாய் இருக்கும் என்பதும் தெரியக்கூடிய விஷயமே. நாம் காணும் கதிரையோ, மேசையோ, 3)ւԸ:1ւՈ3:1, இசையோ, விலங்கோ, தாவரமோ சிறிய சிறிய אי, דן Jey n} + 3 H.
F-3) 5. Lt. 316i

Page 31
அமைப்புகள். அவன் எப்படி இந்த அமைப்புக்களை உருவாக்குகிறான் என்பதும் நமக்குத் தெரியும், விலங்கும் தாவரங்களும் அவற்றின் Genetic code என்னும் மரபணுச் சுவடுகளால் உருவாக்கப்படுகின்றன. மொழியும் இசையும் ஆழ்மனதின் Lang என்னும் மொழிக் கிடங்கினாலும் இசைக் கிடங்கினாலும் உருவாகின்றன. ஒரு இலக்கியப் பிரதிகூட Lang ஆழ்மனதின் இலக்கியக் கிடங்கினால் உருவாக்கப்படு வதாக சொல்லப்படுகிறது.
ஆழ்மனதின் செயற்பாடுகள் மேல்மனதுக்கு - பிரக்ஞை நிலைக்கு - தெரிவதில்லை. எனினும் பிரதிகளின் கூறுகளைக் கண்டறிவதன்மூலம் - அந்தக் கூறுகளின் இணைப்பு முறையை கண்டறிவதன்மூலம் - இவ்வாறு பிரதியை அமைப்பாக்கம் செய்வதன்மூலம் - விமர்சகன் அந்தப் பிரதியின் உட்கிடையை வெளிக்கொணரலாம் என றோலன்ட் பாத்ஸ் (Roland Barthes) போன்றோர் காட்டி யிருக்கின்றார்கள்.
அந்த வகையில், புஸ்பானந்தனின் சில பிரதிகளை அமைப்பாக்கம் செய்து பார்க்கலாம். இத்தொகுதியின் முதற் பிரதியாகிய 'அஃறிணை ஆட்டங்கள்’ ஐயும், தொகுதியினது தலைப்பு பிரதியாகிய இரண்டு கார்த்திகைப் பறவைகள் ஐயும் எடுத்துக்கொள்கிறேன்.
*அஃறிணை ஆட்டங்கள்’ என்னும் கவிதைப் பிரதி யில் இரண்டு பெருங் கூறுகள் உண்டு. ஒன்று அந்நியப் படுத்தப்பட்ட மக்களின் ஒட்டுறவு இல்லாத (அந்நியோன்யம் இல்லாத) உதிரி வாழ்க்கை ; மற்றது அதிகார வர்க்கத்தின் அடிவருடிகள் குல்லாப் போட்டு (பன்னீர் தெளித்து, பல்லிளித்து, கொடிபிடித்து, கோஷமிட்டு) நன்மைகளை ருசிக்கும் வாழ்க்கை. முரண்நிலைப்பட்ட இந்த இரண்டு கூறுகளையும் எதிர் எதிர் வைப்பதன்மூலம் அந்நியப்பட்ட மக்களின் வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வு துல்லியம் பெறுகிறது. மக்களின் அந்நியமாதலுக்கு அதிகார வர்க்கத்தின் போக்கே காரணம் என்பது புலனாகிறது. இந்த அமைப்பாக்கத்தை ஒரு வரைபடம் தெளிவாகக் காட்டும்.
- - அதிகார வர்க்கத்தை பன்னீர் தெளித்து பொட்டு வைத்து,
பல்லிளித்து வரவேற்று
பயன்பெறும் கூட்டம்
அந்நியமாதலுக்கு அரசியல் வாதிகளுக்கு கொடி
ஆளான மக்கள்
ΦΗ --
பிடித்து கோஷம் போட்டு
லாபம் பெறும் கூட்டம்
கறுப்பு காசுக் குவியலுக்குள்
நீதியைக் காணாமல்
புதைக்கும் கூட்டம்
அந்நியமாதலுக்கு ஆளான மக்கள் உறுத்தப்படுவதை அம்புக்குறிகள் காட்டுகின்றன.
இந்த அமைப்பாக்கத்துக்குள் கவிதைப் பிரதியின்
_ கலைமுகம் O ஜுலை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டைசி மூன்று வரிகளும் இடம்பெறவில்லை. அது கவிதை மைப்புக்கு புறம்பான ஒரு வாற்கூறு என்றே சொல்லத் ான்றுகிறது.
‘இரண்டு கார்த்திகைப் பறவைகள்’என்ற கவிதைப் ரதியில் இயல்பாகவே, வெளிப்படையாகவே இரண்டு மைப்புக்கள் இடம்பெறுகின்றன. ஒன்று 1978 கார்த்திகை ல் ஒரு பெரும் சூறையின்போது ஊருக்கு வந்த ஹெலிக் 5ாப்டர் சம்பந்தமான அமைப்பு; இதை 78 இன் அமைப்பு ன்போம். மற்றது 1985 இல் ஊர்ப்பகுதிக்கு வந்த ஹெலிக் 5ாப்டர் தொடர்பான அமைப்பு; இதனை 85 இன் அமைப்பு
ன்போம்.
ஹெலிக்கொப்டர்
காண்டுள்ளது.
18ஹெலி வருவதற்கான தளிவான காரணம்
சூறையின் இடிபாடு)
78ஹெலியின் வரவுக்கு க்களின் பிரதிபலிப்பு
78ஹெலி ஊருக்கு வரக் ரணமானவர்-எம்.பி.
78ஹெலி கொண்டு வந்த
பாருள் - பாண் பொதிகள்
78ஹெலி ஊருக்குத் தந்த கிழ்ச்சி
அமைப்பு ஐந்து கூறுகளைக்
மாமரத்தின் /கந்துகளை நொறுக்கி/ வாழ்வைத் தொலைத்த தெங்கை/ கோடரியை கொண்டுதுண்டாடிய - பின்னணி நிகழ்வு
கவலைக் கம்பாயம் விலக்கி உவகை செய்து
ஓடிவந்தது ஊர் என்னுடன்
குந்திய பறவைக் குள்ளிருந்து துள்ளிப் பாய்ந்தார் எங்கள் எம்.பி.
வதங்கிக் கிடந்த ஊரின் வயிற்றுக்கு
பாண் காட்டிற்று அப்பறவை.
துயில் உடல்கள் மறந்து ஊர் மகிழ்த்தி குந்தி எழும்பி - குந்தி எழும்பி பறந்திற்று அப்பறவை.
ற்ற அமைப்பாகிய 85 ஹெலிக்கொப்டர் அமைப்பு ரக்கப் பேசுகின்ற இரண்டு கூறுகளை மட்டும் தெரியப்
டுத்துகிறது.
85 ஹெலி கொணர்ந்தது ன்ன என்பது: து கொணர்ந்து ாண் அல்ல,
mbs - குண்டுகள்
85 ஹெலி அப்பாவி க்களுக்கு ஏற்படுத்தியது அழிவுகள்.
நெருப்பு முட்டையிட்டு/ என் இனிய ஊரை/ தீமூட்டிற்று இப்பறவை/
வலைவீசி/வாழ்க்கை குளிர்காயும்/ வாயில்லா பூச்சிகள் தலைதானா உனக்கு பயங்கரமாய் தெரிந்தது.
சேறெடுத்து வரப்பப்பும்/ கலப்பை மனிதரின்/ இரைப்பையில் அல்லவா/ நீ
டிசெம்பர் 2007 29

Page 32
நெருப்பு முட்டை இட்டாய்.
78 ஹெலிக்கொப்டர் அமைப்பையும், 85 ஹெலிக்கொப்டர் அமைப்பையும் எதிரெதிராக வைத்துப் பார்க்கும் போதே பிரதியின் உட்கிடையான irony என்னும் முரண்நகை வெளிப்படுகிறது; ஆனால் இந்த இரண்டு அமைப்புக்களையும் எதிர் எதிர் வைக்கும் போது, வேறு சில விஷயங்களும் எனக்குப் புலப்படுகின்றன.
78 அமைப்பு ஐந்து கூறுகளைக் கொண்டது; 85 அமைப்பு இரண்டு கூறுகளைக் கொண்டது. எதிரெதிரே வைத்து ஒப்பு நோக்கும் போது, சமாந்தரங்களை காணக் கூடியதாக இருக்கவேணும். உண்மையில் 85 அமைப்பின் இரண்டு கூறுகளுக்கும் 78அமைப்பில் சமாந்தரங்கள் உண்டு.78 இல் ஹெலி கொணர்ந்தது பாண்; 85இல் ஹெலிகொணர்ந்தது குண்டு. 78 ஹெலி ஊரை மகிழ்வித்தது; 85 ஹெலி ஊரை தீமூட்டியது. அதாவது 85 அமைப்பின் இரண்டு கூறுகளும் 78 அமைப்பின் 4ஆவது, 5ஆவது கூறுகளோடு சமாந்தரம் கொள்கின்றன. 78 அமைப்பின் 1ஆம், 2ஆம், 3ஆம் கூறுகளுக்கான சமாந்தரங்கள் 85 அமைப்பில் இடம்பெற வில்லை; ஏன் என்ற கேள்வி எழுகிறது. இவை பற்றிய ஒரு வரைபடத்தில் இந்த இடைவெளிகள் தெளிவாகத் தெரியும்.
78 அமைப்புக் கூறுகள் 85 அமைப்புக் கூறுகள்
1. ஹெலி வருவதற்கான காரணம் O
2. ஹெலியின் வரவுக்கு மக்களின்
பிரதிபலிப்பு
O
ஹெலி வரவுக்கு காரணகர்த்தா | 0
4. ஹெலி கொண்டுவந்த பொருள்
шпт65іт X ஹெலி கொணர்ந்தது குண்டு
5. ஹெலி ஊருக்குத்தந்த மகிழ்ச்சி X ஹெலி ஊருக்குத்தந்த அழி
85 அமைப்புக் கூறுகளில் ஏன் அந்த இடைவெளி காணப்படுகிறது என்பதுதான் கேள்வி. 85 ஹெலி ஏன் வந்தது? 85 ஹெலியை மக்கள் எப்படி எதிர்நோக்கினார்கள்? 85 ஹெலி வருவதற்கு யார் காரணம்? இந்த இடைவெளிகளில் பிரதி, மெளனமாய் உள்ளது. ஆனால் அந்த மெளனம் உரக்கப் பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். காட்டுருவில் புள்ளபடிகள் முரண்நகையையும் கீறுகள் இடைவெளியையும் வட்டங்கள் மெளனத்தையும் குறிக்கின்றன.
ஒரு பிரதியிலுள்ள மெளனங்களையும் இடைவெளி களையும் கண்டு பிடிப்பது, புதிய புதிய விமர்சனத்தின் வேலை; அமைப்பாக்கத்தின் மூலம் இது சாத்தியமாகிறது. இத் தொகுப்பிலுள்ள ‘இன்னும் மெளனமாய்’, ‘நிகழ்காலம்’, ‘இன்று இங்கு’, ‘சுயவிருட்சம்’ போன்ற பிரதிகளிலும் இடை வெளிகளும் மெளனங்களும் எனக்குத் தென்படுகின்றன. மெளனங்களும் இடைவெளிகளும் உரத்துப் பேசும், காட்டி யும் கொடுக்கும்.
V கட்டுடைத்தல் பற்றி இனி காண்போம். கட்டுடைத்தல் என்பது ஒரு பின்னமைப்பியல்
000 LCCMMHTTLSCS S

தத்துவக் கருத்தாக்கம். இரட்டை எதிர்மைகள் அல்லது இருமை முரண்கள் என்று சொல்லப்படுபவை மொழியின் முக்கிய அமைப்புக்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.
ஒளி/இருள், மேல்/கீழ், உயரம்/குட்டை, வெப்பம்/ குளிர் போன்ற இரட்டை எதிர்மை அமைப்புக்கள் மொழியில் உள்ளதை நாம் அறிவோம். இரட்டை எதிர்மைகளின் ஒன்றின் சார்பாகத் தான் நாம் மற்றதைப் புரிந்துகொள்ள முடியும்.
இந்த சோடி எதிர்மைகளில் மரபு ரீதியாக ஒன்றை முன்னும் மற்றதை பின்னுமாகச் சொல்கிறோம். ஒளி/இருள் என்கின்றோமே தவிர இருள்/ ஒளி என்று சொல்வதில்லை. ஒளிக்கு முதலிடம், இருளுக்கு இரண்டாம் இடம். அதேபோல உயரம்/ குட்டை என்று சொல்கின்றோமே தவிர குட்டை உயரம் என்று சொல்வதில்லை, உயரத்துக்குத்தான் முதலிடம். அதேபோல் ஆண்/ பெண் என்று சொல்வது மரபாய் இருக்கிறதே தவிர பெண்/ ஆண் என்று சொல்வதில்லை. ஆணுக்கே நமது ஆணாதிக்கச் சமுதாயத்தில் முதலிடம்.
இரட்டை எதிர்மைகளில் முன்னிலையில் உள்ளதை மையம் என்று சொல்கிறார்கள்; பின்னிலையில் உள்ளதை விளிம்பு என்று சொல்லுகிறார்கள். இந்த மையம்/ விளிம்பின் பின்னணியில் ஒரு கருத்தியல் அமைந்திருப்பதாகக் கூறுகின் றார்கள். ஒளியே பிரதானமானது, உயரமே விரும்பத்தக்கது, ஆணே பெண்ணிலும் மேம்பட்டவன் என்ற கருத்தியல்கள் குறிப்பிட்ட எதிர்மைகளின் அடியில் உள்ளன. இவை மரபு மரபாக கட்டமைக்கப்பட்டன என்று பின்னமைப்பியல் வாத அறிஞர் டெறிடா கருதினார். இந்த மைய - விளிம்பு உறவை அவிழ்த்து அதன் அடியிலுள்ள கருத்தியலைக் காட்டுவதே கட்டுடைத்தல் என்று பேசப்படுகிறது. இவ்வாறு மையம்/ விளிம்பு என்ற இரட்டை எதிர்மைகளை ஒரு பிரதியில் கண்டுபிடிப்பதும், அவற்றைக் கட்டுடைத்து அம்பலப்படுத்து வதும் புதிய புதிய விமர்சனத்தின் பணியாக உள்ளது.
புஸ்பானந்தனின் பல கவிதைப் பிரதிகளைக் கட்டு டைக்க முடியும். நான் உதாரணத்துக்கு இதிலுள்ள அஃறிணை ஆட்டங்கள் என்னும் முதல் கவிதைப் பிரதியை கட்டுடைத்துப் பார்க்கிறேன்.
புஸ்பானந்தனின் அஃறிணை ஆட்டங்கள் என்னும் இந்த முதற் கவிதைப் பிரதியில் பல இரட்டை எதிர்மைகளைக் காணலாம்.
கண்ணியம் X காசு நீதி X அநீதி உயர்திணை X அஃறிணை ராஜகம் X அராஜகம் அந்நியோன்னியம் X அந்நியம்
எனினும், புஸ்பானந்தனின் பிரதியில் இந்த எதிர்மை கள் இடம்மாறிக் கிடக்கின்றன.
கண்ணியம் காசுக்குள் மறைகிறது. அநீதி நெற்றியின் மங்களகரமான பொட்டு ஆகிறது. அராஜகம், சுகந்தமாகிறது. உயர்திணையை காணவில்லை; அஃறிணை ஆட்டம் போடு கிறது. எனினும் அந்நியம் அந்நியோன்னியத்தை முதன்மைப் படுத்துகிறது.
இந்த எதிர்மைகளில், கடைசியாக குறிப்பிடப் பட்டதை தவிர மற்றவைகளில், விளிம்பு நிலையில் உள்ளவை
லை-டிசெம்பர் 2007

Page 33
மையத்துக்கு மாறுகின்றன. மையத்தில் மரபாகப் பேணப் பட்டவைகள் சிதைக்கப்பட்டு உருவழிக்கப்பட்டு விளிம்பு நிலைக்கு தள்ளப்படுகின்றன. மையம் மாறிய ஒரு சமூகமாக நாம் ஆகிவிட்டதைச் சொல்லி பிரதி அங்கலாய்ப்பது போல் எனக்குத் தோன்றுகிறது.
ஆனால் போகிற போக்கில் அந்நியோன்யம் Xஅந்நியம் என்ற சோடி எதிர்மை மட்டும் சிதையாமல் இருப் பதைக் காண்கின்றேன். அது, பிரதி இன்னும் அந்நியோன்னி யத்தை பிரதானப்படுத்துவதாக இருக்கலாம் என எனக்குப் படுகிறது. மையங்கள் மாறி அந்நியப்பட்டுப்போன ஒரு மனித நிலையைத்தான் கவிதைப்பிரதி பறைசாற்றுகின்ற போதும் அந்நியோன்னியத்தைக் கைவிட பிரதி மறுக்கிறது. மாறிப் போன சமுதாயத்தில் இன்னமும் அன்பையும் அந்நியோன்னி யத்தையும் பாராட்டும் திரிசங்கு சொர்க்க நிலை கட்டுடைக்கப்படுவதை இங்கு காணலாம்.
VI கடைசியாக புஸ்பானந்தனின் பிரதி இன்பம் பற்றி பேசுவோம்.
பிரதி இன்பம் என்பது புதிய புதிய விமர்சனக் கருத்தாக்கங்களில் சேர்த்துக்கொள்ளப்படும் ஒன்றாக உள்ளது. பின்னமைப்பியல் தத்துவ அறிஞரான றோலன்ட் பாத்ஸ் எழுதியPleasure oftheText என்ற நூலுக்குப் பிறகு இன்றைய பின்நவீனத்துவ விமர்சனங்களில் இடம்பெறும் ஒன்றாக அது அமைந்துள்ளது. இவ்வாறு கூறப்படும் பிரதியின்பம் புஸ்பானந்தனின் கவிதைகளில் எப்படிப் பிரதிபலிக்கிறது என்பதை அறிய என்னைப் போலவே நீங்களும் ஆவலாய் இருப்பீர்கள்.
பிரதிகள் தரும் இன்பம் இரண்டு வகைப்பட்டதாக றோலன்ட் பாத்ஸ் கூறுகிறார். ஒன்று Pleasure என்றும், மற்றது BlisS என்றும் குறிக்கப்படுகின்றது. இந்த சொற்களுக்குரிய அகராதிப் பொருள் பயன்தரக்கூடியவை அல்ல இவைகள் கலைச் சொற்கள் ஆகிவிட்டன. இதன்படி Pleasure என்பது ஒருவர் பிரதியின் வாசிப்பில் தனநிலையை, தன் சுய உணர்வை இழக்காமல், ஒரு பிரதியை வசதியாக வாசிக்கும்போது பெறும் இன்பமாகும்; இதனை நான் 'ஆனந்தம்’ என்ற தமிழ் சொல்லால் குறிக்கலாம் - மற்றது, ஒருவர் பிரதியின் வாசிப்பில் தன்னை இழந்து தன்னை மறந்து திணறிய நிலையில், கிளர்ச்சியுற்று அப் பிரதியில் முக்குளிப்பதான இன்பம்; இதனை நாம் பேரானந்தம் என்னும் சொல்லால் குறிக்கலாம். ஒரே பிரதி இந்த இரண்டு வகை இன்பங்களையும் கொடுக்கும் என்பதில்லை. சில பிரதிகள் சிலருக்கு முதலாவது வகை இன்பத்தைக் கொடுக்கும்; வேறு சிலருக்கு வேறு பிரதிகள் இரண்டாவது வகை இன்பத்தைக் கொடுக்கக்கூடும். இந்த இரண்டு வகையான பிரதி இன்பங்களிலும் முதலாவது வகையான பிரதியின்பத்தை புதிய புதிய விமர்சனம் சிலாகிக் கின்றது; இராண்டாவது வகையான பிரதி இன்பத்தை அது மலினமாகக் கருதுகிறது. இது அமுதுக்கும் மதுவுக்கும் உள்ள வித்தியாசம், தெளிவுக்கும் போதைக்கும் உள்ள வித்தியாசம்.
இந்த இரண்டு, வகையான பிரதியின்பமுள்ள பிரதி களும் புஸ்பானந்தனின் இந்நத் தொகுதியில் உண்டு; அவற்றை இனங்காண்பது சிரமமானதல்ல. எனினும்
கலைமுகம் 0 ஜூலை

வ்வொன்றுக்கும் நியாயங்கள் கூறப்பட்டாக வேண்டும்; ந்த நியாயங்கள் நம்முடைய பொதுவான மரபான எதிர் ர்ப்புகளை சிதறடித்து விடவும் கூடும்.
முதலிலே இரண்டாவது வகையான,கிளர்ச்சியூட்டக் டிய, நம்மை மறக்கச் செய்யக்கூடிய, மிதக்கச் செய்யக் டிய, பேரானந்தக் கவிதைப் பிரதிகளைப் பார்க்கலாம். ந்த ஆனந்த அந்தி’ இவ்விதமான ஒன்று என நான் னம்காண்கின்றேன். மனோகர மாலை, ரம்மிய நிகழ்வு, ங்கை கட்டி மனசுக்குள் குந்தி எழுப்பும் கோலாட்டம் , னந்த அந்தி, சுந்தரச் சந்தி, சந்தியாகால சங்கீர்த்தனம், ருவிழா தேரின் நளின அசைவு போன்ற தொடர்கள் இந்த விதைப் பிரதியில் ‘இனி இல்லை’ என்ற கிளர்ச்சியை ட்டுபவை; ஒரு போதையைத் தருபவை. இவை மிகையான ணர்வுகளைக் கோரி நிற்பவை என்பதில் சந்தேகமில்லை. கையான தன்மை பொதுவான விமர்சனத்திலும் ஏற்றுக் காள்ளப்படுவதில்லை.
இதேபோல இதிலுள்ள “மூங்கில் ஆறு’ என்னும் விதைப் பிரதியும், ஒரு பேரானந்தப் பிரதியாகத்தான் னக்குப்படுகிறது. நெளியும், அவள் நளின மேனி/உரசி ளைய/ஆட்டக்காரி/இதய ஒரம்/நளினமாய் ஆடி./ ளுகிளுப்பாய் கீதமிட்டு ஓடுமவள்/பாஷையின்றி. ாவசித்து. மோனமாக உரசுகையில்/வசந்தகால கோகில ாய் கூவலிடும் இனிய சுகம்/கொங்கைகளில் முகமுரச. கமுரச./மனசுக்குள் நாதஸ்வரம் ஒலித்து/ சலங்கை ஸ்லாரியுடனே தடயுடல் திருவிழா./தகதக ஒளி விழா/ என ன்னுள் எதிரொலிக்கும் தொடர்களில் நான் என்னை மறந்து பாகிறேன். மூங்கில் ஆற்றையும் மறந்து போகிறேன். ார்த்தைகள், உருவகங்கள் தரும் சொகுசில் பாலியல் றல்களின் எல்லையில் கிளர்ச்சியுற்று மெய் மறக்கிறேன். னவே இது Brotic தனம் உள்ள பாலியல் தூண்டல் உள்ள பாதைமிக்க மலினமான இரண்டாவது வகையான ஒரு பரானந்தப் பிரதியே.
இவைபோல இன்னும் சில பேரானந்தப் பிரதிகளை, ரதிகளின் பகுதிகளை, இந்தத் தொகுப்பில் இனங் ாண்கின்றேன். பேரானந்தப் பிரதிகளை இனம் காணும் பாது முதலாவது வகையான ஆனந்தப் பிரதிகளை னங்காண்பது சற்றுச் சுலபமாகவிருக்கும். இத்தொகுதியில் ான் பல ஆனந்தப் பிரதிகளை, முதலாவது வகைப் பிரதி ளைக் காண்கின்றேன். குறிப்பிட்டு ஒரு சிலதை சொல்லக் டும். தொடரும் சோகம்,இரண்டு கார்த்திகைப் பறவைகள், ரு புழுக்க ராத்திரி, நீள நினைத்து, செக்பொயின்ட் அலரி தலிய பிரதிகள் குறிப்பிடக்கூடியன. இவைகளில் சக்பொயின்ட் அலரி சிறப்புள்ளதாக எனக்குப்பட்டது; பல ாரணங்களைச் சொல்லக்கூடும்.
பிரதியின் அலரியில் பாத்திரம் இந்தக் கவிதைக்கு ரு புதிர்தன்மையை அளிக்கிறது; அந்த புதிர்த்தன்மையைப் ரிய வேண்டும் என்ற விழிப்பை ஏற்படுத்துகிறது; தப்பையோ, மெய் மறப்பையோ அல்ல. இந்தப் புதிர் ன்ன? வெறும் ஒரு உருவகம் தானா? அல்ல. அந்த சக் பொயின்ட்டில் இறங்கி நிரையாய், மெளனமாய் வதானித்து மனம் நசிபடும் அத்தனை உள்ளங்களுக்கும் லரி குறியீடாக உள்ளது. சொல்லப்போனால் அது )க்கியமாக பிரதியின் குறியீடு. கைத்தடியால்/அலரியை
டிசெம்பர் 2007 31

Page 34
அறிந்து/துண்டு விரித்து, மத்தளம் தட்டி, கச்சேரி தொடங்கும் அந்தக் கண்தெரியாத அன்பனுக்கான அத்தனை பேரினதும் அனுதாபக் குறியீடு. சனநாயக ஒப்பந்தக்காரரின்/பழைய ரயர் சுவாலையில்/மகன் தொலைந்து/அவள் மனசு தொலைந்து/ அவளும் தொலைந்து, அந்த அலரியின் கீழ் துண்டையும் தலையையும் விரித்து, ‘என்ர பிள்ளை, என்ர ராசா” எனும் பசப்பில் மறதி ஏற்படுத்திய பரிதாபத்தின் குறியீடு. இந்த மெளன உணர்வுகளின் பிரதிநிதியாய், என்னைப் பொறுத்த வரையில் செக்பொயின்ட் அலரி சாகாவரம் பெறுகிறது. செக் பொயின்ட் அலரிக்கு வேறேதும் முக்கியத்துவம் உள்ளதோ என்று அறியவும் தூண்டப்படுகின்றோம். பிரதியில் வரும் ‘பசப்பி’ என்ற தொடர் இந்த நோக்கை சற்று இடறவும் வைக்கிறது. அவள் தன் இழப்புக்களையே மூலதனமாக்கு கிறாளோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. அந்தக் கண்தெரியாத அப்பாவி மத்தளக்காரன் மக்கள் அவதியுறும் சோதனை முகாமையே தொழில்கூடமாக்கிய முரணியலை யும் சிந்திக்கத் தூண்டுகிறது. இவ்வாறு வெறும் வார்த்தை
கலைத்தூது அழ பரதநாட்டிய U*Lů
4.
έ ή 测 திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும், கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரியும் இணைந்து பரதநாட்டியத் தில் முதல் தடவையாக ஆரம்பித்துள்ள இளநுண் கலைமாணி (B.F.A), முதுநுண்கலைமானி (M.F.A), பெருஞ்சான்றிதழ் கற்கை (Diploma in Dance) ஆகிய பட்டப்படிப்புக்களை இலங்கையில் ஆரம்பிப்பதற்கு அங்கீகாரம் பெற்றுள்ள யாழ். திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரியில் இக் கற்கை நெறிகளுக் கான ஆரம்ப வைபவம் 08 - 07- 2007 ஞாயிறு மு.ப. 10.00 மணியளவில் இடம்பெற்றது.
கலைத்தூது அழகியல் கல்லூரி இயங்கும் இல 128, டேவிட் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் கலைக்கோட்ட மண்டபத்தில் கலைத்தூது அழகியல் கல்லூரியின் அதிபர்திருமதி. பி. எவ். சின்னத்துரை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக நடனத்துறையில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகவும், யாழ் பல்கலைக்கழகத்தில் இடைவரவு விரிவுரையாள ராகவும் பணியாற்றும் கலாசீர்த்தி, கலைஞானச்சுடர் திருமதி சாந்தினி சிவநேசனும், சிறப்பு விருந்தினர்களாக
32 கலைமுகம் O ஜூ
 
 
 

மயக்கில் அல்லாது சூழலின் பல புதிய புதிர்களுக்கு இட்டுச் செல்கின்ற செக்பொயின்ட் அலரி என்னும் கவிதைப் பிரதி நிச்சயமாக முதலாம் வகைப் பிரதி இன்பம் தருகின்ற பிரதிகளுக்கு ஒரு முன்னுதாரணமே.
VIII
இவ்வாறு இந்த நூலாய்வில் பல கருகலான விஷயங்களை தொட்டுள்ளேன். பிரதி,வாசிப்பு, அமைப்பாக் கம், கட்டுடைத்தல், பிரதியின்பம் என்பது பற்றி கூறியுள் ளேன். அவைகளை புஸ்பானந்தனின் கவிதைப் பிரதிகளில் காணவும் முயற்சி செய்துள்ளேன். அவை தொடர்பான கோட்பாடுகளை இலை மறை காயாக தொட்டுக் காட்டியும் உள்ளேன். எமது வாசகத்தனம் உலக மாற்றங்களோடு இன்னும் கூடுதலாக முன்னேறும் போதுதான், இவைகளை தங்கு தடையின்றி பேசவும் கேட்கவும் கூடும். இந்த ஆய்வில் ஏதேனும் உங்களுக்கு புதிதாக அல்லது புதிராக இருந்தால்
அதற்கு நான் பொறுப்பாளியல்ல. கியல் கல்லூரியில்
O O O O
JIgpUIUq8b56iI e9pgLDUILD
SøM ರಾಶಿಫ್ಟಿ & : திருமறைக் கலாமன்ற இயக்குநர் பேராசிரியர் நீ. மரியசேவியர் அடிகள், ஒய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மு. திருநாவுக்கரசு, யாழ்ப்பாண பிரதேசச் செயலர் திரு. பா. செந்தில்நந்தனன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்
மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம் போன்ற வழமையான நிகழ்வுகளுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் வரவேற்பு நடனத்தை தொடர்ந்து வரவேற்புரையை திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குநர் யோ, யோண்சன் ராஜ்குமார் வழங்கினார். ஆசியுரையை திருமறைக் கலாமன்ற இயக்குநரும், சிறப்புரைகளை ஏனைய சிறப்பு விருந்தினர்களும் வழங்கினார்கள்.
தொடர்ந்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட திருமதி. சாந்தினி சிவநேசன் பிரதம விருந்தினர் உரையை வழங்கியதுடன், கற்கை நெறியை தொடர வுள்ள மாணவர்களுக்கான இறுவட்டுப் பிரதிகளையும், பாடத்திட்டக் குறிப்புக்களையும் வழங்கிச் சிறப்பித்தார்.
இந் நிகழ்வில் பாடசாலை அதிபர்கள் உட்பட யாழ். கல்விச் சமூகத்தைச் சேர்ந்த பிரமுகர்கள். மாணவர்கள், ஆர்வலர்கள் என பெருமளவிலானோர் கலந்து சிறப்பித்தார்கள்.
லை-டிசெம்பர் 2007

Page 35
ZooM வழங்கும்
அசாதாரணச் சூழ்நிலைக்குள் முடங்கிப் போய் செயற்பாடுகளுக்கான சாத்தியம் அருகிப்போயிருக்கின்ற விரிவுரையாளரான க. ரதீதரனின் இயக்கத்தில் ‘கால்’, ‘வெ வெளிவந்திருப்பது பிரதானமானதொரு நிகழ்வே. ஏனென ஒரளவுக்காவது பதிவு செய்து கொள்வது சாத்தியமாகிறது. காலச்சூழலைப் பதிவு செய்யவில்லையாயினும் அவரது தி!ை
‘வெட்டை திரைப்படத்துக்கான வெளியீட்டு நிச பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் சிறிய அளவில் இட நிகழ்வும் இடம்பெறவில்லை. அண்மையில், யாழ். பல்கள் 26.09.2007, 01.10.2007 ஆகிய திகதிகளில் யாழ். பல்கலைக்கழ அண்மையில் தயாரித்த கால்’ என்னும் குறும்படமும் பார்ை
@5ff{
asapagpasib o egre»
 
 

ருக்கும் யாழ்ப்பாணத்தில் தீவிர கலை இலக்கியச் தருணத்தில் யாழ். பல்கலைக்கழக நுண்கலைத்துறை பட்டை’ எனுமிரு திரைப்படங்கள் ZOOM வெளியீடாக ரில் இத்தகைய செயற்பாடுகளாலேயே காலச்சூழலை ரதீதரன் இத்திரைப்பிரதிகள் வாயிலாக தற்போதுள்ள ரவெளிப்பாட்டுக்கான இவ்வெத்தனிப்பு முக்கியமானது. 5ழ்வு இவ்வாண்டு ஆரம்பத்தில் 24.01.2007 இல் யாழ். டம்பெற்றது. அதன் பின்னர் அது தொடர்பான எந்தவொரு லைக்கழக வெறுவெளி அரங்கக் குழுவின் ஏற்பாட்டில் க கைலாசபதி கலையரங்கில் ‘வெட்டையுடன் ரதீதரன் வயாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டது.
O T5) (30 நிமிடங்கள்)
நேர அடிப்படையில் 'கால்’ ஒரு குறும்படமென்றை ரையறைக்குள் உள்ளடங்குகின்றது. கால்களை பிரதான மங்களாக (Images) பிரயோகித்து கருத்து வெளிப்பாட்டில் னைப்புக் கொள்வது இக் குறும்படத்தினை லுப்படுத்துகிறது எனலாம். வசன வெளிப்பாடுகளின்றி சைக்கோர்வையுடன் படிமங்களை நகர்த்தி கதை ால்வதால் சினிமாமொழி காலில் சாத்தியமாகியுள்ளதெனக் தலாம். காட்சிப்படுத்தலில் பிரதானமாகக் குறிப்பிட 1ண்டியது சிறுவர்களைத்தவிர்த்து வேறு எவரும் இடுப்புக்கு ல் காண்பிக்கப்படவில்லை என்பது தான். கதாபாத்திரங்கள் ல்களாக அமைந்து வெகு இயல்பாக உணர்வுகளை 1ளிப்படுத்துவதுடன் உரையாடுவதும் ல்களுக்குரியவர்களின் குணவியல்புகளை 1ளிப்படுத்துவதும் கவனிக்கத்தக்கன. திருமண ழ்வொன்றின் போது வெறுங்கால்களும், செருப்பணிந்த ல்களும் வருகின்றன. இக்கால்கள் பொருளாதார லையையும், நாகரீகப் பின்பற்றுதலையும் 1ளிப்படுத்துகின்றன. செருப்பணிந்த கால்கள் அவற்றைக் ற்றியும் கழற்றாமலும் திருமணமண்டபத்தினுள் ழைகின்றன. செருப்புகளைப் பாதுகாக்கும் வடிக்கைகளும் இடம் பெறுகின்றன. தனது பழைய ருப்பைக் கழற்றி விட்டு ஒருவர் மூன்று ாடிச்செருப்புகளைத் திருடிச் செல்வதும் நிகழ்கிறது. சிலர் D - pagiuli 2007 33

Page 36
செருப்புகளை ஒளித்து மகிழும் கைங்கரியங்களையும் செய்கின்றனர். சாதாரண வீடியோக் கமராவில் மிக நுணுக்கமான அணுகுமுறையில் படமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெட்டை (5 நிமிடங்கள்
நேர வரையறுப்பில் வெட்டையை ஒரு குறுந்திரைப்படமாகக் கருதமுடியாது. நகரமயமாக்கலின் தாக்கத்திற்குள்ளாகாத இயற்கை வனப்பு மிகுந்த காட்டுபுறக்கிராமமொன்றில் குடிசையிட்டு வாழ்ந்து வரும் பிரமச்சாரியான கந்தசாமி வேட்டையாடுதல், விறகு வெட்டுதல், தேன் எடுத்தல் போன்றவற்றை பிரதானமான தொழில்களாகக் கொண்டவன். மாட்டு வண்டி வாங்கும் அவனது கனவு வஞ்சகர் தலையீட்டால் எவ்வாறு சிதைகிறது என்பதையும் அச்சிதைவினால் அவதிக்குள்ளாகும் கந்தசாமியின் உணர்வெழுச்சியையும் ரதீதரன் இயல்பாகக் காட்சிப்படுத்துகிறார். இக்காட்சிப்படுத்துதலில் இசையின் ஒத்திசைவு சிறப்பாக எடுத்துக்காட்டப்பட வேண்டியதொன்று.
இவ்விரு படங்களும் ரதீதரனிடமிருந்து நல்ல சினிமாவை மேலும் எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையைத் தருகின்றன. எனவே ரதீதரன் இத்துடன் ஒய்ந்து விடக்கூடாதென்பதுடன் திரைப்படங்களில் அரங்காற்றுகைப் பண்புகளை பிரதிபலிப்பதைத் தவிர்த்துக்கொள்ளவும் வேண்டும்.
ஈழத்துப் பெண் கவிஞர்களின் இரு கவிதைத் தொகுப்புக்கள்
ஈழத்திலும், புலம்பெயர்ந்தும் வாழும் பெண் கவிஞர்கள் பலரின் கவிதைகளின் தொகுப்பாக இரண்டு நூல்கள் அண்மையில் புதிதாக வெளிவந்துள்ளன.
‘மை’, ‘பெயல் மணக்கும் பொழுது’ ஆகிய பெயர்களில் இத் தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன.
‘மை’ - றஞ்சி (சுவிஸ்), தேவா (ஜேர்மனி) ஆகியோரை தொகுப்பா
ளர்களாகக்கொண்டு ஊடறு வெளி
யீடாகவும், ‘பெயல் மணக்கும் பொழுது - அ. மங்கையின் தொகுப் பில் 'மாற்று வெளியீடாக தமிழகத் தில் இருந்தும் வெளிவந்துள்ளன.
இத் தொகுப்புக்களின் வரவு ஈழத்துப் பெண் கவிஞர்களின் இருப்பிலும், பங்களிப்பிலும் பலரது கவனத்தையும் ஈர்க்க துணைபுரியும் எனலாம். இவை தொடர்பான விமர்சனங்கள் பலவாறு நிகழ்கின்
மையும் குறிப்பிடத்தக்கது.
கலைமுகம் 0 ஜூை
 
 
 
 
 
 
 
 
 
 
 

'ஜீவநதி’ புதிய சஞ்சிகை
யாழ் குடாநாட்டிலிருந்து அச்சிடப்பட்டு வெளிவரும் மற்றுமொரு கலை, இலக்கியச் சஞ்சிகையாக 'ஜீவநதி கடந்த ஒகஸ்ட் மாதம் முதல் வெளிவரத் தொடங்கியுள்ளது. யாழ் - குடாநாட்டில் கடந்த 2006 ஒகஸ்ட் 11 இற்கு பின் ஏற்பட்ட நெருக்கடிச் சூழலின் பின் 'கலைமுகம் மட்டுமே கலை, இலக்கி யத்திற்காக யாழ்ப்பாண மண்ணிலி ருந்து தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருந்தது. அதன் வரிசையில் தற்போது 'ஜீவநதி’ புதிதாக இணைந் துள்ளது. இளைய தலை முறையி k னரை வெளியீட்டாளர்களாகக் 1.* கொண்டு வெளிவரும் 'ஜீவநதி’யின் முதலாவது இதழ் ஆடி - ஆவணி 2007 |
மூன்று இதழ்கள் வெளிவந்துள்ளது. 'ஜீவநதி’ இதழ் தொடர்ந்து வெளிவர கலைமுகம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது. தொடர்புகளுக்கு :
'கலை அகம்
சாமனந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய்.
ல - டிசெம்பர் 2007

Page 37
மெய் உறங்கும் நாட்களின் கோடை
எம்மிடை விரியும் வெளியில் ஊதுபத்தியின் வாசனை கமழ்வதாய் சொல்கிறாய் புறக்கணிக்கப்பட்ட ஒரு கவிதைக்கு இசை மதுவூற்றி கிண்ணங்களை ததும்ப வைக்கிறாய் ததும்பி வழிந்த மதுவில் என் கனவுகள் குமிழியிட்டுடைவதாய் நொருங்கிச் சிதறும் சொற்களால் பாடுகிறாய்
இன்றேன் எம் புன்னகையில் ஈரம் வடிந்திற்று காலாற நிழலற்ற பெருந்தெருவில் கானலில் ஈர்ப்புற்று அலையும் நாய்களின் இளைப்பின் அதிர்வு சாகடிக்கப்பட்ட கணங்களாய் நீள்கிறது.
இனி இரவுகள் தொங்கும் கயிற்றில் விழிப்பின் நிறங்களை உரித்தெடுத்தபடி நீ செல்லப் போகிறாய் எத்தனை ஆந்தைகள் அலறுகின்றன என்னுள் மழையற்ற நெடுங்காலமிது பாழாக்கப்பட்ட கட்டடங்களின் மேலிருந்து சிறகுலர்த்துகிறது கொண்டைக்குருவி ஒற்றையாய். இடிபாடுகளுக்குள் கேட்கும் குரல் வெளவால்களை துரத்திச் செல்கிறது அவற்றின் பறப்பெல்லைவரை.
நீ காலியான மதுக்குவளைகளை முகர்கிறாய் மீதமிருக்கும் போதையையும் அவற்றின் நெடியால் நிறைக்கிறாய்
பின்னும் விழிப்பின் நிறங்களை உரித்தெடுத்தபடி எனது காலத்தை நிர்வாணப்படுத்துகிறாய் எச்சிலாய் வழிகிறது மிஞ்சியுள்ள சொற்களும். நீ சொல்கிறாய்
எம்மிடை விரியும் வெளியில் ஊதுபத்தியின் வாசனை கமழ்வதாய்
வாழ்தலின் இழையறுத்து வலைபின்னுகிறது காலம் கத்திக்கும் வாளுக்குமான பேதந்தான் எமக்கு நீ செல்லப்போகிறாய்
கு
_ (1) O ജംബ

த்தாந்தன் கவிகுைகள்
ாரணமற்ற குரோதத்தின் பழியுணர்ச்சியுடனும் ான் பருகமறுத்த மதுவின் போதையுடனும்,
னக்கு வழிவிடப்போகும் கடலை விஷமாக்கிற்று உனது பார்வை.
'ன்கள் செத்து மிதக்கின்றன
டல் நாறி மணக்கிறது
இன்னும் நீ சொல்கிறாய்
ம்மிடை விரியும் வெளியில்
ஊதுபத்தியின் வாசனை கமழ்வதாய்.
27-05-2007 இரவு-1151
கைமறதியாய் எடுத்து வந்த முக்குக்கண்ணாடி
விடைபெறுதலின் அவசரத்தில் கைமறதியாய் எடுத்து வந்த -னது மூக்குக் கண்ணாடி சூனியமாய்க் கரைக்கிறது எனது பார்வையை,
இன்றைய இரவை -னது கண்களால் கடந்துகொண்டிருக்கிறேன் இப்போது நீ என்ன செய்தவாறிருப்பாய் ாய்மனைக் கட்டிலில் படுத்திருந்தபடியே 1ால் குழைந்து கால்களை நக்கும்
- டிசெம்பர் 2007 35

Page 38
நாய்க்குட்டியின் மென்முதுகு தடவ எத்தணித்து தோற்றபடியிருப்பாயா செல்லமகளின் குறும்புத்தனங்களை ரசிக்கமுடியா பொழுதுகளை நொந்து கொள்வாயா
தூக்கத்தின் இருட்டிற்கும் பொழுதின் இருளுக்கும் வித்தியாசம் புரியாமல் குழம்பிக்கிடக்கிறேன் குழந்தையின் கன்னங்களில் இடவேண்டிய முத்தங்கள் இடந்தவறுகின்றன இருட்டுடன் பேசிக்கொள்ள வேண்டியிருக்கிறது இரவுபற்றிய அற்புத வார்த்தைகள் சிதைகின்றன
ஒளி நிரம்பிய அறையிலிருந்து கொண்டு புத்தகத்தின் கரியபக்கங்களை வாசிக்கிறேன் சூரியன் புலரும் திசையறியாது
கைகளால் சுவர் தடவி ஒலிகளை மோந்து கால்கள் இடறுகிறேன் |
கைத்தடியில்லாத இந்த இரவுக்கு தெருக்களுமில்லை
f5657l 1,
இளவொளி சிதறும் காலைக்காக
காத்திருக்கிறேன் உனது பார்வையை உன்னிடந் தந்துவிட்டு எனது பகலை உன்னிடமிருந்து பெறுவதிற்கு. (ரமேஸிற்கு) 22-09-2007
காற்றில் அலைகிற மரணம்
யாரோ துப்பிய எச்சிலை வாங்கிக் கொண்டது என்முகம். காற்றின் திசைக்கு வளைந்து கைகள் சோர்ந்து தெருவில் நடக்கும்போதில் வலமாய் வருபவனின் காலடி ஒசை நெஞ்சை மிதிக்கிறது இடமாய் எதிர்ப்படுபவனின் பார்வை
பீதியை வளர்க்கிறது வலமும் இடமும் விலக்கி நடுத் தெருவில் நடக்கையில் பின்னும் முன்னுமாக இரைச்சலிடும் வாகனங்களுக்கிடையில் பரிதவிப்பின் உச்சத்தில் நசிபடும் உயிர்,
* கலைமுகம் O ஜு:
 
 

ததாந்தன் கவிதைகள்
மரணத்தின் அச்சமூட்டலில் இருந்து தப்பமுடியாத் தெருவில் தினமும் நடக்கவேண்டியிருக்கிறது பிறகு
எப்படிக் கேட்கமுடியும் சளிகாறி முகத்தில் துப்பியவனிடம் ஒரமாய்த் துப்பினால் என்னவென.
02-10-2007
குறிசொல்வோரின் கணிப்பில் தவறிய வாய்ப்பாட்டுச் சித்திரம்
நடுவீட்டின் புலனாகாச் சுவர்களில் பறந்தபடியிருக்கிறது பறவை வழிந்துகொண்டிருக்கிறது நதி ஈரலிப்பை உறிஞ்சிக் கணத்த கண்ணாடிச் சாளரங்களின் மீது பெய்த மழையில் முதிர்ந்த மரவேர்களின் கீறல்கள். வாழ்க்கை இன்னும் ஒடிக்கொண்டுதாணிருக்கிறது சரிவுகளிலும் திருப்பங்களிலும் எதிர்ப்படும் நபர்களிடம் வாழ்க்கை குறித்த நிறையக் கதைகளுள்ளன சிரித்தபடியிருப்பவர்களிடம் நிரம்ப அழுகைகளும் அழுதபடியிருப்பவர்களிடம் விழுந்து விழுந்து சிரிக்கவுமாக லை-டிசெம்பர் 2007

Page 39
கதைகள் இருக்கின்றன கதையற்ற ஒரு நதியின் ஆழத்துள் தொன்மங்களின் கல்லறைகளில் உறங்கும் கதைகளை வாசிக்கக்கூடிய மொழி யாரிடமுமில்லை புதிர்க்கயிற்றில் கட்டப்பட்டிருக்கிற மாடு கதைகளை மேய்கிறது கதைகளை அசைமீட்கிறது யாருடைய கதையை அல்லது எதுபற்றிய கதையை என்பதுதான் புதிர்.
08-10-2007
நீள் துயரின் அகாலப் பொறி
சொல்லவியலாத் துயரின் வார்த்தைகளை வாள் கொண்டு அரியத் தொடங்கினேன் பெருகிய குருதியின் சகதியள்ளி யன்னலூடே கொட்டி நிமிர்கையில் வானத்தில் எரிந்தணைந்த நட்சத்திரங்களிலிருந்து
யாழ்ப்பானத்தில் இருந்து வெளிவரும்
நான் - உளவியல் சஞ்சிகை
யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த 32 ஆண்டுகளாக உ தாங்கி வெளிவருகின்றது. தற்போது காலாண்டு இ 25.00 ஆகும்.
தொடர்புகளுக்கு ‘நான் டி மசனட் குருமடம், ெ
My Computer - ESGofaf aftebifai,
கணினி துறைசார்ந்த பல்வேறு விதமான கட்டுரைக தேவைக்கேற்ப கடந்த ஜுலை மாதம் முதல் இரு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகின்றது. இதழி G)g51TL lfiLq35(@55(g5 : My Computer, 72/28 Lu60o72555ri
ஆற்றுகை - அரங்கியல் சஞ்சிகை
நாடக அரங்கியல் துறைசார்ந்த கட்டுரைகள், நே விடயங்களையும் தாங்கி கடந்த 1994 ஆம் ஆ வெளிவருகிறது. அரங்க ஆர்வலர்கள், மாணவர்கள் ( “ஆற்றுகை” யின் விலை 60.00 ஆகும். தொடர்புகளுக்கு : “ஆற்றுகை’ நாடகப் பயிலகம், தி 238, பிரதான வீதி, யாழ்ப்பாண
கலைமுகம் O ஜூன

தகுந்தன் கவிகுைகள்
அரூபக் குரல்கள் புகைச் சுருள்களாகக் கிளம்பின.
வானம் அறையருகில் மூச்சுவிடுகிறது பேய்த்தருணம் ஒன்று சொற்சிக்கனத்தை நெஞ்சிலறைந்து சொன்னது கடவுளுடன் மதுவருந்திய மவுனம் அற்புதமானதென யன்னல் கம்பிகளில் வலைபின்னியிருக்கும் சிலந்தியின் நிழல்புறமாக குப்புற விழுந்துகிடந்து புலம்பிய போதும், நிச்சயமாக துயரின் வார்த்தைகளை முற்றிலுமாக மறந்திருந்தேன்
கடவுளுடன் அருந்திய மதுவின்
போதை தணிய தவறி விழுந்துவிட நேர்ந்தது அகாலப் பொறியில் மீண்டும் மவுனம் பிழந்து வெடித்துப்புகையும் சொல்லவியலாத் துயரின் வார்த்தைகள்,
02-10-2007
வெவ்வேறு துறைசார்ந்த சஞ்சிகைகள்
ளவியல் சார்ந்த பல்வேறு ஆக்கங்களையும்
தழாக வெளிவரும் இந்த இதழின் விலை
காழும்புத்துறை, யாழ்ப்பாணம்.
ள், புதிய தகவல்களைத் தாங்கி காலத்தின் மாத இதழாக My Computer தமிழில் ன் விலை 30.00 ஆகும்
லேன், திருநெல்வேலி - யாழ்ப்பாணம்.
ர்காணல்கள், தகவல்கள் என பல்வேறு ஆண்டின் இறுதியிலிருந்து “ஆற்றுகை’ ான பலருக்கும் பயன்தரக்கூடிய இதழான
ருமறைக் கலாமன்றம்.

Page 40
திருமறைக்கலாமன்றத்தின் வரலாற்றில் கடந்த ஆண்டு 14 - 01 - 2006 பொங்கல் தினத்தன்று திறந்து வைக்கப்பட்ட கலைக்கோட்டம் அதன் கலைப்பணியின் விரிவாக்கத்தில் கலைத்தூது அழகியல் கல்லூரியையும் உள்ளடக்கி ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ள நிலையில், மற்றுமொரு வரலாற்றுப் பதிவாக, இவ்வாண்டு 15 - 08 - 2007 இல், திருமறைக் கலாமன்றத்தினால் 286, பிரதான விதி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட கலைத்துாது கலையகம் எதிர்காலத்தில் பன்றத்தின் கலைப்பணியின் வளர்ச்சியில் அதனை புதிய பரிமானத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை உறுதிப்படக் கூறலாம்.
இதுவரை காலமும் நீண்ட பல்லாண்டுகளாக யாழ்ப்பாணத்தில் திருமறைக் கலாமன்றம் ஏராளமான கலை நிகழ்வுகளை நடத்தியிருந்த போதிலும், அவற்றில் பெரும்பாலானவை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் அலுவலகத்திற்கு பின்புறமாக அமைந்துள்ள திறந்தவெளி அரங்கில் பெரும்பாலும் மாலை 6.00 மணிக்கு பின்பாகவே நடத்தப்பட்டு வந்தன. திறந்த வெளி அரங்காக இருந்தமையால் பகல் வேளைகளில் இவ் அரங்கில் நிகழ்ச்சிகள் எதனையும் நடத்த முடியாத நிலை திருமறைக் கலாமன்றத்திற்கு இருந்தது. பகல் நிகழ்வுகளை நடத்த வேண்டி இருந்தால், வெளியில் பாடசாலை மற்றும் இதர மண்டபங்களை வாடகைக்குப் பெற்று அவற்றிலேயே நிகழ்ச்சிகளை நடத்த
“. திருமறைக் கலாமன்றத்தின் ஒவ்வொரு படைப்புகளும் நெறிப்படுத்தப்பட்டவை. அதில் பங்கேற்கும் கலைஞர்கள் தமது உயிருக்கு நிகராக கலைத்துவத்தை மதிப்பவர்கள். அதனால் அக்கலைப்படைப்புக்கள் உயிர்த் துடிப்புள்ளவை யாக -மானிடத்தின் நெஞ்சங்களை நெருடவைப்பவையாக அமைகின்றன.
யாழ்ப்பாண திருமறைக் கலாமன்றத்தின் கலைப்படைப்புக்களினூடே அவற்றுக்கான அரங்க நிர்மாண வேலைகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றமை அந்த அமைப்பினரின் அயராத முயற்சியின் உயர்வுச் சின்னமாகும்.”
விஜயன் (வலம்புரி 17 - 08 - 2007) (கலைத்தூது கலையக திறப்பு விழா கட்டுரையில்)
38 கலைமுகம் O ஜு
 

வேண்டிய நிலையே இருந்து வந்த்து. இதனால் இரவு வேளை களில் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது அவை மிகவும் பெறுமதி வாய்ந்த நிகழ்வுகளாக இருந்தாலும் யாழ் குடாநாட்டில்துாரப் பிரதேசங்களில் வாழும் மக்களால் அவற்றைப் பார்வையிட சாதாரண காலங்களில் கூட பல மைல்தாண்டி இரவு நேரத்தில் வந்து போவது என்பது சற்றுக் கடினமாகவே அமைவதுண்டு. இவ்வாறான நிலையில் நெருக்கடிகள் நிறைந்த இந்நாட்களில் இவற்றை நினைத்துப் பார்க்கவே முடியாத நிலையில் அவர்கள் இருந்தார்கள். தவிரவும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இரவு நேர தொடர் ஊரடங்குச் சட்டத்தால் முடக்கப்பட்டு விட்ட யாழ் குடாநாட்டு வாழ்வில்-திருமறைக்கலாமன்றத்தால் தனது திறந்த வெளி அரங்கில் இரவு வேளைகளில் கலை நிகழ்ச்சிகள் எதனையும் நடத்த முடியவில்லை. இவ்வாண்டில் மிகுந்த பிரயத்தனப்பட்டு மாலை வேளையில் ‘மலையில் வீழ்ந்த துளிகள்’ திருப்பாடுகளின் காட்சியை இவ் அரங்கில் நடத்தியிருந்தார்கள் என்பது வேறு விடயம்.
இவ்வாறான சூழலில் திருமறைக் கலாமன்றத்திற்கு சொந்தமான உள்ளக அரங்கையும் கொண்டமைந்த கலைத்தூது கலையகத்தின் உதயம் மிகுந்த பயன் தரும் ஆரம்பமாக அமைந்துள்ளது. இனிவரும் காலங்களில் பகல் வேளைகளில் கலை நிகழ்ச்சிகளை கலையகத்தில் திருமறைக் கலாமன்றம் நடத்தும் போது அது யாழ் குடாநாட்டின்தூரப்பிரதேசங்களில் வாழும் மக்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாக அமையும் எனலாம்.
திருமறைக் கலாமன்றம்
கலைத்தூது கலையகம்
iu]ú bílpm 15 - DB - 2007
O LDŠ TT யாழ். பிரதான வீதியில் நகரின் அழகுக்கு மேலும் மெருகூட்டும் வகையில் நவீன வடிவமைப்புடன் இரண்டு மாடிகளைக் கொண்டு எழுந்து நிற்கும் இக் கலையகம் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், வெளியீட்டு விழாக்கள், மாநாடுகள், விரிவுரைகள், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் திருமணம் உட்பட மங்கலகரமான நிகழ்வுகள் அனைத்திற்கும் பயன்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட இக் கலையகம் 15 - 082007 புதன்கிழமை மு. ப. 11.00 மணியளவில் யாழ். மறைமாவட்ட ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை அவர்களால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. முன்னதாக விருந்தினர்கள் அனைவரும் கலையகத்திற்கு அருகில் டேவிட் வீதியில் அமைந்துள்ள கலைக்கோட்ட முன்றலிலிருந்து மாலை அணிவிக்கப்பட்டு ஈழநல்லூர் பிச்சையப்பா குழுவினரின் நாதஸ்வர மங்கல இசையுடன் கலைத்தூது கலையகத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்கள். பிரதம விருந்தினராக வருகைதந்திருந்த யாழ் ஆயர், கெளரவ விருந்தினராக வருகை தந்திருந்த பூரீ இராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரமத்தைச் சேர்ந்த சுவாமி சித்ருபானந்தா, சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த யாழ் a pagious 2007

Page 41
பிரதேச செயலக கணக்காளர் திரு. வே.வேல்நிதி, திருமறைக் கலாமன்ற இயக்குநர் நீ. மரியசேவியர் அடிகள், கலையகத் திற்கான கட்டட நிர்மாணப் பணிகளை மேற்கொண்ட யாழ் ‘ரூலிங்ஸ்’ நிறுவனம் சார்பாக வருகை தந்திருந்த பிரதிநிதி ஆகியோரே இவ்வாறு அழைத்து வரப்பட்டார்கள். இவர்களுக்குப் பின்னால் திறப்பு விழா நிகழ்வில் பங்கேற்க வருகைதந்திருந்த பிரமுகர்கள் பலரும் ஊர்வலமாக வந்தார்கள். இந்நிகழ்வினைத் தொடர்ந்து கலையக முன்றலில் வைத்து தமிழர் பண்பாட்டுக்கமைவாக விருந்தினர்களுக்கு பொட்டிட்டு, பன்னீர் தெளித்து, ஆராத்தி எடுக்கப்பட்டதன் பின்னர் திருமறைக் கலாமன்ற இயக்குநர் நீ. மரியசேவியர் அடிகள் மன்றக் கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்கள் நாடாவை வெட்டி கலையகத்தைத் திறந்து வைத்ததுடன், நினைவுக் கல்லினையும் திரைநீக்கம் செய்து வைத்து கலையகத்தை மந்திரித்து ஆசீர்வதித்தார். தொடர்ந்து கலையக உள்ளக அரங்கில் மங்கல விளக்கேற்றலுடன் ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகின.
மங்கல விளக்குகளை விருந்தினர்கள் அனைவரும் ஏற்றி வைத்தார்கள். அத்துடன்திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குநர் யோ, யோண்சன் ராஜ்குமார், கலையக கட்டட அமைப்பிற்கு திருமறைக் கலாமன்றம் சார்பாக பொறுப்பாக இருந்து செயற்பட்ட திரு. சி. எம். நெல்சன், கலைத்தூது அழகியல் கல்லூரி அதிபர்திருமதி. பி. எவ். சின்னத்துரை, திருமதி வி. ஜே. கொன்ஸ்ரன்ரைன், நகர அபிவிருத்தி அதிகாரசபை பிரதிப் பணிப்பாளர் திரு. மைக்கல், இலங்கை வங்கியின் வடமாகாண உதவிப் பொது முகாமையாளர் திரு. பொ. அ. அருமைநாயகம், மக்கள் வங்கியைச் சேர்ந்த திரு. ரி.கே. ஆனந்தராசா ஆகியோரும் ஏற்றி வைத்தார்கள். தொடர்ந்து ‘அருட்சுடர் போற்றி.’ என்ற இறைவணக்கப் பாடலை இசைத் தென்றல் ம. யேசுதாசன் அவர்கள் பாடினார். இந் நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் உணர்வுபூர்வமாகப் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இறைவணக்கப் பாடலைத் தொடர்ந்து கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவிகள் வரவேற்பு நடனமொன்றை வழங்கினார்கள். தொடர்ந்து உரைகள் இடம்பெற்றன. இதன் போது மன்ற இயக்குநர் வரவேற்புரையை வழங்க, வாழ்த்துரைகளை யாழ் ஆயர் அவர்களும், சுவாமி சித்ரூபானந்தா அவர்களும் வழங்கினார்கள். சிறப்புரையை யாழ் பிரதேச செயலக கணக்காளர் திரு. வே.வேல்நிதி வழங்கினார். நன்றியுரை யோ, யோண்சன் ராஜ்குமாரால் வழங்கப்பட்டது. அனைவரது உரைகளிலும், திருமறைக் கலாமன்றத்தின் செயல் வீச்சு, பணிகள், கலையகத்தின் முக்கியத்துவம் பற்றிய கருத்துக்கள் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தன.
நிறைவு நிகழ்வாக 'கலைத்தாயை கரம் கூப்பித் தொழுவோம்.’ என்ற திருமறைக் கலாமன்றக் கீதம் பாடப்பட்டு நிகழ்வுகள் பி. ப. 100 மணியளவில் நிறைவு பெற்றன.
திறப்பு விழா நிகழ்வுகளின் போது இடம்பெற்ற மற்றுமொரு முக்கிய நிகழ்வினையும் குறிப்பிடுவது பொருத்தமானது. மூன்று வகையான கெளரவிப்புக்கள் இதன்போது இடம்பெற்றன. முதலாவதாக இக் கலையக கட்டடத்திற்காக வரைபடத்தை வரைந்து உதவியவர் சிங்களக் கலைஞரான திரு. நவீன் குணரத்தின ஆவார். அவர் இந்
கலைமுகம் O ஜூன

“திருமறைக் கலாமன்றம் கலை நிகழ்வுகளை ஆற்றுவதன் மூலம் யாழ்ப்பாண இளைஞர்களிடையே சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்குக் கலையை ஓர் கருவியாகப் பிரயோகித்தது. இதன் பணி யாழ் மாவட்டத்தில் மட்டுமல்லாது இலங்கையின் ஏனைய பாகங்களுக்கும், பிற நாடுகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டது. இப் பாரிய பணியை கலைத்தூது கலையகம் மூலம் மென்மேலும் செம்மையுட னும், செழுமையுடனும் மேற்கொள்ள வேண்டும்”
வாழ்த்துச் செய்தியில் யாழ். அரச அதிபர் திரு. க. கணேஷ்
நிகழ்வில் பங்கு கொள்ள முடியாமையால் அவருக்கு திருமறைக் கலாமன்றம் வழங்கிய பாராட்டுச் சுருளை அவர் சார்ப்பாக யாழ் ஆயரிடமிருந்து மன்ற இயக்குநர் பெற்றுக் கொண்டார். இரண்டாவதாக, கலையக கட்டட நிர்மாணப் பணிகளைப் பொறுபேற்று மேற்கொண்ட ரூலிங்ஸ்’ கட்டட ஒப்பந்த நிறுவனத்திற்கு வாழ்த்து மடல் திருமறைக் கலாமன்றத்தால் வழங்கப்பட்டது. இதனை யாழ் ஆயர் அவர்களிடமிருந்து “ரூலிங்ஸ்’ நிறுவனம் சார்ப்பாக வருகை தந்திருந்த பிரதிநிதி பெற்றுக் கொண்டார். மூன்றாவதாக, கலையக கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு மன்றம் வழங்கிய அன்பளிப்புக்களை மன்ற இயக்குநர் வழங்கிக் கெளரவித்தார்.
கலைத்தூது கலையக திறப்பு விழாநிகழ்வில் திருமறைக் கலாமன்ற அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், யாழ்ப்பாணத்தின் முக்கிய பிரமுகர்கள், சர்வமதப் பிரதிநிதிகள் உட்பட ஆயிரக் கணக்கானோர் பங்குபற்றினார்கள்.
இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்திரு. கே. கணேஷ் கலந்து கொள்ளவிருந்தார். எனினும் தவிர்க்க முடியாத காரணத்தால் நிகழ்வின் நிறைவி லேயே அரச அதிபர் கலந்து கொண்டார். அரச அதிபர் சார்பா கவே யாழ் பிரதேச செயலக பிரதிநிதி அழைக்கப்பட்டு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ao – lip@hafibuli 2007

Page 42
இவ்வருடத்தின் (2007) இலக்கியத்துக்கான நோபல் பரிசை டொறிஸ் லெஸ்ஸிங் பெற்றுக் கொண்டதையொட்டி இங்கிலாந்து ஊடகங்களில் எழுதிய பலரும் ”இது ஒரு அற்புதமான தெரிவு” (a fantastic choice) எனும் கருத்தையே முன்வைத் திருந்தார்கள். எனினும் ஐரோப்பாவிற்கு வெளியிலிருக்கிற இலக்கிய ஆர்வலர்கள் பலருக்கும் இது ஒரு ஏமாற்றமளிக்கிற தெரிவாகவே இருந்திருக்க முடியும். டொறிஸ் லெஸ்ஸிங் எனும் பெயர் ஐரோப்பாவிற்கு வெளியே அவ்வளவு பரிச்சயமான ஒன்றல்ல.
இம்முறை இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருந்தவர்களாய் மிகவும் பிரபலமான பிலிப்ரோத், சல்மான் ருஷ்டியில் ஆரம்பித்து தீவிரமாய் வாசிக்கிறவர்களுக்கு மாத்திரம் பரிச்சயமான மிலோராட் பாவிக் வரைக்கும் நிறையப் பேர் இருந்தார்கள். நோபலின் கடந்த வருடத் தெரிவான துருக்கியின் ஒரான் பாமுக் நிறைய சர்ச்சைகளில் மாட்டித் தவிக்கிற நபர். ஒரான் பாமுக்கின் தெரிவு மிகவும் கடுமையான அரசியல் விமர்சனங்களை நோபலுக்குப் பெற்றுத் தந்தது. மூன்றாவது மனிதன் இதழில் சாமுவல் ஹன்டிங்டனின்
15 Tg, is, Isis, Gigi, GLDng, 605 (Clash of civilization)ஐயும் பாமுக்கிற்கு நோபல் பரிசளிக்கப் பட்டதையும் முடிச்சுப் போட்டு ஒரு கட்டுரை ஜிப்ரி ஹாசனினால் எழுதப் பட்டிருந்தது. நோபல் எதிர்பார்ப்புப் பட்டியலில் இருந்த சல்மான் ருஷ்டி சில மாதங்கள் முன்னதாக இங்கிலாந்தின் கெளரவ விருதொன்றைப் பெறப்போய்
இலக்கியத்திற்கான (
நோபலின் கவனம் GLITsh
இஸ்லாமிய அடிப்பே இருந்து ஃபத்வா பற் பூட்டலைப் பரிசாகப் பெற்றுக்கொண்டிருந் ஒரியன்டலிஸ், பின்க விமர்சகர்கள் ருஷ்டி% விடயத்தில் கசக்கிப் கொண்டிருந்தார்கள். வழங்குகிற ஸ்வீடிஷ் சிக்கலை உணர்ந்து ெ இம்முறை ‘பிரச்சிை யக்காரர் ஒருவர் தேர் பட்டிருப்பதன் பின்ன அரசியல்கள் இவை. தற்பொழுது டொறிஸ் லெஸ்ஸிங் b.1919) 106 வருட ே வரலாற்றில் நோபல் பெற்றுக்கொள்கிற ப பெண். லெஸ்ஸிங்கி என்பதை வாசிக்கை பெயர் நான் கேள்வி ஒன்றாகத்தான் இருந் எதிர்பார்த்த எழுத்தா நோபல் இல்லாமல் சிறிது ஏமாற்றமும் இ அனுபவங்களின் ஆ என்பவற்றை மீறிச்ெ அழன்றெழுகிற கவி நமிபிக்கையின்றி அ கனவு வலிமையுடன் நாகரீகத்தை முக்கிய அதை நுண்மையாக epicest of the fema who with skepticis visionary power h divided civilization Scrutiny)6igit p51 G, அறிக்கை. சமீப கா தமிழ்ச்சூழலின் முக
40 - davaupab o ego.
 

35ITLIGio LIrfer - 2OO7
| 6hgťfu6ů, பறும் மற்றொரு உலகம்:
டைவாதிகளிடம் பிய மீள்நினைப்
தார். இடதுசாரி, ாலனித்துவ யை இது
பிழிந்து
நோபலை அக்கடமி காண்டிருந்தது. னகளற்ற இலக்கி ந்துகொள்ளப் Eருக்கிற
| 88 வயதாகிற | (Doris Lessing. நாபல்
விருதைப் தினோரவது ற்கு நோபல் பில் அவரது ப்பட்டிராத தது. நான் ளர்களுக்கு போய்விட்டதில் ருந்தது. “பெண் ண்மை பெண்மை சல்கிற மொழி, தையெழுச்சி, லைதல் மற்றும்
ஒரு பிளவுண்ட பொருளாக்கி ஆராய்ந்தவர்” (the e experience, n, fire and s subjected a
O ாபலின் பத்திரிகை }ங்களில் கிய விவாதப்
O 5 aoTabT
பொருளாகியிருக்கிற பெண்மொழி குறித்த விவாதங்களை மேலும் நுண்மையாக உணர்ந்துகொள்ள உதவுமேயென்று நோபலின் சிபாரிசு வாக்கியங்களை நம்பி லெஸ்ஸிங்கின் gig) LIT), b16) GUIT607(duintet) Children of Violence gait upg, Guit G15) B.Tartant Martha Questgg 6 IT5d3, ஆரம்பித்தேன்.
மார்தா க்வெஸ்ட் 333 பக்க நீளம் கொண்டது. கதை மிக மிக மிக மெதுவாய் நகர்ந்தது. மிகவும் பழைய தான கதைசொல்லல் முறை, ஜேன் ஒஸ்டினுடைய மிகவும் சலிப்பூட்டக் கூடிய புத்தகங்களைப் பரீட்சை நோக்கில் படித்துச் சலித்ததில் அப்படி யான எழுத்துநடை மீதே ஒருவித வெறுப்பு வந்து விட்டிருந்தது. மார்தா க்வெஸ்ட் எனும் முக்கிய பாத்திரத்தின் பதின்ம வயதுகளை விபரிக்க ஆரம் பித்து, கதாப்பத்திரங்களை வடிவ மைத்து அவற்றுக்கிடையிலான மோது கைகளை உருவாக்கி, சமூகம் பற்றிய சித்திரங்களை உருவாக்கி சிக்கலடைந்து செல்கிற கதைத் திட்டம் என்பது ஒன்றும் புதிதானதில்லை. 60களில் எழுதிய கேத்தரீன் ஆன் போர்ட்டர் எவ்வளவோ பரவாயில்லைப் போலிருந்தது. ஆங்கில நாவல்களில் மிக வெளிப்படையாக "fசொற்கள் (தூஷணங்கள்) இடம்பெறுவதுண்டு. லெஸ்ஸிங் அரதப்பழசான ‘make love" போன்ற சொற்களையே பயன்படுத்தியது வேறு அவர் ஒரு பழமைவாதியாக இருக்கக் கூடுமோ என்ற சந்தேகத்தைத் தந்தது. (பின்னர் தெரிந்தது அவர் ஒரு பழமைவாதி யல்லவென, சர்ச்சைக்குரியதும் பாலி யல் நாவலென்று கூறப்படுவதுமான
ad - pasiburî 2oo7

Page 43
டி.எச். லோரன்சின் ‘லேடி சற்றர்லிஸ் லவர்’ நாவலின் புதிய பதிப்புக்கு நீளமான முன்னுரையை உவப்புடன் எழுதியளித்திருக்கிறார்.) முதலிரண்டு usissilsafai Housewives Tales எனப்படுகிற வார்த்தையைக் கொண்டு லெஸ்ஸிங்கை ஒதுக்கிவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். எது எப்படியிருப்பினும் லெஸ்ஸிங் குறித்து எழுதப்பட்டவற்றைப் படித்தபின் அவரது பிரதிகளுக்குள் நுழைந்து பார்க்கலாம் எனத் தோன்றியது.
லெஸ்ஸிங் 1919 ஆம் ஆண்டு பேர்ஸியாவில் (தற்போது ஈரான்) பிறந்தவர். குடும்பத்தினர் லெஸ்ஸிங் கிற்கு ஐந்து வயதாகும் போது பிரிட்டிஷ் கொலனியாக இருந்த ரொடேசியாவுக்கு (தற்போது ஸிம்பாவே) புலம்பெயர்கிறார்கள். தானியம் பயிரிடுவது அவர்களது வாழ்வாதாரமாயிருக்கிறது. விவசாய முயற்சி லெஸ்ஸிங் குடும்பத்தினர்க்குக் கைகொடுக்க வில்லை. வீட்டில் பணத்துக்கான தட்டுப்பாடு இருந்துகொண்டேயிருந் தது. 13 வயதில் லெஸ்ஸிங் பாடசாலை யிலிருந்து விலக வேண்டி வந்தது. 15 வயதில் தாதிப்பணிப் பெண்ணாக வேலைக்குச் செல்ல ஆரம்பிக்கிறார் லெஸ்ஸிங்.
அவர் வேலை செய்கிற வீட் டில்தான் வாசிப்புத் தொடங்குகிறது. வேலை ஒய்வு நேரங்களில் எஜமானி புத்தகங்களை வாசிக்கும்படி தூண்டுகி றாள். இலக்கியம், அரசியல், சமூகவியல் என நிறைய விடயங்களில் பரந்து பட்டு வாசிக்க இயலுமாயிருக் கிறது லெஸ்ஸிங்கிற்கு. 1937 அளவில் லெஸ்ஸிங் பத்திரிகைகள், சஞ்சிகைக ளுக்கு எழுத ஆரம்பிக்கிறார். பின்னர் தொலைபேசி ஒப்பரேட்டராக வேலை நியமனம் பெற்று அமைதியாக எழுத முடிகிறது. முதல் திருமணம் இரண்டு குழந்தைகள் மற்றுமொரு விவாகரத்திற்குப் பின்பு லெஸ்ஸிங்கின் ஆர்வம் மார்க்சியச் சிந்தனைகளின் பக்கம் திரும்புகிறது.
Left Book Club.6Tg9 bg)| 5 சாரி அமைப்புடன் தன்னை இணைத் துக்கொண்டு இயங்க ஆரம்பிக்கிறார் லெஸ்ஸிங். 1940களில் அணுவாயுத எதிர்ப்பு மற்றும் தென்னாபிரிக்க
நிறவெறி அப்பாரி நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொ6 போராட்டங்களில் ரொடேசியாவில் லெஸ்ஸிங்கின் எ தடைசெய்யப்படு களை சம்பாதிக்க Left Book Clubg முடித்த இரண்டா? உகாண்டாவின் இ கலம்பகத்தில் கெ இப்படியாக லெவி தனிப்பட்ட வாழ்? துயரமான ஒன்றாக வந்திருக்கிறது.
லெஸ்ஸி I5 Tg) ig TGT. The Gr அதற்கடுத்து 62இல் golden note book புகழைச் சம்பாதித் ளின் அனுபவங்கள் இடதுசாரிச் சாய்வு லெஸ்ஸிங்கின் பி, பகுதி திடீரென மு விஞ்ஞானப் புனை ராக மாறுகிறார். ெ அபிமானம் கொண் மிகவும் அதிர்ச்சி த இருந்திருக்கிறது. கின் நூல்களுக்கு 6 பலரும் இந்த மாற் தொன்றாய்ப் பார் ளுக்கு லெஸ்ஸிங் பதிலளித்திருக்கிற didn’t realize was fiction is some of fiction of our tim புனைகதையென்ட சிறந்த சமுதாயப் அவர்கள் விளங்கி மறுக்கிறார்கள்.” புனைகதையாளர் பதிலை லெஸ்ஸி சொல்லியிருப்பது லெஸ்ஸி Notbook is TG) 1606. classicgg, Elaine போன்றவர்கள் வ லெஸ்ஸிங் விரும் பெண்ணிய அரசி செய்யப்பட்ட வா லெஸ்ஸிங் ஊக்கு:
கலைமுகம் O ஐ

தெய்ட் எதிர்ப்பு
தன்னை ண்டு பல்வேறு பங்கேற்கிறார். டொறிஸ் ழத்துக்கள் கின்றன, எதிர்ப்பு வேண்டிவருகிறது. }ல் சந்தித்து மணம் வது கணவர் 1979 டிஅமீன் ால்லப்படுகிறார். ஸ்ஸிங்கின் வு என்பது மிகவும் 5வே இருந்து
ங்கினுடைய முதல் ass is singingolb ல் வெளிவந்த The
உம் அவருக்கு துத் தந்தன. பெண்க ளை மையப்படுத்திய கள் கொண்ட ரதியாக்கக் காலப் டிவுக்கு வந்து அவர் எகதைகள் எழுதுபவ லஸ்ஸிங்கின் மீது ண்டவர்களுக்கு இது 5ருகிற ஒன்றாய் 80களில் லெஸ்ஸிங் விமர்சனமெழுதிய றத்தை உவப்பான க்கவில்லை. அவர்க கீழ்க்கண்டவாறு mğ: (“What they s that in science the best social
”) ‘விஞ்ஞானப் து நம் காலத்தின் புனைவென்பதையே க்கொள்ள
a AW
பின்நவீன 5ள் சொல்கிற ங்கும்
ஆச்சரியம்தான். sugair The Golden
feminist showalter சிக்கிறார்கள், இதை புவது இல்லை. பல் நீக்கம் சிப்புகளை பிப்பதை அவரது
நேர்காணல்களில் காணமுடிகிறது.
சர்வதேச அளவில் கொண்டா L'i_G) augnaði Margret Atwood எனக்குப் பிடித்த பெண்பிரதியாளர் 35 GMTTGST Erica Jong,Toni Morrison போன்றவர்கள் லெஸ்ஸிங் தம்மைப் பாதித்திருப்பதாய் எழுதியிருந்ததைக் கண்டபோதுதான் லெஸ்ஸிங்கைப் பொறுமையாக வாசிக்க வேண்டும் எனத் தோன்றியது. அதிலும் பெண்ணிய விமர்சகரானElaine Showalter லெஸ்ஸிங்கின் பிரதியாக்க |gbl ' ugi Gong “a long process of feminist self construction with self dissidential totality' (தனக்குள்ளாகவே வேறுபடும் முழு மையுடன் கூடிய பெண்ணிய சுயத்தைக் கட்டமைக்கும் நீண்ட செயன்முறை) என்பதாக வியாக்கியானப்படுத்தியிருந்தார் (interpreting). மிக மிக மிக மெதுவாக நகர்வதாய் எனக்குத் தோன்றிய கதைசொல்லின் நியாயங்களைப் Liig, 63, T657G) Martha Quest மீளவும் கையிலெடுத்தேன்.
Martha Quest பெருமளவுக்கு லெஸ்ஸிங்-இன் தனிப்பட்ட வாழ்க்கையுடன் ஒத்துப்போகிற தன்வரலாற்றுத் தன்மைகள் கொண்டது.
மார்தா என்பவளின் பதின்ம வயதுகளை நாவலின் முதல்பாகம் விபரிக்கிறது. பழமைவாதிகளானதாய், தகப்பன் மற்றும் சமூகம். அவர்களு டைய எதிர்பார்ப்புகளும் மார்தாவின் கனவுகளும் முரண்படுபவை. தலை முறை, தொடர்பாடல் இடைவெளிகள். இவற்றால் நெருக்கடியுறுகிற மனித உறவுகள். வலிநிறைந்த மோதுகைகளால் நிரம்புகிறது முதலாம் பாகம். MarthMன் தாய் கனவு காண்கிறாள்: “My daughter will be somebody, whereas yours will only be married. மார்தா Somebody யாய்இருக்க விரும்புகிறாளில்லை, அவள் மார்தாவாகவே இருந்துவிட நினைக்கிறாள். தாயின் கனவுகளை, சமூகத்தின் எதிர்பார்ப்புகளை மீற எத்தனிக்கிற மார்தா வாழுமிடம் ஒரு பிரிட்டிஷ் கொலனி. மீறலுக்கான உந்துதல் என்பது விமர்சன
உணர்வுறுதலுக்கு அவளை உட்படுத்து
ambao - paribuí† 2oo7 | 41

Page 44
கிறது. துலக்கமான பார்வை மார்தாவுக்கு சாத்தியமானதையொட்டி பிரிட்டிஸ் காலனியாதிக்கம் நிறவேறுபாடுகள், போலித்தனங்கள், மதம் எல்லாம் அவளால் நிராகரிக்கப்படுகின்றன. நாவலின் கதையோட்டத்தில் சுதேசிகளின் ஆதங்கங்கள், விடுதலைக்கும் சமத்துவத்துக்குமான விருப்பு என்பவையும் இணைக்கப்படுகின்றன.
மார்தா கேள்விகள் கேட்கி றாள். நிறைய வாசிக்கிறாள் மார்க்ஸ் எங்கெல்ஸ் உட்பட எல்லாம். பெற்றோரை நோக்கி மார்தா சொல்கி pricit: “Damned hypocrisy... all this nonsense.” மதத்தை தனக்குரியதாக அவள் பார்ப்பதில்லை, அவளைப் G)Lingigg916Og you and your christianity’. தகப்பனும் தாயும் மீள LßaTij Goleg TGib6pm jes6it ‘you younger generation, freethinkers... it's immoral. There are certain values. இப்படியாகவே தொடருகிற உரையா டல் ஒருகட்டத்தில் சலித்துப் போகும் வரை நீள்கிறது, என்ன செய்வது நிஜத்தில் இந்த மோதுகை இப்படியாகத்தான் - சலிப்பூட்டும்படியாக/அபத்தமாக - இருக்கமுடியும் என்பதற்கு எமது இலக்கியச் சூழலின் Centripetal X Centrifugal சண்டைகளே நல்ல உதாரணம் தான் இல்லையா?
மார்தா அர்த்தங்களைக் கேள் விக்குட்படுத்துகிறாள். தாய் நல்லவள் (good) என மார்தாவுக்குக் கூறப்படு L6 giggi LDTijg, it "what do you mean by good?' 6TGirSpitgit. si60g, usair சமாளிப்புகள் சிதறடிக்கப்பட்டு அர்த்தங்கள், அவை யாருடையவை? யாருக்கானவை? என்றெல்லாம் சிந்திக்கும் படியாக மார்தா விவாதிக்கிறாள். தந்தை இறுதியில் சொல்கிறார்: “இப்படியெல்லாம் தொடங்கினாயென்றால் எங்கு போய் முடிவாயோ தெரியாது”
தந்தையார் சொல்வதைப் போலவே மார்தா எதிர்பாராத மாற்றங் களுக்கூடாக நாவல் முழுதும் அலைகி றாள். மணம்புரிவதற்கென அவளால் தேர்ந்தெடுக்கப்பட்ட டக்ளஸ் என்ப வனுடன் அவளால் ஒருமிக்க முடிவ தில்லை. ஒருவித விலக்கம் இருப்பதை உணர்கிறாள். குழம்பித் தெளிந்து
குழம்பி, குழம்பிக் கெ மார்தாவின் இயல்பாகி பின்நவீனம் கொண்ட State of indecision - இழுபட்டுப்போகிறா? கிறது. மார்தா க்வெஸ் வாழ்க்கையை தொடர் செல்கிற மற்ற நான்கு என் கைக்குக் கிட்டவி Martha Que திரும்பப் படிக்கும்படி எனச் சிபாரிசு செய்ய ( எழுத்துநடையின் சலி தித்தன்மைக்குப் பழக் கொண்டால், புத்தகத் ஒளித்திருக்கிற கவித்து கூடும். சில சில இடங் லெஸ்ஸிங்கின் நடை கவித்துவமிக்கதாய் இ looked across the vel! Dumfries hills and re that unused country her imagination.”
பிரதியாக்க நு துவம் இன்னபிற இல களுக்காவன்றி ஷோவ பெண்ணிய அடையா மைத்தல் எனும் செய வாசிக்க விரும்புகிறவ லெஸ்ஸிங்கை வாசிக் உணர்வுறுதல், மீறுதல் Self ஐக் கட்டமைத்த விடயங்களில் மார்தா (+லெஸ்ஸிங்கின் ஏன உபயோகப்படக் கூடி வாழ்நிலமைகள் என் உரையாடல் இலக்கிய போதிய அளவுக்குக் இல்லை என்பது நோ யலைப் பார்த்தாலே கடந்த வருடம் பாமு, போது இஸ்லாமியக் தகர்க்கும் முயற்சிகளி அது கருதப்பட்டு சர். ஹரோல்ட் பின்ரருக் போது ஏகாதிபத்திய அமெரிக்க எதிர்ப்பு 6 விவாதங்கள். இது ே வி.எஸ்.நய்பால், ஹெ எனப் பலரும் அரசிய சிக்குண்டவர்கள். ெ தேர்வு செய்திருப்பே இப்படியான கொதி
000 S TCTMMCCTTS SC Lss

"ண்டிருப்பதே விடுகிறது. GSp Supreme இதற்குள் மார்தா 1. நாவல் முடி டின் ந்தும் விபரித்துச் நாவல்களும் ல்லை.
ஐ திரும்பத் யான புததகம pடியாது. அந்த ப்பூட்டும் அமை கப்படுத்திக்
நில் வம் உறைக்கக் களில்
1555. pgs: "She d to the
- fashioned
Io the Scale of
|ட்பங்கள், கவித் க்கிய சமாச்சாரங் ால்டர் கூறிய ளத்தைக் கட்ட ன்முறையை ர்கள் கலாம். விமர்சன லின் வேட்கையும் லும் போன்ற பல க்வெஸ்ட் னய பிரதிகள்) யது. பெண்கள், பன பற்றிய
உலகத்தில் வனம் பெறுவது பலின் பட்டி தெரிந்துவிடும். க் நோபல் பெற்ற கலாசாரத்தைத் ன் ஒருபகுதியாக சைகள் நடந்தன. ந வழங்கப்பட்ட ாதிர்ப்பு/
னும்
பாலவே ரசே சரமாகோ ல் சர்ச்சைகளில் பஸ்ஸிங்கைத் தன்பது
லையிலிருக்கும்
சிக்கல்களை அமைதிப்படுத்தும் உள்நோக்கமுடையது என்பதை முன்னரே சொல்லியிருந்தேன். அதை நிரூபிப்பது போலவே லெஸ்ஸிங்கின் தெரிவுக்கு கிடைத்த ‘பிரச்சினையற்ற எதிர்வினைகள் அமைந்திருக்கின்றன. ஒரு சில பெண்ணியர்கள் கண்டித்தார்கள். லெஸ்ஸிங்கின் பெயர் பரிச்சயமில்லாதவர்கள் குழம்பினார் கள். பலரும் பாராட்டியதை இங்கிலாந்து ஊடகங்கள் பெரிது படுத்தின என்பதற்கு மேலாக லெஸ்ஸிங்கின் பிரதிகளைக் கணக்கி லெடுத்து அவற்றை விசாரணை செய்வதற்கு யாருக்கும் இஷ்டமில் லைப் போலிருக்கிறது. (அதுதான் நோபலின் விருப்பாகவும் இருக்கலாம்) அடுத்தமுறை, அல்லது அதற்கடுத்த முறை மீளவும் ஒரு அரசியல் புனைகதையாளர் தேர்ந்தெடுக்கப்படுகையில் எழும் விவாதங்களில் லெஸ்ஸிங்கின் பெயர் மீளவும் மறக்கப்படும் என்பதுதான் கசப்பான உண்மை.
நோபல் பரிசு பெற்ற கேத்தரின் ஆன் போர்ட்டரின் பிரதிகள் பெண் அனுபவங்கள் என்கிற ரீதியில் கவனிக்கப்பட்டவையல்ல. அமெரிக்காவில் அப்பிரதிகள் தெற்கைச் (மெக்சிகோ) சேர்ந்த ஒருத்தரின் பிரதிகளாகவே அதிகம் கவனிக்கப்பட்டன. நீண்ட காலத்திற்குப் பிறகு விருது பெற்ற மற்றொரு பெண் எழுத்தாளர் ஒஸ்திரியாவின் எல்பி ரைடே ஜெலினெக். ஜெலினெக்கின் பிரதிகளில் இருந்த eroticism மிக மோசமாக வாசிக்கப்பட்டு அப்பிரதிக ளில் இருந்த concernS மற்றும் அரசியல்கள் அமைதிப்படுத்தப்பட் டன. (சாரு நிவேதிதா ஜெலினெக்கை தமிழில் அறிமுகப்படுத்திப் GuguGungjib Ji,The piano teacher ஐத் தனது ‘ஆண்களின் படித்துறை கதையை நியாயப்படுத்த ஜே.பி.சாணக்யா பயன்படுத்தியபோதும்சரி ஜெலினெக்கின் பிரதியில் இருந்த பெண் உடல் எனும் பிரதி பற்றிய அரசியல் அக்கறைகள் கவனிக்கப்படவில்லை என்பதை இணைத்து வாசிக்கவும்). இப்படியான விபத்துக்களுக்கு லெஸ்ஸிங்கின்
0 - டிசெம்பர் 2007

Page 45
பிரதியில் அவ்வளவாக இடமில்லை, பிரதியில் வைக்கப்பட்டுள்ள பெண்நிலைசார் பதிவுகளை OverShadow செய்கிற அம்சங்கள் குறைவு என்பது சாதகமான ஒன்று.
பெண் எழுத்து (Ecriture Feminine) 676itug| 5GTLDpp avant garde பண்புகள் கொண்டது. உளவியல், தத்துவ கலை ரீதியான வாசிப்புகளின் பெண் எழுத்து என்பது உயர்வான ஒன்றாகவே இருந்த போதிலும் பெண்களின் வாழ்நிலைமைகள் பற்றிய துலக்கமான தரவுகளை அவற்றிலிருந்து பெற்றுக்கொள்ளவியலாது. பெண் எழுத்து என்பது மிக உயர்வானதொரு எழுத்து வகையாக இருக்கிற போதும் அதுவே அனைத்திற்கும் போதுமான ஒன்று அல்ல. பெண்ணிய g)6076160JG5ugi (Feminist Ethnography) என்று வரும்போது தளமற்ற, வரலாறற்ற, முற்றிலும் மொழிவிளையாட்டான பிரதிகளை எவ்வளவுதூரம்தான் பயன்படுத்திக்கொள்ள முடியும்? சிலவற்றைக் கட்டமைப்பதற்கு
வரலாறுள்ள பிரதி லையா? எனவேத ளுக்கு தன்வரலாறு phies), புனைவுசா முக்கியமாகின்றன மேரி வூல்ஸ்ரோன் ஹார்ஸ்ரன் போன் புனைவுகள் மீள மீ விசாரிக்கப்படுவது இதன்காரணமாகத்
ஜேன் ஒள் மறுவாசிப்பிற்குட் லெஸ்ஸிங்கை வா நிறையப் புரிந்து ெ என்று தோன்றுகிற: நாயகிகள் அக்கால பெண்களின் விடுத கனவுகளால் ஆன்ெ அவர்களுடைய வ அடிக்கடி மேற்கோ பெண்ணிய சுலோ மாறிப்போய்விட்டி “Do not consider elegant female inte you, but as a ratio speaking the truth
/ー
சிலை செதுக்கும் சிற்பியும்
கடவுளும் கண்களைத் திறந்தால் கருணை பொழிவார் என்கிறார்கள்.
சிரிக்கும் கண்கள் எரிக்கும் கண்கள் கருணைக் கண்கள் கயமைக் கண்கள் கண்காணிக்கும் கண்கள் கண்டுகொள்ளும் கண்கள் எல்லாம் கண்கள்தான்
எல்லாக்கண்களும். எல்லார்மேலும். கண்கள் இல்லாது போனால்?
இறுதியில் திறப்பதும் கண்களைத்தான்.
நாங்கள் எப்போதும் ஒருவர் கண்களை மற்றவர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
வானில் மிதக்கும் வெண்ணிலாபோல்; இந்த உலகெங்கும் மிதந்து கொண்டிருக்கின்றன
இந்தக் கண்களுக்கு எப்போதும் கனவுகள் பலவுண்டு.
பார்வையில்தான் அப்படி என்ன வித்தியாசம்?
குடவித் தடவி தடுக்கி விழவேண்டியதுதான்.
asapaoypasub o egre

:ள் தேவைதானில் ன் பெண்ணியர்க 5elsh (autobiograா எழுத்துக்களும் ஜேன் ஒஸ்ரன், க்ராப்ட், ஜோரா நீல் வர்களது
T
b நான். ரனின் பிரதிகள் பட்ட விதங்களில் சிக்கும்போது நாம் காள்ள முடியும் து. ஒஸ்ரனின் த்திய ஆங்கிலப் லை பற்றிய பர்கள். ாக்கியங்கள் ள் காட்டப்படும் கங்களாயும் ருக்கின்றன. (எ.கா
16 IlOW dS dil inding to plague nal creature
from her heart' -
p.91 Pride and Prejudice. Jane Austen.)
மேலே அடைப்பிடப்பட்ட எலிஸபெத்தின் கூற்றைப் போல மார்தா நிறைய விடயங்கள் சொல்கிறாள். அவற்றை உரிய முறையில் கேட்க வேண்டுமெனில் பெண்ணிய இடையீடுகளை லெஸ்ஸிங்கின் பிரதிகளுக்குள் நிகழ்த்தியாகவேண்டும். அது நிகழ்ந்தால் தகுதியானவர்கள் பலர் இருக்கும் போது லெஸ்ஸிங் - இற்குப் பரிசு வழங்கிய நோபலின் அரசியல் உள்நோக்கங்களைத் தோற்கடிக்க முடியும்.
முதன்மைப் பயன்பெறு பிரதிகள்
• Martha Quest, Doris Lessing, HarperCollins 1993
• Vivien Jones, “Introduction to Jane Austen's Pride and prejudice' in 1996 Penguin edition of Pride and Prejudice.
• Biographical Details of Dorris Lessing - Nobel Literature Prize official website and Wikipedia.
பற்றி எழுதுதல்
N
போகும் இடங்களில் மிகக் கவனமாக மற்றவர் கண்களைப் பார்த்துக் கொள்ளவேண்டும். சந்திகளில் வீதிகளிலும்கூட
கண்களில் அக்கறை கொள்ளவேண்டும்.
கண்களை மட்டுமா?
ᎶᏡᏯᎯ5ᏯᏠ5ᎧᏈ)ᎶYᎢ ' , ᎶᏡᎠᏪFᎶᏡᏯᏠᏚᏯᏂᎶᏈᎠᎶYᎢ
சிந்தனையை வீட்டில் கழற்றி வைத்துவிடவேண்டும். தந்திரமும் தப்புதலும் மிக முக்கியம்.
இல்லாவிட்டால் போகிற போக்கில் கண்களை பிடுங்கி விட்டு வீதியில் விட்டு விடுவார்கள். வெள்ளைப் பிரம்புகூடத் தரமாட்டார்கள். யார் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? இலாப நட்டத்தை யார் பார்க்கிறார்கள். அவரவர்.
அவரவர் பாடு.
சும்மா போ கண்களாவது பிரம்பாவது.
துவாரகன் 26082007, 1033
ノ ல. டிசெம்பர் 2007 43

Page 46
நேர்காணல்
통
/ 1941 Bf
கடற்கரைக்கிரா காலப்பகுதியில் *ஆனந்தவிகடன் எனும் புனை பெu தொடக் கல்வியை சுன்ன பேராதனைப் பல்
இவரது வளர்ந்தவிதம் தூண்டினவென்ப (இப்பொழுது பிரI ஏற்பட்டு அவை செல்வாக்குச் செ ஈழத்தில் புனைகதைகள் கொள்ளப்பட 6ே மூலம் தனது ஒலி குந்தவையின் ப வவுனியா மாவட்ட தொடர்ந்து சிலா பணியாற்றிய கு ஓய்வுத்திட்டத்தின்
இவர், இடங்களில் வ குறிப்பிடத்தக்கை எழுத்தாளர் சுதா, பற்றிய கதைப்ட குந்தவைக்கு உ மூலமாக ஏற்பட்ட பரிச்சயங்களை அற்புதமான கா காலத்தில் தா இருக்கிறது’ என் work” ST6öTp சமகாலத்தில் விெ தமிழகத்துச் சிற் கொண்டு வெ சிற்றிதழ்களான குந்தவையின் க
2002 இவரது கதைத் கலைழு
பகிர்ந்து கொண்
கலைமுகம் O ஜு
 

லப்பகுதியில் தொண்டைமானாறு எனும் வட இலங்கிை த்தில் பிறந்த இராசரத்தினம் சடாட்சர தேவி. 1963 ‘சிறுமை கண்டு பொங்குவாய்’ எனும் கதையை வாரஇதழில் முத்திரைக்கதையாக எழுதி “குந்தவை ரில் அறிமுகமானார். கக் கல்வியை ஊர்ப்பாடசாலையிலும் இடைநிலைக் ாகம் இராமநாதன் கல்லூரியிலும், உயர்கல்வியினை கலைக் கழகத்திலும் கற்று கலைமாணிப் பட்டம் பெற்றார். வீட்டிலிருந்த நாளேடுகள் மற்றும் வாரஏடுகளின் சூழல், ஆகியன வாசிப்பு ஆர்வத்தை வளர்த்து, எழுதத் துடன் பல்கலைக்கழகச் சூழலில் அப்பொழுது அங்கிருந்த |லமான) மாணவ எழுத்தாளர்களின் பழக்கமும் பரிச்சயமும் தந்த வித்தியாசமான அனுபவங்களும் இவரது எழுத்தில் லுத்தியுள்ளன எனலாம்.
பெண்பிரதிகள் என்ற வகைப்பாட்டிற்குள் குந்தவையின் தனித்துவம் வாய்ந்தவை. முக்கியமாகக் கவனத்தில் பண்டியவை. கதை நிகழும் வெளிக்குள் அந்நியமாவதின் 1வொரு அவதானிப்பையும் நுணுக்கமாகப் பதிவு செய்வதே டைப்பாக்க இயல்பாக எஞ்சுகிறது. 1976 காலப்பகுதியில் -ச் செயலகத்தில் திட்டமிடல் பயிற்சியாளராகவும் அதனைத் Iம், புத்தளம் (முந்தல்) ஆகிய இடங்களில் ஆசிரியராகவும் நந்தவை 1990 களில் நடைமுறைக்கு வந்த விருப்ப ா கீழ் ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஆசிரியப்பணியின் நிமித்தம் சிலாபம், புத்தளம் போன்ற சிக்க நேர்ந்த காலங்கள் தனது எழுத்துலக வாழ்வில் வ என நினைவு கூர்கிறார். புத்தளத்தில் வாழ்ந்த காலத்தில் ராஜூடன் ஏற்பட்ட பழக்கத்தினால் அவரோடான இலக்கியம் கள், அவரிடமிருந்து பெற்ற புத்தகங்களென எல்லாமே ற்சாகத்தைத் தரக் கூடியவையாகவிருந்தன. மேலும் சுதாராஜ் பத்மநாப ஐயரது அறிமுகம் இவருக்கு புதுப்புது இலக்கியப் ஏற்படுத்தியது. அக்காலத்தை தனது இலக்கிய வாழ்வில் லமெனக் குந்தவை குறிப்பிடுகின்றார். ஏனெனில் அந்தக் ன் குந்தவை நீண்டகாலத்தின் பின் எழுதிய ‘யோகம் 1ற கதை தமிழகத்து சிற்றிதழான கணையாழியிலும், Field 5தை ஈழத்துச் சிற்றிதழான ‘அலையிலும் ஏறத்தாழ 1ளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பின்னைய காலங்களில் றிதழ்களான கனவு (சுப்ர பாரதிமணியனை ஆசிரியராகக் ளிவருவது), கணையாழி என்பவற்றிலும் ஈழத்துச் சரிநிகர், மூன்றாவது மனிதன் ஆகிய சஞ்சிகைகளிலும் தைகள் வெளிவந்தன. ாலப்பகுதியில் எஸ்.பொவின் மித்ர பதிப்பக வெளியீடாக தொகுதியான ‘யோகம் இருக்கிறது வெளிவந்துள்ளது. கத்துக்காக குந்தவையை நேர்கண்ட போது அவர் எம்முடன் - கருத்துக்களை இந்த இதழில் பதிவு செய்துள்ளோம். ---சந்திப்பு : இராகவன் - A
உங்களது வளரிளம் பருவம் குறித்து..?
என் வளர்பருவம் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.
ஓரளவு வசதியுள்ள குடும்பத்தில் (அம்மாவின் சொற்களில்
தப்பி ஒட்டி) கடைசியாகப் பிறந்த ஒரே பெண்.
வீட்டில் அதிகாரம் செலுத்தினாலும், நான் வெளியில்
ல-டிசெம்பர் 2007

Page 47
பள்ளிக்கூடத்தில் சங்கோஜியாக, விடைகள் தெரிந்தாலும் சொல்ல வாய் எழாதவளாக, வெருட்டினால் பயந்து விடுபவளாக இருந்தேன். பள்ளித்தோழியருடன் விளையாடி யதாக நினைவு இல்லை.
ஆனால் அதற்கு ஈடு செய்வது போல, வீடும் என் அண்ணன்மாரும் இருந்தனர். வீட்டு வளவிற்குள்ளேயே நானும் என் இளைய அண்ணாவும் அண்ணன் - தங்கையாக கண்டடைந்த பல அதிசயங்களில் ஒன்று வாசிப்பு.
வீட்டிற்கு ‘கல்கி வந்து கொண்டிருந்தது. என் நினைவு தெரிந்த நாள் முதலாய். என் தகப்பனார் ஒரு முறை இந்தியாவிற்குப் போன பொழுது ‘சந்தா கட்டி விட்டு வந்தமையால் நான் சிறு வயதிலிருந்தே வாசிக்கத் தொடங்கி யிருப்பேன். விளங்கிறதோ, விளங்கவில்லையோ ஆனாலும் விளங்கி வாசித்த முதல் தொடர் ‘பொன்னியின் செல்வனாக' இருக்கலாம். இடையிடையே “கண்ணன்’, ‘அம்புலிமாமா என்றும் வாங்கினோம்.
வளர வளர 'ஆனந்தவிகடன்’, ‘குமுதம்’, ‘கலை மகள்’ என்றும் எங்களூர் ஏஜெண்டிடமிருந்தது வாங்கினோம். தினசரிகளும் வந்து கொண்டிருந்தன. இரு தமிழ் இரு ஆங்கிலப் பத்திரிகைகள் (இதில் இரண்டு என் மூத்த அண்ணா வாங்கிப் போடுவது) இலக்கிய ஆர்வத்தை விட உலக நாட்டு நடப்புகளில் ஆர்வம் ஏற்படுத்த இவை உதவின.
பதினொராம் வயதில் சுன்னாகம் இராமநாதன் கல்லூரி விடுதியில் எனக்கு நான்கைந்து மூத்த உறவினரின் கவனிப்பின் கீழ் சேர்க்கப்பட்டேன். அந்தக் காலத்தில் பெண் பிள்ளைகள் சைவ ஆசாரங்களுடன் படிக்க அந்தக் கல்லூரியே ஏற்ற இடமாக பல பெற்றோரல் கருதப்பட்டது. அந்த உறவினர், வகுப்பு நேரம் போக என்னை தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டதால் நானும் அவரை ஒத்த பெண்களோடு தான் பழக நேரிட்டது. எனக்கு அது வேறொரு உலகமாகத் தெரிந்தது.
ஒரு கதை சொல்லியாக உங்களை நீங்கள் உணர்ந்து கொண்டதெப்போது?
எப்பொழுது கதை சொல்ல வேண்டுமென்று தோன்றியது என்பதைத் திட்டவட்டமாகக் கூறமுடியாது. அம்மாவிற்கு வில்லிபுத்தூராரின் ‘பாரதச் சுருக்கம் நல்ல பாடம், படுத்திருந்துகொண்டு இரவில், எங்களுக்குச் சொல்லுவார். அதில், குந்திதேவி கர்ணனிடம் தூது போகும் கட்டம் எனக்குப் பிடிக்கும். அதை அவ்வளவு உருக்கமாக அம்மா சொல்லுவார். அதைக் கேட்டு எனக்கும் கதை சொல்லும் ஆசை முதலில் முகிழ்ந்திருக்கலாம்.
சஞ்சிகைகளையும், பத்திரிகைகளையும் படிக்கை யில் ‘நானும் எழுதினால் என்ன என்று தோன்றியிருக்கலாம். ‘வீரகேசரி’ சிறுவர் மலரில் ஒரு குட்டி நீதிக் கதை நான் எழுதியது வெளிவந்தது. அதுதான் என் முதல் ஆக்கமாயிருக் கலாம். தொடர்ந்து பத்திரிகை சிறுவர் மலருக்கு அவ்வப் பொழுது எழுதியுள்ளேன். தினகரனின் உருவகக் கதைப் போட்டிக்கு நான் அனுப்பியது போட்டிக் கதைகள் பிரசுரித்து முடிந்த பின் தனியாக வெளிவந்தது. அந்தக் காலத்தில் தினசரி தினகரனின் இரண்டாம் பக்கத்தில் கடைசி இரண்டு. கொலம்’கள் நீள, இளங்கீரனின் நீதியே நீ கேள்’ போன்ற
தொடர் கதைகள் பிரசுரமாகி வந்தது. யாழ்ப்பாண மண்
633 g:: ::
 

வாசனை, யாழ்ப்பாணச் சூழல், யாழ்ப்பாணப் பேச்சு தமிழ் இவற்றைப் படிக்கையில், இதுவரை கல்கியை ஒத்த சஞ்சிகை களிலேயே மூழ்கி இருந்த எனக்கு ஒரு வித சந்தோஷம் ஏற்பட்டது.
'கல்கி'யில் தொடராக வந்த தி. ஜானகிராமனின் 'அன்பே ஆரமுதே', கு. அழகிரிசாமியின் 'தீராத விளை யாட்டு’ ஆகியனவும் வித்தியாசமானவைகளாய் எனக்கு ஒரு வித சந்தோஷத்தை தந்தன. தொடர்ந்து பழைய கல்கி, விகடன் தீபாவளி மலர்களை எல்லாம் புரட்டி அவற்றில் வந்திருந்த தி.ஜா'வின் கதைகளை மறு வாசிப்பு செய்தது நினைவிலுண்டு.
இவை எல்லாம் என்னுள் கதை சொல்லும் ஆர்வத் தைத் தூண்டியிருக்கலாம். முதலில் எழுதியனுப்பிய சில கதைகள் திரும்பி வந்திருக்கவும் கூடும். யாழ். இளம் எழுத் தாளர் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் என் கதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது. முதல் பரிசு செ. யோகநாதனுக்கும், இன்னொரு ஆறுதல் பரிசு செம்பியன் செல்வனுக்கும் கிடைத்ததாய் ஞாபகம்.
ஒன்று சொல்ல வேண்டும். கேட்டால், பலரும் ‘புதுமைப்பித்தனைப் படித்தேன்’, ‘மெளனியைப் படித் தேன்’ என்பார்கள். உண்மையைய்ச் சொன்னால் எனக்குப் புதுமைப்பித்தனை பற்றி உயர்தர கல்விக்கு பயிலும் பொழுது பேராசிரியர் செல்வநாயகம் எழுதிய, எங்களுக்கு பாடத் திட்டத்தில் அமைந்த ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்ற புத்தகத்தைப் படிக்கும் வரை தெரியாது. பல்கலைக்கழகத்தில் வந்த பின் தான் அவரது கதைத் தொகுப்புகளைப் படித்தேன்.
ஆனந்தவிகடனில் வெளிவந்த உங்களது முத்திரைக்கதை பற்றிக்கூறுங்கள்?
ஏதோ கதைக்கான கரு கிடைத்தது. எழுதினேன். வேறு ஒரு வித நோக்கமும் அப்பொழுதில்லை. அதோடு அந்தக் கால விகடன் முத்திரைக் கதைகள் கொஞ்சம் இலட்சியவாதக் கதைகளுக்கே முன்னுரிமை கொடுப்பது போல்ப் பட்டது. (கடைசிக் கால முத்திரைக் கதைகள் தரமாயிருந்தன) அது நடுக்கட்டம். ஆகவே முத்திரையை இலக்கு வைத்தே இக் கதையை எழுதி அனுப்பினேன். ஆனாலும் முத்திரை அப்படியே வந்து மடியில் விழுமென எதிர்பார்க்கவில்லை.
இந்த முத்திரைக்கதையை வாசித்துவிட்டு நீங்கள் எப்படி பல்கலைக்கழகத்திலிருந்து பட்டதாரியாக வெளியேறப் போகிறீர்கள் எனத்தான் நினைத்ததாக செம்பியன் செல்வன் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். இக்கதை பல்கலைக்கழகச் சூழலில் எத்தகைய தாக்கத்தை விளைவித்தது?
அக் கதையின் தாக்கம் பற்றி எனக்கு முன் பல்கலைக் கழகத்திற்கு போனவர்களுக்குத்தான் அதிகம் தெரிந்திருக்கும். அந்தக் காலத்தில் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் இருவரிடையே முறுகல் நிலை ஏட்டிக்குப் போட்டியாக இருந்தன. இருவரும் சார்பாக வெவ்வேறாய் இரு மாணவர் அணிகளுமிருந்தன. இந் நிலையில் அதிலொரு பேராசிரியரைப் பற்றிக் கதை எழுதியதாக் கருதப்பட்ட நான் பல்கலைக்குள் புகுந்தேன். என்னை இரு அணிகளும் தேடி இருக்கின்றன. ஒரு அணி
::a - pariusi 2007

Page 48
அப்படியே தம் பக்கம் சேர்த்து மறைத்து வைக்க, மற்ற அணி என்னை'ஒஹோ' என்று தூக்கிப் பிடிப்பதன் மூலம் அப் பேராசிரியருக்கு சங்கடத்தை உண்டாக்க, நான் முதலில் முதல் அணிக்கே அறிமுகமானேன். என்னை தம் பக்கம் சேர்க்க முடியாதெனக் கண்டதும் அதன் தலைவரெனக் கருதப்பட்ட வர், மறைந்திருக்கச் சொன்னார்.‘இன்னார் பரீட்சையில் fail ஆக்கிப் போடுவார்’,இதன் அர்த்தம் என்னை மாற்று அணியினருக்குத் தெரியக் கூடாதென்பதே. அவர்கள் அப்பேராசிரியருக்கெதிராய் என்னை பயன்படுத்துவார்கள், நானும் அப்படியே இருந்தேன். ஆனாலும் எப்படியோ மாற்று அணியினருக்குத் தெரிந்துவிட்டது. அவர்கள் என்னோடு கதைக்க வந்தார்கள்.இதையும் அந்த முதல் அணி தலைவ ருக்குச் சொன்னேன். ஆலோசனை கேட்கும் நோக்குடன். ஆனாலவர்களோ, எங்கே தாம் மறைந்து நிற்கச் சொன்னதை மற்ற அணியிடம் சொல்லி விட்டாளோ எனப் பயந்தனர், யாரோ மாதிரி நடந்தனர். எனக்கும் சற்று சீண்டிப் பார்க்கத் தோன்றியது. விளைவு, சில ‘சுயங்களின் வெளிப்பாடு இவ்வளவு தான் கூற முடியும். நான் சொன்னதிலிருந்து கதையின் தாக்கத்தை ஊகித்திருக்க முடியும் உங்களுக்கு. அந்த இரு பேராசிரியர்களும் இயல்பாகவே நடந்து கொண்டனர். நான் அவர்களின் விரிவுரைகளுக்கு போய் வந்தேன். பரீட்சை எழுதி சித்தி அடைந்தேன். என்னைப் பொறுத்து, அவ்விருவரும் கனவான்களே.
‘குந்தவை’ என்ற பெயர்த்தெரிவுக்கு குறிப்பிடத்தகுந்த காரணம் ஏதேனுமுண்டா?
‘பொன்னியின் செல்வன்’ தான் காரணம்.
வரலாற்றில் எப்படியோ தெரியாது. ஆனால் கல்கி, சோழச்சக்கரவர்த்தி, முதன் மந்திரி எல்லோரும் ஆலோச னைக்கு அணுகும், ஒரு ஆளுமை நிறைந்த அதே நேரம் அமைதியான பாத்திரமாகப் ‘குந்தவையைப் - படைத்துள்ள னர். விகடனுக்கு என ஒரு கதை எழுதி விட்டு, புனைப் பெயரைத் தேடிய பொழுது இப் பெயரே என் முதல் தெரிவாயிற்று.
6. எத்தகைய தருணங்களில் நீங்கள் படைப்பாக்க எத்தனிப்பிற்குட்படுகிறீர்கள்?
சில உந்துசக்திகள் படைக்க தூண்டுவது உண்மை
í
46 கலைமுகம் O ஜூை
 

ான். ஆனால் எவ்வெப்பொழுது என்று எவ்வாறு குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.
. உங்களுடைய முக்கியமான கதைகளிலெல்லாம் எல்லை கடந்த ஒருவெளி சாத்தியமாவதுடன் அந்நியமாக்கிக் கதைசொல்லும் இயல்பினையும், தீவிரவாசக மனநிலையில் உணரக்கூடியதாகவிருக்கிறது. எடுத்துக்காட்டாக “பெயர்வு'; வல்லைவெளி’, ‘பயன்படல்’ போன்ற கதைகளைக் குறிப்பிடலாம். இது நீங்கள் திட்டமிடாமல் நேர்வதொன்றா? நவீன கவிதைகள் போல கதை சொல்லிலும் நுண்ணிய விரிவுச் சாத்தியங்கள் இருப்பது போல, உங்களின் கேள்வி அமைந்திருக்கிறது.
என் கதைகளில் சொல்லும் விடயங்களை விட சொல்லாமலே உணர்த்தும் விடயங்களை கண்டடைவதில் அதிக சிரமம் இல்லை என்றே நினைக்கிறேன். தெரிந்த ஒரு சூழலிலிருந்து விலகி, அதற்கு எதிர்மறையான ஒரு இருப்பை கற்பனை செய்யும் பொழுது, அந்த சிந்தனை உருவாக்கத்தின் இடையே வெளி தோன்றக்கூடும். வல்லை வெளியில் காத்து நின்று விட்டு பஸ் ஏறும் பெண் இந்த வெளியை உணருகிறாள். இதனை திட்டமிடல் என எவ்வாறு கூறலாம். அதே போல் ஆஸ்ப்பத்திரிஸ்ரெச்சரில் படுத்துக் கொண்டு,மற்றவர்கள்தன் கண்ணை வேடிக்கை பார்க்க விட்ட பெண் தன்னை யாரோ மாதிரி உணருகிறாள். “நம் சமுதாயத்தில் செயல்படும் ஒவ்வொரு துறையும் நம்மை அந்நியமாக்குகின்றது. அல்லது அந்நியமாதலை நாம் உணர முடியாத பணியைத் தான் செய்கின்றன” என்கிறார் எஸ்.வி. ராஜதுரை. வல்லைவெளி யில் நிற்கும் பெண் தனக்குள் ஏற்படும் நிராசையை உணர முடியாத நிலையில் உள்ளாள். இதுவும் அந்நியமாதலின் ஒரு பிரிவாயிருக்கலாம். இவை தாமாகவே உருவானவை தான். திட்டமிடப்படவில்லை.
உங்களின் அமைப்பியலின்படி வாசகனே முக்கியம் பெறுகிறான். அவனை முன்வைத்தே பிரதி ஆக்கப்படுகிறது அவனின் வாசிப்புக்கு ஏற்ப பிரதி உருவம் கொள்கையில் அவனாலேயே பிரதியின் அர்த்தமும் இருப்பும் நிர்ணயிக்கப் படுகின்றன. அப்படியானால் இதில் ஆசிரியன் சொல்ல ஒன்றுமில்லை அல்லவா.
அந்தந்த சூழலுக்கேற்ப படைப்புகள் செய்யப்படும் பொழுது அந்த சூழலுக்கேற்ப, சந்தர்ப்பத்திற்கேற்ப அவனின் வாசிப்புக்கு ஏற்ப சில நிர்ணயிப்புகளை வாசகன் மேற்கொள் கிறான். அவை சில அளவு கோல்களின் அடிப்படையில் அல்லது ஊகத்தின் அடிப்படையிலும் இருக்கலாம் அல்லவா? நான் எழுதியவற்றில் சூழலின் நம்பிக்கையின்மை தெரிந்தாலும் விரக்தியை அதிகம் வலியுறுத்தவில்லை என்றே நினைக்கின்றேன். அவற்றில் சொந்த மண்ணில் அந்நியமாய் போய் விட்ட வெறுமை இருக்கத் தான் செய்திருக்கும். ஆனாலும் முற்றிலும் அந்நியமாய் நின்று ஒரு படைப்பை செய்ய முடியாது என்றுதான் நினைக்கின்றேன். ஒன்று மட்டும் சொல்ல முடியும். இவற்றை எல்லாம் திட்டமிட்டு நான் எழுதவில்லை.
ஈழத்து இலக்கியத்தளத்தில் புனைகதையென்று வரும்போது பெண்பிரதிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அநேகமாக நீர்த்துப்போய் விடுகின்றன. (உங்களது
D - pasibuli 2oo7

Page 49
பிரதிகள் விதிவிலக்கானவை) இதற்கென்ன காரணம்?
நீர்த்துப்போய் விடுகின்றன என்ற பதத்தை நான் ஏற்க மாட்டேன். இன்றைய பெண் எழுத்தாளர்கள் நவீன இலக்கி யத்தின் செல் நெறிப்போக்கை, அதில் ஏற்படும் மாற்றங்களை உய்த்து உணர்வதில்லை. உணர முயற்சித்தாலும் அவற்றை கதைகளில் பயன்படுத்துவதில்லை என்ற எடுமானத்தில் இக் கேள்வியைக் கேட்கின்றீர்கள் என நினைக்கின்றேன். நவீன கதை மரபுகளை அவர்கள் கையாளத் தயங்குவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். சமூகம் கட்டமைத்த ஒழுக்கலாறு விதிகளை மீற முடியாதவர்களாய் சமூகத்திலுள்ள அந்தஸ்து குடும்பம் சராசரிக் கணவன் ஆகியவற்றை உடைத்து உள்ளதை எழுத முடியாதவர்களாயிருக்கலாம். இதற்கு மாறானவர்கள் சிலரும் உளர். முக்கியமாக கோணேஸ்வரி பற்றிக் கவிதை எழுதிய கலா, சுந்தரி என்ற பெயரில் பெண்நிலை வாதத்தை ஒட்டி சரிநிகரில் நல்ல கதைகள் எழுதியிருக்கிறார். அதோடு பின் நவீனத்துவம் மற்றும் நொன்-லீனியர் எழுத்துத் தளங்களைப் பயன்படுத்தி எழுத முயலும் நம் இளம் எழுத்தாளர்களின் எழுத்துகள் அப்படி என்ன வாழ்கின்றன?
9. உங்களது சமாகாலப் பெண் எழுத்தாளர்களைப் பற்றிக்குறிப்பிடுங்கள்?
சமகால இலங்கைப் பெண் எழுத்தாளர்களென்றதும் முக்கியமாக முன்னுக்கு வருபவர்கள், கோகிலா மகேந்திரன், தாமரைச் செல்வி.
கோகிலா உளவியல் ரீதியான சிந்தனைப் போக் குடன் எழுத வல்லவர். அதோடு எளிமையான கூர்மையான மண்வாசனையோடு கூடிய நடை இவருடையது. பெண் நிலைவாதியாய் மாறும் கதைகள் எழுதியிருக்கிறார். உ+ம் வந்து சேருகை, தாமரைச் செல்வி யுத்தகால நெருக்கடிகளை பெண்மனஉணர்வுகளோடு கலைத்துவமாய் எழுதி வருகிறார். அவரின் நாவல்களில் மனத்தில் ஒரு முன் வரவை வைத்துக் கொண்டு எழுதுவது போலத் தெரிகிறது. இவர்களை விட, இளம் எழுத்தாளர் தாட்சாயணி முக்கிய கவனம் பெறுகிறார். அவரது நூல் வெளியீட்டு விழாவில் சொல்லப்பட்டது போல், எழுத்துக் களைச் செதுக்கி செதுக்கி எழுதுகிறார். இவர்களை விட வன்னியின் இளம் எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. பெயர்களைத்தான் கேள்விப் பட்டிருக்கிறேன். சூரியகுமாரி பஞ்சலிங்கம், ஆதிலட்சுமி சிவகுமார், தீபா குமரேசன்.
10. தமிழகத்து இலக்கியச் சூழலிலும் கணிசமான காலம் வாழ்ந்திருக்கிறீர்கள். அவ்விலக்கியச் சூழலுக்கும் ஈழத்து இலக்கியச் சூழலுக்கும் இடையே நீங்கள் உணர்ந்த வேறுபாடுகள் குறித்து..?
இலக்கியச் சூழல் என்று எதைப் பற்றிச் சொல்வ தென்று தெரியவில்லை. சென்னையில் என் அண்ணா குடும்பத்தினரோடுதான்தங்கியிருந்தேன். Shopping, சினிமா என்று வெளியே போகும் சராசரிக் குடும்பம் தான். எஸ்.பொ அவர்களின் பழக்கமேற்பட்ட பின் அவர் அழைத்ததும் சில எழுத்தாளர்களின் வெளியீட்டு விழா, கருத்தரங்கு என்று போயிருக்கின்றேன். முக்கியமாக அ. முத்துலிங்கத்தின் வம்ச விருத்தி’ சிறு கதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா. காவ்யாவின் மாதமொரு முறை நடக்கும் சிறப்பு விழா.
_ கலைமுகம் O ஜ

அவற்றை விட என்னைக் கவர்ந்தது சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறையின் அழைப்பை ஏற்று பேசப் போனதுதான். என்னால் பேச இயலாது என நான் மறுத்து விட்டதால் என்னோடு வந்த, என் புத்தக வெளியீட்டி னோடு இணைந்து தன் நுாலினை வெளியீடு செய்த கனடா எழுத்தாளர் சிறிசுவினைப் பேச வைத்தார்கள். அங்கு தமிழ் பயிலும் மாணவர்களின் ஆர்வம்தான் எனக்கு சந்தோஷத்தைத் தந்தது. பேசி முடிந்த பின் சரமாரியாக கேள்வி கேட்டார்கள். சிறிசு திக்குமுக்காடிப்போனார். நிகழ்ச்சி முடிந்த பின் என் னையும் சூழ்ந்தனர். ஆளுக்கு ஆள் கேள்விகள். அது எனக்கு மிக நல்ல அனுபவமாக இருந்தது.
11. பெண்ணியச்சிந்தனை ஈழத்தில் வலுப்பெறவில்லை என்றொரு கருத்து நிலவுகிறது இது குறித்து..?
பெண்ணியச் சிந்தனை, ஈழத்திலும் அதனதன் போக் கில் வளரத் தான் செய்கிறது. சித்திரலேகா மெளனகுரு, செல்வி திருச்சந்திரன் பெண்ணியம் தொடர்பான விவாதங் களில் ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். ஆனாலிவை எல்லாம் ஆணாதிக்கத்தின் கீழ் அல்லலுறும் அடித்தட்டு பெண்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகிறதா என்பதும், அப் பெண்களின் முன்னேற்றத்திற்கு இவர்கள் என்ன செய்தார்கள் என்பதும் தான் தெரியவில்லை.
தமிழகப் பெண்ணிய சிந்தனைகள் இலக்கிய ரீதியில் பெண்ணுடலைப் பற்றிப் பேசும் பெண் அரசியலோடு நின்று விடாது இன்று ஆணாதிக்கத்தைச் சிதைக்க, மாற்று பால் உறவிற்குப்பதில், ஒரு பால் புணர்ச்சியை முன்வைக்கின்றன. நம் புலம் பெயர் எழுத்தாளர் சுமதி ரூபனும் இந்த முனைப் பாட்டை வலியுறுத்தி கதை எழுதுகிறார். இது எவ்வளவு அபத்தமானது.
(“கற்பழித்தல்’ என்ற பதத்திற்கு மாறாக 'பாலியல் வல்லுறவு’ என்ற பதத்தை எல்லோரும் ஏற்க வைத்திருப்பது ஈழத்துப் பெண்ணியவாதிகளே)
12. ஈழத்துப்பெண்களின் கவிதைகள் உலகளவிய ரீதியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை ஈழத்துப் பெண்களின் புனைகதைகள் ஏற்படுத்த முடியாமைக்கென்ன காரணம்? .
ஒரு வேளை இங்கு நிலவும் போராட்டச் சூழலை, அதன் அவலங்களை நேரடியாக அதன் அனுபவ முனைப் புடன் எழுத கவிதைகளே அதிக பொருத்தத்தையும் வாய்ப் பையும் அளிப்பதால் அவை - அப்படி எழுதப்பட்ட கவிதை

Page 50
கள் - உலகத்தரத்தை எளிதில் எட்ட வல்லமையுடையதாய் அமைத்து விடுகின்றன போலும். அனுபவ ஆழத்துடனும், உணர்ச்சி பாவத்துடனும் - நம் பெண்கள் கவிதைகள் - அமைத்து விடுகின்றன. பலதரப்பட்ட சமூகத் தளங்களைப் பேசாது, ஒரு முகப்பட்ட சமூகப் பிரக்ஞையுடன் போராட்ட சூழலை, அதற்குரிய வீச்சுடன் உக்கிரமாய் அவை பேசின. உலகக் கவனத்தை ஈர்த்தன. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குரிய கனதியான ஒரு விடயத்தைப் பற்றி எழுதும் பொழுது, எழுதப்படும் பொருள் மட்டுமல்ல, எழுதும் கவிதையும் கனதி பெறுகிறது.
ரவிக்குமார் ஒரு கட்டுரையில் ‘இந்தியா டுடே' (இலக்கிய மலர்) கேட்கிறார் “அம்பைக்குப் பிறகு அவரோடு ஒப்பிட்டுச் சொல்லும்படியாக கூட சிறுகதைகள் எதை யும் நம் பெண்கள் எழுதவில்லையே ஏன்?’ ஆனானப்பட்ட ரவிக்குமாருக்கே இந்த சந்தேகத்திலிருந்து தெளிவு பெற முடியவில்லை.
13. உங்களது “பெயர்வு’ என்ற சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபட்டமை பற்றிக்கூறுங்கள்?
6TGSTig, 3(b }; mait The Little Magazine 5 luta5)ai) வந்தது. அதன் முன் அட்டையின் உள்ளே படைப்பாக்கம் செய்தவர்களின் பெயர்களின் நடுவே என் பெயரும் இருந்தது. என் கதையை, ஏ.ஜேஅவர்கள் மொழி பெயர்த்திருந்தார். அடுத்த நாள் ஏ. ஜே அவர்களுக்கு என் ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கடிதம் போட்டேன். அதில் ‘லிட்டில் மகசீனில்’ என் கதையைப் பிரசுரிக்கச் செய்தமைக்கு நன்றி. (getting it published m TLA) 676örgy th Sötil NL 14(5jGg56öt. L196v அனுப்பிய ஏ.ஜே அவர்கள் பத்மநாப ஐயர் தான் தன்னிட மிருந்து மொழிப்பெயர்ப்பை வாங்கினார் என்றும் அது பிரசுரமானதற்கும் ஐயருக்குத்தான் நன்றி கூறவேண்டு மென்றும் எழுதியிருந்தார். அடுத்து அவர் எழுதியது தான் என்னை அசத்தியது. லிட்டில் மகசீன்காரர்கள், தன் மொழிபெயர்ப்பில் சிறு சிறு திருத்தங்கள் (Stight improvements) செய்திருக்கிறார்கள் என்றும் நேரடியான மொழி பெயர்ப்பாக தான் கொடுத்த Displacement என்ற தலைப்பை யும் மாற்றியிருக்கிறார்கள் என்றும் அவர்கள் தந்த தலைப்பே அதிக பொருத்தமாயிருப்பதாயும் எழுதி இருந்தார். நான் அதை திரும்பத் திரும்ப வாசித்தேன். ஒரு ஆங்கில மொழி வித்தகர், தரமான ஆங்கில நூல்களுக்கு பலரை வழிகாட்டி விட்டவர், மற்றவர் செய்த திருத்தங்களை improvements என்றும், அவர்களிட்ட தலைப்பே பொருத்தமானது என்றும் சொல்வது என்றால்; இத்தகைய பண்பாளரை நம் இலக்கிய உலகம் இனி எப்பொழுது பார்க்கப்போகிறது? பிறகு, அவர்கள் தம் தொகுப்பில் அக்கதையையும் சேர்க்க விரும்பிய பொழுது, அதற்கான ஒப்புதல் கடித மாதிரியையும் (ஐயர் சொன்னபடி) ஏ.ஜே அவர்களே வரைந்து அனுப்பியிருந்தார். அவர் எழுதியபடியே கடிதமெழுதி, கையெழுத்திட்டு திரு. பன்னீர் செல்வத்திற்கு அனுப்பினேன்.
உங்களது ‘யோகம் இருக்கிறது சிறுகதைத் தொகுப்பு
தமிழகத்தில் வெளியிடப்பட்டமை தொடர்பான அனுபவங்க
ளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?
‘மித்ரவின் ஆதரவில் 28-09-2002 அன்று, சென்னை
#óatj:5ti C °ವ;
 

பில் கனடிய எழுத்தாளர் சிறிசுகந்தராசாவின் ‘சிறிசுவின் சில கதைகள்’ என்ற தொகுப்பும் என்னுடைய ‘யோகம் இருக் கிறது’ என்ற தொகுப்பிற்கும் இணைந்து வெளியீட்டு விழா நடந்தது. எஸ்.பொ முக்கியமான பல எழுத்தாளர்களை அழைத்துப் பேச வைத்திருந்தார். தலைமையுரை விட்டல் ராவ், வாழ்த்துரை வெங்கட் சுவாமிநாதன், அசோகமித்திரன், கருத்துரை ஜெயமோகன், பழமலய் என்று பிரபல்யங்களின் பட்டியல்.
ஆனாலும் ஒருவரும் என் புத்தகத்தின் உள்ளே போகவில்லை. விமர்சனம் செய்யவில்லை. அசோகமித்திரன் மட்டும் ஒரு கதை பற்றிச் சொன்னார். அவர்களுக்கு அன்று தான் புத்தகம் கொடுபட்டிருக்கிறது. இந் நிலையில் அவர்கள் விமர்சனம் செய்வார்களென எதிர்பார்க்கவும் முடியாது. எல்லோரும் பொதுப்படையாக “கனடிய எழுத்தாளர், புலம் பெயர்ந்த வாழ்க்கையைப் பற்றி எழுதியிருக்கிறார். ஈழத்து எழுத்தாளர் ஈழத்து நிலைமை பற்றி எழுதி இருக்கிறார்’ என்ப தையே சொன்னார்கள். அந்நிலையில் பார்த்தால் எனக்கு அது பெரும் ஏமாற்றமே. ஆனாலும் என் புத்தக வெளியீட்டு விழாவிற்கு இத்தனை பெரிய எழுத்தாளர்கள் வந்து கலந்து கொண்டது பற்றி மட்டும் மகிழ்ச்சி அடைந்தேன்.
உங்கள் தொழில் அனுபவங்கள் எத்தகையவை? அவை படைப்பு முயற்சிகளில் தாக்கம் செலுத்தியுள்னவா?
எனக்கு முந்தல் என்ற அழகிய கிராமத்தில் முதலில் ஆசிரிய நியமனம் கிடைத்தது. புத்தளம்-சிலாபம் இரு நகர்களுக்குகிடையே நட்டநடுவில் புத்தளம் கடல் நீரேரியை ஒட்டி உள்ள தென்னம்தோப்புகள், குளம் அருகருகாயுள்ள திரெளபதை அம்மன் கோயில், சேர்ச் முதலியன கொண்ட இக் கிராமத்தில் படிப்பிக்கப் போகையில் நானும் ‘இந்த பின் தங்கிய கிராமத்துப் பிள்ளைகளுக்குப் படிப்பு சொல்லிக் கொடுத்து, முன்னிலைக்குக் கொண்டு வருவதான சினிமா கதாநாயகக் கற்பனையோடு தான் போனேன். ஆனால் விரைவிலே ஆசிரியருக்கான ஆளுமை எனக்கில்லை என்று தெரிந்து விட்டது. வகுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை. முதல் வரிசை மாணவர்களைவிட பின் வரிசை மாணவர்கள் நான் சொல்வதைக் கேட்பதாயில்லை. 1990ஆம் ஆண்டில் வந்த சுய விருப்பு ஒய்வுபெறும் திட்டத்தில் ஆசிரியப் பணியில் இருந்து ஒய்வு பெற்றேன்.
பலதரப்பட்ட அனுபவங்கள் பலதரப்பட்டவர்க ளோடு பழகும் வாய்ப்பு அந்தப் பகுதி சூழல், இவை யாவுமே என் படைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
உங்களது அண்மைக்கால படைப்பு முயற்சிகள் குறித்து..?
ஒரு இலக்கிய விழாவின் மேடையின் என் அருகே யிருந்த திரு.கே.எஸ். சிவகுமாரன், “நாவல் எழுதுங்கோ’ என்றார். அப்பொழுது அவருக்கு 'கஷ்டம்’ என்று சொன்னாலும், நெஞ்சில் எப்பொழுதோ விழுந்தாலும், நீர் ஊற்றப்படாது காய விடப்பட்ட ஒரு விதைக்கு, தண்ணீர் செழிக்க செழிக்க ஊற்றியது போல் இருந்தது அவர் சொன்னது. 20 ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலிருந்த வல்வெட் டித்துறை தொண்டைமானாறு என்ற இரு ஊர்களின் பின்னணியில். ஒரு கப்பல் தண்டையலில் மகளாய் பிறந்து

Page 51
பின் கப்பல் முதலாளி வீட்டிற்கு மருமகளாய் வந்த என் அம்மாவின் கதையை, அக்கால பாய் மரக் கப்பல் வணிகம், அது எதிர் கொண்ட சவால்கள் ஆகியவற்றோடு எழுத முற்பட்டுள்ளேன். அது எந்த அளவு நிறைவேறும் என்பதை முக்கியமாக என் உடல்நிலை, உறுப்புகளின் தன்மை ஆகியனவே நிச்சயிக்கும் என நினைக்கின்றேன்.
தற்போதுள்ள நெருக்கடியான சூழல் உங்களது படைப்பு முயற்சியில் எவ்வகையில் தாக்கம் செலுத்துகிறது?
நான், இப்பொழுது 20ஆம் நூற்றாண்டுத் தொடக்க காலத்தைப் பற்றி எழுத முயல்கின்றேன் என்பதிலிருந்து. இக்கால நிகழ்வுகளை படைப்புகளாக்க நாம் எவ்வளவு தயங்குகின்றோம் என்பது தெரிந்திருக்கும்.
நீங்கள் வாசித்தவற்றில் உங்களை அதிகம் பாதித்தவை பற்றிக்குறிப்பிட முடியுமா?
ERICIT MARIAREMAROUE 6(pgu "Alguit on the western front’ என்ற நாவல் யுத்த கால நாவல்களின் சிறந்ததொன்றாய் கருதப்படுகிறது. அது அவரும் அவரது நண்பர்களும் முதலாம் உலகப் போரில் ஜேர்மனிக்காகப் போரிட்டு, அடைந்த அனுபவங்களைச் சொல்கிறது. தாயும் இறக்க, போரில் நண்பர்களும் கொல்லப்பட, தனி ஆளாய், போர் முடிவில் ஊர் திரும்புகிறார். தொடர்ந்து அவர் அனுபவிக்கும் ஆழ்ந்த அமைதியற்ற நிலை, வெறுமை எல்லாவற்றுக்கும் ஒப்புக் கொடுத்து விட்டு நிற்கும் தனிமை, விரக்தி ஆகியவற்றை இந் நாவல் சொல்கிறது. எங்கள் பரம்பரைக்கும் இது பொருந்தும் என்பதாலோ என்னவோ எனக்கு பிடித்த புத்தகம் இது,
எழுதுவதை நீங்கள் நெருக்கடிகளிலிருந்து விடுபடலுக் கானதொரு மார்க்கமாகக் கருதுகிறீர்களா?
என் வாழ்வில் தேவையற்றுக் குறுக்கிட்டவர்களைப் பற்றி நான் சந்தோஷ மோ, துக்கமோ இன்றி நினைத்துக் கொண்டிருப்பது உண்மை தான். சிலவேளை அந் நினைவுகளி லிருந்து விடுபட நான் எழுத்தை நாடி இருக்கக் கூடும்.
வலிகாமம் இடப்பெயர்வின் பொழுது நான் இந்தியாவில் இருந்தேன். பெயர்வு பற்றியும், தொடர்ந்த மனித அவலங்கள் பற்றியும் செய்திகள் நாளுக்கு நாள் வந்து கொண்டிருந்தன. மனதிலிருந்த அரிப்பில் இருந்து தப்ப, பெயர்வு’ என்ற கதையை எழுத முற்பட்டேன். அப்பொழுது, கிளாலி நீரேரியை படகு மூலம் கடந்து வந்த அனுபவம் எனக்கிருந்தது. அதோடு முன்னதாக, ஊரிலிருந்து உடுப்பிட்டி பின் வதிரி என்றும் பின் திரும்பி வந்து ஆவரங்கால், புத்தூர், நீர்வேலி என்றெல்லாம் அலைந்து கோயில்களிலும், பள்ளிக்கூடங்களிலும் இருந்த அனுபவம் இருந்தது. அங்கெல்லாம், என்னை மிகவும் சங்கடப்படுத்தியது தனித்தனி குழுக்களாக மக்களின் குடும் பங்கள் கோயில் முன்றில்களில் இருக்கும் பொழுது, குடும்ப தலைவி, எங்கிருந்தோ தான் பெற்றுவந்த உணவை தன் குடும்பத்துப் பிள்ளைகளுக்கு கொடுக்கையில், மற்ற மற்ற குடும்ப வட்டங்களைச் சேர்ந்த பிள்ளைகள் அதையே பார்த்துக் கொண்டு நிற்பது தான். ஆகவே, அந்த சங்கடத்தையும் கிடைத்த அனுபவங்களையும் எழுதித் தீர்க்க எண்ணினேன்,
ascoa.gpasi o ar

மற்றது. ‘யோகம் இருக்கிறது’ இதைச் சொல்லலாம். கிடைக்கும் தகவல்கள் யாவும் படைப்பாளிக்கு முக்கியமான வையே. அப்படியான சில தகவல்கள், ஒரு ஏளனத்தை எனக்குள் ஏற்படுத்திய பொழுது, அதிலிருந்து தப்ப, அக்கதையை எழுதினேன். p
உங்களுக்கு மிகுந்த ஈடுபாடுள்ள பிறதுறைகள் பற்றிக் கூறுங்கள்?
நவீன ஓவியங்கள் (என் புரிதலைப் பொறுத்து) பிடிக்கும். விளங்காதவற்றை அப்படியே விட்டுவிடுவேன்.
ஒரு காலத்தில் பத்திரிகையாளி ஆக வரவேண்டு மென்று விரும்பியளவுக்கு எனக்கு நாட்டு நடப்புகளில் ஆர்வம் உண்டு. இன்றும், இலக்கியக் கட்டுரைகளைப்
படிக்கும் அதே ஆர்வத்தோடு டி.பி.எஸ் ஜெயராஜ், இக்பால் அத்தாஸ், கீத பொன்கலன், விதுரன் என்று எல்லோரையும் படிப்பேன்.
உங்களுக்கு யார்மீதாவது இருந்து வந்துள்ள தார்மீகக் கோபம் எழுத்தில் முழுமையாக வெளிப்பட்டிருக்கிறதா?
இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அரச அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதென்பது எங்கள் நாட்டில் மிக மிகப் பழமையான பழக்கம். ஒரு தமிழறிஞர் எனப்பட்ட வரின் பிழை மனதைப் பிசைந்தது உண்மைதான். ஆனாலும், கதையில் அதனை முழுமையாக்க காட்டினேனோ தெரிய வில்லை.
முடிவாக என்ன கூற விரும்புகிறீர்கள்?
இறுதியாக கூற ஒன்றுமில்லை.
06) - p63bi 2007 49

Page 52
ത്ത
1 சிதைந்த
பகலிலொரு நாள் நான் மீண்டும் அழுதேன் மலைகளில் மெளனம் நேற்று fÈ வேற்றொரு தேசத்திலிருந்து வந்திருந்தாய். இரகசியம் பொதிந்த மேகக்கூட்டங்களை கண்கள் கொப்பளிக்க மொழிபெயர்த்த நம் நாட்களுடன் அமைதியாகவும் தளர்வாகவும்
2 நேற்று நாம்
மலர் விளையாடி இருந்தோம் எங்கும் அமைதியிருந்தது. செழிப்பிருந்தது. நட்சத்திரங்களில் நெடும் பனைகளில், அழகிய வாழ்வு கைவசம் இருந்தது. தாபங்களுடன் வரும் உன் வருகையும் என் பருவமும். அன்ப, அந்த ஆதி நாட்களில் மேய்ப்பாரற்று கிழக்கிற்கும் மேற்கிற்குமாய் நாமலைந்த கதைகள் அழகிய மழைக் குழைவுகளாய் மீந்து போக பழைய கனவுகளை அழுது தீர்த்த பிரகாச தளத்தில் என் படுக்கையின் ஆயாசங்களை தறித்து விட்டிருந்த
உன் நிர்மால்ய விழிகள்
பள்ச்சிட்டன.
**
3 நம்மைப் பற்றிய ~டி.
நினைவுகள் எல்லாமே வேதனைக்குரியவை அல்ல என்பதையும், இன்னும்
என்னைப் பற்றி
எழுதாத
சில கவிதைகள் உன்னிடம் உண்டு என்பதையும்
கலைமுகம் C ஜுை
 
 

imiHHHHHHHHHHHHN
உன் புருவங்களின் நிர்வாண மேட்டில் நான் கண்டு கொண்டேன் விலங்கிடப்பட்ட உன் உலகின் வெறுமையிலிருந்து கிளைத் தெழுந்தாய். எந்தத் தீர்ப்புக்களையும் பரிமாற முடியாமல்,
4 நகரில் நீ
மாற்றுப் பெயரில் அலைவதையும், ஆதிவாசிகளின் கூடாரத்தில் தங்கியிருப்பதையும் நானறிவேன் காதலின் பிரதியாய் முத்தங்கள் பரிமாறும் உலகில் கவிதைகள் பரிமாறிய உன் அரூப ஸ்பரிசங்கள், நீ அற்புதமானவன். உலகின் மிக உன்னதமான கவிதை சொல்லி மதுக்குப்பிகளுடன் புரண்டதையும், இரவுகளை பிழிந்து கவிதைகள் வாசிக்கும் உன் மூலங்கள் பற்றியும் நானறிவேன். ஜன்னலற்ற உன் கூடம் முழுவதும் என் இரகசியங்களின் கவிதைகளோடு மணப்பதையும் நானறிவேன். மறுதலிக்கப்பட்ட நம் நிமிடங்களுக்காக இழைகள் உருக துயரத்திலும் வேதனையிலும், குழைக்கப்பட்ட விரல்களெடுத்து
நானும் நீயும் யார் யாராகவும் இருக்கலாம், எங்கேயோ நீயும்இங்கே நானும் நம் பாடல்களை இசைத்தபடி
30/08/.
? ':4్న ့်:မ္ဘိဇ္ဈန္တိ
p - டிசெம்பர் 2007

Page 53
ஆ. சுரேந்திரன்
அண்மையில் 'சிறுவர் ஆளுமை மேம்பாடு குறித்த கருத்தரங்கொன்றிற்கு சமூகமளித்திருந்தேன். சிறுவர் ஆளுமை விருத்தி தொடர்பில் விரிவுரையாற்றிய ‘நெக்ரெப் அமைப்பின் பிரதித் திட்டப் பணிப்பாளர் வீரபத்திரபிள்ளை; சிறுவர் ஆளுமையை விருத்திசெய்ய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முறையை உடனடியாக நீக்கி விடுதல் வேண்டும் என்றார். இவரது கருத்து தற்போதுள்ள கல்விச்சூழலில் முக்கியமானதாகும். இன்றைக்கு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நட்சத்திர அந்தஸ்துப்பெற்ற பரீட்சையாகிவிட்டது. குடாநாட்டிலிருந்து வெளியாகும் நாளிதழ்கள் போட்டி போட்டுக்கொண்டு இப்பரீட்சைக்கான மாதிரிவினாத் தாள்களைப் பிரசுரிக்கின்றன. பரீட்சை முடிவுகள் வெளியான பின் சித்தி பெற்ற மாணவர்களின் நிழற்படங்களுடன் “பாராட்டி வாழ்த்துகிறோம்’ என்ற தலைப்பில் வழங்கப்படும் விளம்பரங்களை அதிகளவில் பிரசுரிக்கின்றன. இப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பிள்ளையின் பெற்றோர் உயர்தர, நடுத்தரமட்ட வருமானம் பெறுபவர்களாகவும் குறிப்பிடத்தகுந்த பதவிநிலையிலிருப்பவர்களாகவும் இருக்குமிடத்து பிள்ளை இப்பரீட்சையில் அதிக மதிப் பெண்களைப் பெற்று சித்தியடைவதை தமக்குரிய கெளரவமாகவே கருதுகின்றார்கள். இதற்காக தமது பிள்ளைகளை நித்திரைக்குச் செல்லும் வரை கசக்கிப்பிழிந்து கொண்டேயிருக்கின்றனர். இத்தகைய செயற்பாட்டினால் பிள்ளைகளின் சுயசிந்தனையாற்றல் மழுங்கடிக்கப் படுவதுடன் அவர்களது ஆளுமை மேம்பாடு பலவீன முறுகிறது. எனக்குத் தெரிந்த ஒருவர் அரச வங்கிக்கிளை யொன்றின் முகாமையாளராக விருக்கிறார். மகன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளான். ஒருநாளில் அவன் வெவ்வேறு இடங்களிலுள்ள ஒன்பது பிரத்தியேக வகுப்புகளுக்குச் சென்று வருவதாகவும், சாப்பிடும் போதுகூட புத்தகமும் கையுமாக இருப்பதாகவும் பெருமைப்பட்டார். எனக்கோ மனவருத்தமாக இருந்தது. பிள்ளைகள் சுயமாகச் சிந்திப்பதற்கு எவ்விதத்திலும் இடமளிக்காதவர்களாகப் பெற்றோர் மாறிவருகின்றனர். இதுபற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்த ஊடகங்கள் முயலவேண்டும். ஆனால் ஊடகங்களோ எதிர்மாறாகவே செயற்படுகின்றன. சில காலங்களுக்கு முன்பு குடாநாட்டுப் பத்திரிகையொன்றில் ‘நேற்று நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெற்றோர் யாழ்நகரப் பாடசாலையொன்றின் வாயிலில் குழுமிநிற்பதைப் படத்தில் காணலாம்’ என்ற குறிப்புடன் புகைப்படச் செய்திவெளியாகியிருந்தது. க.பொ.த சாதாரண, உயர்தரப்பரீட்சைகளுக்கில்லாத முக்கியத்துவம் தரம் 5
. asapagpasib o g
 

புலமைப்பரிசில் பரீட்சைக்கு வழங்கப்படுவதையிட்டு ஆச்சரியமடைந்தேன். வறிய மாணவர்களின் புலமை மேம்பாட்டிற்காக அவர்கள் இப்பரீட்சையில் சித்தியடைந் தால் இதற்கென அவர்களது உயர்தர வகுப்புக்கள் வரை கல்வியைத் தொடர ஓர் உதவு நிதியை வழங்குவதற்கான அரசின் ஏற்பாடே இப்புலமைப் பரிசில் பரீட்சையாகும். ஆனால் வறிய மாணவர்கள் இப்பரீட்சைக்கு தோற்றி சித்தியடைவது இயலாத காரியமெனுமளவுக்கு போட்டி யாளர்கள் அதிகரித்துவிட்டார்கள். இதனால் வெட்டுப்புள்ளி அதிகரித்துச்செல்கின்றது. இதனால் வறிய மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இத்திட்டத்தின் நோக்கம் கேள்விக் குறியாகின்றது. எனவே இத்திட்டத்தை நீக்கிவிட்டால் பிள்ளைகளுக்கு கற்றல் எளிமையாவதுடன் வளமான சிந்தனைக்கும் கால அவகாசம் கிடைக்கும். இதுபற்றி எழுதிக்கொண்டிருக்கும்போது குழந்தை ம. சண்முகலிங்கத் தின் ‘வாற்பேத்தைகள்’ நாடகம் நினைவுக்கு வருகின்றது. இன்றிருக்கும் சூழ்நிலையில் இந்நாடகம் யாழ், குடாநாட் டின் ஒவ்வொரு பாடசாலையிலும் அரங்காற்றுகை செய்யப் படுதல் அவசியமென்றே தோன்றுகின்றது.
хx xx xх
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையைப்போலவே இன்று சிறுவர் மீது சுமையேற்றுகின்ற இன்னொரு சங்கதிதான் ஆங்கில மொழிமூலமான கல்வித்திட்டமாகும். ஆங்கிலே யரிடமிருந்து நாம் விடுதலை பெற்று விட்டதாக வரலாறு சான்றுரைக்கிறது. உண்மையில் விடுதலை பெற்று விட்டோமா? ஆங்கில மொழிமூலமான கல்வியின் வழியே கெளரவ அடிமை நிலையை ஏற்றுக்கொண்டிருக் கிறோம் என்பதே உண்மை. ஆங்கிலம் சர்வதேச மொழி. அதைக்கற்றுக் கொள்வதாலேயே முன்னேற முடியும். ஆங்கிலம் தெரியாமல் இன்றைக்கு எதையும் சாதிக்கமுடியாது என்று சொல்வ தெல்லாம் ஒருவிதமாயையின் பாற்பட்டதே. இதற்கு எம் கண்முன்னே தெள்ளத்தெளிவாக உள்ள எடுத்துக்காட்டு ஜப்பான். இலத்திரனியல் சாதனங்களின் கண்டுபிடிப்பிலும், உற்பத்தியிலும் ஜப்பான் முன்னணி வகிக்கின்றது. ஜப்பான் ஒருபோதும் காலனித்துவ நாடாக இருந்ததில்லை. ஏனெனில் அது தனது மொழியைத்தான் ஒரே ஒரு ஊடகமாகக் கொண்டது. தனது மொழியில் சிந்திப்பதை மட்டுமே முதன்மைப்படுத்தியது. அதனால் புத்துருவாக்கம், கண்டு பிடிப்புக்கள் எல்லாம் சாத்தியமாகியது. ஜப்பானி லிருந்து இறக்குமதியாகிச் சந்தைக்கு வரும் பொருட்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் பாவனைக் கையேடுகளைப் பார்த்தால் தெரியும்! எல்லாம் தனியே சொந்த மொழியிலேயே விளக்கப்பட்டிருக்கும், இன்னொரு உதாரணம், சிங்களமொழி. இன்றைக்கு ஆட்சி மொழியாக இருப்பது சிங்களம். இதற்கென்ன காரணம்? சிங்களவர்கள் தமது மொழியை மதிக்கிறார்கள். யாழ் குடாநாட்டிற்கான தரைவழிப்பாதை மூடப்படுவதற்கு முன்னர் அரச சேவையிலுள்ள எனக்கு அடிக்கடி பயிற்சிக்கருத்தரங்குகள் கொழும்பில் நடக்கும். அங்கே கருத்தரங்குகளில் பயிற்று விப்பாளராக வருபவர்கள் சகலரும் சிங்கள மொழிபேசும் அதிகாரிகள். ஒரு வார்த்தை ஆங்கிலம் பேசமாட்டார்கள். எல்லா விளக்கங்களையும் சிங்களத்தில் தான் அளிப்பார்கள்.
லை-டிசெம்பர் 2007 51

Page 54
அவை தமிழில் மொழிபெயர்க்கப்படும். இடைக்கிடையே அவர்கள் தாங்கள் அளித்த விளக்கத்தில் ஏதாவது சந்தேக மிருந்தால் கேட்கச் சொல்வார்கள். உடனே வடபகுதியி லிருந்து பங்கேற்றுள்ள தமிழ்மொழி பேசும் பயிலுனர்கள் ஆங்கிலத்தில்தான் சந்தேகம் கேட்பார்கள். அவர்களோ சிங்களத்தில்தான் அச்சந்தேகத்திற்கு விடையளிப்பார்கள். இதுதான் அவர்களுக்குரிய தனித்துவம், எங்களுக்கோ அத்தனித்துவமில்லை. அரசியல் வரலாற்றில் நாங்கள் ஒடுக்கப்பட்டதற்கு எங்களது மொழியை மதிக்காமையே காரணமாகும். தமிழுக்காகப் போராடத் தயாராக இருக் கிறோம். ஆனால் தமிழை மதிக்கத் தயாரில்லை. நம்மில் எத்தனை பேர் தமிழில் கையொப்பமிடுகின்றோம்? (தமிழில் ஒப்பமிடுவது கெளரவக்குறைவல்லவா?) அதைவிட எத்தனை பேர் தமிழைச் செம்மையாக எழுதக்கூடியவர்களாக இருக்கின்றோம்? கணக்கிட்டால் நூற்றுக்கு இருபந்தைந்து வீதங்கூடத்தேறாது. தாய்மொழி மூலமாகக் கற்றவர்களே தமிழை செம்மையாக எழுதுவதில் இன்னும் முன்னேற்ற மடையாதபோது ஆங்கில மொழிமூலமாகக் கற்றல் என்பது எதிர்காலத்தில் தரப்போகும் விளைவென்ன? தமிழையே ஒழுங்காக எழுதத் தெரியாத பிள்ளைகள் ஆங்கிலத்தை கற்றலுக்கான மொழியாகக்கொண்டு ஒவ்வொரு பாடத்திலும் செம்மையான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளச் சாத்திய முள்ளதா? மிகச் சொற்பமான பிள்ளைகளால் இது சாத்திய மாகலாம். ஆனால் பெரும்பாலான பிள்ளைகள் அரை வேக்காட்டுத்தனமான விளக்கங்களுடன் பெற்றோரின் நிர்ப்பந்திற்பிற்காகக் கற்றலை மேற்கொள்வர். “என்ர பிள்ளை இங்கிலீஸ் மீடியத்தில படிக்குது’ என்று பெற்றோர் பலருக்கு மத்தியிலும் பெருமையடித்துக்கொள்வர். (தமது பிள்ளை களின் எதிர்காலத்தை தாமே பாழடித்துக்கொண்டிருப்பது தெரியாமல்). இதைப் பற்றி எவ்வளவுதான் ஊடகங்களில் விவாதித்தாலும் எழுதினாலும் (பெற்றோரோ கல்விச் சமூகமோ விழிப்புணர்வு பெறாத வரையில்) எவ்வித பயனும் கிட்டப்போவதில்லை.
>k xk xx
22/09/2007 அன்றிரவு நடிகர் விஜயன் காலமாகிவிட்ட செய்தியறிந்தேன். உடனடியாக என் நினைவுக்கு வந்தது உதிரிப்பூக்களில் சுந்தரவடிவேல் எனும் பாத்திரத்தில் அவர்தோன்றி தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய சலனந்தான். தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஒர் அற்புதமான நடிகரென விஜயனைக் குறிப்பிடலாம். நல்ல சினிமாவுக் குரித்தான இயல்பான உணர்வு வெளிப்பாட்டை நேர்த்தியாக திரைக்குக்கொண்டு வருவதில் விஜயன் தனித்துவமானவர். நிறம் மாறாத பூக்கள்’, ‘கொடிபறக்குது’, ‘ரமணா போன்ற படங்களில் விஜயனின் நடிப்பு மூன்றாந்தரத்தது என்ற போதிலும் பசி விஜயனை அடையாளங் காட்டிய இன்னொரு முக்கியமான படம். தென்னிந்திய தமிழ் சினிமா முறையாகப் பயன்படுத்தத் தவறிய நடிகர்களில் விஜயனும் ஒருவர் என்பது குறிப்பிடப்படவேண்டியது. விஜயனின் மறைவு நல்ல சினிமா மீது ஈடுபாடுள்ளவர்களை பாதிக்கவே செய்யும்.
xk xx xx
52 கலைமுகம் O ஜூன்

1970களில் ‘ஏப்பிரல் 8,9,10’, ‘முக்காடுகள் மீட்டும் முகாரிராகங்கள்’, ‘சிறுதீப்பொறி மூண்டு பெரு நெருப்பாக எரியும்’ போன்ற சிறுகதைகளால் கவனிப்பிற்குள்ளானவர் கிழக்கிலங்கையைச்சேர்ந்த எம். எல். எம். மன்சூர். ஆழ்மன ஏக்கம்; இயலாமை; விரக்தி நிலை; சார்ந்துள்ள மதத்தின் பேரால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டினால் எழும் நெருக்கடிகள் என அகவய முரண் நிலைப்பாட்டினை எளிமையாக கூர்ந்த மொழியில் பதிவுசெய்தல் மன்சூருக்கே யுரித்தான தனித்துவமாகக் கொள்ளலாம். இத்தகைய படைப்பாளியின் சிறுகதைகள் இன்னும் முழுத்தொகுப்பாக வெளிவரவில்லையென்பது கவலைதரும் செய்தி. முழுத் தொகுப்பாக்கக்கூடிய கதைகளை இன்னும் நான் எழுதத் தொடங்கவில்லையென்றே மனசூர் குறிப்பிடுகின்றார். மன்சூரைப்போன்ற இன்னொருவரே ஆனந்தமயில். இவர் ஒரு தொகுப்பாக்கும் அளவுக்கு நல்லகதைகளை எழுதியிருக் கிறார். ‘அலை’யின் ஆரம்ப இதழொன்றில் ஆனந்தமயில் எழுதிய 'திருவிழா’ என்ற கதை வெளியாகியுள்ளது. இதை வாசித்தபோது நான் பரவசமடைந்திருக்கிறேன். ஆனால் ஆனந்தமயிலின் சிறுகதைத்தொகுப்பு இதுவரை வெளிவராததும் தீவிர வாசகருக்கு ஒருவகையில் இழப்பே. இது இவ்வாறிருக்க சிலர் அரையுங்குறையுமாக கதைகளை எழுதி சாதாரண வார இதழ்கள், மாசிகைகளுக்கு அனுப்பி பிரசுரமாகிவிட்டதுமே தொகுப்பாக்கி வெளியீட்டுவிழா நடத்திவிடுகிறார்கள். இவர்களை சமூகம் பிரமிப்புடன் பார்க்கவும் தொடங்கிவிடுகிறது. உற்றார், உறவினர், அன்பர்கள், நண்பர்கள், வாடிக்கையாளர்கள் என எல்லோ ருமே தலையிலேத்திக் கொண்டாடுகிறார்கள். எனக் கென்றால், நிதிசேகரிப்பதற்காக அதிஷ்டலாபச் சீட்டடித்து விற்பனை செய்வதைப் போன்றிருக்கிறது இந்த எழுத்தாளர் களின் செயல். நம்மிடையே தீவிரமான, முறையான வாசிப்பும், முதுகுசொறியாத விமர்சனத்துறையும் வளர்ச்சி யடையாத தாலேயே இத்தகைய அபத்தங்கள் நேர்கின்றன என்பதை நாம் கருத்திற் கொள்ளவேண்டும்.
xx xx xx
இந்நெருக்கடியான காலகட்டத்தில்கூட இலக்கிய இதழ்களை வெளிக்கொண்டுவரும் சிந்தனையும் அதற்கு உடனடியாகச்செயல்வடிவம் கொடுக்கும் முனைப் புங் கொண்ட ஒர் இளந்தலைமுறை செயற்படுவது குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். எனினும் இம்முயற்சியும் ஒர் அதிஷ்டலாபச்சீட்டு விற்பனைக்குள் வந்துவிடக்கூடாது. இதழ்நடத்துவதற்கென சில மரபொழுங்குகள் உள்ளதை தொடர்புடைய தலைமுறை விளங்கிக்கொண்டு செயற்படு வது முக்கியமானது. இதில் முக்கியமானது இதழுக்கு விடயதானம் செய்வோர் தொடர்பான மரபொழுங்காகும். விடயதானம் செய்வோர்க்கு அதற்கான நிதிக்கொடுப் பனவுடன் குறித்த இதழொன்றின் பிரதியையும் வழங்குதல் வேண்டும். நிதிவசதியில்லாத சந்தர்ப்பத்தில் குறித்த இதழின் பிரதியொன்றை இவ்விடயதானம் செய்தவர் எவரோ அவருக்கு இலவசமாக அனுப்புதல் வேண்டும். ஆனால் இன்றைய நாள்களில் இலக்கிய மாசிகைகள், இதழ்களை வெளியிடுவோர் இவ்வொழுங்கைப் பெரும்பாலும் பின்பற்றுவதில்லை. இதனால் விடயதானம் செய்தவர் தனது co-pagius 2007

Page 55
நிதியைச்செலவழித்து குறித்த இதழின் பிரதியை வாங்க வேண்டிய பரிதாபம் ஏற்படுகிறது. இதைவிடமோசமான செயல் என்னவென்றால் விடயதானம் செய்தவரையே வெளியீட்டு விழாக்களில் சிறப்புப்பிரதி பெறுபவராக உள்ளடக்குவது. இதைப்போன்ற அபத்தம் வேறில்லை. எனவே இதழ் வெளியிடுவோர் இம்மரபொழுங்கை கடைப் பிடிக்கவேண்டியது அவசியம். இத்தகைய மரபொழுங்கை அறியாதவர்கள் அ.யேசுராசா போன்றவர்களுடன் தொடர்பு
2రానునుడ24
அகக்கோலங்கள்
ஈழத்து அரங்க வரலாற்றில் முதற்தடவையாக 'அகக்கோலங்கள்’ என்னும் பெயரில் ‘வேடமுகங்களின் காட்சி' யாழ். பல்கலைக்கழக ‘வெறுவெளி அரங்கக் குழுவின் ஏற்பாட்டில் 17.07.2007இல் யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் புதிய கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. இதில் வெவ்வேறுபட்ட கோணங்களில் அமைந்த 75 க்கு மேற்பட்ட வேடமுகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவ் வேடமுகங்கள் கடதாசியை பிரதான ஊடகமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்ததுடன் இவற்றுக்கான அழகுபடுத்தலில் வர்ணங்களும், பல் வகைப்பட்ட இயற்கைப் பொருட்களும் பயன்படுத்தப்பட்டிருந்தன. காட்சியுடன், கதகளி, தெருக்கத்து வடிவங்களின் வேட உடை, ஒப்பனையுடன் கூடிய மாதிரி பாத்திரங்களும் காட்சிப்படுத்தப்பட்டதுடன், வேடமுகங்களைக் கொண்ட குறுநாடகமும் அளிக்கை செய்யப்பட்டமை மற்றுமோர் சிறப்பம்சமாகும். யாழ். பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் மாணவர்களின் கைவண்ணத்தில் தயாரிக்கப்பட்ட இவ் வேட முகங்களின் காட்சியை பெருமளவு பாடசாலை மாணவர்கள், அரங்க ஆர்வலர்கள் என பலரும் ஆர்வமுடன் பார்வையிட் டார்கள். நெருக்கடிகள் நிறைந்த வாழ்விலும் புதிதுபுதிதாக படைக்கும் நம்மவர்களின் செயற்திறன் பாராட்டுக்குரியது.
565 flob6
யாழ் இலக்கிய வட்டத்தின் தலைவராக செங்கை ஆழியான் (திரு. க. குணராசா) மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் இலக்கிய வட்டத்தின் 42 ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டம் 30 - 09- 2007 ஞாயிறு யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றபோது இத்தெரிவு இடம்பெற்றது. இதேவேளை செயலாளராக நயினை கி. கிருபானந்தாவும், பொருளாளராக திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசமும் தெரிவு செய்யப்பட்டனர்.
_ (b ഠ ജൈ

கொண்டு அறிந்துகொள்ளலாம். ‘தெரிதல்’ என்ற இதழை அண்மைக் காலங்களில் யேசுராசா வெளிக்கொண்டு வந்திருந்தார். அதுவும் 5/= விலையில். அத்துடன் விடயதானம் செய்பவர்களுக்கு குறித்த இதழின் இரு பிரதிகளையும் விடயதானத்தின் தன்மைக்கேற்ப 50 ரூபாவிலிருந்து 200 ரூபா வரை சன்மானமும் வழங்கி வந்தமையை இத்தருணம் நினைவுகூர்வது பொருத்தமான தென்றே எண்ணுகிறேன்.
M.
同 2)2ьа): S2ssy |-
G|Jötið öllfloOö
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி சித்திரக் கலைத்துறை முகிழ்நிலை ஆசிரியர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘பேசும்தூரிகை ஒவியக் காட்சி நவம்பர் மாதம் 02 ஆம், 03ஆம் திகதிகளில் கல்லூரியில் நடைபெற்றது. சித்திரம் கற்கும் மாணவர்களுக்கு பயன் தரக் கூடிய வகையில் இக் காட்சி ஒவ்வோராண்டும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கரையாத கற்பனைகள்
கரையாத கற்பனைகள்’ என்னும் பெயரில் முற்றிலும் சவர்க்காரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இருநூறுக்கும் அதிகமாக சிற்பங்களின் காட்சி நவம்பர் மாதம் 9, 10, 11 ஆகிய திகதிகளில் வட்டுக்கோட்டை வைரவிழா மண்டபத்தில் இடம்பெற்றது. ஆசிரியர் ம. பார்த்தீபனின் கைவண்ணத்தில் உருவான இச் சிற்பங்களில் பெரும்பாலானவை சமகாலத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தமை பலரது கவனத்தையும் ஈர்த்தது. /
1. இறக்கை முவுைத்த கறையான்கள்
காலை ஐந்து மணி: சற்று மழையிருட்டு: முன் விறாந்தைக்கு வந்து மின் விளக்கை ஏற்றினேன்.
பூக்கள் மிதப்பது போல் ஈசல்கள் மின் விளக்கின் கீழ் கோபுரம் எழுப்பி மகிழ்ச்சியில் பறந்தன.
முடிவில்
சிறகுகள் ஒடிந்து நிலத்தில் குவிந்து لر .இறந்து கிடந்தன ܢܠ 0-டிசெம்பர் 2007 - 3

Page 56
uue 2-le ١۔ لکھا سحا۲Tحیتے
கங்குல் விலகாத காலைப் பொழுதில் இருள் தேங்கிய வானில் மின்னற் கோடுகள் ஒடுவதான சேட்டில் இரு சூரியரைக் கண்ணாடி வில்லைகளால் முகத்தில் மறைத்துக் கம்பீரமாய் நீ தினமும் ஆழம் தேடி உள்நுழையும் இரு வாசல்களையும் இமைக்குள் தாழ்த்தி ரோசா வண்ண உடையில் பிரியம் மலர்ந்திட உன்னுடன் ஏறிக் கொண்டேன்.
மழைமுகில்கள் தொங்கிக் கிடந்த அதிகாலையில் நெடுந்தூரம் கடந்தோம் உடனிருந்த சிறுவர்களின் சேட்டைகளில் ஒருவரையொருவர் எண்ணிப் பயணிக்கும் கனவுகளில் இருந்து மீண்டோம்
சீதளம் செறிந்த அடர் இருள் வனத்தினுள் புகுந்த வேளை இடி முழக்கத்துடன் 'சோவென இறங்கியது கிளைகள் பணிந்து பெரு மழை
இறுதி யன்னலையும் மூடி இசை தவழ்ந்த வாகனத்துள்ளே ஒளியையும் வாசனை கமழும் குளிரையும் பரவவிட்டாய் மஞ்சள் ஒளியுடன்
ஆடைகளில் படியத் தொடங்கியது உனது சுகந்தத்துடனான ஈரவளி
54 கலைமுகம் O ஜ
 

ജഉമര്
മശബ്
வழி நீளப் பேரிடிகள் முழங்கி அச்சுறுத்தச் சிறியவர் எதிரே உனது தைரியம் எனையும் தொற்றியது மலையை ஏந்தும் வல்லமையுடன் நீ வீழ்ந்து கொண்டிருக்கும் மழைத்துளியொன்றன்றி வேறேது நான்?
நீர்ச் சுமையில் முறிந்து சரியும்
கிளைகள் குறித்த பயம் அடவியைத் தாண்டியதும் விலகிப் போயிற்று பெய்தல் நின்ற வானத்திலிருந்து வந்தடைந்த முதல் கிரணம் பிள்ளைகளின் முகங்களில் புன்னகையைத் தீட்டியது
ஒய்ந்திருந்த இசையும் ஒசையும் மீள வலுத்தது நுழைவாயிலருகே எனை விடுவிக்கும் வேளையில் ஆழ்ந்து ஊடுருவுமொரு பார்வையை எறிந்தாய் இப்போது அடர் வனத்தினுள்ளே பெரு மழையாய் நீ எனதான்மாவினுள் நுழையத் தொடங்குகையில் ஆண்டாண்டுகாலப் போர்வைகள் கொண்டு
எனை மூடிப் போகிறேன் நான்
gنن:8
லை-டிசெம்பர் 2007

Page 57
2ataya-oom A ANTA AIZSDL púlu AT1
: نقل عمولی) அறுவடை ஓய்ந்த வயல் வரப்புகளில் மந்தைகள் மேயவரும் காலங்களில் கோடை தன் மூச்சைக் கட்டவிழ்க்கும் ஆற்றங்கரைத் தோட்டத்துப் பசுமையும் கருகும் தண்ணிர் தேடிப் பாம்பலையும் காட்டில் திரியாதே அம்மம்மாவின் கவனம் பிசகும் கணமொன்றில் பதுங்கிப் பதுங்கி நோட்டம்விட்டு ஒட்டமெடுப்பேன் தோட்டம் பார்த்து அச்சம் தவிர்த்திடவும் கொய்யா பறித்திடவுமாய் கையிலே ஒர் தடி அத்தடியையும் செருப்பொரு சோடியையும் மரத்தடியில் விட்டுக் கிளையொன்றில் அமர்ந்து கொள்வேன் கற்பனையும் பாடலும் தோட்டமெங்கிலும் பரவி பள்ளத்தே பாய்ந்தோடும் ஆற்றிலும் கரைந்தோடும்
? :
ஆற்றின் நீரோட்டம் படிப்படியாக வற்றி கோடையின் உச்சத்தில் நரைத்த தேகம் பூணும் மாலைப் பொழுதொன்றில், தாம்பூலமிடித்து வாயிலேதரித்து வீட்டைப் பூட்டிச் சேலைத் தலைப்பில் சாவியை முடிந்து சொருகி இடுப்பில் தீர்க்க தரிசனத்துடன் புறப்படுவாள் அம்மம்மா மண்வெட்டியை ஊன்றி ஊன்றி காரணம் கேட்டு நிற்கும் என்னிடமோ புதையல் அகழ்ந்திடப் போவதாய்க்கூறி நடப்பாள் நானும் தொடர்வேன்
திருமறைக் கலாமன்றம்
நடத்தும்
ஆத்துல்ல
காலம் : 22, 23 டிசெம்பர் 2007 (சனி, ஞாயிறு)
நேரம் : பி.ப. 3.00 மணி
இடம் : கலைத்தூது கலையகம்
286, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
கலைமுகம் O ஜுை

தோட்டத்து ஒற்றையடிப்பாதையின் சருகுகளைச்
சிறு மண்வெட்டியால் இழுத்தவாறு அவள் பின்னே
0ܗܶܠo22ܐܘܐܝ
அத்திமரத்தின் கீழே
கருநிறப் பாசி படர்ந்து நீர்ப்பூச்சிகள் சருக்கள் நிகழ்த்தும் நீர் தேங்கிய மணலை அகழத் தொடங்குகையில் வெண்ணிற மணலோடு சலசலத்து ஊறும் குளிர் நீர் ஊறிவரும் நீரை வழிந்தோட வைக்கும் கால்வாய் அமைப்பையும் அவளே அறிவாள் அத்தியின் கிளைகள் ஆடும் தெள்ளிய நீர்ச்சுனையை உருவாக்கிய பெருமிதத்துடன் மாலை இருளை ஆற்றில் விட்டுக் கரையேறி வீடடைவோம் சிறுமியும் பாட்டியும்
MPAாறன் பின்னாளில் எல்லோரும் வந்தங்கே துவைப்பர் குளிப்பர் இடையிடையே உயர்ந்த ஆற்றங் கரையின் மூங்கில் மரங்களின் மறைவில் நின்று வந்திருப்பவரை அடையாளங் கண்டு திரும்புவாள் அம்மை பின்னும் கண்காணிப்புத் தவறிய இடைவெளியில் வந்து படு குழி தோண்டி வைத்துப் போயிருப்பான் அவளது வடிகாலமைப்பு ஞானத்தின் துளியும் வாய்க்காத அற்பப் பயலொருவன் தெளிந்த நீர் ஊற்றுக் குட்டையாக மாறி அழுக்கு நீர் சுற்றிச் சுழழுமங்கே நாசமறுத்த பயலவனை முனிந்த படி மீளவும் புனரமைப்பாள் வியர்வை வழிந்திட அம்மை.
2007-09-16
* திருமறைக் கலாமன்றத்தால் நடத்தப்பட்ட தென்மோடி நாட்டுக்கூத்துப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு.
* அரங்க அளிக்கைகள்
* யாழ்ப்பாண தென்மோடி கூத்து மரபின் 153 பாடல்
மெட்டுக்களின் இசைப்பேழை மற்றும் நூல் வெளியீடு
*அண்ணாவிமார் கெளரவிப்பு.
p - டிசெம்பர் 2007 55

Page 58
லா. ச. ராமாமிர்தம்:
കെരg-uിര് ബര്തഥതu Z ത്രർ
/ ཡང་།། தமிழகத்தின் பழம்பெரும் எழுத்தாளரான லால்குடி -
சப்தரிஷி ராமாமிர்தம் என்னும் இயற்பெயரைக்கொண்ட லா.ச.ரா. அவர்கள் தனது 92 ஆவது வயதில் 30.10.2007 இல் தான் பிறந்த அதே நாளிலேயே காலமாகிவிட்டார். இவர் தமிழ்மொழிக்கு வளம்சேர்த்த எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். நவீன தமிழ் இலக்கியத்தில் குறிப்பாக சிறுகதை இலக்கியத்தில் | முக்கிய இடம் பெறுபவர். ‘நனவோடை உத்தியை தமிழுக்கு முதலில் அறிமுகம் செய்தவரும் லா.ச.ரா. தான். அவரிற்கு அஞ்சலியாக இக்கட்டுரை பிரசுர
மாகின்றது.
றது محسس
Oசைத்ரிகன்
‘நேற்றைய நினைவின் மணத்துடன் உதிர்ந்து கொண்டிருக் கிறேன்” - லா.ச.ரா
I
கனவுகள், காதல் கிளர்வுகள் மற்றும் இதம்தரு மென்னுணர்வுகளாலும் தனிமையாலும் நிரம்பியிருக்கிற பதின்மவயதுகளின் நடுப்பகுதியில் லா.ச.ராவின் பிரதிகள் எனக்கு அறிமுகமாகின. தற்செயலாய்க் கைக்குக் கிட்டிய ‘இந்தியா டுடே' வெளியிட்ட முதலாவது இலக்கிய ஆண்டு மலரில் (1993-1994) இரண்டு கதைகள் பிடித்திருந்தன. ஒன்று வாஸந்தியினுடைய நல்ல கதைகளில் ஒன்றான 'கொலை மற்றது, லா.ச.ராவின் வழக்கமான பாணியில மையாத மிகவும் மனோரதியமான கதையான 'அலைகள்’. இந்தக் கதைகளுக்குப் பின்னர்தான் நூலகத்தில் லா.ச.ராவை யும் வாஸந்தியையும் தேடத் தொடங்கினேன். வாஸந்தியின் ‘நான் புத்தனில்லை’ எனும் நாவல் அடுத்து வந்த வாரங்களில் என் ஆதர்ச நூலாக இருந்தது. லா.ச.ராவின் அபிதாவையும் எடுத்து வந்திருந்தேன். ஆனாலும் அபிதாவின் மொழி ‘அலைகள்’ சிறுகதை போலன்றி விளங்கிக் கொள்ள மிகவும் கஷ்டமாக இருந்தது. லா.ச.ராவுக்கு முன்பு நா. பாவின் ‘மணிபல்லவம்’ கல்கியின் ‘புனைவுகள்’ எனக்குப் பிடித்தமானவையாக இருந்து கொண்டிருந்தன. சமஸ்கிருதத் தன்மையும் ஒருவித தொன்மம் கலந்த குறியீடுகளும் விளங்காதுபோயினும் சரித்திரப்புனைவுகளை வாசிப்பது போன்ற உணர்வு இருந்தது. அபிதா'வின் பூடகமான மொழி வேறு ஒரு விடுகதையின் மர்மக் கிளர்ச்சியை உண்டுபண்ணியிருந்தது. இருண்மையான அந்த மொழிக்கும் எனக்கும் நடந்த ஒருவித போராட்டத்தில் லா.ச.ரா. வெகு சீக்கிரத்தில் நான் தேடிப்படிக்கிற பெயராயிற்று.
இன்றைக்கு ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்ட
56 - . . balaupii. O ey.

நிலையில் லா.ச.ராவின் (பெளதீக) மரணிப்பின் பின்னராக இழப்பின் வலியென்பது உசுப்புகிற நினைவடுக்கில் 'அபிதா'வின் மீது அந்த மொழியின் மீது பித்துப் பிடித்துக் கிடந்த நாட்களை நினைவுக்குக்கொண்டு வருகிறேன். நிச்சயமாய் அந்த நிலை இப்போது நினைக்கும் போது ஆச்சரியமூட்டுகிற ஒன்றுதான். அந்த நாட் | களில் லா.ச.ராவைக்கிறக் கத்துடன் வாசித்த தற்கும் இப்போது வாசிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இந்த கட்டுடைப் புக் கருவிகளுடனான வாசிப்பு விமர்சனப்புத்தி
என்கிற எல்லாவற்றுக்கும் ? அப்பால் லா.ச.ராவின்
மரணம் வலிதருவதாயிருக்
கிறது என்பதுவே நான் பகிர விரும்புவது.
30.10, 1916 - 30.10.2007
2 முதன்முதலில் நான் வாசிக்க நேர்ந்த லா.ச.ராவின்
சிறுகதையான 'அலைகள் மனோரதியமான சிறுகதை யென்பதை முதலிலேயே சொல்லியிருக்கிறேன். ஆனால் 'அபிதா மிகவும் இருண்மையானது. விடுகதையின் மாயக்கவர்ச்சி நிரம்பிய அப்பிரதியை ஒரு ஒழுங்கில் வாசித்தேனில்லை. அப்படி வாசிப்பது கடினமாகவிருந்தது. மூச்சுத்திணறவைக்கிற மொழிதல்களுக்கிடையில் அங்கு மிங்குமாய் அலைந்து கொண்டிருந்தேன். அந்த அலைதலின் சுவாரசியம் பிடித்துப் போக மூன்றுதடவைகளுக்கு மேலாக நூலகத்தில் புத்தகத்தைத் திகதி மாற்றம் செய்து என்னுட னேயே வைத்திருந்தேன். உணர்வுகளின் மிதமிஞ்சிய பெருக்கத்தில் மொழி நீர்மையானதாக மாறிப் பாய்ந்து கொண்டிருக்க அதனடியில் இழையும் சம்பவக்கோர்வை களைக் கண்டெடுத்தல் நீண்ட நாட்களுக்குப் பின்னரே சாத்தியமாயிற்று.
தர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட புலனுணர்வுகளாய் மாறிவிடுகிற இசைத்தன்மை கொண்ட மொழி லா.ச.ராவி னுடையது. நுட்பமான இசைக்கோர்வையொன்றின் கட்டமைப்பை லா.ச.ரா பிரதிகளில் காணமுடியும். 1989 இல் சாஹித்திய அக்கடமி விருது ஏற்புரையில் musical effectஐ எழுத்தில் கொண்டு வருதல் குறித்து லா.ச.ரா விரிவாகப் பேசுகிறார். இத்தகைய இசையுடன் 'அபிதாவில் இருந்த பிடித்தாட்டும் வேட்கை, வெளிப்படுத்தப்பட முடியாத தாபங்களின் பெரும் ஒலம் என்பன நடுங்க வைப்பதாய் இருந்தன. அர்த்தங்களைத் தேடுதல், மேலும் தேடிக்கொண் டேயிருத்தலின் இன்பம் அக்காலங்களில் என் வாசிப்பிலி ருந்த பிரதியாளர்கள் பட்டியலில் லா.ச.ராவிடம் மட்டுமே சாத்தியமாயிற்று. லா.ச.ராவின் பிரதியுலகம் மர்மமான சங்கேதங்கள், குறியீடுகளாலானது, இவற்றால் பின்னப்
MT S TTtttLLtttttt 000L0L SSS

Page 59
படுகிற அவருடைய மொழி போதையும் லயிப்பும் தருகிற கவித்துவமிக்க ஒன்று. இந்த மொழிக்குள் வைக்கப்படும் கதையென்பது துண்டுகளாலானது (fragments). துண்டுகளாக் 5 Lil' 5,60565 ITGiggi) (p68) puSci (fragmented narration) கதைகளைக் கண்டெடுக்க முடிவது என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
அந்தநாட்களில் எனது குறிப்புப் புத்தகம் லா.ச.ரா வின் வார்த்தைகளால் நிரம்பியிருந்தது. உக்கிரமான உணர்வுகளால் நான் காவிச்செல்லப்படுகிற போதெல்லாம் அந்த மூர்க்கத்தை, தகிப்பை சில சமயங்களில் உறைந்து போதலைப் பகிரக் கூடிய பிரதிகளாய் லா.ச.ரா வினுடைய பிரதிகள் இருந்தன. எப்போதெல்லாம் ஒருவித metaphysical train Of thought (9! (6) L u 6miĝśaj, ĝi ĝiFţăĝ568) 681g, Gig5 TL ... jářĝfo ?) மனதில் ஆரம்பிக்கிறதோ அப்போதெல்லாம் லா.ச.ராவின் வார்த்தைகளில் சிந்திக்கப் பழகியிருந்தேன். இப்படியான ஒரு உத்தியை மிகவும் physical ஆன எனது அந்நாளைய பிரச்சினைகளைக் கடந்து செல்கிறதற்குப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். (எனதல்லாத இன்னொருத்தரின் வார்த்தை களில் என்னைப் பற்றிச் சிந்திப்பது குறித்த சிக்கலின் உக்கிரத்தைத் தணிக்க உதவிற்றுப் போலும்.)
லா.ச.ராவைப் புரிந்து/உணர்ந்து கொள்வதும் சரி. புரியாமல் தவிப்பதும் சரி மிகவும் இன்பமான அனுபவங்கள் தான். புரியாது/உணரமுடியாது போய்விடின் அந்த நிலைமை தருகிற அந்தரிப்பு, தவிப்பு, அலைக்கழிப் புரிந்து/உணர்ந்து கொண்டால் அந்தப் புரிதலின் வலி, தன்னை
1பு என்பன ஒருபுறம்
உணர்தலில் ஏற்படுகிற சுயபச்சாத்தாபம் என்பன மறுபுறம். இப்படியாக லா.ச.ராவின் பிரதி தருகிற இன்பம் விநோதமான ஒன்று.
அக்காலப்பகுதியில் பிடித்த8ாயிருந்த பெண்ணு டல், தாபம், காமம் பற்றிய விபரிப்புகளை லா.ச.ராவிடம் (ஓரளவுக்கு ஜானகிராமனிடத்திலும்) நான் லயிப்புடன் அனுபவித்திருக்கிறேன். ஜானகி
ராமனின் பெண்டைல்
பற்றிய விபரிப்புகள் !!தார்த்
தமானவை. உலர்ந்து மரக்கட்டையாகிவிட்ட ‘மோகமுள் ஜமுனாவின் உதடுகள் யதார்த்தமானவைதான் என்றாலும் பதின்ம வயதின் கனவுகளை அது குலைப்பதாய்த்தான் இருந்தது. லா.ச.ராவின் பெண்ணுடல் பற்றிய விபரிப்புகள் இப்படியான இடையூறுகளைத் தந்தது இல்லை. அது ஒரு fantaSy அன்றைய மனோநிலைக்கு யதார்த்த நீக்கம் செய்யப்பட்ட பெண்ணுடல் அவசியமானதுதானில்லையா? மிகவும் physical ஆனSensuality யாக தி.ஜா. இருக்க லா.ச.ரா ஆணின் tantaSy களுக்கான பெண்ணுடல்களை தனது பிரதிக்குள் வைத்திருந்தார். இதனால்தான் தமிழ் எழுத்துப் பரப்பில் 9,6%Т60LD Tupleo u 15 (masculine language) GTGšТLJ Gogiji சாத்தியமாக்கிக் காட்டியவரென லா.ச.ரா. குறிப்பிடப்படுவது உண்டு. (இங்கு தி.ஜாவின் விபரிப்புகளின் வலிமையை நான் குறைக்கிறேன் என்றில்லை. அவை வலிமையானவைதான் ஆனால் ஒரு பதின்ம வயது இளைஞனுக்கல்ல.)
லா.ச.ரா தனது நேர்காணலொன்றில் பின்வருமாறு go! Spitfi: “I live in terms of music, I speak in terms of music.” இந்த இசையின் மாபெரும் ரசிகனாய் அடிமையாய் அல்லது லா.ச.ராவின் வார்த்தைகளில் சொல்வதானால் “அந்த செளந்தர்யத்தின் மாபெரும் உபாசகனாய்’ மாறிப் போய்
sതങ്ങupt, O ജെ
 
 
 
 
 

விட்டிருந்தேன். “பொதுவாக ஒரு தத்துவ விசாரமும் உக்கிரமான ஆத்மதாபமும்’ தன் எழுத்தின் உள்சரடாக ஒடிக்கொண்டிருப்பதாய் கூறுகிறார் லா.ச.ரா. அவரது பிரதிகள் குறித்த மிகச்சரியான மதிப்பீடு இதுவாய்த்தான் இருக்க முடியும்.
பதின்மங்களில் லா.ச.ரா பிரதிகளில் வேட்கையை, அவர் குறிப்பிடுகிற ஆத்மதாபத்தை வாசிக்க முடிந்ததே தவிர லா.ச.ராவின் ‘தத்துவ சாரத்தையோ’ அதற்கிருக்கக் கூடிய அரசியலையோ இனம்கண்டு வாசிக்க முடிந்தது இல்லை. 'தொனி’ என்கிற தமிழ்ப்பதிலி இருக்கும்போது லா.ச.ரா ஏன் ‘த்வனி’ என்கிற சமஸ்கிருதச் சொல்லைக் கையாளவேண்டும் என்கிற மிகச்சிறு விடயம், திராவிட இயக்கங்கள் இத்யாதி இத்யாதி எல்லாம் அப்போது உறைக்காமல் போய்விட்டதற்கு என்ன காரணம்?
3 யாழ். பொது நூலகம் மீண்டும் திறக்கப்பட்டதை யொட்டி லா.ச.ரா., தி.ஜானகிராமன், ஜெயகாந்தனுக்கப்பால் நகர முடிந்தது. காலச்சுவடு, உயிர்மை எல்லாம் அங்குதான் முதன்முதலில் கண்டேன். ஜெயமோகன், எஸ். ராமகிருஷ் ணன் என வாசிக்கத் தொடங்கி கோணங்கி, பிரேம்-ரமேஷ் எனப் பலரது பிரதி உலகங்களுக்குள் மூழ்கிப்போனதில் லா.ச.ரா போன்ற பழைய ஆதர்சங்களின் மீதான ஈர்ப்புக் குறைந்து போய்விட்டிருந்தது. ஆனால் கோணங்கியின் மொழியை அவ்வளவு சீக்கிரம் உணர்ந்துகொள்ள முடிந்ததில் லா.ச. ராவின் மொழியுடனான பரிச்சயம் உதவி புரிந்தது என்பதைச் சொல்லவேண்டும்.
பின்னர் ‘நிறப்பிரிகை”யின் பழைய இதழ்களையும், அப்பிரதிகள் சுட்டுகிற பிரதிகளையும் படித்ததில் கிடைத்த மிகவும் சுவாரசியமான வாசிப்புக் கருவிகளுடன் எனது முன்னாள் ஆதர்சங்களின் பிரதிகளுக்குள் மீள நுழைந்த போது முதலில் இற்று வீழ்ந்தவர் க.நா.சு.; லா.சராவைப் பொறுத்தவரை, பின்-நவீன புரிதல்களினடியாய் அவரது தத்துவ சாரத்தை அபாயகரமான ஒன்றாக இனம்கண்ட போதும், அவருடைய பிரதிகளின் கவர்ச்சியை, ஈர்ப்பை என்னால் மறுக்கவோ/மறைக்கவோ முடிந்தது இல்லை. லா.ச.ரா எனக்குப் பிடித்த பிரதியாளராகத் தொடர்ந்தும் இருப்பதில் சிலகாலம் பயங்கரமான குற்ற உணர்வு இருந்தது. ‘புதிய தோழர்கள்’ லா.ச.ரா. பிரதிகைைள விரும்புவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்.
லா.ச.ரா.வின் ‘அகம் சார்ந்த தேடல்’ என்பது இந்திய இந்துத்துவப் பெருமரபைச் சேர்ந்த ஒன்று. அது தனது பண்பாட்டு எல்லைகளை மீறுகிற முனைப்புடன் எங்குமே இருந்தது இல்லை. உண்மையில் நான் 'அபிதாவில் இருந்த உணர்ச்சிக்குவிப்பு, மூர்க்கமிக்க அலைக்கழிக்கும் விபரிப்பு களில் ஊறிப்போய், ‘இறுதிவரை அம்பி, அபிதாவின் விரல்நுனியைக் கூடத் தீண்டாமல் இருந்தா’ என்பதற்கு இருக்கும் மரபார்ந்த அற உணர்ச்சிசார் பொறுப்புணர்வைக் கவனிக்கவில்லை. அபிதா நாவலின் முன்னுரையின் 'அபிதா' என்பதை 'உண்ணாமுலையம்மன்’ என்கிற அர்த்தம் வரும் படிக்கு விளக்கியிருப்பார் லா.ச.ரா. வேட்கை, காமம் பற்றிய விபரிப்புகள்கூட எல்லை மீறாமல் ஒருவித புனிதப்படுத்து கையுடன் இடப்படுத்தப்பட்டிருப்பதையும், அதன் மூலம் கிரேக்க கதார்ஸிஸ் ஒன்று நிகழ்த்தப்பட்டு மனதை
ல - டிசெம்பர் 2007

Page 60
நிர்மலமாக்குகிற ஆன்மீகநோக்கமே இயங்குகிறது என்பதை யும் அதிர்ச்சியுடன் உணர நேர்ந்தது.
தனது பிரதியாக்கமுறை பற்றி எழுதுகிற லா.ச.ரா MySticism உடன் தன்னை இனம்காட்டிக்கொள்ள விரும்பு வதைக் காணலாம். லா.ச.ராவின் Mysticism உம் பின்நவீனம் ஆதரிக்கிற சிறுமரபுசார் தொன்மங்களின் mythopoetic texts உம் வேறு வேறு. லா.ச.ராவின் MySticism ஆன்மீகத் தன்மையான சங்கேதங்கள், புனிதக் குறியீடுகள், மர்மம், ஆன்மவிசாரத்தைச் சாத்தியமாக்குகிற கவிதையியல், கதார்ஸிஸைக் கொணரும் அழகியல் விபரிப்பு என்பதையே தனது கூறுகளாய்க் கொண்டியங்குகிறது. இந்தவகை எழுத்து முறையை லா.ச.ரா. இந்துத்துவக் கூறுகளுடன் இணைக்கும் போது அவரது பிரதி ஒர் இந்துத்துவ அரசியலில் பிரதியாக மாறி விடுகிறது.
லா.ச.ராவின் பிரதியாக்க நுட்பத்தை ‘நனவோடை o gig)” (Stream of consciouSmeSS) 61657.ji (95{óì713ì(5)6)JTj9,6ằT. ஆங்கிலத்தில் இந்த உத்திக்காக அறியப்படுகிற ஜேம்ஸ் ஜொய்ஸையும் லா.ச.ராவையும் ஒருசேரப் படிப்பவர்கள் லா.ச.ராவின் பிரதிகளில் இயங்குகிற "புனித ஒழுங்கை உணர முடியும்.
ஜேம்ஸ் ஜொய்ஸ் குறித்து லா.ச.ராவிடம் கேட்கப்பட்டபோது யுலிஸிஸ் நாவல்”அப்பட்டம், வக்கிரம், குப்பை, ஆபாசம், சாக்கடை கலந்தது” எனக் கூறி நிராகரிக் கிறார். அந்த நேர்காணலிலேயே தனது பிரதிகளில் கையாளுகிற நனவோடை உத்தியை ஜேம்ஸ் ஜொய்ஸிடமி ருந்து வேறு பிரித்து அணுகும் படியும் லா.ச.ரா கேட்டுக் கொள்கிறார் “நீங்களெல்லாம் எண்ணுகிற நனவோடை அல்ல அது. எண்ணத்திலேயே பரிசுத்தமாக அதை நான் கையாண்டு இருக்கிறேன். குதிரை பசும் புல்லைத்தான் தின்னும், வைக்கோலைத் தின்னாது. அது போலப் பசும்புல்லை மேயவிட்டிருப்பேன்.”
இக்கூற்றிலிருந்து லா.ச.ராவின் பிரதிகளில் வைக்கோலைத் தின்னுகிற கழுதை, மலத்தை உண்கிற பன்றி அன்ன பிற விலங்குகளுக்கு வழங்கப்படுகிற இடத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். தலித்துக்கள், விளிம்புநிலை மனிதர்கள், மனப்பிறழ்வுற்றோர், வன்முறையாளர்கள் எல்லாம் லா.ச.ராவின் நனவோடையின் புனித எல்லைகளுக் கப் பால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். லா.ச.ரா கூறுவதுபோல அங்கு பசும் புற்கள் தான் உண்டு, கருகிய புற்களின் கதியென்ன? இதனடியாக லா.ச.ரா தனது பிரதிகளை, அவற்றின் அழகியலை எந்த வர்க்கத்தின், சாதியின் சொல்லாடல்களுடன் இணைக்கிறார் என்பதை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது.
லா.ச.ராவின் மறைவை யொட்டி ‘நான்காவது பரிமாணம் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் (நவம்பர் 03, 2007 “ஐ’ அலைவரிசை) உரையாடலில் கலந்து கொண்ட எஸ்.எல்.எம். ஹனீபாவின் கருத்துக்களைக் கேட்டபோது, லா.ச.ரா பிரதிகளின் மரபுவாத/பழமைவாதக் கூறுகளை மேலும் தீவிரமாய் உணர முடிந்தது. எஸ்.எல்.எம். ஹனிபா, லா.ச.ராவின் மொழி பிரதிநுணுக்கங்கள் பற்றிக் கவனம் குவிக்கவேயில்லை. மாறாக, லா.ச.ராவிடமிருந்து இக்காலத் தைய இளைஞரொருவர் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்களைப் பட்டியலிடுகிற காரியத்தையே அவர் (மிகவும்
58 கலைமுகம் O ஜூ

உவப்புடன்) செய்தார். லா.ச.ராவின் பிரதிகள் வலியுறுத்துகிற கூட்டுக்குடும்ப மரபுகள், அவர்களின் பண்பாட்டு ஒழுங்கமைப்பு வாழ்தல் நோக்கங்கள் ஆகியவற்றின் உயரிய தன்மை என்பன சிலாகிக்கப்படுகையில் குறித்த குடும்ப நிறுவனத்திற்குள் சிக்குண்டு மூச்சுவிடவே திணறிக்கொண்டி ருக்கிற ஒரு சிறு பெடியனாய், பெட்டையாய் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறவர்களிடம் லா.ச.ரா பற்றி உருவாக்கியளிக்கப் படுகிற சித்திரம் எதுவாயிருக்கக் கூடும்?
லா.ச.ராவை இவற்றுக்காக நிராகரித்துவிடுதல் சாத்தியமில்லை. அவரது பிரதிகளில் மிக இளம் தலைமுறை யினர் வாசிக்க வேண்டிய நிறைய வேறு விடயங்கள் உண்டு. எஸ்.எல்.எம். கூறிய விடயங்களை அல்லது லா.ச.ராவின் பேட்டிகள் வலியுறுத்துகிற விடயங்களைத் தான் நாம் அப்பிரதிகளில் வாசிக்க வேண்டுமென்பது இல்லை.
இன்றைக்கு லா.ச.ராவை நான் வாசிக்கும் போது முன்பு போல் அவரது மொழியின் போதையேற்றலில் மயங்கிக் கிடப்பதில்லை. அவரது பிரதியின் சொல்லப்படாத பக்கங்களைச் சேர்த்து வாசிக்க முடிகிறது. இதுவும் கூட இன்பம் தருவதுதான். மொழிபுகளின் லாவகமான நெளிவு சுளிவுகளில் வழுக்கியபடி லா.ச.ராவின் அரசியலை வாசிப்பது இன்னொருவித கிறக்கத்தைத் தருகிறது. இதுகூட அவரது மொழியின் அசாத்தியமான தன்மையால்தான் என நினைக்கிறேன். ஏனெனில் க.நா.சு, சி.சு.செல்லப்பா போன்றவர்களிடத்து கட்டுடைப்பு வினையென்பது அவ்வ ளவு சுவாரசியமாய் இருந்ததில்லை. ஏனெனில் அங்கு மொழிவிளையாட்டுக்கு அர்த்தங்களை ஊகித்துச் செல்வதற்கு இடமே யில்லை. இங்கு அர்த்தங்களைச் சந்தேகப்படுத்தி வேறு வேறு சூழமைவுகளில் இடப்படுத்தியணுகுகிற ஒரு தன்மை இருக்கிறது. இந்த நிலைமையைத்தான் ‘நல்ல இலக்கியத்துக்கான தகுதியாக ரோலன் பார்த் குறிப்பிடுவது வழக்கம்.
இந்த மொழியை நாம் லா.ச.ராவிடத்து இன்னும் ஆழமாய் புரிந்து வாசிக்க முயல வேண்டும். அதே போல இந்த ஆண்மொழி முக்கியமானது. தி.ஜானகிராமன், நகுலன் (சுசீலா) லா.ச.ரா. (அபிதா ஏகா ஜனனி) போன்றவார்களிடம் masculine language என்பது இயங்குகிற விதம் அதில் பெண்மை/பெண் ஆகியவை எங்கனம் மற்றும் எவ்விதத்தில் இடப்படுத்தவும் இடமளிக்கவும் பட்டிருக்கின்றன என்பதை வாசிப்புச் செய்ய வேண்டும். இப்படியாக லா.ச.ராவை முன்வைத்து உரையாட ஏராளம் விடயங்கள் உண்டு. அவரது பிரதிகளுக்கும் கர்நாடக சங்கீதக் கட்டுமானத்துக்கும் இடையேயிருக்கிற இசைவினைவுகள் அவரது பிரதிகளில் கையாளப்பட்ட நனவோடை உத்தியில் Continuity of conscience(பிரக்ஞையின் தொடர்ச்சி) மற்றும் Conscience of continuty (தொடர்ச்சி குறித்த பிரக்ஞை) எனுமிரண்டும் ஒன்றையொன்று குறுக்கீடு செய்கிற விதம் இப்படியான குறுக்கீட்டால் அமைக்கப்படுகிற அவரது Narrative Instalments இந்தக் கதைசொல்லல் துண்டுபடுத்தப்படுகிற விதம் இந்தத் துண்டுகள் தமக்கிடையிலாகப் பேணிக்கொள்கிற 6?(56îg5 - 9gg5 6@(pii (35 (meta-structure of fragmented narTatives) . இவை பற்றியெல்லாம் லா.ச.ரா பிரதிகளை முன்வைத்து உரையாடவேண்டும் குறிப்பாகப் பெண்ணியர் கள் மற்றும் பின்நவீனப் பிரதியாளர்கள். எமது முன்னைய
லை. டிசெம்பர் 2007

Page 61
தலைமுறை லா.ச.ராவை நிராகரித்தது. (கைலாசபதி) விளங்கவில்லை என்று அப்பால் வைத்தது. நாம் லா.ச.ராவை மீள வாசிக்க வேண்டும். மேலும் மேலும் சிக்கலடைந்து செல்கிற பிரதிகளை விளங்கிக்கொள்ள இதுபோன்ற மீள்வாசிப்புக்கள் அவசியமானவை. லா.சா.ரா வின் பிரதிகள் பற்றிய உரையாடல் தமிழில் உரிய காலகட்டத்தில் நடந்திருந்தால் இன்றைக்குக் கோணங்கியை; பிரேம்ரமேஷை விளங்கிக் கொள்வதில் நாம் இவ்வளவுக்குப் பின்நிற்கத் தேவையில்லை. மாறாக இன்னும் தீவிரமாக இவர்களது பிரதிகளை வாசிப்புச் செய்வதற்கான தகைமை களை பெற்றுக்கொண்டிருந்திருப்போம்.
4
லா.ச.ராவை வாசிப்பதென்பது அவ்வளவு கடினமான, சுமையான விடயமில்லை. அந்த அனுபவம் அலாதியானது. தலைமுறைகள், கோட்பாடுகள், வியாக்கி யானங்கள், விமர்சனங்கள் கடந்து அவற்றை மீறி லா.ச.ராவின் மொழிக்கு இருக்கிற அந்த அரூபமான, மெளனமான இசை என்னை மிகவும் வசப்படுத்தி அலைக்கழித்தது. இப்போது அரசியல் புரிந்திருக்கிற நிலையிலும் அப்பிரதிகளை வாசிப் பது இன்பம்தருகிற ஒன்றாகவே இருக்கிறது. அந்த இசை
கருத்தரங்குகள் - கண்க யாழ் பல்கலைக்கழக கலைவ
யாழ் பல்கலைக்கழக கலைவட்டமும், நுண்கலைத் துறையும் இணைந்து பல்வேறு செயற்பாடு களை அண்மைக் காலமாக நிகழ்த்தி வருகின்றன. இச் செயற்பாடுகள் கலை சார்ந்த கருத்தரங்குகள், படக் காட்சிகள், கண்காட்சிகளாக அ!ை
tந்துள்ளன. இவை யாழ். பல்கலைக்கழக பொருளியல் துறை மண்டபம், கலைப்பீட புதிய கட்டடத் தொகுதி ஆகியவற்றில் இடம்பெற்று வருகின்றன.
555jJsfilöj56)T
16 - OS - 2007
- &r . . . . . . . . . •y- r * Υ . பொருள அரு ப ம பாருளகம: கறபதங்களும, யதார்த்தமும்
உரை திரு. ஜீவரட்ணம் ஜெயதிஸ்
23 - O8 - 2007 பொருள் : “இராகமாலிகை ஒவியங்களிலிருந்து இராகமும் வர்ணமும்
உரை செல்வி குமுதா சோமசுந்தரக்குருக்கள்
1 - 10 - 2007
பொருள் ‘மேற்கத்தைய - சமஸ்கிருத தமிழ் காவியங்கள் -
ஒர் ஒப்பீட்டு நோக்கு
உ ை கலாநிதி அடமிர்தாஞ்சலி சிவபாலன்
கலைமுகம் 0 ஜூை
 
 

ஓய்ந்து போய்விடவில்லை.
நகுலன் இறந்த போது “நகுலன் இறந்த பின்னும் ஒலிநாடா ஒடிக்கொண்டிருக்கிறது’ எனும் வாக்கியத்தை கோணங்கியின் “பொம்மைகள் உடைபடும் நகரம்’ தொகுப் பிலிருந்து எடுத்து முகப்பில் பிரசுரித்திருந்தது ‘உயிர்மை’ இதழ். லா.ச.ரா இறந்துபோய்விட்ட செய்தியைக் கேள்விப் பட்டவுடன் இந்த ஒலிநாடா வாக்கியம்தான் உடனடியாய் நினைவில் வந்தது. இதை எழுதுவதற்காய் லா.ச.ராவின் பிரதிகள் சிலதை மீள வாசிக்கும்போது அப்போதெல்லாம் கேட்ட, நான் உபாசித்த இரசிகனாயிருந்த அதே இசை கேட்கிறதா எனக் கவனித்தேன்; மெளனம், மெளனம், குளிர்கிற மெளனம். எதிர் இருக்கையில் இருந்து உரையாடிக்கொண்டும் இசைத்துக்கொண்டும் இருந்த, பல காலம் பழகிய ஒருத்தர் எழுந்து போய்விட்டிருக்கிறார். அந்த இருக்கை வெறுமையாகவே இருக்கிறது.அப்படியான ஒரு வெறுமையை பிரதிகளை- குறிப்பாக அபிதாவை வாசிக்கும் போது மிகவும் பெளதீகமாகவே உணரக்கூடியதாய் இருந்தது. லா.ச.ரா என்கிற மனிதருடன் இவ்வளவு காலமும் உரையாடிக்கொண்டா இருந்திருக்கிறேன்?! அப்படியானால் ‘பிரதியாளரின் மரணம்?? சொல்லத் தெரியவில்லை.
råöoi - LLä öTåöoi Iட்டத்தின் தொடர் நிகழ்வுகள்
thodoTESTA56ir
5, 6, 8 ஒக்ரோபர் 2007
Speaking Stone GT6576): th Guujifai di Liiasts ராஜ்குமாரின் புகைப்படக் காட்சி - இவற்றுடன் தஞ்சைப் பெரிய கோயில், மாமல்லபுரம் பற்றி ஆவணப் புகைப்படக் காட்சியும் 6ஆம் திகதி மாலையில் இடம்பெற்றது.
0ZBLLIff 2002
Light From The Dark GT6573), Lt. G. Luff.gi பல்கலைக்கழக மாணவர்களின் புகைப்படக்காட்சி. இதில் இராமநாதன் நுண்கலைப்பீட சித்திரமும் வடிவமைப்பும் துறை மாணவர்கள் முதற்தடவையாகப் பங்கேற்றார்கள்.
படக் காட்சிகள்
02 - 08 - 2007 உலகப் புகழ் பெற்ற ஜப்பானிய திரைப்பட நெறியாளர் அக்கிராகுரோசோவின் ஒஸ்கார் விருது பெற்ற ரஷ்மோன்’ திரைப்படம்
21 - 09 - 2007 அண்மையில் காலமான உலகப் புகழ் பெற்ற திரைப்பட இயக்குநர் இங்க்மர் பெர்க்மனின் நினைவாகவும், மாணவர்களுக்கு அவரை அறிமுகம் செய்யும் 14:17:51 313 fošt Winter Light 56.) TL II it .
OLS LTttLl 0000 SSeeYSS

Page 62
இங்மர் பெர்க்மன்
രaംബി-ീULL മൃര്ഗmാരൂ?Gബ്രb0
O வறரிகரன்
சுவீடனைச் சேர்ந்த திரைப்பட நெறியாளரான இங்மர் பெர்க்மன் 20 ஆம் நூற்றாண்டின் செல்வாக்கு மிகுந்த இயக்குநர்களில் ஒருவர். 62 திரைப்படங்கள், 170க்கு மேற்பட்ட நாடகங்களை நெறியாள்கை செய்த இங்மர் பெர்க்மனின் மரணம் பெர்க்மனின் திரைப்படங்களுடன் பரிச்சயமுள்ளவர்களுக்கு மிகவும் துயரம் தருகிற ஒன்றாகத் தான் இருந்திருக்க முடியும். பெர்க்மனை அறிந்த யாரொரு வரும் அவரைப்பற்றி மிதமிஞ்சிய லயிப்புடனேயே நினைவுகூர நேர்வதைக் கண்டிருக்கிறேன்.
Winter Lightதான் அவரது படங்களில் நான் முதன்முதலில் பார்க்க நேர்ந்த படம். அக்காலப்பகுதியில் எனது இரசனை பிரான்ஸின் கோடார்ட், ரோஜர் வாடிம் ஆகியோரின் துணிச்சலான திரைபடங்களில், ஆர்வத்தைத் தூண்டுகிற பாஸ்பைண்டரின் GLBTசினிமாக்களில் மையம் கொண்டிருந்ததில் இங்மர் பெர்க்மன் முக்கியமானவராய்ப் படவில்லை.
சமீபத்தில் யாழ். பல்கலைக்கழகத்தில் Winter Light திரையிடப்பட்டபோது நேரமொதுக்கிச் சென்று பார்த்ததற்கு முக்கிய காரணம், சில தினங்கள் முன்பாய் நான் வாசிக்க நேர்ந்த அன்னை தி ரேசாவின் ‘இறை நம்பிக்கையை விசாரணை செய்கிற ஒரு கட்டுரை. திரேசாவின் சர்ச்சைக்குரிய கடிதப் பரிமாற்றங்களை ஆதாரம் காட்ட இறைவரிைன் g) Gð7 GOLD GO Lu (absense of god) g6) É3gáFIT 3 GAJ Jg5! 31 Typ Ib Tai முழுவதும் அனுபவித்ததாய் எழுதியிருந்தது Time இதழ். இறைவன் என்பதன் வெறுமையை உணர்ந்துகொள்ளல் என்கிற ஒரு படிநிலையை அவ்வளவு மனவலியுடன் நான் அனுபவித்தது இல்லை. நீட்ஷே கடவுளின் மரணத்தை அறிவிக்க, கார்ல் மார்க்ஸ் மதத்தை ஒரு கட்டமைக்கப்பட்ட நிறுவனமாய் அணுக உண்மையில் என்னிடமிருப்பது கடவுளைக் கொலைசெய்த திருப்தி மாத்திரமே.
இருப்பியற் கேள்விகளை நம்பிக்கை, அறம் இறைவனின் புனித இருப்பு என்பவற்றின் மீது வைப்பதன் மூலம் அவற்றை விசாரணை செய்த அவரது மூன்று 360Jiul iii.56-5 (BLD (Winter Light, Through a Glass Darkly The Silencec epGöt plub Trilogy 67 607ji (95p6)ů96) 9 ( DVDயில் கிடைக்கிறது) எனக்குப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தவை. மூன்றிலுமே நான் அழுவதற்கான நிமிடங்கள் இருந்தன. பெர்க்மன் துயரமிகு தருணங்கள் கொண்டவர் அவற்றின் கருப்பொருளான ‘கடவுளின் மெளனம்/இன்மை யுடன் எனக்கு மிகவும் தூரமான அனுபவங்கள்தான் உண்டென்கிற போதிலும் கதாபாத்திரங்களின் தனிமை அகவுலகு சார்ந்த சிக்கல்களுடன் இலகுவில் அடையாளப் கண்டு கொள்ள முடிந்திருக்கிறது. 2004 இல் ‘த கார்டியன்
60 கலைமுகம் O

14.07. 1918 - 30.07.2007
இதழுக்கு வழங்கிய பேட்டியில் தனது படங்கள் depressive ஆனவை என்பதையும் தன்னையே அழவைத்துவிடும் வல்லமையுடனிருப்பவை எனவும் அவர் ஒப்புக்கொள்கிறார். அவரது படங்கள் நல்ல கவிதைகள் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடே. உளவியல், தத்துவம், கலை எனும் மூன்றையுமே மிகுந்த கலை நேர்த்தியுடன் அழகாக ஒருங்கிணைத்திருப்பார். ஒவ்வொரு frame இலும் அப்பட்டமான கலை நேர்த்தியும் குறியீட்டுத்தன்மையும் மிளிரும்.
பெரும்பாலான நேரமும் பனிபொழிகிற Winter Light இல் அடிக்கடி “Cod's Silence' என்கிற வசனம் வரும். க1. :வின் :ெனத் : : :த்தி
1ங்கள் அனைவரும் அப்பணியின் குளிரென 2 எணர்கிறார்கள். ஆஸ்த்துமாவிலும் தனிமையிலும் அவதியுறுகிற பாதிரியார், எக்ஸிமாவால் தனிமையால் துன்பப்படுத்தப்படுகிற ஆசிரியை, போரின் பின்னான மனவடுவில் உழல்கிற மனிதன், அவனது மனைவி என எல்லோரும் கைவிடப்பட்ட மனிதர்கள், கடவுளால்.
மனவடுவால் பாதிக்கப்பட்ட மனிதன் தற்கொலை செய்து கொள்கிறான், பனி பொழிகிறது. கணவன் இறந்த செய்தி அவளுக்குத் தெரிவிக்கப்படுகையில் அவள் (ositoi Spitoit"So, I'm all alone'' 605 goid 56&760fcil 6aig5. நோயின் பீடிப்பு, இழப்பு, நம்பிக்கையின்மை ஆகியவற்றின் பின்னணியில் மனித உறவுகளின் அர்த்தங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார் பெர்க்மன்.
ஒளிமிகுந்தவையென நம்பப்படும் விடயங்களில் இருளைப் பூசி விடுவது பெர்க்மனின் அழகு. காதலின் மீதான நம்பிக்கை,அவநம்பிக்கைக்கிடையில் ஊசலாடுதல் The Sev. enth Seal திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் சொல்கிறது: "Love is the blackest of all plagues' gair(660TTC, 35.TLuigi Sulb g) Ligd G.s. Spg|: "Between you and me, isn't life a dirty | mess?’ இந்தச் சிக்கல்களை பெர்க்மன் காட்சிப்படுத்துகிற விதம் Poetic Realism (கவித்துவ யதார்த்தம்) என்கிற வகைமையைச் சேர்ந்த ஒன்று.
ஜூலை-டிசெம்பர் 2007

Page 63
பெர்க்மனை இரசிப்பதற்கு தீவிர சினிமா பற்றிய ஆழமான புரிதல் போன்ற விடயங்கள் தேவையென தமிழ் அறிமுகங்களில் குறிப்பிடப்படுவது உண்டு. பெர்க்மனைப் பற்றி அறிந்து கொள்ளவோ அவரது திரைப்படங்களைப் பார்க்கவோ ஒருபோதும் வாய்ப்பளிக்கப்படாதவர்களிடம் தம்மைப்பற்றிய உயர்வான பிம்பத்தை ஏற்படுத்திக் கொள்ள இவை ஒரு வேளை உதவக் கூடும். பெர்க்மன் சிக்கலற்றவர் என்றே நான் கருதுகிறேன். ஆபாச/வக்கிர சஞ்சிகையாகச் சொல்லப்படும் Play Boyசஞ்சிகைக்கு அவர் 1964இல் அளித்த Gul Lusai (515th SG) Spitfi: "I want my audiences to feel, to sense my films. This to me is important than their understanding of it.” (எனது பார்வையாளர்கள் திரைப்படங் களை உணர்ந்துகொள்ளவேண்டும் என விரும்புகின்றேன். இது அவர்கள் எனது படத்தைப் புரிந்துகொள்வதைவிட முக்கியமானது.) இது மிக முக்கியமான உண்மை.
பெர்க்மனின் படங்களில் இழையோடுகிற நம்பிக்கை, அவநம்பிக்கை இரண்டுக்குமிடையிலான பிணைப்புகளை உணர்வதற்கு மிகவும் சிறிய இதயம் ஒன்றிருத்தல் போதுமானது. இதுவரையான ஒருத்தரது வாழ்நாளில் கொஞ்சம் இருளை, ஒளியை, கொஞ்சம் மங்கல்தன்மையை அவர் உணர்ந்திருந்தால் அவரால் பெர்க்மனின் படங்களுக்குள் தன்னைத் தொலைத்துக் கொள்ள முடியும்.
இப்படியான தன்மைகள் மிகவும் விரும்பப்படுகிற ஒரு இயக்குநராக அவரை மாற்றியிருக்கிறது. பெர்க்மனுடைய பாதிப்பு தமது திரைப்படங்களில் உள்ளது என்பதை பெருமையுடன் குறிப்பிடுகிற இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஹொலிவூட்டின் வூடி அலன், ஸ்ரான்லி குப்ரிக் போன்ற வர்கள் பெர்க்மனை உயர்வான வார்த்தைகளில் சொல்வது வழக்கம். தீவிர சினிமாவின் குரோசோவா, பெலினி, ரே போன்றவர்களுடன் இணைத்துப் பேசப்படுகிற அதே சமயம் ‘ரைம்’ இதழின் முகப்பில் இடம்பிடித்து அவ்விதழால் கவர்
ஏ. ஜே. கனகரத்னா முதலாண்டு நினைவு
மறைந்த இலக்கிய விமர்சகரும், பத்திரிகையாளருமான ஏ. ஜே. கனகரத்னா அவர்களின் மறைவின் முதலாவது ஆண்டினை நினைவு கூரும் முகமாக ஏ. ஜே. யின் நண்பர்கள் ஏற்பாடு செய்த நினைவுரை நிகழ்வு 24 - 10 - 2007 மாலை 3.15 மணியளவில் யாழ். பல்கலைக்கழக புவியற்றுறை மண்டபத்தில் இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி இரா. சிவச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில் ‘நவீன தமிழிலக்கியம்: புனைகதை ஒரு 1.27 canagave
முன்னுரை' என்னும் தலைப்பில் எழுத்தாளர்
க. சட்டநாதன் நினைவுரையை வழங்கினார். ஆரம்ப ஜி.ஜே. கனகரத்
நிகழ்வாக ஏ. ஜே.\யின் திருவுருவப் படத்துக்கு குழந்தை ம. சண்முகலிங்கம் மாலை அணிவித்தார்.
Ꮕ8t .
hapao pasib O roopa
 
 

ஸ்ரோரி செய்யப்படும் அளவுக்குப் பிரபலமானவராகவும் இருந்தார். சிறிது காலத்திற்கு பெர்க்மன் உயர்மத்திய வர்க்கத்தின் விரும்பப்படுகிற இயக்குநராக இருந்திருக்கிறார். அவர் இறந்த போது “வூடி அலனுக்குப் பிடித்த இயக்குநர் செத்துப்போனாராம்” என்றே அமெரிக்கா நினைவு கூர நேர்ந்ததற்குக் காரணம் பெர்க்மன் திரைப்படங்களின் கலைத்துவம் விளங்காமல் அல்ல. பெர்க்மனின் திரைப் படங்கள் அலசுகிற ஆன்மாவின் வலி நிறைந்த சிக்கல்களைப் பற்றியெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க தற்போதைய உலகில் யாருக்குத்தான் நேரமிருக்கிறது? வணிக ரீதியில் பெர்க்மன் எடுபடாமல் போனதற்கு அவரது உத்திகளின் இருண்மை என்பதை விட தெரிவு செய்த themeகளே காரணம். பெர்க்மனின் படங்கள் வணிக ரீதியில் வெற்றி பெறாததையிட்டு அதை உயர்கலையாக மாற்ற முயற்சிப் பவர்களைக் கண்டால் பரிதாபமாய் இருக்கிறது.
அசோகமித்திரன் போன்றவர்கள் பெர்க்மனை “எட்டாத உயரத்தில் மின்னுபவர்’ எனக் குறிப்பிடுகையில் அப்படிக் குறிப்பிட்டுக்கொண்டிருக்க வேண்டியிருப்பதன் தேவைகள் எவையாயிருக்கக் கூடும் என்றே நினைக்கத் தோன்றுகிறது. பெர்க்மனுடைய திரைப்படங்களின் மையக் கருக்கள், குறியீடுகள், இருண்மையான சங்கேதங்கள் போன்றவை ஒருபுறமிருக்க, அக் கதாபாத்திரங்களின் தருணங் களுடன் எந்த ஒருவரும் ஒரு கணத்திலேனும் தம்மை அடையாளம் கண்டு கொள்ளவே நேரும். அதனால்தான் பெர்க்மனை சிக்கலற்றவர் எனக் குறிப்பிட்டேன். இன்னும் சொல்வதானால், பெர்க்மனின் படங்கள் கைவிடப்பட்ட ஆன்மாக்களுக்கு மிக மிக அருகில்தான் இருக்கின்றன. பயன்பெறு பிரதிகள் The Guardian Unlimited Resources on Bergman The Winter Light, Silence, Through a glass darkly The seventh seal Script மரணத்துடன் ஒரு சதுரங்கம். அசோகமித்திரன், காலச்சுவடு
தொடர்ந்து மங்கல விளக்குகளை நவாலியூர் நடசேனும், திரு. சி. திருநாவுக்கரசும் (எஸ். ரி. அரசு) ஏற்றி வைத்தார்கள். வரவேற்புரையை திரு. செ. சிவபாலன் (சிப்பி) வழங்கினார்.
நினைவுரையின்போது, நினைவுரை முழுவதும் கையேட்டு வடிவில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது. இந் நினைவுரை நிகழ்வு ஒவ்வோராண்டும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஏ. ஜே. கனகரத்னாவின் தனிப்பட்ட
சேகரிப்பில் இருந்த பல்துறை சார்ந்த 1500 வரையிலான நூல்களையும், யாழ் பல்கலைக்கழக நூலகத்திற்கு கையளிக்கும் நிகழ்வு 20-07-2007இல் யாழ். பல்கலைக்கழக நூலக மண்டபத்தில் இடம் பெற்றது. இதன்போது ஏ. ஜே. யின் நெருங்கிய நண்பரும், யாழ் பல்கலைக்கழக பரீட்சை அனுமதிகள் கிளையின் உதவிப் பதிவாளருமாகிய திரு.இ. கிருஷ்ணகுமார் யாழ். பல்கலைக்கழக பதில் துணை வேந்தர் பேராசிரியர் ஆர். குமாரவடிவேலிடம் நூல்களைக் கையளித்தார்.
J-L26.3 tibust 2007

Page 64
புலமைப்பரிசில் பா
அசாதாரண கன் ஒரு ே
செய்தித் தலைப்பு - 1
“கடும் முயற்சி, கடவுள் பக்தி, பெற்ே புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம்பெற்ற
செய்தித் தலைப்பு - 2
“கடத்தப்பட்டுள்ள எனது அப்பாவிட முதலிடம்பெற்ற மாணவன் வேண்டுகோள்
செய்தித் தலைப்பு - 3
“சென். பற்றிக்ஸ் மாணவன் யாழில் முத
செய்தித் தலைப்பு - 4
“5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்ை இரண்டாமிடத்தில் இரு மாணவர்கள்’
செய்தித் தலைப்பு - 5
“குண்டு வீச்சுக்கு மத்தியில் குப்பிவி பொறியியலாளராவது சிறுவனின் இலட்சியம்’
செய்தித் தலைப்பு - 6
“யாழ். சென். ஜோண் பொஸ்கோ மாண
செய்தித் தலைப்பு - 7
“பொஸ்கோவிலிருந்து 57 வீத மாணவர்
ܢܠ
தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியவுடன் தொடர்ந்து இருதினங்களில் யாழ்ப்பாணப் பத்திரிகைகள் வெளியிட்ட புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான செய்தி அளிக்கைகளில் இடம்பெற்ற பிரதான தலைப்புச் செய்திக ளையே பார்க்கிறீர்கள்.
முதல் மூன்று செய்தித் தலைப்புக்களும் இவ்வாண் டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 189 புள்ளிகளைப்பெற்று அகில இலங்கை ரீதியாக தமிழ்மொழி மூல மாணவர்கள் மத்தியில் இரண்டாமிடத்தையும் யாழ். மாவட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்றுக்கொண்ட
62 கலைமுகம் O ஜூ

பீட்சை சமூகத்திற்கு DIDuIIrafslairpg|T
ന്ദ്ര
கு க. வேல்தஞ்சன்
༄།
s
றார் ஆசிரியர்களே எனது வெற்றிக்குக் காரணம்
மதுஷன்.
உதயன் - 24.09.2007
டம் சித்தியடைந்த செய்தியைக் கூறவேண்டும்’
வலம்புரி - 24.09.2007
5லாமிடம்!”
யாழ். தினக்குரல் - 24.09.2007
சை யாழ். மாவட்டத்தில் தோற்றியோரில்
வலம்புரி - 25.09.2007
ளக்கில் கற்றுச் சாதனை படைத்த தி. ஈழமாறன்
யாழ். தினக்குரல் 25.09.2007
ாவனும் யாழ். மாவட்டத்தில் இரண்டாமிடம்’
யாழ். தினக்குரல் 25.09.2007
புலமைப்பரிசிலில் சித்தி’
உதயன் - 25.09.2007
செல்வன் மணிவண்ணன் மதுஷன் பற்றியனவாகும்.
செய்தித் தலைப்பு - 5 , கிளிநொச்சி திரேசா மகளிர் கல்லூரி மாணவன் செல்வன் திருமாறன் ஈழமாறன் பற்றியதாகும். அவர் 190புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியாக தமிழ்மொழிமூல மாணவர்கள் மத்தியில் முதலாமிடத்தை பெற்றவராவார்.
அகில இலங்கை ரீதியாக முதன்முறையாக இரு நூறுக்கு இருநூறு புள்ளிகளையும் பெற்று களுத்துறை மாவட்டத்தின் தக்ஸ்சிலா கல்லூரி மாணவன் சகி பசுறு 6975 (33 (rgör (Chagi Basuru Weerakoon) (p3GS) lub பெற்றுள்ளார். களுத்துறை மாவட்டத்தில் ஹொறன லை. டிசெம்பர் 2007

Page 65
என்னுமிடத்திலுள்ள பிரபல்யமில்லாத பாடசாலையொன் றின் ஒரு சாதாரண குடும்ப மாணவனே வீரக்கோன். வீரக்கோன் சிங்கள மொழி மாணவன்.
வழமைக்கு மாறாக களுத்துறை, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து உச்ச பெறுபேறுகளைப் பெற்றுள்ள மாணவர்கள் காணப்படுகிறார்கள். அகில இலங்கை ரீதியில் சிங்கள மொழிமூலத்திலோ தமிழ்மொழி மூலத்திலோ முதலாமிடம் பெற்ற மாணவர்கள் கொழும்பிலோ யாழ்ப்பா ணத்திலோ இல்லை. வழமையாக கொழும்பு றோயல் கல்லூரி, ஆனந்தா கல்லூரி, நாலந்தா கல்லூரி, விசாகா கல்லூரி போன்ற பிரபல பாடசாலைகள் மத்தியிலிருந்து அகில இலங்கை ரீதியான உச்ச பெறுபேறுகள் கிடைப்பதுண்டு. தமிழ்மொழி மூலமான உச்சப் பெறுபெறு பொதுவாக யாழ்ப்பாணத்திலுள்ள முன்னணிப் பாடசாலைகளிடமிருந்து விலகிச் சென்றுள்ளது.
களுத்துறையும் கிளிநொச்சியும் முறையே
வீரக்கோன், ஈழமாறன் எனும் இரு மாணவர்களின் உச்ச பெறுபேறுகள் காரணமாக மீண்டும் பேசப்படும் இடங்களாகி யுள்ளன. வீரக்கோனும் ஈழமாறனும் பாராட்டப்படவேண்டி யவர்கள்.
எனினும் வீரக்கோன்கள் ‘வெற்றிக்கோன்கள்’ ஆகுவதையும் ஈழமாறன்கள் ‘வெற்றிமாறன்கள்’ ஆகுவதை யும் ஏனைய மாவட்ட ரீதியான சிறந்த பெறுபேறுகளையும் ஊடகவியலாளர்கள் வெளியிடுவதோடு நின்றுவிடுகின்றனர். இதன் மறுபக்கம் யாது?
இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு அண்ணள வாக மூன்று இலட்சத்து இரண்டாயிரம் மாணவர்கள் (302, 000) அகில இலங்கை ரீதியாக சிங்கள, தமிழ் ஆகிய மொழிமூலங் களில் பரீட்சை எழுதினர். இத்தொகையில் ‘சித்தி பெற்றவர் கள் எனப்படும் மிக அற்ப தொகையான மாணவர்களில் ஒரு சாரார் குடும்ப வருமான நிலையைப் பொறுத்து மாதந்தோறும் தமக்கான புலமைப்பரிசில் நிதியுதவியைப் பெறுவர். அரசாங்க உத்தியோகத்தரின் பிள்ளைகளாகவும் வசதி படைத்த குடும்பத்தின் பிள்ளைகளாகவும் உள்ளோருக்கு புலமைப்பரிசில் நிதியுதவி கிடைக்கமாட்டாது. எனினும் அம் மாணவர்கள் பிரபலமான பாடசாலைகளில் தரம் ஆறிலிருந்து கல்வி கற்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
‘சித்தி பெறாத மாணவர்களினதும் அவர்களின் பெற்றோர்களினதும் நிலை மகிழ்ச்சியற்றதாகவும், மனவடுக் கள் நிறைந்ததாகவும் மாறிவிடுகின்றன. அகில இலங்கை ரீதியாக எடுத்துக் கொண்டால் இம்முறை பரீட்சைக்கு தோற்றிய மூன்று இலட்சத்து இரண்டாயிரம் மாணவர்களில் இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் நிலை, அவர்களது பெற்றோர்களின் நிலை மகிழ்ச்சியற்றதாகவும் மனத்தாக்கம் மிக்கதாகவும் மாறி விடுகின்றது.
புலமைப் பரிசில் பரீட்சையில் ‘சித்தியடைந்தோர்’ தொடர்பான ஊடகங்களின் செய்தி வெளியிடுகைகள், சித்தி யடைந்தோருக்கான பாராட்டுக்கள், புகழாரங்கள், அன்பளிப் புக்கள் தொடர்பான செய்தி வெளியிடுகைகள் முதலியன இடம்பெற்றவண்ணமே இருக்கும். வெற்றிச்சிகரத்தைத்
బ్తో
l
۰ تا ح3۶۰۰.
 
 
 
 

தொட்ட சில மாணவர்களைச் சுற்றியே ஊடகங்களினூடான பாராட்டு விளம்பரங்கள் அமையும். இந்நிலையில் குறிப் பிட்ட மாவட்ட மட்ட வெட்டுப் புள்ளியை அடைந்த ஏனைய ‘சித்தி பெற்ற மாணவர்கள் கூட உளரீதியாக நொந்துபோகும் நிலை உள்ளது.
உளசமூகரீதியாக நோக்குமிடத்து 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை சிறுவர்கள் மத்தியில் செயற்கைத்தனமான, ஒரு வகையில் கொடுரமான சமத்துவமின்மை, பாகுபாடு, பாரபட்சம் முதலியவற்றுக்கு வித்திட்டுச் சென்றுவிடுகிறது. மாவட்ட மட்டத்தில் கல்விகற்கும் பாடசாலைகள், புலமைப் பரிசில் பரீட்சையில் ‘சித்தியடையும் மாணவர்களின் மூலம் நிரப்பப்படும் போதே பாடசாலைகளின் தரநிர்ணயம்’ புலப்படும். நேற்றுவரை ஒரே வகுப்பில் சமத்துவமாகப் பழகிய மாணவர்களும் சமூகத்தில் அவர்களின் பெற்றோரும் பரீட்சைப் பெறுபேறுகளின் வெளியிடுகையுடன் தத்தமக் கிடையே அநேகமாக உளரீதியான முரண்படு நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சில குடும்பங்களில் பிள்ளைகளின் பெறுபேறுகள் கணவன் மனைவி மற்றும் அவர்களின் ஏனைய பிள்ளைகள் முதலியோரின் வாக்குவாதங்கள், சண்டை சச்சரவுகளுக்கும் இட்டுச் செல்கின்றன. உண்மையில் குறித்த வெட்டுப்புள்ளிக்குக் குறைவாகப் புள்ளிபெற்ற ஒவ்வொரு பிள்ளையும் ஆழ்மனதில் அழத்தான் செய்கிறது. சில பிள்ளைகளின் கண்களில் இது வெளியாகவே தெரியும்.
பெரும்பாலான மத்தியதர, உயர்தர குடும்பங்களி லும் கணிசமானதாழ்பொருளாதார நிலையுள்ள குடும்பங்களி லும் இப்பரீட்சைக்காக தமது பிள்ளைகளை தயார்படுத்து வதற்காக தரம் 4, தரம் 5 ஆகிய வகுப்புகளில் பெற்றோர் படும்பாடுகள் சொல்லில் அடங்காதவை. படி’ ‘படி’ என்று பிள்ளைகளைப் பிழித்தெடுத்துவிடுவார்கள். பல பெற்றோர் கள் தமது பிள்ளைகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைவது தமது கெளரவத்திற்கான உறுதியான அடையா ளமாகவே கருதுகின்றனர். உயர்கல்வித் தகைமையுள்ள பொருளாதார வசதி படைத்த பெற்றோர்களின் அதீத முயற்சி, அதீத வழிகாட்டல், அதீத வசதிகள் வழங்குதல் முதலிய வற்றின் மத்தியிலும் விவசாயக் குடும்பங்கள், வர்த்தகக் குடும்பங்கள் முதலியவற்றினர் மத்தியிலிருந்து வரும் பிள்ளைகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறு களைப் பெறுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற முடியாமை என்பது பல்வேறு காரணங்களில் தங்கியுள்ள விடயமாகும். ஆனால் பிள்ளைகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற முடியாமை உடனடியாக பெற்றோர்களையே பாதிக் கின்றது. பிள்ளைகளும் ஏற்கெனவே மனவருத்தமுற்று இருக்கும்போது பெற்றோர்கள், ஏனைய மூத்த, இளைய =கோதரரது கசப்பான கருத்துகளும் கண்டனங்களும் கோபதாபங்களும் பரீட்சை எழுதிய பிள்ளைகளை மேலும் கூடியளவு பாதிக்கின்றது. சிறுவர்களின் எதிர்கால வாழ்க்கைப் பரப்பு, கல்விப் பரப்பு ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது மிகவும் புறக்கணிக்கத்தக்கதான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப் தனால் தேவையற்ற சிரமங்களை பெற்றோர்கரு
- 1;a:}; n(){}" | ལྷན་ནས་ཚབ་”ཀླག་ནས་ད་

Page 66
பிள்ளைகளும் எதிர்நோக்குகின்றனர். பிள்ளைகளின் புலமைப்பரிசில் பரீட்சைச் சித்தியை எப்படிப் பெற்றோர் தமக்கும் தமது குடும்பத்துக்கும் ஒரு கெளரவ அடையாளமாக கருதுகின்றனரோ அவ்வாறே அவர்களைப் பரீட்சைக்கு தயார்படுத்தும் ஆசிரியர்களும். அதிலும் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் தமக்கான மாபெரும் விளம்பரமாகவும் கருதுகின்றனர். பிள்ளைகளின் அடைவின்மை என்பது இத்தரப்பாரையும் தாக்கத்துக்குட்படுத்தும்.
இப்பரீட்சையின் பெறுபேற்றை காலங்காலமாக சமூகம் கையாண்டு வந்த விதத்தைப் பார்த்தால் இது ஒரு உணர்வுபூர்வமான உளசமூக பாதிப்புக்களை எஞ்சவிடக் கூடிய முரண்பாடுகளை உள்ளும் வெளியிலும் தோற்றுவிக்கக் கூடிய ‘அசாதாரண விவகாரமாகவே உள்ளது.
ஆகவே, இப்பரீட்சை விடயங்கள் தொடர்பாக செய்தித் தொடர்பாடல் முகாமைத்துவம் செய்யும் ஊடக வியலாளர்கள் முரண்பாட்டு உணர் திறன் மிக்கவர்களாகவும் சமூகப் பொறுப்பு மிக்கவர்களாகவும் இருக்கவேண்டியது அவசியம். அதிலும் இது பிஞ்சு உள்ளங்களுடனும் அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்களுடனும் சம்பந்தப்பட்ட விடய மாகும். வாழ்கின்ற சமூகத்தின் மத்தியில் ‘வெற்றிக்கும்’, ‘தோல்விக்கும்’ எல்லையிட்டு சமூகத்தை மேலும் மேலும் பிளந்துவிடும் வகையில் ஊடகங்களின் தொடர்பாடல் அமைந்துவிடக்கூடாது.
பரீட்சையில் ‘சித்தி அடைந்தவர்களை விட, ‘சித்தியடையாத மாணவர்களின் தொகை பன்மடங்கு அதிகம் என்பதனால் ஊடகவியலாளர்கள் சித்தியடையாத மாணவர்களின் பக்கமிருந்தும் தமது தொடர்பாடலை நெறிப்படுத்தவேண்டும்; சமூகத்துக்கு அறிவூட்ட வேண்டும்; நம்பிக்கையைக் கட்டியெழுப்பவேண்டும்; தவறான மனப் பதிவுகளைத் திருத்த வேண்டும்; அடிப்படைப் பிரச்சினை களை இனங்காணவேண்டும்.
'பரீட்சையில் சித்தியடையமுடியாமல் போயிற்றே. என்று ஆழமான மனக்கவலையுடன் காணப்படும் பிள்ளை களினதும் பெற்றோரதும் ஆசிரியர்களதும் அதிபர்களதும் உள உறுதியை பாதிக்கும் வகையில் அளவுக்கு மிஞ்சிய முக்கியத்துவத்தை ஆலாபரணங்களை கொடுப்பதில் தமது வகிபங்கை ஊடகவியலாளர்கள் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். இவ்விடயத்தில் ஊடகவியலாளர்கள் துறைசார் அனுபவமும் தகைமையும் உள்ளவர்களை அணுகவேண்டும். இவ்விடயத்தில் கல்வி உளவியல் தகைமையும் அனுபவமும் ஆற்றலும் உள்ளோர், உளசமூக வளவாளர்கள், உளவளத் துணையாளர்கள் முதலியோரிடம் ஊடகத் துறை சார்ந்தோர் கட்டாயமாக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
உண்மையில் சமூகவியலாளர்கள், சமூகவியல் கற்கும் மாணவர்கள், உளவியலாளர்கள், உளவியல் மாணவர்கள் முதலியோர் 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான சமூகத் தாக்க மதிப்பீடு ஒன்றை நோக்கிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். சமூக, அரசியல் பொருளாதார விவகாரங்களில் விழுந்த பாட்டுக்கு குறிசுடும் கற்றுக்குட்டித்தனமான ஊடகத் தொடர்பாடலை மேற் கலைமூகம் () ஐ

கொள்ளும் போக்கை மாற்றுவதற்கும் சமூக நலன் கருதிய செய்தியறிக்கையிடலை மேற்கொள்வதற்கும் வெகுஜனத் தொடர்பாடலும் ஊடகவியலும் க.பொ.த. சாதாரணதரம், க. பொ. த. உயர்தரம், பல்கலைக்கழகக் கல்வியில் பட்டப் படிப்புத் தரங்கள் ஆகியவற்றில் ஒரு கற்கையாக நிகழும் காலத்தில், கல்விப் புலம்சார் ஒரு விடயத்தையே ஒரு பொருத்தமான தகைமைசார் அணுகு முறையுடன் ஊடக வியலாளர்கள், தாம் கையாளுகிறோமா என்பதை கவனித்துக் கொள்ளவும் தயாராகவேண்டும். எந்தவிடயத்தை யிட்டும் ஒரு கருத்துருவாக்கத்தைச் செய்யவும் அபிப்பிராயச் சிதைப்பை ஏற்படுத்தவும் வல்லமை மிக்கதாக ஊடகவிய லாளர்களின் பேனாக்கள் உள்ளன.
5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையைப் பொறுத்த வரை உடனடியாகவும் நீண்ட கால அடிப்படையிலும் துறைசார்ந்தவர்களின் அணுசரணையுடன் சமூக நலன்களின் அடிப்படையிலான ஒரு சரியான கருத்துருவாக்கத்தைச் செய்யவும், தவறாகக் கட்டிவளர்க்கப்பட்ட அபிப்பிராயத்தை சிதைத்து அகற்றவும் ஊடகங்கள் (அச்சு ஊடகங்கள், இலத்திரனியல் ஊடகங்கள், இணையத்தளங்கள்) தயாராக வேண்டும்.
இவ்விடயத்தில் ஊடகங்கள் தமது பணியை ‘சித்தி பெறாத மாணவர்களின் உணர்ச்சி வேகத்துக்கான வடிகால் ஒன்றை தமது ஊடகங்களில் திறந்துவிடுவதன் மூலம் ஆரம்பிக்கலாம். இதன்மூலம் ‘சித்தி பெற்றோர்’ ‘சித்தி பெறாதோர்’ ஆகிய இருதரப்பாரும் தமது கருத்துக்களைத் தெரிவிக்க சமவாய்ப்புக்கள் வழங்கப்பட்ட ஏதுநிலைகள் உருவாகும். இதற்குள் சம்பந்தப்பட்ட பிள்ளைகளுடன் தொடர்பான பெற்றோர், ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள், கல்வியியலாளர்கள், கல்வி உளவியலாளர்கள், உளசமூகச் செயற்பாட்டாளர்கள் முதலியோரும் உள்ளடக்கப் படவேண்டும். இதன்மூலம் அனைவருக்கும் “கெளரவமான மனித முகமளித்தல்’ என்பது சாத்தியப்படுவதுடன் எதிர்கால மாற்றத்துக்கான சமூக நலன்கருதிய வாதப்பிரதிவாதங்கள் சரியான செல்நெறிக்கு திசைதிருப்பப்படமுடியும்.
ஏற்கெனவே இந்த வயதில் இந்த வகுப்பில் இவ்வாறன ஒரு சோதனை தேவைதானா?’ என்று பல்வேறு தரப்பினரும் சிந்திக்கத் தலைப்பட்டுள்ள நிலையில் ஊடகங்கள் தமது ஆக்கபூர்வமான பங்களிப்பை பொருத்தமாக வழங்கவேண்டும். 24.09.2007அன்று வெளியான லேக்ஹவுஸ் பத்திரிகையான டெய்லி நியூஸ் இல் பரீட்சை ஆணையா ளரின் கருத்து வெளியாகியிருந்தது. அப்பத்திரிகை ஊடகவியலாளர் ஒருவர் பரீட்சை ஆணையாளரிடம் இப் பரீட்சையின் ‘PaSS mark (சித்திக்கான புள்ளிகள்) பற்றிய கேள்வியொன்றுக்கு பின்வருமாறு பதிலளித்திருந்தார்.
“We donot call this a pass mark because the exam is not intended to fail anyone. There fore the term used is cut off mark...'
“இதனை நாங்கள் ‘ஒரு சித்திக்கான புள்ளி’ என்று அழைப்பதில்லை. ஏனெனில் எவரையும் சித்தியடையாமல் செய்கின்ற நோக்கம் கொண்டதல்ல இப்பரீட்சை. ஆகையால் வெட்டுப்புள்ளி எனும் பிரயோகமே பயன்படுகிறது.”
SCeLLT S eEHEEtLlllll 00000 S SS SS

Page 67
பரீட்சை ஆணையாளரின் தொழில்சார் கருத்துப் பற்றி எதுவும் கூறத் தேவையில்லை.
பிஞ்சு உள்ளங்களினதும் இளம் பெற்றோர்களினதும் உளஆரோக்கியத்தை நம்பிக்கைகளை வெட்டிச்சரிக்கும் ‘வெட்டுப்புள்ளி’பற்றிய வாதப் பிரதிவாதங்களை ஊடகங்கள் ஆரம்பிக்கவேண்டும்.
வருடா வருடம் வெற்றிபெறுவோரை மட்டும் வாழ்த்திப் பாராட்டுவதோடு அம்மாணவர்களின் ஆசிரியர் களும் பெற்றோர்களும் கல்விச் சமூகத்தினரும் நின்று விடுவார்கள். அதேவேளை, புலமைப் பரிசில் சித்திகள் ஊடாக வேறுபல தொடர்பாடல்களும் அரங்கேறலாம்.
7
எப்படி இருந்தவர்கள் இப்படியாய் ஆகியது எப்படி? அன்றொரு கால், எல்லாம் படைத்தவர்கள், அன்றொரு கால் திக்குகட்கு அள்ளிக் கொடுத்தவர்கள், இன்றோ எதற்கும்
இலாயக்கு அற்றவராய் இன்றோ எவரிடமும் கையேந்தும் கபோதிகளாய், இன்றோ எதையுமெதிர்
பார்த்தேங்கும் ஏழைகளாய், மாறிய வரலாற்றின் நாயகர்கள்’ ஆகிவிட்டார் ! யாரிட்ட சாபமோ
யாசித்துக் கிடக்கின்றார் !
என்ன குறையிங் கிருந்தது அந் நாட்களிலே? தென்னை, பனை, நெல்லும், சிறுபயிரும், செங்கரும்பும், பொன்னாய் விளையும் புகையிலையும், காய்கறியும்,
வளர்ந்து; கடலருளும் மச்சத்தால் மெருகுபெற்று, வீட்டுக்கு வீடாடு கோழி மாட்டால் பூரித்து, மலைக்குளிரில் மட்டும் வளர்ந்த கிழங்கினையும்
முயன்று விளைவித்து. , மண்ணெண்ணைக் கைவிளக்கு; பயணிக்க வண்டில்; படுத்துறங்கப் பாய், உடுக்க வெயிலுக்கு ஏற்ற வெளுத்த உடை, சனியென்றல்
எண்ணை ஸ்நானம்,
இன்பப் பணம் பாணம், கற்பனைக்குச் சுருட்டு என்று எதையும் இவ் அயலிருந்தே பெற்றும் பிறர்க்கு அள்ளி இறைத்தும். ஊர்ப் பற்றால் திருப்தியுற்ற -
பழைய காலம் போனதெங்கே?
எதற்கும் எவரையும் நம்பா எளிய வாழ்க்கை, எதையுமே விட்டுக் கொடுக்காத் தவ வாழ்க்கை, ஆடம்பரமில்லை;
u 682 - 5 ܢܠ ayaי{aodp35tip Q aתba: אי: , ; .

எதிரும் புதிருமான தரப்பார் தங்கள் ‘கொலர்களை உயர்த்தி பல்வேறு ‘கலர்களும் காட்ட முனையலாம். அவருக்கு இவர் பரிசளித்தார்’, ‘இவருக்கு அவர் பரிசளித்தார்’ எனும் பாணியில் சில ஊடகக்காரர் பிரசாரங்களைத் தீவிரப் படுத்தலாம்.
எனினும் தொழில்சார் தகைமையும் அனுபவமும் உள்ள ஊடகவியலாளர்கள் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை மாணவர் - பெற்றோர் - ஆசிரியர் சார்ந்த சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய நேர்மையான தொடர் பாடலை ஆரம்பித்து ஆக்கபூர்வமான வாதப்பிரதிவாதங்களை திசைப்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது.
ཡོད
ஆசாரம் விழுமியத்தை பாடியெம் அடையாளம் பாதுகாத்துக் கற்றெழுந்து; பொழுதைக் கழிக்க புலனை வழிப்படுத்த அழகொழுகும் கூத்தும் அதிர் ஆட்டக் காவடியும் உடலை உரப்படுத்த. உணர்வு ஆண்ட. ஒளி வாழ்க்கை, பஞ்சமெனும் வார்த்தை
பட்டினியெனும் பேச்சு இல்லையிங்கு இல்லை இல்லையென்ற ஒருவாழ்க்கை, கூற்றும் நெருங்கப் பயந்தொதுங்க. குலம் கிளைத்து வேற்றுமையுள் ஒற்றுமையாய் உறவு கொண்ட சீர்வாழ்க்கை, கைநழுவி வீழ்ந்த கண்ணாடி ஆயிற்றே !
இன்று நிலையென்ன?
எழில் கெட்டு உரங்கெட்டு குண்டுசி முதற் கொண்டு கோமணம் வரை. அயலால் கொண்டுவரப் பெற்று, கொண்டுவரத் தாமதித்தால். என்னநிலை என்ற கவலையுற்று
எம்திருவை
யாருக்கோ தாரைவார்த்து
யாகங்கள் ஏற்று
நாகரீக நடிப்பில் நாயகராய்
அடுத்தவேளைச் சோறுக் கெவரிடமோ நம்பிமாமும் பாவிகளாய் உள்ளூர் முயற்சி உற்பத்தி கைநழுவக் கப்பலே தெய்வமாய்க் கைதொழுது
விவசாயம்
கைப்பணி மறந்து
கனவுகளில் மகிழ்ந்து நனவைத் தொலைத்து. நமை ஏய்ப்போர் வீசுகிற எலும்புச் சிறுதுண்டை எதிர்பார்த்து நம் உயிர்ப்பும்
இழந்து சிலகாலத்துள் இடிந்து போச்செம் ‘மெய் வாழ்க்கை’
சீலன் 24/09/2007ر
- paribLit 2007 L. 65

Page 68
16 - 10 - 2007 காலையில் *உதயன்’ நாளிதழை வாசித்த போது 'மருதனார் மடத்தில் என்னவாம். காத்திருங்கள் 20 ஆம் திகதி வரை’ என்ற தலைப்பில் வித்தியாசமான வகையில் அமைந்த விளம்பரம் கண்ணில் பட்டது. அந்த விளம்பரம் ஏதோ நடைபெறப் போகிறதென்பதை உணர்த்தியிருந் தாலும், என்ன நடக்கவுள்ளது என்பதை அதை வைத்து உணர்ந்து கொள்ள முடியவில்லை. ஆனால், என்ன விடயமாக இருக்கும் என்பதை அறியும் ஆர்வத்தை அது தூண்டியிருந்தது. எனினும் அடுத்து வந்த தகவல்கள் மூலமும், விளம்பரங்கள் மூலமாகவும் மாபெரும் கண்காட்சி யொன்று யாழ்ப்பாணத்தில் - மருதனார் மடத்தில் நடைபெற உள்ளமை பற்றிய
விளம்பரம்தான் அது என அறிந்து கொள்ள முடிந்தது.
யாழ். மாவட்டத்தில் முதன் முறையாக வித்தியாசமான முறையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த 'மாபெரும் கலைக் கண்காட்சியான இதற்கு வர்ண மொழி’ என பெயரிடப்பட்டிருந்தது. யாழ் பல்கலைக்கழக இராம நாதன் நுண்கலைக்கழக சித்திரமும் வடிவமைப் பும் துறை இறுதியாண்டு மாணவர்களின் எண்ணத்தில் உதயமாகி, பின் இராம நாதன் நுண்கலைக் கழக அனைத்துத் துறை மாணவர்களினதும் ஒன்றிணைவில் பரிணமித்த இக் கண்காட்சி ஒக்ரோபர் மாதம் 20 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை ஒரு வார காலமாக - ஏழு நாட்களுக்கு நடைபெற்றிருந்தது.
ஆரம்பத்தில் 24 என இருந்த பின்னர் இரு ந பட்டு 26 ஆம் தி பெற்றிருந்தது. ப
SJTI: QAGg
கலைக் கழகத் மடத்தில் அபை நாதன் நுண்கலை தில் நடைபெற்
சியே யாழ்ப்பான
66 கலைமுகம் O ஜூ
 
 
 

காலத்தில் இடம்பெற்ற பிரமாண்ட மான கண்காட்சி எனக் கொள்ளத் தக்கது. குறித்த நாள்களில் தினமும் மு. ப. 8.30க்கு ஆரம்பமாகி பி.ப. 3.30 வரை நிகழ்ந்த இக்கண்காட்சியை யாழ் குடாநாட்டில் பல்வேறு பகுதிகளை யும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களும், பாடசாலை மாணவர்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டிருந்தார் கள் என்பது இதன் மற்றுமொரு முக் கிய விடயமாகும்.
யாழ். பல்கலைக்கழக சித்திர மும் வடிவமைப்பும் துறை மாணவர்க ளின் ஒவிய, சிற்ப வெளிப்பாடுகளை வெளிக்கொணரும் முகமாக இக்கண் காட்சி திட்டமிடப்பட்டிருந்தாலும், பின்னர் சகல துறைகளினதும் இணை ஆம் திகதி வரை வில் இன்னும் பல விடயங்களையும் இக்கண்காட்சி தன்னகத்தே கொண்டமைந்திருந்தது.
ாட்கள் நீடிக்கப் கண்காட்சியில் ஐந்நூறுக்கும் கதி வரை இடம் மேற்பட்ட ஒவியங்கள், இருநூறு பாழ்ப்பாண பல் வரையிலான சிற்பங்கள் மற்றும்
ngir gair GENApêsys, DITERMAri:Safair
இgாழி= ஆன்தூகுதி
1-e
தின் மருதனார் புகைப்படங்கள், இசைக் கருவிகள் ]ந்துள்ள இராம a TGöTugOT A, B, C, D, E, F, G, H, I, J, K vப் பீட வளாகத் என்ற 11 காட்சியறைகளிலும், வெளி ற இக் கண்காட் களிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந் னத்தில் அண்மைக் தன. காட்சியறைகளில் அவற்றுக்கான விளக்கங்களை துறைசார்ந்த மாணவர் கள் தகுந்த விதத்தில் வழங்கியிருந் தார்கள். காட்சியறைகளில் கண்காட் சியில் மனதை இணைக்கத்தக்க வகையில் மெல்லிய இசை ஒலித்துக் கொண்டிருந்தது. சில வேளைகளில் பார்வையாளர்களின் இரைச்சல் இசையைவிட அதிகமாகி கண்காட்சி யின் அமைதியை குலைக்கவும் தவற வில்லை. ஒவியங்கள், சிற்பங்களுக்கு சிறப்பான விதத்தில் ஒளியூட்டப் பட்டிருந்தமை கண்காட்சியை ஒரு படி உயர்த்தி நின்றது. இவ் ஒளி யமைப்புக்கான மின் விளக்குகளை வெற்று ‘மீன் ரின்’களைப் பயன் படுத்தி பொருத்தியிருந்தமை கழிவுப் பொருட்களை எவ்வாறு பயன்
லை-டிசெம்பர் 2007

Page 69
பாட்டுக்குரிய பொருட்களாக மாற்றியமைக்கலாம் என்பதற்கு சிந்த எடுத்துக் காட்டாக அமைந்திருந்தது. இவை ஒரு புறமென்றால், மறுபுறத்தில் இன்னுமொரு அரங்கில் பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக நடனங் கள், வயலின், வீணை இசை நிகழ்வுகள், தனிப் பாடல்கள் என்பன இசைத்துறை, நடனத்துறை மாணவர்களால் நி க ழ் த் த ப் பட் டு க்  ெகா ன் டி ருந்த ன . இவ்வாறாக, மிகப் பெறு மதி வாய்ந்த படைப் புக்களை, நிகழ்வுகளை 20/=, 10/= நுழைவுச் சீட்டுடன் பார்வையிட முடிந்தமை ஒரு அரிய சந்தர்ப்பமாகும்.
யாழ். பல்கலைக் கழகத்தில் சித்திரமும் வடிவமைப்பும் என்னும் கற்கை நெறியானது 1999 ஆ ஆம் ஆண்டில் அப்போ " தைய துணை வேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்
களின் முயற்சியில் பல்வேறு சவால் : களுக்கு மத்தியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக் கற்கை நெறிக்கு இதுவரை 7 தடவைகள் மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள் ளர்கள். அவற்றில் இதுவரை 3 பிரிவு மாணவர்கள் கற்கை நெறியை நிறைவுசெய்து வெளி யேறியுள்ளார்கள். இக்கற்கை நெறிக்கூடாக உண்மையில் எத்தனை மாணவர்கள் T இம் மண்ணில் எதிர்கால ஒவியர்களாக வருவார் : கள் என்பது கேள்விக்குரி யதாக இருந்தாலும், இக் கற்கைநெறியின் ஆரம்பம் இம் மண்ணில் ஒவியத் துறையில் புத்துயிர்ப்பை தோற்றுவித்த நிகழ்வு என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். இந்த உண்மை எட்டு ஆண்டுகளின் பின்னர் ட்வர்ண மொழியாக சமூகத்துக்கு முன்பாக காட்சிப் படுத்தப்பட்டதுடன் மேலும் வலுப்பெற்றுள்ளது என்று கூறலாம். அத்துடன் இக் கற்கைநெறிக்கு உயர்வான அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளது எனலாம்.
வர்ண மொழி’ கண்காட்சி - இன்றைய சமகால சூழலை பெருமளவில் பிரதிபலிக்கவில்லையாயினும், சில காலங்களுக்கு முந்தைய நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டத் தவறவில்லை. அந்த வகையில், சிற்பங்களில்
S TTMTLCTT SC sCCMCS
 
 
 
 
 
 
 
 
 
 

ஆழிப்பேரலை அவலங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இறந்த குழந்தையின் உடலை நாயும், காகங்களும் கடித்துக் குதறுவது போல் அமைக்கப்பட்டிருந்த சிற்பம், ஆழிப் பேரலையில் இறந்த தனது மகனைதூக்கிக் கொண்டு வரும் தந்தையின் துயரை வெளிப்படுத்திய சிற்பம் என்பவற்றுடன் பிளாவினை கையில் ஏந்தி மது அருந்துபவரின் சிற்பம், விலங்கிடப்பட்ட ஒருவரின் சிலை வடிவிலான சிற்பம், சிங்கமொன்று தன்னிலும் பலம் குன்றிய மிருகத்தை அழிப்பது போன்ற பாணியில மைந்த சிற்பம் என்பனவும் கிரிக்கெட் வீரர்களின் சிற்பங்களும் குறிப் பிடத்தக்க வையாக அமைந்திருந்தன. ፳ ஒவியங்களைப் பொறுத்தவரையில் பெரும்பாலான ஒவியங்கள் சிறப்பாக வரையப்பட்டிருந்தது. அவற்றில் வங்கா லைப் படுகொலையை வெளிப்படுத்திய ஒவியம் தத்ரூபமாக அமைந்திருந்தது. மற்றும் இயற்கைக் காட்சிகள், உலகத் தலைவர்கள், அறிஞர்கள், விளை யாட்டு வீரர்கள் போன்ற ஒவியங் களும் மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தது. இங்கு வைக்கப் பட்டிருந்த ஒவியங்கள் அனைத்தும் பல்வேறு விதமான ஒவிய வகை களில் அடங்குபவையாக அமைந்தி ருந்தன. இதில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றுமொரு விடயம் இக் கண்காட்சியில் குறைந்த அளவிலான மாணவர்களின் ஒவியங்களே அதிகளவில் இடம் பெற்றிருந்தமை ஒரு குறையாக அமைந்திருந்தது.
புகைப்படங்களில் கிழக்கு மாகாண குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்ட நிலைமைகளை வெளிப்படுத்தும் புகைப் படங்கள் கவனத்திற்குரியனவாக இருந்தன. இவை தவிர, நுழைவாயிலில் சீமெந்தி னாலும், காட்டுக் கற்களினாலும் அமைக்கப் பட்டிருந்த இரண்டு வகையான முதலை களும் சிறப்பாக அமைந்திருந்தது.
மொத்தத்தில் நாளாந்தம் தொடரும் பல்வேறு நெருக்கீடுகளுக்கு மத்தியில் தமது கற்றலைத் தொடரும் மாணவர்கள் இவ்வாறான பாரிய முயற்சியில் இரவு பகலாக ஈடுபட்டு உழைத்திருப்பது பாராட்டுக்குரியது. தொடர்ந்து வரும் காலங்களிலும் மாணவர்கள் இம் முயற்சிகளில் ஈடுபடுதல் வேண்டும். எல்லாவிதமான பொழுது போக்குகளும் இல்லாமலாக்கப்பட்டு முடக்கப் பட்டுக் கிடக்கும் குடாநாட்டு மக்களுக்கு இது போன்ற செயற்பாடுகள் ஆறுதல்தரக்கூடியவையாக அமையும், s
O LDépdöI
ல-ழசெம்பர் 2007 4, 1 ఫి; }్యక్షణికీళ్లల్లో

Page 70
இரண்டு கவிதைகள்
த.அஜந்தகுமார்
ஞாபகங்களின் அச்சக்கோடுகள்
நிழல்கள் அச்சுறுத்துகின்றன கனவின் கோரமுகம் பாயை விறாண்டும் பூனையாய்
என்னை விறாண்டுகிறது
ஞாபகங்களின் பயங்கரம் விறைக்கும் மண்டையில் இருந்து புகைத்து வெளிறும் அச்சக்கோடுகள்
எப்போதுமான போரின் ஞாபகங்கள் அச்சத்திலேயே உறைகின்றன
இருளின் கரம் பிசைந்தபடி செல்கிறது எனது இரகசியங்களின் திசைவழிப் பயணங்களை
68 கலைமுகம் O ஜு
 

பேசியபடி இருத்தல்
கவிதைகள் உன்னைச் சுற்றியே திரிகின்றது காற்றின் திசைகளில் கவிந்து கிடக்கும் உன் திருமுகத்தை நினைவின் ஆழ் சுழிகளில் மூழ்கி முத்துகிறேன்
எனது வலிகள் ஒப்பிக்க முடியா மொழியில் கீறிக் கிளர்கிறது
நினைவடங்கா வெளியில் நனவுகளின் இரத்தம் பரவுகின்றது
வளாகமும் வகுப்பும் நிரந்தரி
மாறிக் கொண்டிருக்கும் காட்சி
இயலுமையின் கைகளிலும் இயலாமை
குருசேத்திரம் நிகழ்ந்தபடி இருக்க புறாக்கள் இரத்தச் சிறகுகளோடு
காதல் செய்கின்றன
நீயும் நானும் வெளிகளில் வீசப்பட்டிருக்கிறோம்
உனது திசையை நானும்
எனது திசையை நீயும்
முகர்ந்தபடி. கால நாக்கில் ஒட்டப்பட்டிருக்கிறோம்
வார்த்தைகள் நமதானவை.
எங்கிருந்து பேசினாலும் நாம் முகம் பார்த்து பேசியபடி இருக்கிறோம்.
லை - டிசெம்பர் 2007

Page 71
கடிதங்கள்
சென்ற இதழில், ஆசுரேந்திரன் ‘பரிமாற்றம்’ என்ற தலைப்பில் எழுதியிருப்பதில் வரும் “ஸ்கிரிப்ற் நெற் (Script Net) எனும் பிரித்தானிய தரும நிறுவகம் 2003 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் திரைக்கதை உருவாக்கல் பயிற்சி முகாம் (Script Writing workshop) 96irg560607 15L-gi Sugi (g)60g, பயனுள்ள வகையில் ஒழுங்கமைத்ததில் பேராசிரியர் இரா. சிவச்சந்திரன், திரை விமர்சகர் அ. யேசுராசா ஆகியோரின் பங்கு அளப்பரியது).’ என்ற வரிகள் தொடர்பாக, சிறு விளக்கம் தர விரும்புகிறேன்.
எனக்குச் சிறிதளவே பழக்கமான ஒருவருடன், ஞானதாஸ் என்பவர் ஒரு நாள் எனது வீட்டுக்கு வந்தார். குறும் படத் திரைக்கதை உருவாக்கற் பயிற்சி முகாமை யாழ்ப்பாணத்தில் நடத்த உதவும்படி யாழ். பல்கலைக்கழக நுண்கலைத்துறையைச் சேர்ந்த சிலரிடம் தான் கேட்டபோது, அவர்கள் அதில் அக்கறை காட்டாது, தங்களில் இருவரைத் திரைப்படத்துறைப் பயிற்சிக்காக இலண்டனுக்கு அனுப்பி வைக்குமாறே கேட்டுக் கொண்டதாகச் “சிரிப்புடன்’ கூறி, எனது ஒத்துழைப்பையும் கோரினார்.
பல்கலைக்கழகத்தில் வாரந்தோறும் நல்ல திரைப் படக் காட்சியை ஒழுங்குசெய்வதில் உதவி வருபவரும் - புறநிலைப் படிப்புகள் அலகின் இணைப்பாளருமான பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் இதற்கு உதவுவாரென்றும், அவருடன் தொடர்புகொள்ளுமாறும் அவரை ஆற்றுப்படுத் தினேன்; சிவச்சந்திரனின் ஒத்துழைப்பினாலேயே பின்னர் அந்தப் பயிற்சி முகாம் தொடர்ந்து நடைபெற்றது.
பயிற்சி முகாமில் ஒரு பயிலுநராக நானும் பங்குபற்றி னேன்; ஆயினும், சில விடயங்களிலான அதிருப்தியினால் இடையில் விலகிவிட்டேன். இதைத் தவிர, 'ஸ்கிரிப்ற் நெற்’ நிறுவகத்துடன் எனக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை.
மேலும், கடந்த ஐந்தாறு இதழ்களில் 'கலைமுகம்’ புதிய பொலிவு பெற்றுள்ளமை மகிழ்ச்சியைத் தருகிறது. தீவிர வாசிப்பு அக்கறையைக் கோரும் பல்வேறு விடயங்கள் - பல தரப்பட்டவர்களிடமும் முயன்று பெறப்பட்டு - நவீன அழகியல் வடிவமைப்புடன் வெளியிடப்படுவதானது பாராட்டுக்குரியது. ஆயினும், எழுத்துப்பிழைகளையும் அச்சுத் தவறுகளையும் குறைப்பதில் கூடுதல் கவனம் தேவை என்பதையும், அழுத்த விரும்புகிறேன்.
அ.யேசுராசா குருநகர்.
'கலைமுகம்’45 ஆவது இதழ் சிறப்பான அட்டைப் படத்துடனும் அதற்கேயுரிய தனித்தன்மைகளுடனும் கனதியுடனும் வெளிவந்துள்ளது.
தாசீசியஸ் அவர்களைப்பற்றிய கட்டுரை “இதற்குப் பின்னராவது இவர் யார்?’ என்று கேட்டு இவரையும் இவரை அறிந்தவரையும் புண்படுத்தாது இருப்பீராக’ என்ற வரிக ளோடு எனது காதையும் திருகிக்கொண்டு விரிவான விளக்கத்தைத் தந்துள்ளது. ‘இயல்’ விருதைத் தொடர்ந்து
கலைமுகம் O ஜூa

‘யார் இவர்?’ என்ற வினா என்னுள்ளும் எழுந்திருந்தது.
“கலைத்தூது’ கலையகத் திறப்பு விழாவையடுத்துத் திருமறைக் கலாமன்றத்தினால் நடத்தப்பட்ட தமிழ் விழா (மாலையில் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டத்திற்கு இடையிலும்) சிறப்பாக நடைபெற்றதை அறிந்தேன். இரு தினங்களிலும் நடைபெற்ற கலை இலக்கியக் கருத்தரங்கு களின் போது வாசிக்கப்பட்ட கருத்துரைகளை ‘கலைமுகம்’ இதழிலும் சேர்த்துக் கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
தினமும் நடக்கும் படுகொலைகளின் அவலத்திற்கு மத்தியிலும், மக்கள் உணவுக்காகவே அல்லற் பட்டுத்திரியும் சூழலிலும், நடைபெற்ற இந்த நிகழ்வும்; நூல்களும் இறு வட்டுக்களும் வெளிவந்து கொண்டிருப்பதுவும் அழிவுகளுக்கு மத்தியிலும் அழிந்து போகாத அந்த மண்ணின் மகிமையைக் காட்டுகின்றன.
சைத்ரிகன் கவிதைகளில் “சோளகக் காற்றில் அம்மா அலைந்து திரிகிறாள்’ சிறப்பானதொரு கவிதை. மிகவும் நன்றாக எழுதியுள்ளார். குறுங்கதைகள், ஞாலவனின் சிறுகதை, நடைவழிக் குறிப்புகள் போன்றன யாழ்ப்பாணச் சூழலைப் பதிவுசெய்துள்ளன.
பஹீமா ஜஹான் மெல்சிரிபுர
ஜனவரி -ஜூன் 2007 - கலைமுகமானது சிறந்த நுகர்வுக்கும் இரசனைக்குமுரியனவாகத் தாங்கி வந்த அத்தனை அம்சங்களுமே சிறப்பானவையாகவும் பெரும் பாலும் சமகாலத்தின் பதிவுகளாகவும் அமைந்துள்ளன. குறிப்பாக, அட்டைப்படத்திலேயே நிகழ்காலத்தினை தூரிகையால்துலக்கியிருப்பது மிகவும் சிறப்புக்குரியதொன்று. அலறி, சைத்ரிகன் ஆகியோரின் கவிதைகளும் மித்ரா, சி.ரமேஷ் ஆகியோரின் கட்டுரைகளும் ஒவ்வொரு கவிதைக ளுக்குமிசைவாகப் பதிக்கப்பட்டுள்ள ஒளிப்படங்களும் கருத்தைக் கவர்ந்தன. எனினும் ஈழத்துக் கவிதைகளுக்கு நிகராகவன்றி சிறிதளவேனும் தென்னிந்திய, மொழிபெயர்க் கப்பட்ட வேற்றுமொழிக் கவிதைகளையும் பிரசுரிப்பது விரும்பத்தக்கது.
கலை-இலக்கிய ஆர்வம் மிகுந்துள்ள வாசகர்களின் காத்திரமான இரசனைக்குரிய சஞ்சிகைகள் குறைவாகவுள்ள இக்காலகட்டத்திலே கலைமுகம் செய்கின்ற பணி ஆற்றுதற் கரியது; போற்றுதற்குரியது. தொடர்ந்தும் இச்சஞ்சிகையானது இதே பொலிவுடனும் இன்னும் பல படிகள் கூடிய சிறப்பு டனும் தன் பணியை ஆற்ற வாழ்த்துகிறேன்.
அ. அனுஷானி சுண்டிக்குளி, யாழ்ப்பாணம்.
முற்போக்குத் தளத்தில் 'கலைமுகம்’ தன் சொல்லாடல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. 44ஆவது இதழை விட 45ஆவது இதழில் கவிதைப் பங்களிப்பு காத்திரமானதாகவே காணப்படுகிறது. ‘செவ்வாய்க்கிழமை மதியத்தூக்கம்’, ‘அந்தி’, ‘சீனக்கலை’ போன்ற மொழி பெயர்ப்பு ஆக்கங்களின் மூலம் பிரபஞ்சத்தன்மை வாய்ந்த பன்முகப்பண்பை கலைமுகத்துக்கு கொண்டுவர முயற்சிக் கும் உங்களின் முயற்சி வரவேற்கத்தக்கது. தளக்கோளம்
லை-டிசெம்பர் 2007 69

Page 72
இன்னும் செம்மைப்படுத்தப்பட்டால் நன்றாக இருக்கும்.
மித்ராவின் ‘நீரளவே தானா நீராம்பல்’ சமகால ஈழத்துப் பெண் கவிதைகளின் செல்நெறியை ஒரளவுக்கு புலப்படுத்தக்கூடிய தன்முனைப்பைப் பெற்றிருந்தாலும் அதே ஆக்கம் மேஜான்-2007 சரிநிகரில் விரிவாகவும் ஆழமாகவும் மாற்றம் செய்யப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருப்பது கேள்விக்கு றியை ஏற்படுத்துகிறது.
சுரேந்திரனின் ‘பரிமாற்றம்’, யோண்சன் ராஜ்குமா ரின் ‘கடல் கடந்த கலைப்பயணங்கள், செவ்வந்தியின் “சீனக்கலை’ என்பன அருட்டுணர்வை தந்த நல்ல ஆக்கங்கள்.
சமகாலப் பின்னணிகளில் திருப்தி அடையாத வாசகர்களின் இத யத்தை நிரப்புவதற்கு கலைமுகம் நோக் கிய வாசிப்பு ஒரளவுக்கு போதுமானது.
யோ. ஷாமினி
யாழ்ப்பாணம்.
கடந்த ஜனவரி - ஜூன் 2007 கலைமுகம் இதழில் வெளியான எனது 30 இல் முதலாவது கேள்விக்கான பதிலின் இறுதிப் பகுதியில் கூறப்பட்ட புத்த கங்கள் றொபின்சன் குரு சோவின்,
நேர்காணலில் பக்கம் -
ஒலிவர் ருவிஸ்றின் எனக் குறிப்பிடப் பட்டவை ‘றொபின்சன் குருசோ
ஒலிவர் ருவிஸ்ற் எனத் திருத்தப்பட GGJøðr(6) | b. -2551 –Gär Terzing of Everest எனப் பதிவு செய்யப்பட்ட புத்தகம் “ TENZING OF EVEREST” திருத்தப்பட வேண்டும்.
பக்கம் - 31 இல் நான்காவது கேள்விக்கான பதிலின் இறுதியில் கத்தரின் ஆன் போட்டரின் மனுஷ்ய
எனத்
நாடகம்’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பது கத்தரின் ஆன்போட்டரின் குருதிப்பூ எனவும் வில்லியம்
மனுஷ்ய நாடகம்’ எனவும் திருத்தப்பட வேண்டும்.
ஸ்ரோயனின்
வே. ஐ. வரதராஜா
கலைமகள் வீதி, அரியாலை,
இடமின்மை காரணமாக இந்த இதழில் யோ, யோண்சன் ராஜ்குமாரின் திருமறைக் கலாமன்றத்தின் கடல் கடந்த கலைப்பயணங்கள், செளஜன்யஷாகரின் "சுவைத் தேன்’ ஆகிய தொடர்கள் இடம்பெறவில்லை. அடுத்த இதழில் இடம் பெறுமென்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
--
GorrarasñiraEGG
'கலைமுகம் இதழ் வெளிவருவதற் இதற்காக வாசகர்களி வெளிவரும் நாளை களிடமும் மன்னி வாசகர்களிடம் ‘க கொள்ளவும் துணை கேட்டு ஏராளமான மூலமாகவும் தொட 'கலைமுகம் மீது அ எமது நன்றிகளைத் இதழ்களை உரிய கா முயற்சிக்களையும் எ "கலைமுகம் சமூக இதழாக தன் குறிப்பிட்டிருந்தோ மகிழ்ச்சியைத் தரு புதுமைகளைப் புகு: நிறையவே உண்டு. 6 கருத்துக்களையும் உ "கலைமுகம் தனது : மலராக அமையவுள் வெளியிட வேண்டு வரது ஒத்துழைப்பும் அடுத்து வரும் இதழ் உங்களுடன் 'கலைமுகம் இதழ் பணியாற்றிய திரு. ஆசிரியர் பணியிலி இறையியல் கற்கை ே எமது வாழ்த்துக்கை இதுதவிர, ஒ இதழ்களுக்கு அனுட் கேட்டுக்கொள்ளுகி தொடர்பான தெளி தவறுவிடுகின்றனர். சில ஆக்கங்கள் வே. படவில்லை. எனவே செயற்படுவது அவசி யாழ்ப்பான செயற்பாடுகள் பல மீளவும் மெதுமெ: தருகின்றது.
~-
கலைமுகம் O ஜூலை

ب - - -ذ9عقدة
’ இதழ் 45 வெளியாகிய பின்னர் 46 ஆவது இதழான இந்த ]கு இடையிலான இடைவெளி சற்று அதிகமாகி விட்டது. டமும் குறிப்பாக, படைப்புக்களை வழங்கிவிட்டு இதழ் எதிர்பார்த்து பொறுமையுடன் காத்திருந்த படைப்பாளர் ப்புக் கேட்கின்றோம். எனினும் இந்தத் தாமதம் லைமுகம் பெற்று வருகின்ற ஆதரவை நாம் கண்டு நின்றது. 'கலைமுகம்’ எப்போது வெளிவரும்? எனக் வாசகர்கள் நேரிலும் மற்றும் தொலைபேசி, மின்னஞ்சல் ர்பு கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் வர்கள் வைத்துள்ள அன்புக்காகவும், நம்பிக்கைக்காகவும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். தொடர்ந்து வரும் லப்பகுதிக்குள் வெளிக்கொண்டு வர எம்மாலான எல்லா டுப்போம் என உறுதி கூறுகின்றோம். ’அனைவராலும் விரும்பப்படுகின்ற ஒரு கலை, இலக்கிய, ானை தகவமைத்துக்கொள்ளும் என இதழ் 40 இல் ாம். அந்த நோக்கம் தற்போது நிறைவேறி வருவது கின்றது. ஒவ்வொரு இதழ்களிலும் புதிது புதிதாக த்த வேண்டும் என்ற ஆர்வமும், ஆதங்கமும் எம்மிடம் ாமது வாசகர்கள், படைப்பாளர்கள் என ஒவ்வொருவரது ள்வாங்கி அதனை நிறைவேற்ற முயல்வோம். விரைவில் 50 ஆவது இதழை நோக்கி பயணம் செய்கின்றது. ‘பொன் ாள 50 ஆவது இதழை பெறுமதி மிக்க இலக்கிய மலராக மென்று எண்ணியுள்ளோம். அதற்கு உங்கள் ஒவ்வொரு ) இன்றியமையாதது. அது தொடர்பான அறிவித்தல்கள் களில் வெளியிடப்படும். ன் பகிர்ந்துகொள்ள வேண்டிய இன்னுமொரு செய்தி 40 முதல் அதன் உதவி ஆசிரியராக எம்முடன் இணைந்து வி. பி. தனேந்திரா அவர்கள் கடந்த இதழுடன் உதவி: ருந்து விடைபெற்றுள்ளார். தனது திருச்சபை சார்ந்த நெறியைத் தொடர்வதற்காக கண்டி சென்றுள்ள அவருக்கு ளயும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ரு இதழுக்கு அனுப்பும் படைப்புக்களை அப்படியே வேறு புவதைத் தவிர்க்குமாறு படைப்பாளர்களை அன்புடன் ன்றோம். பெரும்பாலான படைப்பாளர்களிடம் இது வு இருந்தாலும், சிலர் இந்த விடயத்தில் அவ்வப்போது கலைமுகம் இந்த இதழில் கூட வெளிவர இருந்த ஒரு று இதழ்களில் வந்துள்ளமையை அறிந்ததால் பிரசுரிக்கப் , இது விடயத்தில் ஆக்க கர்த்தாக்கள் பொறுப்புணர்வுடன் யமானது. னத்தில் 2006 ஒகஸ்டின் பின்நின்றுபோன கலை, இலக்கியச் வும் இருக்கக்கூடிய சூழ்நிலையை சாதகமாக்கிக்கொண்டு துவாக நிகழத் தொடங்கியுள்ளமை நம்பிக்கையைத்
அன்புடன், பொறுப்பாசிரியர்.
CS LLTeeTC 0000 SSSSS

Page 73
An Award to a
Aے
Several times a year, an attractive cassocked figure, benign of countenance and soft spoken, walks upto an airline check-in counter to undertake a journey overseas, the fruits of which belie such diffidence of demean our in that they promote and create a Y it reme n do us groundswell of artistic, cultural and peace building sentiment between Sri Lanka and the countries of destination.
No one who sees Pof. Rev. Fr. Saveri either traveling alone, or sometimes accompanied by his troupe of artistes, would ever guess the tremendous role he plays as a defacto guardian and champion of Sri Lanka's artistic and cultural norms amongst the Sri lankan diaspora abroad.
As the saying goes “Some are born great, Some achieve greatness, while still others have greatness thrust upon them. Our Prof. Rev. Fr. Saveri without a doubt would easily fit into the second and third categories. Recently Fr. Saveri received the Northern Province Governor's Award-2007 for yeoman service rendered to his motherlandas a writer, playwright, dramatist, philosopher and poet.
His love of languages, art and culture of this country made him a popular personality among men of letters as well as artistes. He is well educated, an eloquent speaker, a voracious reader and an “out of the box
_ (1) O ജം,
 

n Flying Artiste
lf
thinking leader, par excell- ence. His creative thinking and innovative ideas made him an unchallenged leader of his artistic centre for the last 42
years.
This award is a true reflection of the dedicationand commi tment of thousands of disciples of the Centre for Performing Arts (CPArts) which he founded in the year 1965 in the Jaffna peninsula. Today this centre has expanded its activities right up to Sri Lanka's Southernmost Point Dondra, where it is now known by the additional name “Ranga Kala Kendraya'. CPArts remains one of the few cultural organizations that embraces all Sri Lankan ethnicities and languages, bringing people together to learn, play and develop a realm of understanding and appreciation of each others traditions.
Today his Centre, with a membership of more than 25,000 in this island and abroad, without any distinction of caste, creedorrace, still speaks his ideals and excellent leadership qualities. Being a Director of 20 Centres, he dedicates his life to promoting Peace, Justice, . Liberty and Equality among all communities in Sri Lanka. His Saiva Siddhanta study circle, one of the important units, is devoted to the study of revival, propagation and popularizing of the Saiva Siddhanta philosophy.
Sometimes a question arises in the drama circle as to what Fr. Saveri has done to
തങ്ങ - (Fibut 2007 , 7

Page 74
the modern Tamil theatre. The answer is very i simple when we go back to the period of the midnineties, where a number of modern plays such as 2000AD, 'Sathya Tharisanam', 'Jeeva Priyathanam”, “Oru Theedal”, “Saagatha Manitham”, “Koodith Thuyar Vel” (Children Play), Nencha Kanagal and Spartacus' were staged by the Jaffna CPArts Centre, portraying the contemporary situation of the war torn land. These plays were well appreciated and won the applause of the audience. Fr. Saveri’s wordless plays such as Asoka and Dharshana staged in the capital city of our country have always left lingering memories. These plays were excellent and thought provoking performances. Beyond this the one and only mega theatre production that we have witnessed in the Jaffna Peninsula was Father Saveri's Passion Play, eracted on a 250 foot stage, with more than 250 artistes. It is a landmark in the history of drama. Of course it is always a most moving sight to see more than 200 participants on a single stage. Fr. Saveri, ( unlike other dramatists in this country, is a multi faceted artiste.
His activities were not limited to the modern theatre alone. His contribution to the renaissance and revival offolk plays and musical plays to suit the present trends of the young generation, are etched in the memory. His School of Fine Arts, which functions in all 20 CPA Centres in Sri Lanka, plays an important role in promoting and protecting the fine arts in general and traditional arts in particular.
In addition to all this, his articles that appeared in his quarterly magazine Kalai Mugam under the caption Aranka Valigal (Avant-garde theatre) are great critical presentation of the renowned western modern theatre dramatists, from Antonin Artaud to Peter Brooke. Indeed, it is a valuable contribution to students who follow the drama & theatre course
00 S LCMMMTTLT C sLLHLH

nour Universities.
On this occasion I wish to reproduce one fhis comments about the criticism made a few 'ears ago, that his plays are more cinematic than liramatic, because of the lavish settings and lazzling costumes etc. Fr. Saveri Says*we make ise of all the modern technical means at our lisposal to make our theatrical presentations ttractive to the audience. There is no doubt that inema and drama are two different media. But one cannot completely rule out the influence of he one upon the other; besides there seems to pe confusion regarding the definition of these oosely used terms "cinematic and dramatic'. Voreover, in my view, some world famous plays such as “Les Miserables” and “Miss Saigon” :ould not be considered plays at all. Today we notice that most of the modern plays staged by he same critics are overflowing with the latest echnologieS.
Anyhow it is disheartening to realize that lespite the fact that much is said about some icons of modern Tamil theatre, who are locally applauded, acclaimed and promoted, we still do not have a Tamil national theatreform of our own, olossoming from ourrich cultural roots similar to what the late Prof. Ediriweera Sarachchandra achieved in the Sinhalatheatre world. Also it is worthy to mention that famous dramatists from the South such as the late Prof Sarachchandra, Somalatha Subasinghe, Ravindra Ranasinghe, Parakrama Niriella, Jerome de Silva and :horeographer Miranda Hemalatha worked very :losely with Father Saveri and his CPArts team. CPArts aim is to build a cultural bridge between the various divides in this country through arts.
Fr. Saveri wants to see a social change, a Social liberation and everlasting peace, working through arts. I hope his dream will be fulfilled in he near future in view of the mammoth strength of his CPArts organisation.
0 - டிசெம்பர் 2007

Page 75
LрG22пD5, 56 опшрЗоTпош
லைததுரது குலையக
іц68цол, 15-O8-2OO7
திமன்றக் கலாபவன்ற பங்கா போயர் பரவியர் ஆ
மன்றக் கொடிய േ
 

மன்ற இயக்குநர் நீ பேசேவியர் அடிகளாருடன் அமர்ந்திருக்கையில்.

Page 76
கலை நிதந்தின் இெரு விர விரிவரைகி, பிற
றைந்த 芒五 கலைத்துது go its @
பெற்றுக்கெ
தொடர்புகளுக்கு முகாமையாளர், கலைத்துதுகலையகம்:
 

மங்கலகரமான
00S LuTL TYS L TL LHuuHuSS TTTOLOLOL0L LYS 00K KM00 K00OO