கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2008.07

Page 1
50வது ஆண்டை நோக்கி.
இதில் இடுே
Soloss SOOS
 

த்தின் அறிக் இன்
விலை - 30/-

Page 2
(Dealers in Vidi
Oα. CD's, Calcul
Fanc
52, Bal COO To 24.46
Fax
. . . . . . . . . .
 

:-) -
o Cas, Idio
Sette'S,
1ίσ73, (ίτια μην ον
y Goods
9 ܠܵܐ
nkShall Street, mbO: || 028, 24.4.1982
3234.72
" " " " " " ' " " ".

Page 3
}
--m-r
:
is l; A g :

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவர்
இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திரம் தான் ஓர் * இலக்கியச் சஞ்சிகை விதந்து பாராட்டப் பெற்ற
இதனை நாடாளுமன்றப் பதிவேடா ன , விறன்ஸார்ட் (04, 7, 2001) பதிவு செய்ததுடன்
50 -வது ஆண்டை நோக்கி. ஜூலை 250
|மல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன்
வெளிவரும் தொடர் சிற்றேடு மாத்திர :
201/4, Sri Kathiresan St, Colombo - 13. Te: 2320721
உலகப் பாராளுமன்ற வரலாற்றிலேயே,
பெறுமதி மிக்க சம்பவம் இடம் பெற்றுள்ளது. அங்கு பாராட்டப்பட்ட சஞ்சிகை மல்லிகை, :
* எதிர்காலச் சந்ததியினருக்காக ஆவணப் ;
! ദർദ്ധഗ്ഗ ദർgദ്ധe !
|மல்ல - அது ஒர் ஆரோக்கியமான
இலக்கிய இயக்கமுமாகும்.!
mallikaijeevaGyahoo.com
தனிமனிதனுக்கான விழாவல்ல, இத!
LDல்லிகை ஆசிரியரின் 82-வது வயதுப் பிறந்ததினத்தைக் கொண்டாடும் முகமாக அடுத்தநாள் 28. 06, 2008 அன்று சனிக் கிழமை தமிழ்ச்சங்க மண்டபத்தில் ஒரு பாராட்டு விழா, எழுத்தாளர் திக்குவல்லை கமாலின் தலைமையில் நடைபெற்றது.
அதற்கு முதல்நாள் பிறந்ததினத்தைப் பாராட்டி கனடா, லண்டன், டென்மார்க், பாரிஸ், அவுஸ்திரேலியா, தமிழ்நாடு உட் பட தீவின் ஏனைய பிரதேசங்களில் இருந் தெல்லாம் தொலைபேசியிலும், கடிதங்க ளிலும் வாழ்த்துக்கள் வந்த வண்ணமிருந் தன. விழாவில் கலந்து கொண்டவர்களுக் கும், வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கும் ஆசிரியர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளுகின்றார்.
இதென்ன ஆண்டுக்கொரு விழாவா? முணுமுணுப்புக் கேட்கின்றது. ஆசிரியர் தனிமனிதனல்ல. ஓர் இலக்கியத் தொடர் நிறுவனம். ஆண்டு பூராவும் இலக்கியச் சுவைஞர்களுடன் இடையறாது தொடர்பு கொண்டு விட்டு, ஆண்டுக்கொரு தடவை, தான் தொடர்பு வைத்துக் கொள்ளத் தனது பிறந்ததினத்தை ஒரு குறியீடாகக் கொள் வது அப்படியொன்றும் பிழையான அணுகு முறையல்ல. முணுமுணுப்பவர்கள் வராம லிருக்கட்டும்.
இவ்விழாச் சிறக்க மனசார உழைத்த வர்கள் மூவர். ஒருவர் மு. தயாபரன். அடுத்தவர் மேமன் கவி. மூன்றாமவர் Happy திலீபன். இம்மூவருக்கும் ஆசிரிய ரின் மனமார்ந்த நன்றிகள் உரியவை.
- ஆசிரியர்

Page 4
22. 23. 24. 25.
26. 27. 28.
29.
30. 31. 32. 33. 34. 35. 36.
途 மல்லிகைப் பந்தல் வெளியிட்டுள்ள நூல்கள்
لأمرحظيا كنتاكيتمها எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு (இரண்டாம் பதிப்பு) எழுதப்பட்ட அத்தியாயங்கள் : சாந்தன் கார்ட்டுன் ஒவிய உலகில் நான் சிரித்திரன் சுந்தர் மண்ணின் மலர்கள் (13 யாழ் - பல்கலைக்கழக மாணவ - மாணவியரது சிறுகதைகள்) கிழக்கிலங்கைக் கிராமியம் (கட்டுரை) ரமீஸ் அப்துல்லாஹற் முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் : டொமினிக் ஜீவா(பிரயாணக் கட்டுரை) முனியப்பதாசன் கதைகள் (சிறுகதை) முனியப்பதாசன் ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் குரல் : டொமினிக் ஜீவா இப்படியும் ஒருவன் (சிறுகதை) மா. பாலசிங்கம் அட்டைப் படங்கள் சேலை (சிறுகதை) முல்லையூரான் மல்லிகை சிறுகதைகள் : செங்கை ஆழியான் (முதலாம் தொகுதி) மல்லிகைச் சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி) : செங்கை ஆழியான் நிலக்கிளி (நாவல்) : பாலமனோகரன் அநுபவ முத்திரைகள் : டொமினிக் ஜீவா நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள் டொமினிக் ஜீவா கருத்துக் கோவை (கட்டுரை) பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் (கட்டுரை) முன்னுரைகள் சில பதிப்புரைகள் : டொமினிக் ஜீவா தரை மீன்கள் (சிறுகதை) ச. முருகானந்தன் கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் (சிறுகதைகள்): செங்கை ஆழியான் நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதை) ப.ஆப்டீன் அப்புறமென்ன (கவிதை) குறிஞ்சி இளந்தென்றல் அப்பா (வரலாற்று நூல்) : தில்லை நடராஜா ஒரு டாக்டரின் டயரியில் இருந்து. டாக்டர் எம். கே. முருகானந்தன் சிங்களச் சிறுகதைகள் - 25 : தொகுத்தவர் செங்கை ஆழியான் டொமினிக் ஜீவா சிறுகதைகள் - 50 இரண்டாம் பதிப்பு Undrawn Portrait for Unwritten Poetry - டொமினிக் ஜீவா சுயவரலாறு (ஆங்கிலம்) தலைப் பூக்கள் (மல்லிகைத் தலையங்கள்) அக்சுத்தாளின் ஊடாக ஓர் அநுபவப் பயணம் மல்லிகை ஜீவா மனப் பதிவுகள் - திக்குவல்லை கமால் மல்லிகை முகங்கள் டொமினிக் ஜீவா பத்ரே பிரசூத்திய - சிங்களச் சிறுகதைகள் - டொமினிக் ஜீவா எங்கள் நினைவுகளில் கைலாசபதி தொகுத்தவர் - டொமினிக் ஜீவா நினைவின் அலைகள் : எஸ். வி தம்பையா முன் முகங்கள் (53 மல்லிகை அட்டைப்படக் குறிப்புகள்)
250/- 14 Ofs 175/
11 Ofs 100/=
110/- 150/= 135/- 150/= 175/ 150/= هیتا/275 350/= 140/= 180/- 150/-
80/= 100/= 120/s
150/=
175/s 150/- 120/- 120/= 40fe 150/- 350/=
200/= 120/= 200/- 150/= 150/= 120/=
90/=
60/s 200/=

‘நந்திக்கொரு ஞாபகச் சின்னம் தயாராகின்றது
w
மறைந்த நமது எழுத்தாளர் டாக்டர் நந்தியை இலக்கிய அறிவுலகில் யாருமே மறந்தி ருக்க முடியாது.
அவரது இயற்பெயர் பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம் என்பது. ஆனால், அவரது சொந்த நாமத்தை யாருமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்திருந்தவர்கள் கூட, டாக்டர் நந்தி என்றே இன்றுவரைக்கும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டுள்ளனர்.
அவரொரு யாழ்ப்பாணத்தான். அறிவுஜீவி. உயர் உத்தியோகம் வகித்தவர். யாழ். பல்கலைக்கழகத்தில் இறுதிக் காலத்தில் மருத்துவப் பேராசிரியராகத் திகழ்ந்தவர்.
இதில் குறிபிடத்தக்க விசேஷசம் என்னவென்றால், அவர் மலையகத்தை நெஞ்சார நேசித்தவர். மலையகத்து இளம் படைப்பாளிகளும் அவரை மனசு நிறைய நேசித்தனர். தங்களது மண்ணில் முளை கொண்டு வளர்ந்த தேயிலைச் செடியைப் பராமரித்துச் செழிக்கச் செய்வது போலக் 'காமாந்து பண்ணிக் கவனஞ் செலுத்தி வந்தனர்.
அதன் பெறுபேறாக, அன்னாரது ஞாபகார்த்தமாகத் தொகுப்பு நூலொன்று வெகு கவர்ச்சியாகவும், ஆளுமை மிக்க உள்ளடக்கம் மிக்க ஆக்கங்களுடனும் தயாராகி வருகின்றது. சகல உள்ளடக்க எழுத்துக்களும் மலையக படைப்பாளிகளின் எழுத்துக்களே அம்மலரை அணி செய்கின்றன.
'நந்தியும் மலையகமும்' என்பதே அந்த நூலின் பெயராகும்.
சகல மலையக எழுத்தாளர்களின் ஒத்துழைப்புடன் வெகு வேகமாகத் தயாராகி வரும் இந்த ஞாபகார்த்த நூலை வெளிக் கொணர்வதற்கு முன் நின்று உழைத்து வருபவர்கள் இருவர். ஒருவர் ப. ஆப்டீன். மற்றவர் கே. பொன்னுத்துரை.
தங்களுக்காக அரசியல் ஆக்க இலக்கியக் குரல் கொடுப்பவர்கள் அவர்கள் எங்கு பிறந்திருந்தாலும், மலையகம் என்றுமே எளிதில் மறந்து விடாது என்பதற்குத் தயாராகும் நந்திக்கான ஞாபக நூல் ஒன்றே அத்தாட்சியாகத் திகழப் போகின்றது

Page 5
9.62LA) ALLAó
கலைக் குடும்பத்தின் தவைப் புதல்வன், இவர்
- ിa:ിബി ഗ്രങ്ങaംബaം
'கலாபூஷணம்', 'கலாநிதி கந்தசாமி சண்முகம்பிள்ளையவர்கள் தமது தொண்ணுறு வயதைப் பூர்த்தி செய்து எதிர்வரும் 21, 07, 2008 இல் தமது 91 வது வயதில் காலடி வைக் கிறார் என்று நாம் சிந்திக்கும் போது, உண்மையிலே ஓர் அசாதாரணமான மனிதர் என்றே அவரைக் கூறவேண்டும். மனிதகுலத்தில் மிகமிகச் சிறுபான்மையினரே, அந்தப் பிராயத்தை எட்டுகின்றனர். இந்த வயதிலும், புத்திச் சக்தியை நிலையாகக் காத்து வருபவரோ மிக மிக அசாதாரணமானவர்தான்.
சண்முகம்பிள்ளை அவர்களின் தீட்சண்ணிய அறிவின் கூர்மை சற்றும் மழுங்கவில்லை. அவரது உன்னத ஆன்மா தனது தார்மீக ஆவேசத்தையும், பிறவிப் பிணி பற்றி உணர் வையும் சிறிதும் இழக்கவில்லை. மேலும், அவரது தீரம், தனது ஜொலிப்பை இம்மியும் இழக்கவில்லை. அவரது மொழியழகு அதன் சக்தியைத் துளியும் இழந்துவிடவில்லை.
மேலும் சண்முகம்பிள்ளை அவர்களைப் பற்றித் தெரிந்த அனைவருக்கும், புகழ்ச்சி என்பது அவருக்குத் துளி கூட ருசிக்காது என அறிவர். இந்த அச:தாரண மனிதரைப் பற்றிய ஓர் அசாதாரண அம்சமே இதுவாகும். மேலும், இவர் அடிக்கடி கூறுவது என்ன வெனில், "சொந்த இனத்தில், மொழியில், மதத்தில், கலாசாரத்தில் பற்று வைக்க வேண்டும் என்றும், அப்பற்று, வெறியாக மாறி விடக்கூடாது" என்பார். ஒவ்வொருவருடையதும், ஒவ் வொன்றினதும் தனித்துவம் போற்றப்பட வேண்டும். அத்தனித்துவம், பொது நலனுடனும், பொது நோக்குடனும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. எந்த ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளும் தங்கி நில்லாது, தற்பண்பு, தற்சிறப்பு, தன்னிறைவு பேணிக் காத்து, வாழ்வை நெறிப்படுத்துவதே உயர் மானுடம், இத்தகைய பண்புகளைத் தன்னகத்தே கொண்டு நம் மத்தியில் வாழ்ந்து வருபவரும், யாவராலும் பாராட்டப்படுபவரும், மதிக்கப்படுபவருமாகிய 'கலாபூஷணம்', 'கலாநிதி சண்முகம்பிள்ளை அவர்கள் ஆவார்.
இத்துடன் சண்முகம்பிள்ளை அவர்கள் கற்றோர் போற்றும் அறிவாளியாகவும், ஈழத்துக் கலைஞர்களின் வரலாற்றிலே தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்று, எந்த இடர்வரினும் தளராத அஞ்சாமையுடையவராகத் தான் பிறந்த இணுவில் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழுக்கும், தமிழ் கலைஞர்களுக்கும் யாவரும் வியக்கும் வண்ணம்
மல்லிகை ஜூலை 2008 4.

மகத்தான பணியாற்றி வந்துள்ளார் என் பதை எவரும் மறக்கவோ, மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
சண்முகம்பிள்ளை அவர்கள் வரலாற் றுச் சிறப்பும், ஞானச் செழிப்பும், கலையின் கவினும் கொண்டு தலை சிறந்த கலைஞர் களையும், கல்விமான்களையும், எழுத்தா ளர்களையும், பண்டிதர்களையும் வாழை யடி வாழையாக ஈன்றெடுத்த யாழ்ப்பாணத் தில் இணுவில் என்னும் கிராமத்தில் 21.07. 1917 ஆம் ஆண்டு காலம் சென்ற திரு. கந்தசாமி, தங்கமுத்து தம்பதியர்களுக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தையா ரான திரு. கந்தசாமி அவர்கள் அன்றைய காலகட்டத்தில், ஒரு தலைசிறந்த கர்நாடக இசை விற்பன்னராகத் திகழ்ந்தவர். இதன் காரணமாகத் திரு. சண்முகம்பிள்ளை தம் தந்தையாரிடம் கர்நாடக இசையை நன்கு கற்றுத் தேறினார். இக்காலகட்டத்தில் தமிழ் நாட்டிலிருந்து தலைசிறந்த நாடகக் கலை ஞர்கள், இசை விற்பன்னர்கள் இலங்கை க்கு வந்து நிகழ்ச்சிகளை நடாத்திப் போவது வழக்கமாகவிருந்தது. இக்கலை நிகழ்ச்சி களைத் திரு. சண்முகம்பிள்ளை சிறுவ னாக இருக்கும் பொழுது தவறாது போய்ப் பார்ப்பதுண்டு. இந்நிகழ்ச்சிகளை ஆழ்ந்து கவனித்து வந்த திரு. சண்முகம்பிள்ளை, இவர்களின் கலை நிகழ்ச்சிகளில் தாமும் மிருதங்கம் வாசிக்க வேண்டும் என்று விரு ப்பம் கொண்டு, கேள்வி ஞானத்தின் மூல மாக மிருதங்கம் வாசிக்க ஆரம்பித்தார்.
இத்துடன், இவரின் வீடு இணுவில் கிரா மத்தில் மிகவும் பிரசித்தம் பெற்ற அருள் மிகு கந்தசாமி கோவிலுக்கு அருகாமை யில் அமைந்திருந்தது. இக்கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல்
பஜனைக் கச்சேரி நடக்கும். இக்கச்சேரிக் குத் திரு. சண்முகம்பிள்ளை அடிக்கடி போய் வருவார். இங்கு கர்நாடக இசை சம்பந்த மான தமிழ் இசைப்பாடல்கள், மற்றும் பக் திப் பாடலுக்கு இவர் மிருதங்கம் வாசிப்பது வழக்கமாயிற்று. தொடர்ந்து வாசித்து வந்த தின் காரணமாக மிருதங்கம் வாசிப்பதில் இவர் மிகவும் தேர்ச்சியும், திறமையும் பெற்றார்.
மேலும், இவரின் திறமையைப் பாராட்டி அயலில் உள்ள மக்கள் இவரை அடிக்கடி அழைத்து மிருதங்கம் வாசிக்கப் பணித்த னர். இப்படி இருக்கும் காலகட்டத்தில், தாம் மேலும் சிறப்புப் பயிற்சி பெறுவதற்காகத் தமிழ்நாடு சென்று, அன்றைய காலத்தில் பிரபலமாக விளங்கிய மிருதங்க வித்து வான் குத்தாலம் திரு. சிவவடிவேல் பிள் ளையிடம் இரண்டு வருட காலம் குருகுல வாசம் செய்து பயிற்சி பெற்றார். இத்துடன், இவர் தமிழ்நாட்டில் சில கலை விற்பன் னர்களுக்கும் மிருதங்கம் வாசிப்பார். இதன் காரணமாகத் திரு, சண்முகம்பிள்ளை அவர் கள், திரு. சிவவடிவேல் பிள்ளையவர்களின் சிஷ்யன் என்ற முறையில், அவரோடு தாமும் சென்று மிருதங்கம் வாசித்து வருவதுண்டு. உண்மையிலேயே தேசமான்ய சண்முகம் பிள்ளையவர்கள் கேள்வி ஞானத்தாலும், பயிற்சியினாலும் மிருதங்கம் வாசிக்கும் நுணுக்கங்களை நன்கு கற்றுக் கொண் டார். இத்துடன், இவருக்கு அநேக இசைக் கலைஞர்களும் மிகக் குறுகிய காலத்தில் அறிமுகமானார்கள். முக்கியமாக அன் றைய காலகட்டத்தில் கொடி கட்டிப் பறந்த இசைக் கலைஞர்களான திரு. முசிரி சுப்பிர மணிய ஐயர், திரு. அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மதுரை மணி ஐயர் போன்றவர் களின் அறிமுகமும் இவருக்குக் கிட்டியது.
மல்லிகை ஜூலை 2008 奉 5

Page 6
திரு. சண்முகம்பிள்ளையவர்கள் 1938 ஆம் ஆண்டிலிருந்து 1940 ஆம் ஆண்டு வரை மிருதங்க இசையைத் தமிழ்நாட்டில் தேர்ச்சி பெற்று இலங்கைக்குத் திரும்பி வந்தார். இதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத் தில் நடைபெறுகின்ற இசைக் கச்சேரிகளில் மிருதங்கம் வாசித்து, யாவரின் பாராட்டை யும், பெருமதிப்பையும் பெற்றார்.
1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் புல்லாங்குழல் வித்துவான் ஆர். மூர்த்தி ஐயர் அவர்கள், திரு. சண்முகம்பிள்ளைய வர்களைக் கொழும்பு றேடியோவில் இசைக் கச்சேரி செய்தவற்காகக் கொழும்புக்கு அழைத்து வந்தார். அன்றைய காலகட்டத் தில் றேடியோ சிலோன்' Cotta Road -ல் அமைந்திருந்தது. அப்போது யாவரும் அதைக் கொழும்பு றேடியோ’ என்றுதான் அழைப்பார்கள். மேலும், இதன் தமிழ்ப் பிரிவுக்குப் பொறுப்பாக அன்றைய காலத் தில் இருந்தவர் திரு. சோ. சிவபாதசுந்தர மாவார். இவர் ஒரு பட்டதாரியும், ஈழகேசரி யின் பிரதம ஆசிரியராகவும் கடமை புரிந்தவர். இதன் காரணமாக, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த மூதறி ஞர் திரு. ராஜாஜி, 'கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்ற பெருமக்களுடன் நெருங்கிய தொட ர்பைத் திரு. சிவபாதசுந்தரம் அவர்கள் கொண்டிருந்தார்.
திரு. சிவபாதசுந்தரம் அவர்கள், திரு. சண்முகம்பிள்ளை அவர்களின் திறமை யையும், அர்ப்பணிப்பையும் கவனித்து இவரைக் கொழும்பிலேயே நிரந்தரமாக வந்து தங்குமாறு வேண்டிக் கொண்டார். அவரின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க திரு. சண்முகம்பிள்ளை அவர்கள் கொழும் பிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.
கொழும்பு றேடியோ’வில் கிழமைக்கு 3 நாட்கள் இசைக் கச்சேரி நடைபெறும், திரு. சிவபாதசுந்தரத்தின் ஆதரவில், சண்முகம் பிள்ளை அவர்கள் இத்தகைய இசைக் கச்சேரிகளுக்குத் தவறாமல் சென்று வரு
6.
1950 ஆம் ஆண்டுவரை, "கொழும்பு றேடியோ’ என்ற பெயரோடு இயங்கிய இந்த ஸ்தாபனம் றேடியோ சிலோன்' என்று பெயர் மாற்றப்பட்டது. இதன் பின்னர், சுதந்திர சதுக்கத்துக்கு அருகில் றேடியோ சிலோன்’ விரிவாக்கம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆங்கிலம், தமிழ், சிங்களம் என்ற மூன்று பிரிவுகள் உண்டா க்கப்பட்டு, இவற்றிற்கு மூன்று அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கும் கீழ் அநேகர் பணி புரிந்தனர்.
1952 ஆம் ஆண்டு வாத்தியக் கோஷ்டி என்று அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டனர். அச்சமயம் திரு. சண்முகம்பிள்ளை Super Grade மிருதங்க வித்தகனாக நியமனம் பெற்றார். அக்கால கட்டத்தில், இலங்கை வானொலியில் ஒவ்வொரு நாட்களும் காலை, பிற்பகல், இரவு ஆகிய நேரங்களில் இசைக் கச்சேரி நடைபெறும். இக்கச்சேரி களில் இலங்கைக் கலைஞர்களும், இந்தி யாவிலிருந்து வரும் கலைஞர்களும் பங் கேற்பர். இதன் காரணமாகத் திரு. சண் முகம்பிள்ளையவர்களுக்கும் இவர்களின் அறிமுகம் ஏற்பட்டு, இவர் பிரபல்யம் அடைந் ததுடன், பல பாராட்டுக்களையும் பெற்றார்.
1967 ஆம் ஆண்டு இந்த ஸ்தாபனம் ஒரு கூட்டுத்தாபனமாகப் பெயர் மாற்றப் பட்டது. இதுவே இன்று இலங்கை ஒலிபரப் புக் கூட்டுத்தாபனமாக இயங்கி வருகின் றது. மேலும் நாவற்குழியைப் பிறப்பிடமாகக்
மல்லிகை ஜூலை 2008 辜 6

கொண்ட திரு. கே. எஸ். நடராஜா அவர்கள் நிகழ்ச்சி அதிகாரியாக இருந்து இங்கு மகத் தான சேவை ஆற்றி வந்தார்கள்.
சண்முகம்பிள்ளையவர்களுக்கு வழங் கப்பட்ட பட்டங்கள் "லயவாரிதி', 'கலா மான்ய', 'கலாபூஷணம்', 'கலாநிதி என்பன வாகும். மேலும் திரு.சண்முகம்பிள்ளை அவர் களின் மகத்தான சேவையைப் பாராட்டி கொழும்புக் கம்பன் கழகம் இவரை அன்பு பாராட்டிக் கெளரவித்தது. இத்துடன், ஒரா ண்டுக்கு முன்னர் 'கலாநிதி பட்டமும் வழங் கப்பட்டுக் கெளரவிக்கப்பட்டார்.
இன்று இவரிடம் இசை பயின்ற அநேக மாணவர்கள் இலங்கையில் மட்டுமன்றி, உலகளாவிய ரீதியில் புகழ் பெற்று விளங் குகின்றனர். மேலும் இவரின் ஆற்றலை யும், அர்ப்பணிப்பையும் கருத்தில் கொண்டு, வட இலங்கைச் சங்கீத சபை இவரை ஒரு பரீட்சகராகவும் நியமித்திருந்தது. இத்துடன் தொடர்ந்தும், அநேக ஆண்டுகளாக இல ங்கை வானொலியில் இசைப் பிரிவில் ஒரு பரிசோதகராகப் பணியாற்றி வந்துள்ளார்.
'கலாநிதி சண்முகம்பிள்ளை ஐயா அவ ர்கள் 1942 ஆம் ஆண்டிலிருந்து 1976 ஆம் ஆண்டுவரை மகத்தான பணியாற்றிய பின் சேவையிலிருந்து ஒய்வு பெற்றார். மேலும், 1982 ஆம் ஆண்டு "இலங்கை ரூபாவா ஹினி கூட்டுத்தாபனத்தில் முதல் முதலாக
ஒளிபரப்பப்பட்ட கலை அரங்கத்தில் மிருத
ங்கம் வாசித்த பெருமையும் இவரையே சாரும்,
மேலும் இவருடைய மனைவியார் காலம் சென்ற திருமதி விஜயலசுடிமி சண் முகம்பிள்ளை அவர்கள் கலைக்காகத் தன்னை அர்ப்பணித்த ஒரு பெருமகள். இவர் வெள்ளவத்தை சைவ மங்கையர் கழகத்தில் முன்னோடி நடன ஆசிரியை யாகவும், 'கலாலயம்' ஆரம்பிக்கப்பட்ட பொழுது, அதன் முதல் நடன ஆசிரியை யாகவும் மிக்க அர்ப்பணிப்போடு பணியாற்
றியுள்ளார். இவர் ஓர் நடன ஆசிரியையாக மட்டுமன்றி, இசையிலும் ஓர் விற்பன்ன JTass gaspibgsstir. 36 Isr 'A' Grade Vocal Artist' 9,856 b LJ600 flybgstf.
திருமதி விஜயலகங்ரமி ஒரு டிப்ளோமா பட்டதாரி மட்டுமன்றி, யாழ் மருதனார் மடத் தில் அமைந்துள்ள இராமநாதன் கல்லூரியி லும், அதன் பின்னர், வண்ணார்பண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரியிலும் ஒரு நடன இசை ஆசிரியையாக 1961 ஆம் ஆண்டி லிருந்து 1964 ஆம் ஆண்டு வரை கடமை புரிந்தார். அதன் பின்னர், கொழும்பு வந்து 'St. Marys’ கல்லூரியில் இசை நடன ஆசிரி யையாக 20 ஆண்டுகளுக்கு மேலாக, அதா வது (1964- 1984) வரை கடமையாற்றி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
சண்முகம்பிள்ளை அவர்களின் மூத்த மகள் பிரகதா தில்லைநடராஜா ஒரு சிறந்த நடன ஆசிரியையாகக் கடமையாற்றுகிறார். மற்றும், இவரின் மூத்த மகன் திரு. விஸ்வ நாதன் அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட் டுத்தாபனத்தில் பணிப்பாளராக (தமிழ்ப் பிரிவு) மகத்தான சேவையாற்றி வருகின்றார். இவரின் மகள் 'கலாசூரி வாசுகி ஜெகதீஸ் வரன் இன்று உலகளாவிய ரீதியில் புகழ் பெற்ற நடனக் கலைஞராக விளங்குகின்றார்.
உண்மையிலேயே 'கலாநிதி சண் முகம்பிள்ளை அவர்கள் இந்நாட்டிலே ஒரு தலைசிறந்த கலைஞராகவும், தெளிந்த அறிஞனாகவும், உயர்ந்த பண்பாளனாகவும், பாசமிகு தந்தையாகவும் விளங்கி வருகின்
Dr.T.
அவரின் கலைப்பணி வளரவேண்டும் என்று நாம் அனைவரும் வாழ்த்துக்களை யும், நன்றிகளையும் கூறி, அவர் நலத்திற்கு எல்லாம் வல்ல ஆண்டவனின் ஆசி வேண்டி நிற்கின்றோம்.
மல்லிகை ஜூலை 2008 奉 7

Page 7
CELUGUTTGITTGU CELJaffegir- 16
- assus) usei
கட்டார் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளில் எங்கள் மாலை நேரக் கிரிக்கெட்டுக்கும் கனதியான இடமுண்டு. பெரும்பாலும் எமது வேலை நேரம் காலை ஆறுமணி தொடக்கம், பிற்பகல் இரண்டுமணி வரைக்குமே இருக்கும். எனவே, பின்நேரப் பொழுதுகளில் எமது பொழுது போக்கு கிரிக்கெட் விளையாடுவது தான். சதீஸ், ஜெயராஜ், அருளேந்திரன் சேர், அல்- பாரிஸ், முசம்மில், அக்பர்- அலி, நளிம், மாலின், புஸ்பா அய்யா, றிஸ்வி நாநா, உபுல் அய்யா என்று ஒரு பெருங் கூட்டமே எங்களுடன் இணைந்து விளை யாடுவதற்குத் தயாராகி விடும். தவிரவும், இந்தியாவையும், நேபாளத்தையும் சேர்ந்த ஒரு சில நண்பர்களும் எம்மோடு இணைந்து விளையாட வந்து விடுவார்கள். இனியென்ன? ஆட்டம் தொடங்கிவிடும். இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போது காணப்படும் ஆக்ரோஷமும், ஆர்வமும் எமது விளையாட்டில் காணப்படும். தொடர்ந்தும் இடைவிடாது விளையாடிக் கொண்டிருந்தால், எமது பின்நேரப் பொழுதுகள் மிகுந்த சந்தோஷத்துடன் கழிந்தது எனலாம்.
இந்தக் கால எல்லையில்தான் கடந்த உலகக் கிண்ணக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி களும் நடைபெற்றன. உலகக் கிணணப் போட்டிகள் மிகுந்த பரபரப்பையும், ரசிகர்களினது கவனயீர்ப்பையும் பெற்றிருந்தது. நாங்கள் பொதுவாக புஸ்பா அய்யாவின் ரூமுக்குச் சென்று ஆட்டங்களைப் பார்ப்போம். அல்லது, அவர்கள் எங்கள் ரூமுக்கு வந்து விடுவார்கள். எம்மோடு இந்தியா, பாகிஸ்தான், நேபாள நண்பர்களும் வந்து ஆர்வமாய்ப் போட்டிகளை கண்டு களித்தார்கள். இந்தியர்கள், இந்திய அணிக்கே தமது பூரண ஆதரவை நல்கினார் கள். அவர்களது எதிர்பார்ப்பு தமது அணி இம்முறை உலகக்கிண்ணத்தை சுவீகரிக்க வேண்டுமென்ற கணக்கில்தான் இருந்தது. அவ்வாறே பாகிஸ்தானியர்கள் தமது அணிமீது அபார பற்றும், நம்பிக்கையும் வைத்திருந்தார்கள். தமது அணி இம்முறை மீண்டும் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் என்று அடித்துக் கூறினார்கள். நேபாள நண்பர்கள் பெரும் பாலும் இந்திய அணிக்கே தமது ஆதரவை வழங்கினார்கள். ஒரு சிலர் மாத்திரம், இலங் கையை, அல்லது பாகிஸ்தானை ஆதரித்தார்கள். ஆனால், நமது இலங்கையர்கள் மத்தி யில் இந்த அந்நியோன்ய ஒற்றுமையைக் காணமுடியவில்லை. சிலர் பாகிஸ்தானை ஆதரி த்தார்கள். இதில் பெரும்பான்மை முஸ்லிம்களே அடங்கினர். இன்னும், தமிழ் சகோதரர்கள் இந்தியா வெல்ல வேண்டும், கிண்ணத்தைக் கைப்பற்ற வேண்டுமென்றே ஆர்வமுள்ள வர்களாக இருந்தார்கள். சிலர் இலங்கை அணியே வெற்றி பெற வேண்டுமென்ற ஆதங் கத்துடன் இருந்தார்கள். பொதுவாகக் கூறப் போனால், முஸ்விம்கள்- பாகிஸ்தான் அணிக்
மல்லிகை ஜூலை 2008 率 8

கும் தமிழ் சகோதரர்கள் இந்திய அணிக் கும், சிங்களச் சகோதர்களும், ஒரு சில தமிழ், முஸ்லிம் சகோதரர்களும் மட்டுமே, இலங்கை அணியை ஆதரிப்பவர்களாக இருந்தனர்.
உண்மையில் இது தொடர்பில் எனது நிலைப்பாடும், நான் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பவனாகவே காணப்பட் டேன். 1992 ஆம் ஆண்டு உலகக் கிண்ண த்தைப் பாகிஸ்தான் அணி வென்ற போது, பாகிஸ்தான் அணி மீது அபாரமான ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. பின்நாட்களில், 1996 ஆம் ஆண்டு இலங்கை அணி உலகக் கிணத் தைக் கைப்பற்றிய போது, எனது முன்னைய நிலையை மாற்றிக் கொள்ளும் மனோபக்கு வம், எனக்கு வரவில்லை. எனக்கே தெளி வாகத் தெரியவில்லை. நான் ஏன் பாகிஸ் தான் அணிக்கு ஆதரவாக இருக்கின்றேன் என்று. எனவே, பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டுமென்ற எங்கள் அணியில் பலம் இருந்தது. நாங்கள் எங்களுக்குள் ஏனைய அணிகளைத் தரக்குறைவாகக் கூறி,மகிழ்ந்துகொண்ட கணங்களும் உண்டு.
இந்த உலகக் கிண்ணப் போட்டிகள் நடை பெற்றுக் கொண்டிருக்கும் கால எல்லை யில் நான் வேலை செய்யும் இடத்துக்குப் பூ மரங்களுக்குத் தண்ணிர் ஊற்ற வரும், பங்களாதேவைடிச் சேர்ந்த ஒரு இந்து நண் பரைச் சந்தித்து உரையாடு சந்தர்ப்பம் கிடை த்தது. அந்த பங்களாதேஷ் நாட்டுக்காரர் தொடர்ச்சியாகப் பத்து வருடங்களாக இங்கே பூ மரங்களுக்குத் தண்ணிர் ஊற்றுபவராகக் கடமையாற்றுகிறார். நான் சென்று சிறிது காலத்தில் என்னோடு நட்பாகிக் கொண் டார். நாங்கள் இருவரும் பல்வேறு விடய ங்களைப் பற்றி நிறையக் கதைத்துள்
ளோம். அவர் மிகுந்த நாட்டுப் பற்று உள்ள மனிதர். எந்த வகையிலும், பங்களாதேஷ் மக்களை விட்டுக் கொடுக்காத மன ஓர்மம் உடையவர். எனவே, அவரோடு கிரிக்கெட் பற்றிய செய்திகளையும் பரிமாறிக் கொண்
டேன்.
அன்றைய தினம் பங்களாதேஷ் அணி பெரும் பலம் வாய்ந்த அணியுடன் மோது கின்றது. அன்றுதான், அவர் சில நாட்களின் பின்னர், அதுவும் உலகக்கிண்ணக் கிரிக் கெட்டின் முதலாவது சுற்று ஆரம்பித்ததன் பிற்பாடு, முதல் முதலாக என்னைச் சந்திக் கின்றார். முதலாவது அவர் தான் ஆரம்பித் தார்,"உங்கள் அணி பலமானது. இம்முறை வெற்றி வாய்ப்பு உங்களுக்கு உண்டு. இரு ந்தும், எங்கள் அணியும் இம்முறை பல மான நம்பிக்கை தரும் விதத்தில் விளை யாடக் கூடிய அணியாகத் தான் களமிறங்கு கிறது. சில வேளை நாங்கள் (பங்களாதேஷ் அணி) இம்முறை உலகக் கிண்ணத்தை வென்றெடுக்கவும் வாய்ப்பிருக்கின்றது' என்றார். அதற்கு நான், "உங்கள் அணி ஒரு போட்டியில் தானும் வெல்வது சந்தேகமே!" என்று தூக்கிப் போட்டேன் எனது பதிலை. "அது எனக்குத் தெரியும். ஆனால், எமது அணி மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது. வெற்றி, தோல்விகளையும் தாண்டி, அது எனது நாட்டு அணி, அது வெற்றி பெற்றால் பங்களாதேஷியான எனக்குச் சந்தோஷம் தானே?’ என்று பதிலளித்தான் அந்த பங்களதேசத்துநண்பன். நான் விட வில்லை. "தோல்வியுறும் ஒரு அணிக்காக நீ ஏன் சப் போர்ட் பண்ணுகிறாய்? இம்முறை பார் பாகி ஸ்தான் தான் கிண்ணத்தைச் சுவீகரிக்கும். முடிந்தால், பாகிஸ்தானுக்கு சப்போர்ட் பண்ணு' என்றேன். அதுவரைக்கும் நிதா னமாகப் போய்க் கொண்டிருந்த எமது பேச்
மல்லிகை ஜூலை 2008 辜 9

Page 8
சுக் கொஞ்சம் கொஞ்சமாய் சூடுபிடிக்க ஆர ம்பித்தது. "நீ ஏன் பாகிஸ்தானை ஆதரிக் கின்றாய்?" என்று என்னிடம் கேட்டான். 'பாகிஸ்தான் முஸ்லிம் நாடு. பாகிஸ்தா னில் நல்ல திறமையான விளையாட்டு வீரர் கள் இருக்கின்றார்கள்." என்று நான் சொன் னேன். அதற்கு அவன், “முஸ்லீம் நாடு ஒன்றை நீ ஆதரிக்க வேண்டுமெனில், ஏன் பாகிஸ்தானை மட்டுமே ஆதரிக்கிறாய்? பங்களாதேஷ் முஸ்லிம் நாடுதானே. உன க்கு பங்களாதேஷாக்கு சப்போர்ட் பண்ண முடியும் தானே?" என்றான். அவனது வாத த்தில் உண்மையிருந்தது. நான் மவுனமாக அவனைப் பேச விட்டு, கேட்டுக் கொண்டிரு ந்தேன். "சரி! நீ சொல்வது போல் திறமை யான வீரர்கள் உள்ளதற்காய் நீ சப்போர்ட் பண்ணுகிறாய் என்றால், ஏன் பாகிஸ்தான் வீரர்களையும் விடத் திறமையான வீரர்க ளைக் கொண்ட அவுஸ்ரேலியா, தென் ஆபிரிக்கா அணிகளை உனக்கு ஆதரிக்க முடியும் தானே?" என்று தொடர்ச்சியாக என்னைக் கேள்வி கேட்டுத் திக்குமுக்காட வைத்தான். சில வாதப்பிரதி வாதங்களு டன் எம்முடைய அன்றைய சந்திப்பு முற் றுப்பெற்றது. இருந்தும், அவன் விடை பெறும் போது, சொன்ன சில வார்த்தைகள் நீண்ட நேரமாய் என்னுள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தன. "நான் பங்களாதேஷ்காரன் என்று சொல்வதில் பெருமைப்பட்டுக் கொள்ளுகி றேன். எனது நாட்டுக்கு உலகளாவிய ரீதி யில் ஒரு கெட்ட பெயர் கிடைத்தால் நான் கவலைப்படும் அதே கணத்தில், நல்ல பெயர் கிடைத்தால் நான் கட்டாயம் சந் தோஷப்படுவேன். எனது பாஸ்போர்ட், அடையாள அட்டை மற்றும், இதர ஆவண ங்களில் நான் ஒரு வங்காளி என்பதை நிறுவி நிற்கின்ற போது, நான் ஏன் எனது
சொந்த நாட்டை விட்டு விட்டு, இன்னொரு நாட்டவனுக்குச் சப்போர்ட் பண்ண வேண் டும்.?" என்ற வார்த்தைகளில் பொதிந்தி ருந்த எதார்த்தம் சில நொடிகளில் எனக் குள் வெளிச்சக் கதிர்களைப் பரப்பிவிட்டன.
ஆம்! நான் இலங்கையன். எனது நாட்டை நான் முன்னிலைப்படுத்தியே வாழ வேண்டும். சாதாரண பூக்கன்றுகளுக்குத் தண்ணிர் ஊற்றும் சிற்றுாழியனுக்கு உள்ள தெளிவான சிந்தையும், அறிவும் ஏன் என க்கு இதுவரையும் இல்லாமல் போனது? என் பதை நினைக்கும் போது வெட்கமாக இருந் தது. உண்மையிலே, நான் பாகிஸ்தானை விரும்பியதற்கு வெறும் அருட்டல் தான் கார ணம், தெளிவான காரணம் தெரியாமல் நாம் செயற்படுகின்றோம். மாறாகக் கொஞ்சம் சிந்தித்து, ஆறுதலாய் எடுக்கின்ற முடிவு களில் வெற்றியும், தெளிவும் கிடைக்கின் றது. இந்த வகையில் இந்தச் சாதாரண விளையாட்டுச் சார்ந்த விடயத்திலேயே நாம் நமது நாட்டைப் புறக்கணிக்கின்றோமென் றால், பிறகெப்படி இந்த மண் நமக்குரியது என்று நாம் போராடுதுே என்ற கேள்வி எனக்குள் எழுந்தது? உண்மையில் சப்போர்ட் பண்ணுவதற்கு எத்தனை நியாயங்களை அவரவர் சார்பாக முன் வைத்தாலும், நாம் எமது நாட்டு அணியை முன்னிலைப்படுத் தாமல் இருப்பது நமது குறுகிய எண்ணங்க ளின் வெளிப்பாடே என்பது புலப்பட்டது. முஸ்லிம்கள் பாகிஸ்தானையும், தமிழர்கள் இந்தியாவையும் பூர்வீகமாகக் கொண்டவர் கள். சிங்களவர்கள் மாத்திரமே இந்த மண் னின் மைந்தர்கள் என்பதைக் கட்டியம் கூறுவதாகக் கொள்ளலாம். ஆனால், உண் மையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்ற பேதங்களையும் தாண்டி, நாம் இலங்கையர் என்று சிந்திப்போமானால், நமது ஒட்டு
மல்லிகை ஜூலை 2008 露 O

மொத்த சார்பும் இலங்கைக்கு மட்டுமே கிடைக்கும். அது மட்டுமன்றி, அதுவே நம்மை நாம் இலங்கையர்கள் என்று நிரூபிப்பதற்கு ஏதுவான செயற்றிட்டமா கவும் அமையும்.
நாட்டுப் பற்று என்பது ஒவ்வொரு பிரஜை யிடமும் இருக்க வேண்டிய இன்றியமை யாத ஒரு விடயமாகும். அந்த வகையில், இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், பங்களா தேவழிகளிடம் நாம் நாட்டுப்பற்றைப் பற்றிக் கற்றுக் கொள்ள நிறைய விடயங்கள் இருக்கின்றன. ஒரு இந்தியன், இலங்கை - இந்தியா அணிகள் மோதும் போது, ஒரு காலமும் இலங்கை அணிக்குச் சப்போர்ட் பண்ணமாட்டான். அவ்வாறே, இலங்கை - பாகிஸ்தான் அணிகள் களத்தில் சந்திக் கும் போது, ஒரு பாகிஸ்தானியப் பிரஜை இலங்கைக்கு சப்போர்ட் பண்ணமாட்டான். ஆனால், மேற்சொன்ன இரண்டு நிகழ்வுக ளிலும் இலங்கை தோற்க வேண்டும், எதி ரணி வெல்ல வேண்டும் என்ற மனோபாவம் உள்ளவர்கள் எம்மில் எத்தனையோ பேர் கள் உள்ளார்கள். நான் கூட அப்படித்தான் இருந்தேன். (இப்போது அப்படி இல்லை.) இவ்வாறான நமது பொடுபோக்கான, பொறுப்பற்ற செயற்பாடுதான் நமக்குள் இத் தனை இடைவெளியையும், விரிசலையும் உண்டு பண்ணியிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. அது உண்மையும் தான்.
வெளிநாட்டில்- அது எந்த நாடாக இருந் தாலும், இன அடையாளங்களை, மத அடை யாளங்களை வைத்து நம்மை அழைப்பதி ல்லை, அணுகுவதுமில்லை. வளைகுடா அரபு நாடுகள் என்றால் சிறீ லங்கி (Sri Lankee) என்றுதான் அழைப்பார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் எல்லாச் சிறீலங்கனும்
ஒன்றுதான். உண்மையில் வெளிநாட்டுக் குப் போய் வருபவர்களுக்கு இந்த மெய்யி யல் புரியும். அங்கே எந்த பாகிஸ்தான்கார னும், அல்லது இந்தியனும் நமக்கு வலிந்து வந்து உதவமாட்டார்கள். தேவையான போது, ஆதரவளிக்கவும் மாட்டார்கள். மாறாக, இன, மத, ஜாதி, பேதங்களையும் தாண்டிய ஒர் அந்நியோன்ய உறவு நமக் குள் அங்கே ஏற்படும். ஒருவருக்கொருவர் உதவிடும் நல்ல பண்பு வளரும், அடுத்தவர் களை மதிக்கின்ற மகோன்னதத் தன்மை நம்மிடம் பிறக்கும். அடிப்படையிலேயே நம் மைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு சந்தர் ப்பத்தை இந்த வெளிநாட்டு வாழ்க்கை பெற்றுத் தரும். இப்போதென்றால் நான் இலங்கையன், இலங்கைக் கிரிக்கெட் அணிக்குத்தான் எனது பூரண சப்போர்ட்.
g) Gurg IPL (Indian Premior League) போட்டிகள் வெகு விறுவிறுப்பாக நடைபெற் றுக் கொண்டிருக்கிறன. எதிரும் புதிருமாக இருந்தவர்கள் ஒரே அணியில் இணைந்து விளையாடுகின்ற ஆரோக்கியமான இந்த நிகழ்வினால், அவர்களுள் ஒற்றுமை விதை க்கப்பட்டுள்ளது. முன்னணி வீரர்கள் பலர் தமது திறமைகளை வெளிக்காட்டும் அதே நேரத்தில், புதியவர்களும் தம்மை நிலை நாட்டிக் கொள்ளும், தமது திறமைகளை வெளிக்காட்டும் சாதனைக் களமாக IPL போட்டிகள் காணப்படுகின்றன. இன்றைய பொழுதுகளில் ஒருநாள் சர்வதேசப் போட்டி களிலும் பார்க்க, இந்த 20க்கு இருபது போட் டிகள் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளதை மறுக்க முடியாது.
வெள்ளவத்தையில் உள்ள எமது விடுதி யில் இரவில் நண்பர்களுடன் இணைந்து IPL போட்டிகளை நாம் கண்டுகளித்தோம்.
மல்லிகை ஜூலை 2008 奉 11

Page 9
இவ்வாறு ஒரு போட்டியை நண்பர்கள் விடுதியில் தங்கியிருந்த ஏனையவர்களு டன் இணைந்து ரசித்துக் கொண்டிருந் தோம். என்னோடு வசீம், முஸ்பிர், சியான், றிஸான், சானாஸ், ஈசான், அஷ்பாக், சப்ரி, சுபாஷ்தீன் என்று நிறையப் பேர்கள் இந்தப் போட்டிகளை ரசித்துக் கொண்டிருந்தார் கள். பேச்சு வாக்கில் மீண்டும் பாகிஸ்தான், இலங்கை, இந்தியாவுக்கு ஏன் சப்போர்ட் பண்ணுகிறோம் என்ற வாதம் எழுந்தது. ஒவ்வொருவரும் தமது கருத்துக்களை முன் வைத்தனர். கடைசியில் நான் எனக்கு ஏற்பட்ட அந்த பங்களாதேஷ் நண்பனுட னான அநுபவத்தை அவர்களுக்குச் சொன் னேன். பிறகு, "தோற்குமென்று தெரிந்தி ருந்தும் தமது அணிக்கு ஒரு பங்களாதேஷி யினால் சப்போர்ட் பண்ண முடியுமென்றால், உலகக் கிண்ணம் வென்ற பலதிறமை யான (சில திறமையற்ற) வீரர்களைக் கொண்ட எமது இலங்கை அணிக்கு ஏன் நாம் சப்போர்ட் பண்ணக் கூடாது?" என் பதையும் கேள்வியாக விட்டு வைத்தேன். இதனை சிலர் மானசீகமாய் ஏற்றுக் கொண் டனர். இன்னும் சிலர் இது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், சப்ரி சொன் னார், "இந்த மாதிரியான விடயங்களை ஏன் எழுத்தில் எழுதுவதில்லை. இவற்றை எழு துங்கள்" என்றார். மெய்தான் நமது அநுப வப் பகிர்வுகள் ஆகக் குறைந்தது ஒருவரின் மனதிலாவது ஒரு சின்ன அசைவை ஏற் படுத்தும் என்பது தான் உண்மை. அந்த வகையில், அந்த பங்களாதேஷ் நண்பனை சந்தித்து உரையாடியதிலிருந்து நான் இலங்கை அணியின் தீவிர ரசிகனாக மாறிவிட்டேன். ஏன்னென்றால் இல ங்கை என் தாயகம். எனது தாய் நாடு. நான் பிறந்த மண்
(இன்னும் பேசுவேன்)
gO
Excellent
Photographers Modern Computerized Photography
For
Wedding Fortraits & Child Sittings
Photo Copies of ldentity Cards (NIC), Passport & Driving Licences Within 15 Minutes
300, MOdera Street,
Colombo - 15. Tel: 2526345
மல்லிகை ஜூலை 2008 奉 12

நாலு தசாங்தங்களின் பதிவு தெணியானின் மப்பிம்ை இன்னொரு புதிய கோணம்
uொழ்வின் வசந்தங்களைத் தொலைத்து விட்டு, போரின் சகதிக்குள் சிக்கி உயிர்
மூச்சுக்காய்த் திணறிக் கொண்டிருக்கும் பேதைகளானோம்.
எத்தனை கனவுகள் எங்கள் இளமைக் காலத்திலே, மொட்டுக்களாக அரும்பி விரியாமலே கருகிவிட்டன. கனவுகளையும் தொலைத்த அபாக்கியவான்கள் நாம்.
சாதி சமய பேதமற்ற, ஆண்டான் அடிமை நிலை மறந்த, அடக்குமுறை ஒழிந்த சமத்துவம் எங்கெனும் தேசம் கிட்டுமென.
எமது சொந்தக் குரலில் சுந்தரத்தாய் மொழியில் தீவு எங்கெனும் கூவித் திரியும் சுதந்திரம் கைகூடுமென. இப்படி இப்படி எத்தனையோ கனவுகள் கற்பனைகள்
சுதந்திர மனிதர்களாய் பிறந்து வாழ்வின் வசந்தங்களை ஒரளவு அனுபவித்த பின், மேலும் கற்பனைக் கோட்டைகளைக் கட்டி வளர்த்தோம். அவை கானல் நீர்தானோ? என இன்று மயங்கி நிற்கும் மூத்த தலைமுறையினர் நாம்.
போருக்குள் பிறந்து அவற்றின் அவலங்களை அனுபவித்து, இவற்றிலிருந்து மீண்டே தீரவேண்டுமெனத் திடமும், அவாவும் உறுதியும் கொண்டவர்கள் அடுத்த தலைமுறையி னர். அது முடியாத போது, தப்பினால் போதுமெனப் பறந்து சென்று, அங்கும் சுதந்திரக் கனவுகளை விதைத்து கீதம் இசைப்பவர்கள் அவர்கள். வாழ்ந்தாலும், மாண்டாலும் சொந்த மண்ணில்தான் என உறுதியாக இருப்பவர்கள் மீதி.
அடிமைத்தனத்துள் பிறந்து, அதனூடே வளர்ந்து அதுவே நிசமான வாழ்வென மயங்கி அதற்குள்ளும் சின்னச்சின்ன சந்தோஷங்களை நாடும் இன்னுமொரு தலைமுறையும்
உருவாகிறதா? நினைப்பதற்கே சங்கடமாக இருந்தபோதும், அதுதான் உண்மை!
மல்லிகை ஜூலை 2008 & 13

Page 10
சிறுதெய்வ வழிபாடுகளுடனும், வீரசைவ உணர்வுகளுடனும் வாழ்ந்ததாகச் சொல் லப்படும் தமிழ் இனம், பிராமண ஆதிக்கம் கொண்ட வைதீக சமூகமாக சிறிது சிறிதாக மாறி, இன்று அதுவே நிஜம் போலாகி சமஸ்கிருத மந்திரங்களுக்குள் கிறங்கி நிற்கவில்லையா? அதுபோல.
போரின் இழப்புகளும், பொருளாதார சுமைகளும் அழுத்தும் போது மட்டைப் பந்தாட்டத்தின் போதையில் தனது மக் களை மூழ்க வைத்தாள் ஒரு தேசத்தின் தலைவி. இன்று எமது இளசுகளும் பந் தாட்டங்களிலும், களியாட்டங்களிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் தம்நிலை மறக்கும் மாற்றம் ஏற்படுகிறதா?
இது சரியானதா- பிழையானதா? என்ப தல்ல கேள்வி. தன் மகிழ்வை, நிறைவை நாட எவனுக்கும் உரிமை உள்ளது தானே? அதனைக் கண்டு நாம் ஏக்கமுறுவதும் தவறில்லையே?
"இன்னொரு புதிய கோணம்" என்ற தெணியானின் புதிய நூலைப் படித்தபோது, எனது மனம் நிலை கொள்ளவில்லை. சிறகுகள் ஒடிந்து கூட்டுக்குள் அடங்கிவிட்ட பறவையின் துயரக் கனவுகள் போலான சிந்தனைகளில் மூழ்கியது. அதிலும், முக்கி யமாக "பாதுகாப்பு' என்ற சிறுகதை என் கவனத்தை ஈர்த்தது. ஜீவநதி ஆடி ஆவணி 2007ல் வெளியானது. நூலிலுள்ள மிக அண்மையில் எழுதப்பட்ட இளமையான
படைப்பு இது எனலாம்.
சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்ன ரும் இன்றைக்குமான வாழ்வின் கோலங்
களை மிக அழகாகச் சொல்கிறது. அன் றைய வாழ்வு இனிமையானது. அவசரங் கள் அற்றது. இயற்கையோடு ஒன்றியது. தகப்பனானவர் கண்டிப்பானவர். அவர் பேச்சுக்கு மறுபேச்சில்லை. ஆனால், பாசம் மிக்கவர். தனது குழந்தைகளின் பாது காப்பு தன்னிடமே என்பதைக் கேள்விக்கு உட்படுத்தாதவர். படம் பார்க்க வேண்டு என்றால் கூட, நண்பர்களுடன் செல்ல அனுமதிக்காது தானே கூட்டிச் செல்பவர். ஐயா தனது சைக்கிளில் என்னை ஏற்றிக் கொண்டு படம் பார்க்கத் தியேட்டருக்கு அழைத்துப் போகிறார். என்ற வசனத் தோடு இச் சிறுகதையின் முதற்பகுதி நிறை வுறுகிறது.
இரண்டாம் பகுதியில் தகப்பன் யாழ்ப் பாணம் செல்லப் புறப்பட்டு ஆயத்தமாக நிற்கிறார். யாழ்ப்பாணம் முன்பெல்லாம் இரண்டு மணித்தியாலத்தில் போய்வர கூடியது. இப்பொழுது இரண்டு மணித்தி யாலம் போதாது என்ற தகவலானது பாதுகாப்பு கெடுபிடிகள் நிறைந்த காலம் இது என்பதை கோடி காட்டுகிறது. மக னைத் தேடினால், அவன் விளையாடப் போய்விட்டான். இன்று லீவு என்பதால், வழமை போல விடியற்காலை எழும்பாது ஆறுதலாக எழுந்தவனுக்கு இன்று சுதந்திர மாக இருக்கக் கிடைத்த மகிழ்ச்சி. தாய் கூட்டி வருகிறார். வாசலில் மோட்டார் சைக்கிள் நின்றதைக் கண்டு, தன்னையும் தகப்பன் கூட்டிக் கொண்டு போகப் போறார் என்பதைப் புரிந்து மாட்டன். மாட்டன்' என அடம் பிடிக்கிறான். "அப்பா போற இடமெல் லாம் என்னைக் கூட்டிக் கொண்டு திரியி றார். என்னை விளையாட விடுங்கோ என்பது அவனது கோரிக்கையாக இருக்கிறது.
மல்லிகை ஜூலை 2008 & 14

அத்துடன் கதை முடிந்து விட்டதாகவே எனக்குப்பட்டது. நான் மோட்டார் சைக் கிளில் மகனோடு புறப்படப் போகிறேன்." என்ற இறுதி வசனம் அதை உறுதிப்படுத் தியது. ஆம் இன்றைய யாழ் நிலவரப்படி அப்படி முன்பு பிள்ளைக்குத் தகப்பன் பாதுகாப்புக் கொடுப்பான். இன்று இள வயதுள்ளவன் வெளியே செல்லும், போது, அதுவும் முக்கியமாக மோட்டார் சைக்கி ளில் செல்லும் போது, குழந்தை கூட வரு வதுதான் தகப்பனுக்குப் பாதுகாப்பு. இச் செய்தியை இச்சிறுகதை மிக நாசூக்காகச் சொல்கிறது.
சிறுகதை என்பது யாவற்றையும் வெளி ப்படையாகச் சொல்வது அல்ல. பூடகமும் வேண்டும். இதை தெணியான் மிக நேர்த் தியாக கலை நயத்துடன் சொல்லியிருந் தார். இன்றைய காலகட்டத்தில் இதை விட, வெளிப்படையாகப் பேசுவது ஆபத்து என்பதையும் உணர்ந்தேன்.
ஆனால், இதற்கு மேலும் ஏதோ ஒன்றை நான் தப்ப விட்டுவிட்டேன் என்ற உணர்வு என்னைத் தொல்லைப்படுத்தவே அதனை மீண்டும் வாசித்தேன். 'மாட்டன் மாட்டன்’ என அடம் பிடித்தவனை எதைக் கொடுத்து தகப்பன் தாஜா பண்ணினான். கேக் வேண்டாமாம், கஜ0 வேண்டாமாம், முந்திரி, அப்பிள் வேண்டாமாம்!
அப்ப, என்ன வேணுமாம்?
முன்பு புலோலியூர் இரத்தினவேலோன் தொண்ணுாறுகளில் எழுதிய "புதிய பய னம் சிறுகதை ஞாபகத்திற்கு வருகிறது. கொழும்பில் இருந்து வந்த மாமன், குழந்
தையான மருமகனுக்கு விளையாட என்ன வாங்கித் தர என்று கேட்டபோது, தனக்கு ஏ கே 47 வாங்கித் தாங்கோ என்றான் சிறுவன். அவன் சொன்னதைக் கேட்ட போது, மாமன் திடுக்கிட்டான். ஆனால், நாம் திடுக்கிடவில்லை. காலம் அப்படி, சூழல் அப்படி. அவ்வாறுதான் அந்தக் குழந்தையால் கேட்க முடியும். அக்கால கட்டத்தில் சிறுவர்களின் உணர்வை இரத்தினவேலோன் அற்புதமாகப் பதிவு செய்திருந்தார்.
ஆனால், இந்தக் குழந்தை கிரிக்கட் போலும் பற்றும் வாங்கித் தாறன் என்ற போது, இணக்கத்துடன் மோட்டார் சைக் கிளில் ஏறிக் கொண்டது. ரீவியில் அவன் கிரிக்கட் விரும்பிப் பார்ப்பதும். நான் தான் ஜெயசூரியா, நான்தான் ஜெயவர்த் தனா." எனவும் சொல்வது மீள் வாசிப்பில் பட்டது. ஆம், இதுதான் என்னை உலுப்பி யது. இக்குழந்தைகள் மூளைச்சலவை செய்யப்பட்டு விட்டார்களா? இவர்கள் எண்ணங்கள், அபிலாசைகள், எதிர்பார்ப்பு கள் எல்லாம் புதிய திசைகள் நோக்கிப் பயணப்படப் போகின்றதா?
உண்மையில் தெணியான் இதைத் தான் சொல்ல வந்தாரா? அல்லது இது எனது கற்பனையா? புரியவில்லை. எப்படி யிருந்த போதும், புதிய கற்பனைகளையும், சிந்தனைகளையும் தூண்டிவிடுவதுதானே நல்ல சிறுகதையின் சிறப்பம்சம். நீங்களும் படித்துப் பாருங்கள் உங்கள் கருத்தை எனக்கும் சொல்லுங்கள்.
இந்த நூலின் கடைசிக் கதையாக
அமைவது 'பிஞ்சுப் பழம் இதுவே இத் தொகுதியின் மூத்த கதையும் ஆகும்.
மல்லிகை ஜூலை 2008 15

Page 11
அதாவது 1971 பெப்ரவரி மல்லிகை இதழில் வெளியாகியுள்ளது. தெணியானின் ஆரம்ப காலப் படைப்பாக இருந்த போதும், கவனத்தில் கொள்ள வேண்டிய படைப்பாக உள்ளது. படிப்பில் கெட்டித்தனம் உள்ள ஒருவன் குடும்பச் சூழ்நிலை காரணமாக நெல்லியடிச் சந்தைக்கு வானில் ஏற்றிக் கொண்டு வரப்படும் வாழைக்குலையை இறக்கிச் சந்தைக்குக் கொண்டு போகும் கூலித் தொழிலுக்குப் போவதும், அங்குள்ள சூழலுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் இயைபடைவதும், அதிலிருந்து வெளியேறி மீண்டும் படிப்பதற்கான புறச் சூழல் கிட்டிய போதும், அதில் மனம் ஒன்றாமல் மீண்டும் தொழிலுக்குத் திரும்புவதுமான கதை அது.
நெல்லியடிச் சந்தைச் சூழல், அவ் விடத்து நாளாந்த நடப்புகள், வறுமையும் அறியாமையும் குடிகொண்டிருந்த குடும்பத் தில் படிப்பை விட, கூலித் தொழிலில் சொற்ப பணம் உழைத்த போது கிடைக்கும் மதிப்பு, விடலைப் பயல்களின் பேச்சு வழக்கு, நடைமுறை போன்றவை மிக நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோஷங்களை முன்வைக்கும் வரட்டுத் தனமான படைப்புகள் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், தெணியான் இத்தகைய கலைத்துவமான சிறுகதையை படைத்தமை மகிழ்வளிக்கின்றது. பாட சாலை ஆசிரியராக வருபவரின் சிந்தனை யாக எழும் சில கருத்துக்களைத் தவிர, நேரடியாகப் போதனை செய்யாமல் படைப் பின் ஊடாக சிந்தனையை தூண்டிவிடும் நல்ல கதை.
பதினைந்து சிறுகதைகளை உள்ளடக் கிய 162 பக்கங்களைக் கொண்ட தொகுப்பு
இது. அவரின் ஆரம்ப காலப் படைப்புகள் முதல் அண்மைக் காலப் படைப்புகள் வரையான சிறுகதைகளை உள்ளடக்கியு ள்ளது. இதனால், அவரின் சிறுகதை இலக் கியப் பயணத்தில் நாமும் இணைந்து செல் லும் வாய்ப்புக் கிட்டுகிறது. வெளிநாட்டு மோகம், அது கொட்டும் பணத்தில் வீண் டாம்பீகம், அதனால் விளையும் கலாசார சீர்கேடு ஆகியன பல கதைகளின் கருவா கின்றன. அடக்குமுறை எதிர்ப்பு விழிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கை, உயர்தட்டு மனிதர்களின் போலி வாழ்க்கை, வேஷ தாரிகள் மீதான கோபம், மூட நம்பிக்கை கள் மீதான வெறுப்பு போன்ற பல விட யங்களையும் பேசுகின்றன. ஆயினும், இது தெணியானின் தேர்ந்தெடுத்த சிறுகதை களின் தொகுப்பு அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஏற்கனவே பேசப்பட்ட "பாதுகாப்பு", "பிஞ்சுப் பழம்", ஆகியவற்றைத் தவிர, "தீண்டத்தகாத வன்' போன்ற படைப்புகள் என்னைக் கவர்ந்தன. தீரவிலை என்ற பெண்ணியக் கருத்தை வெளிப்படுத்தும் சிறுகதையும் கவனிப்புக்குரியது.
வேறு சில படைப்புகளை தொகுப்பில் சேர்க்காமல் தவிர்த்திருந்தால் நூலின் தரம் பேணப்பட்டிருக்கும் என எண்ணிய போது, தனது படைப்புகள் அனைத்தையும் ஆவணப்படுத்த வேண்டும் என்ற ஆசிரி யரின் ஆதங்கத்தை அவரது முன்னு ரையில் உணரக் கூடியதாக இருந்தது. எட்டுச் சிறுகதைத் தொகுப்புக்களை வெளி யிடப் போதுமான படைப்புகள் இருந்த
மல்லிகை ஜூலை 2008 辜 16

போதும், இதையும் உள்ளடக்கி மூன்று சிறுகதைத் தொகுதிகளே வந்துள்ளன என்ற செய்தி கவலையளிப்பதாக இருக் கிறது. ஆயினும், 'விடிவை நோக்கி', 'கழுகு கள்", "பொற்சிறையில் வாடும் புனிதர்கள்", "மரக்கொக்கு', 'காத்திருப்பு', 'கானலில் மான்' ஆகிய நூல்களும் "சிதைவுகள் குறு நாவல் தொகுதியும் ஏற்கனவே வெளிவந்து சாஹறித்திய பரிசு உட்பட, பல பரிசுகளையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. அவரது மேலும் சில நூல்கள் வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச் சிக்குரியது.
வெளியீட்டுரையை இந்நூலை வெளி யிட்ட பூமகள் சனசமூக நிலையத்தின் தலைவர் இ. செல்வராசா தந்திருக்கிறார். அணிந்துரை தவிர்க்கப்பட்டுள்ளமையானது தெணியானுக்கு தனது படைப்புகள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. பிரப லங்களுக்கு பின் ஓடாத அவரின் தன்னம் பிக்கை பாராட்டவும், மதிக்கப்பட வேண்டிய
தாகும்.
அட்டைப்படம் ரமணியுடையது. "இன் னொரு புதிய கோணம்" என்ற சிறுகதை யின் சில கோணங்கள் பின்புலமாக அமைய தெணியானுடைய முகம் கோட்டோவி யமாக வரையப்பட்டுள்ளது. ரமணியின் கை வண்ணத்தை காண்பதென்பது எப்பொழு
துமே மகிழ்வூட்டுவதே.
ஒவ்வொரு சிறுகதையின் ஆரம்பத்தை யும் சிறு ஒவியங்கள் அலங்கரிக்கின்றன.
கதையின் கருவை வெளிப்படுத்தும் எளி மையான ஒவியங்களை வரைந்த க.
மகேஸ்வரன் பாராட்டுக்குரியவர்.
இத்தொகுப்பின் முக்கியதுவம் என்ன? தெணியானின் படைப்புலகின் தடத்தை 70, 80, 90, 2000 ஆண்டுகளில் என ஒரே நூலில் ஒரே மூச்சில் படிக்க முடிகிறது என்பதுதான்.
ஆனால், ஆண்டு வரிசைக் கிரமத்தில் சிறுகதைகள் நிரைப்படுத்தாமை என்னைப் பொறுத்தவரையில், குறையாகப்பட்டது. இருந்த போதும், நான்கு தசாப்த கால கட்டத்தின் வாழ்க்கைக் கோலங்களை
தரிசிக்க முடிவது மகிழ்ச்சியே.
இலங்கைத் தமிழ் இலக்கியப் பரப்பின் முக்கிய ஆளுமைகளில் ஒருவர் தான் தெணியான். கடந்த நான்கு தசாப்தங் களாக ஈழத்துப் படைப்புலகில் தனது ஆழமான தடங்களைப் பதித்த அவர், மேலும் படைப்புலகில் முன் நகர்ந்தபடியே இருக்கிறார். இப்பொழுதும் தன் அவதா னிப்பைக் கூர்மைப்படுத்தி, மொழியாற் றலை செழுமைப்படுத்தி, படைப்பாற்றல் உத்திகளை நவீனப்படுத்திக் கொண்டி ருப்பதால்தான் அவரது எழுத்து முதுமை தட்டாது இளமையுடன் பவனிவருகிறது. இதனால் வாசகர்களின் உள்ளுணர்வுடன் பேச முடிகிறது. இவற்றிற்கெல்லாம் மூல காரணம் அவருடன உள்ளுறையும் மனித நேயமும், முற்போக்குக் கருத்துக்களும் தான் என்றே நம்புகிறேன்.
மல்லிகை ஜூலை 2008 & 17

Page 12
சோளகக் காற்றுவீசும் இரவில், நிலவொளியில் தூசிகளின் நடனம் குொடங்கிற்று. குவறிவிழந்கு நடிசத்திரங்களை
(கம்பன் கழகம் 2008 ல் நடத்திய ‘மகரந்தச்சிறகு கவிதைப் போட்டியில் சிறப் புப் பரிசு பெற்ற கவிதை.)
பொறுக்கிக் கொண்டிருந்குனர் சிறுமிகள். புகையிலைக் கன்றுகளுக்கு நடுவில் அறுகு படர்ந்கு வரம்பில் கனவுகள் எல்லாம் நடந்துகொண்டிருந்குன, பாழடைந்துபோன மண்டபம் நோக்கி.
மாநாடு குொடங்கியது கனவுகளின் குலைவர் பேசினார். 'மனிகுர்களின் அத்தியாவசியமான நாங்கள் நிறைவேற்றமுடியாகு ஆசைகளை நிறைவேற்றும் நாங்கள் இன்று முகுல் பகிஷ்கரிக்கின்றோம்."
கைகுடீடல், விசிலடி, உலூளை, கோலாகலம் மனிகுர்கள் போலவே நடந்துகொண்டன
கனவுகளும். அவற்றுக்குப் பசிகிடையா, Doosfähe)6756 oour,
குறிக்கோள், கொள்கைகள் கிடையா, ஏகமனகுாக நிறைவேறியது.தீர்மானம்.
பனக்கருனின் கனவுகளும், ஏழையின் கனவுகளும்
ஒன்றாகக் குந்தியிருந்து கள்ளுக்குடித்குன. ஏழையின் கனவுகள் பனக்கருத்தனமாகவும், பணக்கறன் கனவுகள் வக்கிரமாகவும்
பேசிக்கொண்டன.
மல்லிகை ஜூலை 2008
葬18
 

தமிழக எழுத்தாளர் மாலன் திசைகள் என்னுமொரு இணையச் சஞ்சிகை செய்கிறார். அச்சஞ்சிகைக்கு உதவியாக திசைகள் வழிகாட்டி எனும் வலைப்பதிவையும் செய்கிறார். அதில் உலா வந்த பொழுது கண்ணில் பட்ட கட்டுரை இது கொஞ்சம் பழையதுதான். ஆனாலும் இன்றைக்கும் பொருத்தமானது
Monday, June 09, 2003
என்னிடம் இரண்டு நாய்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒரு நாய்க்குப் பேராசை, சுயநலம், சந்தேகம், பொறாமை, பழிவாங்குவது, மற்றவர்களை அச்சுறுத்துவது போன்ற தீயக்குணங்கள் அதிகம். அதற்கு நான் "ஈவில்' என்று பெயர் வைத்திருந்தேன். இன்னொ ன்று அதற்கு நேர் எதிர். நன்றி, பொறுமை, நட்பு, உதவி செய்யும் மனப்பான்மை இதெல்லாம் அதனிடம் மிகுதி. நான் அதை 'குட்டி (goodie) என்று அழைப்பேன். இரண் டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல. ஒன்றை ஒன்று ஜெயிக்கப்பார்க்கும். எப்போதும் போட்டி போட்டுக் கொண்டே இருக்கும்.
“எது ஜெயிக்கும்? நான் எது ஜெயிக்க வேண்டும் என்று விரும்புகிறேனோ அது ஜெயிக்கும்
‘எப்படி? புரியவில்லையே?
'எதை ஊக்குவிக்கிறேனோ, எதற்கு ஊட்டம் அளித்து வளர்க்கிறேனோ, எதைப் பலப்படுத்துகிறேனோ. அதைப் பொறுத்து குட்டியோ ஈவிலோ ஜெயிக்கும்
சரி. நம்முடைய கல்வி முறை, சமகால இலக்கியங்கள், சினிமா இவை எல்லாம் குட்டி'க்குத் தீனி போடுகின்றனவா? அல்லது ஈவிலுக்கா?
மல்லிகை ஜூலை 2008 率 19

Page 13
யோசனை மனதைப் பிறாண்டத் துவங் கியது. செய்தித்தாள் படிக்கும் போது சிந் தனை கூடாது என்று மனதிடம் சொல்லி வைத்திருக்கிறேன். ஆனால் சிந்தனை என் பது காபி குடிப்பது, குளிப்பது போல ஒரு பழக்கத்தின் காரணமாக நேர்கிற செயலா? காற்றுப் போல அது நினைத்த நேரத்திற்கு வந்து வருடிக் கொடுக்கும் அல்லது குப்பை சேர்க்கும்.
'சீ! சும்மாயிரு!’ என்று ஒரு அதட்டல் போட்டுவிட்டு அடுத்த பக்கத்தைப் புரட்டி னேன்.அங்கே என் கண்ணில் பட்டது இந்த செய்தி. 'உயிரை உறிஞ்சுகிறதா சினிமா? என்று ஒரு பெரிய கேள்விக் குறியை வீசித் துவங்கியது செய்தி.
ஐ.நா.சபையின் அமைப்பான உலக சுகா தார நிறுவனம் நடத்திய ஒர் ஆய்வு. இந்தி யாவில் தயாராகும் படங்களில் முக்கால் வாசிப் படங்கள். துல்லியமாகச் சொல்வ தானால் 76 விழுக்காடு புகைபிடிக்கும காட்சி களைக் கொண்டிருக்கின்றன என்று சொல் கிறது. அதிலும் புகழ் பெற்ற, மக்களிடம் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நடிக நடிகையர்கள், உதாரணமாக அமிதாப்பச் சன், ஷருக்கான், ரஜனிகாந்த் அந்தக காட்சி களில் நடிப்பதாகவும் அது கவலைப்படு கிறது. ஒரு நாளைக்கு இந்தியாவில் ஒன்ற ரைக் கோடி பேர் சினிமாப் பார்க்கிறார்கள், ஆண்டொன்றுக்கு 900 திரைப்படங்கள வெளி யிடப்படுகின்றன என்று கணக்குச் சொல்லி, சினிமா இந்த அளவிற்குப் பிரபலமாக இருப் பதால் புகை பிடிக்கும் பழக்கமும் வலுவாக வேரூன்றியிருக்கிறது என்று அந்த ஆய்வு ஆதங்கப்படுகிறது.
ஆனால் இவற்றையெல்லாம் விடக் கவலைப்பட வேண்டிய விஷயம் என்ன வென்றால், இந்தியாவில் புகையிலைப் பழக்கம் உள்ள 28 கோடிப் பேரில் 50 லட்சம் பேர் குழந்தைகள்! நாளுக்கு நாள்
பதின்ம வயதினர் புகை பிடிப்பது அதி கரித்து வருகிறது. அதற்கு சினிமாக்கள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அது கருதுகிறது.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, கறுப்பு -வெள்ளைக் காலத்தில், ஒரு பாத்தி ரத்தை வில்லனாகக் காட்ட சிகரெட் பயன் பட்டது. கழுத்தில் கர்சீப், கட்டம் போட்ட சட்டை, கலைந்த தலை, வாயில் புகையும் சிகரெட் இவை இருந்தால், அவர் வில்லன் என்று பார்த்தவுடனேயே ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள். இதன் காரணமாக நிஜ வாழக் கையில் புகை பிடித்த சில நல்லவர்கள் கூட, அதை பகிரங்கமாகச் செய்யத் தயங் கினார்கள். உதாரணம்: காமராஜர். அவரு க்குப் புகை பிடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் அவர் புகை பிடிப்பது போல புகைப் படம் ( சிலேடை அல்ல) எடுக்கக்கூட அனு மதிக்க மாட்டார்கள்.
எம்.ஜி.ஆர். தனது எந்தத் திரைப்படத்தி லும் புகை பிடித்ததில்லை. இமேஜ் பற்றிய கவனம் மட்டுமல்ல இதற்குக் காரணம். அவர் தனது பாத்திரங்கள் ஏற்படுத்தக் கூடிய தாக் கம் குறித்தும் அறிந்து வைத்திருந்தார் என்று கருத இடம் இருக்கிறது. ’சத்திய மாகச் சொல் நீ மனிதன்தானா? இல்லை நீதான் ஒரு மிருகம், அந்த மதுவில் விழும் நேரம்' என்று அவர் திரையில் பாடியதைக் கேட்டுத் தற்காலிகமாகக் குடிப்பதை நிறுத்தியவர்கள் உண்டு.
இன்றைய தமிழ் சினிமாவிற்கு, மதுவி ற்கு எதிராகவோ, புகைக்கு எதிராகவோ பேசும் தைரியம் கிடையாது. மாறாக அது இன்று புலம்பல் களஞ்சியம். 'திட்றாங்க, திட்றாங்க, திட்றாங்க, திட்றாங்க, தம் அடிச்சா திட்றாங்க, தண்ணியடிச்சா திட்றாங்க, சைட் அடிச்சா திட்றாங்க, ரைட் கொடுத்தா திட்றாங்க, திட்றாங்க திட்றாங்க, திட்றாங்க, திட்றாங்க, டாடியும் மம்மியும்
மல்லிகை ஜூலை 2008 ஜ் 20

திட்றாங்க, என்று அது கிடந்து புலம்புகி றது. பின் இதையெல்லாம் செய்தால் அப்பா வும் அம்மாவும் பூரித்து புளாகாங்கிதம் அடைந்து, உச்சி மோந்து, திருஷ்டி சுத்தி, ஈன்ற பொழுதின் பெரிதுவப்பார்களா?
சரி, மதுவிற்கு எதிராகப் பிரசாரம செய்த எம்.ஜி.ஆர், ஏன் புகை பிடிப்பதற்கு எதிரா கத் திரைப்படத்தில் எந்த பிரசாரமும செய்ய வில்லை? சரித்திரத்தில் விடை காண முடியாத மில்லியன் டாலர் கேள்விகளில் இதுவும் ஒன்று. அவர் அதைப் பெரிய விஷய மாகக் கருதாமல் இருந்திருக்கலாம். அல் லது அந்தப் பிரசாரம் பலன் தராமல் போய் அது தனது செல்வாக்கிற்கு ஏற்பட்ட வீழ்ச் சியாகக் கருதப்பட்டுவிடும். எதற்கு ரிஸ்க் என்று எண்ணியிருக்கலாம்.
ஆனால் தனது விளம்பர வருமானத் தைப் பெரிதாகக் கருதாமல், சிகரெட விளம் பரங்களை வெளியிடப்போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தது ஆனந்த விகடன். அது புகைப்பதற்கு எதிராகக் கொஞ்சநாள் போராட்டமும் நடத்திப் பார்த்தது. ஆனால் பத்திரிகையாளர்களால் - விகடனில் பணியாற்றிய சில பத்திரிகையாளர்களை யும் சேர்த்துத்தான் - கை விட முடியாத ஒரு வழக்கமாக இருந்தது புகை பிடிக்கும் பழக்கம்.
நான் குமுதம் ஆசிரியராகப் பணியா ற்றியபோது, சென்னைக்கு வந்த அன்னை தெரசாவைப் பேட்டி கண்டு வருமாறு ஒரு நிருபரை அனுப்பியிருந்தேன். அந்த நிருப ருக்குப் புகை பிடிக்கும் பழக்கமுண்டு. தெரசா பேட்டிக்கு வரச் சொல்லியிருந்த நேரத்திற்குச் சற்று முன்னதாகவே சென்று விட்ட அவர், காத்திருக்கும் போது போரடி த்ததால், புகைபிடிக்க ஆரம்பித்தார். மூடப் பட்ட ஒரு அறைக்கு முன்னால் வராந்தா வில் அவர் நின்று புகைத்துக் கொண்டி ருந்தார். தெரசா அந்த அறைக்குள்தான்
இருக்கிறார், வேறு யாருடனோ பேசிக கொண் டிருகிறார், நம்முடைய நேரம் வரும் போது நம்மை அழைப்பார்கள், அதற்கு முன்ன தாக சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டு கொஞ்சம் பாக்கை மென்றுவிட்டு உள்ளே போய் விடலாம் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்தது போல் தெரசா அறைக்குள் இல்லை. பேட்டிக்கு சில நிமிடங்கள் முன் தெரசா விறுவிறு வென்று அந்த அறையை நோக்கி வரத் துவங்கினார். வரும் போது அறைவாசலில் புகை பிடித்துக் கொண்டு நின்றிருந்த நிரு பரையும் பார்த்து விட்டார்.
நிருபர் உள்ளே அழைக்கப்பட்டார்.அவர் தெரசாவிடம் கேள்விகள் கேட்கும் முன், தெரசா அவரிடம் கேள்விகள் கேட்க ஆரம் பித்தார். புகை பிடிப்பீர்களா? என்பது முதல் கேள்வி. கையும் புகையுமாகப் பிடி பட்டபின் இல்லை என்றா சொல்ல முடியும். சரி, புகை பிடிப்பதைப் பற்றி ஏதாவது அறி வுரை சொல்லுவார், அதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடலாம என்று எண்ணிக் கொண்ட நிருபர், "ஆமாம். பத்துப் பதினைந்து வருடமாகப் புகைக்கிறேன். பழகிப் போய் விட்டது என்றார். தெரசா புகை யின் தீமைகள் பற்றி உபதேசம் ஏதும் செய்யவில்லை. மாறாக, 'ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் புகைப்பீர்கள்? என்றார்.
'பத்து அல்லது பனிரெண்டு' என்றார் நிருபர்.
'அதற்கு என்ன செலவாகும்?
'பத்து பதினைந்து ரூபாய் ஆகும்.
நீங்கள் புகை பிடிப்பதை நிறுத்திவிட்டு மிச்சமாகும் அந்தத் தொகையை எனக்கு நன்கொடையாகத் தருவீர்களா? என்றார் தெரசா
நிருபர் இந்தக் கேள்வியை சற்றும் எதிர் பார்க்கவில்லை.
மல்லிகை ஜூலை 2008 & 21

Page 14
அது ஒன்றும் பெரிய தொகையாக இராது மதர்' என்று நழுவப் பார்த்தார் நிருபர்.
மாதம் முன்னூறு, நானுாறு ரூபாய். அதை வைத்துக் கொண்டு இரண்டு குழந் தைகளுக்கு மாதம் முழுக்க இரண்டு வேளை பசியாற்றலாம் தெரியுமா? என்றார். நிருபர் சங்கடத்தில் நெளிய ஆரம்பித்தார்.
நான் என்னுடைய பணியைத் துவக் கியபோது என் கையில் இருந்த பணம வெறும் பத்து ரூபாய். அது ஒரு குஷ்டரோகியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உதவியது. அங்கு அவரது ரணங்களைக் கழுவி மருந்திட்டு சிகிச்சை அளிக்க ஆரம் பித்தார்கள். அது அவரது வாழ்வில் ஒரு திருப்பம் எல்லோராலும் அருவருப்பாக உணர ப்பட்டுக் கவனிப்பாரின்றி தெருவோரமாகக் கிடந்த நம்மையும் கவனிக்க மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டு, அவருக்கு மனிதர்கள் மீது நம்பிக்கை பிறந் தது. அதற்குத் தேவைப்பட்டது வெறும பத்து ரூபாய் சேவை செய்ய அதிகப் பணம தேவை யில்லை. ஆனால் சேவை செய்பவர்களு க்கு ஒவ்வொரு பைசாவும் பெரிய உதவி என்று சொல்லிய தெரசா, நிருபரிடம், இனிப் புகை பிடிப்பதில்லை, அதற்கு செலவிட்டு வந்த பணத்தை தர்மத்திற்குக் கொடுக்கி றேன் என்று உறுதி வாங்கிக் கொண்டுதான் பேட்டிக்கு சம்மதித்தார்.
தமிழ் சினிமாக்கள் மதர் தெரசா இல்லை. புகை பிடிப்பவர்கள் மனதில் தர்ம சிந்தனையை விதைக்க அவை முன் வரும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் வியாபாரத்தில் செலுத் தும் கவனத்தில் பத்தில் ஒரு பங்கை சமூக நலன்களைப் பேணுவதில் காட்டக கூடாதா?
திருட்டு விசிடியை எதிர்த்து ஊர்வலம் போகப் போவதாக, முதல்வரை சந்தித்து
மனுக் கொடுக்கப் போவதாக தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அவ்வப்போது சொல்வ துண்டு. வியாபாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள இந்த முயற்சி.
சரி, திருட்டு விசிடிகள் எங்கிருந்து முளை க்கின்றன? அவை விதை போட்டு விளைவ தில்லை. வானத்திலிருந்து குதிப்பதில்லை. சினிமா உலகத்தில் இருந்து சினிமா உல கத்தைச் சேர்ந்தவர்களால்தான் உருவா கின்றன. அதற்கு ஏன் வீதியில் இறங்கி ஊர் வலம் போகவேண்டும்? அறைக்குள் உட் கார்ந்து அலசி ஆராய்ந்து முடிவுக்கு வர வேண்டிய விஷயமல்லவா இது? தங்களது பேராசைக்குக் கடிவாளம் போட வேண்டிய விஷயத்திற்கு, ஊராரை ஏன் உசுப்பி விட வேண்டும்?
இந்த விசிடி விஷயத்தில் காட்டுகிற அக்கறையில். பத்தில் ஒரு பங்கை தமிழ்த் திரைப்படங்களில் புகைப் பிடிக்கும் காட்சி களைக் காண்பிப்பதில்லை, பெண்களைக் கேலி செய்யும் பாடல்களை அனுமதிப்ப தில்லை, இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவதில்லை, ஜாதிப் பெயர் வருவது போலத் தலைப்பு வைப்பதில்லை என்ற விஷயங்களில் முடிவு எடுப்பதில் காட்ட லாமே? இந்த விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஊர்வலம் போகலாமே? கோஷங்கள் எழுப்பலாமே?
'குட்டியைத் தூக்கி வைத்துக் கொஞ் சாவிட்டாலும் பரவாயில்லை, ஈவிலுக்குப் போடுகிற ரொட்டியைக் குறைத்துக் கொள்ளலாமே? செய்யுமா திரை உலகம்? அல்லது திரைக்கு வெளியிலும் வேஷம் போடுமா?
வார்ப்பு எனும் பெயரில் கவிதைக்கான ஓர் இணையத்தளம், இதில் இலங்கை தமிழகம் என பல தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளும் விமர்சனங்களும் இடம்
மல்லிகை ஜூலை 2008 & 22

பெறுகின்றன. மெழிபெயர்ப்புக் கவிதைகளும் உண்டு. மதியழகன் சுப்பையா என்பவர் பவ கவிதைகளை மொழிபெயர்த்து தரு கிறார். அந்த வரிசையில் இந்திய உருது கவிஞர் ஜாவேத் அக்தர் பற்றிய எழுதிய குறிப்பையும் அக்தரின் கவிதை ஒன்றினை வார்ப்பு நன்றி கூறி உங்கள் பார்வைக்கு.
http://www.vaarppu.com/
அம்பறாத்துரணி ஜாவேத் அக்தர்
தமிழில்
மதியழகன் சுப்பையா
தலைமுறைகளைத் தாண்டி நிற்கும் கவிதைகள் உண்டு. தலைமுறைகளைத் தாண்டி வாழும் கவிஞர்கள் உண்டு. ஆனால் ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து அடுக்கடு க்காக ஏழு தலைமுறைக்கும் எழுத்தாளர் களாகவோ அல்லது கவிஞர்களாகவோ இருப்பது வியப்பிலும் வியப்பு தானே! அப்படியொரு கவிதைப் பரம்பரையில் பிறந் தவர்தான் கவிஞர், திரைப்பட பாடலா சிரியர், திரைக்கதை-வசன எழுத்தாளர் என பன்முகம் கொண்ட ஜாவேத் அக்தர்.
கவிஞர் ஜாவேத் அக்தர் ஜனவரி 17, 1945ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் கவிஞர் ஜன நிஷார் அக்தர் மற்றும் ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய ஷாபியா அக்தர் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
உருது கவிதையுலகில் மிகவும் போற்றப்பட்ட கவிஞர் மஜாஜ், ஜாவேத்தின் தாய்மாமன் ஆவார். மேலும் இவரின தாத்தா முஜ்தர் கைராபாதி உருது இலக்கியத்தில் ஒரு மைல் கல்லாக கருதப் பட்டு வருகி றார். ஜாவேத்தின் உடன்பிறந்த இளைய சகோதரர் சல்மான் அக்தர் சைக்கோ அனலிஸ்டாக இருக்கிறார்.
இளம் வயதிலேயே தாயை இழந்தார் ஜாவேத். அவரின் தந்தை மும்பைக்கும் லக்னவுக்கும் இடையில் இடையறாது ஓடிக்கொண்டிருந்தமையால் ஜாவேத் தனது உறவினர்கள் வீட்டில் வளர்ந்தார். அலிகாட் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் மேற் பார்வையில் இயங்கிய கால்வின் தலுக்கார் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பையும் போபாலின் கைட்பியா கல்லூரியில் தனது இளங்கலை பட்டத்தையும் பெற்றார்.
படிப்பை முடித்த ஜாவேத் மும்பைக்கு வந்து சிறிய படக் கம்பெனிகளுக்கு நூறு ரூபாய் கூலிக்கு கதை வசனங்கள் எழுதிக் கொடுக்கத் துவங்கினார். இவர் பெரும் பாலும் துணை எழுத்தாளராகவே விளங்கி வந்தார். ஜாவேத் தனது எழுத்துப் பணி களை உருது மொழியிலேயே செய்து வந் தார். அவை சில துணை எழுத்தாளர் களால் இந்தியில் எழுதப் பட்டது. பின் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்டது. துவக்க காலத்தில் ஜாவேத் தனது நண்பர் சலீம் கானுடன் இணைந்து பணியாற்றி வந்தார். இவர்கள் 1980 வரையில் இணை ந்து பணியாற்றினார்கள். பின் ஜாவேத் திரைப்பட பாடலாசிரியர் பணியில் தீவிர மாகி விட்டார்.
ஜாவேத்திற்கு அவரது தந்தை ஜாதூ (மந்திரம்) என்றுதான் முதலில் பெயர் வைத்தார். இந்த வார்த்தை ஜாவேத்தின் தந்தையும் கவியுமான ஜன் நிஷார் அக்தர் எழுதிய "லம்பா, லம்பா கிசி ஜாதூ கா பஹானா ஹோகா" என்ற வரியிலிருந்து எடுக்கப் பட்டுள்ளது. பின் பதிவு செய்யப் படுகையில் ஜாவேத் என்று ஆகி விட்டது.
கவிஞர் ஜாவேத் அக்தர் இந்தி திரைப்படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதும் வரீனி இராணியை மணந்தார்.
மல்லிகை ஜூலை 2008 率 23

Page 15
இவர்களுக்கு பர்ஷன் அக்தர் மற்றும் ஜோயா அக்தர் என்று இரண்டு குழந்தை கள் பிறந்தது. பர்ஷன் அக்தர் இன்று பிரபல இளம் திரைப்பட இயக்குனர ஆவார். ஷரீனி இரானியுடன் திருமணம் நடக்க நண்பர் சலீம் காரணமாக இருந்திருக்கிறார். ஆனால் இரானியின் தாயாரிடம் ஜாவேத் குறித்து தவறாக சலீம் சில தகவல்களைச் சொன்னதாக கூறப் பட்டு அது பெரும் பிரச்சனையாகி ஜாவேத்-இரானி தம்பதி பிரிந்து விட்டது.
வரீனி இராணியை மணவிலக்கு செய்த ஜாவேத் உருது மொழியின் பிரபலக் கவிஞர் கை.பி ஆஜ்மியின் மகளும் பிரபல திரைப்பட நடிகையுமான சபானா ஆஜ் மியை மணந்தார். இன்று இந்தித் திரையு லகில் நல்ல தம்பதிகளாக மட்டுமன்றி நண்பர்களாக வலம் வருகின்றனர்.
ஜாவேத் அக்தருக்கு சிறந்த பாடலா சிரியருக்கான இந்திய தேசிய விருது ஐந்து முறையும் பிலிம்பேர் விருது ஏழு முறையும் கிடைத்துள்ளது. 1999ம் ஆண்டு இந்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ பட்டமும் 2007ம் ஆண்டு பத்மபூஷன் "ப்ட்டமும் வழங்கப் பட்டு கெளரவிக்கப் பட்டது. 2007ம் ஆண்டு பிலிம்பேர் விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டு கெளரவிக்கப் பட்டது.
ஹதர்கவு என்ற இவரது கவிதைத் தொகுதி பல மொழிகளில் மொழி பெயர்க் கப் பட்டுள்ளது. இன்னும் சிறுகதைகளும் சினிமா குறித்த கட்டுரைகளும் எழுதியு ள்ளார். கவிதையும் கஜலும் இவருக்கு வாய்த்த வரம் எனலாம். உருது மொழியின் மென்மை இவரது உச்சரிப்பாலும் கவி தையில் பயன்பாட்டாலும் இன்னும மென்மை யாகி விடுகிறது.
பசி
ஜாவேத் அக்தர்
பொழுது புலர கண்கள் திறந்து மீண்டும் உயிர் பிழைத்தேன் வயிற்றின் இருளிலிருந்து மூளையின் புகைமூட்டம் வரை பாம்பாய் ஊர்ந்தோர் எண்ணம் இன்று மூன்றாவது நாள் இன்று மூன்றாவது நாள்
அறையில் ஒருவித அமைதி உறைந்து கிடக்கிறது
ஒரு தரை, ஒரு கூரை நான்கு சுவர்கள்- என்னுடன் எவ்வித தொடர்புமில்லாமல் பார்வையாளர்களாய் பார்த்தபடி
எதிர் ஜன்னல் வழி படுக்கையில் படரும் சுடு வெயில் கதிர்கள் குத்துகிறது முகத்தில் உறவுகளின் கூர்மையோ வேலி முட்களைப் போல் ஏழ்மையைக் குத்திக் காட்டும்
கண்களைத் திறக்கிறேன் வெறுமையாய் இருக்கிறேன் ஒடு மட்டுமே மிஞ்சியிருக்கிறது
படுக்கையில் கிடக்கிறது என்னுடைய பூத உடல் ஜீவனற்றக் கண்களுடன் அறையை அலசுகிறேன் இன்று மூன்றாவது நாள் இன்று மூன்றாவது நாள்
மல்லிகை ஜூலை 2008 霹 24

நன்பகல் வெம்மையில் நடக்கிறேன் திக்கற்று நீண்ட சாலையின் இருபுறக் கடைகளிலும் பார்வையில் பட்டது பெயர்ப் பலகைகளை வாசிக்க முடியாது வந்து போகிறார்கள் வழிப்போக்கர்கள் அருகிலிருந்து கடந்தும் மங்கலாகத் தெரிகிறார்கள் முகமற்றவர்களைப் போல
பாதை நிரப்பும் கடைகளில் பெருஞ்சத்தம் கெட்டவார்த்தை வார்த்தைகள் வானொலி ஒசைகள் தூரத்தின் எதிரொலிகள் அனைத்தும் கேட்கிறது
பார்ப்பது அனைத்தும் கனவாய் தெரிகிறது இருப்பது போலும் இல்லாதது போலும் நன்பகல் வெம்மையில் நடக்கிறேன் திக்கற்று எதிர்வரும் சந்தியில் பார்வையில் படுகிறது நீர்க் குழாய் ஒன்று
திடமாய் இருக்கும் நீர் சிக்குகிறது தொண்டையில் வயிற்றில் காற்று நிரப்பியதாய் காட்சியளிக்கிறது மயக்கமாக வருகிறது உடலெங்கும் வேர்க்கிறது இனியும் வலுவில்லை
இன்று மூன்றாவது நாள் இன்று மூன்றாவது நாள்
எங்கும் இருள் ஆழ கரையில் நிற்கிறேன் கல்லாலான படிகளில் படுத்துக் கிடக்கிறேன் என்னால் எழ முடியாது வானத்தைப் பார்க்கிறேன் வானமெனும் தட்டில் நிலாவெனும் சப்பாத்தி கனத்த இமைகள் தாழ்கின்றன நிலவெளிகள் மறைகின்றன சுழல்கிறது இவ்வுலகம்
வீட்டில் அடுப்பிருந்தது தினமும் சமையல் நடந்தது தங்கமாய் சப்பாத்திகள் சுடச்சுடச் சாப்பாடு திறக்கவில்லை கண்கள் காரணம் நான் சாகப் போகிறேன்
மாறுபட்டவள் அன்னை தினமும் உணவூட்டுவாள் அந்த குளிர்ந்த கைகளால் தீண்டுகிறாள் முகத்தை ஆணைக்கு ஒரு பிடி குதுரைக்கு ஒரு பிடி கரடிக்கும் ஒரு பிடி இது மரணமா? {S6Ü60)6v) LDulai53BL(DAT'? எதுவானாலும் ஏற்புடையதுதான் இன்று மூன்றாவது நாள் இன்று மூன்றாவது நாள்
மொழிபெயர்ப்பு மதியழகன் சுப்பையா
மல்லிகை ஜூலை 2008 & 25

Page 16
அன்புள்ள விலங்குகள் : என். எஸ். நடேசனின்
‘வாழும் சுவடுகள்
ہ> eyے 7ٹے لیے n و)--
5ால்நடை மருத்துவராகப் பணிபுரியும் நடேசன் தன்
மருத்துவமனை அநுபவங்களை இருபது கட்டுரைகளாக இந்த தொகுதியில் பதிவு செய்துள்ளார். துறைசார்ந்த ஈடுபாடும், பற்றும் மிகுதியாகும் போது, ஒருவருடைய கண்ணோட்டம் தானாகவே விரிவடைகிறது. சம்பளத்துக்காக ஒருதுறையில் வேலை செய்வது என்பது ஒருவிதம். ஏன்? எப்படி? எதனால்? என்பவை போன்ற கேள்விகளால் மனத்தை நிரப்பிக் கொண்டு, ஒரு துறையில் வேலை செய்வது என்பது இன்னொரு விதம். இப்படிப்பட்டவர்களே அறிவியலாளர்களைப் போல, ஆய்வு மனப்பான்மையோடு தனது துறையில் ஈடுபடுகிறார்கள். தொழிலிடங்களில் தமக்கு நேரும் அநுபவங்களை முன் வைத்து தம் கேள்விகளுக்கான விடைகளைத் தேடி அறிகிறார்கள். இவர்களுடைய அணுகுமுறை, இவர்களைத் திறமைசாலிகளாக உருமாற்றுகிறது. புதுப்புது அநுபவங்களின் வாசல்களை அவர்களுக்காகத் திறந்து வழிவிடுகின்றன.
இரத்தப் புற்றுநோய், தோல்நோய், கட்டிகள், எலும்புத் தேய்வு, நீரிழிவு என எல்லாவகைப்பட்ட நோய்களும் மனிதர்களைத் தாக்குவதைப் போலவே, விலங்குகளையும் தாக்குகின்றன. மனிதர்களைவிட, குறைவான ஆயுள் கொண்ட விலங்குகள், இந்த நோய்க்கு ஆளாகி ஆசை ஆசையாக அவற்றை வளர்த்தவர்கள் கண்முன்னாலேயே இறப்பது சோகமான விடயம். ஒருநாயின் அதிபட்ச வாழ்க்கைக் காலம் 18 ஆண்டுகள். ஒரு மயிலின் வாழ்க்கைக்காலம் 30 ஆண்டுகள். நடேசன் விவரித்திருக்கும் பல கட்டுரைகளில் இடம்பெறும் நாய்கள் 12 அல்லது 13 ஆண்டுகளிலேயே பாதுகாப்பான சூழலில் வளர்க்கப் பெற்றாலும் நடுவயதிலேயே அவை மரணத்தைத் தழுவி விடுகின்றன. தடுக்க முடியாத சக்தியாக நிற்கும் மரணம் பலவிதமான எண்ணங்களை எழுப்புகின்றன.
சிகிச்சை அநுபவங்களை விவரிக்கிற போக்கில், தன் மனத்தில் உதிர்க்கும் எண்ணங்களாக நடேசன் பதிவு செய்யும் பல விடயங்கள் மிக முக்கியமானவை. "ஆதிவாசிகள் அவலம் கட்டுரையில், வீடுகளில் சுவரோரமாக வசித்து, இடங்களை அசுத்தமாக்கிவிடும் தூரிகை போன்ற வாலைக் கொண்ட போசம் என்னும் விலங்கைப் பற்றிய விவரங்கள் விரிவாகத் தரப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் மூத்த விலங்கு என்ற பெயர் இதற்குண்டு. ஒரு காலத்தில் தென்கண்டம் என்ற ஆஸ்திரேலியாவுக்கு, கேப்டன் குக் என்பவரும் அவருடைய மாலுமிகளும் சிறிய குற்றம் செய்த ஆண்களையும், விபச்சாரம் செய்த பெண்களையும் கப்பலில் ஏற்றிக் கொண்டு சிட்னி பொட்டனி விரிகுடாவில்
மல்லிகை ஜூலை 2008 ஜ் 26
 

இறங்கினார்கள். மனிதர்கள் இல்லாத சூனியப் பிரதேசமாக ஆஸ்திரேலியாவை முதலில் பிரகடனம் செய்த தம் கூற்றை உண்மையாக்க ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த ஆதிவாசிகளைக் கொன்றார்கள். முதலில் ஐரோப்பியர்கள், பிறகு சீன க்காரர்கள், அதற்குப் பிறகு வியத்நாமியர் கள், இறுதியாக இலங்கைத் தமிழர்கள். இப்படிக் காலம் காலமாக மனிதர்கள் ஆஸ் திரேலியாவைச் சுற்றி வளைத்து தம் வாழி டமாக மாற்றிக் கொண்டார்கள். மாசூப்பி யல் என்னும் விலங்கினம் மனிதர்கள் வரவு க்கு பல ஆண்டுகள் முன்னராகவே இங்கு வாழ்ந்து வந்தது. பரிணாம வளர்ச்சியில் இவை பாலூட்டிகளுக்கு முற்பட்டவை. இந்த விலங்கினத்தின் ஒருவகையே நடே சன் குறிப்பிடும் போசம் என்னும் தூரிகை வால் விலங்கு. காடு நாடாகி, கானும் இடங் களெல்லாம் வீடுகளாக மாறிப் போய்விட்ட சூழலில், வசிப்பிடத்துக்கு வழியற்ற போசம் மனிதர்களுடைய வீடுகளில் ஒழிந்து வாழ முற்பட்டன. இவ்விலங்கினம் தன்னோடு வசிப்பதை விரும்பாத மனிதர்கள் வேறு வழியற்ற சூழலில் அவற்றைக் கொன்று விடுகிறார்கள். வீட்டு விலங்குகளைச் செல் லப் பிராணிகளாக வளர்த்துக் கொஞ்சத் தயங்காத மனம், போசம் வசிப்பதை விரும்ப வில்லை என்பது முரணாக இருக்கலாம். ஆனால், அதுதான் எதார்த்தமாக உள்ளது. இதைத் தவிர்க்க தனக்கும் வேறு வழி தெரியவில்லை என்று, ஒருவித குற்ற உணர்வோடு பதிவு செய்கிறார். புது வீடு கட்டி குடிபுகுந்த நடேசன், மற்றவர்கள் (3Line) 85600T600 so Lull-gib Qasireosom Loso, நமது ஊரில் பொறியில் அகப்படும் எலிக ளைச் சாக்குப் பைகளில் மாற்றி எடுத்துக் கொண்டு போய் தொலைவான இடங்களில் விட்டுவிட்டு வருவது போல, ஒவ்வொன்றாக ஒரு பெட்டியில் அடைத்துச் சென்று தொலை வான இடத்தில் விட்டு விட்டு வருகிறார்.
சாண்டி எனப்படும் நாயைப் பற்றிய குறி ப்பு இடம் பெறும் நினைவுத் தடத்தில் கட் டுரை முதுமையின் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறது. மனிதர்களைப் போலவே சாண்டியையும் முதுமை வாட்டுகிறது. நடக்க முடியாமல் கால்கள் பின்னுகின்றன. இரவு பகல் வித்தியாசம் மறந்து விடுகிறது. செவிக் கூர்மை மங்குகிறது. புலன்கள் ஒவ் வொன்றாகச் செயலிழக்கத் தொடங்கும் போது மருந்துகளின் சக்தியால் மட்டுமே, மூச்சு விடுகிற ஒரு பொம்மையாக மாறி விடுகிறது அது. போதிமர ஞானம்' என்னும் கட்டுரையில் ஒரு முதியோர் இல்லத்தின் காட்சி இடம் பெறுகிறது. மருந்துகளின் மகிமையால் மனித உயிர் நீண்ட ஆயுள் கொண்டதாக மாறுவதையும், தானாக இயங்குகிற சக்தியில்லாத அவர்களுடைய உடல் எதிர்கொள்ளும் வேதனைகளை இரக்கம் படர எழுதுகிறார் நடேசன். கால் ஒருபக்கம், கை ஒரு பக்கம், தலை ஒரு பக் கம், பார்வை இன்னொரு பக்கம் என இரு க்கைகளிலும், பூங்காக்களிலும், புல்வெளி யிலும் உள்ள முதியோர் கோலத்தை விவரி த்துக் கொண்டே வரும் நடேசன் இறுதியாக, அதே இல்லத்தில் மருத்துவத்தால் காப் பாற்ற முடியாத ஒரு பூனை மயக்க ஊசி போட்டு கருணை மரணத்துக்காக வெளியே எடுத்துச் செல்லும் சம்பவத்தை எழுதுகி றார். அப்போது அவர் மனதில் ஒரு கேள்வி எழுகிறது. இறுதிக் காலத்தில் உடல் உணர்வுகளை இழந்து, உயிரை மட்டும் வைத்திருக்கும் மனிதர்களின் நிலை அதிர்ஷ்டம் மிகுந்ததா? அல்லது அமை தியாக மரணத்தைத் தழுவ இருக்கும் பூனை அதிர்ஷ்டம் மிகுந்ததா? இக்கேள்வி க்கு நம்மால் எப்படி விடை சொல்ல முடியும். விலங்குகளுக்கு நாம் எஜமானர்கள்.
மல்லிகை ஜூலை 2008 ஜ் 27

Page 17
அவற்றை வீட்டில் அன்போடு வளர்த்து ஆளாக்குகிறோம். அவற்றின் வாழ்வும், வள ர்ச்சியும் நம் பொறுப்பில் இருப்பது போலவே, அவற்றின் மரணமும் நம் பொறுப்பாகவே மாறிவிடுகிறது. குடும்ப உறுப்பினர்கள் சார்ந்து அப்படி ஒரு முடிவை எடுப்பது என்பது மனித குலம் செய்ய இயலாத செயல் என்பதே உண்மை.
கோயிலில் மயில் வளர்க்க ஆசைப் படும் மனிதர்கள், மயிலுக்குத் தனித்த அறை கள் தேவை என்னும் உண்மையை அறியா தவர்களாக உள்ளார்கள். பல மயில்களை மந்தை போல ஒரே இடத்தில் வைத்து அடைத்ததால் ஏற்பட்ட ஒரு மயிலின் மரண த்தைப் பற்றிய குறிப்பும், முதன்முதலாக ஓர் எருமையின் பிரசவத்துக்காக அறுவைச் சிகிச்சை செய்யச் சென்ற இடத்தில் இடது பக்கம் உள்ள கருப்பையைத் தேடி வலது பக்கம் அறுத்துவிட்டு, பொய்ச் சொல்லிச் சமாளித்துவிட்டு, வந்ததைப் பற்றிய குறிப்
பும் படிக்கச் சுவையாக உள்ளன. சாலை விபத்தில் இறந்து போன மிஸ்கா என்னும் நாயைத் தேடி எடுத்து வந்து அதைப் பாடம் செய்து அடக்கம் செய்ய அனுப்பும் அநுப வத்தைப் பற்றிய கட்டுரையும், வீட்டில் வளர்க்கிற எல்லாவிதமான நாய்களுக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ சோதனைக்கு உட்படுத்துவதையும், தேவை ப்பட்ட மருந்துகளை வாங்கி, வேளை தவறாமல் தந்து காப்பாற்றி உயிரைப் போல வளர்க்கும் ஒருவர் தன் உடல் நிலை யைப் பற்றி அக்கறை செலுத்தாமல் திடீ ரென உருவாகித் தாக்கிய இதயத் தாக்கு தலால் அகால மரணமுறும் ஒருவரைப் பற் றிய கட்டுரையும் ஒரு சிறுகதைக்கு நிகரான அநுபவத்தை வழங்கக் கூடியது.
(வாழும் சுவடுகள். என். எஸ். நடேசன். மித்ர வெளியீடு, 32/ 9, ஆற்காடு சாலை. சென்னை 24)
R. HAIR DRESSERS -
89, Church Road, Mattakuliya, Colombo -15. Tel:0602133791
குளிரூட்டப் பெற்ற சலூன்
மல்லிகை ஜூலை 2008 率 28
 
 
 
 
 
 
 

து. வைத்திலிங்கம் என்ற படைப்பாளி:
ஒரு நினைவு அஞ்சலி
செங்கைஆழியான் க. குணராசா
படைப்பாளி துவைத்திலிங்கம் அவர்களின் ஆளுமையை நினைவு கூரும்போது இரண்டு பக்கங்கள் தெளிவாகத் தெரிகின்றன. ஒன்று அவரின் நிர்வாகப் பணி, இரண்டு அவரின் இலக்கியப்பணி. நிர்வாகப் பணியைப் பொறுத்தளவில் அவர் இலங்கையின் மூத்த ஒரு நிர்வாக சேவை அதிகாரி. பிரிவுகாரியதிகாரி பதவியிலிருந்து மேலதிக அரசாங்க அதிபர் வரை பதவியாற்றி, அப்பணிகளுக்கு பெருமை சேர்த்தவர். உண்மையில் அவர் ஆற்றிய பதவிகள் அவரால் பெருமைபெற்றன. அத்தோடு ஈழத்து இலக்கிய உலகுக்கு அவர் ஆற்றிய பணி என்றும் காலத்தால் அழியாது நினைவில் கொள்ளக்கூடியதாகும். புனைகதைத் துறைகளான சிறுகதை, குறுநாவல, நாவல் ஆகியவற்றில் அவர் பங்களிப்பு அதிகமாகும். ‘மண்ணின் கனவுகள்’ என்ற சிறுகதைத் தொகுதியையும் “ஒரு திட்டம் மூடப்படுகிறது”, “பூம்பனிமலர்கள்”, “சிறைப் பறவைகள்’ ‘மண்ணின் குழந்தைகள்’ முதலான குறுநாவல், நாவல்கள் ஆகியவற்றையும் ஆக்கித்தந்துள்ளார். அவருடைய புனைகதைகளை முழுமையாக படித்து முடிக்கும் போது, மனதில் எஞ்சி நிற்கின்ற உணர்வுகள, ஏக்கம், தவிப்பு, துயரம். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த மண்ணின் கீழ்மட்ட மக்களை அழுத்தி நிமிர விடாது அமுக்குகின்ற அயோக்கியத்தனங்களின் பல்வேறு வடிவங்கள், சமூகத்தின சிந்தனைக்கு முன்வைக்கப்பட்டிருக்கும் சத்திய ஆவேசம் இதயத்தைக் கணக்க வைக்கின்றது. நல்ல சிறுகதைகளின் சமூகப் பயன் அதுவெனவே நான் கருதுகிறேன்.
محم
கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக ஆக்கவில்க்கியத்துறையில் ஈடுபட்டுவருபவர் து.வைத்திலிங்கம். சிறுவயதிலிருந்தே தன் ஆளுமையை அவர் வளர்த்துக்கொண்டதை நானறிவேன். யாழ் இந்துக்கல்லூரியில் சிந்தனைத்தெளிவும் ஆற்றலும் வாய்ந்த ஆசிரியப் பெருமக்களான மு.கார்த்திகேசன், அற்புதரட்ணம், ஏரம்பமூர்த்தி, சிவராமலிங்கம், கணேச ரட்னம் போன்றவர்களிடம் கல்விகற்கின்ற தகுதி அவருக்கிருந்தது. கல்விகற்கின்ற காலத்தி லேயே நிறைய வாசிக்கின்ற பழக்கமுடையவர். மற்றவர்களையும் நல்ல நூல்களை வாசிக் கச் செய்யும் இயல்பினர். பாடசாலை நாட்களில் நல்லதொரு நடிகனாகவும் விளங்கியவர். தேவன் - யாழ்ப்பாணம் அவர்களின் ‘கூடப்பிறந்த குற்றம்' என்ற மேடை நாடகத்தில நகைச் சுவைப் பாத்திரம் ஏற்று, சபையோரைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்த திறன் இன்றும நினைவிலுள்ளது.
பொது நிறுவனங்களில் சமூகப்பணிசெய்யும் நோக்குடன் இணைந்து கொள்பவர்கள் சமூகவட்டத்தில் பல்தரத்திலும் உயர்வர் என்பதற்கு துவைத்திலிங்கம் தக்க சான்றாவார்.
மல்லிகை ஜூலை 2008 &தி 29

Page 18
அவர் அங்கம் வகித்த கலாஜோதி சனச மூகநிலையத்தில் அங்கத்தவர்களாக இணைந்து செயற்பட்டவர்களை கலாஜோதி சனசமூக நிலையம் இன்று இலங்கையின் உயர் நிர்வாகிகளாக உருவாக்கித் தந்திருக்கின்றது. இலங்கையின் மூத்த நிர்வாகியாக விளங்கிய கலாநிதி க.குணராசா, மாகாணகல்விச் செயலாளராக விளங்கிய சுந்தரம் டிவகலாலா, உலகின் பல நாடுகளில் உயர் ஸ்தானிகராக விளங்கிய சி.பூலோகசிங்கம், மேலதிக அரசாங்க அதிபராக விளங்கிய இந்த நூலாசிரியர் துவைத்திலிங்கம் ஆகியோர் ஒரே சுற்றாடலில் பிறந்து வளர்ந்து இச்சனசமூகநிலையத்தில் தம் நிர்வாக ஆற்றலை அதன் போஷகரான கம்யூனிஸ்ட் மு. காாத்திகேசனிடமிருநது கற்றுக் கொண்டவர்கள். நண்பன் துவைத்திலிங்கம் மாணவனாக விளங்கிய காலத்திலேயே நிறைய வாசிப்பதிலும் கற்பதிலும் அதேவேளை பொதுப்பணிகளில் தளராது ஈடுபடுவதிலும் மிகுந்த அக் கறை கொண்டிருந்தார்.
அமரர்.து. வைத்திலிங்கத்தின் எழுத் துப்பணிக்கு அவரது சமூக அவதானிப்பு எவ்வளவு தூரம் உதவியிருக்கின்றது என்பதை நானறிவோன். வெற்றிபெற்ற இலக்கியப் படைப்புக்கள் அவற்றைப் படைத்தவர்களின் அவதானிப்பின் திறனில் பெரிதும் தங்கியிருக்கின்றமையை மறுப்பதற்கில்லை. து.வைத்திலிங்கத்தின் சிறுகதைகளில் நுணுக்கமான அவதானிப் பினை காணமுடிகின்றது. அவரது சிறுகதைத்தொகுதியில் உள்ள கிணறு, எங்கே போகிறோம்? தீர்ப்பு என்பவற்றில் ஆசிரியரின் அவதானிப்புச் சிறப்பினை நன்கு காணமுடிகின்றது. அதனால் இந்த மூன்று சிறுகதைகளும் அத்தொகுதியில் மிகச் சிறப்பானவையாக அமைந்து விடுகிறன.
து.வைத்திலிங்கத்தின் புரட்சிகரச் சிந்தனையை கிணறு சுட்டுகின்றது. பொதுக்கிணற்றில் ஒரு பகுதி மக்களை தண்ணிர் அள்ளக் கூடாது என ஒரு பகுதியினர் மறிக்கின்றனர். அப்பிரச்சி னையை அப்பிரதேச உயர்அதிகாரி தீர்த்து வைக்கின்றார் அதற்காக எம்பியும் அவர் பின்னால் இயங்குகின்ற தம்பிமாரும் சேர்ந்து அந்த உயர் அதிகாரியை இடம் மாற்றிவிடுகின்றனர். இச் சிறுகதையில் இரணர் டு பிரச்சினைகள் அவரால் அணுகப் பட்டிருக் கினறன. ஒன்று சமூகப்பிரச்சினை மற்றயது. அதிகாரப்பிரச் சினை, எங்களது சமூகத்தில் புரையோடிப் போன சமூகப்பிரச்சினையான சாதிவேறு பாட்டை சத்திரசிகிச்சை மூலம் தான் தீர்க்கமுடியும் என்பது துவைத்திலிங்கத் தின் கருத்து. அதனைச் செய்துகாட்டியவர் களில் ஒருவர், அவர் ஆலயப்பிரவேசம் நடந்த காலகட்டத்தில் அவர் தந்தையாரின் பரிபாலனத்திலிருந்த வீரகத்தி பிள்ளையார் கோயிலை அதற்கு முதலே அனைவருக் கும் வழிபாட்டுக்கு திறந்து விட்டவர். ஆகவே சமூகப்பிரச்சினையை எழுத்தில் காட்டுவது மட்டுமன்றி, செயற்படுத்துவதிலும் வைத்திலிங்கம் முன்னிற்பவர்.
அதிகாரப் பிரச்சினைகளை வைத்து து.வைத்திலிங்கம் அற்புதமான சில படை ப்புகளைத் தந்திருக்கிறார். உயர் அலுவல கங்களில் பணிபுரியும் பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற மோசத்தனங்களை அவர் தனது ‘பூம்பனி மலர்கள்’ என்ற நாவலில் அற்புதமாகச் சித்திரித்திருக்கிறார். ஈழத்துக் குறுநாவல் வரலாற்றில் அவர் எழுதிய “ஒரு திட்டம் மூடப்படுகின்றது” என்ற குறுநாவல் ஒரு முக்கியகட்டமாகும். ஒரு அபிவிருத்தித்திட்டம் மூடப்படுவத ற்கான காரணகாரியங்களை, அதன் பின்ன ணியில் இயங்கிய சக்திகளை அவ்வளவு
மல்லிகை ஜூலை 2008 霹 30

தத்ரூபமாக எவராலும் சித்திரிக்கமுடியாது. ஒரு அபிவிருத்தித்திட்டம் இலக்கியத்தின் முழுப்பொருளாக அமைந்த முதலாவது ஆக்கம் அக்குறுநாவல் தான். ஒரு அலுவ லகக் கோவைகூட அற்புதமான ஒரு இலக் கிய ஆக்கமாக மாறமுடியும் என்பதை து. வைத்திலிங்கம் அக் குறுநவலில் சித்திரித்திருக்கின்றார். வலு துணிவும் குற் றங்களைத் தட்டிக்கேட்கின்ற திறனும் வாய்ந்த அதிகாரிகள் எழுத்தாளர்களாக இருக்கும்போதே, இத்தகைய துணிவு சாத்தியமாகும் என நான் நினைக்கின்றேன். அதிகாரப்பிரச்சனைகள் அவரது சிறு கதைகளில் பரவலாக அணுகப்பட்டிருக்கி ன்றது. பாராளுமன்றக் கதிரைகளைப்பற்றிக் கொண்டவர்களும் அதனைப் பற்றுவதற்குப் பிரதேசமட்டத்தில் இயங்கிவருபவர்களும், சமூகப் பிரச்சினைகளை தீர்க் காது அப்பிரச்சினைகள் தொடர்ந்திருப்பது தமது தொடர்ந்த வெற்றிக்கு சாதகமென்பதை புரிந்து செயற்பட்ட அயேர்க்கியத்தனத்தை து.வைத்திலிங்கத்தின் சிறுகதைகள் மக்கள் முன் வைத்திருக்கின்றன.
பணம் படைத்த ஒருவரது குடும்பம் எவ்வாறு ஒரு கிராமத்து ஏழைப் பெண்ணை பந்தாடியது என்ற கருவை உள்ளடக்கிய ஒரு படைப்பு ‘மண்ணின் குழந்தைகள்’ அந்த நாவலிலும் காணி ஆணையாளர், திணைக்கள குட்டி அதிகாரிகள் கிராமங்க ளில் கொலனிகளில் புரியும் அட்டூழியங் களை துணிவுடன் எடுத்துக் கூறினார். அவ ரின் சிறுகதைகளில் “தீர்ப்பு” கட்டுக் கோப்பான நல்லதொருகதை. பணமும் செல்வாக்கும் படைத்தவர்கள் சட்டத் தினைக் கூட, தமக்குச் சதகமாக மாற்றி விடக் கூடியவர்கள் என்பதை அச்சிறுகதை காட்டுகிறது. அதனைப்படித்து முடித்ததும் நெஞ்சின் ஒரு மூலையில் ஒரு மெல்லிய வலி ஏற்படுவதை உணரமுடிகின்றது.
“எங்கே போகின்றோம்?” என்ற சிறுகதை யில் ஆசிரியர் ஒரு படி மேலே சென்று இச்சமூகம் இப்படியா இயங்கவேண்டும்? என ஆதங்கப்படுகிறார். குண்டடிபட்டு விழுந்து கிடக்கின்ற ஒரு அப்பாவிப் பெண்ணின் மணிக்கூட்டைக் களவாடிச் செல்கின்ற கயவர்களை அவர் பெரும் ஏமாற்றத்துடன் காட்டுகின்றார். ‘தூரத்து நட்சத்திரங்கள்’ எனற கதையில் வெளிநாட்டு ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதை ஆசிரியர் வலியுறுத்துகின்றார். “எதிரொலி” வித்தியாசமான ஒரு சிறுகதை. வினை விதைத்தவன் வினையறுப்பான் என்பதை வற்புறுத்த அவர் விரும்புகிறார் ஆற்றா மையால் எழுகின்ற அவலம், கற்பனை யிலாவது பழிவாங்கி விடுகின்ற தப்பி யோடும் உணர்வு எதிரொலியில் ஊடுபரவி யிருக்கின்றது.
வைத்திலிங்கத்தின் சிறுகதைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் எடுத்துக் கூறமுடியும். அவரின் சிறுகதைகளில் இரு கட்ட வளர்ச்சியை சுட்டும் சிறுகதைகள் இருப்பதாக எனக்குப் படுகின்றது. அவரின் சிறுகதைத்-தொகுதியில் உள்ள முதல் ஐந்து சிறுகதைகளும் ஆசிரியரின் ஆரம்பக்காலக் கதைகள். முதிரா இளமை யின் எண்ணக்கனவுகளாகவும் கற்பனாவாத சிந்தனைகளாகவும் அவை விளங்குகின் றன. ஆசிரியரின் திடீர் பாய்ச்சலை இத் தொகுதியில் உள்ள “கிணறு” என்ற சிறு கதையில் இருந்து அவதானிக்க முடிகி ன்றது அவரது சிந்தனைகளிலும் கருப் பொருளிலும் அவரது பாய்ச்சல் தெரிகின் றது. உயர் அதிகாரியாக நலிந்த கிராமப் புறங்களுக்கு பதவிவகிக்க சென்றதன் பின்னர், அவரது பார்வையில் தெளிவும் சமூகத் தாழ்நிலைக்கான குமுறலும் அச்சிறுகதையில் தெரிகிறது. அனுபவம் கற்றுத்தரும் திறன் அது.
மல்லிகை ஜூலை 2008 率 31

Page 19
தான் சொல்ல விரும்பும் சங்கதியை ஆற்றொழுக்காக சொல்லிவிட ஆசிரியரால் முடிகிறது. வலிந்து சொற்களை புகுத்தி வாசிப்பவரை களைப் படைய வைக்க அவருக்கு தெரிந்திருக்கவில்லை. பெரும் உத்திகளை அவர். இச் சிறுகதையில் கையாண்டிருப்பதாகக் கூறமாட்டேன். ஆனால், தனது கருத்தை எவருக்கு கூறவிரும்பி னாரோ அதனை கூறுவதற்கு அவர் வரித்துக் கொணி ட வடிவம் திருப்திகரமா னதாக இருக்கிறது. இலக்கியம் மக்களு க்காக என்றால் அது
அந்த மக்களை சென்றடைய ஆசிரியரின் எழுத்துநடையும் சலிப்பின்றி கூறும் விபர ணமும் கைகொடுப்பன.அமரர் துவைத்தி லிங்கத்தின் இழப்பு நிர்வா கத்துறைக்கும் இலக்கியத்துறைக்கும் எவராலும் ஈடுசெய்ய முடியாததாகும். அவரின் மரணம் ஏற்படுத் திய வெற்றிடத்தை நிரப்புவத்கு நிச்சயமாக இன்னோர் வைத்திலிங்கத்தால் தான் முடியம். அவரின் என்றும் நிலைத்து நிற்கும் புனைகதை ஆக்கங்கள் அவரின் நினைவை அழிய விடாது பேணிக்காக்கும் என திடமாக நம்பு கின்றேன்.
மல்லிகை ஜூலை 2008 * 32
 

-----  ܼ lló
- Uერèl
அலுவலகக் கதவு மூடியிருந்தது. ஆள் நடமாட்டமே இல்லை. வாயிற்படியில் நாயொன்று சுருண்டு படுத்திருந்தது. நேரம் காலை 7.30 எனக் கடிகாரம் காட்டியது. அதுமட்டுமல்ல, நான் வந்து 15 நிமிடங்கள் ஆகியிருந்தன. துறைமுகத்தினுள் வாகனங்கள் புகையையும், இரைச்சலையும் கக்கிக் கொண்டு பறந்தன. அலுவலகத்தின் இரண்டு பக்கத்திலும் பாரம் தூக்கிகள் சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்தன.
சென்ற வாரம் பயிற்சியின் போது, விரிவுரையாளர் வலியுறுத்தியிருந்தார். நேரம்நேரம்தான் எமது தொழிலின் உயிர்நாடி. துறைமுக வேலைகள் நேர அட்டவணையின் படி நடந்தாக வேண்டும். ஒரிடத்தில் தடங்க, எல்லாமே சங்கிலிக் கோர்வை போல பிந்திவிடும். அதனால், காலை எட்டு மணிக்கே சரக்குக் குதங்கள் திறந்திருக்க வேண்டும். அலுவலகம் அரைமணித்தியாலம் முன்பே திறக்க வேண்டும். அவரை நம்பித்தான் நானும் அதிகாலையிலேயே வந்திருந்தேன். எட்டு மணியும் ஆயிற்று. கால் கடுக்கக் காத்து நின்றதுதான் மிச்சம். அலுவலகம் திறக்கப்படவில்லை. ஏன் ஆள்நடமாட்டங் கூட இல்லை.
பயமாக இருந்தது, வேறு இறங்குதுறைமுகத்துக்கு வந்து விட்டேனோ என்று. விசாரிப்பதற்கும் அருகிலே ஒருவரையும் காணவில்லை. தூரத்தில் செல்பவர்களும் ஒடிக் கொண்டிருந்தார்களே தவிர, நிதானமாக நடந்து போவோர் எவருமே தென்படவில்லை.
எட்டே கால் மணியளவில் அலுவலக வேலையாள் வந்தான். பெரிய சாவிக் கொத்து குலுங்க சாவகாசமாக வந்தான். அவனும் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. நாய் எழுந்து வழிவிட, பூட்டைத் திறந்து உள்ளே போனான். திரும்ப அவனைக் கண்ட போது, அவன் கையில் தும்புக்கட்டை இருந்தது.
'இதுதான் எலிசபெத் இறங்குதுறையா. ?' என்றேன். 'ஆம். ' என்று தலையாட்டியவன் தன்பாட்டிலே அலுவலகத்தினுள்ளே போய் விட்டான்.
9 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார் அலுவலர். நல்ல கட்டுமஸ்தான உடம்பு. அதற்கேற்ற உயரம். மோட்டார் சைக்கிளை ஸ்ராண்டில் நிற்பாட்டியவரின் கண்கள் என்னை மேய்ந்தன.
“என்ன விசயம்.? இங்கே நிற்கிறீர்.” முதலில் விசாரித்தது அவர்தான்.
"எலிசபெத் இறங்குதுறை அலுவலகம் இதுதானா. ?・
மல்லிகை ஜூலை 2008 率 33

Page 20
"ஆமாம். என்ன வேணும்.?"
"பொறுப்பாளரைச் சந்திக்க வேண்டும்."
“எதற்காக...? அவர் குரலில் ஒருவித கண்டிப்பு இருந்தது.
"அவரிடம் போகும்படி தான் கடிதம் தந்திருக்கிறார்கள்."
"யார் தந்திருக்கிறார்கள்...? கொடும், ultrass6)TLb...."
வாங்கி நிதானமாகப் படித்து முடித்தார். இவர் தானோ பொறுப்பாளர் பீரிஸ். சந் தேகம் வலுத்தது.
'நீங்கள் தானா பீரிஸ்?"
"அவரிடம் கொண்டு போய்க் கொடு."
கை காட்டிய திசையில் அந்த வேலை யாள் அமர்ந்திருந்தான்.
'இல்லை இந்தக் குதத்தின் பொறுப் பாளர் பீரிசைத் தான் சந்திக்க வேண்டும்."
"அவர்தான் அது. C3LT.'
எனக்குத் திக்கென்றது. வேலையில் சேரும் முதல்நாளிலேயே இப்படி ஒரு அநுபவமா? புதிராக இருந்தது. கடிதத்தை நீட்டிய போதுதான் என்னை முழுமையாகப் பார்த்தார், பீரிஸ்,
"உட்கார். புதிதாகச் சேர்ந்தவனா..? எவ்வளவு காலம் பயிற்சி..? எத்தனை பேர்..? கேள்விகள் அடுத்தடுத்து வந்தன.
'மூன்று மாதம் பயிற்சியில் இருந் தோம். 30 பேர்." என்று தொடங்கி எல்லாம் விபரமாகச் சொன்னேன். என் பதில் அவரைத் திருப்திப்படுத்தியிருக்க வேண்
டும். முகத்தில் ஒரு மெல்லிய முறுவல் தோன்றியது.
'நீ சமாளிப்பாய். முதலில் கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும். போகப் போக பழகிவிடுவாய்."
"மஞ்சிநாயக்கா..." என்று கூப்பிட்டார்.
மோட்டார் சைக்கிள்காரன் வந்தான்.
"புதுப் பொடியன். நீ தான் வேலை பழக்க வேண்டும்."
'என்னோடு வா. ’ என்று மஞ்சி நாயக்கா அழைக்க, போனேன். அவனு க்கும் தனி அறை இருந்தது. அழகாக ஒழுங்கு படுத்தி இருந்தான். கலகலப்பாகப் பேசினான். அவனில் ஒரு ஒழுங்கு தெரி ந்தது.
"நான். பழக்குவதற்கு என்ன இருக் கிறது? பயிற்சியின் போது எல்லாம் சொல் லித் தந்திருப்பார்கள்."பயப்பிடாதே அது தான் எங்கள் தொழிலின் தாரக மந்திரம்" என்றான்.
என்முகம் காட்டிக் கொடுத்திருக்க வேண்டும். 'ஏதோ யோசனையில் இருக்கி ன்றாயே. என்ன?" என்றான்.
"இவரா பொறுப்பாளர்..? நம்ப முடிய வில்லையே தன் அலுவலகத்தை அவரே தும்புக்கட்டையால் கூட்டினாரே. ?・
'நீ பார்த்தாயா..?
"ஆமாம். காலையில் நான் அவரை அலுவலக வேலையாள் என்று நினைத் தேன். ஏன் இப்படி..? இங்கே...? வேலையாட்கள் இல்லையா..?"
மல்லிகை ஜூலை 2008 器 34

"அவரிடமே கேளேன்."
"எப்படிக் கேட்பது.?"
'பார்த்தாயா...? பயப்படாதே! என்
றேனே. மறந்து விட்டாயா?" சிரித்தான்.
மத்தியானம் சாப்பிடுவதற்கு எனக்கும் அழைப்பு வந்தது. பீரிசும் இருந்தார்.
"எப்படிச் சாப்பாடு.?" என்றான் மஞ்சி
நாயக்கா.
"பரவாயில்லை."
'காலையில் ஏதோ இவரிடம் கேட்க வேண்டுமென்றாயே? இப்போது கேளேன்."
"என்ன கேட்க இருந்தாய்..?" என்றார்
ušíl6inა
'இல்லை அப்படி ஒன்றும் இல்லை."
"சும்மா மழுப்பாதே. கேள்" என்றான் மஞ்சிநாயக்கா.
'காலை 7.30க்கே அலுவலகம் திறக்க வேண்டும் என்று பயிற்சியின் போது சொன் ങ്ങrisണ്.'
"யார் பீக்கொக் நடராசாவா..? அவன் அப்படித்தான். சும்மா வெருட்டுவான். புத்த கப் பூச்சி. பயிற்சியெல்லாம் ஒரு கண்துடை ப்பு. நடைமுறை வேறு."
"மற்றது. நீங்கள் ஏன் அலுவலகம் திறக்க வேண்டும்.? சுத்தம் செய்ய வேண் டும்.? அலுவலக வேலையாள் கிடை
uum g5It....?"
என் கேள்விக்கு அவரின் சிரிப்புத்தான்
பதிலாகக் கிடைத்தது. சிறிது யோசனை
யின் பின் திரும்பவும் தொடங்கினார்:
'நீ புதியவன். போகப் போகப் பழகி விடுவாய். இந்தச் சரக்குக் குதம் என் பொறு ப்பில். இறக்கப்படுவதற்கும். எடுத்துப் போடுவதற்கும் நானே பொறுப்பு. சாவிக் கொத்து என்னிடமே இருக்க வேண்டும். இன்னொருவருக்குக் கொடுக்க முடியாது."
"மற்றக் கேள்விக்கும் மறுமொழி சொல்லி விடுங்களேன்.” மஞ்சிநாயக்கா சிரித்த படி இடைவெட்டினான்.
'ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள். உன் அலுவலகம் தான் உன் வாழ்க்கை. அது ஒழுங்காகச் சுத்தமாக இருந்தால்தான். மற்றதெல்லாம் தொட ரும். அலுவல வேலையாள் வரும் வரை குப்பைக்குள்ளா வேலை செய்வாய்...? உன் வீடு குப்பையாக இருந்தால் நீ சுத்தம் செய்ய மாட்டாயா? அதுபோல் தான் இதுவும். இதுவும் ஒருவகைப் பயிற்சி தான். பழகிக் கொள்."
மஞ்சிநாயக்காவைப் பார்த்தேன். அவன் என்னைப் பார்த்துக் கண் சிமிட் டினான்.
'இதுதான் தொழிலில் முதலில் படிக்க வேண்டிய பாடம். கவனமாகக் கேட்டுக் கொள். என் அறையைப் பார்த்தாய் தானே..? இவரிடம் தான் படித்தேன்." என்றான்.
அவன் சொன்னது உண்மையான பொயின்ற் என்று அன்றைக்கு எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், ஏறக் குறைய 30 வருட அரசாங்க சேவையின் போதும், பீரிசின் முதற்பாடம் தான் எனக்குக் கை கொடுத்திருக்கிறது.
மல்லிகை ஜூலை 2008 ஜ் 35

Page 21
ர ஜே -
உன்னை நினைக்காமல்
LLLLLLLLLLLLLLLLLLLLLGLLLLLLLS
- പ്രെr് ജിജ്ഞ
நண்பர் ஜெயராஜ் கனகரெட்னாவின் இழப்பை இப்பொழுதுதான் என்னால் பூரணமாக உணர முடிகின்றது. என்வரைக்கும் மிகப் பெரிய இழப்பு அது.
அவர் யாழ்ப்பாணத்தில் நடமாடிக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் பலருடன் பழகியிருந்தார். இன்னுஞ் சிலருடன் மிக நெருக்கமாகக் கூடப் புழங்கியிருக்கின்றார்.
அவருடன் தொடர்ந்து இலக்கியம் சம்பந்தமாக உரையாடுவதென்பதே தனிச் சுகம். நிறையப் படிப்பார். வீட்டில் ஒய்வாக இருக்கும் தருணங்களில் எல்லாம் புத்தகமும் கையுமாகவே காட்சி தருவார். தொடர் வாசகன், அவர்.
ஆங்கிலத்தில் ரொம்பவும் புலமை மிக்கவர். 60 கால கட்டங்களில் எல்லாம் அவர் மிகவும் வீச்சாகவும், வெகு துரிதமாகவும் தமிழ்க் கதைகளை ஆங்கில மயப்படுத்தி வந்துள்ளார். கிட்டத் தட்ட 20 கதைகளுக்கும் மேலாக அவர் நமது எழுத்தாளர்களின் சிறுகதைப் படைப்புகளை ஆங்கில மொழியாக்கம் செய்து இலங்கையில் வெளிவரும் ஆங்கில வார இதழ்களில் வெளியிட்டுள்ளார். இல்லஸ்ரட் வீக்லியிலும் வந்தன.
அன்று அவர் மொழியாக்கம் செய்து ஆங்கிலத்தில் வெளியிட்ட சிறுகதைகளைச் சிரமப்பட்டுத் தேடியெடுத்து அவற்றை ஒரு நூலாகத் தொகுத்து வெளியிட்டால் கூட, அது அவருக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகக் கூட இருக்கும்.
அவர் எந்தக் கட்டத்திலும் புகழை விரும்பாதவர். பிரபலத்தைக் கண்டு ஒதுங்கி வாழப் பழகிக் கொண்டவர்.
நான் நினைக்கிறேன் அவருடன் மிக மிக நெருங்கிப் பழகியவன் நானென்று. இலேசில் அவர் நெருங்கிப் பழகமாட்டார் . ஒதுங்கி ஒதுங்கிப் போய்விடுவார், தனிமையை விரும்புவார்.
ஏனோ தெரியவில்லை. என்னிடத்தில் அவருக்கு ஒரு தேவதா விசுவாசம். நானும் அவர் வரைக்கும் ஆத்ம சுத்தியுடன் தான் இறுதி வரைக்கும் பழகி வந்தேன்.
மல்லிகை ஜூலை 2008 ஜ் 36
 
 
 
 
 
 

இத்தனை பெரிய ஆங்கிலப் புலமை மிக்க அவர், மல்லிகைக்கு அடிக்கடி வந்து மல்லிகையின் அச்சுப் படிகளை வெகு துல் லியமாகத் திருத்தித் தந்து உதவுவார். இடை க்கிடையே ஆலோசனையும் சொல்வார்.
சிலசமயங்களில் நான் யோசிப்பதுண்டு. இது வெறும் இலக்கிய நட்பின் நெருக்க மல்லவென்று.
அவர் என் மூலம் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு தன்னாலியன்ற பங்களிப்பைச் செலுத்தி வந்தார் என்றே இன்று கிரகிக்கத் தோன்றுகின்றது.
எனது இயல்பான மன உணர்வுகளை வெகு துல்லியமாகப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற வகையில் என்னுடன் நட்பைப் பேணி வளர்த்து வந்தார்.
யாழ்ப்பாணம் கடற்கரைத் தெருவில் உள்ள பிரபலமான ஹோட்டலின் பெயர் கிறாண்ட் ஹோட்டல்.
நாங்கள் மாலை 6 மணியிலிருந்து பறங்கித் தெருவிலுள்ள பிரிமியர் கபே'யில் இருந்து சொட்டுச் சொட்டாகத் தேநீர் பருகி விட்டு, கபே அடைக்கும் நேரம் வெளியே வந்து, நேராக நடந்து கடற்கரைப் பக்கமாக நடையைக் கட்டுவோம்.
அங்குள்ள அடைக்கப்பட்ட ஒர் அறை யில் வெகு சிக்காராகக் குந்திக் கொள் வோம். நான் குடிப்பதில்லை. சிகரட்டும் புகைப்பதில்லை. அது அவருக்கு நன்கு விளங்கும். எனவே எனது தனி மனித விருப்பு வெறுப்புக்களில் அவர் எந்தக் கட்டத்திலுமே தலையிட்டவரல்ல. மாறாக, மதித்து நடந்தவர். என்னை எனது பழக்க வழக்கத்திற்காக மனதளவில் கெளரவித்து வந்தவர்.
அநேகமாக நாங்கள் இருவருந்தான் தொடர்ந்து மாலை வேளையில் சந்தித்து வந்தோம். இடையே முக்கியமான சிலர் வந்து தொடர்பு கொள்வார்கள்.
அவருடன் பழகும் போது, நட்பின் மென் மையான அணுகு முறையைப் பல தட வைகள் நான் அவதானித்து வந்துள்ளேன்.
கிறாண்ட் ஹோட்டலில் தான் குடிக்கும் குடிவகைகளுக்கு ஒரு போதுமே அவர் நான் பணம் கொடுப்பதை விரும்புவதே யில்லை. "மல்லிகையால் வந்த காசை இதற்கெல்லாம் செலவழிக்கக் கூடாது. அது மகா கொடுரம்" என்பார். பணம் இல்லாது போனாலும் கணக்கில் எழுதச் சொல்லு வாரே தவிர, என்னைக் கொடுக்க அனுமதி ä55 LIDTL" LITT.
கபேயில் தேநீர் குடிப்பதற்கு நான் பணம் கொடுக்க முற்பட்டால், சொண்டுக் குள் ஒரு கள்ளச் சிரிப்பைச் சுமந்த வண் 600Lb, “6TsöT6TrüLur! Ta assoäs 606ä
சிருக்கிறியோ? எனக்கும் தாவன்!" என்பார்.
நானவரைக் குரு என்ற ஸ்தானத்தில் வைத்து என்றுமே பழகியவனல்ல. புழங் கியவனுமல்ல. என்னை விட இளமையா னவர். அதே நேரம் படித்த புலமையாளன் என்ற மட்டு மரியாதையை நெஞ்சில் நிறை த்துக் கொண்டே அவர் சாகும் வரை அவரு டன் நட்புக் கொண்டிருந்தேன்.
எங்கள் இருவரது நட்பையும் கொச்சைப் படுத்த அந்தக் காலத்திலேயே சிலர் முனைந்ததுண்டு. அவர் மல்லிகைக்கு வந்து, எழுத்துத் திருத்தி தருவதைக் கூடச் சிலர் கிண்டலடித்ததுண்டு. அதைப் பற்றிக் கூட, அவர் என்னுடன் மனந்திறந்து கதை த்துமிருக்கிறார்.
மல்லிகை ஜூலை 2008 率 37

Page 22
சிலசமயம் குழந்தைப் பிள்ளையைப் போல, அவர் நடந்து கொள்வார்.
நான் எனது முதல் சிறுகதைத் தொகுதி க்குச் ருரீலங்கா சாஹறித்திய மண்டலப் பரிசை முதன் முதலில் பெற்றுக் கொண்ட தைக் கேள்விப்பட்டு, அப்பொழுது அவர் கொழும்பில் வேலை பார்த்து வந்த சமயத் தில் எனக்கு வாழ்த்துத் தந்தி அனுப்பி வைததாா.
அது மாத்திரமல்ல. எனக்குக் கண்டி புதுசு. தன்னுடன் பஸ்ஸில் அழைத்துச் சென்று, பேராதனைப் பல்கலைக்கழக மண்டபத்தில் நான் பரிசு பெறும் காட்சியை நேரில் தரிசிக்கும் ஆவலில் லீவு போட்டு விட்டு வந்து கலந்து கொண்டார்.
இன்று எனக்குள்ளேயே அந்த அனுசர ணையான மனப் பக்குவத்தை நான் யாரிட மும் கண்டதில்லை.
இன்று வரைக்கும் நினைத்துப் பார்க் கின்றேன். எங்கள் நட்பின் அடித்தளமாக அமைந்திருந்த சங்கதி தான் என்ன? அவர் யாழ்ப்பாணத்தில் தான் பிரபல கல்லூரி ஒன்றின் மாணவனாகக் கல்வி கற்றவர். பின்னர் பேராதனைக்குச் சென்று, பல் கலைக் கழகப் பட்டதாரியாக மீண்டும் யாழ் ப்பாணத்திற்கே வந்து, சம்பத்திரிசியார் கல் லூரியில் ஆசிரியராகக் கடமை புரிந்தவர்.
மாணவனாக இருந்த சமயத்திலோ அல்லது பல்கலைக் கழக வட்டாரத்திலோ அவர் தெரியப்பட்ட ஆளாகவே நடமாடித் திரியவில்லை. அந்தக் காலகட்டத்தில் பேராதனைப் பல்கலைக் கழகத்து மாண வர்களில் பலர் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் களாகத் திகழ்ந்து வந்துள்ளனர். கல்வி கற்பித்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்க
ளில் பலர் வெளி உலகில் தெரியப்பட்ட இலக்கியவாதிகளாகவே மிளிர்ந்து வந்துள் 6T6OTfr.
வெளியே- நாடு முழுவதும் இலக்கிய சர்ச்சைகளும், பிரச்சினைகளும் சம்பந்த மாக விவாதங்களும் நடைபெற்றுக் கொண் டிருந்த காலமது.
இந்த இலக்கியப் பரபரப்பு மிக்க சூடான காலங்களில் பல்கலைக் கழக மாணவ னாகத் திகழ்ந்த நமது ஏ. ஜே. அவர்கள் யாருடனும் தொடர்பற்று, வெளியே தெரியா மல் முடங்கிப் போய்த் தான் இருந்திருக் கிறார்.
நான், எனக்குத் தெரிந்த அந்தக் கால பல்கலைக்கழக நண்பர்கள் பலரிடம் இதைப் பற்றி விசாரித்துள்ளேன். அவர்க ளும் இப்படியான இலக்கியத் துடிப்புள்ள மாணவனைத் தாங்கள் அந்தக் காலத்தில் அறிந்திருக்கவில்லை என்றே மறுமொழியா கக் கூறினர்.
பட்டதாரி ஆசிரியராக யாழ்ப்பாணத்தில் படிப்பிக்கத் தொடங்கிய கால கட்டத்தில் தான் முதன் முதலில் என்னுடன் தொடர்பு கொள்ள முற்பபட்டார்.
அப்பொழுது நான் மல்லிகை ஆசிரிய னல்ல. சிகை அலங்கரிப்பாளன். கஸ்தூரி யார் வீதியிலுள்ள ஜோசப் சலூனில் நான் தொழில் புரிந்து கொண்டிருந்த கால கட்டம்.
அப்பொழுது சென்னையிலிருந்து வெளி வந்த "சரஸ்வதி என்ற இலக்கிய மாத சஞ் சிகையில் மாதா மாதம் சிறுகதைகள் எழுதி வந்த காலமது.
"சிலுவை" என்றொரு சிறுதுதை எழுதி யிருந்தேன். அச்சிறுகதை அந்த மாத இத
மல்லிகை ஜூலை 2008 ஜீ 38

ழில் வெளிவந்திருந்தது. ஒருநாள் செல்வரத் தினம் என்ற ஆசிரியர் என்னைத் தேடி வந்திருந்தார். அவர்தான் சொன்னார்: "ஜீவா என்னோடை படிப்பிக்கிற கனக ரெட்னா என்பவர் உங்களை ஒருக்காப் பார்த்துப் பேசலாமெண்டு விரும்புகிறார். எப்ப கூட்டிக் கொண்டு வர?’ என்றார்.
"மாஸ்டர், நீங்கள் ஏன் இதற்காக மினக்கெடுகிறீர்கள்? சனிக்கிழமை பின் நேரம் வரச் சொல்லுங்கோ, நான் இங்கை தான் இருப்பன். ரெண்டு பேரும் சந்திச்சுப் C&Luas 6-omrLib. Šrilas 6hug G36u6ovTLITLb!”
சனிக்கிழமை என்னைத் தேடி வந்தார்.
நான் அவரை உட்கார வைத்து சிறிது நேரம் உரையாடினேன். அப்படியொன்றும் ஞாபகமூட்டத்தக்க சம்பாஷணையல்ல, அது. சும்மா சுகசேமம் விசாரித்துக் கொண் டதோடு, சரி.
அன்று அவ்வளவுதான் நடந்தது.
எனது இலக்கிய வரலாற்றிலேயே நான்
ஏ. ஜே. யைச் சந்தித்தது ஒரு திருப்பமா கவே அமைந்துவிட்டது.
பல தடவைகளில் இந்தத் தகவலை நான் எழுத்தில் பதிவு செய்துள்ளேன். சொல்லச் சொல்ல இன்னும் இன்னும் எங்கள் இருவரது நெருக்கத்தையும் திரும் பத் திரும்பச் சொல்ல வேண்டுமென ஒரு மன உந்துதல்தான் ஏற்படுகின்றது.
சொன்னால் நம்ப மாட்டீர்கள்.
'ஏஜே இறந்து விட்டார்!’ என்பதையே என் உள்மனசு ஏற்றுக் கொள்ள இன்னமும் தயாராகவில்லை. ஏன்னென்றால் அவரது மரணத்தை இன்னமும் எனது மனசு சீரணித்துக் கொள்ளவில்லை!
சொல்லப் போனால் அவரது நட்புத் தொடர்பு அரை நூற்றாண்டு காலத்திற்கு மேற்பட்டதாகும். குறிப்பிட்டு அதற்கு அழு த்தம் கொடுத்தால் குடும்ப நண்பனாகக் கூட நான் அவருடன் ஊடாடி இருக்கின்றேன். அவரது சகோதரங்கள் கூட, என்மீது தனிப் பரிவும், பட்சமும் கொண்டு பழகி வந்தனர்.
அவரது தந்தையின் பெயர் அலோஸி யஸ். தாயார் எமது நட்புக் காலத்திற்கு முன்னரே மறைந்து விட்டார். தந்தையாரின் மரணச் சடங்கிலும் நான் கலந்து கொண் டிருக்கின்றேன். தகப்பன் என்மீது தனிப் பிரியம் கொண்டவர். மகனின் நண்பன் என்கின்ற முறையில் முகமலர்ச்சியுடன் என்னை வரவேற்று இருக்கச் சொல்வார்.
"ஏன் உங்களுடைய பின் பெயர் கணக ரட்னா எனச் சிங்களக் குடும்பப் பெயர் போலத் தொனிக்கிறது?" ஒரு நேர்ச் சம்பா ஷணையில் நானவரிடம் வினவியதுண்டு. அவரது சுயநாமம் ஜெயராஜ். அவரது மூதாதையர் திருகோணமலையைச் சேர்ந் தவர்கள். தொழில் நிமித்தம் வட பகுதிக்கு வந்தவர்கள்.
கனகரட்ன முதலி என்பதுதான் அவரது மூதாதையரின் தொடர் குல நாமமாகும். எனவே கனகரட்னா' என்ற பெயரே, இயற்பெயரின் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.
எனது மூன்று சிறுகதைகளை ஆங்கில த்தில் மொழி பெயர்த்து, அந்தக் காலத்தி லேயே "சன்டே ஒப்ஸர்வரில்" பிரசுரிக்க வழி சமைத்தார்.
இப்பொழுதுதான். அவரது இழப்பிற்குப் பின்னர் தான் - எனக்கு ஒரு கவலை நெஞ்சைப் பிடித்தாட்டுகின்றது.
மல்லிகை ஜூலை 2008 奉 39

Page 23
'இன்னும் 7 கதைகளை அவரைக் கொண்டே மொழி பெயர்த்து, ஆங்கில மொழியில் எனது சிறுகதைத் தொகுதி யொன்றை வெளியிட்டிருக்கலாமோ? என் றொரு மன ஆசை இடையிடையே மனசில் தட்டுப்படாமலுமில்லை.
அவர் தொடர்ந்து எனது கதைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து மொழி பெயர் க்க ஆயத்த வேலைகளைக் கூடச் செய் திருந்தார்.
நான் தான் அலட்சியமாக இருந்து விட் CSL6ft.
எனது கொழும்பு இடப் பெயர்வும் இதற் கோர் காரணமாகும்.
அந்தக் குடும்பத்தினர். அவரது சகோத ரர்கள்- எங்களது நீண்ட நெடு நாளைய நட்பை எத்தனை தூரம் மதித்துக் கெளர வித்தார்கள் என்பதை அவர்கள் ஏஜேயின் இறுதி நிகழ்ச்சியில் எனக்குத் தந்த முதற் கெளரவத்தை நினைத்து நெஞ்சார்ந்த நிறைவு கொள்ளுகின்றேன். அன்னாரது இறுதிச் சடங்கில் நடைபெற்ற முதல் அநுதாப உரையை நான் தான் நிகழ்த்த வேண்டும் என, எனக்கே முதலிடம் தந்து எங்களது நட்பை அங்கீகரித்தனர்.
ஏஜே கல்லூரியில் ஆசிரியத் தொழிலை விட்டதன் பின்னர், 56o6vbesff D–LLIL– u6v இடங்களில் கடமையாற்றியிருக்கின்றார். சிறிது காலம் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் கடமை புரிந்துள்ளார்.
இவரது பல்வேறு கடமைகளுக்கி டையே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டு மென்றால் வட மாகாணக் கூட்டுறவுச் சங்கத்தின் வெளியீடாக வந்த ஆங்கிலப் பத்திரிகையான கோப்பரேட்டர்’ இதழில்
இவர் கடமையாற்றிய காலம் தான் இவரு க்கேயுரிய காலமாகும்.
அந்த நிறுவனம் யாழ்ப்பாணம் முற்ற வெளியிலுள்ள நீகல் தியேட்டருக்கு அணி த்தாக அமைந்துள்ள 5TSyl Lorrigës s' LL LDITS5b.
அங்கு அவர் பத்திரிகையாளனாகக் கடமை புரிந்து வந்த கால கட்டத்தில் தான் பல்வகைப்பட்ட எழுத்தாளர்களைப், பத்திரி கையாளர்களைச் சந்தித்துப் பழகும் வாய் ப்பு ஏற்பட்டது.
தியேட்டருக்கு அருகே புல்லுக்குளம். அதன் சமீபமாக இருந்தது ஒரு தகரச் 8டை. அது ஒரு தேநீர்க்கடை.
தன்னை நாடி வருபவர்களையெல்லாம் ஒருங்கு சேர அழைத்துக் கொண்டு அந்தத் தேநீர்க் கடையை நோக்கி வருவார்.
அங்கு அவருக்கு நிரந்தரமான கணக் கொன்று உண்டு.
இங்கு சந்தித்த பலர் பின்னர், அவரது நிரந்தர நண்பர்களாகப் பழக்கமேற்படுத்திக் கொண்டார்கள்.
நண்பர் ஏ. ஜேயின் ஞாபகார்த்தமாக இப்படி இப்படித் தொட்டம் தொட்டமாக அவரைப் பற்றிய கட்டுரைகளில் அவரது ஞாபகத்தைப் பேணிக் கொண்டிருக்காமல், நிரந்தரமாகவே அந்த இலக்கிய இனிய நண்பனின் ஆற்றல்களையும், மொழி வல்லமைகளையும் உள்ளடக்கிய நூலொ ன்றை வெளியிடுவதுதான் அன்னாரைக் கெளரவிப்பதற்குரிய சரியான ஞாபகார்த் தம் என்றே இன்று வரைக்கும் நான் கருதிக் கொண்டு வருகின்றேன். சரி. பார்ப்போமே!
மல்லிகை ஜூலை 2008 40

இலக்கியமடல்
இருப்பை வெளிப்படுத்தாத uuäjäft uit t_6op
- முருகபூபதி
‘அறிந்ததைப்பகிர்தல், அறியாததை அறிந்துகொள்ள முயல்தல்’ என்ற சிந்தனையுடன்தான் 2001 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் எழுத்தாளர் விழா இயக்கத்தை ஆரம்பித்தோம்.
முதலாவது விழா மெல்பனில் அடுத்தடுத்து இரண்டுநாட்கள் நடந்தன.
எழுத்துத்துறையுடன் ஈடுபாடுள்ள பலர் கலந்துகொண்ட இம்முதலாவது விழாவில் தான் 'மல்லிகை’ அவுஸ்திரேலிய சிறப்புமலரும் வெளியிடப்பட்டது. தொடர்ந்தும் இவ்விழா ஆண்டுதோறும் நடைபெறவேண்டும் என்று விழாவில் கலந்துகொண்ட இலக்கிய ஆர்வலர்கள் ஏகமனதாக விரும்பினார்கள்.
அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் மாத்திரம் இந்த எழுத்தாளர்விழா நடைபெறாமல், இந்த இலக்கிய இயக்கம் ஏனைய மாநிலங்களுக்கும் விஸ்தரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் ஆர்வலர்களினால் முன்வைக்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டு பண்டுரா என்னுமிடத்தில் அமைந்த பூங்காவில் நிகழ்ந்த இரண்டாம் நாள் விழா நிகழ்ச்சியின்போதே இக்கோரிக்கை எழுந்தது. அன்றைய தினம் பூங்காவில் எம்மைத்தழுவிச்சென்ற இதமான தென்றல் காற்றோடு கலந்து மறைந்துபோன கோரிக்கையல்ல என்பதை இலக்கிய ஆர்வலர்கள், கடந்த எட்டு ஆண்டுகளில் தொடர்ச்சியாக நிரூபித்து வருகின்றனர்.
மெல்பனில் தொடங்கி, சிட்னி, கன்பரா என இதுவரையில் இம்மூன்று மாநில நகரங்களிலும் எட்டுவிழாக்கள் இலக்கிய ஆர்வலர்களின் கருத்துக்களை சங்கமிக்கச்செய்துவிட்டன.
இந்த இயக்கத்தின் தொடர்பயணத்தை அவதானித்துவந்த மல்லிகை ஜீவா அவர்களும், நான் இலங்கை வந்திருந்த சந்தர்ப்பத்தில் மல்லிகை காரியாலயத்தில் எனக்கொரு தேநீர்விருந்துபசாரம் வழங்கியபொழுது, எங்கள் அவுஸ்திரேலிய தமிழ்
மல்லிகை ஜூலை 2008 & 41

Page 24
எழுத்தாளர் விழாவை சிலாகித்துக் குறிப்பிட்டு பேசியதுடன் நின்றுவிடாமல், இலங்கையிலும் ஒரு எழுத்தாளர் விழாவை நடத்தவேண்டும், உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் து எழுத்தாளர்களில் சிலரையாவது அதற்கு அழைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
ஜீவாவின் வேண்டுகோள் கொழும்பு பத்திரிகைகளிலும் பிரசுரமானது.
எனினும், இந்த வேண்டுகோள் இன்னமும் நடைமுறைக்கு வராதமைக் குக் காரணம், இலங்கையின் அரசியல் சூழ்நிலைகள்தான்.
பல வருடங்களுக்கு முன்னர் மெல் பனில் நடந்த ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சி தான் இச்சந்தர்ப்பத்தில் எனது நினைவ கத்தின் கதவைத்தட்டுகிறது.
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பரதம் முறையாகப்பயின்ற தமிழகத்தைச்சேர்ந்த மாணவர்களுக்கு கண் பார்வையில்லை. மிகவும் சிறப்பாக ரஸிகர்களை அக் கலைஞர்கள் கவர்ந்தார்கள். அனைவரும் சிலிர்த்துப்போனோம்.
இம் மாணவர்களின் ஆசிரியர், இறுதியில் பேசும்போது ஒருவிடயத்தை குறிப்பிட்டார். வாழ்க்கையில் எதனையும் சாதிக்கவேண்டுமாயின், மூன்று விடய ங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.
1. ஒரு இலட்சியத்தை கனவு காண வேண்டும்.
2. அந்தக்கனவு நனவாகுவதற்காக கடினமாக உழைக்கவேண்டும்.
3. இறுதியில் வெற்றி நிச்சயம். sÉlasl6ug55l6ò, Dreem - Struggle - Victory.
எழுத்தாளர் விழா இயக்கத்தை தொட ங்கியபொழுது, ஒரு தெளிவான தீரமானம்
எடுக்கப்பட்டது.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அவுஸ்திரேலியாவில் வதியும் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், விமர்சகர்கள், பத் திரிகையாளர்கள், ஊடகவியலாளர் கள், இலக்கிய ஆர்வலர்கள் அனை வரையும் வருடாந்தம் ஒன்றுகூடச் செய்வது.
இதுவே அந்தத் தீர்மானம்.
தங்குதடையின்றி தொடர்ச்சியாக எட்டு ஆண்டுகாலமாக எழுத்தாளர்விழா நடைபெறுவதற்கு, நான் மேலே குறிப் பிட்ட கண்பார்வையற்ற நடனக்கலைஞர் களின் குரு தெரிவித்த கருத்துத்தான அடி ப்படைக்காரணம் என நினைக்கின்றேன்.
எழுத்தாளர்களிடம் மாற்றுக் கருத்து க்கள் இருப்பதனால், இயக்கமாக செயற் படும்பொழுது முரண்பாடுகள் தோன்றி அதுவே பகைமையாகிவிடும் சந்தர்ப்ப ங்கள் அதிகம்.
தன்முனைப்பு ஆணவத்தினால் பல அமைப்புகள் சீர்குலைந்துவிடும் அபாய மும் ஏற்படும். இச்சிந்தனையை மனதில் இருத்தியே 'தனிப்பட்ட விருப்பு வெறுப்பு களுக்கு அப்பால், வேற்றுமையில் ஒற் றுமை காணும்' - நோக்கத்தை முதனி லைப்படுத்தினோம்.
மல்லிகை ஜூலை 2008 42

அதில் முழுமையான பலன் கிடை க்காமல் போனாலும் ஆரோக்கியமான திசையில் எழுத்தாளர் விழா இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது.
கருத்தரங்கு, விமர்சன அரங்கு, கவி யரங்கு, கலையரங்கு என நிகழ்ச்சிகள் திட்டமிடப்படுவதனால் இந்தத்துறைகளில் ஆர்வமுள்ளவர்களும் பங்கெடுக்கின்றனர்.
நூல் வெளியீடு
எழுத்தாளர் விழாக்களில் நுால்விமர் சன அரங்கும் முக்கிய நிகழ்வாக இடம் பெறுவதனால், இங்கு வதியும் படைப் பாளிகளிடம் தமது படைப்புகளை நூலா க்கும் ஆர்வமும் அதிகரித்துள்ளது. வெளி யான நுால்கள் விமர்சன அரங்கில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
விழாவை நடத்திவரும் அவுஸ்திரே லியா தமிழ் இலக்கிய கலைச்சங்கமும், இதுவரையில் ஐந்து நுால்களை வெளி யிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் சிறுகதைத் துறையில் ஈடுபடும் சிலரது கதைகளைத் தொகுத்து உயிர்ப்பு என்ற தொகுப்பை 2006 ஆம் ஆண்டு விழாவிலும் 31 கவிஞ ர்களின் கவிதைகளை தொகுத்து வான வில் என்ற நுாலை 2007 ஆம் ஆண்டு விழாவிலும் வரவாக்கினோம்.
இந்த ஆண்டு (2008) சிட்னியில் நட ந்த எட்டாவது எழுத்தாளர்விழாவில் சங்கத்தின் உறுப்பினர்கள் மூவரின் படைப்புகளை வெளியிட்டோம்.
1. கே.எஸ். சுதாகரின் எங்கே போகிறோம் (சிறுகதை)
2. ஆவுரானின் ஆத்மாவைத் தொலைத்தவர்கள (சிறுகதை)
3. சிசு. நாகேந்திரனின் பிறந்த மண்ணும் புகலிடமும் (கட்டுரை)
இவ்விதம் நூல்வெளியீட்டு முயற்சி களில் ஈடுபடும் அதேவேளை கலை, இலக்கிய,கல்விப் பணிகளில் சிறந்த சேவையாற்றிய மூத்த தலைமுறையினரை யும் வருடாந்த விழாக்களில் பாராட்டிக் கெளரவித்து, விருது வழங்குகிறோம்.
பவளவிழா கண்டுள்ள கவிஞர் அம்பி, எஸ்.பொ., காவலுார் ராஜதுரை, கலை வளன். சிசு. நாகேந்திரன், ஒவியர் ஞானம், பேராசிரியர் பொன். பூலோகசிங்கம், கட்டி டக்கலைஞர் வி.எஸ். துரைராஜா, அண் ணாவியார் இளைய பத்மநாதன், தையல் கலையில் புதுமை படைத்த திருமதி நவரட்ணம் ஆகியோர் பாராட்டப்பட்டோர் வரிசையில் இடம்பெற்றுள்ளனர்.
எழுத்தாளர் விழாவை வருடாந்தம் நடத்திக்கொண்டே, காலத்துக்குக்காலம் இலக்கியச்சந்திப்புகளையும் சங்கம் ஒழுங்குசெய்கிறது.
இலங்கையிலிருந்து வருகைதந்த ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன், திருமதி ஞானம் ஞானசேகரன், உடுவை. தில்லை நடராஜா, கோகிலா மகேந்திரன், யோகேஸ்வரி கணேசலிங்கம், தேவ கெளரி, ரத்னசபாபதி ஐயர் ஆகியோர் எழுத்தாளர் விழாக்களிலும் இலக் கியச்சந்திப்புகளிலும் பங்கேற்றுள்ளனர்.
மல்லிகை ஜூலை 2008 ஜ் 43

Page 25
ஜேர்மனியிலிருந்து சந்திரவதனா செல்வகுமாரன், இங்கிலாந்திலிருந்து நுாலகர் என்.செல்வராஜா, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், இளவாலை அமுது, அமெரிக்காவிலிருந்து திருக்குறள் ஆய்வாளர் பேரம்பலம் தமிழ் நாட்டி லிருந்து நாட்டாரிலக்கிய பேராசிரியை விஜயலக்ஷ்மி இராமசாமி ஆகியோரும் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளையும் சங்கம் ஒழுங்குசெய்துள்ளது.
விமர்சன அரங்கு
ஒரு எழுத்தாளர் இயக்கத்தை கட்டுக்கோப்புக்குலையாமல் வளர்த் தெடுப்பதானது சிரமசாத்தியமானதுதான். கருத்தை கருத்தால் மோதி தெளிவு பெறா மல், தனிநபர் விமர்சனங்களிலும் அவ துாறுகளிலும் ஈடுபடும் சமுதாயத்தில் தான் நாம் வாழவேண்டியது விதியாகி யிருப்பதனால், இந்த இலக்கிய இயக்க த்தை ஒரு குடும்பமாகப்பாருங்கள், இதன் பணிகளை அவரவர் இருப்பை வெளிப்ப டுத்தும் செயற்பாடாக பாராமல் பயிற்சிப் பட்டறையாக அவதானியுங்கள், பயன் படுத்துங்கள் என்றே தொடர்ச்சியாக சொல்லிவருகின்றோம்.
கலை,இலக்கியத்தின் கூறுகளான சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், நாட்டியம், நாட்டுக்கூத்து, ஒவியம், சிறுவர் இலக்கியம், சிறுவர் நாடகம், முதலான துறைகளில் இங்கு ஈடுபடு பவர்களின் ஆக்க இலக்கிய மற்றும் கலைத்துறை முயற்சிகளை விமர்சிக் கும் மாதாந்த சந்திப்புகளையும் எமது சங்கம் ஒழுங்கு செய்யவிருக்கிறது.
தமிழ்நூலகம்
விக்ரோரியா மாநிலத்தை தலைமை யகமாகக்கொண்டியங்கும் அவுஸ்தி ரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஒரு தமிழ் நூல்நிலையத்தையும் தமிழர் தகவல் நிலையத்தையும் விரைவில் மெல்டனில் அமைப்பதற்கான பணியிலும் ஈடுபடவுள்ளது.
சிட்னியில் இந்த ஆண்டு (2008) நடைபெற்ற எட்டாவது எழுத்தாளர் விழாவில் இளம்தலைமுறையினரான தமிழ் மாணவர்களும் கணிசமாகக் கல ந்து கொண்டமை குறிப்பிடத்தகுந்தது. சில மாணவ மாணவியர் கருத்தரங்குகளிலும் கவியரங்குகளிலும் பங்கேற்று மூத்த தலைமுறையினரை பெரிதும் கவர்ந்தனர்.
தமிழர் புலம்பெயர்ந்த வெளிநாடுக ளில் நான்காவது தலைமுறையின் நாவில் தமிழ் இருக்காது என்ற அச் சுறுதல் பரவலாக ஒலித்துக் கொண்டு தானிருக்கிறது. எனினும் இதனையும் புக லிடச்சூழலில் ஒரு சவாலாக ஏற்றுள்ள னர் இங்கு வாழும் எம்மவர்கள்.
கலையும் இலக்கியமும்தான் ஒரு இனத்தின் கண்களாக இருக்கமுடியும்
என்பதனால் புகலிடத்தில் தமிழினத்த வரின் செயற்பாடுகளுக்கான பணிகளில் எமது சங்கத்தின் பங்களிப்பு சிறு துளி தான் என்று அவைய டக்கத்துடன் சொல்லிக்கொள்கின்றோம்.
மல்லிகை ஜூலை 2008 44

"ஜீவநதி முதலாவது நிலவுடு வெளியீடு விழாவில் 'முல்லிதை"க்குப் பாராட்டு
ஜீவநதி இருதிங்கள் இதழின் முதலா
வது ஆண்டு நிறைவு மலர் வெளியீடு 31. 02. 2008 சனிக்கிழமை காலை 9, 00 மணிக்கு எழுத்தாளர் தெணியான் தலை மையில் அல்வாய், கலைஅகத்தில் நடை பெற்றது. எழுத்தாளர் தெணியான் தமது தலைமையுரையில் பின்வருமாறு குறிப் 1álu L-mi:
"வியாபார நோக்கத்துடன் தமிழகத்தில் இருந்து இந்தநாட்டுக்கு வந்து குவிந்த சஞ்சிகைகளின் இறக்குமதியைக் கட்டுப் படுத்த வேண்டுமென ஒரு காலத்தில் போராட்டம் நடத்தியது முற்போக்கு எழு த்தாளர் சங்கம், அந்தப் போராட்டத்தின் விளைவாகத் தரமற்ற சஞ்சிகைகளின் இறக்குமதி தடைப்பட்டுப் போக, ஈழத்தில் ஏராளமான சஞ்சிகைகள் புதிது, புதிதாக வெளிவரத் தொடங்கின. அந்தச் சஞ்சிகை கள் அனைத்தையும் நான் வாங்கிப் படி த்துச் சேகரித்து வைத்திருந்தேன். பின்னர், இருபது ஆண்டுகளுக்கு முன்னர், எமது வட மராட்சிக் கல்வி வலயம் நடத்திய ஒரு கண்காட்சியில், என்னிடத்தில் இருந்து வந்த ஈழத்துச் சஞ்சிகைகளைக் காட்சிப் படுத்தக் கொடுத்துதவினேன். அந்தச் சஞ்சிகைகளுள் இன்றும் தொடர்ச்சியாக
- கார்த்திக்
வெளிவந்து கொண்டிருப்பது 'மல்லிகை" ஒன்று மாத்திரந்தான். ஏனைய சஞ்சிகை களின் வருகை முற்றாகத் தடைப்பட்டுப் போனது. 'மல்லிகை வருகின்ற ஜனவரி யில் தனது நாற்பத்துநான்காவது ஆண்டு மலரை வெளியிடவுள்ளது. ஜீவா என்னும் ஆளுமையே மல்லிகை"யின் தொடர் வரு கைக்குக் காரணம். ஜீவநதி தொடர்ந்து வெளிவரவேண்டும். ஆண்டு மலர் சிறப்பாக உருவாக்கப் பெற்றுள்ளது பாராட்டுக் குரியது."
விழாவில் முதன்மை விருந்தினர்களாக வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலர் சி. சத்தியசீலன், வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் இரா. வரதீஸ்வரன் ஆகியோர் கல ந்து கொண்டனர். மதிப்பீட்டுரையை ம. பா. மகாலிங்கசிவம் ஆசிரியர், க. அருந்தாகரன் சிரேஷ்ட விரிவுரையாளர் இருவரும் நிகழ் த்தினர். கலாநிதி. த. கலாமணி கருத்துரை வழங்கினார். விழாவின் ஆரம்பத்தில் உத விக் கல்விப்பணிப்பாளர்கள் மு. அநாத ரட்சன், த. தவேந்திரராஜா ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். நிருவாக ஆசிரியர் து. இராஜவேல் வரவேற்புரை வழங்க, இணை ஆசிரியர் சி. விமலன் ஏற்புரை வழங்கினார். இணை ஆசிரியர் க. பரணிதரனின் நன்றி உரை இறுதியில் இடம்பெற்றது.
மல்லிகை ஜூலை 2008 45

Page 26
அன்னைக்கு முலலிஆை3ன் இறுதி அஞ்சலி
சிவம் பெருக்கித்தவம் பெருக்கும்
சீலத்தால் அறம் வளர்க்குமி அன்னை.
m. நா. சுப்பிரமணியன்
இது அறிமுகம் அல்ல.
இவருக்கு அறிமுகத்துக்கான அவசியமும் இல்லை. தமது நாவன்மையால் நானிலம் அளந்த பெருமை இவருக்கு உண்டு.
செஞ்சொற் புலமையால், சிவம் பெருக்கித் தவம் பெருக்கும் சீலத்தால், அனைத் துலகுக்கும் பல்லாண்டுகட்கு முன்பே அறிமுகமாகி விட்டவர் இவர். தெல்லிப்பழைத் 'துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் அறங்காவற் பணிக்கு இவர் சட்டபூர்வமான தலைவர். ஆனால், ஈழத்தின் சைவாலயங்கள் பலவற்றின் அறங்காவற் பணிகளுக்கும் இவரே ஆதர்ச. மானஸிகத் தலைவருமாகும்.
இவர் சொற்பெருகாற்றிய மேடைகள் ஆயிரக்கணக்கில். இவர் முன்னின்று நிகழ்த்திய சமயப் பணிகள்- அறப் பணிகள் பல. இவர் எழுதியனவும். இவரைப் பற்றி எழுதப்பட்டனவும் பலப்பல. இவரைக் கெளரவித்ததன் மூலம் தம்மை தாமே கெளரவித்துக் கொண்ட நிறுவனங்களும் பல.
சில பக்கங்களில் இவரை அறிமுகம் செய்து விடுவது உடன் சாத்தியமல்ல. இவரைப் பற்றியும், இவர் சார்ந்த பொது வாழ்வு பற்றியுமான சில எண்ணங்கள் இங்கே பதிவாகின்றன: அவ்வளவே.
தெல்லிப்பழைக் கிராமச் சூழலில், அப்பாக்குட்டி- தையற்பிள்ளை தம்பதிகளுக்கு, 192501- 07 அன்று பிறந்தவர் ‘தங்கம்மா. சைவச்சூழல் இவரை வளர்த்தது. ஆசிரியப் பணி இவரை அழைத்தது. ஈழத்தின் பல பாகங்களிலும் இவர் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்பணியோடு தொடர்புடைய சமய-சமூக சேவைகளில் நாட்டம் கொண்டார்; செயற்பட்டார். இவை அவரது பொது வாழ்வின் முதல் நிலை.
தமிழையும் சைவத்தையும் தனிக் கவனம் செலுத்திக் கற்றார். அக் கல்வி அவருக்கு “பண்டிதர், சைவப்புலவர் ஆகிய தகுதிகளை ஈட்டிக் கொடுத்தது. இப்புலமைத் திறன்களின் துணையுடன் அவர் சைவத்தின் உயிர் நிலையை உணரத் தலைப்பட்டார்; அவ்வாறு உணர்ந்தவற்றைச் சாதாரண பொது மக்களும் உணரும் வண்ணம் விரித்துரைக்கும் ஆர்வத்தால் தூண்டப் பெற்றார். இவ் விரிவுரை முயற்சியில் அவர் எய்திய தேர்ச்சியே
மல்லிகை ஜூலை 2008 率 46
 

அவரது பொது வாழ்வின் இரண்டாவது கட்டத்துக்கு அடிப்படையாயிற்று. சொற் பொழிவாற்றல் அவரது ஆளுமையின் முத ன்மை அம்சமாயிற்று. சமூகம், பிரதேசம், நாடு என்ற எல்லைகளைக் கடந்து அவர் அறியப்படலானார். ஈழத்தின் பல்வேறு பிரதேச ஆலயங்களும் சமய- சமூக நிறுவ னங்களும் மட்டுமன்றிக் கடல் கடந்து இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் ஆலயங்களும் சமயசமூக நிறுவனங்களும் அவரை வாழ்த்தி, வணங்கி, வரவேற்று, அவரது உரைகளைச் செவிமடுத்து மகிழ்ந்தனர்; கெளரவங்கள் செய்து மனநிறைவடைந்தனர்.
செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர் களின் பொதுவாழ்வின் மூன்றாவது நிலை அறங்காவற் பணியாகும். தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் அறங்காவற் குழுவிலே 1966 இல் பொருளாளராகப் பணி தொடங்கிய இவர் 1977 இல் அக் குழுவின் தலைமைப் பொறுப்பேற்றார்; அவ் 6ursuu,560) 5 př. spás sr60)6uujTe5, Frypš5 தின் முதன்மை நிலைக்குரிய சைவத் தெய்வ நிலையமாக வளர்த்தார்; வளர்க் கிறார்; அங்கிருந்தவாறே ஈழத்துச் சைவால யங்கள் பலவற்றின் அறப்பணிகளையும், ஆன்மீகப் பணிகளையும் வளர்த்து வருகி ன்றார்; அனைத்துலக சைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கும் ஓர் ஆதர்ச தலைவியாக வும் திகழ்கிறார்.
செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர் கள் ஒரு சொற்பொழிவாளர் என்ற வகை யில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மேடை கண்டவர். பாடசாலைப் பருவத்திலேயே மேடையேறத் தொடங்கிவிட்ட அவர், 1950களின் ஆரம்ப ஆண்டுகளின் சமய- சமூக
மேடைகளில் தனிச் சொற்பொழிவுகளும், தொடர் சொற்பொழிவுகளும் நிகழ்த்தத் தொடங்கிவிட்டார். திருமுறைகள், ஏனைய தெய்வத் தமிழ்ப் பிரபந்தங்கள் என்பன இவரது சொற் சுவையோடிணைந்து சுவை ஞர்களின் செவி நுகர் கனிகள் ஆயின. மேற்படி, ஆக்கங்களின் உயிர் நிலைக ளான தத்துவங்களும், உணர்வு நிலைக ளான இலக்கியச் சுவைகளும் சராசரி மனித அநுபவங்களுக்கு இவரால் வழங் கப்பட்டன. இவற்றை அநுபவித்தவர்கள் இவ்வம்மையாருக்கு வழங்கிய கெளரவ விருதுகள் பின்வருமாறு.
செஞ்சொற் செம்மணி - மதுரை ஆதீனம், 1966 'சிவத் தமிழ் செல்வி' - காரை நகர் மணி வாசகர் சபை, 1970 'சித்தாந்த ஞானகரம்'- காஞ்சிய மெய் கண்டான் ஆதீனம், 1971 "சைவ தரிசினி' - தமிழ்நாடு இராசேசுவரி பீடாதிபதி, 1972 'திருவாசகக் கொண்டல்' - சிலாங்கூர் இலங்கைச் சைவ சங்கம், 1972 'திருமுறைச் செல்வி' - வண்ணை வைத்தீஸ்வரன் தேவஸ்தானம், 1973 'சிவமயச் செல்வி' - ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டம், 1974 'சிவஞான வித்தகர்' - அகில இலங்கை இந்து மாமன்றம், 1974 'துர்க்கா துரந்தரி - துர்க்காதேவி தேவஸ்தானம், 1974 'செஞ்சொற் கொண்டல்' - மாதகல் நூணசை முருகமூர்த்தி தேவஸ்தானம், 1978 'திருமொழி அரசி - இணுவில் பரராச சேகரப் பிள்ளையார் தேவஸ்தானம்,
1983
மல்லிகை ஜூலை 2008 率 47

Page 27
இவரது சொற்சுவைக்கு இவற்றை விட விளக்கம் அவசியமில்லை. மேற்படி விருது களிற் 'சிவத் தமிழ்ச் செல்வி', 'துர்க்கா துரந்தரி என்பவை அவரது இயற்பெயர் எனத் தக்கவகையில் நிலைத்த வாழ்வு பெற்றுள்ளன.
செல்வி தங்கம்மா அவர்கள் சொற் பொழிவாளராக உருவான காலப்பகுதியின் வரலாற்றில் ஈழத்துச் சைவாலயங்களில் நிகழத் தொடங்கிய குறிப்பிடத்தக்க மாற்ற மொன்றினை இங்கு சுட்டுவது அவசியம். 1960 களின் முற்பகுதி வரை சைவாலய விழாக்களில் 'சின்ன மேளம்' எனப்படும் சதிர்க்கச்சேரி முக்கிய கலை நிகழ்வாக இடம் பெற்று வந்தது. தெய்வீகச் சூழலுக்கு மாறான உணர்வோட்டங்களை அது தூண்டி நின்றது. அந்நிகழ்ச்சியை முற்றாக அப்புறப்படுத்தி, அதன் இடத்தில் ஆத்மீக விருந்தாகச் சமயச் சொற்பொழிவை முதன் மைப்படுத்தி வளர்த்தெடுக்கும் எண்ணப் பாங்கு சைவ உலகில் முளை விட்டது. இவ்வெண்ணப்பாங்கிற்குச் செயல் வடிவம் தந்த வகையில், முதன்மையாக வைத்து கணிக்கப்படத்தக்கது சிவத்தமிழ்ச் செல்வி அவர்களின் சொற்பொழிவுப் பணி.
இவரது வழிநடத்தலிலே தெல்லிப்பழைத் துர்க்காதேவி தேவஸ்தானம் பெளதீக நிலையில் பல வளர்ச்சியினைக் கண்டுள் ளது. இராஜகோபுரம், தீர்த்தத் தடாகம், கல்யாண மண்டபம் எனப் பலவாக இவற் றின் பட்டியல் விரியும். ஆனால், ஆலயம் என்பது கட்டிடம், கோபுரம், மண்டபங்கள், தடாகங்கள் என்பன அல்ல; கிரியை முறை கள் கூட அதன் பிரதான அம்சங்கள் அல்ல. அவை யாவற்றுக்கும் அப்பாலான 'தெய்வ சாந்நித்தியம் தான் ஆலயத்தின் அடிப்
படை அம்சம். அத்தெய்வீகத்தை வெளிப் படுத்தும் துணைக் கூறுகளாகவே மேற்படி, பெளதீக அம்சங்கள் அமைவன. தெய்வ சந்நித்தியத்தின் உயிர் நிலையான கூறு அன்பு. உயிர்களை நேசிக்கும் அன்பு. தெல்லிப்பழைத் துர்க்கா தேவஸ்தானத் தின் பல்வேறு செயற்பாடுகளும் இந்த அன்பின் அடித்தளத்தில் அமைந்துள்ளன. உள் நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந் தும் வந்து குவியும் அத்தனை செல்வமும் பொதுநல நோக்கிலே உரிய வகையில் நிர்வகிக்கப்படுகின்றன. அறப்பணிகள் பலவற்றுக்கு அளவறிந்து விநியோகிக்கப் படுகின்றன. பண்பாட்டு வளர்ச்சிக்குப் பங்களிப்புகளாகின்றன. தேவஸ்தானம் தானே ஒரு மகளிர் இல்லத்தை நிர்வகிக் கிறது. இத்தனைக்கும் வழி சமைத்து ஆலோசனை வழங்கி செயற்படுத்தி நிற்கும் தலைமை துர்க்கா துரந்தரி யுடையது.
சிவத்தமிழ்ச் செல்வியவர்கள் ஈழத்தி லும், வெளிநாடுகளிலும் பல மாநாடுகளிற் பங்கு பற்றி உரை நிகழ்த்தியவர்; பல அரங்குகளுக்குத் தலைமை வகித்துச் சிறப்பித்தவர்; இன்றும் ஈழத்திலும், வெளி நாடுகளிலும் தலைமைத் தகுதிக்கு அழை க்கப்படுபவர்.
சமய சம்பந்தமாக எழும் பிரச்சினைக ளிலே இவரின் கருத்துக்கள் முக்கிய கவ னத்தைப் பெறுகின்றன. 'அம்மா என்ன சொல்கிறா?' என்பது பொதுவாக எழும் வினா. தங்கம்மா அப்பாக்குட்டி சொன்னாற் சரி, இது சைவ மக்கள் அவரது கருத்துக் களுக்கு ஏகோபித்த அங்கீகாரம். இவை இந்த அறம் வளர்க்கும் அன்னையின் தலைமைத் தகுதிக்குச் சான்றுகள். அவர் தலைமை வாழ்க! அவர் வழிநடத்தும் அறம் வாளர்க! அன்னையின் மறைவையொட்டி அட்டைப் படக் கட்டுரை மறுபிரசுரம்,
(CBLD. 1990)
மல்லிகை ஜூலை 2008 & 48

தனிமரம்
- லில் குணசேகர தமிழில்: எஸ். ஏ. ஸி. எம்.கராமத்
LTடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நான் எமது வீட்டுக்குத் திரும்பும் குறுக்குப் பாதைக்குத் திரும்பும் ஒருவரைக் கண்டேன். அவரை இனங்காண்பது கஷ்டமாக இருக்கவில்லை. அவர் மாட்டீன் அப்புஹாமி. அவரது நண்ட தூரத்திலேயே எனக்கு அவரை இனங்காட்டியது. அவரது ஒரு கால் குட்டையானது. கிராமத்தவர்கள் அவரை நொண்டி மாட்டின் என்பார்கள். குட்டையான தடித்த அந்த மனிதனைக் காண நான் விரும்புவதில்லை. நான் அவருடன் என்றும் கதைப்பதில்லை. அவர் தினமும் மதியநேரம் பகலுணவு உண்பதற்காக எமது வீட்டுக்கு வருவார்.
அவர் வீட்டுக்கு வரும் போது அவரைக் காணாதவாறு வெகு தூரம் நான் சென்று விடுவதுண்டு. அக்காமார் இருவரும் அப்படியே நடந்து கொள்வார்கள். எனினும் நான் எனது எண்ணங்களை அக்காவிடம் கூறுவதோ அக்கா தனது எண்ணங்களை என்னிடம் கூறுவதோ கிடையாது. இந்த மனிதனை நான் ஏன் வெறுக்கின்றேன். அவனது தோற்றமா இல்லை. வார்த்தைகளால் கூறமுடியாது வேறு ஏதாவது காரணமா?
பெரும்பாலான ஞாயிறு இரவுகளில் நொண்டி மாட்டின் எமது வீட்டிலேயே இருப்பார். உண்மையில் அவரை அழைத்து வருவது அப்பாதான். சிலநாட்களில் அவர் அப்பாவுடன் சந்தைக்குச் செல்வதும் உண்டு சந்தைக்குச் சென்று வெற்றிலை வியாபாரத்திலீடுபட்டு பொருட்கள் வாங்கி வரும் அப்பாவுடன் மாட்டின் பகலுணவு உண்டபின் சாலையிலுள்ள சோபாவில் படுத்திருப்பார். இரவுணவின் பின்னர்தான் அவர் வீட்டிலிருந்து செல்வார்.
அவர் பகலுணவு நேரத்திலேயே எமது வீட்டுக்கு வரும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். இது பற்றி எனது மூத்த சகோதரி ஒருநாள் குறை கூறினார். அதனைக் கேட்ட அம்மா அக்காவை முறைத்துப் பார்த்தார். அப்பா அக்காவைக் கோபத்துடன் பேசினார். நொண்டி மாட்டின் வருவது பற்றி நான் எதனையும் கூறுவதைத் தவிர்த்தது இதனால் தான்.
ஒரு பிக்குவுக்குத் தானம் வழங்குவது போன்று அம்மா நொண்டி மாட்டினுக்கு உணவு பரிமாறுவதை பலதடவை நான் கண்டுள்ளேன். இந்தப் பிச்சைக்கார நொண்டிக்கு அம்மா ஏன் இவ்வளவு மதிப்பளிக்கின்றார் என்பது என்னுள் பெரும் புதிராக அமைந்தது. அம்மாவைப் போன்றே அப்பாவும் அம்மாவுக்குச் சளைக்காமல் நொண்டி மாட்டினை உபசரிப்பார்.
நொண்டி மாட்டின் ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு வந்த சமயம் ஏதோ வேலையாக அம்மாவும் அப்பாவும் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தனர். மாட்டின் வருவதைக் கண்ட எனது இளைய சகோதரி வேகமாக வாசற்கதவைச் சாத்திக் கொண்டு முனு முணுத் தபடி வீட்டினுள் பிரவேசித்தார். பெரிய அக்கா எனது நகங்களை வெட்டியபடி இருந்தார். கதவு மூடிய சத்தத்தால் நானும் பெரிய அக்காவும் திடுக்கிட்டுப் போனோம். சிவந்த முகத்துடன் சிறிய அக்கா மூத்தவளிடம் வந்தாள்.
"சொந்தக்காரர் வருகின்றார் நான் கதவைச் சாத்திவிட்டேன்." சுவரில் சாய்ந்தபடிசிறிய அக்கா கூறினாள். மூத்த சகோதரி எழுந்தாள். சிறிய சகோதரியை வியப்புடன் நோக்கினாள்.
மல்லிகை ஜூலை 2008 奉 49

Page 28
"கதவைத் திறக்க வேண்டாம். தட்டிப் பார்த்து விட்டுப் போகட்டும். இதற்கொரு முடிவு கட்டவே வேண்டும். என்ன வெட்கம் கெட்டத்தனம்?"
பெரிய அக்காவைப் பின் தொடர்ந்து நானும் வாசல் பக்கம் சென்றேன். நொண்டி மாட்டின் வீட்டின் முன்னாலிருந்த பலா மரத்தடியிலிருந்த பெரிய கல்லொன்றின் மீது அமர்ந்திருப்பதை நாங்கள் யன்ன லூடாகக் கண்டோம். நாம் நின்ற இடத்திற்கு வந்த சிறிய அக்கா.
"இவனை எங்கள் சித்தப்பா என்று வகு ப்புப் பிள்ளைகள் கேலி பண்ணுகிறார்கள்." நான் பெரிய அக்காவைப் பார்த்தேன். அவளது முகபாவத்திலிருந்து எதனையும் தெரிந்து கொள்ள முடியவில்லை.
"அக்கா அவன் எங்களுக்கு என்ன உறவு?" பெரியக்கா விடை கூறும் முன் சின்னக்கா விடை கூறினாள். "அந்த நாதி யற்றவனுடன் எங்களுக்கு என்ன உறவு." பெரியக் கா பெருமூச் சொன் றை உதிர்த்தாள்.
"அம்மா எம்மைத் திட்டுவாளே தெரியாது” அவள் மெல்லிய குரலில் முணுமுணுத்தாள். "ஏசினால் ஏசட்டும்." சின்னக்கா உறுதி யாகக் கூறினாள்.
யன்னலுக்கருகே சென்ற நான் யன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு நொண்டி மாட்டினைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் பலா மரத்தில் சாய்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்தான். வாய் திறந்திருந்தது. பழைய சாரமொன்றை உடுத்திருந்தான். அணிந்திருந்த பெனியனும் பல நாட்களா கச் சலவை செய்யாது அழுக்கடைந்ததொ ன்றாகும். எனக்குள் கவலையும் தோன்றியது. வகுப்பில் படித்த சமயப் பாடமொன்று ஞாப கத்திற்கு வந்தது.
"பசியால் வாடும் ஒரு மனிதனுக்கு உண வளிப்பது தருமமாகும். திக்கற்றவர்களுக்கு உதவுவது உத்தமமானது என்று புத்தர்
போதித்தார்." ஆசிரியர் கூறியது உண்மை யாயினும் நொண்டி மாட்டினுக்கு கருணை காட்ட மனம் இடம் கொடாமலிருப்பது ஏன்? சகோதரிகளும் அவனுக்கு இரக்கம் காட்டுவதில்லை. மனிதர்களின் பலவீனங் களைக் கண்டு அவர்களைத் தாழ்வாக மதிக்கக் கூடாது என நாங்கள் கற்றறிந்த போதிலும் நாம் ஏன் மாட்டினுக்கு கேலி செய் கின்றோம். உண்மையில் அவரது நடை யைப் பர்த்து நாம் சிரிக்கின்றோமா? அல்லது அவனுக்கு எமது பெற்றோர் காட்டும் மதிப்பி ற்காக அவனை வெறுக்கின்றோமா?
மாட்டின் காலமான செய்தியைக் கேள் விப்பட்ட அம்மாவும் அப்பாவும் மிகவும் வருந்தினார்கள். எனினும் எனது சகோத ரிகளின் பேச்சுக்களைக் கேட்ட போது அவர்கள் இதுபற்றிச் சந்தோசமடைவது போல் தெரிந்தது. அவ்வாறானதொரு மகிழ் ச்சி என்னுள் தோன்றவில்லை. ஆனால் நான் கவலைப்படவு மில்லை. எனினும் மனதில் ஒரு வெறுமை தோன்றியது.
அம்மா செத்த வீட்டுக்கு அன்னதானம் வழங்கத் தேவையான பொருட்களின பட்டியலை அப்பாவிடம் கொடுத்தார். அவர் கோணிப் பையொன்றைச் சயிக்கிளில் கட்டிக் கொண்டு புறப்பட்டார். அம்மா அக் காவை அழைத்தார்.
"மகள் நான்கைந்து தேங்காய்களை உரித்தெடு" பெரியக்கா அம்மாவுக்கு உத வத் தயாரானாள் சின்னக்கா இரகசியக குர லில் பெரியக்காவிடம் கூறினாள்.
"கடைசி அன்னதானமல்லவா நானும் உதவி செய்கிறேனே.” என்றுமில்லாதவாறு அம்மாவை இது கோபமடையச் செய்தது. அவள் சின்னக்காவின் கன்னத்தில் பலமாக அறைந்தாள். எனது கன்னத்தில் அறை விழுந்தாற் போல் நான் கன்னத்தைப் பொத் திக் கொண்டேன். சின்னக்காவோ கதறிய படி அறைக்குள் ஓடினாள். நிலையில் தலையை வைத்துக் கொண்டு அம்மா அழ ஆரம்பித்தாள். நான் பெரியக்காவிடம்
மல்லிகை ஜூலை 2008 50

சென்று அணைந்து கொண்டேன். கடிகாரம் நின்று விட்டது போன்றிருந்தது. வெளியில் காகங்கள் கரையும் ஒலி கூடக் கேட்க வில்லை. பெரியக்கா எனது தலையைத் தடவி விட்டாள். நான் எழுந்து சின்னக்கா வின் கட்டிலை அடைந்தேன். அவள் குப்புற விழுந்து தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மிக் கொண்டிருந் தாள். நான் வீட்டில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தேன். கடைசியில் சமையலறைப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டேன். அம்மா சமையலறையினுள் ஏதோ வேலை யாகவிருந்தாள். "மகள் சின்னவள் என்ன செய் கின்றாள் என்று பர்" "அறையில் இருககிறாள்" அக்காவின் விடை உயிரற்று இருந்தது.
"இந்தச் சொத்து சுகங்கள் யாவும் வான த்திலிருந்து கிடைத்தது என நீங்கள் நினை க்கலாம். இந்தக் குடும்பம் இந்த நிலைக்கு வரும் என்று யார் நினைத்தார்கள்."
அம்மாவின் பேச்சு என்னுள் பெரும ஆவ லைத் தூண்டிவிட்டது. நான் சமையலறை வாசலுக்குச் சென்றேன்.
"உங்கள் அப்பா ஒரு கரையோரக் கீழ் நாட்டுக்காரர் என்பது எங்கள் அப்பாவுக்கு வெறுப்பைத் தந்தது. இப்போது நீ நாலு விஷயம் தெரிந்தவள் என்பதால் கூறுகி றேன். அந்தச் சமயத்தில் நான் தீர்மான மெடுத்திருந்தேன். இதைக் கேட்ட எனது தகப்பனார் ஆவேசமுற்றார். எங்களுக்கு எவரும் உதவ முன் வரவில்லை. மாட்டின் மாத்திரம் தான் எங்களுக்கு உதவினார்."
நான் அம்மாவின் முகத்தைப் பார்க்க விரும்பினேன். ஆனாலும் கால்கள் பல மிழந்தது போல தோன்றியதால் நிலத்தில் அமர்ந்து விட்டேன்.
“கந்தவத்தையில் மாட்டின் அண்ணாவும் அவரது அம்மாவும் மாத்திரமே வசித்து வந்தனர். எங்கள் இருவருக்கும் அவ்வீட்டில் புகலிடம் அளித்தார்கள். எனது தகப்பனார் வேறு சிலருடன் சேர்ந்து கொண்டு எங்களைத் துன்புறுத்தி வந்தார். திடீரென ஒருநாள் உங்கள் அப்பாவைக் காண
வில்லை. நான் சாகாமல் இருந்தது மாட்டின் அண்ணாவின் அம்மாவினால் தான்.
மாட்டின் அண்ணாவின் அம்மா தங்க மான மனுசி. மிகவும் திடகாத்திரமான அவள் திடீரென ஒருநாள் இறந்து போனாள். அப் போது மாட்டின் அண்ணா கலியாண வய தைத் தாண்டியிருந்தார். யாரையாவது முடித் திருந்தாரென்றால் இன்று இவ்வாறு அனா தையாக இறந்திருக்கமாட்டார். நான் சமைய லறையினுள் எட்டிப் பார்த்தேன். அம்மாவின் முகம் எனக்குத் தெரியவில்லை. அவள அடுப் பருகே அமர்ந்திருந்தாள். அக்கா அவளு க்கு முன் பலகையில் அமர்ந்திருந்தாள்." அம்மா அக்காவைப் பார்த்துக் கொண் டிருந்தாள். அம்மாவின் பெருமூச்சுக்கள் பல உணர்வுகளை வெளிப்படுத்தின. அப்பா திடீ ரென எப்படிக் காணாமல் போனார். எனது மனதில் உறுத்திய இக் கேள்வியை அக்கா கேட்பாளா? அதைக் கேட்குமாறு அக்காவிடம் கூற எனக்குத் தோன்றியது. கடையிலிரு ந்து திரும்பிய அப்பா சயிக்கிளை நிறுத்தும் சத்தம் கேட்டது. சமையலறையிலிருந்து அக்காவின் கட்டிலருகே சென்றேன். அவள் கட்டிலில் படுத்துக் கொண்டு புத்தகமொன்றை வாசித்துக் கொண்டிருந்தாள். அதைக் கண்ட எனக்குச் சிறிது திருப்தியாக இருந்தது. "மாட்டின் நாதியற்றவனாக இறப்பதற்கு நாம் தான் காரணமென்று தேனீர்க் கடை யில் பேசியிருக்கிறார்கள்."
"அம்மா செத்த பிறகு மாட்டினை நாம் கவனித்தது போதாது." அப்பா கவலையு டன் கூறினார். அப்பாவின் கையில் தேநீர் கோப்பையைக் கொடுத்த அம்மா, தூணில் சாய்ந்து கொண்டார். சகோதரிகள் இருவரும் படுக்கையறையில் இருக்கின்றனரா எனப் பார்த்தேன். சின்னக்கா அறையில் இருந் தார். பெரியக்கா சமையலறையில் இருப் பாள் என்று நினைத்தேன். முன்னறையில் நடைபெறுகின்ற பேச்சுக்குக் காது கொடுக்க எனக்கு விருப்பம் ஏற்பட்டது.
"மாட்டின் அண்ணன் பெரிய வீட்டையும் தோட்டத்தையும் சின்னவளினதும், பைய
மல்லிகை ஜூலை 2008 率 51

Page 29
னினதும் பெயரில் எழுதியதாக உன்னிடம் கூறினாரா?”
"எழுதுவேன் என்று கூறியிருந்தார்.” அவரை அந்த வீட்டில் தனியாகச் செத்துப் போக விட்டது தவறு. நாம் கடமை கழிப்பது போல சாப்பாடு கொடுத்தோம்.
அம்மா சிறிது கோபத்துடன் அப்பாவைப் பார்த்தாள். பின்னர் வேண்டா வெறுப்பாக இவ்வாறு கூறினார்.
"நான் இதனை முன்னரே கூறினால் என்ன நடக்கும். நீங்கள் திடீரென காணா மல் போவீர்கள். பெரியவள் வயிற்றிலிருந்த போதும் நீங்கள் என்னை விட்டுப் போனிர் கள். இந்தக் காணி வாங்கக் காசு தந்தார். இவ்வளவு உதவி பெற்றும் எத்தனை முறை என்னை விட்டு விட்டுப் போனிர்கள்.”
அப்பா தேனீர்க் கோப்பையை மேசை யின் மேல் வைத்து விட்டு அம்மாவை ஒரு கணம் நோக்கினார். பின்னர் குற்றம் செய்த வர் போல் கவலையுடன் பேசினார்.
“இங்கே பார் தெருவில் இறங்கியவுடன் ஏதாவது வம்புப் பேச்சு. மனிதனாக நான் இவற்றை எப்படி தாங்கிக் கொள்வது?"
"ஏன் அந்த மனிதனிடம் உதவி பெற்றீர் கள்? உங்கள் சம்பாத்தியத்தில் இந்த வேலை களை செய்திருக்க முடியுமா? இவற்றுக்குப் பொறுப்புக் கூற நான் எந்தத் தவறும் செய்ய வில்லையே."
அப்பா ஒன்றும் பேசாமல் சாலையை விட்டு வெளியேறி முற்றத்திற்குச் செல்கின்றார். அம்மா அப்பா சொல்வதையே பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்பா வெற் றிலை பாத்தியை நோக்கி அடியெடுத்து வைக் கின்றார். அம்மா இன்னும தூணில் சாய்ந்த படியே இருக்கின்றாள். நான் அறைக்குச் சென்று கட்டிலில் சாய்ந்து கொள்கிறேன்.
அக்காமாருக்கும் எனக்கும் தெரியாத எத்தினையோ விஷயங்கள் எங்கள் வீட்டில் மறைந்துள்னன. நெடுநாட்களாக மாட்டின அண் ணாவின் இரவுணவை எடுத்துச் செல்வது அப்பா தான். பெரும்பாலும் பகல் சாபபாட்டு
க்கு அவர் எங்கள் வீட்டுக்கு வருவார். அத ற்கு அப்பா என்றுமே மறுப்புத தெரிவித்தது கிடையாது.
இவை பற்றி இடைக்கிடையே நான சிந் தித்ததுண்டு. ஆனாலும் அவை அவ்வளவு பாதுTரமான சிந்தனைகளல்ல. பெரும் பாலான நாட்களில் மாட்டின் அண் ணாவும் அப்பாவும் விறாந்தையில் அமர்ந் திரு ட்பர்கள் அவர்களிடையே அதிகம் பேச்சு வார் த்தை நடைபெற மாட்டாது. அம்மா இடைக் கிடையே தேநீர் வழங்குவாள்.
சந்தைக்குச் சென்று வெற்றிலை விற் கும் பொழுது அப்பாவுக்கு முன்னர் மாட்டின் அண்ணா செய்து வந்தாராம். இப்படி நான் கேள்விப்பட்டிருந்த போதிலும் அது பற்றிய விபரங்கள் சரியாகத் தெரியாது.
பெரியக்கா ஒருபக்கத்தில் நானும் சின் னக்காவும் மறுபக்கத்தில், அம்மாவும் அப்பாவும் எங்களைப் பார்த்துக் கொண்டிரு க்கிறார்கள். திடீரென கண்விழித்துப் பார்க் கின்றேன் மாட்டின் அண்ணாவைக் கட்டிலுக் கருகில் நிற்பது போல் காண்கின்றேன். கண்களைத் துடைத்துக் கொண்டு வருகி ன்றேன் முன்னறையில் அக்காமார் இருவ ரும் தையல் வேலை பற்றிக் கதையில் ஈடுபட்டுள்ளனர்.
விறாந்தையிலுள்ள சாய் கதிரையில் அப்பா சாய்ந்தவாறு வெற்றிலை சப்பிக கொண் டிருக்கிறார். அம்மா முற்றத்தில் ஏதோ வேலை. “கந்தவத்தைக்கு வேலி அடைத்துச் சீர் செய்தால் என்ன?" என்று கேட்டபடி அம்மா படியேறுகிறார்.
"ஆமாம் நானும் அதைப் பற்றித்தான யோசி த்துக் கொண்டிருக்கிறேன். நாளை மறுநாளே வேலை ஆரம்பிக்க வேண்டும்" என்கிறார அப்பா. அம்மா அப்பாவுக்கு மறுபுறமிருந்த கதி ரையில் வெற்றிலைத் தட்டுடன் அமர்ந்து கொள்கிறாள்.
அறைக்குச் சென்ற நான் மீண்டும் கட்டி லில் சாய்ந்து கொள்கிறேன். இரவு கனவில் மாட்டின் அண்ணா தோன்றுவார்.
மல்லிகை ஜூலை 2008 奉 52

ஈழத்து நாவல் வரலாறு (9)
1950 - 1960
செங்கைஆழியான் க. குணராசா மலைக்கன்னி
ஈழத்து நாவல் இலக்கியத்தில் நிறைய எழுதிப்பங்களிப்பு செய்தவர்களில் கே.வி.எஸ். வாஸ் முக்கியமானவர். ஆனால் அவரையும் அவரது எழுத்துக்களையும் தீவிர வாசகர்கள் கவனத்துக்கெடுக்காமையால் விமர்சகர்களின் கவனத்தை அவர் கவராது விட்டார். இலங்கையின் புகழ் ட பெற்ற பத்திரிகையான வீரகேசரியின் , ஆசிரியக் குழுவில் ஒருவராகவும் பின்னர் பிரதம ஆசிரியராகவும் அமர்நீத கே.வி.எஸ். வாஸ் நாவல் என்ற வகையில் நிறையவே எழுதிப் போந்துள்ளார். ரஜனி என்ற புனைப்பெயரோடு, 1949 இல் குந்தளப் பிரேமா என்ற நாவலுடன் இலக்கிய உலகில் புகுந்த வாஸ் அதனைத் தொடர்ந்து, ! நந்தினி (1949), தாரணி (1954), மலைக்கன்னி (1955), உதயகன்னி (1955), பத்மினி (1956), ஆஷா (1972), மைதிலி (1972), கணையாழி முதலான நாவல்களை எழுதியுள்ளார்.
ரஜனி கே.வி.எஸ். வாஸின் நாவல்கள் வாசகள்களைத் தம்பால் கவர்விக்கும் பாங்கில் எழுதப்பட்டவை. வியப்பும், அதிசயவுணர்வும் அவரது நாவல்களில் காணப்படும். சிலவிடத்து வரலாற்று நாவல்களோ என மயங்கவைக்கும். வகைக்கு ஓர் உதாரணமாக மலைக்கன்னி என்ற நாவலை எடுத்துக் கொள்வோம். 1957 மார்ச் மாதம் தொடக்கம் செப்டம்பர் மாதம் வரை மலைக்கன்னி வீரகேசரி நாளிதழில் தொடராகப் பிரசுரமாயிற்று. உண்மையாகவே அக்காலத்தில் ஒவ்வொரு நாளும் வீரகேசரியை ஆவலோடு எதிர்பார்த்துப் பெற்று, முதல் வேலையாக மலைக்கன்னியைத் தேடிப்படித்தவர்களை நான் அறிவேன். அவ்வளவு தூரம் மக்களை மலைக் கன்னி கவர்ந்திருந்தது. இந்த நாவலின் தோற்றத்துக்கான காரணத்தை வாஸ் பின்வருமாறு தெரிவிக்கிறார்: “சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் திருச்சி செயின்ட் ஜோசெப் கல்லூயில் நான் படித்துக் கொண்டிருந்தபோது SHE’ என்ற ஒரு ஆங்கில நாவலை நான் வாசிக்க நேர்ந்தது. புராதன இந்து கலாசாரத்தையும் இருபதாம் நூற்றாண்டின் நவ நாகரிக ஒட்டத்தையும் ஒன்றிணைந்த சூழலில் இந்த ஆங்கில நாவலைத் தழுவி எழுத வேண்டுமென்ற ஒரு
மல்லிகை ஜூலை 2008 率 53

Page 30
எண்ணம் எனக்கு உண்டாயிற்று.” எனவே மலைக்கன்னி ஆங்கில நாவல் ஒன்றின் தழுவலாகும்.
2500 ஆணி டுகளுக்கு மேலாக சிரஞ்சீவியாக வாழ்கின்ற தேவதேவி என்ற மலைக்கன்னி இருபதாம் நூற்றாண்டில் சந்திக்கின்ற ஒரு வாலிபன், முன்னர் அவள் வாழ்வில் குறுக்கிட்டு இறந்து போனவனின் மறுபிறப்பு என உணர்கிறாள். ஆதனால் ஏற்படுகின்ற சிக்கல்களை வாஸ் நாவலாக் கியுள்ளார். வியப்பும் அதிசயமும் நிறைந்த கதை, வாசகள்களைக் கட்டி இழுக்கும நாவல். கதை முழுவதும் இந்தியப் பின்னணியில் நடத்தப்படுகின்றது. நல்ல தமிழில் கதை முழுவதும் ஆசிரியக் கூற்றும் பாத்திரங் களின் உரையாடலும் அமைந்துள்ளன. மலைக்கன்னி சுவையானதொரு நாவல்.
கொழு கொம்பு
ஈழத்துச் சிறு கதைத் துறைக் கும் நாவல் துறைக்கும் கனதியான பங்களி ப்புச் செய்த பெருமை வ.அ. இராசரெத்தின த்திற்குரியது. கிழக் கிலங்கை மூதுTர் தந்த படைப்பாளி -- இராசரெத்தினத்தின் 29 சிறுகதைகள் ஈழகேசரியில் வெளி வந்துள்ளன. 1953 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் அவரின் உன்னதமான சிறுகதை யான ‘தோணி ஈழகேசரியில் வெளிவந்தது. அச்சிறுகதையுடன் ஈழத்துச் சிறுகதை உல கம் தன்னை ஒரு கணம் சிலிர்த்துக கொண் டது. தோணி சிறுகதையின் பின்னர் வெகு வாகப் பேசப்படும் இராசரெத்தினம் இரு
நூறுக்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதி யுள்ளர். தோணி, ஒரு காவியம் நிறைவு பெறு கிறது, திணைக கதை * கள் என்பன இவரது * சிறுகதைத் தொகு திகள் கொழுகொம்பு, கிரெளஞ் சவதம் , அறுவடை என்பன அவர் படைத்த நாவல்கள். வ.அ. இராரெத் தினத்தின் முதலாவது நாவல் கொழு கொம்பு ஆகும். ஒரு வகையில் ஈழத்தின் முதலாவது நவீனத்துவ நாவல் என்றும் இதனைக் கூறலாம்.
வ.அ.இராசரெத்தினத்தின் முதலாவது நாவல் கொழுகொம்பு ஆகும். ‘மனிதமன தின் இன்பம், துன்பம். கோபம், ஏமாற்றம், வெறுப்பு, பச்சாதாபம் போன்ற பல்வேறு உணர் ச்சிகளும் உலகப் பொதுவானால் என் கிரா மத்து மக்களும் கதாபாத்திரங்கள் ஆகுவ தற்குத் தகுதியானவர்கள் தாம் என்று திட மாக நம்புகின்றேன். ஆந்த நம்பிக்கையி னாற்றான் என்கிராமத்துச் செல்லனையும் நடாரினையும் அம்பலநாணரையும் கனகத் தையும் உங்களுடன் நடமாடவிடுகின்றேன். அவர்களால் உங்களுடன் ஒட்டிப்பழக முடி யுமானால் நான் நிச்சயமாக ஆனந்தப் படுவேன். “என்கிறார் இராசரெத்தினம் தன் நாவலின் முன்னுரையில். தவழும் குழந் தைப்பருவத்திலுள்ள நாவல் இலக்கியம் இலங்கையில் செழித்து வளரவில்லை என்பது இந்த நாவலுக்கு அணிந்துரை வழங்கிய சு.வே. அவர்களது கருத்தாகும். இத்தேக்க நிலையை வ.அ. இராசரெத்தினம் முறியடிக்கிறார் என்பது அவரது கருத் தாகும். கொழுகொம்பு கதை மகாவலி கங்கையின் பின்னணியில் வளர்கின்றது. தான் பிறந்து வளர்ந்து ஒடீயாடித் திரிந்த
மல்லிகை ஜூலை 2008 率 54
 
 

மகாவலிகங்கைக் கரையை ஆசிரியர் தன் நாவலின் களமாக்கியிருக்கிறார். கங்கை ளின் கம்பீரம் நாவல் எங்கும் முனைப்போடு தெரிகிறது.
நடராஜன் என்ற கதாபாத்திரம் தன் முறைப்பெண்ணான கனகத்தை ஆநசிக்கி ன்றான். அவளை அடைவதற்குப் பல தடைகள் வருகின்றன. அத்தடைகளை அவனது தந்தையான அம்பலவாணரி லிருந்து கனகத்தின் தந்தையுட்படப் பலர் ஏற்படுத்துகின்றனர். அவர்களிடையே
பிளவை சண் முகம் டfள்ளை போன்ற உவர்க்கிராமத் தொண்டர்கள் சிலரும் ஏற்படுத்துகின்றனர். 160கத்தோடு தனி வாழ்வு வாழக் கனகத்தை நடராஜன்
அழைக்கிறான். கனகம் அவனுடன் பெற் றார் சுற்றம் சம்மதமின்றிச் செல்ல மறுத்து விடுகிறாள். மனம் வெறுத்த நடராஜன் கிராமத்தைவிட்டு வெயியேறி மலைநாடு செல்கின்றான். அங்கு அவனுக்கு பிலோ மினா என்பாள் கொழுகொம்பாகிறாள். இறுதி யில் நடராஜனின் மனதில் கனகம் இருப் பதை அறிந்த பிலோமினா, அவனை அவளு டன் சேர்க்கச் செய்யும் தியாகம் நாவலாகின்றது. இக்கதையோட்டத்தை இராசரெத்தினம் சிறப்பாக எழுதிச்சென்றுள் ளார் என்றே சொல்ல வேண்டும். கிரா மங்களில் நடைபெறும் சாதாரண நிகழ்வு களைச் சுவைபட யதார்த்தமாக அக்கால கட்டத்தில் துணிச்சலோடு சித்திரித்துள்ளார். இந்த நாவலால் மூதுர் கிராமத்தில் பலரின் பகைமையைச் சம்பாதித்துக் கொண்ட வரலாறுமுண்டு.
கொழுகொம்பு நாவல் வளங்கொழிக்கும் மகாவலிகங்கைக்கரையில் ஆரம்பமாகின் றது. கல்முனை, கொழும்பு எனப்பயணப் பட்டு மலைநாடு செல்கின்றது. இப்பிரதேசப் பகைப்புலங்களை ஆசிரியர் தத்ரூபமாகத்
தன் நாவலில் சித்திரித்துச் செல்கின்றார் எனலாம். இந்த நாவலில் வருகின்ற பாத்தி ரங்களின் வார்ப்பு முன்பின் முரணற்ற தாகவுள்ளது. அறிவு பூர்வமாச் சிந்திக்கும் இயல்பும் பிறர் துயர் கண்டு வாடும் பண்பும் கொண்ட நடராஜனின் காதலும், அவன் மீது கொண்ட காதலால் தன் பெண்ணுக் குரிய பண்புகளிலிருந்து மாறாத கனகமும் இந்த நாவலில் சிறப்பாக அமைக்கப்பட்டுள் ளனர். நடராஜனின் தந்தை அம்பலவாண ரும் கனகத்தின் தந்தை கந்தையாபிள்ளை யும் அக்கிராமத்தின் குணங்குறிகளோடு வகை மாதிரியாக வருகின்றனர். ஆவர்க ளிடையே பகைமையை மூட்டி மகிழ்ச்சி கொள்ளும் சண்முகம்பிள்ளை,நண்பன் தியாகு, நடராஜனுக்குக் கொழுகொம்பாகும் தியாகச்சுடர் பிலோமினா என்பவர்கள் நல்ல வகைமாதிரிப் பாத்திரமாக நட மாடுகிறார். இராமாயணத்தின் கூனி மாதிரி கதையை நகர்த்துகிறார். பாத்திரங்களின் உரையாடல் தர்க்க ரீதியாகவும யதார்த்தமா கவும் அமைந்துள்ளது. கூடியவரை பேச்சு வழக்குத் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஈழத்தின் பழமை தழுவிய நாவலிலக்கி யத்தின் போக்கினை நிமிர்ந்து நடக்க வைத்த பெருமை 1955 இல் ஈழகேசரியில் தொடராக வெளிவந்த கொழுகொம்புக்குள் ளது. துப்பறியும் நாவல்களிலும், மொழி பெயர்ப்பு நாவல்களிலும், தழுவல் நாவல் களிலும் தம்மை ஈடுபடுத்தி வந்த வாசகர் களை இந்த மண்ணின் மணத்தை நுகர வைக்கும் முயற்சியில் கொழுகொம்பு பிறந்து ள்ளது. இலங்கை மண்ணின் பகைய புலமும், பாத்திரங்களும் நடமாட இந்த அற்புதமான ஆரம்ப நாவலை வ. அ. இராரெத்தினம் ஆக்கித் தந்துள்ளார். அவ்வகையில் ஈழத்தின் நாவல் இலக்கிய உலகு அவருக்குக் கடமைப்பட்டுள்ளது. இவரது நாவலைப்பற்றிக் குறிப்பிடும் பேராசிரியர்
மல்லிகை ஜூலை 2008 奉 55

Page 31
சுப்பிரமணியம், “ வ.அ.இராசரெத்தினம் எழுதிய கொழுகொம்பு நாவல் (19551956) காதல் தியாகம் முதலிய தனிமனித உணர்வுகளுடன் அமைந்ததொரு குடும்பக் கதையாக அமைந்தாலும் கதை நிகழும் களம், கதாசிரியர் வழங்கும் செய்தி ஆகி யனவற்றின் அடிப்படையில் அதனையும் சமகாலச் சமூக உணர்வுடைய நாவலா கவே கொள்ள வேண்டும். கிழக்கிலங்கை யைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவலுக்கு குறிப்பிடத்தக்க சிறப் புண்டு’ என்கிறார்.
கேட்டதும் நடந்ததும்
1956 - களில் ஈழத்தில் வெளிவந்த இன்னொரு நவீன நாவல் தேவன் யாழ்ப்பாணம் எழுதிய கேட்டதும் நடந்ததும் ஆகும். அமரர் தேவன். யாழ்ப்பாணம் சிறு கதை ஆசிரியர், நாவலாசிரியர். நாடக ஆசிரியர். மொழிபெயர்ப்பாளர். பேச்சாளர். வாடாமலர், கண்டதும் கேட்டதும் என்பன அவரது நாவல்கள். தென்னவன் பிரம ராஜன் நூலுருப்பெற்ற நாடகம். அவருடைய சிறுகதைகள் தேவன் யாழ்ப்பாணம் சிறு கதைகள் என்ற தொகு ப்பாக வெளிவந்து ள்ளது. 1954 - 1955 களில் ஈழகேசரியில் தொடர் கதையாக கேட் டதும் நடந்ததும வெளி வந்த போது பலரா லும் விதந்து பேசப் Lill-gil.
கேட்டதும் நடந்ததும் என்ற இந்நாவல் இரண்டு பாகங்களைக் கொண்டது. முதற்
པོ་༽ பாகம் காது என்றும் இரண்டாம் பாகம் 曾 கண் என்றும் வகுக் கப்பட்டன. நாவலின் ).” தலைப்புக்கு ஏற்ப காது, கண் என பாகங்களாகப் பிரிக் கப்பட்டன. இந்த ' நாவலுக்கு முன் ' னுரை எழுதிய ஆனந் தவிகடன் ஆதவன் இப் பாக பிரிவுகளை வியந்திருப்பதுடன் இப்படியான ஒரு நாவலைத் தான் எழுதத் திட்டமிட்டிரு ந்ததாகவும் தெரிவித்துள்ளார். காது என்ற முதல் பாகத்தில் பதினைந்து அத்தியாயங் கள் இருக்கின்றன. கண் என்ற இரண்டாம் பாகத்தில் பதினாறு அத்தியாயங்கள் உள்ளன. 1951 ஆம் ஆண்டு மத்தியில் இந்த நாவலைத் தான் எழுத ஆரம்பித்தாக தேவன் குறிப்பிடுகிறார். தன் வாழ்க்கை யோடு இணைந்த மூவரை இந்த நாவலில் பர்த்திரங்களாக்கியுள்ளார். இதனால் யதார்த்தப் பண்பு மிகவும் பொருந்தியுள் ளது. கதாசிரியருக்கு தம்பி இந்த நாவலின் கதையைக் கூறுகின்றான். அதனை அவர் எழுதவதாக வருகிறது. அந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனி சிறுகதைகளாகக் கொள்ளத்தக்கன. அதே வேளை ஒன்று சேரும்போது நாவலாகும் தன்மையான புதியதொரு உத்தி கையாளப்பட்டு இருக்கிறது. இந்த நாவலில் கையாளப்பட்டிருக்கும் உரைநடை மிகமிக எளிமையானது. தேர்ந்தெடுத்த வார்த்தை களைக் கொண்டு பின்னப்பட்டுள்ளது. நல்லதோர் ஆரம்ப நாவலாக இதனைக்
கருதலாம்.
(தொடரும்)
மல்லிகை ஜூலை 2008 辜 56
 
 

அலக்கியச் சர்ச்சை
ஐய்வது இலக்கிய விமர்சனமாகாது ev6) التي ỳ -- )gܕ݁ܰܐܤܳܘܢ ܘ
LDல்லிகையில் கடந்த ஜூன் மாதம் வெளியான கெகிராவ ஸஹானாவின் ஒரு விமர்சனப் பார்வை படிக்கக் கிடைத்தது. அக்கட்டுரை, விமர்சனப் பார்வை என்பதை விட, ஒரு விளிம்பு நிலை எழுத்தாளனின் ஆழமற்ற அணுகு முறையாயிருந்தது! மல்லிகை 43வது ஆண்டுமலரில் வெளியான ஸஹானாவின் சிறுகதைகள் பற்றிய கண்ணோட்டம் பிழையானவை, மேலோட்டமானவை.
திக்வெல்லை சப்வானின், சிங்கள மொழியாக்கக் கதை, தெளிவத்தை ஜோசப்பின் இறுமாப்பு, தெணியானின் அவஸ்தை இரட்டைக்கதைகள். த. கலாமணி, ஆனந்தி, சட்டநாதன், ச. முருகானந்தன், மு. பவர், ப. ஆப்தீன், பரன், வசந்தி தயாபரன், பிரமிளா பிரதீபன், மா. பாலசிங்கம், உடுவை தில்லைநடராசா, சுதாராஜ், எஸ். சாந்தகுமாரி ஆகிய பதினைந்து எழுத்தாளர்களின் சிறுகதைப் படைப்புகள் மலரில் வெளியாகிருந்தன.
அத்தனை கதைகளிலும் திருப்தியே இல்லையென்றும், தெளிவத்தை ஜோசப்பின் சிறுகதை ஒன்றுதான் ஏலவே இருந்த அதிருப்தியை நீக்கிவிட்டதாக, அவர் குறிப்பிடுகின் றார். எந்த ஒரு தனிநபரின் அதிருப்தி, திருப்திக்காக எவரும் படைப்பாக்கம் செய்ய முன் வருவதில்லை.
மாறாக, சமூக அவலங்கள் குறித்த வெளிப்பாடுகளே புனைகதைகள். மேலும் காலதாமதமாகியே மலரைக் கையிலெடுத்ததாகவும் கூறி ஆறுமாதங்களுக்குப் பின்- மலர் பற்றி குறிப் பெழுதி உள்ளார். மல்லிகையின் மீது இவருக்கு எத்தனை கரிசனை!
தெளிவத்தை ஜோசப், அரை நூற்றாண்டு காலங்களாகவே இந்நாட்டின் ஆளுமை மிக்கப் படைப்பாளி என்பதில் யாருக்கும் எதிர்க் கருத்துக் கிடையாது. அவரது கலைமகள் காலத்து கதைகளை ஸஹானா படித்திருப்பாரா? என்பதே சந்தேகம் தான்.
மற்றப் படைப்பாளிகள் அத்தனை பேரையும் புறந்தள்ளிவிட்டு, இவருக்கு மட்டும் புகழாரம் ஏன்? இவரது விதந்துரைப்பு இல்லாது போனாலும், அவரது கீர்த்திக்கு எந்த ஊறும் சம்பவிக்கப் போவதில்லை. மலரில் வெளிவந்த அனைத்துக் கதைகளும் தேறாவிட்டாலும் கூட, ஒரு ஐந்து கதைகள் சிறப்பானவையெனச் சுட்டலாம்.
இவர்கள் தங்கள் அனுபவங்களைக் கருப் பொருளாக்கி கதை படைத்துள்ளனர். சிலகதைகளில், சமூகப் பிரக்ஞை, செய் நேர்த்தி, கலைநயம், உரையாடல் உயிர்ப்பு,
மல்லிகை ஜூலை 2008 率 57

Page 32
ஆழமான தொனிப் பொருள் இவை தூக்க லாகத் துலங்குவதைக் காணலாம். படைப் பிலக்கிய விமர்சனமென்பது ஜவுளிக் கடை க்குள் புகுந்து, தங்கள் விருப்பு, வெறுப்புக்கு ஏற்றவாறு சேலை செலக்ட் பண்ணும் விவகாரமல்ல! அதற்கு ஆழமான நுண்ண றிவு மிக்க, கலைத்துவப் பார்வை வேண் டும். ஒரு படைப்பை சரியென்றோ, பிழை யென்றோ சுட்டுவதற்கு போதிய காரண காரியங்கள் வேண்டும்.
சுந்தரராமசாமி விமர்சனம் பற்றி கூறியி ருப்பது கவனத்திற் கொள்ளலாம்.
விமர்சனத்தை விட, ஆழ்ந்த விமர்சன த்தை உருவாக்குபவைதான், படைப்புகள். ஒரு அசலான படைப்பாளியைப் பற்றி, விமர்சகன் வந்து சேரும் முடிவுகளுக்கு, முன் வைக்கும் காரணங்கள் தான், விமர் சகனின் இலக்கிய ஆழத்தையும், நுட்பத் தையும், விவேகத்தையும் தன் காலத்தோடு அவன் கொண்டிருக்கும் உறவையும் வெளிப்படுத்துகின்றன.
மறைந்த விமர்சக ஜாம்பவான் பேராசிரி யர் கைலாசபதி கூறுவார். ‘ஒரு படைப்பபை விமர்சிக்கு முன், படைப்பாளி ஏன் எழுது கிறான்? எப்படி எழுதுகிறான்? என்ற கேள் விகள் விமர்சகனுக்கு முக்கியமானவை யாகும்' என்று.
மல்லிகை ஜீவா அடிக்கடி கூறும் வார் த்தை இது, "படைப்பாளி என்கிற மாடு, முன் னால் செல்லவேண்டும். விமர்சகன் என்ற வண்டி பின்னால் செல்ல வேண்டும்' என்று. இன்று இலக்கிய உலகில் இரண்டு தொகு ப்புகளை வெளியிட்டு, கொஞ்சம் வாசிப்பறி வும் இருந்து விட்டால், சிலர் நினைக் கிறார்கள் தாங்கள் பெரிய இலக்கிய ஜாம்ப வான்கள் என்று.
தங்களைப் பற்றித் தாங்களே ஊதிப் பெருப்பித்துக் கொண்ட பிம்பங்களுடன், எடுத்தேன், கவிழ்த்தேன் என, வெங்கட் சாமி நாதன் பாணியில் குறிப்பெழுதுகி றார்கள். எந்தத் தேடல் அநுபவங்களு மற்று, கண்டதை எழுதி விமர்சகனாகலாம் என்று நினைக்கிறார்கள், கலைத்துவப் பார் வையும், நுண்ணறிவும் படைப்பாக்க விமர் சனத்திற்கு தேவை என்பதை அசட்டை செய்கிறார்கள்.
நமது நாட்டில் எந்தத் திறமையுமற்ற 6nfraEG6T sora, g94 gáfuLu666io ger 6Tib. S. யாவதைப் போல, ஒரு வேடிக்கை என்னவென் றால், எல்லாக்கதைகளையும் ஸஹானா புறந்தள்ளிவிட்டு, எனது 'வதை கதைக் கான அரைவரி விமர்சனம் (சரியில்லை) எனக் குறிப்பிடுகிறார். ஏன் சரியில்லை? எப்படிச் சரியில்லை? என்பதை ஒரிரு வரிக ளிலாவது நறுக்குத் தெறித்தாற் போன்று கூறியிருக்க வேண்டும்.
இலக்கிய விமர்சனமென்பது, சரி. பிழை போடும் பாடசாலைப் பிள்ளைகளின் அப்பி யாசக் கொப்பியா? நான் ஏலவே இது குறி த்து ஒரு கவிதை எழுதியதாக ஞாபகம் எனக் குறிப்பிடுகிறார். இது அவரது ஆழப் பார்வையற்ற அணுகு முறையை வெளிச் சம் போட்டுக் காட்டுகிறது.
அந்தக் கவிதையை எங்கோ ஒளித்து வைத்து விட்டு, ‘வதை கதையை மீண்டும் எழுத வந்தவனில்லை நான். அந்தக் கவி தைதான், கதையில் இறுதிப் பகுதியில் இடம் பெற்றிருக்கிறது, கதைக்கு ஊறு இல்லாதபடி,
மார்ச் 2008 மல்லிகையில், எனது ‘வதை கதைபற்றி பிரகலாத ஆனந்த் இப்படிக் குறிப்பிடுகின்றார்.
மல்லிகை ஜூலை 2008 # 58

'பவரின் 'வதை உண்மைக் கதையை எழுதியுள்ளார். முடிவில் வரும் கவிதை, பொருத்தமாக உள்ளது என்று. எனது 45 வருடகால படைப்பிலக்கியப் பயணத்தில் எனது சிருஷ்டியொன்று எந்தக் காரணங் களையும் சுட்டாமல் சரியில்லை என்ற பதம் வந்திருப்பது இதுவே முதல் அநுபவமாக நான் எதிர் கொள்கிறேன், நான் எழுதுகின்ற எல்லாவற்றையும் மற்றவர்கள் பாராட்டியே ஆக வேண்டும், என்று எதிர்பார்க்கிற பக்குவமற்ற இலக்கியக்காரனல்ல, நான்
இந்தப் பிரபஞ்சத்தில் விமர்சனங்களு க்கு உட்படுத்தப்படாத பொருளே இல்லை, மத நம்பிக்கை உட்பட. ஒன்றைச் சரி யென்றோ, பிழையென்றோ குறிப்பிடுவத ற்கு தக்க சான்றுகள் வேண்டும். சரியி ல்லை என்பது உருவத்திலா? உள்ளடக் கத்திலா? என்பதற்கு போதிய விளக்க மில்லை.
அக்கதையின் தொனிப் பொருளில் வாசகன் கிளர்ச்சியடைந்திருக்க மாட்டான், என்பது நான் ஏற்கனவே எதிர்பார்த்த விடயம் தான். ஏனென்றால், ரீட்டா ஜோனின் படுகொலையும், பாலியல் வல்லுறவும், எல்லோரும் அறிந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் என்பதால். 1966களில் இருந்தே மல்லிகையின் தொடர் வாசகன் நான்.
பிற ஊடகங்களைத் தவிர்த்து, மல்லி கையில் மட்டும் எனது படைப்புகள் நாற் பதுக்கு மேல் வெளியாகியிருக்கின்றன. மூன்று சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்து ஒரு சில பிரதிகள் மட்டும் எஞ்சிய நிலை யில் அவை வாசகனை சென்றடைந்து விட்டன. எனது படைப்புகள் சரியில்லை யென்றால் ஐம்பதாண்டு கால இலக்கிய
வரலாற்றில் நான் எப்படி நின்று பிடித்தி ருக்க முடியும்?
ஒன்று செய்யலாம். நான் சிறுகதை எழுதுவது எப்படியென்று ஸஹானா டீச்சரி டம் டியூசன் எடுத்துக் கொள்ளலாம் தான். அதற்கு என் ஐம்பதாண்டு கால இலக்கிய அநுபவமும் எனது வயதெல்லையும் குறு க்கே நிற்கிறதே முப்பது ஆண்டுகளுக்கு முன் மல்லிகை ஆசிரியர் ஜீவா இப்படி எழுதினார்.
'லத்தீப், இளங்கீரன், சம்ஸ், பவரீர், கமால் நமது நாட்டு முஸ்லீம் படைப்பில க்கிய கர்த்தாக்களில் நம்பிக்கை தருபவர் கள்' என்று. அதை ஸஹானா படித்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது என்று நம்புகின் றேன். ஏனெனில் அப்போது சகோதரி ஸ்ஹானா இலக்கியப் பிரக்ஞையே அற்ற ஒரு சிறுமியாக இருந்திருப்பார், என நம்புகிறேன்.
எல்லாப் படைப்பாளிகளையும் புறந் தள்ளும் சஹானா, மல்லிகையில் தான் எழுதுவது மட்டும் தான் நேர்த்தியான படை ப்பு என்று நினைப்பது அபத்தம்.
படைப்பனுபவம் பற்றியே பிரக்ஞையே இல்லாதிருந்த ஸ்ஹானா, இலக்கிய உல கில் பிரவேசித்ததற்கு, நண்பர் மேமன் கவியே உபயம், என்ற வரலாற்றை நன்கறி ந்தவன் நான். ஸஹானா அங்கலாய்க்கும் அளவிற்கு அவரது படைப்புகள் வீச்சா னவை அல்ல. உருவ-உள்ளடக்க சிதைவு கள் கொண்ட தொய்வான கதைகள் அவரு
60Luug).
மினுவாங்கொட தினகரன் விசேட நிரூபராக நானிருந்த காலப் பிரிவில், காக்கைத் தீவு கடற்கரைக் காட்டில் நடந்த
மல்லிகை ஜூலை 2008 & 59

Page 33
அந்தக் கொடூரம் என் ஆன்மாவைக் கசக்கிப் பிழிந்தது. ரீட்டா ஜோனின் சடல த்தைப் பார்த்தது. அவரது கணவர் ஜூட் மனோகரனைச் சந்தித்தது. சம்பந்தப் பட்டவரையணுகி பலமுறை சென்று, சிரமப்பட்டு செய்திகள் சேகரித்தது எல்லாம் என் தீவிர தேடல் முயற்சியே.
அச்சம்பவம் செய்தியாக மட்டுமன்றி, இலக்கியத்தில் பதியப்பட வேண்டுமென்ற நோக்கில் ஒரு பறவையின் சித்திரவதை எனும் நாமத்தில் கவிதையாக யாத்ராவில் எழுதினேன். அதுவும், உறுத்தும் என் மனதிற்கு போதாமை என்ற காரணத்தால், ஒரு கலைத்துவ முலாம்பூசிக் கதையாக்கி னேன். கவிதையில் வந்த பொருள், கதை யில் வரக் கூடாது என்று எதுவும் வரை விலக்கணம் இருந்தால் அதை ஸ்ஹானா அறியத் தந்தால் மிகப் பிரயோசனமாக இருக்கும்.
அப்படியென்றால் ஏன் இந்த, "சரியில்லை?. சம்பவம் பாலியலோடு சம்பந்தப்பட்டது என் பதினா? அந்தக் கதையின் (உரு) செய் நேர்த்தி, குறித்து அநுபவம் மிக்க படைப் பாளிகள் விதந்துரைத்த போது, ஸ்ஹானா வுக்கு மட்டும் ஏன் சரியில்லை? அல்லது கதையில் மேரியின் அங்கலாவண்யம் பற்றி வர்ணித்தது அவருக்குப் பிடிக்கவில் 60d6ou uT?
பல்வேறு பண்பட்ட எழுத்தாளர்களும் பாலியலைக் கையாண்டதில்லையா? ஜானகி ராமன், ஜெயகாந்தன், ஏன் புதுமை பித்தன் கூட, (பொன்னகரம்) பாலியலைக் கலைத்துவமாக்கவில்லையா? நமது சட்டநாதன் பாலியலைக் கருவாகக் கொண்டு கலைத்துவம் மிக்க அற்புதமான படைப்புகளைப் படைத்த அவதானிப்புக்
குரிய எழுத்தாளராக இன்று மிளிரவில் 606)urt?
காமமும், பசியும் மனிதனின் அடிப்படை உடற் கூறு அம்சங்கள். அதற்காக பிச்சை யெடுப்பதையோ, விபச்சாரம் செய்வதையோ நியாயப்படுத்த முடியுமா? சமூகம் என்றிருந் தால் சமூக மீறல்களும் நிகழ்ந்தபடியே தான் இருக்கும், என்பது யதார்த்தம்.
சிக்மண்ட் பிராய்ட்டை, படித்தவர்க ளுக்கு, பாலியல் வெறுக்கத்தக்கது அல்ல என்று புரியும். எனது கதைகள் பலவற்றில் பாலியல் வருகிறது. ஆனால், அவற்றை வக்கிரமாகவோ, விரசமாகவோ கையாளா மல் பக்குவமாக எடுத்தாண்டிருக்கிறேன்.
சல்மாவின் கவிதை வரிகள் இது நீ என்னைப் புணரும் போது, சகல புரிதல் களுடனும் என் யோனி விரிகிறது. இதில் இல்லாத விரசமா என் கதைகளில் விரவிக் கிடக்கின்றது?
இன்றைய பெண்ணியக் கவிதைகள் பல பாலியலைப் பாடு பொருளாகக் கொண்டவை. படுக்கையறை இரகசியங் களை, பச்சையாகப் பேசுகிறது. ஏனென்று கேட்டால், அது உடல் மொழியாம். அத னால் தான் பேச வேண்டுமாம். எனது படை ப்புகள் மீது காரணமற்ற அதிருப்தியை வெளியிடும் சகோதரி ஸ்ஹானா எனது நிஜங்களின் வலி நூலினை மீண்டுமொரு முறை படித்துத் தெளிவது அவசியம்.
அதில் - கே. எஸ். சிவகுமாரன், கோகிலா மகேந்திரன், பிரகலாத ஆனந்த், போன்ற ஆளுமைகள், என் படைப்பாக்க ங்கள் குறித்து எவ்விதமான பார்வைகளை முன்வைத்துள்ளார்கள் என்பது நன்கு புரியவரும்.
மல்லிகை ஜூலை 2008 密 60

அண்மையில் கடந்த வருடத்திற்கான இந்திய தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிரு க்கின்றது. சிறந்த நடிகைக்கான விருதினை 'பருத்திவீரன்’ படத்தில் நடித்த பிரியாமணி பெற்றுக் கொண்டு, தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். பாலச்சந்தரின் 'சிந்துபைரவி திரைப்படத்தில் நடித்தமைக்காக சுகாசினி தேசிய விருது பெற்று இரண்டு தசாப்த ங்களுக்குப் பின்னர், இப்போது மீண்டும் தமிழ் நடிகை ஒருவருக்கு இவ்விருது கிடைத் துள்ளது.
இந்திய தேசிய விருதுகள் வழங்கப்பட ஆரம்பித்து நாற்பது ஆண்டுகள் கடந்து விட்ட இன்றைய நிலையில், இந்திய சிறந்த படத்திற்கான விருதினை தமிழ்த் திரைப்படம் இதுவரை பெற்றுக் கொள்ளவில்லை. அதிக விருதுகளை மலையாளமும், மராட்டியமுமே பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதற்கு அடுத்ததாக ஹிந்தி வருகின்றது.
சிறந்த நடிகைக்கான இந்திய தேசிய விருது uெறும் பிலாமணி
- இலகு ஆனந்த்
இதுகால வரை வழங்கப்பட்ட விருதுகளில், தேசிய ரீதியில் 'சம்சாரம் அது மின்சாரம்" என்ற தமிழ்த் திரைப்படம் சிறந்த ஜனரஞ்சகத் திரைப்படத்திற்கான விருதினைப் பெற்றிருந்த போதிலும், சிறந்த படத்திற்கான விருதினைப் பெற முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது. பொலிவுட்டுக்கு (பம்பாய்) அடுத்ததாகத் திரைப்படத் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் கோடம்பாக்கம், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதுக்காக இன்னமும் காத்திருக்க வேண்டிய நிலைமையே உள்ளது. இதற்குக் காரணம், தொடர்ந்து வரும் மசாலாத் திரைப்படங்கள் தான். அத்திபூத்தால் போலவே நல்ல திரைப்படங்கள் வெளிவருகின்றமை சாபக் கேடாக அமைந்துள்ளது.
தமிழில் சிறந்த கலைஞர்கள் இருக்கிறார்கள். திறமையான தொழில்நுட்பவியலாளர்கள் இருக்கிறார்கள். சிறந்த ஸ்ரூடியோக்கள் இருக்கின்றன. எனினும், ரசிகர்களுக்காக என்று கூறிக் கொண்டு அசட்டுத்தனமான மசாலாப் படங்களைத் தயாரிப்பதிலேயே தமிழ்த் திரையுலகம் மூழ்கிப் போயுள்ளது. ஆனால், இவர்கள் கூறுவது போல ரசிகர்கள் எல்லாம்
மல்லிகை ஜூலை 2008 霹 61

Page 34
அறிவிலிகள் அல்ல. நல்ல கலைத்துவ மான படங்களை வரவேற்கவே செய்கிறார் கள். இதற்கு உதாரணமாக இம்முறை தேசிய விருது பெற்ற இரு தமிழ்ப்படங் களைப் பார்க்கலாம். ஒன்று, சிறந்த நடிகைக்கான விருது பெற்ற 'பருத்திவீரன்" படம். மற்றது, பிராந்திய சிறந்த படமாகத் தெரிவான வெயில் திரைப்படம். இவ்விரு திரைப்படங்களுமே மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு பெரும் வெற்றி கண்டன. பருத்திவீரன் முன்னூறு நாட்கள் கடந்து ஓடியது. இத்தனைக்கும் இத்திரைப் படங்கள் ஓரளவு யதார்த்த பூர்வமாகத் தயாரிக்கப்பட்டிருந்ததுடன் சண்டைக் காட்சிகள், கும்மாங்குத்துப் பாடல்கள் என்ற செயற்கைத் தனங்கள் குறைவாக அமைந்த படங்களாகும். மேலும் கிராமிய சூழலில் எடுக்கப்பட்டிருந்த இத்திரைப் படத்தில் நடித்தவர்கள் பிரபலங்களும் இல்லை. "வெயில் திரைப்பட நாயகன் பசுபதி, பருத்திவீரன்’ திரைப்பட நாயகன் புதுமுகம் கார்த்தி. நடிகைகளும் பிரபலமா னவர்கள் அல்ல. இரண்டு படங்களுமே சக்கை போடு போட்டு வெற்றியீட்டின. வெயில் பசுபதி, பருத்திவீரன் கார்த்தி இருவருமே வெகு இயல்பாக நடித்திருந் தார்கள். பிரியாமணியின் அலங்காரமற்ற கிராமியப் பெண் பாத்திரம் ரசிகர்களின் மனதைக் கவ்வியது போலவே, விருதுக் குழுவினரையும் ஈர்த்துள்ளது. இவ்விரு விருதுகளும் தயாரிப்பாளர்களின் கூற்றை நிராகரிக்கின்றன. ரசிகர்கள் என்றும் நல்ல விடயங்களை ஏற்கவே செய்பவர் என்ப தற்காக இத்திரைப் படங்களின் விருது சான்று பகர்கின்றன.
தமிழ்த் திரைப்படங்கள் தேசிய விருதுக் காகத் தேர்ந்தெடுக்கப்படாத போதிலும், வருடா வருடம் பல கலைஞர்களும், தொழில் நுட்பவியலாளர்களும் விருதுகள் பெறவே செய்கிறார்கள். இதுகால வரை, 'ரிக்சாக்காரன்' எம். ஜி. ஆர், நாயகன்"
'மூன்றாம்பிறை" ஹாசன், "பிதாமகன் விக்ரம் முதலானோர் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளனர். நடிகைகளுக்கான தேசிய
8ნup6ხ6ypm &6ნI, கமல்
விருதினை ஜெயகாந்தனின் "சில நேரங்க ளில் சில மனிதர்கள்' படத்தில் நடித்தமை க்காக லட்சுமி பெற்றார். அடுத்து பசி படத் திற்காக ஷோபாவும், 'வீடு' படத்திற்காக அர்ச்சனாவும், பாலச்சந்தரின் ‘சிந்து பைரவிக்கா சுகாசினியும் இதற்கு முன்னர் பெற்றுள்ளனர். இப்போது பிரியாமணிக்கு இவ்விருது கிடைத்துள்ளது.
இதுகால வரையில் சிறந்த பாடகர், பாடகி, பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர் என பல விருதுகளைத் தமிழ்த் திரையுலகம் தேசியரீதியில் பெற்றுள்ளது. சிவாஜிகணேசன் ஆசிய திரைப்பட விழாவில் "வீரபாண்டிய கட்டப் பொம்மனின் நடித்தமைக்காக சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றுள்ளார்.
சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினைத் தமிழ்த் திரைப்படம் பெற வேண்டுமானால், தமிழ்ப்படத் தயாரிப்பாளர் களும், நெறியாளர்கையாளரும் யதார்த்த மாய்ச் செயற்பட வேண்டும். அண்மைக் காலத்தில் பாலா, அமீர், தங்கர்பச்சான் உள் ளிட்ட சில இளைஞர்கள் நம்பிக்கை ஊட்டு கிறார்கள். எனினும், சிறந்தபடத்திற்கான தேசிய விருதினைப் பெறும் நாளுக்காக இன்னமும் காத்திருக்க வேண்டியுள்ளதே.
மல்லிகை ஜூலை 2008 & 62

பனி சுற்றிவர எங்கும் குவிந்து கொண்டிருந்தது. இருள் விரிந்து கிடந் தது. அறையினுள் இதமான வெப்பமும் மங்கிய ஒளியும் நிறைந்திருந்தும் உறக் கம் வரமறுத்தது.
- யோகேஸ்வரி சிவப்பிரகாசல்
எதிர்பார்ப்பு மனதை ஒய்வு கொள்ள விடாது தடுத்தது. இன்னும் இரண்டு மணிநேரத்தில் ஜனகன் கதை ப்பான். அதை எதிர்பார்த்துத்தான் காத் திருக்கிறேன்.
அதற்கு முன்பே மனக்குயில் ஆனந்தமாகக் கூவிக் கொண்டு இறகுவிரித்து வீடு நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.
நடக்காது என்று எண்ணியது நடக்கப் போகிறது. நான் மீண்டும் எனது ஊருக்கே போகப் போகிறேன். நடக்குமா? எனக் காத்திருந்தது நடந்துவிட்டது. ஈழத்தில் அமைதியும் சமாதானமும் திரும்பிவிட்டது.
ஆனால், ஆனந்த வெள்ளத்திற்குத் தடைகள் இருக்கவே செய்யும். நினைத்தவுடன் மனம் ஊருக்குப் பறக்கலாம். என்னால் இயலாதே. எழுபது வயதைத் தாண்டிய வயோதிபன் நான், இயலுமா?
அன்று வரும்போது என்னுடன் வந்தவன் ஜனகன் மட்டுந்தான். இன்று அவனுடைய மனைவி நித்தியா, பிள்ளைகள் எல்லோரையும் அழைத்துச் செல்ல வேண்டுமே. ஜனகனின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
முற்றத்து வேம்பு, கிணற்றடியில் செவ்விளநீர்க் கன்றும், தோட்டத்து மாவும், பலாவும், மாதுளையும், அடிவளவுப் புளியும். மனம் வீட்டை, வளவை, ஊரையென்று சுற்றிவர, அவற்றைக் காண்பதற்காய் எவ்வளவு காலம் காத்திருந்தாகிவிட்டது. இன்னும் இரண்டு மணிநேரம்.
அறிவு நிமிர்ந்து நின்று ஆனந்தத்தை மெல்லக் கூட்டியது. நான் வந்து இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டது. இப்பொழுது பழையவற்றை எதிர்பார்த்துப் போவது..?
1995ல் இடம்பெயர்ந்து ஆறுமாதங்கள் தான் உசனிலே போய்த் தங்கியிருந்தோம். திரும்பி வந்தபோது, வீடும் வளவும் இருந்த நிலை...!
ஆறுமாத இடைவெளியிலேயே அப்படியென்றால், இந்த நீண்ட காலவோட்டத்தின் பின்? இடையே எத்தனை கஷ்டங்கள், துன்பங்கள், இழப்புக்கள், வேதனைகள். நடந்து
முடிந்தவற்றைத் திரும்பிப் பார்க்கவே மனம் அச்சப்பட்டது. ஆனால், மறக்கமுடியவில்
மல்லிகை ஜூலை 2008 63

Page 35
லையே. ஆழப் பதிந்த 6JCS5.56in. 9606 குடிபெயர மறுத்து முரண்டு பிடிக்கின்றன. நீலையும், மாதுரியையும் போல, இப் பொழுது இடப்பெயர்வு இவர்களுக்கு.
எமது ஊர் காடாகியிருக்குமோ? வீடு என்னவாயிருக்கும்?
எது என்னவானாலென்ன? நிலமிருந் தால் போதும். அதிலே புதியதோர் உலகம்
செய்யலாம்.
நிலமே இல்லாது போயிருந்தால் தான் பெருங்கவுடம்.
இந்தப் பேரானந்தம் தரும் செய்தியைக் கேட்டுங் கூட, ரவீந்திரன் அன்று சந்தோ வழிக்க முடியாது அந்தரித்தது இதனாலே தானே?
யாழ்ப்பாணத்து வீட்டையோ, நிலத் தையோ ஆயிரம் ரூபாவிற்குக் கூட விற்க முடியாத ஒரு காலத்திலே தான் அவர்கள் அந்த மண்ணை விட்டுப் பறந்து வந்து இந்தப் பணியிலே கால் பதித்தார்கள்.
ஜனகனை வைத்துக் கொண்டு அங்கி ருக்க நான் விரும்பவில்லை. பறிகொடுத் தது போதும். பொருளை இழந்தால் மீண்டும் வாங்கலாம். உயிரை இழந்தால் முடியுமா?
ரவீந்திரனும் அப்படித்தான் வந்தான். காலங் கடந்தது. யுத்த நிறுத்த ஒப்பந்த மொன்று வந்தபோது, அவர்கள் எதிர்பார்ப் புடன் காத்திருந்தனர்.
போர் மீண்டும் புகையத் தொடங்கியது. ரவீந்திரன் நம்பிக்கையை முழுமையாக இழந்துவிட்டான். ஒன்றுமே இல்லாது போவதைவிட, கிடைப்பதை எடுப்பது இலாபமென எண்ணி அவனது யாழ்ப்பாண த்து வீட்டை விற்று விட்டான்.
"இனிப் போனால் ஒரு பேர்ச் காணி கூட உச்சவிலைக்கும் கிடைக்காது. வாடகை க்கு வீடும் கிடைக்காது." எனக் கூறிக் கவலைப்பட்டான்.
எனக்குத் தெரிந்த அளவு விடயங்கள் கூட, அவனுக்குத் தெரிந்திருக்காதது என க்கு வியப்பாகவிருந்தது.
"என்னடாப்பா அங்கை நடக்கிறதொண் டும் உனக்குத் தெரியேல்லைப் போல கிடக்கு. அங்கே நகரப் புனரமைப்புத் திட்ட மொண்டுப் படிதான் எல்லாம் நடக்குது. யாழ்ப்பாணத்தினுடைய சில பகுதிகளை மட்டுந்தான் பழைய அமைப்பிலேயே வைத் திருக்கப் போகினமாம். பெரும்பாலும் சரித்திர முக்கியத்துவமான இடங்கள், பிரசித்தி பெற்ற ஸ்தலங்கள், அவற்றின் சுற்றாடல் போன்றவற்றை அப்படியே பழமை பேண வைத்துக் கொண்டு, மற்ற இடங்களை நகரப் புனரமைப்புத் திட்டப் படிதான் அமைக்கப் போகினமாம். அழகழ கான தொடர்மாடிக் குடியிருப்புக்களெல் லாம் அதில இருக்காம், அவற்றிலே ஒண்டை வாங்க நேரத்துக்கே ஒழுங்கு செய்." என நான் ஆலோசனை வழங்கிய போது, ரவீந்திரன் அதைக் கேட்டுத் திகைத்து விட்டான்.
"அப்ப காணிச் சொந்தக்காரர் சண்டை க்கு வருவினமே."
தலைநீட்டிய சந்தேகத்தை அவன்
G3SLT6.
"சண்டைக்கு வாற சொந்தக்காரர், எங்களைப் போல விஷயந் தெரியாமல் தூர இருக்கிறவை, செத்துப் போனவை, அவை யின்ர வாரிசுகள், இன்னும் பலதரப்பட்ட வை எல்லாருடைய பிரச்சினைகளையும்
மல்லிகை ஜூலை 2008 & 64

ஆராய்ந்து சிந்தித்து ஒரு சட்டம் உருவாக்கி μπέινπιο.''
"எப்ப போய் அந்த நாட்டிலை இருப்ப மெண்டு ஆசையாயிருக்கடாப்பா!'
கா60ாது விளக்கத்தைக் கேட்டு அவன் சப்புக் கொட்ட, நான் சிரித்துக் கொண்டே வந்துவிட்டேன்.
ஆனால், எனது மண்ணிற்கு நான் போவது எப்போது? அதை அறியத்தான் இப்போது காத்திருக்கிறேன். ஜனகன் தொடர்பு கொள்ள ஒருமணிநேரத்திற்கு மேலிருக்கிறது.
நேரம் ஏன் மெல்ல நகர்கிறது?
உள்ளம் மீண்டும் பறக்கின்றது.
அங்கே வீடில்லாமலிருக்கலாம். காணி பற்றைக் காடாகிக் கிடக்கலாம். அந்த மண் னில் கால் வைத்ததுமே ஜனகனின் அப்பா செல்வத்தின் நினைவு முளைக்குள்ளிருந்து வெளிக் கிளம்பி வியாபித்து நிற்குமே.
நானும் தம்பி செல்வமும் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த இடமல்லவா?
செல்வம் ஓர் இரவு கைது செய்யப்பட்ட தும், மறுநாள் மாலை கடற்கரையில் ஒதுங் கிய அவனது சடலம் சாம்பராகியதும் அந்த ஊரிலே தான்.
அந்த நினைவுகள் நான் சாம்பராகும் போதுதான் சாம்பராகும். அவன் சாம்பரானா லும் அவன் மூட்டிய கனல் கனன்று கொண்டேயிருந்தது.
எனது மகன் சூரியகுமாரும் செல்வத் தின் மகன் சுயோதனனும் அவனுடைய வழியிலேயே போய்விட்டனர். அதனாலே தான் ஜனகனை அங்கே வைத்திருக்கப் பயந்து இங்கு வந்து சேர்ந்தேன்.
ஜனகனிடமும் தந்தையின் தீவிரம் இருக்கத்தான் செய்தது. இந்தச் சூழலில் படிப்படியாக அது உறைந்து போய்விட்டது.
என்னையும், எம்மூர்க்காரர் சிலரையும் காணும் போது மட்டும் அமர்ந்திருந்து, பழையவற்றையும், நடந்து கொண்டிருக்கின் றவற்றையும் அசைபோடுவான். தன் தந் தையைப் பற்றியும், அவனது செயல்களைப் பற்றியும், அவனது உணர்வுகள், சிந்தனை கள் பற்றியும் அடிக்கடி என்னுடன் பேசுவான். அண்ணன்மார்களைப் பற்றிப் பிரமிப்பான்.
அவனுள் குவிந்து கிடந்த இந்த எண்ண ங்களின் நடுவே என்ன புதைந்து கிடக்கிறது என்பது எனக்குப் புரியாத ஒன்றாகவே இன்றுவரையிருக்கிறது.
நாம் மீண்டும் நமது ஊருக்குச் செல்வது பற்றி அவனிடம் கேட்டதுமே மிகுந்த மகிழ் ச்சியடைவானென நான் எதிர்பார்த்தேன். உடனயே போவதற்கான ஒழுங்குகளில் உற்சாகமாக ஈடுபடுவானென எண்ணி னேன். ஆனால், அப்படி நடக்கவில்லை. ஆலோசிக்க அவனுக்குக் காலம் தேவைப்
Ull-Sl.
genusiT LDmpsil LimeOTIT?
போர்ச் சூழலிலேற்பட்ட மனரணங்க ளுடன் இங்கு வந்திறங்கிய ஜனகன் தன் தந்தையைப் பற்றியும், அவரது இலட்சியங் கள் பற்றியும் பேசிக் கொண்டேயிருந்தான். 'மீண்டும் எப்போது எங்கள் நாட்டிற்குப் போகலாம்? என்று ஏங்குபவனாகத் தென் LILLIT6öT.
இங்குதான் வாழ வேண்டுமென்ற நிர் ப்பந்தம். அந்த இருப்புக்காக உழைப்பதைத் தேடி அலைய வேண்டிய நிலையையும், ஒடி ஒடி உழைக்க வேண்டிய அவசியத்தை
மல்லிகை ஜூலை 2008 奉 65

Page 36
யும் ஏற்படுத்த, அந்த ஓயாத அலைகளி டையே இந்த எண்ணங்கள் படிப்படியாக ஒய ஆரம்பித்தன.
நித்தியாவை அவனுக்கென நிச்சயித்து, திருமணம் செய்து வைத்தது நான்தான். அவளுடைய சிந்தனைகள் எதிர்த் திசையி லிருந்தன. அதுவும் அவனைப் பாதித்தி ருக்க வேண்டும்.
எப்படியோ காலம் போய்விட்டது. இன்னும் சிலவருடங்களில் அவர்களுடைய மகன் நீலுக்குப் பெண்பார்க்க வேண்டியி ருக்கும்.
நமது பண்பாட்டுடன் ஒரு பெண்ணை இங்கே எப்படித் தேடுவது?’ என நான் சிந்திப்பதுண்டு. இனி அந்தப் பிரச்சினை யில்லை. எங்கள் ஊருக்குப் போய்விட்டால், அங்கேயே பெண் பார்க்கலாம்.
அவனும் படவரைஞனாகத்தான் தேர் ச்சி பெற்றிருக்கிறான். அங்கே இப்போது அவனுடைய சேவை அத்யாவசியமான தாக இருக்கும், வேலை தேடி அலைய வேண்டியிருக்காது.
மகள் மாதுரிதான் அங்கு பழகக் கஷ்டப்படப் போகிறாள். இந்தச் சூழலில் வளர்ந்தவளல்லவா? ஆனால், அவளு டைய திறமையைப் பயன்படுத்த அங்கே யும் தயாராகி விட்டார்களென்பது தான் எனக்குப் பெரு மகிழ்ச்சி தந்த விடயம். புற்றுநோய் தொடர்பான ஆய்வில் அவள் ஈடுபட்டிருக்கிறாள். அங்கே போய் அதனைச் செய்ய முடியாதென்ற காரணத்திற்காக அவள் மறுத்து விடுவாளோ என நான் பயந்தேன்.
ஆனால், இந்த நோய்களுக்கான ஆய்வு மையமொன்று எங்கள் ஊரிலேயே
அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதால், மேற்கு நாடொன்று அதற்கான உபகரணங் கள், கட்டிடம் ஆகிய அனைத்துக்கும் பொறுப்பேற்றிருக்கிறதாம்.
பிள்ளைகளுக்கு அங்கே போக அவ் வளவு விருப்பமில்லைதான். பல்வேறு கார ணங்களைக் கூறி மறுத்தார்கள். அவர்களு டைய கேள்விகளுக்கு எனக்கும் பதில் சொல்லமுடியவில்லை.
என்னுடைய மருமகனான காந்தநேசன் தான் அங்குள்ள நிலைகளை எனக்குக் கூறுபவன். அவனிடம் நீலும், மாதுரியும் கேட்டவற்றைப் பற்றி விசாரித்த போது, அவன் நல்ல வழியொன்று சொன்னான்.
இணையத்தளமொன்றைக் கூறி, அதிலே எல்லா விபரங்களையும் பார்க்குமாறு சொல் லியது நல்லதாகிவிட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன் பென நினைக்கிறேன். இணையத்தளத்திலே நகர அமைப்பைப் பார்த்துப் பிரமித்துப் போனோம். ஒவ்வொன்றையும், நன்றாகத் திட்டமிட்டு அதற்கதற்கு ஏற்ற இடங்கள் தெரிவு செய்யப்பட்டு, அவ்வளவு சிறப்பாக நகரம் புனரமைக்கப்படுகிறது.
தொழிற்சாலைகள், நூலகங்கள், விளை யாட்டரங்குகள், வைத்தியசாலை, பல்வேறு ஆய்வு மையங்கள், சர்வதேச விமான நிலையம், துறைமுகம் இப்படி எவ்வளவோ நாங்கள் முமுமனதுடன் உழைத்தால் சுவர்க்கந்தான்.
ஒவ்வொன்றினுடைய தனித்தனி அமை ப்புகளும் விவரிக்கப்பட்டிருந்தன. மாதுரி தன் ஆய்வை அங்கே தொடரலாமெனத் திருப்திப்பட்டாள். அந்த ஆய்வு மையத்தின் அமைப்பை அரைமணி நேரமிருந்து பகுதி
மல்லிகை ஜூலை 2008 & 66

பகுதியாகப் பார்த்து, வியந்தாள். அவ்வளவு சிறப்பாகக் கச்சிதமாக இருக்கிறதாம்.
ஜனகனின் முதலாவது பிரச்சினை இங்கே பிறந்து வளர்ந்த பிள்ளைகளுக்கு அங்குள்ள சுவாத்தியம் ஒத்து வருமோ என் பதுதான். எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. அங்கேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்த நாங் கள் இங்கு வந்து இவ்வளவு காலமும் வாழ் ந்து விட்டோம். இவர்கள் அங்கு போக இப் படியெல்லாம் பார்க்கிறார்களே? இவையெல் லாம் அவ்வளவு முக்கியத்துவமானவையா?
என்னவோ இந்தப் பிரச்சினைகளே ஏற்படாதாம். அதற்கேற்ற வகையில் வீடு கள் கட்டப்படுகின்றனவாம். இரண்டு கிழை மைகளாய் நீலுடனும், மாதுரியுடனும் இதே கதை தான். ஒருமாதிரி அவர்களைச் சம்மதிக்க வைத்தாயிற்று.
தொலைபேசி இன்னிசை இசைத்தது. ஜனகன் தான்.
"ஹலோ தாத்தா ஐ ஆம் மாதுரி."
இவளுடைய சலனம் இன்னும் தீரவி so60s)03urr?
'6T6tT60T siT6061T2 6T66T60T 6Shayu Jub?'
"தாத்தா ஊரிலை இருக்கிற ஆக்கள் ஒரு மாதிரியாம். கல்சேட் இல்லையாம்." தமிழ் இவளுடைய நாவிலே வேதனைப் பட்டது போலத் தோன்றியது.
'எனக்கு அப்படித் தெரியவில்லை. உனக்கு யார் சொன்னது?"
"LD bufSg5T6öT.'
உள்ளே ஓர் எரிவு பரவியது. எங்கள் உறவுகளா பண்பாடற்றவர்கள்'தைப் பண்பாடு என்கிறார்கள்?"
நித்தியாவிற்கு இங்கிருந்து செல்லவே விருப்பமில்லை. மேற்கு நாடுகள்தான் சொர்க்கம்' என்ற ஓர் எண்ணம் எங்களுள் ஆழப்பதிந்திருக்கிறதல்லவா? அந்த ஆழம் நித்தியாவிற்குச் சற்று அதிகம்.
என்ன வசதிகளிருந்தாலும் வேற்று நாட்டிலே நாங்கள் இரண்டாந்தரப் பிரசை கள் தானே. அது எங்கள் நாடு. அங்கு வாழ்வதிலுள்ள மகிழ்வு, இனிமை இவற் றையெல்லாம் எவ்வளவோ எடுத்துக் கூறியும், அவள் அங்கு செல்வதற்கு அரை மனத்துடன் தான் சம்மதித்திருக்கிறாள்.
அவளுடைய இழுத்தடிப்பு பிள்ளைகளை யும் அலைத்ததை நான் ஏற்கனவே அவ தானித்திருந்தேன்.
அதன் தொடர்தான் மாதுரியின் இந்த விசாரணை.
"அவர்கள் மிகவும் நல்லவர்கள். தமி ழர்களுடைய பண்பாடு அவர்களிடமிருக்கி றது. நித்தியா எந்தப் பண்பாட்டைச் சொல்கி றாவோ தெரியவில்லை."
"நீங்களும் டடாவும் அங்கே போறதுக் காக பொய் பொய்யாய் சொல்றீங்களாம்.'
"யார் சொன்னது?"
"Loblól.5TsöT.”
‘'எதுக்கும் நீங்கள் அங்கே வந்து பாருங்கோ. யார் சொல்றது பொய்யெண்டு தெரியும்."
என் குரலிலே மனதிலிருந்த கோபக் கொதிப்பு தொற்றிக் கொள்ளவே மாதுரி க்கும் அது புரிந்துவிட்டது.
"நீங்க கோபமா பேசுறீங்க தாத்தா. நான் பிறகு பேசுறேன்."
மல்லிகை ஜூலை 2008 牵 67

Page 37
மாதுரி தொலைபேசித் தொடர்பைத் துண்டித்தாள். எனது மனதினுள் எழுந்த கோபம் கனன்று கொண்டேயிருந்தது.
அந்த மண்ணிலே இறுதி மூச்சை விட வெனக் காத்திருந்த பலருக்கு அந்த அதிர் ஷ்டம் கிட்டவில்லை. எனக்கு அது கிட்டியி ருக்கிறது என மகிழ்ந்தேனே!
கிட்டித்தானிருக்கிறது. கிடைக்குமோ 66öT6oTG86JT?
தித்தித்த மனம் கசந்தது. ஆவலோடு பார்த்த தொலைபேசியைப் பார்க்கவே விருப்பமற்றுப் போய்விட, காரணமற்ற ஒரு வெறுப்பு சூழ்ந்து கொண்டது.
எத்தனை காலக் கனவு இப்போது நனவாகிவிட்டது. அதை அநுபவிக்கும் பாக்கியம் கைநழுவிப் போனால் மனசு தாங்குமா?
நான் மட்டும் போகிறேன் என்றும் கேட்டுப் பார்த்தேன். "பெரியப்பா, இந்த வயதிலை அங்கே தனிய இருந்து கஷ்ட ப்படப் போறியளோ? உங்களை அப்பிடிவிட என்னாலை முடியாது!" ஜனகன் ஒரே யடியாக மறுத்துவிட்டான்.
இங்கேயும் தனியாகாத்தானே இருக்கி றேன். இறுதி நேரம் இயலாமல் படுத்தால் பக்கத்திலிருந்து பார்க்க யாருக்கு நேரம் இருக்கும்? வயோதிபர் இல்லந்தான் கதி. இப்படி இருக்கப் போறவன் அங்கே இருந்தால் என்ன? மனதிற்குள் நொந்து கொள்ளத்தான் முடிந்தது. அவனை மீறிச் செயற்பட முடியவில்லை. என் மனதிற்கு ஏனிந்த இயலாமை ஏற்பட்டது?
தொலைபேசி அழைத்தது, எடுத்தேன்?
"பெரியப்பா, எப்படி இருக்கிறியள்?"
ஜனகன்தான் பேசினான்.
"நல்லாயிருக்கிறன்." நா பதிலுரைத் தாலும் 'இந்தச் சம்பிரதாயமெல்லாம் ஏன்? விசயத்தைச் சொல்லு" என மனம் எகி றியது.
"நாளைக்கு உங்கை வருவன் பெரி யப்பா."
"அதுசரி என்ன முடிவெடுத்தாயெண்டு இப்ப சொல்லலாம் தானே. நாளைக்கு வந்துதான் சொல்ல வேணுமா?"
ஏற்கனவே இருந்த கொதிநிலை
Ցռնցա&l.
'இல்லை பெரியப்பா. என்னோடை வேலை செய்த நாலுபேர் வேலையை விடுகிறமெண்டு ஏற்கனவே கடிதங் குடுத் திட்டினம்."
"ஏன் விடுகினம்?"
"ஊருக்குப் போகத்தான்."
"அவங்கள் உடனை முடிவெடுத்துப் போட்டாங்கள். உன்னை நித்தியா விடே
ல்லை."
"எல்லாரும் ஒண்டாய் விட்டிட்டுப் போனால் கஷ்டமெண்டு பொஸ் சொல்லு றார். நாங்கள் எல்லாரும் போய்க் கொண்டி ருக்கிறதாலை நல்ல கெட்டிக்காற ஆக்க ளைத் தேடி எடுக்க வேணுமாம். இப்ப என்னை விடப் பொஸ்ஸாக்கு விருப்பமி ல்லை. புது ஆக்களை அவை எடுக்குமட் டும், கொஞ்சம் பொறுங்கோ, பெரியப்பா."
மல்லிகை ஜூலை 2008 率 68

7ܐܢܖà ܫܰ2ܗ݇ܧܵܟܵܐܗܐܢ[d -
? ‘தூண்டில் கேள்வி-பதில் எழுதுகின்றீர்களே, யாரைப் பின்பற்றி எழுதுகின்றிகள்?
கோண்டாவில். எஸ். சபேசன்.
* எழுத்து உலகில் நான் எவரையுமே பின் பற்றி எழுதுவதில்லை. எனது தனித்து வத்தை நான் இழக்கச் சம்மதிப்பதுமில்லை. அதே சமயம் சகலருடைய கேள்விபதில்களையும் கருத்தூன்றிப் படிப்பதில் பின்நிற்பதுமில்லை. எழுத்திலும் சிந்தனை யிலும் முதிர்ச்சி வளர வளர, எழுத்தில் ஒருவகைத் தனித்துவமும் நடையும் தோன் றும். இவைதான் கடந்த கால எனது இலக்கிய வாழ்வில் கண்ட நேரடி அநுபவங் களாகும்.
? குழந்தை இலக்கியம்பரிைபகற்கு நீங்கள் எப்போதாவது முயற்சித்ததுண்டா?
Lig.606T. கே. சுந்தரசிவன்.
இல் அதற்கு அடிப்படை அறிவு தேவை. மனத்தத்துவ நுண்ணுணர்வு தெரிந்திருக்க வேண்டும். வார்த்தைகளின் கனம், காத்திரம் புரிந்திருப்பது அத்தியாவசியம், அந்தப் பயத்தின் காரணமாக நான் குழந்தை இலக்கியப் பக்கம் நாட்டம் செலுத்தியதில்லை.
p மல்லிகைக்காக இன்றுநிகமாக பாவித்துவரும்மல்லிகை என்ற எழுத்தையும் அதன் குறியீடாகப் பக்கதிலே தொடர்ந்து வரும் மல்லிகை மலரையும் வரைந்துதந்த ஓவியரி, யாரி?
தெஹிவளை. எஸ். சிவபாதம்.
இ தமிழ் உலகத்தில் இன்று சிறப்பு நிறைந்த ஒவியராக மிளிரும் ஒவியர் ரமணியின்
எழுத்துக்கள்தான் அவை. ஒன்றை நீங்கள் தொடர்ந்து அவதானித்து வரலாம். மல்லிகை ஆண்டு மலர்களில் தொடர்ந்து ஒவியர் ரமணியின் ஒவியங்களே இடம்
மல்லிகை ஜூலை 2008 & 69

Page 38
பெற்று வருகின்றன. இந்த ஆண்டு மல ரிலும் ரமணியின் ஓவியமே அட்டையில் இடம் பெற்றது. பல தமிழகத்து ரசனை யாளர்கள் அந்த ரமணி அட்டைப்பட ஒவியத்தைப் புகழ்ந்துரைத்ததை நான் நேரில் கேட்டு, மகிழ்ந்திருக்கின்றேன்.
? நீங்கள் சமீபத்தில் படித்த கேள்வி
பதில் பகுதிகளில் யாருடைய பதில் உங் களது மனதைத் தொட்டது?
புத்தளம். ஆர். சிவநேசன்.
2 சமீபத்தில் குமுதம் இதழில் கேள்வி க்குப் பதிலளித்திருந்தார் அரசு. அப் பகுதியில் உங்களின் மனதை தொட்ட இன்றைய சிறுகதை எழுத்தாளர் யார்? என ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு, ‘என்னைக் கவர்ந்த இன்றைய சிறுகதை எழுத்தாளர் அ. முத்துலிங்கம்! எனப் பதிலளித்திருந்தார். தமிழகமும் தனது கவனத்தைக் கொஞ்சம் உலகைப் பார்க்கத் தொடங்கியுள்ளதை இதன் மூலம் அறியலாம்.
p பள்ளிக்கட வயதில், பட்டமேற்றிய அது பவம் ஏதாவது உண்டா, உங்களுக்கு?
எம். மனோகரன்.
உரும்பிராய்.
2 எனது அப்பா பட்டங்கள் தயாரிப்ப
தில் மகா நிபுணன். கொக்குக் கொடி,
எட்டுமூலைக் கொடி, சானாக் கொடி, பாம்பன் கொடி எனப் பல்வேறு பட்டங் களை இரவிரவாகத் தயாரிப்பார். எனது தந்தையார் நித்தம் குடியன். அதனால் அம்மா அவரைத் திட்டிக் கொண்டே
இருப்பார். அவர் குடிக்காமல் இருந்தால் கொதியன். குடித்து வெறியேறினால் மகா மகா சாது. எங்களுடன் ஒருவரா கவே மாறிவிடுவார். எங்களுக்கு அவர் குடித்திருந்தால் தான் சந்தோஷம், நாங் கள் இழுத்தபாட்டிற்கெல்லாம் எங்களு டன் சேர்ந்து சந்தோஷிப்பார். சிரித்து மகிழ்வார்.
எங்களது வீட்டிற்கு முன்னால் யாழ் ப்பாணப் புகையிரத நிலையம். பக்க த்தே பரந்த வெளி. அந்த வெளிதான் எங் களது விளையாட்டு மைதானம். அந்த ‘ஓ’வென்ற வெளியில் தான் போட்டி போட்டுக் கொண்டு நாமனைவரும் பட்ட மேற்றி மகிழ்வோம்.
இன்றைய சிறார்களுக்கு இந்த வாய்ப்பினை கிடைக்கவே இல்லையே!
p
பெயர் Dominic என இருக்கிறதே, அது தமிழ்ப் பெயருமல்ல. ஆனால், நீங்களோ தமிழ் எழுத்தாளர். ஹொலிவூட் நடிகன் பெயர் போல் இருக்கிறதே, இதன்பின்புலம் என்ன?
D. LiñIð5656on Lu I 6 LuuIffa56f6ò dypáðir
சாவகச்சேரி. எஸ். கதிரேசன்.
2 எங்களுடைய வீடு, யாழ்ப்பாணம்
புகையிரத நிலையத்திற்கு வெகு அண் மையில் அமைந்துள்ளது. அந்த நிலைய
‘த்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்னர்
ஸ்டேசன் மாஸ்டராக இருந்தவர் ஒரு பிரெஞ்சுக்காரர். அயலட்டை மக்கள் மீது தனி அபிமானமும், வாஞ்சையும் வாய்க் கப் பெற்றவர். வெள்ளைத் தோலின் அகம்பாவம் சிறிதுமே இல்லாதவர்.
மல்லிகை ஜூலை 2008 奉 70

அவரது நாமம்தான் Dominic என்பது. அவர் நிலையத்தை விட்டு மாறிப் போன போது, நிலையத்தின் சுற்றாடலில் உள்ள மக்கள் அனைவரும் சேர்ந்து, தங்கச் 2ங்கிலி ஒன்றைப் பரிசளித்து மகிழ்ந்த கனராம். எங்கள் குடும்பம் அன்னாரது ஞாபகார்த்தமாக அவரது திருநாமத்தையே எனக்குச் சூட்டி மகிழ்ந்ததாக அம்மா எனக்கு அடிக்கடி சொல்லிச் சொல்லி நினைவூட்டுவார். இந்தப் பெயர் பொருத் தத்திற்கு எனது தாய் தந்தையரின் மதப் பற்றும் ஒரு காரணமாக இருக்கலாம் என நம்புகின்றேன். வெள்ளையனின் நாமத்தை விட, ஒரு பிரெஞ்சுக்காரனது கலைத்துவப் பெயர் தான் என்களை எழு த்தாளனாக்கியதோ என, நான் பிர்கால த்தில் அடிக்கடி யோசித்துப் பார்த்ததுண்டு.
p 2.-fiIö956DLui orul al IInIII) optôIDII
வது பாகத்தையும் எழுதி முரசிது, மாலுருவில் அந்த வாழ்க்கை அநுபவதிகை வருங்கால இளைய தலைமுறையினரிரு சொல்லி வைத்தால் என்ன? rா Mnnவ இந்தச் of fluids6) (8 fth an Anthrnalist (8III 605 தோன்றுகின்றது. கரிம 'அமெரிக்காவைப் LITTft, BCB III flLI I dontonis III s, i srbs? (8Ubuļ6īr6T இந்தியாவைப் பார்!" என நமது இவர் கலை முறையை வெருட்டிப் பயமுறும் ரபி நமது LIIDörö(6ì5ỗở5, “IIIIII])ũLIIIứDTổồmmfì tIIIfĩ, 9ìß தக் கஸ்தூரியார் வீதியைரி 1 1’ எனச் சொல்லிப் பெருமைபருதவற்கு சரியா கை யைக் கட்டிக் கொண்டிருக்காமல் சுபதிவைத்
தால், என்ன?
கோப்பாய். க. முரளிதரன்.
* நேற்றுக் கூட, டென்மார்க்கிலிருந்து ஒரு நண்பர் விசாரித்தார். கனடாவி லிருந்து இளமைக் கால நண்பனொரு வன் தொலைபேசியில் ஊக்குவித்துப் பேசினான். ஒரு நூல் எழுதக் கூடிய அத் தனை தகவல்களும் என்னிடம் நிறைய நிறைய உண்டு. மல்லிகை மாதா மாதம் என்னை உறிஞ்சி விடுகின்றது. எழுத முயற்சிக்க வேண்டுமென்பதுதான் எனது ஆசை. பார்ப்போமே!
p பெற்றோல் விலையேற்றம் உரிங்களை
யும் பாதிக்கின்றதா?
சிலாபம். ஆர். தவசீலன்.
2 இதுவரையும் நான் போக்குவரத்துச் சாதனங்களைப் பற்றி அதிகம் அலட்டிக் கொண்டதில்லை. நான் தங்கியிருக்கும் வீடு மல்லிகை அலுவலகத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் இருக்கும். முன் னர் போக வர, பஸ்ஸைத்தான் பயன்படு த்தி வந்தேன். அலுவல் முடிந்து வீடு திரு ம்பத் தேக அசதியாக இருக்கும் காரண த்தால், ஆட்டோவைப் பயன்படுத்துவேன். இந்தக் கட்டத்தில் பெற்றோல் விலை யேற்றத்தால் ரொம்பவும் சிரமப்படுகின் றேன். ஒரு சிற்றிலக்கிய ஏட்டின் வருமான த்தை நம்பி தினசரி வாழ்வை ஒட்டிக் கொண்டிருக்கும் எனது தினசரிச் சிரம த்தையாரிடம் போய்ச் சொல்லி அழுவது?
யாழ்ப்பாணத்தில் அன்று பிரயா ணப்பட்ட சைக்கிள் ஒட்டத்தின் பொரு ளாதார வசதியை இன்று நாள் தோறும் உணர்ந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.
மல்லிகை ஜூலை 2008 & 71

Page 39
மல்லிகை ஜூலை 2008 奉 72
p இந்தியர்கள் அதிகளவில் உணவு
வகைகளைத் தின்பதாலேயே, உலகில் உணவுப்பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஐனாதிபதி புஷ் சமீபத்தில் சொல்லியிருந் தாரே, இது பற்றி நீங்கள் என்ன கருது கின்றிகள்?
பதுளை. ரி. வைத்தீஸ்வரன்.
இல் அமெரிக்கச் சீமான், சீமாட்டிகளி னது வளர்ப்புப் பிராணிகள் தின்பதை விடவும் மிகக் குறைவாகத் தான் இந்தி யப் பாமர மக்கள் உண்கிறார்கள். இந்த உண்மை கூட, அவருக்குத் தெரியாத தல்ல அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி என்ற திமிரில் வாய்க்கு வந்ததையெல் லாம் சொல்லி வைப்பதற்கு இந்தியப் பொதுமக்கள் வெறும் ஏமாந்த சோன கிரிகள் அல்ல என்பதை வரலாறு அவரு க்குக் கற்பித்தே தீரும்
? “கலைச்செல்வி ஆசிரியரி சிற்பி அவfக
ளினது பவளவிழாத் தொடர்பாக "ஞானம்’ சஞ்சிகை சிறப்பு மலரி வெளியிட்டிருந்ததே, உங்களது 9rifiusò 6rdraor?
நீர்கொழும்பு. ஆர். நித்தியநாதன்.
இல் பார்த்தேன். அளவில்லாத மனமகிழ் ச்சி எனக்கு. மறுமலர்ச்சி, கலைச்செல்வி யின் பசளையால் தான் மல்லிகைச் செடி மலர்ந்து இன்று வரை புதுப்பித்துக் கொண்டிருக்கின்றது. மல்லிகையின் மனமார்ந்த வாழ்த்துக்கள், சிற்பி அவர்க ளுக்கு. சிறப்பிதழ் வந்தது மட்டும் போ தாது. பவளவிழாச் சிறப்பு நூலொன்றும்
தொகுக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பமுமாகும்.
?
நீங்களே பூர்த்தி செய்வீர்களா?
மல்லிகையின் 50- வது ஆண்டை
கன்னாகம். எம். தேவன்.
மி நானே கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மல்லிகையின் சுவைஞர்கள் சிந்திப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. 50-வது ஆண்டு வருவதற்கு இன்னமும் 7 ஆண்டுகள் உள்ளன. இத்தனை காலம் தாக்குப் பிடிப்பதற்கு எனது முதுமை இடம் தருமா? என்பது எதார் த்த நிலை. எனது ஆரோக்கியத்திற்கா கவும் தேக நலனுக்காகவும் மன நிறை வுடன் வாழ்த்துங்கள். சர்வ நிச்சயமாகச் சாதிப்போம். மகிழ்வோம்!
?
க்கு உட்பட்டுள்ளிகளா?
எப்பொழுதாவது ராணுவ விசாரணை
su66tfum. எம். தயாநிதி.
* உண்டு, உண்டு. அந்த இக்கட்டுக் களில் இருந்து என்னை மீட்டவை, இரண்டு. ஒன்று என்னுடைய வயது. அடுத்தது எனது பேனா.
p உங்களுடைய பிறந்தநாள் பெரு
விருப்பம் என்ன?
தெஹிவளை. க. திவ்வியநாதன்.
2 சமாதானம்! மூன்று இனங்களும் பரஸ்பரம் புரிந்து கொள்ளக் கூடிய சமதானம் சக வாழ்வு
201/4, முறி கதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103 இலக்கத்திலுள்ள U.K. அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

; ; ; ; ) is 'i'
, , , , o į | | | | | | | | | . || || II ii
)
if ( ,
s: ,

Page 40
| Սեւ ծepal ul 10
Positive \ Plates
l
॥
(JUH FIII.
(RHEITING CA || || ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| NITATION ISO TITIAN KING CARINI|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| TRANSPARENCY NIINII || ||||||||||||||||||||||||||||||||N|NA
HAPPY DIGITA
Digital Colour Lab
"பியோ
மாரா
 
 
 
 
 
 

|||||||||||||||||OOKMARKS, INTASTICKERS VET MINIS DARMENTAGS IISTM ||||||||||||||||||||||N|||||||||||||||||||||||||NORES
L CENTRE(Pvt) Ltd.
Digital offel Press
- til fodgilaffelrd af en

Page 41
リー
-Malika
GOLD COVERN
(Bangles, Chain,
Tar Tops, Guaran
"Santhosh Pla Mr. 15: F XV Vy, 229-1/14, M
t Colom
Te:O Hot Line - O
 
 

JULY 2008
EWELLERES |
s, Necklaces, ιερά Iίρης ΕίC.
二ン
YA
ജ~
Trading
iza Complex loor, a in Street, bo – 1 1- E---- 77 6561,336