கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2008.08

Page 1
50வது ஆண்டை நோக்கி.
 


Page 2
o os os o do o do ao do ao o o
21ܒ݁ܐ ܟ
|-
Vol
(Dealers in Vid
Ca. C{D's, Calcul
Fafi
| 52, Ba COC Te: 2446 FaX
■
OO 9, O D B O D B O D VOO
 
 
 

o lo o a lo o lo a lo o o a la o se
20 Cassettes, Audio 5 Sette S, ators, Cuxury 60. y Goods
nkshall Street, mbO - 11. 028, 244-1982
323.472

Page 3
(Dealers in Video Cassettes, Audio Cassettes, CD's, Calculators, fuxury el Tancy Goods
152, Bankshall Street, ColombO - 11. Tel: 2446028, 2441982 Fax. 3234.72
 

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி C ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவர்
உலகப் பாராளுமன்ற வரலாற்றிலேயே. இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திரம் தான் ஒர் இலக்கியச் சஞ்சிகை விதந்து பாராட்டப் பெற்ற பெறுமதி மிக்க சம்பவம் இடம் பெற்றுள்ளது. அங்கு பாராட்டப்பட்ட சஞ்சிகை மல்லிகை. இதனை நாடாளுமன்ற ப் பதிவேடான ஹன்ஸார்ட் (04, 7. 2001) பதிவு செய்ததுடன் எதிர்காலச் சந்ததியினருக்காக ஆவணப் படுத்தியுமுள்ளது.
50-வது ஆண்டை ስ நோக்கி.
ஆகஸ்ட்
251
ഗ്ഗഡ്രe%ڑڑک ”نیم مجر%///o ഭർgദ്ധe ال%aرملC
|மல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளிவரும் தொடர் சிற்றேடு மாத்திர மல்ல - அது ஒர் ஆரோக்கியமான இலக்கிய இயக் கமுமாகும் . 201/4, Sri Kathiresan St, Colombo - 13. Tel: 2320721 mallikaiJeeva@yahoo.com
ଶ୍ନ-Jq ର୫Jସ୍ତା গুঞ্জাঁতে...) புரிந்து கொள்ளுங்கள்
சிறு சஞ்சிகைகளுக்குள்ள இடர்பாடே
இதுதான்.
சந்தாப் பணத்தின் வரவை நம்பித்தான் சிற்றேடுகள் இதுவரை காலமும் உயிர் பிழைத்து வந்துள்ளன என்ற அடிப்படை உண்மை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், அடிப்படை உண்மை என்ன வென்றால், சந்தாக்களின் வரவினால் மாத் திரம் சிறு சஞ்சிகை ஒன்று தொடர்ந்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்க இயலாது.
அப்படியென்றால், தொடர்ந்து இத்தனை ஆண்டு காலங்களாக எப்படி நீங்கள் சஞ் சிகை நடத்தி வருகின்றீர்கள்? என நீங்கள் கேட்பது புரிகின்றது.
ஆசிரியரின் அயரா உழைப்பின் மீதும் அர்ப்பணிப்புப் பணியின் மீதும் பேரபிமானம் கொண்ட நல்லவர்கள் இடையிடையே தந் துதவும் அன்பளிப்புகள் தான் இந்தத் தொடர் வரவுக்குக் காரணம் என்பதை விளங்கிக் கொண்டவர்கள் புரிந்து கொள்வார்கள்.
அஞ்சல் செலவு கூடுதல், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற உடனடிக் கார ணங்களால் சந்தாவை ஒழுங்காகச் செலுத் தாதவர்களுக்கு முன் அறிவித்தல் இல்லா மல் பிரதிகளை அனுப்புவதை நிறுத்திக் கொள்ளுகின்றோம்- இது சத்திய உண்மை.
உங்கள் மீது நாம் வைத்துள்ள ஆழ்ந்த நம்பிக்கையைப் பொய்ப்பித்து விட மாட் டீர்கள் என முழுமையாக நம்புகின்றோம். இல்லாது போனால், புதிய ஆதரவாளர் களை நாம் தேடிக் கொள்வோம்.
- ஆசிரியர்

Page 4
بمها
22.
23.
24.
25. 26. 27.
28.
29.
30. 31. 32. 33. 34. 35. 36. 37.
ఫ్రీ மல்லிகைப்பந்தல் வெளியிட்டுள்ள நூல்கள்
ஃந்தல்
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு (இரண்டாம் பதிப்பு) எழுதப்பட்ட அத்தியாயங்கள் : சாந்தன் V கார்ட்டுன் ஒவிய உலகில் நான் சிரித்திரன் சுந்தர் மண்ணின் மலர்கள் (13 யாழ் - பல்கலைக்கழக மாணவ - மாணவியரது சிறுகதைகள்) கிழக்கிலங்கைக் கிராமியம் (கட்டுரை) ரமீஸ் அப்துல்லாஹற் முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் : டொமினிக் ஜிவா(பிரயாணக் கட்டுரை) முனியப்பதாசன் கதைகள் (சிறுகதை) முனியப்பதாசன் ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் குரல் டொமினிக் ஜீவா இப்படியும் ஒருவன் (சிறுகதை) மா. பாலசிங்கம் அட்டைப் படங்கள்
சேலை (சிறுகதை) முல்லையூரான் மல்லிகை சிறுகதைகள் : செங்கை ஆழியான் (முதலாம் தொகுதி)
மல்லிகைச் சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி) செங்கை ஆழியான்
நிலக்கிளி (நாவல்) : பாலமனோகரன் அநுபவ முத்திரைகள் : டொமினிக் ஜீவா நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள் டொமினிக் ஜீவா கருத்துக் கோவை (கட்டுரை) பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் (கட்டுரை) முன்னுரைகள் சில பதிப்புரைகள் : டொமினிக் ஜீவா தரை மீன்கள் (சிறுகதை) ச. முருகானந்தன் கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் (சிறுகதைகள்): செங்கை ஆழியான் நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதை) ப.ஆப்டீன் அப்புறமென்ன (கவிதை) குறிஞ்சி இளந்தென்றல் அப்பா (வரலாற்று நூல்) : தில்லை நடராஜா ஒரு டாக்டரின் டயரியில் இருந்து. டாக்டர் எம். கே. முருகானந்தன் சிங்களச் சிறுகதைகள் - 25 : தொகுத்தவர் செங்கை ஆழியான் டொமினிக் ஜீவா சிறுகதைகள் - 50 இரண்டாம் பதிப்பு Undrawn Portrait for Unwritten Poetry - டொமினிக் ஜீவா சுயவரலாறு (ஆங்கிலம்) தலைப் பூக்கள் (மல்லிகைத் தலையங்கள்) அக்சுத்தாளின் ஊடாக ஓர் அநுபவப் பயணம் மல்லிகை ஜீவா மனப் பதிவுகள் - திக்குவல்லை கமால் மல்லிகை முகங்கள் : டொமினிக் ஜீவா பத்ரே பிரசூத்திய - சிங்களச் சிறுகதைகள் - டொமினிக் ஜீவா எங்கள் நினைவுகளில் கைலாசபதி : தொகுத்தவர் - டொமினிக் ஜீவா காற்றைக் கானமாக்கிய புல்லாங்குழல் (இணுவையூர் சக்திதாசன்) முன் முகங்கள் (53 மல்லிகை அட்டைப்படக் குறிப்புகள்) மல்லிகை ஜீவா (மணிவிழா மலர் தொகுப்பு)
250/= 140/- 175/-
10/- 100/-
10/- 150/- 135/- 150/= 175/ 150/= 275/- 350/= 140/= 180/= 150/-
80/= 100/- 120/-
150/-
175/- 150/ 120/a: 120/= 140/= 150/= 350/-
200/- 120/- 200/s 150/- 150/- 120/- 90/- یی/150 200/- 150/=

‘சார்க் மகாநாடு நமது தேசத்தின் தலைநகரில் நடைபெறப் போகின்றது என்ற செய்தி மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
இலங்கை என்ற இந்தச் சின்னஞ்சிறிய நாட்டின் பெயர் உலகப் பரப்பெங்கும் பேசப்படு வது இந்த மகாநாட்டின் விளைவுகளில் ஆரோக்கியமான ஓர் அம்சமாகும்.
அதே சமயம் சர்வதேசப் புகழ் வாய்ந்த இம் மகாநாடு நடைபெறக் கூடிய சூழ்நிலையில் சூழ நடந்தேறி வரும் சம்பவங்கள் பாமர மக்களைப் பெரிதும் பாதிப்பவையாக உள்ளன.
கொம்பனித் தெரு வட்டாரத்திலுள்ள மக்களைக் காலங்காலமாக அவர்கள் வசித்து வந்துள்ள சிறுகுடிசைகளிலிருந்து அப்புறப்படுத்தியது, பாமர மக்களைத் திகிலுறச் செய்துள்ளது.
இடம் பறிக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு, வாழுவதற்கேற்ற மாற்று வழி செய்து கொடுக்கப்பட வேண்டியது, அதி முக்கியமானதொன்றாகும்.
அத்துடன், கொழும்பு வாழ் சாதாரண மக்கள் இந்த இடைக்காலத்தில் என்ன நடக் குமோ?- ஏது நடக்குமோ? எனப் பயப் பிராந்தியடைந்துள்ளனர்.
இந்த மனப் பயத்தை மக்களிடமிருந்து நீக்க வேண்டியது அரசாங்கத்தின் மிகப் பெரிய பொறுப்பாகும்.
நமக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். இனச் சச்சரவுகள் தென்படலாம். மொழி, பிரதேச வாதங்கள் தலைதூக்கிக் கூத்தாடலாம்.
ஆனால், உலகமே திரும்பி, நமது தேசத்தின் தலைநகரில் நடைபெறப் போகும் இந்தப் பிரசித்தி பெற்ற மகாநாடு வெற்றி பெற வேண்டியது மிகமிக முக்கியமாகும்.
இம் மகாநாடு வெற்றிகரமாக நடந்தேறப் பொறுப்புள்ளவர்கள் பொறுப்புடன் செயல்படுவதே எதிர்காலத் தலைமுறைகளுக்குச் செய்யும் பெரும் பரோபகாரமாகும்.

Page 5
2L2LuuL12
6ébé5 UTeo 331
- அத்தனிஜாே
“புழுதிப் படுக்கையில்
புதைந்த என் மக்களை போற்றும் இரங்கற் புகழ் மொழி இல்லை பழுதிலா அவர்களுக்கோர் கல்லறை இல்லை பிரிந்தவர் நினைவு நாள் பகருவாரில்லை."
தேயிலைத் தோட்டதிலே’ என்ற ஆங்கிலக் கவிதையை. மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளையின் இதய தாகத்தை வெளிப்படுத்தும் வண்ணம் தமிழ் வடிவம் தந்தவர் 'சக்தீ பால ஐயா. ஒரு கவிஞரின் உந்நத ஆங்கிலப் படைப்பை மிகச் சிறப்பாக உயிர்த்துடிப்புடன் தமிழ் வடிவம் தந்தவர், சக்தீ.
இன்று நம்மோடு எண்பத்து மூன்று வயதைத் தாண்டிய இளைஞராக, கலை இலக்கிய உலகில் உலா வருகிறார், இவர்.
கவிஞர் சக்தி 1925 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் திகதி தலவாக்கலையின் அருகிலுள்ள லிண்டுலவில் பிறந்தவர். இலங்கை அரசின் நுண்கலைக் கல்லூரியில் கலையாசிரியாராகப் பயிற்சி பெற்று, ஆங்கில விரிவுரையாளராகவும், கலை ஆசிரியராகவும் அரசாங்கக் கலைக் கல்லூரியில் பணிபுரிந்துள்ளார். மலைநாடு தந்த
மல்லிகை ஆகஸ்ட் 2008 率 4.

தலைசிறந்த ஓவியக் கவிஞர் என்று இவரை கலா விமர்சகர் ஒருவர் குறி ப்பிட்டுள்ளார். உயிரோவியம் தீட்டுவ தில் வல்லவரான இவர், இன்றும் ஒவிய ராகவும், கவிஞராகவும் திகழ்கிறார். தற்போது, விளம்பர ஒவியராக விளங்கும் இவர், ஒய்வு கிடைக்கும் போதெல்லாம் எழுதுவதில் ஆர்வமும், அக்கறையும் காட்டி வருகிறார்.
1949 ஆம் ஆண்டு முதல் இவரது கவிதைகள் தினகரன், வீரகேசரி, சுதந்திரன் பின்னர் ஈழநாடு, தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. கவிதைகள் மாத்திரமின்றி, கட்டுரைகள், ஓவியக் கலைஞர்கள் பற்றிய வரலாறுகளையும் எழுதியுள் 6TIT.
கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக எழுதி வரும் எழுத்துத்துறை யிலும், கலைத்துறையிலும் சுதந்திர மாக ஈடுபட்டுள்ள கவிஞர் சக்தீ, 1956 இல் தமிழ் ஒலி என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும், வீரகேசரியில் துணை ஆசிரியராகவும், பின்னர் வளர்ச்சி என்ற பத்திரிகையில் ஆசிரியராக இருந்து எழுதிய ஆசிரிய தலையங் கங்களைத் தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'திராவிட நாடு மறுபிரசுரஞ் செய்துள்ளது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாவலி இதழின் ஆசிரியரா கவும் பணிபுரிந்துள்ளார். தமிழ்நாட்டில்
வெளிவந்த கல்கி, கல்கண்டு ஆகிய சஞ்சிகைகளில் இவரது எழுத்தோவி யங்கள் இடம் பெற்றுள்ளன.
சுதந்திர மனிதராகக் கொழும்பில் சுயநம்பிக்கையுடன் ஒவியத்துறையை நம்பி வாழ்ந்த மானுடம் பாடும் வானம் பாடியை, பஸ் ஒன்றினால் 1981 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விபத்துக்கு ள்ளாகி, இவரின் இரண்டு கால்கள் மீது ஏறி ஒடிய சக்கரங்களால் ஒரு காலில் எலும்பு முறிந்து, மரணத்துடன் பெரும் போராட்டம் நடத்திய கவிஞர் சக்தி, தனது தூய்மையான நம்பிக்கையாலும், துணிவாலும் குணமடைந்து தன்னிலை தவறாது, ஊன்று கோலுடன் உயிரோவி யமாக உலா வருகின்றார். கடந்த அரை நூற்றாண்டாகக் கவிஞர் சக்தி, தான் சேகரித்து வைத்திருந்த விலை மதிக்க முடியாத நூல்களை, தனது எழுத் தோவியங்களை, ஆராய்ச்சிக் கட்டுரை களை, விலை மதிப்பற்ற ஒவியங்களை அவரது அனைத்து உடைமைகள் அனைத்தும் 1983 ஆம் ஆண்டு இடம் பெற்ற கறுப்பு ஜூலையில் அக்கினித் திருவிளையாடலின் போது, செந்தீ நாக்குகளுக்கு இரையாகிவிட்டன. இத்தகைய பேரிழப்புக்கு உள்ளாகியும், மனந்தளராமல் தனது பணியினைத் தொடர்கிறார், இவர்
கவிஞர் சக்தீ பால ஐயாவுடன் பேசிக் கொண்டிருப்பதே ஒரு சுகானுபவமாகும்.
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 5

Page 6
அவரோடு பேசிக் கொண்டிருந்து விட்டுத் திரும்பினால், ஒரு நூலகத்தில் நுழை ந்து திரும்பிய அநுபவமே ஏற்படும்.
பத்து வயதில் கவிபாடத் தொடங்கி யுள்ளார். இவரது கவிதைகள் முதன் முதலில் கதிர்காமக் கந்தன மீது பாடப்பட்டவையாகும். இவரது பாடல் களை இவரது தாய்மாமனாரான இராமையா என்பவர் திருத்தி, ஊக்க மளித்தார். இராமையா தோட்ட உத்தி யோகத்தராகப் பணி புரிந்தாலும், தமிழ் வேதாந்த நூல்களில் அறிவுமிக்கவராக இருந்தார். இராமலிங்க வள்ளலார் மீது பற்றுமிக்கவராக இவர் விளங்கினார். பிள்ளைப் பருவத்தில் சக்தி எழுதிய கவிதைகளின் இலக்கணப் பிழைக ளைச் சுட்டிக்காட்டி தொடர்ந்து எழுதும் படி தூண்டியுள்ளார். அவர்களின் இல்லத்துக்கு இந்தியாவி லிருந்து வருகை தரும் புலவர்கள், அறிஞர்கள் யாத்திரை மார்க்கத்தில் தங்கி சக்தீ பால ஐயாவின் கவிதை
இராமையா
களைப் படித்துப் பார்த்து ஊக்கமளித் துள்ளனர். இவர்களின் தொடர்பு இவரை வேதாந்தத் தத்துவங்களைக் கற்கும் ஆர்வத்தை ஊட்டியது. இத னால், கவிதா சக்தியை வளர்த்துக் கொண்டு உலகத் தத்துவ ஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஆசி யைப் பெற்றுள்ளார். ஆங்கிலத்திலும், தமிழிலும் புலமை மிக்க சக்தீபால ஐயா தாகூரின் கீதாஞ்சலியைக் கவிதாஞ்
சலி என்ற மகுடத்தில் தமிழ் வடிவம் கொடுத்துள்ளார்.
இயற்கையாகவே கவித்துவமிக்க இவரைப் பற்றி தலைசிறந்த பத்திரிகை யாளரான எஸ். டி. சிவநாயகம் அவர்கள் 'கவிஞரின் வீர உணர்ச்சி மிக்கக் கவிதைகள் சீறிப்பாயும் தீப்பொறிக் கற்றை போன்றது" என்கிறார். மேலும், அவர் கவிஞரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, “கவிஞரின் கவிதா வேகத்தை யும், அதற்கேற்ப அவர் பெயர் விளக்கம் பெறுவதையும் சிறப்பாகக் குறிப்பிடு கிறார்.” கவிஞர் பாலையாவுக்கு முன் னால் இருக்கும் வெறும் சொல் சக்தீ அல்ல, அது 'சக்தீ கடைசி எழுத்து தீயன்னா இதன் பொருள் என்ன?
ஆங்கிலத்தில் இரண்டு சொற்கள் உண்டு. ஒன்று பவர் (Power) மற்றது, பெயர் ஃபயர் (Fire). பவர் என்றால் சக்தீ, ஃபயர் என்றால் தீ. பவரையும், ஃபயரை யும் சேர்த்து ஒரே சொல் ஆக்கியிரு க்கிறார் இந்தக் கவிஞர். அதுதான் சக்தி என்ற கவிஞர்.
'மனிதன் என்னே அற்புதமானவன்' என்று ரஷ்ய இலக்கிய மேதை மாக்ஸிம் கோர்க்கி கூறினார். அந்த அற்புத மனிதர்களில், ஒருவராக மலைநாட்டு மாணிக்கமாகக் கவிஞர் சக்தி பால ஐயா நம்மோடு வாழ்கிறார். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் நாமும் வாழ்ந்தோம் எனப் பெருமைப்படுவோம்.
மல்லிகை ஆகஸ்ட் 2008 霹 6

ஆராய்வுக் கட்டுரை:
சைவமும், சிகப்பு அரிசியும்வருங்கால அறைகவல்கள்
ஆங்கில மொழியில் :
நித்தி கனகரத்தினம் (விரிவுரையாளர் - மருத்துவியல், மருத்துவ விஞ்ஞான கல்லூரி, விக்ரோறியா பல்கலைக்கழகம்,அவுஸ்திரேலியா)
தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
IITBib -1
அரிசி உணவானது இந்தியாவில் ஆரம்பமாகி இந்த உலகின் அரைவாசி மக்களுக்கு பிரதான உணவுத் தானியமாக உள்ளது. அரிசி என்ற துாய தமிழ்ச்சொல் 'றைஸ் (Rice) ( அரிசி - றிசீ. றைஸ் என்று ஆங்கிலமயப்படுத்தப்பட்டு) 'ஒரிசா சரிவ’ (Oriza Sativa) என மேற்குலக விஞ்ஞானிகள் தாவரப்பெயர் சூட்டியுள்ளார்கள்.
பல்லாயிரக்கணக்கான வருடங்களாக சிகப்பரிசிப் பாவனை தென்னிந்திய மக்களால் கைக்கொள்ளப்பட்டு வந்துள்ளது. நெல்லை இயந்திரத்தில் இட்டு குற்றிப்பின் மெருகூட்டி எடுப்பதனால் கிடைக்கும் மினுக்கப்பட்ட வெள்ளை அரிசியானது கடந்த நூற்றாண்டில் தான் அறிமுகமானது என்பதால் சிகப்பு அரிசியைப் பற்றி (Red Rice) அழுத்திக்கூறுவது இச்சந்தர்ப்பத்தில் பொருத்தமானது என்று நான் குறிப்பிட விரும்புகின்றேன். அரிசியை மினுக்கும் முறையானது சேமித்து வைக்கும் காலத்தை நீடிக்க உதவியபோதிலும் உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமான 'பைற்றோகெமிக்கல்ஸ்' (phytochemicals) எனப்படும் தாவர இரசாயனங்களாகிய தவிடும் (bran) அதனை அண்டிய அடுக்குகளும் அரிசியிலிருந்து முற்றாக அகற்றப்படுகின்றன.
எப்படியிருந்தபோதிலும் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான தவிடு இருக்கும் வண்ணம் உரல், உலக்கையின் துணையோடு அரிசியை தென்னிந்திய மக்கள் பக்குவமாகக் கையால் குற்றினார்கள். ஏனைய தானிய வகைகளிலும் பார்க்க பரம்பரை பரம்பரையாக சிகப்பு அரிசியில் உடலாரோக்கியத்துக்கான இயற்பண்புகள் உள்ளன என்று எமது முன்னோர்கள் பட்டுணர்பகுத்தறிவினால் தெளிவாக அடையாளம் கண்டுள்ளனனர். மத்திய கிழக்கிலிருந்து இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்த வேதம்
மல்லிகை ஆகஸ்ட் 2008 ஜ் 7

Page 7
சார்ந்த மக்களால் அறிமுகப்படுத்தப்பட்ட தானியங்களோடு ஒப்பிடும்பொழுது அரிசித் தவிட்டில் முன்தெரிந்திராத சில நன்மைகள் உண்டென்பதை அனுமானித்துள்ளனர். முன்தெரியாத அந்த நன்மைகள் அரிசித் தவிட்டில் 'பைட்டோகெமிக்கல்ஸ்' (phyto chemicals) என அடையாளம் காணப்பட்டு ள்ளது. அவை நோய் எதிர்ப்பு , பாதுகாப்பு சக்தியுடன் குணப்படுத்தும்
இயல்பு கொண்டதென இன்று நிரூபிக்கப்
பட்டுள்ளன.
அறிமுகப்படுத்தப்பட்ட தானிய வகை களும் அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகளும் உடலாரோக்கியத்து க்கு தீங்கு விளைவிப்பதாக நிரூபிக்கப்பட்ட தால் தென்னிந்திய மக்கள் தங்கள் பாவ னைக்கு சிவப்பு அரிசியையே பிரதான மாகக் கைக்கொண்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். 'குளுரன் (glutem) என்ற ஊட்டச்சத்துதான் குழந் தைகளுக்கும், வயதானவர்களுக்கும் 'சீலியக் ஸ்புறு' (Celiac Sprue) எனப்படும் வியாதி கோதுமை மாவினால் ஏற்படுகின் றது என முன்னர் தெரியாதவை என்று கருதப்பட்டு இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனுகூலமாகும். எனவே, அரிசி உடலா ரோக்கியத்துக்கு மூலமான பொருள் என்ற தகுதியை தக்கவைத்துள்ளது.
பூமியில் விளையும் அரிசி தவிர்ந்த அனைத்தும் தீங்கானவை என்று இஸ்லா மிய ஹடிவழில் கூறப்பட்டுள்ள வாக்கியம் இங்கு பொருத்தமானதாகும். நோய் குணமா க்கும் இயல்புகளை சிகப்பு அரிசி கொண் டுள்ளதும் மொறக்கோ நாட்டவரது பிரதான உணவாக மாறியதை சுட்டிக் காட்டுகின்றது (இஸ்லாமியரால் மொறக்கோ நாட்டுக்கு 8ம் நூற்றாண்டுகளில் அரிசி அறிமுகப் படுத்தப்பட்டது).
உடல்
தென்னிந்திய சைவ மக்கள் உடலா ரோக்கிய காரணங்களுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தானியங்களை ஒதுக்கி சிகப்பு அரிசியினால் கிடைக்கும் நன்மைகளைத் தொடர்ந்து அனுபவித் ததையும் அதிலிருந்து பல்வகையான பலக்ாரங்களைத் தயாரித்தனர் என்று தெளிவாகக் காணக்கூடியதாயிருக்கின்றது. இன்றுவரை சைவ ஆலயங்களிலும் சமயா சார விழாக்களிலும் அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் பலகாரங்கள் கொண்டாட்ட உணவாகக் கருதப்படுகின்றன. ஒவ்வொரு சைவருக்கும் அரிசிப் பாவனை பற்றிய அறிவை ஊட்டவேண்டும் என்ற நோக்க த்துடன் பக்தி கீதங்களில் அரிசியுணவின் மேன்மைபற்றி தெளிவாகப் பாடப்பட்டுள் ளது. அரிசியுணவைப் பாவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வண்ணம் வழிபாட் டிடங்களிலும் சமயாசாரக் கொண்டாட்டங்க ளிலும் பாடப்படுகின்றன.
'கைத்தலம் நிறை கனி, அப்பமொடு அவல் பொரி' என்ற திருப்புகழ் பாடலின் ஒரு வரியை நான் எடுத்துக்காட்டாக சமர்ப்பிக்கின்றேன். இறிைவழிபாட்டின்போது ஆகுதியாகச் படைக்கப்படும் அப்பம், அவல், பொரி ஆகிய தீன்பண்டங்களின் மகிமையை விளக்கும் தோரணையில் மேற்குறித்த பாடல் வரி அமைந்துள்ளது. இந்த வகை உணவுகளோடு பிரசாதங் களாக அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகளான பொங்கல், மோதகம், கொழுக்கட்டை, கூழ, கழி, பிட்டு, இடியப்பம் போன்றவைகளும் மக்களுக்கு பழக்கப் படுத்தப்படுகின்றன.
கலாச்சாரம் செழிக்கும்போது, கொண் டாட்டங்களும் விழாக்களும் அரிசியை மூலக்கூறாகக் கொண்ட பண் ங்களின் பாவனையும் அதிகரித்துள்ளது. இந்தப் பண்டங்கள் நாளடைவில் அன்றா வாழ்
மல்லிகை ஆகஸ்ட் 2008 密 8

வில் உணவுப் பதார்த்தங்களாக மாறின. மற்றைய கலாசார உணவுகளின் கடுந் தாக்குதலிருந்த போதிலும், சைவமானது எதிர்நீச்சலடித்து பல கோடிக்கணக்கான மக்களை சிகப்பு அரிசிப் பாவனையில் இன்றும் தக்கவைத்துள்ளது.
சைவசமயமானது அரிசியை பிரதான உணவாகக் கைக்கொண்டது மட்டுமல்ல சமயத்தையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் பின்னிப் பிணைத்து ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாத வண்ணம் மும்மூர்த்தமாக அமைத்தது. இந்த மும்மூர்த்தத்துக்கு விழாக்கள், கொண்டாட்டங்கள், வழிபாடுகள் பொதுவான ஒரு மேடையாகி ஒரே வகை யான உணவை உட்கொள்வதனால் சமு தாய ஐக்கியம் பேணப்படும் நிலை இன்று யதார்த்தமாகியுள்ளது. சித்திரைக் கஞ்சி, பொங்கல், வழிபாடுகள், பூப்புனித நீராட்டு, பல்லுக் கொழுக்கட்டை போன்ற கலாச்சார நிகழ்வுகள் சைவ சமய மக்கள் எல்லோ ராலும் உலகளாவிய ரீதியில் சிகப்பு அரி சியை மையமாகக் கொண்ட பலகார உண வுகளோடு இனிப்புப் பண்டங்களுடன் பரி மாறப்படுகின்றன.
கடந்த நூற்றாண்டு முதலாக மேற்கத் தைய செல்வாக்கினால் பல மக்கள் வெள்ளை அரிசிக்கு முக்கியத்துவம் கொடு த்ததன் விளைவாக எதிர்பாராத வகை யில் தங்கள் உடலாரோக்கியத்தை இழந்
தார்கள். முன்னைய காலத்தில் பாழ்படுத்
திய நோய்களை இன்றைய உலகம் சந்தி க்கின்றது. இயந்திர தொழில் சார்ந்த நாடு களில் வாழும் மக்களிடையே மூட்டுவீக்கம் (arthritis), (Upgij B(656ub (Alzheimer's disease), S(55u (35|Tuj956fi (cardio vascular diseases), LBaj(85. Tui (Cancer), (g)6067.9335 Tu Bisab6ft (Kidney Stones), (Éjflo) (Diabetes) uJT6)|Lb g5LLÜLJt.L. 6|f flufe) (Polished white rice) 11
இரசாயன ஆக்கக்கூறுகளின் (Chemical components) பற்றாக்குறையினால் ஏற்படு வதாகும். சிகப்பு அரிசி உடல் ஆரோகக் யத்துக்கு வழிவகுப்பது என்ற விழிப்புணர்வு விஞ்ஞானிகளிடம் வளர்கின்றது.
எமது முன்னோர்களால் கூறப்பட்டதற் கொப்ப உடல் ஆரோக்கியத்தக்கு சிகப்பு அரிசியினது தாக்கங்கள் பற்றிய ஆரா ய்ச்சிகள் அரிசி பாவனையிலுள்ள நாடு களில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. உதார ணமாக, தானியங்களில் அரிசி மட்டுமே கிரந்தித் தன்மையைக் கொடுக்காத ஒன் றாகும். அரிசியில் 'சீலியக் நோய்’ (Celiac disease) தோற்றுவிக்கும் 'குளுரொன்’ (Gluten) இல்லாமலிருப்பதே இதற்குக் காரணியாகும். சிகப்பு அரிசியில் நோய் எதிர்ப்பு சக்தியும், நோய்களைக் குணமா க்கும் இயல்புடன், ஆயுளை நீடிக்க வல்ல அதிசய இரசாயனங்கள் காணப்படுவதாக விஞ்ஞான ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. சிகப்பு அரிசியின் ஆக்கக்கூறுகளிலுள்ள நன்மைகளை விஞ்ஞான உலகம் பகிரங்கப் படுத்தும் அதே நேரத்தில் , அளவுக்கதி கமான மாமிச உணவுவகைகளும், மெரு கூட்டப்பட்ட உணவுகளும் உடலாரோக்கி யத்துக்கு கேடு விளைவிப்பவை என்றும் பழி சுமத்துகின்றது.
விவசாய விஸ்தரிப்பினால் உணவுகள் உலகமயமாக்கப்படுவதாலும் உணவு விரு ப்பத்தேர்வு விடயத்தில் தாக்கத்தை ஏற்படு த்துவதாலும் ஒரு பரம்பரையே ஆரோக்கிய மற்ற சூழலில் சிக்கியுள்ளது. இருப்பினும் சைவ உணவுகள் இன்றும்கூட பலரால் உட்கொள்ளப்படுவதுடன் சைவ சாப்பாட்டு க்கு பிற சாகித்தியத்தினரும் மாறி வருகின் றனர்.
நாங்கள் எங்கள் முன்னோர் காட்டிய தீர்க்கதரிசமான பாதை வழியே ஆராய்ந்து அறிந்த உண்மைப்படி சிகப்பு அரிசிப்
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 9

Page 8
பாவனையை எங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டவேண்டும். உலகில் ஏற்படவிருக்கும் ஆரோக்கிய அழிவிலிருந்து சைவர்களாகிய நாம் எமது சிந்தனைகளை மீளமைத்து எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்று வோமா? இன்றைய கால செயற்கைச சேர்ம மான மருந்து வகைகளுக்கு எதிராக சிகப்பரிசியின் துணைகொண்டு ஆக்கப்படும் உணவுப் பதார்த்தங்களை உட்கொண்டு பாதுகாப்பான ஆரோக்கியமான உணவுக் கலாச்சாரத்திற்கான வழியை நாளைய சந்ததியினருக்கு காண்பிப்போமா?
இனி நாம் சிகப்பு அரிசி உணவுப் பதார்த்தங்களில் உள்ள இரசாயன மற்றும் மருத்துவ குணங்களை அல்லது 'பைற்றோ G&Ls) disab6)6so' (phytochemicals) Luisulub, நோய் குணப்படுத்தும் இயல்புகள் பற்றியும் LITÚGSLUT DIT?
(பாகம் 2 - அடுத்த இதழில் தொடரும்)
References:
1. Boskou Dimitrios, and Elmafda, Ibrahim, (1999) Frying of food: Oxidation, Nutrient and Nonnutrient Antioxidants, Biologi cally Active Compounds and High Temperatures, Technomic Publishing Company, Lancaster, 2. Dr. Jariwalla, (1994) California Institute for Medical research, San Jose, Jim Pratley, (1994) Principles of Field Crops, Third Edition, Oxford University Press, (p. 120) 4. Linder. Maria . C (1991) Nutritional Biochemistry and Metabolism with Clinical
3
Applications 2" Edition, Appleton and Lange, 5. Mani U.V., et al; (1977) Gly cemic and Lipemic response to Various regional meals and South Indian Snacks, Int. J. Diab. Dev, countries, Vol. 17. 6. McGee, Harold. (1984) On Food and Cooking, Harper Collins publisher, p234. 7. NIV Study Bible, (1985) New International Version, The - Zondervan Corporation, 8. Stipanuk H. Martha, (2000) Biochemical and physiological aspects of Human Nutrition, W.B.Saunders Company, 9. The prophetic medicine, (1997) Ibn Qayy Al-Jawaziyyaim, Darul Ishaat publication, p344 10. Thirupugal-Kaithalam Nirai
Kani. Thevara Thiratu.
By: Niththi Kanagaratnam, BSc (Agriculture), MSc (Plant Pathology, Diploma Fruit Preservation, Post Graduate Diploma Food Science and Technology. Currently a Lecturer / Phytopharmaceutics at Victoria University, Australia and formerly Head
Department of Agronomy and Animal
Science, Eastern University of Sri Lanka).
- Melbourne. Translated in Tamil by: Kandiah Kumarasamy (Nalaikumaran) - Melbourne
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 10

LDத்திய கிழக்கில் மழையென்றாலே மவுசுதான். பூமியில் மழை வீழ்ச்சி குறைவான பிரதேசங்களாக பாலைநிலப் பரப்புக்கள் கணிக்கப்படுகின்றன. அந்தவகையில், அரேபிய தீபகற்பம் எங்குமே மிகக் குறைவான மழை வீழ்ச்சியே பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டாரைப் பொறுத்தமட்டில், வருடத்தில் சராசரியாக இரண்டு தடவைகள் மாத்திரமே மழை வீழ்ச்சி பெரும்பாலும் கிடைக்கும். எப்போதாவது சில வருடங்களில் மாத்திரம் இரண்டுக்கு மேற்பட்ட தடவைகள் மழைவீழ்ச்சி கிடைத்திருப்பதாக அங்குள்ளவர்களின் வாக்கு மூலத்தின் படி அறியக் கிடைக்கின்றது.
ஒரு ஞாயிறு காலை. அரச சார்பற்ற தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்யும் எனது நண்பரான மவ்லவி முனாப் அவர்களின் தொலைபேசி அழைப்பு. அன்று பின்நேரம் Goerge town University 36) Dr. SlsortsSlsöT programme 966TD) g(bjugs.Tas64 b, 915ibes போவதற்கு வருமாறும் அழைப்பு விடுத்தார். அன்று மாலையில் வேறேதும் வேலைகள் இல்லாமையினாலும், Dr. பிலால் மிகச் சிறந்த காத்திரமான பேச்சாளர் என்பதினாலும்,
கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த எண்ணி, வருவதாக ஒத்துக் கொண்டேன்.
பின்நேரம் 4.00 மணிக்கு programme ஆரம்பம், நாங்கள் சுமார் 3.30 மணிக்கே அங்கே சென்றுவிட்டோம். அன்றைய தினம் காலையிலிருந்தே வானம் மப்பும் மந்தாரமாகவும் காணப்பட்டது. மற்றைய நாட்களில் வெயிலின் அகோரமும், சூடும் தாங்கொண்ணாதவாறு இருக்கும். ஆனால், இன்று வழமைக்கு மாறாக, அந்தக் கடுமையான வெயில் இல்லை, அனல் காற்று இல்லை, தீப்பொறி பறக்கும் உஷ்ணம் இல்லை. கால நிலை மிகவும் ரம்மியமாக இருந்தது. குளிர்காற்று சில்லென்று உடலை தழுவி உற்சாகத்தை அள்ளித் தந்துவிட்டு, அப்பால் சென்றது. சூழல் எங்கும் குளுமை படர்ந்திருந்தது. மாரிகாலத்தில் மழைமேகம் வானத்தை மூடிக் கொண்டு மந்தாரமான நிலையிலே காணப்படுமே, அந்த மாரிகாலத்து மந்தாரத்தை அன்றைய நாள் கட்டாரில் கண்டு வியந்தேன். நான் மட்டுமல்ல, புதிதாக அங்கே வேலைக்குச் சென்ற ஒவ்வொரு வெளிநாட்டவனும் வியந்துதான் இருப்பான், அதிகாலை தொடக்கம் இந்த அபரிமிதமான மாற்றம் நிகழ்ந்து கொண்டு தான் இருந்தது. சுமார் பின்னேரம் 4.30 மணி இருக்கும் Dr. பிலாலின் programme ஆரம்பித்து அரை மணிநேரத்தில் மெல்லிய நீர்த்துளிகள் நாம் இருந்த அறையின் வெளிப்புறக் கண்ணாடியில் விழுவது தெரிந்தது. தொடர்ந்து, இடியும் மின்னலும், ஆம், பெரும் மழை பெய்யத் துவங்கியது. மழையின் இரைச்சலும் சோ. வென்ற அந்த இடைவிடாத ஒசையும், அந்த programme க்கு வந்தவர்களை மழையின் பால் கவனத்தை ஒடச் செய்ததே தவிர, programme இல் ஈடுபாட்டுடன் இருக்க முடியவில்லை. சுமார் 5.00 மணிக்கு programme
மல்லிகை ஆகஸ்ட் 2008 ஜ் 11

Page 9
(ypLqbg (3 LuT 60T g5. programme és S5 வந்திருந்தவர்களில் அதிகமானவர்கள் அதே University இன் மாணவர்கள் மட்டுமன்றி, கட்டாரிகள். எனவே, இவ்வா றான மழையானது அவர்களுக்கு அதிசய மாகும். நாங்கள் programme நடைபெற்ற அறையை விட்டு வெளியே வந்து கட்டிடத் தின் தாழ்வாரத்தின் கீழ் நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். மழை இடைவிடாது கொட்டிக் கொண்டே இருந்தது. அந்தக் கட்டாரிய மாணவர்கள் ஒருவர் பின் ஒரு வராக மழையில் நனைந்து விளையாட ஆரம்பித்து விட்டார்கள். ஆங்காங்கே தேங்கி நிற்கும் நீரை ஒருவர் மீது ஒருவர் வீசியும், நீரில் ஒருவரை மற்றவர் வீழ்த்தி யும், கத்தியும், கூச்சலிட்டும் அந்த மழை யில் சந்தோஷமாக ஆசைதீர நனைந்தார் கள். (தால் யா அஹி) 'நீயும் வா சகோத ரனே." என்று எம்மையும் கையைப் பிடி த்து இழுத்தார்கள். நானும் நண்பர் முனாப் மவ்லவியும் மெல்லப் பின்வாங்கிக் கொள்ள, வேறு சிலர் மாட்டிக் கொண்டார்கள். அன் றைய மழை விட 8.00 மணியாகியது. மழை விடும் மட்டுக்கும், அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் மழையில் ஆனந்தக் கூத்தாடி 6OTITfrassif.
முன்னர் சின்னப் பருவத்தின் மழையை நான் மிகவும் ரசிப்பதுண்டு. இப்போதும் தான். ஆனால், சில வேளைகளில் மழை மீது வெறுப்பும் வருவதுண்டு. சின்னப் பருவத்தில் மழை பெய்யும் காலத்தில் கொப் பித் தாள்களில் தோணி செய்து மழை நீரில் விட்டு விளையாடுவதுண்டு. கைகளால் அணைகட்டி மழை நீரைச் சேகரித்து, குளம், ஆறு என்று கட்டி விளையாடிய ஞாபகம் இன்றும் எனக்குள் பதியமாக, பத்திரமாக இருக்கின்றது. உண்மையி லேயே, மழையில் நனைவதென்றால் என க்கு ஆனந்தம். ஆனால், மழையில் நனை
ந்தால் காய்ச்சல், தடிமன் என்று அநேக மாய் நோய் என்னைத் தொற்றிக் கொள்வ தால், உம்மா என்னை மழையில் நனைய விடுவதில்லை. இருந்தும், உம்மாவுக்குத் தெரியாமல் மழையில் நனைந்த அநுபவங் களும் இருக்கின்றன. அதனை எப்படியும் உம்மா கண்டு பிடித்து விடுவார். மட்டுமன்றி, கடிந்து கொண்டே தலையை துவட்டியும் விடுவார். அந்த இனிமையான காலங்களை இன்றைய மழை நாட்கள் ஞாபகமூட்டுவதே இல்லை.
நான் கட்டாரிலிருந்து வந்த பிற்பாடு பல தடவைகள் மழை பெய்துள்ளது. பல தடவைகள் விருப்பமில்லாமலேயே நிர்ப்பந் தத்தில் நனைந்திருக்கின்றேன். எனக்கு ள்ளே சில கேள்வி எழும்பியது. முன்னர் நான் ரசித்த மழைத்துளிகள் இன்றைக்கு ரசிக்குமளவுக்கு இல்லை என்றான போது, எத்தனை முரண்பாடுகள் இந்த வாழ்க்கை யில். இந்தக் கேள்விகளுக்குப் பதில் பின் னர் தான் எனக்குக் கிடைத்தது. சிறுவயது இரசனைக்கும், வளர்ந்த பின்னான இரச னைக்குமிடையிலான வேறுபாடுகள் பற்றி, சில உரையில் அறிஞர்களின் கருத்து அதனை நிரூபித்துக் காட்டியது.
அண்மையில் எனது இலக்கிய, குடும்ப
நண்பி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்
தேன். அன்றும் ஒரு மாலை நேரம், மழை நாள். எங்கள் பேச்சில் மழை பற்றிய எண்ணக் கருக்களே முக்கிய இடம் வகித் திருந்தன. அந்தத் தோழிக்கு, மூன்று வய தில் ஒரு மகள் இருக்கிறாள். அந்த மகளின் மழை பற்றிய அவதானத்தை அந்தத் தோழி என்னோடு பகிர்ந்து கொண்ட போது, நான் வியந்து போனேன். பூக்கள் குளிப்ப தற்காகத் தானாம் மழை பெய்கின்றது, பூக்களின் தலை துவட்ட, காற்றும், வெய் யிலும் உள்ளதாம். அழகான கற்பனை மட்டுமல்ல, உண்மையும் கூட.
மல்லிகை ஆகஸ்ட் 2008 ஜ் 12

ண்மையில் எனது இலக்கிய நண்பர் ܐܶܢ கிண்ணியா அமீரலி தன்னுடைய இரண் டாம் வகுப்பு மகள் பாத்திமா நஸ்லியாவின் LD60p பற்றிய அவதானத்தை தினகரன் வார மஞ்சரியில் பதித்திருந்தார். அது இப்படித்தான்!
ஒருநாள் காலையில் மழை பெய்து கொண்டிருந்தது. மகள் மழையில் விளை யாடிக் கொண்டிருந்தாள். 'மக. LD60p யில நனையாதீங்க.." என்றாள் மனைவி.
'மழை பெய்யுதா...? இல்லையே! பிள்ளையன் அழுவுறாங்க." என்றாள் மகள் நஸ்லியா, 'பிள்ளையஸ் அழுவுறாங்களா?" "ஆமா பிள்ளையள் அழுவுறாங்கள்.” “யாரு பிள்ளிைகள்?"நட்சத்திரம்”, “நட்சத்திரமா?" "ஆமா. நட்சத்திரப் பிள்ளையன் தான் அழுவுறாங்க"ஏன் அழுவுறாங்க?"உம்மா அடிச்சர்ங்க.” “உம்மா அடிச்சாங்களா..?" "ஆமா உம்மா தான் அடிச்சாங்க." "யாரு உம்மா?"நிலர் உம்மா."நிலா உம்மாவா?" "ஆமா நிலா உம்மா தான் அடிச்சாங்க." "ஏன் அடிச்சாங்க? விடிஞ்சிட்டு. வெளியே போய் விளையாடாதீங்க.."ன்னு அடிச்சாங் களாம். எத்தனை அழகான அவதானக் குவிப்பு. இயற்கையை ரசிக்கும் பாங்கு. நான் அசந்து போனேன்.
எனது சாச்சியின் இரண்டு மகன்கள் முதலாமவன் சஜா அஹமட் பாலர் பாட சாலைக்குச் செல்கின்றான். அடுத்தவன் சயீட் அஹமட் (முன்னா). ஒரு மழைநாள் யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்புறமாக இருக்கும் மழை நீர் வடிந்து ஒடுவதற்காகக் கட்டப்பட்டுள்ள வடிகால் மீது நீரை இறைத்து விளையாடிக் கொண்டிருந் தார்கள். மழை என்பதால், பாதையில் நடமாட்டம் இல்லை. மழை நீரில் நனைவ தும், நீரை இறைத்து விளையாடுவதும், வடிகாலின் இருமருங்கிலும் மரக்குச்சி களை வைத்து பாலம் அமைப்பதும்,
9ÜLuÜLIT....... இருவருக்கும் கொண்டாடட் டம் தான். எதேச்சையாக வீட்டிலிருந்து வெளியே வந்த என்னிடத்தில் இருவரும் மாட்டிக் கொண்டனர். நானும் பக்கத்தி லிருந்த வேப்பமரத்தில் ஒரு கிளையை வளைத்து குச்சி ஒன்றை முறிக்க, இருவ ரும் எடுத்தார்கள் ஒட்டம். ஒடிப்போய் சாச்சி யிடம் சரணடைந்தார்கள். இருந்தும், அடி வாங்குவதிலிருந்து இருவரும் தப்பவில்லை.
மழை ஒரு அதிசயமான வரம். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மாத்திரம் என்று சொல்லிவிட முடியாமல், எல்லாக் காலத்தி லும் மழையை ரசிக்க முடியும் என்பதனை இப்போது என் மனம் ஏற்றுக் கொண்டது. எப்போதாவது கிடைக்கும் மழையை ஆர்ப்பாட்டத்துடன் கொண்டாடத் துடிக்கும் அந்த அரேபியர்களை நினைத்த போது, பாவமாக இருந்தது. நமக்கென்றால் வருட த்தில் எண்ணற்ற தடவைகள் மழைகள் வருகின்றன, போகின்றன. ரசிப்பதற்கான மனோநிலை மட்டும் நம்மிடையேயில்லை.
ஆனால், இனிமேல் மழையை ரசிக்க வேண்டும் என்று என் உள்மனம் உறுதி பூண்டு கொண்டது. மழையினால் ஏற்படும் அந்த மண்வாசம், தூவானத்தினால் ஏற்படும் சிலிர்ப்பு, மழையின் ஸ்பரிசத்தி னால் ஏற்படும் மகிழ்ச்சி, சிறுவயதில் இருக் கின்ற இந்த ரசனையுணர்வு ஏனோ, பெரி யவர்களான பின்னர் இல்லாமலே போய் விடுகின்றது. சூடான ஒரு கோப்பை தேநீ ருடன் மழையை ரசிக்க நான் தயாராகி விட்டேன். மழையெழுதும் கவிதைகளை மனப்பாடமிட ஆயத்தமாகிவிட்டேன். பூமி யில் விழுந்து துள்ளிக் குதிக்கும் மழைதுளி களோடு உரையாடி உணர்வுகளை பகிர் ந்து கொள்ளும் அந்தச் சந்தோஷ நிமிஷங் களை என் மனம் யாசிக்கிறது.
(இன்னும் பேசுவேன்)
மல்லிகை ஆகஸ்ட் 2008 * 13

Page 10
விலாசம் இழந்த கடிதம்
சுகந்தினி - உன் உருவம் கண்டேன் நீண்ட காலத்திற்குப் பின் நேற்று. பஸ்ஸில் நீல நிற இரும்பு வலைக் குப் பின்னால், இருந்தாய், நீயும் கண்டிருப்பாய் என்னை வெளியில் நின்றிருந்தேன், கண்டும் காணாதது போல்
இருந்தாயோ - வேதனையா?. கோபமா?.
நெருப்பெரியும் வெய்யிலில் விஷத்தை ஊதும் தார் வீதி மீது விழுந்து, விழுந்து எழும் கண்ணிர்த் துளிகளைக் காண்பது யார்? பிறந்துள்ள நேரமோ வீரர்களுக்கு மாத்திரமே - இருபக்கமும் ஆயுதங்கள் மோதுகின்ற ஒலி மாத்திரமே. ஆலய மணி ஓசையைப் போல்!
புன் முறுவல் நிறைந்த கடந்த காலத்தின் ஒரு பொழுதில் உன் கண்களால் அலை எழுந்த அந்த அன்பான மகிழ்ச்சிக் கடல் எங்கே? வெற்று வானம் போன்ற உணர்வற்ற கண்களுக்கு இன்று சொல்வதற்கு ஏதும் இல்லையா? உள்ளவை சொல்லி முடிக்கப்பட்டதா?
காயாத புண்களே எங்கெங்கும்! புதைக்கப்பட்ட மனசாட்சி புலம்புகிறது, கேட்பதற்கு செவிகள் எங்குண்டு? கல்லாகிப் போன பாதங்கள் கந்தக பூமியில் நடந்து செல்கையில் சகோதரன் கைகள் கட்டப்படும் போது இறுக மூடிக் கொள்ளும் கண்கள்!
முனங்கல்கள். வெற்றாக இருக்கிறது வெளிப்படும் வார்த்தைகள்! விரிகிறது. இருட்டான முழுக் காட்சியும், பாதைகள் ஏராளம் - எனினும் செல்ல வேண்டிய பாதை எது?.
சுகந்தினி - தொடர்ந்து இழுபடும் தடுப்புக் காவல் LJ600ft 60)L கண்டு கொண்டேன்! அது உனது - கழுத்தைச் சுற்றி அணிவிக்கபபட்டுள்ள மாலையைப் போல் இருக்கிறது! வெலிக்கடை - பூசா - ஜாவத்தை இதில் எது உனது புதிய இருப்பிடம்? உன் கண்களில் நீர் - இரகசியமாகப் புதைக்கப்படும் புதை குழியாக.
எனக்கு நீயும், உனக்கு நானும் எதிரிகளாகத் தெரியும் இந்த தருணத்தில் - முடிவுக்குக் கொண்டு வருவோம் வா. எதிர்காலத்தில் ஒரு நாள் நானும் இருந்தால் இரும்புப் பொல்லுகளால் இந்த உலகை உடைத்துத் தகர்ப்போம், இரு பக்க எதிரிகளையும் சேர்த்து - விடுதலையின் பெயரால்!
தோட்டாக்கள், தோட்டாக்கள்,
தோட்டாக்கள்,
சிங்கள மூலம்: சூலானந்த சமரநாயக்க தமிழில்: இப்னு அஸஉமத்
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 14
 
 

எனது சமாதியின் மீது
DaD96UStjögogyவகிவிடடுத்த மேகம் நடந்து வந்து- கண்ணாடி விம்பங்களின் மீது கனி பூசுகிறது.
66 g5Ö6US$5.56fair தாக்கத்தில், எனக்குள்
ஒவ்வொரு அணுவாகச் சாகிறது.
இறந்த பின்னும் எனது உறக்கத்தைக் குலைக்க இயற்கைக்கு என்ன உரிமை?
நானும் மழையும் பேசிக்கொள்ளவில்லையே? பார்த்துக் கொண்டோம். சூறாவளியும், மின்னலும் என்னைத் தாக்காமல் எத்தனை காலம்தான் எனது சமாதி தாக்குப்பிடிக்கும்.
பறவை எச்ச வித்துக்களில் இருந்து உயிர் பெறும் மரங்களுக்கு மழைநீர்வழங்கும். 8வர்கள் என் சமாதியை ஊடறுக்கும். மழைவென்று சமாதி தோற்று விடுமோ?
எனது சமாதியின் மீது
DaDQ 6USyoğgOgyஎனக்கு வியர்க்கிறது.
மல்லிகை ஆகஸ்ட் 2008 * 15

Page 11
രിത്രത്തെമ്നിലരമത്തഞ്ഞ്- /ሯ”
SéoTué,
'தம்பி. பேனாவைக் கொஞ்சம் தாஹீங்களா..?
se déi
என் கேள்வி அவனைத் திரும்பிப் பார்க்க வைத்தது. வங்கிக் கவுண்டரின் அருகே நின்றிருந்தான். சின்னப் பையன். பத்துப் பன்னிரண்டு வயதிருக்கும். பாடசாலை யூனிபோமில் இருந்தான். கையில் இரண்டும் மூன்று மாணவர் சேமிப்புப் புத்தகங்கள்.
"ஒரு நிமிடத்தில் தந்து விடுவன். இதை நிரப்பிறதுக்குத் தான்."
பணம் கட்டும் நறுக்கு அவன் கண்ணில் பட்டிருக்க வேண்டும். பேனாவை நீட்டியவன், ஒருகணம் தயங்கினான். மூடியைக் கழற்றி எழுதும் பகுதியை மட்டும் நீட்டினான். சிரிப்பு வந்தது. அவன் ஆள் கெட்டிக்காரன் தான். சுழியனாக இருக்கவேணும்.
வழக்கத்தில் இந்த மாதிரிச் சங்கடங்கள் கிடையாது. இந்த வங்கியின் ஆரம்பகால ஊழியன் நான். இப்போது தொழில் மாறியாயிற்று. இருந்தாலும், பழைய நண்பர்கள் வங்கியில் இருந்தார்கள். அதுவும், இந்தக் கிளையின் மனேஜரும் நானும் ஒன்றாக வேலை செய்தவர்கள். உதவி மனேஜர் என்னிடம் தான் வேலை பழகியவன். என்ன தேவ்ைக்கும் அவர்கள் தான். அவர்களே படிவம் நிரப்பி. பணம் பெற்று. எல்லாமே நொடியில் முடிந்துவிடும்.
இன்றைக்குச் சகுனம் சரியில்லைப் போலும். வங்கிக்குள் நுழைந்த போதே எக்கச்சக்கமான கூட்டம். திருவிழாச் சனம் போல திங்கட்கிழமை என்பதை மறந்து போயிருந்தேன். மனேஜர் நாதன் அறையில் இல்லை. உதவி மனேஜர் அறையை எட்டிப் பார்த்தேன். அவனும் தொலைந்து போயிருந்தான். ஆச்சரியமாக இருந்தது. திங்கட்கிழமை காலையில் எங்கே போனார்கள்- அதுவும் வாடிக்கையாளர் நிறைந்திருக்கும் போது
கவுண்டரில் உட்கார்ந்திருந்த பெண் சிரித்தாள்.
மல்லிகை ஆகஸ்ட் 2008 ஜ் 16

"மனேஜரையா. தேடுகிறீங்கள்..?"
"ஒம். உதவி மனேஜரையும் காண வில்லையே..!"
"பணம் வைக்கும் அறைக் கதவு தானே பூட்டிக் கொண்டு விட்டது. ரெக்னிசியன் வந் திருக்கிறார். எல்லோரும் அங்கே தான்."
வங்கிகளில் இடைக்கிடை இப்படிப் வருவதுண்டு. இனி அவர்களைத் தேட முடியாது. வேர்வை வழிய, பெட்டகத்துடன் மல்லுக் கட்டிக்
பிரச்சினைகள்
கொண்டிருப்பார்கள்.
'படிவத்தை நிரப்பி என்னிடம் தாருங் கள்.” மீண்டும் அதே பெண்தான்.
தலையாட்டிவிட்டு, எழுதும் மேசைய ருகே வந்தேன். படிவத்தை எடுத்த போது தான் சட்டைப் பையில் பேனா இல்லை என்பது புரிந்தது. யாரிடம் கேட்கலாம்.? தேடிய போதுதான், இந்தப் பையன் இடையே அகப்பட்டான்.
"எழுதிவிட்டுத் தாருங்கள்." சொன் னவன் என் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் கவுண்டருக்குப் போய்விட்டான். படிவம் நிரப்பியபின், மூடியைத் தேடிய போது, அது அவனிடம் தான் என்பது நினைவுக்கு வந்தது. மீண்டும் சிரிப்பு வந்தது.
'நன்றி தம்பி. இந்தாரும் உமது பேனா."
கையில் வைத்திருந்த மூடியைப் பொரு
த்திச் சரிபார்த்துச் சட்டைப் பையில் கவன
மாக வைத்தான்.
'அங்கிள் பேனா நன்றாக எழுதி யதா..? அவன் கேள்வியில் தொனித்தது பெருமையா..? அல்லது அக்கறையா? என்பது புரியவில்லை.
"நல்ல பேனா தான்..!" நான் சர்டிபிக் கட் கொடுத்தேன்.
“எத்தனையாம் வகுப்புப் படிக்கி
fir.....?'
"எட்டாம் வகுப்பு.”
'நன்றாகப் படித்து முன்னுக்கு வாரும்." மனதாரச் சொல்லிவிட்டுக் கவுண்டரை நோக்கி நடந்தேன்.
"அங்கிள். அங்கிள்."
அவன்தான் சிரித்தபடி கூப்பிட்டான்.
"என்ன வேணும்.?”
"இரண்டு ரூபா தாங்கோ."
சிரிப்பு வந்தது. பையன் முஸ்பாத்திக் காரன் தான். என்னுடனேயே பகிடி
விடுகிறானே!
'பிறகு தருகிறேன். ’ சிரித்தபடி திரும்பினேன்.
'அங்கிள். இரண்டு ரூபா தராமல் போறிங்களே..?"
மீண்டும் அவன் தான். குரலும் கொஞ் சம் உயர்ந்திருந்தது. எரிச்சல் வந்தது.
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 17

Page 12
கரைச்சல் பிடித்தவனாக இருப்பானோ? மற்றவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். திரும் பவும் சிரித்து விட்டுப் பேசாமல் இருந்தேன்.
"அங்கிள் இரண்டு ரூபா தந்து விட்டுப்
(8LJITIC35T...... s
இப்போது அவன் குரல் நன்றாகவே உயர்ந்திருந்தது. எரிச்சலும் கோபமும் வந்தன. பிடித்துக் கன்னத்தில் இரண்டு கொடுத்தால் என்ன என்று தோன்றியது." அப்போது தான் பார்த்தேன். வாடிக்கை யாளர்கள் எங்களையே கவனித்துக் கொண்டிருந்ததை.கூச்சமாக இருந்தது.
சட்டைப் பையில் கை விட்டபோது, கிடைத்தது ஐந்து ரூபாய் தான். எடுத்துக் கொடுத்துவிட்டுக் கவுண்டரை நோக்கி நடந்தேன்.
"அங்கிள். இந்தாங்கோ மிச்சக் காசு."
மூன்று ரூபாயை நீட்டினான்.
“வேண்டாம். நீயே வைத்துக் கொள்." என் குரலில் இருந்த கோபம் எனக்கே உறைத்தது.
"இல்லை அங்கிள். நான் கேட்டது இரண்டு ரூபா தான். இந்தாங்கோ மிச்சக்
ST......
கூட்டம் எங்கள் இருவரையுமே பார்த் துக் கொண்டிருந்தது. விடுப்புப் பார்க்க யாருக்குத் தான் விருப்பமில்லை. மிச்ச த்தை வாங்கிய பின், திரும்பி நடந்தேன்.
"அங்கிள்." மீண்டும் அவன்தான்.
"என்ன சேட்டை விடுகிறாயா..?" என் உடம்பில் பதட்டம் பரவியது. இந்தச் சிறுவன் எவ்வளவு அலுப்புத் தருகின்றான்.
"அங்கிள் என் மேல் கோபமா..?" திரும்பவும் கேட்டான்.
“எதற்குக் கேட்கிறாய்..?" வந்த கோப த்தை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு
மெதுவாகக் கேட்டேன்.
'இல்லை அங்கிள். உங்களுக்குக்
கோபம் தான். அது தெரிகிறது. கோபப்
படாதீர்கள். இதை வேண்டுமெண்டு தான் செய்தேன். அந்த இரண்டு ரூபா. உங்களுக்கு ஒரு சின்னத் தண்டம்."
'ஏன்.?" என்னையறியாமலேயே
கேட்டேன்.
'உங்கள் ஞாபக மறதிக்குத் தான் இந்தத் தண்டம். காசு தந்து விட்டீர்கள் தானே. இனிமேல் மறக்கமாட்டீங்கள். வங்கிக்கு வரும் போது, பேனாவை மறக்கவே மாட்டீங்கள்.
அட! எவ்வளவு சுலபமாக உறைக்க வைத்திருக்கின்றான். கோபம் போய் ஆச்சரியம் மிஞ்சியது
இப்போது கூட, ஏதாவது அலுவலகத்தி னுள் நுழையும் போது, சட்டைப் பையில் பேனா இருக்கின்றதா என்று பார்க்கத் தவறுவதே இல்லை.
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 18

"இலக்கணம் என்ற சொல்லைக் கேட்கும் போதே, பெரும்பாலானோரின் எண்ணத்தில்
எழுவது தொல்காப்பியம், நன்னுால் போன்ற இலக்கண நூல்கள் தான். இவர்களைப் பொறுத்த வரையில், தொல்காப்பியமும், நன்னூலும் வெறும் இலக்கண நூல்கள்தான். இதனாலேயே, பெரும்பாலானோர் ‘இலக்கணம்' என்றாலே முகத்தைச் சுழித்துக் கொள்கின்றனர். ஆனால், ‘இலக்கணம்' எனும் சொல்லோ இவர்கள் நினைப்பவற்றை யெல்லாம் கடந்து மிக நுண்ணிய பொருள்களைத் தாங்கி நிற்கிறது.
"இலக்கணம் பழஞ் சொல்லாகும். பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் இலக்கணம்' எனும் சொல்லைப் பயன்டுத்துவதன் மூலம் இதனை நன்கு உணரலாம்.
புறத்திணை இலக்கணம் திறம்படக் கிளப்பின்'
(தொல்- 1005 : 1)
(தொல்- 1489 : 2)
போன்ற சூத்திரங்களில் இலக்கணம்' எனும் சொல்லாட்சியைக் காணலாம்.
மேலும், பழந்தமிழ் இலக்கியங்களிலும் 'இலக்கணம்' எனும் சொல்லாட்சியைக்
ET600T6)ITLD.
சிலப்பதிகாரத்தில்,
இலக்கண முறைமையின் இருந்தோள்'
(சிலப்பதிகாரம் - 16 162)
எனவும் நாலடியாரில்,
இலக்கணம் யாதும் அறிவேன்'
(நாலடியார் - 399 : 2)
மல்லிகை ஆகஸ்ட் 2008 ஜ் 19

Page 13
எனவும் ஆசாரக்கோவையில்,
இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப' (ஆசாரக் கோவை- 2 : 3)
எனவும் 'இலக்கணம்' எனும் சொல் பயின்று வந்துள்ளது. ஆனால், தொல்காப்பி யத்தில் பயன்படுத்தப்பட்ட ‘இலக்கணம்' எனும் சொல்லுக்கும், சிலப்பதிகாரம், நால டியார், ஆசாரக்கோவை போன்ற இலக்கி யங்களில் பயின்று வந்த இலக்கணம் எனும் சொல்லுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன.
மேற்கூறிய இலக்கியங்களில் 'இலக் கணம்' எனும் சொல்லானது 'விதி என்ற பொருளிலேயே கையாளப்பட்டுள்ளது. 'விதி' எனும் பொருளானது விதிக்கப்படுவ தன் பேரில் ஒன்றை அடையாளப்படுத்தப் பயன்பட்டு, அவ்வாறே குறித்த நூலின் அல்லது நூல் கொண்டிருக்கும் மொழியின் இயல்பும், நன்மையும் குறிக்கப்படுவதால் இலக்கணம்' எனும் சொல் காலப்போக்கில் இலக்கண நூலை உணர்த்துவதாயிற்று. எனவே, தொல்காப்பியர் ‘இலக்கணம் என்னும் சொல்லை இங்கு புறத்திணைக்கு வகுக்கப்பட்ட விதியாக, புறத்திணையின் பண்புகளை அடையாளப்படுத்துவதற்காக கையாள்கிறார் எனலாம். மேலும், தொல் காப்பியர் மற்றுமோர் இடத்தில் இச் சொல்லை இலக்கண நூல்' என்னும் பொருளில் கை யாள்வதைக் காணலாம்.
ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கின் ஆகிய உயர்சொற் கிளவி
இலக்கண மருங்கின் சொல்லா றல்ல' (தொல் 510)
இதிலிருந்து இலக்கணம்' என்பதற்கு
'விதி' என்பதே அடிப்படைப் பொருள் என்றும், அதனில் இருந்தே இலக்கண நூலைக் குறிக்க அது பயன்பட்டது என்ற முடிவுக்கு வரலாம்.
மேலும், பலரும் "லசுடின' எனும் வடமொழிச் சொல்லிலிருந்து தோன்றிய ஒரு சொல்லாகவே இலக்கணம்’ எனும் சொல்லைக் காணுகின்றனர். ஆனால், வடமொழியில் இலக்கணம்' என்பதைக் குறிக்க 'வியாகரணம்' என்னும் சொல்லே பயன்படுத்தப்படுகிறது. "வியாகரணம்' என் பது தமிழில் 'பகுப்பாய்வு என்ற கருத்தைத் தருகிறது. அதாவது சொல்லையும் பொரு ளையும் பகுப்பாய்வு செய்வதனை இது குறித்து நிற்கிறது. எனவே, ‘லகூடிண' என் பதன் தற்பவ வடிவமாகப் பலரும் இலக் கணம்' எனும் சொல்லைக் கருது கின்றனர். ஆனால், வேறு சிலரோ, இலக் கணம்' எனும் சொல் தமிழ்ச் சொல் என்றே குறிப்பிடுகின்றனர். இலக்கு + அண் + அம் = இலக்கணம் ஆயிற்று. இலக்கு என்பது குறியை/ இலக்கைக் குறிக்கும். அண்' என்பது அண்மிப்பதை/ நெருங்குவதைக் குறிக்கும். 'அம்' என்பது விகுதி. எனவே, தேவநேயப் பாவாணர் இலக்கை அண்மி ப்பதை இலக்கணம் என்றார்.
தொல்காப்பியர் இலக்கணத்தைக் குறிக்க குறி எனும் சொல்லைக் கையா ண்டதாக வையாபுரிப்பிள்ளை குறிப்பிடு கிறார். இதற்கு,
உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலம் எனக்கொள்ளும் என்ப குறி அறிந்தோரே'
(தொல் 996)
எனும் தொல்காப்பிய நூற்பாவை ஆதாரங் காட்டுகிறார். ஆனால், இரா.
மல்லிகை ஆகஸ்ட் 2008 ஜ் 20

இளங்குமரனோ தொல்காப்பியர் இலக்கண த்தைக் குறிக்க புலன், நூல், எழுத்து, இயல்பு முறை முதலான சொற்களைக் கையாண்டுள்ளதாகத் தக்க ஆதாரங்க ளோடு எடுத்துக் காட்டுகிறார்.
நிணைமயக் குறுதலும் கடிநிலையிலவே நிலனொருங்கு மயங்கு மயங்குதல் இல்லென மொழிப புலன் நன் குணர்த்த புலமை யோரே
(GigiTeso : 958) எனும் நூற்பாவிலும்,
தெரிந்த மொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற் புலனென மொழிப புலனுணர்ந் தோரே'
(தொல் : 1497)
என்னும் நூற்பாவிலும், இலக்கணத் தைச் சுட்ட "புலன்' என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது. தொல்காப்பியர் இலக்கணத்தைச் சுட்ட 'எழுத்து' எனும் சொல்லையும் கையாண்டுள்ளதாக இளங் குமரன் குறிப்பிடுகிறார். இதற்கு,
‘எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந் தான். என்னும் நூற்பாவைக் காட்டு கிறார். மேலும், திருவள்ளுவரின் பின்வரும் குறட்பாவும் ஒளவையாரின் பின்வரும் கூற்றும் இலக்கணத்திற்கு எழுத்து' என்ற ஒரு பெயர் இருப்பதற்கு சான்றாக அமை கிறது.
'எண்ணென்ப ஏனையெழுத்தென்ப.
(திருக்குறள் 392)
'எண்ணும் எழுத்தும் கண்ணெணத் தகும்' (ஒளவையார்)
இங்கு எண் என்பது கணிதம். எழுத்து என்பது இலக்கணம்.
மேலும்,
இயல்பென மொழிய இயல்புணர்ந்தோரே' (தொல் 950)
என்னும் நூற்பா மூலம் இலக்கணத்தி ற்கு தொல்காப்பியர் "இயல்பு' எனும் சொல் லைப் பயன்படுத்துவதாகவும், அவர் குறிப் பிடுகிறார். அத்தோடு, முறை' எனும் சொல் இலக்கணப் பொருளில் வழங்கப்பட்டதை கம்பரின்,
இறையும் கேள்வியிலாதவென் புன்கவி முறையில் நூலுணர்ந்தோரும் முனிவரோ
எனும் அவையடக்கப்பாடலிலும்,
கச்சியப்பரின், இறைநிலம் எழுதுமுன் SOGTujutsoa566, முறை வரை வேனென முயல்வ தொக்கு மால்'
எனும் அவையடக்கப் பாடலிலும் கண்டு கொள்ளலாம்.
இவ்வாறு, ‘இலக்கணம்' என்னும் சொல்லானது விதி, குறி, அடையாளம், புலன், நூல், எழுத்து, இயல்பு, முறை முதலான பொருள்களைக் கொண்டிருந் தாலும், இவை ஒவ்வொன்றும் இவை ஒவ்வொன்றோடும் நெருங்கிய தொடர்பி னைக் கொண்டிருப்பதை நன்கு அறிந்து தெளியலாம். இருப்பினும் 'இலக்கணம்' என்பதன் அடிப்படைப் பொருள் 'விதி எனக் குறிப்பிட்டாலும் அது பெரும்பாலும் இலக் கண நூலையே குறிப்பிட்டுக் காட்டுவதை யும் இங்கு அவதானிக்கலாம்.
இலக்கணம்' எனும் சொல்லுக்கு குறி எனும் பொருளைக் குறிப்பிடும் போது, இலக்கணத்தின் அடிச் சொல்லான இலக்கு"
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 21

Page 14
என்பதற்கும் குறி என்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதனைக் காண முடிகிறது. அவ்வாறே குறி' என்பது குறிப்பதை குறித்துக் காட்டுவதை அதாவது, அடை யாளப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அத்தோடு, அடையாளப் படுத்துவது என்பது ஒன்றினுடைய இய ல்பை வெளிப்படுத்துவதாகும். இயல்பு என்பது ஒன்றுக்கு விதிக்கப்பட்டதாகும். விதி என்பது அறிவோடு அல்லது புலனோடு தொடர்புபட்டதாகும். இங்கு நூல் என்பது
இலக்கணத்தைக் குறிக்கிறது. இலக் கணம் என்பது எழுத்தோடு தொடர்புடை யாது மட்டுமன்றி அது கூறும் முறையோ டும், மரபோடும், வரலாற்றோடும் தொடர்பு
ìỳNềỳR NNNNNNNNIì
டையது. வரல் + ஆறு = வரலாறு அதாவது வரும் வழியாகும்.
எனவே இலக்கணத்திற்கு, மொழியின் இயல்புகளையும், மரபுகளையும் விதிப்படி உணர்ந்து முறையாக பயன்படுத்தும் நூல்
என இலக்கணம் வகுக்கலாம். இவ்வரை விலக்கணத்தில் கூட இயல்பு, மரபு, விதி, முறை, நூல் என்ற சொல்லாட்சிகள்
பயன்பட்டிருப்பதை உணரமுடிகிறது. இவ் வாறு நோக்கும் போது, இலக்கணம் கூறும் பொருள்கள் நுண்மையான வேறுபாடு ങ്കങ്ങണs கொண்டிருப்பினும், அவை யாவும் ஒன்றோடொன்று தொடர்புடையன எனக் ՑռՈ) (լքլջԱյւb.
(
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 22
 

412,241422.j21353 44wń.
- கெகிறாவ ஸஹானா
5டந்த ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில்
தைக் கொள்ளை கொண்ட அட்டைப்படமும்,
圈薇蓋*鞘覆 அழகான வடிவமைப்பும், கண்ணைப் கவரும் ஜெயகாந்தன் அவர்களுடனான அச்சுப் பதிப்பும், தரமான கட்டுரைகளுமாக மலர் சந்திப்பு. அவரது இடப்புறம் கட் ரொம்பக் கனதியானது. கட்டுரையாளர்களை டுரை ஆசிரியை. வலது புறம் அமர் எங்ஙனம் தேர்ந்தெடுத்தார்கள் என்ற ஆச்சரியம் ந்திருப்பவர், பாத்திமா மைந்தன். ஏற்பட்டது. நாகூரான் முதல், மனோதத்துவ வைத்தியர் ருத்ரன் வரை பல்வேறு திறத்தாரும் வழங்கியிருந்த கருத்துக்களைப் படித்த போது, மிக அவசரமாகத் தயாரானதால் ஏற்பட்ட ஒன்றிரண்டு அச்சுப் பிழைகளைத் தவிர, மலரில் உள்ளடக்கப்பட்டிருந்த புகைப்படங்கள், அவற்றைத் தெரிவு செய்திருந்த விதம் அருமை. இலங்கையின் தலைநகரில் கூட, இவ்வளவு ஜேகே அபிமானினின் கரம் கிட்டமுடியாத அம்மலரை எனது சிறிய தந்தை பாத்திமா மைந்தன் (தினத்தந்தி ஆசிரிய பீடம்) எனக்கு உடனடியாக அனுப்பி வைத்திருந்தார். ஏறக்குறைய கையை விட்டு இறக்காமலேயே நான் படித்து முடித்த பின்னர், எனது நண்பர்களுக்கும் படிக்கக் கொடுத்த அம்மலர் என்னுள் பூவாய் நுரைத்துப் பொங்கிக் கரையைத் தழுவுகின்ற அலைகளைப் போன்று, ஆயிரக்கணக்கான மெல்லிய நினைவுகளைக் கிளறிவிட்டதன் காரணமாகவே இதை எழுதுகிறேன்.
அந்த மலரைக் கண்டவுடனேயே எனது சகோதரிகள் கேட்டார்கள்: "நீயும் இதில் எழுதியிருக்கலாமே?" என்று. உடனே அதை மறுத்து “இவ்வளவு பெரிய மனிதர்கள் எழுதி யுள்ள மலரில், என்னைச் சேர்ப்பார்களா?" என்று கேட்டேன். ஆனால், மலரைப் படித்து, அது குறித்த சிறப்பானதொரு கருத்துப் பரிமாறலை ஜெயகாந்தன் அவர்களுடன் மேற் கொண்டு, அவரும் அனுமதியளித்த பிறகு, இக்கட்டுரையை உங்களது நாட்டுப் பத்திரிகை க்கும், எனது நாட்டில் 43 வருடங்களாகத் தொடர்ந்து வெளிவருகின்ற மல்லிகைக்கும் ஒரே சமயத்தில் அனுப்பி வைக்க உளங்கொண்டேன்.
ஜெயகாந்தன் ஸேர் உடனான எனது வெளிப்படையான உறவு கடந்த இருபது வருடங்களாக நீடித்து வருகின்றது. அதற்கும் அப்பால், துரோணர் ஏகலைவன் போன்ற
மல்லிகை ஆகஸ்ட் 2008 率 23

Page 15
மானசீக உறவைப் பற்றிக் கூறுவதானால், இன்னும் மேலே சென்று ஏறத்தாழ முப்பது வருடங்கள் என்று கால வரையறை செய்ய
6)ITLD.
இந்தக் கடிதத்திற்கு பதில் வருமோ, வராதோ? என்ற சந்தேகத்தில் நான் எனது இருப்பதிரண்டாவது வயதில் (90களில்) எழுதியனுப்பிய நீண்ட மடலை, நானே சிறிதும் எதிர்பார்க்காத விதமாக, தொட
ரும் ஆண்டுமலரில் வெளியிட வைத்து,
எனது வினாக்களுக்கு விடையும் பகர்ந்தது மட்டுமன்றி, அந்த முதல் கடிதத்திலேயே உங்களைப் போன்ற நல்ல எழுத்தாளரு க்கு என்று "பிரம்மரிஷி பட்டம் வழங்கி, என்னை ஆச்சர்ய மாயையில் மூழ்கடித்த மாபெரும் இலக்கியவாதி ஜெயகாந்தன் அவர்களை, நான் உடன் சிக்கெனப் பிடித் துக் கொண்டேன். அதன் பிறகு, அவரது ஒவ்வொரு நூலையும் படிக்குந்தோறும் எனக்குள் ஏற்பட்ட உணர்வலைகளை, கருத்துக்களை கடிதங்கள் மூலம் பதிய வைத்து அனுப்பிக் கொண்டேயிருந்தேன். 1996 இல் திடீரென எனது உறவினர்க ளான பாத்திமா மைந்தன், சாஹ0ல் ஹமீது (மாலைமுரசு பிரதம புகைப்படப்பிடிப்பாளரா கப் பணியாற்றியவர்) ஆகியோர் புடைசூழ அவரைச் சந்தித்தேன். ஏறத்தாழ பதினை ந்து நிமிடங்களே பேசினோம். அதிலும், பெரும்பாலும் நானே பேசிக் கொண்டிருந் தேன். எனது கேள்விகளுக்கு அவர் ஒரிர ண்டு வார்த்தைகளில் விடை சொல்லிக் கொண்டு வந்தார். எனினும், அந்தச் சிறு சந்திப்பிலேயே அவரிடம் தெள்ளெனத் துலங்கிய நற்பண்புகளை இன்னும் நான் எண்ணியெண்ணி வியந்து கொண்டிருக்கி ன்றேன். உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து பிறந்த அன்பையும், மனிதநேயத்தையும்,
பண்பாட்டையும், இவற்றின் அடித்தளமாக ஓடிக் கொண்டேயிருந்த. இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிற. வெட்கம் தோய்ந்த மென்னகையையும் என்னவென் பது? மேடைகளில் சிங்கமெனக் கர்ஜித்த, புலிபோல் உறுமிய, ஜேகே அவர்களை நான் கண்முன்னே கண்டபோது, உயர் குலத்து ஆடவர் ஒருவர் தம்மோடு சல சலவென்று பேசுகின்ற, பொதுவான சம்பிர தாயங்களையெல்லாம் மீறிவிட்டு, மேலே வந்து நிற்கின்ற ஒரு முஸ்லிம் பெண் ணைத் தனக்கேயுரிய முதிர்ச்சியோடும், வியப்போடும் பார்க்கின்ற போது, ஏற்பட்ட நாணமா? திருவள்ளுவர் கூறுகின்ற ஆண் களுக்கான நாணுடைமை போன்று அந்த வெட்கம் அவரிடத்தே ஏற்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன். இன்றுவரை எனது பெரிய சாதனையாக ஜேகேயுடனான அந் தச் சந்திப்பையே கருதுகின்றேன்.
இலங்கை திரும்பிய பின்பு, அந்த அநுபவத்தை உடனடியாகப் பதிவு செய்து 'தினகரன் வாரமஞ்சரியில் புகைப்படத்து டன் வெளியிட்டேன். அந்தக் கட்டுரையின் ஒரு Cutting ஜேகே ஸேருக்கும் அனுப்பி வைத்தேன்.
பின்னரும், அவரது ஒவ்வொரு புத்தகங் களைப் படித்து எனது கருத்துக்களை. அவரது பதில் வராது எனத் தெரிந்தும் அனு ப்பிக் கொண்டேயிருந்தேன். மீண்டும் திடீ ரென நான் ஆனந்த வெள்ளத்திலே மூழ்க நேர்ந்தது. மறுபடியும் நினைத்துப் பார்க்கி றேன்' எனும் தலைப்பில் குமுதத்தில் தொடராக எழுதி வந்த கட்டுரைகளில் இன்றைய இந்தியா பற்றிய எனது கேள்வி யொன்றுக்கான பதிலை, ‘அன்புள்ள ஸ்ஹானாவுக்கு' எனும் மகுடத்தோடு அவர்
மல்லிகை ஆகஸ்ட் 2008 ஜ் 24

எழுதியதைப் படித்த போது, அதை விடப் பிரமிப்பு என்னவென்றால், "இவரை எனது சவுற்ருதயர்களில் ஒருவர் என உணர்ந்து கொண்டேன்’ என்று ஜேகே அவர்கள் என் னைப் பற்றி அதில் குறிப்பிட்டிருந்தது தான். இதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை!
பின்னரும், நான் கடிதத் தொடர்பு கொண்டிருந்த போதும், அது எனக்குத் திருப்தியளிக்கவில்லை. ஏனெனில், எனது விமர்சனங்களுக்கான எந்தப் பதிலும் கிடைக்கப் பெறவில்லை. ஜேகே கடிதங்க ளுக்குப் பதில் அனுப்பும் வழக்கம் கொண்ட வர் அல்லரே! எனவே, அவரது வீட்டுத் தொலைபேசி இலக்கத்தை இடையறாது தேடி, இறுதியாகக் கடந்த மூன்று வரு டங்களுக்கு முன்பு கண்டு பிடித்தேன். அதன் பின்னர், எல்லாமே இலகுவாகப் போயிற்று. அவரது நூல்களைப் படித்து ஏற்படும் எண்ணவோட்டங்களைக் கடிதத் தில் வடித்து அனுப்பிச் சரியாகப் பத்து நாட்களுக்குப் பிறகு, தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது வினாக்களுக்கு அவரது பதிலைப் பெற்றுக் கொள்வேன். நேரில் பார்த்ததைவிட, மென்மையாக, இங்கிதமாக, பொறுமையாக அவர் விடை யளிப்பார். சிலசமயங்களில் 'நண்பர்கள் வந்திருக்கிறார்கள் என்பார். நான் எனது உரையாடலை முடித்துக் கொள்வேன்.
இவ்வாறான தருணங்களில் ஒருமுறை அப்புவோடு (ஜேகே இன் மகன்) G8 ug நேர்ந்தது. 'சிலோன்லயிருந்து ஸ்ஹானா பேசுறேன்." என்றுதுமே "ஒ ஸ்ஹானாவா? உங்கள நன்னாத் தெரியுமே." என்றார். ‘எப்படி?’ என்று கேட்டேன். 'ஃபோட்டோ வில் பாத்திருக்கேன். அப்பா உங்களைப் பத்தி எழுதியிருக்காங்க, இல்லையா?"
என்று கேட்டார். தொடர்ந்து நாட்டு நடப்புக் களையெல்லாம் சரளமாக அவர் பேசிக் கொண்டிருக்கையில் இடையில் கேட்டேன்: "நீங்க நரசிம்மன் தானே?"
'இல்ல. ரொம்பப் பேரு அப்படித்தான் சொல்றா... நீங்க சொன்னதுல பின்பாதி தான் சரி. எல்லாரும் கூப்பிட்ற மாதிரி அப்புன்னு கூப்பிடலாமே.." என்றார். எத் தனை முறையோ கேட்டுப் பார்த்தேன். அவர் தனது பெயரைச் சரியாகக் கூறவேயி ல்லை. அடுத்தநாளே ஜேகே ஸேரிடம் இந் தக் கதையைக் கூறி, ‘அவர் பெயர் நரசிம் மன் இல்லையா?" என்று கேட்டேன். ஏனெ னில், ஜேகே இன் வாழ்க்கை வரலாறு பற்றி எனக்கு எல்லாமே தெரியும் என்ற எனது ஈகோவை அப்பு தூளாக்கி விட்டது என்னை என்னவோ செய்தது. ஜேகே சேர் "அவர் பேரு ஜெயசிம்மன்” என்று திருத்திச் சொல் லித் தந்தார்.
பின்னொரு நாள் அவரது மனைவியுடன் பேசினேன். "அவரோட ரசிகையா நீ?" என்று கேட்டவர், "அவரோட Cel லுக்கு எடுத்து நேரடியாப் பேசு.’ என்று ஜேகே ஸேருடைய கைத்தொலைபேசி இலக்கத்தைத் தந் தார்கள்.
அது முதற் கொண்டு எவ்வித தங்கு தடையுமின்றி அவருடன் உரையாடி வரு கின்றேன்.
2004 டிசம்பரில் இலங்கையின் கரை யோரப் பகுதிகளைப் பெருமளவில் சின்னா பின்னப்படுத்திய சுனாமி என்னை வெகுவா கப் பாதித்திருந்தது. அது பற்றி ஜேகேயுடன் பேசினேன். அப்போது அவர் சொன்னார்: 'சுனாமியைப் பத்திப் பயப்பட வேண்டாம்.
அது எப்பவாவது ஒரு தடவைதான் வரும்."
மல்லிகை ஆகஸ்ட் 2008 ஜ் 25

Page 16
ஒரு அழிவுக்குப் பிறகும் உலகம் தழைக் கும், தழைக்க வேண்டும் என்று விரும்பு கின்ற இந்த மானுடப் பேரபிமானத்தை சுனாமி குறித்து முன்வைக்கப்பட்ட ஒலங் களையெல்லாம் விட, கருத்துக்களை யெல்லாம் விட, மிக வலிமையானதாக நான் மதிக்கிறேன்.
சில வருடங்களுக்கு முன்பு தினகரன் பத்திரிகை ஆசிரியர் அருள் சத்தியநாதன் தமிழகத்திற்குச் சென்று ஜெயகாந்தன் அவர்களைச் சந்தித்துவிட்டுத் திரும்பி வந்து, அந்தப் பயண அனுபவங்களைத் தொடராகத் தினகரன் வாரமஞ்சரியில் வெளியிட்டார். அதில் பின்வருமாறு ஓரிடத் தில் குறிப்பிட்டார்.
"இலங்கையிலிருந்து எத்தனையோ பேர் தமிழகம் சென்று ஜெயகாந்தனைச் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். ஆனால், அவரோ டொமினிக் ஜீவாவையும், அந்தனி ஜீவாவையும் மட்டுமே நினைவில் வைத்திருக்கிறார்.
இந்த வரிகள் என்னைத் துணுக்குறச் செய்தன. அதெப்படி ஜெயகாந்தன் ஸேர் அப் படிக் கூறலாம்? அவருடனான எனது நீண்ட கால உறவு என்னைத் தார்மீகக் கோபம் கொள்ள வைத்தது. உடனடியாகத் தொலை பேசியைச் சுழற்றி 'அப்படிச் சொன்னீர் களா?" என்று கேட்டேன். எனது குரல் மூல மாகவே எனது வேகத்தை உணர்ந்து கொண்ட ஜேகே சேர் "இல்லையே. நான் அப்படிச் சொல்லவில்லையே' என்று வழக்கமான வெட்கம் கூடிய சிரிப்போடு மறுத்தார். அப்படி ஒரு பத்திரிகையாளரைச் சந்தித்த ஞாபகமே தனக்கில்லை’ என்று கூறிய அவர், அப்பத்திரிகையின் நறுக்கு களை அனுப்பி வைக்கும்படியும் கேட்டுக்
கொண்டார். நான் வானலோகத்தில் மிதக்க லானேன். ஜெயகாந்தன் ஸேர் என்னிடம் உதவி கேட்பதென்றால். ஓ! உடனடி யாக அந்தத் தொடரின் இரண்டு நறுக்கு களை அனுப்பி வைத்த நான், மூன்றாவது நறுக்கை மிகமிகத் தாமதமாகவே அனுப்பி னேன். அவரோ வழக்கம் போலவே. இப்போது நினைத்துப் பார்க்கையில் எவ்வ ளவு சின்னத்தனமாக நடந்து கொண்டிரு க்கிறேன் என்ற இழிவுணர்வு என்னைக் கேலி செய்கிறது. அதுமட்டுமல்ல, அவரது சில கருத்துக்களில் முரண்படுகின்ற நான், (உதாரணமாக. அமெரிக்கா, உலகமய மாக்கல், பூகோளக் கிராமம் பற்றிய கருத்துக்கள்) அவருடனான எதிர்வாத த்தை காரசாரமாக முன்வைத்துக் கடிதங் கள் எழுதுவேன். அவரோ மாறாத அதே அன்போடு. ஆழமாக யோசித்துப் பார்க் கும் போது, நன்னோக்குடைய ஓர் உள்ளத் திலிருந்து உண்மையாகவே உணர்கி றேன். நக்கீரன் மலர் படித்து முடித்தபின் அவர் மீதான அன்பும், மரியாதையும் மிக அதிகரிக்கக் காண்கிறேன். ஹென்றியா கவே வாழ்ந்து, ஹென்றியைப் படைத்த ஒருவரிடமிருந்து இத்தகைய கருத்துக்கள் எழுதுவது இயல்பேயாகும் என்றும் முடிவு கொள்கிறேன்.
கடந்த ஜனவரியில் அவர் சுகமீனமுற்று தீவிர சிகிச்சைக்கு உட்பட்ட செய்தியைத் துரதிர்ஷ்டவசமாக இரண்டு மாதங்களுக் குப் பிறகே அறிந்து கொண்டேன். உடனே பேசினேன். 'ஒரு மாசமா ஹாஸ்பிடல்ல இருந்தேன்" என்று மிகச் சாதாரணமாகச் சொன்னார். என்னுள்ளம் உடைந்து போனது. உடனே சென்று அவரைப் பார்க்க வேண்டும் என்ற வேட்கை மிகுந்தது.
மல்லிகை ஆகஸ்ட் 2008 ஜ் 26

ஏப்ரல் 24ம் திகதி இரவு ஏழரை மணி யளவில் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல காற்றலை வழியே தொடர்பு கொண்டபோது, பின்வருமாறு கேட்டேன்.
"புதிதாக ஏதும் எழுதவில்லையா லேர்?"
'வரும்” என்று ஒற்றை வார்த்தையில் சிரிப்புடன் விடை கூறினார். அந்த ஒரு சொல் என்னுள் ஆயிரமாயிரம் அர்த்தங்களை எழுப்பி விட, உற்சாகமாகக் கூறினேன்.
‘எப்பவுமே எதிர்காலத்தின் மீது நம்பி க்கை கொள்வதுதான் உங்களது pus point Sir அதுமட்டுமல்ல, எப்பவும் நல்ல தையே நினைத்து, நல்லவற்றின் மீது மட் டும் நம்பிக்கை கொள்வீர்களே. உங்களது இந்தக் குணம் தான் எனக்கு ரொம்பப் பிடிக் கிறது.”
சிரித்துக் கொண்டார்.
தொடர்ந்து கூறினேன்.
“ஸேர், உங்களுக்குச் சுகயினம் என்ற துமே உடனே வந்து பார்க்கணும்னு நெனக் கிறேன். குழந்தை குட்டிகளால் தான் ஒண் டும் செய்ய முடியல. s
“அழைச்சிண்டு வாங்கோ." என்றார்.
"நீடுழி வாழனும், ஸேர் நீங்க." என்று அவரை வாழ்த்திவிட்டுப் பின்வருமாறு கூறினேன். “ஸேர், நீங்க வாழற காலத்துல வாழ்றோம் என்பது எங்களுக்கெல்லாம் பெருமை. ஆனா, அதுல ஒரு சிறிய குறை யும் இருக்கு. நீங்க தீவிரமா எழுதின காலத் துல உங்களோடு ஒரு friend ஆக அல்ல, ஒரு வாசகியாகவாவது தொடர்பு கொள்ள என்னால முடியாமப் போயிட்டுதே என்ற கவலை எனக்கு எப்பவும் உண்டு.” எனது இந்த அபிப்பிராயத்தைக் கேட்டு வழக்கம்
போலவே சிரித்து வைப்பார் என்று எதிர் பார்த்த என்னை, அவரது பதில் திக்கு முக்காடச் செய்தது.
"ஆமாமா. வாழ்க்கையில சில பகுதி கள நாம தவற விட்டிருக்கோம்.” இந்த வாச கங்களுக்கு நிகராக எனக்குப் பெரிய பரிசு கிடைத்திருந்தாலுமே நான் அவ்வளவு புளகாங்கிதம் அடைந்திருப்பேனா? அறியேன்.
அவரது பவளவிழா ஞாபகார்த்தமாக நக்கீரன் வெளியிட்ட மலரைப் படித்தவுடன் என்னுள் ஏற்பட்ட உணர்வுகள் ஆனந்தம். அவற்றை ஒழுங்காகப் பதிவு செய்த பின் னர், எனது நண்பர்களுக்கு மலரைப் படிக்கக் கொடுத்தேன். கடந்த வாரங்களில் ஒருநாள் ஜேகே அவர்களுடன் இது சம்பந்த மாகப் பேச எண்ணித் தொலைபேசி எண்க ளைச் சுழற்றினேன். பொதுவாகவே உரை யாடலின் ஆரம்பத்தில் லேசான ஈடுபாடின் மையைக் காட்டுவது அவருடைய வழக் கம். அதற்கு அவரது அவ்வப் போதைய மனநிலைகள் காரணமாக இருக்கலாம். தொலைபேசி உரையாடல் ஒன்றுக்கு நான் முற்று முழுதாகத் தயாராகி அவரை அழைக்கின்ற அவ்வேளை, சிலவேளை அவருக்கு எக்கச் சக்கமான நேரமாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.
அன்று நடந்த சம்பாஷணையை அப்ப டியே பதிவு செய்கிறேன்.
நான்! உங்களோட நக்கீரன் பவள விழா மலரைப் படிச்சேன். அதப்பத்தி பேச விரும்புறேன் ஸேர்.
JK: அப்படியா? (லேசாகச் சிரிக்கிறார்.)
நான்:
JK: Lib.
மலர் பிடிச்சிருக்கா, ஸேர்?
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 27

Page 17
நான்: (அவர் என்னுடன் உரையாடுவ தற்குத் தயாராகவில்லை என்பதை உண ர்ந்தவளாக கேட்கிறேன்.) நக்கீரன் செஞ்சா அது நல்லாருக்காது, இலக்கியப் பங்களிப்பை அது முழுமையா வெளிக் கொணராது என்று ஒரு கருத்து இருக்கு ஸேர், அதனாலதான் கேட்டேன்.
உங்களுடைய
JK: இல்ல இல்ல. நன்னாவே செஞ் சிருக்கா.
BT6öT: SEDMTLDT... See||L'60L-LÜLJL LLb BnL S9b
மையா வந்திருக்கு, இல்லையா ஸேர்?
JK: (லேசாகச் சிரிக்கிறார்.)
நான் மலரமுழுசாபடிச்சிட்டீங்கள ஸேர்? அவசரமா செஞ்சதால ஒன்றிரண்டு அச்சுப் பிழைகள் இருக்கு. மத்தபடி எவ்வளவு பெரிய நண்பர்கள் வட்டம். எவ்வளவு உயர் வான கருத்துகள். எண்ணப்பதிவுகள். எல் லாமே என்னை மலைக்க வெச்சிருச்சி ஸேர்.
JK: (GLd6m 60TLb.)
(அவரது மூட் நல்லபடியாக இருக்கிறது என்பது எனக்குப் புரிகிறது)
நான்: வழக்கமா நான் போன் பண்ணினா நண்பர்கள் வந்திருக்காங்கன்னு சொல்லி ட்டு என்கிட்டயிருந்து தப்பிச்சு போயிரு வீங்களே. இன்னக்கி நான் எப்படியும் பேசுறதா இருக்கேன். இப்ப முடியாட்டி நாளைக்குப் பேசுவேன்.
JK: (நான் வேண்டுமென்றே முன்வை த்த குற்றச்சாட்டை அவசரமாக மறுக்கி றார்.) இல்ல. அப்படியெல்லாம் ஒண்ணு மில்ல. பேசுங்க.
ஏன் ஸேர் இதுல முறிகாந்த் சேர், நாகேஷ் ஸேர் எல்லாம் எழுதல? முறிகாந்த் ஸேர் நல்லாயிருக்காரா?
நான்:
JK: நல்லாயிருக்காரு. நான்தான் திரும்பத் திரும்ப ஒரேமாதியான கருத்துக் களப் போடவேணான்னு சொன்னேன். அவங்கள்ளாம் என்னுடைய மணிவிழா மலர் ஒண்ணு வந்திச்சே. அதுல எழுதி யிருக்காங்க.
நான்: உங்கட் சிட்டுக்குருவி பாடுது தன் பெட்டைத்துணையைத் தேடுதுன்ற பாட்டப் பாடின ஜேசுதாஸ் ஸேருக்கு இதுல இடம் கொடுத்திருக்கலாமே ஸேர்?
JK: அதப்பாடினது அவர் இல்லையே.
அப்போ PB முநீனிவாஸ் ஸேரா? நா அந்தப் பாட்ட ரெண்டு முறைதான் கேட் டிருக்கேன்.
JK: ஆமா முரீனிவாஸ்.
நான்:
ரெண்டுபேர் குரலும் ஒரு மாதிரித் தானே. அதனால நா தப்பா வெளங்கிட்டேன்.
நான்:
JK: ஒண்ணுபோலதான் இருக்கும். ஆன பழகினவங்களுக்குவித்தியாசம் புரியும். (கே. ஆர். விஜயாவுக்கு ஏன் இடம் கொடுக்கவில்லை என்று கேட்க எண்ணி யிருந்த போதும், தொடர்ந்து இதே பாணி யில் கேள்வி கேட்பது அவருக்கு அலுப்பை உண்டாக்கும் என உணர்ந்து பேச்சைத் திசைமாற்றுகிறேன்.)
நான் ஏற்கனவே கையில் ஒரு விளக்குக் கதையில படிச்சிருந்தாலும், உங்களுக்குப் பாரதி மேலுள்ள பற்று. 2-Islass60Lu மிகப் பெரிய நண்பர்கள் வட்டம். இதப் பத்தியெல்லாம் இந்தப் புத்தகத்தால தான் முழுசா அறிய முடிஞ்சுது. உங்களுடைய மேடைப் பேச்சுகளப் பத்தி ஏற்கனவே அரசியல் அநுபவங்கள்ள படிச்சிருந்தாலும், இந்தப் புத்தகத்துல உங்களுடைய மேடைப்
மல்லிகை ஆகஸ்ட் 2008 * 28

பேச்சுக்கள்ள எடுத்த சில போட்டோக்களப் பாக்குற போது, நீங்க எவ்வளவு ஆவேசமா பேசியிருப்பீங்கன்னு உணர முடியுது ஸேர்.
JK: (லேசான வெட்கம் கலந்து சிரிக் கிறார்.)
நான்: திரும்பவும் எனக்குக் கவலை வருது ஸேர். அந்தக் காலங்கள்ள உங்க ளோட நான் தொடர்பு கொள்ற வாய்ப்பு
எனக்குக் கிட்டல்லியேன்னு.
JK: எங்களுக்கு முன்பும் சில காலங் கள நாம தவற விட்டிருக்கோம். எங்களுக் குப் பின்பும் சில காலங்களத் தவற விட்டி ருக்கோம். இப்ப கையில இருப்பது நிகழ்
SIT6)Lib DLCSLibgs IT66T.
(அவர் எந்த அர்த்தத்தில் கூறுகி றார் என்பது எனக்குப் புலனாகவில்லை.
ஏதோ ஒரு நல்ல அர்த்தமே இருக்கும் என்று எண்ணியவளாகத் தொடர்ந்து
நான்:
பேசுகிறேன்.) இந்த மலர்ல எவ்வளவோ பெரிய மனுவடிர்கள் உங்கள வாழ்த்தத் தங்களுக்குத் தகுதியில்லாததால வணங்கு றோம்னு சொல்லியிருக்காங்க. அதப் படிச்சப்பிறகு, நீங்க என்னதான் என்னை சவற்ருதயர்களில் ஒருவர்னு சொல்லிட்டா லுமே, உங்களுக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து சொன்னதெல்லாம் பெரியதன மோன்னு தோணுது ஸேர்.
JK: உண்மையான அன்பு இருந்தா வாழ்த்தலாம். அதுல தப்பில்ல.
நான்: ஸேர், வயது கூடிய நண்பர்கள் பற்றி உங்க அபிப்ராயம் என்ன? (அவர் கேள்வி புரியாதது போன்று மெளனம்
காக்கிறர். திரும்பவும் கேட்கிறேன்.)
நான்! ஏன்னா, எனக்கும் வயது கூடிய நண்பர்கள் இருக்காங்க, அதனால கேட்
GL6öT.
JK: அவங்களுக்கு உரிய மரியாதை யக் கொடுத்துட்டா சரி.
நான்: ஸேர், இந்த மலர்ல நாலு பெண் கள் எழுதியிருக்காங்க. அதுல ரெண்டுபேர் உங்களப் பத்தி மோசமா எழுதியிருக்கா ங்க. வாஸந்தி ஆணவம் என்ற சொல்லப் பாவிச்சிருக்காங்க. லசுஷ்மி அகங்காரம்ன்ற சொல்லப் பாவிச்சிருக்காங்க. எனக்கு
ரொம்ப வருத்தமா இருக்கு ஸேர்,
JK: இல்லயே. முன்ன அப்படியிருந் தேன். இப்ப இல்லன்னு தானே எழுதியிருக் காங்க. (அவர் இயல்பாகவே தனக்கு வாய் க்கப் பெற்ற நல்லியல்பின் காரணமாகவே இப்படிக் கூறுகிறார் என்று நான் உணர் கிறேன். அவர் தொடர்கிறார்.) ஒரு வேளை, நா அப்படி இருந்திருப்பேன். சின்னப் பிள்ளைகளப் பயங்காட்டுற மாதிரி.
நான்: பத்மா கப்பிரமணியன் ஏற்கனவே உங்க குடும்பத்துக்கு நெருக்கமானவரு. ஆரோவில் இரா. மீனாட்சி புதியவர்தானே.
இப்பதானே உங்களோட பழக்கம்?
JK: ஆமாமா. புதுசாதான் தெரியும்.
நான்: அவர் தான் மிகச்சரியா எழுதியி ருக்காரு சேர். பாரதிபுரம் பத்தி எழுதியிருக் காரே. பாரதிபுரத்திலுள்ள எண்பது வீடுக ளிலும் ஜெயகாந்தன் வழங்கிய பாரதியார் கவிதைகள் வழக்கில் இருக்கின்றனன்னு. அந்த வரிகளப்படிச்சு நா அழுது'டேன் ஸேர்.
JK: (கனத்த மெளனம் காக்கிறார்.)
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 29

Page 18
நான்: வாழ்க்கையைப் பத்திய உங்களு டைய கருத்துப் படிக்கும் போது ரொம்பக் கஷ்டமா இருந்தது, ஸேர். எங்களுக்கெல் லாம் வாழ்க்கைன்னா என்னன்னு தெரிஞ் சிருக்கு. ஆனா, வாழத்தான் தெரியலன்னு நீங்களே சொன்னா, நாங்க என்ன ஸேர்
சொல்லுறது?
JK: எந்தச் சந்தர்ப்பத்துல அப்படிச் சொல்லியிருக்கேன்னு பாக்கணும்.
JBIT6öT: It's a creative Silence 66T sol ரவிசுப்பிரமணியன் சொல்லியிருக்காரே. அதப்படிச்சப்பிறகு, இனிமே புதுசா எழுதல் லியான்னு உங்கள அடிக்கடி கேக்குறத நிறுத்திடணும்னு நெனக்கிறேன் ஸேர்.
JK: இல்ல. இல்ல. கேட்கத்தான் Gay-Lieut.
நான்: ஆமாமா. எழுதுறதுக்கு எவ்வளவு
தைரியம் வேணுமோ, அதேயளவு தைரி யம் எழுதுறத நிறுத்துறத்துக்கும் வேணு ம்னு சொல்லியிருக்காரே. ரொம்பச் சரி. உங்களப் போல ஆரம்பத்துல எழுதிக் குவி த்த ஒருத்தர் இப்போ எழுதாம இருக்கா ரேன்னு யாரும் யோசிக்கிறது தவறில்லத் தானே. அதுசரி ஸேர், அந்தத் தேவாரம் கதையக் கொஞ்சம் சொலுங்களேன்.
JK: (ஒரு குழந்தைக்குச் சொல்வது போல அந்தக் கதையைக் கூறி முடித்து பிறகு சொல்கிறார்.) அவரு ஒரு போலிஸ் சூப்பிரன்ட். மத்தபடி, அவருக்கும் எனக்கும் எந்த விரோதமும் இல்ல.
ஆனா, அந்த மீசை உங்களுக்கு ரொம்பப் பொருத்தம் ஸேர்.
நான்:
JK: அகலமான முகத்துக்குப் பெரிய மீசை எடுப்பாயிருக்கும்.
நான் ஸேர் எம். ஜி. ஆர் எங்கு போட்டி யிட்டாலும் அவரை எதிர்த்து அங்கு நான் போட்டியிடுவேன்னு சொல்லியிருக்கீங் களே, அவருடைய தனிப்பட்ட குணநலன் கள், தயாளகுணம். இதப் பத்தியெல்லாம் உங்க கருத்தென்ன? உதாரணமா சொல் றதுன்னா, ஒருத்தர் சொல்லியிருக்காரு, உலைய அடுப்புல வெச்சிட்டு எம். ஜி. ஆர் கிட்ட போகலாம், நிச்சயமா அரிசி கிடை க்கும்னு. அவ்வளவு நம்பிக்கையோட மக்கள் அவரப் பாத்திருக்காங்களே. இதப்பத்தி என்ன நெனக்கிறீங்க?
JK: பிச்சைகாரங்களுக்கு வேணா அது பெருசாப்படலாம். எல்லாரும் சமமா வாழனும்னு நெனக்கிற ஒருவனுக்கு அது சரியாப்படாது. உண்மையில, அவர் அப்படி இருக்கவும் இல்ல. பிரபலம் பெறுறதுக்காக அப்படி செஞ்சாரு. ஜனநாயகத்துல மக்களு டைய நம்பிக்கையைப் பெறுறது ஒரு முக்கி யமான அம்சம் இல்லியா?
நான் இந்த மலர்ல உள்ள கட்டுரைத் தலைப்புகளிலேயே எனக்குப் பிடிச்ச தலை ப்பு என்ன தெரியுமா? தொடரும் சந்திர காந்தன் எழுதியிருக்காரே, அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலைன்னு. அது தான். மத்தது, காந்தன் எத்தனை காந்தனடி.
JK: (மெல்லிய ஓசையுடன் சிரிக்கி றார்.)
நான் சாவித்திரி கண்ணன் சொல்லியி ருக்காரே. ஜெயகாந்தனைப் போல்
யாரும் வாழக்கூடாதுன்னு. இதப்பத்தி..?
JK: அது அவர் கருத்து. ஒவ்வொருத் தர் கருத்துக்கும் நா போய்ப் பதில் சொல்லிட் டிருக்க முடியுமா?
மல்லிகை ஆகஸ்ட் 2008 ஜ் 30

நான்! உங்க நண்பர்கள்ளேயே பிரின்ஸ் நீல்தான் வித்தியாசமான அநுபவங்களப் பகிர்ந்திட்டிருக்காரு. உதாரணமா, அவரு டைய பர்ஸ் காணாமப் போனது, உடல்
நலமில்லாத 23 வயது மகன்.
JK: ՑեւDITLDIT.
நான் ஸேர் உங்க ஏகபத்தினி விரதன் ஜோக். அத வேற யாரு சொல்லியிரு ந்தாலுமே எனக்குப் பிடிச்சிருக்காது. ஆனா,
நீங்க சொன்னதினால பிடிச்சிருக்கு.
JK: என்ன அது?
ஒரு ஏகபத்தினி விரதனா வாழத் தான் விரும்புறேன். அந்தப் பத்தினிதான் யார்னு தெரியல்ல. இந்த ஜோக்தான்.
நான்
JK: (சிறிது சத்தமாகச் சிரிக்கிறார்.)
நான்: உங்க சோவியத் நண்பர் விதாலி பூர்ணிகாவோட படம் ஏன் வரல்ல?
JK: அவர் வந்து ஃபைலக் கேட்டா, கொடுத்தேன். அள்ளிட்டுப் போயிட்டா. அந் தப் படம் உங்கக்கிட்ட இருக்கா? இருந்தா அனுப்புங்களேன். பூர்ணிகா என்னை விடப் பத்து வயது இளையவரு. இப்ப இல்ல. காலமாகிட்டாரு.
நான் (அவருடைய ஞாபக சக்தியை வியக்கிறேன். ஏனெனில், 1996 இல் அவ ரைச் சந்தித்த போது, எனக்குப் பிடிச்சபடம் என்று சொல்லி அந்தப் படத்தைக் காட்டி யிருக்கிறேன்.) முந்தி உங்ககிட்ட காட்டி
னேனே அந்தப் படம். குங்குமத்துல
வந்தது. அது இருக்கு. கட்டாயம் அனு
ப்புறேன் ஸேர். எங்கள மாதிரி இளைய தலைமுறைக்கு நீங்க என்ன சொல்ல விரும்புநீங்க? குறிப்பா. பாரதிக்குப் பிறகு கவிதை எழுதுற யாரைப் பத்தியுமே நீங்க நல்ல படி சொன்னது கிடையாதுன்னு மலர்ல படிச்சேன். (நான் எனது கவி தைத் தொகுப்பு ஒன்றை அவருக்கு வழங் கிய பின்னர், சிறிது நாள் கழித்து, படிச்சீங் களா? என்று கேட்க, ஆமா என்பதைத் தவிர அவரிடமிருந்து வேறு வார்த்தை வரவில்லை. நல்லவேளை போன் என்ப தால் தப்பினேன். அதை மனதில் வைத்துக் கொண்டு கேட்டேன்.)
JK: நா யாருக்குமே, குறிப்பா எதுவும் சொன்னது கிடையாது.
நான் எத்தனை பெண்ணியக் கருத்து கள் புதிதா வந்தாலுமே நீங்க சொன்ன பெண்ணியக் கருத்துக்களுக்கு ஈடாகாது (86 noir.
JK: ஆமா. பெண்ணியம் இப்ப விபரீ தமாத்தான் போயிண்டிருக்கு.
நான் பெண்களுக்கு என்ன சொல்ல
விரும்புரீங்க?
JK: பெண்கள் தைரியாமா இருக்கணும்.
நான் நாம பேசினதையெல்லாம் நக்கீர
னுக்கு எழுதி அனுப்பவா ஸேர்?
JK: as fluibLDT.
இந்த உரையாடலிலே நான் ஜேகே என்கின்ற மாமனிதரிடம் நம்மைப் போன்ற
மல்லிகை ஆகஸ்ட் 2008 8, 31

Page 19
வர்கள் கற்றுக் கொள்வதற்கு இன்னும் ஏராளமான விடயங்கள் உண்டென்பதை உணர்ந்து கொண்டேன். ஜெயகாந்தனுக்கு மேலே நீ இன்னும் வளரவில்லை என்று எனக்கு எனது நண்பர்கள் சொல்வதுண்டு. ஜெயகாந்தனுக்கு மேலே வளர்வதற்கு
நாக்கு நுனிவரை வந்தும் அவரிடம் நான் கேட்காமலே விட்டுவிட்ட சில கேள்வி களையும் இங்கு குறிப்பிடலாமென நினைக் கின்றேன். அவை:
1. உங்களை காங்கிரஸ் தலைவரா ஆக்க ணும்னு அரசு நாச்சியப்பன் சொல்லியிருக்
காரே?
2. கிரேஸி மோகன் முதல் கானா பாடகன்
நாகூரான் வரை பல திறத்தவரையும் நீங்கள் கவர்ந்தது எப்படி?
3. உங்களது அவ்வளவு பெரிய நண்பர் கள் சபையில் ஏன் ஒரு பெண்கூட இல்லை?
4. உங்கள் பக்கத்து வீட்டு ஆட்கள் கூட, உங்களைப் போல வித்தியாசமாகவே இருக்காங்கன்னு திரைப்பட இயக்குநர் ராஜகுமாரன் சொல்லியிருக்காரே. உதாரணமா, பார்த்திபன், மணிவண்ணன் இவங்கள்ளாம்.?
5. ஆலமரம் பாடலை சந்தோஷமாகப் பாடுவீங்களா? இல்ல அழுதுகிட்டு பாடுவீங் as6ITIT?
6. ஏதாவது ஒரு பாரதி பாடலைப் பாடிக் காட்டுங்களேன்.?
– A. R. R. HAR DREssERs
89, Church Road, Mattakuliya, Colombo - 15. Te:0602133791
முற்றிலும் குளிருட்டப் பெற்ற சலூன்
மல்லிகை ஆகஸ்ட் 2008 $ 32

இரவுகள் என் முன் விழித்துக்கிடக்கின்றன. அதன் ஒவ்வொரு புள்ளியிலும் உயிர் கசிந்து கொண்டிருக்கிறது.
ருேற்று, இன்று, நாளை மூன்றும் ஒரே கணத்தில் எனக்கு முன் தற்கொலை செய்கிறது.
மயிலிறகைச் சூடி பல்கலைக்கழக வளாகத்தில் சிறகடித்த அந்த மறக்க முடியாத نی * இன்ப விசையிலிருந்து விடுபடுகிறது மனது.
വൃത്തുീക് அதற்கு முன்னரான தோல்விகள் ஏமாற்றங்கள் இன்னும் சொல்ல முடியாத வலிகள் துயர எல்லைகளில்
முரண்களையல்லவா
நம்முன் வரைகிறது
இனி வசந்தங்களை மடித்து நமது சட்டைப்பைகளில் செருகினாலும் விடியலை பிய்த்து கடிலறையில் பதுக்கினாலும் கறைபடிந்த இனத்துவதத்தின் வன்மங்களை நமது இதயங்களில் இருந்து வேறாக்காதவரை மேற்படி எதுவும் சாத்தியமில்லாமல் போகிறது.
ܔ
ཐོགྱི་
e
盟
器
நமது மரபு வழித் தோழமை சினேகம், காதல், அன்பு எல்லாம் போரில் புதைந்து போய்விடுகிறது.
மல்லிகை ஆகஸ்ட் 2008 ஜ் 33

Page 20
வாழும் நினைவுகள்- 01
கலை இலக்கியப் பின்புலம்
-திக்குறுல்லை கமால்
ஆறாம் தரம் வரையிலான எனது ஆரம்பக் கல்வி ஊர் பாடசாலையிலேயே இடம் பெற்றது. இரண்டு கட்டிடங்களும், ஒர் ஆசிரியர் விடுதியையும் கொண்ட சிறிய பாடசாலை. அதற்கு மேல் ஞாபகத்தில் நிற்பது அந்த மாமரம் மட்டுமே.
வருடா வருடம் அங்கு கலைவிழா நடைபெறும். விசேட மின்னொளி, ஒலி அமைப்புக்க ளோடு இரவில்தான் நடைபெறும். பாடசாலை இளம் கலைஞர்களின் பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளை அதிலே பார்க்கலாம். ஊர் மக்களை உள்ளடக்கக் கூடிய மேல்மண்டபத்தில் விசேட மேடை போட்டு அலங்கரித்திருப்பார்கள். கலைவிழா முடிவுற்று வெளியேறும் போது, அடுத்த கலைவிழா எப்போது நடைபெறுமென எண்ணத் தோன்றும், அந்நாட்களில், தலைமை ஆசிரியராகவிருந்த ஏ. எச். எஸ். முகம்மதின் நடவடிக்கைகளில் இதுவுமொன்று.
இன்றும் இங்குள்ள மக்களின் மனதிலே வாழ்ந்து கொண்டிருக்கும் மட்டக்களப்பு செல்வராஜ கோபால் ஆசிரியர் கலைதுறையிலும், அளவெட்டி சின்னத்துரை ஆசிரியர் மொழிவளத்துறையிலும் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டனர். கலைவிழாவின் வெற்றியில் இவர்களது பின்புலம் நிச்சயம் கைகொடுத்திருக்கும். நான் சிறுவனாக இருந்த போதும், அவர்களது தோற்றம் என்மனதில் இன்றும் பதிந்திருக்கின்றது.
அந்நாட்களில் தென்மதி என்ற கையெழுத்துச் சஞ்சிகை தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்தது. பல்வர்ணத்தில் வரையப்பட்ட அட்டை மற்றும் சித்திரங்கள் கொண்டதாக அது அமைந்திருந்தது. இன்றுள்ள எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள் பலர் அதில் எழுதியவர்கள். அதன் வாசகர்கள்.
ஒருமுறையில், பாடசாலையில் விசேட கூட்டமொன்று ஒழுங்குபடுத்தப்பட்டது. அதில் புதியவர் ஒருவர் பேசினார். அவர் என்ன பேசினாரென்று எனக்குத் தெரியவில்லை. அவர் இளங்கீரன் என்ற எழுத்தாளரென்று பின்னர் தெரியவந்தது. அவர் மரகதம்' என்ற தனது சஞ்சிகைக்கு ஆதரவு திரட்டவே அங்கு வந்திருந்தாராம்.
பாடசாலையில் நூலகம் ஒன்று இருந்ததாக எனக்கு ஞாபகமில்லை. ஆனால், ஊருக்குள் பல வாசிகசாலைகள் இருந்தன. அவை எல்லாம் சமகாலத்தில் இயங்கவில்லை. ஒவ்வொரு-காலகட்டத்திலும், ஒவ்வொரு சாரார் தமது வசதிக்கேற்ப வாசிகசாலைகளை செயற்படுத்தினர். அங்கெல்லாம் சென்று வாசித்துப் பயன்பெற்றவர்களில் நானும் ஒருவன்.
மல்லிகை ஆகஸ்ட் 2008 * 34

எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் பழைய பாணியிலான ஒரு பெரிய வீடு இப்போது முண்டு. அங்கு வாழ்ந்த மனிதர் கண்ணாடி அணிந்து கொண்டு நாளாந்தம் பத்திரிகை வாசிப்பார். எனது தகப்பனாரும் அவ்வப் போது, அதனை வாசிக்கக் கொண்டு வரச் சொல்வார். இப்படித்தான் எனக்குத் தின கரன் அறிமுகமாகியது. ஆனால், அதில் எங்க ளூர்ச் செய்திகளொன்றும் வருவதில்லை. ஊர்ச் செய்திகள் வெளிவருவதென்றால், அது 'வீரகேசரி'யில்தான். செய்தி வந்ததும் ஊரெல்லாம் பரவிவிடும். இதனை எழுது பவர் ஆமன்சூர்' என்று சொல்லப்படும். எம். ஏ. சீ. முஹம்மதென்பதை விசாரித்துக் கண்டுபிடித்துவிட்டேன். நீண்டகாலம் வீர கேசரியிலும், பின்னர் தினக்குரலிலும் இப் பொழுது சுதந்திர ஊடகவியலாளராகவும் செயற்படுகிறார். அவரது வீடும் ‘ரிப்போட்டர் ஹவுஸ்" ஆகிவிட்டது.
ஒரு பெருநாள் தினத்தில் சில இளை ஞர்கள் ஒரு சஞ்சிகையை விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். நானும் அதி லொன்றை வாங்கிக் கொண்டேன். "காலைச் சோலை’ என்ற அந்த ரோனியோச் சஞ் சிகையிலே சிறுகதை, கவிதை, கட்டுரைக ளெல்லாம் அடங்கியிருந்தன. அதை இக் பால் கலாமன்றம் வெளியிட்டிருந்தது. இம்மன்றம் இன்னொரு குறிப்பிடத்தக்க வேலையைச் செய்தது. எமதுரைச் சேர்ந்த வரும் கொழும்பில் வாழ்ந்து வந்தவருமா கிய எம். ஏ. முகம்மது எழுதித் தயாரித்த 'கொழும்பு மாப்பிள்ளை' என்ற நாடகத்தை மேடையற்றினார். இந்நாடகத்தில் ஏ. எச். எம். அஸ்வர், மானா மக்கீன், ஒ. நாகூர், என். தாலிப், சபா மஹற்மூர் போன்றவர்கள் நடித்தனர்.
இங்கு புத்தகக் கடைகளென்று இருக்க வில்லை. அரபு சமயநூல்களை பைக்கிர் லெவ்வை வருவித்து விநியோகித்தார். தொடர்ந்து இஸ்லாமிய தமிழ் நூல்களை யும் கொண்டுவந்தார். பின்னர் அல்ஹஸ ரைத், புதுமைக்குரல் பத்திரிகைகளையும் ரவற்மத், பிறை, மணிவிளக்கு போன்ற தென்னிந்திய இஸ்லாமிய சஞ்சிகைக ளோடு, தெரிந்தோ தெரியாமலோ எம். ஏ. ரவற்மானின் இளம்பிறை'யையும் கொண்டு வந்தார். அது இலக்கிய ரசிகர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது.
அந்நாட்களில் லைட்ரீடிங் பாணியில் நிலா என்ற சஞ்சிகையை மானா நடாத்தி னார். அப்போது ஈழச்சுடர்' என்ற கல்வி, இலக்கிய சஞ்சிகையும் வெளிவந்தது. இந்த இரண்டையும் வாசகர்களுக்குத் தருவித்து வழங்கியவர் யோனகபுர- ஹம்ஸா.
தென்னிந்திய இஸ்லாமிய சஞ்சிகை கள் மட்டுமல்ல, ஆனந்த விகடன், கல்கி போன்ற ஜனரஞ்சக சஞ்சிகைகளும் அம்புலிமாமா, ஆதவன் போன்ற சிறுவர் சஞ்சிகைகள் படிப்பவர்களும் இருக்கவே செய்தனர். இவையெல்லாம் கொழும்பிலி ருந்து தபால் மூலமே வந்தன.
எம். எச். எம். சம்ஸ் எனக்கு ஒரு பாடக ராக, திருமண மங்களப் பாடல் எழுதுப வராகவே, அறிமுகமானார். அவர் அந்நாட்க ளில் இஸ்லாமிய கீதம் என்று இரண்டு பிரசுரங்களையும் வெளியிட்டார். திருமணம், பெருநாள், மற்றும் பொது விழாக்களில் இசை விருந்து (பஜா) வழங்கும் கோஷ்டியொன்று மிருந்தது. சம்ஸ், ஹம்ஸா, மதனி, நெய்னா முகம்மது, மம்மதா ஹிர் போன்றவர்கள் அதில் முக்கியமானவர்கள்.
மல்லிகை ஆகஸ்ட் 2008 ஜ் 35

Page 21
சில பாரம்பரியக் கலைகளை இன்று வரை முன்னெடுத்துச் செல்லும் கலா பூசணம் எம். எச். எம். அலியை எவரும் மறந்துவிட முடியாது.
1965 வரையிலான திக்வல்லையின் கலை இலக்கியப் பின்னணி என் மன திலே வித்துக்களாக விழுந்திருந்தமை, எனது உருவாக்கதில் உந்துதலாக இருந் திருக்க வேண்டும்.
帶蠍鬱帶馨帶
வாழும் நினைவுகள் - 02
iGirGiff Eigj6)f வழிகாடிடல்
இலக்கியக் கர்த்தாக்களைப் பாட சாலைகளோ, கல்விக் கல்லூரிகளோ, பல்கலைக்கழகங்களோ உருவாக்குவ தில்லை. ஆனால், இங்கு இனம் காணப் பட்டு, சரியாக வழி காட்டப்பட்டதன் மூலம் உருவாகிய இலக்கியக் கர்த்தாக்களுக்கு நிறைய உதாரணங்கள் கூறலாம்.
பிரச்சினை என்னவென்றால், மேற் குறித்த கல்வி நிறுவனங்களில் இலக்கிய நெஞ்சம் கொண்ட, மாணவர் வளர்ச்சியில் அக்கறை கொண்ட ஆசிரியர்களும், விரிவுரையாளர்களும் இருக்கிறார்களா என்பதுதான்.
நான் 1964காலத்தில் நான் அழுத்கம ஸாஹிரா கல் லூரி, அரசாங்க விடுதியில் தங்கியிருந்து கல்விகற்றேன்.
1969 வரையிலான
கல்லூரியில் தமிழ் மன்றம், இஸ்லாமிய மன்றமென்றெல்லாம் இயங்கின. இவற்றில் பதவி வகித்தும் பங்குபற்றியும் என்னுள் கனன்ற ஆர்வத்தை ஓரளவு தீர்த்துக் கொள்ள வாய்ப்புக் கிட்டியது. கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கு கொண்டு பரிசுகளைத் தட்டிக் கொள்ளவும் முடிந்தது.
பாடசாலை வாசிகசாலையில், நல்ல புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்புக் கிடை த்தது. நாளாந்தம் பத்திரிகை படிக்கவும் முடிந்தது. நகரசபை வாசகிசாலையும் கைகொடுத்தது. ஏ. இக்பால் ஸேரின் தனிப் பட்ட நூல்நிலையும் பெரிதும் உதவியது.
சகமானவர் வை. ஐ. எம். ஹாபிஸ் 'அரும்பு' என்ற கையெழுத்துச் சஞ்சிகை யைத் தனிப் பட்டரீதியில் நடாத்திக் கொண் டிருந்தார். அதிலே கதை, கவிதைகள் எழுதிக் கொண் டிருந்தேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக எமது கல்லூரியிலே கலை- இலக்கிய ஆர்வ முடைய ஆசிரியர்கள் சேவையாற்றி னார்கள். கவிஞர் ஏ. இக்பால், இர. சந்திர சேகரன், எம். ஐ. எம். அமீன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். −
அக்கால கட்டத்தில் ஏ. எம். ஏ. அஸிஸ், சில்லையூர் செல்வராசன், எச். எம். பி. முஹிதீன் போன்றோர் வருகை தந்து சொற் பெருக்காற்றிய நிகழ்ச்சி இன்னும் மறவா நினைவாக என்னோடு வாழ்கின்றது.
மல்லிகை ஆகஸ்ட் 2008 * 36

இலக்கியத்தில் குறிப்பாகக் கவிதை எழுவதில் ஆர்வமுடைய பல நண்பர்கள் இருந்தனர். இதனை எப்படிவளர்ப்பதென்றோ, இணைந்து செயற்படும் முறையோ எங்களு க்குப் புரியவில்லை.
ஒருநாள் இக்பால் ஸேர் எங்களை அழைத்து, "ஸ்வறிறா கவிதை மன்றம் ஒன்றை அமைப்போம். கவிதை எழுதக் கூடியவர்களுக்கு அறிவிக்கவும் என்றார்.
மன்றம் அமைத்தாயிற்று.
'எண்ணமிழுக்குதடி" என்ற பொதுவான தலைப்பைத் தந்து அடுத்தவாரம் கவிதை எழுதி வருமாறு கேட்டுக் கொண்டார்.
அடுத்தவாரம் எல்லோரும்- ஏழெட்டுப் பேர்தான். மேற்குறித்த தலைப்பில் எழுதிய கவிதைகளை வாசித்தோம். இப்படி வாரா வாரம் கவிதை எழுதும், பயிற்சி தொடர் ந்தது.
தெரிவு செய்யும் நல்ல கவிதைகளைத் தொகுத்து வெளியிடுவோம். என்ற மகிழ்ச்சி யான செய்தியும் எமது காதுகளில் விழு ந்தது.
அது படிப்படியாகப் பரிமாணமடைந்து, "சுவை' என்ற பெயரில் ரோணியோ கவிதை யேட்டினை வெளியிடுவதாகத் தீர்மானமா யிற்று. எங்களுக்கோ இரவு பகலாகத் தூக்கமேயில்லை.
அன்று வெளியீட்டு விழா. முதலாம் இதழில் எமது கவிதைகள் மாத்திரமன்றி, நீலவாணன், பளில் காரியப்பர் போன் றோரது கவிதைகளும் இடம் பெற்றன.
இந்த சஞ்சிகையின் ஆசிரியராக என் னையே நியமித்தனர். அந்தப் பொறுப்பில் நின்று செயற்படும் தகுதி அப்போது எனக்கு இருந்ததா? இல்லையா? என்று தெரியா விட்டாலும், அந்த வாய்ப்பு எனது இலக்கிய முனைப்பில் ஒரு பாய்ச்சலாக அமைந்த தென்பதையே குறிப்பிட விழைகிறேன்.
இதன் வெளியீட்டு விழாச் செய்தி பத்திரி கைகளில் வெளிவந்தன. சஞ்சிகை பற்றிய விமர்சனக் குறிப்புக் கூட, தினபதி கவிதா மண்டலத்தில் வெளிவந்தது.
கல்வி நிறுவனங்களில் என்றும் மான வர்கள் இனம் காணப்படுகிறார்கள். வழி காட்டப்படுகிறார்களில்லையே என்பதுதான் கவலைக்குரிய விடயமாகும். கொஞ்சத் தூரத்துக்கு அவர்களை முன்னெடுத்துச் சென்றால், அதற்குமேல் அவர்கள் தமது கல்வி இலக்கையும் பாதுகாத்துக் கொண்டு, இலக்கியத்துறையில் வளர்ந்து கொள்வார் களென்பது எனது சுய அநுபவ உண்ம்ை.
பல்வேறு இலக்கியப் போட்டிகளில் தெரிவு செய்யப்படுபவர்கள், பரிசு பெறுவ தோடு அவர்களின் கதை சரியாகிவிடுவது எவருக்கும் தெரிந்த கவலைக்குரிய விடயமே. சிலவேளை உயர் கல்வித் துறைக்கோ, தொழில் வாய்ப்புப் பெறவோ, இரண்டொரு புள்ளிகள் பெற்றுக் கொடுக்க அந்தச் சான்றிதழ்கள் ஒருவேளை உதவ 6)IT b.
臀姆姆姆登登
(தொடரும்)
மல்லிகை ஆகஸ்ட் 2008 * 37

Page 22
EÜS OOITONGlöi DøgCOLOULLE 95buDET Wijleog Brüub
ஆனந்தமயிலின்
EPU DIUggb9gDEUu5ofei lugl'
- எம். கே. முருகானந்தன்
விடுதலை அவாக் கொண்ட இந்தக் குரலிலுள்ள ஆழ்ந்த துயரம் உங்களுக்குக் கேட்கிறதா?
'தெளிவுடன் படுத்திருந்த போதும், விடுதலை தேவைப்பட்டது. விறைப்பு, அது தரும் வருத்தம். சுகத்தின் நழுவல் யாவும் உலுப்பியது. எழுந்து பாய்ந்தோட முடிய வில்லை. அது இயலுமாயின் ஒன்றுமில்லை. வானகத்தில் கிளம்பிப் பார்க்க ஒடுகளும் கைமரங்களும் தடுத்தன."
'கால்கள் உணர்வின்றி மரத்துப் போய்க் கிடக்க, எழுந்து நடமாடவும் முடியாதபடியான நலக் கேட்டின் உடல் வேதனையும், மன வேதனையும் பாராங்கற்களாய் அழுத்த, விடுதலை வேண்டும் என ஒலமிடும் அவலக் குரல் அது. மரணத்தைத் தவிர, வேறென்ன விடுதலை இந்த உயிருக்குச் சாத்தியமாகும்?"
இந்த வாக்கியங்கள் எத்தகைய உணர்வலை உங்களிடையே எழுப்பினவோ தெரியாது. ஆனால், "இத்தகைய நிலை வந்தால்..' என்ற கற்பனை மூளைக் கலங்களுக்குள் உறையவே, விரிந்த கடலின் கரும் ஆழத்துக்குள் மூழ்கடிக்கும் துயராய் எனது ஆன்மாவை அமுக்கிக் கொண்டது. ஆயினும், தொடர்ந்து வாசிக்கும் போது, அது நம்பிக்கை வரட்சி எனும் கொள்ளை நோய்க் கிருமியாக ஊடுருவிப் பரவாது, வாழ்வின் மீதான பற்றுதலையும் வளப்படுத்துவதாகவே உணர்ந்தேன்.
த. ஆனந்தமயில்- என்ற அதிகம் அறியப்படாத, அகவுணர்வு உந்த உள்மன யாத்திரை செய்யும் எழுத்துச் சிற்பியின் "ஒரு எழுதுவினைஞனின் டயறி என்ற புதிய நூல் வெளியாகி யுள்ளது. இந்த நூலிலுள்ள 'கலை தற்போது என்ற கதையைப் படித்த போது, எழுந்த உணர்வுகளே மேற் சொன்னவை. 62 பக்கங்களுக்குள் 12 சிறுகதைகளை அடக்கிய குறுநூல் இது. ஆயினும், ஈழத்து இலக்கியப் பரப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பேராற்றல் மிக்கது. இதற்குக் காரணம் இந்தச் சிறுகதைகள் சொல்லப்பட்டுள்ள விதம்
மல்லிகை ஆகஸ்ட் 2008 ஜ் 38
 
 

தான். எமது தேசத்தின் பெரும்பாலான சிறுகதைகள் போல, இவை வெறுமனே கதையைச் சொல்லிச் செல்லும் சிறுகதை கள் அல்ல. அடுக்கடுக்கான சம்பவங்களை யும், திடீர்த் திருப்பங்களையும் கொண்ட கதைகளும் அல்ல. அதற்கு மாறாக, வரட் சியான வசனங்களையும், தத்துவ விளக் கங்களையும் கொண்ட ஒட்டம் அற்ற பொது சன ரசனைக்கு அப்பாற்பட்ட "உயர் இலக் கியப் படைப்பும் அல்ல.
இவற்றிற்கு மாறாக, அந்த நூலில் அடங் கும் படைப்புகள் அனைத்துமே சுய அநுபவ த்தின் வெளிப்பாடுகள். நாளாந்தம் காணும் நிகழ்வுகள். அத்தோடு முகம் காட்டும் கண் ணாடி போல, எமது வாழ்வின் தெளிவான பிரதிபலிப்பாகவும் இருக்கின்றன. இவற்றால், மிகுந்த நம்பகத்தன்மை கொண்டவையும் கூட. இருந்த போதும், தகவல் களஞ்சியம் போன்ற அநுபவக் குறிப்புக்களாகக் கணிக் கக் கூடிய கதைகளும் அல்ல. ஆழ்ந்த ரச னையும், கூர்ந்த அவதானிப்பும், மானுட நேயமும் கொண்ட ஒரு சாதாரண குடி மகனது உணர்வுகளின் கலாபூர்வமான சித் தரிப்பு என்றே சொல்ல வேண்டும்.
நூலின் முதலாவது சிறுகதையாக அமைவது 'ஒற்றைக்கால் கோழி, எள்ள லும், அங்கதமும் விரவிக் கிடக்க, வடமராட் சியின் வழக்கு மொழியின் இனிமை ஆங்கா ங்கே தெறித்து விழ, கவித்துவமான வரிகள் மனசோடு பேச, நான் மிகவும் இரசித்துப் படித்த கதைகளில் இதுவும் ஒன்றானது. கதையின் உள்ளடக்கம் ஏதோ புதினமா னது அல்ல.
கதையின் பிரதான பாத்திரங்கள் கோழி யும் அவருந்தான். அவர் ஒரு எழுத்தாளர்.
அதுவும், வேலையிழந்த பிறகு ஒருவித ஆத்திர சுபாவம் எழும் ஒருவர். "அற்புதமான கதைக் கருவைச் சுமந்து கொண்டு வந்த வருக்கு தான் உட்கார்ந்திருந்து எழுதும் கதிரையில் கோழி படுத்திருப்பதைக் கண்டு. கரு உருப்படாமல் சிதைய எல்லாம் அவருக்குக் குழப்பமாகி விட்டது. ஆத்திரம் மேலிட, அவரிட்ட கத்தலில் மனைவி கோழியை ஒரு மரத்தில் "தளர்ச்சி மடங்கால்' கட்டிப் போட்டாள். கட்டிப் போட்ட கால் புண்ணாகிச் சீழ்பிடிக்க, நோய்க் கோழியாகித் தின்னவும் முடியா மல், மீனை எதிர்நோக்கி நிற்கும் கொக் காய், கண்களைச் செருகி ஒரு இறப்பை எதிர்நோக்கி நின்றது என மிக நயமாகப் பதிவு செய்கிறார்.
நாளடைவில் கோழியில் மாற்றம் தென் பட்டது. ஒற்றைக்காலால் கெந்தி நடக்க ஆரம்பிக்கிறது, சாப்பிடுகிறது. பிறகு புண் பட்ட கால் அழுகி விழுந்தது தெரிகிறது. உச்சகட்டமாகப் பக்கத்து வீட்டுச் சேவல் இதை மிதிக்கவும் செய்கிறது. முடமாகிப் போனாலும், வாழ்வு அஸ்தமித்து விடுவதி ல்லை. திடமிருந்தால் அதிலிருந்து மீளவும், வாழவும் முடியும் என்பதைக் குறியீடாகச் சொல்லும் கதை. ஆயினும், கதையம் சத்தை விட, நடைமுறை வாழ்வின் தரிசன மாகவே ஒலிக்கிறது. வேலையின்மை, போதிய வருமானம் கிடைக்காமை, அத னால், ஏற்படும் மன உழைச்சல் கணவன் மனைவியிடையேயான கருத்து வேறுபாடு, அதை அனுசரித்து நடத்தல் என நிஜ வாழ்வின் பிரதிபலிப்பாக உள்ளது.
கோழியைச் சிறகில் பிடிக்க, அது பக்கத்து வீடுகளில் இன்று தம்பி வீட்டில் இறைச்சிக் கறிதான் என்று பிரஸ்தாபிக்க."
மல்லிகை ஆகஸ்ட் 2008 ஜ் 39

Page 23
'காவிப் பற்களை எப்படியும் இன்று வெள்ளையாக்கி விடவேண்டும் என்ற முனைப்புடன் பழைய தகரம். வளரும் தென்னம்பிள்ளை, பயன்பாட்டை முடித்துக் கொண்ட சட்டி, தறித்த உணாமர வேர் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு.
"ஆத்திரம் கொப்பளிக்க- மனைவி மூன்றாம் வீட்டில் நிற்பதாக நினைத்து, பலத்து அவளை அழைத்தார்.'
இவ்வாறு கதை முழுவதும் உள்ளத்துள் உவந்து சிரிக்க வைக்கும் அங்கதமும், உள் ளத்தைச் சிலிர்க்க வைக்கும் செழுமை யான நடையும் நிரம்பிக் கிடக்கின்றன. மல் லிகையில் ஐப்பசியில் 1981 இல் இது வெளி யாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவதாக, "தை மாசியில் சமுத் திரம் சாந்தமாகிக் குளம் போலக் கிடந்தது. என கள அறிமுகத்துடன் ஆரம்பிக்கும் கதையானது 'முருகைக் கற்பூக்கள் ஆகும். கடலரசின் பாதாள அந்தப்புரத்தில் ரகசியமாகப் புதைந்து கிடக்கும் வனப்பை கலையழகோடு பதிவு செய்யும் தனித்துவ மான படைப்பாகும். "எவ்வளவு அழகான குகைகள், சோடனைகள், அவற்றை அலங் கரித்து வைத்திருக்கும் கடல்தாய் எவ்வ ளவு அற்புதமானவள். மஞ்சள், குருத்துப் Ljë60)uJITuij, gostigst 6JTuiu, முருகைக் கற்பூக் கள் மலர்ந்திருந்தன. கற்பார்கள் பவளம் போல தோன்றின, வர்ணம் தீட்டிய மீன்கள் வகைவகையாக நீந்தித் திரிந்தன. சூரியக் கதிர்கள் நீரினுடாக." எனக் கடலின் அழகை நேர்நின்று எம்மைப் பார்க்க வைப்பது போலச் சித்திரிப்பதுடன், கடல் சார் தொழிலின் நுட்பங்களை அநுபவத் தேர்ச்சியுடன் தருகின்ற படைப்பு இது.
கடற்தொழில் முன்னைய காலங்களில் சிறப்பாக நடந்தபோது, கடற்கரை சந் தோஷத்தில் பூரித்தது. கிளித்தட்டுகள் விளையாடினர். கரகம் எடுத்தனர். கூத் தும் நாடகமும் போட்டனர். பந்து விளை யாடினர்." என அவர்கள் வாழ்வின் இனிய பக்கத்தைச் சொற்சித்திரமாக வரைகிறார்.
ஆம் அது ரம்மியமான காலம். ஆனால், இன்று?
வெறுமை கணக்கிறது. கரையொதுங் கும் சிதைந்த வீடுகளும், உடைந்த கலங் களுமே கிடக்கின்றன. மீன்கண்ணி பாடவில்லை. எங்கும் அகதிமை தெரிகி றது. சிறுகட்டுமரங்களே மீன்பிடிக்குப் பயன் படுத்தப்படுகின்றன. முனைக்கு உட்புறமா கவே தொழில் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போகிறார்கள்." என்றெல்லாம் விபரித்துக் கொண்டு போகையில் வாழ்ந்த நாட்களின் செழிப்பும், வளமிழந்த நாட்க ளின் துன்பமும் கடலின் அலைகள் போல எம்மையும் துயரத்தில் நனைத்துப் பரவுகி ன்றன.
'நிலத்தின் மீனாய் கடற்கரை ஊர் மனைக்குள் துடிக்கிறது. இளமையின் முருகைக் கற்பூக்கள் அழுகின்றன. எனக் கவிதை வரிகளாக அக்கதைய நிறைவு செய்கிறார்.
'காக்காச்சி கரிமகளே மற்றொரு வித்தி யாசமான படைப்பு. வாழ்வின் ஆறாத் துயரம் செறிந்த காட்சிகளைக் கூட உணர் ச்சி வசப்படுத்திக் கண்ணிருக்குள் ஆழ்த் தும் சின்னத்திரை நாடகங்கள் போலன்றி, சிலேடையும், எள்ளலும் கூடி வர சிந்திக்க
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 40

வைக்கும் கலைப்படைப்பாக ஆக்க முடி யும் என்பதற்கு நல்ல உதாரணமாகும். கட லோரக் குடிசையில் பிறந்த பெண்ணை இராஜகுமாரியாகவும் அவள் வாழ்ந்த வீட்டை "சுவாத்திய வசதிக்கான மண்வீடா கவும் அவளது தொழிலை 'பொன்னிற சுளகுடனும், பெட்டியுடனும், வெள்ளி மீன் வர்த்தகமாகவும் "பிரயாணத்திற்கான வாக னமாகத் தனது திருப்பாதங்களையும்' என உருவகித்துக் கூறுவன நயந்து ரசிக்கத்தக் கன. கதையின் ஊடே போரின் கொடுரமும், இடப்பெயர்வின் அவலமும், இழப்புகளின் துயரமும் மென்குரலில் பேசி, பின்னாலுள்ள அரசியலையும் நாசூக்காகச் சுட்டியே நகர்கின்றன.
சிகரங்கள், லவுஸ்பீக்கர், மேளச்சமா, சகடை, சின்னமேளம், மெல்லிசை, வாண
வேடிக்கை என ஒரு காலத்தில் கிராமத்
தின் முக்கிய ஒன்றுகூடல் நிகழ்வாயிருந்த
ஊர்த்திருவிழா பற்றியது, "திருவிழா' என்ற சிறுகதை. ஒரு பெண்ணின் பார்வையாக மிகவும் அலாதியாகச் சொல்லப்படுகிறது. நிகழ்வுகளைச் சுருக்கமாகவும் செறிவாக வும், சொற்களால் விதைத்துச் செல்வதுடன் "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்' என்ற முற்போக்குக் கருத்தை நோக்கி நகர்த்தியிருப்பது கவனத்திற்குரியது.
எனக்கு அறவே புரியாத படைப்பு கொலுமீட்பு, மீண்டும் வாசித்துப் பார்த்த போதும் தெளியவில்லை. ஏதாவது வசன ங்கள் தவறுதலாக இடம் மாறிப் போடப் பட்டிருக்கலாம் என என்னை நானே திருப்திப் படுத்திக் கொண்டேன். ஆயினும், இந்த நூலின் வடிவமைப்பையும், அச்சு படிகள் திருத்துவதை யேசுராசா ஏற்றிரு
ந்தார் என்பதை ஆனந்தமயிலின் மகன்
நித்திலவர்ணனின் பதிப்புரையில் கண்ட
தால் தவறுக்கு இடமில்லை என்பது தெளிவு. ஏனெனில், யேசுராசா ஒருபோது அரைகுறை வேலை செய்பவரல்ல என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும். எனவே, இதைப் புரிந்து கொள்வதற்கான பக்குவம், பொறுமை அல்லது தேர்ச்சி எனக்கில்லை என்றே முடிவுற்றேன்.
சிறுகதை எழுத்தாளர்களின் படைப்பு க்களை ஆராய்ந்து பார்த்தால், அவர்களின் படைப்புத் தரம், கால ஓட்டத்துடன் மாறுபடுவது தெரியும். பெரும்பாலான வர்களின் ஆரம்பகாலப் படைப்புகள் மிகச் சாதாரண தரத்திலேயே இருப்பதுண்டு. தமது படைப்புகளும் பத்திரிகை சஞ்சிகை களில் வரவேண்டும் என்ற ஆவலில் எழுத ஆரம்பிப்பார்கள், இவர்கள். அதாவது, தமக்கான அடையாளத்தைத் தேடுபவர் களாக இருப்பர். அநுபவமும் கால நகர்ச்சி யும் இவர்களது பிற்காலப் படைப்புகளின் தரத்தை உயர்த்தும். மாறாக, ஆரம்பத்தில் சில நல்ல கதைகளைப் படைத்தாலும், இலக்கிய உலகின் மாற்றங்களுக்கு ஈடு கொடுத்து தமது படைப்புகளின் தரத்தைப் பேண முடியாது பின் தங்குபவைகளும், ஒதுங்கிக் கொள்பவர்களும் அடுத்த பிரிவினர்.
ஆழ்ந்த இலக்கிய உணர்வும், தேடலும் கொண்டவர்களாகப் படைப்புலகுள் நுழை பவர்கள் மூன்றாவது பிரிவினர். இவர்களது படைப்புகள் கால ஓட்டத்துடன் நீர்த்துப் போவதில்லை. மாறாகப் பட்டை தீட்டிய வைரம் போல் இறுதி வரை ஜொலித்துக் கொண்டே இருப்பார்கள்.
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 41

Page 24
இத்தொகுப்பில் உள்ள 12 சிறுகதை களில் நான்கு எழுபதுகளில் எழுதப்பட்ட வையாக இருக்க, மூன்று எண்பதுகளிலும், ஏனைய ஐந்தும் தொண்ணுறுகளில் படை க்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுப்பின் கடை சிக் கதையாக அமையும் விளக்கீடு தான் காலத்தால் முந்தியதாக இருக்கிறது. அதா வது, 1971 இல் எழுதப்பட்ட படைப்பு. கண வனை இழந்த பின்பு, பள்ளி செல்லும் தனது பிள்ளையை வளர்ப்பதற்காகச் சந்தையில் மீன் விற்கும் இளம் பெண் பற்றியது. ஊராரின் வசை மொழிகளைத் தாங்க முடியாது வீட்டை விட்டு வெளியேறி மகனுடன் பிற ஊர் செல்ல விழைகிறாள். விளக்கீட்டன்று தனது ஒலைக் குடிலை நெருப்புடன் சங்கமமாக்கி, அவர்கள் வசை மொழிகளையும் அதனுள் நீறாக்கிப் புது வாழ்வு தேடிப் புறப்படுகிறாள்.
இது அவரின் ஆரம்பகாலக் கதையாக இருந்த போதும், அதீத கற்பனைகளற்று நாளாந்த வாழ்வின் பிரதிபலிப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தேவையற்ற சம்பவச் சித்திரிப்புகளோ, மிகையான சொல்லா டலோ அற்ற சிக்கனமான சொற்சித்திரமாக அமைகிறது. அன்று முதல் இன்றுவரை, அவர் தனது படைப்புகளை கலாபூர்வமாக வெளிப்படுத்துவதில் அக்கறை கொண்டி ருப்பதை உணர முடிகிறது. ஆயினும், கால ஓட்டத்தில் அவரது எழுத்துநடை மெருகேறியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. கருவைப் பொறுத்தவரையில், அவரது ஆரம்ப காலப் படைப்புகளில் முற்போக்குக் கருத்துகள் முனைப்புக் கொண்டிருந்த போதும், பின்பு அரசியல், சூழல் மாற்றங்கள் காரணமாக இனப்பிரச் சினையால் மக்கள் எதிர்நோக்கும் துன்ப
துயரங்களும், சவால்களும் முனைப்புப் பெற்றமை காலத்தின் நியதி எனலாம்.
"அப்போதெல்லாம் சமதர்மம் நோக்கிய சமூக விடுதலையே அவர் சிந்தனை யெல்லாம் குடிகொண்டிருந்தது. அவர் படைப்புகளும், அந்த அடித்தளத்திலேயே வேர் கொண்டவையாயினும், கடல் சார்ந்த கிராமிய வழக்காறுகள் சார்ந்த, நம்பிக் கைள் சார்ந்த பண்பாட்டுக் கூறுகள் அவற் றைக் கலாபூர்வமாகப் பரிணமிக்கச் செய் தன. எனக் குப்பிழான் ஐ. சண்முகம் இந் நூலின் பின் அட்டைக் குறிப்பில் குறிப்பிடு கிறார். 1970லிருந்து நண்பனாயிருந்த இன்னொரு சிறந்த எழுத்தாளர் ஒருவரின் கூற்று இதுவென்பது கவனிக்கத்தக்கது.
கடல் சார்ந்த கிராமியத்தின் சுயமான குரல், வறுமையின் துயரம், குடும்பப் பாரங்களின் சுமைகளும் அழுத்தும் அரச ஊழியனின் இயலாமைக் குரல், இயல்பான வாழ்விழந்து அந்நியத்துப்பாக்கிகளின் கீழ் சுதந்திரமிழந்த போதும், வாய் மூடி மெளனிக் காது வார்த்தைகளின் கோலங்களுக்குள் மறைந்து நின்று அடக்கு முறையின் கொடு ரங்களை அம்பலப்படுத்த முயலும் எதிர்ப் புக்குரல், சமதர்மக் கோட்பாட்டில் உறுதியா யிருந்த குரல் எனப் பலவாறு ஆனந்த மயி லின் படைப்புகள் பற்றித் தொகுத்துக் singp6)rTib.
இருந்த போதும், ஈழத்துப் புனைக்கதை விமர்சகர்கள் மற்றும் இலக்கிய ஆய்வாளர் களின் பட்டியல்களில் இதுவரை இவரது பெயர் இடம்பெறாமல் போனமை துரதிர்ஷ் டம் என்றே சொல்ல வேண்டும். சம்பவ ங்களின் தொகுப்பு என்பதற்கு அப்பால் ஆழ்ந்த அவதானிப்புகளுடன், அகமன
மல்லிகை ஆகஸ்ட் 2008 ஜ் 42

யாத்திரை செய்து, புனை மொழியின் செழுமையுடன், தனது சிறுகதைகளின்
தரத்தை உன்னதங்களுக்கு உயர்த்தியி
ருக்கிறார் ஆனந்தமயில் என்பதை உறுதி யோடு சொல்ல முடியும், இப்படைப்புகள் வீரகேசரி, தினக்குரல் போன்ற செய்திப் பத்திரிகைகளின் ஞாயிறு வெளியீடுகளி லும், மல்லிகை, சமர், அலை போன்ற தர மான சிற்றேடுகளிலும் வெளி வந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
அட்டைப்படம் இருவண்ணத்தில் மட் டும் அமைந்துள்ளதால் இன்றைய நவீன பல்வண்ண நூல்களுக்கு இருக்கும் கவர் ச்சி கிடையாது. ஆனால், குப்பிளான் இன் னொரு இடத்தில் குறிப்பிடுவது போன்ற 'ஆனந்தமயிலின் சோகம் தோய்ந்த குரலை JLD60flueóT 960 L UL g6Sub 856) பூர்வமாக வெளிப்படுத்துகிறது. ஆம், செம் மையான கலைப்படைப்பிற்கு கவர்ச்சியும்,
வெளிப்பகட்டும் அல்லாத ஒவியம் ஏற்ற
தென்றே கருதத் தோன்றுகிறது.
ஆயினும், இங்கு நான் எழுதியவை எல்லாம் என் மனம் சார்ந்த வெறும் வார்த்தைகளே. சுருக்கமாகவும், செறிவா கவும் ஆனந்தமயில் எழுதிய படைப்புகள் பற்றிய நயவுரை அல்ல. நூலுக்கான முன்னுரையில் முருகையன் கூறுவது போல 'ஆனந்தமயில் போன்ற நவீன கலைஞனொருவனின் சிறுகதையைச் சரியாகக் கிரகித்து நயப்பதற்கு அதனை முழுமையாக வாசிப்பதை விட, வேறு குறுக்கு வழி ஒன்றும் இல்லை."
நீங்களும் வாசித்துப் பார்த்தால் தான் அதன் நயம் புரியும்.
Excellent Photographers Modern Computerized Photography For Wedding Fortraits
& Child 5ittings
ア
Photo Copies of ldentity Cards (NIC), Paөөport & Driving Licences Within 15 Minutes
300, MOdera Street,
Colombo - 15. Tel: 2526345
மல்லிகை ஆகஸ்ட் 2008 率 43

Page 25
ஜீவ தரிசனம்?
வராைற்று
ஆவணம்
ബ%
5டந்த இரண்டு மூன்று மாதங்களுக்கு மேலாக நானொரு ஆவணப் பதிவு வேலை தொடர்பாகத் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றேன்.
கடந்த 60 ஆண்டுகளுக்கு C3LD6)Tes நான் இங்கு பங்களித்து வந்துள்ள சகல ஆவணத் தகவல்களையும் எதிர்காலச் சந்ததியின் வரலாற்றுத் தேவை கருதி, ஒரு பெரும் நூல் தொகுப்பாக வெளியிட முயற் சித்து, அது சம்பந்தமாக ஆரம்ப அடிப்படை வேலைகளைத் தொடர்ந்து செய்து கொண்டு வருகின்றேன்.
இந்தப் பாரிய வேலைக்கு எனக்குப் பக்கபலமாக நின்று உழைத்து வருபவர் நண்பர் மேமன்கவி, மற்றவர் எனது மகன் Happy g6Su661.
உங்களுக்கெல்லாம் ஏற்கனவே நன்கு தெரியும், நான் இதழ் விற்றுப் பிழைப்பவன் என்பது. அடுத்து, அதிக அதிகமான
சர்ச்சைகளுக்கும், மேலதிகமான கவனிப்பு
க்கும் உள்ளாக்கப்பட்டவன் என்பதும்.
இதற்கான சாட்சியப் பதிவாகவே இந்த ஆவண நூலை எதிர்காலச் சந்ததியின்
á"öGjögUoI3-------
கரங்களில் சாட்சியமாக அர்ப்பணிக்க விரும்புகின்றேன்.
இது சாதாரணமாக வெளிவரக் கூடிய புத்தகமல்ல. பலவிதமான எழுத்துச் சாட்சியங்களையும், உருவப் படங்களை யும், தகவல் திரட்டுக்களையும் ஒன்று திரட்டி வரலாற்றுப் பதிவாக நின்று நிலைக்கக் கூடிய ஒர் ஆவண நூலாகத் திட்டமிட்டுத் தயாரிக்கப்படுகின்றது.
இந்த 'ஜீவ தரிசனம்" என்ற ஆவணப் பதிவேட்டைத் தயாரித்து வெளியிட, பெரும் தொகைப் பணம் தேவை.
அந்தளவு தொகைப் பணம் என்னிடம் இல்லை. இதைப் பகிரங்கமாகச் சொல்ல நான் வெட்கப்படவுமில்லை.
கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக என்னை- எனது இலக்கிய உழைப்பைப் புரிந்து கொண்டவர்களிடம் நான் மனந்திறந்து உதவி கேட்கின்றேன்.
இந்த வரலாற்றுத் தகவல்களை ஆவ ணப்படுத்தி, அடுத்த தலைமுறையி னரு க்கு உதவ உதவிசெய்வீர்களானால், அதன் முழுப் பெருமையும் உங்களையே சாரும்.
மல்லிகை ஆகஸ்ட் 2008 率 44
 

ஈழத்து நாவல் வரலாறு (10) 1960 - 1970
- செங்கை ஆழியான். க. குணராசா
fழத்து நாவல்களின் அடுத்த காலகட்டத்தில், அதாவது 1960 - 1970 காலத்தசாப்தத்தில், பின்வரும் 54 நாவல்கள் வெளிவந்துள்ளன.
1.
செல்லும் வழி இருட்டு (1961) சொக்கன். தினகரன் தொடர், நூலுரு - 1973.வீரகேசரி
வெளியீடு,கொழும்பு 2. இங்கிருந்து எங்கே? (1961) இளங்கீரன், தினகரன் பத்திரிகைத் தொடர், 3. தீ (1961) எஸ்.பொன்னுத்துரை, சரஸ்வதி வெளியீடு, சென்னை 4. மத்தாப்பு (1962) கனக செந்திநாதன், (தொகுப்பாசிரியர்)சன்மார்க்கசபை, குரும்பசிட்டி 5. வீடற்றவன் (1962) ஸி.வி. வேலுப்பிள்ளை, சென்னை
6 பாரிஸ்டர் சிற்றம்பலம், (1962), வி.லோகநாதன்
மலைக்கொழுந்து (1962) நந்தி (செ.சிவஞானசுந்தரம்) தினகரன் தொடர். நூலுரு1962. ஆசீர்வாதம் அச்சகம், யாழ்ப்பாணம் 8. ஏமாற்றம் (1962) என்.எம்.ஹனிபா கல்கின்ன கலாநிலையம், கண்டி 9. அன்பளிப்பு (1962) அன்பன், நொறிஸ் வீதி, கொழும்பு
10. சரிந்த வாழ்வு (1962), கே.டி.கே. பிள்ளை, சங்கு பத்திரிகைத் தொடர் கண்டி 11. சீதா (1963) சொக்கன், விவேகி தொடர் நூலுரு-1974 வீரகேசரி வெளியீடு, கொழும்பு 12. பாசக்குரல் (1963) அருள் செல்வநாயகம், கலைமகள் காரியாலயம், சென்னை. 13. மர்மக்கடிதம் (1963) என்.எம்.ஹனிபா. கல்கின்ன கலாநிலையம், கண்டி 14. குட்டி (1963) யோ.பெனடிக்ற்பாலன், எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகம், கொழும்| 15. அந்தரத்தீவு (1963) க.ச.மகேசன், அல்லாலை, கொடிகாமம் 16. அவள் (1963) கவிஞர் விஜயேந்திரன், விஜயா பிரசுரம், மல்லாகம் 17. பெண்ணா பேயா? (1963) எம.ஏ.தாஸ், சுதர்ஷன் பப்பிளிஸ்சர்ஸ், யாழ்ப்பாணம் 18. வன்னியின் செல்வி (1963) கச்சாயில் இரத்தினம், ஆசீர்வாதம் புத்தகசாலை, uJITpt IUT600TLD
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 45

Page 26
19. உறவும்பிரிவும் (1964), கே , எஸ். ஆனந்தன், தமிழ் மன்ற வெளியீடு, இணுவில். 20. காலம் மாறுகிறது (1964) இளங்கீரன், தினகரன் பத்திரிகைத் தொடர். 21. நெடுந்துாரம் (1964), டி.எஸ். ராஜ?. செற்திப்பத்திரிகைத் தொடர், கண்டி 22. கிராமப் பிறழ்வு (1964) ம.மு. உவைஸ், சிங்களமுலம் - மார்டின விக்கிரம சிங்க, பூரீலங்கா சாகித்யமண்டலய வெளியீடு. கொழும்பு
23. சதியிற் சிக்கிய சலீமா (1964). ஹமீதா பானு, நல்வழிப்பதிப்பகம், கொழும்பு 24. தூரத்துப்பச்சை (1964) கோகிலம் சுப்பையா தமிழ்ப்புத்தகாலயம், சென்னை
25. உயிர்க்கூடு (1964) க. ம.செல்வ
ரெத்தினம் வட்டு கிழக்கு. சித்தங்கேணி
26. அபலையின்கடிதம் (1965) செ.கணேச லிங்கன், ஆங்கிலமூலம் - ஸ்ரீபன் செவாக், பாரி நிலையம், சென்னை
27. நீண்டபயணம் (1965) செ.கணேச லிங்கன், பாரிநிலையம், சென்னை
28. அபலைப்பெண் (1965)- தெ.செ.நட ராசா, தமிழ்மணிப்பதிப்பகம், யாழ்ப்பாணம். 29. காலத்தின் விதி (1965) அ பொ. செல்லையா, தாய்நாடு பதிப்பகம், கொழும்பு 30. ஜீவ யாத்திரை (1965) யாழ்ப்பாணன், கலாபவனம், பருத்தித்துறை 31. சடங்கு (1966) செ.கணேசலிங்கன், பாரிநிலையம் சென்னை
32. ஏழையின் காதல் (1966) க.நாகப்பு, வட்டுக்கோட்டை
33. பாவையின் பரிசு (1966) துரை மனோகரன், சண்முகநாதன் அச்சுயந்திர சாலை, யாழ்ப்பாணம்
34. 5 soleisög5 (1966) JT. T(86o6rb6)Is, தமிழ் எழுத்தாளர் சங்கம், திருகோணமலை
35. ஏமாறச்சொன்னது நானா? (1966) கே.எஸ்.மோகன், கதம்பம் பதிப்பகம், கொழும்பு
36. நெஞ்சில் நிறைந்தவள், (1966) சி. சிவ ஞானசுந்தரம், ஏழாலை தெற்கு, சுன்னாகம் 37. வினோதனின் சாகசங்கள் (1966) சோ.நடராசன், (சிங்கள மூலம் மொழி பெயர் ப்பு) குணசேன புத்தகநிலையம், கொழும்பு
38. கருகியரோஜா (1967) புதுமை லோலன், அன்பு வெளியீடு, யாழ்ப்பாணம்
39. செவ்வானம் (1967), செ.கணேசலிங் கன், பாரி நிலையம். சென்னை
40. முகை வெடித்த மொட்டு (1967) நா.செல்லத்துரை, வெண்ணிலா வெளியீடு, யாழ்ப்பாணம் 41. தரையும் தாரகையும் (1968) செ.கணேச லிங்கன், பாரிநிலையம், சென்னை 42. இருளினுள்ளே (1968) எஸ். அகஸ் தியர், அன்பு வெளியீடு, யாழ்ப்பாணம்
43. அவன் சுற்றவாளி (1968) தேவன் -யாழ்ப்பாணம், ச.கிருஸ்ணசாமி யாழ்ப்பாணம் 44. ஓடிப்போனவன் (1968) கநவசோதி, குங்குமம் பிரசுரம், கொழும்பு 45. சொந்தக்காரன்,(1968) யோ.பெனடிக்ற் பாலன், பாரி நிலையம், சென்னை
46. போர்க்கோலம் (1969) செ.கணேச லிங்கன், பாரி நிலையம். சென்னை
47. தாயகம் (1969) தொ.சிக்கன்ராஜூ குறிஞ்சிப்பண்ணை, நுவரெலியா 48. நந்திக்கடல் (1969) செங்கைஆழியான, யாழ் இலக்கிய வட்டம், யாழப்பாணம்
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 46

49. ஆச்சி பயணம் போகிறாள் (1969) செங்கைஆழியான், யாழ்.இலக்கியவட்டம், யாழ்ப்பாணம்
50. பெருநாள் பரிசு (1969) மருதூாவாணன், மருதமுனை
51. மண்ணும் மக்களும் (1970) செ.கணேச லிங்கன், பாரிநிலையம், சென்னை
52. விழிச் சுடர் (1970) அன்னலட்சுமி இராஜதுரை (யாழ்நங்கை), தமிழருவிப பதிப் பகம், சுன்னாகம்
53. பிராப்தம் (1970) பிரேமகாந்தன், ஆட்டுப்பட்டித்தெரு. கொழும்பு
சொக்கன்
மூ த ற ஞா க நீ த ப் ப செட் டி சொக்கலிங்கம் 1930 இல் அச் சுவேலி தெற்கு ஆவரங் காலில் பிறந்தார். யாழ்ப்பாணம் இந்து
ஆரம்பப tI T L சாலை, நாவலர்
L j [Ꭲ Ꮏ_ Ꮽ ᎥᎢ 6ᏈᎠ 6Ꭰ , ஸ்ரான்லிக் கல்லூரி, பலாலி ஆசிரிய
கலாசாலை, பேராதனைப் பல்கலைக்கழகம் என்பனவற்றில் தனது கல்வியைப் பெற்றுக் கொண்டார். சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், கட்டுரை,
வானொலிச் சித்திரங் 媒
கள், பாடசாலை நூல்
சோனா, சட்டம்பியார், பேய்ச்சித்தன், திரு அள்ளுவர், பரிமேழகள், தேனி, கன்றுக்குட்டி, குறளன், ஞானம், ஜனனி, சாம்பவன், எதார்த்தன், பாலன எனப் பல புனைப் பெயர் களில் எழுதிக் குவித்தவர் சொக்கனாவார்.
ஈழகேசரியில் 1947 இல் 'கனவுக்கோ யில் வரலாற்றுக் கதையுடன் அறிமுகமா கும் சொக்கன், அதனைத் தொடர்ந்து பல சிறுகதைகளைப் படைத்துள்ளார். அவற்றில் சில அவரின் சிறுகதைகளின் தொகுதி களாக 'கடல்', 'சொக்கன் சிறுகதைகள்' என்றிரு தொகுதிகள் வெளிவந்துள்ளன. செல்லும் வழி இருட்டு, சீதா, ஞானக் கவிஞன், சலதி என்பன சொக்கனின் நாவ ல்களாம். 1960-1970 காலகட்டத்தில் வெளி வந்த நாவல்கள் முதலிரண்டாகும். இவற் றில் சீதா கவனத்துக்குரிய நாவலாகும். இல ங்கையின் மிகமுக்கிய எரியும் பிரச்சினை யான சாதியத்தை வைத்து முதலாவதாக வெளிவந்த நவீன நாவல் சொக்கனின சீதா வாகும். அதன்பின்னரேயே ஏனைய சாதிய நாவல்கள் வெளிவந்தன. அவ்வகையில் சீதா முக்கியமாக நோக்கப்படுகிறது.
சொக்கனின் இருபத்ததைந்தாவது ஆண்டு இலக்கியப் பணியைக் கெளரவி க்கும் முகமாக வீரகேசரி வெளியிட்ட இருபத் தைந்தாவது வெளியீடு சீதாவாகும். இந்த நாவல் குறித்து ஆசிரியர் கூறுவதாவது: 'வயற்காடு என்ற கிராமத்தில் இரண்டு வீடுக ளில் நிகழும் சில நிகழ்ச்சிகளை மைய மாகக் கொண்டு ஒரு வார கால இடைவெளி யிலே நடந்து முடியும் ஒரு கதைதான் சீதா, சாதிவிட்டு வேறு சாதியிலே விவாகம் செய்வதனானாலும் ஆலயங்களையும், தேநீர்க்கடைகளையும் தாழ்த்தப்பட்ட மக்க ளுக்குத் திறந்து விடுவதனாலும், சமபந்திப் போசனத்தாலும், சாதிப்பிரச்சினைக்குச் சாவு மணி அடித்துவிடமுடியுமா? என்ற பிரச்சி னையின் பகைப்புலத்திலே இக்கதை வளர்
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 47

Page 27
ந்து செல்கிறது. இக்கதையினுாடாக அதி மனிதர், சாதாரணமனிதர், கீழ்மனிதராகிய மூன்றுரகமானவர்களையும் நீங்கள் காண லாம். சுவைப்பதற்கு மட்டும் உரிய கதை யல்ல. "சீதா சிந்திப்பதற்கும், உணர்வதற் கும், செயல் உந்தல் பெறுவதற்கும் இது உகந்த கதை என்கிறார் சாதி ஏற்றத தாழ்வை உயர் சாதியினரின் கண்ணோட்டத்தில் நோக்குவதாக விமர்சகர் சிலர் குறிப்பிடுவர். அதில் சந்தேகமில்லை. உயர்சாதியாள ரான செல்வரெத்தினம் தனது சாதியிலும் தாழ்வாகக் கருதப்படும் பெண் ஒருத்தியை புரட்சி மனப்பான்மையோடு திருமணம் செய்து கொள்கிறார். அவளோடு சகயமாக வாழ முடியவில்லை. இவருடைய மகள சீதா வைப் பிராணப்பையன் ஆத்மநாதன் நேசிக் கிறான். சமூகத்தை எதிர்த்து அவனால அவ ளைக் கரம் பற்ற முடியவில்லை. பிரமச்சாரி னியாக இருந்து விடுவது மேல் என சீதா முடிவு செய்கிறாள். இந்த நாவல் மூலம் சொக்கன் பெரிதாக எதையும் சாதிக்க முடிய வில்லை. பாரம்பரியமாகச் சமூகத்தினைக் கட்டிவைத்திருக்கிற சாதியத் தளைகளை அறுக்கின்ற அல்லது குறைந்தது தளர்த்து கின்ற முயற்சியைக் கூட அவரால் செய்ய முடியவில்லை.
சொக்கனின் சீதாவில் சம்பவங்கள வெகு இயல்பாகவும் சடங்குகள் வெகு நுட்ப மாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளன. இந்நாவ லில் எளிமையான தூய்மையான உரை நடை கையாளப்பட்டுள்ளது. பாத்திரங்க ளின் உரையாடல்களில் சாதாரண பேச்சு வழக்குக் கையாளப்படவில்லை. பாத்திரங் களின் வார்ப்பும் வளர்ச்சியும் நாவலுக் குரியதாக அமையவில்லை. முற்போக்கு எண் ணங்களைக் கொண்ட பிராமண இளைஞ னான கம்யூனிஸ்ட் ஐயர் என்ற பாத்திரம் இந்த நாவலில் உரியவாறு வளர்க்கப்படாது போயுள்ளது. இந்த கதையின் சம்பவங்க
ளும் கால நீட்சியும் இதனை நாவல் என்ற வரையறைக்குள் அடக்காது குறுநாவல் என்ற வகைக்குள் அடக்கிவிடலாம். ஆசிரி யரின் முன்னைய செல்லும் வழி இருட்டு
என்பதில் புனைகதைக்குரிய உருவம் சிறப்
பாக விழுந்துள்ளது. சீதாவில் சாதியம் என்ற உள்ளடக்கம் முதன் முதல் கருவா கக் கையாளப்பட்ட சிறப்பைப் பெறுகிறது.
எஸ்.பொன்னுத்துரை
ஈழத்துப் புனைகதை வரலாற்றில் சண் முகம் பொன்னுத்துரை ஒரு மைல் கல்லா வார். அவரின் இலக்கிய ஆற்றல் பல்வேறு துறைகளிலும் வெளிப்பட்டுள்ளது. சிறு
கதை, உருவகக் கதை, நாவல், கட் டுரையியல், விமர் சனம், ஆய்வு எனப் பல துறை களி ல ஆழமாக அவரது ஆற்றல்கள் விரிவு பட்டுள்ளன. கற்பனை வளமும் தனித் து வமான சொல் லா ட்சியும் அவருக்கேயுரியவை. சிறுவயதி லேயே அவரது ஆக்கங்கள் வீரகேசரி, தினகரன் பாலர் பகுதிகளில் வெளிவந் துள்ளன. எஸ். பொன்னுத்துரை பல்வேறு புனைப்பெயர்களில் புனைகதைகள், கட்டு ரைகள் என்பனவற்றினை எழுதியுள்ளார். சிறுகதைத்துறையில் உருவ அமைப்பிலும் உத்தி முறையிலும் n . பல பரிசோதனைக் 影 கதைகளை இவா எழுதி i ۔۔۔۔۔۔۔۔۔۔ யுள்ளார். அவர் எழுதிய !} \! சிறுகதைகளில் 53, இன்று 'எஸ்.பொ. கதை கள் என்ற முழுத தொகு ' தியாக வெளிவந்துள் ........._ ளது அவரின் அரை
மல்லிகை ஆகஸ்ட் 2008 ஜ் 48
 
 

நூற்றாண்டு காலச் சிறுகதைகளை ஒருங்கே வாசிக்கின்ற அனுபவம் இதன் மூலம் கிட்டியுள்ளது.
எஸ்.பொன்னுத்துரை ஒரு நாவலாசிரிய ராவார். தீ சடங்கு என்பன குறிப்பிடத்தக்க நாவல்கள். பாலியல் உணர்வுகளுக்கு இலக்கிய முக்கியத்துவம் கொடுத்து எழுதப் பட்ட நாவல் தி ஆகும். இது நூலாக வெளி வந்த காலகட்டத்தில் பெரும் சர்ச்சைக்கு ள்ளானது. இந்த பரிசோதனை நாவல எழுத ப்பட்ட காலகட்டத்தில் எழுதப்பட்ட நாவல் கள் நியூவே நாவல் பாணி என்ற பெய ரோடு பாலியல் அம்சங்களைப் புகுத்தி எழுதப் பட்டன. எஸ்.பொன்னுத்துரையின் தீ
நாவலும் அவ்வாறான கதைக்கருவைக கொண் ,
டதாக அமைந்தது. முக்கியமாக எழுததாளர் ரகுநாதன் இவ்வாறான பரிசோதனை நாவ லாகக் கன்னிகா என்ற பாலியல் நிரம்பிய நாவல் ஒன்றினை எழுதியுள்ளார். தீ அவ் வாறான ஒரு பரிசோதனை நாவல்.
'எஸ்.பொன்னுத்துரை எழுதிய தீ கதையம்சத்திலும் உத்தி முறையிலும் தமிழ் நாவலின் வரலாற்றில் குறிப்பிடத் தக்க சிறப்புடையது. ஆடவனொருவன் பல்வேறு பெண்களுடன் பாலியலுறவு கொண்டு அவ்வனுபவங்களைச் சுயசரிதைப் போக்கில் விபரிக்கிறான். கதை கூறும் முறையிலே அனுபவங்களை மீளப்பார்க்கும் நனவோடை உத்தி கையாளப்பட்டுள்ளது. கதாநாயகனான நான் பாக்கியம், சாந்தி, லில்லி, புனிதம், திலகா, சரசு ஆகியவர் களை ஒவ்வொருவராக அனுபவிக்கிறான். புனிதம் விருப்பத்துக்கெதிராக மணம் செய்து வைக்கப்பட்ட மனைவி. லில்லி அந்தஸ்தில் உயர்ந்தவள். அவள் மேல் தான் அவனுக்குக் காதல் பிறக்கிறது. தனது அந்தஸ்துக்குக் குறைந்த பெண்களி Lம் அவனுக்குப் பாலியலுணர்ச்சி மட்டுமே உண்டாகிறது.’ என இந்த நாவல் குறித்து
சுப்பிரமணியம் தனது நூலில் குறித்து ள்ளார்.
இந்த நாவலைத் தான் ஆக்க நேர்ந்த காரணத்தை எஸ். பொன்னுத் துரை பின்வருமாறு நியாயப்படுத்துகிறார். பல காலம் என் மனதில் கருக்கொண்ட எண்ண த்தின் அறுவடை கையெழுத்துப்பிரதியைத் திரும்ப வாசிக்கும்போது துணிச்சலான முயற்சி என்றே படுகின்றது. மேனாட்டார் Sexயை மையமாக வைத்து பல நவீனங்க ளைச் சிருஷ்டித்துள்ளனர். மனித இனத் தின் பின்னமற்ற அடிப்படை உணர்ச்சி பாலு ணர்ச்சியே. மரபு என்ற வரட்டுக் கூச்சலி னால் வேலி கட்டி, ஏன் நமது இலக்கிய வளர்ச்சியின் வித்தைக் கருப்பையில் வைத்தே கருச்சிதைவு செய்யும் பணியில் ஈடுபடவேண்டும்?
ஒரு பெண்ணுடன் திருப்தி கண்ட ஆணுமில்லை. ஒரு ஆணுடன் திருப்தி கண்ட பெண்ணுமில்லை என்று காண்டேகள் தனது நாவலொன் நரில் ஓரிடத்தில் குறிப்பிட்டவாறு, பெரும்பாலான நமது மு:1, ஆன்ைகள் இராமர்களல்ல. அவர்களில் பலர் கிருஷ்னரும் தசரதர்களும் தாம். அதற் காக அந்த யதார்த்த வாழ்வின் ஊத்தை களை இலக்கியமாக்கும்போது, இலக்கியத் தின் சமூகப்பயன் அதுவாகாது போகின் றது. தீ நாவல் காட்டுகின்ற பாலுணர்ச்சி முக்கியத்துவத்தைக் கண்டிக்கும் ஆர்ப் பாட்டச் செயல்கள் கால வளர்ச்சிக்குப பொருந் தாத பிற்போக்குத் தனம் என்கிறா முதளைய சிங்கம். பரிசோதனை முயற்சி என்பதைத் தவிர இந்த நாவலில் முக்கிய அம்சம எது வுமில்லை. ஆசிரியர் குறிப்பிடுவது போல இந்த நவீனத்தில் பாத்திரங்கள் அதிகம் தான். பாத்திரங்கள் முழுமை பெறவில்லை. இலக்கிய நயத்தோடு இந்த நாவல் எழுதப் படவில்லை. ஆனால், ஈழத்தில் எழுதப்பட்ட முதலாவது நனவோடை நாவல் என்ற சிறப்பைப் பெறுகின்றது.
- தொடரும்
மல்லிகை ஆகஸ்ட் 2008 ஜ் 49

Page 28
விமரிசனத் தொடர்
குறித்ததொரு சிறுகதை சரியில்லை என்று விமர்சிக்கப்பட்டதற்காக தனது ஏனைய கதைகளைக் குறிப்பிடுவது சரியில்லை
- தேவமுகுந்தன்
་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་།། "---۳-۰۰ داد ... میمه -- - ، -.-.-..........
AAAS SSSSL qS S ܐ ----- -- -- -- ܝ - ཡོད། ་་་་་་་་་།།
N
‘விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் வேறுபாடு தெரியாதோரின் ஆதிக்கம் மிகுந்த தொரு சூழலில் வாழ்கிறோம். நயங்கூறுவதையே விமர்சனமாக கருதப் பழகிவிட்ட \\ 'நமது இலக்கிய மரபில், நக்கீரரைச் சகிக்கும் மனப்பக்குவம் பாண்டியனுக்குமில்லை
|பரம்பொருளுக்குமில்லை என்பதை எளிதாக ஏற்றுக் கொண்டு, மிகவும வரை | iயறுக்கப்பட்ட / /
y
Y.
\
t
ஜூலை இதழில் மு.பவரீர் நுனிப்புல் மேய்வது இலக்கியமாகாது' என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.
கெக்கிராவ ஸஹானா மு.பஷரின் சிறுகதை தொடர்பாக '90 களில் இலங்கையை உலுக்கிய ரீட்டாஜோன்ஸ் விவகாரம் பற்றி மு.பவர் எழுதியிருக்கும் கதை (?) சரியில்லை. அவர் ஏலவே இது குறித்து ஒரு கவிதை எழுதியிருந்ததாகவும் ஞாபகம் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.
இது மு.பவரின் குறித்த கதையான 'வதை பற்றிய விமர்சனம் மட்டுமே. மு.பவர் எழுதியிருப்பவ ற்றில் முக்கியமானவற்றை பின்வருமாறு சுட்டிக் காட்டலாம் 1. மார்ச் மல்லிகை இதழில் பிரகலாத ஆனந்த் பாராட்டிய கதையை கெக்கிராவ ஸஹானா எப்படிச் சரியில்லை என்று விமர்சிக்கலாம் என்பது போல எழுதியுள்ளார். விமர்சனங்கள் ஆளுக்காள் வேறுபடலாம் என்பது ஏனோ மு.பவrருக்குப் புரியவில்லை. 2. குறித்த கதையான 'வதை பற்றிய விமர்சனத்திற்கு மறுப்பெழுத வந்த மு. பவர் அதை விடுத்து தான் எழுதிய சிறுகதைகள், வெளியிட்ட சிறுகதைத் தொகுப்புக்கள், கிடைத்த பாராட்டுக்கள் என்பன பற்றி எழுதுகிறார். இதை விடுத்து பவர் 'வதை சிறந்த கதை என நிறுவியிருக்க வேண்டும். 3. இக் கதையில் பாலியல் சம்பந்தப்படுவதால் இது சரியில்லை என்று கெக்கிராவ ஸஹானா குறிப்பிடாமல் இருக்க, பவழீர் அவர் குறிப்பிட்டது போன்று எழுதி, பாலியல் சம்பந்தமான கதைகளை நியாயப்படுத்தியுள்ளார.
4. மு. பஷீரின் கதை சரியில்லை என்று எழுதிய காரணத்திற்காக கெக்கிராவ ஸஹானாவின கதை களை உருவ, உள்ளடக்க ரீதியாக சிதைவு கொண்டவை என எழுதுகிறார். இது உனது ஒரு கண் குருடு என்று சொல்லும் ஒருவனுக்கு எனது கண் குருடில்லை, உனது இருகண்களுந் தான் குருடு என்று சொல்வதைப் போலுள்ளது. உண்மையில் கெக்கிராவ ஸஹானாவின் கதைகள சரியில் லாதவையாக இருப்பின், அவர் விமர்சிப்பதற்கு முன்பாக அல்லவா பவர் அவற்றைச் சுட்டிக காட்டி யிருக்க வேண்டும். 5. ஐம்பது ஆண்டு கால இலக்கிய அனுபவமுள்ளவரென தன்னைக் குறிப்பிடும் மு.பவர், கெக்கி ராவ ஸஹானா மீது தனிப்பட்ட தாக்குதல்கள் மேற்கொண்டிருப்பது (மேமன் கவியின் உபயம் போன்றன) அநாகரிகமாகப்படுகிறது.
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 50
 
 
 
 
 
 

LDன்னார் கலை இலக்கிய ஆளுமைகளை வெளிப்படுத்தும் விதமாக அம்மண்ணிலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் "மன்னல் இலக்கிய விழா மலர் அண்மை யில் என் விழிமேய்ச்சலுக்குக் கிட்டியது. யுத்த சூழல், மக்கள் இடம் பெயர்வு என்ற ஆபத் தான கட்டங்களில் இறுகியுள்ள அம்மணிலிருந்து சற்றும் அழகு மாறாத அமைப்புடன் தமிழ்ச்சுவை கொண்டு பூத்திருக்கும் இம்மலரில், பல்வேறு ஆக்கங்கள் அமைந்திருக் கின்றன. அனைத்தும் மன்னார் பிரதேச கலை இலக்கிய வரலாற்றைப் பதிவு செய்தி ருக்கின்றன.
மலர் வாயிலைத் திறந்த போது, தமிழ்நேசன் அடிகளது கட்டுரை மனதை ஈர்த்தது. தமிழ்மொழியின் தனித்துவம், மன்னார் மண்ணின் மகிமை என அக்கட்டுரை பல தகவல்களை நமக்குத் தருகிறது. "மன்னார்ப் பிரதேசம் கலை இலக்கிய ஆர்வலர்கள் நிறைந்த மண், கலைஞர்கள், எழுத்தாளர்கள் போன்றோர் ஆங்காங்கே தமது மட்டுப் படுத்தப்பட்ட வசதி வாய்ப்புக்கேற்ப ஒருசில படைப்புக்களை நூலுருவில் கொண்டு வந்திருந்தாலும், அவை வெளியுலகிற்குத் தெரியாத நிலையே இன்றுவரை உள்ளது" என்று ஆதங்கத்துடன் குறிப்பிடுகிறார், தமிழ்நேசன் அடிகள்.
மன்னார் பிரதேச புனைக்கதை இலக்கியங்கள் என்னும் தலைப்பிட்டு மு. சுந்தரம் பாண்டியன் ஒரு கட்டுரையைத் தந்திருக்கிறார். இலங்கையில் தமிழ்தாய்க்கு அணிவிக்கப்பட்ட முதல் நவீனம் 'பிரதாப முதலியார் சரித்திரம்' என்றும், அதை எழுதி யவர் ச. வேதநாயகம்பிள்ள்ை என்றும் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நாவல் கி. பி. 1879 ல் வெளிவந்ததாகவும் எழுதப்பட்டுள்ளது. அறிஞர் சித்திலெப்பை எழுதிய ‘அசன்பே சரித்திரம் 1890 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. இதில் ஏனைய இலக்கியவாதிகளுக்கு முரண்பாடு இருக்கமுடியாது
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 51

Page 29
என்றே நானும் கருதுகிறேன். இலக்கியச் சுவைஞர்களுக்கு இந்த ஆய்வு தரும் செய்தி ஒரு முக்கியமான அம்சமாகும். வரலாற்று ரீதியான இக்கட்டுரை மலரின் கிரீடம் என்றே சொல்லலாம்.
1988 - 2008 வரையான கவிதை இலக்கிய வெளிப்பாடுகள் சம்பந்தமாக வும் தமிழ்நேசன் அடிகள் எழுதிய கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது. கலை ஞர் குழந்தை அவர்களின் மாந்தோப்பு கவிதைத் தொகுப்பு நூல் முதல் எஸ். எச். நிஃமத்தின் 'வா ஊருக்குப் போவோம்' மற்றும் பொன்விளைபூமி மற்றும் எஸ். ஜெகனின் அவஸ்தைகள், வை. கஜேந் திரனின் துளிகள், பஸ்ரீனாவின் விழுது கள் தாங்கும் விருட்சங்கள்' போன்ற தொகுப்புகள் பற்றிய விபரங்களும் இக் கட்டுரையில் அடங்கியுள்ளன. குழந்தை இலக்கியக் கவிதைகள் பற்றியும் இக் கட்டுரை சுட்டிக் காட்டத் தவறவில்லை.
மன்னார் பிரதேச நாடகக் கலை பற்றியதான, அதன் வளர்ச்சி மற்றும் நாடக மன்றங்கள், சம்பந்தமான கட்டு ரையும் இம்மலரில் அடக்கம். அரங்க ஆற்றுகை பரிமாணங்கள் குறித்து எஸ். ஏ. உதயன் இதில் மிக விரிவாகப் பதித் துள்ளார். இலக்கிய உலகுக்கு நன்கு பரிச்சயமான கலைவாதி கலில் பற்றிய குறிப்புகளும் இக்கட்டுரையை வாசிக்கும் போது தெரிய வருகிறது.
1980க்குப் பிறகு ஏற்பட்ட இன முரண்பாடு நிலைமைகளும் 83 இல்
பாரிய இனக்கலவரமும், நாடு முழுவதை யும் ஸ்தம்பிக்க வைத்ததோடு 1984- 85 இல் மன்னார்க் கிராமங்களில் பலர் இந் தியாவிற்கு இடம் பெயர்ந்தனர். இக் காலத்தில் மன்னார் மாவட்டக் கலை வெளிப்பாடுகள் யாவும் சத்தமின்றி படுத்துக் கொண்டன. இடம் பெயர்ந்த மண்ணின் கலைஞர்களில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் இந்தியாவின் தமிழ்நாட்டு நகரங்களிலும், கிராமங்களி லும் நாடகங்களை மேடையேற்றி வந்த வரலாற்றையும் இம்மலரின் கட்டுரை நமக்குப் புலபடுத்துகிறது. அது போன்று மன்னார் மாவட்ட நாட்டுக் கூத்துகள், நாட்டார் பாடல்கள், அதன் வளர்ச்சிக்குப் போக்குகள் சம்பந்தமாகவும் கட்டுரைகள் மலரை அலங்கரித்துள்ளன. மக்கள் காதர் எழுதிய 'இஸ்லாமிய கலை இலக் கியங்கள் கட்டுரையும் பயனுள்ளதாக அமைந்துள்ளன.
இன்னும் பல ஆக்கங்களும் இம் மலரில் பிரசுரம் பெற்றுள்ளன. மன்னா ரின் வரலாற்றை குறிக்கும் விதமாக சிலபடங்களும் இதில் பதிவு செய்யப் பட்டுள்ளன. இவை அனைத்தும் மன் னார் பிரதேசத்தின் ஆவணமாகத் திக ழும் வண்ணம் செய்யப்பட்டுள்ளன. மலர் மிகச் சிறப்பாக அமைய இக்குழுவினர் மிகச் சிரமப்பட்டுள்ளதை மலரை வாசி க்கும் போதே புரிகிறது. அவ்வகையான அர்ப்பணிப்புடன் மலர்ந்துள்ள இம் மலரை அப்பிரதேசத்து மக்கள் பொக் கிஷமாகப் பாதுகாப்பது முக்கியமாகப் படுகிறது.
மல்லிகை ஆகஸ்ட் 2008 ஜ் 52

தசாவதாரம் - ஓர் இரசனைக் குறிப்பு
திரைப் படத்துரையின் திசையெங்கும் கொடி கடிப் பரக்கும் அபூர்வ கலைஞன் கமல்ஹாசன்
- பிற்கலnத ஆனந்த்
மேலோட்டமாகப் பார்த்தால் எம். ஜி. ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் போன்ற உப்புச்சப்பற்ற கதை. அதைச் சொல்ல வந்த முறையும், அதனுாடே வரும் பிரமாண்டங்க ளும் கமல்ஹாசனின் சொல்லும் படியான நடிப்பும் எல்லா மட்ட ரசிகர்களையும் இலகுவில் མས་ཙམ་ཙ་ ※。 ::''SNS கவர்ந்து விடுகிறது. இதற்கு மேலாக , நவீன உலகின் புதிய தத்துவங்க چ ளான ChaOS தத்துவம் மற்றும் Butterfly effect gigsgoutb 676öTusogs) பற்றி இத்திரைப்படம் பேசுவது அனை வராலும் புரிந்து கொள்ள முடியாத அம்சமாகும். ஆனால், இதுவே இத் திரைப்படத்தினை உலக தரத்திற்கு நகர்த்திச் செல்கிறது. இப்பிரமாண்ட நகர்வுகளினூடே சகலகலாவல்லவன் கமல்ஹாசனின் பத்து வேடம் இந்த வேளையில் நவராத்திரி சிவாஜி கணேசனின் ஒன்பது வேடங்களை யும் சிலிர்ப்புடன் நினைத்துப் பார்க்க முடிகிறது.
அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் மிக ஆபத்தான உயிரியல் ஆயுதம் ஒன்று, அங்கு பணிபுரியும் ஒருவரின் உதவியுடன் கடத்தப்பட்டு, விற்பனை செய்ய முயற்சிக்கப்படுவதை அங்கு பணிபுரியும் விஞ்ஞானி தடுத்து, இறுதியில் பேரழிவிலிருந்து உலகைக் காத்திடும் ஒரு வரிக் கதைதான். உயிரியல் ஆயுதம், அது எப்படி அமெரிக்காவிலிருந்து இந்தியக் கடற்கரைக்கு வந்தது என்பதைக் காட்டுவதிலேயே படத்தின் பெரும் பகுதி கடந்து விடுகின்ற போதிலும், இக்காட்சிகள் திரையுலகின் புளித்துப் போன காட்சிகள்தானெனினும், இங்கே வருகின்ற பிரமாண்டங்களும், "கிறாபிக்ஸ்’ மற்றும், பல்வகைத் தொழில்நுட்பங்களும், இசையும், இவை எல்லாவற்றிற்கும் மேலாக கமல்ஹாசனின் பத்துப் பாத்திரங்களும் UITsreo6JuJIT6Tir களைக் கதிரை விளிம்பு வரை நகர்த்துவதிலும், ஆங்கிலப் படங்கள் சிலவற்றைப் பார்த்தபோது, ஏற்படுவது போன்ற பிரமிப்பை ஊட்டுவதையும் படத்தின் வெற்றிக்கான காரணியாகவும், சர்வதேசத் தரத்தை நோக்கி நகர்வதாகவும் குறிப்பிடலாம். நாயகன்
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 53

Page 30
கோவிந், வில்லன் பிளெக்சர், பொலிஸ் அதிகாரி பாலராம் நாயுடு முதலான பாத்திரங்களே அதிகமாகத் தோன்றுகின்ற போதிலும், 12 நூற்றாண்டின் ரங்கராஜன் நம்பியும், மணலேற்றும் கதையில் வரும் தலித் பாத்திரமும் சிறிதளவு நேரமே படத்தில் தோன்றினாலும், கமலின் நடிப்பு க்குச் சிகரம் வைத்தாற் போலிருக்கிறது. எனினும், எல்லாப் பத்துப் பாத்திரங்களிலும் கமலின் திறமையான நடிப்பும், வேறுபட்ட தன்மைகளின் வெளிப்பாடும் வியக்க வைக் கிறது. பாத்திரங்களின் ஒப்பனைகளும், நடிப்பும் குறை கூற முடியாதளவு சிறப்பாக இருக்கிறன. மாறுபட்ட குரல், பேசும் பாணி, உடல் அசைவு, நவரசத் தன்மை எனப் பாத்திரங்களை வேறுபடுத்துவதில் அசகாய சூரனாக வருகிறார். வித்தியாசமான ஒரு நெட்டையான பாத்திரம், இதுவரை காணாத தலித் பாத்திரம், ஜோர்ஜ் புஷ் பாத்திரம் என எல்லாமே நிறைவைத் தருகின்றன. 12 ஆம் நூற்றாண்டின் ரங்கராஜ நம்பி பாத்திர த்தில் அவரது மிடுக்கான நடிப்பும், உடல் பாவனையும், கம்பீரமும், அந்தத் தீவிர பக்தி வெறியை வெளிப்படுத்தலும், நிகரில்லாத நடிப்பின் உச்சங்கள்! தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் சிவாஜி ஓர் அற்புதமான நடிகன் என்றாலும், அவரை இந்தளவுக்கு யாரும் வெளிக்காட்டவோ, பயன்படுத் தவோ இல்லை என்பதால், ஒர் ஆசியத் திரைப்பட விழா விருதோடு அவர் மட்டுப் படுத்தப்பட்டார். ஆனால், இன்றைய தமிழ்ச் சினிமாவின் நடிப்பு மேதையான கமல் ஹாசனை பலரும் திறமையாக வெளிக் காட்டியுள்ளனர். இதனால் தான் ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகள் தேசிய விருதும் இவருக்கு நடிப்புக்காகக் கிடைத்துள்ளது. தனித்துப் பார்க்கின்ற போது, பாலுமகேந் திராவின் மூன்றாம் பிறை கமலின் அப்பாவி தனமான நடிப்பையோ, மணிரத்னத்தின் நாயகன் பட தாதா பாத்திர நடிப்பையோ, மனநோயாளியாகக் காதல் வெறி கொண்ட குணா திரைப்பட நடிப்பையோ, மற்றும் சில
பாலசந்தர் படங்களில் கண்ட நடிப்பையோ இத்திரைபடத்தில் காணமுடியாது விட்டா லும் கூட, ஒரே திரைப்படத்தில் மாறுபட்ட பத்து வேடங்களில் தோன்றி, ஒன்றிற் கொன்று நெருக்கமின்றி வேறுபடுத்திக் காட் டிச் சிறப்பாக நடித்த கமலை எவ்வளவு வேண் டுமானாலும் பாராட்டலாம். உலக நாயகனே என்று பாடலில் வருவது போலவே, இந்தத் திரைப்படம் உலகளாவிய ரீதியில் வெளி யாகி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் களம் கண்டுள்ளமை, கமலின் இன்னொரு பல்துறை ஆளுமைக்குச் சான்று பகர்கிறது.
முகுந்தா முகுந்தா" பாடலும், கடலை மட்டும் கண்டால் பாடலும் இனிமையாக மனதை கவ்வுகிறது. "உலக நாயகனே' பாடலைக் கேட்கும் போது, "உலக்கை நாயகனே' என்பது போலப் படுகிறது. ஏன் இந்த மொழிக் கொலை? எனினும், பரவ லாக இளம் உள்ளங்களைக் கவர்ந்த பாட லாக இது இருக்கிறது.
இறுதியாக, சிக்கலான தொகுதிகளின் இயல்புகளை ஆராயவும், அவற்றை விளக் கவும் உதவும் 'சாவோஸ்" பற்றியும், ஒரு சிறிய மாற்றமானது, மிகப் பெரிய விளைவு களை ஏற்படுத்தும் என்ற பட்டர்பிளை' பற்றியும் தத்துவார்த்த ரீதியில் இப்படத்தில் ஆராயப்பட்டுள்ள போதிலும், அவை பற்றி சமான்ய ரசிகனின் புரிதல் என்பது கேள் விக் குறியே இத்தத்துவம் பற்றி அதிகம் அறியப்படாத நிலையில் இவை பற்றிய தான புரிதலை எதிர்பார்க்க முடியாது.
தசாவதாரம் திரைப்படம் பிரமாண்ட மான வெற்றியைப் பெறும் என்பதில் ஐய மில்லை. கமலின் நடிப்பும் பேசப்படும் என்ப திலும் சந்தேகமில்லை. கமலின் நடிப்பின் முன்னால் ஏனைய பாத்திரங்கள் மேலெ ழும்ப முடியவில்லை. ‘வில்லி நடிகையின் சுறுசுறுப்பு ஆங்கிலப் படம் போல அசத்து கிறது. சண்டைக் காட்சிகளும் அவ்வாறே
தசாவதாரம் தமிழ்ச் சினிமாவின் புதிய அவதாரம்
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 54

நிதியற்றுத் தெருவுக்கே வந்துவிட்ட குடிமுழுகிப் போன, பாவப்பட்ட ஒரு சமூகத்தின் கடைசி வாரிசு போல, அவன் வந்து சேர்ந்திருந்தான். கல்யாணியின் நிழலைத் தேடி வந்திருக்கின்ற அவன், அந்தப் பார்த்திபன் அவளுக்குப் புதியவனல்லன். அவளின் இரத்தவழித் தொர்பான உறவை மெய்ப்பிக்கவே, அவனுடைய இந்த வருகை. தனக்கு முன்னால் ஒளி தரிசனமாகி நிற்பது போல் பட்டாலும், அவனின் ஆரம்புப் பிரவேசத்தினால் நேர்ந்த அதிர்வுகளைக் கண்டு அவள் கொஞ்சம் கலங்கித் தான் போனாள்.
சிறுவயதில் உறவு நெருக்கமான உரிமையோடு, அவளோடு கள்ளம் கபடமற்று ஒன்றாக விளையாடித் திரிந்த அந்தப் பழைய பார்த்திபனல்ல, இவன். அப்போதெல்லாம் கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட அவனைப் பார்த்தாலே, மகிழ்ச்சி வானில் இறக்கை முளைத்துப் பறப்பது போல, ஒரே சந்தோஷமாக இருக்கும். அவனின் மனம் மட்டுமல்ல, பால் போல நிறமும், வெள்ளை நிர்மலமான கண்களோடு முகம் சிரித்த படியே மனம் விட்டு நிறையப் பேசுவான். சிலசமயம் ஜோக் கூட அடிப்பான். கல்யாணியின் சித்தப்பா மகன் அவன். ஒன்றுவிட்ட சகோதர முறை இருந்தாலும், கூடிப் பிறந்த சகோதரன் போல், அப்படியொரு நெருக்கம். ஆனால், வாழ்வில் நேர்ந்த அதீத மாற்றங்களினால் அவளின் வழிக்கு வர முடியாமல் போன ஒரு வேற்று மனிதன் மாதிரி. அவன் நிறையவே மாறிப் போயிருந்தான். அப்பேர்ப்பட்ட அவனின் பார்வைக்கு முன்னால், இப்போது அவள் ஒரு வெறும் மனுவழி. ஆனால் அவன்..? அவளின் கண்களுக்கெட்டாத வெகு தொலைவில், வாழ்வில் நிறைவான பல சித்திகளைப் பெற்று ஈடு இணையற்ற ஒரு முழுமனிதனாய், மெருகேறிக் களை கொண்டு நிற்பது போல, ஒரு நிலைமை. அவன் இப்போது ஒரு சாதாரண ஆளில்லை. சிறந்த நிபுணத்துவமும், ஆளுமையும் கொண்ட ஒரு புகழ் பெற்ற பொறியிய லாளனாகக் கல்முனையில் பணிபுரிகிறான். அவனின் நிலையில் இருந்து பார்க்கும் போது, கல்யாணியும் அவள் வாழ்கிற இந்த வீடும், வெறும் நிழல்களாகவே உறுத்தும்.
இந்த இருள் களைந்து வெறிச் சோடிக் கிடக்கிற சூழ்நிலையில், அந்நிழலோடு ஒன்றுபட மறுக்கிற ஒரு புறம்போக்கு மனோநிலையில், கல்யாணி அன்பு வசப்பட்டு, அவனை இருக்கச் சொல்லிக் கேட்டதையே பொருட்படுத்தாமல், அவள் இழுத்துப் போட்ட அந்தப் பழைய கிழட்டு நாற்காலியில் இருக்க மனம் வராமல், நீண்ட நேரமாக அறை ஜன்னலருகே, நிலை தளர்ந்து நின்று கொண்டிருந்தான். கல்யாணிக்கு அவன் அப்படி நின்று கொண்டிருப்பது பெரும் குற்ற உணர்ச்சியாகவே அவளை வதைத்தது. அவள் இதை எதிர்பார்க்கவில்லை. அன்புக்கு வளைந்து கொடுக்காத அவனின் இந்த முரண்பட்ட போக்கு
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 55

Page 31
அவளுக்குப் பெரும் ஏமாற்றத்தையே அளித்தது. இதற்கெல்லாம் காரணம், அவுனின் நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டுப் போயிருக்கின்ற தனது ஏழ் மைப்பட்ட குடும்ப நிலைமைதானென் பதை, அவள் மிகவும் மனவருத்தத்தோடு நினைவுகூர்ந்தாள். அவனைப் போல், தன் கணவனும் உயர் பதவி வகிக்கிற, மிகப் பெரிய அந்தஸ்துக் கொண்ட ஒருவனாக இருந்திருந்தால், பார்த்திபன் இப்படி முகம் சுழித்துக் கொண்டு நிற்க நேர்ந்திருக்குமா? மாறாக அவனின் நிழல் கூட, மலர் தூவி அவளை வணங்கியிருக்கும். இது வெறும் மாயையல்ல. வாழ்வில் தவிர்க்க முடியா மல் நேர்கின்ற கசப்பான உண்மைகளின் ஒரு முகமே இது. அவனின் இந்த வரட்டுக் கோலம் அதில் ஒளியிருப்பதாகவும், அவ ளால் நம்ப முடியவில்லை. அவள் கண்க ளுக்கு இப்போது அவன் ஒரு வெறும் மனித னாகவே தோன்றினான். இது உண்மை என்று பட்டாலும், வெளிப்படையாக அதைப் பற்றிப் பேசுமளவுக்கு அவள் தீர்க்கமான அறிவோ, மனோபலமோ கொண்டிருக்க வில்லை. அவளுக்கு வேண்டியதெல்லாம், அவனின் களங்கமற்ற அன்பு ஒன்றுமட் டுமே. ஒருவேளை, முன்பு போலவே, இவன் ஒரு நிர்மல்மான சிறுவனாகவே இருந்தி ருந்தால், அவள் எதிர்பார்க்கிற அன்பு வேள்வி, ஒரு தடங்கலுமின்றி நல்லபடி நிறைவேறியிருக்கவும் கூடும்.
அவன் இப்போது அப்படியொரு துல்லிய மான வெள்ளை மனம் கொண்ட சிறுவனில் லையே. வானத்திலேயே கால் முளைத்துப் பறக்கிற நிலையில், அவன்தான் என்ன செய்வான்?
வெறும் மண்புழு மாதிரி என் நிலைமை. என்னைக் கண் திறந்து பார்க்கக் கூட
மனம் வருமா? அவள் எண்ணப் பெருங் கடலில் மூழ்கி முத்தெடுக்கவல்ல மூச்சுத் திணறிப் போய்க் கொண்டிருக்கும் போது, காற்றைக் கிழித்துக் கொண்டு, அவன் குரல் சத்தமாய்க் கேட்டது. -
"என்னடி யோசிக்கிறாய்?" ஆள்மாறி னாலும், பேச்சு மட்டும் பழைய பாணி மாறா மல், உரிமையோடு அவன் பேசுகின்ற போது, அவள் அதை மெய் சிலிர்த்துக் கேட்டுக் கொண்டிருந்தாள். பிறகு உணர்ச்சியடங்கி அவள் பேச வெகு நேரம் பிடித்தது.
'இல்லை' எப்பவோ கனவிலே கேட்ட குரல் மாதிரி இருக்கு. "நானும் தான் பார்க் கிறன். வந்த நேரம் தொட்டு, நிற்கிறியளே. இந்த நிலையில், உங்களைச் சாப்பிடச் சொல்லிக் கேட்கலாமா? விடலாமா? என்று தான் யோசனையாக இருக்கு."
"சரிதான். சாப்பிடுறதா? வீட்டைப் பார்த் ததும் இருக்கவே பிடிக்கேலை. முதலில் வீட்டை மாத்துங்கோ. அப்ப வந்து சாப்பிடு றேனே!"
உறவின் புனிதங்களையே அறியாத வன் போல், வெறுமனே கேவலம், ஒரு வீட்டுக்காக அதையே பெரிதுபடுத்தி அவ ளின் மனம் நோக, அவன் பேசிய வார்த் தைகளையே ஜீரணிக்க முடியாதவளாய் அவள் துக்கம் நெஞ்சை அடைக்க, தொட ர்ந்து அவனோடு எதுவும் பேச வராமல், வெகு நேரமாகச் சூனியத்தையே வெறித் துப் பார்த்தபடி, உறைந்து போய் நின்றிருந் தாள்.
அச்சூனியத்தின் ஒரு முழுவெளிப்பா டாய், காட்சிக்கு வர மறுக்கும், முழுவதும் உருக்குலைந்து வெளிறிக் காட்சியளிக் கும், அவளின் அந்தப் பாழடைந்த வீடு; சுண்ணாம்பு பூசப்படாமல் வெறும் செங்கல்
மல்லிகை ஆகஸ்ட் 2008 3 56

சுவர்களுடன் இரு அறைகள் மட்டுமே கொண்ட அச்சிறிய வீட்டிற்குப் போதிய ஜன்னல்கள் கூட இன்றி, காற்றோட்டமற்ற இருள் கனதியுடன், அழுது வடிவதை நேர் கொண்டு பார்க்கக் கூட மனம் கூசியவனாய் கரை ஒதுங்கி நிற்கும் அவனின் நிழல் கூட, தன் பார்வைக்கு எட்டாத வெகு தொலை வில் ஒளி குளித்த தேஜஸ் மாறாமல், பிரகாசம் கொண்டு நிற்பது போல், அவள் உணர்ந்தாள். அப்படி நிற்கின்ற அவன் முன்னால், அவனின் ரசனைக்கும் விருப்பு வெறுப்புகளுக்கும் ஏற்ற மாதிரி திடீரென்று இன்னுமொரு நவீன வசதிகள் கொண்ட நல்ல வீட்டைத் தேடிப் போகிற, நிலைமை யில் தான் இல்லையே, என்பதை எண்ணி அவள் வெகுவாக மனம் உடைந்து போயி ருந்தாள். இதற்கே மாதம் மூவாயிரம் ரூபாய் வாடகை, மிகவும் கஷ்டப்பட்டுத் தான் கொடுக்க முடிகிறது. இதிலும், சிறப் பாக எடுப்பதென்றால், பத்தாயிரத்துக்கு மேல் வாடகை கேட்பார்களே? ஒரு சாதா ரண கிளார்க்கான அவளின் கணவன் எடுக் கிற குறைந்த பட்ச சம்பளத்தில் அப்படி அள்ளிக் கொடுக்கக் கட்டுபடியாகுமா, என்ன?
இப்போது சிறுவர்களாக இருக்கிற அவ ர்களின் குழந்தைகள் வளர்ந்து பெரியவர் களாகும் போது, ஒருவேளை இது சாத்தியப் படலாம். இந்த வாழ்வு முன்னேற்றத் திற்காக அவள் நீண்ட ஒரு யுகம் வரை கண் விழித்துத் தவம் கிடக்க வேண்டும். எவ்வளவு முறை தீக்குளித்து வாழவேண் டும். இதெல்லாம் அறியாமல், பார்த்திபன் என்ன பேச்சுப் பேசி விட்டான்!
இப்போது வீடா முக்கியம்? வீடு வாழ்ந்த மண்ணே பற்றியெரிகிறது. இப்படி வீடு காணப் போய்த்தான் ஒன்றுமே மிஞ்சவி ல்லை. இனி அதைப் பற்றி பேச்சு எதற்கு? நாங்கள் எங்கு வந்து நிற்கிறோம் என்று
9in. அறியாதவனாய், என்னவொரு வரட் டுப் பொய் வேஷம் இவனிடம் இதில் இப்படி இருக்க முடிந்த அவனிடம், உண்மையான அன்பு கூட, எடுபடாதென்று அவளுக்குப் பட்டது. அந்த மனவருத்தத்துடனேயே, மனம் நொந்து போய், அவள் தொய்ந்த குரலில் கூறினாள்.
'சரி பார்த்தி உங்கடை விருப்பம், நாங் கள் ஒரு நல்ல வீடு பார்க்கிறம், அதுக்கு ஒரு யுகம் கூடப் பிடிக்கலாம். அப்ப உங் கடை ரசனை வேறு வழியிலே மாறாதென்று என்ன நிச்சயம்? எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால், பார்ப்போம். காத்திருக்கிறன்."
அவன் அவள் கூறுவதைப் பொய்யாகக் கிரகித்துக் கொண்டுவிட்ட பாவனையில், தலை ஆட்டியவாறே அவளிடம் விடை பெற்றுப் புறப்படத் தயாராகி வெளியே போனான். அவன் படியிறங்கி மிடுக்காக நட ந்து போவதை, வீட்டின் வாசலருகே நின்ற வாறு, ஒரு வேடிக்கை ப்ோல, அவள் பார்த் துக் கொண்டிருந்தாள். அவளின் கண்களை விட்டு மறையும் வரை, அவன் அகன்ற சோதிப் பிழம்பாகவே தெரிந்தான்.
இந்தச் சோதிப் பெருக்கத்தின் அதி கூடிய மிக விசேஷமான ஒர் உச்சக்கட்ட நிகழ்வாய், மட்டக்களப்பு பார் வீதியிலுள்ள, அவளது அந்தப் பழைய கிழடு தட்டி ஒளி குன்றிப் போயிருக்கிற வீட்டிற்கு முன்னால், கேட் வாசலில் அவனை வரவேற்று அழை த்துப் போவதற்காக, அவனது கப்பல் போன்ற அழகிய கார் கம்பீரமாக ஒளி குளி
த்து நின்று கொண்டிருந்தது. அதில் ஏறி
னாலே முள் தைக்காத சுகப் பயணம் தான் அவனுக்கு. இந்நிலையில் உலகமென்ன? வாழ்க்கை, மனிதர்கள் கூட மறந்து தான் போகும். போகட்டும். நிஜத்தில் விழித்துக் கொண்டிருப்பவனுக்கே இந்த மண்ணைப் பற்றிய பிரக்ஞையெல்லாம். வேறென்ன சொல்ல முடியும்?
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 57

Page 32
- (p. Oరdf
நீண்டு விரிந்து கிடக்கும் பாலைவனக் கட்டாந்தரை. கண்ணுக் கெட்டிய தூரம் வரை, மரங்களேயற்ற வெய்யில் தகிக்கும் பொட்டல் வெளி. பொதிகளைப் போன்ற மணற்குன்றுகள் தூரத்தே பிம்பம் காட்டின. வானம் பளிச்சென ஒளி சிந்த, நெடுஞ்சாலையில் பாதசாரிகள் அருகி, புதுப்புது வாகனங்கள் கடும் விரைவு கொண்டு ஊர்ந்து சென்றன. வானுயர்ந்த கட்டிடக் காட்டில் மேகநிழல் கவிந்திருந்தது.
தினமும் குறித்த நேரத்தில், அல் கொபாரிலிருந்து, தமாம் வரைக்கும் எங்களை இட்டுச் செல்ல கம்பனி பஸ் தவறாமல் வரும். அதில் அமர்ந்திருந்தவாறு இருபக்கக் காட்சிகளையும் ரசனையுடன் அநுபவித்துச் செல்லும் போது, தாயக நினைவுகள் நெஞ்சை வருத்தி நெருடும்.
வெளிநாட்டு வாழ்க்கை ஒரு இயந்திரத் தனமான இருப்பு. சூழ்நிலைக் கைதிகளாய் சொந்த விருப்பு, வெறுப்புகளைத் தாரை வார்க்கும் சங்கடம். தினசரி இயக்கம், கடிகார முட்களின் சுழற்சியில் பின்னப்பட்டவையாகும். மனிதனின் இயற்கை உபாதை தணிப்பதற்குக் கூட நேரகுசியை யாசிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை.
(G S. S. A. L) என்றழைக்கப்படும் கிரே ஹோண்ட் சேர்விஸ், சவுதி அரேபியா லிமிட்டெட் என்பது எமது கம்பனியின் நாமம். இங்கு இராணுவப் பயிற்சி பெறும் சிப்பாய்களுக்கு மூன்று வேளையும் உணவு தயாரித்துப் பரிமாறுவது எங்களது வேலை.
இங்கு சக மனிதன் பால் எவ்வித ஈவிரக்கமற்ற பார்வை கொண்ட பிரிட்டிஸ், முகாமைத்துவ மேலாண்மைக்குக் கீழ், அடிமைகளாகவே தொழிலாளர் வேலை பார்த்தனர். இந்தப் பூமிப் பரப்பின் கணிசமான எல்லைகளை தம் காலனித்துவ ஆட்சியின் கீழ் அடக்கி யாள்பவர்களல்லவா, இவர்கள். இவர்களிடத்தில் மனித நேயத்தை எவ்வாறு எதிர்பார்க்க இயலும்?
இந்த கேட்டரிங் சேவிஸில் விலை மதிப்பான உணவு தயாரிக்கும் உபகரணங்கள், மெசின்கள் பொருத்தப்பட்டிருக்கும். பளிச்சென முகம் தெரியும் விதமாய் அவை துல்லியம் காட்டும். ஒரு முன்னுாறு வேலையாட்கள் வரை டே வழிப்ட், நைட் ஷ்ப்ட் என எப்போதும் நிறைந்து வழிவார்கள். ஆயினும், அறுநூறு பேர் இருந்தாலும், செய்து முடிக்க இயலாத அளவு வேலைப் பளு கெடுபிடிகள்.
ஜெக்ஸன் எனும் பிரிட்டிஸ்காரன் பிரதம முகாமைத்துவ அதிகாரி. தேனியைப் போன்று சதா சுறுசுறுத்த வண்ணமிருப்பான். கண்டிப்பானவன். மற்றவன், விளலிட்டிங் மெனேஜர் பம்பி. தலையிலிருந்து கால் வரை சம அளவிலான, வெள்ளைத் தோல் சதை வளர்ச்சி கொண்டவன்.
மல்லிகை ஆகஸ்ட் 2008 ஜ் 58

வழுக்கைத் தலையுடன் முகத்தில் புன்ன கையேயற்ற அசாதாரண தோற்றத்துடன் நடை பயில்வான், தொழிலாளருக்குக் கடும் வேலை கொடுத்துக் கசக்கிப் பிழிவான்.
சிலவேளைகளில் அபூர்வமாக வேலை யாட்களுடன் நகைச்சுவையோடும் கதைப் பான். அதே போன்று, இவர்களின் குறை களை மெனேஜரிடம் கூறிக் காட்டியும் கொடு
ப்பான்.
அன்று- மலையகத் தொழிலாளியான வேலு, தன் மனைவி அனுப்பியிருந்த கடி தத்தைப் படித்து விட்டு, கண்கலங்கினான். திருமணமாகி ஒரு மாதத்திலேயே புது மனைவியை விட்டு விட்டு, இங்கு வேலை க்கு வரவேண்டிய துர்ப்பாக்கியம் அவனுக்கு.
‘ஏன் கவலையாக இருக்கின்றாய்?
என்ன நடந்தது?"
பம்பி, வேலுவைப் பார்த்து வினா
தொடுத்தான்.
‘இன்னும் மூன்று மாதத்தில் வீடு திரும்பாவிட்டால், என்னுடைய பிணத்தைத் தான் பார்க்க வேண்டி வரும்' என்று மனைவி கடிதம் எழுதியிருப்பதாக வேலு கூறினான்.
'இதற்காக ஏன் கவலைப்படுகின்றாய்? நீ ஒரு வேலை செய். உன் மனைவிக்கு ஒரு கடிதம் எழுதித் தா. நான் முநீலங்காவுக்குப் போய் உன் மனைவியைச் சந்திக்கிறேன்.
எல்லாம் சரியாய்ப் போய்விடும்" என்றான்
எள்ளலாக, அவனுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது.
அவன் பம்பியிடம் எரிச்சலோடு கூறி னான். 'நீ ஒரு லெட்டர் தா. நான் லண்டனில் இருக்கும் உன் மனைவியிடம் போகிறேன்.
எல்லாப் பிரச்சினையும் சரியாகிவிடும்' என்றான். பம்பி உட்பட எல்லோரும் வாய் விட்டுச் சிரித்தோம்.
சவுதியில் உணவுப் பதார்த்தங்களுக்குச் செய்யும் அநியாயம் கண்டால் மனம் தாளாது. காலையில் செய்யும் உணவு வகை களை, மதியத்திற்கு வைக்கமாட்டார்கள். பகல் செய்யும் போஜனத்தை இரவை க்கு வைக்க மாட்டார்கள். பழம், ஜேம், பட்டர், சீஸ், இறைச்சி போன்றவற்றைப் பழுதடை வதற்கு முன்னரே தூக்கி எறிந்து விடு
S56.
அதற்கென்றே ஒரு ஆளுயரப் பொலித் தீன் பேக்குகள் இடத்திற்கிடம் வைக்கப் பட்டிருக்கும். எல்லாவற்றையும் அதில் தூக்கிப் போடுவார்கள். இவற்றை அள்ளிச் செல்ல ஊத்தை லொறிகள் வந்த வண்ண மேயிருக்கும். நான் சில சமயம் இப்படி நினைப்பதுண்டு.
இங்கு துஷ்பிரயோகம் செய்யும் உணவு வகைகளைப் பதனிட்டு நமது நாட்டிற்கு அனுப்பி வைத்தால், அகதி முகாம்களில் அடுத்த வேளைச் சாப்பாட்டிற்கு அல்லலுறும் ஏழைகளின் வயிற்றுப் பசியாவது தீரும் என்று. எங்கள் கம்பனி ஐந்தேக்கர் காணி யில் விஸ்தீரமான நிலப் பரப்பில் அமைந் திருந்தது.
எல்லாத் தேவைகளுக்கும் போதுமான தனித்தனி விசாலமான அறைகளுண்டு. மெனேஜர் ஜெக்ஸனின் கழுகுப் பார்வை படாத இடமே கிடையாது. மலசலசுடத்தில் சிகரட் பிடித்துக் கொண்டிருந்தவர்களைக் கூட, அவன் கண்டு பிடித்துக் கடுமையாக எச்சரித்தும் இருக்கிறான்.
அன்று கம்பனி பெரும் பரபரப்பிற்குள்ளா
மல்லிகை ஆகஸ்ட் 2008 露 59

Page 33
கியிருந்தது. ஜெக்ஸனின் அம்மாத சம்பளப் பணம் ஒரு லட்சம் ஆபிஸ் அறையிலிருந்து திருட்டுப் போய்விட்டதாம். ஊழியர்கள் எல்லோரையும் அழைத்துத் தீவிர விசா ரணை நடைபெற்றது. ஒவ்வொருவராக வரிசையில் நிறுத்திக் கடும் சோதனை யிட்டார்கள். துப்புத் துலங்கவில்லை.
ஒரு வாரம் கழிந்தது.
இந்தப் பணம் வெளிநாட்டுக்கு டிராப்ட் அனுப்பப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் நிர்வாகம் அனைத்து வங்கிகளுக்கும் அறிவித்திருந்தது. வங்கித் தகவல் ஒன்றின் படி காரியாலய அறைய்ைச் சுத்தம் செய்யும் ஊழியன் பீட்டர் மாட்டிக் கொண்டான்.
அப்பணத்தைக் கையாடி நீர்கொழும்பி லிருக்கும் தன் மனைவி பெயருக்கு டிராப்ட் செய்திருந்ததை வங்கி ஊர்ஜிதப்படுத்தியது. சவுதி அரசின் சட்டபடி திருட்டுக் குற்றத்தி ற்குத் தண்டனை கை வெட்டப்படுவது.
கம்பனி நிர்வாகம் இதனை பெரிதுபடுத் தாமல் மெளனமாய் இருந்தது. பீட்டரைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு எச்சரித்தது. முரீலங்காவுக்கு அனுப்பப்பட்ட பணம் இரண்டு வாரத்திற்குள் கம்பனிக்கு வந்து சேரவேண்டும். இது தவறும் பட்சத்தில் பீட்டரைப் பொலிஸில் பிடித்துக் கொடுப்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பீட்டர் இதற்கு ஒப்புக் கொண்டு, காசைத் துரித கெதியில் மீளப் பெறும் முயற்சியில் இறங்க
som 6oT T6öT.
காசு மீண்டும் வெள்ளையர் நிர்வாகத் தின் கைகளுக்கு வந்து சேர்ந்தவுடன், பீட்டர் வேலை நீக்கம் செய்யப்பட்டுச் சொந்த நாட்டுக்குத் திருப்பியனுப்பட்டான். இச்சம்ப 6Lib குறித்த அலட்டல்கள் மனதை விட்டு நீங்கச் சிலகாலம் எடுத்தது.
இங்கு பெரிய அளவில் ஒரு ஐஸ் ரூம் உண்டு. எல்லாப் பொருட்களையும் குளிரில் பதனிட்டுச் சேர்த்து வைத்திருப்பார்கள். இந்த் ஐஸ் ரூமின் மின் விசை வெளிப்பக்கமாகத் தான் பொருத்தப்பட்டிருக்கும். இங்கிருந்து பொருட்களை எடுத்துச் செல்ல வருபவர்கள் திரும்பிச் செல்லும் போது, கதவினைத் திறவுகோலினால் மூடிவிட்டு, வெளிவிசை யைப் பொருத்தி விட்டுச் செல்வார்கள். இரண்டு நிமிடங்களுக்கு மேல் அவ்வறை யில் தங்கி நிற்க இயலாது. அந்த அளவிற்கு
பயங்கரக் குளிர் மேனியைத் தாக்கும்.
அன்றைய உணவுப் பொருட்களை ஐஸ் ரூமிலிருந்து எடுத்து வரும்படி, பம்பி என் னிடம் பட்டியலைத் தந்தான். குளிர்நடுங்கும் அறையில் நின்றபடி, பொருட்களை எடுத்து அவசர அவசரமாகத் தள்ளுவண்டியில் திணித்துக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்தில் குளிரின் வேகங் கூடி என் உடல் விறைத்துக் கொண்டு வந்தது. நிமிடங்கள் செல்லச் செல்ல, என் குருதிய ணுக்களை பயங்கரமாகத் தாக்கி, தலையி லிருந்து பாதம் வரை பிரக்ஞையற்ற நிலை தொடர்வதை உணர்ந்தேன். நின்று நிதானி த்துச் செயற்பட இயலாதபடி, மூளை செயலி ழக்கத் தொடங்கியது.
நான் பதறியடித்துக் கொண்டு வந்து வாசற் கதவைத் தள்ளினேன். கதவு வெளிப்பக்கமாக மூடப்பட்டு, வெளிமின் விசை போடப்பட்டு குளிர் வேகமாகிக் கொண்டிருந்தது. அங்கிருந்து வெளியே வர எந்த மார்க்கமுமின்றி வாசற் கதவைப் பலமாகத் தட்டினேன். அச்சத்தம் எவரது செவியையும் எட்டவில்லை. ஆனால், கதவுக்கு வெளியே யார் யாரோ நடந்து செல்லும் சப்பாத்துச் சத்தம் சன்னமாய் தேய்ந்து செவிப் புலனை வந்தடைந்தது.
மல்லிகை ஆகஸ்ட் 2008 ஜ் 60

கடுங்குளிர் தாக்கி மரக்கட்டையாகிப் பிணமாய் வீழ்வதற்கு முன் நான் எப்படி உயிர் பிழைப்பேன்?
உடல் சோர்ந்து கண்கள் இருட்டி, மூச்ச டைத்துக் கொண்டு வந்தது எனக்கு. மனை வியும், பிள்ளைகள் இரண்டுமங் மங்கிய வெளிச் சத்தில் திரைப்பட பிம்பங்களாய் நிழலாடினர். மேசையின் மீது வெள்ளைப் பேப்பர், அடிக்கி வைக்கப்பட்டிருப்பதைச் சற்றே அவதானித்தேன். மூளையில் மின் னல் போல் அறிவின் ஒளி பளிச்சிட்டது.
எனது உடலியக்கம் முற்றிலும் பிரக்ஞை யற்றுப் போவதற்கு முன்- ஊர்ந்து சென்று பேப்பரைக் கிழித்துக் கையிலெடுத்தேன். "அபாயம்! நான் ஐஸ் ரூமுக்குள் உயிராபத் தில் சிக்கிக் கிடக்கிறேன். தயவு செய்து என்னை உடன் காப்பாற்றுங்கள்." என ஆங்கிலத்தில் விறைத்து நடுங்கும் கரங்க ளால் கொட்டை எழுத்தில் கிறுக்கினேன்.
அடியில் எனது பெயரையும் எழுதினேன்.
மூடிய கதவின் அடிப்பகுதியில் பேப்பரை நுழைக்கும் அளவிற்கு சிறிய இடைவெளி யிருந்தது. பேப்பரை இடுக்கில் நுழைத்து, இயன்ற மட்டும் அசைத்துக் கொண்டேயி ருந்தேன். குளிரில் விறைத்துத் தேகம் பிரக் ஞையற்றுப் போனது. மயக்கமுற்று, மூர்ச் சையாகித் தரையில் விழுந்தேன். பசித்த விலங்கினைப் போல், மரணம் அருகே காத்துக் கிடந்தது.
மறுநாள்,
உடம்பெங்கும் இராட்சத வலி. மெல்லக் கண்திறந்து சூழலை வெறிக்கிறேன். கிங் அப்துல்லா வார்டில், ஒக்சேஜன், சேலைன் பொருத்தப்பட்டு அவசரப் பிரிவில் கிடக்கி றேன். பக்கத்தில் என் அறை நண்பன் ரவி,
கனிவோடு என் கரம்பற்றி ஆறுதல் சொல் கிறான்.
ரவி தமிழ்நாடு, விழுப்புரத்தைச் சேர்ந்த வன். காரியாலயத்தில் கணக்காளராக வேல்ை பார்க்கும். நேயமுள்ள நண்பன்.
'கவலைப்படாதே! உன் மனைவி மக்கள் செய்த புண்ணியம். நீ உயிராபத்தி லிருந்து தப்பி விட்டதாக டொக்டர் சொன் 6Orff.'
'ரவி! எனக்கென்ன நடந்தது? ஒன்றும் நினைவில் இல்லை." மெல்லிய தொனியில்
கேட்டேன்.
'உன்னை உயிராபத்திலிருந்து மீட்டது நான் தான். அலி அக்பர் என்ற பாகிஸ் தானிய அதிகாரி, நீ ஐஸ் ரூமில் இருப்பதைக் கவனிக்காமல், அவசரத்தில் கதவையும் மூடி, சுவிட்சையும் பொருத்திவிட்டுப் போய் விட்டான். அவ்வழியே நான் வந்தபோது, உன் அபயக் கடிதம் முதலில் என் கண்ணில் பட்டது. உடனே உன்னைக் காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாக இயங்கி னேன். இன்னும் கொஞ்சம் தாமதித்திரு ந்தால், ஒரு உயிர் அநியாயமாகப் பலியாகியி ருக்கும் என, மேலிடம் பாகிஸ்தானிய அதிகாரியை வன்மையாகக் கண்டித்தி ருக்கிறது.
உனக்குப் பத்துநாள் பெட் ரெஸ்ட் வழங்கியிருக்கிறது நிர்வாகம். எல்லாம் சரியாகிவிடும். ஒன்றுக்கும் யோசியாதே" என்று ஆறுதல் கூறிவிட்டு, அவன் விடை பெற்றான். என்னை உயிராபத்திலிருந்து காப்பாற்றிய நேயமுள்ள நண்பன் ரவியை, நீர்முட்டும் விழிகளால் நன்றியுணர்வுடன் பார்க்கிறேன்.
மல்லிகை ஆகஸ்ட் 2008 碑 61

Page 34
மேமன்கள் T memonkavi (a yahoo.com
உலகின் பல பாகங்களிலிருந்து பல பெண் வலைiபதிவாளர்கள் பல வலைப்பதிவுகள் செய்கிறார்கள். அவர்களில் சிலரின் கவிதைகளையும் அவர் தம் சில சிந்தனைகளையும் உங்கள் பார்வைக்கு. பெண்களின் பிரச்சினைகளை பெண்களே பேச வேண்டும் என்றுகிற கருத்தில் உடன்பாடு உள்ளவனாக.
1.செல்வநாயகியின் கவிதை
சாம்பல் பூத்த பின்னும்
Selvanayaki.blogSpot.com/
குளித்துமுடித்ததும் வழியும் திவாலைகள் தவறுதலாய்க் கைபட்டுச் சிந்திய ஏதோவொரு திரவம் எனத் துடைத்து எடுத்துவிடுவதுபோல் சுலபமாய் முடிந்துவிடுவன அல்ல உன் நினைவுகள்
எப்போதோ வந்துபோகுமொரு ரயிலுக்காக கானகத்தில் நீண்டு கிடக்கும் தண்டவாளமாய் அடிமனதில் உன் நட்பை அடைகாத்தபடி படுத்திருக்கிறது விவரிக்கவியலாத என் உணர்வு
ஒரு குளிர்தருவோ தளிர்நிழலோ உவமானமாகிட முடியாது நம் சந்திப்புக்கு அக்கினியாய்ச் ஆடு பரவிய வெளியொன்றில் தீயின் நாவுகளினிடை நாட்கள் நகர்ந்த போராட்டக்களத்திலிருந்துதான் கைகுலுக்கினாய் உன் காய்த்த விரல்கள் நீட்டி ஒரு நடுச்சாமத்தின் நல்ல தூக்கத்தில் என் கூரை உடைத்தொழுகிய மழையின் ஈரத்தில்
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 62
 
 
 
 

இருந்தன உன்னிடம் தரிசித்த தத்து
656 வாழ்வு ஒரு அணுவென்றால் அதன் எல்லாத் துகள்களையும் உணர் நீ துவைத் தருந்த அமைதி உன்னிடம் இருந்தது
ஒரு மலையுச்சியில் உட் கார்ந்து நகர்ந்துவிடும் மேக இருப்பின் கால அளவே கதைத் திருப்போம் கோர்த்தலைப்போலவே பிரிதலிலும் இயல்பாய் விலகின நம் விரல்கள்
அருகாமை, பகிர்தல்கள், தொடர்பிணைப்புகள் எதுவும் தேவையிருக்கவில்லை நமக்கு பாண்டியனின் சபையில் கண்ணகியின் சிலம்பிலிருந்து சிதறிய பரல்களாய் உணர்வுச் சிந்தலும் பிரிதலுக்கில்லை
காலம் இப்போதும் எடுத்துச சென்றுகொண்டு
தானிருக்கிறது உன்னையும் என்னையும் இருவேறு திசைகளில் உன்னுள் படர்ந்திருந்த தீ அணைந்திருந் தாலும்
அதிலிருந்து பற்றிக்கொண்ட சுடர்கள் எங்குமிருக்கலாம் என்னிடமுமிருக்கலாம் மீண்டுமொரு திருப்பத்தில் உருமாற்றங்களோடு சந்திக்கநேர்ந்தாலும் கைகுலுக்குவோம் அப்போது கதைக்க ஏதுமில்லாதுபோனாலும் உனக்குள் நீ தீவளர்த்த பிரதேசத்தின்மீது பூத்திருக்கும் சாம்பல் விலக்கி தேடிக்கண்டுகொள்ள முயல்வேன் நீ தொலைத்த உன்னை
லக்கழ்மி எனும் வலைப்பதிவாளர் மென்பொருள் துறையில் இருக்கிறார். இராமுருகனின் முன்று விரல் எனும் நாவலைப் பற்றி தனது கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்.
புத்தகம் - டூன்று விரல் ஆசிரியர் - இரா. முருகன் பதிப்பகம் - கிழக்குப்பதிப்பகம் முதல் பதிப்பு - ஆகஸ்ட், 2005
பொதுவாகவே எனக்கு இரா.முருகனின் எழுத்தில் விரவி நிற்கும் மெல்லிய அங்க தம் பிடிக்கும். அது அரசூர் வம்சம் நாவலா னாலும் சரி, வாரபலன், எடின்பரோ குறிப்பு கள் போன்ற பத்திகள் ஆனாலும் சரி அடிநாதமாக இந்த மெல்லிய நகைச்சுவை இழையோடும். அதிலும் குறிப்பாக இந்த நாவல் ரொம்ப பிடித்துப் போனதன் காரணம் நாவல் முழுக்க முழுக்க பொட்டி தட்டு தல், ஆணி பிடுங்குதல் என்றெல்லாம் தமிழ் வலையுலகால் செல்லமாய் நாமகரணம் செய்யப் பட்டிருக்கும் மென்பொருள் துறை யில் இருக்கும் ஒரு இளைஞனைப் பற்றி யது என்பதுதான். ரமணாவில் விஜயகாந்த் விண்டோஸ் மீடியா ப்ளேயரை திரையில் ஒடவிட்டு ஸ்கீரினைப் பார்த்துக் கொண்டே கீ போர்டில் மாய்ந்து மாய்ந்து டைப் செய் வார் - அதுவும் இதை ட்ராலி வைத்துச் சுற்றிச் சுற்றி வேறு காட்டுவார்கள். இந்தக் காட்சியைப் பார்த்து நாம் சிரிக்கக் கூட முடியாது வீட்டில் உட்கார்ந்து - ஏனென் றால் சுற்றியிருட்பவர்கள் ஒரு சீரியஸ் காட்சியில் திடீரென்று சிரிக்கும் தன் பெண்ணின் சித்த சுவாதீனத்தின் மீதே அவநம்பிக்கை கொண்டு விடக்கூடும்.
வெளியிலிருந்து பார்க்கும் ஆட்களுக்கு மென்பொருள் ஆசாமிகளைப் பற்றி ஏற்படு த்தப்பட்டிருக்கும் பிம்பம் அவ்வளவுக்கு நிஜத்திலிருந்து வேறுபட்டது. அதை இந்த நாவல் கொஞ்சமேனும் மாற்றும் என்று எண்ணுகிறேன். இரா.மு மென்பொருள் துறையிலும் சரி இலக்கியத் துறையிலும் சரி செறிந்த அனுபவமுடையவர். முன்னுரையில் அவர் இந்த நாவல் எழுத நேர்ந்ததன் காரணத்தை விளக்குகிறார்.
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 63

Page 35
மற்ற எந்தத் தொழிலில் இருப்பவரகளை யும்விட, முழுக்க முழுக்க கற்பித்துக கொண்ட பிம்பங்களின் அடிப்படையில் தமிழ்ப் படைப் புகளில் சித்தரிக்கப்படுபவர்கள் கம்ப்யூட்டர் சாட்ப்ட்வேர் துறையில் இருக்கப்பட்டவர்கள் தாம்.
கணினி மென்பொருள் தொழில்நுட்பப் பணியாளர்கள் பெரும்பாலும் இருபத்தை ந்திலிருந்து முப்பது வயதுக்குள் இருக்கும் இளைஞர்களும் யுவதிகளும். இந்த வயது வரம்பு, கம்ப்யூட்டர் என்ற பழைய மந்திரச் சொல்லின் பரவலான எச்ச சொச்ச ஈர்ப்பு அங்கோலாவிலிருந்து ஆஸ்திரேலியா வரை பறந்து இறங்கிக் கூடு கட்டி இந்த மென் பொருள் தொழிலாளர்கள் சம்பாதிக்கும் - இந்தியச்சராசரி வருமானத்தை விடப் பல மடங்கு கூடுதலானது என்று பலராலும் கருதப்படும் - வருமானம் போன்றவற்றின் அடிப்படையில் சாட்ப்ட்வேர் இன்ஜினியர் களைப் பற்றி பலூனாக ஊதப்பட்ட வண்ண வண்ண இமேஜ்கள் தமிழ்க் கதைகளில் பிறக்க ஆரம்பித்தபோது இதெல்லாம் சீக்கி ரம் தரைக்கு வந்து விடும் என்று நினைத்து நான் என்பாட்டுக்கு கம்ப்யூட்டர் தொழிலி லும் அதோடு சம்பந்தப்படாத என் படைப் புலகத்திலும் மூழ்கியிருந்தேன்.
ஆனால், தமிழில் ஒரு படைப்புக்கூட இதுவரை மென்பொருளாளர்களைப் பற்றிய இப்படிப்பட்ட தட்டையான படிமத்தை உடை த்து அந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களை நகமும் சதையுமாகச் சித்தரித்து அவர்க ளின் தொழில் சார்ந்த சிக்கல்களையோ, தினமும் சந்திக்கவேண்டியிருக்கும் சவால் களைப் பற்றியோ பேசவே இல்லை என்று எனக்குப் பட்டபோது, கம்ப்யூட்டர் துறையில் இருக்கும் தமிழ்ப் படைப்பாளன் என்ற முறையில் இவர்களைப் பற்றிய ஒரு முறை யான பதிவை, என் படைப்பாக்கங்களின் ஒரு பகுதியாக முன்வைக்க உத்தேசித்தேன்.
நண்பர் பா.ராகவன் திடீரென்று தொலை பேசியில், தான் சார்ந்திருந்த பத்திரிக்கை யின் இணையதளத்தில் நான் உடனே ஒரு தொடர்கதை எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு, அது கம்பியூட்டர் துறை பற்றியதாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு யோசனையையும் தெரிவித்தார்.
ஐந்து நிமிடத்தில் திரும்ப 'போன் செய்கிறேன். தலைப்பு சொல்லுங்க”
நான் என் கம்ப்யூட்டரில் வழக்கமான வேலையில் மூழ்கி இருந்தேன். புராஜக்ட் மேனேஜ்மென்ட் தொடர்பான சிக்கலான வேலைப் பங்குபிரிப்புக்கு இடையே என்ன காரணத்தினாலோ அந்த இயந்திரப் பிசாசு ஸ்தம்பித்து நின்று போக நான் அதை திரும்ப இயங்க வைக்க ரீபூட் செய்து கொண் டிருந்தபோது உதயமான தலைப்புதான் மூன்று விரல்.’
திடீரென்று இயக்கம் மறைந்து உறை வதும், திரும்பச் செயலபடத் துவங்குவதும் கம்ப்யூட்டரின் குணாதிசயம் மட்டுமல்ல, அதோடு சம்பந்தப் பட்டவர்களின் வாழ் க்கை நியதியும்கூடத்தான் என்று தோன்றிய அந்தக் கணத்தில் உருவான கதையே இது. இந்த நாவலில் வளைய வருகிறவர்கள் பெரும்பாலும் கம்ப்யூட்டர் தொழிலில் ஈடுபட்டவர்கள். ஆனால், தலையில் கொம்பு முளைக்காத, சட்டைப் பையிலும் கைப்பை யிலும் டாலர் நோட்டுக்கள் பிதுங்கி வழிய, கழுத்தை இறுக்கும் டையும் கோட்டும் நுனி நாக்கு ஆங்கிலமுமாக ஆயிங்கம்மை மென்ற படி தரைக்கு மேலே சரியாக பத்து சென்டி மீட்டர் உயரத்தில் மிதக்காத சாதாரண மனிதர்கள் இவர்கள்.
'அவனா. அமெரிக்காவிலே பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியிலே மாசம் பத்து லட்சம் சம்பாதிச்சு லாஸ் ஏஞ்சல்ஸிலே வீடும் காரும் வெள்ளைக்காரி தொடுப்புமா
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 64

இருக்கானாம். என்று பொருமி வியத்தலும், கம்ப்யூட்டர்காரங்களுக்கு எல்லாம் அவழ்ட மத்திலே சனி பிடிச்சு தொழிலே நசிஞ்சு போய், அவனவன் 'ராயர் காப்பி ஹோட்ட லிலே வாழைக்காய் நறுக்கிக் கொடுத்திட்டு இருக்கானாம். நல்லா வேணும்' என்று இருமி எச்சில் உமிழ்ந்து இகழ்தலும இங்கே இலமே!
இருபது வருடங்களாக இந்தத் துறை யில் இருக்கும் அனுபவம். எனக்கு இந்த நாவலை எழுத மிகவும் பயன்பட்டாலும், அது மட்டும் ‘மூன்று விரல் இல்லை.
எல்லாப் படைப்புகளும் எழுதியவனை மீறி ஏதோ சொல்ல முற்படுகின்றன. முற்பட வேண்டும். அவற்றோடு ஊடாடும் வாசகர் கள், சொல்லப்பட்ட கதையையும் கடந்து தங்கள் எண்ண ஓட்டங்களை விரிக்க வழி செய்வதோடு எழுதியவனின் கடமை முடிந்து விடுகிறது.
இந்த முன்னுரையையும் இதோடு முடித் துக் கொள்ள அனுமதி வேண்டுகிறேன்.
கீழாம்பூர் ரங்கநாதன் சுதர்சன் -ஒரு மென் பொருள் வல்லுனன். சென்னையில் ஒரு சா."ப்ட்வேர் கம்பெனியின் சார்பாக லண்ட னிலிருக்கும் நாய் வளர்ப்போர் சங்கத்துக் கான மென்பொருளை உருவாக்கும் பணியி லிருந்தவன். மென்பொருள் உருவாகி முடிந் ததும் அதை வாடிக்கையாளருக்கு இயக் கிக் காண்பித்து அவர்கள் சுட்டிக் காட்டும் குறைகளை உடனடியாகக் களைந்து பின் அவர்களின் ஒப்புதல் பெற்று வரும் யூ.ஏ.டி (யூசர் அக்சப்டன்ஸ் டெஸ்ட்) என்ற அக்னிப் பரிட்சைக்காக லண்டன் செல் கிறான். வெற்றிகரமாக அதை முடித்துக் கொண்டு அங்கேயிருந்து கிளம்புவதற்கு முன்னரே அவன் வேலை பார்க்கும் கம் பெனி கைமாறி விடுகிறது. இதற்கு இடை யில் சந்தியா எனும் லண்டன் வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணைச்
சந்தித்து காதல் கொள்கிறான். இந்தியா திரும்பி வருகையில் ரயில் சிநேகம் போல விமானத்தில் அறிமுகமாகும் ஒரு பக்கத்து சீட் சர்தார் தானும் ஒரு மென்பொருள கம் பெனி ஆரம் டரி கி கவே செனர்  ைன போவதாகவும் அதில் சேர விருப்பமா என்று கேட்கிறார். சென்னை வந்தவுடன் புது நிர்வாகமும் சுதர்சனைத் தன் கம்பெனியி லேயே இருக்கச் சொல்லுகிறது. அதை மறுத்து புது கம்பெனியில் சேரும் சுதர்சன் அக்கம்பெனியின் சார்பில் பாங்காங் போய் வேலையில் சேருகிறான். தன்னுடன் ஒரு சிறு குழுவைத் தன் பொறுப்பில் அழைத் துச் செல்கிறான். அங்கு அவன் சந்திக்கும் பிரச்சனைகள், ஊரில் அவன் அப்பா ஒரு நெருக்கடிக்குள்ளாவது, அப்போது தான் அருகிலிருக்க முடியவில்லையே என்று அவன் தவிப்பது, அவனுக்கு ஒரு பெண் பார்த்து நிச்சயம் செய்யத்துடிக்கும் தாயிடம் தன் காதலைச் சொல்ல முடியாமல்
தவிப்பது, அவனது காதலி எதிர்கொள்ளும்
பிரச்சனைகள் என்று நாவல் சுவாரசிய மாகப் பயணிக்கிறது.
பொதுவாகவே மென்பொருளில் ஆன்சைட் எனப்படும் வாடிக்கையாளரின் இடத்திலேயே போய் வேலை செய்யும் வாய்ப்பு இரு முனைக் கத்தியைப் போன றது. வெளிநாடென்பதால் கம்பெனி தரும் அலவன்ஸ் அதிகமாக இருக்கும் - அதை சேமித்து ஊருக்கு அனுப்பினால் (இந்த ஆல் பெரிய இக்கன்னா. இங்க கோட்ட விடறவங்க ரொம்பப் பேரு) அது பெரிய சேமிப் பாகத் தான் இருக்கும். ஆனால் இதற்காக எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகளும் நிறைய. வெளிப்படையான பிரச்சனைக ளான இந்திய சமையல் சாமான்கள, காய் கறிகள், கோவில்கள் போன்றவற்றின் தேவையெல்லாம் அநேகமாய் எல்லா நாடு களிலும் தீர்க்கப்பட்டாகிவிட்டது. ஒரு
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 65

Page 36
சின்ன் ஊரில் கூட இரண்டு இந்திய டிபார்ட் மென்ட்டல் ஸ்டோர்கள்(இது பெரும்பாலும் குஜராத்திகளால் நடத்தப்படுகிறது), கோவில்கள் (இதில் பெரும்பாலும் ஆந்திர மாநிலத்தவர் பங்கு அதிகம்), போன்றவை இருக்கின்றன. சமீபத்தில் பொன்ஸ் சான் பிரான்ஸிஸ்கோவில் அரசு நூலகங்களி லேயே தமிழ்ப் புத்தகங்கள் கிடைப்பதாகச் சொல்லியிருந்தார். அந்த அளவு புற வசதி கள் நாம் வீட்டை விட்டுத் தொலைவிலி ருக்கிறோம் என்பதை மறக்கச் செய்கின்றன என்பது உண்மைதான். ஆனால் மனவியல் ரீதியில் சந்திக்க நேரும் பிரச்சனைகள் ஏராளம். நமக்கு ஒரு பிரச்சனை என்றால் வீட்டிலிருப்போரின் அருகாமை கிடைக்காது போவது, நாம் இங்கேயிருக்க வீட்டில் ஏதேனும் பிரச்சனை என்றால் அடிக்கடி தொலைபேசி அவர்களை நச்சரிப்பதல்லாது உருப்படியாய் எதுவும் செய்து உதவ முடி யாத கையறு நிலை என்று பல காரணிகள் மனோரீதியாக நம்மைச் சோர்வுறச் செய்யும். இது மணமாகாத இளையோருக்கு. மண மாகி, பின் துணையை இங்கே விட்டு விட்டுத் தவிப்பது ஒரு ரகம். கூட அழைத் துப் போனாலும் கூட பிள்ளைப்பேறு, குழ ந்தை வளர்ப்பு போன்ற விஷயங்களில பெரி யவர்கள் வழிகாட்டுதலுக்கும் ஒத்தாசை க்கும் ஏங்குவது, அப்படியே பெற்றோரை டுரிஸ்ட் விசாவில் அழைத்துப் போவதென முடிவு செய்தாலும் உங்க அப்பா அம்மாவா இல்லை என் அப்பா அம்மாவா என்று முடிவு செய்வதிலிருந்து ஆரம்பித்து ஏகப்பட்ட சிக்கல்கள் - இப்படி வெளிநாடு வாழ் மென் பொருள் ஆசாமிகளின் மனோரீதியிலான பிரச்சனைகளின் பட்டியல் ஆகப் பெரிது.
வேலையிலும் அழுத்தம் அதிகம். குறிப் பாக - யூ.ஏ.டி எனப்படும் வாடிக்கையாளர் கள் மென்பொருளை நேரடியாகச் சோதித்து ஏற்றுக் கொள்ளும் கட்டத்தில் மொத்த
குழுவின் தவறுகளுக்கும் நாம் அங்கே நின்று சப்பைக்கட்டு கட்டியாக வேண்டும். உடனுக்குடன் சரி செய்து (தானே செய்துவிடும் ஆட்களும் உண்டு - இல்லை உடனடியாக ஆட்ப்ஷோர் மக்களை அழை த்து முடிந்த மட்டும் கத்தித் தீர்த்துவிட்டு அவர்களைச் சரிசெய்யச் சொல்வதும் உண்டு) மீண்டும் அவர்களை விட்டே சரிபார்க்கச் சொல்லியாக வேண்டும். இந்தக் கட்டம் கிட்டத்தட்ட நெருப்பில் நிற்பது போன்ற விஷயம். இதையெல்லாம் நாவல் தெளிவாகவே சொல்கிறது. அதற்காக ஏதோ மென்பொருள் துறை பற்றிய பாடம் போலத்தான் இருக்குமாக்கும் என்று நினை த்துவிட வேண்டாம் - எங்கேயும் வலிந்து எந்த விஷயமும் திணிக்கப் படவில்லை. கதையோட்டத்திலேயே நாயகனது பணிச் சுமை, வீட்டை விட்டுத் தள்ளியிருக்கும நிலை யில் வீட்டுப் பிரச்சனைகளில் தன்னால் எதுவும் செய்ய முடியாத தவிப்பு என்று ஏகப்பட்ட விஷயங்கள் நாவல் முழுவதும் விரவியிருக்கிறது.
எவ்வளவு பிரச்சனை வந்தாலும் வாழ் வென்பது முடங்கி நின்று விடக்கூடாதென்ப தையும் எந்தப் புள்ளியிலிருந்தும் அது மீண்டும் ஆரம்பிக்கப் பட வேண்டியதுதான் என்பதையுமே நாவல் சொல்கிறது. அங் கங்கே முருகனின் வழக்கமான மாஜிக்கல் ரியலிசமும் உண்டு.
ஆரியண் தனித்தலையும் பகல் இது தழிழ்நதி எனும்
ஈழத்திலிருந்து கனடாவில் வாழும் பெண் கவிஞரின்
தொகுப்பு அவர் நடத்தும் இளவேனில் என்னும் வலைப்பதிவிருந்து ஒரு கட்டுரை.
யாழ்ப் பாணமே! எங்கள்
யாழ்ப்பாணமே!
இரத்தத்தாலும் கண்ணிராலும் மெழு கப்பட்ட ஏ9 இல் விரைகிறோம். காட்டு மரங்
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 66

களும் கண்ணிவெடி கவனம் என அச்சு றுத்தும் அறிவுறுத்தல்(நம் பாதையின் இரு மருங்கும் கழிகின்றன. எழுத நினைப் பவரை வார்த்தைகள் கைவிடும்- வலியும் மகிழ்வும் நெகிழ்வும் பெருமிதமும் தரும் ஆனையிறவின் உப்பளக்காற்று ஒராயிரம்
கதைபேசுகிறது. தலையறுந்த தென்னை, பனைகள் பரிதாபமாக நிற்கின்றன. சாவகச்
சேரியில் சாவு கச்சேரி நடத்திவிட்டுப போயி ருக்கிறது. வீடுகளின் எல்லாப் பக்கமும் குண்டுகள் வாசல் வைத்துவிட்டுப் போயிரு க்கின்றன. நிலாப் பார்க்க முற்றம் வர வேண் டியதில்லை. வீட்டுள் படுத்து அண்ணாந் தால் ஆகாயம். வெறிச்சிட்டுப்போய்க் கிடக் கும் திண்ணைகளில் விளையாடிய குழந் தைகள் எங்கே போயினர்? தூணில் சாய்ந் திருந்து ராஜா ராணிக் கதைகள் சொல்லிய வயோதிபர் எந்த இரவல் குடிலில் ஏங்கிச் செத்தனரோ? இராணுவப் பச்சையாயிரு க்கிறது ஊர். தலையும் உருமறைத்த இரா இணுவத்தினர் துள்ளிப் பயிற்சியெடுக்கும் காட்சி திடீரென கண்ணில் பட பழைய ஞாப கத்தில் திக்கிடுகிறது நெஞ்சு. சாதாரண சனங்களின் நினைவடுக் குகளில் உறைந்துவிட்ட பயத்தை அரசியல்வாதி களின் சமாதானப் புன்னகைகள் துடைத்து விடப்போவதில்லை. இராணுவப் பச்சை யைக் காணுந்தோறும் இருள் நிறத்தில் ஒன்று சுழன்று சுழன்று நெஞ்சை அடைப் பதைத் தவிர்ப்பதெப்படி?
ரியூசன் சென்ரர்களின் வாசல்களில் கூடிக் கூடி நிற்கும் மாணவர்கள் பால்ய நினைவுகளுக்கு இட்டுச்செல்கின்றனர். மாறி த்தானிருக்கிறது யாழ்ப்பாணம் மாறவில்லை குச்சொழுங்கைகளும், பூவரசுகளாலும் கிழு வந்தடிகளாலும் பின்னப்பட்ட வேலிகளும், போரின் வடுக்களும் புதுமை)யின் மினுக்க முமாக இரண்டு முகம் Iட்(டுகிறது . It I ணம். அங்கு வாழும்போது ? கன ப் I I),
வீடுகளின் விசாலம் இப்போது பிரமிப்பூட்டு கிறது. அகலமும் நீளமுமாய் உள்விரிந்து செல்லும் பலகட்டு வீடுகள். குளிர் தேசங் களில் ஆயிரம் சதுர அடிக்குள் வீடு பேறடைந்ததன் காரணமாக ஏற்பட்ட பிரமிப் பாயிருக்கலாம் இது.
போராலும் பின் கடல் நீராலும் அலைக் கழிக்கப்பட்ட உள்ளுர் வாசிகளுக்கும். புலம்பெயர்ந்து போரோய்ந்த பின் ஊர் பார்க்க வந்தவர்களுக்கும் தோற்றத்தில்கூட வித்தியாசமிருக்கிறது. குளிரூட்டப்பட்ட டொல்பின்களுக்கும் பஞ்சமில்லை. தொள தொள காற்சட்டைகள், நெற்றியிலேற்றிய கணி ணாடிகளுடனான அப் பாக்கள் - ஆங்கிலம், பிரெஞ்சு, டொச் இன்னபிற மொழிகளில் கேள்வி கேட்கும் பிள்ளை களுக்கு விளக்கமளிக்கிறார்கள். வேரை விழுதுகளுக்கு அறிமுகம் செய்துவைக்க வேண்டிய காலமாயிற்று! குளிர்தேசங்கள் குழந்தைகளின் கன்னங்களில் பூக்கவைத்த அப்பிள் நிறத்தை வெயில் வெம்மை சுட்டெரித்திருந்தது. ஐஸ்கிரீம் கடைகளில் ஈக்களோடு கூட இளைஞர்களுமிருக்கி றார்கள். அவர்களுக்கெதிரில் வீட்டுக்காரர் கண்டிடுவினமோ பயமும்-காதல் பரவசமும் மாறி மாறி மிதக்கும் கண்களையுடைய இளம் பெணி களுமிருக்கிறார்கள். வழிதெருவெங்கும் புதிதாக முளைத்திருக் கின்றன புலம்பெயர்ந்தோரை ஊரோடு இணைக்கும் தொப்புள் கொடிகளான தொலைத்தொடர்பகங்கள். சொல்ல மறந்து போயிற்று இங்கும் அநேகரின் கைகளில் முளைத்திருக்கிறது ஆறாம் விரலாய் செல்லிடப்பேசி. அண்மைய சினிமாப் பாடல் மெட்டுகளில் அவரவர் சட்டைப்பைகளி லிருந்து விதவிதமாய் பாடி அழைக்கிறது.
W. (8) வசதியான விடுதிகள் 0) சார்பற்ற நிறுவனப் பணியாளர்களாலும்
ነ 浔 6/

Page 37
புலம்பெயர்ந்தோராலும் நிறைந்துள்ளன. பரவாயில்லை எனும்படியானவற்றின் கட்ட ணங்களோ குடாநாடு டாலர் மற்றும பவுண்ஸ் பற்றிய அறிவுடைத்து என எடுத் துரைக்கின்றன.
ஆனையிறவிற்கும் யாழ். நூலகத்திற் கும் அப்படியென்ன தொடர்பு? சொல்ல முடியாத உணர்வுகளால் நெகிழ்ந்துபோகி றது மனம் இழப்பின் வலியை ஈடுசெய் யுமோ நெடிதுயர்ந்த கட்டிடம்! ஆனால புதுப் பொலிவோடு அழகாயிருக்கிறது. வெளிக ளிலிருந்து வந்திறங்கும் காற்றுக்கேற்ப உல கம் அழகியது அழகியது எனத் தலைய சைக்கின்றன செடிகள். அத்தனை நூல் களையும் வாசிக்க இடந்தராத நடைமுறை வாழ்வின் மீதான ஆற்றாமை படியிறங்கு கையில் பொங்குகிறது.
சுப்பர் மார்க்கெட் எனப்படும் பேரங்காடி களில் அலைமோதுகிறது கூட்டம். மாநக ராய் மீள உருக்கொள்ள விளைகிறது நகரம். பாவம் கிராமங்கள்தான் தனித்து தவித் துப்போயின. போருக்கஞ்சி வெளிநாடுக ளுக்கும் கொழும்புக்கும் ஓடிப்போனவர்கள் கோயில் திருவிழாக்களுக்கே திரும்பி வரு கிறார்கள். அந்த சில நாட்கள் முருகனுக் கும் அம்மனுக்கும் இன்னபிற தெய்வங்களு க்கும் குளிரக் குளிர அபிசேகம் பின்னர் கேணியும் மரங்களும் மட்டுமே துணை. திரட்டிய நிதியில் ஒளிர்பவை தவிர்த்து ஏனைய கோவில் களில் இருளோடு வெளவால்கள் உறவாடுகின்றன. வெளி நாடுகளிலிருந்து பிள்ளைகள் போடாத கடி தங்களுக்காகக் காத்திருக்கும் வயோதிபப் பெற்றோர் போல, சில கடவுளரும் கிராமங்களில் காத்திருக்கின்றனர்.
ஏழு மணிக் கெல்லாம் கடைகள் பூட்டப்பட்டு சனமோய்ந்துபோன நகரம்
இறந்தகாலத்தின் மீதான ஏக்கத்தைக் கிளறுகிறது. தாம் போகும் பாதை நெடுக இந்த வேலிக்கும் அந்த வேலிக்கும் சமரசம் செய்து வைத்துக் கொண்டு போகும் குடிகாரர்களைக் காணவில்லை. படம் முடிந்து பின்னிரவில் எவரும் வீடு திரும்பும் சந்தடியில்லை.
போராலும் காலத்தாலும் சிதிலமாகிப் போன வீடுகளுக்குப் பக்கத்திலேயே முளைத்திருக்கின்றன புதிய வீடுகள் ஒன்றிரண்டு துண்கள் மட்டும் தாங்க ஓவென வெறிச்சிட்ட ஆளற்ற வீடுகளின் பக்கலில் எழுந்திருக்கும் நவீன வீடுகளைப் பார்க் கையில் மரணமும் வாழ்வும் அருகருகு அமர்ந்திருப்பதைப் போலிரு க்கிறது. திறந்தவெளி உணவுச் சாலைக ளின் கட்டணங்கள் கைநனைக்குமளவிற்கு இல்லை. அந்தக் கதிரைகளில் உட்கார்ந் தால் ஓரிரு மயில்களாவது பறந்து விடுகின்றன.
இனியென்ன எங்கோ ஒரு குளிர்தேச த்தில், அலாரம் அலறி எழுப்பாத ஞாயிற் றுக்கிழமை காலையில், கோப்பிக்கடை யொன்றில் ஒலிக்கும் சாக் சபோன் பின்னணியில் இனங்காணக்கூடும் எங்கள் ஊரின் பூவரச பீப்பீ குழலோசையை!
ஏறக் குறைய ஓராணி டிற்கு முன் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தபோது எழுதியது. இப்போது யாழ்ப்பாணம் எப்படிச் சிதைந்திருக்குமென்பதைக் கூறவேண்டிய தில்லை. அதன் முகத்தை போர் குதறி விட்டிருக்கும் என்பது துயரம் செறிந்த S. 606T60)LD.
நாளை என்னோடு ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு எங்கள் யாழ்ப்பாணமே என்றெழுதியது குறித்து எள்ளுவார்.
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 68

ஆண்டில்
р 30 வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கிராமத்து வாசிகசாலைக்குச்
- டொகிேக் ஜீவா
சென்றபோது, பெரிய மேசை ஒன்று நீளமாக இருந்தது. அதன் ஒரு பக்கத்தில் வாரிங்கில் பலர் உட்காரிந்து படித்துக் கொண்டிருந்தனர். மற்றப் பக்கத்தில் வாங்கு போடப்படவில்லை. நின்றபடி, சிலர் பேப்பரி வாசித்துக்கொண்டிருந்தனர்.நின்றபடி வாசித்தவர்கள், அந்தப்பகுதிப் பஞ்மர்கள்.
கல்கிசை. சி. குமாரலிங்கம்.
* முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஏன் யாழ்ப்பாணம் போய் இந்தக் கீழ்த் தரமான நடவடிக்கையைப் பார்க்க வேண்டும்? "நாங்கள் ஊரிலையெண்டால் இவையளின்ரை வீடு வாசலிலை போய்ச் செம்புத் தண்ணி தூக்கமாட்டம்” என்றாளாம் கனடாவில் போய் அகதியாகக் குடியேறியிருக்கும் ஒரு யாழ்ப்பாணத்து உயர்குலச் சீமாட்டி ஒருத்தி. சாதி இருக்கிறதே, அது ஒரு சர்வதேசத் தொற்று நோய், தமிழனுக்கு உதாரணத்திற்கு வாரப் பத்திரிகையின் திருமணத் தகவல்களைப் பாருங்கள்: லண்டனின் குடியுரிமை பெற்று வாழும் சைவ, வேளாள குலத்தைச் சேர்ந்த படித்த உத்தியோக மாப்பிளைக்கு அதே தகுதி வாய்ந்த மணமகள் தேவை. விபரங்களுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்.
? நீங்கள் கொலைக்காட்சிபாரிப்பதுண்டா?
மருதானை. கா. செந்தில்.
* அடிக்கடி பார்ப்பேன். தொடர்ந்து பார்ப்பதில்லை. தொடர்கள் பார்ப்பதுமில்லை, இன்று இளந் தலைமுறையினரின் எதிர்காலம் பற்றி நான் அடிக்கடி சிந்தித்துப் பார்ப் பதுண்டு. அவர்களின் மேல் இரண்டு சர்வதேசத் திணிப்புக்கள் திணிக்கப்பட்டு விட்டு ள்ளதே என அச்சப்படுகின்றேன். இது எங்கு போய் முடியுமோ என நான் மனசாரப் பயப் படுகின்றேன். ஒன்று கிரிக்கட், இன்னொன்று தொலைக்காட்சி. நான் நவீன சாத னங்களுக்கு எதிரானவனல்ல. ஆனால், இவையிரண்டுக்கும் பெருகி வரும் ஆதரவு,
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 69

Page 38
இளசுகளின் இளமைக் காலத்தையே செயலிழக்க வைத்து, தனிமைப் படுத்தி, ஒதுங்கியிருக்கப் பழக்கப்படுத்தி விடுமோ? என மனதளவில் அச்சப்படுகின்றேன்.
p ‘இனிமேல் எனக்குப் பொன்னாடைகள் போர்த்த வேண்டாம். இனி அதை நான் அனுமதிக்கவும் மாட்டேன்!” என முன்னொரு தடவை விழாவில் வெகு வீராப்பாகச் சொன் னிர்கள். சமீபத்தில் நடந்த உங்களது 62வது பிறந்தநாள் விழாவில் பொன்னா டையை ஏற்றுக் கொண்டீர்களே, இது முரண் LIIILITä55 65fu6filö6o6ouIIT?
கொழும்பு-06. ஆர். சிவநேசன்.
2 ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேடையில் சில ஆர்த்மார்த் திக நண்பர்கள் என்னைக் கெளரவிக்க முனைகின்றனர். திடீரென முன்னறிவித் தல் கூட இல்லாமல் பொன்னாடை போர் த்துகின்றனர். நான் என் பிரகடனத்திற்காக, அந்தச் செயலை மறுப்பது அது எத்தனை அநாகரிகமான செயலாக இருக்கும் என் பதைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். பொன்னடைக்குப் பதிலாக என்னுடைய நூலொன்றை மேடையில் வைத்து என் னிடம் வாங்கினால் அது எத்தனை கெளர வமாக இருக்கும். அவர்கள் எண்ணிப் பார்த்திருந்தால், அதுமட்டற்ற மகிழ்ச்சியை யல்லவா தந்திருக்கும்.
? கர்நாடக இசை உலகில் கொடி கட்டிப் பறந்த இசை அரசிகள் யாரையாவது நேரில் சந்தித்த அநுபவம் உண்டா?
Lu860)). க. தனேந்திரன்.
2 நான் இளம் வயதிலேயே கர்நாடக இசை ரஸிகன். என்னுடைய உறவினர் ஒருவர் பெரிய இசை வித்துவான். அவரு டைய நட்பின் மூலம் எனது இசை அறிவை இளம் வயதில் அபிவிருத்தி செய்து கொண் டேன். இசை அரசிகள் நால்வர். எம். எஸ். பட்டம்மாள், சுந்தராம்பாள், என். ஸி. வசந்த கோகிலம். இவர்கள் நால்வரை யும் நான் நேரில் பார்த்திருக்கின்றேன். சிறிது நேரம் பேசியுமுள்ளேன்.
இவர்களது இன்னிசையைச் செவி யாரப் பருகியுமுள்ளேன். இன்று கூட அதை நினைக்கும் போது என் நெஞ்சு குளிர்கின்றது.
இவர்களைத் தவிர, அந்தக் காலத் தில் ரஸித்துச் சுவைத்த இசையரசி சாவித்திரி கணேசன் என்பவர்; இவர் புகழ் பெற்று வரும் இடைக்காலத்தில் அரியலூர் ரெயில் விபத்தில் மரணமாகி விட்டார் என்பது பெரிய துக்கம்.
p நீங்கள் தினசரி வாசிப்பீர்களா? எத்த கைய எழுத்துக்களைப் படிப்பீர்கள்?
மன்னார். ச. பரஞ்சோதி.
2 படைப்பாளி ஒருவன் தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதிலும், சஞ்சிகை ஆசிரியராகத் திகழ் பவன், தனக்காக இல்லாது போனாலும், பரந்துபட்ட தனது வாசகர்களுக்காகத் தகவல்களைத் திரட்டி வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும். தவறி னால் இயல்பாகவே பின் தள்ளப்பட்டு
விடுவான். நான் தொடர் வாசகனாக இரு
மல்லிகை ஆகஸ்ட் 2008 & 70

ப்பது என்னைப் பக்குவப்படுத்திக் கொள் வதற்கு மாத்திரமல்ல, மல்லிகையின் தர த்தைச் மேம்படுத்துவதற்காகவும் தான் இடையறாது படித்துக் கொண்டிருக்கி ன்றேன்.
? தசாவதாரர்' சினிமாப் படத்தைப் பாரி
த்துவிட்டீர்களா?
கொழும்பு- 06. எஸ். அருணன்.
2 இன்னமும் பார்க்கவில்லை. நிச்சய மாகப் பார்க்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருக்கின்றேன். அதுவும் தியேட் டரில் இப்படிப்பட்ட பிரமாண்டமான படத் தைப் பார்க்க வேண்டுமென்பதே எனது மனவிருப்பமாகும்.
உண்மையைச் சொல்லுகின்றேன். எனது இளம் வயதிலிருந்தே பிரமாண்ட மான ஹாலிவுட் படங்களைப் பார்த்து வந்திருகின்றேன். இத்தகைய பிரமா ண்டங்கள் தொழில்நுட்ப சாதனங்களின் நவீன வெளிப்பாடுகள் தான் என்பது எனது கருத்து. பிரமாண்டங்கள் மலைக்க வைக்குமே தவிர, ரஸிக்க வைக் காது. சினிமாத் துறையில் தமிழகம் பின்தங்கி விடவில்லை என ஒரளவு மனத் திருப்தி கொண்ட போதிலும் கூட, மானுட நுட்ப சாதனைகளைத் தான் இன்றும் மெச்சுகி ன்றேன். இப்படி இப்படி மனிதன் தொழில் நுட்பத்திற்கு ஆட்பட்டுப் போனால், க.ை சியில் மனித சாதனைகளை அருங்காட் சியகத்தில் தான் பார்க்க முடியும்.
p
சியாகவும், கண்களுக்குக் குளிர்ச்சியாகவும்
மல்லிகையை இன்னும் இன்னும் கவர்ச்
6l616fluilf Tób, 6Törgyr?
வவுனியா. எம். சரவணன்.
2 மல்லிகையை ஆரம்பிக்கும் போதே ஓர் அடிப்படைத் திட்டத்துடன் தான் ஆர ம்பித்தேன். எக்காரணம் கொண்டும் இடை நடுவில் என்னால் வெளியிடப்படும் இந்தப் பிரசுரம் நிறுத்தப்படக் கூடாது என்ற மனவைராக்கியத்துடன் தான் வேலையைத் தொடங்கினேன்.
43 ஆண்டுகள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கும் ஒரு தனி மனித ஏடு தமிழுலகில் மல்லிகை ஒன்றுதான்ஒன்றேதான்.
எத்தனை எத்தனை ஆண்டுமலர் களை இந்த மண்ணுக்குச் சமர்ப்பித்துள் ளேன். மலர்களின் காத்திரம், பேசப்படத் தக்கவையாக மிளிரவில்லையா?
மனிதர்களில் காந்தி எத்தகைய கவர்ச்சியானவர். காமராஜர் இன்றும் பேசப்படுவது எதனால்?- அன்னாரது எளி மையும் மக்கள் தொண்டும் தானே அதற் குக் காரணம். நேரு மோட்டாக் கதர் உடையைத்தானே அணிந்து உலவினார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் ஒரு குறியீடாகக் கதர் கணிக்கப்பட்டு, மதிக்கப்பட்டதே! அது கையால் நூற்ற நூலிருந்து பெறப்பட்ட துணியல்லவா?
ஏன் 'மணிக்கொடி’ எவ்வளவு எளி மையாக வெளிவந்தது? நமது வரதரின் "மறுமலர்ச்சி' சஞ்சிகையின் எளிமை இன்று கூடப் பேசப்படவில்லையா? செல் லப்பாவின் எழுத்து தமிழ் இலக்கிய வர லாற்றில் இன்று கூடப் பேசப்படுகின்றதே, அது என்ன அட்டைப்படம் சினிமாக் கவர்ச்சியுள்ள சிற்றிலக்கிய ஏடா, என்ன?
இன்றைய காலகட்டத்தில் கவர்ச்சி முக்கியம் தான். அதை ஒப்புக் கொள்
ளுகின்றேன். குடும்பப் பெண்ணின் பாங்
மல்லிகை ஆகஸ்ட் 2008 率 71

Page 39
மல்லிகை ஆகஸ்ட் 2008 ஜ் 72
கான கவர்ச்சி வேண்டும். சினிமா நடிகை யின் "மேக்கப்' கவர்ச்சியை நான் தொடர் ந்தும் நிராகரிக்கவே செய்வேன்!
நான் எத்தகைய எளிமையுடன் காட்சி தருகிறேனோ, அப்படியே மல்லி கையும் எளிமையுடன் தான் வெளிவரும்!
p நீங்கள் முதன் முதலில் ஐரோப்பாவிற் குப் போன சமயம், அங்கு விமானத்தை விட்டு, இறங்கிய போது என்ன உணர்வு உங்களுக்கு முதன் முதலில் ஏற்பட்டது?
புத்தளம். எஸ். தனசிலன்.
 ைநான் ஐரோப்பாவிற்குச் சென்ற சமயம் பாரிஸ் நகர விமான நிலையத்தில் தான் முதன் முதலில் இறங்கினேன். விமானத்தை விட்டுத் தரை இறங்கிய தும், நான் முதன் முதலில் செய்த காரி யம், குனிந்து அந்த மகத்தான நாட்டின் மண்ணைத் தொட்டெடுத்துத் திருநீறாக நெற்றியில் பூசிக் கொண்டது தான். என் தேகமெல்லாம் புல்லரித்தது. எத்தகைய அறிஞர்களை, சிந்தனையாளர்களை, கலைஞர்களை, படைப்பாளிகளை ஈன் றெடுத்த பூமியல்லவா அது என்ற எண் ணம் என் சிந்தனையை நெகிழ வைத் தது. வரலாற்றில் முதன் முதலில் நடந்த பிரெஞ்சுப் புரட்சியின் தலைப் பட்டினத் தில் நான் காலூன்றி நிற்கின்றேன் என்ற பெருமிதம் என் நெஞ்சை விரியச் செய்தது.
பாரிஸ் மாநகரத்தில் நான் எழுத் தாளர்கள் மத்தியில் ஒன்றரை மணி நேரம் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு மிக்கது என எனது பேச்சைக் கேட்ட பலர் நேரில் சொன்னார்கள். அங்கு வெளி வரும் தமிழ்ச் சஞ்சிகைகளும் பெட்டி கட்டிச் செய்தியாகப் பிரசுரித்தன. இன்று
கூட அந்த உரையின் ஆழ, அகலங்
களை எண்ணி எண்ணி எனக்குள் நானே பிரமிப்படைவதுண்டு.
p நீங்கள் உங்களுடைய அரசியல் கொள் கையிலிருந்து ஒதுங்கி விட்டீர்களா? சத்தத் 60öö öT36ITT8D?
நீர்கொழும்பு. சீ. சபேசன்.
2 மார்க்ஸிஸத்தில் அசைக்க முடியாத ஆழமான நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்டவன், நான். மல்லிகையின் வேலைப் பளுவும், வயதின் தாக்கமும் சேர்ந்து சற்று ஒய்வெடுக்க வைத்து விட்டது. அதுதான் காரணம். கடந்த ஜூலை 4ந் திகதி மகரஹமவில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் 65- வது ஆண்டு விழாவில் தோழர்களுடன் சேர்ந்து நானும் பங்குபற்றினேன். என்னுடன் விழா வில் பங்கு கொண்டவர்கள், முீதரசிங், அந்தனி ஜீவா, ப. ஆப்டீன் ஆகியோராவர்.
நான் எந்தக் காலத்திலுமே அரசி யல் அடிப்படைக் கொள்கையில் இருந்து தடம் புரளவே மாட்டேன். அது தான் ஜீவா!
p 88. வி. பி. உண்மையாகவே ஒரு
இடதுசாரிக் கட்சிதானா?
கொக்குவில். ஆர். குழந்தைவேல்.
23 ஒரு மார்க்ஸிஸக் கட்சிக்குரிய எத்தகைய அரசியல் அடிப்படைக் குணா ம்சமும் அந்தக் கட்சியிடம் கிடையவே, கிடையாது! அது தன்னை ஒரு மார்க்ஸி ஸக் கட்சி என்றே பிரகடனப்படுத்துகி ன்றது. அது ஒரு தேசிய முதாலாளித்துவ, பெரும்பான்மை இனவாதக் கும்பலின் ஒட்டு மொத்த அரசியல் இயக்கமாகும்.
201/4, முரீகதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103 இலக்கத்திலுள்ள U.K. அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

سمبر
( oసనీగాస్కర ఓగ్మీళిగ శ్రీశr* (ယိုမှိ#-J
N
ジー・ペ、 Cl این ضبط نمایل
காற்றைக் கானமாக்கிய புல்லாங்குழல் *ష్ణో இணுவையூர் சக்திதாசன் (டென்மார்க்)
விலை: 150
, முன்முகங்கள்
(53 தகைமையாளரின் அட்டைப்படக் கட்டுரை) டொமினிக் ஜீவா விலை: 200
மல்லிகை ஜீவா டொமினிக் ஜீவா 6606): 150
| 1.՝ )', '.t)), ):i, 1 !!) I, I'l:, :11, 11,II (, )*1,| 1:1.(1,1,1,(:):), (:), (,0) (,)Iս III օԾ160»o)].
():},|| | | | | t, (,1Ե1, (: , : l)oninic Jcev:
'M:llik: i' 201/4, Sri Kathies; in St. Colombo - 13. Te : 232072 1

Page 40
(}) VOJScona, Ü) Oñ
til Dann
KONDULO|RATO
ITALIH "
மல்லிகை டொமினிக் ஜீ 560) Glo: 1 EC)
பல்கலைக்கழகங்கள் நூலக
தொடர்புகளுக்கு
 
 
 
 
 
 
 

* ు ఆశగా 4% ேெடுகள்
க் கானமாக்கிய புல்லாங்குழல்
வபூர் சக்திதாசன் (டென்மார்க்) |0
முன்முகங்கள்
(53 தகைமையாளரின்
அட்டைப்படக் கட்டுரை) டொமினிக் ஜீவா GÉIGIS) EJ: 200
ங்களுக்குத் தேவையானவை.
DOIIlinic Jeeva "Milki” 2)1/4, Sri Kathires II SE, Colonbo - 13.
: 2,32721

Page 41
'Mallikai
IN JULLE DE LUCI CU
NU OSI-IVe
I'll LeS
OURPROULICI
|ALABASEPRINTINGERLICILIRES, CATALI (GR EFTING KARIS. NAMIE, JAFS, TENTOWTDI CI} SSSSSSS SLSSSSSSLSSSSSS TILANKEN, ITALIOS TERTIFICATIES, BOOKS. P. TIAN SPARTNICY SITT T'I MÄKTIG" ("MIRTY'S, SI
(OHAPPY DIGIT
Digital Colour Lab
M'o, 75 No 7, Sri Ŝin rilaitzer-fik AlfaLir LEFĥio, Ĉu la?
e ter, f.digitalire, fu
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

August - 2008
ASTER ARDS MEMBERSHIP CARDS OFFICE CENTITY CARD
LIGTE SULTATENIRE, BIOLOKMARKS, WERSIOLITIRB I(DATA, STICKERS SSSS SSS0SSSSLSS
ISTIERS, TID SJUNEMIER. EATIIARIS VISINI: IARIS.
AL CENTRE(Pvt) Ltd.
g Digital offset Press
in-, 75
::ரோக்: