கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாருதம் (வவுனியா) 2007.04-10

Page 1
வவுனியா கலை இலக்
ܢ ܥ ܐ
 

கிய நண்பர்கள் வட்டம்

Page 2
YTLLLLLLL 0LL TTTS TT TMLTT LLLLLLLLS
Gau: 27, ufsnitsig, GuGefluun.
 

நண்பர்களுக்குமட்டும்
கல்வியும் இலக்கியமும் O3 கிள்ளை விடுதூது O7 கவிதைகள் 13
28 நேர்காணல் حاد مشی سال اختی ਟਟ D ஒயுதல் செய்யோம் தலைசாயுதல் செய்யோம் பதிவு l 3. உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
பதிவு 2 34. ஆசிரியர் குழு:
அகளங்கண் பதிவு 3 37 கந்தையா முறிகணேசன் விருதுபெறும் கலைஞர்கள் 38 உதவி: u O. ததனசிலன் இரு குறுமபடங்கள அபேனாட் - கிச்சான், ஏக்கம் 42 வி.தமிழ்ச்செல்வி அச்சு: தமிழகத்திலிருந்து ஒரு மடல் 50
மல்ரிவிஷன் அச்சுக்கலையகம் 8 73) 2ம் குறுக்குத்தெரு, வவுனியா, UGOTUTLGB ஆயவாளர 51 தொ.பே: 024 : 2223669 அஞ்சலிகள் 54
வடிவமைப்பு: கரணேஷ் பயணக்கதை 56 இலச்சினை: பசிவஅன்பு O 0. g56pal: &gy Gosful பிரசவித்துப் LIII S8 தொடர்புகட்கு: புலம்பெயர் கதை 60
(1) 39%பொதிகை” O as
ဖါးအိမ်အရေး ရှိသောဓါး၊ ஓர் இலக்கிய மாணவியின் கட்டுரை 63 இறம்பைக்குளம், 666fluT, ஒரு விமர்சனம்
(2) 90, திருநாவற் குளம் அட்டைப்பட அஞ்சலி 69
666sflur, o 024 222676 நிகழ்வின் நிழல்கள் 70 வெளியீடு:
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்
Published by: Circle of Arts and Literary Friends. Vavuniya, SriLanke, Editors Ahalangan & Kandiah Shriganeshan email: kshriganeshan@yahoo.com

Page 3
്യാ, ഓൺബ് ബീബിu ിങ്ങ6
26GBL.......
‘மாருதம்’ இதழ் 8 உடன் மீண்டும் வாசகள்களுடன் சங்கமிப்பதில் மகிழ் வடைகின்றோம்.
ஒன்றரை வருட இடை வெளிக்குப்பின் வெளிவரும் மாருதம் 8 இதழ் பல புதிய ஆக்கங்களுடன் வெளிவருகின்றது. உள்ளுர் இளம் எழுத் தாளர் களை ஊக்குவிப்பதும் அவர்களுக்கு தரமான இலக்கியம், சமூகப்பிரக்ஞை, பல்துறை வாசிப்பு போன்ற பல விடயங்களில் ஒரு தெளிவை ஏற்படுத்துவதும் எமது எண்ணம்.
நாம் வாழும் காலம் பயங்கர சூழலை பிரசவித்துள்ளது. ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்று பாடுவதற்குப் பதிலாக ‘என்று தணியும் இந்த நெருப்புச்சூழல் என்று பாடத் தோன்றுகிறது. எனினும் இந்த சூழலை எமது ஆக்க முயற்சிகளுடாக வென்று எடுப்பதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும். 11ம் ஆண்டு நிறைவு மலருடன் மீண்டும் சந்திப்போம்.
ஆசிரியர்கள்.

erepah, absb6, GEBUNGU š6uébau eftijdsUpah
கல்வியும் இலக்கியமும்
- தமிழ்மணி அகளங்கன்
கல்வி பற்றிய சமயக்கோட்பாடுகள், கல்வி பற்றிய இலக்கியக் கோட்பாடுகள், கல்வி பற்றிய சமூக பொருளாதார அரசியற் கோட்பாடுகள் என்பவற்றைப் பற்றி ஆராய்வது மிகவும் சுவாரஸ்யமானது.
இவற்றில், கல்வி பற்றிய சமயக் கோட்பாடே ஆதியானது. அதற்குப் பெரும்பாலும் அனுசரணையாகவே கல்வி பற்றிய இலக்கியக் கோட்டாடுகளும் அமைந்தன.
கல்வி பற்றிய சமூக பொருளாதார அரசியல் கோட்பாடுகள் காலத்திற்குக் காலம் கல்வி பற்றிய சமய இலக்கியக் கோட்பாடுகளோடு ஒன்று பட்டும் வேறுபட்டும் இருந்து வந்திருக்கின்றன.
மனிதனின் வளர்ச்சியை இரண்டு விதமாக நோக்கலாம். ஒன்று, மனிதனின் புறவளர்ச்சி, மற்றொன்று மனிதனின் அகவளர்ச்சி.
இதைத்தான் நாகரிகம், பண்பாடு என்ற சொற்களால் இன்று குறிப்பிடுகின்றார்கள். மனிதனின் புறவளர்ச்சியை நாகரிகம் என்றும், மனிதனின் அக வளர்ச்சியான மானுடத்தின் வளர்ச்சியை பண்பாடு என்றும் இன்று குறிப்பிடுகின்றார்கள்.
இவ்விரு வளர்ச்சிகளில், எது முக்கியமானது என்ற கேள்விக்கு இன்று பலவிதமான விடைகள் சொல்லப்படுகின்றன.
இந்த வளர்ச்சிகள் எல்லாம் கல்விக் கொள்கைகளோடு தொடர்புபட்டவை என்பதால், இன்று இவை ஆழமாக நோக்கப்பட வேண்டியவை ஆகிவிட்டன.
தமிழ் இலக்கியத்தின் ஆரம்பக்காலத்தில் கல்வி பற்றிய குறிக்கோள், கடவுளை அறிதல், கடவுளைத் தொழுதல், கடவுளை அடையும் வழிகளை அறிதல், அவற்றைப் பின்பற்றும் முறைகளைத் தெரிந்து கொள்ளுதல், என்பதாகவே இருந்தது.
திருக்குறளில் கல்வியின் பயன்பாட்டைப் பற்றிக் கூறுகையில், வள்ளுவப் பெருந்தகை பின்வருமாறு கூறுகின்றார்.
"கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்’
இக்குறளுக்கு பரிமேலழகர் பின்வருமாறு கருத்துரை வழங்குகிறார்.
3

Page 4
சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின், எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவால் ஆய பயன் யாது?
இந்த வகையிலேயே கல்வியைப் பற்றிய சிந்தனை முற்காலத்தில்இருந்தது.
இலக்கியங்களிலே இச்சிந்தனைகளை வெளியிட்டு புலவர்கள் மக்களுக்குப் போதனை செய்தனர். இது, கல்வி, ஆன்மீகப் பயன்பாட்டிற்கு மட்டுமே உரியது என்பதை வெளிக்காட்டுவதாக உள்ளது.
தமிழ் மொழியின் இலக்கணம் பற்றிய கோட்பாடும் கூட ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்திருந்தது.
மொழியைச் செம்மையாகப் பயன்படுத்தினால் தான்,அம்மொழியின் மூலமாக, ஆன்மீகக் கருத்துக்களைச் சொல்ல முடியும். மொழியைச் செம்மையாகப் புரிந்து கொண்டால்தான், சொல்லப்பட்ட கருத்துக்களைச் செம்மையாகப் புரிந்து கொள்ள முடியும். அதனால் சொல்பவனுக்கும் படிப்பவனுக்கும் ஆக இருவருக்குமே மொழி இலக்கண அறிவு தேவை என வலியுறுத்தினார்கள்.
அதாவது கடவுள் பற்றிச் சொல்லவும், அறியவும் இலக்கண அறிவு அவசியம் என்பது பண்டைய இலக்கணக் கொள்கையாகஇருந்தது.
இலக்கியம், ஆன்மீகத்தோடு இணைந்து சமூக வளர்ச்சியையும் இலக்காகக் கொண்டமைந்தது. மக்களின் ஒழுக்கமே உலகியலுக்கு ஆதாரமாக அமையவேண்டும் என்ற அடிப்படையில் இலக்கியம் ஒழுக்கத்தையே பெரிதும் வலியுறுத்தியது.
மனிதனுக்குரிய சிறந்த முன்னேற்றம் என்பது, மனிதனது ஒழுக்கத்தினாலே அடையப்படவேண்டியது என்று வலியுறுத்தியது.
அதாவது, மானுட வளர்ச்சியே மனித வளர்ச்சி எனக் கொண்டது. அதாவது பண்பாட்டு வளர்ச்சியே நாகரிக வளர்ச்சி எனக் கொண்டது. வள்ளுவப் பெருந்தகையும் தமது திருக்குறளில்
"ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்"
என்று குறிப்பிட்டு, சான்றோனாகத் தன்மகனை, மற்றவர்கள் கண்டு புகழ்ந்து பேசக் கேட்பதே ஒரு தாய்க்கு ஈன்ற பொழுதிலும் பெரிதும் மகிழ்ச்சி தருவது என்று கூறுகிறார்.
எனவே கல்வியின் குறிக்கோள், சான்றோர்களை உருவாக்குவதாக இருந்ததையும்
4

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
இலக்கியம் எடுத்துக் காட்டுகின்றது.
ஒழுக்கமே உயிரினும் சிறந்தது, மானத்திற்குப் பங்கம் வரின் உயிர் நீப்பர், என்றெல்லாம் உயிரை விடவும் ஒழுக்கத்தையே பெரிதும் போற்றியது இலக்கியம்.
இன்றும் கூட ஒழுக்கக் கேடாக நடப்பவர்களைப் பார்த்து "நீ படிக்கவில்லையா?” அல்லது "நீ என்ன படித்தாய்” அல்லது "உனக்கு யார் கற்பித்தார்?’ என்றெல்லாம் கேட்கும் வழக்கம் உண்டு.
கல்வி மனிதனது துன்பத்தைப் போக்குவதாக அமையவேண்டும். இன்று துன்பம் என்பது பொருளாதாரத் துன்பத்தை மட்டுமே கொண்டதாக இருக்கின்றது.
இலக்கியம் மனிதனுக்கு ஏற்படுகின்ற பல்வேறு வகையான துன்பங்களையும் அவற்றுக்குரிய காரணங்களையும் முடிந்த வரையில் தீர்வுகளையும் , கதாபாத்திரங்களினுடாகவும் சம்பவங்களினுடாகவும், வேறு வகையான உதாரணங்களினூடாகவும், வெறும் போதனையாகவும் கூட எடுத்துக் கூறுகின்றது.
பொருளை நல்ல வழியில் தேட வேண்டும் என்று, ஒழுக்க நெறியை இலக்கியம் கூறியதே அல்லாமல், பொருள் தேடும் நெறிகளை இலக்கியம் போதிக்கவில்லை. அது இலக்கியத்தின் கல்வி நோக்கமும் இல்லை.
கல்வி, பொருள் தேடுவதற்காக மட்டும் தான் என்ற நிலை இப்பொழுது பெரிதும் எண்ணப்படுகின்றது. அப்படியாயின் பரம்பரைச் சொத்துக்களை மிகுதியாகக் கொண்டிருப்பவர்களுக்கு, கல்வியினால் என்ன பயன் என்று சிந்திக்கும் போது கல்வியின் பயன்பாடு சுருங்கி விடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
பொருள் தேடும் கல்வி என்ற வகையில் பார்க்கும் பொழுது அது துன்பத்தை வெல்லும் கல்வியாக அமைய முடியாது.
முற்காலத்தில் எல்லா வகையான கல்வியையும் எவரும் கற்கலாம் என்ற நிலை இருக்கவில்லை. மன்னர்கள், மந்திரிகள், போர் வீரர்கள், என அவரவர்க்குத் தேவையான கல்வி மட்டுமே புகட்டப்பட்டதாகக் கிரேக்க வரலாறு கூறுகிறது.
ஆனால், தமிழின் பழம்பெரும் இலக்கியமாகிய சங்க இலக்கியத்தில், பல்வேறு தொழிலைச் செய்தவர்களும் புலவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகின்றது. அதுபற்றி விபரிக்கின் இது நீளும்.
தமிழரின் பாரம் பரியத்தில் யாரும் எக்கல்வியையும் கற்கலாம் என்ற நிலை இருந்ததை எண்ணிப் பார்த்து மகிழ்கின்றோம்.

Page 5
fuാ, 6ബി. ഞണ്ഡ മണdeിധ ട്രിട്ടിട
இன்றுகூட எவரும் தாம் விரும்பிய கல்வியைப் பெறலாம் என்ற நிலை இல்லை என்பது வேதனைக்குரியது.
பெற்றோரின் பரம்பரை அலகுகளாலும், வாழ்க்கைச் சூழலாலும், வழிநடத்தப்படாமல், ஒழுக்க சீலரான குருவின் வழி நடத்தலாலும், பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதாலும், கெட்ட சுபாவங்கள் நீங்கி நல்ல மனிதர்கள் உருவாகும் நோக்கமே குருகுலக் கல்வியாக அமைந்தது.
எவ்வளவு தான் கல்வி கற்றாலும், எவ்வளவிற்குத்தான் குருவின் பழக்கவழக்கங்களைக் கைக் கொண்டாலும், குழப்பமான சந்தர்ப்பத்தில் உண்மை அறிவே மிகும். என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.
"நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும்”
ஊழ்வினையால் பொருந்திய அல்லது பரம்பரை அலகுகளினால் வந்த கெட்ட அறிவே (கெடுபுத்தி) சந்தர்ப்பத்தில் மேலோங்கும் என்பது உண்மையே. இருப்பினும் நல்ல கல்வி மூலமாக பெருமளவிற்கு நடத்தை மாற்றங்களை ஏற்படுத்தலாம் என இலக்கியம் நம்பியது.
சிறுவர்களுக்கு அரிச்சுவடி கற்பிக்கும் போதே, "அறஞ் செய விரும்பு' "ஆறுவது சினம்”, “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்', 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்றெல்லாம் கற்பித்த கல்விக் கோட்பாடு தமிழ் இலக்கியத்திற்குரியது.
"நூலைப்போல சேலை தாயைப் போல பிள்ளை” என்னும் பழமொழி முடிந்த முடியான கருத்தாக இருந்தால் ஒழுக்கக் கல்வியில் ஒரு பயன்பாடும் இல்லை. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே’ என்ற கவி வரியில் எந்த அர்த்தமுமே இல்லை." பிள்ளைகள் பிறக்கும் பொழுதே, விஞ்ஞான பூர்வமாகச் சொன்னால், பரம்பரை அலகுகளாலும், ஆன்மீக ரீதியாகச் சொன்னால், ஊழ்வினையாலும், நோய்கள் மட்டுமல்ல கெட்ட குணங்களும் பொருந்தியே வருகின்றன.
எனவே, கல்வியின் மூலமாக எல்லோருக்கும் பொதுவானநல்ல ஒழுக்கங்களைக் கற்பித்தால் அதைக் கடைப்பிடிக்கின்ற மனித சமுதாயம் மானுட சமுதாயமாக உயரும். நாகரிக வளர்ச்சியும், பண்பாட்டு வளர்ச்சியும் சமனிலை எய்தும்.
இன்று நாகரிக வளர்ச்சி மலைபோல் உயர்ந்தும், பண்பாடு பாதாளத்திலும் கிடக்கின்றது. இந்நிலை மாற இலக்கியத்தின் கல்விக் கோட்பாடே பெரிதும் உதவும் என்று நம்புகின்றேன். அதனால் யாவரும் இலக்கியம் கற்று, துன்பத்தை வெல்லும் நிலையை அடைய வேண்டும்.

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
கவிதைகள் ஒரு பார்வை
“கிள்ளை விடு தூது’
- ந.பார்த்திபன், விரிவுரையாளர், கல்வியியற் கல்லூரி வவுனியா
செல்லையா குமாரசாமி என்ற மூத்த எழுத்தாளின் ‘கள் ளை விடுதுTது 31 கவிதைகளுடன் வெளிவந்துள்ளது. ஆ. ராசையா ஓவியர் , விரிவுரையாளரின் அழகிய கருத்தாழம் மிக்க அட்டைப்படத்துடன் கச்சிதமாக வந்துள்ளது. “போரக்கன் யாழ்மண்ணில் புகுந்து விளையாடிய நாள் ஊரைவிட்டு உடைமைவிட்டு உறவினர்கள் தம்மோடு நாடி வன்னிப் பெருநிலத்தை நடந்தும்.” என்ற கவிஞரின் கவிதை வரிகளுக்கேற்ப அல்லலுறும் மக்கள் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவு செய்து கொள்ள முடியாத ஆற்றலுடன் ஏதோ அம்பிட்டதைத் தூக்கியபடி நடந்து செல்லும் சோகக் காட்சி அட்டையை அலங்கரித்துப் பார்ப்போரைச் சிந்திக்க வைக்கிறது. எங்கே போகிறோம்? என்று தெரியாத நடைப்பிணங்களாய் போகின்ற அந்த மக்களின் (எம்மினத்தின்) துன்பம் தொடர்வதாய். நீண்ட நெடுந் தெருவினில் நடை தொடர்கிறது. இந்தச் சோகத்தை கருப்பொருளாக்கி இளம் பெண்ணொருத்தி கிளியைப் (கிள்ளை)பறக்கவிட்டு ஏக்கத்துடன் ஏதோ யாசித்து நிற்பது போல ஒரு காட்சி. கிளியைத் தூதுவிட்டு, அந்தத் துர்தின் மூலம் எம்மக்களின் தற்கால வாழ்க்கையைக் கவிஞர் காட்டியுள்ளதை ஒவியர் திரு.ஆ.இராசையாவும் அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளார். பார்ட்போரைக் கவர்ந்து படிக்கத் தூண்டும் வண்ணம் கிள்ளை விடு தூது நூல் அமைந்துள்ளது.
பின் அட்டையில் கவிஞரின் சிந்தனை வயப்பட்ட படத்துடன் (Photo) கல்வியியற் பேராசிரியர் கலாநிதி சபா ஜெயராசாவின் நறுக்கான குறிப்புரை “ஆக்கமலர்ச்சியை வினைப்படும் நிலையில் முன்னெடுத்து உரைப்புனைவும் (கூடில்லாக் குஞ்சுகள், மண்ணைத் தொடாத விழுதுகள் நாவல்கள்) கவிதைப் புனைவும் (கிள்ளைவிடு தூது, தந்தை வழங்கிய தண்டனை ஆகிய நெடுங்கவிதைகளுடன் 29 கவிதைகள்) செய்து வருபவர்” என்றும் "ஆழ்மனச் சுவடுகளையும் படிமங்களையும் ‘ஒப்புவித்தல் மொழி வீச்சுக்குள் கொண்டுவரும் பொழுது ஏற்படும் சமநிலைகளையும் சமநிலைப் பிறழ்வுகளையும் தமது புறவிலை அனுபவத்திற்குள் கொண்டுவரும் திறனுடைய எழுத்தாளராகவும், சமூக அழுத்தங்கள், சமூக முரண்பாடுகள், ஒடுக்குமுறை வடிவங்கள், ஒடுக்குமுறையின் உராய்வுகள் முதலியவற்றை புறக்கணிக்கும் எழுத்தாளராக அமையாது, தமது அறிகை வீச்சுக்குள்ளே குவியப்படுத்துபவராக விளங்குதல் இவருடைய இயல்பான
7

Page 6
espai, 6x6 asson6u 6vátsau efsan65
பரிமாணமாக அமைகின்றது” என்றும் குறிப்பிட்டு, "எழுதி எழுதி மனநிறைவு காணும் இவரது உளப்பாங்குபாராட்டுக்குரியதாகும்" என்று சிறப்பித்துக் கூறுகின்றார். இவ்வுரையானது கவிஞரின் எழுத்துக்கு பெருமை சேர்க்கின்றது.
அடுத்து, அணிந்துரை வழங்கிய மூத்த கவிஞர் சோ.பத்மநாதன் எழுத்தாளரின் எழுத்தாளுமையை பின்வருமாறு குறிப்பிடுகிறார் “தமிழ்க் கவிதை மரபில் நல்ல பிடிமானம், ஆற்றொழுக்கான சொல்லாட்சி, காலத்திற்கேற்ற கற்பனைகள் சமூகப்பிரச்ஞை எல்லாம் இழையோடும் இத்தொகுப்பு இதன் ஆசிரியருக்குப் பெருமை சேர்க்கிறது"தூது என்னும் இலக்கிய வடிவம் தலைவன், தலைவி ஆகியவர்களுள் ஒருவர் மற்றொருவர் பால் தமது காதலில் புலப்படுத்த தம்முடைய கருத்துக்கு உடன்பட்டமைக்கு அறிகுறியாக மாலையை வாங்கி வருமாறு அன்னம், வண்டு, கிளி முதலியவற்றைத் தூது விடுவதாகவும் இது கலிவெண்பாவால் இயற்றப்படுகின்றது எனவும் குறிப்பிடலாம். தமிழ் இலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தில் சிவஞானபாலைய சுவாமிகளால் 'நெஞ்சுவிடு தூது எனும் நெடும்பாடலின் மூலம் தொடங்குகின்றது. தூது ஈழத்திலும் ஒல்லாந்தர் காலத்தில் சின்னத்தம்பிப் புலவரினால் பஞ்ச வர்ணத் தூது என்ற நெடும்பாடலுடன் பாடப்பட்டுள்ளது. சோ.ப.குறிப்பிடுவது போல “மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப இலக்கியத்தின் உள்ளடக்கம் மாறும். உள்ளடக்கம் மாறும்போது உருவமும் மாறுவது தவிர்க்க முடியாதது. தமிழ்க்கவிதை வளர்ச்சியை அவதானித்தால் இவ்வுண்மை புலனாகும் இந்தவகையில் இன்றைய காலத்துப் பிரச்சினைகளையும் மரபு சார்ந்த பாவடிவங்களில் தரலாம் என்பதற்கு எழுத்தாளர் பாடியுள்ள 'கிள்ளை விடு தூது உதாரணம்” என விதந்துரைக்கிறார்.
"கிள்ளை விடு தூது 1997இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை, கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் அனுசரணையுடன் அகில இலங்கை ரீதியாக நடாத்திய நாவற்குழியூர் நடராசன் நினைவு மரபுக்கவிதைப் போட்டியில் இரண்டாவது பரிசினைப் பெற்ற நெடுங்கவிதை இது "இத்தொகுதியின் நுழைவாயிலில் இட்ட கோலமாக விளங்குகின்றது’ எனச் சோ.ப.குறிப்பிடுவது பொருத்தமானது. நெடுங்கவிதையான போதும் வாசகரை தன்வசமாக்கி இழுத்துச் செல்லும் பண்பு இக்கவிதைக்கு உண்டு வன்னியை நோக்கி இடம் பெயர்ந்து வந்த மக்களது நிலையைக் கவிஞர் "கூடி மர நிழல்களிலும் கூரையில்லாக் குடிசையிலும் காடழித்த இடங்களிலும் கல்விக் கூடங்களிலும் தேடிக்குழை கொம்பெடுத்து தெருவோரம் கூரைகட்டி மாடுகளைப் போல்படுத்து மழையினிலும் பனியினிலும் காடுறங்கும் விலங்குகளாய் நனைந்து உறங்குவதும்.” என்று குறிப்பிடுமிடத்து வேதனை நெஞ்சைப் பிழிகிறது. சுற்றி வர மதில், கல்வீடு, ஆடு மாட்டிற்கும் கொட்டில், கார், மோட்டச் சைக்கிளுக்கும் இடம் அமைத்து வாழ்ந்த அந்த மக்களின் துன்ப நிலை கவிஞரால் காட்டப்படுமிடத்து துயரம் தெரிகின்றது.
“முன்னொருகால் எறிகணையாம் முற்றத்தில் வீழ்ந்ததனால் அன்னையையும் தந்தையையும் அண்ணனையும் இழந்ததனால் தன்னந் தனிமையிலே தவித்திருந்த நாட்களில்தான் வன்னிமண்ணிணைநோக்கி வந்தவர்களுடன் கூடி என்னுயிரை காட்பதற்கு எழுந்தோடி வந்த நான்” என்று ஒரு இளம்பெண் கிளியிடம் தன் துயர் கூறுவனத
8

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
கேட்கும் போது எத்தனை உயிர்கள் இன்று இவ்வாறு துயர்ப்படுகின்றன. இன்னும் எத்தனை நாளுக்கு இத்துயர் தொடருமோ என்ற ஏக்கம் எம் காதுக்குள்ளும் பரவுகின்றது. கிளிநொச்சி பற்றி “உருக்குலைந்து கல்மேடாய் உடலெரிக்கும் சுடுகாடாய் நரி நின்று ஊளையிடும் இடமாகிப் போச்சுதிப்போ(து)” என்று குறிப்பிடும் போது பாரபட்சமான அரசின் மாற்றாந்தாய் மனப்போக்குத் தெரிகிறது. ஒரு தேநீர்க் கடைகூட இல்லாதிருந்த தம்புள்ள வானுயர்ந்த கட்டிடங்களோடு, சர்வதேச ரீதியில் கிறிக்கெற் விளையாடும் மைதானத்தோடு 'காப்பெற் றோட்டும் என கலகலப்பாய் உருவாக்கி, அன்றிருந்த கிளிநொச்சியை அலங்கோலமாக்கிவிட்டார்களே என்று அங்கலாய்க்கச் செய்கிறது. சாவகச்சேரி நின்று நீள்கண்டிச் சாலைவரை காவலரண், கள்வர் கைவரிசைக்குட்பட்டு ஒவென்ற வாயில் ஒரு கதவும் இல்லாமல் ஆவினங்கள் படுத்துறங்கும் வீடுகளும் தீயிட்ட வேலிகளும் விளைநிலங்கள் பாழ்பட்டு ஆங்காங்கே தாலி இழந்த தாய்க்குலமாய் காட்சிதரும் என்று சாவகச்சேரி நெடு வீதியினை நெஞ்சைத்தொடும் விதமாய்க் கூறுகின்றார். அக்கினி வாய்ப் பட்டழிந்த எச்சங்களாய் பொக்கிசமாய் இருந்த எங்கள் புகழ் பெற்ற நூல்நிலையம் எனக் கவிஞர் குறிப்பிடுவது போல எச்சங்கள் எங்கும் கறைப்பட்டு எமது துயர் நெருப்பைப் பற்றவைத்துக் கொண்டிருக்கின்றன.
“பாதை நெடுகிலும் பருந்து இருக்குது காதம் ஒரு நரி காவலில் நிற்குது. பாயும் நரிவந்து பற்றிப் பிடிக்கையில் தாயை நினைத்ததோ தப்பிப் பறந்ததோ?” இன்றைய எமது பிரதேசங்களின் நிலையை பருந்தும், நரியும் நின்று, வேலியே பயிரை மேய்வது போல் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்தக் கவிதையின் தலைப்பு "கன்னிப்போடு இன்னும் திரும்பலை” இறுதியாகக் கவிஞர் “கன்னி இளம் பேடு காலையில் சென்றது இன்னும் திரும்பலை ஏனோ தெரியலை” என்று முடிக்கும் போது அந்தப் பிள்ளை எதுவித சேதாரமும் இன்றி வீடு வந்து சேர்ந்திட வேண்டுமென்ற பரிதவிப்பு பெற்றோருக்கு மட்டுமல்ல எங்களுக்கும் (வாசகருக்கும்) ஏற்படுகிறதல்லவா? இதுவே கவிஞரின் எழுத்துத்திறனுக்குக் கிடைத்த வெற்றி. இக்கவிதையில் பருந்தும் நரியும் பங்காகக் கொண்டதோ? விருந்து நன்றென வேறேதும் சேர்ந்ததோ? என்று கேட்குமிடம் வாசகனையும் ஊன் பதைக்க வைக்கின்றது. மேலும் கால்களிடையிலே கழுத்தில் நெஞ்சினில் தோலும் உரிந்திடத் தின்று தீர்த்ததோ? குருதி பாய்ந்திடக் குற்றுயிராயுடல் வருந்து வேளையில் வாய்விட்டழுததோ? என்று கேட்கும் இடத்தில் என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம், என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம், என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும். என்றெமது அன்னை கை விலங்குகள் போகுமென்று கொதித்தெழுந்த பாரதி நினைவுக்கு வருவதும், 'ஆண்பிள்ளைகள் அல்லமோ?, அழுது கொண்டிருப்பமோ? உயிர் வெல்லமோ? என்று ஒரு வேகம் வாசகனுக்குப் பிறக்கிறது. கவிஞர் முன்னுரையில் குறிப்பட்டது போல இவை முழுக்க முழுக்க வெறும் கற்பனைகளல்ல. நிஜங்கள் கண்ணால் கண்டவை காதால் கேட்டவை அநுபவங்கள்.
'வீடுதேடி என்ற கவிதையில் “வானிடிந்த மழையினைப்போல் வந்து குண்டு
வீழ, தேனிழந்த பூச்சிகளாய்ச் சிதறிமக்கள் ஒட, உயிர் பேணுமந்த ஆசையுந்தப்
பிறந்த மண்ணைவிட்டுப் போனவன் நான் மீண்டு வந்து ஆசை கொண்டு தொட்டேன.
இக்கவிதையின் எளிமையும் இசைப்பண்பும் படிப்போரை ஈர்க்கின்றன. இங்கு சமகால 9

Page 7
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
நிலைமை ஆழ்மனத் தூறல்களாய் படிந்தவண்ணம் இருக்கின்றன. பொதுவாக கவிஞரது எல்லாக் கவிதைகளிலும் இந்தப் பண்பைப் பார்க்க முடிகிறது. எளிமையாக, படிப்போர் வாய்விட்டுப் பாட வாகாய் இப்பாடல்கள் அமைந்துள்ளன. பதிப்பாசிரியர் குறிப்பிட்டது போல எழுத்தாளரின் மண்ணைத் தொடாத விழுதுகள் நாவல் பதிப்பில் இருந்த வரவேற்பும் தெளிவான மிகவும் சிறந்த முறையிலமைந்ததன் விளைவாகவே இக்கவிதைத் தொகுப்பு பதிப்பிக்கப்பட்டதாக கூறுகின்றார். நிட்சயமாக இத்தொகுதியும் பரந்த வாசகர்களைச் சென்றடையச் கூடிய தரமும் சிறப்பும் கொண்டதால் பதிப்பாசிரியரின் எதிர்பார்ப்பு நிறைவேறுவது மிகச் சுலபமே. எழுதி எழுதி மனமுறிவு காணும் மனப்பாங்கு கொண்டவரெனக் குறிப்பிட்டாலும் சமூக மாற்றத்தை சிலரது கவிதைகள் கொண்டு வருமெனக் கூறலாம்.
இன்பங்கள் தூங்குவதில்லை; துன்பங்களும் அப்படித்தான் என்பது போல ஆசிரியருக்கு நிறைவாய்த் தெரியும் அல்லது குறைவற்றதாய்த் தெரியும் சில விடயங்கள் வாசகருக்கு முரண்பாடாய்த் தோன்றலாம். கிள்ளைவிடு தூது கவிதைத்தொகுதியைப் படிக்கும் போது சில கருத்துக்கள் கூற வேண்டும் போல் தெரிகின்றது. முதலில் கிள்ளை விடு தூது என்ற பெயரைப் பார்த்தும் தூது என்ற பழைய இலக்கியமோ என்பதாய்ப் பலர் நிறைத்து படிக்காமல் விட்டுவிடக் கூடிய சந்தர்ப்பம் உண்டு என நினைக்கிறேன். புதுக் கவிதையில் அதிகம் ஈடுபாடு கொண்ட இளந்தலைமுறையினர் சுருக்கமான சமகால விடயப்பொருளைத் தலைப்பாகக் கொண்ட கவிதைத் தொகுதிகளை தேடிப்பிடிக்கும் றிலையில் “கிள்ளைவிடு தூது" தவறவிடப்படும் வாய்ப்பு உண்டு. மேலும் சமூக அழுத்தங்கள். சமூக முரண்பாடுகள், ஒடுக்குமுறை வடிவங்கள், ஒடுக்குமுறையின் உராய்வுகள் முதலியவற்றைப் புறக்கணிக்கும் எழுத்தாளராக அமையாது தமது அறிகை வீச்சுக்குள்ளே குவியப்படுத்துபவராக விளங்குபவர் என்ற சிறப்பைப் பெற்ற எழுத்தாளர் சமகாலப் பிரச்சினைகளை எடுத்து மிகவும் சிறப்பாக எல்லாக் கவிதைகளிலிருந்தும் தந்திருக்கலாம். சில கவிதைகள் அவ்வாறு அமையாதது தொகுப்பின் கனதியைக் குறைக்கின்றது. 'எல்லாம் நீயே விருப்பு வருமுன்னே நித்திரை இல்லையே. போன்ற கவிதைகள் கவித்துவம் மிளிர்ந்தாலும் வெறுங்கற்பனையாகவே காட்சியளிக்கின்றன.
"சின்ன மழைத்துளி’ சிறுவர்களுக்கும் ஏற்ற அழகான கவிதை அதில் தூரத்துத் தண்ணியெம் ஆபத்துக் குதவா, தூரத் துறவுடன் துணைக்கே வராது. தாரத்தின் அன்பொட்டும் தாசிக்கிராது. தாயினைப் போலொரு கோயில் இராது. இக்கவிதையில் தாசி என்ற சொல் இக்கவிதையைச் சிறுவர் படிந்துச் சுவைக்கும் தரத்தை இழக்கிறது. ஆசிரியர் கவனத்தில் கொண்டிருக்கலாம். இவ்வாறு சில வர்ணனைகளையும் தவிர்த்திருக்கலாம். உதாரணமாக கங்கைத் தலைஉமை பங்கினரின் சில லிங்கங்கள் உன்னிடத்தே கொங்கைகளேயாகிப் பொங்கிடத் காண்கையில் கோயிலொன்றேதுக்கடி? இருப்பினும் கவிஞரிடம் மொழி கொஞ்சி விளையாடுவதை, எல்லாக் கவிதைகளிலும் காணலாம். பொருளடக்கத்தில் தலைப்புக்களுக்கு நேரே பக்க எண் குறிப்பிட வேண்டும். என்னதான் ஒரு சில குறைகள் சுட்டிக்காட்டப்பட்டாலும் தரமான கவிதைத் தொகுதி என்று கூறத்தக்க கவிச் சிறப்புக் கொண்ட நூல் இது.
10

சமூக கல்வி,கலை இலக்கிய சஞ்சிகை
பெண்ணிலைவாதம்: ஒரு விளக்கம் சி.சிவாஜினி
இன்றைய சமகால பின்னணியில் பெண்ணிலை வாதம் பற்றிய விளக்கத்தினை நோக்கின் "சமூகத்திலும் வேலைத்தளத்திலும் குடும்பத்திலும் பெண்கள் அடக்கப்படுவதும் சுரண்டப்படுவதும் பற்றி விழிப்பாய் இருப்பதோடு இதை மாற்றுவதற்கான முயற்சிகளைப் பெண்கள் பிக்ஞைபூர்வமாக மேற்கொள்ள வேண்டும்” என்று பெண்ணிலைவாதம் கூறுவதோடு, “பெண்களுக்கு பலவழிகளிலும் பாரபட்சம் காட்டுவதற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளுக்கும் சமத்துவத்துவக்குமாகப் பாடுபடும் ஒரு இயக்கம் என்று நாம் அதைக்கூறலாம். பெண்கள் குடும்பத்தில் கீழ்மைப்பட்டிருப்பதற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிவதோடு இன்று நிலவும் பொருளாதார, அரசியல் அமைப்புக்கு எதிராகவும் போராட வேண்டும்.” (Jayawardena 1986:3)என்றும் அது கூறுகின்றது.
1979 பாங்கொங்கில் பெண்ணிலைவாதக் கருத்தியல் பற்றி நடைபெற்ற கூட்டத்தில் இரண்டு நீண்ட கால இலக்குகளின் அடிப்படையில் வைத்து பெண்ணிலை வாதம் வரையறுக்கப்பட்டது. முதலாவது அடக்குமுறையிலிருந்துபெண்கள் விடுதலை பெறுவதென்பது வீட்டிலும் வெளியிலும் தமதுவாழ்க்கையைத் தாமே தீர்மானிக்கும் தெரிவையும் அதிகாரத்தையும் பெறுவதாகும். பெண்ணிலைவாதத்தின் இரண்டாவது இலக்கு சர்வதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் நீதியான சமூக, பொருளாதார அமைப்பைக் கொண்டு வருவதன் மூலம் பெண்களுக்கு இழைக்கப்படும் சகலவிதமான அடக்குமுறைகளையும் அவர்களது சமத்துவமின்மையையும் அகற்றுதல் பற்றியது. இக்கருத்தானது பெண்களை தேசிய விடுதலைப் போராட்டங்களிலும், தேசிய அபிவிருத்திக்கான திட்டமிடல்களிலும், தேசிய சர்வதேசிய ரீதியான மாற்றங்களின் மூலோபாயங்களிலும் பங்கெடுக்க வைத்தலை அழுத்துகிறது. என்னைப் பொறுத்தளவில் பெண்ணிலைவாதத்தின் இவ்விரண்டாவது இலக்கானது மிகவும் பரந்துட்டதாய் இருப்பதால் யதார்த்த ரீதியான பெண்ணிலைவாதத்தின் வரம்புகளுக்குள் வராத ஒன்றாக உள்ளது.
ஒருதேசிய போராட்டம் என்பது பெண்ணிலை வாதிகளின் செயற்பாடுடைய ஒன்றே. ஆனால் அதற்காக தேசிய போராட்டங்களிலும் விடுதலை இயக்கங்களிலும் பங்கெடுக்கும் பெண்கள் எல்லோரும் பெண்ணிலைவாதிகள் என்று கூறிவிட முடியாது. இது பெண்களின் போராட்ட வல்மையையும் புரட்சி ஆற்றலையும் காட்டுமேயல்லாது, பெண்ணிலை வாதத்தின் அடிப்படையிலிருந்து எதையும் இது விளக்குவதாகாது. மேற்கத்தைய ஏகாதிபத்தியத்துக்கெதிரான மூன்றாம் உலக நாடுகளின் தேசிய விடுதலைப் போராட்ட இயக்கங்கள் பெண்நிலைவாத உணர்விலிருந்து வேறுபட்டதாகவே இருந்தது என்பதை நாம் அறியலாம் தேசிய உணர்வுகளும் பெண்ணிலைவாதமும் பல சமயங்களில் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டதாகவுமிருக்கின்றன.

Page 8
്യp, 66tബി ബി ബിu ട്രി
ஆனால் அதற்காக மூன்றாம் உலக நாடுகளின் தேசிய எழுச்சியோடுதான் பெண்ணிலைவாதத்தின் முதல் அலை எழுந்ததென்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இது ஒரு முரண்பாட்டுக்குரிய ஒன்றே. தேசிய எழுச்சியோடு பெண்ணிலை உணர்வுகள் தேசியத்தலைவர்களால் எழுதப்பட்டன. அதேவேளை சுதேசியத்தின் பழமையும் கலாசாரமும் மேன்மைப்படுத்தப்பட்டதோடு பெண்களின் பாரம்பரிய விழுமியங்கள் விடுதலைப் போராட்டங்களில் நடுநாயகமாக விளங்கவேண்டும் என்று தேசியவாதிகள் வலியுறுத்தினர். இந்த முரண்பட்ட போக்கே ஏன் பெண்ணிலைவாதம் ஒரு மேற்கத்தைய கருத்தியலாக இழிவாகப் பார்க்கப்பட்டது என்பதை ஓரளவு விளக்கும்.
வவுனியாவில் வெளிவந்த நூல்கள்
நறுந்தமிழ்
12
 

சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
விடியாதோ இந்த இருள்?
நா.தியாகராசா
முடியாத போர் ஒன்று மூண்டு விட்டதே விடியாத இருள் ஒன்று சூழ்ந்து விட்டதே அழிகிறதே நம்தேசம் அடங்காத போரால் பொழிகிறதே "செல்மழை” போர் என்ற புயலால்
இடப் பெயர்வும் புலப் பெயர்வும் - எம்நாடோ தடம் மாறிப் போகிறதே! தவியாய்த் தவிக்கும் அகதிகளுக்கு அடுக்கடுக்காய் துயரமோ? -அவர் வாழ்வு சகதிக்குள் சங்கமமோ? சமாதானம் இல்லையோ?
நோயும், நொடியும், தேயும் - வாழ்வும் - நிதம் காயும் -வயிறும் கண்ணிரும் கம்பலையும், பாயும், படுக்கையும், பரிதவிப்பும், பதட்டமும் - பாரிலே ஒயுமோ சண்டை ஒருநாளும் வாராதோ அமைதி!
பாயுமோ உதிர வெள்ளம் பாரினிலே இனிமேலும் சாயுமோ மனித உடலம் சாவினிலே இதன்மேலும் - மனித நேயமே இல்லையோ? நேர்மையே இல்லையோ? - ஒரு உபாயமே இல்லையோ? உடனேயே அமைதிகாண்.
போர் மேகம் மறைத்ததோ பொழுதை விடியாமல்; யார் போய்த் தடுப்பாரோ போரைத் தொடராமல், அந்தகாரம் சூழ்ந்ததோ அடக்கு முறையால் - அமைதியை மந்தகாலம் மறைத்ததோ இடக்குவழியால்,
இருட்டடிப்புச் செய்வதற்கே இருக்கிறது ஒரு கூட்டம் உரிமைக்குக் கதவடைப்பு, உண்மைக்கு மறுதலிப்பு, பொய்யுக்குப் புகழாரம், பொருத்தமாய்ச் சொல்கின்ற மெய்யுக்குக் கழுத்தறுப்பு, மேலும் மேலும் இழுத்தடிப்பு
இருள் விடிய இரவி வரவேண்டும் - இன்றே மருள் அகல மடமை ஒழிய வேண்டும்- என்றும் ஞாலம் வெளுக்க ஞாயிறு வரவேண்டும் நியாயம் வெளிக்க நீதி நிலைக்க வேண்டும்.
13

Page 9
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
விடிவுக்காய் அழுகிறோம் விந்தையுண்டோ? சமாதானமென்று வடிவுக்காய் அழைக்கிறார் வாஞ்சையுண்டோ? - எம் நாட்டில் அடிமையிருள் குடிமையிருள் அகலவேண்டும் - அதனோடு கொடுமையிருள் மிடிமையிருள் மடமையிருள் குறையவேண்டும்.
இனச் சண்டை சனச்சண்டை எமக்கேனோ? - இன்னும் நிலச்சண்டை புலச்சண்டை இருக்குமாமோ? - இங்கே பெரும்பான்மை சிறுபான்மை பேசுவோரே - எமக்கு ஒருபான்மை தரும்பான்மை எதுவென்று அறியீரோ?
இருள் என்று எதைச் சொல்ல? எம்நாட்டில் இருக்கின்ற உணவுப் பொருள் விலையேற்றமா? போரா? போக்கிடமற்ற - பொருள்கள் இழந்த அகதிகள் அனுபவிக்கும் அல்லல்களா? அன்றாடக் கொலைகளா? திகதிகள் தவறாது திடீரென்று விழும் குண்டுகளா? செல்லடிகளா?
சந்துபிடிக்க வருவோர் மனதிலும் இருளே - சாவகாசமாய்ச் சிந்திக்கத் தெரிந்த சிந்தனாவாதிகள் மனதிலும் இருளே சந்தேகம் என்ற இருள் சகலதையும் மறைத்ததே நம்தேசம் என்றும் இருளிலே நமக்கெப்போது விடிவோ?
தானாக விடியாது தற்செயலாய் நடக்காது - இருளை நாமாக விரட்டவேண்டும் நன்றே சிந்தியுங்கள் போரை நிறுத்தட்டும் பொறுமையாய் பேசட்டும் - இனி யாரை அழித்தென்ன? இனவாதவேரை அறுக்காமல் விடியாது இந்த இருள்.
இதுதான் இருள் என்று இனிமேலும் அறியீரோ - இருள்போக்க இதுதான் வழியென்றால் இனிமேலும் எதிர்ப்பீரோ - ஆனால் விடியாத இந்த இருள் விடிந்திட வேண்டுமெனில் - முதல் படியாக சமாதான ஒளியைச் சகலரும் ஏற்றுவோமே.
இனவாதம் மறைந்து விட்டால் இருளும் விடிந்துவிடும், - நீண்ட கனவாக நாம் கண்ட காலமும் கனிந்துவிடும் - இதுவரை இழந்தவை மீண்டுவிடும் இதயங்கள் குளிர்ந்துவிடும் - இன்னலால் நிகழ்ந்தவை மறந்துவிடும் நிம்மதியும் நிலைத்துவிடும் - நிரந்தரமாய்
(வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் வவுனியாவில் 27.10.2007ல் நடாத்தப்பட்ட தமிழ் இலக்கிய விழாவில் வாசிக்கப்பட்டது)
14

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
உள்ளம் புதிது வேண்டும்!
கயல்வண்ணன்
விரோத குரோத எண்ணம் வேரோடு பிடுங்கி அழி! அலங்கோல அலங்காரங்கள் அகங்கார விகாரங்கள் நாகரிகம் என எண்ணி அநாகரிகம் மனம் அள்ளும் , பூசல் மனம் உள்ளே ஊசலாட இடம் கொடுத்தால் நாசம் குடி அழியும்: மோசம் அது புரியும்; வீசும் நல்ல காற்றும் வில்லங்கம் அது தரும், இல்லம் ஒளி வீச உள்ளம் புதிது வேண்டும்!
சின்னக் குழந்தைகள் போல் சிட்டுக்குருவிகள் போல் புல்லாங்குழல்தந்த புல்லுக்காடுகள் போல் துள்ளல் நடை நடக்கும் தவளைக் குஞ்சுகள் போல் பொல்லு ஊன்றி வரும் பல்லில்லாக் கிழவனைப் போல் பக்குவமாய் உள்ளம் பதமாக உள்ளம் புதிது வேண்டும்.

Page 10
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
சூரியன், பூமி, நிலவு
ஒரு கலந்துரையாடல்
சூரியன்: இயங்குதல்
எம் வாழ்க்கை வளர்ந்து திடமாகி சிதைந்து போகும் மனிதர்!
பூமி : எம் வாழ்வை
அனுபவமாக கொண்டு வலுப்படுத்த முடியாமல் தவிக்கின்றார்கள்!
ിസൈഖ: வாள்கள் வேல்கள் பீரங்கிகள் அணுகுண்டுகள் அந்தராக்ஸ் கிருமிகள் என ஆயுதங்கள் பெருப்பிப்பதிலேயே கவனமாக இருக்கிறார்கள்!
ԱԼծ : நேர்கோட்டில்
நாம் மூவரும் வந்து சூரிய கிரகணம் சந்திர கிரகணம் என திகைப்பூட்டுவதைத்தவிர வேறென்ன செய்யமுடிகிறது
நிலவு : உயிர்களிற்கு சேவையாற்ற
பெரும்பான்மைக் காலமும் எழுந்தமான நிலையில் இயங்குகிறோம்.
சூரியன் என் கோடானு கோடி
மைக்ரோ விரல்களை கொண்டு பூமியினது பரந்த உடலில் ஒளியை நாடுகிறேன் என் தீ உயிர்களைக் கருக்கும் என்பதாலே
16

சமூக கல்வி, களல இலக்கிய சஞ்சிகை
Ալճ :
நிலவு
சூரியன்:
பூமியை
ஒழுக்கை விட்டு இழுத்து அணைத்ததில்லை
நான்கூட சூரியரிடம் ஒளிவாங்கி பூமிக்கே பரிசளிக்கிறேன் குழந்தை தொடக்கம் மனிதரின் காதல் வாழ்விலும் தொடர்புபட்டுப் போகிறேன்!
எட்ட இருந்து கனவு வளர்த்தவர்கள் ബങ്ങങ്ങിങ്ങ് இப்போ தொட்டு நிற்கின்றனர்! என்மேலும் ஆயுதங்களை கொண்டு வருவார்களோ என்ற அச்சமே என்னில் முளைகொண்டு நிற்கிறது.!
அவர்களைத்தாங்கும் நான் மட்டும் என்னவாம்? வசதிகளையே மனிதர்களிற்கு கொடுக்கிறேன்; என்னில் எந்த மாற்றமும் செய்து வாழுங்கள் என்று அனுமதி கொடுத்துள்ளேன். ஆனாலும் அவர்கள் நேர்மையாய் பங்கிட தயாரில்லை சகமனிதர்களை அழிப்பதில் பெருமை கொண்டு வாழ்கிறார்கள்!
விஞ்ஞானம்
மதம்
அவதாரங்கள் என மனிதர் முன்னிற்கு நின்றாலும்,
அதிகாரம், சுயநலம் அத்தனையும் ஆள்கிறது மனித இனத்தை!
ததனசிலன்

Page 11
spab 66ü6, 6606u 35udbául stsbd'505
உன்னை நோக்கி செபம், தபம்!
தியாகத்தின் செம்மல்நீ! அன்பின் காவியமானாய் கல்வாரியில்!
அத்துடன்
எம்மீது
பற்றுவைத்தாய்!
அதனால்
பரிதவித்தாய்! மரணமெய்தினாய் உன்னால் இயலும் எம்மை இரட்சிக்க என்று உயிர்ப்பில் நிறுவினாய் ஆனால் பற்றவில்லை உம்மை நாம் உன்னால் முடியும் சாவை வெல்ல என்று மொழிந்தாய் செய்து காட்டினாய் இன்று செப ஆண்டு நாம் பரிதவிக்கிறோம் எம்மால் முடியவில்லை அன்று உன்னைப் பின்பற்ற இன்று பரிதாபமாய் மரணமடைகிறோம்.
8
தவம் செய்கிறோம் உம்மை நோக்கி செபம் செய்கிறோம். முடியவில்லை இன்றும் முற்றுப்புள்ளி ஏதும் தெரியவில்லை மறந்தோம் நாம் உம்மை மறந்தோம் இன்று அதனால் வாடுகிறோம் உன்னை தேடுகிறோம் இதனால் செப ஆண்டை ஏற்படுத்தி குரலெழுப்புகிறோம்
இனி என்றும்
செபம் செய்வோம்
யேசுவே!
உலக காவிய நாயகனே! மீண்டும் மீண்டும் செபம் செய்வோம்.
அபேனTட

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
கேள்விக்குறிகளுடன்.
அமைதியாய் நாம்
வாழ்ந்து கொண்டிருந்தாலும் - ஏனோ என் உள்ளம் அதையே
நினைத்துக் கொண்டிருந்தது என் வலக்கரம் பேனாவையும் பேப்பரையும் தழுவிக் கொண்டிருந்தது கொடிய யுத்தத்தின் கொடுர நிகழ்வுகள்
சமாதான தடுமாற்றங்கள் மீண்டும் சமாதானம் துளிர்க்குமோ
என்ற நினைவில் - காலங்கள் முன்நோக்கி நகர்கின்ற வேளையில்
துப்பாக்கி மனிதர்களோ ஏராளம் நகரமெங்கும் அமைதி திடிரென வந்த எறிகணைகள்
பூமித்தாயை முத்தமிட்டன சேவல் கூவும் ஒசைகேட்டு
கண்விழிக்கும் எம்தமிழினம் - ஏதோ விதிப்பயனால் செல் ஒலிகேட்டு
தூக்கம் கலைகின்றது. மின்னல் வேகத்தில்
விரைந்து வந்த பீரங்கிகள் விழாத இடமில்லை - அங்கே
மனித உயிர்கள் இயமனுக்கு விருந்தாக்கப்பட்டன
வயது வேறுபாடுன்றி சிதைந்த மானிட உயிாகள்
மண்ணோடு மண்ணாய் கலந்திருக்க காலங்கள் நகர்ந்தன
பள்ளி செல்லப்பயம். கடைத்தெருவுக்குப் போகப்பயம்
வெளியில் உலாவித்திரியப்பயம் இப்படி எண்ணற்ற பயங்களுக்கிடையில் எத்தனை காலந்தான் வாழ்வது படித்துச் சுவைத்த புத்தகங்களும்
செல் அரி(டி)த்துப்போக மாணவ சமுதாயத்தின் கல்வி நிலையோ கேள்விக்குறிகளுடன்.
யோ.ஜான்ச7
19

Page 12
சமூக, கல்வி, களல இலக்கிய சஞ்சிகை
மாறாத வடுக்கள்
ஆர்த்தெழுந்தது ஆழ நெடுங்கடல் அலை உயர்ந்தது பார்த்திருக்கவே பனையளவாகவே படையெடுத்தது வீடு மதில் வேலி களை எல்லாம் பிய்த்துக் கொண்டு மானிடனின் உறைவிடங்களை காவு கொண்டது.
தாய் தந்தை பிள்ளைகள் பச்சிளம் பாலகர் தம் உயிர் குடித்தது? உலகம் அறியா அழிவுதனை உண்டு பண்ணியது
அடித்துச் செல்லப்பட்டன கடலோரக் குடிசைகள் சிதைந்து போனது மீனவர் தம் வாழ்வு அள்ளுண்டு போயின படகுகள், வலைகள்
அதிகாலை வேளை துயில் எழுந்திட்ட எம் கள்ளப்பாட்டுக் கிராமத்துக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது பேரலை
புத்துயிராய் புகழ் கொடுத்த எமது நகள் இன்று பொலிவிழந்து எழில் இழந்து உயிர்ப்பிழந்து போனது!
- எஸ்.என்.செந்தூரன்

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
is 856OT6)
தள்ளாடி நடைபயின்று வந்து நின்றேன் பாசறையின் வாசல்ப்புறம் வயது முதிர்ந்து விட்டது வாலைப் பருவமும் பொய்த்து விட்டது வேகம் இழந்த விட்டேன்!
"அனுமதி மறுக்கப்படுகிறது”
என்கிறான் கூர்க்கா நான் எதிர்பார்த்தது தான்
- ஆனால் தோழியாகும் பாரம்பரியத்தை நான் இழந்து விட்டேன் என்பதை அவனுக்குக் கூறமுடியுமா என்ன! கூடவே வந்த குழந்தையை ஆதரத்துடன் அணைத்தே, "திரும்பிப் போகலாம் வா”
- 616 BULQ என் தொலைவுப் பயணத்தை நான் ஆரம்பித்துப் புறப்பட்டேன்.
பாதையிலே முட்புதர்கள் பாதிதூரம் வந்துவிட்டேன் என் ஆசான் கூறியது நினைவுக்கு வருகிறது.
“இளைஞர்கள் மத்தியில் பொறுப்புணர்வு வேண்டும் வந்த பாதை மீண்டும் திரும்பிப்பார்க்கப்பட வேண்டும்
கற்கள் உடைத்து
பண்படுத்தி
பயிர்செய்ய, நிலம்வேண்டும்,
சில சந்தர்ப்பங்களில் எமது
வரன்முறைகள் பொய்த்ததுண்டு.
- ஆனாலும் திரும்பிப்பார்
பாதையிலே பரிகாசமின்றிப் பாலகராய்
- நாம் மாற வேண்டும்”
2

Page 13
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
திடீரென்று காதைப்பிளந்தது ஒரு சப்தம்
ஒலமிட்டு ஓய்ந்தது என் மனமா அல்லது வெளிப்புறமா?
சரியாகத் தெரியவில்லை ஆனால் என்மகவு
கையை இறுகப் பற்றிய வண்ணம்
அழகிய தன் குரலால்
அம்மாவென்று அழைக்கிறாள்
என் மனப்புண்ணும் ஆறிவிட்டது மருந்தொன்று இனித் தேவையில்லை இந்த மகவுக்காக நான் வாழவேண்டும் மெல்லத்திரும்பிப் பார்க்கின்றேன் என் வீட்டு நிலா முற்றம் தெரிகின்றது.
- வெண்ணிலாவி
ஒன்பதாண்டு நிறைவு விழா கலைநிகழ்வுகள்
ஒன்பதாண்டு நிறைவு $$gଈ
 

சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
இனி ஒரு விதி செய்ய.
பயிர்கள் கருகும் வாசத்தின் நினைவுகளில் உயிர்கள் உருகும் உறவுகள் கதறும் கண்களுக்குள் நிறைந்து வழிந்தோடும் கண்ணிர் பெண்களுக்குத் தினமும் பேரிடியாய் உயிர்வலிகள்
ஒற்றைப்பனை அருகில் ஒய்வெடுத்த காலங்கள் நட்டநடுநிசியில் நாம் திரிந்த வயல்வெளிகள் கட்டுமரங்கட்டி மீன்பிடித்த சிறு குளங்கள் வற்றும் கடல்போல் வாழ்க்கை இன்று.
சுற்றும் பூமியெங்கும் சுடுகாட்டு வாசனைகள் நிற்கும் கால்களுக்கு நிலையில்லா ஊன்றுகோல்கள் சத்தம் காதடைக்கச் சகதிகளாய்ப் பிணக்குவியல்கள் நித்தம் எதிர்பார்ப்பு நிம்மதி வந்திடுமா..?
வயல்களில் பயிரிட்டால் மிதிவெடிகள் முளைக்கின்றன ஆலயவிதிகளில் ஆங்காங்கே புதைகுழிகள் பாலைநிலமாய் மாறும் எம் பசுமைப் புல்வெளிகள் சாலைகளில் எங்கும் தடையின் காற்றடங்கள்
ஈரநெஞ்சத்தில் பாயும் அம்புகளாய்ச் சோகம் இசையின் சுருதிகளில் காயும் எங்கள் கானம் சேலைநுனியில் நெருப்பாய் எரியும் மானம் நாளை என்னவென்று நடுங்கும் நிலையில் தேசம்.
புதியதாய்ப் பூமி செய்வோம் புதுமையாய் மனிதரை மீண்டும் வளர்ப்போம் செழுமையாய் மல்லிகை வாசத்தால் வானம் நிறைப்போம் நட்சத்திரங்களைக் கூரையில் பந்தலிடுவோம்.!
அடக்கிடும் ஆயுதங்களை அத்திவாரத்தில் புதைத்து நிலைத்திடும் கட்டடங்கள் நிமிர்ந்திட வைத்திடுவோம் வெடித்திடும் வெடிகளால் பாறைகள் பிளந்திடுவோம் பீரங்கி வாய்களில் நாம் பூச்செடிகள் நாட்டிடுவோம்.!
யுத்தத்தின் நாக்குகளைத் திகொண்டு நசுக்கி சத்தங்களற்ற தேசமாய்ச் சரி செய்வோம் நாம் முத்தங்கள் மழலைகளின் மூச்சில் பிறந்திடவே சித்தம் சிதறிடா அமைதி காற்றில் கலந்திடவே.!
- அளவை கலைக்கரன்
23

Page 14
espatib, assb6nfo, 56826) 336 Jáíôéíu artido'sU)
இவர்கள் இப்படித்தான்
மாஞ்சோலைக் குடிசையில் மரத்திலிருந்து இறக்கிய பானத்தை கலத்தினில் ஊற்றி ஊதி ஊதிக் குடித்து ஊறுகாயை சுவைத்து ஊர்வம்புகள் பேச ஒன்று கூடுவர்
போதை தலைக்கு ஏற போர்முரசு கொட்டி
எம்மை வெல்ல
எவனும் இல்லை
எம்மோடு மோத எவனுக்கும் துப்பில்லை எல்லாமும் எமக்குத்தான் தெரியுமென்று முட்டி மோதி - மூக்கு உடைபட்டுச் சிந்துவரே இரத்தம்
சிந்திக்கிறோம் சிந்திக்கச் செய்கிறோம் என்றிவர்கள். “இதனை” மட்டும் தான் சிந்திக்கச் செய்கின்றனர்.
- இளையநம்பி கள்ளிக்குளம்
24

aspa, atG, GD5u 55urábalu u shfarnas
ஆத்மராகம்
இருட் போர்வைக்குள்- எங்கள் பசுமையான பக்கங்களின் விலாசங்களும் வாசிப்புகளும் துலங்காமல் தொலைந்து போயின
அவ்வப்போது அடையாளம் தொலைத்து உரிமை இழந்தோம் அசைந்த கால்கள் டப்பி வெடித்து - சிதைந்து சின்னா பின்னமானது.
ஆயிரம் இரவுகளை உசுப்பி மூளையோடு முண்ணாணும் முறுக்கேறி அசையமறுத்தது அவலங்களில் துடித்தது.
அவலங்களின் அலைகளுக்குள் பதினாறாவது ஆத்மாவின் குரல் மரணத்தை உரச தெருவோர நாய்களின் எல்லை கடந்த அலறல்
பிணவாடையை நுகர்வதற்காய் ஆந்தையும் கழுகும் அலகு தீட்டி ஆதரித்தது.
இனம் என்னும் வானங்களுக்குள்
புகுத்தப்பட்ட
காட்டேரிகள் இனங்களை அழித்தது மதங்களை சிதைத்தது. மானிடத்தின் மனிதம் செய்யும் மார்தட்டிக் கொள்ளல்களைக் 660 L LD6CTub ஆத்மராகம் பாடுகிறது.
- மருக்காரை மாவதன்

Page 15
espai, 616, GENu s6nába erans
மயிலர்
எட்டாம் வகுப்பில் செவ்வாயும் வியாழனும் கடைசிப் பாடம் எங்களுக்கு உடற்பயிற்சி மயிலர் எங்களை மைதானத்திலை பாட்டு வெயிலிலை நிறுத்துவார் விசில் ஊதியே 6TB606TT குனிய நிமிர
666 gബ്
ஒடப்பண்ணுவார்!
மனிஷனை LD60TBidigboit திட்டி திட்டி உடற்பயிற்சி செய்தோம் அறுபது தாண்டியும் w ஐம்பது வருஷத்துக்கு முந்தி எப்பிடி உங்களாலை
குனிஞ்சு மயிலர் திரக்கதரிசி வளைஞ்சு செத்து தெய்வமாப் போனார் நெளிஞ்சு இப்ப நுழைஞ்சு ஒவ்வொரு நாளும் போக வர முடியுது? அவரை நினைக்கிறன் விசில் சத்தம் என்னைவிட காதில் விழும் போதெல்லாம் பத்து வயது குறைந்த நிக்கிறன் சூரி கேட்கிறான் நடக்கிறன் பாவம் ஒடுறன் அவனுக்கு கடக்கிறன் மயிலரைப் போல குனியிறன் G5 சகிக்கிறன்! மாஸ்ரர் வாய்க்கேல்லை.
- சோ.பத்மநாதன்

spes, abstub, 6fJp6u B6AJábu arhefb6b
பைந்தமிழ் வளர்த்திடல்.
முத்தமிழ் வளர்த்தார் மூவேந்தர் என்று
முணுமுணுப்பதனால் பயன் ஏதுமுண்டோ அத்தமிழ் வளர்த்திடல் அனைவரின் கடமை
ஆதலினால் பங்குதான் எடுத்தேன் நித்தமும் தமிழ் மொழி வளர்த்திட வேண்டில
நிகழ்வுகள் பல பல செய்திட வேண்டும் அத்தமும் அதுவே எம் தமிழ் மகட்கு
என்பதில் உண்மையும் உண்டு கண்போம்
ஆற்றலுடன் தமிழ் ஆற்றிட வல்லார்
அளவதனில் தேறிட வேண்டும் என்றும் ஊற்றது போல ஊறிடும் கருத்தை
உரைத்திட முன் வந்திட வேண்டும் ஏற்றதோர் பொருளை எடுத்துச் சொல்வதில்
இன்பமும் கண்டிட வேண்டு மன்றோ காற்றினில் கருத்து கலந்தெங்கும் சென்று
கவர்ந்திட வேண்டும் மனங்களையே
வார்த்திடு சிலையதன் வடிவம் போல்
வார்த்தைகள் விளங்கிட வேண்டுவதாம் ஆர்த்திடும் சொல்லதின் அர்த்தங்கள் புரிந்து
ஆவலும் கொண்டங்கு கேட்பதனால் ஈர்த்தெமை ஆண்டது இன்தமிழ் என்றோ
இன்பமும் உள்ளத்தில் விளைந்திடுமாம் ஊர்த்தொழில் செய்திடு போதிலு மிங்கே
எம் தமிழ் வளர்த்திடும் கடமை செய்வோம் பேர்த்திங்கு பிறந்தது போரென்ற போதும்
பைந்தமிழ் வளர்ந்திடல் நம்கடமையன்றோ!
- சர.இராமஸ்சுவாமி (ஈசன்) -
27

Page 16
്യാ, മ്ബി, ഞണ 8ബിളിധ ട്രീമിയ
ஒரு நேர்காணல்
கலாபூசணம் கலாநிதி முல்லைமணி வே.சுப்பிரமணியம்
கேள்வி பதில்
கேள்வி பதில்
அவர்களுடன். நேர்காண்பவர்: அ.பேனாட் உங்கள் எழுத்தாக்கப்பணி அல்லது பின்னணி பற்றி. நான் 1951ம் ஆண்டு மாணவனாக இருந்த போது ஈழகேசரி பத்திரிகை மூலம் தமிழிலக்கிய உலகில் கால் பதித்தேன். ஆர்வம் காரணமாகவே ஆக்க இலக்கியம் படைக்க முனைந்தேன். 1956ம் ஆண்டு அல்லி சஞ்சிகையில் இலக்கியக் கட்டுரையொன்று வெளியானது. "கருவண்டும் கலைமானும்” என்பதே அதுவாகும். 1960களில் பண்டாரநாயக்கா ஜனாதிபதியாக இருந்தார். இக்காலகட்டத்தில பிரதேசத்தின் விழிப்புணர்ச்சி பற்றி பேசினேன். பிரதேச ஆட்சித் தலைவர்கள் பற்றி பார்க்கும் போது, “பண்டாரவன்னியன் ஓர் நினைவுச் சின்னமாக திகழ்கிறார். இதனால் அவர் பற்றி, ஆசிரியர்கள் சிலரின் உதவியுடன் எழுதினேன். ஆனால் தகவல்கள் குறைவாகவே கிடைத்தன. ஆங்கில நூல்களும் சில உதவி புரிந்தன. உதாரணத்திற்கு J.Pலூயிஸ் 6TQg5u, "upg|606)T6i. 6666 q6sofds" (Manual of Vanni District) என்ற நூலும் கொழும்பு நூதனசாலை நூலகமும் மிகுந்த உதவி புரிந்தன. “பண்டாரவன்னியன்' பற்றி முதலியார் குலசபாநாதன் எழுதிய இரண்டு கட்டுரைகளும், யாழ் C.Sநவரட்ணம் அவர்கள் எழுதிய "வன்னியும் வன்னியரும்" என்ற நூலும் பேருதவி செய்தன. “பண்டாரவன்னியன்’ நாடகம் 1970களில் நூலுருப் பெற்றது. இதன் போதே என்னைப் பத்திரிகைகளும் அங்கீகரித்தன. இந்த பண்டாரவன்னியன் புத்தகத்தின் பின்பே நான் வெளிப்பட்டேன். தொடர்ந்து உங்கள் பணிபற்றி சற்று விளக்கமாக கூறுங்கள் வீரகேசரி 1979 பிரதேச நாவல் போட்டி ஒன்றை நடாத்தியது. இதில் எனது "மல்லிகை வனம்” நாவல் வெற்றி பெற்றது. வேடிக்கை என்னவெனில் செங்கையாழியானின் நாவலோடு போட்டியிட்டு ஈற்றில் வெற்றியீட்டியது. பின்னர் காவலூர் ஜெகநாதன் தொடர்பு கிடைத்தது. அதுவும் ஒரு திருப்பு முனையாகவே இருந்தது. 1985இல் “மல்லிகை வனம்" நாவல் நூலுருப் பெற்றது. முதன் முதலில் வெளிவந்த வன்னியைக் களமாகக் கொண்ட நாவல் இதுவாகும் தொடர்ந்து "வன்னியர் திலகம்" நாவல் 1998இல் எழுதப்பட்டது. இது தேசிய சாகித்திய விருதையும் வடகிழக்கு மாகாண பரிசையும் பெற்றுக் கொண்டது. 1999இல் 'இலக்கியப் பார்வை' வெளிவந்தது. பின்பு மழைக்கோலம்' இது என்னுடைய பணத்தில் மட்டக்களப்பு பிரியா வெளியீடு என்பது குறிப்பிடவேண்டியது. அடுத்து 'கமுகஞ்சோலை' பிரித்தானியர் ஆட்சியில் தண்ணிருற்றில் கமுகந்சோலை அழிக்கப்பட்டமையை மையப்படுத்தி எழுதப்பட்ட வரலாற்று நாவல் 2000 இல் வெளிவந்தது. 2001இல் "வன்னியல் சிந்தனைகள்" என்ற நூலும் எழுதப்பட்டன. தற்போது சிறுகதைத் தொகுப்பொன்று எழுதியுள்ளேன்.
28

airepes), et56tbsno, es56.7250 at: 86uébéoluu erdibidos726
கேள்வி பதில்
கேள்வி
பதில்
கேள்வி
கேள்வி
கேள்வி
எவ்வாறு எழுத்துத்துறையைத் தேர்வு செய்தீர்கள்?
சிறுவயது முதலே வாசிப்பில் ஆர்வம். பத்திரிகைகளில் சில ஆக்கங்கள் வெளிவந்த போது நானும் எழுதவேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. ஆனால் வாழ்க்கைச் சூழல் அதற்கு இடம் தரவில்லை. யாழ்ப்பாணக் கல்வியின் போது, அகன்ற வாசிப்பை முன்னெடுக்க முடிந்தது. எனது உளவியல் தேவையும் ஒரு காரணம் அதாவது என்னுடைய திறமைகளை வெளிக்கொணர வேண்டுமென்ற எண்ணமும் தான் இதற்கான காரணங்கள்.
உங்களுடைய இதுவரையான சாதனைகள் எவையென கூறுங்கள்? ஆசிரிய கலாசாலையில் நுழைவுப் பரீட்சை கடினமானதொன்று மகரகமை கலாசாலையில், நுழைந்தது ஒரு சாதனை. இன்றைய வன்னயின் தமிழிலக்கியப்போக்கு, எவ்வாறுள்ளது? தமிழ் இலக்கியப்போக்கு நன்றாகவே உள்ளது. வன்னியென்னும் போது, போராளிகள், மக்கள் நேரடியாக கண்டவற்றையே, எழுதுகிறார்கள் நல்ல திசையிலேயே சென்று கொண்டிருக்கிறது. உங்களின் எதிர்கால இலக்கிய நோக்கு, அல்லது திட்டம் என்னவென்று சொல்லுங்கள்.? வன்னியைப் பற்றியதாக அனைத்தையும் இணைத்து எழுதவேண்டுமென்ற நோக்கம் உள்ளது. ஆனால் அது நிறைவேறக்கூடிய சாத்தியம் குறைவாகவே உள்ளது. நீங்கள் கவிதையைவிட உரைநடையை அதிகமாக ஏன் தேர்வு செய்தீர்கள்? புனைகதையில் அதிகமாக ஈடுபட்டமைக்கு காரணம் 20ஆம் நூற்றாண்டு இலக்கியம் உரைநடைக்கே அதிக இடம் வழங்கியது, கவிதை செத்துவிட்டது என்று கூட கூறினார்கள். ஆனாலும், சில கவியரங்குகளிலும் பங்கு பற்றியுள்ளேன். பத்திரிகைகளிலும், சில கவிதைகள் வெளிவந்துள்ளன. சில பக்திப் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. உங்களைக் கவர்ந்த ஈழத்துப் படைப்பாளிகள் யாவர்? எஸ்.பொன்னுத்துரை என்னைக் கவர்ந்த படைப்பாளி, சில குறைபாடுகள் இருந்தாலும், அவரது நடை என்னை ஈர்த்தது. வ.அ.இராசரெத்தினம் மற்றும் இலங்கையர்கோன் போன்றவர்கள். வன்னிமையினுடைய பண்பாடுகள் எப்படி பேணப்படுகிறது? நாட்டுக்கூத்துக்களும் நாட்டார் பாடல்களும் நடிக்கப்பட்டும் பாடப்பட்டும் வருகின்றன. விவசாயிகள், மீன்பிடித்தொழிலாளிகள் போன்றவர்கள், ஓய்வு நேரத்தில் பாடுவார்கள் இவைதான் எமது பாரம்பரியம், பண்பாடு, சுதந்திரப்போக்கு எனப்பட்டது. முன்பு விடுதலை உணர்வு வெளிப்பட்டது. "வெள்ளியிட்ட காலுக்கு வெறுங்கால் அடிமையோ" என்பதற்கிணங்க வன்னிமைகள் வாழ்ந்தனர். உங்களின் ‘பண்டாரவன்னியன்' நாடகம் பிரபல்யம் அடையக் காரணமென்ன?
29

Page 17
9്യാ, bbി, ബ), 8ബsിധ ട്രി
பதில் -
கேள்வி
பதில்
கேள்வி
பதில்
கேள்வி பதில்
கேள்வி .
பதில்
கேள்வி - பதில்
விடுதலை வேட்கையின் உணர்வுக்கு “பண்டாரவன்னியன்’ ஒரு அடையாளம், எடுத்துக்காட்டு இதனால் வன்னி மண்ணுக்கு, மாத்திரமன்றி அனைத்துப் பிரதேசங்களுக்கும் சென்றடைந்தது. உங்கள் “பண்டாரவன்னியன்' நாடகத்தை படித்துத்தான் கலைஞர் கருணாநிதி “பாயும்புலி பண்டாரகவன்னியன்” நூலை எழுதியதாக கூறுகிறார்கள் இதுபற்றி. அதனை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன். அதற்கு பல ஆதாரங்களை காட்ட முடியும். அவர் கண்டி இராச்சியத்தையே அதிகம் எழுதியுள்ளார். ஆனால் எதிலும் எனது பெயரை குறிப்பிடவில்லை இது எனக்கு கவலையளிக்கிறது. காக்கைவன்னியன், காட்டிக் கொடுத்ததிற்கு எந்த வரலாற்று ஆதாரமுமில்லை. கற்பனைப் படைப்பு தான் அது. தற்போதைய ஆராச்சியாளர்கள் அவ்வாறு ஒருவர் இல்லை என்றே கூறுகிறார்கள். என்னுடைய சிலவரிகள் அப்படியே இடம் பெற்றுள்ளன. மாவீரன் என்ற சொல்லை நான் 1960களில் பயன்படுத்தியுள்ளேன். மரபுக் கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் சமர் நடந்தது. ஒருகாலத்தில், இதுபற்றி நீங்கள் ஒரு மரபிலக்கியவாதி என்ற வகையில் என்ன கூறுகிறீர்கள்? இன்றும் மரபுக் கவிதையாளர்கள் புதுக் கவிதையை எதிர்க்கிறார்கள். எப்படி இருப்பினும், கவித்துவம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஆனால் பலர் யாப்புதெரியாதவர்களே புதுக்கவிதை எழுதுகிறார்கள் புதுக்கவிதைக்கும் யாப்பு இல்லை என்று கூற முடியாது. நுஃமான், கல்வயல் குமாரசுவாமி, முருகையன் போன்றோர் சிறப்பாக எழுதுகிறார்கள் மரபுக்கவிதையின் கிளை தான் புதுக்கவிதை. இதற்கு காலமாற்றமே காரணம்.
வன்னியின் படைப்புக்கள் பற்றி. இரண்டு மூன்று தலைமுறையாக பிரித்து, வேறுபடுத்தப்பட வேண்டும் போராளிகளும் மக்களும் எழுதுகிறார்கள் ஆனாலும் போதாது என்றுதான் கூற வேண்டும். இதுவரை தாங்கள் எழுதியுள்ள நூல்களின் எண்ணிக்கை எத்தனை என்று கூறுங்கள். இதுவரை பன்னிரெண்டு நூல்களை வெளியிட்டுள்ளேன். இன்னும் ஆயத்த நிலையில் ஒன்று உள்ளது. அதுவோர் சிறுகதைத் தொகுதி. தகுதி வாய்ந்தவர்களுக்கு விருதுகள் கிடைப்பதில்லை இது பற்றி. கிடைக்காவிடில் சிலருக்கு கடும் சோர்வு ஏற்படுகிறது விருதுகள் எழுத்தாளனுக்கு ஒரு அங்கீகாரம் சிலர் கொதிக்கிறனர். இதற்கு பார்வை வேறுபாடும், காரணம். முறைகேடுகளும் நடந்துள்ளன.
கொண்டுவந்த சீதம் (சிறுகதைத்தொகுப்பு) நினைவுச் சரங்கள். வன்னியின் கதை, ஆகிய நூல்கள் இந்நேர்காணலின் பின் வெளிவந்துள்ளன. கலாநிதிப் பட்டம் கிடைப்பதற்கு முந்திய
நேர்காணல்
30

fp. 66thbf FGUYSugsuðau erhebuah
9 ஆண்டு நிறைவு நிகழ்வு செல்வி.த.அநிந்திதை (மாணவி.யாழ். பல்கலைக்கழகம்)
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், வருடாந்தம் நடாத்தும், கலை இலக்கிய நிகழ்வின் ஒன்பதாவது ஆண்டு நிறைவு நிகழ்வு கடந்த 10.07.2005அன்று, காலை 10மணியளவிலே ஆரம்பமாகியது. வவுனியாவின் நகரசபை மண்டபத்தில், கலை, இலக்கிய ஆர்வலர்கள் சூழ, கவிஞர் தமிழ்மணி அகளங்கன் அவர்களின் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.
பிரதம விருந்தினர், கெளரவ விருந்தினர்கள், சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் மங்கல விளக்கேற்றியதைத் தொடர்ந்து, செல்வி உசேனி பூரீதரன் அவர்கள் தமிழ் வணக்கப்பாடலை இனிய குரலில் இசைத்தார்.
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் திரு.ந.பார்த்திபன் அவர்கள். வரவேற்புரையை ஆற்றி இலக்கிய நண்பர்களை இன்முகத்துடன் வரவேற்றார். இதன் இன்னொரு அம்சமான வரவேற்பு நடனத்தை, வவுனியா நர்த்தனாஞ்சலி நாட்டிய பள்ளியின் மாணவி, மிகவும் அழகாகவும், அபிநயத்துடனும் ஆடினார். "குறை ஒன்றும் இல்லை.” எனும் பாடலின் வரிகள், இரசிகர்கள் மனதிலே புது உத்வேகத்தை அளித்தது.
இந்நிகழ்விலே பிரதம விருந்தினராக வவுனியா அரச அதிபர் திரு.சி.சண்முகம் அவர்களும் கெளரவ விருந்தினர்களில் யாழ் பல்கலைக்கழக, வவுனியா வளாக முதல்வர், பேராசிரியர் சு.இராஜதுரை அவர்களும், சிறப்பு விருந்தினர்களில், வவுனியா பிரதேச செயலாளர், செல்வி த.துரைச்சாமி அவர்களும் ஏனையோரும் கலந்து, இவ்விழாவினை மேலும் அழகுறச் செய்தனர்.
சிறுமியின் வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து, தலைமையுரை ஆற்றிய கவிஞர் தமிழ்மணி அகளங்கன் அவர்கள், “இச்சிறுவர்கள் வளர்ந்து மலர்கின்ற காலத்திலாவது குறையற்ற ஓர் அமைதியான வாழ்வு கனியவேண்டும்” என்ற ஒரு மெல்லிய ஏக்க உணர்வோடு தனது தலைமையுரையைத் தொடர்ந்தார். மேலும் ஈழத்துக் கலைஞர்களது ஆக்கம், திறமை என்பன இந்நண்பர்கள் வட்டத்தினாலே வளர்த்தெடுக்கப்படுவதைக் கூறி, அப்பணி மேலும் தொடர தனது ஆசியை வழங்கினார்.
இந்நிகழ்வின் சிறப்பம்சம் என்னவெனில், இங்கு மூன்று தலைமுறையினரின்
சங்கமத்தைக் காணமுடிந்தது. மழலைகள், சிறுவர்களின் ஆடலும், பாடலும், கதை
சொல்லல் நிகழ்வும், இளைஞர் யுவதிகளின் ஆற்றல்கள் வெளிப்படுகின்ற மாருதம்
சஞ்சிகையின் வெளியீடும், மூத்த அறிஞரும், கவிஞருமான பேசெபமாலை ஆசிரியரின் 31

Page 18
arpa, abstub as Unsu caséhat erhefnah
"குயிலும் மயிலும்” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வும் என்ற வகையிலே மூன்று தலைமுறையினரினதும் முகிழ்ப்பாக நிறைவுடன் இவ்விழா இனிதே நடைபெற்றது.
வவுனியா பிரதேச செயலாளர். செல்வி த.துரைசாமி அவர்களால், "மாருதம்" சஞ்சிகையின் ஏழாவது இதழ் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன் வெளியீட்டுரையை வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி பீடாதிபதி திரு.க.பேர்ணாட் அவர்களும், ஆய்வுரையைக் கல்லூரியின் விரிவுரையாளர் திரு.எஸ்.பவானந்தன் அவர்களும் ஆற்றினார்கள். இதன் முதற்பிரதியை வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் திரு.நா.சேனாதிராசா அவர்கள் பெற்றுக் கொண்டார். இதன் பின்பு பார்வையாளர்களின் கைகளிலும் ‘மாருதம்' தவழ்ந்தது.
சஞ்சிகையோடு மட்டும் நின்றுவிடாது ஒரு நூல் வெளியீட்டையும் இவ்விழா கண்டது. மூத்த கலைஞரும் கவிஞரும், ஆசிரியருமாகிய பே.செபமாலை எழுதிய "குயிலும் மயிலும்" எனும் கவிதைத் தொகுப்பு. வவுனியாநகரசபை செயலாளர், திரு.ரி.ஜெயராஜ் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இவ் வெளியீட்டு உரையை இவ்வட்டத்தின் மூத்த உறுப்பினர். இலக்கியச் செல்வர், முல்லைமணி, கலாநிதி வே.சுப்பிரமணியம் அவர்கள் நிகழ்த்தினார்.
இவர் கவிதையின் அமைப்புப் பற்றியும் செய்யுள் யாப்பு மரபுகள் பற்றியும் மிகவும் ஆழமாக ஆராய்ந்து கூறினார். இன்றைய இளம் வட்டத்தினரின் கவிதை ஆக்கமுயற்சிகளுக்குஇவரது உரை ஊக்கமளித்தது என்று எண்ணக்கூடியதாக இருந்தது.
இந்நூலின் ஆய்வுரையை வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் திரு.மு.கெளரிகாந்தன் அவர்கள் ஆற்றி அதனை அழகுறச் செய்தார். இதன் முதற் பிரதியை வவுனியா இந்து மாமன்ற செயலாளர் திரு.சி.ஏ.இராமஸ்வாமி அவர்கள் பெற்றுக் கொண்டார். அரச அதிபரும், திரு.சி.ஏ.இராமஸ்வாமி அவர்களும் செபமாலை ஆசிரியருக்கு பொன்னாடை போர்த்திக் கெளரவித்தனர். திரு.சி.ஏ.இராமஸ்வாமி அவர்கள் இவ்விழாவைச் சிறப்பித்து வாழ்த்துப்பா ஒன்றையும் இசைத்தார்.
இதனைத் தொடர்ந்து கலைஞர் கெளரவிப்பும், விருது வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. மிருதங்க வித்துவான், இசை எழில் திரு.கந்தையா கனகேஸ்வரன், வயலின் கலைஞா, கலாபூஷணம் திருமதி விமலலோஜினி கனகேஸ்வரன் ஆகிய இருவருக்கும், மாலை பொன்னாடை என்பன அணிவித்து, பேராசிரியர் சு. இராஜதுரை அவர்களால் 'இசைச்செல்வர்” எனும் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இக்கெளரவ உரையை யாழ் பல்கலைக்கழக, வவுனியா வளாக ஆங்கில முதுநிலை விரிவுரையாளர் திரு.கந்தையா றிகணேசன் அவர்கள் நிகழ்த்தினார். இவ்வுரையில். இசைச்செல்வர் இருவரதும் கலைப்பயணம் பற்றிய ஒரு முகப்பை வழங்கினார்.
32

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
மேலும் வவுனியா வளாக முதல்வர் பேராசிரியர் சு.இராஜதுரை அவர்கள் வாழ்த்துரையை வழங்கினார். இவர், வவுனியாவில் பதவியேற்று நடைபெறும் முதல் நிகழ்வில் கலந்து கொள்ளும் மகிழ்வோடு, தனது மாறுபட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அரச அதிபரும், தனது இலக்கியம் பற்றிய பார்வையை மிகவும் இரத்தினச் சுருக்கமாகக் கூறினார். இக்கெளரவிப்பின் ஏற்புரையில், திரு.கந்தையா கனகேஸ்வரன் அவர்கள், தன் கலைவாழ்வின் உயர்வுக்கு, ஆக்கமும், ஊக்கமும் அளித்தவர்களுக்கு நன்றி செலுத்தினார்.
கண்களுக்கு விருந்தாகும் கலைநிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாகவும், சிந்தனைக்குரியதாகவும், இடம்பெற்றது, வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை சிறார்கள் நடாத்திய கதைசொல்லல் மற்றும், அபிநயப்பாடல் எனும் நிகழ்வுகள் மிகவும் நோத்தியாக அமைந்தன. தமக்கேயுரிய இனிய மழலைச் சொற்களால் இவர்கள் கூறிய கதைகளும் அதற்கேற்ற அபிநயங்களும் அங்கிருந்த பார்வையாளர்களின் இரசனைக்கு விருந்தாகின.
மேலும் செல்வி சஷ்மீரா ரீ கணேசன் அவர்களின் பாஒதல் நிகழ்வும், கந்தையா கனகேஸ்வரன் அவர்களின் மிருதங்க இசை நிகழ்வும், இசைக்குயில் திருமதி வதனி பூரீதரன் மாணவிகளின் குழுப்பாடல் நிகழ்வும், தொடர்ந்து செவிகளுக்கு விருந்தாகின.
இதுமட்டுமல்லாது வவுனியா நிருத்திய, நிகேதன கலாமன்ற மாணவிகளினதும், வவுனியா நர்த்தனாஞ்சலி நாட்டிய பள்ளியின் மாணவிகளினதும் நடன நிகழ்வுகள் கண்களுக்கும், மனதிற்கும் மகிழ்வூட்டின.
கலைநிகழ்வின் இறுதியாக வவுனியா, விபுலானந்தக் கழகம் வழங்கிய திரு. மாணிக்கம் ஜெகன் அவர்களின் நெறியாள்கையில், 'இது கதையல்ல" எனும் நாடகம் அரங்கம் கண்டது. இது, இன்றைய காலகட்ட சமூகப் பிரச்சினைகளை மையக்கருத்தாகக் கொண்டு தத்ரூபமாக நடிக்கப்பட்டதால், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. உணர்வு பூர்வமான கதையான காரணத்தினால், பார்வையாளர்களின் கைதட்டல்களையும், பாராட்டுக்களையும் இந்த நாடகம் தனதாக்கிக் கொண்டது.
நிறைவாக, வாழ்த்துப்பாடலை, செல்வி ஜெயராமி ஏரம்பமூர்த்தியும், நன்றியுரையை திரு.கந்தையா முரிகணேசன் அவர்களும் வழங்கினர்.
வவுனியா நகரசபை செயலாளர், ஊழியர்களின் ஆதரவுடனும், கலை, இலக்கிய ஆர்வலர்களின் ஊக்குவிப்புடனும், கண்களுக்கும், அறிவுக்கும் விருந்துபடைத்து, இந்நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.
JJ
33

Page 19
്യ, ബീ. ബബി (ധ റ്റിൽ
“இலக்கிய நயம்” பகுதியில்அமுத கங்கை இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்
1921இல் பிறந்து 1978இல் காலமான எங்கள் மண்ணின் மூத்த இலக்கியப் படைப்பாளியான வன்னியூர்க் கவிராயர் என்று அழைக்கப்படும் எஸ்.எல்.சவுத்தரநாயகம் அவர்களின் கவிதைகள், சிறுகதைகள் அடங்கிய நூல் அமுதகங்கை என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் வெளியிட்ட இந்த நூலின் பதிப்பாசிரியர்கள் தமிழ்மணி அகளங்கன் அவர்களும், கந்தையா பூரீ கணேசன் அவர்களும் ஆகும்.
சமகால ஈழத்து வெளியீட்டுத் துறையில் இந்த நூலின் வருகையானது முக்கியத்துவம் பெற்ற ஒரு வெளியீடாகக் கருதப்பட வேண்டும்.
வவுனியா செட்டிகுளம் பகுதியில் இலுப்பைக்குளம் என்னும் கிராமத்தில் பிறந்து 1953முதல் 1978 வரை இருபத்தைந்து ஆண்டுகள் இலக்கியப் பணிபுரிந்து மறைந்த அந்தப் படைப்பாளியின் படைப்புக்களை கிட்டத்தட்ட இருப்பதாறு வருடங்களின் பின்னர் தேடி எடுத்துத் தொகுத்து வெளியிட்ட முயற்சியானது வெறும் பாராட்டுக்குரிய விடயமாக மட்டும் பார்க்கப்பட வேண்டியது அல்ல.
எல்லாவற்றையும் விட முக்கியமானது கவிராயருக்கு மிகவும் பிடித்தமான "அமுதகங்கை" என்ற பெயரிலேயே அவரது கவிதைகளும் ஏற்கனவே 1973இல் வெளியான "ஈழத்துக் காவியதீபகம்" என்ற அவரதுசிறுகதைத் தொகுப்பையும் சேர்த்து வெளியிட்டது மிகவும் சிறப்புக்குரிய விடயமாகும்.
அவரது "ஈழத்து காவிய தீபம்" சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முதலுரையில் தனது நூல் உருவாகுவதற்கு பண உதவி நல்கியவர்கள் என்று ஒரு பட்டியல் தருகின்றார். மிக நீண்டதாக இருப்பினும் அந்தப் பட்டியலை ஒருமுறை பார்ப்போம்.
"இந்நூல் உருவாகுவதற்குப் பணஉதவி நல்கிய திரு.பொன்னு நல்லையா, திரு.க.இரத்தினசிங்கம், திரு.எஸ்.அருளம்பலம், திரு.கதம்பிராசா பிரபல கட்டட ஒப்பந்தக்காரர் (ஆத்திப்புலம்), திரு.சி.க.மனோகரன் (காரைக்காட்டு வீதி, வ, பண்ணை), திரு.கந்தசாமி கலைச்செல்வன் (பழம் றோட், கந்தர்மடம்), திரு.எம்இராஜநாயகம் (வைத்திய அதிகாரி), “செல்வம்" சுழிபுரம், திரு.கதிருநாவுக்கரசு (பொதுச் செளக்கியப் பரிசோதகர், சாவகச்சேரி), திரு.வே.சாமுவேல் (ஆசிரியர்), திரு,கோ.பொன்னம்பலம் (பெரியபுளியாலங்குளம்), ஜனாப்செஜமால்தீன் (சின்னச்சிப்பிக்குளம்), திரு.சி.மாணிக்கம், திரு.ச.கருணாகரன் (இலுப்பைக்குளம்), திரு.கு.சாமிநாதர், திரு.த.வேலாயுதம், ஜனாப்
34

speh, 656tbs, essers EMGuéthau erthfines
ஏ.எல்.ஜமால், றஸ்மானியா ஸ்ரோர்ஸ் (நேரியகுளம்), திரு.வ.செல்லத்துரை (பத்தமேனி), திரு.வ.சின்னராசா (அச்சுவேலி), திரு.சி.சிங்கராசா(கொத்தியவத்தை), திரு.மு.சின்னத்துரை(கலட்டி), திரு.வீ.எஸ்.அந்தோனிப்பிள்ளை ஆசிரியர் (வசாவிளான்), திரு.இரா.செல்வரத்தினம், அண்ணா மலை வீதி, சுதுமலை, திரு.மா.அப்புத்துரை, திரு.த.மாணிக்கவாசகர், திரு.கதம்பிராசா, மல்வம், உடுவில், பண்டிதர் நா. இராசையா (கோண்டாவில்) மல்வம் தமிழமுத மன்றத்தினருக்கும்"
உண்மையில் எத்தனை இடங்களைச் சேர்ந்த எத்தகைய நண்பர்களின் உதவியுடன் அந்த நூல் வெளிவந்துள்ளது என்பதை கவனியுங்கள். அத்தகையதொரு சூழல் தற்காலத்தில் இல்லாத போதும் கூட வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் அதனைச் செய்துள்ளது.
சிறுகதை, குட்டிக்கதை, உருவகக்கதை, நடைச்சித்திரம், கட்டுரை எனப் பல்வேறு விடயங்களை எழுதினாலும் கவிராயர் கவிதைகளாலேயே பெருமை பெற்றவர்.
அவருடைய எல்லாக் கவிதைகளும் இத் தொகுப்பில் சேர்க்கப்படாவிடினும் அவருடைய திறமை வெளிக்காட்டும் கவிதைகள் பல தொகுப்பில் உள்ளன.
கவிதைத் துறையிலே ஆசு, மதுரம், வித்தாரம் ஆகிய மூவகைப் பாவினங்களையும் சரளமாகப் படைத்ததுடன் கஷ்டமான இனமாகிய சித்திரகவிப் பாவினத்தையும் தேர்ந்து நாகபந்தம், சக்கரபந்தம், நீரோட்டம் அன்ன கவிதைகளையாக்கும் புலமை விளையாட்டுக்களையே அநாயாசமாகச் செய்துவிட்டேன் என்று கூறிப் பெருமைப்படுகின்றார் கவிராயர்.
கவிராயர் சிறந்த தமிழ்ப் பற்றும், மண் பற்றும் மிக்கவர் என போற்றப்படுகின்றார். அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் பங்கு கொண்ட கவியரங்கு ஒன்றில் பின்வருமாறு தழிழையும் மண்ணையும் போற்றினார்.
நானிவ்வுடலை விட்ட
பின்னும் புகழுடம்பில் பெருமைதரும்
நற்றமிழே!
சேய்கள் மனை மக்கள் சுற்றம் பின
மென்றென்னை
எறிந்த பின்னும் சேர்த்தணைத்து
உறவாடப் போகு மண்ணே!”
மண் பற்றும் மொழிப்பற்றும் கொண்ட கவிஞர் சமூக சீர்திருத்தக் கருத்துக்களிலும் அதிக அக்கறை கொண்டவராக இருந்தார். அவரது படைப்புக்களில் இதுவே பிரதான பாடுபொருளாக இருந்தது.
"சாதி மத பேதம் தகர்த்து முழுமனதாய்க் காதலித்த வென்னையே கைபிடித்து நீதி
35

Page 20
്യാമ, ബി, ബി (ിധ ട്രീമിങ്ങ
நிறுத்து முங்கள் வீரம் நிகரற்ற தென்று சிரித்தாளே அந்தச் சிலை"
என்று பாடினார் கவிஞர் வன்னியூர்க் கவிராயர்.
கவிதைகளில் புகழ்பெற்றாலும் வன்னிக் கவிராயரின் முதலாவது வெளியீடு சிறுகதைத் தொகுப்புத்தான். ஈழத்துக் காவிய தீபகம் என்ற தலைப்பிட்ட அது இப்போது அமுதகங்கை தொகுப்பிலும் இணைக்கப்பட்டுள்ளது.
கதைத் தொகுப்புக்கு அவர் இட்ட பெயரே சிறுகதைத் தொகுப்புக்கு உரியதாக அமையாமல் கவிதைத்தொகுப்புக்கு பெயர் இட்டது போல அமைந்துள்ளதைக் கவனிக்க வேண்டும். அதன் காரணமாகவோ என்னவோ கதைகளும் கவிதைப் பாங்கானதாக அமைந்துள்ளன. தொகுப்பில் உள்ள சிறுகதைகள் ஈழத்தின் சகல பிரதேசங்களையும் கதைக்களங்களாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. வன்னி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகம் என்பன அவற்றில் சிலவாகும்.
இயலுமானவரை கதைகளில் அந்தப் பிரதேச பேச்சுவழக்கை கதைகள் கொண்டுள்ள போதும் வேலப்பன் என்ற கதையில் அழைக்கப்படும் 'ஸார்' என்ற சொற்பதங்கள் சிறிது சங்கடத்தை வரவழைக்கின்றன. தொகுப்பில் உள்ள முதலாவது சிறுகதை “வெள்ளித்திசை மட்டக்களப்புப் பேச்சு வழக்கில் அக்காலத்துச் சூழலைவாழ்வு முறையை நுட்பமாகச் சித்தரித்துக் காட்டும் அற்புதப் படைப்பாகும்.
அநேகமான கதைகளுக்குள் ஆசிரியரும் உட்புகுந்து தன் கருத்துக்களை நேரடியாகவே தெரிவிக்கின்றார். இந்தப்பாணி அந்தக்காலத்தில் வழக்கத்தில் இருந்திருக்க வேண்டும் ‘சவால் என்ற சிறுகதை இவ்விதமாகஆசிரியர் கருத்துக்கு ஊடாக முடித்து வைக்கப்படுகிறது.
"இன்று தொட்டு இனிமேலாவது இன ஒற்றுமையாக வாழ வேண்டியது அவசியத் தேவையான தொன்றென்று" சிந்தித்து நடப்பதற்கும் முனைந்தான்! அதற்கு அந்த நாய்க்கு ஆறாவது அறிவு இருந்திருக்குமானால்..?
"களை பறிக்கப்பட்ட செந்நெற்பயிர்கள் சீவராசிகளுக்கு நன்மை புரியும் இலட்சிய வீறுடன் தலை நிமிர்ந்து இளங்காற்றில் அசைந்தாடின"
"முதிர்ந்த கலைஞனின் நெற்றியில் அறிவொளிச்சுடர் விட்டுப் பிரகாசிப்பதைப் போன்று ஐந்தாம் பிறைக் கீற்றுச் சந்திரன் ஒளிவீசிக் கொண்டிருந்தான்'
போன்றன வன்னிக் கவிராயரின் எழுத்துச் சிறப்புக்குக் சான்றுகள். இவ்வாறான உவமான உவமேயங்கள் கதைகள் பூராக உள்ளன. நல்ல தமிழின் சுவைக்கு கட்டாயம் இந்தக் கதைகள் படிக்கப்பட வேண்டும். குறிப்பாக இளைய தலைமுறைப் படைப்பாளிகள் தேடி வாசிக்க வேண்டும்.
நன்றி. ஈழநாதம் (பக்.09/15.06.2006)
36

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
107வது நிகழ்வு (11.03.2006) 107வது நிகழ்வில் மாருதம் 7 சஞ்சிகை விமர்சனம் இடம்பெற்றது. நிகழ்விற்கு தமிழ்மணி அகளங்கன் அவர்கள் தலைமையேற்றார். பழந்தழிழ் ஆய்வு எழுதும் போது அதனை சமகால சமூக அரசியல் நிலையிற்கு இணைத்து ஆராயவேண்டும் என்ற கருத்தை அகளங்கன் முன் வைத்தார். திரு உதயகுமாரன் அவர்கள் இதுவோர் குழுநிலை மீள்பார்வை நிகழ்வு என கருத்து வெளியிட்டார்.
108 வது நிகழ்வு (17.06.2007) கவிஞர் அபேனாட் அவர்கள் எழுதிய 'என் இனிய தமிழே கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வாக இடம் பெற்றது. நிகழ்விற்கு தலைமை தமிழ்மணி அகளங்கன் அவர்கள். பழந்தழிழ் இலக்கியக் கருத்துகளை சமூகத்துக்கு விளக்கும் ஓர் அரிய முயற்சியாக நூல் வெளியீடு அமைந்தது. இதற்கான ஆய்வுரையை பண்டிதை. யோகா.சோமசுந்தரம் அவர்கள் ஆற்றினார். இளம் படைப்பாளிகளை ஊக்குவிப்பது பாராட்டுக்குரியது என பண்டிதை குறிப்பிட்டார்.
109வது நிகழ்வு (06.07.2007) வட்ட நிகழ்வுகளுக்கு பல நாட்டிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து அளித்த செல்விகஜட்பிரியா குலேந்திரன் அவர்களின் திருமண வரவேற்பும், நாடகப்பட்டறை நிகழ்வும். சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
110வது நிகழ்வு (29.07.2007) முல்லைமணி எழுதிய நினைவுச்சரங்கள் வெளியீடு தமிழ்மணி அகளங்கள் தலைமையில் அரசஅதிபர், வவுனியா வளாக முதல்வர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க இடம் பெற்றது. எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்துடன் இணைந்து நடாத்தப்பட்டது. திருவாளர்கள் கி.உதயகுமார், பொன்தெய்வேந்திரம் மற்றும் ஓ.கே.குணநாதன் ஆகியோர் உரையாற்றினர்.
111வது நிகழ்வு (24.11.2007) 111 வது நிகழ்வு தமிழ்மணி அகளங்கன், திரு.செ.குமாரசாமி அவர்கள் வெளியிட்ட "கிள்ளைவிடு தூது அறிமுக நிகழ்வாக நடைபெற்றது பழந்தழிழ் தூது பிரபந்தம் எளிய வடிவில் சமூக கவிதை நூலாக கலை உணர்வும் காவியபாங்கும் இணைத்து எழுதப்பட்டுள்ளது என நூலை அறிமுகம் செய்தார் அகளங்கன்.
112வது நிகழ்வு (29.12.2007)
த.தனசீலன் எழுதிய "தோரணங்களின் நிலைகள் என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா கவிஞர்.அகளங்கன் தலைமையில் இடம் பெற்றது. பிரதம விருந்தினராக வவெளிக்குளம் கஉவித்தியாலய அதிபர் திருமதி.ஜி.நடராஜாவும், சிறப்பு விருந்தினராக வவுனியா பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி.விஜிதா செல்வகுமாரும்
37

Page 21
്യാ, ബി, ബി (ധ {്ടിയ
கலந்து கொண்டார். ஆய்வுரையை நிகழ்த்திய திரு.பார்த்தீபன் அவர்கள் கவிதைகள் எமது மண்ணின் வாழ்வுமுறையை சிற்பபாக பேசுகின்றன என்று குறிப்பிட்டிருந்தார். மிகவும் சிறப்பான நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்தது.
113வது நிகழ்வு (20.02.2008) 11ம் ஆண்டு நிறைவு நிறைமதி கலந்துரையாடல் இடம்பெற்றது. புதிய உறுப்பினர்களை தலைவர் வரவேற்று இலக்கிய வாழ்வு குறித்து பிரஸ்தாபித்தார்.
114வது நிகழ்வு (10.03.2008) வட்டத்தின் ஆரம்பகால உறுப்பினரான முன்னாள் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் உபபீடாதிபதியும், இளைப்பாறிய யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் முதலாவது பீடாதிபதியுமாகிய கலாநிதி திகமலநாதன் அவர்களை வரவேற்று தேநீர் விருந்துபசாரம் வழங்கப்பட்டு சமகால மொழிக் கல்வியும், பாடப்புத்தக எழுத்தாக்கமும் பற்றிய கலந்துரையாடலும் இடம் பெற்றது.
வவுனியாவில் வெளிவந்த சமூக விஞ்ஞான கல்வி நூல்கள்
 

&#pa5, a55b6uo, a5s6u ĝ6ubábaduu eriiĝosUmeå
வட்டத்தின் 2007 ஆம் ஆண்டுக்கான விருது பெறும் கலைஞர்கள்
சிற்பக் கலைச்செல்வர்.சு.சண்முகவடிவேல்
1948ம் ஆண்டு ஆடி 23இல் வவுனியாவில் சிற்பக் குடும்பத்தில் பிறந்த திரு.சுப்பிரமணியம் சண்முக வடிவேல் சிற்பக் கலையில் ஒரு முத்திரை பதித்து வருவது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இவரது கருங்கல் விக்கிரகங்கள் கருங்கல் கலைப் பொருட்கள் தங்கம், வெள்ளியினால், செய்யப்படும் கொடிமரம், கலசம் மற்றும் கிரீடங்கள் போன்ற கலைப் பொருட்கள் நோர்வே, டென்மார்க், கனடா போன்ற பல நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இவர் ஒரு சிற்பக் கலைஞனாக மட்டுமல்லாது தமிழ், இந்து நாகரிகம், சிற்பக்கலை பற்றிய விமர்சனக் கட்டுரைகளையும், எழுதி ஒரு எழுத்தாளனாகவும் திகழ்வது குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும்.
கல்வியும் கலையும்
ஆரம்பக்கல்வியை வ/ வவுனியா றோமன் கத்தோலிக்க வித்தியாசாலையிலும் தொடர்ந்து இடைநிலைக் கல்வியை வ/வவுனியாமகாவித்தியாலயத்திலும் கற்றுத் தேறி இருபது வயதில் தனது பரம்பரைக் கலைத் தொழிலில் முழு மூச்சாக ஈடுபடத் தொடங்கினார். தனது தந்தையார் சுப்பிரமணியம், மாமனார் கோவிந்தசாமி ஆச்சாரி, சிற்ப மேதை தங்கவேல் ஸ்தபதி ஆகியோரிடம் சிற்பக்கலை பயின்று, சிற்ப ஆகம நூல்கள் மற்றும் சமய இலக்கிய நூல்கள் மூலமாகவும் கலை நுணுக்கங்களைக் கற்று பயிற்சி பெற்றார். 1968இல் அபிராமி சிற்ப, நிலையத்தினை நிறுவி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிற்பங்கள், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட செப்பு, வெள்ளி, உலோகப் படிமங்கள் போன்றவற்றினையும் படைத்துள்ளார். இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பல கோயில்களில் இடம் பிடித்த இவரது சிற்பங்களில் நான்கு அடி உயரமுடைய காளியம்மன் (கொழும்பு) 6 1/4அடி உயரமுடைய ஆஞ்சநேயர் (டென்மார்க்), 4அடி நீளமுடைய பாம்பணையில் பள்ளி கொள்ளும் அனந்தசயனன் (யாழ்ப்பாணம்), 6அடி உயரமுடைய புத்தர் (மன்னார்), 3அடி உயரமுடைய கண்ணகி அம்மன் (மட்டக்களப்பு), 3அடி உயரமுடைய துர்க்கை (திருமலை), 4அடி உயரமுடைய பாலமுருகன் (வவுனியா)என்பவை குறிப்பிடத்தக்கன.
கலை ஆற்றலும் கெளரவங்களும்
வாசிக்கும் திறனும் எழுதும் ஆற்றலும் கைவரப் பெற்ற திரு.சண்முக வடிவேல் மித்திரன், வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் சிற்பக்கலை மற்றும் சமயச் சார்பான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இந்தியாவில் மாமல்லபுரம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் சிற்பக்கலை பற்றி மேலும் பயிற்சி பெற்று நாடு போற்றும் சிற்பக் கலைஞராக மிளிரும் திரு.சண்முக வடிவேல் பெற்ற பரிசில்களும் பாராட்டுக்களும் மிகுதியானவை. தொண்ணுாற்றிரண்டு முதல் தொண்ணுற்றியாறு வரை தொடர்ந்து வடக்கு கிழக்கு மாகாண சபையின் கலைப்பொருட்களுக்கான பரிசினைப் பெற்றுக் கொண்டதோடு 39

Page 22
appes, 66bGlo. 66750 8804,6!u atoyo. De5
கொழும்பு தேசிய கைத்தொழில் சம்மேளனத்தினால் வழங்கப்பட்ட தங்க விருதினையும் (2004) பெற்றுக் கொண்டார். இவற்றோடு இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சினால் 'அருட்கலை வாரிதி" பட்டமும் (1993), கலாசார அமைச்சினால் “கலாபூஷண" விருதும், (1997) சர்வதேச இந்து மத குருபீடம் வழங்கிய “சிற்பக் கலை மாமணி’ விருதும், (2002) வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு வழங்கிய ஆளுநர் விருதும், (2006) குறிப்பிடத்தக்கன. இவற்றோடு வவுனியா கிராம அபிவிருத்தி சங்கம் (1992). வவுனியா நகரசபை (1994), வவுனியா சுத்தானந்த இந்து இளைஞா சங்கம் (1994) போன்றனவும் பரிசளித்து பொன்னாடை போர்த்தி கெளரவித்தன. இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல் 2007 இல் ஜனாதிபதி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். ஒரு கலைஞனின் கலைப்படைப்பு பிரான்ஸ் போன்ற ஒரு கலைத்தேசத்தில் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமையானது, அவரது கலைத்திறமையைப் பறைசாற்றும், அத்தகையதொரு கலை மேதையை வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் “சிற்பக் கலைச் செல்வர்” என்னும் விருது வழங்கி கெளரவிப்பதில் மகிழ்வடைகின்றது. 'கற்கவியாக திகழும் திரு.சண்முகவடிவேல் 'சொற்கவியாகவும் மிளிர்வது கலையுலகம் செய்த பாக்கியமே.
O
 

്യാൺ, ബി. ബി ട്രിബ്ളിധ ട്രീഭിത്
இசைச் செல்வர் கே.ஆர்.சிவசோதி
இசைப்பயணத்தின் தொடக்கம்
2.11.1948இல் வவுனியா குடியிருப்பில் பிறந்த சிவசோதி அவர்களின் அம்மா பார்வதி ஒரு சங்கீத ஆசிரியர். தந்தையார் இரத்தினசிங்கம் ஒரு பாலபண்டிதர், வவுனியா சைவப்பிரகாசா, வித்தியாசாலையின் முதல் அதிபர். நான்கு பிள்ளைகளில் கடைசி மகனான சிவசோதி தனது ஆரம்பக் கல்வியினை வவுனியா மகாவித்தியாலயத்தில் பெற்றுக் கொண்டார். புங்குடுதீவு சங்கீத பூஷணம் பொட்டு கந்தசாமி ஆசிரியரிடம் தனது சங்கீதக் கல்வியினைப் பயின்று பின்னர் பொன். நடராஜா ஆசிரியரிடம் கல்வி கற்றார். சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ரி.எம்.எஸ். செளந்தரராஜன் ஆகியோரை மானசீக குருவாகப் கொண்டு கேள்வி ஞானம் மூலமே அதிகமான சங்கீதக் கல்வியினை ஈட்டிக் கொண்டதாகக் குறிப்பிடுவார் சிவசோதி அவர்கள்.
தொடரும் இசைப்பயணத்தில் கல்வியும் தொழிலும்
1966இல் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் தேறி 1968இல் க.பொ.த.உயர்தரப் வகுப்பில் கல்வி கற்றார். 1969இல் கிளிநொச்சி விவசாயப் பாடசாலையில் இணைந்து கொண்டார். இருவருடப் படிப்பை முடித்துக் கொண்டு 1.08.1971இல் வவுனியா மூன்று முறிப்பு தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராக நியமனம் பெற்றார். எழுபதுகளில் இருந்தே மேடைகளில் ஒரு பாடகராக தனது இசைப் பயணத்தினைத் தொடங்கிய சிவசோதி அவர்கள், தான் எங்கு நேர்முகப் பரீட்சைக்குச் சென்றாலும் தன்னைப் பாடச் சொல்லிக் கேட்பது வழக்கமானது என்று நினைவுகூருகின்றார். தனது ஏழாவது வயதில் வவுனியா கடை வீதியில் பி.எஸ்.அப்துல்லா கடைக்கு முன்பாக நடைபெற்ற MONARA (மயில்) சைக்கிள் விளம்பரப் பாட்டுப் போட்டியில் பாடி முதல் பரிசு பெற்றதையும் குறிப்பிட்டார்.
பலாலி ஆசிரியர் கலாசாலையில் 1974 - 1975 கால கட்டத்தில் விசேட ஆசிரிய தராதர பயிற்சிக் காலத்தில் கர்நாடக சங்கீதத்தினை வீரமணி ஐயர் மற்றும் பொன். முத்துக்குமாரு ஆகியோரிடம் பயின்று அதிதிறமைச் சித்தியனைப் பெற்றுக் கொண்டார்.
திருமணத்தில் இசையும் இசைவும்
1971இல் நொச்சிமோட்டை பேயாடி கூழாங்குளத்தைச் சேர்ந்த செல்வி அற்புத மலரை திருமணம் புரிந்து கொண்ட சிவசோதி அவர்களுக்கு நான்கு பிள்ளைகள். இசைவான இசைப்பயணம் இனிமைமிகு கலைப்பயணமாக மிளிர மனையாட்டியும் மழலைகளும் இசை கூட்டினர்
41

Page 23
d'opé5. 66bEll: 656USu SBSuédou croboam6
ஆசிரியராக, அதிபராக.
புதுக்குளம் வித்தியாலயத்தில் ஐந்து வருடமும் வவுனியா கோவில் புதுக்குள இந்துக் கல்லூரியில் நான்கு வருடங்களும், வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் இரண்டு வருடங்களும், குடியிருப்பு சி.சி.ரி.எம்.எஸ் பாடசாலையில் மூன்று வருடங்களும் ஆசிரியராகக் கடமையாற்றி 1988 இல் ஒமந்தை நொச்சிக்குளம் பாடசாலையில் அதிபராகப் பதவி உயர்வு பெற்று பின்னர் சமளங்குளம் தமிழ் வித்தியாலயத்தில் 1990 முதல் அதிபராகக் கடமையாற்றி 01.06.1993இல் ஓய்வு பெற்றார்.
கலைப்பயணம்
1971முதல் திரு.க.கனகேஸ்வரன் (மிருதங்க வித்துவான்) மற்றும் வயலின் கலைஞர் திருமதி.க.விமலலோஜினி அவர்களுடன் இணைந்துப் பல கச்சேரிகளை வவுனியா எங்கும் நடாத்தினார். 1981இல் இலங்கை வானொலியில் இவரது நான்கு பாடல்கள் மெல்லிசைப் பாடல்களில் சேர்க்கப்பட்டன. முன்னதாக இந்திய இசைப்பேராசிரியர் ரி.என். கிருஸ்ணன் இவரது பாடல்களை தரம் கண்டு தெரிவு செய்திருந்தார். கல்முனை (1979)இ திருகோணமலை (1978). பலாலி (1975), மன்னார் (1969), யாழ்ப்பாணம் அல்வாய் (1969), பருத்தித்துறை எனப் பல இடங்களிலும் பல்வேறு மேடைகளில், கண்ணன் இசைக்குழுவினருடன் இணைந்தும் பாடியுள்ளார். நாடகங்களுக்கு பின்னணி பாடியும் இசையமைத்தும் பணி புரிந்துள்ளார். திரு. அருள் வரதராஜன் இயற்றிய 'மலராத வாழ்வு', 'வாழப் பிறந்தவணி, சச்சா செல்வராஜன் இயக்கிய நீரோட்டம்' ஆகிய நாடகங்களுடன் தனது இசை அறிவையும் ஆற்றலையும் இணைத்துக் கொண்டார்.
இசைக்குழுவும் சமுகப்பணியும்
வவுனியாவில் இசைக்குழு அமைத்துப் பல்வேறு கோயில்கள், இசைவிழாக்கள் என்பவற்றில் பாடியதுடன் பல இசை நிகழ்ச்சித் தயாரிப்பில் ஈடுபட்டும். இசைப் போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றியும் இசைக்கல்வியை வழங்கியும் இசைப் பணி புரிந்ததோடு, நகரசபை சுற்றாடல் பாதுகாப்புக் குழுத் தலைவராகவும் (1997). கோயில்குளம் முத்தமிழ்ச் சங்கத் தலைவராகவும் (2007), ஆசிகுளம் பிரஜைகள் குழுச் செயலாளராகவும் (1988), (1989) சமாதானக்குழுச் செயலாளராகவும் (1990), இருந்து பல்வேறு சமூகப் பணிகளையும் ஆற்றியுள்ளார்.
விருதுகள் பல பெற்று.
2005 இல் இவரது சேவையைப் பாராட்டி சமாதான நீதவான் பட்டமும், தமிழிசை மாமணி' விருதும் 1991இல் 'இசைமணி" விருதும் எனப் பல சிறப்புக்களையும் பெற்றார். 1998இல் வவுனியா நகர சபை இவருக்கு “இசைஎழில்’ எனும் விருதினையும் வழங்கி கெளரவித்தது. கலாசார அமைச்சு 2007 இல் ‘கலாபூஷணம்’ விருதினை வழங்கி கெளரவித்தது. வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் திரு.கே.ஆர்.சிவசோதி அவர்களின் இசைப்பணியையும் திறமையையும் பாராட்டி "இசைச்செல்வர்' எனும் விருதினை வழங்கி பெருமை கொள்கின்றது.
- சங்கரன் செல்வி 42

Grupiah, absitos, afstamī) s6uébau erthynaf
“கிச்சானி” கிளப்பும் உணர்வலைகள்
கந்தையா ரீகணேசன்
சிறுவர் நலன்கள் பேணப்படும் ஒரு கால கட்டத்தில் நாம் வாழ்கின்றோம். சமூக ஜதார்த்தங்களால் சிறுவர் வாழ்வு நாளாந்தம் பாதிப்புறும் ஒரு சமூகச் சூழலில் மாற்றத்தை வேண்டி கலை இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. அந்த வகையில் சமகாலத்தில் குறும் படங்களின் வரவு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
வீட்டிற்குள் நடைபெறும் சிறுவர் மீதான வன்முறை, சமூகச் சூழலில் இடம்பெறும் சிறுவர் துஷபிரயோகம், அரசியல் சூழலால் பாதிப்படையும் சிறுவர் மனோநிலை போன்ற பல்வகைப்பட்ட சிறுவர் பிரச்சனைகளை சிந்திக்க வேண்டிய நிலையில் கலை, இலக்கிய கர்த்தாக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இவ்வாறான பிரச்சனைகளை கலை இலக்கியம் மற்றும் சினிமா சாதனங்கள் ஊடாக மக்கள் மத்தியில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்துவதும், சமூக அக்கறை உள்ளோர் கடமையாகின்றது. இந்தப் பின்னணியில் மட்டக்களப்பு நெய்தல் ஊடக தரிசனம் உருவாக்கிய “கிச்சான்’ குறும் படத்தின் தாக்கம் பற்றி சற்று நோக்குவோம்.
ஈழத்தின் திரைப்பட வரலாற்றில் “பொன்மணி”, “வாடைக் காற்று”, “குத்துவிளக்கு” போன்ற சில படங்கள் ஈழத்தமிழரின் வாழ்வியலை படம் பிடித்தன எனலாம். அதே வேளையில் இன்றைய வீடியோ பயன்பாட்டால் குறும் திரைப்படங்களின் வளர்ச்சி குறிப்பிடப்படும்படியாக உள்ளது. அவை நம் வாழ்வியலை சிறப்புடன் வெளிப்படுத்த முனைகின்றன. ஈழத்தில் போராட்ட குழுக்கள் மற்றும் தன்னார்வ, சுயாதீன கலைஞர்கள் மற்றும் புலம் பெயர்ந்த கலைஞர்கள் இத்துறையில் தொடர்ந்து ஈடுபடுகின்றார்கள். இதனால் குறும் திரைப்படங்களில் கூர்மையான வாழ்வனுபவங்கள் மனிதரின் இக்கட்டுகள் என்பன சிறப்புடன் வெளிப்படுத்தப்படுவதை குறிப்பிடலாம்.
2004இல் Scripnet எனப்படும் நிறுவனம் குறும் திரைப்படங்கள் ஆக்குவது தொடர்பான பயிற்சியை வழங்க முன்வந்தது. இதன் பயனாக சில தரமான குறும்படங்கள் தயாரிக்கப்பட்டன (அழுத்தம், செருப்பு). இதே போல் சில தன்னார்வ குழுக்களும் அரச அமைப்புக்களும் குறும் படதயாரிப்பில் ஈடுபட்டன. வடக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு தயாரித்த ஏக்கம் ஒரு சமீப கால முயற்சி மட்டக்களப்பு நெய்தல் ஊடக தரிசனம் கடந்த வருடம் தயாரித்த “கிச்சான்” இன்னுமொரு முக்கியமான படைப்பு, கருப்பொருள் கலைத்துவம், கட்புல ஊடக பயன்பாட்டின் கச்சிதம் என பலதரங்களில் முன்னணி வகிக்கின்ற ஒரு படைப்பாகும்.
சமகால ஈழத்து தமிழர் துயரம், போரும் அதன் விளைவான இடப்பெயர்வு,
அகதி முகாம் வாழ்க்கை, இராணுவ சுற்றிவளைப்பு, தலையாட்டிகளின் செயற்பாடு,
இளைஞர் கைது செய்யப்படல், காணாமல் போகுதல், குழந்தைகள் கருவிலே தந்தையை 43

Page 24
espes, eGibsu assinou Bibiđau sebab
இழத்தல், அதன் காரணமாக உழைப்புத்தேடி வெளிநாடு செல்லும் இளம் தாய்மார்; பிள்ளை அனாதரவாக முதிய பாட்டன் பாட்டிகளுடன் அல்லது உறவினர்களுடன் வாழ நிற்பந்திக்கப்படல்; சிறுவர்களின் தனிமை, கல்வி இழப்பு; சிறுவயதில் வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயம் என பல்வேறு நெருக்கடிக்குள் வாழும் ஒரு சமூகத்தை 'கிச்சான்’ படம் பிடிக்க முயல்கிறது.
சுமார் இருப்பதைந்து நிமிட நேரம் ஒடும் இக்குறும் திரைப்படம் ஆழிப் பேரலையின் தாக்கத்தில் உயிர் நீத்த செல்வி. அநாமிகா எனும் சிறுமிக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. கிரிக்கற் விளையாடும் சிறுவர்களுடன் படம் ஆரம்பிக்கின்றது. அவர்கள் அடித்த பந்து விழாவின் விளம்பர தட்டியில் வந்து உதைக்கும் காட்சி சரியாகவே சமூகத்தில் அவலப்படும் சிறுவர் உரிமையை சுட்டுகிறது. காட்சி விழாமேடையை நோக்கி திரும்புகின்றபோது வெறுமையான கூரையில் நின்று வீசும் காற்றாடிகளை கமரா காட்டுகிறது. பின்னணியில் விழாவில் பேசுகின்ற கருத்துக்கள் பார்வையாளனை சென்றடைகின்றன. அதே வேளையில் அவற்றின் வெறுமையும் உணரப்படுகிறது.
யுத்தத்தினால் பாதிப்படைந்த சிறார்களின் கல்வியை மீட்டெடுக்க சபதம் எடுக்கும் சிறுவர் நல உரிமைப் பாதுகாப்பு செயலாளரின் குரல் ஓங்கியொலிக்கிறது. அக்குரலின் வெறுமையும் அர்த்தமற்ற நிலைமையும் சோடாபோத்தல் தூக்கி வரும் சிறுவனை நோக்கி திரும்பும் போது எமக்கு புரிந்துவிடுகிறது. இடையில் காட்சி விழாவிலிருந்து கன்டினுக்கு சாப்பிடச் செல்லும் பார்வையாளனுடாக அங்கு வேலை செய்யும் சிறுவனை நோக்கி தாவுகிறது. அவனுக்கு ஏவல் விடுவோர் பலர். முதலாளி, சாப்பிட வரும் வாடிக்கையாளன், விழா ஒழுங்கமைப்பாளர், படையினர், மற்றும் வீதியில் செல்லும் யாரும் அவனில் கை வைக்கலாம் என்கின்ற நிலையில் காணப்படுகிறது. போதுமான உணவில்லை, நித்திரையில்லை, அவன் வயதுக்கு மீறிய வேலைகள் என அவன் உலகம் துன்பத்துள் அமிழ்கிறது.
சோடா போத்தல் பெட்டியை மண்டபத்துள் தூக்கிச் செல்லும் போது அவன் பார்வை பக்கத்தில் உள்ள மண்டபத்தை நோக்கி தாவுகின்றது. உடனே புகைபடிந்த, இருள் நிறைந்த பழைய ஒரு மண்டபக் காட்சி வந்து போகிறது. இது அவன் நினைவூடாகவா? அல்லது நெறியாளனின் நுட்பத்தினூடாகவா? என்பது ஒரு புதிர்தான்.
பகல் வேளையில் பல்கலைக்கழக தேனீர்சாலையில் சகல ஏவல்களுக்கும் ஈடுகொடுக்கும் கிச்சான் இரவில் இராணுவம் நடமாடும் வீதியினூடாக அவன் வயதுக்கு ஒவ்வாத வேலை ஒன்றை செய்ய (சிக்ரெட் வாங்க) அனுப்படுகிறான். வழியில் சந்திக்கும் இராணுவம் அவனை அதட்டுகிறது. இந்த அதட்டல் அதிகாலை நித்திரையில் கனவாக வந்து மிரட்டுகிறது. முதலாளி நித்திரையில் அவனை தண்ணிர் ஊற்றி எழுப்புகிறார். நித்திரை விட்டெழும்பிய கிச்சான் அதிகாலையில் மாவை பிசைந்தபடி தன் பழைய நினைவுகளில் மூழ்கிறான்.

சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
கமரா ஓர் இடப்பெயர்வு காட்சியை படம்பிடிக்கிறது. புகையும், அழுகையும், குழந்தைகளின் ஒலங்களுமாக காட்சி மனதை பிழிகிறது. ஆட்கள் தப்பி ஓடுகிறார்கள், சிலர் சுடப்படுகிறார்கள், மரங்களின் கீழும் பல்கலைக்கழக மண்டபங்களிலும் மக்கள் அகதி வாழ்க்கை வாழ்கின்றார்கள். கிச்சானின் அம்மா, அப்பா பாட்டி ஆகியோர் இப்படியான ஒரு மண்டபத்தில் இருக்கும் பொழுது இராணுவம் சுற்றி வளைக்கிறது.
தலையாட்டிகளின் உதவி கொண்டு கிச்சானின் தந்தை இராணுவத்தினரால் கைது செய்யப்படுகிறார். பின்னர் காணாமல் போகிறார். இச் செய்தி கேட்ட கர்ப்பிணியான தாய் அந்த அவலத்தில் கிச்சானை பெற்றெடுக்கிறாள். காட்சி இப்பொழுது கிச்சானின் பாடசாலையை நோக்கி திரும்புகிறது. பாடசாலைக்கு பிந்தி செல்லும் கிச்சான் படிப்பில் படு சுட்டி என்பது அடுத்த வகுப்பு ஆங்கில பாட கேள்விக்கு விடை சொல்வதில் தெரிகிறது. இதனால் வகுப்பாசிரியையிடம் கண்டனம் பெறும் கிச்சான் ஒரு கொப்பியில் எல்லாப்பாடமும் எழுதியதற்காக தண்டிக்கப்படுகிறான்.
நாளைக்கு எல்லாப்பாடத்துக்கும் புதுக்கொப்பி, டைக்கு காசு, சோதனைக்கு இருபது ரூபா கட்டினாத்தான் வகுப்பில் விடுவன்' என்ற உத்தரவுடன் வீட்டுக்குப் போகும் கிச்சான் தனது பேத்தியாரிடம் இதுபற்றி முறையிடுகிறான். பேத்தியாருக்கும் பேரனுக்கும் இடையிலான உரையாடல் தந்தையின் காணாமல் போன செய்தியையும் தாய் வெளிநாடு சென்ற சூழலையும் சொல்கிறது. காட்சிகள் மிக யதார்த்தமாக நகர்கின்றன. குடும்பத்தின் வறுமையும் நன்கு படம் பிடிக்கப்படுகிறது. கொப்பி வாங்க காசு கேட்கும் கிச்சானுக்கு மில்லில் பொறுக்கிய குறுநல் அரிசியைத் தான் சோறாக ஆக்கிய கதையை கூறுகிறார் பாட்டி. காய்ந்த வெற்றிலையை தான் சப்புவதாக குறிப்பிடுகிறாள். இந்த சூழ்நிலையில் படிப்பு தொடர முடியாது என்று கூறி கிச்சானை வேலைக்கு இழுத்துச் செல்கிறாள் பாட்டி. நமது கால சிறுவர்களின் கதி நன்கு இங்கு LILLDT&BJUG5débg)
ஒரு சிறுவனின் இக்கட்டான வாழ்வு எவ்வாறு சமகால சூழலில் மேலும் இக்கட்டுகளுக்குள் இழக்கப்படுகிறது என்பதை சிறுவன் நலனை பேணும் பார்வையில் கிச்சான் எடுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சமகாலத்து தமிழரின் அரசியல் அவலமும் வாழ்வியல் துன்பமும் அழகுற பிடிக்கப்பட்டிருக்கிறது.
நகையுணர்விற்கும் குறைவில் லாமல் கதையரின் அமைப்பு செப்பனிடப்பட்டிருக்கிறது. உணவுப் பொதிகளை சைக்கிளில் கொண்டு செல்லும் போது பெண்களை பராக்கு பார்த்து கொண்டுவரும் இளைஞர்களுடன் கிச்சான் மோதுகின்றான். கீழே விழுந்த கிச்சான் இளைஞர்களை திட்டுகின்றான். “உங்களுக்கு பெட்டைகளை பாக்கிறது தான் வேலை" பெண்கள் சிரிக்கின்றனர். இளைஞர்கள் ஓடுகின்றனர். இங்கு கிளப்பப்படும் நகையுணர்வு இயல்பானது. இதே போல சிக்ரெட் கடையில் ரொபிபை வாயில் எடுத்துப்போடும் கிச்சான் “முதலாளி இதையும் கணக்கில் சேர்க்கட்டாம்” என்று சொல்லும் போது பார்வையாளர் வெகுவாக ரசித்தனர். இப்படியாக பாடசாலைக்கு பிந்தி வரும் ஒரு கட்டத்திலும் “கிச்சான் சீ. கிருஸ்ணபிள்ளை
45

Page 25
சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
பிரசன்ட் ரீச்சர், என்று கிச்சான் சத்தம் போடும் போதும் காட்சியில் உள்ள நகைச்சுவை சிறப்பானது. இந்த வகையில் கிச்சான் சகல உணர்வுகளையும் உள்ளடக்கி உணர்ச்சிப் பாங்காக தமிழர் வாழ்வியலை சிறுவர் கருப் பொருளாக தருகிறது.
ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது நல்ல தரமான காட்சியமைப்புக்கள், சமூக யதார்த்தம் பிரதிபலிக்கும் கதையமைப்பு, எரியும் சமூகப் பிரச்சனைகளின் தாக்கம், போரும் அதன் விளைவான சிறுவர் நலன் பாதிப்பும், பெண்களின் திசை திரும்பிய வாழ்க்கை என பல்வேறு பரிமாணங்களுடன் கிச்சான் படைக்கப்பட்டுள்ளான். எமக்கான சினிமா எமது வாழ்வு அடையாளங்களுடாக ஏற்படுத்தப்படவேண்டும் எனக்கூறும் நெய்தல் ஊடக தரிசன பணிப்பாளரும் இப்படத்தின் நெறியாளருமாகிய திரு.ஏ.விமல்ராஜ் தொழில் சார்ந்த சினிமா, உருவாக வேண்டும், என்று விரும்புகிறார். சமூகத்தை யோசிக்க வைக்கும் சினிமாக்கள் உருவாக வேண்டும் எமது வாழ்வியலை நாமே பேச வேண்டும், எமது சிந்தனைகள் ஏற்படுத்தும் தாக்கம் பதிவு செய்யப்பட வேண்டும் அதற்கு சுயாதீனமானபடைப்புகளுக்கு மக்கள் ஆதரவு கிடைக்க வேண்டும் என குறிப்பிடுகின்றார். ஈழத்தின் குறுந்திரைப்படங்களின் வளர்ச்சிக்கு “கிச்சான்’ புது இரத்தம் பாய்ச்சுகிறது என்றால் அது மிகையாகாது.
வவுனியாவில்
வாம்க்கக்கள் வெளிவந்த குறும்படம் JP53
* **
2006ம் ஆண்டிற்கான வடமாகாண கல்வி கலாசாரஅமைச்சின் இலக்கிய நூல் பரிசில்கள் பெற்றவர்கள்.
“இத்தம்”
კარჯrtბtrt-tfs
கலையார்வன் கு.இராயப்பு (கடலலைகள் கொஞ்சும் நகர்) சறோஜினி பேரானந்தன் (உணவும் போசனையும்) பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் (உணவும் போசனையும்)
சமாதரி லிங்கம் சத் தரிய சீலன் (மலாயக்குடிப்பெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும்)
நீபி.அருளானந்தம் (வாழ்க்கையின் நிறங்கள்) ஆ.இரத்தினவேலோன் (நெஞ்சாங்கூட்டு நினைவுகள்) யோயோண்சன் ராஜ்குமார் (கொல் ஈனுங் கொற்றம்)
 
 
 
 
 
 

espasib, abstub', 666mS 3R6áseu estefsane
“ஏக்கம்” தரும் உணர்வுகள்
சு.வரதன்
யாழ்ப்பாண இடப்பெயர்வுகளுக்கு பின்பு தமிழர் கலைப்பயணத்தில் ஏற்பட்ட "திடுக்கிடு” எழுச்சியாக 28-10-2007 வவுனியா இறம்பைக்குள மகளிர் கல்லூரியில் கந்தையா றிகந்தவேளின் இயக்கத்திலும் திருமதி என்பூரிதேவியின் கதையமைப்பிலும் திரு.இ.இளங்கோவன் செயலாளர் கல்வி பண்பாட்டு விளையாட்டுத்துறை அமைச்சின் தயாரிப்பிலும் “ஏக்கம்” எனும் மனத்தாக்கமிக்க குறும்படம் வெளியிடப்பட்டது.
இப்படம் வட முனையில் போர் மேகம் சூழ்ந்திருக்க தென்முனையில் அத்தியாவசிய பொருட்கள் விலை மின்னல் வேகத்தில் அதிகரிக்க தென்னிந்திய தொலைக்காட்சித் தொடர்நாடகங்கள் எம்மைச் சூழ்ந்து கொள்ள மீளமுடியா ஏக்கத்திற்குள் சிக்குண்டு போகும் எம்வாழ்வை குறைந்த மணித்தியாலத்திற்குள் படம் பிடித்துக் காட்டுகிறது.
தொலைக்காட்சி உட்பட நவீன தொடர்பாடல் ஊடகங்களால் கடவுள் தந்த அழகிய வாழ்க்கை சீரழிந்து போவதை நல்லதோர் வீணை செய்து பாடலில் தொடங்கி அதே பாடலில் முடிவுறும் காட்சிகளுக்கூடாக அறிய முடிகிறது. "என்ன இந்த வாழ்க்கை” யார் மேல் பழிபோடுவது என்ற ஏக்கம் எம்மிடம் இருக்கிறது. பெருமளவு நேரம் தூக்கத்திலும் ஏக்கத்திலும், கனவுகளுக்குள்ளும் சென்றுவிடுகின்றது. யாரும் பேசுவதாக இல்லை மெளனிகளாக இருக்கின்றோம். இங்கு சுதந்திரம் இல்லை. கிராமப்புறத்தில் இருந்து நகர்புற நரகத்திற்கு துரத்தப்பட்டோம். ஆன்மீக பலம்குன்றியது. ஆக்குரோசமும் விஞ்ஞானமும், ஆயுதங்களும் எழுச்சி கொண்டன. நாம் எமது மெய்யறிவில் வீழ்ச்சி கண்டு வருகின்றோம். தென்னிந்திய தொலைக்காட்சித் தொடர்காற்றில் குளிர் காய்கின்றோம். இதன் மறுதாக்கம் சிறுவர்கள் தொடக்கம் முதியவர்வரையும் நெருப்புக் கொப்பளங்களாக சென்றடைவதையும் அறிந்தும் அறியாமலும் ஏமாற்றப்படுவதையும் இக்குறும்படத்தினை ஆழ ஊடுருவி பார்க்கும் போது தென்படுகின்றன.
"கனவுகள் காணும் வாழ்க்கை நல்ல கடலில் ஓடும் ஒடம் தான் எதுவரை செல்லும்!" என்ற பாடல் வரிகளில் இருந்து காட்சிச் சிறகுகளை கமராப்புறா விரித்துக் காட்டுகிறது. அழகான பாடல் வரிகளை இயற்றிய தமிழ்மணி அகளங்கன் தன் கண்களுக்குள் இயற்கையை கொண்டு வந்துவிடுவதும் பின்பு அது கமராவின் கண்களுக்குள் சென்று நம் கண்களை வந்தடைவதும் அதற்குரிய இசையமைப்பும் வரவேற்பிற்குரியது. சண்டை சேவல், சமாதானப் புறா, நல்லது செய்யும் மைனா, செய்திகாவும் ஊர்பறவையும் உலகத்து பேர்வழி காகமும், தேன் உறிஞ்சும் வண்ணாத்தியும் எப்படியான மன உணர்வுகளை ஏற்படுத்துகின்றன? என்ற கேள்வியை விட்டுச் செல்லும் கமராவின் வெளிப்பாட்டுக் காட்சிகள்.
47

Page 26
്യാ, ബി ബി ജങ്ങളിധ {ിക്കു
நடிப்பை பொறுத்தவரை கதாநாயகன் சிறுவன் 'குமரன் தன் முகபாவத்திலும் அசைவிலும் நுணுக்கமான பலசெய்திகளைச் சொல்லும் ஏக்கத்தின் குறியீடு ஆகின்றார். தந்தை ரட்ணம் மதிய உணவு அருந்தாமல் அலுவலகத்திற்கு திசை திருப்பப்படுகின்றார். ஏதோ சாப்பிடாட்டிலும் அலுவலகத்தில் ஆவது நிம்மதியாய் இருப்பம் என்ற போக்கு மனவெளிப்பாட்டிலும், உள்ளே மற்றையவர்களின் கிண்டல்களும் அவரைச் சோர்வடையச் செய்யும் காட்சியின் நடிப்பும், தாய் கவிதாவின் தொலைகாட்சியினுடனான ஒன்றிவிடும் மனோபாவமும், இறுதியில் பாடசாலையில் தன்மகனிற்கு ஏற்பட்ட உளச்சிக்கலை ஆசிரியர் உணர்த்தும் போது ஏற்பட்ட மனநிலை மாற்றமும் கண்ணிரும் சிறப்பான நடிப்புக் களங்களே! பாடசாலை மாணவர்களின் நடிப்பிலும் அலுவலக உதவியாளர்களின் நடிப்பிலும் சிறியமாற்ற உணர்வு செம்மையாகவே பார்க்க முடிந்தது. மேலும் பல ஒத்திகைகளுக்கு பின்பு அவை செம்மைப்படுத்தப்படும் தேவை உள்ளது.
கதை தேர்வை பொறுத்தவரை பொதுவாக உலகம் எங்கும் வாழும் தமிழ் சமூகத்திற்கு பொருத்தபாடுடையதாக இருக்கின்றது. கதையில் உரையாடல் கையாட்சி மிகவும் குறைவாகவே உள்ளது. மெளன அசைவுகளும், காட்சிச்சித்திரிப்புக்களுமே அதிகமாகவுள்ளது. இயக்குனரின் உத்தியாலே கதை நகர்வு மெருகூட்டப்பட்டிருப்பதை கமரா கண் அசைவின் ஊடாக அறிய முடிகின்றது. கதை நகர்வுக்குள் மேலும் பல முரண்படுகளங்களும் உரையாடல்களும் புகுத்தப்பட்டிருப்பின் சிறப்பாக இருந்திருக்கும். கதையில் தொடக்கம் முதல் இறுதிவரையும் மையப்பகுதியை வளர்ப்பதில் கமராவின் பங்களிப்பு போதாது இருப்பினும் குறும்படத்தின் மையப்பகுதியை எந்தவகையிலும் சிதைக்கவில்லை. தாய் பிள்ளைக்கு உணவு கொடுக்கிறார். பிள்ளை சாப்பிட ஆரம்பித்த கணமே ஒட்டோவின் சத்தம்; மன பதகளிப்புடன் ஆட்டோவில் ஏறி பாடசாலை செல்கின்றான். அங்கு படிப்பிலோ விளையாட்டிலோ அவனுக்கு நாட்டமில்லை தாய் வீட்டில் சமையலில் நாட்டமில்லை தொலைக்காட்சி தொடரைப் பற்றி நண்பியுடன் தொலைபேசியில் அலட்டிக் கொள்கின்றாள். கணவன் வருகின்றார். சாப்பாட்டில் சுவையில்லை சாப்பிடாது அலுவலகம் செல்கின்றார். அங்கு நையாண்டி கதைக்கு உட்புகுத்தப்படுகின்றார். பாடசாலையை விட்டு மகன் அம்மாவின் பாசத்தை எதிர்பார்த்து வருகின்றார். அவருடைய தொலைக்காட்சி மோகம் எல்லோரையும் ஆவேசப்படுத்துகின்றது. தாய் தந்தையின் கவனிப்பும் ஈர்ப்பும் இன்றி தனிமைப்படுத்தப்படுகின்றான் மகன். இதனால் பிள்ளையின் கல்வி பாதிப்புக்குள்ளாகிறது. பாடசாலையில் இருந்து தாயிற்கு அழைப்பு விடப்படுகிறது. தாய் தன் பிள்ளை நிலை எண்ணி கண்ணிர் மல்குகின்றாள். இப்படிப்பட்ட எத்தனையோ, தாய்மார்கள் தம் பிள்ளைகளின் நிலையை உணர்ந்து கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதை கதையின் அவலத்தன்மை எடுத்துக் காட்டுகின்றது.
இசையை நன்கு ஆராய்ந்து பார்க்கும் போது கையாளப்பட்டிருக்கும் பாடல்
வரிகளும் க.ஜெயந்தனின் இசை மெட்டுக்களும் உணர்வுகளுக்கு மெருகூட்டுகின்றன.
கவிஞர் தாமரை, சூரியன், கடல் அலை, விதி, சதி, இனிமை, தனிமை எனப் பல்வேறு
சொற்களை தகுந்த இடத்தில் கையாளுகிறார். பிள்ளை ரீயூசனுக்கு அனுப்பப்படும்
காட்சியில் கையாளப்படும் இசையின் பொருத்தப்பாடு குன்றினாலும் மறைமுகச் செய்தியை
48

്യാദ്, ബി, ഓണ ജൂബിധ ട്രിട്ടിക
சொல்லிவிடுவதும் சிந்தனைக்குரியது! பாடல்களைபாடிய கந்தப்பு ஜெயந்தன், கந்தப்பு ஜெயரூபன் ஆகியோரின் தொனி சிறப்பானது. மேலும் சுத்தமாக சுருதியின் கனத்தை (அளவை) அதிகரித்திருக்கலாம். ஆடல்கள் எந்த இடத்திலும் கையாளப்படவில்லை. ஆடல்களை கதையோடு இணைப்பாக்கம் செய்திருப்பின் உள்ளக்கிளர்ச்சியை வெளிக்கொணர உதவியிருக்கும். சித்திரம் சிறந்த குறியிட்டு ஆவணமாக காட்டப்படுகிறது. வேடஉடை ஒப்பனை எளிமையாக இருப்பினும் சற்று நவீனத்திற்குள் நகர்ந்திருப்பின் அழகியலை மெருகூட்டியிருக்கலாம்.
85upg|T66ör ses086, Long Shots, Middle shots, close shots 61601 Gój666)g வகையாக தொழிற்பட்டாலும் மேலும் நவீன shots முறைமைகளை கையாண்டு சில தேவையற்ற காட்சிகளை தவிர்த்து தேவையான காட்சிகளை சேர்த்திருக்கலாம். பிள்ளையின் ஏக்கத்தை வலுப்படுத்ததக்க பலமான நிலையான அசைவுகளையும் முன்னோக்கிய அசைவுகளையும், stilt shots புகுத்தி மனக்குமுறல்களை தெளிவுபடுத்தியிருக்கலாம்.
பாடசாலைக் கல்விமுறைமை என்ற விடயத்தை ஆராய்ந்து பார்க்கும் போது விபுலானந்தாக் கல்லூரி களத்தில் காட்டப்பட்ட காட்சிகள். மிகவும் முக்கியமானவை விளையாட்டு, செய்முறை, இவற்றில் நாட்டமில்லாத பிள்ளையை அணுகியவிதம் "தீர்வு முறையை” கல்வியில் உலகிற்கு எடுத்துக் காட்டுகிறது. இதுதான் உகந்த தீர்வு முறையாக சிலருக்கு அமையாவிட்டாலும் அரச நிர்வாகத்திற்கு சில விடயங்களை தெளிவுபடுத்திச் செல்லும் காட்சிகள் வரவேற்கத்தக்கது. அரச நிர்வாக இயந்திரத்தில் ஏற்படும் தவறுதல்கள் தூரநோக்கில் கல்வியில் சமூகத்தை தவறான பாதைக்கு இட்டுச் செல்ல வழிவகுக்கிறது. போரின்தாக்கம், இடப்பெயர்வு அதன் பின்னான மனஅழுத்தம், கலாச்சார சீர்கேடு வரை செல்வதை உட்கிடையாகப் பார்க்கமுடிகிறது.
பண்பாடு என்ற விடயத்தை பார்க்கும் போது யாழ்ப்பாணப்பண்பாடு வன்னிப்பண்பாடுகள் இழையோடி இருக்கின்றன. யாழ்ப்பாண பேச்சுத்தமிழை உரையாடல்களில் கேட்ககூடியதாகவும், வன்னி உணர்ச்சி மிகு பாடல்களின் லயத்தையும் ரசிக்ககூடியதாகவும் மனஆறுதலுக்காக ஆலயத்தை நாடுவதும், தண்ணிரை குடிப்பதும் சுவாரசியமானவை மட்டுமல்லாது இன்றைய இக்கட்டான சூழ்நிலைக்கான மருந்தாகவும் உள்ளது. பாசத்திற்காக ஏங்கும் பிள்ளையின் மனமும், தொலைக்காட்சிக்குள் கவனத்தை வைத்திருக்கும் தாயின் போக்கும் எதைச் செய்ய வேண்டும் எதைச்செய்யக்கூடாது என்பது பற்றிய அக்கறையில்லாத வேறுபட்ட நிர்வாக முறைமைகளின் சிக்கல் பண்பாட்டையும் குறும்படம் மறைமுகமாக காட்டுகிறது.
உளவடுக்கள் என்ற விடயத்தை ஆராயும் போது “ஈகோ” மனநிலையில் உள்ள தாயார் இறுதிக்கணங்களில் தன்தவறை உணருகின்றார். அடிக்கடி உளச் சோர்வுக்குள்ளாகும் மாணவனில் உளநோய்க்கான அறிகுறிகள் தென்படுகின்றன. எமது உளப்பிரச்சினைக்கு நாமே தீர்வு காணவேண்டும். கூட்டுமொத்த சமூகத்தின் உட, உள நம்பிக்கை ஊடான வன்முறை அலுப்பு சமராக மாறி உளத்தீர்வுப் பொதியாக மாறும் சந்தர்ப்பத்தை இக்குறும்படம் காட்டுகிறது.
49

Page 27
errepuen, 656tbolf, 65606u 15:36upé63u erliebef J)6
ஒட்டு மொத்தமாக இந்தப் படைப்பு பெற்றோர், சமூகம், நாடு என்ற விரிந்த வட்டத்திற்குள் ஒரு குடும்பத்தின் பெற்றோர் பிள்ளைக்கிடையிலான உளநெருக்கடிக்குள் தெரியும் அரசியல் உருவமும் நசியுண்டு போகும் நாமும் நமது நாடும், பிள்ளைகளின் கல்வியும் அதற்கு எதிராக ஒவ்வொருவரும் போராட வேண்டிய தேவையை உணர்த்திநிற்கின்றது
நவம்பர் 2007ம் ஆண்டு நடாத்தப்பட்ட வடக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் வெளியிடப்பட்டது இக்குறும்படம். கதை திருமதி.எஸ்.ழரீதேவி, இயக்கம்; கந்தையா யூனிகந்தவேள், இணை இயக்கம் மாணிக்கம் ஜெகன், இசையும் குரலும் கந்தப்பு ஜெயந்தன், கந்தப்பு ஜெயரூபன், பாடல்: தமிழ்மணி அகளங்கன், தயாரிப்பு மேற்பார்வை: கந்தையா றிகணேசன்.
வவுனியாவில் வெளிவந்த நூல்கள்
 

eropah, a566. &thormou Guéthau edobonah
தமிழகத்திலிருந்து ஒருமடல்
சிறுபத்திரிகைகளின் அவசியமும் அவற்றின் பங்களிப்பும்
- இரா கேசவன்
எந்த நாட்டின் தேசிய விடுதலைப் போராட்டமாகட்டும் அல்லது சமூக விடுதலைப் போராட்டமாகட்டும் அல்லது பொதுவுடைமைப் புரட்சியாகட்டும் அதன் ஒவ்வொரு பரிணாம பரிமாண வளர்ச்சிகளிலும் கலை இலக்கியப் பண்பாட்டுப் பத்திரிகைகளின் பங்களிப்பும் பின்னிப் பிணைந்து வந்துள்ளதைப் பார்க்கமுடியும். அந்தவகையில் தெற்காசியப் பிராந்திய போராட்டங்களிலும் இத்தகைய பத்திரிகைகளின் பங்களிப்பும் அளப்பரியது. ஆனால் நமது பிராந்தியத்தில் இத்தகைய பத்திரிகைகள் தவிர்க்கமுடியாதவாறு சிறுபத்திரிகைகளாகவே வெளிவர முடிகின்றது. பத்திரிகை வெளிவருவதற்கு ஒரு காலநிர்ணயம் செய்து அதைக் கொண்டுவர முயற்சிக்கின்ற போதிலும் பல்வேறுபட்ட நெருக்கடியான சூழல்களும் பொருளாதார நெருக்கடியும் அதனைக் கொண்டுவர எத்தனிக்கும் ஆசிரியர் குழுவுக்குப் பெரும் சவாலாக உள்ளது. மாருதம் இதழும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை நிகழ்காலத்தில் உணர முடிகின்றது. இப்படிப்பட்ட நெருக்கடிகளை சந்திப்பதனாலேயே 'மாருதம் தனது கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து செயற்படுவது நிரூபணமாகின்றது.
சரியான சமூக சிந்தனைகளையும் நல்ல இலக்கியங்களையும் அதனோடு நமது பாரம்பரிய கலாச்சார விழுமியங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய முயற்சியில் இறங்கும் அனைத்துக் கலை இலக்கிய கலாச்சாரப் பத்திரிகைகளும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையே “மாருதமும்” சந்தித்து வருகிறது. எனவே இத்தகைய சிக்கல்களிலிருந்து மாருதத்தைக் காக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் சரியாகச் சிந்திப்போருக்கும் மக்கள் கலை இலக்கிய விரும்பிகளுக்குமே உள்ளது. பொழுது போக்குக் கலாசார விளம்பரத்தை மையமாக வைத்து வெளிவரும் பத்திரிகைகளிலிருந:து விலகி சமுதாய சிந்தனைகளையும் உண்மையான இலக்கிய விழுமியங்களையும் தாங்கிவரும் “மாருதத்தை” அதன் சொந்தக் கால்களில் நிற்க வைக்க வேண்டிய அவசியமும் அவசரமும் இப்பொழுது எழுந்துள்ளது என்பதை நினைவில் கொண்டு சமூக ஆர்வலர்களும் தெளிந்த சிந்தனையுடையவர்களும் செயற்பட வேண்டிய தருணம் இது.
தேசிய ஜனநாயக விடுதலைப் போராட்டத்தை எதிர் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் இலக்கிய ஏடாக வெளிவந்து கொண்டிருக்கும் 'மாருதம் விரைவில் மாத இதழாக தொடர்ந்து வெளிவர வாழ்த்துக்கள், ரஷ்யப் புரட்சி தொடங்கி இன்று நடைபெற்று வரும் தமிழர் போராட்டம் வரை எடுத்துக் கொண்டால் அத்தகைய விடுதலைப் போராட்டங்களுடன் கலை இலக்கியப் பத்திரிகைகளின் தேவையும் அவற்றின் இலக்கியப் பங்களிப்பையும் மறக்க முடியாது. லியோ டால்ஸ்டாய் முதல் எர்னஸ்டோ சேகுவாரா, ஹோசிமின், பிடெல் காஸ்ரோ, நார்மன் பெத்யூன் ஆகியோரைப் போராட்டத்துடன் இணைந்த கலாசாரத்தை எழுதத்துண்டியதும் இத்தகைய பத்திரிகைகள் தான் என்பதை நாம் மறக்க முடியாது. 'மாருதம் தன் காலில் நிற்கவேண்டும் நிற்கும். தெளிந்த நீரோடையாக அது தனது கலைப்பணியைத் தொடரும்.
Sl

Page 28
враћ, њbtb ввлbu Bouđаш велн
பண்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர் இரா.வை.கனகரத்தினம்
மு.கெளரிகாந்தன், விரிவுரையாளர் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி
இலங்கையில் பல்கலைக்கழக மட்டத்திலே, இந்துப்பண்பாடு இரு பெரும் பேராசிரியர்கள் மூலமாக விருத்தி பெற்று வந்துள்ளதாகத் தெரிகிறது. ஒருவர் பேராசிரியர் கலாநிதி ஆசதாசிவம் அவர்கள், மற்றவர் பேராசிரியர் கா.கைலாசநாதக்குருக்கள் இவர்களிலே பேராசிரியர் சதாசிவம் அவர்களின் உன்னதமான வழிகாட்டலில் உருப்பெற்றவர்தான் மணிவிழாக்காணும் பேராசிரியர் இராவை கனகரத்தினம் அவர்களாவர். இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றிலே முதன்முதலாக இந்து நாகரிகபாடத்தைச் சிறப்புபாடமாகக் கற்றுத்தேறியவர்களில் கனகரத்தினம் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றைக் துணைப்பாடமாக எடுத்தாலும் அதிலும் ஆழமான புலமையுடையவராக விளங்கினார். இரு துறைகளையும் துறை போகக் கற்ற இவர் இத்துறைகள் தொடர்பாக எழுந்த வளப்படுத்தும் புத்தம் புதிய சிந்தனைகளை தமது மாணவர்களுக்கும் எந்தவித ஒளிவு மறைவும் இன்றி வழங்கிப்பணி செய்து கொண்டிருக்கும் உயர்ந்த பண்பாளர்.
இராமநாதர் வைத்திலிங்கம் சிவகாமிப்பிள்ளை தம்பதியரின் மூன்றாவது புத்திரரான கனகரத்தினம் அவர்கள் நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நெடுந்தீவு மங்கையர்க்கரசி வித்தியாலயம், சைவப்பிரகாச வித்தியாலயம், திருநெல்வேலி முத்துத்துத்தம்பி வித்தியாலயம், செங்குந்தா இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் மாணவர். கொழும்புப் பல்கலைக்கழத்திலே பட்டப்படிப்பை மேற்கொண்டவர். பேராசிரியர்களான ஆசதாசிவம், பொபூலோகசிங்கம் ஆகியோரின் கீழ் "ஆறுமுகநாவலர் சைவத்திறகு ஆற்றிய பணி" எனும் தலைப்பிலே ஆய்வு செய்து முதுகலைமாணிப்பட்டம் பெற்றவர்.
சிற்பி சரவணபவன், குழந்தை ம.சண்முகலிங்கம், கலாநிதி ஆசதாசிவம், கலாநிதி கோ.சுந்தரமூர்த்தி, கலாநிதி பொ.பூலோகசிங்கம், கலாநிதி சி.பத்மநாதன், கலாநிதி மகேஸ்வரி தியாகராஜா, கலாநிதி மகேஸ்வரி அருட்செல்வம், திருமதி குணசிங்கம் தனபாக்கியம் இவரை வளப்படுத்திய ஆசான்கள். இவருடைய நன்றிப்பெருக்குடன் கூடிய பணிக்கான நிலையமாக விளங்குவது இந்துபோட் சு.இராசரத்தினம் அவர்களுடைய மேற்பார்வையிலான அநாதை விடுதியாகும். எவருமே மேற்கொள்ளத அளவுக்கு ஆறுமுகநாவலர் அவர்கள் தொடர்பான ஏராளமான ஆய்வுகளை இவர் மேற்கொள்வதற்கான காரணம் நாவலர் வழியில் கல்வி மற்றும் சைவப் பணிகளை முன்னெடுத்த பூரீமான்.சு.இராசரத்தினம் அவர்கள் இவருக்கு ஆற்றிய உதவியாக இருக்கலாம் என்று கூறத்தோன்றுகிறது.
52
 

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
திரு.கனகரத்தினம் அவர்கள் களனி, பேராதனை ஆகிய பல்கலைக்கழகங்களிலே உதவி விரிவுரையாளராகவும் பேராதனைப் பல்கலைக்கழகத்திலே விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர், துணைப் பேராசிரியர் எனும் பதவிகளை வகித்து முட்பத்தைந்து ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறார். தரம் 6தொடக்கம் க.பொ.த.சா.த வரையிலான சைவ நெறிப்பாடத்திட்டம், ஆசிரியர் கைந்நூல், பாடநூல்கள் என்பனவற்றிற்கு 1997 ஆம் ஆண்டு தொடக்கம் ஆலோசனை வழி காட்டல்களை வழங்கிவருகின்றார். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்து பணியாற்றியவர். இச்சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர். பல நூல்களின் ஆசிரியர், பதிப்பாசிரியர், மலராசியர், சஞ்சிகை ஆசிரியர், கட்டுரை ஆசிரியர்.
ஈழத்திற் புராணபடனச் செல்வாக்கு ஓர் ஆய்வு (1985), ஏழாலை அத்தியடி புவனேஸ்வரி அம்பாள் ஆலய வரலாறு - ஒரு நோக்கு (1986), நாவலர் உரைத்திறன் (1997), நாவலர் மரபு (1999), ஆறுமுகநாவலர் வரலாறு: ஒரு புதிய பார்வையும் பதிவும் (2001), பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் புலமையியல் ஓர் ஆய்வு (2004) இலங்கைத் தமிழறிஞர் நூல்வரிசை ஆறுமுக நாவலர் (2007) ஆகிய புகழ்பூத்த நூல்களின் ஆசிரியர். பதிப்புப்பணி என்ற வகையில் வே.கனகரத்தின உபாத்தியாயரின் பூரீலழறி நல்லூர் ஆறுமுகநாவலர் சரித்திரம் (1994) நல்லூர் ஆறுமுகநாவலர் அவர்களின் சரித்திரச்சுருக்கமும் அவர்கள் இயற்றியருளிய தனிப்பாமாலையும் (1996) யாழ்ப்பாணம் வட்டுநகர் மகாவித்துவான் மு.ஆறுமுகம் பிள்ளை அவர்கள் இயற்றிய சிறுத்தொண்ட நாயனார்புராணம் (2003) என்பன குறிப்பிடத்தக்கன.
பேராசிரியர் கலாநிதி ஆசதாசிவம் அவர்களின் நினைவுமலர்(1988), பேராசிரியர் சி.தில்லைநாதன் அவர்களின் மணிவிழாமலர் (1997), என்பனவற்றின் ஆசிரியர். பத்மம் (2004): பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின் பாராட்டுமலர் என்பதன் மலர் ஆசிரியர்களில் ஒருவர். பண்பாட்டியல் (காலாண்டிதழ்) எனும் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர். இவற்றைவிட நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை பல்வேறு பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதியிருக்கிறார். இவை இந்துசமயம், தத்துவம், கலைகள், ஈழத்துப் பெரியார்களின் பணிகள், ஈழத்து இலக்கிய வரலாறு தொடர்பானவையாகும்.
பேராசிரியரின் ஆய்வு முயற்சிகளுக்கு உறுதுணை புரிந்து வரும் அவர்தம் பாரியார் ஆசிரியை மீனலோஜினி அவர்களையும் இவ்விடத்தில் பாராட்டி வாழ்த்துவதுடன் மேலும் பல சமூக சமய இலக்கிய ஆய்வுகளை மணிவிழாக்காணும் பேராசிரியர் மேற்கொள்ள வேண்டுமென தமிழ் கூறும் நல்லுலகம் வேண்டி நிற்கின்றது.
O
2007க்கான ஆளுநர் விருது பெற்றோர்
* வண.பேரா.நி.மரியசேவியர் அடிகளார் * கவிஞர்.சோ.பத்மநாதன் * ஜனாப்.க.வரிசை முகம்மது
* அராலியூர்.ந.சுந்தரம்பிள்ளை * திரு.மா.சிதம்பரநாதன் * திரு.பறுனாந்து பீரிஸ்
53

Page 29
சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
அஞ்சலிகள்
ஈழத்தவர் அமரர் கவிஞர் சு.வி.வில்வரட்ணம்
0
அகங்களும் முகங்களும், காற்றுவெளிக்கிராமம், காலத்துயர் போன்ற பல கவிதைத் தொகுப்புக்களை வழங்கி ஈழத்துக் கவிதையுலகிற்கு அணி சேர்த்த கவிஞர் சு.வி.வில்வரட்ணம் அவர்களுக்கு மாருதத்தின் அஞ்சலிகள்.
மார்க்ஷியமும் இலக்கியமும், மத்து, இயேசு நாதர் காவலர் போன்ற பல நூல்களின் ஆசிரியரும், கோப்பரோட்டர், சன்றடோ ரிவியு ஆசிரியரும், மார்க்ஷிய விமர்சகரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில மொழிப் போதனைத் துறை ஆசிரியருமாகிய அமரர் ஏ.ஜே கனகரட்னா அவர்களுக்கு எம் அஞ்சலிகள்.
ஈழத்தின் பிரபல சிறுகதை (சர்ப்ப வியூகம்) மற்றும் நாவலாசிரியரும் (நாணவின்கீதை, விடியலைத்தேடும் வெண்புறா), சஞ்சிகை ஆசிரியரும் (விவேகி, அமிர்தகங்கை), யாழ் இலக்கிய வட்ட செயற்பாட்டாளருமாகிய அமரர் செம்பியன் செல்வன் அவர்களுக்கு எம் அஞ்சலிகள்.
நவீன தமிழ்க்கவிதை உலகின் புதுமைக் கவிஞரும், நிலம்' எனும் கவிதைச் சஞ்சிகையின் ஆசிரியருமாகிய சந்திரபோஸ் சுதாகரன் (எஸ்போஸ்) அவர்களுக்கு மாருதத்தின் அஞ்சலிகள்.
மறுமலர்ச்சி சஞ்சிகையின் ஆசிரியரும், மூத்த எழுத்தாளருமாகிய வரதர் அவர்களை நினைவுகூருகின்றோம்.
மலையக இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான கவிஞர்.தமிழோவியர் அவர்களுக்கும் எமது அஞ்சலிகள்.
பிரபல நாடக நடிகரும், இலக்கிய கருத்தாவுமாகிய அமரர் சித்தி அமரசிங்கம் அவர்களுக்கும் எமது அஞ்சலிகள்.
பிரபல நாவலாசிரியர் (இரவல்தாய்நாடு, நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே) அமரா செ.யோகநாதன் அவர்களை மாருதம் நினைவுகூருகின்றது.
தமிழகத்தவர்
()
"லாசாரா” என அழைக்கப்பட்ட லாசர் ராமாமிர்தம், பிரபல எழுத்தாளர் சுஜாதா, ஸ்டெல்லா புரூஸ் ஆகிய தமிழகத்து எழுத்தாளர்களுக்கும் மாருதத்தின் அஞ்சலிகள் உரித்தாகட்டும்.
54

്യാദ്, ബി, ഞണ 8ബഴിധ ദിമ
ஓர் எழுத்தாளனின் நினைவுக்குறிப்பிலிருந்து. அமரர் ஏ.ஜே.கனகரட்னா
அது 1980களின் நடுப்பகுதி. "சற்ரடே ரிவியூ வெளி வந்து கொண்டிருந்த காலம், ஆங்கிலத்தில் கவிதை, கலை இலக்கியம் பற்றிய கட்டுரைகள் எழுத ஆசைப்பட்ட காலம், ஈழத்து இளம் கவிஞர் சேரன் அவர்களை ஏற்கனவே "மண்சுமந்த மேனியர்" நாடகம் மூலமாக அறிமுகம் பெற்றிருந்தேன். எனது ஆங்கிலக் கவிதையொன்றை "சற்ரடே ரிவியூ" பத்திரிகையில் வெளிவர சேரனுடாக அதன் ஆசிரியர் குழுவுக்கு அனுப்பியிருந்தேன். ஏ.ஜே.யை சேரன் அறிமுகப்படுத்தியிருந்தார். அந்த வாரம் சனிக்கிழமையன்று வெளிவந்த பத்திரிகையை எடுத்துப் பார்த்தேன். ஓரிரு சொற்களின் மாற்றத்துடன் அது வெளிவந்திருந்தது. நல்லூர் வீதியில் தற்செயலாய்ச் சென்ற போது ஏ.ஜே.யைக் காண நேர்ந்தது. ஏ.ஜே.காலை வேளையில் பத்திரிகைகள் வாங்கிக் கொண்டு நடந்து வந்தார். என்னைக் கண்டதும் தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். "சற்ரடேரிவியூ"வை எடுத்து தான் செய்த மாற்றங்களுக்கான காரணத்தைக் கூறினார். அத்தோடு நின்றுவிடாமல் "இன்னும் நீர் எழுத வேண்டும்” என்று கட்டித் தழுவினார். இதுதான் ஏ.ஜே உடனான முதல் இலக்கிய உறவாகும். பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும், வீட்டிலும் பல்வேறுபட்ட கலந்துரையாடல்களை நடாத்துவதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. அவை ஒவ்வொன்றும் மிகவும் காத்திரமானவை. "றேமன்ட் வில்லியம்ஸ்’ எழுதிய “Culture and Society (பண்பாடும் சமூகமும்) எனும் நூலை நான் வவுனியாவுக்கு தொழில் நிமித்தமாயப் புறப்பட்ட போது தந்தது இன்னுமோர் பசுமையான நினைவு. எனது முதல் நூலான “யாழ்ப்பாணத் தமிழ் நாடக அரங்கு” நூலை வாசித்துவிட்டு "இக்கட்டுரைகளுக்கு நீர் ஒரு Over view எழுத வேண்டும் எனக் குறிப்பிட்டமை இன்னுமொரு தாக்கமான நினைவு. இன்னும் எத்தனையோ புலமை சார் உசாவல்கள். கலாநிதி சுரேஸ் கனகராஜா கூறுவார். “ஏ.ஜே.போன்றவர்களின் புலமை மேற்குலக புலமைத் தரத்திற்கு சவால்விடும் தன்மையது. ஏ.ஜே.இன் நினைவுகள் தான் எமக்கு மிச்சம், கடைசி சந்திப்பின்போது அவர் அன்பளிப்பு செய்த அவர் தமிழ் நூல்கள் மத்து, ஏசுநாதர் காவலர், என்பவை அவர் நினைவை என்றும் ஊட்டிக் கொண்டிருக்கும்.
- கந்தையா றிகணேசன்
கலாபூஷணம் விருதுபெறும் சிவசோதியும், சண்முகவடிவேலும்.
கலாபூஷண கைமலர்கள் 蜂 M | ელგo ,

Page 30
சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
பயணக கதை ஒனறு 9ت
வண.பிதா.எஸ்.யெயந்தன்
தனது முயற்சியில் சிறிதும் தளராத விக்கிரமாதித்தன் கிளையில் தொங்கிய. என பிரயாண ஆயத்தங்களிலும், 'கனிந்த காலத்தைக் கணிப்பதிலும் வீட்டார் கவனமாயிருந்தனர். முதல் முயற்சியின் மரண அனுபவம் பிரயாணத்தை கைவிடச் சொன்னாலும் 'கொலை செய்யப்படுவோம்' என்ற பயம் வேரறுந்து குடிபெயர நிர்ப்பந்தித்தது.
“நாளைக்கு வெளிக்கிடுவோமா..?” “ச்சி. ச்சீ. கள்ள வியாழன் கழுத்துறுக்கு." “ஞாயிற்றுக்கிழமை பூசைக்குப்போயிற்று வெளிக்கிடுவோ." “ஞாயிற்றுக்கிழமை நல்ல பார்ட்டிய போட்டுட்டு வெறியில கிடப்பான்கள். கண்மண் தெரியாம சுடுவான்கள்." "திங்கட்கிழமை போயா. லீவு எடுப்பாங்க, கடலில பெரிசா கிடக்கமாட்டாங்க.." நியாயமாகப்பட ஆமோதித்தார்கள்.
போன தடவை படகு பாய்விரித்து கரைபிரிந்த போது அனுபவித்த பிரிவுத்துயர் தந்த வலியில் வெறிச்சோடிய ஊரை வலம் வந்தேன். சில வளைவுகளோடு பேசினேன். சில மரங்களோடு சல்லாபித்தேன். சிலையடியைச் சுற்றிச் சுற்றி வந்தேன். தாகமில்லாதபோதும் ஸ்ரேசன் கிணற்றில் குடித்தேன். கோயில் முற்றத்தில் குந்தியிருந்தேன். இன்னும் நாலு நாட்கள் இருக்கின்றனவே. வேறு நண்பரின்றி உறவின நண்பனொருவனுடன் நெருக்கமாகினேன். பனைமட்டை வேலிகள் அநேக இடங்களில் நிலத்தில்படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. இறந்தகால எல்லைச்சண்டைகளும் வேலிச்சண்டைகளும் கேலியாய்ச்சிரித்தன.
நெல்லி மரமொன்று காய்முற்றி வளைந்திருந்தது. அடிமரத்தைப் பற்றி லாவகமாக கிளையடைந்தேன். கிளையொன்றில் குப்புற படுத்தபடி இருகைகளினாலும் உருவிப்பறித்து காற்சட்டைப்பை நிறைத்தேன். 'ர்ர்., சர்ர்ர். சடக்' என கணப்பொழுது சத்தம் ஒய்வதற்குமுன் கிளையோடு விழுந்தேன். மூச்சடைத்தது. முக்கினேன், முனங்கினேன். அழுதேன் ஆனால் சத்தம் வரவில்லை. கூட வந்திருந்தவன் பயத்தில் தூர ஓடிவிட்டான். பின் மனமாற்றமடைந்து ஓட்டை வாளிஒன்றில் தண்ணிர் கொண்டு வந்தான். என் இடுப்புப்பகுதி இயங்கமாட்டாது போலிருந்தது.
"ம். ம்." அனுங்கிக்கொண்டே எழுந்துநிற்க முயற்சித்தேன். வியர்வையில் ஒட்டியிருந்த மணலைத் துடைப்பதற்கே உதவி தேவைப்பட்டது. இடக்கை இடுப்பைத்தாங்க வலக்கையால் காற்சட்டை நெல்லிக்காய்களை அள்ளி வீசியபடி அடிமேல் அடிவைத்து நகர்ந்தேன். நோயாளரும் இல்லாமல் மருந்துகளும் இல்லாமல் வெறுமையாக இருந்த வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். இரத்தநிறத்தில் வெளியேறிய சிறுநீர் பரிசோதனைக்குப்பின் வைத்தியர் முகத்தில் பயம் காட்டினார். இன்றோ, நாளையோ அவரும் ஓடிவிட எஞ்சியிருக்கிற மருந்துகள் வீணாகிப்போகும் என நினைத்தாரே என்னவோ சரை சரையாக குளிசைகளை தந்தார்.
56

arupas, assition assumsu sasundhau sefama
சண்டையில்லாவிட்டால் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே.” எனப்பாடுவதற்கேற்ற ஒரு பூரண நிலவிரவது. அழகான கடற்கரை நிலா. நாங்கள் திருடர்கள்போல் அரவமின்றி படகேறிக்கொண்டிருந்தோம். நான் கைத்தாங்கலாக தூக்கி வரப்பட்டு ஏற்றப்பட்டேன். தடித்த போர்வையொன்றினால் நோஞ்சான் பிள்ளையைப் போல் நூதனம் பார்க்கப்பட்டேன்.
சில்லென்ற இரவு, சீரான கடல் அதே இடத்தை கடக்கின்ற போது ஆண்டவரின் திருநாமம் தானாக உச்சரிக்கப்பட்டது. செபமும் பிரார்த்தனையுமாக முதல் மூன்று மணிநேரமும் கழிந்தன. அணியத்து அடிவானத்தில் வெளிச்சங்களின் அணிவகுப்பு தெரிந்தது. "கும்பா! கொஞ்ச "ஸ்லோ பண்ணுங்க கும்பா! இந்திய போடருக்குள் வந்திற்றோம்" எங்களுக்குக்கேட்க வேண்டுமென்பதற்காகவே ஒட்டி தன் சக ஒட்டிகளுக்கு சங்கதி சொன்னார். எனது இடுப்பு வருத்தம் காணாமல் போயிருந்தது. எழுந்து நின்று பார்த்தேன். 'அது இராமேஸ்வர டவர் செளிச்சம், மற்றது இராமேஸ்வர கோயில் பல்ப்" என விபரம் தெரிந்தவர்கள் விவரணம் தந்தார்கள்.
இறங்கினேன். பாரதமண்ணை கைகளில் தொட்டு உதடுகளில் ஒற்றிக்கொள்வதற்கு முன்பாக "கண்டதும் கிடக்கும், காலடியப்பாத்து வாங்க” அனுபவ வார்த்தைகள் கேட்டன. அந்த விடிகாலையில் கூட சில அதிகாரிகள் விழித்திருந்தார்கள். "யோவ்! இந்தாண்ட வாங்கயா" என புரியாமொழி பேசியவர்கள் படுவேகமாகப் பதிவெடுத்தார்கள். சுடச்சுட அடையாள அட்டை தந்தார்கள். இப்பொழுது எனது அடையாளம் 'அகதி' மாத்திரம்தான்.
O
வவுனியாவில் வெளிவந்த நூல்கள்

Page 31
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
பிரசவித்துப் பார்
மாணிக்கம் ஜெகநாதன் வவுனியா.
SeeD DIT
கருவில் என்னை சுமந்த போதும் கனவு கண்டு மகிழ்ந்த போதும் பெண்தான் குழந்தையென்று எப்படியம்மா புரிந்தது? மாங்காயும் சாம்பலும் இதமாக இருந்த போதும் உனக்குள்ளே இருப்பது உன்னைப்போல் கரு என்று உணர்ந்து கொண்டாயோ? ஆண் குழந்தை உதைக்குமாம் அடிக்கடி - கருப்பைக்குள் உன் வயிற்றில் உதைக்காமல் நான்இருந்தது உன்மீது கொண்ட பாசத்தால் தானே இது புரியாமல் என்னை இனம் கண்டு கருக்கலைப்பாய் என்று கனவிலும் நினைக்கவில்லை அம்மா நீ நினைப்பது போல் என் வாழ்வு இருக்காது மாறாக என்னால் கல்பனா சாவ்லாவைப் போல் இந்திரா காந்தியைப்
போல் ஏன்? ஆங்சாங் சுகியைப் போல் - கூட
உருவாக முடியும் உனக்கு துணிவிருந்தால் என்னை பிரசவித்துப்பார் இம்மண்ணில்..!

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
கல்பனா சாவ்லா
இந்தியாவைச்சேர்ந்தவர் . அப்பலோ விண்கலத்தில் பயணம் செய்தவர் அப்பலோ விண்கல விபத்தில் உயிரிழந்தவர்.
இந்திரா காந்தி
இந்தியாவின் பிரதமர் இந்தியாவின் தவப்புதல்வி அன்னை இந்திரா எனப்பட்டார்.
ஆங்சாஸ் சுகி
பர்மாவின் எதிர்கட்சி தலைவர். ஜனநாயகத்திற்காக போராடுபவர். பலமுறை சிறை வைக்கப்பட்டவர். முற்போக்கு ஜனநாயக வாதி.
யாழிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகள்

Page 32
്യാ, 6ഖി, ബാ ജൂബിധ ട്രിട്ടിട
புலம் பெயர் கதை ஒன்று
எங்கே என் நாடு?
விஜீவகுமாரன் (டென்மார்க்)
மனதை ஏதோ சூனியம் கவ்விக் கொண்டிருக்கிற மாதிரி ஓர் பிரமை. அப்படி ஏதும் நடந்து விடவில்லை. யாருடன் எந்தக் கொடுக்கல் வாங்கலோ, வாக்கு வாதமோ எதுவுமே இல்லை. ஆனால் மனம் மட்டும் வெறுமையில் போன மாதிரி. கண்கள் மட்டும் ரிவீயில் பதிந்திருக்க, கைகள் மட்டும் ஏனோ தானோ என்று ரிமோட் கொன்றோலில் சனல்களை மாற்றி மாற்றி அழுத்திக் கொண்டிருக்கிறது.
றொஸ்கில் பெஸ்ரிவலில் அப்படி என்னதான் இருக்கின்றது. இவ்வளவு சனக்கூட்டம். ஆண்களின் தோள்களில் பெண்களும், பெண்களின் தோள்களில் ஆண்களுமாக. ஏதோ அதில் இருக்க வேண்டும். எனக்குத்தான் அந்த இசையை சுவைக்கத் தெரியவில்லை. டனிஷ்காரர்களால் மட்டும் வைரமுத்துவின் கூத்தை விடிய விடிய இருந்து ரசிக்க முடியுமா என்ன?
கை ஆபிரிக்காவுக்குத் தாவுகிறது.மக்கள் நாலா பக்கமும் சிதறி ஓடுகின்றார்கள். கண்முன்னே ஒரு குண்டனின் தடியடியில் ஓர் கறுப்பனின் தலையிலிருந்து இரத்தம் பிறுகிறது. கற்கள் எங்கேயோ இருந்து வந்து விழுகிறது. ஒரு பெண்ணை நாலு பேர் தரதரவென்று பற்றை மறைவுக்குள் இழுத்துக் கொண்டு போகின்றார்கள். அந்தப் பெண்ணின் கதறிலில் புதர்ச் செடிகள் குலுங்கின்றன.
மேல்அறையில் எனது மூன்றாவது பிள்ளை வயிற்றுக் குத்தால் அழுகிறது. மனைவி இரண்டு மணித்தியாலமாக சமாதானப்படுத்துவது கேட்கிறது. ஆனால் எனக்குத்தான் மேலே போய் ஆறுதல் படுத்த மனம் ஏவுதில்லை. சோபாவின் சொகுசிலும் மனத்தின் மூட்டத்திலும் மீண்டும் ரீவிக்குள் அமிழ்கின்றேன்.
அந்த அண்ணாமலைச் சித்தர் ஏதோ எனக்கு சொல்லுமாப்போல் இருக்கின்றது. சிக்கடித்த முடியும். அரைத்துண்டு துணியும், கால் வயிற்றுக் கஞ்சியுடனும் அந்த சித்தர் நிமிர்ந்து நிக்கிற மாதிரி ஏன் என்னால் சுதந்திரமாய் திரியமுடியவில்லை. சுமைகள், பொறுப்புகள், கடமைகள் என்று எல்லாத்தையும் தூக்கிப் போட்டுக் கொண்டு ஏன் அமிழ்ந்து அமிழ்ந்து போகின்றோம். சித்தருக்கு என்ன கவலை? எந்த சீட்டு, என்ன கழிவு, என்ன வட்டி, என்ன பில், என்ன கவலைகள். ஒரு சோற்றுப் பருக்கையையாவது எந்த யோசனையும் இல்லாமல் சாப்பிட முடிகிறதா? கையும் மனமும் ஒன்று சேரச் சாப்பிட்டு கவலை இல்லாது கண்மூடித் தூங்கி எத்தனை நாளாச்சு?
டெலிபோன் மணி பயங்கரமாக அலறுகிறது. செல்லத்துரை அண்ணை தனது
60

ape, essbin, assUso Southau exe5
மகளின் ஐந்தாவது பிறந்த நாளுக்கு வரட்டாம். காலம் எவ்வளவு கெதியாக ஓடுகிறது. இப்போதுதான் நாலாவது பிறந்த நாள் வந்நது போலிருக்கு. நாலாவது பிறந்த நாளுக்கு மூன்றாவது பிறந்த நாளுக்கு வந்ததில் அரைவாசிப் பேரும் இருக்கவில்லை.
இம்முறை அதிலும் அரைவாசியாத்தான் இருக்கும். இலங்கையில் இருந்து வந்தோம் என்பதைத் தவிர ஏன் பழகுகின்றோம்? எதுக்காக பழகுகின்றோம்? என்று எந்தவித தொடுப்பும் இல்லாது அண்ணா, அக்கா, அன்ரி, அங்கிள் உறவுமுறை வேறு. ஆனால் அண்ணர் அக்காவிடம் அறாவட்டி வேண்டுவார். அன்ரி அங்கிளுக்கு ஆயிரம் பொய் சொல்லி அடித்து சத்தியம் செய்வார். இந்த உறவு முறைகளால் ஏற்படும் பிச்சுப் பிடுங்கலில் செல்லத்துரையண்ணரின் சுற்று வட்டாரமும் ஆண்டுக்கொரு முறை அரைவாசியாகக்குறையும்.
ஏன் என் மனம் இந்த உலக வியாக்கினங்களில் இன்று அலைந்து கொண்டு இருக்கின்றது.
"உந்த ரீவியிலை இருந்தது காணும். ஒருக்கா வயித்தாலை போற மருந்தை வேண்டிக் கொண்டு வாங்கோ. அதைக் குடுத்தாலாவதுசுகமாய் இருக்கும்" மகளை ஆற்ற முடியாத இயலாமையை மனுசி என்மேல் கோபமாய் காட்டுகிறாள்.
நேரத்தைப் பார்க்கின்றேன். இரவு 10மணியாகிவிட்டது. மூலைத்தெருவில் உள்ள மருந்துக் கடைதான் இரவு முழுக்கத் திறந்திருக்கும். காரில் போவதைவிட நடந்து போனால் மனதுக்கு நல்லாய் இருக்கும் போல இருக்கு. ஐக்கற்றையும் கைப்போனையும் எடுத்துக் கொண்டு றோட்டில் இறங்குகின்றேன்.
றோட் வெறிச்சோடிப் போய் இருக்கிறது என் மனம் போல். யாரையும் காணவில்லை. விடிய விடிய திருவிழாக்கள் நடந்த யாழ்ப்பாண வீதிகள் கேர்வியூ சட்டம் வந்த பொழுது இருட்ட முதலே இருட்டி விட்டது போல இந்த டென்மார்க் தெருக்களும் இருக்கிறது.
கைத்தொலைபேசி அடிக்கிறது. மாமாவுக்கு ஊரிலை கடுமையாம். ஒரு தரம் அதிர்ந்து போனேன். ஏதோ ஒரு தொப்புள் கொடி உறவு அறுந்தது போலை. திருவிழாவுக்கு, பள்ளிக்கூடத்துக்கு, படத்துக்கு சைக்கிளில் முன் இருத்திக் கொண்டு போய் விட்டது தொடக்கம், டென்மார்க் வர வெளிக்கிட ஸ்ரேசன்வரை வந்து அழுது அழுது பயணம் அனுப்பியது வரை ஒன்றன் பின் ஒன்றாக வருகின்றது. "எனக்கு என் மாமா வேண்டும். நீ வேண்டும் மாமா” கண்கள் கலங்கிறது. மிக அருகில் ஒரு கார் வந்து விலத்திப் போகின்றது.
அடுத்த ரெலிபோன் வருகிறது.
“நீங்கள் ஊருக்கு வருவியளாமோ”
மனம் நிஜத்தை நோக்கித் திரும்புகிறது. பக்ரறியில் லீவு கிடைக்குமா?
61

Page 33
சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
ஏக்ஸ்ராவாகச் செய்யும் கழுவுற வேலையை எப்படிச் சமாளிக்கிறது? பதிவில்லாமல் களவாய் செய்யும் பிற்ஸாக்காரன் நான் திரும்பிவர நிற்பாட்டிப் போடுவானோ? இல்லாட்டி வேறை தமிழ் ஆட்களை எடுத்துப் போடுவானோ?. என்ன இது? என்னை நினைக்க எனக்கே விசராய்க் கிடக்கு.
இப்படியா இங்கு டென்மார்க் வர முதல் என்னுடைய யோசனைகள் இருந்தது. நான் மாறிவிட்டேனா? இல்லை சில நிஜங்களை யோசித்து இலங்கைக்கு போகாமல் இருப்பதற்கு நியாயம் கற்பிக்கின்றேனா? இலங்கைக்கு போக ஏன் நான் பயப்பிட வேண்டும்? இலங்கை என் நாடு இல்லையா? எதுக்காக பயப்பிட வேண்டும்? நான் துரோகியா? இல்லையே? ஆனாலும் மனம் பயப்பிடுகிறது.
ஒன்று மட்டும் உண்மை. நான் வளர்ந்த இலங்கை அல்ல அது. காணி உறுதி மட்டும் என் பெயரில். ஆனால் யாரோ அளவெட்டி ஆட்களை இருத்தி இருக்கினமாம். வீட்டுக்குப் போனாலும் வீட்டுத் தாழ்வாரத்திலை தான் கட்டில் போட்டுப் படுக்க வேணும். இல்லாட்டி மூத்தக்கா வீட்டை போய் தங்க வேணும்.
மருந்தை வேண்டிக் கொண்டு திரும்புகின்றேன். சந்தின் மூலையில் நாலைந்து டெனிஷ்காரர் பியர்ப்போத்தலுடன் நிற்கிறார்கள். அவர்களைப் பொருட்படுத்தாமல் வீதியின் மறுபக்கத்தால் அவர்களைத் தாண்டிச் செல்லுகின்றேன். "சோட்ட சுவின. கோ ஜெம்" (கறுத்தப் பன்டியே நாட்டுக்குப்போ) பின்னால் கத்திக் கேட்கிறது. உடல் பதறிப் போகிறது. இருப்பினும் துணிவினை வரவழைத்துக் கொண்டு அவர்களை நெருங்குகின்றேன்.
"உங்களுக்குத்தெரியுமா எனக்கு டென்மார்க்கில் பிரஜர் உரிமை இருக்கிறது. நானும் இந்த நாட்டுப் பிரஜைதான்', சொல்லி முடிக்கவில்லை ஒரு வெற்று பியர் போத்தல் என் கன்னத்தருகால் பறக்கின்றது. அவர்கள் கை, கால்கள் எல்லாம் என்மீது பாய்கிறது. மூக்கடியும் முகமும் விறைப்பது போல் இருக்கிறது. எனது வலு எல்லாம் போய் விட்டது. றோட்டுகரையிலுள்ள குப்பைத் தொட்டியருகே ஒதுங்கி கிடக்கின்றேன். உடல் மட்டும் உதறுகிறது.
என்னை அடித்த மகிழ்ச்சியில் மீண்டும் ஓர் பியரைக் குடித்துக் கொண்டு அவர்கள் போய்விட்டார்கள். ஆனால் கடைசியாக அவர்கள் சொன்ன வார்த்தை மட்டும் காதில் ஒலிக்கிறது.
"உந்த நியாயங்களை உன்ரை நாட்டிலை போய்க்கதை" எனக்கு நாக்கு வரண்டு போய்க்கிடக்கிறது. "எங்கே என் நாடு?"
ஜக்கற் பொக்கற்றில் இருந்த பிள்ளையின் மருந்துப் போத்தல் உடைந்து போய் இருக்கின்றது.
62

&apa, &etEl' &GIEu BEuðau eftihefsmeð
ஓர் இலக்கிய மாணவியின் கட்டுரை
இலக்கியமும் சமூகமும்
விதமிழ்ச்செல்வி
ஒருகாலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் விழுமியங்களை எடுத்துக் கூறும் ஒன்றே இலக்கியம் எனப்படுகிறது. அதாவது கலாசாரம், நாகரிகம், பண்பாடு,சமயம் என்கின்ற ஒவ்வொன்றும் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை இலக்கியங்கள் வெளிப்படுத்தும் "சவியுறத்தெளிந்து தன்று ஒழுக்கம் தழுவி மனிதனுக்கு இன்பத்தையும், பிரயோசனத்தையும் எது கொடுக்கின்றதோ அதுவே இலக்கியமாம்." இது ஈராயிரம் ஆண்டு காலத்திற்கு முன் வாழ்ந்த சமூகத்தின் வாழ்க்கைப் போக்கினை அப்படியே பிரதிபலித்துக் காட்டி விடுவதால் காலத்தின் கண்ணாடி எனவும் இலக்கியம் அழைக்கப்படுகிறது. இலக்கியத்திற்கும் சமூகத்திற்குமிடையே நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. இலக்கியத்திற்கமைவாக சமூகமும் சமூகத்திற்கமைவாக இலக்கியமும் மாறுபட்டுச் செல்லும் தன்மையதாய் அமையும். இதனை நாம் இலக்கிய வரலாற்றுக் காலங்களை அடிப்படையாகக் கொண்டு விரிவாக நோக்கலாம்.
மூவேந்தர் முச்சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த காலப் பகுதியாகிய 1தொடக்கம் 3ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியை உள்ளடக்கிய சங்ககாலச் சமூகத்திலே வாழ்ந்த மக்கள் தமது வாழ்விலே அகம், புறம் எனும் இருதிணை ஒழுக்கங்களைக் கடைப்பிடித்துள்ளனர். அதாவது அகம் எனப்படுகின்ற காதலுக்கும், புறம் எனப்படுகின்ற போர், வீரம் மற்றும் கொடை என்பவற்றிற்கும் முக்கியத்துவமளித்து வாழ்ந்துள்ளனர். இதனால் இக்காலத்திலே தோன்றிய இலக்கியங்கள் காதல் மற்றும் போர், வீரம், கொடை என்பவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு படைக்கப்பட்டன. அவை அகத்திணை, புறத்திணை நூல்களென அழைக்கப்பட்டன.
இயற்கை நெறிக்காலமெனப்படுகின்ற சங்ககாலத்தை அடுத்து வந்த சங்கமருவிய காலத்தில், இதற்கு முன்னைய காலத்தில் வாழ்ந்த மக்களால் பெரிதும் போற்றப்பட்டு மதிக்கப்பட்ட காதல் மற்றும் போர் என்பன பொய்த்துப் போயின. இதனை "நானும் அவரும் புணர்ந்த காலை குருகு பார்த்தன்னது அது பொய்ப்பின் யான் என்ன செய்வேன்" எனத்தலைவி புலம்பியதனூடாகத் காதலும், "முன்னைநாள்ப் போரில் தமையனை இழந்தவள், நேற்றைய போரில் கணவனை இழந்தவள், இன்று போர் முரசம் கேட்டு சென்றுவா மகனே' என இறுதியாக மகனையும் அனுப்பி விட்டு அவ்விடத்தில் தலை சாய்வதனூடாகப் போரும் பொய்த்துப் போக மக்கள் அறக்கருத்துக்களையே பெரிதும் விரும்பியதால் இக்காலத்தில் தோன்றிய நூல்களில் பெரும்பாலானவை அறநூல்களாகக் காணப்படுகின்றன. இக்காலச் சமூக அரசியலில் காணப்பட்ட சீர்கேடு, களப்பிரர் வருகையால் மக்களிடையெ புகுத்தப்பட்ட கூடா ஒழுக்கங்கள் போன்றவற்றைக் களையவும் வைதீக,அவைதீக மதங்களிடையே மூண்ட சமயப்பகை காரணமாக மக்களை தமது சமயத்தின்பால் ஈர்ப்பதற்காகவும் அறக்கருத்துக்கள் போதிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தில்
63

Page 34
arab, datos. 65Mnu Godsduu ertefanas
தோற்றம் பெற்ற நூல்களில் ஏராளமானவை அறநூல்கள் என்பதனாலேயே இக்காலம் ஓர் அறநெறிக்காலம் எனவும் அழைக்கப்படுகிறது.
நாயன்மார்களினாலும் ஆழ்வார்களினாலும், சமயகுரவர்களினாலும் பக்திநெறி வளர்க்கப்பட்ட காலமே பல்லவர் காலம். சங்கமருவியகாலத்தின் இறுதிப்பகுதியில் சைவம், வைணவம் ஆகிய வைதீக மதங்கள் அவைதீக மதங்களான சமணம், பெளத்தம் என்பவற்றால் அழிந்து போய்விடுமோ? என்ற நிலையில் சைவத்தின் விடிவெள்ளியாக காரைக்காலம்மையாரும், வைணவத்தின் விடிவெள்ளியாக முதல் மூவாழ்வார்களும் தோன்றி இவ்விரு மதங்களையும் கட்டியெழுப்பினர். இதுவே தொடர்ந்து வந்த பல்லவர் காலப்பகுதியில் வாழ்ந்த மக்களால் பெரிதும் கடைப்பிடிக்கபட்டு காப்பாற்றப்பட்டது எனலாம். இக்காலச் சமூகத்திலே இறைவனோ தந்தை, மகன், காதலன், காதலி, தோழமை போன்ற உறவு முறைகளில் நின்றும் பக்தி நெறி வளர்க்கப்பட்டுள்ளது. மக்கள் பக்தி வெள்ளத்தில் ஆழ்ந்து போயினர். இதனால் பக்திபாடல்களைப் பாடியும் அவற்றை தொகுத்து நூல்களாக்கியும் வெளியிட்டமையினால் பக்தி நூல்கள் ஏராளமாகப்படைக்கப்பட்டு "பக்திநெறிக் காலம்" எனவும் போற்றப்படுகின்றது. இவற்றோடு பல்லவர் காலத்திலே இலக்கியம், காவியம், சிற்றிலக்கியம், உரைநடை நூல்களும் எழுந்துள்ளன.
இலக்கிய வரலாற்றிலே "ஒரு பொற்காலம்" எனப் போற்றப்படுகின்ற சோழர்காலச் சமூகத்திலே போரற்ற ஓர் அமைதியான சூழல் காணப்பட்டது நாடு செல்வச் செழிப்புடன் இருந்தது. நாட்டுமக்களும் இன்பமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இக்காலத்தில் காவியம், சிற்றிலக்கியம், இலக்கணம், நிகண்டு, தத்துவம், நீதி, உரை, வெண்பா போன்ற பல்வேறு வகையான நூல்களும் தோன்றியுள்ளன. இதனால் இக்காலத்தில் இலக்கியம் பல்துறை வளர்ச்சியடைந்துள்ளது.
சோழராட்சியானது 3ம் இராஜராஜசோழனுடன் முடிவடைய மீண்டும் பாண்டிய மன்னர்களால் நாடு கைப்பற்றப்படுகிறது. குறுநில ஆட்சியிலே ஒரு நிலை தளர்வு ஏற்பட முதன் முதலாக தமிழ் நாட்டினுள்ளே இஸ்லாமிய படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டு சொத்துக்களனைத்தும் சூறையாடப்பட்டது. இதனால் நாட்டினுள்ளே வறுமை குடிகொள்ள பசி, பஞ்சம், பட்டினி என்பனவும் தலைவிரித்தாடியது. மன்னர்களும் இக்காலத்தில் புலவர்களை ஆதரிக்காத நிலையில் சோழர்காலத்தில் அரச சபைகளைஅலங்கரித்த ஆஸ்தான கவிஞர்கள் நாயக்கர் காலத்திலே அங்காடி வீதிகளிலே அலைந்து திரிந்தனர். இதனால் இக்காலத்தில் கற்பனை வறட்சியும், வித்துவச் செருக்கும், வசைப்பண்பும்,பழமை போற்றும் பண்பும், வடமொழிச் செல்வாக்கும் கொண்ட இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன.
மேல்நாட்டார் தொடர்பாலும் அவர்தம் வருகையினாலும் தமிழ் இலக்கியத் துறையிலே குறிப்பிடத்தக்க மாற்றத்தினை ஏற்படுத்திய காலமாக ஐரோப்பியர் காலம் கொள்ளப்படுகிறது. இக்காலத்தில் மேல்நாட்டவரின் சமயப்பிரச்சார நடவடிக்கைகள் கடுமையாகக் காணப்பட இதன் காரணமாக எளிமையான உரைநடையும், நவீன இலக்கிய
64

്യാമ, ബി. ബബ ജൂബിഡ Mിഞ്ഞ
வடிவங்களான சிறுகதை, நாவல் முதலான புனைகதை வடிவங்கள் என்பனவும் தமிழில் எழுந்தன. இவற்றோடு அச்சுவாகன வசதியால் பத்திரிகை, சஞ்சிகைகள் என்பனவும் தோன்றி மானிடத்தின் அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின.
ஐரோப்பியர் காலச் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றமும் அதன் காரணமாக இலக்கியத்துறையில் ஏற்பட்ட பல்துறை வளர்ச்சியும் தொடர்ந்து வந்த 19ம், 20ம் நூற்றாண்டுகளிலும் தொடர்வதாயிற்று. சிறுகதைத் துறை மற்றும் கவிதைத் துறையில் நவீன கவிதை, ஹைகூ கவிதை எனப்பலவேறுபட்ட வளர்ச்சி கணப்படுகின்றது. இதன் தொடர்ச்சியை நாம் 21ம் நூற்றாண்டிலும் கண்டு கொள்ளக்கூடியதாயுள்ளது. தற்காலத்தில் நிகழும் இயற்கை அனர்த்தங்கள், போர் அனர்த்தங்கள், மற்றும் மனித வாழ்வியல் சம்பந்தமான அம்சங்கள், காதல் என அனைத்தையும் அம்பலப்படுத்துவதாக இலக்கியங்கள் காணப்படுகின்றன. எனவே இலக்கியமும் சமூகமும் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்தன என்பதுவும் வாஸ்தவமான உண்மை தான்.
“மாற்றத்தின் ஆரம்பம் நாமே” பெண்களுக்கான ஒரு குரலாக ஒரு பாடல் இறுவட்டு
வவுனியா “எங்களால் முடியும்” என்கின்ற குழுவின் தயாரிப்பாக வெளிவந்துள்ள "மாற்றத்தின் ஆரம்பம் நாமே” என்கின்ற புதிய பாடல் இறுவட்டு பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் குரலாகக் காணப்படுகிறது. மாற்றத்தின் ஆரம்பம் நாமே என்கின்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ‘கவிதையும் கானமும்" இறுவட்டின் பாடல்களை திருமதி நாகபாதம் மற்றும் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் எழுதியுள்ளனர். இவற்றுக்கான இசையமைப்பை சிறந்த முறையில் கந்தப்பு ஜெயந்தன் அவர்கள் வழங்கியுள்ளார்கள். பாடல்களை ஜெயரூபன், ஜெயந்தன் மற்றும் பிரதா ஆகியோர் இனிமையுடன் பாடியுள்ளனர். ஏற்கனவே வவுனியா வளாக வெளியீடுகளான வன்னியோடை, வன்னியருவி, வன்னியூற்று மற்றும் இ சோ.ஜெயச்சந்திரனின் 'ரெயின்’ போன்ற இறுவட் டுப் பாடல் வெளியfடுகளை வவுனியா கண்டுள்ளது. அதன் தொடர்ச்சியில் சமயப்பாடல்களுக்குப் புறம்பாக இப்புதிய இறுவட்டு இசையமைப்பை திரு.கந்தப்பு ஜெயந்தன் அவர்கள் மேற்கொண்டிருந்தார். ஏற்கனவே இவர் சக்தித் தொலைக்காட்சியிலும் 'ஏக்கம் குறும்படத்திலும் தனது திறமையினை வெளிப்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
65

Page 35
espa, est6, absensu Suàbiau Grefslah
மதமும் மார்க்ஷியமும் - šípů LIGDořUTCů LITřG06u
சங்கரன் செல்வி
பாரதியின் மெய்ஞ்ஞானம் எனும் விமர்சன நூலினூடாக இடதுசாரி மார்க்ஷிய சித்தாந்தத்தை தனது விமர்சன அடிப்படையாகக் கொண்டு இதுவரை எட்டு நூல்களை ஆக்கியுள்ளார். அண்மையில் வெளிவந்த ரவீந்திரனின் எட்டாவது நூலாகிய "மதமும் மார்க்சியமும் - தமிழ் பண்பாட்டுப் பார்வை” பற்றிய ஒரு விமர்சனத்தை இக்கட்டுரை முன்வைக்க விழைகிறது.
மார்க்சிசப் பார்வை ஊடாக பாரம்பரிய மற்றும் நவீன இலக்கியங்களை விமர்சிக்கும் ரவீந்திரனின் ‘கலாசாரம், எதிர்க்கலாசாரம், புதிய கலாசாரம்' என்ற நூலும் "பின் நவீனத்துவமும் அழகியலும்" என்ற மற்றைய நூலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை இலக்கிய உலகில் தோற்றுவித்தன. பேராசிரியர்கள் கைலாசபதி மற்றும் சிவத்தம்பி ஆகியோரைத் தொடர்ந்து பேராசிரியர்கள் நுஃமான் மற்றும் சிவசேகரம் ஆகியோர் முன்னெடுத்து வரும் மார்க்சிய விமர்சனத் துறையை திரு இரவீந்திரன் அவர்களும் முன்னெடுத்து வருவது இலக்கிய உலகில் புதிய பார்வையினை வழங்கும் என்பதில் ஐயமில்லை.
மேற்படி இரு நூல்களும் இலங்கை இந்திய வாசகர்களிடையே ஒரு பரவலான தாக்கத்தினை ஏற்படுத்தி இருந்தது. இவற்றினைத் தொடர்ந்து இந்துத்துவ சூழலில் இந்து விடுதலை நெறியின் சாதகமான போராட்ட குணாம்சங்களை முன்வைத்து எழுதப்பட்டவை அவரது அடுத்த இருநூல்கள் ஆகும். அவையாவன "இந்து விடுதலை நெறியும் இந்துத்துவமும்," இந்துத்துவம், இந்துவிடுதலை நெறி சமூக மாற்றம், மற்றும் இந்துத்துவ காலச் சூழலின் மறுவாசிப்பில் பாரதியின் "மெய்ஞ்ஞானம்" என்பனவுமாகும். தற்போது ஒரு அகன்ற பரப்பில் தமிழ்ப் பண்பாட்டுப் பார்வையில் "மதமும் மார்க்சியமும்" என்ற நூல் வெளிவந்துள்ளது.
மதங்கள் மற்றும் மரபுகளின் வீறான பக்கங்களை மதவாதிகள் போல் பழமை வாதத்தை மேலோங்கச் செய்யப் பயன்படுத்தாது சமூகத்தில் காணப்படும் சகல ஒடுக்குமுறைகளையும் தகர்ப்பதற்கு மரபின், மதத்தின் போர்க்குணம் சுவீகரிக்கப்பட வேண்டும் என்கிறார் இரவீந்திரன்.
சமூக மாற்றங்களுக்கான போராட்டங்க்ள அரசியல் புரட்சிகளினுடாக முன்னெடுக்கப்பட்டு சாதகமான அம்சங்களை தன்னகத்தே செறியச் செய்து வளர்ந்தது
66
 

9ാങ്ക, ടിബി ( Gിധ {ളി
மேற்குலகம். அதே சமாந்தரமான நிலைமைகள் மதங்களினூடாக முன்னெடுக்கப்பட்ட வரலாற்றுச் சந்தர்ப்பங்களை எடுத்து விளக்கும் இரவீந்திரன் இந்த சாதகமான அம்சங்களினூடாக ஒரு புதிய பண்பாட்டு எழுச்சியையும் அதனூடாக ஓர் அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்த கட்டியம் கூறுகின்றார்.
கி.மு.5ம் நூற்றாண்டில் ஏற்பட்ட "சமண பெளத்தப் புரட்சி” எழுச்சி, கி.பி.4இல் ஏற்பட்ட நிலப்பிரபுத்துவ எழுச்சிக்கு வழிகோலிய இந்துசமயப் புரட்சி 19இல் இந்திய மண்ணில் ஏற்பட்ட ஏகாதிபத்திய ஒழிப்புக்கு "விவேகானந்தர்” முன்வைத்த "இந்து விடுதலை நெறிப்புரட்சி” போன்ற பல்வேறு வரலாற்றுப் பக்கங்களைச் சுட்டிக் காட்டி தமிழ்ப் பண்பாட்டுச் சிந்தனையில் வள்ளுவர், பாரதியார் மற்றும் பெரியாரின் சிந்தனைகளும் எவ்வாறு ஒரு புதிய பண்பாட்டு எழுச்சிக்கு வழிகோலும் எனக் குறிப்பிடுகின்றார்.
எனினும் இடையில் தோன்றிய எதிர்ப்பண்பாட்டுப் போக்குகள் சமூக மாற்றத்தினை மறுதலித்த நிலைமையினையும் எடுத்துக்காட்டி இவற்றை வெற்றி கொள்ள இனிப் போக வேண்டிய பாதை என்ன என்பதனையும் மார்க்சிய அரசியல் துணை கொண்டு வடிவமைக்கின்றார். மா.சேதுங் எவ்வாறு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்கின்ற லெனிசிச சித்தாந்தத்தை மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம் எனப் பிரயோகித்துள்ளார். என்பதைச் சுட்டிக்காட்டி எமது சூழலில் எப்படி உள்ளுர் நிலைமைகளை முக்கியத்துவப்படுத்தி ஒரு புதிய பண்பாட்டு இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார் ஆசிரியர்.
இரவீந்திரனின் இந்நூலானது கி.மு. 1200ம் ஆண்டுகாலத்து யூதர் காலத்து செமிட்டிக் மதங்களிலிருந்து படிப்படியாக இயேசு கிறீஸ்துவின் அன்பு என்ற கருத்தாக்கத்திற்கு வருகின்ற வகையைக் கூறுகின்றது. தொடர்ந்து பாலை வனச்சூழலில் இனக் குழுக்களை வென்று ஒன்றுபடுத்தி சகோதரத்துவம் பேசிய இஸ்லாம் மதம் பற்றியும் விபரிக்கின்றது. அதனைத் தொடர்ந்து வேத கால மதங்கள் மற்றும் இந்துசமய எண்ணக்கரு உருவாக்கம் மற்றும் வேதமறுப்பு மதங்களான சமணம், ஆசீவகம், பெளத்தம், சீக்கியம், உலகாயுதம் என்பவற்றின் பின்னணிகளைக் குறிப்பிட்டு ஒரு விரிவான நூலாக வளர்கின்றது.
கி.பி4இல் குப்தர் காலத்தில் தோற்றம் பெற்ற இந்து மதம் பகவத் கீதையின் உருவாக்கத்துடன் மக்கள் மயப்பட முனைகிறது. தமிழகச் சூழலில் சைவநெறியாக சைவ சித்தாந்த மரபுடன் வளர்கிறது. வேதத்தை முன்நிறுத்திய இந்துமதம் புராணங்களால் தமிழ் மயப்படுவதை சுட்டிக்காட்டுகிறார். நாட்டார் வழிபாடுகள் சிந்துவெளி பண்பாடுகளினூடாகவும், ரிக் வேதத்தினூடாகவும் இந்து சமயக் கூறுகளாகி கிராமிய மக்களையும் தனக்குள் உள்வாங்கியது. வர்ணக் கோட்பாட்டை எதிர்த்த புத்தரின் அநித்திய அநான்மக் கருத்திற்கெதிராக புத்தரையே நில உடைமைக்கேற்ற கடவுளாக தகவமைத்துக் கொண்டதையும் குறிப்பிடுவார்.
சமண, பெளத்த ஆயிரமாண்டு எழுச்சியில் சீர்கேடுகள் மலிந்த நிலையில் இன்னொரு சமயத்தைத் தமிழகம் தழுவியது. கி.பி.4இல் சந்திரகுப்தனின் குழு ஒன்று சாதிப் பிரிவினைகளை ஏற்றுக்கொண்டு தமிழகத்தில் நிலை கொண்டது. ஆனால் 7ம் நூற்றாண்டில் தொடங்கிய பக்திப் பேரியக்கம் சாதியத்திற்கெதிரான நிலையில் சகல தரப்பு மக்களையும் உள்வாங்கியது. இரவீந்திரனின் நூல் தமிழகத்துப் பண்பாட்டுச் சூழலில் சாதி மறுப்பு, சமத்துவம், மதசார்பு போன்ற பண்புகளில் எவ்வாறு திருவள்ளுவர். பாரதியார் மற்றுமு பெரியார் ஊடாக கண்டு கொள்ள முடியும் என விளக்குகின்றது. 67

Page 36
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
திருக்குறளுடாக தமிழப் பண்பாட்டின் மதச்சார்பின்மை, தனிமனித சமத்துவம், மரியாதை, சுதந்திரம் என்பனவும், பிராமண அடக்குமுறை மூட நம்பிக்கை என்பவற்றுக்கெதிராக பாரதியார் முன்வைத்த கருத்துக்கள் மற்றும் பெரியாரின் மத எதிர்ப்பு, நாத்திகவாதம், சுயமரியாதைச் சிந்தனை என்பனவும் முன்வைக்கும் தமிழ்ப் பண்பாட்டு அடிப்படையிலான ஒரு புதிய சிந்தனை, புதிய வாழ்வை நோக்கி தமிழச் சமூகத்தை இட்டுச் செல்ல முடியும் என இரவீந்திரன் நம்புகின்றார். இதனைத் "தமிழியம்” என்கின்றார்.
மதத்தை மதித்து மார்க்சிய வழியில் சிந்திக்கும் இரவீந்திரன் மேற்குலக சிந்தனை முறைமையில் அல்லாமல் கிழக்கு சார்ந்து எழுப்பப்பட வேண்டிய சிந்தனை பற்றி விவாதிக்கின்றார். சங்ககால அரசியலிலும் நல்லாட்சி இருந்தது. இந்து சார்ந்த அரசியலிலும் (சிவாஜி மற்றும் விஜயநகர ஆட்சி) நல்லம்சங்கள் காணப்பட்டன. அக்பர் காலத்து முஸ்லிம் அரசியலிலும் சுதந்திரம் இருந்தது. கத்தோலிக்க அரசுகளும் ஜனநாயக ஆட்சியைத் தந்திருக்கின்றன. இவ்வாறாக விவாதிக்கும் இரவீந்திரன் தமிழின் பக்திப் பேரியக்கம், திருவள்ளுவம், பாரதியம், பெரியாரியம் என்பவற்றினுாடாக ஒரு புதிய பண்பாட்டு எழுச்சியைக் கொண்டுவர முடியுமென நம்புகின்றார். சுரண்டலற்ற, அதிகாரமற்ற ஒரு பொதுவுடைமைப் புத்துலகம் மரபு அம்சங்களை அரவணைத்து புதிய ஜனநாயகத்தை உருவாக்க வழிகோலும் என நம்பிக்கை கொள்கின்றார். ஒவ்வொரு சமயத்தின் அடக்குமுறைக்கெதிராகவும் புதிய சமயம் தோன்றியது வரலாறு. எனவே புதிய நிலைமைகள் பழமைகளை எதிர்கொண்டு உருவாவதும் வரலாற்றில் தவிர்க்க முடியாததே.
இந்தக்கட்டத்தில் வெறுமனே அறிவியில் துணை கொண்டு முடிவுகளை எட்ட வேண்டும் என வாதிடும் விமர்சகர்கள் (குணசேகரன், மார்ஸ்சிஸ்ட்(9) 2007:58) சமகால ஆய்வியல் முறைமைகள் இனக்குழு ஆய்வு முறைகள் ஊடாக ஆய்வாளரின் தன்னிலை நோக்கில் அனுபவம் துணைக் கொண்டு ஆய்வு முடிவுகள் எட்டப்படுவதை அறியாதவர்களா என எண்ணத்தோன்றுகிறது. சாதி ஆரியர்களால் புகுத்தப்பட்டது, குப்தர் காலத்தில் புதிதாதக் தோன்றியது இந்துமதம் போன்ற ரவீந்திரனின் ஆய்வுக்கருத்துக்களை மறுதலிப்போர் அறிவியல் துணைக்கொண்டு தான் முடிவுகளை எட்ட வேண்டும் என்கின்றார். திராவிடர்களின் திணைக்கோட்பாடுகள் ஆரியர்களின் வர்ணக்கோட்பாடும் இணைந்த பின்னரே சாதிவாழ்முறை வடிவமைக்கப்பட்டது. எனும் தமிழ் அனுபவம் சார்ந்த முடிவுதான் இந்த ஆய்வு நூல் அதனால் தான் தமிழ் பண்பாட்டுச் பார்வையாக இந்நூல் விரிகிறது.
இறுதியாக, மக்களின் மத உணர்வுகளை மதிக்காது, மக்கள் சமத்துவம் பேசி புரட்சி சமூகம் மாற்றத்தை வேண்டி நிற்கும் பொது உடைமை கொள்கையாளர்கள் கீழிலிருந்து மேலாக மக்கள் மயப்பட்ட சித்தாந்தத்தினை கட்டி எழுப்ப வேண்டிய தேவையை இந்நூல் உணர்த்துகிறது. ஒரு 2000 ஆண்டு கலை பண்பாட்டு இலக்கிய புலத்திலிருந்து எழும் வீச்சான பார்வையாக தமிழிபம் பரிணமிக்கின்றது. இதனை அடிப்படையக் கொண்டு ஒரு விரிந்த தளத்தில் சமூக மற்றத்தை கோரும் நிலை நாட்டும் கைங்கரியத்தில் அரசியல் இலக்கிய சித்தாந்திகள் ஈடுபட முன்வரவேண்டும் என்பதற்கு ஒரு முன்னோட்டமாக இந்நூலை நாம் குறிப்பிடலாம்.

erpos, estos 655u86uébet estébene
அட்டைப்பட அஞ்சலிக் கட்டுரை
O e O பண்டிதர் சு.வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் தையல்நாயகி தம்பதியினருக்கு 24-05-1921 இல் நாவற்குழியில் பிறந்த அமரர் சு.வேலுப்பிள்ளை ஒரு பயிற்றப்பட்ட தமிழாசிரியரும் தமிழ்ப் பண்டிதருமாவார். 1946 முதல் 1981 வரை மலையகம் மற்றும் சுன்னாகம், மானிப்பாய் ஆகிய இடங்களில் ஆசிரியப் பணி புரிந்து ஒய்வு பெற்றார். மானிப்பாய் இந்துக்கல்லூரியில் அவர் பணி புரிந்த காலத்தில் அவருடன் ஒரு மாணவனாகப் பழகும் சந்தர்ப்பங்களும் அவரை ஒரு இலக்கிய வாதியாக அறியும் சந்தர்ப்பங்களும் கிடைத்திருந்தன. ஆயினும் எழுபதுகளிலிருந்து மாணவப்பருவ காலமாதலால் பெரிதும் உறவாட முடியவில்லை. இருந்தாலும் அவரது எழுத்துப் பணியின் சிறப்பை அனுபவிக்கக் கூடியதாயிருந்தது.
சு.வே யின் முதல்ச் சிறுகதையான 'கிடைக்காத பலன் 1943 இல் ஈழகேசரியில் வெளியானது. அவர் 'மனித மிருகம் (1944), 'பாற்காவடி" (1947), "பெரியம்மா’ (1962), ‘மண் வாசனை’ (1963) போன்ற குறிப்பிடத்தக்க சிறுகதைகளை எழுதியுள்ளார். மண் வாசனை கொண்ட கதைகளாக அமையும் சு.வேயின் சிறுகதைகள் 'பாற்காவடி', 'மண் வாசனை’ ஆகிய தலைப்புகளில் இரு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
அவரது இன்னுமொரு துறை உருவகக் கதைகள். இந்த வடிவத்தின் பிதாமகர் அவரே என் எஸ்.பொ குறிப்பிடுகின்றார். உருவகக் கதைகளின் தொகுதியொன்று 1999 இல் மித்திர வெளியீடாக வந்தது. அவரது இன்னுமொரு துறை நாடகமாக வானொலி நாடகங்கள் பலவற்றை எழுதி இரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். "ஏட்டிலிருந்து(1964), “கிராம ராஜ்ஜியம்' (1964), "பொன்னாச்சிக் குளம்' (1967 - 68), நவயுகம்" (1969) போன்ற தொடர் நாடகங்களுடன் பரிசு பெற்ற நாடகமான 'மண் வாசனை’ (1960), 'ஒருமை நெறித் தெய்வம் (1968) போன்ற வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார். இலங்கை கலைக்கழகம் நடத்திய நாடகப் போட்டியில் சு.வே.யின் 'வஞ்சி' (1965), என்ற ஓரங்க நாடகம் முதல் பரிசு பெற்றது. 1966இல் 'எழிலரசி' என்னும் முழுநீள நாடகம் முதல்ப் பரிசைப் பெற்றுக் கொண்டது. சிறுவர் கதைகளான 'சந்திரமதி', 'குகன் என்பவற்றோடு பாடநூல்களையும் எழுதி இலக்கியப் பணி புரிந்துள்ளார். அவர் இலங்கை வானொலியில் நிகழ்த்திய "இலக்கிய இரசனை (1965), திருக்குறட் சித்திரம் (1968), நாட்டுக்கு நல்லது (1969) போன்ற வானொலி உரைச் சித்திரங்கள் அவரின் இன்னொரு பரிமாணமாகும்.
போர்த் தாக்கத்தினால் சு.வேயின் பல படைப்புக்கள் யாழ்ப்பாணம் நாவற்குழியில் அவரது இல்லத்தில் அழிந்து போக நேரிட்டது. ஆயினும் அவரது சிறுகதைத் தொகுதிகளும் செங்கையாழியான் தொகுத்த ஈழகேசரிச் சிறுகதைகள். மறுமலர்ச்சிக் கதைகள் ஆகிய தொகுதிகளில் இடம் பெற்றிருக்கும் சிறுகதைகளும் அவரது இலக்கியப் பணிக்கு சான்றுகளாக அமையுமென்பதில் ஐயமில்லை. அமரத்துவமடைந்த அமரர் சு.வே.யின் அஞ்சலி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் கொழும்பு மற்றும் கனடா ஆகிய இடங்களில் சிறப்புற நடந்தேறியமை அன்னாரின் இலக்கிய முக்கியத்துவத்தை எடுத்தியம்புகிறது. நாவற்குழி வாழ் பெருமக்களால் கனடாவில் ஒழங்கு செய்யப்பட்ட அஞ்சலி நிகழ்வில் த.விஜயசேகர். பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம், கவிஞர் அம்பி மற்றும் பலர் உரையாற்றினர். வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் தனது இலக்கிய அஞ்சலியை ‘மாருதம்' இதழில் அட்டைப்பட அதிதியாக கெளரவித்துத் தனது அஞ்சலியைச் செலுத்துகின்றது. - நன்றி. நாவற்குழியூர், த.விஜயசேகர் கந்தையா ரீகணேசன் 69

Page 37
arupe, astos añ66m assuláthau arbéfsneb
ஒன்பதாண்டு நிகழ்வில்.
s
 

creuad, Mstb6f, eDBUDS) Sibuláhduu edobnah
ஒன்பதாண்டு நிகழ்வில் கலைநிகழ்ச்சிகள்.
if Esse fiaçãá séãs
యises

Page 38
്യാട്, ബി, ഞണ ഭബ്ളിധ ആഴ്കിക്കു
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் நடாத்தும் பத்தாளர்டு நிறைவு விழா Diaga I5
காலம் : 21.08.2008 காலை 9.30 மணி இடம் நகரசபை மண்டபம், வவுனியா. 35606060D தமிழ்மணி அகளங்கள்
மாருதம் சஞ்சிகை இதழ் 8 வெளியீடு
|| ിഖീ * திரு.அ.பேனாட் எழுதிய “முங்கில் காற்று”
G * பண்டிதர் ழீமத்.வ.சு.ஐயனார் எழுதிய 99 மாயக்குதிரையும் இலக்கியக் கட்டுரைகளும் தொகுப்பு : திரு.மு.கெளரிகாந்தன்
சிற்பக்கலைச் செல்வர் விருதுபெறுபவர்: கலாபூஷணம் க.சண்முகவடிவேல் (சிற்பக் கலைஞர்) இசைச்செல்வர் விருதுபெறுபவர்; கலாபூஷணம் திரு.கே.ஆர்.சிவசோதி (சங்கீத வித்துவான்) கெளரவிப்பு உரை திரு.கந்தையா பூரீகணேசன்
கலை நிகழ்ச்சிகள்
இசைப்பாடல் இசைநாடகப் பாடல் கதா நிகழ்வு கவிதா நிகழ்வு இசைவும் அசைவும் நடனவிருந்து நாடகம்
72

ത്ത
METO TRADERS
Dealers in Fletical Goods & Plumbing Items
35A, lus Stand Shopping Complex, Station Road, Wavuniya.
l'om' ()24 - 2222572
N.S.RATNAM & BROS
1)risers in all inds of electroni' items and spares
EPO H ION I DŽA
No.6., 1st Cross Street,
Wavuniya. Tes/Fax. 024 - 222 1237

Page 39
её.or3.силе.засі. பஜார் வீதி, வவு
 
 

வா அன் கோ.