கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மின்வலையில் தேசம் ஒன்றை வளர்த்தல்

Page 1
5
H
D|l'Illi
RTAINGNUM
 

| || || || || || ||l|||| ஆப்புேக் கட்டுரை 92
தேசம் ஒன்றை வளர்த்தல்
mu žurnom od uti

Page 2

மின்வலையில் தேசம் ஒன்றை வளர்த்தல்: தமிழ்நெற் தொடர்பான விடயம்

Page 3

மாறுநிலை / உருவாக்கம் : இலங்கைத் தமிழ் தேசியம் பற்றிய ஒரு கருத்தரங்கு ஆய்வுக் கட்டுரை - 2
மின்வலையில் தேசம் ஒன்றை வளர்த்தல்: தமிழ்நெற் தொடர்பான விடயம்
மாயா ரங்கநாதன் மொனாஸ் ஆசிய நிறுவனம், அவுஸ்த்திரேலியா
தமிழாக்கம் : தை.தனராஜ்
இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் (CES)

Page 4
Introduction to the translation
The International Centre for Ethnic Studies (ICES) Sri Lanka Studies Program assisted by the Norwegian Agency for Development Cooperation (NORAD) aims at doing cutting edge research on issues of
1. multiculturalism, nationalism and identity 2. studies on war, suffering and memory 3. studies on globalization, foreign aid and economic reform
This is a translation of a paper presented at the "Trans/Formations: A Conference on Sri Lankan Tamil Nationalism" organised by the ICES in Colombo from December 14-16, 2004. There were seventeen papers
presented at this conference and the edited collection of papers will be published by the ICES with an international publisher this year.
Published by International Centre for Ethnic Studies 2, Kynsey Terrace Colombo - 8 Sri Lanka
Copyright 2007 by ICES
Printed by Kumaran Press Private Limited 361 1/2 Dam Street, Colombo - 12 Tel: +9411242 1388

மின்வலையில் தேசம் ஒன்றை வளர்த்தல்: தமிழ்நெற் தொடர்பான விடயம்
சுருக்கம்
உலகரீதியாகத் தமிழர்கள் மத்தியில் தமிழ் தேசிய அடையாளத்தினைப் பரப்புவதற்கும் உருவாக்குவதற்கும் தமிழ்நெற் எவ்வாறு துணை புரிகின்றது என்பதனை இவ்வாய்வுக் கட்டுரை ஆராய முற்படுகின்றது. தேசிய உணர்வினை வலுப்படுத்துவதிலும் வளர்த்தெடுப்பதிலும் மின்வலையுருவின் பங்களிப்பினை அடிப்படையாகக் கொண்டு அண்டசனின் பிரதான ஆக்கமான “கற்பனைச் சுருக்கங்கள் (1991) என்பதன் பின்னணியில் இலங்கையின் வட கிழக்கில் நடப்பவை பற்றிக் கூறும் அடிப்படையில் ஒரு செய்தி வலையுருவான தமிழ் நெற் என்பது பணி பாடு, வரலாறு என்பவற்றை நிலைநிறுத்துவதோடு இவ்வலையில் உணர்வுநிலையற்ற தேசிய உருவாக்கத்திற்கும்
※ இவ்வாய்வுக் கட்டுரையானது "மின்வலையில் தேசங்களை வளர்த்தல்: தேசமும் மின்வலையில் தேசத்தைக் கட்டியெழுப்புதலும் பற்றிய ஒரு பூர்வாங்க ஆய்வு” என்னும் தலைப்பினில் அவுஸ்திரேலிய மெல்போன் நகரத்திலுள்ள மொனாஸ் பல்கலைக்கழகத்தில் ஒக்டோபர் 2004 இல் சித்தியடைந்த கலாநிதிப்பட்டப்படிப்பின் ஆய்வுக் கட்டுரையில் இருந்து உருவாக்கப்பட்டது. இக்கட்டுரையின் ஆசிரியர் யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியர். விநித்தியானந்தம், கனடா, யோக் பல்கலைக்கழக கலாநிதி உ. சேரன் மற்றும் "பரிமாற்றங்கள் : தமிழ் தேசியவாதம் தொடர்பான ஓர் ஆய்வரங்கம்" என்னும் தலைப்பில் இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தினால் கொழும்பில் 2004 மார்கழி 16 - 24இல் ஒழுங்கு செய்யப்பட்ட ஆய்வரங்கில் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றார். தமிழ் நெற்றின் ஆசிரியர் 'தராக்கி தர்மரெட்ணம் அவர்களுக்கு அவரது பதில்களுக்கும் குறிப்புகளுக்கும் விசேட நன்றிகள்.

Page 5
இட்டுச் செல்கின்றது என்பதனை இக்கட்டுரை விளக்குகின்றது.9 பார்வையாளர்கள் மத்தியில் தமிழ் அடையாளத்தினை வலையுருவில் வழங்கப்படுகின்ற செய்திகள் வலுப்படுத்த முடியும் என்பதனை வலையமைப்பினைப் பற்றிய தரம் சார் ஆய்வு வெளிப்படுத்துகின்றது. இலங்கை தமிழ் வலையமைப்புக்களில், பொதுவாக, வெளிப்படையாகவே தேசிய வாதம் வெளிப்படுத்தப்படுவதில்லை என்பதுடன் மேலைத்தேய ஊடகத்துறைத் தத்துவங்களின் அடிப்படையில் புறவயத் தன்மை வெளிப்படுத்தப்படுகின்றன. குடி மக்கள் யுத்தம் நடைபெறும் காலத்தில் அனேக சந்தர்ப்பங்களில் தமிழ் நெற் என்பதே வெளி உலகிற்கான தகவல் மையமாகக் காணப்பட்ட போதும் இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் இதனை மேற்கோள் காட்டுவதில் பொதுவாகவே கடினத் தன்மைகள் காணப்படுகின்றன. இன்று தமிழ்நெற் என்பது ஈழம் பற்றிய தகவல்களை வழங்குவதில் அதிகார பூர்வமான தகவல் மையங்களில் ஒன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. இருப்பினும் இக்கட்டுரையானது வலையமைப்பின் உள்ளடக்கம் பற்றிய பார்வையாளர்களின் கருத்துக்களை உள்ளடக்கவில்லை.? ஈழம் பற்றிய உணர்வுநிலையின் மீள் வலியுறுத்தலானது வெளிநாடுகளில் குடியேறியோர் மத்தியில் ஒருமைப்பாட்டின் உருவாக்கத்தினைப் பாதிக்கின்றதா என்னும் கேள்வி ஒன்றையும் இது எழுப்புகின்றது.
1. இது விடுதலைப் புலிகளின் கருத்தியலை ஆதரிக்கும் முயற்சியன்று எனும் தமிழ் நெற் ஆசிரியர் தர்மரெட்ணத்தின் பதிலை அடிப்படையாகக் கொண்டு அனுமானம் மேற்கொள்ளப்படுகின்றது. விசேடமான வினாக்களுக்கு அவரது பதிலை இணைப்பில் பார்க்கவும்.
2. இருப்பினும் இதற்கு மேலதிகமாகக் கட்டமைக்கப்பட்ட தெளிவான ஆய்வு தேவைப்படுகின்றது. யாழ். மக்களின் புலன் நோக்கு (மார்கழி 2004 இல் மேற்கொண்ட யாழ். சந்திப்பின் போது சேகரிக்கப்பட்டது) மற்றும் மெல்போனில் உள்ள இலங்கை தமிழர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் (இங்குதான் இவ்வாய்வு ஐப்பசி 2000 - பங்குனி 2004 வரை மேற்கொள்ளப்பட்டது) இவ்விடயம் தொடர்பாக மிகவும் நம்பகமான தகவல் மையமாகத் தமிழ் நெற் காணப்பட்டது.

அறிமுகம்
தேசிய அரசுக்கான அல்லது மேலாதிக்க சிறுபான்மையினருக்கு எதிரான தங்களின் முரண்பாடுகளில் பிரிவினைவாதிகள் மற்றும் சுதந்திரப் போராட்டக்காரர்கள் வலையமைப்பினைச் சிறப்பாகப் பயன்படுத்தியதனை ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன. மின் வலையின் எல்லை மீறும் தன்மையானது ஊடகத்தைக் கட்டுப்படுத்துவது கடினம் என்பதோடு இணைந்து மின்வலையினை ஒருமைப்படுத்தும் செயற்பாடுகளுக்கன்றி தீர்மானச் செயற்பாடுகளுக்குமான அதிகரித்த பாவனைக்கு இட்டுச் சென்றது. மின்வலையின் பாவனையானது விரைவானதும் சார்பளவில் எல்லைகளைக் கடந்து நம்பகமான தொடர்பாடல் வடிவம் என்பதனை வழி சிறப்பாக மின் அஞ்சல் மற்றும் மின் உரையாடல் குழுக்கள் என்பன சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கை தமிழ் சமூகமானது ஊடகத்தின் சாராம்சத்தினை மிகவிரைவாகவே சுரண்டுகின்றனர். ஈழப் போராட்டத்திற்கான மின்வலையின் பங்களிப்பானது தெரியக் கூடியதும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுமாகும் (அண்டசன், 1998; 73; சோக், 2000, சம நேரத்தொடர்பு; சோக், 2001). தமிழீழ விடுதலை புலிகளின் சர்வதேச ஒழுங்கமைப்பினையும் செயற்பாட்டினையும் ஆராய்ந்த சோக் என்பவர், புலிகளின் பிரச்சாரச் செயற்பாட்டின் குறிப்பிட்ட ஒரு பகுதி மின்வலையூடாகவே இடம் பெறுகின்றது. இது இலங்கை அரசோடு பொருத்தப்பாடற்றதாகும் (2000 சமநேரத்தொடர்பு) போருக்கான நிதி சேர்ப்பு மற்றும் தகவல் பரிமாற்றம் என்பவற்றுக்கு மின் வலையினைப் பாவித்தல் என்பதற்கும் மேலாக இலங்கை தமிழர்கள் இச்சாதனத்தினைப் போருக்கானதோர் கருவியாகவும் பயன்படுத்துகின்றனர். 1997இல் அறிக்கையிடப்பட்டதன் பிரகாரம் 'மின்வலைக் கரும்புலிகள்’ என்னும் புலிகளின் அமைப்பானது இலங்கை தூதரக மற்றும் இராஜாங்கச் செயல்களை நாளுக்கு 800 வரையான மின்அஞ்சல்களை அனுப்பிச் சீர்குலைத்தது. இந்த மின்னியல் பயங்கரவாதத் தாக்குதல் பெரும்பாலும் அமெரிக்க உளவுத்துறை அலுவலர்களால் அறிவிக்கப்பட்ட முதலாவது தாக்குதலாகும். இதன் காரணமாக இருவாரங்களுக்கு வலையமைப்பு (விற்றச்சி 2000) பாதிப்புக்குள்ளானது. இலங்கை தமிழர்களைப் பொறுத்தவரையில் தகவல்
3

Page 6
கருவியான மின்வலையமைப்பின் தோற்றப்பாட்டியல் பாவனைக்" கான காரணங்கள் பின்வருமாறு. இச்சமூகமானது பெரும்பான்மைச் சமூகத்தின் அடக்கு முறைகளையும் கொடுமைகளையும் எதிர்த்துப் போராடி வருவதோடு மேலாதிக்க ஊடகத்தில் போதுமான பிரதிநிதித்துவத்தினைப் பெற்றுக் கொள்வதிலும் பிரச்சினைகளை எதிர் கொள்கின்றன. மின்வலையமைப்பானது இவர்கள் தங்களின் கருத்துக்களை எல்லை கடந்து பரப்புவதற்கும்; இலங்கைச் சட்டங்களையும் மேலாதிக்க ஊடகத்தின் முற்சாய்வான தகவல்களையும் வெளிப்படுத்தவும் சந்தர்ப்பத்தினை வழங்கியது (மித்திரா,2001). இலங்கை, அயல் நாடான இந்திய மற்றும் சில வெளிநாடுகளின் தடைகளை விடுதலைபுலிகள் எதிர் கொண்ட காலகட்டத்தில் சர்வதேச அங்கிரகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரே ஊடகமாக மின்வலையமைப்பே காணப்பட்டது (சம்பந்தன், 2005:57). இதற்கு மாறாக புலிகளின் வளர்ச்சியும், மாற்றுக் கருத்துக்கள் மீதான இவர்களின் பொறுமையின்மையும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான மின்வலை அமைப்புக்களின் தோற்றத்திற்கும் பங்களிப்புச் செய்தது? யாழ்ப்பாணத்தில் 2004 இல் ஊடகக்கல்வியாளர்களுடனான கலந்துரையாடலானது யாழ்ப்பாணத்தில் வெளிவரும் நான்கு வெளியீடுகளும் புலிகள் சார்பானதாகக் கருதப்படுவதாகவும், சிறிதளவேனும் புலிகளுக்கு எதிராக இருப்பினும் சந்தைப்படுத்த முடியாது என்பதனை வெளிப்படுத்தியது (ரங்கநாதன், 2005:4). இதனால் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்கள் மின்வலையினை நோக்கிப் படை" யெடுத்தனர். இக்கலந்துரையாடல்கள் எதனை வெளிப்படுத்திய
3 ஒவ்வொரு அரசியல் எதிர்கருத்தும் மின்வலையில் பிரதிபலித்தது. உதாரணமாக 2004 இல் கேணல் கருணாவின் வெளியேற்றமானது ‘நெருப்பு (http://www.neruppu.com) GTGð6Juð GJIGOMGIVULJ GOLDLÙLÍNGOMGOT 2 LGST quLJITHġi தோற்றுவித்தது. இது கருணாவின் கருத்துக்களைத் தாங்கி வருகிறது. புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாகத் தோற்றம் பெற்றமையே பெரும்பாலும் வலையமைப்பு தமிழ் தேசிய வாதத்தினைக் கடத்திச் செல்வதில் வெற்றி என்னும் எனது முன்னைய விவாதமானது (ரங்கநாதன், 2000) மாற்றத்தை நாடி நிற்கின்றது. புலிகளுக்கு எதிரான கருத்துக்களும் மின்வலையில் காணப்படுகின்றது என்னும் கருத்தை நான் கூறினால், இவை புலிகள் சார்பான கட்டமைப்புக்களிலும் பார்க்க மிகவும் எண்ணிக்கை குறைந்தவையே.

தெனில் குறிப்பிட்ட கொள்கையுடைய ஒவ்வொரு தேசியவாதியும் தேசத்தை உருவாக்குவதற்கும் ஊடகத்தையே பயன்படுத்துகின்றனர்.
இக்கட்டுரையானது இத்தகைய தேசியவாதிகளின் தேசத்தின் உருவாக்கம் மற்றும் மீளுருவாக்கம் என்பதனையே கருத்தில் கொள்கின்றது. மின் அஞ்சல் அதாவது ஒருவர் ஒருவருடனான தொடர்பு போன்ற வலையமைப்புகள் பொதுவான செயற்பாடு" களை விடுத்து ஒருவர் - பலருடனான தகவல் பரிமாற்றம் என்னும் இயல்புக்கே இக்கட்டுரை முக்கியத்துவம் கொடுக்கின்றது.? இவ்வகையில் நோக்குகின்ற போது மின்வலையானது பிரிவினையினைத் தோற்றுவிப்பதைப் போன்றே ஒருமைப்பாட் டினையும் மேற்கொள்கின்றது. இது வேறுபட்ட பின்னணிகளைக் கொண்டோரை ஒன்றிணைக்காத போதும் குறித்த ஒரு தேசத்தைச் சார்ந்த மக்களை ஒன்றிணைக்கின்றது. குறித்த ஊடகமானது தேசத்தின் அல்லது தேசிய அரசின் மக்களை ஒன்றிணைப்பதற். கான திறனைக் கொண்டிருந்த போதும் தொடர்பற்ற மக்களைக் கொண்ட புதிய பூகோளச் சமூகத்தினை உருவாக்கவில்லை என்பதனை நான் எனது இன்னுமோர் ஆக்கத்தில் விவாதித்துள்ளேன். ஈழம் தொடர்பான தகவல்களை வழங்கி இலங்கை தமிழர் களை ஒன்று சேர்ப்பதன் மூலம் ஈழம்பற்றிய உணர்வு நிலையினை வலுப்படுத்தியபோதிலும் இவர்களை ஏனைய உலகில் இருந்து வலையமைப்பானது பிரித்து விடுகின்றது என்பதே இக்கட்டுரையின் எனது விவாதமாகும். )ே இத்தகைய ஒருமைப்பாடும்,
4 நான் இங்கு குறிப்பிட்ட குறித்த அளவு கருத்துக்களினதும் எண்ணங்களினதும் பரிமாற்றத்தையே குறிக்கின்றது. பொதுவாக தமிழ் தேசிய வலையமைப்பானது இடைவினையையோ அல்லது பின்னூட்டலையோ ஊடகத்தில் உள்ளடக்கவில்லை. எனது விவாதத்தின்படி இவ்வலையமைப்புக்கள் பிரதானமாக தகவல் பரிமாற்றத்தினை மேற்கொள்வதன் காரணமாக இது தகவல் பரிமாற்ற மாதிரித் தொடர்பாடல் வடிவத்தினையே உறுதி செய்கின்றது. அதிகாரபூர்வ, அதிகார பூர்வமற்ற அரசுகள் தேசிய உணர்வினைக் கட்டியெழுப்புவதற்கு வலையமைப்பினை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதற்கான பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்னோர் இடத்தில் மேற்கொள்ளப்படுகின்றது.
5. ஆசிரியரைப் பொறுத்த வரையில் தேசியவாதக் கருத்துக்களைப் பரப்புவது மின்வலைகளின் உண்மையான நோக்கமல்ல. இருப்பினும் "மின்வலையில் தகவல்கள் தேசிய அடையாளத்தைக் கட்டியெழுப்புவது" என்பது பற்றிய ஆய்வு பின்பு தரப்படுகின்றது.

Page 7
பிரிவும் பன்நாட்டவர் மத்தியில் எத்தகைய தாக்கங்களை வெளிப்படுத்தும் என்பது மேலும் பல ஆய்வுகளிலேயே தங்கியுள்ளது. இலங்கை தமிழர்களைப் பொறுத்தவரையில் வெளி நாடுகளில் வசிப்போர் மத்தியில், “தேசிய உருவாக்கத்தினைக் கட்டி எழுப்புவதில் வலையமைப்பு மிக முக்கிய கருவியாகச் செயற்படுகின்றது" என்னும் விவாதமானது அண்டசனின் (1993) முக்கிய ஆக்கத்தினை அடிப்படையாகக் கொண்டது. அண்டசன் ‘அச்சக முதலாளித்துவம் பற்றிக் குறிப்பிடுகின்றார். மிகப் பெரும் தொகையில் வெளியிடப்பட்ட பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் மக்களின் தேசத்தைப்பற்றிய உணர்வினை எவ்வாறு மாற்றின என்பதனை குறிப்பிடுகின்றார். றொபின் ஜெபரின் ‘இந்தியாவின் பத்திரிகைப்புரட்சி” என்னும் நூலின் 'குடிமகன் மற்றும் தேசியத்துவம் போன்ற கருத்துக்கள் அச்சகத்தின் மூலம் எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டன என்பதனை விளக்குகின்றார் (200:7). நான் இத்தகைய விவாதத்தினை மின் வலையுருவோடு தொடர்பு படுத்துகின்றேன்.
தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் பெரும் தொகை மக்கள் குடிபெயர்வுக் காலத்தில் மின் வலையானது அச்சகத்தின் நடிப்பங்கினை மேற்கொள்வதோடு தேசத்தில் நிலைப்பதனை மின்வலுப்படுத்துவதோடு தினமும் தேசத்தின் முக்கியத்துவத்தினையும் வலியுறுத்துகின்றது. மற்றும் பொதுமக்கள் கருத்தினையையும் அல்லது பொதுமக்களிடையே இடைவெளியினையையும் தோற்றுவிக்கின்றது (ஜெபரி,2000:11). தேசங்களை கடந்து மின்வலையானது பயன்படுத்தப்படலாம் என்பதனைக் கருதுகின்றபோது இவ்வூடகத்தின் சக்தியானது வெளிநாடுகளில் குடியேறிய இனத் - தேசிய மக்கள் மத்தியில் அடையாளத்தை மின்வலுப்படுத்துவது மிகப் பெரியதாகும். பல்வேறு நாடுகளில் வாழும் குடியேறிய தமிழர்களால் இவர்கள் பிராந்திய மையப்படுத்தப்பட்டவர்கள் என்னும் காரணத்தினால் தேசியவாதிகளைப் பொறுத்தவரையில் இன - தேசியவாதத்தினைப் பரப்புவதில் மின்வலை மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது. ஏனெனில் மின்வலையானது தொழில்நுட்ப கட்டமைப்பு மேலோங்கி காணப்படும் மேற்குலகில் மின்வலையானது நாளாந்த தகவல் மையமாக எழுச்சிக் கண்டது மட்டுமின்றி மேற்குலகில்

குடியேறியோர் மின்வலையில் மேலாதிக்கம் செலுத்தும் ஆங்கில மொழியில் தாம் தேர்ச்சி பெற்றவர்கள் என்று புகழாரம் சூட்டிக் கொள்ளவும் முடிகின்றது. இருப்பினும், இக்கட்டுரையின் இறுதியில் கூறப்படுவது போன்று இலங்கை அல்லது இந்தியா போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் மின்வலை பாவிக்கப்படவில்லை என நான் கூறவுமில்லை.
குடியேறிய ஒருவரின் கண்ணோட்டத்தில் அரசியல் மின்வலையின் பாவனையினைச் சுருக்கமாக ஆராய்கின்ற போது தேசத்தின் விடயங்களில் தொடர்ச்சியாகப் பங்கு கொள்ளும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களைப் வழங்குவதோடு அண்டசன் கூறுவது போன்று ‘நெடுந்துாரத் தேசிய வாதத்தினையும் ஊக்குவிக்கின்றது (1998:73). புதிய நாட்டில் பாரம்பரிய செய்தி ஊடகம் தேசம் பற்றி எதனையும் குறிப்பிடாத போதிலும் மின் வலையமைப்பானது அரசியல் உறுதிப்பாடின்மை காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய மக்கள் மத்தியில் பண்பாட்டுப் பரிமாணங்களையும், தேசத்துடனான உணர்வுசார் தொடர்புகளையும் பராமரிப்பதற்கும் துணைபுரிகின்றது (பகர்த்ஜிவா மற்றும் சிமித், 2001:74). வேறுபட்ட பண்பாடு, வேறுபட்ட மொழி, இன்னும் மாறுபட்ட அரசியல் புலம் என்பதனுள் நுழைந்த 'குடியேற்றவாதி” என்பவர் தான் பழக்கப்பட்டதனுள் நுழை" வதற்கு வலையமைப்பு துணைபுரிகின்றது (பகர்த் ஜீவா மற்றும் சிமித் 2001:81). மின்வலையில் சமநேரத்தில் செயற்படும் போது குறித்த நபர் தான் சார்ந்த தேசத்தில் அறிந்தவற்றுள் செல்வதனைக் குறித்துக் காட்டுகின்றது. சமூக பண்பாட்டு அன்னியமயமாக்க" மானது குடியேற்றவாதி ஒருவரை தாய் நாட்டின் பிரதிபலிப்பான மூன்றாம் இடத்தினுள் நுழையத் தூண்டுகின்றது (ஒல்டென் பேக், 1991). மின்வலையானது ஏதாவது இலக்கியமான 'ஈழம் திணை' என்பதனை உருவாக்குகின்றது. இது மக்களின் சூழல் மற்றும் அவர்களின் கூட்டுக் கற்பனைவாதம் மற்றும் ஆர்வம் என்பவற்றோடு தொடர்புபட்டதாக கவனமாகவும் நுட்பமாகவும் மக்களை ஒன்று சேர்த்து அடையாளம் பற்றிய உணர்வினை உருவாக்கு" கின்றது (சேரன், 2002,10). “ஞாபக இழப்பு அல்லது அடையாள இழப்பு என்பது விருந்தினர் சமூகத்துடன் இரண்டறக் கலப்பதன் விளைவாக உருவாகிறது என்றால் மின்வலையானது அரசியல்

Page 8
இழப்பு இடம் பெறவில்லை என்பதனை உறுதிப்படுத்துகின்றது (சேரன் 2002:17). சேரன் தனது “ஆளும் இலக்கியம், ஞாபகம், வரலாறும் தமிழ் புலம் பெயர்ந்தோரின கற்பனைவாதமும் (2002) என்பதில் தமிழ் தேசியவாதிகளால் வரலாறு ஞாபகம் என்பன சமூக அரசியல் கட்டுப்பாடாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. நான் சேரனின் “புலிகள்” என்ற பதத்தினை தமிழ் தேசியவாதிகள்’ என மாற்றியுள்ளேன். ஏனெனில் "ஈழம் மின்வலையெல்லாம்’ புலிகளின் மின்வலை எனக் கருதப்படும் என்னும் காரணத்தினால் இவ்வாறு செய்துள்ளேன். குறித்த ஒரு வரலாற்று நிகழ்வினை தமிழ் மின்வலை அமைப்புக்கள் தமக்கே ஏற்ற விதத்தில் மேலதிக விளக்கத்தினை வழங்குகின்றன; அதனை வடிவமைக்கின்றன. இயற்கையாக்குகின்றன; மற்றும் மேலாதிக்க ஞாபகம் பெரும் எடுத்துரைப்புக்களாக அமுல்படுத்துகின்றன (சேரன்,2002:11). இக்கட்டுரையானது இத்தகைய கருத்தினையே தமிழ்மின்வலை’ என்பதோடு தொடர்புபட்டதாக ஆராய்கின்றது. நான் இப்பொழுது கூட்டு ஞாபகம் உருவாக்கம் கட்டுப்படுத்துதல்,. செய்தல் பாதுகாத்தல் என்பவற்றினைச் செய்திகளை அறிவித்தல், தெரியப்படுத்தல் என்பவற்றின் மூலம் தமிழ் மின்வலையானது எத்தகைய வழிமுறைகளில் மேற்கொள்கின்றது என்பதனை எடுத்துக் காட்டுகின்றேன்.
இக்கட்டுரை மூன்று பகுதிகளைக் கொண்டது. முதலில் தமிழ் மின்வலையமைப்பானது எவ்வாறு செயற்படுகின்றது. இலங்கையின் வட கிழக்கின் தகவல்களுக்கான முக்கிய செய்தி ஊடகமாக எவ்வாறு தோற்றம் பெற்றது அதனது செயற்பாடுகள் எவை என்பதனைப் பற்றிய சுருக்கமான விளக்கத்தைத் தருகின்றேன்; இரண்டாவதாக, இவ்வாய்வில் பின்பற்றப்பட்ட முறையினைச் சுட்டிக்காட்டி இறுதியில் தமிழ் மின்வலையில் வெளிப்படுத்தப்படும் செய்திகள் ஈழ உணர்வினை எவ்வாறு மீழ் உறுதிசெய்து வளர்த்தெடுக்கின்றது என்பதனை விளக்குகின்றேன்.

பிரதான தகவல் மையமாகத் தமிழ் மின்வலையின் தோற்றமும் வளர்ச்சியும்
தமிழ் மின்வலையின் தற்போதய வடிவமானது 1996 இல் வட அமெரிக்காவில் வாழ்ந்த தராக்கி தர்மேந்திரன் என்னும் பத்திரிகையாளரால் தோற்றுவிக்கப்பட்டது. வித்துவத்திறன் கொண்ட ஒர் இலங்கை தமிழர்கள் குழு ஆரம்பத்தில் இந்த மின்வலையமைப்பினை ஆரம்பித்தன. இருப்பினும் அது வெற்றி அளிக்காததன் காரணத்தினால் அதனை மேலும் வலுப்படுத்தும் பொருட்டு தர்மேந்திரனை அதற்குள் ஈர்த்துக்கொண்டனர். மாற்றம் நிகழ்ந்த காலத்தில் அது நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் அதன் செயற்பாடுகள் 1997இல் ஆரம்பிக்கப்பட்டது. இது WWW ஊடகம் சம நேர வெளியீடுகளை மேற்கொள்ளுதல் மற்றும் மின்னியல் அஞ்சல் பட்டியல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட முற்றும் முழுவதுமான ‘மின்னியல் ஊடக ஒழுங்கமைப்பாகவே தன்னை அடையாளப்படுத்தியது. (தமிழ் மின்னலை, 2003, சமநேரம்). போர் நிறைந்த இலங்கையின் வட-கிழக்குப் பிரதேசங்களில் வெளிப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் பற்றிய காலத்தோடு கூடிய தகவல்களை துல்லியமாக வழங்குவதே இதன் பிரதான குறிக்கோளாகும். உடனடித் தகவல்களை வழங்கும் பொருட்டு இவ்வலையமைப்பானது தினமும் தகவல்களை மீழ் உறுதிப்படுத் தப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் பிரதேசத்தின் நிகழ்வுகளுக்கு ஏற்பவும் தகவல்களின் வியாபகத்தன்மையின் அடிப்படையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளில் தகவல்களை மீள்உறுதிப்படுத்” தப்படுகின்றது. புதிய தகவல்களும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றது. தமிழ் ஈழத்தின் புனர்வாழ்வு மற்றும் தமிழீழப் போராட்டத்திற்கு தொடர்புபட்ட தகவல்கள் என்பவற்றை ஊடகத்துறை சார்ந்த எடுத்துணர்வுகளாக வெளியிடுவதனை அலகாகக் கொண்டுள்ளது. இலங்கை அரசினதும் மற்றும் சட்டபூர்வமற்ற அரசொன்றைக் கிழக்கில் நடத்திவரும் புலிகளின் அதிகார பூர்வ அறிவிப்புக்" களையும் காலத்தோடு கூடிய நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புக்" களையும் இது வெளியிடுகின்றது. மின்வலையின் பிரதான பங்களிப்பானது பங்குனி 23, 2003, இல் பத்திற்கும் மேற்பட்ட விடயங்களை வெளியிட்டது. இவற்றில் ஐந்து விடுதலைப்

Page 9
புலிகளைப் பற்றியதாகும் இலங்கைப்படம், பின்னூட்டலுக்கான சந்தர்ப்பம், ஆங்கிலத்திலான வெளியீடு, தமிழில் செய்தி போன்ற ஐந்து பகுதிகளை வெளியிட்டது. வலையமைப்புக்கள் போலன்றி இவ்வலையமைப்பானது வரலாறு, போர், வீரமரணமுற்றோர், அல்லது இவ்வியக்கத்தில் தலைவர் என்பவற்றுக்கும் பிரத்தியேகமான பகுதி எதனையும் கொண்டிருக்கவில்லை. இவ்வலையமைப் பின் செய்தி வழங்கும் தன்மையே இதனை ஏனைய அரசியல் வலையமைப்புக்களில் இருந்து வேறுபடுத்துகின்றது. ஏனைய வலையமைப்புக்களோடு தொடர்புகள் ஏதுமில்லை. தமிழ் மின்வலையமைப்பானது நல்ல ஊடகத்துறையின் பண்பியல்பான புறவய நடுநிலைமை என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது (வைத்தகர், 2004). ஏனைய ஈழம் வலையமைப்புகளிலிருப்பது போன்று வெளிப்படையான தேசிய வாதம் என்பது இங்கு காணப்படவில்லை. தமிழ்வலையுரு அடிப்படையில் செய்தி வலையுருவாகவே காணப்படுகின்றது. ஆயினும் செய்தி வழங்கப்படும் தன்மையினை நோக்கின் வெளிப்படையாக அடையாளக் கட்டுருவாக்கம் என்பதே இதனைப்படிப்பதற்கான தகுதி நிலையாகக் காணப்படுகின்றது. ?
வைத்தகரின் தமிழ் மின்வலை தொடர்பான ஆய்வானது இனத்துவக் கள ஆய்வு தொடர்பாக எவ்வாறு இலங்கை தமிழர் களின் தேசியவாத ஆர்வங்களை முன்னெடுத்துச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்டது என்பதனை விளக்குகின்றது (2004:469-499). தமிழ் பிரபலத்துவ வாதத்திற்கு எதிராக மாறுபட்ட பொதுமக்கள் ஆர்வத்தின் தோற்றத்திற்கு மின்வலையமைப்பு ஆற்றிய பங்குபற்றி இவர் ஆராய்கின்றார். “சந்தைப் பிரபல்லியத்தன்மையின் வடிவம் மற்றும் அடையாளம் எதிர்ப்புப் பிரபல்லியத்தன்மையின் அடைவு என்னும் மாறுபட்ட இயல்புகளின் ஒன்றுசேருதலை’ தமிழ் மின் வலையமைப்பின் தோற்றுவிப்பாளர்கள் தவறாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதே இவர்களின் வாதமாகும் (2004:479). மின்வலையில் தமிழர்கள் தொடர்பான விடயங்களின்
6 இது தமிழ் நெற் ஆசிரியர் தர்மரெட்ணத்தினால் முன்மொழியப்பட்டது. இவர் இவ்வலையமைப்பானது பக்கச் சார்பற்றது எனவும் அனைவரது கருத்” துக்களையும் உள்ளடக்கச் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது என்பதனையும் உறுதியாகக் கூறுகின்றார். இணைப்பில் கேள்வி 9 ஐப் பார்க்கவும்.
10

மிகையான உள்ளடக்கமானது பிரதான ஊடகத்தில் ஈழம் தொடர்பான விடயங்கள் காணப்படாமையினால் எதிர் விளைவாகவே கருதப்பட முடியும் (உபயசிறி, 2004:484).
இலங்கைக்கு வெளியே இருந்து மின்வலையமைப்பில் செய்திகள் எவ்வாறு உட்புகுத்தப்படலாம் என்னும் செயல் முறை" யினை நோக்குகின்ற போது தமிழ் மின்வலையின் ஒழுங்கமைப்பாளர்கள் வழமையாக இலங்கை அரசின் வெகுசனத்தொடர்பு சாதனங்களின் மட்டுப்படுத்தல்கள் காரணமாகப் பிரச்சினைகளை எதிர்கொண்டதுண்டு என்பதனை வைத்தகர் சுட்டிக்காட்டுகின்றார். இருப்பினும் கடல் கடந்து (மெரிலாண்ட், அமெரிக்கா) பிரதேசத்தில் இவ்வலையமைப்பானது செயற்படுத்தப்படுகின்றது என்ற காரணத்தினால் இதன் அமைப்பாளர்கள் இலங்கையின் தொடர்பு சாதனச் சட்ட விதிகளை பொதுவாக அலட்சியம் செய்வதுண்டு (2004:477). வைத்தகர் தமிழ் வலையமைப்பின் நிலைப்புத் தொடர்பாக இரு விடயங்களை குறிப்பிடுகின்றார். தொழில் வித்துவத்தன்மை மற்றும் சந்தைப்படுத்தல் தன்மை (2004:478) ஒன்று இவ்வலையமைப்பானது செய்தித் தொடர்புத் தொடர்பான ஊடகத்துறைத் தத்துவங்களை மிகவும் இறுக்கமாகப் பின்பற்றுகின்றது. இவ்வகையில் இவ்வலையமைப்பானது வெளிப்படையான தேசியவாதத்தினைத் தவிர்த்துக் கொள்வதன் காரணத்தினால் இவ்வலையமைப்பானது செய்தியை வெளிப்படுத்தும் தன்மையே வைத்தகரைப் பொறுத்தவரையில் BBC மற்றும் சென்னை, இந்தியாவில் வெளியாகும் இந்து போன்ற அனேகமான ஊடகங்கள் இவ்வலையமைப்பின் தகவல்களைப் பயன்படுத்துவதற்கான பிரதான காரணமாகும்.
இதன் காரணமாக நான் இன்னும் ஒன்றைச் சேர்க்க விரும்புகின்றேன். இலங்கையில் போர்காலங்களில் நிலவிய சூழ்நிலைகளே இவ்வலையமைப்பின் தகவல்களை ஏனைய ஊடகங்களும் ஏற்றுக் கொள்வதற்கான இன்னுமோர் காரண" மாகும். இலங்கையின் வட-கிழக்கில் விடுதலைப்புலிகள் அரசினை நடாத்திய வேளையில் இலங்கையினைச் சாராத தமிழர்களின் இத்தகைய பிரதேச மக்களுடனான தொடர்பானது மிகவும் மட்டுப் படுத்தப்பட்டிருந்தது. ஊடகவியலாளர்கள் சிறப்பாக சர்வதேச ஊடகவியலாளர்கள் கொழும்பில் இருந்து இயங்கியதனாலும் வட
11

Page 10
கிழக்கோடு மிகவும் அரிதாகவே தொடர்புகொள்ள முடிந்தது. இலங்கை அரசின் அறிவுறுத்தல்களை மீறி போர் பிரதேசத்திலுள்ளவர்களை ஊடகவியலாளர்கள் தொடர்பு கொள்ள முனையும் போது ஊடகவியலாளர் மாரியோ கொல்வின் போன்று மிகவும் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேர்ந்தது. ”
தர்மேந்திரன் வலையமைப்பின் இயக்கப் பொறுப்பினை ஏற்றதும் வடகிழக்கில் இருந்து தகவல்களை வழங்கும் செய்தித் தொகுப்பாளர்களின் வலையமைப்பு ஒன்றை உருவாக்கினார். இந்நேரத்தில் தமிழ்வலையமைப்பு வடகிழக்கில் பிரதான தகவல் மையமாக எழுச்சி பெற்றது. )ே
இதுவே வைத்தகரின் கருத்துப்படி இலங்கையின் வடகிழக்" கில் தமிழ் செய்தியானது மின்வலையமைப்பில் தமிழ் வலையுரு வடிவில் ஆங்கிலத்தில் தோற்றம் பெற்றது. இலங்கையில் இருந்து மின்னஞ்சல் மூலமாகத் தெரிவிக்கப்பட்ட தகவல்களை சில மணிநேரங்களில் கனடாவிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு செய்திகளாக வலையமைப்பில் போடப்பட்டது. ஆயினும் மொழி பெயர்ப்பாளர்கள் ஐரோப்பா, அவுஸ்த்திரேலியா உட்பட உலக மெங்கும் காணப்பட்டனர். பிராந்திய நேரமாற்றங்கள் மின்வலைச் செய்திகளை முதலில் தெற்காசியப் பிராந்தியத்திற்கே எடுத்துச் செல்லத் துணைபுரிந்தது. இதன் அடிப்படையிலேயே தமிழ் மின்வலையமைப்பின் ஆய்வு அமைகின்றது.
7. பிரித்தானிய "சன்டே ரைம்ஸ்" இன் பரிசு பெற்ற ஊடகவியலாளரான மரியோ கால்வின் சித்திரை 2001 இல் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வடக்கிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள வடக்கிற்குள் நுழையும் போது அந்த இரவிலே காயமுற்றார். உள்நாட்டு யுத்தத்தினைப் பற்றிய தகவல்களை பெற முனையும் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களையே இந்நிகழ்வு எடுத்துக் கூறுகின்றது. ஒரே நாள் போரில் நூற்றுக்கு மேற்பட்டோர் மரித்தாலும் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் விடுதலைபுலிகள் விரும்பாத தகவல்களையும் பெரும்பாலும் பெற்றுக் கொள்ள முடியுமென நம்பினர் என "தி இந்து" கூறுகின்றது (சுப்பிரமணியம்,2001).
8. இந்த இணைத்தளம் தமது நிருபர்களை விசேடமாக பயிற்றுவதில்லை. ஆனால் தகைமையுள்ளவர்களை நியமித்துக்கொள்கிறது. ஐந்தாம் வினாவுக்கான விடையைப் பார்க்கவும்.
12

இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் உருவாகும் செய்திகள் “தமிழ்நெற்” இணையத்தளத்தில் ஆங்கிலத்தில் இடம் பெறுவது எவ்வாறு என விற்றேக்கர் கூறுவதை இது எமக்கு நினைவுபடுத்துகிறது. இலங்கையிலிருந்து மின்னஞ்சலூடாக செல்லும் தமிழ் செய்தி அறிக்கைகள் சில மணித்தியாலங்களில் கனடாவில் இருக்கும் ஆசிரியரினால் மொழி பெயர்க்கப்பட்டு செவ்வை பார்க்கப்பட்டு இணையத்தளத்தில் போடப்படுகிறது. அத்துடன் செய்திகளின் மொழி பெயர்ப்பாளர்கள் ஐரோப்பா, அவுஸ்திரேலியா உட்பட உலகம் முழுவதும் உள்ளனர். நேர வித்தியாசம் இணைத்தளத்துக்கு வாய்ப்பாகி விடுகிறது. இதனால் தென்னாசியப் பிராந்தியத்தில் செய்திகளை இது முதலில் வழங்கி விடுகிறது. இந்த பின்னணியில் தான் தமிழ் நெற்றின் உள்ள
டகக்கத்தின் பகுப்பாய்வு கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.
முறையியல்
இப்பகுதியில் இணையத்தளத்தின் உள்பக்கம் எவ்வாறு பகுப்பாய்வு செய்யப்பட்டது என்பது விளங்கப்படுத்தப்படுகிறது. மூன்று ஆண்டுகளாக மேற்படி இணையத்தளம் மற்றும் ஏனைய சில இணையத்தளங்களின் உள்ளடக்கம் வாசிக்கப்பட்டது. இந்த பெரிய செயற்றிட்டத்தின் ஒரு பகுதியையே இந்த கட்டுரை தருகிறது. இதில் தரப்பட்டுள்ள தரவுகள் 2003 ஜனவரிசெப்டெம்பர் மாதங்களுக்கு அதிலும் குறிப்பாக மார்ச்-ஏப்ரல் மாதங்களுக்குரியது. சில வினாக்களுக்கான விடைகளையே மேற்படி பகுப்பாய்வு தளமாகக் கொண்டுள்ளது. இவ்வினாக்கள் தேசிய அடையாளத்தை உருவாக்கி, உறுதிப்படுத்தி வெப்தளத்தி லுள்ள கூறுகளினால் வெளிக்கொண்டு வருவதை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. வில்பர் (1997) வோல்ஸ் (1993) ஆகியோரின் ‘சமுதாயம்” பற்றிய ஆய்வுகள், பிரன்ஸ்டன் மற்றும் மோர் வியின் “கற்பனையான சமத்துவங்கள்” (Imaginary Equivalance) கருத்தாக்கத்தினை உருவாக்கும் முயற்சிகள் பற்றிய வெளிப்படுத்தல்கள், போஸ்டர் (1997) /போஸ்டர் (1997) மித்ரா (1997) ஆகியோரின் இந்தியாவில் இணைய தளத்தின் தொழின்முறையியல் பற்றிய ஆய்வுகள், டிரைப் (1981) றோலார்த் (1996) கென்சன் (1996) கிறிக்லர் (1996) ஆகியோரின் “தேசம்”
13

Page 11
“தேசியம்” பற்றிய ஆய்வுகள், குப்தா மற்றும் அகர்வா (1996)லின் தேசத்தைக் கட்டியெழுப்புதல் பற்றிய பகுப்பாய்வு, ஹெபர்மாசி (1989அ, 1989ஆ)ன் பொதுக்களம் (Public Sphere) பற்றிய ஆய்வுகள் போன்றவற்றை தளமாகக் கொண்டுள்ளன.
பின்வரும் தகவல்கள் முதலில் தேடப்பட்டு பின்னர் பகுப்பாய்வு செய்யப்பட்டன. இணையத்தளத்தின் கருத்துநிலை: ஈழ இயக்கத்துக்கான நியாயங்கள் மற்றும் அதனை அடைவதற்கு விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருக்கும் முறைகள்? இணையத்தளத்தின் இணைப்புகள், பின்னூட்டல் போன்ற தொழில்நுட்பவியல் அம்சங்கள் வெப்தளத்தில் கையாளப்பட்டிருக்கும் முறை, இலச்சினைகள் படங்கள், நிறம் உட்பட முதற்பக்கத்தின் அமைப்பு, “நாங்கள், அவர்கள், எங்களுடையது, அவர்களுடையது” என்னும் அடிப்படையிலான கருத்தாடல்கள், போர் விபரங்கள், மக்களின் கொண்டாட்டங்கள் இடங்கள், தேசியத் தலைவரின் உரை உட்பட தேசவரலாற்றின் கட்டமைப்பு. குறிப்பான கேள்விகளுக்கு ஆசிரியர் திரு. தர்மரெட்ணம் அவர்களின் துலங்கல்கள் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன.
விபரிப்பு வடிவம்
பின்வரும் பகுதியில் தமிழ்நெற்றின் செய்திகளில் தேசியவாத கருத்தியல்களும் தேசத்தைக் கட்டியெழுப்புதலும் எவ்வாறு உள்ளார்ந்துள்ளன என்பது விபரிக்கப்படுகிறது. உள்ளடக்கத்தை விபரிக்கு முன்னர் அதன் வடிவத்தைப் பார்ப்போம். இணையத் தளத்தின் தொழிலில் முறையியல் பற்றிய ஆய்வுகள் இந்த ஊடகத்தின் இரு அம்சங்கள் பற்றி அழுத்தியுரைக்கின்றன: ஊடகத்தின் இடைவினையாற்றும் தன்மையும் பொதுக்களமாக பயன்படக் கூடிய அதன் ஆற்றலும் செய்தியை ஆக்குபவருக்கும் பெறுபவருக்கும் இடையிலான ஆளிடை இடைவினைகளை ஏற்படுத்தக் கூடியதான ஊடகத்தின் ஆற்றலையே இடைவினையாற்றல் என சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர் (வால்த்தர் மற்றும் பர்கூன். 1992, வில்லியம்ஸ் மற்றும் ஏனையோர்,
9. இங்கு விடுதலைப்புலிகளின் கருத்தியல் முக்கியத்துவம் பெறுகிறது. பல ஆண்டுகளாக அது இலங்கை தமிழர்களின் குரலாக தலையெடுத்திருப்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
14

1988). ரபெய்லி இடைவினையாற்றல் என்பதை பின்வருமாறு வரையறை செய்கிறார்:
ஏதேனும் ஒரு தொடர்பாடல் பரிமாற்றத் தொடர்ச்சியில் ஏதேனும் மூன்றாவது (அல்லது பின்னரான) கடத்தல் (அல்லது செய்தி) எவ்வாறு முன்னைய பரிமாற்றல்கள் அல்லது அதைவிட முந்திய கடத்தல்கள் எந்தளவுக்கு சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதை கூறுவதே இடைவினையாற்றல் (1988). வில்லியம்ஸ் மற்றும் ஏனையோர் (1988:10) செய்தி மீதான கட்டுப்பாடு மற்றும் பரஸ்பர கருத்தாடல்களில் வகிபங்குகளை பரிமாறிக் கொள்ளும் வசதி ஆகிய அம்சங்களை அழுத்திக் கூறுகின்றனர்.
பின்னூட்டலை மையமாகக் கொண்டுள்ள இடைவினையாற்றல் காரணமாக மரபுசார்ந்த ஊடகங்கள் வழங்குவதை விட மிகவும் சிறந்த பொதுக்களத்தை இணையதளத்தினால் வழங்க முடியும் என்ற கருத்து எழுந்துள்ளது. பத்திரிகை, வானொலி, தொலைக் காட்சி போன்றல்லாது இணையதளமானது இடைத்தரகர் இல்லாத உடனடி பின்னூட்டலை வழங்க முடியும். உடனடியாக செய்தியாசிரியர்களுக்கும் அதே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் எவ்வித இடைத்தரகுமில்லாத செய்திகளைக் கொண்டு செல்லும் வல்லமையை இணையதளம் கொண்டுள்ளது. பத்திரிகையில் இடவசதியின் வரையறை காரணமாக ஆசிரியர்களுக்கு கடிதங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. வானொலியிலும் தொலைகாட்சியிலும் கூட இதே நிலைதான் உள்ளது. அவர்களுக்கு வரும் நேயர் கடிதங்கள், மின்னஞ்சல்கள் தெரிவு செய்யப்படுகின்றன. இணையதளத்துக்கு இவ்வித பிரச்சினை எதுவும் இல்லை. எவ்வித தடையுமில்லாமல் இடைத்தரகர்களும் இல்லாமல் சகல தளங்களும் செய்தி ஆசிரியரைச் சென்றடைய முடியும். இணையதளத்தினால் பரந்த தகவல்களைக் கொண்டுள்ள இணைப்புகளை செய்தியுடன் தொடர்புபடுத்த முடியும். இவ்வாறாக ஹெபர்மஸ் கருத்தில் கொண்ட பொதுக்களத்தையும் அதனால் வழங்க முடியும்.
எனினும் இணையதளத்துக்கும் ஏனைய ஊடகங்களுக்கு" மிடையில் ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது. அதாவது செய்தித்தாள் வானொலி அல்லது தொலைகாட்சியில் காணப்படும் பின்னூட்டல் ஒரு செய்தியை உருவாக்கியவர் அச்செய்தியை
15

Page 12
அறிந்துள்ளார் என்பதைக் காட்டுகிறது. ஆனால் இணையதளத்தில் செய்தியை உருவாக்கியவர் அதனை அறிந்துள்ளாரா என்பது பற்றிய தெளிவு இல்லை. இணையதளத் தொழில்நுட்பம் வெப்தளத்தில் செய்தியைத் தோன்றச் செய்கிறது. இதில் செய்தியை உருவாக்கியவரின் தலையீடு இல்லாத காரணத்தினால் “உடனடி பின்னுரட்டலுக்கான வசதி” உடனடி செயற்பாட்டுக்கு வழிவகுக்கின்றதா என்னும் விவாதத்துக்கான வினா எழுகிறது.
இணையதளத்தில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பவியல் அம்சங்களின் அடிப்படையில் நோக்கும் போது “தமிழ்நெற்” இவ்ஊடகத்தின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ள போதிலும் அதனை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளது எனக் கூறுவதற்கில்லை." உதாரணமாக குரல் மற்றும் விம்பங்களை இணைத்துக் கொள்ளக் கூடிய வசதி இந்த இணையத்தளத்தில் கருத்தில் கொள்ளப்படவில்லை. “தமிழ்நெற்” வெப்தளத்தின் முதற்பக்கத்தின் இடதுபக்கத்தில் பின்னூட்டல் அனுப்பும் வசதி உள்ளது. எனினும் மக்களின் அபிப்பிராயங்களுக்கு இங்கு இடமில்லை. இந்த இடம் யாவும் “தமிழ்நெற்றின் நுகர்வுக்கு மட்டுமாகத்தான் உள்ளது போல் தோன்றுகிறது. எனவே மக்கள் இதனை எவ்வாறு பெற்றுக் கொண்டுள்ளனர் என்றோ மக்களின் பதிற்குறிகளுக்கு இந்த வெப்தளம் எவ்வாறு துலங்குகிறது என்றோ எம்மால் தெரிந்து கொள்ள முடியாது. தர்மரெட்ணம் அவர்களது கருத்துப்படி இந்த வெப்தளத்தின் ஒரே நோக்கம் செய்திகளைப் பரப்புவதுதான். செய்திகளின் துல்லியம் குறித்து வாசகர்களின் பின்னூட்டலுக்கு வெப்தளம் துலங்கினாலும் செய்திகள் பற்றிய வாசகர்களின் புலக்காட்சி குறித்து அது மெளனம் சாதிக்கிறது. இவ்வாறு
10. 2003 மார்ச் முதல் ஒக்டோபர் வரையிலான ஆய்வு காலத்தில் தொழில்நுட்பவியல் அம்சங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது அவதானிக்கப்பட்டது. பின்னர் சில அம்சங்கள் இணையத்தளத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. உதாரணமாக தலைப்புகளை நபர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்புதல்; 'அபிவிருத்தி மீதான தனிப்பகுதி, படவைப்பகம் போன்றவை இந்த ஆய்வில் உள்ளடக்கப்படவில்லை. WAPMobile பதிப்பு போன்றவை சேர்த்துக்கொள்ளப்பட்டமை இணையதளத்தின் தொழில்நுட்பவியல் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதைக் காட்டினாலும் இணையதளத்தின் அடிப்படை அம்சங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்னும் எமது வாதம் மாற்றமடையவில்லை.
16

“குரலற்றவர்களின்” குரலை உலகத்துக்கு ஒலிப்பதாகக் !! கூறிக்கொள்ளும் இந்த வெப்தளம் தனது மக்களின் எதிர்வினைகளுக்கு முற்றாகக் காதை பொத்திக் கொள்கிறது.
இதே போல இதிலுள்ள Hypertext வசதியும் மிகவும் அடிப்படையான முறையிலேயே கையாளப்படுகிறது. ஆனால் இது கருத்து நிலையில் “ஆசிரியர்-வாசகர் தொடர்பில்” ஒரு நகர்வினை காட்டுவதோடு “வார்த்தைகளுக்கிடையிலான இடைவெளிக்கு உள்ளடக்கத்தை"த் தருகிறது (எவரார்ட், 2000:155). உதாரணமாக: “கொழும்பு’, ‘ஈழம்’ ஆகிய சொற்கள் கட்டுரைகளில் தோன்றும் ஒவ்வொரு முறையும் பிரகாசமாகக் காட்டப்படுகின்றன. இவற்றை “கிளிக்’ செய்தல் இடங்களின் படங்கள் காட்டப்படுகின்றன. இந்த படங்கள் தேசத்தின் “கொடி’யை தொடர்ச்சியாக காட்டுகின்றன (மில்லிக், 1995). உண்மையில் இந்த வெப்தளமானது "விம்பங்களின் உண்மை" யான முக்கியத்துவத்தை திரையில் ஒளிரச் செய்வதால் இணையத் தளத்தை பயன்படுத்துபவர் “வாசிப்பதற்கு அகப்பட்டுக் கொள்கிறார். அர்த்தங்களை அவராகவே பெற்றுக் கொள்ள அவருக்கு எந்த வாய்ப்புமில்லை (பிரைன்ஸ்டனும் மோர்லியும், 1979; 23). Hypertext பயன்படுத்தும் முறையானது ஆசிரியர்வாசகர்-அனுப்புபவர்-பெறுபவர் என்னும் படிமுறையை ஒரு புத்தகம் அல்லது செய்தித்தாள் கொண்டிருக்கும் வழியிலேயே அமைகிறது (எவரார்ட், 2000:15).
வெப்தளத்தில் காணப்படும் இடைவினையாற்றும் மட்டங்கள் “நான் எழுதுவேன், நீ வாசிக்கவேண்டும்” என்னும் செய்தித்தாளின் பிடிவாதத்தான் உறுதிப்படுத்துகிறது. இதனடிப்படையில் பார்க்கும்போது தமிழ்நெற்’ இணையதளத்தை ஒரு செய்திகளைக் கடத்தும் ஒரு கருவியாகப் பார்க்கிறதே அல்லாமல் அதனை ஒரு தொடர்பாடல் கருவியாய் பார்க்கவில்லை (Deuse, 2003:22O).
எனவே தமிழ்நெற் கூடிய தூரத்தை அடையும் ஒரு செய்தி முகவராகவே செயற்படுகிறது. செய்தித்தாள்களுக்கு இவ்விட யத்தில் வரையறை உண்டு. ‘தமிழ்நெற் செய்திகளை எழுதும் நியமங்களையே பின்பற்றுகிறது என முன்பே குறிப்பிடப்பட்
11. பின்னிணைப்பில் முதலாம் வினாவுக்கான விடையைப் பார்க்க.
17

Page 13
டுள்ளது. எனவே செய்திகள் அச்சொட்டாக இதழியல் முறை" யிலேயே எழுதப்படுகின்றன. இதனுடைய வடிவமும் ஒரு சராசரி செய்தித்தாளின் வடிவத்திலேயே அமைந்துள்ளன. ஒரு செய்தித்தாளைப் போலவே தமிழ்நெற்றும் மிக முக்கிய செய்தியை முன்பக்கத்தில் தலைப்பாக தருவதோடு செய்தியின் முக்கிய அம்சங்களை விளக்கும் ஒரு விளம்பரத்தையும் கொண்டுள்ளது. ஏனைய செய்திகள் அவற்றின் கால அடிப்படையில் தோன்றுகின்றன. கட்டுரையுடன் ஒரு படமும் உள்ளதாகக் காட்டும் குறி யீடும் உள்ளது. முன்பக்கத்தின் எஞ்சிய ஏற்பாடுகளும் காட்டப்படுகின்றன. வலது புறத்தில் படங்களுடனான செய்திகளும் உள்ளன. ஆக தமிழ் நெற்’ ஒரு மெய்நிகர் செய்தித்தாள். படங்கள், வரைபுகள் ஆகியவற்றின் பயன்பாட்டிலேயே இது ஒரு செய்தித்" தாளிலிருந்து வேறுபடுகிறது. ஒரு செய்தித்தாளைப்போல இடநெருக்கடி இல்லாத காரணத்தில் ஒவ்வொரு கட்டுரையுடனும் பல படங்களும் உள்ளன. உதாரணமாக 'தமிழர்களின் எதிர்ப்பினை தூக்கி எறிந்துவிட்டு இலங்கை இராணுவம் தடுப்பு மதில் கட்டுகிறது.”* என்னும் கட்டுரையில் தடுப்பு மதிலை அம்புக்குறி களால் காட்டும் யாழ்ப்பாணப்படம் காட்டப்படுகிறது. அத்துடன் யாழ்ப்பாண மாநகராட்சியின் காணி எல்லைகளும் காட்டப்படுகின்றன. இப்படத்தை பெருப்பிக்கும் வசதியும் உள்ளது. இன்னும் ஓர் புராணத்தையும் பார்ப்போம். “ விடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் பெண்களின் சக்தியை மாநாடு காட்டுகின்றது - கருணா”*என்னும் கட்டுரையில் மூன்று படங்கள் உள்ளன. ஒன்று விடுதலைப்புலிகளின் முன்னைய நாள் முக்கிய தலைவரான கருணாவின் படம், மற்றது தமிழீழக் கொடியை ஏற்றும் பெண் தளபதி நிலாவினி, அடுத்தது மரபுவழி நடன அணிகளுடனான ஓர் பெண். இது இணையதளத்தில் உள்ள வசதிகள் காரணமாகவே சாத்தியமாகியுள்ளது. அத்துடன் தேசியவாத கட்டுரைகளுக்கு கூடிய ஆழத்தைத் தருகிறது. நம்பகத்தன்மையற்றது என விமர்சிக்கப்படும் ஓர் ஊடகத்துக்கு இப்படங்கள் நம்பகத்தன்மையை அளிக்கின்றன.
12. http://news.tamilnet.com/art.html?catid=13&artid=8637 accessed on July 26,
2003.
13. http://news.tamilnet.com/art.html?catid=13&artid=8634 accessed on July26,
2003.
18

செய்தியை இன்னும் பரப்பக் கூடிய முயற்சியாக இந்த இணைய தளம் மின்னஞ்சல் மற்றும் அச்சுப் பிரதியைப் பெறும் வசதியினையும் வழங்குகிறது. அதற்கான நிபந்தனையும் உள்ளது: "இந்த செய்தியில் எவ்வித மாற்றத்தையும் செய்து தமிழ்நெற்’ மூலத்தைக் ' குறிப்பிட்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.’ இவ்வாறாக “ மேலாண்மை கொண்ட உலக சமுதாயம்’ எழுத்துலகத்தில் இனத்துவ அடையாளத்தைக் கோரும் தமிழ் மக்களின் பிரச்சனையினை வெளிப்படுத்துகிறது” (விற்றேகர், 2004:490). *
உள்ளடக்கம்
இனி இணையத்தளத்தின் உள்ளடக்கத்தை நோக்கி “discursive செயற்பாடு” (பாரக்கர், 1999:65) மூலமாக செய்வதற்கு இணையம் எவ்வாறு உதவுகிறது என்பதை பகுப்பாய்வு செய்வோம். வலிமை மிகுந்த ஊடகத்துக்குள் எவ்வாறு மாற்று ஊடகம் உள்வாங்கப்படுகின்றது என்பதற்கு ‘தமிழ்நெற்’ நல்ல உதாரணமாகும். இதுவரைகாலம் நிராகரிக்கப்பட்டு வந்ததை கவனம் செலுத்துவதன் மூலம் இந்த இணையத்தளம் அநாதரவானவர்களின்’ குரலாக ஒலிக்கின்றது. அது மாத்திரமல்லாது வலிமையுள்ள ஊடகத்தினால் அங்கீகரிக்கப்பட்டு மேற்கோள் காட்டப்படும் நிலையையும் எட்டியுள்ளது. இதில் வினோதமானது என்னவெனில் தமிழ்நெற்’ இணையத்தளம் தனது பக்க அரசியல் யதார்த்தத்தை பிரதான ஊடகத்துக்கு" வழங்குகிறது. (டால்கிறேன், 1991:15).
தேசத்தைக் கட்டி எழுப்புதல் என்பதை மக்களின் தேசிய அடையாளத்தை உருவாக்கிப் பேணி தேசத்தின் பொருளாதார
14. ஒருவரின் ஈ-மெயில் விலாசத்திற்கு பிரதான செய்திகளை வழங்கும் வசதி, அபிவிருத்தி பற்றிய தனியான பகுதி, படங்களை உள்ளடக்கிய பகுதி போன்ற, இணையத்தளத்தில் உள்ள ஏனைய அம்சங்கள் இக் கட்டுரையில் விவாதிக்கப்படவில்லை.
15. ஆசிரியர் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இந்த இணையதளத்தின் உள்ளடக்கத்தில் நாம் மேற்கொண்ட ஆய்வு, தமிழ்நெற்றானது ஒதுக்கப்பட்” டுள்ள இலங்கை தமிழ் சமுதாயத்தில் மேலாண்மை கொண்டுள்ள விடுதலைப்புலிகளின குரலையே ஒலிக்கச் செய்கிறது என்பதைக் காட்டுகிறது. எனினும் இணையதளத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான சிறுபான்மைக் குரல்களும் ஒலிக்கின்றன என்பது முன்னரே குறிப்பிடப்பட்டது.
19

Page 14
உட்கட்டமைப்பை கட்டி எழுப்பும் முயற்சி என்பதை நாம் ஏற்றுக்" கொண்டால் ‘தமிழ்நெற்’ ஒரு முக்கிய வகிபங்கை கொண்டுள்ளது. ஆனால் இது தனது இணையதளத்தில் ஏற்கப்பட்ட நோக்கம் அல்ல என அதன் ஆசிரியர் அடித்துக் கூறுகிறார்.
ஈழம் எவ்வாறு ஆட்சி செய்யப்படுகிறது. தமிழர்கள் தமது தேசத்தின் எதிர்காலத்துக்கு என்னென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் போன்றவை இணையதளத்தின் கருத்தாடல்களில் ஒரு பகுதியாக இருக்கின்றன. இவை வாசகர்கள் மத்தியில் தேச உணர்வை மீள உறுதிப்படுத்தக் கூடியவை. முதலில் விடுதலைப் புலிகளின் அறிவிப்புக்கள் செய்தியுடனோ அல்லது செய்தி யாகவோ கூறப்படுகின்றன. “தமது கொள்கையை மக்கள் மனதில் விதைக்க” விடுதலைப்புலிகளுக்கு கருவியாக 'தமிழ்நெற் பயன்படுகிறது (அல்பா மேற்கோள் காட்டியப்படி ஹேய்ஸ், 1968:6). ஏற்றுக் கொள்ளப்படும் தன்மை மற்றும் மேலாண்மைத்துவம் ஆகியவற்றைக் கொண்டுள்ள தமிழ்நெற் வெறித்தனமான தேசியவாதத்தை கொண்டிருக்கவில்லை. எனவே தமிழ்நெற்றின் செய்தி சக்தியுள்ளதாக இருக்க முடிகிறது.
அடுத்ததாக “பொது அனுபவம் மற்றும் விதிவழி துன்பம்” ஆகியவற்றின் ஊடாக தேசம் மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது (எக்ரன், 1996:51). கருத்தாடல்களில் தேச மக்கள் ‘நாம்’ எனவும் அந்நியர்கள் 'அவர்கள்’ என குறிப்பிடப்படுவதும் முக்கியமானது. இவ்வாறு ஈழமக்களின் ‘உள்வாங்கிய சொற்கள்’ (மெக்றொபர்ட்ஸ், 2001 : 162) தேசத்தின் போராட்டத்தில் வாசகர்களையும் ஈடுபடுத்துகிறது. இணையத்தளத்தின் பெயரிலேயே ‘தமிழ் இருப்பது இதனை காட்டிநிற்கிறது. இப்பெயருக்குப் பின்னால் எவ்வித “தத்துவார்த்த அல்லது கருத்தியல் முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகள்’ எதுவுமில்லை என ஆசிரியர் குறிப்பிட்ட போதும் ஒன்றை நாம் ஞாபத்தில் கொள்ள வேண்டும். “சகல தமிழரையும் இணைத்துள்ள அதே நேரத்தில் உலகெங்கும் வாழும் பெரும்பான்மையான தமிழர்கள் இதில் உள்வாங்கப்படவில்லை"
தனித்துவமான இலங்கை தமிழர் அடையாளமானது இவ்வாறு சகல தமிழரையும் உள்வாங்கும் நோக்கத்துடன் விரிவுபடுத்தப்படுவதாகும். இணைய தளமானது பயன்படுத்து
16. பின்னிணைப்பில் முதலாம் வினாவுக்கான விடையைப் பார்க்கவும்.
2O

வோரின் பெளதீக இருப்பிடத்தை முக்கியமற்றதாக்குகிறது என்பது உண்மையே. ஆனால் பிராந்திய செய்தியினை உலகெங்கும் கொண்டு செல்வதை இந்த இணையத்தளம் நோக்கமாகக் கொண்டிருப்பினும் அது வெளிநாடுகளில் வாழும் தமிழர்களையே குறிப்பாக சுட்டி நிற்கிறது. தமது பிறந்த இடத்திலிருந்து பிடுங்கி எறியப்பட்டு தமது உறவுகளிலிருந்து விலக்கப்பட்டு வாழும் தமிழர்களுக்கு இணையத்தளம் மூலமாக உருவாக்கப்படும் தேசியவாத அடையாளமும் அந்த அடையாளத்தில் ஒரு மகிழ்ச்சியையும் வழங்குகிறது (புருய்லி, 1996:154). ஒரு தகவல் ஊடகம் என்றளவில் இலங்கையில் இது எந்தளவுக்கு காத்திரமான ஊடகமாக விளங்குகிறது என்பது ஆய்வுக்குரியது. இலங்கையில் 19 மில்லியன் மக்களில் 121,500 பேர் இணையதளத்தைப் பயன்படுத்துகின்றனர். எனினும் இந்த இணையத்தளம் வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர் சமுதாயத்தையே மையமாகக் கொண்டுள்ளது (உபயசிறி, 2004:486).
இந்த இணையத்தளம் வடக்கு கிழக்கைத் தனியாகக் காட்டும் தேசப்படங்களைத் தருகிறது. ஈழத்தின் தேசப்படம் “யதார்த்தத்தை விஞ்ஞானபூர்வமாகக் காட்டுகிறது. புறவயமாக “அங்கே” ஏற்கெனவே காணப்படுகின்ற ஒன்றை வெளிப்படுத்துகிறது’ (அண்டர்சன் மேற்கோள் காட்டியுள்ளவாறு தோங்சாய், 1991 :173). ஈழம் என்பது “மாற்று எதுமில்லாத இயற்கையான, வியாபகரமான, சவால் விடுக்க முடியாத” அந்தஸ்தினை பெற்றுள்ளது (மிஸ்கே,1987:290). தமிழீழ மக்களின் இருப்பு என்பதே “ஏனைய குழு’ ஒன்றும் அதாவது சிங்களவர்கள் இருப்பதைக் காட்டுகிறது. இலங்கை தமிழர்கள் “நாங்கள்” ஆக குறிப்படும் போது ‘அவர்கள்’ என்பது “ஒடுக்கு முறையையும் அடக்கு முறையையும் கையாளும் மேலாண்மை கொண்ட இனவெறிபிடித்த” இலங்கை அரசாங்கத்தைக் குறிக்கிறது. சிங்கள சமுதாயமும் அவர்களது இனத்துவ "எதிர்ப்பும்’ இந்த கருத்தாட லில் தொடர்ச்சியாகவே விலக்கி வைக்கப்படுகின்றன (உபயசிறி, 2004:484). தனது “புறவயமான நடுநிலை”யைக் காட்டுவதற்காக தமிழ்நெற்’ ஒரு சாராருடன் வெளிப்படையான அடையாளத்தை காட்டிக் கொள்வதில்லை. ஆனால் ஆழமாக பகுப்பாய்வு செய்யும் போது அது இலங்கை தமிழர்களுக்கு சார்பாக இருப்பதைக்
21

Page 15
காணமுடியும். உதாரணமாக: 2003 மார்ச் 30 ஆம் திகதி “தமிழர்களின் எதிர்ப்புவினைத் தூக்கி எறிந்துவிட்டு இலங்கை இராணுவம் பாதுகாப்பு மதில் கட்டுகிறது” என்னும் செய்தியில் தமிழ் தேசிய கூட்டணியின் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் மேற்கோள் காட்டப்படுகிறார். ஆனால் இலங்கை இராணுவத்தின் மேற்கோள் காட்டப்படவில்லை." அதேபோல் 1990 இலும் பின்னர் 2000 இலும் "யாழ்ப்பாண கோட்டை கைப்பற்றப்பட்டது"திரும்பத் திரும்ப கூறப்படுகிறது. ஆனால் 1995 இல் ஏற்பட்ட யாழ்ப்பாண வீழ்ச்சி பற்றி ஒன்றும் கூறப்படவில்லை. “வாகனேரி வயல் நிலங்களில் விவசாயம் அனுமதிக்கப்பட்டுள்ளது.”* என்னும் செய்தி “முஸ்லிம்களுக்கு சொந்தமான 90 வீத விவசாயக் காணிகளில்” விடுதலைப்புலிகள் விவசாயம் செய்ய அனுமதித்த போது வெளியிடப்பட்டது. இச் செய்தியானது ஈழத்தைக் கட்ட மைப்பதில் முஸ்லிம்களை சேர்த்துக்கொள்ளும் வெளிப்படை யான முயற்சியாகும். இதில் சொல்லப்படாத விடயம் ஈழப் போராட்டத்தில் முன்னர் முஸ்லிம்களை ஒதுக்கி வைத்தமையாகும். *
17 யாழ்ப்பாணத்தின் ஊடக நிலையத்தில் ஊடகவியலாளருடன் ஒரு முறை நடந்த கலந்துரையாடலில் இந்த விடயம் கொண்டுவரப்பட்டபோது இங்குள்ள இராணுவ அதிகாரிகள் கதைப்பதற்கு அல்லது படம் பிடிக்கப்படுவதற்கு மறுக்கிறார்கள் என கூறப்பட்டது. இதற்குக் காரணம் இராணுவம் அல்லது விடுதலைப்புலிகள் மீதுள்ள அச்சம் காரணமாகும் எனவே ஒரு பக்க செய்தியுடன் மாத்திரம் திருப்திப்பட்டுக் கொள்ளுமாறு அவர்கள் நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறார்கள்.
18 http://news.tamilnet.com/art.html?catid=13&artid-8629 accessed on March 29,
2003.
19 10 ஆம் வினாவுக்கான தனது விடையில் ஆசிரியர் முஸ்லிம்களை அல்லது இலங்கையர்களை இணையத்தளம் ‘அசட்டை’ செய்வதாகக் குறிப்பிடுகிறார். இந்த கட்டுரை அவ்வாறு கூறவில்லை. இந்த இணையத்தளத்தின் கருத்தாடல் சிங்களம் பேசும் இலங்கையர்களை விலக்கிவைப்பதாகவே குறிப்பிடப்பட்டது. பொதுவாக இலங்கை இராணுவமும் அரசாங்கமும் இப்பிரிவினரைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கொள்ளப்பட்டு இக்கருத்து முன்வைக்கப்படுகிறது. அதேபோல முஸ்லிம்களைப் பற்றிய கருத்துக்கு எதிர்ப்பில்லை. அவர்கள் அண்மைக் காலத்திலேயே உள்வாங்கப்படுகின்றனர் என்பது எமது அவதானமாகும்.
22

மொழிரிதியாக முஸ்லிம்கள் உள்வாங்கப்படும்போது அதற்கு முரணாக இலங்கை இராணுவம் விலக்கிவைக்கப்படுகிறது. இராணு வத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கும் வெளிப்படையான வாசகங்கள் இல்லாத போதும் 2003 மார்ச் 30 கட்டுரையில் (இராணுவத்தின் பாதுகாப்பு மதில்) பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது:
யாழ்ப்பாண மாநகரசபை வளவு மற்றும் கோட்டையை உள்வாங்கி இலங்கை இராணுவம் அமைக்கும் பாதுகாப்பு மதில் யாழ்ப்பாண கடனிரேரி ஊடாக ஒரு முழுமை" யான பாதுகாப்பு வேலியாக அமையும். இது பிரதான நிலப்பகுதிலிருந்து வரும் எத்தகைய தாக்குதலையும் தாக்குப் பிடிக்கும். இது யாழ்ப்பாணத்தை பொருளாதார ரீதியாக அபி. விருத்திசெய்வதைவிட இராணுவரீதியாக உறுதிப்படுத்துவதே கொழும்பின் நோக்கமாகும். என்பதைக் காட்டிநிற்கிறது. என கடந்தவார தமிழ் பத்திரிகைகள் கருத்து தெரிவிக்கின்றன. இங்கு தமிழ்நெற் உள்ளிட்ட தமிழ்ப்பத்திரிகைகள் இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணத்தை பொருளாதாரரீதியாகக் கட்டி எழுப்புவதை விடுத்து இராணுவத்தை இங்கு நிலைப்படுத்துவதிலேயே கவனமாக இருப்பதாக கூறுகின்றன என்னும் கருத்து முன்வைக்கப்படுகிறது. இங்கு இலங்கை இராணுவத்தின் கருத்து பெறப்படுவதில்லை. ஆனால் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினரின் சொத்துக்களை 'தன்னிச்சையாக’ ‘சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்து பேசாமல் பிடுங்குவதைப் பற்றி குற்றம் சாட்டுவது” மேற்கோள் காட்டப்படுகிறது. இலங்கை இராணுவத்தை நேரடியாகக் குற்றம் சாட்டாவிட்டாலும் குடியேறிய ஒருவர் தனது வலது கையை இழக்கும்போது மன்னார் உயர் பாதுகாப்பு வலயம் பற்றி பேச்சுவார்த்தை நடக்கிறது எனக் கூறும் ஒரு செய்தி இலங்கை இராணுவம் இப்பகுதியிலிருந்து வெளியேறும் போது சுத்திகரிக்காமல் சென்று விட்டது என மறைமுகமாகக் குற்றம் சாட்டுகிறது. 2003 ஏப்ரில் 24 ஆம் திகதி சமாதான ஒப்பந்தத்துக்குப் பின்னரும் ‘வடக்கு கிழக்கில் இலங்கை இராணுவம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில்” ஈடுபட்டுள்ளதாக இணையத்தளத்தில் ஒரு செய்தி வந்தது. விடுதலைப் புலிகளின் நீதித்துறை தலைவரை இச் செய்தி மேற்கோள் காட்டியது. இதேபோல யாழ்ப்பாணத்துக்கு மரங்கள் கொண்டு செல்வதை இலங்கை கடற்படை
23

Page 16
தடுப்பது பற்றியும் 2003 ஏப்ரில் 23 ஆம் திகதியும் “இலங்கை இராணுவத்தினால் தமிழ் சிவிலியன் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி 2003 ஏப்ரில் 18 ஆம் திகதியும் மற்றும் யாழ்ப்பாண பாடசாலைகளில் தொடர்ந்தும் இராணுவம் தங்கி நிற்பது பற்றியும் தொடர்ச்சியாக செய்திகள் வந்தன. இவை யாவும் இணையத்தளம் இலங்கை இராணுவத்தை 'அந்நியப்படுத்து’ வதற்கு உதாரணங்களாகும். இங்கு குறிப்பிடவேண்டிய விடயம் என்னவெனில் தமிழ்நெற்றை உருவாக்கி நடத்துபவர்கள் பின்னணியிலேயே இருக்கின்றனர். மற்றவர்களால் முன்வைக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மிகக் கவனமாக தெரிவு செய்யப்பட்டு மூடி மறைக்கப்பட்டு அவை தமிழ் தேசியவாதமாக முன்வைக்கப்படுகின்றன.
தேசத்தின் கலாசாரம் பற்றி இணையத்தளத்தில் நேரடியாக செய்திகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் நெற் என்பது “செயற்றிட்ட அடையாள உருவாக்கத்தின்” விளக்கமாகும். அதாவது சமூக உறுப்பினர் தமக்கு கிடைக்கக் கூடிய கலாசார சாதனங்களைக் கொண்டு புதிய அடையாத்தைக் கட்டி எழுப்புகின்றனர். அது சமூகத்தில் அவர்களது நிலைமையை மீளக் கட்டி எழுப்புகிறது” (பீநிகர்,1986:7). இதில் வேடிக்கையான விடயம் என்னவெனில் பின் நவீனத்துவ கருவியான இணையதளம் தேசத்தின் கலாசாரத்தின் பழைமையை வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுவதாகும். 2003 மார்ச் 30 இல் தமிழ்நெற், வரலாற்று பழம்மிக்க கோணேஸ்வரம் தேர்த்திருவிழா திரும்பவும் நடத்தப்படுவது பற்றிய ஒரு செய்தியை வெளியிட்டது.?? இத்திருவிழா கடைசியாக கொண்டாடப்பட்டது கி.பி. 1624 இல் ஆகும். இச்செய்தியில் புதிதாக உருவாக்கப்பட்ட தேர் பற்றியும் குறிப்பிடப்பட்டது. இதுவே 2001 பெப்ரவரி போர் நிறுத்தத்திற்குப் பின்னர் இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது கலாசார நிகழ்வாகும். இச்செய்தியுடன் புதிய தேரின் படம் வெளியிடப்பட்டது. இது கலாசார தேசியவாதமாகும். “மக்களின் சலாசார அடையாளம் சரிவடையும் போது அல்லது அச்சுறுத்த" லுக்கு உள்ளாகும் போது அதனை உருவாக்கி, பேணி, உறுதிப்படுத்தி தேசிய சமுதாயத்தை மீளுருவாக்கம் செய்வதே
20 http://news.tamilnet.com/art.html?catid=13&artid=8636 accessed on March 31,
2003.
24

கலாசார தேசியவாதமாகும்” (கஸ்ரெல்ஸ்,2000:22). இதைப் போல 2003 மார்ச் 30 ஆம் திகதி “சுதந்திரப் போராட்டத்துக்குப் பின்னால் பெண்களின் சக்தியை மாநாடு வெளிப்படுத்துகிறது - கருணா” என்னும் தலைப்பில் வெளிவந்தது. இது கொஞ்சம் வித்தியாசமான “சீர்திருத்தப்பட்ட” கலாசாரத்தின் விளக்கமாகும். இங்கு பெண்களுக்கு சமமான கெளரவம் வழங்கப்படுவதோடு தேச செயற்பாடுகளில் பங்களிப்பும் வழங்கப்படுகிறது. இச்செய்தியின் முதற்பகுதி சமாதானப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் பற்றி கூறினாலும் இத்துடன் இணைக்கப்பட்டிருந்த படம் பாரம்பரிய உடைகளுடன் பெண்கள் குழு நடனம் ஆடுவதையும் பெண் தளபதி ஈழக் கொடியை ஏற்றுவதையும் காட்டியது. இது தேசத்தைக் கட்டி எழுப்பும் அபிலாஷையைக் காட்டுகிறது; அதாவது கலாசார வேர்களை மறந்துவிடாத அபிவிருத்தி முயற்சி. பெண்களை பற்றிய இவ்வாறான விபரிப்பு தமிழ் சினிமாவின் பெண்கள் பற்றிய பிரபலமான கலாசார கருத்துருவாக்கத்துக்கு எதிரானது மட்டுமல்ல, பாலியல், திருமணம், பால்நிலை வகிபாக எதிர்ப்பார்ப்புகள் தொடர்பான மேற்கத்தைய விழுமியங்களுக்கும் எதிரானது. உலகெங்கும் வாழும் தமிழ் பெண்கள் இந்த விழுமியங்களின் செல்வாக்குக்கு உட்பட்டிருக்கவில்லை எனலாம்.
யுத்த நிறுத்தம், அரசியல் தீர்வுக்கான நகர்வு போன்றவற்றை பொருளாதார ரீதியாக ஈழதேசத்தைக் கட்டி எழுப்பும் முயற்சி இதனை இணையதளத்தில் கருத்தாடலின் தொனிப்பொருள் ஆக்கின. இதற்கு நல்ல உதாரணம் 2003 மார்ச் 30 ஆம் திகதி வெளிவந்த செய்தியாகும். “முல்லைத்தீவு பாடசாலை சிறார்கள் மாட்டுவண்டியில் பயணம்.”* போரினால் பாதிக்கப்பட்டு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பும் வடக்கு கிழக்கில் பிள்ளைகளை பாடசாலைக்கு கொண்டு செல்ல மாட்டுவண்டி பயன்படுத்தப்படுகிறது. 2003 ஏப்ரில் 29 ஆம் திகதி யாழ்ப்பாணம் மூளாய் ஆஸ்பத்திரியில் அலுவலர்களும், உபகரணங்களும் தேவை என தமிழ் நெற் கூறியது. * 2003 ஏப்ரில் 19 ஆம் திகதி ஏறாவூர் நீதிமன்ற
21 http://news.tamilnet.com/art.html?catid=13&artid=8631 accessed on March 31,
2003.
22 http://news.tamilnet.com/art.html?artid=8870catid=13 accessed on April 29,
2003.
25

Page 17
கட்டிடத்தொகுதி புதுப்பிக்கப்படவேண்டும் என்னும் செய்தி வெளிவந்தது.* தேசத்தைக் கட்டி எழுப்புவதற்கும் அபிவிருத்திக்கும் உள்ள ஒன்றிணைப்பு (குப்தாவும் அகர்வாலும், 1996 :39). இத்தகைய அறிக்கைகள் மூலம் வலியுறுத்தப்பட்டது. திருகோணமலையில் போஷாக்கு குறையை நீக்குவதற்கு ஜெர்மன் உதவி, தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் தொழில்நுட்ப நிறுவனத்துக்கான அனுசரணை போன்ற செய்திகள் (2003 ஏப்ரில் 29 ஆம் திகதி) இதற்கு இன்னும் சில உதாரணங்கள்." இத்தகைய செய்திகள் “விடுதலைப் புலிகளின் இருப்புக்கு உறுதியான சான்றாக” இருப்பதோடு தொடர்ந்தும் அவர்கள் இருக்கப் போவதற்கும் குறிகாட்டியாகவும் உள்ளது (ராஜகோபாலன், 2002; 101). இந்த கருத்தாடலானது இன்னும் உருவத்தைப் பெறாத தமிழீழ தேசத்தை வெளிப்படுத்துவதற்கும், பிரசாரப்படுத்துவதற்கும் உதவுகிறது. இவ்வாறாக செய்திகளின் தெரிவு, நடுநிலைத்தன்மையைக் காட்ட முற்படும் செய்திகள், கட்டுரைகளின் ஒழுங்கமைப்பு, அவற்றுக்கான உள்ளக தேசத்தை உருவாக்க பங்களிப்பு செய்கின்றன.
தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பிரிக்கமுடியாத அம்சம் தேசத்தின் வரலாற்றைக் கட்டி எழுப்புவதாகும். வரலாற்றைக் கடத்துவதில் இணையதளம் மிகவும் பொருத்தமானது. ஏனெனில் இந்த ஊடகமானது பல்வேறுவிதமான Oral மற்றும் கட்புல சாதனங்களை பயன்படுத்த வழிசெய்வதுடன் நிரந்தரமான மற்றும் மாறக்கூடிய செய்திகளை சேர்த்துக் கொள்ள உதவுகிறது. அச்சுப் பிரதிகளில் உள்ள நிரந்தர குறிப்புகளுக்கும் இலத்திரனியல் வடிவிலுள்ள நடைமுறை தொடர்பாடலுக்குமிடையிலுள்ள வேறுபாடுகளை இணையதளம் மயங்கச் செய்கிறது (போல்ரர், 1991:2). இந்த ஊடகமானது “பொது விதி" பற்றிய “ பொது அனுபவங்’களை வெளிப்படுத்தவும் ஒருவருக்கிடையிலான இடைவினையை வசதிப்படுத்தவும் மிகவும் பொருத்தமானது (அக்ரன், 1996:51). இவ்வாறாக இணையதளத்தின் தொழில்நுட்பவியல் முதன்மைநிலை விரிவாக்கத்துக்கான ஒர் ஊடகமாகத்
23 http://news.tamilnet.com/art.html?artid=8817&catid=13 accessed on April 19,
2003.
24 http://news.tamilnet.com/art.html?artid=8877&catid=13 accessed on April 29,
2003.
26

தொழிற்படுகிறது. “இயற்கையான ஒழுங்கமைப்பு” போல் தோன்றும் இசைகளை தமிழ்நெற் வழங்குகிறது. இந்த சூழ்நிலையில் இலங்கை அரசுடன் தொடர்புடைய செய்திகளை வேண்டுமென்றே பகிஷ்கரிப்பதன் மூலம் தமிழர்களும் சிங்களவர்களும் இரண்டு வேறுபட்ட தேசங்களை உருவாக்குகின்றனர். ஈழத்தில் மாத்திரம் தனது பார்வையை குவிப்பதால் தமிழ்நெற் இரண்டு தேசங்களுக்குமிடையிலான வித்தியாசம் இயற்கையானது எனக் காட்ட முயல்கிறது. இந்த இரண்டு தேசங்களும் இன்னும் இலங்கை தேசத்தின் பகுதிகளாகவே உள்ளன என்னும் உண்மை இங்கு முற்றாக மறுக்கப்பட்டுள்ளது. இங்கு அனுமானிக்கப்படுவது என்னவெனில் தமிழர்களுக்கும் சிங்களவர்ளுக்குமிடையில் எந்த தொடர்புமில்லை; அவர்கள் தமிழர்களை ஒடுக்குவதைத் தவிர வேறெதுவும் அவர்களைப் பற்றி சொல்வதற்கில்லை என்பதாகும்.
தேசம் இன்று எவ்வாறு உள்ளது என்பதன் அடிப்படை யிலேயே இணையதளம் செய்தி வெளியிடுகிறது. கடந்த கால நாட்களில் தேசம் எவ்வாறு இருந்தது. என்பது பற்றி எதுவும் கூறப்படுவதில்லை; அரசின் “நிகழ்கால சமநிலையின்மை" பற்றி கூற முற்படுகையில் “கடந்த காலத்தின் ஆரம்பசமநிலை” பற்றி கூற முயற்சிக்கப்படுகிறது. அந்நேரத்தில் தமிழரும் சிங்களவரும் தனியான அரசியல், நிர்வாகக் கூறுகளாக வாழ்ந்தனர். நாட்டில் சமாதானமும் நிலைத்திருந்தது (ரொடொரொவ்,1990:29). 'அபிவிருத்தி தொடர்பான பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் புனர்நிர்மாணங்கள் பற்றி கூறப்படுகிறது. ஆணையிறவு ஒரு ‘போர்க்களம்’ என்னும் நிலையிலிருந்து ‘உப்பு தலைநகரமாக’ * உருமாறுதல் அம்பாறையில் நடைமுறைப்படுத்தப்படும் நீர்ப்பாசன செயற்றிட்டம்" போரினால் பாதிக்கப்பட்ட பாடசாலைக் கட்டடங்களைக் கட்டியெழுப்புதல், ஆஸ்பத்திரியினை ஆரம்பித்தல், வடக்கு கிழக்கை குரல்/தரவு வலையமைப்பூடாக இணைத்தல்'
25 http://news.tamilnet.com/art.html?artid=9780&catid=73 accessed on October
6, 2003. 26 http://news.tamilnet.com/art.html?artid=9765&catid=73 accessed on October
6, 2003. 27 http://news.tamilnet.com/art.html?artid=8127&catid=73 accessed on October
6, 2003.
27

Page 18
போன்ற பல செய்திகள் உள்ளன. வடக்கு-கிழக்கு நிர்வாகம் பற்றி கடைசி செய்தி ‘வடக்கு கிழக்கை உலகின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கக் கூடிய நன்கு திட்டமிடப்பட்ட தொடர்பாடல் வலையமைப்பை” வேண்டிநிற்கிறது. பழைய வரலாறாக எண்ணும் ஒன்றின் அடிப்படையில் நிகழ்காலத்தை விபரிப்பது ஒரு தமிழீழம் பற்றிய முதன்மை நிலையைக் கட்டி எழுப்ப உதவுவதோடு ஈழம் பற்றிய கற்பனையை இலகுவாக்குகிறது.
மண்ணை வணங்குவது உடனிணைந்த இன்னுமொரு அம்சம் மக்களை மேன்மைப்படுத்துவதாகும். இதில் பல வடிவங்கள் உண்டு. பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் தமது இழந்த பெருமையை மீட்டெடுக்கப் போராடும் உதவியற்ற பலியாடுகளாக அவர்களைக் காட்டமுடியும்; அவர்களது செழுமைமிக்க கலாசார வேர்கள் அழிக்கப்படுவதாகக் காட்டலாம்; ஒரு தேசிய அரசை உருவாக்க சோர்வின்றி பாடுபடுபவர்களாகவும் அவர்களைக் காட்டமுடியும். தமிழ்நெற் போரில் இறந்தவர்களைக் கொண்டாடும் மாவீரர் நாள் பற்றியும் தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரைபற்றியும் கிரமமாக அறிக்கைப்படுத்துகிறது. துன்பத்தையும் வேதனையும் “ஞாபகப்படுத்துவதும், “மீளுருவாக்கு”வதும் தெசிய உணர்வை எழுச்சிபெறச் செய்வதோடு தமிழர்களை பாதிக்கப்படுபவர்கள் என்ற நிலையிலிருந்து தமது சுதந்திரத்துக்காக போராடும் வீரர்கள் என்னும் நிலைக்கு உருமாற்றுகிறது.*
ஹெபர்மாஸ் எதிர்பார்க்கும் பொதுக் களமாக இந்த இணையத்தளம் செயற்படாவிட்டாலும் “தொடர்பாடல் காரணி” (communicative reason) uta, ggil 6l3FupuG)apgsi. G533glai பிரதிநிதிகள் எனப்படுவோர் தெரிவு செய்யப்பட்ட ஆவணங்களின் மீளுருவாக்கத்தின் மூலம் தேசத்துவத்தின் அடிப்படைகளை கடத்துகின்றனர். இதன் காரணமாக “மக்கள் தம்மை ஒன்றாக அடையாளம் காணும் ஏனைய வழிமுறைகளை தடுத்து விடுகின்றன’ (பில்லிக், 1995: 28). அறிக்கைகள் யாவும் தேசம் என்பது பிழைபோகாதவாறும் தன்னை ஒரு தேசிய அரசாக
28 விடுதலைப் புலிகளின் மாவீரர் வணக்கம் பற்றிய மேலதிக விபரங்களுக்கு
பீற்றர் ஷோக்ஸின் எழுத்துகளை பார்க்கவும். உதாரணமாக, http://news.tamilnation.org/ideology/schalk01.htm-43k- 4March 2005.
28

உருமாற்றுவதில் அதன் போராட்டத்தை வெளிப்படுத்தக் கூடியதாகவும் கட்டமைக்கப்படுகின்றன. "அசைக்கமுடியாத” ஆணையிறவு வீழ்ச்சியின் மூன்றாவது ஆண்டு நிறைவின் கொண்டாட்டத்தின் போது 2003 ஏப்ரில் 23 ஆம் திகதி பின்வரும் செய்தியை தமிழிநெற் வெளியிட்டது: “ஆணையிறவின் வீழ்ச்சி: விடுதலைப்புலிகளின் போரியல் ஆற்றலை மீளமதிப்பீடு செய்தல்” இந்த செய்தியில் “மூன்றாண்டுகளுக்கு முன்னர் தென்னாசியாவின் மிகப் பாதுகாப்பான இராணுவ முகாமின் இதயத்தில் விடுதலைப் புலிகள் தமது கொடியை ஏற்றினர்”.* இந்த முகாம் “ஊடறுக்க முடியாதது” என ஒரு அமெரிக்க இராணுவ அதிகாரி சுட்டிக்காட்டியிருப்பதை எடுத்துக்காட்டி விடுதலைப்புலிகளின் போராற்றல் மேலும் புகழ்ந்துரைக்கப்படுவதோடு இதனை சாதித்ததன் மூலம் இத்தகைய சிக்கலான போர் நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடிய விடுதலைப்புலிகள் தான் இன்று உலகிலுள்ள பலமான அரசு சாரா இராணுவ சக்தியாகும் எனவும் கூறப்பட்டது. (அழுத்தம் எம்மால் தரப்பட்டது). தெரிவு செய்தல் என்பது இங்கு மிகவும் முக்கியமானது. கடந்த கால மற்றும் நிகழ்கால நிகழ்வுகளில் “சில அர்த்தங்களும், நடைமுறைகளும் தெரிவு செய்யப்பட்டு முக்கியத்துவப்படுத்தப்படும்” அதே வேளையில் வேறு சில “அசட்டை செய்யப்பட்டு விலக்கப்படுகின்றன (வில்லியம்ஸ், 1980:39).
முடிவுரை
இணையதளம் என்பது தேசியவாத கருத்தியல்களை விதைத்து தேசங்களை குறிப்பாக தம்மை தேசிய அரசுகளாக மாற்றிக் கொள்ள முயலும் தேசங்களை பேணிவளர்க்கக்கூடிய மிக வலிமையான ஆயுதங்களில் ஒன்றாகும். இந்த அடிப்படையில் தமிழ்நெற் எனப்படும் செய்தி இணையத்தளம் செய்திகளை கவனமாகத் தெரிவு செய்து வாண்மைரீதியாக சமர்ப்பித்து மிக நுணுக்கமாக சந்தைப்படுத்தி ஈழம் என்னும் அடையாளத்தை உறுதிப்படுத்த முனைகிறது. இந்த ஆய்வில் சுவையான விடயம்
29 http://news.tamilnet.com/art.html?artid=8839&catid=13 accessed on april 24,
2003.
29

Page 19
என்னவெனில் தமிழ் நெற் அரசியல் இணையதளங்களில் காணப்படுகின்ற தேசியவாத கோஷங்களை வெளிப்படையாக தவிர்த்துக் கொண்டு செய்திகளை உருவாக்கி சமர்ப்பிப்பதால் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மேற்கத்தைய மாதிரிகளைப் பின்பற்றுகிறது. இதன் மூலம் தனது செய்திகளை ஈழ தேசத்தின் மக்களுக்கு மட்டுமல்லாது இதுவரை தமிழ் தேசியவாதத்துடன் பகைமை பாராட்டிய வலிமைமிக்க ஊடகங்கள் கூட அவற்றை ஏற்றுக் கொண்டு, அங்கீகரித்து, தமது செய்திகளில் ஒன்றிணைக்க வைப்பதில் வெற்றி கண்டதுதான். இதில் வேடிக்கை என்னவெனில் இந்த இணையத்தளம் ஒரு மெய்நிகர் பத்திரிகையாக இருந்து இதனை சாதிப்பதுதான். இந்த ஊடகத்தின் தொழில்நுட்பவியல் ஆற்றல்களை இது கருத்தில் எடுப்பதில்லை. இணையதளத்தில் கோட்பாட்டாளர்கள் கூறும் பொதுக் கருத்தை இது வழங்கவில்லை. ஆனால் “நாங்கள் எழுதுகிறோம்; நீங்கள் வாசியுங்கள்” என்னும் பத்திரிகைக் கொள்கையைப் பின்பற்றி இணையத் தளத்தில் ஈழதேசத்தை உருவாக்கிப் பேணிவளர்க்க தமிழ்நெற் செயற்படுகிறது. சேரன் முன்வைத்த “ஏழாம் திணை’ என்னும் அம்சத்தைப் பின்பற்றி இந்த இணையதளம் தமிழர்களின் தனித்துவ அடையாளத்தை அவர்களது கலாசாரம், வரலாற்று அம்சங்களை எடுத்துரைப்பதன் மூலம் மேம்படுத்துகிறது. அத்துடன் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளையும் செய்திகளையும் அறிக்கைப்படுத்துவதன் மூலம் அவர்களது தேசியவாத கருத்தியல்களை முன்னெடுக்கிறது. தேசத்தின் உறுப்பினர்கள் மத்தியில் மட்டுமல்லாது ஏனையோரையும் தன்னை ஏற்றுக் கொள்ளச் செய்தமையினாலேயே அதனுடைய வெற்றி தங்கியுள்ளது. ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்த இடங்களில் புதிய கலாசாரத்தை தழுவிக் கொண்ட போதிலும் தமது தாயகத்துக்குத் திரும்பிச் செல்லும் நம்பிக்கையைக் கைவிட்டுவிடவில்லை. இந்த உண்மையின் அடிப்படையில் இவ்வாறான அடையாள உறுதிப்பாடு ஏனைய கலாசாரங்களு" டனான அவர்களது ஒன்றிணைப்பை சிரமமாக்கியதா என்பது பற்றி இன்னும் ஆய்வு செய்யப்பட வேண்டிய தேவைப்பாடு உள்ளது (சேரன்,2004:1).
30

உசாத்துணைகள்
Acton, L. (1996) Nationality' in Mapping the nation, (ed.)
Balakrishnan, G. Verso, London, 17-38.
Alba, V. (1968) Nationalists without nations: the oligarchy versus the people in Latin America, Frederick A Praeger, New York, Washington, London.
Anderson, B. (1991 , second edition) Imagined communities: reflections on the origin and spread ofnationalism, Verso, London, New York. Anderson, B. (1998) Spectre of comparisons: nationalism, South East
Asia and the avorld, Verso, London. Bakardjieva, M. and Smith, R. (2001) The Internet in everyday life: computernetworking from the standpoint of the domestic user', New Media and Society, 3, 1, 67-83. Barker, C. (1999) Television, globalisation and cultural identities,
Open University Press, Philadelphia, Buckingham. Beniger, J.R. (1986) The control revolution: technological and economic origins of the information society, Harvard University Press, Cambridge, Mass Billig, M. (1995) Banal nationalism, Sage, London, New York,
New Delhi. Bolter, J.D. (1991) Writing space, the computer, hypertext and the history of writing, Lawrence Erlbaum Associates, Hove and London. Breuilly, J. (1996) "Approaches to nationalism' in Mapping the
nation, (ed.) Balakrishnan, G. Verso, London, 146-174.
Brunsden, C. and Morley, D. (1978) Everyday television:
Nationwide, British Film Institute, London.
31

Page 20
Castells, M. (1997) The power of identity: the information age, economy, society and culture, Volume II, Blackwell Publishers, Oxford, UK.
Cheran, R. (2002) 'The sixth genre: memory, history and Tamil
diaspora imagination”, Marga Institute Monograph Series.
Crigler, A.N. (1996) "Introduction: making sense of politics, constructing political messages and meanings' in The psychology ospolitical communication, (ed.) Crigler, A.N. University of Michigan Press, Ann Arbor, 1-10.
Dahligren, P. (1991) Introduction in Communication and citizenship: journalism and public sphere, (eds) Dahligren, P. and Sparks, C. Routledge, London, 1 -26.
Deuze, M. (2003) The web and its journalisms: considering the consequences of different types of newsmedia online, New Media and Society, 5, 3, 203-230.
Everard, J. (2000) Virtual states: the Internet and boundaries of the
nation-state, Routledge, London.
Fiske, J. (1987) Television culture, Metheun, London, New York.
Foster, D. (1997) Community and identity in the electronic village' in Internet culture, (ed.) Porter, D. Routledge, London, 23-37.
Ganson, W.A. (1996) “Media discourse as a framing resource” in The psychology of political communication, (ed.) Crigler, A.N. University of Michigan Press, Ann Arbor, 111-132.
Gupta, V.5. and Agarwal, B.B. (1996) Media policy and nation
building select issues and themes, Concept, New Delhi.
Habermas, J. (1989a) The structural transformation ofthe public sphere an inquiry into a category of bourgeois Society, (trans. Thomas Burger with the assistance of Frederick Lawrence) MIT Press, Cambridge, Mass.
Habermas, J. (1989b) Theory of communicative action, (trans.
Thomas McCarthy) Beacon Press, Boston.
32

Howarth, D. (2000) Discourse, Open University Press, Buckhingam
Jeffrey, R. (2000) “India's newspaper revolution: capitalism, politics and the Indian language press 1977-99, Oxford, New York.
McRoberts, K. (2001) Catalonia: nation-building without a state,
Oxford University Press, New York.
Mitra, A. (1997) “Virtual Commonality: Looking for India on the Internet' in Virtual culture: identity and communication in cybersociety, (ed.) Jones, S. G. Sage, London, 55-77.
Mitra, A. (2001) "Marginal voices in cyberspace,' Media
Communication and Society, 3,1, 29-48.
Oldenburg, R. (1991) The great good place: cafes, coffee shops, community centres, beauty parlours, general stores, bars, hangouts, and how they get you through the day, Paragon House, New York.
Poster, M. (1997) 'Internet and the public sphere' in Internet culture, (ed.) Porter, D. Routledge, London, 201-217.
Rafaeli, S. (1988) “Interactivity: from new media to communication
in Advancing communication science, merging mass and interpersonalprocesses, (eds) Hawkins, R.P., Weiman, J.M. and Pingree, S., Sage, Newbury Park CA, 110-134.
Rajagopalan, S. (2001) State and nation in South Asia, Lynne
Reiner, Boulder, Co.
Ranganathan, M. (2002) Nurturing a nation on the Net: the case of Tamil Eelam,” Nationalism and Ethnic Politics, 8, 2, 5166.
Ranganathan, M. (2003) Potential of the Net to construct and convey ethnic and national identities: comparison of the use in the Sri Lankan Tamil and Kashmir situations', Asian Ethnicity, 4,2, 265-279.
Ranganathan, M. (2005)"Lull or peace', Sunday Magazine, The New
Indian Express, Jan 9, page 4.
Sambandan, V.5 (2005) 'Setback for Tamil Tigers', Front/me,
February 26 - March 11, 2005, Page 57.
33

Page 21
Todorov, T. (1990) Genres in discourse, Porter, C. Cambridge University Press, Cambridge, New York, Melbourne, Sydney.
Tribe, K. (1981) History and the production of memories' in Popularfilm and television, (eds) Bennet, T., Boyd-Bowman, S., Merce, C. and Woollacott, J. Open University Press, London, 319-326.
Ubayasiri, K. (2004) “A virtual Eelam: democracy, Internet and Sri Lanka's Tamil struggle' in Asian cyberactivism: freedom of expression and media censorship, (eds) Steven Gan, James Gomez and Johannen, U. Friedrich Naum man Foundation, Thailand, 474-5 13.
Walls, J. (1993) 'Global networking for local development in Globalnetworks, (ed) Harasim, L. MIT Press, Massachusetts, 153-166.
Walther, J.B. and Burgoon, J.K. (1992) “Relational communication in computer-mediated interaction, Human Communication Research, 19, 1, 50-80.
Wilbur, S. (1997) 'An archaeology of cyberspaces: virtuality, community and identity' in Internet culture, (ed.) Porter, D. Routledge, London, 5-22.
Williams, R. (1980) Problems in materialism and culture, Verso,
London.
Williams, F., Rice, R.E. and Rogers, E. (1988) Research methods
and the new media, Free Press, New York.
Whitaker, M. (2004) Tamilnet.com: some reflections on popular anthropology, nationalism and internet, Anthropological Quarterly - Volume 77, Number 3, Summer 2004, pp. 469498.
Electronic sources
Chalk, P. (2000) Liberation Tigers of Tamil Eelam's (LTTE) International organization and operations: a preliminary analysis, http://www.csiscrs.gc.calleng/comment/ com77 e.html, April 8,2002.
34

Chalk, P. (2001) Conference on Tamil Tiger terrorism and the threats to security in the Asia Pacific region, http:llwww.spur.asn.au/ Peter_Chalk_transcript_ofj, roceedings 2_March_2001.htm, January 29,2002.
Gomez, J. (2003a) Policing Singaporeans on the Web, http:// www.jamesgomeznews.comliniainlindex.cfm?Sectionl) =l&ArtCat=1&ArtID=24, May 6, 2003.
Gomez, J. (2003b) Snooping and self-censorship, http:// www.jamesgomeznews.com/mainlindex.cfm?SectionlD=1 &ArtCat =1 &ArtID=31, May 6,2003.
Schalk, Peter (2003) The Revival of Martyr Cults among ilavar - Tamil Eelam, http:// www.tamilnation.org/ideology/ schalkOl ...htm - 43k - 4 Mar 2005
Subramaniam, Nirupama (2001) "Marie Colvin incident highlights restrictions on media', The Hindu, 19 April 2001, Chennai, India (http://www.hinduonnet.com, accessed April 19, 2001.
Tamilnet (2003) http://www.tamilnet.com, accessed from 2000 till
March 6, 2005.
Vittachi, I (2000) 'Tigers take Eelam to the e-waves in Sri Lanka conflict, The world paper, New York, http:// www.worldpaper.com/2000/April 00/vittachi.html, Sept 1, 2001.
35

Page 22
பின்னிணைப்பு
தமிழ்நெற் தொடர்பான வினாக்களுக்கு ஆசிரியர் தராக்கி சிவராம் அவர்களின் பதிற்குறிகள். 2005 மார்ச் 21 இல் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டது. 1. ‘தமிழ்நெற்’ என்னும் பெயரை தெரிவு செய்தமை பற்றி விளக்க முடியுமா? தமிழ்நெற் தனது கருத்தாடல்களில் தமிழர்களில் பெரும்பாலோரை ஒதுக்கியே வைத்துள்ளது. எனவே ஏன் தமிழர்கள் அனைவரையும் உள்வாங்கிய பெயரை தெரிவு செய்தீர்கள்? சர்வதேச செய்தி முகவரங்கள் கொழும்பை மையமாகக் கொண்டுள்ளதோடு இலங்கை அரசின் கருத்து நிலைகளையே அறிக்கைப்படுத்துகின்றன. எனவே தமிழர் விவகாரங்களை குறிப்பாக வடக்கு கிழக்கு செய்திகளை அறிக்கையிட ஒரு மாற்று செய்தி முகவரத்தை உருவாக்குவதே எமது நோக்கம். வடக்கு கிழக்கில் நடப்பனவற்றை துல்லியமாக அறிக்கைப் படுத்தவேண்டும்; முடிந்த வரை இலங்கையின் ஏனைய பகுதிகளின் நிகழ்வுகளையும் வெளிப்படுத்த வேண்டும். பிரதான செய்தி முகவரங்கள் பொதுவாக அசட்டை செய்யும் பிரச்சினைகள், நிகழ்வுகளை அறிக்கையிடவேண்டுமென நாம் அவாவுற்றோம். குரலற்றோர், பின்தங்கியோர் ஆகியோரது அறிக்கையிடப்படா செய்திகளில் கவனம் செலுத்துவதே எமது அவா. சுருங்கச் சொன்னால் “ஏனையவற்றை” அறிக்கையிடவே எமது நோக்கம் (sic) தமிழ்நெற் என்பது ஒரு கவர்ச்சிகரமான பெயராக தெரிந்தது. தவிர வேறு தத்துவார்த்த அல்லது கருத்தியல் சார்ந்தது போன்று நீங்கள் எதிர்பார்க்கும் எதுவும் இந்த பெயருக்குப் பின்னால் இல்லை.
36

2. தமிழ்நெற்றின் நோக்கங்களை உங்களது வார்த்தை"
களில் தயவு செய்து கூற முடியுமா? மேலே பார்க்க
3. விடுதலைப்புலிகளினால் முன்வைக்கப்படுகின்ற. தேசியவாத பிரக்ஞையை உருவாக்குவது அல்லது தேசிய கருத்தியலை பரப்புவது இணையதளத்தின் நோக்கங்களில் ஒன்றாகுமா? நிச்சயமாக இல்லை. விடுதலைப் புலிகளின் அரசியல் நோக்கங்கள் அல்லது குறிக்கோளுடன் எமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை. இது தமிழ்நெற்றின் ஆரம்பத்திலிருந்தே எமது செய்திகளைக் கொச்சைப்படுத்துவதற்கு கையாளப்படும் நச்சு பிரசாரமாகும். எமது மொழியிலும் அறிக்கைப்படுத்தலிலும் நாம் நடுநிலையாகவே உள்ளோம். இலங்கை இராணுவம், பொலிஸ் மற்றும் விடுதலைப் புலிகளுடன் நாம் எமது அறிக்கைகளை உறுதிப்படுத்திக் கொள்கிறோம் (அறிக்கைகளை சரிபார்க்கவும்). எமது அறிக்கைகளில் எமது சொந்த அபிப்பிராங்களை நாம் திணிக்க முயல்வதில்லை. நாம் நிகழ்வுகளை அறிக்கைப்படுத்தும் போது இலங்கை இராணுவம், பொலீஸ், அரசாங்கம் அல்லது விடுதலைப்புலிகள் முதலிய மூலங்களை பாரபட்சமின்றி மேற்கோள் காட்ட நாம் எப்போதுமே முயற்சிக்கிறோம். எமது அறிக்கைகளில் அல்லது கட்டுரைகளில் அபிப்பிராயங்கள் ஏதும் காணப்படின் எமது அபிப்பிராயத்தைக் கூறி எமது செய்திகளின் தரத்தைக் குறைக்காமலிருப்பதற்கு நாம் எப்போதும் கூடிய கவனம் எடுக்கிறோம்.
4. விடுதலைப்புலிகளின் நோக்கங்கள் தொடர்பான
தமிழ்நெற்றின் நிலைப்பாடு யாது? பிணக்கில் தொடர்புபட்ட இரு சாராரினதும் நோக்கங்கள் குறிக்கோள்கள் பற்றி நாம் எவ்வித நிலைப்பாடும் கொண்டிருக்க வில்லை. எமது நோக்கம் எமது ஆற்றல் மற்றும் வளங்களின் அடிப்படையில் உண்மைகளை அறிக்கைப்படுத்துவது மட்டுமே. எமது அறிக்கைகளில் ஏதேனும் தவறுகள் இருப்பின் உடனடியாகவே அவற்றை திருத்துகிறோம். அல்லது சம்பந்தப்பட்ட தரப்பினரான இலங்கை இராணுவம், விடுதலைப்புலிகள்,
37

Page 23
அரசு சாரா நிறுவனங்கள், அரசாங்கம் அல்லது சிவில் சமூகம் முதலியோர் எமது தவறுகளை சுட்டிக்காட்டினாலும் உடனே
திருத்திவிடுகிறோம்.
5. தமிழ்நெற் நிருபர்களுக்கு என்ன விதமான பயிற்சிகள்
வழங்கப்படுகின்றன?
செய்திகளின் துல்லியம், புறவலயம், உறுதிப்படுத்திக் கொள்ளல், மூலங்களை அறிதல் தொடர்பாகவே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தமிழ்நெற் மட்டுமட்டான நிறுவனங்களைக் கொண்டே இயங்குகிறது. எனவே எமது பிரதேச அறிக்கைப்படுத்தலின் தரத்தை மேம்படுத்த தொடர்ச்சியான பயிற்சியை வழங்குவதற்கு தாராளமாக முதலீடு செய்யும் நிலையில் நாம் இல்லை. எனவே தகுதியுள்ளவர்கள் என நிரூபிக்கப்பட்ட" வர்களையே நாம் எமது நிருபர்களாக நியமிக்கிறோம். எனினும் அவர்களின் செயலாற்றறிகையை நாம் கிரமமாக மீளாய்வு செய்து அவர்களின் தரத்தை மேம்படுத்த தனித்தனியாக பயிற்சிகளை வழங்குகிறோம்.
6. செய்திகளை வழங்குவதற்கு இணையதளத்திலுள்ள தொழில் நுட்ப அம்சங்களை பயன்படுத்திக் கொள்ள காத்திரமான முயற்சிகள் எடுக்கப்படுகின்றனவா? நிச்சயமாக. தமிழ்நெற்றில் மொபைல் (Mobile) மற்றும் வெப்
(Web) பகுதிகளை நாம் உருவாக்கியுள்ளோம்.
7. ‘ஆம்” எனில் எவ்வாறு? பெறப்படும் பின்னூட்டல்கள் ஏன் காணப்படுவதில்லை. கலந்துரையாடல், உரையாடல் போன்றவை ஏன் இல்லை. ஏனைய applaucus Fejdías (on line journals) sa)6T Gunta வாசகர்களினர் கருத்துக்களை நீங்கள் ஏணி வெளிப்படுத்துவதில்லை? செய்திகளை முடிந்தவரையில் துல்லியமாக அறிக்கைப்படுத்துவதுதான் எமது பணி. எமது செய்திகள் தொடர்பாக பிரச்சினைகள் ஏற்பட்டால் அவற்றை விளங்கி எம்மளவில் உறுதிப்படுத்திக் கொண்டபின்னர் உடனடியாக அவற்றை திருத்தி விடுகிறோம். (நாம் மேற்கொண்ட திருத்தங்களை சரிபார்க்கவும்)
38

8. இலங்கை அரசாங்கம் அல்லது விடுதலைப் புலிகளினால் தமிழ்நெற்றுக்கு அழுத்தங்கள் ஏற்படுகின்றனவா? ஆம்.
"ஆம்" எனில் எவ்வாறு? என்னைப்பற்றிய RSF மற்றும் CP) அறிக்கையினைப் பார்க்கவும்.
9. செய்திகளை அறிக்கைப்படுத்துவதில் புறவலயத் தன்மையும் நடுநிலைமையும் தான் முக்கிய மெனில் விடுதலைப்புலிகளுக்கு சார்பானவை ஏன் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன? வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகள் மேலாண்மை கொண்டுள்ளனர். எனவே அடிக்கடி அவர்களைப் பற்றிய செய்திகள் வருகின்றன. இலங்கை இராணுவத்தின் கருத்துக்களையும் முன்வைக்க நாம் மிகவும் முயன்றுள்ளோம். எனினும் நேர்முகம் காண்பதற்கான எமது கோரிக்கைகளை அவர்கள் அசட்டை செய்துள்ளனர். அத்துடன் எமது அறிக்கைகளை துல்லியமாகப் படிக்காத காரணத்தினால் உங்களது கேள்வியில் சாய்வு நிலை காணப்படுகிறது. ஜே.வி.பி, இலங்கை இராணுவ வடக்கு கிழக்கு தளபதிகளின் கருத்துக்கள், ஜனாதிபதி செயலகத்தின் கருத்து முதலியவற்றை நாம் எத்தனை முறை அறிக்கைப்படுத்தியுள்ளோம் என எண்ணிப்பாருங்கள்.
10. இணையத்தளத்தின் கருத்தாடல்களில் அணி மைக் காலமாக முஸ்லிம்களை “உள்ளீர்ப்பதும்” இலங்கையர்களை முற்றாக “விலக்கி வைப்பதும்” வேண்டுமென்றே செய்யப்படுகிறதா? தங்களது கருத்து படிமத்தின் வலிந்துபட்ட நியமங்களுக்குள் தமிழ்நெற்றைக் கொண்டுவருவற்கு நீங்கள் உறுதியாக நிற்பதைத் தங்களது கேள்வி வெளிப்படுத்துகிறது. உங்களது கேள்வியை மீளாய்வு செய்வதற்கு எமது பழைய கோப்புகளை ஆய்வு செய்யவும். முஸ்லிம்களை நாம் அண்மைக் காலமாகத்தான் உள்ளீர்க்கிறோம் என்பதை நாம் முற்றாக மறுதலிக்கிறோம். எமது கடந்த கால அறிக்கைகளைப் பார்க்கவும். இலங்கையர்களை நாம்
39

Page 24
முற்றாக விலக்கிவைத்திருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். தமிழ்நெற்றைப் பற்றிய கோப்பில் உள்ள எமது அறிக்கைகள் யாவற்றையும் ஆய்வு செய்யாமல் வெறுமனே கேள்வி ஞான அடிப்படையிலேயே தங்களது கேள்வி அமைந்துள்ளதாக நாம் எண்ணுவதற்குத் துணிய வேண்டியுள்ளது. எமது செய்திகளை மேலோட்டமாகப் பார்த்தால் கூட தமிழ்நெற் முடிந்தவரை இன, மத, மொழி பேதமில்லாமல் செய்திகளை அறிக்கைப்படுத்துகிறது என எவரும் புரிந்து கொள்ளமுடியும்.
40


Page 25
* Kumouron Pri. 3é1-Ts. Dam Tall: Tal P. 388. Fi

inted by
hss Private Lir" frd Strçr:", Colombo 12
Til: kiu romihhiĝĝois Hrisant.lk