கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிறகு விரிந்த காலம்

Page 1
'ഝ
|
 
 

LSLS S S S S S S S SSSSS S SSSS SS SSLSLSS
... L YYY SLL S SLLLSSLSLSSLSLSSLSLSSLSLSLS

Page 2

dfl[](b. 6ill[605 காலம்
அந்தனி ஜீவா
gN6om6oor Glealonfluff G: *அயோத்தி நூலக சேவைகள் ஐக்கிய இராச்சியம்
*சிந்தனை வட்டம்” இல 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை 20802, ரீலங்கா. தொலைபேசி O094-81-2493746 தொலைபேசி / தொலைநகல் 0094-81-2497246
‘சிந்தனை வட்டத்தின 254° வெளியீடு'

Page 3
சிறகு விரிந்த காலம்
நூலாசிரியர் : அந்தனி ஜீவா
பதிப்பு : 1ம் பதிப்பு - 26 மே 2007 இணை வெளியீடு : அயோத்தி நூலக சேவைகள்,
ஐக்கிய இராச்சியம். சிந்தனை வட்டம். 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை, ரீலங்கா. அச்சுப்பதிப்பு : சிந்தனை வட்டம் அச்சீட்டுப் பிரிவு
14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை,
ரீலங்கா. கணனிப் பதிப்பு : எஸ்.எம். ரமீஸ்தீன் அட்டை அமைப்பு : சம்பத்
ISBN : 978-955-8913-77-2 பக்கங்கள் : 68
விலை : 140.00
Siraku Virintha Kaalam Subject : Bibilography
Author : Anthony Jeeva Printers & Publishers: Cinthanai Vattam
CV Publishers (Pvt) Ltd, 14, Udatalawinna Madige,Udatalawinna 20802, Sri Lanka. Co. Publishers: Ayothy Library Services
Luton, United Kingdom. Edition: 1st Edition 26th May 2007 Language : Tamil Type Setting : S.M. Rameezdeen Cover Design : Sampath
ISBN : 978-955-8913-77-2
Pages : 68
Price : 140.00
CANTHONY JEEVA, 2007 All Rights Reserved. No part of this Documentation may be reproduced or utilised, stored in a retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise, without the prior written permission of the author.

Uólüq60)g
பிரபல எழுத்தாளரும், கலைஞரும், தொழிற்சங்கவாதியும், ஊடகவியலாளருமான ‘அந்தனிஜிவா'வினி 'சிறகு விரிந்த காலம்’ எனும் இந்நூலினை ஐக்கிய இராச்சியத்தின் "அயோத்தி நூலக சேவைகள் உடனி இணைந்து சிந்தனைவட்டத்தினி 254வது வெளியீடாக வெளியிடுவது குறித்து மிகவும் மகிழ்ச்சியடை கினிறேனர்.
இந்நூலில் ‘அந்தனிஜீவாவின் வாழ்க்கைக்குறிப்புக்கள் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. இவரின் வாழ்க்கைப் படிகள் புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கும், கலைஞர்களுக்கும், ஊடகவியலா ளர்களுக்கும் சிறந்ததொரு படிப்பினையாகும். தானி எடுத்த காரியத்தை நிறைவேற்றி வெற்றி காணிபதில் இவரது அணுகு முறைகள் நல்லதோர் உதாரணமாகும்.
மலையக இலக்கியப் பரப்புக்கு புத்துயிர் அளித்தவர்களுள் ஜீவா குறிப்பிடத்தக்கவர். மறைந்து கிடந்த மலையக இலக்கியங்க ளையும், இலக்கியக்கர்த்தாக்களையும் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரைச்சாரும். தான் ஒரு எழுத்தா ளனி என்ற அடிப்படையில் இவர் பல நூல்களை எழுதி வெளி யிட்டுள்ளார். குறிப்பாக சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற 'அக்கி னிப்பூக்கள்', ஈழத்தில் தமிழ் நாடகம், அனினை இந்திரா, காந்தி நடேசையர், மலையகமும் இலக்கியமும், மலையகத் தமிழ் இலக்கி யத்திற்கு முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பு, மலையகம் வளர்த்த தமிழ், மலையகம் வளர்த்த கவிதை, கணிடி மாவட்ட தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள், அம்மா, மலையக மாணிக் கங்கள், முகமும் முகவரியும். திருந்திய அசோகனி, நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம், மலையகத் தொழிற்சங்க வரலாறு என்பன குறிப்பிடத்தக்கவை.
03

Page 4
இதேபோல நாடகத்துறையிலும் இவரினி பங்களிப்பு விசாலமானது. 1970களில் நாடகத்துறையில் ஈடுபடத் தொடங் கிய ஜீவா இதுவரை 14 நாடகங்களை மேடையேற்றியுள்ளார். 1980களில் மலையக வீதி நாடகங்களை முதன் முதலில் நடத்திய பெருமை இவரையே சாரும். இவரால் மேடையேற்றப்பட்ட நாடகங்களுள் வெளிச்சம், சாத்தானி வேதம் ஒதுகின்றது, அக்கினிப்பூக்கள், வீணை அழுகின்றது, அலைகள் போன்றன குறிப்பிடத்தக்கவை.
இவர் தேசிய பத்திரிகைகளிலும், பிரபலமான சஞ்சிகைக ளிலும் பத்தி எழுத்தாளராக திகழ்ந்துள்ளார். இவரின் நினைத்துப் பார்க்கின்றேன், படித்ததும் - பார்த்ததும் - கேட்டதும் ஆகியன பிரபல்யமிக்கவை. மேலும் பல சிற்றிலக்கிய ஏடுகளையும், பத்திரிகைகளையும் வெளியிட்டு வரும் அந்தனிஜீவா தற்போதும் கொழுந்து இலக்கிய ஏட்டினை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கவை.
சிந்தனைவட்டத்தின் ஏனைய வெளியீடுகளுக்கு வாசக நெஞ்சங்களான நீங்கள் தந்த ஆதரவு இந்நூலுக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. S.
மிக்க நன்றி
கலாபூஷணம் பீ.எம்.புனினியாமீனி முகாமைத்துவப் பணிப்பாளர்
*சிந்தனை வட்டம்’ இல 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை 20802, ரீலங்கா. தொலைபேசி O094-8-24.93746 தொலைபேசி / தொலைநகல் O094-81-2497246
26-05-2007
O4.

மலையக எழுத்தாளர் அந்தனி ஜீவாவும், அவரது கலை இலக்கியப் பயணமும்
என். செல்வராஜா நூலகவியலாளர் ஐக்கிய இராச்சியம
நூற்றாண்டுப் பழமை மிக்க மலையகத்தின் கலை இலக்கி யத்துக்கு உயிர்கொடுத்த கலை, இலக்கியவாதிகளுள் அந்தனி ஜீவா அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர். கண்டியூர் கண்ணன், மாத்தளை கெளதமன், கவிதா ஆகிய புனைபெயர்களில் ஆரம்பத்தில் எழுதி வந்தபோதிலும் இவரது படைப்புக்களின் வாயிலாக இறுதியில் அந்தனி ஜீவா என்ற பெயரே கலை இலக்கிய அரங்கியல் துறையில் நின்று நிலைத்துவிட்டது. 45 ஆண்டு காலமாக இவரது கலை இலக்கியப் பணி ஆங்காங்கே பதிவாகி வந்துகொண்டிருக்கின்றது.
1944ம் ஆண்டு மே மாதம் 26ம் திகதி கொழும்பில் பிறந்த இவர் பாடசாலை நாட்களிலேயே பத்திரிகைத்துறையில் ஈடுபாடு கொண்டவராக விளங்கியுள்ளார். பாடசாலை நண்பர்களுடன் இணைந்து அந்நாளில் வெளியிட்ட ‘கரும்பு என்ற சிறுவர் சஞ்சிகை யின் சில இதழ்களுக்குப் பொறுப்பாசிரியராகவும் அந்தனி ஜீவா இருந்துள்ளார். அக்காலகட்டத்தில், மாணவன், தமிழருவி, திருமகன், கலைமலர், மாணவமலர், மாணவ முரசு போன்ற பல சிறுவர் இதழ்களிலும் இவரது ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 05

Page 5
தமிழருவி, மாணவன், கலைமலர் ஆகிய இதழ்கள் நடத்திய சிறுகதைப் போட்டிகளிலும் இவர் பரிசுபெற்றுள்ளார். வீரகேசரியிலும் இவரது இளமைக்காலப் படைப்புகள் வெளிவந்த சுவடுகள் காணப்ப டுகின்றன. 1964ம் ஆண்டு ஏப்ரல் 21 வீரகேசரி இதழில் இவ்வார மாணவர என்ற தலைப்பில் அந்தனி ஜீவா பற்றிய இலக்கியக் குறிப்பொன்று காணப்படுகின்றது. இளம் பேச்சாளராக இவர் சுவாமி ஞானப்பிரகாசர் நினைவுப் பேச்சுப் போட்டியில் முதற்பரிசு பெற்ற செய்திக்குறிப்பொன்றும் 1964ம் ஆண்டு வீரகேசரிச் செய்தியில் காணப் படுகின்றது.
இளவயதில் பத்திரிகைத்துறையில் இவர் கொண்ட ஈடுபாடு பின்னாளில், இலங்கை சமசமாஜக் கட்சி வெளியிட்ட ஜனசக்தியிலும், அதைத் தொடர்ந்து மலையகத்தின் சிறு சஞ்சிகைகளாக மலர்ந்த தேசபக்தன், குன்றின் குரல், கொழுந்து ஆகியவற்றிலும் ஆசிரியராகப் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. கலையையும் இலக்கியத் தையும் வெறும் பொழுதுபோக்குக்காகவன்றி, சமூக விழிப்புணர் வுக்கான ஊடகமாகக் கருதித் தன் பணியை ஆற்றும் இவர் அடிக்கடி கூறும் வாசகம், ‘கலை இலக்கியச் செயற்பாடுகள் எனக்களிப்பது ஊதியமல்ல. உயிர் என்பதாகும்.
பத்திரிகை ஆசிரியராகத் தன் மலையக இலக்கிய வாழ்வினுள் பிரவேசித்த போதிலும், அந்தனி ஜீவா அவர்கள், கட்டுரை ஆசிரிய ராக, சிறுகதை எழுத்தாளராக, நாடகாசிரியராக, நாடக இயக்கு நராக, தேசியப் பத்திரிகைகளின் பத்தி எழுத்தாளராக, நூல் வெளியீட் டாளராக என்றெல்லாம் பன்முகப்பட்ட பங்களிப்பினை இன்றுவரை வழங்கி வருகின்றார்.
அரங்கியல் துறையில் இவரது பணிகள் விதந்து கூறத்தக் கவை. இத்துறையில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் ஈழத்து நாடக மேடையில் புதிய வீச்சுக்களையும், புதிய தரிசனங்களையும் கொண்ட நாடகங்களை மேடையேற்றி வந்துள்ளார். 1980களில் மலையகத்தில் வீதி நாடகங்களை முதன்முதலில் ஆரம்பித்தவர் என்ற பெருமையை யும் இவரே பெற்றிருக்கிறார். இந்த வீதி நாடகங்களை நடத்துவதற்கு
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 06

இவர் தமிழ்நாட்டில் வீதி நாடக முன்னோடியான ‘பாதல் சர்க்காரின் பயிற்சிப் பட்டறையில் 1980இல் பெற்ற தொழில்நுட்ப அறிவு மிகவும் துணைபுரிந்திருந்தது. இவரது வெளிச்சம், சாத்தான் வேதம் ஒதுகின்றது போன்ற வீதி நாடகங்கள் முக்கியமானவை. மக்களுடன் நேரடியானதும் நெருக்கமானதுமான தொடர்பினை எற்படுத்தும் சிறந்த கலை ஊடகமான தெரு நாடகங்கள் அந்தனி ஜீவாவின் முயற்சியால் மலையகத்தில் புத்துயிர் பெற்றதெனலாம். புகழ்பூத்த சிங்கள நாடகக் கலைஞர்களான தயானந்த குணவர்த்தன, ஹென்றி ஜயசேன போன்றோரினதும், தமிழ் நாடகக் கலைஞர்களான வீரமணி, சுஹைர் ஹமீட் ஆகியோரினதும் அரங்கியல் தொடர்பு இவரது அரங்கியல் பணிகளுக்கு மெருகூட்டியிருந்தன. 1970இல் “முள்ளில் ரோஜா என்ற பெயரில் இவர் எழுதி நெறியாள்கை செய்து மேடையேற்றிய முதலாவது நாடகம் அந்தனி ஜீவாவை ஈழத்து தமிழ் அரங்கியல் உலகில் இனம் காட்டியிருந்தது. அன்று தொடக்கம் இன்று வரை சுமார் 14 நாடகங்கள் வரை இவர் மேடையேற்றியுள்ளார். நான்கு கதாபாத்திரங்களைக் கொண்ட பறவைகள', மூன்று கதாபாத்திரங்க ளை மட்டுமே கொண்ட ‘கவிதா” போன்றவை இவரது பரிசோதனை முயற்சிகளாகும்.
இவரது எழுத்தில் மலர்ந்தது தான் ‘அக்கினிப் பூக்கள என்ற மேடை நாடகமாகும். தொழிலாளர் போராட்டங்களையும் வேலை நிறுத்தங்களையும் கருவாகக் கொண்ட இந்நாடகம் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் முதலில் மேடையேற்றப்பட்டது. சுமார் 16 தடவைகள் பல்வேறு இடங்களிலும் இது மேடையேற்றப்பட்டது. பதுளையில் நடந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மகாநாட்டின் போது அரங்கேற்றப்பட்ட ‘அக்கினிப் பூக்கள்’ நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மலைநாட்டுத் தொழிலாளர்கள் உணர்ச்சி மேலிட்டால் முழக்கமிட்டு ஆர்ப்பரித்த சம்பவத்திலிருந்து இவரது நாடகங்கள் எவ்வளவு தூரம் மக்களுடன் ஒன்றிணைகின்றன என்று அறியமுடி கின்றது.
அக்கினிப் பூக்கள்', பின்னர் அதன் பிரபல்யம் கருதி நூலுருவிலும் வெளிவந்திருந்தது. இந்நூல் 1999ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலுக்குரிய அரச சாகித்திய விருதினையும் பெற்றிருந்தமை சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா O7

Page 6
குறிப்பிடத்தகுந்தது. அக்கினிப் பூக்கள், கண்டி, ஞானம் பதிப்பகத் தினால் டிசம்பர் 1999 இல் 112 பக்கங்களில் வெளியிடப்பட்டிருந்தது. தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டம் பற்றிய இந்த நாடகம் இலங்கையில்- குறிப்பாக மலையகத்திலும் தென்னிலங்கையிலும் பல தடவைகள் மேடையேற்றப்பட்டது. 11 காட்சிகளிலான இந்த நாடகத்துடன், பின்னிணைப்பாக, அந்தனி ஜீவா நெறிப்படுத்திய பிற நாடகங்களின் பட்டியலும், தினகரனில் 05.12.1986 அவர் எழுதிய நானும் என் நாடகங்களும் என்ற கட்டுரையும் அந்தனி ஜீவா பற்றிப் பிறர் வெளியிட்ட நல்ல கருத்துக்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
1974இல் இவரது சர்ச்சைக்குரிய நாடகமான வீணை அழு கின்றது என்ற சமூக நாடகம், குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளின் தலையீட்டினால், அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டது. மீனவர் பிரச்சினைகளைக் கருவாகக் கொண்ட 'அலைகள்’ என்ற நாடகம் இலங்கை கலாசாரப் பேரவையின் 1978ஆம் ஆண்டுக்குரிய தேசிய நாடகவிழாவில் இரண்டாவது பரிசினைப் பெற்றுக்கொண்டது.
அந்தனி ஜீவா முற்போக்குச் சிந்தனை கொண்ட கலை இலக்கியவாதியாகத் திகழ்வதற்கு இலங்கையின் முற்போக்கு இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் தொடர்பும், முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயற்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டமையுமே காரணம் என்று நா.சோமகாந்தன் அவர்கள், அந்தனி ஜீவாவை அட்டைப்பட நாயகனாகக் கொண்டு வெளிவந்திருந்த மல்லிகை இதழொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அறுபதுகளின் ஆரம்பத்தில் இலக்கியப் பிரவேசம் செய்திருந்த போதிலும் அந்தனி ஜீவா அவர்கள் குறிப்பிடத்தகுந்த சில சிறுகதைகளையே எழுதியிருக்கின்றார் என்று அறியமுடிகின்றது. அவரது சிறுகதைத் தொகுப்புகள் எதுவும் நூலுருவில் வெளிவர வில்லை. மலடு (ஈழநாடு), விதி (சிந்தாமணி), புருட் சலட் (சிரித்தி ரன்), தவறுகள் (அமுதம்), நினைவுகள் (தேசபக்தன்), ஆகிய சிறுக தைகளை இவரது சிறந்த சிறுகதைகளாக ராஜ பூரீகாந்தன் அவர்கள் குறிப்பிடுகின்றார்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா O8

ஈழத்துச் சிறுகதை வரலாறு என்ற நூலை எழுதிய செங்கை ஆழியான் அவர்களும், அந்தனி ஜீவாவின் புருட்சலட் என்ற சிரித்திரன் சிறுகதை பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
பத்தி எழுத்துக்களைப் பொறுத்தவரையில், தினகரனில் இவர் எழுதிய நினைத்துப் பார்க்கிறேன், படித்ததும் - பார்த்ததும் - கேட்டதும் ஆகிய இரு பத்தி எழுத்துக்களும் பிரபல்யமானவை.
மலையகத்தின் இலக்கிய வளர்ச்சிக்காகவும், மலையக எழுத்தாளர்களின் நலன்பேணவும் என உருவான ‘மலையக கலை இலக்கியப் பேரவையின் செயலாளராக இருந்து இவர் ஆற்றிய பணிகளை இரா.அ. இராமன் அவர்கள் 2002ம் ஆண்டுக்குரிய மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா மலரில் விதந்து கூறியிருக்கிறார். கண்டியிலிருந்து இவர் இயக்கும் மலையக வெளியீட்டகம் என்ற நூல்வெளியீட்டு நிறுவனத்தின் மூலமும் பல நூல்களை இவர் வெளியிட்டுள்ளார்.
அந்தனி ஜீவா எழுதியும் தொகுத்தும் நூலுருவில் வெளியிட்ட படைப்புக்கள் பலவாகும். இவற்றில் பல மலையக வெளியீட்டகத்தினா லும், பிற மற்றைய வெளியீட்டகங்களாலும் தமிழகத்திலும், இலங்கை யிலும் வெளியிடப்பட்டுள்ளன.
1978ம் ஆண்டில் தமிழ்நாட்டில் திருப்பூரில் நடைபெற்ற கலைஇலக்கிய பெருமன்ற மகாநாட்டில் கலந்துகொண்டு இவர் நிகழ்த்திய ஆய்வுரை ஈழத்தில் தமிழ் நாடகம் என்ற பெயரில் தமிழ்நாட்டி லிருந்து சிவகங்கை, அகரம் வெளியீடாக 1981இல் நூலுருவில் வெளிவந்திருந்தது. உலக நாடகப் பின்னணியில் தமிழ் நாடகத்தின் படிமுறை வளர்ச்சி இவ்வாய்வில் ஆராயப்பெற்றிருந்தது. நாடகவளர்ச் சியிலும், கூத்து ஆராய்ச்சிகளிலும் பங்குபற்றிய சில பிரபல்யமான ஈழத்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களது பணியையும் அந்தனி ஜீவா இவ்வாய்வில் சுருக்கமாக விளக்கியிருந்தார்.
அன்னை இந்திரா என்ற இவரது அடுத்த நூல், கல்ஹின்னை தமிழ் மன்றத்தின் மூலம், அதன் 25வது வெளியீடாக, கண்டியிலிருந்து
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா O9

Page 7
எஸ்.எம் ஹனீபா அவர்களால் 1985 மே மாதத்தில் வெளியிடப்பட்டது. இது பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் 1984 ஒக்டோபர் 31ம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக அந்தனி ஜீவா எழுதி தினகரன் வாரமஞ்சரியில் பல வாரங்கள் தொடராக வெளி வந்த கட்டுரையின் நூலுருவாகும். அந்தனி ஜீவாவின் 25ஆண்டுக் கால எழுத்துப் பணியை கெளரவிக்கும் வகையில் இந்நூல் வெளி யிடப்பட்டிருந்தது.
காந்தி நடேசையர் என்ற மற்றொரு நூல் அந்தனி ஜீவாவின் பெயர் சொல்லும் குறிப்பிடத்தகுந்த நூலாகும். கண்டி, மலையக வெளியீட்டகம், நவம்பர் 1990இல் இந்நூலை வெளியிட்டிருந்தது. 19ம்-20ம் நூற்றாண்டுகளில் இலங்கையில் மலையக மக்கள் பட்ட அவலங்களிலிருந்து அவர்களை விடுவிக்கப் போர்க்குரல் எழுப்பிய முதல் வழிகாட்டியான கோதண்டராம நடேசையர் அவர்களின் வாழ்வும், பணியும் இந்நூலில் பதிவுசெய்யப்பட்டிருந்தது. இலங்கை தொழிற்சங்க வரலாற்றிலும், மலையக மக்களின் வரலாற்றிலும் மிக முக்கிய இடம் பெற்ற நடேசையரின் வாழ்வும், பணியும் இலங்கை யின் மலையக இலக்கியத்துடன் இரண்டறக் கலந்ததொன்றாகும். இவரது வாழ்வையும் மலையகத் தமிழரின் விடிவுக்காக அவர் ஆற்றிய பணிகளையும் அந்தனி ஜீவா இந்நூலில் பதிவுசெய்திருந்தார்.
மலையகமும் இலக்கியமும் என்ற நூல் அந்தனி ஜீவா அவர்களால் தனது மலையக வெளியீட்டகத்தின் வாயிலாக நவம்பர் 1995 இல் வெளியிடப்பட்டது. இந்தியாவின் தென்கோடித் தமிழர்கள் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காகப் புலம்பெயர்ந்து இலங்கை வந்த பொழுது தங்களுடன் பாரம்பரியக் கலை வடிவங்களையும் வாய்மொழி இலக்கியங்களையும் தான் கொண்டு வந்து சேர்த்தார்கள். காலமாற்றத்தில் அந்த இலக்கிய வடிவங்களும் மாறி மலையக இலக்கியமாகத் தனித்துவமாகப் பரிணமித்துள்ளது. மலையக இலக்கி யத்தின் வரலாற்றை அந்தனி ஜீவா இந்நூலில் விரிவாக ஆராய்ந் துள்ளார். மலையகமும் இலக்கியமும் என்ற இந்த நூல் 1996ல் அரசகம மொழித் திணைக்களத்தினர் நடத்திய தமிழ்த் தின விழாவில் அரச இலக்கிய விருது கிடைத்தது. காந்தி நடேசையர் நூலை யொட்டி, மலையக மக்களின் அவல வாழ்வினை உலகிற்கு எடுத்துக்
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 10

காட்டி அவர்களது பார்வையை விரியச் செய்த இலக்கியவாதியான சி.வி. வேலுப்பிள்ளை பற்றியும் அந்தனி ஜீவா நூலொன்றை எழுதியி ருந்தார். சி.வி. சில நினைவுகள் என்ற அந்த நூலில் அந்தனி ஜீவா அவர்கள் சி.வி.வேலுப்பிள்ளையின் வாழ்வும் பணியும் பற்றித் தன் குறிப்புகளைப் பதிவுசெய்துள்ளார். இதுவும் மலையக வெளியீட் டகத்தின் வெளியீடாக 2002 இல் கண்டியில் வெளிவந்தது. இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் மலையக இலக்கியம் என்ற தனித்துவம் மிக்க இலக்கிய முயற்சிகள் பேசப்படுவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்த மலையக மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் பற்றி நவமணி வார இதழில் மலைச்சாரல் என்ற பகுதியில் மலையக மக்கள் கவிமணி சி.வி சில நினைவுகள என்ற தலைப்பில் அந்தனி ஜீவா அவர்கள் எழுதிய கட்டுரைத் தொடரே இந்நூலாகும்.
மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம் எழுத்தா ளர்களின் பங்களிப்பு என்ற பெயரில் அந்தனி ஜீவா எழுதிய மற்றொரு நூல் மலையக வெளியீட்டகத்தினால் ஒக்டோபர் 2002இல் வெளியிடப்பட்டது. இலங்கையின் துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சு, கிழக்கு அபிவிருத்தி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு, இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்தும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு, பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 22, 23, 24, ஒக்டோபர் 2002இல் நடைபெற்றபோது சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை இதுவாகும். இந்நூலில் அறிஞர் ஏ.எம்.ஏ. அசீஸ், அறிஞர் சித்திலெப்பை, அருள்வாக்கி அப்துல் காதிர், கோட்டாறு செய்குபாபா, கி.மு.நல்ல தம்பிப் பாவலர், பண்ணாமத்துக் கவிராயர், அப்துல் லத்தீப், கவிஞர் அல் அசுமத் போன்றோர் உள்ளிட்ட பல முஸ்லிம் பிரமுகர்கள் மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பணிகளை இச்சிறு ஆய்வில் மேலோட்டமாக அந்தனி ஜீவா அவர்கள் கோடிட்டுக் காட்டியிருந்தார். உண்மையில் இது ஒரு விரிந்த பெரும் ஆய்வுக்குரிய தளமாகும் என்பதை எவரும் அறிவர்.
மலையகம் வளர்த்த தமிழ் என்ற பெயரில் மலையகத்தின் மற்றொரு இலக்கியவாதியாகவும், அந்தனி ஜீவாவின் இலக்கிய
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா

Page 8
இரட்டையராகவும் கருதப்பட்ட சாரல்நாடன் அவர்கள் சென்னையில் முன்னர் இயங்கிய, மலையக பதிப்பாளர் துரை விஸ்வநாதனின் துரைவி பதிப்பகத்தின் வாயிலாக நவம்பர் 1997இல் நூலொன்றை வெளியிட்டிருந்தார். 1990-1995காலகட்டத்தில் சாரல் நாடனால் எழுதப் பட்ட 13 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூலாகும். மலையகம் தொடர் பான கலை, இலக்கியம், மொழி, பண்பாடு, நூலகம், நூலியலும் வெளியீட்டுத் துறையும், நாட்டார் வழக்கியல், சிறுசஞ்சிகைகள் எனப் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக இக்கட்டுரைகள் எழுதப்பட்டி ருந்தன.
மேற்குறிப்பிட்ட நூலின் அடியொற்றி, மலையகம் வளர்த்த கவிதை என்ற தலைப்பிட்டு அந்தனி ஜீவா அவர்கள் கண்டி: மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் வாயிலாக டிசம்பர் 2002 இல் ஒரு நூலை வெளியிட்டிருந்தார். இலங்கையில் மலையக இலக்கியத்துக்கு முன்னோடியாகத் திகழ்வது கவிதை என்பதே இலக்கியத் திறனாய்வாளர்களின் முடிவாகும். அதற்கு முதற் காரணியாக அமைந்தது மலையக மக்களின் வாய்மொழிப் பாடல் களே என்பது பொதுவான கருத்தாகும். இவ்வாய்மொழி இலக்கி யங்கள் இன்றும் மலையகத்தில் விருப்புடன் பாடப்பட்டு வருகின்றன. இத்தகைய பின்னணியில் எழுந்த மலையகக் கவிதைகளின் வளர்ச்சி பற்றி கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக அந்தனி ஜீவா அவர்கள் தான் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து மலையகம் வளர்த்த கவிதை என்ற பெயரில் நூலாக்கியிருக்கின்றார்.
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் என்ற நூல் அந்தனி ஜீவா அவர்களைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு கண்டி, மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவெளியீடாக 2002இல் 250 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. கண்டி மாவட்டத் தமிழரின் அரசியல், பொருளாதாரம், சமூகம், சமயம், கலை, பண்பாடு, முதலான பல்துறை அம்சங்களை வரலாற்று ரீதியில் இந்நூல் ஆராய்ந்துள்ளது. கண்டி மாவட்டத் தமிழர்கள்- சில வரலாற் றுப் பதிவுகள், கண்டிராசன் கதை, கண்டி மாவட்டத் தமிழர்களின் வாழ்வும் வரலாறும் வழிபாடும், கண்டித் தமிழர்களின் சமூக அசைவி யக்கமும் பொருளாதாரப் பின்புலமும், கல்வி வாய்ப்புக்களும் கண்டி
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 12

மாவட்டத் தமிழரும், கண்டி மாவட்டத்தில் இந்துமதம் - வரலாறும் வளர்ச்சியும், கண்டி மாவட்டத் தமிழர்களின் அரசியல், நாட்டாரியலில் கண்டி, இந்திய வம்சாவளித் தமிழரின் வர்க்க அடுக்கமைவு மாற்றம், கண்டியில் தமிழ் இலக்கியங்கள் ஆகிய கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
மலையக இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்தவரும் பெண் படைப்பாளிகளின் பங்களிப்புக்கள் சரியான முறையில் பதிவுசெய்யப்படுவதில்லை என்ற ஆதங்கத்தில் அந்தனி ஜீவா அவர்கள் 2000ம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தில் 12 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து குறிஞ்சி மலர்கள் என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார். இவரது மலையக வெளியீட்டகத்தின் மூலம் இது வெளியிடப்பட்டிருந்தது. இதே வெளியீட்டகம் பின்னர் 2001இல் சர்வதேச பெண்கள் தினத்தில் மலையக எழுத்தாளர் திருமதி சாந்தாராஜ் அவர்களின் சிறுகதைக ளைத் தொகுத்து சாந்தாராஜின் கதைகள் என்று தலைப்பிட்டு ஒரு தொகுப்பினை வெளியிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக குறிஞ்சிக்குயில்கள் என்ற நூலினை அந்தனி ஜீவா அவர்கள் 2002ம் ஆண்டின் சர்வதேச பெண்கள் தினத்தினை முன்னிட்டு மார்ச் 2002 இல் இவ்வெளியீட்டகத்தின் வழியாக வெளியிட்டிருந்தார். இச்சிறு நூலில் மலையகத்தின் தேர்ந்த பெண் கவிஞர்களான 21 கவிதாமணி களின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன. இக்கவிதைகளில் யதார்த்தபூர் வமான மனவெளிப்பாடுகள் பதிவாகியிருந்தன. மலையக வெளியீட்ட கத்தின் 21வது வெளியீடாக இது வெளிவந்திருந்தது.அம்மா என்ற தலைப்பில் 25 இலங்கை பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அந்தனி ஜீவாவினால் தொகுக்கப்பெற்று, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திசைகள் அமைப்பின் ஏற்பாட்டில் சென்னை கலைஞன் பதிப்பகத்தினரால் 2004 இல் வெளியிடப்பட்டிருந்தது. 208 பக்கம் கொண்ட இந்நூலில் இலங்கையின் மூத்த படைப்பாளிகள் முதல் இன்றைய இளையதலைமுறை எழுத்தாளர்கள் வரை 25 பெண் எழுத்தாளர்களின் தேர்ந்த சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. குந்தவை, யோகா பாலச்சந்திரன், கோகிலா மகேந்திரன், அன்னலட்சுமி இராசதுரை, சந்திரா தனபாலசிங்கம், தாட்சாயணி, எம்.ஏ.ரஹீமா, நயீமா சித்தீக், லஹினா ஏ. ஹக், தாமரைச்செல்வி, பூரணி, பேராதனை ஷர்புன்னிஷா, புசல்லாவை ஸ்மாலிகா, அட்டன் சாந்தாராஜ், சாந்தி மோகன், அக்னஸ் சவரிமுத்து, பாலரஞ்சினி சர்மா, ரோஹிணி
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 3

Page 9
முத்தையா, சுகந்தி வெள்ளையகவுண்டர், கெக்கிராவை ஸஹானா, பத்மா சோமகாந்தன். குறமகள், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், ராணிசீதரன், மண்டூர் அசோகா ஆகிய எழுத்தாளர்களின் படைப் புக்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அந்தனி ஜீவாவின் அன்னையாரின் நினைவாக அவரது மறைவின் 3ம் ஆண்டு நிறைவு தினத்தில் இந்நூல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மலையகத்தில் தமிழ் வளர்த்தோரும், கலை வளர்த்தோரும், மலையக மக்களுக்காக உரத்த சிந்தனையை விதைத்தோரும் காலந்தோறும் அந்தனி ஜீவாவினால் பல்வேறு ஊடகங்கள், மற்றும் நூல்கள் வழியாக மீள் அறிமுகம் செய்யப்பட்டு வந்துள்ளார்கள்.அந்த வகையில், மலையக மாணிக்கங்கள் அந்தனிஜீவாவின் குறிப்பிடத்த குந்ததொரு நூலாகும். கொழும்பிலிருந்து துரைவி வெளியீடாக செப்டெம்பர் 1998 இல் இந்நூல் வெளிவந்துள்ளது. மலையக மக்களின் முன்னேற்றத்துக்காக உழைத்த முன்னோடிகளில் பன்னிருவரைப் பற்றிய தகவல்களைத் தரும் நூல் இதுவாகும். திருமதி மீனாட்சி அம்மையார், பத்திரிகையாளர் கோ.நடேசையர், பெரி சுந்தரம், இராமானுஜம், ஐ.எஸ். பெரேரா, ஜோர்ஜ் ஆர். மோத்தா, மலையக காந்தி ராஜலிங்கம், வி.கே.வெள்ளையன், சி.வி.வேலுப்பிள்ளை, ஏ.அஸிஸ், சோமசுந்தரம், அசோகா பி.டி.ராஜன் ஆகியோர் பற்றிய மனப்பதிவுகள் இந்நூலில் இடம்பெற்றிருந்தன.
புதிய வார்ப்புக்கள் என்ற வரிசையில் இளைய தலைமுறை எழுத்தாளர்களையும் பெண் பிரம்மாக்கள் என்ற தலைப்பில் பெண் படைப்பாளர்களையும் பத்திரிகைகளில் அறிமுகப்படுத்தியவர் அந்தனி ஜீவா அவர்கள். பின்னாளில் 1997இல் முகமும் முகவரியும் என்ற தொகுப்பு நூலின் மூலம் மலையக எழுத்தாளர்களின் விபரத்திரட்டினையும் இவர் வெளியிட்டிருந்தார். இதில் நாவல் நகர் கே.பொன்னுத்துரையின் உதவியுடன் 1991முதல் சேகரித்த விபரங் களுடன் மத்திய மாகாண இந்து கலாசார கல்வி அமைச்சு சேகரித்த விபரங்களையும சேர்த்து மொத்தம் 68 எழுத்தாளர்களின் விபரங்களை முகமும் முகவரியும் நூலின் முதலாவது தொகுப்பில் பதிவு செய்திருக்கிறார்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 4.

எழுத்தாளரின் பெயர், புனைபெயர்கள், தொழில், பிறந்த திகதி, பிறந்த மாவட்டம், எழுதி வெளிவந்த நூல்கள், எழுதிய முக்கிய படைப்பு, சிறு குறிப்பு, முகவரி என்பன ஒவ்வொரு பதிவிலும் இடம் பெற்றுள்ளன.
கடந்த காலங்களில் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய தகவல்களைத் தொகுத்து வெளியிடும் பணியை அரச மட்டத்திலும், கொழும்புத் தமிழ்ச்சங்கம், மற்றும் பல்கலைக் கழக மட்டத்திலும் மேற்கொள்ளவெனத் திட்டம் தீட்டப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டு வந்துள்ள போதிலும், எவையேனும் நூலுருவில் வெளிவந்ததாகத் தகவல் இல்லை. இந்நிலையில், அந்தனி ஜீவாவின் முகமும் முகவரி யும் முயற்சி ஒரு மைல்கல்லாகக் கருதப்படவேண்டும்.
இதே வேளையில், மலையகத்தில் உடத்தலவின்னையில் சிந்தனை வட்டம் பீ.எம். புன்னியாமீன் அவர்கள் சுய முயற்சியில், 2004-2005 காலப்பகுதியில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு ஒன்றினை மூன்று பாகங்களில் வெளியிட்டுள்ளார். நான்காவது பாகம் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் விபரங்களைத் தாங்கியதாக வெளியிடவும் திட்டமிட்டுள்ளார் என்பதையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமான தாகும.
அந்தனிஜிவாவின் 60°து அகவையை 2003ம் ஆண்டு நவம்பர் 26இல் கொண்டாடும் நோக்கில் பேராசிரியர் எம்.சின்னத்தம்பி, கலாநிதி துரை. மனோகரன் போன்றோரின் தலைமைத்துவ வழிகாட்ட லில் மணிவிழாக் குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்தனி ஜீவா சிறு வயதில் எழுதி தினகரனில் வெளியான திருந்திய அசோகன் என்ற சிறுவர் நாவல், மணிவிழாவையொட்டி அன்றைய தினம் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தகுந்தது.
தனது எழுத்துப் பணிகளுக்கு அப்பால், அந்தனிஜீவா செய்து வரும் ஆக்கப் பணிகளில் ஒன்று, உலக அரங்கில் பரந்துவாழும் ஈழத்தமிழர்களுக்கு இடையே இலக்கியப் பாலமொன்றினை பயன் கருதாது அமைத்துக்கொடுப்பதாகும். மலையகத்தின் வெளியீடுகளை
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 15

Page 10
பொருட்செலவைப் பொருட்படுத்தாது தனது சொந்தச் செலவில் இலங்கையிலிருந்து ஐரோப்பா, தமிழகம், மலேசியா, சிங்கப்பூர் என்று தமிழ் எழுத்தாளர்கள் வாழும் இடங்களுக்கெல்லாம் அனுப்பி வருகின்றார். ஒவ்வொரு நாட்டிலும் தான் அறிந்த அந்நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களுடன் ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் தொடர்பினை வலிந்து ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றார்.
கடந்த 2003ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் அந்தனிஜீவா அவர்கள் இலக்கியப் பயணம் ஒன்றை லண்டன், பாரிஸ் ஆகிய ஐரோப்பிய நகரங்களில் மேற்கொண்டிருந்தார். இவரது பயணக்கட் டுரை தினகரனில் பின்னர் தொடராகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இது நெஞ்சில் பதிந்த ஐரோப்பிய பயணம் என்ற பெயரில் சென்னை மணிமேகலைப் பிரசுரத்தினால் 140 பக்கங்களில் கறுப்பு, வெள்ளை புகைப்படங்களுடன் நூலுருவிலும் வெளியிடப்பட்டிருந்தது. லண்டனி லும் பாரிசிலும் தான் சந்தித்த கலை இலக்கியவாதிகள், கண்டு கழித்த இடங்கள் ஆகியன பற்றிய சுவையான தகவல்களை இந் நூலில் அந்தனி ஜீவா, வாசகர்களுடன் தனது பயணக்கட்டுரையின் வாயிலாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
லண்டனில் அவர் தங்கியிருந்த வேளையில், புதினம் ஆசிரியர் ஈ.கே.இராஜகோபால் அவர்களின் முயற்சியில், கலை இலக்கியப் பிரமுகர்களின் சந்திப்பொன்றும் இடம்பெற்றிருந்தது. மாத்தளை சி.செல்வராஜா அவர்களின் தலைமையில், பொன் பாலசுந்தரம், க.இராஜமனோகரன், பாரிஸ்டர் எஸ்.ஜே.ஜோசப், மு.நித்தியானந்தன், தெளிவத்தை ஜோசப், ஐ.தி.சம்பந்தன், எஸ்.பி.ஜோகரட்ணம், போன் றோர் அங்கு பிரசன்னமாகி உரையாற்றியிருந்தனர். மலையகத்தில் மட்டுமன்றி, புகலிடத்திலும் அந்தனி ஜீவாவுக்கு உள்ள செல்வாக்கை இந்நிகழ்வு நன்கு புலப்படுத்தியது.
மலையக எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்களின் மலையகத் தொழிற்சங்க வரலாறு என்ற சிறு நூல் அவரது மிக அண்மைக்கால வெளியீடாகும். நவம்பர் 2005இல் வெளியாகியுள்ள இந்நூலில மலையகத் தொழிற்சங்க வரலாறு என்ற தலைப்பில் இரண்டாண்டு
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 6

முன்னர் வீரகேசரி வார வெளியீட்டில் இவர் எழுதிய கட்டுரையொன்று சற்று விரிவுபடுத்தி, சிறுநூலாக 24 பக்கங்களில் வெளியிடப்பட் டுள்ளது. மலையகத் தொழிற்சங்க வரலாறு 25 பக்கங்களுள் அடக்கக் கூடியதாகத் தோன்றவில்லை. இது மிகவும் ஆழமாகவும் விரிவாகவும் ஆராய்ந்து எழுதப்பட வேண்டியதொரு துறையாகும். அந்தனி ஜீவா அந்நூலில் இந்தப் பரந்த வரலாற்றின் சிறு முனைகளை மட்டுமே தொட்டுக் காட்டியுள்ளார். எதிர்காலத்தில் இது மீளாய்வு செய்யப்பட்டு விரிவாக எழுதப்பட வேண்டும். மலையக மக்களின் வரலாறும், வாழ்வியலும் இத் தொழிற்சங்கங்களின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளதால் இத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இந்நூல் விரிவுபடுத்தப்பட வேண்டும். இதற்கு புலம்பெயர்நாடுகளில் வாழும் மலையகத் தமிழர்கள் முன்வந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவர்களின் நிதி பலத்துடன் இத்தகைய ஆய்வ முயற்சிகள் மலையகத்தில் எளிதாகச் செய்யப்பட லாம். மலையகத் தமிழரின் வரலாறு நேர்மையாக எழுதப்படலாம்.
(நன்றி: ஐ.பீ.சீ. காலைக்கலசம், 04.12.2005, சுடரொளி, தை-மாசி, 2006, பங்குனி-சித்திரை, 2006)
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 7

Page 11
சிந்தனை வட்டம் நாளைய சந்ததியின் இனிறைய சக்தி.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா
18
 

சிறகு விரியும் மூன்.
சிறகு விரிந்த காலம்.
எனது வாழ்வியலின் சில பக்கங்களும் பதிவுகளுமாகும். என்னையே, நான் திரும்பிப் பார்த்ததில் சில நினைவுகளைப் பதிவு செய்ய வேண் டிய தேவை ஏற்பட்டது.
தலைநகரமான கொழும்பிலே எனது கலை இலக்கியப் பணிகள் ஆரம்பமாகிப் பின்னர் மலைய கத்தின் கலை இலக்கியப் பண்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என்று மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எனது செயற்பாடுகள் தொடருகின்றன.
என்னை பத்திரிகையாளனாக, பத்தி எழுத்தா ளனாக, நாடகக் கலைஞனாக, இலக்கிய செயற் பாட்டாளனாக எடைபோட்டு வருகிறார்கள். அதனால் காலத்தின் தேவையை கருதி என்னையே நான் எடைபோட வேண்டிய தேவை ஏற்பட்டது.
என்னை தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள் ளவும் இந்த பதிவுகள் உதவும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
சில தகவல்களை இங்கு சொல்லுவது அவசி யமாகும். சுமார் பத்து மாதங்களுக்கு மேலாக 'கம்பி யூட்டர் பிரதியாக இருந்த இந்த நூலை நண்பரும்,
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 9

Page 12
த.பெ.எண் 32,
நாடறிந்த எழுத்தாளரும், பதிப்பாளரும், “சிந்தனை வட்ட”முகாமைத்துவப் பணிப்பாளருமான பீ.எம். புன்னியாமீன் அவர்களிடம் கொடுத்தேன்.
பின்னர். சில தினங்களில் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு “வந்து சந்திக்க முடியுமா..?” என அன்போடு அழைத்தார். அவரை சந்தித்த பொழுது அச்சிடுவதற்கு தயாராக இருந்த சிறகு விரிந்த காலம். பிரதியை என்னிடம் தந்தார்.
என் விழிகள் வியப்பால் விரிந்தன.
எனது நெஞ்சுக்கும் நெருக்கமான நண்பர் லண்டனில் வாழும் நூலகர் என்.செல்வராஜாவின் அயோத்தி நூலக சேவையும், சிந்தனைவட்டமும் இணைந்து இந்த நூலை வெளியிடுகிறது என்று அறிந்த பொழுது என் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது.
இரண்டு இலக்கிய இதயங்களின் ஏற்பாட்டில் எனது 'சிறகு விரிந்த காலம்” வருவது. எனக்கு கிடைத்த மிகப் பெரிய கெளரவமாகும். அதுவும் எனது கலை இலக்கியப் பணிகளின் 45 ஆண்டுகளை நினைவுகூரும் நிகழ்வின்போது இந்நூல் வெளிவரு வது எனது செயற்பாடுகளை தொடருவதற்கு எனக்கு கிடைக்கும் விருதுகளாகும்.
தோழமையுடன்
அந்தனிஜீவா
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 2O

சிறகு விரிந்த காலம்
இலங்கையின் தலைநகரான கொழும்பிலே பிறந்து, வளர்ந்து பின்னர் மலைமுகடுகளிலும், தேயிலைக் காடுகளிலும் வானம் பாடியைப் போல சிறகடித்து திரிந்த ஒருவனின் சுயவரலாறு இது. பறவைகள் பறந்து திரிந்த சுவடு வானில் இருப்பதில்லை. அதேபோல் எனது பணிகளும் பங்களிப்பும் பதிவு செய்ய வேண்டியது கடமையாகிறது.
இது எனது சுயவரலாறு.என் இரத்தமும் சதையும் கலந்தது. என்னைப் பற்றி நானே எழுதும் சுயவரலாறு இது. எனது தந்தையார் இந்திய இராணுவத்தில் சேர்ந்து பர்மா சென்று பின்னர் கொழும்பு திரும்பியுள்ளார். இலங்கைக்கு வந்த அவர் நிரந்தரமாக தங்கிவிட்டார். நான் பிறந்ததன் பின்னர் தென்னிந்தியாவில் இவர் தாய் வழி சொத்துக் கள் இவருக்கு சொந்தமாகியது. நான் பிறந்த பின்னர் தான் தாய் வழி சொத்துக்கள் இவரை வந்தடைந்ததால் எங்களை எல்லாம் மிகுந்த மகிழ்ச்சியுடன் கடல் கடந்து ஊருக்கு அழைத்துச் சென்று உறவினர்களை காட்டினார்.
பின்னர் என்னையும் எனது அண்ணாவையும் கூட்டிச் சென்று பாளையம்கோட்டை சென் சேவியர் கல்லூரியில் சேர்க்க விரும்பினார். நாங்கள் கொழும்பு திரும்ப வேண்டும் என அடம் பிடித்ததால் நாங்கள் எல்லோரும் கொழும்பு திரும்பிவிட்டோம்.
எனது ஆரம்பக் கல்வியை வீட்டிலிருந்து ஒன்றரை மைல் தூரத்திலுள்ள சுவர்ண வீதியிலுள்ள தமிழ் பாடசாலையில் கற்றேன். பின்னர் இரண்டாம் வகுப்பிலிருந்து பம்பலப்பிட்டியில் சென்.மேரிஸ் பாடசாலையில் எஸ்.எஸ்.ஸி.வரை (9'வகுப்பு) கற்றேன். பாடசாலை யில் நான் படித்த வசந்த காலத்தை மீண்டும் இரை மீட்டிப் பார்க் கிறேன்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 21

Page 13
அத்தகைய வசந்த காலம் மீண்டும் வராதா என ஏங்குகிறேன். பாடசாலையில் துடிப்பும் துணிவுமிக்க மாணவனாக இருந்தேன். பாடசாலையில் எனக்குப் படிப்பித்த, என்னை இனங்கண்டு ஊக்குவித்த இரண்டு ஆசான்களை நினைத்துப் பார்க்கிறேன். அவர்கள் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன்.
ஆசிரியர் சந்தானம் என்பவர் என்னுள் பதுங்கியிருந்த கலை உணர்வை தூண்டிவிட்டார். அவரே எழுதி தயாரித்த நாடகத்தில் எனக்கே முக்கிய பாத்திரம் வழங்கப்பட்டது. பாடசாலை கட்டட நிதிக்காக நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சியில் பாடசாலை பழைய மாணவரான ஜெ.பி.ரொபர்ட் நெறிப்படுத்திய நாடகத்தில் கவின் கலை மன்ற நடிகர்கள் நடித்தார்கள்.
அந்த கலை நிகழ்ச்சியில் ஆசிரியர் சந்தானம் எழுதிய “அந்தோ நாகரிகம்” என்ற சீர்த்திருத்த கருத்துக்களைக் கொண்ட நகைச்சுவை நாடகத்தில் நானே முக்கிய பாத்திரத்தில் நடித்தேன். அது மிகவும் பாராட்டப்பட்டது.
எனக்கு பயிற்றுவித்த இன்னொரு ஆசானாகிய பெண்மணி திருமதி. எம். பெர்ணாண்டோவைப் பற்றி இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். அப்பொழுது எமக்கு பாட நூலாக கம்ப இராமாயணத்தின் சுந்தரகாண்டம் நூலும், மகாகவி பாரதியாரின் கவிதைகளும் பாடநூலாக அமைந்திருந்தது. கம்பரின் காவியத்தை அந்த ஆசிரியர் மிகச் சிறப்பாக படிப்பிப்பார். அந்த காவியச்சுவை என்னை மிகவும் கவர்ந்தது.
மகாகவி பாரதியின் கவிதை என்னை மிகவும் பாதித்தன. பாரதியைப் பற்றி ‘பாட்டுக்கொரு புலவன்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி அந்த ஆசிரியையிடம் கொடுத்தேன். அதனை ஆறுதலாக படித்த அவர் என்னை எழுதும் படியும் நல்ல நூல் தேடி வாசிக்கும் படியும் தூண்டினார்.
பாடசாலை ஓய்வு நாட்களிலே கொழும்பு பொது நூலகமே எனது ஞான இல்லமாக அமைந்தது. அங்கே தான் ஜெயகாந்தனின் “தேவன் வருவாரோ” என்ற சிறுகதைத் தொகுதியைப் படித்தேன். அதன் பின்னரே சிறுகதை ஜம்பவான் புதுமைப்பித்தன் கதைகளைப் படித்தேன். அவருடைய ‘ஒரு நாள் கழிந்தது’, ‘பொன்னகரம்’ போன்ற கதைகளை சக மாணவர்களிடம் கூறி மகிழ்ந்தேன்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 22

é
தீபம் பார்த்தசாரதியின் “குறிஞ்சிமலர்’ அகிலனின் ‘பாவை விளக்கு’, மு.வரதராசரின் ‘கள்ளோகாவியம்’ போன்ற படைப்புகள் அசுர வேகத்தில் வாசித்தேன். அவர்களுக்குப் பின்னர் விந்தனின் ‘பாலும் பாவையும்” எத்தனை தரம் படித்தேன் என்பது ஞாபக மில்லை. மகாகவி பாரதியைப் போலவே கவிஞர் பாரதிதாசனும் என்னை மிகவும் பாதித்தார்.
பதினைந்து வயது இளைஞனான நான் எனது வீட்டில் இருந்த என்னைப் போல இலக்கிய ஆர்வம் கொண்டவர்களுடன் தமிழகத்தி லிருந்து வெளிவரும் சிறுவர் சஞ்சிகைகளான கரும்பு, கண்ணன், தமிழ்வாணனின் கல்கண்டு ஆகியவற்றை வாங்கி வாசிப்போம்.
அந்தப் பிஞ்சு நெஞ்சிலே இது போன்ற ஒரு சஞ்சிகையை வெளியிட்டால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. முதலில் கையெழுத்து பத்திரிகை. பின்னர் எங்கள் எழுத்துக்களை அச்சில் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம்.
எங்களது இலக்கிய ஆர்வமிக்க நண்பர்களில் பழனியப்பன் என்பவர் இளம் வயதில் அச்சகம் ஒன்றில் பணியாற்றினார். அவர் சஞ்சிகையொன்றை அச்சில் வெளியிட ஆர்வம் ஊட்டினார். இன்னொரு நண்பர் கதிர்வேல் என்பவர் இவர் இந்துக்கல்லூரி மாணவர். நாங்கள் மூவரும் சேர்ந்து எங்களிடம் இருந்த சிறு சேமிப்பை கொண்டு ‘கரும்பு’ என்ற சஞ்சிகையை அச்சில் கொண்டு வந்தோம்.
இரண்டே இதழ்கள் தான் வந்தன. நானும் நண்பர் கதிர்வேலும் அதிகமான ஆக்கங்களை எழுதினோம். அச்சகத்தில் பணியாற்றிய பழனியப்பன் தான் சஞ்சிகையை வெளியிட்டார்.
பின்னர் நான் படித்த பாடசாலையில் எனக்கு அடுத்த வகுப்பில் படித்த துரைசாமி என்பவர் நன்றாக ஒவியம் வரைவார். ஓவியம் வரைவதில் ஆர்வம்மிக்கவர். இருவருமாக சேர்ந்து கையெ ழுத்து பத்திரிகை தயாரித்தோம். நான் எழுத அவர் ஒவியத்தால் அலங்கரிக்க, அந்த ‘வெண்ணிலா” என்ற கையெழுத்து பத்திரிகை மாணவர் மத்தியில் உலா வந்தது. இப்பொழுது துரைசாமி எஸ்.டி. சாமி என்ற பெயரில் ‘விஜய் பத்திரிகையின் ஆஸ்தான ஒவியர்
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 23

Page 14
என் எழுத்தை அச்சில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமே என்னில் மிகுந்திருந்தது. அப்பொழுது வீரகேசரி, தினகரன் ஆகிய பத்திரிகைகள் தினசரியாக வெளிவந்து கொண்டிருந்தன. நான் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த அன்ரனி பெர்னாண்டோ என்பவர் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார். அதே போல நாமும் எழுதினால். என்று நினைத்தேன். எனது நெஞ்சின் கனவுகளை என்னை ஊக்குவிக்கும் ஆசிரியையிடம் வெளியிட்டேன். அவரது சகோதரி எங்களோடு படிப்பவர். அவரும் பத்திரிகைகளுக்கு எழுதும்படி தூண்டினார்.
எனது அன்பிற்கு பாத்திரமான அந்த ஆசிரியைக்கு இரண்டு தம்பிகள், இரண்டு தங்கைகள். அந்த நால்வருமே உடன் பிறப்புகள் போல என் மீது அன்பு காட்டுவார்கள். நான் எழுதியவற்றை அந்த ஆசிரியையிடம் படிக்கக் கொடுப்பேன். அந்த ஆசிரியையும் சஞ்சிகை கள், நூல்கள் வாசிப்பதில் ஆர்வமுள்ளவர்கள். எனது எழுத்துக்களை திருத்தி தருவதுடன், எனக்கு பல ஆலோசனைகள் வழங்குவார்.
இந்த இடத்தில் ஒன்றை தெரிவிக்க வேண்டும். என் தாயாருக்கு வாசிக்கத் தெரியாது. படிப்பறிவு அற்றவர். அவரது சகோதரி எனது சிற்றன்னை வாசிப்பதில் ஆர்வமுள்ளவர். என் மீது அதிக அன்பு காட்டுவார். எனது அச்சில் வெளிவரும் எழுத்துக்களை எனது தாயாருக்கு படித்துக் காட்டுபவர். எனது தாயார் அழகாகப் பாடுவார். கதை சொல்வதில் வல்லவர். தாலாட்டு பாடல்களை அழகாகப் பாடுவார்.
என் தங்கையை உறங்க வைப்பதற்காக “முத்தே பவளமே, முக்கனியே சர்க்கரையே” என அவர் பாடும் பாடல் இன்னும் என நினைவில் பதிந்துள்ளது. முதலில் “சுதந்திரன்’ வார இதழில் மாணவர் பகுதியில் கவிதை ஒன்று எழுதினேன். அது அச்சில் வந்த பொழுது என் விழிகள் வியப்பால் விரிந்தன.
வீரகேசரி வார இதழில் எழுத ஆரம்பித்தேன். வீரகேசரி தினசரியில் செவ்வாய்க்கிழமை “மாணவர் கேசரி’ என்ற பகுதி வெளிவரும். அதற்குப் பொறுப்பாக இருந்தவர் “யாழ் நங்கை” என்று அனைவராலும் அறியப்பட்ட அன்னலட்சுமி ராஜதுரை.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 24

முகம் தெரியாத என்னுடைய எழுத்துகளைப் பிரிசுரித்து ஊக்கு வித்தார். அதே நேரம் எனது புகைப்படத்துடன் என்னை அறிமுகப் படுத்தினார்.
இதற்கு முன்னரே வீரகேசரி பத்திரிகையில் செய்தி ஆசிரிய ராக இருந்த டேவிற்ராஜூ என்பவர் புதன்கிழமை தோறும் ‘கலாமன் றம்” என்ற நாடகக்கலை பற்றிய செய்திகள் கொண்ட பகுதியில் பாடசாலை நாடகத்தில் நான் நடித்ததைப் பாராட்டி படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தார்.
இந்த இருவரையும் நான் நேரில் கண்டதில்லை. பாடசாலை விட்டு வெளியேறிய நாட்களில் தமிழகத்தில் இருந்து வெளிவரும் திராவிட கழகத்தவர்கள் வெளியிட்ட கலைஞரின் 'முரசொலி” கவியரசர் கண்ணதாசனின் ‘தென்றல்” அறிஞர் அண்ணாவின் ‘நம்நாடு’ போன்ற ஏடுகளை படித்த தாகம் அவர்களின் பகுத்தறிவு கருத்துக்களில் நாட்டம் ஏற்பட்டது.
அப்பொழுது எங்கள் வீட்டுக்கு சிறிது தூரத்தில் தங்கியிருந்த ஒருவர் பாடசாலை போகும் நாட்களில் அவரும் பஸ்ஸஸுக்காக காத்திருப்பதைக் கண்டிருக்கின்றேன். அவரை எனக்குத் தெரிந்த ஒருவர் அறிமுகப்படுத்தினார். அவர் தான் இலங்கை திராவிடர் கழக பொதுச் செயலாளர் ஏ.இளஞ்செழியன்.
அவர் என்னோடு சக தோழரைப் போல மிக உற்சாகமாக உரையாடினார். அதன் பிறகு அவரது சொற்பொழிவுகளை கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர் எல்லோரையும் கவரும் வண்ணம் அற்புத மாக உரையாற்றுவார். அவரது உரையின் போது பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகளை அனைவரும் கவரும் வண்ணம் கூறுவார். அவர் இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட கலைஞர் கலைதாசன் எனக்கு அறிமுகமானார்.
இவர் எழுத்து, பேச்சு, நடிப்பு என்று பன்முக ஆற்றல கொண்டவர். இவருடைய தொடர்பாடல் கொழும்பு நாடகக் கலைஞர் களின் அறிமுகம் கிடைத்தது. நடிகவேள் லடீஸ் வீரமணி. அன்று முதல் இன்று வரை நாடகத்துறையில் ஈடுபாடு கொண்டு செயல்பட்டு வரும் நாடகக் கலைஞர்களின் அறிமுகங்கள் கிடைத்தன.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 25

Page 15
அந்த காலகட்டத்தில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க கூட்டங்களுக்கு போவது வழக்கம். அங்கே தான் அறிஞர் அ.ந. கந்தசாமியின் அறிமுகமும் கிடைத்தது. அவரின் தொடர்பால் பல படைப்பாளிகளின் அறிமுகமும் கிடைத்தன.
அப்பொழுது கலைதாசன் “தேசபக்தன்” என்ற பத்திரிகை வெளியிடும் முயற்சிகளில் ஈடுபட்டார். அந்த பணிகளில் என்னையும் இணைத்துக் கொண்டார். அதன் நிர்வாக ஆசிரியராக நான் செயற் பட்டேன். இந்த பத்திரிகையை சிறப்பாக வெளியிட பல அரிய ஆலோசனைகள் அறிஞர் அ.ந.கந்தசாமி கூறியதுடன், அவரும் அதற்கு எழுதினார். அவர் அப்பொழுது அரச தகவல் பகுதியில் பணியாற்றினார். “பூரீலங்கா’ என்ற தகவல் பகுதி வெளியிட்ட சஞ்சிகைக்கு ஆசிரியராகவும் இருந்தார்.
இவர் பணியாற்றிய தகவல் திணைக்களத்தின் அருகில் தனியார் நிறுவனமொன்றின் ‘தான் தோன்றி கவிராயர்’ என்றழைக்கப் பட்ட கவிஞர் சில்லையூர் செல்வரசன் பணியாற்றி வந்தார். ஆங்கில விளம்பரங்கள் கவிதை நயத்துடன் தமிழாக்கம் செய்வதில் வல்லவர்.
அறிஞர் அ.ந.க.மியின் மூலம் சில்லையூர் செல்வரசன் அறிமுகம் கிடைத்தது. அ.ந.க.வின் தொடர்பு எனக்கு ஒரு வழிகாட்டி யாக ஆசானாக அவர் அமைந்தார். அ.ந.க. சாமானிய மனிதரலல்ல. முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளான. கா. சிவத்தம்பி, பிரேம்ஜி, செ.கணேசலிங்கம், கே.டானியல், எச்.எம்.பி.முகைதீன், என்.கே. ரகுநாதன், இளங்கீரன், டொமினிக் ஜீவா, ஈழத்து சோமு போன்ற அரிய மனிதர்களை சந்தித்தேன்.
அப்பொழுது பேராசிரியர் கா. சிவத்தம்பி ருத்ரா மாவத்தையில் இருந்தார். அங்கதச் சுவையுடன் பேசுவதில் வல்லவர். அவரை சந்தித்து உரையாடுவதே ஒரு சுகானுபவமாக இருக்கும். ‘இவர்கள் வித்தியாசமானவர்கள்’ என்ற நூலில் அ.ந.க.வைப்பற்றி அவரின் சிறப்பியல்புகளைப் பற்றி சரியாக பதிவு செய்திருக்கிறேன்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 26

எனது இளம் வயதிலேயே பெரிய மேதைகளுடன் பழகும் வாய்ப்பு கிட்டியது. பாராளுமன்றத்தில் உரை பெயர்ப்பாளராக பணியாற்றிய பேராசிரியர் கா.சிவத்தம்பி தமிழ் சங்கம் அமைந்துள்ள ருத்ரா மாவத்தையில் தங்கியிருந்தார்.
கம்யூனிஸ் கட்சியின் வார இதழான தேசாபிமாணியில் பணியாற்றிய கே.இராமநாதன், ஸ்டெனிஸ், கலைதாசன் ஆகியோ ருடன் பேராசிரியர் சிவத்தம்பியின் அறைக்கு சென்று உரையாடி மகிழ்வதுண்டு.
நான் மிகவும் இளவயது என்றபடியால் இவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருப்பேன். இதனால் பல தகவல்களையும் படைப்பிலக்கியவாதிகளைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது. இளம் வயதில் இடதுசாரி கருத்துக்களால் கவரப்பட்ட நான் சமதர்ம இயக்கமான சமசமாஜக்கட்சியின் இளைஞர் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு செயற்பட்டேன்.
அப்பொழுது சமசமாஜக்கட்சியின் தலைமையகத்தில் இயங்கிய தோட்டத்தொழிலாளர்களின் சங்கமான லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியனில் பணியாற்றிக் கொண்டு கட்சி பணிகளில் ஈடுபட்டேன்.
அகில இலங்கை சமசமாஜ வாலிப முன்னணியின் செயற் குழுவிற்கு தெரிவு செய்யப்பட்டடேன். அதன் பின்னர் வாரம் ஒரு தடவை நடைபெறும் செயற்பாட்டு குழுவிற்கும் தெரிவு செய்யப் பட்டேன். அ.இ.வாலிப முன்னணியின் தலைவர் கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா தலைமையில் செயற்பாட்டுக்குழு கூடும். அதில் தோழியர் விவியன் குணவர்தன, அத்தாவுட செனவிரத்ன (பின்னர் இவர் தொழிலமைச்சராகவும் கடமையாற்றினார்), வாசுதேவ நாணயக் கார, விமலனாக, சோமபால இளைய பெருமா, சரத் நாவன்ன இன்னும் இரண்டு தோழியர் அந்தக் குழுவில் இடம் பெற்றனர். மிக இளவயது தோழன் நான்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 27

Page 16
அந்தக்குழுவில் உள்ள அனைவரும் என் மீது அன்பு காட்டினர். தோழியர் விவியன் குணவர்தன என் மீது அதீத பிரியம் கொண்டவர். மகனைப் போல அன்புடன் உரையாடுவார். முதன் முதலில் ஒரு தடவை அவரது உரையை வாலிப முன்னணி சம்மேளனத்தில் மொழி பெயர்த்தேன்.
அவர் உள்ளுராட்சி சபை தொழிலாளர் சங்கத்தின் (LOCAL GOVERNMENT UNION) g560d6d6JJITab5 (bög5Tj. SÐI6j g5L6up தொழிலாளர்கள் செறிவாக வாழும் பகுதிக்கு செல்லும் போதெல்லாம் என்னையும் அழைத்துச் செல்வார். சமசமாஜக்கட்சியில் பணியாற்றிய காலங்களில் வாசிப்பது, எழுதுவது, கட்சிப்பணிகளில் ஈடுபடுவது என் கடமையாகும்.
காலை கட்சி அலுவலகத்திற்கு சென்றால் நான் ஏழு, எட்டு மணியளவில் தான் வீடு திரும்புவேன். வெள்ளிக்கிழமைகளில் கட்சியின் வார இதழான “சமசமாஜ” என்ற இதழ் வந்துவிடும். நானும் கட்சித் தோழர்களும் கட்சியின் தலைமைக்காரியாலயத்தின் அருகிலுள்ள மருதானை ரயில் நிலையம், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பஸ்ஸிற்காகவும், ரயில் வண்டிக்காகவும் காத்துநிற்கும் போது மக்களிடம் பத்திரிகைகள் கொண்டு சென்று விற்போம்.
முதன் முதலில் தெருவில் பத்திரிகை விற்க தோழர்கள் அழைத்த போது வெட்கமாகவும், கூச்சமாகவும் இருந்தது. ஆனால் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அஞ்சா நெஞ்சம் படைத்த வழக்கறிஞர் கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா தோழர்க ளுடன் வீதியில் இவ்விதம் பத்திரிகை விற்ற பொழுது எனக்குள் குற்ற உணர்வு ஏற்பட்டது.
பின்னர் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளைகளில் தெருவில் இறங்கி தோழர்களுடன் பத்திரிகையை விற்பனை செய்வேன். ஒரு தடவை கட்சியின் தலைவரான டாக்டர் என்.எம்.பெரேரா எங்களோடு வந்து தெருவில் பத்திரிகை விற்றார். இது இடதுசாரி மார்க்சிய இயக்கத் தோழர்கள் முன்வந்து செய்யும் பணியாகும்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 28

லங்கா தோட்டத்தொழிலாளர் யூனியன் தன் பிரசார பணிகளுக்காக ஒரு பத்திரிகை வெளியிட தீர்மானித்தது. முதலில் அதனை மாத இதழாக வெளியிட முடிவு செய்தது.
லங்கா தோட்டத்தொழிலாளர் யூனியனில் இணைச்செயலா ளராக வி.எஸ். ராஜா, என்.பி.தர்மலிங்கம் இருவருக்குமே நான் பத்திரிகையை சிறப்பாகத் தயாரித்து வெளியிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஏற்கெனவே “தேசபக்தன்” பத்திரிகை நடத்திய அனுபவம் எனக்கு இருந்தது. “ஜனசக்தி” பத்திரிகையின் வெளியீட்டாளரும், ஆசிரியரும் நானே என நீதிமன்றத்தில் பதிவு செய்தேன்.
தமிழகத்திலிருந்து வெளிவந்த திராவிடர் இயக்கப் பத்திரிகை களின் பாணியில் தலைப்புக்களை வெளியிட்டேன். ‘உறவுக்கு கை கொடுப்போம்-உரிமைக்கு குரல் கொடுப்போம்” என்றும் “செம்படை திரண்டது வெஞ்சமர் புரிந்திட’ இப்படிப் பல தலைப்புக் களில் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் மாத்திரமன்றி ஏனைய தொழிலாளர்களும் படிக்கும் வண்ணம் வெளியிட்டோம்.
“சேகுவேரா” என்ற போராளியை கொன்ற சமயம் அவரைப் பற்றி சமசமாஜக்கட்சி சிங்களப் பத்திரிகையில் கொல்வின் ஆர்.டி. சில்வா ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை தழுவி சேகுவேரா என்ற மாவீரனைப் பற்றி படத்துடன் ஒரு கட்டுரை ஜனசக்தியில் வெளியிட்டேன். அந்த மரணத்தை வென்ற மாவீரர் மீது எனக்கு எப்பொழுதும் மரியாதை உண்டு.
அந்தப் பத்திரிகை கியூபா தூதரகத்திற்கு அனுப்பி வைத்தேன். அவர்கள் சேகுவேராவை பற்றிய படங்களுடன் தகவலுடன் படங்கள் கொண்ட நூலொன்றையும் சேகுவேரா விரும்பி குடிக்கும் சுருட்டு ஒன்றையும் ஞாபகமாக தந்தார்கள். 1971ல் நடந்த ஏப்ரல் கிளர்ச்சியின் போது வீடு வீடாக தேடுதல் நடத்திய பொழுது என்னை பொலிஸ் தேடி வந்த வேளை எனது தாயார் பயத்தின் காரணமாக எனது மாக்சிய இயக்க நூலுடன் சேகுவேரா நூலையும் எரித்துவிட்டார்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 29

Page 17
ஆனால், அந்த சூழ்நிலையில் அந்த நூல்களை ஆயுதப்படை யினரிடம் கிடைத்திருந்தால் என் கதி நிர்கதியாகியிருக்கும். ஆனாலும், பொலிஸார் என்னை பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித் தார்கள். ஏனென்றால் என் தோற்றமும், குறுந்தாடியும் என்னை சந்தேகத்திற் குரியவனவாக்கியது.
எனது பிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், சமசமாஜக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான பேர்னட் சொய்சா எனக்காக பொலிஸ் நிலையம் வந்து என்னை அவர் கட்சியின் உறுப்பினர் என கூறி விடுவித்தார்.
பாடசாலையின் வசந்த காலங்களைப் போல கட்சி பணிகளில் நான் ஈடுபட்டிருந்த வசந்த காலங்களை இப்பொழுது எண்ணிப்பார்க் கையில் எத்தகைய இனிமையான நாட்கள்.
நாடகத்துறையில்
மாலை வேளையில் கட்சி காரியாலயத்திற்கு அரசாங்க உத்தியோகம் பார்க்கும் சில சிங்கள கலைஞர்கள் வருவார்கள். அவர்கள் மேடை நாடகத்தோடு சம்பந்தப்பட்டவர்கள்.
அவர்கள் மேடையேற்றிய ‘நிதிகும்பா’ என்ற சிங்கள நாடகத்தின் ஒத்திகை றோயல் கல்லூரியில் நடைபெற்றது. மாலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணிவரை நடைபெறும். அவர்கள் என்னையும் ஒத்திகைக்கு அழைப்பார்கள். கலையார்வமிக்க நானும் அவர்களோடு ஒத்திகைக்குச் செல்வேன்.
அந்த நாடகத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்தவர் இன்று திரையுலகில் புகழ்பூத்த நடிகையாக திகழும் மாலினி பொன்சேகா. அவருடன் எஸ்.கருணாரத்ன என்பவர் நடித்தார். அது மாத்திரமல்ல, கட்சி அங்கத்தவரான திரைப்பட இயக்குனர் கிங்ஸ்லி ராஜபக்ஷ என்பவர் இயக்கும் திரைப்படப் பிடிப்பைப்பார்க்கப் போயிருந்தேன். அந்தப்படப்பிடிப்பு சிலோன் தியேட்டர் என்ற அரங்கில் நடைபெற்றது.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 30

பின்னர் மாலை வேளைகளிலும் ஓய்வுநாட்களிலும் சிலோன் தியேட்டர் என்ற அரங்கிற்கு போவது வாடிக்கையாகிவிட்டது. அங்கு பணியாற்றிய தமிழ் சிங்கள கலைஞர்களின் தொடர்பு ஏற்பட்டது. சிங்களத் திரைப்படங்களை இயக்கிய லெனின்மொறயஸ், எம்.வி. பாலன், கமிரா கலைஞர் எம்.ஏ.கபூர், சுண்டிக்குளி சோம சேகரன், இசையமைப்பாளர் ஆர். முத்துசாமி, பின்னர் எம்.பி.பாலன் இயக்கிய “மஞ்சள் குங்குமம்’ திரைப்பட தயாரிப்பில் சம்பந்தப்பட்டேன். அந்த திரைப்படத்தில் ஆரம்ப முதல் இறுதி வரை பணியாற்றினேன். சில காட்சிகளுக்கு வசனமும் எழுதினேன்.
இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஆர்.முத்துசாமி பல சிங்களப் படங்களுக்கு இசையமைத்தவர். இவரோடு எனக்கு நெருக்கமான நட்பு ஏற்பட்டது. இவர் இசையமைக்கும் சிங்களத் திரைப்படங்களுக்கு என்னை கூடவே அழைத்துச் செல்வார்.
இவரால் பிரபல சிங்கள பாடகர்கள் மொஹிதீன் பேக், ஜோதி பால, மில்டன்பெரேரா,'பைலா’பாடகர் எம்.எஸ். பெர்ணான்டோ, சுஜாதா போன்றவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைத்தது. 'மஞ்சள் குங்குமம்” திரைப்படத்தில் றிசங்கர் கதாநாயகனாக நடித்தார். பண்பிலும், பழகுவதிலும் கண்ணியமிக்க கலைஞராக திகழ்ந்தார். நடிப்பின் ஆர்வத்தால் தான் வகித்த உயர் தொழிலையும் இழந்தார்.
இவரோடு எனக்கு ஏற்பட்ட நட்பு அவர் அமரராகும் வரை தொடர்ந்தது. இவரே நான் முதன் முதலில் எழுதி இயக்கிய “முள்ளில் ரோஜா” நாடகத்தில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்தவர்.
எனது கதை வசனத்தில் நெறியாள்கையில் 23.08.1970ல் லும்பினி மண்டபத்தில் “முள்ளில் ரோஜா” மேடையேறியது. இந்த நாடகத்தில் பரீசங்கர், சுசில் குமார், பொஸ்கோ, செல்வராஜ், ஜெயா, கமலறி ஆகியோர் நடித்தனர். அப்பொழுது ஹீமாவோ பண்டாரநாயக் கவின் அமைச்சரவையில் தபாலமைச்சராக இருந்த செல்லையா குமாரசூரியர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 3.

Page 18
எனது முதல் நாடகமே நாடக உலகில் என்னை சிறப்பாக அறிமுகப்படுத்தியது. ‘நாடகத்தை நெறிப்படுத்திய அந்தனி ஜீவாவின் முதல் முயற்சியே நம்பிக்கை ஊட்டுகிறது” என நாடகாசிரியர் கே.எம்.வாசகர் இலங்கை வானொலியில் “கலைக்கோலம்’ நிகழ்ச் சியில் குறிப்பிட்டார்.
இந்த நாடகம் ஓர் எழுத்தாளரின் பிரச்சினையை கருவாகக் கொண்டிருந்தது. “முள்ளில் ரோஜா” நாடகத்தில் புதிய உத்தி முறைகளை கையாண்டிருந்தேன். இதற்கு முக்கிய காரணம் நாடக நெறியாளர் தயானந்த குணவர்தனவிடம் அரங்கியல் பற்றிய பயிற்சி பெற்றிருந்தேன்.
சிங்கள நாடக அரங்கில் நாடகத் தந்தை என வர்ணிக்கப்படும் சரத்சந்திராவிற்கு பிறகு சிறப்பாக பேசப்பட்ட இரண்டு சிங்கள நாடக தயாரிப்பாளர்களான தயானந்த குணவர்தன, ஹென்றி ஐய சேனா. இவர்கள் இருவரும் நெறிப்படுத்திய சிங்கள நாடகங்கள் என்னை பெரிதும் பாதித்தது.
நாடக நெறியாளர் தயானந்த குணவர்தனாவின் “நரிபேனா” (நரிமருமகன்) என்ற நாடகத்தின் ஒத்திகையின் போது நான் அங்கே நின்று அவர்களோடு உடனிருப்பேன். அந்த நாடகத்தில் நரியாக நடித்த கலைஞர் சொலமன் பொன்சேகாவின் நடிப்பு என்னை பெரிதும் கவர்ந்தது. பின்னர் இவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் நாடகத் துறையில் கலாநிதி பட்டம் பெற்றார்.
நாடக நெறியாளர்களான ஹென்றி ஜெயசேனா, தயானந்த குணவர்தன போன்றவர்கள் நாடகங்களை தயாரித்த பொழுது அவர்கள் அளிக்கும் பயிற்சிகளை நேரில் சென்று பார்த்து அவர்களின் அடிச்சுவட்டில் பயணித்து பல நாடகங்களை வெற்றிகரமாக தயாரித்து என்னால் மேடையேற்ற முடிந்தது. அதனால் நானும் தமிழ் நாடக மேடையில் கவனிப்புக்குரியவனாவேன். கலாவிமர்சகர் கே.எஸ். சிவகுமாரன் போன்றவர்கள் எனது முயற்சிகளை பெரிதும் பாராட்டி தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதினார்கள்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 32

அப்பொழுது தமிழ் நாடக மேடையில் சிறப்பாக நாடகங்களை நெறிப்படுத்திய சுஹைர் ஹமீட் அவர்களை நான் பெரிதும் மதித்தேன். அவர் முறையாக அரங்கியலை கற்றவர்.
தமிழ் நாடக மேடையில் மிகவும் குறைந்த மூன்றே மூன்று கதாபாத்திரங்களை வைத்து ‘கவிதா” என்ற நாடகத்தை அரங்கேற் றினேன். நான்கே நான்கு கதாபாத்திரங்களை கொண்ட “பறவைகள்” என்ற நாடகத்தை மூன்று தடவை மேடையேற்றினேன். முதலில் இந்த நாடகத்தில் இரண்டு தடவை நடிகர் ரீசங்கர் பிரதான பாத்திரத்தில் நடித்தார். மூன்றாவது தடவை "பொப்” இசைப்பாடகர் ஏ.ஈ.மனோகரன், ஹெலன் குமாரி, சந்திரகலா, ராஜம் ஆகியோர் நடித்தனர். எனது நெறியாள்கையில் முள்ளில் ரோஜா, பறவைகள், தீர்ப்பு, கவிதா, அக்கினிப்பூக்கள், வீணை அழுகிறது, சாத்தான் வேதம் ஒதுகிறது, அலைகள், பறக்காத கழுகுகள், மகாகவி பாரதி, ஆராரோ ஆரிவரோ, ஒன்று எங்கள் ஜாதியே ஆகிய நாடகங்கள் அரங்கேற்றியுள்ளேன்.
நான் மேடையேற்றிய நாடகங்களில் எனக்கு சிறப்பான பெயரையும், ஆத்ம திருப்தியையும் தந்த நாடகம் அக்கினிப்பூக்கள். இது தொழிலாளர் வர்க்கப் பிரச்சினைகளை கருவாகக் கொண்ட நாடகம். இந்த நாடகத்தின் முதல் அரங்கேற்றம் 1973ம் ஆண்டு பொரளை வை.எம்.பீ.ஏ. மண்டபத்தில் அரங்கேறியது. இந்த நாடகம் பத்தாண்டுகளில் 16 தடவை மேடையேறியுள்ளது.
இந்த நாடகத்தில் முதலில் நடித்த ரீசங்கர் பின்னர் நடிகர் டீன்குமார் அதற்கு பிறகு நடிகர் மோகன் குமார் ஆகியோர் நாடகத்தின் முக்கிய பாத்திரத்திரமான தொழிற்சங்கத் தலைவர்களின் பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
‘அந்தனி ஜீவா போன்றவர்களால் தமிழ் நாடக மேடை மறுமலர்ச்சி அடையவேண்டும். ஏனென்றால் அவரின் முயற்சி முற்றிலும் உண்மையானதாகவே தெரிகிறது”. இவ்வாறு விமர்சகர் கே.எஸ். சிவகுமாரன் டெயிலி நியுஸ் (Daily News) என்ற ஆங்கிலப் பத்திரிகையில் எழுதினார்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 33

Page 19
‘எல்லா இனத் தொழிலாளர்களையும் அவர்களின் பாஷை யில் பேச வைத்திருப்பது சிறப்புக்குரிய அம்சமாகும்” என தினகரன் வார மஞ்சரியில் எழுத்தாளர் எச்.எம்.பி. முஹிதீன் எழுதியிருந்தார்.
இந்த நாடகம் பதுளையில் சரஸ்வதி வித்தியாலயத்தின் முன்றலில் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாநாட்டு மேடையில் பத்தாயிரத்திற்கு அதிகமான தொழிலாளர்களின் முன்னிலையில் திறந்தவெளி அரங்கில் மேடையேற்றப்பட்ட பொழுது, தோட்டத்தொழிலாளர்கள் உணர்ச்சி வசப்பட்டு ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
காங்கிரஸ் மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நடிகர் ஜெமினி கணேசன், நடிகர் நாகேஸ், நடிகை சுஜாதா ஆகியோர் இந்த நாடகத்தை பெரிதும் ரசித்து பாராட்டி னார்கள். இந்த நாடகம் பற்றி “நானும் என் நாடகமும்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், “அக்கினிப்பூக்கள்’ அபூர்வமான சிருஷ்டியல்ல. இந்த நாடகத்தில் நீங்கள் சந்திக்கும் பாத்திரங்கள் ஏற்கெனவே நீங்கள் சந்தித்தவர்கள். உங்களோடு தினசரி உரையாடி யவர்கள். அவர்களில் ஒருவராகக் கூட நீங்களும் நானும் இருக்கலாம். நாடகத்தில் நான் எழுதியுள்ள வசனங்கள் என் எழுது கோலிலிருந்து வரவில்லை. இதயத்திலிருந்து பீறிட்டு வந்த ஆத்மாவின் ராகங்கள்.
படைப்பின் இலட்சியம் சமுதாயத்தின் தேவையாக இருக்க வேண்டும். அதில் மண்ணின் மணம் இருக்க வேண்டும். கலைஞன் மானுடன் படைக்கும் ஆத்மாவின் ராகமாக திகழ வேண்டும். இப்படி யெல்லாம் என் இதயச் சிந்தனையில் அக்கினிப் பூக்கள் மலரில் தெரிவித்திருந்தேன்.
“பல்கலைக்கழகத்தினின்று வெளியேறிய மாணாக்கர்களும் இவ்வியற் பண்பு நாடகநெறியினை வளர்த்தெடுத்தனர். பல்கலைக்கழ கத்தை சாராத பலரும் இவ்வியற் பண்பு நாடக நெறி வளர்த்தலில் உதவினர். கலையரசு சினிமா மரபில் நின்றவராயினும் பின்னணியில் தம்மைச் சூழவுள்ள வாழ்வை நாடகங்களில் இயல்பாக பிரதிபலித் தவர்களாக லடீஸ் வீரமணி, பெளசுல் அமீர், கலைச்செல்வன், அந்தனி ஜீவா ஆகியோர் காணப்படுகின்றனர்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 34

அந்தனி ஜீவாவின் அக்கினிப்பூக்கள், பெளசுல் அமீரின் தோட்டத்து ராணி, கலைச் செல்வனின் சிறுக்கியும் பொறுக்கியும் இவ்வகையில் அமைத்த நாடகங்களே என கலாநிதி சி.மெளனகுரு ‘ஈழத்து தமிழ் நாடக அரங்கு” என்ற தனது கலாநிதி தேர்விற்கான ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கலாசார பேரலை 1978ம் ஆண்டு நடத்திய நாடக விழாவில் நான் நெறிப்படுத்திய “அலைகள்’ நாடக அரச நாடக விழாவில் சிறந்த நடிகை சிறந்த இசையமைப்பிற்பகான இரண்டு விருதுகளைப் பெற்றது.
மேடை நாடகத்தில் மாத்திரமன்றி வீதி நாடக முயற்சிகளிலும் நான் ஈடுபட்டேன். இந்தியாவில் வீதி நாடக தந்தை எனக் கூறப்படும் வங்க நாடக மேதை பாதல்சர்கார் பயிற்சி பட்டறையில் பயின்று அதனை பின்னர் மலையகத்தில் பல இடங்களில் முன்னெடுத் துள்ளேன்.
வீதி நாடகம்
“இலங்கையில் தமிழில் வீதி நாடக செயற்பாடு தீவிரமாக காணப்படவில்லை. காமினி ஹத்தெட்டுவகமவின் குழு, தமிழ் மக்களிடையே சில நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. அந்தனி ஜீவா 1980ம் ஆண்டில் பாதல்சர்காரின் வீதி நாடக பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து வீதி நாடக பயிற்சிகள் நடத்தியுள்ளார்.”
இவ்வாறு எழுத்தாளரும், விமர்சகருமான எஸ்.எம்.ஜே. பைஸ்தீன் 25.09.1983ல் ‘வீரகேசரி’ பத்திரிகையில் நாடகம் சம்பந்த மான கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் வீதி நாடக முயற்சிகளை முன்னெடுத்தவர்கள் சகோதர சிங்கள நாடகக்கலை ஞர்களே. மக்கள் கூடும் சந்தைகளில், பஸ் நிலையங்களில் வீதி நாடகங்களை நடத்துவார்கள்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 35

Page 20
வீதி நாடக முன்னோடி காமினி ஹத்தொட்டுவகமவின் வீதி நாடக பயிற்சியின் பொழுதும், பின்னர் ஹட்டன் டன்பார் மைதானத்தில் அவர் சிங்களத்தில் நடத்திய நாடகத்தை தமிழில் தயாரித்து வழங்கும்படி வாய்ப்பளித்தார். இதன் பிறகு எனக்கும் வீதி நாடக முயற்சிகளில் ஈடுபாடு ஏற்பட்டது.
மேடை நாடகங்கள் நடுத்தர மக்களின் பொழுதுபோக்கு அம்சமாகவே நடைபெற்று வந்துள்ளன. வீதி நாடகம் மக்களை நேரிடையாகவே சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. வீதி நாடகத்தை Third Theatre என்ற மூன்றாம் வகை நாடகம் என டில்லியின் நாடகக் கல்லூரி அதிபராக இருந்து பல வெற்றிகரமான மேடை நாடகங்களை தயாரித்து வழங்கிய வங்த நாடக மேதை பாதல் சர்கார் பின்னர் வீதி நாடக முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.
மூன்றாவது தியட்டர் என்று புதிய நாடக வடிவத்தை உத்வே கத்துடன் உருவாக்கியவர் பாதல்சர்கார் தெருகூத்து வகையிலான நாடகங்களை முதலாவது தியட்டர் என்றும், மேற்கிலிருந்து நமக்கு வந்த பெட்டி வகை அமைப்பைக் கொண்ட (PROSCENTUMTHEATRE) மேடை நாடகங்களை இரண்டாவது தியேட்டர் என்றும் அதனை இவர் நகர மக்களுக்குரிய இரண்டாவது தியேட்டர் நாடகங்களை வெற்றிகரமாக மேடையேற்றினார்.
எழுபதுகளில் இத்தகை 2து வகை நாடகங்களிலிருந்து வேறுபட்டு ‘சதாப்தி” என்ற நாடகக்குழுவை அமைத்து மரபு வழி நாடக மேடையை முற்றாக நிராகரித்து திறந்த வெளியல் 3° வகை நாடகங்களை நடத்தியுள்ளார்.
1980ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10 நாட்கள் சென்னையில் பாதல்சர்காரைக் கொண்டு வீதி நாடகப் பயிற்சி பட்டறை ஒன்றை சென்னையில் உள்ள வீதி நாடக இயக்கம் நடத்த திட்டமிட்டனர். எனது நாடக முயற்சிகளை அறிந்த அக்கினிப்புத்திரன் போன்றவர்கள் என்னையும் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தனர்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 36

தமிழகத்தில் அடையாருக்கு அருகிலுள்ள சோழ மண்டல பகுதியில் ஒவியர்களின் கிராமத்தில் பயிற்சிப் பட்டறை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பத்து நாட்கள் நடைபெறும் பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ள சென்னைக்கு சென்றேன்.
இன்று பிரபல நாட்டுப்புறவியல் கலைஞரும், பாண்டிச்சேரி சங்கரதாஸ் கலைப்பள்ளியில் பேராசிரியராக இருக்கும் டாக்டர் கே. குணசேகரன், எழுத்தாளர் பிரபஞ்சன், பூமணி, ஞானி, அக்கினிப் புத்திரன், திருச்சி அல்பர்ட், அம்சன்குமார், சாமிநாதன், மீனாட்சி சுந்தரம், விவேகானந்தன், எம்.ராமசாமி, பைரவி ரங்கராஜன் இப் : 28 பேர் அந்தப் பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றினோம். பத்து நாட்கள் பயிற்சி பட்டறை ஒரு தவமாய் அமைந்தது. பயிற்சி பட்ட றையில் பங்குபற்றிய அனைவரும் ஆளுக்கொரு வீதி நாடகத்தை தயாரிக்க வேண்டும்.
பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றியவர்கள் தாங்கள் பெற்ற பயிற்சிகளின் அடிப்படையில் ஒவ்வொருவரும் தானே இயக்கி தானே கதை அமைத்து தாங்களே காட்சி அமைப்புக்களை உருவாக்கி, ஐந்து நிமிட நாடகமொன்றை தயாரித்து வழங்க வேண்டும். ஒருவர் பட்டறையில் பங்கு பற்றியவர்களிடம் இருந்து நடிகர்களை தெரிவு செய்து கொள்ளலாம். தாம் தெரிவு செய்யும் நடிகர்களை வைத்து பத்து நிமிடங்கள் அவர்களுக்கு நாடகக்கதையைச் சொல்லி, எப்படி நடிக்க வேண்டும், காட்சி அமைப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்பதனை விளக்கி, பயிற்சியளித்து, இயக்கி ஐந்து நிமிட சிறு நாடகமொன்றை அப்போதே பயிற்சி பட்டறையில் பங்குபற்றியவர்களி டையே நிகழ்த்திக் காட்ட வேண்டும்.
இந்தப் பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றியவர்களின் பிரபஞ்சன் ஆண்டான் செகாவின் பச்சோந்தியை ‘மந்திரியின் நாய்’ என்ற தலைப்பில் நிகழ்த்தி காட்டினார். சந்தையில் நாய் ஒருவனை கடித்து விடும். கடிபட்டவன் அலறுவான். அங்கே வந்த பொலிஸ்காரர்கள், கடித்த நாய் பெரிய இடத்து நாய் என்று அறிந்ததும் நாய் யாரைக்கடித்ததோ அந்த கடிபட்டவனை தண்டிப்பார்கள்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 37

Page 21
இப்படி ஒவ்வொரு பயிற்சியாளரும் ஒரு நாடகத்தை நிகழ்த்திக் காட்டினார்கள். நான் ‘சாத்தான் வேதம் ஒதுகிறது” என்ற தலைப்பில் தேர்தல் குறித்தும் வாக்குறுதிகள் குறித்தும் மக்களை ஏமாற்றுவது குறித்து ஒரு நாடகத்தை நெறிப்படுத்தினேன்.
பயிற்சிப் பட்டறையில் பங்கு பற்றிய அனைவரும் ஆளுக் கொரு நாடகத்தை நிகழ்த்திக் காட்டினார்கள். நிகழ்த்திக் காட்டப்பட்ட நாடகத்தைப் பற்றி பாதல்சர்காருடன் கலந்துரையாடினோம். பயிற்சி யாளரான வீதி நாடக மேதையான பாதல்சர்கார் ‘எனக்கு வயதாகி விட்டது. நான் வயசானவன். இது போன்ற பயிற்சிப் பட்டறைகளில் பயிற்சி பெற்று செல்கின்ற நீங்கள் தான், இந்த இருபத்தெட்டு பேரும் இந்த தீபத்தை பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் சென்று பிரகாசிக்கச் செய்யப் போகிறீர்கள் என்று நான் நம்புகிறேன்’ என்று உருக்கமாக முடித்தார்.
அதன் பின்னர் நாடு திரும்பியதும் கோட்டை வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் “சாத்தான் வேதம் ஒதுகிறது” என்ற வீதி நாடகத்தை நிகழ்த்திக் காட்டினேன். பின்னர் மலையகத்தோடு எனது கலை இலக்கியப் பயணம் தொடர்ந்தது. கண்டி, கொட்டகலை, நுவரெலியா என வீதி நாடக பயிற்சி பாசறைகள் நடத்தினேன். என்னோடு கவிஞர் முரளிதரனும் ஒத்துழைப்பு வழங்கினார்.
எமது வீதி நாடக முயற்சிகளுக்கு மத்திய மாகாண கல்விய மைச்சராக இருந்த திரு. வி.புத்திரசிகாமணி அமைச்சின் நிதியுதவி வழங்கி நாடக பயிற்சிப் பட்டறை நடத்த உதவினர். பெருந்தோட்டத் துறையைச் சார்ந்த இளைஞர்கள் பலர் பயிற்சி பட்டறையில் பங்கு பற்றினார்கள்.
கண்டி சத்தியோதய மண்டபத்திலும், மாத்தளை இந்து மகா வித்தியாலயத்திலும், ரீபாத கல்விக்கல்லூரியிலும், நுவரெலியா திரித்துவக்கல்லூரியிலும் வீதி நாடகம் பயிற்சி பட்டறைகள் நடத்தப் பட்டன.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 38

கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டின் வீதி நாடகப் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டு “வெளிச்சம்” என்ற வீதி நாடகக் குழுவொன்று உருவாக்கப்பட்டது. இந்த பயிற்சிக்கு பொறுப் பாளராக செயற்பட்டேன்.
ஒவ்வொரு மாதமும் தோட்டங்களுக்குச் சென்று அவர்கள் மத்தியில் வீதி நாடகங்கள் நடத்தி வருகிறேன். ஆரம்பத்தில் வெளிச்சம் நாடகக் குழுவினருக்கு ஷெல்டன் பயாகல, ஐயலால் ரோகன போன்றவர்கள் வீதி நாடகம் பற்றிய விளக்கங்களை அளித்து பயிற்சிகளும் வழங்கினார்கள்.
கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர் பெ.முத்து லிங்கம் வெளிச்சம் வீதி நாடக பயிற்சி பட்டறையில் பங்குகொண்டு வீதி நாடகம் சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்துரைகளை வழங்கி வெளிச்சம் நாடக குழுவினர்களுடன் கலந்துரையாடுவார்கள்.
வெளிச்சம் நாடகக் குழுவின் அனைவரும் சமமாக மதிக்கப் பட்டோம். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் பெருந் தோட்டத்துறை மாணவர்கள் பலர் எமது குழுவில் நிரந்தரமாக பங்கு பற்றினார்கள். புசல்லாவையைச் சேர்ந்த வாசுதேவன், எம்.மகேஸ்வரன் ஆகியோரும் எமது குழுவில் இடம்பெற்றனர்.
தமிழகத்திலிருந்து இங்கு வருகை தந்த வீதி நாடகக கலைஞரான பிரளயன் வீதி நாடகத்தை பற்றி சிறப்பான பயிற்சிகள் வழங்கினார். அதன் பிறகு மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு வருகை தரு விரிவுரையாளராக வருகை தந்த பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் வெளிச்சம் குழுவினருக்கு பயிற்சியளித்து, அவரும் எங்களோடு வீதி நாடகத்தில் பங்குபற்றி கவிஞர் இன்குலாப்பின் பாடலான ‘நாங்க மனுசங்கடா’ என்ற பாடலை மக்கள் முன்னிலையில் பாடினார். அவரும் எங்களில் ஒருவராக செயற்பட்டார்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 39

Page 22
மலையக பாரம்பரிய கலைகள்
மலையகத்தின் பாரம்பரிய கலைகளைப் பாதுகாப்பதிலும், மேம் படுத்துவதிலும் ஆர்வமுடன் செயற்பட்டுள்ளேன். இலங்கை அரசின் கலாசார அமைச்சின் கீழ் இயங்கிய கலைக்கழக நாடகக்குழுவில் அங்கத்துவம் வகித்து மேடை நாடக வளர்ச்சிக்காக செயற்பாடுகளை மேற்கொண்ட வேளையில், கலாசார அமைச்சராக இருந்த மாண்பு மிகு லக்ஷ்மன் ஜயகொடி அவர்கள் மலையகத்தின் பாரம்பரிய கலைகளை மேம்படுத்த ஒரு குழுவை அமைத்தார். அமைச்சரின் விஷேட ஆலோசனையின் பேரில் அந்த குழுவில் என்னையும் இடம்பெறச் செய்தார்.
மலையகத்தின் பாரம்பரிய கலைகளை பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் தோட்டங்களில் முடங்கிப்போன மரபுக்கலை ஞர்களை தேடிப்பிடித்து அவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தோம். இதற்கு எனக்கு ஒத்துழைப்பு நல்கியவர்கள் சிங்கள கலைஞர்களே. அமைச்சில் தொடர்பு அதிகாரியாக இருந்த திரு. குணதாச மலையக பாரம்பரிய கலைகளை ஊக்குவிப்பதில் எனக்கு முழு சுதந்திரமும் அளித்தார்.
கண்டிக்கு அருகிலுள்ள கலஹாவில் வாசி மலைத்தோட்டத் தைச் சேர்ந்த கரகாட்டக் கலைஞரான முத்துசாமி பச்சை முத்து என்பவர் கோவில் திருவிழாக்களிலும், தேரோட்டத்தின் பொழுதும் தெருவில் தனது கரகாட்டத்தை நடத்தி வந்தார். இந்த கரகாட்டக் கலைஞரை தேடிப்பிடித்து சிங்கள பாரம்பரிய கலைஞர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினோம். அத்துடன், மலையகத்தில் மறைந்துவரும் கலைகளான பாரம்பரிய கலைகளையும் கலைஞர்களை ஆண்டு தோறும் கொழும்பில் ஜோன் டி சில்வா கலையரங்கில் நிகழ்வுகளை நடத்தி விருதும் பணப்பரிசும் அரசால் வழங்கி கெளரவிக்கப் பட்டார்கள்.
கலைஞர் பச்சை முத்துவின் கரகாட்ட நிகழ்ச்சியை சிங்கள மக்கள் பெரிதும் விரும்பி வரவேற்றனர். மூத்த கலைஞர்களுக்கு வழங்கும் கலாபூஷண விருதினையும் அமைச்சரிடம் கூறி வழங்கி கெளரவித்தோம்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 40

அது மாத்திரமல்ல. இலங்கை சுதந்திரம் அ!ை.ந்த ஐம்பதாவது ஆண்டை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாய்க்க தலைமையில் நடத்த சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ் வில் புகழ் பூத்த சிங்கள கலைஞர்களுக்கு மாத்திரம் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. விழாக்குழுவில் இடம் பெற்றிருந்த அமைச்சர் லக்ஷ்மன் ஜயகொடியவர்கள் உடனடியாக தமிழ், முஸ்லிம் கலைஞர் களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என வாதாடி கரகாட்டக் கலைஞரான பச்சை முத்துவுக்கே அந்த வாய்ப்பை வழங்க விரும்பி உடனடியாக அமைச்சர் என்னைத் தொடர்பு கொண்டு கலைஞர் பச்சை முத்துவை அந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யும்படி சொன்னார். அந்த விழாவில் கலைஞர் பச்சை முத்துவின் நிகழ்ச்சி சிகரமாக அமைந்தது.
இலக்கியப் பணிகள் இனி, எனது இலக்கிய முயற்சிகளைப் பற்றி சொல்ல வேண்டும். 1978ம் ஆண்டு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் திருப்பூரில் நடத்திய மாநாட்டில் இலங்கை பிரதிநிதியாக கலந்து கொண்டேன். அந்த மாநாட்டில் ஜெயகாந்தன், சிதம்பர ரகுநாதன் போன்றவர்களும் கலந்து கொண்டார்கள்.
பேராசிரியர் வானமாமலையின் தலைமையில் ‘ஈழத்து தமிழ்
நாடகம்” என்ற தலைப்பில் எனது ஆய்வுகளை நிகழ்த்தினேன். மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பிய பின்னர் எண்பதுகளில் கண்டியில் ‘மலையக கலை இலக்கியப் பேரவை’ என்ற அமைப்பை நிறுவினோம். என்னோடு இந்த அமைப்பின் ஸ்தாபகராக பத்திரிகை யாளர் க.ப.சிவம், கவிஞர் மலைத்தம்பி, கண்டி கலாசார சங்கத்தின் தலைவரான சுப்பரமணியம், கேகாலையில் பாடசாலை அதிபராக கடமையாற்றிய ஏ.பி.வி.கோமஸ் ஆகியோர் ஆரம்பகர்த்தாக்களாக செயற்பட்டனர்.
மலையக கலை இலக்கிய பேரவையின் மூலம் தலைநகரான கொழும்பில் கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் கவிஞரும், தொழிற் சங்கவாதியுமான சி.வி.வேலுப்பிள்ளை அவர்களின் சேவையைப் பாராட்டி கெளரவிக்குமுகமாக 'தினகரன்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர்.சிவகுருநாதன் தலைமையில் பெருவிழா எடுத்தோம்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 4.

Page 23
சி.வி.அவர்களின் இலக்கிய தொழிற்சங்க பணிகளைப் பற்றி ஒரு காத்திரமான உரையை பேராசிரியர் கைலாசபதி நிகழ்த்தினார். சி.வி.வேலுப்பிள்ளை அவர்களுக்கு ‘மக்கள் கவிமணி’ என்ற விருதினையும் வழங்கினர். இந்த பாராட்டு விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய :ர்கள் மூவரில் ஒருவர் கொழும்பு கலைச்சங்கச் செயலாளர் கே.பாலச்சந்திரன் மற்றைய இருவர் கவிஞர் பெரியசாமி, இலக்கியப் புரவலர் எம்.ரெங்கநாதன் ஆகியோர்.
இந்தப் பாராட்டு விழாவில் நாவலாசிரியர் இளங்கீரன், கலாநிதி ஜெயராசா, ஏ.பி.வி.கோமஸ் ஆகியோர் பாராட்டுரை நிகழ்த் தினார்கள். கவிஞர் பெரியசாமி, கவிஞர் பானா. தங்கம் ஆகியோர் கவி வாழ்த்துப் பாடினார்கள். ஓரிரு ஆண்டுகளிற்கு பின்னர் எழுத் தாளர் சாரல் நாடன், கண்டி சில்வேஸ்டர் கல்லூரியின் மாணவரான எஸ். முரளிதரன் ஆகியோர் எங்களுடன் இணைந்து கொண்டனர்.
மலையக கலை இலக்கியப் பேரவை இலக்கிய கருத்தரங்கு, கலந்துரையாடல், நூல்வெளியீடு ஆகிய முயற்சிகளில் முன்னின்று செயற்பட்டது. எனது இலக்கிய செயற்பாடுகளுக்கு மலையக மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை ‘செய்தி” ரா.மு.நாவலிங்கம் போன்ற வர்கள் நல்ல ஆலோசனைகளை வழங்கி வந்தனர்.
1986ம் ஆண்டில் மலையக கலை இலக்கியப் பேரவை தனது ஐந்தாவது ஆண்டு விழாவை ஒரு முழுநாள் விழாவாக நடத்தியது. காலை நிகழ்வு கண்டி சத்தியோதய மண்டபத்தில் நடைபெற்றது. காலை நிகழ்வில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் செயலாளர் பிரேம்ஜியும், மக்கள் எழுத்தாளர் முன்னணியின் தலைவர் குணசேன வித்தான அவர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள்.
கலை நிகழ்வில் எழுத்தாளர் சாரல் நாடன் எழுதிய ‘சி.வி. சில சிந்தனைகள்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. அதன் முதல் பிரதியை சி.வி. வேலுப்பிள்ளையின் துணைவியார் பெற்றுக் கொண்டார். அடுத்து எஸ்.முரளிதரன் எழுதிய “தியாகயந்திரங்கள்’ என்ற கவிதைத் தொகுதியை பேராசிரியர் அ.சிவராசா வெளியிட முதல் பிரதியை கவிஞர் பண்ணாமத்துக் காவிராயர் பெற்றுக் கொண்டார்.
சிறகு பிரிந்த காலம் - அந்தனி ஜீவா 42

பேரவையின் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த திருக்குறளை சிங்களத்தில் மொழிபெயர்த்த மூத்தறிஞர் சார்ள்ஸ் சில்வா சிறப்புரையாற்றினார். அதன் பின்னர் திரு.குணசேன வித்தான கேயும் கருத்துரை வழங்கினார். பகலுணவுக்குப் பின்னர் கவிஞர் குறிஞ்சி தென்னவன் தலைமையில் கவியரங்கு நடைபெற்றது. கவியரங்கில் கவிஞர்கள் பண்ணாமத்து கவிராயர், மாத்தளை வடிவேலன், ஸ்மாலிகா, அல்அஸஉமத், மேமன்கவி, தேவதாசன் ஜெயசிங் ஆகியோர் பங்கு பற்றினார்கள்.
மாலை நிகழ்வு மத்திய மாகாண இந்து மாமன்ற மண்டபத் தில் நடைபெற்றது. அமைச்சர் செ.இராசதுரை கலந்து சிறப்பித்தார். விழாவில் சிறுகதைச் சிற்பி என்.எஸ்.எம்.இராமையா, திருமதி நயீமா சித்தீக், சாரல்நாடன், க.ப.சிவம், பண்ணாமுத்துக் கவியராயர், கவிஞர் குறிஞ்சி தென்னவன், மூதறிஞர் சார்ள்ஸ் த.சில்வா ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர். விழாவிற்கு மத்திய மாகாண சபை உறுப்பினர் திரு.அண்ணாமலை, வழக்கறிஞர் ஜெயா பெரி. சுந்தரம் சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்தனர். இறுதியில் கலைச்செல்வி நிர்மலாவின் பரத நாட்டியம் இடம்பெற்றது. ‘மலைநாட்டு மாணிக்கங் கள்” என்ற தலைப்பில் மலையக மேம்பாட்டுக்கு உழைத்த தலைவர் களைப் பற்றி தொடர்ந்து எழுதி வந்தேன். பின்னர் இந்த தொடர் ‘துரைவி’ பதிப்பகத்தால் துரை விஸ்வநாதன் அவர்களால் நூலாக வெளியிடப்பட்டது. இதனை பலரும் வரவேற்றனர். “குன்றில் மலர்ந்தது” என்ற தலைப்பில் மலையக எழுத்தாளர்களின் நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
வெறும் துண்டுப் பிரசுரம் போல வெளிவந்த “குன்றின் குரல்’ சஞ்சிகைக்கு இலக்கிய அந்தஸ்த்து அளிக்கப்பட்டு மலையக சிற்றிதழ்கள் வரிசையில் “குன்றின் குரல்' சஞ்சிகையும் பாராட்டப் பட்டது. ‘குன்றின் குரல்' சஞ்சிகை சகோதர இதழாக “அநாவரண” என்ற சிங்கள சஞ்சிகை வெளிவந்தது. சிங்கள மொழியில் நன்கு பரிச்சயமுள்ள ஜே.ஜேஸ் கொடியே இதற்கு பொறுப்பாளராக இருந்தார். மலையக எழுத்தாளர்களின் படைப்புகளை சகோதர சிங்களவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவாவில் மல்லிகை
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 43

Page 24
சி. குமாரின் சிறுகதை, குறிஞ்சி தென்னவனின் கவிதை, சாரல் நாடனின் கோ.நடேசய்யர் பற்றிய கட்டுரை எனது ‘மலையக இலக்கிய வளர்ச்சி” பற்றிய கட்டுரை ஆகியவைகள் “அநாவரண” சஞ்சிகையில் வெளிவந்தது. பின்னர் இவைகளை ஒரு நூலாக கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டோம்.
“பெருந்தோட்டத்துறையில் பூத்த மலர்கள்” என்ற தலைப்பில் இதனை வெளியிட முயன்றோம். இதற்குத் தோட்டப் பிரதேச கூட்டுச் செயலகத்தில் அங்கம் வகித்த சிலர் தடையாக இருந்தனர். அந்த முயற்சி கை கூடாமற் போனதற்கு இன்னொரு காரணம் தோழர் ஜே.ஜேஸ்கொடியும் இளவயதில் மரணத்தை தழுவிக் கொண்டார். தோழர் ஜேஸ்கொடி அவர்களைப் பற்றி சிறிது குறிப்பிட வேண்டும். மலையகத்தில் ஓர் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டார். கவிஞர் குறிஞ்சி தென்னவன் மீது அன்பு செலுத்தி வந்தார். தன்னால் இயன்ற பொழுதெல்லாம் பொருாளதார உதவி செய்தார். தொழிற்சங்கவாதி எஸ்.நடேசனுக்கு அவரது மலையக தமிழரின் வரலாற்றை ஆங்கிலத்தில் அவர் எழுதிய பொழுது, அவருக்கு தேவையான சில நூல்களை தேடிக்கொடுத்தனர்.
மலையக வெளியீட்டகம்.
எங்கள் செயற்பாடுகள் அனைத்தும் காற்றில் கதை பேசிய கதையாக போய்விடாமலிருக்க, மலையக கலை இலக்கியப் பேரவை யின் 5 ஆண்டு விழாவை நடத்த திட்டமிட்ட பொழுது ‘மலையக வெளியீட்டகம்” என்ற அமைப்பை உருவாக்குவது சம்பந்தமாக நானும் நண்பர் சாரல் நாடனும் திட்டமிட்டோம். எங்களோடு அப்பொ ழுது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டி ருந்த எஸ். முரளிதரனும் இணைந்து கொண்டார்.
மலையக வெளியீட்டகத்தின் முதல் வெளியீடாக சாரல்நாடன் எழுதிய ‘சி.வி.சில சிந்தனகள்’ என்ற நூலும், எஸ்.முரளிதரனின் புதுக்கவிதைகளைக் கொண்ட “தியாகயந்திரங்கள்” என்ற நூலும், மலையக கலை இலக்கியப் பேரவையின் 5வது ஆண்டு விழாவின் பொழுது வெளியிடப்பட்டது. சி.வி.அவர்கள் மரணிக்கும் வரை இங்கு செயற்பட்ட தொழிலாளர் தேசிய சங்கம் செய்யாத பணியை நாங்கள் செய்தோம் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 44

அது மாத்திரமல்ல சி.வி.உயிருடன் வாழ்ந்த பொழுது மலை யக கலை இலக்கியப் பேரவை சிறப்பான விழாவை நடத்துவதற்கும் தலைநகரான கொழும்பில் அவருக்குரிய மரண செய்தியை ஊடகங் களுக்கு கொடுப்பதற்காக என்னோடு உடனிருந்து செயற்பட்டவர் தமிழறிஞர் க.நவசோதி இது பற்றி விரிவாக நான் எழுதிய “சி.வி.சில சிந்தனைகள்” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளேன்.
1986ன் பின்னர் மலையக கலை இலக்கியப் பேரவை ஆக்க இலக்கிய பணிகளை முன்னெடுக்க முனைந்தது. இதற்காக மலைய கத்தின் பல பகுதிகளிலும் எழுத்துப்பயிற்சி பட்டறைகளை நடத்தியது. மலையகத்திலிருந்து ஒரு இலக்கிய சஞ்சிகை வெளிவர வேண்டும் என ஆசைப்பட்டோம். ‘‘கொழுந்து” என்ற பெயரில் 1988ம் ஆண்டு சஞ்சிகை ஒன்றை வெளியிட்டோம்.
‘‘கொழுந்து' சஞ்சிகையின் முதல் இதழ் 1988ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிவந்தது. ஆசிரியர் தலையங்கத்தில் ‘அன்புள்ளங்கொண்டவர்களே, நீண்ட நெடு நாட்களாக நாங்கள் கண்ட கனவு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தேயிலைக்கு சாயத்தை யும் தேநீருக்கு பசுமையையும் தந்த பாரம்பரியத்தின் வழித்தோன் றல்கள் நாங்கள். மலைமுகடுகளிலும், தேயிலைக்காடுகளிலும் மானுடம் பாடும் வானம் பாடிகளின் எண்ணங்களுக்கும் இதயத்தாகங் களுக்கும் கொழுந்து களம் அமைக்கும் மலையக இலக்கிய வளர்ச்சிக்கு சமூக பார்வையுடன் கொழுந்து வடிவும் பொழிவும் ஊட்டும் புதிய விடியலில் முகம் காட்ட விரும்புகிறவர்கள் எங்களோடு இணைந்து பரணிபாட வரலாம். சமுதாய பார்வையுள்ள அனைவ ரையும் அணைத்துக் கொண்டு செயல்படுவோம். மலையக எழுத்துலகின் பழைய பரம்பரையும் புதிய தலைமுறையும் எங்களோடு இணைந்து பயணம் போக வந்துள்ளார்கள். பாதை தெரிகிறது. பயணம் தொடர்கிறது.’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளேன்.
கொழுந்து அட்டையில் பசுமை மிகுந்த தேயிலை கொழுந்து இடம்பெற்றது. ‘என் குருநாதன்” என்ற தலைப்பில் கவிஞர் பெரிய சாமி ஐம்பதுகளில் எழுதிய கோ.நடேசய்யர் பற்றிய கவிதை மறு பிரசுரம் பெற்றது. அதே போல கோ.நடேசய்யரின் சாதனைகள் என்ற சி.வி.வேலுப்பிள்ளையின் கட்டுரையும் இடம்பெற்றது.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 45

Page 25
முதல் இதழில் கவிஞர் சு.முரளிதரன், தமிழோவியன் வெளி மடை ரபீக், மாத்தளை வடிவேலன், புசல்லாவ இஸ்மாலிகா, குறிஞ்சி தென்னவன் ஆகியோரின் கவிதைகளுடன் மூத்த படைப்பாளி கே.கணேஷின் மொழிப்பெயர்ப்பு கவிதையும் இடம்பெற்றது. மற்றும் இர.சிவலிங்கம், சாரல் நாடன், மலேசியா கவிஞர் சா.அன்பழகன், வீரா.பாலச் சந்திரன், மொழிவரதன், கருணா பெரேரா ஆகியோரின் படைப்புகள் முதல் இதழில் இடம்பெற்றிருந்தன.
கொழுந்து சஞ்சிகை 7°து இதழுடன் பயணத்தை நிறுத்திக் கொண்டது. அதன் பின்னர் மலையக கலை இலக்கிய பேரவையின் 15வது ஆண்டு விழாவின் பொழுது கொழுந்து மீண்டும் வெளிவந்தது. மீண்டும் 12 இதழ்களுடன் பயணத்தை நிறுத்திக் கொண்டது. கொழுந்து வெளிவராத காலத்தில் தோட்டப் பிரதேசங்களின் கூட்டுச் செயலகம் என்ற அரசு சார்பற்ற அமைப்பில் வெளிவந்த “குன்றின் குரல்"என்ற சஞ்சிகையின் ஆசிரியர் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப் பட்டது. இதற்கு கூட்டுச் செயலகத்தில் பணியாற்றிய இலக்கிய ஆர்வமிக்க ஜே.ஜோப்கொடி இந்த சஞ்சிகை சிறப்பாக வெளிவர ஒத்துழைப்பு நல்கினார். மீண்டும் 'கொழுந்து வெளிவந்துக் கொண்டிருக்கிறது. 23 இதழ்கள் வெளிவந்துள்ளன.
மலையகத்தின் சிறந்த சிறுகதைகளை ‘காலத்தை வென்ற கதைகள்’ என்ற தலைப்பில் மறுபிரசுரம் செய்தோம். தெளிவத்தை ஜோசப், பூரணி, மலரன்பன், மரியதாஸ், பன்னீர் செல்வம், மாத்தளை வடிவேலன், நூரளை சண்முகநாதன், மு.சிவலிங்கம் ஆகியோரின் கதைகள் இடம்பெற்றது.
தேசபக்தன் கோ.நடேசய்யர் மலையக அரசியல், தொழிற்சங்கம், இலக்கியம், பத்திரிகை ஆகியவற்றின் முன்னோடியும் முதல்வருமான கோ.நடேசய்யர் அவர்களை ஒரு சிலர் மாத்திரம் தொழிற்சங்கவாதியாக மட்டும் அறிந்து வைத்திருந்தார்.
கே.நடேசய்யரின் பணியினையும், தொண்டினையும் பன்முக ஆற்றலையும் நாடறியும் வண்ணம் கட்டுரைகள் எழுதியும் கருத்த ரங்கு நடத்தியும் செயற்பட்டது மலையக கலை இலக்கியப் பேரவை.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 46

கோ.நடேசய்யர் பற்றிய ஓர் ஆய்வு நூலை கொண்டு வர வேண்டும். அது சம்பந்தமாக கண்டி சத்தியோதய மண்டபத்தில் 1986ல் தொழிற்சங்கவாதி எஸ்.நடேசன் தலைமையில் மலையக கலை இலக்கியப் பேரவை ஒரு கருத்தரங்கை நடத்தியது. இலங்கை தொழிற்சங்க வரலாற்றை எழுதிய கலாநிதி குமாரி ஜெயவர்தனா அவர்களையும் அழைத்திருக்கிறோம். அவரது ஆய்வு நூலில் கோ.நடேசய்யரின் தொழிற்சங்க பணிகளை பற்றி ஓர் அத்தியாயம் எழுதாமலிருந்தால் கோ.நடேசய்யர் மறைக்கப்பட்டிருப்பார்.
கலாநிதி குமாரி ஜெயவர்தனா கருத்தரங்கில் தேடுதலுக்கான அரிய தகவல்களை தெரிவித்தார். கோ.நடேசய்யர் பற்றிய ஆய்வு நூலை எழுதும் முயற்சியில் எழுத்தாளர் சாரல் நாடன் ஈடுபட்டிருந்தார். இந்த ஆய்வு நூலைப்பற்றிய தகவல்களை தேடும் முயற்சியில் ஈடு பட்ட பொழுது, தொழிற்சங்கவாதி எஸ்.நடேசனுடன் நானும் சாரல் நாடனும் கலாநிதி குமாரி ஜெயவர்தனவை அவரது இல்லத்தில் சென்று மீண்டும் சந்தித்தோம்.
கலாநிதி குமாரி ஜெயவர்தனா மேலும் பல தகவல்களை தெரிவித்தார். அவருக்கு தமிழ் தெரியாதபடியால் கோ.நடேசய்யரின் பத்திரிகை துறை பணிகளைப் பற்றி முறையான தகவல்கள் சாரல் நாடன் எழுதும் ஆய்வு நூலில் இடம் பெற வேண்டும் என்றார். நானும் நண்பர் சாரல் நாடனும் கொழும்பிலுள்ள தேசிய சுவடி காப்பகத்தில் பல நாட்கள் தூசி படிந்த பழம் பத்திரிகைகளை படித்தோம். பயனுள்ள தகவல்களை திரட்டினோம். நான் தமிழ் பத்திரிகைகளில் தேடுதல் நடத்துவேன். சாரல் நாடன் ஆங்கில பத்திரிகைகளில் குறிப்பு எடுப்பார். பல நாட்கள் அவர் லீவு எடுத்த காரணத்தால் தொழிலை இழக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
எழுத்தாளர் சாரல் நாடனின் அயராத முயற்சியின் காரண மாக கோ.நடேசய்யர் பற்றிய அரிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. இந்த நூல் அச்சிலிருக்கும் பொழுது இதனை வெளியிட வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 47

Page 26
மலையக முதல் தொழிற்சங்க பிதா மகனான கோ.நடேசய் யரின் நூலை கொழும்பில் சிறப்பாக வெளியிட வேண்டும் என ஏற்பாடு செய்தோம். நூலை வெளியிட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரான எஸ்.தொண்டமான் அவர்களை அழைத் தோம். அவரை நேரில் சென்று அழைத்த பொழுது “நூலை பார்க்காமல் படிக்காமல் வரமாட்டேன்’ என்றார். “தேசபக்தன் கோ. நடேசய்யர்” நூலின் பிரதியை வெளியீட்டு விழாவிற்கு பத்து நாட்கள் இருக்கும் பொழுது நானே நேரில் சென்று அவரிடம் கொடுத்தேன்.
கொழும்பு “தப்ரபேன்’ ஒட்டலில் நூல் வெளியீட்டு விழா பிரதேச அபிவிருத்தி அமைச்சர் செ.இராசதுரையின் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் எஸ்.தொண்டமான் நூலை வெளியிட்டு வைத்தார். அப்பொழுது அவர் சொன்ன சில வார்த்தைகள் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். “இந்த நூலின் ஆசிரியர் சாரல் நாடனும், நூலைப் பதிப்பித்த அந்தனி ஜீவாவும் பிராமணர்களில்லை. தஞ்சாவூரிலிருந்து இங்கு வந்து சேவையாற்றிய நடேசய்யர் என்ற பிராமணரைப் பற்றி இந்த நூலை இவர்கள் எந்தவித வருமானமும் கருதி வெளியிடவில்லை. அதனால் இவர்களை பாராட்டுகிறேன்’ என்றார். எம்.வாமதேவன் அவர்கள் நூல் பற்றிய சிறப்பான விமர்சனம் செய்தார்.
தேசபக்தன் கோ.நடேசய்யர் என்ற நூலின் பிரதியை கண்டியி லிருந்து வந்த பூரீலங்கா சிகாமணி நாகலிங்கம் இரத்தினசபாபதி பெற்றுக் கொண்டார். இந்த நூலுக்கு 1988ம் ஆண்டிற்கான அரச சாகித்திய விழா விருதும் பணப்பரிசும் கிடைத்தது. எங்கள் பணிக்கு கிடைத்த பெரும் வெற்றியாக இதனை கருதினோம்.
வெளிச்சம் நாடகம் இலங்கை அரசின் கல்வி அமைச்சு அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் தமிழ் தின போட்டியொன்றை நடத்தும். முதல் பிரதேச ரீதியாகவும், பிறகு மாகாண மட்டத்திலும், பின்னர் தேசிய ரீதியிலும் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு
தங்கப்பதக்கம், வெற்றி விருதுகள் வழங்கப்படும்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 48

அகில இலங்கை ரீதியாக வெற்றி பெற்றவர்கள் இறுதிப் போட்டிக்கு வருவார்கள். இறுதித் தேர்வுக்கு வருபவர்களிடையே சிறுகதை, கவிதை, கட்டுரை, பேச்சு, விவாதம், பண்ணிசை நாடகம் என பல்வேறு போட்டிகளில் பங்கு பற்றி மாணவர்கள் தங்கள் ஆளுமையையும், ஆற்றலையும் வெளிப்படுத்துவார்கள். தமிழ்த் தின போட்டிகளில் இறுதித் தேர்வுகளில் நாடகங்களை தேர்வு செய்யும் நடுவர்களில் ஒருவராக என்னை அழைப்பார்கள். இதனை நான் ஒரு கடமையாக கருதி செயல்படுவேன். அத்துடன், நான் ஆசிரிய ராக இல்லாத காரணத்தால் எனது தீர்ப்புக்களை விழாக்குழுவினர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
ஒரு தடவை கண்டி மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்டப் போட்டி, கண்டி பதியுத்தீன் கல்லூரியில் நடைபெற்றது. நாடகத் தேர்வில் பன்விலை என்ற இடத்தைச் சேர்ந்த தோட்டப் பாடசாலை முதலாம் இடத்தைப் பெற்றது. இரண்டாவது இடத்தை கம்பளைச் சார்ந்த முஸ்லிம் பாடசாலை பெற்றது.
நாடகத் தேர்வில் என்னோடு மலையகத்தின் மூத்த எழுத்தா ளரும், நாடகத்துறையில் ஈடுபாடுள்ளவருமான ஏ.பி.வி. கோமஸ், புசல்லாவ இஸ்மாலிகா ஆகியோர் செயற்பட்டனர். மாகாண ரீதியாக நடைபெறும் போட்டிகளில் முதலிடத்தை பெறுபவர்களுக்கு போட்டி யின் இறுதியில் பரிசளிப்பது வழக்கம். பரிசில்களை வழங்குவதற்காக வெளிவிவகார அமைச்சர் மாண்புமிகு ஏ.சி.எஸ். ஹமீது வந்திருந்தார். நாடகத் தீர்ப்பு பிழையானது என்றும் முஸ்லிம் மாணவர்களுக்கு அநீதியிழைக்கப்பட்டுள்ளது என அமைச்சரிடம் கூறப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குவதற்கு முன்னர் விழா ஏற்பாட்டா ளர்கள், கல்வி அமைச்சின் அதிகாரிகள், நாடகத்தில் நடுவர்களாக பணியாற்றியவர்களை அழைத்து, அமைச்சர் விபரம் கேட்டார். ‘நாடகத் தீர்ப்பு பிழையானது என்று சொல்கிறார்களே, உங்களது கருத்து என்ன” என்று என்னிடம் கேட்டார்.
நாடகப் போட்டிக்கு நடுவர்களாக பணியாற்றியவர்களின் சார்பில் நாடகங்களை முதலாம், இரண்டாம், மூன்றாம் இடத்திற்கு எவ்வாறு தெரிவு செய்தோம் என விளக்கமாக எடுத்துச் சொன்னேன். அமைச்சர் ஹமீது அவர்கள் எனது கருத்துக்களை அக்கறையுடன்
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 49

Page 27
செவிமடுத்து, “நாடகத்திற்கு பரிசளிப்பதற்கு முன்னால் நீங்கள் இதனை எடுத்துச் சொல்ல முடியுமா?’ எனக் கேட்டார். நானும் அதற்கு ஒப்புதல் தெரிவித்து, நாடகத்திற்கு பரிசளிப்பதற்கு முன்னர் ‘நாடகம் என்பது சினிமா அல்ல. அது ஒரு நிகழ்த்தும் கலை. நீங்கள் ஊடகங்களில் அதாவது தொலைக்காட்சியில் அல்லது சினிமாவில் பார்க்கின்ற கோமாளி கூத்துக்கள் அல்ல. அது மனித வாழ்க்கையை யதார்த்தபூர்வமாக எடுத்துக் காட்டும் கலைச்சாதனம். அரங்கியல் கலைப்பற்றி மாணவர்களுக்கு மாத்திரமல்ல, ஆசிரியர்க ளுக்கும் கற்பிக்க வேண்டும்” என்றேன். ஆசிரியர்கள் எனது கருத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
இதே போன்று இன்னொரு சம்பவம் 1995ம் ஆண்டு கொழும்பில் தேசிய ரீதியில் நடைபெற்ற தமிழ்த் தின விழாவில் இடம்பெற்றது. அகில இலங்கை தமிழ்த்தின விழாவின் இறுதித் தேர்வுகள் கொழும்பு இந்துக் கல்லூரியிலும் முஸ்லிம் பெண்கள் கல்லூரியிலும் நடைபெற்றது. இறுதித் தேர்வுக்காக இடம்பெற்ற நாடகங்களை நான் நாடகக் கலைஞரும் எழுத்தாளருமான மானா மக்கீன், இலங்கை வானொலியில் பணியாற்றிய மயில்வாகனம் சர்வானந்தா ஆகிய மூவரும் பணியாற்றினோம்.
அந்த நாடகப் போட்டியில் அட்டன் பிரதேசத்திலிருந்து ‘வெளிச்சம் வெளியே இல்லை’ என்ற நாடகம் பங்கு பற்றியது. அந்த நாடகம் முதலாவது இடத்தைப் பெற்றது. நாடகப் போட்டிகள் முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. முடிவுகள் எல்லாம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நாடக போட்டிக்கு பொறுப்பாளராக இருந்த திருமதி செல்வநாயகம் என்ற பெண்மணிக்கு ஒரு தகவல் வந்ததாகவும், அட்டனில் இருந்து வந்த நாடகத்தை அனுமதிக்க வேண்டாம் என்றும், ஆனால் நாடகம் நடந்து முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே தகவல் கிடைத்ததாம். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதற்கு அடுத்த நாள் பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் பரிசளிப்பு விழாவுக்காக சென்றபொழுது “வெளிச்சம் வெளியே இல்லை’ நாடகத்தை தயாரித்து வழங்கிய ஆசிரியர் நிசாம் என்னிடம் வந்து பரிசளிப்பு விழாவில் தமிழ்த்தின விழாவில் முதலாம் இடத்தைப் பெற்ற நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவது வழக்கம். ஆனால் நாடகத்தை மேடையேற்றாமல் தடை செய்து விட்டார்கள் என்றார்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 50

பரிசளிப்பு விழாவிற்கு கல்வி அமைச்சரான ரணில் விக்கிரம சிங்கவுடன் அமைச்சர் எஸ்.தொண்டமான், பிரதி கல்வி அமைச்சரான திருமதி ராஜமனோகரி ஆகியோர் சமுகமளித்திருந்தனர். பரிசளிப்பு நடைபெற்றது. ஆனால் நாடகத்திற்கு பரிசளிக்கவில்லை. நாடக தயாரிப்பாளரான நிசாமிடம் வாங்கள் கல்வி அமைச்சரிடம் இதைக் கூறுவோம் என்று அழைத்துச் சென்றேன். கல்வி அமைச்சருடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுவிட்டனர். அடுத்து மேடையிலிருந்து இறங்கி வந்த அமைச்சர் தொண்டமானிடம் நாடக தயாரிப்பா ளராக ஆசிரியர் நிசாமை அழைத்துச் சென்று ‘மலையகத்திற்கு முதற் தடவையாக நாடகத்திற்கு விருது கிடைத்துள்ளது. அதுவும் வழங்கப்படவில்லை” என்று குறிப்பிட்டேன்.
அமைச்சர் என்னை ஒரு கோபப் பார்வை பார்த்துவிட்டு போய்விட்டார். கல்வி அமைச்சர் உயர் உத்தியோகத்தரான அல்பிறட் ஒரு தகவலை தெரிவித்தார். நாடகத்திற்கு பரிசளிக்க வேண்டாம் என அச்சுறுத்தியது அமைச்சர் தொண்டமான் என்றார்.
பின்னர் இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்த பொழுது பிரதேச ரீதியாக விழாவில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் தொண்டமானும் மத்திய மாகாண கல்வி அமைச்சராக இருந்த எஸ். சதாசிவமும் கலந்து கொண்டார் கள். “வெளிச்சம் வெளியே இல்லை” என்ற நாடகத்தில் மலையகத் தின் யதார்த்த நிலை சித்தரிக்கப்பட்டிருந்தது. மலையக மக்களின் இருண்ட வாழ்க்கையை நாடகத்தில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். தொழிற்சங்கங்கள் விமர்சிக்கப்பட்டிருந்தன. இது தொழிற்சங்கத் தலைவரான தொண்டமானுக்கு பிடிக்கவில்லை. அதனால் தனக்கு அருகிலிருந்த எஸ். சதாசிவத்திடம் இந்த நாடகத்தை தமிழ்த் தின விழாவில் மேடையேற்ற அனுமதிக்க வேண்டாம் என கூறினார்.
மத்திய மாகாண கல்வி அமைச்சரான எஸ்.சதாசிவம், கண்டி கல்வி காரியாலயத்தில் பணிப்பாளராக பணியாற்றிய எம்.வை.எம். முஸ்லிம் அவர்களிடம் கொழும்பில் தேசிய ரீதியில் நடைபெறும் விழாவில் பங்குபற்ற அனுமதிக்க வேண்டாம் எனக் கூறியிருந்தார். ஆனால் முஸ்லிம் அவர்கள் நேர்மையானவர் “வெளிச்சம் வெளியே இல்லை” என்ற நாடகத்தை பங்குபற்ற அனுமதியளித்து விட்டார்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 5.

Page 28
கொழும்பில் பரிசளிப்பு விழா முடிந்த பின்னர் பரிதாபமாக காட்சியளித்த நாடக தயாரிப்பாளர் நிசாமிடம் இதற்கு ஏதாவது பரிகாரம் காணப்பட வேண்டும் என்றேன். நடுவராக இருந்த கலைஞர் மானா.மக்கீன் அப்பொழுது எங்களோடு ஹைலன்ட் அதிபராக இருந்த மெய்யநாதன், ஹொலி ரொசரி அதிபர் நாகலிங்கம் ஆகியோர் இருந்தார்கள். கல்வி அமைச்சருக்கு எங்கள் கண்டனத்தை உடனடியாக தந்தி மூலம் தெரிவிப்போம் என முடிவு செய்தோம். ஆனால் சிறிது நேரத்தில் மெய்யநாதனும் நாகலிங்கமும் நழுவி
விட்டார்கள். அப்பொழுது நாடக தயாரிப்பாளரான நிசாம் “எனது
ஆசிரியர் பதவிக்கு ஆபத்து வந்து விடுமா?’ என தனது பெயரை தந்தியில் போட வேண்டாம் என்றார்.
‘மலையகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு அக்கறையில்லை என்றால் நமக்கேன் வம்பு’ எனக் கூறி மானா.மக்கீனும் விடை பெற்றார். இரவு வீடு திரும்பியதும் எனக்கு தூக்கமே வரவில்லை. மறுநாள் காலை கல்வி அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவசர தந்தியொன்றை எனது பெயரில் கொடுத்துவிட்டு பத்திரிகைக ளுக்கு செய்தி கொடுத்தேன். சிங்கள வாரப்பத்திரிகை “யுக்திய” முன் பக்கத்தில் ‘இது தொண்டமானின் வேலை” என்ற தலைப்பில் முன் பக்கத்தில் கட்டடம் கட்டி செய்தி வெளியிட்டது. செய்தி வெளிவந்த பின்னர் என்னை இனிவரும் தமிழ் தின விழாவிற்கு நடுவராக அழைக்கக் கூடாது என அமைச்சர் தொண்டமான் உத்தரவுவிட்டு விட்டார்.
மத்திய மாகாண கல்வி அமைச்சராக எஸ்.சதாசிவத்திற்கு பின்னர் அண்ணாமலை கதிரேசன் கல்வி அமைச்சராக பதவி வகித்த பொழுது அவர் அமைச்சர் எஸ்.தொண்டமானுடன் கருத்து வேறுபாடு கொண்ட முரண்பட்டு செயல்பட்டார். அப்பொழுது அண்ணாமலை கதிரேசன் அவர்களிடம் நிலைமை எடுத்துச் சொல்லி ‘வெளிச்சம் வெளியே இல்லை” என்ற நாடகத்துக்குரிய தங்கப்பதக்கத்தையும் சான்றிதழையும் பெற்றுக் கொடுத்தேன்.
பின்னர் ஒரு தடவை இந்த உண்மைகளை “சரிநிகர்’ என்ற பத்திரிகையில் விரிவாக எழுதியிருந்தேன்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 52

இலக்கிய விழாக்கள் அரச மட்டத்தில் ஒரு பெருவிழா “ சாகித்திய விழா” என்ற பெயரில் ஆண்டு தோரும் இலக்கிய விழா நடைபெறும். இதே போன்று மாகாண அமைச்சுக்கள் உருவான பின்னர் வடக்கு, கிழக்கு மாகாண அமைச்சு சாகித்திய விழாவை சிறப்பாக கொண்டாடியது.
ஆனால், மத்திய மாகாணத்தில் அதிகமாக தமிழ் பிரதிநிதிகள் இருந்தும், கல்வி அமைச்சர் தமிழராக இருந்த மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா கொண்டாடப்படவில்லை. ஆனால், சிங்கள சாகித்திய விழாக்கள் கொண்டாடப்பட்டன. முதலில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் எஸ்.தொண்டமானின் மைந்தர் இராமநாதன் கல்வி அமைச் சரானார். அவருக்கு பின்னர் எஸ்.சதாசிவம், ஏ.கதிரேசன் சிறிது காலம் அமைச்சராக இருந்தார்கள். அதன் பின்னர் அமைச்சராக ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினரான வி.புத்திர சிகாமணி தமிழ் கல்வி அமைச்சரானார்.
அமைச்சர் புத்திரசிகாமணி நீண்ட காலம் எனது நண்பர். நாங்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்து இருந்தாலும் மலையகத்தில் கலை இலக்கியம் வளர வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.
மத்திய மாகாண கல்வி அமைச்சராக புத்திரசிகாமணி இருந்த பொழுது அவர் கலை இலக்கிய வளர்ச்சியில் ஆர்வமுள்ளவர். அவர் தமிழ் சாகித்திய விழாக்களை சிறப்பாக நடத்தினார். அமைச்சரான வி.புத்திரசிகாமணி தமிழ் சாகித்திய விழாவை நடத்த இலக்கியவாதிகள், ஆர்வலர்களைக் கொண்ட இலக்கிய ஆலோச னைக் குழுவை அமைத்தார். 1995ம் ஆண்டு முதல் தமிழ் சாகித்திய விழாவை அட்டனில் இரண்டு நாட்கள் நடத்தினார். ஒரு சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.
அந்த சிறப்பு மலரில் பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் சோ.சந்திரசேகரன், லண்டன் மு.நித்தியானந்தன், வீரகேசரி வி.தேவராஜ், சாரல்நாடன், சு.முரளிதரன், கலாநிதி க.அருணாசலம், அந்தனி ஜீவா, எம்.வாமதேவன், ஜெ.சற்குருநாதன் ஆகியோரின் கட்டரைகள் இடம் பெற்றிருந்தன. சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா వీ

Page 29
சாகித்திய விழா நடைபெற இரண்டு வாரங்கள் இருக்கும் பொழுது கல்வி அமைச்சராக இருந்த வி.புத்திரசிகாமணி மலரை சிறப்பாக தயாரிக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்.
“இலங்கை தமிழ் இலக்கியத்திற்கு மலையக இலக்கியம் புது இரத்தம் பாய்ச்சியது” என்றார் பேராசிரியர் அமரர் கைலாசபதி, அத்தகைய தனித்துவமிக்க மலையக இலக்கிய வளர்ச்சிக்கு பத்திரி கைகள், சஞ்சிகைகள், ஆய்வரங்குகள், இலக்கிய விழாக்கள் உந்து சக்தியாக இருந்துள்ளன.
ஆனால் இப்படி நடைபெறுகின்ற விழாக்கள் ‘காற்றோடு கலந்த கதையாகி விடலாம். தொடர்ந்து வரும் தலைமுறையினர்கள் வரலாற்று உண்மையை எடுத்துச் சொல்வதற்கு ஆவணமாக அமைவது இலக்கிய விழாவின் சிறப்பு மலர்கள் தான்” என்று சாகித்திய விழா சிறப்பு மலரின் ‘இதழாசிரியரின் இதயத்திலிருந்து” குறிப்பிட்டேன்.
சிறப்பு மலரில் பேராசிரியர் கா.சிவத்தம்பி ‘மலையக இலக்கி யம் மறக்கப்படக் கூடாத மறு பக்கம்” என்ற கட்டுரை எழுதியிருந்தார். இந்த கட்டுரை மலருக்கு மகுடம் சூட்டுவது போலமைந்தது. நுவரெலி யாவில் நடைபெற்ற சாகித்திய விழாவுக்காக மலையக கலை இலக்கியவாதிகள் பற்றி படத்துடன் நூலொன்றை தயாரித்து இருந்தேன். ஆனால், அது வெளியிடப்படமாட்டாது என்பது அறிந்தேன்.
பின்னர் காரணம் என்னவென்று விசாரித்த போது அமைச்சரின் நண்பர் ஒருவர் 'முகமும் முகவரியும்' நூலை பார்த்து விட்டு அதில் இடம்பெற்றுள்ள நடேசய்யர் படத்தைபார்த்துவிட்டு அமைச்சர் தொண்டமானுக்கு நடேசய்யரை பிடிக்காது. அதனால் நடேசய்யரின் படத்துடன் அந்த நூல் வெளிவந்தால் புத்திரசிகாமணியின் அமைச்சர் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என கூறியுள்ளார். அதனால் தனது அமைச்சர் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்ற அச்சத்தில் அதனால், என்னிடம் சொல்வதற்கு தயங்கி கவிஞர் முரளிதரனிடம் கூறியுள்ளார்.
சாகித்திய விழாவில் சிறப்பாக முன்னின்று செயல்பட்ட முரளிதரன் என்னிடம் வந்து மிகுந்த தயக்கத்துடன் ‘முகமும் முகவரியும்” இன்று வெளியிட முடியாத நிலை என்று கூறினார்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 54

நான் மிகவும் சிரமப்பட்டு தயாரித்தது “முகமும் முகவரியும்”. அந்த நூலை இன்று மண்டபத்தில் வெளியிடாவிட்டால் அதனை மண்டபத்திற்கு வெளியே பகிரங்கமாக ‘வீதி’யில் வெளியீட்டு விழாவை நடத்துவேன் என கோபத்துடன் கூறி, இதனை அமைச்சர் புத்திரசிகாமணியிடம் தெரிவிக்கச் சொன்னேன். பின்னர் கவிஞர் முரளிதரனும் எழுத்தாளர் சாரல் நாடனும் அமைச்சர் புத்திரசிகா மணியிடம் நியாயத்தை எடுத்துக் கூறி ‘முகமும் முகவரியும்” நூலை வெளியிட ஏற்பாடு செய்தார்கள். ‘மலையக ஆக்க இலக்கிய முன்னோடி கோ.நடேசய்யரின் இலக்கியம், பத்திரிகை, தொழிற்சங்கம், அரசியல் பங்களிப்புக்களை சிறப்பாக எடுத்துக் கூறி முகமும் முகவரியும் நூலை வெளியிட்டு வைத்தேன்.
மத்திய மாகாண கல்வி அமைச்சராக வே. இராதாகிருஷ்ணன் பதவி வகித்தார். இவர் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வர்த்தகர். எல்லோ ருடனும் அன்பாகப் பழகக் கூடியவர். இவர் 2000ம் ஆண்டில் முதல் சாகித்திய விழாவை அட்டனில் நடத்தினார். அந்த விழாவில் எனது ‘அக்கினிப்பூக்கள்’ நாடக நூலுக்காக எனக்கு விருதும் பணமும் தரப்பட்டது. இரண்டாவது சாகித்திய விழாவை மாத்தளையில் நடத்தினார். அந்த விழாவில் மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர் ஏ.எம். புவாஜி எழுதிய மாத்தளை வரலாறும் ‘மலையக எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு’ம் வெளியிடப்
--Sl.
மூன்றாவது விழா 2003ல் கண்டியில் நடத்தப்பட்டது. இதை சிறப்பாக நடத்துவதற்கு ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ‘கண்டி மாவட்டத் தமிழர்கள்’ பற்றிய ஒரு நூலை வெளியிட வேண்டும் என்று கருத்து தெரிவித்தேன். விழா நடைபெற ஒரு மாதம் இருப்பதால் ஓர் ஆய்வு நூலை வெளியிட முடியுமா என பலரும் கருத்து தெரிவித்தனர். சாகித்திய விழா கோலாகலமாக நடைபெற்று முடிந்துவிடும். ஆனால் விழாவில் வெளியிடப்படும் நூலும் விழா மலரும் பதிவுகளாக இருக்கும். கண்டி “மாவட்டத் தமிழர்கள் நூலை” தனி ஒருவர் எழுதாமல் மிக முக்கிய தலைப்பில் கட்டுரை எழுதி ஒரு தொகுப்பாக வெளியிடலாம். அது எவ்வாறு தொகுக்கப்படும் என்று தெளிவாக எடுத்துக் கூறினேன்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 55

Page 30
அந்த பொறுப்பை என்னிடம் ஒப்படைப்பதாக கூறி நூலை தொகுத்து பதிப்பிக்கும் பொறுப்பை அமைச்சர் இராதாகிருஷ்ணன் என்னிடம் ஒப்படைத்தார். ‘கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றை” தொகுப்பது என்றால் அதற்குரிய ஆலோசனைகளை வழங்குவதற்கு பொருத்தமானவர் மூத்த தமிழறிஞர் எஸ்.எம்.ஏ.ஹசன் என்பவரே என்பது நான் அறிந்த உண்மை. இவருக்கும் எனக்கும் நீண்ட காலமாகவே தொடர்பு உண்டு. அதனால் ‘கண்டி மாவட்டத் தமிழர்கள்” என்ற நூல் சிறப்பாக தொகுக்கப்பட்டது. அந்த தொகுப்பு நூலுக்காக நான் எழுதிய முன்னுரையை இங்கு பதிவுகளாக தருவது மிக முக்கியமாகும்.
“. கண்டி மாநகரில் நடைபெறவிருக்கும் மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா 2002ஐ முன்னிட்டு ‘கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்று பதிவுகள்’ என்ற நூலினை தொகுத்து பதிப்பிக்கும் பணியி னை தமிழ் சாகித்திய விழாக் குழுவினர் என்னிடம் ஒப்படைத்தனர்.
6 6. தமிழ் சாகித்திய விழாவிற்கு குறுகிய நாட்களே இருப்பதால் இத்தகைய ஆய்வு நூலொன்றை கொண்டு வர முடியுமா என பலர் ஐயப்பட்ட வேளையில், விழாவின் போது கட்டாயமாக நூல் வெளிவர வேண்டும். அதனை நீங்கள் பொறுப்பெடுத்து செயல்படுத்த வேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்ட அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் அவர்களையும், நூலை தமிழ் சாகித்திய விழாவில் வெளியிட வேண்டும் என்று உற்சாகமூட்டிய விழாக்குழுத் தலைவர் திரு. மதியுகராஜா, விழாக்குழு செயலாளரான திரு.வி. சாந்தகுமார், பொருளாளரும் கண்டி மாநகரசபை உறுப்பினருமான திரு.சுரவணன் மற்றும் என்னுடன் ஒத்துழைத்த கட்டுரையாளர்கள் ஆகியோர்களையும் முதலில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன். கண்டி மாவட்ட தமிழர்களின் வரலாற்றுப் பின்னணியைப் பார்க்கின்ற பொழுது அவர்கட்கு நீண்டதொரு வரலாற்றுப் பாரம்பரியம் உண்டு. உலகின் பல பாகங்களிலும் இந்தியர்கள் குடியேறினார்கள். அவர்களின் கணிசமானோர் தமிழர்கள். உலகெங்கும் தமிழினத்துடன் ஒரு பழமையான தொடர்பு உள்ள வரலாறு காணப்படுவதாக உலக வரலாறு எழுதிய எச்.ஜி.வெல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா ქნ6

G. s.
. 18ம் நூற்றாண்டில் இலங்கை கண்டி இராஜதானியில் தமிழ் மொழி அரச மொழியாக இருந்தது. கண்டியின் கடைசி மன்னன் தமிழ் நாட்டைச் சேர்ந்த நாயக்க வம்சத்தினன்.
‘. இவ்வாறு பார்க்கின்ற பொழுது பதினெட்டாம் நூற்றாண்டு முதல் கண்டி மாவட்டத்தில் தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றனர். அதற்கு ஆதாரமாக பல சான்றுகள் உள்ளன. அதனை பதிவு செய்ய வேண்டியது வரலாற்றின் தேவையாகும். கண்டி மாவட்டத்தில் தமிழர் களின் வரலாற்றை எழுதும் பணியினை ஒரு கூட்டு முயற்சியாக செயற்படுத்துவது என முடிவு செய்து அத்துறைச் சார்ந்த தகுதியுள்ள வர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கண்டியில் வாழும் மூத்த தமிழறிஞரான அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ.ஹசன் தலைமையில் கட்டுரை யாளர்கள் ஒன்றுகூடி விவாதித்தோம். யார் யார் எந்த தலைப்புக்களில் எழுதுவது என முடிவு செய்தோம். பின்னர் கட்டுரைகளை கருத்த ரங்கில் வாசித்து விடுபட்ட கருத்துக்களை கட்டுரைகளில் உள்ளடக் குவது என முடிவு செய்தோம்.
త థ ஆனால், கால அவகாசம் போதபடியால் ஓரிரு கட்டுரையாளர்களே கலந்துரையாடினோம். ஒரு சில கட்டுரையாளர் களுக்கு தேவையான தரவுகளையும் தகவல்களையும் நூல்களையும் தேடிக் கொடுத்தேன். நூலகரும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள கட்டுரையா ளரான ஆர்.மகேஸ்வரன் என்னையும் ஆய்வாளர் சாரல் நாடனையும் பேராதனை பல்கலைக்கழக நூலகத்திற்குள் அழைத்துச் சென்றார். இரண்டு நாட்கள் நானும் சாரல் நாடனும் பல மணித்தியா லங்களை அங்கு தகவல் தேடுவதில் செலவிட்டோம்.
6 6 தமிழ் சாகித்திய விழாவிற்கு இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் தான் கட்டுரைகள் வந்து சேர ஆரம்பித்தன. உடனடியாக அச்சிடக் கொடுத்தோம். மிக சிரமத்திற்கு மத்தியில் தான் இந்நூல் வெளிவருகிறது. கண்டி தமிழர்களைப் பற்றிய அல்லது மலையகத் தமிழர், இந்திய வம்சாவளி தமிழர்கள் பற்றிய வரலாற்று ஆய்வு நூலுக்கு இந்த நூல் ஒரு முன்னிடாக அமையும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.”
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 57

Page 31
‘கண்டி தமிழர்கள் சில வரலாற்று பதிவுகள்’ என்ற நூலில்
இடம்பெற்ற கட்டுரைகளின் தலைப்புகள் இவை.
1.
2.
O.
கண்டி மாவட்ட தமிழர்கள் - சில வரலாற்று பதிவுகள் எஸ்.எம். ஹசன்
கண்டிராசன் கதை
சாரல் நாடன் - எழுத்தாளர், ஆய்வாளர் கண்டி மாவட்டத் தமிழர்களின் வாழ்வும்,வரலாறும்,வழிபாடும். இரா. சடகோபன் - சட்டத்தரணி, ஆய்வாளர் கண்டித் தமிழரின் சமூக அசைவியக்கமும், பொருளாதாரப் பின்புலமும் - ஒரு பார்வை - இரா.சிவலிங்கம் B.A. (Hons) ஆய்வாளர்- பிரிவுத் தலைவர், திரித்துவக் கல்லூரி, கண்டி கல்வி வாய்ப்புகளும், கண்டி மாவட்ட தமிழர்களும். சு. முரளிதரன்
ஆய்வாளர் - பீடாதிபதி, ரீபாத கல்வியல் கல்லூரி. இந்து மதம் : வரலாறும், வளர்ச்சியும் இரா.சர்மிளா தேவி ஆய்வாளர்- ஆசிரியை, திரித்துவக் கல்லூரி, கண்டி கண்டி மாவட்ட தமிழர்களது அரசியல் பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா அரசியல்துறை-பேராதனைப் பல்கலைக்கழகம் நாட்டாரியலில் கண்டி
ஆர்.மகேஸ்வரன் - B.A. (Hons)
துணைநூலகர்-பேராதனைப் பல்கலைக்கழகம்
இந்திய வம்சாவளி தமிழரின் வர்க்க, அடுக்கமைவு மாற்றம்
pÉlg55u IT60||556ö (M.PhL) ஆய்வாளர். ஆசிரியர், திரித்துவக் கல்லூரி, கண்டி கண்டியில் தமிழ் இலக்கியம் - ஒரு கண்ணோட்டம் முதுநிலை விரிவுரையாளர்-தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்
கண்டியில் நடைபெற்ற சாகித்திய விழாவில் ‘கண்டி
மாவட்டத் தமிழர்கள்” என்ற நூல் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் சாகித்திய விழாமலரும் வெளியிடப்பட்டது. மலரை இலக்கிய ஆர்வலர் இரா.அ.இராமன் தயாரித்திருந்தார்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 58

நாட்டின் அரசியல் மாற்றம் காரணமாக மத்திய மாகாண கல்வி அமைச்சராக தொழிற்சங்கவாதி எஸ்.அருள்சாமி மாகாண கல்வி அமைச்சரானார். அவரும் குறுகிய இடைவெளியில் சாகித்திய விழாவை நுவரெலியாவில் நடத்தினார். அந்த சாகித்திய விழாவில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் வீ.அரசு. மலேசியா தமிழாராய்ச்சி நிறுவனத் துணைத் தலைவர் ஆ.குணநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இவர்களின் இருவரின் வருகைக்கு நான் காரணமாக இருந்தேன் என்பதை ஒரு வரலாற்று பதிவுக்காக இங்கே குறிப்பிடுகிறேன்.
மலையக கலை இலக்கியப் பேரவை, மலையக வெளியீட் டகம், கொழுந்து, குன்றின் குரல் சஞ்சிகைகளின் மூலம் நான் ஆற்றிய பணிகளை இரை மீட்டிப் பார்க்கும் பொழுது என் சக்தியை மீறிய பணிகளை செய்துள்ளேன் என்பது சத்தியமான உண்மையா
(35D.
மலையகப் பெண்படைப்பாளிகள்
மலையக பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் அதிகமாக அச்சில் வெளிவரவில்லை. ரூபராணி ஜோசப்பின் சிறுகதை தொகுப்பும், நயீமா ஏ.சித்தீக்கின் சிறுகதை தொகுப்புக்களாக வந்திருந்தன. இந்த பெண் படைப்பாளி களின் கதைகளை தொகுத்து வெளியிட வேண்டும் என்கிற எண்ணம் என் நெஞ்சில் நிறைந்திருந்தது.
ஏற்கெனவே நான் கொழும்பில் வாழ்ந்த காலத்தில் பெண படைப்பாளியான யோகா பாலச்சந்திரனின் கதைகளை தொகுத்து “கனவுக் குழந்தை” என்ற தொகுப்பாக வெளியிட்டேன். இது மிகவும் வரவேற்பைப் பெற்றது. இது நடந்தது மலையக வெளியீட்டகம் என்ற அமைப்பை தொடங்குவதற்கு முன்னர் ‘ஜெயபராதி” பதிப்பகம் என்ற பெயரில் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டேன். இதற்கு முன்னர் தினகரன் வார மஞ்சரியில் புனைப்பெயரில் பெண்படைப்பாளி களை புகைப்படத்துடன் வாராவாரம் “பெண் பிரமாக்கள்’ என்ற
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 59

Page 32
மகுடத்தில் அறிமுகப்படுத்தினோம். அப்பொழுது ஒர் எழுத்தாளர் பெண்களை பிரமாக்கள் என்று எழுதுகின்றீர்கள் என்று கோபப்பட்டார். அவரும் ஒரு தாயின் மைந்தன் என்பதை மறந்து விட்டார்.
மலையகத்தில் அறுபதுகளில் எழுதிய படைப்பாளியான பூரணி என்பவருடைய கதைகளைத் தொகுத்து வெளியிடலாம் என்ற ஆர்வத்தில் தேடுதல் நடத்திய பொழுது அவருடைய கதைகளில் இரண்டை தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. மலையகத்தின் மூத்த பெண் படைப்பாளியான பேராதனை ஷர்புன்னிஷா முதல் இளைய தலைமுறை படைப்பாளிகள் வரை பன்னிருவரின் கதைகளை தொகுத்து குறிஞ்சிப்பூக்கள் என்ற பெயரில் 2000ம் ஆண்டில் சர்வதேச பெண்கள் தினத்தில் மத்திய மாகாண கல்வி அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் வெளியிடப்பட்டது. குறிஞ்சிப்பூக்கள் தொகுதியின் வெளியீட்டு உரையை திருமதி லலிதா நடராஜா வழங்கினார்.
குறிஞ்சிப்பூக்கள் தொகுதியில் பேராதனை ஷர்புன்னிஷா, புஸல்லாவ இஸ்மாலிகா, அக்னஸ் சவரிமுத்து, பூரணி, ஷாந்தி மோகன், சர்மிளா தேவி, சுகந்தி, அட்டன் சாந்தராஜா, பாலஞ்சனி, ரோஹினி முத்தையா, கோகிலவர்தனி ஆகியோரின் சிறுகதைகள் இடம்பெற்றிருந்தன.
மீண்டும் அடுத்த ஆண்டு 2001ம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தில் அட்டனைச் சேர்ந்த சாந்தராஜின் சிறுகதைகளை தொகுத்து ‘சாந்தராஜின் சிறுகதைகள்” என்ற தலைப்பில் வெளியிட்டேன். 2002ம் ஆண்டில் மலையக கவிதாமணிகளின் கவிதைகளைக் கொண்ட “குறிஞ்சிக் குயில்கள்’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டேன். இந்த தொகுதியின் இருபத்தொரு பெண் கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றது.
அதற்கு அடுத்த ஆண்டு 2002ல் பதுளை லுணுகலையைச சேர்ந்த ரஸினா புஹாரி என்ற இஸ்லாமிய பெண்மணியின் கவிதை களை தொகுத்து ‘மண்ணிழந்த வேர்கள்’ என்ற தலைப்பில் வெளியிட்டேன். இந்த நூலை ஒரு வித்தியாசமான அளவில் படங் களுடன் பதிப்பித்தேன். சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 60

அம்மா சிறுகதைத் தொகுப்பு எனது பாசமிகு தாயார் அக்டோபர் 2001ல் மாலை ஏழு மணியளவில் இயற்கை எய்தினார். அவர் என் மீது அபரிதமான அன்பை பொழிந்தார். ஒவ்வொரு வாரமும் அவரைப் பார்க்க கொழும்பு சென்று விடுவேன். அவர் இறப்பதற்கு ஒரு சில தினங்க ளுக்கு முன்னர் அவரோடு நீண்ட நேரம் உரையாடினேன்.
அவர் ஏழு மணியளவில் மூச்சை நிறுத்தினார் என்ற தகவலை இரண்டு தினங்களுக்கு முன்னர் அவரைப் பார்க்க கொழும்பு சென்ற என் துணைவியர் இரவு தொலைபேசியில் தெரிவித்தார். மறுநாள் காலையில் தான் அவரது உயிரற்ற உடலை பார்த்தேன். அடக்கம் செய்வதற்கு முதல் நாள் இரவு அவரது அருகிலமர்ந்து அவரையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்த பொழுது என் மனதில் ஓர் எண்ணம் பளிச்சிட்டது. அம்மாவின் நினைவாக ஏதாவது செய்ய வேண்டும்.
எனது தாயார் கதை கேட்பதில் அதிக ஆர்வமுள்ளவர். சிறுகதைகளை படிக்க சொல்லி ஆர்வமுடன் கேட்பவர். அவர் நினைவாக இலங்கை வாழ் பெண் படைப்பாளிகளில் கதைகளை தொகுத்து வெளியிட வேண்டும் என்று மனதில் பதிய வைத்துக் கொண்டேன். அம்மாவின் ஓராண்டு நினைவாக 2002ம் ஆண்டு ‘அம்மா’ என்ற மகுடத்தில் 50 பெண் எழுத்தாளர்களின் கதைகளை தொகுத்து காத்திரமான தொகுதியாக கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதற்காக பல பெண் எழுத்தாளர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு பிடித்த சிறுகதை ஒன்றினை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டேன். இந்த காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு வாசல் தேடி வந்தது. நானும் என் துணைவியாரும் அவரின் சகோதரர்கள் இருவரின் அழைப்பின் பேரில் லண்டன் சென்றோம்.
ஒரு நாள் இரவு மேல் மாடியில் ஒரு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். அது தமிழகத்தில் கலைஞன் பதிப்பக வெளியீடு. கலைஞன் பதிப்பகத்தை நடத்தி வரும் மாசிலாமணியின் மைந்தர் நந்தனின் நினைவு வந்தது.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 61

Page 33
தமிழகத்தில் சென்னையில் நடைபெற்ற ‘தமிழ் இனி 2000” நிகழ்வுக்கு தமிழகம் சென்றிருந்த பொழுது, நானும் சாரல் நாடனும் கலைஞன் பதிப்பக நந்தனிடம் உரையாடிக் கொண்டிருந்த பொழுது “இலங்கை எழுத்தாளர்களின் சிறந்த படைப்புக்களை நூலாக வெளியிடலாம்” என்றார்.
லண்டனில் இருந்த பொழுது திரு.நந்தனுக்கு ‘அம்மா” தொகுதி பற்றி எழுதினேன். லண்டனிலிருந்து நாடு திரும்பியதும் திரு. நந்தனிடமிருந்து பதில் வந்திருந்தது. 300 பக்கங்களில் வரக் கூடியதாக ஒரு தொகுதி வெளியிட கதைகளை அனுப்பி வைக்கும்படி கேட்டிருந்தார்.
எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எனது நம்பிக்கை உடனடியாக மூத்த பெண் படைப்பாளியான குறமகள் முதல் சிலரின் கதைகளை அனுப்பி வைத்தேன். குந்தவை பத்மா சோமகாந்தன் போன்றவர்களின் சிறுகதைத் தொகுப்புகளிலிருந்து கதைகளை தெரிவு செய்து அனுப்பி வைத்தேன்.
நான் வெளியிட்ட ‘குறிஞ்சிப்பூக்கள்’ தொகுதியிலிருந்து சில கதைகளை தெரிவு செய்து கொள்ளும்படி அந்த தொகுதியையும் அனுப்பி வைத்தேன்.
தொகுதியின் மகுடக்கதையாக ‘அம்மா’ என்ற தலைப்பில் கதை. ஒன்றை தேடிக் கொண்டிருந்தேன். கொழும்பில் நடைபெற்ற “மானுடத்தின் ஒன்று கூடல்” என்ற நிகழ்வுக்கு வந்திருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இயல்வாணன் ‘அம்மா’ என்ற பெயரில் தாமரைச் செல்வி கதை ஒன்றை எழுதியிருப்பதாகவும் குறிப்பிட்டார். அவரே சகோதரி தாமரைச் செல்வியை நேரில் சந்தித்து அவரிடம் அனுமதி பெற்று ‘அம்மா’ என்ற கதையை அனுப்பி வைத்தார்.
‘அம்மா’ தொகுதியில் இலங்கை பெண் எழுத்தாளர்களின் 25 கதைகளில் கம்பியூட்டர் பிரதி பிழை திருத்தம் பார்ப்பதற்காக திரு. நந்தன் கூரியரில் அனுப்பி வைத்திருந்தார்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 62

இருபத்தைந்து பெண் எழுத்தாளர்களின் கதைகளின் அச்சு படிகளை பார்த்து என் விழிகள் வியப்பால் விரிந்தது. நான் மிகவும் மதிக்கும் லலிதா அம்மையாரிடம் புரூப் திருத்தும்படி அதனைக் கையளித்தேன்.
‘‘அம்மா’ தொகுதிக்காக திருத்தப்பட்ட கதைகளுடன் தொகுப்பாசிரியரின் குறிப்புடன் அனுப்பி வைத்தேன். தொகுப்பு தயாராகி கொண்டிருப்பதாக கலைஞன் பதிப்பக திரு. நந்தனிடம் இருந்து பதில் வந்தது. சிறிது காலத்திற்கு பின்னர் திரு. நந்தனிட மிருந்து எந்த வித பதிலுமில்லை. ஒரு நாள் நான் அலுவலகம் சென்ற பொழுது என் மேசை மீது ஒரு கடிதம் காத்திருந்தது. சென்னைப் பல்கலைக்கழக மானிட வியல் துறையிலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது.
இலங்கை இந்திய சமூகவியலாளர்களின் கருத்தரங்கு மானிட வியல் பிரிவின் ஏற்பாட்டில் நடப்பதாகவும் அந்த கருத்தரங்கில் மலையகம் சம்பந்தமான கட்டுரை சமர்ப்பிக்கும்படி கேட்டிருந்தார்கள். அந்தக் கடிதத்தைப் படித்து, எனக்கே வியப்பு நான் வசிக்கும் கண்டிக்கு அருகிலுள்ள பேராதனைப் பல்கலைக்கழகம் கூட என்னை அழைக்காத நிலையில் சென்னைப் பல்கலைக்கழகம் என்னை அழைத் துள்ளது. இலங்கையிலிருந்து ஐந்து பேர்களை அவர்கள் அழைத்தி ருந்தார்கள். அவர்களில் மூவர் பல்கலைக்கழக பேராசிரியர்கள். அவர்களில் ஒருவர் எனக்கு மிகவும் வேண்டியவர். நான் பெரிதும் மதிக்கும் அறிவு ஜீவி. பேராசிரியர் சுதர்சன் செனவிரத்ன. இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மானிடவியல் பிரிவின் தலைவர் சென்னைப் பல்கலைக்கழகத்தவர்கள் என்னை அழைத்திருந்த வேளையில் இன்னொரு தேவைக்காக சென்னைக்கு போக வேண்டிய அவசியம் இருந்தது. உலகப் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் திருமண நிகழ்வு சென்னையில் நடைபெறவி ருந்தது. அந்த நிகழ்வில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். முரளியின் தந்தையார் எனக்கு மிகவும் வேண்டியவர். வீடு தேடி வந்து திருமண அழைப்பிதழை தந்துள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழக கருத்தரங்கு நடைபெறும் நாட்களில் திருமண நிகழ்வு நடைபெறுவதில் அந்த நிகழ்விலும் பங்கு பற்றலாம் என முடிவு செய்தேன்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 63

Page 34
2005 மார்ச் 17ம் திகதி சென்னைச் சென்று மறுநாள் கலைஞன் பதிப்பகம் சென்றேன். திரு. நந்தன் என்னைக் கண்டதும் என்னை சிறிது இருக்கும்படி கூறிவிட்டு உள்ளே சென்று திரும்பி வந்தார். அவர் கையில் வைத்திருந்த புத்தகத்தை என்னிடம் தந்தார். அது ‘அம்மா’ சிறுகதைத் தொகுப்பு நூலை கையில் வாங்கியதும் என் கண்கள் கலங்கிவிட்டன. ‘அம்மா’ சிறுகதைத் தொகுப்பை கலைஞன் பதிப்பகத்தார் மிகவும் சிறப்பாக பதிப்பித்திருந்தார்கள். திரு. நந்தனுக்கு எவ்வாறு நன்றி சொல்வதென்பது தெரியவில்லை.
நூலின் அட்டையை மிகவும் சிறப்பாக அமைத்திருந்தார்கள். உள் பக்கங்களை புரட்டிய பொழுது ‘சமர்ப்பணம் அம்மாவுக்கு.” என்றிருந்தது. என் தாயாரின் நினைவிற்கு நான் செய்த மிகப் பெரிய கடமையாகும். சென்னை கருத்தரங்கு முடிந்ததும் மீண்டும் ஆர்வத்துடன் ‘அம்மா’ கதை தொகுப்பை புரட்டி நான் எழுதிய தொகுப்புரைக்கான முன்னுரை “தொகுப்பாசிரியரின் இதயத்திலி ருந்து.” என்ற மகுடத்தில் பிரசுரமாகியிருந்தது. அதனை படித்துப் பார்த்தேன். “...சிறுகதை வாழ்க்கையின் சாளரம் என்றான் சிறுகதை மன்னன் புலமைப்பித்தன். அதனால் அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் புனைக்கதை இலக்கியத்தில் சிறுகதைகள் உன்னத இடத்தை வகிக்கின்றன. இலங்கையில் தமிழ் இலக்கியத்திலும் சிறுகதைகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. மனித வாழ்வியலை மிக நுட்பமாக சித்தரிக்கின்றன. அறுபதுகளுக்கு பின்னர் இலங்கையின் தமிழ் இலக்கியத்தில் வளமூட்டிய சிறுகதைகளை பெண் எழுத்தா ளர்கள் எழுதியுள்ளார்கள் என்பதற்கு இத்தொகுதியிலுள்ள சிறு கதைகள் ஒரு சான்றாகும்.
“...இலங்கையில் பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் தொகுப்புக ளாக வெளிவருவது மிகக் குறைவாகும். பல சிறுகதைகள் பத்திரிகை களில், சிறு சஞ்சிகைகளில் வெளிவந்து அதன் சுவடுகூட தெரியாமல் மறைந்து விடுகின்றன. இலங்கையில் இதுவரை 300 சிறுகதைத் தொகுப்புகள் வந்திருப்பதாக அறிய முடிகிறது. இவற்றில் 30 தொகுதி கள் கூட பெண் எழுத்தாளர்களின் தொகுதிகள் இல்லை. 20 தொகுதி கள் வரை வெளிவந்ததாக அறிய முடிகிறது. ‘எழுதத் தொடங்கிய 35 வருட காலத்தின் பின்பே நூலுருவில் உங்களைச் சந்தித்தேன்’ என 1954ல் எழுதத் தொடங்கிய மூத்த பெண் படைப்பாளியான குறமகள் 1989ல் வெளிவந்த தனது சிறுகதைத் தொகுதியில் குறிப்பிடு கின்றார். இலங்கை பெண் எழுத்தாளர்களின் நிலை இதுவே. அவர்களே பாதையை வெட்டிப் பயணமும் போக வேண்டும்.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 64

6 6.
u e b 8 ele ‘அம்மா’ என்ற மகுடத்தில் வரும் இத்தொகுதியில் இருபத் தைந்து பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம்பெறுகின்றன. என் தாயார் முதலாண்டு நினைவாக ஐம்பது பெண் எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுத்து வெளியிட வேண்டும் என ஆர்வம் கொண்டேன். இதற்காக நானே எழுத்தாளர்களுடன் தொடர்பு கொண்டேன். அவர்களின் படைப்பு ஒன்றினை அனுப்பும்படி கேட்டுக் கொண்டேன். அவர்கள் சம்மதம் தெரிவித்தாலும் ஓரிருவரைத் தவிர ஏனையவர்கள் அனுப்பவில்லை. தேடுதல் வேட்டையில் ஈடுபட்டேன். மிகச் சிரமப்பட்டு கதைகளைத் தேடி எடுத்தேன். இந்த தொகுதியில் மூத்த படைப்பாளியான குறமகள் முதல் இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர்களின் கதைகளும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இலங்கை சகல பிரதேச எழுத்தா ளர்களின் படைப்புகளை இதில் உள்ளடக்கியுள்ளேன். பெண் எழுத் தாளர் தாங்கள் சிறுகதைகளில் அவர்களின் பிரச்சினைகளைச் சிறப்பாக சித்தரித்துள்ளனர். தாங்கள் வாழும் பின்னணியில் என்ன நடந்தது, நடக்கிறது என எழுதத் தவறவில்லை. அவர்களின் உள்ளத்து உணர்வுகள் படைப்புகளில் வெளிப்படுகின்றன.
“... என் தாயின் நினைவாக முதலாம் ஆண்டு வெளிவர வேண்டிய இத்தொகுதி அவர் மறைந்த மூன்றாம் ஆண்டு வெளிவரு கிறது. எந்தவித கைமாறும் கருதாது இத்தொகுதியை வெளியிட முன் வந்த கலைஞன் பதிப்பகத்திற்கும் அதனை வழி நடத்தும் பெரியவர் திரு. மாசிலாமணி அவர்கட்கும், இளவல் மா.நந்தன் அவர்கட்கும் இலக்கிய உலகம் சார்பாக நன்றி செலுத்த கடமைப் பட்டுள்ளேன். மீண்டும் என் தாயின் நினைவாக கொண்டு வர துணை நின்ற அனைவருக்கும் வணக்கத்துடன் வாழ்த்துக்கள்.”
இவ்வாறு எனது முன்னுரை 'அம்மா’ கதைத் தொகுப்பில் இடம்பெற்றிருந்தது. அம்மா தொகுதியில் பெண் எழுத்தாளர்களான குறமகள், குந்தவை, யோகா பாலச்சந்திரன், கோகிலா மகேந்திரன், அன்ன லட்சுமி இராஜதுறை, சந்திரா தனபாலசிங்கம், தாட்சாயணி, எம்.ஏ.நயீமா சித்திக், லஹினா ஏ.ஹக், தாமரைச் செல்வி, பூரணி, பேராதனை ஷர்புன்னிஷா, புஸல்லாவ ஸ்மாலிகா, அட்டன் சாந்தா ராஜ், ஷாந்திமோகன்,அக்னஸ் சவரிமுத்து, பாலரஞ்சனி, ரோஹினி முத்தையா, சுகந்தி, கெக்கிராவ ஸஹானா, பத்மா சோமகாந்தன், ராஜேஷ்வரி பாலசுப்பிரமணியம், ராணி ரீதரன், மண்டுர் அசோகா
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 65

Page 35
ஆகிய இலங்கை பெண் எழுத்தாளர்களின் கதைகள் ‘அம்மா” தொகுதியில் இடம்பெற்றிருந்தது. மாலையில் என்னை தேடிவந்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்திடம் ‘அம்மா’ தொகுப்பை காட்டி னேன். அவர் உடனே “திசைகள்’ மாலனுடன் தொடர்பு கொண்டு சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு அவர் ஏற்பாடு செய்துள்ள விழாவில் ‘அம்மா’ கதைத் தொகுதியையும் அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்தார்.
உலக மகளிர் தினத்தையொட்டி பால், இனம் இவற்றை கடந்து மானுடன் பாடும் பெண் படைப்பாளிகளின் படைப்புகளை அறிமுகம் செய்து வைக்கும் ஒரு முயற்சியாக திசைகள் இயக்கம் மார்ச் 23ம் திகதி மாலை 6 மணிக்கு சென்னை மயிலை பாரதி வித்தியாபவன் அரங்கில் வைகைச் செல்வியின் “கறிவேப்பிள்ளை செடிகளும், நெட்டிலிங்க மரங்களும்” என்ற சிறுகதைத் தொகுதியை எழுத்தாளர்கள் திலகவதியும், திலகபாமாவின் ‘கூர் பச்சையங்கள்” என்ற கதைத் தொகுப்பை எழுத்தாளர் பொன்னிலனும், இலங்கை எழுத்தாளர் பத்மா சோமகாந்தனின் ‘மாண்புறு மகளிர்” கட்டுரை தொகுப்பை செ.கணேசலிங்கனும், ‘அம்மா’ சிறுகதைத் தொகுப்பை எழுத்தாளர் பா.செயப்பிரகாசமும் விமர்சன பார்வையுடன் அறிமுகப் படுத்தினார்.
'திசைகள்’ என்ற அமைப்பின் சார்பில் விழாவை ஏற்பாடு செய்திருந்த புகழ்பெற்ற பத்திரிகையாளரும், எழுத்தாளருமான திரு. மாலன் விழாவை தொடக்கி வைத்து உரையாற்றும் போது ‘ஆண் டாண்டு காலமாக இச்சமுதாயத்தைப் பலர் வேறுபட்ட தளங்களில நின்று மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டே நோக்கினர். மொழி, இலக்கியம், சமயம், சமூக உணர்வுகள் முதலியவை கூட வித்தியாச மான பார்வைகளுக்குட்பட்டவையாக இருந்துள்ளன. இந்து சமயத்தில் சைவம், வைஷணவம், தமிழ் மொழியில் மணிப்பிரவாளம், தனித் தமிழ், இலக்கியத்தில் பண்டைய இலக்கியம் நவீன இலக்கியம் என வேறுபாடுகள் நிலவின. ஆக்க இலக்கிய படைப்பாளிகள் மத்தி யில் கூட கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்பவர்கள், ஏற்காதவர்கள் என்ற வேறுபாடுகள் நிலவுகின்றன. இவற்றையெல்லாம் அறிதல், ஆக்கம் பகிர்தல் என்ற அடிப்படையில் “திசைகள்” இயக்கம் கருத்தில் கொண்டு இயங்கி வருகின்றது.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா 66

சென்ற 2004ம் ஆண்டின் உலக மகளிர் தினத்தையொட்டி முழுவதுமே பெண் கவிஞர்கள் பங்கு பற்றிய நிகழ்ச்சியாகக் கொண் டாடியது. இவ்வாண்டு மூன்று பெண் படைப்பாளிகளையும் அவர்களின் நூல்களையும் பராட்டிக் கெளரவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. அவ்வாறு பாராட்டப்படுபவர்களில் தமிழ் நாட்டின் எல்லைகளுக்கும் அப்பால் கடல் கடந்து இலங்கையைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளரான பத்மா சோமகாந்தனை அழைத்து இங்கு பாராட்டக் கூடிய வாய்ப்புக் கிடைத்திருப்பது எமக்குப் பெரு மகிழ்ச்சி தருகிறது. அத்துடன், அந்தனி ஜீவா தொகுத்த இலங்கை பெண் எழுத்தாளர்களின் சிறுகதை களைக் கொண்ட ‘அம்மா’ தொகுதியையும் இவ்விழாவில் அறிமுகம் செய்யக் கிடைத்தது சிறப்பம்சமாகும்.
பிரபல எழுத்தாளர் திலகவதி ஐ.பி.எஸ். பேககையில், பெண் கல்வி கற்றால் விடுதலை கிடைத்துவிடுமென பாரதி காலத்திலிருந்தே பேசப்பட்டது. கல்வி கற்ற பின்னும் பெண்ணுக்கு விடுதலை கிடைக்க வில்லை. ஆணாதிக்க விலங்கு கல்வி கற்ற பெண்களால் கூட இன்னும் நொருக்கப்படவில்லை என்பதை ஓர் உயர் பொலிஸ் அதிகாரி என்ற வகையில் என்னால் அறிய முடிகிறது. பெண்கள் படித்துவிட்டால் மட்டும் சகல சுதந்திரங்களையும் எப்துவிட்டார்கள் என்று கூற முடியாதுள்ளது. இன்னும் தாண்ட வேண்டிய தடைக் கற்கள் நிறையவே உண்டு. அந்தச் சிந்தனையோட்டத்தைக் கொண்ட இம்மூன்று பெண் படைப்பாளிகளை இனங்கண்டு இங்கு பாராட்டுவ தற்காக மாலனுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். சர்வதேச மகளிர் தினத்தை வெறும் சடங்காகக் கொண்டாடாமல் இது போன்ற பயனுள்ள முறையில் நினைவு கூர்தல் மிகுந்த பலனைத் தரும் என்பதில் வேறு கருத்துக்கு இடமில்லை எனக் கூறினார்.
பிரபல நாவலாசிரியர் பொன்னீலன் தமது உரையில் இலக்கியத் தம்பதியரான சோமகாந்தனும் திருமதி பத்மாவும் சிறந்த எழுத்தாளர்கள். நான் சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்:ை5க்குச் சென்றிருந்த போது அவர்களின் இலக்கிய ஆளுமையையும், இலக்கி. வளர்ச்சிக்கான செயற்பாடுகளையும் கண்டு வியந்து போனேன். கவிஞர் திலகபாமாவின் கவிதை அவரது ஆற்றலையும், ஆளுமை யையும் வெளிப்படுத்துகிறது.
சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா é?

Page 36
மூத்த நூலாசிரியரான செ. கணேசலிங்கம் உரையாற்று கையில், பத்மா சோமகாந்தன் தமது மாணவப் பருவத்திலேயே எழுத்துலப் பிரவேசஞ் செய்து, இன்று தமிழ் கூறும் நல்லுலகம் எங்கினும் தமது ஆக்கங்களினூடாக மிகவும் கலரிப்புக்குரிய எழுத்தாளராக விளங்குபவர். இவரின் சிறுகதைத் தொகுதிகளான கடவுளின் பூக்கள் புதிய வார்ப்புகள், வேள்வி மலர் ஆகியவற்றிலுள்ள கதைகளில் அநேகமானவை பெண்களின் குரல் கொடுப்பவை அவலங்களைத் சித்தரிப்பவை. இப்படைப்புக்கள் பலராலும் பாராட்டுப் பெற்றிருப்பதுடன், தமிழ் நாட்டிலும் இலங்கையிலுள்ள பெண்கள் அமைப்புக்களுடன் இணைந்து செயலாற்றி வரும் அவர் சென்ற ஆண்டில் வெளியிட்டுள்ள ‘ஈழத்து மாண்புறு மகளிர்” எனும் நூலில் இலங்கையில் பல்வேறு துறைகளில் முன்னணியில் விளங்கும் பெண்மணிகள் புரிந்து வரும் பணிகளை மிக அற்புதமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் என்றார்.
முத்த படைப்பாளர் பா.செயப்பிரகாசம், அந்தனி ஜீவாவினால் தொகுக்கட்பட்ட ஈழத்தின் 25 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் கொண்ட ‘அம்மா’ என்ற நூலை வெளியிட்டு வைத்து உரையாற்று கையில், ஈழத்தமிழர்கள் கொடிய யுத்தத்தின் அவலங்களையும், இழப்புகளையும் அனுபவித்தவர்கள். ஈழத்தின் எழுத்தாளர்கள் அவற் றை தமது படைப்புகளில் உணர்ச்சிகரமாகப் பதிவு செய்துள்ளனர். இந்நூலிலுள்ள பத்மா சோமகாந்தனின் சிறுகதை அவ்வாறான தொன்று. யுத்த அரக்கனுக்கு தனது கணவனைப் பலிகொடுத்து விட்டு பிள்ளைகளுடன் புலம் பெயர்வதற்காக விமானம் ஏறும் ஒரு :ெண்ணின் சோகத்தை அவர் அற்புதமாகச் சிறு கதையாக்கியுள்ளார். ஆர்க்கதையைப் படித்த போது சோகம் என் இதயத்தைத் தொட்டது எனக் குறிப்பிட்டார்.
படப்பாளிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கினார்கள். விழாவில் படைப்பாளிக5ை:யும் உரையாற்ற வந்தவர்களை சிறப்பான முறையில் களிதாயின் தமிழச்சி சுமதி கவிதை வரிகள் மூலம் அறிமுகப்படுத்தினார். பத்மா சோமகாந்தன், திலகபாமா, வைகைச் ரெல்ஃ, அந்தனி ஜீவா ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினார்கள்.
சிறகு விரிந்த காபப் - அத்தனி ஜீவா 68


Page 37

அந்தணி _ இலக்கியப் பேரவி
ஈழத்தின் இலக்கிய G மலையக இலக்கியத்திற்கு
ஒரு கணிசமான பங்குண்டு என்பதைப் பந்துபட்டதில் நாட்டின் உள்ளேயும்
|b.T.”.t၄ထိ၊ எல்லைகளைத் ൈ
எடுத்துச் சென்றவர்களில்
■