கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2008.10

Page 1
50வது ஆண்டை நோக்கி.
நமது நவீன யுகத்திற்கு ந
gesesuz Arif - 2oos
 
 

SSSNÈS I
LA&&డి ప్రమA
அறிவை
αύαρου - 30/-

Page 2
*
(Dealers in Video Cassic’ ,
Cassettes,
CD's, Calculators, su \, t III
'fancy Goods
152, Bankshall Street, Colomb0 - 11. Tel:2446028, 2441982 FaX: 323472
 

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவர்
உலகப் பாராளுமன்ற வரலாற்றிலேயே, இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திரம் தான் ஓர் இலக்கியச் சஞ்சிகை விதந்து பாராட்டப் பெற்ற பெறுமதி மிக்க சம்பவம் இடம் பெற்றுள்ளது. அங்கு பாராட்டப்பட்ட சஞ்சிகை மல்லிகை. இதனை நாடாளுமன்றப் பதிவேடான ஹன்ஸார்ட் (04, 7 2001) பதிவு செய்ததுடன் எதிர்காலச் சந்ததியினருக்காக ஆவணப் * படுத்தியுமுள்ளது.
50 -வது ஆண்டை நோக்கி. g56UAUlf
353
|மல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளிவரும் தொடர் சிற்றேடு மாத்திர மல்ல - அது ஒர் ஆரோக்கியமான இலக்கிய இயக்கமுமாகும் ,
201/4, Sri Kathiresan St, Colombo - 13. Tel: 2320721
mallikaiJeeva@yahoo.com
യ്ക്കെക Lomm மாதம் யூஸ்தே, மல்லிலகல் யந்தலில் U8லைnஸில்தான்
மல்லிகை மாத இதழ் தனது 44வது ஆண்டு மலரைத் தயாரித்துக் கொண்டிருக்கும் இந்தவேளை யில், ஆண்டாண்டுக் காலமாக இந்தச் சிற்றேட்டை ஆதரித்து, அன்பு செலுத்தி, உற்சாகமூட்டி, அணு சரணை வழங்கி வந்தமைக்காகவும், தொடர்ந்து நான்கு தஸாப்தங்களுக்கு மேலாக அதன் தொடர் வரவுக்கு ஒத்தாசை புரிந்த சகல இலக்கியச் சுவை ஞர்கள் அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றி யையும் வணக்கத்தையும் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.
நமது மண்ணில் இலக்கியச் சிற்றேடொன்று நீண்ட காலங்களாக நிலைத்து நிற்பதற்கு அடிப் படைக் காரணமே, அதனைத் தொடர்ந்து ஆதரித்து வரும் அன்பர்களின் ஆதரிப்பும், தளராத ஒத்துழைப் பும், நல்லெண்ணமும்தான்!
அதேசமயம் தகுந்த விளம்பர ஒத்துழைப்புப் பின்னணியும், விரிவான விநியோகக் கட்டமைப்பும்
இல்லாது போனால், என்னதான் அர்ப்பணிப்பும்
உழைப்புப் பசளையிட்டிருந்த போதிலும்கூட, சில
ஆண்டுகளுக்குள்ளேயே அவ் விலக்கிய இதழ் வாடி
வதங்கிக் காணாமலே போய்விடும்.
இதுவே கடந்த காலங்களில் இந்த மண்ணில் வெளிவந்த சிற்றேடுகளுக்கு நடந்த துர்ப்பாக்கிய நிலையாகும். இந்தப் பின்னணியைத் தெளிவாகப் புரிந்து கொண்டுதான், பக்கம் பக்கமாக 'மல்லிகைப் பந்தல் வெளியீட்டு நிறுவனத்தையும் உருவாக்கி வளர்த்து வந்துள்ளோம்.
இதன் பொருளாதாரப் பெறுபேறுகளை எம்மால் இன்று நடைமுறையில் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகின்றது.
எனவே, மல்லிகையின் தொடர் வளர்ச்சிக்கு உதவுபவர்கள், மல்லிகைப் பந்தல் வெளியீடுகளை ஆதரிக்க வேண்டும் என விநயமாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
- ஆசிரியர்

Page 3
ఫ్రీ மல்லிகைப்பந்தல் வெளியிடுேள்ள நூல்கள்
Nஃந்தல் 1. எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு (இரண்டாம் பதிப்பு) 2. எழுதப்பட்ட அத்தியாயங்கள் : சாந்தன் 3. கார்ட்டூன் ஓவிய உலகில் நான் சிரித்திரன் சுந்தர் 4. மண்ணின் மலர்கள் (13 யாழ் - பல்கலைக்கழக
மாணவ - மாணவியரது சிறுகதைகள்) 5. கிழக்கிலங்கைக் கிராமியம் (கட்டுரை) ரமீஸ் அப்துல்லாஹ் 6. முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் : டொமினிக் ஜீவா(பிரயாணக் கட்டுரை) 7. முனியப்பதாசன் கதைகள் (சிறுகதை) முனியப்பதாசன் 8. ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் குரல் டொமினிக் ஜீவா 9. இப்படியும் ஒருவன் (சிறுகதை) மா. பாலசிங்கம் 10. அட்டைப் படங்கள் 11. சேலை (சிறுகதை) முல்லையூரான் 12. மல்லிகை சிறுகதைகள் : செங்கை ஆழியான் (முதலாம் தொகுதி) 13. மல்லிகைச் சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி) செங்கை ஆழியான் 14. நிலக்கிளி (நாவல்) பாலமனோகரன் 15. அநுபவ முத்திரைகள் : டொமினிக் ஜிவா 16. நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள் 17 டொமினிக் ஜீவா கருத்துக் கோவை (கட்டுரை) 18. பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் (கட்டுரை) 19. முன்னுரைகள் சில பதிப்புரைகள் : டொமினிக் ஜீவா 20. தரை மீன்கள் (சிறுகதை) ச. முருகானந்தன் 21. கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் (சிறுகதைகள்).
செங்கை ஆழியான் 22. நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதை) ப.ஆப்டீன் 23. அப்புறமென்ன (கவிதை) குறிஞ்சி இளந்தென்றல் 24. அப்பா (வரலாற்று நூல்) : தில்லை நடராஜா 25. ஒரு டாக்டரின் டயரியில் இருந்து. டாக்டர் எம். கே. முருகானந்தன் 26. சிங்களச் சிறுகதைகள் - 25 தொகுத்தவர் செங்கை ஆழியான் 27. டொமினிக் ஜீவா சிறுகதைகள் - 50 இரண்டாம் பதிப்பு 28. Undrawn Portrait for Unwritten Poetry -
டொமினிக் ஜீவா சுயவரலாறு (ஆங்கிலம்) 29. தலைப் பூக்கள் (மல்லிகைத் தலையங்கள்) 30. அக்சுத்தாளின் ஊடாக ஓர் அநுபவப் பயணம் 31. மல்லிகை ஜீவா மனப் பதிவுகள் - திக்குவல்லை கமால் ܛܛܟ 32. மல்லிகை முகங்கள் : டொமினிக் ஜீவா 33. பத்ரே பிரசூத்திய - சிங்களச் சிறுகதைகள் - டொமினிக் ஜீவா 34. எங்கள் நினைவுகளில் கைலாசபதி : தொகுத்தவர் - டொமினிக் ஜீவா 35. காற்றைக் கானமாக்கிய புல்லாங்குழல் (இணுவையூர் சக்திதாசன்) 36. முன் முகங்கள் (53 மல்லிகை அட்டைப்படக் குறிப்புகள்)
250/- 14.0/s 175/-
ی/110 100/=
110/- 150/- 135/- 150/= ܒ/175 150/- 275/= 350/= 140/= 80/= 150/- 80/= 100/- 120/-
150/e
175/- 150/= 120/- 120/- 14.0/s 150/= 350/=
200/s 120/= 200/= 150/= 150/ 120/
90/s 150/ 200/ 150/-
37. மல்லிகை ஜீவா (மணிவிழா மலர் தொகுப்பு)

தமிழக முதல்வரின் கவனத்திற்கு.
தமிழ்நாட்டு முதலமைச்சர் என்கின்ற பதவிச் சிறப்பையும் மீறி, ஒரு மெய்யான கலைஞர் என்கின்ற ரீதியில் நீங்கள் கலைஞர்களிடமும், பொதுவாக எழுத்தாளர்களிடமும் காட்டிவரும் பரிவையும், நெஞ்சார்ந்த நெருக்கத்தையும் தகவல்கள் மூலமும், செய்திகள் மூலமும் தெரிந்து கொண்டதில் நெஞ்சு நெகிழ்ந்து நமது மனமார்ந்த நன்றியையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். உங்களது பணத்தில் ஒரு கோடி ரூபா அன்பளிப்புச் செய்துள்ளிர்கள்
முக்கியமாக, தமிழ் மொழிப் படைப்பாளி ஜெயகாந்தன் நோயுற்று அப்பல்லோ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்த வேளையில், முதலமைச்சராக மாத்திரமல்ல, ஒரு சக எழுத் தாளனாக நீங்கள் அந்த சிருஷ்டி கர்த்தாவுக்குக் காட்டிய பரிவும் பாசமும், ஒத்துழைப்பையும் கண்டு, மனநிறைவுடன் பூரிப்படைந்தவர்கள்தான் இந்த நாட்டு எழுத்தாளர்கள்.
அந்தக் கவனிப்பான கண்ணியப்படுத்தலுக்காக, இந்த மண்ணின் எழுத்தாளர்களின் சார்பாக உங்களை வாழ்த்துகின்றோம், மதித்துப் போற்றுகின்றோம். - நாம் சொல்ல வந்தது அதுவல்ல.
நீண்ட நெடுங்காலமாகவே தமிழகத்திலிருந்து அத்தனை சஞ்சிகைகள், புத்தகங்கள், இலக்கியப் படைப்புக்கள், சினிமாச் சுருள்கள் எங்கள் மண்ணுக்கு அபரிமிதமாகவே வந்து குவி கின்றன. நமது நாடே தமிழகத்தின் சந்தைக் கடையாக மாறிவிட்டது.
ஆனால், இங்கிருந்து தமிழில் வெளிவரும் எந்தவொரு படைப்புமே தமிழகத்திற்கு வர உங்களது மத்திய அரசாங்கம் தடைவிதித்துள்ளது.
காரணம், தமிழ் மொழி இந்தியப் பிரதேச மொழிகளில் ஒன்றாம். எனவே, இந்திய உபகண்டத் திற்கு வேற்று நாட்டுத் தமிழ்ப் படைப்புக்களின் இறக்குமதி தேவையற்றதாம். வேண்டப்படாததாம்.
- இதை உங்களது கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம். மெய்யாகவே சொல்லுங்கள். தமிழ் மொழி இன்று தமிழ்நாட்டுக்கு மட்டும் உரித்தான பிரதேச மொழி மாத்திரம்தானா? இன்று 32 நாடுகளில் தமிழ் மொழி பேசப்படுகின்றது. சஞ்சிகைகள் வெளியிடப்படுகின்றன. புலம்பெயர்ந்த நம்மவர்கள், இன்று உலகம் பூராவும் பல்கிப் படர்ந்து, தமது தாய்மொழியை இன்று உலக மட்டத்திற்கு உயர்த்தியுள்ளனரே, இது நடைமுறையில் நாம் காணும் யதார்த்தமல்லவா? நமது வேண்டுகோள் அதுவல்ல.
தமிழகத்திற்கு நமது தரமான படைப்புக்கள் வந்து சேரத் தடையாக இன்று விளங்கும் மத்திய அரசாங்கத்தின் தடையை முதல்வர் என்கின்ற ரீதியில் நீங்கள் நீக்கித் தரவேண்டும் என்ற வேண்டு கோளைத் தமிழின் பெயரால் உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்.
சர்வதேசத் தமிழ் நாளை உங்களை நன்றியுடன் நினைவு கூரும்!

Page 4
அட்டைப்படம்
சதா நேரமும் சுயமாக
இயங்கும்
மனப்போக்குக்
N་ கொண்டவர், சபா'
- டொமினிக் ஜீவா
நீண்பர் சபா.ஜெயராசாவை நான் அவரது மாணவப் பருவ காலத்திலேயே சந்தித்துப்
பழகி வந்திருக்கின்றேன். யாழ்.மத்திய கல்லூரியில் அவர் மாணவனாகக் கல்வி பயின்ற
காலத்திலிருந்தே எனக்கு அவருடன் நல்ல பழக்கம் இருந்தது.
நான் இவரைச் சந்திக்கும் காலகட்டத்தில், இலங்கை முற்போக்கு எழுத்தாளர்
சங்கத்தின் கிளைச் செயலாளராகத் தொடர்ந்து பல ஆண்டுகள் இயங்கி வந்துள்ளேன்.
அந்தக் காலத்திலேயே கல்வி கற்ற சில இலக்கிய ஆர்வமுள்ள மாணவர்கள்
ஒருங்குகூடி "இளம் எழுத்தாளர் சங்கம்' என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக் கினார்கள். டாக்டர். மகாலிங்கம், கலா. பரமேஸ்வரன் போன்ற மாணவ நண்பர்கள் முன் கையெடுத்து அந்த இளம் எழுத்தாளர் சங்கத்தை வழிநடத்திச் சென்றனர். இந்தக் குழுவினரிடையே நண்பர் சபாவும் அடிக்கடி தென்படத் தொடங்கினார்.
கல்லூரியிலிருந்து மத்திய தீபம் என்றொரு இலக்கிய இதழும் அந்தக் காலகட்டத்தில் வெளிவந்தது. அந்த இதழ் வெளிவருவதற்குப் பக்கத் துணையாக நின்று உதவியவர் நமது சபா ஜெயராசா அவர்களே.
இன்று வரைக்கும் நானோ அல்லது அவருக்கு நெருங்கியவர்களோ அவரை அழைக்கும் போது, சபா' என்றே அன்பொழுகக் கூப்பிட்டுப் பழகி வருகின்றோம். எங்களுக்கு நன்றாகவே தெரியும் அந்தச் சபா என்ற பெயர் அவரது தகப்பனாரின் முன்னெழுத்துப் பெயரென்று. இருந்தபோதிலும் கூட, சபா' என அழைப்பதில் ஒரு நெருக்கமும் சுமுகமும் பல ஆண்டுக் காலங்களாக நிலவி வந்துள்ளது என்பது உண்மை யான உண்மைகளில் ஒன்றாகும்.
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 4
 

யாழ். மத்திய கல்லூரி அதிபர்கள் அந்தக் காலத்தில் வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளுக்குத் தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்து வந்துள்ளனர் என் பதை நன்றியுணர்வுடன் இன்று வரைக் கும் நினைத்துப் பார்த்து, மனநிறைவடை கின்றேன். அவர்களுக்கு நன்றி செலுத்து கின்றேன்.
செயலாளர் என்கின்ற முறையில் நான் அந்தக் காலத்தில் பல இலக்கியக் கூட்டங்களை ஒழுங்கு செய்வது வழக்கம். பணம், காசு புழங்காத இளம் பருவத்துக் காலம். வயது வந்த எழுத்தாளர்களும் உதவ மாட்டார்கள். எனவே மண்டபங் களை வாடகைக்குப் பெற்றுக்கொள்ள
முடியாத கையாலாகாத நிலை.
அடிக்கடி எழுத்தாளர்களை ஒருங்கு சேர்த்துக் கலந்துரையாட வேண்டும், சந்திக்க வேண்டுமென்ற ஆக்கபூர்வமான மன உந்துதல் எனக்கு. எனவே மத்திய கல்லூரி ரிம்மர் மண்டபத்தில் கூட்டங் களுக்கு ஒழுங்கு செய்யப்படும்.
அந்தக் கால கட்டத்தில் மத்திய கல்லூரியின் நூலகராக நண்பர் மாணிக்க வாசகர் பொறுப்பாக இருந்தார். தொலை பேசி வசதி கூடக் கிடைக்காத Eme) b. நூலகர் மாணிக்கவாசகரின் ஒப்புதலை நம்பி, சனிக்கிழமைகளில் பிற்பகலில் இலக்கியக் கூட்டங்களை ஒழுங்கு செய்வேன்.
நானழைக்கும் அந்த இலக்கியக் கலந்துரையாடல்களுக்கு வரதர், கனக. தெந்திநாதன், சொக்கன், சிற்பி, டானியல், சுவே, ஏ.ஜே. நாகராஜன், நாவேந்தன்,
தேவன், நடராஜன், சில சமயங்களில் வெளியே இருந்து வந்து ஊரில் தங்கி யிருக்கும் பிரபலங்கள் போன்றோர் வந்து கலந்து கொண்டு, எனது அழைப்பை ஏற்றுக் கண்ணியப்படுத்துவார்கள்.
இப்படி எனது அழைப்பை ஏற்று. இலக்கியக் கூட்டங்களுக்கு வந்து கலந்து கொண்டவர்களில் ஒருவராக நிச்சயம் சபா ஜெயராசாவும் ஒருவராகவே இருப்பார். இலக்கிய நட்பை வளர்த்துக் கொண்
டோம்.
கட்டம் கட்டமாக இவரது வளர்ச்சி யையும், அறிவு முதிர்ச்சியையும், கல்வித் தகைமைகளையும் நான் வெகு கூர் குறிப் பாகவும் அவதானித்து வந்துள்ளேன். பல தரமான பாட நூல்கள் வெளியிடுவதிலும் இன்று இவர் முன்னணியில் திகழ்ந்து வருகின்றார்.
இணுவில் மண்ணுக்கே உரித்தான கலைக்கூர்மை, அறிவுத் தேடல் இவருக் குப் பரம்பரைக் கொடையாகக் கிடைத் துள்ளதோ என நான் அடிக்கடி நினைத் துப் பார்ப்பதுண்டு.
பட்டதாரியாகி, முதுகலைமாணி, முனைவர் பட்டங்களைப் பெற்று, இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பதவி வகித்த போதும்
எங்களது நட்பின் நெருக்கம் மிக
இறுக்கமாகவே இருந்து வந்துள்ளது.
மல்லிகையின் ஆரம்ப காலத்தி லிருந்தே அந்த இதழுக்கு எழுத்துப் பங்களிப்புச் செய்து வந்துள்ளார்.
மல்லிகை ஒக்டோபர் 2008 5

Page 5
அவரிடம் ஒரு சைக்கிள் இருந்தது. என்னிடமும் ஒரு சைக்கிள் இருந்தது. அவரிடமிருந்த சைக்கிள் "ரேஸிங் சைக்கிள்' எனச் சொல்லப்படும் இளை ஞர்கள் ஒடித்திரியும் சைக்கிள். அந்தச் சைக்கிளில்தான் பல்கலைக்கழகத்திற்கு வந்து போவார். அதே சைக்கிளில்தான் மல்லிகைக்கும் வருவார். கட்டுரைகளைத் தந்துவிட்டு, ஆறுதலாக உரையாடி விட்டுச் செல்வார்.
என்னிடமிருந்த சைக்கிளின் கதை வேறானாது. மாதா மாதம் அந்தச் சைக் கிளில்தான் நான் இலக்கிய உலா வருவேன். மல்லிகைப் பொதி கையி லிருக்கும். இப்படி மாதா மாதம் உலாச் செல்லும் இடங்களில் யாழ்ப்பாணப் பல் கலைக்கழகமும் அடங்கும்.
அங்கு மல்லிகையின் நண்பர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். மல்லிகைக்கு எழுதுகின்றவர்கள் பலர் இருந்தார்கள். பேராசிரிய நண்பர்கள் அங்கு கடமை புரிந்தார்கள். மல்லிகையையும், என்னை யும் அந்தக் காலத்திலிருந்தே நெஞ்சார நேசிக்கும் உபவேந்தர்களும் இருந் தார்கள். எல்லாரையும் ஒருங்கு சேரச் சந்திக்கும் ஒரு ஆலயமாகவே நான் பல்கலைக் கழகத்தைக் கருதி வந்தேன்.
அங்குள்ள தேநீர்ச்சாலை பிரபலம் வாய்ந்ததொன்று. மாணவர்களிலிருந்து பேராசிரியர்கள் வரைக்கும் வெகு சாவதானமாகச் சந்தித்து உரையாடி விட்டு, எனது இலக்கிய வியாபாரத்தையும் நடத்திவிட்டு வரக்கூடிய ஒரு சந்திப்பு மடமாகவே அது விளங்கியது.
அந்தச் தேநீர்ச் சாலையிலும் நான் சபாவுடன் அடிக்கடி தேநீர் பருகி, பலதும் பத்தும் கதைத்த பின்னர் திரும்பி யுள்ளேன்.
இப்படியொரு தினத்தில்தான் நண்பர் ஏஜேயின் அழைப்பை ஏற்று, அந்தத் தேநீர்ச்சாலைக்குள் நுழையும் சந்தர்ப் பத்தில், நான் ஒட்டி வந்த சைக்கிளை ஒரு பக்கமாக வைத்துவிட்டு, உள் நுழைந்து தேநீர் அருந்தினோம்.
வெளியே வந்து பார்த்தால் சைக் கிளைக் காணவில்லை!
எனக்கோ ஒரே அதிர்ச்சி!
எனது துயரத்தில் பங்கு கொண்டு, என்னை ஆசுவாசப்படுத்தியவர்களில் ஒருவர் நண்பர் சபா.
அவர் மாணவராக இருந்த காலத்தி லிருந்து கலாநிதியாகி, பின்னர் பேராசிரி யருமாகி, அன்று இளைப்பாறிய பின்னர், இன்று தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் பார்க்கின்றேன். :
அதிசயம்! - அதே உருவம் சொண்டுக்குள் அதே சிரிப்பு! அன்று பார்த்ததைப் போன்ற அதே முகம்
சிலருக்கு வயது போகும். முதுமை வரும். ஆனால், அந்த முக மலர்ச்சியும், காந்தியும், கவர்க்சியும் அவர்களை விட்டுப் போகவே போகாது
அதில் ஒருவர்தான் "நம்ம" சபா ஜெயராசா
மல்லிகை ஒக்டோபர் 2008 率 6

"லொக்கு லொக்கு." என்று தொடர்ச்சியாக இருமுவதும் காறித் துப்புவதுமாக அந்த வீட்டிலிருந்து சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. இருமிக் களைத்து அனுங் கலுடன் மூச்சு விடுவதும் கேட்கிறது. இரண்டே இரண்டு அறைகளுடன் ஒரு விறாந்தையு மாக உள்ள அந்தச் சிறிய வீட்டின் விறாந்தையின் ஒரு மூலையில் கொஞ்சம் கிழிந்த ஒலைப் பாயில் அருளானந்தம் படுத்திருக்கிறார். பழைய ஒரு பெட்சீற் பாயின் மேல் விரிக்கப்பட்டிருக்கின்ற படுக்கையில் சாரத்திற்குள் முழு உடம்பையும் ஆமைபோல் உள்ளிழுத்துப் படுத்திருக்கிறார். அழுக்கேறிப்போன தலையணைக்குப் பக்கத்தில் துப்பற்பேணி கிடக்கிறது. இருமியபின் தலையைக் கிளப்பிப் பேணிக்குள் காறித் துப்புகிறார். அருகில் கோப்பையில் சோறு போட்டபடி இருக்கிறது. அதற்கப்பால் தன் எஜமானைப் போலவே ஒட்டி உலர்ந்த வயிற்றுடன் அவருடைய நாய் ஜொனி படுத்திருக்கிறது. தன் எஜமான் எப்போது சாப்பிடத் தொடங்குவார், அதன் பின் தனது பங்கைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற ஆவல் அதன் கண்களில் தெரிகிறது.
ஆஸ்துமா நோயினால் அவதிப்படும் அருளானந்தத்திற்கு அந்நோய் புதிதல்ல. அவரால் உயிராய் நேசிக்கப்பட்ட உறவுகள் அவரை விட்டுத் தூரப்போய் விட்டபோதும் அவரது சிறுவயதிலிருந்தே அவருடன் கூடவே இருந்து பிரியாமல் தொடர்வது இந்த ஆஸ்துமா நோய் மட்டும்தான்.
அருளானந்தம் வயது முதிர்ந்து உடல் பலகீனப்பட ஆஸ்துமா நோயும் அவருடனான நெருக்கத்தை அதிகரித்துக் கொண்டது. அவர் இழுத்து மூச்சு விடும் சத்தம் அயல் வீடுகளுக்குக் கேட்குமளவிற்கு நிலைமை மோசமாகிக் கொண்டு போகிறது.
நேற்றையிலிருந்து இந்தச் சாப்பாட்டைச் சாப்பிடுவதில்லை என்று முடிவெடுத்து விட்டார் அருளானந்தம். அதேசமயம் வேறுவகையில் சாப்பிடவும் வசதியில்லை. அருளானந் தத்தின் இயல்பான சுபா வமே நடப்புத்தான். எந்தச் சந்தர்ப்பத் திலும் தன்மானத்தை விட்டுக் கொடுக்காத போக்கு. இன்று வயது அறுபத்தைந் தைக் கடந்து விட்ட போதும், இங்கு தனக் கென யாரும்
ஒரு குேப்பை சோறு ਹੈ।
இழக்க அவர் தயாரில்லை.
கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 7

Page 6
இந்தச் சிறிய வீடும், காணியும்தான் அவரது ஒரே சொத்தாக இருந்தது. இதுவும் அவரது தகப்பன் வழிவந்த முதுசொம் தான். இப்போது அதுவும் அவருக்குச் சொந்தமில்லை.
அவரது ஒரே மகன் பொறியியல் கல்விக்குத் தெரிவாகி பேராதனைப் பல் கலைக்கழகத்திற்குச் சென்றதும், படிப்பு முடிந்தபின் தன்னுடன் கூடப்படித்த கொழும்புப் பெண்ணொருத்தியை பதிவுத் திருமணம் செய்துகொண்டதும், இதைக் கேள்விப்பட்ட அருளானந்தம் மகனைத் தங்கள் சாவுக்குக்கூட வரக்கூடாது என்று சொல்லியனுப்பியதும் பழைய கதைகள்.
அப்பா ஆத்திரத்தில் அப்படிச் சொல்லியிருக்கலாம். அதற்காக நானும் அப்படியே இருந்துவிடக் கூடாது என்று அவனும் நினைக்கவில்லை. பெற்றோருட னான தொடர்பை நன்றிகெட்டதனமாக அப்படியே முறித்துக்கொண்டான்.
இது நடந்து இரண்டு வருடங்களில் கவலை மனதை அரித்துத்தள்ள அருளா னந்தத்தின் மனைவியும் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்து போய்ச் சேர்ந்து விட்டாள்.
(ဒီ့) (မှဲ့) ပျွိခ့ဲပြဲ .
அருளானந்தத்திற்கு பசி வயிற்றைப் பிடுங்கினாலும் சோர்ந்து படுத்துக் கொண்டே போன வருடம் நடந்ததை நினைத்துப் பார்க்கிறார்.
'அத்தான் ஆறுதலாக இருக்கிறி யளோ. உங்களோடை ஒரு விஷயம் கதைக்கலாமெண்டு நினைக்கிறன்."
பக்கத்து வளவில் இருக்கும் இவரு டைய மைத்துணி மகேஸ்வரி வந்து விறாந் தையில் இருந்து கொண்டு பீடிகையோடு (385 LIT6iT.
"ஒமோம் சும்மாதான் இருக்கிறன். விஷயத்தைச் சொல்லு"
"இவள் சின்னவளுக்கு ஒரு நல்ல இடத்திலையிருந்து சம்பந்தம் கேட்டு
வந்திருக்கு. கோண்டாவில் மாப்பிள்ளை.
பெடியன் படிப்பிக்கிறான். பட்டதாரியாம். சீதனம் பெரிசாகக் கேட்கேல்லை. சின்ன தாக எண்டாலும் ஒரு வீடும் பத்து இலட்சம் காசும் குடுத்தால் போதுமாம். காசு ஒரு மாதிரிச் சரிப்பண்ணியிட்டம். எங்களுக் கிருந்த வீட்டையும் மூத்தவளுக்கு எழு தினது உங்களுக்குத் தெரியும்தானே.
வேறை காணியுமில்லை."
". உம் . சொல்லன்."
'ஆதுதானத்தான் இப்போதைக்கு இந்த வீடு காணியை பொறுப்பாய் எழுதிக் கொடுத்தியெளெண்டால் கல்யாணத்தை ܬ முடிச்சுப் ப்ோடலாம். பிறகு என்ரை பெடி யன் கனடாவிலிருந்து காசனுப்ப எங்கை யெண்டாலும் காணி வேண்டி வீடு கட்டிக் குடுத்திட்டு உங்கடை வீட்டைத் திருப்பி யெழுதித் தரலாம் எண்டு யோசிக்கிறம். உங்கடை முடிவைப் பொறுத்துத்தான் கல்யாணத்திற்கு முடிவு சொல்ல நினைச் சிருக்கிறம்."
"அப்பிடி நினைக்கிறதென்ன. சரி யெண்டு சொல்லிவிடு. எனக்குப் பிறகு இந்த வீடு அவளுக்கெண்டுதான் நானும் நினைச்சிருக்கிறன். அது இப்பவே தேவை
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 8

யெண்டால் நான் எழுதித் தாறன். என்ரை காவாலி இனி இஞ்சை வரப்போறானே. இல்லைத்தானே. அதோடை இந்த வீடும் காணியும் நாங்கள் தேடின தேட்டமில்லை. என்ரை முதுசொம். தாயின்ரை பங்கெண்டு அவன் வந்து எதுவும் கேட்கேலாது. நீ எல்லா ஆயத்தங்களையும் செய்து போட்டுச் சொல்லு. நான் வந்து கை யெழுத்து வைக்கிறன்.”
அத்தானின் நல்ல பதிலோடு மகேஸ்வரி எழுந்து சென்றாள். அதன்பின் எல்லாம் நல்லபடி நடந்து முடிந்தது.
அருளானந்தத்தின் சேமலாபநிதி மகனை பொறியியலாளராக படிப்பிப்பதற் காக மாதா மாதம் அனுப்பி வைப்பதற்குப் பட்ட கடனை வட்டியோடு கட்டி முடித்ததும் மிஞ்சியது கொஞ்சப் பணமே. அதை வங்கி யிலிட்டு தனது சிறு சிறு தேவைகளுக்கும் மருந்துச் செலவுகளுக்கும் எடுத்துச் செல வழித்துக் கொண்டுவர அதுவும் கரைந்து போய்விட்டது.
ஆஸ்துமா நோயும் தனது கொடு மையை அதிகரித்துக் கொண்டே போனது. மகேஸ்வரியின் வற்புறுத்தலுக்குச் சம் மதித்து தனக்கென்று ஒரு ஆளுக்காக உலை வைப்பதை விட்டு அவள் கொண்டு வந்து மூடிவைத்துவிட்டுப் போகும் ஒரு கோப்பை சோற்றுடன் ஒரு வருடம் கழிந் தது. காலை உணவு சாப்பிடுவதில்லை. இரவு சிலசமயம் பானும், வாழைப்பழமும், சிலசமயம் சிவபட்டினி.
இப்ப கொஞ்ச நாட்களாக மகேஸ் வரியோ, மகளோ சந்தோஷமாக சாப்பாடு கொண்டு வந்து வைப்பதில்லை என்பதை
அருளானந்தம் அவதானித்துக் கொண்டே வந்தார். சில சமயங்களில் எனக்கு வயிறு சரியில்லை சாப்பாட்டைக் கொண்டு போங்கோ என்றும் திருப்பி விட்டிருக்கிறார். அவர்களும் வற்புறுத்திக் கொடுப்பதாயு மில்லை.
பசி நெருப்பின் கொடுமையை யார் தான் தாங்கிக் கொள்ளமுடியும். பசி வந்தால் பத்தும் பறந்து விடும் என்று அனு பவமில்லாமலா சொல்லி வைத்தார்கள். என்றாலுங்கூட இனி இவர்களிடம் வாங்கிச் சாப்பிடுவதில்லையென்று ஒரேயடியாக அருளானந்தம் முடிவெடுத்ததிற்குக் காரணம் ஆஸ்துமாவின் கொடுமையால் அவர் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தும் சிகிச்சைக் காக எங்காவது கூட்டிக்கொண்டு போவதற் குக் கேட்கவுமில்லை. அதை அவதானித் ததாக காட்டிக்கொள்ளவுமில்லை.
நேற்றும் மகேஸ்வரி விறாந்தையின் கீடிப்படியில் நின்றபடியே சோற்றுக் கோப்பையை விறாந்தை நிலத்தில் வைத்து வேகமாகத் தள்ளிவிட்டாள். சோறு நிலத்தில் சிந்தியது பாதி, சிந்தாதது பாதி யாக அருளானந்தத்தின் படுக்கைக்கு வந்து சேர்ந்தது. அருளானந்தத்தின் மங் கிய கண்களுக்கு சாப்பாட்டுக் கோப்பைக் குள் புழுக்கள் நெளிவது போன்ற உணர்வு தான் ஏற்பட்டது. அவர்அந்தி சாய்கிற நேரம் மெல்ல மெல்ல படுக்கையிலிருந்து நகர்ந்து போய் நாய்க்கு விறாந்தையின் படிக்கட்டில் சாப்பாட்டைக் கொட்டிவிட்டு இருந்தபடியே நகர்ந்து வந்து படுத்து விட்டார்.
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 9

Page 7
இன்றும் மகேஸ்வரியின் மகள் சாப் பாடுடனான கோப்பையை அதேமாதிரியே தூரத்தில் நின்றபடி தள்ளிவிட்டாள். சாப் பாடு நிலத்தில் சிந்தியபடி அவரது கால் மாட்டிற்கு வந்து சேர்ந்தது. இன்றைக்கும் அருளானந்தம் எழும்ப முடியாமலிருந்தும் மெல்ல மெல்ல இருந்தபடியே நகர்ந்து வந்து விறாந்தையில் நாய்க்குச் சோற்றைக் கொட்டிவிட்டு மீண்டும் அதேமாதிரியே நகர்ந்து வந்து படுத்து விட்டார்.
முட்டிழுப்பு மோசமாக இருந்தாலும் பழைய நினைவுகள் கறுப்பு வெள்ளைப் படமாக அவரது மனத்திரையில் ஒடத் தொடங்குகிறது.
தொண்ணுாற்றைந்தாம் ஆண்டு வலி காமத்து மக்கள் தென்மராட்சிக்கும் வடம ராட்சிக்கும் இடம்பெயர்ந்து வந்த நேரம், எங்கும் எதற்கும் தட்டுப்பாடு. எல்லா வற்றுக்குமே கியூ. பொருள் இல்லை. இருந்தாலும் அதை வாங்குவதற்கு பணமில்லை. தொழிலில்லை.
இவர்கள் வடமராட்சியில் சொந்த இடத்தில் இருந்தாலும் பஞ்சம் இவர்களை யும் விட்டுவைக்கவில்லை. அருளானந்தத் தின் இரு மைத்துணிகளின் கணவன் மாரும் சாதாரண கூலித்தொழிலாளிகள் தான். இரண்டு மாதமாகப் பிள்ளை குட்டி களுடன் ஒரு நேரச் சாப்பாட்டிற்கே கஷ்ரப் LILLIrfras6ir.
இத்தனைக்கும் அருளானந்தம் பெரிய பணக்காரனல்ல. சாதாரண 5mĽGD வுச் சங்கக்கடை மனேஜர். குறைந்த வேதனமென்றாலும் தட்டுப்பாடான நேரம்
தட்டுப்பாடில்லாமல் வாழச் சந்தர்ப்ப மிருந்தது.
அருளானந்தம் தாங்கள் சாப்பிடும் போது பக்கத்து வீட்டில் அவர்கள் பட்டினி கிடக்கக்கூடாது என்பதற்காக சங்கக்கடை யிலிருந்து அரிசி, பருப்பு, சீனி, தேயிலை, சவர்க்காரம் என்று தங்களுக்குக் கொண்டு வரும்போது அவர்களுக்கும் கொண்டு வந்து கொடுப்பார். அவர்கள் இவர் கொண்டு வந்து கொடுத்த சாமான்களில் சமைத்துச் சாப்பிட நேரஞ் செல்லும் என்றும் அதுவரை அந்தச் சின்னஞ் சிறிசுகள் பட்டினி கிடக்கக் கூடாதென்றும் தங்கள் சாப்பாட்டில் மத்தியானம் இரண்டு குடும்பங்களுக்கும் ஒவ்வொரு கோப்பை சோறு கொண்டு போய் கொடுக்கும்படி யாகத் தன் மனைவிக்குச் சொல்லி அதன் படி நிலைமை ஒரளவு சீரடையும் வரை இந்த ஏற்பாடும் ஒழுங்காக நடைபெறு வதைக் கவனித்தார். அதில் திருப்தி யடைந்த பின்னர்தான் தான் சாப்பிடத் தொடங்குவார். அப்போதெல்லாம் அத்தர் னும் அக்காவும்தான் மகேஸ்வரிக்கும் கமலாவுக்கும் தெய்வங்கள்.
மூன்று நான்கு மாதங்கள் இப்படியே ஒடியபடியால் சங்கக்கடையில் இருப்புக் கணக்கெடுப்பின்போது ‘லிக்கேஜ் பிடிபட்டு மூன்று மாதங்கள் அருளானந்தம் வேலை யிலிருந்து இடைநிறுத்தம் GEFUiruu'Lu'LLT. மனைவியின் தாலிக்கொடியை விற்றுத் தண்டமும் சோர்வும் கட்டி முடித்த பின்னர் தான் வேலையில் சேர்த்துக் கொள்ளப் பட்டமை இப்போது மறக்கப்பட்ட ஒரு சின்ன விஷயம்.
மல்லிகை ஒக்டோபர் 2008 等 O

அருளானந்தத்தின் நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கி முற்றுப்பெற்றன.
மகேஸ்வரிக்கோ அவளது குடும்பத் திற்கோ நன்றியுணர்வு கொஞ்சமும் இருக்கவில்லை. கமலா அப்படியல்ல. தன் மகளை வெளிநாட்டு மாப்பிள்ளைக் குக் கட்டிக்கொடுத்து அதன் மூலம் முழுக் குடும்பமே வெளிநாட்டில் குடியேறிவிட்டா லும் மகேஸ்வரிக்கு இடையிடையே பணம் அனுப்பும் போது அருளானந்தத்தைக் கவ னிப்பதற்காக என்றும் சிறு தொகையை அனுப்புவாள். ஆனால் அத்தானுக்கு அனுப்பப்படும் பணத்தில் அரைவாசிகூட மகேஸ்வரி செலவழிப்பதில்லை.
"அத்தான் தனியாள். பாவம் கவன மாகப் பாருங்கோ. ஒரு குறையும் வைக்க ாதையுங்கோ" இது மகேஸ்வரியிடம் காசு அனுப்பும் போதெல்லாம் கமலா வற்புறுத் திச் சொல்கின்ற விஷயம். அத்தானுக்கு ஏதும் நடந்தால் அது சம்பந்தமான முழுச் செலவும் நானே பார்ப்பேன் என்று ஏற் கனவே மகேஸ்வரியிடம் சொல்லி வைத் திருந்தாள்.
கடந்த இரவுடன் அருளானந்தம் சாப் பிடாமல் விட்டு நான்கு நாட்கள் கடந்து விட்டன. இன்று காலை கதிரவன் தன் கதிர்களை பூமியின் மீது வாஞ்சையுடன் பரவ விடுகிறான். அருளானந்தத்தின் வீட் டில் பல நாய்கள் சண்டையிடுவது போன்று குரைக்கின்ற சத்தம் கேட்கிறது. நாய் களின் சத்தம் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த மகேஸ்வரி அங்கு வருகிறாள்.
முதல் நாள் வைத்துவிட்டுப் போன ஒரு கோப்பை சோறு கொஞ்சம் சிந்தியபடி அப்படியே இருக்கிறது. தன் எஜமானுக் குரிய உணவை மற்ற நாய்கள் சாப்பிட்டு விடாதபடி ஜொனி பாதுகாக்க முயலுகை யில் எழுந்த சண்டையே அந்தச் சத்தம் என்பதை உணர்வதற்கு மகேஸ்வரிக்கு கணநேரம் தேவைப்படவில்லை.
இங்கே அருளானந்தத்தின் பக்கம் பார்வையைத் திருப்புகிறாள். அவரது உடல் அசைவற்றுக் கிடக்கிறது. வாய் 'ஆ'வென்று திறந்திருக்கிறது. மூன்று நான்கு இலையான்கள் முகத்தில் மொய்ப்பதும் மேலேழுவதுமாக இருந்தன. கிட்டவந்து உன்னிப்பாக கவனித்துப் பார்த் ததும் அவளுக்கு நிலைமை விளங்கி விடுகிறது. அத்தான் போய்விட்டார். சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்றாலும் சுதாகரித்துக் கொள்கிறாள்.
"அத்தான் எங்களை விட்டிட்டுப் போய்விட்டியளே'
பலமாக ஒப்பாரி வைக்கத் தொடங்கு கிறாள். ஆனாலும் அவள் மனம் வீட்டை இடித்துப் புதிதாக கட்டுவதற்கு இனித் தடையேதுமில்லை என்றெண்ணியது. அத்துடன் உடனே கமலாவுக்கு அறிவிக்க வேண்டும். அவள் அனுப்புகிற பணத்தில் செத்த வீட்டுச் செலவு, அந்தியேஸ்டிச் செலவுகளைச் சுருக்கமாகச் செய்தால் கொஞ்சமாவது தனக்கு மிஞ்சும் என்று இலாப நட்டக் கணக்கு பார்க்கவும்
தவறவில்லை.
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 11

Page 8
இத்திரு ஒருவிேதையற்ற
வாலிபத்தை வழியனுப்பி வைக்குமுன் என் அறிவுரை கேள் நீ ஆடவனே
உதிர்ந்த பூவிதழ்களோடு வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளும் கிடக்கலாம் தொடங்கு, அங்கிருந்து உன் தேடலை
ஒரு படகோட்டியின் பாடலாய் மிதந்து போ. மீன் நிறைந்தப் படகாய்த் திரும்பு
கலையை ரசி காதலை நேசி இதயத்தால் படித்துப் பயின்று கவிதைகளைக் கொடுத்து வாங்கு
இனியவன் இஸாறுத்தீன்
பூக்கள் மலரும்வரை உன் கிளைகளில் இடம் கொடு பறவைகள் அமரட்டும்
தாசியின் காதலைப் போல் உன் அனுபவமும் முகமற்றுப் போகலாம் ஆனால், தேடு அவள் விழிகளின் வேட்கையோடு
காத்திரு நதியில் மழையாய்க் கலந்த மேகத்தின் பக்குவத்தோடு எழுதக் காத்திருக்கும் ஒரு எழுச்சிக் கவிதையாய்
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 12

ஜெயகார்டின் Uو80 گوژ குறிப்பு
- ஈ. ஆர். திருச்செல்வம்
திருச்சியில் நண்பர் சசிபாரதி (எஸ்.சபாரத்தினம்) வீட்டிலிருந்து ஜெயகாந்தனை அவரது கையடக்கத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "திருச்செல்வம் பேசுகிறேன். நேற்றுத்தான் யாழ்ப்பாணத்திலிருந்து வந்துள்ளேன். ஒரிரு நாட்களில் சென்னை வருவதாக உத்தேசம். உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்” என்றேன்.
'சென்னை வந்ததும் போன் செய்துவிட்டு வாருங்கள். நேரில் பேசிக்கொள்வோம்' என்று தொலைபேசியை "ஒவ்' செய்து Gassrsoot Limir.
இதற்கிடையில், சந்திப்புக்களை
ஜெயகாந்தன் விரும்புவதில்லை. அதுவும் உடல்நலக் குறைவின் பின்னர் அவர் மற்றவர்களைச் சந்திப்பதேயில்லை என்று சிலரிடையே விந்தையான ஒரு வதந்தி.
சென்னை வந்த மறுநாளே ஜெயகாந்தனுடன் தொடர்பு கொண்டு, "இன்று காலை 10 மணியளவில் சந்திக்கலாமா?" என்று ஆரம்பித்த நான், என்னை நானே தனிமைப்படுத்திக்கொள்ள விரும்பாமல், எஸ்.பொ.வையும், யாமூர் துரையையும் கூட
அழைத்து வருகிறேன்" என்றேன்.
"ஆமாம். அழைத்து வரலாமே!” என்று பதில் கிடைத்தது. யூலை 02.2008 காலை சுமார் 10 மணி. கே.கே. நகரில் உள்ள அவர் இல்லத்துக்கு முச்சக்கர வண்டியில் சென்றடைந்தோம். கதவைத் திறந்ததும், 'ஐயா மேலே. போங்கள்." என்று ஒருவர் மாடிப்படிகளைக் காட்டினார். எங்கள் வரவை அவர் எதிர்பார்த்திருந்தாரோ, என்னவோ?
அது ஒரு மொட்டை மாடி. ஒலையால் வேயப்பட்ட கூரை. ஆடி மாதச் சென்னை வெயிலிலும் குளிர்ச்சியாயிருந்தது. ஒரு மேஜை, சாய்வு நாற்காலிகள் ஐந்து, பீரோவில் விரல் விட்டு எண்ணக் கூடிய நூல்கள், ஒரு மின்விசிறி; அவ்வளவுதான்.
மல்லிகை ஒக்டோபர் 2008 & 13

Page 9
அந்த அறையில்தான் அவர் எழுத்து முதலிய காரியங்களைச் செய்து கொண்டு, மற்றப் பொழுதுகளில் நண்பர் களைச் சந்திப்பதற்கும் பயன்படுத்துகிறார் என்று ஊகம் செய்துகொள்ள முடிந்தது.
மொட்டை மாடியில் மூன்று நிமிஷங் கள் அதிகம். அவர் வந்ததும் குசலம் விசாரித்துக் கொண்டோம். ஆஸ்பத்திரி யில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று உடல் தேறியிருந்தார். அவர் நடையிலும் தள் ளாட்டமில்லை; பேச்சிலும் தள்ளாட்ட மில்லை. கவர்ச்சியான தோற்றம் அவருக்கு ஒரு கொடை. நரையைத் தவிர தோற்றத்தில் எவ்வித மாற்றமுமில்லை.
ஜெயகாந்தனின் வயதும் எழுபத்து நான்கினைத் தொட்டுவிட்டது.
Is second childishness and mere oblivion
SanSteeth, sans eyes, sans taste, sans everything– 676öp 2_6uas LD6).DIT56í) சேக்ஷ்பியரின் கூற்று ஜெயகாந்தனைப் பொறுத்தவரையில் பொய்த்துப் போய் விட்டது எனலாம்.
நாம் பேச்சை ஆரம்பிக்கும் முன் தானே பேச்சை ஆரம்பித்தார். நான் தாயகம் நீத்து, 1955இல் சென்னையின் கலாசார மையமான மயிலாப்பூரில் வாழ்ந்த காலத்தில் எனக்கும் அவருக்கும் 巧L日 உண்டாகியது. அந்த நாள் நினைவுகள் சிலவற்றை அசைபோட்டுக் கொண்டார்; மனப்பதிவுகளை மறக்க வில்லை.
தடம் மாறி சமீபத்தில் வழங்கப்பட விருக்கும் உயர் விருது ஒன்றைப் பற்றி எமது பேச்சுத் திரும்பியது. விருதுக்குரிய வருடன் இந்நாள்வரை தன்னிச்சிையாக முரண்பட்ட கருத்துடன் வாழ்ந்துவரும் எஸ்.பொ. இவ்விஷயத்தில் ஜெயகாந்த னுடன் கருத்தொற்றுமை காணவில்லை.
மல்லிகை ஜீவாவைப் பற்றிப் பிரஸ் தாபித்த ஜெயகாந்தன் "அவர் எப்படியிருக் கிறார்?" என்று விசாரித்தார்.
மனுஷனுக்கு எண்பதற்கு மேலாகியும் "ஜீவ"களை போகவில்லை. வீர்யத்துடன் இலக்கியப் பணியைத் தொடர்கிறார்' என்றேன். முகத்தில் வழமையான புன்சிரிப்பு.
இவ்வாறு இன்னோரன்ன விசயங் களைப் பற்றிப் பேசிய பின் விடைபெற்றுக் கொண்டோம்.
ழுநீலங்கா திரும்பியதும், கொழும்
பிலும், யாழ்ப்பாணத்திலும் "ஜெயகாந்த்ன்
Y
இப்போது எழுதுகிறாரா? எழுதக்கூடிய நிலையில் உள்ளாரா? அல்லது எழுத்தி லிருந்து ஒதுங்கி விட்டாரா?” என்று ஐயப் பாடுடன் வினா எழுப்பாத இலக்கிய நண்பர்கள் மிகக் குறைவு.
அவர் எம்மிடம் உரையாடியதி லிருந்து எழுத்தைக் கைவிட்டுவிட்ட தாகவோ அல்லது ஒதுங்கிவிட்டதாகவோ தெரியவில்லை. எவ்வாறாகிலும் "எழுதிச் செல்லும் விதியின் கை எழுதிச் செல்லும்.”
மல்லிகை ஒக்டோபர் 2008 & 14

கே.எஸ். சிவகுமாரன் எழுதில்
"ஈழத்துச்
சிறுகதைகளும்
Glfsuffibbligò
ஒரு பன்முகப் Ifl២៣ចា”
(t962 — 1979) uற்றில் ஒரு பார்வை
- கோகிலா மகேந்திரன்
gorgotrisy என்பது இன்று ஐரோப்பிய மொழிகளில் பெருமளவு வளர்ந்துவிட்ட ஒரு விஷயம். திறனாய்வு நூல்கள் மூலம் இலக்கிய நூல்களை நன்கு சுவைக்க உதவும் என்ற நிலைக்கு எதிர்த்திசையில் அதற்குக் கேடு விளைவிக்குமோ என்று அஞ்சும் அளவிற்கு உலகின் பிற பகுதிகளில் திறனாய்வு நூல்கள் பெருகி விட்டன. ஆயினும் எமது நாட்டில் - எமது மொழியில் இன்றும் கூடத் திறனாய்வு நூல்கள் மிக அரிதாகவே வருகின்றன. இக்குறையைத் தீர்க்கும் முயற்சியின் ஒருபடியாக மேற்கூறிய நூல் வந்துள்ளது எனலாம்.
கடந்த ஐம்பது ஆண்டு காலமாக ஈழத்துத் தமிழ் இலக்கியம் தொடர்பான திறனாய்வைத் தொடர்ந்து செய்துவரும் ஒருவர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள். திறனாய்வு முக்கியமானதுதான் என்றாலும் அது படைப்பிலக்கியத்திலும் சிறிது குறைந்த நிலையில் இருப்பதே என்ற கருத்தை மத்தியூ ஆர்னோல்ட் (MatheWArnold), ரி.எஸ். எலியட் (T.S. Eliot) ஆகியோர் கூறியுள்ளனர். திறனாய்வு ஒரு கலை என்பது பலரின் கருத்து. ஆயினும் அதனை விஞ்ஞான முறையில் அமைந்த அறிவியலாக வளர்த்தெடுக்க
மல்லிகை ஒக்டோபர் 2008 率 15

Page 10
வேண்டும் என்று நோத் றொப் பிறை (NOrthrOpfrye) singôìuisir smrử. umữ எதைச் சொன்னாலும் திறனாய்வு என்பது சில முக்கிய நோக்கங்களைக் கொண்டது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு தான் எடுத்துக் கொண்ட பணியைத் தொடர்ந்து செய்துவரும் கே. எஸ். பாராட்டுக்குரியவர். அவரது திறனாய்வு என் போன்ற பல எழுத்தாளர்களை மிக நன்றா கவே ஊக்குவித்துள்ளது என்பது மறக்க முடியாத உண்மை.
திறனாய்வின் நோக்கம் என்ன? இலக்கியங்களுக்கு விளக்கம் தருவது, நயம் உரைப்பது, குறை நிறைகளை எடை போடுவது, ரசிகர்களை வழிப்படுத்துவது, எழுத்தாளர்களைத் தரப்படுத்துவது. நூலை வாசிக்கும் போது ஏற்படும் தனது அநுபவத்தைக் கூறுவது, நூல் தோன்றிய சூழலை ஆராய்வது, நூலாசிரியரின் ஆளுமையை ஆராய்வது என்றவாறான பல நோக்க்ங்களைக் கொண்டது திறனாய்வு படைப்பிலக்கியம் பற்றி எழுதப் பட்ட எந்த நூலையும் திறனாய்வுத் துறை யைச் சார்ந்தது என்றே கூறமுடியும். (தான் எழுதுவது பத்தி எழுத்து என்றே கே.எஸ். குறிப்பிடுவார்.) திறனாய்வின் உயர்ந்த தரம் பேணப்படுவது தற்சார்பற்ற தன்மையினா லேயாகும். கே.எஸ். தன்னை எந்த எழுத் தாளர் அணியுடனும் பொருத்திப் பார்க் காதவர் என்ற வகையில் அவர் எல்லோ ரையும் சார்பின்றி நோக்குவது குறிப்பிடத் தக்க விடயம்.
தமிழ் இலக்கியத் திறனாய்வு நீண்ட நெடுங்காலமாக நயமுரைத்தல் என்ற நிலையிலேயே இருந்து வந்தது. அதில்
இருந்து முன்னேறி திறனாய்வுக் கோட் பாடுகளைப் பயன்படுத்தும் நிலைக்கும் உயரத் தளம் அமைத்தவர்களில் வ.வே.சு. ஐயர், எஸ். வையாபுரிப்பிள்ளை ஆகியோர் முக்கியமானவர்கள் எனக் கருதப்படு கின்றனர்.
திறனாய்வு செய்கின்ற ஒருவரிடம் நிதானமும், நேர்மையும், தனித்து நோக்கும் திண்மையும், நெஞ்சுறுதியும் இருக்க வேண் டும். இலக்கியத்தின் உருவம், உள்ளடக்கம் ஆகிய இரண்டும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். தமது சொந்தக் கொள்கைக்குச் சார்பான உள்ளடக்கம் இருந்துவிட்டால் அதை "ஒகோ' எனப் புகழ்ந்து தள்ளுவதும் இல்லை எனில் தூக்கி எறிந்து விடுவதும் (கதை மட்டுமல்ல - ஆளையுந்தான்) இன்று மிக மலிந்து போன திறனாய்வுப் போக்கு - எமது நாட்டில் கே.எஸ். இதற்கு விதி விலக்கானவராகக் காணப்படுகின்றார்.
சில திறனாய்வாளர்கள் சமூகவியல் அணுகு முறையைப் பின்பற்றுவர். ஒப்பியல் அணுகுமுறையைக் கைக் கொள்பவர்களும் உள்ளனர். கல்வித்துறையில் இருப்போர் மாணவர்களுக்குக் கற்பிக்கும் நோக்கில் வித்தியாசமான ஒரு திறனாய்வுப் போக்கைக் கொண்டிருப்பர். மணிக்கொடி இன்னொரு திறனாய்வுப் பாதையைக் காட்டியது. எமது நாட்டின் சிறந்த திறனாய்வாளர்கள் என்று போற்றப்படுகின்ற ச.கைலாசபதி, கா.சிவத் தம்பி, இ.முருகையன் போன்றோர் கலை கலைக்காகவே' என்பதற்கு மறுதலையாக 'கலை சமுதாயத்தின் முன்னேற்றத்திற் காகவே' என்ற கொள்கையின் அடிப்படை யில் மார்க்சியத் திறனாய்வு செய்தவர்களா கவே இருக்கின்றனர். கே.எஸ். அவர்களில் இருந்து வேறுபடுகிறார்.
மல்லிகை ஒக்டோபர் 2008 率 16

இந்த நூலைத் தூக்கியவுடன் எமது கண்ணில் படுகிற அட்டை திருப்தியாக இல்லை. பத்தோடு பதினொன்றாகச் செய்யப் பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது. நூலுக்கு உள்ளே சென்றால் நூலின் தொடக்கத்தில் இருக்கிற தமிழிற் புனைகதை என்ற
கட்டுரை புனைகதை தொடர்பாகத் தமிழில்
வெளிவந்த திறனாய்வு நூல்கள் பல வற்றையும் பட்டியலிடுகிறது.
அதனைத் தொடர்ந்து 1962 - 1979 காலப்பகுதியில் நூல்களை வெளியிட்ட இலங்கையர்கோன், செ.கணேசலிங்கன், வ.அ.இராசரத்தினம், டொமினிக் ஜீவா, காவ லூர் இராசதுரை, நீர்வை பொன்னையன், வரதர், டானியல், நாவேந்தன், பவானி ஆழ்வாப்பிள்ளை, எம்.ஏ.நுஃமான், செ.கதிர் காமநாதன், என்.எஸ்.எம். ராமையா, செ.யோகநாதன், மு.தளையசிங்கம், மண்டூர் அசோகா, புலோலியூர் க.சதாசிவம், நெல்லை க.பேரன், அ.யேசுராசா, சாந்தன், மு.திருநாவுக்கரசு, நா.முத்தையா, யோ.பென டிக்ற்பாலன், லெ.முருகபூபதி, சுதாராஜ், மருதூர் மஜித், காவலூர் எஸ்.ஜெகநாதன் ஆகியோரின் சிறுகதைத் தொகுதிகள் பற்றிய கட்டுரைகள் காணப்படுகின்றன. இவை அந்தந்தத் தொகுதிகள் வந்தபோதுநூலாசிரி யரால் எழுதப்பட்ட கட்டுரைகள். மற்றொரு முறை இந்த எழுத்தாளர்கள் ஒவ்வொருவரை யும் முழுமையாகப் படித்து அவர்களின் மொத்தப் படைப்புகள் பற்றிக் கே.எஸ். எழுதும் நூல் வெளிவர வேண்டும் என்பது எமது ஆசை.
இக்காலப்பகுதியில் புதிதாக எழுதத் தொடங்கிய சிலரின் கதைகள் பற்றிய பதிவு களும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த எழுத் தாளர்களில் ஏறத்தாழ அரைவாசிப் பேர் இன்று உயிருடன் இல்லை. இதில் குறிப்
பிடப்படும் பல சிறுகதைத் தொகுதிகளும் இன்று கைக்கு அகப்படும் நிலை இல்லை. இத்தகைய ஒரு சூழலில் இந்த நூல் ஒரு முக்கியத்துவத்தைப் பெறுகின்றது.
இனி, திறனாய்வின் எப்பகுதிகளைக் கே.எஸ். இந்த நூலின் மூலம் செய்துள்ளார் 6T60T uTriC3Lumb.
இலக்கியத்திற்கு விளக்கம் தரும் வேலையை மிக முதன்மையாகச் செய்யா விட்டாலும், இடையிடை செய்கிறார். உதாரணமாக இலங்கையர்கோனின் ஒரு கதை பற்றிக் கூறுகையில் "மாட்டென்" என்ற பொருள்படும் "ஒண்ணா' என்ற வார்த்தையின் பயன்பாட்டை ஆசிரியர் உரையாடலில் சரிவரப் பயன்படுத்தியுள்ளார் என்று சுட்டுகிறார்.
நிறை குறைகளை எடையிடும் வேலையை மிகச் சிறப்பாகவே செய்திருக் கிறார் என்று கூறலாம். செ. கணேசலிங் கனின் ‘சங்கமம்" கதை பற்றிக் கூறும்போது, "கதைப் பொருளும், உணர்ச்சி மயப்படுத்தி வாசகனை வாசிக்கச் செய்யத் தூண்டும் நாடக உணர்வும் இக்கதையில் இருக் கின்றன. ஆனால், இவற்றை வாசகனின் மனதில் உணர்வுடன் தொற்ற வைப்பதில் ஆசிரியர் வெற்றி அடையவில்லை' என்கிறார்.
நயம் உரைப்பது கே.எஸ். சிவகுமார னுக்குக் கைவந்த கலை எனலாம். வ.அ. இராசரத்தினத்தின் பிரபலமான 'தோணி கதையில் உள்ள சில வரிகளைப் பற்றிக் கூறுகையில், "இந்த வரிகளில் உள்ள கவிதைப் பூச்சு, ஒலிநயம் மிக்கதாயும், கற் பனை வளமுடையதாயும் இருக்கிறது. அத் துடன் படிப்பவர் உள்ளத்தில் கதையுடன் நெருங்கிய தொடர்பு வைக்கும் ஆவலையும்
மல்லிகை ஒக்டோபர் 2008 率 17

Page 11
கிளப்பி விடுகிறது. பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவுகளே என் ஞாபகத்துக்கு வரு கின்றன" என்று குறித்துள்ளார்.
ரசிகர்களை நெறிப்படுத்தும் வேலை யையும் இவர் திறம்படச் செய்திருக்கிறார் என்றே கூறலாம். டொமினிக் ஜீவாவின் "பாதுகை தொகுதி பற்றிக் கூறுகையில், "பாதுகை பல விதத்திலும் சிறந்ததொரு தொகுப்பாக விளங்குகிறது. இதில் நல்ல சிறு கதைகள் சில இடம்பெற்றிருக்கின்றன’ என்று கூறுவதன் மூலம் ரசிகர்களை வாசிக் கத் துண்டுகிறார். அதேநேரத்தில் தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் தர வளர்ச்சி பற்றியும் நுனித்து நோக்கியுள்ளார். ' தண்ணிரும் கண்ணிரும் என்ற தொகுப்பில் காணப்பட்ட உருவக் குறைபாடுகளும் ஒரு தலைப்பட்ச மான சித்திரிப்புகளும் பாதுகையில் இல்லை. ஜீவா வளர்ச்சி அடைந்திருக்கிறார் என்பதற்குப் பாதுகை சான்று பகருகின்றது" என்பது அவர் மொழி. நூலை வாசிக்கும் போது ஏற்படும் தனது தனிப்பட்ட உணர்வு களையும் இவர் ஆங்காங்கு தூவிச் செல்வது கவனத்திற்குரியது. மு. திருநாவுக்கரசுவின் ஞானப்பால்' பற்றி எழுதுகையில், "தர்ம கர்த்தா குழந்தையைச் சுவரில் மோதும் வண்ணம் வீசும் காட்சியை மனத்திரையில் பதிவு செய்யும் பொழுது உணர்வே சில்லிடு கிறது” என்று பேசுவதைக் காணலாம்.
நூலாசிரியரின் ஆளுமையைக் கே. எஸ். ஆராய்ந்திருக்கிறாரா? செய்திருக் கிறார். “நாவேந்தன் நவீன எழுத்தாளர் மீது கொண்டுள்ள போலி வெறுப்பை அறவே அகற்ற வேண்டும்" என்ற வசனம் கவனிக் கத்தக்கது.
இவர் பாவித்திருக்கும் சில சொற்கள் புதிதாய் இருக்கின்றன. Monologue என்ற
சொல்லுக்கு "தற்பாவழிதம்' என்று பாவிக் கிறார். (அது தவறுதலாக "தற்பாவழிம்" என்று எழுத்துப் பிழையுடன் வந்துவிட்டது.) இக் கலைச்சொல் அவருடைய சொந்த ஆக்கம் போலத் தெரிகிறது. இதற்கு முன் இவ்வாறு வேறு யாரும் பாவித்திருப்பதாகத் தெரிய வில்லை.
சில எழுத்தாளர்கள் பற்றித் தான் அன்று கொண்டிருந்த பார்வை இன்று மாற் றம் பெறவேண்டியுள்ளது என்று உணரும் இடங்களில் அதையும் கூறுகிறார். பவானி ஆழ்வாப்பிள்ளை தொடர்பான அவரது கூற்று இது, "பவானியின் கதைகள் தொடர்பாக 1960களில் நான் கொண்டிருந்த பார்வையே இது. இன்று பெண்ணிய நோக்கில் ஆராயும் பொழுது அபிப்பிராயங்கள் சில மாறு படலாம்."
நூலைப் படித்து முடிக்கிற புேனது 1962 - 1979 இல் எழுதிய தமிழ் எழுத்தாளர்களில் வ.அ.இராசரத்தினத்தையே இவர் முதலிடத் தில் வைக்கிறார் என்று படுகிறது. வேறு அபிப்பிராயம் உள்ள திறனாய்வாளர்களுக்கு அதுபற்றிக் கலந்துரையாடும் உரிமை இருக்கிறது.
மொத்தத்தில் இலங்கையிலும் இலங் கைக்கு வெளியேயும் உள்ள தமிழ் வாசகர் களுக்கு இந்நூல் கே.எஸ். சிவகுமாரன் என்ற திறனாய்வாளரையும் பல எழுத்தாளர் களையும் ஒருங்கே அறிமுகம் செய்கிறது. அல்லது ஞாபகமூட்டுகிறது. ஆய்வாளர் களுக்கு வேண்டிய ஏராளமான தகவல்களை அள்ளி வழங்குகிறது. எழுத்தாளர்களுக்கு த்ம்மைத் தளவாடியில் பார்க்கச் செய்கிறது.
பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய நூல்
இது.
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 18

கன்னாஷ் அனிர்து Aபன்களைக் காதலிக்கக் கூடாது.
கண்ணாடி அணிந்த பெண்ணொருத்தியைக் காதலித்தேன். நீண்ட மூக்கு,
நிதர்சனமாய்க் கண்கள், தோண்டத் தோண்ட துளிர்விடும் அழகு, பாண்டவர் கதையில் வரும் ፂ ፵6ፃjr6opቓ”
சீண்டியபோது சிரித்து
சில்மிஷங்கள் செய்து
ஒல்வியாய் உயரமாய் என்னில்
கவிதைகளையும் மோதவிட்டாள். 空 Ավ "مركزي
y P. P &ܬܵܐ
எச்சில் தொட்டு விரல்கள் எண்ணிய *ܠܬ6
வேண்டிய விரகம் வழங்கிப் போனாள்
,6S ஊமைக் காசுக்காய் کي
எல்லா நாளும் அகப்படாமல்
செல்லிடப்பேசியில் நாட்குறித்து
சொல்லொனாத் துன்பமும் இன்பமும்
பல்லுப்படாமல் தருவாள்.
நாள் செல்ல, நாள் செல்ல நான் மட்டும் படுத்தெமும்பி தோள்களில் கயிறு கட்டி தொங்கினேன், ஆகாயத்தில்,
மல்லிகை ஒக்டோபர் 2008 季 19

Page 12
கால் வீங்கி வயிறு பருத்து
முலைகள் பெரிதாகி தாயாகிக் கொண்டிருந்தாள், எனது குழந்தைக்கு. கண்ணாடியை மட்டும் கழற்றாமல்,
நீண்ட தூக்கம் கலைந்து மதுக்கோப்பை எறிந்து தாண்டவங்கள் மனதிலாடிக் காத்திருந்தேன், என் கவிதைக்காக,
வெடித்துச் சிதறிப் போனாள் ஒரு மதிய உணவு இடைவேளையின் போது, கடிதாகிப் போனது கற்கண்டு!
என்னவோ,
ஒரு துளியில்தான் என்னுயிர் பூத்திருக்கும் எனினும் பன்னெடுங்கால புராண இதிகாசநாயகன் போல வீற்றிருந்த நான் தோற்றுத்தான் போனேன்.
இனிமேல் கண்ணாடியணிந்த இளவயதுப் பெண்களைக் காதலிக்கக் கூடாது. கலவி கொள்ளக்கூடாது. வெடித்துச் சிதறிவிடுவார்கள் இடிபோலும், என் இதயம் போலும்,
எங்களுக்கும் அவளுக்கும் சம்பந்தம் இல்லையென்று, கண்ணாடி அணிந்த ஒருவர் சுறிக்கொண்டிருந்தார் - நான் அமுதுகொண்டிருந்தேன்.
Modern Computerized
Joʻsgo
Excellent Photographers
Photography For Wedding Fortraits & Child sittings
Photo Copies of lidentity Cards (NIC), Passport & Driving Licences Within 15 Minutes
300, Modera ||
Street, ColombO – 15. Tel 2526345
மல்லிகை ஒக்டோபர் 2008 率 20

பஸ் கொழும்பிலிருந்து புறப்பட்டது. அன்று கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. ஏனென்றால் அடுத்தநாள் சித்திரைப் புத்தாண்டு. பாக்கியலட்சுமி என்ற லட்சுமி தன் தந்தை கண்ணுசாமியின் தோளில் மெதுவாக சாய்ந்து கொண்டாள். கண்ணுசாமி - அவர் தலையைப் பாசத்துடன் தடவிக்கொடுத்தார். லட்சுமிக்கு இலேசாக கண்கள் கலங்கின. அவள் மெதுவாகக்
கண்களை மூடிக்கொண்டாள்.
"இங்கப் பாரு லட்சுமி. நீ ஸ்கூல்ல நல்லாதான் படிக்கிறே. நாங்க இல்லன்னு சொல்லலை. ஆனா படுக்கப் பாயில்லை. இந்த நிலையில மேற்கொண்டு படிப்பு எதுக்கு. ஏதோ ஒன்பது வரை படிச்சிட்டே, அது போதும். உன் அப்பன் ரொம்ப கஷ்டப்பட்டு உனக்கு கொழும்புல வேலை புடிச்சிருக்கு. உனக்குக் கீழே இன்னும் தம்பி தங்கச்சிமாரு இருக்காங்க. மூத்தவள் நீதான் முன்யோசனையோட நடந்துக்கணும்."
'கொழும்புக்கு வேணாம். நான்
$2ტÖlჯ 68:୩g) உங்களையெல்லாம் விட்டுட்டு போக M மாட்டேன். என்னை தோட்டத்துல பேர் பதிஞ்சிடுங்க. மாடா உழைச்சி உங்களை
- பாலா. சங்குபிள்ளை காப்பாத்துறேன்." "என்னடி விளங்காதவளாயிருக்கே. நானும் உன் அப்பனும் உழைச்சே ஒருவாய் சோறு ஒழுங்க சாப்பிட முடியலை, விலை வாசி வேற ஏறிக்கிட்டேயிருக்கு. அங்க வேலைக்குப் போனா கைநிறைய பணம் தருவாங்க. உடுப்பு, துணிமணி கிடைக்கும். இங்க நாய் போல
உழைச்சாலும் வெறும் வாய் மென்னுக்கிட்டுத்தான் இருக்கணும்."
"யார் என்ன சொன்னாலும் சரி. நான் கொழும்புக்கு வேலைக்குப் போகமாட்டேன்.
போகவே மாட்டேன்."
"அக்கா. நான் டீச்சர் வேலைக்குப் படிக்கனும், கஷ்டம்ன்னு என்னையும் ஸ்கூல்ல இருந்து நிற்பாட்டிடுவாங்களா..?"
'ஏய். இங்க கூழுக்கே வழயில்ல. நீ வேற மeச்சர் வேலைக்குப் படிக்கப் போறியோ. உன் அக்காவோட கையிலதான் இருக்கு நீ படிக்கிறதும் படிக்காததும்."
மறுநாள் இன்னொரு இடி விழுந்தது. வட்சுமியின் அக்கா நிறைமாத கர்ப்பிணியாக சுவரில் பட்ட பந்தைப் போல வந்து கண்ணை கசக்கினாள். வளைகாப்பு செய்ய வேண்டுமாம். திருமணத்தன்று பேசியபடி ஒருபவுண் நகை போட வேண்டுமாம். செத்த சிங்கத்தை கழுதை கூட உதைக்கும். பெண்கள் என்னதான் தங்கமாக இருந்தாலும் அவள் ஊமையாக இருக்கும் வரை ஆண்கள் அவர்களை பந்தாடிக் கொண்டுதாணிருக்கிறார்கள். மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும்தான் கோபம் வரும்.
லட்சுமி உடனடியாக தன் தகப்பனுடன் கொழும்புக்குப் புறப்பட்டாள். அவர்கள் அவ னிடம் முன்பணமாக ஒரு பெரிய தொகையும், பாவித்த பழைய உடைகள், சப்பாத்துகள் என்று
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 21

Page 13
அவனை குவழிப்படுத்தி விட்டார்கள். அந்த வீட்டில் லட்சுமி வேலைக் காரியாக நுழைந்தாள். அவர்கள் சிங்கள இனத்த வர்கள். கணவனும் மனைவியும் அரசாங் கத்தில் உயர்ந்த உத்தியோகத்தில் இருந் தார்கள். அது ஒரு பெரிய பங்களாவாக இருந் தது. அவர்களுக்கு நான்கு பிள்ளைகள். நால்வரும் பாடசாலைக்குச் சென்றார்கள். மூத்தவன் க.பொ.த. உயர்தரம் பயின்றான். அவர்களின் பாட்டி அவதாவது அம்மாவின் தாய்க்கு எழுபது வயதிருக்கலாம். அவளுக்கு பக்கவாதத்தால் ஒரு பகுதி இயங்காமையி னால் எல்லாமே கட்டிலில் தான் நடந்தது. முக்கியமாக அவளை பார்த்துக்கொள்ளத் தான் ஆள் தேவைப்பட்டது. லட்சுமி விடியற் காலை நான்கு மணிக்கு எழுந்துவிட வேண் டும். தண்ணிர் சுட வைத்து தேநீர் தயாரித்து, சாப்பாடு தயார் செய்ய எஜமானிக்கு உதவி செய்து, பிள்ளைகளுக்கு சாப்பாடு கட்டிக் கொடுத்து, எல்லாரையும் எட்டு மணிக்குள் அனுப்பி விட்டு பின்பு மூதாட்டியை தட்டி எழுப்பி சுத்தம் செய்து சாப்பாடு ஊட்டி ம். அவள் பம்பரமாக சுழன்றாள்.
அவளை அவர்களுக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. 'லட்சுமி' என ஆளாளுக்கு அழைத்தார்கள். ஆனாலும் அவள் அந்த இடத்தை ஒரு சிறைச்சாலையாகவே எண்ணினாள். சில நேரங்களில் அந்த மூதாட்டி தூக்கத்தில் காலைக் கடன்களை முடித்துவிடுவாள். தனியாளாக அந்த மூதாட்டியைத் தூக்கி துப்பரவு செய்து அவள் வெறுத்துப் போனாள். ஆனால், வேறு வழியில்லை. இதுகூடப் பரவாயில்லை. அவர்கள் பங்களாவுக்கு
கட்டிலிலேயே
ரஞ்சித்’ என்றொருவன் வருவான். சுமார் நாற்பது வயதுமிக்க அவன் அவர்களுக்கு நெருங்கிய உறவினனாம். முன்னர் எப்போ
தாவது வருபவன், லட்சுமியை எப்போது கண்டானோ அது முதல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வருவான். அவளையே உற்றுப் பார்ப்பான். கள்ளச் சிரிப்பு சிரிப்பான். ஏழைகள் உணவைத் தேடுகிறார்கள். பணக்காரர்கள் பசியைத் தேடுகிறார்கள். ஏழ்மையிலிருந்தாலும் பதினைந்து வயதில் அவள் எழுச்சியுடனிருந்தாள். தேயிலைக் காட்டில் மலர்ந்த செந்தாமரையாக இருந்தாள்.
அன்று ஒரு சனிக்கிழமை. ஒவ்வொரு சனிக்கிழமையும் வைத்திய சிகிச்சைக்காக மூதாட்டியை வைத்தியசாலைக்குக் கூட்டிச் செல்வது வழக்கம். அநேகமாக லட்சுமி மட்டுமே தனியாக இருப்பாள். அன்றும் அப்படித்தான். அவள் தனியாக இருந்தாள். யாரோ வாசலில் அழைப்பு மணியை ஒலிக் கச் செய்தார்கள். அவள் வாசல் கதவைத் திறக்க, ரஞ்சித் மதுபோதையுடன் அவளைத் தள்ளிக்கொண்டே உள்ளே நுழைந்தான். அவள் பதறினாள். அவன் அவள் கை களைப் பற்றினான். அவள் தட்டி விட்டாள். அவன் கட்டிப்பிடித்தான். அவள் சமைய லறைக்கு ஓடினாள். கூரிய கத்தியை எடுத் தாள். அவன் ஓடிவிட்டான். அவள் தீர் மானித்து விட்டாள். வரும் சித்திரைப் புத் தாண்டில் அவளுக்கு லிவு கொடுப்பார்கள். அவள் இனி இங்கே வரமாட்டாள்.
இந்த ஒருவருடமாக அவளின் கடுமை யான உழைப்பு அவளை களைப்பாக்கி விட்டது. அதிலும் ரஞ்சித்தின் நடவடிக்கை அவளை கலவரப்படுத்தி விட்டது. வேண் டாம். இந்த வேலை வேண்டாம். முட்டாள் களுடன் புலால் உண்பதைவிட அறிவாளி யுடன் கல் சுமப்பதே மேல். இப்படியே பயந்து பயந்து கோழையாக நான்கு வேளை சாப்பிடுவதை விட, ஏழையாக
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 22

இருப்பதை உண்டுவிட்டு சந்தோஷமாக இருக்கலாம்.
பஸ் பல மணிநேர ஓட்டத்துக்குப் பின் எழில் கொஞ்சும் மலையகத்தை அடைந் தது. கண்ணுசாமி மூட்டை முடிச்சுகளுடன் பை நிறைய பணமும், மனம் நிறைய சந்தோஷமாகவும் பஸ்ஸை விட்டு இறங்கி னான். லட்சுமிக்கு நீண்ட நாட்களுக்குப் பின் அந்த ஈரக்காற்று இதயத்தை மகிழ்ச்சிப் படுத்தியது.
அவர்கள் மூன்று சக்கர வாகனத்தில் தங்களின் லயத்தை அடைந்தார்கள். அவள் தாய் வள்ளி ஓடிவந்து லட்சுமியை கட்டிப் பிடித்துக் கொண்டாள். "வா லட்சுமி. உன் னால, நாங்க நல்லா இருக்கோம். எங்க வீட்டு மகாலட்சுமி. உன்னோட உழைப்பு எங்களுக்கு ஏதோ குடும்ப வண்டியை ஒட்டுற துக்கு ரொம்ப உதவியா இருக்கு. சீட்டு போட்டு கொஞ்ச கொஞ்சமா பணம் சேர்த்து அக்காவுக்குப் போட வேண்டிய நகையைப் போட்டு, சந்தோஷமா அனுப்பிட்டேன். உன் தங்கச்சி நல்லா படிக்கிறா. தம்பியும் படிக்கிறான்."
அவள் சொல்லிக்கொண்டே போனாள். லட்சுமி கேட்டுக் கொண்டேயிருந்தாள். லட்சுமிக்கு தன் பெற்றோர், சகோதரர்கள் மட்டுமல்ல, சக உறவினர்கள், பக்கத்து காம்பறா என எல்லா இடங்களிலும் நல்ல மரியாதையிருந்தது. தங்களுக்கும் லட்சுமி போன்று ஒரு மகள் இல்லையேயென வருந் தினார்கள். ஆனால், அங்கே எந்தளவுக்கு துன்பப்படுகிறாள். சோதனைகளை அனுப விக்கிறாளென்பது அவளுக்கல்லவா தெரி யும். இவர்களின் ஒரு பிடி சோற்றுப் பிரச் சினைக்காக அவள் எப்படி துன்ப துயர வேதனைகளை தாங்கிக் கொள்வாள்.
கிணறு வெட்டுபவள் அவள். ஆனால், பலர் நீர் அருந்துகிறார்கள்.
இரண்டு நாட்கள் சென்றன. லட்சுமி யின் பெற்றோர் இருவராக உழைப்பதிலில் லாத மகிழ்ச்சி அவள் ஒருவளின் உழைப்பில் இருந்தது. அவளின் கொழும்பு உழைப்பு அவர்களின் தேவைகளை ஈடு செய்கின்றது. அவர்களை சந்தோஷப்படுத்துகிறது. இந் நிலையில் அவள் தன் சந்தோஷத்துக்காக, தன்னுடைய நிம்மதிக்காக வேலையை விட்டால் பின்பு காலை சுற்றிய பாம்பைப் (8 urt 6u) மறுபடியும் வறுமை அவர்களை இறுக்கத் தொடங்கும். தூக்கி வீசும் குதிரை யாக அவள் இருக்கப் போகிறாளா அல்லது சுமந்து செல்லும் கழுதையாக இருக்கப்
போகிறாளா?
மேலும் இரண்டு நாட்கள் சென்றன. விருந்தும் மருந்தும் எத்தனை நாளைக்கு? அவள் குதிரையா? கழுதையாவென்பதை உடனடியாக தீர்மானித்தாக வேண்டும். இல்லையென்றால்..? அவளால் எதிர்மறை யாக சிந்திக்க முடியவில்லை. விளக்கை வைத்துக்கொண்டு கிணற்றில் விழ அவள் தயாரில்லை. எனவே முடிவு செய்துவிட்டாள். அவளுடைய துன்பம் அவளோடு இருக் கட்டும். தன் பெற்றோர் சகோதரர்களுக்காக அவள் சிலுவை சுமக்கத் தயாராகி விட்டாள். விடிந்தால் மறுபடியும் கொழும்பு போக வேண்டும். அவள் சலனமில்லாமல் அமைதி யாக உடைந்த அந்த கட்டிலில் படுத்துத் தூங்கினாள். கண்ணுசாமி மறுநாள் காலை கொழும்புக்குப் போவதற்காக இப்போதே அனைத்தையும் ஆயத்தம் தொடங்கினார்.
செய்யத்
அந்த லயத்துக்கு வெளியே எங்கும் அமைதியாக இருந்தது.
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 23

Page 14
யுத்த கண்டத்தில் சுந்தர காண்டம்
- LIT. SCB6q600T66T
திடீரென்று குண்டு மழை; அதைக் காரணம் காட்டி ராணுவத்தினரின் கெடுபிடி; தமிழ் பேசு வோரைச் சந்தேகத்துடன் பார்க்கும் அரசு; எப்போது குண்டு வெடிக்குமோ, எப்போது துப்பாக்கிச் சத்தம் கேட்குமோ என்ற நிலை.
இத்தகைய கடுமையான சூழ்நிலையில் உள்ள கொழும்பு நகர்.
அங்கே தமிழை, சைவ சமய நெறிகளை, கம்பன் புகழை, திருவள்ளுவர் பெருமையைச் சத்தமில்லாமல் பரப்பிக் கொண்டிருக்கிறது இலங்கை கம்பன் கழகம். அதைத் தனது மூச்சாக, முழு நேரப் பணியாகச் செய்து வருகிற்ார் கம்ப வாரிதி எனப் போற்றப்படும் இலங்கை ஜெயராஜ்.
"இலங்கையில் கம்பன் கழகம் 1980ம் ஆண்டு உருவானது. உள்நாட்டுப் போருக்கு இடையே தமிழ்ப் பணியைத் தொடர்ந்து வருகிறது” என்கிறார் ஜெயராஜ். ܠܕ
உலக அளவில் புகழ் பெற்றது காரைக்குடி கம்பன் கழகம். அதன் பின் புதுவை கம்பன் கழகம் தொடங்கப்பட்டது. காரைக்குடியின் அடியொற்றி உருவானது தான் இலங்கை கம்பன் கழகம். வெளிநாட்டில் தொடங்கப்பட்ட முதல் கம்பன் கழகம் இதுதான். இப்போது ஜெயராஜின் முயற்சியால் லண்டன், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களிலும் கம்பன் கழகங்கள் இயங்கி வருகின்றன.
1995ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை ராணுவம் வெளியேறியது. அதுவரையில் இலங்கை கம்பன் கழகம் அங்கேதான் சிறப்பாக இயங்கி வந்தது. அங்கு பட்டிமன்றம் உள்ளிட்ட இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக 'கம்பன் கோட்டம் நிறுவப்பட்டது. மேடையில் தமிழறிஞர்கள் அமர்வதற்காக அழகிய நாற்காலிகள் வைக்கப்பட்டன.
"உள்நாட்டுப் போரில் யாழ்ப்பாணத்தை ராணுவம் கைப்பற்றியது. அப்போது, கம்பன் கோட்டத்தையும் அங்கிருந்த நாற்காலிகளையும் பார்த்து விட்டு, "பிரபாகரன் ஆட்சி செய்த அரண்மனையும், அங்கிருந்த சிம்மாசனங்களும்
மல்லிகை ஒக்டோபர் 2008 率 24
 

பிடிபட்டன” என்று வர்ணித்து, விநோதமான அறிக்கையை வெளி ராணுவம். பிறகுதான் உண்மை தெரிந்தது” என்று சிரித்துக் கொண்டே சொன்னார், "கம்பவாரிதி"
யிட்டது
கம்பவாரிதி என்ற பட்டம் எப்படி வந்தது?
யாழ்ப்பாணத்தில் கம்ப ராமா யணத்தைத் தொடர் சொற்பொழி வாக நிகழ்த்தி அசத்தியதால், இந்தப்
பட்டம் வழங்கப்பட்டது. வாரிதி என்
றால் கடல் என்று பொருள். கம்பராமா
யணக் கடலில் மூழ்கித் திளைத்தவர், இவர். இவருக்குக் கம்பராமாயணத் தில் ஈடுபாடு வந்ததற்கே ஒரு சுவை
யான காரணம் உண்டு.
porTGOMOTanu TrT35 இருந்தபோது, திருச்சி வானொலியில் திருச்சி தேசிய கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் ராதா கிருஷ்ணனின் கம்பராமாயணச் சொற் பொழிவைக் கேட்டு ஈர்க்கப்பட்டார்.
ஒருமுறை மதுரையில் நடை
பெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்றார் ஜெயராஜ். மாநாட்டுக் குப் பின் பேராசிரியரைச் சந்திக்க திருச்சிக்கு வந்தார். ஆனால், சரியான முகவரி தெரியாததால், அவரது வீட்டைக் கண்டுபிடிக்க இயலவில்லை. ஆனால், மறுநாள் ராமேஸ்வரம் சென்று, கப்பலில் இலங்கைக்குத் திரும்ப வேண்டும்.
நமக்கு கொடுப்பினை இல்லை’ என்று நினைத்தபடி இரவு திருச்சியில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் புறப்பட எண்ணினார்.
அப்போது ஓரிடத்தில் ஒரு பலகையில், பேராசிரியர் ராதாகிருஷ் ணன் இன்று மாலை உரை நிகழ்த்து கிறார் என்ற அறிவிப்பைப் பார்த்ததும் துள்ளிக் குதித்தார், ஜெயராஜ்.
அன்று மாலைவரை காத்திருந்து, பேராசிரியர் ராதாகிருஷ்ணனைச் சந்தித்து, அவரது முகவரியைப் பெற்றுக்கொண்டு ஊர் திரும்பினார்.
மீண்டும் ஒரு சமயம் காரைக் குடியில் கம்பன்விழாவில் பங்கேற்றார்,
ஜெயராஜ். அதன்பின் திருச்சிக்குச்
சென்று பேராசிரியர் ராதாகிருஷ்ண னைச் சந்தித்தார். அங்கே பேராசிரி யரிடம் அவர் கேட்ட நினைவுப் பரிசு என்ன தெரியுமா?
"ஐயா, உங்களது பாதுகைகளை எனக்கு அளியுங்கள். பூசிக்க விரும்பு கிறேன்” என்றார்.
விசித்திரமான வேண்டுகோளைக் கேட்ட பேராசிரியரோ, "அதெல்லாம் எதுக்குய்யா? நான் காஞ்சிப் பெரிய வரின் பாதுகைகளை வைத்துப் போற்றி வருகிறேன். அதை அளிக் கிறேன்” என்றார்.
அதற்கு ஜெயராஜ், "காஞ்சிப் பெரியவரின் பாதுகை உங்களுக்குக் கிடைத்தவை. அவற்றை நீங்கள்தான் வைத்துக் கொள்ள வேண்டும். எனக்கு உங்களது திருப்பாதுகைகள் வேண் டும்” என்று வலியுறுத்திப் பெற்றுக்
கொண்டார்.
“யாழ்ப்பாணத்தில் குருநாதரின் பாதுகைகளை வைத்துப் பூசை செய் தேன். ராணுவத்தினர் யாழ்ப்பாணத்தி
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 25

Page 15
லிருந்து வெளியேற்றியபோது, எல்லாச் சொத்துகளையும் விட்டுவிட்டு, குரு நாதரின் மட்டும் எடுத்துக் கொண்டு கொழும்புக்கு வந் தேன். அங்கு வைத்து பூசையைத் தொடர்கிறேன்’ என்று ஜெயராஜ் கூறியபோது, அவரது கண்களில் நீர் பனித்தது. இலங்கை கம்பன் கழகம் கொழும்பில் பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்களின் ஆதரவு, நன்கொடை யில் இயங்கி வருகிறது.
பாதுகைகளை
"இலங்கை கம்பன் கழகத்தின் வெள்ளிவிழாவை ஒட்டி, கொழும்பில் லட்சுமி ஆலயம் அமைத்துள்ளோம். உலகில் எங்கும் இல்லாத வகையில் அந்த ஆலயத்தில் திருவள்ளுவருக்கும் கம்பருக்கும் சந்நிதி எழுப்பி வழிபட்டு வருகிறோம்” என்று பெருமையோடு குறிப்பிட்டார்.
வேறு கம்பன் கழகங்களில் இல் லாத ஒரு பெருமை இதற்கு உண்டு. முத்தமிழையும் போற்றி வருகிறது. இயல் தமிழுக்கு கம்பன் விழா, இசைத் தமிழுக்கு இசை விழா, நாடகத் தமிழுக்கு நாட்டிய விழா நடத்தப் படுகின்றன.
கொழும்பில் நடைபெறும் இலங்கை கம்பன் விழாவில் அந்நாட்டு அறிஞர்கள் மட்டுமன்றி, தமிழகத்தி லிருந்தும் அறிஞர்களை அழைத்து, விருது வழங்கி சிறப்பிக்கிறார் ஜெய ராஜ். தமிழ்ப் பணி ஆற்றுவோருக்கு இலங்கை நாணய மதிப்பில் ரூ. 50,000 அளித்து சிறப்பிக்கிறார். இது மட்டு மன்றி, கவியரங்கம், பட்டிமன்றம், மாணவர்களுக்கான போட்டி, பரி
சளிப்பு என்று மூன்று நாள் கம்பன் விழா களை கட்டும். அதைப் போல் நாட்டிய விழா 3 நாட்களும், இசை விழா 8 நாட்களும் கோலாகலமாக நடைபெறுகின்றன.
“எந்த விழாவுக்கும் டிக்கெட் கிடையாது. மக்கள், பிரமுகர்களின்நிதி ஆதரவுதான். பல நேரங்களில் எங் களது பணத்தைப் போட்டு நடத்தி யுள்ளோம்” என்றார் அவர்.
இதைத் தவிர, இளைய தலை முறைக்குத் தமிழையும், தமிழ்ப் பண் பாட்டையும் எடுத்துச் சொல்வதற்காக கம்பராமாயணம், திருக்குறள், திரு முறை உள்ளிட்ட வகுப்புகளையும் நடத்துகிறது இலங்கை கம்பன் கழகம்.
“இலங்கை அமைச்சரின் செயலர் ஒருவர் கூட இந்த வகுப்பில் பங்கேற் கிறார்” என்றார் கம்பவாரிதி. இவை மட்டுமன்றி, ஆற்றி வருகிறது. இலங்கை கம்பன்
கழகம், மாணவர்களின் கல்விக்காக
சமூகப் பணியையும்
மொத்தம் சுமார் ரூ. 4 லட்சம் அளவுக்கு உதவித் தொகை அளித்து வருகிறோம். அத்துடன், சமூகப் பணி ஆற்றும் மருத்துவர், பொறியியலாளர், ஆசிரியர்களையும் பாராட்டி சிறப் பித்து வருகிறோம் என்றார் அவர்.
ஒரு நூற்றாண்டுக்குரிய சாதனை களை 50 வயதில் நிகழ்த்திய ஜெயராஜ் திருமணம் ஆகாதவர். குருநாதரைப் பின்பற்றி குடுமி வளர்த்துக் கொண்ட இளைஞர். அவரதுஅருந்தொண்டை நினைத்து கைகள் தானாகவே எழுந்து கூப்பின.
நன்றி : தினமணி
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 26

ஆகஸ்ட் இதழின் தொடர்ச்சி.
Figj 5TGui) GJOTO (l) 1910 - 1980
- செங்கை ஆழியான். க. குணராசா
fழத்தின் நாவலாக்க வரலாற்றில் 1970-1980 தசாப்தத்தை நாவல் வரலாற்றுக் கால கட்டம் என்று சொல்ல வேண்டும். ஈழத்தில் வெளிவந்த நாவல்களின் எண்ணிக்கையிலும் சரி, நாவல்களின் உருவச் சிறப்பு, உள்ளடக்க விரிவு, கலை அம்சம் என்பனவற்றிலும், பாத்திர வார்ப்பிலும் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்ட காலமாகும். குறிப்பிடத்தக்க அம்சங்கள் வருமாறு:
(அ) ஈழத்து நாவல்களை விரும்பிப் பெற்று வெளியிடுகின்ற பிரசுரத் தளங்கிள் இக்கால கட்டத்தில் உருவாகின. முக்கியமாக வீரகேசரிப் பிரசுரங்களை மறந்து விடக்கூடாது. அத்துடன் ஜனமித்திரன், மாணிக்கம், சிரித்திரன், அரசு போன்ற வெளியீட்டு நிறுவனங்கள் ஈழத்து நாவல்களை வெளியிட்டன: இவ்வகையில் ஈழத்து நாவல்களைப் பட்டி தொட்டி எல்லாம் எடுத்துச் . சென்ற பெருமை வீரகேசரிக்குரியது. a
(ஆ) இப்பத்தாண்டுகளில் வெளிவந்த 100 மேற்பட்ட நாவல்களில் 50க்கு
மேல் பிரசுரித்தளித்த பெருமை வீரகேசரிக்குரியது.
(இ) செங்கை ஆழியானின் பிரளயம், சித்திரா பெளர்ணமி, முற்றத்து ஒற்றைப் பனை, வாடைக்காற்று, இாவின் முடிவு, கங்கைக்கரையோரம், காட்டாறு, யானை, கொத்தியின் காதல் ஆகிய 9 நாவல்கள் வெளிவந்துள்ளன.
(ஈ) பிரபல்ய ஏழுத்தாளர்களான எஸ்.பொன்னுத்துரையின் சடங்கு, இநாகரரினின் வாழ்க்கை ஒரு வசந்தம், கே.இளங்கீரனின் அவளுக்கு ஒரு வேலை வேண்டும், டானியலின் பஞ்சமர், அருள் சுப்பிரமணியத்தின் அவர்களுக்கு வயது வந்து விட்டது, தெணியானின் விடிவை நோக்கி, அ. பாலமனோகரனின் நிலக்கிளி, வ.இ.அ. இராசரெத்தினத்தின் கிரெளஞ்சவதம், தெளிவத்தை யோசெப்பின் காலங்கள் சாவதில்லை, கே.ஆர். டேவிட்டின் வரலாறு அவளைத் தோற்று
மல்லிகை ஒக்டோபர் 2008 & 27

Page 16
விட்டது, தி.ஞானசேகரனின் குருதி மலை, அருளரின் லங்கா ராணி என்பன குறிப் பிடத்தக்க வகை மாதிரி நாவல்களாக வெளிவந்துள்ளன.
1. பிரளயம் (1971) (மயானபூமி - சிரித்திரன்) செங்கை ஆழியான், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
2. சடங்கு (1971) எஸ்.பொன்னுத்துரை, அரசு வெளியீடு, கொழும்பு.
3. வாழ்க்கை ஒரு வசந்தம் (1971) இநாகராஜன், சண்முகநாதன் புத்தகசாலை. யாழ்ப்பாணம்
4. சித்திரா பெளர்ணமி (1972) செங்கை ஆழியான், சிரித்திரன் பிரசுரம், யாழ்ப்பாணம்.
5. முற்றத்து ஒற்றைப்பனை (1972) செங்கை ஆழியான், சிரித்திரன் பிரசுரம், யாழ்ப்பாணம்.
6. யுகசந்தி (1972) மணிவாணன் (வி.க.இரத்தினசபாபதி) வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
7. பஞ்சமர் (1972) கே.டானியல், தாரகை வெளியீடு. யாழ்ப்பாணம்.
8. தீக்குள் விரலை வைத்தால் (1972) கே.எஸ்.ஆனந்தன், வீரகேசரி வெளியீடு, கொழும்பு
9. நான் சாகமாட்டேன் (1972)
செ.கதிர்காமநாதன், உருது மூலம் - கிருஷன் சந்த், வீரகேசரி வெளியீடு,
கொழும்பு.
10. அவளுக்கு ஒரு வேலை வேண்டும் (1972) இளங்கீரன், நூலுரு -2000. கலை இலக்கியப் பேரவை, கொழும்பு.
11. ஆஷா (1972) ரஜனி, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
12. கணையாழி (1972) ரஜனி. வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
13. மைதிலி (1972) ரஜனி, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
14. கடற்காற்று (1972) அங்கையன் கைலாசநாதன், உதயம் புத்தக நிலையம், கொழும்பு.
15. பூஜைக்கு வந்த மலர் (1972) பா.பாலேஸ்வரி, வீரகேசரி வெளியீடு.
16. வீடு யாருக்கு (1972) காவலூர் இராசதுரை, அபயன் பதிப்பாலயம், கொழும்பு.
17. மனவடு (1972) 冬 எஸ்.கே.மகேந்திரன், எம்.எஸ். லிங்கிம் வெளியீடு, மருதானை.
18. யுகசந்தி (1972) மணிவண்ணன், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
19. சொர்க்கமும் நரகமும் (1973) கே.எஸ்.ஆனந்தன், மாணிக்கம் சஞ்சிகைத் தொடர்.
20. வாடைக்காற்று (1973) செங்கை ஆழியான், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
21. அவர்களுக்கு வயது வந்து விட்டது (1973) அருள் சுப்பிர
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 28

மணியம், மலர் வெளியீடு, LDL...d5856TTL).
22. மர்ம மாளிகை (1973) அருள் செல்வநாயகம், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
23. இணைபிரியாத் தோழர் (1973) சரோஜினிதேவி. அருணாசலம், சிங்கள மூலம் - டி.பி.இலங்கரத்ன, லேக்கவுஸ் இன் வெஸ்ட்மன்ற் லிமிட், கொழும்பு.
24. ஒரே ஒரு தெய்வம் (1973) கே.எஸ். சிவகுமாரன், சன்மார்க்க சபை, குரும்பசிட்டி,
25. மேகங்கள் (1973) நந்தினி சேவியர், ஈழநாடு பத்திரிகைத் தொடர்.
26. விடிவை நோக்கி (1973) தெணியான் (கே.நடேசன்) வீரகேசரி வெளியீடு. கொழும்பு.
27. ஜினா (1973) ஜி.நேசன், ஜனமித்திரன் வெளியீடு, கொழும்பு.
28. நிலக்கிளி (1973) அ.பாலமனோகரன், வீரகேசரி வெளியீடு, கொழும்பு
29. இரவின் முடிவு (1973) செங்கை ஆழியான், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
30. அன்பே ஆருயிரே (1973) ஜி.நேசன். ஜனமித்திரன் வெளியீடு, கொழும்பு.
31. புயலுக்குப் பின் (1973) பொ.பத்மநாதன், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
32 ஒளி நமக்கு வேண்டும் (1973) செ.யோகநாதன், மலர் வெளியீடு, மட்டக்களப்பு.
33. கர்ப்பக்கிரகம் (1974) கே.எஸ். ஆனந்தன், மாணிக்கப் பிரசுரம், கொழும்பு.
34. காகித ஒடம் (1974) கே.எஸ்.ஆனந்தன், வீரகேசரி வெளியீடு. கொழும்பு.
35. ஒரு விலை மகளைக் காதலித்தேன் (1974) இந்துமகேஸ், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
36. நீலமாளிகை (1974) சிவம் பொன்னையா
37. இலட்சியப் பெண் (1974) என்.எம். ஹனிபா, கல்கின்ன கலாநிலையம், கண்டி,
38. பட்லி (1974) ஜி.நேசன், ஜனமித்திரன் வெளியீடு, கொழும்பு.
39. யார் அனாதை (1974) குடம்பியனூர் அ.நடராசன், ஜெயா அச்சகம், சாவகச்சேரி.
40. வாழ்க்கைப் பயணம் (1974) நயிமா ஏ.பசிர், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
41 மீட்டாத வீணை (1974) எ.ரி.நித்தியகீர்த்தி, கமலா வெளியீடு, பருத்தித்துறை.
42. கனலும் புனலும் (1974) கே.எஸ்.ஆனந்தன், மாணிக்கம் சஞ்சிகைத் தொடர்.
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 29

Page 17
43. காலங்கள் சாவதில்லை (1974) தெளிவத்தை ஜோசெப், வீரகேசரி வெளியீடு.
44. கிரெளஞ்சப் பறவைகள் (1975) வ.அ.இராசரத்தினம், வீரகேசரி வெளியீடு. கொழும்பு.
45. g(3LD6 or (1975) ஜி.நேசன், ஜனமித்திரன் வெளியீடு, கொழும்பு.
46. உறவுக்கப்பால் (1975) பா.பாலேஸ்வரி, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
47. கொத்தியின் காதல் (1975) செங்கை ஆழியான், மாணிக்கம் பிரசுரம், கொழும்பு.
48. நன்றிக்கடன் (1975) இந்துமகேஸ், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
49. உள்ளத்தின் கதவுகள் (1975) யாழ்நங்கை, வீரகேசரிவெளியீடு, கொழும்பு.
50. பொன்னான மலரல்லவோ?
(1975) உதயணன், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
51. கறுப்பு ரோஜா (1975) ஜி.நேசன், ஜனமித்திரன் வெளியீடு, கொழும்பு.
52. காற்றில் மிதக்கும் சருகுகள (1975) மணிவாணன், மாணிக்கம் பிரசுரம், கொழும்பு
53. அலிமா ராணி (1975) ஜி.நேசன், ஜனமித்திரன் வெளியீடு. கொழும்பு.
54. குமாரபுரம் (1975) அ.பாலமனோகரன், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
55. விதவையின் வாழ்வு (1975) மதுபாலன் (த.மதுபாலசிங்கம்) வன்னி வெளியீடு. முள்ளியவளை.
56. போராளிகள் காத்திருக்கின்றனர் (1975) கேடானியல், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
57. யாருக்காக (1975) மொழிவாணன் (சி.ஆர்.நீதிராஜா) வீரகேசரி வெளியீடு.
58. மழைக்குறி (1975) சி.சுதந்திரராசா, ஏ.ஆர்.எஸ்.பிரின்டர்ஸ், யாழ்ப்பாணம்.
59. இரவின் முடிவு (1976)
செங்கை ஆழியான், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
60. பழிக்குப்பழி (1976) வி.பி.மரியாம்பிள்ளை, ஆங்கில மூலம் - அலெக்சாண்டர் டுமாஸ், ஆசீர்வாதம் > வெளியீடு, யாழ்ப்பாணம். YA
61. அன்னை அழைத்தாள் (1976) இளங்கீரன், சிரித்திரன் சஞ்சிகைத் தொடர்.
62. அந்தரங்க கீதம் (1976) உதயணன், வீரகேசரி வெளியீடு. கொழும்பு. 63. போடியார் மாப்பிள்ளை (1976) எஸ்.ழரீஜோன்ராஜன், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
64. திருமணத்திற்காக ஒரு பெண்
காத்திருக்கிறாள் (1976)
மல்லிகை ஒக்டோபர் 2008 奉 30

எஸ்.அகஸ்தியர். மாணிக்கப்பிரசுரம், கொழும்பு. 65. யாத்திரை (1976) பொ.பத்மநாதன், வீரகேசரி வெளியீடு,கொழும்பு.
66. நான் கெடமாட்டேன் (1976) அருள் சுப்பிரமணியம், வீரகேசரி வெளியீடு. கொழும்பு.
67. SÐ L6OLDu JT6ĩTLUjög5 D. DIT (1976) புரட்சி பாலன், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
68. புதிய தலைமுறைகள் (1976) வை.அஹற்மத், வீரகேசரி வெளியீடு. கொழும்பு.
69. கனவுகள் வாழ்கின்றன (1976) கவிதா (இந்திராதேவி சுப்பிரமணியம்) வீரகேசரி வெளியீடு, கொழும்பு. 70. ஒட்டுமா (1976) சாந்தன், தினகரன் தொடர், நூலுரு
71. ஊமை உள்ளங்கள் (1976) ஞானரதன் (வை.சச்சிதானந்தம்) வீரகேசரி ബൈബിul@. கொழும்பு. 72. வரலாறு அவளைத் தோற்று
விட்டது (1976) கே.ஆர்.டேவிட், வீரகேசரி வெளியீடு, கொழும்பு. 73. நெஞ்சில் ஓர் இரகசியம் (1976) தம்பிஐயா தேவதாஸ், சிங்கள மூலம் - கருணசேன ஜயலத், வீரகேசரி வெளியீடு, கொழும்பு. 74. குஜராத்மோகினி (1976) ஜி.நேசன், ஜனLத்திரன் வெளியீடு, கொழும்பு.
75. காட்டாறு (1977)
செங்கை ஆழியான், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
76. பொய்மைகள் நிலைப்பதில்லை (1977) திக்குவலை கமால், தினகரன் தொடர்.
77. அக்கரைகள் பச்சையில்லை (1977) அருள்சுப்பிரமணியம், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
78. இங்கேயும் மனிதர்கள் (1977) இந்து மகேஸ், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
79. புதிய சுவடுகள் (1977) தி.ஞானசேகரன், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
80. சுமைகள் (1977) தாமரைச்செல்வி (ரதிதேவி கந்தசாமி) வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
81. கமலினி (1977) அப்பச்சி மகாலிங்கம், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
82. கனவுகள் கலைந்தபோது (1977) அ.பாலமனோகரன், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
83. மர்மமங்கை நார்தேவி (1977) ஜி.நேசன், ஜனuமித்திரன் வெளியீடு.
84. பாலைவனத்து ரோஜா (1977) ஜி.நேசன், ஜனமித்திரன் வெளியீடு
85. சாத்தானின் ஊழியர்கள் (1977) ஜி.நேசன், ஜனமித்திரன் வெளியீடு,
86. புதியயூமி (1977) ஞானரதன், வீரகேசரி வெளியீடு. கொழும்பு.
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 31

Page 18
87. தங்கச்சியம்மா (1977) நந்தி, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
88. காவியத்தின் மறுபக்கம் (1977) செ.யோகநாதன், எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், கொழும்பு.
89. உனக்காகவே வாழ்கிறேன் (1977) கமலா தம்பிராஜா, வீரகேசரி வெளியீடு.
90. விடிவுகால நட்சத்திரம் (1977) கே.விஜயன், வீரகேசரி வெளியீடு.
91. கலட்டுத்தரை (1977) காவலூர் எஸ்.ஜெகநாதன், அருள் ஒளி அச்சகம், கொழும்பு.
92. இதயங்கள் அழுகின்றன (1977) தா.பி.சுப்பிரமணியம், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
93. விதியின் கை (1997) கனக செந்திநாதன், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
94. யானை (1978) செங்கை ஆழியான், வரதர் வெளியீடு. யாழ்ப்பாணம்.
S ミ
SYNS
WAN A. Šį șŞ
"T
95. கங்கைக் கரையோரம் (1978) செங்கை ஆழியான், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
96. பொன்னம்மாவின் பிள்ளைகள் (1978) பொ.பத்மநாதன், வீரகேசரி வெளியீடு. கொழும்பு.
97. லங்கா ராணி (1978) அருளர், கனல் வெளியீடு, சென்னை.
98. மண்ணில் தெரியுதொரு தோற்றம் (1978) எஸ்.அகஸ்தியர், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
99. குருதி மலை (1979) தி.ஞானசேகரன், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
100. மலைக்கன்னி (1980) ரஜனி, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
101. ஜீவஜோதி (1980) ரஜனி, வீரகேசரி வெளியீடு. கொழும்பு.
1970-1980களில் வெளிவந்த சிறப்பான நாவல்களை நோக்குவோம்.
ESSE
தொடரும்.
Y
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீங்களும் எழுதலாம் - கவிதைச் சஞ்சிகை
மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள் - துவாரகன் கவிதைகள்
- மேமன்கவி
நீங்களும்
V Vug') *\', 'U/
أ. في : : : : : :"في
{ ఎ*
S தமிழ் சஞ்சிகைத்துறையில்
} } }51 ቆ፧ *ç፥
ஒவ்வொரு துறைக்கென பல சஞ்சிகைகள் பெரும் சஞ்சிகைகளின் சந்தையிலும், சிறு சஞ்சிகைச் சூழலிலும் வெளிவந்து கொண்டிருக் கின்றன. பெரும் சஞ்சிகைகளின் சந்தையில் வெளிவரும் அத்தகைய சஞ்சிகைகளை விட சிறு சஞ்சிகைச் சூழலில் வெளிவரும் ஒவ் வொரு துறைக்கான சஞ்சிகைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவையாக இருக் கின்றன. இந்த வகையில் கவிதை, சங்கீதம், ஓவியம் (3Lum siT D துறைகளுக்கென தமிழகத் திலும், ஈழத்திலும் வெளிவரும் சிறு சஞ்சிகை களைக் குறிப்பிடலாம்.
அந்த வகையில், கவிதைக்கென தமிழகத்திலும், ஈழத்திலும் சிறு சஞ்சிகைச் சூழலில் தோன்றிய சஞ்சிகைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திச் சென்று இருக்கின்றன.
பாவேந்தர் பாரதிதாசன் நடத்திய "குயில், கண்ணதாசன் நடத்திய "தென்றல்' எனத் தொடங்கி "வானம்பாடி வரை தமிழகத்தில் கவிதைக்கென தோன்றிய சஞ்சிகைகள் பல நல்ல கவிஞர்களை தமிழுக்கு அடையாளம் காட்டிச் சென்றுள்ளன. ஈழத்தைப் பொறுத்தவரை கவிஞன், நோக்கு எனத் தொடங்கி அக்னி, விடிவெள்ளி, பூபாளம், வகவம், கவிதை, யாத்ரா என பல சஞ்சிகைகள் கவிதைக்கென (இது பூரண பட்டியல் அல்ல) தோன்றிய சஞ்சிகைகள் ஈழத்து கவிதை வளர்ச்சியில் கணிசமான பங்காற்றிச் சென்றுள்ளன. பங்காற்றி வருகின்றன. அந்த வரிசையில் திருகோணமலையிலிருந்து எஸ்.ஆர்.தனபால சிங்கம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் "நீங்களும் எழுதலாம்' எனும் கவிதைக்கான மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 33

Page 19
சஞ்சிகையும் தன்னை இணைத்துள்ளது. ஓராண்டை பூர்த்தி செய்திருக்கும் நீங்களும் எழுதலாம் பல புதிய கவிஞர் களை இந்த ஓராண்டு கால பகுதியில் ஈழத்து கவிதை உலகுக்கு அடையாளப்படுத்தி யிருக்கிறது.
அத்தோடு, பல முன்னோடிக் கவிஞர் களின் படைப்புகளை பிரசுரித்தும், மீள் பிர சுரம் செய்தும் புதிய கவிதைப் படைப்பாளி களுக்கு வழிகாட்டியாக செயற்படுகிறது.
அதன் ஒராண்டு சிறப்பு இதழை நாம் நோக்கும் பொழுது, கடந்த ஒராண்டில் அச் சஞ்சிகையில் எழுதிய கவிதைப் படைப்பாளி களினது பெயர் பட்டியல் ஒன்றினை வெளி யிட்டு இருப்பதன் மூலம், அச்சஞ்சிகை பல புதிய கவிதைப் படைப்பாளிகளை ஈழத்து கவிதை உலகின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. நீங்களும் எழுதலாம் தனது ஓராண்டு இதழில் வெளியிட்டிருக்கும் இப் பட்டியலைக் காணும் பொழுது, எனக்கு 70 களில் தமிழகத்திலிருந்து தமிழகக் கவிஞர் களான உமாபதி, ராஜரிஷி போன்றோர் இணைந்து வெளியிட்ட “ஏன் என்னும் கவிதைச் சஞ்சிகையில் ஈழத்து புதுக் கவிதை சிறப்பிதழ் ஒன்றினை வெளியிட்ட தும், அவ்விதழில் அன்று ஈழத்தில் எழுதிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான புதுக் கவிதையாளர்களின் பெயர் பட்டியல் ஒன் றினை வெளியிட்டு இருந்தமையும் எனக்கு ஞாபகப்படுத்தியது.
நீங்களும் எழுதலாம்' இதழில் எழுதிய - எழுதிக்கொண்டிருக்கும் புதிய கவிதைப் படைப்பாளிகளின் படைப்புகளை நோக்கு மிடத்து 70களிலும், இன்றைய சூழலில் சில பத்திரிகைகளிலும் எழுதிய - எழுதும் புதிய கவிதை படைப்பாளிகளின் படைப்புகள் போல் வெறுமனே துணுக்குகளாய் அமை யாது, எழுதுவோர் புதிய படைப்பாளிகளாக
இருப்பினும் அவர் தம் அனுபவங்களை கவிதைகள் மூலம் முன்வைக்கும் பாங்கும், உள்ளடக்கங்களின் வீச்சும் கவனத்தை ஈர்க் கின்ற வகையில் அமைந்திருக்கின்றன. இதற்கு இன்றைய வாழ்வு அவர்களுக்கு தரும் அநுபவங்கள் முக்கிய பங்கு வகிக் கின்றன என்பது தெரிகிறது.
அத்தோடு, நீங்களும் எழுதலாம்' சஞ் சிகையில் முன்னோடி கவிதைப் படைப்பாளி படைப்புகளை மட்டும் மீள் பிரசுரம் செய்யாது, அவ்வாறான முன்னோடிக் கவிஞர்களின் கவிதை பற்றி அன்று அவர்கள் முன்வைத்த கருத்துக்களையும் வெளியிட்டு, புதிய கவிதைப் படைப்பாளிகளைச் சிந்திக்கத் தூண்டுகிறது. அந்த வகையில், நீங்களும் எழுதலாம் தனது ஓராண்டு இதழில் மீள் பிரசுரம் செய்து இருக்கும் பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன் அவர்கள் அன்று சொன்ன ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது.
'கற்றால் வருமோ கவித்துவம்?' எனும் தலைப்பிலான அக்குறிப்பில் சொல்லப்பட்டு இருக்கும் கருத்துக்கள் இன்றும் பொருந்தக் கூடிய கருத்துக்களாக இருக்கின்றன. ܬ
YA
செய்நேர்த்தி திறன் மட்டுமே ஒரு படைப்பை உருவாக்கி விடுவதில்லை. அதற்கு மேலாக, சிருஷ்டி திறன் என்பதும் தேவையான ஒன்று என்னும் தொனியில் அமைந்திருக்கும் சில்லையூர் செல்வராசன் அவர்களின் கருத்துக்கள் ‘கவிதை' என்பது தமக்கே சொந்தமானது எனும் மயக்கத்தில் இருக்கும் அறிவுஜீவிகளுக்கும் கவிதை என்பது வெறும் சொற்களின் குவியல் என மயங்கிக் கிடக்கும் கவிதை தயாரிப்பாளர் களுக்கும் 'கவிதை மட்டுமல்ல, ஒரு சிருஷ் டிக்கு படைப்பாற்றல் அதி முக்கியமான ஒன்று என்பதை அழுத்திச் சொல்வதாகவே எனக்குப் படுகிறது.
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 34

நீங்களும் எழுதலாம் போன்ற சஞ் சிகைகள் இத்தகைய கருத்துக்களைத் தொடர்ந்து மீள்பிரசுரம் செய்யும் பணி யினைத் தொடர வேண்டும். இன்றைய ஈழத்து. சூழலில் ஒரு சிறு சஞ்சிகை நடத்து தல் என்பது மிகுந்த சிரமமான பணி. அத் scoasu syLDLDIT60T listofu's060T (85m freihsiosort மல் மேற்கொண்டு வரும் தனபாலசிங்கம் அவர்களின் பணியினை நாம் பாராட்டுதல் வேண்டும்.
நீங்களும் எழுதலாம் கவிதைச் சஞ்சிகை ஈழத்து கவிதை சஞ்சிகைகளின் வரிசையில் கவனிக்க வேண்டிய ஒரு சஞ்சிகை என்பது மறுப்பதற்கில்லை.
\ყნv அனுபவங்களாக துவாரகனின் கவிதைகள்
ஒவ்வொரு படைப்பாளியும் தனது சூழ
o லால் பாதிக்கப்பட்டே தனது படைப்புகளை
முன்வைக்கிறான். சூழலின் பாதிப்பிலிருந்து தப்பி எழுதுதல் - அல்லது படைத்தல் என்பது சாத்தியமில்லாத ஒன்று. உலகின் சிறந்த படைப்புக்கள் என பார்க்குமிடத்து, அப்படைப்புகளை படைத்த படைப்பாளிகள் தமது சூழலால் பாதிக்கப்பட்ட அப்படைப்பு களை படைத்தவர்களாக இருந்திருக்கின் றார்கள். சூழலால் பாதிக்கப்படாத கலை,
லக்கியம் என்பது நிச்சயமாக தயாரிக்கப் பட்ட படைப்புகளே என்பதை உறுதியாகச் சொல்லலாம்.
மல்லிகை ஒக்டோபர் 2008 窜 35
இன்று ஈழத்தில் படைக்கப்படும் பெரும் பான்மையான கலை, இலக்கியப் படைப்பு கள் படைப்போர்கள் இன்றைய நமது தேசம் கொண்டிருக்கும் சூழலால் பாதிக்கப்பட்டுத் தான் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப் படைப்புக்களை படைக்கின்ற படைப்பாளி கள் முதிர்ச்சி அடைந்த படைப்பாளிகளாக இருப்பினும் சரி, புதிய தலைமுறையைச் சார்ந்த படைப்பாளியாக இருப்பினும் சரி இன்றைய நமது தேசச் சூழல் என்பது சகல இன, மதம் மற்றும் பிரதேசம் சார்ந்த மக் களைப் பாதித்துத்தான் இருக்கிறது. அத் தகைய நிலையில் அந்த மக்கள் சமூகத்தி லிருந்து வரும் கலை, இலக்கியப் படைப்பு களில் அந்தச் சூழலின் பாதிப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது.
இதன் காரணமாகத்தான் ஈழத்து கலை, இலக்கியப் படைப்புகளில் இயல்

Page 20
பாகவே, ஒரு பொதுத்தன்மை வெளிப்படு கிறது. (ஆங்கிலம், தமிழ், சிங்களம் எனும் மும்மொழிகளிலும் படைக்கப்படும் படைப்பு களுக்கும் இக்கூற்றுப் பொருந்தும்.)
ஆனாலும், இப்பொதுத்தன்மையினூ டாக இனரீதியாகவும், மத ரீதியாகவும் மற்றும் பிரதேச ரீதியாகவும் படைக்கப்படும் கலை, இலக்கியப் படைப்புகளில் அந்தந்த இனம், மதம், பிரதேசம் பிரத்தியேகமாக கொண்டிருக்கும் பிரச்சினைகளையும் அப் படைப்புக்கள் பேசுகின்றன என்பதையும் நாம் மறுதலிக்க முடியாது.
இந்தச் சிந்தனைகளின் பின்னணியில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் துவாரகனின் “மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்" எனும் தொகுதியினை நாம் நோக்க வேண்டியிருக் கிறது.
90களில், தனது கவிதைப் பயணத்தை தொடங்கிய துவாரகனின் இத்தொகுப்பில் அடங்கியுள்ள கவிதைகளை ஒருசேர பயிலு கின்ற பொழுது, அவர் வாழுகின்ற சூழலை யும், அந்தச் சூழலில் அவர் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளையும், அப்பிரச்சினைகளால் அவரது அந்தச் சூழலில் உள்ளாகும் சிதைவுகளையும் நாம் இவரது கவிதைகள் வழியாக நாம் எதிர்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
இந்தப் பிரச்சினைகள், அவை கொண்டுவரும் சிதைவுகள் என்பது ஒரு சமூகத்தைச் சார்ந்த மக்கள் கூட்டத்தை அவலப்படுத்துகின்ற, அழிக்கின்ற நிலை யினை பார்க்கின்ற அதேவேளை, அந்த சமூகக் கூட்டத்தின் பிரதிநிதியாக தன் இருப்பை உறுதி செய்கின்ற ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவனது சூழலுக்கும் இடை யிலான அந்நியத்தை, தூரத்தை, இழப்பை
மல்லிகை ஒக்டோபர் 2008 * 36
எவ்வாறு உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் உணரக்கூடியதாக இருக்கிறது.
குறிப்பாக, “கிராமம்’ எனும் கட்டமைப் பின் சூழலிலிருந்து போர் எனும் அரக்கனின் கொடூர கரங்கள் ஒரு சமூகத்தைச் சிதைத்து, தான் சார்ந்த மண்ணிலிருந்து அந்நியமாகிப் போகும் அவலத்திற்கு ஆளாக்கும் நிலை யினை - அச்சமூகத்தில் படைப்பு மனோ நிலை கொண்ட ஒருவர் எதிர்கொள்கின்ற பொழுது, மேல் எழவேண்டிய போராட்ட குணத்தை தாண்டியும், மீறியும், சுய சிதைவை தன் இருப்பினுடாக எதிர்கொள் கின்ற ஒரு மனிதனின் உள்மனக் குரல் களாக துவாரகனின் கவிதைகள் பதிவாகி இருக்கின்றன.
தன் மண்ணுடனான தனது உறவை வெறுமனே நிலத்துடன் உரிமையை தக்க வைக்கும் நிலைக்கு அப்பால், இந்த மண் னின் இயற்கையுடன் சார்ந்த பிணைப்பில் உறுத்திக்கொள்ளும் மனோநிலைதான் அடிச்சரடாக இயங்கும் ஒரு இருப்பு நிலைக்கு தன்னை நகர்த்திக் கொள்ளும் அவசியம் தவிர்க்க முடியாத நிலை உ வாகும் என்பதனை துவாரகனின் கவிதை கள் சித்திரிக்கின்றன.
இவர் இழக்கின்ற கிராமம் அல்ல தன் மண் சார்ந்த இழப்புக்களை இவர் வெளியாளாக நின்று உரைக்காமல், அந் சூழலின் உள்ளிருந்து எடுத்துரைக்கிறார். அவ்வாறாக, இவர், இவருக்கும் மண்ணுக் மான உறவையும் சரி, அம்மண் சந்திக்கும் சிதைவையும் சரி சகமனிதர்களின் அசை வாக்கங்களுடன் அல்லாது அம்மண்ணைச் சார்ந்த ஊர்வன, நடப்பன, பறப்பன என்ற 65 605 UL S ஜீவராசிகளுடன் தொடர்புப்
படுத்தி காண்கின்ற மனோபாவம் இவரது
f

கணிசமான படைப்புக்களில் மேலோங்கி
நிற்கிறது.
இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் வெவ் வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டு இருப் பினும், ஒட்டுமொத்தமாக பயிலுகின்ற பொழுதுதான் தெரிகிறது. இவரது பெரும் பாலான படைப்புக்களில் உருவகமாகவோ, குறியீடாகவோ அல்லது நேரடியாகவோ அந்த ஜீவராசிகள் இடம்பிடித்துக் கொள் கின்றன.
ஆடுகள், மைனாக்கள், குருவிகள் (அவையிலும் பல வகைகள்), அணில்கள், சிலந்திகள், பூச்சிகள், காகங்கள், பாம்புகள், (அவையிலும் சில வகைகள்) அட்டைகள், வண்ணத்துப் பூச்சிகள், எறும்புகள், நாய்கள், எலிகள், பல்லிகள், கழுகுகள், அறணைகள் மாடுகள் (அவையிலும் சில வகைகள்).
இப்படியாக இந்த ஜீவராசிகளை அவ ரது மண்ணின் சிதைவையும், தம் மண்ணில் எதிர்கொள்ளும் தன்மையை சித்திரிக்கின்ற நிலைகளில் அவை தவறாமல் இடம்பிடித்து விடுகின்றன. அத்தோடு பல கவிதைகள். அவை பிரதான பாத்திரங்களையும் வகிக் கின்றன. அந்த வகையில்,
* தூக்கணாங்குருவிக் கூடு
* முதுகு முறிய பொதி சுமக்கும்
ஒட்டகங்கள்
* வண்ணத்துப்பூச்சிகளின் உரையாடல்
* காட்டெருமை
* எலியும், அறணையும், கரிக்குருவியும்
* வெள்ளெலிகளுடன் வாழ்தல்
* நாய் குரைப்பு
* குப்பை மேட்டிலிருந்து இலையான்
விரட்டும் சொறி நாய் பற்றிய சித்திரம்
* கோழி இறகும், காகங்களும்
போன்ற கவிதைகளை உதாரணங்
களாக குறிப்பிடலாம்.
இப்படியாக இந்த ஜீவராசிகளை தன் மண்ணின், தன் இருப்பின் சிதைவை சித்திரிக்கின்ற அனுபவ வெளிப்பாடுகளில் தவறாமல் இடம்பிடித்துக் கொள்கின்றன.
அதேவேளை சக மனிதர்களுடனான உறவில் ஏற்படும் விரிசலை, அவலத்தை, தூரத்தை, போலித்தனத்தை சித்திரிக்க வரும்பொழுது கூட, அந்த ஜீவராசிகளையே உருவகங்களாக கையாள்வது கூட அவரது பாணிகளில் இன்னொன்றாக இருக்கிறது.
மனிதர்களையிட்ட கவிதையான
தலைகள்' எனும் கவிதையில் -
இந்தத் தலைகள்
எப்பொழுதும் என்னை விரட்டிக் கொண்டிருக்கின்றன - எனத் தொடரும் அக்கவிதையில் ஒரிடத்தில்,
தளர்ந்து - இறுகி தனியே வந்து விமும் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் என் கைப்பைக்குள் பத்திரமாக இருக்கின்றன தனியே வெட்டி எடுக்கப்பட்ட ஒரு ஆட்டின் தலை போலவே - என அக்கவிதையை நகர்த்துகிறார்.
*குருட்டு வெளிச்சமும் ஊமை நாடகமும்’ எனும் கவிதையில்,
சிற்றெறும்பு கலைந்தாற் போல் சிந்தனைகள் சிதறும்
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 37

Page 21
என இடையில் பேசுகிறார்.
துயர் கவிந்த பொழுதுகளோடு அலைகிறேன் கூட்டத்திலிருந்து தவறிய தனியன் ஆடுபோல்; இருப்பது, புசிப்பது, பழப்பது எப்படி முடியும்? மனிதர்கள் தவிர்ந்த நீண்ட பொழுதுகளில் நாய்களும் எலிகளும் குரங்குகளுமே அதிகமும் சந்திக்கின்றன
இப்படியாக இத்தகைய பல உதா ரணங்கள் இவரது கவிதைகளில் விரவிக் இவரது இத்தகைய முறைமை என்பது இவர் கையாளும் ஒர் உத்தி என்று என்னால் சொல்ல முடிய வில்லை. மாறாக இந்த நிலைக்கு காரணம் போர்; அகதி வாழ்வு, இடப்பெயர்வு இப்படி யான அவலநிலைகள், இவர் சார்ந்த சமூகத் தினை துண்டம் துண்டமாக உடைத்து
கிடக்கின்றன.
போட்டுள்ளது. அதன் காரணமாக சக மனிதர் களால் நிறைந்த இடங்கள் வெறுமையாக இருக்கின்றன. இப்பொழுது மிஞ்சுவது அந்த ஜீவராசிகள்தான்.
இக்கூற்றினை நிரூபிக்கும் வகையில், 'மனிதர்கள் இல்லாத பொழுதுகள், நானும் நானும்" போன்ற கவிதைகள் அமைந் துள்ளன.
இப்பொழுது இவரது உறவுகளும் உரையாடல்களும் அந்த ஜீவராசிகளுடன் தான்.
இப்பொழுது இன்னொரு நிலையும் தோன்றுகிறது. அந்த ஜீவராசிகளில் சில வற்றை கொன்று தின்றது போக, போர்; மனிதம் இறந்த நிலை, இப்பொழுது மனித
இறைச்சி உண்ணும் நிலைக்கு பரிந்துரை செய்யும் அவலத்திற்கு இவர் ஆளாகிறார், பல் நாசுவை அறியாது' எனும் கவிதை ep6)bl
இவ்வாறாக, முன்வைக்கப்படும் துவா ரகனின் கவிதைகள் மறுவாசிப்புகளுக்கு உட்படுத்தப்படும் பட்சத்தில், தமிழ் படைப் புலகில் ஏற்கனவே பரிச்சயமாகிப் போன உருவகக் கதைகளின் போக்குகளுக்கு (மனிதர்களாக அல்லாதவை கதாபாத்திரங் களாக இடம்பெறுதல் என மாதிரியான) இணங்க அவரது கவிதைகள் உருவகக் கவிதைகளாகவோ, அசாதரண நிலையி லான இருப்பு, அந்த ஜீவராசிகளில் ஒன் றாகத் தானே மாறிவிடுவது ("வெள்ளெலி களுடன் வாழ்தல்' எனும் கவிதையில்) போன்ற வெளிப்பாடுகளின் காரணமாக, சர்ரியலிஸம் மற்றும் மேஜிக்கல் ரியலிஸம் போன்ற போக்குகளை மனங்கொண்ட படைப்புகளாகவோ, அல்லது மண் இழப்பின் ஏக்கங்களைப் பற்றி பேசுவதனாலோ, பின் காலனித்துவ படைப்புக்களாகவோ, அடை யாளப்படுத்தக்கூடிய சாத்தியங்களை துவர ரகனின் கவிதைகள் அதிக அளவில் கொண்டிருக்கின்றன என்பதை அந்த மறு வாசிப்புகள் பேசக்கூடும்.
எனது வாசிப்பில் துவாரகனின் கவிதை களைப் பொறுத்தவரை கவிதையை எடுத் துரைப்பதில் ஒரே வகையான தொனியினை கையாண்டிருக்கும் சலிப்புத் தன்மைக்கு அப் பாலும், அவர் காட்டி நிற்கும் அனுபவங்கள், போர் எனும் அரக்கனின் கொடுர கரங்களின் நீட்டல்கள் என்பது ତଣ୍ଡୁ சமூகத்தை எப்படிச் சிதைக்கிறது என்பதையும், அந்த சமூகத் தின் ஓர் அங்கமாக இருக்கும் தனிமனிதன் எத்தகைய சுய சிதைவுக்கு ஆளாகுகிறான் என்பதை பதிவு செய்கின்ற படைப்புகளாக
மல்லிகை ஒக்டோபர் 2008 38

நம்முன் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பதிவு களை முன்வைக்க அவர் துணை சேர்த் திருக்கும் உருவகங்களுக்காகவும், படிமங் களுக்காகவும், குறியீடுகளுக்காகவும் தேர்ந் தெடுக்கும் உலகத்தின் (ஜீவராசிகள்) காரண மாக, துவாரகனின் கவிதைகள் நமது சூழலை கொண்டு புதிய அனுபவங்களாக நமக்கு அமைகின்றன. இந்த வகையில் துவாரகனின் மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள்' எனும் இத்தொகுப்பு கவனத்தில் எடுக்க வேண்டிய ஒரு தொகுப்பாகும்.
பிற்குறிப்பு :
1992ஆம் ஆண்டு ‘விடிவு' எனும்
கவிதையினை மல்லிகைக்குத் தந்ததன் மூலம் தனது கவிதைப் பயணத்தை ஆரம்
பித்ததாக கூறியிருக்கும் துவாரகன் மல்லிகைக்கு நன்றி கூறியிருப்பது அவரது காட்டுகிறது. ஆனால், அக் கவிதை இத்தொகுதியில் சேர்க்காமல் விட்டது, அவர் அளவில் அக் கவிதையின் தரத்தில் அவருக்கு சந்தேகம் இருந்திருக்கலாம் போல் தோன்றுகிறது. இதுபோல் பல ஆரம்பகால கவிதைகளை அவர் தவிர்த்திருப்பார் போல் தெரிகிறது. ஒரு படைப்பாளி தனது நூலுக்கான படைப்பு
நன்றி மறவாமையைக்
களை தேர்வு செய்யும் உரிமையில் யாரும் தலையிடக் கூடாது என்பது எனது கருத்து. ஆனாலும், அக்கவிதையையும் இத்தொகுப் பில் சேர்த்திருந்தால் அவரது வளர்ச்சியினை நாம் அறிந்துகொள்ளக் கூடியதாக இருந் திருக்கும்.
r மல்லிகை ஆண்டுச் சத்தா
ஆண்டுச் சந்தா 450/-
தனிப்பிரதி 30/- ஆண்டு மலர் 200/-
(மலருக்கான தபாற் செலவு 65/= ரூபா) ’.့်် ... ....် ့်..့် ် . . . . வங்கித் தொடர்புகளுக்கு: Dominic Jeeva 5305014-Hatton national Bank
SeaStreet,Colombo - 11. 88: 43 வது ஆண்டு மலர் தரமான தயாரிப்பு. விரும்பியோர் தொடர்பு கொள்ளவும்,காசோலை அனுப்புபவர்கள் Dominic Jeeva எனக் குறிப்பிடவும்.காசுக்கட்டளை அனுப்புபவர்கள் Dominic Jeeva.
Kotahena, PO. stserš g9119.G அனுப்பவும். - - - -
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 201/4, முரீகதிரேசன் வீதி, கொழும்பு 13. தொலைபேசி : 2320721
سے
மல்லிகை ஒக்டோபர் 2008 * 39

Page 22
5ட்டார் வாழ்க்கை பல்வேறுபட்ட அநுபவங்களை எனக்கு கற்றுத் தந்தது எனலாம். வாழ்க்கைப் படகை ஒட்டுவதற்கு மக்கள் படுகின்ற அவஸ்தையும், அதற்காகச் செலுத்து கின்ற தொகையும் இங்கே மிக மிக அதிகமாகும். அரேபியருக்கு எந்தப் பிரச்சினைகளும் இங்கேயில்லை; எல்லா வகையான பிரச்சினைகளும், வேலைக்கென்று இங்கு வந்து சேரு கின்ற மூன்றாம் மண்டல நாட்டைச் சேர்ந்தவர்களுக்குத்தான். பெருந்தொகையான பணத்தை தமது நாட்டு முகவர் நிலையங்களுக்கு கொடுத்துவிட்டு, மிக சொற்ப சம்பளத் திற்காக இங்கே வந்து இவர்கள் படுகின்ற அவலங்கள் மிக அதிகமாகும். இந்த விடயத்தில் கட்டாரில் இருக்கின்ற நமது இலங்கைக்கான தூதுவர் நிலையமும் பொடு போக்குடனேயே நடந்து கொள்ளுகின்றன. இந்நிலை கட்டாரில் மட்டுமில்லை! பொதுவாக வளைகுடாவில் எல்லா நாட்டிலும் உள்ள இலங்கைக்கான தூதுவர் நிலையங்களும் இவ்வாறுதான் நடந்து கொள்கின்றன என்பதனை அந்தந்த நாடுகளில் வேலை செய்து கொடுமைக்குற்படுத்தப் பட்டு ஆதரவு தேடி தமது தூதரகங்களுக்குள் தஞ்சம் புகுந்து எந்தப் பயனும் கிட்டாமல் திரும்பி வந்த பலரின் கதைகளை நான் கண்டும், கேட்டும் அறிந்து வைத்திருக்கின்றேன். அந்த வகையில்தான் கட்டாரில் உள்ள எமது இலங்கைக்கான தூதரகத்தில் எனக்குக் கிடைத்த அனுபவமானது எனது எண்ணக்கருவை வலுப்படுத்துவதாய் இருந்தது.
பேனாவான் பேசுகிறேன் - I9
- நாச்சியாதீவு பர்வீன்
எனது தம்பி பர்சாத் அஹமதை FreeVisaவில் நான் கட்டாருக்கு அழைத்திருந்தேன். அங்கே அவருக்குத் தகுதியான ஒரு வேலையைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருந்ததினால் பர்சாத்தை அவ்வாறு கட்டாருக்கு எடுத்தேன். Free Visa என்பது குறித்த வேலைக்கு என்று Visaவில் குறிப்பிடப்பட்டிருக்காது. அந்த Visa 6 மாதங் களுக்கு மட்டுமே வழங்கப்படும். கட்டாருக்குள் நுழைந்த நாளிலிருந்து மூன்று மாதங் களுக்குள் குறிப்பிட்ட நபர் வேறு ஒரு வேலையுடன் Sponserஐ தேடிக்கொள்ள வேண்டும். மூன்று மாதங்களுக்கு மேல் கழிகின்ற ஒவ்வொரு நாளுக்கும் கட்டாரின் அரச சட்டத்தின்படி தண்டப் பணம் செலுத்த வேண்டும், அல்லது சிலவேளைகளில் மூன்று மாதங்கள் முடிந்த நிலையில் பொலிஸில் மாட்டிக் கொண்டால், வழக்குப் பதியப்பட்டு இன்னும் பல கெடு பிடிகள் நடாத்தப்படும்.
. . e.
பெரும்பாலும் Free Visaவில் வருகின்றவர்கள் ஏதாவது ஒரு வேலையை ஏலவே அமைத்துவிட்டுத்தான் வருவார்கள். அல்லது அவர்களது உறவினர்கள், நண்பர்கள் வேலை பார்த்து வைப்பார்கள். அதுவும் இல்லாவிட்டால் குறிப்பிட்ட மூன்று மாதங்களுக்குள் எப்படியும் ஏதாவது ஒரு வேலையை தேடிக்கொள்ள முடியும். அந்தளவுக்கு கட்டாரின் Lusoffi
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 40

யாட்களின் வெற்றிடம் அதிகமாகவே இருக் கின்றது.
ஆனால் FreeVisaவில் இங்கு வந்து சேரும் அனேகமானவர்களுக்கு இந்த சில அடிப்படையான சட்ட விதிகள் தெரியாமை யினால் அவர்கள் பெரும் சிரமங்களையும், கஷ்டங்களையும் அனுபவித்த சந்தர்ப்பங்
களும் அதிகமாக இங்கே நடந்து கொண்டு
தான் இருக்கின்றன.
பர்சாத்தின் வேலை விடயமாக நான் பல இடங்களில் சொல்லி வைத்திருந்தேன். தெரிந்த நண்பர்கள், தெரிந்த கம்பனி என்று பலரிடமும் சொல்லி வைத்திருந்தேன். இருந்தும் ஒரு நல்ல வேலையை தேடிக் கொள்வது குதிரைக் கொம்பாக இருந்தது. இறுதியில் மிகுந்த அலைச்சலுக்கு மத்தி uSlsi) City CentregÉQ6Äo ed l6iT6IT 5p(Ob J56ğ60I பொருட்களை விற்பனை செய்யும் ஒரு கடைக்கு விற்பனைப் பிரதிநிதியாக வேலை செய்வதற்கான ஒரு வாய்ப்பு பர்சாத்திற்கு கிடைத்தது. அந்த கடையின் உரிமையாளர் (அரபி) வீசாவுக்கான ஏற் பாடுகளைச் செய்து தருவதாகக் கூறினார். மெய்யாகவே அந்த வேலை தம்பிக்குக் கிடைப்பதற்கு கேரளத்தைச் சேர்ந்த ஒரு நண்பரும், பிலிப்பைன்சைச் சேர்ந்த ஒரு நண்பருமே காரணமாக இருந்தார்கள்.
கேரளத்தைச் சேர்ந்த அந்த நபர் அந் தக் கம்பனியின் முகாமையாளர் ஆவார். பிலிப்பைன்சைச் சேர்ந்த அடுத்த நபர் அந்த நிறுவனத்தின் மன்தூப்’ ஆவார். மன்தூப் என்றால் வெளிநாட்டிலிருந்து வேலை நிமித் தமாக கட்டார் நாட்டுக்கு யாராவது சென் றால், கட்டார் நாட்டின் சட்டப்படி சில விடயங் களை கட்டாரிலுள்ள வெளிநாட்டு அமைச்சு, தூதராலயம் போன்றவற்றில் செய்து
ஆவணப்படுத்த வேண்டும். எனவே, ஒவ் வொரு நிறுவனமும் தனது நிறவனத்தின் வேலை நிமித்தமாக ஒரு மன்தூப்பை வைத்துக் கொள்வார்கள். பெரிய நிறுவனங் கள் ஒன்றுக்கு மேற்பட்ட மன்துTப்"களை வைத்துக் கொள்பவர்களும் உண்டு.
எப்படியோ, எனக்கு கொஞ்சம் 'ரிலாக்ஸ்’ ஆக இருந்தது. தம்பிக்கு வேலை கிடைத்துவிட்டது. ஆனால், சில ஆவணங் களை கட்டாரிலுள்ள இலங்கை தூதரகத் தில் உறுதிப்படுத்திக் கொண்டு சென்றால் தான் பர்சாத்திற்கான புதிய விசாவை எடுக்க முடியும் என்று அந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மன்துாப் என்னிடம் கூறினார். அவர் கூறிய அந்த அத்தாட்சிப் படுத்தும் கடிதத்தைப் பெற்றுக் கொள்வது மிக இலகுவான விடயமாகவே நான் கருதினேன். இன்னும் இரண்டு நாளில் அதனைப் பெற்று வருவதாக கூறிச் சென்று விட்டேன்.
அடுத்த நாள் தூதரகத்துக்கு நண்பர் ஒருவருடன் வாடகை டாக்ஸி ஒன்றைப் பிடித்துக் கொண்டு சென்றேன். வரவேற்பு மேசையில் ஒரு இலங்கையர்தான் இருந் தார். ஒரு பெண்மணியை வைத்து மிரட்டிக் கொண்டிருந்தார். மற்றைய தூதராலயங் களைப் போல பெரிதாக எந்தவிதமான பாது காப்புக் கெடுபிடியும் அங்கே இருக்க வில்லை. ஒரேயொரு கட்டாரிய பொலிஸ் உத்தியோகத்தர் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தார். எந்தவித அலங்காரமும் அல்லது அழகியல் தன்மையும் அற்ற ஒரு கட்டிடத்தில் ஏழ்மை நிலையில் இருந்தது நமது தூதுவராயலயம்.
மெதுவாக வரவேற்பு மேசையில் அமர்ந் திருந்த அந்த நபரை அணுகி விடயத்தைக்
மல்லிகை ஒக்டோபர் 2008 率 41

Page 23
கூறினேன். அவர் என்னை சட்டை செய்வ தாகத் தெரியவில்லை. மாறாக அந்தப் பெண் ணுக்கு புத்திமதி சொல்லிக் கொண்டிருப்பதி லேயே நேரத்தை கழித்துக் கொண்டிருந்தார். அவர் என் பக்கம் கவனத்தை செலுத்தும் மட்டுக்கும் காத்திருந்தேன். ம்ஹம்ை. இல்ல வேயில்லை! அவர் அசைவதாகயில்லை. சுற்றுமுற்றும் கொஞ்சம் பார்வையை சுழல விட்டேன். கூட்டம் கூட்டமாக ஆண்களும், பெண்களும் அந்த வரவேற்பறை முழுவதும் விரவியிருந்தனர். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பிரச்சினைக்காக இங்கே வந்து குந்தி யிருக்கின்றவர்கள் என்பது புரிந்தது.
சுமார் அரைமணி நேரம் கடந்து போயி ருந்தது. அந்த வரவேற்பாளர் என் பக்கம் திரும்பினார். நான் விடயத்தைக் கூறினேன். அவர் முன் அறையில் இருக்கின்ற ஒரு பெண் அதிகாரியைச் சந்திக்கும்படி கூறி னார். அங்கு சென்று பார்த்தபோது, அந்த பெண் அதிகாரி செல்போனில் யாருடனோ அறுத்துக் கொண்டிருந்தார். நிமிடங்கள் கரைந்தன. என்னால் பொறுத்துக் கொள்ள (pçusîsü606). "EXCuse me Madem" என்றேன். என்னை நிமிர்ந்து பார்த்தார். விருப்பமேயில்லாமல் செல்போனை ஒப் பண்ணி தனது கைப்பையில் பத்திரப்படுத் திக் கொண்டார். என்ன என்பது போல எனது முகத்தை நிமிர்ந்து பார்த்தார். நான் விட யத்தைக் கூறினேன்.
ஒரு படிவத்தை என்னிடம் தந்து சுமார் 60 QRE 6061T) பெற்றுக்கொண்டார். அது இலங்கை நாணயப்படி சுமார் 1700 ரூபா வாகும். அதனை நிரப்பி, புதிய தொழில் வழங்குனரின் ஒப்பந்தப் படிவத்தை அத் துடன் இணைத்து உடனே கொண்டுவரும் படி கூறினார். "இதனை நீங்கள் சொன்னது போல் செய்தால் போதுமா? அல்லது வேறு
ஏதாவது தேவையா?" என்று கேட்டேன். அது பிரச்சினையில்லை. இதை மட்டும் கொண்டு வந்தால் போதும் என்று அவர் கூறினார்.
சுமார் இரண்டு மணிநேர அலைச்சலின் பின்னர் அவர் கூறியவாறு எல்லாவற்றையும் பூர்த்தி செய்து தூதுவராலயத்திற்குள் நுழைந்தேன். அப்பாடா! இத்தோடு என் அலைச்சல் முடிந்துவிடும் என்று மனசு சந் தோஷப்பட்டது. ஆனால், அந்தச் சந்தோஷம் நீடிக்கவில்லை. காரணம், ஏற்கனவே, நான் சந்தித்த அந்தப் பெண் அதிகாரி அரைநாள் விடுமுறையில் வீடு சென்றிருந்தார், அத் தோடு அவரின் கதிரையில் மற்றொரு ஆண் அதிகாரி வீற்றிருந்தார். அவரிடம் விடயத் தைக் கூறியபோது, அவர் எல்லாவற்றையும் எடுத்துப் பார்த்தார். பார்த்துவிட்டு, எல்லாம் சரி. ஆனால் ஏற்கனவே விசாவழங்கிய ஸ்பொன்சரிடமிருந்து ஒரு கடிதம் கொண்டு வர வேண்டும் என்று கூறினார். ஏற்கனவே இருந்த பெண் அதிகாரி இதனைக் கூற வில்லையே என்றேன். அதற்கவர், அவர் புதிதாக வேலைக்கு வந்தவர். அவருக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்றார். எனக்கு கடும் கோபம் ஏற்பட்டது. அடக்கிக் கொண்டேன். வேறு வழி இல்லையா? என்று கேட்டேன். அதற்கவர் "இருக்கு ஆனால் கொஞ்சம் செலவாகும்" என்றார். மனிதாபி மானமே இல்லாமல், அந்த அதிகாரி மிகக் கேவலமாக பிச்சை கேட்பது போல அப்படிக் கேட்பார் என்று நான் கனவிலும் நினைக்க வில்லை. இருந்தும் என்ன செய்ய? அந்த நிலையில் ஒன்றும் செய்ய முடியாத நிலை. அதிகாரக் கதிரையில் அமர்ந்து கொண்டு பொதுமக்களை சுரண்டும் வர்க்கம் உள் நாட்டில் மட்டும்தான் இருக்கின்றது என்று பார்த்தால் அவை வெளிநாடுகளிலும் வெவ் வேறு வடிவத்தில் ஏழைகளையும், அப்பாவி
மல்லிகை ஒக்டோபர் 2008 $ 42

களையும், பாதிக்கப்பட்டவர்களையும் சுரண்ட முயற்சி செய்துகொண்டுதான்
இருக்கின்றன.
அந்த அதிகாரிக்கு பணம் கொடுத்து கடிதம் பெறுவதிலும் ஏலவே, Visa வழங்கிய ஸ்பொன்சரிடம் எப்படியாவது கடிதத்தை பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையுடன் வெளி யேறினேன். அங்குள்ள எந்த அதிகாரியும் இலங்கையர்களின் பிரச்சினைகளில் கவன மெடுத்து நடப்பதாய்த் தெரியவில்லை. எப் போதும் எரிந்து விழுகின்றவர்களாகத்தான் இருக்கின்றார்கள். இவ்வாறான முதலை களை இலங்கை அரசும் உயர் அதிகாரி களாக, மக்கள் சேவையாளர்களாக இங் கிருந்து பதவி வழங்கி அங்கே அனுப்பி வைக்கின்றது. அங்கே இவர்களை கேட்ப தற்கு யாருண்டு? நினைத்த மாதிரி ஆட்டம் போடாமல் வேறு என்னதான் செய்வார்கள்?
என் மனதில் மீண்டும் சுமை எப்படி இந்தப் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வந்து தம்பியை பிரச்சினையில்லாமல் வேலைக்கனுப்புவது? எனக்கும் வேலையில் கவனம் செல்லவில்லை. எம்பசியில் உள்ள வர்களை நினைத்தால் கோபம் கோபமாக வந்தது. முதலாவது Visa தந்த ஸ்பொன்சர் லண்டனுக்குப் போய்விட்டதாக வேறு செய்தி வந்தது. இந்த நேரத்தில்தான் அந்த நிறு வனத்தின் மன்தூப்' வேலை செய்கின்ற அந்த "பிலிப்பைன்ஸ் நாட்டு நண்பர் என் னோடு தொலைபேசியில் கதைத்தார். அவ ரிடம் நடந்த விடயம் எல்லாவற்றையும் கூறினேன்.
"(Parveen you don't worry. I'll help you) பர்வீன் நீ பயப்படாதே! நான் உனக்கு உதவி செய்கின்றேன். உங்கள் எம்பசி கடிதம் இல்லாமலேயே நான் Visa வுக்கு Apply பண்ணிப் பார்க்கின்றேன்.
வெளிநாட்டு அமைச்சின் சில அதிகாரிகளை எனக்குத் தெரியும். அதன் மூலம் ஏதாவது செய்யலாம்' என்றார். சொன்னது போல் செய் தும் காட்டினார். ஆம், மேலதிக செலவுகள், அலைச்சல்கள் இன்றி புதிய Working Visa 606 sibS is sit is 96 lir எடுத்து ஏனைய நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவேற்றித் தந்தார்.
எனது நண்பன் அமீர் இலங்கையில் நற்பிட்டி முனையைச் சேர்ந்தவன். அவன் Free Visaவில் வந்துதான் எமது நிறுவனத் திற்கு வேலைக்குச் சேர்ந்தான். அவன் அந்த எம்பசிக் கடிதம் எடுப்பதற்கு சுமார் 2000 QRassir செலவழித்துள்ளான். (இலங்கை நாணயப்படி 60,000/-) இப்படி எத்தனையோ ஏழைகள், அன்றாடம் காய்ச்சிகள் அரபிகளா லும், நம் நாட்டு அதிகாரிகளாலும் சொல் லொணாத் துயரத்தை அனுபவித்து வரு கின்றார்கள்.
எமது கிராமத்தைச் சேர்ந்தவர், பிரபல சட்டத்தரணி என்.எம்.சஹிட், இப்போது வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஏஜென்சி களின் தலைவர் கட்டாருக்கு வந்திருந்தார். அவரைச் சந்தித்து இந்த விடயங்களை நாம் கூறினோம். மிகவும் கவலைப்பட்டார். எம்ப சிடருடனான கலந்துரையாடலில் இவற்றை கட்டாயம் தெரிவிப்பதாகவும் கூறினார். அவர் கட்டாரில் நின்ற இரண்டு நாட்களும் அவ்வப்போது நானும் எனது நண்பர்களும் அவரைச் சந்தித்து அங்குள்ள நிலவரங் களை தெளிவுபடுத்தினோம். அவர் வந்து சில மாதங்களில் நானும் ஊருக்கு வந்து விட்டேன். இப்போது அங்குள்ள நிலவரங்கள் பற்றி தெரியாது. இருந்தும் அந்த எம்பஸி அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற நடத்தை இன்னும் எனக்கு வேதனையாகவே இருக் கின்றது. (இன்னும் பேசுவேன்.)
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 43

Page 24
நினைவழியா நாட்கள் - 19
3வல் பழுத்த பல4
- பரன்
செனை மூக்கைத் துளைத்தது. நல்ல மணமாக இருந்தது. அடுப்படிக்குள் எட்டிப் பார்த்தேன். மூன்று வாண்டுகளும் ஒன்றாக உட்கார்ந்திருந்து எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள், சண்டை எதுவும் பிடிக்காமல். ஆச்சரியமாக இருந்தது! மூன்று பேரும் ஒன்று கூடினால் நிச்சயம் பிரளயம்தான். வழக்கு. விசாரணை என்றுதான் முடியும். இன்று நிலைமை மாறியிருந்தது. *
“ஜெகன். என்ன செய்கிறீங்க..?”
“வந்து பாருங்களேன், மாமா..!" என்றான், ஜெகன். உள்ளே நுழைந்ததும் பலாப்பழ வாசனை என்று புரிந்தது. ஒரு சின்னத் துண்டு பலாப் பழத்தை மூன்று பேருமாகப் பங்குபோட்டுச் சாப்பிட்டுக்
Հ.
கொண்டிருந்தார்கள்.
"சாப்பிட்டுப் பாருங்க மாமா..!” ஜெகன் நீட்டினான்.
தேவாமிர்தமாக இனித்தது. நல்ல முற்றிய பழம். மரத்திலேயே பழுத்த பழம் போலும்.
“இன்னும் கொஞ்சம் தரவா..?’ கேட்காமலேயே எடுத்து நீட்டினான், இரகு.
மறுபேச்சில்லாமல் வாங்கி வாயில் போட்டுக் கொண்டேன், சாப்பிடச் சாப்பிட சுவை கூடுவது போலிருந்தது.
“நல்லாயிருக்கா..?” மீண்டும் ஜெகன்தான் கேட்டான். “அருமையாக இருக்கு. யார் கொண்டுவந்தது?"
மல்லிகை ஒக்டோபர் 2008 率 44

“வேறு யார், மாமா. தாத்தா
தான்!”
இப்படியான விசேஷமான சாமான் களையெல்லாம் கொண்டுவருவது அப்பா தான். ஊர் முழுக்க அவருக்கு நண்பர்கள். “பண்டமாற்று அவரின் பிடித்தமான பொழுதுபோக்கு. தின் பண்டங்கள் என்றில்லை, புத்தகங்கள், பூமரக் கன்றுகள் என்று நண்பர்களில் வீடுகளில் இருந்து கொண்டு வருவார். அதபோல, இங்கிருந்தும் போகும்.
கழுவிய பின்னரும் கை மணத்தது. அப்படியொரு வாசனை. எங்கிருந்து கொண்டு வந்தாரோ தெரியவில்லை.
"மாமா..!" என்றான் ஜெகன்.
"என்ன...???
“ஒரு சின்னத்துண்டு தான் மாமா தாத்தா கொண்டு வந்தவர். ஒரு முழுப் பழம் கொண்டுவரச் சொல்லுங் களேன்..!"
"தாத்தா எங்கே..?”
“உலாத்துக்குப் போய்விட்டார்." என்றான் குமரன்.
அப்பாவின் வழக்கமான உலா நேரம் அது. மாலை நாலு மணியாகி விட்டால் சைக்கிளில் ஏறிக் கிளம்பி விடுவார். திரும்பிவர ஏழு மணியாகி விடும். வாசிகசாலையில் பத்திரிகை வாசித்து, நண்பர்களுடன் ஊர்ப்புதினம் கதைத்து வர நேரமாகிவிடும்.
பழம் யாரிடம் வாங்கி வந்தாரோ தெரியவில்லை. இரவு வரும்போது
கேட்டு, இன்னொன்று வாங்கிவரச் சொல்ல வேண்டும் என நினைத்தேன்.
மாமி வீட்டு ஞாபகம் வந்தது. அங்கு நிற்கும் பலா மரத்தின் பழமும் சுவையானதுதான். ஆனால், இவ்வளவு ருசி அதற்குக் கிடையாது.
‘மாமி வீட்டு பலா மரத்தின் பழமும் நல்ல இனிப்புத்தான்." என்றேன்.
“எந்த மாமி?” என்றான் இரகு.
“தாத்தாவின் தங்கச்சிதான்."
“அங்கை போய் ஒரு பழம் பிடுங்கி வாருங்கோவன்!” என்றான் ரகு. எதை யும் உடனே செய்துவிட வேண்டும் என்று துடிப்பவன், அவன்.
“போடா! உனக்கு எப்போதுமே அவசரம்தான்.'
"இல்லை. மாமா, இப்ப பலாப்பழ சீசன்தானே.”
அவன் சொன்னதிலும் ஞாயம் இருந்தது. சீசன் முடிந்தால் பழம் கிடைக்காது. ஆனால் மாமி விடு போவ தென்றால் ஐந்து மைல்கள் சைக்கிள் உழக்க வேண்டும்.
“வாற சனி போய்ப் பார்க்கிறன்."
அடுத்த சனிக்கிழமை சைக்கிளை எடுத்தபோது,
“எங்கே போகிறாய்...?? என்றார்
அப்பா.
‘மாமி விட்டுக்கு."
மல்லிகை ஒக்டோபர் 2008 45

Page 25
"கொஞ்சம் பொறு! நானும்
வாறன்."
திக்கென்றது. அப்பாவுடன் கூடப் போனால் போய்ச் சேர்ந்த மாதிரிதான். போகும் வழியெல்லாம் அவரின் நண்பர்களின் வீடுகள். ஒவ்வொரு படலையாக நின்று கதைத்துப் போக வேண்டும். அவருடைய நடைமுறை அது. போதாதற்கு தெருவெங்கும் போவோர் வருவோர் எல்லாரும் குசலம் விசாரிப்பார்கள். அவர்களுட னும் நேரம் போய்விடும்.
“இல்லை! கொஞ்சம் அவசரமாகப் போகலாம். என்று பார்க்கிறன்."
"சனிக்கிழமை உனக்கு லிவுதானே? நான் உன்னை மினைக் கெடுத்த மாட்டன்." என் யோசனை அவருக்கு
விளங்கியிருக்க வேண்டும்.
சொன்னது போலவே, வழி வழியே பிரேக் போடாமல் வந்தார். இருந் தாலும் கனகசிங்கத்தார் தன் வீட்டு வாசலில் நின்றது பிழையாகப் போய் விட்டது.
“என்ன மாஸ்ரர் நிக்காமல் போறி யள்.?” ரோட்டுக்குக் குறுக்கே வந்து மறித்தார்.
'தங்கச்சி வீட்டை ஒருக்காப் போறம். இவனுக்கு நிக்க நேர மில்லையாம்."
"பரவாயில்லை. ஒருவாய் தேத் தண்ணி குடிச்சிட்டுப் போகலாம் தானே?
அப்பாவின் பார்வை என்மேல் விழுந்தது. கனகசிங்கத்தார் அப்பாவின் நீண்ட நாளைய நண்பர். தட்டிக் கழிப் է 1351 முறையில்லை என்று பட்டது. நானே கேற்றைத் திறந்து உள்ளே நுழைந்தேன்.
சைக்கிள் உழக்கிய களைப்புக்கு எள்ளுப்பாவும், பிளேன்ரீயும் இதமாக இருந்தன. வெளிக்கிடும் போது, கனக சிங்கத்தாரின் மனைவி ஒடி வந்தா.
"மாஸ்ரர் அண்டைக்குக் கொண்டு வந்து தந்தியள் பலாப்பழத் துண்டு. அருமை, நல்ல திறமான பழம். இவரட்டை சொன்னனான், உங்களுக் குச் சொல்லச் சொல்லி."
"ஒம், மாஸ்ரர் அப்படியொரு ருசியான பழம். நாங்கள் சாப்பிட்ட தேயில்லை...! கனகசிங்கத்தாரும் ஆமோதித்தார்.
வீட்டிற்கு வந்த பலாப்பழத் துண் டில் ஒரு பகுதி இங்கேயும் போயிருக் கின்றதென்பது விளங்கியது. வேறு யார் யாருக்குப் போய்ச் சேர்ந்ததோ • தெரியவில்லை.
மாமி வீட்டில். பெரிதாகப் புதினம் எதுவும் இல்லை. அப்பா இப்போது அடிக்கடி வருவதில்லை என்று மாமி குறைபட்டுக் கொண்டா.
"ஏன் போனகிழமை வந்தன்."
'முந்தியெண்டால் கிழமைக்கு இரண்டு தரமாவது வருவியள்...!" மாமியின் பேச்சில் ஆதங்கம் இருந்தது.
மல்லிகை ஒக்டோபர் 2008 率 46

"இவ்வளவு தூரம் இப்ப எனக்குச் சைக்கிள் ஒடேலாது..!"
"ஏன். வழியிலை அஞ்சாறு இடத்திலை நிண்டுதானே வருவியள்.?" மாமியின் மறு மொழி எனக்குச் சிரிப்பை வரவழைத் தது. முற்றத்தில் எட்டிப் பார்த்தேன். பலாமரம் பெரிதாகக் கிளை பரப்பி முற் றத்தை மூடி நின்றது. உயரத்தில் பலாக் காய்கள் முள்விரிந்து தொங்கின.
"சரியான உயரத்திலை கிடக்கு. பிடுங்க ஆளில்லாமல் அலையிறம். ஆரி ருக்கினம் இந்த வீட்டிலை ஏறிப் பிடுங்க ? " மாமி குறைப்பட்டுக்
கொண்டா.
"அதுதான். இந்த முறை பழம் அனுப்ப இல்லையோ..?" மெதுவாகக்
கேட்டேன்.
“என்ன சொல்லிறாய்...? போன கிழமை ஒரு பழம் அனுப்பினான் தானே. நல்ல பழம். வேரிலை பழுத்தது. இந்த முறைதான். இப்பிடி இரண்டு காய் வந்தது. ஒண்டை நாங்கள் எடுத்துக் கொண்டு, மற்றதை அண்ணனிட்டை அனுப்பி விட்டனே!"
வீட்டில் சாப்பிட்ட பலாப்பழத் துண் டின் ஞாபகம் வந்தது. தாரும் நினைவில் வந்து போனார். அப்பாவின் முகத்தைப் பார்த்தேன். மெல்லிய முறுவல் இருந்தது.
கனகசிங்கத்
"இவனும் சாப்பிட்டவன். மறந்து போனான் போலை!" என்றபடி அப்பா
சிரித்தார்.
/
ܢܠ
ரலிகலிை கதைசெந்தி கதவிைருது 2007 - 2008 விருது பெறும் சிறுகதைகள்
வைகறை மேகங்கள் - கந்தர்மடம் தி. மயூரன் - தினக்குரல் - 23.6.2007 இது ஒரு அழிவுக்காலம் - ஆரையம்பதி ஆதங்கராசா - தினக்குரல் - 21.10.2007 சகுனங்கள் - கனகாம்பிகை கதிர்காமன் - வீரகேசரி - 2.12.2007 மதமாற்றம் - கே.ஆர்.டேவிட் - தினக்குரல் - 6.1.2008 பள்ளிக்கூடம் - மட்டுவில் ஞானகுமாரன் (ஜேர்மனி) வீரகேசரி - 2.3.2008 பெரியத்தான் - சந்திரகாந்தா முருகானந்தன் - தினக்குரல் - 2.3.2008 அதுகும் சரிதான் - மா.பாலசிங்கம் - தினக்குரல் - 23.3.2008 வேடத்தனம் - மல்லிகை சி.குமார் - தினக்குரல் - 30.3.2008 வாழத்துடிக்கும் இதயங்கள் - ந.பாலேஸ்வரி - தினக்குரல் - 22.6.2008 . அதிசயம் - தேவகி கருணாகரன் (அவுஸ்திரேலியா) . வீரகேசரி - 20.7.2008 . ஒப்பாரி கோச்சி - மு.சிவலிங்கம் - வீரகேசரி - 13.7.2008
துயரம் தோய்ந்த பயணத்திலே - எஸ்.டேவிட் - தினக்குரல் - 20.7.2008 . அகதி மணம் - வெள்ளை மணாளன் - தினக்குரல் - 6.3.2008 . யாதும் ஊரே - செ.குணரெத்தினம் - வீரகேசரி - 27.7.2008 ノ
N
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 47

Page 26
உலகக் கடிகாரத்தில் சூரிய முள் ஒருமணியைக் காட்டிக் கொண்டிருந்தது. கொழுந்து நிறுத்து முடித்த சின்ன கண்டக்டர் மலைக் குறுக்கில் ஏறிக்கொண்டிருந்தார். தன் குவாட்டர்ஸை நோக்கி நெஞ்சு முட்டும் குறுக்கில் ஏறிக் கொண்டிருந்தவர் சற்றே தன்னையான அந்த சவுக்குமர நிழலில் வந்து நின்றார். வாயினால் ஊதுவதைப் போல குளிர்ந்த காற்று இதமாக விசியது. அந்தக் குறுக்குப் பாதையில் ஏறிவரும் எவரும் அந்த இடத்தில் நிற்காமல் போகமாட்டார்கள். அப்படி நிற்பவர்கள் பள்ளத் தாக்கில் இருந்து ஏறிவரும் குளிர்ந்த காற்று முகத்தில் படும்படி திரும்பி நிற்கவும், காலடியில் விரிந்து கிடக்கும் பள்ளத்தாக்கையும், எதிரே ஓங்கி உயர்ந்து அரண் செய்யும் மலைமுகட்டையும் பார்க்காமல் போக மாட்டார்கள். போகவும் முடியாது. இவரும் நின்றார். பழக்கப்பட்டவர்களையே அந்த இடம் வசீகரிக்கும் போது புதிதாய் வந்த இவர் அந்த இடத்தில் நிற்பது வியப்பொன்றுமில்லை.
அவர் இந்தத் தோட்டத்திற்கு வந்து நாலைந்து நாட்கள் ஆகின்றன. இதற்கு Eğıyladılı முன் அவர் வேலை பார்த்தது ஒரே டிவிஷனைக் கொண்ட சிறிய தோட்டம். அதேபோல நான்கு டிவிஷன்களைக் நீங்கில்...! கொண்ட பெரிய தோட்டம் இது. மிக வும் உயர்ந்த இடத்தில் வந்து நிற்கிறார் அவர். சற்று முன் அவர் கொழுந்து - குடந்தை பரிபூரணன் நிறுத்துக் கொண்டிருந்த இடம் உள்ளங் கையாக சுருங்கிக் கிடக்கிறது. கீழே பச்சை வெல்வெட் போர்த்திய தேயிலை மலைச் சரிவுகளில் செம்மண் சாலை தங்க ஜரிகையாக நெளிந்தும் வளைந்தும் காட்சியளித்தது. ஆங்கில 'வை எழுத்துப் போல மலை இடுக்குகளில் இருந்து ஓடிவந்த சிற்றருவிகள் வெள்ளிக் கம்பிகளாய் இணைந்து பள்ளத்தில் ஓடி மறைந்தன. மலைச்சரிவுகளில் வீடுகளும் கூரைத் தகரங்களும் தூரத்தில் தெரியும் பதுளை நகரமும் வெயிலில் மின்னிக் கொண்டிருந்தன. மோதிரத்தில் பதித்த வைரக்கல்லாய் எதிரே மலை உச்சியில் "ஸ்டோர் காட்சியளித்தது. ஸ்டோரில் இருந்து எழுந்துவரும் B.O.P தேயிலையின் மணம் குளிர்காற்றில் கரைந்து நாசிகளில் நுழைந்து மனமெங்கும் இன்ப பரவசமாய் நிறைந்து சென்றது. இயற்கை எழிலை இனிய நறுமணத்துடன் கூடிய இளந்தென்றலுடன் ரசித்து அனுபவித்தவர், குறுக்கில் ஏறினார்.
அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த குவார்ட்டர்ஸ் புதுப்பிக்கப்படாமலே இருந்தது. பங்களாவைச் சுத்தப்படுத்தி வைட் வாஷ் செய்து புதிதாக வருபவர்க்கு கொடுக்கப் படல் வேண்டும் என்பது தோட்டத்து நியதி. ஆனால், ஏதோ காரணங்களினால் அந்த வேலை தடைபட்டுப் போய்விட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் கலர் வாஷ் செய்து காலையில் செல்லும் காலேஜ் மாணவி போல பளிச்சென ஆக்கித் தருவதாகப் பெரியவர் வாக்களித்திருக்கிறார். விட்டு வேலைகள் முடிந்த பிறகே இவர் குடும்பத்தை
மல்லிகை ஒக்டோபர் 2008 & 48

அழைத்துக் கொண்டு வரவேண்டும். அது வரை தனியாளாக இங்கே தங்கிக் கொள்ளலாம் என முடிவெடுத்திருந்தார். மூன்று வேளையும் சாப்பாடு பெரியவர் அனுப்பி வைப்பதாக கூறியிருந்தார்.
யூகலிப்டஸ் மரநிழலில் மெளனமாக வீற்றிருந்த பங்களாவின் முன் கதவைத் திறந்தார். உள் அறையில் பெரிய மேசை யும், நான்கு நாற்காலிகளும், மேசைக்கு மேல் தண்ணீர் ஜக்கும் ஒருசில தட்டு களும், தட்டுகளுக்கடியில் நீளமான மீசை யுடன் ஆராய்ந்து கொண்டிருக்கும் பெரிய கரப்பான் பூச்சிகளும் அவரை - வரவேற்றன. மூடியே கிடந்த வீட்டில் இருந்து ஒருவித நெடி மூக்கைத் துளைத்து மூச்சை வெளியே தள்ளியது. டவல் எடுத்து முகம், கழுத்து என வியர் வைப் பிசுக்கை அழுத்தித் துடைத்தார். மரத்தில் இருந்து உதிரும் நவசவுக்கு இலை ‘சர்’ என்ற ஒலியுடன் கூரைத் தகரத்தில் வழுக்கிக் கொண்டோடுவது துல்லியமாகக் கேட்டது. சாப்பாடு எடுத்துவரும் ஆள் இன்னும் வரவில்லை. அதுவரை சற்று ஓய்வாகப் படுத்திருக்க லாம் என உள்ளே சென்றார். சப்பாத்தை கழற்றி விட்டு, சொக்ஸ் கால்களோடு கட்டிலில் சாய்ந்தார். எதிரே, ஜன்னலுக்கு வெளியே வாங்கியில் தேயிலை வேர் களின் இடுக்குகளில் அடைந்திருந்த கோனாறு பூச்சிகள் ஸ்பிரிங் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தன. கண்களை மூடி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் நேரத்தில், தட்டப்பட்டது என்று கூறுவதைவிட இடிக்கப்பட்டது என்றே கூறவேண்டும். கதவுக் கண்ணாடிகள் உடைந்து விழுந்து விடும் அளவுக்கு கோடை இடியாக பட
முன் கதவு தட்டப்பட்டது.
படத்த சத்தத்தைக் கேட்டு அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தார். நிச்சயமாக இது சாப்பாடு எடுத்துவரும் ஆளின் தட் டல் அல்ல. அப்படி என்றால் இந்த கோடை இடி தட்டல் யாருடையது? அது வெளியில் நிற்பவனின் அவசரத்தையா, ஆத்திரத்தையா காட்டுகிறது. என்ன எழவோ கதவு கண்ணாடி உடைந்து தொலைந்து விடப்போகிறது. முதலில் கதவைத் திறப்போம் என்று ஒடிப் போய்க் கதவைத் திறந்தார். திறந்தவர் திகைத்து இரண்டடி பின்னால் நகர்ந்தார். கதவு அகலத்துக்கு நிலை உயரத்துக்கு கறுத்த ஓர் ஆசாமி கரடியாய் நின்று கொண்டிருந்தான்.
“மம கவ்த கியலா உம்பட்ட தன்ன வாத பாங்." ஒருமையில் அதுவும் “டா” போட்டு தெறித்து விழுந்த அந்த அதட்டலைக் கேட்டு அவர் ஆடிப் போய் விட்டார். ஐயா, சார், தொரே, மாத்தியா” என்றே கேட்டு பழக்கப் பட்டவருக்கு, யாரோ ஒரு காட்டு மிராண்டிப் பயல் 'டா' போட்டுப் பேசியதை அவரால் ஜீரணிக்க முடிய வில்லை. தாங்கிக் கொள்ள முடிய வில்லை. உஷ்ணம் தலைக்கேறியது. கட்டுப்படுத்திக் கொண்டார். நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு.
"தோட்டத்துக்கு புதுசா. நா யாருன்னு தெரியுமா..? யக்கடயான்னா புலிகூட மியானு கத்தும். நீ செஞ்சிருக் கிற காரியத்துக்கு அப்படியே நசுக்கித் தேய்த்துப் புடுவேன்.” காலால் ஆக் ரோஷமாக தரையில் அரக்கித் தேய்க் கிறான். "நீயில்ல, ஓந்தொரை, கண் டாக்கு போலீசு, எஸ்.ஐ. ஒருத்தரும்
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 49

Page 27
ஏம் மசிரக் கூடப் புடுங்க முடியாது. ஒரு செக்கண்ட் தான். சொன்னேன் னாப் போதும், இந்தக் கல்சுவர் வீடு எல்லாம் ஊதித்தள் விடுவானுக. ஜாக் கிரதையா இருந்துக்க.." என்றவாறு ஆவேசமாக இறங்கிச் செல்கிறான். செல்லும் போதே பூந்தொட்டிகளை உதைத்து உடைத்துக் கொண்டே செல் கிறான். புயலில் அடிபட்டவரைப் போல கலங்கி நிற்கிறார் அவர். மெது வாகக் கதவைத் தாழிட்டு விட்டு வந்து மேசையில் சாய்ந்து கால்களைப் பின்னிக்கொண்டார். பெருவிரல் ஆள் காட்டி விரல் நகத்தை நிமிண்டிக் கொண்டிருக்க யோசித்தார்.
யாரிவன்? இவனுக்கும் எனக்கும் என்ன பிரச்சினை. என்ன பகைமை வந்து மூன்று நாள்தான் ஆகிறது. புதிதாக வந்திருக்கும் தமிழனை தலையில் தட்டி அடக்கி
உள்ளது.
வைக்க அனுப்பப்பட்டிருப்பானா? 'உம்ப கெராப்பு வெடட்ட' என்று ஏதோ கூறினானே. இந்த ஒரிரு நாட் களில் அப்படி ஒன்றும் தான் செய்ய வில்லையே. தமிழர்களோடு வேலை செய்யும் தொழிலாளர்களிடம் கடுமை யாக நடந்து கொள்ளவில்லையே. குற்றங்குறை கண்டுபிடித்து வீட்டுக்கு விரட்டிவிடவில்லையே. ஆள் தெரி யாமல் வந்து ஏதோ கத்திவிட்டுப் போகிறானேர் என நினைத்துக் குழம் பிப் போயிருந்த போது கதவில் மெல் லிய தட்டலும் "ஐயா” என்ற குரலும் கேட்டு கதவைத் திறந்தார். கேரி யருடன் நின்றான் சாப்பாடு எடுத்து வரும் ஆள்.
"ஐயா யக்கடயா வந்து கத்திட்டுப் போறானே. என்னய்யா பிரச்சனை. அவன் பொல்லாத ரவுடிப் பயலாச்சே."
'அவன ஒனக்குத் தெரியுமா? அவன் யாரு...? அவன் பொண்டாட்டி அல்லது அக்கா தங்கச்சி யாராவது ஏம் மலையில வேலை செய்யிராளுகளா..? ஒனக்குத் தெரியுமா?"
“அவனுக்கு பொண்டாட்டி புள்ள குட்டி கூடப் பொறந்தவங்க யாருமே அவன் ஆத்தா கெழவி ஒன்று ஸ்டோர்ல குச்சு
இல் லிங்கையா.
பொறுக்கிக்கிட்டு கெடந்தாங்க. ஒருறா
கெழடி மண்டைய போட்டுரிச்சிங்க.
கெழவி மண்டைய போடலிங்க.
கெழவி மண்டையில இவன் போட்
டுட்டான் ஒரு போடு, குடிக்க சல்லி
கொடுக்கல்லனு! அதோட படுத்தவ
தான். போய்ச் சேர்ந்திட்டா. அதுக்குப்
பொறகு இவன் தோட்டத்துக்கு
வர்ரதே இல்ல. காடாறு மாதம் நாடறு
மாதம்னு சொல்வாங்களே,யூரீ அப்படி
இவன் ஜெயிலாறு மாதம் வெயிலாறு மாதம்னு ஆகிட்டான். கட்டு சாரயம்
காச்சிறதுதான் அவனோட பொழப்பா பொயிரிச்சிங்க. ஜெயிலுக்குப் போறது
அவன் மாமியா வீட்டுக்கு போற
மாதிரிங்க. கொலை பாதகத்துக்கு அஞ் சாத பயங்க. அய்யா நீங்க பெரியவர் கிட்ட சொல்லி துரையிட்ட சொல்லச்
சொல்லிடுங்க. ராத்திரில வேற
தனியா இருப்பீங்க. வீட்டை கொளுத்
தினாலும் கொளுத்திடுவான்..!"
f
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 50

"அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று அவன் தலையில் தட்டி அடக்கிவிட்டு “போய் தண்ணீர் கொண்டு வா!" என்றார். சாப்பிடும் மனநிலையில் அவர் இல்லை. இருந்த போதும் ஏதாவது சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் அவ ருக்கு. மீண்டும் மலைக்குப் போய் வேலை வாங்க வேண்டுமே! அரக்கப் பரக்க சோற்றை அள்ளிப் போட்டுக் கொண்டு மலைக் குறுக்கில் இறங்கும் போதே, அவர் மனக்கணக்கில் ஒரு தீர்மானம் இறங்கிக் கொண்டிருந்தது.
அந்திக் கொழுந்து நிறுத்துப் பேர் போட்ட கையோடு செக்றோல் புத்த கங்கள் ஆகியவற்றை பெரியவர் வீட் டிற்கு அனுப்பிவிட்டு, செல்ல பஸ் ஏறிவிட வேண்டும் என
பதுளைக்கு
ர்மானித்துக் கொண்டார்.
தது
இவரது நண்பர் ஒருவர் டவுணில் ஹோட்டல் வைத்து நடத்துகிறார். அவ ருடைய ஒரே மகன் கறிவேப்பிலைக் கன்றாகப் பொத்திப் பொத்தி வளர்ந் தவன், கொழும்பில் பல்கலைக் கழ கத்தில் படித்துக் கொண்டிருந்தவன் காணாமல் போய் விட்டான். ஒரு நாலு நாள் லிவில் பெற்றோரைப் பார்க்க கிளம்பி வந்தவன்தான். அந்த நேரம் பார்த்து கொழும்பில் எங்கோ குண்டு வெடித்திருக்கிறது. பாதுகாப்புப் படை யினரின் சைரன் ஒலி எழுப்பிய வாகனங்கள் வீதியெங்கும் அலறிக் கொண்டோட, பயந்துபோன மக்கள் பாதுகாப்பிற்காக சிதறி ஒடி அலை மோத, ஒரே அல்லோலகல்லோலப்
பட்டுப் போனது கொழும்பின் முக்கிய விதிகள். அந்தக் கொந்தளிப்பில் இவன் எங்கோ காணாமல் போய்விட்டான். பயந்து பயந்து பல இடங்களிலும் தேடி விசாரித்து நொந்து நூலாகிப் போன அவன் தந்தை காவல் துறையினரிடமும் ஒரு புகார் மனு கொடுத்து விட்டார். படைமுகத்தில் ஒப்பாரி ஏது. குடும் பமே சின்னாபின்னப்பட்டுப் போனது. குடும்பத்தின் நிலையை விவரிக்க எந்த மொழியிலும் உள்ள வார்த்தைகளுக்கு வலிமை கிடையாது. எண்ணெய் இன்றி தானாக அணைந்த தீபம் போல குடும்பமும் அணைந்து புகைந்து போனது. ஹோட்டலைப் பற்றி சொல்லவா வேண்டும்! நண்பருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் ஆறுதல் சொல்லி தேற்ற வேண்டும். ஒய்வு கிடைக்கும் போதெல்லாம் போய் இருந்து பேசிவிட்டுத்தான் வருவார். இப்போது அவருக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கு மாற்று மருந்தாக நண்ப ரிடம் போய் பேசிக்கொண்டிருக் கலாமே என்று தோன்றியது. இரவு அங்கேயே தங்கிவிட்டு காலையில் முதல் பஸ்ஸில் ஏறினால் பிறட்டுக் களத்துக்குப் போக சரியாக இருக்கும். இரவில் இங்கே தனித்திருப்பதை தவிர்த்துக் கொள்ளலாம். வந்த உடனே பிரச்சினை என்று பெரியதுரையிடம் போய் நிற்பதும் அவ்வளது நல்லதல்ல என்று எண்ணிக் கொண்டார்.
கொழுந்து நிறுப்பதற்கான ஆயத்த வேலைகள் ஆரம்பமான பொழுது சாப்பாட்டு ஆள் அவரிடம் வந்தான்.
மல்லிகை ஒக்டோபர் 2008 * 51

Page 28
"ஐயா ஒங்களுக்கு விஷயம் தெரி யுமா. இன்னைக்கு மத்தியானம் மட்டக் கொழுந்து மலையில பொம் பளைங்க வேலை செஞ்சிட்டிருந்தாங் கல்ல. அந்த மலையிலதான் பவுண்டர் ஒரத்தில ஒரு கானுல யக்கடயா கட்டுச்சாரயம் காச்சிறதுக்காக பானை யில் ஊறல் போட்டு வச்சிருக்கான் போல இருக்கு. பானைனா பெரிய வெள்ளாவி வைக்கிற பானை மாதிரி இருவது லிட்டர் கொள்ளுற பானை. கொழுந்தெடுத்துகிட்டு இருந்ததுல யாரோ ஒரு குட்டி அந்தப் பானைய ஒடைச்சிப் போட்டிருக்காளுக. அவ் வளவு ஊறல்களும் கானுக்குள்ளார ஒடிரிச்சாம். மட்டக் கொழுந்து மலையில நீங்க ஐயா இருந்திருக்
கீங்க. அதனால தான் ஒங்களை வந்து
கத்தி மெரட்டிட்டு போயிருக்கான் போல இருக்குங்க..!
ஏதோ மர்மம் விலகுவது போல உணர்ந்தார். "பானைய ஒடைச்சது
யார்னு தெரியுமா..?”
“தெரியலிங்க ஐயா. அது தெரிஞ்சு துன்னா யக்கடயா என்ன பண்ணு வான்னே சொல்ல முடியாதுங்க."
“சரி. அந்த விஷயம் அப்படியே கமுக்கமா இருக்கட்டும். கொழுந்து மலைப் பெண்கள் செய்த தாக வெளியில தெரிய வேணாம். கொழுந்தாட்கள் செய்ததாகத் தெரிந் தால் அவன் லயத்தில கலகம்
மட்டக்
செய்வான். அந்த நெரையில யாரு கொழுந்தெடுத்தாங்கன்னு கங்காணிய விட்டு விசாரிக்கச் சொல்லி எச்சரிக்கை
பண்ணச் சொல்லிடுறேன். மற்றப்படி இன்று இரவு எனக்கு சாப்பாடு வேண் டாம். நான் டவுனுக்கு பொயிட்டு காலைல வந்திர்ரேனு பெரியவர்கிட்ட மறக்காமல் சொல்லிடு.!" ஆட்கள் கொழுந்துக் கூடைகளுடன் ஒடி வரவே, அவர் வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கினார். பெரிய கங் காணியிடம் விஷயத்தைக் கூறி, இன்று மதியம் பவுண்டர் ஒரத்து நிறையில் கொழுந்தெடுத்தப் பெண்ணைப் பற்றி
விசாரிக்கச் சொன்னார்.
கங்காணி லயத்திலுள்ள பெண்கள் இருவர் அந்த நிரையில் கொழுந்தெடுத் திருப்பதை கங்காணி கண்டுபிடித்து விட்டார். அவர்களைக் குறிப்பிடாமல் பொதுவாக மட்டக் கொழுந்துப் பெண்களை நிறுத்தி விஷயதீதைக் கூறி எச்சரிக்கையாக இருக்கும்படி கூறி அனுப்பி வைத்தார்.
அன்று மதியம் பவுண்டர் ஒரத்தில் கொழுந்தெடுத்தப் பெண்கள் மேலே ஏறி வந்ததும், இவர் மட்டும் கீழே இறங்கிச் சென்றார். ஒதுக்குப்புறமான பவுண்டர் ஒரம்தானே யார் இறங்கி வந்து பார்த்து விடப் போகிறார்கள் என்று அலட்சியமாக கைக்கெட்டியதை மட்டும் கிள்ளிப் போட்டுக்கொண்டு ஏறிவந்துவிடுவார்கள் என்பது அவருக் குத் தெரியும். ஆகவே நிரைகளை நீவிக்கொண்டு கீழே இறங்கினார். மாடு மேய்ந்தது போல செடிகள் காட்சி யளித்தன. மட்டக் கத்தியால் அவற்றை வெட்டி விட்டு, முற்றலான இலை களை கிளைகளோடு ஒடித்தறித்து
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 52

விட்டு போனதை அவன் எங்காவது தூரத்தில் நின்று பார்த்திருப்பான்
போலிருக்கிறது. அதனால்தான் தன்மீது
சந்தேகப்படுகிறான் என அவர் எண்ணிக் கொண்டார். கொழுந்து நிறுத்து பேர் போட்டு முடியும் போதே கம்பிக் கட்டை வளைவில் 'கெந்த கொல்ல" ( பஸ் வருவது தெரிந்தது. பஸ் இவர் நிற்கும் இடத்திற்கு வந்து சேர எப்படியும் பத்து நிமிடமாகும். அதற்குள்ளாக பெரியவருக்கு அனுப்ப வேண்டிய செக்ரோல் புத்தகம் எல்லா வற்றையும் சாக்குக்காரனிடம் ஒப் படைத்து விட்டு கங்காணியிடம் பெண் களைப் பற்றி எச்சரிக்கை செய்து விட்டு, ஒரு சில பயணிகளுடன் பஸ் தடதட
பஸ்ஸில் ஏறிக்கொண்டார்.
வென்று தார் றோட்டில் லிப்ஃடில் இறங்குவது போல இறங்கி ஓடியது. ஈஸ்டன் ஹோட்டல் நண்பர் வீடு ரேஸ் கோர்ஸிற்கு எதிர்புறம் இருந்து பஸ்ஸை அந்த இடத்தில் பெல் அடித்து நிறுத்தி இறங்கிக் கொண்டார். நண்பர் வீட்டிற்குச் சென்று நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு இரவு அங்கேயே பேருக்கு ஏதோ சாப்பிட்டு லோவர் விதியில் உள்ள ஹோட்டலுக்கு சென்றார், மாடியில் படுத்துக்கொள் வதற்காக,
லோவர் வீதியையும், மறுபுறம் இருக்கும் மீன்மார்க்கட் வீதியையும் இணைத்துக் கட்டப்பட்டிருந்தது, ஹோட்டல். லோவர் விதியில் கடைக் குள் நுழைந்தால் உணவருந்திவிட்டு அடுத்த வழியாக மீன்மார்க்கட் வந்து விட்டால், அருகே பஸ் நிலையம்.
ஹோட்டலில் உள்ள மாடியறையில் படுத்துக்கொண்டால் காலையில் வெள் ளென எழுந்து பஸ் நிலையம் வருவது மிகச் சுலபம். கல்லாவில் இருந்த மெனேஜரிடம் கூறிவிட்டு மாடிக்குச் சென்று படுத்துக்கொண்டார்.
அதிகாலை 5 மணிக்கு விழித்துக் கொண்டார். தோட்டத்தில் என்றால் பறவைகள் இனிமையாக ஒலி எழுப்பியபடி பறந்து செல்லும். இங்கு பாத்திரங்கள் உருளும் சத்தம், மேசை தளபாடங்களை இழுக்கும் சத்தம் கர்ண கடுரமாயிருந்தன. அவரே அவசர மாக கிளம்பி கீழிறங்கி வந்தார். மரியாதைக்காக அவருக்கு சுடச் சுட தேத்தண்ணீர் கொண்டுவந்து கொடுத் தார்கள். முதலாளியின் நண்பர் அல்லவா. காலைக் குளிருக்கு தேநீர் தேவாமிர்தமாக இருந்தது. பஸ் நிலையம் - வந்தார். மெல்லிய பணி மூட்டத்தில் தெருக்கள் சந்தடி இன்றி அமைதியாகக் கிடந்தன. பனிநீரைச் சொட்டிக் கொண்டிருந்த ரெயின்ட்றீ மரத்தடியில் பஸ்வண்டிகளும் பனியில் நனைந்தபடி வரிசையாக நின்று கொண்டிருந்தன. பஸ்ஸை தேடிப் பிடித்து ஏறிக் கொண்டார். புது ஆளாய்த் தெரியவும் ட்ரைவர் “கொய்த யன்னே? என்று கேட்டான். மலங்காம" என்றபடி பனிநீர் கோர்த் திருந்த சீட்டைத் துடைத்து விட்டு உட்கார்ந்து கொண்டார். தோட்டத்தில் 556) வைத்திருக்கும் ஒர் ஆள் காகறி மூட்டையை தூக்கி வந்து பஸ்ஸினுள் போட்டு சீட்டோரம் இழுத்துப் போட்டான். தினமும் வருபவன். ட்ரை
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 53

Page 29
வர், கண்டக்டர் பழக்கமானவன். அதனால்தான் பயமோ பதட்டமோ இன்றி அலட்சியமாக மூட்டையை அங்குமிங்கும் இழுத்து சரியாக வைப்பதில் ஈடுபட்டிருந்தான்.
"கங்காண லயத்தில ராத்திரி என்ன கச்சமுச்சா?" என்று சாரதி மூட்டைக் காரனிடம் சிங்களத்தில் கேட்டான். ட்ரைவர் சீட்டில் ஒருக்களித்து அட்ட காசமாக ஒருகாலைத் தூக்கி எஞ்சின்" மேல் போட்டபடி உட்கார்ந்திருந்தான். என்ஜின் மேல் கால் வைக்காதே, உட் காராதே என்று பயணிகளிடம் சத்தம் போடுகிறவனும், அவன்தான். தோட் டத்தில் நடந்த ஏதோ கரைச்சல் பற்றி கேட்டுக்கொண்டிருந்தான்.
"கங்காணி லயத்தில உள்ள ஒரு பொம்புள புள்ளைய யக்கடயா கத்தி யால குத்தியிருக்கான். அந்தப் புள்ள அலறுன சத்தம் கேட்டு அண்ணங் காரன் ஒடியாந்திருக்கான், அவனுக்கும் கத்திக் குத்து. அவுங்கப்பன் ஒடியாந் திருக்கான் அவனுக்கும் குத்து விழுந் திருக்கு." யக்கடயா என்ற பேரைக் கேட்டதும் இவர் திடுக்கிட்டுப் போனார். .
"எய் ஹேத்துவ மொக்கக்த?' என்று கேட்டான் ட்ரைவர்.
“என்ன காரணம், அவனோட கட்டுச் சாராயப் பானைய இந்தப் பொண்ணு ஒடைச்சிருச்சாம். அது அவனுக்குத் தெரிஞ்சுப் போச்சு. அதான் ஆத்திரம் ட்ரைவருன்னே' என்றான், மூட்டைக்காரன் எதுவித
பதட்டமும் இல்லாமல், அலட்சியமாக.
“பிறகு என்ன நடந்தது?" என்று கதை கேட்கும் உற்சாகத்தில் நிமிர்ந்து உட்கார்ந்தான் ட்ரைவர்.
“மூணு பேரையும் பெரியாஸ்பத்திரி யில கொண்டடு போயி போட்டுட் டாங்க... யக்கடயாவை பொலிஸ்
தேடிட்டு போயிருக்கு."
கேட்டுக் கொண்டிருந்த சின்ன வருக்கு அந்த அதிகாலைக் குளிரிலும் வேர்த்தது. மாலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள்ளாக இந்த விஷயம் யக்கடயாவிற்கு எப்படித் தெரிந்தது. இந்தச் செய்தியின் தாற்பரியம், பின் விளைவுகளின் பயங்கரம் தெரிந்திருந் தும் அவன் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டியிருக்கிறதென்றால். அதுவும் ஒருசில மணித்தியாலங் களுக்குள். . . காடையர்களின் ஒற்றுமையை, உள் உணர்வை என்ன வென்பது! ܬ
Y
‘ஹரி ஹரி யங். என்றபடி கண் டக்டர் ஓடிவந்து ஏறிக்கொள்ள, பஸ் உறுமியபடி கிளம்பியது. இவை ஒன்றையுமே பற்றிக் கவலைப்படாமல் பனிமூட்டங்களுக்கடியில் அந்தத் தேயிலைத் தோட்டங்கள் மெளனமாய் உறைந்து கிடந்தன, அந்தத் தோட்டங் களில் வாழும் தமிழர்களைப் போல! ஒருவேளை அவர்களுக்காக அவை மெளனமாக சண்ணிர் வடித்துக் கொண்டும் இருக்கலாம் - சின்னக் கண்டக்டரைப் போல!
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 54

உடப்பூர் வீரசொக்கனின்
66 29 29 ہے!\برت
L2துடுப்டு (சிறுகதைத் தொகுதி) - கிருஷ்ணன் ருரீஸ்கந்தராசா
தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு நன்கு பரிச்சயமிருந்த ஊடகவியலாளரான திரு. வீரசொக்கன் மிக அண்மையில் வெளியிட்டுள்ள படைப்பு முண்டத் துண்டு" என்ற சிறுகதைத் தொகுதியாகும். ஏற் கெனவே உடப்பு திரெளபதையம்மன் ஆலய
வரலாறு', "கங்கை நீர் வற்றவில்லை', 'அலைகட லோரத்தில் தமிழ் மணம்’, ‘வீராவின் கதம்பமாலை', கீர்த்தி மிகு முறி திரெளபராயம்மன்' ஆகிய ஐந்து நூல்களை வழங்கிய திரு. வீரசொக்கன்; தனது மண்ணின் வாசனைப் பண்புகளை நுகர்ந்து பெற்ற அனுபவத்தை இத்தொகுதியில் சிறுகதைகளாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
வீரசொக்கன் தனது கதைகள் பற்றி பின்வருமாறு கூறுகின்றார், "ஒடுக்கப்பட்ட ஒர் குழுமத்தின் அவலங்களை, அநியாயங்களை, நிஷ்டுரங்களை, பகைப்புலனாகக் கொண்டு இக்கதைகள் தீட்டப்பட்டுள்ளன. சிருஷ்டிக்கப்பட்டுள்ளன."
"உடப்பு போன்ற கிராமத்தில் வாழும் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை, அவலங்களை, அவலட்சினைகளை அவ்வப்போது கண்டும், கேட்டும், பார்த்தும் அனுபவங் களுடன் பகிர்ந்து யதார்த்தமாக உணர்ந்தவன் என்கின்ற முறைமையின் அடிநாதமாகக் கொண்டே இக்கதைகள் சொல்லப்படுகின்றன."
'கடற்றொழிலாளர் கூட்டமே எனது சூழல். அதன் நெளிவு சுளிவுகளையும், ஆழ அகலங் களையும் கண்ணாரக் கண்டுள்ளேன். அவைகள் மனதை வேக்காடு படுத்தின. துன்பியல் வாழ்வுக்கு உந்தப்பட்ட உழைக்கும் மாந்தர்களின் துயரங்களின் வெளிப்பாடே இக்கதை களின் அடையாளங்கள்."
முண்டத்துண்டு சிறுகதைத் தொகுதியை பொதுவாக நோக்குகின்ற பொழுது உடப்புப் பிரதேச மீனவர்களின் வாழ்நிலையும், எதிர்கால திட்டமிடல் இல்லாத சூழ்நிலையும் அதனால் அத்தொழிலாளர்கள் படுகின்ற அவலமும், கவலையும் பெரும்பாலான கதைகளில் கூறு பொருளாக வலம் வருகின்றது.
மல்லிகை ஒக்டோபர் 2008 率 55

Page 30
உடப்புப் பிரதேச மீன்பிடித் தொழில் என்பது சம்மாட்டிமார் என்றழைக்கப்படும் முதலாளிகள், கரவலைக்காரர்கள் எனப் படும் மீனவர்கள். இந்த இரு சாராருக்கும் இடையில் நிகழும் நிந்தப் பணம் எனப்படும் கடன் என்ற திரிகோணத்தின் மத்தியில் ஊடாடிச் செல்லும் ஒன்று. நிந்தப் பணம் எனப்படும் கடனை வாங்குகின்ற மீனவன் ஒரு சம்மாட்டியின் நிரந்தர ஊழியனாக அமைந்து விடுகின்றான். மீனவனுடைய அன்றாட வாழ்க்கை, செலவுகள், பற்றாக் குறை, வாழ்வு, தாழ்வு, திருமணம் போன்ற வாழ்க்கையின் பல்வேறு தளங்களிலும் முத லீடு செய்து, உறுதுணையாக சம்மாட்டிப் பாத்திரம் அமைகின்றது. அதனால் மீனவன் என்ற தொழிலாளியை அதி மேலாண்மை செய்கின்ற பாத்திரமாக சம்மாட்டி என்ற பாத் திரம் அமைகிறது. ஆனால் எதிர்முரணாக மீனவனுடைய அன்றாட வாழ்வில் மது பானம் இன்றியமையா அமைந்து விடுகின்றது. மீன்பிடித் தொழில் என்பது கரவலைத் தொழில் என அமையும்
தேவையாக
போது உடலை வருத்தி மாய்ச்சலுக்கு உட் பட்டு கொள்ளும் தொழிலாக உள்ளது. மாய்ச்சலுக்கு ஈடு மதுபானம் என்ற எழுதப் படாத வேதவாக்கு உடப்பில் நிலைத்து விடு கிறது. எனவே கரவலை இழுக்கின்ற மீன வனுக்கு தன் வளர்ச்சியில் ஒரு நிறை வெறி காரனாக பரிணாமம் பெறுகின்றான். இந்தப் பரிமாணம் மீனவத் தொழிலாளியை படு பாதாளத்தில் வீழ்த்தி விடுகிறது. குடி, குறைந்த வருமானம், சேமிப்பின்மை, கடன் என்ற விஷ வட்டத்துள் தொழிலாளி வாழும் நிலை தோன்றுகின்றது. இந்தக் கிடங்கில் அவன் வீழ்ந்தே விடுகிறான். அவனால் மேலே எழ முடிவதில்லை. இதன் விளைவு வறுமை, கவலை, கண்ணிர், பிரச்சினைகள். எனவே மீன்பிடி ஊழியம் என்பது விமோ
சனம் இல்லாத, மீள முடியாத அடிமைச் சாசனம் என்றே கருத வேண்டி உள்ளது.
இந்த இயங்கியலை வீரசொக்கன் நன்கு விளங்கியிருக்கிறார் அவர் பிறந்த மண், வளர்ந்த மண், வாழ்கின்ற மண், கண்டும் கேட்டும் உற்றும் உணர்ந்தும் முழுமை பெற்ற மண். அந்த மண்ணின் வாசனையை இக்கதைகளில் பரிமளப்படுத் தியிருக்கிறார்.
நாம் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். வடமேல் மாகாணத்தின் தமிழ் மக்கள் மிகப் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஒரு கிராமம் உடப்பு. வரலாறு, வழிபாடு, தொழில், வாழ் நிலை, கலைகள், பிரதேச மொழி என்ற வகையில் அது மிக மிகத் தனித்துவமான பண்புகளைக் கொண்டது. இந்தக் கிராமம் பற்றிய ஆய்வுகள் மிக மிகக் குறைவு. திரெளபதி தேவியம்மன் வழிபாடு பற்றிய செய்திகளுக்கப்பால் உடப்பு மக்களின் தொழில் சார்ந்த வாழ்க்கைப் பிற்புலத்தை காட்சிப்படுத்து கின்ற ஒரு நூல் என்றால் அது முண்டத்துண்டு என்பதே உண்மை.
அலைகடல் கரையோரத்தில் நிறுத்தப் பட்டிருக்கின்ற தோணிகள் வைரைய்யா, வண்டியன், கதிர்காமுத்தையா, அன்டனி, சின்னடப்பன் முதலான தொழிலாளிகள். முத்து ராக்காய், ராமாய், மேரி, எக்களா தேவி, கதிராய் முதலான தொழிலாளர் களின் மனைவியர். இவர்களுக்கிடையில் இடம்பெறும் பொருளாதாரத்தை அடிப்படை யாகக் கொண்ட வாழ்வின் அகோரங்கள்
வெகு நயமாக சித்திரிக்கப்படுகின்றன.
நிந்தப் பணத்தின் மீது வாழலாம் என்று நினைத்த வண்டியன் அதன் இறுதி விளை வாக முண்டத்துண்போடேயே பெருநா ளொன்றின் பரவசங்களை அனுபவிக்கவே
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 56

விருப்பமின்றி கடலோரத்தில் தோணியின் பக்கத்தில் நின்று தலை குனிந்து நிற்கிறான். நீர்ச்சட்டியில் சூடேற்றும் பொழுது இளந்தகிப் பில் மேலே எழும் நண்டு கொதிப்பின் இறுதி யில் அடிச்சட்டியில் அவிந்து படிவது போல, வண்டியன் நிற்கிறான். எதுவுமற்று எல்லா வற்றையும் இழந்து வெறும் கச்சையுடன் நிற் கின்ற வண்டியனின் பாத்திரம் உடப்பு மீன வர்களின் நிந்தப் பண வாழ்வின் குறியீடு என்று நாம் நினைப்பதில் தவறில்லை.
வீரசொக்கனின் பெரும்பாலான கதை கள் இந்த இழி நிலையிலிருந்து மீனவன் கரையேற வேண்டும் என்பதற்கான ஆதங் கத்தின், உணர்வின், தன் மண்ணின் மீது கொண்ட மனித நேயத்தின் வெளிப்பாடு என்றே நாம் சொல்லலாம். நத்தார் தந்த புது வாழ்வு' 'ஒர் இதயத்தின் திருநாள்', 'புது வருசம் தந்த புதுவாழ்வு', 'புது வாழ்வு', 'ஒளி பிறந்தது முதலான கதைகளில் தமது மண் னின் மைந்தர் கவலை நீங்கி, அவலம் நீங்கி வாழ வேண்டும் என்ற உரத்த சிந் தனை வெளிப்படுகின்றது. இலக்கியம் காலத்தின் குரல். காலத்தின் சமிக்ஞை. காலத்தின் கூறுகளை மாற்ற வேண்டும் என்ற ஆக்ரோசத்தின் குரல், வீரசொக்கனின் கதைகளில் நிறையவே ஒலிக்கக் காண லாம். நாம் நிதர்சனமாகக் காண்கின்ற பாத் திரங்கள் உலா வருகின்றன. கதிரா முத் தையா சம்மாட்டியார், வேலஞ் சம்மாட்டியார், கதிரஞ் சம்மாட்டியார், மண்டாடி சின் னாண்டி, நாதன் சம்மாட்டி, சின்னாண்டி வளியாச்சி, அரிவீரன் சம்மாட்டியார் என்பன யதார்த்தபூர்வமான பாத்திரங்களாக வரு கின்றன.
எளிமையானதும், தெளிவானதுமான உரைநடை இந்தச் சிறுகதைகளில் வாசிப் பதற்கான கவர்ச்சியைத் தூண்டுகின்றது. சொல்வதும், காட்டுவதுமான கலை நுட்
பத்தை வீரசொக்கன் பயன்படுத்துகின்றார். உடப்புப் பிரதேசத்தின் தனித்துவமான பேச்சு வழக்கு இந்தச் சிறுகதைகளின் தனித் துவ முத்திரைகளாக ஒட்டிக்கொள்கின்றன.
உதாரணத்திற்கு ஒருபதச் சோறு.
'சுருக்குப் பண்ணுங்க.." என்றாள் முனியாய்.
'உங்களால் நடக்கலுமா? அதுவும்
கொஞ்ச தூரமில்லங்க."
'நாலு அஞ்சி கட்ட போகவேணும்."
'என்ன... இன்னும் 6T (Lp LíbL 'uSlesib60)6vbuLurT?"
"சுருக்காட்டி எழும்புங்க."
'சரி. முனியாய். இப்பதான எழும்புனன்'
‘என்ன வுட்டுப்புட்டுப் போனா
போரான்"
"நடப்பது நடக்கட்டும். நம்ம தலைவிதி பாரு, முனியாய்”
'நடக்கத்தான் வேணுமென்டா. நடந்துதான் போக வேணும்"
'அருவும் ஒடம்புக்கு நல்லதுதான் பாரு. முனியாய்"
"மறா. பொல்லாத ஆளு இவர்"
"இன்னும் எழந்தாரி என நெனப்புப்
G8UTs)''
"இந்தாங்க. டெக்டர் சத்தம் கேக்குது'
"இருக்கட்டும் முனியாய்"
"கஞ்சி வாலிய துப்பராக்கினியா"
"பழம் சோத்துக்குள்ள ஒரு வெங்காயப் பள்ளையும் வச்சிடு. மறக்காதே"
மல்லிகை ஒக்டோபர் 2008 率 57

Page 31
* முன்வைக்கப்படுகின்றன.
'இந்தாங்க. ஒங்களுக்கு எல்லாச் வாழ்நிலை, பொருளியல், கல்வி, வீடு, சாமான்களையும் ருசிக்காக வச்சிரிக்கன்" வீதி, சுகாதார குறை, அபிவிருத்தி என்பவற்
இவை தமக்குள் அந்நியோன்னிய றால் சகல மட்டங்களிலும் அடக்கப்பட்டும்
மாய்க் கலந்துவிட்ட பாமரத் தம்பதியினரின் சொல்லாடல். தமக்குள் இச்சொற்கள் கறா
ஒடுக்கப்பட்டும் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டி ருக்கும் ஒரு சமுதாய மக்களின் அவலங்கள்
- இந்தக் கதைகளில் கொணரப்பட்டிருக் ராக அமைகின்றன. ஒரு வகையில் அன்புப்
கின்றன. பரிமாற்றம். மறுவகையில் சிறு எள்ளல். இவை அந்த வாழ்க்கையின் ஊடுசரடாக இவற்றுள் பதினொன்று நவமணி சஞ்சி அமைவதை இவை உணர்த்துகின்றன. கையில் வெளிவந்தவை. மீதி இத்தொகுப்புக்
- காக எழுதப்பட்டவை. நீர்கொழும்பு கடற் நிந்தத்திலிருந்து விடுதலை, சுதந்திர
கரைப் பிரதேச மக்களின் வாழ்நிலையை மான தெப்ப உழைப்பு, மதுபானத்திலிருந்து
லெ. முருகபூபதி சுமையின் பங்காளிகள் விடுதலை, கல்வியை நோக்கிய ஈர்ப்பு,
கதைத் தொகுதியில் காட்டியது போல உள்ளத்தால் ஒன்றிய சமூக ஒருமை என்ற உடப்பு மக்களின் வாழ்வை முண்டத்துண்டு நூலில் தரிசனப்படுத்தியிருக்கிறார் வீர சொக்கன். இலங்கைத் தமிழிலக்கியத்தின் செழுமைக்குள் மற்றொரு புதிய வரவு முண்டத்துண்டு என்பதில் ஐயமில்லை.
பல சமூகச் சிந்தனைகள் பாத்திரங்களின் உரையாடல்கள் மூலமாக வீரசொக்கனால்
F8JS Š
སྐུ་ `
SYNYN
Š
ရှ်ရှို့ရှို့ရှ် ရှို့ရှ် ရွဲ့ ရှို့ရှ်နဲ့ `န်ု ရွဲ့ရွဲ : နှီး
SSS※ミ注 S ম্ভ Š w RRIÄR ခြီးမှို့ခေါ်အိမ်
২২২ ২২ ২ Y. Š
மல்லிகை ஒக்டோபர் 2008 & 58
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மல்லிகையைத் தொடர்ந்து படித்து வருகின்றேன். யாழ்ப்பாணத்திலிருந்து மல்லிகை இதழ்கள் வெளியிடப்பட்ட காலத்திலிருந்தே அதன் உள்ளடக் கத்தை எழுத்தெண்ணிப் படித்து வரு
பவன் நான். C
அதிக படாடோபமில்லாத சஞ்சிகை திடிதிரிரதிவி
தான் மல்லிகை. அதேசமயம் இன்றைய காலகட்டத்தின் இளந்தலைமுறையின ரின் கவனத்தைக் கவரத்தக்கதான முறை யிலும் மல்லிகை வெளிவரவேண்டியது மிக மிக முக்கியம். ஏனெனில் நாளை படைப்பாளி களாகவும், தரமான வாசகர்களாகவும் மிளிர்ந்து வரப்போகின்றவர்கள் அவர்கள்தான் என்பதை நாம் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.
இது முக்கியமான செய்தி.
யுத்த சூழ்நிலையின் காரணமாக இலங்கையின் நெருக்கடி மிக்க ஏனைய பிரதேசங்களுக்கு மல்லிகை எப்படிப் போய்ச் சேருகின்றது என்பதே தெரியவில்லை, என்னதான் சிரமங்கள் இடையிட்ட போதிலும்கூட, மல்லிகையை இதுவரை காலமும் நெஞ்சார நேசித்த இலக்கிய நேசர்களுக்கு மாதா மாதம் மல்லிகை போய்ச் சேருவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மற்றும் மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் அடிக்கடி வெளிவருவதாக மல்லிகையின் தகவல்களை வாசித்தறிந்தேன். மல்லிகையை மனசார நேசிக்கப் பழக்கப்பட்டவர்கள் மல்லிகைப் பந்தலின் வெளியீடுகளையும் வரவேற்கவே செய்வர். எனவே உங்களது புதிய நூல் வெளியீடுகளையும் தகுந்த முறையில் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள்.
வழக்கமாக மல்லிகைக்கென்றே எழுதும் எழுத்தாளர்களைத் தவிர்த்து, புதிய புதிய இளந்தலைமுறையினரை ஊக்கமூட்டி முன்னணிக்குக் கொண்டுவர தெண்டித்துப் பாருங்கள். இன்றைய எழுத்தாளர்களில் பலர் மல்லிகை மூலமே இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர்கள் என்பதே மகிழ்ச்சியூட்டும் செய்தியாகும்.
இலங்கையின் பின்தங்கிய பிரதேசங்கள் என நாம் தவறாகக் கணித்து வைத்திருந்த பல பிரதேசங்கள் இன்று கல்வித்துறையிலும், நூல்களை வாங்கிப் படிக்கும் பழக்கத்திலும் முன்னோக்கி வந்து கொண்டிருக்கின்றன.
இது ஒரு மகிழ்ச்சியான தகவல்.
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 59

Page 32
அந்த அந்தப் பிரதேசங்களைக் கவனத் தில் எடுத்துக்கொண்டு, அந்தந்தப் பகுதி களில் இன்று முளைவிட்டு வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களை வளர்தெடுக்க முனையுங்கள்.
மல்லிகை தனது 50வது ஆண்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. சிற்றி லக்கிய ஏடுகளின் வரவு, இந்த அரை நூற் றாண்டுக் காலத்தைய சஞ்சிகை வரவு எதிர் காலத்தில் ஒர் ஆவணத் தகவலாக பதியப் பட்டுச் சிலாகிக்கப்படும் என்பது திண்ணம்,
பதுளை. ஆர்.சிவநேசன்
நான் மல்லிகையைப் பெற்றுக் கொண் டதும் அதில் கடைசிப் பக்கத்தில் வெளி வரும் தூண்டில் பக்கத்தைத்தான் விரும் பிப் படிப்பது என் வழக்கம்.
சும்மா கேள்வி - பதில் என்று போகா மல் பல தகவல்களையும், செய்திகளையும் அந்த நான்கு பக்கத்திலும் பதிவு செய்து, வாசிக்கத் தருகின்றீர்கள்.
கூடியவரை தொடர்களை இனி நிறுத்தி விடுங்கள். சில இதழ்களில் கதைகள் அதிகம் இடம்பெறுகின்றன. சில இதழ் களிலோவென்றால் கட்டுரைகள் மிகுதி யாகக் காணப்படுகின்றன. இப்படியாகத் தொகையாக இடம்பெறுபவைகளை ஒரளவு மட்டுப்படுத்துங்கள்.
44வது ஆண்டு மலர் வெளிவரவுள்ள தாகச் சென்ற இதழில் தகவல் படித்தேன்.
மல்லிகையின் ஆண்டு மலர்கள் என்றாலே
ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தவை. பாதுகாத்து வைக்கத்தக்கவை.
எனவே, இந்த ஆண்டு மலரையும் தனிக் கவனமெடுத்துத் தயாரியுங்கள். போன
ஆண்டு மலருக்கு எந்தவிதமான வெளியீட்டு விழாவையும் நீங்கள் ஏற்பாடு செய்ய வில்லை. இந்த ஆண்டு மலர் முடிந்ததும் அதற்கான ஒரு வெளியீட்டு விழா கண்டிப் பாக வையுங்கள்.
மலர் அறிமுக விழாவல்ல முக்கியம். பல இலக்கிய நண்பர்களைச் சந்தித்து உரையாட நல்ல சந்தர்ப்பம் இது, அத்துடன் இன்றைய இலக்கிய நோக்குகள் - போக்கு கள் பற்றி அறிந்து கொள்ளவும் அது வாய்ப் LITés JosoLDuqLb.
நீங்கள் முன்னின்று முன்னொரு காலத்தில் ஆனைக்கோட்டையிலும், நீர் கொழும்பிலும் நண்பர் சுதாராஜ் இல்லத்தில் நடத்திய இலக்கியம் பேசாத இலக்கிய நண்பர்களின் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தால் என்ன? பல இலக்கிய நண்பர் களின் ஒத்துழைப்பு அந்த இலக்கிய நண்பர் களின் சந்திப்புக்குக் கிடைக்கலரிமல்லவா?
அத்தகைய ஒர் இலக்கியச் சந்திப்பை ஏற்பாடு செய்வதாக இருந்தால் கொழும்பில் வேண்டாம். கொழும்பை அண்டியுள்ள ஒரு பிரதேசத்தில் ஏற்பாடு செய்யலாமல்லவா? எதற்கும் மல்லிகை 44வது மலர் வெளி யீட்டுடன் செய்யப் பாருங்கள்.
குறை சொல்வதே இன்று எழுத்தாளர் பலரின் இலக்கிய பிழைப்பாகி விட்டது. அனைவரும் ஒருங்கு சேர்ந்து, ஆக்கபூர்வ மாகச் சிந்தித்து, நட்பைப் புதுப்பித்துக் கொள்ள இன்று யாருமே முன்வருகிறார்கள் இல்லையே என்ற மன ஆதங்கம் இந்த இளம் ரசிகர்களின் நெஞ்சில் நீண்ட கால மாக இருந்துவரும் மன்த்துயரம்.
இதை எழுத்தில் வடித்துவிட்டேன். இனிமேல் உங்களது இஷ்டம்
கொழும்பு 06. க.ராம்குமார்
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 60

மிஸ்வன்றத0
- வை. சாரங்கன்
என்னைப் பற்றிய உன்னுடைய சந்தேகங்களை மருவருந்த உதவும் தங்குக் கோப்பையில் நிறைத்துக் கொள்!
வித்துக்களைப் பரிகரி
உறுதியான மரங்களே சிறந்தவை. ஆல், அரசு, வேம்பு பாலை, முதிரை கருங்காலி காலங்காலமாக வாழுபவை தேவை
கோடாரியை எடு வைரக் காம்பினைப் பிடி நடு மண்டையைப் பிள ஒற்றை விதை நடு ஒவ்வொரு நாளும் கோப்பையில் நிறையும் ஈனத்தை இறை
மல்லிகை ஒக்டோபர் 2008 61

Page 33
மரம் வளரட்டுடம்
என்னைத் தழுவிக் கொள்
தூர இருந்து அவதானி
மாமிசம்புசிக்கும்
பூக்களாய் DQgb
பழம் பறிக்கு வா!
விழுதுகளும் வேரும்
முடியிருக்குமென்னை
(8) Bure ஓர் உந்துருளி
இரு இளைஞர்கள்
நச்சுக் கொடிகளே சில வேடிடொலிகள்
ஒட்டுண்ணியான ಛgಠ) (D@
உனது மரத்துக்கு ஏழு மரணங்கள்
மழை மொழி
கீழ் வளரியாகு மடிடக்களப்பு வாவியை
நீந்திக் குடிந்தது -
காடுகள் மட்டுமே விரியும் ಹೃfué!
மூளையின் பள்ளத்தாத்தில்
இருவரும் விழுந்து நண்பதல்
இறந்து தொலைப்போம் 65ಛಿಸಿ ಟ್ವಿಯಾ ವಿಹಿ
பின்னர் நாங்களும
இன்னுமின்னும் நிறைய బr தொழுகையில்
வித்துகளைப் பரிதரி é9|QñGrbò ، ۰* هھ
எதிர்காலம் காடுகளால் மண்டிப் இறந்துபோன
புதராதிப் புதிராகுட்டும் அனைவருத்தாகவும்
தொழுதோம்
மல்லிகை ஒக்டோபர் 2008 & 62

இன்று தமிழில் வலைப்பதிவுகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. இப்பொழுது மாற்று எனும் பெயரில் பல நண்பர்கள் இணைந்து வலைப்பதிவுகளை தொடர்புபடுத்தும், வகைப்படுத்தும் வகையில் ஒரு வலைப்பதிவை செய்கிறார்கள். இவ்வலைப்பதிவில் இவர்கள் பட்டியலிட்டிருக்கும் இடுகைகளினதும் வலைப்பதிவுகளின் எண்ணிக்கையை பார்க்கும் பொழுது வியக்க வைக்கிறது. இந்த வலைப்பதிவை உருவாக்கி இருக்கும் நண்பர்கள் வலைப் பதிவு உலகில் பிரபலமானவர்கள். இக்குழுவில் நம் நாட்டைச் சேர்ந்த மயூரனும் இருக்கிறார் என்பது விஷேடமாக குறிப்பிட வேண்டிய விடயம். அந்த வலைப்பதிவின் முகவரியை கீழே தருகிறேன். இணையத்தில் உலாவும் நண்பர்கள் மாற்றுவை கட்டாயம் பார்க்க வேண்டும்.
http://maatru.net/
சேவியர் என்பவர் பல வலைப்பதிவுகளை வைத்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்தவர். கவிதை, சிறுகதை என பல நூல்களை வெளியிட்டுள்ளார். தனது வலைப்பதிவு ஒன்றில் இலங்கை மலையக கவிஞரான திலகர் அவர்களின் மல்லியப்பு சந்தி தொகுதி பற்றியும், அவருடனான சந்திப்பையும் பதிவு செய்து இருக்கிறார். கவிதைக்கென ஒரு வலைப் பதிவை வைத்திருக்கிறார். அவ்வலைப்பதிவில் சமீபத்தில் இணைத்திருக்கும் ஒரு கவிதைகளை உங்கள் பார்வைக்கு தந்திருக்கிறேன். அவரது வலைப்பதிவின் முகவரி : http://Xavi.wordpress.com/
களுக்கலைப்பு
மனிதாபிமானச் சிதைவுகளில் நடந்தேறும் படுகொலை.
மல்லிகை ஒக்டோபர் 2008 & 63

Page 34
குற்றமில்லா ஓர் வெள்ளைப் புறாவை வேங்கை வேட்டையாடும் வலி
முளை விடும் வரை விதைகளைத் தூவிவிட்டு தலை கொய்வது தகாத அறுவடையில்லையா?
தொப்புள் கொடியில் மழலைக்குத் தூக்குத் தண்டனையா?
பன்னிர்க் கடவில் LafomlõLravasiaš3 கருணைக் கொலையா?
எந்தத் தராசுத் தட்டில் இதை நியாயப்படுத்துகிறீர்கள்?
அனாதைக் குழந்தைகளோடா? வறுமையின் விண்ணப்பங்களோடா? இல்லை அந்தஸ்தின் அலங்காரங்களோடா? சொல்லுங்கள்.
உங்களுக்குள் இறங்கி வலை வீசித் தேடுங்களேன்.
விகாரத்தின் விரல்பதிவுகள்.
மோகத்தின் அவசரப்பகிர்வுகள்,
இவைதானே மிஞ்சிக் கிடக்கின்றன.
உங்கள் தவறுக்கு பிஞ்சுக்குத் தண்டனையா?
இளமையின் பலிப்பித்தில் பிறப்புக்குச் சிரச்சேதமா?
பதினெட்டு நாட்களில் இதயம் துடிக்கத் துவங்கி, ஆறு வாரப் பயணத்தில் மூளையோடு முதல் பரிமாற்றம் செய்து,
எட்டு வாரத்தில் ஓரிடம் எட்டிப்பிடித்து, ஒன்பது வாரத்தில் வலி உணருமாம் சிறு உயிர். £36025 2 600Tif.
கருச்சிதைவு
மானிட வளர்ச்சியின்
படிக்கட்டல்ல. கூண்டுக்குள் வேட்டையாடுதல் வீரத்தின் விளையாட்டுமல்ல.
நீயும் நானும் நிலவிலிருந்து நழுவி விழுந்தோமா? கருவறையின் குருகுலத்தில் தானே வளர்க்கப்பட்டோம்.
வருமுன் காப்பது விவேகம் வந்தபின் தீய்ப்பதோ துரோகம்,
ஸ்டிலை ஏக்கங்கள்
தூக்கத்திலும் ஆங்கிலம் உளறும் குழந்தைகளால் நிரம்பி வழிகின்றன !
மல்லிகை ஒக்டோபர் 2008 & 64

பிளே ஸ்கூல்கள்.
கான்வெண்ட் கதவருகே காரிலிருந்து
இறங்குகின்றன சீருடைத் தேவதைகள்,
காத்திருக்கின்றனர் கார் டிரைவர்கள்
வீட்டு மதில்களுக்குள் குழந்தைகளை திரும்பக் கொண்டு சேர்க்க,
ஜாமங்கள் கடந்தபின் வந்துசேரும் பெற்றோரை வார இறுதி ஐஸ்கிரீம் பார்களில்தான் நிதானமாய்ப் பார்க்கின்றன குழந்தைகள்,
ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களில் கிரெடிட் கார்ட் தேய்த்து பிட்சா தின்று வீடு திரும்புகையில்,
சீட்பெல்ட் மாட்டி அமர்ந்திருக்கும் குழந்தைகளின் கண்களில் ஏக்கத்தை வரவழைக்கின்றனர் சேரிக்கரையில் விளையாடும் சுதந்திரச் சிறுவர்கள்.
சேவியர் கவிதைகள் காவியங்கள் நூலிலிருந்து.
"லவ் மேரேஜ்" அமெரிக்க யாழ்ப்பாண
பெண் எழுத்தாளரின் நாவல்.
அப்பன் மவனே சிங்கன்டா
இது சின்னக்குட்டி என்பவரின் வலைப்பதிவின் பெயர். அவ்வலைப் பதிவில் அவர் வெளியிட்டிருக்கும் ஒரு தகவல் இது. "லவ் மேரேஜ்’ (காதல் திருமணம்) என்ற புத்தகத்தை சிலராவது கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த ஆண்டு ஏப்ரல் வாக்கில் அமெரிக்காவில் வெளி யான இந்த ஆங்கில நாவல், இலங்கை இனமோதலை பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒன்று. இலங்கையின் யாழ்ப் பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட வரும், அமெரிக்காவில் பிறந்து அங்கேயே வாழ்ப வருமான வாசுகி கணேஷானந்தன் என்ற இளம் பெண் எழுத்தாளர் இந்தக் கதையை எழுதியிருக்கிறார்.
இலங்கை இனப்பிரச்சினையை பின் புலமாகக் கொண்டு கடந்த ஒரு சில தாசப்தங்களில் எழுதப்பட்ட சில நாவல்கள் வரிசையில் இதுவும் வருகிறது. இதை அமெரிக்காவில் பிறந்து அங்கேயே வாழும் இலங்கைத் தமிழ் வம்சாவளிப் பெண் ணான யாழினியையும், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஈடுபட்டு பல ஆண்டு காலம் போராளியாக இருந்து, நோய்வாய்ப்பட்ட நிலையில், வாழ்க்கையின் இறுதி நாட்களில் கனடாவுக்குச் செல்ல புலி களால் அனுமதிக்கப்படும் அவரது மாமா குமரன் ஆகியோரைச் சுற்றிச் சுழலும் இந்தக் கதை மூலம் இலங்கையின் இனப்பிரச்சினை, ஆயுதப் போராட்டம், இனப் பிரச்சினையின் சமூகத் தாக்கம் ஆகியவற்றை வாசுகி ஆராய்கிறார்.
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 65

Page 35
திறப்பு
- ஏ.எஸ்.எம். நவாஸ்
வாழ்வில் சங்கடங்களும் நெருக்கடிகளும் வரும்பொழுதே மனிதர்களும் எப்படிப் பட்டவர்கள் என்பது தெரியவரும். உண்மையாகவே உழைப்பை நம்பி எவ்வளவுதான் வாழ்ந்தாலும் கூட பண நெருக்கடி வரும்போது யாரிடமாவது கேட்கத்தான் வேண்டியுள்ளது. அவ்வாறு கேட்பதற்கு முன் மனதின் உள்வேகம் வெட்கத்தையும் கூடவே வெளியேற்றி விடுகிறது. வேதனையான வாழ்க்கைதான்!
அன்றும் அப்படியே -
எனக்குள் சில நெருக்கடிகள் - சொந்தத் தொழிலில் நஷ்டம்.
கைகூடாத நேரம் - கடை திறக்கும் நேரம்.
கடன்காரன் வரவில்லை. ஏனென்றால் எனக்கு கடன்கள் இல்லை."வந்தது 556 L உரிமையாளன் ராஜபக்ஷ. கடையைக் கேட்டு ஒற்றைக்காலில் நின்றான். செய்வதறியாது திகைத்துப் போனேன்.
"இப்போதுதான் எனக்கு வியாபாரம் கைகூடி வருகுது ஐயா. உங்களுக்கு வேணு மென்றா கடையைக் கேட்டபடி தருகிறேன். முடிஞ்சா எனக்கு மூணு மாசம் தவ்ணை கொடுங்கள்!" என்றேன் எனக்குத் தெரிந்த சிங்களத்தில்.
எனது இயலாமை அவனுக்குள் இன்னும் தைரியத்தை வளர்த்திருக்க வேண்டும். கடை அவனுடையது என்பதில் அஞ்சா நெஞ்சனாக ராஜபக்ஷ பேசிக்கொண்டிருந்தான்.
'ரெண்டரை வருஷங்களாச்சு ஒப்பந்தமும் முடிஞ்சு போச்சு! நீ யாரிடமிருந்து கடையைப் பொறுப்பெடுத்தாயோ அவனிடமே கடைச் சாவியைக் கொடு எனக்குக் கடை வேணும். தவணையெல்லாம் தரமுடியாது" என்று கத்தினான்.
பின் வெளியேறி விட்டான்! சாவி கேட்டுச் சென்றவனை கூவி அழைக்கலாமா என்றது மனம், மீண்டும் கெஞ்சு வதற்கு அஞ்சியது. அவன் இப்படி ஒரு போடு போடுவான் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
என் நண்பன் சுரேஷ் பற்றிய நினைவு வந்தது.
மல்லிகை ஒக்டோபர் 2008 & 66

அவன்தான் எனக்கு இந்தக் கடை யைப் பெற்றுத் தந்தவன். இரண்டரை வருஷங்களுக்கு முன் இதேபோல் வியா பாரம் செய்வதற்காக கடை தேடி அலைந்து கொண்டிருந்தபோது, சுரேஷ்தான் இறை வன் ஏவலாக வந்தான். "இந்தா சாவியைப் பிடி' என்றான். "கடையைத் திற' என்று உதவினான். கடை உரிமையாளன் ராஜ பக்வடிவிற்கு அவன் ஒரு லட்சம் எப்போதோ கொடுத்து வைத்திருந்தான். அதனால் முன் பணமில்லாமல் எனக்கு கடை கிடைத்தது.
"மச்சான் இது உன் கடை மாதிரி. எப்படியாவது முன்னேறப் பாரு!" என்று என்னை வாழ்த்தி அனுப்பினான் சுரேஷ்.
'நாம் வசதியாக இருக்கும்போது நம்மைச் சுற்றி இருப்பவர்களெல்லாம் நண்பர்கள் அல்ல! நம்மிடம் இல்லாத போது நம்மைத் தேடி வந்து உதவி செய் பவனே உண்மையில் நண்பன்' என்று கண்ணதாசனின் கருத்துமிக்க வாக்கியம் சுரேஷக்குப் பொருந்தும்.
சுரேஷ் என்னோடு பல வருஷங்கள் பழகிய நண்பன். அவனது குடும்பத்தில் நானும் ஒருவனாகப் பழகிப் பழகி கிடைத்த பரிசுதான் இந்தக் கடை. பாசத்தின் திறவு கோளை எவ்வளவுதான் நுழைத்தாலும் நுழைந்து கொண்டேதான் இருக்கும். அது அன்பு கொண்டு ஆளும். அளவில்லாது நீளும். மாசு இல்லாத வரை அது வளரும்.
பவித்ரமான சிநேகிதம் இவ்வாறானதுவே
எனக்கு கடை தந்து உதவிய சுரேஷ் திடீரென்று கனடா பயணமாகி விட்டான்! எனக்கும் சரியாகச் சொல்லாமலேயே. ஏன் என்று தெரியாமலேயே நான் குழம்பிப் போனேன். மாதங்கள் கழிந்தது. வருவடி
மானது. அவனது ஒரே ஒரு வார்த்தை யேனும் தொலைபேசி மூலமாக வந்தேனும் காதில் தட்டவில்லை. கனடாவில் தனித்துப் போன என் நண்பனுக்காக ஆறுதலாக வேனும் ஒரு வார்த்தை பேச அவதிப்பட் டேன். ஆனாலும் என் இதயத்தில் எங்கோ ஒரு மூலையில் அவனைப் பற்றிய பாச உணர்வு ஒட்டிக்கொண்டே இருந்தது. சுரேஷ் பற்றிய தகவல்களைக்கூட அவ்வப் போது அவன் மனைவி மூலமே அறிந்து கொண்டேன். சுரேஷக்கு கனடாவில் வேலை அனுமதிப் பத்திரம் கிடைத்து விட்ட தாக அவனது மனைவி சொல்லித் தெரியவே
ஆனந்தமடைந்தேன். ஆறுதலடைந்தேன். அவன் 'சிறப்பாக வாழ வேண்டும்' என்றே எனது மனமும் பிரார்த்தனை செய்தது. இவ் வாறு இரு வருஷங்களும் கடந்துவிட்டது.
令 令 令
இப்போது கடைச் சொந்தக்காரன் சுரேஷின் ஒரு லட்சம் பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு என்னை வீதிக்குப் போ என்றால் எப்படி..?
சுரேஷ் இருந்திருந்தால் இது நடந்திருக் குமா? அவன் பணத்தைப் பெரிதாக மதிப்ப வனும் அல்ல இந்துமத சமயத்தில் நிறைய நம்பிக்கை வைத்திருப்பவன். 'நீ என்ன * கொண்டு வந்தாய், அதை எடுத்துச் செல் வதற்கு." என்ற கீதை மொழியை எனக்கு அடிக்கடி நினைவூட்டுவான். எங்களது நட்புக் குள் எப்போதுமே மதங்கள் தடையாக இருந் ததே இல்லை. எனக்குச் சுகமில்லை என்று நான் புலம்பிக் கொண்டிருந்தவேளை என்னை டாக்டரிடம் அழைத்துப் போய் பரி சோதனை செய்ய பணம் கட்டினான். நானும் அவனும் அருகருகே அமர்ந்து உணவு உண்ட நாட்கள் உண்மையில் மனதை விட்டு விலகாத நாட்களே சிறகு சிம்மாசனம்
மல்லிகை ஒக்டோபர் 2008 & 67

Page 36
கொண்டு பறந்த நாட்கள் அவை, என்ன செய்வது. என் விதி அவன் கனடா போக
வேண்டும் என்ற கட்டாயம்.
செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் அரபுலகின் இலங்கை நண்பர்களிடம் கேட்ட உதவிகள் நிச்சயம் உதவி செய்கிறோம்" என்ற வெறும் வார்த்தைகளுடனேயே மடிந்தது. சிலநாட்களில் தொடர்புகளும் முடிந்தது.
நான் எழவேண்டும். எழவேண்டும்" என்று செய்த முயற்சிகள் தோற்றுப்போய்
இப்போது அழவேண்டும் போல் இருந்தது.
அன்றொரு தினம் -
நல்ல பணக்காரர், பெரியவரிடம் உதவி கேட்டுப் போனதில் உபதேசங்கள் என் காதை அறைந்தது. 'தினமாவது ஒரு நூறு என்று ஒதுக்கியிருந்தால் இப்படி உனக்கு நடந்திருக்குமா?" என்று என்னிடமே அவர் கேட்க சொல்ல வார்த்தை இல்லாதவனாய் சும்மா இருந்தேன். அவர் கூறிய வார்த்தை களில் உண்மையில்லாமலும் இல்லை. பொருள் விலையேற்றம், நிதி நொருக்கடியில்
அன்றாடம் அவதிப்பட்டு வாழும் இந்தக்
காலத்தில் எவ்வளவுதான் சேமிப்பது? கஞ் சனுக்குக்கூட மிச்சம் காண முடியாத கால மல்லவா இது...! எனக்குள்ளேயே நான் கேட்ட கேள்வி அது பெரியவரிடம் இதைப் போய் விளக்க முடியுமா? அவர் பக்கம் பணம் இருக்கிறது, என் பக்கம் தேவை இருக்கிறது. குழப்பிக் கொள்ளக் கூடாது என எண்ணி அங்கிருந்து நகர்ந்து போனேன்.
‘வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்" என்றான் கண்ணதாசன். எவ்வாறு நினைத்துச் சொன் னானோ தெரியவில்லை?
வாழலாம் பணமில்லாமல், தொழில் இல்லாமல் எவ்வாறு வாழ்வதாம்!
வாழலாம் வசதியில்லாமல், சந்தோஷ மில்லாமல் எவ்வாறு வாழ்வதாம்!
நம்பிக்கை இருந்தால், நாலு கை சேர்ந்தால் வாழலாம்!
நம்பிக்கை இருக்கிறது. நாலு கைகள் சேர வேண்டுமே!
சேர்ந்தால் எந்நாளும் வாழலாம்! என்னாலும் வாழலாம்!
அந்தப் பெரியவர் சொன்ன நூறு ரூபாய் தினம் ஒதுக்கும் திட்டம் வெற்றி பெற வெறும் ஐநூறு சம்பாதிக்கும் என்னால் எவ்வாறு முடியும்? இக்காலத்தில் சாத்தியப்படுமா?
முயற்சித்தேன் -
முதல்நாள் போட்ட நூறு மறுநாளே பிள்ளையின் திடீர் செலவுக்காக எடுக்கப் பட்டுவிட்டது. எங்ங்னம் சேமிக்க..?
நேற்றும், இன்றும் முயன்றுகொண்டு தான் இருக்கிறேன். தினமும் நூறு ரூபாய் சேமிப்பதற்காக. அந்தப் பெரியவர் போதித்த பொன்மொழிக்கிணங்க. Yrk,
சாவி கேட்டுப் போன ராஜபக்ஷ, பகல் சாப்பாட்டு நேரத்தில் தொலைபேசியில் கத்தினான் கடை கேட்டு. வாயில் விழுந்த உணவு வயிற்றில் கூட இறங்கவில்லை.
உறுதியுடன் சொன்னேன், 'சாமான் களை தூக்கிப் போட்டு கடையைத் தருகிறேன்" என்று.
*கால்கள் இருக்கி கைகள் இருக்க, கவலைகள் என்னை என்ன செய்யும்." என்று என்னை நானே கேட்டுக் கொள்வது
போலிருந்தது. f
மல்லிகை ஒக்டோபர் 2008 ஜ் 68

O (e s6ste AO
- டொகிே% ஜீவா
SASSS
3šR&BšNS N
`` ššŞÈS ရှို့နဲ့နွှဲ XS 苓领激密赛鲨够 鳢公欧酸
ரஜனிகாந்தின் எதிர்காலப் பிரபலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சினிமாப் பிரபலம் அரசியலில் நிலைக்குமா?
ளுைதானை. ஆர். மகேந்திரன்
O வெடித்துப் போன பட்டாசுதான், ரஜனி, குசேலன் படத்தின் பயங்கரத் தோல்வி இன்றைய சினிமாப் பிரபலங்களின் பின்புலப் பிரமையை முற்றாக நீக்கிவிட்டது. அவரது அரசியல் பிரவேசத்திற்கும் கோவிந்தா இனி ரஜனியானாலும் சரி, கமலானாலும் சரி, சரிந்த தங்கள் தங்களது மார்க்கட்டையும், கவர்ச்சியையும் மீட்டெடுத்துவிட முடியாது. சினிமாக்காரனுக்குப் பின்னால் சுற்றிச் சுழன்று கட்டவுட்டுகளுக்குப் பாலாபிசூஷகம் செய்த ரசிகர் மன்றங்களை ஊக்குவித்த தலைமுறை, இன்று புதிய அநுபவத்திற்குள் மனஞ் சாய்ந்துவிட்டது. அதற்கு இன்று வீட்டிற்குள்ளேயே வந்துவிட்ட தொலைக்காட்சியும் ஒரு காரணமாகும். இனிவரக் கூடிய புதிய தலைமுறை சினிமாக்காரனுக்கு காவடி தூக்கமாட்டது என்பது என் எண்ணம்.
0 எதிர்கால நவ இந்தியாவின் வருங்காலம் எப்படி அமையும் எனக் கருதுகிறீர்கள்?
பதுைை. எஸ்.நடனதிங்கல்
மல்லிகை ஒக்டோபர் 2008 & 69

Page 37
O சீனாவும் இந்தியாவும் எதிர்காலத்தில் மிகப் பெரிய வல்லரசுகளாகப் பரிணாமம் பெறும். அமெரிக்கா இன்றைய உலக ஆதிக்க நிலையிலிருந்து பின்தள்ளப்படும். உத்தரப் பிரதேசத்தில் இன்று ஆட்சி அதி காரத்தைக் கைப்பற்றிக் கொண்டிருக்கும் மாயாவதி இந்தியாவின் அடுத்த பிரதமரா வார். அவரொரு தலித். தலித்துக்களின் கையோங்கும். கருணாநிதியின் புகழும், தி.மு.காவின் செல்வாக்கும் அறவே மறைந்து போகும். புதிய அரசியல் தலை முறை தோன்றும். ஜெயலலிதா தமிழ கத்தை தவிர்த்து, மத்திய அரசியலில் பிர வேசிப்பார். மாயாவதியுடன் போட்டி போட்டு, பிரதமர் ஆவதுதான் அவரது திட் டம். சினிமாப் பிரபலம், கட்டவுட் கலா சாரம், பாலபிஷேகம் போன்றவை அறவே மறைந்து போகும். சகல மட்டங்களிலு முள்ள சாதி வெறி அற்றுப் போகும். பார்ப்பானிய ஆதிக்கத் திமிர் சுக்குநூறாக உடைந்து போகும். புதிய நவ இந்தியா தோன்றுவது உறுதி!
பல்கலைக்கழகச் சமூகத்தின் இலக்கியச் செயற்பாடுகள் பற்றி
உங்களது அபிப்பிராயம் என்ன?
தென்கிழக்குப் பல்கலைக்கழகன்.
&e-elonapole
O ஒரு காலத்தில் அறுபதுகளில் பேரா தனைப் பல்கலைக்கழக மாணவர்கள் தான் ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு முன் உதாரணமாகத் திகழ்ந்தனர். பின் னர் பிரபல எழுத்தாளர்களாக மிளிர்ந்தனர்.
எனக்கொரு மனக்குறை உண்டு. இந்த நாட்டில் தமிழ் மொழியைச் சார்ந்த மாண வர்கள் கல்வி பயிலும் பல்கலைக்கழகங் கள் பல உண்டு. இதை நாடே நன்கறியும். எந்தவொரு பல்கலைக்கழகமாவது இந்த நாட்டுப் படைப்பாளி ஒருவரை அழைத்து தமது மாணவர் குழாத்துக்கு அந்த எழுத் தாளரின் இலக்கிய அநுபவங்களைப் பேசும்வண்ணம் கேட்டதுண்டா? இல்லை. இதுவரையும் நானறிந்தவரை, இல்லவே யில்லை. அங்கு வகுப்பெடுக்கும் பேராசிரி யர்களுக்கு அவர்களைக் கூப்பிட்டு உரை யாட வைக்க அறிவுப் பயம். இந்த இடை வெளி இன்றுவரை தொடர்ந்து நீண்டு கொண்டே வருகின்றது. பார்ப்போம். பார்ப்போமே!
ஈழத்தின் பல்வேறு இடிங்களில்
இருந்து இப்போது பல்வேறு சிறு சஞ்சிகைகள் வெளிவருகின்றனவே,
இது மல்லிகைய்ை பாதிக்கின்றதா?
இறுராதபுரல். எல். ஹினால்
O இங்கு வெளிவரும் சிற்றேடுகள் அனைத்துமே வியாபாரச் சஞ்சிகைகள் அல்ல. அதனால் விற்பனைப் போட்டி என்ற வார்த்தைக்கே இங்கு இடமில்லை. நஷ்டப்படத் தயாரா? - சரி எங்களுடன் ஒருவராக வந்து சேர்ந்து கொள்ளுங்கள்! என்பதுதான் இன்று மல்லிகையின் நிலை.
يهته
பெருந்தலைவர் காமராஜருக்குப் பின்னர் இன்றைய தமிழகத்தில்
மல்லிகை ஒக்டோபர் 2008 & 70

நீங்கள் மதிக்கும் பெருந் தலைவர்
uumti?
இறுராதபுரல். எல். ஜிரைஸ்
O தோழர் ஆர். நல்லகண்ணு
0 மலையகத்தில் இப்போது புதிது
புதிதாக நிறைய இளம் எழுத்தாளர் கள் தோன்றி வருகிறார்கள். பலர் தரமான ஆக்கங்கள் மூலம் பெரிதும் பேசப்படுகின்றனர். ஆனாலும் மூத்த எழுத்தாளர்களைப் போலப் பேசப்படாமல், நிலைத்திருக்காமல், புற்றீசல்களைப் போல மறைந்து விடுகிறார்களே, என்ன காரணம்?
apleLas. Unasa sistetbahahaws)
O எழுத்து என்பதே ஒரு தவம்-யோகம் தன்னை அதற்கு நைவேத்தியம் பண்ணி, அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டால் தான் அந்தத் தவம் எவனொருவனுக்கும் வரமாகச் சித்திக்கும். இன்றைய இளம் தலைமுறை அதை ஒரு விளையாட்டாகப் பார்க்கின்றது. புகழ் கிடைத்தால், அதில் கொஞ்சம் சதிராடிப் பார்ப்போமே என நினைத்துப் பேனாவைத் தூக்குகின்றது. கொஞ்சம் புகழ் கிடைத்துவிட்டால் மற்றவர் களை மதிக்கத் தயங்குகின்றது. இது ஒர் எழுத்து நோய். இப்படிக் காணாமலே போய்விட்ட பல திறமைசாலிகளை மல்லிகை ஏற்கனவே அறிந்து வைத்திருக் கின்றது. எழுத்து சிவபெருமானைப் போன் றது. தன்னை நம்புகின்றவனைக் கடைசி வரை சோதிக்கும். மனக் கிலேசமடைய
வைக்கும். இதையெல்லாம் கடந்து துணிந்து நிற்பவனை, 'பக்தா உன் பக்தியை மெச்சினேன். விரும்பிய வரத் தைக் கேள்! அருள்பாலிக்கின்றேன்" எனச் சொல்லித் தன்பால் அரவணைத்துக் கொள்ளும். அதுவேதான் நிரந்தரப் புகழ்,
வாழ்க்கைச் செலவு அதிகரித்த
இந்தச் சூழ்நிலையில் இருந்து கொண்டு, அதுவும் கொழும்பில் வாழ்ந்து கொண்டு எப்படித் தினசரி வாழ்க்கையை ஒட்டுகிறீர்கள்?
Reley ச.செந்தில்
O அத்துடன் மல்லிகையின் தயாரிப்புச் செலவுகள் அதிகரித்த இந்தக் கால கட்டத்தில் என்பதையும் சேர்த்துக் கொள் ளுங்கள். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும் பிற்கு நான் அகதியாக வந்து குதித்த காலத்தில் என்னிடமிருந்த மொத்த மூல தனமே 120/- ரூபாய்தான். தன்னம் பிக்கை, அயராத உழைப்பு, மக்களை மன சார நேசிக்கும் தன்மை ஒருவனிடம் இடை யறாது இருந்தால், அந்த நேசிக்கப்படத் தக்க மக்களிடமிருந்தே பொன்மனச் செம் மல்கள் நிச்சயமாக உதவி செய்தே தீரு வார்கள். உண்மையைச் சொல்லட்டுமா? நான் இந்த வெளியுலகத் தாக்கங்கள் பற்றி எந்தக் கட்டத்திலுமே மலைத்துப்போய் நின்று பழக்கப்பட்டவனல்ல சமூகத்துக் காக அர்ப்பணிப்பு உணர்வுடன் இயங்கி னால், அந்தச் சமூகம் எப்பொழுதுமே எம்மைப் போன்றவர்களைக் கைவிட்டு விடாது என்பது திண்ணம்!
மல்லிகை ஒக்டோபர் 2008 奉 71

Page 38
மல்லிகை ஒக்டோபர் 2008 * 72
சொன்னால் நம்புவது கொஞ்சம் கஷ்டம்தான். காலையில் சாப்பிட என் னிடம் காசு இருக்காது. சமாளிப்பேன். சாயங்காலம் என்னுடைய சட்டைப்பை யில் ஆயிரம் ரூபாத் தாள் நர்த்தனமாடும். யாரோ ஒரு சந்தாதாரர் வழி தெருக்களில் தந்திருப்பார்! அரப்பணிப்பு உழைப்புத் தரும் காணிக்கை
இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சிலரின் இத்தனை வெகுசனப்
பிரபலத்திற்கு மூல காரணம் யார் என நினைக்கிறீர்கள்?
Beỹmulõ. இசிவசன்பு
O உண்மையாகவே அவரவரது ஆற்ற லும், திறமையும்தான் காரணம். அதே சமயம் ஒன்றை மனந்திறந்து பாராட்டியே ஆகவேண்டும். இந்த நாட்டில் வெளிவந்து கொண்டிருக்கும் தினசரிகளை நாம் கவ னத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்துப் பிரபல எழுத்தாளர்களின் மேடைக் கருத் துக்கள் பற்றி, அந்த நாட்டில் இலட்சக் கணக்கில் விற்பனையாகும் செய்தி ஏடு களில் ஒரு வரிகூடச் செய்தி பிரசுரிப்ப தில்லை. மாறாக, அன்று தொட்டு இன்று வரை, நமது தினசரிப் பேப்பர்கள் எழுத் தாளர்களின் மேடைப் பேச்சுக்களை வரிக்கு வரி வெகுசனங்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கின்றன. இதற்கான அந்த அத்திவாரமிட்டவர்கள் அமரர்களான கைலாசபதியும், ‘வீரகேசரி செல்லத்துரை யுமேயாகும். இந்த ஆரோக்கியமான தகவல் தொடர்புகளை இன்று வரைக்கும் நமது தினசரிகள் தொடர்ந்து செய்து
வருகின்றன. எதிர்கால இலக்கிய வரலாறு இதனை நிச்சயம் தனது பதிவேட்டில் ஆவணப்படுத்தும்.
0 இன்று தமிழில் பல நூல்கள்
பிரசுரமாகின்றனவே, இந்த நூல் வெளியீட்டுப் பெருக்கத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
toteliasatsu- எஸ். தவிஷால்ை
O 19526) முதல் முதலில் நமது எழுத் தாளர்களின் வெளியீடாக செ.கணேசலிங் கனின் நல்லவன்’ என்றொரு சிறுகதைத் தொகுதிதான் வெளிவந்திருந்தது. இன்றோ வாரம் ஒரு நூல் வெளிவருகின்றது. அது வும் கணிப்பொறியின் வரவால் புத்தகம் தயாரிக்கும் தொழில்நுட்பமும் சிறப்பாகக் கையாளப்பட்டு வருகின்றன"ஒருவருக்கு வெளிநாட்டில் அண்ணனோ, மச்சானோ இருந்து விட்டால்போதும், அவரனுப்பும் பணத்தில் நூல் ஒன்றை வெளியிட்டு 6SL6)ITLb.
இதில் எனது அநுபவத்தையும் சேர்த் துக் கொள்ளலாம். இப்படிப் பல்கிப் பெருகும் எழுத்தாளர்களில் ஒருவர் தனது நூலெர் ன்றை மல்லிகைக்கு அனுப்புவார். அவர் எந்தவொரு இலக்கிய கூட்டத்திற்கும் வந் திருக்கவே மாட்டார். ஈழத்தில் வெளிவரும் ஒரு சஞ்சிகையைக்கூட காசு கொடுத்து படித் திருக்க மாட்டார். ஈழத்து இலக்கிய வளர்ச் சிக்காக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போட் டிருக்க மாட்டார். ஆனால், இவரது நூலுக்கு மல்லிகை விமரிசனம் எழுதி இவரது சேவை யைப் பாராட்ட வேண்டும். விமரிசனத்திற்கு 4 அல்லது 5 பக்கங்கள் ஒதுக்க வேண்டும். மல்லிகையின் ஒருபக்க பெறுமதி இவர் களுக்கு விளங்குமா என்ன?
201/4, முீ கதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103 இலக்கத்திலுள்ள U.K. அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

Uసనీగాaు Us)8) copäFir? ယိမ်ရှ်z-J a G. . مضيق نتخيلهماC تعجبرہ:بحیرہ ہوجاتی
༡..༨ ( , , ) காற்றைக் கானமாக்கிய புல்லாங்குழல்
இ0ணுவையூர் சக்திதாசன் (டென்மார்க்)
өffil60oө\p: 150
முன்முகங்கள் (53 தகைமையாளரின் அட்டைப்படக் கட்டுரை) டொமினிக் ஜீவா விலை: 200
மல்லிகை ஜீவா டொமினிக் ஜீவா
விலை 150
பல்கலைக்கழ1.1.1.1, பாலகங்களுக்குத் தேவையானவை.
தொடர்புகளு, Dominic Jeeva
“Maikai”
201/4, Sri Kathiresan St, Colombo - 13.
Te I : 232(0)72 1

Page 39
YMalikai
PLASTICCARDS, SCRATCHCARES, MA:
OUR PRODUCT "DATABASE PRINTLINGBROXTIE TRES, CMT, OG GREINGCARDS. NAMETAGS, CD/DVDCV INWTTATION CARIOS, PROJEKT REPORTS, BOOK THANKING CARDSCERTIFICATES, BOOKSFO TRANSPARENCY SHEET PLASTICARDS, SCR
置
(OHAPPY DIGIT
Digital Colour Lab
Ma, 75 y 7, Sri Sumia Narra karraska, Calismo,
web extrifydigital retire. OT
 
 

October - 2008
STER CARDS, MEMBERSHIP CARDS, OFFICE IDENTITY CARD
ALTES SOLTWENLERS, B0XOKMARKS. ERSCOLOUR BIODATA STICKERS
COWER, MEN I CARIOS. GARMENTTIMES, STERS CD STUMMER, ATCHCARDS. VISITING CARDS,
AL CENTRE(Pvt) Ltd.
s Digital offset Press
lk.72, 7; Gf. 77 493733&, +4,77 #FF45ff :Ay:ரேak:M