கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2007.11-12

Page 1
| |
|-|- - |-
·
-
 


Page 2
சிறுவர் சிறுமி
ரெடிமேட்
அனைத்து தெரிவுகளுக்
செப்பு
நெல்லி
熬
 
 

அணுகு"

Page 3

ஜீவநதி
நதி 01 கிளை - 03
கவிதைகள்
பிரதம ஆசிரியர்கள் :
சின்னராஜா விமலன் கலாமணி பரணிதரன்
நிருவாக ஆசிரியர்:
துரைராஜா இராஜவேல் ஆலோசகள் òd9፡
திரு.தெணியான் திரு.குப்பிளான் ஐ.சண்முகலிங்கம்
திரு.கி.நடராஜா தொடர்புகளுக்கு :
கலை அகம் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார்வீதி
அல்வாய்.
தொலைபேசி : 0775991949
O7769.91015
Fax 0212263206
E.mail: jeevanathy (aDyahoo.com
பதிப்புரிமை: கலை அகம் வெளியீடு
இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத் N ஆக்கங்களின் கருத்துக்களுக்கும் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப் புடையவர்கள். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செம்மைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை 2 lei6.
ஆசிரியர் امر۔
கட்டுரைகள்
; பத்தி எழுத்து
மேமன்கவி.
சிறுகதைகள்
அட்டைப்படம்
ஆழியாள் to O p O
இயல்வாணன்.
ம.பா.மகாலிங்கசிவம்.
க.சுதர்சன். சி.மதுவஷன். ச.ஜனனி.
ம.இரகுநாதன். செ.யோகராசா. சோ.தேவராஜா.
ஆசி.கந்தராஜா.
அன்புமணி.
நதியின்றுள்ளே.
எல்.வளிம் அக்ரம் .
as so e o po so see so s
O O. O. O. o O O o O O. v.
O up
R
R 8.
சி.கதிர்காமநாதன்.
சி.யோகேஸ்வரி. கெக்கிறாவ ஸ்ஹானா.
பேசும் இதயங்கள். to
: அ.சுதர்சன்
O9
18
24
29
42
42
49
O3
19
3O
43
46
13
1O
25
35
5O

Page 4
ஜீவநதி
(கலை இலக்கிய இருதிங்கள் ஏடு)
அறிஞர் தம் இதய ஒடை
ஆழ நீர் தன்னை மொண்டு
செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி.
புதியதோர் உலகம் செய்வோம்.!
-பாரதிதாசன்
ஜீவநதியின் புதிய ஊற்றுகள்
ஜீவநதியின் மூன்றாவது இதழ் இது. இன்றைய சூழலில் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு கலை இலக்கிய சஞ்சிகையை வெளியிடுவதில் எதிர்கொள்ளக்கூடிய பல்வேறு சிரமங்களையும் எதிர்பார்த்த நிலையிலேயே சஞ்சிகை வெளியீட்டு முயற்சியில் இறங்கினோம். நிதி, விற்பனை, விநியோகம், விடயதானம்., என்று வரிசைப்படுத்தி, அவற்றுடன் தொடர்பான சவால்களை சமாளிக்கலாம் என்று திட்டமிட்டுச் செயற்படத் தொடங்கினோம். புதியவர்கள் - இளைஞர்கள் - தொடங்கியுள்ள சஞ்சிகை இரண்டு இதழ் களுடன் நின்று நிலைக்குமா?, என்ற ஐயப்பாடும் சிலரிடம் எழுந்ததில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. ஆனால், எங்கள் எதிர்பார்க்கைக்கும் மேலாக, எம்மோடு தோள்கொடுத்து 'ஜீவநதியைத் தொடந்து வெளிக்கொணர வேண்டும் என்று பல இலக்கிய நெஞ்சங்கள் உற்சாகமூட்டுவதைப் பார்க்கும் போது எமக்குப் பூரிப்பாக இருக்கிறது.
உள்நாட்டின் பல பாகங்களிலுமிருந்து பலர் எமக்கு ஆக்கபூர்வமான கருத்துகளைத் தொடர்ந்து எழுதிக்கொண்டு விடயதானங்களையும் வழங்கி, வருகின்றனர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் இச்சஞ்சிகையைத் தொடர்ந்து வெளிவரச் செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் இவர்களிடம் உள்ளமை எடக்கு நன்கு புலனாகின்றது. புலம்பெயர்ந்த நாட்டிலிருந்தும் பல நெஞ்சங்கள் மின் அஞ்சலில் எம்மோடு தொடர்பு கொள்கின்றனர். 'ஜீவநதி' வெளிவருவது குறித்து இணையத்தளத்தில் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நெஞ்சங்களை 'ஜீவநதி' நன்றியோடு பதிவு செய்து கொள்கின்றது. இந்த நெஞ்சங்கள் யாவும் ஜீவநதியின் புதிய ஊற்றுகள்.
இன்றைய யுகம் தகவல் தொழில்நுட்பயகம். அறிவு என்றுமில்லாத வேகத்தில் பிரவாகித்துக் கொண்டிருக்கும் இந்நாளில் நாட்டின் பல பாகங்களிலுள்ளவர்களிடமிருந்தும் விடயதானங்களைப் பெற்று ஜீவநதியில் பிரசுரிக்கவேண்டுமென முயற்சிக்கிறோம். ஆனால் 'அது ஒன்றும் பெரிய காரியமில்லை' என்பது எம்மோடு பலர் கொள்ளும் தொடர்புகளிலிருந்து தெரியவருகின்றது. இத்தொடர்புகளை 'ஜீவநதி மேலும் விரிவாக்கம் செய்து கொள்ளும். -ஆசிரியர்கள்.
 
 

ஜீவநதி 3
புனைகதைகளில் கேட்கும்
புதிய குரல்கள்
கலாநிதி.ம.இரகுநாதன்.
உலகெங்கும் பரந்து வாழ்கின்ற மக்கள் அனைவரும் மனிதர்கள் என்ற வகையில் ஒன்றுபட்டாலும் இவர்கள் இனம், மதம், மொழி, பொருளாதார நிலை, புவியியற்சூழல் முதலியவற்றால் வேறுபடுகின்றனர். உலகில் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்கள் அனைத்தும் ஒரே புவியியற் சூழலைக் கொண்டிருக்கவில்லை. மாறுபட்ட சூழல்களில் வாழும் மக்கள் தமது சூழலுக்கேற்பத் தமது பழக்க வழக்கங்களையும் அமைத்துக் கொள்கின்றனர். சூழல் தேவை கருதி மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் காலப்போக்கில் அவர்களது பண்பாடாகவும் வரையறுக்கப்பட்டது. இது, குறித்த ஒரு மக்கட் பிரிவினரை அடையாளப்படுத்துவதாகவும் அமைந்தது. இவை புவியியற் சூழலால் ஏற்பட்ட விளைவுகள்.
மற்றொரு புறத்தில் பொருளாதார நிலைமைகளும் மனித நடத்தைகளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக மனித சமூகத்தில் குடும்பம் என்ற அமைப்பு உருவாகியமைக்கான காரணம் பொருளாதார நிலைமைகளே என்பது மானிடவியலாளர்கள் பலரதும் பொதுவான கருத்தாகும். குடும்பம் என்பது ஓர் ஆணையும் பெண்ணையும் அடிப்படையாகக் கொண்டது. சமுதாய வளர்ச்சிப்போக்கில் புராதன பொதுவுடைமை நிலையில் ஆணும் பெண்ணும் எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லாது சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் வாழ்ந்து வந்தனர். பாலியல் நுகர்விலும் உறவுமுறைக் கட்டுப்பாடுகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. காலப்போக்கில் இந்நிலை மாற்றமுற்றுத் தனிக்குடும்ப அமைப்பு உருவாகியது. தமிழர் பண்பாட்டிலும் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டி வேலம் செய்து பெண்ணை ஆணுக்குரியவளாகத் தாரைவார்த்துக் கொடுத்தனர். ஆணின் தலைமையில் உருவாகிய குடும்பத்தில் பெண் ஆணுக்குரிய வாரிசைப் பெற்றுத் தரவேண்டியவள் என்பதால் அவளுக்கு மட்டும் கற்பு வலியுறுத்தப்பட்டது.
இவ்வாறு பெண்ணை ஆணுக்குரியவளாக்கி அவளைக் குடும்பம் என்ற அமைப்பினுள் கட்டுப்படுத்திய வாழ்வே இல்லற வாழ்வாகப் பேசப்பட்டது. நீதி நூல்கள் பலவும் இல்லற வாழ்வையே உயர்வானதாகக் கூறுகின்றன. வள்ளுவரும் 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை’ என இல்லறத்தை உயர்வுபடுத்தினாலும் பெண்ணை ஆணின் இல்வாழ்வுக்குரிய வாழ்க்கைத் துணையாகவே குறிப்பிடுகின்றார். பெண்ணுக்கென்று தனியான வாழ்க்கை இலட்சியம் எதுவுமே பேசப்படுவதில்லை. இவ்வாறான பண்பாட்டுப் பாரம்பரியத்திலிருந்து உருவாகிய பெண்களையே ஆரம்ப காலத் தமிழ்ப்

Page 5
ஜீவநதி 4. புனைகதைகளில் காணமுடிகின்றது. சான்றாக 1927 இல் யாழ்ப்பாணத்தி லிருந்து வெளிவந்த அ.நாகலிங்கத்தின் 'சாம்பசிவம் ஞானாமிர்தம்' என்ற புனைகதையில் வருகின்ற பொன்னம்பலத்தின் மனைவி அம்பிகை தொடர்பான சித்திரிப்பு பின்வருமாறு அமைகின்றது.
"கற்பில் அருந்ததியை நிகர்த்தவள். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்றபடி தன் கணவன் சொற்படியே நடந்து வருவாள். தன்விட்டில் வேலைகளைச் சிக்கிரம் முடித்துக் கொண்டு தன் கணவனுடன் பயிர்களுக்குத் தண்ணி பாய்ச்சுவதிலும் நிலத்தைத் திருத்திப் பண்படுத்துவதிலும் எருயிடுவதிலும் இன்னும் தோட்டத்தோடு சேர்ந்த எவ்வித வேலைக்கும் சேர்ந்துழைப்பாள. கணவனுக்குத் தொந்தரவில்லாதபடி குடும்ப வேலைகளைத் தானே சுமந்து கொள்வாள் தன் புருஷன் விரும்பக் கூடிய உணவையே சுத்தமாகச் செய்து வைட்பாள் புருஷன் கோட்பித்தாலும் தான் கோயிக்கமாட்டாள். புருஷன் சந்தோஷமாயிருந்தால் அவளும் சந்தோஷமாயிருப்பாள் புருஷனுக்கு எதில் விருப்பமோ அவளுக்கும் அதிலேயே விருப்பம். புருஷன் சாப்பிட்டால் அவளுடைய பசியாறிவிடும். வரவுக்குத் தகுந்த செலவையே செய்வாள் தன் விட்டிற் காரியங்களைப் பிறரிடம் போய்ப் பேசமாட்டாள். புருஷன் தன்னை வைதுஅடித்தாலும் தாய்விடு போகமாட்டாள். தன்புருஷனே அவளுக்குத் தெய்வம்" (ப2 - 4) இவள் கணவனுக்காகவே வாழ்பவளர்; தனக்கென எந்தவிதமான ஆசையும் இலட்சியமும் இல்லாதவள். படியாய்க் கிடந்து பணிசெய்கின்ற பாரம்பரியத்தின் நல்லதொரு பிரதிநிதி இவள். இத்தகைய வாழ்வே தனக்குரியது என்பதை மனதார ஏற்றுக் கொண்டதாலேயே இவள் கணவன் இறந்தபின்னர் மறுமணம் செய்து கொள்வதை ஏற்க மறுக்கின்றாள்.
"ஓர் பெண்ணானவள் தன் கொழுநன் இறந்தபின்னர் இன்னோர் ஆடவனை நோக்கினாலும், இச்சித்தாலும், மனத்தில் நினைத்தாலும், கற்புடையவளாகமாட்டாள். இவற்றைக் கவனியாது அவள் திரும்பவும் மணம் செய்வாளாகில் அவளை விபசாரியென்றே யான் சொல்ல 662/6Ø7ÓFLð” (Lu. 121) என்பது தான மறுமணம் தொடர்பான இவளின் கருத்து.
இவ்வாறு உரிமைகள் மறுக் கப்பட்டவர்களாகவும் தமது உரிமைகளை உணரமாட்டாதவர்களாகவும் பெண்கள் அடக்கியொடுக்கப் பட்டிருந்த சூழலில் மேற்குநாட்டவரின் வருகை சில மாற்றங்களை ஏற்படுத்தியது. இதனாலேயே படிதாண்டாப் பத்தினியாக அம்பிகையைச் சித்திரித்த அ.நாகலிங்கத்தின் காலத்திலேயே விதவாவிவாகத்திற்கு ஆதரவான குரலும் சமூகத்தில் எங்கோ ஒரு புறத்தில் ஒலிக்க ஆரம்பித்திருந்தது. சான்றாக ம.வே. திருஞானசம்பந்த பிள்ளையின் கோபால நேசரத்தினமி' என்ற புனைகதையில் வருகின்ற நேசரத்தினம் ஓர் இளம் விதவை. இவள் சைவத்திற்கு மதம்மாறி கோபாலனை மறுமணம் செய்கின்றாள். இவர்களின் திருமணம் மதமாற்றத்திற்காக எதிர்க்கப்பட்டதே தவிர மறுமணம் என்பதற்காக அல்ல. எனவே விதவா விவாகத்தை ஏற்றுக்

ஜீவநதி கொள்கின்ற சமூகச் சூழல் இருந்ததென்பது புலனாகின்றது.
1950 இல் வெளிவந்த தொ.மு.சி. ரகுநாதனின் 'மனைவி' என்ற புனைகதையில் வருகின்ற ராமசாமி, படித்த வாலிபன், வாழ்க்கையில் சுதந்திரமாகவே வாழவிரும்புபவன்; தனது மனைவிக்கும் சகல விதமான சுதந்திரங்களையும் கொடுக்கப் போவதாக நண்பர்களிடம் சொல்லி வந்தவன்; மனைவியை அடிமையாய் நடத்துவதையும் அடிப்பதையும் காட்டுமிராண்டித் தனம் என்று நினைப்பவன்.
தனது மனைவியான செல்லத்துக்கும் தனது கருத்துக்களை அவன் கூறியுள்ளான். தான் சாப்பிட்டபிறகுதான் அவள் சாப்பிடவேண்டும் என்ற சம்பிரதாயங்களையெல்லாம் மறந்துவிட வேண்டும் என்றும் ஏதாவது துணிமணி சாமான் எடுக்க வேண்டும் என்றாலும் அவள் இஷடப்படியே எடுத்துக் கொள்ளலாமென்றும் அவளது சுயநிர்ணயஉரிமை எதிலும் தான் தலையிடப் போவதில்லை என்றும் சொல்லியிருக்கின்றான்.
ஆனால் செல்லம் தனக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தைப் பயன்படுத்துபவளாக இருக்கவில்லை. அவள் எதற்கும் கணவனின் அனுமதியையும் துணையையும் நாடுபவளாகவே இருந்தாள். துணிக்கடையில் துணிவாங்கும் போதும் அவனுக்குப் பிடித்ததையே வாங்க விரும்புகின்றாள். அவன் அவளின் சுதந்திரத்தில் தலையிடவிரும்பாதபோது அவனோடு கோபித்துக் கொண்டு துணியே வாங்காமல் திரும்பி விடுகின்றாள். அவள்,
"கணவனும் மனைவிக்கு அடிமையல்ல, மனைவியும் கணவனுக்கு அடிமையல்ல ஆனால் சுதந்திரம் என்று சொல்லி இருவரும் ஒருவரையொருவர் அறியாமல் பிரிந்து தான்தோன்றியாகச் சென்று கொண்டிருப்பது தான் சுதந்திரமா? நான் பெண. எனக்கு அவர் துணை. அவரின்றி நான் இயங்க முடியாது. அப்படியிருக்கும் போது அவர் என்னைச் சுதந்திரமாய் விட்டுவிட்டேன் என்று சொல்லி என்னை விட்டு விலகிச் சென்றால்." அவருக்காகத்தானே நான் இருக்கிறேன். என்றாவது என்னை, அதைக் கட்டு இதைக் கட்டு' என்று வற்புறுத்தியிருக்கிறாரா? எல்லாம் நான்தான் பார்த்துக் கொள்ளவேண்டுமாம். நல்ல சுதந்திரம் அபிப்பிராயம் கூறுவதால் கூடவா சுதந்திரம் கெட்டுவிடப்போகிறது?
நான் அவருக்கு அடிமையாக வேண்டாம். ஆனால் அவரது அன்புக்கு நான் அடிமையாகத்தான் வேண்டும். அடிமையாவதில் ஒரு இன்பமா? இன்பம் இருப்பதாகத்தான் தெரிகிறது. இல்லறத்தில் ஒருவருக்கொருவர் அடிமையானால்தானே ஆனந்தம் பிறக்கும் அந்த அடிமை ஆதிக்கத்தினால் வரக் கூடாது. அன்பினால் வரவேண்டுமா? அன்புக்கு அடிமையா? அப்படியென்றால் அவருக்காக நானும் எனக்காக அவரும் வாழ்வதுதான் சுதந்திரமா..? ' என்றெல்லாம் சிந்தித்தவள்,
"உங்கள் சுதந்திரமே எனக்கு வேண்டாம் நான் உங்கள் அடிமை. உங்கள் அன்புக்கு நான் அடிமை உங்கள் இலட்சியத்துக்கல்ல. என்னை உங்கள் மனைவியாக நடத்துங்கள்”

Page 6
ஜீவநதி 6 என்று கணவனிடம் கூறுகிறாள். செல்லம் பாரம்பரியமான தமிழ்ப்பண்பாட்டில் ஊறிப்போன பாரதப்பெணி, அவளால் அவ்வாறுதான் சிந்திக்க முடியும். ஆனால் அவளின் வாழ்வில் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழும் மகிழ்ச்சியான வாழ்வுக்கான ஒளிக்கிற்றுக்கள் தென்படுகின்றன. இதுதான் இன்பமான குடும்ப வாழ்க்கை. இதையே தமிழ் மக்கள் பெரிதும் போற்றிப் பேணிவருகின்றனர்.
காதலர் இருவர் கருத்தொருமித்து வாழ்கின்ற வாழ்க்கையே இல்வாழ்க்கை. கருத்தால் ஒன்றுபடமுடியாத கணவனும் மனைவியும் இணைந்து வாழ்கின்ற வாழ்க்கை இருவருக்கும் துன்பமாகவே அமைந்துவிடும். ராஜம் கிருஷ்ணனின் 'வீடு' (1977) என்னும் நாவலில் வருகின்ற தேவி, தனது கணவனின் தன்னிச்சையான போக்கால் அதிருப்தியடைந்து வீட்டை விட்டே வெளியேறுகின்றாள். அவளின் மனதில்.
"உங்கள் ஆளுகையில் அழுந்திப் புழுங்கிக் கொண்டிருந்த ஒருத்தி உங்கள் எல்லையை கோபதாடங்களை அறியாமைகளை உதறிவிட்டுப் போகிறாள். அவள் இந்த நேரத்தில் இவ்வாறு முடிவு செய்ததையே ஒரு பெரிய சாதனையாகக் கருதுகிறாள். நீங்கள் எது செய்தாலும் சரியே என்று கருதும் மனப்பாங்கிலிருந்து விடுபட்டுத் தனித்துவம் பெற்று உங்கள் சொல்லையும் செயலையும் விமர்சிக்கும் துணிவு பெற்று எதிர்ப்பும் காட்டி தன் நியாயத்தை நிலை நிறுத்திக் கொண்டு அவள் தன் மனச் சாட்சிக்கொப்ப நடக்கிறாள். இதன் விளைவுகள் அவளைப்பலவாறாகப் பாதிக்கக்கூடும் உங்களுக்கும் பெருத்த அதிர்ச்சி அளிக்கக்கூடும் என்றாலும் மனிதத் தன்மைக்குப் பொதுவான கசிவு அவளை வென்று விட்டது. உங்களோடு வாழ்ந்து மக்களைப் பெற்று ஒரு குடும்பத்தை உருவாக்கியவள் என்ற நிலையில் அவள் உங்களை என்றும் மதிக்கிற7ள் ஆன7ல் அதற்காக அவள் கண்களை முடிக் கொண்டு மனச்சாட்சியை விழுங்கும் அறியாமைகளை உதறும் சந்தர்ப்பம் இதுவே எனக்கருதி அகலுகிறாள்.'(ப.272) என்ற வாக்கியங்கள் மின்னலிடுகின்றன. தேவி திருமணமாகிக் கணவனுடன் இல்லறம் நடாத்தியவள், இரண்டு குழந்தைகளைப் பெற்று வளர்த்தவள்; வீட்டையும் பிள்ளைகளையும் நல்லபடியாகப் பேணிப் பராமரித்துவந்தவள். கணவனின் அதிகாரம் எல்லைமீறி, அவள் ஆசையோடு பராமரித்த வீட்டை விற்றதாலும் அவளுக்குத் தெரியாமலே மகளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாலும், தேவி மனமுடைந்து போகின்றாள். குடும்பத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவளுக்கு - தான் புறக்கணிக்கப்பட்டதாக ஏற்பட்ட உணர்வு அவளை வீட்டைவிட்டு வெளியேறத் தூண்டுகிறது. அதனாலேயே அவள் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறிவிடுகிறாள். தேவியின் வெளியேற்றம் அமைதியான முறையில் நடந்திருக்கலாம். ஆனால் தமிழ்ப் பாரம்பரியத்தில் இது பெரியதொரு பாய்ச்சல். ஆணின் ஏகபோக உரிமையையும் அதிகாரத்தையும் பெண்கள் ஏற்கத் தயாரில்லை என்பதற்கு இது ஒரு முன்னறிவிப்பாகவே கருதப்படவேண்டியது.
தேவி தான் கட்டுண்ட குடும்பத்தைவிட்டுப் பிரிந்து செல்கின்றாள்.

ஜீவநதி ל ஆனால் தேவியின் பின்னவர்கள் குடும்ப அமைப்பினுள் கட்டுப்படுவதையே வெறுத்துப் புதுக்குரல் கொடுக்கின்றார்கள். செ.கணேசலிங்கனின் 'சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை' (1989) என்ற புனைகதையில் வருகின்ற சித்திரா,
"ஒருவனுக்குச் சமைத்துப்போட்டுப் பிள்ளை பெற்றுக் கொடுத்து அடிமைப் பணிகளும் செய்ய நான் தயாரில்லை" (11.52) எனக் கூறிக் கொண்டு வெளிநாட்டிற்குப் பணிப்பெண்ணாகப் பணிபுரியச் செல்கின்றாள். கலியாணம் செய்து ஒரு பேரப்பிள்ளையைப் பெற்றுத் தருவாள் என்று ஆசைப்பட்ட தாய்க்கு அவள்கூறும் பதில்,
"கலியாணத்திற்கும் பிள்ளைபெறுவதற்கும் என்ன தொடர்பு? எனக்குப்பிள்ளை வேணுமென்றால் தெருவிலே போகிற எந்த வாலிபனோ, கிழவனோகூடத் தயாராக இருப்பாங்க. நான் விரும்பினவனைக் கூப்பிட்டே என்னைச் சினைப்படுத்த முடியும் அது என் பிள்ளையாகவும் இருக்கும் என் கருவில் சுமந்து இரத்தத்தைச் சிந்திப் பெற்று இரத்தத்தைப் பாலாக்கிக் கொடுத்து வளர்க்கும் பிள்ளையை மற்றொருவன் உரிமைபேச விடமாட்டேன்’ (ப.61) என்பதுதான்.
செ. கணேசலிங்கனின் மற்றொரு நாவலான 'குடும்பச்சிறையில் (1999) என்பதில் வருகின்ற சுகன்யா, குமுதினி என்ற இரு பெண்களும் தமிழ்நாட்டின் இந்துப் பாரம்பரியத்தில் வளர்ந்தவர்கள். புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழ்பவர்கள். இவர்கள் அமெரிக்காவில் மகாதேவன் என்ற தமிழக இளைஞனைக்கண்டு நட்புக் கொள்கின்றனர். இந்த நட்பு அவா களிடையே பாலியல் தொடர்புகளையும் ஏற்படுத்துகின்றது. மகா தேவனுடன் இரு பெண்களும் சுதந்திரமாகப் பாலியல் இன்பத்தை அனுபவிக்கின்றனர். இந்த நிலையில் மகாதேவனுக்கு திருமணம் பேசப்படுகின்றது. அவன் தன்னோடு பாலியல் இன்பத்தை அனுபவித்த இருவரில் ஒருவரையாவது திருமணம் செய்யக்கூடாதா என்ற குற்ற உணர்வுக்கு உட்பட்டு அவர் களிடம் அதுபற்றிக் கேட்டபோது பெண்கள் இருவருமே மகாதேவனின் விருப்பத்தைப் புறக்கணித்துவிடுகின்றனர். சுகன்யா மகாதேவனுக்கு,
'நங்கள் வேண்டினால் உங்களுடன் வந்து இருக்கத் தயாராயிருக்கிறேன். இனிமேல் சடங்கு முறைவைத்துப் பாலுறவுக்கு அனுமதிபெறும் போலித் தேவையும் இல்லையே அக்காவின் (குமுதினி) உறவும் அப்படியே இருக்கலாம்" எனக் கூறுகின்றாள். (ப.182) குமுதினியும்,
"என்னுடையதும் அதே முடிவுதான சுதந்திரமான பாலுறவுதான் வாழ்க்கைக்கு முக்கியமானதென்று எண்ணினால் தற்போது நடப்பது போலத் தொடரலாம். இருவருடனும் பாலுறவு கொள்ளத்தக்க வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்தேன். இத்தகைய வாய்ப்பு அம்மா பேசும் திருமணத்தில் ஒரு போதும் கிடையாது. யோனிப் பொருத் தத்தை ஜாதகத்தில் தான் பார்ப்பார்கள் நம் இருவரிலும் பிடித்தவரோடு நீங்க வாழ்வதிலும் தவறில்லை. அமெரிக்காவில் குடும்ப உறவுப் பெயரின்றி அவரவர் தமது பெயருடன் கூட்டாகவும் தனித்தனியாகவும்

Page 7
ஜீவநதி 8
வாழ்பவர் ஏராளம் சுகன்யாவைப் பிடிக்கா விட்டால் அதே போலவே வாழ்ந்து பார்க்கத் தயாராயிருக்கின்றேன். நான் விரும்பாதவேளை வெளியேறி விடுவேன். அந்த சுதந்திரம் வேண்டும்."(ப182) என்றுகூறி அவனது வேண்டுகோளை நிராகரித்துவிடுகின்றாள். குடும்ப அமைப்பினுள் கட்டுப்படாமல் சுதந்திரமாக வாழ்ந்து பாலியலையும் சுதந்திரமாக அனுபவிக்கும் இப்பெண்கள் இந்துப்பாரம்பரியத்தில் ஊறிய தமிழ்நாட்டுப் பெண்கள். இவர்களின் குரல் தமிழ்ப்பாரம்பரியத்திற்கு முற்றிலும் புதியது. இதுவரை எங்குமே கேட்காத குரல்.
மற்றொரு புறத்தில் பணத்துக்காக ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் மனைவியாக வருகிறேன் என்று இன்னொரு பெண் குரல் கொடுக்கின்றாள். செங்கை ஆழியானின் மழைக்காலமி (1988) என்ற புனைகதையில் வருகின்ற தேவி தனது காதல் தோல்வியாலும் குடும்பத்தின் வறுமையாலும் ஜேர்மனியிலுள்ள மைக்கல் என்ற இளைஞனுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மனைவியாக வாழ உடன்படுகின்றாள். அண்மைக்காலத் திரையுலகிலும் இவ்வாறானதொரு குரலைப் பலரும் கேட்டிருக்கலாம். விஜய் சிம்ரன் நடித்த ‘பிரியமானவளே’ என்ற திரைப்படத்தில் கதாநாயகி ஒருவருட ஒப்பந்த மனைவியாகவே திருமணம் செய்கின்றாளர். இவை தமிழர் பண்பாட்டில் புதியகுரல்கள்.
முடிவாக, ஒருவனுக்கு ஒருத்தியென உறவுகண்டு இல்லறத்தில் நல்லறம் கண்டவர்கள் தமிழர்கள. இன்று அந்த இல்லறத்திற்கு அடிப்படையான குடும்ப அமைப்பை உடைத்துத் தனியன்களாகி மீண்டும் பண்டைப் புராதன நிலைக்குச் சென்று கட்டற்ற பாலியல் இன்பத்தை நுகர்ந்து காட்டுமிராண்டிகளாக வாழும் நிலைக்குத் தமிழர்கள் திரும்பிக் கொண்டிருக்கிறார்களா? சித்திராவும் சுகன்யாவும், குமுதினியும் எமக்கு இதைத்தான் உணர்த்துகின்றனரா.? இது வெறும் அபத்தமி. இவர்களின் குரல் வெற்றுக்கூச்சல், வெறும் மாயை, மேற்கில் உருவாகிய பெண்ணியச் சிந்தனையாளர்களில் ஒரு பிரிவினராகிய தீவிரவாதப் பெண்ணிய வாதிகளே குடும்ப அமைப்பை வெறுத்து பாலியல் இன்பத்தை சுதந்திரமாக அனுபவிக்க விரும்பியவர்கள். இவர்களின் கருத்துக்கள் மேற்குலகில் கூட பெரியளவில் வரவேற்கப்படவில்லை. இந்தியாவிலும் இலங்கையிலும் இக்கருத்துக்கள் எந்த வகையிலும் முக்கியத்துவம் பெறவில்லை. இந்தியப் பெண்ணியம் பண்பாட்டின் அடித்தளமான குடும்ப அமைப்பினை சிதைக்காதவாறே பெண்களின் உரிமைகளை வலியுறுத்தியது. இத்தகைய நிலையில் மேற்படி புனைகதைகளில் வருகின்ற பெண்களின் குரல்கள். தமிழர் பண்பாட்டில் எங்குமே ஓங்கி ஒலிக்காத குரல்கள். புறநடைகளைப் புறந்தள்ளினால் இது வெறும் மாயை. குடும்ப அமைப்பை உடைத்து எமது பண்பாட்டின் அடித்தளத்தை வேரோடு கிள்ளி எறிய எந்தவொரு பெண்ணும் இன்னும் தயாராகவில்லை. எனவே, மேற்படி குரல்கள் அர்த்தமற்றவை. இவை மேலைப்புலத்துச் சிந்தனைகளுக்கு இலக்கிய வடிவம் கொடுக்க முற்பட்டதன் ஆபத்தான விளைவு என்பதே உண்மையாகும். 0

ஜீவநதி 9
ബ്ബ00 ട്രൂ ീയ്യ മത്ര
இதோ
எழுந்து
நிமிர்ந்து
9 (JILorets விண்ணிற்கும் மண்ணிற்குமாய் விசுவரூப மெடுத்தபடி நிற்கிறது அப் பெருங்கோயில்.
காற்றில் அசையும்
அக் கோபுரக் கலசம்
அவளின் தலை. வெகு சீராய்ச் செதுக்கப்பட்ட
சிற்பங்கள்
அவளின் முண்டமாம்.
கைகளது நீளமே அப் பெருங்கோயிற் சுற்றுப் பிரகாரம். உறுதியாய்த் திரண்டு நிலத்தில் ஊன்றிப் படிந்த அவளின் அகன்ற கால்களோ கற்துாண் வாயில்கள். பூஞ்செடிகள், நிழல் மரங்கள் மணிப்புறா, அணிற்பிள்ளைகளைத் தாண்டிப் பின் நந்தியும் தாண்ட பிரமாண்டமாய் மேல் உயர்கிறது பஞ்சாராத்தி ஒருங்கே கூம்பிய
அனைத்து கைகளும் உள்ளங்கள் கனிந்து கண்ணிராய் மல்கிக் கடைவாய் வழியப் பிதற்றுகின்றன அரோகரா என்று.
அவை அறிந்தோ அறியாமலோ கருவறையின் இருட்சுடரில் மற்றுமோர் “அவள்” ஜனிக்கத் தொடங்குகிறாள்.
கோயிற் திருக்காளை
அசை போட்டு அமர்ந்தபடிக்கு
மொய்க்கும் ஈக்களைக்
கழுத்துமணி அசைய விரட்டுகிறது - ஆழியாள் வாலைச் சுழற்றிச் சுழற்றி (அவுஸ்திரேலியா)

Page 8
10
ஜீவநதி
“நீ ஒய்ந்திருக்கலாகாது பாப்பா.”
நகரம் இயங்கத் தொடங்கி விட்டது. பாடசாலைக்குச் செல்வோர், வைத்தியசாலைக்குச் செல்வோா, பிற அலுவல்களுக்குச் செல்வோர். பஸ் வண்டிகள, துவிச் சக் கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், கும்பல் கும்பலாகச் சனங்கள். மெதுவாக, விரைவாக, இன்னும் விரைவாக. கூக்குரல்களி, சத்தங் கள். வாகனங்களின் இரைச் சல்கள். றோட்டை அடைத்து. வாகனங்கள், சனங்கள்.
மட்டக்களப்பு. கண்டி. யாழ்ப்பாணம். மன்னார் பயணி களைத் தமது பக்கம் இழுக்கும் நடத்துனர்களின் சத்தம். பழவகை, அதிர்ஷ்டலாப சீட்டுக்கள், பத்திரி
கை, நானாவித பொருட்கள் விற்போர். இவர்களது கூக்குரல் களும்.
அவள் பொறுமையாக, இன்னும் திறக்காத கடை வாசலின் முன் அமர்ந்திருந்தாள். பழுப்பேறிய சாறி, அதற்கேற்ற சட்டை வெயிலில் அதிக நேரம் திரிந்தமையினால் தலைமயிர் எண்ணெய் தண்ணி யின்றி தூசி படிந்து, "பிசுபிசுத்து', செம்மண் நிறத்தில் இருந்தது. அவளது முகமும் அதே நிறத்தில் சிவந்து உலர்ந்து போயிருந்தது.
இடது பக்க கீழ்த் தாடை யில் பற்கள் இரண்டு விழுந்து விட்டமை தெரிந்தது. வெற்றிலை தொடர்ந்து போடுவதினால் மற்றைய பற்கள் காவி படிந்து அசிங்கமாய் காட்சியளித்தன. காதுகளிரண்டும் ஒன்றுமில்லாமல் வெறுமையாய். மூக்கில் மட்டும் மூக்குத்தி என்ற பெயரில் ஏதோவொரு குச்சி உட் கார்ந்திருந்தது. காலில் இருந்த
- சி.கதிர்காமநாதன் -
பாட்டா ஒன்றை ஊசியினால் குத்தி செப்பனிட்டு இருந்தாள்.
அவள் மடியில் குழந்தை யொன்று இரண்டு வயது கடந் திருக்கும். அட்டைபோல் சுருண்டு நித்திரையில் இருந்தது. அதன் மூக்கிலிருந்து வழிந்த “சளி’ உதட்டின் மேல் ஒட்டியிருக்க அதை இலையான்கள் சுற்றிவளைப் பு செய்து கொண்டிருந்தன. சிந்தனை யில் இருந்தவள் திடுக்கிட்டு மடியில் படுத்திருந்த “பிஞ்சை’ தட்டி எழுப்பினாள்.
சே. சனியனே. காலங்காத் தால. தொழிலுக்குப் போற நேரத் தில் நித்திரை. எழும்பு
அது தன்னை மறந்து நித்திரையில். அவளே ஆத்திரத் துடன் தொடையில் விரல்களினால். “வீல்". பெருமூச்சுடன். விக்கலுடன் அது அழத்தொடங்கி விட்டது.
 

ஜீவநதி
11
ஆ. பிறகென்ன. அவள் முகம் பிரகாசமடைய குழந்தையைத் தூக்கிக்கொண்டு சனக் கூட்டத்தில் ஐக் கியமானாள். விரைந்து நடந்தாள். மிகப்பெரியதுமான நாற் சந்திக்கு வந்தாள். மின்சார சமிக்ஞை விளக்குகள் தமது கட்டு ப்பாடுகளினால். வாகனங்களை பாதசாரிகளை நிறுத்தி. நிறுத்தி. அவைகளைப் பாதைகளில் அனுப்பிக் கொண்டிருந்தன. வாகனங் கள் நிறுத்தப்பட்டபோது அவள் ஒடிப்போய் தனது வேலையைத் தொடங்கினாள். நிறுத்தியிருந்த வாகனத்தின் யன்னல் கண்ணாடி யூடாக குனிந்து தலையைவிட்டு "ஐயா.ஐயா. அம்மா. பிள்ளையைப் பாருங் கோ. சாப் பாடில் லை பாலில்லை. இந்தப் பிஞ்சுப் பாலகனுக்கு உதவி செய்யுங்கோ. 3uJIT...
அவள் கெஞ்சினாள் குரலில் இரக்கம்.குழைவு கண் களில் கண்ணி. முகத்தில் சோகம். குழந்தையின் தலையைத் தூக்கி. அது புதியவர்களின் முகத்தைப் பார்த்து. மேலும் பலமாக வீரிட்டுக் கத்தியது. ‘ஐயா. அம்மா. அக்கா. அண்ணா. தம்பி. மாமா இந்தப் பிஞ்சு பசியால் துடிக்குது. எங்களுக்கு ஒருவருமில்லை இப்படி நாயாய். பேயாய் இடம் பெயர்ந்து அலைஞ்சு திரியிறம்.
மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள் எந்த வொரு வாகனமும் அவளது பார்வை யிலிருந்து தப்பிப் போக முடிய வில்லை. தோளில் தொங்கிய சிறு தோற்பை ஆடிக் கொண்டி ருந்தது.
கையில் சில்லறை கணக்க. தோற்பையினுள் போட்டாள் கிடைத்த
ஓரிரு தாள் காசுகளை சுற்று முற்றும் பார்த்து விட்டு “மார்புப் பகுதியினுள் செருகினாள். வெயில் சூடேறத் தொடங்கியது. சனநெரிசலும் . வெக்கையும் புழுக்கமும் புகையும். குழந்தைக்கு கண் எரிச்சலைக் கொடுத்தது. கண்களைக் கசக் கியது. அவளும் சற்றுக் களைப்
படைந்த நிலையில் பக்கத்து தேநீர்க்
கடையில் தண்ணிர் வாங்கி குடித்து குழந்தைக்கும் சிறிது பருக்கி. பின் வெற்றிலை போட்டு மறுபடி ஓடினாள். குழந்தை ‘பரிதாபமாக அவளைப் பார்த்தது. ‘என்ன பாக்கிறாய்? உனக்கு இன்னும் வேலையிருக்கு அவள் மறுபடி வாகனங்களை முற்றாகத் தடவி. சிலருக்கு அவளது செய்கை எரிச்சலை, கோபத்தை உண்டு பண்ணியது. அவள் தேர்ந்த கலைஞன் போல் பொறுமையாகச் செயற்பட்டாள்.
சற்று நேரத்தில் பார்த்தாள் குழந்தை அவள் தோளில் தூங்கிப் போய் விட்டிருந்தது. மோட்டார் சைக் கிள் காரனிடம் மன்றாடிக் கொன டி ரு ந த வ ஞ க கு குழந்தையைக் காட்ட நினைத்து அதைத் தட்டினாள. அதுக்கோ நல்ல அசதி. சரிப்பட்டு வரவில்லை மெல்ல. நின்றிருந்த லொறியின் பின்னால் போய் குழந்தையின் தொடையின் கீழ் விரல்களினால்.
“நல்லா அழு. உப்பிடி படுத்தி யெண்டால்.” குழந்தை கைகால்
’களை உதறிப் பலமாக அலறியது.
அவள் அந்தக்கையோடு. நகரின் மத்திய பஸ் தரிப்பிடத்திற்கு வந்து ஒவ்வொரு பஸ்வண்டியாக ஏறி இறங்கத் தொடங்கினாள்.

Page 9
ஜீவநதி ' குழந்தை விம்மலுடன் அழுது கொண்டிருந்தது. மூக்கிலிருந்து சளி. கீழே.
"ஐயா. அம்மா. அக்கா. அண்ணா. தம்பி. மாமா பாருங்கோ எங்கட நிலையை பால் வாங்கக் காசில்லை உதவி செய்யுங்கோ.”
குழந்தை கண்கள் செருக.
அவள் தோளில் சாய்ந்தது. பின் திடுக்கிட்டு. தொடையில் வலிக்க மறுபடி வீரிட்டுக் கத்தி அழத் தொடங்கியது. பஸ்வண்டியில் ஏறி இறங்கும் போது பயணிகள் அவளைக் கேள்வி கேட்டார்கள். சொந்த ஊர். இப்போது இருக்கும் ஊர். உன்குடும்பத்துக்கு என்ன நடந்தது? ஏன் இப்படி அலைகிறாய். எனப் பல கேள்விகள். பரிதாபப் பட்டார்கள். “உச்" கொட்டினார்கள். தோற்பை சில்லறையால் கனத்தது. “ஐயோ! கடவுளே. இப்படி கேள்வி கேக்கிற மாதிரி என்னை வைச்சிட்டியே. குண்டுவெடிச்சு என்ர புருசன் போன மாதிரி நானும் பிள்ளையஞம் போயிருக்கலாம். இப் படி நாய் மாதிரி அலைய வேண்டியிருக்காதே. நான் எப்பவோ செத்துப் போயிருப்பன். இந்தப் பச் சிளம் பிஞ்சைக் காட்டி. வாழ வேண் டியிருக்கே. நான் என்ன செய்ய.
அவள் தலையில் அடித்து கூக்குரல் செய்ய பலர் மேலும் உதவ முன்வந்தனர். கை நிறைய
12 காசு வர தோற்பையும் நிறைந்தது. அவள் நேரத்தைக் கேட்டாள் ஒரு மணி என பயணி ஒருவர் சொல்ல. அவள் மறுகணம் பஸ்வண்டியி லிருந்து குதித்து ஓடி விரைந்து நடக்கத் தொடங்கினாள். இடையில் வந்த பஸ்வண்டியில் ஏறி. அவள் வனாந்தரமான இடத்தில் இறங் கினாள். தூரத்தில் ஒதுக்குப்புறமாக பல காலமாய் இருக்கும் நிலையில் தெரிந்த அகதி முகாம் தெரிந்தது. இவள் வருவதை எதிர்பார்த் துக் கொண்டிருந்த பெண் விழுந் தடித்து ஓடி வந்து பெரிதாக மூச்சு வாங்கினாள் காணாமல் போன கணவன் இருந்தால் என அவள் கண்கலங்கி நிற்க. “இந்தா உன்ர குழந்தையைப் பிடி. எனக் கு நுாற் றை ம் பது ரூபாய், உனக்கு நூற்றிருபத்தைந்து ரூபாய் ஒரேயடியா தூங்கி விழுதது. ராவைக்கு நல்லா பிள்ளை யை நித்திரை கொள்ள விடு. காலேல வாறன். சமைக்க வேணும் அவள் ஓடிப்போகிறாள்.
தாயானவள். குழந்தையை மார் போடு இறுக அணைத்தபடி கடைக்கு ஓடுகிறாள் அவளது அடு ப்பு எரியவேணும். வயதுபோன அப்பா, யுத்தத்தால் அங்கவீனமான மகனி, விதவைச் சகோதரி. அவர் களது வயிறுகள் . காத்துக் கிடக்கின்றன. D
நூல ஆசிரியா
வெளியீடு
நால் அறிமுகம்
பதிப்பாசிரியர் - கலாநிதி. அம்மன்கிளி முருகதாஸ்
- ஜனனி வெளியீட்டகம்.
- அபகரம் (ஓரங்க நாடகம்) - நா.சுந்தரலிங்கம்
திரு.க.திலகநாதன்
புதுவளவு, பொலிகண்டி,
 

§ඛJIBé 13
ක්"df"කydłනීස් ජිනරතන් ශ්‍ර (C උctfශතකyaරථf
- மேமன்கவி -
Lffങ്ങഖ് - I இளைஞர்கள் எல்லோரும் கவிஞர்களாக. இலங்கையின் இன்றைய தமிழ் பேசும் சூழலில் என்றுக்குமே இல்லாத தொகை அளவுக்கு நூல்கள் வெளிவருகின்றன. அவ்வாறு வெளிவருகின்ற நூல்களில் கவிதைத்தொகுதிகள் அதிக அளவில் வெளிவருகின்றன. தொகை அதிக அளவில் கவிதைத் தொகுதிகள் வெளிவருவதற்கு புதுக்கவிதை பெற்றுக் கொண்ட அங்கீகாரம்தான் காரணம் எனச் சொல்லப்படுகின்றது. புதுக்கவிதை பெற்றிருக்கும் அங்கீகாரம் என்பது அது எழுதுவதற்கு இலகுவானது என்பதாகத்தான் இன்றைய நமது சூழலில் பலரால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் ஆழ்ந்து நோக்கினால் அதுவல்ல உண்மை.
புதுக்கவிதை எழுதுவது இலகுவானது அல்ல. இன்றைய சூழலில் புதுக்கவிதை (அல்லது நவீன கவிதை என்றும் சொல்லலாம்) எனும் பேரில் எழுதப்படும் துணுக்குகளுக்கு வேண்டுமானால் புதுக்கவிதை எழுதுவது இலகுவானது என்ற கூற்று பொருந்தக் கூடும். இன்னும் சற்று விரிவாக சொல்வதானால் இன்று புதுக்கவிதை, மரபுக்கவிதை என்ற சர்ச்சை தேவையற்றதாகிப் போன சூழலில், நவீன கவிதை என்று குறிப்பிடுவதுதான் சரி. அந்த வகையில் இன்றைய சூழலில் வெளிவரும் கவிதைத் தொகுதிகளில் நாம் மேற்குறிப்பிட்ட அந்த துணுக்குகள் அடங்கிய தொகுப்புகள் சிறு விகிதாசாரம் தான். மற்றும்படி இன்று வெளிவருகின்ற கவிதைத் தொகுப்புகள் மூலம் பல்வேறு சமூகத் தளங்களிலிருந்து தோற்றம் பெற்ற இளைஞர்களின் அனுபவங்களின் வெளிப்பாடுகள் கவிதைகளாக ஆக்கம் பெறுகின்றன. அத்தகைய கவிதைகள் அடங்கிய தொகுப்புக்கள்தான் அதிக அளவில் வெளி வருகின்றன என்பதும் மறுப்ப தற்கில்லை. இங்குதான் மீண்டும் அந்த கேள்வி எழுகிறது. அவ்வாறு எழுத வரும் பெரும்பாலான இளைஞர்கள் தம் அனுபவங்களை வெளிப்படுததுவதற்கு கவிதை உருவத்தை ஏன் தேர்தெடுக்கிறார்கள்?
கவிதை என்பது உணர்ச்சி சார்ந்தது என்பது பல நூற்றாண்டுகளாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய சூழலில் கவிதை என்பது உணர்ச்சி சார்ந்தது மட்டுமல்ல, அது அறிவு சார்ந்ததும்தான் என்பதும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய இளைஞர்கள் கவிதை யை தம் இலக்கிய வெளிப்பாடாக பயன்படுத்துவதற்கு, ஏலவே கவிதை உணர்ச்சி சார்ந்தது என்ற கருத்து பாதகமாக இவர்களுக்கு பயன்பட, (இவ்விடத்தில் இன்றைய கலை இலக்கிய உலகில் தம் ஆரம்ப கால இலக்கிய வெளிப்பாடாக கவிதையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை இங்கு கூற வேண்டியிருக்கிறது) கவிதை அறிவு சார்ந்தது என்ற கருத்தும் வந்து சேர்ந்ததும் அவர்களுக்கு பலமாக அமைந்து விட்டது. (இளைஞர்கள் என்று நான் குறிப்பிடுவது பெண்களையும் உள்ளடக்கித்தான் என்ற வகையில்

Page 10
ஜீவநதி 14 இன்றைய தமிழ் இலக்கிய சூழலில் பெண் படைப்பாளிகளால் எழுதப்படும் கவிதைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டி யிருக்கிறது.)
மேலும், இன்றைய சமூக சூழல் கொண்டு தரும் உக்கிரமான அனுபவங்கள், துணுக்குகளை கவிதைகள் எனும் பேரில் எழுதிக் கொண்டிருந்தவர்களைக் கூட கவிதைகளை எழுத வைத்திருக்கிறது என்பதை நாம் மறுப்பதற்கில்லை.
மேற்குறித்த காரணங்கள் போக, இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் “கவிதை"யை தம் இலக்கிய வெளிப்பாட்டுக்கான உருவமாக கையாளுவதற்கான மேலதிகமான காரணங்கள் உண்டா?
என்ற கேள்விக்கான பதில் விரிவான பார்வையுடன் கூடிய ஆய்வு முயற்சியின் மூலம் நமக்கு கிடைக்கக் கூடும்.
பார்வை - 2 பூரணமான ஆய்வுக்கான தேவை
ஈழத்து தமிழ் கலை இலக்கியம் புதிய பல பிந்திய பரிமாணங்களை பெற்று நகள்ந்து கொண்டிருக்கிறது. தேசிய ரீதியாக நிலவும் போர்ச் சூழல் இனவாதம், புலம் பெயர்வு, இடம் பெயர்வு மற்றும் இன்ன பிற உக்கிரமான பிரச்சினைகளால் இத்தகைய வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் உண்மையாகும்.
அத்தகைய வளர்ச்சி இன்று ஈழத்து தமிழ் கலை இலக்கிய உலகில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மூலம் பரவலாக எடுத்துக் காட்டப்படுகிறது. ஆனால் அவ்வாய்வுகளில் பெரும்பாலாக வடகிழக்கு பிரதேசத்திலிருந்து அல்லது அப்பிரதேசத்தை சார்ந்தவர்களிடமிருந்து வரும் எழுத்துக்களை மட்டுமே எடுத்துக் காட்டி அத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது அவ்வாய்வுகளில் வாய்ப்பாடாக ஓரிரு பெயர்களே மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கப்படுகின்றன. அப்படி சொல்லப்படுவதில் நமக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. அவர்கள் சொல்லப் படவேண்டியவர்கள்தான். ஏனெனில் அவர்கள்தான் நாம் மேற் சொன்ன பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றவர்கள். அப்பிரச்சினைகளை நேரடியாக பார்க்கின்றவர்கள்.
ஆனால் நமது பிரச்சினை என்னவென்றால், நாம் மேற்கூறிய பிரச்சினைகளான போர்ச் சூழல், இனவாதம், புலம்பெயர்வு, இடம்பெயர்வு இன்ன பிற உக்கிரமான பிரச்சினைகளை வடகிழக்கு பிரதேசத்தை தவிர்ந்த பிரதேசங்களைச் சார்ந்தவர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்? அவ்வாறு எதிர் கொள்கின்றவர்களின் எழுத்துக்கள் எவை? அவ்வாறான எழுத்துக்களை தருபவர்கள் யார்? அவ்வாறாக தரப்படும் எழுத்துக்கள் ஈழத்து தமிழ் கலை இலக்கியம் அடைந்திருக்கும் புதிய பரிமாணத்தில் வகிக்கும் பங்கு என்ன? என்ற மாதிரியான கேள்விகளுக்கான பதில்கள் அவ்வாய்வுகளில் நமக்கு கிடைப்பதில்லை.
நாம் சொல்ல முனைவது இதுதான். மேற்சொன்ன ரீதியிலான பார்வையுடன் இன்று மேற்கொள்ளப்படும் ஆய்வுகள்

ஜீவநதி 15 முன்வைக்கப்படல் வேண்டும். அவ்வாறான பார்வை முன் வைக்கப்படும் பொழுதுதான் இன்றைய ஈழத்து தமிழ் கலை இலக்கியம் அடைந்திருக்கும் வளர்ச்சியை அடையாளப்படுத்தல் என்பது பூரணமாக அமையும் எனச் G)öFIT6ö6vo6vo(TLíb.
அவ்வாறான ஆய்வுகள் மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் இக்கூற்றை மனதில் இருத்திக் கொள்வது நல்லது.
பார்வை - 3 இலங்கை ஆங்கில புனைகதை இலக்கியம்
தமிழக சிறுசஞ்சிகைச் சூழலின் வழியாகவும் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களின் முயற்சியினாலும் மற்றும் இலங்கையில் வசிக்கும் பல்வேறு மொழிகளுடன் (ஆங்கிலம், தமிழ்,சிங்களம்) பரிச்சயமுடையவர்களாலும், உலகின் பல்வேறு மொழிகளின் இலக்கி யங்களும் அந்தந்த மொழிகளில் முன் வைக்கப்படும் கலை இலக்கிய சமூகவியல் சம்பந்தமான கோட்பாடுகளை விளக்கும் படைப்புக்களும் தமிழில் கொண்டு வரப்படுகின்றன. அதன் மூலம் தமிழ் மொழியும் செழுமை அடைவதோடு உலகின் சக மொழிச் சமூகங்களின் இருப்பையும் அவர் தம் சமூக விழுமியங்களையும் நாம் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
அதே நேரத்தில் இலங்கையில் பிற மொழிகளில் (சிங்களம், ஆங்கிலம்) மேற் கொள்ளப்படும் கலை இலக்கிய முயற்சிகள் பற்றிய நமது அறிதல் போதுமானதாக இருக்கிறதா? என்றால் சிங்கள மொழியில் நடைபெறும் கலை இலக்கியம் மற்றும் கோட்பாடுகள் பற்றிய முயற்சிகளைப் பற்றிய நமது அறிதல் பரவலாக இல்லாவிடினும் நமது கலை இலக்கிய முயற்சிகளைப் பற்றிய சிங்கள கலை இலக்கியவாதிகளின் அறிதலுடன் ஒப்பிடும் பொழுது, அவர்தம் கலை இலக்கிய முயற்சிகளைப் பற்றிய நமது அறிதல் அதிக அளவானதுதான். நம் பக்கம் இருக்கும் இச்சிறப்பைப் பற்றியும், அவள் தம் பக்கம் உள்ள அந்த பலஹினத்தைப் பற்றியும் பல தடவை சிங்கள மொழி ஊடகங்களிலும், அவ்வாறான இரு மொழி சார்ந்த நண்பர்கள் ஒன்று கூடும் இடங்களிலும் தமிழ் பேசும் கலை இலக்கியவாதிகளால் இக்குறை அடிக்கடி எடுத்துச் சொல்லப்படுகிறது என்பதையும் இங்கு நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது.
அதே நேரத்தில் இன்னொன்றையும் இங்கு குறிப்பிட வேண்டும் அதாவது சிங்கள மொழி மூலம் மேற்கொள்ளப்படும் கலை இலக்கிய முயற்சிகளைப் பற்றிய நமது அறிதல் அளவுக்கு இலங்கையில் ஆங்கிலத்தில் எழுதப்படும் எழுத்துக்களைப் பற்றிய நமது அறிதல் மிக குறைவானது என்றுதான் சொல்ல வேண்டும். கே.எஸ். சிவகுமாரன், சோ.ப, பண்ணாமத்து கவிராயர், கெக்கிராவ ஸஉலைஹா (இன்னும் சிலர் இருக்கிறார்கள். உடனடியாக நினைவுக்கு வந்தவர்கள் என்ற வகையில் இவர்களை குறிப்பிட்டுள்ளேன்) போன்றவர்களின் இலங்கையில் ஆங்கிலத்தில் எழுதப்படும் சில கவிதைகளை தமிழில் நமக்கு தந்திருக்கும்

Page 11
ஜீவநதி 16 முயற்சிகளுடன் ஒப்பிடும் பொழுது, இலங்கையில் ஆங்கிலத்தில் எழுதப்படும் கவிதைகள் நமக்கு தமிழில் கிடைத்த அளவுக்கு ஆங்கிலத்தில் படைக்கப்படும் புனைகதை இலக்கியம் தமிழில் நமக்கு கிடைக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.
LITiao.62 - 4 மேடையில் படைப்பாளிகள் இந்த வேளை -
அக்டோபர் மாதம் வாசிப்பு மாதம் என்பதை முன்னிட்டு இலங்கையில் அமைந்துள்ள பிரான்ஸ் தூதராலயத்தின் கலாசார பிரிவான Alliance Francaise de Colombo அம்மாதம் 18,1920 ஆகிய மூன்று நாட்களாக புத்தகக் கண்காட்சியும் எழுத்தாளர்களின் படைப்பு அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும் வகையில் “Writers on Stage” எனும் மகுடத்தின் கீழ் நடாத்திய நிகழ்வும் நினைவுக்கு வருகிறது.
அந்த இரண்டாம் நாள் நிகழ்வாக இலங்கையில் வசிக்கும் தமிழ், ஆங்கிலம், சிங்களம், பிரான்ஸ் ஆகிய மொழிகளில் எழுதும் எட்டு எழுத்தாளர்களை அழைத்து அவர் தம் படைப்புக்களையும் அனுபவங் களையும் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாக அந்த நிகழ்வு அமைந்தது.
தமிழ் எழுத்தாளர்கள் வரிசையில் தமிழில் எழுதும் டொமினிக் ஜீவா மற்றும் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதும் கே.எஸ்.சிவகுமாரன் ஆகியோர் அழைக்கப்பட்டு இருந்தார்கள். இவர்களுடன் ஆங்கிலத்தில் 6| (Upg5!Li) Yasmaine Gooneratne, Brandon Ingram gé)sÉÍ 86Tg, gó6)Ö பிரெஞ்சிலும் எழுதும் Niroshini Gunasekara சிங்கள மொழியில் எழுதும் Soma jayakody, kamal perera 9.5 d56)5g5g)|ip holy 65dg)tb 6T(pg|Lib இலங்கையில் வசிக்கும் பிரான்ஸ் தேசத்தை சேர்ந்த Philippe Fabry ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
டொமிக் ஜீவா தனது ‘பாதுகை’ சிறுகதை பற்றிய தனது அனுபவங்களை தமிழில் பகிர்ந்து கொண்டார். கே.எஸ். சிவகுமாரன் தனது இருமை’ எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதை ஒன்றினை ஆங்கிலத்தில் லாசித்தார்.
இலங்கையில் வசிக்கும் பெண் படைப்பாளியான Yasmaine Gooneratne தன் எழுத்துக்களுக்காய் பல சர்வதேசிய பரிசுகளை பெற்றவர். அன்றைய நிகழ்வில் அவர் அவரது சமீப நாவலான “THE SWEET & SIMPLEKIND’ எனும் நாவலின் சில அத்தியாயங்களை வாசித்ததுடன், அந்த நாவல் சார்ந்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிங்கள பெண் எழுத்தாளரான Somajayakody, இவர் சிங்கள மொழியில் சிறுவர் இலக்கியத்துறைக்கு பாரிய பங்களிப்பு செய்தவர் என்ற வகையில, அன்றும் தனது சிறுவர் இலக்கியப் படைப்பொன்றின் சில பகுதிகளை முன் வைத்தார்.
Kamal Perera, மலையகத்தில் வசிக்கும் சிங்கள சமூகத்தைச் சார்ந்த சிறுவனை வைத்து எழுதப்பட்ட தனது “USKANDUAWADIAN” எனும் தன் புதிய நாவலின் சில பகுதிகளை வாசித்து காட்டினார்.

ඉෂ්ඛuIbé 17
Niroshini Gunasekara இவர் பிரான்ஸிலிருந்து சிங்களத்திற்கு மொழிபெயர்ப்பில் கை தேர்ந்தவர்களில் ஒருவர். அவ்வாறான மொழிபெயர்ப்புக்காக பல பரிசில்கள் பெற்றவர். இந்த நிகழ்வில், இவர் தற்பொழுது மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் பிரான்ஸ் தேசத்து படைப் UT6fluJT60T Maguerite Duras uîl6öï La Douleur 6go)JLD bff656ôt offia) Uég5g5560)6TT பிரெஞ்சு மொழியில் வாசித்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட படைப்பாளிகளில் வயதில் குறைந்தவரான ஆங்கிலத்தில் எழுதும் Brandon Ingram இவர் தனது முதலாவது நாவலான “THE FAIRY DANCE” எனும் நாவலின் ஓரிரு பகுதிகளை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். இவரைப் பொறுத்த வரை ஒரு கவனத்திற்குரிய நாவலாக பார்வையாளர்களால் உணரப்பட்டது. இலங்கை சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறையை பற்றியும், இலங்கையின் சிறுவர் பாலியல் தொழிலாளர்களை பற்றியும் பேசுகின்ற ஒரு நாவலாக இது அமைந்துள்ளது.
இந்த நிகழ்வில் நம் கவனத்தை கவர்ந்த இன்னொரு எழுத்தாளர் இலங்கையில் வசித்து வரும் பிரான்ஸ் தேசத்தைச் சார்ந்த Philippe Fabry ஆவார். இவர் பிரெஞ்சு மொழியிலும் ஆங்கிலத்திலும் பல வழிகாட்டி நூல்களையும், கடல் பயணங்களைப் பற்றிய நூல்களையும் எழுதி யிருக்கிறார். இவர் பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளில் நூல்களை வெளியிடும் பதிப்பாளரும் ஆவார். அன்றைய நிகழ்வில் இலங்கை நோக்கிய போர்த்துக்கீசர்களின் கடல் பயணம் பற்றிய பல வரைபடங்கள் அடங்கிய தனது நூலை அறிமுகப்படுத்தினார்.
அவருடனான தனிப்பட்ட முறையிலான அறிமுகத்தின் பொழுது 96 ft 6i Dis(5 BTL9u b|T6)5|T66, "The Essential Guide for Jaffna and its region” ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்த வழிகாட்டி நூலின் விசேஷம் என்னவென்றால் அந்த நூலுக்கான ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் தலைப்புக்கள் மும்மொழியிலும் (ஆங்கிலம், சிங்களம், தமிழ்) இருந்தமைதான். அத்தோடு, இந்த நூலுக்கு ஆங்கிலத்தில் செங்கை ஆழியான் அவர்கள் ஒரு முன்னுரை வழங்கி உள்ளமையும் நம் கவனத்தை கவர்ந்தது.
இவ்வாறாக பல்வேறு புதிய அனுபவங்களையும் சந்திப்புக்களையும் தகவல்களையும் பெற்றுத் தந்த ஒரு நிகழ்வாக “Writers on Stage’ அமைந்தது எனலாம்.
தொகை அளவில் கூடிய நிலையில் (எட்டு பேர்கள் என்பது) படைப்பாளிகள் கலந்து கொண்டதனால் ஒவ்வொரு படைப்பாளிகளுக்கும் ஒதுக்கப்பட்ட நேரம் போதாமையால் இந்த நிகழ்வில் முழுமையாக ஒவ்வொரு படைப்பாளி பற்றியும் அறிய முடியாது போனாலும் கூட, அந்த நிகழ்வு கட்டமைக்கப் பட்டிருந்த முறைமை மனதிற்கு திருப்தி தந்தது என்றே சொல்லவேண்டும். இத்தகைய நிகழ்வுகளுடன் தமிழ் எழுத்தாளர்களை தொடர்ப்படுத்துவதில் அக்கறை கொண்ட அந்த நிகழ்வுக்கான தொடர்பாளர்களில் ஒருவரான இளைஞர் நயன கணேஷன் பாராட்டுக்குரியவர்.

Page 12
ஜீவநதி 18
இந்த நிகழ்வில் பார்வையாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட பொழுதுதான் நமது சூழலில் நடைபெறும் கலை இலக்கியக் கூட்டங்கள் நினைவுக்கு வந்தன.
நூல் வெளியீட்டு விழாக்கள், பாராட்டு விழாக்கள் என்ற மாதிரியான விழாக்களுக்கு மட்டுமே பழகிப் போன நமக்கு இந்த நிகழ்வு வித்தியாசமான அனுபவத்தையே தந்தது எனலாம். ஒரு தனிப்படைப்பாளியை அழைத்து வந்து அவரே தன் படைப்புக்களையும் தம் படைப்புகள் சார்ந்த அனுபவங்களையும் நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையிலான நிகழ்வுகள் நம் மத்தியில் நிகழாதது ஒரு குறை என்றே சொல்ல வேண்டும்.
எதிர்காலத்திலேனும் அவ்வாறான முறைமையில் படைப்பாளி களையும் வாசகள்களையும் தொடர்ப்படுத்தும் நிகழ்வுகள் நமது சூழலிலும் நடைபெறவேண்டும் என்பதே நமது அவா.0
Ψσωσοταμό ψσωσοτεδΦυ ραχιό
நான் சிறுவனாயிருந்த போது வாழ்க்கை ஒரு பூனைக் குட்டியாயிருந்தது. அது அடிக்கடி வந்து தன் மென்மையான வாலால் என்னை நீவியது. அதன் ஸ்பரிசத்தால் என்னைத் திளைக்க வைத்தது. தன் உடம்பைச் சிலிர்த்தபடி உற்சாகத்தோடு வந்து விளையாட அழைத்தது. குத்தென நிமிர்ந்த மரங்களில் தாவிப் பறந்து என்னையும் உயரத்துக்கு நகர்த்தியது வசீகரம் மிளிரும் கண்களை உருட்டி குரலை உயர்த்தி தாளமிட்டுப் பாடியது. என்னையும் இருகை சேர்த்தழைத்து
bL-60 DITL ugl.
O Ο Ο
வாழ்க்கை இப்போது படுத்திருக்கிறது ஒடுங்கிப் போய் ஒரு முலையிலே. அதன் உரோமங்கள் ஒவ்வொன்றாய் உதிர்ந்து கொண்டிருக்கிறது ஈனக்குரலில்
அது
கடந்த காலத்தை முணுைமுண்ணுக்கிறது. துர்நாற்றமடிக்கும் தனதுடலை அசைக்க முடியாமல் அல்லாடுகிறது. அதன் கண்களில் மரண தேவனின் அச்சமுட்டும் விம்பம் படிகிறது. தனது இயலாமையை வெளிப்படுத்தியபடி நோயாளியாய் முடங்கியிருக்கும் என்னை நோக்கியபடியே இருக்கிறது அது.
-இயல்வாணன்

ஜீவநதி 19
இsஐத்ஆனுச் சிறுகதை முன்ைேடிகள்
வலிசையில் பித்தன்
- கலாநிதி செ.யோகராசா -
ஈழத்து தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சிபற்றி இதுவரை ஆராய்ந்துள்ளோர் பலரும் முப்பதுகளில் (1930) எழுதத் தொடங்கிய, ஈழகேசரிக் காலகட்டத்தைச் சார்ந்த இலங்கையர்கோன், சி.வைத்தியலிங்கம், சம்பந்தன் ஆகிய மூவரையுமே ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளாக முதன்மைப்படுத்தி வந்துள்ளனர். ஆயினும், அண்மைக்கால ஈழகே சரிக் காலகட்டச் சிறுகதை தொகுப்புகளும் ஆய்வுகளும் அம் முன்னோடிகளுக்குச் சமமாக வேறு சில எழுத்தாளர்களையும் இனங் காட்டுகின்றன. (எ.க ஆனந்தன், சுயா)
அவ்வாறே, நாற்பதுகளில் (1940) எழுதத் தொடங்கிய மறுமலர்ச்சிக் காலகட்ட எழுத்தாளர்கள் பற்றிய முக்கியத்துவத்தையும் அண்மைக்காலத் தொகுப்பு வெளிப்படுத்தியுள்ளது.
எனினும், மட்டக்களப்புப் பிரதேசம் சேர்ந்த பித்தன் (கே.எம்.ஷா, 19211994) எழுதிய சிறுகதைகளை மேற்குறிப்பிட்ட முயற்சிகளில் ஈடுபட்டோர் நுணுகி வாசிக்கத் தவறிவிட்டனர் என்றே கூற வேண்டும். ஏனெனில், பித்தன் சிறுகதைகளை இன்று ஆழ்ந்து வாசிக்கும் போது ஈழத்துச் சிறுகதை முன்னோடிகள் வரிசையிலே பித்தனையும் சேர்த்துக்கொள்ள முடிகிறது. பின்வரும் விடயங்களுக்கு அழுத்தம் கொடுத்துப் பித்தன் சிறுகதைகளை அணுகுவது பொருத்தமானது. (அ) ஈழகேசரிக் காலகட்ட எழுத்தாளர்களது சிறுகதைப் போக்கு (ஆ) மறுமலர்ச்சிக் காலகட்ட எழுத்தாளர்களது சிறுகதைப் போக்கு (இ) பித்தனது சமகால எழுத்தாளர்களது சிறுகதைப் போக்கு
ஈழகேசரிக் காலகட்ட எழுத்தாளர்களது சிறுகதைப் போக்கு
ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளாக அண்மைக் காலம்வரை கருதப்பட்டு வந்துள்ளோரில் இலங்கையர்கோன், சி.வைத்தியலிங்கம். ஆகியோரது சிறுகதைகள் உள்ளடக்க ரீதியில் பின் வருமாறு அமைந்துள்ளன.
அ) ஈழத்து வரலாற்றுச் சம்பவங்கள்.
ஆ) புராண இதிகாசக் கதைகள்.
இ) குடும்ப உறவு, காதல்.
ஈ) வறுமை நிலை.
சம்பந்தனின் சிறுகதைகள் உலகப் பொதுவான மனித அடிப்படைப் பண்புகள் பற்றிப் பேசின.
எவ்வாறாயினும் மேற்கூறப்பட்ட பெரும்பாலான சிறுகதைகளிலும் ஈழத்திற்குரிய சமகாலச் சமூகப் பிரச்சினைகள் (எ.க: சாதி, சீதனம்) முதன்மை பெறவில்லை. மேலோட்டமாக ஈழச்சூழல் மட்டுமே இடம்

Page 13
ஜீவநதி 20 பெற்றுள்ளது. யதார்த்த நோக்கினை விட றோமான்ரிச (Romanticism) நோக்கு, காவியப்பாங்கு என்பன காணப்படுகின்றன. ஈழகேசரி காலத்தில் வேறு சில எழுத்தாளர்கள் சமூகப் பிரச்சினைகளைக் கையாண்டுள்ளதாக அண்மைக்கால ஆய்வுகளில் கூறப்படினும் அது விரிவான ஆய்வினை அவாவி நிற்கின்றதென்றே கூற வேண்டும்.
மறுமலர்ச்சிக் காலகட்ட எழுத்தாளர்களது சிறுகதைப் போக்கு
ஈழத்துச் சிறுகதைகள் ஈழத்து மண்ணுடன் இக்காலகட்ட எழுத்துக்களுடன் தான் வரத் தொடங்கியது. கிராமிய வாழ்வின் பன்முகங்கள், நகர வாழ்வின் உருவாக்கமும் அதனால் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களும் முதலான விடயங்கள் ஓரளவு கலைத்துவமாக வெளிப்படத் தொடங்கின. (எ.க : அ. செ. முருகானந்தன்) பித்தனது சமகாலம்
பித்தன் சிறுகதையுலகினுள் பிரவேசித்த காலத்தில் (1948) ஈழத்துச் சிறுகதைப் போக்கில் பின்வரும் மாற்றங்களை அவதானிக்கலாம்.
அ) முற்குறிப்பிட்ட எழுத்தாளர்களுள் பெரும்பாலானோர் யாழ்ப்பாணப் பிரதேச எழுத்தாளர்களே. ஆக, இப்போதுதான் ஈழத்துச் சிறுகதை யாழ்ப்பாணத்திற்கப்பால் திருகோணமலை (வ.அ.இராசரத்தினம்) மட்டக்களப்பு (அருள் செல்வநாயகம், அப்துஸ் ஸமது) ஆகிய பிரதேசங்களை நோக்கி அகலக்கால் பதிக்கிறது. குறிப்பாக மட்டக்களப்பு பிரதேச எழுத்தாளர்கள் கணிசமானோரிடம் 'கல்கி'யின் பாதிப்பு கோலோச்சுகிறது. ஆ) பித்தனது இடைப்பட்ட காலத்தில் மருதூர்க்கொத்தன், எஸ்.பொன்னுத்துரை முதலானோர் சிறுகதை எழுதத் தொடங்கியிருந்தனர். இவர்கள் பிரதேச மணங்கமழும் சிறுகதைகளை ஓரளவு எழுத முற்பட்டனர்.
பித்தனது சிறுகதைகள்
இதுவரை கூறப்பட்ட ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி நிலையை
மனதிலிருத்திக் கொண்டு பித்தனது சிறுகதைகளை எடைபோடுகின்றபோது,
பின்வரும் அம்சங்கள் அழுத்தப்பட வேண்டியமைகின்றன.
பெண்களது வாழ்க்கை
பித்தனது சிறுகதைகளை ஆழ்ந்து நோக்கும் போது அவரது படைப்புகளில் பெண்களது துயரங்களும், மன உணர்வுகளும் ஏனைய எழுத்தாளர்களது படைப்புகளைவிடத் திறம்படச் சித்திரிக்கப்படுகின்றமை முதற்கண் குறிப்பிடத்தக்கதாகிறது. சற்று விரிவாகக் கூறின் வறுமை காரணமாகத் திருமணம் தடைப்பட்ட அல்லது காதல் நிறைவேறாத பெண்களினதும், விதவைகளினதும், வேலைக்காரப் பெண்களினதும், வாழ்க்கைத் துயரங்களும் மனப்போராட்டங்களும் மன உணர்வுகளும் வெகு நுணுக்கமாகவும் வெகு தத்ரூபமாகவும் வெகு அநாயாசமாகவும். வெளிக் கொணரப்படுகின்றன. இவ்விடத்தில் இரு சிறுகதைகளை மட்டும் எடுத்துக் காட்ட முற்படுகின்றேன்.
"ஊர்வலம் சிறுகதையில் வரும் ரகுமத்து வறுமை காரணமாகத் திருமணம் செய்ய முடியாத நிலையில் இருப்பவள். அவளது அயல்வீட்டுத்

ஜீவநதி 21 தோழிக்குத் திடீரெனத் திருமணம் நடக்கிறது. ரகுமத்தின் முன்னாள் காதலனே மணமகனி. கதை இவ்வாறு ஆரம்பிக்கிறது.
“மனிதன் ஏன் பிறக்கிறான் என்ற கேள்விக்குப் பலதரப்பட்ட பதில்கள் வரலாம். ஆனால், பெண் ஏன் பிறக்கிறாள் என்று கேட்டால், “பிள்ளைகளைப் பெற்றெடுக்க” என்ற பதில் உடனே வரும்.
முகத்தைத் திருப்பிக் கொள்வதில் பயனில்லை. கொஞ்சம் நேராகப் பார்க்கும் தைரியம் வேண்டும் நமக்கு!
நமது சமூகமும் அதன் அமைப்பும் இப்படி முகத்தைத் திருப்பிக் கொள்ளும் மனப்பான்மையில் தான் பின்னப்பட்டுக் கிடக்கிறது. பெண்களைப் பற்றி எண்ணிப் பார்க்கும் பொழுது, தாய்மையும் தனித்து நின்று அழிந்து போகும் தன்மையும்தான் எஞ்சி நிற்கின்றன. இவற்றை விட வேறு எதாவது இருக்கிறதா?” இவ்வாறு ரகுமத்து, தனக்குத்தானே கேட்டுக் கொள்ளும் கேள்வியுடன் ஆரம்பிக்கும் கதை அயல்வீட்டுக் கல்யாண ஆரவார அடுக்குகளின் பின்னணியில் ரகுமத்தின் பழைய நினைவுகள், மனக்குமுறல்கள் என்பவற்றுடன் வளர்ந்து செல்கிறது. உள்ளத்தை உருக்கும் வண்ணம் உள்ளத்தில் நிலைக்கும் வண்ணம் இவ்வாறு முடிகிறது.
"ஊர்வலம் வருகுது புள்ள. நமக்கென்ன உம்மா..? ஊர்வலம் பார்க்க நீ வரல்லையா புள்ள..?” என்னத்த பாக்கிற உம்மா! நானும் ஒரு நாளைக்கு ஊர்வலமாய் போறவள் தானே. ரகுமத்து எந்த ஊர்வலத்தைப்பற்றிச் சொன்னாள் என்பது அந்தத் தாய்க்குத் தெரியாது.
தெரிந்துகொள்ள அந்த முதியவள் முயலவில்லை. மேலே இடம்பெற்றுள்ள ரகுமத்தின் வார்த்தைகளும் முதியவள் மனநிலையும் பற்றி நாம் சிந்தித்துப் பார்க்கும்போது, ஒரு பெண் எழுத்தாளர் நிலையில் நின்று பித்தன், பெண்களது மனநிலையினை மன உணர்வுகளை எடுத்துரைக்கின்றார் என்றே கூற வேண்டும்.
“ஊர்வலம்" கதையில் சற்று அடங்கி ஒலித்த பித்தனது குரல் தாகம் கதையிலே ஆக்ரோஷத்துடன் குமுறுகிறது.
"நேற்றுத் தன்னைப்போல் தனியாகக் குமரியாக இருந்து ருக்கியா இன்று மனைவியாக மாறிவிட்டாள். பணம் எப்படியெல்லாம் மனிதனை மாற்றி விடுகிறது? ஒரு பெண்ணுக்கு மட்டும்தான் ஆண் தேவையா? ஆணுக்குப் பெண் தேவையில்லையா? தேவையென்றால் இந்த ஆண்கள் ஏன் ஆடுமாடுகளை விலை கூறி விற்பது போல் தங்களைத் தாங்களே விலைகூறி விற்கிறார்கள்.? "
அடிமட்டஞ் சார்ந்த மனிதரது வாழ்க்கை
முற்பட்ட ஏனைய எழுத்தாளர்களது சிறுகதைகளைவிடவும்
பித்தனது சிறுகதைகளிலேயே, சமூகத்தின் அடிமட்டஞ் சார்ந்த மனிதர்கள்
பலரது வாழ்க்கை கூர்மையாகவும் மனிதாபிமான முறையிலும் இடம்

Page 14
ஜீவநதி 22
பெறுகின்றது. எடுத்துக்காட்டுகளாக:
மூட்டை தூக்குகின்ற கந்தசாமி (அறுந்த கயிறு) ஹோட்டல் சமையல்காரன் முருகப்பன் (திருவிழா) வேலைக்காரி சுபைதா (பாதிக்குழந்தை) வண்ணாரப் பெண் வதணி (ஆண் மகன்) அனாதை தானியேல் (நத்தார்ப்பண்டிகை) சமையல்காரி செல்லம்மாள் (மயானத்தின் மர்மம்) மயானக் குழிதோண்டும் கணபதி (மயானத்தின் மர்மம்)
வறுமைநிலைச் சித்திரிப்பு
ஈழத்துச் சிறுகதைகளில் ஆரம்ப காலம் தொடக்கம் ஏறத்தாழ 1980 வரை வறுமைநிலைச் சித்திரிப்பு முதன்மை இடம் பெற்று வந்துள்ளது. சி.வைத்தியலிங்கத்தின் பாற்கஞ்சி தொடக்கம் நந்தினி சேவியரின் 'ஒருநாள் பொழுது வரை இதற்குச் சான்றுகளாகின்றன.
எனினும் வறுமையின் வன்முகங்களையும் பன்முகங்களையும் தமது பல படைப்புகளிலும் திறம்பட வெளிப்படுத்தியவராகப் பித்தன் காணப்படுகின்றார். இத்தகைய இவரது படைப்புகளுள் "நத்தார்ப்பண்டிகை" விதந்துரைக்கப்பட வேண்டியது.
சமூக விமர்சனம்
ஈழத்துச் சிறுகதைகளில் ஆழமான சமூக விமர்சனப் போக்கினைத் தொடக்கி வைத்தவராகவும் அத்தகைய பல படைப்புகளைத் தந்தவராகவும் விளங்குபவர் பித்தனே. இவ்விதத்தில் சில சிறுகதைகளின் முக்கிய சில பகுதிகள் மட்டும் இங்கு தரப்படுகின்றன.
எ.டு : 1
'மஹர்ப் பணம் கொடுத்த பின்னர்தான் கணவன் என்ற உரிமையோடு ஒரு பெண்ணின் கையைப் பிடிக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுவதாக ஹதீஸில் சொல்கிறார்கள். இது வெறும் பிரசங்கம் மட்டும் தானா? வாழ்க்கையின் நடைமுறைக்கு வர வேண்டாமா? குர்ஆனின் கோட்பாடுகளை வாழ்க்கையிலும் கடைப்பிடித்தாலென்ன? " - தாகம்
எ.டு : 2
“விவாகமான தம்பதிகளின் வாழ்க்கையில் ஏற்படும் கோளாறுகளைத் தீர்க்க வேண்டுமானால் கணவர் மனைவி இருவரையும் நெருங்கித் தான் முடிவு கட்ட வேண்டும். ஆனால் சமீமாவை நெருங்க முடியாதே? இவள் இஸ்லாமியப் பெண்.” - அமைதி
எ.டு : 3
"ஹாஜியார் உமரு லெப்பை அந்தக் கிராமத்துக்கே பெரிய மனிதன் பாபமும் பணமும் அவரைப் பெரிய மனிதனாக்கிவிட்டது. வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பது போல செய்த பாவங்களைத் தீர்ப்பதற்காக ஒரு முறை மக்காவுக்குப் போய் வந்தார். பிறகு திரும்பவும் அகரத்தில்

ஜீவநதி 28 ஆரம்பித்துக் கொண்டார் தனது சுபாவத்தை. பாபமூட்டைகளைத் தாங்கிக் கொள்ள மக்கா என்றொரு சுமைதாங்கியை அமைத்துக் கொண்ட பிறகு பணக்காரன் பாபம் செய்யப் பயப்பட வேண்டியதில்லையல்லவா? இந்தத் தைரியத்தில் கண்மூடிக் காலம் கழித்தார் ஹாஜியார்” - பாதிக்குழந்தை
முஸ்லிம் மக்களது வாழ்க்கை
இஸ்லாமிய இலக்கியம் ஈழத்து இலக்கியத்தின் ஒரு கிளையாக உள்ளமை (தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது) ஈழத்து இலக்கியப் போக்கின் தனித்துவ அம்சங்களுள் ஒன்றாகின்றது. இவ்விதத்தில் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் முஸ்லிம் எழுத்தாளரின் வரவு 1950களில் ஏற்படுகின்றது. இவ்விதத்தில் முன்னோடி எழுத்தாளர் பித்தன்.
பித்தனைத் தொடர்ந்து எழுதிய முஸ்லிம் எழுத்தாளர்களுள் அப்துஸ் ஸமது, மருதூர்க் கொத்தன் ஆகியோர் கவனத்திற்குரியவர்கள். எனினும, அப்துஸ் ஸமது, முஸ்லிம் சமூகப் பிரச்சினைகளை மேலோட்டமாகவே அணுகினார். மருதுார்க் கொத்தன் ஆழமாக நோக்கியிருப்பினும் பிரச்சாரப் பாங்குடன் அவை அமைந்தன. மாறாகப் பித்தனின் கதைகள் முஸ்லிம் சமூகப் பிரச்சினைகளைக் கூர்மையாக அணுகின, விமர்சித்தன. எனவே பித்தன் ஈழத்தின் முஸ்லிம் முன்னோடி எழுத்தாளராகவும் உள்ளமை தெளிவானது.
மட்டக்களப்பு பிரதேசச் சிறுகதை முன்னோடி
ஈழத்தில் தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற பிரதேசம் தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது பரப்பளவில் குறுகியது. எனினும் பண்பாட்டு நிலையில் தமிழ்நாட்டினைவிட வெவ்வேறுபட்ட பண்பாட்டுக் கோலங்களைக் கொண்டுள்ளது. இன்னொரு விதமாகக் கூறின் உபபண்பாட்டு அலகுகள் கொண்ட ஏறத்தாழ ஒன்பது பிரதேசங்களிடையேயும் (மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், வன்னி, மலையகம், தென்னிலங்கை முதலியன) அசமத்துவ வளர்ச்சி நிலவுகின்றது இப்பின்னணியில் மட்டக்களப்புப் பிரதேச நவீன இலக்கிய வளர்ச்சி 1940இன் கடைக் கூறிலேயே கருக்கொள்கிறது. சிறுகதையைப் பொறுத்தவரையில் எழுத்தாளர் பலர் (அருள் செல்வநாயகம், சா.இ.கமலநாதன், சிவா முதலானோர்) சிறுகதையுலகினுள் பிரவேசிக்கின்றனர். இவ்விதத்தில் மட்டக்களப்பிலே வாழ்கின்ற இரு இனத்தவரதும் மூன்று மதத்தவரதும் வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பேசுகின்ற குறிப்பிடத்தக்க படைப்புகளை முதன் முதலாகத் தந்ததனுாடாக மட்டக்களப்புப் பிரதேசச் சிறுகதை முன்னோடியாகவும் திகழ்கின்றார் பித்தன்.
ஆக, 1930களில் முகிழ்ப்புற்ற ஈழத்துச் சிறுகதையின் தோற்றம் ஏறத்தாழ 1960வரை நீடிக்கின்றது என்றே கூற வேண்டும். இவ்விதத்தில் அது பித்தனுடன் முழுமை எய்துகின்றது. எனவே பித்தன் ஈழத்துச் சிறுகதை முன்னோடிகள் வரிசையின் முழுமைப் புள்ளியாகின்றார். அவ்விதத்தில் ஈழத்துச் சிறுகதை முன்னோடிகள் வரிசையில் முக்கியமான ஒருவருமாகின்றார். ()

Page 15
24
ஜீவநதி
எம்மை வாழ வைத்தோர்கள்
எம்மை உயரச் செய்தோர்கள்
நன்மை யாவும் நாம்பெறவே
நாயாய்ப் பாடு பட்டோர்கள்.
இளமைக் காலம் தீர்வடைந்து
இழைத்தே உடலும் தளர்வடைந்து முதுமைப் பருவம் அடைந்தோர்கள்
முதியோர் நிலையைச் சிந்திப்போம். வீட்டில் முலை தனில் ஒதுக்கி
வெறுப்பு வார்த்தை நிதம்விசி வாட்டி என்றும் வதைக்கின்றோம்
வயோதிபர் நெஞ்சைப் பிளக்கின்றோம்.
உண்ண நல்ல உணவில்லை
உடுக்கச் சிறந்த உடையில்லை மண்ணில் ஓட்டைப் பாய்தனிலே
மலசலத் தோடு கிடக்கின்றார் நோய்க்கோ உரிய மருந்தில்லை
ஆறுதல் சொல்ல ஆளில்லை ஈக்கள் மொய்த்து மொலுமொலுக்க
இழிநிலை அடைந்தோர் முதியோர்கள்
இந்த நிலையை மாற்றிடவே
இளையோர் நீவிர் எழுந்திடுக! சொந்தம் இன்றித் தவிப்போரைத்
தூக்கி நிறுத்த முன்வருக! கோயில் சென்று ஆண்டவனை
நாளும் பொழுதும் தொழுவதிலும் பாயிற் கிடக்கும் முதியோர்க்குப்
பணிவிடை செய்தல் பெரிதென்போம். அருகிற் சென்று அன்புடனே
ஆறுதல் வார்த்தை பேசிடுவோம் வருத்தும் துயர்கள் எவையென்று
கேட்டு மாற்ற வழிசெய்வோம். முத்தோர் வீட்டின் முதுசொமெனக்
கிடைத்தற் கரிய செல்வமெனக் காத்தே இருப்போம் அவர்களிடம்
கனலும் அறிவைப் பயன்செய்வோம்
- ம.பா.மகாலிங்கசிவம்

ஜீவநதி
25
காணி நிலத்திடையே
சேவல்கள் கூவும் சப்த மும் காகங்கள் கரைவதும் இரவு போர்த்திருந்த நிசப்தத்தை மெது வாக அகற்றின. அந்த ஒலிச் சேர்க்கை வேல்முருகனின் காது களுட் புகுந்து அவரை எழுப்பவும் முயன்றது.
வேல்முருகனின் கண்கள் விழிக்க மறுத்தன. கனடாவிற்கும் யாழ்ப்பாணத்துக்குமான நேரவேறு பாடு, இரவு வெகு நேரமாக உறக்கத் தைத்தடுத்துவிட, தாமதித்து வந்த துாக்கம் இப்போது விழிகளின் மீது சவாரிவிட்டது.
கோழி காகங்களின் சப்தங் கள் " நீ யாழ்ப்பாணத்தில் இருக் கின்றாய்” என அவருடைய மன திற்குக்கூறின.
யாழ்ப்பாணம்’ அந்த எண்ணம் திறந்து விட்ட உணர்ச்சியூற்று உடலெங்கும் வியாபித்த கணத்தில் உறக்கம் அடித்துச் செல்லப்பட வேல்முருகன் எழுந்து உட்கார்ந்தார்.
அன்று செய்யவென அவர் போட்டிருந்த அட்டவணையும் நினை விற்கு வந்தது. செயற்படுத்த முடி யுமா? என ஓர் ஐயமும் கூடவே எழுந்தது.
நேற்று அதிகாலை கொழும் பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அவர் விமானத்தில் வருவதற்கு ஒழுங்கு செய்ததும், வந்த அன்றே சில இடங் களுக்குப் போய்வரலாமென எண்ணி யிருந்தார். அந்தக் காலத்தில் கொழும்பிலிருந்து இன்ரசிற்றி தொட ருந்தில் புறப்பட்டுவந்து எத்தனை
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்.
வேலைகளை அன்றைக்கே செய்து முடித்திருக்கின்றார்.
ஆனால் நேற்று விமானத் தில் பயணித்து யாழ்ப்பாணத்தில் வந்துசேர மாலை மணி நான்கைத் தாண்டிவிட்டது. நீராடி உணவருந்தி, அவரைக் காண வந்தவர்களுடன் உரையாடிவிட்டு 'கணேசலிங்கம் அத்தான் வீட்டுக்குப் போட்டுவாறன்’ என அவர் புறப்பட, "இரவு ஏழு மணிக்குத்தான் ஊரடங்குச் சட்ட மென் றாலும் ஐந் தரை ஆறு மணிக்குப் பிறகு ஒருவரும் அவசர மில்லாவிட்டால் வெளியிலே போற தில்லை” என்றான் அவரது பெறா மகன் சுந்தரவேல்.
வீட்டிலிருந்த ஒவ்வொரு வரும் தொடராக தத்தம் நினைவிற்கு வந்த ஊரடங்கு இரவு நேரக்கதை களை அவருக்குக் கூறினார்கள்.
விமானப் பயண அலைச்சல் உடலை அடித்துப் போட்டிருந்தும் யாழ்ப்பாணத்தின் கதைகளும் நேர வேறுபாடும் அவரது தூக்கத்தைத் தூக்கிச் சென்றுவிட, அவர் தனது பழைய நினைவுகளைக் கிளறிக் கொண்டு படுக்கையில் கிடந்தார். அப்போதுதான் இந்திரபுரத்தின் நினைவும் எழுந்து வந்தது.
கனடாவில் இருந்தபோதே அங்குபோய்ப்பார்க்கவேண்டும் என்று பலமுறைகள் நினைத்திருக்கிறார். இப்போது அந்த ஆசை பேருருக் காட்டியது.
நேற்றுச் செய்ய எண்ணி யிருந்தவற்றுடன் இதையும் இன் றைய நிகழ்ச்சிநிரலிலே சேர்த்தார்.

Page 16
ඉෂ්ඛJIbé
நேற்றுப்போவதெனத் திட்ட மிட்ட உறவினர் வீடுகளுக்கு முதலிலே போகத்தொடங்கினால் அவர் பார்க்க விரும்பும் இந்திர புரத் தைச் சுற்றிப் பார்க்கமுடியாது போகலாம். அதைப்பார்ப்பதுதான் அவரைப் பொறுத் தவரை மிக முக்கியம்.
"இந்திரபுரம!’ அவர் பொறுப்பதிகாரியாக இருந்து அமைத்த நவீன கிராமம். அப்போது நவீன கிராமம். இப்போது பழையதாகி ஒரு நகரமாகக் கூட வந்திருக்கலாம். கடலோரத்தை அண்மித்த இடம். மறுபுறம் வயல் களும் தோட்டங்களும், முயன்றிருந் தால் வளர்ந்திருக்கக் கூடிய சூழலிலேதான் அதை அமைக்க
வாய்ப்புக்கிட்டியது.
“பெரியப்பா, எழும்பீட்டிங் களோ? அல்லது படுக் கப்
போறிங்களோ?'அறை வாசலில் அவ ரைக்கண்ட சுந்தரவேல் கேட்டான்.
"இனிப்படுக்கேலாது ஐந்து நாட் 'கள்தானே நிற்கப்போறன். நிறைய
வேலைகள் கிடக்கு.”
"மதுரிகா, பெரியப்பா எழும் பிட்டார். கோப்பி”
“(86,16ööĩ LIT Lio, (86)J65ổi L[Tư) அப்பிடிக்குடிக்கிற பழக்கமில்லை. நான் குளிச்சிட்டுவாறன். பிறகு கோப்பி குடிப்பம்”
அவர் கிணற்றடியை நோக்கி நடந்தார். கிணறு கண்ணில் படவும் இந்திரபுரம் அவரிடம் மீண்டும் ஓடிவந்தது.
அந்தக்கிராமத்துக்குத் தண் ணிர் வசதிசெய்வதுதான் அவருக்குப் பெரும் பிரச்சினையாக அமைந்த 6Lujib.
கடற்கரையை அண்மித்த
திட்டத்திற்குப்
பிரதேசமாக இருந்ததாற் போலும் அங்கு நன்னீருற்றைத் தேடிப்பிடிப்பது கஷடமாகவிருந்தது. அது மிகப் பெரும் பிரச்சினை. எவ்வளவு சிரமங் களுக்கு மத்தியில் அவர் திட்டத்தை நிறைவேற்ற முயல்கிறார்.
வெளிநாடொன்றின் அரசசார் பற்ற நிறுவனம் குடியேற்றத் திட்டத் திற்கு வழங்க முன்வந்த உதவியை இப்பகுதிக்கென்று பெற்றுக் கொள்ள பெரும்பாடுபட வேண்டியிருந்தது. அதற்கான இடமொன்றைத் தெரிவு செய்து அவர்கள் திருப்தியுற்றால் தான் நிதியுதவி கிடைப்பது உறுதி யாகும்.
கிராமமொன்றை அமைக்கக் கூடிய நிலமொன்று தேவை. அது அவ்வளவு சுலபமாகக் கிடைப்பதாக வில்லை. வெறும் தரிசாகக் கிடந்த நிலத்தைப் பார்த்துவிட்டு வந்தாலே மறுநாள் அதற்கு உரிமைகோரிக் கொண்டுயாராவது வந்து நிற்பார்கள். வீடுகளை அமைக்கமட்டுமே நிறுவனம் நிதிவழங்க முன்வந்தி ருந்தது. காணிக்கு ஒருவரும் நிதியுதவி செய்யமாட்டார்களே, அரச காணிகளும் ஏற்றதாக இல்லை. பாரதியாரின் "காணிநிலம் வேண்டும்" பாடல்தான் அடிக்கடி நினைவிற்கு வந்தது. பராசக்திக்கு அது கேட்ட தோ என்னவோ?
இவர் காணிதேடுவது பற்றி கேள்வியுற்ற ஒரு கோவில் நிர்வாகம் கோவிலுக்குரிய இந்தக்காணியை வழங்குவதற்கு முன்வந்தது. கோவி லுக்குப் பெரும் பயனொன்றும் தராத காணிதான். ஆனால் குடியேற்றத் பொருத்தமாக இருந்ததென்று மகிழ்ந்தபோது நன்னீர் பிரச்சினை! நல்ல தண்ணீர் இல்லாமல் கிராமமா? அதுதான்

ஜீவநதி
27
பாரதியார் தன் பாடலிலும் கேணி யைக் கேட்டாரோ?
நீர் கிடைக்காவிட்டால் மீண்டும் நிலம் தேடுவதா? கடவுளே! மனம் பதற நிலத்தின் சகல பகுதிகளிலும் பரிசோதரித் து தேடியலைந்தபோதுதான் நன்னீருற்று ஓரிடத்தில் கிட்டியது. அந்தக்கண ஆனந்தம்.
ஒரே அமைப்புடன் அழகாக நிரலிட்ட வீடுகள். சீரான பாதைகள். பாடசாலை, தபாலகம், வைத்திய சாலை, வங்கி, சனசமூகநிலையம். முற் கூட்டியே தயாரிக்கப்பட்ட வரைபடத்தின்படி உருவான கிராமம். தானே உருவாகி வளர்ச்சியடைந்த கிராமத்தை விட இது அழகுதான். வசதியானதுங்கூட
இந்திரபுரம் இப்படி உரு வாகிக் கொண்டிருந்தபோது ஒரே யொரு நன்னீர் கிணற்றிலிருந்து சகல வீடுகளும் நீர் பெற நீர்த்தாங்கி அமைத்து, குழாய்களைப் பொருத்தி, ஏற்ற வசதிசெய்வதற்கான செலவு களைப் பொறுப்பேற்க மற்றொரு வெளிநாட்டு நிறுவனத்தைத் தேடிய லைந்து அந்தத்திட்டத்தை நிறை வேற்றுவதிலும் அவர் வெற்றி கண்டார்.
பழைய நினைவுகளுடன் குளித்து முடித்து வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்த அவரெதிரே பூந்தளிராய் மஞ்சுளன் - சுந்தர வேலின் மகன் ஓடி வந்தான். அவன் பின்னே தாய், மதுரிகா.
“அம்மா ஊஞ்சல்” மாமரத்தில் கட்டியிருந்த ஊஞ்சலில் அவனை உட்கார வைத்ததும் அவனது கண்களில் ஆனந்தம் ஊஞ்சலாடியது. சிறு பிள்ளைகளுக்கு இப்படி விளையாடு
வதில் கொள்ளை மகிழ்ச்சிதான்.
இந்திரபுரத்தில் சிறுவர் விளையாடி மகிழ ஒரு பூங்காவையும் உருவாக்கியிருந்தார். சிறுவரைக் கவரக் கூடிய உருவச் சிலைகள், அவர்கள் விளையாட ஊஞ்சல் முதலிய உபகரணங்கள் யாவற் றையும் கொண்ட மனதிற்கிணிமை யான அழகிய பூங்கா.
குடியிருக்க இடமின்றித் தவித்தோர் அங்கு குடியேறிய போது அடைந்த மகிழ்வு!
வீடு கிடைக்காதவர்களிட மிருந்து பொங்கி வந்த கோபம்!
பொறாமை ஏமாற்றம்! மாடிவீட்டில் வசித்தவர்களே காட்டிய புகைச்சல்
உலகம் இவ்வளவு பொல் லாததா?
வேல்முருகனின் பொறுப்பு நிறைவேறிய வேளை அவர் இடமாற்றம் கிடைத்ததால் யாழ் ப்பாணத்தை விட்டுச் சென்று விட்டார். சில மாதங்களிலேயே இனக்கலவரம் அவரைத் துரத்த இந்தியா சென்று பல நாடுகள் சுற்றி, இறுதியில் கனடாவில் குடியேறினார். இடையிடையே இந்திரபுரம் நினைவில் தலை நீட்டும்
ஓரிருமுறை சுந்தரவேலிடம் அதைப்பற்றி விசாரித்தார். “நான் அந்தப்பக்கம் போனதில்லையே பெரியப்பா” என்று பதில் வந்தது.
நீண்ட காலத்தின் பின் இலங்கைக்கு, அதுவும் யாழ்ப்
பாணத்திற்கு இப்போது வந்திருக்
கிறார்.
அதைச் சென்று பார்க்க வேண்டும்.
அந்த நாட்களில் அதை

Page 17
ஜீவநதி
அமைக்க உழைத்த அத்தனை பேரும் முழுமையான ஈடுபாட்டுடன, ஒரு சேவைசெய்யும் உணர்வுடன் பணியாற்றி நிறைவேற்றிய திட்டம். இன்று எப்படி இருக்கிறது? அன்றைய எதிர்பார்ப்புகள் ஈடேறியிருக்குமா?
காலை உணவை சுவைத்து உணி டபின் முச் சக் கரவண் டி யொன்றில் புறப்பட்டார்.
கண் கள் இருபுறமும் பார்த்தன.
நேற்று பலாலியிலிருந்து வந்தபோது வீதிமருங்கைப் பார்த்து அவை மனதிற்குள் சேர்த்துக்குவி த்த வேதனை இன்று உருவாக வில்லை. பழக்கப்பட்டு விட்டதோ? மகிழ்வு முகிழ் விடவும் எதுவுமே இல்லை. இடிந்து கிடந்த கட்டடங்கள, உடைந்து திருத்திய வீடுகள, ஆங்காங்கே புதிய வீடு களும் கட்டத் தொடங்கி முடிவுறாத கட்டடங்கள். ஒவ்வொன்றும் தன் னுள் ஒவ்வொரு கதையை வைத்துக் ' கொண்டு நின்றன.
List Ld (T60)6) LD(T600T6)is 856f சீருடையுடன் சென்று கொண்டி ருந்தார்கள்.
இந்திரபுரம், அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இப்பொழுது வளர்ச்சியடைந்திருக்குமா? இரண்டு கட்டடங்களை மட்டுமே போட்டு ஆரம்பப் பாடசாலையாக அதை அமைப்பதற்கே அவர் அரும்பாடு படவேண்டியிருந்தது.
அதிபர் திறமைசாலியாக இருந்தால் முன்னேற்றியிருக்கலாம். சற்று நேரத்தில் தெரியப்போகிறது. "தம்பி, முந்தி இந்தப்பக்கம் போயிருக் கிறியளோ?’ அவர் முச் சக்கரவண்டி ஓட்டுனரிடம்
கேட்டார்.
“ஒரு முறை போயிருக் கிறன்”
"இந்திரபுரம் என்று ஒரு குடியேற்றத்திட்ட கிராமம் இருந்தது தெரியுமோ?”
“தெரியேல்லை” இப்படியொரு பதில்! விரிந்திருந்த கற்பனைகள் அச்சொல்பட்டு தொட்டாற் சுருங்கியா கின.
அவரது மனநிலை அவனுக் குப் புரிந்ததோ?
"அந்தப் பக்கம் வீடுகள் குறைவு. தொண்ணுாற்றைந்து இடம் பெயர்வுக்குப் பிறகு வந்த உடனே குடியேறினவை இருக் கனம் . அதற்குப்பிறகு குடியேற அனுமதி கிடைக் கிறது கஷடம் என்று சொல்லுகினம். பாதுகாப்புப் பிர தேசத்துக் குள் ளை இருக்கிற ஊரெல்லோ?”
முச்சக்கரவண்டி ஒட்டுனர் தனக்குத் தெரிந்தவற்றைக் கூறி 60][16].
நேற்று அந்திப் பொழுதில் வீட்டிலிருந்தவர்கள் ஊரடங்கு இரவுபற்றிக் கூறியபோது ஏற்பட்ட மரணவலி மீண்டும் படர்வது போல். " அந்தக் காட்டு வெளியி னிலே அம்மா நின்றன் காவலுற வேண்டும்”
இந்திரபுரத்தை உருவாக் கிய போது அடிக்கடி நினைவு வந்த பாரதியாரின் பாடல்ை முழுமையாகப் பாடாமல் விட்டுவிட்டேனோ?
பராசக்தியைக் காவல் வைக்காததால் வேறு எவரேனும் காவலிருப்பார்களோ? r
முதலில் செபமாலைதாசன் வீட்டிற்குப் போவோமோ? இந்திரபுரம்

ஜீவநதி நிர்மாணிக்கப்பட்டபோது உதவிய ஊர்க்காரர்களில் அவர் முக்கிய மானவர் . அவர் இருப்பாரோ, இல் லையோ? அவரைத் தேடி அலையாமல் இந்திரபுரத்திற்கே செல்வோம்.
ஊர் அண்மிக்க முச்சக்கர வண்டிக்காரனின் கூற்று சரிதா னென்று தோன்றியது. வயலும் தோட்டங்களுமாக இருந்த இடங்கள் பற்றைக்காடுகளாகக் கிடந்தன. அவற்றின் முன்னே சிவப்புப் பலகையில் வெண்ணிறத்தால் வரையப்பட்ட மண்டையோடும் இரு எலும் புத்துண்டுகளும் கொண்ட UL-(Up LĎ மிதவெடி அபாய அறிவிப்பும் கிடந்தன. மிதிவெடிகள் அகற்றப்படாத பிரதேசங்கள்.
அறிவிப்புப் பலகையின் தோற்றமே மனதைப் பிசைந்தது.
இந்திரபுரம் பகுதியை வண்டி அண்மித்துவிட்டது. அதோ உயர்ந்து நிற்கும் நீர்த்தாங்கி ஒரு பக்கம் உடைந்து தெரிகிறது.
பாடசாலை பெயர்ப் பலகை யின்றி வளைந்த கம்பிகள் மட்டும். கட்டடங்கள் இருந்ததற் கான அடையாளங்களாக அங்கு மிங்கும் உடைந்த சுவர்கள்.
சிறுவர் பூங்கா விளையாட்டு உபகரணங்களின் பலகையொன்று மண்ணுக்கு மேல் தலைநீட்டிப் பார்க்கிறது.
இந்திரபுரம் பெயர்பொறித்த கல்லில் 'ம்' எழுத்து மட்டும் கிடக் கிறது.
"நீ எங்களைத் தேடி வரு வாய். அப்போது எம் கதைகூறவென இறுதி மூச்சைப்பிடித்துக்கொண்டு காத்துக்கிடக்கிறோம்.”
இந்திரபுரத்தை உருவாக்க உதவிய நிறுவனங்களின் பெயர் களையும் அக்கல்லில் பொறித் திருந்தோம். அவை மட்டும் உடை யாது கிடந்தன.
அதன் கீழே சிவப்புப் பல கையில் மண்டையோடும் எலும்பு களும். ()
எதிர்பார்ப்புகள் எரிக்கப்படுவது பற்றி.
முடிவிலா இழைகளில் விசாரணை முடிந்துகிடக்க, அகிம்சையுடன் பயணிக்க ஒர்மம் சிறகடிக்கும. வெறி உமிழும் ஒரு கோடி விழிகள் புசிக்க எங்கள் வாழ்தலின் வணிகம் துவம் செய்யப்படும். புதிய கிரகங்கள் புலர இராட்சத உருக்களின் பிரவேசிப்பு முடுக்க பீதியுடன் தணிக்கை செய்யப்படும், அழகான எமது எதிர்பார்க்கைகள.
ஏற்றத்தாழ்வின்
GT6)6)6)6oT புயலாய் வீசிக்கிளர போதாமையின் புற்றில் தோய்ந்துருகும் எமது கனா. மரணத்தின் பிம்பங்களை கோர்த்து அணிவிக்கும் உங்கள் வேட்கையின் அபார விடுவிப்புக்களை யாரின் தோட்டத்தில் இனி உழுது பயிரிடுவது? எங்களையும் எரித்து சாம்பலாக சேமிக்கும் வரை.
-எல்.வஸிம் அக்ரம்

Page 18
ஜீவநதி SO
திறனாய்வாளர், பேராசிரியர் க.கைலாசபதி நினைவாக.
காலக் கணிதம் க.கைலாசபதி
-சோ.தேவராஜா
கைலாசபதி தனது 49வது வயதில் 06-12-1982இல் காலமானார். இருபத்தைந்து வருடங்களாகின்றன. தேசிய கலை இலக்கியப் பேரவை அவரது நினைவாக வருடந்தோறும் யாழ்ப்பாணத்திலுமி, மலையகத்திலும், கொழும்பிலுமாக நினைவரங்குகளை நடாத்தி வருகின்றது. அவரது நினைவாக அவ்வப்போது இன்னும் சில கலை இலக்கிய அமைப்புக்களும் நண்பர்களும் தோழர்களும் ஆய்வரங்குகளை நடத்தி வருகின்றமை நமக்கெல்லாம் இன்றைய நெருக்கடியான இலங்கையின் சூழலிலும் உத்வேகத்தை அளிப்பவையாகும்.
கைலாசின் நினைவு தினத்தைக் கொண்டாடுவது வெறும் சடங்காகத் தெரியலாம். ஏனெனில் இருபத்தைந்து வருடங்களின் முன்னே வாழ்ந்து மறைந்தவர் பற்றிய நினைவுகளை 25 வயதில் வாழுகின்ற இன்றைய இளைஞர் தெரிந்திருத்தல் இயலாததொன்றே.
இறந்தவர் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லும் போது எமக்கும் அவருக்குமிடையிலிருந்த உறவைப் பற்றி பொச்சடிப்பது எமக்கு மகிழ்வளிக்கலாம். ஆனால் அதுவே இளைஞர்களுக்கு சலிப்பூட்டலாம்.
கைலாசின் நினைவுகள் எமக்கு ஆண்டுத்திவசம் கொண்டாடுவது போல் வருடத்துக்கொரு தடவை வரும் நினைவுகளல்ல. எமது அன்றாட வாழ்விலும் எமக்குள்ளும் குடும்பத்தினுள்ளும் அயலிலும் நடைபெறும் நிகழ்வுகளிலும் அவரது எழுத்துக்கள், உரையாடல்கள், நடத்தைகள் என்பன உள்ளொளி பெருக்கி நிற்பனவாகும். எனவே அவர் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் வாசிப்பதும் எமது அன்றாட வாழ்வின் திசைமார்க்கத்தைக் காட்டும் காலக் கணிப்பாகும். சமகாலத்திலும் எங்களுடன் கைலாஸ் கலந்து கொண்டு உரையாடுவதனை அவரது நூல்களினுTடு நாம் அனுபவிக்கின்றோம்.
கைலாசைப் பற்றிப் போற்றுவோர், உள்ளளவில் தூற்றுவோரும் சிலர் உள்ளனர். அந்தத் தூற்றல்கள் எம்மைத் திரும்பத் திரும்பத் தூசுதட்டிக் கைலாசின் புத்தகங்களைப் படிக்கத் தூண்டுகின்றன. சிந்தித்துச் செயற்பட உற்சாகமளிக்கின்றன. அவரது எழுத்துக்கள் எம்மிடையே எழுகின்ற கேள்விகளுக்கு விடைகளைத் தருகின்றன. “மாற்றம் ஒன்றே மாறாத நியதி என்பதே மரபு” என்பதைத் தெளிந்து தேர்ந்த கைலாஸ் தேக்கமடைந்த நியமங்களையோ, விழுமியங்களையோ விரும்பியவரல்ல. எனவேதான் கைலாஸ் எவ்வாறு இன்னும் எமக்குள் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார் என்பதைப் பகிர விரும்புகின்றேன். நாம் அனைவரும் அந்த வெளிச்சத்தில் எமது வாழ்வையும், உலகையும் உற்று

§ඛubé 31 நோக்கலாம். அவரது மக்கள் இலக்கியச் செல்நெறியும் நடைமுறையும் எவ்வாறு ஒன்றுபட்டிருந்தன என்பதை கண்டு கொள்ள முனைகின்றேன். 1. அரசியல் நீக்கம் பெற்ற அதிமேதாவியாக அவர் இருக்கவில்லை. 'இதுவரை வந்த தத்துவங்கள் சமூகத்தை விளக்க உதவின. ஆனால் மாக்ஸியத் தத்துவம் சமூகத்தை மாற்ற வழிகாட்டியது என மாக்ஸியத்தை வெறும் தத்துவமாகக் கைக் கொள்ளாமல் விஞ்ஞான மனப்பாங்குடைய பிரபஞ்ச உண்மையாக - உலகை நோக்கும் கருவியாக அதனைப் புரிந்து கொண்டார். மாக்ஸியத்தளமே அவரது அரசியல் ஆகும். அரசியல் கட்சியின் பத்திரிகையான 'தொழிலாளி' யில் அபேதன் என்ற பெயரிலும் “செம்பதாகையில் ஜனமகன், உதயன் என்ற பெயர்களிலும், Red Banner பத்திரிகையிலும் அரசியல் கட்டுரைகள் எழுதினார்.
பிரபலம் பெற்ற பெரிய கட்சிகளில் தன்னை அடையாளப்படுத்தி அவர்களின் சலுகைகளை எதிர்பார்த்தவரல்ல. பட்டம், படிப்பு, சாதி அந்தஸ்து என்பவற்றுக்கப்பால் சாதாரண எழுத்தாளர், பத்திரிகையாளர், கலைஞர், தோழர்களுடன் அரசியலில் இணைந்து செயற்பட்டார்.
2. தமிழ்த் தேசியத்தின் திசைமார்க்கத்தைக் கணிப்பதில் சர்வதேசத் தொழிலாளி வர்க்க சமூகத்தின் அங்கமாகவே தமிழ்ச் சமூகத்தைப் பார்த்தார். குறுந் தமிழ்த் தேசியத்தை வெறுத்தொதுக்கினார். ஏகாதிபத்திய எதிர்ப்புடைய முற்போக்குத் தேசியத்தை முன் மொழிந்தார். எனவே தான் பிற்போக்குத் தமிழ்த் தேசியத்தின் போக்கையும் நோக்கையும் புறந்தள்ளினார். தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற அமைப்பை 'தமிழர் வியாபாரக் கூட்டணி’ என்று விமர்சித்தார். தமிழர்கள் பார்க்க வேண்டிய சர்வதேசம் என்பது அமெரிக்காவோ, ஐரோப்பாவோ, பிரித்தானியாவோ அல்ல. மாறாக லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா போன்ற மூன்றாம் உலகமே என்று திசைகாட்டினார்.
3. தமிழ் இலக்கியப் பரப்பில் பிரபல்யம் பெற்ற மேதைகளைச் சொல்லி அவர்களின் பேரின் பின்னால் தனது பிரபல்யத்தை பாதுகாத்தவரல்ல. தமிழ் இலக்கியச் சூழலில் வள்ளுவன், கம்பன், சேக்கிழார் என்று மன்றங்கள் அமைக்காமல் தமிழுலகம் இதுவரை கண்டறியாத சீனத்தறிஞர் லூசுன் அவர்களுக்கு நூற்றாண்டுவிழா கொண்டாட வழிகாட்டித் தலைமை தாங்கினார். சீனக் கலாச்சாரப் புரட்சியின் பாதிப்பால் 'பாரதி யார்? என்று கேட்டு பாரதியை மதவாதி, முதலாளித்துவவாதி என ஒதுக்கிய மனப் போக்கே மேலோங்கியிருந்தது. இதனை மாற்றியமைத்து விஞ்ஞான பூர்வமாக - பாரதியை எவ்வாறு பார்ப்பது என்பதனைப் பன்முகப் பார்வையினுடாகத் தெளிவுபடுத்தினார். 'பாரதி நூற்றாண்டு

Page 19
ஜீவநதி
32 வந்த போது மாதாந்த ஆய்வரங்கை தலைமை தாங்கி நடத்தினார். இதன் மூலம் 'பாரதியியல்' பற்றிய தெளிவை தமிழ் சமூகத்துக்கு வழங்கினார். ‘ஆறுமுக நாவலர்’ ஐந்தாம் குரவராகக் கொண்டாடப்பட்ட இலங்கைச் சூழலில் அவரைத் தேசியவாதியாக, சீர்திருத்த முனைப் பாளராக அவரின் மறு கோணத்தை வெளிக் கொணர்ந்து நாவலர் ஆய்வில்' 'காலமும் கருத்தும் அடிப்படையில் யதார்த்தமான கணிப்பை முன்வைத்தார்.
தனிமனித புகழ் நாட்டம் இன்று பலரையும் சித்திரவதைக்குள்ளாக்கி வருகின்றது. தனியனாக நிற்பதும், தனியனாகச் செயற்படுவதும், தற்புகழ்ச்சி கொண்டு பிறரைத் தூற்றுவதும், தனக்கு வரும் இன்னலொன்றுக்கு பிறரே காரணம் என்று அயலாரிடம் குற்றம் காண்பதும் இலக்கிய உலகில் சாதாரண சங்கதியாகி விட்டன. கைலாஸ் தனிமனிதவாதச் செயற்பாட்டுக்கப்பால் கூட்டு முயற்சியையும் கூட்டுச் செயற்பாட்டையும் இலக்கிய இயக்க மாகவும் - இலக்கிய அணியாகவும் செயற்படத் தூண்டியவர். சிற்றிலக்கியச் சஞ்சிகைகளுக்கு உற்சாகமூட்டி ஒன்றுபட்ட செயல் களுக்கு வழிசமைத்தவர். மல்லிகை, தாமரை, தாயகம், சமர் போன்ற பல இலக்கிய இயக்கங்களின் பின்னால் இயங்கியவர். ஆய்வரங்குகளில் பிரமுகப் பேச்சாளர் என்று பாராமல் சாதாரண எழுத்தாளர்களையும் இணைத்து நடாத்தவும் அவற்றை நூலாக்கவும் பலமுயற்சிகளை மேற்கொண்டார். உதாரணமாக நாவல் நூற்றாண்டு விழாவை யாழ். பல்கலைக்கழகத்தில் நடாத்தினார். 'ஆக்க இலக்கியமும் அறிவியலும்' என்ற ஆய்வ ரங்கின் மூலம் பல எழுத்தாளர்களை எழுதச் செய்து அவர்களின் ஆக்கங்களை தொகுப்பாக்க ஆலோசனை வழங்கினார்.
பாரதி நூற்றாண்டின் நினைவாகக் கைலாஸ் தலைமையில் நடந்த ஆய்வரங்கில் பலர் சமர்ப்பித்த கட்டுரைகள் 'பாரதி பன்முகப் (ார்வை' என்ற நூலாக வெளிவந்துள்ளது.
தினகரன் பத்திரிகை ஆசிரியராக இருந்த போது இந்தியச் சஞ்சிகைகளின் சந்தையாக விளங்கிய இலங்கையில் ஈழத்து இலக்கிய எழுத்தாளர்களுக்கு ஊக்கமளித்து பிரசுரித்தார்.
'பாரதி கவிதைச் சமர் நடாத்திப் பல ஈழத்துக் கவிஞர் களின் பாடல்களை தொடர்ந்து தினகரனில் வெளிவரச் செய்தார். 'மத்தாப்பு என்ற நாவலை ஒவ்வொரு எழுத்தாளராக ஐந்து எழுத்தாளரைக் கொண்டு தொடர்ந்து எழுதச் செய்து வெளியிடத் தூண்டினார்.
'ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு' என்ற பாரதியின் வாக்கை ஈழத்து எழுத்தாளரின் எழுச்சிக்கும் தேசிய இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தினார். பழைய குட்டையில் குடி கொண்டி

ඉෂ්ඛuIbé
33 ருந்த ஈழத் தமிழரின் தேக்கத்தைத் தகர்த்து மாறாக் கொள்கையுடைய பண்டித மரபு மான்மியத்திலிருந்து தமிழை மீட்டெடுத்தார். நாவல், சிறுகதை என்ற நவீன இலக்கிய வடிவங்களை அங்கீகாரம் பெறச் செய்தார். மண்வாசனை, பிரதேச வழக்கு ஆகியன முதன்மைப்படுத்தப்பட்டன. பாடசாலைப் படிப்பறியாச் சாதாரண எழுத்தாளர்களின் படைப்பிலக்கிய வளர்ச்சிக்கும் அவர்களின் எழுச்சிக்கும் ஊக்கம் கொடுத்தார்.
தமிழ் நாட்டில் பிரபல எழுத்தாளர்களின் புகழ் நாட்டத்துக்குமப்பால் - வியாபார மனப்பாங்குக்குமப்பால் சமூக நல மேம்பாடு என்பதை வலியுறுத்தும் பான்மையையே கைலாசின் இலக்கியச் செயற்பாடுகள் விளக்கின. உண்மை, நன்மை, அழகு என்பவற்றின் வலிமையை வலியுறுத்தி இலக்கியச் செழுமையை வளர்த்தவர்.
பழைமையின் புகழ் பேசிச் சோழர்காலச் சொப்பனங்களில் மயங்கி பொற்காலம் என்ற புனைவின் புனிதங்களை உடைத்து பண்டைத் தமிழர் வாழ்வையும் வழிபாட்டையும் வர்க்கக் கண்ணோட்டத்தில் வழங்கியவர். வர்க்கக் கண்ணோட்டத்தில் உண்மையைத் தேடும் வழியைச் செழுமைப்படுத்தியவர்.
தமிழ்மொழி என்பது சமயம் என்ற சிமிலிக்குள் மாத்திரம் குடிகொண்டு விடாமல், வரலாறு, பண்பாடு, மானுடவியல், தொல்பொருள் ஆய்வு, பொருளாதாரம் என்ற பல்துறைகளினூடாக பார்க்கப்பட வேண்டும் என்று முழங்கியவர். சைவமும் தமிழும் என்ற தூய்மைவாத மூடநம்பிக்கையைத் தகர்த்து தமிழியல் என்ற பரப்பை ஆழ அகலிக்கச் செய்தவர்.
விமர்சனம் என்பதை முதன்மைப்படுத்தி திறனாய்வு என்ற விஞ்ஞான மனப்பாங்கை தமிழுக்கு ஆதார சுருதியாக்கியவர். தமிழகத்தின் வையாபுரிப்பிள்ளையின் விமர்சனத்தை உள்வாங்கிக் கொண்டவர். தமிழகத்தின் முற்போக்காளர்களுடன் கொண்டும் கொடுத்தும் இலக்கிய வாழ்வில் திளைத்தவர்.
புதுமையைக் கண்டு புளகாங்கிதம் கொள்ளாமலும்' பழைமை மீது பாராமுகங் காட்டாமலும் மானுட நேசிப்பினை முதன்மைப்படுத்தி தனது ஆய்வுத் தடத்தை ஆற்றுப்படுத்தியவர். தமிழர் என்றொரு இனமுண்டு. அதற்கு தனியே குணமுண்டு எனத் தமிழைத் தனியே புகழ்ந்து போற்றும் மனப்பாங்கிலிருந்து மாறி தமிழைத் தரணியில் பிற தேச மொழிகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து தமிழின் வளர்ச்சியை ஒப்பியல் ஆய்வாக முன்னெடுத்தவர்.
இளம் எழுத்தாளர்களுடன் ஊடாடியும் - உறவாடியும் அவர்களின் ஏழுத்துக்களை ஊக்குவித்தும் விமர்சித்தும் வியாக்கியானம் ச்ெய்தும் முன்னுர்ைகன்ஸ் வழங்கிக் கெளரவித்தவர்.சில எழுத்தாளர்கள் அதனையே தமது மகுடமாகச் சூடிக் கொண்டனர்.

Page 20
ஜீவநதி 34
8. தமிழ்த் தேசியம் சிங்கள மக்களை எதிரிகளாகக் கண்டு காட்டிய போதும் அதற்கு மாறாகச் சிங்கள மக்களை நண்பர்களாக மதித்தார். சிங்கள எழுத்தாளர், கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றினார். சினிமா நெறியாளர் தர்மசேன பத்திராஜவின் நெறியாள்கையில் 'பொன்மணி’ என்ற படம் எடுக்கப்பட்ட போது அதற்கு ஒத்துழைப்பு நல்கினார். இவரின் துணைவியார் சர்வமங்களம் கைலாசபதியும் அதில் நடித்தார்.
சிங்கள எழுத்தாளர்களுடன் இணைந்து ‘சமூக விஞ்ஞானிகள் சங்கம்’ என்ற அமைப்பினுாடாக "இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை' என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு கட்டுரை சமர்ப்பித்தார். இது பின்னர் "இலங்கையில் இனத்துவமும் சமூக மாற்றமும்' என்ற நூலாக வெளியிடப்பட்டது.
சிங்களத் தொழிலாளர்கள், விவசாயிகள், கலைஞர்கள் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்காக குரல் கொடுத்துக் கட்டுரைகள் தீட்டினார்.
9. படிப்பு, பட்டம், பல்கலைக்கழகம் என்பதனை ஆதிக்கத்துக்குப் பயன்படுத்தாமல் மானுட தேவைக்குப் பயன்படுத்த வேண்டும் எனக் கருதியவர். ‘வடக்கில் ஒரு பல்கலைக்கழகம்’ என்ற கட்டுரையில் பல்கலைக்கழகப் பயன்பாடு அப் பல்கலைக்கழகம் இயங்கும் சூழலுக்குத் தக்க விவசாயம், மீன்பிடி போன்றவை முக்கியம் பெறவேண்டுமே தவிர வேறு அல்ல என ‘பூரண பல்கலைக்கழகம்’ என்ற எண்ணக்கருவுக்குப் புது வியாக்கியானம் கொடுத்தார்.
ஈழத்து இலக் கியப் பரப்பில் தன்னிகரில் லாத் தலைமகனாகத் திகழ்ந்த கைலாசபதி தனது எழுத்துக்களை எமக்கு விட்டுச் சென்றுள்ளார். மாக் ஸியத்தை தமிழ் மயப்படுத்தியுள்ளார். மூன்றாம் உலகத்தை எமது மொழியோடும், பண்பாட்டோடும் இணைத்துள்ளார். மக்கள் வாழ்வே இலக்கியத்தின் . ஊற்றுக் கண் என்பதை உணர்த் தியுள்ளார். தமிழ் தி தேசியவாதத்தின் திசைமார்க்கத்தை வழிப்படுத்தியுள்ளார். மானுடத்தை நேசித்துள்ளார். கூட்டுச் செயற்பாட்டினை வலியுறுத்தியுள்ளார். ஒப்பியல் திறனாய்வை வளப்படுத்தியுள்ளார். தமிழும் இலக்கியமும் பயில்வதற்குரியனவல்ல என்ற மடமையைக் கொழுத்துவோம். தமிழ் இலக்கியத்தின் அடிமுடியை ஆய்வோம். தமிழ் சமூகம் சாப விமோசனம் பெறும் ம்ார்க்கத்தில் கைலாசைப் பயில்வோம். வீறுடன் விரைவோம். D
C மதிப்பீட்டிற்கு உங்கள் நூலின் இரு
பிரதிகளை அனுப்பி வையுங்கள்.

35
ஜீவநதி
கறுப்பும் வெள்ளையும்
மெல்லிய இளமாலைப் பொழுதின் தென்றல் கழுத்தோர மாக கிச்சிகிச்சு மூட்டிற்று. வாடிக் கையாளர்கள் வரும் நேரம். எல்லா வற்றிற்கும் மேலாக சந்தடியின்றி அந்த பொலிஸ்காரன் வரும் நேரமும் கூட. சாரதா மெல்ல எழுந்து கொண்டாள். கையில் வைத்திருந்த சிறிய கையகலக் கண்ணாடியில் முகத்தை மீண்டும் ஒரு தரம் பார்த்துக் கொள்கிறாள். அந்த கண்ணாடியே நிரம்பி வழிவது போன்று தெரிந்த வட்ட, சிவந்த முகத்தில் செவேரென்ற குங்குமப் பொட்டு பிரகாசமாக ஒளிவீசிற்று. கண்ணாடியை சற்றே வளைக்க, காதோரங்களில் சுருளாக விழுந்தி ருந்த கேசம் அழகு காட்டிற்று.
அவள் எத்தனை தடவை யாக இந்த கண் ணாடியைப் பார்த்துக் கொள்கிறாள் என்று தெரியாது. எத்தனையோ தடவை கள்! அவளைப் பொறுத்தவரை அவளது பொழுது போக்கே இது தான். தனது அன்றாட வேலை களை முடித்துக் கொண்டுவிட்டால், வீட்டின் முன்புற ஹோலில் முன் வாசல் கதவோரமாக வந்து அமர்ந்து விடுவாள். பின்னர் என்ன, கண்ணாடி அவள் கையில் 'சீஸோ’ விளை u TOB b.
சாரதா இந்த ஊரில் பிரபலமான ஒரு சாராய வியாபாரி. இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த இவளது அம்மா பலே குடிகாரி. குடிக் கச்செல்லும் போது சாரதாவையும் எப்போதும் தன்னோடு இட்டுச் செல்வதுண்டு. நாளடைவில் சாராய சமாசாரங்கள் அத்துப்படியாகி விட, சாரதா பிரபல "கசிப்பு" வியாபாரியாக
கெக்கிறாவ ஸஹானா
மாறி விட்டாள். எனினும் அவள் ஒரு போதும் சாராயக் கிளாஸொன்றை உதட்டருகே கொண்டு சென்றது கூட இல்லை. ஆனால் அவளைப் பார்ப் பவர்கள் மதர்ப்பான அந்த தேகக் கட்டின் பின்னால் ஒளிந்திருக்கும் அழகின் ரகசியம் அவள் குடிக்கின்ற சாராயமோ என்று ஐயுறுவார்கள். அந்தளவுக்கு செக்கச்சிவந்து ஜெக ஜோதியாக அவளது முகமும், உடம்பும் சுடர்விடும்.
அவளது தொழில் முதலிய யாவற்றையும் தெரிந்து கொண்டே வேலுச்சாமி அவளைக் கரம் பிடித் தான். அவளைத்திருத்தி நல்ல குடும் பப் பெண்ணாக ஆக்கிவிடலாம் என்ற நப்பாசையின் காரணத்தாலோ என்னவோ, துணிந்து, நல்ல குடும்பத் தைச் சேர்ந்த அவன் பெற்றோரை எதிர்த்து வந்து அவளை மணம் முடித்துக் கொண்டான். ஆனால் ஐந்து வருடங்கள் முயன்றும் அவ னால் எதுவும் முடியாது போயிற்று. திருமணத்தையடுத்து ஒரு வருட த்துக்குள் பிறந்த ஆண்குழந்தை குப்பை'. அது தான் அவனது செல்வமகனின் பெயர். அவனுக்கு இப்போது பத்து வயது நெருங்கு கிறது. ஆண்டவன் தந்த அருளால் தான் தாம் எதிர்பாராத விதமாக ஒரு ஆண் மகன் தலைச்சனாக கிடைத்
'தது என்று, மனங்கொள்ளாத பூரிப் 'பில் லயித்திருந்த சாரதா- வேலுச்
சாமி தம்பதிகள், பிறர் கண்ணுாறு செயப் யாததிருக்கும் பொருட் டு அவனுக்கு அந்தப் பெயரை சூட்டி மகிழ்ந்தனர். இப்போதெல்லாம் வேலுச்சாமி அவளுடன் இல்லை. அவளது பிடிவாத குணம் காரண மாக மனம் விட்டுப்போய் நான்கு

Page 21
ஜீவநதி
36
வருஷங்களுக்கு முன்பு குப்பையின் ஆறாவது வயதில் தனது குடும் பத்தை விட்டே பிரிந்து சென்று எங்கோ தொலைதுாரம் போய் விட்டான்.
அவள் ஒரு துணிந்த கட்டை வாழ்க்கையில் எதற்குமே அஞ்சியது இல்லை. சாராயம் விற்பவளாயினும்கூட அவள் இன்று வரை அந்த சமாசாரங்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களுக்கெல்லாம் போனதில்லை. அதற்கெல்லாம் உதவிக்கு ஏகப்பட்ட ஆட்கள் தயாராக இருந்தார்கள். சாராயத்தை மலிவு விலையில் காய்ச்சுவதற்கு ஒருவன், அதைக் கொண்டு வந்து தருவதற்கு ஒருவன, தற்செயலாக அவள் பிடிபட்டுவிட்டால் தானே அந்த குற்றத் தற்கு பொறுப் புதாரி எனக்கூறி வலிந்து சென்று பொலி ஸில் தண்டனையை அனுபவித்து விட்டு வந்து பிறகு அவளிடம் வந்து கூலி பெற்றுக்கொள்ள ஒருவன் என, ஏக தடயுடலாக சாரதா வாழ்ந்து வந்தாள்.
ஒரு தடவை எதிர்பாராத விதமாக பொலிஸ் திக் விஜயம் செய்தபோது சாரதா வீட்டில் இருக்கக்கண்டு அவளையும், சாராய மூட்டியையும் ஏற்றிக் கொண்டு போய்விட்டார்க்ள். அப்போது விளக் கமறியலில் இருந்த காலத்தில்) அவளுக்கு அறிமுகமாகியவனே அந்த பொலிஸ் காரன். நாளா வட்டத்தில் அவன் அவளது வாடி க்கையாளனாக மாறிவிட்டான்.
சாரதாவின் தாய் வள்ளி யம்மா சில வருடங்களுக்கு முன்னர் இறந்து போனாள். சாரதா ஒரு கேவலமான சாராய வியாபாரியாக மாறிவிட்டது குறித்து அவளுக்கு ஏகப்பட்ட மனவருத்தம். அடிக்கடி சண்டை பிடிப்பாள முற்றத்து மணலை வாரிவிசி, திட்டிக்கொட்டு
வாள். அப்படித்தான் ஒருநாள் போனவள் குடிபோதையில் கீழே விழுந்து, தலை அருகில் இருந்த பெரிய கல்லில் மடேரென்று மோதி அடிபட, பொட்டென்று போய்விட்டாள். சாரதாவுக்கு உள்ள வருத்த மெல்லாம் ஒன்றே. அவள் அருமை பெருமையாகப் பெற்ற ஒரே மகன் குப்பை, மூளை வளர்ச்சியற்ற பையனாக இருந்தான். சட்டென்று பார்த்தால் தோற்றத்தில் எதுவும் தெரியாது. சிறிது நுணுகப் பார்த்தால் அவன் தன்னையொத்த ஏனைய சிறுவர்களை விடவும் வித்தியாசமாக இருப்பது தெரியும். பன்னிப் பன்னிப் பேசுவான். செயல் களில் பத்து வயதுப்பையனின் முதிர்ச்சி இல்லை. நாலு வயதுக் குழந்தையின் சமர்த்துக்கூட இருக் காது. கைகால்கள், கண்பார்வை, மூளை என்பவற்றிலும் சரியாக இயங்கும் திறன் இல்லை. வெள்ளை வெளேரென்று மெலிந்த அழகிய சிறுவன் அவன்.
சிவனேயென்று போட்டதைத் தின்றுவிட்டு தன்பாட்டுக்கு கிடப்ப வனாக அவன் இருந்திருந்தால் அவள் இவ்வளவு வருத்தமாக இருந்திருக்கமாட்டாள். கெக்கிறாவ பிரதான வீதியின் அசுரப்போக்கு வரத்தில் இருந்து நாளும் அவனைக் காப்பதே பெரும் பாடாக இருந்தது. பக்கத்து வீடுகளுக்குப் போய் ஏதாவது தொல்லை கொடுப்பான். அவர்கள் ஒரு நடை நடந்து வந்து முறைப்பட்டுவிட்டுப் போவார்கள். சாரதா சமாளித்து அனுப்புவாள். பக்கத்து வீட்டுக்கூனிக் கிழவி குனிந்து கூட்டுவதற்கென்று செய்து வைத்திருந்த கூட்டுமாறைத்தூக்கி மதிலுக்கு அப்பால் எறிவான். முன்வீட்டுச்சிறுமி கண்ணே பொன்னே என்று வைத்திருக்கும் விளையாட்டுச் சாமான்களை தூக்கியெறிவான்.

ஜீவநதி
37
பின்வீதியில் நிறுத்திவைக்கப் பட்டி ருக்கும் வாகனங்களைக் கண்டால் அவனுக்கு ஒரு நரம்புத் துடிப்பு கூடிவிடும். ஏறி உட்கார்ந்து ரிப்பேர் பார்ப்பான். யாருக்கும் தெரியாமல் மெல்லக் கதவை இழுத்து மூடித் திறந்து கையில் பலத்த அடியுடன் வந்து அதை மெதுவாகக் ‘ காட்டி எரிச்சல் மூட்டுவான். நாளொரு மேனியும் பொழு தொரு வண்ணமு மாக இரத்தக்காயங்களோடு வரும் அவனுக்கு அவள் ஏசி மருந்து போட்டு விடுவாள். மருந்தும் மாய மும் பண்ணிப்பண்ணி சமயங்களில் தண்டனை அனுபவிப்பது போல் இருக்கும் அவளுக்கு
இதையெல் லாம் விட பெரிய வேதனை பொலிஸ்காரனின் உருவத்தில் வந்தது. தொழில் முறையில் மிகவும் வேண்டப்பட்ட வனல்லவா அவன்? கள்ளச்சாராயம் குடிப்பவர்களை விட விற்பவர்கள் ஏறத்தாழ நூறு என்று விகிதம் காணப்பட்ட அவ்வுபூரில், சாரதா தவறியும் பொலிஸ் நிலையத்திற்கு போக நேராதபடி அவன் பார்த்துக் கொண்டான். மாதாந்தம் ஐம்பதா யிரம் ரூபா வரை வருமானம் தருகி ன்ற கள்ளச் சாராய கேஸ்களை வெகு உற்சாகமாக கையாளுகின்ற தனது சகாக்களை ஒரே கண் ஜாடையில் சாரதாவின் வாசலுக்கு போகாமல் தடுத்து விட அவனால் முடியும். ஈஸ்டையும், பேரீச்சம்பழத் தையும், சீனியையும் எவ்வெவ் விகிதங்களில் கலந்தால் என்ன சுவை கிடைக்கும் என்று கூறுமள விற்கு அவன் அவ்விடயத்தில் கைதேர்ந்தவனாக இருந்தான். சமயங்களில் இரண்டு கிளாஸ் கசிப்போடு அவனது தேவைகள் முடிந்து போகும். சிலவேளைகளில், அதற்கும் மேல் சிறிது மேலே.
அப்போதெல்லாம் சாரதா
விற்கு பெரிய பிரச்சினையாக இரு க்கும். எல்லாவற்றுக்கும் குப்பை குறுக்கே நின்றான். அவனை சமாளி த்து தூங்க வைப்பதற்குள் போது மென்றாகிவிடும் அவளுக்கு.
இவனை எங்காவது தொலைத்துக் கட்ட முடியுமானால் எவ்வளவு நிம்மதி? யோசித்துக் கொண்டிருந்தவளின் கவலையை ஒருநாள் அந்த பொலிஸ்காரனே தீர்த்து வைத்தான்.
“மாத்தளையில் ஒருஸ்கூல் இருக்காம் அங்க போய் தள்ளிட 6)(Tib.....'
மூளை வளர்ச்சி குறைந்த மாணவர்களுக்காக புதிதாகக் கட்டப்பட்டிருந்த அந்தப்பாடசாலை பெரிய ஆரவாரங்கள் எவையுமின்றி இரண்டு கட்டடங்களுடன் இருந்தது. அவர்களது பிரயோக அறிவுத்
திறன்களுக்காக பொருட்கள்
நிறைந்திருந்த ஒரு மண்டபமும் தவிர, பிள்ளைகள் விளையாடு வதற்கான பூங்கா ஒன்றும் வெளியே காணப்பட்டது. தோட்டத்தின் மேல் மூலையில் ஒரு சிறிய குவாட்டஸ் இருந்தது.
சாரதா குபபையை அழை த்துக்கொண்டு சென்றது ஒருமாலை நேரம் ஆதலால், இரு மண்டபங் களும் மூடப்பட்டு பூட்டுக்கள் தொங்கிக் கொண்டிருந்தன. விளை யாட்டுப் பூங்காவை கண்டதுமே உற்சாகம் மேலிட்டதால் அங்கு மிங்கும் ஒடியாடி, அதிலும் இதிலும் தொங்கிப்பாய்ந்து குப்பை விளை யாடத் தொடங்கிவிட்டான். அவனை அப்படியே விட்டு விட்டு, குவாட் டஸின் திறந்ததிருந்த வாசல் கதவுகளின் முன்னே தயங்கி நின்றாள் சாரதா.
உள்ளேயிருந்து மெல்லிய டீவியின் சப்தம் கேட்டுக் கொண்டி ருந்தது. ஆள் அரவமில்லை. இரண்டு

Page 22
ஜீவநதி
முறை கதவில் தட்டினாள்.
உள்ளேயிருந்து ஒரு பெண் வந்தாள். அந்த அம்மணியின் கையில் ஒரு பத்திரிகை இருந்தது. மூக்குக்கண்ணாடியை சரி செய்த படியே புருவங்களை நெரித்தபடி வாசலில் வந்து நின்று, மிக நேர்த்தி யாக உடையணிந்து கெளரவமான தோற்றத்துடன் வெளியே காத்து நிற்கின்ற சாரதாவைப் பார்த்தாள்.
சாரதா எப்போதுமே இப் படித்தான். வெளியே புறப்பட் டாளானால் அவளது இனம், குலம், தொழில் பற்றிய சந்தேகங்கள் யாருக்கும் எழவே எழாது. அந்த ளவுக்கு படித்த நாகரிகமான ஒரு தொழில் செய்கின்ற பெண்ணைப் போன்று கனகச் சிதமாக காட்சி யளிப்பாள். சற்று உருண்டு திரண்ட உருவம் ஆயினும் போதுமான உயரம் இருந்ததால் அவளது தோற்றம் யாரையும் பிரீதி கொள்ள வைக்கும். ஜொலிக்கும் குங்குமப் பொட்டு எப்போதும் நெற்றியில் பெரிதாக துலங்க, தலையில் மலர்ச் சரம் இல்லாவிட்டாலும் ஒரேயொரு ஒற்றைப் பூவாவது பின்னால் உச்சி யில் கொழுவி யிருக்க, பளிரென ரோஜா நிறத்தில் ஒளிர்கின்ற முகத்தில் செவ்விரத்தம் கோலம் காட்ட . அவள் அனேகமாக ஒரு
தேவதை போன்று தான் இருப்பாள்,
"என்ட, எத்துலட்ட என்ட” என்று அவளை வரவேற்றாள் அம்மணி, யாரோ வேலை தேடி வந்திருக்கக்கூடும் என்ற எண்ணத் தில், நெடிய, மெல்லிய அவளது தேகத்தையும், முகத்தின் மீது தொங்குகின்ற சுருள் முடிகளையும், தூய வெள்ளை நிறத்தில் பளி ரென்று கட்டியிருக்கும் வெள்ளைச் சேலையையும் கண்களால் அளந்து, மனதால எடைபோட்டபடியே உள்ளே வந்தமர்ந்தாள் சாரதா.
அதுவரை விளையாடிக்கொண்டிருந்த குப்பை ஓடிவந்து. ஏக உரிமையுடன் அவளது மடியில் உட்கார்ந்து கொண்டான்.
அவனைப் பார்த்ததும் அம்மணிக்கு எல்லாம் புரிந்தது. இருவருக்குமிடையில் மொழி ஒரு பிரச்சினையாக இல்லை. சாரதாவுக்கு சிங்களம் நன்கு தெரியும். அம் மணியும் கொஞ்சம் தமிழ் புதிதாகக் கற்றிருந்தாள்.
சாரதா குப்பையின் பிரச் சினையை எடுத்துக் கூறினாள், தனது தொழில் என்ன என்பதை மட்டும் மறைத்து விட்டு. அவனை ஏற்க சம்மதித்த அம்மணி, தினமும் காலையில் அவனை கொண்டு வந்து விட்டு பின்னேரம் கூட்டிச்செல்ல வரவேண்டுமென்று கண்டிப்பாகக் கூறினாள்.
இந்த இடத்தில் தான் உதைத்தது. ஏறத்தாழ ஐம்பது அறுபது கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் கெக்கிறாவையில் இருந்து தினமும் அவனைக்கூட்டி வந்து, கூட்டிச் செல்வதென்றால் வேறு வேலை இல்லையா சாரதாவுக்கு?
கெஞ்சிக் கூத்தாடி அவனை அங்கேயே விட்டுச்செல்ல அனுமதிக் குமாறு வேண்டினாள். அவள் ஏற்கனவே அவனுக்குத் தேவையான உடைகளையும், பொருட்களையும் ஒரு ட்ரவலிங் பேக்கில் எடுத்து வந்திருந்தாள். தான் தினமும் போக்குவரத்திற்கு செலவளிக்க முடியாதளவிற்கு ஏழை என்று பேசி அந்தப் பெண் அதிபரை நம்ப வைத்துவிட்டாள்.
மிஸ் குருகுல சூரிய. அவளுக்கு இந்த பொறுப்பு மிக்க அதிபர் பதவிதான் புதியதே தவிர, அல்லும் பகலும் மனவளர்ச்சியற்ற சின்னக் குழந்தைகளுடன் பழகி, அவர்களது நாடித்துடிப்பை அறிந்து

ஜீவநதி
39
செயல்படுவதில் நல்ல அனுபவம் பெற்றிருந்தாள். ஏற்கனவே பல சமூகசேவை நிறுவனங்களில் கடமையாற்றியிருந்தாள். அரசாங்கம் தற்போது இந்தப் பள்ளியின் நிரு வாகியாக அவளை நியமித்த போது மனப்பூர்வமாக அதை ஏற்றுக் கொண்டு, இனி தனது வாழ்நாளை இத்துறையிலே அர்ப்பணித்துவிட வேண்டும் என்ற சங்கற்பமும் கொண்டிருந்தாள்.
ஏறத்தாழ வயது ஐம்பதை நெருங்கிக் கொண்டிருந்தாலும் திருமணம் செய்து கொள்ளாமல் சமூகப் பணி செய்து வாழ்ந்து, ஊருக் கும் உலகுக் கும் பல சேவைகள் செய்து இப்படியே காலங்கழித்து விட வேண்டும் என்று அவள் தீர்மானித்திருந்தாள். இன்று நேற்றல்ல பல வருடங்களாகவே தன்னுள் சுடர்விடும் இக்கனவை அதன் ஜோதியை இன்றுவரை யாரும் அழித்துவிடாதபடி மிகக் கவனமாகவே தனது வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தவள் . வைப்பவள் . அவள். இநீ த ப் பாடசாலை யை நடத்தி வருகின்ற இந்த ஒருவருட காலத்தில் இத்தகைய மாணவர் களைப் பயிற்றிப் பல கலை களையும் கற்பிப்பதற்கு ஏற்றபடி ஒரு விடுதியையும் தானே நடத்தி வர வேண்டும் என்ற எண்ணம் அவளிடம் இருந்தது. ஏற்கனவே ஓரிரண்டு மாணவர்கள் அவளுடன் வந்து தங்கி நிற்பதற்கு விருப்பம் தெரிவித் திருந்தனர். இப்போது குப்பையும் சேர்ந்துகொள்ளவே, பரீட்சார்த்தமாக விடுதியைத்தொடங்கி விடலாம் என்ற எண்ணத்தில், அவனைப்பொறுப் பேற்றுக்கொண்டாள் அவள்.
குப்பையைத் தள்ளிவிட்டு வெற்றிக்களிப்புடன் திரும்பி பஸ் பிடித்து வீடுபோய்ச்சேர இரவு எட்டு
மணியாகியிருந்தது. சமையல்கட்டில் இருந்த பிஸ்கட்டை உண்டு விட்டு, சூடாக டீ தயாரித்து குடித்து விட்டு படுத்துக்கொண்டாள் சாரதா. மனது ஏனோ வெறுமையாக இருந்தது.
காலையில் நேரங்கழித்தே எழுந்தாள். எழுந்ததும் வழக்கமாக ‘அம்மா’ என்று குரலெடுத்து அழைத்து எழுப்பிவிடுகின்ற குப்பை யின் குரல் கேளாதது சந்தோஷ மாகவே இருந்தது. கூடவே ஒருவித வெறுமைசூழ் அமைதியாகவும் இருந்தது.
வீட்டுவேலைகளை நிதான மாக செய்து முடித்தாள். வீட்டைக் கூட்டிப் பெருக்கும் போதும், தட்டித் துப்புரவு செய்யும் போதும் ஆங் காங்கே சிதறிக்கிடந்த குப்பையின் பொருட்களையும், விளையாட்டுச் சாமான்களையும் கானுந் தோறும் மனதைப் பிசைந்தது. பாத்ரும் கதவோரத்தில் பின்புறம் ஒளித்து வைத்திருந்த சாராயக்குடம் காலி யாகி இருப்பதைக் கண்ட அவள் ராமலிங்கத்திடம் ஒரு கேன் எடுத்து வரச் சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.
மாலை வந்தது. அவள் சொல்லியனுப்பியது போல ராமா ஒரு பிளாஸ்டிக் கேனில் சரக்கு எடுத்து வந்திருந்தான். பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு மாலை கறுக்கும் போது வரும் வாடிக்கை யாளர்களை கவனிப்பதில் மும் முரமானாள் அவள்.
இரவு முற்றிப் பழுத்து, மின்விளக்குகளின் பளிர் ஒளியால் கனிந்து கொண்டிருந்தபோது பொலிஸ்காரன் வந்து சேர்ந்தான். அவன் வருகின்ற நாள்தான். அவனது வரவை அவளும் எதிர் பார்த் திருந்தாள். இடையிடையே பல்வேறு சிந்தனைகள் மனதில் சூழ மனதுக் குள் குழப்பமாகவே இருந்தது

Page 23
§ඛulbá
40
அவளுக்கு குப்பையின் நினைவும் மேலோங்கி நின்றது.
தனக் குக் கள் ளச் சாராயத்தை கொண்டு தந்துவிட்டு போகும் ராமலிங்கத்திற்கும் தன் னிடம் கிளாஸ் கணக்கில் குடித்து விட்டு பணம் தந்து செல்கின்ற வாடி க்கையாளர்களுக்கும் தனக்கும் என்ன உறவோ அவ்வளவே தனக் கும் இந்த பொலிஸ்காரனுக்குமான உறவு என்னுமாப்போல் ஒரு நிரந் தரமற்ற தன்மை தன்னை சூழ்ந்து கொண் டிருப்பதை அவளால் இப்போது உணர முடிந்தது. ஒரு கிளாஸை மேலதிகமாக குடித்து விட்டு “நாளை பணம் தருகிறேன்” என்று அவளை யாருமே ஏமாற்றிவிட முடியாது. பணம், கடன் போன்ற விஷயங்களில் பேய் அவள. வந்தவனிடம் கண்டிப்பாகப் பேசி, கறாராக பணத்தை வாங்கிய பின்டே திரவம் கையில் கொடுக்கப்படும் அப்படி கொடுக்கும்போது எக்கு த்தப்பாக சில்மிஷம் எதும் வந்தவன் செய்துவிட்டால் போதும் தொலை த்து விடுவாள். அவளது வலிய தடக்கைகள் எப்போதும் சுறுசுறுப் பாகச் சுழலும். ஓட ஓட விரட்டுவாள். எனவே அந்த ஊரிலேயே "ராங்கிக் காரி” என பேரெடுத்திருந்தாள்.
இந்த பொலிஸ் காரனோ பொலிஸ் விவகாரங்களில் மட்டு மின்றி தனது சுதந்திரத்திலும் தலையிடுவது அவளுக்கு நீண்ட காலமாகவே பிடிக்கவில்லை. அவ ளது கொள்கைகளில் கூட அவன் அதிகம் தலையிட்டான். எப்போதும் கடன் வைத்துக் கொண்டுதான் குடிப்பான். பொலிஸ் உருட்டல் மிரட்டல்களுக்கென்று அவள் அவ் வப் போது கணக்குத் தீர்த்துப் பணத்தைக் கொடுத்து விடுவாள். அல்லது, போனால் போகிறதென்று ஒருநாள் பிடிபட்டாலும் தண்டப்பணம்
கட்டி வெளியே வந்து ஒரு குப்பு சாமியையோ மாடசாமியையோ அனுப்பி பிடிபட்ட சாராய குடத்திற்கு பொறுப்பேற்க வைத்துவிடுவாள். வீடுவாசலின்றி கட்டாக்காலியாகச் சுற்றிக்கொண்டிருக்கும் அவர்கள் மாதக்கணக்கில் மாமியார் வீட்டில் இருந்து ஹாய்யாக சாப்பிட்டுவிட்டு, முடிந்தால் பொலிஸ்காரர்கள் முதல் வக்கீல்கள் வரையில் கூட்டாளி களாக்கிக் கொண்டு வெகு கம்பீர மாக வந்து சேர்வார்கள். சில வேளைகளில் நீதவான் வீட்டு வேலை களைச் செய்வதற்காக பொலிஸ் மூலம் அனுப்பப்படும்போது அங்கே நீதவானுக்கு உதவி ஒத்தாசை புரி ந்து அவர் மனதை வென்றவர்களா கவும் திரும்புவார்கள்.
எப்படிப்பார்த்தாலும் சாரதா வுக்கு இந்தத்தொழில, இதன் ஏற்ற இறக்கங்கள் தண்ணிர்பட்டபாடுதான். இந்த பொலிஸ்காரனோ பல வேளை களில் அதிகபட்ச தொல்லையாக, ஒரு கடன்காரனாக, அடிக்கடி அவ ளை ஏமாற்றுவதற்கே வழிபார்த்த வனாக, அல்லது ஒவ்வொரு முரண் பாடான யோசனைகளையும் கதை களையும் சொல்லி அச்சமூட்டு பவனாக, எரிச் சலுாட்டுபவனாக இருந்துகொண்டிருந்தான். இப்போது குப்பையை அனுப்ப யோசனை சொன்னவனும் அவன்தானே! :
“என்ன மூஞ்சி ஒருமாதிரி செவக் குது?’ பொலிஸ் காரன் இளித்தவாறு கேட்டான். அவனுக்கு வழக்கமாகக் கொண்டுவந்து தரும் உயரமான, விஷேடமான பூப்போட்ட கிளாஸை நிரப்பி நீட்டியவாறு கூறினாள். 8.
'குப்பையை ஸ் கூல் ல வுட் டுட்டு வந்துட்டன் நேத்து’ அவளை அறியாமல் குரலில் சோகம் தொனித்தது
அடிசககை குமமாள

ඉෂ්ඛuIbé
41
மிட்டுச் சிரித்தான், சந்தோஷத்தில். உடனே சரக்கை காலி பண்ணாமல் கிளாஸை மேசை மீது வைத்து விட்டு குறும்பாகப் பார்த்தான். "அப்ப இனி தொல்லையே இல் ல’. நெருங்கி நின்று கண் சிமிட்டினான். சாரதாவுக்கு திடீரென அழுகை பொங்கியது. ஒருகணம் தன்னை உயர்த்தி வாழவைப் பதற்காகவே தன்னைக் கரம்பிடித்து பொறுமைகாட்டி வாழ்ந்துவந்த வேலுச்சாமியின் சாந்தமான முகம் மனக்கண்ணில் வந்து நின்றது. அவன் எங்கே இந்த சுயநலமி எங்கே? அவன் எவ்வளவு நல்லவன்.
ஏதோ ஒரு குணத்தால் பொலஸ் காரன் சொன்னபடி குப் பை யை த தளர் ளரி வரி டட் டு வந்துவிட்டாலும், அந்தயோசனை அவளுக்கு முற்றாகப் பிடிக்க வில்லை என்னுமாப்போல் ஒரு குமைச்சல் அடிக்கடி அவளுள் எழுந்து கொண்டிருந்தது. இவன் சொன்னபடி தானே அவனைத் தள்ளிவிட்டேன். இப்ப என்னால் நிம்மதியா இருக்க முடியுதா? முந்தியை விட கொடுமையா இரு க்கே அவன் நெனப்பு.? என் றெண்ணிக் கலங்கினாள் சாரதா.
அவளது முகபாவத்தைக் கவனித்த அவன், கிளாஸை நிதான மாகக் காலிபண்ணிவிட்டு, வாயைத் துடைத்துக்கொண்டு, கிளாஸை டமாரென்று மேசையில் வைத்தான். அந்தச் சத்தத்தில் திடுக்கிட்டுப் பார்த்தாள் அவள். அவளது அகன்ற விழிகளில், கடைசியாக தான் டொபி வாங்கி தருவதாக பொய் சொல்லி ஏமாற்றிவிட்டு வந்தபோது தன்னை நம்பியும் நம்பாமலும் நிலைகுத்திப் பார்த்த குப்பையின் கண்கள் வந்து நின்றன.
பொலிஸ் காரன் முகம் நிறைய சிரித்துக்கொண்டு, சாராய நெடி அவளைச்சூழும்படி இன்னும்
மிக நெருங்கி அவளது தோள் களைத் தொட்டான்.
ஏனோ. தனக்கு மட்டுமே முழு உரிமையில் லாத ஒரு பொருளை. வேலுச்சாமிக்கு சொந்
’தமான ஒரு பொருளைத் தொலை
த்துவிட்டு நிற்பதுபோல் ஒரு குற்ற உணர்வு மேலிட்டு கொதித்துப் போயிருந்த அவள் வெறி கொண்டு “பளாரென' அவனது முகத்தில் அறைந்தாள்.
“யோசன சொல்லிட்டு சிரிச் சிட்டு வாரியா, மவனே போடா வெளியே..! நீ நெனக்கிறது இனி நடக்காது தூ. ஒன் யோசனையும் நீயும். தொலஞ்சி போ.”
திகைத்து தள்ளாடி நின்ற அவனைப்பிடித்து வெளியே தள்ளி கதவைச் சாத்தினாள் கண்ணிர் கண் களில் கோடாக வழிந்து நெஞ்சை நனைத்தது. “நாளையே குப்பையை கூட்டி வந்திரனும்” என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக முளைவிட்டு அவளுள் உறுதியா யிற்று. அதற்கும் மேலாக பத்து வருடமாக தன்னைவிட்டுப் பிரியாத குப்பையை. மூணு வயசுக் குழந் தையின் புத்திசாலித்தனம் கூட இல்லாத ஒரு பச்சைப் பாலகனை. எங்கோ தள்ளிவிட்டேனே என்ற குற்ற உணர்வு படமெடுக்கும் நல்ல பாம்பு போன்று அவளைச்சுற்றி சீறிக் கொத்தியது. அந்தத் துன்பத்தில் மிக உழன்று, மூடிய கதவில் சாய்ந்து, “எங்கண்ணே குப்பை.” என்று ஒலமிட்டு அழத்தொடங்கினாள் சாரதா,
ஜீவநதியின் வெளியீட்டில் தோள் கொடுத்து பங்களிக்க விரும்புவோர் தங்கள் அன்பளி ÜLéB60)6IT HNB - Nelliady, G5uÖlÜLjä, கணக்கு இலக்கம் 118-00-02-0945701-1 அனுப்பி வைக்கலாம்.

Page 24
ஜீவநதி
42
புதுப்புனல்
க.சுதர்சன்யா உயர்தரத்தில் கல்விகற்கின்றார். இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம் எழுதுதல் என்பவற்றில் திறமையுள்ளவர் இவரை அறிமுகம் செய்து வைப்பதில் ஜீவநதிபெருமை கொள்கின்றது.
சிவம்மதுவுள்யாழ்.இந்துக்கல்லூரியில் உயர்தரத்தில் கல்விகற்கின்றார். இவர் கவிதை, எழுதுவதிலும், ஓவியம் வரை வதிலும் திறமையானவர். இவரை ஜீவநதி அறிமுகம் செய்து வைப்பதில் பெருமை கொள்கின்றது.
வானம் வசப்படும்! LILL-ITLb ġdif பரவசமாக உலவுகிறது. பறவை பாரினைச் சுற்றிக் களிக்கிறது.
விஞ்ஞானம் விண்ணைத் தொட்டு விந்தை புரிகிறது.
நீ மட்டும். சிறகுகளை விற்றுவிட்டு பறக்க ஆசை கொள்கிறாய்!
கனவுகளில் காலத்தைக் கரைக்கிறாய்!! சும்மா இருந்து கொண்டு சுகம் வேண்டும் என்கிறாய்!!! வாழ்வென்ன , அடிமையா, உன் காலில் மண்டியிட? 6)JT!
காற்றில் ஏறு, கனவுகளைச சமை, தூக்கம் குறை,
ஊக்கம் நிறை
நெஞ்சில் நம்பிக்கை என்னும் ஈரம் விதை. வாழ்வென்ன,
உனக்கு
வானமும் வசப்படும்.
துணிபம் இந்தக்காக்கைகள் எத்தனை நாளைக்குத்தான் கறுப்பாய் இருப்பது.
கடவுளே நீயாவது முடிந்தால் கருணை காட்டு!
இனியாவது வெள்ளையாய் காகங்கள்
Baisdbi' (6tb முடியவில்லை என்றால் காக்கைகளே நீங்களும் இனி சீதனம் என்னும் சாயம் போடுங்கள்.
வெளிநாட்டு திருமணம்
அந்த எட்டயபுர அரசர்கள் தம் ஊர்க்கென்று சொல்லி ஒருநாள் வருவார்கள் காந்தர்வ மணம் புரிவார்கள் சில நாள்களில் மீண்டும் மறைவார்கள். பாவம! இங்கு சகுந்தலைகள் மட்டும் முதலிரவு கண்டும் முதிர் கன்னிகளாக.
 

ஜீவநதி 43
மூன்றுகால் மூயலைத் தேடி.
- ஆசி.கந்தராஜா - (அவுஸ்திரேலியா)
சுரங்க ரெயில்வண்டி நிலையமொன்றில் "நித்திய குடிகாரன்” வகையைச் சேர்ந்த ஒருவனை, பொலீசார் விரட்டிக் கொண்டிருந்தார்கள்.
அவனைச் சுற்றி அவன் குடித்து முடித்த "மினிக்குவாட்டர்’ மதுப்போத்தல்களும், சிகரெட் குறைக் கட்டைகளும் நிறைந்து காணப்பட்டன. இவைதான் பொலீஸ்காரரை எரிச்சலடையச் செய்திருக்க வேண்டும்.
சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்தாது சுகாதாரம் பேணுவதில், ஜேர்மன் அரச இயந்திரம் எடுக்கும் அக்கறையின் வெளிப்பாடாக இந்த முற்றுகை, அன்றேல் விரட்டுதல் நடக்கிறது.
“போத்தல்களைப் பொறுக்கிக் கொண்டு ரெயில் நிலைய மேடையை விட்டு வெளியேறு” என பொலீஸ்காரன் உரத்துச் சத்தமிட்டான்.
"நான் ஏன் வெளியேறவேண்டும்? இது என் நாடு. ஜேர்மனியில் எங்கு வேண்டுமானாலும் படுப்பதற்கும் இருப்பதற்கும் எனக்கு பூரண உரிமை உண்டு. என்னை விரட்ட நீ யார்.?” என உரத்த தொனியில் தூஷணை வார்த்தைகள் பல கலந்து, வாதிட்டுக் கொண்டிருந்தான் "நித்திய குடிகாரன்" அந்தக் குரலை எங்கேயோ கேட்டிருப்பதான உணர்வு சுரீரெனச் சுட்டது. உற்றுப் பார்த்தேன். சந்தேகமே இல்லை. என்னுடன் ஒன்றாக பட்டப் பின்படிப்பைத் தொடர்ந்த ஜேம்ஸ் சிமித் தான்! அவனருகில் சென்று, “என்னைத் தெரிகிறதா?’ எனக் கேட்டேன்.
கண்களை சுருக்கி அருகில் வந்து பார்த்தவன், "ழரீலங்கா நண்பனே, எப்போது பேர்லினுக்கு வந்தாய்?” எனக்கேட்டு என் கைகளை இறுகப் பற்றிக் குலுக்கினான். ஜேம்ஸின் நிலையில், அவனுடன் உறவாட இன்னொருவன் வந்ததை ஜேர்மன் பொலீஸ்காரன் விரும்பவில்லை.
உடனடியாக அவனை ரெயில் நிலைய மேடையை விட்டு வெளியேறுமாறு பொலீஸ்காரன் மீண்டும் கடின தொனியில் கட்டளையிட்டான்.
“வா, வெளியே போவோம்” என ஜேம்ஸை அழைத்தேன். “ஒரு மினிக் குவாட்டர் மது வாங்கித் தருவாயா?” எனக் கேட்டவாறே அவன் பின் தொடர்ந்தான்
தேவையில்லாத சர்ச்சையிலிருந்து விடுபட்டு விட்டதாக நினைத்த பொலீஸ்காரன் அவ்விடம் விட்டு அகன்றான்.
“என்ன நடந்தது உனக்கு.? இது என்ன கோலம்.?” என சுரங்கப் பாதையின் வெளியே வந்ததும் கேட்டேன்.
“நண்பா கை நடுங்குது. சீக்கிரம் மதுப் போத்தல் ஒன்று வாங்கித்தா” என என் கைகளைப் பிடித்தான்.
உண்மையில் அவனது கைகள் இரண்டும் வெடவெடத்து நடுங்குவதை அவதானித்தேன்.
ஜேர்மனியில் பேப்பர் கடை, காய்கறி கடை, சாப்பாட்டுக் கடை

Page 25
ஜீவநதி 44 என எல்லாக் கடைகளிலும் மதுப்போத்தல்கள் “மினிக் குவாட்டர்” சைஸ் தொடக்கம் வெவ்வேறு சைஸ் வரை வெவ்வேறு வடிவங்களில் விற்பனைக்கு உண்டு. நித்திய குடிகாரர் பைகளிலே இத்தகைய மினிக்குவாட்டர் போத்தல்கள் எப்போதும் கைவசம் இருக்கும். போதை தெளியும் போதெல்லாம் இவற்றைக் குடித்துவிட்டுப் பொதுவிடங்களில் உள்ள இருக்கைகளிலே சுருண்டு படுத்துக்கொள்வார்கள்.
இவர்கள் தமது உறவுகளைத் தொலைத்தவர்கள், மது போதையிலே வாழ்க்கையின் அர்த்தங்களையும் சுருதிகளையும் தேடிக் கொண்டிருப்பவர்கள். மாலையானதும் “Penners’ என ஜேர்மன் மொழியில் அழைக்கப்படும் இவ்வகை குடிகாரர்களை சமூக சேவை இலாகா தங்கள் வண்டியில் கூட்டிச் சென்று இவர்களுக்காகவே அரசால் நிர்வகிக்கப்படும் விடுதியில் விடுவார்கள்.
விடிந்ததும், மீண்டும் ஒருநாள் வழக்கம்போல இவர்கள் வீதிக்கே வந்துவிடுவார்கள்.
ஜேர்மன் வீதி அருகில் உள்ள மின் கம்பத்தில் சாய்ந்தபடி என்னை பரிதாபமாகப் பார்த்தான். மதுவுக்காக அவன் யாசிப்பது புரிந்தது. போதை முறிவதற்கிடையில் அவனுக்கு மது வேண்டும்.
அருகில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் செறிவு குறைந்த மினிக்குவாட்டர் போத்தல் ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். ஒரே மடக்கில் போத்தலை காலி செய்தவன் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு தன் கதையைச் சொன்னான்.
ஜேம்ஸ் மிகுந்த புத்திசாலி. எதையும் வினாடியில் கிரகித்துக் கொள்வான். ஆனால் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் எனச் சாதிப்பவன். யாருடைய பேச்சையும் கேட்க மாட்டான். மற்றவர்கள் கருத்துச் சொல்வதையும் அனுமதிக்க மாட்டான். இதனால் பேராசிரியருடன் முரண்பட்டுக் கொண்டான். பல்கலைக் கழகத்திலும் பல எதிரிகளைச் சம்பாதித்துக் கொண்டான்.
விளைவு - பாதியில் பட்டப்பின் படிப்பை முறித்துக்கொண்டதுடன், எந்த வேலையிலும் அவனால் நிலைத்து நிற்க முடியவில்லை. படிப்பில் மட்டுமல்லாமல் ஜேம்ஸ் வாழ்விலும் ஒரு வகைப் புரட்சியை ஏற்படுத்தியவன். பள்ளிப்பருவத்திலேயே இவன் ஒருத்தியை காதலித்து, ஒரு குழந்தைக்கும் தந்தையாகிவிட்டான். இருப்பினும் விடலைப் பருவத்து கனவுக் காதலின் அவசர விளைவல்ல அது என்பதிலே உறுதியாக இருந்து, அவளையும் குழந்தையையும் ஏற்றுக் கொண்டான்.
நாளாக, நாளாக அவனது புரட்சிகர சிந்தனைகள் 'அல்ககோலில்” கரைந்து போயின. ஜேர்மன் நாட்டின் வரைவிலக்கணத்தின்படி அவன் இப்பொழுது “வீடு வாசலற்ற தெருப் பொறுக்கி’.!
இவனது பிடிவாதமும் இம்சையும் தாங்கமுடியாது மனைவியும் பிள்ளைகளும் இவனைவிட்டு பிரிந்துவிட்டனர். இவன் நித்திய குடிகாரனாக இப்போது நடைபாதையில் வாழ்கின்றான்.
“எனக்குத்தான் எல்லாம் தெரியும், நான் சொல்வதைத் தான்

මුද්ඛuIbé 45 மற்றவர்கள் கேட்கவேண்டும்” என்ற எண்ணங் கொண்டவர்களுக்கு ஜேம்ஸின் வாழ்க்கை ஒரு பாடமாகும். எங்களில் எத்தனைபேர் மற்றவர்களை முழுமையாக பேச விடுகிறோம்? மற்றவர் தன் கருத்தை சொல்லி முடிக்க முன்பே இடையில் மறித்து, தன் கட்சியை உரத்த குரலிலே கூறி, தான் சொல்வதே சரியெனச் சாதிக்க முயல்கிறோம்.
ஒரே நேரத்தில் எல்லோரும் பேசுவதால் கூச்சலும் குழப்பமும்தான் மிஞ்சுகிறது. m மற்றவர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஜேம்ஸ் என்றைக்கும் அனுமதித்தது கிடையாது. பல்கலைக்கழக கலந்துரையாடலில் அவன் என்றைக்குமே மற்றவர்களைப் பேச அனுமதித்ததும் கிடையாது. இத்தகைய ராங்கியினால் அவனால் புதிதாக விஷயங்களைக் கற்றுக் கொள்ளமுடியவில்லை.
தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்ற ரீதியில் பேசுவதால் சண்டைதான் எழும். இதுதான் ஜேம்ஸ் தன் மனைவி பிள்ளைகளைப் பிரிவதற்கு முக்கிய காரணமாய் இருந்தது. மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து புன்சிரிப்போடு அவர் மனம் நோகாதபடி மெதுவாகக் கருத்துக்கள் சொல்லத் தெரியாததினால், ஜேம்ஸ் வீழ்ந்துவிட்டான்.!
எங்களுடைய கருத்துக்களை விட்டுக் கொடுக்கத் தேவையில்லை. ஆனால், எதிரியின் கருத்துக்களுக்குச் செவிமடுக்கும் பண்பு, அறிவு நாகரிகத்திற்குத் தேவை. அதற்கு "ஜனநாயகம்" "புண்ணாக்கு” “புடலங்காய்” எனத் தோதான வார்த்தைகளைத் தேடி அலையத் தேவையில்லை. ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்’ என்று வள்ளுவர் என்றோ தமது அறிவுரை வழங்கிவிட்டார்.
ஜேர்மனியனாகப் பிறந்த ஜேம்ஸ், ஒரு கார்ல் மார்க்ஸாகவோ, ஜன்ஸ்டீனாகவோ, பிராய்டாகவோ தனது அறிவு மேதைமையை நிலை நாட்டியிருக்கக்கூடும். அதில் எனக்குச் சந்தேகமில்லை.
"நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்” என்பதை நிலை நாட்டுவதிலே வீறுகொண்டு வாழ்ந்த ஜேம்ஸ்,இன்று தன் அறிவு அனைத்தையும் ஒரு மினிகுவாட்டர் மதுப்போத்தலுக்குள் அடைத்து வாழ்கின்றான்.
துக்கம் என் தொன்டையை அடைத்தது. அவனுக்கு இன்னொரு மினிகுவாட்டர் வாங்கிக் கொடுத்துவிட்டு, கனத்த மனத்துடன் நடக்கத் துவங்கினேன். ()
வWழ்த்துகின்றேIம்
இந்த ஆண்டிற்கான ‘தேச நேத்ரா (தேசத்தின் கண்) எனும் அதியுயர் விருது பேராசிரியர் சி. தில்லைநாதன் அவர்களுக்கும் சாஹித்திய இரத்தினம்’ எனும் எழுத்தாளருக்கான அரச அதியுயர் விருது கவிஞர் கலாநிதி இ. முருகையன் அவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன என்ற செய்தி மகிழ்ச்சியைத் தருகின்றது. இவ்விருவரும் பல்லாண்டு ஆரோக்கியத்துடன் வாழ்ந்து தமிழுக்குப் பணிபுரிய வேண்டும் என ஜீவநதி இதயபூர்வமாக வாழ்த்துகிறது.

Page 26
ஜீவநதி 46
திமிலைத்துமிலன் எண்றொரு கவிஞன்
- அன்புமணி -
1. அற்புதப் பிறவி
வெறுங்கல் ஒன்று சிற்பி ஒருவரின் கையில் சிற்பமாகிறது. மண், சிப்பி ஒன்றின் வயிற்றில் விழுந்து அற்புத முத்தாகிறது. வெறும் மொழி கவிஞன் ஒருவன் உள்ளத்தில் கவிதையாகிறது. அற்புதமான உள்ளத்தில் அவை பிறக்கின்றன.
உள்ளம் நல்லதானால் மண்ணும் பொன்னாகும். 'எண்ணிய முடிதல் வேண்டும் நல்லதே எண்ண வேண்டும்’ என்று பாரதி பாடினான். கவியுள்ளமி, அப்படிப்பட்டது. அது ஆத்மீகத்துக்கும் நெருங்கிய ஒருபடியில் உள்ளது. அதனால்தான் கவிதைகள் அற்புதமாய் அமைகின்றன.
உண்மையில் அழகிய எண்ணங்களே கவிதைகளாகின்றன. சிலகவிதைகளைப் படிக்கும் போது நாம் மெய்சிலிர்த்துப் போகிறோம். 'வெறும் வார்த்தைகளைக் கொண்டே எத்தகைய பொன்னாபரணங்களைச் செய்கிறார்கள் இந்தக் கவிஞர்களி’ என்று வியப்படைகிறோம்.
அதனால்தான் ஆயிரத்தில் ஒருவர்தான் கவிஞனாகப் பிறக்க முடியும் என்கிறார்கள். எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுள் ஒரு சிலரே கவிஞர்களாகப் பரிண மிக்கிறார்கள். மட்டக்களப்பு மண் ஈன்ற கவிஞர்களுள் “திமிலைத்துமிலன்” அத்தகைய ஒரு கவிஞராகத் திகழ்கிறார். அவருடைய வாழ்க்கையே ஒரு கவிதை. ஆம், அவர் கவிதை எழுதுவதுடன் நின்றுவிடவில்லை. கவிதை யாகவும் வாழ்கிறார். எழுத்துக்கும் வாழ்வுக்கும் முரண்பாடு கற்பிக்காத ஒரு அற்புதப் பிறவி அவர். 2. கவிதைக் காட்சிகள்
பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் திமிலைத்துமிலனின் முதல்நூலான 'நீரரமகளிர்’ என்ற நூலுக்கு வழங்கிய வாழ்த்துப்பாவில் திமிலைத் துமிலனின் கவிதைக் காட்சியைச் சுட்டும் அற்புத வார்த்தைகளைக் காணலாம். இது திமிலைத்துமிலன் கவிதைகளின் சிறப்பம்சம். அவள் கவிதை மூலம் படம் பிடிக்கும் காட்சிகள் அற்புத ஒவியங்களாக அமைந்துவிடுகின்றன. 'நீரர மகளிர்” குறுங்காவியத்திலேயே நிறைய உதாரணங்களைக் காணலாம்.
'நீலவான் திரைவிலக்கி முறுவல் பூத்து
நிலவென்ற ஒளிமுகத்தை நீட்டி நீந்தும் கோலமுறும் இளவேனிற் குமரி தென்றற்
குமரனோடு விளையாடும் குளுந்த யாமம் பாலளித்த வட்டில்களைச் சிதறி நன்னிப்
பரப்பெல்லாம் வீசியதால் பளபளத்த சீலமுறும் வாவியிடைத் தோணியொன்றைச்
செலுத்தி வந்தாள் என்னைத்தானா தேடிவந்தாள்?"
t

ஜீவநதி 47
பாடி முடிந்தவுடன் மட்டக்களப்பு பாலத்தில் நின்று பார்க்கும் போது பெளர்ணமி நிலவு வாவி அலைகளில் பிரதிபலிப்பது, எண்ணற்ற பொன்வட்டில்களைச் சிதறவிட்டிருக்கும் காட்சி அப்படியே மனக்கண்முன் வருகிறதல்லவா? (நீரர மகளிர் 1963ல் வெளிவந்தது)
3. அழகு தமிழ்
“கொய்யாக்கனிகள் கொழுந்திந் தமிழ்மொழிக்கோர் மெய்யாய் விளங்கும் விருந்து" என்பது திமிலைத்துமிலனின் “கொய்யாக்கனிகள்” என்ற நூலுக்கு வித்துவான் க.வேந்தனார் அளித்த மதிப்புரை. இந்நூல் முழுதும் திமிலையின் அழகுதமிழ்க் கவிதைகளால் நிறைந்துள்ளதை நாம் பார்க்கிறோம். உதாரணத்திற்கு ஒரு கவிதை.
"கார்த்திகைப்பூக் கரத்திருந்த புத்தகத்தைக்
கட்டவிழ்ந்து விம்மியெழும் கமல மார்பில் சேர்த்தனைத்த கொடியாளைச் "செல்வதெங்கே?
செங்குவளை இதழ்விரித்துச் செப்பு" என்று வார்த்தை சொல வில்லையவன். மனமோ "தந்தை
வயலுக்குச் செல்வ" ளென வரம்பு கட்டி ஆர்த்தெழுந்த அவாவடக்க அவன் நடந்தான்
அங்கே யோர் முள்வேலி அடர்ந்தகாடு” தீந்தமிழ்’ என்ற வர்ணனை இக்கவிதைக்கு அச்சொட்டாகப் பொருந்துவதை நாம் பார்க்கிறோம். “கார்த்திகைப்பூக்கரம், கமலமார்பு, சேர்த்தணைத்த கொடியாள, வயலுக்குச் செல்வனென வரம்புகட்டி ஆர்த்தெழுந்த அவா" முதலிய வார்த்தைப் பிரயோகங்கள் அழகு தமிழாக நம் உள்ளத்தை கொள்ளை கொண்டு இன்பத் தேன் வந்து காதில் பாயச் செய்கின்றன. இந்நூலில் உள்ள 163 கவிதைகளும் இத்தகைய வைரமணிகளாக ஜொலிக்கின்றன. (கொய்யாக்கனிகள் - 1964)
4. கருத்தாழம்
திமிலைத் துமிலனின் 'நெஞ்சம் மலராதோ’ என்ற கவிதை நூல் 'விண்ணப்பத்து என்ற பழைய செய்யுள் வடிவில் அமைந்தது. வேண்டுதலும் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதாக பத்துச் செய்யுள்களைக் கொண்ட அந்நூலில் இருந்து ஒரு கவிதை.
"பூத்த வெண்ணிலவு வானை நீக்கி அடி இன்னும் தூக்கவில்லை - புவிக் கூத்து மேடையிடை ஏற்று வெள்ளி விளக்
கின்னும் நூக்கவில்லை - கை கோத்த புல்லரிப்பு நெஞ்சை மீட்டுதது
இன்னும் போகவில்லை - அவர் பார்த்த பார்வை விழியேற்று நாணமது
இன்னும் சாகவில்லை’ ஆண்டாள் பாசுரங்களில் இழையோடும் காதல் சுவையை விஞ்சும் அளவு கருத்தாழம் உள்ளதாக இப்பாடல் அமைந்திருப்பதைக் காணலாம்.

Page 27
ஜீவநதி 48 பேராதனைப் பல்கலைக் கழக முருகன் மேல் பாடப்பட்ட கவிதைகளைக் கொண்டது. இவை அத்தனையும் பக்திச்சுவை சொட்டும் புனிதக்கவிதைகள். (நெஞ்சம் மலராதோ-1968)
5. சொல்நயம், பொருள்நயம் உவமைச் சிறப்பு
திமிலைத்துமிலன் கவிதைகளில் தனித்துவமான ஒரு சிறப்பம்சமி, அவற்றில் இழையோடும் சொல்நயம், பொருள்நயம், உவமைச்சிறப்பு முதலியனவாகும். துமிலனின் எந்தக் கவிதையை எடுத்துக் கொண்டாலும் சொற்கள் வந்து விழும் அழகு நவில்தோறும் நயம்பயப்பதாகும். இப்படி அமையும்போது அவை கம்பன் கவிபோலும், இளங்கோவின் கவிபோலும் நோக்காமல, சில குதர்க்கவாதிகள் இவற்றைக் குறைசொல்வதுமுண்டு. ஆனால் திமிலையின் கவிதைகள் சுயமான தனித்துவத்துடன் கம்பீரமாக எழுந்து நிற்பதை, அவற்றை ஆழ்ந்து நோக்கும் எவரும் கண்டு கொள்ளலாம்.
(. கற்பனை வளம்
'நீரர மகளிர்” கவிதைநூல் சுவாமி விபுலானந்தர் கற்பனையில் கண்ட நீரரமகளிரை வேறொரு கோணத்தில் கற்பனையுருவாக்கிக் காட்டுவது. இவ்வாறே “எல்லம் எங்கள் தாயகம்” என்ற கவிதை நூல் ஈழத்தின் பூர்வீகப் பெயர்களுள் ஒன்றான "எல்லம்" என்ற பெயரை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களின் பாரம்பரிய சிறப்புக்களைக் கற்பனையாகக் கூறுவது, முதற்சங்க காலத்துக் 'கபடாபுரம்' என்ற தமிழர் நகரை நினைவூட்டும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
“அழகு முல்லை” என்றொரு கவிதை நூல் குழந்தைகளுக்கு வேண்டியதான கவிதைகளைக் கொண்டது. நான்கு வயதில் மறைந்து விட்ட அருமைத் தங்கை முல்லை நினைவாகவோ என்னவோ இப்பெயர் கவிஞனின் நூலில் அடிக்கடி இடம் பெறுகிறது. 'நீரர மகளிர்”, “கொய்யாக் கனிகள்” போன்ற நூல்களிலும் இப்பெயர் இடம் பெறுகிறது.
புதிய தலைமுறையினர் சிலர் புதுக்கவிதைகளின் வரவின்பின் மரபுக்கவிதையை ஏளனக்கண் கொண்டு நோக்குவதைச்சில வேளைகள் பார்க்கிறேன். புதுக்கவிதை ஒப்பனை இல்லாத சிருஷ்டியாக இருக்கலாம். அதில் ஒருவித அழகும் இருக்கலாம். ஆனால் சர்வலங்கார பூஜிதையான ஒரு பெண்ணின் அழகு அதைவிட ஆழமானதல்லவா? அலங்காரம் இல்லாத ஒரு குடும்பப் பெண்ணிற்கும் சர்வலங்காரமுள்ள ஒரு நாட்டியப் பெண்ணுக்கும் இடையேயுள்ள வேறுபாடு புதுக்கவிதைக்கும் மரபுக்கவிதைக்குமிடையே உள்ளது. இது வேறு எந்தக்கவிதைகளுக்குப் பொருந்தாவிட்டாலும் திமிலையின் கவிகளுக்கு மிக நேர்த்தியாகப் பொருந்துகிறது. துமிலனின் எக்கவிதையை எடுத்துக் கொண்டாலும் இந்த அழகை நாம் தரிசிக்கலாம்.
7. திமிலையின் ஆளுமை
திமிலைத் துமிலனை நேரில் பார்ப்பவர்கள் இந்த மனிதனுள்ளே
இத்தனையாற்றலா? என்று வியந்து போவார்கள். கவித்துறையில் பல
சாதனைகளை புரிந்தவர்; பல பரிசுகளைப் பெற்றவர்; பல கெளரவங்களைப்

ஜீவநதி 49
பெற்றவர்; மணிவிழாக் கலன் வர். அப்படியிருந்தும் அவற்றைப் பற்றி சிறிதும் அலட்டிக் கொள்வதில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார். சித்தம் போக்கு சிவன் Iேக்கு எனினும் ஒரு தகவலுக்காக அவர் பற்றிய
சில விபரங்களை மிகச் சுருக்கமாக இங்கு கூறிவைக்கிறேன்.
இதுவரைக்கும் ஆயிரத்திற்கு மேற்பட் கவிதைகளை யாத்துள்ளார். நூற்றுக்கு மேற்பட் கட்டுரைகளை எழுதியுள்ளார். அவரது ஆறு நூல்கள் இதுவரை அச்சில் வெளிவந்துள்ளன. (நீரர மகளிர், கொய்யாக்கனிகள், நெஞ்சம் மலராதோ, அழகு முல்லை, எல்லம் எங்கள் தாயகம், மஞ்சு நீ
-மழைமுகில் அல்ல) நாவல் 3, நாடகங்கள் - வானொலியில் 5 நாடகங்கள் மேடையேறியுள்ளன. (முல்லைக்குமரி, அழைத்தது நீதானா?, ஈட்டிப்பஸ், மலர்விழி, விதியின் பிழை) பெற்ற பரிசில்கள் பல - "சீதாதந்த செல்வம்” (சிறுகதை)- கதம்பம் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு. "ஈட்டிப்பஸ்” (கலைக்கழக மேடைநாடகப் போட்டியில் முதற்பரிசு) "வழிதவறிய வண்டு” (கவிதை) சென்னை குழந்தை எழுத்தாளர் சங்கம் நடாத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு.
இப்பரிசுகள் அவரது பன்முகப்பட்ட எழுத்தாற்றலுக்கு உரை கல்லாகின்றன. சிறுகதை, நாடகம், மேடைநாடகம், கவிதை அனைத்திலும் இப்பரிசுகள் அவருக்கு ஒரு அங்கீகாரத்தை அளிக்கின்றன.
பெற்ற கெளரவங்களும் பட்டங்களும் திமிலைத்துமிலனுக்குப் பலவுள. மட்/ கலாசாரப் பேரவையின் கவிமணிப்பட்டம், மட்/ இந்து இளைஞர் பேரவையின் ‘கவியரசுப்பட்டம், ஆசிரியர் கலாசாலையின் ‘கவிமணி வெளியீட்டகம்'.
இந்தக் கெளரவங்களும் பட்டங்களும் திமிலைத்துமிலனின் கவிதாவிலாசத்திற்கு ஒரு உரைகல் என்று கொள்ள முடியாது. அவரது கவித்துவம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது. அதனால் தானோ என்னவோ அவர் இந்தப் பட்டங்கள் எதையும் பயன்படுத்துவதில்லை. மL/ ஆசிரியர் கலாசாலையின் பிரதி அதிபர், பயிற்றப்பட்ட ஆசிரியர், பி.ஏ.பட்டதாரி, பட்டப்பின் கல்வி டிப்ளோமா பெற்றவர். மணிவிழா கண்டவர். அப்படியிருந்தும் அவர் கடைப்பிடிக்கும் அமைதி அலாதியானது. ‘அடக்கம் அமரருள் உய்க்கும்' என்ற குறளடிக்கு உதாரணம் இவரே. D
காதல் பற்றி.
வலி பற்றித் தெரியாது காதல் நெருப்பில்
உனக்கு. மட்டும் தான்! சின்னக்காயங்கள் O தீண்டிய வலி போலில்லை இது 蠶 காதலின் வலி என்றால் உணர்ந்து பார் தெரியும் காதல் தோல்வி காயங்கள் ஆறமுன்னமே காதலின் சாபமா? புதுப் புதுக் காயங்கள் - ச. ஜனனி
தோன்றுவது சங்கத்தானை

Page 28
ஜீவநதி 50
பேசும் இதயங்கள்
1) யாழ்ப்பாணத்தில் எல்லாச் செயற்பாடுகளும் பெருமளவில் முடங்கியிருக்கும் சூழலில், மிகுந்த உற்சாகத்தோடு செயற்பட்டு தொடராகச் சஞ்சிகையை வெளியிட்டு வரும் உங்கள் துணிவுக்கும், முயற்சிக்கும் எனது பாராட்டுகள்.
இயல்வாணன்
சுன்னாகம். 2)ஜிவநதியின் இரண்டாவது இதழ் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. என் பாராட்டுக்கள்
அன்புமணி இரா.நாகலிங்கம்
(DLLá566TÜL) 3) வணக்கம். ஜீவநதியினை வாசித்தேன். பார்த்ததுமே மிகவும் மகிழ்வு தந்தது. இதழை அற்புதமாக வெளிக்கொணர்ந்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள். கனதியான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஜீவநதி பொங்கிப் பிரவகிக்க வாழ்த்துக்கள். புதிய ஊற்றுகளிலிருந்து பிரவகிக்கும் நீரும் நிறையவே அதில் கலக்கவேண்டும். ஒரு புதிய எழுத்தாளர் பரம்பரையை உருவாக்கும் பணியில் பங்களிப்புச் செய்வீர்களென எதிர்பார்க்கிறேன்.
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
கோப்பாய். 4) வடக்கே பாயும் ஜீவநதி
பசுமை செழுமை தந்திடவே வெடிக்கும் நிலத்தில் முளைவிட்டே அறிவின் நாற்றாய் தளைக்கட்டும். - அல்வாய் சி.சிவநேசன்.
வநதி புரட்டாதி - ஐப்பசி இதழில் வெளிவந்த யாழ்ப்பாலை என்னும் லைப்பிலான கவிதை தாயகம் சஞ்சிகையிலும் வெளிவந்துள்ளது. இதனால் ாசகர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியத்திற்காக வேண்டி நாங்கள் மனம் ருந்துகின்றோம். இது எமது சக்திக்கு அப்பாற்பட்டது.
-ஆசிரியர்
"ஜீவநதி" சந்தா விபரம் தனிப்பிரதி - 50/= ஆண்டுச்சந்தா - 350/= ஓராண்டுக்கு உரிய சந்தா செலுத்த விரும்புவோர், காசோலை மூலமாகவோ, மணியோடர் மூலமாகவோ அனுப்பலாம். மணியோடரை அல்வாய் தபால் நிலையத்தில் மாற்றக்கூடியதாக அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய பெயர்\ முகவரி . K. Bharancetharan
Kalaiaham
Alvai North west kN
Alvai. 6) "Jaś episod srbg5T U6OOTLb G3Fpgög5 6(5b86hJITÍ - K. Bharaneetharan & S. Vimalan
HNB – Nelliady. சேமிப்பு கணக்கு இலக்கம் -118-00.02-0945701-1 என்ற வைப்பில் வைப்பு செய்து வங்கி ரசீதை எமக்கு மேற்குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வெளிநாடு ஓராண்டுக்கு சந்தா $20 (us)

Ur O o Ογκο o o O முச்சக் லுண்டி, மோட்டார் சைக்கிள் p af. நங்களை நியாய விலையில் U
"م O a m2& *\,
** 、、、、ふぶ* ※*ー* sina & Y kasa:''' 6. ်ဘွဲ့နွဲဒ္ဓိတ္တိ§ ಜಿನ್ದೆ a § of $3 *?*
" KM) 2xamwa Ya. 37 ۔۔۔۔۔۔۔a: .
ఫ్లభభ********్ళ 4 ۱۸۰ : ورا... *SSS:23,832 9راN:" : : : . .
- - - ՞ N: r
o U
【
உங்கள் வீட்டிற்குத் தேவையான சகல விதமான பலசரக்குச் சாமான்களையும் மலிவுவிலையில் பெற்றுக்கொள்ளவும் தரமான பொருட்களை பெற்றுக் கொள்ளவும்
நாடவேண்டிய ஒரே இடம் ஆனந்தா ஸ்ரோர்ளல்
பிரதானவீதி நெல்லியடி.

Page 29
§ඛuIbé 52
a'ഞ്ഞ_6ബൺ - ിത്രങ്ങJG U.6ആംaപ്രabം
எமது சங்கச் சேவைகள் :
நுகர்ச்சிச் சேவை தரமான நூலக சேவை கிராமிய வங்கிச் சேவை புலமைப்பரிசில் வழங்கல்
வாடகைச் சேவைகள் தரமான திரைப்படக்காட்சிக்கூடாக புதிய ரசனையை ஏற்படுத்துதல் எரிபொருள் சேவை விவசாய சேவை நூல்வெளியீடும் விமர்சனங்களும் கூட்டுறவுக் கலாசாரப் பெருமன்றம் “சங்கம் செய்தி” மாதாந்த வெளியீடு.
தொலைபேசி இலக்கம் :- 0212283283 தொலைநகல் 02:12263283
0212264474
0212264,725 கட்டைவேலி நெல்லியடி ப.நோ.கூ. சங்கம் கரவெட்டி.
/
WG)UNG- M EN 9S G-H RS /AN ASSOC-AON PON PEORO
COMPUTER STUDIES
WIRING & PLUMBING COURSE
TSUNAMY HOUSING. EDUCATIONAL SCHOLARSHIP
BeS7 07SAeS FOR 7ee/AWA7Ay
h / இச்சஞ்சிகை அல்வாய் கலையகம் வெளியீட்டு உரிமையாளர் கலாநிதி த.கலாமணி அவர்களால் சதாபொன்ஸ் நிறுவனத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
 

-----
‘, *
A
,“.“:

Page 30
ENVEDE EST S
நவநாகரீக காலன பாட்டா, DS1 ரன சஞ்சி ஆகிய உள்ளூ பெற்றுக் கெ
ஒரே
எவரெஸ்
விஆறுஷ0 00ல
(ட I TITT_FTEFj]El[ اللہ
அன்பளிப்பு பொருட்
பொருட்கள் மற்றும் Ba
வகைகள், உள்ளூர்
என்பவற்றை மொத்தமா
பெற்றுக்கொள்ள நாட WITH"UygCA
கே.கே.எஸ் வீ T.P. - 7
 
 

CODED PAAAACE
ரிகளின் சாம்ராஜ்யம் ஈர்பா மற்றும் IMT ருள் உற்பத்திகளையும் ார்ாக்கடைய
இடம் ட் ஆ பலவில்
வெளிப்புறம்
ਸੰ FETATIG
jša 8. ooČLO
பகரணங்கள்,
டகள், அழகுசாதனப் a, DSI போன்ற பாதணி உற்பத்தி பாதணிகள் கவும், சில்லறையாகவும் வேன்ை டிய ஒரே இடம்.
(EANCY & (TA
தி மல்லாகம்
7) - 1

Page 31

oru L-53. Pల్g ாளிகை
ஆடைத் ... N,
ܬ 1 7 ܬܼ.
. ܢ
பத்திற் கும்
Nelliady 53233 Karaveddy