கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2008.07-08

Page 1

ய இருதிங்கள் ஏடு
* - (v R
ീ h 50/-

Page 2
門 I Beauty Fa
* Üluluq s SKONNA
அழகுசாதனம்
I
உபகரணங்கள்,
பொருட்கள், பேபி அனைத்துப் பொருட்க பெற்றுக் கொள்ள ந
அவர்களால் சதாபோன்ஸ் நிறுவன
 

Ancy House |
酮
'  ́ இருந்தர்
பொருட்கள்
நூதன பாடசாலை
வீட்டுப்பாவனைப் செற்வகை போன்ற ளையும் ஒரே இடத்தில் நாடவேண்டிய இடம்.
লর্ড ஹவுஸ்
*
(یہ بھی
ଶ୍ରେf
(I7LL Vr7a577/7°
Offidavia புைோறி
三l巳『
LLB g_fie:LLITTT கலாநிதி |LTL த்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

Page 3
|B5: B. l.
s:
இச்சஞ்சிகை அல்வாய் கலையகம் வெளியிட்டு உரிமையாான் கலாநிதி த.கலாமணி அவர்களால் சதாடொன்ஸ் நிறுவனத்தில் ஆச்சிட்டு வெளியிடப்பட்டது.
 
 
 
 
 
 
 
 

1D
: நதியினுள்ளே.
நதி 02 கிளை - 01 ; புருஷோத்தமஞானிZ06
R
த.ஜெயசீலன் Z07 R R
Spg5D efflufrasoir :
சின்னராஜா விமலன் கலாமணி பரணிதரன்
O சா. ஹரிகரன் 21
Ար சோதிநாதன் 22 Fl III. 6geguLIUTFzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzza 33
R கோகுலராகவன் Z 88 556 hurrays é9dffluñir:
துரைராஜா இராஜவேல் ecksureresfir sug:
திரு.தெனியான் 8 செங்கோடன் 03 திருகுப்பிளானி ஐ.சண்முகலிங்கம் சபா.ஜெயராசாண72 08 திரு.கி.நடராஜா 3; 63536pTGAI GIMDØMpTGOTTzzzzzzzzzzzzzz 14 தொடர்புகளுக்கு : : நீர்வை மேருகிளிண 19 கலை அகமீ செ. கிருஷ்ணராஜா Z 27 சாமனந்தறைஆலgப்பிள்ளையார்வீதி : செ.யோகராசாண 34 3 影 அம்மன்கிளி முருகதாஸ்Z 29 (9656ff). 8 85. 356ơITIDGoof (zzzzzzzzzzzzzzza 38 வதாலைபேசி: 0775991949 : செல்வ9ம்பிகைZ 47
0776991 O15 8 Fax : 021226.3206 (சிறுகதைகள் E.mail: jeevanathy (Gabyahoo.com * பிரமிளா பிரதீபன் 11.
እN சி.கதிர்காமநாதன்Z 23 8 ந. குகபரன்
பதிப்புரிமை: கலை அகம் வெளியீடு 44
வாங்கித் தொடர்புகள்:
K. Bharaneetharan & S.Vimalan HNB- Nelliady Branch
A/CNo. 118-00-02-0945701-1
இச்சஞ்சிகையிலி இடமீபெறும் அனைத்து as මෙoණිණි(r நிகழவுகள 46 ஆக்கங்களின் கருத்துக்களுக்கும் அவற்றை δύο χ9έ5ίαή எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். நு தி &5 பிரசுரத்திறீக ஏற்றுக் கொளிளப்படுமி பேசும் இதயங்கள் 36 படைப்புகளைச் செமீமைப்படுத்த ஆசிரியருக்கு
8වffiගlp වගන්(8.
5I
ஆசிரியர்கள்

Page 4
திேகிேள9-02)
சீவாததி
(கலை இலக்கிய இருதிங்கள் ஏடு)
அறிஞர் தம் இதய ஒடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்.!
-பாரதிதாசன்
ஜீவநதியின் பயணத்தில்.
ஜீவநதியின் பயணத்தில் இரண்டாம் ஆண்டுக்கான முதலாவது இதழ் இது. முதலாம் ஆண்டு நிறைவு மலரை புதிய வடிவமைப்பில், கனதியான விடயங்களுடனும் அதிகமான பக்கங்களுடனும் வெளிக்கொணர்ந்தபோது, இதில் திருப்தியுற்று எம்மை உற்சாகப்படுத்தியோர் பலர். ஆயினும், ஜீவநதியின் வளர்ச்சியைப் பொறுக்காத ஒரு சிலர் ‘எங்கே என்ன எழுதுவது? என்று தெரியாமல் ஜீவநதி சஞ்சிகை வெளியீட்டை சிறுபிள்ளை வேளாண்மையாக இனங்காட்ட முயற்சிக்கின்றனர். இச்செய்கை இவர்களின் வக்கிரபுத்தியையும் முதிர்ச்சியின்மையையுமே காட்டுகின்றது எனக்கொண்டு இவர்களுக்கான எதிர் வினைகளுக்காக பக்கங்களை வீணாக்குவதை ஜீவநதி தவிர்த்துக்கொள்கின்றது.
“ஆயிரம் மைல் நீளமான நீண்ட பயணமும் நாம் எடுத்து வைக்கும் முதற் காலடியுடனேயே ஆரம்பிக்கின்றது” என்பது சீனப்பழமொழி, ஜீவநதி தனது முதற் காலடியை மிகவும் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் எடுத்து வைத்துள்ளது. ஜீவநதியின் பயணத்தில் இதுவரை பலர் எம்மோடு இணைந்துள்ள்னர், இன்னும் பலர் இணைவர். கால ஓட்டத்துடன் ஜீவநதி தன்னைச் செழுமைப்படுத்திக்கொண்டு மேலும் மெருகுபெறும்.
ஜீவநதியின் இலக்கியப் பயணத்தில் புதிய இளந் தலைமுறையொன்றை அறிமுகம் செய்து வைத்து வீரியம் மிக்க இளம் படைப்பாளிகளைத் தோற்றுவிக்க வேண்டும் என்பதும் ஜீவநதியின் நோக்கங்களுள் ஒன்றாகும். கடந்த ஒரு வருடத்திலேயே இவ்வாறான ஒரு சிலரை ஜிவநதி அறிமுகஞ் செய்துள்ளது. ஏற்கெனவே எழுத்துத்துறையில் அறிமுகமாகியிருந்த சிலரின் படைப்புகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்துள்ளது. இலக்கிய உலகில் தம்மை நிலைநிறுத்திக் கொண்ட பலர் ஜீவநதிக்கென தமது படைப்புகளை அனுப்பிவருகின்றனர். புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள படைப்பாளிகளும் எமக்கு நேசக்கரம் நீட்டுகின்றனர். இப்பின்னணியின் ஊக்கம் தரும் நம்பிக்கையுடன் ஜீவநதி இரண்டாம் ஆண்டினுள் பிரவேசிக்கின்றது. :
ஆசிரியர்கள்.
 
 
 

ஜீவநதி 3. ക്രയ്യ@ക്ട് കഠിധർ
கட்ைடுத்தல்ஜன் சமுதயைத்தின் இருண்ைடoகுதி
- செங்கோடன்
பல்வேறுவகைப்பட்ட ஆதாரங்களை வரலாற்று மூலகங்களாகக் கொண்டு மனிதவரலாறு இன்று கண்டறியப்படுகின்றது. ஆதாரமாக விளங்கும் மூலகங்களுள் பிரதானமான ஒன்றாகக் கொள்ளப்பெறுவது இலக்கியம். ஒர் இலக்கியமானது அது எழுந்த சமுதாயத்தினைப் பிரதிபலிக்கும் காலத்தின் கண்ணாடி என்பர். ஒரு சமுதாயத்தினை முழுமையாகப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இலக்கியம் அமையாதெனினும் சமுதாயத்தைச் சித்திரிக்கும் சித்திரமாக இலக்கியம் சிறப்பாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க இயலாது. ஒரு சமுதாயமக்கள் தமது வரலாற்றினை நடுநிலை நின்று எழுத்துருவில் ஆவணப்படுத்தி வைத்திருப்பார் களேயானால் அதனை விடவும் மேலான வேறு வரலாறு இல்லையெனலாம். அவ்வாறான பதிவு வரலாற்று ஆதாரமாகாது. அதுவே. உண்மைத் தன்மை சந்தேகிக்கப்படாத இடத்து அதனைவிடவும் சிறந்தவரலாற்றினைக் கண்டட்ை இயலாது. ஆனால், ஒரு நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட சம்பவங்களுக்கே முறையான ஆதாரங்களைப் பெற்றுக்கொள்வது இன்று நடைமுறைச்சாத்தியமற்ற காரியமாகவே காணப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் இலக்கியங்கள் வரலாற்றின் பிரதான ஆதாரங்களாகக் கொள்ளத்தகுந்தவை எனலாம்.
தமிழ்மக்களின் வரலாற்றினை எடுத்தியம்பும் முதன்மையான ஆதாரமாக விளங்குவது பண்டைய இலக்கியங்களே ஆகும். சங்க இலக்கியங்களும் அவற்றுக்குப் பிற்பட்ட காலத்து இலக்கியங்களும் தமிழ் மக்களின் வாழ்வுநிலையைப் பதிவு செய்துள்ளதன் மூலம் வரலாற்றுத் தடங்கள் பலவற்றைத் தம்முட் கொண்டுள்ளன. அவற்றுள் சிலப்பதிகாரமும் ஒன்று. சேரநாட்டு இளவரசராக இருந்து பின்னர் துறவு வாழ்வினை மேற்கொண்ட இளங்கோ அடிகளால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஆக்கப்பெற்றது சிலப்பதிகாரம் என்னும் காப்பியம். தமிழுக்கு இளங்கோ அடிகளால் வழங்கப்பெற்ற நன்கொடை சிலப்பதிகாரம் என்று அறிஞர்கள் குறிப்பிடுவார்கள்.
ஐம்பெருங்காப்பியங்களில் முதற்காப்பியமாகவும் முதன்மையான காப்பியமாகவும் விளங்குவது சிலப்பதிகாரம் மகாபாரதம், இராமாயணம் போன்று வடமொழிவழியாகத் தமிழுக்கு வந்த ஒருகாப்பியமன்று. தமிழில் எழுந்த முதற் காப்பியம் என்னும் பெருமையும் சிலப்பதிகாரத்துக்குண்டு. அது தோற்றம் பெற்றுவந்த வழியினால் மாத்திரமன்றி அதனனுடைய இலக்கியச் சிறப்பு விதந்துபோற்றுதற்குரிய நியாயமாக அமைகின்றது. இதனாற்போலும் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்" என மகாகவிபாரதியினால் உயர்வாகப் போற்றப் பெறுகின்றது. ம.பொ. சிவஞானகிராமணியார் சிலப்பதிகாரம் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட ஒருவராக திகழ்ந்தார். அவருக்கிருந்த ஈடுபாடும் தாடனமும் காரணமாகவே "சிலம்புச் செல்வர் என அவர் சிறப்பித்து அழைக்கப்பெற்றார்.

Page 5
4D சிலம்புச் செல்வர் மா.பொ.சி.அவர்கள் தமிழ்மீது மிகுந்த பற்.ஆதலும் தமிழர் வாழ்வு சிறப்புற வேண்டுமென்பதில் பெரிதும் நாட்டமுள்ள ஒருவராகவும் வாழ்ந்து வந்தார். சிலப்பதிகாரத்தின் மேல் அவர் கவனம் கவிந்தமைக்கு இவைகள் அடிப்படைக்காரணங்களெனலாம். தமிழர் சமுதாயத்தின் வாழ்வியலை வெளிப்படுத்தும் ஒருகாவியம் சிலப்பதிகாரம். இது குடிமக்கள் காப்பியம் என்றுவிதந்து பேசப்பெறுவது. அரசபரம்பரையிற் தோன்றாத கோவலன், கண்ணகி ஆகியோரையும் மாதவியையும் காவியத்தின் தலைமக்களாகக் கொண்டுள்ளதால் சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம் எனக் (x २५x காப்பியத் தலைவர்களாக பெறாத இடத்தும் முடிமன்னர் செழிப்பு மிக்க குடும்பத்தில் தோன்றியவர்களே சிலப்பதிகாரம் என்னும் ့်ပွဒွိ . *) காவியத்தின் தலை மக்களாக விளங்குகின்றார்கள் உண்மையில் சிலப்பதிகாரம் சாதாரண குடிமக்களின் காப்பியம் என சிறப்பித்துப் பேசப்படுவது கேள்விக்குரிய ஒன்றாகும். இக்கேள்வி எழும்புவதற்கான வேறு ஆதாரங்கள் சிலப்பதிகாரத்திலேயே உண்டென்பதனை எடுத்தியம்புவதே இக்கட்டுரையின் அடிப்படை நோக்கமாகும்.
சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தைப் படைப்பதற்கான குறிக்கோள் எதுவென்பது பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.
அரசியல் பிழைத்தோர்க் கறங்கூற்றாவதுTஉம் உரைசால் பத்தினிக் குயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந்தாட்டும் என்பதாம் குழ்வினைச் சிலம்புகாரணமாகச்
களை ஒத்த செல்வச்
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்"
அரசுக்குரிய நெறிமுறை தவறிய வேந்தர்களை அறமே அழித்தொழிக்கும. கற்புடைமாதரை எல்லோரும் போற்றி ஏத்துவர். ஊழ்வினையானது தொடர்ந்து வந்து தாக்கும். இவை மூன்றுமே சிலப்பதிகாரத்தின் அடிப்படைக் குறிக்கோளாக அமைந்தன.
சிலப்பதிகாரக் கதையினை முன்னெடுத்துச் செல்வதற்குரிய முரண்நிலை தோன்றுவது கோவலன் கண்ணகியை விட்டுப் பிரிந்து மாதவியை நாடிச் சென்றமைதான். அக்காலத் தமிழர் சமுதாயத்தில் அவ்வாறு கோவலன் நடந்து கொண்டமை சமுதாய ஒழுக்க நெறி முறைக்கு முரணான ஒன்றாகக் கொள்ள இயலாது. இதனை டாக்டர் மா.இராசமாணிக்கனார் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"ஆடல் பாடல்களில் வல்ல பொது மகளிர் எந்தச் சமுதாயத்திலும் உண்டு. அவர்தம் ஆடல் பாடல்களிலும் ஒப்பனையிலும் அறிவைப்பறிகொடுத்து ஆடவர் தம் மனையரை மறந்து தகாத ஒழுக்கத்தில் ஈடுபடுவர். மாதவியை விரும்பிய கோவலன் கண்ணகியை மறந்தாற் போலத் தலைவன் தலைவியை மறந்து பரத்தையை நயத்தலும் உண்டு. இத்திய பழக்கம் பண்டை நாகரிக நாடுகள் எல்லாவற்றிலும் இருந்து வந்தது அக்காலச் சமுதாயம் இதனை அநுமதித்தது. ஆயின் ஒவ்வொரு தலைவனும் இவ்வாறு பரத்தையோடு வாழ்ந்தான் என எண்ணுதல் தவறு. மன அடக்கம் அற்றவரும் செல்வச் செருக்கு மிக்கவரும் ஆகிய சிலரே இத்திய வழக்கத்திற்குஆளாயினர். எனினும் இதற்குச் சமுதாயம் ஒப்புதல் தந்த காரணத்தால்
 

ஜீவநதி 5 புலவர்கள் அகப்பொருள் இலக்கணத்தில் இதற்கு இடங்கொடுத்தனர். (இல்வாழ்க்கை)
அரசனும் செல்வச் சிறப்பு மிக்கவர்களுமே அக்காலச் சமுதாயத்தின் பிரதிநிதிகளாகக் கருதப் பெற்றனர். அதனால் அவர்களது வாழ்வே இலக்கியங்களாகப் படைக்க பெற்றன. சமுதாயத்தின் பெரும்பான்மையினராக வாழ்ந்த வலுவற்ற மக்கள் பற்றி இந்த இலக்கியங்கள் பேசவில்லை. சமுதாயத்தில் மிகுந்த வலுவுள்ளவர்களாக வாழ்ந்தவர்களின் மாட்சிமைகளை எடுத்துச் சொல்வதற்காகவே அடிநிலைமக்கள் சுட்டப்படுகின்றனர். அதனால் பண்டையதமிழ் இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டுதமிழ் மக்களின் உண்மையான வரலாற்றினைக் கண்டு கொள்ள இயலாது. இதற்குச் சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுச் சொல்லத்தகுந்த நல்லதோர் எடுகோள் உண்டு இக்காவியத்தின் நீர்ப்படைக் காதை" யை நோக்கலாம்.
கண்ணகியின் சிற்றத்துக்குள்ளாகி மதுரைமாநகர் எரிந்தது. பாண்டியன் நெடுஞ்செழியனும் கோப்பெருந்தேவியும் உயிர்துறந்தனர். கண்ணகி வழிபாட்டுக்குரிய தெய்வமானாள். இதன் பின்னரும் பாண்டியநாடு சிறப்பிழந்து வறுமையுற்றே இருந்து வந்தது. நாட்டின் வறுமை நிலையைப் போக்குவதற்கான மார்க்கம் யாதென அரசகட்டிலில் வீற்றிருந்த வெற்றிவேற்செழியன் சிந்தித்தான். அவன் சிந்தனையின் பேறாக யாது நிகழ்ந்தது?
"கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன் பொற்றொழிற்கொல்லர்ஈரைஞ்நூற்றுவர் ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு ஒருபக எல்லை உயிர்ப்பலியூட்டி" எனச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. ஆயிரம் பொற்கொல்லர்களைப் பத்தினித் தெய்வத்துக்கு ஒரு பகற்பொழுதிற் பலியிட்டுப் பாண்டி நாட்டினைக் காப்பாற்றினான். அக்கால கட்டத்தில் தெய்வங்களுக்கு நரபலி இடுகின்ற வழக்கம் தமிழர்களிடையே இருந்து வந்திருக்கவேண்டும். அதுமாத்திரமன்றி படைவீரர்கள் வேந்தன் வெற்றிபெற வேண்டுமெனத் தம்மைப் பலியாகத் தற்பலிகொடுத்தனர் என்பதனைப் பின்வரும் பாடல் அறியத் தருகின்றது.
மருவூர் மருங்கில் மறங்கொள்வீரரும் பட்டின் மருங்கில் படைகெழு மாக்களும் முந்தச் சென்றுமுழுப்பலிபீடிகை வெந்திறல்மன்னற்குற்றதை யொழிகெனப் பலிக்கொடை புரிந்தோர். (இந்திரவிழவூரெடுத்த காதை) இவற்றுக்கு மேலாக இங்கொருவினா எழுகின்றது. இலக்கியம் ஒருசமுதாயத்தின் இருப்பினைச் சித்திரிக்கின்றது என்றால் சிலப்திகாரம் காட்டும் சமுதாயத்தில் பொற் கொல்லர்கள் மனிதர்களாகக் கருதப்படவில்லையா என்பதே அந்தவினா. கோவலன் கொலையுண்டமைக்கு ஒரு பொற்கொல்லன் காரணமாக இருந்தான் என்பதனால் நாடு நலம் பெறவேண்டும் என்பதற்காக ஆயிரம் பொற்கொல்லர்களை பத்தினித் தெய்வத்துக்குப் பலியிடுதல் என்பது எவ்வகையில் நியாயமானதாக - நிதியான செயலாக அமைய முடியும். கோவலன் கொலையுண்ட மைக்கு ஊழ்வினையே காரணம் என்பது இன்னொரு நியாயம்.
ஆயிரம் பொற்கொல்லர்கள் பலியிடப்பட்டமை வெகு சாதாரணமான ஒரு

Page 6
ஜீவநதி நதி - O2 கிளை - 01 6 நிகழ்வாகவே சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகின்றது. இதன் மூலம் சில உண்மைகளை நாம் விளங்கிக் கொள்ளலாம். சிலப்பதிகாரம் போன்ற பண்டைய இலக்கியங்கள் காட்டுகின்ற தமிழர் சமுதாயத்தில் பெரும்பான்மையினராக வாழ்ந்த வலுவற்ற அடிநிலைமக்கள் மனிதர்களாகக் கருதப்படவில்லை. குறிப்பிட்ட அந்த இலக்கியங்கள் வெளிப்படுத்தும் தமிழர் சமுதாயம் உண்மையான சமுதாயமாகிவிடாது. ஆட்சி அதிகாரமும் செல்வச்செருக்கும் கொண்டோர் பற்றியே பெரும்பாலும் பேசுகின்றன. "உலகு என்பது உயர்ந்ததோர் மாட்டு” எனவே கொள்ளப்பட்டது.
வெற்றிவேற்செழியனால் பத்தினித் தெய்வத்துக்குப் பலியிடப் பெற்ற ஆயிரம் பொற் கொல்லர்களும் ஊழ்வினைப் பயனாலேயே கொலையுண்டார்கள் என்று கொள்வது வலிந்து தேடப்பெறும் சமாதானமேயாகும். சாதாரணகுடிமக்கள் ஆயிரவர் பலியிடப்பட்டமை பற்றிச் சொல்லும் காப்பியத்தைக் குடிமக்கள் காப்பியம் என்று அழைக்கலாமா? இக்காப்பியத்தில் பெரிதாக எடுத்துப் பேசப்பெறாத ஆயிரம் பொற்கொல்லர் கொலை பண்டைய தமிழர் சமுதாயத்தின் இருள் கவிந்த பக்கம். இருண்டபக்கங்களுக்குத் தகுந்த ஒளி ஊட்டப்பெறும் போது அத்தகைய கொடுமைகள் மேலும் தொடராமல் இருப்பதற்கு வழி சமைக்கலாம். 000
ஆதியில் வந்த சோதி அருங்கதிர் ஒன்றில் வந்தேன்
சேதியைக் கானா அந்தச் பயணிகள் பக்க வீடு செல்வழி நீரீைட தூரம் பலதையும் தட்gப் பார்தீத போதியோ என்னப் போகும் செயலினைத் தொடர்ந்து பின்னர் பொண்னென வாய்த்த நேரம் சேருவார் தங்கள் வீட்டை ஆதியில் வந்த சோதி & முயன்றுதான் இதயத் துள்ளே அருங்கதிர் ஒன்றில் வந்தேன் 6F மூழ்கியே போவதற்கும் ஆதியைத் தேடி எங்கும் 密 S වLiffffiඝෆික් බ|60ඝl5 Liff6||5 அலைகிறேன் யாத்தி ரைக்காய் S မျှိ உழaறுநாம் அலைதலி வேண்டும். வனமெனச் சொல்லத் தக்க தி கர்ைகளால் உன்னைக் கான வனப்புள உலகம் எல்லாம் ് O கருதியே திசைகள் தோறும் தினமொளி பரப்பும் மாயத் f ఫ్లో எர்ைனிநான் நோக்கி நோக்கி திருமிகு நட்சத் ரத்தின் 令 எத்திசை தன்னி லேயும்
&S S
இனமெனும் மண்ட லங்கள் S o N கர்ைகளால் கானே னாகிக் இவைகளில் தடயம் வைத்தே S 斜 Sy ආගමීඝග6II ළpgස් ඛආlleffell முனதெனும் ஒளியின் தேரில் " eS 家 திர்ைனமாய் "இருக்க இங்கே" முனினுற வெளியே வந்தேன் ெ @丁、3 சிக்கெனப் பிடித்துக் கொண்டேனி
நீர்ைே శ్రీశ్రీ இ &ಹಣೆ ೭eland Gಣಿ8 6T6 Tai Tai l 6ft (5 ளாய எனறே எப்படிப் போன போதும் 邻 శ్లో ; ஏங்கிநான் விட்ட கணினி அனீனதோ ஒனக்கே மிக்க N எங்குமாய்ப் பெருகி ஓடை அருகிலே உள்ள தாகும் எனப்பல ஆயிரம் தான் 66llerfæISis uslóð 616ð6OIð பொங்கிட 'நானே உரீைமை" சுருதிபோலி வளைந்து செல்லும் பொருளெனும் பெரிய வெள்ளமீ பண்ணிைய கீதமீ என்றே சங்கம மாகிப் பூமி
பவ்விய மாகச் செல்லும் தானுமே ப்ரளய மாதமீ.

O மினுங்கும் சுடர் வாழ்வு ஏகலைவன்
இநீததி தெருமருங்கிலி உங்கள் மனதுகளை நடக்க முடியவிலீலை வேட்டையிட எநீதனது முற்றத்தில் 9qD6olffዐD! இருக்க முgயுதில்லை எங்கோ இருந்த இந்தக் கடற்கரையில் துரோaDaரினை. உலவ இயலவிலீலை எனிணைத்திலி எநீதனது சந்திகளிலி ஆதர்ஷக் குருவாக்கி மகிழ இயலுதிலிலை ஆயிரம் வகைவித்தை எங்களது காற்று மாசடைந்திருக்கிறது utijරග්pl)'L 6jōගඛoඛණ් tuilග්: எங்கள் கடலிலீ விஷமே விளைகிறது. ஜெ 9% (86.f3 Lific&op எங்கள் வயலிகள் சுடுகாடாய் மாறிற்று UL எனினால் எafaEகீலக எங்களது தோட்டத்திலி 6LdpleL.T. dp65ID(5ust நெருஞ்சி நிறைகிறது சீ மனங்கள் விழுந்ததென. எங்கள் கிறுைகளில் 6) அதிர்ந்தது எண் காரீைeபமீ அமிலமீ சுரந்திடுது - " எங்கள் குழயிருப்பைப் னி புற்றுகளே மூgற்று ன் எங்களது பூக்களிலே இ இரத்தம் வழுகிறது அந்த இதழ்களிலே () பிணநாற்றம் வீசிடுது s upe)6656ft 8ollapab6|TTE பாதுகாப்பு வலயத்துள் ରf எனது வேட்டைக்கு பறந்து திருமீயிடுது தை இடையறாது கவிஅமீயை பகலிகள் குறுகிற்று. அமுத சுரபியாக அருளிடுதென் அமீபறா. இரவுகளே நீண்டு * புதுப்புது இலக்குகளைப் விஜயலை விழுங்கிற்று ள் புகுந்தழுத்துக் கைப்பற்றும் மழைவருமுன் பெயரும் எறும்புகளாய் பெருமையிலே விமீமிப் புடைக்கிறது எண்கவசமீ. பலர்செல்ல நீர் வgந்த இன்றும் பயிலுமீ இ(ை"எயற்ற நுட்பத்தாலி வெறுநீதொட்g. ஊராச்சு இனினுமின்னுமீ வேட்டை இத்தனைக்குப் பின்னும் இருக்கெனினுமீ என் இடைவாள். 6D6DTLDITDT Dar(85FFFGB எனிறாலும். "SbọBad 86,Tarif6fČL இடைக்கிடையே% வேரைப் பிடுங்கியெங்கே எங்கிருநீதோ அதீதுரோணிை போவது நான்?". புரியாது வநீததனி வாரிசை வளர்க்க. ஏதோநப்பாசையொடு எண் விதீதையையே மினுங்கும் சுடராக. விலையாகக் கேட்பானோ?
புயலுள்நம் வாழ்விருக்கு. ஐயமுறும் எனி இதயமீ

Page 7
நதி - O2 கிளை - 01 8) பின்கானிையத்திறனார்வு
கலாநிதி சபா.ஜெயராசா
1990ஆம் ஆண்டைத் தொடர்ந்து வளர்ச்சியுறத் தொடங்கிய திறனாய்வுக் கோட்பாடாக பின்காலனியம் நிமிர்ந்தெழுந்துள்ளது. பிரித்தானிய ஏகாதிபத்தியம் காலனித்துவ நாடுகளிலே பன்முகமான பண்பாட்டுத் தாக்கங்களை ஏற்படுத்தியது. மொழி கலை, இலக்கியங்கள், சிந்தனை முறைமை, அரசியல் நோக்கு, கல்வி முறைமை, மனித உளப்பாங்குகள். நடை உடைபாவனை என்ற பலதுறைகளில் அவற்றின் செல்வாக்குகள் ஊடுருவியுள்ளன. அந்நிலையில் தேசிய அடையாளங்கள், இனத்துவ இனங்காணல்கள், பால்நிலை அகவய எழுச்சி முதலியவை அறிபொருட்களாக மேலெழுந்துள்ளன.
மேலையுலகம் அறிமுகப்படுத்திய நவீனத்துவப் பரிமாணங்களும் மேலைப்புல அறிவொளிப் பரிமாணங்களும் கட்டுமானக் குலைப்புக்கும் தகர்ப்புக்கும் உள்ளாக்கப்படுகின்றன. காலனித்துவ ஆட்சிக் காலத்தில் ஓரங்கட்டப்பட்டவை மீள் எழுச்சி கொள்ளத் தொடங்கியுள்ளன. காலனித்துவம் வழங்கிய அல்லது உருவாக்கிய பெரும் உரையங்கள் அல்லது பெருங்கதையாடல்களின் தகர்ப்பை அடியொற்றி பின்காலனியக் கோட்பாடு எழுச்சி கொள்ளத் தொடங்கியுள்ளது.
அகில மனிதன் அகில வரலாறு முதலியவை தள்ளுபடி செய்யப்பட்டு அவற்றின் இடங்களை உள்ளுர் அடையாளங்கள் கைப்பற்றத் தொடங்கியுள்ளன. இவ்வாறான புதிய நிலவரங்களை அடியொற்றிய புலக்காட்சியைப் பின் காலனிய இலக்கியங்களும்.திறனாய்வும் உரையாடல்களும் முன்னெடுத்து வருகின்றன.
ஏட்வேட் செட், ஹோமி பாபா, காயரி இஸ்பிவக், பில் அஸ்கொரப், மற்றும் செல்டென் முதலியோர் பின் காலனியத் திறனாய்வைப் பலகோணங்களில் அணுகிவிபரித்துள்ளனர். ஐரோப்பாவை நடுநாயகப்படுத்தி உருவாக்கப்பட்ட பெருங்கருத்துக்கள் தொடர்பான தகர்ப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுவருதல் தனித்துவமான தரிசனமாகக் காணப்படுகின்றது. கீழை உலகின் இலக்கியங்களும் வளமான கருத்துக்களும் ஐரோப்பியமையப் பாட்டில் ஒதுக்கிவைக்கப்பட்ட தாழ்நிலையில் இருந்து வந்துள்ளன. அவர்களும் அவர்களின் ஆக்கங்களும் அடையாளம் காணப்படாத அநாமதேயநிலைக்கு ஐரோப்பியர்களால் ஒதுக்கிவைக்கப்பட்டன. இவையற்றிய உணர்வு பூர்வமான கருத்தாடல்களைப் பின் காலனியத்திறனாய்வு முன்னெடுத்து வருகின்றது.
மேலைப்புல எழுத்தாளர்களும் கவிஞர்களும் உருவாக்கிய ஆக்கங்கள் ஆசிய ஆபிரிக்கநாடுகளைத்தாழ்ந்த நிலையில் நோக்கியுள்ளமையும் பகுப்பாய்வின் வழியாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. யீட்சின் கவிதைகளே இதற்குச் ófsT60 m3|356m T35 61 (BööléébsT"LüLJLGB6ï616OT. (SAILING TO BYZANTIUM - 1927) அதாவது பின்காலனியத்திறனாய்வு நோக்கிலே யீட்ஸ் மீள்வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
காலனித்துவ ஆட்சிக்காலத்து ஆசிய ஆபிரிக்க நாட்டு எழுத்தாளர் களிடத்து இருமை நிலைகள் காணப்படுதலும் பின்காலனியத் திறனாய்வாளரினால்

9 வெளிப்படுத்தப்படுகின்றது. ஒரு புறம் தமது அடையாளங்களைக்காட்ட முயலுதலும், மறுபுறம் ஐரோப்பிய மேலோங்கலோடு இணைந்து நிற்றலும் இருமைக் கோலங்களாகின்றன. நையீரிய நாவலாசிரியர்களிடத்து இப்பண்புகள் காணப்படுதல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை இரட்டைநிலைப் போக்கு என பின்காலனிய திறனாய்வாளர் குறிப்பிடுவர்.
காலனித்துவ காலத்தில் எழுத்தாக்கங்களை மேற்கொண்ட கலாயோகி ஆனந்த குமாரசாமி அவர்களின் எழுத்தாக்கங்களிலும் மேற்குறிப்பிட்ட இருமை நிலைகளைக் காணமுடியும். அவர் எழுதிய 'சிவநடனம் என்ற நூல் ஒருபுறத்தே சைவசமய அடையாளத்தை வெளிப்படுத்தியது. மறுபுறம் ஐரோப்பாவிலே பெரும் எழுச்சி கொண்ட இருப்பியம் தொடர்பான நீண்ட ஆக்கத்தினையும் அவர் அந்தநூலிலே இணைத்திருத்தலும் குறிப்பிடத்தக்கது.
• காலனித்துவத்துக்கு உட்பட்ட நாடுகளின் எழுத்தாக்கங்களில் மூன்று தளங்களைக் கொண்ட படிமலர்ச்சியைக் காணமுடியும்.
1) முதலாவது படிநிலை ஐரோப்பிய எழுத்தாக்கங்களை எதுவித மாற்றங்களுமின்றி அவ்வாறே மொழிபெயர்த்து எழுதியமை,
2) இரண்டாவதாக, அவற்றைத் தழுவி குறித்த உள்ளூர்ப்பண்பாடுகளுக்கு ஏற்றவாறு ஆக்கங்களைமேற்கொள்ளல்.
3) மூன்றாவதாக, அவற்றிலிருந்து விடுபட்டு சுயாதீனமான ஆக்கங்களை மேற்கொள்ளல் சிறுகதை நாவல் போன்றதுறைகளிலே இவர்கள் திறமைசாலிகளாகி விடுகின்றனர்.
மேற்கூறியவற்றுடன் தொடர்புடைய குறுக்குநிலைப்பண்பாட்டு இடை வினைகளை இனங்காட்டுதலும் பின்காலனிய திறனாய்வில் முன்னெடுக்கப்படுகின்றன. பின்காலனியத்திலே தோற்றம் பெற்ற ஆங்கில நாட்டு எழுத்தாளர்கள் இணைப்பு பன்முகப்பாங்கு வித்தியாசமான அணுகுமுறைகள் முதலியவற்றைப் புனையலானார்கள். பாலியல் அரசியல் (SEXUAL POLITICS) அவர்களது எழுத்தாக்கங்கள் சிலவற்றில் மேலோங்கத் தொடங்கின. மூடப்பட்டிருந்த பெண்களின் ஆளுமை வீச்சுகள் எழுத்தாக்கங்கள் வழியாக வெளிக் கொண்டு வரப்படலாயின. பால்நிலை மார்க்சிய நோக்கு, பாலியலின் புதிய வடிவங்கள் முதலியவை எழுத்தாக்கங்களிலே தெறித்தெழத் தொடங்கின.
தொகுத்து நோக்குகையில் பின்வரும் சிறப்புப் பண்புகளைப் பின்காலனியத் திறனாய்வுகளிலே கண்டு கொள்ளமுடியும்.
1) மேலைப்புலப் பெரும் இலக்கியங்களால் உருவாக்கம் செய்யப்பட்ட அகிலப்பண்பியலை (UNIVERSALISM) நிராகரித்தல்.
2) அகிலப் பண்பியலின் மட்டுப்பாடுகளை வெளிப்படுத்துதல். 3) ஆசிய ஆபிரிக்க நாடுகளின் பல்லின தனித்துவ அடையாளங்கள் வெளிப்படுத்தப் படாமையைச் சுட்டிக்காட்டுதல்.
4) ஓரங்கட்டப்பட்ட பண்பாட்டு பிரதிநிதித்துவத்தைப் பரிசீலித்தல் 5) காலனித்துவம் மற்றும் ஏகாதிபத்தியம் தொடர்பான இயல்புகளை வெளிப்படுத்தாது மெளனமாகியும் ஒதுங்கியும் எவ்வாறு இலக்கிய ஆக்கங்கள் நின்றன என்பதைக் கண்டறிதல்.
6) பண்பாட்டுப் பல்லினப்பாடுகள் திரிபு படுத்தப்படாது எவ்வாறு

Page 8
10 புனைந்துரைக் கப்படுகின்றன என்பதைத் திறனாய்வு செய்தல்
7) ஒரே நேரத்தில் அல்லது ஏககாலத்தில் தனிமனிதரும், குழுக்களும் பண்பாட்டுப் பன்முகப்பாடுகளுக்குள் அடங்கியிருக்கும் பன்முகவியலை (POLYVALENCY) புளகாங்கித்து வரவேற்றல்.
8) எல்லைப்படுத்தல் நிலை, பன்மைநிலை மற்றையதெனக் குறிக்கப்பட்ட "மற்றைய நிலை" (OTHERNESS) முதலியவற்றில் உள்ளடங்கியிருக்கும் ஆற்றல்களையும், விசைகளையும் கண்டறிந்து நேர் முக வெளிப்பாடுகளுக்குள் கொண்டுவருதல்.
உலகவரலாற்றில் மார்க்சியத்துக்குப்பின்னர் தோற்றம் பெற்ற திறனாய்வுக் கோட்பாடுகளில் அதன் செல்வாக்குகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஊடுருவி நிற்றலைக் காணமுடியும். காலனித்துவ காலத்தில் ஒடுக்கப்பட்டவற்றை அல்லது மறைக்கப்பட்டவற்றை வெளிக்கொண்டு வரும் பின்காலனியத்திறனாய்வு உந்தலில் மார்க்சியத்தின் நேரடியான செல்வாக்கின் உட்கவிப்பைக் காணமுடியும், பின்காலனியத் திறனாய்வாளரால் எடுத்தாளப்படும் டி.எச்.லோரன்ஸ் அவர்களது எழுத்தாக்கங்களிலும் மார்க்சியத்தின் கவிப்பைக் காணமுடியும்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் விளைவுகளும், காலனித்துவ நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் சிறப்பாக இங்கிலாந்தில் வாழ்வோரது எழுத்தாக்கங்களும், அவர்களிடத்துக் காணப்படும் பண்பாட்டுக் கோலங்களும் இருமைத் தன்மையான இயல்புகளும் பின்காலனியத்திறனாய்வுச் சிந்தனையாக்கங்களுக்குப் பின்விசைகளாக அமைந்துள்ளமையைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
காலனித்துவகாலத்தில் ஆசிய ஆபிரிக்க நாடுகளிலிருந்த வளங்கள் ஆட்சியாளரால் பெரும் பறிப்புக்கு உள்ளாக்கப்பட்டன. அதன் விளைவாக மேற்கு ஐரோப்பிய நாடுகள் சிறப்பாக இங்கிலாந்து, பிரான்ஸ் முதலாம் நாடுகள் செல்வச் செழிப்பை அனுபவிக்கலாயின. அந்தச் செழிப்பு அந்நாடுகளின் சிந்தனை முறைமைகளிலும் இலக்கிய ஆக்கங்களிலும் செல்வாக்குகளை ஏற்படுத்தின. அவர்களின் மேலாதிக்க உளப்பாங்கு கல்வியிலும் இலக்கியங்களிலும் ஏதோவிதமாக பிரதிபலித்து நின்றன. பின் காலனிய இலக்கியங்களில் அவ்வாறான புலக்காட்சிகளில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. 000
சிறுகதை எழுத்தாளரும் தினகரன்’ பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான அமரர் ராஜ பூரீகாந்தன் அவர்களின் 4ஆவது நினைவுதின (20.04.2008) ஞாபகார்த்தச் சிறுகதைப்போட்டிமுடிவுகள் முதலாம் பரிசு- பிரகலாத ஆனந்த் (புரியாத தொடர்கதைகள்) (192,வின்செற் பெரேரா மாவத்த, கொழும்பு) இரண்டாம் பரிசு-பூநகுலன் ( இலமென்றசைஇ இருப்பாரைக் காணின்.) (மகாத்மா வீதி, நெல்லியடி, கரவெட்டி) முன்றாம் பரிசு- சி.கதிர்காமநாதன் ( வருமா..?) (டச் வீதி, தொல்புரம் கிழக்கு சுழிபுரம்) நடுவர்கள் தெணியான், யோகேஸ்வரி சிவப்பிரகாசம், த.கலாமணி * பரிசுகள் அமரரின் சகோதரர்களால் விரைவில் அனுப்பிவைக்கப்படும்.

11
சஞ்சும்மா
எனக்கு கவலைதான். இருந் தாலும் வேறு வழியில்லை. உயிரோடு இருந்து அவஸ்தை படுவதை விட செத்துப்போதல் உசிதம் தானே. இதனை கருணைக்கொலையென்றும் சொல்வார்களாம். ஆனால் இப்பொழுது நடக்கப்போவதென்றால் நிச்சயமாய் கருணைக்கொலையல்ல. இதிலும் ஒரு வருமானத்தை தேடும் வழியைதான் என் அப்பன் செய்திருக்கிறார்.
அடேய், ஐஞ்சுமணிக்கு அந்த மொதலாளி வருவது. மாட்டை கட்டிவை,
அப்பா மூன்றாவது முறை யாகவும் கத்துகிறார். இனியும் தாமதித் தால் போச்சு. போனகிழமை பட்ட அடி இன்னுமே வலிக்கிறது. சடாரென எழும்பி மாட்டை இழுத்து வந்து பட்டிக்குள் கட்டிப் போடுகிறேன். மாடென்றோ பசுவென்றோ எப்பொழுதுமே அதை நான் நினைத்ததில்லை. செல்லமாய் சஞ்சு என்றுதான் அழைப்பேன். வழமைபோல் அதனுடன் விளையாட இப்பொழுது என்னால் முடியாதிருந்தது. சஞ்சும்மாவின் கண்களிலும் கண்ணிர். அதன் தலையை லேசாய் வருடிக் கொடுக்கிறேன். என் தலையை அதன் முகத்தோடு ஒட்டவைக்கும்போது, என்
கண்ணிர்த்துளிகள் சஞ்சுவின் முகத்தில் பட்டிருக்க வேண்டும். லேசாய் அசையப்பார்க்கிறது.
‘என்ன மன்னிச்சிடு சஞ்சும்மா. உன்ன காப்பாத்த முடியல்லடா'
பேசாமல் சஞ்சுவையும் கூட்டிக் கொண்டு எங்காவது ஓடிவிட்டால்..? சாத்தியப்படாது. சஞ்சுவிற்கு எப்
பிரமிளா பிரதீபன்
போதோ பட்ட காயத்தில் புழு வைத்து விட்டதாம். இனி எப்படியும் காப்பாற்ற முடியாதாம். தான் சாகப்போவது தெரிந்தோ என்ன வோ சஞ்சு சோகமாகவே இருந்தது. முதலாளி வருவதற்கு இன்னும் இரண்டு மணித்தியாலங்கள் தான் இருக்கிறது. அதற்குள் சஞ்சு விற்கு பிடித்த தண்ணிர் கொடியை கொண்டுவந்தால் தின்னக் கொடுக்கலாம்.
gSGBL Leò கத்தியையும் கயிற்றையும் செருகிக்கொண்டு பத்தாம் நம்பர் மலைக்கு வேகமாய் ஒடுகிறேன்.
அநேகமாய் இந்த மலைக்கு தான் சஞ்சுவை மேய கூட்டி வருவேன். தண்ணிர் கொடியென்றால் அதற்கு மிகவும் பிடிக்கும். சஞ்சு புல் மேய்ந்து முடியும் வரை ஒரு கல்லில் அமர்ந்து கொண்டு கத்தியால் நோண்டி நோண்டி எனக்கு தெரிந்த எல்லா பெயரையும் எழுதி வைப்பேன். பொழுது போவதே தெரியாமலிருக்கும். சஞ்சுவை கட்டிப் போடவோ கவனிக்கவோ அவசியமே இல்லை. ஒரு குரல் கொடுத்தால் போதுமி ஓடி வந்து விடும். நான் என்ன சொன்னாலும் சஞ்சுவிற்கு விளங்கும். அழத் தெரியும் சிரிக்கத் தெரியும் முறைக்கத்தெரியும். ஏன்! உரசி உரசி பாசத்தை காட்டக்கூடத் தெரியும். சிலநேரம் நாக்கால் கையை நக்கிவிடும் அம்மாடி..! அந்த நாக்கு இருக்கே எவ்வளவு சொரசொரப்பு தெரியுமா..? இறுக்கமா இரும்புமாதிரி. ஒருதடவை நக்கினா ரெண்டு நிமிஷத்திற்கு வலிக்கும். இருந்தாலும் என்கையை நக்கவிட்டுட்டு சிரிப்பேன். சஞ்சுவின்

Page 9
கண்ணை பார்த்துக்கொண்டே இருக்கலாம். எப்பவும் அதில் ஒரு சாந்தம் தெரியும். அந்த உணர்வை வேறு எந்தக் கண்ணிலுமே நான் கண்டது கிடையாது.
யாருக்காவது LJöi (86)MTL மடிக்கிட்ட போய் இருக்க முடியுமா..? யாரா இருந்தாலும் எத்தி விரட்டிடும். பழகினவங்ககிட்டகூட முரண்டு பிடிக்கு மாம். ஆனா நான் என்ன செய்தாலும் சஞ்சும்மா எதிர்க்காது. ரெண்டாம் நம்பர் மலையில் வெயிலுக்கு ஒதுங்க ஒரு பெரிய மரம் கூட இல்லை. அப்போ வெயில் சுட்டெரிச்சது. வேறு வழியில்லாமல் சஞ்சும்மா புல்மேயுற இடத்துக் கிட்ட போய் அது மடிக்கிட்ட உட்கார்ந் துட்டேன். எனக்கு நிழல்தர வேண்டி ஒரே இடத்திலேயே சஞ்சு புல் மேய்ஞ்சத எப்பவுமே என்னால்
மறக்க முடியாது.
மாடு மேய்க்கிறது ஒன்னும் நினைக்கிற LDT śrf &FIT 5. [T [] 600,
விஷயமில்லை. ரசித்து செய்தால் அது ஒரு கலை, வெறுத்தால் அதுவே பெரிய ரணம். எனக்கென்றால் இது சுகமான அனுபவம்தான். அது புல்மேயும் அழகு. மேய்ந்தபுல்லை அசைபோடும் விதம். அமர்ந்திருக்கும் பாவனை. ஒவ் வொன்றுமே வெவ்வேறு அபிநயங்கள். நீர் குடிக்கும் போது முகமெல்லாம் நீர்படிய, முகம் சுளிக்கும் அத் தருணத்தில் கொள்ளை அழகாய் தெரியும் சாணம் போடும் நேரத்தில் வால் துர்க்கி உடலை நெளிக்கும். சிறுநீர் கூட தாளசுருதியோடுதான் தரையில் விழுந்து தெறிக்கும். மொத்தத்தில் சஞ்சு, நான் ரசிக்கும் செல்லக்காதலி.
பாவம் என் சஞ்சு. எத்தனை வருஷமா பால் தருது. எந்த எதிர் பார்ப்பும் இல்லாம தன் ரெத்தத்தை
12
கொடுக்க வேற எந்த ஜீவனால (Uplguló...? புனிதம் தெய்வீகம், தாய்மை, கருணை, அழகு. லட்சுமிகரம் இவற்றிற்கெல்லாம் ஒரு உருவம் கொடுத்தால் நிச்சயம் அது பசு வாகத் தான் இருக்கும். அதை கடவுளாய் வணங்க ஒரு கூட்டம் அடித்து பயனெடுக்க வேறொரு கூட்டம், வெட்டித் தின்னவும் ஒரு கூட்டம். பசுக்களை புரிஞ்சளவு கூட இந்த மனுஷங்கள புரிஞ்சிக்க முடியல்ல.
மாட்டுப் பொங்கலெல்லாம் வந்தா சஞ்சுக்கு ஒரே குவிரிதான். அன்றைக்கு கொஞ்சம் அதிகமாகவே தேய்த்து குளிப்பாட்டுவேன். முத்து பழனிகிட்ட கொடுத்து குளிப்பாட்டினா பத்துரூபா கொடுக்கணும். அந்தாளுக்கு சரியா குளிப்பாட்ட தெரியாது. கயிறால தேய்ச்சு ஏனோதானோன்னு தண்ணிய ஊத்தி அனுப்பிடுவது. அதுதான் சஞ்சுவ நானே குளிப்பாட்டிருவேன். ஒரு சிறிய சிரட்டை வச்சிருக்கேன் ,
அதால வலிக்காம அழுத்தி தேய்ப்பேன். கால் தொடை பகுதியில் அப்படியே களிமண் ஒட்டிகாய்ஞ்சுபோய் இருக்கும். அதை வரண்டி வரண்டி எடுக்கனும். அப்பறம் வயிறெல்லாம் கூட மண்ணு மண்ணா தான் இருக்கும். எப்படியும் முழுசா தேய்ச்சு குளிப்பாட்ட ஒரு மணித்தியால மாவது வேணும். குளிச்சவுடன சும்மா புதுப் பொண்ணு மாதிரி. பொட்டு வேற வச்சு விட்டுட்டா சொல்லவா வேணும். அவ்வளவு அழகா இருக்கும். பூசை எல்லாம் பண்ணி, பொங்கல்வச்சிபறங்கிகாய்கறிபோட்டு அப்பிடியே பிசைஞ்சு அம்மா ஊட்டும் போது சின்ன பிள்ள மாதிரி சாப்பிடும். எனக்குமே மாட்டு பொங்கல் தான் விருப்பம். பட்டியை சுத்தி தோரணம் போட்டுமாவிலை கரும்பெல்லாம் கட்டி. இப்போ நினைக்கையில் நெஞ்செல்லாம்

ஜீவநதி
ஏதோ செய்கிறது.
சஞ்சுவை பிரிஞ்சு இனி என்னால இருக்க முடியுமான்னு தெரியல்ல. ஒரு வகையில் இதற்கு காரணமும் நானேதான். ஒரு சரிவில மாட்டை கட்டிப்போட்டுட்டு ஸ்டோர் லயத்திற்கு விளையாட போயிட்டேன். நான் வரும் போது சஞ்சு பள்ளத்தில் விழுந்து படுத்திருந்தது. பின் முதுகில் ஒருகட்டை குத்தி சிறிய காயமும் இருந்தது. ஆண்டவனே..! அதை அப்போதே கவனித்திருந்தால் ஒரு வேளை சஞ்சுவை காப்பாற்றியிருக் கலாமோ..? தப்புபண்ணிட்டேன். இப்போ அந்த புண் தான் கொதிச்சு புழு 6hléféfuqéfetstub.
சஞ்சு, அதுவா செத்து போயிருந்தால் எப்படியோ சமாதான மாயிடலாம். ஆனால் எங்கப்பா இறைச்சிகடை முதலாளிக்கு அரை விலைக்கு கொடுக்க போறாராம். அதுதான் அழுகை அழுகையா வருது.
தண்ணிர்கொடி மலையெங்கும் பரந்து கிடந்தது. இழுத்து அறுத்து ஒரு கட்டு சேர்க்கிறேன். கண்ணிருடன் விம்மலும் சேர்ந்து கொள்கிறது. யாருமே இல்லாத தனிமையில் சஞ்சு சஞ்சு வென சத்தம் போட்டு கத்துகிறேன். இருக்கும் கொஞ்சம் நேரத்தையும் வீணாக்கிவிட கூடாதே. தண்ணிர் கொடியை கட்டி எடுத்துக்கொண்டு ஒடும்போது, ஒரு கல்லில் கால் தடுக்கி தடுமாறி விழப்போய். ஒருவாறு சுதாரித்துக்கொள்கிறேன். ஆனாலும் அந்த கல் கால்பெருவிரல் தரையை பிளந்துவிட்டிருந்தது. ரெத்தம் தாராள மாய் வழிய. சஞ்சுவை வெட்டும்போதும் இப்படிதான் ரெத்தம் வழியுமோ..! வலி மறந்து ஓடிப்போய் தண்ணிர்கொடியை சஞ்சுவிற்கு போடுகிறேன்.
ஐந்தறிவு ஜீவன்கள் என்றாலும்
13
அன்புகாட்டுவதில் பேதமில்லைதான். பேசமட்டுமே அவைகளுக்கு தெரிவ தில்லை. சில நேரங்களில் மிருகங்கள் மனிதர்களையும் மிஞ்சி விடுகின்றன. எந்த மிருகமுமே மறைந்திருந்து தாக்கி கொள்வதில்லை. நேருக்குநேர் மோதிடும் பேராண்மையும் உணர் வாற்றலும் அவைகளுக்குதான் அதிகம் உண்டு. சஞ்சுவுக்கும் ஏதோவொன்று புரிந்திருக்க வேண்டும். புல்லைத் தின்னாமல் பார்த்த இடத்தையே பார்த்துக்கொண்டு அழுகிறது. அந்த கண்ணிரின் அடர்த்தியும் செறிவும் எனக்கு மட்டும்தான் புரிகிறது.
இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? எதுவுமே புரியவில்லை ஐந்துமணியாகப்போகிறது. முதலாளி லொறியில் வருவார். அப்பா கையில் ஒரு தொகை பணத்தை திணிப்பார். பின் இருவரும் சிரித்தபடியே சஞ்சுவை முரட்டுத்தனமாய் இழுத்து லொறிக்குள் அடைப்பார்கள். சஞ்சு என்னை தேடும் அவர்களோடு போகாமல் முரண்டு பிடிக்கும். அலைமோதியபடியே லொறிக்குள் அடைபட்டு தூரமாய் தூரமாயப் போகும் அதற்குப்பின்.? என்னால் நினைக்க முடியவில்லை. அதை சகித்து முகம் கொடுக்கும் தைரியம் எனக்கில்லை. எதிர்த்தும் பலனில்லை.
என்ன செய்யப்போகிறேன்..! ஏதும் தெரியாமலேயே பத்தாம் நம்பர் மலைக்கு மீண்டும் ஓடுகிறேன். சஞ்சுவுடன் நான் கழித்த நாட்களை அசைபோட்டு அழுதிட. தனியாய் புரண்டு தேம்பிட. வேகமாய் ஓடுகிறேன். இப்போது என் கையில் கயிறோ கத்தியோ இல்லை. 000

Page 10
14 நவீன யுகத்திலும் வண்மை அதே .
கெகிறாவ ஸஹானா
கோடான கோடி காலங்களாக அண்டவெளி, ஆகாயம். பிரபஞ்சம், பூமி ஆகியவை உருவாகி, தணலாய்க் கொதித்த பூமி குளிர்ந்து, பின்னர் ஜதைஜதையாக நீர் வாழ் உயிரினங்கள் முதல் பிற உயிரினங்கள் தோன்றியது ஈறாக, எந்த ஒரு உயிருமே ஆண்-பெண் ஜோடியாக அன்றி தனித்துத் தோன்றியது இல்லை. அப்படித்தோன்றுவது சாத்தியமும் இல்லை. காரணம், படைப்பினத்தின் தொடர்ச்சியான இனப்பெருக்கம், வளர்ச்சி என்னும் சங்கிலியின் வளையங்கள் இடையறாது பிணைக்கப்பட்டமையே. அவை இடையில் அறுபட்டால் அக்குறித்த இனமும் அத்துடனே அழிந்து போவது திண்ணம். −
ஆண்-பெண் ஜோடியாகத் தோன்றிய உயிரினங்களுக்குள்ளே, மனித இனத்தில் பெண் எனும் படைப்பு படுகின்ற பாடும், அவலமும் ஏனைய பிற உயிரினங்களில் பெண்ணினம் படுகின்ற பாடுகளைவிட மிகக்கொடியது என்றே கூறலாம். ஏனெனில், மனிதப்பெண்ணுக்குத் தானே மனசு உண்டு உடம்பு படும் வேதனை ஒருபுறமும், மனது படும் வேதனை இன்னொருபுறமுமாக அவள் நிலை மிகப்பரிதாபமானது.
எல்லாப் புலவர்களும்தான் பெண்களைப் பாடினார்கள். ஆனால் பாரதிதான் புதுமைப் பெண்ணாக அவளைக் கண்டான். பாரதிக்குக் கூட இயல்பாக அந்தக்கருத்துக்கள் தோன்றவில்லை என்றும், அன்னை நிவேதிதா தேவியே முதன்முதலில் அக்கருத்தை விதைத்தார் என்றும் கூறப்படுகின்றது. அது ஒரு புறமிருக்க இலக்கியத்தில் பாரதி கொண்டு வந்த பெண் பற்றிய புதிய சிந்தனை நவீன எழுத்தாக்கங்கள் பலவற்றை தோற்றுவித்தது என்றால் அது மிகையாகாது. பெண்கள் அடிமைகளாக கருதப்பட்ட ஒரு சூழலிலேதான் "புதுமைப்பெண்" பிறந்தாள் என்பதால் பாரதியின் புதுமைப்பெண் வரலாற்றுச் சிறப்பு பெறுகிறாள். அக்கவிதையில் புதுமைப்பெண்ணின் இயல்புகளை பலவிதமாக வர்ணிக்கும் பாரதி, ஓரிடத்தில் "ஆண்கள் போற்ற வாழ்வராம் என்கிறார். அக்கவிதையை எனது மாணாக்கருக்கு விளக்குந்தோறும் அவ்விடத்தில் எனக்குள் ஒரு மெல்லிய நெருடல் ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. அப்போதெல்லாம் நான் கூறுவேன். 'பாரதி சொல்கின்ற புதுமைப் பெண்ணாக வாழ்வது மிகக்கஷடம் ஏனெனில், ஒரு பெண் தேசம் ஓங்கி வளர தனது உழைப்பை நல்கினாலும், தியாகம் பல செய்தாலும், எல்லாத்துறைகளிலும் சாதனைகள் படைத்தாலுமே ஆண்கள் அவளை ஏற்றுக்கொள்ளும்படியாக வாழ்வது என்பது மிகக் கடினம் አ
எனது கூற்றுக்கு ஏனைய பெண்களிடத்திலே மறுப்பிருக்காது என்று எண்ணுகிறேன். அப்படி இருந்தால் அவர்கள் தாராளமாக முன்வந்து தங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்.
பாரதி கூறியபடியே நவீன உலகில் பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் மட்டுமல்ல வானிலே விமானம் ஒட்டவும் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றிக்கொடி நாட்டவும், அல்லது வீரமரணம் எய்தவும்கூட புதுமைப்பெண்கள்

ஜீவநதி நதி - O2 கிளை - 01 15
துணிந்துவிட்டனர். ஆயினும், அவர்களைச் சூழவுள்ள யதார்த்த வாழ்க்கை மனித வட்டம் அவர்களைப் புரிந்து கொண்டுள்ளதா, போற்றிப் புகழ்கின்றதா என்றால், அதுதான் இல்லை.
பெண்ணின் உடம்பை, அவளது அழகை, அங்க லாவண்யங்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாட, வர்ணிக்க ஆண் இனம் தயாராக இருக்கின்ற அதேவேளை, அவளது ஆன்மிக, மனோதத்துவ, சிந்தனாரீதியான வளர்ச்சிகளை ஏனோ ஏற்றுக்கொள்ளவில்லை என்றே கூறலாம். நான் இங்கு குறிப்பிடுவது பொதுவாகத்தான். குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஓரிரு நல்லவர்கள் இருப்பின், அவர்களையல்ல. அப்படி இருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்ல்ை.
இந்த 21ம் நூற்றாண்டிலே, வெளிப்பார்வையில் பெண்களின் நிலை மிக உயர்வாகவே தோன்றுகின்றது. பெண்கள் பல பல தொழில் புரிந்து, கைநிறைய வேதனம் பெறுகிறார்கள், பல பலவிதமான நவநாகரிக ஆடைகளை அணிகிறார்கள். ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்று சொல்லம்படியாக பேசிச்சிரிக்கிறார்கள். வேலை செய்கிறார்கள், கருத்துக்கள் பரிமாறியும் கொள்கிறார்கள்.
ஆனால், உள்வாழ்க்கையில் பெண் அதே இழிநிலையில்தான் இன்னும் இருக்கிறாள் என்பதே நிஜம். பெண்ணை வேலைக்கு அனுப்பும் கணவன்மார் அல்லது அவளது உறவினர்கள் அவளது சம்பளத்தில்தான் குறியாக இருக்கிறார்களே தவிர, அவளது இயல்பான மன, உடல் வியாகூலங்களைக்கூட புரிந்து கொள்வது இல்லை. எனக்குத் தெரிந்த பல பெண்கள் இருக்கிறார்கள். தமது கணவன் மார்களுக்கு மாதா மாதம் பணம் காய்த்துத்தருகின்ற இயந்திர மரங்களாகவே. "நாங்கள் இரட்டைப் பளுவைச் சுமக்கவும் வேண்டும்,சம்பாதித்துக் கொடுக்கவும் வேண்டும்" என்று அடிக்கடி முணுமுணுத்துக்கொள்கிறார்கள. ஆனால், இந்த இழிநிலையிலிருந்து மீள ஆக்கபூர்வமாக எதுவுமே அவர்கள் செய்ததில்லை.
இன்னும் சில பெண்கள், தமது சொந்தச் சம்பளத்திலிருந்து பணம் ஒதுக்கி தமது குழந்தைக்கு போஷாக்கு தருகின்ற விலை கூடிய ஒரு பால்மா டின்னை வாங்குவதற்குக்கூட திராணியற்றவர்களாக இருக்கிறார்கள். "பட்ஜெட்டில் துண்டு விழுந்தால் அவர் திட்டுவார்ே என்கிறார்கள். மற்ற பல பெண்கள். அரசாங்கக் கடன் என்றும், வங்கிக் கடன் என்றும் பல மாயைகளில் சிக்கித்தவிக்கிறார்கள். இந்தப் பெண்கள் எல்லோரும் தமது வீட்டுவேலைகளை விரைவாகவும் இலகுவாகவும் செய்து முடிக்க, தமது சொந்தப்பணத்தைக் கொண்டு ஒரு washing machine, refrigerator, Vacuum cleaner, ஏதாவதொன்று வாங்கியிருக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. ஆனால், அவர்களது கணவன்மார் மோட்டார் சைக்கிள்களில் பறப்பதற்கும். கையடக்கத் தொலைபேசியை வைத்துக்கொண்டு அழகு காட்டித் திரிவதற்கும்.வியாபாரத்திற்கு தாரை வார்ப்பதற்கும் அள்ளி வழங்குகின்றார்கள். அவ் ஆண்கள் குறைந்த பட்சம் வீட்டு வேலைகளில்கூட இப்பெண்களுக்கு உதவி செய்கிறார்களில்லை. அதிகம் ஏன் சொல்லுவான்? தனியே அல்லாடும் இப்பெண்களுக்காக ஒரு ஆறுதல் வார்த்தைதானும் அவர்கள் வாயிலிருந்து உதிர்வது இல்லை.
நமது ஆண்கள் இது குறித்துச் சிந்திக்க வேண்டும். தனது மனைவியை அடக்கியொடுக்கிவைத்து, அதிகாலை நாலு மணிக்கே அவள் எழுந்து வீட்டு வேலைகளைச் செய்துமுடித்து, வேலைக்குச்சென்று இரட்டைப்பளுவை

Page 11
16 அனாயாசமாகச் சுமந்து. பின்துாங்கி முன் எழும் தர்ப்பத்தினியாக காணவிரும்பும் ஆண், தனது பெண் குழந்தைகளை நம்பிக்கை நட்சத்திரங்களாக உருவாக்க நினைப்பது எவ்வளவு வேடிக்கை? அந்த நட்சத்திரம் படித்து பட்டம் பெற்ற இலட்சியப்பெண்ணாக உங்கள் வீட்டு மாடத்திலே ஒளி வீசினாலும், இன்னொருவன் கைகளில் ஒப்படைக்கப்பட வேண்டிய ஒன்றல்லவா? அங்கே அவள் சுதந்திரமாக சிந்திப்பதும், செயல்படுவதும். ஆக்கபூர்வமாக முடிவெடுப்பதும் சிரம சாத்தியம் அல்லவா? அந்த இன்னொருவனும் உங்களைப்போலவே இருக்கமாட்டான் என்று நீங்கள் நம்புவது எவ்வளவு அசாத்தியம்.?
கணவனும், மனைவியும் ஒன்றாக வேலை செய்யும் வேலைத்தளங்களை எடுத்துக்கொண்டால் அங்கெல்லாம் மனைவியரின் நிலைமை சிறைக்கைதிகளின் நிலையை ஒத்திருக்கின்றது. தம்மோடு வேலை செய்கின்ற ஏனைய பெண்களுக்குள்ள சிறிதளவு சுதந்திரத்தைத் தானும் அவர்கள் அனுபவிக்கிறார்கள் இல்லை. கணவன்மார் எதிரில் எதைப்பற்றியும் பேசத்தயங்குகிறார்கள். அவர்களது எதிரிலே நடமாடக்கூட அஞ்சுகிறார்கள். கணவனும் மனைவியும் வேறுவேறாக வேலை செய்யும் இடங்களை எடுத்துக்கொண்டாலும், அங்கும் இந்தப் பெண்களுக்கு நிம்மதி இல்லை. ஏனெனில், அங்கும் சில ஆண்கள் தமது மனைவியரின் ஒழுக்கத்தைக் கண்காணிக்க வென்று ஒற்றர்களை நியமித்திருக்கிறார்கள் என்றால் பாருங்களேன்! இப்பெண்களைப் பார்க்கும்போது அழுவதா. சிரிப்பதா என்றே தெரியவில்லை. தமது உரிமைகளுக்குக்கூட குரல் கொடுக்க வலிமையற்ற இவர்கள், அலுவலகங்களில் நடக்கும் அநீதிகளை,அக்கிரமங்களை எதிர்த்துக் குரல் கொடுப்பது எங்ங்ணம்? சரி போகட்டும். இந்தப் பெண்கள் தாம் பெற்ற ஊதியங்களில் சிறிதளவாவது சேமித்து மனதை வலிமை செய்கின்ற ஆத்மார்த்தமான பொழுதுபோக்குகளையோ,பிற கருமங்களையோ செய்கிறார்களா? இரண்டு வருடங்களுக்கொருமுறையாவது சந்தோஷமாக உல்லாசப்பயணம் சென்று வருகிறார்களா என்று ஆராய்ந்து பார்த்தால்.அதுவும் இல்லை. மண்ணோடுமண்ணாக வாழ்கின்ற ஒரு பூச்சியைப்போல. ஒரு மண்புழுவைப்போல இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம் அலுவலகங்களிலும், வேலைத்தலங்களிலும் அதிகமாக பெரும்பான்மையாக ஆண்கள் இருப்பதுதான் என்று கூறினாலும் அது தவறாகும்.ஏனெனில். ஆண்களைவிட எண்ணிக்கையில் மிக அதிகமாக இருக்கும் இடங்களில்கூட பெண்களின் நிலை இப்படித்தான் இருக்கின்றது.
வேலை செய்யும் பெண் உத்தியோகத்தர்களின் மேற்பார்வையாளா ’களையும், நிறைவேற்று அதிகாரிகளையும் எடுத்துக்கொண்டால்.அங்கே இன்னொரு பிரச்சினை உருவெடுக்கின்றது. வருகின்ற மேலதிகாரிகள் அங்கும் ஆணாதிக்க கதாயுதத்தை பாவிக்கின்றார்கள். தமக்குக் கீழே உள்ள பெண் உத்தியோகத் தவர்களோடு ஆபாசமான சொல்லாடல்களைக் கையாளுகிறார்கள். அல்லது. வேண்டுமென்றே ஒரு குறையைக் கண்டுபிடித்து.அதை ஊதிப் பெரிதாக்கி பூதாகரமாக எடுத்துக்காட்டி முறைப்பாடாக எழுதிவைத்துவிட்டுப் போகிறார்கள். இவள் பெண்தானே. தனது மேலதிகாரியைப் பற்றிவாய் திறக்கமாட்டாள் என்ற கர்வம்! இன்னும் சில உயரதிகாரிகள் தமது ஆஜானுபாகுவான தோற்றத்தால், வசீகரமான மொழியாற்றலால், குடும்ப வாழ்வில் அடிபட்டிருக்கின்ற பெண்களை நோக்கி வலைவீசி, அவர்களை ஏறக்குறைய பைத்தியமாக ஆக்கிவிடுகிறார்கள். பின்னர்,

17 அவள் தன்னைச் சுற்றிச்சுற்றி வந்ததையோ.இழைய இழையப் பழகியதையோ தனது சக ஆண் நண்பர்களிடம் கூறிவேடிக்கையாகச் சிரிக்கிறார்கள். அவளுக்கு காந்தம், கரும்பு என்றெல்லாம் இகழ்ச்சியாகப் பெயர் சூட்டுகிறார்கள்
இது தவிர, நிறுவனங்களில் அடிக்கடி நிகழும் பல சம்பவங்கள் மனதை மிகவும் புண்படுத்துகின்றன. நிறுவனத்தின் தலைவர் ஒரு பெண்ணாக இருந்தால், அவள் எவ்வளவு நேர்மையாக நடக்க முற்பட்டாலுமே. அவளுக்குக் கிழ் வேலை செய்கின்ற ஆண்கள் தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க மறுக்கிறார்கள். அல்லது கட்டுப்படுவதுபோல் தோற்றம் காட்டி ஏய்க்கிறார்கள். மாறாக,தலைவர் ஒரு ஆணாக இருந்துவிட்டால்,அவர் தமக்குக் கீழேயுள்ள பெண்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. தமது தனிப்பட்ட'குடும்ப வாழ்வில் ஏற்படும் உளைச்சல்களுக்குக்கூட வடிகால்களாக பெண்களையே ஆக்கிவிடுகிறார்கள். பெண் உத்தியோகத்தர்களை பிடிபிடியென்று பிடித்து உலுப்புகிறார்கள். நிறுவனத்தன் தலைவர் என்ற காரணத்தால் அவர் வாய்க்கு வந்தபடியெல்லாம் கூறும் ஏச்சுப்பேச்சுகளையும்,குறைகளையும் மெளனமாகத் தலைகுனிந்து கேட்டுக்கொண்டிருக்கின்ற பெண்களே இன்றும் அதிகம் இருக்கிறார்கள். இவர்களை விலகி நின்று பார்க்கையில். கசாப்புக்கடை ஆடுகளின் ஞாபகமே வருகின்றது.
இவர்களுக்கு மத்தியில் சிந்திக்கத் தெரிந்த, சுயமரியாதை மிக்க ஒரு பெண் இருந்துவிட்டால் அவளது பாடு அதோ கதிதான். அவள் அலுவலகத்தில் புதிதாக காலடி வைக்கும் போதே "திமிர் பிடித்தவள்" என்று பட்டம் சூட்டி விடுகிறார்கள், சகபாடிகளான ஆண்கள். அவள் ஏதாவது ஒரு பிரச்சினையைப்பற்றி வாய் திறக்கும் முன்னமே தமது குரலை கடுமையாக உயர்த்தி அதட்டிப்பேசி அடக்க முற்படுகிறார்கள். அதையும் மீறி அவள் பேசிவிட்டாலோ, அவள் முன்வைத்த கருத்து எவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்தாலும் பூ இவ்வளவுதானா?என்று ஒதுக்கி விடுகிறார்கள். தங்களது மனசாட்சி ஏற்றுக்கொண்ட ஒரு உண்மையான கருத்தாகத் தான் இருக்கட்டுமே. அதை பெண் ஒருத்தி சொல்லிவிட்டால் போதும் "இவள் சொல்லி நாம் என்ன கேட்பது? ஆண்மை கொப்பளிக்கும் தோரணையில் பல போலியான காரணங்களையும், இட்டுக்கட்டப்பட்ட பிரச்சினைகளையும் மேலே துாக்கிப்போட்டு அந்தக் கருத்தை டமாலென்று உடைத்து விடுகிறார்கள். அதையும் மீறி அவள் ஒருபடி மேலே சென்றுவிட்டால் இருக்கவே இருக்கிறது கடைசி ஆயுதம் "ஒழுக்கக்கேடானவள். அவனை வைத்திருக்கிறாள். இவனை வைத்திருக்கறாள்" என்ற இலவச பட்டம் ('
இவற்றையெல்லாம் தாங்கி தன்வழியில் அந்தப்பெண் சுயேச்சையாக முன்னேறிச் செல்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது மறைமுகமான பல சதித்திட்டங்களை பாதாள உலக வேலைகளைக்கூட ஜாம் ஜாமென்று அரங்கேற்றி எப்படியோ அவளது காலை ஒடித்துப்போட்டுவிடுகிறார்கள். இதே பெண்கள் தம்மோடு சிரித்துப்பேசி, தாம் அவிழ்த்துவிடும் பச்சையான பாலியல் வக்கிரங்களை ரசித்துக்கேட்கிறோம் என்று முன்வந்து விட்டார்களானால் இந்த ஆண்களுக்குக் கொண்டாட்டம் தான். சுற்றிச் சுற்றி வருவார்கள். குழைந்து குழைந்து பேசுவார்கள். சமயங்களில் அவர்களைத் தொட்டுப்பார்த்து ஸ்பரிவடி சுகமும் அனுபவிப்பார்கள்
இந்த நிலைமை பெரும்பாலும் கிழைத்தேய, ஆசிய நாடுகளில் அதிகமாக காணப்படுகின்றது. அதிலும் பாலியல் ரீதியான சுரண்டல்களுக்கு பெரும்பாலும்

Page 12
18 ஆளாகின்ற பெண்கள் படித்த, மத்திய தர வர்க்கத்துப் பெண்களாகவே இருக்கிறார்கள். கீழ்த்தட்டுப் பெண்கள் தமக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறைகளை எவ்வித்திலேனும் தடுக்கும் வல்லமை பெற்றிருக்கிறார்கள். குறைந்த பட்சம் சுடுசொற்களை வீசியாவது, செருப்பைக் கழற்றியெடுத்தாவது அந்த இக்கட்டான நிலைமையிலிருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்கு அவர்கள் பழக்கப்பட்டு விடுகிறார்கள். மேல்தட்டுப் பெண்கள் தமது அதிகாரம், அந்தஸ்து , பணபலம் இவற்றைப் பிரயோகித்து, தம்மை பிற ஆண்கள் நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். மீறி யாரும் வாலாட்டினாலோ, அவனைத் துாக்கியெறிந்துவிட்டு இன்னொரு ஆளை அந்த இடத்திற்கு நியமித்துக்கொள்ளும் வல்லமை அவர்களுக்கு உண்டு. ஆனால், தொழில் புரியும் நடுத்தர வர்க்கத்துப் பெண்கள்தான் கூனுங்குறளும் ஊனமுங்கூடிய நவீனயுக அடிமைகளாக வாழ்ந்து வருகின்றார்கள். எதைப்பற்றியும் வாய் திறந்துவிட்டால் தமது மானம் போய்விடுமே, தொழில் போய்விடுமே, தண்ணியில்லாத காட்டுக்குப் போக வேண்டி ஏற்படுமே என்றெல்லாம் பயப்படுகிறார்கள். இந்த நிலைமையிலிருந்து மீள அவர்கள் எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் எடுக்கும் திராணியற்றிருக்கிறார்கள் என்பதுதான் மிக மனவேதனைக்குரிய விடயமாகும்.
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களது கதையொன்றை அண்மையில் படித்தேன்.அதில் "ரிவரி" என்னும் ஒரு பாத்திரம் வருகின்றது. அந்தப்பாத்திரம் அதி சிந்தனாசக்திமிக்க படைப்பாற்றல்மிக்க எழுத்தாளராக வருகிறது. ரிவரியிடம் பேட்டி காணும் ஒருவர் கேட்கிறார். "நீங்கள் யாருக்காக எழுதுகிறீர்கள்?’
"நான் பெண்களுக்காக எழுதுகிறேன். அடிமைப்பட்டவர்களின் விமோசனத்திற்காகவும், ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காகவும் எழுத வேண்டுமெனில், ஒடுக்கப்பட்டர்களாலும், அடிமைப்பட்டவர்களாலும் ஒடுக்கப்படுகிற, அடிமைப்படுத்தப்படுகிற பெண்மக்களின் விமோசனத்துக்காகவே ஒருவன் எழுத வேண்டும்.” இந்தக்கூற்றை யாரும் மறுக்கமுடியாது. இப்படி யாரோ ஒருவர் எழுதுவதைவிட, சம்பந்தப்பட்ட ஒருத்தி தனது பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொண்டு. வக்கிரமான ஆண்களின் குற்றங்குறைகளை பிட்டுப்பிட்டு வைப்பாளானால் இன்னும் எவ்வளவு நன்றாக இருக்கும்?
இந்தப் பிரச்சினையை உற்று நோக்கின் கல்வியும், சுயேச்சையான பொருளாதாரமும்கூட இன்றைய பெண்களின் நிலையை உயர்த்திவிடவில்லை என்பது புலனாகின்றது. ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்களின் நிலை இவ்வாறு இருப்பது பிரத்தியட்சமானது. ஆயின், ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வாழ்கின்ற நமது பெண்களின் நிலை எவ்வாறு இருக்குமோ என்பதுபற்றிய சிந்தனையும் இந்தக்கணத்தில் மேலெழுகின்றது. 000
சந்தா விபரம் தனிப்பிரதி - 50/= ஆண்டு சந்தா - 400/- (இலங்கை) வெளிநாடு - $20 (us) ஓராண்டுக்கு உரிய சந்தா செலுத்த விரும்புவோர், காசோலை மூலமாகவோ, மணியோடர் மூலமாகவோ அனுப்பலாம். மணியோடரை அல்வாய் தபால் நிலையத்தில் மாற்றக்கூடியதாக அனுப்பி வைக்கவும். (உங்கள் பெயர், விலாசம் என்பவற்றை விரிவாக எழுதவும்)

நதி - O2 கிளை - 01 19 Uொன் விலங்கு
- நீர்வை மேருகிரி இலங்கையிலுள்ள அந்தணர்கள் எனும் பிராமண சமூகத்தின் நிலையை மேலோட்டமாக பார்க்கும் எவரும் அவர்கள் இந்துமதமக்களிடையே மிக உயர்வான ஸ்தானத்தை வகிப்பதாக கருதிக் கொள்வர். ஐயர் என்றும் அந்தணர் என்றும் குருக்கள் என்றும் இவர்களை பிறர் அழைத்து வருதலைக் கண்டு பிராமண வகுப்பார் இலங்கையின் இந்துத் தமிழ் சமூகத்தின் மரியாதைக்கு உரியவர்களாயுள்ளனர் என்றும் நிலவுடைமையாளர்களாகவுள்ள உயர்வகுப்பாரிற்கும் மேலான சமூக அந்தஸ்து பெற்றவர்கள் என்றும் கருதிக் கொள்வர். ஆனால் சிறிது கூர்மையான பார்வையுடன் இலங்கையின் சமூக, சாதிய அமைப்பினை ஆய்வு செய்யும் பொழுது பிராமணர்களின் மறுபக்கம் தெட்டத் தெளிவாகிறது. யாழ்ப்பாண சாதிமான்களால் திண்டத்தகாதவர்களாய் ஒடுக்கப்பட்ட மக்களுக்குள்ள பிரச்சினைகள் பலவும் பிராமண வர்க்கத்தாரிடமும் இருக்கக் காணலாம். அவர்களுக்கு சாதி வேளாளர் சமூகம் கொடுக்கும் மரியாதை வெறும் கானல் நீர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஆனால் மிகுந்த வேதனைக்குரிய விடயம் யாதெனில் பிராமணர்களுள் பலர் உள்ளிட்ட சமூகத்தவர் பலரும் இம்மறுபக்கத்தை உரிய வகையில் உணர்ந்து கொள்ள மறந்தமையாகும். யாழ்ப்ாணத்து சமூக (சாதிய) பிரச்சினை பற்றியே எழுதி வந்த பிரபல எழுத்தாளர் டானியல் முதலியோர் அக்கால கட்டத்திலேயே பிராமண சாதியாரின் பிரச்சினை பற்றி ஓரளவு அறிந்திருந்தனர். கோவிந்தன் எனும் டானியலின் நாவலில் அந்தக் கரையல் புக்கை தின்னிப் பிராமணியிட்டைப் போய்ச் சொல்லு, ஊர் அழிஞ்சாலும் நாளைக்குக் கொடியேற்றத்தை நிப்பாட்டேலாதெண்டு என கோயில் ஐயர் பற்றிய கூற்றாக உயர் சாதி வேளாளரான சண்முகம் பிள்ளை கூற்றாக ஒர் உரையாடல் வருகிறது. (கோவிந்தன், பக் 214) இதன் மூலம் கோவில் ஐயரின் ஏழ்மைநிலை காட்டப்படுகிறது. தரம் குறைந்த அரிசியாலான உணவு இறுக்கமாக அமையாது கரைந்து விடும் என்பது கருத்திற் கொள்ளப்பட வேண்டியது. கிறிஸ்தவ சமயியான கே.டானியல் அவர்கள் கூட உணரும் வகையில் பிராமணரின் நிலை மிக தாழ்ந்திருந்தது.
இவ்வாறு பல கதைகள், நாவல்கள் மூலம் பிராமணரின் நிலை ஓரளவு தெளிவாகிறது. எனினும் முதன்முதலாக யாழ்ப்பாண பிராமணரின் இழிந்த நிலையை தெளிவாக கூறும் நாவல் 1987ல் முரசொலி தினசரியில் தொடராக வெளிவந்து பின்னர் 1989ல் செப்டெம்பர் ம் வெளிவந்த தெணியானின் பொற்சிறையில் வாடும் புனிதர்கள் எனும் V இந்நூலில் தெணி ான்அவர்கள் புதிய
கோணத்தில் பிரா ჯაt ჭი. აჭ#ჭić ჭ?) Dண வர்க்கத்தாரின் பிரச்சினைகளை 遏、■ காணலாம். இதே ஆண்டு (1989) வெளி
யான எழுத்தாளர் "விடிவெள்ளிபூத்தது" எனும் நாவலும் முழுக்க முழுக்க பிராமணிய சாதிப்பிரச்சினையை 60)tDuILDTě6Y60)Lu JöffSlĐ.

Page 13
ஜீவநதி 20
இலங்கையில் பெரும்பாலான இந்து ஆலயங்கள் பெரும்பாலும் தம்மை சாதிமான்கள் என்று அழைத்துக் கொண்ட நிலவுடைமையாளர்களாகிய உயர் வேளாளரின் ஆதிக்கத்திற்கே உட்பட்டுள்ளன. எனவே அவர்களின் ஆதிக்கத்தின் கீழ் அகப்பட்டு ஒடுங்க வேண்டிய நிர்ப்பந்தம் பிராமணருக்கு ஏற்படுதலைசிறந்த முறையில் இவ்விரு நாவல்கள் வெளிப்படுத்திநிற்கின்றன. மேலும் கோப்பாய் சிவம், சிற்பி, தெணியான். பழையூர்.கு.சி.சுந்தரம்பிள்ளை போன்ற சில எழுத்தாளர்கள் பிராமண சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றி சிறுகதைகள் பல எழுதியுள்ளனர்.
யாழ்ப்பாண சமூகவமைப்பில் உயர் குடிநிலமானியகாரராகவிளங்கியவர்கள் வேளாளர்களேயாவர். இதன்படி பிராமணரும் இவர்களில் தங்கியிருப்போராக வறுமைமிக்க வகுப்பாராக காணப்பட்டனர். ஆனால் மேற்படி நிலவுடைமைச் சாதிமான்கள் பிற சாதியினரை அடக்கியது போலல்லாது அந்தணர்களை கூழைக்கும்பிடு போட்டு அவர்களே அறியாத வகையில் பொன் விலங்கிட்டு அடக்கி ஒடுக்கி வைத்திருந்தனர். "கஞ்சி குடிப்பதற்கில்லார் அதன் காரணங்கள் இவை யென்னும் அறிவுமிலார் ஆக அந்தணர்கள் காணப்பட்டனர். இன்று வரை இதன் தாக்கங்களைக் காணலாம்.
விரிவாக உலகமயமாதல் விரைந்து நிகழும் இக்காலத்திலும் ஆசாரம், சாதியம், தெய்வ காரியம். திட்டு எனும் பெயர்களால் அந்தண மரபினர் விரும்பிய உணவை உண்பதையோ, விரும்பியபடி விரும்பிய தேசங்களுக்கு செல்வதையோ விரும்பிய உடை அணிவதையோ நாகரிகமாகப் பெயர் சூட்டிக் கொள்வதையோ, கல்வி கற்று உத்தியோகங்களைப் பெற்றுக் கொள்வதையோ, சாதியவெறிபிடித்த மேட்டுக்குடி மரபினர் விரும்பாத நிலையே காணப்படுகிறது. "இப்படித்தான் வாழ வேண்டும்’ என ஒவ்வொரு பிராமணக் குழந்தையும் வலுக் கட்டாயமாக நிர்ப்பந்திக்கப்படுகிறது. அடிப்படை உரிமையான கல்வியறிவைக் கூட நீங்கள் தெய்வகாரியம் செய்யப் பிறந்தோர் உங்களுக்கு கல்வி எதற்கு' என்று மரியாதைப் போர்வையில் மறுதலிக்கிறார்கள். இவ்வாறு இன்று வரை சாதிவெறி பிடித்த சமூகம் பொன் விலங்குகளிட்டு பிராமணரை அடக்கி வைத்து தமது காரியத்தைச் சாதித்து கொள்கிறது. பிராமண சாதியின் அழிவு, சாதியற்ற சமத்துவ சமுதாயத்தை இந்துக்களிடம் உருவாக்கி விடும் என சாதிய வெறிபிடிப்போர் ஆழமாக நம்புவதும் இதற்க்கு காரணம்.
இந்தியாவில் பிராமணரின் நிலை உயர்வாகவுள்ளதை கண்டு இலங்கையிலும் பிராமணியம் மேலோங்கியுள்ளது என்றும் சாதியக் கோட்பாட்டின் மூலமே பிராமணியம் தான் என்றும் கண்களும் காதுகளும் மூடியவாறுபல அறிஞர்கள் கூட முழங்கியுள்ளனர். இந்தியாவிலிருந்து ஈழத்தின் தனித்துவ சாதிக் கொள்கைகளை அவர்களால் பிரித்தறிய முடியாமற் போனமை மிகவும் வருந்துதற்கு உரியது. உணவு,உடை, பேச்சு, வாழ்க்கைமுறை என்று பலவற்றாலும் பிராமணர்கள் ஒடுக்கப் பட்டிருக்கிறார்கள். ஆனால் இவற்றை இன்னும் அவர்கள் கூட பூரணமாக உணரவில்லை. இலங்கை பிராமணர்களுள் குறிப்பிடத்தக்க ஒரு சிலர் மட்டுமே பேராசிரியர்களாகவும் அது போன்ற பெரும் பதவிகளையும் வகித்தோராவர். மற்றையோரின் வறுமை, சமூக கட்டமைப்பு என்பனவும் அவர்களின் தொழிலும் அவர்களை வளர்ச்சி பெற தடைக்கல்லாகி விட்டது.

நதி - O2 கிளை - 01 21 தெய்வத்தின் பேராலும், மதானுஷ்டானத்தின் பேராலும், சாதியத்தின் பேராலும் பிராமணர்கள் சாதிமான்களான உயர் நிலவுடைமையாளரால் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளனர். இன்னும் அது தொடர்கிறது. இதை மேற்படி பிராமண சமூக இளம் தலைமுறை ஓரளவு உணர்ந்திருக்கிறது. ஆனால் அது போதுமானது அல்ல. துணிவுடன் பொன் விலங்குகளை உடைத்தெறிந்து புத்துணர்வோடு வளர வேண்டிய அவசியத்தை அவர்களும் சமூக ஆர்வலர்களும் சாதிய எதிர்ப்பு சமத்துவவாதிகளும் உணர்ந்து கொள்ள வேண்டும். நான் எல்லா உயிரிடத்தும் சமமாயுள்ளேன். எனக்கு பகைவனுமில்லை.நண்பனுமில்லை. ஆனால் என்னை பக்தியோடு வழிபடுவோரிடத்தே நானும் என்னிடத்தில் அவர்களும் உள்ளனர்”என்கிறான் கண்ணன் (பகவத்கீதை9:29)
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமையான்' (வள்ளுவர்)
புதுங்புனல்
சாஹரிகரள், யா/நெல்லியடி மத்தியமகாவித்தியாலயத்தில் உயர் தரத்தில் கலைப்பிரிவில் கல்விகற்கின்றார். இவர் கவிதை, கட்டுரை எழுதுவதிலும், வாசிப்பதிலும் சிறந்த ஆர்வம் உள்ளவர். சமாதான தின கவிதைப்போட்டியில் யாழ் மாவட்டத்தில் 2ம் பரிசு பெற்றவர். இவரை ஜீவநதி அறிமுகம் செய்து வைப்பதில் பெருமை கொள்கின்றது.
கற்பனைகள் ஆயிரம் தான் மனதினிலே துளிர்த்து நிற்கும் சிந்தனைகள் ஆயிரம் தான் சிறகுகளை விரித்து நிற்கும்
கவிதைகள் ஆயிரம் தான் உள்ளத்தில் சிந்தி நிற்கும் - அந்த வேளையிலே தமிழ்மொழிதான் உள்ளத்தில் முந்திநிற்கும்
எண் பேச்செல்லாம் கவிதையாக தமிழ் புகழ் தாங்கி நிற்கும் கடல்போல கற்பனைகள்
உள்ளத்திலே தேங்கி நிற்கும்
கவிகுை பாடும் வேளையிலே.
வீசி வரும் தென்றலோடு பாட்டுக்கள் தங்கி நிற்கும் - எனி உர்ைமை பேசிவரும் வார்த்தைகள் கவிதையாய் பொங்கி நிற்கும்
கண்ணித்தமிழ் எண் மனதில் விளையாட்டு ஆடி நிற்கும் அமிழ்தினும் இனிதான தமிழ் சுவை தான் கூறுநிற்கும்
உள்ளத்தில் கற்பனைதான் உறவாறு மகிழ்ந்து நிற்கும் - தமிழ் வெள்ளமாய் எண் மனது வேடம் ஒன்று தாங்கி நிற்கும்

Page 14
22
அறுவைச் சிகிச்சை
பலகோடி ஆணர்டுகளாய் பாரிலுள்ளோர் துண்ைடிரும்பை 4)UD4)34)löTáj Jppalaj வேளையிலும் விழுங்கிப்பின் நலமிழந்து நலிகின்றார் நலவதற்தம் முடியாமல் dflaoGuardi (biolGua திண்டாடிக் கக்குதற்கோ GIGübGRDGaoWillsüboğ Oதால்லை)யலலாம் எடுத்தியம்ப முடியாமல் பல்லைத்தான் கழுத்தபடி ιατόρι ουουτώ ειδιώματα, மைல்லத்தம் முகர்னேயே மேதைகள்போல் முறுவலித்துத் தைால்லையையே கைாடுத்ததோடு தோதில்லா வழிசைன்ற பித்தரிவர் என்கிறன்றும் பிடிவாதக் காதரைன்றும் மைத்தத்தான் புவிமீதில் மேதைகள் போல் பழித்தார்கள் சத்தியமாய் அவர்கள் தான் தாமுணட இரும்பதனைச் சித்தியினால் கக்கிவிட்டார் சிலரையவர் சிக்கவைத்து சிறுவயதில் இரும்புதனை திண்னுகின்ற போதினிலே உறுத்தியுமே கக்கவைத்தாள் உணர்டவர்க்கும் கக்குகின்ற தறுவழியை காட்டிய்யின் தாடவைத்தார் நாடியவர் விறுவிறைணக் கக்கினார்கள் விந்தையதை மற்றவர்க்கும்
2) gigs. D6DDT&ICT celebija)VD4UT ஒழியாமல் எழுதிவைத்தார் மறுவற்ற மறையதனை வடிவாகக் கற்றவர்கள் 4)ZhigojocalDelë vëllezëvD வேடிக்கை காட்டுகிறார் புறுபுகிறனச் சொல்லித்தான் புதுப்புதுவாய் மிகாதரசம் கொடுப்பதற்குத் தனித்தனியே 4)காள்கைகளை உருவாக்கி அடுக்தமிது தானுமக்கே அருந்துங்கள் என்றிவர்கள் மிடுக்காகச் சீர்திருத்த விந்நானம் செய்கின்றார் அடுக்தமைன அங்கங்கே அவரவர்கள் அதைப்பருகி என்கிறன்றும் வயிற்றுவலி இருக்த)தன்று கதறுகின்றார் தன்றிதற்கு வழியேதும் நானறியேன் என்றபடி ஒன்றுமக்தக் காட்டுகிறேன் உணர்வீரோ யுத்தம்தான் தன்லாத அறுவையுடன் ðing&u (bdð öflöld;&Döfðælavi மகாவைத்ய நாதனவன் நடத்துகிறான் அறுவைக்தப் புகாதிருக்க ஆசையுமக்தப் பூணனணிணம் இருக்தமைன்றால் வாகாக இரும்புகக்தம் வளமான சித்துவித்தை மகான்களினால் எழுதிவைத்த மத்திரத்தைப் பாருங்கள்.
- பூ சோதிநாதன்

ஜீவநதி
23
*கரை. தேடும். ஒடங்கள்”
எல்லா ஆட்டமும் முடிஞ்சுபோச்சு. மரண அமைதியாய் வீடுஇருக்கு, வீட்டுச் சாமான்கள் எல்லாம் சிதறிப் போய் கிடக்கு. அதுவும் இப்பபுதிசாய்வாங்கிப் போட்ட “பிளாஸ்ரிக் கதிரை முத் தத்தில் கால் முறிஞ்சு போய்' என்னை மாதிரி எழும்ப முடியாமல் கிடக்கு ஜன்னல் கண்ணாடி அரைவாசி ஏற் கனவே உடைஞ்சு போய் கிடந்தது இப்ப திரும்பவும் உடைஞ்சு கண்ணாடி எல்லாம் சிதறி என்ரை பிள்ளையின்ரை 6TŠŤ BT6Aob LDTórf.
நேரமோ பன்னிரண்டு மணிக்கு மேலே போட்டுது மூச்சுவிடக் கஸ்ர மாய்க் கிடக்கு. கிரகம் இழுத்துப் போட்டு அடிச்சதில பிடரி சரியாய் வலிக்குது 'அந்தாளுக்குபோட்ட சாப்பாடு 'குசினிக்குள்ள சிந்துண்டு போய் இருக்கு.பூனையும் பயந்து பயந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கு.
‘என்ரை பிள்ளையள்' சாரைப் பாம்பைக் கண்ட எலியளைப் போல 'அயல் வீடுகளில் ஒடி ஒளிந்தவர்கள் மெல்ல மெல்ல பயந்தபடி வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்
கணேஷ், மாலதி, ரகு, சுமதி
தலைமயிரைக்கோதி பின்னு க்கு முடிக்கிறன் ‘கடவுளே தினமும் இந்த நரகத்தில் சிக்கிக்கொண்டு நெஞ்சு பதபதைக்கின்றது இப்படிநிலை எனக்கு வருமா? நான் என்ன பாவம் செய்தனான் இந்தப் பேயாட்டத்தை கூக்குரலை அட்டகாசத்தை எத்தனை காலத்திற்குதான் நான் தாங்கிக் கொண்டு இருக்கப் போறன்.?
'அம்மா எழும்பம்மா ஒவ்வொரு நாளும் பக்கத்து விடுகளில் போய் ஒளிச்சு நிக்க வெக்கமாய் கிடக்கு,
- சி.கதிர்காமநாதன் அவையள் எங்களை பரிதாபமாய் பாக்கினம்
'உந்தாளை ஏனம்மா நீங்கள் காதலிச்சு கலியாணம் கட்டினிங்கள்.
'உந்தாள் ஒரு அப்பாவே பேயைவிடமோசம்
'சின்ன வயசில இருந்துநானும் பாத்துக் கொண்டுதான் வாறன். இனியும் சும்மா இருக்கேலாது உங்களில கை வைச்சால். நான் அப்பனென்டு பாக்க மாட்டன் திருப்பி அடிப்பன்.
மூத்தவன் கணேஷ் ஆவேச மாயப் பெருங்குரலில் கத்தினான் மற்றவர்கள் திகைப்புடன் விம்மியபடி நின்றார்கள். 'ஐயா என்ரை பிள்ளையஸ் நிம்மதியாயப் படிச்சு விளையாடி, நித்திரை கொள்ளிற நேரத்தில ஒடி ஒளிச்சுக் கொண்டு இப்ப மூத்தவன் தகப்பனை அடிப்பனென்டு சொல்லுறான் 'உங்க உன்ரை புருஷனைபார். காலேல போயேக்க இனி குடிக்க மாட்டனென்டு சத்தியம் பண்ணிப் போட்டு இப்ப என்ன மாதிரி ஆட்டம் போட்டிட்டு படுத்துக் கிடக்கிறார்.
செத்த பிணம்போல் சண்முகம் கை. கால்களை அகல விரிச்சபடி, இடுப்பில் 'சாறம் அவிழ்ந்து கிடக்க. அவன் இப்போது இந்த உலகத்தில் இல்லை எங்கேயோ போய்க் கொண்டு இருந்தான். அவன் பின்னேரம் அடித்த ரண்டுபோத்தலுக்கு மேலான 'கசிப்பு' அவனை அழைத்துக்கொண்டு. சி. எங்களை அடிச்சு துரத்திப்போட்டு படுத்து. என்னால் சும்மா இருக்க முடியவில்லை. வசை பாடினேன் 'உன்னை நம்பித்தானே அப்பா, அம்மா இனசன மெல்லாத்தையும் விட்டுப் போட்டு வந்தனான். கலியாணம்

Page 15
முடிக்கேக்க நீ குடிக்கிறது தெரியாமல் போச்சு. உடம்பு அலுப்புக்கு குடிக்கிறா யெண்டு பரிதாபப்பட்டன். கடைசியில இப்படி ஆகுமெண்டு நான் நினைக்க வேயில்லை. யார் வீட்டை வருகினம் என்ரை அப்பா, அம்மா சகோதரங்கள் யாரும் வீட்டை வரக்கூடாது. தெரிந் தவர்கள் உறவினர்கள் என்னோடு கதைக்கக்கூடாது. கொஞ்ச நேரம் தன்னும் ஆம்பிளையஸ் யாரேனும் என்னோடு கதைச்சால். தூங்கிக் கொண்டிருக்கும் மிருகம் மாதிரி பேசாமல் பாத்துக் கொண்டிருக்கும். கதைச்சவர் போனபிறகு
'நீ. இப்ப ஆள் பிடிக்கத் தொடங்கிட்டியே,
“எதுக்கு அவன் இங்க வந்திட்டுப் போறான்"
இப்ப. அதான். ராவில
என்னோட படுக்கிறதுக்கு பஞ்சிப் படுகிறாய் இப்ப நல்ல இளம் பொடி யனாய் பாத்து வைச்சிட்டாய்.
‘ஒருத்தரும் படலையைத் திறந்து விட் டைவரக் கூடாது. நீயும் வெளியால போகக் கூடாது.
‘கடவுளே இந்த மனுசனுக்கு என்ன நடந்தது? விசரா? ஏன் இப்படி சந்தேகப் படுகிறார். குடித்தால் இந்தக்குணமா? யோசிக்க யோசிக்க எனக்கு தலைவலிக்குது
'அம்மா. மூத்தவனின் குர்ல் ‘என்னப்பு. 'எனக்கு இப்ப நித்திரை வருததில்லை ராவிலபடிக்க கஸ்ரமாய்க் கிடக்கு, இனியும் இப்பிடி இருக்கேலாது நீயும் இப்படி அடிவாங்கி கஸ்ரப்பட்டுக் கொண்டு இருக்கப் போறியே? தம்பி, தங்கையைப் பாருங்கோ அதுகள் என்ன பாவம் செய்ததுகள்?நான் ஒருமுடிவுக்கு வந்திட்டன்.
அவன் தாயைப் பார்த்தான்
"S.ub.LDst. உந்தாளை விட்டிட்டு பேசாமல் வாம்மா நாங்கள்
நதி - 02 கிளை - 01 24
எங்கேயோ போய் இருப்பம்
எனக்கு பிடரி வலியைவிட அவன் சொன்னது.
என்னம்மா. பாக்கிறியள் உந்தாள் குடியை விட்டுட்டு திருந்தி. நல்ல மனுசனாய். மனுசிபிள்ளை யளோட வாழுமெண்டு இன்னும் நம்புநியே?நீயும் எத்தனை தரம் கெஞ்சி மன்றாடியிருப்பாய். குடியை நிப்பாட்
'டுங்கோ எண்டு.நாங்கள் ராவிலஉங்கட
சண்டை தொடங்கேக்க அகதிகள் போல ஒவ்வொரு நாளும் யாற்றையும் வீடு வாசல் பற்றை யெண்டு ஓடி ஒளிக்கிறம் ஆமிக்காரங்கள் எங்கள பாத்து பரிதாபப்படுகினம். சொல்லம்மா நான் சொல்லுறது சரியெல்லே.?
நான் விக்கித்து மகனை பார்க்கின்றேன். தகப்பன் மாதிரி நெடுநெடுவென வளர்ந்து விட்டான் இவன் குழந்தையல்ல.
இவன் என்ன சொல்கிறான் ‘விட்டுப்போட்டுவா "அப்பு. இது. நீ. சொல்லியே நான் செய்யவேனும்,
எத்தனை சந்தர்ப்பங்கள். புத்திமதிகள் 'பிள்ள. நான் சொல்லு றதைக்கேள். இவனை விட்டுப் போட்டு 'கண்காணாத இடத்திற்கு போ. அப்பதான் இவங்களுக்கு புத்திவரும்.
"இஞ்சை. நீ. ஒமெண்டு சொல்லு, அந்தாள் உன்னை கலியாணம் கட்ட விரும்புது
சண்முகத்தின் குறட்டை
இப்பபலமாக கேட்டது
‘என்னம்மா யோசிக்கிறாய் "அப்பு போய் படுங்கோ. அவன் மனமின்றி அகன்றான் 'அம்மா. உந்தாளை நம்பாத. குடிச்சு நோயில் ஆஸ்பத்திரி யிலவிட அங்கயிருந்து ஓடிவந்த ஆளெல்லே
எங்கேயோ சேவல் கூவியது. இருள் கனத்துக் கிடந்தது.
‘என்ரை வாழ்க்கையில

ஜீவநதி
மாற்றம் வருமா? இப்படி பிள்ளையளை வைச்சுக்கொண்டு அடி வாங்கி வாழ (66.6RLDIT?
பிள்ளைகள் மூலைக் கொருவராக படுத்துவிட்டனர். நான் திடுக்கிட்டேன். அருகில் சாராய வாடையுடன் கூடிய மூச்சுக் காற்று வீசியது. என் இடுப்பை சொரசொரப்பான வலிமையான கை சுற்றி வளைத் திருந்தது.
சே. இண்டைக்கு. ஒருத்தன் வாங்கித் தந்திட்டான். நாளைக்கு குடிக்க மாட்டன். வா. கிட்டவா. என்ரை மனுசி என்ரை மனுசிதான்
கடவுளே கடினமான இரவு. விலகிக் கொள்ள முடியாத நிலை இருளோடு இருளாக சாராயமணமும். வியர்வை நாற்றமும். வாயில் வரும் ‘பீடிப்புகையின் நெடிலும். அவனது பலாத்காரத்தில் நான் திணறினேன் எத்தனை காலங்கள் இந்த நரக அவஸ்தைகள்
ஐயோ. வேண்டாம். என்னால் தாங்கலாமல் கிடக்கு. பிள்ளையளி அங்கால படுத்துக்கிடக்கு. நான் தடுக்கின்றேன் விலத்த முயல்கிறேன். எனது பலம் எந்த மூலைக்கு. அவன் விலங்காய் நின்றான். அது உறுமியது கர்சித்தது. ஆக்கி ரோஷமாய் பாய்ந்தது. @65「@l பலத்தைக் காட்டியது. நகங்களால் விறாண்டியது. "ஐயோ. போதும் நிறுத் துங்கோ
'பிள்ளையஸ் கிடந்தால் எனக்கென்ன. என்ன நினைப்பில் படுத்துக் கிடக்கிறாய். வேண்டாமோ. இப்ப என்னை பிடிக்குதில்லையோ?. அந்தப் பிள்ளையஸ் எனக்கு பிறந்த பிள்ளையஸ் தானோ..?
நான் வாயை அடக்கிக் கொண்டேன், மிருகத்திடமிருந்து. எதனை எதிர்பார்க்க முடியும்.?
நானே தேடியதை நானே
25
அநுபவிக்க வேண்டும் பிள்ளையளிர் உண்மையில் நித் திரையாகி இருப் பார்களா? நெஞ்சு பலமாக அடித்துக் கொண்டது புருஷன் என்பவனின் பசி அடங்கி விட்டது. அது மல்லாந்து படுத்துக் கிடந்தது. நான் புரண்டு புரண்டு படுக்கின்றேன் நித்திரை வரவில்லை. ஒரே யோசனை
. பிள்ளைகளின் கதி ... 6Tg5iabiToolb. எத்தனை நாளைக்கு நான் அவர்களை என் பிடியில் வைத்துக் கொள்ள முடியும்.?
மின்னல் போல் வளர்ந்து விட்டார்கள். அவர்கள் தாங்கள் தரீர்மானிக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள். பிரச்சனை என்ன என்பதை அவர்களால் விளங்கிக் கொள்ள முடிகின்றது.
எப்படியெல்லாம் கேள்விகள் கேக்கின்றார்கள்
‘எப்படியம்மா. உந்தாளை காதலிச்சு கலியாணம் செய்தனி.?
'உந்தாள் ஒரு அப்பனே. பேயைவிட மோசம் 'அம்மா. இனியும் அப்பனென்டு பாக்கமாட்டன் ஒரு நாளைக்கு. கை வைப்பன். 'உந்தாளை விட்டுப்போட்டு வாம்மா. நாங்கள் தூர எங்கையாவது போவம்
'உந்த. மனுசனை இன்னும். நீ. நம்பாத அக்கம் பக்கத்து சனங்கள் என்ன சொல்லுதுகள்
'உன்ரை முகத்துக் காண்டி. பிள்ளையஞக்காண்டி பாக்கிறம். இல்லையெண்டால். உன்ரை புருஷன் செய்யிற கூத்துக்கு. பொலிசில பிடிச்சுக் கொடுக்கவேனும். பேச்சுக் கள். திட்டுக்கள். வசைவுகள் நான் நினைச் சிருந்தால். இந்தப் பிரச் சினைக்கு ஒரேயடியாயப் தீர்வு கண்டிருப்பன். ஒரு இரவு யோசனை வந்தது சின்னத் தம்பி LDITUDIT தோட்டத்துக்கு அடிக்கிற மருந்துப்

Page 16
போத்தல் வைக்கிற இடம் தெரியும். யோசித்தனான். ஒரேயடியாய் போயிட வேண்டுமென்று. ஆனா என்ரை பிரச்சனை. ஒரு நொடியில சரி. என்ரை பிள்ளைகளின்ரை எதிர்காலம்.
ஆனா நான் செத்துப்போனா என்ரை புருஷன் குடியை விட்டு விடுவானா..?
பிள்ளையளை அம்மா இல்லாத பிள்ளையளெண்டு பாத்து கொள்வானா?
எடுத்த முடிவும் மாறிப்போனது
விடிந்து விட்டது. தலை கிறுகிறுத்தது
'அது' இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தது. பிள்ளையஸ் என்னை சுற்றிக் கொண்டார்கள். எனக்கு அவர்களை பார்க்க கூச்சமாய் இருந்தது ‘என்னம்மா.என்ன முடிவெடுத் திருக்கிறியள்.?
"எங்கையாவது போவம்.? 'பள்ளிக்கூடத்தில பெடியன்கள் உந்தாளைப்பற்றி கதைச்சு சிரிக் கிறாங்கள்.
"கேள்விகள். கேள்விகள்." உறங்கிக் கொண்டிருந்தது. விழித்து விட்டது. சோம்பல் முறித்து கண்களை கசக்கியபடி நெருங்கி வந்தது.
‘என்னப்பா. முத்தத்தில. கதிரை முறிஞ்சு போய் கிடக்கு ராத்திரி என்ன நடந்தது.?
Stil மனிதனா? gulfsorLDIT?
ராத்திரி என்ன நடந்ததா? தெரியாதாம். பிள்ளைகள் முறைத்துக் கொண்டு இருக்கிறார்கள்
'சத்தியமாய் நான் குடிக்கா மத்தான். வரப்பாத்தனான் வழியில பிடிச்சுப்போட்டாங்கள் விலத்த முடியேல்ல அப்பாவியாய் நின்றது.
'அம்மா. முடிவு சொல்லம்மா. இனியும் சகித்துக் கொண்டு இருக் கலாது. உந்தாள் உழைச்சு உங்கட கையில காசு கொண்டந்து தந்து
(86)(a)
நதி - O2 கிளை - 01 26
எவ்வளவு காலம் ஆகுது?நீங்கள் வீட்டு வேலை போய்த்தானே எங்கட சீவியம் போகுது. நான் இனி உழைப்பனம்மா. நான் வீடொன்று பாத்து வைச் சிருக் கிறன், எல்லாரும் போவம் நாங்கள் சந்தோஷமாய் இருப்பம்.
மகன் சொல்லியபடி என்னைப் பார்த்தான். முகத்தில் தீர்க்கமான முடிவு தெரிந்தது.
'அம்மா இனியும் நானும் என்ரை சகோதரங்களும் அவமானப்பட்டு. கேவலப்பட்டு. வாழ்ந்து கொண்டு இருக்கலாது. உவரை தனிய விட்டால் தான் திருந்துவர். அந்தாளுக்குத் தெரியும். தான் எந்தக் கூத்து ஆடினாலும். நாங்கள் தன்னை விட்டு போக மாட்டமெண்டு தன்னை விட்டால் யார் இருக்கினம். எங்களை பாக்கிறதுக்கு. அந்தத் துணிவுதான்.
எனக்கு யார் இருக்கினம்? அம்மா, அப்பா, சகோத ரங்கள், உற்றம், சுற்றம் எல்லாம் இழந்து ஐயோ. நான். என்ன. செய்யிறது.? மகன் மிக அருகில் அமர்கின்றான் 'அம்மா. யோசியாதை. உந்தாள் அடிச்சு அடிச்சு உன்னை சாக்காட்டி போடும்
'இவ்வளவு காலமும் அடிபட்டு வாழ்ந்தது போதும் எங்களோட வாம்மா போவம். அவன் என்னை இறுக அணைத்தான் அதில் எனக்கு நிம்மதி தெரிந்தது.
மாலை இருள் விரைந்து வந்து கொண்டிருந்தது சண்மும் படலையை eBIT6ft 6) அடித்து திறந்தான். வாயிலிருந்து கெட்ட வார்த்தைகள் தெறித்து விழுந்தன
'ஏய். எங்கையடி. போட்டியள் வீடு அமைதியாய் இருந்தது LDBulgulub finétéf6) (SLIITLLIT6ör விடுமீண்டும் அமைதியாய் இருள் மேலும் அவனை சுற்றிச் சூழ்ந்தது. 000

ஜீவநதி 27 சக்கறத்தின் கண்டுபிடிப்qன் அதன் 2) OGoooagõ
- செ.கிருஷ்ணராஜா
இலத்திரனியல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் அவ்வாறான ஒரு வாழ்க்கைமுறையினை அடைந்து கொண்டமைக்கு ஏதுவாக அமைந்த எமது முன்னோரின் அனுபவத்திரட்டினைப் பற்றிச் சிந்திக்கின்றோமா? அல்லது களிமண் தட்டுக்களில் எழுத்துக்களைப் பொறித்து வைத்த மனிதன்,கணினிவரைக்கும் அவற்றை எவ்வாறு எடுத்துச்சென்று உபயோகித்துக்கொள்ளக் கற்றுக் கொண்டான் என்ற வினாக்களை முன்வைப்பதன்வாயிலாக விஞ்ஞானம் தோன்றி.வளர்ந்த கதையை ஓரளவிற்கு விளங்கிக் கொள்ள எத்த்ணிக்கலாம் இங்கேயே சக்கரத்தின் கண்டுபிடிப்பும்,அதன் உபயோகமும் அச்செயலுக்குரிய இயங்குதளமாக உருவாக்கம்பெற்றிருந்ததைக் கண்டுகொள்ளமுடியும் ஆங்கிலத்தில் Wheel எனக்குறிக்கப்பட்ட சக்கரம்புதியகற்காலப்பண்பாட்டின் இறுதிக்கட்டத்தில் எம் முன்னோரால் கண்டுபிடிக்கப்பெற்று, உயோகிக்கப் பட்டிருந்தமைக்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன இற்றைக்கு 10000 வருடங்களிலிருந்து இப் புதிய கற்காலப் பண்பாடு தென்னாசியாவிலும், ஐரோப்பாவிலும் உச்சமான நிலையில் இருந்தமையை அகழ்வாய்வுசான்றுகள் உறுதிப்படுத்தியுள்ளன. செம்பு உலோககாலம் தோன்றும் வரைக்கும் அதாவது இற்றையிலிருந்து5000 ஆண்டுகள் வரைக்கும் அப்புதிய கற்காலத்திற்குரிய நிலையான பயிர்ச் செய்கைப் பொருளாதார முறைமையை அம்மக்கள் உருவாக்கி வாழ்ந்துள்ளனர். பயன்பாடுமிக்க விலங்குகளை காட்டுவிலங்குகள் மத்தியிலிருந்து இனங்கண்டு அவற்றைவிட்டுமிருகங்களாக வளர்க்கத் தொடங்கியிருந்த காலம் அப்புதிய கற்காலமாகும். தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டதால் அவற்றை அரைத்து மாவாக்குவதற்காக அரைகற்கள் (Grinders) உருவாக்கப்பட்டன. விளைநிலத்திலிருந்து தானியப் பொதிகளை வாழும் மனைக்கு எடுத்துச் செல்வதற்கேற்ற வண்டிகள் உருவாக்கப்பட்டன. அவ்வண்டிச்சில்லுகள் நாளடைவில் பானைவணைவதற்கும் நகரங்களை உருவாக்குவதற்கும் கிணற்றிலிருந்து நீரை பொறிமுறையடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கும் உதவிய முறையே தயவசக்கரமாகவும் வண்டிற்சில்லாகவும் நீர்ச்சில்லாகவும் மாற்றமடைந்த ஒர் இயந்திரப் பொறிமுறையாக வளர்ச்சியடைந்தது. அண்மைய மத்திய கிழக்குப்பிரதேசத்திலுள்ள லிடியா (Lydia) என்ற இடத்திலேயே காலத்தால் முற்பட்ட சக்கரப்பாவனை கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்லியல் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. புதியகற்காலத்தில் நிகழ்ந்த இந்த அறிவியல் வளர்ச்சியே பின்னர் புராதன நதிக்கரையோரங்களில்நகரங்கள் உருவாகி வளர்ந்தமைக்கும் தொழிற்சாலைகள் பெருகியமைக்கும் வானைநோக்கிய கட்டிடங்கள் அமைந்தமைக்கும் அடிப்படைக் காரணமாகியது.
கிழக்காபிரிக்காவில் காணப்பட்ட நைல்நதிநாகரிகம், மத்தியகிழக்கில் தோற்றம் பெற்ற சுமேரிய, பபிலோனிய நாகரிகங்கள், சீனாவில் தோற்றம்பெற்றமஞ்சள்நதி நாகரிகம், மேற்கிந்தியாவில் தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்த சிந்து வெளிநாகரிகம், இலங்கையில் இராசரட்டையில் தோற்றம் பெற்றிருந்த நீர்ப்பாசனவியல் நாகரிகம் ஆகியன சக்கரத்தின் உபயோகத்துடன் நகரங்களை உருவாக்கி, போக்குவரத்து வலைப்பின்னலூடான மக்கள் தொடர்பினை அந்நகரங்களுக்கேற்படுத்தி, கிராமங்களி லிருந்து உற்பத்திப் பொருட்களை நகரங்களுக்கு எடுத்து வருவதற்குதவியாக

Page 17
28 சில்லுகளினை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காளைமாட்டு வண்டில், குதிரை வண்டில் போன்றவற்றின் பயன்பாட்டினை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தன. இவ்வாறு உருவாகிய சக்கரம் (Wheel) இற்றைக்கு 10000 ஆண்டுகளுக்கு முன்னரிலிருந்தேமனிதவள நாகரிகத்தின் அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்துகொண்டிருப்பதனைக் காண் கின்றோம். அவற்றின் பன்முகப்பயன்பாட்டினை பின்வருமாறு தொகுத்துக் குறிப்பிடலாம் அ) நிர்ச்சில்லு
நான்காயிரம் மைல் நீளமான நைல்நதிமீது படகைச் செலுத்திய எகிப்தியர்கள் இந்நீர்ச்சில்லுப்பாவனையை பொறிமுறை அறிவியலில் பயன்படுத்திFirst Navigaters in the World என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டிருந்தனர். கடல் கழிமுகப்பரப்பிலிருந்து குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட இடைவெளித்தாரத்தை இலக்காகக் கொண்டுநீர்ச்சில்லின் உதவியுடன் (Water Log wheel) நதியின் மேனோக்கிய திசையில் படகு செலுத்தப்பட வேண்டிய கன அளவு உள்ள நீர்க் கொள்ளளவுக்கான இயந்திரப் பொறிமுறையாக அங்கு நிர்ச்சில்லு உபயோகிக்கப்பட்டமையைக் காணலாம். அமெரிக்காவிலுள்ள ஐம்பெரும் பேரேரிப் பிரதேசத்தில் இந்நீர் பூட்டுப்பாவனை இற்றை வரைக்கும் இருந்து கொண்டிருப்பதனைக் காணலாம். ஆ) குயவசக்கரம்
Potters Wheel எனக்குறிப்பிடப்படும் குயவசக்கரம் மனிதநாகரிக வரலாற்றில் ஒரு பெரும் பாய்ச்சலையே ஏற்படுத்திவிட்டிருந்தது. விதம் விதமான மட்பாண்ட உற்பத்திகளுக்கு அடிப்படையாகபெரும் எண்ணிக்கையிலான மிகவேகமான உற்பத்திக்கு அடிப்படையாக தயவசக்கரம் விளங்கியது. இக்குயவசக்கரத்தைக் கையாண்ட சமூகம், மொழிக்குடும்பத்தினர். பிரதேசம் என்பவற்றிற்கேற்ப வடிவமாற்றம், மாதிரியமைப்பு. சேர்க்கை, பருப்பம் என்பன அமைவுற்றிருப்பதனைக் காணலாம். பண்பாட்டுத் தனித்துவம் இக் குயவசக்கரத்தினூடாக வெளிப்படுத்தப்பட்ட வகையைக் காணும் போது அப்பொறிமுறை ஆற்றியிருந்த பங்கும் பணியும் பற்றி அறியமுடிகிறது. இ) உழண்டி : நெம்புகோல் : உருளை
புராதன நதிக்கரைகளில் உருவாக்கப்பட்ட நகரங்களின் உட்கட்டுமானத்திற்கு மிகவும் அடிப்படையாக விளங்கிய இப்பொறிமுறைச் சாதனமானது மிகவும் பாரமான - கனதியான பொருட்களை மிகவும் இலகுவாக நகர்த்தக்கூடிய வலுவைக் கொண்டதாக விளங்கியது. பிரமிட்டுக்களைக் கட்டுவதற்கேற்றமிகப்பிரமாண்டமான கற்துண்டுகளையும், கற்சலாகைகளையும் உருளையூடான நெம்பு கோல் தத்துவத்தினூடாகவே எகிப்தியர் நகர்த்தியிருந்தனர். மாடிக்கட்டிடங்களையுடைய சிந்து வெளிமக்கள் உழண்டியின் உதவியுடனேயே தமது ஜீவனோபாயத்தினை நகர்த்திச் சென்றிருப்பதனைக் காண்கின்றோம். நீர்ச்சில்லின் உதவியுடன் கிணறுகளிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு, பின்னர் உழண்டிகளின் உதவியுடன் அவை மாடிக்கட்டிடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
நவீன விஞ்ஞானத்தில் சக்கரம் பல்வேறு வடிவங்களில் உபயோகிக்க ப்படுவதனை மக்கள் காண்கின்றார்கள். ஆட்லெறி என அழைக்கப்படும் எறிகணை சக்கரத்தின் உதவியுடனேயே நகர்த்தப்படுவதனைக் காணலாம். நீர்மூழ்கிக்கப்பல் சக்கரத்தின் உதவியுடனேயே சமுத்திரத்திற்குள் பயணம் செய்கின்றது. வெறுவெளியில் பயணித்த டிஸ்கவரி போன்ற றொக்கெட்ஸ் பூமிக்குத் திரும்பும் போது Wheeler இன் உதவியுடனேயே தரையிறக்கப்படுகின்றது. ஒட்டுமொத்தமாகக் குறிப்பிடுவதாயின் இன்றைய கணினியுடன் இணைந்த இயந்திரப்பொறிமுறை முழுவதுமெ சக்கரத்தின் உதவியுடனேயே அவ்வவற்றிற்குரிய பணிகளை ஆற்றுவதனைக் காண்கின்றோம்.000

ஜீவநதி 29 வெள்ளிவீதியார் பாடல்கள்
கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்
வெள்ளிவீதியார் என்பவர் சங்ககாலத்தில் வாழ்ந்த (அண்மைய கணிப்புகளின்படி கி.மு.200 - கி.பி.300) ஒரு பெண்பாற்புலவராவர். இவரது பாடல்கள் சங்க இலக்கியத் தொகுதிக்குட் சேர்க்கப்பட்டுள்ளன. பெண்பாற் புலவர்கள் என்ற வகையில் ஒளவையாருக்கு அடுத்தபடியாக வெள்ளிவிதியாரின் பாடல்களே சங்க இலக்கியத்தில் அதிகமாகக் கிடைப்பவை. இவர் பாடியதாக 13 பாடல்கள் கிடைத்துள்ளன.
சங்க இலக்கியங்கள் தொல்காப்பியத்துட் கூறப்பட்டபடி ஒரு இலக்கியக் கோட்பாட்டினடிப்படையில் இயற்றப்பட்டுள்ள அதேவேளை அக்கோட்பாட்டின் அடிப்படையில் வகுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டுள்ளன. அப்பாடல்கள் தொடர்பாக வைக்கப்பட்டுள்ள இந்த வகுப்புகள் அதாவது பாடல்கள் எச்சந்தர்ப்பத்தில் பாடப்பட்டன எனக்கூறும் கொளுக்கள் (இன்னார் கூற்று இன்ன சந்தர்ப்பத்தில் பாடப்பட்டது எனவரும்) அக்கவிதைகள் ஒவ்வொன்று பற்றியும் முன் எண்ணத்தையும் தருகின்றன. எனினும் இந்த இலக்கியக் கோட்பாட்டை விடுத்து சங்க இலக்கியங்களைத் தனியே பார்க்கும் போது சில புதிய தகவல்களை இனங்காண முடிகிறது.
சங்க இலக்கியங்களில் முக்கியமாக அகப்பாடல்கள் (காதலும் இல்லறம் சார்ந்தவையும்) ஐந்து திணைகளாக திணைகளுக்குரியனவாக (நிலங்களுக் குரியனவாக) வகுக்கப்பட்டுள்ளதுடன் குறிப்பிட்டோரின் கூற்றுகளாகவும் இனங்காணப்பட்டுள்ளன. அவ்வகையில் பாடல்கள் தோன்றிநினிடகாலத்தின் பின்னர் தோன்றிய தொல்காப்பிய இலக்கணக் குறிப்புகளை வைத்து அவற்றை குறிப்பிட்டவர்களின் கூற்றுகளாக இனங்காண முனையும்போது பாடல்களை விளங்கிக்கொள்ள அவை உதவினாலும் புலவனின் உண்மையான கவித்துவத்தையும் அனுபவத்தையும் கண்டு கொள்ளமுடியாது. அத்துடன் அப்பாடல்களுக்கு உரை எழுதியோரின் கருத்து நிலைகளும் பாடல்களை இனங்காண்பதில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. ஆகவே உண்மையான கவித்துவத்தை அறிய உரையாசிரியரின் குறிப்புகளை விட்டு அப்பாடல்களைத் தனியே நோக்க வேண்டியதவசியமாகும்.
ஆதிப் பாண்ர்பாடல்கள் மூன்று வகையினவாக இனங் காணப்படுகின்றன. 1. பாத்திரங்கள் தாமே பாடியவை 2. பாத்திரங்கள் போன்று பாணர் பாடியவை 3. பாணர் மரபைப் பின்பற்றி புலவர் பாடியவை
முற்கூறப்பட்டவற்றுள் சங்க இலக்கியங்களை இரண்டாவது மூன்றாவது வகைக்குள்ளேதான் அடக்கிப் பார்க்கும் மரபு உண்டு. ஆயினும் முதலாவது வகையினவான பாத்திரங்களின் கூற்றுகளாகவே (முக்கியமாக அகப்பாடல்கள்) வகுக்கப்பட்டுள்ளன. உதராணம் :- தலைவி கூற்று, தலைவன் கூற்று, தோழி கூற்று. பாங்கன் கூற்று, நற்றாய் கூற்று, கண்டோர் கூற்று இங்கு புலவனோ பாணனோ தலைவியாகவோ தலைவனாகவோ தோழியாகவோ பாங்கனாகவோ செவிலியாகவோ நின்று பாடுவர். தந்தை கூற்றையோ தமையன் கூற்றையோ இங்கு

Page 18
ஜீவநதி 30 காணமுடியாது இந்த அடிப்படையிலேதான் வெள்ளிவீதியின் பாடல்களும் கூற்றுகளாக வகுக்கப்பட்டுள்ளன.
தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை சங்க இலக்கியத்தின் அடிப்படையில் வெள்ளிவீதியாரின் வரலாறு தொடர்பாக சில தகவல்களை நாம் அறியமுடிகிறது. ஒளவையார் தாம் பாடிய பாடல் ஒன்றிலே (அகநானூறு 147) தலைவனைக் காணாது தேடிய தலைவியின் மனநிலையை வெளிப்படுத்துவதற்கு புலிகள் உலவுகின்ற காட்டிலே வெள்ளிவீதியார் தன் காதலனைத் தேடித்திரிந்த செய்திக்கு ஒப்பிடுகிறார். அப்பாடல் அடிகள் வருமாறு
"ஓங்கு மலைச்சிலம்பில் பிடவுடன்மலர்ந்த வேங்கை வெறித்தழை வேறு வகுத்தன்ன ஊன்பொதிஅலிழாக்கோட்டுகிர்க்குருளை முன்றுடன் ஈன்ற முடங்கர்நிழத்த துறுகல்விடர்அளைப்பிணவுப்பசிகூர்ந்தென பொறிகிளர்உழுவைப்போழ்வாய் ஏற்றை அறுகோட்டுஉழைமான் ஆண்குரல் ஒர்க்கும் நெறிபடுகவலைநிரம்பாநீஸ்ரிடை வெள்ளிவிதியைப்போலநன்றும் செலவுஅயர்ந்திசினால்யானே பலபுலந்து உண்ணா உயக்கமொடுஉயிர்செலச்சாய் தோளும் தொல்கவின்தொலையநாளும் பிரிந்தோர்பெயர்வுக்கு இரங்கி மருந்து பிரிதிண்மையின் இருந்துவினை இலனே." இந்தப்பாடல் வரிகள் வெள்ளிவீதியின் காதலையும் அவர் தன் காதலனைத் தேடித் திரிந்தமையும் வரலாற்றுச் செய்தியாகக் கொள்ள வைக்கின்றன. இந்த அடிப்படையில் வெள்ளி வீதியாரின் பாடல்களை நோக்கும்போது அவை தொகுக்கப்பட்டு கூற்றுகளாக வகுக்கப்பட்டுள்ள முறையில் அவற்றைப் நோக்காது அவற்றை அவரது அனுபவங்களினூடாகப் பார்க்கவேண்டும் என்பதைக் காட்டுகின்றன. தமிழ் இலக்கிய மரபிலே பெண்கள் இதனைக் கூறலாம் (முக்கியமாக அகமரபிலே) இதனைக் கூறக்கூடாது என்ற விதிகள் பேணப்பட்டன. அந்தவகையில் தலைவி தலைவனிடத்து தனது வேட்கையை வெளிப்படையாகக் கூற முடியாது. தலைவி அவனைத்தானே தேடிச் செல்ல முடியாது. அதாவது அவ்வாறு இலக்கியம் படைக்க முடியாது.
ஆனால் வெள்ளிவீதியின் பாடல்கள் இந்த விதிகளை மீறியனவாக அவரது வாழ்க்கை அனுபவங்களையும் பேசுவனவாகக் காணப்படுகின்றன. குறுந்தொகையில் 8 பாடல்கள் (27, 44, 58, 130, 146, 149, 169, 386), நற்றிணையில் 3 பாடல்கள் (70, 335, 348), அகநானூற்றில் 2 பாடல்கள் (45, 362) என வெள்ளிவிதியாரின் பாடல்கள் அமைந்துள்ளன. இப்பாடல்கள் பாலை குறிஞ்சி நெய்தல் மருதம்,ஆகிய நான்கு திணைகளுக்குரியனவாக வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் கருப்பொருளினடிப்படையில் பார்க்கும்போது முல்லை நிலத்துக்குரியனவாகக் கொள்ளப்படக்கூடிய பாடல்களும் உள்ளன. குறுந்தொகை 27 வது பாடல் அவ்வாறு கொள்ளப்படக் கூடியது. இவை அனைத்துமே அகப்பாடல்கள் இவை ஒன்றில் தலைவியின் கைம்மிக்க காமத்தைப் பேசுவனவாக அல்லது காதலனைக் காணமல் தேடிச் சென்றமையைக் கூறுவனவாக உள்ளன. அவைமிகச்சிறந்த முறையிலே அந்த உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.

ஜீவநதி 31
தலைவனைச் சேராததால் தன் அழகுவீணாதல் (குறு 27) தலைவனைச் சேரவேண்டும் என்ற விருப்பம் (குறு 147 அகம் 362) தலைவனைக் காணாது தூங்காதிருத்தல் (அகம் 45) கைமிக்க காமமும் அதனைத் தடுக்க மாட்டாமையும் (குறு 58 149, 169 நற் 335, 348) வருந்துதல் (குறு 386) வராத தலைவனிடம் குருகைத் துாது செல்லுமாறு வேண்டுதல் (நற் 70) வராத தலைவனைத் தேடிச் செல்லல் (குறு 44, 140) ஆகிய விடயங்களையே பேசுகின்றன.
வெள்ளிவீதியாரின் தலைவன் எந்த வகையில் அவரை விட்டுச்சென்றான் என்பது தெரியவில்லை எனினும் அவருக்குச் சொல்லாமலே பிரிந்திருக்கிறான் என்பது பாடல்களினால் தெளிவாகிறது எனவேதான் அவரது பாடல்களின் கருப்பொருள் முற்குறிப்பிட்டவாறு அமைந்தது எனலாம்.
ஆனால் வெள்ளிவீதியின் வரலாற்றை நோக்காது அவரது பாடல்களை இலக்கண அடிப்படையில் நோக்கியதால் சில பிரச்சினைகள் தோன்றியுள்ளன. முக்கியமாக அவர் தலைவியாக நின்று பாடிய பாடல்கள் வேறு கூற்றுகளாகக் கொள்ளப்பட்டுள்ளன. அவரது பாடல்களுள் குறுந்தொகை 44.58.130. 146. 169 ஆகிய பாடல்களும் அகம் 362வது பாடலும் தலைவி கூற்றாக அல்லாது வேறு கூற்றுகளாகக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை நுனித்து நோக்கும் போது அவையும் தலைவி கூற்றே என அறியலாம்.
உதாரணமாக இங்கு இரண்டு பாடல்களை நோக்கலாம். முதலாவதாக குறுந்தொகை 44 பாடலை நோக்கும்போது அது இடைச்சுரத்து செவிலித்தாய் கையற்றுச் சொல்லியது என்று செவிலிகூற்றாக வகுக்கப்பட்டுள்ளது. பாடல் வருமாறு
காலே பரிதப்பினவே கண்ணே நோக்கிநோக்கிவாளிழந்தனவே அகலிநவிசும்பின்மீனினும் பலரேமன்ற இவ்வுலகத்துப்பிறரே” கால்கள் நடந்து சோர்ந்து விட்டன. கண்கள் (அவனைத்) தேடித் தேடிக் கூர்மை யிழந்து விட்டன அகன்ற வானத்து விண்மீன்களிலும் பலரே இவ்வுலகத்தில் பிறர் (நான் தேடுகின்றவனைத் தவிர ஏனையோர் மட்டுமே தென்படுகின்றனர் அவனை மட்டும் காணவில்லை) என்ற கருத்தைக் கொண்டது இப்பாடல்.
இப்பாடல் நாராயணசாமி ஐயர் தலைவி கூற்றாகக் கொள்வதுடன் விளக்கவுரையிலே செவிலி கூற்றாகவும் கொள்ளலாம் என்பர். ஆனால் செ.வை.சண்முகம் அதனை செவிலி கூற்று எனவே வாதிடுவார்.
செ.வை.சண்முகம் வாதிடும்போது இதில் வரும் நோக்கி நோக்கி என்பது வழியில் போகிறவர்களை யெல்லாம் உற்றுப் பார்ப்பதையே குறிக்கும் இதனைத் தலைவியின் செயலாகக் கொள்ள முடியாது என்பாார் ஆனால் ஒளவையாரின் பாடலில் வரும் செய்தியை அடிப்படையாகக் கொண்டு இப்பாடலைப் பார்ப்போமெனின் அது வெள்ளிவீதியின் அனுபவமே என்பது புலனாகும். அத்துடன் தலைவனைக் காணாது தேடும் தலைவி வருகிறவர்களிலே தனது தலைவன் வருகிறானா என நோக்குவது இயற்கைக்கு அப்பாலானதல்ல. செ.வை.சண்முகம் தந்தைவழி சமூகக் கருத்துநிலையில் பெண்கள் அவ்வாறாகத் தாமே தலைவரைத் தேடிச்செல்ல முடியாது என நோக்கியதனாலே தான் அவ்வாறு கொண்டிருக்கிறார் எனலாம்.
குறுந்தொகை 58 ஆம்பாடலும் அவ்வாறே இப்பாடல் தலைவன் கூற்றாகக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இது தலைவன் கூற்றாகக் கொள்ளப்பட முடியாதது என்பது பாடலை நோக்கும் போது தெரியவரும். பாடல் வருமாறு

Page 19
ஜீவநதி 32
இடிக்கும் கேளிர்நுங்குறை ஆகம் நிறுக்கலாற்றினோநன்றுமற்றில்ல ஞாயிறுகாயும் வெவ்வறைமருங்கில் கையில் ஊமன்கண்ணில் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப் பரந்தன்று இந்நோய் நோன்றுகொளற்கரிதே' இங்கு தலைவனைப் பிரிந்த தலைவியின் உடலில் ஏற்படும் மாற்றமே (பசலைநோய்) அவளால் பேசப்படுகிறது. வெயிலிலே காயவைத்த வெண்ணெயைக் கையில்லாத ஊமை கண்ணாலே காவல் செய்கின்றான். அது வெயிலில் உருகிப் பரந்து செல்லும்போது அதை எடுக்கவோ அதனை யாரிடமும் கூறி நிறுத்தவோ அவனால் முடியாது. அதனையே இங்கு தலைவி தன்னை அறியாமல் தன்னால் தடுக்க முடியாமல் மற்றவரிடம் சொல்லமுடியாமல் பரக்கும் நோய்க்கு ஒப்பிட்டுக் கூறிகிறாள். எனவே இதனைத் தலைவனின் கூற்றாகக் கொள்ள முடியாது. தலைவனாயின் அவனால் அதனைக் கூற முடியும் தலைவன் அதனைக் கூறுதற்கு இலக்கியமரபும் சமூகமும் இடமளித்திருக்கின்றன. எனவே இப்பாடல் தலைவனைப் பிரிந்த தலைவியாக இருந்த வெள்ளிவீதியின் அனுபவங்களையே காட்டுகிறது.
எனவே முற்குறிப்பிட்டவாறு இவ்விரு பாடல்களுமே பெண்கள் அன்னதைப் பாடமுடியாது என்ற கருத்து நிலையில் வைத்து நோக்கப்பட்டதால் பின்வந்தோரால் அவை தலைவி கூற்றாக அல்லது வேறு கூற்றுகளாகக் கொள்ளப்பட்டன.
அதுமட்டுமல்லாது பெண்நிலைநின்ற அனுபவத்தினூடாக உவமைகளைக் கையாள்தலும் இங்கு குறிப்பிடற்குரியது. வெண்ணெய் உணங்கல் பற்றிய உவமையை ஏ6)வே பார்த்தோம் அதுமட்டுமல்லாது தன்னை தலைவன் அடையாமல் இருப்பதனால் தனது கவின் அழிந்துபோகிறது என்பதற்கு உவமையாக கன்றும் உண்ணாது கலததினும் படாது நல்லான் திம்பால் நிலத்துக்காங்கு என்னைக்கும் உதவாது எனக்கும் ஆகாது என்பதைக் கூறுகிறார் அதாவது பசுவின் பாலானது கன்றும் உண்ணாமல் பால் கறக்கும் கலத்தினும் விழாமல் நிலத்தில் வீழ்ந்து வீணாவது போல என பெண்களின் அனுபவத்தினூடாக வருகின்றஉவமையைக் கையாள்கிறார். மேலும் தன்னைத் தேடிவந்த தலைவன் தன்னைக் காணாது துயரத்துடன் திரும்புவானாயின் தான் அப்பொழுது உயிரை விட்டுவிடுவென் எனக்கூறும்போது கையாளப்படுகின்ற தொடர் சுவைக்கத்தக்கது.
நெஞ்சு பழுதாக வறுவியன்பெயரின் இன்று இப்பொழுதும் யான் வாழலனே" (அகம் 362) துயரத்துடன் வெறுமையாகச் செல்வானாயின் நெஞ்சுபமுதாக வறுவியன்பெயரின் எனப்படுகிறது. இதை விட வேறெப்படிச் சிறப்பாகச் சொல்லமுடியும். வெள்ளிவிதியார் வரலாற்றுச் செய்திகளை தன் பாடலிலே இணைத்துள்ளமையை அகநானூறு 45 ஆம் பாடலில் காணலாம். தலைவியைச் சேர்ந்துவிட்டு விட்டுச்சென்ற தலைவனால் தலைவிக்கு ஏற்பட்ட அவரை (அதாவது குறிப்பிட்ட பெண்ணின் காதலைப்பற்றி ஊரெல்லாம் பேசுதல்) அன்னி என்ற குறுநில மன்னனுக்கும் திதியன் என்ற குறுநில மன்னனுக்குமிடையே நடந்த போரிலே அன்னி திதியனை வெற்றிகொண்ட போது வயிரியர் ஆர்த்த இன்னிசையிலும் பெரிதாகப் பேசப்பட்டது. என்று கூறுகிறார். அத்துடன் தான் துயிலாதிருப்பதற்கு உவமையாக வானவரம்பன் என்ற மன்னனால் வெற்றி கொள்ளப்பட்டு உடைந்த அரணைக் காவல் புரிவோர் தாங்காதிருத்தலை கூறி தானும் காதலனை அழந்த ஆதிமந்திபோல

நதி - 02 கிளை - 01 33
பேதுற்று அலைவேயோ என்றிார். இப்பாடலில் அக்காலத்துப் பெரிதாகப் பேசப்பட்ட மூன்று வரலாற்றுச் செய்திகளை இணைத்துள்ளமையைக் காணலாம். அதாவது அவரது காலத்தில் அன்னி திதியனுக்கிடையே நடந்தபோர், வானவரம்பனின் போர் வெற்றி, ஆதிமந்தி (அவளது காதலனான ஆட்டனத்தியைக் காவேரி கொண்டுவிட) காதலனைத்தேடி அலைந்தமை ஆகியன கூறப்பட்டுள்ளன.
இவ்வாறாக சங்க இலக்கியங்களில் முக்கிய இடம்பெறும் வெள்ளிவீதியின் பாடல்கள் சிறந்த கவித்துவப் பண்பை கொண்டனவாகி தலைவி கூற்றுகளாக அமைந்து சங்க இலக்கிய மரபைப் பேணியுள்ளதுடன் அவரது அனுபவங்களையும் சமகால வரலாற்றுச் செய்திகளையும் சிறந்த முறையிலே வெளிப்படுத்தி பெண் என்ற முறையில் சொல்லப்பட முடியாது என்று மறுக்கப்பட்ட விடயங்களையும்
வெளிப்படுத்தியுள்ளன. 000
தனித்தலையும் புள்ளியின் நினைவாக வேறெந்த சிறப்புமீ கழியா வாழ்விலீ மிகுதிப் புனினகையையுமீ விட்டுத் தொலைதீதேனி தொடராய் போயினர் என் பினினும் எனி முனினும் ബനൃഥ G|(b 86്യർ കെീL uീഖിന്റെ எனி அழகிய நதிகளினி சொத்தரிமை இழநீதேனி இவர்களுமீ இனினும் பிறருமீ என் கனவுக்குள் விஷ நாகங்களினை ஏவினர் சொலீல முடியாத வார்த்தைகளுள் බ||Ifජ්ගඝ uTfLt8 (Babas u TfLič 6éFT6čool இருப்பினி வீனர் அர்த்ததீதை ஒரு குவளை தேனீரிலுமீ விஷப்பொழு தாவிய பின்னர்
புனினகைதீது விட்டு s போகினிறது காலமீ لاع இந்தப் புள்ளியிலி எஞ்சியவை గో வெறுங்கனவுகளுமீ- 9ق
கொஞ்சம் கவிதையுமீஇரு துளி கணினிருமே."
p5mmuf p5mmuf
நாராய் நாராய் செங்காலி நாராய் செந்நிறக் குருதியில் தோய்நீ தெழுநீதிங்கு தேகம் நடுங்கும் செங்காலி நாராய் - 6ाlिebeाँ
ઈDિof ஒgயும் இருந்தும் சிற்றிலி செய்த
നൃഥ6DIൺ 8D'gൺ அக்கிரிை
(86 fig65 அதிர்வுகள் கரீைடாய் - ஏக்க மலைகளின்
குகைகளினுள்ளே என்றும் கற்குமீ fD6Isai disare 6) گیS 6III]]Gඹී 6)offi5)ඛයී గో உரைப்பாய் நாராய் ళ
s 6
محے

Page 20
ஜீவநதி 34 கவிஞர் அல்வையூர் மு. செல்லையாவின்
கவிகுைகள் ஒரு கண்ணோட்டம்
- கலாநிதி செ. யோகராசா
நூற்றாண்டு விழாவினை இவ்வருடம் கொண்டாடுகின்ற அல்வையூர் கவிஞர் மு.செல்லையாவின் கவிதையுலகத் தடங்கள் வெளியே தெரியாதவாறு வட்டத்தோசை சுட்டதுபோல் வானிலிருந்த சந்திரனை தட்டச்சிறுவன்யாருடைத்தான் சொல்வாய் உண்மை தோன்றிடவே" என்ற (வளர்பிறை என்ற தலைப்பிலான) சிறுவர் பாடலின் பிரபல்யமும் எமது ஆய்வுலகின் ஆரோக்கியமற்றநிலமையும் அவற்றை மூடிமறைத்துவிட்டன. அவைபற்றி ஒரளவு நினைவுகூர்ந்து பார்ப்பதற்கேற்ற தருணம் இதுவென்றே கூறத்தோன்றுகின்றது.
ஈழத்து நவீன கவிதை ஊற்று வளமாகப் பிரவாகித்த 1930களில் ஈழகேசரி கவிஞர்கள் யாழ்ப்பாணத்திலும், மலையகக்கவிஞர்கள் மலையகத்திலும் அவற்றை முன்னெடுத்தனர். இத்தகைய ஈழகேசரிக்கவிஞர்களுள் முக்கியமான ஒருவரே அல்வையூர் முசெல்லையா(சோமசுந்தரப்புலவர்.முநல்லதம்பிவேந்தனார்.யாழ்ப்பாணன்,அகிலேஸ்வரசர்மா, மனுப்புலியார் முதலானோர்)
ஈழகேசரிக்காலம் ஈழத்து அரசியலில் விழிப்புணர்ச்சி பெருமளவில் ஏற்பட்ட காலமாகும்.(ஈழகேசரி > ஈழசிங்கம் = சேர் பொன்னம்பலம் இராமநாதன்) டொனமூர் அரசியல் குழுவினரின் சிபார்சுகள் ஒரு புறமும், யாழ்ப்பாணவாலிபர் காங்கிரஸின் செயற்பாடுகள் இன்னொருபுறமும் இவை அனைத்தையும் விட இந்திய தமிழகதொடர்பும் இந்திய சுதந்திரப் பேராட்டச் சிந்தனைகளும் மற்றொரு புறமுமாக இக்காலப்பகுதியின் அரசியற்களத்தினை உருவாக்கியிருந்தன. 1927ல் மகாத்மகாந்தி நேரு, சத்தியமூர்த்தி, திரு.வி.க.முதலானோர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்றனர். ஈழகேசரி அதிபரான நா.பொன்னையா தீவிர காந்திபக்தர். பாரதிபுகழ்பரப்பிய முன்னோடிகளுளொருவர்.
மேற்குறித்த சூழலில் ஈழத்துக் கவிஞர் மத்தியில் தேசிய உணர்வுமுகிழ்க்க ஆரம்பித்ததில் வியப்பில்லை. ஆயினும், அன்றைய சூழலில் இத் தேசியம் இலங்கைத் தேசியமாகவும் இருந்தது. தமிழர் என்ற பரந்துபட்ட உணர்வு காரணமாக தமிழகத்தேசியமாகவும் (இவ்வழி இந்திய தேசியமாகவும்) இருந்தது. இத்தகைய இரட்டைத்தேசிய உணர்வு முகிழ்த்த நிலையில் ஈழகேசரிக் கவிஞர்கள் ஆறுமுக நாவலரையும், சேர். பொன்னம்பலம் இராமநாதரையும் போற்றிய அதே வேளையில் காநதியையும்.நேருவையும்போற்றத்தவறவில்லை. முற்குறிப்பிட்ட ஈழகேசரிக்கவிஞர்கள் பலரும் (தேசியம், தேசிய கூட்டுறவு, திண்டாமை ஒழிப்பு, விவசாயவிருத்தி, மதுபாவனைத்தடை, ஜீவகாருண்யம். இன, மத பேதமின்மை முதலான) காந்தியக் கருத்துக்களுள் ஒன்றையோ பலவற்றையோ தமது கவிதைகளின்பாடு பொருளாக்குவது தவிர்க்கவியலாததாயிற்று! திண்டாமைக்கு எதிரான செயற்பாடுகளில் தொழிற்சங்கங்கள். அமைப்புகள் என்பன முன்நின்றுசெயற்பட்டன. 1942ல் சிறுபான்மைத்தமிழர்மகாசபைஉருவாகின்றது.புதிதாகத் தோற்றமுற்ற இடதுசாரிக்கட்சிகளும் இவற்றின் செயற்பாடுகளுக்கு உதவிபுரிந்தன. காலனித்துவஎதிர்ப்புணர்வும் அறிந்தோ அறியாமலோ இக் கவிஞர்களிடம் வெளிப்பட்டது.

நதி - 02 கிளை - 0 35 ஈழகேசரிக் கவிஞர்களுள் சிலர் ஆங்கிலக் கல்விமுறையை எதிர்த்தனர். சிலர் ஆங்கில நாகரிகமோகத்தைச் சாடினர். சிலர் ஆங்கில உத்தியோகத்தை வெறுத்தனர். கலை. இலக்கியத்துறைகளிலும் விழிப்புணர்ச்சிஏற்படுகின்றது. யாழ்ப்பாண"வாலிபர் காங்கிரஸ் கலாநிலையம ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச்சங்கம் முதலியன இவற்றின் பின்னணியிலிருந்தன. சிறுவர் இலக்கியத்துறையில் அக்காலக்கல்விஅதிகாரியாகவிருந்த க.அருள்நந்தியின்முயற்சியால் சிறுவர் பாடல் போட்டிநடத்தப்பட்டு (தமிழில்முதல் சிறுவர் பாடல் தொகுப்பான) பிள்ளைப்பாட்டு என்ற தொகுப்பும் வெளியிடப்படுகின்றது!
மேற்குறிப்பிட்டசூழலில் கவிதைஎழுதுகின்ற அல்வையூர் மு.செல்லையா சமகால ஈழ. தமிழகக் கவிஞர்களுடன் ஒப்பிடுகின்றபோதுகுறிப்பாக இன்றையநோக்கில் பெறுகின்ற இடம் எத்தகையது என்று அவதானிப்பது அவசியமானது.
மேற்கூறியவாறு நோக்கும் போது முதலிற் குறிப்பிடப்படவேண்டியது சமகால ஈழத்துக் கவிஞருள் அரசியல்சார்பான கவிதைகள் அதிக மெழுதியவர் இவரேயென்பது. இவரது அரசியல்சார்பான கவிதைகளில் மூன்றுபோக்குகள் வெளிப்படுகின்றன.
ஒன்று இலங்கைத்தேசியம்' பற்றிப் பாடியவை எங்கள் நாடு என்ற தலைப்பிலமைந்த பாடல் இதற்கு சிறந்த உதாரணமாகின்றது. வகுப்புவாத உணர்வு மேற்கிளம்பிய சூழலில் அதற்கு எதிராகக்குரல் கொடுப்பது என்ற விதத்தில் அமையும் பின்வரும் பாடல் இவ்வேளை எடுத்துரைக்கத்தக்கது.
தேர்ந்திடும் இலங்கா
தேவிநின்வாழ்வு தினமுங்குறைந்திடுதல்
மைந்தர்செய்யும் தாழ்வு சார்ந்திடும் சிங்களரும்
தக்க தமிழ்ச்சனமும் சகோதர நேயம் பெறல்
ബ്ഖ@lp?. ' ܚ அக்காலத்தில் முக்கியம் பெற்றிருந்த அரசியல் பிரமுகர்களும் கவிஞரது போற்றுதலுக்குள்ளாகினார். எடுத்துக்காட்டு பொதுசன பாதுகாப்பு அதிகாரி சேர் ஒலிவர் குணதிலக பற்றிபுதுமணமக்கள் உலாப்போதல் என்ற தலைப்பிலான பாடல். இப்பாடலுக்கு முன்னுரைபோன்று கவிஞர் எழுதிய குறிப்புஎமது கவனத்திற்குரியது. அது பின்வருமாறு.
புதுமணமக்கள் உலாப்போதல் மணமகன் பொதுசன பாதுகாப்புஅதிகாரிசேர் ஒலிவர் குணதிலக மணமகள்: முறிலங்காதேவி
மணஞ்செய்த காலத்தில் புதிய தம்பதிகள் பூம்பொழில் நுகர்தல், புனல் விளையாடல் முதலியவற்றை நிகழ்த்தி மகிழ்ந்து உலாவருதல் பழந்தமிழ் மக்கள் வழக்கமாதலால் அவ்வழக்கத்தைப்பின்பற்றிழுரிலங்காதேவியும் அவளது பிராணநாயகர், உயிரை, யுத்த அபாயத்தினின்றும் காப்பாற்றும் அதிபர் திருஒலிவர் குணதிலக அவர்களும் உலாப்போகின்ற கற்பனையில் இக் கவிகள் இயற்றப்பட்ட காலத்திலேயப்பானியர் பர்மா நாட்டைப் பிடித்துக் கொண்டு இந்தியாவில் நுழையும் சமயத்தில் இருந்தனர்" இக்குறிப்பினூடே கவிஞரின் தமிழ்மரபுசார்ந்த வெளிப்பாட்டுமுறை ஒருபுறமும் சர்வதேச அரசியல் விவகார நாட்டம் மற்றொருபுறமும் வெளிப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது!
கவிஞர் இயற்றிய மரதன் அஞ்சல் ஒட்டமும் முதுதமிழ்ப்புலவர் மு.நல்லதம்பி, சோமசுந்தரப்புலவர் ஆகியோரது பாடல்களுடன் ஒப்பிடும் போது புதுமைப் பண்பு மிளிர்ப்பவை. எடுத்துக்காட்டு:

Page 21
ஜீவநதி நதி - O2 கிளை - 01 36
சிங்களர்தமிழரோடு சேர்முசிலிங்கள் பேக்கர் எங்களைப்போலிணைந்தே என்றுமொற்றுமையை நாட்டிப் பங்கமிலிழத்தாய்க்குப்பயன்பல விளைப்பரோவென்(று) இங்குளமலைகள் கூறியிறமாந்துநின்றமாதோ' அரசியல் சார்பான கவிதைகளின் மற்றொருபோக்கு, தமிழக இந்தியதேசிய உணர்வு மீதுர, இந்தியத் தலைவர்களைப் போற்றிப் பாடியது. காந்தி, நேரு ஆகியோர்பற்றிப்பல பாடல்கள் கவிஞரால் இயற்றப்பட்டுள்ளன. இவையும் ஒப்பீட்டுரீதியில் நோக்கும்போது புதுமை மிளிர்ப்பவை. எடுத்துக்காட்டு
ஜின்னாவெறுத்தாலும் சேர்ச்சிலிகள் கழ்ந்திட்டாலும் மன்னும் பொறுமையுடன் வாழ்ந்தமகான்- என்னை அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத்தன்னை இகழ்வாரைப்பொறுத்தல்தலை” முதலிரு அடிகளும் காந்திபற்றியதாகவும் ஏனைய இரு அடிகளும் அதற்கேற்ற குறளடிகளாகவுமுள்ளமை கவனிக்கத்தக்கது.தவிர, இந்திய சமகால அரசியல் பற்றிய பார்வை கொண்ட பாடல்களும் கவிஞரால் இயற்றப்பட்டுள்ளன. இந்தியக் காங்கிரசுக்கும் முஸ்லிம் லீக்குக்குமிடையில் பேதமேற்பட்டபோது "இந்த ஒற்றை மாட்டுவண்டி ஓடுவது சாத்தியமா? என்ற தலைப்பில் கவிஞர் பாடிய பாடல் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகின்றது!
அரசியல் சார்பான கவிஞரது கவிதைகளின் பிறிதொரு போக்கு, சர்வதேச அரசியல் சார்ந்த பாடல்களும் கவிஞரால் பாடப்பட்டுள்ளமையாகும். இவ்விதத்தில் கவனத்திற்குரியது நேசக்கட்சியாரும் காந்தியடிகளும். இப்பாடல் ஒருபுறமிருக்க, பாடல் தொடர்பாக கவிஞர் எழுதிய குறிப்பு இவ்விதத்தில் கவனிக்கத்தக்கது. "சென்ற இரண்டாவது மகாயுத்தம் முடிந்தவுடன் நேசக் கட்சியைச் சார்ந்த அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா முதலிய வல்லரசுகள் தமது பிற்காலத் திட்டங்களை வகுத்துக் கொள்ளும் பொருட்டுப் பல நகர்களில் மகா நாடுகள் நடத்தி ஒற்றுமையான முடிவு காணாது தயங்கியபோது இக்கவிகள் பாடப்பட்டன
ஒப்பீட்டுரீதியில்கவிஞரது கவிதைகளின்பிறிதொரு சிறப்பு. காலனித்துவஎதிர்ப்பு வெளிப்பாடாகும். இவ்வாறான பார்வை ஈழகேசரிக்கவிஞர் பலரிடமும் காணப்படுவதுண்மையே. எனினும் இவ்விதத்தில் ஒவ்வொரு கவிஞரும் ஏதோ ஒரு விடயத்தை முதன்மைப்படுத்துகின்றனர். யாழ்ப்பாணன், ஆங்கிலக்கல்விமுறையைக் கண்டித்தார். மனுப்புலியார் சுதேசப் பொருட்களின் பயன்பாட்டினை வற்புறுத்தினர். சோமசுந்தரப் புலவர், பண்பாடு சார்ந்த பாரம்பரியமான கொண்டாட்டங்களை முதன்மைப்படுத்தினார். இக் கவிஞர் ஆங்கில உத்தியோக மோகத்தைக் கண்டிக்கலானார். அதனைக்கண்டிப்பதோடுவிவசாயத்தொழிலை முதன்மைப்படுத்தவும் முற்பட்டார். இவ்விதத்தில்"உழுகலப்பையும் எழுதுபேனாவும் முக்கியமானதொருபடைப்பு. இவ்விரு பொருட்களுக்குமிடையிலான உரையாடற் பாணியில் இப்பாடல் அமைகின்றது. இப்பாடலின் சுவைக்கு ஒர் எடுத்துக்காட்டு w ہم பேனா : மின்சார விசிறியின் கீழிருந்து-வாயில்
வெள்ளைச் சுருட்டுக்களை புகைத்த வண்ணம் பின்சாரும் பென்சனுடன் வாழுஞ்சுகத்தை -எந்தப் பேயன் வெறுத்துக்கமம் பேணவருவான்? "புரட்சிப் பெண்ணும் இவ்விதத்தில் கவனத்திற்குரியதே!ஆங்கில நாகரிகமோகமும் கவிஞரது கண்டனத்திற்குள்ளாகியது. தமிழ்க்கன்னிதந்தசூடு, புரட்சிப்பெண் ஆகியன இவ்விதத்திதல் முக்கியம் பெறுவனவாகின்றன.

37 முற்குறிப்பிட்டவாறுமுப்பது,நாற்பதுகளில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சூழலில்சாதிப்பிரச்சினை கவனத்தை ஈர்த்த விடயமாகவிருந்தாலுமி.இக்கால ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள் சிலவற்றில் சாதி ஆதரிப்புத் தொடர்பான விடயங்களும் அவற்றிற்கெதிரான நடவடிக்கைகளும் இடம் பெற்றிருந்தாலும் - ஈழகேசரிக்கவிஞர்கள் இவ்விடயம் பற்றி அதிகம்பாடியிருப்பதாகக் கூறுதற்கில்லை. கவிஞரதுவளர்பிறை தொகுப்பிலும் இதுபற்றிய ஒரு கவிதையே இடம்பெற்றுள்ளது. ஆயினும், அது முக்கியமானதொரு படைப்பாகின்றது. காரணம் அது திருவாங்கூர் சமஸ்தான அரசரும். ஹரிசன மக்கள் உள்ளே சென்று வணங்குதற்கு இந்தியாவில்முதன்முதலாக ஆலயங்களைத் திறந்துவிட உரிமை அளித்த கருணையாளரும் ஆகிய சித்திரைத் திருநாள் மன்னர் மீது பாடப்பட்ட பாக்கள்" பற்றியாகவுள்ளது.
தொழிலாளர் பற்றி ஈழகேசரிக் கவிஞர்கள் பலர் பாடியிருப்பினும் கவிஞரது தொழிலாளர் பற்றிய பாடல்கள் தனித்துவம் பெற்றுள்ளன. ஏனையோரது பாடல்கள் அவர்களைக் காசினித்தெய்வங்களாகக் காண - கவிஞரோ - அதுவும் அன்றையசூழலில் பின்வருமாறுநோக்குவது குறிப்பிடத்தக்கது.
"பட்டுடையும் நல்ல சட்டையும் கொள்சிலர்
பல்தொழில்பார்த்திடினும் - சிறு கட்டை உடையணிஉண்வர்க்கம் என்னுடைக்
கண்மணிபாவாரே.
தாங்கும்பாட்டாளிக்குத் தக்க கவுரவம்
தந்திட வில்லையெனில் -உலகில் ஓங்கும்பினக்குகள் நீங்குவதேயில்லை
உணர்மை இது மைந்தனே
தன்னைப் புரந்திடும் பாட்டாளி வர்க்கத்தைச்
சற்றும் மதியாதான் - இன்று எண்ணை உணர்ந்தவனல்ல இறுதியில்
6VDDLIII LDLilgl ILIITø7" துயரடையும் பாட்டாளிக்குப்பூமித்தாய் சொல்லியமுறையில் பாடல் அமைந்துள்ளது
இறுதியாக கவிஞரது சிறுவர் பாடல் முயற்சிகள் பற்றியும் கூறவேண்டும். சிறுவர் பாடல்துறையில் முற்கூறியது போல் எழுச்சி காணப்பட்டகுழலில் (கவிஞர்பற்றிய சிறுவர்பாடல்கள் சிலவாகவிருப்பதும் கவிஞர் முற்குறிப்பிட்ட சிறுவர் பாடல் போட்டியில் பங்குபற்றாதிருந்தமையும்) வியப்பிற்குரிய விடயமாகின்றது. அன்றேல் கவிஞர் இயற்றி வளர்பிறையில் இடம்பெறாதபாடல்கள் பல இருக்க வேண்டும். இத்தொகுதியிலுள்ளவற்றுள் பூஞ்சோலை 'தாய் என்பனவும் சிறுவர் பாடல்கள் என்றே கருதத் தோன்றுகிறது!
உள்ளடக்க ரீதியில் மேற்கூறிய விதங்களில் கவனத்தை ஈர்த்துள்ள இக் கவிஞரது கவிதை வெளிப்பாட்டு முறைகளும் மனங்கொள்ளத்தக்கனவே முற்கூறிய வற்றோடு இன்னும் சிலவற்றைக் கூற இடமுள்ளது. குறிப்பாக மெட்டுகளின் பயன்பாடும். நாட்டார் பாடல் பயன்பாடும் இவ்விதத்தில் கவிஞரது தனித்துவங்களுள் விதந்துரைக்கப்பட வேண்டியனவாகின்றன. எவ்வாறாயினும், கவிஞரது பாடல்கள் அனைத்தையும் உள்ளடக்கிய தொகுப்பொன்றுவரவேண்டியதுமிக அவசியமானது. அது மட்டுமன்றி ஈழத்தில் நகைச்சுவை எழுத்துக்கள் அருகிய சூழலில்,"அநுசுயா என்ற பெயரில் கவிஞர் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகளும் நூலுருப்பெறுவது மிகமுக்கியமானது (யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் இவ்விதத்தில் நன்கு பயன்படுமென்பது இம்முயற்சியில் ஆர்வமுள்ளவருக்கு இக்கட்டுரையாளர் விடுக்கும் செய்தியாகும்).

Page 22
3S எழுத்துக் கூத்துறரயும் வழிபாடும் : சில குறிப்புகள்
கலாநிதி.த.கலாமணி
இலங்கையின் இந்துப்பாரம்பரியம் பற்றிய ஆய்வானது பிரதேசவாரியாக இடம்பெறும் வழிபாட்டு நடைமுறைகளையும் மதப்பண்பாட்டு நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதான இந்துப் பாரம்பரியத்தின் தொகுப்பாய்வின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கருத்து இன்று ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றது. இத்தொகுப்பாய்வு மேற்கொள்ளப்படுவதற்கு இப்பிரதேசங்களில் வாழும் இந்து மக்களிடையே காணப்படும் வணக்கத் தலங்களையும் வழிபாட்டு முறைகளையும் உள்ளடக்கியதான முழுமையான தரவுத் தொகுதியொன்று வேண்டும். இத்தரவுத் தொகுதிக்குள் உள்ளடக்கப்படும் வகையில் இலங்கையில் காணப்படும் வழிபாட்டு நடைமுறைகளோடு கூத்து எவ்வாறு தொடர்புற்றிருந்தது என்பதனைப் பரிசீலித்து, பொதுவாக, மக்கள் வழிபாட்டு நடைமுறைகளில் கூத்தின் இணைவு எவ்வாறுள்ளது என முன்வைப்பதும் குறிப்பாக வடமராட்சி வாழ் மக்களின் நம்பிக்கைகளோடு கூத்தும் வழிபாடும் தொடர்புற்றிருந்த தன்மையைத் தெளிவாக்குவதும் இக் கட்டுரையின் நோக்கமாகும்.
வழிபாடும் கூத்தும் மக்கள் வாழ்க்கையுடன் தொடர்புற்றிருந்த முறைமை
தமிழ் இலக்கிய tଶ 8. ପୈଶିଷ୍ଟ୍ରି நூல்களில் எடுத்துக்காட்ட S. . . ப்பட்டுள் ளது. கிரேக்கம் ć弁60IT, உரோமானியம் ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளின் 5Tlass
6) JGTBlé5606il 3ಣ್ಣಿಟ್ಟ 7 ܟ ܢ ܢ ܪ நோக்கும்
போது, எல்லா நாடுகளிலுமே நாடகம் தோன்றுவதற்கான அடிப்படைக்காரணம் சமயச் சடங்குகள் தான் எனலாம். மதரீதியாக அல்லது சமூகரீதியாக ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட ஒரு நடைமுறையைக் குறிப்பதான சடங்கு என்பது நம்பிக்கையின் அடிப்படையாககப் பிறப்பதாகும். இச்சடங்குகள் சற்று விஸ்தாரமாக அமைகின்ற முறையிலேதான் நாடகம் தோன்றுகின்றது என்பர்.
சங்ககாலந்தொட்டே தமிழகத்தில் நாடகம் இருந்து வந்துள்ளமைக்கான சான்றுகள் சங்க இலக்கியங்களிற் காணப்படுகின்றன. பாணர், பாடினியர், கூத்தர், விறலியர் போன்ற கலைஞர்கள் மன்னர்கள், வள்ளல்கள் ஆகியோரின் ஆதரவோடு நாடகக்கலையை வளர்த்து வந்தனர். சங்க காலத்தில் தமிழ்நாட்டில் காணப்பட்ட ஐவகை நிலப்பிரிவுகளிலும் அந்த நிலப்பிரிவுகளுக்குரிய கடவுளரை வழிபடும்போது விறலியர், பாடினியர் ஆகியோரோடு அந்த நிலப்பெண்களும் சேர்ந்து குரவைக்கூத்தாடி வந்தனர். குறிஞ்சிநிலக் குறத்தியர் முருகனை வழிபடும்போது குன்றக்குரவையும், முல்லைநில ஆய்ச்சியர் மாயோனை நினைந்து ஆய்ச்சியர்
 
 

39 குரவையும் நெய்தல் நிலப்பரத்தியர் வருணனை நோக்கிக் குரவைக் கூத்தையும். மருதநில உழத்தியர் இந்திரனை நினைத்துத் துணங்கைக் கூத்தையும் பாலைநிலப்பெண்டிர் கொற்றவையின் முன்நின்று வேட்டுவவரியினையும் ஆடியுள்ளனர்.
இயற்கைச் சக்திகள் உலக நடவடிக்கைகளில் செல்வாக்குச் செலுத்தும் என்ற நம்பிக்கையை குலக்குழுநிலையில் வாழ்ந்திருந்த இச்சமூகத்தவர்கள் கொண்டிருந்தனர். இந்நம்பிக்கையூடாக மழை வேண்டியும் விலங்குகளிலிருந்து பாதுகாப்பு வேண்டியும் பிற பிரச்சினைகளிலிருந்து விடுவிக்கும்படி வேண்டியும் இக்கூத்துகள் ஆடப்பட்டன அச்சத்தின் நிமித்தம் தெய்வங்களைத் திருப்திப்படுத்துவதற்காக நிகழ்த்தப்பட்ட கரணங்கள் அன்றைய கூத்தின் அம்சங்களாக விளங்கின.
பழந்தமிழ் நூலாகிய சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்திலே வேட்டுவவரிப்பகுதியில் மக்களின் வாழ்க்கையோடு வழிபாடும் கூத்தும் எவ்வாறு தொடர்புற்றிருந்தன என்ற செய்தி விளக்கப்பட்டுள்ளது. வேட்டுவர்கள் காடுறை தெய்வமாகிய கொற்றவையை வழிபாடு செய்யும் போது கூத்தும் மடையும் இடம் பெறுகின்றன. வேட்டுவக்குடியில் தெய்வத்திற்கு வழிபாடு செய்யும் உரிமையுடைய சாலினி என்பாள் தெய்வமேறப்பெற்று, எயினர் மன்றுகள் பாழ்பட்டன. கடன் உண்ணின் அல்லது கொற்றவை வெற்றி கொடாள். ஆதலின் நீர் செலுத்தற்குரிய கடனைச் செலுத்துவீராக’ என்றாள். சாலினியின் இச்சொற்கேட்டு, எயினர் அனைவரும் சாலினிக்குக் கொற்றவைக் கோலம் புனைந்து வழிபாட்டுப் பொருட்களையும் கொணர்ந்து வைத்துக் கொற்றவையை வழிபடுகின்றனர். சாலினிமேலுற்ற கொற்றவை மூலமாக கொற்றவையின் நிலையும் முன்றிற் சிறப்பும் வென்றிக் கூத்தும் கொற்றவை ஆடிய கூத்தின் சிறப்பும் பேசப்படுகின்றன. இவ்வாறு வெற்றியை அருளும் கொற்றவைத் தெய்வத்திற்கு மடையுடன் கூத்தும் நிவேதனப் பொருளாகின்றது. முன்னர் எதோ நிகழ்ந்தது என்ற நம்பிக்கையான ஐதீகமே (myth) பின்பு இவ்வாறுதான் அது நிகழ்ந்தது என்ற செய்கைச் சடங்காக (ritual) ஆனது என்பர். முன்னர் நிகழ்ந்த ஒன்றைத் திருப்பிச் செய்தால் அதே பலன் நமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையே அம்மன் கோயில்களிலே மடையும் கூத்தும் வழக்கமாவதற்குக் காரணமாகியிருக்க வேண்டும். இச்சடங்கின் வழியில் கொற்றவை வேடம் பூண்ட சாலினிபோன்று பலர் வேடமிட்டு ஆடத் தொடங்கியிருக்கவேண்டும் என்றும், மக்கள் தாம் நினைத்த கருமங்களில் வெற்றிபெறுவதற்கும் கடும் நோயினின்றும் நீங்குவதற்கும் கூத்தாடுவதாக நேருகின்ற வழக்கமும் ஆரம்பித்திருக்க வேண்டும் என்றும் பேராசிரியர் சண்முகதாஸ் குறிப்பிடுவார்.
இந்த வழிபாட்டு நடைமுறையின் தொடர்ச்சியாக இன்றும் இலங்கையின் பல ஆலயங்களிலும் வழிபாட்டின் ஒர் அம்சமாக கூத்து தொடர்புபட்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. விசேட விழாக்களின் இறுதியிலும் பொங்கல் நிகழ்ச்சிகளின் இறுதியிலும் சிவராத்திரி தினங்களிலும் கூத்துகள் மேடையேற்றப்படுகின்றன. விசேடமாக நேர்த்திக்காக கூத்துகளை மேடையேற்றும் மரபு சில ஆலயங்களில் இன்றும் காணப்படுகிறது. இம்மரபுடன் இணைந்ததாக மக்களின் சிறப்பார்ந்த நம்பிக்கைகளும் காணப்படுகின்றன.
வன்னிப்பிரதேசத்தில் வற்றாப்பளை, முள்ளியவளை, சிலாவத்தை,

Page 23
ஜீவநதி 40 கற்கிடங்கு. பனையாண்டான், அரியமடு, கொக்கிளாய், குமிளமுனை முதலியவன்னிக் கிராமங்கள் பலவற்றிலும் கண்ணகை அம்மனுக்குரிய வழிபாட்டிடங்கள் அமைந்துள்ளன. ஆண்டு தோறும் வைகாசித் திங்களில் கண்ணகை அம்மனுக்கு சிறப்பார்ந்த பொங்கல் வழிபாடுகள் நடைபெறுகின்றன. முள்ளியவளையிலும் வற்றாப்பளையிலும் வன்னிப்பிரதேசத்தவர் அனைவரையும் ஒன்று சேர்க்கும் பெருவிழாவாகவும் இது நடைபெறும் வற்றாப்பளை அம்மன் பொங்கல் விழாவில் பாக்குத் தண்டல் முதல் தீர்த்தம் எடுத்தல் இறுதியான காலத்தில் அம்மன் தொடர்பான கலைநிகழ்ச்சிகளாக கரகம். தம்மி, கோலாட்டம், வசந்தன் ஆட்டம் என்பவற்றைத் தொடர்ந்து உச்சக்கட்டமாக கண்ணகி கதை கூறும் கோவலனார் கூத்து வட்டக்களரியில் ஆடப்படும்.
நோய்கள் உண்டாகியபோதும் கடல்வளங்குன்றியபோதும் வயல்களில் விளைவு குறைந்தபோதும் மழைபெய்யத் தவறியபோதும் கூத்துகளை ஆடி, தெய்வங்களை மகிழ்விக்கும் வழக்கம் இன்றும் மன்னாரிற் காணப்படுவதாக அறியப்படுகின்றது. தொற்று நோய்கள் ஏற்படும்போதும் பயிர்வளங்குன்றும் போதும் வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயிலில் கோவலன் கூத்தாடுவது வழக்கம். சின்னமுத்து. பொக்களிப்பான் போன்ற தொற்றுநோய்கள் ஏற்பட்ட போதுகாத்தான் கூத்து ஈழத்தின் வடபகுதி எங்கும் ஆடப்பட்டது. இவ்வாறாக அறியப்படும் செய்திகள் பலவும் வழிபாட்டுடன் கூத்தும் இணைந்தவகையைத் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்துமதச் சார்பான கூத்துகளைப் பேணிவந்த கிராமங்களுள் காரைநகர். சுழிபுரம், வட்டுக்கோட்டை, ஆனைக்கோட்டை, இணுவில். அரியாலை, கோண்டாவில், மாதகல், காங்கேசன்துறை, மயிலிட்டி, அச்சுவேலி, ஆவரங்கால், புத்தூர் நீர்வேலி, கைதடி, சாவகச்சேரி, மீசாலை, பளை, வரணி, கரவெட்டி, தும்பளை, துன்னாலை, பருத்தித்துறை, அல்வாய், வல்வெட்டித்துறை. புறாப்பொறுக்கி, தாழையடி. அம்பன் குடத்தனை, தீவுப்பகுதி என்பன முக்கியமானவை என்பர்.
சிவராத்திரி தினத்தன்றும் முக்கிய விழாக்களிலும் நேர்த்திக்காக கூத்துகள் ஆடப்பட்டு. பின்பு அந்த வழமை தொடரும் நிலையும் இன்று பல ஆலயங்களில் காணப்படுகின்றன. மாதனை கண்ணகை அம்மன் கோயில், புற்றளைப்பிள்ளையார் கோயில், கற்கோவளம் கும்மி அம்மாள் கோயில் அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன் கோயில், வதிரி உல்லியனொல்லை முத்துமாரி அம்மன் கோயில், அல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் கோயில் முதலான ஆலயங்களில் சிவராத்திரி தினங்கள், விசேட தினங்கள் என்பவற்றின்போது கூத்தாடப்படுகின்ற வழமை இன்றும் காணப்படுகின்றது.
கற்கோவளம் கும்மி அம்மன் ஆலயத்தில் சித்திராபெளர்ணமிக்கு பத்து நாட்களுக்கு முன்தொடங்கி தொடர்ச்சியாக பெண்களால் கும்மி அடிக்கப்படும் வழமையும் பெளர்ணமி அன்று காத்தவராயன் கூத்து மேடையேற்றப்படும் வழமையும் இருந்து வந்தன. மாதனைக் கண்ணகை அம்மன் கோயிலிலும் கும்மி கோலாட்டம். உடுக்கடிக்கதை ஆகிய நிகழ்வுகள் இன்றும் வைகாசிவிழாவில் இடம் பெறுகின்றன. புலோலிகிழக்கு அறுபதபாகைக் கிணற்றடி அம்மன் கோயிலில் விலாசக்கூத்துகள் ஆடப்பட்டுவந்தன. அண்ணாவி விநாசிப்பிள்ளை என்பவர் இங்கு அரிச்சந்திரவிலாசம் எனும் விலாசக்கூத்தை வைகாசிப்பொங்கலன்று நிகழ்த்திவந்தார்.

41 அல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் கோயிலில் 1945ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி இன்று வரை சிவராத்திரி தினத்தன்று இசைநாடகங்கள் மேடையேற்றப்பட்டு வரும் வழமை தொடர்கிறது. 1945இல் அல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் கோயிற் பரிபாலனசபைத் தலைவராக இருந்த கலைஞர்
எஸ்.தம்பிஐயா அவர்களின் கோரிக்கைக்கு இணங்கவேசிவராத்திரி தினத்தன்று இசை நாடகங்களை 4945இல்இல் ஒனந்தலுமேடையேற்றும் வழமை இங்கு ஆரம்பமானது. இச்சிவராத்திரி நாடகமேடை ஈழத்தின் புகழ்பூத்த நாடகக் கலைஞர்கள் பலர் இணைந்து
இசைநாடகங்களில் ஐநடிப்பதற்குக் 5ണ്ഥ அமைத்துக் ழ் கொடுத்தது.
அக்காலத்தில் பல வருடங்களாக சிவராத்திரி நாடகங்களை ே யற்றும் பொறுப்பை ஆலய பரிபாலனசபை கலைஞர் எஸ்.தம்பிஐயாவிடமே ஒப்படைத் திருந்தது. கலைஞர் தம்பிஐயா ஏற்கெனவே பல நாடகங்களில் நடித்தும் நாடகங்களைப் பழக்கியும் அண்ணாவியார் என்ற ஸ்தானத்தைப் பெற்றிருந்தவர். நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் ஆலயத்திலும் நேர்த்திக்காக நாடகங்களை மேடையேற்றியவர். இதனால் இவரும் நடிகமணி வி.வி.வைரமுத்து, எம்.பி.அண்ணாசாமி ஆசிரியர், வசாவளான் மார்க்கண்டு அச்சுவேலிமார்க்கண்டு. கே.வி.நற்குணம். வி.கே.இரத்தினம் போன்ற ஈழத்தின் புகழ்பூத்த இசைநாடகக் கலைஞர்களும் ஒன்றாக நடித்த பல இசைநாடகங்களையும் ஸ்பெஷல்' நாடகங்களையும் கலைஞர் எஸ்.தம்பிஐயா அவர்களால் அல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் ஆலய சிவராத்திரி விழாக்களில் மேடையேற்ற முடிந்தது. புகழ்பூத்த கலைஞர்களின் நாடகங்களை மேடையேற்றுவதோடு தமது ஊரைச் சேர்ந்த வயதுவந்த சிறுவர்களையும் சிறுமியரையும் கொண்டு சிறுவர்க்கான இசை நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றும் வழக்கத்தையும் அவர் கொண்டிருந்தார். இந்நடைமுறையானது அண்ணாவியார் எஸ்.தம்பிஐயா வழிவந்த கலைஞர்களால் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் கோயில் ஈழத்தமிழரின் கூத்து. விலாசம். இசைநாடகம் ஆகிய நாடகமரபுகளின் வரலாற்று ஆய்வுக்குரிய தொன்மையான கூத்துக்களரி ஆகும். இலங்கையில் வழிபாட்டு நேர்த்திக் கடனுக்காக 'கூத்துப் போடுவிக்கும் முறை தொடர்ந்தும் பேணப்படும் கோயிலாக நெல்லண்டை பத்திரகாளி அம்மன் ஆலயமே விளங்குகின்றது. தமிழக சினிமாக்கதாநாயகரான தியாகராஜபாகவதர்கூட தமது வழக்கு ஒன்றுக்காக நேர்த்திவைத்து நெல்லண்டைக்கோயிலில் கூத்துப் போடுவித்தார் என்ற செய்தியும் Ф 6xя(Б.
நெல்லண்டையிலே கூத்தும் வழிபாடும் இணைந்துள்ள முறைமை குறித்த பல அம்சங்கள் ஏனைய ஆலயங்களில் இடம்பெறும் கூத்துகளிலிருந்து நெல்லண்டைப்பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஆடப்பெறும் கூத்துகளை வேறுபடுத்துவன. ஆரம்ப காலங்களிலே கூத்துகள் சமதரையிலே ஆடப்பட்டன. கூத்தாடுகின்ற இடத்தைச் சுற்றிக் கயிறுகட்டி அடைக்கப்பட்ட களரியில் கூத்துகள் ஆடப்பட்டன. வடக்குமுகமாக களரியின் வலப்பக்க மூலையில் இரு கதிரைகள்

Page 24
42 போடப்பட்டு கூத்தாடுபவர்கள் ஆலய முன்றலிலே சென்று காப்புப்பாடி கோயிலை வலம் வந்ததும், கதிரைகளுக்குப் பூஜை செய்யும் நடைமுறை இடம்பெறும். கோயிற்பூசகர் இப்பூஜையைச் செய்வார்.
அம்பாளும் ஆழ்வாரும் அங்கு ஆடப்பெறும் கூத்துகளைப் பார்க்க வருவார்கள் என்ற நம்பிக்கை காரணமாகவே இக்கதிரைகள் அவர்களுக்காக இடப்பட்டுகதிரைப்பூஜை நடைபெறும் வழக்கம் ஏற்பட்டது என்பர். இதன் காரணமாக வல்லிபுர ஆழ்வார் கோயில் கொடியேறியபின்னர் நெல்லண்டையிலே கூத்தாடப்படுவதில்லை. அம்பாளுடன் கூத்துப்பார்க்க வரும் வல்லிபுர ஆழ்வார் திருவிழாக் காலத்தில் தமது ஆலயத்திலேயே தங்கி தமது அடியார்களுக்கு அருள் நல்கும் காரணத்தால் கூத்துப்பார்க்க வரமாட்டார் என்ற நம்பிக்கையையே இது காட்டுகிறது. பண்டிதர் நமசிவாயம் அவர்கள் நெல்லண்டைப்பதி அம்மனைப் பரவும் போது,
சுத்துவந்தாய் நேர்த்தியர் சுத்தாடுங்காலை கோலமிகு வல்லிபுரக்கோவில் வைகும் சிர்த்திமிகு நின்னண்ணன் தனையும் சுவிச் சேர்ந்திருந்து மேலைமதில் யன்னல் ஊடாயப் பார்த்தவர்கள் வேண்டுவன பரிவின் ஈவாய். என்று பாடுவதும் நெல்லண்டைப்பதியின் கூத்துநடைமுறை பற்றிய நம்பிக்கையையே சுட்டுவதாகும்.
கூத்தாடும் காலத்திலே கூத்தாடுபவர்கள் விரதம் இருப்பதும், தொடக்கத்திலும் முடிவிலும் காப்புச் சொல்வதும் மங்களம் பாடும் போது விநாயகர், சரஸ்வதி. கூத்து ஆடப்படும் கோயிற்தெய்வம், கூத்தாடுவோர் குலதெய்வம் ஆகியோரை முன்நிறுத்தி வழிபாடு செய்வதும் கூட கூத்தும் வழிபாடும் இணைந்த தன்மையையே சுட்டுகின்றன. பொதுவாகவே, நேர்த்திக்கான கூத்துகளின்போது, களரியின் வலதுபக்க மூலையில் பிள்ளையார். கூத்தாடப்படும் கோயிற்தெய்வம், பிறதெய்வங்கள் ஆகியோருக்காக பழம், பாக்கு, வெற்றிலை ஆகியவற்றை வைப்பதும் தேங்காய் உடைத்து கூத்தினை ஆரம்பிப்பதும் விடிய விடிய விளக்கேற்றுவதும் கூட கூத்துடன் இணைந்த வழிபாட்டு நடைமுறைகளாகவே உள்ளன.
நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில், வடமராட்சியின் புகழ்பூத்த அண்ணாவியாரான தம்பையாவின் விலாசக்கூத்துகள் இடம் பெற்றன. இவரைத்தொடர்ந்து, வடமராட்சியின் புகழ்பூத்த இசைநாடகக்கலைஞர்களான எம்.வி.கிருஷ்ணாழ்வார் எஸ்.தம்பிஐயா, வி.வி.வைரமுத்து, எஸ்.செல்லத்துரை, சிவப்பிரகாசம் போன்றோர் இங்கு இசைநாடகங்களை மேடையேற்றிவந்தனர். ஆரம்பத்திலே இக்கோயிலில் நாட்டுக்கூத்துகளே ஆடப்பட்டன. பின்பு விலாசம், சபா. டிராமாமோடி என்று பலவாறாக ஆடப்பட்டு இன்று இசைநாடகங்கள் மேடையேறிவருகின்றன. இசைநாடகங்களைக்கூட கொட்டகைக்கூத்துகள் அல்லது ஸின் கூத்துகள் என்று அழைக்கும் வழமையே இன்றும் வடமராட்சியில் இருந்து வருகின்றது.
முன்னைய காலத்திலே, சில ஆலயங்களில் கூத்தாடப்படும் போது, கோயிலுக்குள் செல்லும் உரிமை மறுக்கப்பட்ட கலைஞர்கள் ஆடிய கூத்துகளைக் காண்பதற்கும் கூட தாழ்த்தப்பட்டவர்களுக்கென பிரத்தியேக இடங்கள்

நதி - O2 கிளை - 01 43 ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தமையை செய்தியாக அறியக்கூடியதாக உள்ளது. ஆயினும், நெல்லண்டைப்பதியிலே இந்த வழக்கம் இருக்கவில்லை. அம்பாளின் நேர்த்திக்காக யார் கூத்தாடினாலும் அனைவரும் சென்று பார்க்கவேண்டும் என்ற எண்ணமே காணப்பட்டது. நேர்த்திக்காக ஒழுங்கு செய்யப்பட்டகூத்து, இடி, மின்னல், மழை என்பவற்றால் தடைப்படுவதற்கான குணங்குறிகள்காணப்பட்டபோது, கூத்து தடைப்படாதிருக்கவேண்டும் என எல்லோருமே அம்பாளை வேண்டுதல் செய்தனர். மேடையேற்றப்பட்ட இசைநாடகங்கள் சிறப்பாக அமைந்தவிடத்து.அவை யாரால் மேடையேற்றப்பட்டன என்ற பேதமின்றி, மணியகாரன், விதானையார் போன்ற ஊர் முதன்மையாளர்கள். மேடையிற்தோன்றி கலைஞர்களைப் பாராட்டுவதும் வெகுமதி வழங்குவதும் கூட நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றன. நேர்த்திக்காகச் செய்யப்படும் கூத்துகளும் அம்பாளுக்கான நிவேதனப் பொருள்களே என்ற உணர்வுநிலை சாதி இறுக்கத்திலும் தளர்வுநிலையை ஏற்படுத்தியது.
பிள்ளைப்பேறு, நோய்நீக்கம், வழக்குவெற்றி, பரீட்சைச்சித்தி என்பவற்றுக்காக வைக்கப்பட்ட நேர்த்திகளின் வரிசையில் இன்று வெளிநாட்டுப் பயணம் சித்திக்கும்போதும் நேர்த்திவைத்து நெல்லண்டைப்பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் கூத்துப்போடுவிக்கும் வழமை தொடருகிறது. கோயிலுக்கான நிதி உதவியைவிட நெல்லண்டை அம்பாளுக்கு கூத்து நேர்த்திவைப்பதே சிறந்தது என்ற நம்பிக்கையே இன்றும் வடமராட்சி மக்களிடையே நின்று நிலைத்துவருகிறது.
இன்று மக்களின் வழிபாட்டு முறைகளில் சமஸ்கிருதமயப்பாடு விளைவித்துவருகின்ற தாக்கம் குறித்து சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் கூத்தும் வழிபாடும் இணைந்த நெல்லண்டைப்பத்திரகாளி அம்மன் ஆலயச் சூழலில் உள்ள வடமராட்சி மக்கள் தமது நம்பிக்கைகளையே வழிபாட்டின் அடித்தளமாகக் கொண்டு சமய அநுபவங்களையே உந்நதமாகக் கருதி வாழ்ந்து வருகின்றனர். இன்று நாடகம் ஓர் அரங்க ஆற்றுகைக் கலையாக புதிய பொருளில் புதிய உத்திகளுடன் முன்னெடுக்கப்படுகின்ற நிலையிலும் நெல்லண்டைப்பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மேடையேறுகின்ற புராண, இதிகாசக் கதை அம்சங்களைக் கொண்ட மரபுக்கூத்துகள் தமது செல்வாக்கை இழந்துவிடாமல் இன்றும் பேணப்பட்டு வருகின்றன. ஈழத்துக்கூத்துமரபும் வழிபாடும் இணைந்த தன்மையினாலேயே இக்கூத்துமரபு இன்றும் நின்று நிலைத்துவருகின்றது என்பது மறுக்கற்பாலதன்று)
ല്ല. ബ്ലേ? :)
,"് நூல் அறிமுகம்
Rygg 深 S நூல் - ஓர் எழுதுவினைஞனின் டயறி
ஆசிரியர் - ஆனந்தமயில்
வெளியீடு - வர்ணாவெளியீடு
பொலிகண்டி கிழக்கு
வல்வெட்டித்துறை
விலை - 150/=

Page 25
ஜீவநதி
44
கனவுகள் கலைய.
பெட்டியைசயிக்கிளில் தூக்கி வைத்து அதன் சமனிலையை சரிபார்த்துக்கொண்டே இறுகித் திரண்ட கயிற்றால் வழமைபோல சுற்றி (pQở đf (Bai &t5 Lņu Lu Q &tbsỀ 605 uuT மரக்கறி வியாபாரத்திற்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தான்.
வழமையாக ஐந்துமணிக்கு அருகிலிருக்கும் ஆலயமணியின் ஒசையோடு எழுந்துவிடுகின்ற அவனால் இன்று அவ்வாறு எழ முடியவில்லை. தனது உள்ளம் இடிகளைத் தாங்கித் தாங்கி உரமேறிப் போய் பலகாலம் என்றுதான் அவன் நேற்றுவரை நம்பி யிருந்தான். அந்தளவிற்கு அவன் துன்பங்களைச் சுமந்தவன். துயரங் களால் தோய்ந்தவன். ஆனால் எல்லா வற்றையும் தாண்டி எம் குடும்பத்திற்கு விடிவுவரும் நாளை நாங்களும் நிமிர்வோம் என்ற கனவுகளைத் தாங்கி அதற்கான நாட்களுக்காய் தவமிருந்த வனுக்கு அவை ஒரே நாளில் உடைந்து சிதறியபோது அதை அவனால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?
本米米
கந்தையாவின் சொந்த இடம் மாவிட்டபுரம், வளம் நிறைந்த மண்ணில் பயன்விளைத்து வாழ்ந்தவன். அடக்க மான சிறுவீட்டில் மூன்று பிள்ளை களோடும், மனைவியுடனும் அமைதி யாக வாழ்ந்த குடும்பம். யுத்தத்தால் பெயர்க்கப்பட. இன்று அகதியாய் குடிசைக்குள் இருப்பு சுருண்டு விட்டாலும் வாழவேண்டும்'என்ற வேகம் அவனை இயக்குவித்தது. கடையில் கட்டடவேலையில். என பல இடங் களில் கூலியாய் குடும்பத்தைக் கட்டிக் காத்தான். அதற்கெல்லாம் ஒரு
- ந. குகபரன்
அறுவடை உண்டு என்றே அவன் முழுதாய் நம்பினான்.
கந்தையாவின் மனைவி பாக்கியம் கணவன் கொடுப்பதைக் கொண்டு வயிற்றின் கொதிப்பை எப்படியோ அடக்கி விடுவதில் கெட்டிக் காரி. மூத்தமகன் கணேசன் இருபத்தி னாலாவது வயதில் சொந்த மச்சாளை திருமணம் செய்து கொண்டு தனியாகப் போய் விட்டான். மூன்றாவது வானதி நீண்ட இடைவெளியின் பின்னர் பிறந்தவள். ஏழாம் வகுப்பில் கற்கிறாள். இரண்டாவது மகன் கதிரவன் தான் கந்தையாவின் கனவுகளுக்கெல்லாம் உருவம் கொடுக்கப்போபவனாக நேற்று வரை இருந்தான் ஆனால்.
'சின்னவன் ஏதோ யோசிச்சுக் கொண்டிருக்கிறான் முந்தினமாதிரி கலகலப்பு குறைவாகக் கிடக்குது;
பாக்கியம் சில மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்டதன் அர்த்தத்தை கந்தையா சரியாக உணர்ந்து கொள்ள நீண்டகாலம் எடுத்துவிட்டது.
'அவன் தெளிவான பெடியன். படிக்கிற விடயங்கள் கணக்க இருக்கும் அதுதான்.
அன்று இப்படிக்குறிப்பிட்டதை இப்பொழுது நினைக்க.
‘ஆரோ சங்கீதாவாம். அவ ளோடை உவன் வயலடியில நிண்டு கதைச்சுக்கொண்டு நிண்டவனாம்
என்ற செய்தி வானதி மூலம் வீட்டிற்கு வந்து சிேர்ந்த பொழுது கந்தையா சிறி. கலங்கி. கதிர வனோடு ஒரு நாள் முழுவதும் பேசாது
விரதம் இருந்ததும்.
அப்பா! அந்தப்பிள்ளையோட ப்ரண்டாத்தான் கதைச்சனான்.

உங்களுக்குப்பிடிக்காட்டி நான் கதைக் கிறதை விட்டிறுறன்'
எனக் கூறியதை நம்பி யதும் சேர்ந்து இன்று கந்தையாவை குத்தி குதறிக் கொண்டிருந்தன.
இடம்பெயர்ந்த பொழுதும்சரி வாழ்க்கையில் வரிசையாக வந்த துன்பங்கள் ஒவ்வொன்றையும் சுமந்த போதும் சரி அவன் இவ்வளவுதுக்கப்பட வில்லை, கண்ணிர் விட்டு அழவில்லை. ஆனால் நேற்று அவனது வாழ்க்கையே இருண்டு போனதான உணர்வு அவனுக்கு மட்டுமல்ல பாக்கியம் வானதி, என அனைவருக்குந்தான்.
‘நான் திரும்பத்திரும்பச் சொன்னேனே. அவன் முந்தின மாதிரி யில்லை எண்டு.
பாக்கியம் இரவு முழுவதும் புலம்பியபடியே இருந்தாள்.
நித்திரை என்பதையே மறந்து கதிரவனின் வார்த்தைகளே கந்தை யாவின் மனதிலும் எதிரொலித்தன.
'நான் அவளைத்தான் கட்டப் போறன். அவள் வீட்டில பிரச்சனை. ஒருத்தரும் தலையிடாதேங்கோ
நேற்று ‘வாதம் தீவிரமாய் நிகழ்ந்து கொண்டிந்த வேளையில்தான் கந்தையாவும் சந்தைக்கு கொண்டு போவதற்காக மரக்கறியைக் கட்டிக் கொண்டு வீட்டிற்குள் பிரவேசித்தார்.
'டேய்! என்ன நடக்குதிங்க. கொஞ்சம் மேல வளந்திட்டவுடன தலைகால் தெரியலையே.
கந்தையாவின் கை, கால்கள் நடுங்கத் தொடங்கின ஆத்திரம், வெறுப்பு, துயரம் எல்லாம் ஒன்றுகூடி இதயத்தை இறுக்க மேலே பேச முடியாது விக்கித்தார்.
நான் வீட்டை விட்டுப்போறன். எனக்கு பதினெட்டு வயசாவிட்டுது. என்ர வாழ்க்கை பற்றி எனக்குத் தெரியும்.
பாக்கியம் பதிலுக்குக் குளறி
45
யபடியே இருந்தாள். ஆனால் கந்தை யாவால் முடியவில்லை.
'டேய் ! A/Lக்கு இன்னும் மூண்டுமாசம் கிடக்குது உனக்கேன்ரா இப்படி புத்தி கெட்டுப்போகுது.
பாக்கியம் பாவம் பெத்த பிள்ளை எல்லாவற்றையும் குலைத்து விட்டு இப்படிக் கதைக்கிறதே என்ற ஏக்கம் அவளுக்கு.
பதினெட்டு வருஷமாய் உழைப்பால் தன் உடலை உருக்கி வளர்த்த சீவன். கனிந்து வரும் எதிர் காலத்தை உதைத்துவிட்டு எல் லோருடைய கனவுகளையும் கலைத்து விட்டு.
கந்தையாவால் பாக்கி யத்தால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. ‘காதலிக்கிறது தப்பில்லை. ஆனால் பொங்கி வருகிறபோது பானையை உடைக்கிறமாதிரி. சின்ன வயதில் கலியாணஞ் செய்து பிள்ளையளவளத் திட்டன், இவனாவது படிச்சு பல்கலைக் கழகம் போய். நாலுபேர் மதிக்க வாழலாம். என்னைப் போல இவன் கஸ்ட படக் கூடாது எண்டு எண்ணினன்.
கந்தையாவின் மனதில் பல சுனாமிகள் ஒன்றாய் அடித்தன.
'அவளைக் கூட்டிக்கொண்டு போட்டானாம்
வானமே இடிந்து விழுந்தது போல நேற்று பின்னேரம் வந்த செய்தி கந்தையாவின் வீட்டை துக்க வீடாக்கியது.
இத்தனை சோகங்களையும் சுமந்து கொண்டே நேற்றைய இரவு கழிந்தது.
பெட்டியை கட்டிமுடித்த கந்தையா மீண்டும் சரிபார்த்துக் கொண்டு அழுதவாறே நிற்கும் தன் மனைவியை நிமிர்ந்து பார்த்தான். அவனுக்கு இப்போது அவளும் ஒரு பிள்ளைதான்.

Page 26
நதி - 02 கிளை - 01 46 பக்கத்து குடிசையில் கொண்டு கேற்றையே வெறித்துப்
இருக்கும் சுந்தரத்தின் வீட்டுநாய் வாலை ஆட்டியபடி புறப்படத்தயாரான கந்தையாவைப் பார்த்து சிணுங்கியது. வழமையாய்நாயை பாசத்துடன் வருடும் கந்தையாவிற்கு இன்று அதன் பார்வையும் கூட தன்னை ஏளனமாய், பரிதாபமாய் நோக்கிச் சிரிப்பது போன்ற உணர்வையே தந்தது.
‘கடவுளே நாங்கள் என்ன பாவம் செய்தம் ஒரு சின்ன கஸ்டம் கூட
பார்த்தபடி ஒருகணம் யோசனையில் ஆழ்ந்து நின்ற கந்தையா, மனைவி அருகில் வந்ததைக் கண்டதும் சயிக்கிளின் பின்சில்ரயரை அழுத்திப் பார்த்தான்.
அப்பா! இண்டைக்கு பேசாமல் வீட்ட இருங்கோ’
கந்தையா எதுவும் பேச வில்லை இனி எதைப் பேசி என்ன பயன் என்று எண்ணினானோ? தன்னை நம்பி
பிள்ளையளிர் படக்கூடாது எண்டு இரண்டு சீவன்கள் இருக்கிறது என்ற பாடுபட்டன். ஏன் இப்படி?. எண்ணத்திலோ. அவன் சயிக்கிளை
சயிக் கிளை பிடித்துக் மிதிக்கத்தொடங்கிவிட்டான்.000
கலை இலக்கிய நிகழ்வுகள்
1) ஈழத்தில் முதற் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டவரும் கலைச் செல்வி ஆசிரியருமாகிய சிற்பி சிவசரவணனின் பவள விழா ஞானம் சஞ்சிகையின் அனுசரணையுடன் யாழ். இலக்கியவட்டம் 15.06.2008. கந்தரோடை ஸ்கந்தவரோதய கல்லூரியில் நடத்தியது. யாழ். இலக்கிய வட்டத்தலைவர் கலாநிதி செங்கை ஆழியான் தலைமையில் நடைபெற்ற, இந்நிகழ்வில் பவளவிழா மலரை ஞானம் ஆசிரியர் தி.ஞானசேகரன் வெளியிட்டார். அத்தோடு சிற்பி எழுதிய நினைவுகள் மடிவதில்லை" சிறுகதை தொகுதியை பேராசிரியர் அ.சண்முதாஸ் வெளியிட்டு வைத்தார். நிகழ்வில் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், ப.சிவானந்தசர்மா, கவிஞர் சு.துரைசிங்கம். எழுத்தாளர் ஐ.சாந்தன் உட்படப் பலரும் உரையாற்றினர்.
2) எழுத்தாளர் க.சட்டநாதன் எழுதிய "புதியவர்கள் சிறுகதை தொகுப்பின் நூல் விமர்சன அரங்கு யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரைமண்டபத்தில் பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் தலைமையில் 11.05.2008 அன்று நடைபெற்றது. யாழ்.பல்கலைக்கழக சமூகவியல் சமூகம் ஏற்பாடு செய்த இந்தநிகழ்வில் வரவேற்புரையை ந.மயூரஞபனும் உரைகளை ச.இராகவன், ந.சத்தியபாலன் ஆகியோரும் நிகழ்த்தினர்.
3) யாழ்.பல்கலைக்கழக சமூகவியல் சமூகத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் த.ஆனந்தமயிலின் "ஓர் எழுதுவினைஞனின் டயறி சிறுகதைத் தொகுதி நூல் அறிமுக அரங்கு 22.06.2008 யாழ்பல்கலைக்கழக புவியியற்துறை மண்டபத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் குப்பிளான் ஐ.சண்முகனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை எஸ் இதயதிபன் நிகழ்த்தினார். அறிமுகஉரையை எழுத்தாளரும் விமர்சகருமான அயேசுராசாவும். மதிப்பீட்டுரைகளை விரிவுரையாளர் பா.அகிலன் , விரிவுரையாளர் க.அருந்தாகரன், ஆசிரியர் இ.ராஜேஸ்கண்ணன் ஆகியோரும் நிகழ்த்தினர். நன்றியுரையை ஆனந்தமயில் நித்திலவர்ணன் நிகழ்த்தினார்.

ஜீவநதி 47 செம்மொழித் தமிழில் பெண்களின்
புலமைத்துவம் : ஒக்கூர் மாசாத்தியார்
செல்வி. செல்வ அம்பிகை நடராஜா
வீரம் பாடிய பெண்பாற் புலவர்களில் ஒக்கூர் மாசாத்தியாரும் குறிப்பிடத்தக்கவர். இவர் தழிழகத்தின் பழைய ஊர்களில் ஒன்றான ஒக்கூர் என்னும் ஊரில் வாழ்ந்தவர். இவரது இயற்பெயர் சாத்தி என்பதாகும். உயர்வையும், பெருமையையும் குறிப்பதற்கு மா என்னும் அடைமொழி வழங்கப்பட்டுள்ளது. பண்டையநாளில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சாத்தன், சாத்தி கொற்றன், கொற்றி என்னும் பெயர்கள் சூட்டப்பட்டன. தொல்காப்பிய உரையாசிரியர்கள் இப் பெயர்களைத் தங்கள் உரை விளக்கத்திற்கு எடுத்துக் காட்டிச் சென்றுள்ளனர். சங்க இலக்கியங்களில் ஒக்கூர் மாசாத்துவனார் என்னும் ஆண்பாற் புலவர் இடம் பெற்றுள்ளார். சாத்தன் என்னும் ஆண்பாற்பெயருக்குப் பெண்பாற்பெயர் சாத்தி ஆகும். இவரின் சிறப்பு நோக்கி மாசாத்தியார் என அழைக்கப்பட்டார்.
ஒக்கூர் மாசாத்தியாரின் பாடல்களாக எட்டுப்பாடல்கள் கிடைத்துள்ளன. அவை பின்வருமாறு அமைகின்றன. குறுந்தொகை - 126, 139, 186, 220, 275. அகநானூறு - 324, 384, புறநானூறு - 279
ஒக்கூர் மாசாத்தியாரின் பாடல்களில் ஏழு பாடல்கள் அகப்பாடல்களாகவும், ஒரு பாடல் புறப் பாடலாகவும் அமைந்துள்ளன. அகப்பாடல்களுள் பெரும்பாலன முல்லைத்தினை பற்றி வருவன. இவரது பாடல்களில் புறப்பாடலினாலேயே பெரும் புகழ் பெற்று விளங்குகின்றார்.
மாசாத்தியார் மறக்குடித் தாயாரின் வீரத்தை ஓர் அழகிய சொல்லோவியமாகச் சித்திரித்துக் காட்டியுள்ளார், பழந்தமிழகத்தில் பல குடிகள் இருந்தன. அதில் ஒன்றுதான் மறக்குடி, இது எப்பொழுது தோன்றியது என்று அறிய முடியாத பழைமையானது. மறம் என்றால் வீரம் எனப்பொருள்படும். இக்குடியில் தோன்றிய அனைவரும் வீரர்கள். அவர்கள் போர் புரிதலையே தொழிலாகக் கொண்டவர்கள். மறக்குடியில் தோன்றிய ஆண்கள் மட்டுமன்றி பெண்களும். சிறுவர்களும் கூட வீரம் செறிந்தவர்களாக விளங்கினார்கள். மறக்குடியில் தோன்றிய தாய் ஒருத்தியின் வீரத்தை மாசாத்தியார் காட்டுவதன் மூலம் தமிழ் மகளிர் கடமையில் தவறாத வீரப் பன்ைபினர் என்பதைப் புலப்படுத்துகின்றார்.
காலைப் பொழுது. போர்ப் பறையின் ஒலி நாற்றிசையும் முழங்கியது. பறையோசை கேட்ட மறக்குடி மங்கை வீட்டினுள் இருந்து வெளிவந்து வீதியின் இருமருங்கும் பார்க்கிறாள். சிறுவன் ஒருவன் வீதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அச்சிறுவனைக் கண்ட அவளும் அவனது கரம்பற்றி, "மகனே பறையொலிஉன் காதிற் படவில்லையா மாற்றார் படைகளை மாய்த்துநம் நாட்டையும் குடிமக்களையும் காப்பது நம் கடமையல்லவா? விரைந்து போர்க்களம் செல்க" என்று கூறி அழைத்து வருகின்றாள். அம்மறக்குடி மங்கையின் வீரச் செயலை நேரிற் கண்டறிந்த மாசாத்தியார் அவளின் செயலை வியந்து பாடியுள்ளார்.

Page 27
48 கெடுக சிந்தை கடிதிவள் துணிவே முதின் மகளிர் ஆதல்தகுமே மேனாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை யானையெறிந்துகளத்தொழிந்தனனே நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன் பெருநிரைவிலக்கியாண்டுப்பட்டனனே இன்றும் செருப்பறைகேட்டுவிநப்புற்றுமயங்கி வேல்கைக் கொடுத்துவெளிது விரித்து உடீஇப் பாறுமயிர்க் குடுமிஎண்ணெய்நீவி ஒரு மகன் அல்லது இல்லோள் செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே (புறநானூறு 279) முதஸ் நாள் போரிலே அவள் தமையன் மாண்டான். நேற்றைய போரிலே அம்மறக்குடிமகளின் கணவன் மாண்டான். இன்று ஒரே மகனான இச்சிறுவனைத் தவிர வேறு எவரும் இல்லை. அச்சிறுவனது விரிந்த தலைமயிரை எண்ணெய் தடவி அமர்த்தினாள். வெள்ளை ஆடை அணிவித்து வேலாயுதத்தைக் கையிற் கொடுத்தாள் "உன் நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் பகைவரை மாய்க்க மகிழ்வுடன் போர்புரியச் செல்க எனத் தன் ஒரேமகனிடம் கூறி, அச்சிறுவனைப் போர்க்களம் நோக்கி அனுப்பி வைக்கிறாள். அம்மறக்குடி மங்கையின் செயலை மாசாத்தியார் என்னே இவள் நெஞ்சத்துணிவு இவளை மறக்குடிமங்கை என்று கூறுவது தகும் என வியந்து பாடியுள்ளார்.
பாடலடிகளின் கருத்துச் செறிவு நுட்பமாக அமைந்துள்ளது. காட்சியைத் தெளிவாக உணர்த்துவதற்குப் பொருத்தமான சொற்களை இடம் நோக்கி அமைத்துள்ளார். பாடலின் தொடக்கத்தில் மாற்றார் மாள்வது உறுதி என்பதைக் காட்ட "கெடுக சிந்தை" என்ற தொடரை மாற்றாருக்காகச் சுட்டிக் காட்டியுள்ளார். தன் மறக்குடிக் குடும்பத்தில் வீரச்சாவு அடைந்த தமையனையும், கணவனையும் குறிப்பிடுமிடத்து அவர்களின் இறப்பை முறையே யானையைக் கொன்று களத்து ஒழிந்தனன்" எனவும் ஆநிரை கவர் தலைத் தடுத்தலால் பட்டனன் எனவும் நுண்மையாக வேறுபடுத்திக் காட்டியுள்ளார். முன்பு (மேனாள்). நேற்று (நெருநல்). இன்று எனக் காலமுறைப்படுத்தி குடும்பத்திலிருந்து நாட்டுப் பணியாற்ற தன் உறவுகளை எல்லாம் அனுப்பிவைக்கும் வீரத்தாயின் மறஉணர்வு போற்றுதற்குரியது. ஒரு மகனையன்றி வேறு ஒருவரையும் பெறாத அத்தாயப் போர் வீரனுக்குரிய ஒப்பனையுடன் அச்சிறுவனைப் போர்க் களத்திற்கு அணி செய்வித்து அனுப்பும் சூழ்நிலை வீரத்தாயின் நாட்டுப் பற்றைப் புலப்படுத்தி நிற்கின்றது. 000
ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் கூறு நல்லுலகில் ஆசிரியராக பணிபுரிந்தும் ஆன்மீகத்துறையில் சொற்பொழிவாளராகவும் ஆலய அறங்காவலராகவும் இறைபணியாளராகவும் விளங்கியதோடு மட்டு மல்லாமல் சமூகத்தின் தேவைகருதிஉதவும் கரமாக சமூகசேவகியாகவும் விளங்கிய அன்னை தங்கம்மா அப்பாகுட்டியின் மறைவிற்கு ஜீவநதி தனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

நதி - O2 கிளை - 01 49
66 99 வடலி
குறும்பட விமர்சனம்
- சின்னராஜா விமலன்
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்துறை மாணவன் கோகுலரூபனின் கதை இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த குறும்படம் தான் "வடலி. மூச்சு தயாரிப்பில் வெளிவந்துள்ள இக்குறும்படத்தை பிரான்சிஸின் ஒளிப்பதிவும் தர்ஷனின் படத்தொகுப்பும் ஜெயந்தனின் இசையும் ஒன்று சேர்ந்து முழுநிறைவான படைப்பாக்கமாக கலாநேர்த்தியுடன் அளித்துள்ளன.
நல்லூர் முருகன் ஆலயத்தோடு ஆரம்பமாகும் படமானது ஒரு சிறுவனை மையமாகக் கொண்டே சித்திரிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் பனையின் இளமை பெயரான வடலியை சிறுவர்களுக்கு குறியீடாகக் கொண்டு குறும்படத்தின் பெயர் இடப்பட்டுள்ளது.
படத்தின் தலைப்புப் பாடலை தமிழ்த்துறை துணைவிரிவுரையாளர் செ.சுதர்சன், பனையோலை காற்றில் யாழோசை சிந்திபல வண்ணப்பாடல் மண்ணைப் பாடாதோ. என்று எழுதிக் கொடுத்த பாடல் வரிகளும் நெய்தல், மருதமண் வாசனை பிரதிபலிக்கும் வகையிலான ஒளிப்பதிவும் பாடல் மெலடி பாணியில் அமைந்திருப்பதும் மனதைக் கவர்கிறது. ஜெயந்தனின் குரலும் இசையும் இதற்கு மேலும் வலுச் சேர்க்கின்றன.
சிறுவன், வயோதிபர், வயோதிபமாது, சீவல் தொழிலாளி ஆகிய நான்கு பாத்திரங்களை மட்டும் தெரிவு செய்து இதனை ஒரு குறும்படமாக அளிக்கை செய்துள்ளனர். சிறுவனாக நடித்த விதுஷனின் நடிப்பு குறிப்பிட்டுச் சொல்லும் படியாக உள்ளது. சைக்கிள் வால்கட்டையில் காற்றைத் திறந்து விடுதல். கழற்றிய வால் கட்டையினுள் தீக்குச்சி மருந்தினைப் போட்டு வெடிக்கச் செய்தல், சுவரில் தொங்கியுள்ள சிவலிங்கப்படத்தின் மேல் பூ இருப்பதைப் பார்த்துவிட்டு கும்பத்தின் மேலிருந்த பூவை எடுத்து ஆட்டுக் கல்லின் மேல் வைத்தல், பனையில் தொங்கும் முட்டிக்கு கவனால் கல் அடித்தல் போன்ற செயற்பாடுகள் மூலம் சிறுபராயத்தினருக்குரிய குண இயல்புகளும் குறும் புத் தனங்களும் சித்திரிக்கப்படுகின்றன.
சிறுவர்கள் முன்னிலையில் பெரியோர்களால் ஆற்றப்படுகின்ற எந்த ஒரு செயலும் அவர்களை எந்தளவிற்கு மனதளவில் பாதிக்கின்றது என்பதனை அந்தச் சிறுவனின் மனநிலையில் இருந்து சித்திரிக்கவும் இயக்குனர் தவறவில்லை. கள் குடித்துவிட்டு வயோதிபர் வைத்த செம்பை எடுத்து சிறுவன் நாக்கால் ருசிபார்க்கும் சந்தர்ப்பத்தை இதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம்.
"போரின் தாக்கம் சிறுவர்களின் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி விடுகிறது. போர் எனும் இடர் நீங்கி சமாதானம் மலர மீண்டும் விழித்தெழுவோம். போரின் சுமை இன்னொரு சந்ததிக்கு வேண்டாம்" எனக்கூறி போருக்குள் வாழும் உலக சிறுவர்களுக்கு இக்குறும்படம் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

Page 28
50 மனித இழப்புக்களை அவமாகச் சந்திக்கின்ற பொழுது அவை பிள்ளைகள் மனதில் எவ்வாறான பழிவாங்கல் எண்ணங்களை விதைத்து விடுகின்றது என்பதை சிறுவர் உள நலக் கண்ணோட்டத்துடன் நோக்கி இயக்குனர் வெற்றி கண்டுள்ளார். சிறுவர்களின் உளநலன் பாதிப்புறாத வகையில் அவர்களுக்குத் தகுந்தாற் போன்ற சூழலை அமைத்துக் கொடுப்பதும் எமது பாரிய பொறுப்பாகிறது.
சீவல் தொழிலாளி வயோதிபர் வீட்டுக்கு வருகை தரும் சந்தர்ப்பத்தில் பின்னணியில் சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா. திரைப்பாடல் ஒலிப்பது பனை கொடுக்கும் வள்ளலாக இருந்தாலென்ன, சீவல் தொழில் செய்பவனாக இருந்தாலென்ன இறுதியில் ஏற்றத்தாழ்வின்றி மயானத்தில் இருவருக்கும் சமத்துவமான இடமே எனக் காட்ட முற்படுவது துலங்குகிறது. இருப்பினும் நாம் இன்று கணினி யுகத்தில் வாழ்ந்தாலும் திண்டாமையின் கரங்கள் இன்னும் நம்மை திண்டிய வண்ணமே உள்ளன என்பதை அந்தச் சீவல் தொழிலாளிக்கு உணவு கொடுக்கின்ற தருணத்தில் வெளிப்படுத்த முயன்றுள்ளமை கண்கூடாகிறது.
குறும் படத்திற்கெனக் கொள்ளப்படும் முக்கிய பண்புகளில் ஒளிப்பதிவு செய்கின்ற ஒவ்வொரு காட்சியும் கதை நகர்த்தலுக்கான பயணிப்பின் ஓர் அங்கமாய் அமைந்து நுகர்வாளனின் சிந்தனையில் பல்பரிமாணத்தை தோற்றுவிக்கக்கூடியதாக அமைதல் அவசியமாகின்றது. அந்தவகையில் வீட்டில் மாட்டப்பட்டிருக்கும் இறந்தவருடைய படம் வீட்டின் புறச்சூழலை யதார்த்தமாகச் சித்திரிப்பதற்காக கையாளப்பட்ட ஒன்றாகவே படுகின்றது. ஆசிரியர் சொல்ல விளைந்த மையக் கருத்துக்கும் அந்தப் படத்திற்கும் இடையில் ஒரு போரியல் அனர்த்தத் தொடர்பை ஏற்படுத்தி கதையை இன்னும் செழுமைப்படுத்தி இருக்கலாமோ எனவும் எண்ணத் தோன்றுகின்றது.
இது தவிர படத்தில் வருகின்ற வயோதிப பெண் பாத்திரத்தை இன்னும் சற்று மெரு கூட்டி இருக்கலாம். வயோதிப ஆண் பாத்திரம் ஏற்று நடித்த தனுஜனின் ஒப்பனையில் செலுத்திய கவனம் நடிப்பில் அவரது அங்க அசைவுகளில் முற்று முழுதாக வெளிப்படாதது சற்று உறுத்தலான விடயமே.
ஒட்டு மொத்தத்தில் பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முயற்சியாகத் தோற்றம் பெற்ற கோகுலரூபனின் "வடலி குறும்படத்தில் அவர் வெளிப்படுத்திய அசாத்தியத் திறமையானது எதிர்காலத்தில் அவரிடமிருந்து இன்னும் சிறப்பான படங்களை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையைத் தருகின்றது.
feon, segurgíu
aь полкъ6ії நூல் அறிமுகம்
T நூல் - சீன ஜப்பானிய நாடகமரபுகள்
ஆசிரியர் - பா.இரகுவரன் வெளியீடு - தேடல்வெளியீடு
விலை - 100/=
 

நதி - O2 கிளை - 01 51 ஜீவநதி ஆண்டுமலர்தினக்குரல் முதிப்பீடு
- கே. சுபேஸ்
ஒரு சஞ்சிகையைத் தொடர்ச்சியாக வெளியிடுவது என்பதுபோட்டிகள் நிறைந்த இந்தக்காலத்தில் ஒரு சவாலாகவே உள்ளது.நம்நாட்டில்வெளிவரும் சில்லறைத்தனமான சில இதழ்கள், அது போதாதென்று வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் மலினப் பத்திரிகைகளுக்கிடையேகனதிமிக்க ஒரு இலக்கியசஞ்சிகையை வெளியிட்டுசமூகத்தில் ஒரு காத்திரமான இடத்தைப் பிடிப்பதென்பதே அரிதிலும் அரிய செயல். எத்தனையோ இதழ்கள் ஆரம்பித்த வேகத்தில் காணாமல் போயிருப்பது இதற்கு நல்ல உதாரணம்
ஆனால் போர்ச் சூழல். பொருளாதார நெருக்கடி, வளப்பற்றாக்குறை. போக்குவரத்து வசதியின்மை, உயிர் அச்சுறுத்தல்கள். இத்தனைக்கும் நடுவே இளைஞர்களால் தொடர்ச்சியாக ஒரு காத்திரமான இலக்கிய இதழாக ஜீவநதி வெளிவருவது உண்மையில் வேதனைகளுக்கு மத்தியில் நிலை நாட்டிய ஒரு சாதனையாகவே கருத வேண்டியுள்ளது.
கலை, இலக்கிய ஆர்வத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு ஊற்றெடுக்க ஆரம்பித்த ஜீவநதி,இந்த ஒராண்டு காலத்திற்குள் மூத்த எழுத்தாளர்கள். புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள், புதிய தலைமுறைப் படைப்பாளர்கள் என அத்தனை பேரையும் தன்னுள் உள்ளிர்த்துக் கொண்டு இலக்கியத் தேடலுடன் வீச்சுடன் பாய்ந்து செல்கின்றமையும், அந்த ஜீவநதியின் ஓட்டத்தில் ஆயிரமாயிரம் இலக்கிய உள்ளங்கள் மூழ்கிமுத்தெடுத்து இன்புறுவதையும் காணமுடிகின்றது. இதற்கு ஜீவநதியின் ஆசிரியர்கள். ஆலோசகர்கள். படைப்பாளிகள், வாசகர்கள் விநியோகஸ்தர்கள் விளம்பரதாரர்கள் என அத்தனை பேருமே காரணம்.
அந்த வகையில் இரு திங்கள் இதழாகத் தொடர்ச்சியாக ஐந்து இதழ்களை வெளியிட்டநிலையில் ஒராண்டைப்பூர்த்திசெய்தஜீவநதிமுதலாம் ஆண்டுநிறைவுமலரை வைகாசி- ஆனி இதழாக வெளியிட்டுள்ளது. என் கரம் கிடைத்த ஜீவநதி ஆண்டு மலரை நான் மட்டுமல்ல அதனைப் பார்த்தவர்கள் எல்லோரும் வியந்து போனார்கள். அவர்கள் கேட்ட முதல் கேள்வி இது யாழ்ப்பாணத்தில் இருந்துவெளிவந்த சஞ்சிகையா?என்றுதான். அந்தளவுக்கு அதன் உருவம், உள்ளடக்கம் அத்தனையும் தரம் நிறைந்ததாக இருக்கின்றது.'ஜீவநதி விமர்சனத்துறைசார்ந்த அதிக நாட்டத்தைக் கொண்டுள்ளது. நொய்ந்து போயிருக்கும் விமர்சனத் துறையை வளர்த்து ஆரோக்கியமான இலக்கியங்களை இனங்காண்பதுடன் நல்ல இலக்கியங்களை வளர்த்தெடுக்க வேண்டுமெனவும் கருதுகின்றோம். நமது நாட்டில் உள்ள விமர்சகர்கள் ஜீவநதியின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு உதவ வேண்டும் எனவும் அதேசமயம், ஜீவநதி பற்றிய ஆரோக்கியமான விமர்சனத்தையும் எதிர்பார்ப்பதாகவும் ஜீவநதி ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
வடமராட்சியிலுள்ள பெருங்கற்காலகடல்முகப்புத் தளங்கள் மற்றும் கற்காலப் பண்பாட்டுமையங்கள். அடையாளம்காணலுக்கான ஒர் அறிமுக ஆய்வுஎன்னும் பயனுள்ள ஒரு ஆய்வுக்கட்டுரையினை பேராசிரியர் செ.கிருஸ்ணராஜா தந்துள்ளார். யாழ்ப்பாண குடாநாடு வரலாற்றுக்கு முற்பட்ட காலப்பரப்பிலிருந்தே கடல்முகப்புத்தளங்களின் அதீத செல்வாக்கிற்கு உட்பட்டு வந்தமையினை தொல்லியல் சான்றுகளினூடாகக் கண்டு கொள்ள முடிகிறது என்பதைக் கிடைக்கப் பெற்ற ஆதாரங்கள். தகவல்களை

Page 29
52 அடிப்படையாகக் கொண்டு இவ்வரலாற்றாய்வினைத் தந்திருப்பதோடு இதுபற்றிய மேலும் விரிவான ஆய்வுக்கான அவசியத்தையும் தேவையையும் ஆசிரியர் வலியுறுத்திநிற்கின்றார். த.ஜெயசீலனின் 'காலநதியோட்டம்', 'நேரத்துடன் விடேக வேண்டும்' ஆகிய இரண்டு கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கசட்டநாதனின்"பேரிளமைசிறுகதை காதலின் மற்றுமொரு கோணத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது. பேராசிரியர் அ.சண்முகதாஸ் தந்திருக்கும் 'செம்மொழி பற்றிய ஒரு குறிப்பு என்னும் கட்டுரை, தமிழ் செம்மொழி என அறிவிக்கப்பட்ட வரலாறு, செம்மொழிகள் எவை? அதன் பயன்பாடு எனப் பல்வேறு விடயங்களையும் ஆராய்ந்துநிற்கிறது.
"தாக்கம்" வள்ளுவன் கூற்றுச் சரியா? என்ற மருத்துவம் சார்ந்த கட்டுரையை டாக்டர் எம்.கே.முருகானந்தன் தந்திருக்கின்றார்.'ஆதிக் குரலும் இன்றைய என்னிருப்பும் என்ற கவிதையை மேமன்கவிதந்துள்ளார்.'ஈழத்தில் வெளிவந்த ஈழத்தின் முதல்நாவல் மறுமதிப்பீடு ஒன்றை கலாநிதிசெ.யோகராசா தந்துள்ளார். ஈழத்தின் முதல்நாவல் 1855இல் வெளிவந்திருப்பினும் ஈழத்தின் முதல் நாவல் எது என்பது பற்றி நிலவுகின்ற கருத்துகள் மறு மதிப்பீட்டுக்குள்ளாக வேண்டியது அவசியம் அதனை ஈழத்து நாவல் வரலாற்றுப் பின்புலத்தில் அவதானித்து இம்மதிப்பீட்டை ஆசிரியர் தந்துள்ளார்.
தெணியானின் "மறுபக்கம் சிறுகதையில் திருமணமாகிமூன்று வருடங்களாகியும் குழந்தைப் பாக்கியம் கிடைக்காததால் தன் மனைவியிடமே இரண்டாம் திருமணத்திற்கு சம்மதம் கேட்கும் கணவனிடம் மருத்துவப் பரிசோதனை செய்ய நிபந்தனை போடுகிறாள் மனைவி பரிசோதனை முடிவில் அவனிடமே குறை என்பது தெரியவரும்போது ஆண்மகன் என்று வீரம் பேசிய அவனின் ஆணவம் அடங்குவதையும் இத்தனை நாள் அவன் மீதான கோபத்தை அடக்கி வைத்திருந்தவள் அவன் முன்பு கேட்ட அதே கேள்வியைத் திருப்பி அவனிடமே கேட்டு பதிலடி கொடுப்பதும் இன்றைய பெண்களின் புரட்சிமனநிலையை கதை வெளிப்படுத்திநிற்கின்றது.'தமிழ் இலக்கண நூல்கள் மற்றும் சிறப்புகள் பற்றியும் அன்புமணி தந்துள்ளார்சலனப்பொழுதின் படிமத்தோற்றம்' என்னும் இயல்வாணன் கவிதை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. ‘ஈழத்துச் சிறுகதைகளில் பிராணிகள் பற்றிய மனித நேய வார்த்தெடுப்புகள் என்ற கட்டுரையை சின்னராஜா விமலன் தந்திருக்கிறார். ஈழத்துச் சிறுகதைகளில் சகமனிதன் மீதல்லாமல் பிராணிகள் மீது மனிதன் காட்டும் மனிதாபிமானம் பற்றி இக்கட்டுரை பேசிநிற்பதோடு அதற்கான எடுத்துக் காட்டுகளையும் தந்துநிற்கின்றது. நா.நவராஜ்ஜின்புல்'வாழ்க்கை ஆகிய இரண்டு கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.
- செங்கை ஆழியான் க.குணராசா கந்திருக்கும் 'எந்தையும் தாயும் குலாவி மகிழ்ந்த பூமி என்னும் கட்டுரை 1795 முதல்யாழ்ப்பாண வரலாற்றைபண்பாட்டை, கலாசார முறைகள் பற்றிய செய்திகளைத் தெளிவாகத் தந்து நிற்கின்றது. பொன். சுகந்தனின் சிந்தித்தால் சிரிப்பு வரும் ம.பா.மகாலிங்க சிவத்தின்’பொமரேனியன் ஏட்டுச் சுரக்காயும் கூட்டுக் கறியும்’ என்ற கவிதைகளும் வெளிவந்துள்ளன. த.கலாமணியின் வீழ்ந்து விடாதிருப்பேன். சிறுகதை யதார்த்தமும் உயிர்த்துடிப்பும் மிக்கது. க.திலகநாதன் தந்திருக்கும் 'நாடகப் படைப்பாக்கச் செல் நெறிகள்’ என்ற கட்டுரை நாடகம் பற்றிப் பயிலும் மாணவர்களுக்கும் அத்துறை மீதான ஈடுபாடுடையவர்களுக்கும் மிகவும் பயனுடையதாக இருக்கும். மாறும் தமிழ் கவிதை' என்ற தலைப்பில் கி.நடராசாவின் கட்டுரை இன்றைய கவிதைப் போக்குகள் பற்றிப்பேசிநிற்கின்றது. ‘நிம்மதியின்மையின் ஆசீர்வாதம் -மனவெழுச்சி- படைப்பு-படைப்பாளி- சமூகம்-ஒரு சிறு விசாரணை’ என்ற த.அஜந்தகுமாரின் கட்டுரை, ஓர் படைப்பாளி எப்படி இருக்க வேண்டும் என்ற் ஓர் இளம் இலக்கிய ஆர்வலனின் கோரிக்கைகளாக வெளிவந்திருக்கின்றது.

53 தாயகக் குரலாய் ஒலித்துக் கொண்டிருப்பவை தீபச் செல்வனின் கவிதைகள். அவரது இரண்டு கவிதைகள் இங்கே இடம்பெற்றுள்ளன. குப்பிளான் ஐ.சண்முகனின் ‘வாழ்க்கை என்பது என்னும் சிறுகதை மற்றும் பொன்னையா அரவிந்தனின் உடல் மொழியின் பயில் நிலையும் அதன்புலப்பாடுகளும் என்னும் கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. தாய் மண்ணின் பசுமையான நினைவுகளை மீட்டிச் செல்கிறது மிருசுவிலுார் எஸ். கார்த்திகாயினியின் கவிதை, பெண் கவிஞர்கள் பற்றி பேசிநிற்கிறது இ.இராஜேஸ் கண்ணனின் ‘ஒளவையை மறுதலிக்கும் அவ்வைகள் பெண்கவிஞர் தொடர்பான இரு துருவநோக்கு என்னும் கட்டுரை. "தலித் திலக்கியம பற்றி பேசி நிற்கிறது மு.அநாதரட்சகனின் கட்டுரை. சித்திரைப்புத்தாண்டு நினைவுகளாகிப் போக இன்றைய புத்தாண்டின் நிலையை மைத்திரேயிதன் கவிதைகளுடாக வெளிப்படுத்திநிற்கின்றார். விலையேற்றம்பற்றிய பாடுகளை தனது'ஏற்றம் சிறுகதையூடாக வெளிப்படுத்திநிற்கிறார் ச.முருகானந்தன். வேல்நந்தன், எல்.வஸம் அக்ரம். வெ.துஷயந்தன், சோ.பத்மநாதன். ச.முருகானந்தன் ஆகியோரது கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.
‘இலக்கியமும் எதிர்காலமும்’ என்ற தலைப்பல் க.பரணிதரன் நச்சிலக்கியங்களின் வளர்ச்சியைத் தடுத்து இளைஞர்களை நல்ல இலக்கியங்களின் பால் ஈர்க்கச் செய்ய வேண்டும்' எனவும் அதற்காகச் செயற்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் பற்றியும் தெளிவாகச் சொல்லியுள்ளார். செல்வ அம்பிகை நடராஜா தந்திருக்கும் “செம்மொழித் தமிழில் பெண்களின் புலமைத்துவம்: "பொன்முடியார்” என்ற கட்டுரையில் சங்ககாலப் பெண்பாற் புலவர்களுள் ஒருவரான பொன்முடியார் பற்றியும் அவரது கவிதை, அதனுடாக வெளிப்படுத்தும் கருத்துகள் என்பவைபற்றித்தந்துள்ளார். பெரிய ஐங்கரனின் 'பெண் மொழிக் கவிதை' என்னும் கட்டுரை, பெண்களின் கவிதைப் போக்குகள் பற்றிப் பேசுகின்றன. அல்சர் பற்றி டாக்டர் வே. கமலநாதன் தந்திருக்கும் கட்டுரை மிகவும் பயனுள்ள மருத்துவ கட்டுரையாக அமைந்துள்ளது. ஒராண்டிற்குள் வெளிவந்த ஜீவநதியின் ஐந்து இதழ்கள் பற்றிய ஒரு பார்வையை தனலட்சுமி நகுலேசபிள்ளை தந்திருக்கிறார். இது ஜிவநதி பற்றிய ஒரு ஆவணமாக எதிர்காலத்தில் இருக்கும். பார்வையை இன்னும் விரிவுபடுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். சலலிசன் பேச்சுக்கலை பற்றிய ஒரு கட்டுரையினையும் விஷ்ணு ரசித்ததும் சுவைத்ததும்' என்னும் தலைப்பில் கடந்த சிவராத்திரி தினத்தில் அல்வாய் செல்லையா அரங்கில் 'சங்கரதாஸ் சுவாமிகள் நாடக சபாவினரால் ஆற்றப்பட்ட 'சத்தியவான் சாவித்திரி இசை நாடகம்' பற்றியும். டொக்டர் எம்.கே.முருகானந்தனின் வடமராட்சியில் நடைபெற்ற மணிவிழா நிகழ்வு பற்றியும். உலக நாடக தினத்தன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நாடக விழாக்கள் பற்றியும் 2008.05.08 அன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வித்தியானந்தன் நினைவுப் பேருரை பற்றியும் தந்துள்ளார். பா.இரகுவரன் காலமான காவியம். மதுரைப் பண்டிதர் கலாநிதி க.சச்சிதானந்தன் பற்றிய குறிப்பினைத் தந்துள்ளார்.'வற்றாது வளம் பெருக்கும் ஜீவநதி' என்ற தலைப்பில் ஜீவநதியின் கடந்த இதழ்களில்வெளியான படைப்புகள் பற்றிய ஒரு சிறு கண்ணோட்டத்தைத் தந்துள்ளார் அவிந்தனி.பி.கிருஷ்ணானந்தனின் கிணறு தனாவின் 'பிள்ளைநேயம்' என்ற சிறுகதைகளும் சிறப்பு. காத்திரமான படைப்புகளுடன் பாஸ்கரின் அழகான அட்டைப்பட ஓவியத்துடனும் கனதிமிக்க, காத்திரம்மிக்க மலராக ஜீவநதியின் ஆண்டுமலர் வெளிவந்துள்ளது. ஜீவநதி இன்னும் தனதுபயணத்தை விரிவுபடுத்திபலநூறு ஆண்டுமலர்களை தொடர்ச்சியாக வெளியிட்டு ஈழத்து சஞ்சிகை வரலாற்றில் தனியான ஒரு இடத்தை தனக்கென நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அனைவரினதும் விருப்பாகும்.000

Page 30
54 ஜீவநதி ஆண்டுமுலர் வெளியீட்டுவிழா
சில பதிவுகள், பகிர்வுகள்
வேல்.நந்தகுமார்
வற்றாத வளம் மிக்க இலக்கிய ஊற்றாக சி.விமலன், க.பரணிதரன் ஆகியோரை இணை ஆசிரியர்களாகவும் துராஜவேலை நிர்வாக ஆசிரியராகவும் கொண்டு வளம் பரப்பிக் கொண்டிருக்கும் ஜீவநதி இரு திங்கள் கலை இலக்கியச் சஞ்சிகையின் முதலாம் ஆண்டுமலர் வெளியீட்டு விழாவானது அச்சஞ்சிகையின் உற்பத்தி ஊற்றிடமான அல்வாயில் அமைந்துள்ள கலைஅகத்தில் மூத்த எழுத்தாளரும் ஜீவநதி ஆலோசகர்களில் ஒருவருமாகிய கலாபூசணம் தெணியான் அவர்கள் தலைமையில் 2008.05.31 மு.ப 10 மணிக்கு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. ஜீவநதியின் நிர்வாக ஆசிரியர் து. ராஜவேல் வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து எழுத்தாளர் தெணியான் தலைமையுரையாற்றினார். அவர் தமது தலைமையுரையில் "ஈழத்தில் வெளிவந்த சஞ்சிகைகளின் வரலாறு, அவற்றில் பல இடையில் நின்றுபோனமை, மல்லிகையின் தொடர்வருகை என்பவற்றை எடுத்துக் கூறியதுடன் இன்று பல மூத்த சஞ்சிகையாளர்களே தரமான கட்டுரைகளைப்பெற கஷ்டப்படும் வேளையில் இந்த இளைஞர்களின் முயற்சி பாராட்டுக்குரியது என்றும். ஜீவநதி கல்லெறியும் விமர்சனங்களைக் கண்டு அஞ்சவில்லை என்றும் தரமான விமர்சனங்களை எதிர்பார்ப்பதாகவும் கூறினார். அத்துடன் ஈழத்தில் விமர்சனத்துறையின் இன்றையநிலை பற்றியும், புதிய படைப்பாளிகள் பற்றியும் கூறியதுடன் ஜீவநதி தனது தரத்தைப் பற்றி கவனம் செலுத்தி இரண்டாம் ஆண்டு நிறைவையும் கொண்டாடவேண்டும்" எனவும் கூறினார்.
இச் சஞ்சிகை முயற்சியை ஊக்குவிக்க வேண்டும் என்ற நல்நோக்கோடு
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசெயலர் சத்தியசீலன் அவர்களும், வடமராட்சி வடக்கு பிரதேசசெயலர் வரதீஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். பிரதேச செயலர் சத்தியசீலன் அவர்கள் தமது உரையில் "இந்தப் பிரதேசத்தின் கலை இலக்கியச் சிறப்புக்களை எடுத்துக் கூறியதுடன் இந்த இளைஞர்களின் சஞ்சிகைப் பணியைப் பாராட்டி இவர்கள் பணிக்கு தங்களாலான உதவிகளை செய்யத்தயார் என்றும் மாவட்ட நூலகங்களுக்கு இந்த சஞ்சிகையை சேர்ப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதாகவும் கூறினார்.
பிரதேசசெயலர் வரதீஸ்வரன் அவர்கள் தனதுரையில் "சாதாரண நதி வற்றிப்போய்விடலாம். மனித இதயத்தில் இருந்து வரும் இந்த ஜீவநதி ஒருபோதும் வற்றாது என்று கூறியதுடன் இந்த வட்டாரத்தில் தான் கூடியளவான வெளியீடுகளை கண்டிருக்கிறேன் என்றும், எமது கலை இலக்கியப்பாரம்பரியங்கள் கட்டிக்காக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் குறிப்பிட்டு இன்றைய இளைஞரின் போக்கு கவலையளிப்பதாய் இருக்கையில் இவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது:என்றார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஜீவநதியின் வெளியீட்டு உரிமையாளரும் அச்சஞ்சிகையின் பரந்துபட்ட வளர்ச்சிக்கு மூலகாரண

55 கர்த்தாவுமாகிய யாழ்பல்கலைக்கழக கல்வியியற் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளரான கலாநிதி கலாமணி அவர்கள் இளைஞர்களின் இம் முயற்சியை ஒரு பார்வையாளனாக இருந்து ரசிப்பதுதான் சிறப்பு என்று கூறியதுடன். அவர்களது முயற்சிகளில் தான் அதிகளவில் தலையிடுவதில்லை என்றும் கூறி இன்றைய பல்வேறு பட்ட நெருக்கடிகள் நிறைந்த சூழலில் ஒரு சஞ்சிகை வெளியிடுதல், அதில் வரும் படைப்புக்களை செம்மைப்படுத்தல் என்பவற்றில் உள்ள சவால்கள்.சிக்கல்களையும் எடுத்துக் கூறியதுடன் SWOTஎன்ற பகுப்பாய்வினூடாக ஜீவநதியின் பலம், பலவீனம், சந்தர்ப்பங்கள் அல்லது வாய்ப்புக்கள் சவால்கள் என்பவற்றை எடுத்துக் கூறினார்.
இதனைத்தொடர்ந்து ஜீவநதியின் வெளியீட்டுரையை டாக்டர் கமலநாதன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தமது உரையில் "இந்த வெளியீட்டு முயற்சிக்காக தமது உடல்நிலையைக் கூட கவனத்தில் கொள்ளாமல் கஷ்டப்படும் இதழாசிரியர்களைப் பற்றியும் ஜீவநதியின் படைப்புத்தளம் வாசகர்தளம். சமூகப்பார்வை என்பவற்றையும் எடுத்துக் கூறியதுடன் அவை (Forum)யின் சிறப்புக்கள் ஆண்டுமலரின் ஆக்கங்கள் பற்றியும் மேலெழுந்தவாரியாகக் குறிப்பிட்டு வெளியீட்டுரையாற்றினார்.
மதிப்பீட்டுரைகளை ஆசிரியர் ம.பா மகாலிங்கசிவம். விரிவுரையாளர் க. அருந்தாகரன் ஆகியோர் ஆற்றினர் மகாலிங்கசிவம் அவர்கள் தனது உரையில் "உருவ, உள்ளடக்கச் சிறப்புக்களை தனது சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் முறையில்எடுத்துக் கூறினார். யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளரும் இளம் விமர்சகருமாகிய க. அருந்தாகரன் அவர்கள் "ஆண்டுமலரில் வெளிவந்த ஒவ்வொரு ஆக்கங்களையும் நுணுகி ஆராய்ந்து, அவ் ஆக்கங்களின் பலம். பலவீனம் நிறை குறைகளை எடுத்துக் கூறியதுடன் எதிர்காலத்தில் படைப்புக்களை தெரிவு செய்யும் போது சஞ்சிகை ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்களையும் எடுத்துக் கூறி ஒட்டு மொத்தத்தில் இதில் உள்ள உருவ. உள்ளடக்கம் சார்ந்த சிற்சில குறைபாடுகள் நிக்கப்படுமாயின் எதிர்காலத்தில் இது ஒரு மிகத் தரமான ஈழத்து சஞ்சிகையாக வரலாற்றில் இடம் பிடிக்கக்கூடியது என்றார். தொடர்ந்து இணையாசிரியர் சி.விமலன் ஏற்புரையும். இணையாசிரியர் க.பரணிதரன் நன்றியுரையும் வழங்கினர்.

Page 31
56 பேசும் இதயங்கள்
1) இப்படியொரு சஞ்சிகை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகின்றது, விடயதானம் செய்யுங்களேன் என்று எனது நண்பரும் எழுத்தாளருமான அன்புமணி அண்மையில் ஒரு கோரிக்கையை என்னிடம் விடுத்திருந்தார். ஏதோ இப்பொழுதுதான் ஆரம்பித்த பத்திரிகையாக்குமென எண்ணிக்கொண்டு இன்றைய தினக்குரலை (29.06.2008) பார்த்தால் நீங்கள் ஆண்டுமலர் வெளியிட்டுள்ளதாக தெரிய வந்தது. சபாஷ்! என் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்! தங்கள் பணி தொடரட்டும்! சிறக்கட்டும் அதிலும் யாழ்.குடாநாட்டின் இன்றைய இத்தனை கெடுபிடிக்குள்ளிருந்து கொண்டு உயிரைக்கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டும் இப்படியொரு இலக்கிய ஆர்வமா? தங்களுக்கு எமது மானசிகமான ஆதரவு. உங்கள் முயற்சிக்கு என்றுமிருக்கும்.
எஸ். ஜோன்ராஜா , அக்கரைப்பற்று
2) ஜீவநதியின் ஆண்டுமலர் உண்மையிலேயே சிறப்பாக இருக்கிறது. அதன் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் பார்த்தவர்கள் இது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்ததா என ஆச்சரியத்துடன் கேட்கிறார்கள். அந்தளவுக்கு ஓராண்டிற் குள்ளேயே ஜீவநதி பலரது கவனத்தையும் ஈர்த்து விட்டமை மகிழ்ச்சியைத் தருகின்றது.
கார்த்திகாயினி சபேஸ், கொழும்பு
3) முதலில் நீங்கள் இருவரும் பெரியோருக்குக் காட்டும் மரியாதைக்கு எனது நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். அடுத்ததாக உங்களது விடாமுயற்சிக்கும். ஜீவநதியின் வருகைக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் சிறப்பு மலர் என்ற எண்ணமே போற்றற்குரியது. ஆனானப்பட்ட ஜாம்பவான் இதழ்கள் பெண்களது முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளாத போது நீங்கள் மிகத்தரமான தொரு பெண்கள் மலரை வெளியிட்டுள்ளிர்கள். நன்றிகள் பாராட்டுகள். அதிலும் முழுக்கவும் பெண்கள் இதில் படைப்புக்கள் நல்கியுள்ளமை சிறப்பம்சம் ஆகும். உலகப் பெண்ணிய வாழ்க்கை முறைமையைத் தமிழ் சூழல் எவ்வாறு எதிர் கொள்ளப்போகின்றது என்பது இன்று எம்முன் உள்ள முக்கிய வினாவாகும் என்ற உங்கள் கருத்து ஆழமான உங்களது சிந்தனையோட்டத்தை எடுத்துக்காட்டுகிறது.
கெக்கிர7வ ஸ்ஹானா
5) ஜீவநதி ஆசிரியர்களே தங்கள் சஞ்சிகையின் தரமான உள்ளடக்கத்தை கண்டு வியந்துபோயுள்ளேன். தங்கள் சஞ்சிகையின் தொடர்வாசகன். தங்கள் சஞ்சிகையில் அனைத்து விடயதானங்களும் சிறப்பாக உள்ளன. ஆனால் சில நியாயமற்ற இலக்கியநேர்மையற்ற எழுத்தாளர்களின் செயற்பாடுகள் தங்கள் சஞ்சிகையின் பெயரைக் கெடுத்துவிடும். எனவே கவனமாக செயற்படுங்கள். துவர்ரகன் என்பவரால் எழுதப்பட்ட ‘தூசி படிந்த சாய்மனைக் கதிரை நாட்கள்’ என்ற கவிதையை தங்கள் ‘தை-மாசி இதழில் பார்த்தேன். ஆனால் அதே கவிதையை'தாயகம்'ஏப்ரல் - ஜூன் இதழிலும்கண்டேன். இது ஒரு இலக்கிய நியாயமற்ற செயல். ۔۔۔۔۔
சிசெல்வரட்ணம் , ஏழாலை

கட்டைவேலி
கரவெட்டி.
நெல்லிடி டர்.நோ.கூ. சங்கம்

Page 32
கட்டைவே
Ս.6ՇՂ»:
எமது சங்கச் சேவைகள்
தரமான திரைப்படக்கா
ஏற்ப
«TrՐalլ III
Shishшағ
நூல்வெளியீடு
கூட்டுறவுக் கடு
"சங்கம் செய்தி
தொலைபேசி இலக்கம் :-
தொலைநகல் O212
O12
கட்டைவேலி நெல்லியடி 1
கரவெட்டி.
 

லி - நெல்லிus
പം?)&gം
:
நுகர்ச்சிச் சேவை
தரமான நூலக சேவை
। ।।।।
புலமைப்பரிசில் வழங்கல்
வாடகைச் சேவைகள்
ட்சிக்கூடாக புதிய ரசனையை
படுத்துதலே
ருள் சேவை
TLI I ÇË JFGJ si
ம் விமர்சனங்களும்
ாசாரப் பெருமன்றம்
மாதாந்த வெளியீடு.
O2 122332.38
:
恺唱墨墨7墨
恺出墨*2蚤
ப.நோ.கூ. சங்கம்

Page 33

கு அர்பூல்
այդ
749459)
ருட்கள்
5xisrg5ia56
BIGIGI DTLEGIUriSL