கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சங்கடங்கள்

Page 1

லக்கியப் பேரவை

Page 2

(நாடகங்கள் ஐந்து)
adugú yo
தேசிய கலை இலக்கியப் பேரவை

Page 3
Title
Author
First Edition
Printed by
Published by
Distributers
Price
தலைப்பு
ஆசிரியர் முதற்பதிப்பு அச்சுப்பதிப்பு வெளியீடு விநியோகம்
Sangadankal
(Five Plays)
E. Murugaiyan
February, 2000
Techno Print, Dehiwala.
Dhesiya Kalai Ilakikiyap Peravai
South Asian Books Vasantham (Pvt) Ltd, 44, 3rd Floor, C.C.S.M. Complex, Colombo - 11 Tel: 335844 Fax: 075-524358
Rs... 100.00
சங்கடங்கள்
(நாடகங்கள் ஐந்து)
இ.முருகையன்
பெப்ரவரி 2000
டெக்னோபிரின்ட், தெஹிவளை தேசிய கலை இலக்கியப் பேரவை சவுத் ஏசியன் புக்ஸ் வசந்தம் (பிறைவேற்) லிமிற்றெட் 44, 3Lń Loriq, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி, கொழும்பு 11. தொலைபேசி :335844 தொலைநகல் : 075-524358
ரூபா 100.00

கவிஞர் முருகையனின்நூல்களை வெளியிடும் பணியில் தேசிய கலை இலக்கியப் பேரவை முன்னின்று உழைத்து வருகிறது. எம்மால் ஏற்கனவே வெளியிடப்பட்ட அவரது 'இன்றைய உலகில் இலக் கியம்’ எனும் நூல் இலக்கியக் கட்டுரைகளையும், 'அது அவர்கள்', "நாங்கள் மனிதர்' ஆகிய நூல்கள் கவிதைகளையும் கொண்டுள்ளன.
அவரால் எழுதப்பட்ட மேடை, வானொலி நாடகப் பிரதிகள் சிலவும் எம்மால் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. 'வெறி யாட்டு', 'மேற்பூச்சு', 'மாடும் கயிறுகள் அறுக்கும்' ஆகியன
அந்நாடக நூல்களாகும். இந்நாடக நூல் வெளியீட்டு வரிசையில்
'சங்கடங்கள்’ என்ற இந்நூலைத் தற்போது வெளியிடுவதில் மகிழ்ச்சி யடைகின்றோம்.
இன்னும் முருகையனால் எழுதப்பட்டு எம்மிடம் பிரசுரத் துக்காகத் தரப்பட்டுள்ள பல கையெழுத்துப் பிரதிகள் கைவசம் உள்ளன. உண்மை, இளநலம், வெனிசிய வணிகன், ஒதெலோ, இடிப்பஸ் வேந்தன் ஆகியவை வெளியீட்டுக்காக வருடக்கணக்கில் காத்துக் கிடக்கின்றன.
மேலும் முருகையனிடம் ஐந்து ஷேக்ஸ்பியர் நாடகங்களும், கவின்கலைகள் பற்றி இளையோருக்கு அறிமுகம் செய்யும் ஒரு விளக்கநூலும், 'மொழிபெயர்ப்புநுட்பம்' பற்றிய புத்தகமொன்றும், இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பொன்றும் உள்ளன. இவையும் ஒவ்வொன்றாக வெளிவர வேண்டும்.

Page 4
முருகையன் அவர்கள் எழுதுகிறார்; 'என் கவிதைகள் சிலவற் றைத் தெரிந்தெடுத்து, அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் சிறு நூலாக்க வேண்டும். தொகுக்கப்படாது உதிரியாக உள்ள கவி தைப் படைப்புகளையும் வசன ஆக்கங்களையும் வெளியிட வேண் டும். எனவே அலுவல்கள் நிறைய உண்டு’ என்றிவ்வாறாக.
சில்லையூர் செல்வராசனுடனும் மஹாகவியுடனும் இணைந்து செயற்பட்ட ' வெளியிட வேண்டியுள்ளன.
பாரதி கவிதைச் சமர்', 'தகனம்' ஆகியவையும்
கவிஞர் முருகையன் அற்புதங்களையும் உன்னதங்களையும் தேடி ஒடும் கவிஞரல்ல. அன்றாட மக்கள் வாழ்வில் அவலங்களை, அந்தரிப்புகளை, விருப்புகளை, வேட்கைகளை வெளிப்படுத்தும் சமகாலத்தில் வாழும் மூத்த கவிஞராவார்.
சாதியக் கொடுமை, தேசிய ஒடுக்கல், பழமைப் பிணி ஆகிய மானிடக் கொடுமைகளுக்கெதிராக தமிழ் மொழியின் வல்லமையை மக்கள் மத்தியில் சாத்தியப்படுத்தும் தேசிய ஜனநாயகப் புரட்சியின் பண்பாட்டுப் பெருமகனாய் வாழும் கவிஞரின் எழுத்துக்கள் ஒவ் வொன்றும் ஈழத்திருநாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஓங்கி ஒலிக் கச் செய்ய வேண்டுமென்பது எமது பேரவையின் பேரவாவாகும்.
'ஊரெல்லாம் கூடி ஒரு தேர் இழுக்கிறதே வாருங்கள் நாமும் பிடிப்போம் வடத்தை”. இந்நூல் வெளியீட்டில் ஒத்துழைத்த கவிஞர் இ.முருகையன், பேராசிரியர்.சி.சிவசேகரம், கே.தியாகராஜா, மாவைவரோதயன், சி.கா. செந்திவேல் ஆகியோருக்கும் எமது நன்றிகள்.
தேசிய கலை இலக்கியப் பேரவை
44, 3ம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத் தொாகுதி, கொழும்பு - 11
16.02.2000
 
 

எனது நாடகங்களை நூலுருவாக்கும் முயற்சிகள் அவ்வப்போது நடைபெற்றுள்ளன. அந்த முயற்சித் தொடரில் இப்பொழுது ‘சங்க டங்கள்’ என்னும் தொகுதி வருகிறது.
இந்தத் தொகுதியிலும் அய்ந்து நாடகங்கள் உள்ளன. இவற்றுள் ‘கந்தப்ப மூர்த்தியர் என்பது இலங்கை வானொலி யிலே தரும சங்கடம்" என்ற தொடரில் நான் எழுதி ஒலிபரப்பான நான்கு நாடகங்களில் ஒன்று. இந்தத் தொடரைத் தயாரித்தவர் வி.சுந்தரலிங்கம் (சுந்தா) அவர்கள்.
இடைத்திரை' என்பது இலங்கை வானொலியில் ஒலிபரப்பான 'பில்கணியம்’ என்ற எனது குறுநாடகத்தின் விரிவாக்கம். 'பில்கணி யத்தை வானொலிக்கெனத் தயாரித்தவர் திரு.சி.வி. இராஜசுந்தரம். அவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கூடுதற் பணிப் பாளராகக் கடமையாற்றியவர்.
'வழமை என்பதும் வானொலி நாடகமே. அது 'மாமூல்" என்ற பெயரில் ஒலிபரப்பாயிற்று. அதைத் தயாரித்தவர் திரு வை.அ.கயி லாயநாதன்.
'அந்தகனே ஆனாலும்.’’ என்பது அதே பெயரிலே இலங்கை வானொலியில் ஒலிபரப்பாயிற்று. அதில் நடிகராகவும், அதன் தயாரிப்பாளராகவும் செயலாற்றியவர் கவிஞர் நாவற்குழியூர் நட ராசன். அவர் இலங்கை வானொலித் தமிழ் நிகழ்ச்சி அமைப்பாளர் (ற்றமில் ப்றோ"கிறாம் ஒ‘க்‘னைசர்) ஆகத் திகழ்ந்தவர்.

Page 5
ஐந்தாவதாக உள்ள ‘குனிந்த தலை" கிரேக்க நாடக ஆசானாகிய சொஃவக் கிளிஸ் என்பார் இயற்றிய 'அன்ற்றி'க'னி என்னும் நாட கத்தைத் தழுவி அமைத்துக் கொண்டது. பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலம் வழியாக என்னாற் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பைச் சுருக்கிச் செப்பனிட்டு நிகழ் தமிழ் வடிவமாய்ச் செய்துள்ளேன்.
படிப்போர்க்கும் நடிப்போர்க்கும் துணையாய் அமையட்டும் என்னும் நோக்கத்துடன் மிகச் சுருக்கமான துணைக்குறிப்புகளைத் தொகுதியின் ஈற்றிலே தந்துள்ளேன். ஈழத்துப் பேச்சுத் தமிழ்ப் பிரயோகங்கள் சிலவற்றை விளங்கிக் கொள்வதற்கும், கிரேக்க நாடகத்தின் பின்னணித் தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கும் இந்தக் குறிப்புகள் உதவும்.
வெளியீட்டாளர்களுக்கும், கருத்துரை வரைந்த கவிஞருக்கும் நன்றி.
இ.முருகையன் நீர்வேலி தெற்கு நீர்வேலி 1997.08.29
 
 

சில கருத்துகள்
இன்றைய இலக்கிய உலகில் 'நாடகம் பற்றிய சிந்தனையும் தாக்கமும் புதிய பல பரிமாணங்களையும் தோற்றுவித்துள்ளன. தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இதன் பாதிப்பு நிகழாமல் இல்லை. மரபுகளைக் கட்டிக் காக்கும் உணர்வில் தடுதாளிப்பட்டு வழிமாறித் திகைப்போரிடையே பாரிய இடைவெளிகள் நீண்டகன்று காணப் பட்டாலும் அவற்றினூடே ஒரு முயற்சித் தொடர் இடையறாது கிளை விட்டு வளர்வதையும் அவதானிக்கலாம். இந்த வகையிலே கவிஞர் முருகையன் அவர்கள் எழுதிய ஐந்து நாடகங்களின் எழுத்துருக்கள் 'சங்கடங்கள்' என்ற பெயரில் நூலுருப் பெறுகின்றன. இவற்றுள் 'கந்தப்ப மூர்த்தியர் உரை நாடகம்; "வழமை', 'அந்தகனே ஆனா லும், இடைத்திரை’, ‘குனிந்த தலை ஆகிய நான்கும் பா நாடகங் கள்.
இந்நாடகங்கள் முறையே 1967, 1973/4, 1995, 1963, 1969 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்டவை; வானொலியில் ஒலிபரப்பானவை என நினைக்கிறேன். முறை நெறிகள், சம்பிரதாயங்கள், கோட் பாடுகள், கடமைகள், கட்டுப்பாடுகள் என்பவற்றைக் கடைப்பிடிக்க முயல்வோருக்கு நேரும் தரும சங்கடங்கள் தான் இந்நாடகங்களின் அடிப்படை. ‘கந்தப்ப மூர்த்தியர்', 'வழமை ஆகிய இரண்டும் நிகழ்கால அநுபவமுறைக்கு மிக மிக அணுக்கமானசமூக நாடகங்கள். மற்றைய மூன்றும் காலத்தாலும் இடத்தாலும் வேறுபட்டவை. 'அந்தகனே ஆனாலும். * யாழ்ப்பாண வரலாறு பற்றிய கர்ண பரம்பரைக் கதையொன்றைத் தழுவியது. இடைத்திரை மன்னன் மகள் ஒருத்திக்கும் குடிமகன் ஒருவனுக்குமிடையே தோன்றிய காதல்

Page 6
பற்றியது. ‘குனிந்த தலை சொஃவக்கிளிசின் ‘அன்ற்றி'க'னி" என்ற கிரேக்க நாடகத்தின் தமிழாக்கம். இந்த நாடகங்களினூடே ஒர் அநுபவ உள்ளொளி சுடர் விடுகிறது. மோன மொழிகளால் ஆன தொரு தருமக் குரலின் தவிப்பும் ஆதங்கமும் அந்தரிப்பும் பொது நிலைப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.
இன்றுள்ள நிலையில், முருகையன் படைப்புகள் தெளிவான பார்வையுடன் இன்னமும் சரியாக எடைபோடப்படவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. அதற்கு அவர்தம் எழுத்து முழுவதும் புத்தக வடிவில், இன்னமும் வெளிவரவில்லை என்பதும் ஒரு காரண மாகும். இன்னொன்று, முருகையன் சென்ற சுவட்டின் தடத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு தொடரத் தெரியாமையும் ஆகும். அவரது படைப்பின் கலைப் பெறுமானத்தை - ஆளுமையில் உள்ள நேர்மை களை - இன்றைய விமரிசகர்கள் முழுமையாக வெளிக்கொணர வில்லை என்றே கூறவேண்டும். குறிப்பாக, நாடகத்தில் அவரது அக்கறை பற்றிய தேடல் நடைபெறவேயில்லை. வானொலியிலும் அரங்கிலும் அவர் நாடக எழுத்துருக்கள் உரிய வகையில் அணுகப் படவில்லை என்பதே உண்மை. இதற்கு இன்னொரு முக்கிய கார ணம் குழுநிலைப்பட்ட இலக்கிய காரர்களின் இழுபறி இழிநிலை; "ஆல் பழுக்க அங்கே, அரசு பழுக்க இங்கே என்று நிலைகொள்ளாது ஊசலாடித் திரிகின்ற மனோபாவம். மேலும் நாடகங்கள் பற்றித் திறனாய்வாளரும் வரலாறு எழுதுவோரும் வெளியிட்டு வருவன பெரும்பாலும், வெவ்வெறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு தேவை களுக்காக எழுதப்படுவதால், அவற்றுக்கிடையிலே ஒருமைப்பாடும் தொடர்ச்சியும் இருக்கும் என்றும் எதிர்பார்க்க முடியாதுதான். இனி, இங்கு நான் அழுத்தம் கொடுக்க விரும்புவது நாடக மொழி பற்றியே ஆகும். ஏனெனில், 'நாடகத்தின் மொழி என்பது, சொல் மட்டும் அல்ல சொல் அதன் ஒரு பகுதியே என்ற கருத்தும் இன்று பேசப் படுகிறது. உண்மை தான். மவுனம், இடையீடு, பாவனை, இயக்கம், அரங்கு, ஒழுங்கு ஆகியனவும் நாடக மொழியின் பாற்படுவன தான். ஆனால், நாடகத்தின் இயக்கம் எதன் மூலம்- -எந்தச் சக்தி மூலம்தொழிற்படுகிறது என்பதையும் ஈண்டு நாம் மனங்கொள்ள வேண் டும். அதாவது, எழுத்துரு ஒன்று எழுதப்படாத நிலையிலே கூட, அரு உருவாக நின்றே நடிகர்களை மவுனத்துள்ளும், பாவனைக்குள்ளும், அரங்குக்குள்ளும் எங்கும், எதிலும் இயங்க வைக்கிற பணியை ஏதோ
 
 

ஒரு சக்தி நிறைவேற்றுவிக்கிறது. அந்தச் சக்தியின் தூலமான வெளிப் பாடு தான் எழுத்துரு.
பேச்சு மொழியில், உணர்ச்சியை வெளியிடும் தன்மையும் (அது) வாழ்வோடு பின்னிப் பிணைந்து செல்லும் பண்பும் காணப்படும். இலக்கிய மொழிக்கும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொழிக்கு மிடையே உள்ள வேறுபாட்டை(யும் ஒற்றுமையையும்) நிறுவுவது இதைவிடச் சிரமம். அன்றாடம் நாம் பயன்படுத்தும் மொழி, சாதாரண பேச்சு வழக்கிலே உணர்ச்சியை வெளியிடும் தன்மை மிக மிக அதிகம். இன்னும், பெயர், செயல், இடம் முதலியவற்றைச் சுட்டும்போது வரும் ஒலிச்சமிக்ஞை மொழியே, பேச்சு மொழிக்குள் ஊடுருவி நாடகச் செய்கைக்கு உயிர் ஊட்டுகிறது. முருகையன் தம் மொழி வளத்தால், பொருந்தா நிலை, பொருள் மருட்சி என்பன வற்றையும் இந்நாடகங்களிற் பயன்படுத்தியுள்ளார். அதாவது அன் றாட மொழி வளத்தைப் பாத்திரங்களிடையே ஒழுங்குபடுத்திச் செறிவாக்கியுள்ளார்.
இன்னும் பாத்திரங்களின் உள்நோக்கம், மதிப்பீடு, போக்கு, விருப்புகள் முதலியவற்றைக் கூடத் தெளிவாக்கி வைக்கும் திறன், நுண் பொருள் விளக்கும் மொழியாட்சி, மொழியின் உருவகப் பண்பைப் புதுப்பித்து உணர வைக்கும் சொற்பிரயோகம் - இவை எல்லாம் போதிய அளவு நிறைவு செய்யப்பட்டுள்ளன. "மின்னிப் பொலியும் புதுமை மெருகுகளை உன்னிக் கருத்திலே ஊன்ற வைத்த மேதாவி" என்பன போன்ற அடிகள், பழந்தமிழ் இலக்கிய மொழிவுகள் புதி தாக்கி வார்க்கப்பட்டுள்ளமையைச் சுட்டி நிற்கின்றன.
பழைய இலக்கியத்தை உரமாக்கிக் கொள்வதோடு, தம் வாழ்விற் கண்ட மாந்தரையும், தம்மையும் கலந்து பாத்திரப் படைப்பாக்கம் நிகழ்கிறது. இவ்வாறு நாடக ஆசிரியர் தம்மையும் ஒருவாறு வெளிப் படுத்துகிறார். இங்கும் அவர்தம் ஆளுமையின் பங்களிப்பு நடை பெறுகிறது. இவ்வாறு தான் உயிர்த்துடிப்புள்ள பாத்திரங்கள் உருவா கின்றன; முழுமை பெற்ற ஜீவன்கள் ஆகின்றன. இவை படைப் பாளியின் இயல்போடு ஒட்டியவையாகவும் இருப்பதனாலே தான் உயிருள்ளவையாக உள்ளன. வெறுமையிலிருந்து உயிரூட்ட முடி யாது. பாத்திரங்களிற் காட்டப்பட்ட ஈட்டப் பண்பு, தனிப்பண்பு

Page 7
இரண்டுமே இணைந்தவையாக இவரது வார்ப்புகள் உலாவுவதை யும் அதனால் அவை நம் மனக்கண் முன் வார்த்தைகளூடாகவே உணர்த்தப்பட்டுள்ளதையும் கண்டு கொள்ளலாம். சிற்சில இடங் களிலே உரை உணர்வு இறந்து - கடந்து -நின்று உணர்வதோர் உணர்வினை மூட்டிச் செல்வதையும் அநுபவிக்க முடிகிறது. வட மொழியிலிருந்து வந்து, பாரதிதாசன் முதல் பிற வேறு எழுத்தாளர் களாலும் எடுத்தாளப்பட்ட “பில்கணியப் பழங்கதையின் தழுவலான 'இடைத்திரையில், பிறரது அநுபவத்தைத் தம் அநுபவமாக்கும் ஆற்றலும், இலக்கியச் சுவை பற்றிய ஆழ்ந்த பரிவின் பகிர்வும், படைப்பாளி தன் காலத்துக்குத் தேவையான நோக்கத்துக்குப் பயன் நிரம்பிய பணியாற்றி விட்டான் என மற்றவர்கள் கணிக்கும்படியான தோர் மனநிறைவுப் பரிவர்த்தனையைத் தருவனவாய் அமைகின்றன. இங்கும் சொற்களைச் சமிக்ஞை நிலையிற் பயன்படுத்தும் லாகவம் மிக அற்புதமாய் உள்ளது.
நமது வாழ்க்கையின் ஊடான ஒரு குணசித்திரத்தின் பயணம் தான் நாடகக் கரு. இன்னும் சொன்னால், சம்பவங்களினதோ நிலைமைகளினதோ மனித வாழ்வினதோ, அல்லது இயல்பான குணசித்திரங்களினதோ முரண்-வேறு விதத்திலே கொல்வதானால்சில குணசித்திரங்களின் முரண், சில சம்பவங்களின் சந்திப்பில் எழும் முரண், சில இயல்பான நிலைகளிலே ஒரு குணசித்திரத்தின் அக முரண் அல்லது இளிவரல், போற்றத் தகுந்த நல்லெண்ணங்களுக் கிடையும் மரபுகளுக்கிடையும் கிளம்பும் முரண் என்பனவே நாடகம் ஆகின்றன. இவ்வாறான முரண்கள் உருவாக்கி விடுவிக்கப்பட் டிருக்கும் வகையும் இங்குள்ள ஐந்து நாடகங்களிலும் நல்ல வெற் றியை ஈட்டிக் கொடுத்துள்ளன.
கருத்துப் பொருளை உணர்த்தி நிற்கும் மெய்ப்பாடுகளை வார்த்தைக்குள் மடக்கிப் பிடிக்கும் ஆற்றல் நாடக ஆசிரியருக்கு மிக மிக அவசியம். மிகவும் நுணுகிய பல உணர்ச்சிக் கலவைகள் வெறும் வார்த்தை அளவிலற்ற அறம் பிறழா நிறை மொழிகளுட் பொதியப் பட்டிருப்பதை இந்த நாடகங்களிலும் காணலாம். உணர்ச்சி நிறை வுள்ள மிக மிக நுணுகிய கருத்துப் பொருளை அநுபவமாக்கிய நாடகாசிரியரின் ஆற்றலைப் பல விமரிசகர்கள் அளவிடத் தவறி யுள்ளனர் என்றே கூறத் தோன்றுகினறது. ஒன்றுக்கொன்று நுணுகிய
 
 

வேற்றுமை உடைய செறிவுணர் சொற்கள் அழைத்துப் போதும் ஆழ, உச்சங்களை உணர எந்தவித சிரமங்களும் படத் தேவை இல்லாதபடி முருகையன் செய்திருக்கிறார்.
"எல்லாரும் தலைகீழாய் நிக்கினம் எண்டாப் போலெ நாங்களும் தலை கீழாய் நிக்கிறதா, கனகம்?" (கந்தப்ப மூர்த்தியர்) போன்ற வரிகளின் தாக்கம், வீச்சு, நடுநிலை விடுபடாத மெய்ந்நெறிக் கூர்மை, இந்நாடகங்களுக்குத் தனியான தொரு வலுவை நல்கியுள்ளன.
'நாடகம் பாவடிவில் அமையும் போது சொற்செட்டும் இறுக்க மும் ஆழமும் மொழியின் பொருட் கனமும் இயல் நிலைப்படு கின்றன. ஆனால் யாப்பின் இறுக்கம் சுயாதீனமான இயக்கத்துக்குத் தடையானதெனச் சில மொழியியல் ஆய்வாளர்கள் கூறியுள்ள னர்தான். அவ்வாறான கூற்றுக்கள், ஒரு படைப்பாளிக்கே உரித்தான தனிப்பண்பைப் பிரித்தறியும் ஆவலற்ற, நுட்பமான செவிப் புலனும் கூரிய நோக்கும் அற்றவர் கூற்றெனவே கொள்ள வேண்டும். ஏனெ னில், "போலச் செய்தலிற் கூட உண்மையில் இடம் பெறுவது செயற்கையே. அப்போது எதிர்பாராத சில சறுக்கல்கள் நேர்ந்து விடுவதும் உண்மையே. வீட்டிலே எலித் தொல்லை என்பதற்காக வீட்டையே கொளுத்த வேண்டும் என்பவர்களை விட்டு விட வேண் டும். 'புற நடைகள் அமையாத துறை எதுவும் இல்லை" என்பதை நாம் வாழ்வியல் அநுபவமாக விளங்கிக் கொண்டால், இச் சிக்கல் சிரமங்களுக்கு இடமில்லாமற் போகும். நடைமுறையில், செறிந்த அமைப்புள்ள கவிதையானது மொழியின் ஒலியோடும் பொரு ளோடும் மிக நெருங்கிய தொடர்புடையது. இதை இன்னும் கொஞ் சம் தெளிவாகக் கூறுவதானால், யாப்பானது மொழியின் ஒலிப் பண்பை அமைக்கிறது. அந்த ஒலிப்பண்பானது உரைநடை ஒத்திசை யைச் செழுமைப்படுத்திக் கொடுப்பதை இந்த நாடகங்கள் நன்றா கவே - எதுவித தடக்குப்பாடும் இன்றி, வெளிக்காட்டி நிற்கின்றன.
"எங்களுக்கே சொந்தமான, உண்மையாகவே தேசியப் பண்பு டைய மரபினை உருவாக்கிக் கொள்வதற்கு மேலும் தகைமைகளைப் பெறும் பொருட்டே மேலைத்தேச நாடகங்களை மேடையேற்ற வேண்டும்" என்ற கருத்தியலடியான விளக்கமும் குறிக்கோளும்

Page 8
நிதானிப்பும் நமது நாடகாசிரியரிடம் காணப்படுகின்றன. கலையின் சமூகப் பணியைப் புறக்கணிக்காத பொறுப்புணர்ச்சியை அவரிடம் நன்கு அவதானிக்க முடிகிறது. 'அந்தகனே ஆனாலும்', 'இடைத் திரை’, ‘குனிந்ததலை, ஆகியவை தழுவலாகவும் மொழி பெயர்ப் பாகவும் அமைந்த போதும், ஆசிரியர் அம்முயற்சிகளை மிக நிதா னித்த அறிவார்ந்த கொள்கைத் தெளிவுடனும் அடக்கத்துடனும், அதேவேளை கலைச் செழுமையுடனும் மேற்கொண்டுள்ளார். தான் தோன்றித்தனமான, எழுந்தமானமான, எதையும் கண்டபாட்டிலே தட்டிக் கழித்து விடுவதான போக்குகள் இல்லாத பொறுப்பு மிகு செயலாகக் கருதியே அவர் நாடகக் கலைக்கு உழைத்து வருகிறார். 'சங்கடங்கள் இந்த உண்மையை வெளிக்காட்டி நிற்கிறது. ஆனால், இவை எல்லாம் நமது நாடக நிபுணர் சிலரின் கண்களில் ஏனோ படுவதில்லை. ‘இன்றைய ஈழத்துத் தமிழ் நாடக அரங்கின் வளர்ச்சிக்கு வளஞ் சேர்த்தவர்கள் யார், எவர், எப்போது?’ போன்ற வினாக்களை எழுப்பும்போது தான் முருகையனுடைய நாடகப் பணியின் பங்குதுலக்கமுறும். அதற்கு உறுதுணையாய், அவருடைய நாடகங்கள் அனைத்தும் நூலுருப் பெறவேண்டும். அத்தோடு, அவர் வரைந்துள்ள நாடகஞ்சார் சிந்தனைக் கட்டுரைகளும் தொகுக் கப்பட்டு நூல்களாக வெளிக் கொணரப்பட வேண்டும். அப்போது தான் நாடகம் பற்றியும் அரங்க நுணுக்கம், மேடை உத்தி முதலிய வற்றைப் பற்றியும் அவர் கொண்டிருந்த எண்ணக் கருக்களைக் கண்டறிய வாய்ப்பு ஏற்படும். அத்துடன் அவருடைய ஆக்கத் திறன், நேர்த்தி நயம், பிரக்ஞை பூர்வமான முயற்சி முதலியவற்றையும் தரிசிக்க முடியும்.
பா நாடகத்திலே நுணுக்கமான பல பரிசோதனை முயற்சிகளை இடையறாது தொடர்ந்து மேற்கொண்டு வருகிறவர், முருகையன். எனவே அவரிடமிருந்து தமிழ் நாடக உலகு நிறையவே எதிர்பார்க் கலாம். ஆய்வாளர்களின் அவ்வப்போதைய கருத்துக்களை நாம் அதற்காகத் தூக்கி எறியத் தேவையில்லை. அவற்றை இவற்றுக்கு உரமாக்கும் போது, புதிய மூச்சும் நிச்சயம் பிறக்கவே செய்யும். அவரது ஆரம்பகாலப் படைப்புகள் கூட, அத்தகைய புதுநலப் பண்பு குன்றாநிலையிலேயே இருப்பதையும் இந்நாடகத் தொகுதி எடுத்துக் காட்டி நிற்கின்றது.
 
 

முருகையனுடைய படைப்புகளை நூலுருவாக்குவதில் பெரும் பங்கு கொண்டுழைக்கும் தேசிய கலை இலக்கியப் பேரவையினரும் சவுத் ஏசியன் புக்ஸ் நிறுவனத்தினரும் நிச்சயமாகத் தமிழிலக்கிய ஆர்வலர்களின் அன்பையும், ஆதரவையும் பாராட்டையும் பெறு வார்கள். குறிப்பாக 'சங்கடங்கள்' நூலை வெளியிடுவதன் மூலம் நாடக இலக்கிய ஆர்வலர்களின் நன்றிக்கும் உரியவராகின்றனர். நாடகம் பற்றிய எனது கருத்துக்கள் சிலவற்றைச் 'சங்கடங்கள் ஊடாக வெளிப்படுத்த இடம் தந்த ஆசிரியருக்கு என் நன்றி. 'நாடக மும் அரங்கியலும் துறைசார் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் கூட இந்நூல் மிக்க பயனுடையதாக அமையும் எனலாம்.
கல்வயல் வே.குமாரசாமி பெரிய அரசடி,
சாவகச்சேரி
1997.08.19

Page 9

கந்தப்ப மூர்த்தியர்
நாடக மாந்தர்:
கந்தப்ப மூர்த்தியர்
கனகம்- அவர் மனைவி
கதிரவேலு அவர்கள் குடும்ப நண்பர்
கனகம்
கந்தப்ப
கனகம்
கந்தப்ப
கனகம்
(விம்மல்) : ஏனப்பா, இப்ப மூஞ்சையை நீட்டிக்கொண்டு முட்
டைக் கண்ணிர் விடுறீர்?
: (சினங் கலந்து) பிடிச்ச பிடி விடாத முறடுகளோடெ
காலந்தள்ளிறதெண்டால். போங்கோப்பா அங்காலே.
: பிறகும் ஒரு பாட்டம் துவங்கப் போரீர் போலெ இரு
க்கு. உம்மைக் கும்பிட்டென், கனகம், அழுகையை நிற் பாட்டிப் போட்டு முகத்தைக் கழுவிக் கொண்டு வாரும்.
: நான் சொல்லிறபடி நீங்கள் செய்யமாட்டீங்கள்; நீங்கள்
சொன்னபடி எல்லாம் நான் ஆடவேணும். அப்பிடித் தானே!

Page 10
கந்தப்ப
கனகம்
கந்தப்ப
கனகம்
கந்தப்ப
கனகம்
கந்தப்ப
ஏன், நீர் சொல்லிறபடி தானே நான் ஆடிக் கொண்டு
வருறென்.! அப்பிடிச் செய்யாவிட்டால் உம் மட்ட யிருந்து தப்ப முடியுமா? எண்டாலும். சரி, பிழை, தர்மம் அதர்மம் -இதுகளைப் பற்றியும் இடைக்கிடை யோசிச்சுத் தானே பாக்க வேண்டியிருக்கு? அல்லது கீழ் வகுப்புகளிலை ஆத்தி சூடியும் நல் வழியும் படிச்சு என்ன பிரயோசனம் ? கனகம், நீரே சொல்லும். திருக் குறளையும் நாலடியாரையும் - அதுகும் விரிவுரையும் மூலமுமாய் வாங்கி அலுமாரிக்குள்ளெ அடுக்கி வைச் சுத்தான் என்ன புண்ணியம்?
(அலுப்புடன் சிணுங்கலும் நக்கலுமாக) "புண்ணியம்
ஆம்; பாவம் போம். y y
; அதைத்தான், கனகம், நானும் சொல்லிறென். 'புண்ணி
யம் ஆம் பாவம் போாம்; போன நாட் செய்த அவை / மண்ணிற் பிறந்தார்க்கு வைத்த பொருள் எண்ணுங்கால்/ ஈ தொழிய, வேறில்லை எச்சமயத்தோர் சொல்லும்/ தீதொழிய நன்மை செயல்' தீமை செய்யக்கூடாது; நன்மை செய்ய வேணும். அதுதான், கனகம், நல்வழி, நன்னெறி, அறிநெறிச் சாரம் எல்லாம் அதுதான். தீமை வேண்டாம்; நன்மை வேணும், ஆசார சாரமே அவ் வளவுதான். மற்றதெல்லாம் வெறும் ஆரவாரம், கூச்சல், குளறல்.
: நீங்கள் சொல்லிறதெல்லாம், சரியப்பா, நான் அதுக
ளொண்டையும் மறுக்கேல்லை.
பின்னை ஏன் விம்மி, அழுது முறண்டு பிடிக்கிறிர்?
போய் முகத்தைக் கழுவிக் கொண்டு வாரும்.
: நீங்கள் எப்பிடியும் கந்தசாமியை முதலாமாளாய் வரப்
பண்ண வேணும். ஏன், அவனுக்கென்ன, தகுதி இல் லையா? ஆண்மை இல்லையா? ஆற்றல் இல்லையா?
கனகம், கனகம். அவனுக்குத் தகுதியும் ஆண்மையும்
ஆற்றலும் இருந்தால், அவன் முதலாவதாய்த்தானே வருவான்? பிறகு நான் ஏன் அவனை முதலாவதாய் வரப்பண்ண வேணும்?
 
 

கனகம்
கந்தப்ப
கனகம்
கந்தப்ப
கனகம்
கந்தப்ப
கனகம்
கந்தப்ப
கனகம்
: நீங்கள் தருக்கத்திலெ பெரிய 'ச்சைம்ப்பியன்’ எனக்குத்
தெரியும்.
: ஏன், நீர் ஏதோ குறைவா? சருவகலாசாலைத் தமிழ்ச்சங்
கத்திலெ சொற்போர்க் குழுவுக்கு நீர்தானே, தலைவி
ιμπή 2
: நீங்கள் ஏன் கதையை மாத்தப் பாக்கிறியள்?
கந்தசாமி உம்மடை அக்காள்டை மகன் தான். அதுக்
காக நாங்கள் நியாயம், நீதியைக் கவனியாமல் நடக் கிறதா, கனகம்?
: நீங்கள்தானப்பா நியாயம், நீதி,தர்மம், அதர்மம் எண்டு
சாகிறியள். ஏன், உங்கெ, ஊர் உலகத்திலெ நடக்கிறது தெரியாதா, உங்களுக்கு?
என்ன நடக்குது, உலகத்திலெ?
: ஆத்திசூடியும் கொன்றை வேந்தனும் அரிவரியோடெ
சரி. வயது போகப் போக வேறெ விதமான நீதி நெறி யளைத்தான் எல்லாரும் கடைப்பிடிக்கினம். நடை முறை வாழ்க்கைக்கு அந்தப் பழங்காலத்துச் சித்தாந்தம் எல்லாம் ஒத்து வராது. உண்மைதான் உலகை வெல்லும்; நேர்மை தான் நீதியாகும்- எண்டெல்லாம் பேசலாம்; கலன்டர்களிலே கூட அச்சடிச்சு விடலாம். பெரிய எழுத் துகளிலெ அச்சடிச்சு 'ஃவிறேம் போட்டுக் தூக்கலாம். ஆனால், இதொண்டையும் கடைப்பிடிக்கக் குடாது; கடைப்பிடிக்க ஏலாது. கடைப்பிடிச்சால் அதோ கதி தான்!
எல்லாரும் தலைகீழாய் நிக்கினம் எண்டாப்போலெ,
நாங்களும் தலைகீழாய் நிக்கிறதா, கனகம்?
இல்லைக் கண்டியளோ இது அப்பிடி ஒண்டும் பார
தூரமான காரியமில்லை. நீங்கள் தான்ே இந்தத் தடவை தேசிய தின விளையாட்டுப் போட்டிக்குத் தலைமை நடுவராய் இருக்கப் போரீங்கள்? நீங்கள் சொன்னால், ஆரேனும் அதைத் தட்ட முடியுமா? உங்கடை நடப் புக்கும் செல்வாக்குக்கும். வேறெ யாரேனுமாய் இருந்தால், உலகத்தையே சுருட்டிக் கமக்கெட்டுக் குள்ளெவைச்சிருப்பங்கள்.

Page 11
கந்தப்ப
கனகம்
கந்தப்ப
கனகம்
: நடப்பும் செல்வாக்கும், ஞாயம் நீதியோடெ சேர்ந்து
தான் இருக்க வேணும். அதுதான் சிறப்பு.
: அதென்னவோ, எனக்குத் தெரியாது. வருற கிழமை
பத்திரிகையிலெ வரும்- விளையாட்டுப் போட்டியிலெ வெற்றி எடுத்த பொடி - பெட்டையளுடைய பட்டியல். அந்தப் பட்டியலிலெ கந்தசாமியுடைய பேர் முதலா வதாய் இருக்க வேணும். அவ்வளவுதான் நான் சொல் லக்கூடியது. பிறகு, இங்கை, அங்கை, அப்பிடி, இப்பிடி எண்டு சாட்டொண்டும் சொல்லப்படாது. முந்தநாளும் அக்கா வந்திட்டுப் போறா. கச்சவேலியிலையிருந்து அவ்வளவு தூரம் பாடுபட்டு வந்தவ. மண்டாடி மண் டாடிச் சொல்லிப் போட்டுப் போறா. மைச்சான் காறன் விளையாட்டுப் போட்டிக்குத் தலைமை நடுவர். சொல் லிக்கில்லிச் சரிப்பண்ணினால், கந்தசாமியை முதலா வது ஆளாய் வரப்பண்ணிப் போடலாம் எண்டு ஆசை யோடெயும் நம்பிக்கையோடெயும் வந்திருக்குது மனிசி. நீங்கள் என்னெடா எண்டால், புண்ணியமாம் பாவம் போம் எண்டு அறநெறிச் சாரத்தைப் பற்றிப் பிரசங்கம் பண்ணிறீங்கள்.
கனகம், நீர் என்ன படிப்பறிவு இல்லாத சனங்கள் மாதி
ரிப் பேசுறிர்? விளையாட்டுப் போட்டியிலெ கந்தசாமி முதலாம் ஆளாய் வருறதும் வராததும் அவனுடைய கெட்டித்தனத்திலெ எல்லோதங்கியிருக்கு? எல்லாரும் ஓடிறபோது, மற்றவையைப் பின்னுக்கு விட்டிட்டு, இவன் முன்னுக்கு ஓடினால் தானே வெற்றி கிடைக் கும்? எல்லாரும் பாயிற உயரத்திலும் பாக்க அதிகமான உயரத்தைப் பாய்ஞ்சால்தானே கந்தசாமிக்கு வெற்றி கிடைக்கும்? எல்லாரும் எறியிற தூரத்தைவிட அதிக தூரத்துக்குப் போகத் தக்க விதத்திலெ குண்டெறிஞ்சால் தானே, இவனுக்கு முதலிடம் கிடைக்கும்? எல்லா (ü), LD. . . .
: அதெல்லாம் தெரியுமப்பா, எனக்கு. திறந்து விட்ட
தண்ணிக் குழாய் மாதிரி ஒரே நீட்டுக்குப் பேசிக் கொண்டே போறிங்கள் கந்தசாமியை முதலாவதாய் வரப்பண்ணிற வழி எனக்குத் தெரியும்.
 
 

கந்தப்ப
கனகம்
கந்தப்ப
கனகம்
கந்தப்ப
கனகம்
கந்தப்ப
கனகம்
என்ன வழி? சொல்லுமென் கேட்பம்.
: அதெல்லாம் சொல்ல வேண்டிய நேரத்திலெ நான்
சொல்லிறென், உங்களுக்கு.
: விளையாட்டுப் போட்டி அஞ்சு மணிக்கெல்லா துவக்
கம்? அதுக்கிடையிலெ சொன்னால் தானே.
: இல்லை, இல்லை. போட்டி நடக்கிறபோது நீங்கள்
ஒண்டும் செய்யத் தேவை இல்லை. அதுக்குப் பிறகு தான் இருக்கிது காரியம்.
; அப்பிடியா? என்ன திட்டம் வைச்சிருக்கிறிர், கனகம்?
எனக்குக் கேட்க ஆவலாய் இருக்கு.
அவசரப்படாதேங்கோ. எல்லாம் சொல்லிறென். ஆறுத
லாய். நாங்கள் இப்ப போயிட்டு வருவம், போட்டிக்கு. போற வழியிலெகதிரவேற்பிள்ளையரையும் கண்டு ஒரு சொல்லுச் சொல்லிப்போட்டுப் போவம்.
என்ன சொல்ல வேணும் அவருக்கு?
இண்டைக்கு இரவுச் சாப்பாட்டுக்கு எங்களுடைய வீட்
டுக்கு வரச்சொல்லுவம், அவரை. வரியப் பிறப்புக்கு வந்த பிறகு அவர் இங்கை வரேல்லைத்தானே காணச் சோட்டையாய் இருந்தது எண்டும் சொல்லுவம். அதெல்லாம் நான் கதைக் கிறென். நீங்கள் சும்மா பக்கவாத்தியம் வாசிச்சாற்போதும்.
சரி, சரி நாங்கள் போவம். போற வழியிலெ கதிரவேற்
பிள்ளையையும் கண்டு சொல்லிப்போட்டுப் போவம்; என்னென்ன திட்டங்கள் வைச்சிருக்கிறீரோ 'பெண் புத்தி பின்புத்தி எண்டு சொன்னவன், பேயன்! (காட்சி மாற்ற இசை)
(சாப்பாட்டு மேசைத் தட்டுமுட்டுப் பொருள்களின் ஒசை-உண்ட பின் கிளம்பும் ஏப்ப ஓசைகள்- ஏதோஒரு பானத்தை ஒருவர் உறிஞ்சிப் பருகும் ஒலி- சிறு அமைதி)

Page 12
கதிரவேலு:
கந்தப்ப
கனகம்
கதிரவேலு:
கனகம்
கதிரவேலு:
கந்தப்ப
கனகம்
கந்தப்ப
மிஸ்ற்ற(ர்) கந்தப்பமூர்த்தியர், அருமையாய் இருந்திது சாப்பாடு.
அப்பிடியா? (நாணம் விரவ) நீங்கள் அதிகமாய்ப் புகழ் றீங்கள்.
இல்லை, மிசிஸ் மூர்த்தியர். நான் வெறும் முகமனுக் காய்ப் பேசேல்லை. உண்மையாய்த்தான் சொல்லி றென். இது பட்சபாதகமில்லாத நேர்மையான சாப் பாட்டு விமர்சனம்.
உங்களுடைய பத்திரிகையிலெ வருற புத்தக விமரிசனம்
போலெ சீ, சி! பத்திரிகையிலெ புத்தக விமரிசனம் ஆர் போடு றாங்கள்? புத்தகம் போடுறவன் எல்லாரும் இரண் டிரண்டு பிரதி அனுப்பி வைப்பான்- அன்புடன் மதிப் புரைக்காக-எண்டு. நாலு சொல்லுப் புளுகி எழுதினால் தான் பாருங்கோ அடுத்தடுத்துப் போடுற புத்தகங் களையும் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருப்பாங்கள். அதுக்காக, ஆகா, பிரமாதம், பலே, பலே எண்டெல் லாம் எழுதித் தள்ளவேண்டியது தான்!
: (ஏமாற்றம் விரவிய குரலில்) என்ன, மிஸ்ற்ற(ர்) கதிர
வேற்பிள்ளை- நீங்கள் இப்பிடி எல்லாம் செய்யிறது சரியில்லை எண்டு தான் நான் நினைக்கிறென். என்ன இருந்தாலும் சமுதாயத்துக்காகச் செய்ய வேண்டிய கடமையள் சிலது இருக்குத் தானே! அதுகளையும் சாடைமாடையாய் எண்டாலும் கவனிக்காமல் விடுறது சரியில்லை.
: (இடைமறித்து) அவருக்குத் தெரியும் கண்டீங்களோ
பத்திரிகா தருமம் எண்டால் என்ன எண்டு. 'தினச் செண்டு ஆசிரியர் திருவாளர் கதிரவேற்பிள்ளைக்கு நீங்களா போதிக்கப் போறிங்கள்- பத்திரிகா தர்மத்தைப் பற்றி?
கனகத்துக்குத் தர்ம சிந்தனையே குறைவுதான். இண்
டைக்குப் பின்னேரம், பாருங்கோ, தேசிய தின விளை யாட்டுப் போட்டி நடந்திது, காரைத்திடல் மைதா னத்திலெ. இவவுக்கு ஒரு பெறாமகன் இருக்கிறார்
 
 

கனகம்
கதிரவேலு:
கந்தப்ப
கன்கம்
கந்தப்ப
கந்தசாமி எண்டு- இவவுடைய தமக்கை மகன். அவரும் பங்கு பற்றினவர்.
: இவர் தான் பாருங்கோ, தலைமை நடுவர்- விளை
யாட்டுப் போட்டிக்கு. ஓ, அது தெரியும் தானே! பின்னேரம் நீங்கள் இரண்டு பேரும் சோடியாய் வெளிக்கிட்டுப் போனது மிச்சம் சிறப்பாய் இருந்திது.
கனகம் பிடிவாதமாய் வற்புறுத்தத் துவங்கி விட்டா.
கந்தசாமியை எப்பிடியாவது முதலாாம் ஆளாய் வரப் பண்ண வேணும் எண்டு என்னோடெ சண்டை- இண் டைக்கு மத்தியானம்! நீங்களெ சொல்லுங்கோ, மிஸ்ற் ற(ர்) கதிரவேற்பிள்ளை விளையாட்டுப் போட்டியள் என்னத்துக்காக வைக்கிறது? அதினுடைய தத்துவம் என்ன? தாற்பரியம் என்ன? ஒட்டப் பந்தயம் எதுக்காக வைக்கிறம்? தந்திப் பியோன் வேலைக்கு ஆள் தெரி யிறதுக்கா? இல்லை! ஆருக்குத் திறமை இருக்கி "தோ. ஆருக்கு வல்லமை இருக்கி ‘தோ அவனுக்குப் பாராட் டும் புகழும் போய்ச் சேர வேணும். இதுக்காகத் தானே விளையாட்டுப் போட்டி வைக்கிறம்? சமுதாயத்திலெ நீதியும் நேர்மையும் நிலவ வேணும் எண்டதை ஒரு சின்ன அளவிலெ ஆவது- எங்களுடைய அதிகாரம் செல்லுபடி ஆகக்கூடிய ஒரு சின்ன அளவிலெயாவது செய்து காட்ட வேணும் எண்டதுக்காகத் தான் இந்தத் தேசிய தினத்தையே துவக்கி நடத்திக் கொண்டு வருறம். அப்பிடி இருக்கத்தக்கதாய், கனகம் சொல்லுறா- விளை யாட்டுப் போட்டிக்குள்ளெயே மோசடியைப் புகுத்த வேணும் எண்டு!
: ஏனப்பா, பரிசளிப்புப் பிரசங்கத்தை வந்து வீட்டிலெ
நிண்டு பேசுறியள்? மிஸ்ற்ற(ர்) கதிர்! நான் மோசடி செய்யச் சொல்லி இவரைத் தூண்டேல்லை. கந்தசாமி முதலாம் ஆளாய் வரவேணும் எண்டு தான் விரும்பின
நான்.
; அதுக்காக என்னுடைய நடப்பையும் செல்வாக்கையும்
துர்ப்பிரயோகம் செய்ய நான் விரும்பேல்லை. ஆனா

Page 13
கனகம்
கந்தப்ப
கதிரவேலு:
கந்தப்ப
கனகம்
கந்தப்ப
கனகம்
லும் கந்தசாமி தான் முதலாம் ஆளாய் வந்தான். நான் ஒரு வேலையும் செய்யாமலே கந்தசாமி முதலாவதாய் வந்திட்டான்.
; அது எனக்குத் தெரியும் கண்டீங்களோ. கந்தசாமி முதலாம்
ஆளாய் வந்திட்டான். அவன் அப்பிடி முதலாவதாய்த் தான் வருவான் எண்டு எனக்கு முன்னமே தெரியும். அதைப்பற்றிக் கடுகளவு கூட நான்ஜமிச்சப் படேல்லை.
பின்னை, ஏன் அப்போதை என்னோடெ சண்டைக்கு
நிண்டநீர், மத்தியானம்? என்னவோ! கந்தசாமி முதலாம் ஆளாய் வந்திட்டான். சந்தோசம் தானே, எல்லாருக்கும் மழை ஒண்டு பெய் யப்போகிது போலெ இருக்கு. இருட்டிக் கொண்டு வருகிது. நான் வீட்டை போக வேணும். நேரத்தோடெ போனால் தான் இந்தக் கிழமைக்குத் தேவையான மூண்டாம் பக்கக் கட்டுரையை எழுதி முடிக்கலாம். நான் வருறென். மெத்தப் பெரிய உபகாரம். வணக்கம்
சரி, சரி. வணக்கம். வாருங்கோ.
(காட்சி மாற்ற இசை)
: பிடிவாதக்காறி. பிடிவாதக்காறி எண்டு என்னைப் பழிக்
கத்தான் உங்களுக்குத் தெரியும். நீங்கள் தான் பெரிய பிடிவாதக்காறர்.
: என்ன, கனகம்? இதை நான் எப்பிடி வாய் விட்டுக்
கேட்கிறது? அந்த ஆள் என்ன நினைக்கும் எங்களைப் பற்றி? இதென்ன தரும சங்கடம், அப்பா!
இது எவளவு முக்கியம் எண்டு உங்களுக்கு விளங்கு
தில்லையே! சர்மா அன்ட் கம்பனியிலெ இன்ற்றவியூ நாலாம் தேதி, அந்தக் கம்பனி டிறெக்ற்றர் கதிர்காமத் தம்பிக்கு விளையாட்டெண்டால் உயிர். பத்திரிகைப்
புதினத்திலெ ‘கந்தசாமி எண்ட பேர் முதலாவதாய்
வரவேணும். அப்பதான் கந்தசாமியை எடுப்பாங்கள், உத்தியோகத்துக்கு.
 
 

கந்தப்ப
கனகம்
கந்தப்ப
கனகம்
கந்தப்ப
கனகம்
கந்தப்ப
கனகம்
கந்தப்ப
கனகம்
கந்தப்ப
; கந்தசாமி போட்டியிலே முதலாய்த் தானே வந்திருக்
கிறான்? புதினத்திலெயும் அவனுடைய பேர் முதலிலே வரும் தானே?
: இந்தச் சின்ன, சிம்ப்பிள் விசயங்கூட விளங்கேல்லையே
உங்களுக்கு கீழ்ப்பிரிவு, நடுப்பிரிவு, மேற்பிரிவு எண்டு மூண்டு பிரிவாய் எல்லா நடந்தது, போட்டி?
ஒ!
கந்தசாமி மேற்பிரிவைச் சேர்ந்தவன் எல்லா? ஒ, அதுக்கென்ன? போட்டி முடிவுகளைப் பத்திரிகையிலே இரண்டு வித
மாய்ப் போடலாம், கண்டீங்களோ! ஒண்டில், கீழ்ப் பிரிவு, நடுப்பிரிவு, மேற்பிரிவு எண்டு கீழே இருந்து மேலே போகலாம். அப்பிடிப் போட்டாங்கள் எண் டால் கந்தசாமியுடைய பேர் புதினத்திலெ முதலாவ தாய் வராது. மேற்பிரிவு, நடுப்பிரிவு, கீழ்ப்பிரிவு எண்டு வரிசைப்படுத்தினால் தான் அவனுடைய பேர் முத லிலெ வரும்.
அதுக்கு நான் இப்ப என்ன செய்ய வேணும்?
: போய்ப் பாருங்கோ, அப்பா - கதிரவேற்பிள்ளையரை.
அவர் உங்களுக்காகக் கட்டாயமாய் இந்த உதவியைச் செய்வர். எல்லாம் நீங்கள் கதைக்கிற மாதிரியிலெ இருக்கு. செய்தித் தலைப்பிலேயே கந்தசாமியுடைய பேர் வரக்கூடிய விதத்திலெ கூடச் செய்தியைப் போடப் பண்ணலாம்.
: நீர் எவளவுதான் சொன்னாலும் எனக்கு இது தருமத்
துக்கு மாறு போலெ தான் இருக்கு.
என்ன விசர்க் கதை, அப்பா!தர்ம, அதர்மக் கோட்பாடு
களை எங்கெங்கே, எப்பிடியெப்பிடி ஐப்ளை (apply) பண்ணிறது எண்டே தெரியேல்லையே, உங்களுக்கு! அவனுடைய வருங்கால வாழ்க்கையையே.
சரி, சரி. நான் போய்க் காண்றென்- கதிர வேற்பிள்ளை
யரை.
(காட்சி மாற்ற இசை)

Page 14
கந்தப்ப
கனகம்
கந்தப்ப
கனகம்
V
(பத்திரிகைத் தாளின் சரசரப்பொலி)
(மகிழ்ச்சி விரவ) பாத்தியா, கனகம்? கதிரவேற்பிள்ளை
எவ்வளவு நல்ல மனிசன்! செய்தித் தலைப்பைப் பாத் தியா?
(வந்து கொண்டே) என்ன போட்டிருக்கிறார்? வாசி
யுங்கோ.
(வாசிக்கும் தொனியில்) 'கந்தசாமியின் அபாரத்
திறமை - தேசிய தினப் போட்டி முடிவுகள் -மே மாதம் ஆறாம் தேதி. காரைத்திடல் மைதானத்தில்.
முழிப்பான எழுத்திலெ தான் போட்டிருக்கிறார். நீங்கள்
எவளவு பஞ்சிப்பட்டீங்கள்- அவரிட்டை ஒரு சொல்லுச் சொல்லிறதுக்கு? இப்ப என்ன உலகம் அழிஞ்சு போச்சா? தர்மம், அதர்மம் எண்டெல்லாம் கதைக் கிறதிலெ ஒண்டும் இல்லை. அதுகளை எங்கெ, எப்ப 'ஐப்ளை' பண்ணிறது- பிரயோகிக்கிறது. எண்டும் தெரிய வேணும்- மணிசருக்கு. கந்தசாமிக்குக் கட்டாயம் வேலை கிடைக்கும்- சர்மா அன்ட் கம்பனியிலெ.
(முடிப்பிசை)
1967
 
 

2
வழமை
நாடக மாந்தர் :
தங்கம்
துரையார் - கணவர்
இராசன் - மேற்படியோரின் மகன்
கனகு - இராசனின் தம்பி
தங்கம்
தங்கம்
துரை
தங்கம்
எனக்கென்றால் துப்பரவாய்ப் பிடிக்கவில்லை. எதைப்பற்றிச் சொல்லுறாய், தங்கம்?
ராசன்.
பிடிச்ச பிடி விடமாட்டான். அதுவும் போக, பிஎச்.டி.பட்டமுள்ள பெரும் ஆள்!
பின்னை?
தாய்ப்பாலை மறக்காத சவலையா? ங். ஆய்?
: சனமெல்லாம் - பொடியளெல்லாம் - அவனைச் சுற்றி

Page 15
வட்டமிட்டுத் திரியுதுகள் - அறிவுரைக்காய். மகன் அறிஞன். அது எனக்குப் பெருமையும் தான். என்றாலும்.
சீவியத்திற் சீர்கள், செல்வம் இவ்வளவும் கிடைச்சாலும்,
உலகம் எல்லாம் கொண்டாடிப் பாராட்டி மதிப்புத் தந்து கூடி வந்து மரியாதை பண்ணினாலும், இவனுக்கோ தன் பெருமை தெரியுதில்லை. எதற்காக
பதிவாளர் கந்தோர் போய்,
தன் கலியாண எழுத்தை வைக்க நினைக்கிறானோ? கமலி என்ன குறைச்சலா?
பட்டதாரி. விரிவாக 'நாகசின்னம்" மேளம் வைச்சு வெள்ளை கட்டி, சொக்கட்டான் பந்தல் போட்டு
வடிவாக நடத்தலாம், கலியாணத்தை.
மகனுக்கோ இதில் எல்லாம் நாட்டமில்லை.
"எழுத்திலன்றே தாலி கட்டி,
காரியத்தை இதமாக முடிப்பம் என்று சொல்கிறாளே! "இழுத்தடிச்சுப் பல நாளாய்த் திட்டம் தீட்டி இலங்கை முழுதையும் வீட்டிற் கூட்டி என்ன? வழக்கத்தைக் கை விடாப் பிடி ஏன்?" என்றான். ‘மாமூலில் அவனுக்கு விருப்பமில்லை.
விருப்பமில்லை.
நாட்டமில்லை.
வெறுப்பே உண்டு.
விளையாட்டுப் புத்தியிலே
காசை எல்லாம் w 4 எடுத்தெறிஞ்சு செலவு செய்து கரைச்சுத் தீர்த்தால், இதால் எல்லாம் ஆருக்கு நன்மை, அம்மா?
 
 

தங்
இரா
துரை
பொருளாதாரக் "கிறய்சிஸ்" இந்த நாட்டைப் "புடிச்சலைச்சுப் பயங்காட்டி நெருக்கினாலும் இருள் போக்க முயற்சி செய்யம்உழைக்க மாட்டம். எக்கனமி திருந்த வழி செய்யமாட்டம். கைக்காசு முழுவதையும், யோசிக்காமல் கண்மூடிச் செலவு செய்வம். இதுதான் வேண்டாம். வேண்டவே வேண்டாம்.
gյ
வேண்டாம், வேண்டாம். விடுங்கள் - நான் சிக்கனமாய் மணம் முடிக்க.
: நாண்டு கொண்டு நிற்கிறாய் தம்பி.
இச்ே நாலு பேர் நாளைக்கு.
பொறுங்கள், அம்மா!
நாலுபேர் 'கதைப்பினமே" என்று பார்த்து நடுநடுங்கி எங்களுடைய நடத்தை கண்ட
கோலமாய்ப் போச்சுதய்யோ!
கோபிக்காதே.
கும்பிடுறென், தம்பி. சும்மா போங்கள், அம்மா. சுருக்கமாய் எழுத்திலன்றே தாலி கட்டிச் சுலபமாய் வைபவத்தை முடிப்பம், நாங்கள்.
இருக்காது குறை எதுவும் இதிலே.
(யோசனையுடன்) ம்ம்ம்.
: ஒம்,
ஏனென்றால், என்னுடைய கொள்கை எல்லாம் ஊர் முழுதும் அறியும், அப்பா!
மெய்தான்.
இந்த உலகமெல்லாம் உன் பின்னால் வரத் தயாராய் ஆர்வமுள்ள பொடி, பெட்டை நிறைய உண்டே!

Page 16
இரா
அதை நாங்கள் மறுக்க -இல்லை.
அம்மா, அப்பா.
குழல் வேண்டாம்.
தவில் வேண்டாம்.
வாழை வேண்டாம். கொட்டகைகள் போட்டு வெள்ளை கட்ட வேண்டாம். அழல் வேண்டாம். அரசாணி, அம்மி வேண்டாாம். ஆகாச வெடி வேண்டாம். அய்யர் வேண்டாம். முழு ஊரும் வர வேண்டாம். முருக்கு வேண்டாம். மோதகமும் உறட்டிகளும் முறுக்கும் வேண்டாம். விழலான செயலேதும் செய்ய வேண்டாம். வெற்றியுடன் மணம் முடிப்பேன். வியக்கும் வையம்.
சரி, தம்பி, உன்னுடைய விருப்பம்.
என்ன, சாணைக் கைக்குழந்தையா நீயும்?
(எதையோ சொல்லத் தொடங்கி) அப்பா. சரி, சரி, போ.
உன்டை திட்டப்படியே செய்வம், சகலருக்கும் சம்மதம் தான்.
குறையே இல்லை. ஆனாலும், கடைக்குட்டி கனகலிங்கம்அவனுக்கு மாத்திரம் தான் மனம் கசக்கும். ஏமாற்றமாய் இருக்கும்.
சுருக்கமாகி இப்படியாய்த் தடயுடல்கள் குறைஞ்சு போனால்?
; அதுக்கென்ன செய்யிறது?
சின்னப்பையன்! அவனுக்கோ விளையாட்டுப் புத்தி. நாங்கள் a முதிர்ச்சியுள்ள மணிசர், அப்பா!
 
 

இரா
se
துரை
வளர்ந்த பேர்கள்! முடியுமோ விளையாட
அது மெய்.
ஆனால், கனகலிங்கம் சிணுங்காமல் அமைதி சொல்லி, கவனமாய்ச் சமாதானப் படுத்த வேண்டும். உனக்குத்தான் அது கடமை.
செய்கிறேனே!
உங்களுக்கு மனவருத்தம் வேண்டாம், அம்மா. (காலம் கழிதலைக் காட்டும் இசைக்குறிப்பு)
அண்ணா!
: ஏன், கனகு, என்ன கவலை?
நீங்கள்
ஆகவும் ஏன் சடங்குகளைச் சுருக்கினீர்கள்? 'உண்ணாணை’ எனக்கென்றால் மன வருத்தம். ஒரே ஒரு நாள் வேடிக்கைக்கென்று விட்டால், என்ன, அது பெரும் பிழையா?
: இல்லைத் தம்பி!
இது பழைய கொடும் பழக்கம், பழமை வாதம். சின்னபின்னமாய் இதை நாம் உடைக்க வேண்டும்.
(வெறுப்புடன்) செய்யிறதைச் செய்யுங்கள்.
(தகப்பனார் வருவதைக் கண்டு) அப்பா!
என்ன? (செருமி)
என்னப்பா, சரிதானே, ஏற்பாடெல்லாம்?
ஏற்பாடா?
அது மிச்சம் சிம்ப்பிள் தானே! பொன்னையன் காரோடு பத்தரைக்கே புறப்படலைப் பக்கமாய் நிற்பான்.
போனால், பன்னிரண்டு மணிக்கெல்லாம் வீடு மீண்டு பாய் போட்டு விருந்தொன்று நடத்திப் போட்டால் பின்னை என்ன?
கலியாணம் முடிஞ்சு போகும்.

Page 17
56
56
இரா:
: பிரமாதம், பிரமாதம்!
ஆனால், கார் ஏன்? நடந்தபடி போய் வரலாம். 'றயித்தார் கந்தோர்’ நாலு மைல் இருக்காதே!
; அது மெய்.
மெய், மெய்!
நடந்து போய் வருறது தான் நல்லதண்ணா! நடைபாதை கல்லு முள்ளு நிறைஞ்ச பாதை. உடம்பு முற்றிக் குதிக்காலில் தோல் தடிச்ச உங்களுக்கு, நடக்கிறது சின்ன வேலை. கடுந்தொழில்கள் செய்யாத, மெதுமையான கமலி அண்ணி பாதங்கள் நோகும் அண்ணா. நெடுந்தெருவில் முழு நீளம் நிலபாவாடை நேர்த்தியாய் ஏற்பாடு செய்ய வேண்டும்.
: 6, 6), G6urt.
திடீர் என்று ஏன் உளறு'றாய் நீ?
(உரை நிகழ்த்தும் தொனியில்) .
சினங்கொள்ளல் சரி அல்ல. இரங்க வேண்டும். ஆசை நெடு நாளாக எனக்குண்டண்ணா, அருளப்புக் கட்டாடி நிலபாவாடை வீசி அள்ளி முன் ஒடி விரிச்சுப் போக, வீரசிங்கம் மற்றதொன்றை ஒதுக்க - என்றே ஆயத்தமாய்க் காத்து நிற்பன், அங்கே. அதுக்கிடையில் மூன்று பேர் மாறி, மாறி ஒயல் இல்லாச் சங்கிலியாய்த் தொடர்ந்து போகும் ஒழுங்கான செயற்பாட்டு வரிசை பார்க்க நெடுநாளாய் ஆசை, அண்ணா! (எதிர்பாராத விதமாய் மகிழ்ந்து) அச்சா, அச்சா! நேர்த்தியாய் வருணிச்சாய்
நல்ல பேச்சு. 4. பரிசாக அனுமதிச்சென், நிலபாவாடை பாதை எங்கும் விரிக்கிறதை மட்டும், தம்பி.
 
 

56
s
தங்
இரா
(மகிழ்ச்சி கும்மாளியிட) பெரிய உபகாரம், அண்ணா! (கத்தி - தாயைக் கூப்பிட்டு) அம்மா, அம்மா!
(வந்து கொண்டே)
‘பெடியர்' என்ன பெரும் புளுகம்? குதிக்கிறாரே!
நாளைக்குப் பத்தரைக்கு நாங்கள் எல்லாம்
நடை பவனி போகிறதாம்'றயித்தார்’ செல்லர்
வாழுகிற வீடு வரை.
மீளும் போது வழிமுழுதும் விரிப்பிப்பம், நிலபாவாடை.
மூளை ஒன்றும் பிசகில்லைத் தானே?
ஏன், நீ முழு மாறாய்க் கதைக்கிறாய்?
இல்லை, அம்மா.
கனகு மிச்சம் வடிவாக,
நிலபாவாடை கை மாறி விரிச்சிடுற விதத்தைச் சொன்னான்புனை கனவு மொழியில் அல்ல, கணித நூலார்
புத்தி நுட்ப மொழி வழியில். அதை நான் மெச்சி இனியதொரு பரிசாக, அவனுக்காக இந்த ஒரு சிறு சலுகை வழங்கினேன்.
ஆ.ங்ப்? சலுகை ஒன்று தம்பிக்குத் தந்தாய்?
தாய்க்கும் தரலாமே, ஒரு சலுகை?
என்ன வேண்டும்?
'றயித்தார் கந்தோராலே திரும்பி வந்து
நம்முடைய வீட்டுக்குள் நுழையும் போதில் வெயில் கொதிக்கும் நடுப்பகலாய் இருக்கும். அந்த ‘வெக்கைக்கு மறைப்பாக, இரண்டு வாழை ஐயத்தானின் தோட்டத்தே வாங்கி வந்தால் இரண்டு பக்க முகப்புக்கும் நடலாாம்.

Page 18
தங்
இரா
56
துரை
(உற்சாகம் குன்றி) ஏதோ
செய்வியுங்கள்.
; அது மட்டும் இல்லைத், தம்பி.
ஆலாத்தி எடுக்கையிலே நாலு சின்ன அளவான வெடி கொளுத்த வேணும்.
: (பொறுமை இழந்து, கத்தி) அம்மா!
ஆலாத்தி கீலாத்தி ஒன்றும் வேண்டாம். அதை எல்லாம் சுருக்குங்கள் என்று சொல்ல ஒம் என்று கேட்டீர்கள்.
: இல்லை, இல்லை.
உதைப்பற்றி நீ ஒன்றும் சொல்ல - இல்லை.
: ஏனம்மா கதை மாற்றப் பார்க்கிறீர்கள்?
: இல்லை, இல்லை, உள்ளபடி ஆலாத்திக்கு
மாறாக நீ எதையும் சொல்ல - இல்லை. மறுக்கிறதும் சரி இல்லை; ஞாயம் இல்லை. தட்டொன்றும் குங்குமமும் திரியும் வேண்டும்.
: தையலர்கள் இரண்டு பேர் வேண்டும், வேண்டும்.
கெட்டெதுவும் போகாது. நட்டம் இல்லை. கேடு கெட்ட மேலதிகச் செலவும் இல்லை. பட்டு மினுங்கும் பெண்கள் இரண்டு பேரும் பக்குவமாய்ச் சுடரொளியைச் சுழற்றி வந்து பொட்டுகளை நெற்றிகளில் வைக்கும் நேரம் பூரித்துப் போகாரோ, எங்கள் தாயார்? ஆனபடியாலே தான் ஆலாத்திக்கும் அநுமதியைத் தர வேண்டும், அண்ணனாரே! சீன வெடி கொளுத்திவிட நானே உள்ளேன். சில ரூபாய் சதம் வேண்டும், வெடிகள் வாங்க.
: இன்னும் ஒரு சங்கதி
நான் மறந்து போனென். இப்பொ' கொஞ்சம் முந்தித்தான் வந்து போனார், பொன்னப்பர் -
; உன்னுடைய மாமன்
 
 

துரை
இரா
துரை
இரா
துரை
Sea
ஏதும்.
புதிதாகச் சொன்னவரா?
நாளை அந்தி
சின்னதொரு றிசெப்ஷனாய் வைச்சால் தானாம் சிறப்பாக இருக்கும் என்றார். நான் 'ஓம்' என்றென்.
: சம்மதிச்சா விட்டீர்கள்?
என்ன, அப்பா! 'சடக்கென்று கைவிட்டிட்டீர்களே!
சைய்! மாமூலில் கொஞ்சமுமே விருப்பம் இல்லா மாப்பிளை நான். சுருக்கமாய் எதையும் செய்து.
போ, மோனை.
எதுக்குமே சட்டம் பேசிப் புறத்தியார் சிரிப்புக்கும் பொருளாய்ப் போனம். சாமான்கள் வாங்கத்தான் காசு- சல்லி. சல்லி என்றால், செலவழிக்கத்தானே, தம்பி? 'பூமானை' -பணம் காசை- வேறெதுக்கு?
போட்டாயே ஒரு போடு! மெய், மெய் , அச்சா!
உடனே போய்ச் சொல்லுங்கள்.
றிசெப்ஷன் வைக்க ஒரு போதும் முடியாது- நாங்கள் மாட்டம்.
கடமையை நான் கை விடேன்.
வாக்கு மீறேன்.
கடவுளே, கடவுளே.
தம்பி, ராசன்!
தயவு செய்து கத்தாதே. எங்கள் சொல்லைத் தட்டாதே.
(எரிச்சலுடன்) சொல்லுங்கள், அமுதவாக்கை,
சுய அறிவை முடக்க என்றே, சுழல் செய்யும் சூழ்ச்சி இது.
தப்பிவிட ஏலாதண்ணே!

Page 19
துரை
தங்
துரை
தங்
துரை
இரா
துரை
இரா
(இராசன் எதுவும் பேச விரும்பாமல் வாயடைத்துப் போகிறான். மற்றவர்களும் மவுனமாகி விடுகிறார்கள். ஒரு சில நொடிகளின் பின்)
* உனக்கென்ன, பேசாமல் இரு, நீ.
நாங்கள் ஊர்ப்பெரியார் சில பேரை வரவேற்புக்கு வரச்சொல்லிக் கூப்பிட்டு விருந்து வைப்பம். வாசலிலெ நிறைகுடம் தான் ஒன்று வேண்டும்.
கனக்க இல்லை
ஏழெட்டு 'பலூனும் தேவை. கடதாசி - நிறப்பேப்பர் - கொஞ்சம் தேவை. அரை றாத்தல் மாப்போதும் பசையைக் காய்ச்ச. அத்துடனே நாலு பந்து நூலும் தேவை. பிறகென்ன?
சோடிக்கத் தடை வேறில்லை.
: பெரிசாகப் பந்தலொன்றும் வேண்டும் தானே?
: ஊரை எல்லாம் வரச்சொல்லி அழைச்சுப் போட்டம்.
உட்கார வைக்க என்றால்.
: பந்தல் தேவை.
வாரியப்பர், மூத்ததம்பி, மயிலர், ஞானி, வாய்க்காலிற் சின்னப்பர், மாணிக்கத்தார், 'சூரியற்றை கந்தையா- இவைக்குச் சொன்னால், சுதியான பந்தலொன்று கிடைக்கும்.
: மெய்தான்.
அப்படியே செய்விப்பம்.
அப்பா. நீங்கள். (ஆத்திரத்திற் சொற்கள் வராமல்
நிறுத்தி விடுகிறான்)
: அதெல்லாம் நான் கவனிப்பென்.
நீ போ உள்ளெ.
: எப்படியோ செய்யுங்கள்
அறுங்கள் - போங்கள்.
(சடாரென்று கதவடிக்கும் சத்தம்) : இன்னும் என்ன ஏற்பாடு ப்ண்ண வேண்டும்?
 
 

தங் : "சோக்கான வித்துவான் சுப்பராயன்.
சோமேசர் படிப்பிச்ச வீணை மன்னன். கேட்காத காதுகளும் காதோஅந்தக் கிளுகிளுப்பை உண்டாக்கும் சங்கீதத்தை? ஈக்கள் வந்து பலாப்பழத்தை மொய்க்கும்; இந்த இனிமையிலே மொய்ப்பார்கள் - ஊரிலுள்ள ஆட்களெல்லாம். ஆனபடியாலே, நாங்கள் அவனுடைய கச்சேரி ஒழுங்கு செய்தால், நீக்கல் இல்லா நிறைவுடைய மக்கள் கூட்டம்.
so நிச்சயமாய் அதைச் சுவைக்கும். தடையே இல்லை.
தங் சருமாதான் பிடில்.
சாமி தம்பூராவைத் தக்கபடி வாசிப்பன். மிருதங்கத்தைத் திருவாளர் மருதலிங்கம் வாசிக்கட்டும். சிதம்பரம் தான் கடத்துக்கு நல்ல தோது.
துரை வருவாரோ, வாகீசன் கஞ்சிராவை
வாசிக்க?
956 : நிச்சயமாய் வருவார்.
நான் போய் ஒரு சொல்லுச் சொன்னாலே, செட்டை கட்டி 'உய்' என்று பறந்து வரும், மனிசன். தங் ஒமோம்.
கனகுவிலெ வாகீசன் நல்ல பட்சம். : 'கம்"மென்று கச்சேரி கேட்பம், நாங்கள்.
வாழ்க உங்கள் திட்டங்கள். பெரியண்ணாவின் மணவாழ்க்கை மங்கலமாய்த் தொடங்கி நீள்க. ஈழவள நாட்டுக்கே எடுத்துக்காட்டாய் எங்கள் இந்த வைபவமே மிளிரும் அன்றோ! தோழர்களே, தோழியரே, இந்த றோட்டில்

Page 20
தங்
5.
துரை
s
தங்
So
துரை
SC
துரை
தங்
துரை
தொடரட்டும், சிந்தனைகள், செயல்கள் யாவும்.
: நீள நெடுநாக்குனக்கு.
நெளிக்கிறாயே!
: நின்றினி வாய்க்காட்டாது. சுழல வேண்டும்.
சுழன்றால் தான் ஒருபடியாய்க் காரியங்கள் சுத்தமாய் நிறைவேறும். (எதையோ கேட்பதற்குப்பீடிகை போடும் தொனியில்)
அப்பா.
என்ன?
ஐம்பது ரூபா வேண்டும், 'பலூனும் நூலும்
ஆகாச வெடிக் கட்டும் போலே உள்ள பண்டங்கள் சில வாங்க வேண்டும் தானே?
பைக்கட்டாய்ப் பூந்திரியை வாங்கு, தம்பி.
ஒன்றொன்றாய் வாங்கிறதிற் பார்க்க லாபம்.
: ஒம், அம்மா, அப்படித்தான் செய்வம் நாங்கள்.
தம்பி, இந்தா காசு.
கடைப்பக்கம் போகச்
சயிக்கிளை நான் எடுக்கவா, அப்பா?
போய் வா.
: நாளைக்குக் கலியாணம்.
சும்மா நின்றால், நடக்குமா காரியங்கள்?
ஒடு, போ, போ.
வேளைக்கே இதுகள் ஒன்றும் செய்ய - இல்லைவிருப்பமில்லை என்று மகன் சொன்னதாலெ. ஆளுக்காள் ஒன்றை ஒன்றைச் சொல்லச் சொல்ல அலுவலுக்கோ கணக்கில்லை. வெறுத்துப் போச்சு. பாவம், அவன் இராசனுக்கோ,
கசக்கும்
இந்தப்
 
 

இரா
படாடோப எடுபாடு.
நாங்களும் தான் ஊர், உலகம், இனசனங்கள் ஆட்ட ஆட்ட உலைகிறமே தப்ப என்றால் மார்க்கம் இல்லை.
(காட்சி மாற்ற இசை)
(சன சந்தடி ஒலிகள், இடையிடையே ஓங்கி அமுங்கு கின்றன. நாயன மங்கல வாத்திய ஓசை மிக மென்மை யாக இந்தக் காட்சி முழுவதும் ஒலிக்கிறது)
; (தனக்குள்) எங்களவர் வழமைகளை மாற்ற என்றால்
எள்ளளவும் சம்மதியார்.
நான் ஓர் பேயன். மங்கலமாய் மணவாழ்வு தொடங்க வேண்டும். மறுக்க ஒன்றும் இல்லை இதில். அதுக்காய்க்,காசைக் கண் மண்ணே தெரியாமல வீசலாமா? காற்சட்டை, சப்பாத்து, கழுத்துப்பட்டி உண்ணுகிற சோறு- இவைக்கே மட்டுமட்டாய் ரூபாயைச் செலவழிக்க வேண்டும். ஆனால். மணவறைக்கும் ஆகாசவெடிக்கும், மற்றும் வாழ்த்து மடற் கண்ணாடிச் சட்டத்துக்கும் மணியடிக்கும் அய்யருக்கும், அம்மி மேலே மாக்கோலம் போடுகிற விரயத்துக்கும்துணிமணிகள் பந்தல் எங்கும் விரித்துக் கட்டிச் சுற்றாடல் முழுவதையும் மறைப்பதற்கும் பணம் பொருள்கள் செலவாகும்.
@, 9յ
இந்தப் பழியை எந்த மறுசெயலாற் கழுவுவேன், நான்? பிஎச்.டி. படிச்சவன் நான்.

Page 21
பிரான்சு நாட்டின் 'பிள்ளை மனவியல்" எனக்குக் கரைஞ்ச பாடம். ஆய்வு செய்தேன். அதில் நிபுணன் ஆகி விட்டேன். ஆராய்ச்சிப் பீடங்கள் என்’டை கைக்குள். ஓய்வில்லாப் படிப்பாளிஉலக நாட்டின் உளவியலார் பிரச்சினைகள் கடுமையாகிப் போய்விட்டால், என்னிடந்தான் வருகிறார்கள். புகழ் மிக்க மேதை இவன் ராசன் - ஒம், நான்! இருந்தாலும் என்னுடைய கலியாணத்தை என்’டை விருப்பப்படியே செய்வம் என்றால், திருந்தாத போக்குடைய மணிசராலே திட்டமெல்லாம் தூள்தூளாய் நொறுங்கிப் போச்சு. வெட்கம் இது, முழு வெட்கம்! இதை நினைக்க வேகிறதே என்னுடைய மான நெஞ்சம்! கட்டாயம், இதுக்குகந்த பிராயச்சித்தம் கடும்பிடியாய்ச் செய்வென் நான். விடக்கூடாது. முந்தி நான் என்னுடைய கலியாணத்தை முழுச்சிறந்த உதாரணமாய் நடத்தப் பார்த்தென். வந்து வந்து பல பேரும் குழப்பம் பண்ணி மாற்றிப்போட்டார்கள் அந்தச் சுருக்கத்திட்டம். அந்த விதம் போனாலும்.
ஏதேன் நல்ல அடையாள மறுப்பொன்றைக் காட்ட வேண்டும். சிந்திச்சுச், சீர்திருத்த மனப்பான்மைக்குச் சிறப்பான விளக்கமாய் அமையத்தக்க அடையாள மறுப்பொன்றை யோசிச்சால் தான் அனைத்துலகும் பாராட்டும்மதிச்சுப் போற்றும்.
(யோசிக்கிறான்)
என்ன செய்வம். ? என்ன செய்வம். 2
(வந்து கொண்டே) தம்பி, ராசன்!
 
 

இரா
(பரபரத்து) இன்னும் என்ன? இன்னும் என்ன? : தலைப்பா’ எங்கே?
(தனக்குள்) இது நல்ல சந்தர்ப்பம்.
(தாய்க்குக் கேட்கும்படியாக - உரத்து) தலைப்பாக் கட்டேன். (பல பேர் பல விதமாய்க் குசுகுசுக்கும் ஓசைகள்)
(உரத்து - சொற்பொழிவுப் பாணியில்)
மாட்டேன், நான் தலைப்பாகை கட்ட மாட்டேன். மானுடரே கேளுங்கள்.
'மாமூல் எல்லாம் போட்டுடைக்கும் கொள்கை ஒன்றே பூண்ட வீரன் புகழுக்காய் உயிர் கொடுக்கும் பண்டைச் சான்றோர் கோட்பாட்டைக் கடைப்பிடிக்கத் துணிந்து விட்டென். கொள்கையின்முன் பழமை எல்லாம் குலைத்து வெட்டி ஒட்டைபடத் துளைத்தறுத்துத் தூள்தூள் ஆக்கி ஊதுவேன் சாம்பலினை.
உணர்ந்து கொள்வீர். பலவீனம் என்னிடத்தே துளியும் இல்லை. பயம் இல்லை.
நடுக்கம் இல்லை.
தயக்கமில்லை. குலவீனம் ஆகுமென்று சில பேர் வந்து கொக்கரித்தால் அதற்காகத் தளர்வதில்லை. விலகுங்கள் எல்லாரும்.
நானோ இன்று வெறுந்தலை சேர் மணமகனாய்ப் புரட்சி செய்வேன். உலகம் என்னைப் பார்க்கட்டும்.
பார்த்த பின்னர் ஒப்பிட்டுப் பார்க்கட்டும்- பிறரோடென்னை. (இராசனின் பேச்சு உணர்ச்சிமயமாகி உயர்ந்து வந்து, சுருதியில் மேலோங்கி, இறுதியில் ஒரு பாடல் போல மாறி விடுகிறது. தாய்க்கும் ஒரு வித ஆவேசம் பற்றிக் கொள்ள அவள் பாடுகிறாள்.)
(பாடல்)

Page 22
தலைப்பாகை சூட வேண்டும் தாமதமேன் தம்பி ராசா தயவு செய்து நீகுல வழமை தவறாமல் காத்திட வேண்டும் தலைப்பாகை சூட வேண்டும் தான்.
குலமேன்மை பேணிட வேண்டும் கோத்திரத்தின் சாத்திரம் பாரும் உலகோரின் கண்களில் எல்லாம் உயர்வாக நீ பட வேண்டும் தயவு செய்து நீகுல வழமை தவறாமல் காத்திட வேண்டும்.
தலைப்பாகை சூட வேண்டும் தான்.
தாயாரின் வேண்டுதல் தம்பி தயவு செய்து நீ நிறைவேற்று சோயா "பீன்ஸ் பால் தரவில்லை சொந்தப் பால் தந்தவள் நம்பு தாயாரின் வேண்டுதல் தன்னை தட்டாமல் ஒம்புதல் நன்மை
தலைப்பாகை சூட வேண்டும் தான்.
தங் (தொடர்ந்து) மகனே, நீ ஒரு பெரிய
மானமுள்ள ஜென்ற்றிள்மன்வாழ்வில்
மிக்க தகுதிகளை ஈட்டியுள்ளாய். சான்றாண்மை உடையவன் நீ, தலைப்பாகைக்குள், சிகை மறைத்தல், எங்களது சிறப்பான பண்பாடு- ' தெரிந்து கொள்வாய். புகை பிடித்தல், பொடி போடும்
 
 

துரை
இரா
துரை
பழக்கங்கள் இலை எனினும் பொல்லாப்பில்லை. மீசை இல்லை என்றாலும் மிகப்பெரிய பழுதில்லை. மிடுக்காய், நல்ல ஆசையுடன் வருடி விட அழகான சைட்"பேண்சே அமையாவேனும் பேச அதில் ஒரு தவறும் இல்லை, அப்பு! அதில் எல்லாம் பிழையே இல்லை ggr)
வெறும் அவமானம் தலைப்பாகை இல்லாமைதீரா வெட்கம்! முரண்டு பிடிக்காதே
என் முலைப்பாலில் வளர்ச்சி பெற்ற முதல்வனே, ஓ..! வரம் தருவாய். தலைப்பாகை வடிவாகச் சூடி வா. மகனே, வா, வா!
: (திடீரென்று ஒடி வந்து)
என்னப்பா களேபரம் ஏன்? இரண்டு பேர் எதற்காக
வசனம் பேசி
முந்தி எப்போதும் நடவா முறைகேட்டை இன்றைக்கேன் நடத்துறிர்கள்?
என் அப்பா, தயவு செய்து கேளுங்கள். சொல்லு, தம்பி.
: தலைப்பாக் கட்ட
உன்மத்தம் பிடிச்சவனாய் மறுக்கிறான் இவன் ராசன்உதவாப் பிள்ளை!

Page 23
துரை
56
இரா
துரை தங்
: நான் நினைச்ச படி என்னை
நடக்கவோ விட- இல்லை.
: நாங்கள் என்னதான் செய்வம்?
சம்பந்தப் பகுதியார், இனசனங்கள், தமிழ்ப் பண்பாட்டுத் தேன் சுவையைக் குடிச்சவர்கள் செய்து வந்த நிர்ப்பந்தத் திருகலாலே தேய்ந்தன நம் திட்டங்கள். செய்கை எல்லாம் திசைமாறிப் போச்சே, தம்பி!
கட்டுப்பாடாய், இந்தக்
கொண்டாட்டம் சிக்கனமாய்ச் சுருக்கமாகத் திட்டமிட்டு நடத்துவமே என்று நான் முதற் சொன்னேன். செய்வம் என்றீர்.
: பிற்பாடு படிப்படியாய்
அயிற்றங்கள் கிசுகிசென்று பெருகிப் போச்சே!
அப்பளங்கள், அலுவாக்கள்,
அரசாணி, அரியதரம், அம்மி, முத்துச் சப்பறத்து முகப்புள்ள மணவறை, பாய், கம்பளங்கள் தாம்பாளங்கள்.
சுப்பையா செற் மேளம்,
சோங்ஸ் பாட ஒலிபெருக்கி, சோசே'ஸ், கோப்பை.
: ஆத்திரத்தைக் கிளறாதே.
அதுக்குள்ளெ நீ ஒரு 'தன்.
அட, சீ போடா!
: தீர்த்து வைக்க வேண்டும் அப்பா
மகனுடைய பிடிவாதம்.
 
 

துரை
இரா
துரை
இரா
துரை
திருந்து தம்பி.
(மன்றாட்டமாய்)
முழுப்பிழை தான் செய்திட்டம். தயவு செய்து பொறுத்துக் கொள். முகூர்த்த வேளை வழுப்பட்டுக் கழிய முன்னம் வடிவாகத் தலைபாகை வைச்சுக் கொண்டே எழுப்பமாய் வா, தம்பீ பெண்வீட்டார் காத்திருந்தே இளைச்சுப் போனார்.
(முந்திய ஆவேசம் சற்றே தலைகாட்ட)
அழைப்புக்கு வந்தவர்கள் அடாத நெடு நேரமாய் அமைதியாகப் பொறுத்திருந்தார். பொறுமைக்கும் எல்லை உண்டு, நீ அறிவாய்.
பொறுங்கள் அம்மா,
நிறுத்துங்கள் நான் என்"டை நிலை மாறேன். தலைப்பாவை
நினைக்க மாட்டேன்.
(சீற்றத்துடன்) கிறுக்கனடா, நீ!
; என்ன
கேடுகெட்ட பேச்சப்பா!
கேள்விப்பட்டால்.
கமலியின்’டை தாய் தகப்பன்
என்னதான் கருதுவரோ?
கடைஞ்செடுத்த
முழு மோடன் என்று தான்
நினைப்பார்கள். (தூரத்திலே கார்க் கதவுகள் அடித்துச்சாத்தும் சத்தங்கள் கேட்கின்றன. பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு

Page 24
துரை
கார்கள் அப்புறமாக அகன்று தூரப் போய் மறையும் ஒலிக்குறி)
(ஓடி வந்தவாறு) மோசம் அப்பா,
மோசம், மோசம்! சம்பந்தி வீட்டார் போய் விட்டார்கள்.
: (உறுதியாயும் ஒருவித ஆறுதல் தொனிக்கவும்)
நான் இனிமேல் தலைப்பா சூடேன்.
* உன் சொந்தப் பேய்த்தனத்தால்
தகராறில் முடிஞ்சுதடா.
உன்மத்தன் நீ. (பழைய உன்மத்தம் இராசனிடம் மேலும் இறுக்க மடைகிறது. சில நொடி மவுனத்தின் பின் இராசன் பேசுகிறான்)
பாவம் என்று நான் பாரேன்.
பற்றிக் கொண்ட பண்புடைய கொள்கைக்காய் எதையும் செய்வேன். ஆவி விட என்றாலும் ஆயத்தம் நான். அவள் என்ன பிரமாதம்?
தேவை என்றால்.
தேடி வந்து சேரட்டும்.
தலைப்பாகைக்காய்ச் சீவியத்தைப் பலியாக்க விருப்பம் என்றால் செய்யட்டும் அப்படியே.
அசையேன், சற்றும்.
(ஆற்றாமையுடன் பிரலாபிக்கிறாள்)
ஓ, கமலி, என்ன தான் செய்வோயோ நீ? உனக்கினிமேல் பிரச்சினைகள் அதிகம், பிள்ளை. சோக இசைப் பின்னணியிற் பாட்டுப்பாடு, துதிப்பாடல் ஒரு சிலவும் சேர்த்துப் பாடு. வேகும் அந்த வேக்காட்டை
"ஆத்ம நாதம்' a
மேம்படுத்தும்.
 
 

இரா
தங்
அதனாலே, மேன்மை நேரும். மோகனத்திற் பாடம்மா, கமலி.
ராசன் முன்போலே அதிற் சொக்கி மூழ்கக் கூடும். ஒருவேளை. உனக்கதனால் மீட்சி கிட்டும்.
ஓ, அம்மா!
ஏன், நின்று பிதற்றுறிர்கள்?
: மருமகளை நினைச்சுத்தான் புலம்பு’றென், நான்.
வாழ்வு பெறத் தகுதியுள்ள பொடிச்சி, தம்பி. (ஒரு நெடிய பெருமூச்சு)
(இசை)
(அறிவிப்புகள்)
(முடிப்பிசை)
1973/1974

Page 25

B
அந்தகனே ஆனாலும்.
நாடக மாந்தர் :
இராகவன் - தென்னாட்டுக்கவிஞன் இலக்குவன் - அவன் நண்பன் இளங்கோ - மற்றொரு நண்பன் அருட்செல்வி - இராகவன் மனைவி தோழி
ஒருவர்
ஈழவேந்தன்
அமைச்சன்
(அறிவிக்கைப் பாடல் இசையுடன் ஒலிக்கிறது) பாடல் : யாழ்ப்பாணன் ஆன இராகவனார் ஈழத்திற்
பெற்ற 'மணற்றி என்ற பேருடைய பாகமே பிற்பாடு யாழ்ப்பாணம் என்று பெயர் பெற்றதாம். காதுவழிச் செய்திக் கதை இதனை இன்றைக்கு நாடகமாய்த் தந்தோம்- நலங்கனிந்த பாவடிவில்.

Page 26
இரா
இள
இரா
இள
(பாடல் - யாழ் இசையுடன்)
எங்கள் இனிய மொழி தமிழ் மொழியே பெரும் இன்ப நலம் துலங்கும் அமிழ்ததுவே
எங்கள் இனிய மொழி.
சங்கம் இருந்த பழந் தனி மொழியே
9/95] சந்தம் பொருந்தி வரும் நறும்பிழிவே
எங்கள் இனிய மொழி.
இன்றைய பாட்டோ என்றையதையும் விட
மிஞ்சி ஒரு படி மிதந்தது; இல்லையா?
ஆமாம்,
அதைத்தான் அப்பொழுதே நான் சொல்ல நினைத்தேன்.
சொல்லுவதெல்லாம்
சொல்லி முடிப்பீர்.
மெல்ல வருகிறேன். இங்கே இந்த வெளிப்புறத் திண்ணையில் இருந்து கொள்ளுங்கள். இதோ, வந்திட்டேன்.
ஒகோ, காதல் உளத்தினை மனையாள்
ஒரக்கண்ணின் ஒருபால் அமர்த்திச் சிமிட்டுவாள். அதற்கா செல்கிறான்? இலக்குவா! (பரிகாசமாய்ச் செருமுதல்)
: பாவம், இராகவன்!
பல நாள் அல்லவே, அவன் மணம் முடித்தும்! அன்புளாள் மனையாள். சென்று வரட்டும், சிரிக்காதே, அடா!
 
 

(தூரத்தே சென்றுகொண்டே)
போங்கடா, போக்கிரிப் பொக்கிசப் பெட்டிகாள்!
(சற்றே தாழ்ந்த குரலில்)
எத்தனை அன்படா, இராகவன் வாழ்க்கையில்! எல்லையற்(று) அவர்களின் இதயம் சுவறியே இரண்டறக் கலந்ததோர் இனிமையின் மலர்ச்சி தான். வடிவழகுடையவள் மனையவள். - அன்புமோ குறைவிலா நிறைவு - குளிர் நிலா அமுது
ஆ!
அழகின் திருவுருவம் அன்பு மனைவி என்றாய். ஆனாலும். (பெருமூச்சு)
என்ன?
அதிருப்தி ஏனோ?
அதிருப்தி அல்ல.
அநுதாபம், நண்ப. இதயத்தழகதனை ஏற்று நுகர்வதற்கும் ஒட்டும் இரண்டுளத்தின் தட்டும் பிணைப்புண்டு. கட்டவிழ்ந்த பூப்போற் கவின் மிகுந்த தோற்றத்தாள், வையத்தழகை வடித்தெடுத்தோர் பெண்ணாக்கிச் செய்த வடிவம், செழுத்தாமரைத் திருவின் அச்சுப் படிவம், அவள் துணையாய் வாய்த்ததையும் கண்டு மகிழ்ந்திடவோ கண் இல்லைப் பாணனுக்கு! அந்தோ, பரிதாபம்!
அன்னானின் கண்ணொளியை
மங்கும் குருடாக்கி, வாழ்வின் புறத்தோற்றம் காணுகிற பேறு கடவுள் தரவில்லை. ஆனாலும் என்ன, அவன் அந்தகனே ஆனாலும் பாவாணன்
உள்ளத்தாற் பார்க்க வல்லான்.
: அம்மட்டோ!
பாணன். மன வெள்ளிப் பாத்திரத்திற் பொங்கி எழும் தண்ணமுதம் இன்னிசையாய்த் தந்திடுவான்.

Page 27
அரு
இரா
அரு
அரு
யாழ் எடுத்தால், விண்ணிற் பறந்துயர்ந்து மேகத்திற் சஞ்சரித்துச் சந்திரனைச் சென்று கண்டு சல்லாபம் செய்யவெனத் தந்திதனை மீட்டி ஒரு சங்கீதத் தூதனுப்பிப் பூமி இசைப் போதையிலே பூரிக்க வைத்திடுவான். பாடும் இசையில் மண் பம்பரமாய் ஆட்டிடுவான்.
: காலக் கிழவனது காற்சுவடு தன் அறிவின்
சீலத் திரையினிலே தீட்டியவோர் சித்திரத்தைச் சொல்லில் வடித்துச் சுவையைக் குடிப்பித்து நல்ல கவிதை நமக்களிப்பான்.
வாழி அவன்.
வேறென்ன வேண்டும்?
விருப்புகளுக்கோர் எல்லை கீற ஒரு கோடிருந்தால், கிட்டி அதைத் தொட்டுவிட்ட அன்புள்ளச் சோடி.
: அருட்செல்வியோடு
கலந்த ஒரு வாழ்வு. கவலை என்ன வேறிதிலே?
(காட்சி மாற்ற இசை)
: (சிரிப்பொலி)
அவ்வளவேன் ஆர்ப்பாட்டம்?
அன்பே, சிரிப்பும் அளவு கடந்தால் அபாயம்.
தெரியுந்தான். : ஆகா! தெரியுமா?
அன்பே, உனக்கதெல்லாம் போகாதென்றல்லவோ, எண்ணினேன்!
புத்தி இன்றிக்
கற்பனைகள் பண்ணும் கவிஞர் பெருமானே, இப்படி நீர் கூறியதை மன்னித்தேன்.
 
 

அடு
அரு
அப்படியா?
தெய்விக்கென் நன்றி திரள் திரளாய்த் தந்திட்டேன். கோபிக்க வேண்டாம், குறும்பரசீ, என் வணக்கம். இன்னும் உன்றன் சித்தம் எதுவோ?
ஒ, சொல்லலாம்
முன்னம் ஒரு நாள் மொழிந்த குறும்புப் பாட்டை ஞாபகத்தில் வையுங்கள்.
'நாம் உடனே ஓடோடி
ஏடெடுத்து வந்திடுவாம்.
இன்னே, இதோ வந்தோம். (கடைசிப் பகுதியில் குரல் தேய்ந்து தூரத்தே ஒலித்தல்)
; (தனக்குள்)
உண்மைதான், இந்த உலக நிகழ்ச்சிகளைக் கண்டுள்ளத்தாராய்ந்து கற்பனையாற் சோடித்துச் சொல்லிற் பிணிக்கும் சுகத்தொழிலில், பாட்டெழுதி அல்லல் மறக்கடிக்கும் அச்செயலில், அப்பப்பா, என்ன சிரமம்!
எழுந்த உணர்ச்சிகள் தாம்
பின்னிப் பிணைந்துருவம் பெற்றதுமே, ஏடெடுத்துப்
பாட்டைச் சுவடி பதிப்பித்தால் வாழும் அது. ஏட்டிற் பதியா இணையற்ற கற்பனைகள் காற்றோடு காற்றாய்க் கரைந்தொழிய வேண்டும். அவளும் இந்த உண்மை அறிந்துள்ளாள். சிந்தையிலே இப்போதே உள்ள எழிற்கவியை ஏட்டினிலே நற்பாசம் கொண்டாள் நகல் செய்து பார்க்கட்டும்.
: இங்கே பாருங்கள், இவை ஒலை.
பாட்டமுதைத் தங்கள் திருவாய் தடையின்றிப் பெய்தால், எழுத்தாணி ஏட்டினிலே இப்படியே ஏற்றெழுதும்.
போச்சுதடி காற்றில், புதுமைக் கவியமுதம்.
வாய்ச்சொல் வடிவிலே வந்த கலைப்பேறு 'கால முகமூடி கட்டும் "மறதி எனும் சாலத் திருடனவன் தட்டிப் பறித்திட்டான்.

Page 28
அரு
9) CD
ஆனாலும் என்ன? அதுபற்றித்துக்கமில்லை.
என்ன, கவலையே இல்லையா?
செந்தமிழின் மின்னற் கவிதை வெறுங்காற்றில் வீசி விட்டுத் துக்கமில்லையாமே! தொழில் வீரப் பாவேந்தர்!
இல்லை, அருட் செல்வி, ஏனென்றால், என் கவியின்
சொல்லை, உணர்வைச் சுவைக்கின்ற ஆத்மா இரண்டே இரண்டாம்.
இதில் ஒன்று நீ.
இன்னும்
மற்றவனோ நான் தான். மகிமை இதென் பாட்டுக்கு. கற்று மகிழும் கலைச்சுவைஞர் நாமிருவர். கேட்டுவிட்டோம். வாழும் தகுதி இருந்திருந்தால், எங்கள் நினைவில் இருக்காதோ, அக்கவிதை? மேலும், கலைக்கு விலை கூறி வேந்தர் சபை ஏறும் வழக்கம் எனக்கில்லை அன்றோ?
அதுதான் தவறு.
ஆம், அரசர் அவை ஏறிச் செந்தமிழைப் பாடினாற் சேருமே பொன்கூட! ஆனால், அதற்காக அல்ல, அன்பே, நான் கவிதைத் தேனை விலை கூறச் சொல்லுவது,
மன்னர் அவையில் அறிஞர், அருங்கவிஞர், செம்மைக் கவிதைப் பிரியர் 'கனபேர் இருப்பார்கள்.
மற்றவர்கள் பாட்டை மனங்கொள்ள மாட்டாமல்,
குற்றமில்லை என்று சில கூறுவதும், பாட்டுச் சுமாராக உள்ளதென்று சொல்லுவதும் சும்மா
த்மாசே! அதனாலே சாருகிற நன்மை என்ன?
 
 

அரு
இரா
sg|CU
இரா
9) CD5
இரா
அடு
உங்கள் தமிழை உணர்ந்து நயப்போரின்
எண்ணிக்கை கூடும். இதுவும் நலந்தானே! என்ன நினைக்கின்றீர்?
என்ன நினைப்பது நான்?
நீயும் பிற பேரும் நெஞ்சொத்த நண்பர் சிலர் தாமும் கவியைச் சரியாய் விளங்கிச் சுவைக்கின்றீர். இன்னும் விளம்பரங்கள் சும்மா எவர்க்கிங்கு வேண்டுமடி?
ஏனோ மாய்மாலம்?
தெரியும், நீர் வாதங்கள் செய்வதேன் என்று. புரியாதவர்க்குப் புதுமைக் கலை என்(று) எதையேனும் காட்டினால், ஏமாந்து போவார்கள். மன்னர் அவையில் மதிவாணர், மந்திரிமார், இன்னும் அறிஞர் இருப்பார்.
உமது சில செல்லாக் கவியைச் சிரித்துக் கழித்திடுவர். இந்தப் பயந்தானே!
என்ன, சரியா?
(சீற்றமடைந்து) நிறுத்தடி நீ, செல்வி. : நிசத்தை வெளி வெளியாய்ச்
சொல்லுவது தானே! சுரீர் என்ற கோபம்.
கலைத்திறத்தை எள்ளியதாம் காரியத்தின் பின் விளைவு
கூறுவது கேள் நீ,
குளிர்ந்த தமிழ் வழங்கும் தென்னாட்டின் மூலை முடுக்கெல்லாம் வாழுகிற மன்னாதி மன்னர் வதியும் சபைகள் மதிக்க மிளிரும் வழியும் வலியுமுண்டு.
: தென்னாட்டை விட்டாற் சிறிதும் மதிப்பில்லை
அப்படியா?
இல்லையில்லை.
ஆழி கடந்தாலும்

Page 29
9) CD5
ஈழம் அடைந்தாலும் என் மதிப்பைக் காக்கக் கவியுண்(டு), இசையுண்டு, கையில் யாழ் உண்டு. புவி கண்டு போற்றும் புதிய கருத்துண்டு. வாய் உண்டு. கண் மட்டும் வாய்ப்பில்லைப், பார்ப்பதற்கு.
: மெத்தச் சரி
நீர் விரிந்த கடல் கடந்து முத்தொத்த நும் கவிதை வித்தைத் திறத்தை எடுத்து விரித்து விடும்.
ஈழத்து வேந்தன் கொடுத்து வழங்குவான், கொள்ளுங்கள். யானையொடு நாடும் தருவான். ஏன், நாளைக்கே செல்லுங்கள் (ஏளனச் சிரிப்பு)
போதும், நிறுத்து நீ.
போதும், பரிகாசம் காது துளைக்கும் கருமொழிகள் பேசுகிறாய். நீ என் பெருமை நினைத்தாயா, ஏளனமாய்? இங்கே பார், நானுந்தான் இப்போதே போகின்றேன். நாளைக்கு வேண்டாம். ஆம், நாவாய் கடல் கடக்கும். நீலக் கடலில் நிருத்தம் இடும் அலையிற் காவியங்கள் கேட்டுக் கவிதை சமைப்பேன் நான். வானக் குடையின் வயிர மணிகளெனும் மீனினத்தின் சோதி விரல் மீட்டிட என் கற்பனை யாழ்
இன்பக் கவிதை இசை பாடும்.
ஈழத்தில்
மன்னன் முன் பாடுவேன். மறப்பான் உலகத்தை. நாடும் உதவுவான்; நான் ஏறிச் செல்ல என்று பீடு நடைக் களிறும் ஈவான், பரிசாக. சென்று வருகிறேன், செல்வி. சுணங்கேன் நான்.
 
 

அரு
இள
இரா
என்ன இது?
எங்கே எழுந்தீர்?
வெறுங்கேலி. உண்மை அல்ல; சே, சீ, சி! ஒடுகிறார்.
போய்விடுவார். போகாரே போலும். ஒரு பொய்க் கோபம் காட்டி என்னை ஏமாற்றும் நோக்காய் இருக்கும். வருவார்தான்.
(காட்சி மாற்ற இசை)
III
வா, வா, கவிஞா!
வரவேற்பை ஏற்றுக்கொள். ஏதிந்தப் பக்கமடா?
இப்போது தானே, நான் உன் வீட்டிருந்திங்(கு) உடனே புறப்பட்டேன். அப்படித்தான் என்ன அவசரமோ?
நண்ப,
இலங்கைக்குப் போகின்றேன். என்னோடே நீயும் வா.
எப்போது போகின்றாய்?
6T661607 6.5G5sg LDLIT?
: இன்றைக்கே போகின்றேன்.
இன்னும் சிறு பொழுதிற் காரிருட்டு வந்திந்தக் காசினியைப் பற்றுகிற மாலை வருமுன் வழிப்பயணம் ஆரம்பம்.
என்ன திடீர் முடிவு?
யாவையப்பா காரணங்கள்?
காரணங்கள் கேட்டெல்லாம் காலம் கடத்தாதே.
கண் தான் குருடு,

Page 30
இரா
இரா
கவிதை குருடல்ல.
; அப்பா, இது ஏன்?
அனல் கக்கும் கோபத்தின் தீவிரம் என்மீது திடீர் என்று பாய்கிறதே! கண்ணைக் குருடென்றோ, காவியத்தின் சோபை குருடென்றோ நானா குறிப்பிட்டேன்?
ஏதோ,
அருட்செல்வி மேலெழுந்த அக்கோபம் என்மீது
பாய்கிறது தானே. பரிதாபம் - ஆச்சரியம்!
: மன்னிப்பாய், நண்பா!
மனத்தின் கொதிநிலையில் என்னத்தைப் பேசுகிறேன் என்பதறியாமல் சீறிச் சினந்தேன்.
சிறிதும் சரி இல்லை.
வாய்ச்சொற் பிழைக்காய் வருந்துகிறேன்.
: போடா!
மனிதன் அயலான் மனத்தை அறிந்து கொண்டால்,
மன்னிப்புக்கே இந்த வையகத்தில் இல்லை இடம்.
வந்ததேன் என்று வடிவாய் நான் சொன்னேனா?
இல்லையே; கேட்பாய்! ஓ, என் மனையாள் இன்று கதைத்தபடி நின்ற காலத்தில், என்றன் கலைத்திறத்தின் மீது கறை படிய வைக்க முயன்றாளே! என் கவிதை மூதறிஞர் முன்னால் விலையற்றுப் போய்விடுமாம். வெற்றுவெளிச் சூனியமாய்ப் போய் விடுமாம். இஃதும் பொறுப்பதா?
ஆகையினால்?
; ஆகையினால், செந்தமிழை ஆய்வதிலே ஆர்வமுடைத்
தென்னிலங்கை வேந்தனிடம் சென்று, பரிசாக வேழமுடன் நாடு விரைந்தேற்று மீள்வதாய் உத்தேசம்.
 
 

இள
ஆனால். ஒளி இழந்த கண்ணிரண்டு. கைப்பிடித்துப் பாதைதனைக் காட்ட ஒரு துணைவன் இப்போது வேண்டும்.
: இதற்குத் தான் நானா? : இதற்கு மட்டுமல்லடா என்னோடு கூடக்
கவித்துணையாய் வா நீ. கட்டாயம்.
மறுக்காதே.
எனக்கு மட்டும் என்ன?
இலங்கைத் திருநாட்டைப் பார்க்கின்ற ஆசை பல நாளாய் உண்டப்பா. மேலும், உனக்காவேனும் வரவேணும். ஆனாலும்.
என்னடா?
: ஆத்திரத்தில் உன் மனைவி
கூறியதை எண்ணிக் குதிப்பதென்ன?
பாவம் அவள். கேலி செய்ய எண்ணித்தான் கிண்டல் விளைத்திருப்பாள். வேலையற்ற நீயோ விளையாட்டை வீணாய் வினையாக்க எண்ணுகிறாய்.
வேண்டாமே!
: இல்லை.
குருட்டுக் கவியின் குணத்தை அவளுக்குக் காட்டத்தான் வேண்டுமடா.
; காட்டப்பா, காட்டப்பா,
: ஆமாம், மறக்காதே,
அந்தி வருவதன் முன் சாமானைக் கட்டித் தயாராக வை. நான்
வருவேன், விரைவில்.
வணக்கம்.
(போய்க் கொண்டே) வருகின்றேன்.
(காட்சி மாற்ற இசை)

Page 31
அரு
IV
(தனக்குள்) ஒரு மாதம்!
ஏதோ உளறினேன்.
அன்று
பிரமாதம் பண்ணினார்.
பேசினாார், ஏதேதோ. பின்னும் அதை நான் பெரிதாய் நினைத்தேனா? என்னவோ பொய் என்றே எண்ணினேன். ஆனால். உயிரை, உணர்ச்சியதன் உந்தல் வளர்க்கும் பயிரை, கவிபாடும் பண்பின் பெருவலியை, வையக் கருத்தை வளைக்கவும், நேராகச் செய்யவும் வல்ல சிறந்த கலைத்திறத்தை, நிந்திக்கக் கேட்டால், நிலைக்காதவர் பொறுமை. ஆத்திரத்திற் சென்றார். அரசனிடம் நிச்சயமாய்ப் போய்த் தம் கவி கூறிப் போற்றப்படும் வரைக்கும், ஆறாதவர் மானம். அன்புடையேன் போலும் நான். தேறாத புண்ணை அவர் சித்தத்திற் குத்திவிட்ட பின்னும் அவர் மேலே பேரன்புடையேன், நான் என்று நினைக்கின்றேன்
என்று நடிக்கின்றேன்.
இல்லை, நடிப்பல்ல.
ஏதோ விளையாட்டாய்ச் செய்த தவறெங்கள் சிந்தை சுவறியுள்ள மெய்யன்பை ஒட்டி விரட்டி விடுவதெனல் சாத்தியமா, இல்லையே!
சாயுமோ நம் காதல்?
ஆழி கடந்தாரோ?
அப்பாலே ஈழமெனும் தேயம் தனைச் சென்று சேர்ந்தாரோ?
மன்னன்
சபையிற் கவிதை சமர்ப்பித்திருப்பாரோ?
 
 

தோழி
அரு
தோழி
அரு தோழி
9Cl5
: அருட் செல்வீ, செல்வி
அடியே, கதவைத்
திற வந்து.
யாது நீ செய்திருந்தாய்?
மாலைக் கறை வந்தோ இப்போது கால் நாழிகைப் பொழுது சென்றிருக்கும்.
நீயோ சிறிதும் செயலற்றுக் கன்றி மனம் நொந்து கவலைப் படுகின்றாய். தீபத்தை ஏற்று.
செயலற்றிருந்தமைக்குக் காரணங்கள் என்னவோ?
: காரணங்கள் வேறென்ன?
சென்றார். அவரைத் திரும்பத்தான் காணோமே! பாட்டுக்குரிய பரிசு பெறுவாரோ.
: மோட்டுத்தனமாய் முனையாதே சிந்தனையில்.
சந்தேகம் என்ன?
சலிப்பெதற்குச் செல்வீ2 முகட்டு வலையில், முகிலிடையிற் சிந்தை அகப்படுத்தி, அண்ணாந்து மேலேசுகப்பரப்புச் சிப்பிலி ஆட்டச் சிறகடித்து வான் பரப்பின் ஒப்பில் உயரத்தின் உச்சியிலே - கப்பியதோர் சிந்தையுடன் இவ்வுலகு சேராக் கனவுலகு வந்தணைய, அவ்வுலகில் வாழுகிற போதையுளப் போலிக்கவி அல்ல. பூமிக் கவி அம்மா! நிச்சயமே வெற்றி.
: j5?gFLDfTuumr?
ஆம், செல்வி. : பால் வார்த்தாய் நெஞ்சில்
பல ஆண்டு வாழிய நீ.
(காட்சி மாற்ற இசை)

Page 32
@@
905
ஒரு
இள
V
(கடலலையின் சலசலப்பொலி, கப்பற்பாட்டு (தூரத் தில்) தொடர்ந்து யாழோசை.)
கப்பற் பயணம் களிப்பு மயமாக்கி
வைப்பதற்கு யாழோசை வந்தமையால் நாள் முழுதும் இன்பம் மிகவும் எழுகிறது, ராகவனால்.
: ஆமாம், அவனுக்கோ ஆன்ம திருப்தி தரத்
தானே கவிதைச் சரமும், இசை பயிலும் யாழும் துணையாய் இருக்கின்றன!
: போதும்.
உங்கள் புகழ்ச்சி உதவாது.
சீரிலங்கைத்
திங்கட் குடை வேந்தன் செப்புவது தானா உதவும்?
: அதற்குத்தான் உப்புக் கடல் கடந்து
போகின்றோம்.
ஆமாம், புதுமைக் கவியின் உருவகத்தில், மின்னும் உவமைகளில் எல்லாம் உருவச் செறிவும் உலகப் புறத்தோற்றக் காட்சி விவரக் கவினும் பயில்வித்துன் கண்ணில்லா நண்பன் கவிதை சமைக்கின்றான். விந்தையிலும் விந்தையே!
விந்தை தான்.
இன்னும்,
வியப்பிதிலே உண்டு. மிக இளமைக் காலத்தில் - கண்பார்வை மங்காத காலத்தில்.
என்ன அது?
வாழ்வைத் தரிசிக்கும் வாய்ப்போடு, கண் பார்வை மங்காத வாழ்வொன்றும் வாழ்ந்தானா, ராகவனும்?
ஆமாம், அது இளமைக் காலத்தில்.
 
 

ஒரு
ஒரு
96). D
பலரும்
968) D
: பின்னர் தான்
பார்வை இழந்தானா, பாணன்?
அது விதியின்
கோணல் திருப்பம்.
குறையை நிறைக்கக்
கவிதைத் திறம் உண்டு. காலத்தின் செங்கோல் அவனுக்கு நன்மை அளிக்கட்டும். வாழ்த்துகிறேன்.
(காட்சி மாற்ற இசை)
VI
(ஈழவேந்தன் அவைக்களத்தில் நடன இசை. ஆர வாரங்கள் ஒடுங்குகின்றன.)
வாழ்க நம் ஈழ வேந்தன். வாழிய, வாழ்க, வாழ்க! பாரத நாட்டிருந்தோர் பாவலன் வந்துள்ளானாம். (உரத்து) யாரவன்?
; அவனோர் பாணன்.
இராகவன் இவன் பேர், வேந்தே!
வரட்டும் கவிஞன். வருமுன் திரையை இடு.
அந்தப் பாவாணன் குருடன் - அதனாலே!
குற்றம் அதில் ஒன்றும் இல்லை
கூப்பிடுங்கள் பாவலனை. அந்தகனே ஆனாலும், அன்பால் எனை அணைத்த செந்தமிழன் தானே!
திரையின் மறைவிருந்து பாடட்டும்- கேட்போம்- பழகு தமிழ் மொழியில்.
(அதிகாரத் தொனியில்)
பாட்டுத் தொடங்கட்டும், பாணனிங்கே பாடட்டும்

Page 33
Fp
ஈழ
Fp
: யாழ்ப்பாணன் பாடட்டும்.
ஈழமிது கேட்கட்டும்.
(பாடல் - யாழ் இசையுடன்)
எளிய செந்தமிழில் இனிய சந்தமுடன் எழில் மினுங்க வரும் அணியொடே களி குலுங்க வரு கவி விருந்து நுகர் கனக வெண்குடை கொள் அரசனே!
மலை வளங்களொடு வளம் மிகுந்தமையும் வளர் இலங்கைதனில் அடியனேன் அலை முழங்கு கடல் அது கடந்து நின(து) அடி அணைந்து கவி பொழிகுவேன்.
திரை மறைந்த நின தருள் முகந்தனிலே செறியும் அன்புனது குடிகளின் பெருகும் இன்னல் பல பீதி கொண்டொழியப் பின் தொடர்ந்து துயர் களையுமோ!
ஆகா, அருமை, அருமைக் கவியமுதம்!
பாகோ இனிய பழத்தின் சுவைப்பிழிவோ! செந்தமிழின் சாற்றைத் திருந்தும் இசையுடனே தந்தெமது சிந்தை இனிக்க மகிழ்வளித்த பாவலரே, பாராட்டு.
பைந்தமிழின் பாட்டை
மிகவும் வியந்தோம்.
மெச்சுகிறோம், அன்ப! மகிழ்வுக்(கு) அடையாளமாக, 'மணற்றி எனும் நாடும், திருப்பலவும், நல்யானை ஒன்றும், யாம் தந்தோம் - பெறுக - தமிழின் நினைவாக.
மிக்க நன்றி வேந்தே. மேலும் ஒன்று கூறுகிறோம்.
கற்கண்டுப் பாட்டைக் கழித்தொதுக்க எணணினோம்; சொற்கண்டு போற்றிச் சுவைக்காமல், யாமோ திரையிட்டொதுக்க நினைத்தோமே, சிச்சீச்சீ மன்னிக்க வேண்டும் எமை.
 
 

ஈழ
96). D
பலரும்
அடு தோழி
அடு
தோழி
அடு
மன்னருக்கா மன்னிப்பு?
ஏழைக் கவிஞன் இலங்கைக் கரசனையா மன்னிக்க வேண்டும்?
மறந்து விடும் என் பிழையை. வாழ்க, இராகவனார்.
வாழ்க அவர் புலமை.
(காட்சி மாற்ற இசை)
V
அடி கோதை, போதும் அலங்காரம்! என்னடி நீதுள்ளுகிறாய்?
: பின்னென்ன, துள்ளாமற் சும்மா
துவளவா சொல்லுகிறாய்?
செல்வி இனி ராணி.
சிறியேன் அவளுக்குச் சேவை செய்யும் சேடி.
அரசி என்றால் என்ன?
அதல்லப் பிரதானம். முரசம் அடிக்கும் முழக்கம் 'அவர் வருகை சொல்லுவது தானே சுவை மிக்க செய்தியடீ! வா செல்வோம்.
சென்று வரவேற்போம்.
இஃது கவிதைக்கு வெற்றி - கலைத்திறத்தின் வெற்றியடி
(இசை)
(அறிவிப்புகள்)
(முடிப்பிசை)
1955

Page 34

4.
இடைத்திரை
நாடக மாந்தர் :
மன்னன்
அமைச்சன்
எழுத்தர் அனவரதம்பிள்ளை - ஒரு குடிமகனார் குமாரி - மன்னர் மகள்
வில்கணையன் - ஒரு புலவன்
(மன்னன் அரியணையில் அமர்ந்துள்ளான், அமைச்சர், ஏவலர்கள், எழுத்தர்முதலானோர்புடைசூழ்ந்துள்ளனர்)
மன் அமைச்சரே, ஆரூர் அனவரதம் பிள்ளை
துணிச்சலுடனே மறுத்தானா?
அமை - ஆம், வேந்தே!
LDGör என்ன திமிர்!
சீ, இழிந்த மடையன் அவன். மன்னிக்கக் கூடாது; வாலை நறுக்கிடுவோம். நிச்சயமாய்ச் செய்வோம் நாம். நீர் என்ன சொல்லுகிறீர்?

Page 35
96). D
6T(Աք
6T(Աք
: துர்ச்செயலர் வாலை எல்லாம்
துண்டிக்க வேண்டியதே. ஆட்சி வரியை மறுக்கும் அவன் போன்றோர் சூழ்ச்சி புரிவார்கள்.
தொல்லை தருவார்கள். வீழ்த்த முனைவார்கள்- வேந்தரையே!
: (கை தட்டி) யாரங்கே!
(மன்னன் முன் வந்து) வாழ்க, அரசே! : (அமைச்சர்களை நோக்கி) வழக்கை விசாரிப்போம்? : ஆமாம், அரசே!
(ஏவலனிடம்) அனவரதம் பிள்ளையைக்
கொண்டு வரச் சொல்லு.
'கொழுந்தூர் மறவர்’ என்ற தண்டத் தொழிலோர் தலைவரிடம் போய்ச்சொல்லு, (பின்னர் ஏதோ நினைத்துக் கொண்டு) இல்லையடா, கொஞ்சம் இரு. அந்த ஆணையை நான் ஏட்டில் எழுதி உனக்குத் தருகின்றேன். எங்கே எழுத்தர்?
(ஒதுக்கிடத்திலிருந்து வெளிப்பட்டு)
இதோ, வேந்தே!
சொல்லுவதைச்
சற்றும் பிழை இன்றிக் கேட்டெழுதும். ஒப்பமிட்டு ஏவலாள் கையில் இதை நாம் கொடுப்போம். ம்ம். ஆயத்தம் தானே, எழுத்தரே?
(தமது தலைப்பாகையைச் சரி செய்து கொண்டு ஒலைக்
கட்டுடன் அவை நடுவே வருகிறார் தடுதாளிப்பட்டு, எழுத்தாணியையும் கையில் எடுத்து வைத்துக்கொண்டு) ஆம், வேந்தே!
(எழுத்தர் எழுத மன்னன் நிறுத்தி நிறுத்திச் சொல்லு
கிறான்) தண்டத் தொழிலோர் தலைவர்
 
 

எழு
எழு
கொழுந்தூரர். கண்டுகொள்ள வேண்டியது.
கயவன் அனவரதம்பிள்ளை. அது வேண்டாம்.
பிழை எல்லாம். மீண்டும் தொடங்கும் எழுத்தரே! சொல்லுகிறேன். கேளும். அடங்காமல் மீறி எதிர்த்த அனவரதம் பிள்ளை சிறையில் இருப்பான்.
பிழை எழுத்தர்.
நீரே எழுதி முடியும், நான் ஒப்பத்தைப் போட்டுத் தருகிறேன்.
(தயங்கி) என்ன. எழுதுவது? (கடிந்து) என்ன எழுதுவதா?
ஏதப்பா, நீங்கள் எல்லாம்! காசு கொடுத்துக் 'கருமிகளை வைத்திருந்தால். பேசி வழவழத்துக் காலம் கடத்தத் தான் லாயக்கே அல்லாமல், என்ன பயன் உங்களால்? சாப்பாட்டு ராமர்!
தலைமை எழுத்தர் என்று பட்டும் மணியும் அணிந்து, படாடோபமாய்க் கட்டுத் தலைப்பா’ கவிழ்க்கக் குறை இல்லை. சின்னதோர் ஆணை இது. சிந்தித்து எழுதும் அய்யா! என்னய்யா, ஊமைபோல் ஏங்கி இருக்கிறீர்?
மன்னர் தயவு செய்து. (சீற்றமடைந்து) மாற்றுமொழி பேசாதே! : (எழுத்தரின் இக்கட்டை உணர்ந்து)
அய்யா, எழுத்தர்!
அனவரதம் பிள்ளை வழக்கு விசாரிக்க மன்னர் விரும்புகிறார். காவற் சிறையில் இருக்கும் அனவரதம் பிள்ளையை இங்கே அரசர் அவைக்கனுப்பத் தண்டத் தலைவர் கொழுந்தூர் மறவருக்கோர் ஆணை நறுக்கெழுதும்.
: ஆமாம், அமைச்சே!

Page 36
96). D
(அவசரம் அவசரமாக ஆணையை எழுதி)
அரசே, இதோ ஒலை! கைச்சாத்து வைக்க.
(ஆணை ஒலையை வாங்கி வாசித்துப் பார்த்துக் கைச்
சாத்து வைத்து ஏவலனிடம் கொடுத்து) கடுகி விரைந்து போ. கூட்டி வா, போ- அந்தக் குற்றப் பதரை, இங்கே. நாட்டை எல்லாம் காக்கின்றோம், நாங்கள். எதிர்த்துக்
கிளர்ச்சி புரியத் தொடங்கினான்.
சற்றும்
தளர்ச்சி தகாது.
(மன்னன் கவனத்தை வேறு புறம் திருப்ப எண்ணி)
மன்னர் சாந்தி அடைக.
தங்கள்
செல்வ மகளின் கலைத்தேர்ச்சி முன்னேற்றம். பற்றி எதுவோ குறிப்பிட்டுக் கேட்டீர்கள். ஆலோசனை வேண்டும் என்றெல்லாம் சொன்னீர்கள். என்ன, அதனை எடுத்து விரிவாகச் சொல்லுங்கள், கேட்போம்.
ஒ, சொல்லுகிறேன். என் மகள் என் ஆவி என நீர் அறிவீர்.
ஆம், ஐயம் என்ன?
தேவியார் கூட, அந்தச் செல்வ மகள் மேலே ஆராத அன்புடையார்.
ஆம், அவளோ, தேன் குரலிற்
பாட்டுக்கள் பாடுவாள்; பரதமும் ஆடுவாள். ஆட்டத்தில் நல்ல அழகும் திறமும் உண்டாம். வித்தைத் திறனை விமர்சகர்கள் எல்லாரும் ஒத்து வியந்தார்கள்.
: உண்மை அது; நான் அறிவேன்.
கூத்தும் இசையும் குழந்தையவள் வாழ்க்கையிலே
பூத்துக் குலுங்கும்; புதிய மணம் வீசும்.
சொல்லும் எழுத்தும் தொடரும், தொடர் அமைந்து
f
 
 

96) to
96). D
-965) LD
செல்லும் விதமும் தெளிவாய்ப் படித்தாளாம். ஆனாலும் , பாவம்!
அகத்துட் கிளம்புகிற ஞான அசைவை - இயக்க நளினத்தைப் பாட்டாகத் தானே படைக்கப் பழகவில்லை. பூட்டை உடைப்பதனைப் போலே புறப்பட்டுப் பொங்கும் உணர்வைப் புலமைத் திறங்கொண்ட ஆற்றல் மிகுந்த தமிழில் அமைத்தியற்ற ஆசை மிகவும் உடையாள்.
அவளுக்குச் செய்யுள் இலக்கணத்தைச் சீராய்ப் பயிற்ற ஓர் ஆசிரியன் வேண்டும், அமைச்சரே,
ஆசிரியன்
பேச அரிய பெருமை உடையனவாய் ஆவது மிக்க அவசியமாம்.
அப்படியா?
எங்கள் அரசில் இருக்கும் புலவர்களில்
தங்கள் கருத்துப்படியே தகுந்தவன் ஆர்? எங்கே இருக்கிறான் என்பதையும் சொல்லுங்கள்.
வேந்தர் மகளின் குருவுக்கு, மேலான
ஊக்கமும் வேண்டும், நிறைய.
; அவசியம் தான்.
நீர் அறிந்த மட்டில் நிகரில்லா மேதாவிக் கல்விமான் எங்கேனும் உள்ளானா?
ஆம், உள்ளான்
அப்படியா? யாரந்த ஆசிரியன்?
சொல்லுங்கள்.
: 'வில்கணையன்’ என்ற ஒரு வித்துவான்.
என்ன, அவன்
கல்வி நிறைந்த கலைஞனா?
: ஆம், வேந்தே!
முன்னைக் கலைகள் முழுதும் உணர்ந்துள்ளான். மின்னிப் பொலியும் புதுமை மெருகுகளை

Page 37
LDGär
உன்னிக் கருத்திலே ஊன்ற வைத்த மேதாவி. ஊறித் திளைப்பான் உணர்வுகளில், தன் உணர்வை ஆறிக் குளிராத ஆற்றலுள்ள சொற்களிலே பெய்யத் தெரிந்த பெரியான். அவன் புனைந்த செய்யுள், சுவைஞர் செவிக்கு விருந்தாகும்.
அப்படியா?
ஆனாலும்.
என்ன அது, ஆனாலும்?
: இப்படியான கலைஞன் இளைஞன் தான்.
: என்ன வயதாய் இருந்தால் எமக்கென்ன?
மன்னருக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். மன்னர் மகளும் அழகி - இளங்கன்னி. பின் இவனும் ஆண்மையுள்ள பேரறிஞன். மேல் நிமிர்ந்த தோற்றப் பொலிவும் சுவையாகப் பேசுகிற பேற்றையும் பெற்ற இளைஞன்.
பிழை ஒன்றும் நேர விடாாமல் தடுப்பது நம் கடமை.
அப்படியானால், அவனைவிட வேறாரும்.
: இல்லை, இல்லை வேந்தே!
இவனைவிட யாருக்கும் இத்தகைய வேலையினை ஏற்கும் தகுதிஇல்லை. வில்கணையன் அல்லாமல் வேறு பிற பேரிலே வேலை இல்லை.
; ஆனால், விபரீதம் நேராமல்
எப்படி நாம் காக்கலாம்?
: ஏதும் ஒரு தந்திரத்தைக்
கையாள வேண்டும். அவர்களது கண் நான்கும். சந்திக்கக் கூடாது. (தாழ்ந்த குரலில்) தங்கள் மகளார்ஒர்.
 
 

(மன்னர் செவியிலே குசுகுசுப்பாய்) குட்ட நோய்க் காரி என்று கூறுவோம். வில்கணையன் கண்பார்வை இல்லாத கல்விமான் என்று சொல்லிப் பண்பாடு காப்போம். குமாரிக்குப் பொய் சொல்வோம்.
; ஆனாலும், என்ன?
அவர்கள் இரு பேரும் நேரே சந்திக்க. நிசம் வெளித்துப் போகுமே!
: பாரார் ஒருவர் ஒருவரை -
அவ்வாறாய் ஏற்பாடு செய்வோம். இருவருக்கும் ஊடாகப் போடுவோம் நல்ல திரை ஒன்று.
: (மகிழ்ந்து மெச்சி) போம், அமைச்சே!
உண்மையிலே நீரோ மதியில் உயர்ந்தவர் தான். எண்ணி எண்ணி நெஞ்சில் இறும்பூதடைகின்றேன். மாதக் கணக்கில் முயன்றாலும்,
நான்
உதுபோல் வாய்ப்பான சூழ்ச்சி வகுத்து விட மாட்டேன். ஏலாது காணும்.
ஆம், என்னால் இயலாது. நீரோ இரண்டு நொடிப் பொழுதிற் சொல்லிவிட்டீர். எண்ணுமுன்னே எண்ணிவிட்டீர்எவ்வளவு மேலான தந்திரத்தை? ஆகா, சரியான யோசனைதான். நாளைக்கே அந்த நலமான பாவலனைப் பாளைச் சிரிப்புப் பழகும் குமாரிக்குப் பாடம் பயிற்ற அமர்த்துவோம். (ஏதோ ஆரவாரம் கேட்டு) என்ன அங்கே ஆர்ப்பாட்டம்?
ஆமாம்.
அனவரதம் பிள்ளையைக் கூட்டிவந்து விட்டார்கள்.
கொண்டு வா, கிட்ட அந்த

Page 38
அன
மோட்டுப் பயலை - முரட்டு மடையனை - மூர்க்கப் பதரை. (கை விலங்கிட்ட அனவரதம் பிள்ளையைக் கொண்டு வந்து ஏவலர்கள் நிறுத்துகின்றனர். மன்னன் சீறுகிறான்)
: இங்கே, முன்னாலே வாரும், அய்யா.
என்ன, வரி கொடுக்க ஏலாதா?
(பணிவுடன்) ஆம், வேந்தே!
செந்நெல் விளையும் வயல்கள் பயிரழிந்து போன படியால்.
: புரட்சி மனப்பான்மை
கொண்டு விட்டீரா?
குறை இரந்து வேண்டுகிறேன்
எங்களூர் சார்பிலே.
ஏதேது!
நீ ஒருவன் மட்டுமே இந்த மனப்பான்மை கொண்டிருப்பாய் என்று நினைத்தேன்.
எமக்கெதிராய் ஊர் முழுதும் உன்பால் திரட்டி உலுத்தச் செயல் புரிந்தாய்.
இல்லாதார் நாங்கள்.
இராசா குடிகளையே கொல்லுவது போலே கொடுமை செய்து கொள்ளையிட்டால், எங்கே நாம் போவோம்?
இராசத் துரோகி!
சும்மா
கன்னா பின்னா என்று கத்தாதே, கத்தாதே!
; ஏழை அழுது கண்ணிர் ஈரம் உலர்ந்தவுடன்
ஆவியாய் மாறும்.
அழிவுக் கனலாய்க் கொடுங்கோலை நீறாக்கும். கும்பிட்டு வேண்டுகிறேன்எங்கள் குறையை இராசா இரக்கமுடன் நீக்கி அருள் புரிக.
 
 

-96ö0lf)
(95шот
: (அமைச்சன் பக்கம் திரும்பி)
நீர் என்ன சொல்லுகிறீர். இந்த முறையீடு பற்றி?
: அரசே,
குடிதழிஇக் கோலோச்சும் மன்னன் அடிதழிஇ வையகமே வாழும் என்று வள்ளுவரே சொல்லுகிறார். பஞ்சமே காரணமாய்த் தானே வரி மறுப்பு? வஞ்சனை வேறில்லை.
ஆகையினால் மன்னித்தல் ஏற்றதாம் என்றே எனக்குப் படுகிறது.
நல்லதமைச்சரே! நாம் இவரை இன்று
விடுதலை செய்கிறோம்.
வேந்தரே, நன்றி. அட, விலங்கை நீஅகற்று.
அப்பாலே போகவிடு.
(காவலாளர் விலங்கைக் கழற்றி அனவரதம் பிள் ளையை விடுவிக்கிறார்கள்)
எல்லாரும் போகலாம்.
இவ்வளவில் நாள் இருக்கை முற்றிற்று.
வேந்தரின் அன்பும் அருள் கனிந்த
வெற்றியும் வாழ்க மிக.
(அனைவரும் வெளியேறுகின்றனர்)
(மன்னன் மகள் குமாரியின் கன்னிமாடம். மன்னனும் குமாரியும் உள்ளனர்)
அம்மா, உனது முகம் அப்படி ஏன் வாடிற்று?
சோர்ந்து போயிற்றே! துயர் என்ன?
போங்கள் அப்பா!

Page 39
குமா
உண்டி கொண்டாயா?
உடம்பு மெலிவடைந்து. கொண்டு போம் என்றால், குழந்தாய், சிறப்பன்றே!
: இல்லை, இல்லை,
நீங்கள்
இதைப்பற்றிக் கொஞ்சமும் உள்ளம் வருந்த ஒரு சற்றும் தேவையில்லை ஏனென்றால், அன்னையார் என்னை மிகக்கனிவாய்க் கண்ணினைக் காக்கும் இமைபோலக் காக்கின்றார். தாகம் அடையத் தடையுண் டெனக்கிங்கே. ஆகையினால் நீங்கள் அதுபற்றிச் சற்றேனும் நோகிறது கூடாது.
(சிரித்து) நூலறிவு தானே
உன்
நாவில் இருக்கிறது! நம்மை இழுக்கிறது! பற்றி வசப்படுத்திப் பாசம் வளர்க்கிறது!
அப்பா!
அரசர்கள் வாசலிலே வந்து வந்து எப்போது காணலாம் என்று திறை கொண்டு வந்து நிற்கும் படியான நேரில்லா வேந்தரிவர். மன்னவர்க்கும் மன்னர்- மகாராசர்இப்படியாய்ப் பேரவையிற் கூடும் பெரிய புலவர்கள் கூறுவது மெய்தான்.
இருந்தாலும்.
என் மகளே,
ஏறியன மேலே, இனிய புகழுரைகள். மீண்டு நிலத்தில் விழுந்து தலைகுத்திப் போனதென்ன? ஏதும் புதிதாக வேண்டுகோள்?
(சினப்பவள் போல்) ஒன்றும் புதிதாய்
உரைக்க இனி இல்லை. a
: நன்று, நன்று.
 
 

யாப்பும் அணியும் பயிற்ற ஓர் ஆசிரியர் வேண்டும் என்றாய். அப்படியாய் நீ விடுத்த விண்ணப்பம் இன்னும் உரிய கவனத்தை எய்தவில்லை என்பதற்குத் தானா, இனியவளே, இச்சீற்றம்?
உண்மை அதுதான்.
'உலகம்" என்று நம் புலவர் வண்ண மொழியில் வருணிக்கும் நம் நாட்டில் சொல்லுத் தொடுத்துச் சுவையைச் சிறைப்பிடிக்கும் வெல்லக் கலைக்கு விளக்கம் தருவதற்கோர் ஆசிரியர் தானும் அகப்படவே இல்லையா?
பேசி முடி, அம்மா,
பின்னர் எனது விடை.
(சிணுங்கி) சொல்லுங்கள், அப்பா
சுடர்த்தொடியே, உன்னுடைய
வேண்டுகோள் பற்றி மிகவும் கருத்துடனே நீண்ட பொழுதாய் நினைத்தேன். அமைச்சருடன் நேற்று முழுதும் கலந்தேன், அதுபற்றி. ஏற்றதொரு நல்ல முடிவை எடுத்துள்ளோம்.
; அப்படியா?
யார் அந்த ஆசிரியர்? சொல்லுங்கள்.
; அப்பப்பா, என்ன அவசரம் பார்!
என் மகளே, யாப்புப் பயிற்ற வரவிருக்கும் ஆசிரியன் பாக்கள் இயற்றுவதில் விண்ணன்; பலர் புகழும்
மேதை. அவனை வியந்துலகம் பாராட்டும். ஆசிரியன் வீரன்.
அரிய கவிதைகளைத் தந்து புகழ் பரப்பும் சான்றோன்தனிக் கவிஞன்.

Page 40
குமா
குமா
எந்தையே, ஆசிரியர் பேர் என்ன?
சொல்லுங்கள்.
: 'வில்கணையன்" என்ற மிடுக்கான வாலிபனே
கல்வி மிகுந்த கலைஞனாம்.
மந்திரிமார் எல்லாாரும் கூடி எடுத்தெனக்குச் சொன்னார்கள். நல்லவளே, நீ உன் நலிவு தவிர்.
அப்பா,
இன்றே இதயம் நிரம்பி வழிகிறது.
: நன்று, நன்று.
பாடத்தை நாளைக்கே நீ தொடங்கு.
: நாளை தொடக்கம் நறுங்கவிதைச் சீவியந்தான்.
வேளை முழுதும் அதற்கே கொடுப்பேன் நான். வித்தை பயில்வேன். வெயில் எறிக்கும் வெள்ளை ஒளி முத்துகளே போன்ற மொழிகள் தொடுத்திடுவேன். வாழ்வின் அடித்தளத்து மர்மங்கள் யாவையுமே ஆழ அடைந்தறிவேன்.
ஆன்மச் சுடர் தெறிக்கும்சிந்தனையை எல்லாம் சிறந்த கவிதைகளாய்த் தந்து மகிழ்வேன்.
உலகம் பயனடையும். மின்னற் பொறிபோல் விநாடிக்கொரு தடவை என்னிடத்தே தோன்றும் எழுச்சிகளைப் பாட்டாக்கி நல்குவேன், அப்பா!
நனவுலகின் போக்குகளை நுட்பமாய் நோக்கி நொடிப்படங்கள் செய்வேன், நான். முட்ட இனிமை ததும்பி நிறைந்திருக்கும். காவியங்கள் செய்வேன், கருத்துச் செறிவுடனே, பாமலிந்து மின்னும் பல நாடகம் சமைப்பேன். மூழ்குவேன் எங்கள் மொழிக்குள்
இலக்கிய ஆழ் கடலுள் வீழ்வேன்.
அரிய நவநிதிகள்
கொண்டு வருவேன்.
 
 

மன் : குழந்தாய், உன் உற்சாகம்
கண்டு மகிழ்ந்தேன். என் கண்மணியே, இன்று வரை உன்னுடைய வேண்டுகோள் ஒன்றை நிறைவேற்றாது பின் போட்டு வந்தேன். பெரிய பிழை அது என்று இப்போது தானே எனக்குத் தெரிகிறது! தப்பே அது.
(g5 LD/T ; ஆனால், தங்கள் கருணையினால்
என்னுடைய எண்ணங்கள் ஈடேறும். ஆம், அதனை எண்ண எண்ண நெஞ்சத்தில் இன்பம் சுரக்கிறது.
Desir மேலுமொன்று சொல்ல உண்டு. மென்மகளே!
ஆசிரியன் நாலு வகைக் கவிதை வல்லவன்தான். ஆனால். பிறவிக்குருடன்.
குமா (அதிர்ந்து) ஆ, வில்கணையர்?
மன் : ஆமாம்,
கறைவைத்தான் போலும், கடவுள், முழுமதிக்கும்! ஆகையினால் நீ அவனைப் பார்த்தல் அபசகுனம். நீ கவிதை யாப்பு முறை கற்கும் நிலையத்தில் வில்கணையனுக்கும் உனக்கும் இடை நடுவே
செல்லும் திரை ஒன்று. தேன்மொழி, என் ஏற்பாடு நல்லதா, அம்மா? நடக்கிறாய் யாதொன்றும் சொல்லாமல்! என்ன, சுருக்கம் முகத்தில்?
(5lor (வேண்டா வெறுப்புடன், போய்க்கொண்டே)
ஆம், எல்லாம் சரிதான்.
uDeir : இனி நாளை அந்திக்கு
யாப்புப் பயிற்சி தொடங்கலாம். இப்போது

Page 41
வில்
போய்ப் படுத்துத் தூங்கம்மா. G8ur.
(திரை)
III
(குமாரியின் கன்னிமாடம். குமாரி திரை மறைவில் உள்ளாள். பாடம் நடக்கிறது. வில்கணையன் மட்டுமே அவையோருக்குத் தெரியும்படியாக உள்ளான்.)
: வணக்கம், குருநாதா?
: வாழ்க
தளைகள்உணர்ச்சிக் சுழிப்புகளை ஒசைப்படமாக்கும் போது, கவிதைகளின் போக்கினையே நிர்ணயிக்கும். ஆதலால், நாங்கள் அவைபற்றிச் சிந்திப்போம். சீர்கள்.
: அசைகள் பல சேர்ந்து வரும் கூட்டம்
நேரும் நிரையும் அசையின் வகை என்றும் கூறியுள்ளீர்கள்.
: குறிப்பறிந்து சொல்லிவிட்டாய்.
இந்த இரண்டு வகையாம் அசை, தமக்குள் வந்து கலந்தும் கலக்காதும், கூட்டமாய் ஆவதே "சீர் என்று நீஅறிவாய்.
அச்சீர்கள் கூடும் வகையும் கொளுவப்படும் விதமும் நாடி அறிந்துவிட்டால், யாப்பே விளங்கிவிடும். "வெண்டளையைப் பற்றி முதலிற் படிக்கலாம்.
; (பாடத்தில் அக்கறை உண்டென்று காட்டும் தொனியில்)
வெண்டளையைப் பற்றி.
விளக்கத் துணையாகப் 4
பாவொன்று சொல்லுகிறேன்.
யார் பாவோ?
 
 

Gg5 LD nr
குமா
: இப்பொழுதே,
நானே உடனே இயற்றித் தருகின்றேன். விண்ணில் எழுந்த வெளிப்பை விளைவிக்கும் தண்ணிலவைப் பாட்டில் தருகின்றேன்.
சொல்லுங்கள்.
இருளைக் களைய எழுந்த நிலவே!
அருள் மிக்கார் நெஞ்ச அமைதிக்கு நேரான இன்ப ஒளியை எமக்குத் தருகின்றாய். வன்பு மிகுந்த வெயில் மாற்றிக் குளிர்மையினைத் தந்து மிளிர்வாய், தனிச்சுடரே, உன் வரவாற் சிந்தை குளிர்ந்தேன். செழுந்தேன் வழிவது போல் பேருவகை நெஞ்சிற் பிறந்து சுரக்கிறது. ஈருடலும் ஒருயிரும் என்பதுண்டே, அத்தகைய காதலர்கள் கூடிக் கவிதை மொழி பேசிப் பேதம் அறியாப் பெருவாழ்வை எய்த ஒரு முத்து விதானம் அமைத்து, நடுவிலே வைத்த மணவறைக்கு வாய்த்த முடியாகத் தோன்றி ஒளிர்வாய். சுவையின் அதியுயர்வை ஈன்று புறந்தருவாய்.
எம் கண்கள் ஆரமுதம் மாந்தும் படியாக வந்தாய்.
உனதினிய
காந்தி உவகைக்குக் கால்.
: ஆகா, இனிய அருமைக் கவிதை இது.
(குமாரியின் வியப்பை அதிகம் பொருட்படுத்தாதவன்
போல)
இந்த விதமாய் இசைந்து வருவதையே "வெண்டளை" என்பார்கள்.
வியக்கத் தகுந்த உங்கள்
பொன் கவிதை கேட்டுப் புளகம் அடைகின்றேன். சீர்தளைகள் பற்றிப் பிறகு படிப்போமே!

Page 42
குமா
ஐயம் ஒன்று; கொஞ்சம் அதனை அகற்றுங்கள். செய்யுள் இயற்றுகையில், சித்தத்தில் மெய்மெய்யாய்ப் பொங்கும் உணர்வைப் புனைதலன்றோ தக்கது?
; நங்கையே, உண்மை.
: நயனங்கள் இல்லாத
தாங்கள் நிலவை வியந்து படைத்த பா.
என்ன, என்ன, நான் குருடா?
யார் உனக்குச் சொன்னார்கள்?
: அப்பா தான் சொன்னார்.
(வியப்புடன்) அது தானே நான் பார்த்தேன். இப்படியான கலைஞர் குருடராய் ஆக முடியுமா?
ஆட்சி நிறுவனம் ஓர்
சூதுக்கிடங்கு! (திரை நீக்கிக்கொண்டு வெளிப்படுகிறாள்)
சுடர்த்தொடியே, ஏன் திரையை
நீக்கிவிட்டாய்? ஒ, ஓகோ, நீயும் பெருநோயால் அங்கம் அழுகி அவலம் அடையாத திங்கள் சுமந்த திருவுருவம் கொண்டவளோ?
என்னைப் பெருநோய் பிடித்த ஒரு பெண் என்றா
சொன்னார்கள்? நன்று, நன்று- சூதின் மறுபக்கம்! இன்று தொடக்கம் இடைத்திரைக்கு வேலை இல்லை.
நல்லதே சொன்னாய் நீ.
ஆனால். நமக்குள்ளே
உண்மை பகிர்ந்தோம்.
உலகத்தார் கண்களிலே
மண் தூவுவோமே!
மறைப்பை வழமைபோல் இட்டே நடத்தலாம், எங்களது பாடத்தை. பட்ட கட்டை போலப் படுத்திருந்த என் உணர்வில் இன்றரும்பி நிற்கும், எழுச்சி ஒன்று! வாழ்க்கையை
 
 

நுட்பமாய் நோக்கி நுனித்தறிய வல்லவள் நீ. பெட்பு மிகுந்த, பிழை தவிர்ந்த சிந்தனையும் கொண்டவளே இந்தக் குமாரி.
அவளுக்குக் குட்ட வியாதி என்று கூறிய செய்தியைக் கேட்ட பொழுது, "கிடந்துவிட்ட ஊக்கத்தை மீட்டெடுத்து விட்டாய். வெளிவெளியாய் மெய் சொன்னாாய்.
(திரைக்குப் பின்புறம் மறைந்து)
ஏதும் புதிதாய் நடக்கவில்லை என்பது போல் ஊடே திரையை வழக்கம்போல் விட்டிடுவோம்.
பாடம் தொடர்ந்து படி,
(இருவரும் சேர்ந்து சிரிக்கின்றனர் - திரை)
V
(குமாரியின் கன்னிமாடம். முன்திரைதிறக்குமுன் சில நிமிடம் வீணைஇசை திரைதிறந்ததும் குமாரிகையில் வீணையுடன் காணப்படுகிறாள். வில் கணையன் கையில் இருந்த ஏட்டினைக் கட்டி அப்பால் வைத்து விட்டுப் பேசத் தொடங்குகிறான்)
: ஏன் நிறுத்தி விட்டாய் இசையை?
இனிய இசை
தேனே தான் அல்லவோ? தேன் இனிமை என்றாலும் எப்போதும் தேனே அருந்த இயலுமோ?
; அப்படியானால், அதனாலே தானோ
தந்தியினை மீட்டத் தயங்கி நிறுத்தி விட்டாய்?
: புந்தி வெறுமையாய்ப் போகும் சமயத்தில்
தன்னந்தனியே இருந்து, தங்கள் பொன் போன்ற பாடல் ஒன்றைப் பாடிப் பரமசுகம் பெறுவேன்.
ஆடலுக்கு மட்டும் அடியேன் கவிதை ஒன்றும்
ஏற்றதில்லைப் போலும்!

Page 43
குமா
வில்
குமா
குமா
இருங்கள்
இசை அமைத்தேன், நேற்றுத்தான் - உங்கள் நினைவுக் கணி" என்ற இன்பக் கவிதைக்கு!
எழிலமுதப் பாட்டுக்கு! திங்களன்று மாலை அதைப் பாடி ஆடவும் ஆயத்தம் செய்கின்றேன்.
ஆகையினால்.
* உன் நாவிற்
போய் நித்தம் வாழும் புகழோடு,
பேரழகின் அங்கம் அசைப்பதற்கும் ஆற்றல் உடையதுவோ என் கவிதை?
: ஆமாம், இளைஞர் எவர்களுக்கும்
மின்னல் இடைச்சி என்றும் மீன் விழிச்சி என்றும் எல்லாம் காதலியர் முன்னே கதைக்க வரும் போலும்!
ஒ, அதுவும் மெய்தான்.
உலகில் உள்ள மற்றவர் போல் வார்த்தைகள் நானும் வழங்குவேன் ஆனாலும் ஏன், எனக்குப் பொய் சொல்ல எந்த அவசியமும் இல்லை
இளமை அழகின் அவதாரம் மெல்ல மெல்ல வந்திதய வீணையினை மீட்டுவதால்! (திடீர் என்று, கடமை உணர்வுடன்) நல்லது, நாம் ஏதும் படிப்போமா? நாள் பலவாய்ப்
பாடம் எதுவும் படிக்கவில்லை. நேரத்தை ஒடவிட்டு விட்டோம்.
உணர்ச்சிமய லாகிரியில்,
போதை மயக்கில், புலன் கடந்த யோகத்தில் வாலிபத்தின் மோக மது வெறியின் உச்சத்தில் வாழும் எமக்கு- மனிதப் புறிவுலகின் என்ன நினைவும் இருக்க முடியுமோ?
 
 

வில்
குமா
குமா
வில்
குமா
வில்
மோனை எதுகை என்றும் முற்றுவமை என்றும் எல்லாம் நானும் அருகில் இருக்கும் சமயத்தில் பொன்னான நேரத்தைப் போக்குவதா?
: இந்த நிலை
மன்னர் அறிந்தால்..?
மறந்துவிட்டேன், சொல்வதற்கு.
எங்களிடையே இருக்கும் உறவுபற்றித் தங்களிடையே தருக்கம் புரிந்தாராம் எந்தையும் தாயும்.
: இடையே திரை போட்டும்
தந்திரங்கள் செய்தும், தடையைப் புறந்தள்ளி மூண்ட தொடர்பை முறிக்க முயல்வார்கள்.
ஆண்டவனே கூட முறிக்க முடியாது. வீர மொழிகள் சில வீசிவிட்டாற் போதுமா?
தீருமோ சிக்கல்? சிறிது கடினம் இது!
: ஆமாம், அறிவேன்.
அடைய அரியதுதான்எங்கள் குறிக்கோள். எனது பிரியமுள்ள அன்னையார் எண்ணம் அறிவேன். தடை சொல்ல
மாட்டார் அவர்.
; ஆனால், மன்னர். நமக்கிடையே
‘ஏதும் தொடங்க இடம் விடுதல் கூடாதென்று ஆதி முதலே அபிப்பிராயப் பட்டார்.
அந்த இடம் தான் அதிக பிரச்சினைகள்
வந்து குழப்பி வளைக்கும் இடமாகும். 'காலம் எதற்கும் கடைசியிலே தீர்ப்பளிக்கும்.
(ஆசையுடன்) நீலக் கருமை நெடுங்கண்ணி என்ன அது, மீண்டும் புதிதாக? வேண்டுகோள் ஒன்றுண்டு.
(குமாரி நாணத்துடன் திரையின் பின் மறைய)

Page 44
குமா
குமா
வில்
குமா
வில்
SLDir
வில்
ஒவ்வொரு நாளும் தருகின்ற அன்பளிப்பு. (வில்கணையனும் அவளைத் தொடர்ந்து மறைகிறான்) கொவ்வைக் கனிகள் குளிரும்.
இவை.
(ஏதோ விழுந்துருளும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு,
திரை மறைவிலிருந்து வெளிப்பட்டு) யாரங்கே?
(வில்கணையனும் திரைமறைவிலிருந்து வெளிப்படு
கிறான்) பாலொடு தேன் கலந்தற் றே, பணிமொழி வாலெயிறுாறிய நீர்.
(மீண்டும் சத்தம் கேட்க) என்ன சத்தம் அது?
கன்னிமாடத்துக் கதவு திறந்தது யார்? என்னுடைய அந்தரங்க இல்லிருப்பில் யாரிங்கே?
ஒன்றுமில்லை.
பூனை ஒலியாகத் தான்இருக்கும். அல்லாமல் வேறார் அரச குமாரியின் தன்னந்தனி இடத்தில் வந்து நுழைவார்கள்?
: இல்லை, இல்லை- அன்பே
இரவு நான் கண்டேன் ஓர் பொல்லாக் கனவு. பிறகு மனத்தில் ஓர்
அச்சம்! அதனால் அமைதி குலைகிறது.
: சிச்சீ, பயமேன்?
சிறிய இடைத் தேன் மொழியே!
கண்ட கனவென்ன?
: கண்ணுக்கினியவரே,
எண்ணவே என்னால் இயலாதாம், அக்கனவை; மீண்டும் ஒரு கால்.
விதிர்த்து நடுங்குகிறேன். உள்ளம் உலைகிறேன்.
: ஒகோ, சனிக்கிழமை
தெய்வம் மணக்கும் சிறப்ப்ான காதை ஒன்றில் கற்றுச் சுவைத்த கவிதைப் பகுதியொன்று கூறியது போல் ஏதும் கோரக் கனவுகள், நீ
 
 

குமா
கண்டாயே போலும்!
: கடவுளே, காத்தருள்க.
நீங்கள் நினைத்ததுண்மை.
; நெஞ்சை அள்ளும் காப்பியத்தில்
கண்ணகியார் கூறும் கனவிதுதான் அன்றோ! 'கடுக்கும் என் நெஞ்சம் கனவினால். என் கை
பிடித்தனன். போய் ஓர் பெரும்பதியுட் பட்டோம். பட்ட பதியிற் படாததொரு வார்த்தை இட்டனர் ஊரார், இடுதேளிட்டு என்றன்மேல் கோவலற்குற்றதோர் தீங்கென்றதுகேட்டுக் காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன். காவலனோடு ஊர்க்குற்ற தீங்கும் ஒன்றுண்டால், உரையாடேன்’
ஏதேது!
இலக்கியத்தில் மூழ்க இறங்கிவிட்டீர்.
காதல் விளக்குக் கதிரின் ஒளிபரப்பு
மூட்டி விடுகிறது, மோகக் கனவுகளை. நாட்டியமும் நல்லிசையும் போல, கவிதை என்னும் பாட்டுகளும் நெஞ்சிற் பதிந்து, புதியதோர் இன்ப மயக்கை இயற்றும்.
இதை உனக்குச்
சொல்லவா வேண்டும்?
(பின்னும் சத்தம் கேட்க)
தொடர்ந்து மறுபடியும் ஏதோ குழப்பம்!
: எலிகள் மிகுதி இங்கே.
பூனைகள் தேடிப் புறப்பட்ட சந்தடியைத்தானே நீ கேட்டுத்தளருகிறாய்?
என் கனவு.
ஆம், மறந்து போனேன். அதற்குள்.
அதைச் சொல்லு.
நாம் இருவர்

Page 45
குமா
ஆவியோ ஒன்றாம்.
நமக்கிடையே யாரோ புகுந்தார், இடையூறு செய்ய என்று. உங்களது கையில் உருக்கு விலங்கிட்டுக் கொண்டு போனார்கள் - கொலைக்களத்தை நோக்கி அதனைத் தடுக்க விரைந்தேன்.
எவரோ என் மார்பிலே வாள் வீசி மாட்ட மயங்கிவிட்டேன்.
எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி, விழிப்பில் மனம்
புண்ணாவாய்.
அந்த மனப்போக்கே கனவாக
வந்திருக்கும். நீ ஏன் வருந்துகிறாய், என்னுடைய கண்ணே?
எதற்கும் ஒரு காரணத்தைக் காட்டுவதில்
வல்லவர் தான் நீங்கள். வணங்குகிறேன், உங்களது சொல்வலிமை கண்டு.
துயரமேன், சீ, சிறு பெண்!
பாடலொன்று பாடு. பயத்தை மறக்கலாம். ஒவ்வொரு நாளும் அணியத் தவறாயே. செவ்வரளி மாலை! எங்கே, காணோம்?
திரும்பி இரு.
பூச் சூட்ட வேண்டும். ஒரு புன்னகையை உன் முகத்திற் பாய்ச்சி விடலாமே!
(மன்னனும் அமைச்சனும் மறைவிடத்திலிருந்து வெளிப்படுகின்றனர்.)
பார்த்தீரா, இங்கிவர்கள்
பாடம் நடத்தும் விதத்தை? (வில்கணையனை நோக்கிச் சீற்றங் கொண்டு) படு மூடா, ベリ
உய்யவா எண்ணம், உலுத்தனே! (மறைவில் நிற்கும் காவல்துறையினரை நோக்கி)
 
 

குமா
காவலர்காள்,
வாருங்கள், இங்கே.
மதி கெட்ட வாத்தியைச் சங்கிலியாற் கட்டித் தரைக்கீழ்ச் சிறைக்குள்ளே தள்ளுங்கள். (காவல் துறையினர் வில்கணையனைக் கட்டி இழுத் துப் போகிறார்கள்)
: நாளை, சபையில் விசாரிப்போம்.
மன்னிப்பே இல்லை
மகத்தான குற்றங்கள்! என்னென்ன தண்டனைகள் உள்ளனவோ, அவ்வளவும் தந்து வதைப்போம்.
தறுதலையை வாட்டுவோம். கொய்து தலையை, கொலைத் தண்டனை கொடுத்தால் அவ்வளவும் போதாதே!
அப்பா, இவர் இழைத்த
தீங்குதான் என்ன?
கிறுக்கி!
LD56TIT, pë? பெற்றேனே, பெற்றேன், பிறர் சிரிக்கப் பெற்றேன் நான். எங்கள் குலம் என்ன?
இந்தச் சிறு வாத்தி அங்கும் இங்கும் எங்கும் அலைந்து திரிகின்ற பிச்சைக் குலம் என்ன, பேதை?
மனித குலம்
எங்கள் இருவர்க்கும் உரிமை, மனிதகுலம்.
எங்கள் இருவர் என யாரையடி சொல்லுகிறாய்?
இச்சை பிடித்த இழியவனை, வையமெல்லாம்
மெச்சிப் புகழுகிற மேன்மை உடைய எங்கள் மன்னர் குலத்து மகளான உன்னுடனே
சேர்த்தா நினைத்தாய்?
(தணிந்து) சிறுமி நீ. ஆகையினால்,

Page 46
மன்
(5LDIT
96). D
உன்னை மட்டும் மன்னித்தேன்.
ஒடு. பிழைத்துப் போ.
மன்னிப்பு எனக்கு மட்டும் என்றால், அது வேண்டாம். ஒன்றாகி விட்டோம், உயிர்கள் கலந்தன.
நாம்
வாழ்வதென்றால் ஒன்றாக வாழ்வோம். அது தவறிச் சாவதே என்றாலும் ஒன்றாயே சாவோம், நாம்.
சீற்றத்தை மேலும் கிளறாதே!
(ஆதரவாக) சித்தூரின் ஏற்றம் மிகுந்த இளவரசன் மாலையிடும் மங்கல நாளை வரவேற்கக் காத்திரு, போ. சங்கிலியும் நாலு தருவிக்குமாறு எங்கள் பொற்கொல்லருக்கும் தகவல் அனுப்புகிறேன். போ, அம்மா! நீ எனக்குப் பொன் குஞ்சு, போய் உறங்கு.
முன்போல, எல்லாம் முழுமையாய்க் கீழ்ப்படியும்
சின்னக் குழந்தையா நானும்? இந்தச் செல்லமொழிப் பேச்சுக்கு எடுபட்டுப் போகேன்.
(வாளை உருவி) அடி, கொடுவாள்
வீச்சுக்கு நீயும் இரையாவாய்வீண் கதைகள் பேசினாய் என்றால்.
(கண் கலங்கி) பிணமாக்கி
என்னவரை
மாய்த்த பிறகெனக்கு வாழ்வெதற்கு? : மன்னவரே, சீற்றம் தணிக.
சிறுமி அவள்
: சீ, அடங்கா, M
நாக்கால் எதிர்த்தாள், யமன் போலே!
ஆறுதலாய்
எல்லாம் கருதி, இதனைத் தகுந்தபடி
 
 

மன்
தீர்ப்போம்.
வருக, சிறிது, தனியாக. (மன்னவனும் அமைச்சனும் போக, குமாரி மட்டும் தனித்து விடப்படுகிறாள். பின்னணிப் பாட்டிசை)
கண்ணீர் தான் வாழ்வோ?
கடவுளே, என்ன இது? பெண் ஏது செய்வாள், பிரிந்து?
(திரை)
V
(அரசவை கூடும் மண்டபம். மன்னன் அமைதி இழ ந்து, ஆத்திரமடைந்து பரபரப்புடன் நுழைகிறான். அமைச்சன் மன்னனை அமைதிப்படுத்தும் ஆவலுடன் தொடர்கிறான்)
(சிற்றச் சிரிப்பைத் தொடர்ந்து) மாணவிமேற் காதல்!
மடையன்! அவனுடைய ஆணவத்தைப் பாரும், அமைச்சரே!
ஆம், அரசே!
இந்த நிலைமை எதிர்பார்த்த ஒன்று தான். அந்த வழியால் அதை நாம் முறியடிக்கப் பார்த்தோம்.
முயற்சி பலிக்கவில்லை.
கூர்மை மதித் தந்திரமும் வாய்க்கவில்லை.
தாழ்ந்த இழிமகனைக்
கொல்லத் தான் வேண்டும் கொடிய ஒழுக்கமுள்ள பொல்லாத பேதை
பொறுங்கள் அரசே! : 6,
மன்னர் குலத்து மகளை மணந்து கொள்ளச்

Page 47
-9/6ő)L0
சின்னப் பயலாதுணிந்தான்? சிரமறுப்போம். கண்டதுண்டம் ஆக்கக் கடவோம்.
அவசரம் ஏன்?
எங்கள் முடிவில் இழுக்கிருக்கக் கூடாது. வேந்தே, அதனாலே வெப்பம் தணிந்த பின்னர் ஆராய்ந்து பார்த்தால்.
அது மிகவும் நல்லதென்றா
கூற நினைத்தீர்? குழம்பிய என் நெஞ்சத்தைக் கீறுகிறீர் பேச்சாலே!
கிண்டுகிறீர்.
போம், நீரும்
வில்கணையன் கட்சி. விசர் பிடித்துப் போனிர்கள். புல்லன், புலவன், புடையன். அடிப்பம் என்றால் எல்லாப் புறமும் எதிர்ப்பாய் இருக்கிறதே! என் புதல்வி என்றிருந்தேன். இன்பத்தால் நெஞ்சமெல்லாம் பூரித்தேன். அந்தப் புதல்வி, என்னையே எதிர்த்துக் கூரிய சொற் கொண்டு குடைந்தாளே! என்னுடைய
மானம், மதிப்பு. மரியாதை.
(பல்லை நெறுமிக் கொண்டு பேச்சுத் தடைபட நின்று
தடுமாறுகிறான்)
வில்கணையன்
கொண்டு வரப்பட்டு விட்டான்.
* விசாரிப்போம்
(பிற அமைச்சர்களும் அவையத்தாரும் வந்து தத்தம் இருக்கைகளில் அமருகின்றனர். விலங்கிடப்பட்ட வில்கணையனைக் காவலர்கள் இழுத்துக் கொண்டு
வந்து மன்னன் முன் நிறுத்துகின்றனர்.)
கொற்றவனே,
:y
சங்க
భ భళ్లభ ಘ್ರಜ್ಞೆ பங்கள்-முருகையன்
 
 
 

நான் செய்த குற்றமென்ன, குற்றமென்ன?
; சின்னப் பயலே, சினந்து முறுகாதே,
மன்னர் குலத்து மகள்மேலே, காதல் என்ன வேண்டி இருக்கிறது? மென்மகளின் கல்வியை, நான் உன் பொறுப்பில் விட்டேன். உனக்கே உரியவள் போல் அன்பு செய்ய முற்பட்டாய், அற்பா! துரோகம் அது. பாவம், அவளுடைய பச்சைப் பசுநெஞ்சில் தீய களங்கத்தைச் சேர்த்தது யார்?
நீதானே!
வேந்தே, பொறுங்கள்.
விரும்பத் தகுந்த ஒரு பெண்ணழகை என்முன்னே விட்டீர்கள். பேதை அவள்!
கண்ணால் நுழைந்தாள்.
கருத்திற் குடிபுகுந்தாள். பஞ்சில் நெருப்பு வைத்தால், பற்றாது போய்விடுமா? நெஞ்சுகளிற் பற்றும் நெருப்புகளும் அப்படித்தான்.
சாரமிலாச் சொற்கள்.
- (தயக்கத்துடன்) தயவு செய்து நான் கூறும்
வார்த்தையையும் கேட்டு வழக்கதனைத் தீர்ப்பதே ஏற்றதென்று சொல்ல.
இரும் நீர்.
குறுக்கிட்டுப்
பேசாதீர். (வில்கணையனை நோக்கி) நீ உன் பிழையை ஒப்புக்கொள்.
அதுதான்
ஏலாதென்று - ஏற்கனவே சொல்லிவிட்டேன்.
: நீ அவளின்
மேலே விருப்பு வைத்தாய்?
ஒப்புகிறேன்

Page 48
ஆனாலும். குற்றம் என்மேல் இல்லை என்றும் கூற விரும்புகிறேன்
குற்றமா, இல்லையா என்று முடிவு செய்ய
நீதி அவையம் இருக்கிறது.
நீயே உனது வழக்குக்குத் தீர்ப்பளிக்க முந்தாதே. என்ன நடந்ததென்று நேர்முகமாய் உன்னிடமே கேட்டுறுதி செய்யத் தான், கீழ்மகனே உன்னை இங்கு கூட்டிவரச் சொன்னேன். கொலைத் தண்டனை விதித்தால், நாளை நடக்கும் அது.
நல்லது, நீ போகலாம். அந்தரங்கமாக அமைச்சர் முதல்வருடன் நான் கலக்க வேண்டும்.
: நலமே பெருகட்டும்.
செங்கோல் வளைந்து தெறிக்காமல் வாழ்வதற்கும் மங்காமல் உம்முடைய ஆதிக்கம் நீள்வதற்கும் ஏற்ற வகையில் இருக்கட்டும் - உம்முடைய ஆட்சி முறைமை. 'அநீதிச் கிடங்கிந்த வேந்தன் அவை என்றாரேன் வெந்து சினப்பதற்குச் சற்றும் இடம் வைக்காமல், சால்பு மிகுந்ததொரு நல்வழியிற் செய்வதே ஞாயம். அது மறந்தால் - அல்வழியிற் போனால், அழிவதுறுதி என்று பண்டைய நூல்கள் உணர்த்துவதை ஞாபகத்திற் கொள்க என்று கூறிப் பிரிகின்றேன்.
உம் தீர்ப்பு
நல்ல முடிவை நமக்கு வழங்கட்டும். (காவலாளிகள் வில்கணையனின் பேச்சைத் தடுத்து அவனை இழுத்துப் போகின்றனர். மன்னன் ஆத்தி ரத்திற் கையோடு கை மோதிச் சினந்து அங்குமிங்கும் அலைகிறான். அமைச்சன் செய்வதறியாது திகைத்து நிற்கிறான். பின்னர் அவையத்தார் அனைவரையும் வெளியேறும்படி சைகை காட்ட அவர்கள் போகின்
 
 

குமா
குமா
9160)LD
றனர். அரசவை மண்டபத்துக்குத் தவிப்புடன் குமாரி வருகிறாள். தந்தையைக் காண்கிறாள்)
எந்தையே, வேந்தே, எனக்கினிய தந்தையே,
சித்தம் இரங்கிச், சிறையில் அடைபட்ட அத்தானை.
: (உரப்பி) அத்தானா?
சீ, போடி!
அப்படியும் உன் வாயாற் கூறி உயிர்பிழைத்துத் தப்புவதா உன் எண்ணம்?
ஆமாம், உயிரால் எனக்கினிமேல்
என்ன பயன்? என் உயிரோ இப்போது வெஞ்சிறையில்! என்னவரைக் கொன்றுவிட எண்ணுகிற நாட்டிலே, ஒன்றத் தகுந்தவரை ஊறு படுத்த என்றே பண்டை வழக்கம், பழம்பொய்ம்மை ஆசாரம் சாதி முறைமை சொல்லும் சாத்திரங்கள் சாட்சியாய்க் கண்டு - அவற்றைக் காட்டுகிற கல் நெஞ்சர் நாட்டிலே, வாழ்ந்தென்ன, மாண்டென்ன? (விம்முகிறாள்)
வாய் பொத்து.
(ஆவேசமாய் மகளைக் கையிலே பிடித்துத் தள்ளு கிறான். அவள் கீழே விழுந்து மயக்கம் அடைகிறாள். மன்னன் திகைத்துப் பிரமை பிடித்தவனாய், வெறித்து நோக்கியவனாய், நிற்கிறான். சில நொடி அமைதி)
(தயங்கித் தயங்கி) மன்னவரே,
சற்று வருக, தனியே ஒரு வார்த்தை முற்றிவிட்ட பந்தம்- முறிக்க முடியாது. வில்கணையன் மாண்டால். பிறகு மகள் வாழாள். பின்னும் உலகிற் பிழைத்திருப்பாள் - தங்களது செல்வ மகள் என்று சிறிதும் நினைக்காதீர். உண்மை அது தான்.
உலக அநுபவந்தின் பெண்மை வடிவாய் விளங்கும் அவள் தாயார் -
பட்டத்தரசி.

Page 49
96). D
96ő) LD
என்ன சொன்னாள்?
அவளுமா,
வில்கணையன் கட்சி? ஓ, வேறும் என்ன வேண்டும் இனி? நானோ தனியன், நடுத்தெருவில் நிற்கிறவன். ஆருமே இல்லா அநாதை!
அரசன் என்று
பேர்தான். அவள் தாயும். பேதை நான். வாழ்வெனக்கேன்?
(உடைவாளை உருவுகிறான்-தற்கொலை நோக்குடன்)
(மன்னனின் கையைப் பிடித்து)
நில்லுங்கள் கொஞ்சம், அரசே!
நிலை மாறி
விட்டுக் கொடுத்தல்.
(மனத்தை மாற்றக் கிடைத்த தருணத்தை நழுவ விட
விரும்பாமல்)
விரும்பத் தகுந்தது தான்.
(மனம் வெறுத்து) முட்டாள் என்றென்னை
முடித்துவிட்டீர் எல்லாரும்
ஒன்றாகக் கூடி!
ஒழியுங்கள் எப்படியும். (அருவருப்புடன்) நன்றாகப் பன்றிகளை நக்குங்கள். கீழ் சாதிப்
பிண்டங்களோடு பிணைந்து கிடவுங்கள். வில்கணையன் என்ற விழலனையே வேந்தனாய் வைத்து நடத்துங்கள், வாழ்த்துப் படியுங்கள். நாட்டுக்கு மன்னனாய் நாளை முடி சூட்டுங்கள். (சில நொடி மவுனம், பின் தெளிவான, உறுதியான, சாந்தமான குரலில்) காட்டுக்குச் சென்று கடைசி வயதுகளைத் தன்னந்தனியே கழிப்பேன்.
தயவு செய்க; மன்னரே வேண்டாம்.
மனத்தைத் திருப்புங்கள்.
தீர்மானம் ஒன்றைத் திருத்தினேன்.
 
 

அ1ை0
-963) LD
மற்றதனை ஆர் வந்து தானும் அசைக்க முடியாது. இந்தாரும் செங்கோல். (செங்கோலைக் கொடுக்கி றான். முடியையும் கழற்றிக் கொடுக்கிறான்.) எடும் முடியை.
யாரேனும் தக்கவரைக் கண்டறிந்து தந்துவிடும், தந்துவிடும். தந்துவிடும்.
வேந்தே! (தீர்ப்பான குரலில்) தடுத்துப் பயனில்லை.
போய் எல்லோருக்கும் தெரிவியும் - என்னுடைய நல்வாழ்த்தை. (மன்னன் தன் மேலாடையையும் கழற்றி வீசிவிட்டு வெளியேறுகிறான்)
வேந்தர் நடந்துவிட்டார்.
யார் தடுத்தும் நில்லார். (குமாரி மயக்கம் தெளிந்து நாற்புறமும் பார்க்கிறாள். பின்னர் எழுந்து அமைச்சனுக்கு அருகிலே வந்து உற்று நோாக்குகிறாள்.)
; (தனக்குட் பேசுவான் போல்)
அவர் மானி,
நீங்கள். (துணுக்குற்று)
நடந்ததென்ன? எந்தையார் எங்கே? இதென்ன முடி, செங்கோல்? ங். ஆய். 9
அந்தோ, அரசர்.
(தழதழக்கும் குரலில்) அவர்.
(விக்கித்துப் பேச முடியாமல், திணறி நிறுத்தி விடு கிறான்) (திரை)
1963

Page 50

குனிந்த தலை
நாடக மாந்தர்:
இசுமனி- இதிபனின் மூத்த மகள் அந்திகனி - இசுமனியின் தங்கை. கிறயன் - தீபசு வேந்தன் ஏமன் - கிறயன் மகன் தயிரீசியர் - ஒரு குருட்டுச் சாத்திரி கிறுவன் - தயிரீசியின் வழிகாட்டி காவலாள்
தூதன்
இயூரிடிசி- கிறயன் தேவி குழு - தீபசு முதியோர் கொண்ட குழு பரிவாரம் - வேந்தன் கிறயனின் பரிவாரம்
போராளிகள்
(குழு - கிரேக்க நாடக மரபுப்படியானது, குழுவினர் சேர்ந்திசையாயும் தனி ஒசையாயும் பாடுவர்/பேசுவர், தனித்து ஒருவர் குரல் தரும் இடங்களில், குழுவில் ஒருவர், பெரும்பாலும் அதன் தலைவர், பேசுகிறார்/ பாடுகிறார் என்று கொள்ளுதல் வேண்டும்.)

Page 51
களம் - தீபசு வேந்தன் மாளிகை முன்றில்
அந்
இசு
அந்
அந்
(இசுமனி மாளிகை நடுக்கதவால் வருகிறாள். அந்தி கனி அவசரத்துடனும் பரபரப்புடனும் தொடருகி றாள். அவள் அவதானமாய்க் கதவை மூடித் தமக் கையை நெருங்குகிறாள்.)
: அக்கா, இசுமனி, ஆ. என் உடன்பிறப்பே
எப்போதும் எம்மை இறைவன் வருத்துகிறான். தந்தை இதிபருக்காய்ச் சஞ்சலங்கள் மூட்டுகிறான். அந்தோ, இருவர் நாம்; அல்லலுக்கோ எல்லை இல்லை! மானபங்கப் பட்டோம் - மரியாதை கெட்டழிந்தோம். ஈனம் அடைந்தோம் நாம். இன்னும் ஒன்று கேட்டாயா? மன்னர் நகரில் வகுத்துவிட்ட ஆணை ஒன்றுநம்மவர்க்கு வெம்பகையாய் நாட்டில் எழுந்ததக்கா. எங்கள் உறவோர் எதிர்க்கப்படுகின்றார்.
எங்கள் உடனே பிறந்தோர் இருவருமே
ஒன்றாய் மடிந்த ஒரு நாளின் பின்,
நமது நன்மையோ, தீமையோ நானறியேன். 'ஆகீவுச் சேனை மீட்கப்பட்ட செய்தி இரவறிந்தேன். ஏனையவை ஒன்றும் எனக்குத் தெரியாதே!
அப்படித்தான் நானும் நினைத்தேன்.
அதனால் தான். இப்படி உன்னை இரகசியமாய் அழைத்தேன்.
என்ன புதினம்?
எதுவோ கொடியது தான்!
ஆ, ஆ, இசுமனி, நம் அன்புச் சகோதரர்கள்.
எல்லா மதிப்பும் எதியோக்கிளியனுக்கே. ஈமக் கிரியை இவனுக்கே செய்வித்தார்மன்னர் கிறயன் பொலினிசனை யாரேனும்
நல்லடக்கம் செய்தால். ஆம்,
சங்கடங்கள்-முருகையன்
 

அந்
இசு
நாட்டுத் துரோகமென்று சொல்லுகிற ஆணை ஒன்று தோன்றி இருக்கிறது. கல் எறிந்து கொல்லப் படுவாராம் - மீறுவோர். ஆரும் தொடாத அநாதைப் பிணமாகச் சீர்கெட்டழிந்து, சிதைந்து, கழுகுகளின் தீனியாய்ப் போகட்டும்- செத்த அவனுடலம் என்கிறது சட்டம்.
எனக்கும் உனக்கும் எதிராகத் தானே, எழுந்தன, இக்கட்டளைகள்! இங்கு கிறயனே, இன்னும் சில பொழுதில் நேரிலே வந்து நிலை நாட்டப் போகிறார்தம்முடைய சட்டம்.
தருணம் எமக்கிது தான்மன்னர் குலத்து மனிதர்கள் நாம் என்ற உண்மை நிறுவ.
உதவி உனக்கென்ன
என்னாலே ஆக இருக்கிறது - சொல்லி விடு.
என்னோடு கூடி எடுத்துச் சடலத்தை. மன்னவரை மீறி மயானக் கிரியையா? தம்பி அவன் அன்றோ?
சரி, நீ போ.
உன் விருப்பம்.
நான் அவனைக் கைவிடேன்.
: நாட்டரசர் சட்டத்தால்
அப்பட்டமாக அதனைத் தடுத்த பின்னும் எப்படி நீநெஞ்சம் துணிவாய்?
ஆம், என்னவனை
அப்பால் விலக்கிவிட ஆருக்குரிமை உண்டு?
தங்கையே, தங்கையே, சற்றே கேள்
நம்முடைய தந்தையார், தம்மைச் சிதைத்து, தம் பாதகத்தைத் தாமே நிறுவித் தளர்ந்தொடிந்து, வெட்கத்தால் வெந்து மடிந்தார்.

Page 52
அந்
அந்
மிகவும் இழிவடைந்தார். அன்னை, அவர் தாரம்- அவருக்குத் தாயும் அவள்தன் கை உருவு தடத்தால் உயிர்நீத்தாள். பின்னர் எமது சகோதரர்கள் வெம்பகையால் சீறிச் சினந்து, திருகி உயிர் குடிக்க மீறிப் பெருகும் வெறிகொண்ட மாந்தர்களாய்த் தம்முள் முரணிச் சரிந்தார் ஒரே நாளில், எஞ்சி இருக்கும் இருவர் நாம், வேந்தரின் ஆணை கடந்தால், அழிந்து படுவமடி! அந்திகனி, கேளாய், அருமை உடன்பிறப்பே, பெண்கள் நாம். ஆள்வாரோ ஆண்கள் - பெருவலியர். தென்புலத்தார் எம்மைப் பொறுக்க. அரசாணை
ஏற்று நடப்பேன்.
இதை மீற நான் துணியேன்.
இல்லை, இல்லை, வேண்டாம் எனக்குதவி
நல்கினாற் கூட இனி நான் வேண்டேன். நானே போய்
நல்லடக்கம் செய்திடுவேன் -நாடாள்வோர் கொன்றாலும்! சாவேன் என் அன்புக்காய், தண்டனையை ஏற்றிடுவேன். சோதரனின் பக்கலிலே துஞ்சி மடிவேன் நான். வாழ்வாரை இன்புறுத்த வாய்ப்பில்லை, எங்களுக்கு. சாவால் மறைந்தவர்க்காய் என்றென்றும் பக்கலிலே சாய்ந்து துணையாய்க் கிடப்பேன். நீ வாழ்ந்திரு, போ. தேவர் புனித விதியைச் சிதைத்திரு, போ.
அந்த விதிகள் அழிக்கவில்லை நான்.
அரசர் தந்த விதிகளையும் தாண்ட முடியாதே!
: அப்படியானால் அதைச் சாட்டி நீ இரு.
நான்
ப்போதே சென்று தம்பி இன்னுடலை மூடிடுவேன்.
Ա)] SE)) ep
 
 

G5CP
அஞ்சுகிறேன், அந்திகனி, அஞ்சுகிறேன்.
* நீ எனக்காய்
அஞ்சாதே. அஞ்சினால், உன்பொருட்டாய் அஞ்சு நீ.
ஆரும் அறியாமல் ஆயினும் உன் வேலையைச் செய்.
நானும் ஒருவருக்கும் சொல்லேன்.
பறையடித்துப்
பார் முழுதும் செய்தி பரப்புஅதுதான் என் விருப்பம்.
என் நெஞ்செரிகிறது - நானோ நடுங்குகிறேன் -
எண்ண அதுபற்றி.
என் கடமை நானறிவேன்.
ஆற்ற முடியும் என்றால் நல்லது தான்.
ஆனாலும் தோற்பாய் நீநிச்சயமாய்.
; தோற்பேனே என்றாலும்
ஆற்ற முயல்வேன்.
; அதனாற் பயனில்லை.
பேசாதே அப்படி நீ, பேதை!
அவன் ஆவி உன்னை வெறுக்கும் - ஒழிக நீ உன்பாட்டில் என் புத்தியீனம் இருக்கட்டும், என்னுடனே. தண்டனை என் மானமுள்ள சாவைத் தடுக்காது.
பூண்டாய் உறுதி என்றால், போ நீ நினைத்தபடி,
உன்மீதில் அன்பே உடையேன் - மறவாதே. (இசுமனி மாளிகைக்குட் செல்லுகிறாள். அந்திகனி பக்கவழி ஒன்றால் வெளியேறுகிறாள் . தீபசு முதி யோர் குழு வருகிறது)
ஏழு கபாட எழில் தீப மாநகரின்
கீழைத் திசையில் என்றும் இல்லாக் கிளர் ஒளிசேர் தீபம் பிடிக்கும் திருக்கதிரோன் வாழியவே. சீற்றம் மிகுந்து சிறகடித்துத் தீ உமிழும். சக்கரவாகம் அனைய கொடுஞ்சேனை

Page 53
மிக்க பொலினிசன் எம் மேலே படையெடுத்தான். எழு கபாட எழிற் கோட்டை வாயிலிலே செங்குருதி மண்டலத்தில் வாய் திறந்து வாள் சுழற்றி நின்றானே ஆனாலும் நீசன் எமைச் சங்கரிக்கும் முன்பே தொலைந்தான், முடிந்தொழிந்து போய்விட்டான். எங்கள் பொருட்டாய் இறைவன் தனது சினக் கங்குகளை வீசிக் கடும்பகையை வீழ்த்திவிட்டாான். ஏழுபேர் தாக்கினார், ஏழு பேர் காத்தார்கள். ஏழு கபாடத் தருகில் மடிந்தார்கள்.
(இ)ரண்டு சகோதரர்கள் எஞ்சிச் சமரிட்டே ஒன்றாக மாண்டார்- ஒழிந்தார், ஒருமிக்க. போர் வெகுத்த வெற்றிப் புதிய மகிழ்வுண்டு தேர் மிகுந்த தீபத் திருநகரில்.
கோயில்களில், பூசை புரிந்து, புவி குலுங்குமாறினிய ஓசை மிகுந்த பெரு நடனம் ஆடுதற்கும். காலம் இதுவே - களியாட்டக் காலமிதே. ஆயினும் எங்கள் அரசர் மேனிசியசின் மைந்தர் "கிறயன் வருகின்றார், பாருங்கள். என்ன சொல்ல உள்ளாரோ என்பதனை நாமறியோம். கேட்போம் - சிறப்புப் பிரகடனம் யாதென்று.
(நடுக்கதவு திறக்கிறது. கிறயன் வருகிறான்)
கிற பேரன்பு மிக்க பெரியோரே, நம் நகரம்
போர்ப்புயலால் மீண்டு புகுந்துளது சாந்தியிலே. வேந்தர் இதிபர் மிகுந்த அறிவுடனே ஆண்ட பொழுதும் அதன் பிறகும், மைந்தர்கள் சாகுமட்டும் அவ்வாறே சார்ந்தீர் - அமைதியாய். இன்றைக்கோ ஆட்சி எனது கையில் வந்துளது. நாட்டின் பகை என்றால், நாமும் அவன் பகையே. நாட்டு நலம் எமக்கு நல்ல உயிர் ஆகும். ஆட்சி புரிவேன் அரிய இந்தக் கொள்கையுடன். வேந்தர் இதிபரது மைந்தர்கள் பற்றி ஒரு தேர்ந்த சின்ன ஆணை செயற்படுத்த எண்ணுகிறேன்.
102 சங்கங்கள்-முருகையன்

(5CP
56
வீரச் சமரில் நகர் காக்க ஆவி விட்ட சீரார் எதியோக்கிளியன் சடலத்தை நல்ல சிறப்பாக நாம் அடக்கம் செய்வித்தோம். மற்ற மடையன்- அவன் தான் பொலினீசன் வேற்றுார் இருந்து தாய் நாட்டுக்கு மீண்டு வந்து உற்றார் உறவார் உயிர் குடிக்க முந்தியவன்சாக்குழியும் இன்றிச் சவம் அழுகிப் போகட்டும். நாயும் கழுகும் நயக்கட்டும் அப்பிணத்தை. வாயும் திறக்கப்படாது - அவனுக்காய் எவரும். தீது நன்றை வெல்லச் சிறிதும் இடமளியேன்.
கீர்த்தி மிக்க மன்னர் கிறயன், உமதாணை
நண்பன், எதிரி, இறந்தோர், இருப்போர்கள் பற்றிய நும் ஆணை - பதியே, அது வேதம்.
அப்படியானால், அதை ஓம்பி வாழுங்கள். : இப்பணிக்கு வாலிபரே ஏற்றவர்கள், எம் அரசே!
காவலர்கள் ஏலவே உள்ளார், பிணத்தருகில். : இன்னும் என்ன உண்டோ, எமது பணியாக? ; மீற உடந்தையாய் ஆகாதீர்- அவ்வளவே. ; அவ்வளவு பித்தர் ஆர், ஆவியிலே அன்பில்லார்?
உண்மை, எவரும் உதாசீனம் செய்தாலோ,
தண்டனை சாவே, சரி. (போகத் திரும்புகிறான். அப்பொழுது காவலாள் ஒரு வன் அரங்கின் பக்கவழியால் வருகிறான். கிறயன் மாளிகைக் கதவருகில் நிற்கிறான்.)
மூச்சுத் திணறல் களைப்பாலே அல்ல, மன்னா!
வீச்சாக ஓடி விரைந்து வரவில்லை. மெல்லவே வந்தேன்.
விரைந்து சொல்லு - செய்தி என்ன?
: நான் செய்யவே இல்லை - செய்தவரைக் காணவில்லை.
என் மேலே குற்றம் எதுவும் கிடையாது.
: பீடிகைகளோடு பிசங்குகிறாய்.
நூதனாய் ஏதோ நடந்தே இருக்கிறது, நிச்சயமாய்.

Page 54
STØY
so
கிற
di:SİT69)
(9) Clip
கிற
: ஆமாம், வியப்பே
அதனை அறிவித்தல் கூட மிகவும் கடினம்.
: சீ, கூறித் தொலை அப்பா.
வேந்தரே, சொல்லி விடுகின்றேன்
ஈமச் சடங்கில் இடுவது போல் மண்ணிட்டு யாரோ பிணத்தை அடக்கம் புரிந்துவிட்டார்.
என்ன துணிச்சல்!
எவர் செய்த வேலை இது?
ஒன்றும் அறியேன், உயர் வேந்தே!
மண் வெட்டி
பட்ட குறி இல்லை. பாரை, பிக்கான் தொட்ட குறி, வட்டித்த சில்லு வரைந்த குறி ஒன்றில்லை. அவ்வழியே சென்றவர்கள் ஆரோ பிணத்தின் மேல் மண்ணிட்டு மூடி மறைத்திருப்பார் போலும், அய்ய! செய்தி தெரிவிப்பார் யார் என்று தேர்ந்தெடுக்கச் சீட்டிழுத்துப் பார்த்தோம் நாம். தீய கொடுங்காலம். என் தலையின் மீதிலே இந்தப் பொறப்பு விழ ஓடோடி வந்தேன், உயர்ந்தோய்!
பொறுத்தருள்க.
: அய்யோ, பயந்தேன் - அது தேவர் செய்கையால்
மெய்யாய் இருக்கும் என மேலெழும் ஓர் அய்யத்தால்!
போதும் நிறுத்து.
பொறுமையினை உன் பேச்சால் சோதிக்கலானாய் நீ - சுத்தக் கிழ மடையன்! பேயர் சிலர், இல்லையில்லை,
பித்தர் சிலர் இந்நாட்டில் சட்டத்தை மீறிச் சதிசெய்யக் காத்திருப்போர் உள்ளார் - அவரே உவந்து பணம் கொடுத்துக் கள்ளமாய் இந்தக் கடும் ப்ாதகம் புரிந்தார். இந்தா, இதைக் கேள் - இற்ைமீது சத்தியமாய்ச் சொல்லுகிற வார்த்தை - துணிவோடு சட்டத்தை
 
 

5 Gy)
(35(ԱՔ
மீறிச்சவ அடக்கம் செய்தவனைத் தேடி வந்து முன்னால் நிறுத்து.
முடியாதுனக்கென்றால், இன்னும் என்னை மீறும் எவர்க்கும் ஒரு பாடமாய் உன்னை வதைப்பேன், உதைத்துக் கொலை செய்வேன் குற்றம் புரிந்தவனைக் கொண்டுவரவில்லை என்றால் பாடம் படிப்பாய்- பணம் பெற்றமைக்காக!
(மாளிகையுட் போகிறான்)
தேவர் அருளிருந்தால் தீயன் பிடிபடுவான்.
ஆவி பிழைத்தேன்.
அதனால் இனி ஒடித் தப்பி ஒளித்துத் தனியே விலகிடுவேன். நானோ இனிமேல் பிடிபடேன் - நன்று, நன்று! (வெளியேறுகிறான்)
* விந்தை பல, இந்த மேதினியில்.
அன்னவைகள் எல்லாம் கடந்தவனே, இவ்வுலக மானுடவன் கொந்தளிக்கும் ஆழிக் குறுக்கே கலம் செலுத்தி வந்திடுவன் சாகா வரம் பெற்றவன் போலே! முன்னைப் பழைய நிலத்து முதலாளி அவன். அன்னை அவனி அவன் நெற்றி வேர்வையினால் என்னென்ன செல்வங்கள் ஈன்று கொடுக்கின்றாள்! மூளையினை மூச்சாக்கிப் பேச்சாக்கி மானுடவன் சூழ இருந்தொருங்கு வாழும் வகை கண்டான். ஆமாம், எதையும் அவன் திறமை வென்றுவிடும். சாவைத் தவிர்ந்த வருத்தம் அனைத்துக்கும் ஏற்ற மருந்தும் இயற்றி முடித்து விட்டான். நன்மைக்கும் தீமைக்கும் சார்பாய் இயங்குகிற. தன்மை உடைய தலைவேலை நுட்பமுண்டே. தெய்வ நியதியையும் தேய விதிகளையும் ஏற்பவனே ஆற்றல் இயைந்து சிறப்பவனாம். ஆணவத்தாற் பாவ அவ வழியிற் சென்று, சுயநன்மையினை நாடி, விதி ஞாயங்கள் கொல்கிறவன் தீயவனே ஆவான், திருவற்றான் - சீர்மை இலான். (தொலைவிலே சிலர் வருவது கண்டு, பலபடியாய்)

Page 55
56
(5(ԱՔ
கிற
956)
கிற
956)
SITGI
10
அய்யோ, கடவுளே, ஆச்சரியம்!
உண்மையல்ல.
வேறாரும் அல்ல.
விசனம் மிகு கன்னி.
அந்திகனி
ஆமாம், அவலம் மிகும் இதிபர் பெற்ற மகளைப் பிணித்து வருகின்றார்கள். கொற்றவனின் சட்டம் இவள் மீறத் துணிந்தாளா? (வேறும் இரு வீரர்களுடன் அந்திகனியைக் கொண்டு காவலாள் நுழைகிறான்.)
ஆளைப் பிடித்துவிட்டோம்.
ஆமாம், அரசரெங்கே? பெண்ணைப் பிடித்தோம், பிணத்தைப் புதைக்கையிலே,
: மாளிகையால் இங்கே வருகின்றார் - மன்னவரும்.
(கிறயன் வருகிறான்)
என்ன இது, என் கண்ணால் இப்போது காண்கின்றேன்?
பெண்ணிவளைக் கண்டோம்,
பிணம் புதைக்கும் வேளையிலே! ஆகையினாற் கொண்டு வந்தேன். ஆம், அரசே, இந்த முறை நானே பரிசைப் பிடுங்கிவந்தேன், நேரடியாய்! குற்றம் விசாரித்துக் கூறிடுக நீதியினை. மற்றும் நான் போக விடை தருக, மன்னவரே!
எவ்வாறு கண்டீர்கள்?
எங்கிருந்து கொண்டு வந்தீர்?
; தன்னுடைய கையாற் சவத்தின் புதைகுழியைச்
செப்பனிட்டுக் கொண்டிருந்தாள்.
: சித்த சுவாதீனமுடன்
பேசுகிறாய் தானே!
* பிணத்தை, உங்கள் ஆணையினை
மீறிப் புதைத்தாள், விழி இரண்ட்ால் நான் கண்டேன்.
எப்படித்தான் கண்டீர்கள்?
சங்கடங்கள்-முருகையன்

Aa
கிற
அந்
அந்
எல்லாம் எடுத்துச் சொல்.
: அச்சுறுத்தித் தாங்கள் அனுப்பிவிட, நாங்கள்
செத்த சவத்தைத் திரும்ப வெளிப்படுத்தி நாற்றம் பரவா இடத்தில், பெருங்குரலை ஏற்றி உரையாடி இருந்தோம் - துயிலாமல். நண்பகலில், உச்சி நடுநாட் பொழுதினிலே, மண் பறக்குமாறு வளைந்தடித்த காற்றாலே கண் விழிக்கக் கூட இயலவில்லை எங்களுக்கு. பின்னர் விழிக்க, இந்தப் பெண் அங்கே நிற்கின்றாள். குஞ்சு பறந்துவிட்ட கூட்டில், குருவி ஒன்று கூடி அழுவதனைப் போல, பிணம் வெளியில் உள்ளதனைக் கண்டவுடன் ஒலமிட்டுக் கொண்டிருந்தாள். கிண்டி எடுத்தோரை வைது, கிளறி, உலர் மண் இரண்டு கையாலும் வைத்தாள், பிணத்தின்மேல். வெண்கலத்துக் கெண்டி கொண்டும் வேறு சில பூசனைகள்
மூன்று தடவை புரிந்தாள்,
அது கண்டோம். பற்றிப் பிடித்தோம் - பயப்படவே இல்லை அவள். குற்றத்தை நாம் எடுத்துக் கூறினோம்
ஒப்பினாள். கொண்டு வந்து சேர்த்துள்ளோம் குற்றம் புரிந்தவளை.
கூம்பும் முகத்தாளே, குற்றத்தைப் பற்றி உன்
வாய்ப்பிறப்பைச் சொல்லு - மறுக்கிறாயா வழக்கை?
இல்லை, மறுக்கவில்லை;
ஏற்றொப்புக் கொள்ளுகிறேன்.
: நீ இனிமேற் போகலாம், நிற்க இனித் தேவையில்லை.
(காவலாள் போகிறான்)
(அந்திகனியை நோக்கி) சொல்லு நீ
அந்தத் தொழில் தடுக்கப்பட்டதென்று நல்லாய் அறிந்திருந்தாய் அல்லவா?
: நான் அதனை
முற்றும் அறிந்திருந்தேன்.

Page 56
அந்
(95C
கிற
மோதத் துணிந்தாய் நீ? : ஆமாம், இறையவனின் ஆணை அது அல்ல.
தேவ நியதியைப்போல் தேயத்து வேந்தர்களின் வாய் விதிக்கும் சட்டம் வலிமை உடைத்தல்ல. தெய்வ நியதிகளோ ஆதி - அந்தம் அற்றவைகள். செய்த பொருள்கள் அல்ல - தேவுகளின் கட்டளைகள். அன்னவற்றை மீறத்தான் அஞ்சுவேன் அல்லாமல் மன்னர் விதிகள் மதியேன்.
மரணமும்
நாளையோ இன்றோ வரலாம்.
ஒரு வேளை,
முன்போடுவீர் போலும் இன்றைக்கு, நான் அஞ்சேன். நாள்தோறும் இன்னல் நசிக்கும் என் போன்றவர்கள். வாழ்நாள் முடியுமென்று வாட்டம் அடையார்கள். என் தாய் மகனை இடுகாட்டில் நல்லடக்கம் செய்யாமல் விட்டுவிட்டுச் செத்திருந்தால் உம் தண்டம்
என்னை வருத்தும்.
இனி
யான் எதையும் ஏற்றிடுவேன்.
தந்தை குணமோ பிடிவாதம்.
புத்திரிக்கும் அந்தக் குணந்தான்உலகே எதிர்த்தாலும்!
கர்வம் அடக்கப்படும்.
இவளின் கர்வத்தைச் சட்டம் மறுத்த சதிச் செயலிற் கண்டோம் நாம். பின்னும் தகாத மொழி பேசி அவமதித்தாள். தப்பவிடேன் நான், தருக்கை ஒடுக்கிடுவேன். என் தங்கை பிள்ளை இவள். இல்லை, இதனைவிடக் கிட்டும் உறவை உடையவளே என்றாலும் கெட்ட தனது தமக்கையும் தானுமாய்த் திட்டமிட்டுக் குற்றத்தைச் செய்திருப்பாள்.
 
 

அத்
அந்
அக்காளைப்
பற்றி இழுத்து வா.
பார்ப்பதற்குப் பிச்சிபோல் தன்னுட் சதி நினைந்து தான் திரிந்தாள், இல்லத்தில். சற்று முன்பு பார்த்தேன் நான். சந்தேகம் தோன்றியது.
பற்றிவிட்டீர் என்னை.
பறிக்கலாம் என் உயிரை. வேறென்ன உம்மால் இயலும்?
; அது போதும். : தாமதமேன் இன்னும்
தடுத்தேதும் நான் சொல்லி உண்டோ பயனும்? உடன் பிறந்த சோதரனை ஈமக்கிரியை புரிந்து புதைத்துவிட்டேன். வேறென்ன வேண்டும்? இந்த மேல் மக்களுங்கூட அஞ்சிவாய் பொத்தி அடங்கிவிட்டார்வேந்தனையும் மிஞ்சி ஒன்றுமே இல்லை என்று கருதியதால்!
: இல்லையில்லை, உன் செயலை யாரும் ஒப்பார்.
: அச்சத்தாற்
பேசவில்லை யாரும்.
சீ, பேதை - தனியன் நீ.
நாணம் இலாய்.
: நான் என் சகோதரனை மாட்சி செய்தேன்.
: அன்னானுடனே இறந்த அவன் எதிரி
உன் சோதரனா, இலையா?
: இருவருமே
சோதரர் தான் - என் அருமைச் சோதரர்தான்.
; ஆனாலும்,
தீய எதிரியை நீ சீராட்டிப் போற்றினாாய். இந்தச் சகோதரனை ஏற்றபடி போற்றாமல்

Page 57
(35(ԱՔ
அந்
இசு
அந்தச் சகோதரனை ஆதரித்தாய். அச்செயலோ சாவின்பின் செய்த தகாத அவமதிப்பு
சாகாதிருந்தால் குறையாய் எடுத்திருக்கார். : நீசத் துரோகியினை நீ மதித்தாய்; துன்புற்று
நெஞ்சம் வருந்தி இருப்பான்.
அவருடனே
மாண்ட எதிரி அடிமை அல்லன், சோதரனே!
மற்றவன் தன் நாட்டைக் காத்தான்.
இவன் எதிர்த்தான்.
ஆனால், இறந்தவர்க்காய் ஆற்றும் கடன் உண்டே. நல்லதுக்கும் தீயதுக்கும் ஒத்த சம மாட்சிமையா? தென்புலத்தில் அந்த நெறிதான் சரியாமோ! : செத்த பிறகும் எதிரி எதிரியே. : அன்பையே பங்கிடுவேன், அன்றி வெறுப்பை அல்ல. : செத்தோரின் மத்தியில் உன் அன்புகளைப் பங்கிடு, போ
பெண்டுகளின் தத்துவங்கள் பேண என்னால் ஆகாதே.
(இசுமனி வருகிறாள், மாளிகையுள் இருந்து)
: இங்கே வந்தாள் இசுமனியாள்.
இனிய தங்கை, துயர் மூடி மங்கி இருண்ட கண்கள் இவை. மழையாய் நனைந்த கன்னங்கள்!
என் மாளிகையில் எனது குருதிக்காய்
ஊர்ந்து நெளிந்த ஒரு பாம்பே, உன்னுடைய தங்கையுடன் கூடிச் சதி புரிந்தாய் அல்லவோ? உண்மையை நீ சொல்வாய். ஒளிக்க முயலாதே.
ஆமாம், அவள்போல் எனக்கும் இதிற் பங்குண்டே.
இல்லவே இல்லை, இதற்குத் துணை நிற்க
நீ மறுத்து விட்டாயே.
ta
என்றாலும் இந்த
வழக்கு விசாரிக்கும் வேளையிலே மன்றிலே
:
 
 

அந்
அந்
உன்பக்கம் நிற்கத் தயங்கேன், சகோதரியே!
தென்புலத்தாரும் மரணமும் உண்மையிலே
தம்பக்கம் நின்றவர்கள் யார் யார் என எல்லாம் நன்றாய் அறியும். நடிப்பு வெறுஞ்சொல் ஏன்?
: தங்கையே, தங்கையே, சாவேன் நான் உன்னுடனே.
மாண்டவர்க்குச் செய்யும் வணக்கத்திற் பங்கெடுப்பேன்.
: தீண்ட விரும்பாத செய்கையிலே இங்குனக்குப்
பங்கேது? போதும் ஒரு சா.
: பிறகும் நான், வாழவா?
கேள் நீ கிறயனிடம்.
அன்னவரே காப்பாளர். ஆவார் உனக்கு.
வதைக்காதே
உன் பொருட்டு நானும் இறக்க விடை தருவாய்.
: வாழ்வை நீ தேர்ந்தாய், மரணத்தை நான் தேர்ந்தேன்.
எச்சரித்தேன் தானே? சிலர்க்குன் வழி சரிதான்.
மற்றவரோ வேறு வழிதான் சரி என்பார்.
: இப்போது- இருவரிலும் குற்றக் கறை, தங்காய்! : பித்தம் இருவருக்கும்
தங்கை பிறப்பாலே! மற்றவளோ கிட்டடியில் மாறி மனம் பேதலித்தாள்.
: துர்க்கதியால் வந்த துயர மனப் பேதலிப்பு!
வல்ல மனமும் துயரால் திரியாதோ?
தங்கையுடன் சேர்ந்த தருணமே நீ பிச்சி. எவ்வண்ணம் தங்கை இறந்தபின்னர் வாழ்வேன் நான்? தங்கை உனக்கில்லை, அவள் சாவாள், உறுதி இது.
கொல்லவா போகின்றீர், மைந்தன் மணமகளை?

Page 58
கிற
அந்
(5(ԱՔ கிற
Q5CP
(35C
வேறு வயல்கள் உழுவான் எனது மகன்
என் மைந்தர் யாரும் இழிந்த இவள் போன்ற யாரை எனினும் மணக்க முடியாது.
ஆ, ‘ஏமன்', , இதையும் பொறுப்பாயா?
* உன் கள்ளக்
காதலனும் நீயும்! ஒருங்கே வெறுக்கின்றேன்.
; உன் சொந்த மைந்தர் உவளை இழப்பதுவோ? : இல்லையில்லை, சாவே இவளை இழப்பிக்கும். : ஆகட்டும் அவ்வாறே.
சா அவட்கு நிச்சயந்தான்
நிச்சயந்தான்!
இந்த இரு நீச மனிசிகளைத் தப்ப இயலாத் தடுப்புச் சிறையுளிட்டுக் காவல் புரியுங்கள், காலம் கடத்தாதீர். சாகப் பயந்தவர்கள் - தப்பிவிடப் பார்ப்பார்கள்.
(பெண்கள் கொண்டு செல்லப்படுகின்றனர்)
: அல்லற் சுவையை அறியார் அதிட்டமுள்ளோர்.
தெய்வ சினம் காய்ந்த தீய குடும்பத்தில் சாபம் படர்ந்து பல சஞ்சலத்தை உண்டாக்கும். பொங்கும் கடலின் கரிய மணல், புயலின் வெங்கொடுமையாலே கரையில் ஒதுங்கிவிடும். சுற்றி அடிக்கின்ற சூறை அலைக்கழிக்க எற்றுண்டு நைவர், இழிந்த குடும்பத்தார். சாவிலும் வாாழ்விலும் லாபுதாக்குக் குலத்தோர் வெந்து துடிக்கின்றார் - மீளவழி இல்லாமல், இப்பொழுதே, செத்தவர்க்காய் ஈற்றுக் கொழுந்துகளும் தப்பாதழிந்து சரிந்து கெடவுள்ளார்.
தூங்காத நீங்காச்சுடரே, ஒலிம்பசிலே நீங்காது வாழுகிற நித்தியமே, சீயனே! எந்த மனிதன் எதிர்க்க வல்லான் உன் வலிமை? என்றுமே மாறாப் பழைய விதிப்படியே மாந்தர் கடத்துகிற வாழ்வில், துயர் மிகுதி.
 
 

HTLD
பேராசை நன்மை பெருக்கும் சில வேளை. மற்றும் சில வேளை மாய அழகுடனே தீமை பெருகும் என்றும் செப்பப்படுகிறது. துன்பம் வரும்பொழுதும் சொல்லி வருவதில்லை. ஆனால் இளைய மகன் ஏமன் வருகின்றான். எண்ணி எதிர்பார்த்த இல்லாளின் மேல் இரங்கி, கண்ணிர் சொரிந்து, கெட்ட காலக் கொடுமைகளைச் சொல்லிப் புலம்பித் துயர்ப்படவா வந்துள்ளான்?
: எல்லாம் அறிவோம்,
எதிர்வுரைப்போர் தேவையில்லை. (ஏமன் வருகிறான்)
மைந்த, வருக,
வருங்காலத்தே நீ மணக்க இருந்தாள் வழக்குக்கு நான் கொடுத்த தீர்ப்பை அறிந்திருப்பாய். சீற்றம் என்னில் இல்லையே?
அப்பா, நான் தங்கள் மகனன்றோ?
தங்கள் மொழி எப்போதும் என்னைச் சரியாய் வழிநடத்தும். உங்களை மீறி மண ஒப்பந்தம் ஏதெனக்கு?
உண்மை சரியாய் உரைத்தாய், என் மைந்தனே!
தந்தையின் நண்பன் தனயனுக்கும் நண்பன் தான். தந்தை எதிரி தனயனுக்கும் வெம்பகை தான். ஏவாத மக்களே மூவா மருந்தாவார். காம இருள் உனது கண்ணை மறைக்காமற் பார்த்துக்கொள் தம்பி.
பதிதை மனைவி என்றால், நிம்மதி உன் வாழ்வைவிட்டு நீங்கிஒழிந்து விடும். எம்மிடையே உள்ளதுரோகிகளை நாம் பொறுத்தால் வேற்றுப் பகைவர்களை வெல்ல முடியாது. சத்தியங்கள் வாழ்வதெல்லாம் சட்டத்தின் கீழ்ப்படிவால், ஆகையால், சட்டத்தின் ஆட்சி நிலை நாட்டுவேன். தோகை ஒருத்தி தொலைவாளே என்பதற்காய்

Page 59
Q5C
ஏமன்
இம்மி அளவும் அசையேன், இளகேன் நான்.
வேந்தர் சொல் உண்மை.
விருத்தாப்பியன் எனக்குத் தோன்றுவதும் அப்படித்தான். சொல்லுவது தக்கதுதான்.
தந்தையே, ஈசுவரன் தங்களுக்குத் தந்திருக்கும்
சிந்திக்கும் ஆற்றல் திருத்தத் துணிவேனோ? கூர்மதிசேர்தங்களது கொள்கைகளைக் காப்பதுதான் என் கடமை ஆகும்.
எவர்கள் புகழ்கின்றார்கள். துன்மொழிகள் சொல்லி எவர்தூற்றுகிறார் என்பவற்றை ஒற்றி அறிந்தே உரிய மதியுரைத்தல் உற்ற கடமை எனக்கென்றும் எண்ணுகிறேன். நாட்டார் இரங்குவதும் கேட்டேன் என் காதுகளால். போரில் இறந்து, புதைக்கப்படாது, கொடும் நாயும் கழுகும் குதற இன்று நாதியற்றுப் பட்ட பிணத்தை அவள் பக்தியுடன் நல்லடக்கம் செய்துவிட்டாள் என்பதனால், செம்பொன் புகழ்முடியை எய்திவிட்டாள் போல நகர் ஏத்துவதும் கேட்கின்றோம். தந்தையே, தங்கள் தனிப்பேருயர்ச்சியே மைந்தன் எனக்கு மிகவும் பெரிதாகும். தீர்ப்பளித்தீர்கள்.
திருத்தி அதை மாற்றுவதும்
சாத்தியமா, தேவையா?
சற்றெண்ணிப் பாருங்கள். தானே எதிலும் சரி என்று கொள்ளுவதும் கூனல் மிகுந்த குறிய அறிவன்றோ? மோதுகிற ஆற்றுப் பெருக்கில் முகம் குனிந்து விட்டுக்கொடுக்கும் சிறுபுற்கள் வீழ்வதில்லை. மொக்கு மரங்கள் முடிவதையும் கண்டுள்ளோம். வீசும் புயலை எதிர்பார்த்தும், பாய் சுருக்கா மாலுமிகள் மாண்டு மடிவார், கலம் கவிழ்ந்து. ஆதலால், எந்தையே, ஆறுதலாய்ச்சிந்திக்க. இங்கிதுவே தான் என் இளமைக் கருத்தாகும்.
 
 

G5C
கிற
: இந்தக் கருத்திலும் ஏதோ இருக்கிறது
தந்தை கருத்தும் சரியே தான் என்றாலும்!
; அப்படியா?
நீயா அறக்கல்வி ஊட்டுகிறாய்? இந்த வயதில் எனக்கு, சிறுவா?
: இளமை, முதுமை அல்ல இங்கே பிரதானம்
நீதி, அநீதி நினைக்கப்படல் வேண்டும்.
சட்ட மறுப்புச் சரி என்றா கூறுகின்றாய்? சட்ட மறுப்புத் தகாதென்றால், தீயதுதான். : இன்னாள் கெடுதி புரிந்தாளா, இல்லையா? : தீப நகர் மக்கள் அது தீமை என எண்ணவில்லை.
தீபநகர் மக்கள் சிறியோர்கள்.
எப்பொழுதென் - மேலாள்கள் ஆனார், விதி படைக்கும் வேந்தர்களாய்?
சின்னக் குழந்தைபோல் சீற்றமொழி.
இல்லை, இல்லை.
யானே அரசன், எனக்கார் அதிகாரி?
: ஓராள் அரசா?
ஒரு பெரிய அற்புதம் தான்!
பாராள்வோன் கையில் அரசுரிமை, இல்லையா? : பாலைநில வெட்டையைத்தான் பாலிக்க ஏற்றவர் நீர்.
ஒகோ, நீ அந்த உலுத்திக்காய்ப் பேசுகிறாய். இல்லை - உலுத்தியே தாங்கள் எனில் அல்லாமல்.
பேசும் மொழி என்னைப் பிய்க்கிறது.
பின் என்ன?
: நீசத்தனம் உம் நிலைப்பாடே ஆகையினால்.
என் ஆணைச் சட்டம் இழிந்ததென்றா சொல்லுகிறாய்? தூயவற்றை எல்லாம் துகளாக்கும் நும் ஆணை. தீயவனே, கோழை, சிறிதேனும் வெட்கமில்லாய். : வெட்கம் எதற்காக வேண்டும்?
எனினும், அவள்

Page 60
GILD
(35CP
பக்கம் எடுக்கின்றாய்.
இல்லை, இல்லை, உம் பக்கம்
தென்புலத்தார் பக்கம்.
: சிறியவனே, நீ அவளைச்
சாவதற்கு முன்னர் மணக்க இயலாது.
: சாவாளே என்றால், தனியாய் அவள் சாகாள்.
அச்சுறுத்தப் பார்க்கிறாய் - அப்படியா?
: இல்லை, இல்லை.
துர்ச்செயலைச் சொல்லாற் சுடுவதா அச்சுறுத்தல்?
தம்பி, மிரட்டலை உன் தையலுடன் வைத்துக்கொள். அப்படியானால்! அது தானா நும் தீர்ப்பு?
சத்தியமாக!
தருக்குக்கு நீ இரங்கித்
துக்கப்படுவாய். (உள்ளே உள்ளவர்களைக் கூப்பிட்டு) துடுக்குப் பிசாசவளைக் கொண்டு வா பற்றி இழுத்து, கொலை புரிவோய்! மாப்பிள்ளை கண்டு மகிழ்ச்சி அடையட்டும்.
பார்ப்பவர்கள் பார்க்கட்டும் பாதகத்தை.
நான் இனிமேல். என் கண்ணால் உம்மை இமைப்போதும் காண ஒட்டேன்.
(போகிறான்)
: சென்றுவிட்டான், பாவம், திமிறி அவசரமாய்!
வாலிபத்தின் வேகம் எந்தவாறாய்ச் செயற்படுமோ?
போகட்டும் அன்னான், புகைந்து திமிறலுடன்
சாகவுள்ள பெண்கள் இனித் தப்ப முடியாது.
பெண்கள் இருவருமே கொல்லப்படுவாரோ?
: இல்லையில்லை, குற்றமொன்றும் இல்லாதவள்
பிழைப்பாள்.
மற்றவளுக் கெப்படித்தான் சாக்காடு வந்திடுமோ? வெற்றுவெறும் பாலை வெளியில், ஒரு குகையுள்,
 
 

(35(ԱՔ
அந்
கற்சுவரால் மூடி உயிரோடடைத்திடுவோம். பெண் கொன்ற பாவம் எங்கள் பேரரசைச்
குழாத அந்த அளவுணவை ஆங்கு சிறிது வைப்போம். சாவை வணங்கி அவள் தாழ்ந்து பணிந்திரங்கி ஆவி பிரியும் அருவரத்தை வேண்டட்டும். சாவை வணங்கினால் என்ன கதி கிடைக்கும். என்பதனைப் பாவி இறந்திறந்து பார்க்கட்டும். (போகிறான்)
காதலென்ற தேவனுக்கு நேர் ஆர்?
அவனாலே
போர்கள் உலகில்
புவியினது கோடியிலும் நீர் பொங்கும் ஆழி நெடுமைக்கு மத்தியிலும் உள்ளான் அவன்.
ஓ, ஒயிலான ஓர் முகத்துச் செந்தளிர்ப்பில் உள்ளான். ஆம், தேவர் மனிதர்களும் காமன் பிடிப்பைக் கழற்றிவிட ஏலாது. நல்லவனோ கெட்டவனோ சாவான். அவன் ஆவி. பொல்லாத பாவ வலைக்குள்ளே போய்ச்சிக்கும். ஒன்றி இருந்த குடும்பம் உடைந்து விடும். மன்றல்மகள் கண்ணின் ஒளி ஓர் சுடுநெருப்பே. காமவேள் வந்த பிறகு தொடர்ந்து வந்து காளி எவரிடத்தும் கைவரிசை காட்டிடுவாள். (கதவுகள்திறக்கப்படஅந்திகனிவருகிறாள்- காவலுடன்) கண் கலங்கி நீர் மறைக்கும் காட்சி
ஆ, அந்திகனி போகின்றாள், அந்தோ புதிய மணவறைக்கு!
: என்னருமை நாடே, இறுதிப் பயணமிது.
இன்னும் என்ன சொல்ல இருக்கிறது? சாக்காடு வந்து தழுவும் மதிலறைக்குப் போகின்றேன்.

Page 61
(5(ԱՔ
அந்
(5CP
(5CP
நன்மணநாள் ஒன்றுமில்லை. நாயனமும் கேளாது. செத்தொழிதல் மாத்திரமே சீதனமாம். செல்கின்றேன்.
; பெண்ணே, உனக்குப் பெரிய புகழ் உண்டு.
நோயால் அழிந்து நொடியா உடம்போடும் காயங்கள் இன்றி, கணை, வேல், வாள் ஊறின்றி மங்கா எழில் சேர் மரண அறை போகின்றாய். எங்கேனும் இன்னும் இயலாத செய்தி இது.
தந்திலCன் புத்திரியாள் என்ற பிகிரியப் பெண்
சிப்பிலிசுப் பாலைச் சிறையில் அடைபட்டு மாரி, பணிகள் வருத்த, அவள் விழிகள் சோரும் நீரோடு துவைபட்டுச் செத்தொழிந்தாள். அத்தகைய சாவே அமையும் எனக்கும்.
அவள் ஓர் அமரப்பிறவி.
மனிதர் நாம். அத்தகைய சா ஓர் அருமைக் கொடையாகும். வாழும் மரணம். எனின், மாளாது நன்னாமம்.
சிச்சீ, கொடுமை!
சிரிக்கப்படுகின்றேன். தீபத் திருநகரே, தேரோடும் வீதிகளே ஆற்றுப் படுகையே, ஆற்றற் குதிரைகளே. வாழ்வுக்கும் சாவுக்கும் மத்தியிலோர் ஆதரவுச் சின்னக்குரல் கூட இல்லாமற் செல்கின்றேன். நண்பர்களும் இல்லேன், நாதி எவரும் இல்லேன்.
: பிள்ளாய், துணிந்து பெரிய பிழை இழைத்தாய்.
கள்ளம் புரிந்து கவிழ்த்தாய் அரச விதி. உன் தந்தை பாதகமே உன்னில் விடிந்ததம்மா.
என் தந்தை - அய்யய்யோ, எண்ணினால் ஆவி சுடும்.
லாவுதாக்குக் குலத்தின் ஈனம் - அபகீர்த்தி! தாயை மகனே மணந்த, தகா அசுரத் தீய கொடுமை - சிய சியா! .
சோதரனை a
மாசுபடுத்தி மறுப்படுத்தும் தீ மணத்தால்
 
 

(35CP
அந்
கிற
ஆவி விடுத்தார். அதன் பேறாய், இக்கதிக்கு நான் தள்ளப்பட்டேன். நடந்த நிகழ்ச்சிகள். ஆ
: போற்றல், வணங்கல், புகழல் - இவையெல்லாம்
தம்மளவில் நல்லவையே - தக்கவையே என்றாலும், ஆற்றல் மிகுந்த அரசாங்கச் சட்டத்தை மீறினாய் ஆகையினால் வேகிறாய், தண்டனையில். நீயே விரும்பி அழைத்த நிலைமை இது!
என் வழியே போதல் எனக்கு விதி
மரண கீதங்கள் இல்லை. கிளரும் மணவாழ்த்தும் தீபமும் இல்லை.
சிறிது பகலொளியும் இன்று தொடக்கம் எனக்குக் கிடையாது.
(கிறயன் வருகிறான்)
; சாவினது வாயில் தளர்ந்து புலம்பி என்ன?
கொண்டு போ, அப்பாலே. பாவி இவள் கல்லறைக்குப் பாறை வைத்துக் கட்டுங்கள். பாடுபட்டுச் செத்தாலும் இட்டுமுட்டுப் பட்டே இறந்தாலும் பாவமில்லை.
சாவுலகில் உள்ள உறவினரின் மாளிகைக்கே
இப்போது செல்வேன்.
இறுதி ஆள் நானேதான். வெஞ்சிறைக்குப் போகின்றேன்அஃதென் மணவறையும். காலம் வரவில்லை, என்றாலும் போகின்றேன். எந்தையே, தாயே, இனிதாய் வரவேற்பீர். என் சோதரனும் எனது வருகையினை மெத்த மகிழ்ச்சியுடன், வேட்கையுடன் ஏற்றிடுவான். ஈமக்கிரியைக்காய் என்னை வரவேற்பார்கள். உன் இறுதிக் கைங்காரியம் செய்ததற்காய் அல்லவோ இந்தக் கடுந்தீர்ப்பும் பெற்றேன், பொலினிசனே!

Page 62
Q95CP
(5(ԱՔ அந்
(5CP
ஆனாலும் நான் இவ்வரிய செயலை, ஒரு கொண்டவற்காய், மைந்தனுக்காய்ச் செய்திருக்கேன். ஏனென்றால், கொண்டவன் போனால், பிறகொருகால் நான் மணந்து மற்றுமொரு மைந்தனையே
பெற்றிடலாம், வேண்டுமென்றால் அப்பரையும் அம்மையையும் விட்டுப் பிரிந்த பின்னர் எப்படி நான் வேறு சகோதரனைப் பெற்றிடுவேன்? என் சோதரனே, இனியாய், உன் மீதில் அன்பு வைத்ததற்காய் அன்றோ மரணம் அடையவுள்ளேன்! நன் மணமும் இல்லை.
நான் தாய் இல்லை.
நண்பர் இல்லேன்.
தன்னந் தனியே இறக்கவுள்ளேன்.
தெய்வமே. உன் விதியுள் ஒன்றையும் நான்தாண்டி நடக்கவில்லை. அன்பு செய்தல் பாவம் என்றால் ஆதரவு வேறேது? தெய்வசித்தம் என்றால், சிறிதும் வருந்தேன் நான். ஆனால் எதிரிகளே குற்றமுள்ளோர் என்றாலோ என்னிலும் பார்க்க இவர்கள் வருந்தட்டும்.
: இன்னும் அவள் இதயம் எய்தி இருந்த புயல்
சீறிச் சினந்து சிதைக்கிறதாம் ஆன்மாவை.
காவலர்கள் தாமதித்தால் கஷ்டப்படுவார்கள். வார்த்தைகளின் ஓசை மரணத்தின் நாதம், அந்தோ! முந்தையோர் தேவுகளே, ஊரே பெருநகரே,
மாண்புக்குரியோரை மாட்சி செய்த காரணத்தால் இந்த அவலம் எனை எய்திற்றோ!
நும் குலத்தின் ஈற்றுக் கொழுந்து - மகள் நானே என்றாலும்!
: சீயத் தேவின் திருவருளாம்
தெய்வப் பொன் பூமழை பொழிந்த தூய வடிவ சுந்தரியாம் தோகை "தேனை முன்பொருகால் தீய பித்தளைச் சிறைக்குள்
 
 

தயி
கிற
தயி
தீர்ந்து மடிந்தாள் - வெவ்விதியால். ஏய படைகள், கப்பல், எயில் எதுவும் உதவா, உலகிதிலே!
இறைவன் விதியை எதிர்த்ததற்காய் எடோனி மன்னன் லயிக்கேசன் சிறிய பாறைச் சிறைக்குள்ளே சிதைக்கப்பட்டு வதைப்புற்றான். நிறையார் டயோனிசன் என்ற நிலைமை உயர்ந்த தெய்வத்தை எறிய முயன்ற காரணத்தால் இந்தக் கதியை இவன் அடைந்தான்.
மாற்றாந் தாயின் கொடுமையினால் மைந்தர் வருந்த, பீனியசின் ஆற்றா மனைவி வட காற்றின் ஆட்சிக் காவற் சிறையுற்றாள். சீற்றம் மிகுந்த காட்டு மலைச் சிறிய குகைக்குள் அவள் இருந்தாள். ஆற்றல் நிறைந்த கொடுவிதியின் ஆட்சி இதுதான் - அறிமகளே! (குருட்டுச் சாத்திரியாகிய தயிரிசியனைக் கூட்டிக் கொண்டு சிறுவனொருவன் வருகிறான்)
தீப நகரப் பெரியீர், வணக்கம்.
இரு கண்களை நாம் இருவர் பங்காக்கிக் கொண்டுள்ளோம்.
அந்தகன் நான். இந்தச் சிறுவன் வழிகாட்டி.
: அய்யா, தயிரீசி, வாருங்கள்.
செய்தி என்ன?
சொல்லுவேன் செய்தி-அறிவுரையும் கேளுங்கள்.
கேட்காமற் போவேனோ?
கேட்பேன் தயிரீசி.

Page 63
தயி கிற தயி கிற
தயி
: ஆதலால் தானே, இதுவரையும் தப்பினிர். : நன்றி உடையேன் அதற்காக, நல்லவரே. : அப்படியானால், அறிக - அபாயமுண்டு.
: உண்மையா, அய்யா குருவே?
மிகுதியையும் சொல்லிவிட வேண்டுகிறேன்.
சொல்லலாம், சொல்லலாம்.
வான உலகின் மருமங்கள் தேடவென்று மந்திர பீடம் அமர்ந்த பொழுதினிலே விந்தை ஒலிகள் பலவற்றை நான் கேட்டேன். சண்டை இடுகின்ற பட்சி, மிலேச்சர்களின் கேடுகெட்ட கூச்சல், சிறகடிப்புச் சத்தங்கள், நான் உணர்ந்து கொண்டேன்.
பலிபீடச் செந்தீயில் சோதித்துப் பார்க்கச் சொரிந்தேன் - பலியுணவு. யாகத்தீ மூசி எரியவில்லை.
மாமிசத்தால் ஊறி வழிந்த வெறும். ஊனம் நனைத்ததய்யா, நீறுகளை.
அவ்வளவில் பித்தமோ பக்கென்று போய் மறைய, ஊன் கொழுப்பு நீங்கிக் கழன்றதெனச் சீடன் கண் கொண்டு கண்டு செய்தி உரைத்தமையால், உம் முயற்சி தோற்கும் அறிகுறிகள் கண்டேன் நான். ஏனென்றால் எங்கள் கெடுதிக்குக் கால் நீரே. கோயிலின் பீடக் குருதியும், நாய், கழுகு நக்கும் செந் நீரும் இதிபனதே என்றுணர்க. மைந்த அறிக - மனிதர் தவறிழைத்தல் விந்தையே அல்ல.
பெரியோர் கழிவிரக்கம். கொண்டு, கழுவாய் குறித்து முயல்வார்கள். தென்புலத்தார் கொள்கடனைத் தீர்க்கக் கடவீர்நீர்.
அய்யா, உம் சாத்திரங்கள் ஆருக்கு வேண்டுமிங்கே?
ஈசனது நன்மையினை எந்த மனிச்னது செய்கையுமே சற்றேனும் தீட்டுப்படுத்தாது.
 
 

QC
தீய துரோகிக்குச் செவ்வியதோர் கல்லறையா? ஈமச்சடங்கை இனி நான் அனுமதியேன்.
; அவ்வாறு செய்தால், அவமதிப்பீர் சாத்திரத்தை.
சாத்திரத்தார் எல்லாரும் தந்நலத்தார் என்பேன் யான். பொன்னை விரும்பி இவைகளை நான் செய்யவில்லை.
என்ன இழவோ, தொடங்கினதைச் சொல்லிவிடும்.
வேண்டாம் ஒளிப்பு மறைப்பினிமேல், அய்யா.
: இரண்டொரு நாளில் இனிய உமது மகன்
சாவுக்குச் சாவாய்ப் பலியாவான்; போயொழிவான். உண்டிரண்டு முன் கடன்கள்ஒன்று சவ அறைக்குள்
வைத்த உயிருக்கு.
மற்றதுவோ மண்ணுள் புதையாது, போற்றப் படாத உயிருக்கு. மாற்ற இயலா நியதி இது.
தேவர்களும் ஆற்றல் இலார், இதனை ஆகாமற் செய்வதற்கு. ஆற்றிய உம் பாவம் - அதற்குப் பலன் இதுவாம். நரகுலக வேடுவர்கள் நாடி உமக்காகக் காத்திருக்கிறார்கள்.
கரிய வினைப்பலன்கள் உம்மீது வீழும்; உடனே இரை ஆவீர். ஆண், பெண் குரல்கள் அழும் உமது வீட்டில். அயல் நகரம் முற்றும் அடர்ந்து வளைக்கும் உம்மை. நாயும் கழுகும் குருதித் துடக்கதனை வேள்வி உலைக்கும் பலியுணவு மேடைக்கும் கொண்டுவந்து சேர்க்க, அவற்றுக்கும் தீட்டு வரும். இவ்வளவுதான் நான் உரைக்க இருக்கிறது. (சிறுவனிடம்) என் சிறுவா, என்னை அப்பால் இட்டுச்செல். போவோம் நாம்
(போகின்றனர்)
போய்விட்டார், ஈசா!

Page 64
(35CP கிற
(35C
(5(ԼՔ கிற
(35Cp
புகன்றார் கொடுஞ் செய்தி. இத்தனைநாளாய் இயைந்த அநுபவத்தில் சொன்னால், இவருடைய சோதிடங்கள் பொய்ப்பதில்லை.
உண்மை தான்.
நெஞ்சம் உடைகின்றேன்.
என் நிலையை விட்டுக் கொடுக்க முடியாது. வெவ்விதியைத் தாங்குவதும் கூடத் தணியா இடர்ப்பாடே
: புத்தி சொல்வோம், கேட்க விரும்பினால், எம் அரசே,
சொல்லுங்கள், கேட்போம்.
வழி எனக்கு யாதுமில்லை.
பாறைச் சிறையால் அவளை அகற்றிப்
புதையாப் பிணம் புதைத்துக் கல்லறையும் கட்டுகவே.
: நான் இதனை ஒப்பினால், நீரும் நயப்பீரோ?
: ஆமாம், இறையோர் பதகர்களைச்
சங்கரிக்கக் காலத்தைத் தாழ்த்தார்.
கடினமேயானாலும்
செய்யத்தான் வேண்டும் இது. தேவை, தப்ப ஏலாது.
; தங்கள் கரங்களே இச்செயலைச் செய்யட்டும்.
போவேன் நான், இப்போதே!
யாரங்கே, வாருங்கள். கொண்டு வாபிக்கான் - பிளப்பதற்கு மண்வெட்டி குன்றுக்கு வாரும், அடிமைகளே!
அன்னவளை
இட்டேன் சிறைக்குள். இனி நான் விடுவிப்பேன். வானுலகச் சட்டமே வாழ்க்கைக்கு உகந்தனவாம். உண்மை உணர்ந்தேன்.
முடிந்த முடிவிது தான்.
: பேராயிரமுடைய இடியின் மைந்தா,
பெருங் கட்மிய தேவி மகனே, வல்லாய்,
 
 

துத
சீரார்ந்த இற்றலியா, இலுசி என்ற சிறந்த பள்ளத் தாக்குடையாய், தீபசென்னும் ஊரான தாய் நகரின் மண்ணின் மேலே ஊற்றெடுக்கும் இசுமீனம் இனிமை பாய்ச்சக் கூரான அரவசுரப் பல் விளைந்து கொழிக்கின்ற நகரத்தின் உறவே வாராய்.
மலைமுடியில் தீப்பந்தம் ஒளியைக் கால வருகசுற்றாலிய அருவி அருகில், நிம்பர் கலை நடன மகிழ் நுகர, ஐவி பின்னிக் கவின் சிறப்ப, திராட்சை மலி புலத்தினின்றும் நிலை குலையா அமரகுரல் நின்னைப்பாட நீ வருவாய் தீபசெனும் நகரை நோக்கி. தலையளியால் நீ விரும்பும் நகரை நாடித் தாயுடனே வந்திடுவாய், இடியின், மைந்தா!
வருகையினை ஆவலோடு நோக்குகின்றாள். வருத்தமுற்றாள் நெருப்பாலே ; அனைத்து நோயும் திருகிவிட வல்லவனே வருக. நீண்ட சிகரமுடைப் பானசியக் குன்றின் மேலாய், பரவைகளின் மேலாலே வருக, செந்தீ பட உயிர்க்கும் உடு நடிக்கும் உனக்காய், நல்ல இரவு பல பாட்டெடுக்கும், எதிரொலிப்பால். இனியவனே, இயாக்கசே, வருக, வேந்தே!
(தூதன் நுழைகிறான் -மேடைப்புறமிருந்து)
: கட்மியப் பட்டின மக்களே, கேளுங்கள்
அம்பியன் நற்குடியைச் சேர்ந்தோரே, தீபசெனும் மாநகர மக்களே, கேளுங்கள், கேளுங்கள் வாழ்வும் அழிவும் புகழும் வெறும் மாயை மற்றோர் பொறாமைப் படத்தக்க வாழ்வு கிறயனுக்கு வாய்த்ததுதான், முன்னர். அவர் தம் நாட்டைக்
காப்பாற்றிப் பேணினார். கெளரவிக்கப் பட்டிருந்தார். இன்றோ இவை எல்லாம் இல்லாது போயினவாம்.

Page 65
(5CP
gigs
(5(ԱՔ
g525
(5Cup
ġbig
குழு
gills
(95 CP
ଔଷ୍ଣ
gills
இன்பமில்லா வாழ்வும் சிறப்புக்கு நேரன்றோ? பொன்னும் புகழும் புனை முடியும் கோல் நிமிர்வும் இன்னிதய இன்பமில்லை என்றால் வெறும் நிழலே!
என்ன புதினம்?
இழவென்ன, இந்நகர மன்னர் குடியில்? வடிவாய் எடுத்துச் சொல்.
: சாவுக்குக் காலானோர் சாபம் அநுபவித்தார்.
யார் இறந்தார், யார் கொன்றார்?
என்ன, நடந்த செய்தி?
: ஏமன் இறந்தான்.
இவனுடைய சொந்தத்.
தந்தையா கொன்றுவிட்டார்?
தானே - தன் கையாலே.
தந்தை செய்த செய்கை ஒன்றே தான் அதற்குக் காரணமும்.
: சாத்திரம்போல் அன்றோ, சரித்திரமும் ஆயிற்று!
என்ன இனிச் செய்வோம்?
இறையோரே தீர்ப்புரைப்பார். (மாளிகைக் கதவு திறக்கிறது)
: இங்கே இராணி இயூரிடிசி வந்தணைந்தார்.
(இயூரிடிசி வருகிறாள் - பாங்கியர் சூழ)
: நண்பர்களே, நீவிர் நவின்றுள்ள செய்திகளைக்
கேட்டேன்- கதவின் அருகே வரும்போது. பல்லாசுக் கோயிலுக்குப் போகப் புறப்பட்டேன். சட்டென்று கேள்வியுற்றேன், சஞ்சலிப்புச் செய்திகளை, அஞ்சிச் சுழன்றேன், என் பாங்கியரின் கைகளிடை. சொல்லுங்கள் செய்தியெல்லாம்.
சோகம் எனக்கும் புதியதன்றே, நானும் பொறுக்கும் வலிவுடையேன்.
கண்டவனே நான் தான். A.
கதை எல்லாம் சொல்லுவேன். உண்மையே சொல்வேன்.
 
 

உமது கணவராம் மன்னரைப் பின்தொடர்ந்து போனேன் - புதைக்காமல் நாய் தீண்ட நாறிக் கிடந்த, பொலினிசனின் தேகம் இருந்த திடலுக்கு.
தெய்வ துதி செய்தோம், பணிந்தோம், திருவருளை வேண்டினோம். பின்னர் பிணத்தைக் கழுவினோம், தீர்த்தத்தால். பச்சைக் கிளைகள் பரப்பித் தீமூட்டியபின் அப்பிணத்தைத் தீக்கே அளித்தோம், இரையாக. சாம்பல் குவித்துச் சிறுமேடு செய்தோம், நாம். பின்னர் மரணம் மணம்புரிந்த பெண்ணுடைய பாறைச் சிறையை அடைந்தோம்.
அதற்கிடையில், பக்கத்தே நின்ற ஒருவன், குளறல்கள் கேட்பதாய் வந்து கிறயனிடம் கூறினான். கிட்ட அணுக, பலத்த புலம்பல் ஒலி காதுற்றார் மன்னர்.
'கடவுளே, சாத்திரி முன்
சொன்னதுண்மை தானோ? தொடர்வதினித்துக்கமோ? என் மகனா அங்கே புலம்புகிறான், அய்யகோ? யாரேனும் போங்கள், விரைந்து.
பெருங்கல்,
புரட்டப்பட்டுள்ள வழியால் நுழைந்து,
குகை
வாசலுக்குட் போங்கள்.
மகன் ஏமனே தானோ அங்குள்ளான் என்றே அறிந்தெமக்குச் சொல்லுங்கள். இல்லை என்றால் நானே இமையோர் பகடைக்காய்" என்றழுதார் மன்னர்.
நாம் ஏகினோம்.
பார்த்தோம்
=巻。
பாறைக் குகையின் படுதூர மூலையிலே அந்திகனி தொங்கினாள் - ஆடை திரித்தெடுத்த

Page 66
glg5
(35(ԱՔ
தூது
(35(ԱՔ
359
தாம்பு கழுத்தைப் பிணித்தபடி!
அன்னாளின் காதலனோ செத்த சவத்தை அணைத்தபடி போனவளுக்காகப் புலம்பினான்-தந்தையின் வெங்கொடுமை தந்த விதிக்கதியை நொந்தபடி, மன்னர் கிறயன் இரங்கி அழுதபடி
கூவினார்.
'மைந்த, வெளியே வா,
என் செய்தாய்?" மன்னர் குழைவாக வேண்டினார்.
மைந்தனோ அன்னார் முகத்தில் உமிழ்ந்தான், சினம் திருகப் பேசாமல் வாளெடுத்து வீசினான், தந்தையோ ஓடிப் பிழைத்தார், உயிர் தப்பிக் கொண்டுவிட்டார். ஏமாந்து நொந்த இளைஞன், தன் நாரி வழிப் பாய்ச்சினான் வாளை, பதைத்த உயிர் மயங்க, சோரும் கரத்தால் துணையை அணைத்தபடி சாய்ந்தான்.
பிளிட்ட செங்குருதி, செத்தவளின் கன்ன வெளிறல் சிவப்பித்துக் காட்டியது. (இயூரிடிசி மாளிகையுள் விரைந்து மீள்கிறாள்)
: பிணங்கள் இரண்டும் இறப்பில் இணைந்தபடி
வாளா கிடந்தன. இவ்வையகம் ஓர் மானுடனின் துன்மதியால் எய்தும் துயரிழவைக் காட்டுதல் போல்.
என்ன இது, ராணி எதற்காக உட்சென்றார்?
: மாய்ந்த தமது மகனுக்காய் மக்கள் முன்
சாய்ந்து விழுந்து தடுமாறிச் சோராமல், தன்னந்தனியே தமது சகிகளிடைச் சென்றுள்ளார் போலும் அழுது துயர் ஆற்றுதற்கு!
: ஆமாம், இருக்கலாம், அப்படியும்.
ஆனால், அசாதாரண மோனம் ஆபத்தே அன்றோஎல்லை கடந்தே எழுகின்ற ஒலம் போல்
; அத்தகைய மோனம் அபாயம் நிறைந்ததுதான்.
 
 

(5CP கிற
உட்சென்று பார்க்கின்றேன் - உண்டோ அபாயமென (உள்ளே போகிறான்) (மன்னனுக்கு முன்னாக ஏவலர்கள் நுழைகிறார்கள்) மன்னர் வருகின்றார், சொல்லவே நாக் கூசும். செய்தி உடனடியாய்ச் செப்பப்படல் வேண்டும். தான் செய்த குற்றத்தின் பாரந்தான் இவ்வளவும். (ஏமனின் சடலத்துடன் கிறயன் நுழைகிறான்)
தீங்கு செய்த யாருக்கும் தீய கொடும் பாவம்
ஈங்கு மரணத்தை ஏற்படுத்தும்.
நான் மகனைக் கொன்றுவிட்டேன், அந்தோ கொடிய பிடிவாதம் கொண்டுவிட்டேன், ஆதலினால் அன்றோ இளமையினை வெட்டித் தொலைத்தேன் குறுக்கால்- நான் பாதகனே! என் பிழைக்குச் செத்தாய், மகனே, நீ குற்றமில்லாய்.
காலம் கடந்த பின்னர் கண்டீர்கள், உண்மையினை.
துக்கத்தாற் பாடம் படித்தேன், கடவுளே!
மிக்க தண்டம் தந்து கடவுள் படிப்பித்தார். வெங்கொடுமை சாய வெளுத்துவிட்டாார். காலடியில் என் மகிழ்வைப் போட்டு மிதித்தார். நிலையில்லா மானுடனின் புல்லிய வாழ்க்கை இவளவுதான்!
(தூதன் நுழைகிறான் - மாளிகையிலிருந்து)
அய்ய, இன்னும் உண்டே அறிவதற்கு.
வேறென்ன?
இன்னும் துயரா? இதற்கும் மேல்? என்ன அது?
தங்கள் மனைவியார் மாய்ந்தார், இறந்த மகன்
தாயாரும் போய்விட்டார்- சாவின் புது வடுவைத் தம்மிதயம் பூண்டு தவித்தவராய், பாவம்.
தணியாப் பசியுடைய சாவே, இனியுமா
என்னை அழிப்பாய்? எட, தூதா, தீங்குரைப்போய், இல்லக் கிழத்தியுமா ஏகிவிட்டாள்? ரத்தபலி!

Page 67
(35(ԱՔ
gll;25
ģ5
கிற
ģģ5
(35CP
கிற
(5CP
: நான் இனியும் இல்லை.
(நடுக்கதவு திறக்கிறது; இயூரிடிசி உடல் தெரிகிறது)
: நேரிலே காண்க; ஒளிப்பு மறைப்பில்லை, இனி. : அய்யய்யோ, கோரம், அடுத்த பயங்கரம், ஆ!
மைந்தனுடல் கையிலே, மற்ற உடல். அங்கே. இங்கு மகன். அங்கு தாய்.
: கண்கள் இருண்டு வர,
தீட்டியவாளோடு, பலிபீடத்தின் அருகே. செத்த தம் மூத்த மகனை, பிற பேரைக் கூவி அழைத்தார், கொடுஞ்சா நெடுமூச்சால்! தங்களைத் திட்டி, கொலைகாரன் என்று வைதார்.
: அய்யோ, கொடுமை, எனக்கும் ஒரு வாள் வேண்டும்.
: சா இரண்டின் பாரமும் உங்களையே சேரும் என்று
சொல்லிய பின்னர் சுருண்டு மரித்துவிட்டார்.
என்ன செயல் செய்தாள், இறுதியிலே?
; தம் மைந்தன்
செத்துவிட்டான் என்ற அந்தச் செய்தி கிடைத்தவுடன் வாளை நுழைத்தார்தம் மார்பிடையேமாண்டுவிட்டார்.
: பாவச் சுமை, அந்தோ! என்போற் பதகர் யார்?
நானே கொலைஞன், நடத்திப்போ என்னை அப்பால். இங்கினி மேலும் இருக்க முடியாது. மேலும் ஒரு பகலுள் மீண்டும் விழிப்பதற்குச் சற்றும் விரும்பேன்; ஏ, சாவே, உடனே வா!
: நாளை நடப்பதனை நாமறியோம்
ஈனக் கவலைகளே எங்கள் கதி. மீதி எங்கள் கைகளிலே இல்லை, கடவுளரின் பொம்மைகள் நாம்.
; சாவைத் தவிரப் பிறிதொன்றும் வேண்டேன் நான்.
: வேண்டி என்ன நன்மை?
விதியைத் தடுப்பார் யார்?.
-A.
நடத்திப் போ. செத்தவன் நான்.
 
 

(5(ԱՔ
மைந்தனையும் கொன்றேன். மனைவியையும் கொன்றுவிட்டேன். எங்கு செல்வேன், அய்யோ? எனக்குப் புகலேது? குற்றம் புரிந்த கரங்கள், குனிந்த தலை! பற்றிய என் பாவச் சுமையோ பெரும்பாரம்!
(வெளியேறுகிறான்)
புத்தியும், தெய்வத்தின்மேற்
பொருந்திய அச்சம் சார்ந்த பக்தியும் தானே, இன்ப பாக்கியப் பெரும்பேறென்போம் மெத்திய கர்வ பங்க வீழ்ச்சியின் அவலத்தாலே பிற்பட்ட வயதில் மாந்தர் பெறுகின்ற பாடம் கண்டீர்.
(வெளியேறல்)
1969
'சங்கடங்கள்?
முற்றும்

Page 68
விளக்கத்துணை
1.கந்தப்ப மூர்த்தியர் உம்மட்டை - உம்மிடம், அரிவரி - அரிச்சுவடி தொடங்கும் பாலர் வகுப்பு, கமக்கட்டு - அக்குள், கக்கம், கச்சவேலி - ஓர் ஊர் (கற்பனையானது); வரியப்பிறப்பு-ஆண்டுப் பிறப்பு:சோட்டை-நேரே பார்க்க வேண்டும் என்னும் ஆவல்; விட்டா - 'விட்டாள்" என்பதை மரியாதையாய்ச் சொல்லும்முறை. தென்னிந்திய வழக்கில், 'விட்டாங்க" என்பதற்கு ஓரளவு சமனானது; சொல்லுது - சொல்லுகிறாள்' என்பதைச் சற்றே மரியாதையுடன் கூறுவது, அப்பாவிகளுக்குப் பெரும்பாலும் வழங்கும் வினைமுற்று வடிவம்:நிண்டநீர்-நின்றீர்; என்னநினைக்கும்? -என்னநினைப்பார்? (ஆள் அப்பாவிஎன்பதைக் குறிப்பால் உணர்த்தும் வினைவடிவம்) விசர்க்கதை - பைத்தியக் காரப் பேச்சு.
2. வழமை
நாகசின்னம்-நாயனம், எழுத்திலன்று-திருமணப் பதிவுநாளில்:நாண்டு கொண்டு நிக்கிறாய் - பிடிவாதமாய் நிற்கிறாய்; கண்ட கோலமாய் - 'கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்றவாறாய்;உறட்டி-ரொட்டி: றயித்தார்- பதிவாளர் கட்டாடி - சலவைத்தொழிலாாளி, பெடியர்பொடியர், பையர், பயல், புளுகம் - மகிழ்ச்சி, ஆலாத்தி - ஆரத்தி, ஓம்சம்மதம், சரி, சோக்கான- சிறந்த பட்சம் - பிரியம், அன்பு: சோயாவின் பால் - சோயா மொச்சையிலிருந்து பெறும் செயற்கைப் பால்.
3. அந்தகனே ஆனாலும். யாழ்ப்பாணத்துக்கு அப்பெயர் வந்தமைக்கான காரணம் பற்றிச் சொல் லப்படும் செவிவழிக் கதையைத் தழுவியது இந்த நாடகம், "யாழ்ப்பாடி'
 
 

என்பவன் யாழிசையுடன் பாட்டுப்பாடி, ஈழ வேந்தனிடம் ‘மணற்றி என்னும் குறுநிலத்தைப் பரிசிலாய்ப் பெற்றான் என்பர். அந்த யாழ்ப்பாடி, அந்தகக் கவி வீரராகவனே என்பாரும் உளர். இங்கு பாணன் பெயர் இராகவன் எனநின்றது.
4.இடைத்திரை
கருமி- கருமஞ் செய்வோன், அலுவலன், தலைப்பா - தலைப்பாகை (செய்யுள் விக்ாரம், கடைக்குறை) வேறு பிற பேரிலே வேலை இல்லைவேறு பிறராற் பயனில்லை; நொடிப்படங்கள்- Snapshots) விசர்- பித்து, பைத்தியம், புடையன் - நச்சுப் பாம்பு வகை.
5.குனிந்த தலை
இது சொஃவக்கிளிஸ் என்பாரின் 'அன்ற்றி'க'னி என்னும் கிரேக்க நாடகத்தின் தமிழ் வடிவம். தீபசு - கிரேக்க நகரமொன்று, தீபநகர் என்றும் இந்நாடகத்தில் வழங் கப்படும்.இதிபன் - இடிப்பஸ், Oedipus, விதிவசத்தால் தன் தந்தையைக் கொன்று, தன் தாயை மணந்தவன்; உண்மை தெரிந்த பின் தற்கொலை செய்தவன்; பொலினிசன், எதியோக்கிளியன் என்போர் இதிபனின் மைந்தர்கள். இசுமனி, அந்திகனி என்போர் இதிபனின் மகளிர், தென் புலத்தார்- இறந்தவர்கள், கிறயன் - (reon இதிபனுக்குப் பின் தீபசை ஆண்ட வேந்தன், இதிபனின்மைத்துனன், பிக்கான்-pick axe, கெண்டிமூக்குச் செம்பு வாய்ப்பிறப்பு- Confession 'மைந்தன் மணமகள் - கிறயன் மகன் ஏமன் அந்திகனியை மணக்க எண்ணியிருந்தான்; அதனால் இசுமனி கிறயனுடன் பேசும் பொழுது, 'மைந்தன் மணமகள்' என்று அந்திகனியைக் குறித்தாள், சீயன் - Zeus என்னும் தெய்வம் இந்த நாடகத்தில், சீயத்தேவன் சியன் எனவும் வழங்கப்படுகிறான்; 'சிவனை நோக்கிய விளிப்பு 'சிவசிவா' என்று வருவது போல, 'சியனை நோக்கிய விளிப்பு ‘சியசியா' என்று வரும்; காமவேள் - காதல் தெய்வம் எனக் கிரேக்க மரபில் வரும் தெய்வம் இவ்வாறு சுட்டப்பட்டது; காளி - கோர வடிவானதென்று கிரேக்க மரபில் வரும் தெய்வம் இவ்வாறு சுட்டப் பட்டது:நாயனம்-மணமங்கல வாத்தியம் இவ்வாறு சுட்டப்பட்டது; (அ)
தந்திலசின் புத்திரியாள். ; (ஆ) தேனை, பித்தளைச் சிறை; (இ)

Page 69
லயிக்கேசன், பாறைச்சிறை; (ஈ) பீனியசின் மனைவி, வடகாற்றின் ஆட்சிக் காவற்சிறை - இவை எல்லாம் கிரேக்க மரபில் வரும் தொன்மம் பற்றிய குறிப்புகள், சீடன் கண்கொண்டு கண்டு - தயிரீசியன் குருடன் ஆகையால், சீடச் சிறுவன் துணையுடன் காட்சியறிவைப் பெற்றுக் கொள்கிறான், அரவசுரம்- அசுரப்பருமனும் பாம்பின்இயல்புகள் சிலவும் கொண்ட பவுராணிக விலங்கு ட்ற(ய்)'க'ன், dragon , ஐவி- ஒரு வகைச் செடி நிம்பர்-Nymphs என்னும் கடற்கன்னியர், மரணம் மணம் புரிந்த பெண் - மரணதண்டனை பெற்ற அந்திகனி,


Page 70
. பேச்சு மொழியில், உ தன்மையும் (அது) வாழ் ந்து செல்லும் பண்பும் ச மொழிக்கும், நாம் அன் மொழிக்குமிடையே உள் ஒற்றுமையையும்) நிறுவு அன்றாடம் நாம் பயன்படு பேச்சு வழக்கிலே உன தன்மை மிக மிக அதிக செயல், இடம் முதலிய வரும் ஒலிச்சமிக்ஞை மெ குள் ஊடுருவி நாடகச் ெ கிறது. முருகையன்தம் ெ ந்தாநிலை, பொருள் மரு இந்நாடகங்களிற் பயன்ப அன்றாட மொழி வளத்ை ஒழுங்குபடுத்திச் செறிவ. இன்னும் பாத்திரங்களி பீடு, போக்கு விருப்புகள் தெளிவாக்கி வைக்கும் விளக்கும் மொழியாட்சி பண்பைப் புதுப்பித்து பிரயோகம் - இவை என் நிறைவு செய்யப்பட்டுள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஈர்ச்சியை வெளியிடும் வோடு பின்னிப் பிணை காணப்படும். இலக்கிய றாடம் பயன்படுத்தும் ாள வேறுபாட்டையும் வது இதைவிடச் சிரமம். த்தும் மொழி, சாதாரண ர்ச்சியை வெளியிடும் ம். இன்னும், பெயர், வற்றைச் சுட்டும்போது ாழியே, பேச்சு மொழிக் சய்கைக்கு உயிர் ஊட்டு மாழி வளத்தால், பொரு ட்சி என்பனவற்றையும் டுத்தியுள்ளார். அதாவது நப்பாத்திரங்களிடையே ாக்கியுள்ளார்.
ள் உள்நோக்கம், மதிப் முதலியவற்றைக் கூடத் திறன், நுண் பொருள் மொழியின் உருவகப் டணர வைக்கும் சொற் ல்லாம் போதிய அளவு
曹