கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம்
Page 1
3. ଽ &
தமிழிலக்கிய வரலாற்றின் ଶ୍Tଏଁ தடத்தைக் கடந்து இன்று பின் - நவீனத்துவத்தின் வழி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றக் கட்டத்தில் நவீனத்துவத்தின் தாக்கம் குறித்த மறுமதிப்பீடுகளும் பின் - நவீனத்துவச் சிந்தனைத் தடத்தில் நின்றபடி குறைகாணல்களும் எழுவது இயல்புதான். நவீனத்துவம் தமிழிலக்கியத்தை மக்கள் | மயப்படுத்தியதென்றால், பின் - நவீனத்துவம் | மக்களிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் வரலாற்றி
லிருந்தும் பிரிந்து வெறும் உள்மனத் தேடல்களுக்கும் | தனிமனித புலம்பல்களுக்கும் அழுத்தம் கொடுப்பதாய் மாறியது.
இங்கே கண்டன விமர்சனத்துக்கு உட்படுவது பாரதி தொடக்கி வைத்த நவீனத்துவச் செல்நெறியை | அதன் பரிணமிப்புக் கட்டத்தில் முழுமையுடன் வளர்க்காமல் முடக்கி வைத்த பாதைகளும் அவற்றின் அடுத்த கட்டமாக இன்று முளைவிட்டிருக்கும் பின் - நவீனத்துவப் | தவறான
அம்சங்களுந்தான். புத்தம் புதிய வியாக்கியானங்களை | முன் வைக்கும் ஆயிரந்தத்துவங்கள் தோன்றலாம் இன்றும் மார்க்சியம் வெறும் வியாக்கியானம் செய்யும் தத்துவமாயில்லை. அதனால் இந்தப் புதிய தத்துவங்கள் போல சமகால சமுதாயங்களைப் புரிந்துகொள்ளப் போதாதது போலத் தெரிவது மார்க்சியத்தின் சாராம்சத்தைப் புரியாத குருட்டுப் பார்வை மட்டுமே மார்க்சிய நோக்கு வாய்க்கப்பெறின் வியாக்கியானம் செய்ய வாய்க்கப் பெறுதல் மட்டுமல்ல, இன்றைய சீரழிவுகளை வெற்றிகொண்டு புதிய உகமொன்றை வென்றெடுக்கும் வகையில் மாற்றங்களைக் கொணரவும்|
முடியும் எனக் காணலாம்.
Page 2
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம் புதிய கலாச்சாரம்
ந. இரவீந்திரன்
登
தேசிய கலை இலக்கியப் பேரவை
V/
சவுத் விஷன்
Page 3
Kalacharam, Ethirkalacharam, Puthia Kalacharam N. Raveendran First Edition: April 1998 Published in Association with National Association for Art and Literature
by
Vyf
SOUTH VISION 6, Thayar Sahib II Lane Chennai - 600 002.
RS. 50.00
Published and Distributed in Sri Lanka by Vasantham (Pvt.) Ltd. South Asian Books 44, 3rd Floor, CCSM Complex, Colombo - 11. Tel: 335844 Fax: 00941-333279
தேசிய கலை இலக்கியப் பேரவையின்
25வது ஆண்டு நிறைவு வெளியீட்டு வரிசையில் நான்காவது நூல்
கலாச்சாரம், எதிர்க்கலாச்சாரம், புதியகலாச்சாரம் ந. இரவீந்திரன் முதற் பதிப்பு : ஏப்ரல் 1998 வெளியீடு தேசிய கலை இலக்கிய பேரவையுடன் இணைந்து
Vyf
சவுத் விஷன் 6. தாயார் சாகிப் 2வது சந்து, சென்னை - 600 002
bur : 5000
அச்சாக்கம் : மணி ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை - 600 005. லேசர் அச்சு: அல்ஃபா பைட் சென்னை - 600 028. அட்டை அச்சு பிரிண்ட் ஸ்பெஷாலிடி சென்னை - 600 014. அட்டை அமைப்பு ஏஞ்சலோ கிராபிக்ஸ்
உள்ளடக்கம்
பதிப்புரை
முன்னுரை.
என்னுரை
அரசியல் இலக்கியமும் பாரதியும்
பாரதி வரலாறு: ஒரு மறுமதிப்பீடு இருபதாம் நுாற்றாண்டில் தமிழ்ப்புனைகதை இலக்கியம் ஜெயமோகன் திசையழிந்த அத்துவான வெளியில் கலாச்சாரம், எதிர்க்கலாச்சாரம், புதியகலாச்சாரம் பின்னிணைப்பு- 1. திலகரும் காந்தியும் சந்திப்பு பின்னிணைப்பு- 2. 1966 அக்டோபர் 21 எழுச்சி
பக்கம்
VIII
XI
36
62
81
91.
14
117
Page 4
IV
இந்நூல்,
"1966 அக்டோபர் 21" எழுச்சியின் முப்பதாவது நினைவு ஆண்டை நினைவுகூர்ந்து, அந்த எழுச்சிக்கு வடிவங்கொடுத்த தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்திற்கும்,
"சாதியமைப்புத் தகரட்டும்
சமத்துவ நீதி ஓங்கட்டும்"
என்ற பதாகைக்கு உரமாகிய தியாகிகட்கும், அதன் சமூக, அரசியல், கலாச்சாரச் துறைகளின் தலைவர்களாகிய,
எஸ்.ரி.என். நாகரட்ணம்
என்.சண்முகதாசன்
கே.ஏ. சுப்பிரமணியம்
கே. டானியல்
மு. கார்த்திகேசன்
வி. ஏ. கந்தசாமி
ஆகியோர்க்கும்
சமர்ப்பணம்
பதிப்புரை
தமிழ்க் கலாச்சாரம் என்ற பெயரால் தமிழர் மத்தியிலான ஆதிக்க சக்திகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஒரே கலாச்சாரம் இருந்து வந்ததான மாயை இன்று இல்லை. தமிழகத்தில் பிராமணிய கலாச்சாரத்திற்கு எதிராக திராவிட கலாச்சாரம்' போர்க்கொடி தூக்கி ஆட்சியதிகாரத்தையும் வென்று இரு தசாப்தங்களாய்த் தக்கவைத்து வந்துள்ளது.
இன்று திராவிட கலாச்சாரத்துக்குள் தம்மை அடையாளங்காணாத தலித் மக்களின் எதிர்க்கலாச்சாரக் குரல் முனைப்புப் பெற்றுள்ளது. கலாச்சாரத்தின் பேரால் தொடர்ந்து வந்த ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணியத்தின் குரலும் கலாச்சாரத் தளத்தின் மீது பாரிய தாக்குதலைத் தொடுத்துள்ளது. இவற்றின் பேறாக தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் என்பன முனைப்படைந்துள்ளன.
ஈழத்தமிழர் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராகத் தமது அடையாளங்களைத் தக்க வைக்கப் போராடுகிற குழலில் தமிழர் கலாச்சாரப் பாதுகாப்புப்பற்றி பேச நிர்ப்பந்திக்கப்படுகின்றர். ஆயினும், யாழ்ப்பாணத்தின் 'கந்தபுராணக் கலாச்சாரம்' இந்தத் தக்கவைத்தலுக்கான நியாயப்பாட்டை சாதகமாக்கிக்கொண்டு தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முயல்வதை அவதானிக்கமுடிகிறது. யாழ்ப்பாணத்தின் ஆதிக்க கலாச்சாரம் ‘கந்தபுராண கலாச்சாரம்' என்றால் கோயிலினுள் அனுமதிக்கப்படாத ஒடுக்கப்பட்ட மக்களினது 'காத்தவராயன் கலாச்சாரம்" எனத்தக்கதாய் இருந்து வந்தது.
ஆயினும், அறுபதாம் ஆண்டுகளில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்டம் பாட்டாளிவர்க்க உலக நோக்கில் முடுக்கிவிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டதன் பேறாக இங்கே எதிர்க்கலாச்சார இயக்கத்தையும் கடந்து புதிய கலாச்சார உருவாக்கத்துக்கான முன் முயற்சிகள் தோற்றம் பெற்றிருந்தன. அப்போராட்டம் சார்பான இலக்கியங்கள் இழிசனர் இலக்கியம்' எனப்பட்டன. இந்த இழிசனர் இலக்கியம் என்பது தீண்டாமைக் கொடுமையைச் சந்தித்தவர்களுடையதாய் மட்டும் இருக்கவில்லை. சாதிய வரம்புகள் கடந்த உழைக்கும் மக்களின் ஐக்கியப்பட்ட குரலாய் தீ. ஒ. வெ.இ. அமைந்தது போன்றே இழிசனர் இலக்கியமும் அமைந்திருந்தது.
இக்காரணங்களால் தமிழகச் குழலில் தலித் இலக்கியம், எதிர்க்கலாச்சாரம் என்பன முனைப்புறும் அதே வடிவத்தில் ஈழத்தமிழரினது இல்லை. பேரினவாத ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடும் ஈழத்தமிழிலக்கியம் இழிசனர் இலக்கியமாக அமைந்திருக்க வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் தொடர்ந்தபடிதான். பேரினவாத இராணுவ ஆக்கிரமிப்பு யுத்தத்துக்கெதிராகப் பல வடிவங்களில் வெளிப்படும்
Page 5
VI
போராட்ட இலக்கியம் அறுபதுகளில் இழிசனர் இலக்கியமாய் முகிழ்த்து எழுபதுகளில் எதிர்ப்பிலக்கியமாய்ப் பரிணமித்த வடிவத்தின் வளர்ச்சி ஆகும். எழுபதுகளில் இலங்கையில் மக்கள் இலக்கிய வடிவம் முழு வீச்சுடன் வீறுபெற்றெழுந்தமை இங்கு சுட்டப்பட வேண்டியது. ஈழத்துச் சிறுகதை, நாவல், கவிதை, திரைப்படம் என்பன புதிய பல பரிமாணங்களைத் தமிழிலக்கியத்துக்கு வழங்கியிருந்தது. ஐரோப்பிய வரலாற்றுப் போக்கின் நவீனத்துவ, பின் நவீனத்துவக் கட்டங்களை ஈழத்து வரலாற்றுச் செல்நெறியில் தேட முயல்வது அபத்தமானது. எமது இயங்கு திசை வேறானது.
எமது இயக்க வளர்ச்சி வேறுவகையானது என்பது வரலாற்றுச் செல்நெறியின் விசேட அம்சங்களால் தீர்மானிக்கப்பட்டது. தமிழகம் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கண்ட மாற்றத்தை அரை நூற்றாண்டுகளின் பின்னேதான் ஈழ வரலாறு காண நேர்ந்தது. பாரதி வாயிலாக தேசிய இலக்கியம் தமிழகத்தில் பெற்ற வீச்சினை முழு அளவில் ஈழம் ஐம்பதுகளில்தான் பெற முடிந்தது. ஆயினும் வரலாற்று நெருக்குவாரங்கள் பின்னர் வேகம் பெறத் தொடங்கவே அதன்பின் மக்கள் இலக்கிய வளர்ச்சி வேகம் ஈழத்தில் பகிய வடிவங்களில் முன்னேற முடிந்துள்ளது.
பாரதியிடமும் இதனைக் காணமுடியும்; ஐரோப்பிய வரலாறு பல தசாப்தங்களாய் கண்டடைந்த மாற்றப் போக்குகளின் குணாம்ச வேறுபாடுகளின் தாக்கத்தால் விளைந்த புதிய வேகம், பல தீர்க்கதரிசனங்கள் பாரதியிடமிருந்து வெளிப்பட வாய்ப்பைத் தந்தது. நூற்றாண்டுகளுக்கு முந்திய மறுமலர்ச்சிக் காலத்தை மட்டும் பாரதியிடம் அடையாளம் காண்பது அபத்தம், சோஷலிஸ் சகாப்தத்துக்குள் உலக வரலாறு பிரவேசிக்கையில் பாரதி இந்தியத் தத்துவ தரிசனப் பார்வையை புதிய உலக நோக்காக வளர்த்தெடுத்திருந்தார். 'பாரதியின் மெய்ஞ்ஞானம்' என்ற ஆய்வு நூல் வாயிலாக இந்த மாற்றப் போக்கைத் தொட்டுக் காட்டிய ந. இரவீந்திரன் 'கலாச்சாரம், எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம்' என்ற இந்த நூலினூடாக ஐரோப்பிய வரலாற்றில் பின்னர் தோன்றிய நவீனத்துவத்தை தமிழ்ச்சூழலில் பாரதி முன்னதாகவே தொடக்கி வைத்துள்ளதை மனங்கொண்டு தனது ஆய்வுகளை வெளிக்கொணர்ந்திருப்பதை அவதானிக்கலாம்.
இத்தகைய புறநிலை யதார்த்த வேறுபாடுகளை மனங்கொள்ளாமல் ஐரோப்பிய நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்ற செல்நெறிகளை அப்படியே இங்கு இறக்குமதி செய்ய முயலும் எத்தனிப்புகள் வீணானவை. சில பல சந்தர்ப்பங்களில் இந்த வரம்பைக் கடந்து எமது முன்னோக்கிய நடையெழுச்சியைத் தடைப்படுத்துவதாகவும் ஆகிவிடுகிறது. தமிழர் போராட்டத்திலிருந்து ஒதுங்கி நிற்பதோடு எதிர்க்கவும் செய்யும் சிலர் இன்று போராட்ட இலக்கியமாய்ப் பரிணமித்துள்ள மக்கள் இலக்கியத்தை அழகியலின் பேரால் இருட்டடிப்பு செய்ய முயல்கின்றனர். இதற்கு பின்-நவீனத்துவம் ஏற்ற கவசமாகியுள்ளது. ஐம்பதுகளில் இழிசனர் இலக்கியம்' எனக் கூறி மக்கள் இலக்கியத்தை மரபுவாதிகள் நிராகரிக்க
VII
முயன்றதை இது ஒக்கும்; எழுபதுகளில் தீண்டாமைக் கெதிரான எதிர்ப்பிலக்கியத்தை இத்தகையவர்கள் ஏற்காதிருந்ததையும் கண்டிருக்கிறோம். சூரியனைத் தங்கள் கைகளால் மறைக்க முயன்று தோல்வி கண்டதை இவர்கள் மறந்து விடவில்லை. இப்போது புனிதமான தூய அழகியல் வாதத்தை மிக "லேட்டஸ்ட் பின்நவீனத்துவத்தின் பேரால் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். சாராம்சத்தில் இந்தப் பின்நவீனத்துவக் குரல் அன்றைய பழைமைவாதத்தின் மறுவடிவமே!
இத்தகைய தடைகளனைத்தையும் வெற்றி கொண்டு இழிசனர் இலக்கியம், எதிர்ப்பிலக்கியம், போராட்ட இலக்கியம் என்பன முன்னேறி மக்கள் இலக்கியத்துக்கான அழகியலை வெளிக்கொணரும். இத்தகைய போராட்டங்களுக்கூடாக எதிர்க்கலாச்சாரத்திலிருந்து புதிய கலாச்சாரம் நோக்கிய வளர்ச்சித் தேவையை நாம் வந்தடைந்திருக்கிறோம். எதிர்க்கலாச்சாரம் என்ற கட்டத்துக்குள்ளேயே முடங்க முயல்வது சிலரது பிழைப்புவாதத்துக்கு அவசியமாயிருக்கலாம்; மக்களைப் பொறுத்தவரை ஆதிக்க வடிவங்கள் அனைத்தையும் தகர்த்து, விடுதலை பெற்று, ஆளுமை கொள்வதன் வாயிலாக புதிய கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதே அவசியமானது.
இந்த நூல் இத்தேவையை வலியுறுத்தும் விவாதங்களை முன்வைத்துள்ளது; பாரதி தொடக்கி வைத்த தமிழின் நவீனத்துவப் போக்கு தமிழகத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் விவாதிக்கப்படுகின்றது. தமிழகத்திலிருந்து வேறான வளர்ச்சிப் போக்கு ஈழத்து இலக்கிய வரலாற்றில் உண்டு. ஐம்பதாம் ஆண்டுகளில் பாரதியை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்ட தேசிய இலக்கிய இயக்கத்தின் வளர்திசை ஒருவகையில் பாரதி வழியின் தொடர் பரிணமிப்பாகவே இங்கு அமைந்து வந்துள்ளது. இன்றைய புலம் பெயர்ந்தோர் இலக்கியத்திலும் பேராட்ட இலக்கியத்திலும் இதன் தொடர்ச்சியைக் காணமுடியும். இங்கே மாயாவாதம் மேலோங்க முடியாமற் போனமை எமது இருப்புக்கான போராட்டத்தை தொடர வேண்டியிருப்பதால் எழுந்தது.
ஈழத்து அனுபவம் வேறாக இதே ஆசிரியரால் ஆராயப்பட்டுள்ளது. அது 'ஈழத்து எதிர்ப்பிலக்கியப் போக்கும் தேசிய இலக்கியக் கோட்பாடும்' என்ற நூலாக இந்நூலைத் தொடர்ந்து வெயியிடப் படவுள்ளது. இந்த நூல் மீதான உங்களது விமரிசனம் அதற்கு உதவும். விவாதங்களைத் தொடர்வோம்.
12.5.1997 தேசிய கலை இலக்கியப் பேரவை
Page 6
முனனுரை
மார்க்சிய இலக்கியப் பார்வை நேர்முகமாகவும், மறைமுகமாகவும் பலவாறு விமர்சனத்திற்கு உட்பட்டு வந்தாலும், அந்தப் பார்வையின் செழுங்கூர்மையைச் சேதப்படுத்த முடியவில்லை. சேதப்படுத்த முயல்வோரைச் சாடிச் சாய்ப்பதில் மார்க்சிய ஆய்வாளர்கள் கண்ணுங்கருத்துமாக இருந்து வருகின்றனர். இவர்களுள் ஒருவராக தோழர் ந. இரவீந்திரனை இனங்காண முடிகிறது.
'கலாச்சாரம், எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம்' எனும் தலைப்பில் அவர் நிலைமறுப்பின் நிலைமறுப்பு சிந்தனை வளர்ச்சி விதியை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். கலை இலக்கிய வடிவங்களிலும், உள்ளடக்கங்களிலும் இயக்கவியல் செயற்பாட்டின் வழிப்படுத்தும் இலக்கிய செல்நெறிகளைச் சுட்டிக்காட்டி, தமது திறனாய்விற்கு அரண் அமைத்துள்ளார்.
ஐந்து கட்டுரைகளைக் கொண்டுள்ள இந்நூலில் 'அரசியல் இலக்கியமும் பாரதியும்', 'பாரதி வரலாறு ஒரு மதிப்பீடு' என்னும் இரு கட்டுரைகள் பாரதியியல் ஆய்வில் நேரடித் தொடர்பு கொண்டுள்ளன. பிற கட்டுரைகளிலும் வேண்டுமிடங்களில் பாரதியியலின் கூறுகளை வெளிப்படுத்தியுள்ளார். பாரதிஇழை நூல் முழுவதும் இணைந்தோடுவது நூலின் தனிச் சிறப்புகளில் ஒன்றாகும். மார்க்சியத்தில் எந்த அளவு தோய்ந் துள்ளாரோ, அந்த அளவு பாரதியியலிலும் இரவீந்திரன் தோய்ந்துள்ளது அவருடைய இலக்கிய ஆளுமையின் வலிமையை எடுத்துக்காட்டுகிறது.
'அரசியல் இலக்கியத்தின் முன்னோடியாக வாழ்ந்து வழிகாட்டிய பாரதி' என்று இந்நூலாசிரியர் குறிப்பிடுமிடத்தில் கவிதை இலக்கியத்தைக் குறிப்பிடுகின்றார் என்று கொள்ள வேண்டும். தமிழில் வெளிவந்த முதல் அரசியல் அரிச்சுவடி, 1883-இல் வெளிவந்த 'காங்கிரஸ் வினா-விடை என்னும் வெளியீடாகும். இதை எழுதியவர் அக்கால 'சுதேசமித்திரன்' ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய ஐயர். வெளியிட்டது, 'உபயோகமான அறிவைப் பரப்பச் செய்யும் சபை'
தமிழ்நாட்டின் புதிய விழிப்புக்கு ஆதிகர்த்தாக்களாக' விளங்கியவர்களுள் ஒருவராக ஜி. சுப்பிரமணிய ஐயரை பாரதியார் பாராட்டியுள்ளார். ஜி. சு. ' வின் அரசியல் தமிழ் வெளியீடுகளின் எண்ணிக்கை பதினொன்றாகும். தமிழிலக்கிய மரபில் சரியான உலக நோக்கை உருவாக்கியதிலும் ஆன்மீகத்தை தனது சிந்தனைக்கு 'விலங்கிடும் தத்துவமாக' கொள்ளாமல் 'புதிய நிலைக்கு மாற்றியமைக்க துணிந்த" பாங்கிலும், பாரதி தரிசனத்தைக் கண்டால் 'பாரதியின் பலவீனம் பற்றி அதிகம் பேச்செழாது' என்று மிகச் சரியாகவே விளக்கியுள்ளார், நூலாசிரியர்.
'பாரதி வரலாறு `ஒரு மறுமதிப்பீடு' எனும் தலைப்பில் இரவீந்திரன் எழுதியுள்ளதில் பாரதியியல் ஆய்வாளரான கோ. கேசவன் தக்கச் சான்றுகளுடன் மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
IX
'இருபதாம் நூற்றாண்டு புனைகதை இலக்கியம்' எனும்
கட்டுரையில் பாரதியை தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். 'மணிக்கொடி'யும் எழுத்து'ம் பாரதி வழியைத் தொடரவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளதும் கவனத்திற்குரியது.” சரஸ்வதி, தாமரை, செம்மலர் முதலான இதழ்கள் பாரதி வழியில்
'பெரும்பிரயத்தனங்களை' எடுத்ததையும் குறிப்பிட்டுள்ளார் இரவீந்திரன்.
இவர் கல்கி, ஜெயகாந்தன் முதலான பல தமிழ் எழுத்தாள்ர்களை விமர்சனம் செய்து வருமிடத்தில் புதுமைப்பித்தனைப் பற்றி விமர்சனம்
செய்துள்ளது பலத்த விவாதத்தை எழுப்பும். மேலை நாட்டு இலக்கியத் தாக்கத்தை வெளிப்படுத்தி வந்த 'மணிக்கொடி', 'தூயகலை" யிலேயே நாட்டம் கொண்டிருந்தாலும், புதுமைப்பித்தனின் உள்ளடக்கங்கள் சமூக பிரச்சனைகளை எடுத்தாண்டுள்ளன. 'நம்பிக்கை வரட்சி பற்றி அவர் குறிப்பிட்டிருந்தாலும், அவர் சிறுகதைகள் அத்ையும் மீறியப் பாங்கினையுடையவை. அவர் விட்ட இடத்தை நிரப்ப இன்னொருவர் இதுவரை தோன்றவில்லை என்பதும் வலிமையான கருத்தாகும்.
புனைகதை இலக்கியத்தில் 'அமைப்பியல்வாதம் 'பின் நவீனத்துவம் தலைகாட்டி வருவதையும் கவனத்தில் கொண்டு இரவீந்திரன் இவ்விரண்டு ‘வாதங்களின் போலித்தனத்தை எடுத்துக்காட்டியுள்ளார். இவ்விரு வாதங்களும் மார்க்சிய முற்போக்கு குணாம்சத்தை குறிவைத்து தாக்குவதையும் கவனிக்கத்தூண்டுகின்றார்.
யதார்த்தவாதத்தில் பூத்த இரு நறுமலர்கள் ‘தலித்தியம்', 'பெண்ணியம்'. நவீன இந்திய இலக்கியத்தில் மிகச் சிறப்புடன் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கூறு, "தலித் இலக்கியம். ஒடுக்கப்பட்டவர்களைக் குறிப்பிடும் தலித் என்ற மராட்டி மொழிச் சொல் இன்று இந்திய இலக்கிய மொழிப் பொதுச் சொல்லாக பல்வேறு மொழிகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. தலித் இயக்கத்தின் இலக்கிய ஆவேசக் குரலாக இன்று தலித் இலக்கியம் ஒலித்துக் கொண்டு வருகின்றது.
1926-ல் மராட்டிய மொழியில் வெளிவந்த டிஜவால்களின் 'தேஸ்கா துஷ்மன்' (நாட்டின் பகைவன்) என்னும் கட்டுரை தலித் இலக்கியத்தின் தொடக்கமாகக் கூறப்படுகின்றது. இந்தக் கட்டுரையில் மராட்டிய மொழி யின் புகழ் பூத்த இலக்கியக் கர்த்தாவான விஷ்ணு கிருஷ்ண சிப்லங்கரும், லோகமான்ய பாலகங்காதர திலகரும் தாக்கப்பட்டனர். இதன் காரணமாக, பிராமணர்கள் கட்டுரையாசிரியர் மீது வழக்கு தொடுத்தனர். தலித் இலக்கியத்தின் போர்க்குரல் அதன் மலர்ச்சிக் காலத்தில் இயல்பானதே.
தமிழகத்தில் பண்டிதர் த. அயோத்திதாஸ் (1845-1914)அவர்கள் கட்டுரைகளில், நூல்களில், அவர் 1907 முதல் நடத்திய 'ஒரு பைசாத் தமிழன்’ இதழிலும் தலித் இலக்கியச் சார்புடையனவற்றைக் காண இயலும், தமிழில் தலித் இலக்கிய முன்னோடி பண்டிதர் க. அயோத்திதாஸ் என்றும் கூற முடியும். தமிழகத்தில் பெரியாருக்கு முந்திய பகுத்தறிவு இயக்கச் செம்மல்களில் ஒருவர், அயோத்திதாஸ் என்பதும் நினைவிற்குரியது.
Page 7
X
தமிழில் தலித் இலக்கியப் போக்குகளை விமர்சனம் செய்யும் இரவீந்திரன் சாதிப் பார்வையைக் காட்டிலும், வர்க்கப் பார்வைக்கே முதலிடம் தந்து, அது ஒன்றே பிரச்சினைக்கு தீர்வும் ஆகும் என்று வாதிட்டுள்ளார். இதற்காக அவர் ஈழத்தமிழ் எழுத்தாளர் காலஞ்சென்ற டானியல் பற்றி செய்துள்ள விமர்சனம் கவனிக்கத்தக்கது. சாதிப் போராட்டமா? வர்க்கப் போராட்டமா? இவற்றுள் எது முதல் தேவை என்பது இன்று பரவலாக விவாதிக்கப்படுகின்றது. இரண்டும் இணைவது இன்றைய அவசர அவசியத் தேவையாகும்.
தற்காலத் தமிழ் இலக்கியத்தில் இருவேறு திசைகளில் நின்று இலக்கிய முரசு கொட்டும் இளைஞர்களில் அ. மார்க்சும், ஜெயமோகனும் திறனாய்வாளர்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்து வருகின்றனர். இவ்விரு வரையும் மிகத் துல்லியமாக விமர்சனம் செய்துள்ளார் இரவீந்திரன். மார்க்சியத்தை கொச்சைப் படுத்தியும், பிறழ்ச்சியுறும் பார்வை யில் எழுதி வருவதாகவும் அ. மார்க்சை விமர்சனம் செய்துள்ள பகுதிகள் குடும் சுவையும் நிறைந்தவை.
ஜெயமோகன் மீதான விமர்சனம் விரிவானது. 'சிறுகதைக்கு ஓரளவுக்கு நம்பிக்கையூட்டுவது ஜெயமோகன்' என்று பேராசிரியர் சிவத்தம்பி பாராட்டியதை ஏற்க மறுத்துள்ளார், இரவீந்திரன்.
அ.மார்க்ஸ், ஜெயமோகன் இலக்கியப் பார்வைகளை மார்க்சிய இலக்கியப் பார்வையில் மறுத்து ஒதுக்க எழுதப்பட்டதே "ஜெயமோகன் திசையழிந்த அத்துவான வெளியில்' எனும் கட்டுரையும், 'கலாச்சாரம், எதிர்க்கலாச்சாரம், புதியகலாச்சாரம்" எனும் கட்டுரையும் ஆகும். இந்த இலக்கிய விவாதங்களில் தமிழ் சிற்றேடுகளை பயன்படுத்திக்கொண்டுள்ள பாங்கு, இரவீந்திரனுடைய வாசிப்புத் தேடலைப் புலப்படுத்தவல்லது.
ஈழத் தமிழ் இலக்கியம் 'பின் தங்கிய நிலையில் இருப்பதாக ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளதை இரவீந்திரன் மறுத்துள்ளதும் இலக்கிய விவாதத்தின் தர மேம்பாட்டைக் காட்டுகின்றது. இவ்வாறே அவர் முன்பொரு சமயம் வண்ணநிலவனையும் விமர்சனம் செய்துள்ளார்.
தற்கால இலக்கிய உணர்வுகளின், செயல்பாடுகளின் பல்வேறு போக்குகளை இயக்கவியல் பொருள் முதல்வாத அணுகுமுறையில் தேர்ந்து தெளிய இந்நூல் வாசகர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. மக்கள் இலக்கியத் தையும், அவ்வழிப்பட்ட திறனாய்வுகளையும் இரவீந்திரன் இந்நூலில் விவாதித்துள்ளதும் இந்நூலின் தனிச் சிறப்புகளில் ஒன்று. இலங்கையின் தேசிய கலை இலக்கியப் பேரவையின் முற்போக்கு அம்சங்கள் இந்நூலில் எதிரொலித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
18-12-1995 சென்னை. பெ.சு. மணி
என்னுரை
தமிழிலக்கிய வரலாற்றின் செல்நெறி நவீனத்துவத் தடத்தைக் கடந்து, இன்று பின் நவீனத்துவத்தின் வழி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றக் கட்டத்தில் நவீனத்துவத்தின் தாக்கம் குறித்த மறுமதிப்பீடுகளும் பின்நவீனத்துவச் சிந்தனைத் தடத்தில் நின்றபடி குறைகாணல்களும் எழுவது இயல்புதான். நவீனத்துவம் தமிழிலக்கியத்தை மக்கள் மயப்படுத்தியதென்றால், பின் நவீனத்துவம் மக்களிடமிருந்தும், சமூகத்திடமிருந்தும், வரலாற்றிலிருந்தும் பிரிந்து, வெறும் உள்மனத் தேடல்களுக்கும் தனிமனித புலம்பல்களுக்கும் அழுத்தம் கொடுப்பதாய் மாறியது.
இந்த உணர்வு நிலையிலிருந்து, சமூகச் சச்சரவுகளிலிருந்து ஓடியொழிந்து தன்மனதினுள் புதைந்தபடி, பாரதியைப் பார்க்கும் ஒரு கலைஞன், 'நான் பாரதியை மகாகவியாகவே ஏற்றுக்கொள்வதில்லை. மகாகவி என்பவன் ஒரு மக்கள் சமூகத்தின் கவித்துவ நுண்ணுணர்வை, அவர்கள் வாசிக்கும் முறையையே மாற்றி அமைக்கக் கூடியவனாக இருக்கவேண்டும்.' (பார்க்கநந்தலாலா,மார்ச்-செப்டெம்பர். 1995 பக்.17) எனக் கூறக் கூடியதாகியுள்ளது. இதற்குத் தனியே பதில் எதுவும் வேண்டியதில்லை, கு.ப.ரா., சிட்டி ஆகியோரின் 'கண்ணன் என் கவி' போதும்.
பாரதி பிரதிநிதித்துவப்படுத்திய நவீனத்துவச் செல்நெறியின் இன்றைய பரிணமிப்பு எவ்வாறு அமையவேண்டும் என்பதை மட்டிடுவதற்கு,பாரதியைத் தந்த அந்த வரலாறும், சில குறித்த அம்சங்களில் அதற்கெதிராகச் செல்லும் இன்றைய பின்-நவீனத்துவக் குணாம்சங்கள் தோன்ற ஏதுவான காரணிகள் குறித்தும் பார்வைத் தெளிவு அவசியமானதாகும். அதற்கான உணர்வுத் தூண்டலை இக்கட்டுரைத் தொகுதி அருட்டிவிடும் என நம்புகிறேன்.
இத்தொகுதியில் அடங்கியிருக்கும் முதற் கட்டுரையான 'அரசியல் இலக்கியமும் பாரதியும்', பேராசிரியர் கைலாசபதி தலைமையில் தே.க.இ. பேரவை நடாத்திய பாரதி நூற்றாண்டுத் தொடர் ஆய்வரங்கின் போது அவரால் நெறிப்படுத்தப்பட்டு அவர் தலைமையில் வாசிக்கப்பட்ட கட்டுரை. பின்னர் 'தாயகம்' சஞ்சிகையிலும் அந்த ஆய்வுக் கட்டுரைகளனைத்தையும் தொகுத்து வெளியிட்ட 'பாரதி பன்முகப் பார்வை' யிலும் வெளிவந்தது.
அந்தக் கட்டுரையுடன் பேராசிரியர் க. கைலாசபதி உட்படப் பலரும் உடன்பாடு கொண்டிருந்தபோதிலும் எல்லோருமே அதன் கருத்துகளை ஏற்றுக் கொண்டு விடவில்லை. பாரதியை இறுகிப்போன வறட்டுத்தத்துவங்களினூடாகப் பார்த்துப் பெறப்படும் தவறான கணிப்புகள் தொடர்வன, அவற்றை மேலும் ஆதாரங்கள் கொண்டு மறுக்கும் நோக்குடன்
Page 8
XI
எழுதப்பட்ட கட்டுரை 'பாரதி வரலாறு ஒரு மறு மதிப்பீடு' இதனை 'பண்பாடு' சஞ்சிகையில் பிரசுரிக்க இசைந்த அதன் பிரதம ஆசிரியரும் இத்துசமய அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளருமான கே. சண்முகலிங்கம் அவர்களுக்கு நன்றி.
அதையடுத்துள்ள 'இருபதாம் நூற்றாண்டில் புனைகதை இலக்கியம்' வவுனியா மாவட்ட செயலகம் 16.09.95 அன்று நடாத்திய வவுனியா பிரதேச இலக்கிய விழாவின் ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை (இதன் ஒரு பகுதி மேற்படி இலக்கிய விழா சார்பாக வெளியிடப்பட்ட 'கலை மருதம்' சிறப்பு மலரில் வெளிவந்தது). 'ஜெயமோகன்திசையழிந்த அத்துவான வெளியில்' என்ற திறனாய்வுக் கட்டுரை 'நந்தலாலா' சஞ்சிகைக்காக எழுதப்பட்டது. இவற்றில் பின் நவீனத்துவம் ஏற்படுத்திய மாற்றப் போக்குகள் குறித்து கவனஞ்செலுத்தப்பட்டதாயினும் அவை எழுப்பிய கலாச்சாரம் சார்ந்த சர்ச்சைகள் வேறாக அணுகப்பட வேண்டும் என உணர்ந்தநிலையில் இந்தத் தொகுப்புக்காக எழுதப்பட்ட கட்டுரை 'கலாச்சாரம், எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம்'
முதற் கட்டுரையிலிருந்து இந்த இறுதிக் கட்டுரைவரையில் கலாச்சாரம், எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் தொடர்பான ஒரு இழை மறைமுகமாயேனும் தொடர்புற்றுச் செல்வதன் காரணமாக இத்தொகுப்பில் அவை ஒன்றாக்கப்பட்டுள்ளன. பாரதியிலிருந்து அவரது வழியை விட்டு விலகிச் சென்று இருதிசை வழிப்படும் அ.மார்க்ஸ், ஜெயமோகன் வரையான பயணிப்பின் அடிப்படையை இனங்காண இவை முயல்வன.
பிராமணியம் குறித்து இங்குள்ள கருத்துத் தொடர்பாக எவராயினும் கோபங்கொள்வதென்பது 'பார்ப்பானை ஐயரென்ற காலம் போச்சே' என்ற அந்த ஐயரின் தீர்க்கதரிசனம் இன்னமும் கைப்படவில்லை என்பதன் விளைவு. முற்போக்குணர்வுள்ள எவரும் அவ்வாறு சினங்கொள்ளமாட்டார். அத்தகையவர்கள் பாரதியைப் போல பார்ப்பன அடையாளங்களை இழப்பதற்கு அஞ்சாதவர்கள்.
தலித்தியம் தொடர்பாக சொல்லப்படும் கருத்து தலித் உணர்வின் பலத்திலிருந்து வருவது. "தேசிய கலை இலக்கியப் பேரவை' ஒரு வகையில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் பிள்ளை. அந்த தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைமையின் கீழ் ஒடுக்கப்பட்ட மக்கள் 1966 ஒக்டோபர் 21 எழுச்சியில் அணிதிரண்டு 'சாதியமைப்பு தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும்' என்ற பதாகையை ஏந்தியபடி பரந்துபட்ட ஐக்கிய முன்னணியொன்றைக் கட்டியெழுப்பி நடாத்திய போராட்டங்கள்தாம் அண்மைய ஈழ வரலாற்றில் பாரிய அளவில் சமூக அடித்தளத்தை ஆட்டிவைத்தது என்பதைக் காய்தல் உவத்தலற்ற ஆய்வாளர் யாரும் ஏற்பர் (அதன் பின்னர் வெடித்த இனவிடுதலைப் போராட்டம் சமூக அடித்தளத்தில் வெகுஜன இயக்கப் போராட்டத்திற்கு பின்னர் அதன் வழியே அடுத்தகட்ட வளர்ச்சி எதையும் ஏற்படுத்துவதான முயற்சி எதிலும்
XIII
இறங்கவில்லை தேசியப் போராட்டத்திற்காக அனைவரையும் ஐக்கியப்படுத்துதல் என்ற வகையில் ஏற்கனவே, முந்திய தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க போராட்டத்தில், எட்டப்பட்ட விடுதலைத்தளங்களை உறுதிப்படுத்தியதுடன் இனவிடுதலைப் போராட்டம் அமைதிகண்டுள்ளது. அதற்கடுத்த நிலை குறித்து இதுவரை கவனஞ்செலுத்தப்படவில்லை).
தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்ட வீச்சுடன் வீறுகொண்ட படைப்பாளிகள் ஒன்றுபட்டுத்தான் 1974ஆம் ஆண்டில் தேசிய கலை இலக்கியப் பேரவை உதயமானது. அந்தப் பேரவையின் பாசறையில் வளரும் எமக்கு இயங்கியல் - பொருள்முதல்வாத உலகக் கண்ணோட்டத்தில் நிலையூன்றவும் வளரவும் உறுதுணையாய் அமைந்தது தீ.ஒ.வெ. இயக்கமே. அந்தத் தலித் விடுதலை மார்க்கம் என்பது தலித்திய வழியிலல்ல வர்க்கப் போராட்டக் கண்ணோட்டத்திலேயே சாத்தியம் என்பது தீஒ.வெ.இயக்க போராட்ட வரலாற்றுப் படிப்பினையாகும்.
தே.க.இ. பேரவை ஸ்தாபகர்களில் ஒருவரான டானியல் தலித் இலக்கியத்தின் முன்னோடியாகக் கருதப்படுவது அந்தப் போராட்டப் பாதையின் அருங்கொடை. ‘தலித் இலக்கிய முன்னோடி' என்பதை டானியலும் ஏற்கக்கூடும்;அவ்வாறு ஏற்க நேரினும் தலித்தியம்' விடுதலைக்கான தத்துவம் என்பதை எங்களைப் போலவே அவரும் ஏற்கம்ாட்டார் (அவரது இறுதிக் காலத்தில் அவர் தே.க.இ. பேரவையுடன் முரண்பாடு கொண்டிருந்தாராயினும், இன்று சொல்லப்படும் தலித்தியம்' அல்ல, வர்க்கப் பார்வையே தனது மார்க்கம் என்பதை, இறுதிவரை தனது படைப்புகளின் முன்னுரைகளில் வலியுறுத்தி வந்திருக்கின்றார். ஆயினும் அவரது படைப்புகள் அவர் விரும்பியவாறு வர்க்கப்பார்வையிலன்றி சாதி நோக்கிலேயே அமைந்து விட்டமை அவரது சக்தியையும் மீறிய துரதிஷ்டம்). தலித் இலக்கியம் தமிழகச் சூழலில் பிறப்பெடுப்பது இன்றைய தவிர்க்கவியலா வரலாற்று நியதி, அந்தவகையில் ஏற்றாக வேண்டியது. தலித்தியம் என்பது தலித் மக்கள் சார்பாக எதிர்க்கப்பட வேண்டியது. சமூக விடுதலையைத் தரப்போவது தலித்தியமல்ல -மார்க்ஸியமே என டானியல் போல நாமும் தொடர்ந்து அழுத்திச் சொல்வோம்.
டானியல், அ.மார்க்ஸிடம் காட்டிய மதிப்பு அவர் மார்க்ஸியத்தை ஏற்றார் என்ற வகையில்தான். இன்றுள்ள 'மார்க்ஸியத்தைக் கடப்பது'என்ற நிலையுடன் டானியலுக்கு ஒரு போதும் உடன்பாடு இருந்ததில்லை. அதிலும் 'எண்பதுகளுக்கு பிறகு தகவல் சமூகமாக,பணித்துறை சார்ந்த தொழிலிலுள்ளோர் மொத்த உழைப்புச் சக்தியில் அதிக சதத்தினராக மாறிவருகிற உலகம் உருவாகிவருகிறது. பாட்டாளிவர்க்கமே உலகளாவிய வர்க்கம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பதும், பாட்டாளி வர்க்கத்தின் ஏகப்பிரதிநிதியான எங்கள் கட்சித் தலைமையின் கீழ் எல்லா மக்கட்பிரிவினரும் தத்தம் அடையாளங்களை விட்டுவிட்டு ஒன்று திரளுங்கள் என்று கூறிக்கொண்டு உட்கார்ந்திருப்பதும் பிரச்சினைக்கு
Page 9
XIV
விடிவாக அமையாது. நமது தலைமையில் மக்கள் திரளவும் மாட்டார்கள். எனவே வலிமையாக உருவாகிவரும் உலக முதலாளியத்தையும் இந்துத்துவம் உள்ளிட்ட பாசிசங்களைய்ம் நாம் வன்மையாக எதிர்கொள்ள வேண்டுமானால் இத்தகைய போக்குகளின் தன்மையை உணர்ந்து எந்த ஒரு பிரிவினரின் மேலாண்மையையும் முன்மொழியாத பன்மைத்தன்மையையும் இலக்கை நோக்கிய உறுதியான இயக்கத்தையும் உடைய வானவில் கூட்டணிகளே இன்றைய தேவை" (பார்க்க:சுபமங்களா. செப்டம்பர் 1995. பக்.46-7)எனக்கூறும் அ. மார்க்சை ஒருபோதும் டானியல் ஏற்றிருக்கமாட்டார்.
இத்தகைய கூட்டணியொன்றும் புதிய விடயமல்ல. பாட்டாளிவர்க்கப் புரட்சிகள் ஏனைய வர்க்கங்களை ஐக்கியப்படுத்திக் கூட்டணி அமைத்தே வெற்றியீட்டி வந்துள்ளன. பாட்டாளிவர்க்கத் தலைமையென்பது, சுரண்டலை ஒழிக்க விரும்பும், எந்த வடிவிலும் சுரண்டலில் ஈடுபடாத ஒரு வர்க்கத்தின் வழிகாட்டல், தனது கைக்கெட்டியதனைத்தையும் அபகரித்துவிடத் துடிப்பதாகிய சுரண்டற் குணாம்சமுடைய சிறுமுதலாளி வர்க்கப்பிரிவு, எவ்வளவுதான் தொகையில் கூடிவருவதாகத்தெரியினும் புரட்சியின் முன்னணிச் சக்தியாகிவிட முடியாது. அவ்வாறு முயன்ற போராட்டங்களில் அந்த வர்க்கத்தின் குணாம்சமான புரட்சியின் அவசரத்தன்மை எனும் நோயும் சரணாகதித் தோல்வி மனப்பாங்குகளும் ஏற்படுத்தியுள்ள பாதக அம்சங்கள் இக்கணத்து சமகால வரலாற்றின் எதிர்நிலைப் படிப்பினைகள். தவிர, சுரண்டல் கொடூரம் உக்கிரமடைய தகவல் சமூகம் உருவாக்கும் பெருந்தொகையான சிறுமுதலாளித்துவ சக்திகளும் மத்தியதர வர்க்கப் பிரிவினரும் சரிவடைந்து பாட்டாளிவர்க்க அணிக்குள் வந்து சேர அதிக காலம் செல்லாது.
அந்தவகையில், புரட்சிகர குணாம்சம் கொண்ட, சுரண்டலைத் தகர்க்கும் வன்மை படைத்த, சகலவகைக் குறுகிய பார்வைகளுக்கும் மாறாக சர்வதேசக் கண்ணோட்டமுடைய, வளர்ந்துவரும் சக்தி இப்போதும் பாட்டாளிவர்க்கமே. பாட்டாளி வர்க்க உலக நோக்கை எந்தத் தரப்பினரும் தமது 'சுயத்துவத்தை இழந்து வரித்துக்கொண்டால் இந்தப்பணிக்கெனத் தம்மை அர்ப்பணிக்க முடியும். அதன் வாயிலாக சுரண்டல் பின்னணிகளின் அற்பத்தனங்களைத் துடைத்தெறிய முடியும். பாட்டாளிவர்க்கக் குடும்பங்களிலிருந்து வருவோருங்கூட பாட்டாளி வர்க்க நோக்கை வளர்த்துக் கொள்ள மார்க்ஸிய கற்றலில் ஈடுபடுதல் அவசியம். நாளாந்தம் முகங்கழுவுதல் போல மார்க்ஸிய கற்றலில் சளைப்புறாது ஈடுபடுவதும் மக்கள் நலநாட்ட இயக்கங்களில் புடம் போட்டெடுக்கத் தயாராய் இருப்பதும் இல்லையென்றால் பாட்டாளிவர்க்கக் கண்ணோட்டம் தொடர்ந்து வராது.
இதிலிருந்து தவறிய நிலையில் எங்கே செல்ல நேரும் என்பதற்கு அ. மார்க்ஸ் நல்ல உதாரணம், பாட்டாளி வர்க்கத் தலைமையை 'மேலாண்மை’ எனக் கொச்சைப்படுத்தி, "வானவில் பல்தன்மைக் கூட்டணி ஒன்றுக்கு அறைகூவல் விடுக்கும் இடத்துக்கு அவர் சென்றுவிட்டிருக்கிறார்.
XV
ஒரு காலத்தில் இந்த அ. மார்க்சையும் விட புரட்சிகர சொல்வீச்சுகளை உதிர்த்தவர் ஜெயகாந்தன். இன்று 'இலக்கியம் என்றாலே முற்போக்குத்தான். வர்க்கப்போராட்டம் என்பதெல்லாம் இப்பொழுது இல்லை. அதைக் கொள்கையாக வைத்திருந்த நாடுகள் எல்லாம் மாறிப் போய்விட்டன. இப்பொழுது வர்க்க இசைவு என்பதுதான் கொள்கை' (பார்க்க: கணையாழி செப்டம்பர் 1995 பக்.43) எனக் கூறும் இடத்துக்கு வந்துவிட்டார். இன்னமும் முழுமையான 'வர்க்க இசைவு' பற்றி தான் பேசவில்லை @T%のT அ. மார்க்ஸ் கூறலாம்; போய்க் கொண்டிருப்பதென்னவோ அந்தத் திசைவழியேதான்.
கட்டுரைகளில் விவாதித்த விடயங்களுக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்த அண்மைக்காலத் தகவல்களை இங்கே குறிக்க முனைந்ததில் இந்தப் பகுதி நீண்டுவிட்டமைக்கு மன்னிக்கவும். இனி நேரே கட்டுரைகளுடன் உங்கள் தர்க்கங்களைப் புரியத்தடையாய் எதுவும் வேண்டாம்.
அதன்போது கவனத்திலிருத்த வேண்டிய ஒரு அம்சத்தை மட்டும் இங்கு குறிப்பிடலாம். கோ. கேசவன், அ. மார்க்ஸ் போன்ற ஆய்வறிஞர்களும் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜெயமோகன் போன்ற படைப்பாளிகளும் பெரிதும் மதிக்கப்படுகின்றவர்கள். ஞானி குறிப்பிடுவது போல இவர்களிடமுள்ள நல்ல அம்சங்கள், மக்கள் நல நாட்டப்பகுதிகள், புரட்சிகரக் குணாம்சங்கள் ஆகியன வெளிக்கொணரப்பட்டு சமூக மாற்றத்திற்கு உழைக்கும் சக்திகளால் அவை உரமாக்கப்பட வேண்டியவை என்பதில் எனக்குக் கருத்து பேதம் எதுவுமில்லை. அதேவேளை இவர்களிடம் காணப்படும் விமர்சனத்துக்குரிய அம்சங்களை பாராது விடுதலும் சாத்தியமில்லை. அவ்வாறு பார்க்க வேண்டியது அவசர அவசியப்பணியாகிவிட்டால் அதனைச் செய்தாக வேண்டியதும் சமூக மாற்றச் செயல் முனைப்படைய உதவுவதுதான். அக் காரணத்தால் அந்த விமர்சனப் பக்கம் இங்கே அழுத்தம் பெற்றிருப்பதை அவதானிக்கும் எவரும் விமர்சனபூர்வமான இரண்டு அம்சங்கள் குறித்தும் கவனத்திற் கொள்ள வேண்டிய கடப்பாட்டைக் கைவிட்டு விட வேண்டியதுமில்லை.
இங்கே கண்டன விமர்சனத்துக்கு உட்படுவது பாரதி தொடக்கி வைத்த நவீனத்துவச் செல்நெறியை அதன் பரிணமிப்புக் கட்டத்தில் முழுமையுடன் வளர்க்காமல் முடக்கிவைத்த பாதைகளும் அவற்றின் அடுத்த கட்டமாக இன்று முளைவிட்டிருக்கும் பின்-நவீனத்துவப் போக்கின் தவறான அம்சங்களுந்தான். புத்தம் புதிய வியாக்கியானங்களை முன்வைக்கும் ஆயிரந் தத்துவங்கள் தோன்றலாம். இன்றும் மார்க்ஸியம் வெறும் வியாக்கியானம் செய்யும் தத்துவமாயில்லை; அதனால் இந்தப் புதிய தத்துவங்கள் போல சமகால சமுதாயங்களைப் புரிந்து கொள்ளப் போதாதது போலத் தெரிவது மார்க்ஸியத்தின் சாராம்சத்தைப் புரியாத குருட்டுப் பார்வை மட்டுமே மார்க்ஸிய நோக்குவாய்க்கப்பெறின் வியாக்கியானம் செய்ய வாய்க்கப் பெறுதல் மட்டுமல்ல, இன்றைய
Page 10
XVI
சீரழிவுகளை வெற்றி கொண்டு புதிய உலகமொன்றை வென்றெடுக்கும் வகையில் மாற்றங்களைக் கொணரவும் முடியும் எனக் காணலாம்.
மார்க்ஸியப் பார்வையில் நாட்டத்தை ஏற்படுத்தும் வகையில் இங்கே விவாதிக்கப்படும் விடயங்களை எழுதத்தூண்டுதல் அளித்த தேசிய கலை இலக்கியப் பேரவை, தாயகம்' ஆசிரியர் குழு, நந்தலாலா ஆசிரியர் குழு, சவுத் ஏசியன் புக்ஸ் ஆகியவற்றைச் சேர்ந்த நண்பர்கட்கு எனது நன்றிகள். இதன் பதிப்பில் பங்கெடுக்கும் அச்சக ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகட்கும், வெளியீட்டில் உதவும் தமிழ்நூல் வெளியீட்டு அமையத்திற்கும் நன்றிகள். இதற்கான முன்னுரையை எனது பெருமதிப்பிற்குரிய பாரதியியலறிஞர் பெ. சு. மணி அவர்களிடம் கேட்டபோது பெருமனதுடன் வழங்கிய அவருக்கு நன்றி கூறுதல் எனக்கே நான் சொல்வதை ஒக்கும். ஆயினும், எனது ஆய்வு முயற்சிகளைத் தொடர்ந்து வலியுறுத்திவரும் அவருக்கும் சம்பிரதாயம் கருதி நன்றியைத் தெரிவிக்க முனைந்தேன்.
இந்தக் கருத்துக்கள் அனைத்துடனும் பூரண உடன்பாட்டை எட்டமுடியாமல் இருக்கும் என்பது நிதர்சனம். ஆயினும் இவை விவாதிக்கப்பட வேண்டியன. "நூறுபூக்கள் மலரட்டும், நூறு சிந்தனைகள் முட்டி மோதட்டும்' என்பதை அதன் உண்மையர்த்தத்தில் இனிக் கடைப்பிடிப்போம். வேண்டாத குரோதங்களைக் களைந்து ஆக்கப்பூர்வமான விமர்சனப் பார்வையை வளர்ப்போம். அதற்குறுதுணையாகக் கருத்துக்களை முன்வைக்கப் போகும் உங்களுக்கும் நன்றிகளைக் கூறும்,
வவுனியா கல்வியியல் கல்லூரி, ந. இரவீந்திரன், பூந்தோட்டம், சத்தியமனை, வவுனியா, சுளிபுரம்.
இலங்கை. 995 ஒக்டோபர் 21.
அரசியல் இலக்கியமும் பாரதியும்
1. அரசியல் இலக்கியத்தின் தோற்றுவாய்
சமகாலத் தமிழ் இலக்கியத்தில் அரசியல் இலக்கியம் என்ற கோட்பாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் பாரதியுடன் மிக நெருங்கிப் பிணைந்த உறவைக் கொண்டுள்ள காரணத்தால், அரசியல் இலக்கியத்தில் பாரதியின் ஈடுபாட்டை ஆராய்வது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாயமைந்துள்ளது. பொதுவாக இலக்கியம் - அது சங்க காலத்ததாயிருப்பினும், அன்றிப் பக்தி இயக்கத்தின்பாற்பட்டதாயினும் - ஆரம்பந்தொட்டே ஏற்றத்தாழ்வான வர்க்கங்களாகப் பிளவுபட்டுவிட்ட சமூகத்தில் ஆதிக்கஞ் செலுத்துவதற்காக வர்க்கப் பிரிவுகள் தம்முள் நடத்தும் போராட்டத்தில் ஒரு வர்க்கஞ் சார்ந்ததாக நின்று, பாலில் நெய்போல் தன்னகத்தே அரசியல் கோட்பாட்டை மறைபொருளாகத் தாங்கிவந்துள்ளது. அதன் திரண்ட வெளிப்பாடு, அதாவது அரசியல் சிந்தனைகள் இலக்கியத்தில் வெளிவெளியாகவே இனங்காட்டிக்கொள்ளும் போக்கு. பாரதி பாவரிகளில்தான் ஆரம்பமாகின்றது. அவருக்கு முந்திய இலக்கியத்தில், 19ம் நூற்றாண்டின் கடைக்கூற்றிலிருந்தே சமுதாயச் சார்புமிகுதியாக இருந்து வந்த போதிலும், அது அரசியல் இலக்கியமாகப் பரிணமித்தது பாரதியின் வாயிலாகத்தான். இத்தகைய மாற்றநிலை ஒன்றை பேராசிரியர் க. கைலாசபதி, தமிழிலக்கிய மரபில் பொதுமைச் சிந்தனைகள் பெற்றுவந்த வளர்ச்சிப் படிநிலைகள் ஊடாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.
'பழங்காலத்திலே சமயக் கருத்துகளாகவும், தார்மீகக் கட்டளைகளாகவும், அறிவியற் கோரிக்கைகளாகவும் இலக்கியத்தில் இடம்பெற்ற பொதுமைச் சிந்தனைகள் இருபதாம் நூற்றாண்டிலே நேரடியாகவே அரசியற் சமுதாய விஷயங்களாக உருப்பெற்றன. இது இலக்கியத்தின் பொதுவான வளர்ச்சிப் போக்கிற்கு அமைய உள்ளது. பல நூற்றாண்டுகளாகச் சமயங்களைத் தழுவி வளர்ந்த தமிழிலக்கியம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைக்கூற்றிலிருந்து சமயச்சார்பு குறைந்தும் சமுதாயச் சார்பு மிகுந்தும் புதுவழியிற் செல்வதாயிற்று. தொடக்கத்திலே சமுதாய சீர்திருத்தம் இலக்கியத்தின் முனைப்பான உள்ளடக்கமாய் இருந்தது. நாளடைவில் சமுதாயப் புரட்சியும், புத்தாக்கமும் இலக்கியத்தின் உந்துசக்திகளாகவும் அமைந்தன.'
இத்தகைய புரட்சி இலக்கியத்துக்கு முன்னோடியாக பாரதி விளங்கினார். இதன் வெளிப்பாடுதான், வினாயகர் நான் மணிமாலை புனையும் போதும் பாரதி நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல்,
Page 11
2 口 அரசியல் இலக்கியமும் பாரதியும்
இமைப்பொழுதுஞ் சோராதிருத்தல்' என்று வீராவேசமாகப் பிரகடனஞ் செய்வது; இதன் நேரடிப் பயன்தான்
'பொய்க்குங் கலியை நான்கொன்று
பூலோகத்தார் கண்முன்னே மெய்க்குங் கிருத யுகத்தினையே
கொணர்வேன், தெய்வ விதியிஃதே' என்று குளுரைப்பது. −
இது தமிழிலக்கியத்தின் வளர்ச்சிவிதி மட்டுமல்ல; மாறாக இது இலக்கியத்தின் பொதுவான வளர்ச்சிப் போக்கிற்கு அமைய உள்ளது" என்பதே உண்மை. அதாவது, இந்தப் பரிணாம வளர்ச்சி உலக இலக்கியப் பரப்பில் அரசியல் இலக்கியம் இடங்கொள்ள ஆரம்பித்த வளர்ச்சி நிலையை ஒத்திருக்கின்றது.
இதன் உலகளாவிய தோற்றத்தை 1789இன் பிரெஞ்சுப் புரட்சியுடன் காணமுடிந்தது. பிரெஞ்சுப் புரட்சியானது, ஒவ்வொரு தேசிய இனத்தையும் விழிப்புறத் தூண்டி, அதைத் தொடர்ந்த ஒவ்வொரு நிகழ்சிகளினூடாகவும் வரலாற்றைப் பொதுமக்களின் அனுபவத்துக்குட்படுத்தியது. இதன் விளைவாக, மக்கள், கொந்தளிக்கும் அரசியல் இயக்கங்களின்பால் ஈர்க்கப்பட்டனர். இவ்வாறு சமுதாயச் சச்சரவுகளில் வெகுஜனங்கள் கிளர்ந்தெழுந்து செயலாற்றும்போது, அதனைக் கலைஇலக்கியவாதிகள் ஆர்வமிகுதியோடு ஆதரிக்க முன்வந்தார்கள். இது கலைஞர்களுக்கும் வெகுஜனங்களுக்குமிடையே பாலமிடவே, முதன் முறையாக 'கலை கலைக்காக" என்ற போக்குத் தகர்க்கப்பட்டு கலைஇலக்கியம் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற கோட்பாடு மேலோங்கத் தொடங்கியது. இவ்வாறு தோன்றிய கலை இலக்கியத்தின் பயன்பாட்டுக் குறிக்கோளையே பிளக்கனோவ் மேல்வருமாறு குறிப்பிடுகிறார்.
'கலை பற்றிய பயனிட்டுவாதக் கருத்தோட்டம் எனப்படுவதும் அதாவது கலைப் படைப்புகள் வாழ்க்கைப் புலப்பாடுகள் குறித்துத் தீர்ப்புக் கூறும் சிறப்புடையவை எனக்கருதும் போக்கும், எப்போதும் இதனுடன் இணைந்து காணப்படும் மகிழ்ச்சிவாய்ந்த ஆவலாகிய சமுதாயச் சச்சரவுகளில் பங்கு கொள்ளும் ஆவலும், சமுதாயத்தில் கணிசமான பகுதியோருக்கும் கலைப் படைப்புகளில் மிகுதியாகவோ குறைவாகவோ செயல்முனைப்புள்ள அக்கறை காட்டுகிறவர்களுக்கும் இடையே பரஸ்பரப் பரிவு உணர்ச்சி நிலவுகிறபோதெல்லாம் தலை தூக்கவும் வலுவடையவுஞ் செய்கின்றன’’
அத்தகைய சூழ்நிலையைத் தேசிய புரட்சி வழங்கும்போது கலை இலக்கியவாதிகள் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்கு உந்துசக்தியாக தமது படைப்புகளை வெளிக்கொணர்ந்ததுடன், மகிழ்ச்சிவாய்ந்த ஆவலோடு அதில் பங்கெடுத்துங்கொண்டார்கள். அதன் விளைவாக,
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் Π 3
வெகுஜனங்களைத் தட்டியெழுப்பி அரசியல் கோரிக்கைகளின்பால் கவர்ந்திழுக்கும் முதலாளிவர்க்க இயல்பு காரணமாக, அவர்களுடைய ஆக்கங்களில் அரசியல் கோரிக்கைகள் அழகியற்தாரதம்மியத்துக்குட்பட்டு வடித்தெடுக்கப்பட்டு விடுகிறது. இதற்குரிய சூழ்நிலை விளங்கிக்கொள்ளத்தக்கதே. இதைப் பிளக்கனோவ் தெளிவாகக் காட்டியுள்ளார்;
'கருத்து உள்ளடக்கம் அறவே இல்லாத கலைப்படைப்பு ஏதும் இல்லை. அதோடு, எந்தக் கருத்தும் ஒரு கலைப்படைப்பின் அடிப்படையாகிவிட முடியாது. எது மக்களிடையே தொடர்புக்கும் உறவுக்கும் உதவக்கூடியதோ, அது மட்டுந்தான் கலைஞனுக்கு மெய்யாகவே உத்வேகமூட்ட வல்லதாய் இருக்கும். இத்தகைய தொடர்புக்கும் உறவுக்கும் சாத்தியமான வரம்புகள் கலைஞனால் நிர்ணயிக்கப்படுகிறவை அல்ல. அந்தக் கலைஞனைத் தனக்குரியவனாகக் கொண்ட சமுதாயம் முழுவதுமாய் வந்தடைந்துள்ள கலாச்சார வளர்ச்சி நிலையால் நிர்ணயிக்கப்படுகிறவை. ஆனால் வர்க்கங்களாகப் பிளவுண்டிருக்கும் சமுதாயத்தில் இவ்வரம்புகள் இதன்றி, இந்த வர்க்கங்களது பரஸ்பர உறவுகளாலும், மற்றும் இந்த வர்க்கம் ஒவ்வொன்றும் அப்போது வந்தடைந்துள்ள வளர்ச்சிக் கட்டத்தாலும் நிர்ணயிக்கப்படுகிறவை. முதலாளி வர்க்கம் சமயச் சபைப் பிரபுக்கள், லெளகிகப் பிரபுக்களது ஆதிக்கத்திலிருந்து தனது விடுதலைக்காக இன்னமும் பாடுபட்டுக் கொண்டிருந்த போது, அதாவது அது புரட்சிகர வர்க்கமாய் இருந்தபோது, உழைப்பாளிப் பெருந்திரளினர் யாவருக்கும் அது தலைவனாகி, அவர்களோடு சேர்ந்து தனியொரு 'மூன்றாவது' வகுப்பாய் அமைந்து செயல்பட்டது. அந்தக் காலத்தில் முதலாளி வர்க்கத்தின் தலைசிறந்த சித்தாந்தவாதிகள், 'தனிச் சலுகைக்கு உரியோரைத் தவிர்த்து தேசம் அனைத்துக்குமான' தலைச்சிறந்த சித்தாந்தவாதிகளாகவும் விளங்கியவர்கள். வேறு விதமாகச் சொல்வதெனில், முதலாளித்துவ நோக்கு நிலையை ஏற்றுக்கொண்ட கலைஞர்களது படைப்புகளைச் சாதனமாகக் கொண்டு மக்களிடையே நிகழ்ந்த உறவாடலின் வரம்புகள் ஒப்பளவில் மிகவும் விரிந்தனவாய் இருந்தன.'
இதன் தமிழகப் பிரதிநிதியாகப் பாரதி திகழ்ந்தது தற்செயலானதல்ல. இந்த வரலாற்றுப் பாத்திரத்தை நிறைவு செய்ததன் வாயிலாகத்தான் பாரதி தனது சமகாலத்து கலைஇலக்கியவாதிகளிலிருந்தும் தனித்துவம் பெற்றுக் காலத்தை வென்று நிலைபெற முடிந்திருக்கிறது. இத்தகைமையை ஆய்வாளர்கள் ஒரு மனதாக ஏற்கத் தவறவில்லையெனினும், பாரதி ஒரு முதலாளித்துவக் கவிஞன் என்ற காரணத்தினால், அவருக்கு இத்தனை முக்கியத்துவம் வழங்கப்படவேண்டியதில்லை என்ற கருத்தொன்றும் முன்வைக்கப்படுவதைக் காணமுடிகின்றது. இக் கருத்துப் பிரிவினர் ஏதோ ஒருவகையில் இன்றைய கால நிலைமையின் அடிப்படையில் வைத்து பாரதியை அகநிலை ரீதியாக மதிப்பீடு செய்வதனாலேயே இம்முடிவுக்கு வருவதாகக் கொள்ள வேண்டும். -
Page 12
4 D அரசியல் இலக்கியமும் பாரதியும்
இவர்கள், இவ்வாறு கருதுவதற்கு இன்றைய முதலாளித்துவக் கலை இலக்கியவாதிகளின் நசிவு இலக்கியப் போக்கும், 'கலை கலைக்காக' என்ற இலட்சியப் பித்தும் ஒரு காரணமாக இருக்கலாம். இன்றோ முதலாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி ஆளும் வர்க்கமாக மாறிவிட்டது; அது முற்போக்கு வர்க்கமாயிருந்து மக்களை அரசியல் கோரிக்கைகளின்பால் கவர்ந்திழுத்துக் கிளர்ச்சி செய்யத் தூண்டிப் புரட்சிக்கு தலைமை தாங்கிய நிலை இன்று இல்லை. இன்று, முதலாளி வர்க்கம் வெகுஜனங்கள் அமைதியாக அடங்கி வாழ வேண்டுமென விரும்புகிறது. அதன் பலமுனைச் செயற்பாடுகளால் சமூகத்தில் பெரும்பான்மையான மக்கள் சமூகச் சச்சரவுகளிலிருந்து ஒதுங்கியவர்களாக, அதாவது ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு ஒருமுறை வாக்களிக்கும் அரசியல் நடவடிக்கை தவிர அதிகபட்சம் ஈடுபாடில்லாத நிலையில், அரசியலில் நேரடிப் பங்கு கொள்ளாதவர்களாகக் காணப்படுகிறார்கள். இந்த நிலையில், கலைஇலக்கியம் தன்னளவில் பயனீடுள்ளதாயிருக்க வேண்டுமென்று ஆளும் வர்க்கமாகிவிட்ட முதலாளிவர்க்கம் விரும்புகிறது. இதற்கு, இழிவான கலைஇலக்கியத்தைக் காட்டிப் பணம் குவிக்க முயலும் "வர்த்தகக் கலாமேதைகள்', முதலாளித்துவக் கலாச்சாரச் சீரழிவைப் பிரதிபலிக்கும் நசிவுஇலக்கியத்தைக் குவித்து மக்கள் மனதை நச்சுப்படுத்த முயல்வதன் மூலம் சேவை செய்கிறார்கள். இதற்குமாறாக, இலட்சியப் பற்றுள்ள கலை இலக்கியவாதியாலோ இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் முதலாளித்துவ சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் சீரழிவுகளால் செயலிழந்தபோது, தம்மைத் தாமே சமூகப் பிரஷ்டம் செய்துவிடுகிறார்கள். "எங்கே கலைஞர்களுக்கும் அவர்களைச் சுற்றிலும் உள்ள சமுதாயச் குழலுக்கும் இடையே பிணக்கு ஏற்படுகிறதோ, அங்கே கலை கலைக்காகவே என்கிற போக்கு தலைதூக்குகிறது."
இதற்கு முற்றிலும் மாறுபட்ட - பிற்போக்கு சக்திகளுக்கு மரண அடி கொடுக்கும் - போராட்ட குழலில் வாழ்ந்து, அத்தகைய அரசியல் கொந்தளிப்பின்பால் வெகுஜனங்களைக் கவர்ந்திழுத்து அணிதிரட்ட இலக்கியம் படைத்தவர் பாரதி. அத்தகைய வரலாற்று நிகழ்வின் ஒரு பகுதியாக விளங்கும் பாரதியையும், பொதுவான சமூகப் பிரச்சினைகளை ஆய்வுக்குட்படுத்தும் வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் புறநிலை ரீதியாக ஆராய வேண்டும்.
அவர், பிரித்தானியாவுடனான ஏகாதிபத்தியப் பிணைப்பைத் தகர்த்துப் பூரண சுயராஜ்யத்தை நிலைநாட்டுவதன் மூலமே இந்திய மக்களின் பொருளாதார சுபீட்சத்தை ஈட்ட முடியுமென்ற முடிவுடன் தளராது போராடி,மிதவாதத்தைத் தீவிரவாதிகள் முறியடிக்கத் தொடங்கிய 1905ஆம் ஆண்டில் அரசியல் இலக்கியத்தின் பிரதிநிதியாகப் பரிணமித்தார். அன்றிலிருந்து தனது இறுதி மூச்சுவரை நேரடியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பாரதி தேசிய அரசியல் நீரோட்டத்தின் வளைவு சுழிவுகளிலெல்லாம் சரியான மார்க்கத்தையமைக்கும் தன் அயராத முயற்சியையும் வெளியிட்ட வண்ணமாய் முன்னேறி வந்தார்.
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் O 5
அக்காலத்தை மூன்றுகூறுகளாக வகுத்து ஆய்வு செய்தல் வசதியாக இருக்கும். முதலாவது கட்டம் 1905 - 1910 வரையிலான, முதலாவது தேசிய எழுச்சிப் பேரலைக்குரியது. இரண்டாவது கட்டம் 1910-1919 வரையிலான, மந்தப்போக்கும் அடக்குமுறை தலைவிரித்தாடியதுமான காலகட்டம். மூன்றாவது கட்டம் 1919 - 1921 வரையான, இரண்டாவது தேசிய எழுச்சிப் பேரலைக்குரியது.
2. தேசிய எழுச்சிப் பேரலையில் பாரதி
பாரதி எட்டயபுரத்து ஜமீன்தாரின் சமஸ்தானத்தில் ஆஸ்தான கவியாக வாழ்வதை வெறுத்து
'திமிங்கில உடலும் சிறிய புன்மதியும் ஒரேழ் பெண்டிரும் உடையதோர் வேந்தன் தன் பணிக்கிசைந்து என் தருக்கெல்லாம் அழிந்து வாழ்ந்தனன்.' r என வருந்தித், தொடர்ந்தும் நீசத்தொண்டு புரிதலை வெறுத்து நீங்கித் தமிழாசிரியராய்ச் சில காலம் மதுரையில் பணிபுரிந்தார். அதன்மீதும் ஆத்மதிருப்தி காணாத பாரதி பரிபூரணமாகத் தன்னைத் தேசத் தொண்டுக்கு அர்ப்பணிக்கும் நோக்குடன் சென்னைக்கு வந்தார். அங்கே 1904ம் ஆண்டில் 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் துணை ஆசிரியராக இணைந்த பாரதி, தேசிய உணர்வு கொழுந்துவிட்டெரிந்த வங்கத்தில் இந்து-முஸ்லீம் இனவாதத்துக்குத் தூபமிடுவதன் வாயிலாக, அங்கே தேசிய உணர்வு வளர்ச்சி பெறுதலையும், அது தேசம் பூராவும் பரவிவிடுவதையும் தடுக்கமுடியும் என்ற நோக்குடன் ஏகாதிபத்திய அரசு வங்கத்தைத் துண்டாட முற்பட்டபோது, அதை எதிர்த்து கிளர்ந்தெழுந்து போராடிய வங்கத்தின் இந்து - முஸ்லிம் மக்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்துக்குத் தலைசாய்த்து, 'வங்கமே வாழிய' என்ற கவிதையை 1905 செப்டம்பர் 15ந் தேதி 'சுதேசமித்திர'னில் வெளியிட்டதன் வாயிலாக, அரசியல் இலக்கியத்தில் அடியெடுத்து வைக்கிறார்.
இந்த வங்கப் பிரிவினை எந்த நோக்கத்துக்காக மேற்கொள்ளப்பட இருந்ததோ, அதற்கு மாறான விளைவைத்தான் அன்று ஏற்படுத்தி வைத்தது. இது, ஏகாதிபத்தியவாதிகள் எண்ணியது போல தேசிய உணர்வை அணைப்பதற்கு மாறாகப் பன்மடங்காகக் கொழுந்துவிட்டெரியத் தூண்டுவதாயிற்று. இதனைப் பின்னால் 'அதுவும் ஒரு நன்மைக்கே' என மகுடமிட்டு பாரதி இலக்கிய நயத்தோடு எடுத்துக்காட்டியிருக்கிறார் :
'..தற்கால இந்தியர்களுக்கு நேரிட்டுவரும் விபத்துகளெல்லாம் அவர்களின் பிற்கால நலனையுத்தேசித்தே நன்மையாக வந்தவையாவது
Page 13
6 அரசியல் இலக்கியமும் பாரதியும்
காண மிகவும் வியக்கிறோம். லார்ட் கர்ஸன் இந்தியர்களுக்கு செய்ய நினைத்த தீங்குகளெல்லாம் அவர்களுக்கு நன்மை பயப்பதாகவே முடிந்தன. இந்த மகானின் கொடுமைகளிலிருந்து சுதேசிய விருகூடிம் கிளம்பியது. பின்னர் புல்லர் பெருமானால் விருத்தியடைந்து செழிக்க ஆரம்பித்தன. வங்கதேச வாசிகளின் ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்க எண்ணி முயன்றவர்களின் முயற்சி அதற்கு நேர் விரோதமாக அமைந்தது மிகவும் அதிசயிக்கயாவதே. அதுவும் ஒரு நன்மைக்கே என்ற வாக்கியத்தை நமக்குச் செய்திகள் நேரும்போதெல்லாம் உபயோகப்படுத்த ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. துன்பங்களுக்கு இனிமேல் சொல்லவேண்டிய வாக்கியம் என்ன? அதுவும் ஒரு நன்மைக்கே. '
இது அழகு நடையில் கிண்டல் தொனிக்க எழுகிற குரலாயிருக்கும் அதே வேளை, ஆழ்ந்த பொருள் செறிவுடனுமிருப்பது பாரதியின் மேதாவிலாசத்தை பறைசாற்றுவதாகும்.\இதன் மூலம், மனிதன் தனது முயற்சியினால் 'தீய அம்சங்களை நல்ல அம்சங்களாக மாற்றமுடியும்' என்பதையே பாரதி வலியுறுத்துகிறார்.
அவ்வாறுதான் வரலாறும் அமைந்தது. அந்த வங்கப் பிரிவினைக்கெதிரான தேசம் பரந்த எதிர்ப்பியக்கந்தான் தீவிரவாதிகளின் கோட்பாட்டை முன்னணிக்குக் கொண்டுவந்தது. அத்தகைய வீறுகொண்ட எழுச்சிக் குரலை 'சுதேசமித்திரன்’ எதிரொலிக்க இடமளிக்காத நிலையில் பாரதி நண்பர்களுடன் இணைந்து இந்தியா’ பத்திரிகையில் 1906லிருந்து ஆசிரியரானார்.
இதே ஆண்டு (1906 ஆம் ஆண்டில்) இந்தியாவுக்கு விஜயஞ் செய்த வேல்ஸ் இளவரசரை வரவேற்று பாரதி எழுதிய கவிதை அவரது வரலாற்றறிவையும் சுதந்திர உணர்வையும் ஒருங்கே எடுத்துக்காட்டு வதாயுள்ளது. அக்கவிதையில், ஆங்கிலேயர் வருகை இந்தியத் தொழில் விருத்திக்கு அத்திவாரமிட்டதை எடுத்துக்காட்டுகிறார், சமூகத்தில் புரையோடிக் கிடந்த மதக் குரோத உணர்வுகளையும் மதத்தின் பேரிலே மறைந்து கிடந்த சமூகக் கொடுமைகளையும் ஒழிக்கவேண்டிய உணர்வைத் தோற்றுவித்ததைக் காட்டுகிறார்; பெண்ணடிமைத்தனத்தின் வேரைக் கெல்லியெறியும் நடவடிக்கைகளுக்காகப் பாராட்டுகிறார். அதேவேளை இந்திய சுதந்திரம்' என்ற கோஷத்தைக் கேட்டு எள்ளிநகையாடும் ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியின் முன்னால் துணிவுடன் நெஞ்சை நிமிர்த்தி நின்று தொடர்கிறார்.
"ஆயினும் என்னை? ஆயிரங் கோடி தொல்லைகள் இன்னும் தொலைந்தனவில்லை நல்குர வாதி நவமாம் தொல்லைகள் ஆயிரம் எனைவந்தடைந்துள நுமரால்."
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் O 7
இதற்குமேல் என்ன? எமது சுதந்திரத்தை அங்கீகரித்து வெளியேறுவதுதான் நீடித்த நட்புறவுக்கு இலட்சணம் என்பதை வேறு சொல்லவேண்டுமா? இதன் வாயிலாக, மேற்குலகின் மறுமலர்ச்சிக்கு ஒளிபாய்ச்சிய இங்கிலாந்தின் கைத்தொழிற் புரட்சியின் ஒளிக்கிரணங்களில் ஒருசில எம்மீதும் விடிவைத் தோற்றுவித்ததென மனதார வாழ்த்தி, அதற்காக வரவேற்றபோதிலும், எமது தொடர்ச்சியான வளர்ச்சிக்கு இடப்பட்ட முட்டுக்கட்டையும் இப்போது உங்களால் அல்லவா ஏற்பட்டிருக்கிறது என்பதையும் ஒருங்கிணைத்துச் சொல்லிவிட்டார்.
இக்கவிதை தன்மானமிக்க இந்திய அன்னை தன்னோடொத்த நாட்டின் புதல்வனுக்களித்த வரவேற்பு என்ற கோதாவில் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கிறது. இதை வைத்து பாரதி சுதந்திரத்தை இரந்து கேட்டதாகக் கொள்ள முடியாது. இதற்கு மாறுபட்ட கருத்தையே பாரதி ஆரம்பந்தொட்டு இறுதிவரை கொண்டிருந்தார். அதனை அவர் படைப்புகளில் பரக்கக் காணலாம். அவர், மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுவதையே விரும்பி வலியுறுத்தினார் என்பதற்கு 26.01.1907 இல்
எழுதிய 'பிரிட்டிஷாரின் வாள்பலம்' என்ற கட்டுரை சான்று பகர்கிறது :
'.30கோடி ஜனங்களின் மனோநிச்சயத்தை தகர்க்கக் கூடிய வாளும் பீரங்கியும் இந்த உலகத்தில் எங்கே இருக்கின்றன? கும்பகர்ணன் உறங்கிக்கொண்டிருக்கும் வரை அவனுடைய சரீரத்தின் மீது எலிகள் கூடச்சென்று நகத்தால் பிராண்டியும் கூச்சலிட்டும் விளையாடிக்கொண்டிருக்கலாம். கண்விழித்தெழுந்துவிட்ட ராக்ஷசன் முன்பாக 20, 30 ஜனங்கள் நின்று வாள்! வாள்1என்று கத்தி என்ன பிரயோஜனம் இருக்கிறது. ' 6 என்று கேட்கிற அதேவேளை விழிப்படையாத இந்திய மக்கள் நிலைகண்டும், அவர்களை விழிப்புறத் தூண்டுவதை விடுத்து அரசுக்கு மன்றாட்ட மகஜர் அனுப்புவதே தம் பணியாய்க் கொண்டுவிட்ட மிதவாதிகளின் பேதமையைக் கண்டும் வருந்துகிறார்.
'. ஆடுகள் எத்தனைகாலம் பொறுமையுடன் நீதி சாஸ்திர உபதேசம் செய்தபோதிலும் ஓநாய்களின் ஜென்ம இயற்கையை மாற்றமுடியாது. நீதி சாஸ்திர உபதேச சக்தியினால் இழந்து போன ராஜ்யத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் எங்கும் எந்தக் காலத்திலும் கிடையாது. அவரவர்கள் தத்தம் துக்கங்களுக்கு தாங்களே நிவர்த்தி தேடிக்கொள்ள வேண்டுமென்பது இயற்கை நீதி, நமது ஜனங்கள் அந்நியர்களிடம் விசுவாச்ம் வைத்திருக்கும் வரை எவ்விதமான அனுகூலமும் ஏற்படப்போவதில்லை என்பது திண்ணம்."
Page 14
8 அரசியல் இலக்கியமும் பாரதியும்
இந்த நிலை அவர் நெஞ்சம் புண்படக் காரணமாயிருந்தது. அக்கால மாந்தர் நிலைகண்டு நெஞ்சு பொருமினார்
'நெஞ்சு பொறுக்கு திலையே இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே கஞ்சி குடிப்பதற் கிலார் அதன்
காரணங்கள் இவை யென்னும் அறிவுமிலார் பஞ்சமோ பஞ்சம் என்றே நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத் துஞ்சி மடிகின்றாரேஇவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே."
என்று அங்கலாய்க்கிறார்.இதற்குரிய காரணத்தைத் தேடினார். இத்தகைய மக்களுக்கு உண்மையை விளக்கி கிளர்ச்சி செய்யத் தூண்டி, அதனூடாக மக்களை ஸ்தாபனப்படுத்தும் வெகுஜன இயக்கமாக காங்கிரஸ் இல்லாததைக் கண்டார். அது வெறுமனே, ஆங்கிலங் கற்ற விற்பன்னர்கள் வருடத்தில் மூன்று நாள் கூட்டம் போட்டுச் சில வேண்டுதல்களை அரசுக்குச் சமர்பித்தற்கு நடாத்தப்படும் வெறும் திருவிழா என்ற காரணத்தையும், அந்த நிலையை மாற்றுவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதையும் 'நாம் அனுசரிக்கவேண்டிய வழி' என்ற கட்டுரையின் வாயிலாக சுருக்கமாகவும்,தெளிவாகவும் வெளிப்படுத்துகிறார்.
'. காரணமின்றி ஒரு காரியமும் உலகில் நடவாது. ஆகையால் காங்கிரஸின் உபயோகக் குறைவிற்குப் பல காரணங்கள் உள. அவைகளில் முக்கியமானதும் மரத்திற்கு வேர் போன்றதுமான ஒரு காரணம் உள்ளது. அதென்னவெனில், இப்போது கூடும் பொதுக்கூட்டம் பொதுஜனங்களான நிலச்சுவான்தார்களாலும் இன்னும் I 6) வர்த்தகர்களாலும் ஏழைக்குடிகளாலும் ஒப்புக்கொள்ளப்பட்டதல்ல. இந்த காங்கிரஸானது முழு பலத்தை உண்டுபண்ணவும், அதன் கீர்த்தியை நிலைநாட்டவும் வேண்டுமென்ற எண்ணம் நமக்கிருக்குமாயின் இதை மூன்று நாள் திருநாளாக்காமல் தினம் நாம் செய்யும் கடமையெனக் கொண்டு 'காங்கிரஸ் ஆபீஸ்' என்ற ஆபீஸ் என்றைக்கும் நிலைபெற்றிருக்க வேண்டும். பெரிய தேசாபிமானிகளனைவரும் இந்த அபீஸின் காரியத்தை நிருவகித்து இந்தியாவை பல சிறு பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவிலும் ஒரு சங்கமேற்படுத்தி, அச்சங்கத்தார் தலைமை ஆபிஸிற்கு ஆறுமாதத்திற்கொருதரம் அப்பிரிவின் நிலைமைகளையும் குறைகளையும் எழுதியனுப்பவும், கடைசியாக காங்கிரஸ் கூடும்போது பொதுஜனங்களைக் கொண்டு அச்சங்கத்தில் காங்கிரஸ0 க்குப் போக முன்னிற்கும் தேசாபிமானிகளில் 'ஒட்' மூலமாய் எவரையேனும் தேர்ந்தெடுக்கவும் இன்னும் பல நன்மைகளைச் செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும். இருளடைந்து பலவகை துன்பங்களில் ஆழ்ந்து கிடக்கும் கோடிக்கணக்கான
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் 9
ஜனங்களுக்கு இக் காங்கிரஸ் இன்னதெனவும், அதில் அவர்களுக்கு உரிமையுண்டெனவும் நன்றாய் விளக்கி அந்தந்த நாட்டு பாஷையில் மாதந்தோறும் எடுத்துப் பேசியுள்ள அவ்விஷயங்களை அவர்கள் முன்வைத்து அவர்களைக் கண் விழித்துப் பார்க்கும்படி செய்யவேண்டும்.'"
இவ்வாறு எழுதியதோடமையாது, இவற்றைச் செயலாக்குவதில் தானே முன்னின்று உழைக்கும் பாங்குமுடையவராய் பாரதி விளங்கலானார். அவர் ஸ்தாபன ஒழுங்கமைப்பைப் பேணுவதில் உறுதியாக இருந்து வந்திருக்கிறார் என்பதற்கு 1906 இல் கல்கத்தா காங்கிரஸ0க்குப் போகும் பிரதிநிதிகளை ஜனநாயக முறைப்படி தெரிவு செய்வதில் அவர் காட்டிய அக்கறை ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும்: (கல்கத்தா காங்கிரஸ0க்கு)
'.பிரதிநிதிகள் அனுப்பவேண்டுமென்று பூரீ விபின்சந்திரபாலர் நமது அபீசுக்கு எழுதினபடியால் 17ம் தேதியன்று காங்கிரஸ் டெலிகேட்டுகள் தெரிந்தெடுக்கும் பொருட்டாக இந்தியா ஆபீசில் ஒரு
பொதுசபை கூட்டப்பெறும்.'
என அறிவித்து அத்தகைய பொதுச்சபைக் கூட்டத்துக்கூடாகவே தீர்மானங்களும் நிறைவேற்றப்படலாயிற்று என்பதையும் நாம் காணலாம். அவ்வாறே, மக்களைக் கிளர்ந்தெழத் தூண்டும் ஆர்வத்தையும் அவர் மரணமடையுங் காலம் வரை கைவிடவில்லை. அவர் கலங்காத நெஞ்சோடு, தளராத நம்பிக்கையோடு தன் கவிதைகளை ஊடகமாகக் கொண்டு மக்கள் மத்தியில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
இத்தகைய தீவிர பிரச்சாரம் திலகர் விபின் சந்திரபால்- லாலா லஜபதிராய் போன்றோர் முன் முயற்சியால் தேசம் பூராவிலும் வியாபித்திருந்தது. இது பொதுஜனங்களைச் சிறுகச் சிறுக ஆட்கொண்டு, வீறுகொண்ட தேசிய எழுச்சிப் பேரலையின் முதல் அத்தியாயங்களை வடித்தது. இந்த உத்வேகத்தில் 1909இல் பாரதி "சுதந்திரப் பள்ளு' இசைத்தார்;
'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோ மென்று."
இப்படிக் குதூகலிப்பது நிறைவு பெறுதற்கு, ஈட்டப்படும் சுதந்திரம் அரசியல் சுதந்திரமாக மட்டுமல்லாமல் சமூக விடுதலையைக் கொணர்வதாகவும் அமையவேண்டுமென அவர் எதிர்பார்த்தார்.
'எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே - பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே." என்று பிரகடனஞ் செய்து:
Page 15
10 O அரசியல் இலக்கியமும் பாரதியும்
' உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்
விழலுக்கு நீர்ப்பாய்ச்சி மாயமாட்டோம் - வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஒயமாட்டோம்.' என்று சபதமெடுக்கிறார்.
இந்த மகிழ்வு நீடிக்கமுடியாமல் ஒரு வருடத்தில் வரலாற்றுத் திருப்பம் ஒன்று ஏற்பட்டது. இவ்வாறு வரலாறு வளைவு சுழிவைக் காட்டுவதற்கு மக்களின் எழுச்சி, அபிலாஷை ஆகியவற்றைக் கண்டு எதிரிகள் தாமாகவே பணிந்து போய்விடாததே காரணம் என்பதை ஏகாதிபத்திய அரசு நிதர்சன உண்மையாக்கிக் காட்டியது. அது செயலில் இறங்கத் தொடங்கிவிட்டது;1908ல் திலகர் முதல் தமிழகத்தின் தலைவர்களான வ.உ.சி. சுப்பிரமணிய சிவா வரையிலான தீவிரவாதிகள், ஒன்றில் நாடுகடத்தப்பட்டனர், அல்லது கொடுஞ்சிறையின் சித்திரவதைக்காளாக்கப்பட்டனர்; எங்கும் அடக்குமுறை கோரத்தாண்டவமாடியது: இந்தியா' காரியாலயம் சீல் வைக்கப்பட்டு அதன் நிர்வாக ஆசிரியர் கைது செய்யப்பட்டார்; பாரதி கைது செய்யப்படும் அபாயம் கருதி அவரை நண்பர்கள் புதுவை சென்று 'இந்தியா' பத்திரிகையின் ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றப் பணித்தனர்.
அவ்வாறே பாரதி, பிரெஞ்சு இந்தியாவான புதுவை சென்று அங்கிருந்து இந்தியா' பத்திரிகையின் ஆசிரியரானார். அங்கிருந்து பிரித்தானிய இந்தியாவினுள் இந்தியா' பிரச்சாரப் பிரயாணம் செய்வதாயிற்று. இதற்கும் 1910இல் ஆப்பு வைக்கப்பட்டது; கடுமையான தடைச்சட்டம் காரணமாகப் பத்திரிகை பிரித்தானிய - இந்தியாவினுள் நுழைய முடியாது போகவே இறுதியில் இந்தியா நின்றுபோய்விட்டது.
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் () 11
3. ஒடுக்குமுறையைச் சாடும் பாங்கு
இந்த நிலையிலிருந்துதான் பாரதியின் அரசியல் வாழ்வின் இரண்டாவது கட்டம் தொடங்குகிறது. இந்தியா' பத்திரிகை வாயிலாகத் தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டபோதிலும், மீண்டும் அவர் பத்திரிகை வாயிலாக மக்களை அணுகும் நோக்குடன், நாலு வருடத்துக்குள்ளாகவே 'சுதேசமித்திரன்' களத்தைத் தெரிவு செய்து. அதனுடன் இணைந்தார். இந்த இடைக் காலத்திலுங்கூட, அதாவது 1910ஆம் ஆண்டிலிருந்து மீண்டும்பத்திரிக்கைக்களத்தைத் தேடியது வரையான நாலு வருடங்களில் கூடப் பாரதி கதிகலங்கிச் செயலற்று வாழரு விருக்கவில்லை. மாறாக, இச்சிறிய கால இடைவெளியே "பாஞ்சாலிசபதம்' கருக்கொள்ளவும் அதன் முதல்பாகம் அச்சேறவும் உதவியது; பகவத்கீதை மொழிபெயர்ப்பைப் படைக்கவும் மகத்தான முன்னுரை அதற்கு வழங்கவும் வகை செய்தது. வீரச் சபதம் நிறைவேற்றும் வினாயகர் நான்மணிமாலையைத் தந்தது. இவையனைத்தும், நம்பிக்கையற்ற அச்சூழ்நிலையை பாரதி மாற்றியமைப்பதற்கும், தளராத நம்பிக்கையை ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சிக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாயிருக்கின்றன.
அவற்றில் ஒன்றான "பாஞ்சாலி சபதம்' எழுதப்பட்ட காரணத்தை -கலாநிதி கா.மீனாட்சிசுந்தரம் எடுத்துக் காட்டுகிறார் :
'இதில் மறைமுகப் பிரச்சாரம் அமைந்திருப்பதை நம்மால் உணராமல் இருக்கமுடியாது. பாஞ்சாலியின் உறுதிவாய்ந்த எதிர்ப்பிலும் அச்சமற்ற சபதத்திலும், அவமதிக்கப்பட்ட இந்திய மக்களின் பொங்கியெழுந்த சினக்குரலையே கேட்கிறோம். , , 10
இவ்வாறு எண்ணுவதற்கு நியாயமான காரணம் இருக்கிறது. பாஞ்சாலி வடிவில் பாரதி பாரதமாதாவைத்தான் படம் பிடித்துக் காட்டினார். இதை ப.ஜீவனாந்தம் பல ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறார். அவற்றில் உச்சக் காட்சியான உயர் சாட்சிஒன்று பாஞ்சாலியை துச்சாதனன் கூந்தல் பற்றி வழிநெடுக இழுத்துவரும்வேளை அவனைக் கொன்று பாஞ்சாலியை மீட்டு அந்தப்புரத்தில் சேர்க்காதிருந்த அப்பாவி மக்களின் பேடித்தனங் கண்டு கொதித்துக் குமுறியெழும் பாரதியின் ஓங்காரக் குரலினைத்தொட்டுக் காட்டி, இது பாரத மக்கள் பாரததேவியை அரியணையேற்றத் திராணியற்றிருக்கும் நிலை கண்டு பாரதி கொதிப்படைந்ததன் வெளிப்பாடுதான் என்று கூறியதன்மூலம், ப.ஜீவானந்தம் எடுத்துக்காட்டியிருக்கிறார். அவர் காட்டிய பாரதியின் இந்த வரிகள், அந்த உண்மையைத்தான் தெளிவுபடுத்துகிறது -
Page 16
12 口 அரசியல் இலக்கியமும் பாரதியும்
"..வழி நெடுக மொய்த்தவராய் ‘என்னகொடுமையிது வென்று பார்த்திருந்தா ஊரவர் தங்கீழ்மை உரைக்குந்தர மாமோ? வீரமிலா நாய்கள், விலங்காம் இளவரசன் தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே, பொன்னையவள் அந்தப்புரத்தினிலே சேர்க்காமல், நெட்டை மரங்களென நின்று புலம்பினார் பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையா மோ?"
இவ்விதம் துயர் தோய்ந்த சினக்குரலில் எழும் கேள்வி வாயிலாக ஆண்டாண்டுகால அடிமைத்தனத்தைத் துடைத்தெறிய வக்கில்லாத அவலமான ஒலத்தை, அதே நிலையில் தகர்க்கப்படவேண்டிய பெண்ணடிமைத்தனத்தின் புலம்பலுடன் இணைத்துப் 'பெட்டைப்புலம்பல்" என அழகான ஆழமான உவமைச் சிறப்புடன் பாரதி வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதேவேளை நிலவிவந்த அடக்குமுறையைப் "பேயரசு செய்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள்!' எனப் பொங்கியெழுஞ் சினக்குரலில் சாடுகிறார். இந்த நிலை நீடிக்கப் போவதில்லையென்பதையும் பாரதி தெள்ளத் தெளிவாகச் சொல்லி வைக்கிறார். அதை அர்ச்சுனன் வாயிலாக நிதானத்துடன் சொல்கிறார்.
'தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்: தருமமறு படி வெல்லும், எனுமியற்கை மருமத்தை நம்மாலே யுலகங் கற்கும் வழிதேடி விதியிந்தச் செய்கை செய்தான்
கருமத்தை மேன்மேலுங் காண்போம். இன்று கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; கால மாறும் தருமத்தை யப்போது வெல்லக் காண்போம் தனுவுண்டு காண்டீவ மதன்பேர். '
என்றான் (அர்ச்சுனன்).
அத்தகைய வீரச்சமர் விரைவில் வரவிருப்பதை பாரதி நம்பிக்கையோடு எதிர்நோக்கியிருந்தார். அதுவரை யாது காரணம் முன்னிட்டும் கலங்காதிருக்கும் திண்ணிய நெஞ்சம் வரப்பெற்ற பாங்கினை 'வினாயகர் நான் மணிமாலை'யில் காட்டி நிற்கிறார் :
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் 0 13
'அச்சமில்லை அமுங்குதலில்லை
நடுங்குதலில்லை நாணுதலில்லை பாவமில்லை பதுங்குதலில்லை ஏதுநேரினும் இடர்ப்படமாட்டோம்.'
இவ்வாறு எத்தகைய நெருக்கடி நிலையிலும் வாடிப்போகாது நம்பிக்கையுடன் கடமையைச் செய்யத்தூண்டும் நோக்குடனே கீதை மொழிபெயர்ப்பை (1912இல்) பாரதி செய்திருப்பதை அதன் முன்னுரையிலிருந்து புரிந்துகொள்ள முடியும். அந்த முன்னுரையிலேயே, கீதையின் சில கோட்பாடுகளுடன் (மறுபிறப்பு, துறவு, யாகம் போன்றவற்றுடன்) அவர் உடன்பாடில்லாததைக் காணமுடியும், அப்படியிருந்தும் அதனை முக்கியத்துவமானதாக அவர் கருதியதற்கு ஒரு காரணம், ‘கடமையைச் செய்வது மனித இயற்கை, இலட்சியம் வெற்றி பெறும் - அது இயற்கை (தெய்வ) நியதி, அந்தப் பயனில் மனிதனுக்குப் பொறுப்பில்லை' என்பதை உணர்த்துவதன் வாயிலாக நம்பிக்கையை விதைக்கும் உன்னத குறிக்கோள் ஒன்றுதான்.
இதேவேளை, 1914இல் 1ம் உலக யுத்தம் தொடங்கித் தொடர்ந்து கொண்டிருந்தது. இவ்வேளை ஆங்கில அரசுக்குத் தொந்தரவு கொடுக்கக்கூடாது, யுத்தம் முடிந்தால் 'சுயராஜ்யத்தைத் தந்துவிடுவார்கள் என்று காந்தியுட்படக் காங்கிரஸ், முஸ்லிம் லீக் தலைவர்கள் சொல்கிறார்கள். இதனை மறுத்த பாரதி இப்போதே (யுத்தகாலத்திலேயே) சுயராஜ்யத்தை வழங்கிடும்படி காங்கிரஸoம் முஸ்லிம் லீக்கும் வற்புறுத்தி, மக்கள் மத்தியில் கிராமம் கிராமமாகச் சென்று குரல் எழுப்ப வேண்டுமென்கிறார். இதைக் காங்கிரஸ்-முஸ்லிம் லீக் தலைவர்கள் நிறைவேற்றாத போதிலும், பாரதியின் பாதையைக் காலங் கடந்தாயினும் மேற்கொள்ளும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். அவர்கள் எதிர்பார்த்த அளவில்கூட ஏகாதிபத்திய அரசு 'கருணை காட்டத் தவறியது. இந்நிலையில் அதிருப்தியுணர்வு எங்கும் ஆட்கொள்ளத் தொடங்கியது; காங்கிரஸின் கும்பகர்ணத் தூக்கத்தை அரசு அடக்குமுறைப் பீரங்கியால் அதிரவைத்தது.
மீண்டும் தேசிய உணர்வு கொந்தளிக்கத் தொடங்குகின்றது: அதற்குரிய அகநிலை 1916 இலிருந்தே உருவாகத் தொடங்கிவிட்டது. அதேவேளை புறநிலை ரீதியாக, பலமான அரசொன்றை உழைப்பாளி மக்கள்திரள் தொழிலாளி வர்க்கத் தலைமையில் போராடி வீழ்த்தித் தமது கரங்களில் ஆட்சியதிகாரத்தைப் பெறமுடியுமென்ற அசையாத நம்பிக்கையைச் செயலாக்கிக் காட்டியதன் மூலம், இந்தியத் தொழிலாளர் விவசாயிகளை உலுக்கி எழுப்பியது. 1917இன் லெனின் தலைமையிலான ரஷ்ய அக்டோபர் புரட்சி ܀
Page 17
14 O அரசியல் இலக்கியமும் பாரதியும்
4. அக்டோபர் புரட்சி பற்றி பாரதி
இப்புரட்சியை வாழ்த்தி வரவேற்றுப் பாடிய முதலாவது இந்தியக் கவி பாரதிதான். இந்த உண்மையைச் சில 'அதிதீவிரப் புரட்சி" வீரர்களால் சீரணிக்க முடியவில்லை. அத்தகையவர்கள், பாரதி ஒரு முதலாளித்துவக் கவிஞரென்பதால் அவர் அக்டோபர் புரட்சியை வாழ்த்தியிருக்க முடியாதென்று கருதி, பாரதி அதே ஆண்டில் பெப்ரவரியில் நடந்த, ஜார் மன்னன் தூக்கியெறியப்பட்டுக் கெரென்ஸ்கி தலைமையில் தற்காலிக அரசு பதவியேற்ற பெப்ரவரி (முதலாளித்துவப்) புரட்சியையே வாழ்த்தினார் என்று கூறி உண்மையை விகாரப்படுத்துகிறார்கள் இல்லையென்றால்: "லெனின் தலைமையிலான போல்ஷிக் அரசு நீடித்து அரசாள முடியாதென்று பாரதி சொல்லியிருப்பாரா?' என்று கேட்கிறார்கள்.
இந்த மாதிரி முதலாளித்துவ சார்பு நிலைப்பாட்டுக்கும் சோஷலிஸப் புரட்சியைக் குதூகல மனோபாவத்துடன் வரவேற்றுப் பாடிய கவிதா உணர்வுக்குமிடையே ஒரு சீன நெடுஞ்சுவர் எழுப்பிப் பிரிக்க வேண்டியதில்லை. அத்தகைய தடைச் சுவர்களையும் தகர்த்துக் கொண்டு அக்டோபர் புரட்சி தேசிய வாதிகளை ஆகர்ஷித்துக் கொண்டதென்பது ஒரு புறநிலை ரீதியான உண்மை. இதனால்தான் 'உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்' என்ற கோஷத்துடன் 'ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்' என்ற கோஷத்தையும் இணைப்பது நடைமுறைச் சாத்தியமானது. அதற்குரிய நம்பிக்கையான சூழ்நிலையையும் அக்டோபர் புரட்சி வழங்கியது. அப்புரட்சியொன்றே முதன் முதலாகத் தேசிய இனங்களின் சுய நிர்ணயத்தை அங்கீகரித்துத் தனது நாட்டின் காலடியில் அடக்கப்பட்டுவந்த தேசங்களின் சுதந்திரத்தை அங்கீகரித்திருந்தது. அதுமட்டுமல்லாமல், தேசங்களைக் கபளிகரம் செய்யும் ஏகாதிபத்திய யுத்தத்திலிருந்து தனது மக்களைத் திருப்பியழைத்த புரட்சிகர நடைமுறையை அக்டோபர் புரட்சிதான் நிதர்சன உண்மையாக்கிக் காட்டியது. இவற்றையெல்லாம், தீவிர தேசியவாதியான பாரதி பார்க்கத் தவறவில்லை. அதோடு அவர் கெரென்ஸ்கி அரசு தோன்றிய உடன் புதிய சகாப்தம் உருவாகியதாகக் கருதவில்லையென்பதற்கும் அக்டோபர் புரட்சியையே கிருத யுகத்தைக் கட்டியங் கூறிய புரட்சியாகக் கருதினார் என்பதற்கும் பல நூறு ஆதாரங்கள் உண்டு. அவர் 28-03-1917இல், பெப்ரவரிப் புரட்சியின்பின் சொல்கிறார்.
'பூமியில் நல்ல யுகம் தோன்றப்போகிறது. மனித ஜாதி
முழுமைக்கும் விடுதலை உண்டாகப் போகிறது. ருஷ்ய ராஜ்யப்
புரட்சியானது இனி வரப்போகின்ற நற்காலத்தின் முன்னடையாளங்களில் -ஒன்று. '
இவ்வாறு அக்டோபர் புரட்சிக்கு முன் இனிவரப் போகின்ற நற்காலத்துக்கு' அடையாளம் தெரிவதையே அவர் கண்டு, காட்டினார் அதன் பின்னர், அக்டோபர் புரட்சி வெற்றி வாகை குடிய பின்னர், ஜாரின்
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் () 15
கொடுமையின் முடிவைப் போல்ஷ்விக்குகளே உறுதிப்படுத்தியதை நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்' என்ற கட்டுரையில் -
'ருஷ்யாவில் ஜார் சக்கரவர்த்தியின் ஆட்சி பெரும்பாலும் ஸ்மத்துவக் ககூழியார் அதாவது போல்ஷிவிஸ்ட் கட்சியாரின் பலத்தாலேயே அழிக்கப்பட்டது. எனினும் ஜார் வீழ்ச்சியடைந்த மாத்திரத்திலே அதிகாரம் போல்ஷிவிஸ்ட்களின் கைக்கு வந்துவிடவில்லை. அப்பால் சிறிது காலம், முதலாளிக் கூட்டத்தார் கெரென்ஸ்கி என்பவரைத் தலைவராக நிறுத்தி, ஒருவிதமான குடியரசு நடத்தத் தொடங்கினார்கள். ஆனால் கெரென்ஸ்கியின் ஆட்சி அங்கு நீடித்து நடக்கவில்லை. இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய நேச ராஜ்யங்களிடமிருந்து பல வகைகளில் உதவி பெற்ற போதிலும், புதிய கிளர்ச்சிகளின் வெள்ளத்தினிடையே கெரென்ஸ்கியால் தலைதூக்கி நிற்கமுடியவில்லை. சில மாஸங்களுக்குள்ளே"கெரென்ஸ்கி தன் உயிரைத் தப்புவித்துக் கொள்ளும் பொருட்டாக, ருஷ்யாவினின்றும் ஒடிப்போய், நேசவல்லரசுகளின் நாடுகளில் தஞ்சம் புகநேரிட்டது.' 2
என்கிறார். இவ்வாறு குதூகலிக்கும் அதேவேளை போல்ஷ்விக் ஆட்சிக்கு அபாயந்தரும் நிலையைக் கண்டபோது அவர் வருந்தினார் என்பதுதான் உண்மை, நேச வல்லரசுகள் கெரன்ஸ்கி போன்றோரின் உதவியுடன் உள்நாட்டு யுத்தத்துக்கு தொடர்ந்து தூபமிட்ட வண்ணமிருந்தார்கள். இது, பாரதிக்குத் தூக்கமில்லாத அளவுக்கு மன உலைச்சலைக் கொடுத்தது. அவர் பலவாறாக வருந்தி, தான் தூக்கமின்றி அவதிப்பட்டதைச் சோகரசங் கலந்த நகைச்சுவை உணர்வோடு எழுதும் போது 'உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இருபக்கம் இடி லெனினுக்கு லட்சம் பக்கத்திலே!' 芷3 என்கிறார்.
இத்தகைய நெருக்கடிகளை முறியடித்துப் படிப்படியாக வெற்றியை உறுதிபடுத்தும் பல சட்டங்களை ருஷ்யப் பாட்டாளி வர்க்கக் கட்சி நிறைவேற்றுவதைக் கண்டபோது, இலட்சியப் பற்றுமிக்க பொறாமையுணர்வுடன் குதூகலிக்கிறார் பாரதி. அவர் கிருத யுகத்தை இந்தியா முதலில் உலகுக்களிக்கும் என்ற அசையாத நம்பிக்கையுடன் அயராது உழைத்தவராதலால் புதிய ருஷ்யாவின் உறுதியான வளர்ச்சியைக் கண்டபோது
'ருஷ்யாவில் 'சோஷலிஸ்ட்' கட்சியார் ஏறக்குறைய நம்முடைய நோக்கத்தை நிறைவேற்றிவிடக்கூடுமென்று தோன்றுகின்றது.'
என்று எழுதினார். இவ்வாறு அவரது முழுமையான தோற்றம் தெளிவாகக் காட்டும் ஒரே உண்மை அக்டோபர் புரட்சியே கிருத யுகத்துக்கு கட்டியங் கூறிய புரட்சியென அவர் கருதினார் என்பதும், ஆதலால் 'புதிய ருஷ்யா' அக்டோபர் புரட்சியையே வாழ்த்திப் பாடப்பட்டது என்பதுமாகும்.
இவைதவிர, இன்னும் பல ஆதாரங்களை வைத்துப் பல ஆய்வாளர்கள், பாரதி அக்டோபர் புரட்சியை வாழ்த்திப் பாடிய
Page 18
16 அரசியல் இலக்கியமும் பாரதியும்
கவிதைதான் 'புதிய ருஷ்யா' என்பதை எடுத்துக் காட்டியுள்ளார்களாதலால் இதற்குமேல் 'அதிதீவிரப் புரட்சி வீரர்களிடமிருந்து நிஜமான பாரதியை மீட்க நாம் நேரத்தைச் செலவிடவேண்டாம்.
அவர் அக்டோபர் புரட்சியின் சாராம்சத்தைக் கிரகித்து அதைக் கவிதாநயத்துடன் வடித்திருக்கிறார்.
'குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுறக் குடிமை நீதி
கடிதொன்றில் எழுந்ததுபார் குடியரசென்று
உலகறியக் கூறிவிட்டார்
அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
அடிமையில்லை அறிக என்றார்!"
என அகவயப்பட்ட மகிழுணர்வோடு கூறித் தனது இலட்சிய சகாப்தம் இனி எதிர்காலத்துக்குரியதல்ல; அதற்குக் கட்டியங் கூறப்பட்டுவிட்டதெனப் பாடிவைக்கிறார்.
'இடிபட்ட சுவர் போல் கலிவிழுந்தான் கிருத யுகம் எழுக மாதோ'
5. பேரெழுச்சி தோற்றிய "புதிய விதி"
இத்தகைய ஆனந்தக்களிப்பும், நம்பிக்கையும் பாரதியிடம் மட்டுமல்ல, தேசம் பரந்த அளவில் பலரிடம் வேர்பரப்பத் தொடங்கிவிட்டது. இந்த நம்பிக்கை யொளியுடன் எழுந்த இந்திய தேசிய எழுச்சிப் பேரலையை, 1919இல் அடக்க எண்ணி அரசுமேற்கொண்ட அமிர்தசரஸ் படுகொலை', எரிகிற நெருப்பில் நெய்யை வார்த்தாற். போலானது. அரசின் 1919இன் சீர்திருத்த நடவடிக்கையை இந்திய மக்கள் தீரத்துடன் எதிர்த்துப் போராடினர். அதில், புதுவையிலிருந்து 1918ஆம் ஆண்டில் பிரித்தானிய - இந்தியாவுக்கு மீண்டுவிட்ட பாரதியும் கலந்து
கொண்டார்.
அதேவேளை 1919 டிசம்பர் வரை ஏகாதிபத்திய அரசில் நம்பிக்கை பாராட்டிய காந்தி ஒத்துழையாமை'யை முன் வைக்கிறார். இந்த ஒத்துழையாமையை விபின் சந்திரபால், ரஞ்சினதாஸ் உட்பட பாரதி ஈறாக உள்ள 'பழைய தீவிரவாதிகள் எதிர்க்கின்றனர். அவ்வாறு எதிர்ப்பதற்கான காரணத்தை பாரதி தெளிவாக 30-11-1920 'சுதேசமித்திரன் இதழில் விளக்குகிறார்.
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் 0 17
'.இந்த ஒத்துழையாமை முறையையே மிகவும் உக்ரமாகவும், தீர்வை மறுத்தல் முதலிய அதன் இறுதிப் படிகளை உடனே உட்படுத்தியும் அனுஷ்டித்தால், ஒருவேளை அன்னிய ராஜாங்கத்தை ஸ்தம்பிக்கச் செய்வதாகிய பயன் அதனால் விளையக்கூடும்.
எனினும் இப்போது காண்பிக்கப்பட்டிருப்பதாகிய முதற்படியின் முறைகளால் அந்தப் பயன் எய்துவது ஸாத்தியமில்லை. தேசாபிமானிகள் மாத்திரமே சட்டசபை ஸ்தானங்களை பஹிஸ்காரம் செய்ய மற்ற வகுப்பினர் அந்த ஸ்தானங்களையெல்லாம் பிடித்துக் கொள்வதினின்றும் இந்தியாவில் ஆங்கில ஆட்சியை ஸ்தம்பிக்கச் செய்தல் அரிதென்று தோன்றுகிறது. இங்ங்னமே வக்கீல்கள் தம் உத்தியோகங்களையும், பிள்ளைகள் படிப்பையும் விடும்படி செய்தல் இப்போது நம்மால் முற்றிலும் சாதிக்க முடியாத விஷயமாகத் தோன்றுவதுடன் அதனால் குறிப்பிட்ட பயனெய்தி விடுமென்று தீர்மானிக்கவும் இடமில்லை.'"
இதில் ஓர் உண்மையை வரலாறு நிரூபித்தது. பாரதி எதிர்பார்த்தது போலவே வக்கீல்கள் பகிஷ்கரிப்புப் படுதோல்வியைத் தழுவியது; தாஸ், மோதிலால் நேரு ஆகிய வக்கீல்கள் மாத்திரமே நீதிமன்றத்தைப் பகிஷ்கரித்தனர்; அதே வேளை காந்தியால் அறிவிக்கப்படாத போதிலும் பாரதி விரும்பியது போலவே விவசாயிகள் தன்னெழுச்சிபூர்வமாக தீர்வை மறுத்தலில் இறங்கி இந்தியா முழுவதும் அதுவே இயக்கமாகப் பரிணமித்தது.
இது முதலாவது தேசிய எழுச்சிப் பேரலையில் காணமுடியாத அம்சம். இப்போது வீறுகொண்ட எழுச்சி பாரதி விரும்பியபடி கீழ்நிலை வரை உலுக்கிவிட்டது. தொழிலாளர், விவசாயிகள், ஓரளவில் மாணவர்கள் என்ற வெகுஜனப் பெருந்திரள் முதல் முறையாக அரசியல் அரங்கில் தமது மகத்தான பங்களிப்பை வெளிப்படுத்திவிட்டார்கள், அதனால்தான் ராஜனி பாமி தத் 'இன்றைய இந்தியா' என்ற நூலில் 'இதனை முந்திய தீவிரவாதிகள் கண்டால் அதிசயித்துப் போவார்கள்' " என்றார். அந்த அதிசய சக்தியை நேரில் கண்ட பாரதி பெரும் உற்சாகத்துடன், தான் முதலில் எதிர்த்த அதே ஒத்துழையாமையை (காந்தி) -
'கெடுதலின்றி நந் தாய்த்திரு நாட்டின்
கிளர்ச்சி தன்னை வளர்ச்சிசெய்கின்றான்'
- - - - - இன்று பாரதப் பொன்னா டெங்கும்;
மாந்தரெல் லோரும் சோர்வை அச்சத்தை மறந்து விட்டார்
காந்திசொற் கேட்டார், காண்பார் விடுதலை கணத்தினுள்ளே,
என்று பாரதமாதா நவரத்தின மாலை'யில் பாராட்டி ஆதரிக்கத் தொடங்குகிறார். இருந்தபோதிலும் எந்தக் காரணத்துக்காக பாரதி
Page 19
18 O அரசியல் இலக்கியமும் பாரதியும்
'மகாத்மா காந்தி பஞ்சகம் படைத்தாரோ அதற்கு ஏற்பட்ட கதியைக் காண அவர் உயிருடன் இருக்கவில்லை. எதைக் கண்டு பாரதி குதூகலித்துக் கொண்டு 1921-09-12 அன்று கண்களை மூடினாரோ, அதைக் கண்டு காந்தி கலங்கினார். அதன் விளைவாக, காங்கிரஸ் செயற் கமிட்டியின் அவசரக் கூட்டம், 1922-2-12 இல் (பாரதி மறைந்து சரியாக ஐந்து மாதங்களின் பின்) பர்தோலி என்ற இடத்தில், காந்தி தலைமையில் கூட்டப்பட்டது. அது மக்களின் தீர்வை மறுத்தல் இயக்கத்தை தயவு தாட்சண்யமின்றிக் கண்டித்து, "ஜனக் கூட்டத்தின் சண்டாளத்தனமான நடத்தையைக் கண்டு காரியக் கமிட்டி வருந்துகிறது' என்று அரசிடமும் , ஜமீன்தார்களிடமும் மன்னிப்பு கோரியது; அது சனங்களின் 'காடைத் தனத்தை'ச் சாடியது; அதோடு நில்லாது 'நிலவரியையும் அரசாங்கத்துக்குச் செலுத்தவேண்டிய இதர வரிகளையும் செலுத்தும்படி விவசாயிகளுக்கு யோசனை கூறி' 1 வெகுஜன எழுச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முழு முயற்சியெடுத்தது. இதற்குபின்தான் காந்தி 'பக்குவப்படாத சனங்களை'ப் பேசாதிருக்கும்படி பணித்துவிட்டுத் தனிநபர் சத்தியாக்கிரகத்தை அறிமுகப்படுத்தினார்.
இவ்வாறு மக்கள் குரல்வளை நெரித்து அடக்கப்பட்டதற்காகக் காந்திக்கு பாரதி கொடுத்திருக்கக்கூடிய தீர்ப்பை ஓரளவுக்கு கற்பனை செய்யமுடியும். அது புதிய மிதவாதத் தலைவர் காந்தியின் குருவான பழைய மிதவாதத் தலைவர் கோகலேயை 'கோகலே சாமியார்' என்று கிண்டல் செய்து எழுதிய 'கோகலே சாமியார் பாடல் போன்று இருக்காதா? இவ்வாறு கோகலேயை பாரதி கிண்டல் செய்த அதே வேளை
'. வேறு சில சாமானிய ஜனங்களைப் போல, கோகலே பயத்தினாலேனும் அற்ப ஆசைகளினாலேனும் ஜனப்பிரியமான முயற்சிகளை எதிர்த்துப் பேசும் சுபாவமுடையவரில்லை. தமக்கு உண்மையாக புலப்படும் விஷயங்களையே பிறருக்குப் போதனை செய்ய முயலும் இயற்கையுடையவர். ,,18
என்று மதிப்பீடு செய்து அக்காரணத்தினால் கோகலேயை பாரதி மதித்ததையும் நாம் மறக்கக்கூடாது. அதேபோல காந்திக்கிருந்த வெகுஜனச் செல்வாக்கைக் கண்டு, அதன் வாயிலாக மக்களைக் கிளர்ந்தெழத் தூண்ட முடிந்ததென அறிந்து, வாழ்த்தி வரவேற்ற பாரதி, இறுதியில் அதுவே எழுச்சியை நசுக்கவும் பயன்பட்டதெனக் கண்டிருந்தால் மிகவும் வேதனைப்பட்டிருப்பார். அச்செயலை மிக வன்மையாகக் கண்டிப்பதற்கு, காந்திமீதான மதிப்புணர்வு அவரை ஒரு போதும் தடுத்திருக்காது. அதைவிட சுதந்திர ஆர்வமே அவரிடம் மேலோங்கியிருந்ததால் கிண்டல் தொனிக்கும் நடையில் கடுமையாகச் சாடியிருப்பார். அதற்கு இடமில்லாமல் அவர் மறைந்த பின்னாலேயே எழுச்சி நசுக்கப்படலாயிற்று.
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் 0 19
இவ்வாறு இரண்டாவது தேசிய எழுச்சிப் பேரலை பாரதியின் மறைவுக்குப்பின் அடக்கப்பட்டபோதிலும், அது வீறுகொண்டு பொங்கியெழுந்ததைக்கண்டு மகிழ்ந்தவர் பாரதி, அந்த மகிழ்ச்சி காரணமாகவேதான் அவர் 'புதிய பாரத சமுதாயம்' குறித்தும் கட்டியங் கூறுகிறார்.
'முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை ஒப்பில்லாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை வாழ்க!”
இவ்வாறு, 'நெருங்கிய பயன் சேர் "ஒத்துழையாமை நெறியினால்'
தோன்றிவிட்ட தீர்வை மறுத்தலின் உக்கிர நிலையின் மகத்துவத்தை உணர்ந்து காட்டியவர், அது எத்தகைய விளைவை உண்டுபண்ணப் போகிறது என்பதையும் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்:
"மனிதருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ?"
இருக்க முடியாது! இந்த நிலைகளும் இல்லையென்ற சொல்லேகூட இல்லாதொழிக்கப்படும் ஒப்பில்லாத சமுதாயத்தின் தாரகமந்திரம் புதிய விதி, பாரதியால் படைக்கப்பட்டுவிட்டது. இதனூடாக பாரதி கஞ்சிகுடிப்பதற்கிலாத காரணத்தை அறியாது வாடிய, மக்களின் துயர்களைக் களைந்தெறிய வழியறியாத, பழைய நிலையிலிருந்து தெளிவுபெற்று. இப்போது வழியறிந்து அதைப் பறைசாற்றுகிறார்.
'இனியொரு விதிசெய்வோம் அதை
எந்த நாளும் காப்போம்;
தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்!"
இதனை உறுதியுடன் பறையறையும் புதியமனிதன் -இவ்வாறு எழுச்சிபெற்றுவிட்ட இந்திய மனிதன் - இனிப் பூரணத்துவம் பெற்றுவிடுவான்; அதன் மூலம், ஒவ்வொரு மனிதனும் எங்கோ உள்ள பூரணத்துவத்தைத் தேடுவதல்ல, தன்னுள் நிறைந்துள்ள பூரணத்துவத்தைக் கண்டு, அதையே விருத்திசெய்யும் தத்துவத்தை நிறைவு செய்வதினூடாக, இந்தியா அதனை உலகுக்கு எடுத்துக்காட்டும் என்று ஆர்ப்பரிக்கிறார்.
Page 20
20 அரசியல் இலக்கியமும் பாரதியும்
'எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்"
என்றுரைத்தான் கண்ண பெருமான்
எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும்.'
6. ஆயுதமேந்திய எழுச்சியும் இந்திய விடுதலையும்
இந்த நிலையைத் தோற்றுவிக்கும் வகையில் தீர்வை மறுத்தல் இயக்கத்தின் உக்கிர நிலை இதற்கும் மேலான உயர்ந்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்கப்படுவதற்கு மாறாக, "பர்தோலி செய்ற் கமிட்டி' ஊடாகக் காந்தி அதனை முறியடித்தபோதிலும், இந்த இயக்கம் கதவைத் திறந்துவிட்டதால் தன்னெழுச்சி பூர்வமாகவே அரசியல் அரங்கில் பிரவேசித்த பாட்டாளி வர்க்கம், பாரதியின் மரணத்துக்கு அடுத்த ஓரிரு ஆண்டுகளிலேயே தனது ஸ்தாபனத்தை உருவாக்கி, 1925இல் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்ற வடிவில் தனது அரசியல் ஸ்தாபனத்தையும் உருவாக்கிக் கொண்டுவிட்டது. இதன் விளைவாக 1930-34 இன் மூன்றாவது தேசிய எழுச்சிப் பேரலை தொழிலாளர் - விவசாயிகளின் வளர்ச்சியடைந்த போராட்ட வடிவத்தைச் சந்திக்க முடிந்தது. இதையடுத்து 1942 இன் தேசம் பரந்த எழுச்சி நேரடியாக ஆயுதபலத்தின் மகிமையை வெளிப்படுத்திவிட்டது. இப்புரட்சியின் போது ஏகாதிபத்திய அரசு வழக்கம்போல் காங்கிரஸின் தீவிரவாதிகளையும், கம்யூனிஸ்ட் தலைவர்களையும் மட்டும் சிறையிடவில்லை. இம்முறை வெளியே இருந்து சத்தியாகிரகம் போதிக்க இடமில்லாமல் காந்தியையும் உள்ளே இழுத்துவைத்தார்கள். இதனால் சுதந்திர தாகம் தணியாத மக்கள் இறுதி நிலையிலாவது, தங்கள் கைகளில் அகப்பட்ட ஆயுதங்களையேனும், ஏந்திக்கொள்ள முடிந்தது. இதனால்தான் காந்தீய தத்துவம் இந்திய சுதந்திரத்தின் அத்திவாரம் என முழக்கமிட்டபோதிலும், இந்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்றுப் புத்தகமான 'சுதந்திரப்போராட்டம்' மழுப்ப முடியாத நிலையில் இப்படிச் சொல்கிறது:
'1942ஆம் ஆண்டுப் புரட்சி தோல்வியுற்றதற்குக் காரணம் ஆயுதம் தாங்காத மக்கள், வழிகாட்டுவதற்குத் தலைவர்களும், கட்டுக்கோப்பாகச் செயலாற்றுவதற்கு வாய்ப்பும் இல்லாமல் நடத்திய போராட்டம், ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஏகாதிபத்திய வல்லரசின் இராணுவ வலிமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் போனதுதான். ஆனால் அப்புரட்சியினால் இரண்டு சாதனைகள் கிட்டின. ஏகாதிபத்தியத்தின்மீது இந்தியா கொண்டிருந்த சீற்றத்தையும், சுதந்திரம் அடைய நாடு கொண்டிருந்த உறுதியையும், அப்புரட்சி உலகுக்குத் தெளிவாகவும் துணிவாகவும் உணர்த்தியது. மக்களின் தேசிய உணர்வுகள் எந்த அளவு வலுத்து,
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் 0 21
ஆத்திரத்தின் உச்சநிலையை அடைந்திருந்தன என்பதற்கும், சுதந்திரம் பெறத் தங்கள் உரிமையை நிலைநாட்டிக் கொள்ள தியாகங்களையும் துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளும் உறுதி மக்களிடையே எவ்வளவு வலுத்திருந்தது என்பதற்கும் அப்புரட்சி உயிருள்ள சான்றாக அமைந்தது. இரண்டாவதாக, 1942ஆம் ஆண்டுப் புரட்சிக்குப்பின், இந்தியாவில் ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் இறுதிக் கட்டம் நெருங்கிவிட்டது என்ற தெளிவு, பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கும் ஏற்படும்படி செய்தது அப்புரட்சியின் மற்றொரு சாதனை.
ஒருவகையில் 1942ஆம் ஆண்டுப் புரட்சி, இந்திய சுதந்திர இயக்கத்தின் வெற்றிக்கட்டமாக அமைந்தது என்று கூறலாம். அப் புரட்சிக்குப்பின், நாடு சுதந்திரம் பெறுமா என்ற ஐயத்துக்கு இடமில்லாமல், எப்பொழுது சுதந்திரம் பெறும், இந்தியர் கைக்கு அதிகாரத்தை மாற்ற என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும், சுதந்திரத்துக்கு பின்பு நாட்டில் எத்தகைய அரசாட்சிமுறை நிறுவப்பட வேண்டும், என்பவை தான் விவாதத்துக்குரிய பிரச்சனைகளாக இருந்தன. 1942ஆம் ஆண்டுப் புரட்சிக்கும், 1947இல் நாடு சுதந்திரம் பெற்றதற்கும் இடையே பல அரசியல் பேரங்களும் பேச்சுவார்த்தைகளும், அரசியல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன என்பது உண்மைதான். ஆனால் சுதந்திரப் போராட்ட வெற்றியில் ஐயப்பாட்டுக்கு இடமில்லாத நிலையை உண்டாக்கியது, 1942ஆம் ஆண்டுப் புரட்சியின் மகத்தான சாதனையாகும்.' 19
இத்தகைய வரலாற்றுப் படிப்பினைகளும் பாரதி ஆய்வுக்கு அத்தியாவசியமானவையே. இல்லையெனில் ப. ஜீவானந்தங்கூட, 'ஆயுதப்பரிகரணம்’, ‘சமாதான சகவாழ்வு' போன்ற கோஷங்களுக்கு ஆட்பட்டு, "வருங்கதிகண்டு பாரதி தீர்க்க தரிசனத்துடன் காந்தியின் அஹிம்சா மகத்துவத்தை வாழ்த்தியதாக ’க் கருதிய நிலைக்கு நாமும் வருவோம்; அல்லது பாரதி ஆயுதமேந்திய மக்கள் எழுச்சியைப் பாடவில்லையென்றும், காந்தியத் தலைமை ஏற்றாரென்றும் ஆராய்வின்றிக்கூறி, பிற்போக்குவாதியென்ற பட்டத்தை பாரதிக்குச்சூட்ட நாமும் நிர்ப்பந்திக்கப்படுவோம். இத்தகைய தவறான இரு போக்குகளை நாம் இன்று காணமுடியும்.
இவற்றுக்கு மாறாகவே உண்மை நிலை காணப்படுகின்றது. பாரதி ‘வாழ்க நீ எம்மான்' என மகாத்மா காந்தி பஞ்சகம் படைத்து
'நெருங்கிய பயன்சேர் "ஒத்துழையாமை'
நெறியினால் இந்தியாவிற்கு
வருங்கதிகண்டு பகைத்தொழில் மறந்து
வையகம் வாழ்க நல்லறத்தே. '
என்றபோது, ஒத்துழையாமை அதன் ஒரு உயர் வடிவமான தீர்வை மறுத்தல் இயக்கமாகப் பரிணமிக்கத் தொடங்கிவிட்டது. அந்நிலையில்தான்
Page 21
22 D அரசியல் இலக்கியமும் பாரதியும்
வருங்கதிபற்றிப் பார்க்கிறார் என்பதை நாம் மறக்கக்கூடாது. அதே வேளை இதை மாத்திரம் வைத்து பாரதியின் தீர்க்கதரிசனத்தை அளவிடவுங் கூடாது. அவ்வாறு அளவிட முயற்சித்தால், இதற்கு மாறாக இந்திய வரலாறு ஆயுதமேந்திய மக்கள் எழுச்சிக்கும் சுதந்திரத்திற்கும் இடைய இருந்த தொடர்பை எடுத்துக்காட்டியதை பார்க்கத் தவறியவர்களாவோம்; அல்லது இந்த உண்மை காரணமாக 'பாரதியிடம் தீர்க்கதரிசனம் இருக்கவில்லைய்ே' என்று கூறுவோம்.
பாரதியின் தீர்க்கதரிசனத்தை, இன்னும் இரண்டு மூன்று தசாப்தங்களின் பின்னால் மட்டுமே சிலரால் உணர முடிந்த சுதந்திரத்தின் சாத்தியப்பாட்டை முன்கூட்டியே அறிவித்ததில் தான் பார்க்கவேண்டுமேயன்றி, அது அமையப்பெறுவதற்கு மேற்கொள்ளப்படும் செயல் வடிவங்கள் பற்றி அவர் கூறியவற்றில் தேடிப்போகக்கூடாது. செயல் வடிவங்களைப் பொறுத்தவரை, அது தேச - கால வர்த்தமானங்களுக்கு (நிலைமைகளுக்கு) அமைய மாறுபடும் என்பதை அவர் அறிந்திருந்தார்.
இல்லையென்றால் அவர்,
"பூரீமான் காந்தி நல்ல மனுஷர். அவர் சொல்லுகிற ஸத்ய விரதம், அஹிம்சை, உடைமை மறுத்தல், பயமின்மை இந்த நான்கும் உத்தம தர்மங்கள். இவற்றை எல்லோரும் இயன்றவரை பழகவேண்டும். ஆனால் ஒருவன் என்னை அடிக்கும்போது நான் அவனைத் திருப்பி அடிக்கக்கூடாது என்று சொல்லுதல் பிழை.'
என்று கூறியிருக்க அவசியமில்லை. அவர், காந்தி இந்திய அரசியலுக்கு வருவதற்கு ஒரு சகாப்தத்துக்கு முன்பே அந்நியப் பொருள் பஹஸ்காரத்தை உள்ளிட்ட அஹிம்சை வழிப் போராட்டத்தைத்தான் ஏற்றுக்கொண்டவர். இதன் மூலம் தானாக ஆயுதம் ஏந்துவதைத் தவிர்த்து, தனிநபர் பயங்கர வாதத்தை நிராகரித்த போதிலும் எதிரி ஆயுதம் ஏந்தும்போது அஹிம்சை பற்றிப் பேசி மக்களை நிராயுதபாணியாக்கும் நிலைக்கு அவர் ஒரு போதிலும் வந்ததில்லை.
இதை "ஸர்க்கார் அதிகாரிகள் கவனிக்கவும்' என்ற அவருடைய கட்டுரையிலிருந்துகூட நாம் விளங்கிக்கொள்ள முடியும்:
'ஜனங்கள் சமாதான வழிகளினால் தங்கள் நோக்கங்களை எதுவரை நிறைவேற்ற விரும்புகிறார்களோ அதுவரை கவர்ன்மென்டார் சும்மா இருக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அப்படியல்லாமல் பொதுக்கூட்டங்களைத் தடுத்தல், பாடசாலைகளை பயமுறுத்த ஜனத் தலைவர்களை தீபாந்திரத்திற்கு ஏற்றி அனுப்புதல் முதலிய கொடுங்கோல் முறைமைகளை அனுசரிப்பது ஸர்க்காருக்கே பெருங்கேடாக முடியும்.
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் 0 23
சமாதான வழிகளிலே விருப்பம் கொண்டு வேலை செய்யும் ஜனங்களை கவர்ன்மென்டார் உக்கிர வழிகளிலே செல்லும்படி பலவந்தப்படுத்தல் அவர்களுக்கு க்ஷேமகரமான செய்கையாகுமா" 21
ஆகாது என்பதை அறிந்து கொண்டு, ஆயுதத்தால் நேரும் அழிவைத் தடுக்க அரசு "பொறுமையுடனும் அடக்கத்துடனும் அறிவுடனும் வேலைசெய்ய வேண்டும். உக்கிரம் காண்பிப்பார்களானால் கலகமும் முதிர்ச்சி அடைந்துவிடும்' என்று பல இடங்களிலும் சொல்லியுள்ளாரேயன்றி, மக்கள் ஆயுதமேந்திய போது அதைத் தவிர்க்கமுடியாத தேவையென்றே அவர் கருதி வந்திருக்கிறார். அத்தகைய நிலைமைகளில் ஆயுதமேந்திய கலவரங்களை ஆதரித்துமிருக்கிறார்.
அவருடைய மரணத்துக்குப் பின்னால்தான், தேசம் பரந்த ஆயுத எழுச்சி ஒன்றே இந்தியாவின் பூரண சுதந்திரத்துக்கு வழியென்பதைச் சரித்திரம் எடுத்துக்காட்டியிருக்கிறது. அப்போது பாரதி இருந்திருந்தால் அவர் அநுபவத்தினூடாக அதைப் படித்திருக்கமுடியும். அப்போது மட்டுமே மக்களைக் கிளர்ந்தெழ இலக்கியம் படைத்த அவர் ஆயுத எழுச்சியைத் தூண்டிப் புதிய பணியை மேற்கொள்ள முடிந்திருக்கும்.
இதே நிலையில் வாழ்ந்த சீன எழுத்தாளர் லூசுன், 1919-20ம் ஆண்டுகளில் மார்க்ஸிஸவாதிகளுடன் தொடர்பிருந்தபோதிலும், 1921இல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான போதிலும், தன்னளவில் கருத்து முதல்வாதியாகவே இருந்து, 1927இன் புரட்சித் தோல்வியின் படிப்பினையிலிருந்தே, அவர் பொருள் முதல்வாதியாக, மார்க்ஸிஸவாதியாக மாறமுடிந்தது என்பதைக் காணமுடிகிறது. இதைப்போல பாரதிக்குங் கூட கம்யூனிஸ்ட் கட்சி உருவாகு முன்பே, மார்க்ஸிஸ்த்துடன் பரிச்சயமுள்ள சிங்காரவேலுச் செட்டியார் போன்றோருடன் தொடர்பிருந்திருக்கிறது. பாரதியுங்கூடக் கூர்மையான வர்க்கப் போராட்டத்தைத் தேசிய இயக்கத்தினூடாகக் கண்டு அதை இலக்கியமாக்கித் தந்திருக்கமுடியும். இதற்குச் சந்தர்ப்பமில்லாமல், அதற்குரிய புறநிலை முதனிலைகள் தோன்றுமுன் பாரதி மறைந்தது நமது துரதிர்ஷடம்.
7. தேசசுதந்திரமும் சமூக விடுதலையும்
இவ்வாறு, வர்க்க முரண்பாடுகள் தெளிவாக வெளிப்பட்ட இந்நூற்றாண்டின் மூன்றாவது சகாப்தத்தில் (இருபதாம் ஆண்டுகளில்) தொடர்ந்து வாழ்ந்திருந்தால் பாரதி விஞ்ஞானபூர்வமான வர்க்கப் போராட்டக் கோட்பாட்டை ஏற்றிருப்பார் என்று சொல்வது தனியான தானா? சரியானதுதான் என்பதற்கு அவருடைய சமூகப் பார்வை : சான்றாக இருக்கிறது. அவர் தேசிய விடுதலையுடன் சமூக
Page 22
24 அரசியல் இலக்கியமும் பாரதியும்
விடுதலையை இணைத்து வந்திருக்கிறார். அதானாலேயே ‘சுதந்திரப்பள்ளு" பாடியபோது, தேசம் விடுதலையடைந்தவுடன் -
'பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப் பறங்கியைத் துரையென்ற காலமும் போச்சே'
A
என்று ஆனந்தப்படப் போவதை எண்ணிப் பார்த்திருக்கிறார். இதைத் தெளிவாக பகுத்து 'விடுதலை’ என்ற கவிதையிலும் வெளிப்படுத்துகிறார், அக் கவிதையில் சாதியொடுக்குமுறையிலிருந்து விடுதலை, ஏற்றத்தாழ்விலிருந்து விடுதலை, பெண் விடுதலை என்ற அம்சங்களே சுதந்திர இந்தியாவில் துலங்க வேண்டும் என்பதையும், அந்த அம்சங்கள் உயர்ந்த கல்வி ஞானத்தால் நிறைவு செய்யப்படவேண்டும் என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இவை மூன்றிலும் பெண்ணடிமைத்தனத்தைச் சாடும் பண்புதான் பாரதியிடம் மேலோங்கியிருக்கிறது என்பது தெளிவு. இது இயல்பானதுதான். அதற்குரிய காரணத்தை அவருடைய இலக்கியமே கூறுகிறதே -
'நிலத்தின் தன்மை பயிர்க்குளதாகுமாம்;
நீசத் தொண்டும் மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
சாலவே யரி தாவதோர் செய்தியாம்.'
இவ்வாறு, தெளிந்த நல்லறிவும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத சுதந்திர மனப்பாங்கும் அமையப்பெற்ற அன்னையே மாண்புயர் மனிதனைப் பெற்றெடுக்க முடியும் என்றவர், நெஞ்சுரமிக்க பெண்கள் வாழக்கூடிய புதிய சமூகத்தைத் தோற்றுவிக்கவல்ல கிருதயுகத்தை தனது இலட்சிய சமுதாயமாகக் கொண்டவர். அத்தகைய கிருத யுகத்தை முன்னறிவித்த புரட்சியாய் அக்டோபர் புரட்சியை அவர் கண்டார். அவ்வாறு அக்டோபர் புரட்சியினால் உதயமான நவீன ருஷ்யாவில் அறிவிக்கப்பட்ட புதிய விவாக விதிகள் பெண் விடுதலை அம்சத்தை முழுமையாகக் கொண்டிருப்பதைக் கண்டு, காட்டினார். அதேவேளை ஐரோப்பிய நாடுகளில் மேலோங்கிய (முதலாளித்துவக் கலாசாரச் சீரழிவின் விளைவான) காதலில் சுதந்திரம்' என்பதை கண்டித்து 'அது கூடச் சுயநலங்கொண்ட காமுகரான ஒரு சில ஆண் ஆதிக்க வெறியர்களின் ஆசையே' எனச் சாடிக் கவி படைத்தார்
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் 0 25
காதலிலே விடுதலையென் றாங்கோர் கொள்கை
கடுகிவளர்ந் திடுமென்பார் யூரோப் பாவில்; மாதரெலாம் தம்முடைய விருப்பின் வண்ணம்
மனிதருடன் வாழந்திடலாம் என்பார் அன்னோர்; பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே
பிரியம்வந்தால் கலந்தபின்பு பிரிந்துவிட்டால், வேதனையொன்றில்லாதே பிரிந்து சென்று
வேறொருவன் றனைக்கூட வேண்டும் என்பார்.
வீரமிலா மனிதர் சொல்லும் வார்த்தை கண்டீர்
விடுதலையாங் காதலெனிற் பொய்மைக் காதல்! சோரரைப்போல் ஆண்மக்கள் புவியின் மீது
சுவைமிக்க பெண்மைநல முண்ணுகின்றார் காரணந்தான் யாதெனிலோ ஆண்களெல்லாம்
களவின்பம் விரும்புகின்றார், கற்பே மேலென்று ஈரமின்றி யெப்போதும் உப தேசங்கள்
எடுத்தெடுத்துப் பெண்களிடம் இயம்புவாரே!
ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,
அப்போது பெண்மையுங்கற் பழிந்திடாதோ? நாணமற்ற வார்த்தையன்றோ? வீட்டைச் சுட்டால்,
நலமான கூரையுந்தான் எரிந்தி டாதோ? பேணுமொரு காதலினை வேண்டி யன்றோ
பெண்மக்கள் கற்புநிலை பிறழு கின்றார்? காணுகின்ற காட்சியெல்லாம் மறைத்து வைத்துக் கற்புக்கற் பென்றுலகோர் கதைக்கின்றாரே
(பாரதி அறுபத்தாறு) இக்கேடுகெட்ட நிலை கடந்த, "உயர்ந்த நாகரிகத் தரத்தை சோவியத் அரசே பிரதிநிதித்துவப்படுத்துகிறது' என்பதையே "நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்' என்ற கட்டுரையில் அவர் எழுதினார். இந்த உயர் நாகரிகத்தை, அதாவது பெண் விடுதலையம்சத்தை, இன்றைய இந்தியா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகள் எவற்றிலும் காணமுடியாது. மாறாக, இந்நாடுகளில் முதலாளித்துவ, அரை நிலப்பிரபுத்துவச் சித்தாந்தங்களின் ஆட்சிநிலை காரணமாகப் பெண் விடுதலையும், ஒரு புறம் முதலாளித்துவக் கண்ணோட்டத்தில் தனிநபர் விமோசனமாகக் குறுக்கப்பட்டும், மறுபுறம் ‘விடுதலை காதல்’ எனும் கலாசாரச் சீரழிவை நோக்கி வளர்ந்து கொண்டும்
Page 23
26 口 அரசியல் இலக்கியமும் பாரதியும்
இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டே, பேராசிரியர் க. கைலாசபதி, காப்பியங்களிலிருந்து நவீன இலக்கியங்கள் வரை அகலிகை பட்டபாட்டை அலசி ஆராய்ந்துவிட்டு இப்படிச் சுட்டிக்காட்டியுள்ளார்,
'உண்மையில், மகாகவி பாரதியார் கற்பனை கண்டளவிற்குங்கூட இன்னும் எமது சமூகத்திற் பெண்கள் உரிமையும் உயர்வும் பெறவில்லை. 'பட்டங்கள் ஆள்வதும் / சட்டங்கள் செய்வதும் / பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்' என்று கவிஞர் பாடியதை மேலீடாகக் கொண்டு மாதர் நல்லறம்' நடைமுறைக்கு வந்துவிட்டது என்று சிலர் மயங்குவர்.
எமது நாடுகளில், மத்தியதர வர்க்க, பூர்ஷ்வா மனப்பான்மையோடு சில பெண்கள் பொது வாழ்க்கையில் புகழோடு விளங்குகின்றனர். ஆனால் இது 'பாரதப் பெண்குலம்' முழுவதற்கும் பொருந்துமா?.
இறுதியாக ஒன்று கூறலாம். கடந்த பல நூற்றாண்டுக் காலமாக அரசியல் அதிகாரம், வம்ச (குல) அதிகாரம், மத அதிகாரம், ஆண் (கணவன்) அதிகாரம் ஆகிய நான்கு வகையான அதிகாரங்களுக்கு ஆட்பட்டவர்களாய்ப் பெண்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இவற்றில் சில நவீன காலத்தில் பலவீனமுற்றிருக்கின்றன. எனினும், பெளதிக முறையிலும் கருத்துமுறையிலும் நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ - சித்தாந்தங்கள் இவற்றை ஆதரிக்கவே செய்கின்றன. மேற்கூறிய் அதிகாரங்களிற் சில ஆண்களையும் உட்படுத்துகின்றன. எனவே ஆணும் பெண்ணும், யாவரும் சேர்ந்து இவ்வதிகாரங்களுக்கு ஆதாரமான சமுதாய அமைப்பைத் தகர்த்தெறியும் பொழுதுதான் பெண் விடுதலையும் கிடைக்கும். அது வாய்ப் பேச்சாலன்றிப் போராட்டத்தினாலேயே வருவதாகும்.”*
அத்தகைய போராட்டங்களில் புடம் போட்டெடுக்கப்படும் இயக்கங்கள் பெண் விடுதலையைத் தனிநபர் விமோசனம் என்ற வகையிலன்றிச் சமூக விடுதலை முழுமையினதும் பிரதான பகுதியாகக் கணிக்கின்றன. அதன் காரணமாகவே பெண் விடுதலையில் தீவிர ஆர்வமும் முற்போக்குச் சிந்தனையுங் கொண்ட பெண்கள், முதலாளித்துவ - ஏகாதிபத்தியச் சிந்தனையின்பால் சோரம்போன பொழுதுபோக்கு 'மாதர் சங்கங்களுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தித் தேசிய - சமூக விடுதலை இயக்கங்களுடன் தம்மை இணைத்துக் கொண்டு, ஆண்களுடன் சரிநிகர் சமானமாக நின்று போராடுகிறார்கள் ஏன், ஸ்பெயின் குடியரசுப் போராட்டத்தின் வரலாற்றில், ஐரோப்பாவையே உலுப்பிவிட்ட வீரஞ்செறிந்த உள்நாட்டு யுத்தத்தின் போது முழு மக்களுக்கும் தலைமை கொடுத்தும், அப்போது ஸ்பெயின் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தலைழை தாங்க்யும் இபாறுறி, மக்கள் விடுதலை இயக்கத்தில் பெண்ணின் பங்கைத் தலைமை தாங்கும் நிலை வரை உயர்த்தியுமுள்ளார்; இப் பாரம்பரியத்தை இன்றுவரை விடுதலை இயக்கங்களில் இணைந்துள்ள பல்லாயிரக்கணக்கான பெண்கள் சிறந்த தலைமைப் பண்பின் வாயிலாகப் பேணிவந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய இயக்கங்களினூடாக சோஷலிஸ் அமைப்பை வென்றுகொண்ட சீனா போன்ற சோஷலிஸ்
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் () 27
நாடுகளில் பெண்கள் விடுதலைக்கு முன் இருந்த அடிமை நிலையிலிருந்து பலபடி வளர்ச்சியைத் (தனி மனித அந்தஸ்த்துக்கு மேலாகச் சமூக ரீதியாகவே) பெற்றுவிட்டார்கள். மேலும் பல வெற்றிகளைப் பெற்றுவருகிறார்கள் என்பது ஒருதலை.
இந்த வரலாற்று உண்மைகள் ஒரு அடிப்படையான படிப்பினையை வழங்கியிருக்கின்றன. அதாவது, முதலாளித்துவ அமைப்புத் தகர்க்கப்பட்டு-ஏற்றத்தாழ்வு ஒழிக்கப்பட்டு, சோஷலிஸ் அமைப்பு நிர்மாணிக்கப்படுவதன் வாயிலாகவே பெண் விடுதலை (சாதியொழிப்புங்கூட) நிறைவுபெறமுடியும். அதற்கு முன் தேவையாக தேச விடுதலை ஈட்டப்படவேண்டும். இதற்கு மாறாக, தேசவிடுதலை இன்றியே, அதற்கு முன்பே ஆசாரத்திருத்தம் குறித்துச் சிலர் பகற்கனவு கண்டனர்- இதைத் தவறெனக் கண்டித்த பாரதி, தேச விடுதலையுடன் தான் சமூக விடுதலை சாத்தியமாக முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை வைத்திருந்தார். இதற்கு 10-11-1906இன் இந்தியா'வில் 'மகாராஷ்டிர ஜனேந்திரராகிய பூரீமத் பாலகங்காதர திலகர்' பற்றி எழுதியது சிறந்த சான்றாகும்:
'. 'விதவைகளுக்கு விவாஹம் செய்யவேண்டும்', 'சர்வ ஜாதியாரும் ஒன்றாய் கலந்துவிட வேண்டும் ' என்பது போன்ற கொள்கைகளுடைய ஆசாரத்திருத்தல் கட்சியிலே திலகர் தம்மால் சேரமுடியாதென்கிறார். அதன்பேரில், இந்த ஆசாரத்திருத்தல் கட்சிக்காரர்களிலே அநேகர் அவரை தாறுமாறாக நிந்திப்பதுடன் அவர் ராஜதந்திர விஷயங்களில் ஜனத்தலைமை பூண்பதற்கு சிறிதேனும் தகுதியற்றவரென்று பழிக்கிறார்கள்.
ஆசாரத் திருத்தல்காரர்களின் கோட்பாடு சரியா தப்பா என்பதைப்பற்றி நாம் இங்கே விவரிக்கவேண்டியது அவசியமில்லை. அவர்களின் கோட்பாடுகள் சரியென்றும், திலகரின் கொள்கைகள் தப்பென்றுமே வைத்துக்கொள்வோம். அதிலிருந்து திலகர் ராஜதந்திர விஷயங்களில் வழிகாட்ட உரிமை பெற்றவரல்லவென்று வாதாடுவது மூடத்தனமல்லவா?.
. திலகரது கல்வியும், ஜனாபிமானமும், தேசபக்தியும் மனோதிடமும் வரம்புகடந்தனவாகும். இங்ங்ணம் உயர்வுடைய மனிதரை ஆசாரத் திருத்தக் கட்சியார் கண்டனை / செய்யும் போது உதாசீன வசனங்கள் போதித்திருக்கக்கூடாதா?'
இவ்வாறு தேசவிடுதலைக்கு முதன்மையளித்த பாரதி, எந்த வகையிலும் சமூக விடுதலையைக் குறைத்து மதிப்பிடவில்லையென்பதும், உண்மையில் தேச விடுதலையின்பால் அவர் காட்டிய தீவிர பற்று, அது சமூக விடுதலையை ஈட்டுவதற்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் முன்முயற்சியென்பதன் காரணமாகவேதான் என்பதும் நாம் ஏற்கனவே பாரதியிடம் அறிந்த குணாம்சங்கள். அந்த உணர்வுக்கான அடிப்படைதான்
Page 24
28 அரசியல் இலக்கியமும் பாரதியும்
என்ன? அது, அவரது ஆழமான வரலாற்றுப் பார்வையினதும், அவர் மனித நேயமிக்க கவியென்பதினதும், அவர் உழைப்பை மிக உயர் ஸ்தானத்தில் வைத்துப் பூசித்தினதும் வெளிப்பாடு. அதனால்தான், 'கடமை செய்யாதவன் பிழைப்பதே நடக்காது' என்று கிருஷ்ணன் சொல்லுகிறார் என்பதில் அதிகளவு ஈடுபாடு காட்டினார்; உழைப்பாளிகளைப் பிரமாவுக்கு ஒப்புவமை காட்டிய அவர் தனது பல புனைகதைகளை, ஒடுக்கப்பட்டுத் தீண்டத்தகாதவர்களாக' ஒதுக்கப்பட்ட உழைப்பாளர்களின் விடுதலை நாடிச் சாதிக் கொடுமையைத் தகர்ப்பதற்கென்றே ஆக்கி வழங்கினார். அதோடு அமையாது 'ஆறில் ஒரு பங்கு' என்ற கதையின் முகவுரையில் பெருமையோடு இப்படி எழுதினார்.
'. இந்நூலை, பாரத நாட்டில் உழவுத் தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரகூழிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.”*
இந்த அர்ப்பணம் நுனித்து ஆராயத்தக்கது. இது பாரதியை, வர்க்கப் போராட்டத்தின் வடிவத்தைக் காணக்கூடிய சந்தர்ப்பத்துக்கு இட்டுச் சென்றிருக்க வல்லதென்பதை உற்று நோக்குங்கால் புரிந்து கொள்ள முடியும், இந்தப் 'பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்கள்’ முன்னெடுக்கும் (தீண்டாமை ஒழிப்பு உட்பட) போராட்டத்தினூடாகவே ஏகாதிபத்தியப் பிடிப்பையும் - அதன் பின்புலமாக அமைந்த, கொத்தடிமை முறையின் சமூகத்தளமான நிலப்பிரபுத்துவப் பிடிப்பையும் தகர்த்தெறிய முடியுமென்பதையும் அறியும் வழியிலான சிந்தனை வளர்ச்சிக்கு இந்த அர்ப்பணிப்பு உணர்வு அவரை இட்டுச்சென்றிருக்க முடியும்; தேசியப் போராட்டம் அதன் தவிர்க்கமுடியாத இணைப்பான நிலப்போராட்டமெனும் வர்க்கப் போராட்ட வடிவத்தோடு பிணைக்கப்பட்டிருப்பதை, அந்த உண்மையை வெளிப்படுத்தும் புறநிலை முதனிலைகள் உருவான இருபதாம் ஆண்டுகளில் தொடர்ந்து வாழ்ந்திருந்தால், இந்த உணர்வு பாரதியை விட்டுச் சென்றிருக்கும் (அதற்குச் சான்றுதாரணமாக, அவர் தீர்வை மறுத்தல் இயக்கத்தின் தேவையை முன்னறிந்து கூறியதைக் கொள்ள முடியும்.):இந்த முற்போக்குச் சிந்தனையின் வளர்ச்சி நிலையில், 'தேசியப் பிரச்சனையென்பது சாராம்சத்தில் உழவர் பிரச்சனையே' என்ற ஸ்டாலினின் ஆய்வினை ஆதர்சமாகக் கொண்டு 'புதிய - ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்த, மாசேதுங் தலைமையிலான சீனப்புரட்சியின் அனுபவம் புகட்டிய,
'சாராம்சத்தில் சீனப் புரட்சியானது உழவர் புரட்சியாகும்; இப்போது நடக்கும் ஜப்பானை எதிர்த்த தாக்குதல் என்பது சாராம்சத்தில் உழவர்களின் தாக்குதல் ஆகும். சாராம்சத்தில் புதிய - ஜனநாயகத்தின் அரசியல் என்பது உழவர்களுக்கு உரிமைகளைக் கொடுப்பதாகும். ' என்ற நடைமுறை யதார்த்தம் நோக்கி ஆகர்ஷிக்கப்பட்டிருப்பார்.
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் 0 29
இந்த வகையில், முரணற்ற ஜனநாயக வாதியான பாரதி, தவறற்ற இலட்சியத்தைத் தெரிந்து நெறிபிசகாது உழைத்த பாரதி தேசவிடுதலைக்குப்பின் சுதந்திர இந்திய அரசியல் நிறுவன அமைப்பில் பெண்களும், சகல சாதிப் பிரிவினரும் அங்கம் வகித்து தமது மக்கள் பிரிவினரின் குறைகளை விவாதித்துத் தீர்ப்பதன் மூலம் சமூகக் கொடுமைகளையும், ஏற்றத் தாழ்வையும் தகர்க்கமுடியுமென்ற கருத்தையும் முன்வைத்தார். அவர் இவ்வாறெல்லாம் உருவாகும் சமத்துவ சமுதாயத்தையே கிருத யுகமாகக் கண்டார். அங்கு எத்தகைய ஏற்றத் தாழ்வுகளும் இருக்க முடியாது. அத்தகைய அமைப்புக்கு ருஷ்யப் புரட்சி கட்டியங் கூறிவிட்டதென்று உவகை கொண்ட பாரதி கனவு கண்டது போல, அப்புரட்சி காட்டிய சோஷலிஸப் பாதையில், முதலாளித்துவ இடைக்கட்ட மின்றியே தேசவிடுதலை இணைக்கப்படுவது சாத்தியமாகி யிருக்கமுடியுமா? இதற்கு, முடியுமென்ற பதிலையே லெனின் கருத்து வாயிலாகப் பெறுவோம்:
'இப்பொழுது விடுதலையடைந்து கொண்டிருக்கும் பின் தங்கிய நாடுகளில், போருக்குப் பின் முற்போக்குகள் காணப்படுகின்ற நாடுகளில் ப்ொருளாதார வளர்ச்சியில் முதலாளித்துவக் கட்டம் நிச்சயம் ஏற்பட்டுத்தான் தீருமா? பிரச்சினை இவ்வாறு எழுப்பப்பட்டிருந்தது. မ္ဘီဒ္ဓိ இல்லையென்று நாம் பதில் அளித்தோம். வெற்றிகரமான புரட்சி தொழிலாளி வர்க்கம் பின்தங்கிய இனங்களிடையே தொடர்ச்சியான பிரச்சாரத்தை நடத்தினால் அதேவேளையில் சோவியத் சர்க்கார் தன்னாலான எல்லா வகையிலும் அவற்றிற்கு உதவிபுரிய முன்வருமானால் - அப்பொழுது பின்தங்கிய தேசிய இனங்கள் முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்தை அடைந்துதான் தீர வேண்டுமென்று கொள்வது தவறாகும். காலனிகள், பின்தங்கிய நாடுகள் அனைத்திலும் நாம் சுயேச்சையான போராட்ட அணிகளையும், கட்சி ஸ்தாபனங்களையும் உருவாக்குவது மட்டுமின்றி, விவசாயிகளின் சோவியத்துக்களை அமைப்பதற்கும் அவற்றை முதலாளித்துவத்திற்கு முந்திய நிலைமைகளுக்குப் பொருத்துவதற்கும் பாடுபடவேண்டும். தவிரவும் இந்தப் பின்தங்கிய நாடுகள் முன்னேற்றமடைந்த நாடுகளின் தொழிலாளி வர்க்க உதவியால் முதலாளித்துவ கட்டத்திற்குச் செல்லும் அவசியமின்றியே திட்டவட்டமான வளர்ச்சிக் கட்டங்களின் மூலம் சோவியத் அமைப்பிற்கு மாறிச்செல்ல முடியும்.'"
இந்த வகையில் இந்தியப் புரட்சி வளரமுடியாதபோதிலும் இந்த நிர்ணயிப்பு சரியானதெனச் சீனப்புரட்சி எடுத்துக்காட்டியிருக்கின்றது. அதைப்போன்று, இந்தியா சோஷலிஸத்தைக் கட்டியமைக்க முடியாமல் முதலாளித்துவ அமைப்பில் உள்ள காரணத்தினால்தான் பாரதியின் கனவு நிறைவுபெறாமல் இன்றுங்கூட பெண்ணடிமைத்தனம் (முதலாளித்துவக் கலாச்சாரச் சீரழிவு பெண்களை இழிவு செய்யும் மடமையை நீடிப்பது), சாதியொடுக்குமுறை, வறுமை, அறியாமை என்பன கோரத்தாண்டவமாடுகின்றன.
Page 25
30 O அரசியல் இலக்கியமும் பாரதியும்
8. புதிய உலக நோக்கும் பாரதியும்
இந்த வகையிலே, பாரதியின் இலக்கியம் இன்றுங்கூடக் காலங்கடந்ததாகிவிடாது உயிரோட்டமுள்ளதாய் விளங்குகின்றது. அவர், தேச விடுதலைக்கு விஞ்ஞான தத்துவம் இல்லாத நிலையில் தேசிய முதலாளி வர்க்கம் மதவடிவில் கண்ட தத்துவத்தை ஏற்றுத் தன் அரசியல் இலக்கியப் பணியை ஆரம்பித்தார். அதனாலேயே அவரது ஆரம்பகால இலக்கியத்தில் 'வெறிகொண்டதாய்', 'பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி, 'பாரத தேவியின் அடிமை', 'சத்ரபதி சிவாஜி' போன்ற மதத் தொடர்பு மேலோங்கப் பெற்றிருக்கிறது; வடிவத்தைப் பொறுத்தவரை பேராசிரியர் க. கைலாசபதி இரு மகாகவிகள்' என்ற கட்டுரையில் குறிப்பிட்டதுபோல இளம் கவிக்கேயுரிய தன்மையுடன் பக்தி இலக்கிய வடிவத்தைப் புதிய அரசியல் உள்ளடக்கத்துக்குப் பயன்படுத்தியதையும் காண முடிகின்றது.
இருந்தபோதிலும், இருபதாம் ஆண்டுகளில் (இந் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்தில்) பாட்டாளி வர்க்கம் அரசியல் அரங்கில் தீர்க்கமாகப் பிரவேசித்துத் தன்னை ஸ்தாபனப்படுத்தியதினூடாக, அதன் விஞ்ஞானபூர்வமான மார்க்ஸிஸ் - லெனினிஸம் என்ற தத்துவ ஆயுதம் தேசிய இயக்கத்துக்குப் புதிய தெம்பையும் அசைக்கமுடியாத நம்பிக்கையையும் வழங்கியது. அது தனது பாணியில் உலகை மாற்றியமைப்பது என்ற வகையில் தேசிய இயக்கத்துக்கு விஞ்ஞான பூர்வமான விளக்கத்தை வழங்கியது. அத்துடன் ருஷ்ய அக்டோபர் புரட்சியின் விளைவாக சோஷலிஸ் சகாப்தம் உருவாகி உலகப் பாட்டாளி வர்க்கத்துக்கு நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சியது. இந்த நிலையில் தீவிரவாதிகளான தேசிய முதலாளி வாக்கத்தின் பிரதிநிதிகள், ஒரு புறம் ஏகாதிபத்தியத்துடனான முரண்பாட்டைக் காணும்போது 'சோஷலிஸம்" பற்றிப் பேசினர். மறுபுறம் வெகுஜன எழுச்சியைக் கண்டு (அது தன் வர்க்க நலனையும் துடைத்தழித்து முன்னேறிவிடும் என்பதை அறிந்து) கிலிபிடித்துக் காந்தீய மிதவாதத்தில் அடைக்கலம் தேடிக்கொண்டனர், இந்த முரண்பட்ட நிலையை பாரதியிடம் காணமுடியாது. அவர் தேசிய முதலாளிவர்க்கக் கவியாக இருந்தபோதிலும் ஐரோப்பிய முதலாளித்துவக் கவிஞர்களிலிருந்து வளர்ச்சிபெற்ற வரலாற்று நிலை காரணமாக மாறுபட்ட வளர்ச்சிப் போக்கையே காட்டி நிற்கிறார். இதைப் புரிந்துகொள்ள முடியாமல்தான் 'அதிதீவிரப் புரட்சி' வாதிகள், பாரதி அக்டோபர் புரட்சியைப் பாடியிருக்க முடியாதெனக் கருதுகிறார்கள்: அவருடைய வளர்ச்சி, வரலாற்றின் பிரதிபலிப்பு என்பதைப் புரிந்து கொண்டால் இந்தக் குழப்பத்துக்கு இடமில்லாமற் போய்விடும்.
அவர் இந்தியா’ பத்திரிக்கையின் முத்திரையாகப் பொறித்த 'சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்றும் 1907 இல் "சுதந்திரப்பள்ளு பாடியபோது 'எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே' என்றும் - 'சட்டத்தின் முன் சமத்துவம்' தேடிய முதலாளித்துவக் கோஷத்துடன் இலக்கியப் பணியை தொடங்கி, 'தனியொருவனுக் குணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்றும்
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் 0 31
'மனிதருணவை மனிதர் பறிக்கும் வழக்கத்தைத் துடைத்தழிப்பதென்றும் 'பொருளாதாரச் சுதந்திரத்தை' தேடும் பாட்டாளி வர்க்கக் கோஷத்தை நோக்கி வளர்ந்த நிலையில் மறைந்துவிடுகிறார். இவ்வாறு தேச விடுதலையை நேசித்த அதே வேளை அவர் மக்களைச் சார்ந்து நிற்பதில் உறுதியாக இருந்தமையினாலும், அவருடைய கவிதா சக்தியின் முதிர்ச்சி நிலை காரணமாகவும் அவரது பிற்காலக் கவிதைகள் மிகுந்த சமூகப் பிரக்ஞை உடையனவாயுள்ளதைக் காணமுடிகிறது. அதே வேளை வடிவத்தைப் பொறுத்தவரை இரண்டாவது படிநிலையில் "பாஞ்சாலிசபதம்’ வாயிலாகவே சிந்துக்குத் தந்தையாக வளர்ந்துவிடுகிறார்.'
அவர் வர்க்கப் பகைமை கூர்மையடையாத குழலில், தேசிய முதலாளி வர்க்கம் முரண்பட்ட போக்கைக் கடைபிடிக்குமுன் - தேசப்பற்றுள்ள நிலச்சுவான்தார்கள், தேசிய முதலாளிகள், தொழிலாளர், விவசாயிகள் போன்ற வர்க்கங்கள் 'மக்கள்' என்ற நிலையில் ஐக்கியப்பட்டுத் தேச விடுதலைக்குப் போராடிய நிலையிலேயே இறந்து விட்டதால் 'வர்க்க ஒற்றுமை அவருடைய இலக்கியத்தில் காணப்படுவது வியப்புக்குரியதோ தவறானதோ இல்லை.
இதேவேளை, இந்த வரலாற்றுப் போக்கின் வளர்ச்சி காரணமாக பாரதி ஆன்மீக வளர்ச்சியில் மிக உயர்ந்த படிநிலையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதையும் காண முடிகின்றது. இந்த வையகத்தில் அமரநிலை எய்துவது, உலகையே மோட்ச சாம்ராஜ்யமாக மாற்றுவது என்ற கருத்துத் தொடங்கித் தனது நடைமுறையில் கருத்துக்களைப் பெறுவதில் வாழ்நிலையிலிருந்து தொடங்குவதும், காரணமின்றிக் காரியம் இருக்க முடியாது என வாதிப்பதுவரை ஃபேயர் பாக் 'சமய உலகைக் கரைத்து' அதனிடத்தில் அவர் 'பொருள் முதல்வாதம்' என்ற பெயரை ஏற்காதபோதிலும் பொருள் முதல் வாதக் கோட்பாட்டை நிலைநிறுத்திவிட்டதுபோல “ அவர் விஞ்ஞானபூர்வமான பொருள் முதல்வாதத்தை ஏற்காதபோதிலும், அந்த நிலைக்கு வளர்ந்து "சமய உலகைக் கரைத்து அந்த இடத்திற்குப் பழைய வேதகாலத்தை மீட்டெடுப்பது என்ற பாணியில் அதன் (வேதகாலத்தின்) வளர்ச்சி நிலையான பொருள் முதல்வாதத்தையே கொண்டுவருகிறார். 'வேதகாலக்' கோட்பாட்டை நிலைமறுத்து சித்தாந்தக் கோட்பாடு இடங் கொண்டது; அந்த சித்தாந்தம் பாரதியின் இலக்கியத்தில் நிலை மறுக்கப்பட்டதன் மூலம் 'நிலை மறுப்பு நிலை மறுக்கப்பட்டுள்ளது' இதனோடு கூடவே இலக்கியப் பரப்பில் தேச, கால வர்த்தமானங்களுக்கு அமைய ஆராயும் அவரது நோக்கும் போக்கும் தீய அம்சங்களை மனித இயக்க ஆற்றலால் நல்ல அம்சங்களாக மாற்ற முடியும் என்பதும், மாற்றம் இயற்கையினதும் சமூகத்தினதும் (அதன் கூறுகளான பொருளியல், அரசியல் துறைகளினதும்) தவிர்க்க முடியாத நியதி என்பதன் வாயிலாகவும் அவர் இயங்கியல் கண்ணோட்டத்தை வந்தடைவதைக் காண முடிகின்றது.
Page 26
32 அரசியல் இலக்கியமும் பாரதியும்
இவ்வாறாக, விஞ்ஞானபூர்வமான இயங்கியல் - பொருள் முதல் வாதத்தை விளங்கி ஏற்றுக்கொள்ளாதபோதிலும், பாரதி, தமிழ் இலக்கிய உலகின் இயல்பான தத்துவ வளர்ச்சியென்ற வகையில் அதற்கு மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளார். அவ்வாறு ஆன்மீகத் துறையின் வளர்ந்த - வளர்க்கப்பட்ட உயர் வடிவம் ( கருத்து முதல்வாதத்தின் நிலை மறுப்பு வடிவம்) பாரதியின் அரசியல் இலக்கியத்தின் தத்துவ வடிவமாக விளங்கியது. இது அவரது முற்போக்குக் குணாம்சத்துக்கு எந்தவகையிலும் முரணல்ல; மாறாக இதுவே அவரது ஆளுமையின் உயர் விருத்தியைக் காட்டுகின்றது.
இந்த அம்சத்தைக் கண்டுகொள்ளாததன் விளைவாகவே, பாரதி பற்றிய ஆய்வுகளில் சில அடிப்படையான தவறுகள் மேலோங்கி நிற்கின்றன. இந்த வளர்ச்சி நிலைமை வேறு பிரித்துப் பார்க்காததாலேயே, பாரதி மதவாதியாகையால் அவரின் புரட்சிகரக் குணாம்சத்திலும் முரண்பட்ட போக்குகள் தொக்கி நிற்கின்றதென்றும், அதுவே அவர் பிற்காலத்தில் காந்தீய மிதவாதத்தை ஏற்றுக்கொள்ள வழிகோலியதென்றும் சில ஆய்வாளர்கள் தவறாக எடைபோடுவதற்கு வகை செய்திருக்கிறது; மேலும் இந்தப் பலவீனமான போக்கே இவர்கள் பாரதியிடம் மிகையாகப் பலவீனத்தைத் தேடத் தூண்டுகோலாயிருந்திருக்கிறது.
சரியான உலகக் கண்ணோட்டத்தின் ஒளியில் பாரதியின் வாழ்வைப் பார்த்தால், கண்ணனையும் மாகாளியையும் நம்பிக்கையின் வடிவமாகக் கொண்டு அவர் வாழ்ந்தது, எத்தகைய நெருக்கடி நிலையிலும் உறுதிகுலையாத மனப்பாங்கை பேணவே அவருக்கு உதவியதென்பதைக் காணலாம். அவ்வாறே, ஆரம்பம் முதல் இறக்கும்வரை மக்கள் இயக்கம் வெற்றிகொள்ளும் என்ற மனந்தளராத பற்றுறுதியை அவர் கொண்டிருந்தார்,எந்தவடிவிலான தனிநபர் சாகஸங்களும் சுதந்திரத்தை ஈட்டும் மார்க்கமல்ல என்பதில் தெளிவாக இருந்தார். அவர் தனி நபர் சாகஸங்களுக்கு மாறாக, மனிதகுல வளர்ச்சியின் முழுமையை (அடிப்படையான சமூக மாற்றத்தை) வேண்டி நின்றமையினாலேயே, மனிதன் பூரணத்துவம் பெறும் போக்கு நோக்கி முன்னேறத் தடையாயுள்ள விலங்குகளைத் தகர்ப்பதற்கு ஒவ்வொரு மனிதனும் கிளர்ந்தெழுந்து போராட வேண்டுமென விழைந்தார். அதனாலேயே அவர், தான் போற்றிப் பின்பற்றிய தீவிரவாதத் தலைவர் திலகர் கருத்துக்கு மாறாகக் கூட ஆசாரத் திருத்தலின்பால் (சமூக விடுதல்ையின்பால்) அக்கறை காட்டினார்.
இவ்வாறு, தனது காலத் தவறான ஓட்டங்களை மேவி, சமூகப் பாய்ச்சலை மனங்கொள்ளும் உலக நோக்கு அவரிடம் மேலோங்கியிருந்ததாலேயே, ஆன்மீகத்துறையையும் விமரிசனக் கண்ணோட்டத்தில் அலசியாராய்ந்து, ஸ்தூல நிலைமைக்கேற்பக் கொள்கை வகுக்க உதவியது. முரணுரையாகச் சொன்னால், ஆன்மீகக் கோட்பாடுகளைப் புதிய நிலைக்கேற்ப வளர்த்துப் பிரயோகித்ததன்
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் () 33
விளைவாக, அவர் முரணற்ற ஜனநாயக வாதியாகத் திகழ தடையேது மிருக்கவில்லை. அவ்வாறு, தனது சிந்தனைக்கு விலங்கிடும் தத்துவமாக ஆன்மீகத்தைக் கொள்ளாது, அந்த ஆன்மீகத்தையே புதிய நிலைக்கு மாற்றியமைக்கத் துணிந்த அவர் பாங்கைப் புரிந்து கொண்டால் பாரதியின் பலவீனம் பற்றி அதிகம் பேச்செழாது. மாறாக தமிழிலக்கிய மரபில் சரியான உலக நோக்கை உருவாக்கும் வளர்ச்சியின் மிகச்சிறந்த பிரதிநிதியாக அவரைக் காணலாம்.
இவையனைத்தும் பாரதி சிறந்த முன்னுதாரண புருஷனாக வாழ்ந்து காட்டியதை உணர்த்துவன. அவர், இலக்கியத்தில் அழகியல் குறித்து, லூசுன் கொண்டிருந்த கருத்து பற்றி லுாசுன் ஆய்வாளர்கள் வெளிப்படுத்திய இலக்கிய மதிப்பீட்டில், உண்மையில் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அந்தக் கோட்பாடு இதுதான் :
'அழகியல் கலையின் தாரதம்மியம் பற்றி அளவிடுவதில் மூன்று அம்சங்களை நாம் கருத்தில் கொள்கின்றோம், எந்தவொரு கலை ஆக்கமும் உண்மை, நன்மை, அழகு ஆகிய மூன்று அம்சங்களையும் கொண்டிருக்க வேண்டும். குறித்த காலத்தில் வாழ்க்கை அம்சங்களின் உண்மை நிலையை அது எடுத்துக்காட்ட வேண்டும்; சமூக வளர்ச்சிக்கு அது பயன்பட வேண்டும்; அதன் அழகு ஆத்மீக அநுபவத்தைக் கொடுக்க வேண்டும். இந்த மூன்று அம்சங்களையும் தன்னில் இசைந்து வழங்கக்கூடிய கலை - இலக்கிய ஆக்கங்களே நிரந்தர பயன்பாடு உடையன. *
இந்த அடிப்படையில் சிறந்த இலக்கியவாதியாக - அரசியல் இலக்கியத்தின் முன்னோடியாக வாழ்ந்து வழிகாட்டிய - பாரதி, அதேவேளை மனந்தளராத புரட்சியாளராகவும் , முற்போக்குச் சிந்தனையாளராகவும் விளங்கியதன் காரணமாகக் குறுகிய வாழ்வுப் பகுதியினூடாகவே, மனிதகுல விடுதலைக்கு உழைத்த அறிஞர் வரிசையில் அழியாத இடத்தைப் பெற்றுவிட்டார்.
Page 27
5.
11.
12.
13.
14. 15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
y அரசியல் இலக்கியமும் பாரதியும்
குறிப்புகள்
கைலாசபதி க. 'சமூகவியலும் இலக்கியமும்', நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெ. பக். 113
பிளெஹானவ் கி.வ. "கலையும் சமுதாய வாழ்க்கையும்', முன்னேற்றப் பதிப்பகம் - மாஸ்கோ, 1979, பக் 27-28.
அதே நூல். பக் 65.
அதே நூல். பக் 17.
இளசை மணியன் தொகுத்தது. 'பாரதி தரிசனம் I', 'இந்தியா' பத்திரிகையில் 05-01-1907 இல் எழுதப்பட்ட கட்டுரை.
அதே நூல். அதே நூல்.
அதே நூல் "இந்தியா' - 12-1-1907 இல் எழுதப்பட்டது.
'பாரதி தரிசனம் 1" - "இந்தியா' - 22-12-1906, “புதிய கட்சியாரின் கொள்கைகள்'. --
டாக்டர் கா. மீனாட்சிசுந்தரம், 'பாரதி பா நிலை", பக் 54 தூரன் பெ. தொகுத்த “பாரதி தமிழ்'
'கட்டுரைகள்' பாரதியார், இன்பநிலையம் - மையிலாப்பூர், சென்னை, நவம்பர் 1963, 'மாதர்' பக் 67-68
“பாரதி தமிழ்" - "சில வேடிக்கைக் கதைகள்' குறிப்பு 12 இன் அதே நூல் 'சமூகம்" பக் 110. 'பாரதி தமிழ்' பக். 313-316 ராஜனி பாமெதத் (மொழிபெயர்ப்பு:ராமகிருஷ்ணன்.எஸ்) ‘இன்றைய இந்தியா' ஜனசக்தி பிரசுராலயம், 6, டேவிட்சன் தெரு ஜி.டி. சென்னை ஜனவரி 1948. பக் 308.
அதே நூல். பக் 317 'பாரதி தரிசனம் II " 09-02-1907 'கோகலேயும் பஹிஸ்கார முறைமையும்'. பிபன் சந்த்ரா, அமலேஷ் திரிபாதி, பாருன்டே ஆகியோரால் எழுதப்பட்ட "சுதந்திரப் போராட்டம்' (தமிழாக்கம் ) பக்.279-280. பாரதியார் கதைகள். தராசு, பக் 502 'பாரதி தரிசனம் II" - "இந்தியா' - 18-05-1907.
கைலாசபதி க. 'அடியும் முடியும்' பாரிநிலையம், 59, பிராட்வே சென்னை 1 மார்ச் 1970. பக் 195-197.
'பாரதி தரிசனம் 1" பக். 44 - 46.
24.
25.
26.
27.
28.
29.
30.
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் 0 35
// குறிப்பு 12இன் அதே நூல் 'சமூகம்' பக்.1 மாஓசேதுங் "புதிய ஜனநாயகம்" பாட்டாளிகள் வெளியீடு, சென்னை 1978. பக். 54-55
லெனின். வி.ஐ. 'கிழக்கத்திய மக்களின் தேசிய விடுதலை இயக்கம்' என்.சி.பி.எச். பிரைவேட் லிமிடெட். 1963, பக். 391.
பாரதியின் இலக்கிய வடிவம்பற்றி பேராசிரியர் க. கைலாசபதி 'சிந்துக்குத் தந்தை' என்ற கட்டுரையிலும் ஆய்வு செய்துள்ளார். பார்க்க:
கைலாசபதி.க, 'ஒப்பியல் இலக்கியம்' சென்னை புக் ஹவுஸ் (பி) லிட். 6, மேட்லி சாலை, சென்னை 600 017 செப். 1982. பக். 211-257;
பார்க்க: ஏங்கெல்ஸ் பி. 'லுத்விக் ஃபாயர் பாகும் மூலச் சிறப்புள் ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்' என்ற நூலின் பிற்சேர்க்கை: மார்க்ஸ் எழுதிய 'ஃபாயர் பாக் ஆய்வுரைகள்' முன்னேற்ற பதிப்பகம். 97-98.
பார்க்க ஏங்கெல்ஸ் பி. 'டூரிங் குக்கு மறுப்பு' முன்னேற்றப்
பதிப்பகம். மாஸ்கோ 1979 பக். 241-242
Liu Zaifu "Social Sciences in China" (Aesthetic Criteria for Literary and Art Criticism') Vol.1. No. 1 (March 1981) Page 190.
Page 28
பாரதி வரலாறு: ஒரு மறுமதிப்பீடு
1. முப்பெரும் பாதைகளும் பாரதியும்
பாரதி நூற்றாண்டு விழா கடந்து போய் பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆயினும், இரு வருடங்களே கடந்த பாரதிதாசன் நூற்றாண்டுவிழாவைத் தொடர்ந்து வந்த படைப்புகள் பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை தெளிவுபடுத்திய அளவுக்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு சரியாக வரையப்படவில்லை. கவிஞர் முருகுசுந்தரம் வெளியிட்ட 'பாவேந்தர் - ஒரு பல்கலைக்கழகம்' , கோ. கிருட்டிணமூர்த்தியின் 'பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு', டாக்ட்ர் ச. சு.இளங்கோவின் 'பாரதிதாசன் பார்வையில் பாரதி' முதலிய நூல்கள் பாரதிதாசனின் வாழ்க்கை வரலாறை ஓரளவு தெளிவாகக் காட்டியுள்ளன.
ஒப்பீட்டு ரீதியில் மிக அதிக நூல்கள் பாரதி பற்றி வெளிவந்த போதிலும் பாரதி வாழ்க்கை வரலாறு தெளிவாக வரையப்பட்டுள்ளதாக கூறமுடியாதுள்ளது. 'பாரதியின் வாழ்க்கை வரலாறு இன்னும் முற்றிலும் ஆராயப்பட்டு எழுதப்படவில்லை. விரைவில்டஒரு நல்ல ஆராய்ச்சி நூல் ஒன்று வெளிவரலாமென்று எதிர்பார்க்கிறோம்'என்று ப. கோதண்டராமன் கூறிய நிலையே இன்னமும் தொடர்கின்றது. பெரும்பாலும் அவ்வக்காலத்தில் தமது நிலைப்பாடுகள் குறித்து பாரதி எழுதிய விடயங்களைத் தொகுத்து தி. முத்துகிருஷ்ணன் 'மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சித்திரம்' எனும் நூலை தந்த போதிலும், அது பாரதியின் வாழ்க்கை நெறியை முழுமையாகக் காட்டத் தவறிவிட்டது.
இதற்கான அடிப்படைக் காரணம் என்ன? பாரதிதாசனின் வாழ்க்கைப் பாதையைத் தெளிவாக அடையாளங்காணமுடிவது போல, பாரதி வழியைத் தடங்காண முடியாதபடி பாரதியோடு வாழ்ந்தவர்களும் ஆய்வறிஞர்களும் தடுமாறுவது ஏன்?
பாரதியின் மறைவுக்குப்பின், 1925ஆம் ஆண்டைத் தொடர்ந்து, தேசிய விடுதலைப் போராட்டத்தில் காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்திய தேசிய முதலாளி வர்க்கத் தலைமை மட்டுமின்றி கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதித்துவப்படுத்திய பாட்டாளிவர்க்கத் தலைமையும் தனது செல்நெறியை தெளிவுபடுத்திக் கொண்டது. மேலும், மூன்று ஆண்டுகளின் பின், தமிழ்த்தேசிய முதலாளி வர்க்கப் பிரிவொன்று தனக்கான தனியான மார்க்கம் ஒன்றைத் தெரிவு செய்து அவ்வழியில் முன்னேறியது.
இத்தெளிந்த மூன்று அரசியல் ஓட்டங்களில் மூன்றாவது மார்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய திராவிடர் கழகத்தை தனதாக வரித்துக்கொண்டு, அவ்வழியில் நீண்ட காலம் தன் தடம் பதித்த பாவேந்தரின் வாழ்க்கைப் பயணத்தை வரைவதற்குத் தடங்கல் எதுவும் இருக்கவில்லை. இவ்வாறு தொடர்ந்த வரலாற்றுப் போக்கில் பாரதி
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் O 37
வாழ்ந்து தன் சிந்தனைப் போக்கைத் தெளிவுபடுத்தியிருப்பின் முந்திய (அவர் வாழ்ந்த) காலச்சிந்தனைத் தடத்தையும் இனங்கண்டு அவர் வாழ்க்கை வரலாற்றுப்போக்கை உறுதியாக முன்வைத்திருக்கமுடியும்,
அவர் வாழ்ந்த அந்தக்காலம், பின்னால் இத்தகைய மூன்று மார்க்கங்களை பிரசவிப்பதற்கான கருக்களைத் தன்னகத்தே கொண்டிருந்த காலம். அவற்றுள் எது பாரதியில் அதிகளவில் முளைகொண்டு அவரை இயக்கியது என்பதை அறியாமல் அவருடைய வாழ்க்கை நெறியை வரையறுத்துவிடமுடியாது. அவருடன் வாழ்ந்தபோதிலும் அந்த மேதைமையைப் புரியாமல், அதன் ஒவ்வொரு பகுதிகளை மட்டும் உள்வாங்கிய உறவினர்கள் நண்பர்களால் அந்த முழுமையை வெளிப்படுத்தியிருக்கமுடியாது என்பது இயல்பானதே.
பாரதி பற்றி பாரதிதாசன் மேல் வருமாறு கூறியிருப்பதாக பாவேந்தரின் நண்பர் பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் காட்டியிருப்பது கவனத்திலெடுக்கப்பட வேண்டிய ஒரு அம்சமாகும். 'பாரதி பெரிய புரட்சிக்காரர், சீர்திருத்தச் செம்மல், பாரதியைப்பற்றி வைதீகச் சார்பான சில செய்திகளைப் பலர் கூறுவார்கள். அந்தக் காலத்தில் பாரதிக்குமேல் சீர்திருத்தவாதியாக வேறு யாரும் இருந்திருக்க முடியாது. அந்தக் காலச் சமுதாயச் சூழ்நிலை அதற்குமேல் இடங்கொடுக்கவில்லை. நானும் அப்போது அப்படித்தான் இருந்தேன். பாரதியைப் போல நானும் அன்று போராடியக் கட்சிக் (காங்கிரஸ்) காரன், சுப்பிரமணியர் துதியமுது பாடியவன். அப்போது அவரிடத்திலும் தனித்தமிழ் இல்லை. பாரதி படிப்படியாக சீர்திருத்தவாதியாக மாறிவந்ததை நான் என் கண்ணாரக் கண்டேன். பாரதி உயிரோடிருந்திருந்தால் 'சுயமரியாதைக்காரராக" மாறியிருப்பார் என்னைப்போல்தான் பாடியிருப்பார்.”*
பாவேந்தர் இவ்வாறு கூறுவதற்கான ஆதாரமாகவும் பாரதியின் வாழ்வு அமைந்திருந்தது. இதற்கு இன்னொரு அணியைச் சார்ந்தவராகிய ப. ஜீவானந்தம் தனது அணிக் கருத்தினராக பாரதியை இனங்காணவும் பாரதியிடம் ஏதுக்கள் இருந்தன. -
'பாரதியின் வாழ்க்கைப் பார்வையில் ஒரு புரட்சி நிகழ்ச்சி ஒரு 'யுகப்புரட்சி'யைக் காட்டுகிறது. 'கலி இடிபட்ட் சுவர்போல விழுகிறான். "கிருதயுகம்' எழுகிறது.
'அவனுடைய "பொது உடைமைப் பார்வையில், 'உலகத்துக்கொரு புதுமை நடக்கிறது. 'எல்லோரும் ஓர்குலம், எல்லோரும் ஓர் இனம் , எல்லோரும் ஓர் விலை, எல்லோரும் ஓர் நிறை' என்ற குழ்நிலை உருவாகிறது. அங்கு "எல்லோரும் மக்கள், எல்லோரும் மன்னர்களாக, வாழ்கிறார்கள்' என்றும்,
'தமிழ் நாட்டுக் கவிஞன் பாரதி 'பாரத சமுதாயும் பாட்டில் முப்பது கோடி முழுமைக்கும் பொதுஉடைமை கோரினான். அவனது நுண்மாண் நுழை புலத்தால் பொதுவுடைமைதான் சிறந்தது என்பதை உணர்ந்தான்." 4.
Page 29
38 O பாரதி வரலாறு : ஒரு மறுமதிப்பீடு
என்றும் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் வலியுறுத்துவதனூடாக பாரதி பொதுவுடைமைச் சார்பினரென ப. ஜீவாநந்தம் காட்டி வந்துள்ளார். நேரடியாக கூறாத போதிலும் மறைமுகமாக பாரதி கம்யூனிஸ்ட் அணியை அண்மிப்பதாகவே ஜீவா காட்டுகின்றாரெனலாம்.
ஆயினும் இந்த இரு போக்குகளுக்கும் மாறாக, பாரதியை 'வைதீகச் சார்பினராக இனங்காணும் போக்கே வலுப்பெற்றுக் காணப்படுகிறது. அவ்வாறு காட்டும் முயற்சிக்கு எதிராக பாரதிதாசன் தனது வாழ்நாள் பூராவும் போராடினார், புதுவையில் பாரதிதாசன் தலைமையில் 1958இல் நடந்த பாரதி விழாவின் போது பாரதி நண்பர் சங்கு சுப்பிரமணியம் 'பாரதி சாதியை எதிர்க்கவில்லை; அவ்வாறு எழுதவும் இல்லை என்று பேசியபோது பொறுமையிழந்த பொதுமக்களை அமைதியாக இருக்கும்படி பாரதிதாசன் வேண்டிக் கேட்ட பின்னர், சங்கு சுப்பிரமணியத்தின் கருத்துக்களை ஆதாரத்துடன் மறுத்துப் பேசினார். ‘பாரதிதாசனின் இந்த முயற்சிகளும், பாரதி பூரண சமத்துவப் புத்துலகம் வெண்டிய புரட்சிக் கவியாகக் கண்களை மூடியவர் என்ற ஜீவாவின் பிரச்சார முழக்கங்களும் 'ஆன்மீகச் சிமிழுள்' பாரதியை அடைப்பதிலிருந்து அவரைக் காப்பாற்றிவிடவில்லை. அவ்வாறு ஆன்மீக அணியில் இனங்காணவும் பாரதியிடமிருந்து ஏராளமான ஆதாரங்களைக் காட்ட முடியும்.
தமது ஆன்மீகச் சார்புக்கு பாரதியை வலிந்தெடுப்பவர்களால் மட்டுமன்றித் தம்மைத் தீவிர புரட்சியாளர்களாக அடையாளங்காட்டும் ஆய்வாளர்களாலும் பாரதி அத்திசை நோக்கித் தள்ளப்படுவது ஒரு யதார்த்தம். 1905 ஆம் ஆண்டில் முளைவிட்ட முதலாவது தேசிய எழுச்சிப் பேரணிக் காலத்தில் அரசியல் வாழ்வில் பிரவேசித்த பாரதி அதிதீவிரவாதியாக இருந்தார். 1908 ஆம் ஆண்டில் புதுவைக்குப் போய்த் தலைமறைவு வாழ்வு மேற்கொண்டதிலிருந்து ஆன்மீகத் தேடலுள் மூழ்கிப்பிற்போக்கு நிலைப்பாட்டை எடுத்துவிட்ட பாரதி பிரிட்டிஷ் இந்தியாவினுள் 1918 இல் நுழைந்தபோது காந்தீய மிதவாதியாக மாறிவிடுகிறார் என்பதான ஆய்வுகள் இன்று முன்வைக்கப்பட்டுள்ளன.
புதுவையில் அடியந்தமான சிந்தனை மாற்றத்தைப் பெற்றுவிட்ட நிலையில் மீண்டும் பிரித்தானிய இந்தியாவினுள் பிரவேசித்த 'பாரதியின் ஆன்மீக நோக்கும் அத்வைதப் பார்வையும் சரணாகதித் தத்துவமும் பகவத்கீதை விளக்கமும் இப்போதைய அரசியல் நிலைக்கு இயைந்து கொடுக்கின்றன. இத்தகைய நிலைப்பாடுகளை ஏற்றுக்கொண்ட காந்தியை அவுர் முழுமனதாக ஏற்றுக் கொள்கிறார்." என கோ. கேசவன் கூறியிருப்பதை அவதானிக்கலாம். -
பாரதி காந்தியவாதியா? இவ்விடயம் பாரதியியலில் தெளிவு காணப்படவேண்டிய மிகப்பிரதான அம்சமாகும்.
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் O 39
2. தனித்துவப் பாதை வகுத்த பாரதி
தமிழ்நாடு அரசு வெளியிட்ட 'மகாகவி பாரதி நுாற்றாண்டு விழா மலர் - 1982 இல் 'பாரதி நோக்கில் காந்தியடிகள்' எனுந்தலைப்பில் கட்டுரை எழுதிய கு. ராஜவேலு இன்னும் ஒரு படி மேலே சென்று கூறியிருக்கிறார். "சுதந்திரம் எமது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவோம் என்று முழங்கியவர் லோகமான்ய பாலகங்காதர திலகர். அவருடைய அருமைச்சீடர் பாரதியார் எனினும் திலகரால் இந்திய நாடு விடுதலை பெறும் என்று அவர் நம்பவில்லை. காந்தியடிகளால்தான் நாடு சுதந்திரமடையும் என்பதை அறுதியிட்டுக்கூறுகிறார்" என்பது ராஜவேலு வின் கருத்து.
ராஜா ராம்மோகன்ராய், விவேகானந்தர் முதல் காந்தி வரை அனைவரையும் போற்றவேண்டிய இடத்துப் போற்றித் தவறெனக் கண்ட சந்தர்ப்பங்களில் திறந்த மனத்தோடு விமர்சிக்க பாரதி தவறியதில்லை என்றபோதிலும், அவர் எந்த ஒரு விமர்சனத்தையும் வெளிப்படையாக முன் வைக்காததோடு, பலமான அம்சங்களையெல்லாம் பற்றார்வத்துடன் பிரச்சாரப்படுத்தியது திலகர் விடயத்தில் மட்டுமே. பூரண சுயராஜ்யம் வேண்டுமெனத் துணிந்து கருத்துரைத்து, சிலவேளை சுதந்திரம் சாத்தியமாகக்கூடுமோ என்ற ஐயந்தானும் மக்களை அண்டாத சூழலில், சுதந்திரமீட்ட மக்களைக் கிளர்ந்தெழத்தூண்டிய தலைவர் திலகர் என்ற வகையில், அதே எழுச்சியைத் தமிழகத்தில் காண விரும்பிய பாரதி அதற்குக் குந்தகம் நேராதிருக்கும் பொருட்டு திலகரை வெளிப்படையாக விமர்சிக்காத நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டார்.
ரவீந்திரநாத தாகூர் காந்திக்கு வழங்கிய 'மஹாத்மா' பட்டத்தை பாரதியும் ஏற்றுப் பாட்டில் வடித்ததை வைத்துப் பலர் முதிர்ந்த காந்தீயவாதியாக பாரதியைக் கணிப்பர். அதே பாரதி அதற்குப் பத்தாண்டுகளின் முன்னே திலகரைப் போற்றிப்பாடிய வரிகளை ஆழ்ந்து நோக்கினால் காந்தியை மகாத்மாவெனப் போற்றியதற்காக ஆச்சரியப்படமாட்டார்கள். 'லோகமான்ய பாலகங்காதர திலகர்' எனும் 1908 ஆம் ஆண்டு எழுதிய கவிதையில் 'சேரவர்க்கு நினைக்கவுந் தீயென நின்றவெங்கள் திலக முனிவர்கோன்',
"துஞ்ச மட்டுமிப் பாரத நாட்டிற்கே
தொண்டி ழைக்கத் துணிந்தவர் யாவரும் அஞ்செழுத்தினைச் சைவர் மொழிதல் போல்
அன்பொடோ தும் பெயருடை யாரியன்"
எனப் பாடியிருப்பதைக் காணலாம். சைவர்க்கு 'சிவாய நம' எப்படியோ அத்தகைய புனிதமிக்கது தேசியவாதிகட்கு திலகர் நாமம் என்ற பாரதியின் கூற்று மகாத்மாவுக்கும் மேலே திலகரை மதித்ததைக் காட்டும்.
Page 30
40 O பாரதி வரலாறு : ஒரு மறுமதிப்பீடு
புனா நகரத்தில் 1906 ஜூலை 11ம் திகதி திலகரின் 50 வது பிறந்ததினம் கொண்டாடியது பற்றி அதே மாதம் 14ம் திகதி பாரதி எழுதிய விடயமும் இங்கு மனங்கொள்ளத்தக்கது. அத்தகைய விழா வீண் பணவிரயம் எனத் திலகர் மறுத்த போதிலும் ஆதரவாளர்கள் அதனைக் கவனியாது விழா நடத்தியது பற்றி பாரதி இவ்வாறு கூறுகிறார்; 'தெய்வத்தினிடத்தில் சம்மதம் கேட்டுக்கொண்டா அதற்கு பூஜை நடத்துகின்றோம். தெய்வ பூஜையைக் காட்டிலும், இப்போது நமது நாடிருக்கும் நிலைமைக்கு வீரபூஜை . அத்தியாவசியமாகும். ராமன், அர்ஜூனன், சிவாஜி, பிரதாபர் முதலிய யுத்த வீரர்களும், புத்தர், சங்கரர் முதலிய ஞான வீரர்களும் வாழ்ந்த இந்தப்புண்ணிய தேசமானது இப்போது வீர குன்யமாய் போய்விட்டது. அந்த ஸ்துதி ஈஸ்வரக்கடாக்ஷத்தினால் உதித்திருக்கின்ற சாமான்ய மகான்களைக்கூட நாம் தக்கபடி கெளரவம் செய்யாமலிருப்போமானால் நம்மை மிகவும் இழிந்த குருடரென்று உலகத்தார் நிந்தனை புரிவார்கள்."
அவ்வாறு பாராட்டுவதை விடுத்து திலகரை சமூக சீர்திருத்தவாதிகள் தாக்குவதைக் காணும்போது, திலகரை மாக்ஸ்முல்லர் நிகரற்ற வித்வானென்றும் மஹா ஞானியென்றும் கொண்டாடியிருக்கிறார், சுரேந்திரநாத் பானர்ஜி திலகரைப் புகழ்வது கொஞ்ச நஞ்சமல்ல, விபின் சந்திரபாலர் திலகரைத் தெய்வமாகவே பாராட்டுவார், பூநீலஜ்பத்ராய் திலகரென்று நினைத்தவுடன் கைதுக்கி வணங்குகிறார், எனக்கூறும் பாரதி, வரம்பு கடந்த கல்வி ஞானமும் ஜனாபிமானமும் தேசபக்தியும் மனோதிடமும் வாய்க்கப்பெற்ற திலகரைக் கண்டிக்கும்போது உதாசீன வசனங்கள் பேசாதிருக்க வேண்டாமா என வினவுகிறார்.
சமூக சீர்திருத்தக் கருத்தில் பாரதியும் திலக ரோடு முரண்பட்டபோதிலும் விடுதலைப் போராட்ட அணியின் உயர்ந்த தலைவராய்த் திலகரை மதித்ததாலேயே "ஞான ரதத்தில் பயணித்து தர்மலோகத்தை அடைந்து தர்மராஜாவைக் காணும்போதும் அவர் முகத்தில் திலகரின் சாயலைக் காண்கிறார் பாரதி.
சுதந்திரக் கிளர்ச்சி தொடங்கி சிலநாளே ஆயினும் அதற்குள் எல்லா மதத்தார்க்கும் பொதுவான பல புண்ணிய ஸ்தலங்கள்உருவாகிவிட்டது என 1910 ஆம் ஆண்டில் எழுதுகிறார் பாரதி. திலகர் பொன்னடிகளால் புனிதம் பெற்ற ஆமதாபாத் ஸாபர்மதி சிறைச்சாலை முதல் ஆத்மசக்தி சம்பூரணமாய் நிறைந்த பாரத புத்ரர்களான பூரீமான் மோ.க. காந்தி, ஜனாப் டாவுத் முஹமத், ஜனாப் அங்கிலயா, பூநீரஸ்தோம்ஜி ஆகியோர் போராட்டத்தால் தென்னாப்பிரிக்க திரான்ஸ்வால் (ஜொஹன்ஸ்பர்க் நகரம்) வரை பல புண்ணிய ஸ்தலங்கள் தோன்றிவிட்டமையை பட்டியலிட்டுத் தொடர்கையில், ஒவ்வொரு தேசபக்தரையும் அதி உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றி எழுதுவார் பாரதி'
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் ロ 41
மக்கள் தலைவர்களை மதிக்கும் பாரதியின் இந்தப்பண்பை,
ஈஸ்வரக் கடாக்ஷத்தினால் உதித்திருக்கின்ற சாமான்ய மகான்களைக்கூட தக்கபடி கெளரவம் செய்ய வேண்டும் என்ற அவரது உணர்வைப் புரிந்து கொள்ளாமையினாலேயே காந்தியை மகாத்மா எனப் போற்றியதை வைத்துப் பாரதியைக் காந்தியவாதியாகக் கணிக்கும் நிலை ஏற்படுகிறது.
திலகரால் விடுதலை கிடைக்கும் எனக்கூறாத பாரதி, காந்தியால் விடுதலை காண்போம் எனக்கூறியது பலமான ஆதாரமில்லையா என்ற கேள்வி எழலாம். சுதந்திரப் போராட்ட வரலாற்றை அறிந்த எவருக்கும் இதன் உண்மை நிலை தெரியாமலிராது. திலகர் தலைமை தாங்கிய முதலாவது சுதந்திரப் போராட்ட எழுச்சிக்காலம் (1905-1908) மக்களுக்கு ஆரம்ப உணர்வை ஊட்டுவதாக மட்டுமே அமைந்தது. அன்று "விந்தைத் திலகர் அரவிந்தரோடு சிதம்பரச் செம்மலும்' வந்திலராயின் 'அன்னை வள்நாடெங்கே வந்தேமாதரமாம் மந்திரம் எங்கே" 13 என்று கேள்விகளை மட்டுமே பாரதியால் எழுப்பமுடிந்தது. சுதந்திரப் போராட்ட
பயணத்துக்கான முதலடிகளைப் பதிப்பதே அன்றைய தேசிய வீரர்களுக்கு விதிக்கப்பட்ட பணியாக இருந்தது. மகாத்மா காந்தியின் தலைமையைப் பெற்ற இரண்டாவது சுதந்திரப் போராட்ட எழுச்சிகாலம் (1919-1921)
முந்திய போராட்ட அனுபவங்களை உள்வாங்கிய தேசபக்தர்களின் அயரா உழைப்பு விஸ்தீரணமடைந்ததோடு அரசியல் ஆர்ப்பாட்டங்களுக்குள் மக்கள் பிரவேசித்துவிட்டதுமான நிலையில் நிகழ்ந்தது. குறிப்பாக மகாத்மா காந்தியின் முன்மொழிவிலான ஒத்துழையாமை இயக்கம் மக்கள் இந்த அரசியல் எழுச்சியில் பங்கு கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியிருந்தது.
முதலாவது எழுச்சிக் காலத்திலேயே, சுதந்திரம் சாத்தியமில்லை என்ற எண்ணங்கள் மேவியிருந்த அந்தக்காலத்தில்,
சுதந்திரப் பெரும்போர் ஒர்காற் தொடங்குமேற் பன்முறை தோற்கும் பான்மைத் தாயினும்
இறுதியில் வெற்றியொ டிலகுதல் திண்ணம் 14
என 21-11-1908 இல், எழுச்சிப் பேரலை சற்று வடிந்து செல்லத் தொடங்கியபோது பாடியவர் பாரதி. அத்தோடு அமையாது அந்த எழுச்சி அடங்கிப்போயினும் சுதந்திரம் கிடைப்பது நிச்சயம் என்ற உறுதியை வளர்க்க 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று" " (1909ம் ஆண்டில்) சுதந்திரப் பள்ளுப் பாடிக்களித்தவர் பாரதி.
அத்தகையவர் ஒத்துழையாமை இயக்கத்தினால் மக்கள் எழுச்சிபெற்ற நிலையில் காண்பார் சுதந்திரம் கணப்பொழுதில் எனப்பாடியதில் ஆச்சரியமொன்றுமில்லை. இந்தச் சந்தர்ப்பம் பற்றிய பூரண தெளிவு ஆய்வுலகில் இன்னமும் ஏற்படவில்லை. ஆய்வறிஞர் கோ. கேசவன் 'ஒரு முறை நீலகண்டன் என்ற பிரமச்சாரி குறிப்பிட்டதைப் போல, தமிழகத்தில் முதன் முதலாகக் காந்தியை ஏற்றுக்கொண்டவர் பாரதி ஆவார். எனினும் சிற் சில விமர்சன்க் கண்ணோட்டத்துடன்
Page 31
42 ロ பாரதி வரலாறு : ஒரு மறுமதிப்பீடு
ஏற்றுக்கொண்டார். விதவை மறுமணம் குறித்த காந்தியின் பிற்போக்குத்தனத்தை பாரதி ஒப்புக்கொள்ளவில்லை. ஒத்துழையாமை இயக்கத்துக்கு பாரதி முழு அளவில் ஆதரவு தெரிவிக்கவில்லை. பதவிகளைப் புறக்கணித்தல் சாத்தியமில்லையென்றும் அதில் குறிப்பிட்ட அளவுகூடப் பயனிராது என்றும் குறிப்பிடுகின்றார். அப்பொழுது அவர் பணியாற்றிய 'சுதேச மித்திரன்' பத்திரிகை உரிமையாளர் ரங்கசாமி ஐயங்காரின் கருத்தும் இதுவாகவே இருந்தது. ஒத்துழையாமை இயக்கத்தைச் 'சந்து பொந்துகளின் வழி' என உவமிக்கிறார்' எனத் தெளிவற்ற முறையில் இந்த இறுதிக் காலத்தில் பாரதி எழுச்சிப் போராட்டங்களை விரும்பவில்லை என்ற தொனியில் கூறிச் சொல்கிறார்.
இவ்வாறு காட்டுவது கேசவனைப் பொறுத்தவரையில் அவசியமாகும். சுதேசமித்திரனில் 25.05.1916 இல் 'பாரத நாட்டுக்கு உடனே சுயாட்சியைக் கொடுக்க வேண்டுமென்ற கருத்துடன் ஒரு பெரும் விண்ணப்பம் தயார் செய்து அதில் மாகாணம்தோறும் லட்சக்கணக்கான ஜனங்கள் கையெழுத்திட்டு 'இந்த கணமே பிரிட்டிஷ் பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும்' என்று பாரதி எழுதியதை வைத்துக் கேசவன் 'இது மிதவாதிகளின் அரசியல் நடைமுறையாகும். இது பாரதி என்ற தேசபக்த ஜனநாயக அரசியல்வாதியின் வீழ்ச்சியாகும். ' என்று கணிக்க வேண்டியிருந்தது. பாரதி இந்தியாவை இந்தியர்களும் ஏகாதிபத்தியவாதிகளும் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் என்ற நிலைக்கு மாறிவிட்டார் என்பதும் கேசவனின் கருத்தென்ற வகையில் அவர் அவ்வாறு பாரதி நிலைப்பாட்டை சித்தரிக்கிறார். '
உண்மை நிலை கேசவனின் விருப்பம் போல அமையவில்லை. மிதவாதிகளின் போராட்ட வடிவம் ஒன்றைப் பயன்படுத்துவதை வைத்து பாரதியை மிதவாதியாக இனங்காண்பது யானையை உரலாகவோ உலக்கையாகவோ சுழகாகவோ காண்பதற்கு ஒப்பானது. விண்ணப்ப்முறை ஒன்றை மட்டுமே எல்லாச் சந்தர்ப்பங்களிலும், கிளர்ச்சி சாத்தியப்படும்போதும், கையாள முனைவதே மிதவாதமாகும். புரட்சி நடவடிக்கைக்காக சகல போராட்ட வடிவங்களும் காலதேச வர்த்தமானங்களுக்கேற்ப பயன்படுத்தப்பட்டாக வேண்டும். பாரதி இங்கே எழுச்சி முற்றாக சாத்தியமாயில்லாத குழலில் விண்ணப்பித்தலையும் ஒரு போராட்ட வடிவமாகக் கையாள விரும்பியதை வைத்து அவரை மிதவாதியாகக் கருதிட முடியாது. பிரதான அம்சம், முந்திய ஆரம்பத் தேசிய எழுச்சி அடக்குமுறைச் சட்டங்களால் நசுக்கப்பட்டு, மக்கள் விடுதலை பற்றி யோசியாதிருந்த சந்தர்ப்பத்தில், திலகர் முதலிய தலைவர்கள் தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டோ சிறையிலடைக்கப்பட்டோ இருந்த வேளையில், தலைமையற்றிருந்த விடுதலைப் பேராட்ட அணியின் தலைமையைப் படிப்படியாக ஏற்றுக்கொண்டிருந்த மகாத்மா காந்தி பிரிட்டிஷ் அரசுக்கு நிபந்தனையற்ற முறையில் ஒத்துழைப்பவராயிருந்தார். பிரித்தானிய அரசு உலகப்போரில் ஈடுபட்டிருக்கும்போது தொந்தரவு கொடுக்கக்கூடாது எனக்கருதி சுதந்திரக் கோரிக்கையை ஒதுக்கி
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் () 43
வைத்துவிட்டு அரசுக்கு விசுவாசம் தெரிவித்துப் போர் வீரர்களைத் திரட்டி யுத்த களத்துக்கு அனுப்பிக் கொண்டிருந்தார் காந்தி. அந்த சந்தர்ப்பத்தில் மேற்படி விண்ணப்ப முறையைப் பற்றிக் கூறிய பாரதி, அத்தகைய நிலையில் கிராமம் கிராமமாக விடுதலைப் பிரச்சாரம் செய்யும் இயக்கமாகவே அதைக் கருதினார், யுத்தத்தின் பின் ஐரிஷ், போலந்து முதலிய ஐரோப்பிய நாடுகட்கு விடுதலை வழங்கப்படுமென அறிவிக்க அது சந்தர்ப்பம் என்றால் இந்தியாவுக்கும் அந்த வாக்குறுதியை யுத்த நிலையிலேயே கோர வேண்டும் என்றும் கூறினார். ' அங்கு, சுதந்திரக் கோரிக்கையைக் கைவிட்ட காந்தியின் நிலைப்பாட்டை பாரதியால் ஏற்கமுடியாதிருந்தமையையே பார்க்க முடிந்தது.
அந்தச் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற போராட்ட வடிவமாக விண்ணப்பித்தலை ஏற்றுக் கொண்ட பாரதி எதிரி அடித்தால் எதிர்த்து அடிக்கும் கொள்கையையே கொண்டிருந்தார். அதே சமகாலத்தில் சுதேசமித்திரனில் தராசு" பகுதியில் பாரதி இவ்வாறு எழுதுகிறார்; 'பூரீமான் காந்தி நல்ல மனுஷர். அவர் சொல்லுகிற சத்ய விரதம், அஹிம்சை, உடைமை மறுத்தல், பயமின்மை ஆகிய இந்த நான்கும் உத்தம தர்மங்கள். இவற்றை எல்லோரும் இயன்றவரை பழக வேண்டும். ஆனால் ஒருவன் என்னை அடிக்கும்போது நான் அவனை திருப்பி அடிக்கக்கூடாது என்று சொல்லுதல் பிழை" "
கேசவனைப் போன்றே பலரும் பார்க்க விரும்பாத இந்தக் கருத்தைக் கூறிய பாரதியின் மேற்படி தராசு" கட்டுரையில் காந்தியின் பதினொரு விரதங்கள் கூறப்பட்டுவரும் போது தனது மாறுபாடுகளை அவவபபோது பாரதி தெரிவித்து வருகிறார். நாக்கைக் கட்டும்படியான காந்தியின் விரதத்திற்கு ஏழைகள் நாக்கைக் கட்டித்தான் வைத்திருக்கிறார்கள் என்று கூறிய பாரதி, பிரம்மச்சரியத்தைக் காந்தி வற்புறுத்தும் போது எல்லோரும் பிரமச்சரியமிருப்பின் மனிதரற்றுப். போய்விடுவர் என்கிறார். இறுதியாக, தான் முன்வைக்கும் பன்னிரண்டாவது விரதமாக பாரதி கூறுகிறார்: "எப்பாடுபட்டும் பொருள் தேடு, இவ்வுலகத்திலேயே உயர்ந்த நிலை பெறு; இப்பன்னிரண்டாவது விரதத்தை தேசமுழுதும் அனுஷ்டிக்க வேண்டும்' "
பாரதியினுடைய இந்தப் பன்னிரண்டாவது விரதம் காந்தியுடனான மிக மிக அடிப்படையான முரண்பாடொன்றின் வெளிப்பாடு. கேசவன் சொல்வதைப் போல காந்தியத்துடன் இரண்டாம் பட்சமான முரண்பாடுகளை மட்டும் பாரதி கொண்டிருக்கவில்லை என்பதைக் காட்டுவது; உண்மையில், அமையவேண்டிய சமூக அமைப்புத் தொடர்பாக தோன்றிய பிரதான முரண்பாட்டின் விளைவாகவே ஏனைய இரண்டாம்பட்ச முரண்பாடுகளும் கிளைத்தன. காந்தி சுதந்திர இந்தியாவை வரலாற்றின் முன்னேற்றமாகக் கருதாமல், பின்னோக்கிச் சென்று பூரணமாக நிலமான்ய உற்பத்தி உறவை மீட்டெடுக்கும் 'இராமராஜ்ய சமூக அமைப்பை சுதந்திர இந்தியாவில் நிர்மாணிக்க விரும்பியபோது,
Page 32
44 O பாரதி வரலாறு : ஒரு மறுமதிப்பீடு
பாரதியோ, மேற்கே வளரும் விஞ்ஞான மேன்மைக் கலைகளனைத்தையும் கொணர்ந்து சந்திதெருப்பெருக்கும் சாத்திரமும் சந்திரமண்டலத்தியலும் தெளிந்து அனைவரும் உழைத்து சரிநிகர் சமானமாக வாழவல்ல, உலகுக்கு முன்னுதாரணமாய்த் திகழும் புதிய சமூகமாக சுதந்திரமடைந்த பாரத சமுதாயத்தைக் காண விரும்பினார். அந்தப் புதிய அமைப்பைக் கூடியவரை சமாதான வழியில் ஈட்டிவிடமுடியும், அனைத்து மக்களும் எழுச்சிபெற்று கிளர்ந்தெழும் பட்சத்தில் சிறுபான்மையோரான ஆள்வோர் ஆட்சியை விட்டுச்செல்வர் என்ற நம்பிக்கை பாரதியிடம் இருந்தமையால் சந்துபொந்துகளற்ற நேரிய போராட்ட வழிபோதும் என எண்ணினார். அதற்காக எதிரி அடித்தால் மறுகன்னத்தை காட்டவேண்டியதில்லை. திருப்பித் தாக்கிப் பணியவைக்கத்தக்க பெரும்பான்மை பலமும் வல்லமையும் மக்களிடம் உண்டென்பது பாரதிக்குத் தெளிவு.
இதற்குப் பத்து வருடங்களுக்கு முன்னரும் பாரதியிடம் இக்கருத்தே நிலவியது. முதலாவது சுதந்திரப்போராட்ட எழுச்சிகாலத்தில், அந்நியப் பொருள் பஹஸ்காரம் போன்ற செயல்முறை எதிர்ப்பின் மூலம் மக்கள் கிளர்ந்தெழுவதால் சுதந்திரம் கிட்டும். மாறாக மக்கள் எழுச்சி கொள்ளாதபோது யுத்தம் சாத்தியப்படாதென்பதோடு ஒரு சிலரின் அதிதீவிரப்பாதை கெடுதியைத் தரும் என்று எழுதியிருந்தார். “ அவ்வாறு சமாதானவழியில் எதிர்ப்பைக்காட்டும் மக்களை பயமுறுத்தக் கொடுங்கோன்மை முறைகளை அரசு அனுஷ்டித்தால் அது மக்களை உக்கிர வழிகளின் பால் இட்டுச்செல்லும் என்றும் வேறோர் சந்தர்ப்பத்தில் எழுதியிருந்தார். *
மக்கள் எழுச்சி அவசியம் என்ற தொடக்ககால பாரதியின் எண்ணம் புதுவை வாழ்வுக்குப்பின் மாறிவிட்டதா? இரண்டாவது தேசிய எழுச்சிக்கு கால்கோலமைத்த காந்தியின் ஒத்துழையாமையை ஆரம்பத்தில் பாரதி ஏன் ஆதரிக்கவில்லை?
அரசுக்கு நிபந்தனையற்ற முறையில் ஒத்துழைத்த காந்தி ஏமாற்றத்தை உணர்ந்தபின் ஒத்துழையாமையை அறிவித்தபோது சட்டசபை-பாடசாலை-நீதிமன்ற பஹிஸ்கரிப்புகளையே முன்வைத்திருந் தார். இந்த முதற்படி நடவடிக்கையினாற் பயனேதும் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்ற முணுமுணுப்போடு மட்டும் பாரதி அமைதி காணவில்லை. தேசாபிமானிகள் பஹஸ்கரிக்க மற்றையோர் சட்டசபைக்கு செல்வராதலால் ஆங்கில அரசு ஸ்தம்பிக்க அது காரணமாகாது என்பதோடு வக்கீல்களும் மாணவர்களும் பஹிஸ்கரிப்பதும் சாத்தியப்படப் போவதில்லை என்று ஒத்துழையாமையை ஏற்காதமைக்கான காரணங்களையும் தெளிவுபடுத்தினார் பாரதி இவ்வாறு எதிர்விமர்சனத்தை முன்வைத்ததோடும் அவர் அமைதி காணவில்லை- மாற்றுத் திட்டத்தையும் முன்வைக்கிறார். 'இந்த ஒத்துழையாமை முறையையே மிகவும் உக்கிரமாகவும், தீர்வை மறுத்தல் முதலிய அதன் இறுதிப் படிகளை உடனே உட்படுத்தியும் அனுஷ்டித்தால் ஒருவேளை அன்ய ராஜாங்கத்தை
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் O 45
ஸ்தம்பிக்கச் செய்வதாகிய பயன் அதனால் விளையக்கூடும்" எனக் காரிய சாத்திய வழிமுறையைக் காட்டினார். 2
இத்தகைய இறுதிப்படி எதையும் காந்தி அறிவிக்காத போதிலும் விவசாயிப் பெருந்திரளினர் தன்னெழுச்சி பூர்வமாக வரிகொடா இயக்கத்தைத் தொடங்கிவிட்டனர். ஆரம்பத்தில் ஏற்காத அதே ஒத்துழையாமை இயக்கம் இவ்வாறு வீறுகொண்ட போராட்ட எழுச்சியாக மாறியபின் எந்தவிதத் தயக்கமுமின்றி, முன்னர் எதிர்த்தோமே இனி ஆதரித்தால் கெளரவக் குறைவில்லையா என்ற வகையான வறட்டுத்தனங்கள் ஏதுமின்றிப் பற்றார்வத்தோடு முன்வந்து பாரதி ஆதரித்தார். ரவீந்திரநாத தாகூர் போற்றிய மகாத்மாகாந்தி,
'கெடுதலின்றிநந் தாய்த்திரு நாட்டின்
கிளர்ச்சி தன்னை வளர்ச்சிசெய்கின்றான்' ஆதலால்,
"மாந்தரெல் லாருஞ் சேர்வை
அச்சத்தை மறந்து விட்டார்;
காந்திசொற் கேட்டார், காண்பார்
விடுதலை கணத்தி னுள்ளே'
என்று பாடிய LUITUé9, .
'. புவியிசைத் தருமமே அரசிய லதனிலும், பிறஇயலனைத்திலும் வெற்றி தருமென வேதஞ் சொன்னதை முற்றும் பேண முற்பட்டு நின்றார், பாரத மக்கள். இதனாற் படைஞர்தஞ் செருக்கொழிந்துலகி வுறந்திறம் பாத கற்றோர் தலைப்படக் காண்போம்- விரைவிலே, (வெற்றி கூறுமின் வெண்சங் கூதுமின்)"
(பாரத மாதா நவரத்ந மாலை)
என்றும் சொல்லி வைத்தார்.
பெருங்கொலை வழியை விடுத்து மெய்த்தொண்டர்கள் திரண்ட
அறவழிப்போராட்டத்தைத் தொடுத்த காந்தியை மேலும் 'மஹாத்மா காந்தி பஞ்சகம்" கவிதையில் வாழ்த்தும் போதும்,
Page 33
46 ) பாரதி வரலாறு : ஒரு மறுமதிப்பீடு
'நெருங்கிய பயன்சேர் "ஒத்துழை யாமை'
நெறியினால் இந்தியா விற்கு
வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து
வையகம் வாழ்கநல் லறத்தே 25
என்றும் வேண்டுகிறார். ஆயினும் அந்நிய அரசின் ஆணைக்குப் பணிந்த படைஞர், கற்றோர்வழி மேற்கொள்ளவில்லை; அந்த எழுச்சி இந்திய மக்கள் விடுதலையை விரும்புகிறாரென்று ஆங்கில அரசுக்கு உணர்த்திப் பகைத்தொழிலை அவர்கள் விட்டொழிக்க வழிசெய்யவில்லை. மாறாக செளரி செளராவில் ஊர்வலஞ்சென்ற மக்களைக் கிண்டல் செய்த போலீசாரால் மக்களுக்கும், போலீசாருக்குமிடையே மோதல் மூண்டு எழுச்சிக் கொந்தளித்தபின் முன்னேறித் தாக்கிய மக்களால் போலீசார் கொல்லப்பட்டதோடு காவல் நிலையமும் தீக்கிரையானது. இதை வைத்தே அனைத்து இந்திய எழுச்சியையும் நசுக்க ஆங்கில அரசுக்கு சாட்டுக் கிடைத்தது. செளரிசெளரா விவசாயப்பிரதிநிதிகள் தூக்கிலிடப்பட்டனர்.
பாரதி எதிர்பார்த்த்வாறு படைகளும் அரசும் (வையகமும்) நடக்காதது மட்டுமன்றிக் காந்தியும் பாரதியின் புகழாரத்தை ஏற்கும் நிலையில் இருக்கவில்லை. கிளர்ச்சி தன்னை வளர்ச்சி செய்பவராகவே பாரதி காந்தியைக் கணித்தார். அக்கிளர்ச்சியைக் கண்டே இருகவிதைகளையும் பாரதி புனைந்தார். காந்தியோ அந்தக் கிளர்ச்சியை வெறுத்தார். வரிகொடா இயக்கத்தை வன்மையாகக் கண்டித்தார். பாரதி 12-09-1921 இல் கண்களை நிரந்தரமாக மூடியபின் 12-02-1922 இல் காந்தி தலைமையில் பர்தோலியில் கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி அவசரக் கூட்டத்தில் 'மக்களின் சண்டாளத்தனமான செயலுக்கு காரியக்கமிட்டி வருந்துகிறது' எனப் பிரகடனப்படுத்தி நிலவரியையும் அரசாங்கத்துக்குச் செலுத்தவேண்டிய இதர வரிகளையும் செலுத்தும்படி விவசாயிகளுக்கு யோசனை கூறித் தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டது." கிளர்ச்சியை அடக்குவதில் அரசுக்கு அதிக சிரமந்தராது காந்தியே அடக்கும் வகையில் செயற்பட நேர்ந்தது, மக்களின் கிளர்ச்சி மனப்பாங்கு காந்திக்கு உடன்பாடானதல்ல என்பதனாலாகும். இதன் பின்னர் காந்தி பக்குவப்படாத மக்களை ஒதுக்கிவிட்டுத் தேர்ந்தெடுத்த- சத்தியாகிரக விரதத்தை மீறாத வகையில் பயிற்சி வழங்கப்பட்டவர்களைக் கொண்டதனிநபர் சத்தியாகிரகத்தை முன்மொழிந்தார்.
ஒத்துழையாமை இயக்கம் மக்களின் எழுச்சித் திசையில் முன்னேறிக் கொண்டிருந்தபோது காந்தி இயக்கத்தை வாபஸ் பெற்றதை எதிர்த்து மோதிலால் நேரு, லஜபதிராய், வல்லபாய்படேல் உள்ளிட்ட பெருந்தலைவர்கள் சிறையிலிருந்தபடி காந்திக்கு எழுதினர். செளரி செளராவில் வன்முறை வெடித்தால் அதைவிட்டு ஏனைய இடங்களில் மக்களின் கூட்டு முயற்சியாக ஒத்துழையாமையை முன்னெடுத்திருக்க வேண்டுமென்று மோதிலால் நேரு விரும்பினார். ' -
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் O 47
அவர்களின் வழியில் சிந்திப்பவராகக் காந்தி இருக்கவில்லை.
1920ஆம் ஆண்டில் ஆமதாபாத் தொழிலாளர்கள் விடயத்தில் பெற்ற அனுபவத்தால் 'நாம் தொழிலாளர்களைச் சீண்டிவிடக்கூடாது. தொழிற்சாலைப் பாட்டாளிகளைக் கொண்டு அரசியல் ஆதாயம் பெற முயல்வது ஆபத்தில் முடியும்' (தி டைம்ஸ், மே 1921) என்று எழுதிய காந்தி முன்னெச்சரிக்கை உணர்வுடனேயே சட்டசபை -நீதிமன்றபாடசாலை பஹிஸ்கரிப்பை முன்மொழிந்தார். விவசாயி வர்க்கமுங்கூட கிளர்ந்தெழும்போது அந்நிய ஆட்சியுடன் நிலவுடைமை ஆதிக்கத்தையும் எதிர்த்தே கிளம்பும் என்ற அனுபவத்தை காந்தியத் தலைமை 1922இல் புரிந்து கொண்டதை பர்தோலித் தீர்மானம் தெளிவாகக் காட்டுகிறது என பகத்சிங் கூறியிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது."
இந்த அனுபவங்களை முன்மாதிரியாகக் கொண்ட காந்தி, 1930 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் உப்புச் சத்தியாகிரகத்தைத் தொடங்கியபோது தேர்ந்தெடுத்த தொண்டர்களுடனேயே தண்டிக்குச் சென்று உப்புக்காய்ச்சத் தொடங்கினார். ஆயினும் 1930இல் வெடித்தெழுந்த மூன்றாவது சுதந்திரப் பேரெழுச்சி மேலும் மக்களைக் கிளர்ந்தெழச்செய்து சில நகரங்களைப் கைப்பற்றித் தமது கட்டுப்பாட்டுக்குள் வென்றெடுப்பதுவரை முன்னேறியிருந்தது. அவ்வாறாகலாம் என்ற முன்னனுபவம் உள்ள காந்தி அச்சந்தர்ப்பத்துக்கு இடது சாரி நாட்டமுடைய ஜவகர்லால் நேருவின் தலைமை ஆபத்தானது என்பதை முன்னெச்சரிக்கையுணர்வுடன் புரிந்து கொண்டு பூரண வலதுசாரிகளிடம் முன்கூட்டியே தலைமையைக் கொடுத்தபின் உப்புச்சத்தியாகிரகம் தொடங்கியமை வரலாறு காட்டிய உண்மை. அப்போது காந்தியின் முன்முயற்சியால் செயற்கமிட்டியில் ஜவகர்லால் நேரு உட்பட எந்தவொரு இடது சாரியும் அனுமதிக்கப்படவில்லை."
வெகுஜனக் கிளர்ச்சியை விரும்பிய பாரதி இந்தப் பாணியிலான காந்தியவாதியாக மாறிவிட்டார் என்று கூறமுடியுமா? கிளர்ச்சியை வளர்ப்பவராக பாரதி காந்தியை வாழ்த்தியபோது அதைக்காந்தி விரும்பியிருக்கவில்லை என்பது பாரதிக்குத் தெரிந்திருக்கவில்லை. அது பாரதியின் இறப்புக்குப் பின்னரே உலகுக்குத் தெரிந்த உண்மையாகும். பாரதி மறைவுக்குப்பின்னால் 1930 ஆம் ஆண்டு எழுச்சி அடக்கப்பட்டபோது, வன்முறையை வெறுத்துக் காந்தியின் சத்தியாகிரக மார்க்கத்தை ஏற்றிருந்த நேருவே 'வன்முறை கெட்டதுதான். ஆனால் அடிமைத்தனம் அதைவிட மோசமானது' என்று காந்தியின் நிபந்தனையற்ற சாத்வீகத்தின் மீதான ஆதங்கத்தைத் தெரிவித்திருந்தார். அந்த எழுச்சிகளின் தீவிரப்போக்கை முறியடிக்கும் வகையில் காந்தி செயற்பட்டு, நீண்டகால நோக்கங்களை அசட்டை செய்து, முக்கிய பிரச்சனைகள் அனைத்திலும் விட்டுக்கொடுத்து அரசுடன் ஒப்பந்தமும் செய்த நிலையில் மிகவும் மனமுடைந்து போன ஜவகர்லால் நேரு, அவ்வேளையில் தனது தந்தையான மோதிலால் நேரு உயிருடன்
Page 34
48 D பாரதி வரலாறு : ஒரு மறுமதிப்பீடு
இல்லையே என மக்கள் எண்ணத்தொடங்கியதையும் தனது வருத்தத்தையும் காந்தியிடமே நேரில் கூறினார். *
தன்னளவில் வன்முறையை ஏற்காத போதிலும், எழுச்சியை மதித்து அரசும் படைஞரும் விலகிச் செல்ல வேண்டுமென விருப்பம் தெரிவித்த போதிலும், நிபந்தனையற்ற சாத்வீகத்தை ஏற்கமறுத்து அடிக்கு அடிகொடுக்கும் கொள்கையைத் தனதாக வரித்துக் கிளர்ச்சியாளராகவே காந்தியைக் கண்ட பாரதி, காந்தி அவ்வாறு இருக்கவில்லையென அறியச் சந்தர்ப்பம் பெற்றிருப்பின் கண்டிக்கத் தவறியிரார் வீரியம் பெருக்கு, கொடுமையை எதிர்த்துநில், பாதகம் செய்பவரைக் கண்டால் மோதி மிதித்துவிடு என முழங்கும் பாரதி, அடக்கு முறைக்கு எதிரடி கொடுப்பதை ஆதரித்தே வந்துள்ளார்.
"பஞ்சாபி பத்திரிகையின் சொந்தக்காரர், பத்திராதிபர் ஆகியோர் சிறைக்கூடம் அழைத்துச் செல்லப்படுகையில் 'வந்தே மாதரம்" கோஷமெழுப்பிய மக்கள் மத்தியிலிருந்து மாணவனை சவுக்கால் அடித்த சுப்ரண்டன்ரன்ற்றைக் கோபங் கொண்ட மக்கள் பலமாகத் தாக்கியதை உள்ளார்ந்த மகிழ்வோடுதான் 1907-4-20ம் திகதிய இந்தியா பத்திரிகையில் பாரதி எழுதியிருந்தார்." அந்த உணர்வோடுதான் சமாதான வழியில் செல்லவிரும்பும் மக்களை உக்கிரவழியில் தள்ளுவது அரசுக்கு சேமகரமானதா என்றும் கேட்டுவந்தார்.
இந்த வரலாற்று உண்மைகளைக் கவனத்திற் கொள்ளாதமை யினாலேயே பாரதியைக் காந்தியவாதியாகக் காணும் தவறு ஏற்படுகிறது. பாரதியைக் காந்தியவாதியெனக் காட்டி விடும் எத்தனிப்பில் ஒரு பகுதியினர் முயன்றபோதிலும் பல ஆய்வாளர்கள் பாரதி பூரண காந்தியவாதியாக மாறிவிடவில்லை எனக் காட்டியுமுள்ளனர். 'மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சித்திரம்' எழுதிய தி. முத்துகிருஷ்ணன் 'காந்திஜியின் செல்வாக்கில் பாரதி தன்னைக் கரைத்துக் கொண்டாரா? என்ற கேள்வியை எழுப்பி, இல்லை என்பதை வலியுறுத்திச் செல்கிறார்." காந்தியிலிருந்து பாரதி வேறுபடும் அம்சங்களைக் குறிப்பிடும் ஆதவன் காந்தி பாண்யபிலான அஹிம்சாவாதியல்ல பாரதி என்ற பின்னர், "அவருடைய பல பாடல்களிலும் கட்டுரைகளிலும் விவேகானந்தர் பாணி துணிவையும் ஆண்மையையுமே" காண்கிறார். *
விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா தேவியைத் தனது குருவாக வரித்துக் கொண்ட பாரதி விவேகானந்தரின் சுதந்திர விழிப்புணர்வுக்கான எழுச்சி அறைகூவலைப் பிரதிநிதித்துவப் படுத்தியவராயினும் பல அம்சங்களில் விவேகானந்தரைக் கடந்த காலத்தோடு முன்னேறிச் சென்ற தீர்க்க தரிசன மேதையாகவும் திகழ்ந்தவர் இந்தத் தகுதியை அவர் புதுவையில் வாழ்ந்த காலத்தில் இழந்து பின்தங்கிச் சென்றாரா? தனது சமூகப் பங்களிப்பை மறந்து தனிமனித ஆன்ம ஈடேற்றத் தேடல்களுக்குள் முடங்கிப்போனாரா? 1911ஆம் ஆண்டில் இந்தியா, விஜயா, சூரியோதயம்
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் 49
ஆகிய பத்திரிகைகள் நின்றுபோனபின் தொடர்ந்து சமகால அரசியல் போக்குகளை எழுத முடியாத நிலை பாரதிக்கு ஏற்பட்டது. மீண்டும் 1915ஆம் ஆண்டிலிருந்து சுதேசமித்திரனுக்கு எழுதத் தொடங்கினாலும் நேரடி அரசியல் எழுதுவதற்குத் தடைகள் இருந்தன. இத்தடையுடன் புதுவையில் இருந்த காலத்தில் (1911 தொடக்கம் 1918 வரை) பாரதியின் மனநிலை அடியந்தமாக மாறிவிட்டதா? அவ்வாறு மாறிவிட்டதாலேயே பிற்காலத்தில் மிதவாதியாகி காந்தியத்துள் சரண்புகுந்தார் என்று கணித்துப் புதுவையில் வாழ்ந்த இந்தக் காலத்தை மாறுதல் காலகட்டம் என்போருளர் உண்மையில் அது அடியந்தமான மாற்றத்தை ஏற்படுத்திய காலகட்டந்தானா?
இந்தச் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையிலே, புதுவையிலிருந்த இந்தக் காலகட்டத்தில் பாரதியின் வாழ்நிலை பற்றி ஆராய்தல் அவசியமாகிறது.
புதுவை வாழ்வின் மறுபக்கம்
'பாரதியினுடைய கண்ணன் பக்தி அரவிந்தராலேயே ஊக்கம் பெற்றதெனக் கூறுவர். புதுச்சேரியில் பாரதியாரும் ஆன்மஞானி அரவிந்தரும் வேத நூல்களைச் சேர்ந்தே பயின்றனர். புதுச்சேரிக்கு அரவிந்தர் வந்தபின் பாரதியார் வாழ்வில் இலக்கிய ஆக்கப்பணிகள் பெருகத் தொடங்கின. பாரதியினுடைய வரலாற்றினை எழுதுபவர் எவருமே அவருக்கும் பூரீஅரவிந்தருக்கும் இருந்த தொடர்பினைக்குறியாது விட்டிலர்' என்பார் பேராசிரியர் சு. வித்தியானந்தன்.
'புதுவையில் பாரதி' எனும் நூல் எழுதிய, ப. கோதண்டராமன் அரவிந்த ஆசிரமத்தில் நடந்துவந்த அன்னை வழிபாட்டிலிருந்தே பாரதி ஆவேச அருள் ஞானம் பெற்றமையே பாரதியின் சக்திப்பாடல்களுக்கு கால்கோலமைத்தது என்ற பேராசிரியர் சுப்பிரமணிய ஐயரின் கூற்றை மறுத்துவிட்ட பின் கூறுவார். 'ஆயினும், ஒன்று மட்டும் கூறலாம் பூரீ அரவிந்தரின் தொடர்பு ஏற்பட்ட பின், பாரதியின் கவிதா சக்தி பன்மடங்கு பெருகியது. இப்பெருக்கத்தினின்று அற்புதமான சக்திப்பாடல்கள் 'ஊழிக் கூத்து' போன்ற பாடல்கள் வெளியிடப்பட்டன.”*
இவ்வாறு அரவிந்தர் தொடர்பால் ஏற்பட்ட செழுமை போதிய அளவு வெளிக்கொணரப்பட்டதாயினும் அரவிந்தருடனான பாரதியின் உறவு, எத்தகையதாயிருந்தது என்பது பற்றி பாரதியின் வாழ்வு எழுதப்படும்போது முழுமையாகச் சொல்லப்படுவதில்லை. குறிப்பாக ஆன்மீக வாழ்வு பக்கம் அழுத்தம் பெறும் அளவுக்கு இக்காலத்தில் மறுபக்கம் கவனம் செலுத்தப்படுவதில்லை. புதுவைக்குச் செல்லும்போது எந்த நோக்கத்துடன் பாரதி சென்றார். அங்கு அவரது தொடர்புகள் அவரது
Page 35
50 O பாரதி வரலாறு : ஒரு மறுமதிப்பீடு
நோக்கத்துக்கு அனுசரனையாக எவ்வளவு தூரம் அமைந்திருந்தது என்பவை ஆராயப்படவேண்டும்.
முதலாவது தேசிய எழுச்சியைத் தூண்டும் எழுத்துப் பணியைத் தமிழகத்தில் முடுக்கிவிட்ட இந்தியா' பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டபோது அதன் ஆசிரியராகப் பதிவு செய்யப்பட்டிருந்த பூரீனிவாசன் என்பவரே கைது செய்யப்பட உண்மையில் ஆசிரியராக் இயங்கிய பாரதிநண்பர்களின் வலியுறுத்தலினால் புதுவை சென்றுவிட்டார். இது பற்றி எழுதுகையில் பாரதி நண்பர்களில் ஒருவரான எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு 'தம்மை நம்பிய ஒருவரை ஆபத்தில் சிக்கவைத்துவிட்டுத் தாம் தூரப்போய்விட்டமை பாரதியின் சரித்திரத்தில் ஒரு பெரிய களங்கமேயாகும்.' * என்கிறார்.
பாரதி தன் நலன் கருதித் தப்பியோடும் எண்ணத்துடன் புதுவை செல்லவில்லை என அவருடைய நண்பர் நீலகண்ட பிரமச்சாரி சொல்வது கவனிக்கத்தக்கது. ஆரம்பத்தில் பாரதி புதுவை செல்வதை விரும்பாத போதிலும், மிதவாத அணியைச் சார்ந்த வி. கிருஷ்ணஸ்வாமி ஐயர் உட்படப் பலரும் வற்புறுத்திய நிலையில் சென்றார் என " இந்தியா' புதுவை போனது' பற்றிக் கூறுகையில் நீலகண்ட பிரமச்சாரி சொல்கிறார்.”
இதுவே மிகப் பிரதான அம்சமாகும். புதுவைக்குச் சென்றது வெறும் பாரதி அல்ல, இந்தியா' என்ற ஜீவநாடியுந்தான். பாரதிக்கு அன்று விதிக்கப்பட்ட பணி மக்களை விழிப்படையச் செய்வது; இமைப்பொழுதுஞ் சோராதிருந்து கவிதையூடாகவும் செய்திக் கட்டுரைகளுடாகவும் அதனைச் சாதிக்க வேண்டியிருந்தது. பிற்காலத்தில் சிறைசெல்வதும் எழுச்சியைத் தூண்டும்படியான நிலை இருந்ததைப் போல அல்லாது சிறைக்காலம் பணி முடக்கமாக இருந்த வகையில் புதுவை சென்று செயல்முனைப்போடு இயங்க முடிந்தமை பாரதியின் ஆளுமை சரியாகப் பயன்பட்ட தன்மையையே காட்டும்.
நண்பர்களின் வற்புறுத்தல் மட்டுமன்றித் தனது கடமை பற்றிய புரிந்துணர்வும் உந்தியதாலேயே அவ்வாறு சென்றார் என்பதற்கு புதுவையிலிருந்து இந்தியாவில் பாரதி எழுதிய விடயங்களும் ஆதாரமாக அமைகிறது. 1905 இல் தோற்றம் பெற்று வளர்ந்த முதலாவது தேசிய எழுச்சி 1908ஆம் ஆண்டில் அடக்கப்பட்டாலும் மீண்டும் எழுச்சியேற்படும் வீன்பதை வலியுறுத்த விரும்பிய பாரதி அந்த வரலாற்றைச் சுருக்கமாக எழுதிய கட்டுரைக்கு 'முதற் பிரயத்தனம்' என்ற தலைப்பிட்டார். 1908-11-21ஆம் திகதி எழுதிய அந்தக் கட்டுரையில் திலகர் நாடு கடத்தப்பட்டதுடன் எழுச்சி வரலாற்றின் முதலாவது சுருக்கம் முடிவுபெற்றது என்கிறார். இனி அடுத்த எழுச்சியை எதிர்நோக்கும் காலத்து இடைப்பொழுதில் தேசாபிமானிகளின் பணி எதுவாயிருக்கும் என்பதற்கு புதிய இத்தாலியைக் கட்டியெழுப்பப் போராடிய மாஜினி நாடுகடந்து சென்று சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தபடி ஆற்றிய செயற்திறத்தை உதாரணமாகக் காட்டுகிறார் பாரதி.
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் O 51
மாஜினி அந்த நிலை பற்றிக் கூறியது சமகால இந்தியாவுக்கும் முற்றிலும் பொருந்து மெனக் காட்டிய வார்த்தைகளை பாரதியின் மொழிபெயர்ப்பிலேயே காண்பது சிறந்தது. 'நான் (மாஜினி) எனது சந்தேகங்களையெல்லாம் உதறிவிட்டு அடுத்த காரியத்தை விடாது நடத்த வேண்டுமென்ற உறுதிசெய்து கொண்டேன். இத்தாலியில் எங்களுடைய வேலையை இன்னம் சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்பது தெளிவாக நின்றது. எமது ஜனங்கள் கலக்கம் தெளிவதற்கும் அரசு புரிவோர் தமது வெற்றியை உறுதியாக நம்பி, மறுபடியும் கண்ணயர்வதற்கும் சிறிது காலம் கடந்தே தீர வேண்டும். எனினும் உள்நாட்டில் எங்களுக்கேற்பட்ட நஷ்டங்களை வெளித் தேசங்களில் சென்று பிரயத்தனங்கள் புரிந்து ஒருவாறு ஈடு செய்து கொள்ள முடியும். நாம் இரண்டாவது முறை ஒர் எழுச்சி தொடங்கும்போது நமக்கு அன்னிய தேசத்தாரின் அனுதாபம் இருக்குமாறு செய்துகொள்ள வேண்டும். 'இந்த வார்த்தைகள் ஐரோப்பா சென்றிருக்கும் இந்திய தேசபக்தர்கள் நிலவரத்தைக் காட்ட வல்லது என பாரதி கூறுகையில் பிரித்தானிய இந்தியாவை விட்டு பிரெஞ்சு இந்தியா வந்த பாரதி தனது பாதையைத் தெளிவாகப் புரிந்துகொண்டேதான் வகுத்திருந்தார் என்பதையும் காட்டும்.
இவ்வாறு நேரடியாகத் தன் கருத்துகளை எழுதும் வாய்ப்பு அவர் ஆசிரியராக இருந்து வெளிவந்த பத்திரிகைகள் தடுக்கப்பட்டதால் பறிக்கப்பட்ட பின்பும், சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களிலெல்லாம் சுதந்திரதாகத்தை வெகுஜன மட்டத்தில் வளர்க்கும் பணியை பாரதி கைவிடவில்லை. இந்த முடக்கத்திற்கும் மீண்டும் சுதேசமித்திரனில் எழுதத் தொடங்கு முன்னருமான இடைக்காலத்திலும், இந்தத் தேக்கம் தற்காலிகமானது மட்டுமே, மீண்டும் புதிய வீரியத்துடன் எழுச்சி தோன்றும் என்ற தனது உறுதியில் தளர்ச்சிகாணாது முப்பெரும்படைப்புகளை பார்தி வழங்கினார். கண்ணன் பாடல்கள், குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய முப்பெரும் படைப்புகளுள் அந்த உணர்வு இழையோடுவதை அவதானிக்க முடியும். திரெளபதையை பாரதமாதாவின் குறியீடாக அமைத்து, பேடித்தனங்களைந்து விடுதலைக்குப் போராட அறைகூவ பாரதி எத்தனித்த காப்பிய முயற்சியே "பாஞ்சாலி சபதம்' என்பதைப் பல ஆய்வறிஞர்களும் காட்டியுள்ளனர்.
அதே சமகாலத்தில் பகவத்கீதை மொழி பெயர்ப்பைச் செய்தபோது செய்கையின்றி ஜீவன் இருக்க முடியாது, இருக்கக்கூடாது என்பதை இடித்துரைக்கவே முயல்கின்றார். அந்த மொழி பெயர்ப்புக்கு எழுதிய புகழ்வாய்ந்த முன்னுரை இந்த உணர்வைப் பூரணமாய் வெளிக்காட்டுவது. கீதை காட்டும் தெளிந்த உண்மையென முன்னுரையின் இறுதிப் பந்தியில் பாரதி தொகுத்துக் கூறும் கருத்து இதை உணர்த்தவல்லது 'உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தைக் கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது. பின் மாறுகிறதேயெனில், மாறுதல் மாயையின் இயற்கை மாயை பொய்யில்லை. அது கடவுளின் திருமேனி இங்குத் தீமைகள் வென்றொழித்தற்குரியன.
Page 36
52 O பாரதி வரலாறு : ஒரு மறுமதிப்பீடு
நன்மைகள் செய்வதற்கும் எய்துதற்கும் உரியன. சரணாகதியால் கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீர்கள் எல்லா ஜீவன்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால் விடுதலையடைவீர்கள். சத்தியவிரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். இல்லறத்து தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள்.'"
இங்கு பாரதி காட்டும் சரணாகதி என்ற விடயத்தை மட்டுமே கவனத்திலெடுத்து அதை அவர் எந்த நோக்கத்துக்காக சொல்கிறார் என்பதைக் காணத்தவறுகிற ஒருவர் பாரதி நெறியைக் கணிக்க முடியாதவர் ஆவார். பாரதி காந்தியவாதியாகியது புதுவையில் அவர் பெற்ற சரணாகதித் தத்துவத்தினாலும் என கோ. கேசவன் காட்டியிருப்பதை இங்கு நினைவு மீட்டிப்பார்க்க முடியும். பாரதியின் பகவத்கீதை முன்னுரையை முழுமையாகப் பார்த்த ஒருவர் இந்தக் குறுகிய முடிவைப் பெறமாட்டார் என்பது மட்டுமல்ல, இந்தப் பந்தியை மட்டும் பார்ப்பவர் கூட இதன் அடிப்படையை உணராதிரார்.
இந்த உலகம் கடவுளின் திருமேனி என்ற வகையில் விட்டு விலக வேண்டிய வெறும் மாயையல்ல; உள்பொருள் என்ற வகையில் இங்கு செயலாற்றித் தீமைகளை ஒழித்து நன்மையை நிலைநாட்டுதல் கடன். அந்தக்கடன் இறைபணி என்ற உணர்வில் கடவுளிடம் சரணாகதி அடைந்து இல்லறத்தூய்மையினால் ஈசத்தன்மை பெற்று இயங்கக் கீதை வழிகாட்டும் என்பதே இந்தப் பந்தியின் சாரமாகும்.
அந்த முன்னுரையை முழுமையாகப் பார்ப்பவர், பாரதி துறவறம் ஏற்புடையதல்ல என வலியுறுத்துகையில் சரணாகதி என்பதற்கு புதிய விளக்கத்தை வழங்குவதை அவதானிப்பார். இல்லற பந்தத்தை இழக்காமலேயே ஈசனைச் சரணடைந்து செயல்முனைப்போடு வாழ வழிசொல்கிறார் பாரதி என்பதைப் புரிந்து கொள்வார். அந்த வகையிலும், மீண்டும் எழுச்சி தோன்றுவது வரலாற்று நியதி என்ற புரிந்துணர்வைக் கொண்டிருந்தமையாலும், விட்டு விலகித் தனிமனித ஆன்ம ஈடேற்றங்களில் நாட்டங்கொள்ள மக்களைத் தூண்டுவதற்கு மாறாக எதிர்கால விடுதலையை நாடும் செயற்பாடுகளுக்கு விதை ஊன்றுகிறார் பாரதி என்பதை உணரமுடியும்.
சொல்லளவில் ஜனநாயகம், சோஷலிஸம் பேசும் ஐரோப்பாவினால் செயல்முனைப்புடன் உலகம் உய்ய வழிகாட்ட முடியாது, பூரண சமத்துவக் கொள்கையை இந்தியாவினாலேயே உலகுக்கு எடுத்துக்காட்ட முடியும் என்று கூறவந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வேதாந்தக் கோட்பாட்டின் பயிற்சி அதற்குக் காரணமென பாரதி காட்டுவார். அவ்வாறு சொன்னதைத் தொடர்ந்து பாரதி கூறுவது அழுத்தம் பெறவேண்டியதொன்று; எந்தச் சரணாகதித் தத்துவமும் சுதந்திரத்தை இழந்து வாழ பாரதிக்கு வழிகாட்டியதில்லை; அல்லது பிரித்தானியருடன் பகிர்ந்து மேல் தட்டினர் அனுபவிக்கும் வகையில் சுயராஜ்யத்தைக் கோருவதற்கு பாரதியைத் தூண்டியதில்லை என்பதற்கும் எடுத்துக்காட்டாக 1921ஆம் ஆண்டில்
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் D 53
(தனது இறுதி நாட்களில்) அவர் எழுப்பிய இந்தக்குரல் அமைகிறது: ‘'எத்தனையோ நூற்றாண்டுகளாக இந்தியாவின் நெஞ்சில் வேதாந்தக் கொள்கை ஊறிக்கிடக்கிறது. இந்த வேதாந்தம் லெளகிக அனுஷ்டானத்தில் பரிபூரணமான, ஸம்பூரணமான ஸ்மத்துவம் ஏற்படுத்தும் இயல்புடையது. ஆனால் நாம் இக்கொள்கையை முற்றும் அனுஷ்டித்தல் அன்னிய ராஜ்யத்தின் கீழே ஸாத்தியப்படவில்லை. ஆதலால் நமக்கு ஸ்வராஜ்யம் இன்றியமையாதது. இந்தியா ஸ்வராஜ்யம் பெறுவதே மனித உலகம் அழியாது காக்கும் வழி.'"
பாரதியின் இந்தச் சிந்தனைப் போக்கு ஒரு போதும் தடம் புரளாது முன்னேறிச் சென்ற ஒன்று. ஆரம்ப காலத்தில் அதீத தீவிரவாத மார்க்கங்களைத் தேர்ந்து முன்னேறிய அரவிந்தர் அதன் தோல்வியின் பின் அரசியலில் இருந்து முற்றாக ஒதுங்கி ஆன்மீக ஆய்வில் மூழ்கிய போதிலும் பாரதியின் பாதையை மாற்றித் தன் வழியே ஈர்க்க அரவிந்தருக்கு இயலவில்லை. அரவிந்தரைச் சந்திப்பதற்கு முன் அவரை மகானாக மதித்துப் பல சந்தர்ப்பங்களில் எழுதிய பாரதி சந்திப்பின் பின்னர் அவரோடு இணைந்து வேதநூல்களைப் படித்துத் தேர்ந்த போதிலும் அவர் குறித்து அதிகம் எழுதாதது ஏன்? 'புதுவை வந்தபின் அவருடன் நேரிடையாகத் தொடர்பு கொண்டு அவரிடமும் பக்தி செலுத்தி வந்தார். ஆனால் அவரது புகழைப் பாட்டில் ப்ாடவில்லை; பாடுவதற்குரிய அவகாசமும் எழவில்லை. ஆனால், குள்ளச்சாமியைப் பற்றியும் அவரிடமிருந்து தாம் சுயானுபவமாகப் பெற்றதையும் பாரதியார் 'பாரதி அறுபத்தா றில் தெளிவாகக் கூறியுள்ளார்.' என ஆய்வாளர்கள் கூறும் நிலை ஏற்பட்டது எதனால்,
குள்ளச்சாமியை சுயானுபவ வழிகாட்டியாகக் கூறும்போது அதே உணர்வு அரவிந்தரால் ஏற்பட்டதாகக் கூறாதுவிட்டமைக்கு அவகாசம் கிடைக்காதமையா காரணமாயிருக்கும்? பாரதி வெறுக்கும் கொலைத் தொழிலைச் செம்படவன் செய்தாலும் அவன் உயிரும் என் உயிரும் ஒன்றே என்ற உணர்வுடைய பாரதிக்கு, சாதாரண மக்களுக்கு முதல் தெய்வமாகத் தெரிகிற மடத்துக்குருவிடம் கண்டனுபவிக்காத பிரபஞ்ச உண்மைகளை செம்படவன் பாட்டிலிருந்து தெளியும் மனப்பாங்கு வாய்க்கப் பெற்றிருந்தது என்பதனால், அது காரணமாக அமைந்திராதா?
அரவிந்தரையும் பாரதி மதித்தபோதிலும் குள்ளச்சாமியை மதித்த அளவுக்கு அது உயர்ந்த ஸ்தானத்துக்குரியதல்ல என்பதையே இது காட்டுகிறது. அந்த வகையில் அரவிந்தருடனான உறவின் முழுப் பரிமாணங்களையும் காண்பது அவசியமானதாகும். இதற்கு அதிகளவில் உதவக்கூடியது பாரதிதாசனின் தொடர்பாகும். பாரதியுடன் உறவு கொண்டவர்களில் அதிகம் பாரதியைப் புரிந்து கொண்டவர்கள் கண்க சுப்புரத்தினம் (பாரதிதாசன்), பரலிக நெல்லையப்பர், வ.ரா என மூவரை மட்டும் குறிப்பிடும். வ.ரா. 'வேறு எவரினும் பாரதியின் பாவழி மரபினை நிலைநிறுத்தியவர் பாரதிதாசன் ஒருவரே' என்கிறார். பாரதிதாசன்
Page 37
54 பாரதி வரலாறு : ஒரு மறுமதிப்பீடு
பரம்பரை எனத் தொடர்ந்த கவிப்பரம்பரையொன்று பாரதிதாசனுக்கு இருந்தது போல பாரதிக்கு ஒரு பரம்பரை எனக்கூற பாரதியாலேயே 'சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டல' த்தைச் சேர்ந்தவரெனக் கூறப்பட்ட பாரதிதாசன் ஒருவரே இருந்தாரெனக் கூறுவர் ஆய்வறிஞர்."
அவ்வாறு இருந்தபோதிலும் பாரதி வாழ்க்கைத் தடங்களைக்கான பாரதிதாசன் தொடர்பு அதிகம் கவனத்திலெடுக்கப்படாத நிலையே உள்ளது. பாரதிதாசன் உயிரோடிருந்த காலத்திலும் இதே போக்கு நிலவியது. பாரதி விழாக்களுக்கு தான் அழைக்கப்படாதது பற்றி பாரதிதாசன் கூறும்போது பார்ப்பனிய நோக்குநிலையிலிருந்து பாரதியை முளையில் கருக்க முயன்றவர்கள் அந்த முயற்சியில் தோற்றபின் பார்ப்பனியத்தை எதிர்த்த அவர் குரலை அமுக்கிவிட வெறும் உப்புச் சப்பற்ற விழாக்களை எடுக்கையில் பாரதியின் வழியில் தொடரும் தன்னைப் புறக்கணித்துவிடுகின்றனர் எனச் சொல்லி வந்துள்ளார்."
'எனக்கு இளமையிலிருந்தே அரசியலிலே ஈடுபாடு அதிகம். காரணம் பாரதியார் தொடர்புதான். ' எனக்கூறும் பாரதிதாசன் 'பாரதியாருடன் நானிருந்தவரைக்கும் வெளித்தொல்லைகள் அதிகமாக இருந்தாலும் மனமகிழ்ச்சிக்கு அளவேயில்லை. காலமெல்லாம் கவிதை வாழ்க்கை, இலக்கிய ஆராய்ச்சி, அரசியல் ஆராய்ச்சி. அவரை விட்டுப் பிரிந்த பிறகு எனக்கு வெளித்தொல்லைகள் அதிகம் இல்லை. ஆனால் உள்ளத்தில் தொல்லை. இதனை நீந்திக் கரையேறுதற்கு நீண்ட நாட்கள் வேண்டியிருந்தன." எனக் கூறும்போது துடிப்புடன் சமூகச் செயற்பாடுகளில் இறங்கிய கனக சுப்புரத்தினம் என்ற இளங்காளையை பாரதிதாசன் எனும் சமூகச் சார்புமிக்க கவிஞராகவும் அரசியலாளராகவும் பரிணமிக்கச் செய்த பாரதி என்ற அரசியல் ஆர்வந்தளராத தேசியக்கவியையே தரிசிக்கிறோம். வெறும் ஆன்மீக ஆய்வில் மூழ்கிய பற்றற்ற சரணாகதிவாதியைக் காணமுடியவில்லை.
இந்த உணர்வுக்கு முரணற்ற வகையிலேயே அரவிந்தருடனான உறவும் அமைந்திருந்தது. புதுவைக்கு அரவிந்தர் வருகை தந்த 1914இல் நேரடித் தொடர்பு அவருடன் பாரதிக்குத் தொடங்கிய போதிலும் 1917இல் அதிகம் சந்திக்காத அளவிற்கு உறவில் விரிசல் ஏற்பட்டுவிடுகிறது. அரவிந்தரைச் சந்திப்பதற்கு 1917ஆம் ஆண்டில் பாரதியின் உதவியை நாடிய தி.வி.கபாலி சாஸ்திரியாரிடம் பாரதி 'ஆனால் இப்பொழுதெல்லாம் அவர் மக்களைப் பார்ப்பதற்கு விரும்புவதே இல்லை. நானே முன்போல் அவரை அடிக்கடி பார்ப்பதில்லை. சரி, எப்படியும் நான் பார்க்கிறேன்' எனக்கூறி, தானே நேரில் அழைத்துச் செல்லாமல், வேறோர் ஆள் மூலமாக, அரவிந்தருக்கன்றி அரவிந்தருக்குப் பணிவிடை செய்த நாகஸ்வாமிக்கு தமக்கே உரிய நகைச்சுவையுடன் ஒரு சீட்டு எழுதிக் கொடுத்து அனுப்பிவைக்கிறார். ” அந்தச் சீட்டுக் கிடைத்திருப்பின் உள்ளுறைந்த பாரதி உணர்வைப் புரிந்து கொள்ள உதவியாக இருந்திருக்கும். இந்த விலகல் அரவிந்தர் மக்களைச் சந்திக்காததை மட்டும்
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் 55
அல்ல, பாரதி நேரில் அரவிந்தரிடம் செல்ல ஆர்வம் காட்டவில்லையென்பதையும் தெளிவுபடுத்தி நிற்பது. இதற்கு நேரடியாக பாரதிக்கு ஏற்பட்ட அனுபவ மொன்று காரணமென, அந்த நிகழ்வின் குடாறுமுன் பாரதியை அவர் வீட்டில் சந்தித்த பாரதிதாசன் வாயிலாக அறிய முடிகிறது.
அரவிந்தரைச் சந்தித்தபின் வீடுதிரும்பிய ஒரு நாளில் பாரதி மிகவும் சோர்ந்து காணப்பட்டதை உணர்ந்த பாரதிதாசன், வாட்டத்துக்கான காரணத்தைக் கேட்டபோது, திறந்தவெளி மணக்காரரான பாரதி, அங்கு நடந்ததைக் கூறுகிறார்; 'நானும் அரவிந்தரும் உரையாடிக் கொண்டிருந்தோம். முன்பின் தெரியாத எவனோ ஒருவன் அரவிந்தர் காலில் விழுந்தான். அவரும் ஆசி வழங்கினார். பிறகு அரவிந்தர் என்னைப் பார்த்து நீரும் இவ்விதம் ஊரார் வணங்கச் சீரும் சிறப்பும் தேடலாமே ' எனக் கூறினார். அரவிந்தர் உள்ளம் சமத்துவ உணர்வுடையதன்று; அது மேடுபள்ளங்கள் நிறைந்த காடு என்று தன் விமரிசனத்தையும் இணைத்துக்கூறி மனம் ஆறினார் பாரதியார் என பாரதிதாசன் விளக்குகிறார். * விடுதலையை நேசிக்கும் பாரதி மனிதனை மனிதன் மத நம்பிக்கையின் பேரால் அடிமையாய் வழிபடத்தூண்டுவதை ஏற்காதவர் என்ற காரணத்தால் அரவிந்தரை விலகி நடக்கத் தொடங்கிவிட்டார். அதன்பின் பொது இடங்களிலன்றி வீட்டில் சென்று அரவிந்தரைச் சந்திப்பதை முற்றாகவே பாரதி தவிர்த்தார் எனவும் கூறுவர்."
இவ்வாறு வெறும் ஆன்மீக விடுதலைக்கு அப்பால் பூரண சமத்துவத்தையும் விடுதலை உணர்வையும் வேண்டிய பாரதி தனது வீட்டிலும் வெளியிலும் அதே உணர்வைக் கொண்டிருந்தவர்களோடு கூடிக் குலாவிக் கருத்துப் பரிமாற சுதந்திர உணர்வை வளர்ப்பதை நாளாந்தக் கருமமாகக் கொண்டு இயங்கிவந்திருக்கிறார். பாரதியுடன் பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்பு கொண்டிருந்த பாரதிதாசன், இருவரும் ஓரிடத்தில் உறங்கி எழுவது முதல் கூடவே பல இடங்களுக்கும் செல்லவும், பல பாடல்களின் தோற்றத்தை நேரில் காணவுமான வாய்ப்பையும் தான் பெற்றிருந்ததைக் குறிப்பிடுவார்."
இத்தகைய சந்திப்புச் சர்ச்சைகளின் போதும் தனது புரட்சிகரமான நிலைப்பாட்டை பாரதி வலியுறுத்திக் காட்டத் தவறியதில்லை. பாரதி, பாரதிதாசன், வ.வே.சு. ஐயர் மற்றும் சில பாரதி நண்பர்கள் அளவளாவிக் கொண்டிருந்த வேளை அவர்களின் நண்பரான முத்திலால் பேட்டை கிருஷ்ணசாமி, கையில் "ஜஸ்டிஸ்' பத்திரிகையுடன் வந்தார். அது பார்ப்பனரல்லாதாரின் அரசியல் பொருளாதார நிலை உயர உழைக்கும் "ஜஸ்டிஸ்' பத்திரிகை என்பதையறிந்த அய்யர் 'பிராமணரல்லாதார் முன்னேறும் போது பிராமணர் மேலும் பலபடி முன்னேறியிருப்பர் என்பதால் சமத்துவ நிலையை எட்ட முடியகதி’ என்றார். யாரும் இதற்குப் பதிலளிக்காத போது பாரதிதாசன் 'பிராமணர் அல்லாத்வர் மிகப்பலர். அவர்கள் அடிதடியில் இறங்கிவிட்டால் கதி என்ன?’ எனக் கேட்டார்.
Page 38
56 [ ] . பாரதி வரலாறு : ஒரு மறுமதிப்பீடு
இதற்குப் பதில் கூற முடியாத வ.வே.சு.ஐயர் வேறு விடயங்கள் பேசியிருந்துவிட்டுச் சென்றுவிட்டார். கிருஷ்ணசாமியும் பாரதிதாசனும் இருந்தபோது அவர்களிடம் 'சுப்புரத்தினம் கேட்டது சரியான கேள்வி. ஆணித்தரமான பேச்சு, அப்படித்தான் பயப்படக்கூடாது. ஜனங்களின்பெரும்பாலோரின் அபீஷ்டம், கொடிய கட்டுத்திட்டமும், சட்டதிட்டமும் தூளாகும்படி, அடிதடி சகிதம் உண்டாவதுதான் புரட்சி அதை நிலை நிறுத்துவதுதான் மக்களின் வெற்றி" என்று கூறினார் பாரதி'
சமாதான வழியில் எதிர்ப்பைக் காட்டி முன்னேறும் மக்களை உக்கிர வழிக்கு அரசு இட்டுச் செல்லும் பட்சத்தில் எதிர்த்துக் கிளர்ந்தெழுந்து புரட்சியில் இறங்கி மக்கள் வெற்றியை நிலைநாட்டுவர் என்ற அறிவும் தெளிவும் பாரதியிடம் இருந்ததை, அவருடைய வெறும் எழுத்துக்களுக்கு அப்பால், கூட இருந்து உணர்வுபூர்வமாய் கண்டனுபவித்த நண்பர்கள் வாயிலாய் அறியும் உண்மைநிலை இது. பாரதியின் உணர்வே பின்னால் வரிகொடா இயக்க கிளர்ச்சியைக் கண்டபோது, பல விடயங்களிலும் காந்தியுடன் உடன்பாடு காணமுடியாத போதிலும் காந்தியின் கிளர்ச்சியை வளர்க்கும் ஆற்றல் கண்டு வியந்து, காந்தி தலைமை சுதந்திரத்தைக் கடிதில் வெற்றிகாணச் செய்யும் என வாழ்த்துப்பாடவும் தூண்டியது.
வெகுஜன எழுச்சி சாத்தியமற்றது போலத் தென்பட்ட புதுவை வாழ்வுக் காலத்திலும் அதே புரட்சிக் கொந்தளிப்பு பாரதியின் உள் மனதில் உறைந்து நீறுபூத்த நெருப்பாய்க் கிடந்ததைக் காட்டும் இந்தச் சம்பவம், பாரதி அடியந்தமாய் மாறிப் போய் விடுபவராயல்லாது புதுவையிலும் தேச- சமூக விடுதலை அம்சங்களில் தொடர்ந்தும் முன்னேறிச் செல்பவராய்த் துலங்குகிறார் என்பதைக் காட்டுவது. இந்த வளர்ச்சியின் காரணமாயே 'பாரதி படிப்படியாக சீர்திருத்தவாதியாக மாறி வந்ததை நான் என் கண்ணாரக் கண்டேன்' * ଗt୩ பாரதிதாசனால் கூற முடிந்தது. புதுவையில் பாரதி வாழ்ந்து காட்டிய நெறியே பழமையை உதறிப் புதுமை நாடிய பாரதிதாச்னை உருவாக்கியதென்பதை 'பழைமைப் போக்கிலும், செக்கு சுற்றும் கவிதைப் பாணியிலும் ஊறிப்போயிருந்த எனக்கு பாரதியாரின் அஞ்சாமையும், எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும் காலத்துக்கு ஒவ்வாததை அலட்சியமாக உதறும் துணிச்சலும், பிறர் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தான் நினைத்ததைச் செய்யும் உள்ள உறுதியும் மிகவும் பிடித்தன' என்பதால் தன்னையறியாமலே பாரதி உறவு தன்னுள் பழக்கவழக்கங்களிலும் சிந்தனையிலும் மாற்றங்களை ஏற்படுத்தி வந்ததைக் காலப்போக்கில் உணர்ந்ததாக பாரதிதாசனே கூறக் கேட்கிறோம். சமூக ஊடாட்ட உண்மை ஒளி பாரதியிடம் இல்லையேல் துணிச்சலும் இளமைத் துடிப்பும் மிக்க ஒருவரை ஒருமுகப்படுத்தியிருக்க முடியாது போயிருக்கும். 55
அவ்வாறு புடம் போட்டெடுத்த, புரட்சிக்கவிதைகள் எழுதத்தமக்குக் கற்றுத் தந்து, முதன் முதலில் மனமுவந்து பாராட்டி விளம்பரப்படுத்தியதோடு ஆங்கிலத்தில் தனது கவிதையை மொழி
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் ロ/57
பெயர்த்து இந்து'வில் வெளிப்படுத்திய பாரதி பார்ப்பனரல்ல என்பதோடு 'பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே' எனக்கூறிய புரட்சியாளர் என்பதால் பாரதிதாசன் என்று தனது புனைபெயரை அமைத்தது நியாயம் என்பார் பாரதிதாசனாகப் பரிணமித்த கனக சுப்புரத்தினம். * தீவிர பிராமணிய எதிர்ப்பு அணியில், ஒரு பார்ப்பனருக்கு அடிமையென சமஸ்கிருதமொழியில் சொல்லிக் கொள்வதா எனப் புனைபெயர் தொடர்பாகத் தொடர்ந்து கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்ட போதிலும் தனித்தமிழியக்கங்கண்ட சுயமரியாதைக்காரரான பாரதிதாசன் இந்தக் காரணத்தினால் கேள்வியெழுப்புவோரை அடக்கித் தொடர்ந்தும் தனது பெயரை பாரதிதாசன் என்றே வைத்திருந்தார்.
மூடநம்பிக்கைகளைச் சாடிய பாரதி பற்றிக் கூறுகையில், 'பாரதிக்கு எல்லா மதமும் ஒன்று. கூடுமானால் மதமே இல்லையென்றாலும் பரவாயில்லை' என்பார் பாரதிதாசன். பாரதியை ஏதாயினும் குறித்த ஓர் சிந்தனைக்குள். முடக்கிப் பார்க்காத தன்மையை நேரடியாக ஊடாடிய உறவின் காரணத்தால் பாரதிதாசன் பெற்றிருக்கிறார் எனக் கருத முடியும். பாரதி வெளிப்படுத்திய பல முனை சார்ந்த சிந்தனைப் போக்குகளால் ஒவ்வொரு துறையினரும் பாரதியை அவ்வத்துறை சார்ந்தவரென முத்திரை குத்த முனைகையில் பாரதியோ அனைத்து விளங்கிடல்களையும் களைந்து முன்னேறிச் செல்பவராகத் திகழ்கிறார். அவை பற்றி மேலும் பல தகவல்களைப் பாரதிதாசனிடமிருந்து பெற்றிருக்க முடியும். இதுவரை கிடைத்த அளவிலும் பாரதிதாசன் தொடர்பு தரும் தெளிவு, பாரதி வாழ்க்கை வரலாற்றை வரைவதற்கு ஏற்ற விளக்கங்களைத் தருவதாயிருப்பதைக் காணக்கூடியதாயுள்ளது.
ஊற்றுக்களும் வெளிப்பாடும்
திலகரைச் சுதந்திர இயக்கக் தலைவராக வரித்தபோதே அவருக்கு மாறான கோட்பாடுகளான சாதி ஒழிப்பு, பெண் விடுதலை எனும் சமூக விடுதலை அம்சங்களிலும் நாட்டம் செலுத்தியவர் பாரதி. அரவிந்தருடன் ஆன்மீக ஆய்வில் இணைந்த போதிலும் மன ரீதியான அடிமைத்தனங்களை உடைத்தெறியும் இலட்சியத்தினால் அவரோடு முழுமையாக ஒன்றாமல் விலகிச் சென்றவர் பாரதி. காந்தியத்தின் சாரத்துடன் ஒட்டுறவில்லாதிருந்த போதிலும் கிளர்ச்சிதனை வளர்ப்பவராய்க் கண்டதும் சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் தலைவராய்க் காந்தியைத் தயக்கமின்றி ஏற்றவர் பார்தி
இவற்றைக் கொண்டு பார்க்கும் போது பாரதியை முரண்பாடுகளுடையவர் என்பதா? தத்துவ ரீதியாகவும் பாரதி தன்னை அத்வைத வேதாந்தியெனக் கூறியபோதிலும் பல அம்சங்களில் அத்வைதத்திலிருந்து விலகிச் சென்றவர். பிரபஞ்ச படைப்புக்கோட்பாட்டில் அத்வைத வேதாந்தத்தைவிட சாங்கியமே சரியானதென்றவர். “அவற்றைப் பார்க்கையில் அவரே தன்னை அத்வைதியாக கருதினும் அத்வைத வேதாந்தியாகக் கொள்ள முடியாதவர்.” அது, பாரதி அனைத்துக்
Page 39
58 O பாரதி வரலாறு : ஒரு மறுமதிப்பீடு
கோட்பாடுகளிலும் மேலோட்டமாகக் கவனஞ் செலுத்தித் தனக்குகந்தவற்றை ஏற்றுக் கொள்பவர் எனக் காட்டுவதா?
தத்துவ நோக்கிலும் நடைமுறையிலும் பாரதியிடம் இத்தகைய போக்குகள் காணப்படுவது, அவர் காலத்தில் இந்திய மெய்ஞ்ஞானம் அடியந்தமான மாற்றத்துக்கு உட்படும் வரலாற்றுப் போக்குக் கொண்டிருந்தமையினாலாகும். அந்த மாற்றப் போக்கை அதன் முன்னேற்றத் திசை வழியே முழுமையாக வெளிப்படுத்தியதிலேயே பாரதியின் மேதைமை புலப்படுகிறது. அத்திசை வழியே இயங்கித் தத்துவத்தளத்தில் நிலை மறுப்பின் நிலை மறுப்பாளராகச் செயற்பட்ட பாரதியின் இந்த வரலாற்றுப் பாத்திரம் காரணமாகவே, பலரும் முரண்பட்ட ஒருவராக அவரைக் காணக்காரணமான குணாம்சங்கள் அவரிடம் காணப்பட்டது. மாறாக பாரதியோ தெளிந்த தத்துவ ஞான செழுமையுடன் தனது சமூகப் பங்களிப்பை முன்னெடுத்துச் சென்றிருக்கிறார். *
சமூகத்தாக்கம் ஒவ்வொரு தனிநபரிலும் தாக்கம் செலுத்தும். அதன் காரணமாய் சமூகத்தின் உள்நாடியை வெளிப்படுத்தும் முன்னோடிகள் வழிகாட்டிகளாயும் மிளிர்வர். அந்த வகையிலும் நிலைமறுப்பின் நிலைமறுப்பாளர் என்ற வகையிலும் வேதரிஷிகள் முதல் விவேகானந்தர், நிவேதிதா தேவி, திலகர், அரவிந்தர், காந்தி வரையும், வள்ளுவர் முதல் லெனின் வரையும், இளங்கோ, கம்பர், கோபாலகிருஷ்ண பாரதி, மீனாட்சி சுந்தரம்பிள்ளை முதல் ஷெல்லி, கீட்ஸ், பைரன், வால்ட்விட்மன் வரையும், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, வ.வே.சு.ஐயர் முதல் குள்ளச்சாமி வரையும் பலரது சிந்தனைத் தடத்தில் ஏற்புடையவற்றை உட்செரித்து முன்னேறிய பாரதியிடமும் முன்னோடிகள் பலரது தாக்கங்கள் உள்ளது. ஆயினும் பாரதியின் ஆளுமை அவரின் தனித்துவ இயல்புகளைத் துலக்கமாகக் காட்டுவதாய் அமைந்துள்ளது. அவை தெளிவாக வரையறுக்கப்படுவது அவசியம்.
அதற்கமைவாக தத்துவார்த்த ரீதியாக பாரதியின் மெய்ஞ்ஞானம் தெளிவாக அடையாளங் காணப்பட்டு, பாரதியின் முழுப் பரிமாணங்களையும் கவனத்திலெடுத்து பாரதி வாழ்க்கை வரலாற்றை பூரணமாக எழுதுவது மிகமிக அவசிய பணியாகும். இதற்கு பாரதிதாசன் தொடர்பு மிக அதிகளவில் பயன் நல்க வல்லது. அதே போன்றே கிடைக்கும் ஒவ்வொரு தகவல்களும் கவனமாகச் சீர்தூக்கி அலசப்பட்டுத் தெளிவுகாணப் பயன்படுத்தப்பட வேண்டும். முழுமை வாய்ந்த, ஆய்வடிப்படையிலான பாரதி வரலாறு விரைவில் வெளிவரும் என நம்புவோம்.
10.
11.
12.
13.
14.
15.
16,
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் O 59
உசாத்துணை
ப. கோதண்டராமன், 'புதுவையில் பாரதி', பழனியப்பா பிரதர்ஸ், சென்னை - 600 014. இரண்டாம் பதிப்பு, 1990. பக். 177. கா. அப்பாத்துரையார், 'செட்டி நாட்டிலிருந்து சென்னை வரை' பாவேந்தர் பல்கலைக்கழகம். தொகுப்பு: கவிஞர் முருகுசுந்தரம். அன்னம் (பி) லிட், 2, சிவன் கோவில் தெற்கு தெரு, சிவகெங்கை - 623 560, டிசெம்பர் 1990 பக். 277. ப. ஜீவாநந்தம், 'பாரதியின் தத்துவ ஞானம்' இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு கமிட்டி, சென்னை, செப்டெம்பர் 1958, பக். 07. ப. ஜீவானந்தம், "இலக்கியச்சுவை' நியு செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், 41 பி, சிட்கோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், சென்னை - 600 098, மூன்றாம் பதிப்பு: செப்டெம்பர் 1992, பக்.31. ܗܝ கவிஞர் சிற்பி, 'பாவேந்தர் - ஒரு நினைவுச்சரம்', பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம், பக்.351. கோ. கேசவன், 'பாரதியும் அரசியலும்', அலைகள் வெளியீட்டகம், 36 தெற்கு சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம், சென்னை - 600 024, டிசெம்பர் 1991, பக்.175.
‘மகாகவி பாரதி நூற்றாண்டு விழா மலர்', 1982, தமிழ்நாடு அரசு வெளியீடு, பக்.174-175.
சுப்பிரமணிய பாரதி, 'பாரதி பாடல்கள்' (ஆய்வுப் பதிப்பு), தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், ஏப்ரல் 1987, பக்.108-109.
சுப்பிரமணிய பாரதி, 'பாரதி தரிசனம்' - 01. (தலையங்கம், 'இந்தியா’ 1906 ஜூலை 14), என்.சி.பி.எச் (2ம் பதிப்பு), ஆகஸ்ட் 1986, பக்.27-8.
மேற்படி, பக். 50-51.
சுப்பிரமணிய பாரதி, “ஞானரதம்', பாரதி நூல்கள் (வசனங்கள்) பாரதி பிரசுராலாயம், திருவல்லிக்கேணி, சென்னை 1950, தொகுப்பாசிரியர் ரா.அ.பத்மநாபன், பக்.81.
சுப்பிரமணிய பாரதி, 'பாரதி புதையல்', வானதி பதிப்பகம், 13. தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, டிசம்பர் 1982, us. 420-421.
சுப்பிரமணிய பாரதி, 'பாரதிப் பாடல்கள்' (ஆய்வுப் பதிப்பு), தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1987, பக்.146
மேற்படி, பக்.102.
மேற்படி, பக்.158 - 160,
கோ, கேசவன் (06), 178 - 179
Page 40
60
17.
18.
19.
20,
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
பாரதி வரலாறு : ஒரு மறுமதிப்பீடு
மேற்படி, பக். 150 - 151. 'பாரதி புதையல்' (12), 251. 'பாரதி நூல்கள்' (வசனங்கள்) (11), "தராசு", பக்.57 மேற்படி, பக்.57-58, 德 · 'பாரதி தரிசனம் - 2', (தொகுப்பு : இளசை மணியன்) என்.சி. பி.எச். 1977, U5.45-47.
மேற்படி, பக்.148. 'பாரதி தமிழ்', தொகுப்பாசிரியர். பெ. தூரன் ("சுதேச மித்திரன் பத்திரிகையும் தமிழ்நாடும்’ எனுந்தலைப்பில் 30.11.1920 இல் பாரதி எழுதிய கட்டுரை). 'பாரதி பாடல்கள்' (08), பக். 738 - 740.
மேற்படி, பக்.742. ராஜனி பாமே தத் 'இன்றைய இந்தியா - 2' (தமிழில் எஸ். ராமகிருஷ்ணன்), ஜனசக்தி பிரசுராலயம். 6, டேவிட்ஸன் தெரு, சென்னை - 1, ஜனவரி 1948, பக்.283 - 287, பக்.317.
இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், நேரு 'கொள்கையும் நடைமுறையும்', (தமிழில் சு. கிருஷ்ணமூர்த்தி) சென்னை புக்ஸ், 6. தாயார் சாகிப் 2 வது சந்து, சென்னை - 2, மார்ச் 89, பக். 20 - 21.
மேற்படி, பக்.29. மேற்படி, பக். 63 - 64.
மேற்படி, பக்.64 - 69.
பாரதி தரிசனம் - 2 (21). பக். 69 - 70,
தி. முத்துக்கிருஷ்ணன், ‘மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சித்திரம்', என்.சி.பி.எச், 1986, பக்.340.
ஆதவன் (கே. எஸ். சுந்தரம்), 'புழுதியில் வீணை' (நாடகம்). முன்னுரை, தாகம், 58, டி.பி. கோயில் தெரு, திருவல்லிக்கேணி, விவேகானந்தர் இல்லம், சென்னை - 5, 1988, பக். 59 - 61. கோ. கேசவன் (06), பக்-133. சு வித்தியானந்தன், 'வரலாற்றோடு இணைந்த பெரியார்கள்' மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா மலர் - 1982. பக். 133. ப. கோதண்டராமன் (01), பக். 66 - 67. எஸ். ஜி. இராமாநுஜலுநாயுடு, 'பாரதியைப் பற்றி நண்பர்கள்' (தொகுப்பு: ரா. அ. பத்மநாபன்), வானதி பதிப்பகம், ஜூலை 82, uš. 255.
மேற்படி, பக்.58.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் ロ 61
ப. கோதண்டராமன், (01), பக்.15 - 22.
'பகவத் கீதை', முன்னுரை, பூம்புகார் பிரசுரம், 2ம் பதிப்பு : 1977, பக்.50
'பாரதி புதையல்", (12), பக்.500 - 501.
ப. கோதண்டராமன் (01), பக்.152.
மேற்படி, பக்.171.
ச.சு. இளங்கோ, 'பாரதிதாசன் பார்வையில் பாரதி', பக்.08.
கோ. கிருஷ்ணமூர்த்தி, 'பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு, தமிழ்நாடு அரசியல் அறிவாய்வுக் கழகம், 1991. பக். 26.
ச.சு. இளங்கோ (44), (குயில் 6.9.1960) புதுமை செய்தி - பாரதி விழா, uš. 200.
முருகுசுந்தரம், "பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்", பக்.41. ச.சு. இளங்கோ (44), பக். 197 - 198.
தி.வி. கபாலி சாஸ்திரியார், பாரதியாருடன் எனது முதல் சந்திப்பு, 'அறிஞர்கள் பார்வையில் பாரதி' (தொகுப்பு பெ. சு. மணி), மணிவாசகர் நூலகம், 14, சுங்குராம் தெரு, பாரிமுனை, சென்னை - 1, 1982, Luš. 53.
ச.சு. இளங்கோ (44), பக்.97.
க. கைலாசபதி, பாரதியார் நூற்றாண்டு விழா சிறப்புரை, பலாலி ஆசிரியர் கலாசாலை, இலங்கை 1982.
கோ. கிருஷ்ணமூர்த்தி (45), பக்.17 - 53.
மேற்படி, பக். 29 - 30. ܝ
முருகுசுந்தரம் (02), "பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்' பக்.297 மேற்படி, பக். 69.
மேற்படி, பக். 278.
ச.சு. இளங்கோ (44), பக். 136. - பாரதி நூல்கள் (வசனங்கள்), 'பதஞ்சலியோகஸCத்திரம்' பக். 16 - 20.
பார்க்க ந. இரவீந்திரன், 'பாரதியின் மெய்ஞ்ஞானம்', சவுத் ஏசியன் புக்ஸ், 6. தாயார் சாகிப் 2வது சந்து, சென்னை - 2. 2ம் பதிப்பு - மார்ச் 1993.
Page 41
இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் புனைகதை இலக்கியம்
பல தலைப்புகளின் கீழ் பகுத்தாரயப்பட வேண்டிய விடயப்பரப்புடையது 'இருபதாம் நூற்றாண்டில் தமிழ்ப் புனைகதை இலக்கியம்' ஒரு சிறிய கூஜாவினுள் பூதத்தை அடைக்கும் வித்தையைப் போல, சிறிய ஆய்வெல்லையொன்றுக்குள் இதனைக் கொண்டுவரும் போது, உருச்சிதையாமல், இருபதாம் நூற்றாண்டின் புனைகதை இலக்கியப் போக்குகள் குறித்து ஒரு சித்தரிப்பாக வழங்குவது வசதியாயிருக்குமெனக் கருதுகிறேன்.
தமிழில் முதல் நாவலின் தேர்ற்றம் 1879ஆம் ஆண்டாக இருந்தபோதிலும், குறிப்பிடத்தக்க சில நாவல்கள் 19ஆம் நூற்றாண்டில் தொடர்ந்து உருவாகியபோதிலும், இருபதாம் நூற்றாண்டை எட்டியபோது நாவலின் நிலை புதிய வீறுடன் எழுச்சிபெறுவதாக அமைந்துவிடவில்லை. 'இந்த நூற்றாண்டின் முதல் முப்பது வருடங்களிலே பலவிதமான நாவல்கள் தோன்றின. நாவல் படிக்கக்கூடாது என்கிற அபிப்பிராயத்தை வலுவடையச் செய்யும் வகையிலே, ஆரணி குப்புசாமி முதலியார், ஜே. ஆர். ரெங்கராஜ0, வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு. கோதைநாயகி அம்மாள் முதலியோர் நிறைய எழுதினர். இந்த வரிசையில் சேர்ந்தவர்தான் கல்கியும்' என க.நா.சுப்பிரமணியம் (விமர்சனக் கலை) குறிப்பிடுவது மணங்கொள்ளத்தக்கது.
புனைகதை இலக்கிய வளர்ச்சிப் போக்கில் கல்கி வழி பாரதூரமான முடக்கத்தை ஏற்படுத்திய நிலையில், ஒரு சில்லெடுப்பின் வாயிலாக ஒழுங்கான வழிப்படுத்தலுக்குக் கொணரும் முயற்சியாகவே க.நா.சு.வின் குரல் அமைந்துள்ளது. நாவல் படிக்கக்கூடாது' என்கிற வெறுப்பு வளர்கிற நிலைமைக்கும், இந்த நூற்றாண்டின் நடுக்கூற்றில் கல்கி அத்தகைய தவறான திசைவழியையே தொடர்ந்து முன்னெடுப்பவராக அமையவும் ஏதுவாக இருந்த காரணி என்ன?
முதல் தமிழ் நாவலாகிய 'பிரதாப முதலியார் சரித்திரம்', அதன் ஆசிரியர் மாயூரம் முன்சீப் வேதநாயகம்பிள்ளையின் நோக்கம் காரணமாக, அறிவுறுத்தல், இன்பூட்டுதல் ஆகிய எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டு நாவலுக்குரிய வடிவச் சிறப்பை எய்தத் தவறியது. இராஜம் ஐயரின் 'கமலாம்பாள் சரித்திரம்' (1896) சற்று முன்னேறி சமூகத்தை உள்ளபடி சித்தரிக்கும் இயற்பண்புவாத நாவலாக அமைந்தது. மாதவய்யாவின் 'பத்மாவதி சரித்திரம்' (1898) சமகால வாழ்க்கைச் சிக்கல்களை விவரித்துப் பேசவும் விவாதிக்கவும் முயன்றது. பண்டித நடேச சாஸ்திரியாரின் 'தீனதயாளு 'வும் (1900) தி. ம. பொன்னுசாமிப் பிள்ளையின் 'கமலாட்சி"யும் குறிப்பிடத்தக்க நாவல்கள்.
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் O 63
இந்த நாவல்கள், 'தமிழில் அவை நவீனம் என்று அழைக்கப்படுவதற்கு ஏற்ற வகையில், நவீனத்துவ உணர்வுடன் படைக்கப்பட்டனவல்ல. இன்பமூட்டுதல், அறிவுபுகட்டுதல், உள்ளதை உள்ளபடி காட்டுதல் என்பவற்றுக்கு மேலாக சமூக அமைப்பை மாற்றத்தக்க நவீன சிந்தனையடிப்படை இவற்றுக்கு வந்தமையவில்லை.
தமிழில் நவீனத்துவச் சிந்தனை இத்தகைய புதிய வடிவத்தைக் கையேற்றவர்களிடமின்றி மகாகவி பாரதியிடமே முழுமைபெற்றதாய் வெளிப்படுவதை காண்கிறோம். புதிய வடிவம் என்ற வகையில் நாவலில் எளிய வசன நட்ையைக் கையாண்ட வேதநாயகம்பிள்ளை, மாதவையா போன்ற நாவலிலக்கிய முன்னோடிகள், கவிதை எழுத முற்பட்டபோது விளங்காத ’மொழி ஒன்றை வரித்துக்கொண்டார்கள். முடிந்தவரை பேசுவது போல எழுத வேண்டுமென்கிற கொள்கையுடைய பாரதி, கவிதையையும் அனைவருக்கும் விளங்கும் மொழியில் எழுதினார். இதற்கான அடிப்படைக்காரணம் வெறும் இன்பமூட்டலுக்காகவும், அறிவூட்டலுக்காகவும் எழுதிய நாவலிலிக்கிய முன்னோடிகள் சமூகமாற்றத்திற்கான செயலூக்கமிக்க பங்களிப்பு பற்றி பிரக்ஞையற்றவர்களாயிருக்க, பாரதி இலக்கியத்தை மக்களிடம் செல்வதற்கான புதிய கருவியாக கண்டார் என்பதுதான். பழைமைக்கு பணிந்துவிட்ட அவர்களைத் தமிழ்க்கவிதையின் இரண்டாயிரம் ஆண்டு மரபு கட்டிப் போட்டுவிட, பாரதி நவீனத்துவ முன்னோடியாக முகிழ்த்து கவிதையின் மீது தன் ஆளுமையைச் செலுத்தும் வல்லமையைப் பெற்றார்.
சமூக மாற்றப் பங்களிப்புக்கு கவிதை அளவுக்கு புனைகதைக் களம் உதவமுடியாது எனக்கருதியதாலோ என்னவோ, புனைகதை இலக்கியத்தின்பால் பாரதி அதிக சிரத்தை செலுத்தவில்லை. எழுதிய சிலவும் வடிவச் சிறப்பை எட்டமுடியாமல் பிரச்சாரத்தன்மை மேலோங்கியிருந்தன என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டன.
ஆயினும் பாரதி நூற்றாண்டுவிழா காலத்தின் தாக்கத்தின் விளைவாக தமிழில் சிறுகதை பிறக்கிறது என்ற தனது கட்டுரைத்தொகுதியின் புதிய பதிப்பொன்றை 1988இல் வெளியிட்ட சி.சு.செல்லப்பா, பாரதியின் சிறுகதைகளிடத்தும் வடிவ அமைதியைக் காணமுடிகிறது என்ற வகையில் தமிழ் சிறுகதையின் முன்னோடியாகவும் பாரதியைக் கருத முடியும் எனக் காட்டியிருந்தார். அவ்வாறு எடுத்துக்காட்டியபோதிலும் பின்வந்த ஆய்வுகளில் அநேகமானவை பாரதியையன்றி வ. வே. சு. ஐயரையே சிறுகதையின் முன்னோடி எனக்காட்டுகின்றன. வ.வே.சு.ஐயரிடம் காணப்பட்டது போன்ற ரீதி புதிது" என்ற பிரக்ஞை பாரதியிடம் இருக்கவில்லை எனக்கருதப்படுவது இதற்கான ஒரு காரணமாயிருக்கலாம்.
எவ்வாறாயினும் நாவல் தனது ஆரம்பகால வாசகர்களாய்க்கண்ட படித்த உயர்குல மற்றும் மத்தியதர வர்க்க இல்லத்தரசிகளின் பொழுதுபோக்குத் தரத்துக்கு மேல் வளரமுடியாமல் இருந்த முடக்கமே
Page 42
64 0 இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் புனைகதை இலக்கியம்
க.நா.சு. மேலே காட்டியிருந்த நாவலாசிரியர்கள் அரங்கேறக் கால்கோளமைத்தது என்பதுதான் வரலாறு. பாரதி நாடிச்சென்றவர்களான வீதியில் இறங்கிச் சுதந்திரக் கிளர்ச்சிக்குத் தயார்ப்படுத்தப்படவேண்டிய மக்களை வாசகர்களாக்கியிருப்பின், நாவலின் வீச்சு வேறுவகையில் அமைந்திருக்கமுடியும். 3'-
தமிழ்ச் சிறுகதை முன்னோடியாகக் கருதப்படும் வ. வே. சு. ஐயர் தேசிய வீரராக இருந்த அளவுக்கு சமூக விடுதலை அக்கறை கொண்டவராக இல்லாமற் போன காரணத்தால் நவீனத்துவ வடிவம் என்ற வகையில் சிறுகதைத் தோற்றம் முழுமைபெறமுடியாமற் போனது. வ.வே.சு.ஐயரின் சிறுகதைகளில் வடிவ அமைதி விதந்துரைக்கத்தக்க சிறப்பைப்பெற்ற போதிலும் உள்ளடக்கம் சமூக விடுதலை உணர்வை மழுங்கடிப்பதாகவும் அமைந்தன.
பாரதியே சிறுகதையின் முன்னோடி எனக்காட்டுவோர் உள்ளடக்க வீச்சுடன் பாரதி தமிழ்ச்சூழலுக்கு அமைவாக வடிவ அமைதியை வரித்துக் கொண்டவாறினையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. தலைசிறந்த தமிழ் சிறுகதைகளை 'அன்று தொகுதியாய் வழங்கிய மாலன், அதன் முதற் தொகுதியில் கவிதையில் புதுமை செய்த, கார்ட்டூன் போன்ற நவீன உத்திகளைத் தமிழ்ப்பத்திரிகை உலகில் அறிமுகப்படுத்திய, புதியன விரும்பு என உபதேசித்த பாரதியார், சிறுகதையில் மாத்திரம் நவீன வடிவத்தை அறிந்தும் அதனை மறுதலித்து பழைய மரபினை விரும்பித் தேர்ந்தெடுத்தது ஏன்?' என்ற வினாவைத் தொடுத்திருந்தார்.
கூடவே மாலன் கூறிய இந்த விடயமும் கவனத்திற்கொள்ளப் படவேண்டிய அம்சம். 'வ. வே. சு. ஐயரைப்போலச் சிறுகதையை ஒரு இலக்கிய வடிவமாகவோ, மணிக்கொடிக்காரர்களைப் போலச் சுத்தக் கலை உருவமாகவோ, கல்கியைப் போல ஒரு பொழுது போக்குச் சாதனமாகவோ பாரதியார் கருதி இருக்கவில்லை. அவற்றைப் பத்திரிகைபோலச் சமுக விமர்சனத்திற்கான ஒரு ஊடகமாகவே பயன்படுத்திவந்தார்.'
மேற்கூறியவாறு கொள்ளலாம் எனிற் பாரதியின் சிறுகதைகள் வடிவ அமைதி அற்றன, அந்த வகையில் பாரதியை சிறுகதையின் முன்னோடியாகக் கருத முடியாது என்று பொருளாகிவிடும். மாலன் தன்னளவில் பெற்றுக்கொண்ட தீர்மானம் தெளிவானது, ஆயினும் அதற்கான விளக்கத்திலே தவறு செய்கிறார். பாரதி நவீன வடிவம் என்ற சிறுகதையின் அம்சத்தை முழுமையாய் மறுதலித்து பழைய மரபினை நாடிச் செல்கிறாரா?
இல்லை. அந்த ஐரோப்பிய நவீன வரலாறு வழங்கிய புதிய வடிவத்தை எமது குழலுக்கு இசைவாக மாற்றியமைக்கிறார். அவரது உள்ளடக்கம் அத்தகைய மாற்றிவளர்க்க்ப்பட்ட புதிய உருவத்தை வேண்டி நிற்கிறது. தேசிய விடுதலை உணர்வோடு சமூக விடுதலை அம்சங்களையும்
கலாச்சாாம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் 口 65
சாதாரண மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய புதிய நோக்கம் அந்த மாற்றத்தை விளைவித்திருக்கிறது. புதிய சிறுகதை வடிவம் ஒன்றும் புரியவில்லையே என்ற செல்லம்மா பாரதியின் குரலை மதித்து, சாதாரண எழுத்தறிவுடையவர்களும் தமக்கான வடிவமாக சிறுகதையைக் கொள்ளக்கூடிய வகையில் எமது பஞ்சதந்திரக்கதைகள் போன்ற மரபு வடிவத்துடன் இணைத்து தமிழ் சிறுகதை மரபு ஒன்றை பாரதி தொடக்கி வைக்க முனைகிறார்.
இவ்விடத்தில் சிறுகதைக்கு முன்னோடியாக பாரதி துலங்கியதை வெளிக்காட்டும் பெ. சு. மணி அவர்களுடைய 'வ. வே. சு. ஐயர் அரசியல்-இலக்கியப் பணிகள்' என்ற நூலில் உள்ள கருத்துக்கள் கவனத்தை ஈர்ப்பன. சி.சு.செல்லப்பா "ஆறில் ஒரு பங்கு' பாரதியால் 1913ல் எழுதப்பட்டதென்ற வகையில் வ. வே. சு. ஐயரின் 1915ஆம் ஆண்டில் எழுதப்பட்ட குளத்தங்கரை அரச மரத்தை விடவும் முன்னோடி நடவடிக்கை எனச் சுட்டிக் காட்டுவதைக் குறிப்பிடும் பெ. சு. மணி 'ஆறில் ஒரு பங்கு' 1910ல் வெளிவந்து ஆங்கில அரசின் தடையைச் சந்தித்தமையைக் குறிப்பிட்ட பின்னர், பாரதியால் சிறுகதை என்ற உணர்வுடன் 'சக்கரவர்த்தினி'யில் ஐந்து இதழ்களில் வரத்தக்க வகையில் எழுதப்பட்ட நான்கு அத்தியாயங்களைக்கொண்ட 'துளஸ்பாயி என்ற ராஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்' என்ற சிறுகதையே (சக்கரவர்த்தினி நவம்பர் 1905, ஜனவரி 1906 பிப்ரவரி 1906, ஜூன் 1906, ஜூலை 1906) முதல் முயற்சி என்பார்.
வடிவ அமைதியைப் பொறுத்தவரை பாரதி தமிழ் இலக்கிய வரலாற்றுக்குள் சிறுகதையைக் கொணரும் வகையில் உணர்வுபூர்வமாகவே வடிவ வாதத்துக்குள் கட்டுப்படாமல் புதிய வழியைச் சமைக்கிறார் என்பதற்கு “ஞானபாநு' மாத இதழில் 1913இல் எழுதத் தொடங்கி முற்றுப்பெறாத 'சின்னச்சங்கரன் கதை', தொடக்க வரிகள் சிறந்த எடுத்துக்காட்டாகும். அவசியம் கருதி, பெ. சு. மணி தன் ஆதாரங்களுக்காகக் காட்டிய பாரதியின் அந்த வரிகளை முழுமையாகத் தருகிறேன்: 'நமது நாட்டுக் கதைகளிலே பெரும்பாலும் அடிதொடங்கிக் கதாநாயகனுடைய ஊர், பெயர், குலம், கோத்திரம், பிறப்பு வளர்ப்பெல்லாம் கிரமமாக சொல்லிக்கொண்டு போவது வழக்கம். நவீன ஐரோப்பிய கதைகளிலே பெரும்பகுதி அப்படியல்ல. அவர்கள் நாடகத்தைப்போலே கதையை நட்டநடுவில் தொடங்குகிறார்கள். பிறகு, போகப் போக கதாநாயகனுடைய பூர்வ விருத்தாந்தங்கள் தெரிந்து கொண்டே போகும். எங்கேனும் ஒரு நாட்டில், ஒரு குளக்கரையில், ஒரு தனி மேடையில், இவன் தனது காதலியுடன் இருப்பான். இல்லாவிட்டால் யாரேனுமொரு சிநேகிதனுடன் இருப்பான். அப்போது கதையின் ஆரம்பங்களை எடுத்து விரிப்பான். இது அவர்களுடைய வழி நான் இக் கதையிலே மேற்படி இரண்டு வழிகளையும் கலந்து வேலை செய்யப்போகிறேன்.'
Page 43
66 0 இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் புனைகதை இலக்கியம்
தெளிந்த கலையுணர்வு மீதுரப்பெற்ற பாரதியின் இந்த இணைப்பு புறக்கணிக்க முடியாத ஒரு அம்சம். பெ. சு. மணியின் வார்த்தைகளில் கூறினால், 'பாரதியார் இரண்டையும் இணைத்தது, மரபு வழியில் கதைகேட்டுப் பழகியவர்களைக் கருத்தில் கொண்டும், அதே சமயத்தில் அவர்கள் புதிய வழியையும் புரிந்து கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்தாலும் என்றும் கூற இயலும்,' "
ஈழத்துக்கதைஞர் எஸ். பொன்னுத்துரை 'பாரதியாரின் தேசிய விடுதலை எழுச்சி, மெய்ஞ்ஞான விசாரணை, உலகளாவிய சமுதாயப் பார்வை, சுத்த சுயம்புவான மானுஷிகத்தின் தேடல் ஆகியன அவருடைய உள்ளத்திலே பொங்கிய தமிழ்க்காதலைக் கரைக்குள் அணையிட்டும் வைத்தன. புதுத் தமிழ்ச் சேவையே இன்தமிழ்ச்சேவிப்பாகவும் அமைந்தது. 'சிறுகதை இலக்கியம்' பற்றிய பிரக்ஞையும் பாரதியாருக்கு இருந்தது. அதற்கான இலக்கிய வடிவத்தை மேலைநாட்டிலிருந்து இறக்குமதி செய்யத் தயங்கினான். வழக்கிலிருந்த நாட்டார் கதைமரபிலிருந்து அதற்கு ஓர் உருவம் பெற்றுத் தருவதில் சிரத்தை ஊன்றினான். இதில் அவன் வ.வே.சு.ஐயர் உடன் மாறுபாடு கொண்டு தமிழ் ஓர்மத்தை ஊன்றினான்' என்பார். இக்கருத்தை முன்வைக்கும் எஸ்.பொ. 'நீலாவணன்: எஸ். பொ.நினைவுகள்' என்ற நூலில் மரபுத் தொடர்பைப் பேண முனைப்புடன் தாம் குரல் கொடுத்த கருத்துச் சார்பையும் வெளிப்படுத்துவதைக் கொண்டு அவதானிக்கும்போது, பாரதியின் அந்தப் பண்பு அவரில் எத்தனை ஆழத்துக்குப் பதிந்து விட்டிருக்கும் என்பதை உணரமுடியும். இவ்விடத்தில், மனுக்குல முன்னேற்றத் திசைவழியே lp fr6OL i மாற்றுவதற்கும் பாரதி முனைந்தார் என்பதும் அழுத்தப்படவேண்டியது.
இந்தச் சந்தர்ப்பத்தில் 'தமிழ்ச் சிறுகதைகளில் உருவம்' என்ற நூலின் ஆசிரியர் கோ. கேசவன் கருத்தைக் கவனத்தில் எடுப்பது பொருத்தமுடையது.
அந்த நூலில் கேசவன், சிறுகதை எழுதும் முயற்சியில் பாரதி, மாதவையா போன்றோர் ஈடுபட்டிருந்தனர், 'எனினும் இவர்களது முயற்சிகள் நவீன சிறுகதையின் வடிவக் கட்டுப் கோப்புக்குள் அமையவில்லை' எனக்கூறுகின்றார். அவர் அதற்கு ஒரு கலைப் படைப்பின் வடிவ நிர்ணயிப்பில் பங்காற்றும் அம்சங்களாக மேல்வரும் ஆறினைத் தருகிறார்: "1. கலைப்படைப்பின் உள்ளிடுதிறன்கள் அ-து அதன் உள்ளடக்கம். 2. வர்க்க மனநிலை, அ-து கலைஞனின் வர்க்க மனநிலை; கலைஞன் காட்டும் பாத்திரங்களின் மனநிலை, 3. அந்நியக் கலை இலக்கியத்தின் தாக்கம், 4. பண்டைய மரபுகளின் செல்வாக்கும் அவற்றிலிருந்து விடுபடத்துடிக்கும் முயற்சியும். 5. கலைஞனின் பயிற்சி - பழக்கம். அவனது ஆழ்ந்த மனக்கிளர்ச்சி, 6.நுகர்வோர் தளத்தின் தரவேறுபாடு. இந்த அம்சங்களின் அடிப்படையில், குறிப்பாக 4வது 6வது அம்சங்களை உணர்வுபூர்வமாக தன் கவனத்தில் இருத்தியபடியே பாரதி
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் D 67
சிறுகதைகளை எழுதினார் என்பதைக் கவனத்திலெடுத்து கேசவன் மீள்பார்வை ஒன்றை மேற்கொள்வாராயின் சி.சு.செல்லப்பா, மாலன், பெ.சு.மணி, எஸ்.பொ. ஆகியோர் போன்றே தாமும் பாரதியை தமிழ் சிறுகதை முன்னோடியாகக் கண்டிருப்பார்.
இங்கே முக்கியத்துவம் பெறும் அம்சம் அனைத்து நவீனத்துவ அடிப்படைகளுக்குமான முன்னோடியாக பாரதிக்கு முடிசூட்டிவிட வேண்டும் என்பதல்ல. பாரதி சிறுகதையில் அதிக நாட்டங்காட்டவில்லை என்பதோடு பாரதி வழிபாடு அவசியமற்றது. பாரதியை தமிழின் நவீனத்துவ முன்னோடியாகக் காட்ட விரும்பாது 'மணிக்கொடி' காலத்தையே நவீனத்துவச் செல்நெறியின் தொடக்கமாகக் காணும் வக்கிரப்போக்கு ஒன்று காணப்படுகிறது" என்பது உண்மையேயாயினும் எல்லாமே பாரதியிடமிருந்துதான் தொடங்குகிறது என்று மறுதலையாக நின்று வலிந்து காட்டவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. இங்கே நேர்மையானதுஞ் சரியானதுமான பண்பாட்டு வரலாறு ஒன்றின் தேவை எம்முன் உள்ளது.
வடிவவாதத்துக்கு ஆட்பட்டு பாரதியினுடையவை சிறுகதைகள் அல்ல எனும்போது, மேலைத் தேசநவீனத்துவத்தை அப்படியே இறக்குமதி செய்யும் தவறொன்றுக்கு ஆளாகிவிடுகிறோம். க.நா.சு. போன்ற உருவவாதிகளிடம் இத்தவறை நிறையவே கண்டிருக்கிறோம். புனைகதை இலக்கியவரலாற்றில் இன்றுவரை அதன் பாதிப்பு தொடர்கிறது. இன்று அதன் குரல் சற்று ஓங்கி முழக்கப்படுவதால் ஒரு மறுமதிப்பீடு மிகவும் அவசியமாகியுள்ளது.
க.நா.சு.முப்பதுகட்கு முந்திய நசிவு இலக்கியகாரர்களாக நாவலாசிரியர்களைக் காட்டிய அதே வேளை, அதற்கு மாற்றீடாக முன்வைத்தது வெறும் வடிவப்புனிதத்தைப் பேணும் கலைப்படைப் புகளைத்தான். அத்தகைய மேன்மைதங்கிய கலை வடிவங்களை மக்கள் கிரகிக்கவோ ஏற்கவோ முடியாதவர்களாயிருந்தபோது, எந்தவிதத் தயக்கமுமின்றி பாமர மக்களை துாரவிலக்கிவிட்டு தூய கலைத்துவத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்டுவிட்டார்கள்.
இத்தகைய மாற்றுப்போக்கு க.நா.சு.விற்கு முன் 'மணிக்கொடி பரம்பரையினரால் தொடக்கி வைக்கப்பட்டுவிட்டது. முன்னோடிகளை யெல்லாம் விஞ்சி மேலோங்கி, தமிழ் சிறுகதையின் மன்னரெனப் போற்றப்படும் புதுமைப்பித்தன் பாரதியைப்போல் மக்களுக்கான கலைவடிவமாக சிறுகதையைக் கருதியிருப்பின் எமது புனைகதை இலக்கிய வரலாறு மேலும் ஆரோக்கியமான தடத்தில் சென்றிருக்க முடியும், கா.சிவத்தம்பி அவர்கள் மணிக்கொடி பொன்விழா மலர் ஒன்றுக்கான தனது கட்டுரையில் ' மக்களுக்கான முழுமைசார் இதழாக மணிக்கொடி விளங்காதது குறித்துக் கூறும்போது 'மணிக்கொடிக்கு இத்துறையில் ஏற்பட்ட தோல்வி தமிழ் இதழியல் துறையில் இன்னும்தான் நிவர்த்தி
Page 44
68 0 இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் புனைகதை இலக்கியம்
செய்யப்படவில்லை. சனவிருப்புவாத வார இதழ்களே சகல ரஸ் மட்டங்களுக்கும் தம்மை இயைபுபடுத்திக்கொள்ளும் முறையே இன்றும் காணப்படுகிறது.'' என்றார். இது மணிக்கொடி தொடக்கி வைத்த புனைகதைப் போக்குக்கும் பொருந்தக்கூடிய கூற்று.
மேற்படி மணிக்கொடி பொன்விழா மலரில் கோ. கேசவன் வணிகப்பத்திரிகைகளின் வளர்ச்சிக்கு முதலாளிவர்க்க எழுச்சியும் நகர்மயமாதலும் எவ்வகையில் உதவின என்பதைக் காட்டியுள்ளார். ' முப்பதாம் ஆண்டுகளில் மணிக்கொடிக்கு சமாந்தரமாக இந்த எழுச்சியும் அமைந்தது. கோ. கேசவன் வார்த்தைகளில் கூறின் 'இன்றைய இலக்கிய வணிகமயப்போக்கின் அழுகல்கள் அனைத்தும் அன்றைக்குத் தொடங்கப்பட்டவையாகும். இதில் எஸ்.எஸ்.வாசனுக்கும் அவரது சரக்கு மாஸ்டராக முதலில் இருந்த கல்கிக்கும் பெரும் பொறுப்பு இருந்தது. கல்கியின் சாதகமான அம்சங்கள் ஒருபுறமிருக்க, வணிக இலக்கியத்தின் தந்தை என்ற விதத்தில் அவரது திறன் வாசன் போன்ற தொழிலதிபருக்கே பயன்பட்டது. ஆனால் புத்திசாலியான கல்கி 1941இல் தானே தனிக்கடை தொடங்கி இலக்கிய வணிகத்தை நடத்தினார். இவர்களுக்கு வணிக நுணுக்கம் கைவந்த கலையாக இருந்ததே தவிர இலக்கியத் தொழில்நுட்பம் இல்லை. இந்தக் கல்கித்தனத்தின் எதிர்ப்புக்குரலே மணிக்கொடியின் இலக்கியக் கொள்கைகளுள் ஒன்றாகும்." 14
இலக்கியத்தன்மையற்ற, வணிக நோக்குடைய கல்கி இலக்கிய வித்தகராக வெற்றிபெற, இன்று போற்றப்படும் புதுமைப்பித்தனோ மறுகண்டுபிடிப்புச் செய்யப்படவேண்டிய அளவிற்குப் புதைந்து போய்விட்டிருந்தார். இதுகுறித்து மேற்படி மணிக்கொடி பொன்விழா மலரில் சிவத்தம்பி அவர்கள் விஸ்தாரமாக விளக்கியுள்ளார். கேசவன் அடையாளங் காணும் கல்கியின் சாதகமான அம்சங்கள் இதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கும். புதுமைப்பித்தனையோ வ. வே. சு. ஐயரையோ போலன்றி பரந்துபட்ட மக்களுக்குப் புரியும் வடிவ மொன்றைக் கையேற்றார் கல்கி. அதன்பொருட்டு பாரதியைப்போன்றே முன்னுரை, முடிவுரை, அத்தியாயங்கள் என்ற பகுப்பையும் கல்கி ஆரம்பத்தில் கையாண்டார். சிறுகதையைப்பற்றி பாரதியின் பார்வையே கல்கிக்கும் இருந்ததால் * மக்களை ஈர்ப்பதில் கல்கி வெற்றியீட்டி அவரது சாதகமான பக்கத்தை அவருக்கு வழங்கியது. மக்களிடம் இந்தப்புதிய வடிவம் கல்கி வாயிலாகப் பிரபல்யப்பட்ட பின்னர், அந்த மக்களின் தரமும் அவராலேயே நிர்ணயிக்கப் படுவதாயிற்று. அதன் காரணமாய் வடிவ அமைதி பொருந்திய கலைத்துவம் நோக்கிய வளர்ச்சி வெகுஜனத்தளத்தில் நிறைவடையாமற் போனது. மிகக்காலந்தாழ்ந்து புதுமைப்பித்தன், தி.ஜ. ரா. கி.ரா. , பி. எஸ். ராமையா, சி. சு. செல்லப்பா, சிதம்பர சுப்பிரமணியம், லா.ச.ராமாமிருதம் போன்ற மணிக்கொடியினர் மறுகண்டுபிடிப்புச் செய்யப்பட்ட அண்மைக்காலங்கூட எவ்வளவுதூரம் வெகுஜன தளத்தை
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் 69
அகலப்படுத்தியிருக்கும் என்பது கேள்விக்குறிதான். அதாவது தரமான படைப்புகள் இன்னமும் மக்கள் மயப்பட்டுவிடவில்லை. வேறு வார்த்தைகளில் கூறினால், இலக்கியத்தரம்பற்றிய உணர்வுடையவர்களில் பலர் இன்னமும் மக்களை விலகித் தூரவே இலக்கிய சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இலக்கியத்தரம் - வணிகக்கதைகள் என்ற முரணைப்பற்றி, அவற்றின் பிரதிநிதிகளாய் மணிக்கொடி-ஆனந்தவிகடன் விளங்கியமைக் குறித்து, மேற்படி மணிக்கொடி பொன்விழா மலருக்கான தனது கட்டுரையில் அ. மார்க்ஸ் குறிப்பிடும்போது , மணிக்கொடி வணிக லாபத்தைக் கருதாமற் சோதனைப்படைப்புகளையும் தந்தது, ஆனந்தவிகடன் லாப நோக்கை மட்டுமே கொண்டிருந்தது என்ற வேறுபாடு தவிர, 'ஆனந்தவிகடனுக்கும் மணிக்கொடிக்கும் அதிக வேறுபாடுகள் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனந்த விகடனிலும் சிறந்த கதைகள் வெளிவந்தன. மணிக்கொடியிலும் பெரும்பாலானவை வாசக ரஞ்சகக் கதைகளாகவே இருந்தன. உள்ளடக்கத்தில் இரண்டிற்கும் அதிக வேறுபாடு இருந்ததாகத் தெரியவில்லை. இரண்டுமே மக்கள் பிரச்சனைகளை அணுகவுமில்லை' என்பதைக் காட்டிச்சென்று மேல்வருமாறு முத்தாய்ப்பு வைக்கிறார்: "மொத்தத்தில் மணிக்கொடிப் பொற்காலப் பெருமை ஒன்றை இன்று சிலர் நிறுவ முயல்கிற தருணத்தில் மணிக்கொடியின் இடத்தைத் தமிழிலக்கிய வரலாற்றில் சரியாக அடையாளம் காணமுயல்கிற எவரும், 'மணிக்கொடி எந்தநாளுமே பட்டொளி வீசிப் பறந்ததில்லை' என்கிற பேராசிரியர் கைலாசபதி அவர்களின் கூற்றை அவ்வளவு எளிதில் புறக்கணித்துவிட முடியாது என்பது தெளிவு.'
வடிவம் பற்றிய சர்ச்சை உள்ளடக்கம் சார்ந்த பிரச்சனைகளின் வெளிப்பாடுந்தான் என்ற வகையில் பாரதி வழிக்கும் வ. வே. சு. ஐயர் வழிக்கும் இடையே உள்ளடக்க வேறுபாடும் காத்திரமானது. வ. வே. சு.ஐயரின் 'குளத்தங்கரை அரசமரத்தில் அந்தப் பேதைப்பெண் ருக்மணியைக் குளத்தில் தள்ளியாயிற்று என்பதற்காக “ வருந்தியவர் பாரதி இறப்பு, பிறப்பு, தோல்வி, விரக்தி, சோகரசம் என்பவற்றை வடிவ நேர்த்திக்காகவும் தனது சமூகநோக்குக் காரணமாகவும் வ.வே.சு.ஐயர் பேண முற்படும்போது, பாரதி இப்போக்கிற்கு முற்றிலும் மாறான திசைவழியே சென்றார். நம்பிக்கையூட்டவே பாரதியின் படைப்பின் இலட்சியமாய் அமைந்தது. தேசவிடுதலைக்களத்தில் செயற்பட சந்நியாசம் மேற்கொள்ள முயலும் வீரனும் காதலில் கலந்து எதிர்காலத்தை பலங்களின் இணைப்போடு முகங்கொள்ள முன்வருதாய்க் காட்டும் பாரதி, மங்கையற்கரசி உடன்கட்டை ஏறுதல் போன்றதுமான முடிவை ஒருபோதும் தந்ததில்லை. துளளிபாயி கதைவாயிலாக இந்து - முஸ்லிம் இணைப்பைக் காட்ட முயலும் பாரதி, அவள் நம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்ள வழிசெய்வார்.
Page 45
70 0 இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் புனைகதை இலக்கியம்
பாரதியின் வடிவத்தைக் கையேற்ற கல்கி இத்தகைய உள்ளடக்க வீச்சை அதனூடாகக் கொணர முயன்றவரல்ல. அதற்குள்ளே இன்ப2உணர்வூட்டும் கதை சொல்லல் மூலம் காசு பண்ண முயன்றபோதே அவர் இலக்கிய தரத்தை கோட்டைவிட நேர்ந்தது. மக்களுக்குப் புரிந்த மொழியில் கலைத்துவ நெறியினூடாக இலட்சிய உணர்வைத் தூண்டும் பாரதியின் நோக்கம் போன்ற உயர்ந்த பண்பு கல்கிக்கு வாய்க்கப்பெற்றிருக்கவில்லை. அவரை நிராகரித்த புதுமைப்பித்தனேர இலக்கியத்தினூடாக சமூகத்தை சீர்திருத்திவிடலாம் என்ற எண்ணம் எதுவும் தமக்குக் கிடையாது எனும் கருத்துடையவராய் சகலரையும் சகலத்தையும் புரட்சிகர சக்திகளையும் கிண்டல் செய்து, கேலிக்குள்ளாக்கி, பரந்துபட்ட வெகுஜனத்திரளினரிடம் இலக்கியத்தைக் கொண்டு செல்லும் குறிக்கோளும் அற்றவராக இருந்துவிட்டார்.
ஆயினும் மணிக்கொடி ஏற்படுத்திய சிறுகதை வடிவத்தரமேன்மை மக்களிடம் பிரபலப்படுத்தப்படவேண்டிய ஒன்றாக இருந்தது; அந்தத் தரத்துடன் பாரதிவழி தொடரப்பட வேண்டியிருந்தது. இந்நிலையில் தான், இந்த இணைப்பை உள்வாங்கியபடி, "சரஸ்வதி தோற்றம் பெற்றது. கூடவே எதிர்முகாமாக வெறும் இலக்கியத் தரத்துக்காக, வளமான உள்ளடக்கச் செழுமையை நிராகரித்தபடி, "எழுத்து உதயமானது. சி.சு.செல்லப்பா தொடங்கிய 'எழுத்து' உருவவாத இதழாகி அதிஉன்னத கலைத்துவச் தீட்சை பெற்றோர்க்கான சஞ்சிகையாய் முடங்கிப்போனது. "சரஸ்வதியில் எழுதத்தொடங்கிய க.நா.சு. தனது கோட்பாட்டுக்கேற்ற கூடாரமாக எழுத்து அமைவதைக்கண்டு அதன் வழியில் சென்றார்.
மக்களை மையமாகக் கருதி புதிய வழியைத் தொடங்கிய "சரஸ்வதி, புனைகதை இலக்கிய வரலாற்றில் ஆழக்கால் பதித்த ஜெயகாந்தனைத் தந்தது. மணிக்கொடியுஞ் சரி, எழுத்துஞ் சரிபாரதிவழியை தொடர்வதாகக் கூறுவதற்குப் பின் நின்றதில்லை. ஆயினும் பாரதியின் முழுமையை அவர்களால் தரிசிக்கமுடியாதது போன்றே பாதையும் பாரதியின் தொடர்ச்சியாக முடியாமற்போனது. அதுபோன்றே தன்னை பாரதியின் வாரிசாகக் காட்டிய ஜெயகாந்தனும் சாதாரண மக்களின் இலக்கியமே புனைகதை என்ற தளத்திற்கு தமிழ் புனைகதையை வளர்த்தெடுத்தபோதிலும் வளர்ச்சியின் உச்சம் நோக்கி வந்த வேகத்திலேயே சரியவும் தொடங்கினார். வெறும் ஃபிராய்டிய எல்லைக்குள் குறுகி, மக்களைவிட்டு விலகிச்சென்றார்.
இத்தகைய மாற்றம் ஜெயகாந்தனுக்கு மட்டுமே உரிய ஒன்றல்ல. மா.இராமலிங்கம் அவர்கள் குறிப்பிடுவதுபோல 'நாடு விடுதலை பெற்றபின், எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்து முற்போக்குச் சிந்தனைகளை வெளியிட்ட எழுத்தாளர்கள் தாங்கள் எதிர்பார்த்தபடி கனவுகள் நிறைவேறவில்லை என்று கண்டனர்.இதனால், எழுத்துத்துறைக்கு வந்த புதிய கோபம் கொண்ட இளைஞர்கள் ஒருவகையான மனமுறிவு மனப்பான்மையோடு உலகைக் காணத்தலைப்பட்டனர். அதுவரை
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் 71
உலகத்தைப் புறநிலைப்பார்வையோடு கண்டவர்கள், தம் பாதையை மாற்றிக் கொண்டு தம்மையே உள்முகமாகக் காணத்தொடங்கினர். அதன் விளைவாகத் தமிழ்க்கதை உலகில் புதியபோக்கு உருவாயிற்று. சமூக விமரிசனமாக மலர்ந்த சிறுகதை, பின்னர் வெறும் அகமனச் சித்தரிப்பாக மாறிற்று. அறுபதுகளின் இறுதியிலும், எழுபதுகளின் முற்பாதி காலகட்டத்திலும் நாட்டில் அவ்வப்போது தோன்றிமறைந்த சிறுபத்திரிகைகளும் இதற்குத் தூண்டுகோலாக இருந்தன. 'கசடதபற', நடை', 'பிரக்ஞை' போன்ற சிற்றேடுகள் இங்கே சுட்டிக் காட்டத்தக்கன." 19
இத்தகைய உள்மனத்தேடலுக்கு நனவோடை உத்தி பெரிதும் கைகொடுத்தது. இந்த மாற்றத்தை ஜெயகாந்தனின் சரிவில் காணமுடியும். அவரது 'சில நேரங்களில் சில மனிதர்கள்' கங்காவின் பிதற்றலின் ஊடாக சமூக விமர்சனத்தை மறைமுகமாக முன்வைப்பது உண்மையேயாயினும், அவர் பாரதி வழியிலிருந்து எவ்வளவு தூரம் விலகிச்சென்றார் என்பதையும் பட்டவர்த்தனமாக காட்டுகிறது. காலமாற்றத்தை கலைஞன் பிரதிபலிப்பதாக கூறலாம்; ஆயினும் அந்த எழுபதுகளிலும் உயர்தர மத்தியதரவர்க்கப் பாத்திரங்களாய் எடுத்துச் சீரழிவுகளைக் காட்டுவதைவிட கலைஞனுக்குரிய நம்பிக்கையூட்டும் பாரதியின் வழிக்கமைய உழைக்கும் வர்க்கத்தை நிலைக்களமாகக் காட்டி வலுச்சேர்த்திருக்க முடியும். இதற்காக எழுபதுகளின் பிற்கூற்றிலும் எண்பது களிலும் 'ஊருக்கு நூறுபேர்' தேடப்போகும்போது மக்களைப் பிரிந்த ஜெயகாந்தனின் வரட்டுக் கோஷத்தைத்தான் பார்க்கிறோம். அங்கு "வாழ்க்கை அழைக்கிறது' என்ற பாரதி வழியின் ஒரு கீற்றைத்தானும் தரிசிக்க முடியவில்லை.
ஜெயகாந்தனின் தடம்புரள்தல் போலவே எழுபதுகளின் புதிய எழுத்தாளர்களின் ஆக்கங்களும் உள்மனத்தேடல்களாகவே ஆகிவிடுகின்றன. சா. கந்தசாமி, பாலகுமாரன், நீல. பத்மநாபன், வண்ண நிலவன், வண்ணதாசன், ந. முத்துசாமி, ஆர்.குடாமணி, ஆதவன், அசோகமித்திரன், சிவசங்கரி, பூமணி, அம்பை, திலிப்குமார், மாலன் ஆகியோரது படைப்புகள் இதற்குரிய எடுத்துக்காட்டுகளாக அமையும். இவர்களில் பெரும்பாலானவர்களது எழுபதாம் ஆண்டுகளின் படைப்புகள் மாலன் தனது 'அன்று இரண்டாம் தொகுதியின் முன்னுரையிற் கூறியிருப்பதுபோல 'இந்தத் தலைமுறையின், சொந்த வீட்டுக் கதவையே தட்டத் தயங்குகிறவன், சொந்த வீட்டிலேயே சாப்பிடக்கூசுகிறவன், வேலை கிடைக்காத ரோஷத்தில் சோப்புப்போட்டுக் குளிக்க மறுக்கிறவன். (மற்றும்) உருப்படியான எதிலும் தீவிரப் பிடிப்பில்லாமல், நம்பிக்கையில்லாமல், ஆழமான எதனுடனும் தம்மை முழுமையாகச் சம்பந்தப்படுத்திக்கொண்டு அதன்விளைவுகளைச் சந்திக்கத் துணிவில்லாமல் தாமே உருவாக்கிக் கொண்ட ஒரு நிரந்தரமான சலிப்பில் உழலும்' " மனிதர்களையே இவர்களில் அதிகம் காணமுடியும். நம்பிக்கையீனம், விரக்தி, கயமை போன்ற வகையான பண்புகளே மேலோங்கி நிற்பன.
Page 46
72 0 இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் புனைகதை இலக்கியம்
எழுபதுகளில் விற்பனைப் பண்டமாகக் கற்பனைகளை அறுவடை செய்து வணிக ரீதியில் வெற்றிபெற்ற அகிலன், சாண்டில்யன், ஜெகசிற்பியன், மு. வரதராசன் போன்றோரது நம்பிக்கை ஒளிகள்' உயர்குலத்துக்குச் சேவகம் செய்த மின்மினிகள் என்பதால் கவனத்தில் எடுக்காதுவிடலாம். மு.வரதராசன் கற்பனாவாத சோசலிஸத்தையும் கலந்து வழங்கியதால் சற்றுவித்தியாசப்பட்டு நின்று, இளைய தலைமுறைக்கு இருந்த தளத்தின் மேலாக ஒரு படியை அமைத்துக் கொடுத்தார் என்பது
உண்மையே.
சரஸ்வதி வழியில் டிாரதிமார்க்கத்தை வளர்த்தெடுத்த தாமரை 'செம்மலர்' போன்ற சஞ்சிகைகள் பெரும் பிரயத்தனங்களை எடுத்தபோதிலும் வர்க்கசக்திகளிடையேயான மாற்றப் போக்குகள் தீர்மானித்த புறநிலை காரணமாக வணிகப் புற்றீசல்களும் விரக்தி முனகல்களுமே எதிரெதிர் நின்று மோத, வெளித்தெரியாத மூன்றாம் சக்தியாக, உள்ளுர உழைக்கும் மக்களிடம் மட்டுமே பெரும்பாலும் செயற்பட வேண்டியதாயிற்று. கூடவே மார்க்ஸிய செல்நெறியை வெற்றிகரமாக அமைத்து வெகுஜனமார்க்கத்தைக் கட்டியெழுப்பி மக்கள் இயக்கமொன்றை மலர்விக்க முடியாதபடி வலதுசாரி சந்தர்ப்பவாதம் அதிதீவிரவாதம் என்பன மேலோங்கியமையால் மக்கள் இலக்கியம் பலம் பெறமுடியாமற் போனது.
உலக அளவிலேயே தொழிலாளிவர்க்கத் தலைமையிலான எழுச்சி அலை வடிந்துபோய், அமெரிக்க மேலாதிக்கம் சர்வதேச போலீஸ்காரனாய் உருவெடுத்து வந்த எண்பதுகள் தமிழிலக்கியச் சூழலில் மேலும் சரிவுகளைக் கொணர்ந்தன. ஒருபுறம் வணிக அச்சுத் தொழிற்கூடங்களின் மலிவுச் சரக்குகள்,மறுபுறம் ஒவ்வொரு பத்துப்பேருக்கும், அவர்களுக்குள்ளும் பல குத்து வெட்டுகளோடு, ஒரு போட்டிச் சிற்றேடு மீண்டும் மக்களை நச்சுப்படுத்தும் விகடர்களும், மக்களைப் பிரிந்த மணிகளும் (ஒரு குழுவுக்கு ஒரு கொடி சாத்தியமில்லை, ஒவ்வொரு பொறுக்கு மணிக்கும் ஒவ்வொரு கொடி) மணிக்கொடிப் பொற்காலம் முழுசமாய் விட்டுப்போனது இந்த நிலையைத்தான்.
தத்துவார்த்தத் தளத்திலும், சமூக இயக்கப் போக்கின் முழுமையின் பகுதிகளாய் தேசிய உணர்வு, சாதிய எதிர்ப்பு, பெண்விடுதலை என்பன விளங்கியிருந்த நிலைமாறி ஒவ்வொன்றும் தத்தம் அளவில் அவையே முழுநிறைவென முனைப்படைந்த போக்கை எண்பதுகளில் காண்கிறோம். தேசிய இனவாதப் போக்கு தேசியப்பிரச்சனையை சர்வதேசக் கண்ணோட்டத்திலன்றிக் குறுகிய தேசிய வெறியாகக் காண்பது வலுப்பெற்றது. சாதியமைப்பின் தகர்வையும் பெண்விடுதலையையும் சமூக மாற்றத்துக்கான இயக்கப் போக்குடன் இணைத்துப் பார்க்காமல் தலித்தியமும் பெண்ணியமும் தத்தம் அளவில் முழுமை நெறியாகி, இந்த சமூக அமைப்புக்குள்ளேயே அவற்றுக்குத் தீர்வு கண்டுவிடவெறித்தனம் காட்டி சமூக மாற்றத்துக்கு மார்க்கந்தேடவேண்டிய புரட்சிகர சக்திகளை
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் 口。73
அத்திசைவழியே வளரமுடியாமல் தடுத்து, வெறும் தன்னுணர்ச்சிக் குழுக்களாக முடக்கும் முயற்சி தற்காலிக வெற்றியைப் பெற முடிந்தது. எங்கும் பிரிவின்னகள், ஒவ்வொருவரும் தனிவழி.
இத்தகைய அழிவுக்கோலத்துக்கு ஏற்ற தத்துவமாக அமைப்பியல் வாதமும், அதையும் மறுக்கும் பின் - அமைப்பியல் வாதமும் தமிழ்குழலுக்கு வலிந்து கொணரப்பட்டன. அமைப்பியல்வாதம் மார்க்ஸியத்தை தலைகீழாக்கிக் கடந்து செல்கிறதாம். ஒருவகையில் மீண்டும் தலைகீழ் கைங்கரியம் செய்வதாக அமைப்பியலை அறிமுகம் செய்த தமிழவன் சொல்வதும் சரிதான். அவர்கள் மார்க்ஸியத்தைக் கடந்து மேல்நோக்கி சென்றுவிடவில்லை. மீண்டும் ஹெகலிய நிலைக்குச் சரிந்து கருத்துமுதல்வாத பழைமையிலும் பழைமைக்கே செல்கிறார்கள்.
அமைப்பியல்வாதம் பேசுவோர் புனைகதை இலக்கியத்துக்குக் கதையே வேண்டியதில்லை என்பர்; மையத்தகர்ப்பு என்ற பெயரில் மையக்கரு எதுவும் வேண்டியதில்லை என்பர். எதையும் மனம் போனபடி எழுத வேண்டியது, எழுதிப் பிரதி வெளிப்பட்டதுடன் ஆசிரியன் இறந்துவிடுவான்', இனி, பிரதி. அதையும் ஒவ்வொரு தனித்தீவாக உள்ள ஒவ்வொரு வாசகனும் தனது மனக்கோணல்களுக்கேற்ப அர்த்தப்படுத்தி மறுவாசிப்புகள் செய்து கொள்ளலாம். இப்போது பிரதியும் செத்துவிடும். வேண்டியபடி உடைத்து விருப்புக்கேற்ப பொருத்தி மனம் போனபடி அலைக்கழியும் வாசகனின் உள்ளம் கொள்ளும் அர்த்தத்திற்கும் பிரதியின் உண்மை நிலைக்கும் எந்த ஒட்டுறவும் இருக்கவேண்டியதில்லை. இதன் வேடிக்கைக்கு ஒரு உதாரணம் போதும்; டானியலின் 'கானல்’ நாவலை தன் பார்வையில் அர்த்தப்படுத்திய வாசித்த தமிழவன், இருபக்க் நியாயங்களையும் காட்டவேண்டும் என்பதற்காக டானியல் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலையும் காட்டியபோதிலும், 'உயர்சாதி பிரச்சாரமாகவே அந்த நாவல் மொத்தத்தில் அமைகிறது என முத்தாய்ப்பு வைத்திருப்பது. காகத்தை 'வெள்ளை' என வாசிக்கும் விமரிசன சுதந்திரம் போன்றதென்பது டானியலை அறிந்தவர்கள் மட்டுமல்லாது 'கானல்’ நாவலை மட்டுமேயாயினும் புறநிலைரீதியாகப் படித்தவர்களும் அறியமுடியும். பிரதியை தன்பாட்டிலிருக்கவிட்டுத் தன் சொந்த அகவய உணர்வுகளைச் சுதந்திரமாய் இயங்கவிடும் கருத்து முதல்வாத அமைப்பியல் வாதத்திற்குக் காகம் வெள்ளையும் ஆகும், டானியல் உயர்சாதிப் பிரச்சாரகராயும் தெரியும்.
வரலாறு எப்போதும் நேர்ப்பாதையில் முன்னேறிச் செல்லும் அளவுக்கு மிகை எளிமைப்பண்புடையதல்ல. வளைவு சுழிவுகளுக்கு ஆட்பட்டு பின்னடைவைத் தற்காலிகமாக எதிர்கொண்ட படியே முன்னேற்றம் நிகழ்கிறது. மார்க்ஸிய இயங்கியல் - பொருள்முதல்வாதம் வெற்றிபெற்ற சூழலில் பணவலிமை, பழைமைப் பண்பாட்டு மரபுரிமைப் பலம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் முதலாளித்துவம், ஏற்ற போர்த்தந்திரத்தை வகுத்து மாறுபடு சூரத்தனங்களை வெளிப்படுத்தித்
Page 47
74 O இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் புனைகதை இலக்கியம்
தாக்கமுயல்வது தவிர்க்கவியலாததுதான். அமைப்பியலும், அதைக்கடந்துசென்றபின் - அமைப்பியல் வாதமும் தமது பணியில் வெற்றிபெறமுடியாத போது (மார்க்ஸியம் முன்னேறும் மனித சமூகத்துக்கான தத்துவமாய்த் துவங்கும்போது முதலாளித்துவத்தின் எந்தவடிவச்சூரத்தனங்களாலும் மார்க்ஸியத்தை வென்றுவிடமுடியாது என்பதே நிதர்சனம் என்றானபோதும்) இன்னொரு வடிவெடுக்காமல் சுரண்டற்கும்பல் அடங்கிவிடப்போவதுமில்லை. இந்த மாற்றங்களிலும் இரண்டு அம்சங்கள் உண்டு என்பதை மறுத்துவிடமுடியாது.
இந்த வகை வளர்ச்சியாய்' எண்பதுகள் அமைய அதன் வாரிசுரிமையாய் கிறிஸ்துவுக்குப் பிந்திய மூன்றாம் ஆயிராண்டின் எல்லையைத் தொட்டுநிற்கும் தசாப்தம் வந்து அரை வழியில் உள்ளது. எழுபதுகள்வரை பட்ட அடியிலிருந்து மீண்டு நெஞ்சு நிமிர்த்தி வெறியாட்டைத் தொடுத்து, அமெரிக்க மேலாதிக்க வெறித்தலைமையில் பிற்போக்குவாதம் வெற்றி எக்களிப்புச் செய்யும் இரண்டாம் தசாப்தம் இது. இந்தக் கனத்தின் உலகு முழுமையிலுமான இரத்தக் கோரத்தாண்டவங் களும், அடுத்தவனைப் பகையாளியாயே காணும் மிருகத்தனமும், ஊசலாட்டமுடைய மத்தியதர வர்க்கப்பிரிவினர் தொலைக்க நினைத்த சோசலிசத்தின் தேவையை மீண்டும் உணர்த்தும். அடுத்த தேசத்தின் சுயநிர்ணய உரிமையை மதித்த, மனிதர் எல்லோரும் ஓர் நிறை எனப்புரிய வைத்த, தனியொருவனுக்குணவில்லையெனில் அத்தகு ஐகத்தினை அழிக்கத் துடித்த, அனைவரும் பரிபூரணத்துவமெய்தி சரிநிகர் சமானமாய்க் கூடி உழைத்துப் பண்பாட்டில் உயர்ந்து பொதுவுடைமைப்பூங்காவை அமைக்க மார்க்கம் காட்டிய தொழிலாளர் தலைமை அணி மீண்டும் பொங்கும் அலையெனக் கிளம்ப இன்னும் சிலவருட 'உறங்கல் நிலைதான்' வேண்டியிருக்கும்.
அந்த இடைவெளியில், இந்தத் தொண்ணுாறாம் ஆண்டுகள் இலக்கியத்தரம், உலகத்தரம் என்ற கோஷங்களை முகங்கொள்கிறது, இந்தக் கோஷங்களில் சுரண்டற்கும்பலின் புளிச்சல் ஏவறை நெடி வீசுவது தவிர்க்கவியலாததுதான். நாம் உறங்கல் நிலையில் உள்ள இவ் வேளையிலும் எம் வசம் இழந்துவிடாமல் உறுதியாய்க் கால்பதித்து இந்த இருட்குகை ஊடாகத்தான் அடிபெயர்த்து முன்னேறியாகவேண்டும்.
இந்தக் காலத்துக்கேயான கலைத்துவப் பிரதிநிதியாகப் பரிணமித்திருக்கிற ஜெயமோகன் கலைப்படைப்புகளுக்கு யதார்த்தம் எட்ட நிற்க வேண்டுமென்று குரல் கொடுக்கிறார். இலங்கைத் தமிழர்களின் வாழ்வின் கொந்தளிப்புத் போன்றன நேரடியாகப் படைப்பாளியைப் பாதித்துத் தன்சார்பான தீவிர நிலையை எடுக்கக் கலைப்படைப்புத் தூண்டப்பட்டுவிடின் கலைத்துவம் கெட்டுவிடும் என அவர் கவலை கொள்கிறார். அவ்வாறு நேரின் 'அத்தருணத்தில் கருமத்துடன் சம்பந்தப்பட்ட அளவிலேயே நின்றுவிடச் செய்கிற' அவலம் நேர்ந்து காலத்தைக் கடந்த சாகாவரம்பெற்ற தரம் மிக்க இலக்கியப்படைப்பு
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் O 75
இல்லாமற் போய்விடும் எனக்கருதி "நவீன படைப்புகளில் நிகழ்தளத்தை நிராகரிப்பதன் மூலம்' வாழ்விலிருந்து தூரவிலகி நிற்குமாறு கலைஞனை வேண்டி நிற்கிறார். 'நிகழ்வுகளின் அநுபவ சாரத்ததை அதாவது அவற்றின் நனவிலி மனப்பதிவுகளை மட்டும்' எழுத முடிந்தால் 'அர்த்த விரிவும் தீவிரமும் கொண்ட படைப்புகளை உருவாக்க முடியும்' எனக் கூறுகிறார் ஜெயமோகன்'
ஏனைய இலக்கியவாதிகளிடம் கோரும் இந்தப் போக்குக்கு 'முன்னுதாரண புருஷனாகவும் அவர் விளங்குகிறார். ஒவ்வொரு கதைக்கும் வலிந்து தொன்மத்தைக் கொணர்வதும் படிமங்களின்மேல் படிமங்களை அடுக்கி வாசகன் தன்மனம் போன போக்கில் 'அர்த்த விரிவு' ஏற்படுத்திக் கிறங்கிப்போக வழிசெய்வதும் அவர்பாணி இந்தப் பாணியில் அவர் படைத்த கதைகளுள் 'மாடன் மோட்சம்' என்ற சிறுகதை மட்டுமே தேறுகிறது.
அது தவிர்ந்த ஏனைய படைப்புகள் ஏதோவொருவகையில் சோடைபோனவை தாம். சிறுகதைக்குரிய பலதரப்பட்ட அம்சங்களை மனங்கொள்ளாமல் வலிந்து காட்டும் தொன்மமும் அளவிறந்த படிமக்குவிப்பும் அவரை ஒரு முடக்குவாத நோயாளியாகவும் படிமப் புற்றுநோயாளியாகவும் ஆக்கிவிடுவதற்கு எடுத்துக்காட்டுகளாக படுகை' சிறுகதையிலிருந்து அண்மைய 'ரதம்' வரை நிறைய உண்டு.
இவ் வழியில் சமூக அக்கறையுள்ள ஒரு கலைஞனால் செல்லமுடியாது. சமூகக் கொந்தளிப்புகளிலிருந்து விலகிவெறும் தனிமனித உலைச்சல்களை மட்டுமே கலைப்படைப்புகள் தந்து கொண்டிருக்க முடியாது. ஒட்டுமொத்தமான சமூக இயக்கப் போக்குகள் இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கையைக் காட்டுவதன் வாயிலாகக் கொணரப்பட வேண்டும், மனித வாழ்வு அதன் முழுவளத்துடன் இன்னமும் காட்டப்படவில்லை என்பதுதான் தமிழ் புனைகதை இலக்கியத்தின் பலவீனம். நுஃமான் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று, மாக்ஸிம் கோர்க்கியின் 'தாய்' போல உள்ளக்கிளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய சமூக நோக்குடைய நாவல் தமிழில் இல்லை என்பதும் உண்மையே. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை இலக்கியப்படுத்தும் டானியலும் பஞ்சமர், அடிமைகள், கானல், தண்ணீர் போன்றவற்றில் முழுமையான சமூக மாற்றத்தளங்களைக் கவனத்திற் கொள்ளாமல், உயர்சாதியினருக்கு எதிரான வக்கிர மனப்பாங்குகளைக் காட்டி, ‘கதை’ கூறுவதற்காக வேண்டாத திடீர் திருப்பங்களை காட்டும் வகையில் உயர்சாதியினர் இச்சைகளின் வாரிசுகளைக் கொணர்ந்து அவர் விரும்பாத தலித் இலக்கிய முன்னோடியாக ஆக வேண்டியதாகிவிட்டது. அவர் தன்னளவில் முழுமைப் பார்வை தரும் வர்க்கக் கண்ணோட்டத்திலேயே தனது படைப்புகள் அமைந்திருப்பதாக வாதிட்டு வந்தார். அவரது அணியைச் சேர்ந்த (தேசிய கலை இலக்கியப் பேரவையின்) விமரிசகர்களே அந்தப்படைப்புகளில் வர்க்கப் பார்வையன்றி சாதிசார்ந்த
Page 48
76 0 இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் புனைகதை இலக்கியம்
பார்வையே முனைப்புப் பெறுவதாக ஒவ்வொரு படைப்பும் வெளிவந்தபோது பகிரங்க விமரிசனங்களை முன்வைத்தனர். இன்று அவரே விரும்பாத விதமாக அவை தலித்திய இலக்கியங்களாக ஆகிவிட்டன. அவ்வாறன்றி பாட்டாளி வர்க்க நோக்கில் உலகை மாற்றியமைக்கவல்ல உணர்வைத் தூண்டும்வகையில் சமூக இயக்கப் போக்கை சினிமாப்பாணித் திடீர்த் திருப்பங்கள் இல்லாத வகையில் ஆக்கும் முயற்சிக்கு டானியல் போன்றோரின் படைப்புகள் களம் அமைத்துத்தரவல்லன. பல எழுத்தாளர்களும் பின்னிற்கும் ஒரு அம்சமான, அடிமட்ட மக்களின் வாழ்வியக்கத்தை அப்படியே இயல்புகுன்றாமல் தரமுயன்ற டானியலின் பண்புக்காக அடக்கப்பட்ட மக்களின் இலக்கியக் குரலின் முன்னோடியாக அவர் போற்றப்படுவது நியாயமானது.
இவ்வேளையில் இலங்கைத் தமிழர் கொந்தளிப்புச் சூழ்நிலையில் இலக்கியவாதி நிகழ்தளத்தைத் தகர்த்துப் படைப்புச் செயற்பாட்டில் இறங்கவேண்டும் என்பது குறித்த விடயத்திற்கு அதன் கொந்தளிப்பு மையமாகத் துலங்கும் யாழ்ப்பாணத்திலிருந்து பதிலைக் கேட்பது அவசியமானது. யாழ்ப்பாணச் சஞ்சிகையான "வெளிச்சத்திற்கு சிவத்தம்பி அவர்கள் கொடுத்த பேட்டியொன்றில் கூறுவது இது: "இந்தக் கட்டத்தில் யதார்த்தச் சித்தரிப்புப் பற்றிய ஒரு உண்மையை வற்புறுத்த விரும்புகிறேன். எழுத்தாளன் / கலைஞன் வெளியே காணப்படும் யதார்த்தத்தை ஆதார சுருதியாகக் கொண்டு ஒரு புதிய யதார்த்தத்தை தன் படைப்பில் / படைப்பாக தோற்றுவிக்கிறான். தான் புதிதாகத் தோற்றுவிக்கும் ஆக்கத்தைக் கொண்டு மனிதன் பின்னர் தன்னை மாற்றிக்கொள்கிறான். இலக்கியம் சமூக மாற்றத்தைச் செய்ய முற்படும்பொழுது, படைப்பு (ஆக்கம்)பற்றிய இத்தெளிவு இருத்தல் வேண்டும். சூழவுள்ள யதார்த்தத்தை வெறுமனே விவரணம் செய்வது கலைப்படைப்பாகிவிடாது. புதிய படைப்பே இலட்சியத்தின் குறியீடாக அமைதல் வேண்டும். இவ்வேளை இலைமறை காயாக உள்ள ஒரு முக்கிய சமூக, இயக்கப்பண்பு பற்றி எடுத்துக்கூற விரும்புகிறேன். யாழ்ப்பாணச் சமூகத்தின் வரலாற்றில் இதுவரை காணப்படாத மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இம்மாற்றங்களினூடே சமூகப் பழைமையைப் போற்றுவதற்கான ஒரு நடைமுறையும் வன்மைப்பட்டுக்கொண்டு போகிறது. பண்பாட்டுப் பேணுகை என்ற போர்வையில் அது பழைமையைப் பேணவும், புதிய மாற்றங்களைச் சூசகமாக எதிர்க்கவும் முனைகிறது. இதுவும் வரலாற்றின் தர்க்கத்துள் நிற்பதுதான்'
அந்த வகையிற் கொந்தளிப்பான வாழ்க்கைச் குழலூடாக சமூக மாற்றத்தை வலியுறுத்தும் யதார்த்தம், அதைப்பின்னுக்கு இழுக்க முனையும் சக்திகளுக்கு எதிராக இலக்கியத்தில் கொணரப்படுவது அவசியமாகும். 'இலக்கியத்தின் அடிப்படைப்பண்பு அது 'மானுட அம்சத்தைக் கொண்டிருப்பதுதான். அரசியற் சமூகப் பிரச்சனைகளை மனித நிலைப்படுத்திச் சித்தரிப்பதுதான் அதன் பலம் 26 எனக்கூறும் பேராசிரியர் சிவத்தம்பி 'சூழவுள்ள யதார்த்தத்தை வெறுமனே விவரணம் செய்வது
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் 77
கலைப்படைப்பாகிவிடாது' என்பதை இடைச்சொருகலாகக் கூறவேண்டிய அவசிய மில்லை. உண்மையில் அவர் முழுமையாக வலியுறுத்த முயல்கிற அம்சத்தையே ஜெயமோகன் போன்றவர்கள் வெறும் யதார்த்த விவரணம் என்கிறார்கள், மற்றபடி வாழ்வு தன்னுள்ளிருந்து வெளிக்கொணரும் மக்களுக்கான கலைத்துவ நெறியோடுதான் தனக்கான புதிய யதார்த்தமாக மறுபடைப்புச் செய்யப்படுகின்றன. மக்களின் செயற்பாடுகளுடாக உருவாகும் ஒவ்வொரு மிகச் சிறிய குழுவிடங்கூட நாட்டார் வழக்காறு ஒன்று முகிழ்த்து மொட்டவிழ்த்து மண்ணில் வீழ்ந்தபடிதான் உள்ளது. அவற்றை ஒழுங்கமைத்து வெளிக்கொணரும்போது செவ்வியல் பாங்கு கைவரப்பெறும். அப்போது மக்களின் நலன்சார்ந்த தமிழிலக்கியப் பரப்பும், உலக இலக்கியம் முழுமையும் கலைஞனுக்கு கைகொடுக்க முன்வரும். வேண்டிய இடத்து மக்கள் இயல்பாக உருவாக்கியபடி உள்ள தொன்மமும் படிமமும் குறியீடும் ஆகியனவற்றை ஒழுங்கமைத்து செம்மைப்படுத்தி உயர்ந்த தளத்தில் யதார்த்தப்படுத்துவதே கலைஞனின் பணி என்ற வகையில், இயல்பாக வந்தமைந்து படைப்பாளிக்குச் சேவகம் செய்யும்.
சிவத்தம்பி அவர்களும் உலகத்தரமான படைப்புக் குறித்து அக்கறை காட்டுகிறார். அவர் புலமைத்துவ நெறி நின்று இத்தகைய குரலை எழுப்பும்போது, தவிர்க்கவியலாமல், உயர்குழாத்தின் அழகியல் அளவுகோல் கொண்டு இலக்கியத் தரத்தை காணநேர்கிறது. மக்கள் இலக்கியத்துக்கான தனது கடந்தகால பங்களிப்பின் வழிநின்று அவர் குரலெழுப்புவாரேயாயின் சுரண்டிக் கொழுத்து புளிச்சல் ஏவறையில் தம்மையும் உலகையும் மறந்து கிடப்பவர்களதும், உழைக்கும் மக்களுக்கான உலகை மறுபடைப்புச் செய்யும் செயல்முனைப் புடையவர்களதும் அழகியல் உணர்வுகள் ஒன்றாக அமைய முடியாது என்பதை நிதானிப்பார். " இது அவர் அறியாத ஒன்றல்ல. அவர் புலமைத்துவ நெறிக்காக குரல் கொடுப்பதைவிட மக்கள் இலக்கியத்துக்காக வழிசமைக்க வேண்டியவர் என்ற வரலாற்றுப் பொறுப்பை இளைய தலைமுறை இடித்துரைக்கவும் வேண்டும்.
இருபத்தோராம் நூற்றாண்டின் தமிழிலக்கியத்தை ஈழத் தமிழிலக்கியம் வழிநடத்தும் என்ற ஒருசாராரின் கருத்துப்பற்றிக் கூறும்போது சிவத்தம்பி அவர்கள் இவ்வாறு கூறுகிறார். 'இருபத்தோராம் நூற்றாண்டின் ஈழத்து இலக்கியம், மற்றைய தமிழிலக்கியத்தை 'வழிநடத்தும்' என்று சொல்வதிலும் பார்க்க, ஈழத்து இலக்கியம் தனக்குள்ள வளம் காரணமாக சில இலக்குகளை, சாதனை எல்லைக் கோடுகளை வரையும் என்று கூறலாம். ' அத்தகைய வளத்துக்கு எமது இருப்புக்காகப் போராடிக்கொண்டிருக்கும் எங்களுடைய வாழ்க்கை நிலை ஒரு காரணம். அதைவிட, ஈழத்து இலக்கிய வரலாறும் யதார்த்தத்தை தூரவிலக்கி ஓடி ஒதுங்கவில்லை என்பதும் பலமான காரணமாகும்.
'உண்மையில் இன்று எம்முன்னுள்ள சவால் நமக்கு கிடைத்துள்ள வரலாற்று முக்கியத்துவம் உள்ள அநுபவங்களை நமது எழுத்தாளர்கள்
Page 49
78 0 இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் புனைகதை இலக்கியம்
எவ்வாறு படைப்பிலக்கியம் ஆக்கப் போகிறார்கள் என்பதுதான். வெறும் இயல்புவாத எடுத்துரைப்பு அதன் ஆத்மாவையே குடித்துவிடும்' என சிவத்தம்பி அவர்கள் கூறும்போது, தேவையற்ற இன்றைய அழுத்தங்களுக்கு தலைசாய்ப்பதாகத் தெரிகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில் தனது யதார்த்தப் படைப்புகளின் மூலம் கிராமிய மனிதர்களை உயிர்ப்போடு உலவ விட்டு படைப்பாக்கம் செய்பவரான மேலாண்மை பொன்னுசாமியின் கருத்தைக் கவனத்திற்கொள்வது பொருத்தமுடையதாகும்: 'கண்ணுக்குப் புலப்படுகிற காட்சிகளையும், வாழ்க்கையையும் மட்டுமே வார்த்தைப்படுத்துவதுதான் யதார்த்தவாதம் என்ற புரிதலிலேயே இதை மறுக்கிறவர்களெல்லாம் வாதம் பண்ணுகிறார்கள். கற்பனைக்கோ படிமங்களுக்கோ குறியீடுகளுக்கோ கருத்துலகப் பிரபஞ்ச விரிவுக்கோ யதார்த்த வடிவத்தில் இடமேயில்லை என்ற வறட்டுத்தனமாக புரிந்துகொள்கிறார்கள். இல்லை, யதார்த்தவாதம் என்பது கண்ணால் பார்க்கிற உண்மைகளை மட்டுமல்ல, மனசால் உணர்கிற உண்மைகளையும் பிம்பங்களையும் பதிவு செய்வதும் தான். வாழ்வின் உள்ளும் புறமுமான ஆழங்களை அலசுவதும், மனிதனின் புறத்தோற்றங் களோடு இணைந்த அக உலகத்தைக் கண்டுணர்வதுமே யதார்த்தவாதமாகும்'" எனக்கூறும் மேலாண்மை பொன்னுசாமியின் படைப்புகளில் இவற்றுக்கான கூறுகளைக் காணவும் முடியும்.
இக்கட்டுரைத் தலைப்பின் தன்மைக்கு இணங்க ஈழத்து இலக்கியப்போக்கு எவ்வாறு அமைந்திருந்தது எவ்வாறு தொடரப்படவுள்ளது என்பதையும் விளக்கியிருக்கவேண்டும். மேற்படி பொதுப்போக்கு எமக்குள்ளும் சலனத்தை ஏற்படுத்துவதையே சிவத்தம்பி அவர்களது கருத்தில் காண்கிறோம்; அந்தவகையில், அது குறித்த விரிவான விளக்கம் வேண்டியிருக்கிறது. இதைத்தவிர்த்த தெளிவான எமதுபாதை குறித்து ஆராய இது ஏற்ற சந்தர்ப்பம் அல்ல என்பதால் அதுகுறித்து வேறு ஒரு சந்தர்ப்பத்தில் ஆராய முயல்வோம்.
இக்கட்டுரையை யதார்த்தவாதம் குறித்து ஞானி தெளிவாகக் கூறிய வாசகங்களுடன் நிறைவு செய்வோம். 'முதலாளியத்தோடு தோன்றி வளர்ந்த யதார்த்தவாதம் நவீன காலனியாதிக்கச் சூழலில் இயல்பாகவே தகர்ந்து போவதை நாம் புரிந்து கொள்ளலாம். இன்று பெருகிவரும் குரூரமான, பொறுக்கித்தனமான முதலாளியத்தைப் பொறுத்தவரை, குடும்பம் தேவையில்லை. மனிதர்களுக்குள் அன்பு தேவையில்லை. மரபு தேவையில்லை. உழைப்பாளிகள் கூடத் தேவையில்லை. கொஞ்சம் அறிவுஜீவிகள் தேவை. குரூரமான அதிகாரிகள் தேவை. மக்களை மயக்கத்தில் ஆழ்த்துகிற வணிகக் கலாச்சாரம் தேவை. போதை தேவை. சிந்தனையைச் சிதறவைக்கிற விளையாட்டுக்கள் தேவை. இத்தகைய முதலாளியத்திற்கு யதார்த்தவாதம் தேவையில்லை. யதார்த்தவாதத்தின் முதலாளிய ஆக்கக்கூறுகளை ஒதுக்கிவிட்டுப்பார்த்தால், மனிதன் வாழ்வதற்கான நிலம் தேவை. உழைப்பு தேவை. இயற்கை தேவை.
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் O 79
உறவுகள் தேவை. இயற்கையை நாசப்படுத்தாத கருவிகள் தேவை. மனித உறவை மேம்படுத்தும் கலைகள் தேவை. முதலாளியத்திற்கு முற்பட்டே இவை மனிதனின் தேவையை நிறைவு செய்பவை. முதலாளியம் அழிந்து சோஷலிஸம் நிறைவுபெறுகிற காலத்திலும் இவை தேவை. இவை மனிதனின் வாழ்வுக்கான யதார்த்தங்கள். இந்த யதார்த்தங்களை மனிதன் சார்ந்திருக்கிற காலம் முழுவதிலும் யதார்த்தவாதம், (அதன் முதலாளியக் கட்டமைப்பிலிருந்து விலகி) இயங்கத்தான் செய்யும், அதாவது மனித வாழ்வினுள்ளும் சரி, அவனது சிந்தனையுள்ளும் கலை உணர்வினுள்ளும் யதார்த்தம் ஒரு கூறு. யதார்த்தம் இல்லாமல் மனிதனுடைய பிற ஆக்கங்கள் இல்லை."
இன்றைய இருள் மூட்டத்துக்குள் இருந்தபடியே அழுத்தங்கொடுக்கும் மாலைக்கண் நோயாளர்களது பார்வையை நாமும் சுவீகரிக்கவேண்டாம். எமது இருப்புக்காகவும் வளமான வாழ்வுக்கான அமைப்பை வென்றெடுக்கவும் போராடிக் கொண்டிருக்கும் எமது மக்களின் ஒளிசார்ந்த கண்கள் கொண்டு நோக்குவோம். ஒளி பிறக்கும், முழுமைத் தரிசனமும் கிட்டும்.
குறிப்புகள்
1. பார்க்க: மா.இராமலிங்கம் "தற்காலத் தமிழ் இலக்கியத்தின் போக்கு'
மனோரமா இயர்புக் 1995; பக். 542 2. க. கைலாசபதி. 'தமிழ் நாவல் இலக்கியம்'
3. மாலன். 'அன்று', தொகுதி-1, ஒரியண்ட் லாங்மன், 3-6-272
ஹிமாயத் நகர், ஹைதராபாத்-500029, 1993.
4. மேற்படி,
5. பெ.சு.மணி. 'வ.வே.சு.ஐயர் அரசியல்- இலக்கியப்பணிகள்' உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், டி.டி.ஐ.(அஞ்சல்), தரமணி, சென்னை-113. ஒகஸ்ட் 1993. பக்.192-200. مسح
6. மேற்படி பக்.200.
7. எஸ்.பொ.'நீலாவணன்: எஸ்.பொ.நினைவுகள்' மித்ர வெளியீடு. 375-10 ஆற்காடுசாலை, சென்னை- 600025. இந்தியா. செப்ரெம்பர் 1994, U5.30.
8. கோ. கேசவன், 'தமிழ் சிறுகதைகளில் உருவம்' அன்னம் (பி) லிட்.
சிவகங்கை.1988 பக்.28,
9. மேற்படி, பக்.12.
10. பார்க்கநிறப்பிரிகை. நவம்.1994. அ. மார்க்ஸ். 'தமிழ் நவீனமான
Lu T6025' Luś.08-28.
Page 50
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
0 இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் புனைகதை இலக்கியம்
க. சிவத்தம்பி ‘நவீன தமிழிலக்கிய வரலாற்றில் மணிக்கொடி ஒரு வரன்முறையான மதிப்பீட்டின் அத்தியாவசியம்' பார்க்க: முனைவன்-12 மணிக்கொடி பொன்விழா மலர்.1-2-1985 பக்.01-33.
மேற்படி. பக்.11.
முனைவன் -12.கோ.கேசவன். 'மணிக்கொடியில் இலக்கியக் கொள்கை' பக்.41-56.
மேற்படி, பக்.44.
மாலன். 'அன்று' 1.
முனைவன்-12. அ. மார்க்ஸ், 'மணிக்கொடியின் பரிணாமம்', Luč. 160-180.
மேற்படி, பக்கங்கள் 176 -180.
யதுகிரி அம்மாள் 'பாரதி நினைவுகள்'. 1958. பக்.58. மேற்கோள்: பெ.சு.மணி. பக்.205.
மா.இராமலிங்கம். மனோரமா இயர் புக் 95. பக்.548. மாலன் 'அன்று' -தொகுதி 2. 1993.
தமிழவன் 'அமைப்பியல்வாதமும் தமிழ்இலக்கியமும்' காவ்யா. 16.17வது இந்திராநகர், 11வது ஒழுங்கை, பெங்களுர் 560 038. 1991. цš.104-5.
ஜெயமோகன். 'நாழிகை’ ஜூலை 1994. ஜெயமோகன் "திசைகளின் நடுவே' அன்னம் (பி) லிட்டிசெம்பர் 1992. சுபமங்களா, ஓகஸ்ட் 1995. வெளிச்சம். ஆடி, ஆவணி 1995. பக் 34.
மேற்படி, பக்.33.
இரு பிரிவினரதும் அழகு குறித்த வேறுபாடுகளுக்கு எடுத்துக்காட்டை தனது ஆய்வில் தருகிறார் மாரியப்பன். பார்க்க : மாரியப்பன், "சோஷலிஸ் யதார்த்தவாதம்', காவ்யா, ஜூன் 1988. பக்.48-53.
வெளிச்சம், ஆடி, ஆவணி 95 பக்.42.
மேற்படி, பக்.41. மேலாண்மை பொன்னுச்சாமி 'இது தலித்துகள் குரலா, பண்டிதர்கள் குரலா?" பார்க்க செம்மலர், ஜூன் 1995 பக்.11-12
ஞானி 'படைப்பியல் நோக்கில் தமிழ் இலக்கியம்' வைகறை வெளியீடு.4 அ.ஐடியல் பள்ளிச் சாலை, நரசிம்ம நாயக்கன் பாளையம், கோவை-641031 மார்ச் 1994. பக்.104-5.
ஜெயமோகன் : திசையழிந்த அத்துவான வெளியில்
'ஜெயமோகனின் சிறுகதைகளைப் படிக்காத ஒருவர் சிறுகதை பற்றியே பேசக்கூடாது' என்ற கண்டிப்பான சட்டப்பிரகடனம் ஒன்றை எப்போதோ தினகரன்' வாரமலரொன்றில் படித்தபோது அதிர்ந்ததுண்டு. அந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன் சஞ்சிகைகள் சிலவற்றில் அவ்வப்போது ஜெயமோகனின் கதைகளைப் படித்திருந்த அனுபவத்தை மீட்டிப் பார்த்தபோது, அண்மித்த வருடங்களில் சிறுகதையுலகில் அறியப்பட்ட பிரபஞ்சன், சி.ஆர்.ரவீந்திரன், மேலாண்மை பொன்னுசாமி, இரா.முருகன், தனுஷ்கோடி போன்ற ஆற்றல்மிக்க இலக்கிய கர்த்தாக்கள் வரிசையில் ஒருவராக ஜெயமோகனையும் கருதமுடிந்தது:மேற்படி சட்டம் போடுகின்ற அளவுக்கு பிரமிப்பு எதையும் இனங்காண முடியவில்லை.
பேராசிரியர் சிவத்தம்பி 'சிறுகதைக்கு ஓரளவுக்கு நம்பிக்கை ஒளியூட்டுவது ஜெயமோகன்' என்று ஒரு தடவை குறிப்பிட்டதைப் படித்தபோது வினோதார்த்தமாயிருந்தது. அவ்வாறு கூறுவதற்குக் காரணமாகக் காட்டிய கதை நாகம்' அந்தச் சிறுகதை அப்படியொன்றும் குறிப்பிடத்தக்க படைப்பாயிருக்கவில்லையென்ற வகையில் பேராசிரியரின் அத்தாட்சிப்பத்திரம் குறித்து வியப்படையாமல் இருக்கமுடியவில்லை.
வைரக்கல் எதையும் பெற்றுப் பட்டைதீட்ட வாய்ப்பற்ற ஒருவர் வெறும் கண்ணாடித் துண்டைப் போலியாக வைரக்கல்லாய்க் காட்ட எத்தனித்தது போன்ற தோற்றத்தையே நாகம்' சிறுகதையில் காண முடிந்தது. அந்தக் கதையின் கரு வெறும் அரைத்த மா. கணவனை இழந்த ஒரு அபலையிடம் வந்து போகிற ஆணாதிக்க பிம்பம் நாகமாக்கப்பட்டுள்ளது. கதை முழுமையும் படிமத்தின் மேல் படிமமாக அடுக்கப்பட்டிருந்தது (உரலில் பலதரம் கிடந்து மாவாகப் போனதை இன்னொருதரம் கிரைண்டரில் போட்டிருக்கிறார்). இப்படி நவீனமாய்ப் படிமங்களைக் குவித்துவிடுவதால் மட்டும் ஒரு சிறுகதை உன்னத கலைப் படைப்பாகிவிடுமா? சிறுகதை ஒன்றுக்கு அவசியமான ஏனைய அங்கங்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டுத் தனியொரு உறுப்புக்கு வெறும் பூச்சுவேலை மட்டும் பண்ணிவிட்டால் உயிர்த்துடிப்போ மகத்துவமோ வந்துவிடுமா?
ஜெயமோகனின் திசைகளின் நடுவே" என்ற முதலாவது சிறுகதைத் தொகுதியைப் படித்தபோதும் அவரது அனுபவச் செழுமை பற்றியோ கலைத்துவ வெற்றி குறித்தோ வேறுபட்ட முடிவெதற்கும் வரக்கூடியதாயி ருக்கவில்லை. ஆயினும் நுனிப்புல் மேயும் அபிப்ராய வியாபார அரைவேக்காட்டாளர்கள் போலல்லாமல் ஒரு நல்ல கலைஞராக மிளிரக்கூடிய ஆற்றல் ஜெயமோகனிடம் இருந்திருக்கிறது என்ற எண்ணம் அவரது 'முன்குறிப்பைப் படித்தபோது ஏற்படாமலில்லை.
Page 51
82 () ஜெயமோகன் : திசையழிந்த அத்துவான வெளியில்
அந்த முன் குறிப்பில் 'இலக்கியத்தின் மையமாகப் புதுமைப் பித்தனைப் போன்ற படைப்பாளிகளையே காண்கிறேன். புதுமைப்பித்தன் தொடாத சில அபூர்வ இடங்களைச் சிலசமயம் (மட்டும்) தொடுகிறார் என்பதே மெளனியின் ஒரே அர்த்தம். எனவே மெளனிரக எழுத்து குறைவாகவே வரமுடியும்' என்றவர் "அகவுலகும் புறவுலகும் சந்திக்கும் விகிதாச்சாரமே பெரிய படைப்புகளைத் தீர்மானிக்கிறது என நம்புகிறேன்." என எழுதியுள்ளதைப் படித்தபோது அவர் இவ்வளவு துாரம் பேசப் படுவதற்கு அவரது இந்த நோக்குக் காரணமாய் இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. இதுவும் நீர்க்குமிழியென விரைவில் சிதறியது.
அவரது முன் குறிப்பைக் கடந்து உள்ளே சிறுகதைகளுக்குள் பிரவேசிக்கும்போது மக்களுக்கான புற உலகொன்றை அவர் குறிப்பிட்டிருக்கவில்லை என்பது தெரியவரும். மக்களைப் பிரிந்த மனப்பிறழ் வடைந்தோரின் புற - அக உலகுகளை எந்த விகிதாசாரத்தில் இணைத்த போதிலும் வாழ்க்கைப் போராட்டத்தின் சவால்கள் நிறைந்த யதார்த்தப் புற உலகு காட்டப்படாமலே போய்விடும் என்பதையே காண்போம்.
இதற்கு தொகுதியின் பெயரைக் கொண்ட திசைகளின் நடுவே" என்ற சிறுகதை சிறந்தவோர் எடுத்துக்காட்டு. அது, பலநூறு ஆண்டுகளின் முன் உலோகாயதவாதியான சார்வாகன் பிராமணியத்தால் அக்கினிக்கு ஆகுதியாக்கப்பட்டதை ஒலைச்சுவடிகளுள் மூழ்கிக்கிடக்கும் தீஷணா என்ற பாத்திரம் நினைவு மயங்கிய நிலையில் உணரும் கதை. தன்னையும் அந்தத் தருமனின் பிச்சை ஏற்கச் செல்லும் சார்வாகனோடு கூடவே செல்பவனாயும், சார்வாகனோடு ஒத்த தன்மையை இனங்காண்பவனாயும் உணர்கிறான் தீஷணா.
முன்னதாக அவனுடைய அம்மா கெஞ்சுவாள். 'தீஷணா, நான் சொல்வதைக்கேள் மகனே, இவ்வளவு படிக்கிறாயே, இந்த அன்னையின் மனம் மட்டும் உனக்குப் புரியாமல் போனதென்ன?' என்று கூறி 'அடிவயிற்றில் நெருப்பைக் கொட்டி விடாதே' என்பாள். இந்தச் சுவடிகளைப் படித்த உன் அப்பா ஆனதைப் போல நீயும் என்னைவிட்டு ஓடிவிடுவாய், அதை என்னால் தாங்க முடியாது என்று உணர்த்த முயல்வாள்.
தாயை வருத்தவும் விரும்பாமல், தன்னை மாற்றவும் முடியாமல் அல்லாடும் தீஷணா சுவர்சுவராக தோன்றி மறையும் ரிஷி முகங்களின் அழைப்பால் குழம்புவான், தன் தந்தையின் சுவடிகள் அறையில் இருந்தபடி! அங்கேதான் 'லோகாயத ஞானம் என்ற முள்' அவனுள் குடியேறிவிட்டிருந்தது. 'இப்போது இரவில் லோகாயதக் கல்வி, பகலில் வேதகோஷம். என் வேதத்தை நான் காணச்செய்யும் இந்த நெற்றிக் கண்ணைக் குத்தி உடைத்து விட்டால் என்ன? இருட்டு எனும் சுகம்
நிம்மதி. '
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் O 83
இத்தகைய சுய பிரலாபத்தில் அமிழ்ந்து நினைவு கலங்கிப்போகும் நிலையைத் தொடர்ந்து தருமனின் விழாக்கோலமும் சார்வாகனின் எரிப்பும் நீளும் காட்சித் தொடர்களாய் விரிகின்றன. அறையினுள் / ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலின் கிரீச். கிரீச். கைகளால் தலையைப் பிடிக்கிறான் தீஷணா.
'சுழல் வேகத்தின் ஒரு கணத்தில் எல்லாமே மறைந்துவிட்டன. சுழல் மையமாக நான், ஒரு புள்ளியாக நான், சகலப்பிரபஞ்சத்தையும் தூக்கிச் சுழட்டும் சக்தியின் மையப்புள்ளி அழுத்தத்தின் அதி உச்சம். என் நெற்றிப் பொட்டை மையம் கொண்டிருக்கிறது அது. வெடித்துவிடும் இதோ இக்கணம். இதோ. இதோ. சட்டென்று எல்லாம் நின்றுவிட்டன. அழுத்தம் இல்லை. எதுவுமே இல்லை. திசைகளற்ற, மேல் கீழற்ற பெருவெளி ஒரு கணம்தான். என் பிரக்ஞை பீரிட்டெழுந்தது. உதறினேன். மவுனமானதோர் ஒலத்துடன் கண்விழித்தேன். என் சித்தம் சுழண்டு தெறிக்கப்போகிறது. நான் பைத்தியமாகப் போகிறேன்.'
போய்விடவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் வாசகனைப் பைத்தியமாக்கும் சுழற்சிகள், இறுதி இரு பத்திகள்
'எழுந்தேன்; தள்ளாடி நடந்தேன். என் மனமும் உடலும் ஒய்வுக்காக மன்றாடின. என் புலன்களனைத்தும் மெல்ல அவிந்து கொண்டிருந்தன. ஆனால் உள்ளிருந்து ஏதோ உத்வேகம் அப்போதும் கசிந்து கொண்டிருந்தது. யுகங்களுக்கு முன் அந்த ரிக்வேத கவிஞன் மனமொடிந்து கூவிய குரல் எனக்குக் கேட்டது. நான் யார்? எனக்குத் தெரியவில்லை. மனத்தின் அறியமுடியாத சக்திகளினால் நான் அலைந்து திரியும்படி ஆக்கப்பட்டேன்.
'என் காலில் எதுவோ மிதிபட்டது. பாம்பு என்று உள்மனம் சொல்ல, உடம்பு எகிறியது. மெல்ல ஓய்ந்த பிறகு, உற்றுக் கவனித்தேன். அரையிருளில் நீளமாக, வழவழப்பாக எதுவோ கிடந்தது. சிறிது நேரத்தில் என் கண்கள் பழகி, அதை அறிந்தேன். சார்வாகனின் யோகத்தண்டு'
அன்று பிராமணியத்தால் தீயிடப்பட்ட சார்வாகனின் உலோகாயதம் இன்று பலநூறு ஆண்டுகளின் பின் புதுப்பொலிவுடன் இயங்கியல்பொருள்முதல்வாதமாக, தத்துவந்தேடும் எவர்காலிலும் இடறும்; இது இன்றைய நிதர்சனம்.
இன்று அது கேவலம் உலோகாயதமோ வெறும் தத்துவமோ அல்லஉலகை மாற்றும் நடைமுறைக்கான வழிகாட்டி. அந்த வகையில் பிறழ்வடைந்து உள நரம்பு நோய்க்கு ஆட்படும், நடைமுறையைப் பிரிபவர்க்குரிய தத்துவமாக அது இல்லை. அது செயலுக்கு வழிகாட்டும் உலகக் கண்ணோட்டம். வெறும் பழஞ்சுவடிகளுக்குள் மூழ்கி முத்தெடுப்பவர் இன்னமும் வேறொரு வடிவத்தில் பிராமணியத்தின் கருத்து முதல்வாத தத்துவ வியாக்கியானங்களையே எடுப்பார், ஜெயமோகனும் அவ்வாறே எடுத்துவிட்டதால், சார்வாகனோடு இனங்காணும்
Page 52
84 0 ஜெயமோகன் : திசையழிந்த அத்துவான வெளியில்
சந்தர்ப்பத்துக்கு ஏற்றவகையில் செயல்திறம் மிக்க பாத்திரத்தைத் தெரிவுசெய்திருக்கவேண்டிய வேளையில் உளநரம்பு நோய்க்காட்பட்ட தீஷணாவைத் தெரிவு செய்திருக்கிறார்.
சார்வாகனை உறவாகக் காணவல்ல அகமும், அந்த அகத்துக்கேற்ற புறமும் சித்தரிக்கப்படாமையினால், உள்ளடக்கத்துக்கேற்ற உருவத்தை காணத்தவறிய கலைச்சிதைவு நேர்ந்துவிடுகிறது. பொருந்தாத உறுப்புக் கோர்வைகளுடைய உருவத்தை அழகூட்ட எடுக்கப்பட்ட கலைத்துவ முயற்சிகள் அனைத்தும் புறக்குடத்தில் வார்த்தனவாகி விட்டன. உலகை மறுதலித்து, இருளுள் அழுந்தி, ஆழ்மனத் தேடல்களுள் தனித்துச்சீவிக்க விரும்பும் மெளனிரகப் படைப்பாகிவிடுகிறது. ஜெயமோகனின் முயற்சி
நதி' என்ற முதற்கதையில் தொடங்கி திசைகளின் நடுவே" ஊடாக வளர்ந்து இன்றுவரை வந்துள்ள ஜெயமோகனை ஆராயும்போது, இந்த உலக வாழ்விலிருந்து விலகி விலகி ஓடும் அவர் அத்துவான வெளி நோக்கி அலைந்து கொண்டிருப்பதைத் தெளிவாகவே காணமுடியும். அனைத்தையும் படிமங்களுக்குள்ளும் தொன்மங்களுக்குள்ளும் புதைத்தே படைப்பாக்க வேண்டும் என்ற கோட்பாடுகளால் ஆட்கொள்ளப்படாத நிலையில் வெளிவந்துள்ள நதி' அவர் சிரமப்பட்டு உன்னத சிகரத்தை எட்ட முனைந்து எழுதிய கதைகளைவிடச் சிறப்பாக அமைந்திருந்தது. கதை முழுமையும் தாயை இழந்த மனநிலை, வெறுமையும் சோகஉணர்வும் கலந்ததாக வடிக்கப்படுகிறது. தாயின் கரும காரியங்களை ஏற்றுக் கொண்ட நதி "எதுவும் நடக்காதது போல ஓடிக்கொண்டிருந்தது மெளனமாக." இந்த இறுதி வரிகளைப் படித்தபின் கதையை மீட்டிப் பார்க்கும்போது பலவித வாழ்க்கை அனுபவங்கள் இதயத்தைக் கணக்க வைத்தது.
குறியீடு-படிமம்-தொன்மம் என்ற சாம்பார்க் குழையல் மிகுந்த ஜெயமோகன் பாணி முனைப்புப் பெற்றதாய் எழுதப்பட்ட 'மாடன் மோட்சம்' என்ற சிறுகதை, மதமோசடிகளைக் கலைத்துவத்துடன் வெளிப்படுத்துவதில் தனது குறைபாடுகளையுங் கடந்து வெற்றி பெற்றிருந்தது. கிராமத்தினுள் தலைதூக்கிய கிறிஸ்தவ ஊடுருவலுக்கு எதிராகத் தனது இருப்பை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் மாடனின் அற்புத விசேடங்களைக் காட்டப் பூசாரி சித்துவிளையாட்டுக்கள் செய்யப்போய், இறுதியில் அற்புதம் நிகழ்த்திய மாடன் தன்நிலையினின்று அந்நியப்பட்டுப் போய் பூசாரியிடமிருந்தும் விலக்கப்பட்டுப் பிராமணியத்தால் தேவாலயத்துள் சிறையிடப்பட்ட கதை மாடன் மோட்சம்' ஒடுக்கப்பட்ட மக்களின் சிறு தெய்வமாயிருந்த மாடன் பிராமணிய மயப்படுத்தப்பட்டு, சொந்த மக்கள்ால் தீண்டப்பட முடியாத மோட்சத்தில் சுயமழியும் காட்சியின் வாயிலாக இன்றைய மத அடிப்படைவாத எழுச்சியின் கோரத்தை அந்தக் கதையில் காணமுடிந்தது.
இதுபோன்ற மக்கள் நலன் சார்ந்த விடயங்களைப் படைப்பாக்க முடியாமல் 'அதியுன்னத கலைத்துவப் பிராமணியத்தால் மோட்ச தீட்சை வழங்கப்பட்டுவிட்ட ஜெயமோகன் எழுவதற்கு முயலவும் முடியாமல்
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் ロ 85
இறுகிப் போய்கிடப்பது அவரது சகாப்தத்தின் சோகம் போலும். தனக்கு மோட்சம் உறுதிப்பட்டுவிட்டதை மாடனால் புரிந்து கொள்ள முடிந்தது;மறுகணம் அதன் உடம்பு பதற ஆரம்பித்தது "வாளை ஓங்கியபடி, அடேய்' என்று வீரிட்டபடி, அது பாய்ந்து எழமுயன்றது. அசையவே முடியவில்லை. பாவி அய்யன் மந்திரத்தால் தன்னை யந்திர பீடத்தோடு சேர்த்துவிட்டதை மாடன் பயங்கரமான பீதியுடன் உணர்ந்தது. ' (திசைகளின் நடுவே. பக்.89).
ஜெயம்ோகனோ தன்னை இறுகக்கட்டிய கலைத்துவப் பிராமணியத்தின் கொடுமை குறித்து உணராதவராய் (அந்தக் காரணத்தால் எழவேண்டுமென்ற சிந்தனையே இல்லாமல்) இருப்பதை இந்தத் தொகுதியின் படுகை' போன்ற சிறுகதைகளும், இன்று அவர் உதிர்க்கும் அபிப்பிராயங்களும் காட்டிநிற்கின்றன.
'படுகை" சிறுகதை, மழை பொழியும் போதெல்லாம் பொங்கிப் பாய்ந்து கிராமத்தை அழிக்கும் காட்டாற்றை அணைகட்டித் தடுத்து அதிலிருந்து மின்னையும் பெற்ற வெள்ளைத் துரையின் முயற்சியைப் பாமர மனிதனின் நோக்கில் சித்தரிக்கிறது. காட்டுத் தெய்வமான பேச்சியின் சீற்றமும், வள்ளி ஆற்றின் கட்டற்ற ஓட்டமும், சகல அழிவுகளும் படிமங்களுடாகவே காட்டப்படுகிறது. நேராக இந்த அர்த்தத்தைப் பெறாமல் வேறு பல கற்பனைகளில் வாசகன் மிதக்க முடியும். அது ஜெயமோகன் கருதி எழுதியதாக இருக்க வேண்டியதில்லை. ஓராயிரம் படிமக்குவியலோடு ஒரு பிரதியைத் தந்ததோடு அவரது கடமை நிறைவு பெற்றுவிட்டது. இனி வாசகர்கள் சுயமாய் படைப்பாளிகளாகி, அதை உடைத்து, விரும்பியபடி பொருத்தி, தம்மனம் போன போக்கில் அர்த்தங்கள் கற்பித்துப் படிப்பதன் மூலமாக ஆசிரியர் எண்ணாத தளங்களுக்குப் பறக்க முடியும்,
இந்த நோஞ்சான் கோட்பாடுடன் அவர் இலங்கைப் படைப்பாளிகட்கு உபதேசம் பண்ண அண்மையில் முன்வந்துள்ளது பற்றி அறிவோம். 'ஒரு தவளைக் குஞ்சும் சில வெம்பல்களும்' என்ற தலைப்பில் 'புதிய பூமி ஒக்டோபர் இதழில், இலண்டனிலிருந்து வெளிவரும் நாழிகை' சஞ்சிகையில் (ஜூலை 1994) 'இலங்கைப் படைப்புகளின் வடிவம்' குறித்து ஜெயமோகன் எழுதிய கட்டுரை பற்றி இடம் பெற்றிருந்த கருத்துக்கள் கவனத்தை ஈர்ப்பன.
உள்ளடக்கத்துக்குப் பொருத்தமற்ற வடிவங்களுக்கு வேண்டாத வர்ணங்கள் சேர்த்துப் பல சந்தர்ப்பங்களிலும் தோற்றுப்போன ஜெயமோகன் எமது படைப்புகளின் வடிவம் குறித்துச் சொல்லியிருப் பதைத் தொகுத்து நோக்குவோம்.
'இன்றைய இலங்கைத் தமிழ்ப்ப்டைப்புக்களைப் பொதுவாகப் பார்க்கும்போது அனுபவ உலகின் தீவிரத்தை உள்வாங்கி வெளிப்படுத்த முடியாதபடி மொழியும் வடிவமும் பின்தங்கிவிட்டிருப்பதாகத் தெரிகிறது.
Page 53
86 0 ஜெயமோகன் : திசையழிந்த அத்துவான வெளியில்
இவற்றில் ஒரு வெடிப்பு நிகழாதவரை இலங்கைத் தமிழ்ப் படைப்பிலக்கியம் இன்று உள்ளதுபோல பழுக்காமல் உதிர்ந்தவற்றால் நிரம்பியதாகவே இருக்கும். இதுபற்றிய தீவிரமான ஒரு விவாதம் குறைந்தபட்சம் புலம் பெயர்ந்தோர் படைப்புலகிலாவது உடனடியாக நடக்க வேண்டியது அவசியம்.'
'.இலங்கைப் படைப்பாளிகள் தங்கள் படைப்புலகின் தேவை என்ன என்பது பற்றிய பிரக்ஞையுடன் இல்லை."
'..தமிழகத்தில் எதார்த்தவகை எழுத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. மிகு கற்பனை சார்ந்த புனைகதைகளின் உலகில் மிதக்கும் வாசகலட்சங்களுக்கு அவர்கள் வாழ்வை அவர்களுக்கு காட்டும் கடமை அதற்கு உண்டு.
இலங்கையில் இன்று படைப்புலகின் முதன்மையான பணி இதுவாக இருக்கமுடியாது. இலங்கை மக்கள் முதுகொடிய யதார்த்தத்தைச் சுமப்பவர்கள்.வாழ்வின் பெளதீக இயக்கத்தை சித்தரிப்பதன் மூலம் தமிழக யதார்த்தத்தை இலக்கியம் ஒளியே படாமல் இருந்த எத்தனையோ மூலைகள் மீது கவனத்தைக் கொண்டுவந்தது. இத்தகைய விரிவும் பன்முகத்தன்மையும் இலங்கை மண்ணுக்கு இல்லை. தவறான கருவியால் (யதார்த்தவாதத்தால்) இலங்கை வாழ்வையள்ள படைப்பாளிகள் முயலும் போது திரும்பத்திரும்ப ஒரே மாதிரியான பெளதீக வாழ்வே அகப்படுகிறது. விளைவாக பல படைப்புகள் முதல் சில பக்கங்களிலேயே அலுப்புத் தருகின்றன.'
'.இலங்கைப் படைப்பாளி இன்று தன் முன் கொந்தளிக்கும் வாழ்வை சரித்திரத்தின் முன் வைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. கனவுகள், மதிப்பீடுகள், கருத்து நிலைகள் மூன்றையும் உடைத்து ஆராய வேண்டியுள்ளது. ஒரே சமயம் சிந்தனையும் உள்ளுணர்வும் தீவிரமாக செயல்பட்டாலொழிய இது சாத்தியமில்லை. கருத்து நிலைகளை விவாதிக்கும் தருக்கம் சார்ந்த மொழியும், உள் மன அதிர்வுகளை மீட்டெடுத்துப் பதிவு செய்யும் பாய்ச்சல் மொழியும் ஒரே சமயம் பயின்று வரவேண்டியுள்ளது. சம்பிரதாயமான யதார்த்தவாதம் இவற்றுக்கு மிக அசெளகரியமான ஒன்று கருத்து நிலைகளை அதில் விவாதிக்க ஆரம்பிக்கும்போது கட்டுரை உரைத்தன்மை மேலோங்கி அழகியல் ஒழுங்கு சிதைகிறது. ஆழ்மனப்பதிவுகளைத் தொட முனையும்போது திட்டவட்டமான பெளதீக யதார்த்தத்தில் அதை நம்பும்படியாக பொருத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே யதார்த்தவாத மரபின் இறுக்கத்தை மீறுவதுதான் அவர்களுக்கு இன்று மிகவும் வசதியாக இருக்கக்கூடும்.'
'. இன்னொரு வகையிலும் யதார்த்தவாதம் தடையாக ஆகக்கூடும். இன்றைய இலங்கைத் தமிழ் வாழ்வின் கொந்தளிப்பான நிலை நேரடியாக படைப்பாளியைப் பாதித்து தன்சார்பான ஒரு தீவிர
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் O 87
நிலைக்கு தள்ளிவிடுகிறது. இந்தச் சார்பு அத்தருணத்தின் கருமத்துடன் சம்பந்தப்பட்ட அளவிலேயே நின்றுவிடச் செய்கிறது. கலைப்படைப்புக்கு வாழ்வுடன் எவ்வளவு ஒட்டுதல் தேவையோ அதே அளவு தூரமும் தேவை. நவீன படைப்புகளில் நிகழ்தளத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தத் தூரத்தை சாதிக்க முடியும், யதார்த்தவாதம் இதற்குத் தடையாகும். நிகழ்வுகளின் அனுபவ சாரத்தை அதாவது அவற்றின் நனவிலி மனப்பதிவுகளை மட்டும் இந்தப் பின்புலத்துடன் இணைப்பது வழியாக அர்த்தவிரிவும் தீவிரமும் கொண்ட படைப்புகளை உருவாக்க முடியும்.'
யதார்த்த உலகச் சவால்களுக்கு முகங்கொடுக்க வக்கற்று அத்துவான வெளிக்குள் சிதறிப்போய்விடும் தனது நனவிலி மனப்பிரதி பலிப்புகளான 'படுகை' போன்ற படிமக் குவியல்களை யாரும் இலங்கையில் தரவில்லையென வருந்தும் ஜெயமோகன் இந்தியா டுடே' இலங்கைச் சிறப்பிதழில் வெளியான உமாவரதராசனின் சிறுகதை பற்றி மேற்படி நாழிகை" கட்டுரையில் கூறும்போது, "உமாவரதராசனின் கதை அதற்கான முயற்சி. ஆனால் இதில் உள்ள படிமங்கள் திட்டவட்டமான கலாச்சார அடையாளம் இல்லாதவை. எனவே பல்வேறு தளங்கள் நோக்கி இக்கதை விரிவு பெறவில்லை. குறிப்புணர்த்தும் பொருளை வாசகன் அடைந்த உடனே இப்படைப்பு நின்றுவிடுகிறது. குறிப்புக் கதைகளுக்கேயுரிய பலவீனம் இது. இதை மீறவே ஐதீகங்களையும் தொன்மங்களையும் பயன்படுத்துவது. மிகுந்த பிரயாசையுடன் புற உலக யதார்த்தத்துடன் ஒவ்வொரு வரியையும் இணைக்க முயன்றிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். கதையின் மொத்தமான கனவுத்தன்மையே போதுமானது. இதன் நனவுப் பிரக்ஞை சற்று பிடி தளர்ந்திருந்தால் மொழி ஆசிரியரைத் தூக்கி அவர் எண்ணாத புதிய எல்லைகளுக்குக் கொண்டு சென்றிருக்கும்' என்கிறார்.
நனவிலி மனதைக் குடைந்து, உள் மனயாத்திரை புரிந்து, கனவுத் தளத்தில் மிதந்து, கற்பனையிலும் காணாத கலைச் சிகரத்தை எட்ட முனைகையில் தனது வாசகர்களையும் எண்ணாத புதிய எல்லைகளுக்கு எடுத்துச் சென்றுவிடச் சிறுகதை எழுதும் உமாவரதராஜனுங்கூட எமது யதார்த்தப் பாதிப்பிலிருந்து விலக முடியாதிருப்பது ஏன்? அதற்குக் காரணமான எமது பாரம்பரியத்தின் சிறப்பம்சங்கள் பற்றிய அரிச்சுவடியும் அறியாத நிலையில்தான் எமக்கு வழிகாட்டும் அதியுன்னத கலைத்துவப் பணியாற்ற வந்திருக்கிறார் ஜெயமோகன். எமது மண்ணின் வாழ்வு இலக்கியமாக்கப்பட்டபோது மக்களிடம் வழங்கும் இலக்கிய நயஞ்சார்ந்த நாட்டார் வழக்காறுகளும் உரையாடல்களும் வளமிக்க மொழியில் பட்டைதீட்டி செப்பனிடப்பட்டு இலக்கியமாக்கப்பட்ட எமது கலைமரபுச் செழுமை பற்றி அவர் அறிந்திருக்கவில்லையென்பமதால் அவரை மன்னித்து மறந்து விடலாம். அவ்வாறு வாழாதிருந்துவிட முடியாத வகையில் எமது அடிப்படையைத் தகர்க்கும் அபாயம் உள்ள காரணத்தால் அவரது அபிப்ராயங்கள் மீது நாம் கவனஞ் செலுத்தாதிருக்க முடியாதுள்ளது.
Page 54
88 0 ஜெயமோகன் : திசையழிந்த அத்துவான வெளியில்
அனுபவ உலகின் தீவிரத்தை உள்வாங்கி வெளிப்படுத்த முடியாதபடி பின்தங்கிவிட்ட எமது மொழியிலும் வடிவத்திலும் ஒரு வெடிப்பு நிகழாதவரை இலங்கைத் தமிழ் படைப்பிலக்கியம் இன்று உள்ளது போல பழுக்காமல் உதிர்ந்த வெம்பல்களால் நிரம்பியதாகவே இருக்கும் என்று எச்சரிக்கும் ஜெயமோகன், எமது யதார்த்தத் தாக்கம் ஆழ்மனப்பதிவுகளை வெளிக்கொணரத் தடையாக உள்ளதென்றும் கருத்து நிலைகளை விவாதிக்கும் தருக்கம் சார்ந்த மொழியும், உள்மன அதிர்வுகளை மீட்டெடுத்துப் பதிவுசெய்யும் பாய்ச்சல் மொழியும் ஒரே சமயம் பயின்று வரவேண்டியுள்ளது, என்ற வகையில் நாம் யதார்த்தத்திலிருந்து விலகி விடவேண்டும் என்றும் வழிகாட்ட வந்திருக்கிறார்.
இன்றைய இலங்கைத் தமிழ் வாழ்வின் கொந்தளிப்பான நிலை நேரடியாகப் படைப்பாளியைப் பாதித்து தன்சார்பான ஒரு தீவிரநிலைக்குத் தள்ளிவிடுகிறது' எனக்கூறும் ஜெயமோகன் 'கலைப்படைப்புக்கு வாழ்வோடு எந்தளவு ஒட்டுதல் உண்டோ அந்தளவு துாரமும் இருந்தாக வேண்டும்' என்றும், நவீன படைப்புகளில் நிகழ்தளத்தை நிராகரிப்பது மூலம் இந்தத் தூரத்தைச் சாதிக்க முடியும்' என்றும் பாதை வகுத்துத் தந்து, நிகழ்வுகளின் அனுபவசாரத்தை அதாவது அவற்றின் நனவிலி மனப்பதிவுகளை மட்டும் இந்தப்பின்புலத்துடன் இணைப்பது வழியாக அர்த்த விரிவும் தீவிரமும் கொண்ட படைப்புகளை உருவாக்க முடியும்' என்று புதிய தளத்தையும் இனங்காட்டியிருக்கிறார்.
இனியாவது எங்களுக்குத் தெரியவேண்டும், போர்ச்சுவாலை மிக்க யதார்த்த தளத்தை நாங்கள் துாரவிலக்கி விடவேண்டும்; அதை அமெரிக்க மேலாதிக்கவாதிகளிடமும் இந்திய விஸ்தரிப்புவாதிகளிடமும் உள்ளுர் பிற்போக்குவாதிகளிடமும் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு வெள்ளைத்துரை பேச்சியோடு சமரசம் செய்து வள்ளியை அடக்கிப் பெண்டாள வந்ததையும் தீஷணாவுக்கு வாழ்வோடு இருந்த துாரத்தை அளந்து காட்டிக் கொண்டு மிருந்தால் போதும்.
அவர் சொல்லும் கருத்துநிலை விவாதங்கூட இத்தகைய எல்லைகளுக்குள்ளே நிலைப்பட்டுப்போன ஒன்று. இதற்குள் நின்றபடி ஜெயமோகன் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதால்தான் அவரது படைப்புகள் சிகரம் எனப் போற்றப்படுகின்றன போலும், புறஉலகை வேண்டிய அளவோடு காட்டிக் கருத்துநிலை விவாதம் புரிந்து இயங்கினால் பொருள் முதல்வாத நிலைப்பாட்டில் ஒரு படைப்பாக்கம் அமைந்துவிட்டால் அழகியல் குலைந்துவிட்டதென்று கூக் குரல் எழுப்பிவிடுவார்கள் ஜெயமோகன்க்ளாகியதுாயகலைவாதிகள் அத்தகைய படைப்புகளும் யதார்த்தபாணியிலான சிறந்த படைப்புகளும் நிறையவே எம்மிடம் உண்டு.
யதார்த்த பாணியில் நாம் வெற்றி பெறவில்லையென்றும் ஒரே மாதிரியான பெளதீக வாழ்வே திரும்பத்திரும்ப எழுதப்பட்ட எமது
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் O 89
படைப்புகளைப் படிக்கும்போது முதல் சில பக்கங்களிலேயே அலுப்புதட்டிவிடுகிறது என்றும் எம்மிடம் உள்ளவை எல்லாம் வெம்பல்கள் என்றும் தீர்ப்புச் சொல்லியிருக்கிறார் கலாரிஷி ஜெயமோகன்.
ஒரே மாதிரியான பெளதீக வாழ்வை சித்தரித்த எமது சிறுகதைகளில் எத்தனையைப் படித்துவிட்டு உள்ளதெல்லாம் வெம்பல்கள் என்று கூறியிருப்பார்? எமது உன்னதமான படைப்புகளைப் படித்தாலுங்கூட அவர் தனது அபிப்பிராயத்தை மாற்றிவிடுவார் என்பதற்கில்லை அவரோ படிமங்களும் தொன்மங்களும் இல்லாத சிறுகதைகள் கலைப்படைப்பாக மாட்டாவெனக் கருதும் ஒரு முடக்குவாத நோயாளி
அவரது படிமக்குவியலைக் காணும்போது எழுபதுகளுக்கு முன் (வானம்பாடிகளின் வருகைக்கு முன்) படிமத்துக்காகப் படிமத்தை அடுக்கி அழகிழந்து கிடந்த புதுக்கவிதைத் தேக்க நிலைதான் நினைவுக்ககு வருகிறது. ஒவ்வொரு கதைக்கும் தொன்மங்களைத் தேடுவதும், படிமத்துக்காகப் படிமத்தை அடுக்குவதும் சிலேடைப்புலிகள் மலிந்து கிடந்த நாயக்கர்கால சிற்றிலக்கியங்கள் நினைவூட்டுகின்றன.
ஆயினும் படிம-தொன்ம கையாள்கையில் சூரராய் இவர் கிடைத்து விட்டதில் தூயகலைப் பிராமணியக் கோட்பாட்டாளர் கூட்டத்துக்கு ஏக சந்தோஷம். இந்தியா டுடே ஐந்தாம் ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ் (ஆக. 21 செப். 5. 1994) தமிழ்நாட்டின் விடிவெள்ளி களை இனங்காணும் எத்தனிப்பில் இலக்கியத்திற்குரியவராய் எல்லைகளைக் கடந்து நிற்கும் ஜெயமோகனைத் தெரிவு செய்திருக்கிறது. இருபத்தொன்றாம் நூற்றாண்டு விளிம்பில் எனக்கு ஆதர்ச மனிதர் காந்தி ஒருவர்தான் என்றும் அபூர்வ இளைஞர் ஜெயமோகன் எனக் கண்டதில் அடங்காத ஆனந்தம் அவர்கட்கு (மேற்படி இதழ் பக் 51) எழுதும்போது அழகியல் உணர்வே பிரதானமானது. படைப்பாளி எந்த இயக்கத்திற்கும் சித்தாந்தத்திற்கும் முற்றிலும் கட்டுப்பட்டவனா இருக்கக்கூடாது. என்ற ஜெயமோகனின் பிரகடனத்தால் என்ன எழுதப்படுகிறது என்பது முக்கியமில்லை. எப்படி அழகாக எழுதப்பட்டிருக்கிறது என்பதே முக்கியம் எனக் கருதும் கும்பல் புளங்காகிதம் அடைந்துவிட்டது.
இருப்பினும் தனது அவதரிப்புக்கு முன் தமிழிலக்கியம் வறண்டுபோய்க் கிடந்ததாய்க் கண்டதால் தமிழ்நாவல்கள் பற்றிய தன் அதிருப்தியை அவர் வெளியிட்டது அதிகப்பிரசங்கித்தனம் என்று அவர் எழுத்துமீது நல்ல அபிப்ராயம் வைத்திருப்பவர்கள் கூடக் கருதுகிறார்கள். என்ற வருத்தத்தையும் தர்க்கங்களின் சிக்கி பெரிதாகச் சாதிக்கும் வேட்கையைக் கெடுக்கக்கூடா தென்பதை மற்றதைப் புரிந்து கொண்டதைப் போல புரிந்துகொள்வார். என்ற நம்பிக்கையையும் தெரிவித்திருக்கிறது அந்த இந்தியா டுடே இதழ். அதியுன்னத கலைத்துவச் சாதனையூடாகவே போதிய சீர்குலைவைச் செய்யக்கூடியதாயிருக்க இத்தகைய கருத்துக்களைச் சொல்லித் தன்னை இனங்காட்டி வர்க்க சமுகத்தை பேணும் பணிக்குத் தடங்கல்களை ஏற்படுத்துவானேன்? அதே பக்கத்தில் ஞானி சில நல்ல இலக்கியங்களை நமக்குத் தந்தவர்கள் என்ற முறையில் சிலரை இங்கு காட்டலாம். சுந்தர ராமசாமி, அசோக மித்திரன்,வண்ணதாசன், பிரபஞ்சன்,
Page 55
90 D ஜெயமோகன் திசையழிந்த அத்துவான வெளியில்
ஜெயமோகன், பொன்னீலன், கடைசியாகத் தமிழவன் என்ற சிலரைக் குறிப்பிடலாம். உலக அளவில் செயல்படும் எதரிகள், தமக்குள்ளும் தடம் பதித்திருப்பதை தம்மையும் சிறைப்படுத்தியிருப்பதை , தாமும் அவர்களுக்கு கருவியாகி இருப்பதை இவர்கள் இனம் கண்டு கொள்ளும் போது இவர்களின் படைப்பாற்றல் இன்னும் பலமடங்கு மேம்படும்' என்று தெரிவித்திருப்பது குறித்து இந்தியா டுடே' ஒன்றும் அலட்டிக் கொள்ளப் போவதில்லை. அதனாலேயே ஆதிக்கசக்திகளின் சிறந்த கருவியாகப் பரிணமிக்கும் ஜெயமோகனுக்கு அதே பக்கத்தில் மணிமகுடம் குட்டி மகிழ்ந்திருக்கிறது.
இப்போது எம்முன்னுள்ள வினா இந்தத் துாய கலைத்துவச் சக்கராதிபத்தியத்திற்கு ஏற்ப எமது இலக்கிய மரபை ஆற்றுப்படுத்தி விடுவதா, அல்லது எமது மரபின் தளத்தில் காலுான்றி நின்று எத்தகைய அழகியல் அம்சங்களையும் ஒரு முழுமையின் அளவான பகுதியாகப் பயன்படுத்திக் கொள்வதா என்பதுதான். இதற்குப் பதிலைப் பெறுவதற்கு ஜெயமோகனின் பரிணமிப்பு சிறந்த படிப்பினையாகும்.
இரத்தப்பலியிலேயே ஜீவித்த மாடன், தேவாலயச் சிறையினுள் சக்கரைப் பொங்கலைக் கண்டு குமைந்து சினங்கொண்டதென்னவோ உண்மைதான். எப்படியும் பெருகிக்கொண்டிருந்த புகழ்மோகத்தில் மாடன் விரைவிலேயே ஈசனாகத் தன்னையும் மாற்றிக்கொள்வதற்குத் தடையொன்றும் இல்லை. இந்த மாற்றங்களை பல மடாலயங்கள் தேவாலயங்களாகப் பரிணமித்ததில் மட்டுமன்றி ஜெயமோகனிலும் காணவே செய்கிறோம். இந்தியப் பிற்போக்குச் சிந்தனைக் கூடாரமான இந்தியாடுடே' போன்ற தூய கலைத்துவப் பிராமணியக் கருவறை யந்திரபீடத்தோடு மந்திரித்துக் கட்டப்பட்டதை மகிழ்வோடு ஏற்று இன்று அவர் உதிர்க்கும் அபிப்பிராயங்கள் எமக்கு எதிர்மறைப் படிப்பினையாக அமைந்தாக வேண்டும்.
'இன்றைய கற்கோட்டை உடைந்தால் சிலவழிகள் தெரியக்கூடும்" என்று தனது நாழிகை கட்டுரையை முடித்திருந்தார் ஜெயமோகன் (நாழிகை ஜூலை1994 பக்கங்கள் 31-32), இந்த மாரிக் கூச்சல் அவ்வாறு கற்கோட்டையை உடைத்துத் தனது கிணற்றுக்குள் வந்து அழுந்திவிட வேண்டும் எனக்கோரும் குறுகிய நோக்குடையதென்ற படிப்பினையைப் பெறுவதற்கு அமைவான பரந்து விரிந்த திறனாய்வு இன்றைய இலக்கிய ஆர்வலர்களின் அவசர அவசிய பணியாகும்.
தமிழகத்தின் கலாசார சீரழிவின் உச்சநிலையில் அத்துவான வெளியில் பறக்கிற படிமப் புற்றுநோயாளிக்கு அத்தகைய நோய்க்கூற்றாளர்கள் நிறைந்த சாம்ராச்சியத்திற்குரிய மணிமகுடமும் சிம்மாசனமுங் கிடைக்கக்கூடும்; மாறாக, எமது இருப்பை நிலை நிறுத்தப் போராடும் எமது மக்களின் யதார்த்தத் தளத்தில் கால்பதிக்கத் தவறினாலோ எமக்கு குனியந்தான் மிஞ்சும்.
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம் புதிய கலாச்சாரம்
'ஜெயமோகன் - திசையழிந்த அத்துவானவெளியில்' என்ற விமர்சனக் கட்டுரைக்கு ஜெயமோகன் தனது பதிலை நந்தலாலா ஆசிரியர் குழுவுக்கு எழுதியுள்ளார். அவர் ஈழத்தமிழ் இலக்கியம் தொடர்பாக ஒரு காத்திரமான விவாதக்களம் ஒன்றை நாழிகை கட்டுரையில் கோரியிருந்தார் என்ற வகையிலும், இது ஒரு அடிப்படையான கோட்பாட்டுப் பிரச்சனை என்ற வகையிலும் நந்தலாலா’ அவரது பதிலைத் தொடர்ந்து ஆரோக்கியமான திசையில் அந்த விவாதத்தை நடாத்த இருக்கிறது. பலதரப்பட்டவர்கள் தத்தமது அபிப்பிராயத்தை மனந்திறந்து முன்வைப்பதன் வாயிலாக மட்டுமே வளங்கொழிக்கும் மார்க்கம் ஒன்றை இளங்கலைஞன் தேர்ந்து கொள்ள வழிபிறக்கும் என்பதால் அது குறித்த இடையீடு ஒன்றை ஏற்படுத்தாதிருக்கும் வகையில் எனது பதிலைப் பின்போடுவது எனத்திட்டமிட்டேன்.
"முற்போக்கு இலக்கியத்தின் அழகியல் பிரச்சினை' குறித்த பேராசிரியர் கைலாசபதியின் 'சமர் கட்டுரைக்கு ஜெயமோகன் இப்போது எழுதுகிறது போன்ற ஒரு பதிலை 'அலை’ பதின்மூன்று ஆண்டுகளின் முன்னே எழுதியது. அந்த விவாதம் 'லங்கா கார்டியன்' வரை தொடர்ந்தது. ஆயினும் அந்த விவாதத் தொடரில் கைலாசபதியின் பார்வை சரியான திசைவழியே வளர்த்தெடுக்கப்படாமல் முடக்கப்பட்டுவிட்டது. படவும், கைலாஸின் மறைவும் நேர்ந்துவிட்டமையாலும் எதிர்விமர்சனம் ஓங்கி "ஈழத்து ஆக்க இலக்கியம் என்று ஒன்று இல்லாமலேயே போய்விட்டது" என்பது போலவும், அதற்கு கைலாஸ் என்ற 'விமர்சன ஆக்கிரமிப்பாளரின்' கோட்பாடுகளே காரணம் என்பது போலவும் எதிாமுகாமினரதும் எதிர்முகாமுக்குள் பின் கதவால் அடைக்கலம் தேடியவர்களதும் (சில வேளைகளில் புதிய 'மதம் மாறிகளே' ஆக்ரோசமான எதிரிகளாகி விடுகின்றனர் என்பது இங்கும் மெய்) கூக்குரலாய்விட்டது. அதற்கான பதில், ஒரு தசாப்தத்திற்கு மேல் தொடரும் கைலாஸ் குறித்த ஒருபக்க மதிப்பீட்டுக்கு எதிரானதாக அமைய வேண்டியிருப்பதால் 'கைலாசபதி ஒரு மறுமதிப்பீடு' என்ற கட்டுரையைத் தனியே எழுதுவது என உத்தேசித்தேன்.
இங்கு அவற்றைத் தவிர்த்து வேறுசில விடயங்களை அலச எண்ணினேன். அதன் பொருட்டு ஜெயமோகனின் பதிலில் உள்ள ஒரு விடயத்தை மட்டும் எடுத்துக் கையாள்கிறேன். எனது விமர்சனக் கட்டுரையில் அவரை 'பிராமணிய சார்பாளர்' எனக் காட்டுவதாகக் கருதி தனது 'மாடன் மோட்சம்', 'திசைகளின் நடுவே ஆகிய கதைகள் பிராமணர்களால் எதிர்க்கப்பட்டது, இப்போது பிராமண எதிர்ப்பாளர் களாலும் எதிர்க்கப்படுவதால் உன்னத கலையாகிவிட்டது எனக் கூறி மகிழ்ந்தார். என் விமர்சனம் 'பெரியாரிஸம் சார்ந்த பிராமண எதிர்ப்பு
Page 56
92 கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம்
வகைப்பட்டதல்ல என்பதை, நிதானித்து வாசித்தால் புரிந்திருக்கும். எதிர்க்கப்பட வேண்டியது பிராமணியம். விமர்சனத்தில் பிராமணியம் வளர்த்த கருத்து முதல்வாதம் 'திசைகளின் நடுவே"யைத் திசையழிந்த அத்துவான வெளிக்கு எப்படி எடுத்துச் சென்றுவிடுகிறது என்பதைக் காட்டியிருந்தேன். அதுதான் ஜெயமோகனின் சரிவுப்புள்ளி. அதைத் தொடர்ந்து அவர் அத்துவான வெளியில்தான் சஞ்சரிக்கின்றார். (எப்போதாவது பருந்துப் பாய்ச்சலில் வந்து போவது விதிவிலக்கு).
சில பிராமணர்கள் திசைகளின் நடுவே"யை எதிர்க்கிறார்கள் என்றால் அது அவர்களின் வறட்டு வைதிகச் சார்பைக் காட்டுகிறது. முதலாளித்துவ மாற்றியமைத்தலுடன் ஜனநாயக வகைப்படும் சமரசத்திற்கு தயங்காத பிராமணியக் கோட்பாட்டாளர்கள் இதற்காக ஜெயமோகனுக்கு முடிசூடாமல் இருந்துவிடமாட்டார்கள் என்பதுதான் இந்தியா டுடே' கிரிடம் உணர்த்தும் நிதர்சனம். பிராமணியத்தின் ஸ்தாபிதம், பரவுகை முழுமையிலும் இந்த இரு போக்காளர்களும் இருந்து வந்துள்ளார்கள். சைவ சமயம் வேதத்தை மூல நூலாகக் கொள்ளாமல் ஆகமங்களையே வரித்துக் கொண்டமையால், சைவம் வைதீக நெறியல்ல என ஒதுக்கிவைத்த மனுஸ்மிருதி ஆசிரியரும் இருந்துள்ளார், சைவத்துடன் சமரசம் செய்து அந்த ஆகமக் கோயிற்கிரியைகளின் பெயரால் கருவறைக்குள் தம்மை மட்டுமே புகுத்திப் பிராமணியத்தை அதன் வாயிலாய் 'உலகெலாம்' மேன்மை கொள்ள வழிகோலிய பிராமணர்களும் இருந்துள்ளார்கள். இருதரப்பினரும் பிராமண மேலாதிக்கத்துக்குத் தத்தம் வழிகளினூடே சேவை செய்திருக்கிறார்கள்.
ஆக, பிராமணர்கள் எதிர்க்கிறார்கள் என்ற ஒன்றே திசைகளின் நடுவே" கதை பிராமணியக் கருத்து முதல்வாதம் சார்ந்தது என்று கூறிய என் விமரிசனத்தை மறுக்கப்போதுமான ஆதாரமாகாது. அதன் வார்ப்பு எப்படி அத்திசைவழி சிதைகிறது என்பதை விமர்சனத்தில் விளக்கி விட்டதால் இங்கு மீண்டும் கூற வேண்டிய அவசியமில்லை. அவரது 'மாடன் மோட்சம் கதையும் இதே வகைப்பட்டது என்பதாக நான் காட்டுவது போலவும் சுட்டுகிறார். 'மாடன் மோட்சம் ஒடுக்கப்பட்ட சமூகத்தை ஒதுக்கி வைத்த படியே மாடனை ஈஸ்வரமயமாக்கி (வைதீகப்படுத்தி) பிராமண மேலாதிக்கம் நிலை நிறுத்தப்படுகிறது என்பதைக் காட்டும் சிறந்த படைப்பு என்றுதான் கூறியிருந்தேன். இரண்டையும் பிராமணர்கள் எதிர்க்கலாம்; அது வேறு விடயம், 'மாடன் மோட்சத்தை ஜனநாயக சமரசவாதப் பிராமணியர்களும் விரும்பமாட்டார்கள்தாம். 'எல்லாவற்றையும் புரிந்து கொள்ளக் கூடிய ஜெயமோகன் இனியொருதரம் 'மாடன் மோட்சம்' என்ற கதையை எழுதியது போன்ற தவறுகளை இழைத்துவிடமாட்டார் என்ற நம்பிக்கை அவர்களுக்குண்டு. அதனால்தான் அத்தனை சிறப்பான 'மாடன் மோட்சம்' வெளிவந்த 1991ஆம் ஆண்டில் அவர் எழுதிய வேறொரு கதையான ஜகன் மித்யைக்குப் பரிசுதந்தவர்கள் 'மாடன் மோட்சம்' பற்றிக் கண்டு கொள்ளவேயில்லை.
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் D 93
உண்மையில் 'மாடன் மோட்சம்' தந்த ஜெயமோகனை நாங்கள் மதிக்கிறோம். "ஜகன் மித்யை 'க்காக பிராமணியத்தால் சுவீகாரம் செய்யப்பட்டு திசைகளின் நடுவே'யில் சிதைவடைந்து படுகை'யும் ரதமும் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் ஜெயமோகன் எங்களுக்கு வேண்டியவரல்ல. அந்த ஜெயமோகனின் கலைத்துவநெறி அவர் சரிந்து சென்றுவிட்ட பிற்போக்குவாத சக்திகளுக்குரியது.
இவ்வாறு தான் வேறுபடுத்திப் பார்க்கிறோம் என ஜெயமோகனால் ஏன் புரிந்துகொள்ள முடியாமற் போனது? சாபம் ஒன்றால் பன்றியாகிவிட்ட ரிஷியின் நிலைதான் அவருக்கும். இன்று பிற்போக்கு வாத சகதிக்குள் அழுந்திய மாற்றமும் தெரியவில்லை, மக்கள் நலன் சார்ந்த நல்ல படைப்பாக 'மாடன் மோட்சத்தை தந்த பார்வையும் கெட்டுப் போய்விட்டது. தன்னிடம் ஏற்பட்ட சிதைவுபற்றி அறியாமலே அன்று கொஞ்சம் அளவோடு படிமத்தையும் அவசியத்தோடு தொன்மத்தையும் யதார்த்தத்துடன் இணைத்துத்தந்த வெற்றியே இன்றும் தொடர்வதாக மயங்கிவிடுகிறார். இன்னொரு யதார்த்தம் வேறொரு வடிவத்தைக் கோரும் என்ற பிரக்ஞையின்றி, படிமக்குவிப்பும் தொன்மத்தை இணைப்பதுமே கலைத்துவம் எனக்கருதிவிடுவது முடக்குவாதமின்றி வேறென்ன? அந்தப் படிமமும் தொன்மமும் மட்டுமே அந்தரத்தில் தொங்க யதார்த்தத் தளத்தைத் தகர்த்துவிடவேண்டும் என்று அவர்கோருவது 'படிமப்புற்றுநோயை' விடவும் மோசமானதோர் நோய் முற்றிய நிலை. இவர் நிகழ்தளத்தை ஒதுக்கி, கலைத்துவத்திடம் ஒதுங்கி, பிற்போக்குவாத யந்திரபீடத்துடன் பிணைந்து போய்விட்டமை 'தூய கலைப்பிராமணியம்' அன்றி வேறென்ன?
மக்களைப் பிரிந்த தூய கலைவாதத்தையே 'தூய கலைப்பிராமணியம்' என்கிறோமேயன்றி திராவிடரியக்கப்பாணியில் பிராமண எதிர்ப்பை முன் வைக்கவில்லை. பிராமணர் கோட்பாடுகள் எல்லாமே கருத்துமுதல் வாதம் என்பதும் வரலாற்றுத் திரிபாகும். ஆறுதரிசனங்களில் நியாயம், வைசேடிகம், மீமாம்ஸை, சாங்கியம் ஆகியன பொருள் முதல்வாத அடிப்படைகளை மிகவும் உடையவை. பிராமணிய ஆன்மீகச் சிந்தனைகளை வரலாற்றுப் பொருள்முதல்வாத நோக்கில் ஆராயாமல் அனைத்தையும் கருத்துமுதல்வாதமாகக் காண்பதும் அதே நோக்கில் பாரதியின் உலகக்கண்ணோட்டத்தையும் கருத்துமுதல்வாதம் சார்ந்ததாகக் காட்டுவதும் ஆய்வுக்குப் புறம்பான குருட்டுப் பார்வைகளாகும். பாரதி அளவுக்கு பிராமணியத்தை எதிர்த்தவர்கள் தெளிவான மிகச்சிலரே பாரதி போல தெளிவான கண்ணோட்டத்திற் பிராமணியத்திற்குச் சாட்டையடிகொடுத்தவர்கள் விரல்விட்டு எண்ணத்தக்க ஓரிருவரே. இதனைக் கருத்திற் கொள்ளாமல் பாரதியையே பிராமணராகப் பார்ப்பதும் பார்ப்பனிய எதிர்ப்பின் பெயரால் அவரை நிராகரிப்பதும் எவ்வளவு கீழான வக்கிரபுத்தி பாரதி தனது இந்தியா' இதழில் போட்ட பாரதமாதா படத்தில் 'பாரத மாதா உயர்சாதி / உயர்வர்க்கப் பெண்ணின்
Page 57
94 O கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம்
அடையாளங்களுடன் (உடை உருவத் தோற்றம் உடல் வண்ணம்) உருவாக்கப்பட்டது' அந்த வகையில் அது ஏனைய வகுப்பினர் அடையாளங்களை அழிக்கும் எத்தனிப்பு' என்பதுபோல சாதிய நோக்கில் பார்ப்பதில் எமக்கு உடன்பாடு இருந்ததில்லை.
இத்தகைய தவறான விளக்கத்தைக் கொண்டிருக்கும் அ. மார்க்ஸ் 'தமிழ் நவீனமான கதை' பற்றிய கட்டுரையொன்றில், 'தொகுத்துப்பார்க்கும் போது பார்ப்பனிய மரபை மறுத்தல், அழகியலினிடத்தில் அரசியலை வைத்தல், 'படைப்பில் புனிதத்துவத்தை அழித்தல், மக்களிடம் நிறைந்துள்ள எதிர்மரபுக் கூறுகளைத் தேடுதல், ஒழுங்கமைவுகளைச் சிதைத்தல் போன்றவற்றை உண்மையான நவீனமயமாதலின் அடையாளங்களாகக் கொண்டால் தமிழில் நவீனத்துவமென்பது 1980களின் பிற்பகுதியில் முளைவிட்டு தொண்ணூறுகளில் அரும்பத்தொடங்கியுள்ளது எனலாம். ' என்று குறிப்பிடுகிறார். முன்னே மணிக்கொடிக்காரர்களிடம் நவீனத்துவத் தொடக்கம் முளைவிட்டதாகக் கூறிய அ. மார்க்ஸ் அந்த மணிக்கொடிக் காரர்களிடம் வெள்ளாளக் குணாம்சத்தைக் காண்கிறார்; அதன் காரணமாகவே "உண்மையான நவீனத்துவத்தை எண்பதாம் ஆண்டுகளுக்கு கொண்டுவருகிறார். இத்தகைய பார்வைத் 'தெளிவு' இருக்கும்போது இத்தகைய தலைப்புடைய கட்டுரையொன்றில் 'பிராமணரான பாரதியை அ. மார்க்ஸ் எப்படி ஓரிடத்திலாயினும் நினைவுபடுத்தியிருக்கமுடியும். தூய தலித்திய உணர்வடைய அவர் பாரதியைத் தீண்டத்தகாதவராக்கிவிட்டது ஆச்சரியமுடையதல்ல. அவரே தொகுத்துக் கூறியவற்றைப் பார்த்தாலும் 'பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே' என்று கூறி, அரசியல் இலக்கியமே மூச்சாகக்கொண்டு, உயர்வு தாழ்வுக்கெதிராகக் குரலெழுப்பி பாதகங்களை மோதி மிதித்துவிடும்படி வாழ்வாலும் வழிகாட்டிய பாரதியே நவீனத்துவத்தின் முன்னோடி என்ற அரிச்சுவடி புரியும்.
'பாரதிக்கு முன்னரே சில நவீன இலக்கிய வடிவங்கள் தோன்றிவிட்டதெனினும் பாரதிக்கு பின்னரே நவீன இலக்கிய வடிவங்கள் இக்காலத்துக்குரியனவென மேலாண்மையுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவ்வுண்மையிலும் பார்க்க மிக முக்கியமான வரலாற்றுண்மை பாரதி காலத்தின் பின்னர் பாரம்பரியத் தமிழிலக்கியம். விழுந்தது தான். 1879இல் முதல் தமிழ் நாவல் தோன்றிவிட்டாலும் அது அப்பொழுதே கால இயைபுடைய இலக்கியவடிமாக முற்று முழுதாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை. பாரதியின் பாடல்கள் தோன்றிய பின்னர் அவை வரவேற்கப்பட்ட முறையில் காலத்துக்கேற்ற இலக்கியம் இவைதான் என்ற ஏற்புடைமை ஏற்பட்டது' என்று கூறுவதன்வாயிலாக இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தி தமிழ் இலக்கியத்தை முழுமையாய் நவீனத்துவத் தடத்தில் ஆற்றுப்படுத்தியது பாரதியே என்பதைக்காட்டும் பேராசிரியர் சிவத்தம்பி, மணிக்கொடியின் பங்களிப்புக் குறித்து பி.எஸ். ராமையா, 'பாரதியார் தமிழின் மகாகவி இலக்கியப் பேராசிரியன் என்று தமிழ்
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் O 95
மக்களை உணர வைத்ததுதான் அதன் பெரிய சாதனை' என்று கூறியதைக்காட்டும் போது * மணிக் கொடி எவ்வாறு பாரதியத்தின் ஒருவகைத் தொடர்ச்சியாகிறது என்பதையும் அதற்கான வேறு ஆதாரங்களுடன் வலியுறுத்துகிறார்.
வரட்டுதனமான பிராமண எதிர்ப்பு அ. மார்க்ஸை இத்தகைய உண்மைகளின் பக்கம் கவனஞ் செலுத்த முடியாமல் தடுத்துவிடுகிறது. அவரும் அவர் போன்றோருங் காட்ட முயல்வது போல பிராமணர் எதிர் திராவிடர் எனும்போது தமிழ்ப் பிராமணர்களைப் பலநூறு ஆண்டுகளின் முன்னர் வந்த அதே ஆரியர்களாகக் காண நேரும். ஆரியர்கள் வருகைக்கு முன்பே வடஇந்தியத் திராவிடர்கள் (சிந்து வெளிப்பண்பாட்டினர்) வர்க்கங்களாகப்பிளவுபட்டு கருத்தியல் ரீதியான கடவுட் கோட்பாட்டைக் பெற்றிருக்கக்கூடும் எனக் கருதத்தக்க வகையில் விக்கிரக வழிபாடு, கோயில் ஆகியவற்றுடன் அவற்றுக்குரிய கிரியைகளோடு பூசாரிகளைக் கொண்டிருந்தார்கள். 'இந்தப் பூசாரிகளும் ஆரியப் பிராமணர்களும் இணைந்தே வைதிதசமயத்தின் பிராமணர்கள் தோற்றம் பெற்றனர் என்பார் டி.டி. கோசாம்பி * ரிக்வேதகால ஆரியப் பிராமணர்கள் விக்கிரக வழிபாட்டையும் லிங்க வழிபாட்டையும் வன்மையாக எதிர்த்தவர்கள்; அந்த வகையில் அவை பிரதிஷ்டை செய்யப்படும் கோயிலை அறியாதவர்கள் சிந்துவெளியினரின் 'உயிர்களின் தலைவராய் யோகநிலையிலுள்ள கடவுள்' போல ஒன்றை நோக்கி வந்தடையாதவர்கள்; இயற்கைசார்ந்த அனைத்தையுமே வழிபட்டவர்கள் இத்தகையவர்கள் கோயில், விக்கிரகம், லிங்கம், யோகநிலைக்கடவுள் என்பவற்றை ஏற்றபோது அவற்றுக்கேயுரிய பூசாரிகள் என்ன ஆனார்கள்? இந்த மாற்றத்தூடே ரிக்வேதப் பண்பாடும் சிந்துவெளிப் பண்பாடும் இணைந்தபோதே ஆரிய திராவிடப் பூசாரிகளும் இணைந்தனர். பின் வந்த பிராமணரை ஆரியர்கள் என்பது இந்த வகையில் அர்த்தமற்றதாகிறது. தமிழகம் வந்த இந்த இணைப்பாளர்கள் இங்கும் கலப்புக்குப் பின்னின்றதில்லை. அந்த வகையில் திராவிடர்களின் ஒரு பிரிவினரேயான பிராமணர்களை ஆரியர்கள் என்பதும் அவர்களெல்லோருமே திராவிடர்களுக்கு எதிரானவர்கள் எனக்காட்டுவதும் மிகமோசமான அபத்தம். திராவிடரியக்கத் தளமான வெள்ளாளர்களின் மூதாதையரான சேர, சோழ, பாண்டிய வேளிர்குலத் தலைவர்களால் தமது மேலாண் மையை நிலைநிறுத்த உதவிக்கு ஏற்கப்பட்டு இருத்தப்பட்டவர்களே பிராமணர்கள். இப்போது பிராமண- வெள்ளாள மேலாண்மை யாளர்களுக்கு எதிராகவே போராடுவதாகக் கூறுகிறவர்கள், அதற்காகப் பெரியாரியத்தில் இட்டு நிரப்பப்பட வேண்டிய விடயங்கள் பற்றி ஆராய்வது “ அவர்களுக்கேயுள்ள போதாமையைத்தான் காட்டுவது.
பெரியாரியத்தின் வரலாற்றுப்பங்களிப்பு நிறைவெய்திவிட்ட ஒன்று. அதன் வெள்ளாளச் சார்பைத்துடைத்துவிட்டு இனித் தீண்டாமை ஒழிப்புக்காக அதைக் கொண்டு வருவதற்கான அதன் பலத்தைவிடவும் பலவீனங்கள் மிகுதியானவை. அந்த வரலாற்றுத் தேவையை
Page 58
96 O கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம்
வர்க்கப்போராட்டக் கோட்பாட்டைத்தரும் மார்க்ஸிஸம் மட்டுமே தரமுடியும்.
இவ்விடத்தில், திராவிடரியக்கம் அப்படியொன்றும் வெள்ளாளரியக்கமல்ல என்ற குரல் பற்றிப்பார்த்துச் செல்வோம். குறைந்த தொகையினரான "சுயமரியாதை இயக்கச் சார்புடையவராகக் கருதப்பட்ட சீர்திருத்தச் சைவர்' எந்தவரை சுயமரியாதை இயக்கத்தினருடன் கை கோர்த்து வந்தனர், எங்கே முரண்பட்டு எதிரணிக்குப் போயினர் என்பதைக்காட்டும் ஆ.இரா.வேங்கடாசலபதியின் திராவிட இயக்கமும் வேளாளரும் எனும் அரியநூல் நோக்கத்திற்கு இணைவான தலைப்பைப்பெறத் தவறியதால் தவறான கணிப்பை வெளியிடுவதற்கு காரணியாகியிருப்பதைக் காணமுடியும். 'திராவிட இயக்கமும் சைவ வேளாளரும்' எனத் தலைப்பு அமைந்திருப்பின்கூடப் பொருந்தியிருக்கும். வேளாளர் எல்லோருமே சைவ வேளாள இயக்கச்சார்பினர் என்று எப்படிக் கருத முடியும்? திராவிட இயக்கத் தலைவர்கள் பெரும்பாலும் வேளாளர் சமூகத்தினர் என்பதையோ திராவிட இயக்கப் போக்கில் வேளாளர் சார்பே முனைப்புப்பெற்றிருந்தது என்பதையோ மறுக்கத்தக்க ஆதாரங்களைத் தராத நிலையில் 'திராவிட இயக்கத்திற்கும் சைவருக்குமான உறவை வரலாற்று மாற்றங்களோடு அதனதன் குழலில் பொருத்தி ஆராயாமல், பொத்தம் பொதுவாகத் திராவிட இயக்கம் வேளாளர் இயக்கம் என்று சொல்வது பகுதியுண்மை என்ற தகுதியைக்கூடப் பெறமுடியாது.'' என்று வேங்கடாசலபதி எப்படிக்கூறமுடியும்? 'சைவர்' மட்டும்தான் வேளாளர் நலன் பேண முடியுமா? 'சுயமரியாதை வேளாளர் வேளாள நலன் பேணக்கூடாதென்று ஏன் வேங்கடாசலபதி தடைவிதிக்க வேண்டும்?
வேளாளர்கள் சைவ இயக்கத்திலுமிருந்தனர், சுயமரியாதை இயக்கத்திலுமிருந்தனர். வேளாள வெகுஜனத் திரளினர் தமக்கு வேண்டிய தருணத்திற்கு ஏற்ப இரு இயக்கங்களையும் ஆதரித்தனர். "தலித் தோழமை மையம்" என்ற ஸ்தாபனத்தைச் சேர்ந்த டி.என். கோபாலன் "நான் அறிந்த வரை, பெரியார் முன்னிலைப்படுத்தியது பார்ப்பன எதிர்ப்புதான், சாதி ஒழிப்புக்கூட அப்புறம்தான். பிராமண அதிகாரத்தை வேறோடு அறுத்ததில் அவருக்கு ஒரு பங்களிப்பு இருக்கிறது. மற்றபடி தலித்துகள் பெரியார் இயக்கத்திலிருந்து விலகியே இருந்தனர். தி.மு.க. ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்கள் வலிமையான நிலைகளை அடைந்திருக்கின்றனர். தலித்துகளின் ஒட்டுகள் எம்.ஜி.ஆருக்குப் பிறகுதான் திராவிட இயக்கத்திற்கு வந்திருக்கிறது' எனக் கூறுவதுடன் 'திராவிட இயக்க ஆட்சியில் தலித்துகள் மீது பிற்படுத்தப்பட்டோர் தாக்குதல்கள்' அதிகமாக இடம்பெற்ற போது பெரியாரின் நிலைப்பாடு குறித்தும் கேள்வி எழுப்புகின்றார். * அத்தகைய தாக்குதல்களிற் சிலவற்றைப் பெரியார் கண்டித்திருப்பினும் , வெள்ளாளர் தலைமையிலான பிற்படுத்தப்பட்டோரிலிருந்து வேறான அரசியல் நிலைப்பாடுகளோடுதான் ஒடுக்கப்பட்டோர் இருந்தனர் என்பதையே வரலாறு காட்டி நிற்கின்றது.
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் O 97
பெரியார் சாதியமைப்பின் தகர்வை சுரண்டலமைப்பின் தகர்வுடன் இணைத்து நோக்கி சமதர்மத்திற்காக பிரச்சாரம் செய்தது முப்பதாம் ஆண்டுகளுக்குள் தொடங்கி முடிந்துவிட்ட ஒன்று. இருபதாம் ஆண்டுகளில் காங்கிரஸின் சோஷலிஸ் அணியினராக இருந்த ப. ஜீவானந்தம் போன்ற பாட்டாளி வர்க்கத்தலைவர்கள் முப்பதாம் ஆண்டுகளில் சுயமரியாதை இயக்கத்துள் இயங்கமுடிந்தது இக்காரணத்தினாலேயே. ஆயினும் இந்தப்பண்பு தொடர்ந்து நிலவவில்லை. அரசு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கமுடியாத நிலையில், சமூக மாற்றப் பிரசாரங்களை ஒதுக்கிவிட்டு பிராமணிய எதிர்ப்பு இயக்கமாக ஒடுங்கும் நிலைக்கு சுயமரியாதை இயக்கத்தை பெரியார் வழிநடத்தி விட்டார்.
இத்தகைய மாற்றங்குறித்துச் 'சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமையும்' என்ற நூலில் ஆய்வு செய்த கோ. கேசவன் 'இயக்கத்தின் வர்க்க அடித்தளம் முதலாளிய நோக்கிலானது. இயக்கத்தில் ஜனநாயக நடைமுறை இல்லை. சமதர்மப் பிரச்சாரம் பெரியாராலேயே கைவிடப்பட்டது; இயக்கம் கூடி முடிவெடுத்துக் கைவிடவில்லை. இத்தகைய இயக்கத்தின் தலைமை கவர்ச்சி வாதத்திற்கு ஆட்பட்டு சமதர்மத்தின் மீது விருப்பம்கொள்கின்றபொழுது அதைப்பயன்படுத்திக் கொள்ள முடியும். இயக்கத்தைத் திறனாய்வு செய்து வென்றெடுத்துவிட முடியாது. மேலும் பொதுவுடைமையர் தமக்கென்று ஒரு தனித்த அமைப்புக் கட்டி, அந்த அமைப்பின் வலுவில் இன்னோர் அமைப்பின் இடதுசாரி சக்திகளாகச் செயற்படுகிறபொழுது அதற்குரிய பயன் இருந்திருக்கும். அதுவன்றி, ஏதாவது வேறு ஓர் அமைப்புக்குள் மட்டுமே செயல்படுதலை நோக்கமாகக் கொள்கின்றபொழுது அதற்குரிய பயன் இருக்காது " எனக் கூறுகின்றார்.
இவ்வாறு காங்கிரஸினுள்ளும் சுயமரியாதை இயக்கத்தினுள்ளும் செயற்பட்டுப் பொதுவுடைமை அமைப்பு ஸ்தாபிதத்துக்காக பிரச்சாரச் செயற்பாட்டில் இயங்கியவர்கள், அதற்கமைவான இயக்கங்களாக அவை இல்லாத வரலாற்று அனுபவங்களின் விளைவாகவும் இந்திய தேசியவாத சக்திகளினதும் (காங்கிரஸ்) தமிழ் இனத் தேசியவாத சக்திகளினதும் (சுயமரியாதை இயக்கம்) வாலாகப் பாட்டாளி வர்க்க இயக்கம் அமைந்துவிடமுடியாது என்று அறிந்ததாலுமே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் நாட்டிலும் உதயமானது. சுயமரியாதை இயக்கம் சோசலிசப் பிரச்சாரத்திலிருந்து 1936ஆம் ஆண்டுடன் பின்வாங்கிவிட்டதை கோ. கேசவன் காட்டியிருந்தார். 'இந்திய கம்யூனிச இயக்க வரலாறு' எனும் நுாலின் ஆசிரியர் அருணன் 1935 இன் பிற்பகுதியில் சென்னையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்திற்கு முன் முற்போக்கு மாநாடு' நடைபெற்றமையையும் அங்கே இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் - சுந்தரய்யா சந்திப்பையும் , 1937 இல் நால்வரைக் கொண்ட குழு ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையாகச் செயற்பட்டமையையும் விரைவில் அவர்களுடன் பி. ராமமூர்த்தி பி.சீனிவாசராவ், ப.ஜீவானந்தம் ஆகியோர் இணைந்தமையையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
Page 59
98 கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம்
சுயமரியாதை இயக்கத்தின் போதாமையே சோசலிச இயக்கத்திற்கான இன்னொரு அணியின் உருவாக்கத்திற்குக் காரணமாகியது. அதற்குப் பிந்திய ஏறத்தாழ அரைநூற்றாண்டு கால வரலாறு பெரியாரிஸத்தின் சரிவுகளையும் சில சாதகமான மாற்றங்களோடு பல பாதகமான தாக்கங்களையுமே ஏற்படுத்திவந்திருக்கிறது. இன்று மீண்டும் அதே பெரியாரிஸத்துக்குப் புத்துயிர்ப்புக் கொடுக்க என்ன அவசியம் ஏற்பட்டுவிட்டது? பெரியாரிசம் ஏற்படுத்தித் தந்த சாதகமான படிவளர்ச்சியில் ஊன்றிநின்று அதன் அடுத்தகட்ட வளர்ச்சியான மார்க்ஸிய இயக்கச் செயற்பாட்டின் சரியான பக்கத்தில் முன்னேறிப் பிரயோகத்தில் ஏற்பட்ட தவறுகளைத் திருத்தி, அடுத்த கட்டம் நோக்கி வளர்வதை விடுத்து, முப்பதாம் ஆண்டுகளுக்குச் சரிந்துவிடத் தம்மை மார்க்ஸியர்களாகக் கூறும் அ. மார்க்ஸ் போன்றோர் முயல்வது ஏன்?
இது மார்க்ஸியத்திலிருந்து தலித்தியம் நோக்கிய விலகலின் விளைவு. அங்கே ஜெயமோகன் 'தூய கலைப் பிராமணியத்திடம் " தன்னை இழக்க இங்கே தலித்தியத்தினுள் அ. மார்க்ஸ் மறைந்து கொண்டிருக்கின்றார். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக தலித்தியம் துலங்குவதாகக் கூறிக்கொண்டு அதற்குக் குரல் கொடுக்கும் முழு உரிமையையும் தாமே முழுக் குத்தகைக்கு எடுத்துவிட்டதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டு உண்மையான தலித் மக்களின் விடுதலைக்கு மார்க்கம் காட்டும் வர்க்கப் போராட்டத்தின் பக்கம் அவர்களின் வளர்ச்சி அமைவதைத் தடுக்கும் வகையில் முன்னேறும் தலித் சக்திகளை வெறும் தன்னார்வக் குழுக்களாய் முடக்கும் கைங்கரியத்தையே அ.மார்க்ஸ் போன்றோர் செய்கின்றனர்.
தனது தலித்திய தத்துவ இறக்குமதியே உண்மையான நவீனத்துவத்தைக் கொணர்ந்ததாகக் காட்டலே, எண்பதுகளின் பின் தமிழுக்கு நவீனத்துவம் வருவதாக அவர் வாதிடக் காரணமாகிறது. மேலே அவர் தொகுத்துக் காட்டியதில் ஒழுங்கமைவுகளைச் சிதைத்தல் என்பது மட்டுமே தனித்துவம் பெறும் கருத்தரங்கமாகும். சாதியத்தைத் தகர்த்ததிலிருந்து இலக்கியப் புனிதத்துவத்தைக் குழிதோண்டிப் புதைத்து அரசியல் இலக்கியத்திற்கு வழிகோலியது வரை பாரதி எட்டிய உயரத்தை மணிக்கொடியினரிலிருந்து அ. மார்க்ஸ் வரை இன்னமும் யாரும் தொட்டுவிடவில்லை. (வேண்டுமானால், பாரதிக்கு கொடுக்கப்படும் இந்தளவு முக்கியத்துவம் அபத்தமானது என கவிஞர் அப்துல் ரகுமான் போல் கூறிவிட்டுப் பேசாமல் இருக்கலாம்).
ஒழுங்கமைவுகளைப் பொறுத்தளவில் ஏகாதிபத்திய-பார்ப்பனிய ஒழுங்கமைவுகளைச் சிதைப்பதிலும் பாரதி முன்னோடியாக இருந்திருக்கிறார். காந்தி போன்ற தலைவர்கள் கனவிலும் நினையாமலிருந்த போதே தீர்வை மறுத்தலைப் பிரேரித்தார்,எல்லோருமே பூனூலை அறுத்து அனைவரும் சமனாய் உழைத்துண்டு வாழ வேண்டுமென்றார்; அதன்படி, தனது பூனூலை அறுத்தெரிந்தார், வேத
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் O. 99
மந்திரத்திலும் பூனூலிலும் புனிதத்துவம் பற்றிய கருத்தியலைத் தகர்க்கும் வகையில், தாழ்த்தப்பட்டவரான கனகலிங்கத்திற்குப் பூனூலை அணிவித்து வேதத்தையும் ஒதச் செய்தார். இவற்றின் வாயிலாக சகல ஒழுங்கமைவுகளையும் அவர் ஒழித்துவிடவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒரு ஒழுங்கமைவுக்காக அவர் குரல் கொடுத்து வந்திருக்கிறார். ஒடுக்கும் வர்க்கத்தினரின் அடக்கு முறைகளைத் தகர்க்கும் அதே நேரத்தில் ஒடுக்கப்படுவோர் தமக்கான எஃகு போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு ஒன்றினூடாக மட்டுமே மனிதகுல விடுதலையை ஈட்டித் தரமுடியும்; ஒடுக்குமுறையாளர்களால் தம் மீது ஏவப்படும் ஒழுங்கமைவுச் சுமைகளையும் சுயத்துவத்தை இழக்கச் செய்யும் கொடுமைகளையும் முறியடிக்க முடியும். சுரண்டுவோரை அடக்கி, அவர்களது பணபலம், ஆயுதபலம், மரபுப் பிடிப்பு ஆகியவற்றை முறியடித்து சமுதாயத்தைக் கட்டியெழுப்ப, மக்களுக்கான ஒழுங்கமைப்பு ஒன்று புதிதாய்த் தேவை. அதுதான் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் (இன்றைய பொருளில் மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம்).
ஒருவர் மார்க்ஸியவாதியா இல்லையா என்பதற்கான உரைகல் அவர் மார்க்ஸிய வசனங்களை எவ்வளவு பாண்டித்தியத்தோடு உச்சாடனம் செய்கிறார் என்பதிலில்லை. தமக்கெனச் சுதந்திரமாக உழைக்கும் சமாதான குழலை மக்களுக்கு வழங்கும் ஒழுங்கமைவாகிய பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை (மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்தை) அவர் ஏற்கிறாரா இல்லையா என்பதே அதன் உரைகல், ஏற்பவர் மார்க்ஸியவாதியாவார்; மறுப்பவர் மார்க்ஸ் தன் காலத்தில் எதிர்த்துப் போராடிய அராஜகவாதியாக இருப்பார்.
மிகுந்த தடுமாற்றங்களோடும் குழப்பத்துடனும் அ. மார்க்ஸ் உதிர்க்கும் தத்துவ முத்துக்கள் இவை. 'ரசியாவில் சோசலிச உறவுகள் இல்லை என்பதை நான் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றேன். இந்த சோஷலிச உறவுகள் ஏற்கனவே லெனின் காலத்திலும் ஸ்டாலின் காலத்திலும் நிறுவப்பட்டுப் பின்னர் சீரழிந்ததாக நான் கருதவில்லை. சோசலிச உறவுகள் அதன் உண்மையான பொருளில் என்றுமே நிலைநாட்டப்படவில்லை. பாட்டாளி வர்க்கம் அதன் உண்மையான பொருளில் என்றைக்கும் ஆளும் வர்க்கமாக மாறவில்லை என்றும் நான் கருதுகிறேன். புரட்சிக்குப்பின் தான் உயிரோடிருந்த சில ஆண்டுகளில் இவை இரண்டையும் நிலை நாட்டிவிட்டதாக மாமேதை லெனின் எங்குமே உரிமை கொண்டாடவில்லை என்பதை அவரது இறுதிக்கால எழுத்துக்களைக் கூர்மையாகப் படிப்போர் உணரமுடியும். உடைமைகளைச் சமூகமயமாக்குவது தனி உடைமைகளை ஒழிப்பது ஆகியவை மட்டும் சோஷலிச உறவுகளை நிலைநாட்டுவதோ, பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கமாக ஆக்குவதோ ஆகிவிடாது என்பதில் லெனின் உறுதியாக இருந்தார். நாம் முதலாளியப் புரட்சியின் வேலைகளைத்தான் செய்திருக்கிறோம். சோஷலிச உறவுகள் நிலை நாட்டப்பட்டதாக எந்தக் கம்யூனிஸ்ட்டும் மகிழ்ந்துவிடக்கூடாது. பாட்டாளி வர்க்கத்திற்கான
Page 60
100 () கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம்
ஆட்சியைத்தான் நாம் சமைத்திருக்கிறோமே யொழிய பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சியை நாம் இன்னும் உருவாக்கிவிடவில்லை என்றெல்லாம் சொன்னார்; தொழிற் சங்கங்களின் மேலாண்மை பறிபோவதையும் கட்சி அதிகார வர்க்க மயமாக்கப்படுவதையும் மிகவும் வேதனையோடு கண்டித்தார். ' 12
சுருங்கக்கூறின் 'சோஷலிசம் எப்போது வீழ்ச்சியடைந்தது?" என்று கேட்டால் அ. மார்க்ஸ், 'சோஷலிஸ் நாடு எதுவுமே உலகில் தோன்றியதில்லை என்று லெனின் சாவதற்கு முன் சொல்லியிருக்கிறார்" என்பார். அந்தவகையில் 'லெனின் எப்போது செத்தார்?' 'லெனினா, அப்படியொருவர் பிறக்க வேயில்லையே' எனும் 'சொல்லாடலை " இவ்விடத்தில் பிரதியீடு செய்ய முடியும்.
லெனினின் 'அரசும் புரட்சியும்' முதல் அக்டோபர் புரட்சியின் பின்னால் அதன் சாதனைகள் குறித்துக் கூறியனவரை லெனின் ஆக்கங்களில் சோஷலிஸத்தின் இரண்டு கட்டங்கள் பற்றிச் சொன்னதையும், இளம் சோஷலிஸ்டுகளுக்கு அவர் வலியுறுத்திய பணிகள் பற்றியும் எவரும் அ.மார்க்ஸிடம் எதுவுமே கேட்க முடியாது; கேட்டால், லெனின் என ஒருவர் பிறக்கவேயில்லையென்று அவர் சொல்லிவிடக்கூடும். இப்போது அவர் மேலே தயங்கித் தயங்கிக் கூறியதுபோல பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கோட்பாட்டை ஏற்கவில்லை என்பதற்கு சுற்றிவளைத்து எதையும் சொல்ல வேண்டிய நிலையில் அ. மார்க்ஸ் இல்லை. லெனின் தலைமையில் போல்ஷெவிக் கட்சி ஒக்டோபர் புரட்சிவாயிலாக நிறுவிய, பாட்டாளி வர்க்க அரசு கட்டியெழுப்ப முனைந்த, புதிய ஒழுங்கமைவுகள் உட்படச் சகல ஒழுங்கமைவுகளையும் தகர்க்க அமைப்பியல் பேசும் அராஜகவாதியாக அ.மார்க்ஸ் சரிந்துவிட்டார். சறுக்கத் தொடங்கிவிட்டால் சகதிக்குள் போய் விழுவதற்கு முன்னர் இடையில் நின்றுவிடமுடியாது என்று லெனின் சொன்னது சரிதான். ' w
இவ்விடத்திற் குழப்பத்தை தவிர்க்குமுகமாக, சோஷலிஸ் நிர்மாணத்தின் பொருட்டு 'சோவியத் அரசாங்கத்தின் உடனடிப்பணிகள்' குறித்து லெனின் சொல்லும் இந்த வார்த்தைகள் கவனிக்கப்படவேண்டியன: 'இன்று ஸ்தூலமாய்ச் செயல்படுத்தப்பட்டு வரும் வடிவில் சோவியத், அதாவது பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தின் சோஷலிசத் த்ன்மை, முதலில் உழைப்போரும் ஒடுக்கப்பட்டோருமான மக்களே தேர்ந்தெடுப்போராய் இருப்பதிலும் முதலாளித்துவ வர்க்கத்தினர் விலக்கப்பட்டுள்ளதிலும் காணக்கிடக்கிறது. இரண்டாவதாக, தேர்தல்களின் எல்லா அதிகாரவர்க்க முறைமைகளும் தடைவரம்புகளும் ஒழிக்கப்பட்டிருப்பதிலும், மக்கள் தாமே தேர்தல்களின் கிரமத்தையும் காலத்தையும் நிர்ணயித்துக் கொள்வதிலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எவரையும் திருப்பியழைக்கப் பூரண உரிமையுடையோராய் இருப்பதிலும் காணக்கிடக்கிறது. மூன்றாவதாக, உழைப்பாளி மக்களின் முன்னணிப் படையின், அதாவது
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் () 101
பெருவீதத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் பாட்டாளிவர்க்கத்தின் சிறந்த வெகுஜன ஒழுங்கமைப்பு தோற்றுவிக்கப்படுவதில் அது காணக்கிடக்கிறது. இந்த வெகுஜன ஒழுங்கமைப்பு பாட்டாளி வர்க்கம் சுரண்டப் படுவோரான பெருந்திரளான மக்களுக்குத் தலைமை தாங்கி அழைத்துச் செல்லவும், சுயேச்சையான அரசியல் செயல்பாட்டில் அவர்களை ஈடுபடும்படி ஈர்க்கவும், அவர்களுடைய சொந்த அனுபவத்தின் வாயிலாகவே அரசியல் வழியில் அவர்களுக்கு போதமளிக்கவும் வகைசெய்கின்றது. மக்கள் அனைவரும் நிர்வாகக் கலையைக் கற்கவும் நிர்வகிக்கத் தொடங்கவும் இவ்வாறு முதன் முதலாய் முற்படுகிறார்கள்.'
இத்தகைய உழைக்கும் மக்களுக்கான புதிய ஒழுங்கமைவு நோக்கி வளர்வதற்காக, வெகுஜனத்திறளை ஆர்வத்துடன் அரசியல்- நிர்வாகச் செயற்பாட்டில் ஈடுபடுத்துவதும் முதலாளி வர்க்கத்தினரை அடக்கி வைத்திருப்பதுமான பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் ஸ்டாலின் காலம் முழுமையும் நடைமுறையில் இருந்தது. அக்காரணத்தால் உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வு வளங்கொழித்து பொருளுற்பத்தித்துறையிலும் ஆன்மீகவிருத்தியிலும் பண்பாட்டு விழுமியங்களிலும் மிகவேகமான முன்னேற்றம்ஏற்பட்டுவந்தது. ஸ்டாலின் மறைவுக்குப்பின் அதிகாரத்துக்கு வந்த குருஷ்சேவ் சோஷலிசத்துக்கெதிரான தனது போர்ப்பிரகடனத்தின் முன் முயற்சியாக, "ஸ்டாலின் சர்வாதிகாரம்' என்ற பெயரால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கெதிராகப் போர்பிரகடனம் செய்தார். முதலாளித்துவ மீட்சிக்கு அவர்க் கொண்டிருந்த சக்திகளுக்கு புத்துயிர்ப்புக் கொடுத்து அவர்களின் அரசியலதிகாரங்களை அங்கீகரித்து அரங்கில் செயலாற்ற இடங்கொடுக்கும் வகையில் சுரண்டுவோர்க்கும் சுரண்டப்படுவோர்க்கும் இடையிலே சமாதான சகஜீவனம் பற்றிப் பேசினார். சுரண்டுவோர் அரசியலதிகாரம் பெற்று ஓரிரு தசாப்தங்கள் கடப்பதற்கு முன்னரே, 'சமாதான சகஜீவனம்' குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. இன்று யெல்ற்ஸின் தலைமையில் சுரண்டுவோர் உழைக்கும் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கம்டவிழ்த்துவிட்டனர். இந்த அனுபவங்களின் பின்னர் ருஷ்ய வெகுஜனத்திரள் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் மீள வரவேண்டும் என்பதை உலக அரங்குக்கு தனது ஆர்ப்பாட்டங்கள் வாயிலாக வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டது.
இத்தகைய பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் முதலாளித்துவ மீட்பாளர்களான குருஷ்சேவ் முதல் கொர்பச்சேவ் வரையிலான துரோகிகளுக்கும் யெல்ற்ஸினுக்கும் கிளிண்டனுக்கும் வேம்பாக இருக்கலாம், இருக்க வேண்டும். சரி. அ. மார்க்ஸ் ஏன் அதுபற்றி இவ்வளவு மிரள வேண்டும்? அவர் வழுக்கிச் செல்வது அந்த முகாமுக்கு என்பதனாலா?
இப்படிச் சொல்வதின் பொருள் அ. மார்க்ஸ் போன்றோர் பெருமுதலாளி வர்க்கத்தின் பிரதிநிதிகள் ஆகிவிட்டனர் என்பதல்ல. அந்தப்
Page 61
102 0 கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம்
பெருமுதலாளிவர்க்கம் தனக்கான ஒரு ஒழுங்கமைவை விரும்பும். அது பெற்ற வளர்ச்சியின் மட்டம் இன்றைய பின் - நவீனத்துவத்தை அடைந்த காலத்திலேயே சமூக ஒழுங்கமைவுகள் மிகவுஞ் சிதைந்து கலாசார சீரழிவுகள் கேவலமான கீழ்நிலையை நோக்கி விரைகையில் மனித உறவுகளும் நாசமடைகின்றன. சகல ஒழுங்கமைவுகளையும் தகர்ப்பதான அ. மார்க்ஸ் பிரதிநிதித்துவப்டுத்தும் இக்கட்டம் அவர் சொல்வது போல நவீனத்துவமல்ல; பின் - நவீனத்துவமே.
அற்பத்தனமான சிறு முதலாளி வர்க்கத் தத்துவங்களிடம் தன்னை இழந்து நிற்கும் அ. மார்க்ஸ் இந்தக் கட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி சகல ஒழுங்கமைவுகளையும் தகர்க்கும் அராஜகவாதியாகிவிட்டுள்ளார். அக்காரணத்தால் பாட்டாளிவர்க்க அரசையும், அதன் தலைமையில் முதலாளித்துவம் இன்றுவரை மோசமாகச் சிதைந்துவரும் (மனிதசமூகம் வளர்த்துவந்த) விழுமியங்களை மீளப்பெற்று வளர்க்கவல்ல மக்களுக்கான ஒழுங்கமைவு ஏற்படுவதையும் அ.மார்க்ஸ் எதிர்க்கின்றார்.
ஜெயமோகன் போன்றோர் மரபுசார் கலாச்சாரத்திடம் அடைக்கலம் புக அ. மார்க்ஸ் போன்றோர் எதிர்-கலாச்சாரத்திடம் தங்களுக்கான அடையாளத்தைத் தேடுகின்றனர். உழைக்கும் மக்கள் ஒய்வொழிச்சலின்றி உழைத்து ஓடாகும்போது அந்த உழைப்பைச் சுரண்டிய ஆளும் கும்பல், தாம் உழைக்காது ஓய்வு நேரத்தைத் தாராளமாகப் பெற்றநிலையில் உருவாக்கி வளர்த்தது உயர் கலாச்சாரம், அந்த வகையில் அக்கலாச்சாரத்துக்கு உரமாகியவர்கள் உழைக்கும் மக்களே. தஞ்சைப் பெருங்கோயில் தமிழர் கலாச்சாரத்தின் மணி மகுடமென்றால் அதைக் கட்டுவித்தவர் பெயராலேயே அது அழைக்கப்படுவது என்பது அந்தக் கட்டத்தின் ஆளும் வர்க்கத்தின் கலாச்சாரச் சின்னமாக அது துலங்குவதாலேயே கட்டிடக் கலைஞனின் பெயரோ, சிற்பிகளின் பெயர்களோ கட்டியெழுப்பிய மக்களின் விபரங்களோ அவர்களைப் பொறுத்தவரை அவசியமற்றன. ஆயினும் கவிஞர் இன் குலாப் அந்த உழைப்பாளர் சார்பாக குரல் எழுப்பும் போது, அதில் அங்கே அந்தக் கலாச்சார உருவாக்கத்தில் உழைக்கும் மக்களுக்கு இருந்த பங்களிப்பு அதில் உரிமை கோரலும் மறைமுகமாய் அடங்கியிருக்கிறது. அதே வேளை, அந்த உயர் கலாச்சாரம் அடக்குமுறையின் வடிவங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பதையும் எவரும் மறந்துவிடவுமில்லை. V
உழைக்கும் மக்களின் நேரமும் சுரண்டப்படுகிறதேயாயினும் கிடைக்கும் ஒய்வுநேரத்தில் மக்கள் தமக்கான கலை-கலாச்சார மரபுகளை உருவாக்கி விருத்திசெய்து பேணத் தவறவில்லை. அநேகமாக உழைப்போடு இணைந்தே அவை பரிணமிப்பன. நாட்டாரிலக்கியம், நாட்டுக் கூத்து, நாட்டுபுறக் கலை வடிவங்கள் அனைத்திலும் இந்த அம்சங்களைக் காணமுடியும். ஒடுக்குமுறைக்குள்ளான மக்களின் நாட்டாரியல் மரபுகள் இத்தகைய எதிர்க்கலாச்சார அம்சங்களை எப்படி
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் 0 - 103
வளர்த்து வந்துள்ளன என்பதைக் காட்டும் நாகுக்காகவும் மறைபொருளாகவும் ஆண்டைகளைக் கிண்டல் அடித்தபடியே வெளிக்கு அவர்களுக்கு பணிந்து கிடப்பதாகக் காட்டும் நாட்டாரியல் அம்சம் பற்றி அ. மார்க்சும் 'நாட்டார் இலக்கியங்களில் மோதலும் சமரசமும்' என்ற தலைப்பின் கீழ் ஆராய்ந்துள்ளார். ஒரு வகையான சமரசப் போக்கு தவிர்க்கவியலா வாழ்நிலை நிர்ப்பந்தம்தான். "
அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையைச் சகித்தபடி வளரும் எதிர்-கலாச்சாரம் சாராம்சத்தில் கொண்டிருந்த வெறுப்பின் அம்சங்களை வளர்த்து கலாச்சார ஆக்கிரமிப்புக்கு எதிரான போர்க் குரலாக ஆக்கப்பட்டதென்று அ. மார்க்ஸ் போன்றோரது கருத்து இந்த எதிர்க்கலாச்சாரம் சுரண்டலமைப்பின் இன்னொரு பக்கம், அவ்வளவே. அதே வேளை, உயர் கலாச்சார ஆக்கத்தில் மறைமுகமாகப் பங்கு செலுத்திய உழைக்கும் மக்கள் நேரடியாக உருவாக்கும் ஒரு கலாச்சாரமாகவும் இந்த எதிர்க்கலாச்சாரம் உள்ளது.
நம்மால் வேண்டப்படுவது சுரண்டலமைப்பைத் தகர்க்கும் ஆளுமையையும் துணிவையும் நம்பிக்கைகளையும் ஊட்டவல்ல புதிய கலாச்சாரம் தான். வெறும் வெறுப்புமட்டுமல்லாது சமூக அமைப்பை மாற்றவல்ல செயல் முனைப்பும் வேண்டும்.
எதிர்க்கலாச்சாரத்தின் பிரதிநிதிகள் பலநூறு ஆண்டுகளாய் மனிதகுலம் கட்டியெழுப்பிய கலாச்சாரக் கூறுகள் அனைத்தையும் துடைத்தெறிந்துவிட வேண்டும் என்கின்றனர். அவை மறைமுகமாக உழைக்கும் மக்களால் உருவாக்கப்பட்டவை (அதன் சுரண்டலம்சங்கள் மட்டுமே ஆளும் வர்க்கத்துக் குப் போய்ச் சேரத்தக்கன) என்பதை மறைத்துச் சுரண்டற் கும்பல் நிர்வகிப்பைச் செய்த போதிலும், இந்த உலகம் மறு படைப்புச் செய்யப்பட்டது முற்றாக உழைக்கும் மக்களால்தான். இனி, நிர்வகிப்புகளையும் தங்கள் கரங்களில் எடுத்துவிடப் போகும் உழைக்கும் மக்களே அனைத்துப் பண்பாட்டம்சங்களின் (அவற்றின் அடக்குமுறைக் குணாம்சங்களை தகர்த்தபடி) வாரிசுகளாவர். அப்போது வெறும் எதிர்க்கலாச்சாரமல்ல, புதிய-கலாச்சாரம் பரிணமிக்கும்.
'மனித குல வளர்ச்சி அனைத்தினதும் விளைவாகவும் தோற்று விக்கப்பட்ட கலாச்சாரத்தைப் பற்றிய துல்லியமான அறிவைக் கொண்டும் இந்தக் கலாச்சாரத்தை மாற்றியமைப்பதன் மூலமும்தான் நாம் பாட்டாளி வர்க்கக் கலாச்சாரத்தை தோற்றுவிக்க முடியும் என்பதைத் தெளிவாய் உணர்ந்தால் ஒழிய இப்பிரச்சினைக்கு நம்மால் தீர்வு காண இயலாது. பாட்டாளி வர்க்கக் கலாச்சாரம் மாயமாய் வெற்று வெளியினின்று தயாரிக்கப்படக் கூடியதல்ல; கம்யூனிசக் கலாச்சார நிபுணர்கள் என தம்மை அழைத்துக்கொள்வோர் கண்டுபிடித்துக் கொடுத்துவிடக் கூடியதுமல்ல. அவ்வாறு பெறலாம் என்பது அபத்தப்பேச்சு. முதலாளித்துவ சமுதாயம், நிலப்பிரபுக்களின் சமுதாயம், அதிகார வர்க்க சமுதாயம் ஆகியவற்றின் ஆதிக்கத்தில் மனிதகுலம்
Page 62
104 0 கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம்
சேமித்து வந்திருக்கும் அறிவுக் கருவூலத்தின் தர்க்கரீதியான வளர்ச்சியாகவே பாட்டாளி வர்க்கக் கலாச்சாரம் இருக்க முடியும். எப்படி அரசியல் பொருளாதாரம், மார்க்ஸால் திருத்தியமைக்கப்பட்ட வடிவில், மனித சமுதாயம் எதை வந்தடையப் போகிறதென்பதை நமக்குக் காட்டியுள்ளதோ, எப்படி அது வர்க்கப் போராட்டத்துக்கும் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் தொடக்கத்துக்குமான பாதையை நமக்குக் காட்டியுள்ளதோ, அதேபோல மேற்கூறிய பாதைகள் யாவும் பாட்டாளிவர்க்கக் கலாச்சாரத்துக்கு இட்டு வந்திருக்கின்றன. இனியும் தொடர்ந்து இட்டுச் செல்லும்' எனக்கூறும் லெனின், எப்படி மார்க்ஸ் மனித சிந்தனை தனது காலம்வரை வளர்த்த விஞ்ஞானம் முழுமையையும் (அது எந்த வர்க்க சமுதாயத்தில் தோற்றுவிக்கப் பட்டதாயினும் அனைத்தையும்), மறுபரிசீலனை செய்து, தொழிலாளி வர்க்க இயக்கத்தைக் கொண்டு சரிபார்த்து, முதலாளித்துவ வரம்புகளாலும் முதலாளித்துவத் தப்பெண்ணங்களாலும் கட்டுண்டோரால் வந்தடைந்திருக்க முடியாத மார்க்ஸியம் நோக்கி வர முடிந்தது என்பதையும் காட்டியுள்ளார். "
இவ்வாறு லெனின் கூறும்போது வர்க்க சமுதாயம் முழுமையிலும் ஒடுக்குவோரின் கலாச்சாரமும் ஒடுக்கப்பட்டோரின் கலாச்சாரமும் ஒன்றாயே இருந்ததில்லை என்பதை மனதிற் கொண்டே சொல்கிறார். 'கலாச்சார தேசியம்' பற்றிப் பேசியவர்களை கண்டிக்கும்போது முதலாளிகளது கலாச்சாரமும் உழைக்கும் மக்களது கலாச்சாரமும் ஒன்றல்ல என்பதை லெனின் எடுத்துக் காட்டியிருந்தார். அந்த வகையில் புதிய சோஷலிஸ் சமுதாயம் கட்டியெழுப்ப வேண்டிய பாட்டாளி வர்க்க கலாச்சாரமாகிய புதிய கலாச்சாரம் ஒன்றைப் பற்றி இவ்வாறு அவர் பேசும் போது, கடந்த காலத்தின் இரு கலாச்சார வடிவங்களையும் சோதனைக்குட்படுத்தி, தொழிலாளர் இயக்கங்களினூடே சரிபார்த்தபடி உள்வாங்கவேண்டும் என்பதையே வலியுறுத்த வருகிறார் என்பது தெளிவு. தனியே எதிர்-கலாச்சாரம் பற்றிப் பேசுவதும் உயர் கலாச்சாரத்தை பிராமணிய-வேளாள கலாச்சாரம் எனக்கூறி முழுமையாய் நிராகரிப்பதுமான 'பெரியாரிய' முனைப்பிலான தலித்தியம், தலித் மக்களை விடுதலைப் பாதையில் முன்னேற வொட்டாமல் தடுக்கும் வெட்டிப் பேச்சு. இவை மேலாதிக்க வாதிகளுக்கே உதவத்தக்கன. இத்தகைய சிறுமுதலாளிவர்க்க சித்தாந்தங்கள் எப்போதுமே இவ்வாறுதான் மேற்பார்வைக்கு அதிபுரட்சிகரமான தோற்றத்துடன் பிற்போக்கு வாதிகளுக்கு உதவுவது வழமை. இன்றைய அதிதீவிரப் புரட்சியாளர் நாளை படுமோசமான சந்தர்ப்பவாதியாகி பிற்போக்கு வாதச் சகதிக்குள் அழுந்த நேரும். 'அதிதீவிர இடதுசாரிவாதம் வலதுசாரி சந்தர்ப்பவாதத்துக்கு இட்டுச் செல்லும்' என்பது ஓர் இயங்கியல் விதி
நாம் வரலாறு முன்னோக்கிச் செல்ல உழைக்கும் மார்க்ஸியர்களாய் இருக்க விரும்பின் இத்தகைய எதிர்-கலாச்சார அதிதீவிரக் கோஷங்களால் அடித்துச் செல்லப்பட்டுவிடாமல் புதிய கலாச்சார உருவாக்கத்திற்கு அவசியமானவற்றைக் கவனத்தில் எடுத்தாக வேண்டும். லெனின் உட்படப் பல மரபு மார்க்ஸியர்கள் தொழிலாளி வர்க்கம் அரசதிகாரத்தைப் பெற்று
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் () 105
சொத்துக்களைச் சுவீகரித்து சோஷலிஸ் உற்பத்தி உறவை ஏற்படுத்தும் சோஷலிஸப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பினால் மட்டுமே இன்றைய பிரச்சனைகளில் அநேகமானவற்றைத் தீர்க்க முடியும் எனக் கருதுகின்றனர் எனக்கூறும் அ.மார்க்ஸ் போன்றோர், அதற்காக 'மரபு மாக்ஸியர்களை" பொருளாதாரவாதிகள் என்பர். 'நவ-மாக்ஸியர்களான இவர்கள் எதிர்க் கலாச்சாரத்தை இந்த சமூக அமைப்புக்குள்ளேயே தீர்வுநிவாரணி ஆக்கமுயலும்போது தாமே கலாச்சாரவாதிகள் ஆகிவிடுகிறார்கள்.
இந்த சமூக அமைப்புக்குள்ளே அதிதீவிர தலித்தியமும் பெண்ணியமும் பேசி எதிர்-கலாச்சார மட்டத்துடன் அடங்கமுயல்வது ஆளும் கும்பலுக்கு உதவும் செயல்தான். பாட்டாளிவர்க்க அரசதிகாரத்தை மறுத்து, அதன் மூலம் புதிய - கலாச்சாரத்தை மறுப்பது சாதியொழிப்புக் கானதும் பெண்விடுதலைக்கானதுமான ஒரே சரியான மார்க்கத்தைத் தகர்த்தெறியும் செயல்தாம். சாதியமைப்புக்கு எதிராகவும் பெண் விடுதலைக்காகவும் அதேபோல தேசிய இனங்களின் விடுதலைக்காகவும் போராட வேண்டியது இக்காலகட்டத்துக்குரிய நிர்ப்பந்தம் என்பதை மார்க்ஸியவாதிகள் மறந்துவிடவில்லை. மறப்பதென்ன, பல அம்சங்களில் இவற்றை தொடக்கி முன்னெடுப்பதில் முனைப்புடன் செயலாற்றியவர்களே. மாக்ஸியவாதிகள்தாம். அவை சோஷலிஸ் இயக்கத்தின் பகுதிகளாக அமைந்து பலம் சேர்ப்பதைக் கண்டபோதே முதலாளித்துவ சக்திகள் அவை ஒவ்வொன்றையும் பிரித்து அதன் வாயிலாகவே அவை சோஷலிஸ் இயக்கத்தின் பகுதிகளாக அமையும் வாய்ப்பைத் தகர்த்துத் தனிவழி அதிதீவிரங்களாகிவிட்டன (இன்று இவை ஆயுத விற்பனைக் கும்பலின் தங்கச் சுரங்கங்களாக்கப்பட்டுள்ளன).
சுரண்டப்படும் மக்கள் தமக்கான ஒரு அரசை உருவாக்குவது தவிர்க்கவியலாத வரலாற்றுக் கடமை. அது லெனின் சொன்னது போல அரை அரசுதான் அரசு என்பது உழைக்கும் பெரும்பான்மையினரை அடக்குவதற்கு சிறுபான்மையினரான சுரண்டும் வர்க்கம் கொண்டிருக்கும் அடக்குமுறைக் கருவி. சிறுபான்மையினரை அடக்க பெரும்பான்மையினருக்கு அதே வடிவம் வேண்டியில்லாத போதிலும், முதலாளித்துவ சக்திகளின் பலங்களை மனங்கொண்டு அரை அரசைக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. அதில் கவனக் குறைவு கொள்ளல் எங்கே கொண்டுபோய்விடும் என்பதைத்தான் சோவியத் யூனியனில் சோஷலிஸத்தின் வீழ்ச்சி காட்டுகிறது. அதேவேளை, அந்தப் பாட்டாளிவர்க்க அரசுதான் உழைக்கும் மக்களுக்கும் பெண்களுக்கும் உண்மையான விடுதலையையும் ஈட்டித்தந்தது. அந்த மார்க்கத்தை எதிர்க்கும் அ.மார்க்ஸ் போன்றோர் வேறெவ்வழியில் சாதித் தகர்வையும் பெண் விடுதலையையும் ஈட்டமுடியும் எனக் காட்டுகின்றனர்? அப்படியெதையும் அவர்கள் காட்டி விடவில்லை இந்த சுரண்டல் அமைப்புக்குள்ளேயே எதிர்கலாச்சாரத்தை ஆக்கிக்கொள்வார்களாம்
இந்தக் கலாச்சாரவாதிகள் 'மரபு' மார்க்ஸியத்தை பொருளாதாரவாதம எனக் கூறும் போது பொருளாதார அடித்தளத்துக்கு அதிக
Page 63
106 0 கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம்
முக்கியததுவம் கொடுத்து கலாச்சாரம் வகிக்கும் தாக்குதிறனைக் குறைத்து மதிப்பிடுவதாகக் குற்றஞ்சுமத்துவர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்கள் அதிகம் எடுத்தாளும் ஒரு மேற்கோள், 1890 இல் ஏங்கெல்ஸ் எழுதிய மேல்வரும் கடிதவாசகம் ஆகும்; "வரலாறு பற்றிய இயக்கவியல் பொருள் முதல்வாத நோக்கின்படி உற்பத்தி முறையே இறுதியில் நிர்ணயிக்கும் கூறு. இதற்கு மேலாக மார்க்ஸோ நானோ ஒன்றும் கூறவில்லை. இதனைத் திரித்துக்கூறி பொருளாதாரக்கூறே நிர்ணயம் செய்யும் ஒரேயொரு கூறு என யாராவது கூற முனைந்தால் அது அர்த்தமற்றது; முட்டாள் தனமானது. பொருளாதார நிலைமையே அடித்தளம். ஆனால் மேல் அமைப்பின் பல்வேறு கூறுகளும் (வர்க்கப் போராட்டத்தின் அரசியல் வடிவங்களும் விளைவுகளும், வெற்றியீட்டிய வர்க்கம் உருவாக்கிய அரச அமைப்புகள், சட்ட வடிவங்கள், நிஜப் போராட்டங்கள், போராடுவோர் மனதிலே எழுப்பும் எதிரொலிகள், அரசியல், சட்ட, தத்துவக் கோட்பாடுகள், சமயக் கருத்துகளும் அவை கோட்பாடுகளாக பின்பு இறுகுவதும்) வரலாற்றுப் போராட்டங்களின் போக்கைப் பாதிக்கின்றன. பல சமயங்களில் இப் போராட்டங்கள் எடுக்கும் வடிவத்தினை நிர்ணயிப்பதில் அவை முதன்மை பெறுகின்றன. இக்கூறுகள் யாவும் ஒன்றையொன்று பாதிக்கின்றன. இறுதியிலே பொருளாதார இயக்கமே தவிர்க்க முடியாதவாறு தனது பிடியை வலியுறுத்துகிறது, இவ்வாறு இல்லாவிடின் மார்க்ஸிய கோட்பாடினை ஏதேனும் வரலாற்றுக் காலத்துக்குப் பொருத்திப் பார்ப்பது இலகுவான சமன்பாட்டினை விடுவிப்பதிலும் பார்க்க எளிதாக இருக்கும்.'
போராட்ட வடிவத்தினை நிர்ணயிப்பதில் பல சந்தர்ப்பங்களில் மேல் கட்டுமானம் முதன்மை பெறும் சந்தர்ப்பத்துக்கு உதாரணமாக இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தின்போது பாரதியின் அரசியல் தலைவராகத் திகழ்ந்த திலகர் தொடக்கி வைத்த சிவாஜி விழா தொடங்கி சக்தி வழிபாட்டு எழுச்சிவரை இந்துப் பண்பாட்டுக் கூறுகள் தாக்கம் செலுத்தியதைக் கொள்ளலாம். அது பல தேசிய இனங்களை ஒன்றிணைத்து இந்தியாவை ஒரு தேசமாக ஆக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி (பாரதி அதை மத அடிப்படை சார்ந்த அம்சத்திலிருந்து விருத்தி செய்யும் பொருட்டு, இஸ்லாமியர்களையும் ஈர்க்கும் வகையில், சிவாஜி விழாவுடன் அக்பர் விழாவும் எடுக்கப்படவேண்டும் என்றார். அது வெகுஜன மட்டத்திற்கு செல்லத்தவறியது). அதேவேளை அடிப்படை வாதத்துக்கான விதை அங்கே ஊன்றப்பட்டது. இந்தக் கலாச்சாரக் கூறு இன்றையவரையான இந்து-முஸ்லீம் அடிப்படை வாதங்களுக்குக் கால் கோலமைத்தது.
இத்தகைய மதவாத வடிவத்தைப் பெறுவதில் மேற் கட்டுமானம் செல்வாக்கு செலுத்தியது உண்மையேயாயினும், பலநூறு நாடுகளாகச் சிதறிக் கிடந்தவை ஒரே இந்திய நாடாகக் கட்டியெழுப்பப்பட அது உதவியது என்பதும் அதேயளவுக்கு மெய்யாகும். அதே வேளை பாகிஸ்தான் உருவாகவும் இன்று தேசிய இனங்களிடையே பிரிவினைக்
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் 0 107
கோஷம் வலுப்பெறுவதும் ஆகிய வரலாற்றுப் போக்கிற்கான அடிப்படை என்ன? சேர, சோழ, பாண்டியர் கால வரலாற்றினைப் போன்ற நாட்டுரிமையை ஆங்கிலேயரிடமிருந்து மீட்க முடியாதமை ஒருபுறமிருக்க தமிழகம்’ ஒரே தேசமாய் உணரப்பட காரணம் என்ன? இங்கேயும் புலிக் கொடியை இமயத்தில் நாட்டியதற்காக ஒருவர் பெருமை பேசலாம்; மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் பற்றி இன்னொருவர் முழங்கலாம்: தமிழகம் என்ற பொது உணர்வை மீறாமல் இவற்றைச் செய்வர்.
இன்னொரு தளத்திலிருந்தும் சிந்திக்கலாம். காவியம் நாவல் ஆகியன தோற்றம் பெற வெவ்வேறு சமூகச் சூழ்நிலைகள் காரணமல்ல, காலமாற்றங்களுடன் ஏற்பட்ட சில மதிப்புகளின் மாற்றங்களாலேயே இவை பிறந்தன எனக்கூறிய வெங்கட்சாமிநாதனை நோக்கி நுஃமான் இந்தக் கேள்விகளை எழுப்புகிறார். "முதலாம் நூற்றாண்டில் இருந்து 19ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையுள்ள சுமார் 1800 வருடங்களில் ஏன் இந்த மதிப்பு மாற்றம் ஏற்படவில்லை? ஏன் இந்த நீண்ட காலகட்டத்தில் தமிழில் நாவல் இலக்கியம் தோன்றவில்லை? அல்லது ஏன் ஐரோப்பாவில் 18ம் நூற்றாண்டு வரை நாவல் தோன்றவில்லை? குறிப்பாக ஐரோப்பாவில் 18ம் நூற்றாண்டில் மட்டும், தமிழகத்தில் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இலங்கையிலும் கூட 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மட்டும் ஏன் ஒரு கலைஞனின் மதிப்பும் நோக்கும் மாறுபட வேண்டும்? ஏன் இந்தக் காலகட்டத்தில் தான் நாவல் தோன்ற வேண்டும்.'
இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் பொருளுற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றந்தான். நிலவுடைமை அமைப்புக்கு முடிமன்னர் பொருத்தமுடையவர்கள்; அந்த அமைப்புக்கு காவியம் இலக்கிய வடிவமாகும். மூலதனம் வரலாற்று அரங்குக்கு வந்தபின்னர் அது தீர்மானிக்கும் பொருளாதார அடித்தளத்திற்கு ஏற்ற அரசியல் வடிவம் முதலாளித்துவ ஜனநாயகம்; இந்திய தேசிய முதலாளி வர்க்கம் இந்துப் பண்பாட்டை ஐக்கியப் படுத்தும் அடிப்படையாக கொண்டு இந்திய தேசியத்தைக் கட்டியெழுப்பும். இஸ்லாமிய தேசிய முதலாளித்துவ சக்திகள் பாகிஸ்தானை கோரும். தனக்கான தேசிய எல்லைக்குள் மாற்றானை நுழையாது தடுத்து, தானே உற்பத்தியையும் பங்கீட்டையும் தீர்மானிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு தேசிய முதலாளிவர்க்கப் பிரிவினரதும் அபிலாசையாவது இந்தக் கட்டத்திற்குரிய சிறப்பியல்பு. வடநாட்டாரைத் தமிழகத்துக்குள் தலை நீட்ட விடாமற் செய்து தமிழனைத் தானே சுரண்ட முயன்றாலன்றி முன்னேற்றமில்லை என்ற நிர்ப்பந்தம் ஏற்படும்போது திராவிடரியக்கம் பிறக்கும். எந்தவொரு தேசத்துக்குள்ளும் தொழிலாளர் நிலை உழைப்பை விற்பனைப் பண்டமாக்கி கூலியடிமை ஆவதன்றி வேறல்ல.
ஆயினும் பண்ணையடிமையாய் மிருகம் போல நடத்தப்பட்ட நிலைபோய், இங்கே விரும்பிய எவனுக்கும் உழைப்பை விற்கும் சுதந்திரம் கிடைக்கும். சுரண்டுவோர் காட்டுகிறவர்களில் விரும்பிய ஒருவனை
Page 64
108 0 கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம்
ஆளத்தீர்மானிக்கும் சுதந்திரம் கிடைக்கும் அந்தக் காரணங்களினால் தொழிலாளர்களும் தேசியப் போராட்டத்தில் முன்னணிப்பங்கை வகித்ததுண்டு. மற்றபடி தொழிலாளர்க்கென்று ஒரு தேசமில்லை, யாருக்கும் யாரையும் சுரண்ட உத்தரவாதம் செய்யும் தேச எல்லைகள், சுரண்டல் அடியோடு ஒழிந்து பூரண பொதுவுடைமை அமைப்பு மலரும்போது முற்றாக அழிந்துவிடும். அங்கேதான், 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்பதை நிறைவாக்கத் தக்க இலட்சிய தாகம் அடங்கும்.
நிலைவுடைமை அமைப்புக்கும காலனித்துவத்துக்கும் எதிராக தேசிய சக்திகள் போராட வேண்டியிருந்த போது மக்களை அணிதிரட்ட ஏதுவாக ஜனநாயகக் கருத்துக்கள் மலர்ந்து இலக்கியமும் மக்களிடம் செல்ல நேர்ந்த காலத்து இலக்கிய வடிவமாக நாவல் முகிழ்கிறது. இந்த வகையில் அரசியல் வடிவத்திலிருந்து இலக்கிய வடிவம் ஈறாக, மக்களின் உணர்வுகளையெல்லாம் தீர்மானிப்பது, அடிப்படையில் பொருளுற்பத்தி முறையாகிய அடித்தளம் தான். மேல்கட்டுமானம் தம்மளவில் செலுத்தும் தாக்கம் பற்றியும் அதன் இயங்கியல் அம்சம் குறித்தும் அக்கறையின்றி எல்லாமே பொருளாதார அடித்தளத்தினால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது என்று யாந்திரீக பொருள்முதல்வாதம் பேசிய வறட்டு மார்க்ஸியர்கள் செய்த அதேயளவு தவறை இன்று கலாச்சாரவாதிகள் இழைக்கிறார்கள். மேலே ஏங்கல்ஸ் 'அடிப்படையில்" என்ற பொருளில் இறுதியாகத் தீர்மானிப்பது பொருளாதார அடித்தளம்' எனக் கூறியதைத் திரித்து கடைசியில்தான் பொருளாதார அடித்தளம் தீர்மானிக்கும் , முதலில் இருந்து கடைசிக்கு முதற் கட்டம் வரை மேல்கட்டுமானந்தான் தீர்மானிக்கும் எனச் சொல்வது வெறும் சொல்லாடல் பம்மாத்து. "
மனிதனின் உணர்வு அவனது வாழ்வைத் தீர்மானிக்கவில்லை மாறாக வாழ்நிலையே உணர்வைத் தீர்மானிக்கிறது என்பது தான் மார்க்ஸியம்; அதுதான் உண்மை என்பதை மேற்படிக் கலாச்சார வாதிகள் (அமைப்பியலுக்குப் போகுமுன் மார்க்ஸியத்தைக் கடந்து வந்தோம் எனப் பொய்யாகவேனும் சொல்பவர்கள்) கூட மறுப்பதில்லை (இதிலே சொல்லாடல் சித்து விளையாட்டிற்கு இடமில்லாமற் போய்விட்டதால்!).
அவர்களது சொல்லாடல் சித்து விளையாட்டு எவ்வளவு தூரம் மோசடியானது என்பதைக் காட்டுவதற்கு இந்த ஏற்புடைமை ஒன்றே போதும். வாழ்நிலை என்பது பொருளுற்பத்தி முறைமையில் அவரவரது இடத்தைப் பொறுத்தது. அவரவரது அரசியல் கலாச்சார, கலை, இலக்கிய அபிலாசைகள் சார்ந்தது. தனிமனிதருக்கு மட்டுமல்ல, சமூக உணர்வுக்கும் பொருந்துவது இது. ஆண்டையின் கீழ் பண்ணையடிமையாக இருந்த காலம் முழுமையும் சிறு தெய்வ வழிபாடுள்ள வைதிக நெறிக்கு கீழ்பட்ட சமூகமாக இருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை ஏற்படுத்தித தந்த உணர்வு இல்லை என்றால் அம்பேத்கார் வழியில் சுதந்திரமாக பெளத்தத்தை நாடியிருக்க முடியாது. (அரசுத் தலையீட்டின்
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் L) 109
மத மாற்றம் வேறு விடயம்) அந்தப் பொருளுற்பத்தி முறைமாற்றமே உணர்வு மாற்றத்திற்கு மூலகாரணி. அந்த அடிப்படையில்தான் மார்க்ஸ் ஏங்கல்ஸ் ஆகியோர் பொருளாதாரம் அடித்தளம் என்றும் ஏனையவற்றை மேற்கட்டுமானம் என்றும் சொன்னார்கள்.
குறித்த சூழ்நிலைகளில் மேற்கட்டுமானம் செலுத்தும் தாக்கத்தை இயங்கியல் - பொருள் முதல்வாதியால் மட்டுமே விளங்கிக் கொள்ள முடியும். அவ்வாறில்லாத வெறும் பொருளாதார வாதிகளின் வாய்ச் சவடாலை முன்னிட்டு அத்தகைய இயங்கியல் அணுகுமுறையை ஏங்கல்ஸ் வலியுறுத்தியதை வைத்து மார்க்ஸிய அடிப்படையையே தகர்க்க முனைவது கபடத்தனமானது. மார்க்ஸியவாதிகள் யாந்திரிக பொருள் முதல்வாதிகள் அல்ல; அவர்கள் இயங்கியல் - பொருள் முதல்வாதிகள்.
மார்க்ஸிய உலக நோக்கை இழந்துவிட்ட அ.மார்க்ஸ் போன்றோர் அடித்தளம் - மேற்கட்டுமானம் ஆகியவற்றிடையேயான பரஸ்பரத்தாக் குறவை சரியாக அர்த்தங் கொள்ளமுடியாமற் போகவே, பொருளாதார அடித்தளத்தின் அடிப்படைத் தன்மையை ஏற்கமுடியாதவர்களாகின்றனர். அதனாலேயே சோசலிச உருவாக்கத்தையும் அதற்கான பாட்டாளிவர்க்கக் கட்சியின் அத்தியாவசியத்தையும் ஏற்காத நிலைக்குச் செல்கிறார்கள்; பொருளாதார வாதத்துக்கு எதிராக அடுத்த அந்தலையான கலாச்சார வாதத்துக்கு சென்றுவிடுகிறார்கள்.
இத்தகையவர்களில் ஒரு பிரிவினர், இலக்கியத்தில் அரசியல் கூடாது, பொத்தம் பொதுவான இலக்கியத் தரம் வேண்டும் என்பவர்கள். இன்றைக்கு அரசியல் இலக்கிய வடிவம் தவிர்க்கமுடியாத ஒரு தேவை. இலக்கியத்தரத்திற்கு முன், மக்கள் இலக்கியம் வேண்டும். உண்மையான மக்கள் இலக்கியம் தனக்கான திசையில் தரமேன்மையை ஈட்டிச்செல்லும்; மார்க்ஸிம் கோர்க்கியின் 'தாய்' உலக இலக்கியமானது போல இம்மக்கள் இலக்கியமும் ஆகும். மக்களைப் பிரிந்து இலக்கியத் தரத்துக்கு அழுத்தம் கொடுப்பவர்கள் காலவோட்டத்தில் மக்கள் விரோத நிலைப்பாட்டையே வெளிப்படுத்துவர்.
அவ்வாறன்றி, பின்-நவீனத்துவப் புதுமைகளின் பேரால் முதலாளித்துவச் சீரழிவுகளுக்குள் வேகமாக மூழ்கிக் கொண்டிருப்போருக்கு நுஃமானின் வார்த்தைகளில் நாமும் சொல்லலாம்: "மார்க்ஸியவாதிகள் ஒரு வகையில் நேர்மையானவர்கள். அவர்கள் தங்கள் சார்பை முடி மறைப்பதில்லை. ஆனால் சாமிநாதன் (இவர் ஒன்றும் 'நவ- மாக்சிஸ்ட்' அல்ல; ஆயினும் இந்த, 'நவ-மாக்ஸிட்டுகளின் இன்றைய பணியைத்தான் இரு தசாப்தங்களின் முன்னே செய்தார் - ஆசிரியர்) போன்றவர்கள் நேர்மையற்றவர்கள். இலக்கியத்தில் அரசியல் சார்பை எதிர்த்துக் கொண்டே அப்பட்டமான அரசியல் சார்பாளர்களாகவும் இருக்கின்றனர்.' 'மார்க்ஸியம் இதுவரை ஏற்பட்டுள்ள எத்தகைய துறை வளர்ச்சிகளையும் ஏற்றுக் கொண்டதும் இல்லை. எதிர் கொண்டதும் இல்லை' என்று இவர்கள் கூறும்போது
Page 65
110 0 கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம்
இவர்கள் கருதுவது புதிது புதிதாக புதிய புதிய வடிவங்களில் தோன்றிக் கொண்டிருக்கும் கருத்து முதல்வாத முதலாளிய சித்தாந்தத் தத்துவங்களை மார்க்ஸியம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைத் தான். அது உண்மையே. மார்க்சியத்தை பொறுத்தவரை இவையெல்லாம் சமூகத்தின் அடியதார்த்தத்தை தொடாத வெறும் அலம்பல்களே. அது மட்டுமன்றி, அவை, முதலாளித்துவ சமூக குறிப்பான நெருக்கடிகளின் விளைவுமாகும். மார்க்ஸியம் அவற்றின் தோற்றத்துக்கான சமுதாய வேர்களை விளக்கி அவற்றை நிராகரிக்கின்றது. அவை கருத்து முதல்வாதத்தின் வெவ்வேறு வடிவங்களே.
இவ்வாறு காலந்தோறும் கருத்து முதல்வாதம் வேறுவேறு வடிவங்களை எடுப்பது குறித்து நுஃமான் எழுதிய கட்டுரை, பேராசிரியர் கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம்' (1968) என்ற நூலுக்கு எதிராக நடை'யில் வெங்கட்சாமிநாதன் 'மார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல்" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை மீதான ஒரு விமர்சனம், சாமிநாதனின் கட்டுரையை ஈழத்தில் மு.தளையசிங்கம் தமது பூரணி'யில் மறுபிரசுரம் செய்திருந்தார். சாமிநாதன் போல் மார்க்ஸியத்தில் ஒன்றுமே இல்லை என்று சொல்பவராக இல்லாதிருந்த மு.த. அன்றைக்கே (மேலைத்தேய 'மார்க்சிய அமைப்பியல்வாதிகள்' போல) மார்க்சியத்தை மீண்டும் தலைகீழாக்க குரல் கொடுத்தவர். மார்க்சியத்தை கடந்து போவதாகக் கூறிக்கொண்டவர். இந்தக் கடத்தல் உண்மையில் மார்க்ஸிய எதிர்ப்பின் வேறு வடிவமே என்பதை வெளிப்படுத்துபவர் போல சாமிநாதனின் கட்டுரையையும் இறக்குமதி செய்திருந்தார். இங்கே பிரதான அம்சம் சாமிநாதனின் உணர்வாகவே இருந்தாலும் மார்க்ஸியத்தை கடப்பதாகப் பாசாங்கு செய்ய வேண்டிய அளவுக்கு ஈழத் தமிழிலக்கியப் போக்கில் மார்க்ஸிய நோக்கு பலமாகத் தாக்கம் செலுத்தியிருந்ததென்பதுதான்.
இன்றைக்குக் கூட பின்அமைப்பியல் வாதப்போக்கைக் கற்றல் என்கிற அளவுடன் ஒப்பிட்டால் அதனால் சிதைந்து போதல் வீதம் குறைவுதான். சிதைவு இல்லாமல் இல்லை; புலம்பெயர்ந்த சமூகச் சூழலால் உளப்பிறழ்வுக்கு உள்ளாகும் ஒரு பாத்திரத்தின் சிதைவை 'செக்குமாடு' என்கிற சிறுகதையாக வடித்த வ.ஐ.ச.ஜெயபாலன், ஜெயமோகன் போல யதார்த்தத்தை விட்டு விலகியோடாமல் மிகுந்த கலை நேர்த்தியுடன் யதார்த்தத்தை மீள்படைப்புச் செய்யும் பணியாகத் தான் ஆற்றியுள்ளார். இது ஈழத்தமிழிலக்கிய வரலாற்றின் மரபுப் பலம் எனலாம்.
தலித்தியம் ஈழத்தில் கெடுதி செய்ய முடியாமல் இருப்பது மூன்று தசாப்தங்களின் முன்னே சாதிய எதிர்ப்புப் போராட்டம் சாதிக் கண்ணோட்டத்திலன்றி வர்க்கப் பார்வையில் முன்னெடுக்கப்பட்டு தனது மட்டத்திற்கான வெற்றியைக் குறைந்த இழப்புகளுடன் பெற்றெடுத்தமையாலேதான். அந்த 'அக்டோபர் 21 எழுச்சிப் பதாகை' தொடர்ந்தும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழிகாட்டி வந்தது. அது தேசிய இன வாதம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது என்ற உணர்வுக்கு மிகை
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் D 111
அழுத்தம் கொடுத்ததில் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை வர்க்கப் பார்வையில் தொடர முடியாமற் போனமைதான் ஈழத்தின் பிரதான பலவீனம். அதனால் அமிர்தலிங்கம் போன்ற இனவெறியர்களின் தலைமை பாரிய கெடுதி இழைக்க வழி கோலியது. வர்க்கப் பார்வையில் அந்தப் போராட்டத்தைச் சரியான திசைவழிப் படுத்துவதற்கு இன்றுவரை அது இடைஞ்சலாகவே உள்ளது. அன்றைய இளைஞர் அணிகள் இடதுசாரிகள் மீது ஒருமுனைப்பாங்கான விமர்சனத்தை முன்வைத்து அமிர்தலிங்கம் வழியில் ஏற்கனவே தீர்மானித்த தமிழீழத்துக்கு மார்க்ஸியம் என்ன வழிகாட்டுகிறது என்று பார்த்தார்களேயன்றி மார்க்ஸியப் பாதையில் இனப் பிரச்சினைத் தீர்வை அணுகினார்களில்லை. மார்க்ஸிய இயக்கத்தின் தவறையும் அமிர்தலிங்கத்தின் தலைமையிலான மக்கள் விரோத துரோகத்தனத்தையும் சமதளத்தில் வைத்துப் பார்க்காத புதிய பரம்பரை தேசிய இனவிடுதலைப் போராட்டத்தில் புதிய நோக்கை வலுப்படுத்தும் போது மீண்டும் பாட்டாளி வர்க்கத் தலைமை ஈழத்தில் எழுச்சி கொள்ளும்.
வீரஞ்செறிந்த வர்க்கப் போராட்டச் சுவாலையில் புடம் போட்டெடுக்கப்பட்ட பல புரட்சிவாதிகளை வழங்கியுள்ள தமிழகத்தின் இன்றைய அரசியல் , கலாச்சார சூழ்நிலையானது பலவகைக் கும்பல் கலாச்சாரங்களின் தோற்றுவாயாகும். இந்த நிலையில் போர்க்குணம்மிக்க இளையதலைமுறையின் ஒருபகுதி 'எதிர்க்கலாச்சாரம் என்ற கோஷத்தால் கவரப்பட்டு தன்னெழுச்சிக் குழுவினராதல் தவிர்க்கவியலாததே. அதே போன்ற வரலாற்று நியதி, இந்த நிலைமைகளுக்கு முடிவுகட்டும் வகையில் பலமான பாட்டாளி வர்க்க அரசியலனியின் தலைமையிலான புதிய பாதையையும் திறந்துவிடும். நாளைய அந்தப்பாதை சகலவகையான கும்பல் கலாச்சாரங்களையும் முறியடித்து புதிய ஜனநாயகம் ,புதிய வாழ்வு, புதிய கலாச்சாரம் மலர வழி சமைக்கும். அந்த வரலாற்றுப் பொறுப்பைக் கையேற்போம்.
புதிய கலாச்சார உதயத்துக்கான வெகுஜன மார்க்கத்தில் அணி திரள்வோம்!
குறிப்புகள் 1. அ. மார்க்ஸ் "வ குப்புவாதம் - நான்கு கட்டுரைகள்' பார்க்க:
நிறப்பிரிகை-7 ஜனவரி 1994, பக். 38. 2. அ.மார்க்ஸ் 'தமிழ் நவீனமான கதை" பார்க்க: நிறப்பிரிகை -இலக்கிய
இணைப்பு2. நவம்பர் 1994, பக்கம் 28. 3. கா. சிவத்தம்பி ‘முனைவன்' 12 மணிக்கொடி பொன்விழா மலர்,
பக்கம் 18. 4. சோவியத் ரூஸ்ய, பின்லாந்து தேசங்களின் இந்தியவியலாளர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பற்ற வகையில் மேற்கொண்ட கணனி ஆய்வுகள் சிந்துவெளி மக்களை திராவிடர்கள் என இனங்காட்டுகின்றன, (இன்று பல ஆய்வாளர்களாலும் இக்கருத்து ஏற்றுக் கொள்ளப்படுவதை
Page 66
112 ) கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம்
10.
11.
12.
13.
14.
15.
16.
அவதானிக்கலாம்) அவர்கள் ஆரியர்கள் போல் வர்க்கங்களற்ற இனக்குழு வாழ்முறையிலன்றி வளர்ச்சியடைந்து வர்க்க பேதங்களையும் எய்தியிருந்தனர். அதற்கமைவாக மதத்தின் வளர்ச்சியும் அமைந்திருந்தது. பார்க்க: கொ. அ. அன்தோனவா. கி.ம போன் காரத்லேவின். 'இந்தியாவின் வரலாறு' (பகுதி 1) முன்னேற்றப்பதிகம், மாஸ்கோ விற்பனை என்.சி.பி.எச்.சென்னை. (தமிழில் பூ.சோமசுந்தரம், இரா.பாஸ்கரன்), 1987, பக்கம் 36. டி.டி.கோசாம்பி, 'பண்டைய இந்தியா- அதன் பண்பாடும் நாகரிகமும் பற்றிய வரலாறு' இந்தியன் கவுன்சில் ஆப் கிஜ்டாரிகல் ரிசர்ச், நியுதில்லி அண்ட் நியு செஞ்சுரி புக் கவுஸ் பிரைவேட் லிமிடெட், மதராஸ் 1989. பக்கம் 149.
“பெரியாரிசம்' கூட்டுக்கட்டுரை-6 பார்க்க: நிறப்பிரிகை-7 ஜனவரி 1994. பக்கம் 03-32.
ஆ.இரா.வேங்கடாசலபதி 'திராவிட இயக்கமும் வேளாளரும்', சவுத் ஏசியன் புக்ஸ், 6/1 தாயார் சாகிப் 2வது சந்து, சென்னை - 2. ஆகஸ்ட் 1994, பக்கம் 38.
மேற்படி, பக்கம் 76. நிறப்பிரிகை -7 ஜனவரி 1994 பக்கம் 14.
கோ. கேசவன், 'சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமையும்' சரவணபாலு பதிப்பகம். 33-சி செட்டித் தெரு, விழுப்புரம்- 605 602. அக்டோபர் 1990. பக்கம் 250-1. அருணன். 'இந்திய கம்யூனிஸ் இயக்க வரலாறு' அன்னம் (பி) லிட், சிவகங்கை. ஜூன் 1993. பக்கம் 210. அ.மார்க்ஸ், “ரஷ்யாவில் நடப்பதென்ன' வெளியீடு: தோழமை, கும்பகோணம். சிலிக் குயில், அருங்கலை நூல்களின் கருவூலம், 20 ப, கோதண்டபாணித் தெரு, கும்பகோணம், 612 001. மார்ச் 1989. ué8, b 76.
லெனின், 'சோவியத் அரசாங்கத்தின் உடனடிப் பணிகள்' பார்க்க: லெனின் நூல் திரட்டு -3 (தமிழ்). முன்னேற்றப்பதிப்பகம், மாஸ்கோ. 1978. uš3b 170. w அ.மார்க்ஸ், 'மாக்சியமும் இலக்கியத்தில் நவீனத்துவமும்' பொன்னி புத்தக மையம், 25, அருணாசலபுரம் பிரதான சாலை, அடையாறு, சென்னை - 20. 1991. பக் 113-127
லெனின். 'இளைஞர் கழகங்களின் பணிகள்' பார்க்க: லெனின் நூல் திரட்டு (தமிழ்). முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ 1978 பக்கம் 215
மேற்படி, பக்கம் 214.
17.
18.
19.
2O.
21.
22.
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் 0 113
எம். ஏ. நுஃமான், 'மார்க்ஸியமும் தமிழ் நாவல் இலக்கியமும்' பார்க்க 'மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் அன்னம் (பி) லிட், சிவகங்கை, டிசெம்பர் 1987 பக்கம் 182. பொதுவாக ஈழத் தமிழர்க்கு நடைமுறை சார்ந்த தத்துவமே வேண்டியுள்ளதான புறநிலை யதார்த்தமே இன்று உண்டு; இருப்புக்கான போராட்டம் கடுமை பெற்றுள்ள இன்றைய குழலில் கலை இலக்கிய ஆர்வம் உள்ளோரிடையே தமிழகம் போல மக்களைப் பிரிந்து நின்று திண்ணை வேதாந்தம் பேசும் கூட்டம் இங்கே குறைவு. அதனால் மார்க்ஸியப் பிரயோகிப்புக் குறித்த வாதப் பிரதிவாதங்கள் உள்ள அளவுக்கு அமைப்பியல் வாதம் குறித்த அலட்டல் பெரிதாக இங்கே இல்லை. எம்.ஏ.நுஃமான். மேற்படி நூல். பக்.169.
மேற்படி, பக்.170. பார்க்க: 'புலம் பெயர்ந்த தமிழர் நல மாநாடு - சிறப்புமலர்' வெளியீடு: நிறப்பிரிகை, அஞ்சற்பெட்டி எண்.192. பாண்டிச்சேரி 605 001. (விடியல் பதிப்பகம் 3, மாரியம்மன் கோயில் வீதி, உப்பிலிப்பாளையம், கோயம்புத்துார் 641 015.) டிசெம்பர் 1994 பக்கம் 79-89
பார்க்க: பின்னிணைப்பு-2.
Page 67
பின்னிணைப்பு-1
திலகரும் காந்தியும் சந்திப்பு (பாரதியின் ஒத்துழையாமை இயக்க நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ள அவரது அரசியல் குரு திலகரின் கருத்தை அறிந்து கொள்ளல் பயனுடையது. அதன் பொருட்டு இது).
அன்னிபெசண்ட் ஹோம்ரூல் கிளர்ச்சிக்கு மூன்று முக்கிய காரணங்களை எடுத்துக் காட்டினார். 1. பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியாவின் பஞ்சாயத்து அரசாங்கத்தை அழித்துவிட்டுக் கலப்புமுறை இனவிருத்தியாக, சக்தியற்ற "போர்டு"களையும் 'கவுன்சில்"களையும் புகுத்தியது. 2. பிரிட்டிஷ் ஆட்சி எண்பது வருடங்களில் 3.4 சதவிகித மக்களுக்கே கல்வி அளித்துள்ளது. கண்ணுக்குத் தெரியாத சிறுபான்மையான படித்தவர்களின் உரிமைகளையும் மறுக்கிறது. கீழ்த்திசை நாடான ஜப்பான், தமது ஆட்சியில், நாற்பது வருடங்களில் மொத்த ஜனத் தொகைக்கும் கல்வி புகட்டியது. 3. வெளிநாட்டின் சாதாரணமான பொருட்களின் இறக்குமதிக்காக, இந்தியாவின் நயம் மிக்க கலைகளையும் தொழில்களையும் பிரிட்டிஷ் ஆட்சி அழித்தது.
ஹோம்ரூல் இயக்கத்தை அரசாங்கம் ஒருபுறம் அடக்குமுறைகளைக் கையாண்டு எதிர்த்தது. மற்றொரு புறம் காங்கிரசின் மிதவாதிகள் உலக மகாயுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் வலிவு மிக்க அரசியல் இயக்கத்திற்கு இடமளிக்கக்கூடாது என்று பிரசாரம் செய்தனர்.
மொழி வழிப் பிரிவினையை பெசண்டு எதிர்த்தார் என்ற காரணத்தால் ஆந்திராவில் 'ஹோம்ரூல் இயக்கம்' பரவவில்லை. ஹோம்ரூல் இயக்கம் கிராமங்களிலும் பரவி மக்கள் இயக்கமாக மாறினால்தான், அதற்குத் தம் ஆதரவு உண்டு என்பதை காந்தியடிகள் கூறி, அவ்விதம் மாறிய பின் ஹோம்ரூல் இயக்கத்தில் உறுப்பினராகாமலேயே அதன் மேடைகளில் ஆதரித்துப் பேசிவந்தார். அந்தச் சமயத்தில் காந்தியடிகள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையும் பிரிட்டிஷ் ஆட்சியாளரின் நேர்மையையும், நீதியையும் நம்பினார். ஹோம்ருல் இயக்கம் சம்பந்தமாகக் காந்தியடிகளுக்கும், பாலகங்காதர திலகருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல், ஊன்றி உணர்ந்து அறியத் தக்கது.
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் 0 115
திலகர்- காந்தியடிகள் உரையாடல்
காந்தி: இந்த நெருக்கடியான சமயத்தில், பிரிட்டிஷாருக்கு உதவி செய்ய வேண்டுவது நமது கடமை மட்டுமல்ல. நமது சொந்த நலன்களுக்காகப் பணம், ஆட்கள் அனைத்தையும் தயங்காமல் கொடுக்க வேண்டுமல்லவா?
திலகர்: ஒப்புக் கொள்கிறேன். பகிரங்கமாகவும் நான் செய்யத் தயார் என்பதைக் கூறியிருக்கிறேன். பெசண்டும் இதையே சொல்லியிருக்கிறார். பணத்தாலும், ஆட்களாலும் முயன்ற உதவியை அளிக்க முன் வருகிறோம்.
காந்தி: நிபந்தனையற்ற உதவிதானா தாங்கள் கூறுவதன் பொருள்? s
திலகர்: அது நிபந்தனையற்ற உதவியாக எப்படி இருக்க முடியும்? அவர்கள், நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகள் கடுமையானவை அல்ல. அவர்களுடைய பிரதிநிதிகளும் அரசியல் அறிஞர்களும் கூறி வருவதைத்தான் நிறைவேற்றச் சொல்கிறோம்.
காந்தி: அவர்கள் கூறும் எதைத் தாங்கள் குறிப்பிடுகிறீர்கள்?
திலகர் நிச்சயமாக, காந்தி லாயிட் ஜார்ஜ் விடுக்கும் அறிக்கைகளைத் தாங்கள் படித்தீர்களா? உலகில் ஜனநாயகமும், காக்கப்படுவதற்காகப் போர் நடத்தப்பெற்று வருகிறது. இப்பொழுது நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள். இந்தியாவில் ஜனநாயகமில்லை. தன்னிச்சையான சர்வாதிகாரிகளின் பின் இருக்கிறது. இந்தியாவிலும் ஜனநாயகம் நிறுவப்படும் எனும் வாக்குறுதியை அவர்கள் தரவேண்டும் என்பதைத் தான் நான் விரும்புகிறேன்.
காந்தி: ஒன்றன் பின் ஒன்றாகத் தோல்வியைத் தழுவி வரும் அவர்கள் மீது, நிபந்தனைகளைச் சுமத்தலாமா? நம் உதவி தேவைப்படும் அளவிற்குச் சங்கடமாக உள்ள அவர்களிடம் நாம் சுயநலமாக நடந்து கொள்ளலாமா?
திலகர்; நானோ, அல்லது பெசண்டோ, எங்கள் சுயநலத்திற்காக ஒன்றும் கேட்கவில்லை. அவர்களைப் பார்த்து நாங்கள் என்ன கேட்கிறோம்? 'இந்த நாட்டை மோசமாக நடத்துகிறீர்கள். எங்களை வறுமையில் ஆழ்த்தி அடிமைத் தனத்தில் வைத்து, மனிதப் பிறவிகளுக்கும் கீழான நிலைக்குத் தாழ்த்திவிட்டீர்கள். இப்பொழுது உங்களுக்கு, எங்கள் உதவி தேவைப்படுகிறது. நீங்கள் வெற்றியடைந்தால் ஜனநாயகம் காக்கப்படும் என்று கூறுகிறீர்கள், அப்படியானால் உங்களுக்குத் தயக்கம் ஏன்? போர் முடிந்த பிறகு மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஜனநாயக அரசாங்கம் அமைக்கப்படும் என்று உறுதி மொழியைத் தரலாமே!"
Page 68
116 O பின்னிணைப்பு 1
காந்தி: நான், தாங்கள் கூறுவதை ஒப்புக்கொள்ளவில்லை. பிரிட்டன் நீதியை நேசிக்கும் நாடு. சாம்ராஜ்யத்துடன் நிரந்தரமாக இணைந்திருக்க நீங்கள் விரும்புவதை அவர்கள் உறுதியாகக் கொண்டால், போர் முடிந்ததும் நாம் செய்த உதவிக்கு செய்நன்றியாக வெகுமதி அளிப்பார்கள்.
திலகர்: நான் அவர்களிடம் வெகுமதியை விரும்பவில்லை. இங்கிலாந்தில் உள்ள ராஜீய நிபுணர்கள் எழுத்து மூலமாகத் தாங்கள் கூறுவதை வெளியிடட்டுமே?
காந்தி: நான் எனது இரண்டாவது கேள்விக்கு வருகிறேன். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தோடு இணைந்திருக்கும் சுயாட்சி இலட்சியத்தைத் தாங்கள் தொடர்ந்து பின்பற்றுவீர்களா?
திலகர் நான் சிறையில் இருந்து வந்ததும், பெசண்டுடன் நடத்தியப் பேச்சுவார்த்தையில், தற்சமயம், இருவரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு உட்பட்ட சுயாட்சிக்காகப் போரிடுவது என்று உறுதிமொழியெடுத்தோம்.
காந்தி: பெசண்டுடன் நீண்ட நேரம் பேசியதில், தங்களுடன் நான் பேசிக் கலந்த பிறகு முடிவைக் கூறுவதாகச் சொன்னார்கள். இந்தச் சுயாட் சியை நிரந்தரமாக விரும்புகிறீர்களா என்பதனை அறிய விரும்புகிறேன்.
திலகர்: காலத்தின் மாறுதலுக்கு உட்படாதது எதுவும் இல்லை. பிரிட்டிஷ் ஆட்சியின் நடத்தையிலும், எதிர்கால இந்திய மக்களின் விருப்பத்திலும் அதன் முடிவு உள்ளது.
- நன்றி. பெ.சு.மணி, "இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்", பூங்கொடி பதிப்பகம், பக். 240-3.
பின்னிணைப்பு -2
1966 ஒக்டோபர் 21 எழுச்சி
1964ல் உருவாகிய புதிய கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றத்துடன் வடபகுதியில் புரட்சிகரமான போராட்டங்களுக்கான நிலைமைகள் வளரத் தொடங்கின. ஏற்கனவே குறிப்பிட்டளவுக்கு அரசியல் ஸ்தாபன ரீதியில்" கட்சி பலமுடையதாக விளங்கிய வடபகுதியில் மு.கார்த்திகேயன், சு.வே.சீனிவாசகம், கே.ஏ.சுப்பிரமணியம், கே. டானியல், வீ.ஏ.கந்தசாமி போன்ற தலைவர்கள் புரட்சிகர நிலைப்பாட்டை எடுத்து புதிய கட்சியை வழிநடத்தினர். அதேவேளை அ. வைத்தியலிங்கம், எம்.சி.சுப்பிர மணியம், வ. பொன்னம்பலம், ஐ.ஆர். அரியரட்ணம் போன்றோர் வலதுசாரிப் பாதையில் பழைய கட்சியை பாதுகாக்க முற்பட்டனர். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே கட்சி, வாலிபர் இயக்கம் என்பனவற்றில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் புரட்சிகர நிலைப்பாட்டையே எடுத்திருந்தனர். கட்சிப் பிளவுக்குப் பின் இடம்பெற்ற 1964ம் ஆண்டின் மேதினம் புதிய கட்சியின் மிகப்பெரிய செல்வாக்கினை வெளிப்படுத்தியது. அத்துடன் கட்சியின் மார்க்சிச லெனினிசக் கொள்கை காரணமாக வாலிபர் இயக்கத்தின் ஊடாக புதிய இரத்தம் பாய்ச்சப்பட்டு வீறும் வேகமுமுடையதாக கட்சி மாறியது. 1965ம் ஆண்டில் யூ.என்.பி- தமிழரசு அரசாங்கம் கொழும்புநகர் தவிர்ந்த நாட்டின் எப்பகுதியிலும் மேதின ஊர்வலம் நடத்தக் கூடாது எனவும் கூட்டம் மட்டுமே நடத்தலாம் என்ற ஒரு தடை உத்தரவைப் பிறப்பித்தது. ஏனைய கட்சிகள் அதனை ஏற்றுக் கொண்டன. ஆனால் புதிய கட்சி அத்தடையை மீறி ஓர் ஊர்வலத்தை யாழ்ப்பாணத்தில் நடாத்தி முடித்தது. ஊர்வலம் முடியும் வரை பொலீஸ் அவ்விடத்திற்கு வருவதைத் தவிர்த்து ஊர்வலம் முடிவுற்ற பின்பே வந்து விசாரித்துச் செல்லும் அளவுக்கு ஊர்வலம் சக்தி மிக்கதாக இருந்தது.
இத்தகைய ஓர் வளர்திசைச் சூழலை நன்கு அவதானித்த கட்சியின் வடபிரதேசத் தலைமை மத்திய குழுவின் முடிவோடு சாதி அடக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் எதிரான இயக்கத்தையும் போராட்டத்தையும் முன்னேடுக்க முடிவு செய்தது. இதற்கான முடிவு மேற்கொள்ளும் கட்சியின் தலைமைப் பீடத்தில் சில தவறான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. அதாவது சாதி தீண்டாமைக்கு எதிராகக் கட்சி தனியான போராட்டத்தை முன்னெடுத்தால் அது உயர்சாதி எனப்படும் மக்களிடம் இருந்து தனிமைப் பட்டுவிடவேண்டி ஏற்படலாம் என்று வாதிடப்பட்டது. இது அடிப்படையில் வர்க்கப் பார்வையை இழந்து நிற்கும் பாராளுமன்றக் கண்ணோட்டம் கொண்டது என்பதனை சண்முகதாசன்
Page 69
118 பின்னிணைப்பு 2
உட்பட பெரும்பான்மையான தோழர்கள் எதிர்த்தனர். வட பிரதேசத்தில் இத்தவறான கருத்தினை எதிர்த்து சரியான கருத்தை வலியுறுத்துவதிலும் அதற்கான போராட்ட முனையைத் திறப்பதிலும் மு. கார்த்திகேசன், கே.ஏ.சுப்பிரமணியம், சு.வே. சீனிவாசகம், வீ.ஏ.கந்தசாமி, கே. டானியல் போன்றவர்கள் முக்கியமானவர்களாகத் திகழ்ந்தனர். இதன் அடிப்படையிலே 1966ஆம் ஆண்டு ஒக்டோபர் 21ம் திகதி இப்புதிய கம்யூனிஸ்ட் கட்சி சுன்னாகத்தில் இருந்து ஓர் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடாத்த முன்வந்தது. 'சாதி அமைப்புத் தகரட்டும், சமத்துவ நீதி ஓங்கட்டும்" என்ற செம்பதாகையின் கீழ் அவ்ஊர்வலம் பொலீஸ் விதித்த தடையையும் மீறி சந்தை மைதானத்தில் இருந்து ஆரம்பித்து யாழ்நகர் நோக்கி வீறுநடை போட்டது. அவ் ஊர்வலம் சுன்னாகம் பொலீஸ் நிலைய முன்றலை சென்றடைந்தபோது முன்கூட்டியே தயார்நிலையில் வைக்கப்பட்ட குண்டாந்தடிப் பொலீஸ்படை ஊர்வலத்தின் மீது தனது மூர்க்கத்தனமான தாக்குதலை நடாத்தியது. உயர் பொலீஸ் அதிகாரிகள் ஸ்தலத்தில் நின்று ஆணையிட அத்தாக்குதல் தொடுக்கப்பட்டது. ஊர்வலத்தினைத் தலைமைதாங்கிச் சென்றவர்கள் தாக்கப்பட்டனர். கே.ஏ. சுப்பிரமணியம், வீ. ஏ. கந்தசாமி, இ.கா. குடாமணி ஆகிய மூவரும் கடுமையாகத் தாக்கப்பட்டு மேல் சட்டைகள் கிழிக்கப்பட்ட நிலையில் பொலீஸ் நிலையத்தினுள் இழுத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். தாக்குதலுக்கு உள்ளான சு.வ்ே, சீனிவாசகம் எஸ்.ரி.என்.நாகரட்ணம், கே.டானியல், சி. கா. செந்திவேல், டி.டி. பெரேரா மற்றும் கட்சி வாலிபர் இயக்க ஊழியர்கள் மீண்டும் ஊர்வலத்தை யாழ்நகர் நோக்கி நடாத்துவதில் விடாப்பிடியாக நின்றனர்.இறுதியில் யாழ் நகர் நோக்கி ஊர்வலத்தினர் நடந்து செல்வதற்கு பொலீஸ் அனுமதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. யாழ்நகர் முற்றவெளியில் பொதுக்கூட்டம் சு.வே. சீனிவாசகம் தலைமையில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அன்றைய கட்சியின் பொதுச் செயலாளர் நா. சண்முகதாசன், கே. டானியல், சி. கா. செந்திவேல், டி.டிபெரேரா ஆகியோர் உரையாற்றினர். அக் கூட்டத்தில் சாதி அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு கட்சியின் சார்பில் அறைகூவல் விடுத்த சண்முகதாசன் தனது பேச்சின்போது அமெரிக்க நீக்ரோ மக்களின் நிறவெறிக்கு எதிரான போராட்ட உதாரணத்தை எடுத்துக்காட்டினார். தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டம் உயர்சாதியினர் அனைவருக்கும் எதிரான போராட்டமாக இருக்க வேண்டும் எனக் கூறிய கூற்றுபின் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது. இப்போராட்டம் உயர்சாதி தாழ்ந்த சாதி முரண்பாடு அல்லவென்றும் வர்க்க அடிப்படையில் உயர்சாதியில் உள்ள உழைக்கும் வர்க்க சக்திகளை அரவணைத்து சாதி தீண்டாமையை
கலாச்சாரம் எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் 0 119
வற்புறுத்தும் சாதிவெறியர்களுக்கு மட்டும் எதிரான போராட்டமாக முன்னெடுப்பதாலேயே அது பரந்த வெகுஜனப் போராட்டமாக வளரமுடியும் என்பதனை கே. ஏ. சுப்பிரமணியம், சு. வே. சீனிவாசகம் போன்ற தலைவர்கள் வற்புறுத்தினர். இத்தகைய அடிப்படையான கொள்கைத் தெளிவு சரியான மார்க்சிச லெனினிச நிலைப்பாட்டில் இருந்து எடுக்கப்பட்டதனாலேயே சாதி அடக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் எதிரான போராட்டம் மிகப் பரந்த ரீதியில் அதன் வெற்றிவரை முன்னெடுக்கப்பட்டது. மேற்படி புரட்சிகர வெகுஜனப் போராட்டங்கள் இடம், சூழலுக்கு ஏற்றவாறு சட்டத்திற்கு உட்பட்டும் சட்டத்தை மீறியும் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் அன்று உருவாக்கப்பட்டதே தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்' என்ற பரந்த போராட்ட ஸ்தாபனமாகும். அதன் தலைவராக எஸ்.ரி.என். நாகரட்ணம் இருந்து வந்தார். அப்டிோராட்டத்தின் மையப்புள்ளி மக்களது முழுமையான பங்களிப்பாகவும் அவர்களது சொந்தப் போராட்டமுமாகத் திகழ்ந்தது. 1966-70 காலகட்டத்தில் மிக உச்சநிலையில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டங்களில் கட்சியின் தலைமை குறிப்பாக வடபிரதேசத் தலைமையானது மிகவும் தெளிவான மார்க்சிச லெனினிச நிலைப்பாட்டைக் கொண்டு தலைமை தாங்கி நின்றமை குறிப்பான அம்சமாகும். ஒக்டோபர் 21 எழுச்சியுடன் முன்வைக்கப்பட்ட புரட்சிகரக் கொள்கையானது சங்கானையில் வெடித்த போராட்டத்தின் மூலம் புரட்சிகர வெகுஜனப் போராட்டம் என்னும் நடைமுறைக்குள் பிரவேசித்தது. சங்கானைப் போராட்டத்தின் உறுதியான நிலைப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் உள்ள அடக்கப்பட்ட அனைத்துத் தாழ்த்தப்பட்ட மக்களையும் விழித்தெழிந்து போராட்டப் பாதையில் முன்செல்ல வழிவகுத்தது. மட்டுவில் - சாவகச்சேரி, மந்து வில் - கொடிகாமம், மாவிட்டபுரம் - காங்கேசன்துறை, நெல்லியடி - கன்பொல்லை - கரவெட்டி, உரும்பிராய் போன்ற குறிப்பான பகுதிகளில் இடம்பெற்ற தேனீர்க்கடை - ஆலயப் பிரவேசப் போராட்டங்கள் தொடர்ந்து பல மாதங்கள் நீடித்தன. அவை புரட்சிகர வெகுஜனப் போராட்ட மையங்களாக விளங்கின. இப்போராட்டங்களின்போது சாதிவெறியர்களின் தாக்குதலுக்கு இலக்காகி பத்துக்கும் மேற்பட்டோர் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்தனர். யூ.என்.பி- தமிழரசுக் கட்சி இணைந்திருந்த "தேசிய அரசாங்கத்தின் பொலீஸ் சாதிவெறியர்களுடனும் பிற்போக்கு சக்திகளுடனும் இணைந்து நின்றமை குறிப்பிடக்கூடியதொன்றாகும். அதே வேளை ஏழு சாதிவெறியர்கள் புரட்சிகரப் போராட்டத்தின் மூலம் உயிரிழக்கவும் நேரிட்டது.
Page 70
120 O. பின்னிணைப்பு 2
ஆண்டாண்டுகாலமாக சாதி அடக்குமுறையாலும் தீண்டாமைக் கொடுமையாலும் அல்லலுற்று அடிமைத்தன வாழ்வுக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் தமது சொந்தக் கால்களில் எழுந்து நின்று புரட்சிகரப் போராட்டத்தின் மூலம் அடிமைவிலங்கை உடைத்தெறிய முன்வந்த நிகழ்வு வரலாற்றுத் திருப்பு முனையாகிறது. இப்போராட்டம் அன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திறக்கப்படாத ஆலயக் கதவுகளைத் திறக்கச் செய்தது. சமத்துவமாக அனுமதிக்கப்படாத தேனீர்க் கடைகளில் சமத்துவத்தைப் பெற்றுக் கொடுத்தது. மற்றும் பொது இடங்களில் இரண்டாந்தர நிலையில் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையினை மாற்றியமைத்தது. மொத்தத்தில் தமிழ் மக்கள் மத்தியில் நிலவிவந்த உயர்ந்த தமிழரும் தாழ்ந்த தமிழரும் என்ற இரட்டைத் தர நிலையினைத் தகர்த்து தமிழர் சமுதாயம் என்ற நிலை உருவாகுவதற்கு வழிவகுப்பதில் இப்புரட்சிகரப் போராட்டம் தனது வரலாற்றுப் பங்களிப்பை வழங்கிநின்றது. பிற்காலத்தில் தமிழர்களிடையே பெரும்போராட்ட அலையாக எழுந்த தமிழ்த்தேசிய இனவிடுதலைக்கான போராட்டம் தோன்றி வளர்வதற்கான முன்தேவையை இக்காலப் போராட்டம் நிறைவுசெய்தது. அதன் மூலம் பல முன் அனுபவங்களைத் தமிழ் இளைஞர்கள் இப்போராட்டத்தின் ஊடே பெறக்கூடிய வாய்ப்பினையும் வழங்கி நின்றது.
- நன்றி : சி.கா. செந்திவேல், 'இலங்கை இடதுசாரி இயக்கத்தின் 50 ஆண்டுகள்', சவுத் ஏசியன் புக்ஸ், பக்-170-175.