கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மறப்பதற்கு அழைப்பு

Page 1
நிர்கரவாவின் போராளிக்கவிஞர்கள் தொட்டு மத்திய அமெரிக்காவிர் பெர் கவிஞர்கள்ளெர பொதுவாகச் சமூகவிடுதலை வேட்கமிர் பல்வேறு
முகங்களையே நமக்கு கட்டுகிறார்கள் லண்டனில் வாழும் புலம்பெங்கு
கவிஞர்களிடம் புலம்பெயர்ந்த வாழ்வின்
அவமும் தாய்நாட்டின் அடக்குமுறை
ஆட்சிக்கு எதிரான உணர்வும்
கவிதையாகி அவுஸ்திரேலியக் கவிதைகளை விாங்
கொள்வதால் இயற்கையோடு ஒன்றி
வாழ்ந்த ஒரு சமூகம் தனது பணர்னிலேயே
அந்நியமாக்கப்பட்டு உரிமை மறுக்கப்பட்டு R
ஆங்கில கிறிஸ்துவ நாகரித்தி ரோஸ்
தனது மொழியும் IGILITILLI பணமுடியாது பறிக்கப்பட்டதை நிாவிற்கொள்ள வேர்டு எதிர்ப்புக்
குரல்களாகவே அவர்களது கவிதைகள்
அமைவதில் வியப்பில் ஒரு சில கவிதைகள் போக, பற்றவற்ற
விளங்கிக் கொள்வதற்கும் நமது இருப்பு தொடர்புபடுத்தி வாசிப்பதற்கும் அதிக சிரம் இராது என்பது எளது நம்பிக்கை தமிழ்க் கவிதையுலகுக்கு இவை புதிய சாத்தியப்பாடுகளை உண்ர்த்தது போயிறும் தமக்குள்ளேயே தேடல் நடத்துகிற ஒரு பந்தமான கவிதைப் போக்கிளின்றும் வேறுபட்ட ஒரு |GjERGÄLLIGT FEITLI LIITTIGTIGJIGIÚIL வழங்கும் எண் எதிர்பார்க்கிறேர் இது வெளியிலிருந்து பாபும் ஒளி சார்
ISBN 3-75
קרחון הן חוה דווח וחדר
 

绯
தேசிய கலை இலக்கிப் பேரவை

Page 2

மறப்பதற்கு GHEOIL
சி. சிவசேகரம்
இ
தேசிய கலை இலக்கியப் பேரவை

Page 3
தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடு -101
நூற்பெயர் பதிப்பு வெளியீடு அச்சிட்டோர் முகப்போவியம் விநியோகம்
விலை : ரூபா. 160=
Tjte
Edition Publishers Printers Cover Design Distributors
ISBN NO
Price : Rs. 160/=
; மறப்பதற்கு அழைப்பு
: பெப்ரவரி 2003 : தேசிய கலை இலக்கியப் பேரவை : கெளரி அச்சகம்
: இரா. சடகோபன் : சவுத் ஏசியன் புக்ஸ், வசந்தம் (பிறைவேற் லிபிட்,
44, மூன்றாம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி, கொழும்பு -11. தொலைபேசி 335844
வசந்தம் புத்தக நில்ையம்
405, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்,
: MarappathatkuAlaippu : February, 2003 : Theshiya Kalai Ilakkiyap Peravai : Gowry Printers : R. Shadagopan '
: South Asian Books,
Vasantham (Pvt) Ltd, No. 44, 3rd Floor, C.C.S.M. Complex, Colombo -11. Tel: 335844.
Vasantham Book House, 405, Stanly Road, Jaffna.
: 955-8637-16-5
ii

பதிப்புரை
மொழிபெயர்ப்பு இலக்கிய வெளியீட்டு முயற்சியில் நாம் இதுவரை 14 நூல்களை வெளியிட்டுள்ளோம். இவற்றில் கே. கணேஷ் அவர்களின் ஆறு நூல்களும் க. நடனசபாபதி அவர்களினர் இரு நூல்களும் இ. முருகையனின் இரு நூல்களும் இந்நூலாசிரியர் சி. சிவசேகரத்தின் நான்கு நூல்களும் அடங்கும்.
இவ்வெளியீடுகளில் கே. கணேஷ் அவர்களின் கூனற்பிறை, இளைஞன் எர்கையின் திருமணம், மூங்கிற்பள்ளம், உடலும் உணர்வும், சீன அறிஞர் லூசுன் சிறுகதைத் தொகுப்பு ஆகிய கதை நூல்களும் க. நடனசபாபதியினர் ‘லுTசுனர் -போர்க் காலச் சிந்தனைகள்’, பருவமானவர்கள் ஆகிய இரு ஆய்வு நூல்களும் முருகையனினி ‘இளநலம்-காளிதாசனின் குமாரசம்பவம்” கவிதை நூலும் ஈடிபஸ் வேந்தன் என்ற நாடக நூலும் சி. சிவசேகரத்தினர் ‘அபராதி நானல்ல', “சமூகவிரோதி ஆகிய இரு நாடக நூல்களும் உள்ளன. சி. சிவசேகரத்தின் ‘பணிதல் மறந்தவர்’, 'பாலை” ஆகிய மொழிபெயர்ப்புக் கவிதை நூல்களைத் தொடர்ந்து இந் நூலை வெளியிடுவதில் மகிழ்வடைகின்றோம்.
பொதுவாக யுத்தம் என்பது மனிதகுலத்திற்கு மட்டுமன்றி உயிரினங்களுக்கும் பூகோளத்திற்கும் அணிடத்திற்கும் அழிவை ஏற்படுத்துவதாகும். ஆதிக்கத்திற்காக ஆளும் வர்க்கத்தினர் மக்கள் மீது எப்போதும் யுத்தத்தை திணிப்பவர்களாகவே இருக்கின்றனர். இந்த யுத்தத்திற்கு முடிவு கட்டுவதற்காக தொடர்ச்சியாக மக்களினதும் மக்கள் சார்பாகவும் எதிர்ப்பியக்கங்கள் முன்னெடுக்கப்படுவதே மக்களின் வரலாறாக இருந்து வருகிறது. அந்த மக்கள் இயக்கத்தில் மக்களின் யுத்தம், யுத்தத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிரான ஆயுதப்போராட்டமாக விளங்குகின்றன. அதாவது யுத்தத்திற்கு எதிரான இயக்கத்தில் ஆயுத நடவடிக்கைகளும் உள்ளடங்குகின்றன. இவை அழிவுபூர்வமான ஆளும்வர்க்கங்களின் யுத்தங்களினின்று பிரித்தறியப்பட வேண்டும்; பிரித்து முன்னெடுக்கப்படவும் வேணர்டும், குறிப்பாகக் கூறின் யுத்தத்திற்கும் அதற்கு எதிரான மக்கள் யுத்தத்தில் அதற்கு அதரவான ஆயுத நடவடிக்கைகளுக்கும் வேறுபாடு இருக்கின்றது. இருக்க வேண்டும் என்பதும அவசியமாகும்.
iii

Page 4
ஏகாதிபத்திய-பேரினவாத யுத்தக் கொடுமைகளுக்கெதிராக மக்கள் சார்பில் உலக மக்கள் கவிஞர்களின் எதிர்ப்புக் குரல்கள் இத்தொகுதி மூலம் மேலும் சில பதிவுகளாக தமிழ் வாசகர்களைச் சென்று சேர்வதில் நாம் ஆர்வம் கொண்டுள்ளோம்.
இச்சுவடியின் நூலாக்கத்திற்குத் துணை நின்ற அனைவருக்கும் எமது நன்றிகள் உரியன. இதனைப் படித்துத் தமது விமர்சனங்களை எமக்கு எழுதுமாறும் கூறுமாறும் வாசகர்களை மீணடும் கேட்டுக் கொள்கிறோம்.
நூல் வெளியீட்டில் எமக்குத் தொடர்ந்தும் ஆதரவாக உள்ள புத்தகப் பணிபாட்டு ஆர்வலர்களுக்கும், அச்சிட்டு உதவிய கெளரி அச்சகத்தினருக்கும், நண்பர் எஸ். இராஜரட்ணம் அவர்களுக்கும், அட்டை அமைப்பிற்குப் பொறுப்பாய் செயலாற்றிய ஓவியர் இரா. சடகோபணி அவர்களுக்கும், கணனி வடிவமைத்த சிந்தியா, சோபனா ஆகியோருக்கும் எமது நன்றிகள்.
தேசிய கலை இலக்கியப் பேரவை
44, மூன்றாம் மாடி
கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி கொழும்பு -11.
முன் அட்டைப் புகைப்படம் : வியட்நாம் யுத்தத்தின்போது, தென் வியட்நாமில் இடம்பெற்ற ஆகாய மார்க்க நேபாம் குண்டுத் தாக்குதலுக்கு தப்பும் பொருட்டு எரியும் தன் உடையை களைந்து வீசி உயிர்காக்க ஓடும் ஒன்பது வயதுச் சிறுமி, இப்படம் பின்பு யுத்தப்படப்பிடிப்புக்காக பல சர்வதேச விருதுகளைப் பெற்றது.
மூலம் :
LIFEAt War
Special Edition
Time-Life bookS-1985
iv

புறத்திருந்து பாயும் ஒளி
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அயல் இலக்கியங்களின் பங்களிப்பை யாரும் மறுக்க இயலாது. இன்று நம்மிடையே உள்ள ஆக்க இலக்கிய வகைகளிலும் அவற்றுக் குட்பட்ட பல வேறு வடிவங்களிலும் பெரும்பாலானவை, பகுதியேனும், அயல் உறவுகளின் விளைவாக உருவானவை. அதினும் முக்கியமாகத் தமிழ்ச் சிந்தனை மரபு பார்ப்பணிய, சமண, பெளத்தத் தாக்கங்கட்கும் கடல்கடந்த வணிக, பணிபாட்டு அயற் தொடர்புகளின் தாக்கங்கட்கும் (பின்னாளில்) கிறிஸ்துவ, இஸ்லாமியத் தாக்கங்கட்கும் மாக்ஸியம் உட்பட்ட நவீனச் சிந்தனைகளது தாக்கத்துக்கும் உட்பட்டே வந்துள்ளது. சிந்தனைத் தளத்திலான உள்வாங்கல்கள் ஆக்க இலக்கியத்தினுடும் இயலுமாகி உள்ளன.
படைப்பிலக்கியங்களின் தமிழாக்கங்கள் பல வேறு நோக்கங்கட்காக நிகழ்ந்துள்ளது. ஒரு அயற் படைப்பு அல்லது படைப்பாளியின் சர்வதேசப் பிரபல்யம் முதலாக, ஒரு படைப்போ படைப்பாளியோ அடையாளப்படுத்தும் உலகநோக்குடனான ஈடுபாடுவரை, பலவேறு காரணாப்கட்காகத் தமிழாக்கப்படலாம். வணிக நோக்கில் அல்லது அரச/ அரசுசாரா நிறுவனங்களது பணிப்பில் மேற்கொள்ளப்படாத தமிழாக்கங்கள், பெரிதும் மொழிபெயர்ப்பாளரது சமூகப் பார்வையுடன் உறவுடையவை. அதேவேளை, ஒருவர் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட எல்லைகட்குள் இருந்தே தன் தெரிவுகளைச் செய்வது அருமை.
எனினுடைய தெரிவினி அடிப்படையும் எனது சமூக அக்கறைகளுடன் உறவுடையது. ஒரு சில பிறரது வேண்டுகோளின் பேரில் ஆங்கிலத்துக்கும் ஆங்கிலவாயிலாகத் தமிழுக்கும் மொழி பெயர்த்துள்ளேன். எனினும், ஏகப்பெரும்பாணர்மையான பகுதி, எனி சுயவிருப்பின் பேரில் அல்லது எனக்கு மிக உடன்பாடான எணர்ணங்கள் உள்ளன என்பதால் மேற்கொள்ளப்பட்டது.
V

Page 5
எனினுடைய முதலாவது கவிதைத் தமிழாக்க முயற்சியான ‘மாஓசேதுங் கவிதைகள்’ பரவலாக அறியப்படாதது. அதன் பின்னர், விரிவான பயனுள்ள குறிப்புக்களுடன் தமிழகத்திலிருந்து எஸ்.வி. ராஜதுரை வெளியிட்ட தமிழாக்கம் அண்மையில் மீளப்பதிப்பிக்கப்பட்டுள்ளது. 1994 வரை செய்த பிற தமிழாக்கங்களுள் மிகப் பெரும்பகுதி இறுதி நான்கு ஆண்டுகளிற் செய்யப்பட்டவை. இவற்றுள் ஒரு நூறளவில் ‘பணிதல் மறந்தவர்’ என்ற தலைப்பில் வெளியானது. அதன் பின்னர் பலஸ்தீனக் கவிஞரான அடோனிஸ் எழுதியவை “பாலை’ எனிற அவரது நெடுங்கவிதையின் தலைப்புடன் சில ஆண்டுகள் முன்னம் வெளியானது. நான் தமிழாக்கிய மிகுதியை, கையில் அகப்படாதவை போக, ஒரு தொகுப்பாக்கும் எணர்ணம் சென்ற ஆண்டு எழுந்தது. எனினும், என் வசமிருந்த தொகை நூற்றுக்குங் குறைவாகவே இருந்ததால், மேலுஞ் சிலவற்றையுஞ் சேர்த்துச் செய்ய எணர்ணினேன். சென்ற ஆணர்டு வழமையிலும் அதிகமானளவில் தமிழாக்கங்களைச் செய்யும் வாய்ப்புக் கிட்டியது.
கவிதைகளின் தெரிவு, நான் தேடிச் சேகரித்தவையாக அன்றி என் கைக்கு எட்டியவற்றுள் நான் தெரிந்தெடுத்தவை என்பதே உணர்மை, சிறந்த படைப்பாளிகள் சிலரது கவிதைகள் ஏற்கெனவே பிறராற் சிறப்பாகத் தமிழாக்கியுள்ளதால் அவர்களது கவிதைகளை நான் மொழிபெயர்க்க முயலவில்லை. மிகவும் நன்கறியப்பட்ட கவிஞர்களுள் ஒக்Tோவியா பாZ நொBெல் பரிசு பெற்றவர். மெக்ஸிக்கோ நாட்டின் அயற்தூதராக உலக நாடுகள் பலவற்றிலும் பணியாற்றிய அவர் தன்னை எந்த சிந்தனை முறையுடனும் அடையாளப்படுத்த விரும்பாதவர். மிரொஸ்லாவ் ஹொலுB செக்கோஸ்லவாக்கியாவின் முக்கியமான கவிஞரும் விஞ்ஞானியுமாவர். அவரும் சர்வதேச மட்டத்தில் நன்கறியப்பட்டவர். அவருடைய கவிதைகளிற்சில ‘பணிதல் மறந்தவரில் வெளியானவை. எஞ்சியவையும் பின்பு மொழிபெயர்க்க ஒதுக்கி வைத்தவையும் இங்கு சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறே, ஒஸ்ற்றியாவின் எரிஷ் Fரீட், நாடகமேதை BேTோல்ற் Bறெஹற்ற் ஆகியோரது கவிதைகளும் பகுதி முன்னைய தொகுதியிலும் மிகுதி இங்கும் உள்ளன. நணர்பர் நுஃமான் பலஸ்தீனக் கவிதைகள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார். இன்னும் நூலாக வெளிவராதவையும் அவர் வசமுண்டு. எனவே, நான் 1994க்குப் பிறகு தமிழாக்கிய சிலவும் இன்னொரு கவிதைத் தொகுப்பிற் சேர்க்கப்பட்டுத் தாறுமாறாக அச்சிடப்பட்டவை இரணர்டு உட்பட்ட மஹற்முட் டர்விஷ் கவிதைகள் சிலவும் சென்ற தடவை வெளியிடாது விட்ட ஸமிஃ அல் கஸிம் கவிதைகள் சிலவுமே இங்குள்ள பலஸ்தீனக் கவிதைகள்,
vi

பிலிப்பினியப் புரட்சிவாதியான ஹோலே மரியா ஸிஸோனின் நெடுங்கவிதையொன்று பகுதி தமிழாக்கப்பட்ட நிலையில் உள்ளது. இன்னொரு தமிழாக்கம் கைதவறிவிட்டது. எஞ்சியுள்ள ஒரு தமிழாக்கமும், முன்னாள் சீனப் பிரதமர் ஜௌஎண்லாய், நவ சீனத்தின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினருமாக இருந்த Gோமோஜோ ஆகியோரது கவிதைகள் ஒன்றிரண்டும் சீனாவின் நீண்டகால நண்பரான றெவி அலி எழுதிய ஒன்றும் இங்குள்ளன.
தெலுங்குக் கவிஞரும் மக்கள் விடுதலைப் போராளியுமான பூரீரீயினி கவிதையொன்றணி ஆங்கிலவழித் தமிழாக்கம் பற்றி மனநிறைவில்லாததால் அதைத் தழுவி நான் எழுதிய ‘புதிய பூமி’ என்ற கவிதை செப்பனிட்ட படிமங்களில் வெளிவந்து, ‘புதுவரலாறும் நாமே படைப்போம்’ ஒலிப்பேழையிலும் இடம்பெற்றது. 'அலை'யில் வெளிவந்த அத் தமிழாக்கம் இத்தொகுதியில் இடம்பெறுகிறது. "போரின் முகங்கள்’ தொகுதியில் நான் சேர்த்த ஒரு குர்தியக் கவிதையும் இங்கு உள்ளது.
சோவியத் ரஷ்யக் கவிஞர் யெவ்து ஷென்கோவின் கவிதைகள் இரணர்டு அணிமையில் தமிழாக்கப்பட்டவை. 1974 அளவில் பேராதனைக்கு வந்த யூகோஸ்லாவியப் பெணிமணி ஒருவர் எனக்கு அன்பளிப்பாகத் தந்த சமகால யூகோஸ்லாவியக் கவிதைத் தொகுதியொன்று அணிமையில் தற்செயலாக எனது புத்தக அலுமாரியிலிருந்து வெளிக்கிட்டது. அதிலிருந்து பணினிருவரது கவிதைகள் பதினி மூன்று இங்குள்ளன. போலந்துக் கவிதைகள் மூன்றும் லணர்டனில் வாழ்ந்த போது தமிழாக்கியவை, பாக்கிஸ்தானியக் கவிஞர் ஹரிஸ் க்ஹலிக்கை 2000 ஏப்ரலில் டில்லியில் நடந்த ஸார்க் எழுத்தாளர் மாநாட்டில் சந்தித்தேன். அவரது எழுத்தின் கிளர்ச்சிக் குரல் எரிஷ் Fரீடினது கூரிய அங்கதச்சுவையையும் தன்னுட்கொணர்டுள்ளது. அவற்றுள் கடந்த ஒன்றரை ஆணர்டுகளில் தமிழாக்கியவை இங்கு உள்ளன.
நிக்கராஹ"வாவினர் போராளி விவசாயிக் கவிஞர்களது ஆக்கங்களது தொகுப்பு ஒன்று சில ஆண்டுகள் முன் கைக்கெட்டியது. மக்கள் இலக்கியக் கோட்பாட்டுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமான இத்தொகுதிபற்றி இந் நூலில் சிறிது விளக்கியுள்ளேன். அதிலிருந்து தெரிந்தெடுத்த கவிதைகள் அதே விளக்கக் குறிப்புடன் காலக்குறி என்ற தமிழகச் சஞ்சிகையில் இரணர்டு ஆணிடுகள் முன் வெளியாயின.
vii

Page 6
அமெரிக்க ஏகாதிபதி திய ஆதரவில இயாப் குங் கொடுங்கோன்மைக்கு எதிரான மத்திய அமெரிக்க பெண் படைப்பாளிகளது கவிதைகள் சிலவும் இங்குள்ளன. ஒரு கியூBா நாட்டவரது கவிதையும் உள்ளது. இவை “காதலரும் தோழர்களும்’ (Lowers and Comrades) என்ற தொகுதியிருந்து பெறப்பட்டவை.
புலம்பெயர்ந்து லண்டனில் வாழும் தென் அமெரிக்க முக்கியமாக சிலே நாட்டின்) கவிஞர்களது தொகுப்பிலிருந்து சென்றமுறை சிலவற்றைத் தமிழாக்கினேன். இம்முறை மேலும் ஐந்து இடம்பெறுகின்றன.
ஆபிரிக்கக் கவிதைகள் பல சென்ற முறை தமிழாக்கப்பட்டன. இம்முறை, அப்போது தவறவிட்ட ஒன்று மட்டுமே உள்ளது.
அவுஸ்திரேலியாவுக்குச் சென்றபோது கைக்குக் கிடைத்த அவுஸ்திரேலிய பழங்குடிக் கவிஞர்களது தொகுதியொன்றிலிருந்து ஒரு சிறுபகுதியைத் தமிழாக்கியுள்ளேனர். இருபத்தைந்துக்கும் மேலானவை இத்தொகுப்பில் உள்ளன.
கவிதைகளில் மிகப் பெரும்பாலானவை குறிப்புக்களின்றி விளங்கிக் கொள்ளக்கூடியன. விடுதலைக்கு முந்திய சீனம், விடுதலைக்காகப் போராடும் பிலிப்பின்ஸ், Fாஸிஸ எழுச்சிக்கால ஜேர்மனி, இரணர்டாம் உலகப்போர்க் கால யூகோஸ்லாவியா, சோவியத் திரிபுவாதிகளது மேலாதிக்கத்துக்குட்பட்ட போலந்தும் செக்கோஸ்லவாக்கியாவும் என்பவற்றை மனதிற் கொண்டாலி முதல் இருபத்தொன்பது பக்கங்களிலும் உள்ள கவிதைகளை வாசிப்பது இலகுவாயிருக்கும்.
எரிஷ் Fறீடின் ‘மறப்பதற்கு அழைப்பு பலஸ்தீனப் பிரச்சினை பற்றியது. அதுவே இந்நூலில் உள்ள கவிதைத் தலைப்புக்களில் எனக்கு மிகவும் பிடித்ததும் இன்றைய சூழலின் பின் நவீனத்துவ வரலாற்று மறுப்பு வாதங்கள் நடுவே மிகவும் பொருத்தமானதும் என நினைத்தேன். அதுவே இந்நூலின் தலைப்பாகிறது. முதலுதவியும் மூன்றாமுலகில் ஏகாதிபத்தியத்தின் அழிவுச் செயல்கள் பற்றியது. ‘முதலுதவி’ என்ற கவிதையில் "சதை இல்லாமல் மனேரதியம் இல்லை” என்ற அவரது கேலியான சொற்கள், மாமிச நுகர்வை அதிகரிப்பதற்காக 1980களின் போக்கில் ஐரோப்பிய நாடுகளில் பாவிக்கப்பட்ட ஒரு விளம்பர சுலோகத்தை ஒட்டியன, பிறகவிதைகளில் 1970-1980களில் ஐரோப்பிய இடதுசாரிகளின் குழுவாதம் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகின்றன.
viii

பாலஸ்தீனக் கவிதைகள் பற்றி நாணி அதிகாப் கூற வேணர்டியதில்லை. எனினும் அவற்றில் வருகிற படிமங்கள் எதைக் குறிக்கின்றன என்று விளக்குமளவுக்கு எனக்கு ஆற்றல் இல்லை. எனக்குக் கிடைத்த ஆங்கில மொழியாக்கங்களுடன் அவை பற்றிய குறிப்புக்கள் தரப்படவில்லை. ஹரிஷ் க்ஹலிக்கை விளங்கிக்கொள்ள பாகிஸ்தானில் ராணுவ அதிகாரத்துக்கு உட்பட்ட பாராளுமன்ற முறையை மனதிற் கொள்வது போதுமானது.
ஒக்ாாவியா பாZ அரசியல் அடையாளத்தையும் இலக்கியத்துக்கு என ஒரு சமூக இலக்கையும் கவனமாக மறுத்த ஒருவர். எனினும் அவரது கவிதைகளில் விடுதலையினர் குரலை நாம் கேட்கலாம். நிக்கரஹவாவின் போராளிக்கவிஞர்கள் தொட்டு மத்திய அமெரிக்காவின் பெணி கவிஞர்கள்வரை, பொதுவாகச் சமூகவிடுதலை வேட்கையின் பல்வேறு முகங்களையே நமக்கு காட்டுகிறார்கள்.
லண்டனில் வாழும் புலம்பெயர்ந்த கவிஞர்களிடம் புலம்பெயர்ந்த வாழ்வின் அவலமும் தாய்நாட்டின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான உணர்வும் கவிதையாகிறது.
அவுஸ்திரேலியக் கவிதைகளை விளங்கிக் கொள்வதானால் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த ஒரு சமூகம் தனது மணிணிலேயே அந்நியமாக்கப்பட்டு உரிமை மறுக்கப்பட்டு ஆங்கில கிறிஸ்துவ நாகரிகத்தின் பேரால் தனது மொழியையும் பணிபாட்டையும் பேணமுடியாது மறிக்கப்பட்டதை நினைவிற்கொள்ள வேண்டும். எதிர்ப்புக் குரல்களாகவே அவர்களது கவிதைகள் அமைவதில் வியப்பில்லை.
ஒரு சில கவிதைகள் போக, மற்றவற்றை விளங்கிக் கொள்வதற்கும் நமது இருப்புடன் தொடர்புபடுத்தி வாசிப்பதற்கும் அதிக சிரமம் இராது என்பது எனது நம்பிக்கை, தமிழ்க் கவிதையுலகுக்கு இவை புதிய சாத்தியப்பாடுகளை உணர்த்தாது போயினும், தமக்குள்ளேயே தேடல் நடத்துகிற ஒரு மந்தமான கவிதைப் போக்கினின்றும் வேறுபட்ட ஒரு புறநோக்கிய மனிதநேயப் பார்வையை வழங்கும் என எதிர்பார்க்கிறேன்.
இது வெளியிலிருந்து பாயும் ஒளி எணர் மொழிபெயர்ப்புக் கணிணாடியூடு இதை உள்ளே தழுவ விடுகிறேனர். என் தமிழாக்கத்தின்
குறைபாடுகளையும் மீறி இக் கவிதைகள் சிறப்பான கவிதைகளாக
ix

Page 7
அமைகின்றன என்றே நினைக்கிறேனர். எனினும் இவை பற்றிய விமர்சனங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
இத்தமிழாக்கங்களில் பெரும்பாலானவற்றை வெளியிட்ட தாயகம், தேசியகலை இலக்கியப் பேரவையின் 25ம் ஆண்டு நிறைவுச் சிறப்பிதழான புதுவசந்தம், மூன்றாவது மனிதன், யாத்ரா, ஞானம், ப்ரவாகம் ஆகிய ஈழத்து ஏடுகட்கும் தமிழகத்துக் காலக்குறி, லணர்டனின் தமிழோசை, கனடாவின் தாயகம், நோர்வேயின் சுவடுகள் ஆகியவற்றுக்கும் நண்பர் இ. தம்பையாவின் தந்தையாரின் நினைவாக வெளியிடப்பட்ட அறிவஞ்சலி எனும் நூலின் தொகுப்பாளர்கட்கும் எனது நன்றிகள் உரியன.
இதை நூலாக்குவதில் கடும் முயற்சி எடுத்த நணர்பர் சோ. தேவராஜாவுக்கும் நான் சுட்டும் திருத்தங்களை மனங்கோணாது செய்து உதவிக் கணனியில் எழுதி உதவிய சிந்தியா, சோபனா அவர்களுக்கும் முன் அட்டைப்படத்தை வரைந்துதவிய ஓவியர் இரா. சடகோபனுக்கும் நூலை வெளியிடும் தேசிய கலை இலக்கியப் பேரவையினருக்கும் அச்சிட்ட கெளரி பிரசுரத்தினர் நிருவாகி எஸ். இராஜரட்ணம் அவர்களுக்கும் அச்சகத்தினருக்கும் என் நன்றிகள்.
சி. சிவசேகரம் பேராதனை 24 டிசம்பர் 2002.

ஹோஸே மரியா ஸிஸோன் (Jose Maria Sison) பிலிப்பின்ஸ்
955)
மார்கழியில் என் சிறைக் கூண்டை நள்ளிரவில் ஒரு உறைகுளிர் அறையோடும் பகலில் ஒரு வெதுப்பகத்தோடும் ஒப்பிடுவேன்.
இப்போது வெய்யிற்காலம் என்பதால் இதை நரகத்தோடு ஒப்பிடுகிறேன். எனினும் இதன் சிறிய அளவு கருதி இதை ஒரு உலையோடு ஒப்பிடுகிறேன்.
இது ஒரு சிறும் உலை:
எ."கைப் பதனிடுகிறது. இது ஆறுதல் தரும் ஒரு உவமேயம்,
சி. சிவசேகரம் 1

Page 8
ஜெள என் லாயப் (Zhou Enlai) சீனா
விர்! விர்! வடமேற்கின் காற்று!
குளிர்காலம் வந்தாயிற்று. வெளியே செல்ல ஒரு ரிக்ஷாவை அமர்த்தினேன். ரிக்ஷாக்காரன் பஞ்சு அடைந்த கோட் அணிந்திருந்தான். நானும் பஞ்சு அடைந்த கோட் அணிந்திருந்தேன். எனது கோட்டுக்கு ஊடாகவும் குளிர் என்னைக்குத்தியது. தனது கோட்டை அணிவது அவனுக்குச் சுமையாய்த் தெரிந்தது. அதைக் கழற்றி அவன் எண் பாதங்களை மூழனான். அவனது கருணைக்காக நான் நன்றி சொன்னேன். தன்னை ஏற்றதற்காக அவன் நன்றி சொன்னான்.
பரஸ்பர நலன்சார்ந்த சகஜீவனம்?
உயிர் வாழும் மனிதரின் வேர்வை சிந்துதல்! மரணத்துள் வாழ்வதன் சோம்பேறித்தனம்!
2 மறப்பதற்கு அழைப்பு

G3GT (GBLDT (8.gm (Guo Mojo) சீனா
மணற் சுவடுகள்
வலப்புறம் சூரியன் ஒளிர்கிறது இடப்புறம் உள்ள கடல்மீதென் முழுநிழ லினையே எறிகிறது கடற்கரை மணலென் காலழச்சுவடு பலப்பல கொண்டே திகழ்கிறது
இடப்புறம் சூரியன் ஒளிர்கிறது வலப்புறம் உள்ள கடல்மீதென் முழுநிழ லினையே எறிகிறது கடற்கரை மனலென் காலடிச்சுவடு பலப்பல கொண்டே திகழ்கிறது
பின்புறம் சூரியன் ஒளிர்கிறது முன்புறம் உள்ள கடல்மீதென் முழுநிழ லினையே எறிகிறது வேண்டாம் கடலே மணல்மீதென் காலழச் சுவட்டை அழியாதே!
முன்புறம் சூரியன் ஒளிர்கிறது பின்புறம் உள்ள கடல்மீதென் முழுநிழல் சூரியா எறிந்தாயா ஆ என் காலழச் சுவடுகளை கடற்பெருக் கழித்தோ வெகுநேரம்!
சி. சிவசேகரம் 3

Page 9
ஒளிருங் காலைப்பொழுது
குளத்தின் மேலாக இளம் விலோ? மரங்கள்; விலோக்கட்குக் கீழே ஒரு நீண்ட ஒதுக்கிடம்; ஒதுக்கிடத்தில் அமர்ந்தUழ என் மகனும் நானும், குளத்தில் சூரியனதும் முகில்களதும் நிழல் விழும்.
சேவற்கூவல், பறவை ஒலி, கிளிக்கத்தல்; பளிங்கு, நீரோடைபோற் பாயும்; வண்ணத்துப் பூச்சிகள் இங்குமங்கும் சிறகடிக்கும்; தூக்கணாங்குருவி இங்குமங்கும் பாயும்.
இறந்த இலைகள் தடுமாறி விழுந்தபடி குளத்திற்குள் மிதந்து இறங்கும்; காற்றில் அலையும் பசும் இலைகள் எங்கட்கு மேலே வெள்ளிச் சொலிப்பைப் சொரியும்.
ஒரு வெண் பறவை குளத்தின் நடுவே ஆழயபடி இறங்கும்: ஆ! ஒரு சிராய்த்த பச்சைமணிக்கல் ஏரி, அதற்கு அப்பால் முழவற்ற நாணற்புதர் அடுக்கு.
*விலோ (willow) காற்றாடி மரவகை
4 மறப்பதற்கு அழைப்பு

GBGTT6ógó BGggsögð (Bertolt Brecht) ஜேர்மனி
விமர்சனக் கண்ணோட்டம் பற்றி
விமர்சனக் கண்ணோட்டம் சிலருக்குப் பயனற்றதாய்த் தெரிகிறது ஏனென்றால் அவர்களது விமர்சனத்தை அரசு அசட்டை செய்கிறது இங்கே பயனற்ற கண்ணோட்டம் பலவீனமான கண்ணோட்டமே விமர்சனத்தை ஆயுதபாணியாக்கினால் அது அரசுகளை அழித்தொழிக்கும்
ஆற்றுக்கு அணை கட்டல் கனி மரத்தில் ஒட்டு வைத்தல் ஒருவருக்குக் கற்பித்தல் அரசை மாற்றியமைத்தல்
இவையெல்லாம் ஆக்கமான விமர்சனத்துக்கு உதாரணங்கள் அதேவேளை
கலைக்குரிய உதாரணங்கள்
சி. சிவசேகரம் 5

Page 10
காலையில் யன்னலுடு முதலாவது பார்வை மீண்டுங் கிடைத்த பழைய நூல் உற்சாகமான முகங்கள் வெண்பனி, பருவ மாற்றங்கள் பத்திரிகை
நாய்
இயங்கியல்
குளிப்பு, நீச்சல்
பழைய இசை வசதியான காலணி பொருட்களைக் கொணர்தல்
புதிய இசை எழுதுதல், மரம் நாட்டல் Սա6007Ù
பாடல், நட்புடன் இருத்தல்
சாந்தகப்பை
இன்பங்கள்
கனவொன்றில் ஒரு கட்டட வேலைத்தலத்தில் நின்றேன். கல்லடுக்கல் எண் வேலை. என் கையில் ஒரு சாந்தகப்பை. சாந்துக் கலவைக்காக நான் குனிந்தபோது, ஒரு வெடி யொலித்தது என் சாந்தகப்பையின் அரைவாசி இரும்பை அது அள்ளிச் சென்றது.
மறப்பதற்கு அழைப்பு

இந்த வேனிலின் வானம்
குளத்தின் மேலாகக் குண்டு வீசும் விமானம் பறக்கிறது
வலிக்குந் தோணிகளினின்று சிறுவரும் பெண்களும் முதியோரும் மேலே பார்த்தனர் தொலைவினின்று பார்க்கையில் அவர்கள் உணவுக்காய் வாய்பிளக்கும் கரிய குருவிக்குஞ்சுகள் போற் தெரிந்தனர்.
நீர் பேசும்போது செவி சாய்ப்பீர்
ஆசிரியரே, அழக்கடி நீர் சொல்வது சரி என்னாதீர் மாணவர்கள் அதை உணரட்டும் உண்மையை வற்புறுத்தாதீர் அது உண்மைக்கு நல்லதல்ல நீர் பேசும்போது செவிசாய்ப்Uர்
சி. சிவசேகரம் 7

Page 11
யெவ்Gெனி யெவ்துஷென்கோ (Yevgeni Yevtushenko) சோவியத் யூனியன்
பொய்கள்
இளையோரிடம் பொய்யுரைப்பது தவறு. அவர்களிடம் பொய்யை மெய்யென நிரூபிப்பது தவறு. கடவுள் தனது சொர்க்கத்தில் உள்ளார் உலகில் எல்லாமே ஒழுங்காக உள்ளது என்பது தவறு. இளையோர் உங்கள் எண்ணத்தை அறிவர். இளையோரும் மாந்தரே. தொல்லைகள் எண்ண இயலாதன என அவர்க்குச் சொல்வீர். நாளை நடப்பதை மட்டுமன்றி இன்றைய நிகழ்வுகளையும் தெளிவுடன் காணச் சொல்வீர். அவர்கள் எதிர்நோக்க வேண்டிய தடைகள் உள்ளன. துன்பம் நிகழும், இடையூறு நேரும் என உரைப்பீர். ஆவது ஆகட்டும். இன்பத்திற்கான விலை இன்பமானதல்ல என அறியாதிருந்தோர் யார்? மனமறிய ஒரு பிழையை மன்னியாதிர் அது மீள நிகழும், பெருகும்.
அதன்பின்பு நம் மாணவர்கள் நாம் மன்னித்தவற்றிற்காக நம்மை மன்னிக்கமாட்டார்.
8 . மறப்பதற்கு அழைப்பு

பேச்சு
“நீஒரு தைரியசாலி” என எண்ணிடம் சொன்னார்கள். நான் அப்படி இல்லை.
தைரியம் எனது பண்பாக இருந்ததில்லை மற்றவர்கள் போல என்னைத் தரந்தாழ்த்திக் கொள்வது தகாதது என மட்டுமே எண்ணினேன். எந்த அத்திவாரமும் நடுங்கவில்லை. எனது குரல் ஆடம்பரமான பொய்யை பற்றிச் சிரித்ததற்கு அப்பால் எழவில்லை. நான் எழுத்தைவிட எதுவும் செய்யவில்லை, எதையும் பழித்ததில்லை,
நான் கருதிய எதையும் ஒதுக்கி வைத்ததில்லை. தகுதியானோருக்கு ஆதரவு தந்தேன், தகைமையற்றோர் மீதும் இறந்த காலத்திற்குரிய படைப்பாளிகள் மீதும் முத்திரை Uதித்தேனர். (இவை, எவ்வாறோ செய்யப்பட்டிருக்க வேண்டியன.) இப்போது நான் ஒரு தைரியசாலியெனக் கூறுமாறு என்னை வற்புறுத்துகின்றனர். இந்தப் பயங்கரங்கட்குத் தம் இறுதிப் பழியை வாங்கும் போது, வெகு சராசரியான ஒர்மம்கூட தைரியமாகத் தோன்றுகிற ஒரு வினோதமான காலத்தை நினைவுகூர்கையில், நமது குழந்தைகள் எவ்வளவு கடுமையாக வெட்கப்படுவார்கள்.
சி. சிவசேகரம் 9

Page 12
இவோ அன்ட்ரிச் (Ivo Andric)
யூகோஸ்லாவியா (ஸேர்Blயா)
குளத்திலிருந்து
வயப்படாதவாறு கொடுங்குத்தாகவும் அசைவற்றும் தமது முகில் மூழய உச்சிகளினின்று நோக்குகின்றன மாமலைகள். விறைப்பான வானம் மேலே. கழதாகக் கருணையின்றிப் பூமி.
இல்லை, எதுவும் நிகழாது. மாமலைகள் துகளாக நொறுங்கா. வானம் குளிராகவும் தன் உயரம் பற்றிய பெருமையுடனும் இருக்கும்.
மனிதர்களது அழமை இதயத்தை ஒருவர் காணவும் அதன் துழப்பைக் கேட்கவும் இயலுமான படி, சூழும் சாம்பல் நிறத்திடை தொலைவு பின்வாங்குகிறது. ஒலிகள் மயங்குகின்றன. நிறங்கள் வெளிறுகின்றன.
முகில்களிலும் மழைகளிலும் எதிர்கால நூற்றாண்டுகள் நெருங்கி என் அவமானத்தை நோக்குகின்றன. வரவிருக்கும் பரம்பரைகளின் விழிகட்குத் தெரிய எண் ஆன்மா ஒரு உடைந்த வாள் போல் நீட்டி நிர்வாணமாக, அனாதரவாகக் கிடக்கிறது. இன்னும் பிறக்காதோரின் ஏளனமிக்க விழிகளால் நான் Uொசுக்கப்படுகிறேன்.
10 மறப்பதற்கு அழைப்பு

@画 g) GOJILITL6)
“நீஅளவுக்கு அதிகம் தனிமையில் இருக்கிறாய், நீநீண்டநேரம் மோனம் அனுட்டிக்கிறாய். நீகனவுகளால் வதைக்கப்படுகிறாய். ஆன்மாவின் பாதைவழிகளில் சோர்வுண்டு இருக்கிறாய். உன் உருவம் கூனியுள்ளது. உன் கன்னங்கள் வெளிறியுள்ளன. உன் விழிமடல்கள் சாய்ந்துள்ளன. உன் குரல் ஒரு சிறைக்கதவின் கிரீச் ஒலி போலத் தொனிக்கிறது. மகனே வேனிற்காலத்தின் பகல் வேளையில் வெளியே சென்று வா.”
“வேனிற் காலத்தின் பகல் வேளையில் எதைக் கண்டாய், மகனே?”
“பூமி வலியதெனவும் வானம் நிலைபேறுடையதெனவும் மனிதன் வலுவற்றவனும் சிலநாள் வாழ்பவனும் எனவும் கண்டேன்.”
“வேனிற் காலத்தின் பகல் வேளைகளில் வேறென்ன கண்டாய், ups(560T2'
“காதல் குறுகிய காலத்துக்குரியது எனவும் Uசிமுடிவற்றது எனவும் கண்டேன்.”
“வேனிற் காலத்தின் பகல் வேளைகளில் வேறென்ன கண்டாய், மகனே?”
“வாழ்க்கை என்பது எவ்வளவு துன்பமானது எனக் கண்டேன். அவலமும் பாபமும் ஏமாற்றின் மேல் இணைந்த கீழ்த்தரமான கலவை.”
“நீஓய்வெடுக்க விரும்புகிறாய், இல்லையா மகனே?”
“இல்லை தந்தையே, நான் வெளியே சென்று வாழப்போகிறேன்.”
சி. சிவசேகரம் 11

Page 13
யொவான் டுசிச் (Jovan Ducic)
யூகோஸ்லாவியா (ஸேர்Bயா)
ஒரு குளிர்காலப் படம்
வெண்Uணி போர்த்த கல்லறை வெளி தனிமையாயுள்ளது கோயில் மனை உறைந்துள்ளது வானம் சாம்பலாகத் தாழ்ந்துள்ளது ஒரு சிலுவைக்கோ ஒரு மண் மேட்டிற்கோ பின்னால் ஒரு சொல்லை மூச்சு விடவோ ஏக்கப் பெருமூச்செறியவோ காற்று எங்குமில்லை
உறைந்த கோயில் மணி அழுத்து
ஒலி எழுப்பாது கழகாரத்தின் கரங்கள் விறைத்து எப்போதும் நிலையாய் நின்று அகண்டு ஊமையாக உள்ள Uள்ளத்தாக்கினிடம் காலமே இறந்து போன ஒரு நேரத்தை அறிவிக்கும்
12 மறப்பதற்கு அழைப்பு

Bளாஸே கொனெஸ் கி.
(Blaze Koneski)
யூகோஸ்லாவியா (மஸிடோனியா)
மரத் தண்டு
விழுவது பற்றிய நிச்சயமின்மையை இன்னமும் அஞ்சி மரத்தில் நடுங்கியபடி நிற்கும் சில இலைகளை நோக்கி விழுந்த இலைகள் சொல்கின்றன. கீழே வந்து எம்முடன் சாவுங்கள் கடுங் காற்றினின்று தப்பித் தரைக்கு அருகே மெளனத்துள் புகுங்கள் எரிந்து போன இந்த எலும்புக் கூட்டை வெறிதாக உரியுங்கள் அவனது கரிய கரங்கள் வானை நோக்கி நீளட்டும் அவனது உடல் இலையுதிர்கால மழை நீரின் கிழே ஆற்றுப் படுக்கைக்குள் புதையட்டும் அப்போது
அவனுடைய மஞ்சள் நிற நினைவுப் பொருள் வளையத்தினின்று அவன் வெளியேற முடியாமல் நாம் அவனைச் சூழ நெருங்கி நிற்போம்.
சி. சிவசேகரம் 13

Page 14
G"ஸ்தாவ் கர்க்லெச் (Gustav Krklec) யூகோஸ்லாவியா (குறோவேஷியா)
அச்சம்
வானம் இறந்து விட்டது. புள் ஏதும் பறக்கவில்லை. அறுவடைப் பாடல்களின் எதிரொலி கேட்கவில்லை.
முதிர்ந்த சோளக் கதிர்களை ஒரு அரிவாளும் வெட்டவில்லை. சூரியன் மறைந்துவிட்டது. ஒருகுரலேனும் காற்றை கிழிக்கவில்லை.
ஒளிமங்குகிறது. எல்லா ஒலிகளும் மங்குகின்றன. சுற்றியுள்ள பாதைகள் மீது ஒரு பனித்திரை படர்கிறது.
ஈரம் வற்றிய மரம் நிலை பெறவில்லை. புல் காய்ந்து கிடக்கிறது.
அந்நிய வயல்வெளிகளுடுவெற்றிகரமாக அணிவகுத்துச் சவாரி வருகிறவன் நிழல்கட்கு அஞ்சுகிறான்.
14. , மறப்பதற்கு அழைப்பு

அன்தெ செதினெயோ (Ante Cetineo)
யூகோஸ்லாவியா (குறோவேஷியா)
உரைநடையில் ஒரு கவிதை
சூரிய ஒளியும் சூறைகளும் நிறைந்து, கடலுள் துருத்திநிற்கும் நெடும் பாறையின் கீழ் இரண்டு படகுகள். கயமை, முதுமை, பிசுப்பிசுப்பான அந் நீர்க்குட்டையில் தம் மாலுமிகளால் கைவிடப்பட்டவை. ஒன்று, பாய்மரமற்றும் விலா எலும்புகள் துருத்தியவாறும்; மற்றது தனி ஊன்றுகோலில் சாய்ந்திருக்கும் முடவன்போல ஒரு முறிந்த துடுப்பால் தாங்கப்பட்டு.
பகற்பொழுதில், தமது சோகச் சித்திரங்கள் தெரியா வண்ணம் கடலின் ஈயக்கண்ணாடி மீது திரையோடும்பழ அலைகளையும் காற்றையும் அவை இரண்டும் கெஞ்சும்.
இராப் பொழுதில், தாரகைகளாற் சூழப்பட்டு அவை தியானம்
செய்யும்: ஒன்று வாழ்வின் பயனின்மை பற்றி, மற்றது சிதைவின் பயங்கரம் பற்றி.
சி. சிவசேகரம் 15

Page 15
அசோ ஷொபொவ் (Aco Sopov) யூகோஸ்லாவியா (மஸிடோனியா)
என் குரலைத் தேடுகிறேன்
கடலின் காட்டுமிராண்டிமோனத்துள் எண்குரலைத் தேடுகிறேன். கடல் கல்லாகிறது இலையுதிர் காலத்தின் மஞ்சட் பாலைவனத்துள் தேடுகிறேன், இலையுதிர் காலம் பச்சையாகிறது (நிலாவொளி விரல்களைக் கொண்ட எண் கரங்கள்) என் கரங்கள் என் கரங்களல்ல (தொலைவிலுள்ள காட்சிக்கான எண் கண்கள்) என் கண்கள் என் கண்களல்ல காலத்தின் வன்மையான தாடையினின்று என் சொல் புறப்பட்டு விதைகளைப் பற்களாய்க் கொண்ட வயல்களில் துளிர்க்கிறது.
16 மறப்பதற்கு அழைப்பு

GொGொ இவனொவ்ஸ்கி (Gogo Ivanovski) யூகோஸ்லாவியா (மஸிடோனியா)
SJG)
முதலும் முழவும் நான்; எல்லையிலாக் கடல்களும் பேராழியும் நான்; மேலே ஆழமறியப்படாமலுள்ள வெளியின் நீலம் நான்; எழும் பரிதிக்கு ஒரு பொன்னொளிர்வு சூட்டும் அழகு நான்; பாதிநிலவைத் தன் சடையில் ஒரு சீப்பெனச்சூடும் மாலையின் கனலொளி நான்; வாழ்க்கை வாழ்க்கை தான் என உறுதிப்படுத்த வருகின்ற துயரம் நான்; எந்த மகிழ்ச்சியிலே நாலு புலன்களும் பிறக்கின்றனவோ அந்த மகிழ்ச்சி நான்; மலை உயரங்களில் விரியும் மலரின் நறுமணம் நான்; முகிலின் மெதுவான தொடுகை நான்;
கணப் பொழுது,
மணிநேரம்,
ஆண்டு
காலமும் நான்.
நானின்றி ஒன்றுமில்லை. உலகென்றும் அண்டமென்றும் சொல்லப்படுவனவற்றின் தொடக்கம் என்னுள் உள்ளது.
நானே படைப்Uோன்.
யாவும் என் விழிகளிலேயே பிறந்தன. அவை யாவும் அதற்குள்ளேயே புதைவன.
ஏனெனில், அந்தோ!
இங்கு எல்லாம் வல்லவன் நான்.
சி. சிவசேகரம் 17

Page 16
ஒTன் Z"பான்சிச் (Oton Zupancic) யூகோஸ்லாவியா (ஸ்லொவீனியா)
சிகரங்கட்கும் மேலாக, வானம் தீப்பற்றி எரிகிறது. அந்தத் தங்கத் திரைக்கும் அப்பால் நீமுற்றிலும் அமைதியுடனும் சாந்தத்துடனும் இருக்கிறாய் என் ஆவலின் இன்னுயிரே, அதன் பிறப்பிடமே நானோ கடல்கடந்து இங்கே, தடைசெய்யப்பட்டவன் போல.
இருண்ட இந்நாட்களில், நான் இனிதாகவும் மென்மையாகவுமன்றி உனக்கு ஏதேன் மொழிவேனா, என் தாய் நாடே!
18 மறப்பதற்கு அழைப்பு

எட்வர்ட் கொச்Bெக் (Edvard Kocbek) யூகோஸ்லாவியா (ஸ்லொவீனியா)
திகில்
இறந்த கிராமத்தின் நடுவே தியின் பின்னர் இன்னமுஞ் சூடாறாத சுவரிற் சாய்ந்த படி இரவில் நிற்கிறேன்.
தொட்டியின் வழியே நீரூற்று ஓடுகிறது. பூனை, வெறிபிடி2த்து நிலவின் மேலாகத் தவழ்கிறது. தனிமை தொடர்ந்து முழங்குகிறது. நிர்ச்சலனம் வளர்கிறது.
நிலைத்திருக்கவும் சாய்ந்து விழாமலிருக்கவும் முயன்றபடி நிற்கிறேன்.
திகில்
என்னைச் செவிடாக்கவும் என் நிதானத்தைக் கொல்லவும் என்னைத் திணறடிக்கவும் முனைகிறது.
சுவரெதிரே வயலற் மலர்கள். அப்பிள் மரங்களின் கீழ் வைக்கோல். நிலவொளியில், நொறுங்கிய கண்ணாடி வாயிற் படியிற் புல், இதயத்திற் சாம்பல்.
சி. சிவசேகரம் 19

Page 17
தொனெ ஸெலிஷ்கர் (Tone Selikšar) யூகோஸ்லாவியா (ஸ்லொவீனியா)
புத்துயிர்ப்பு
இரவு தெளிவாகவும் நிலவு ஒளியுடனும் மிளிர்கையில் சகோதரர்களே உங்கள் இதயத் துடிப்பை நான் கேட்கிறேன்.
துயிலும் நள்ளிரவில் என் ஆண்மா தனது கதவுகளைத் திறக்கையில் சகோதரர்களே உங்கள் கனவுகளின் நிழல்களை நான்காண்கிறேன்.
காலைப்பொழுது தனது குதுகலமான சுவாலைகளைப் பொழிகையில் சகோதரர்களே உங்கள் முழக்கத்தை நான் கேட்கிறேன்: நீதி!
பகலின் முழு ஒளியில் நான் காண்Uனவோ : துரிதமாக வளரும் பிணக்குகள், சகோதரன் முகத்திற் சகோதரன் காழ்ப்பை உமிழ்தல், சகோதரனின் இதயத்திற் சகோதரன் கட்டாரியைப் பாய்ச்சுதல், மானுடம் துணிக்கையாகப் பிளவுண்ணல், ஒவ்வொரு துண்டத்தினதும் பேர் :நீதி!
நீதி என்பதென்ன?
உங்களுக்கு நான் சொல்கிறேன்:
சகோதரன் சகோதரனைக் கைகள் விரிய வரவேற்கட்டும்! ஒருவர் மற்றவரின் கைகளையும் இதயங்களையும் நோக்கி, அங்கே காய்த்த உள்ளங்கைகளையும் உளையும் இதயங்களையும் காணட்டும்.
அதன் பின்னர் புதுவாழ்வு எழும்,
முகில் சூழ்ந்த நமது யுகத்தை நாணச்செய்யும்.
20 மறப்பதற்கு அழைப்பு

கயெதான் கொவிச் (Kajetan Kovic) யூகோஸ்லாவியா (ஸ்லொவீனியா)
உன்னை அழுது தீர்க்க விரும்புகிறேன்
இலையுதிர்கால மழையை வானம் அழுது தீர்ப்பது போல நான் உன்னை அழுது தீர்க்க விரும்புகிறேன்.
ஆனால் நியோ
சாகாத ரோசாப்பூப் போல என் உடலின் உயிர்க்கலங்களில் அரும்பிக்கொண்டிருக்கிறாய். என் ஆன்மாவில் முளைத்த பூந்தண்டை என் வெதுவெதுப்பான கைகள் தடவி வருடுகின்றன.
இரத்தஞ் சிந்தாமலும் தீங்கின்றியும் நான் உன்னைக் களைவது எவ்விதம்? அல்லாமல் உன்னைக் களையாமற் தொடர்ந்தும் நேசிப்பதா? ஏ, அரும்புவதையும் வளர்வதையும் நிறுத்து. உன்னை என்னால் அழுது வெளியேற்றலன்றி இயலுமா?
சி. சிவசேகரம் 21

Page 18
LTC360, Zuid; (Dane Zajc) யூகோஸ்லாவியா (ஸ்லொவீனியா)
சாகும் மரமொன்று
கடுஞ்சிவப்புத் தியிற் காடுகள் சுடரும்: இலையுதிர்காலத் தீ
அழிவின் தீ அப்பாலுள்ள மரம் காய்க்கவில்லை. அது துயருடன் உள்ளது. அம் மரம் சாகின்றது. அதன் நினைவுகளில் ஏதென்று கடவுளுக்கே தெரியும். இளவேனில்?
முதுவேனில்?
மகிழ்வற்ற மரம். இலையுதிர்காலத்தின் அழகுள்ளது. கடுஞ்சிவப்புத் தியில் நீஅழிக.
மண்ணுக்கும் விண்ணுக்குமிடையே தனிமையில் மரம் செத்துக்கொண்டிருக்கிறது. துணையாக ஒரு குரலோ காப்பாற்றுவாரோ இல்லை. அதன் இலைகள் மெளனமாகத் தொங்கின அதைச் சூழும் பாதைகள் ஓசையற்றிருந்தன. பறவைகள் நீங்கிவிட்டன. மரம் செத்துக்கொண்டிருந்தது. சிவந்த இலைகள் இரத்தத் துளிகள்போல தரை மீது சொட்டின. சதுப்பு நிலத்திற்குக்கிழ் அமிழ்கிற மனிதன்போல, சாவிலும் அழகுடன் அது விண் நோக்கித் தன் கைகளை விரித்தது.
22 மறப்பதற்கு அழைப்பு

திமொதெயுஸி கார்போவிச் (Tymoteusz Karpowicz) போலந்து
மெளனப் பாடம்
வண்ணத்துப் பூச்சி எப்போதேன் தன் சிறகுகளை மிகவும் வலிதாக மடக்கினால் அவர்கள் கூவினர்; அமைதி!
அருண்ட பறவையொன்றனர் சிறகு சூரியக் கதிரில் உரசுப்Uட்டாலும். அவர்கள் கூவினர்; நிசப்தம்!
இவ்வாறு அவர்கள் முரசங்கள்மீது இரையாது நடக்க யானைகட்கும் மண்மீது நடக்க மானுடர்க்குங் கற்பித்தனர்
வயல்வெளிகளில் மரங்கள் ஒலியின்றி எழுந்தன அச்சத்தில் ரோமம் எழுவதுபோல்
சி. சிவசேகரம் 23

Page 19
கனவு
எரியும் வனத்தின் மாண்போலக் கவிஞனை அவன் துயிலினின்று துள்ளச் செய்த துர்ச் சொப்பனம் எது?
அவனது உவமேயத்தின் வண்ணத்துப் பூச்சி தன் சிறகுகளால் அவனுக்கு முகத்திரை இட்டிருந்தது
அவன் வர்ணித்த கதவுக்குமிழ் நடுக்குற்றது
24 மறப்பதற்கு அழைப்பு

Bரொனிஸ் லாவ் மாயப் (Bronislaw Maj) போலந்து
ஒரு இலை
ஒரு இலை
கடைசி இலைகளில் ஒன்று மேப்பிள் மரக் கிளையின் ஒழந்து ஐப்பசியின் தெளிவான காற்றிற் சுழல்கிறது, பிற இலைகளின் குவியல் மேல் விழுகிறது, மேலும் இருண்டு அசைவறுகிறது, காற்றுடன் அதன் கடும்போரை நயப்பாரில்லை, அதன் பறப்பைத் தொடர்ந்தாரில்லை, பிற இலைகள் நடுவே கிடக்கும் அதனை வேறுபடுத்துவாரில்லை, நான் கண்டதைக் கண்டதில்லை.
நானர்
தனிய.ர்.
சி. சிவசேகரம் 25

Page 20
மிரொஸ்லாவ் ஹொலுB (Miroslav Holub) செக் குடியரசு
குண்டுவீச்சுக்கு ஐந்து நிமிடங்கள் பின்னர்
U66)660feb புகையிரத நிலைய வீதியின் இருபத்தாறாம் இலக்க வீடு முழுவதிலும்
மிஞ்சிக் கிடந்த மூன்றாம் மாடியின் மேற்தட்டுக்கு ஏறினாள். வானை நோக்கித் தன் கதவை முற்றாகத் திறந்தாள். விளிம்பின் மேலாகத் திகைத்தUழ பார்த்து நின்றாள்.
ஏனெனில் இதுவே தான் உலகம் முழந்த இடம்.
பின், தனது சமையலறையிலிருந்து காலை உணவுக்கான பொருட்களை யாரேனுங் களவாடக்கூடுமென்று கதவைக் கவனமாகத் தாழிட்டாள். மீண்டும் கீழிறங்கி வந்து
வீடு மீண்டும் எழவும் தன் கணவன் சாம்பலினின்று மீளவும் தண்குழந்தைகளின் கைகால்கள் மீண்டும் ஒட்டுண்ணவும் உட்கார்ந்தபடி காத்திருந்தாள்.
காலையில் அவளைக் கண்டனர்:
குருவிகள் அவள்கைகளைக் கொத்துகையில் அவள் கல்போல அசைவின்றி இருந்தாள்.
*Pilsen: செக் நாட்டில் உள்ள ஒரு நகரம், இரண்டாம் உலகப்போரில் குண்டு வீச்சுக்குள்ளாகியது.
26 m மறப்பதற்கு அழைப்பு

இடைவிபத்து மருத்துவ கூடம்
நசுக்கப்பட்ட விரல்களை நம்மிடம் கொண்டு வருகிறார்கள்.
வைத்தியரே சரிக்கட்டுங்கள் எரிந்து போன கண்களை குதறுண்ட ஆந்தைகள் போல இதயங்களை நூறு வெள்ளை உடல்களை நூறு சிவப்பு உடல்களை நூறு கறுப்பு உடல்களை
வைத்தியரே சரிக்கட்டுங்கள்
அம்புலன்ஸ் வாகனத்துள் இரத்தம் எனும் பைத்தியத்தை தசை இடும் ஒலத்தை எரிவின் மோனத்தை
வைத்தியரே சரிக்கட்டுங்கள் அங்குலம் அங்குலமாக இரவு இரவாக நரம்புடன் நரம்பை தசையுடன் தசையை விழியுடன் பார்வையை நாம் இணைக்கும் போது அவர்கள் மேலும் நீளமான கட்டாரிகளை மேலும் உரக்க முழங்கும் குண்டுகளை மேலும் உன்னதமான வெற்றிகளைக் கொண்டு வருகிறார்கள்.
மூடர்கள்!
சி. சிவசேகரம் 27

Page 21
சாவு பற்றிய ஒரு சிந்தனை
தாம் இன்னமும் பிறவாதது போலவே பலர் நடந்து கொள்கிறார்கள். ஆயினும் அதேவேளை, ஒரு மாணவன் “சாவுக்குப் பின்பான வாழ்வை நம்புகிறீர்களா?” எனக் கேட்டபோது در " . . . . வில்லியம் Bறோஸ் சொன்ன பதில் : “நீஇன்னும் சாகவில்லை என்று உனக்கு எப்பழத் தெரியும்?”
28 மறப்பதற்கு அழைப்பு

சிரிப்பு பற்றிய சிறியதொரு சிந்தனை
சிரிக்கும் போது நாம் வாயைக் காதுகள் வரை,
குறைந்தளவில் அத்திசையிலேனும், இழுக்கிறோம், நம் பற்களைக் காட்டுகிறோம். அவ் வகையிற், சிரிப்பு, கொல்லப்பட்ட அயலவனை நாம் வென்றதன் வெளிப்பாடாக இருந்த நமது பரிணாமத்தின் பழைய நிலைகளை வெளிப்படுத்துகிறோம்.
நமதுகுரல்வளையின் ஆழத்திலிருந்து மூச்சை வெளியேற்றித்
தேவைக்கேற்ப நம் ஒலியுறுப்புக்களை அதிரச்செய்து அவசியமாயின், நமது நெற்றியையோ பின்னந்தலையையோ தொட்டு அல்லது கைகளை உரசி அல்லது தொடைகளைத் தட்டி அவ்வகையில் வெற்றி என்பது பாதங்களின் வேகமெனக் கருதப்பட்ட பழைய நிலைகளை வெளிக்காட்டுகிறோம்.
பொதுவாகச் சொல்வதானால், நமக்குச் சிரிக்கத் தோன்றும்போது சிரிக்கிறோம்.
சிறப்பான நிலைமைகளில் நமக்குச் சிரிக்கவே தோன்றாத போது சிரிக்கிறோம் சிரிக்குமாறு நமக்குப் பரிந்துரைக்கப்பட்டதாற் சிரிக்கிறோம் அல்லது பரிந்துரைக்கப்படாததாற் சிரிக்கிறோம்
எனவே மொத்தத்தில்,
நம்மை நோக்கி எவரோ சிரிக்கிறார்கள் என்ற உண்மையை மறைப்பதற்காகவேனும் நாம் எல்லா நேரமும் சிரிக்கிறோம்
சி. சிவசேகரம் 29 .

Page 22
எரிஷ Fறிட் (Erich Fried) Eg 6mögöflum (புலம் பெயர்ந்து வாழ்வபர்)
மறபபதறகு அழைபபு
"அவர்கள் மட்டும் தமது கோரிக்கைகளை இறுதியாக மறப்பார்களெனின்”. ஸியோனிஸ்டுகளின் வாதம்)
"மடக்கதை கதையாதே'
OOOOO என்கிறது காற்று. ‘உலகம் சுழல்கிறது எல்லாம் மாறுகிறது முடிந்ததை நீமறந்தே தீரவேண்டும்’
30 மறப்பதற்கு அழைப்பு

'நீஉன் வயலை மறக்க முழயுமெனின்’ . என்கிறது நஞ்சூட்டப்பட்ட பயிர் 'நீஉன் வெள்ளை வீட்டை மறக்க முழயுமெனின்’ *●曾够够制 என்கிறது இழந்த கல். 'பழுப்பு நிறக்குடத்தை ரீமறக்க முடியுமெனின்’ 0608000 என்கின்றன. ஒட்டுத் துண்டுகள். ‘ஒலிவ் மரத்தை மறக்க முழயுமெனின்’
OppdeOSO என்கிறது மரக்குற்றி.
‘தோடை மரங்களை’ . என்கிறது எரிந்த தோப்பு.
'நீஉன் சகோதரியர் இருவரையும் மறக்கமுடியுமெனின்’ code என்கிறது புதைக்குழிகட்குச் செல்லும் பாதை. ‘ஒலங்களை ரீமறக்க முடியுமெனின்’ . என்றன செவிகள்.
"அப்போது அபாயத்துடன் விளையாடுவதை நீநிறுத்தலாம்’
‘பிடுங்கப்பட்ட விருட்சத்தின் விடுதலைபெற்ற அத்திக் கனி போலக் கப்பலின் உதரத்துள் நீகடற்பயணம் போகலாம் காற்றில் மணற் துளிபோல் விடுதலையைக் காணலாம் Φρρ6ύ6ύ நீஇழந்த சொந்த மண்ணினின்று விமோசனம் பெறலாம்’
‘உலகம் சுழல்கிறது முழந்ததை நீமறந்தே தீரவேண்டும் மடக்கதை கதையாதே'
என்கிறது காற்று - உன்னைத் துரத்தினோரின் தரப்பினின்று வீசியவாறு,
சி. சிவசேகரம் 31

Page 23
32
முதலுதவி
அடுத்த போரின் பினர் பாதுகாவலர்கள் மூவரும் வருவர். தம்மால் இயன்ற வரை எல்லாவிடத்தும் உதவிகள் தருவர்.
ஒருவர், பசிமிகுந்த தமது கோபுரங்களைத் தன்னிடம் நீட்டும் இழபாடுகட்கு உணவைக் கொண்டு வருவர்.
இரண்டாமவர், முதலாமவர் இழபாடுகட்கு ஊட்டும்பழ மீண்டும் முளைத்துச் சதையோடுவதற்காகத், தான் சேகரித்த எலும்புகளை நடுவர். ஏனெனில் சதையில்லாமல் மனோரதியம் இல்லை.
மூன்றாவது பாதுகாவலர், பற்றைகளினின்றும் புற்களினின்றும் காகிதத்தினின்றும் கூடுகள் கட்டுவர் கற்களுக்கும் அவற்றின் குழந்தைகளுக்குமாக.
மறப்பதற்கு அழைப்பு

மழித்தல்
அலகு எவ்வளவு கூரியதோ அவ்வளவு இளமையுடன் கண்ணாடியில் தெரிகிறேன்.
மெய்யாகவே என்னை இளைஞனாக்க
656ftby எவ்வளவுகூர்மையாக இருக்க (86)J6ööf(ჩuბ?
6)5 Long
நான் இவ்வுலகினுள் வந்து, இறுதியாக. “எவ்வாறு நான் இதற்குள் வந்தேன்?”
என்று உரைக்க வினாவும் நிலையை அடைந்தேன்.
அவள் என்னிடம் வந்து மெல்லச் சொல்கிறாள்:
“நீவரவில்லை. Uோய்க்கொண்டிருக்கிறாய்.”
சி. சிவசேகரம் 33

Page 24
ஆக்கபூர்வமான &LGiojFGOT
எனது பலவீனம் என் மேன்மை பற்றிய உணர்வாக இருந்தது
நான் அதை இப்போது வென்றுவிட்டேன்
நான் பரிபூரணன்
தலைநகரில்
“இங்கே ஆள்வோர் யார்?” எனக் கேட்டேன். “இயல்பாகவே மக்கள்” என்றார்கள்.
“இயல்பாகவே மக்கள்.
ஆனால், உண்மையாக யார்?” என்றேன்.
மறப்பதற்கு அழைப்பு

அகச் சுதந்திரம் பற்றி
6Tփ 6TԺԱշՈ66f6õÏ Ս6ITU6ITég5Փ கரிய சப்பாத்தை முத்தமிடக் குனிந்தேன் “இன்னும் தாழ்வாக” என்று அவர் பணித்தார்.
இன்னுங் கீழாகக்குனிகையில் வளைய விரும்பாத எனது முள்ளந் தண்டின் எதிர்ப்புணர்வை உன்னதமாக என்னுள் உணர்ந்தேனர்.
அகவலிமையையும் தனிமானத்தையும் எனக்கு உணர்த்தியமைக்காக எம் எசமானுக்கு நன்றியுடன் நழுவினேன்.
சி. சிவசேகரம் 35

Page 25
பலவீனமாதல்
“அவர்கள் மீண்டும் வலிமையடைகின்றனர்” ליישmש"י “அவர்கள்’
“அவர்கள் ஏதாக இருக்கலாகும்?” “அவர்கள் அவ்வாறு இருக்கலாகாது. ஆயினும் இருக்கிறார்கள்”
“யாரிலும் வலியோராக?” “உன்னிலும். விரைவிற், சிலவேளை, பலரினும்”
“இதையெல்லாம் ஏன் சொல்கிறாய்?” “ஏனென்றால், என்னால் இன்னமும் சொல்ல இயலும் என்பதால்”
“இது உன்னைத் தொந்தரவில் மாட்டிவிடாதா?” “ஓம். ஏனெனில் அவர்கள் வலிமையடைகின்றனர்”
“எதனால் இவ்வளவு நிச்சயமாயிருக்கிறாய்?” “நான் தொந்தரவில் மாட்டிவிடலாம் என்ற உன் சொற்களால்”
36 மறப்பதற்கு அழைப்பு

பெண்களின் சுவைஞன்
மஞ்சள் வேசை சிறியவள் ஆயினும் பயங்கர வலிமையுடையவள் என்று காலைப் பொழுதை ஒருவன் குறிப்பிட்டான்
மெய்தானி
அவன்
ஒரு கவிஞன் பெண்ணை அத்தகைய பழமத்திற் பாவித்தல் பற்றி அதிகம் யோசிக்காதவனாக இருக்கலாம்
ஆனாலும்
அத்தகைய ஒரு கவிஞன் என்றாவது ஒரு நாள் ஒரு வேசையை அதிகம் நெருங்கினால் அவள் அவனுக்குள் நிலைத்திருக்கவல்ல சிறியது ஆயினும் Uயங்கர வலிமையுடைய நல்லதொரு காலைப் பொழுதிற்காக வாழ்த்துவாள் அல்லது வழங்குவாள் என்று வேண்டுகிறேன்.
சி. சிவசேகரம் 37

Page 26
குறி தவறாத விளையாட்டுப் பொருள்
குழந்தைகளின் பண்டிகைக்காகக் குண்டுகட்குப் பதிலாக விளையாட்டுப் பொருட்களை வீசுவது
அது
நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்கள் சந்தைப்படுத்தற் துறை ஆய்வாளர்கள்
დpტg s» 6bā?6Or uðვნJuბ அது ஒரு மாபெருந் தாக்கத்தை ஏற்படுத்தியது
6)huprT60Tuბ uoU”(ჩსბ இரண்டு கிழமைகள் முன்னம் விளையாட்டுப் பொருட்களையும் இப்போது குண்டுகளையும் வீசியிருப்பின்
உங்கள் கருணையின் பயனாக
என் குழந்தைகள் இருவருக்கும்
அந்த இரண்டு கிழமைக்கும்
விளையாட ஏதாவது இருந்திருக்கும்
(வியற்னாமிய குழந்தைகள் பண்டிகை தினத்தை முன்னிட்டு அமெரிக்க
விமானங்கள் விளையாட்டுப் பொருட்களை வீசின. வீசிய சில கிராமங்கள் மீது சிலகாலம் முன்னரே குண்டு வீச்சு நடைபெற்றுக் குழந்தைகள் இறந்தன.)
38 மறப்பதற்கு அழைப்பு

கேள்விகள்
உன் வாழ்க்கை எவ்வளவு பெரியது? எவ்வளவு ஆழமானது? அதற்காகும் விலை என்ன? எவ்வளவு காலங் கொடுக்க வேண்டும்? அதற்கு எத்தனை தடவை புதிதாக ஒன்றைத் தொடங்குகிறாய்?
அதற்காக நீ எப்போதாவது ஒட நேர்ந்ததா? அவ்வாறாயின்
அதற்காக நீ வளைய வளைய வட்டமிட்டாயா? அல்லது முன்னும் பின்னும் ஒழனாயா? உனக்குள் என்ன யோசித்தாய்?
ஒரு முழுச் சுற்று வந்து விட்டதாக எப்படி அறிந்தாய்? ஒரு முறைக்கும் அதிகமாக ஒழனாயா? மூன்றாம் முறை இரண்டாவதைப் போலிருந்ததா?
அந்தத் தொலைவைக் காரோட்டிச் செல்ல விரும்புவாயா? அல்லது ஒட்டப்பட? எத்திசையில்?
யாரால்?
சி. சிவசேகரம் 39

Page 27
புரட்சியின் அலுவலர்கள்
கடமை என்ற வகையில் அலுவலர்களிடமுள்ள அதே அளவு உணர்வே புரட்சியின் அலுவலர்களிடம் புரட்சியின் பால்
உள்ளது
அவர்களிடஞ்
சரியான அதிகாரப் பூர்வமான நோக்கும் உள்ளதால் அந்த அழப்படையிற் புரட்சியில் எவரெவர் பங்குபற்றலாம் бт60їду
தீர்மானிக்கின்றனர்
எதிர்யை நேசித்ததற்கான அடிப்படை
என் நண்பர்களது மந்த புத்தி என்னை அயர வைத்த பினர் என் எதிரிகளது
&ՍԿ-Ա5
சில சமயம்
எனக்குப் புதிய வலிமையைத் தருகிறது
40
மறப்பதற்கு அழைப்பு

பேச்சற்றேன்
கவிதைகள் மூலஞ் சிறுபான்மையானோரையே சென்றடையலாம் என்ற போதும்
நீஏன்
இன்னமுங் கவிதை எழுதுகிறாய்? என்று பொறுமையற்ற எண் நண்பர்கள் கேட்கின்றனர் ஏனெனில் அவர்கள் தமது மார்க்கங்களுடுஞ் சிறுபான்மையானோரையே சென்றடைகின்றனர் அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை
சி. சிவசேகரம் 41

Page 28
தாக்கும் வலிமையைப் பேணுவதற்கான உபதேசங்கள்
எதிரிகள் வெகுதொலைவில் உள்ளனர் அத்துடன் பெருமளவிற்கு நல்ல பாதுகாவலுடன் உள்ளனர்
எனவே நும் நண்பர்களை எதிரிகள் என்Uர் அவர் பற்களைக் குத்தி உதிர்ப்Uர்
இவ்வாறு அவர்களை எதிரிகளாக்க உம்மால் இயலும் அதன்பின் நீர் பெருமை பேசலாம்:
“அவர்கட்கெதிரான போராட்டத்தில்
எழுந்து நின்று முதல் உதை கொடுத்தவன் நானே’
42 மறப்பதற்கு அழைப்பு

அச்சங்களும் மிச்சங்களும்
தான் அஞ்சுவதாக உன்னிடஞ் சொல்பவனைப் பற்றி ஐயுறாதே தன்னிடம் ஐயங்களே இல்லையென உன்னிடஞ் சொல்பவனைப்பற்றி அஞ்சு
செய்முறைப் பணி
திக்குவாயர்களுக்கு Uேசக் கற்பிக்க
அவர்களுள் ஒருவன் போற் சரளமாகத் திக்கிப் பேசக் கற்றேன்
அவர்கள்
ஏன் இப்போது என்னை உதைக்கிறார்கள்?
சி. சிவசேகரம் 43

Page 29
மஹற்முட் டர்விஷ் (Mahmud Darwish) பலஸ்தீனம்
பலஸ்தீனப் புனினொன்றன்
நாட்குறிப்பு
1
*காமெல் குன்றம் எமக்குள்ளே எனவும் **Gலலியின் புற்கள்
நம் கண்மடல்கள் மீது எனவும் நமக்கு நின்னவூட்டவேண்டா ‘அவளிடம் ஒரு நதி போல ஓடமுடியுமெனின்’ என்னாதிர் அவ்வாறு சொல்லாதீர்;
நாமும் நமது நாடும் ஒரே என்பும் தசையுமே.
2
***ஜூனுக்கு முன்னம் நாம் புறாக்குஞ்சுகளல்ல
எனவே நம் அன்பு தளைகளால் வாடவில்லை. * சகோதரி, இந்த இருபது ஆண்டுகளாக
நமது பணி கவிதை புனைவதல்ல, போராடிக் கொண்டிருப்பதே.
3
உன் கண்களின் மீதாக இறங்கும் நிழல்
- நம் தலைகள் மீது சூரியனைச் சுற்றிக்கட்ட ஜூன் மாதத்தினுள்ளிருந்து வந்த ஒரு தெய்வீக அசுரன். அவனது நிறம் தியாகம் பிராத்தனையின் சுவை எவ்வளவு நன்றாகக் கொல்லுகிறான்
எவ்வளவு நன்றாக உயிர் தருகிறான்?
44 மறப்பதற்கு அழைப்பு

4
உன் விழிகளிற் தொடங்கிய இரவு
என் உயிரில் அது ஒரு நீண்ட இரவின் முழவு
வரட்சியின் யுகத்தினின்று
நாம் மீளும் வழியில்
இங்கு இப்போது நாம் துணையிருப்போம்
7
βρφb 6))(τοΟτιδυτιρuύ6ο Φ060)6υ ஆக்கிரமிப்பாளரை நோக்கி ஒளிரும் கட்டாரியாக்கியது ஏதென அறிந்தோம்
மயானத்தின் அமைதியை ஒரு விழாவாக. வாழ்வின் கணித் தோட்டங்களாக ஆக்கியது ஏதென அறிந்தோம்
8
நீஉன் கவிதைகளைப் பாடினாய்.
மாழமுகப்புக்கள் தங்கள் சுவர்களைக் கைவிடவும்
நகரின் சதுக்கம் மலையின் இருப்புவரை விரியவும் நான் கண்டேன்.
நாம் கேட்டது இசையில்லை
நாம் கண்டவை சொற்களின் நிறமல்ல :
அறைக்குள் தசலட்ச வீரர்கள் இருந்தனர்
11
இம் மண் தியாகிகளின் சருமங்களை உறுஞ்சிக் கொள்கிறது
இம் மண் கோதுமையையும் தாரகைகளையும் வாக்களிக்கிறது
இதை வணங்கு.
நாம் இதன் உப்பும் இதன் நீரும்
நாமே இதன் புண்,ஆயினும் போர் செய்யும் புண்.
சி. சிவசேகரம் 45

Page 30
12 சகோதரி, எண் தொண்டையிற் கண்ணிர், கண்களில் நெருப்பு
நான் சுதந்திரமானவன் இனி என்றுமே சுல்தானின் வாயிலில் முறையிட மாட்டேன் நாளின் வாசலில் மரித்தோரும் மரிக்க உள்ளோரும் என்னைத் தழுவினர், என்னை ஒரு ஆயுதமாக்கினர்
14
தேடற்கு அரிய எண் புண்ணே! என் நாடு ஒரு பயணப் பெட்டிக்குள் இல்லை நான் ஒரு பயணி அல்ல நானே காதலன் இம் மண்ணே காதலி.
22
தொல்லியலாளன் கற்களை ஆய்வதில் மும்முரமாயுள்ளான் நாகரிகத்தின் அரிச்சுவழயில் ஒரு அட்சரமும் அற்று
நடைபாதையில் அலையும் ஒருகுருடனாய் எனைக் காட்டப் பழங்கதைகளின் குவியலில் தன் கண்களையே தேடுகிறான் அவ்வேளை நான் என்னுடைய நேரத்தில் என் மரங்களை
நாடுகிறேன், என் காதலைப் பாடுகிறேன்.
24
சொற்களைச் செயலாக நான் மாற்றுதற்கான வேளை இது இம் மண்ணின் மீதும் வானம்பாடி மீதும் என்
காதலை நிறுவுவதற்கான நேரம் இது ஏனெனில் இந்த யுகத்தில் கிற்றாரை ஆயுதம் தின்னுகிறது கண்ணாடியில் நான் மேலும் மேலும் மங்குகிறேன் ஏனெனில் என் பின்புறத்தே ஒரு மரம் வளரத் தொடங்கியது.
as TGLD65 g56trol - Mt. Carmel
**G6d6ó – Galaiee, Galilee
***ஜூன் - 1967ம் ஆண்டு ஜூன் மாதப்போர்.
46 மறப்பதற்கு அழைப்பு

இலையுதிர்காலத்தை நேசிக்க நமக்கு உரிமையுண்டு
இந்த இலையுதிர்காலத்தின் முழவை நேசிக்கவும் “எமது உடல்களை நிலக்கரிபோல அமர்த்த
இவ்வயலில் இன்னொரு இலையுதிர்காலத்திற்கு
இடமுண்டா? எனக் கேட்கவும் எமக்கு உரிமையுண்டு. இலையுதிர்காலமொன்று பொன்னை ஒத்த தணர் இலைகளைத் தாழ்த்துகிறது
சி. சிவசேகரம் 47

Page 31
பருவ மாற்றங்களைப் பார்த்திருப்பதற்காக நாம்
அத்தி இலைகளாகவோ கவனிப்பாரற்ற ஒரு மரமாகவோ இருக்கலாம் என எண்ணுகிறேன் ஈட்டி முனையிற் பறந்த போதில் நம் தந்தையர் என்ன கேட்டனர்
என்று கேட்பதற்காக நாம் நமது கண்களின் தென்திசைக்குப் பிரியாவிடைகூறாமல் இருந்திருக்கலாமென எண்ணுகிறேன் கவிதையும் கடவுளின் பேரும் எமக்குக் கருணையுடையவனாய்
உள்ளன. அழகிய பெண்களை இரவுகளில் இல்லாமலாக்கவும் வடக்கை எட்டும் வரை திசை காட்டியைக் காத்திருக்கும்
வழிப்போக்கர் இருவருக்காக இரவைக்குறுக்குவது எது என்பது பற்றிப் பேசவும் நமக்கு உரிமை உண்டு ஒரு இலையுதிர்காலம், இவ் இலையுதிர்காலத்தின் மணத்தை
முகரவும் இரவினிடம் ஒரு கனவைக் கோரவும் உண்மையில் நமக்கு உரிமை உண்டு கனவு காண்பவர் போல கனவும் நோய்வாய்ப்படுகிறதா? ஒரு இலையுதிர்காலம், ஒரு இலையுதிர்காலம் கிலற்றின் மீது மக்கள் பிறக்க இயலுமா? நாம் விரும்பியபடி சாக நமக்கு உரிமை உண்டு பூமி ஒரு கோதுமை மணிக்குள் போய் ஒளியட்டும்
கிலற்றின் ; மேலிருந்து விழுந்து வெட்டும் கனமான அலகையுடைய ஒரு
கொலைக்கருவி
48 மறப்பதற்கு அழைப்பு

அவர்கள் என்னைப் பிணமாகக் காண விரும்புகின்றனர்
அவர்கள் எனர்னைப் பரிணமாகக் காணவிரும்புகினர்றனர். ஏனெனில் அப்போது அவர்கள் சொல்லலாம்; அவன் எங்களுள் ஒருவன், அவன் எங்களைச் சேர்ந்தவன். இருபது வருடங்களாகச் சுவரில் இழக்கும் அதே காலடிகளைக் கேட்டிருக்கிறேன். அவர்கள் வந்தனர். ஆனாற் கதவைத் திறக்கவில்லை. இப்போது புகுந்துவிட்டனர். பின் அவர்களில் மூவர் வெளியேறினர்: ஒரு கவிஞன், ஒரு கொலைஞன், ஒரு வாசகன். "வைன் அருந்துவீரோ? என வினவினேனர். “அருந்துவோம்’ என்றனர். “என்னை எப்போது சுடுவீர்கள்?’ என வினவினேன். “அவசரப்படாதே" என்றனர். கிண்ணங்களை ஆயத்தமாக்கிவிட்டு மக்களுக்காகப் பாடிக்கொண்டிருந்தனர். “என்னை எப்போது கொல்லத் தொடங்குவீர்கள்?” என வினவினேன். “நாங்கள் தொடங்கி விட்டோம், நீஏன் ஆன்மாவுக்குக் காலணிகளை அனுப்பினாய்?” என்றனர். “அது தரைமீது நடக்க என்றேன்.” தரை கரிதாக இருக்கையில் நீ ஏன் வெண்மையான கவிதை எழுதுகின்றாய் என்றனர். “முப்பது கடல்கள் எனர் இதயத்துட் பாய்வதால்’ என்றேன். “நீஏன் பிரெஞ்சு வைனை விரும்புகிறாய்?” என்றனர். “மிகவும் அழகான பெண்ணே எனக்கு ஏற்றவள் என்பதால்” என்றேன். “எவ்வாறு மரிக்க விரும்புகிறாய்?”“கூரையூடு கொட்டும் தாரகைகள்போல நீலநிறமாக. உங்களுக்கு இன்னும் வைனி வேண்டுமா?” “கொஞ்சம் எடுக்கிறோம்” என்றனர். “மெதுவாகச் செய்யுமாறு கேட்கிறேன். மெதுவாக, மெதுவாக, என் இதயத்தின் மனைவிக்காக இறுதிக் கவிதையை நான் எழுதுமாறு’ என்றேன். அவர்கள், சிரித்தபடி, எனர் இதயத்தினர் மனைவிக்கு நாணி சொல்லவிருந்த சொற்களை மட்டுமே வீட்டிலிருந்து களவாழச் சென்றனர்.
சி. சிவசேகரம் 49

Page 32
அதென்ஸ் விமான நிலையம்
அதென்ஸ் விமான நிலையம் எம்மை வேறு விமான நிலையங்கட்கு உதைத்துத் துரத்துகிறது. “நானெங்கே போராடலாம்?” என்றான் ஒரு போராளி. “நமெங்கே நம் குழந்தையைப் பெறலாம்?” என்று ஒரு கர்ப்பிணி அவனிடம் உளறினாள். என் பணத்தை எங்கே முதலிடலாம்?’ என்றான் ஒரு உத்தியோகத்தனர். “உனதும் எனதும்?” என்றானர் ஒரு ஆய்வறிவாளனர். “எங்கிருந்து வருகிறீர்கள்?” என்றனர் சுங்க அதிகாரிகள். “கடலினின்று” என்றோம். “போகுமிடம்?” “கடல்”, “முகவரி?” “என் மூட்டை முடிச்சே என் கிராமம்’ என்றாள் நமது குழுவில் ஒரு பெண். அதெனர்ஸ் விமானநிலையத்தில் நாம் வருஷக்கணக்காய்க் காத்திருந்தோம். ஒரு இளஞ்சோழக்கு மணமாகி, அவசரமாக ஒரு அறை தேடினர். “எங்கள் முதலிரவை எங்கே கழிப்பது?” என்று வினவினான் மணமகன். “அத்தகைய ஆசைகட்கு இங்கே இடமே இல்லை இளைஞனே” என்று சிரித்தபடியே சொன்னோம். “தாம் மரிக்காமலிருக்கும் பொருட்டு மரிக்கினர்றனர்?’ எனர்றார் எம்மிடையே இருந்த பகுப்பாய்வாளர். “நமது முகாம் வீழ்வது தவிர்க்க வியலாதது. நம்மிடம் எதை எதிர்ப்பார்க்கின்றார்கள்’ என்றான் ஒரு எழுத்தாளன். அதென்ஸ் விமான நிலையம் தினமும் தனது சனங்களை மாற்றுகிறது. நாமோ கதிரைகள் மீது கதிரைகளாகக், கடலுக்காகக் காத்தUழ, போட்டபடியே கிடக்கிறோம். இன்னும் எத்தனைகாலம் அதெனர்ஸ் விமான g5606)U(3to?
50 மறப்பதற்கு அழைப்பு

ஒரு கனவுக்காக அஞ்சுகிறோம்
நாம் ஒரு கனவுக்காக அஞ்சுகிறோம்; நமது வண்ணத்துப்
பூச்சிகளை நம்பாதீர்.
நீர் விரும்பினால் நமது தியாகங்களை நம்புக, ஒரு குதிரையின்
திசைக்காட்டி2யை, வடக்கிற்கான நம் தேவையை நம்புக.
சி. சிவசேகரம் 51

Page 33
நாம் நமது ஆன்மாக்களின் அலகுகளை உங்கள்Uால்
உயர்த்தியுள்ளோம். நமக்கு ஒரு கோதுமை மணியை, நம் கனவைத் தருக. தருக, அதை நமக்குத் தருக.
ஒரு கருத்தினாலோ அல்லது மணலிடைப் பாறை ஒன்றின் மீது
அலைகளிரண்டின் முறையற்ற கலவியினாலோ பிறந்து பூமிக்கு வந்தது முதலாக நாம் நமது கரையோரங்களை உங்கட்குச் சமர்ப்பித்துள்ளோம்.
வெறுமை, வெறுமை. ஒரு அழகாற்றில் மிதக்கிறோம். நமக்குட்
காற்றுப் பிளவுபடுகிறது.
நீர் நம்மைக் கைகழுவி, நமக்காகச் சிறைக்கூடங்களைக் கட்டி,
அவற்றைத் தோடைச் சுவர்க்கமெனஅழைத்திர் என நாம் அறிவோம்.
நாம் கனவு கண்டவாறே இருக்கிறோம். ஒ, ஆசைக்கனவு. நமது
கட்டுக் கதைகளாற் போற்றப்படுவோரிடமிருந்து நமது நாட்களை நாம் திருடுகிறோம்.
நாம் உமக்காக அஞ்சுகிறோம், நாம் உம்மை அஞ்சுகிறோம். நாம்
ஒன்றாகவே அம்பலமாகியுள்ளோம், நீர் நமது மனைவியரின் பொறுமையை நம்பலாகாது.
அவர்கள் இரண்டு ஆடைகளை நெய்வார்கள், பின் நமது
பிள்ளைகட்கு ஒரு கிண்ணம் பால் வாங்கப் பிரியத்துக்குரியவர்களின் எலும்புகளை விற்பார்கள்.
நாம் அவனிடமிருந்து, நம்மிடமிருந்து ஒரு கனவிற்காக
அஞ்சுகிறோம். நாம், ஓ, நமது கனவு, கனவு கண்டவாறே இருக்கிறோம். நமது வண்ணத்துப் பூச்சிகளை நம்பாதீர்.
52 மறப்பதற்கு அழைப்பு

நான் மீண்டும் முதலினின்று தொடங்கலாமெனின்
நான் மீண்டும் முதலினின்று தொடங்கலாமெனின்
நான் தேர்ந்தெடுத்தவற்றையே மீண்டும் தேர்ந்தெடுப்பேன்: வேலியிற் கிடக்கும் ரோசாக்கள். கோர்டோவாவுக்கு என்னை ஒருவேளை கொண்டு செல்லும்
அல்லது கொண்டுசெல்லாதவீதி வழியே பயணஞ் செய்வேன். தம்பியோடும் பறவைகள் என் நிழலின் கிளைகளிற் கூடுகட்டுமாறு
என்நிழலை இரு பாறைகளிடையே தொங்கவிடுவேன் பாதாம் பருப்பின் மணம் தூசுUடர்ந்த முகிலில் ஏறிப் பறக்கையில்
அதைத் தொடருமாறு எண் நிழலைத் துண்ழப்பேன், மலையடிவாரத்தே களைத்து நிற்பேன்; வந்து நான் சொல்வதைக்
கேட்Uர். என் ரொட்டியில் சிறிது உண்Uர், என் மதுவை அருந்துவீர், காற்றாழ மரம்போல் பல்லாண்டு காலம்
தனித்திருந்த பாதையில் என்னை விடாதீர் பிரிவின் பாடலின் அழச்சுவட்டை உணராத, குருதிக்கோ ஒரு
பெண்ணுக்கோ தலைவனங்காத நாட்டை நேசிக்கிறேன் எல்லையில் மரிக்கும் புரவிகளின் தற்கொலையைத் தம்
ஆசையுள் மறைக்கும் பெண்களை நேசிக்கிறேன் என்ரோஜாக்கட்கும் என்அடிச்சுவடுகட்கும் மீளவேண்டின் மீள்வேன் ஆனால் என்றுமே கோர்போவாவுக்குத் திரும்பிச் செல்லேன்
சி. சிவசேகரம் 53

Page 34
ஸமி. அல் களமிம் (Samih al Qasim) பலஸ்தீனம்
அலுப்புத்தட்டும் பாதை
ஹGார் என்னும் பேருக்குரியவளும் இன்னும் பிறவாதவளுமான எண் மகள் என்னைக் கேட்டாள்: “அப்பா பூமி ஏன் சுழல்கிறது?” “கடவுள் ஒருநாட் காலை துயிலெழுந்தார். அவரது காலைநேரக் கோப்பியை GேBரியல் சம்மனசு கொண்டுவந்தது. ‘தயவு செய்து ஒரு சீனி’ தன் தங்கக் கரண்டியாற் கடவுள் சீனியைக் கலக்கினார் சோர்வான வெறிதான வட்டங்கள் அதுமுதலாக,
என் குழந்தாய், உலகம், தன் அலுப்புத் தட்டும் பாதையிற் சுழல்கிறது’
அநந்த காலம்
காலத்துக்குக் காலம் இலைகள் விழுகின்றன.
ஆனால்
ஒக் மரத்தின் தண்டு.
54 மறப்பதற்கு அழைப்பு

அறை
நூல்களும்
ஒரு கட்டிலும் ஒரு சுவரொட்டியுமே உள்ளன. ஒரு போர்விமானம் வந்து கட்டி2லையும் கடைசிப் புத்தகத்தையும் தூக்கிச் சுவரொட்டியிற் தன் சுவடுபதித்தது.
சிறைக்காவலனுடன் ஒரு உரையாடலின் முடிவு
என் சிறிய சிறைக்கூண்டின் யன்னலினின்று மரங்கள் எனைநோக்கி முறுவலிப்பதையும் எனது சனங்களால் நிறைந்த கூரைகளையும் எனக்காக அழுது பிராத்திக்கும் யன்னல்களையுங்
காண்கிறேன்.
என் சிறிய சிறைக்கூண்டின் யன்னலினின்று உனது பெரிய சிறைக்கூண்டை காண்கிறேன்.
சி. சிவசேகரம் 55

Page 35
தெரியாத மனிதனின் கதை
தெருமுனையில் திராட்சைத் தோட்டத்தில் வெருளி போலத் தெருமுனையில் அவன் நின்றான்
பச்சைப் போக்குவரத்து விளக்கின் மனிதன் போலத் தெருமுனையில் அவன் நின்றான் பழையதொரு கோட் அணிந்து தெருமுனையில் அவன் நின்றான்; அவன் பேர் “தெரியாத மனிதன்”,
வெள்ளை வீடுகள்
அவனுக்கு வாசலைச் சாத்தின, மல்லிகைச் செடிகள் மட்டுமே நேசமும் வெறுப்பும் நிழல்பதித்த அவன் முகத்தை நேசித்தன.
56 மறப்பதற்கு அழைப்பு

அவன் பேர் “தெரியாத மனிதன்”, வெட்டுக்கிளிகளினதும்* கடுந்துயரினதும் சுமையின்கீழ் நாடு இருந்தது. அவன் குரல் ஒருநாள் வெள்ளை வீடுகளின் சதுக்கத்தில் ஒலித்தது. ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் வெள்ளை வீடுகளின் சதுக்கத்திற்குவிந்தனர் அவன் தனது பழைய கோட்டை எரிக்கக் கண்டனர். (அவனிடம் ஒரு பழைய கோட் இருந்தது)
ஒரு பசும் மேகத்துடன் ஒரு வெண் மேகத்துடன் ஒரு செம் மேகத்துடன் வினோதமான ஒரு நிறமிலா மேகத்துடன் வானம் விரிந்தது
அந்த நாள்
வானம் மின்னி இழத்தது
மழை கொட்டியது
மழை கொட்டியது
அவனது பேர் ‘தெரியாத மனிதன்' மல்லிகைச் செழகள் மட்டுமே நேசமும் வெறுப்பும் நிழல் பதித்த அவனை நேசித்தன வெள்ளை வீடுகளும் அவனை நேசிக்கத் தொடங்கின
*Locust : பயிர்களை முற்றாக நாசம் செய்யப், படைபடையாக வந்து குவியின்ற வெட்டுக்கிளி இனம்.
சி. சிவசேகரம் 57.

Page 36
ஹரிஸ் க்ஹலிக் (Haris Khalique) பாக்கிஸ்தான்
பொய்யர்கள் நரகத்தில் அழுகுவார்கள்
நம்முடைய பாற்காரன் ஷேகு ஒரு பொய்யன்
படு பொய்யன் அவனுடைய பொய்கள் அவனது பாலினளவு வெள்ளை “பால் என்றுமே தூயதாக இல்லை. நீதண்ணிர் ஊற்றுகிறாய்” என்று தன்னுடைய வழமையான போலிக் கோபத்துடன் நாளும் என் அம்மா சொல்லுவார் “தண்ணிரா? கிடையவே கிடையாது!’ என்று ஷேகு அலட்சியமாகச் சொல்வான்
58 மறப்பதற்கு அழைப்பு

அவனுடைய அப்பனுடைய வயிற்றிலும் பெரிய வயிறு அவனுக்கு அவன் காவுகிற ஆகப்பெரிய பால் வாளியிலும் அது கனமானது அவன் நடக்கும் போது அலங்கோலமாகப் புனையப்பட்ட முழயையுடைய விரிந்த குடைபோல். அவனுடைய தொப்புள் வானை நோக்காமல் நம்மை நோக்கும்
விடுமுறை நாட்களில் நமது தெருவிலுள்ள பையன்கள் அவனைச் சூழ்ந்தபடி? “ஷேகு, உன் வயிற்றினுள் என்ன? இவ்வளவு பெரிதாக இருக்கிறதே” என்று கேட்பார்கள் பசுஞ்சாணங் கமழும் உரத்த சிரிப்புடன் “பால், அது நிறைய பால்” என்பான் ஷேகு அவர்கள் இளையோராயினும் முட்டாள்களல்வே அவன் சொன்னதை ஐயத்துடன் நம்பினார்கள் சில ஆண்டுகள் பின்பு சிறுவர்கள் வளர்ந்து இளைஞர்களானார்கள். ஷேகு சொன்னது பொய் என்பது போக அவன் பொய்சொல்கிற பேச்சு வகையும் வேறு என்றே உணர்ந்தார்கள் எனவே அவன் வயிற்றில் துளையிட்டார்கள் வெளியே வந்தது இரத்தம் மட்டுமே
Uாலே இல்லை
பொய்யர்கள் நரகத்தில் அழுகுவார்கள்
(கடந்த 10 ஆணர்டுகளாகக் கராச்சியில் வன்முறையாற் செத்த அனைவர்க்கும் சமர்ப்பணம்)
ef, fel JC3eg erbyth 59

Page 37
மன்னிக்க வேண்டும், அன்புக்குரிய பிரதமரே
எதிர்க்கட்சி என்பது வேண்டாத மயிர்போல ஒரே இரத்தத்தில் வாழ்ந்து ஊட்டம் பெற்று உடம்பில் ஏற்படும் வசதியீனமான வளர்ச்சி. எவ்வளவுக்கு மழிக்கிறோமோ அவ்வளவுக்கு அது தழக்கிறது. அது மட்டுமன்றி, அது எப்போதும் அங்கேயே உள்ளது.
நீரே எப்போதும் வெல்வீர்
னிந்து போகிற பண்பான மெல்லிய குரல்: மன்மைதங்கிய, மாண்புமிகு என அவர்களை நீர் விளிப்Uர்.
உராய்வான முருடான பண்பற்ற குரல் : மாட்சிமை தங்கிய மக்களே என
நான் கூவுவேன்.
நான் தனியே நிற்கிறேனர். மக்கள் உம்முடன் நிற்கின்றனர்.
60 மறப்பதற்கு அழைப்பு

உண்மையான ஒரு சர்வதேசியவாதியின் ஒப்புதல் வாக்குமூலம்
நான் உலகப் பிரசை. முன்னெப்போதும் இனியெப்போதும். எனினும், பாதிரியாரே எங்கே நான் போனாலும், கராச்சி பற்றி நினைக்கிறேன். லாகூர் பற்றிக் கனாக் காண்கிறேன். வேறொன்றும் அறியேன்.
அகதி
மரங்களை விடவும் ஆழமான வேர்களை மனிதர் கொண்டிருந்த நாட்டிலிருந்து வந்தவன் அவன் குழந்தைகள் மண் விளையாடுவதைக் காணும் போது அவனுடைய முகமென்னும் தட்டையான வெள்ளை லினெண் வேதனை விரிப்பில் மகிழ்ச்சியின் ஒரேயொரு கறையாக அவன் விழிகள் மீதாக ஒரு முறுவல் ஊர்ந்தது
சி. சிவசேகரம் 61

Page 38
அக்கறையற்றோருக்காக
பிற்படுத்தப்பட்ட சாதியினருக்காக மயானத்தில் நான் பிறந்தேன் என்னைச் சூழவுள்ள எச்சங்களின் நலன்கள் பற்றிய பொறுப்புணர்வுடன் என் ஈமக் கிரியைகட்காக இறைவன் காத்திருக்கையில் நான் எண் மரணத்தை வாழ்கிறேன்.
நான் கராச்சியில் வாழ்ந்தவன்
சிறுவனாக இருந்தபோது என் அன்னையிடம் எப்போதும் கேட்டது: “நாம் ஏன் எண்களுக்குப் பேர்களும் பேர்களுக்கு எண்களும் தர இயலாது?’ அவர் பதில் கூற இருபத்தைந்து ஆண்டுகள் எடுத்தன: “மகனே, நாங்கள் தெருக்களுக்குப் பேர் வைக்கிறோம், மனிதர்களை எண்ணுகிறோம்” காலைப் பத்திரிகை சொன்னது: “எம்.ஏ.ஜின்னா சாலையில் அடையாளம் தெரியாத மூவர் சுட்டுக் கொல்லப்Uட்டனர்.”
31 ஆண்டுகளின் பின்
அம்மா, திருத்த முடியாத உன் மகன் உன் ஆன்மாவின் துணி உலர்த்துங் கயிற்றில் பாட்டுக்களுடனும் கதைப்புத்தகங்களுடனும் கழுத்தாடையுடனும் கஞ்சிக் கிண்ணத்துடனும் தொங்குகிறான்.
62 மறப்பதற்கு அழைப்பு

கல்லறை வாசகங்கள்
கோUக்கார இளைஞர்கள் நமது திரள் பிணக்குழிகளின் கல்லறை வாசகங்களைச் சுவர்களிற் சுலோகங்களாக எழுதுகின்றனர்.
நாம் ஒருவரை ஒருவர் காண இயலும்
யதார்த்த கடலுக்கு அப்பால் பழங்கதை ஒன்றன் விளிம்பில் அவள் வாழ்கிறாள். அலைகளோ கொழயன, தாண்ட இயலாதன. தூரத்துத் தொங்கலிலிருந்து அவளை நோக்கிக் கையசைக்கிறேன்.
நம்பிக்கை
பொழுது சாய்வதற்குச் சற்று முன்னம் சூரியன் களைத்து, ஓய்ந்து, அணுகக் கூழ2யதாக நாம் உற்று நோக்குவதைச் சட்டை செய்யாதிருக்கையில் ஒரு நடுத்தர வயது விவசாயி தன் இரு மகன்களுடனும் ஒரு மகளுடனும்
புல்வயல்களை ஊடறுத்து நேராகச் சூரியனிடம் செல்லும் தெருவிற் தோன்றுகிறான். ஏற்றிச் செல்லும்பழ கோரிக் கடந்து செல்லும் ஒவ்வொரு வாகனத்திற்கும் கையசைக்கிறான்.
சி. சிவசேகரம் 63

Page 39
சுதந்திரமான இருப்பு
சூரியன் மேற்கில் உதிக்க வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள்
எனினும்
அவர்கள் பெரிதும் வியக்கும்பழ சூரியன், தன் சொந்த முழவுகளையே எடுக்கிறது.
ஒரு சனத்தின் மரண அறிவித்தல்
உருதுவில் வாழ்ந்த அக்தர்-அல்-அமான் இறந்து விட்டார்.
ஆனால் அவர் எப்போதேன் இருந்தாரா? மட்டுப்Uட்ட ஒரு சனத்தின் மட்டில்லாத மொழியான
உருதுவில் எழுதுவது முதலாவது காதலிக்குக் கடிதம் எழுதுவதுபோல அனுப்புதற்கும் இல்லை, என்றுமே வாசிப்பதற்கும் இல்லை.
64 மறப்பதற்கு அழைப்பு.

உண்மை
உண்மை நம் நெஞ்சங்களைக் கவர்வதில்லை, தன்னம்பிக்கை நம்மை மலைக்க வைக்கிறது பொய்யன் நான்
பொய்யுரைக்கிறேன் நீங்கள் என்னை நம்புகிறீர்கள்.
ஏழையின் அன்னை
அவள் வயதான, பாழ்பட்ட ஒரு பெண், நரகத்தை ஒத்த கசப்புணர்வுடையவள் தாம் சாகவேண்டும் எனும் ஆசையை உரக்கச் சொல்லும் தன் வயதையொத்த பெண்களைப் போலன்றி மூச்சுவிட்டபடி
நிலைத்திருக்கவே அவள் விரும்பினாள். ஏனெனில் அவள் சாவீட்டுச் செலவுக்கு அவளுடைய மகனிடம் பணமில்லை.
விதி
எண் நண்பர்கள் அனைவரும் சொர்க்கத்தில் வாழ்கின்றனர். கடவுள் எனக்கும் பிறந்த நாள் பரிசாக வழங்கிய பகுத்தறியும் கழகாரத்துக்குச் செவிமடுத்தUழ நான் நரகத்தில் இருக்கிறேன்.
சி. சிவசேகரம் 65

Page 40
அந்தக் கணிகளில்
இளமையான புத்துணர்வான மகிழ்ச்சிகள் ததும்பின அந்த விழிகள் ஒரு விழாவினைப் போல களிப்புடன் ஒளிர்ந்தன
அந்த ஒளிர்வினில் என்னை இழப்பேனோ என அந்த விழாவினில் தனித்து இருப்பேனோ என அஞ்சி நின்றேன் நான்
கனவுகள்
மனிதர் தம் கனவுகள் நனவாக வேண்டுகின்றனர் நான் வேண்டுவன கனவுகள்மேலுங் கனவுகள் வழமை போலல்லாத தனித்துவமான முன்னர் யாருமே கண்டிராத கனவுகள்
66 மறப்பதற்கு அழைப்பு

ஒடம்
சிப்பிகளை, முத்துச் சிப்பிகளை நான் மறைத்து வைத்திருக்கும் எல்லையில்லாத் துன்பக் கடலினிலே மிதக்கவிட்டேன் ஒரு ஒடத்தினை சிப்பிகளும் உள்ள முத்துக்களும் மட்டுமன்றி
அந்த ஒடமுமே உந்தனுக்கே எல்லாம் உந்தனுக்கே எனினர் ஆரிடமும் இதைச் சொல்லாதே
(EFITj6)
எனக்குச் சொர்க்கத்தின் மீது கவர்ச்சியில்லை நரகம் பற்றிய பயமும் இல்லை ஏனெனில் உணர்வுகள், பருவங்கள் அங்கே மாறுவதில்லை
நான் அஞ்சுவது சாவின் சலிப்பூட்டும் பண்புக்கே
சி. சிவசேகரம் - . 67

Page 41
696 Lп613uЈТ штž (Octavio Paz) மெக்ஸிகோ
கவிஞனின் பணிகளிலிருந்து
(XIII)
ஆண்டுகள் பல முன்னம், கூழாங்கல்லினின்றும் குப்பையினின்றும் புல்லினின்றும் திலந்த்லானை நான் கட்டியெழுப்பினேன். சுவரும் இலக்க அடையாளங்கொண்ட மஞ்சட்கதவுகளும் இரைச்சல் மிக்க சனங்கள் வாழும் நாறுகிற வீதிகளும் பச்சைநிற அரசாங்க மாளிகையும் விரிந்த கைபோல தனது ஐம்பெருங்கோயில்களுடனும் எண்ணிலடங்காத கடப்பு வழிகளுடனுமான பலிகொடுப்பதற்கான மனையும் எனக்கு நினைவிலுள்ளன. திலந்த்லான், வெண்குன்றின் அடிவாரத்தே அமைந்த சாம்பல் நகரம், நகங்களாலும் பற்களாலும் தரைக்குப் பற்றப்பட்டுள்ள நகரம், தூசினதும் பிராத்தனைகளதும் நகரம். தந்திரமானோரும், ஆசாரம் மிக்கோரும் உணர்ச்சி வயப்படுவோருமான நகரவாசிகள் தம்மைப் படைத்த கைகளை வழிபட்டனர். எனினும் தம்மை அழிக்கக்கூடுமெனப் பாதங்களை அஞ்சினர். அவர்களையும் அவர்களது வரலாற்றையும் கடுஞ்சீற்றம் மிக்க அவர்களது உயர் குடியினரையும் அவர்களது கிளர்ச்சிகளையும் அவர்களது புனித மொழியையும் அவர்களது நாட்டார் பாடல்களையும் அவர்களது சடங்குக் கூத்துக்களையும் எனது வலது Uாதம் நசுக்கிய அந்த மகிழ்வான காலைப் பொழுதினின்று அவர்களைக் காப்பாற்றுவதற்கு அவர்களது இறையியலாலும் முதலாவதுகளின் அணர்பை வாங்கவும் முடிவானதுகளின் கருணையை உறுதிசெய்யவும் வேண்டி அவர்கள் கொடுத்த புத்தம்புதுப் பலிகளாலும் இயலவில்லை. பாதங்களும் கைகளும் ஒரே கடவுளின் அந்தங்களே அன்றி வேறல்ல என்று அவர்களது மதகுருமார் என்றுமே ஐயுற்றதில்லை.
68 மறப்பதற்கு அழைப்பு

(XIV)
வெகு சிரமத்துடன் ஆண்டுக்குச் சில மில்லிமீற்றர்களே முன்னேறி, ஒரு குன்றினூடு பாதையொன்றைக் குடைந்தேன். ஒளியும் திறந்த காற்றுவெளியுமுள்ள மறுபக்கத்தைப் போயடைய எடுத்த ஆண்டுகள் ஆயிரங்களில் எண் பற்கள் தேய்ந்து நகங்கள் உடைந்து போயின. இப்போது என் கைகளில் இரத்தம் வழிய தாகத்தாலும் தூசாலும் வெழுத்துள்ள ஒரு குழியில் எண் பற்கள் நிச்சயமின்றி நடுநடுங்குகையில், நான் சற்றே தரித்து எனது வேலை பற்றிச் சிந்திக்கிறேன்: எண் வாழ்வின் இரண்டாவது பகுதியைக் கற்களை உடைப் பதிலும் சுவர்களிற் துளையிடுவதிலும் கதவுகளை நொறுக்குவதிலும் என் வாழ்வின் முதலாவது பகுதியில் எனக்கும் ஒளிக்கும் நடுவே நான் வைத்த தடைகளை அகற்றுவதிலும் செலவிட்டுள்ளேன்.
சி, சிவசேகரம் 69

Page 42
புனிதமான அரச மரம்
காற்றும்
கனிகளின் கள்வரும்
(குரங்குகள், பறவைகள்) பெரியதொரு மரத்தின் கிளைகளிடை விதைகளைச் சிதறுவர்.
சூரியர்கள் அருந்த நிரம்பி வழிகின்ற, பசுமையான அதிர்வுமிகும் பெருங்கிண்ணம் காற்றினில் ஒருகுடல்.
விதைகள் வெழுத்து விரியும்.
வெறுமைமீது செடி, வேர் கொள்ளும்.
தன் கிறக்கத்தை வாதாழத் தீர்க்கும்.
அதனுள் நேராக வளர்ந்து அசைந்தாழப் பெருகும்.
ஆண்டுக்கு ஆண்டு அது ஒரு நேர் கோட்டில் விழும்.
அதன் வீழ்ச்சி தாவுகையில் உறையும் நீரின் பாய்ச்சல் :
கல்லாக உறைந்த காலம்.
தன் பாதையைத் தடவிக் கண்டறிந்து நீண்ட வேர்களையும் முறுக்குண்ட கிளைகளையும் Uன்னிப் பிணைந்த கரிய தாரைகளாக அது வீசும்.
தூண்களை நிறுவும்.
70 மறப்பதற்கு அழைப்பு

எதிரொலி பரவி மழயும் ஈரலிப்பான நுழை மாடங்களைத் தோண்டும்.
நாள் தோறும் கரியாகும் ஒரு சூரியனின் அசைவின்மையிற் கரையும் செம்புத் தன்மையான அதிர்வு.
கரங்களும் கப்பல் கட்டுங் கயிறுகளும் வளையங்களுமாகப் பாய்மரங்களதும் வடங்களதும் கடுஞ் சிக்கு - தரைதட்டிய ஒரு பாய்க் கப்பல்.
- அலையும் வேர்கள் தட்டித் தடவி ஒன்றாய்ச் சுருளும்.
இக் கைகளின் புதர்க்காடு ஒரு உடலை நாடுகிறது, மண்ணையல்ல.
அவை பின்னுகிற ஒரு ஆலிங்கனம்.
மரம் உயிரோடு ஒரு சுவராற் சூழப்படும்.
அதன் தண்டு உக்க ஒரு நூற்றாண்டுகளாகும்.
அதன் நுனி மொட்டையான ஒரு மண்டையோடு மானின் முறிந்த கொம்பு.
தோல் போன்ற இலைகளின் மேலாடைக்கீழ் இளஞ்சிவப்பினின்று காவி மஞ்சளுக்கும் பச்சைக்குமாகச் சுரபேதம் செய்து பாடும்
ஒரு அலை,
தனது முழச்சுகளிற் சிக்குண்டு இரண்டாயிரம் ஆண்டுகளாக அரசமரம் தவழ்ந்து மேனோக்கி வளர்ந்து தன்னையே மூச்சுத் திணறடிக்கும்.
சி. சிவசேகரம் 71

Page 43
மற்றது
அவன் தனக்காக ஒரு முகத்தைக் கண்டுபிடித்தான். அதற்குப் பின்னால் வாழ்ந்தான், இறந்தான், மீள உயிர்த்தான். U6 CD60)(D.
இன்று அவனது முகம் அந்த முகத்தின் சுருக்கங்களைக் கொண்டுள்ளது. அவனது சுருக்கங்கட்கு முகம் இல்லை.
இசைவு
(கார்லொஸ் F"வென்Tெஸ"க்கு?)
மேலே தண்ணிர் கீழே தோப்பு தெருக்கள் வழியே காற்று
அமைதியான கிணறு வாளியின் கருமை அசையாத தண்ணிர்
மரங்கள் மீது இறங்கும் தண்ணிர் உதடுகளைத் தொட எழும் வானம்
* Carlos Fuentes-நன்கறியப்பட்ட மெக்ஸிக்கோ படைப்பாளி
72 மறப்பதற்கு அழைப்பு

ஞானஸ்னானத்தின் Lusof 56f
வாலிபன் ஹஸன் ஒரு கிறிஸ்தவப் பெண்ணை மணம் முழக்க ஞானஸ்னானம் பெற்றான்
. ஏதோ அவன் ஒரு வைக்கிங்* போல. Uாதிரியார் அவனுக்கு எரிக் என்று பேர் சூட்டினார்
இப்போது அவனுக்கு இரண்டு பேர்கள் ஒரே ஒரு மனைவி
*வைக்கிங் - முன்னைக்கால ஸ்கன்டினேவியக் கடலோடிகள், கடற்கொள்ளையிலிடுபட்ட போர்வீரர்.
உதயம்
குளிர்ந்த வேகமான கரங்கள் இருளின் கட்டுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கின்றன என் கண்களை விழிக்கிறேன் இன்னமும் UழுதுUடாத ஒரு புண்ணின் மத்தியில்
நான் வாழ்கிறேன்.
சி. சிவசேகரம் 73.

Page 44
இங்கே
இவ்வீதி வழி என் காலழகள் இன்னொரு வீதியில் மீளொலிப்பன
அவ்வீதியில் இவ்வீதிவழிச் செல்லும் என் அழகள் கேட்பன
இவ்வீதியில் பனிப்புகார் மட்டுமே நிசமானது.
முன்பின்னாக்க வல்லது
வெளியினுள் நானிர்
என்னுள்
வெளி எனக்கு வெளியே வெளி எனக்கு வெளியே வெளியில்
நான் எங்குமில்லை உள்ளே
606ᎧᎫ6rf
வெளியே எங்குமில்லை நான்
வெளியில் இத்தியாதி
74 மறப்பதற்கு அழைப்பு

நீக்கராஹ"வாவின் போராளி விவசாயிக் கவிஞர்கள்
இங்கு மொழிபெயர்க் கப்பட்டவை (பக 77-92), ஸொலென்ற்றினாமேயின் விவசாயிக் கவிஞர்கள் (The Peasant Poets of Solentiname) 6T60f G5 T (5 L foil (b. 5 gs எடுக் கப் பட்டவை. ஸ்பானிய மொழியிலிருந்து SÐ, Élaé6dLDTäsafluu6uj ĵÖApj 60DJÖ (Peter Wright.)
முப்பத்தெட்டு தீவுகளைக் கொண்ட ஸொலென்ற்றினாமே தீவுக் கூட்டம் நிக்கராஹ"வா குளத்தின் தென் கீழ்க் கோடியில் உள்ளது. நிக்கராஹ"வாவில் ஸொமோஸோ குடும்பத்தின் கொடிய ராணுவ சர்வாதிகார ஆட்சியில் இப்பகுதி மிகவும் பின்தங்கி இருந்தது. வயது வந்தோரில் 100க்கு 96 பேர் எழுத வாசிக்க இயலாதவர்கள். பாடசாலையோ மருத்துவமனையோ இல்லாத இப்பகுதியில் 1976-ல் கவிதை இயக்கம் ஒன்று மலர்ந்தது. பெரும்பாலும் இருபது வயதுக்குட்பட்டோரான (குழந்தைகள் உட்பட்ட) இருபது சொச்சம் கவிஞர்களது சில கவிதைகள் 1980ல் விடுதலை பெற்ற நிக்கராஹ"வாவின் பண்பாட்டு அமைச்சரால் ஒரு தொகுதியாக வெளியிடப்பட்டன.
இவர்களைப் படைப்பாளிகளாக்கியதில் ஏர்னெஸ்ற்றோ கர்தினால் (Ernesto Cardinal) எனும் விடுதலைக்கான இறையியற் கோட்பாட்டாளரும் விடுதலைப் போராளியும் முக்கியமான கவிஞருமானவரின் பணி பெரியது. பத்து வருடங்களாக ஸொலென்ற்றினாமேயில் அவரது சேவை அளப்பரியது. விவசாயிகள் ஓவியர்களாக, சிற்பிகளாக, கவிஞர்களாக உருவாயினர். இக் கவிதைகள் கவிஞர்களும் கேட்போரும் பங்கு பற்றிய கவிதைப் பட்டறைகளில் செப்பனிடப்பட்டவை.
சி. சிவசேகரம் 75

Page 45
இப்பட்டறைகளில் ஏர்னெஸ்ற்றோ குறுக்கிடவில்லை. கவிதைப் பட்டறைகளை ஊக்குவித்ததில் கொஸ்ற்ற ரீக்கா (Costa Rica) பெண் கவிஞர் மிரா ஹிமெனெஸ் (Myra Jimenez) ஆற்றிய பங்கு பெரியது.
இக் கவிதைகள் இனி னும் பல வகைகளில முக்கியமாகின்றன. இக்கவிஞர்கள் அனைவரும் ஸன்டினிஸ்ற்றா விடுதலை இயக்கத்தின் போராட்டத்துடன் தம்மை நெருக்கமாகப் பிணைத்துக் கொண்டவர்கள். கவிஞர்களிற் பதின்மர் 1976 ஒக்தோபர் 13ம் திகதி ஸன் கார்லோஸ் நகரிலிருந்த ராணுவமுகாம் மீதான தாக்குதலில் பங்கு பற்றியோராவர். ஆயுத பலமும் அனுபவமும் எண்ணிக்கையும் குறைந்த இப்போராளிகள் பெற்ற வெற்றிக்கு விலையாக ஸொமோஸா ஆட்சி ஸொலென்ற்றினாமே மீது காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையை ஏவிவிட்டது. பின் வாங்கலின் போது சிறைப்பிடிக்கப்பட்ட Fெலிப்பே பென்யா, எல்விஸ் சவாலியா, டொனால்ட் கெவாரா ஆகியோரில் பின்னைய இருவர் சித்திரவதை செய்யப்பட்டு இறந்தனர். முன்னவர் 1978 ஒகஸ்ற்றில் புரட்சிவாதிகளால் மீட்கப்பட்டு மீண்டும் போராடி 1979 மேயில் ஒரு காயமுற்ற தோழனைக் காக்கும் போது இறந்தார். 1979 ஜூலையில் ஸொமோஸா ஆட்சி தூக்கி எறியப்பட்டது. ஸன்டினிஸ்ற்றா அரசு மக்களது கல்வி மேம்பாட்டுக்காகப் பல முயற்சிகளை எடுத்தது. ஸொலென்ற்றினாமே கவிஞர்களின் ஒரு முக்கியமான பண்பு, தமது அக உணர்வுகளை விடப் புற நோக்கிய பார்வைக்கு அளிக்கும் முக்கியத்துவமாகும். இக் கவிதைகளின் தெளிவுழ் போகிற போக்கில் கருத்துக்களைக் கூறும் பாங்கும் கவிதைக்கு ஒரு விடுதலைப் பரிமாணத்தை வழங்குகின்றன. வாழ்வின் பல்வேறு அம்சங்களைத் தொடும் 55 கவிதைகள் கொண்ட தொகுதியில் அக் கவிதைகளின் வேறுபட்ட பாடு பொருள்களையும் ஒவ்வொரு கவிஞரையும் உள்ளடக்குமாறு இருபது கவிதைகளைத் தெரிந்துள்ளேன். இத்தொகுதி 1991ல் ஆங்கிலத்தில் வந்தது. எனினும் அண்மையிலே தான் தமிழாக்குவதற்கான அவகாசம் எனக்குக் கிட்டியது.
76 மறப்பதற்கு அழைப்பு

ஹ"வான் அகுடெலோ (7வயது) (Juan Agudelo)
கவிதை
சிவப்பு வண்ணத்துப் பூச்சிகள் தேனருந்தும் அலரிப் பூக்களில் கவிதை பிறக்கிறது. காதலர் இருவர் ஒருவருக்கொருவர் கூறுகிற மொழி கவிதை. குளத்தில் விழும் நிலவின் நிழலினும் நுண்ணியது கவிதை. உத்தமமான கவிதை புரட்சி போன்றது.
அலெஹாநீரோ கெவாரா (Alejandro Guevara)
கொக்குகள்
வெண்ணிறத்தில் நேர்த்தியான நெட்டைக் கொக்குகள் நாள் முழுதும் மீன் பிழக்கும். தமக்குப் பிடித்தமான கடற்கரையோரம் மற்றோர் மீன் பிழக்கையில் புறுபுறுக்கும், சில வேளை சண்டையும் இடும். அகப்படும் ஒவ்வொரு சூடை மீனோடும் கூட்டுக்கு ஒரு பயணம்.
ஏனெனில் அவற்றின் சிறிய வயிற்றில் இரண்டிற்கே இடமுண்டு. தனக்கு ஒன்று,
தன் குஞ்சுக்கு மற்றது.
தூரத்தினின்று கொக்கைக் காணும் எவரும் கன்னி மரியாளின் சிலையெனர்றே நினைக்கலாம்.
சி. சிவசேகரம் 77

Page 46
ஹொனி ஷவரியா (11 வயது) (Jonny Chavarria)
மகிழ்ச்சி
எனக்கு பெற்றோர் இருப்பதனால் மகிழ்வாய்
இருக்கிறேன் எனக்கு பழக்க முழவதால் மகிழ்வாய்
இருக்கிறேன் நானோர் கவிஞன் என்பதால் மகிழ்வாய்
இருக்கிறேன்
எடி ஷவரியா (Eddy Chavarria)
ஓணான்கள்
காய்ந்த மரத்தண்டின் மேல் ஓணான்கள் வெய்யிற் காயும். காற்றின் முணுமுணுப்பிற்கு மாவும் தோடையும் ஓய்வின்றி ஆடும். அங்கே ஒரு தீவின் முனையில் அலைகள் மோதும். சற்று அப்பால் ஒரு சிற்றாறு. தீவில் வாழும் மக்களின் பணிவான பண்புகளைப் படம்பிழக்கும் Uாங்கில் வைக்கோலாற் சமைந்த மிக எளிய சிறுகுழசை.
78 மறப்பதற்கு அழைப்பு

பொஸ்கோ சென் தெனோ (Bosco Centeno)
என் மனைவி எஸ்பெரன்ஸாவுக்கு
புரட்சியின் பின் யாவுமே மாறிவிடும். நம் நேசம் மக்கள் மீதான நேசமாகும். ஆயினும் நாம் என்றும் போல் ஒருவரை ஒருவர் நேசிப்போம்.
நற்றாலியா ஸெகுவெரியா (Natalia Sequeria)
ஒரு காதல் மாநாடு
மாசி மாதத்தில் இரை தேடும் பறவைகளெல்லாம் ஒரு காதல் மாநாட்டில் இணைவன. மரங்களெல்லாம் இலைகளை உதிர்ப்Uன. பறவைகள் சோகத்துடன் கிளைகளில் அமர்வன. ஏனெனில், புழுக்களைத் தேட உகந்த இலைகளோ உண்ண உகந்த உயிரிகளோ இல்லை. வைகாசி பிறந்ததும் அவை உற்சாகமாகிச் சிறகு விரிப்Uன. இலைகள் அடர்ந்த கிளைகளைக் கண்டதால் ஒன்றுக் கொன்று வந்தனை கூறிக் கழுத்தை நீட்ழப் பாடுவன.
சி. சிவசேகரம் 79,

Page 47
Fெலிப்பே பெண்யா (Felipe Peña)
நீ நினைக்கலாம்
நான் உன்னை நேசிக்கவில்லை எனவும் உன் சொற்களின் பொருளையோ உன் குரலின் தொனியையோ உன் பார்வையின் சந்தேகத்தையோ புரியாததுபோல நழப்பதால் நான் கொடியவனெனவும் நீநினைக்கலாம். உன் அழகையே ஒருவேளை நீஐயுறலாம். அவ்வாறு நீஎன்னைக் கருதாதே. சற்றே நிதானி, சதுப்பு நிலத்திலும் மலைப் பாதையிலும் ஊர்ந்து சுள்ளிகளாலான Uடுக்கை மேல் உறங்கி அல்லது பிலாஸ்ற்றிக் விரிப்பொன்றன்மேல் மல்லாந்து கிடக்கும் ஒரு கெரில்லாப் போராளி உனக்கு எதைத்தான் தர இயலுமென யோசி. என் உயிரை மக்களுக்கு வழங்கிய பிறகு நான் உனக்கு எதைத் தர இயலும்? என்னிடம் எஞ்சியுள்ளவை. என் தோள் Uை, என் ரைFள் துவக்கு, எனக்கு வழங்கப்பட்ட தோட்டாக்கள், என் கரும் பச்சைச் சீருடை
80 , மறப்பதற்கு அழைப்பு

இவான் Gெவாரா (Ivan Guevara)
வெறிதான தேவாலயம்
தேவாலயம் வெறிதாக உள்ளது: கூச்சலிடும் சிறுவர்கள் இல்லை; மீட்டும் கிற்றார்கள் இல்லை. இயற்கை மட்டுமே நிகழ்வுகளைக் கணிப்பிற் கொள்கிறது. முன் போல மீண்டும் அங்கு புல் முளைக்கும், காற்றும் மழையும் மலர்ந்த தெங்கு மரங்களைச் சாடும், பறவைகள் வந்து மாங்கனிகளை உண்ணும், தேவாலய இறவாரங்களில் தூக்கணாங்குருவிகள் தம் கூடுகளைக் கட்டும். மெளனமான நாட்களில், இப்போது மலர்களும் பறவைகளின் Uாட்டுமே மகிழ்ச்சி தருவன.
சி. சிவசேகரம் 81.

Page 48
ேேளாரியா QG61) Tyrr (Gloria Guevara)
வறுமைப்பட்ட மக்கள்
நகரின் குப்பைகளையெல்லாம் கொட்டுகிற இடத்துக்கு வந்தேன் சில பழஞ் சாக்குகளை துருப்பிடி2த்த தகரங்களாலும் நைந்த காலணிகளாலும் பழைய அட்டைப் பெட்டிகளாலும் சில குழந்தைகள் நிரப்புவதைக் கண்டே6
சாக்குகளிடையே சில ஈக்கள் புகுந்தன
அவை வெளியே வந்து குழந்தைகளின் தலைகளின் மேல் அமர்ந்தன.
82 மறப்பதற்கு அழைப்பு

டொனால்ட் Gெவாரா (Donald Guevara)
சொலென்ற்றினாமேயில் GJITjë605
சொலெனிற்றினாமே குளத்தினிடை சிறு தீவுகளின் கூட்டம், கவிஞர் தம் கவிதைகட்குச் சுவையூட்டும் இடம். அளப்பரிய மோனத்தினுாடு பறவைகளின் ஓசைகள் மட்டுமே கேட்கும்: அழுக்கு வாத்துக்களின் குவாக்குவாக், பூச்சியிழப்பான்களின்* கத்தல், கிறாக்கிள்களின்** கொம்பொலி தன்குஞ்சுகளிடையே பருந்து பாய்கையில் நீர்க் கோழிகளின் எதிர்ப்பு முழக்கம். ஆமைகள் சூரியவெப்பத்தை நுகர வரும் ஒவ்வொரு தீவினதும் தொடக்கமும் முழவுமாய்க் கற்கள் செறிந்த கரைகளில் அலைகளின் மோதல். தூரநின்று நோக்கும் அயலார் எவருக்கும் ஆற்றோடு போகிற ஆற்றுச்செழ போற் தெரியும் துடுப்பு வலிக்கும் படகொன்றைத் தவிர எதையும் நான் காணேன், கேளேன். உண்மை ஏதெனில்
அதில் என் காதலி மிமி மீன் பிடிக்கப் போகிறாள்
*fly catcher 6T60lb up606). **grackie எனும் காக்கை இனப் பறவை
சி. சிவசேகரம் 83

Page 49
Bெஸ்கோ சென்தெனோ (Bosco Centeno)
கொடுங்கோலனே கவிஞர்க்கு அஞ்சி நட
கொடுங்கோலனே கவிஞர்க்கு அஞ்சி நட ஏனெனில் உன் ஜெர்மன் தாங்கிகளோ உன் ஜெற விமானங்களோ உன் கொமாண்டோப் படைகளோ உன் பாதுகாவற் படைகளோ உன் வேசை நிக்கொலாஸ்ாவோ உன் நாற்பதாயிரம் கடற்கரைப் படைகளோ செவ்வனே பயிற்றப்பட்ட உன் துப்பாக்கி வீரர்களோ இவர்களில் எவருமோ. இல்லை, உன் ஆண்டவனுமோவரலாற்றின் மரண தண்டனைக்காரர்களிடமிருந்து உன்னைக் காத்தல் இயலாது.
84 மறப்பதற்கு அழைப்பு

நுBயா ஆர்கியா (Nubia Arcia)
என் தலை மயிரெல்லாம் குழம்பி,
என் தலைமயிரெல்லாம் குழம்பி, எண் ரவிக்கை அவிழ்ந்து, வெறுங்காலோடு சேறும் குருவி எச்சமும் பழந்த ஒரு பாறை மேற் கிடக்கிறேன். ஒக் மரக் கிளைகளுடு நிலவை நான் நோக்குகையில் அலெஹாந்ரோ உண்னை நினைக்கிறேன்.
எஸ் பெரன்Zா Gெவரா (Esperanza Gvevara)
நேற்று இச்சிறுகுடில் வழியே சென்றேன்
சிறுகுழல் மிகவும் அழுக்காய் இருந்தது. ஏனெனில் இன்னும் நேரம் இருக்கிறது; குழந்தைகள் மிகவும் அழுக்காய் இருந்தனர்ஏனெனில் இன்னும் நேரம் இருக்கிறது; தொற்றுப்பறியில் சுவரில் நிற்கும் தட்டில் ஸொமொஸாவின்* படமொன்று இருந்தது. ஏனெனில் இன்னும் நேரம் இருக்கிறது.
(*Somosa நிக்கராகுவப் புரட்சிக்கு முன் ஆண்ட சர்வாதிகாரி)
சி. சிவசேகரம் 85

Page 50
Bொஸ்கோ சென் தெனோ (Bosco Centeno)
சிப்பாய்ச் சகோதரா
தேசிய காவற்படைச் சிப்பாயே, நீ"என் சகோதரன், எனவே உன்னைச் சுட நான் கவனமாகக் குறிப்பார்ப்பதற்கு நீஎன்னை மன்னிப்பாயாக. ஆனால் எங்கள் துப்பாக்கிகளினின்று நாம் முன் கண்டிராத மருத்துவமனைகளும் பாடசாலைகளும் வரும். உண்குழந்தைகள் பிறகுழந்தைகளுடன்
விளையாடும் பாடசாலைகள். என் சொற்களைக் கவனி, அவை எங்கள்
கொலையை நியாயப்படுத்தும், ஆனால் உன் ஒவ்வொரு வேட்டும் உன் பரம்பரை முழுவதினதும் அவமானமாகும்.
86 மறப்பதற்கு அழைப்பு

ஒலிவியா சில்வா (Olivia Silva)
மலைமேலுள்ள எண் நான்கு மைந்தர்கட்கும் -
அங்கே மலை மீது அவர்கட்குப் படுக்கையில்லை. தங்கள் தோழர்களுடன் தரைமீது துயில்கின்றனர். குளிர்கால இரவின் ஈரப் புற்கள் அவர்களது அயர்ந்த உடல்களை நனைக்கும். ‘தேசிய காவற்படையினருக்கு’ வழங்குவதுபோல், உலங்கு வானூர்தி மூலம் அவர்கட்குக் காலை உணவு வழங்குவாரில்லை, ஆயினும் தங்களது உயிரை ஈந்து நிக்கராஹ°வாவின் ஏனையோருக்கு அவர்கள் படுக்கையும் காலை உணவும் கொணர்வர்.
சி. சிவசேகரம் 87

Page 51
ஹ"வான் அகுதெலோ (7 வயது) (Juan Agudelo)
புரட்சி
புரட்சி என்பது Fடல் கஸ்ற்றோ கூடைப்பந்து விளையாடுவது புரட்சி என்பது வீரர்கள் பணயஞ்செய்த Gறான்மா கப்பல் புரட்சி என்பது ஸ்ண்டினோ மக்களுக்கு உரையாற்றுவது புரட்சி என்பது தாய்மார் எல்லாரும் தம் குழந்தைகளை நன்கு
கவனிப்பது புரட்சி என்பது எல்லோருக்கும் போதிய மீன்களுள்ள குளம் புரட்சி என்பது ஒரு காதல் ஜோழ புரட்சி என்பது அலரிப் பூ
புரட்சி என்பது மரியோ அவிலா ஒரு கவிதைக்கு மெட்டமைப்பது. புரட்சி என்பது ஏகாதிபத்தியத்தின் மீது வீசப்பட்ட ஒரு
வெடியோடு புரட்சி என்பது ஏகாதிபத்தியத்தின் தோல்வி புரட்சி என்பது ஸொலனிற்றினாமேக்காக ஏர்னெஸ்ற்றோ
கர்தினால் ஒரு கவிதை இயற்றுவது புரட்சி என்பது ஆழமான நிறமுள்ள ஒரு வண்ணத்துப்பூச்சி
V மாவீரர்களைச் சூழப் பறப்பது புரட்சி என்பது Fடலுக்கு சகல கியூப மக்களும் கரவொலி
எழுப்புவது புரட்சி என்பது என் தந்தை தன் உளிகள் அனைத்துங் கொண்டு ஒரு சிற்பஞ் செதுக்குவது.
88 மறப்பதற்கு அழைப்பு

எல்விஸ் சவாரியா (Elvis Chavarria)
ஸான் கார்லொஸ்
கறள் பிடித்த கூரைகள் மேல் மழை விழுகிறது. கிழவியொருத்தி கூவுகிறாள்: “மீன் பொரியல்! “மீன் பொரியல்!” சேறான தெருவிலே நாய்கள், பூனைகள், பன்றிகள். மணி பொருந்திய கைவண்டி. கிழவனொருவன் கூவுகிறான்: “வாருங்கள்! வாருங்கள்! ஐஸ் கிறிம் ஐஸ் கிறீம்!” சிற்றுண்டிச்சாலைகள், சிகையலங்கார சலூன்கள், பிலியர்ட்ஸ்
கூடங்கள், பெற்றோல் பம்புகள், கFேக்கள், விபசார விடுதிகள், தூக்கணாங்குருவிகள், கொசுகள், ஈக்கள், முடைநாற்றம்,
விற்பனைப்Uண்டங்கள், இன்னும் முடைநாற்றம், மேலும் பண்டங்கள், மலம், முடைநாற்றம், தூக்கணாங்குருவிகள் எச்சமிட்ட சுவரொட்டியொன்றில்
პ: 6)6O(T6)Os6)s. சுமையேறிய துணியுலர்த்துங் கயிறுகள்: விரிப்புக்கள், மேற்சட்டைகள், காற்சட்டைகள், விக்கைகள். பொத், பொத், பொத்: பெண்கள் துணியை மொத்தும் ஒலி. எப்போதும் துணி துவைத்தல், பப்பாளி, அப்பிள், மாம்பழம், சீஸ், வேகவைத்த உணவு, கூர்ப்பூசணி, ஐஸ் பானங்கள், பார்லித் தண்ணிர். மேலும் பண்டங்கள், மேலும் கொசுகள், மேலும் தூக்கணாங்குருவிகள், மேலும் எச்சம், மேலும் சுவரொட்டிகள்.
சி. சிவசேகரம் 89

Page 52
எலெனா பினேடா (Elena Pineda)
ஸான் கார்லொஸை ஸொலன்ற்றினாமே யுவார்களும் யுவதிகளும் தாக்கிய போது
வானினதும் நீரினதும் வண்ணத்தில் நிலமும் வெண்மையுமான சிறுபடகு படகுத் துறையினின்று விலகியது. ரம்மியமான என் ஸொலனிற்றினாமே தீவுக் கூட்டத்தை அதன் கரைவிளிம்பில் உள்ள சின்னஞ்சிறு வீட்டை பிற்பகலின் சாம்பல் வானத்தின் கீழாகப் பறக்கும் சில கொக்குகளை ஊசி அலகு வாத்து ஒரு மீனை விழுங்குவதை கொய்யாமரத்தடியில் ஒரு மைனா தன் வெண்கலக்குரல் ஒலிக்கத் தத்தித் திரிவதை பூச்சி பிடிப்பான்களை
வீடாக்*குருவிகளை இறுதி முறையாக ஒருதரம் நோக்கினேன். இருந்தாற்போல என்னால் ஒன்றையுமே காணமுழயவில்லை.
90 மறப்பதற்கு அழைப்பு

கொஸ்ற்ற ரீக்கா போகும் வழியில் முழுவில் குளத்தை நீங்கி ஆற்றை அடைந்தோம்.
இரவு வந்தது. அதன் அமைதியில் சில் வண்டுகளின் பாடல் மட்டுமே காதில் விழுந்தது. பூச்சி பிடிப்பானின் கீச்சுகீச்சு என்ற அழைப்பு பிஹல், பிஹ°ல், பிஹி"ல் என்னும் பிஹ°ல், வீடாக்குருவிகளின் கூவல்போல ஸொலன்ற்றினாமேயின் பறவைகள் அனைத்தினதும் பாடல்கள் என் நினைவில் மீளவந்தன.
திடீரென எண்னை எழுப்பியது, பொம், பொம், பொம்
U-ó5 U-ó5 U-ó5 என்று தூரத்து யந்திரத் துப்பாக்கிகளின் ஒலி.
* ஆங்கிலத்தில் Widowbird என அறியப்படும் பறவை
சி. சிவசேகரம் 91

Page 53
இவான் Gெவாரா (Ivan Guevara)
காதல் என்பது ஒரு அவரைச்செடி போல
ஒரு அவரைச்செழ வளர்வதைப் பார்த்திருக்கிறாயா?
அது தோன்றுகிறது, இலை விடுகிறது, அரும்புகிறது, மலர்கிறது. பிறகு
அது செய்வதெல்லாம் அவரைக் காய்களையும் விதைகளையும்
உண்டாக்குவதுதான். ம். காதலும் அது போன்றது தான்.
மிரியம் ேெவாரா (Myriam Guevara)
ஸன் கார்லோஸ் ராணுவ முகாம் மீதான
தாக்குதலில் இறந்த சாற்றே மெட்ரானோவுக்கு அஞ்சலி
அந்த ஒக்தோபர் காலையில் நீல ஜீன்ஸும் ஜக்கெற்றும் அணிந்து தாக்குதற் துப்பாக்கி சுமந்தபழ. எம்முடன் அருகருகாக நீபோரிட்டாய். பழைய ராணுவ முகாமுக்குள் நீபோகையில் அவர்கள் உன் வலது காலைக் காயப்படுத்தினர்; ஒரு தோழனின் துணையோடு எமை நோக்கி
அரக்கி வந்தாய், உன் அகலமான முகம் வெளிறியபடி “உறுதியாய் நில்லுங்கள்!” என்று முழங்கினாய்.
92 மறப்பதற்கு அழைப்பு.

ஸிரா அன்ட்ரெஸ் (Cira Andress) 85 u Bmr
நண்பிகட்குச் சொன்னால்
நான் என் அன்னையின் அன்னையென என் நண்பிகட்குச் சொன்னால் நிச்சயமாய் நம்பவே மாட்டார்களென நிச்சயமாய் நான் அறிவேன்
எனினும் இதுவே நான் அறிந்த மிக அழகிய பிள்ளைபேறு என ஒரு கவிதையைப் போல நான் ஊட்டமளித்ததென அவளை இரவிற் தூங்கப் பண்ணுமுன் மனித இனத்தின் பரிணாமத்தை விளக்கிய போது குரங்கின் கதை கேட்டு அவள் குழந்தை போல் சிரித்தாளென எழுதவும் வாசிக்கவுமான இயக்கத்தின் முழுவில் வாக்கியங்களை எவ்வாறு இணைப்பது எனவும் பூமி உருண்டை எனவும் அவளுக்குக் காட்டினேன் என நான் ஹவானாவுக்குச் சென்ற போது கம்யூனிசத்தை நேசிக்க அவளுக்குக் கற்பித்தேன் என நான் மீண்ட போது என் கையில் ஒரு குழந்தை இல்லாமல் என் இதயத்தில் எத்தனையோ குழந்தைகளை அவள் கண்டாளென
அவர்கட்கு நாள் விளக்கினால் இறுதியாக உறுதியாகச் சொல்வேன். எண் நணர்Uகட்கு நான் என் அன்னையின் அன்னையெனச் சொன்னால்
அவர்கள் என்னை நம்புவார்கள்
சி. சிவசேகரம் 93

Page 54
எஸ்மெரல்டா L66)IT (Esmeralda Davila) நிக் கராஹ"வரி
என் மகனுக்கு
உன்னைக் கண்டேனென்று, நீசிரிக்கக் கேட்டேனென்று நினைத்தேன். மிகவுங் கருத்தூன்றி, மிகவும் பெருமிதத்துடன்
உன்னைக் கண்டிருக்கிறேன், *திரும்பவும் போகிறாயா? மலைக்கு மறுபடியும் போகிறாயா? நாட்டைப் பாதுகாப்பதன் அர்த்தம் இதுவா? என நீகேட்கையில் உனது பிஞ்சுக்குரல்
நடுங்குவதைக் கேட்டிருக்கிறேன்
உனக்கு ஆறு வயது ஆகு முன்னமே ‘போர் ஒரு விளையாட்டல்ல, பயிற்சி ஒரு விளையாட்டல்ல." என்று கத்துவதற்கு நீஅறிந்திருந்தாய். அதன் பின் “எதற்காக ஒரு போர்?
எனக் கேட்பாய் நீயே தான் காரணம் என்பதை அறிய உனக்கு வயது போதாது.
இதுவே நான் உன்னை நேசிக்கும் விதம். நீஎன் மகன் என்பதால், அனைத்தினும் முக்கியமாக நீயே எதிர்காலம் என்பதால்.
94 மறப்பதற்கு அழைப்பு

கிறிஸ்ற்றியான் ஸன்ற்றொஸ் (Christian Santos) நிக் கராஹ"வா
ஆற்றோர வானம்பாடிகள்
வீழும் மழை ஆற்றின் மேற்பரப்பில் சுருக்கங்களை விழுத்துகிறது நீரை மேய்ந்தபடி வானம்Uாடிகள் வட்டமிடுகின்றன. வானம் தெளிவாகக் கழுவுண்டதும் அவை எதிரோட்டமாகப் பறக்கின்றன.
விடாலுஸ் மெனெஸெஸ் (Vidaluz Meneses) நிக் கராஹ"வா
அமமா
காலத்தின் தொடக்கத்தினின்று நான் உன்னுடன் வேதனையைப் பகிர்ந்தேன், உன்னுடைய சிரிப்பில் இளவேனிலின் மகிழ்ச்சியைக் கற்றேன். கனவுகட்கு ஊட்டமளிக்கும் உன் நீண்ட மெளனங்களையும் என்னை முழு மானுடத்துடனும் இறுகப் பிணைக்கும் நத்தை போன்ற வட்டடுக்கு இதயத்தையும் உன்னிடமிருந்து பெற்றேன்.
6ਪBਰਣ5 . , 95.

Page 55
டெய்ஸி Zமோறா (Daisy Zamora)
நிக் கராஹ"வா
ஏனெனில்
என்னிடம் அவசியமான சொற்கள் இல்லை என்ற காரணத்தாலேயே செயல்கள் மூலம் உன்னுடன் பேச முனைகிறேன்.
அனா இல்ஸே Gோமெஸ் (Ana lice Gomez)
நிக் கராஹ"வா,
இரவின் தேவதை
இரவின் தேவதை என்னிடம் சொன்னாள்: ‘உனது இதயம் எனது இராச்சியம் போல சாசுவதமானது ஆக அமையும்’.
அன்பே, விழயலுக்கான வாசலைத் திறக்காதே.
96 மறப்பதற்கு அழைப்பு

ஜியோகொண்டோ Bெயி (Giocondo Belli)
நிக் கராஹ"வா
நீக்கராஹ"வா, நீ யார்?
பூமி நடுவே தொலைந்து போன சிறிய முக்கோண மண்ணன்றி நீயார்? கடற் கொக்குகளதும் தூக்கணாங்குருவிகளதும் பூஞ்சிட்டுகளதும்
ஒரு பறவைக் கூட்டமன்றி நீயார்? உன் மலைகளின் வழியே நீர்ச் சுவடுகளைப் பதித்து உன் சுழற்சியில் ஒளிர மினுக்கிய கற்கள் சுமக்கும் நதிகளின் உறுமல் அன்றி gounů?
களிமண் சிலைப் பெண்களின் அழுத்தமான, கூர்மையான, மிரட்டுகிற முலைகளன்றி நீயார்? பச்சையாக, சிக்காகப், புறாக்கள் நிரம்பிய ராட்சஸ் மரங்களின் இலைகளின் பாடலன்றி நீயார்? நோவும் தூசும் பிரசவ வேதனையில் பெண்களின் அலறல்போன்ற அந்திவேளை ஒலங்களும் அன்றி (5°աՈg? இறுகிய ஒரு முஷ்ழயும் தயாராக உள்ள ஒரு தோட்டாவுமன்றி நீயார்? எனக்கு இத்தனை வேதனைத் தருவதற்கு, நிக்கராஹ°வா, நீயார்?
சி. சிவசேகரம் 97

Page 56
யூலாலியா Bேணாட் (Eulalia Bernard) கொஸற்ற றிக்கா
உன் நினைவின் உருமாற்றம்
அன்று, வேகமுடையவனாக அன்று, அழகனாக அன்று, முழுமையானவனாக அன்று, பொலிவுடையவனாக உன்னை நினைவிருக்கிறது
இன்று, பலவீனனாக இன்று, வக்கிரமானவனாக இன்று, குறுகியவனாக இன்று, இல்லாதவனாக உன்னைக் கருதுகிறேன்.
98 மறப்பதற்கு அழைப்பு

நாம் மூன்றுகளின் தேசத்தோர்:
நாம் மூன்றுகளின் தேசத்தோர்: மூன்று மலைத்தொடர்கள்; நம் கொடிக்கு மூன்று நிறம், ஒன்றிணைந்த மூன்று இனம்; பேசுகிற மொழிமூன்று; மூன்று வல்லரசுகள் ஆளும்; ஒவ்வொரு ஆணுக்கும் மூன்று பெண்கள்; சராசரி வீட்டுக்கு மூன்று பிள்ளைகள். மூன்றுகுரல்களில் பேசும் மூன்று கடவுளர், மூன்று தேசிய உணவு வகை, இன்னும் மூன்று தேசிய வாழ்க்கை முறைகள்
நாம் மூன்றுகளின் தேசத்தோர், மூன்றாம் உலகின் தேசத்தோரும் கூட
சி. சிவசேகரம் 99

Page 57
6ծl6ծ 6MD"6)IIIլգաT (Lily Guardia) கொஸ்ற்ற றிக்கா
ஒரு குழந்தை இறந்துவிட்டது
மிரா. ப்ளொறெஸ்* என அழைக்கப்படும் மாவட்டத்தில் ஒரு குழந்தை இறந்துவிட்டது. ና மிரா. ப்ளொறெலில் ஏழைக்குழந்தைகளே வாழ்கின்றன. பொங்கும் வளம் பற்றிய கனவுகளைக் கொண்டு பசியின் வேதனையை ஒருவர் தணிப்பது போன்று இந்த மாவட்டமும் இங்கு ஒருவர் குப்பை கூளத்தின் காற்றையே சுவாசிக்கலாம் என்ற மூச்சுத் திணறவைக்கும் சாட்சியத்தைத் தவிர்க்கப் பூக்களின் பேரைக் கொண்டிருக்கிறது. மிரா. ப்ளொறெஸிலிருந்து தப்பிச்செல்லும் குழந்தைகள் செத்துப்போன குழந்தைகளே * மிரா. ப்ளொறெஸ் என்றால் மலர்களை முகர்ந்துபார் என்று பொருள்படும்.
மரியா தெரெஸா ஹ"வார்னெரொஸ் (Maria Teresa Guarneros) நிக்கராஹ"வா
556)6OLUL
திகிலுக்கு என் கதவை அடைத்தேன் திகில் உள்ளேயே தங்கியிருந்தது
100 மறப்பதற்கு அழைப்பு

மிஷெல் நஜ்லிஸ் (Michele Najils) நிக் கராஹ"வா
இறந்தோர்
போர்வீரனின் ஓங்கிய கரத்தையும் மக்களின்குரலையும் உழவனின் கருவிகளையும் இறந்தோர் தாங்கி நிற்பர்
இறந்தோர். இறந்தோரின் கரங்களை எவர் தாங்கி நிற்பர்?
Gளோறியா GB"வார்டி (Gloria Gabuardi)
நிக் கராஹ"வா
மலைகளின் மேல்
என் தாயகத்தின் மீதும் புரட்சியின் மீதுமான எனது அன்பு முகரவும் தீண்டவும் உணரவும் படுகின்ற மலைகளின் மேல் என் இதயத்தை விட்டு வந்தேன் அங்கே, சொற்கள் பொருத்தமற்றவை செயல்களும் வாழ்வும் அர்ப்பணிப்பும் நம்மைத் திணறடிக்கின்றன
சி. சிவசேகரம் 101

Page 58
ஹனினா Fெனான்டெZ
செயலுக்கமற்ற புத்திஜீவிகட்கு
புத்தகங்களிலான மதிலொன்றின் நடுவே வன்முறைச் சொற்களஞ்சியமொன்றை நிர்மாணித்தபடி
கோட்Uாட்டாளர்கள் தமது நேர்த்தியான விசாரணைகளை வகுக்கின்றனர்:
ஆட்சிக் கவிழ்ப்பு,
புரட்சி,
விடுதலை. வெளியில் அடியெடுத்து வைக்காமலே
102
(Janina Fernandez) கொஸ்ற்ற றிக்கா
மறப்பதற்கு அழைப்பு

க்ளோடியா லார்ஸ் (Claudia Lars) எல் ஸவ்வடோர்
ճ0լի նIIIԱյIյIնII (մՄյնilgilլն
ஒரு வாழ்நாள் முழுவதும் உன்னிடமிருந்து விலகி ஒரு வாழ்நாள் முழுவதும்.
ஏன்?. உன்னால் விளக்க முழயுமா?.
நமது யன்னல் வழியாக ஒரு தாரகையைப் பார்த்தவாறு இருந்திருப்பின் எத்தனை அற்புதமாய் இருந்திருக்கும்.
அப்போ, நீ பதில் எழுதமாட்டாய்
அப்போ, நீஎண் கழதங்கட்குப் பதில் எழுத மாட்டாய். இனியும் நான் எதையும் எதிர்பார்ப்பதோ கேட்பதோ இல்லை.
காலங் கடந்த இந்த நிலையில் ஒரு தாரகை போல் மின்னும்
தபால் உறை ஒன்று
எனக்காக உண்டா என்று தப, ற்காரனிடம் கேட்பது அபத்தமாகவே இருக்கும்
சி. சிவசேகரம் 103

Page 59
நான் வாழ்ந்திருக்கலாம்
உனக்கு அருகாக நான் எத்தனை இனிதாக வாழ்ந்திருக்கலாம் உன் மேசை விளக்கை ஒளியூட்டி, அகலமான சாய்மனைக் கதிரையில் நாளுக்கு நாள் இதம் மிக அமர்ந்திருக்கலாம்.
ஒரு ரோசாப் பூவைக் கொய்து உன் பழுப்பு மேசை மீது வைத்திருக்கலாம் அல்லது பின்னேரப் பொழுதில் பூக்களாலான ஒரு மேசை விரிப்பைப் பின்னியிருக்கலாம். வித்தியாசமாக ஏதோ நிகழ்ந்தது: நேர்மாறானது நடந்தது: நான் தனித்து தொலைவில் அலைந்தேன் - பெரிதும் தனித்துஏனெனில் நீஎன் துணையாயிருக்க விரும்பவில்லை
- ஆயினும், இவ்வழியே பயணங்களின் போதல்களும் வருதல்களும் எனக்கு. ஆ, மிக நன்றாகக்- கற்பித்தது: என்னையே நான் அறிந்தேன்.
104 மறப்பதற்கு அழைப்பு

G°Q601. Bij (Gune Beer) நிக் கராஹ"வா
ஒரு காதற் பாட்டு
காதற் பாட்டுப் பாடச் சொல்கிறாய். ஒஸ்கார் நீஎன்னை வியக்க வைக்கிறாய்
நாட்டுக்காகப் பாடல் இசைப்பேன் சின்ன நாடு, சோதிமிக்கது மக்களுக்கு நம்பிக்கை தரும்,
செல்வருக்கோ மண்டையிழக்கும் - உலகில் செல்வரிலும் ஏழை அதிகம். அனேகர் என்னுடைய நாட்டை நேசிப்Uார்.
நிக்கராஹுவா என் நாட்டின் பேர் கறுப்பு, மிஸ்கிற்றோ
ஸ்ரீமு, ராமா, மெஸ்ற்றிஸோ? எல்லார் மீதும் நேசம் எனக்கு - என் காதற்பாட்டு முற்றுங் கண்டாயா - ஏனெனில் உன்னையும் நான் நேசிக்கின்றதால்
வானில் உள்ள அம்புலியையும் வெள்ளியையும் நீக்கக் கேளாதே இவ் விழயல் தன்னைக் காத்திட - இரவு சூழ்ந்திடாமல் ரீமறித்ததுமே உன் தொடைகள் தட்டி எழுந்தாய் - ஏனோ என் நினைவில் வருகின்றது. ஒன்று மட்டும் நன்கு அறிவேன் அம்புலிக்கும் வெள்ளிகட்கும் கீழ் ஸான்டினோவின் **பிள்ளைகள் என நிமிர்ந்து சுதந்திரத்துடன் ஆறுதலாய் நாங்கள் கடக்க நாளை மிக்க நேரம் இருக்கும்
*நிக்கராஹ"வாவின் தேசிய சிறுபான்மை இனங்கள் **ஸான்டினிஸ்ற்றா விடுதலை இயக்கம்
சி. சிவசேகரம் 105

Page 60
ஹசின்தா எஸ் குடொஸ் (Jacinta Escudos)
இயற்பெயர் றொசியோ அமெரிகா (Rocio America) எல் ஸல்வடோர்
வேட்டைக்காரி
மலை விலங்கே, நான் உன்னைத் தொடர்வதும் உன் மறைவிடத்தில் உன்னை அவதானிப்பதும் நஞ்சூட்டிய கணைகளால் உன்னை வேட்டையாடுவதும் உன் பாதச்சுவடுகளைத் தொடர்ந்து உன்குகையைக் கண்டறிவதும்
நீஒட இடமின்றி உன்னை அங்கு மறித்தலும்
இந்த வேட்டைக்காரியால் உன்னை எனக்கு, எனக்கு மட்டுமே கைதியாக பலியாக இரையாக உணவுக்காகக் கூடும்
அல்லது உன் விழிகளில் தெரிகிற அச்சம் இப்போது கல்லாகிப்போன என் இதயத்தைத் தொட்டு நான் உன்னை விடுவிக்கக் கூடும்
106 மறப்பதற்கு அழைப்பு

ஹோர்ஹே ஸல் Gாடோ ரோச்சா (Jorge Salgado Rocha)
gf (8 6d (லண்டனில் வாழ்கிறார்)
செப்ற்றெம்பர் நான்காம் நாள்
துப்பாக்கிச் சனியனைப் போல நீளமான ஒரு நாள் அது; நமது இறுதி நம்பிக்கையெனும் குடாவில் நங்கூரமிட்ட போர்க்கப்பல் போல மிரட்டுகிற ஒரு நாள் அது.
மனக்கிலேசங்களும் அச்சமும் ஆயுதங்களும் குருதிப்பெருக்கும் மக்களின் முழவற்ற பொறுமையின் இடையே பயங்கரமாகக் கவ்வும் சாம்பற்தலைக் கவசங்களும் கொண்ட தெளிவான உலர்வான நாள் அது:
செப்ற்றெம்பர் நான்கு,
சனநாயகத்தின் நாள்.
கைப்பற்றுதல்களின், வீதித் தடுப்புக்கள், எதிர்ப்புப் பாடல்களின், வெடியோசைகள், சூடுகள், கைதுகளின் குண்டுகளால் நோவுண்ட அலறும் இளம் உடல்களின் நாள்.
அன்றிரவு, பசியையும் அமைதியையும் ரீதியையும் விடுதலையையும் தாங்கிய பூரண ஆயுதபாணிகளாக, கொடுங்கோலர்கள் “எமது பாசத்துக்குரிய தேசம்’ என அழைக்கும் பொருளற்ற கோமாளித்தனத்தின் மீது கடுந்தாக்குதல் தொடுக்கத் துணிந்திருந்தோம் என்று ஒப்புக்கொள்ளுமாறு கட்டாயத்துக்கு ஆளாக எத்தனை பேரின் நித்திரை உலுக்கிக் கலைக்கப்பட்டது?
சி. சிவசேகரம் 107

Page 61
மீளல்
ஏறத்தாழ ஒவ்வொரு இரவிலும்
அல்லது பிற்பகலிலும்
என் இறுதியான மீளலின்
ஆண்டையும் நாளையும்
ஏன், நிமிடத்தையுங் கூடக்
கவனமாகவும்
கிட்டத்தட்ட விஞ்ஞானரிதியாகவும் திட்டமிட்டு வந்திருக்கிறேன். மனப் பிறழ்வுடையவன் போற் தோன்ற நான் விரும்பவில்லை, எனினும் என் இதயத்துடிப்பு:திரும்பிப் போ! திரும்பிப் போ!
108 மறப்பதற்கு அழைப்பு

அன்டீஸ் மலைத்தொடருக்கு மேலாகக் கடக்கும் ஜெற் எஞ்சின்களின் இரைச்சல் பற்றியும் வேனிற்கால மாலைப் பொழுதொன்றில் காற்றின் அலைகள் மோதி உன் சட்டை படபடக்கையில் உன்னைக் காணும் மங்கிய ஆவலுடன் நம் கடற்கரைகளில் ஒன்றான கலெற்றா அ8ார்காவின் வெதுவெதுப்பான மணல்மீது வெறுங்காலுடன் நடப்பது பற்றியும் கனாக் கண்டUழ திரும்பத் திரும்ப என் பாதையை மீளவும் வரைகிறேன்.
இன்று, முன்னெப்போதையும் விட அதிகமாக எனது மக்களுக்கு என் கைகளை நீட்டி ஆயிரங்குரல்களிற் சேர்ந்து Uாழ எண்ணற்ற முத்தங்கள் ஈந்து நூறு விரல்கள் கொண்ட கரங்கள் தடவுமாறு வேண்டும் வேளை, என் பழமைக் காலத்தின் மக்கள் என் நினைவில் இருப்பது போலவே இல்லை எனக் காண்கிறேன் பாடல்கள் ஒற்றத் தந்தியினதாகி விட்டன. கட்டித் தழுவுவதெல்லாம் பக்கச் சுவரற்ற பாலத்தின் மருங்காக வழுக்கி விழுகின்றன.
எனவே, மீளவும் கவனமாக மீளொழுங்கு செய்து என் ஏக்கத்தைத் திட்டமிடுகிறேன். நான் மீண்டும் திரும்பிச் செல்லும் ஆண்டையும் நாளையும் நிமிடத்தையுங் கூட கிட்டத்தட்ட விஞ்ஞானரீதியாக
இப்Uழயே போகிறது. இப்பழயே, இப்Uழயே.
சி. சிவசேகரம் 109

Page 62
எட்கார்டோ டுறான் றெஸ்ற்றெபோ (Edgardo Duran Restrepo)
சிலே
(லண்டனில் வாழ்கிறார்)
நேற்றுப்போல் உண்டாணி
U6060T, தான் மலமுண்ணி என்று அவன் சொன்னான் அவனுக்கு விருந்தளிக்க அனைவரும் விரும்பினர் “அவன் நமதுகுடல்களைத் துப்புரவாக்குகிறான்’
என்று பாதிரியாரின், பட்டாளத்தானின், சனாதிபதியின் மனைவியரும் நல்ல குடல் கழுவி தேவையென ஒவ்வொருவருஞ்
சொல்லினர்.
பின்னர் நிசப்தத்தில் மிதந்து வந்தது இருள், இரவுப் பறவைகள், தூரத்து மின்னல். தொழிலமைச்சரின் பாதங்களை முத்தமிட நிசப்தமாக மலமுண்ணி மெதுவாக மேல்மாடி சென்றான், நேற்றுப்போல் உண்டான்.
மறுநாள்,
அவளது தாசர்கட்கு என்னவொரு அதிசயம்! கொடும் பதைப்பு, அமைச்சர் மறைந்து விட்டார். அது என்னவோ மெய்தான். அவள் தனது கட்டிலில் இல்லை.
110 மறப்பதற்கு அழைப்பு

மரியா யூஜெனியா Bராவோ (Maria Eugenia Bravo)
சிலே (லண்டனில் வாழ்கிறார்)
தோத்திரம்
அத்துடன்
ஆதாமை நோக்கி அவள் அழகள் சென்றன ஆதாமை நோக்கியே அவள் எப்போதுஞ் செல்வாள் ஏனெனிற் காதலென்பது காலத்திற்கெதிரான நகர்வு காதலென்பது மரணத்திற் கெதிராகப் பொங்கும் நதி காதலின்மை வரண்டு தூசுபழந்த நீர்த்தடம், வாழ்வின்மை ஏவாள் எப்போதுமே ஆதாமிடம் செல்வாள் தன்னையொரு கிண்ணமென நிரப்பித் துர்ச் சொப்பனங்களையும் மரண பயங்கரத்தையும் விரட்டும் அவனிடம்
சி. சிவசேகரம் 111

Page 63
அப்போது
ஏவாள் திராட்சை மதுபோல் மகிழ்வாயிருந்தாளெனச் சிறிய கடவுளுக்குக் காண முடிந்தது அவனை அறிந்ததால் ஏவாள் முழுமையானவளாயிருந்தாளெனவும் அவனது வாயின் தேனால் ஏவாளது பசி ஆறிற்றெனவும் அவனது உவர்ப்பான வியர்வையைச் சுவைத்து அவள் களித்திருந்தாளெனவும அவள் மண்போல் இனியவள் என அறிந்து அவளை மகிழ்விக்க தன் வேரை அவளுடன் நட்டவனுமான தன்னை விதைப்பானாகக் கொண்டிருக்க மகிழ்ந்திருந்தானெனவும் அவராற் காணமுடிந்தது
அத்துடன் ஏவாள் எப்போதுமே ஒரு சுனையின் பசுமையாயிருப்Uாளெனவும் அவளது சரீரத்தினின்று பரம்பரைகளும் உயிர்களும் பாயுமெனவும் சிறிய கடவுளுக்கும் காணமுடிந்தது
அத்துடன்
ஏவாள் கருவுற்றிருந்தாளெனவும் அவள் வயிற்றில் ஆதாமினி மலர் தன் விதையை இட்டதெனவும் கடவுள் அறிந்திருந்தார்.
112 மறப்பதற்கு அழைப்பு

றொBேTோ றிவேரா-றெயெஸ் (Roberto Rivera-Reyes)
சிலே (லண்டனில் வாழ்கிறார்)
கருங்கழுத்து அண்னம்
(காணாமற்போன கைதிகளைத் தேடுதல)
என் அன்பே
நிலவின்றி நினக்கு ஒளியூட்ட வெளிச்சமின்றி நின்னைத் தொடர நிலவின் விழிகளின்றி விழகாலை குளிராயுள்ளது.
என் அன்Uே சிந்தப்பட்ட குருதியைத் தேடியபடி கரிய நீரலைகளுடே தனியே மிதந்தோடும்
நிலவின்றி இரவு இருளாய் உள்ளது.
மரித்தோரின் சாரத்தைப் பொசுக்குகின்ற புடக்குகை, *எல்லாப் புனிதர்களதும் ஏரியினின்று எல்லையிலாப் பெருநீர்ப்பரப்புள் ஒரு பருக்கை, என் அன்பே
இக்குருதிக் கிண்ணம் கண்டெடுக்கப்பட வேண்டும்.
சி. சிவசேகரம் 113

Page 64
என் அர்ைUே இப்போது, காணாமற்போனதான ஒரு குழந்தைக்குப் பாலூட்டிய பால் வண்ண எரிமலைகளின் மீதான கடுமுழசுக்களினின்று முட்கொடி ஒன்றின் பொழமுட்களால் இழைத்த வேண்டுதல்களாலான செUமாலையை நின் கரிய அன்னத்தின் கழுத்தென்னும்
வினாக்குறியின் மீது நிலவில்லாத இந்த இரவு தொங்கவிடுகிறது.
வஞ்சகமறியாத வாய்கள் மீதும் அவற்றின் உதடுகளின் ஏக்கத்தின் மீதும் அழுத்தும் பார முலைகள்.
குருதியில் உள்ள இச்சை
Ugful 60
விழிகளினின்று பருகட்டும்.
விரசக் கனவிற்போல உனக்கு உள்ளிருந்து சொட்டிய ஒரு வெண்ணிற நம்பிக்கைத்துளி மனக்கசப்புற்று ஒழயவாறும் தேடியவாறும்
உருண்டோடுகிறது.
என் அன்Uே ஆன்மாக்கள் காணாமற்போய் தாரகைகள் விழுந்து இரவில் மங்குகின்ற
இருண்ட நீர்
அடர்ந்து ஆழமானது. எனவேதான் எல்லாப் புனிதர்களதும் ஏரி, இப்போது, காணாமற்Uோன முகங்களாலான ஆழமறிய இயலாத அழத்தளத்தையுடையது என்கிறார்கள்.
* All Saints Lake
114 மறப்பதற்கு அழைப்பு

அல்Rறெடோ கொர்டால் (Alfredo Cordal)
ઈી (8.6o (லண்டனில் வாழ்கிறார்)
நமது மக்கள்*
சிறைச்சாலையில் இருக்கும் எங்கள் மக்களே உமது இலட்சியம் நன்கு அறியப்படுவதாக, உமது கனவுகள் நனவாகுக. இவ் உலகிற்போல் வானத்தின் வெள்ளிகளிலும் உமது விடுதலை வெல்லப்படுவதாக. நீங்கள் வேண்டி நிற்கும் விடுதலையை எங்கள் அன்றாட அப்பமாகத் தருவீராக. புலம்பெயர்வதினும் மேலாகச் சிறையையே கருதினரீரென நாம் மறவாமல் இருக்கிறோமாதலால் நமது சுதந்திரத்தை மன்னிப்பீராக. நம்மை விரக்திக்குள்ளேயே தள்ளாமல் நம்மைப் பிளவுபடுத்தி, இடையறாத நமது போராட்டத்தை நிறுத்த வல்ல தீமையினின்றும் நம்மை காப்பாற்றுவீராக.
* பரமண்டலத்திலிருக்கும் எங்கள் பிதாவே என்ற கிறிஸ்துவப் பிராத்தனையைச் சார்ந்து எழுதப்பட்டது.
சி. சிவசேகரம் 115

Page 65
ஒஸ்வால்ட் ம் B"யியெனி ம்ட் ஷாலி
சூரிய அத்தமனம்
சுண்டி விட்ட காசு போற்
சூரியன் திரிந்தது மஞ்சள் நிற வானிலே
விர்ரெனச் சுழன்றது முட்டி அடி வானிலே
பட்டு நடுக்குண்டது பொத்தலொன்றின் வாயிலே
பொக்கென விழுந்தது Uாக்கிங் மீற்றர் ஒன்றிலே
“நேரமாச்சு” என்றிடும் சைகைபோல், நியோன் ஒளி
சட்டென எழுந்தது
116.
(Oswald Mbuyiyeni Midshali)
ஆபிரிக்கா
-ப்பதற்கு அழைப்பு

பன்ஸி றோஸ் நபால்ஜர்ரி (Pansy Rose Napaljarri) அவுஸ்திரேலியா
கங்காரு
மலைகள் அடியில் தண்ணிர் சிற்றோடையின்று மெதுவாக மலைகளை நோக்கிப் பாய்கிறது
வளரும் செம்மலர்களைக் கிளைகளில் அமர்ந்தUடி Uறவைகள் முகருகின்றன
துள்ளித்திரிந்து மிகக்களைத்த கங்காரு நிழலிற் படுத்துள்ளது மிக மெதுவாகப் பாய்கின்ற தண்ணிருக்குக் காது கொடுக்கிறது.
தன்மீது ஈட்டி பாய்ச்ச மனிதர் இல்லையென மகிழ்வாய் இருக்கிறது செம்மலர்களை முகர்ந்தபடி மிகக் களைத்துக் கண்ணுறங்குகிறது
சி. சிவசேகரம் 117

Page 66
டபிள்யூ. லெஸ் ரஸல் (W. Les Russel) அவுஸ்திரேலியா
தலி கர்ங்: கருக்கற் பொழுதின் பாம்பு
தலிகர்ங்: கருக்கற் பொழுதின் பாம்பு: ஆழ் கிடங்கிற் கிடக்கிறதுசூளம்
பழுப்பு நீர், ஆழ்ந்து இருண்டது; இலைகளும் பட்டைகளுமாய் குளிர்ந்த குளப் படுக்கை கிடங்கின் குத்தான கெட்டிச் சுவர் மூழனாற் போல் மேவும்
பசுஞ்சாம்பல் நெடுமரங்கள் அழகிய பறவைகள் ஆழப் பறக்கும்; கிளைக்குக் கிளை தாவி இனிதாய்ப் பாடும். திடுமென வரும் பொன் மாலைப் பொழுது.
தலி கர்ங்: கருக்கற் பொழுதின் பாம்பு: குளநீரின் ஒரமாய் வேட்டையாடும்.
118 மறப்பதற்கு அழைப்பு

அபிவிருத்திக்காரர்
என் இதயத்துள் ஆழப்பாய்ச்சிய ஈட்டி போல பூமியின் ஆழத்துள் துறப்பணம் சுற்றுகிறது. “யுலோ’பிரியச் செய்வது போல பேராசைக் களிப்புடன் கொம்பனி கொல்கிறது.
எண் சொற்களே அடி தாங்கும் கேடயமாய் தவறென நான் காணும் அத்தனைக்கும் எதிராக எழுகின்றேன் இணைய மாட்டேன்
நானே இம் மண், இதிலுள்ளது நான் அதை மாற்றி அதற்கு உண்மையாயிருக்க முழயாது கொம்பனி தோண்டுவதை நான் அனுமதியேன் நுமக்கு இந்த மண்ணை நான் தரமாட்டேன்
என்று இம் மண்ணை நீர் மதிக்கக் கற்று என்று இம் மண்ணுள் நீர் வாழுவிரோ என்று நீர் பெருமையுடன் நிமிர்ந்து நின்று அவளை நீர் விளங்கியதாய்க் கூறுவீரோ
அன்றேனும் தரமாட்டேன், அது என் உரிமையன்று எந்த மனிதனால் தன் தாயைத் தர இயலும், ஆயினும் என் வலிமை அனைத்தோடும் அதைப் பகிர்வேன் உன்னை எண் சொந்தச் சோதரன் என்பேன்.
சி. சிவசேகரம் 119

Page 67
ஜூலி வற்ஸன் நுங்கர்ராயி (Julie Watson Nungarrayi)
அவுஸ்திரேலியா
வருந்துகிறேன்
நான் உள்ளே தவழ்ந்தேன். அது தாழ்ந்தும் இருண்டும் இருந்தது. Uாறைகள் பற்கள் போல் தொங்கின கழக்கப் பார்க்கும் பற்கள் ஒவியங்களைப் பாதுகாப்பாக வைக்கப் பார்க்கும் பற்கள்
என் முதுகிற் படுத்திருந்தேன் குந்தி இருக்க அது மிகவும் தாழ்வாக இருந்தது. கூரைக்குக்குறுக்காக மார்லு துள்ளியது பாம்புகள் நெளிந்தன
கோவன்னா ஒழ2யது
ஈமு குதித்தோழயது
இவற்றை இங்கே வைத்தவர் யாரென நினைத்தேன் சிலது சிவப்Uாக, சிலது வெண்மையாக, சிலது Uழுப்பாக, சிலது கறுப்பாக சப்பிய தடியாலான தூரிகையால் இவற்றைத் தீட்டியவர் யார்? வெகு காலம் முன்பு அவர்கள் அவற்றை இங்கு வைத்தனர். அந்தப் பழைய நியியபாலி மனிதர் வெகு காலம் முன்பு இப்போது எஞ்சியுள்ளது இது மட்டுமே.
பெருமிதமிக்க வேட்டைக்காரர்களும் மட்டா தோண்டும் மாதரும் போய் விட்டனர். அவர்களது மொழியும் அவர்களது ஆட்டமும் பாட்டும். ஒரு மக்களில் இன்று எஞ்சியிருப்பது சின்னஞ் சிறு சித்திர விலங்குகள்
120 மறப்பதற்கு அழைப்பு

வலெரி பTெஸன் நபானங்கோ (Valirie Patterson Napangka) அவுஸ்திரேலியா
LOGO.g
Ա960) Ք 6)ՍՈ{{ջáՈ95) மழை எதற்காகப் பொழிகிறது? எல்லாவற்றுக்குமாகத் தான் மரங்கட்காக, மலர்கட்காக, புல்லுக்காக, புதர்க்காட்டிற்குழப்பதற்காக மரங்கள் வளர்வதற்காக, மலர்கள் விளைவதற்காக, மனிதர்கள் அதைக் குழப்பதற்காக ஓ, மழைபொழியும் போது எவ்வளவு நன்றாக இருக்கிறது.
குதிரை
குதிரை ஒன்று ஒடுகிறது
அஞ்சி ஒடுகிறது
தழகளும் கற்களும் கொண்டு விரட்டும் சிறுவர்களிடமிருந்து விலகி ஓடுகிறது புண்பட்டு நோயுண்டகுதிரை பாவம், அதற்கு இரங்காமல் அதை விரட்டுகிறார்கள் நாளுக்குப் பின் நாளாக இது நடந்து வருகிறது: குதிரை பாவம். அது என்னை மிகவும் துயரில் ஆழ்த்துகிறது.
சி. சிவசேகரம் 121

Page 68
ஐரீன் ஜேம்ஸ் நபுர்ருர்லா (Irene James Napururla) அவுஸ்திரேலியா
தண்ணிர்
பாறைகள் தாண்டிப் பாய்கிறது தண்ணிர், சிறிய பாறைகள், பெரிய Uாறைகள் மரங்களிற் பேசும் பறவைகள், நடக்கும் விலங்குகள் - கோவன்னா, ஈமூ, பிற பல விலங்குகள்.
மேகங்கள் திரள்வன, வெகுதொலைவில் மரங்களையும் புற்களையும் எறிந்து பெருங்காற்று வீசுகிறது.
பின்பு மனிதர் வேட்டைக்கு வந்தனர், எவ்வகையான விலங்கு எதையும் காணவில்லை. விலங்குகள் எல்லாம் எங்கே போயின?
பறவைகள், பச்சை, சிவப்பு, கறுப்பு ஆகிய பல நிறங்களில் பறவைகள் தரையை நீங்கிப் பறந்தோழ விட்டன.
எத்துணை சிவப்பாக மலையின் பின் சூரியன் படுகிறது. பறவைகள் தமது கூட்டில் உறங்கின, எல்லா வகையன விலங்குகளும் தரையில் உறங்கின.
உணவேதும் இன்றி மிகுந்த துயருடன், சிரிப்பின்றி மனிதர்கள்
வீடு சென்றனர். பாவம் மனிதர்! வருந்துகிறேன்!
122 மறப்பதற்கு அழைப்பு

GBTs 6oo6mo iš 6mó (Bobby Sykes) அவுஸ்திரேலியா
சுழற்சி
கருப்பையில் ஒருகுழந்தை போல புரட்சி கருத்தரிக்கப் படுகிறது. கர்ப்பமாக, அது ஆண்களின் பார்வையில் ஒரு சிந்தனை, ஒரு ஒளிவெட்டு மட்டுமே, பெண்களின் Uார்வையில் ஒரு மெளனமான அறிதல் மட்டுமே. எனினும் அது வாழ்கிறது.
புரட்சி நம்முள் வாழும்வரை
புரட்சி உயிரோடுள்ளது: நமது இதயத்தை வெதுவெதுப்பாக்கி நமது மனங்களை வலுப்படுத்தி அது அழத்துக்கொள்கிறது, ஏனெனில், பிறப்பு
நீதியைப் போன்று தவிர்க்க இயலாததென நாம் அறிவோம்
தாங்கள் காண்பது ஏதென அறியாது அவர்கள் நம்மை நோக்குகின்றனர், நாம் வலிவில் மிகுகிறோம், நமது சருமத்தைப் பிளந்து வெளிவர முனைகிறோம், புரட்சி அதன் பிறப்பை நெருங்கிவிட்டதென அவர்கள் உணரமாட்டார்கள்.
சி. சிவசேகரம் 123

Page 69
உயிரூட்டப்பட்ட கருவறையினின்று இந்த நீண்ட காலக் காத்திருப்பின் பின்பும் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளாத புரட்சிக்கு நீண்டகாலமாகவே பக்குவமாயுள்ள இந்த உலகில் வந்திறங்க முனைகிறதென அவர்கள் உணர மாட்டார்கள். நமது தாய்மை நிலை பற்றி நாம் எப்போதுமே பேசிக்கொள்வதில்லை. ஏனெனில் விடுதலையின் உந்துதலை நாம் கருத்தரித்துள்ளோம். நமது விடுதலை பிறருக்கு மிரட்டலாகத் தெரிகிறது.
நாம் விடுதலை பெற வேண்டும். அதை நாம் அறிவோம், அவர்களும் அறிவார்கள். ஏனெனில் விடுதலை என்பது பரிசு அல்ல. அதை எவரும் வழங்குவதற்கு. நம்மை அடக்கிப் பணிய வைத்தோரிடமிருந்து பறித்தெடுக்கப்பட வேண்டியது.
நாம் கைகள் உயர்த்தி எழுந்து நிற்க வேண்டும் மொத்தத்தில், சுதந்திரக் காற்றை ஆழச் சுவாசிக்க வேண்டும். நமது குழந்தைகள் தொல்லையற்றோராய்ப் பிறப்பிலேயே துள்ளி வர வேண்டும்
புரட்சி வாழ்கிறது, அது நம்முள் வாழ்கிறது. பிறப்பு நிகழவுள்ளது. அதைக் காசுக்குப் பறிக்க இயலாது பின்தள்ள முழயாது, மறிக்க முழயாது. ஆயத்தமானதும் குழந்தை கருவறையினின்று வருவது போல புரட்சி முன்னே பாய்வதும்
நிச்சயமானது. நமது காலத்தைக் கடத்தும் போது தயாரிப்பையும் துரிதப் படுத்த வேண்டும்
124 மறப்பதற்கு அழைப்பு

இறுதிக் கணிப்பு
Uயங்கரமான எண்ணிக்கைகளில் போஷாக்கின்மையாலும் அது தொடர்பான நோய்களாலும்/ குழந்தைகள் சாகின்றனர்/ நமது புரட்சியின் வீர மரணங்களின் தொகையுள் அவர்களின் தொகை கணிக்கப்படுவதில்லை/ சாவதற்கான காலம் வரை நீண்டகாலம் வாழ்ந்து/ தெருவிற் சுடப்பட்டாற்போல நிச்சயமாய் அவர்களது குருதி சிந்துகிறது
அவர்களை நாம் கணிப்பிலெடுக்க வேண்டும்/ அவர்களை நாம் கணிப்பிலெடுக்க வேண்டும்/ அவ்வாறு நாம் செய்யாவிடின் அவர்களது மரணம் வீணிலானதாகும்.
சி. சிவசேகரம் 125

Page 70
மேரி டியூரோ (Mary Duroux) அவுஸ்திரேலியா
இழந்த ஒரு மொழிவழக்கிற்காக இரங்கல்
ட்யிர்ரிங்கன்* பேச்சுவழக்கையூஇன்* இனக்குழுமங்கள் இழந்து
விட்டன. என்னிற் துயரம் நிறைகிறது, சிதைவு கண்டு வெம்பி அழுகிறேன். மெலிதாகப் பேசப்பட்ட அழகான சொற்கள், இன்று உடைந்து நொருங்கிக் கடந்த காலத்திற் கிடக்கின்றன இனிதாக ஒலிக்கும் ட்யிர்ரிங்கன் பேச்சு வழக்கை, நாம் ஆங்கிலத்தின் தொடக்கத்துடன் எவ்வாறோ மறந்தோம். நாம் நாகரிகம் அடைய வேண்டியமைக்கு யாரை நாம் நோவோம்; என் மொழியே, நின்னை இழந்தது என் பெரிய அவமானம்.
*Dyirringan அவுஸ்திரேலியப் பழங்குடிகளில் ஒரு இனக்குழுமமான Yuin மக்களது ச்ேசு மொழி.
126 மறப்பதற்கு அழைப்பு

மறைந்துள்ள கலை ஒன்றுக்கு இரங்கல்
Uன்நெடுங்காலம் பழையதோர் இனத்தின் காவிய வாழ்வு
ஒரு குகையின் சுவரில் கூறப்படுகிறது கொர்ரோபொரீதரையில் புல் முளைத்துள்ளது
மதச்சின்னம் தன் புதைக்குழியில் கிடக்கிறது. எவ்வாறு காற்றும் மழையும் சாம்பல்களைச் சிதறிவிட்டன,
குன்யாக்கள் அழுகி அழிந்து விட்டன யூஇன் இனம் இம்மண்ணை நீங்கி
நினைவுகள் அழுகி அழிய விடப்பட்டபோது,
அவர்களது பண்பாடும் கனவுலகும் கதைகளும் பற்றிக்
கூறப்பட்ட கதைகள் எவர்கட்கும் நினைவில்லை. தாமே செய்த ஆயுதங்களுடன் வீரராய் விளங்கிய மறவர்
கடந்துபோன காலத்தில் இறந்து விட்டனர். இப்போது நான் ஒரு கிழவன், எண் இனத்தின் கடைசி ஆள்
ஒரு மனிதனுக்கு இருக்கக் கூடியளவு தனிமை எனது ஒவ்வொரு கோட்டையும் தொட்டுத் தொடர்கையில் மெளனக் கண்ணிர் விடுகின்றேன் ஏனெனில் இப்படங்கள் நான் வரைந்தவை.
சி. சிவசேகரம் 127

Page 71
ஜெனி ஹாGறேவ்ஸ் நம்பிஜின்பா (Jennie Hargraves Nampijinpa) அவுஸ்திரேலியா
குழந்தாய், அந்த ஒலி நாடாப் பெட்டியை விடு
குழந்தாய் அந்த ஒலி நாடாப் பெட்டியையும் வீடியோவையும் தம் பாட்டில் விடு - அவற்றை எல்லா நேரமும் பார்த்துப் பார்த்திருந்தால் அது உன் கண்களைப் புண்ணாக்கிவிடும்.
இசையை சற்று மெதுவாக ஒலிக்கச் செய் அல்லாவிடின், அதைக் கேட்டு உன் செவிகள் வெடித்துவிடும்.
சிகரெட்டுக்களைத் தம் பாட்டில் விட்டு விடு. அல்லது அவை உண்னை எரித்துவிடும். இன்னொன்று, மதுவையும் தன்Uாட்டில் விட்டுவிடு. நீயே உன்னை நோயாளி ஆக்கலாம். நல்லவனாய் இரு
வெள்ளையரது பொருட்களை, இசை, மது, சிகரெட், வீடியோ இன்னும் பிற பொருட்களையும் விட்டு விடு!
வைபவங்கட்கு வா, வேட்டைக்கும் நடனமாடவும் வா, உன் பண்பாட்டை நீயே அறிவதற்கு வா.
128 மறப்பதற்கு அழைப்பு

ஷாமேன் பேப்பர்Tாக்-Gறின் (Charmaine Papertalk-Green) அவுஸ்திரேலியா
நாம் ஒரே விதமா?
நீபட்டினி கிடந்திருக்கிறாய்? உன் தாய் கசையடிபடவும் உன் தகப்பன் கண்மண் தெரியாமல் குழத்திருக்கவும் கண்டிருக்கிறாயா?
உன் உலகம் என் உலகமல்ல உன் வயிறு எப்போதுமே நிரம்பியுள்ளது நீதொலைக்காட்சியில் வன்முறையைக் கண்டிருக்கிறாய், தெரு வழியே அல்ல உன் தாய் மூழய கதவுகளின் பின்னால் அழUட்டு வெட்கம் காரணமாக
உதவிக்காக அலறவில்லை அயலார் என்ன நினைப்பார்கள் அவர்கள் இதையெல்லாம் நீஅறியாமல் மறைத்தார்கள்
நீஎன்றுமே அறிய முடியாத இன்னொரு உலகிலிருந்து நான் வருகிறேன் நீஎன்னை விளங்கிக் கொள்ள முயலலாம் ஆனால் என்றுமே விளங்கிக்கொள்ள மாட்டாய்
சி. சிவசேகரம் 129

Page 72
எமக்கு வழிகாட்ட எவருமில்லை
ஏனென்று யோசித்து ஊக்கமிழந்து மனம் சோர்கிறேன் இந்த சமூகத்தில் என்ன நடக்கிறது றோபோனில் பொலிஸ் அடி உதை ஜோன் பற் சாவு நீதி கிடைக்கவில்லை புறுமில் தற்கொலை மீக்காவில் இன்னொன்று எல்லாரும் இளம் பழங்குடிகள் எதற்காகச் சாகிறார்கள்? என்ன நடக்கிறது என எனக்கு விளங்கவில்லை. மனம் சோர்கிறேன். எங்களுக்கு வழிகாட்ட எம் மூதாதையரினதும் எங்கள் மக்களதும் ஆவிகள் எங்கே?
130 மறப்பதற்கு அழைப்பு

வெள்ளையாக வேண்டும்
என் மனிசன் நேற்று ஒரு வெள்ளைக்காரியுடன் ஒழவிட்டான் உலகில் உருப்Uடுவதற்காக என்னையும் குழந்தைகளையும் கைவிட்டான் கறுப்பாக, ஏழையாக சிரிப்பிற்கு இடமாக இருந்து அலுத்துவிட்டது என்றான் வெள்ளையனாகி நல்ல உடைகளும்
ஆடம்பரமான
காரும் வினோதமான உணவும்
பெறவிரும்பியதாகச் சொன்னான். நானும் பிள்ளைகளும் கூட கறுப்பென்ற காரணத்தால் தனது பேரைக் கெடுத்து விடுவோம் என்றான் அதனால் ஒரு வெள்ளைக்காரியுடன் ஒழ விட்டான்.
சி. சிவசேகரம்
பென்ஷன் நாள்
யூகலிப்டஸ் மரத்தடியில் அமர்ந்து மற்ற எந்த நாளையும் விடத் துப்புரவாக தUாற்கந்தோர் திறக்கும்வரை காத்திருக்கிறார்கள் சிலர் புளுகிச் சிரித்திருப்பர் மற்றோர் மெளனமாய் அமர்ந்திருப்பர் தங்கள் காசைக் கொண்டு தாங்கள் என்ன செய்வாரென அவர்கள் சொல்வதில்லை அதற்குத் தேவையுமில்லை அவர்கள் எல்லோரும் சிரித்துக்குழத்து சண்டையட களியாட்ட மனைக்குப் போய்ச் சேர்வார்கள்
இது பென்ஷன் நாள்.
131

Page 73
Gpm (3B) வோக்கர் (Robert Wolker) அவுஸ்திரேலியா
முட்களிடையே உள்ள ரோசா S. தினமும் காலைச் சூரியனின் முத்தங்களை உணராது போகலாம் தன் மீது நிழல் விழுத்துவோர் கிளைகளிடை ஒளித்து வைத்த சூரியனின் ஒளியைக் களவாழயே கொள்ளும் நிர்பந்தம் அதற்கு எனினும் அது ஒரு ரோசா
அது வாழ்கிறது
போற் ஒகஸ்ற்றாவில் 1958 நத்தார் தினத்தில் பிறந்த றொBேற் வோக்கர் பதினைந்து பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் பதினான்காமவர். சிறுவயதிலிருந்தே தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது திமிர்த்தனமல்ல என்று தனது தகப்பனாரால் ஊக்குவிக்கப்பட்ட றொBேற் அடிலெய்டில் (மே. அவுஸ்திரேலியா) கறுப்பர்கள் அனுபவித்த பாடசாலை வாழ்வை நன்கு அறிந்தவர். வெள்ளை மாணவர்களால் இம்சிக்கப்பட்டு அவமதிக்கப்பட்டுப் பின்னர் பொலிஸாருடன் தொந்தரவு பட்டுச் சிறைவாசமும் அனுபவித்தவர். கறுப்பர்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்ததால் சிறை அதிகாரிகளிடம் உதைவாங்கி 28-08-1984ல் சிறையில் இறந்தார். அவரது மரணம் பற்றி இன்னொரு முக்கிய ஆதிவாசிக் கவிஞரான கூரி தாத்தா, “இவ்வளவு சிவப்பாக இரத்தம் என்றும் இல்லை’ என்ற தலைப்பில் எழுதிய கவிதையும் பிரபலமானது.
132 மறப்பதற்கு அழைப்பு

கூரி தாத்தா (Grandfather Koori) அவுஸ்திரேலியா
இவ்வளவு சிவப்பாக இரத்தம் என்றும் இல்லை.
இவ்வளவு சிவப்பாக இவ்வளவு சிவப்Uாக இரத்தம் என்றும் இல்லை
இவ்வளவு இறந்து
குளத்தில் கிடந்த
கவிஞனது கொகாதா கவிஞனது இரத்தம் போல இவ்வளவு சிவப்பாக இரத்தம் என்றும் இல்லை இவ்வளவு சிவப்பாக இவ்வளவு சிவப்பாக இரத்தம் என்றும் இல்லை 'ப்றிமனற்றில் சிறையில் இவ்வளவு சிவப்பாக குண்டாந்தடிகளில், சுவர்களில், பாதங்களில் அது ஒளிர்கிறது சிறை மெய்காப்பாளர் தலைமேல் செந்துளிகள் இவ்வளவு சிவப்பாக இவ்வளவு சிவப்பாக இரத்தம் என்றும் இல்லை நீதிக்கான எவனது முழக்கம் இரத்தம் சிந்தியதோ நீதிக்கான எவனது முழக்கம் இரத்தம் சிந்தியதோ
அந்தக் கவிஞனது கொகாதா கவிஞனது இரத்தம் போல இவ்வளவு சிவப்பாக இரத்தம் என்றும் இல்லை
சி. சிவசேகரம் 133

Page 74
ஈவா ஜோன்ஸன் (Eva Johnson) அவுஸ்திரேலியா
நினைவிருக்கிறதா?
ஆற்றோரமாய்ப் பிறந்து ஆம்பல் இலையில் மெதுவாகத் தாங்கப்பட்ட Uெண் - அயர்வுற்ற விழிகள் நூற் பையில் ஆம்பற் கிழங்குகளையும் மீன்களையும் சிறிய ஆமைகளையும் அரும்புகளையும் நிரப்பியபழ அருகாக நீந்தும்
பெண் - Uாழயவாறு
இராப்பொழுதில் நெருப்பைச் சூழ உற்றாருடன் அமர்ந்து - சுடுசாம்பலில் வேகிய
உணவைப் பகிர்தல் குழந்தைகளின் சிரிப்பு,
g5/Tuj60s usuéb மார்மீது குழந்தை. மொழியில்
கதைகள் சொல்லும், பகிரும் பாடல்கள், ஆவிகளின் பேர்கள், கல்வி தரும் பெண்கள்
இனிமேல் இல்லாத ஆறு - இப்போது பெரும் அனை வெறும் நூற்Uை
இப்போது ஸ்ரீப்பர் மார்க்கெற் பெரிய வீடுகளில் இருந்தUழ
பகிர்ந்தும் பாடியும் தாய் அழக்குழந்தை ஒட்டிக்கொள்வதை நினைவுகூரும் பெண்கள் கதை சொல்லும் பெண்கள்
புதிய கதைகள், புதிய பேர்கள்
புதிய மொழி.
134 மறப்பதற்கு அழைப்பு

என் அன்னைக்கு ஒரு கடிதம்*
உன்னைக் கண்டு பல காலம், உன்னைக் கண்டு பல காலம். வெள்ளையன் தொட்டிலில் எனை எடுத்தார், ஏனோ எனக்கும்
தெரியாது. கடவுளின் குழந்தை ஆக்கிடவே, மிஷனரிகையில் எனைக்
கொடுத்தாரர். எனக்குப் புதிதோர் மொழி தந்தார், எனக்குப் புதிதோர் பேர்
தந்தார். எல்லாப் பொழுதும் நான் அழுதேன், ‘ஐயோ வெட்கம்’
என்றார்கள் தெற்கே நகரம் நான் போனேன், அங்கே மிகவும் கொடிய குளிர். அம்மா நீயும் சொன்ன கதை, எல்லாம் நானும் மறந்தேனே, என்னது ஆவி, என் கனவு என்பேர் எல்லாம் போயினவே. எம்முடை உரிமை இந்நாடு, மனிதர் இவரிடம் போயினவே.
சி. சிவசேகரம் 135

Page 75
எனக்கோர் வெள்ளைத் தாய் தந்தார், எனக்கவள் புதிதோர் பேர்
தந்தாள்
எல்லாப் பொழுதும் நான் அழுதேன், "ஐயோ வெட்கம்’ எனச் சொன்னாள்.
உன்னைக் கண்டு பலகாலம். உன்னைக் கண்டு பல காலம்.
பெண்ணாய் நானும் வளர்ந்தேனே, தொட்டாற் சிணுங்கி இனி
இல்லை. உன்னது ஞானம், உன் கதைகள் நீயும் தர நான் வேண்டுகிறேன். நான் உன்னுடைய ஆவியெலோ, உயிருடனே நான் இருப்பேனே. வெள்ளையண் வாழும் வழியினிலே நீயும் பிழைத்தல் இயலாதே. உனக்கே உரிய மண்ணிற்காய், உனது புனித தலங்கட்காய் ஒடும் ப்ரொல்கா விலங்குடனே ஆழப்பாடும் உரிமைக்காய் உனது சொந்த மரபுவழி தொடர்ந்தும் வாழப் போரிடுவேன். எனக்கே உரிய பண்பாட்டின் இடத்தை மிஷனும் பிழத்ததுவே. உன்னைக் கண்டு பலகாலம், உன்னைக் கண்டு பலகாலம்.
ஒருநாள் உனது நடனமதும் உனது கனவும் உன் பாட்டும் எனக்கே உரிய இடத்திற்கே உந்தனர் ஆவி எனைச் சேர்க்கும். எந்தன் தாயே வையகமே மண்ணே நானும் கோருகிறேன். ஆள்வோர் ஆணை செயும் அயலார் தம்மிடமிருந்தே காத்திடுவாய் ஏனெனில் எங்கள் கனவுகளின் தொடக்க நிலையை அவரறியார், வெள்ளை மனிதன் சட்டத்துள் எங்கள் விதியும் இருக்கிறதே. சொல்லாக் கதையாய் இருபெண்கள் நாமும் இங்கே
இருக்கின்றோம், ஆயின் எங்கள் ஆவிகளின் உறவும் இன்று விரிகையிலே எந்தன் அன்னை நீஎனக்கு எனது பேரைத் தரும்போது இந்தச் சுமையை, காத்திருப்Uை வேதனை தன்னை ஒழித்திடுவோம் உன்னைக் கண்டு பலகாலம், உன்னைக் கண்டு பலகாலம்.
(*ற்விங்கிள் ற்விங்கிள் லிற்றில் ஸ்ற்றார் என்ற சிறுவர் பாடல் மெட்டுக்கு எழுதப்பட்டது)
136 மறப்பதற்கு அழைப்பு

வாழும் உரிமை
நான் எப்படி வாழ்வதென நீஎண்ணும் ஒரு பழமமாக என்னை
மாதிரிப் படுத்தாதே நான் ஒரு பெண், நான் கரியவள், நான் சுதந்திரமாயிருக்க
வேண்டும். என் மீது நீசூட்டிய உனது விழுமியங்களை நான் மீளத் தருவேன். என் பெருமிதத்தை, என் பண்பாட்டை, என் நிசமான
அடையாளத்தை மீளப் பெறுவேன்.
எதிர்காலத்திற்காகவே நான் முயல்வேன், Uன்னே நோக்குதற்கு
இல்லை. என்னை எண் வழியில் ஆதரிக்க பிற பெண்களை நாடுவேன் இச் சமுதாயத்தின் அதி முக்கிய பங்களிப்Uாக மட்டுமே இருக்கும் உரிமைக்காக ஒரு பெண் என்ற வகையில் நான்
(8UrT[fჩ0ჩ(86)J60f.
ஒம், நான் ஒரு பெண், எண்ணில் ஒரு குறையுமில்லை என நான்
அறிவேன். முடிவில் திறமையை அடையும் வரை நான் என் கல்வியில்
முன்னேறுவேன் என் சுயாதீனமான சிந்தனையே என்னை இவ்வளவு
வலியவளாக உணரச் செய்கிறது ஒற்றுமையில் எம் நம்பிக்கை, நாம் தவறமாட்டோம் எனப்
பொருள்படும்.
எவரதும் கைப்பட்ட ரோசாவாக நான் விரும்பவுமில்லை உன் நடுப்பக்கக் கவர்ச்சிப் பெண்ணாகும் தேவையுமில்லை நான் ஒரு பெண், நான் கரியவள் நான் சுதந்திரமாயிருக்க வேண்டும் நிமிர்ந்த தோற்றமும் வல்லமையுமே வாழ்வதற்கு ஒரே வழி.
சி. சிவசேகரம் 137

Page 76
பூச்சி உள்ள கஞ்சி
பூச்சி உள்ள கஞ்சி பித்தமெனக் கேற்றும் பூச்சி உள்ள கஞ்சி மூளை கெட்டுப் போகும் சர்க்கரையைக் கலக்கு இன்சுவையை ஊட்டு அடுப்பினில் ஏற்று வெப்பந்தனைக் கூட்டு தகரத்துப் பாலும் வெள்ளாட்டுப் பாலும் பூச்சியுள்ள கஞ்சி தொண்டை வழி ஊற்று
ம்ம்ம்ம் மிஷன் தீன், மோட்சத்தாலே வந்தது
நன்றாய்த்தானே இருக்கும்
ம்ம்ம்ம் மிஷன் தீன், மோட்சத்தாலே வந்தது
நன்றாய்த்தானே இருக்கும்
‘பூச்சியைப் பார்க்காதே, குசினியைப் பார்க்காதே’ மிஷன்காரி சொல்லுவாள், ‘ஒன்றும் வீணாக்காதே பூச்சியுள்ள கஞ்சி உடல்வலு வேற்றும் பூசித் திண்னு நன்றாய் ஒன்றும் பிழை போகா'
பூச்சிகட்கு ஆசி, பாவம் எனக் காசி நாங்கள் ஒரு வம்பு செய்திடுவோம் பாரும் சின்னப் பூச்சி கொஞ்சம் தேனிருக்குள் போட்டு மிஷனரிமாரை குழத்திடச் செய்வோம்
நாளும் எங்கள் Uங்கு ரட்சகரே தந்தார் அவருக்கு நிறைய உணவுகள் செய்வோம் பூச்சியை அரைப்போம் கஞ்சி சோற்றில் இடுவோம் ரட்சகரும் சொல்வார் ம்ம் நல்ல சுவைதான்.
(*WeeWillie Winkie என்ற சிறுவர் பாடல் மெட்டுக்கு எழுதப்பட்டது)
138 மறப்பதற்கு அழைப்பு

ஏணி டிங்கோ (Ernie Dingo) அவுஸ்திரேலியா
2 தடங்களும் சுவடுகளுமே
எஞ்சி இருப்பவை ஆயினும் என் மனதின் பின்புலத்தில் அந்த மக்களை இன்னமும் காண்கிறேன்
Z ஆதிவாசிகளின் சாதனை
நிலவின் இருண்ட பக்கம் போல, அது அங்கே உள்ளது ஆயினும் சொற்பமே அறியப்பட்டுள்ளது
Z நம் சொந்த நாட்டில்
நாம் அந்நியரல்ல வெறுமனே ஐரோப்பிய சமுதாயம் ஒன்றுக்கு அந்நியர். ஒரு அந்நியனாயிருப்பது கடினம்சட்டம் மற்ற அந்நியனாக இருக்கையில்,
சி. சிவசேகரம் 139

Page 77
றொண்டா ஸமுவெல் நபுர்ருலா (Rhonda Samuel Napurrula) அவுஸ்திரேலியா
தாய்மார் இருவர்
தாய்மார் இருவரும் கணப்பின் அருகே குந்தியிருந்து தம் மகள்மார் பற்றிக் கதைக்கின்றனர். ஒருவர் நபர்ங்கார்டி மற்றவர் நங்கலா.
நங்கலா தனது மகள்பற்றி சிறிது சொல்லத் தொடங்கினார். ‘என் மகள் வீடியோப் படங்கள் பார்த்துவிட்டு நள்ளிரவு தாண்டியே வருகிறாள். அவள் எங்கே போய் வீடியோக்கள் பார்க்கிறாளோ நான் அறியேன். ஒருவேளை இந்த வீடுகளில் ஒன்றாக இருக்கலாம். அவளுடைய கண்கள் இரண்டும் நோவதுமில்லை வீடியோ பார்த்து அவளுக்கு விறைப்பு வருவதுமில்லை.” என்றார்.
அதன் பின்பு நUங்கார்டி தனது மகள் பற்றியும் சிறிது சொல்லத் தொடங்கினார். ‘என் மகள் நங்கலா பற்றி நான் சொல்வதைக் கேட்கும் வரை பொறு. அவள் வானொலி கேட்டுக்கொண்டே இருக்கிறாள். காலை எட்டரை முதல் மாலை ஏழரை வரை அவள் வானொலி கேட்கிறாள்.
மெய்யாக, அவள் கேட்டுக் கேட்டுக் கொண்டே இருக்கிறாள். அவள் வானொலி கேட்பதை நிறுத்துவதே இல்லை. அவளை நான் நிறுத்த வேண்டுமென நினைக்கிறேன். “இவ்வளவு சத்தமாக வானொலி கேட்டால் காது செவிடாகிவிடும்” என்று சொன்னேன். அது தான் நான் நங்கலாவுக்குச் சொன்னது.
140 மறப்பதற்கு அழைப்பு

வெய்யிலினின்று ஒதுங்கிப் பெண்கள் இருவர் நிழலில் அமர்ந்துள்ளனர்
வெய்யிலினின்று ஒதுங்கிப் பெண்கள் இருவர் நிழலில் அமர்ந்துள்ளனர். அமர்ந்தவாறே தமது சமூகத்தில் மற்றையோர் நடத்தை பற்றி அலசுகின்றனர். நம்பிஜின்Uாவிடம் நக்கமர்ரா சொல்கிறாள் : “அதோடு, எல்லா நேரமும் ஆண்களோடு வெளியே செல்கிற அந்த இளம்பெண்கள். உனக்குத் தெரியும், அந்த ஆண்கள் ஏற்கெனவே மணமானவர்கள். ஒரு ஆணுக்காகச் சண்டையிடுவதானால், எவருக்கும் துன்பம் நேராமல் ஒரு பெண் விலகிப் போகும் வரை அவர்கள் சண்டையிடட்டும். அந்தப் பெண்கள் என்றுமே கணவர்களுக்கு விசுவாசமானவர்களாக இருக்க மாட்டார்கள், G65606Ust?
நக்கமர்ராவிடம் நம்பிஜின்Uா சொல்கிறாள் : ‘அந்த ஆண்கள் எப்போதுமே மது அருந்தப் போகிறவர்கள். அவர்கள் ஏன் மதுவருந்தாமல் இருக்க மாட்டார்கள்? அதனாலேதான் வெறியேறிய பின்பு அவர்கள் மிகவும் சண்டையிடுகிறார்கள். தம் உறவினர்களோடும் சண்டையிடுகிறார்கள். அவர்கள் ஆளை ஆள் கொல்லவும் கூடும்!
நக்கமர்ரா சொல்வாள் ‘அந்தப் பெண்கள் முதுகைக் கூனிச் சீட்டாடாமல் ஒன்று கூடலுக்கு வர வேண்டும். ஒன்றுகூடல் நிகழும் போதெல்லாம்
அவர்கள் நடனமாட வேண்டும். ஒ. அவர்கள் இப்படி அறியாதவர்களாக இருப்பது பெரிய பரிதாUம்!’
நக்கமர்ராவிடம் நம்பிஜின்Uா சொல்கிறாள் : ‘நான் வீட்டுக்குப் போகிறேன். நாளை உன்னைக் காண்கிறேன்.”
நம்பிஜின்UT தனது கூடாரத்துக்குப் போகிறாள்.
சி. சிவசேகரம் 141

Page 78
டபிள்யூ. லெஸ் ரஸல் (W. Les Russel) அவுஸ் திரேலியா
அணு ஆயுதக் குளிர்காலம்
(அணு ஆயுதப் பரிசோதனைக்குப் பலியான எண் சகோதரன் த்ஜில்பிக்கு சமர்ப்பணம்)
குளிர் நரகொன்றில் கிடக்கிறாள், இருட்டாயுள்ளது, ஆனால் அவள்குருழ; தன் சொந்தச் சிறைக்கூண்டில் உண்ண உணவின்றிச் சாகிறாள்.
ஏனென்றால்:
அணுஆயுத வேதனை, மண் கண்ணாழஆனது, பின்னர் வந்தது நீண்ட இரவு, குளிரும் இருள், கொழய ஆண்டுகள் கடந்தன.
அணு ஆயுதக்குளிர்காலம்,
அவளுக்கு உயிரும் மூச்சும் தந்த வித்துக்கள் எவரதோ, அவர்கட்குக் கொழய சாவன்றி எதிர்காலம் இல்லை இந்தப் பைத்திய வேலை. இச் சிறு அனாதை அங்கே சாகிறாள்; அங்கே அழுகிறாள்
தனியே, தனியே!
அணுஆயுத விளையாட்டை ஆடுங்கள், அஞ்ச வேண்டியோர் நம் குழந்தைகளே
அங்கே சாவது யார்?
அங்கே அழுவது யார்? அவள் உங்கள் அன்புப் பேரக்குழந்தையா அங்கே தனியாக,
142 மறப்பதற்கு அழைப்பு

சிவப்பு
என் குருதினதும் என்னைத் தன் பாகமாய்க் கொண்ட மண்ணினதும் என்னைத் தன் பாகமாய்க் கொண்ட சூரியனது எழுதலினதும் படுதலதும் என்னைத் தனி பாகமாய்க் கொண்ட விலங்குகளின்
குருதியினதும் என்னைத் தன் பாகமாய்க் கொண்ட ‘வரட்டா’ போன்ற மலர்களினதும் பின்னிப் பிணையும் அவரையினதும் எண்ணைத் தன் Uாகமாய்க் கொண்ட மரத்தின் குருதியினதும் நிறம் சிவப்பு. ஏனெனில் எல்லாப் பொருட்களும் என்னிற் பகுதி, அவற்றில் நான் ஒரு பகுதி
சி. சிவசேகரம் 143

Page 79
ங்ார்ன்பார்ன்ட் தார் டி2ய்திம்பியர்ங்கா ங்ெயர்ம்பூம் ட்தக்கார்ன்ட்திU? ங்ார்ன்Uார்ன்ட் தார் டிய்திம்பியர்ங்கா ங்ெயர்ம்பூம் ட்தக்கார்னர்ட்திU? ங்ார்ன்பார்ன்ட் தார் ழய்திம்பியர்ங்கா ங்ெயர்ம்பூம் ட்தக்கார்ன்ட்திU?
(என் நெருப்பின் இப்புறத்தே குந்தி இருப்பவன் யார்?
ங்ார்ண் பார்ண்ட்தார்
60566)s Bங்கை
605660s Bங்கை
60566)(T Bங்கை
நோய்களைக் கொணரும் ஒரு ஆவியா?)
(சட்டங்களை அறியாத பணிபற்றவன்,
என்னைப் பாகமாய்க் கொண்ட மணிணை அபகரிப்பவன்; ஆவலுடனர், களவாடி)
144
மறப்பதற்கு அழைப்பு

றபிக் ஸபி தென் குர்திஸ்தான
துப்பாக்கியின் தெரு
என்னிடம் சிறிய நிலவானமொன்றிருந்தது. ஆக்கிரமிப்பாளர்கள் அதை என்மீது விழுத்தினர். சிறிய இருண்ட நிறக்குருதியாவறான்றும் தேன் கனவுப் பொதியொன்றும் சேகரித்த புத்தகங்களும் என்னிடம் இருந்தன. அவர்கள் அவற்றையெல்லாம் கொள்ளையடித்தனர்.
ஆயினும் அவர்கள் என் சருமத்தை மாற்றி என் முகத்தைச் சிதைக்க வந்தபோது நான் வெண்பனியும் இடியொலியும் பூண்டு என் தாயகத்தைத் தோளிற் சுமந்து துப்பாக்கியின் தெருவில் இறங்கினேன்.
சி. சிவசேகரம் 145

Page 80
ý.ů. ஆந்திரம், இந்தியா
முன்னோக்கிய படை நடப்பு
அலைUாய்கிறது,
மணி ஒலிக்கிறது, இன்னொருலகின்குரல் அழைக்கிறது. பாய்குது ஒலிக்குது அழைத்திடுகிறது. முன்னே நடப்Uர், ஓ! முன்னுற விரைவீர்; மேலும் முந்தித் திரள்வோம் என்றும்
146 .... மறப்பதற்கு அழைப்பு'

எங்கள் ஜீவன் கீதமிசைக்க விரைவோம், பாய்வோம். துள்ளும் எம் நெஞ்சம் குறிக்கோள் சேரும் தேர்வு தெளிகுது,
நேரம் நெருங்குது, இன்னொருலகின் அழைப்பு இனியது, இன்னொருலகின் அருவியின் அழைப்Uால் குதுகலமுடனே முன்னே நடப்போம். வெள்ளமாக எங்கள் குருதி வீதியனைத்தும் ஊற நனைக்கும். ஆழ்கடல் தாவிக் கரைகளனைத்தும் ஆளுமை செய்வோம். புவியியல் தன்னை மாற்றியமைப்போம், புதுவரலாறு ஒன்று படைப்போம். Uாலையும் காடும் மலையும் நதியும் முன்னோக்கிய நம்படை நடப்Uதனை நிறுத்திட மாட்டா, திருப்பிட மாட்டா. கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும் வாலிப சக்திகள், கழுகு சிங்கம் வேட்டை நாய்களாய் எத்தர் புரட்டர்கள் கோட்டையை எதிர்க்கும். பழமை பேணுவோர் பத்தாம் Uசலிகள் தோல்வி காணுவர்: கூண்டில் ஏறுவர்.
இளமைக்குருதி எதிர்காலத்தின் கனலைமூட்டும். விழித்த வாலிபம் முன் நடக்கிறது. புதிய உயிர்கள் கோபுரமாக,
முன்னே பாய்வீர்
முன்னுறச் செல்வீர். இன்னொருலகின் வரவை உரைப்Uர்.
சி. சிவசேகரம் 147

Page 81
மணியொலி இசையும் இன்னொருலகின் முரசின் ஒலியும் உந்தன் செவியில் ஏறவில்லையா?
வாழ்க தோழர்காள்! போய்க்கழிந்த சகாப்தமொன்றனர் பயன் இல்லாத தூசையும் அழுக்கையும் பழித்துரை செய்வோம். காணுக நம்முன் மனித இனத்தின் உள்ளொளி மூட்டிய உன்னதமான அக்கினிக் கோபுரம்
சீறும் பாம்புகள் போல வருக, வேட்டை நாய்கள் போல வருக, தனஞ்சயன் போல உலகை வெல்க, விழயலை வாழ்த்துக, கொம்புகள் ஒலிக்குக.
புதிய சத்ய பூமி ஜனிக்கும். ஒன்று சேர்ந்து பாடல் இசைக்குக. நம்முன் புதுவுலகுள்ளது, உள்ளது. முன்னே முன்னே.
அதனுடைஎழில்மிகு
அக்கினி முழயிலும் அதனுடை விழயலின்
உன்னதம், சிவந்தகொடியிலும் விந்தைகாலத்தினது ஹோமாக்கினி போல்
(சுருக்கிய மொழி பெயர்ப்பு)
148 மறப்பதற்கு அழைப்பு

றெவி அலி (Rewi Alley) நியூசிலாந்து (சீனாவில் வாழ்ந்தவர்)
விலை
நாகரிகங்கள் மக்களால் ஆக்கப்பட்டவை. பேரரசுகள் குருதி தோய நாடு பிழத்தலினின்றும் கனவினின்றும் அழமை கொள்ளலினின்றும் விளைந்தவை. புதிய துரைமார் எப்போதுமே மேலும் வசதியும் உள்ளதின் அதிக சொகுசும் வேண்டினர்; அவை திகட்ழப் போன அவர்களது குழந்தைகளோ சிலிர்ப்பூட்டுவதாக எதையேன் தேடுகின்றனர்; பழைய மேலாதிக்கம் வெடிப்புண்ணும் போது மாற்றம் உள்நுழைகிறது.
சி. சிவசேகரம் 149

Page 82
தவிர்க்க இயலாததாய்த் தோன்றும் இச் சூழலை முறிப்பது எவ்விதம், புதிய சவால்கள் எழுவது எவ்விதம்? சீனாவின் நீண்ட படை நடப்பின்போது, சிறிதளவே உண்டு, முழுவின்றிப் போராடி மின்னல் வேகத்தில் நகரும் போது, அவர்களைக் கிழிக்கும் ஊளைச்சதையோ கனமான ஆடைகளின் சுமையோ இன்றிப், போராளிகள் மலைக்க வைக்குங்குன்றுகளை வெறுங்காலுடன் கடந்து, செயலும் துணிவும் என்ற உள்ளுணர்வு உந்த எதிர் காலத்தினுள் கீறிப் பாய்ந்து வென்றனர்.
ஒவ்வொரு புதிய கட்டமும் புதிய கர்த்தாக்களை வேண்டி நிற்கிறது. எனினும் பழைய வழக்கங்களும் கொள்கைகளும் சமூகத்தளைகளும் என்றென்றைக்கும் தகர்த்தெறிய வேண்டிய தடையாக நிற்பன. பழைய போராட்டங்கட்குச் சற்றேனுங்குறையாத வல்லமையைப் புதிய போராட்டங்கள் வேண்டி நிற்பன.
நிசத்துடன் நெருக்கமான தொடர்பு மட்டுமே தரவாக, கையிற் தியாக வழியும் மனதில் வியர்வையும் தெளிவான விளக்கங்கட்கான போராட்டமுமே இடையறாத வெற்றிக்குரிய விலை.
150 மறப்பதற்கு அழைப்பு