கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மரபும் மார்க்ஸியவாதியும்

Page 1
* 。
კი „ “.
 

| || || ||
|-| |-|× |×|-, !|--s! _
● ,,|- },
●\,\!
\, ,
)
-- . . . . . . . . . ,
. . :
WƆƆ|- ,No}|No. ,
- - - -디

Page 2

மரபும் மார்க்ஸியவாதியும்
சி. சிவசேகரம்
SOUTH VISION
\y
சவுத் விஷன்

Page 3
Marabum Marxiavaathiyum S. Sivasegaram First Published: December 1999 Published by
Vyf
SOUTH VISION 6, Thayar Sahib lil Lane, Chennai - 600 002.
RS. 20.00
மரபும் மார்க்ஸியவாதியும் சி. சிவசேகரம்
முதற் பதிப்பு டிசம்பர் 1999 வெளியீடு
· Vyf சவுத் விஷன்
6. தாயார் சாகிப் 2ஆவது சந்து, சென்னை - 600 002.
ரூபாய் 20.00
அச்சாக்கம் : மணி ஆப்செட் பிரிண்டர்ஸ். சென்னை - 600 005. லேசர் அச்சு : லேசர் சிஸ்டம். சென்னை - 600 014. அட்டை அச்சாக்கம் பிரிண்ட் ஸ்பெஷாலிட்டி

பொருளடக்கம்
முன்னுரை
மரபும் மார்க்ஸியவாதியும் மதமும் மார்க்ஸியமும் மரபும் மாற்றமும் மானுடருங் கடவுளரும் மதச் சுதந்திரமும் மனிதச் சுதந்திரமும் மு. தளையசிங்கமும் மார்க்ஸியமும்
16 26
37
42
49

Page 4
முனனுரை
ஐந்து குருடர்கள் யானை பார்த்த கதையை நாம் சிறு வயதிற் கேட்டிருப்போம். ஒவ்வொரு குருடனும் யானையின் ஒரு பகுதியை மட்டுமே தொட்டுத் தடவி ஆராய்ந்து, அப்பகுதியையே யானையின் முழுமையெனக் கருதித் தான் தொட்ட பகுதி தானறிந்த எப்பொருளை ஒத்திருந்ததோ அப்பொருளையே யானையும் ஒத்திருக்கும் என்ற முடிவுக்கு வந்து, மற்றவர்களுடன் கடுமையாக வாதிட்டதைப் பற்றிச் சிரித்திருப்போம். மனித அறிவும் பல சமயங்களில் குருடர் யானை பார்த்த வகையில் அமைந்து விடுகிறது. எந்தவொரு விஷயத்தையும் பல்வேறு கோணங்களினின்றும் பார்க்கவும் முழுமையையும் பகுதியையும் உறவுபடுத்தியும் வேறுபடுத்தியும் ஆராயவும் தவறும்போது, நமது பார்வை குறைபாடுடையதாகி நமது முடிபுகள் முழுமையற்றனவாகின்றன.
மனிதனது சுற்றாடல் பற்றிய மனித அறிவு தனி முழுமையற்றதெனினும் மனிதன் வேண்டி நிற்கும் அறிவு மனித வாழ்க்கைக்குத் தொடர்பானதும், மனிதனது தேவைகளின் அடிப்படையில் எழுவதும் என்பதால், அறிவு அறிவுக்காகவே என்ற முறையில் அறிவு தேடப்படுவதில்லை.
மனிதனது பல்வேறு தேவைகளையும் நிறைவு செய்யவும் மனித வாழ்வைச் செழுமைப்படுத்தவும் தேவைப்படும் அறிவு மனித சமுதாயத்தினதும் சமுதாய நடைமுறையினதும் விருத்தியுடன் இணைந்தே வளர்ச்சி பெறுகிறது. மனித இனத்தின் எதிர்காலம் பற்றியும் மனிதர் வாழுஞ் சுற்றாடல் பற்றியும் அக்கறை கொண்ட சமுதாயப் பார்வையையும் நடைமுறையையும் சார்ந்து நிற்கும் அறிவு வேட்கை, மனிதரது தேவைகளை நிறைவு செய்யும் நோக்கில் நிறைவு பெற முடிவும். சுயநலத்தையும் சுரண்டலையுமே மனித சமுதாய விருத்தியின் ஆதாரமாகக் கருதும் பார்வை குருட்டுத்தனமானது. "புறவுலகம் அநித்தியம், மாயை' என்று கூறி மனித வாழ்வுக்கு அப்பாற்பட்ட ஒரு பேருண்மையைத் தேடுகிறதாகச் செய்யப்படும் பாவனைகளும் குருட்டுத்தனமானவை. இன்றுவரை, மனிதர் தம் குறைவான பார்வைகள் மூலம் பெறும் தகவல்களை ஒன்றிணைத்துப் பொதுவான கொள்கைகளை வகுத்து அவற்றை நடைமுறை மூலம் பரிசீலனை செய்து சீர்ப்படுத்தித் தவறானவற்றை நிராகரித்துப் புதிய கொள்கைகளை வகுத்து மனித அறிவை முன்னெடுத்து வந்துள்ளனர். இந்த மனித அறிவின் இறுதி ஆதாரம் நடைமுறையேயன்றி வேறில்லை.

メ
முன்னுரை/
பொதுமைப்படுத்தப்பட்டு, கொள்கையாக விருத்தி செய்யப்படாத நடைமுறை குறைபாடுடையது. அத்தகைய நடைமுறை அனுபவத்தை மட்டுமே சார்ந்திருக்கும் அறிவு அரைகுறையானது. நடைமுறையினின்று கொள்கைக்கும், கொள்கையினின்று நடைமுறைக்குமான பரிமாறல் மூலமே மனித அறிவு விருத்தி பெற்று முழுமையை நாடுகிறது. ஐந்து குருடர்களும் தத்தமது நேரடி அனுபவங்கட்கு அப்பால் அறிவைத் தேட மறுத்ததாலும் அந்த அனுபவங்களை முழுமையாகக் கருதிப் பொருளின் பிற அம்சங்களைப் புறக்கணித்ததாலும் அவர்களது நடைமுறை குறைபாடான அறிவையே தந்தது. இயங்கியல் சாராத வரட்டுத்தனமான பொருள்முதல்வாதமும் யானை பார்த்த குருடர்களின் நிலையில்தான் உள்ளது.
ஐந்து குருடர்களும் யானையின் ஒரு பகுதியை முழு யானையாகவும், தத்தம் குறுகிய அனுபவங்களை முழுமையானவை எனவுங் கருதித் தவறு செய்தார்களாயினும், அவர்கள் சொன்னவற்றில் உண்மையின் ஒரு சாயலாவது இருந்தது.
அவர்களது விளக்கத்தின் பல்வேறு தவறுகள் அவர்களது நடைமுறையின் போதாமையுடனும் தம் அனுபவத்தை அறிவாக விருத்தி செய்யும் முறையின் குறைபாடுகளுடனும் தொடர்புடையன. ஐந்து குருடர்களைப் பற்றி அறிவீர்கள். ஆறாவது குருடனைப் பற்றி அறிவீர்களா? ஆறாவது குருடன் வேறு வகையானவன். அவனுக்கு யானையைப் பற்றி அறியும் அக்கறையைவிட யானயைப் பற்றித் தான் ஏற்கெனவே கொண்டிருக்கும் கருத்தைப் பலப்படுத்தும் நோக்கமே முக்கியமானது.
மார்க்ஸியம் பற்றியும் மார்க்ஸிய இயக்கங்கள் பற்றியும் இன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பல விமர்சனங்கள் ஆறாவது குருடனுக்குரியன. மார்க்ஸியம் காலத்துக்கும் சூழ்நிலைக்கும் அப்பாற்பட்ட நிரந்தரமான உண்மைகளின் கோவை என்றோ, மனித சமுதாயம் பற்றியும் மனித இருப்புப் பற்றியும் மார்க்ஸ் ஆராய்ந்ததைவிட அதிகமாயும் அந்த ஆராய்ச்சிக்கு வெளியிலும் ஆராய எதுவுமில்லை என்றோ மார்க்ஸியம் கூறவில்லை. மார்க்ஸியம் அறநெறி சாராதது, பொருளுக்கு அப்பால் எதுவுமே இல்லை என்று மார்க்ஸியம் கூறுகிறது. மார்க்ஸியத்துக்கு மனிதனது அக உணர்வு சார்ந்த விஷயங்களை ஆராயும் திறமை இல்லை என்றவாறான குற்றச்சாட்டுகள் சில சமயங்களில் அறியாமை சார்ந்தவை; சில சமயங்களில் விஷமத்தின் விளைவானவை.
மார்க்ஸ் என்கிற தனி மனிதன், மனித வாழ்க்கையின் சகல அம்சங்களையும் ஒன்றுவிடாமல் ஆராய்ந்து அறுதி இறுதியான முடிவுக்கு வந்ததாக விஷயமறிந்த எந்த மார்க்ஸியவாதியும் கருதியதில்லை. மார்க்ஸின் சாதனைகள் அவருக்கு முன்னர் வந்து போன பல பெரும் அறிஞர்களதும் சிந்தனையாளர்களதும் சாதனைகளின் அடிப்படையிலானவை. மார்க்ஸ் நமக்கு வழங்கியது ஒரு வலிய ஆய்வு முறை; அதைச் சரிவரப் பயன்படுத்துவதிலேயே

Page 5
6 சி. சிவசேகரம்
மார்க்ஸியத்தின் விருத்தி தங்கியிருக்கிறது. மாக்ஸ் தொடாத விஷயங்கள் மார்க்ஸியம் தொடக்கூடாதவையோ தொட இயலாதவையோ தொட அஞ்சுவனவோ அல்ல. மார்க்ஸ் மனித வரலாற்றை ஆராய்ந்து அதன் பொதுவான போக்கைச் சரிவரக் கூறினாரேயொழிய மனித இனத்தின் எதிர்கால வரலாற்றை இம்மியும் பிசகாதபடி ஆரூடங்கூற முற்படவில்லை. ஏகாதிபத்தியம் எவ்வாறு விருத்தியடையும் என்பது பற்றி மார்க்ஸ் தெளிவுபடுத்தவில்லை யென்பதால், ரஷ்யப் புரட்சிக்கு வழிகாட்டிய லெனின் மார்க்ஸை மிஞ்சினாரென்றோ பொய்ப்பித்தாரென்றோ நாம் கருதுவதற்கில்லை. அது போன்றே, மானுடர் சுற்றாடலின் சீரழிவு மூலவளங்களின் கொள்ளையும் அதன் விளைவான பற்றாக்குறையும்போன்ற புதிய நெருக்கடிகளும் மார்க்ஸால் ஆராயப்படவில்லை என்பதனால் அவை மார்க்ஸியத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்களாகிவிடவில்லை. அவற்றின் விருத்தி வர்க்கப் போராட்டத்தைப் பொய்ப்பித்துவிடவில்லை; மாறாக, ஏகபோக முதலாளித்துவம் எவ்வாறு சமுதாய நெருக்கடியை மேலும் உக்கிரமாக்கி வருகிறது என்றே உணர்த்துகிறது. வர்க்க சமுதாயத்தில் பல்வேறு சமுதாய முரண்பாடுகளிருந்தபோதும் வர்க்க முரண்பாடே முதன்மையானது. ஆயினும் அது எப்போதுமே நேரடியாகத் தன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. பிரதான முரண்பாடு தீர்க்கப்படாத நிலைமைகளிற்கூட இரண்டாம்பட்சமான முரண்பாடுகள் உக்கிரமடையலாம். அதனால் பிரதான முரண்பாடு இல்லாமற் போவதில்லை; அதன் முக்கியத்துவம் குறைந்து விடுவதில்லை சமுதாய முரண்பாடுகளின் முக்கியத்துவத்தை, சமுதாய முழுமையின் அடிப்படையில் வரலாற்று ரீதியாக மதிப்பிட இயலுமே அல்லாமல், வரையரைக்குட்பட்ட நிலைமைகளின் கீழும் குறுகிய கால அளவிலுமல்ல.
மார்க்ஸியத்தைக் கடந்து செல்லுகிறதாகவும் மார்க்ஸியம் தொடத் தவறியவற்றை மார்க்ஸியத்திற்கு வழங்குவதாகவும் பாசாங்கு செய்வோர் பலர் சிலர் எங்கேயோ எவரோ சொன்னதன் உண்மையை ஆராயாமலே கருத்துகளை இரவல் வாங்கித் தமக்கு விளங்காத மார்க்ஸியத்துக்கு மருத்துவம் செய்ய முற்படுவார்கள் சிலர் மார்க்ஸிய நடைமுறையின் பிரச்சனைகளை சமுதாய நடைமுறையின் لأن تن ـ (68 لا لابوا إلى ஆராயாமல் கருத்து முதல்வாதத்திற்குள் தீர்வுகளைத் தேடுவார்கள். வேறு சிலர் அதிதீவிர நிலைப்பாடுகளை மேற்கொள்வார்கள் அல்லது நவ மார்க்ஸியவாதிகள் என்ற போர்வையுடன் உலவுவார்கள். எவ்வாறாயினும் அவர்களது நோக்கம் மார்க்ஸிய லெனினிஸக்கட்சிகளையும் வெகுஜன இயக்கங்களையும் தூற்றிப் பழிப்பதே.
மார்க்ஸிய இயக்கம் நடைமுறை சா ந்தது. அதன் விருத்தியின் போக்கில் தவறுகள் நேராமல் இருக்க டியாது. ஆயினும் அதன் பாட்டாளிவர்க்கச் சார்பு அத்தகைய தவறுகளைத் திருத்தி இயக்கத்தை மேலும் வலிமைப்படுத்தி முன் செல்லுமாறு உந்துகிறது. விமர்சனங்கள் இல்லாமல்

முன்னுரை
தவறுகள் திருத்தப்பட முடியாது. விமர்சனங்கள் நேரடியானவையா, சாடையாகச் சொல்லப்படுவனவா, சூடானவையா, தண்மையானவையா என்பதைவிட ஆக்கபூர்வமானவையா, அழிவுத் தன்மையினவா, சினேகமானவையா பகைமையானவையா என்பதே முக்கியமானது. அந்த அடிப்படையிலேயே விமர்சனங்கட்கு மார்க்ஸிய இயக்கம் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
மார்க்ஸிய இயக்கத்துள் பெரும் விவாதங்கள் பல நிகழ்ந்துள்ளன. பிணக்குகளும் பிளவுகளும் நிகழ்ந்துள்ளன. இவை ஒருபுறம் மார்க்ஸிய இயக்கத்தைப் பலவீனப்படுத்தினாலும் தவறுகளை அடையாளங் காணவும் திருத்தவும் வழிகோரிய அளவில் பயனுள்ளவையே. மார்க்ஸியத்தின் விரோதிகள் மார்க்ஸிய இயக்கத்தின் விருத்திக்குப் பாதகமான எதையுமே வரவேற்றுப் போற்றக் கூடியதில்லை. உலகின் ஒடுக்கப்பட்ட மக்களது பாட்டாளி வர்க்கத்தினதும் போராட்டங்களைப் பிளவுப்படுத்திப் பலவீனப்படுத்தும் தேவை அவர்கட்கு உண்டு. அந்தத் தேவையை நிறைவு செய்ய மார்க்ஸியம் பற்றிய ஆராய்வு என்ற பேரில் மார்க்ஸிய விரோதப் பொய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன; மார்க்ஸியத்தைத் திருத்தி அமைக்கிறோம் என்ற பேரில் மார்க்ஸிய இலக்கை திசை திருப்பும் முயற்சிகள் ஊக்குவிக்கப் படுகின்றன. இங்கே அவர்கட்கு ஆறாவது குருடனின் பணி அவசியமாகிறது.
நமது சமுதாயச் சீரழிவின் விளைவாக, போலித்தனமான புத்திஜீவி மனோபாவம் நமது மத்தியதர வர்க்கத்தினர் நடுவே மலிந்துள்ளதால் மார்க்ஸியம் பற்றி ஆறாவது குருடனுடைய வர்ணனைகளை நாம் அடிக்கடி கேட்க நேருகிறது. சில வேளைகளில் அதற்குப் பதிலளிக்க வேண்டிய தேவை நமக்கு ஏற்படுகிறது. மார்க்ஸியம் பற்றிய எல்லாப் பொய்ப் பிரசாரங்கட்கும் பதில் எழுதிக் கொண்டிருக்க நமக்கு அவகாசமில்லை. ஆயினும் சில முக்கியமான விஷயங்கள் பற்றி மார்க்ஸியத்தின் நிலைப்பாட்டை விளக்குவது அவசியமாகிறது. இந்த வகையில் என்னால் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட மூன்று கட்டுரைகட்கு நூல் வடிவம் தரப் புதிய பூமி வெளியீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதைவிட விரிவான ஒரு நூலை நான் எழுதும் வாய்ப்பும் வசதியும் குறைவாக உள்ள நிலையில் இக்கட்டுரைகள் மார்க்ஸியத்தின்மீது சேறு வீசும் முயற்சிகளை முறியடிக்க ஒரு சிறு பங்கையேனும் அளிக்கும் என நம்புகிறேன்.
இக்கட்டுரைகட்கு நூல் வடிவம் தர் வாய்ப்பளித்த புதிய பூமி, சென்னை புக்ஸ் நூல் வெளியீட்டாளர்கட்கு என் நன்றி. இலண்டன் 10-1-81 சி. சிவசேகரம்

Page 6
1.
மரபும் மார்க்ஸியவாதியும்
மொழி, இலக்கிய மரபுகள் பற்றியும் மதம், சடங்குகள், சம்பிரதாயங்கள் என்பன பற்றியும் மரபுவாதிகள் கொண்டுள்ள கருத்துகளும் மார்க்ஸியவாதிகள் கொண்டுள்ள கருத்துகளும் அடிப்படையில் முரணானவை. அதேவேளை மார்க்ஸியவாதிகளது நிலைப்பாடு பகுத்தறிவுவாதிகள் எனப்படுவோரதும் அவர்களைச் சார்ந்தோரதும் நிலைப்பாட்டினின்று மிகவும் வேறுபட்டது. இந்த வேறுபாடு அடிப்படையான சிந்தனை முறை சார்ந்தது. சில சமயங்களில் நடைமுறைப் பிரச்சனைகளை மார்க்ஸியவாதிகள் அணுகும் முறையும் கையாளும் விதமும் மரபு பேணும் நிலைப்பாடு சார்ந்ததாகவே சிலருக்குத் தென்படலாம். பகுத்தறிவுவாதிகள் எனப்படுவோர் இதன் காரணமாக மார்க்ஸியவாதிகளுடன் பெரிதும் முரண்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. ஆயினும், பகுத்தறிவு இயக்கத்தின் நடைமுறை, தென் இந்தியாவில் அவர்களையே தம் சிந்தனை முரண்பாடுகளது கைதிகளாக்கிவிட்டதை நாம் காணலாம்.
மனித வாழ்க்கையை நாம் உற்று அவதானித்தால், எத்தனையோ, பகுத்தறிவுக்கு ஒவ்வாத, தேவையற்ற காரியங்களைக் காணலாம். இவை இல்லாமற் போவதால் மனிதனது நேரமும் உழைப்பும் பெருமளவில் மீதப்படுத்தப்பட்டுப் பயனுள்ள திசைகளில் பிரயோகிக்கப்படலாம் என்ற வாதம், மேலோட்டமாக நோக்கும்போது, மிகவும் சரியாகவே படலாம்.

முன்னுரை/7 9 ஆயினும் இது மனிதன் என்கிற சமுதாய விலங்கின் தன்மையை அதன் வரலாற்றுச் சூழலினின்று பிரித்துப் பார்ப்பதன் விளைவேயாகும். இந்த இடத்தில்தான் மரபுவாதியும் பகுத்தறிவுவாதியும் தமது மாறா நிலையியலில் ஒருமை காண்கிறார்கள். மரபுவாதி சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் நிரந்தரமான நியதிகளாக, சமுதாயச் சூழலுக்கு அப்பாற்பட்ட உண்மை சார்ந்தவையாகவே எண்ணுகிறான். பகுத்தறிவுவாதியும் அவற்றைச் சமுதாயத்தின் வரலாற்றுச் சூழலுக்குப் புறம்பாகவே வைத்து நோக்குகிறான். பண்டைய இந்தியப் பொருள் முதல்வாதம் (லோகாயதம்) நால் வேதங்களின் அடிப்படையிலான மதங்களை இவ்வாறே அணுகியது. மரபின் வலிமையும், மரபை எதிர்த்தோர்க்கு அதனை முழுதாக விளங்கிக்கொள்ளும் ஆற்றல் இல்லாமையும் பொருள் முதல்வாதிகளது வீழ்ச்சிக்குக் காரணமாயின. இந்திய மெய்யியல் வரலாற்றில் அவர்களது தோல்வி அவர்களது மாறாநிலையியல் அணுகுமுறையின் தோல்வியே எனலாம். இன்றைய பகுத்தறிவுவாதியின் நிலைப்பாடு பழைய லோகாயதவாதியினதினின்றும் அதிகம் முன்னேறிய ஒன்றல்ல.
இந்திய மரபும், வாழ்க்கை முறையும் பற்றிய ஆராய்வை அதற்குரிய வரலாற்றுப் பின்னணியில் மேற்கொள்வதன் மூலமே மரபை சரியாக விளங்கிக் கொள்ளவும் இந்தியத் துணைக் கண்டச் சமுதாயத்தை அதன் சீரழிவினின்று மீட்கவும் முடியும். மரபுடன் குருட்டுத்தனமாக மோதுவது, இறுதி ஆராய்வில் பிற்போக்கான சக்திகளையே ஆதரித்து நிற்கிறது. இந்திய சமுதாயத்தின் மரபுகட்கு அடிப்படையாக அமைந்துள்ள நால் வேதங்களையும், அதற்குப் பிற்பட்ட பழம் நூல்களையும் மரபுவாதிகள் தெய்விகமானவையாகப் போற்றினர். காலப்போக்கில் சமுதாய மாற்றங்கள் அவற்றை வியாக்கியானம் செய்வதில் புதிய பிரச்சனைகளை உண்டாக்கின. இதன் விளைவாக வேத நூல்கள் வேத மரபு சார்ந்தவர்கள் மத்தியில் முரண்பாடான கருத்துகளை உருவாக்கியது மட்டுமன்றி, வேத நூல்களை முற்றாகவே நிராகரிக்கும் சிந்தனை முறைகளும் ஏற்படுத்தப்பட்டன. வேதங்கள் சொல்வன சரியா பிழையா, சரியாயின் அதன் உண்மைப் பொருள் என்ன என்ற விதமாக வாதங்கள் வளர்ந்தனவேயொழிய, நவீன சிந்தனையும் மார்க்ஸிய வரலாற்று அணுகுமுறையும் பரிச்சயமாகும் வரை, வேதங்கள், தம் ஆரம்பத்தில் கூற முனைந்தவை யாவை, அவை எதைப் பிரதிபலித்தன என்பதில் அதிகம் தெளிவு பிறக்கவில்லை எனலாம்.
கொசாம்பி, டாங்கே போன்றோர். வேத நூல்கள் அவை உருவான காலத்தின் சமுதாய வாழ்க்கை முறையையே அடிப்படையில் பிரதிபலித்தன என்பதை விளக்கினார்கள். சடங்குகள், சம்பிரதாயங்கள்

Page 7
می - .0 V சி. சிவசேகரம்
எல்லாமே ஒரு கூட்டு சமுதாய வாழ்க்கை முறையினின்றும் உருவானவை என்று தெளிவுபடுத்தினர். சமுதாய அபிவிருத்தி, வர்க்க சமுதாயத்தின் வளர்ச்சி என்பன நீதிகள், சாஸ்திரங்கள் ஆகியவற்றுக்கு வழிகோலின. ஒரு சுரண்டல் சமுதாய அமைப்பு ஸ்திரமானபோது இவ்வாறான மரபுகள் எல்லாம் ஆளும் வர்க்கத்தினருக்குச் சாதகமான முறையில் அச்சமுதாய அமைப்பைப் பேணும்விதமாக ஒரு நிரந்தரத் தன்மை எய்தின. அந்த அமைப்பு, ஒரு நீண்ட வரலாற்றுக் காலக்கட்டத்துக்குப் பின்பு, சமுதாய மாற்றங்கட்கு ஈடுகொடுக்க முடியாமலும் சமுதாய மாற்றங்களை வேண்டி நின்ற சூழ்நிலைகட்கு முரண்பட்டும் நின்றது. இதன் விளைவாக, இம்மரபுகள் அவற்றின் சாராம்சத்தின்ன்று விடுபட்டு யந்திர ரீதியாகவே பின்பற்றப்பட்டு வந்துள்ளன. சில சூழ்நிலைகளில் சமுதாயச் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் இவற்றைக் குரூரமாக விகாரப்படுத்தியதும் உண்டு. இவ்வாறான விகாரப்படுத்தல் ஆளும் வர்க்கத்தின் குறுகிய கால நலனையொட்டி அமைவதும் பெரும்பாலும் தவிர்க்க முடியாததே.
மரவு வழியாக வந்த விஷயங்கள் எல்லாமே சரியானவை - உள்ளபடியே பேணப்பட வேண்டியவை என்ற வாதம், சமுதாய மாற்றங்களின் விளைவாகத் தம் வர்கக் நலன்களும் அதிகாரங்களும் அழிந்துவிடுமே என்று அஞ்சும் ஒரு வர்க்கத்துக்கு உரியன. எனினும், மனித சமுதாயத்தின்மீது மரபின் பிடிப்பு மிகவும் பலமானது: பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்கள், சடங்குகள், நம்பிக்கைகள் போன்றன காலப் போக்கில் மக்கள் மத்தியில் ஊறிப் போய்விடுகின்றன. சமகாலச் சூழலில் அவசியமற்றன மட்டுமன்றிக் கெடுதலானவை என்று பரவலாகவே தெரிந்த சில மரபுவழிப் பயிற்சிகளும் கடைபிடிக்கப்படுகின்றன. நீண்ட கால நடைமுறையும் சமுதாய மாற்றங்களின் நிர்ப்பந்தங்களுமே மனிதனை அவற்றின் பிடிப்பினின்று மெல்ல மெல்ல விடுவிக்கின்றன. அப்படியுங்கூடச் சில காரியங்கள் குறைந்தபட்சம் பாசாங்காகவேனும் கடைபிடிக்கப்படுவதை நாம் உணராம். இத்தகைய சூழ்நிலையில் மரபை அப்படியே பேண விரும்புவோர், அது சாத்தியமற்றது என்று தெரிந்தும் அதன் காரணங்களை உணரவோ, ஆராயவோ முடியாமல் 'கலி முற்றிவிட்டது, காலம் கெட்டுப் போயிற்று என்று முணகிக்கொண்டே நைந்து சிதைந்த மரபைத் தம்மால் முடிந்தவாறு பேண முனைகிறார்கள். சில சூழ்நிலைகளில் சமுதாயச் சிக்கல்கள் இவர்கட்குச் சாதகமாக அமையும்போது வேதகாலத்தை நோக்கிச் சமுதாயத்தைச் செலுத்தப் போராடுவார்கள். இவர்கள் கூறும் வேதகாலம் என்னவென்று இவர்கட்குத் தெரியுமா என்பது வேறு விஷயம். ஆயினும் படுபிற்போக்குச் சக்திகள் இவர்களுடன் ஒன்றிணைவது மட்டும் தவிர்க்க முடியாதது.

மரபும் மார்க்ஸியவாதியும்
மரபு வழி வந்த மூட நம்பிக்கைகளையும் பகுத்தறிவுக்கொவ்வாத பழக்க வழக்கங்களையும் களைந்தொழிய முனையும் பகுத்தறிவுக் காரர்கள், அவற்றைச் சமுதாய முழுமையின் கூறுகளாகவும் வாழ்க்கையினின்று ஒரேயடியாகப் பிரித்து நோக்கமுடியாத விஷயங்களாகவும் அவதானிப்பதில்லை. எனவே, இவர்கள் சமுதாயத்தைப் பகுதி பகுதியாகக் கழற்றிச் சீர்திருத்த முனையும் "மெக்கானிக்குகளாகி விடுகிறார்கள். இந்தப் பழுதுப் பார்த்தல் சீர்திருத்தத் திருமணம், 'கலப்புத் திருமணம்', 'பிள்ளையார் சிலை உடைப்பு, ராகு காலத்தில் சுப காரியங்கள் செய்வது போன்று துண்டு துண்டாக நடைபெறும். இதன் ஒட்டுமொத்தமான விளைவு என்னவென்றால், ஒரு சடங்கின் இடத்தில் இன்னொரு சடங்கும் ஒரு சமுதாய ஊழலின் இடத்தில் இன்னொரு சமுதாய ஊழலும் வந்து அமைவதுதான். மரபின் பொருந்தாமை காரணமாக ஏற்படும் பிரச்சினைகளையே பிரதான முரண்பாடு என்று இனங் காண்பதால் இவர்களால் பெரும்பான்மை மக்களை வென்றெடுக்க முடிவதில்லை. முடிவில் இவர்களது வைத்தியமே ஒரு நோயாகி விடுகிறது. சாதி எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பாகி இன்று அதுவே பிராமணரல்லாத உயர்சாதியினரின் பார்ப்பணியமாகி விட்டமை இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
பகுத்தறிவுவாதிகள் தாம் தூக்கியெறிய முனைந்த பழைமையின் இடத்தில் எதை வைப்பது என்பது பற்றிய தெளிவில்லாமலே இருந்தார்கள். இவர்களது வரலாறு சாராத கண்ணோட்டம் முழுமையும் தெளிவுமற்ற ஒரு சிந்தனை போக்குக்கே இடமளித்தது. ஆரம்ப காலங்களில் (பல்வேறு அரசியல், சமுதாய காரணங்களால்) இவர்களை நோக்கி வந்த இளைஞர்களை இவர்களால் வழிகாட்டி வளர்த்தெடுக்க முடியவில்லை. புராணப் படத்தின் இடத்தில் எம்.ஜி.ஆர். சிவாஜி பாணியில் காதல், சரித்திர, சமுதாயச் சீர்திருத்த அரை வேக்காடுகளையே இவர்களால் தர முடிந்தது. சமஸ்கிருத எதிர்ப்பு தனித் தமிழுக்குப் போக முனைந்து திசை தெரியாமல் திண்டாட நேர்ந்தது. கலை இலக்கியத் துறையிலும் மேடைப் பேச்சிலும் கூட இவர்கட்கு தாமே உருவாக்கிய ஒரு போலித்தனத்தின் விளிம்பைத் தாண்ட முடியாமல் போய் விட்டது. இன்றைய அரைகுறை முதலாளித்துவ வளர்ச்சி, நவகாலனித்துவத் தாக்கத்தின் விளைவுகளைச் சரிவர அடையாளங் காண முடியாமை இவர்களது அணுகுமுறையின் இயங்கியல் சாராத தன்மையையும் அதன் தோல்வியையுமே குறிக்கின்றது.
மார்க்ஸியவாதிகளது அணுகுமுறை எப்போதுமே சரியாக இருந்தது என்றோ அவர்களது நடைமுறை தவறுகட்கு அப்பாற்பட்டது என்றோ மார்க்ஸியத்தின் பேரில் வரட்டுத்தனமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வில்லை என்றோ வாதிட நான் முனையவில்லை. ஆயினும் மனித அறிவின்

Page 8
சி. சிவசேகரம்
வரையறைகளையும், ஆராய்வு முறைகள் தவறுகட்கு உட்படலாம் என்பதையும் மார்க் ஸியம் மறுக்கவில்லை. வரட்டுத்தனமான
பகுத்தறிவுவாதம் மார்க்ஸியத்துக்கு என்றுமே உடன்பாடானதல்ல. தவறுகளும், தோல்விகளும்கூட ஒரு மார்க்ஸியவாதியின் அறிவுத் தேடலில் பயன்படவே செய்கின்றன. எனவே மார்க்ஸியவாதி தன் அறிவை என்றைக்குமே சரியானதாகவும், முழுமையானதாகவும், மாற்ற முடியாத ஒன்றாகவும் கருதுவதில்லை. புதிய தகவல்களுக்கும் அனுபவங்கட்கும் சூழ்நிலைகட்கும் வரவேற்புள்ள மனத்தில் மூடப்பட்ட சிந்தனைக்கு இடமில்லை.
மார்க்ஸியவாதிகள் மரபை மனித சமுதாய வரலாற்றின் அடிப்படையில் வைத்து நோக்குவதால் அங்கு ஒருபுறம் சம காலத்துக்குப் பயனுள்ள வரலாற்றுவழிச்ச்ாதனைகளையும், இன்னொருபுறம் வளர்ச்சியின் போக்கிற்கு இசையாமல் இன்னும் ஒட்டிக் கொண்டு இருக்கும் விஷயங்களையும் வேறுபடுத்தி அடையாளம் காணமுடிகிறது. பயனுள்ள அம்சங்கள் என்பவைகூட முற்றாகவே ஏற்ககூடிய வடிவில் குறைபாடுகள் இல்லாமல் இருப்பவையும் அல்ல பயனற்றவை யாவுமே ஒரே வீச்சில் பாரதூரமான எதிர் விளைவுகள் இல்லாமல் நீக்கப்படக்கூடியனவும் அல்ல. எனவே சமுதாய யதார்த்தத்தை மனத்தில் வைத்துக்கொண்டே மரபு சார்ந்த விஷயங்களை அணுக வேண்டியுள்ளது. கழிக்கப்பட வேண்டிய எந்த அம்சமும் பரவலான சமுதாய அங்கீகாரமின்றிக் கழிக்கப்படுவதில்லை. எனவே பரந்துபட்ட மக்களது நலன்களுக்கு விரோதமாக அமையும் அம்சங்களைத் தெளிவாக இனங்காண்பதும் எடுத்துக்காட்டுவதும் ஒரு முக்கியத் தேவையாகிறது. அது மட்டுமன்றி நிராகரிக்கப்படும் ஓர் அம்சம் போவதால் ஏற்படும் வெற்றிடத்தை எவ்வாறு நிரப்புவது என்ற கேள்வியும் முக்கியமாகிறது. இந்த அடிப்படையில்தான் மத சுதந்திரம், வழிபாட்டுச் சுதந்திரம், மரபுகட்கு மதிப்பளித்தல் என்பன சோஷலிஸ் சமுதாய அமைப்பில் வலியுறுத்தப்படுகின்றன. சமய, கலாச்சார மரபுகள் சமுதாய விரோதமான முறையில் பிற்போக்குச் சக்திகளால் பயன்படுத்தப்படும் சூழ்நிலைகளிலும் சமுதாய மாற்றத்துக்கு.முரணாக நிற்கும் சூழ்நிலைகளிலும் மட்டுமே சம்பந்தப்பட்ட அம்சங்கள் பிரச்சனைக்குரியனவாகின்றன. இங்கேகூட ஒரு மதம் இன்னொரு மதத்துக்கு வரலாற்று ரீதியாகக் காட்டி வந்த சகிப்புத் தன்மையைவிட அதிகமான அளவில் சோஷலிஸ் சமுதாயம் மதங்கள் எல்லாவற்றுக்குமே சகிப்புத் தன்மை காட்டி வந்துள்ளது.
மரபு வழியாக வந்த் தொழில்நுட்பம், மருத்துவம், கைத்திறன், கலை வடிவங்கள் என்பன சமுதாய மாற்றத்தின்போது வெவ்வேறு அளவுகளில் பாதிப்புக்கு உள்ளாகின்றன. நம்முடையதுபோன்ற சமுதாயத்தின் வளர்ச்சிப்

மரபும் மார்க்ஸியவாதியும்
போக்கில் நிகழ்ந்த குறுக்கீடு காரணமாகவே சமுதாய மாற்றம் ஏற்பட்டதால், நம் பாரம்பரியத்தின் சகல அம்சங்களும் தேக்கத்துக்கோ பெரும் வரலாற்று முறிவுக்கோ உட்பட நேர்ந்தது. இதன் தீய விளைவுகளினின்று மீள்வது மரபுவாதிக்கு வரலாற்றில் பின்னோக்கிப் போவதன் மூலமே சாத்தியமென்று படுகிறது. மரபுவாதியின் கண்ணில், நவீன சமுதாயத்தின் பிழைகளை யெல்லாம் அகற்றிவிட்டு ஐநூறோ ஆயிரமோ ஐயாயிரமோ ஆண்டுகள் முன்பிருந்ததாகக் கருதப்படும் ஓர் அமைப்பின் அடிப்படையில் பழைய விஞ்ஞானக் கலை வடிவங்களை மீண்டும் உயிர்ப்பிப்பதன் மூலம்ே சமுதாயம் உருப்பட முடியும் என்று தெரிகிறது;கு ஓரிரண்டு விஷயங்களில் பழைமை எதையாவது விட்டுக் கொடுக்கலாம் என்ற சலுகை போக பழைமை மீது இவர்களது நம்பிக்கை அசைக்க முடியாத ஒன்றாகவுள்ளது.
பகுத்தறிவுவாதி மரபைச் சிதைந்து போன அதன் சமகால வடிவில் நோக்குகிறான். அது அவனுக்கு முற்றாக அகற்றப்பட வேண்டிய ஒன்றாகவே படுகிறது. அங்கே அதன் வரலாற்று முக்கியத்துவமோ மனித உணர்வுகள் சார்ந்த தேவைகளோ, பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயங்களாகி விடுகின்றன. பழைய லோகாயதவாதி மாதிரி, ஜடத்தன்மையானவையாகவே விஷயங்களைக் கருதுகிறான்.
மார்க்ஸியவாதியைப் பொறுத்தவரை, மரபானது மனித குலத்தின் சாதனை என்ற வகையில் மதிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறதே ஒழிய வணக்கத்துக்குரிய ஒன்றாக அல்ல. அதேபோல் மரபு எத்தனை இழிந்து விட்டாலும் அதில் மனித மனம் கொண்டுள்ள ஈடுபாடு காரணமாக, மனித உணர்வுகள் மதிக்கப்படவேண்டும் என்பதற்காக, அது கவனத்துடனேயே கையாளப்படுகிறது. அது மட்டுமின்றி மரபு வழியான விஞ்ஞான, கலைச்சாதனைகளையும் பாரம்பரிய அறிவையும் ஒட்டு மொத்தமாக நிராகரிக்கும் போக்கோ புறக்கணிக்கும் தன்மையோ மார்க்ஸியவாதிக்கு ஏற்புடையதல்ல. ஆயினும், சமகால விஞ்ஞானம், கலை என்பன மேற்கிலிருந்து திணிக்கப்பட்டவை' என்பதற்காக மட்டுமே அவற்றை நிராகரித்து, நம் பாரம்பரியத்தின் அடிப்படையிலேயே புதிய ஆக்கங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் மார்க்ஸியவாதிகள் கருதுவதற்கில்லை. எதுவுமே 'புதியது' என்பதாலோ 'பழையது என்பதாலோ மட்டுமே ஏற்கத்தக்கதாகிவிட முடியாது. சமகாலச் சூழலுக்கும் வரலாற்றுப் போக்குக்கும் சார்பாகவே ஒவ்வொரு விஷயமும் மதிப்பிடப்படுகிறது. இங்கே இயந்திர ரீதியான அணுகுமுறைக்கு இடமே இல்லை.
மரபு சார்ந்த விஷயங்களைக் கையாளும் நடைமுறையான பிரச்சனைகட்கு அப்பாற்பட்டதல்ல. சில அரசியற் சூழல்களும் சமுத

Page 9
சி. சிவசேகரம்
நெருக்கடிகளும் நிர்ப்பந்தங்களும் தவறான முறையில் விஷயங்களைக் கையாளும் நிலையை உருவாக்கி விடுகின்றன. ஆயினும் விழிப்புணர்வோடு செயற்படும் மார்க்ஸிய இயக்கத்திற்கு இவை நிவர்த்தி செய்ய முடியாத தவறுகள் அல்ல. கலாச்சாரப் புரட்சியின்போது இவ்வாறு இழைக்கப்பட்ட பல தவறுகள் இன்று நிவர்த்திக்கப்பட்டுவிட்டன. ஆயினும் மார்க்ஸியத்தின் பேரால் தவறான அணுகுமுறைகள் முன் வைக்கப்படுவதை யிட்டு நாம் என்றுமே எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.
மேலை நாட்டு நவகொலனித்துவ கலாச்சாரத்தை எதிர்க்கிறோம் என்ற பேரில் பழைய கலை வடிவங்களே நம் கலைகளது எதிர்காலத்துக்கு அத்திவாரமாக அமைய வேண்டும் எனும் வாதமும், பரதமும் கர்நாடக இசையும் புரட்சிக்கு ஒவ்வாதன எனும் வாதமும் மார்க்ஸியத்தின் பேரிலேயே வெவ்வேறு கோஷ்டிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன. பழைய கலை வடிவங்களை மீட்டுப் பயன்படுத்துவதும் அவற்றையே அடிப்படையாக அமைப்பதும் வெவ்வேறு என்பதையும் புரட்சி என்றால் வெறும் 'கத்தியும் ரத்தமும் சங்கதி அல்ல என்பதையும் இவர்கள் தவற விட்டுவிட்டனர். இவர்களில் சிலர் திருவள்ளுவர் நிலவுடைமையாளரின் பாதுகாவலர் என்ற மாதிரி ஆராய்ச்சி வெடிகுண்டுகளைப் போட்டுவிட்டு, அதற்கான ஆதாரங்களைக் குறட்பாக்களுக்குத் தாம் தரும் வக்கிரமான வியாக்கியானங்களிலேயே தேடுவார்கள். துரதிர்ஷ்டவசமாக, எழுதப்பட்ட வரலாறு என்பது இந்திய வரலாற்றியல் மரபின் மிகவும் பலவீனமான அம்சம் என்பது போக, அதை நிதானமாக ஆராய முடியாதவாறு தமிழின் தொன்மை பற்றிய புனைகதைகள் வழி மறித்து நின்றன. அண்மைக் காலங்களில் வரலாற்றியலில், காலம் சென்ற பேராசிரியர் வானமாமலை அவர்களது வழிகாட்டலும், இலக்கியத் துறையில் காலஞ்சென்ற பேராசிரியர் கைலாசபதி அவர்களது விளக்கங்களும் தமிழக வரலாற்றுக்குச் சார்பாகத் தமிழ் இலக்கியங்களை விளங்கிக்கொள்ள ஓரளவு துணைபுரிந்துள்ளன. எனினும் மரபு பற்றிய முன்கூறிய விறைப்பான பார்வை தொடர்ந்தும் மார்க்ஸியத்தின் பேரால் முன் வைக்கப்பட்டே வருகிறது.
சமீப காலமாக, மேலை முதலாளித்துவ வாயிலாக நம்மை வந்தடைந்த தொழில் நுட்பம், மருத்துவம் ஆகியன ஏற்படுத்திய சிக்கல்களையடுத்து, மரபு சார்ந்த விஞ்ஞானம், தொழில் நுட்பம், மருத்துவம் ஆகியவற்றை நோக்கித் திரும்ப வேண்டும் என்ற கருத்து இந்தியாவில் முன் வைக்கப்பட்டு வருகிறது. இது நமக்கு முற்றாகவே புதிய ஒன்றல்ல. ஆயுர்வேதத்துக்குப் புத்துயிரூட்ட இலங்கையில் எடுத்த முயற்சிகள் ஆயுர்வேத வைத்தியர்களுக்கு ஸ்டெதஸ்கோப்பும் வெப்பமானியும் வழங்கி அவர்களது மருத்துவ அத்தாட்சிப் பத்திரங்களைச் செல்லுபடியாக்கி

மரபும் மார்க்ஸியவாதியும்
வைத்ததைவிட எதையுமே பெரிதாகச் சாதித்துவிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆயுர்வேத மருந்துகள் லேபல் ஒட்டிய போத்தலில் வருவதால் அது ஆயுர்வேதத்தை நவீனமயமாக்கிப் பரவலாக்கியதாகி விடாது. இது ஆயுர்வேதத்தை வர்த்தகமயமாக்கிய ஒரு பணி மட்டுமே. மரபுவழி மருத்துவம் சீனாவில் நவீன மருத்துவத்துடன் இணைந்து செயற்பட முடிந்தமைக்குக் காரணம், மரபு முதன்மைப்படுத்தபட்டமை அல்ல - சமுதாயத்துக்குப் பயனுற்ற விஷயங்களை அடையாளங்கண்டு அவற்றை ஊக்குவிக்குமாறு ஒரு சமுதாய மாற்றம் ஏற்பட்டமையே ஆகும். எனவே மரபு தொடர்பான விஷயங்களிலும் வரலாற்று அடிப்படையில் சமகாலச் சமுதாயத்தின் யதார்த்த நிலையைக் கணிப்பில் எடுக்காமல் செய்யும் ஆய்வுகள் ஆய்வாளரை இயங்கியல் மறுப்பான ஒரு நிலைப்பாட்டுக்குத் தன்னை அறியாமலே இட்டுச் சென்றுவிடும். மார்க்ஸியத்தையும் தம் மாறாநிலையினையும் ஒன்றாகக் கருதிக் குழப்பிக் கொள்பவர்கள் நம் அனுதாபத்துக்கு உரியவர்கள்.

Page 10
2 மதமும் மார்க்ஸியமும்
LDதங்களுக்கும் மார்க்ஸியததுக்குமிடையிலான வேறுபாடுகள் அவற்றின் மூலாதாரமான அணுகுமுறையையும் ஆய்வுமுறையையும் சார்ந்தன. அவை பற்றி ஏற்கெனவே பல விரிவான விளக்கங்கள் உள்ளதால், அவை பற்றி இங்கு மீண்டும் எழுத அவசியமில்லை. ஆயினும் மதங்களும் அரசியல் இயக்கங்களும் சமுதாய நடைமுறை சார்ந்தன என்பதால் அவற்றினிடையிலான உறவுக்குச் சமுதாய மாற்றத்தில் முக்கியமான ஒரு பங்கு உண்டு. நாளைய மனித இனத்தின் சுபிட்சத்தையும் விடுதலையையும் விமோசனத்தையும் உறுதிபடுத்தவல்ல சமத்துவ சமுதாயத்துக்கு வழிகாட்டும் மார்க்ஸியத்துக்கும் மதங்கட்குமிடையிலான உறவு அதி முக்கியமானது. இந்த உறவுக்குக் காலத்தாலும் சூழ்நிலையாலும் மாறாத விறைப்பான நிரந்தரத்தன்மை இல்லை. மார்க்ஸிய விரோதிகளும் வரட்டு மார்க்ஸியவாதிகளுமே மார்க்ஸியத்தை மதங்களின் பரம வைரியாகக் காட்டி வந்துள்ளனர். மார்க்ஸிய நூல்களினின்றும் அரசியல் நடைமுறையிலிருந்தும பொருத்தமற்றவாறு மேற்கோள்களையும் முன்னுதாரணங்களையும எடுத்துக் காட்டுவதன் மூலம் மார்க்ஸியம் மனிதர்களது மத நம்பிக்கையையும் வழிபாட்டு உரிமையையும் நசுக்க முற்படுகின்றது என்ற கருத்து நீண்ட காலமாக வளர்க்கப்பட்டுள்ளளது. இது தவறானது மட்டுமல்ல, மிகவும் விஷமத்தனமானதும் கெடுதலமானதுமாகும்
மார்க்ஸியம் நாத்திகத்தை அடிப்படையாக் கொண்டது என்பதில் ஐயமில்லை. ஆயினும் நாத்திகம் மட்டுமே மார்க்ஸியமாகிவிடாது. வரட்டுத்தனமான பொருள்முதல் வாதமும் இயந்திரரீயான ஆய்வுமுறைகளும் மார்க்ஸியத்துக்கு முரணானவை. முதலாளித்துவமும்

மதமும் மார்க்ஸியமும் S.
நாத்திகத் தன்மையுடையது. அதன் நாத்திகம் மிகவும் வஞ்சகமானதும் நேர்மையற்றதுமாகும். முதலாளித்துவம் மனித சமுதாயம் பேணி வந்த உயர் பண்புகளையும் விழுமியங்களையும் சிதைக்கும் தன் முயற்சிக்குத் துணையாகக் கடவுளையும் மதங்களையும் விகாரப்படுத்திப் பயன்படுத்துகிறது. உண்மையாகவே மத நம்பிக்கையும் மனிதாபிமானமும் உள்ள எவரும் எதிர்க்க வேண்டியது முதலாளித்துவத்தையும் அது மதங்களைப் பயன்படுத்தும் முறையையுமே அன்றி மார்க்ஸியத்தை அல்ல. மார்க்ஸியத்தையும் மாக்ஸிய இயக்கங்களையும் மதங்களுடனும் மத நம்பிக்கையுடையவர்களுடனும் மோதவிடமுனைவோர் பரப்பி வரும் சில தவறான கருத்துகளை நாம் அடையாளம் காண்போமானால், மக்களின் மத நம்பிக்கைக்கும் வழிபாட்டுச் சுதந்திரத்துக்கும் எதிரிகள் யாரென்று அறிவது எளிது.
எல்லா மதங்களும் ஒரு பொதுவான அடிப்படையை உடையன என்பது பூரவலாக உள்ள ஒரு கருத்து கருத்து முதல்வாதமும் மாறா நிலையிலுமே அந்த அடிப்படை என்றால், அது மத விரோதமான பல சிந்தனைப் போக்குகட்கும் உரியது. மதங்கள் அனைத்தினதும் தோற்றுவாய் சமுதாயச் சார்பு உடையது. வரலாற்றில், எந்த ஒரு மதத்தாலும் பொருள்முதல் வாதத்தினதும் சமுதாய நடைமுறையினதும் வெளிப்பாடுகளினின்றும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள முடிந்ததில்லை. மதங்கள் தம் விருத்தியின் போக்கில் தம் பொருள்முதல்வாத அடிப்படையினின்று பிரிந்தபோதும் அவற்றால் சமுதாய நடைமுறையின் பொருள்முதல்வாதத் தன்மையினின்று பூரணமாக விடுபட முடியவதில்லை. மோட்ச நரகங்களைக்கூட மனித உணர்வு கருதும் இன்ப துன்பங்களினதும் உயர்வு தாழ்வுகளினதும் அடிப்படையிலும் மதங்கள் வர்ணிப்பதன் காரணம் என்ன? இவ்வாறான இன்ப துன்பங்கட்கு அப்பாற்பட்ட அமைதியை அல்லது ஞான நிலையைப் போதிக்கும் மதங்களும் மதப் பிரிவுகளும் மிகச் சிறுபான்மைப் போக்காகவே காணப்படுகின்றன. எனினும் அவற்றுள்ளுங்கூடச் சமுதாய நடையினதும் மனித சிந்தனையின் பொருள்முதல்வாதத் தன்மையினதும் சுவடுகளை அடையாளங் காணலாம். மதங்கள் யாவுமே கடவுட் கொள்கையுடையன என்று கொள்வதானால், தேரவாத பெளத்தம் கடவுட் கொள்கையை நிராகரிக்கிறது. கடவுளின் தன்மை பற்றிய விளக்கங்கள் மதத்துக்கு மதம் வேறுபடுகின்றன. ஒரு கடவுட் கொள்கைக்கும் பல கடவுட் கொள்கைக்குமுள்ள வேறுபாடு ஒருபுறமிருக்க, கடவுளின் விருப்புவெறுப்புகளையும் ஆணைகளையும் திட்டவட்டமாக வரையறுக்கும் மதங்களும் விருப்பு வெறுப்புகட்கு முற்றிலும் அப்பாற்பட்ட, அறிவதற்கரிய கடவுளை வரையறுக்கும்

Page 11
சி. சிவசேகரம்
மதங்கட்குமிடையே கடவுட் கொள்கையின் பொதுமை எதுவும் இல்லை. மதங்கள் எல்லாமே ஆன்மா என்று ஒன்று இருப்பதாகக் கூறுவதாகக் கருதவும் இயலாது. விவிலிய நூற்சார்புடைய மதங்கள் கூறும் ஆன்மாவும் இந்து மதப் பிரிவுகள் அடையாளங்காணும் ஆன்மாவும் தன்மையில் வேறுபட்டன. பெளத்தம் ஆன்மாவை நிராகரித்து கர்மா என்ற கருத்தை வலியுறுத்துகிறது. அண்மையில் கிறிஸ்துவப் பாதிரிமாரால் மதம் மாற்றப்படும் வரை, அவ்கா இன (அமெரிந்திய மக்கள் இறை நம்பிக்கை உடையோராகவும் ஆன்மா என்பதை ஏற்காதவர்களாயும் இருந்து வந்தனர். இவ்வாறான விஷயங்களை எல்லாம் ஒதுக்கி, மதங்கள் வலியுறுத்தும் ஒழுக்க அறநெறிகள் மத்தியில் ஒருமை உண்டென்ற வாதத்தை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு விதியாக எடுத்து ஒப்பிடும்போது சகல மதங்களும் போதிக்கும் அடிப்படையான பொதுவிதிகளென அதிகம் இல்லை. அவ்வாறான விதிகள் இருப்பின், அவை மனித சமுதாயங்களை நிலைநிறுத்திப் பேணுவதற்கு வேண்டிய சில நடைமுறை அவசியங்களன்றி வேறல்ல.
மதங்களின் பேரால் மனிதர் மனிதரை நீண்ட காலமாக அழித்தொழிக்கவும் அடக்கியாளவும் முற்பட்டுள்ளனர். இது பொதுவாக மதங்கள்மீது ஆளும் அதிகார வர்க்கங்கள் செலுத்தும் ஆதிக்கத்தின் விளை பயனே, மதச் சுதந்திரம், மதங்களிடையே ஐக்கியம் எனும் பெயர்ப் பலகைகளின்கீழ் மார்க்ஸியத்துக்கு விரோதமான ஓர் ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்ப முனைவோர் பற்றி மக்கள் விழிப்பாக இருப்பது அவசியம். எந்த ஒரு மதத்தையும்விட அதிகமாக மனிதரிடையே சமத்துவத்தை மார்க்ஸியம் வலியுறுத்துகிறது என்ற உண்மையை மறைத்து, வரலாற்றுச் சூழ்நிலைகளையும் சமுதாய முரண்பாடுகளின் தன்மையையும் புறக்கணித்து மார்க்ஸியத்தை மத வழிப்பாட்டுச் சுதந்திரங்களின் எதிரியாகக் காட்டுவது பிற்போக்குவாதிகட்குக் கைவந்த கலை, எனவே, மார்க்ஸியவாதிகள் மதம் பற்றிய சரியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது மட்டுமன்றி அதை மக்களுக்குத் தெளிவுபடுத்துவதும் அவசியம்.
"மதம் வெகுஜனங்களின் அபினி" எனும் மார்க்ஸின் சொற்கள் மதம் பற்றிய மார்க்ஸியக் கொள்கையின் பூரண விளக்கமாகக் காட்டப்பட்டு வந்துள்ளன. அபினி ஒரு தீய பொருள். எனவே அது அழிக்கப்பட வேண்டும்' என்ற கருத்தில் சிலரால் முன் வைக்கப்படும் இந்த வாக்கியத்தில், அபினியின் இடத்தை மதத்தை வைத்துப் பார்க்கும்போது மார்க்ஸியம் மதத்தை ஒழித்துக்கட்டுவதையே தன் இலக்காகக் கொண்டுள்ளது போற் தெரியும். "நோக்கம் செயல்முறைகளை நியாயப்படுத்துகிறது" என்ற மாக்கியவெல்லியின் கூற்றை மார்க்ஸின் கூற்றாக்கி, மார்க்ஸியவாதிகள் தம்

மதமும் மார்க்ஸியமும்
இலட்சியத்தின் பேரால் என்ன இழி செயலிலும் இறங்கக்கூடியவர்கள் எனும் விளக்கத்தை முன் வைத்தவர்கள் மார்க்ஸின் சொற்களை திரிபுபடுத்த ஏன் தயங்க வேண்டும்?
மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்கவும் விதி, தெய்வசித்தம் என்றவாறான விளக்கங்களை ஏற்றுச் சமுதாயப் பிரச்சனைகட்குரிய விடைகளை உரிய இடத்திற் தேடாதவாறு திசைதிருப்பவும் ஆளும் வர்க்கங்கள் மதத்தைப் பயன்படுத்தியுள்ளன. நிஜ உலகில் துன்பங்கட்கு முகங்கொடாது தப்பிச் செல்லும் முயற்சியில் அபின் எவ்வாறு பயன்படுகிறதோ அவ்வாறே மதமும் பயன்படுத்தப்படும் நிலையையே மார்க்ஸ் குறிப்பிட்டார். பாட்டாளி வர்க்கம் ஒரு புதிய சமுதாய சக்தியாக வளர்ந்து அதன் அரசியல் உணர்வும் ஸ்தாபனப்படுத்தலும் வேகமாக விருத்தியடைந்து வந்த நிலையில், முதலாளித்துவம் தன்னால் முன்பு நிராகரிக்கப்பட்ட மத நிறுவனங்களுடன் தன் உறவுகளைச் சீர்செய்ய முற்பட்டது. நிலமான்ய சமுதாயத்தின் நிலப்பிரபு வர்க்க நலன்களைப் பேணி நின்ற மத நிறுவனங்கள், புதிய ஆளும் சுரண்டல் வர்க்கத்துடன் உறவுகளைப் புதுப்பிக்கத் தயங்கவில்லை. ஆளும் வர்க்கங்களும் மத நிறுவனங்களும் சமுதாய மாற்றத்தை மறிக்கும் ஒரு கருவியாக மதத்தைப் பயன்படுத்தி வந்த சூழ்நிலையிலேயே, பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கும் மத நிறுவனங்கட்குமிடையே முரண்பாடுகள் வளர்ந்தன. மத நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம், மதநம்பிக்கை, வழிப்பாட்டுச் சுதந்திரம் ஆகிய விஷயங்களில் குறுக்கிடும் துர்ப்பாக்கிய நிலை சில சமயங்களில் ஏற்பட்டதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆயினும் இந்த நிலை ஏற்படுவதற்கு மத நிறவனங்கள் பிற்போக்குவாதி களுடன் தொடர்ச்சியாகக் கொண்டிருந்த நெருக்கமான உறவு ஒரு முக்கியக் காரணம் என்பதை நாம் மறக்கக் கூடாது.
ரஷ்யப் புரட்சியின்போதும் அதனையடுத்து நிகழ்ந்த போராட்டங்களிலும் ரஷ்யாவின் பிரதான கிறிஸ்துவ மத பீடம், பிற்போக்குச் சக்திகளையே பகிரங்கமாகச் சார்ந்து நின்றது. எனவேதான் அங்கு பாட்டாளிவர்க்க அரசுக்கும் கிறிஸ்தவ மத பீடத்திற்குமிடையில் பகைமை ஏற்பட அவசியமாயிற்று. ஒருபுறம் மக்களின் வழிபாட்டு மத நம்பிக்கைச் சுதந்திரங்களைப் பேணவும், மறுபுறம் அதே சுதந்திரங்களின் பேரால் மத பீடங்கள் எதிர்ப் புரட்சிகர நடவடிக்கைகளில் இறங்குவதையும் மத சுதந்திரம் வெகுஜனங்கட்கு விரோதமான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதையும் தடுப்பது அவசியமாயிற்று. இதைச் சரிவரக் கையாள்வதில் உள்ள பிரச்சினைகள் சோவியத் யூனியனின் உள்ளும் வெளியிலும் இருந்த சூழ்நிலைகளால், முக்கியமாக ஏகாதிபத்தியவாதிகளதும்

Page 12
சி. சிவசேகரம்
பிற்போக்குவாதிகளதும் செயல்களால் மேலும் சிக்கலாயின. இதன் விளைவாகச் சில தவறுகள் நேர்ந்தன. எனினும் தவறுகள் நேர்ந்த சூழ்நிலைகளையும் அவற்றைச் சாத்தியமாக்கிய பிற்போக்கு நடவடிக்கைகளையும் மூடிமறைத்து, மார்க்ஸிய அரசு மதங்களை ஒழித்துக்கட்டுவதையே இலக்காகக் கொண்டுள்ளது என்று இன்னும் செய்யப்பட்டு வரும் பிரசாரம் மிகவும் விஷமத்தனமானது. சோவியத் யூனியனுள் உள்ள இன்னொரு முக்கிய மதம் இஸ்லாம் முஸ்லிம்களின் வழிபாட்டுச் சுதந்திரம் பற்றிப் பெரும்பாலும் பிரச்சனை இல்லாமைக்கு காரணம் இஸ்லாமிய மக்களை எதிர்ப்புரட்சிகர மார்க்கத்தில் உந்தும் ஒரு வலிய மதபீடம் இல்லாமையே எனலாம். மத வழிப்பாட்டுச் சுதந்திரங்களின் விஷயத்தில் சோவியத் யூனியனில் இழைக்கப்பட்ட தவறுகளைப் பயன்படுத்தி சோவியத் யூனியனில் சோஷலிஸத்தை ஒழித்துக்கட்டவும் பிற்போக்கையும் மேலை ஏகாதிபத்தியவாதிகளையும் வலிமைப்படுத்தவும் முனைந்துள்ள சக்திகள் கிறிஸ்துவத்தை மாக்ஸியத்திற்கு மாற்று மார்க்கமாகக் காட்ட முற்படுகிறார்கள்: சோஷலிஸத்துடன் முரண்பாடற்று சோவியத் அரசின் தவறுகளை விமர்சிக்கிறவர்களையும் இவ்வாறான பிற்போக்கு அணியில் திரட்ட முயல்கிறார்கள்.
கிழக்கு ஐரோப்பாவில், முக்கியமாகப் போலந்தில், அரசுக்கு எதிரான சக்திகள் கத்தோலிக்கத் திருச்சபையின் அனுசரணையுடன் செயல்படு கிறார்கள். மதம் பற்றிய பிரச்சனையை சரிவரக் கையாளாததால் மட்டுமன்றி, சோவியத் யூனியனின் ஆதிக்கத்தின் விளைவாகவும் போலிஷ் கம்யூனிஸ்ட் தலைமையின் தவறுகளாலும் போலந்தின் அரச நிர்வாகமும் பொருளாதாரமும் சீர்குலைந்துள்ளதாலும் அரசுக்கு எதிரான உணர்வுகள் கணிசமாக வளர்ந்துள்ளன. இதைப் பிற்போக்குக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதற்கு வத்திக்கான் அதிகார பீடமும் அதன் அண்மைக்கால வரலாற்றின் படு பிற்போக்குவாதப் போப்பரசர்களுள் ஒருவருமான இன்றைய போப்பரசரும் (அவர் போலிஷ் இனத்தவர் என்பது கவனிக்க வேண்டியது தயங்கவில்லை. போலிஷ் அரசின் தவறுகளை விமர்சிக்கின்ற எவரும் ஐரோப்பாவின் அண்மைக்கால வரலாற்றில் வத்திக்கான் அதிகாரபீடம் எப்படி நடந்து கொண்டது என்பதை மறந்து விடக்கூடாது. இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஹிட்லரை எதிர்க்கத் தயங்கிய வத்திக்கான் அதிகார பீடம் பிராங்கோவுடனும் பிற பாஸிஸ் எதிர்ப்புரட்சியாளர்களுடனும் குலாவத் தயங்கவில்லை என்ற உண்மையை இன்றைய உலகின் முதலாளித்துவ நாடுகளின் தாராளவாதிகளும் பூஷOவா ஜனநாயகவாதிகளும் எளிதாக மறந்து விடுகிறார்கள்.

மதமும் மார்க்ஸியமும் 21
மார்க்ஸியத்துக்கும் கிறிஸ்துவத்துக்குமிடையிலான உறவும் மார்க்ஸியவாதிகட்கும் வத்திக்கான் அதிகார பீடத்திற்குமிடையிலான உறவும் வேறுபட்ட தன்மையுடையன என்ற உண்மையை மூன்றாம் உலகில் நிகழும் புரட்சிகள் எடுத்துக்காட்டுகின்றன. நிக்கரகுவாவின் புரட்சிகர எழுச்சியில் கத்தோலிக்கப் பாதிரிமாரும் மார்க்ஸியவாதிகளும் சாண்டினிஸ்ற்றா இயக்கத்தில் இணைந்து செயற்பட்டதோடு, புரட்சிகர அரசாங்கத்திற் தொடர்ந்தும் இணைந்தும் செயற்பட்டு வருகின்றனர். வெகுஜன நன்மைக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கும் தேசிய விடுதலைக்குமான இந்த ஒத்துழைப்பை உலகின் சகல மார்க்சியவாதிகளும் முற்போக்குச் சக்திகளும் வரவேற்று ஆதரிக்கும் வேளையில், அமெரிக்க ஏகாதிபத்தியமும் வத்திக்கான் அதிகாரபீடமும் நிக்கராகுவாவின் திருச்சபையின் மேலிடமும் அவற்றின் செல்வாக்குட்பட்ட சக்திகளும் இந்த ஐக்கியத்தை முறியடிக்க முன் நிற்கின்றன. எனினும் நிக்கராகுவாவின் பரந்துபட்ட கத்தோலிக்க வெகுஜனங்களும் அவர்கட்கு நெருக்கமான நிலையில் உள்ள கீழ்மட்டக் கத்தோலிக்கக் குருமாரும் தம் உறுதியில் விட்டுக் கொடுக்காது சண்டினிஸ்ற்றா அரசுடன் ஒத்துழைக்கிறார்கள்.
இதுபோன்றே பிலிப்பீன்ஸிலும் பல லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் மார்க்ஸியவாதிகட்கும் கத்தோலிக்க விசுவாசிகட்குமிடையில் நெருங்கிய ஒத்துழைப்பு நிலவுகிறது. கிறிஸ்துவத்தின் சாராம்சம் மார்க்ஸிய சமுதாயப் பார்வையுடன் பொதுவான பல அம்சங்களையுடையது என்று விளக்கும் புதிய இறையியல், லத்தீன் அமெரிக்காவிலுள்ள சமுதாயவுணர்வுமிக்க பாதிரிமாரால் முன்வைக்கப்பட்டுப் பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது. இதை முறியடிக்குமுகமாக வத்திக்கான் அதிகாரபீடமும் பிற்போக்குவாத பிஷப்மாரும் பலவிதமான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் லத்தீன் அமெரிக்காவிலும் மூன்றாமுலகின் பிற வறிய கத்தோலிக்க நாடுகளிலும் கத்தோலிக்க மதத்தினரிடையே வளர்ந்து வரும் சமுதாய மறுமலர்ச்சிச் சிந்தனைகள் மிகவும் வரவேற்கப்படுகின்றன. இவற்றை எதிர்க்க முற்படும் சக்திகள் உண்மையில் மார்க்ஸியத்தினின்று கத்தோலிக்க மதத்தைக் காக்கப் போராடவில்லை. மாறாக, மார்க்ஸியத்தை முறியடிப்பதற்காகவும் தங்கள் வர்க்க நலன்களைப் பேணவும் கிறிஸ்துவ போதனைகளின் சாராம்சத்தையே சிதைக்க முற்படுகிறார்கள். கிறிஸ்துவத்தின் எதிரிகள் இவர்களே அன்றி மார்க்ஸியவாதிகள் அல்ல.
வரலாற்றில் ஒரு காலத்தில் புரெட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள் முற்போக்கான பணியொன்றை ஆற்றினார்கள். கத்தோலிக்கத் திருச்சபை முதலாளித்துவம் உருவாவதை எதிர்த்து நின்றபோது, திருச்சபையில் ஏற்பட்ட பிளவுகள் சமுதாயத் தேவையால் உந்தப்பட்டன. திருச்சபையினுள்

Page 13
- சி. சிவசேகரம் நடந்த ஊழல்களும் சதிகளும் அப்பிளவுகளை நியாயப்படுத்தப் பயன்பட்டாலும், பிளவுகளின் அடிப்படைக் காரணங்கள் சமுதாய அரசியல் தன்மையுடையன. பிற்காலத்தில் பல்வேறு புரொட்டஸ்தாந்து மத அதிகாரபீடங்களும், பொதுவாகத் தத்தமது நாடுகளின் ஆளும் வர்க்க நலன்களைச் சார்ந்து நின்றதோடு கொலனித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் எதிர்க்கத் தயக்கங்காட்டின. இவை சில தீவிரமான சூழல்களில் உதாரணமாக, தென்னாப்பிரிக்காவின் டச்சுச் சீர்திருத்த திருச்சபை நிறவெறியை நியாயப்படுத்தியதுபோன்று படு பிற்போக்கான நிலைப்பாட்டை மேற்கொண்டும் உள்ளன. இன்று சில புரொட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத நிறுவனங்களும் அவை சார்ந்த அற நிறுவனங்களும் பல மூன்றாமுலக நாடுகளின் பிரச்சனைக்குக் காரணம் ஏகாதிபத்தியமே என்ற உண்மையை உணர்வதோடு, இடையிடையே பகிரங்கமாகச் சுட்டிக்காட்டவும் முற்படுவது வரவேற்கத்தக்க ஒரு போக்காகும். அதே சமயம் சமுதாயச் சார்புள்ள கிறிஸ்துமதம் கிறிஸ்துவ ஆன்மிகத்துக்கு விரோதமானது எனக்கூறி, கிறிஸ்துவ அடிநிலைவாதிகள் என்று தம்மை வர்ணிக்கும் இயக்கங்களும் விருத்தியடைந்து வருகின்றன. அமெரிக்காவில் உள்ள இவாஞ்ஜெலிஸ்டுகள் தமது கத்தோலிக்க விரோதத்தையும் கம்யூனிஸ விரோதத்தையும் பகிரங்கமாகவே பிரகடனம் செய்து, அமெரிக்காவின் படு பிற்போக்குச் சக்திகளது குரலாக ஒலிக்கிறார்கள். நிக்கர குவால படுகொலைக்கும் கூசாத கொன்ட்றா எதிர்ப்புரட்சியாளர்கட்கு ஆயுத உதவி பெற்றுத் தருவதில் இவர்களது செயற்பாடு முக்கியமானது. அமெரிக்காவில் கிறிஸ்துவம் பொதுவாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனையும், கம்யூனிஸ எதிர்ப்பையும் தன் பணிகளில் உள்ளடக்க முக்கியக் காரணம், அமெரிக்கச் சமுதாயத்தின் ஏகாதிபத்தியத் தன்மையே ஆகும். எனவே, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சரிவின் போக்கிலேயே அமெரிக்காவின் கிறிஸ்துவம் தூய்மையடைய முடியும்.
சீனப் புரட்சியின்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் மதங்கள் பற்றிய சரியான நிலைப்பாடு மேற்கொள்ளப்பட்டது. மத நம்பிக்கைக்கும், வழிபாட்டுச் சுதந்திரத்துக்கும் உரிமை வழங்கப்பட்டதோடு மத நம்பிக்கையில்லாதிருக்கவும் வழிபடாது விடவும் அதே அளவு உரிமை வழங்கப்பட்டது. கத்தோலிக்க மக்கள் சீனத் தேசிய அடிப்படையில் தமது மதத்தைக் கடைபிடிக்குமாறு உற்சாகமூட்டப்பட்ட, அதே தருணம் சீனக் கத்தோலிக்கர்கள்மீது வத்திக்கானின் இறைமையைச் சீன அரசாங்கம் ஏற்க மறுத்தது மிகவும் சரியானதே. திபெத்தில் நிலப்பிரபு வர்க்கத்துக்கும் பெளத்த அதிகார பீடத்திற்குமிடையிலிருந்த நெருக்கம் காரணமாக அங்கு மதபீடத்துக்கும் மார்க்ஸியப் புரட்சிக்குமிடையில் முக்கிய முரண்பாடுகள் இருந்தன. எனினும் சீனப் புரட்சியை அடுத்து திபெத் விடுவிக்கப்

மதமும் மார்க்ஸியமும் பட்டபோது கீழ்மட்டப் பெளத்த குருமார் சமுதாய மாற்றத்தை ஆதரித்தனர். மிகவும் பின்தங்கிய பண்ணையடிமை முறையைப் பேணிய திபெத் சமுதாயத்தில் பெளத்த மத பீடத்தினுள்ளேயே வர்க்க வேறுபாடும் சுரண்டலும் கடைபிடிக்கப்பட்டு வந்ததே இதன் காரணமெனலாம். 1959இல் தூக்கியெறியப்பட்ட நிலப்பிரபு வர்க்கத்தினரின் தூண்டுதலின் பேரில் ஒரு கிளர்ச்சி நடைபெற்றது. அப்போது திபெத்தின் இரண்டு முக்கியமான மதத் தலைவர்களுள் முதல்வரான தலாய் லாமா பிற்போக்கு வாதிகளின் தரப்பில் அயல் ஊடுறவல்காரர்களது ஆதரவுடன் நடந்த அக்கிளர்ச்சியை ஆதரித்தார். சமுதாய உணர்வுமிக்க பஞ்சன் லாமா கிளர்ச்சியை எதிர்த்தார். மக்கள் ஆதரவு இல்லாத கிளர்ச்சி தோல்வியடைந்தது. ஆயினும் இந்தியா தன் வஞ்சகமான சீன விரோத நோக்கங்களை நிறைவேற்றுமுகமாக தலாய் லாமாவுக்குத் தஞ்சமளித்து உற்சாகமூட்டியது. சீனா திபெத்தினுள் மதம் பற்றிய சரியான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்த காரணத்தால், திபெத்தினுள் குறுகிய தேசியவாதமோ தீவிரமான மதவெறியோ வளரவில்லை. ஆயினும் சீனக்கலாச்சாரப் புரட்சியின்போது இடது தீவிரவாத சக்திகள் மதங்களை ஒழிப்பதையும் கலாச்சாரப் புரட்சியின் ஓர் இலக்காகக் கருதி சீனாவினுள் இருந்த சகல மதங்கட்குமெதிரான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டன. இதன் விளைவாக மத வழிபாட்டுச் சுதந்திரங்கள் மட்டுமன்றி ஆலயங்களும் வழிபாட்டுக்குரிய தலங்களும் சேதப்படுத்தப்பட்டன. இதன் விளைவாகச் சிறுபான்மை இன மக்களது தேசிய, மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டன. அண்மையில் திபெத்தில் நடைபெற்ற கலவரங்களைத் தூண்டிய சக்திகட்கு இந்தத் தவறுகள் மிகவும் உதவி உள்ளன. எனினும் சீன மத நடைமுறை பற்றிய சரியான மார்க்ஸிய நிலைப்பாட்டைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்க உறுதி கொண்டிருப்பதால், கலாச்சாரப் புரட்சியின்போது இழைக்கப்பட்ட தவறுகளும் அவற்றின் தீய விளைவுகளும் திருத்தப்பட்டு வருகின்றன.
இந்தியத் துணைக் கண்டத்தில் கத்தோலிக்கத் திருச்சபையுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு அதிகாரமுள்ள மதபீடங்கள் எதுவுமில்லை. கேரளத்தின் முதலாவது கம்யூனிஸ்ட் மாநில அரசாங்கத்தைக் கவிழ்த்ததில் கத்தோலிக்கத் திருச்சபையின் பங்கு முக்கியமானது ஆயினும், இன்று கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகார பீடத்தின் கம்யூனிஸ் விரோத அரசியல் மக்கள் மத்தியில் முன்னைய அளவுக்கு எடுபடாதவாறு நிலைமைகள் மாறியுள்ளன. இந்துக்கள் மத்தியில் மத அதிகார பீடங்கள் என எதுவும் இல்லாதபோதும், இந்துமத வெறியையும் பிற மதங்கட்கும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் எதிரான தாக்குதல்களையும் நடத்தும் அரசியல் ஸ்தாபனங்களும் குண்டர் படைகளும் பெருகி வருகின்றன.

Page 14
சி. சிவசேகரம் ஆர்.எஸ்.எஸ். சிவசேனை போன்ற ஸ்தாபனங்கள் இந்து முஸ்லிம் பகையை ஆதாரமாக வைத்து வட இந்தியாவில் விருத்தியடைந்துள்ளன. இன்று ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து மதவெறி நிறுவனங்கள் தென் இந்தியாவிலும் வேரூன்றி இந்து கத்தோலிக்க, உயர் சாதி தாழ் சாதி மோதல்கட்கு ஊக்கமளிக்கின்றன. இது மட்டுமன்றி, மக்களின் அறியாமையையும் பணக்காரர்களது பேராசையையும் ஆதாரமாகக் கொண்டு பகவான்கள் எனவும் 'அவதாரங்கள் எனவும் தம்மைப் பிரகடனம் செய்யும் ஏமாற்றுக்காரர்களும் பெருகி வருகிறார்கள். மார்க்ஸியவாதிகள் இத்தகைய சமூக விரோதச் செயல்களை எதிர்க்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
மார்க்ஸியவாதிகள் மூடநம்பிக்கைகளை எதிர்க்கக் கையாளும் முறைகளும் திராவிட இயக்க நாத்திகர்கள் ஒரு காலத்திற் கையாண்ட முறைகளையும் ஒப்பிட்டால் மார்க்ஸியவாதிகள் மக்களின் உணர்வுகள் புண்படாத விதமாகவேச் செயற்பட்டு வருவது புலனாகும். மறுபுறம் சாதி அடக்குமுறையை எதிர்ப்பதில் மார்க்ஸியவாதிகள் முனைப்புடன் செயல்பட்டு வருவதுபோல, இன்றைய திராவிட இயக்கத்தினர் செயற்படாததோடு அவர்கள் பிராமணரல்லாத உயர்சாதியினரின் நடுத்தர-உயர்வர்க்க நலன்களையே பேண முற்படுவதையும் காணலாம். எனவே மார்க்ஸியவாதிகள் மக்களின் மத, வழிபாட்டுச் சுதந்திரங்களை மதிக்கும் அதேவேளை, மதத்தின் பேரில் இன்றும் தொடரும் சமுதாய அநீதிகளை எதிர்க்கிறார்கள் என்பது புலனாகும். ஆயினும் ஆர்.எஸ்.எஸ். போன்ற ஸ்தாபனங்களும் பிற்போக்கு அரசியற் கட்சிகளும் தொடர்ந்தும் மார்க்ஸியவாதிகளை இந்து மதத்தின் விரோதிகளாகச் சித்தரித்து வருகின்றன. மார்க்ஸியத்தை மத விரோத சக்தியாகக் காட்டுவோர் யார் என்று நாம் அடையாளங் காண்போமானால், உண்மையான சுதந்திரத்தின் விரோதிகள் தீவிர மதவாதிகளே என்பது புலனாகும். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட காலத்தில் அதற்குப் பக்கபலமாக பெளத்த குருமார் இருந்துள்ளனர். இலங்கையில் பேரினவாதம் எழுச்சி பெற்றதையும் பழைய இடதுசாரிப் கட்சிகளின் சரிவையும் அடுத்து பெளத்த குருமாருக்கு கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொடர்புகள் குறைந்துவிட்டன. எனினும், இன்றும் சாதாரண பெளத்த பிக்குகள் பலரிடையே இடதுசாரிச் சிந்தனைகள் நிலவுகின்றன. மார்க்ஸியத்தைப் பெளத்த விரோத சக்தியாக யூ.என்.பி. தொடர்ந்தும் சித்தரித்து வருகிறது. ட்ரொட்ஸ்கிவாதியான கொல்வின் ஆர்.டி. சில்வா முன்பு ஒரு தடவை பெளத்த விகாரைகளை இடித்து அவற்றின் இடத்தில் பொதுலசலக் கூடங்கள் கட்டுவோம் என்ற பொருட்படப் பேசியதை வலதுசாரிகள் பலமுறை எடுத்துக் காட்டியுள்ளார்கள். அது ட்ரொட்ஸ்கியத்தின் இடது தீவிர

மதமும் மார்க்ஸியமும்
நிலைப்பாட்டிற்குரிய கருத்தன்றி மார்க்ஸியத்துக்குரியதல்ல. (அதே கொல்வின் ஆர்.டி. சில்வா 1970இன் பின் பெளத்தத் தலங்களில் வழிபாடுகளில், அரசியற் காரணங்கட்காகப் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு ட்ரொஸ்கியவாதி களினதினின்றும் வேறுபட்டது. மத நிறுவனங்கள் தேசிய வெகுஜன நலன்கட்கும் சமுதாயத்தின் முன்னோக்கிய வளர்ச்சிக்கும் ஊறு ஏற்படுமாறு செயற்படும்போது, அவர்கள் மத நிறுவனங்களைக் கண்டிக்கத் தயங்கவில்லை. தனி மனிதர்களது மத சுதந்திரத்துக்கும் மத நிறுவனங்களின் அதிகார வேட்கைக்குமிடையிலான வேறுபாட்டை அவர்கள் சரிவர அடையாளங் கண்டுள்ளனர். தீவிர இடதுசாரிப் போக்குகளின் விளைவாக மக்களின் மத உணர்வுகள் புண்படுமாறான தவறுகள் ஏற்பட்டுள்ளன. இவற்றை ஏற்றுக் கொள்ளவும், திருத்தவும் மார்க்ஸிய லெனினியவாதிகள் என்றும் தயங்கியதில்லை.
மதங்கள் பற்றிய மார்க்ஸியப் பார்வை மதங்களின் அடிப்படையான சிந்தனை முறையை நிராகரிக்கிறது; மதங்களின் அடிப்படையில் சமுதாயத்தின் பிரச்சனைகட்குத் தீர்வு காண இயலாது என வலியுறுத்துகிறது. மதங்களின் பேரில் முன்வைக்கப்படும் காலத்துக்கொவ்வாத நடைமுறைகளை மறுப்பதோடு, அவை சமுதாய நலனுக்குத் தீங்காக அமையும்போது எதிர்க்கிறது. ஆயினும் மதத்தைத் தன் பரம எதிரியாகக் கருதிச் செயற்படும் தேவை மார்க்ஸியத்துக்கு இல்லை. மார்க்ஸியம் மதத்தை மட்டுமன்றி தேசியவாதத்தையும் நிராகரிக்கின்றது. ஆயினும் கொலனித்துவ, நவகொலனித்துவ ஏகாதிபத்திய அதிகாரம் நிலவும் சமுதாயச் சூழல்களில் தேசியவாதத்திற்கு ஒரு முற்போக்கான பங்கு இருப்பதை அது ஏற்றுக்கொள்கிறது. தேசியவாதத்தில் முற்போக்கான தன்மையும் பிற்போக்கான தன்மையும் உள்ளதை ஏற்று. முற்போக்கான தேசியவாதத்தையும் பிற்போக்கான தேசியவாதத்தையும் வேறுபடுத்துகிறது. ஒரு மார்க்ஸியவாதியால் ஏககாலத்தில் தேசபக்தனாகவும் சர்வதேசியவாதி யாகவும் திகழ முடியும் என மாக்ஸியம் ஏற்றுக் கொள்கிறது. மதங்கள் பற்றிய மார்க்ஸியப் பார்வையும் இவ்வாறே மதங்களின் சமுதாய நடைமுறையில் முற்போக்கானதையும் பிற்போக்கானதையும் வேறுபடுத்தி சமுதாயத்தின் முற்போக்கான வளர்ச்சியில் மத நடைமுறை அளிக்கக்கூடிய பங்கை ஏற்றுகொள்ள வல்லது. தேசிய உணர்வுகளும் மத நம்பிக்கையும் ஒரு குறிப்பிட்ட மனித சமுதாயச் சூழலுக்கு உரியன. மார்க்ஸியத்தின் நோக்கு, அச்சூழலை மாற்றுவதே அல்லாமல் அச்சூழலின் நிழல்களுடன் போரிடுவதல்ல.
தாயகம் 19 - 1988

Page 15
3
மரபும் மாற்றமும்
LDரபு என்ற சொல், சமுதாய மொழி வழக்கில், மாற்றத்தையும் நவீனத்துவத்தையும் மறுக்குமொன்றாகவே மேலோட்டமாக விளங்கிக் கொள்ளப்படுகிறது. மரபுவாதம் என்பது வழக்கில் உள்ள மரபை நிலைநிறுத்தவும், சிலவேளை அதற்கும் அப்பாற்சென்று, வழக்கொழிந்து போகிற ஒரு மரபையோ வழக்கொழிந்து போன ஒரு மரபையோ மீண்டும் அதன் முன்னைய உச்சிநிலையில் வைக்கவும் எடுக்கப்படுகின்ற ஒரு முனைப்பைக் குறிக்கிறது. இதற்கு மாறாகப் புதுமைவாதமும் புரட்சிவாதமும் மரபை வெவ்றுே அளவுகளில் மறுத்து நிற்கின்றன. மறுப்பின் இயல்பும் அளவும் ஒவ்வொரு மனிதரதும் பார்வை சார்ந்தது. மரபென்பது முற்றாகவே நிராகரிக்கப்பட வேண்டியது என்ற பார்வை மார்க்ஸியஞ் சார்ந்ததுமல்ல; புதுமைக்கும் புரட்சிக்கும் உத்தரவாதமுமல்ல. எவ்வாறாயினும், பல அதிதீவிர நிலைப்பாடுகள் உடையோர் போன்று மரபுவாதிகளும் பூரணமாக மரபை நிராகரிப்போரும் மரபு மாறா இயல்புடையது என்ற கருத்தையே, வெவ்வேறு நோக்கங்க்ட்காக வலியுறுத்துகின்றனர்.
இயற்கை உலகிற் தோன்றுவன யாவும் வளர்கின்றன, மாறுகின்றன, அழிகின்றன. மாற்றத்தின் கால அளவு வேறுபடலாம். ஆயினும் மாற்றம் நிச்சயமானது. இதை நவீன இயங்கியல் வழிப்பட்ட சிந்தனைகள் மட்டுமன்றிப் பழைய சிந்தனைகள் சிலவுஞ் சுட்டிக்காட்டியுள்ளன. காலத்துடன் ஒருபொருள் மாறாதிருக்கக் காண்போமேயானால், அதை உயிரற்றதென்றே கொள்வோம். உயிரற்ற பொருட்களும் மிக நீண்ட கால அளவில் மாறுகின்றன. எனவே, மனிதர் தமது விருத்திப் போக்கில்

மரபும் மாற்றமும் உருவாக்கிய மொழி, மதம், பண்பாடு, கலைகள், தொழில்நுட்பம் போன்ற அனைத்துமே மாற்றத்துக்கு உரியன. மனிதரது அறிவும் மாற்றத்துக்குரியது. அப்படியாயின், எவ்வாறு மரபுவாதியொருவரால், மாறுகிற உலகில் என்றைக்குமே மாறாத ஒன்றாக மரபைக் கருத முடியும்? மரபுவாதி தனக்கு வசதியாக விதித்துக்கொண்ட கால, இட வரையறைகளின் விளைவாக இது நேரக்கூடும். அல்லது, மனித நடைமுறைக்கு அப்பாற்பட்ட ஒரு வழிநடத்தும் விதியுடன் அவர் மரபெனத் தான் கருதுவதைப் பிணைத்துக் கொண்டதன் விளைவாகவும் இருக்கக்கூடும். மரபு பற்றிய ஒரு இறுக்கமான பார்வையை எவ்வாறோ, ஒருவர் வரித்துக்கொண்டதன் பின், மரபின் தன்மை பற்றியும் அதன் நிலைப்பும் நிரந்தரமும் பற்றியும் அவர் ஏற்படுத்திக் கொண்டுள்ள படிமங்களை அவர் மாற்றத் தயங்கலாம். இது மரபுவாதிக்கு மட்டுமன்றி, சிலசமயம் மரபை அப்படியே நிராகரிக்கும் ஒருவருக்கும் பொருந்தும். W
மரபின் மாறா இயல்பு பற்றிய கருத்து வரலாற்றுக்கு முரணானது. கடவுள், ஆன்மா, கன்மம், முத்தி போன்ற மதக்கோட்பாடுகட்கு ஒருவர் வழங்கும் நிரந்தரத் தன்மைகள் அறிவு சார்ந்த விவாதத்துக்கு அப்பாலானவை. ஆனால் மரபு பற்றிய நிலைப்பாடு அவ்வாறானதல்ல. மரபென்பது மனிதருலகில் உருவாகி விருத்தி பெற்ற ஒன்று. அது எவராலுஞ் சிருட்டிக்கப்பட்டதல்ல, எல்லாருக்கும் பொதுவானதுமல்ல. எனவே மரபின் மாறாத் தன்மை பற்றிப் பேசுவோர் மரபையும் அது செயற்படும் காலத்தின் அளவையும் எல்லைப்படுத்த அவசியமாகின்றது. இந்த எல்லைகளின் அடிப்படையில், அவர்களால் நாம் கருதும் மரபுக்கு இசைவானது எது, இசையாதது எது, உட்பட்டது எது, அயலானது எது என்றவிதமான மதிப்பீடுகளை வழங்க முடிகிறது. புதிதாகச் செய்யப்படும் எதுவும் பயனுள்ளது என்று அவர்களில் எவருங் கருதினால், அவர் மரபின் அடிப்படையிலேயே நியாயப்படுத்தக் கடமைப்பட்டவராகிறார். அதை ஏற்க விரும்பாதோர் மரபைச் சம்மட்டிபோற் பிரயோகித்துப் புதியதை முறியடிக்க முயல்வர். மரபுவாத மொழியறிஞர் மத்தியில் இன்னமும் இவ்வாறான விவாதங்களைக் கேட்கலாம்.
மரபென்பது ஒரு சமுதாயத்தின் வாழ்க்கை முறையின் முழுமை தொடர்பானதும் சமுதாய நடைமுறையின் ஒவ்வொரு செயற்பாடு தொடர்பானதுமாகும். ஒருவரது மரபுவாதம் எப்போதுமே எல்லா விஷயங்களையும் அவையவற்றின் மரபு வழிப் பேணுகிற ஒன்றாக இருக்க அவசியமில்லை. பூரண மரபுவாதிகளைக் குறிக்கப் பத்தாம் பசலி என்ற சொற்றொடரும் போதாது. நடைமுறையில், மரபுவாதம் பகுதியாகவே அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் தம் தெரிவிற்குட்பட்ட துறைகள்

Page 16
சி. சிவசேகரம்
சார்பாகவோ அல்லது அவற்றுக்குள் குறிப்பான அம்சங்கள் தொடர்பாகவோ மரபு பேணுகின்றனர். மரபை மறுப்பதாகச் சொல்வோரும் மரபின் பகுதிகளைப் பேணுகின்றனர். மரபை வேறுபட்ட அளவுகளில் ஏற்போரும் மறுப்போரும் நடைமுறையில் மரபைப் பேணுகிற அதேவேளை, நமது நடைமுறை மூலம் மாற்றத்திற்கும் வழிவகுக்கின்றனர். இவ்வாறு மாற்றங்கள் ஏற்படும்போது மரபுவாதியொருவர், அவை மரபினுள் அனுமதிக்கதக்கன என்றோ மரபின் சாராம்சம் மாறவில்லை என்றோ தன்னைத் தேற்றிக் கொள்ளக் கூடும். இந்த மரபின் சாராம்சம் என்னவென்று இவர்கள் எவரும் தெளிவாகச் சொல்லமாட்டார்கள். மாற்றங்கட்கு ஆளாகாமல் எஞ்சியிருக்கத் தெரிகிற விஷயங்களைச் சுட்டி மரபின் சாராம்சம் மாறவில்லை என்று வாதிப்பார்கள். இந்த மரபு தொடர்பான சில கேள்விகளையும் அதன் மாறாமை பற்றிய சில கருத்துகளையும் இக்கட்டுரையில் முன் வைக்கிறேன். அத்துடன் மரபு பேணல் தொடர்பாகவும் மரபை ஒழித்தல் தொடர்பாகவுஞ் சில விஷயங்களைத் தொட்டு, மரபு மாற்றமும் பற்றிச் சிறிது எழுதுகிறேன்.
9 மரபின்படி விருத்தி பெற்ற ஒரு சமுதாய நடைமுறையையும் அதன் நெறிப்படுத்தும் ஒரு சிந்தனை முறைமையையுங் குறிக்கிறதெனில், இந்த மரபின் தோற்றப்புள்ளியாக எதை நாம் கொள்ள முடியும்?
9 மரபொன்றன் தோற்றத்திற்கு முன்பிருந்த நடைமுறையும் அதன் இயக்கநெறியும் அம்மரபினின்றும் எவ்வாறு மாறுபடுகின்றன?
9 நடைமுறையிலுள்ள மரபொன்று உருவாகு முன்னிருந்த நிலை இன்னொரு மரபுக்குரியதாகக் கருதப்படக்கூடுமா? அவ்வாறாயின் முன்னைய மரபின் அழிவு மரபுவாதிகள் ஏற்கக் கூடியவொன்றா? இல்லையாயின், முன்னைய மரபின் அழிவு சமகால மரபும், ஒரு மாற்றத்தின் விளைவெனக் கொள்ள முடியுமா?
0 மரபென்று நாம் ஏற்றுக் கொண்டது ஏதோ ஒரு கட்டத்தில் மாறாநிலை பெறுகிறதா? அவ்வாறாயின், நாம் மாறாததாக அடையளாங்காணும் மரபோ அதன் சாராம்சம் எனப்படுவதோ எந்த நிலையில் தன் மாறா நிலையில் ஒருமை பெறுகிறது? மேற்கொண்டும் மாற்றங்கட்கு இடையூறாக நிற்பது எது?
0 மரபொன்று அயற்தாக்கத்திற்குள்ளாகும்போது, அத் தாக்கத்தை அது எவ்வாறு உள்வாங்கிக் கொள்கிறது? வேறுபட்ட மரபுகளை உடைய சமுதாயங்கள் அல்லது சமுதாய நடைமுறைகளை ஒருங்கிணைய நேரும்போது துணையும் மரபுகள் மாற்றமின்றித் தம் தனித்துவத்தைப் பேணமுடியுமா? இவ்விணைவு புதிதான இன்னொரு மரபினதோ மரபுகளினதோ உருவாக்கத்துக்குக் காரணமாக முடியுமா? வலிய மரபு

மரபும் மாற்றமும்
வலுவற்றதை வென்று தன்னை நிலைநிறுத்திக் கொள்ளுமா? இவ் வெற்றி மட்டுமே அவ்வாறான மாற்றங்களைத் தவிர்க்கப் போதுமாகுமா?
9 மனித வாழ்வையோ அதன் பல்வேறு கூறுகளையோ ஒவ்வொன்றாக எடுத்துப் பார்ப்போமேயாகின், நீண்டகாலக் கண்ணோட்டத்தில், மரபுவாத நிலைப்பாடு மிகவும் பலவீனமானது என்பது தெளிவாகும். மனித சமுதாயத்தில் மாற்றங்கள் நீண்ட கால அளவிலேயே நிகழ்கின்றன. உறுதியான அமைப்புகள் மனித இருப்பின் பாதுகாப்புக்கு அவசியமாகத் தெரிகிற அளவில் மாற்றம் விரும்பப்படுவதில்லை. அதே அமைப்புகள் மனித இருப்பின் தேவைகட்குப் போதாதவையாகும்போதும் மனித இருப்பை நெருக்கடிகளாக்கும்போதும் மாற்றம் விரும்பப்படுகிறது. மனித சமுதாயத்திலும் மனித வாழ்வுடன் தொடர்புள்ள பல்வேறு துறைகளிலும் நெருக்கடியே மாற்றத்தை அவசியமாக்குகிறது. பழக்கப்பட்ட ஒன்றை விடுத்துப் புதிய ஒன்றைத் தேடுகிற தன்மை தனிமனிதர்களிடம் உள்ளளவுக்குச் சமுதாயங்களிடம் இருப்பதில்லை. எனவே, அறிந்த அமைப்பின் அடிப்படையிலேயே மாற்றங்களை ஏற்படுத்தச் சமுதாயங்கள் முற்படுகின்றன. அந்த அமைப்புள் நாம் மேலும் முன்னேற முடியாத நிலைமட்டுமன்றிச் சமுதாயச் சீரழிவும் நேருகிறதை உணரும்போது, பாரிய மாற்றம் ஒன்று ஏற்கப்படுகிறது. இத்தகைய மாற்றத்தை நாம் புரட்சி எனலாம். புரட்சியும் எல்லாவற்றையும் ஒரே வீச்சில் மாற்றிவிடுவதில்லை. அது மாற்றத்திற்கான திசையை வகுக்கிறது. மாற்றம், நடைமுறையின் போக்கில், ஓய்வற்ற போராட்டங்களின் மூலமே சாத்தியப்படுகிறது. என்றுமே புரட்சிகர மாற்றம் உறுதியாக ஒரே திசையிற் சென்றதில்லை. மாற்றத்தின் நெளிவு சுழிவுகளையும் ஏற்ற இறக்கங்களையும் விளங்கிக் கொள்ளாதவர்கள், வரலாறு வட்டப் பாதையிற் போவதாகவும் மரபுகள் காலத்தை மீறி நிலைப்பதாகவும் கூறிக் கொள்வார்கள்.
அடிப்படையான மாற்றமென்பது மரபின் பூரணமான மறுதலிப்பு என்று கூறுவோர் - என்று கூறிக்கொள்வோர் பலர். இவர்களது நிலைப்பாட்டின் போதாமை மரபுவாதிகளது கைகளில் ஆயுதமாகிறது. பொதுவாக எல்லாப் பிற்போக்குவாதிகளையும்போல, மார்க்ஸியம் என்று தமக்கு வாதியாக ஒன்றை உருவகப்படுத்திக் கொண்டு அதைத் தாக்கும் முயற்சியில் மரபுவாதப் பிரச்சாரகர்கள் இறங்குவதில் வியப்பில்லை. எனவே இவ்வாறான மரபு விரோதம் பற்றியுஞ் சிறிது கவனிக்க வேண்டியுள்ளது. மரபு சார்ந்த அனைத்தும் தவறானவையும் பிற்போக்கானவையும் என்ற கருத்து மனித அறிவினதும் சமுதாய விருந்தியினதும் இயங்கியல் மறுக்கும் ஒரு பார்வை மூட நம்பிக்கைகளை எதிர்ப்பது என்ற பேரில் ஒருவர் ராகு காலத்திலேயே நல்ல முயற்சிகளைத் தொடங்குவதும் விக்கிரக உடைப்பில்

Page 17
சி. சிவசேகரம்
ஈடுபடுவதும் அவரையறியாமலேயே அவரைச் சடங்குத் தன்மையான செயல்களில் ஈடுபடுத்தி விடுகிறது. ஒரு தவறான போக்கை எதிர்ப்பதற்குத் தவறு முறையாக அடையாளங் காணப்படுவதும் அதற்கு மாற்றீடான போக்கு ஒன்று வகுக்கப்படுவதும் அவசியம். புதிதாகப் பிரதியிடப்படும் போக்கு ஒரு சடங்காகிவிடாது. அது மீளவும் மீளவும் பரிசீலனைக்கு ஆளாக்கப்படுவதும் அவசியம். மரபை முற்றாக நிராகரிக்கிற ஒருவர் மரபின் ஒவ்வோர் அம்சத்தையும் நுணுக்கமாக அணுகி ஆராய்ந்து அவ்வாறு செய்கிறாரா என்பது கவனத்துக்குரியது. அவ்வாறு செய்தல் எப்போதுமே சாத்தியமானதல்ல. அத்தோடு, மூர்க்கத்தனமாக மரபை மறுப்போர், மரபு பற்றிய கவனஞ் சிறிதுமே இல்லாதவர்களாகவே இருக்கக் கூடும். அதைவிட முக்கியமாகச் சமுதாயத்திற்கும் மரபிற்கும் உள்ள உறவின் அடிப்படையிலேயே மரபை மீறுதலும் மாற்றுதலும் சாத்தியமாகிறது. எனவே மரபுடனான முறிவு என்பது மரபை அப்படியே தூக்கி எறிவது என்பதைவிட மரபின் முனைப்பினின்று வேறுபட்ட ஒரு முனைப்பிற் செயற்படுவது என்றே விளங்கிக் கொள்ளப்படக் கூடும். புதிய முனைப்பிற் பழையதன் சில பண்புகள் காணப்படலாம். ஆயினும் புதியதும் பழையதும் அவற்றை எல்லா வகைகளிலும் ஒரேவிதமாகக் கையாள அவசியமில்லை.
மரபுக்குரிய முக்கியமான பண்பு ஏதெனில், அதன் சமகால நடைமுறை காரண காரிய அடிப்படையிலான கேள்விகளின் அடிப்படையில் அமைந்ததல்ல. மரபு பேணல் அவ்வாறான கேள்விகளை அனுமதியாது. ஆயினும் சமுதாய நடைமுறை மரபின் குறைபாடுகளைத் திரும்பத் திரும்பக் கேள்விக்குட்படுத்துகிறது. சமூகத் தேவைகள் மாற்றங்களை நிர்ப்பந்திக்கின்றன. இவ்விடத்து மரபுவாதம் மரபின் இருப்புக்கு அதனளவிலேயே நியாயமுள்ளதாகவும் மரபில் எதுவுமே கேள்விக்கோ மாற்றத்திற்கோ உட்பட முடியாதெனவுங் கூறும். மரபிற்கெதிரான நிலைப்பாடுகளை மரபைப் பூரணமாகவே நிராகரிக்கும். சிலர் மட்டுமன்றிச் சீர்திருத்தவாதிகளும், சமுதாயப் புரட்சியை வேண்டுவோரும் மேற்கொள்கின்றனர். மரபுவாதிகளைப் பொறுத்தவரை, இவர்கள் அனைவருமே மரபின் விரோதிகள்தான். இதன் விளைவாக மரபுவாதிகள் சீர்திருத்தவாதிகளையும் கம்யூனிஸ்டுகள் என்று வர்ணிக்க நேர்ந்ததுண்டு. எவ்வாறாயினும், விறைப்பான மரபுவாதம் காலம் என்னும் பெருவெள்ளத்தின் முன் நிலைத்து நிற்க இயலாது, ஈற்றில் விட்டுக் கொடுக்கிறது. இவ்விட்டுக்கொடுத்தல் மிகுந்த தயக்கத்துடனேயே நிகழ்கிறது. இதன் விளைவாகச் சமுதாய நடைமுறை ஒரு புதிய நிலையை அடைகிறது. மரபுவாதம் மேலும் மாற்றங்கள் நிகழ்வதைத் தவிர்க்குந் தேவையால்

மரபும் மாற்றமும்
இப்புதிய நிலையைப் புறக்கணிக்க முடியாமல் அதைத் தனது புதிய
வரையறையாக்கி நிலைநிறுத்த முற்படுகிறது. இவை ஒரு நீண்ட காலப்
பரப்பிலும் சமுதாயத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு அளவுகளிலும் உக்கிரத்துடனும் நடைபெறுவதால் மரபுவாதிகளது
நிலைப்பாடும் இடத்துக்கும் காலத்திற்குமேற்ப வேறுபடும். இதை மொழி
பற்றிய வாதப் பிரதிவாதங்களில் நாம் அடிக்கடி சந்திக்கலாம்.
மொழி நடைமுறை பற்றிய மரபு மொழியின் பல்வேறு இலக்கண முறைகளால் அறியப்படுகிறது. மொழியில் மாற்றமும் வளர்ச்சியும் அவசியமாகும்போது மரபுவாதிகள் இலக்கணத்தை ஓர் ஆயுதமாகப் பிரயோகிக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை இலக்கணம் என்பது மொழியின் சீரான நடைமுறைக்கு அவசியமான ஒரு கருவி மட்டுமல்ல; மொழியின் தன்மையில் மாற்றங்கள் நிகழாதிருக்க உதவும் ஒரு நெறிமுறை. மொழியில் ஏற்படும் மாற்றங்கள் இலக்கண விதிகட்கு அமையாதபோது அவை நிராகரிக்கப்பட வேண்டும் என்கிறது விறைப்பான மரபு. அவை மொழியின் வளர்ச்சிக்கு அவசியமா? அவசியமாயின் மொழியின் நடைமுறைக்கு ஊறில்லாமலும் ஏலவே உள்ள வலிய பண்புகளைப் பலவீனப்படுத்தாமலும் எவ்வாறு அவற்றை நெறிப்படுத்துவது என்று தேடுவது மொழிச் சீர்திருத்தம். சீர்திருத்தங்களை மரபு உள்வாங்க மறுக்கும்போது அல்லது இயலாது போகும்போது முறிவுகள் ஏற்படுகின்றன. இவ்விதமான முறிவுகள் பல்வேறு காரணங்கட்காக ஏற்படலாம். ஆயினும் நீண்ட வரலாற்றையுடைய ஒரு மொழியின் இலக்கண மரபு எத்தனையோ பாதிரிய மாற்றங்களையும் முறிவுகளையும் உள்வாங்கிக் கொள்வதன் மூலமே மொழியின் இருப்பைச் சாத்தியமாக்குகிறது. மாற்றம் மாற்றத்துக்காகவே' என்ற போக்கில் நெறிப்படுத்தப்படாத முறையில் மொழியுட் புகும் விஷயங்கள் மொழி வளர்ச்சிக்கு அதிகம் உதவுவதில்லை. இவை குறுகிய காலத்திற் குழப்பத்திற்கும் வழிகோலலாம். எவ்வாறாயினும் மொழியின் நடைமுறை தான் சார்ந்த சமுதாயத்தின் தேவைகட்கமைய அயலினின்றும் சமுதாயத்தினுள்ளிருந்தும் புதியனவற்றைப் பெற்றுப் புதிய விதிகளை வகுத்து முன்னோக்கிச் செல்கிறது. இன்றைய மரபுவாதி நேற்று ஏற்பட்ட மாற்றங்களைக் கணிப்பில் எடுக்கத் தவறுகிறார். அதுபோல நாளைய மரபுவாதி இன்றைய மரபுவாதியுடன் தனக்குள்ள வேறுபாடுகளை உணராமல் ஒரு நிரந்தரமான மரபு பற்றிப் பேசக்கூடும்.
மொழியிற் போன்று மதத்திலும் மரபுவாதம் மாற்றங்களை மறுப்பதும் முடிவில் மாற்றங்கள் நேரும்போது அவற்றையே மரபாகக் காட்டுவதும் நாம் பரவலாகக் காணக்கூடிய ஒன்று தீவிரமாக மரபை வலியுறுத்தும் மதவாதிகள் மதங்களைச் சமுதாயத்தினின்றும் வரலாற்றினின்றும்

Page 18
சி. சிவசேகரம்
வசதிக்கேற்பப் பிரித்தே காட்டுகிறார்கள் அடையாளங் காணக்கூடிய ஒரு தோற்றுவாயையுடைய எந்தவொரு மதமும் காலப்போக்கில் மாற்றங்களை உள்வாங்கிக் கொள்வதும் அதன் விளைவாக வேறுபட்ட கிளைகள் உருவாவதும் நாமறிந்ததே. மாறாததென அடையாளங் காணக்கூடிய கூறுகள் சில தொடர்ச்சியாக இருக்கக்கூடுமேயாயினும் அவை மட்டுமே மரபென்றும் அவற்றை வைத்து மரபை வரையறுக்கு முடியுமென்றுங் கொள்வது பொருந்தாது.
சமுதாய மரபுகள் என்று நாம் கருதுவன சமுதாய அமைப்புத் தொடர்பானவை. ஒரு சமுதாயம் அடிப்பபடையில் நிலமான்யச் சமுதாயமாயின் அதற்குரிய சமுதாய உறவுகளும் சமுதாய விழுமியங்களும் அச்சமுதாயத்தில் நிலவும். இந்த உறவுகளும் விழுமியங்களும் அவற்றையொட்டிய சிந்தனைகளும் நடைமுறைகளும் காலத்துடன் மாறுவது உண்மையேயாயினும், அம்மாற்றத்தின் அளவு சிறியது. சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கில் சமுதாயத்தின் தேவைகட்கும் சமுதாய அமைப்புக்கும் இடையிலான உறவு மாற்றமடைகிறது. சமுதாயத்தின் தேவைகட்குச் சமுதாய அமைப்பு ஈடுகொடுக்க முடியாததாகவும் சமுதாய வளர்ச்சிக்கு இடையூறாகவும் நிற்கும் போது அடிப்படையான சமுதாய மாற்றம் நிகழ்கிறது. சில சூழ்நிலைகளில் மாற்றங்கள் வெளியிலிருந்து வரும் குறுக்கீடுகளாலும் நிகழலாம். எவ்வாறாயினும் சமுதாய வளர்ச்சியின் திசைமாற்றம் சமுதாய உறவுகளிலும் விழுமியங்களிலும் சிந்தனைகளிலும் நடைமுறையிலும் புதிய முனைப்புகளைப் புகுத்துகிறது. இத்தகைய மாற்றத்திற்குரிய கால அளவு சமுதாயச் சூழல்கட்கேற்ப வேறுபடலாம். ஆயினும், அடிப்படையான சமுதாய மாற்றத்தையொட்டிச் சமுதாயத்தின் பல்வேறு அம்சங்களிலும் ஏற்படும் மாற்றங்கள் பிற காலகட்டங்களில் ஏற்படுவனவற்றினுந் துரிதமானவை. மரபுவாதிகள் மாற்றங்களைத் தடுத்து நிறுத்தவே எப்போதும் முனைவார்கள். முடியாதபோது வெவ்வேறு தந்திரோபாயங்களால் மேலும் மாற்றங்கள் நிகழ்வை மந்தப்படுத்தவும் முடியுமாயின், வரலாற்றைப் பின்னோக்கித் தள்ளவும் முற்படுவார்கள்.
சமுதாயத்தின் அத்திவாரமாகக் கருதக்கூடிய நால் வருண முறை இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்களையும் ஊடுருவிச் சாதிய சமுதாயங்களை தோற்றுவித்தது. சமுதாய உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் தன்னை நியாயப்படுத்திய சாதி முறை, அந்த உறவுகளின் மாற்றத்தினூடு சுரண்டற் சமுதாய அமைப்பைத் தொடரவும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பிளவுபடுத்தவும் ஒரு கருவியாகச் செயற்படுகிற பேடையிற். சாதியம் நால்வருண முறையினின்று பெறப்பட்ட ஒரு மரபையே தனது ஆதாரமாகக் கொண்டு விருத்தியுடன் தமக்குள் மாறி வந்துள்ளபோதும்

மரபும் மாற்றமும் s
சாதி அடிப்படையிலான சமூக உறவுகளைத் தொடர்வதற்கு இதுவரை மரபு என்ற ஒன்று எப்போதுமே பயன்பட்டு வந்துள்ளது. சமுதாயத்தில் ஒவ்வொருவருக்கும் உரிய இடத்தை வகுக்கவும் சமுதாயத்தில் மனிதரிடையிலான உறவையும் தனிமனித நடத்தையையும் வரையறுக்கவும் மரபு பலவேறு மட்டங்களிலும் செயற்பட்டு வந்துள்ளது. பாலடிப்படையிலான ஒடுக்குமுறையும் மரபின் பேராலேயே இன்னமுந் தொடர்கிறது. இத்தகைய மரபுகளைப் பொறுத்தவரை நீதிக்கான ஒரு புதிய சமுதாயம் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க முடியும்? சில மரபுவாதிகள் சீர்திருத்தவாதிகளாகத் தம்மைக் காட்டிக் கொள்வார்கள். இவர்களது சீர்திருத்தம் மாற்றங்களது தவிர்க்கவியலாத நிகழ்வின் பின்பு ஏற்படுவது. இவர்களுட் சிலர் மரபின் வரலாற்றுப் பண்பை மறந்து நலிந்து போகும் மரபை அழகுபடுத்தி எக்காலத்துக்குமுரிய ஒன்றாக நீடிக்க முனைவார்கள். ஆயினும், இவர்கள் அழகுபடுத்திப் புதிதாகக் காட்ட முனையும் சாதிய மரபின் நடைமுறையோ சமுதாயத்தில் மேலும் நெருக்கடிகட்கே இட்டுச் செல்கிறது. அதில் ஏற்படும் மாற்றங்களால் அதன் நெருக்கடிகளைத் தவிர்க்க முடிவதில்லை.
சமுதாய மரபு தொடர்ந்தும் மாற்றத்திற்குள்ளாகிய ஒன்றேயாயினும், மனிதர்மீது மரபின் பிடிப்பு மிகவும் வலியது. ஏனெனில், மனிதரது சமுதாயச் செயற்பாட்டிற் கணிசமான பகுதி மரபின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. எனவே மரபுடனான முறிவுகள் மிகுந்த சிரமத்துடனும் தயக்கத்துடனுமே நிகழ்கின்றன. மனிதரது தேவைகளே மரபில் மாற்றத்தை ஏற்படுத்துகிறபோதும், சமுதாய அளவில் மாற்றங்களைப் புகுத்துவதற்குப் பாதகமாகப் பல விஷயங்கள் உள்ளன. சில சமயங்களில் ஒரு புதிய பரம்பரையின் பின்னரே மாற்றங்கள் சமுதாயத்தில் நிலைபெறுகின்றன. மரபின் வலிமைக்கு இன்னுமொரு முக்கியக் காரணம், அது தன் பல்வேறு குறைபாடுகளின் மத்தியிலும், நீண்டகால மனித அனுபவத்தைத் தன்னுட் கொண்டுள்ளது என்பதாகும். இவ்விடத்திற்றான் ஒட்டுமொத்தமாக மரபை நிராகரிப்போர் தவறுகிறார்கள். அவர்களது நிராகரிப்பு மரபானது நிராகரிப்பாக மட்டுமன்றி, மரபுடன் சேர்ந்துள்ள மனித சமுதாய நடைமுறையின் அனுபவத்தினதும் நிராகரிப்பாகி விடுகிறது. மரபுக்கெதிரான போராட்டம், சமுதாய வளர்ச்சிக்குத் தடையாக மரபு எவ்வெவ் வகைகளிற் செயற்படுகிறதோ, அவற்றை அடையாளங் கண்டு அவற்றை முறியடிக்க முனையுமளவில் முற்போக்கான பணியையாற்றுகிறது. மரபில் மாற்றங்களை ஏற்படுத்துவது சமுதாயரீதியான செயல். எனவே குருட்டுத்தனமாக மரபுடன் மோதுவது குறுகிய காலத்திலும் மரபு வழிகளையே பலப்படுத்தும்.

Page 19
சி. சிவசேகரம்
மனிதரது அன்றாட வாழ்வுடன் மரபு நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ள அளவில், மரபு சமுதாய மாற்றத்தையொட்டி மாறியே தீரும் என்பதிற் பரவலாக அதிகம் கருத்து வேறுபாடுக்கு இடமிராது. மனித சமுதாயத்தினின்று மனிதத் தேவைகட்காக எழுந்தபோதும், வசதிக்காவேனும், தனித்துக் கருதப்படக்கூடிய கலை இலக்கியங்கள் தொடர்பாக மரபு பற்றிய பிரச்சனை வேறுவிதமாக எழுதுகிறது. இங்கே மரபு என்ற சொல் சில சமயங்களில் பொதுவான நடைமுறையைக் குறிக்கவும் - சில சமயங்களில் வரைவிலக்கணப்பாங்காகவும் பயன்படுகிறது. தமிழ் இலக்கிய மரபு பற்றியோ சீன ஓவிய மரபு பற்றியோ சமஸ்கிருதக் காவிய மரபு பற்றியோ பேசும்போது பரவலான ஒரு நடைமுறையின் காலமும் சூழலும் உருவாக்கிய சில பொதுவான பண்புகளைக் கருத்திற்கொள்கிறோம். வடகோடிக் கூத்து மரபு, பரத நாட்டிய மரபு, கர்நாடக இசை மரபு எனப் பேசும்போது மேலுந் தெளிவாக வரையறுக்கப்பட்ட நடைமுறைகளைக் கருத்திற்கொள்கிறோம். இவ்வாறு வரைவிலக்கணப்படுத்தக் 56للاوعا م மரபுகட்குள்ளும் அக வேறுபாடுகளையுடைய உள் மரபுகள் இருக்கலாம். வியாக்கியானங்களில் ஏற்படும் வேறுபாடுகள் புதிய மரபுகளைத் தோற்றுவிக்கலாம். எனினும், ஒரு கூத்தோ, நடனமோ, இசையோ குறிப்பிட்ட வரம்புகட்குட் செயற்படும்போது மட்டுமே அது அந்த மரபுக்குட்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த வரம்புகளின் பண்பும் பரிமாணமும் காலத்துடன் விருத்தி பெற்றவை என்பதும் மேலும் மாற்றத்திற்கு உட்படக் கூடும் என்பதும் உண்மையேயாயினும், சில அடிப்படையான இயல்புகள் மிக நீண்ட கால அளவிற் தொடர்ந்து நிலைக்கின்றன. இவ்விஷயங்களில் மாற்றங்கள் நிகழும்போது ஒரு புதிய, மரபு சாராத கலை வடிவங்கள் உருவாகின்றன. தெளிவாக வரையறுக்கப்பட்ட கலைவடிவங்கட்குரிய மரபுகளில் ஏற்படும் மாற்றங்கள் அக்கலைவடிவங்கள் மாறி வரும் சமுதாயத்திற்கு எவ்வாறு முகங்கொடுக்கக்கூடுமென்ற தேவை சார்ந்தோ, சமுதாயத்தின் உள்ளும் வெளியிலுமிருந்து உள்வாங்கிக்கொண்ட புதிய பண்புகளைச் சார்ந்தோ நேரலாம். புதிய தொழிற் கருவிகள், தொழில் நுட்பம், திரவியங்கள், புதிய சிந்தனைகள் போன்ற யாவுமே கலைஞனையும் கலையையும் பாதிக்கக் கூடும். சில சமயங்களில் ஒரு மரபுக் கலைவடிவம் தனது இருப்பைத் தொடர்வதற்காகத் தன் நடைமுறையைக் கணிசமாக மாற்ற நிர்ப்பந்திக்கப்படக் கூடும். இங்கேயும் மரபு தொடர்பான வாதங்கள் எழுகின்றன. மரபு பேணலை இங்கு வலியுறுத்துவோர் சமுதாயப் பிரச்சனைகளில் மரபு பேணலை வலியுறுத்துவோர் போன்றவர்களாக இருக்க அவசியமில்லை. ஒரு குறிப்பிட்ட கலைவடிவம் அதன் அழகியற் பண்புகட்காக அழியாது பேணப்பட வேண்டும் என்ற வாதம், அக் கலை

மரபும் மாற்றமும்
வடிவத்தின் அடிப்படையிற் புதிய கலை வடிவங்கள் உருவாகலாம் என்ற நிலைப்பாட்டை மறுக்க அவசியமில்லை. புதியதை அது மரபுக்குப் புறம்பானதாகக் கொண்டாலும் இன்னொரு கலைவடிவமாக ஏற்க ஆயத்தமாக உள்ளளவில், அது சமுதாயம், மொழி, மதம், பண்பாடு என்பன சார்ந்த மரபுவாதங்களினின்று தெளிவாகவே வேறுபடுகிறது.
கலை, இலக்கியங்கள் தொடர்பான பொதுவான மரபுவாதம் சமுதாய மாற்றங்களை மறுத்து நிற்கும் மரபுவாதத்துடன் பல ஒற்றுமைகளையுடையது. அது புதுக் கவிதை - கவிதையில்லை என்று வாதிக்கும். நவீன ஓவியம் ஓவியமேயல்ல என்று பிரகடனஞ் செய்யும், தன்னாற் சுவைக்க முடியாத பாடல் இசையல்ல என்று நிராகரிக்கும். புதியன என்ற வடிவிற் பம்மாத்துகள் பெருமளவில் வருவது உண்மை. ஆயினும், மரபுவாதம் அவற்றை நிராகரிக்கப் பயன்படுத்தும் அளவுகோல்கள் அழகியலைவிட மரபையே, மரபு சார்ந்த அழகியல் என்ற பேரிலாயினும் வலியுறுத்துவன. பல சமயங்களில் மரபு சார்ந்த அழகியல் அடிப்படையிற் தேறாதனவாயினும் மரபு வடிவில் அமைந்த படைப்புகளை மரபுவாதம் சிறந்த நவீனப் படைப்புகளைவிட உயர்வாகக் கொள்கிறது.
ஒரு மரபுவாதி, குறிப்பிட்ட ஒரு கவிதை தானறிந்த ஒரு செய்யுள் வடிவத்தினுள் அடங்காது எனும்போது அவர் சரியான ஒரு தகவலை நம்முன் வைக்கிறார். அவர் அது கவிதையல்ல எனும்போது கவிதைக்கான எந்த அளவுகோல்களைப் பயன்படுத்துகிறார் என்று நாம் கவனிக்க வேண்டும். மரபுக் கவிதை வடிவங்கட்கான யாப்பு விதிகளே அவரது அளவுகோல்களாயின், அவர் மதிப்பிடுவது மரபுடனான உடன்பாடேயன்றிக் கவிதையையல்ல. பிற நவீன கலைவடிவங்கள் தொடர்பான மரபுவாத மதிப்பீடுகளும் மேற்கண்டவிதமாக வேறுபடக் கூடும். எவ்வாறாயினும், புதிய கலை வடிவங்கள் அழகியல் தொடர்பான தெளிவான வரையறைகளுடன் உருவாவதில்லை. அவை சில அழகியற் கோட்பாடுகளை மரபினின்று பெறுகின்றன. பிற அவற்றின் விருத்தியின் போக்கில் முடிவாகின்றன. எவ்வாறாயினும் நடைமுறையே இறுதித் தீர்வுகளை வழங்குகிறது. மரபு சார்ந்த கலைவடிவங்கள் கண்டிப்பான மரபின் வரையறைக்கு உட்படப் பேணப்பட வேண்டுமா என்பது முக்கியமான ஒரு பிரச்சனை. இங்கே மனிதரது படைப்பாற்றலின் வரலாற்று விருத்தியின் ஓர் உச்சநிலையை எதிர்காலத்திற்காகப் பேணுகிற ஒரு தேவையையும் அக்கலைவடிவத்தாற் புதிய சமுதாயச் சூழலில் மனிதரது தேவைகளை எவ்வாறு நிறைவு செய்ய முடியும் என்பதையும் நாம் கணிப்பிலெடுக்க வேண்டும். முதலாளித்துவம் மரபுசார்ந்த கலை வடிவங்களைச் சந்தையின் தேவைகட்கேற்பவே கையாளுகிறது. வியாபார நோக்கம் அவற்றை

Page 20
சி. சிவசேகரம்
மலினப்படுத்தி உருக்குலைக்கவும் முற்படுகிறது. முதலாளித்துவத்தின் கீழான மரபுக் கலைகளின் பேணல் மரபை ஒரு வியாபாரப் பொருளாக்குவதற்கு மேலாக எதையும் செய்ய மாட்டாது. மரபுக் கலைவடிவங்களை அழகியற் காரணங்கட்காகப் பேணுவது சமுதாய முழுமையினதும் தேவையையொட்டியது. தனியார் சிலரது நலன்களை முதன்மைப்படுத்தும் ஒரு சமுதாய அமைப்பால் அதைச் செய்ய முடியுமா என்பது ஐயத்துக்குரியது எவ்வாறாயினும், விரிந்த பார்வையையுடைய ஒரு சமுதாயத்தில் மரபுசார்ந்த கலைகள் தமது பழைய வடிவிலும் அவற்றினின்று விருத்தி பெறும் வடிவங்களும் அவற்றின் பண்புகளை உள்வாங்கிக் கொள்ளும் பிற நவீன வடிவங்களும் மனிதருக்குத் தொடர்ந்தும் பயன்பட (LPLQ-UD.

4
மானுடருங் கடவுளரும்
LDதங்கள் அனைத்திற்கும் பொதுவான அம்சங்கள் என்று அதிகம் இல்லை. வெவ்வேறு சமுதாயச் சூழ்நிலைகளிற் தோன்றிப் பரவியும் இணைந்தும் பிரிந்தும் மாறியும் வந்துள்ள மதங்கள் அவற்றின் சமுதாயச் சூழல்களையும் அவற்றில் ஏற்பட்ட் வரலாற்று மாற்றங்களையும் பிரதிபலிப்பன. மதங்கள், பொதுவாகவே, தாம் உருவான காலச் சூழலுக்குத் தம்மை இறுகப் பிணைத்துக் கொண்டதன் விளைவாகப் புதிய சமுதாயச் சூழல்கட்கு ஏற்றவாறு இயங்க முடியாது தவிக்கின்றன. சமுதாய மாற்றங்களை நிராகரித்துப் பழைமை பேண வேண்டுவோர், மதங்களைத் தமக்கு ஆதாரமாகப் பயன்படுத்துவது வழமை. மத நம்பிக்கைகள் மட்டுமன்றிச் சடங்கு சம்பிரதாயங்களும் மாற்ற இயலாதன என்றே அவர்கள் வாதிப்பார்கள். ஆயினும் வரலாற்றின் மாற்றங்கட்கு வளைந்து கொடுக்காமல் ஒரு மதம் நிலைக்க முடியாது என்பதால், மதங்கள் இறுதியிற் சமுதாய மாற்றத்துக்கு விட்டுக் கொடுக்க நேருகிறது. இதற்கான உதாரணங்களை இங்கு நான் தர அவசியம் இல்லை. மதங்களின் ஒவ்வோர் அம்சமும் அதன் தோற்றுவாயில் மனிதன் என்ற சமுதாய விலங்கின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டவையே. மனிதரது தேவைகட்கும் ஐயங்கட்கும் மனிதர் கண்டறிந்த தீர்வுகள் பல மதங்கள் என்பன மனிதர் சாத்தியமெனக் கருதிய தீர்வுகளில் ஒரு பகுதியேயன்றி வேறல்ல. மதங்கள் மனிதத் தேவைகளை எவ்வளவு தூரம் நிறைவு செய்தன என்றோ அவற்றால் இன்னும் எவ்வளவு காலம் எவ்வாறு பயனுள்ள பணியாற்ற முடியுமென்றோ

Page 21
சி. சிவசேகரம்
நான் ஆராய முற்படவில்லை. மறுமையை வலியுறுத்தி இம்மையை அதற்குக் கீழ்ப்பட்ட ஒன்றாக்க முனையும் மதங்களின் மறுமைக் கோட்பாடுகளும் ஆன்மா, கடவுள் என்பன பற்றிய கருத்துகளும் மனிதரது இம்மை அனுபவங்களில் வேரூன்றி நிற்கின்றன என்பதை மட்டும் இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
மனிதருக்குத் தம் வாழ்வு இந்த மண்ணிற் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே வரையறைப்பட்ட ஒன்றென்பதை ஏற்க இயலாமையையே மறுமைக் கோட்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன. மரணத்தின் பின் மனிதர் இன்னொரு முறை பிறப்பதாகக் கருதுவதும் இன்னோர் உலகை அடைவதாகக் கொள்வதும் மரணம் என்ற வலிய உண்மையை ஏற்க இயலாமையின் காரணமாக விளைந்தவை. வானுலகம், மோட்சம், சுவர்க்கம், நரகம் போன்ற படிமங்களும் இன்ப துன்பங்கள் பற்றியும் நன்மை தீமை பற்றியும் மனிதர் கொண்டிருந்துள்ள கருத்துகளின்பாற்பட்டவையே. நிரந்தரமான ஆன்மா, உருவமும் அருவமும் அற்ற ஆதியந்தமற்ற பரம்பொருள் போன்ற கருத்துகள் காலத்தாற் பிற்பட்டவை. இக்கருத்துகளின் விருத்தி ஒரு சிந்தனை மரபின் விருத்தி. இந்து மதம் ஒரு புறம் மனித உணர்வு கடந்த ஒரு பரம்பொருளை வலியுறுத்தினாலும், உண்மையில் அது பல கடவுட் கொள்கையுள்ள மதமேயாகும். இந்து மதத்தில் ஒரு கடவுட் கொள்கை வந்த முறை, யூத-கிறிஸ்தவ-இஸ்லாமிய மரபில் ஒரு கடவுட் கொள்கை புகுந்த முறையினின்றும் வேறுபட்டது என்பதால், இந்து மதம் ஏக காலத்தில் ஒரு கடவுட் கொள்கையைப் பல கடவுட் கொள்கைகளுடன் இணைத்துப் பேணக் கூடியதாயிற்று. ஆயினும் ஒரு கடவுட் கொள்கை பல கடவுட் கொள்கையை விடத் தன்னளவிலேயே மேம்பட்டதாகி விடமுடியாது. கடவுட் கொள்கையின் முக்கிய இடர்ப்பாடே மனிதர் அறிதற்கரியதாகக் கூறப்படும் ஒன்றை மனிதர் அறியக் கூடியவாறு மட்டுமன்றி அறிவுபூர்வமான வாதங்களுடு நிலைநாட்ட முனைவதாகும். கடவுள் நம்பிக்கையுள்ளோர் எவ்வளவு தூரத்துக்குக் கடவுளைத் தெளிவாக விவரிக்க முனைகின்றனரோ, அவ்வளவு எளிதாக ஒரு நாத்திகனாற் கடவுள் பற்றிய விளக்கங்களையும் விவரணங்களையும் மறுக்க முடிகிறது. பிறவியின் நோக்கமோ கடவுள் உலகையும் உயிர்களையுந் தோற்றுவித்திருப்பின், அப்படைப்பின் நோக்கமோ அல்லது யாவும் மாயை எனின் அம்மாயைக்குரிய காரணமோ மனிதர் அறியத்தக்கவையல்ல. மனிதர் அறிய இயலாத பரம்பொருள் ஒன்றுக்கு மனிதர் கருதுமாறான ஒரு நோக்கம் ஏன் இருக்க வேண்டும்? எவராலும் மறுக்கக்கூடாத ஒரு கடவுட் கொள்கை மனிதராற் பயன்படுத்த முடியாத ஒன்றாகவே இருக்கும். அத்தகைய கடவுளை அடைய முனையும் எவரும் அதனை அடைவரோ

மானுடருங் கடவுளரும் 39
என்பதும் நிச்சயமற்றது. அக் கடவுளை அடைய விரும்பாமலும் முயலாமலும் ஒருவர் அடையமுடியாது என்ற நிலை மைக்கும் அவசியமில்லை. கடவுளை அடைவது தான் சென்ம ஈடேற்றத்தின் இறுதி நிலை என்று யார் கூற முடியும்? அதற்கப்பால் இன்னொன்றிருந்தால் அதை அக்கடவுளன்றி யார் நிருணயிக்கக்கூடும்? கடவுளர் பற்றிய மனிதரது கொள்கைகள் யாவும் ஊகங்களென்ற அளவில் ஒன்றுக்கு ஒன்று சமமானவையே. இந்தளவிற். கடவுளர் பற்றிய கொள்கைகளைக் கொஞ்சம் ஒப்பிடுவோம்.
கடவுள் தன் சாயலிலேயே மனிதரைப் படைத்தார் என்ற கருத்து மற்றைய உயிரினங்கள்மீது மனிதர் தமது ஆளுமையை நிலைநாட்டிய பின்னரே ஏற்பட்டது. நேர்மையாகக் கூறின், இம்மனிதர் தமது சாயலிலேயே அக்கடவுளைச் சிருட்டித்தனர். அக்கடவுளுக்கும் மனிதர் போல விருப்பு வெறுப்புக்களும் கோபமும் அன்பும் இருந்தன. எதிரி இருந்தான். மனிதரை நேசிக்கும் ஒரு பிதாவான கடவுள் ஆணாதிக்கத்தின் குறியீடாகவும் மனித சமுதாய விழுமியங்களை நியாயப்படுத்தும் ஒரு வாதியாகவும் உள்ளார். பாலுறவு பற்றியும் பிற புலன் இன்பங்கள் பற்றியுமான குற்ற உணர்வுகள் ஆதிக்கஞ் செலுத்திய நெறிகளைக் கொண்ட ஒரு சமுதாயம் கடவுளையும் தனது விழுமியங்கட்கு ஏற்பவே கண்டது. விவிலியத்தின் ஒரு கடவுட் கொள்கைக்கு முற்பட்ட சமூகங்களிற் கடவுளர் மிகுந்த மனித சுபாவம் உடையோராயிருந்தமையும் கடவுளரிடையே மனிதரிடையிலான உறவுகள் போன்ற உறவுகள் அமைந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்தியத் துணைக்கண்டத்திலும் உலகின் பிற பகுதிகளிலும் மனிதப் பண்புகளும் மனிதரிடையிலான உறவுகள் போன்றஉறவுகளுங் கொண்ட கடவுளர் இருந்தனர். இவை யாவும் மனிதரது கடவுட் கொள்கை எவ்வளவு தூரம் மனித வாழ்வின் அடிப்படையில் உருவானது என்றே காட்டுகின்றன. மனிதர் பற்றி எவ்வகையான எதிர்பார்ப்பேனும் இருக்கக்கூடிய ஒரு கடவுளுக்கு ஏன் வேறு உணர்வுகளும் இருக்க முடியாது என்பது ஒரு நியாயமான வாதமே. இந்து மதத்தின் ஒரு கடவுட் கொள்கை ஓர் அருவுருவற்ற பரம்பொருளாக அமைந்தது. இக்கொள்கை பலகடவுட் கொள்கையை நிராகரிக்காமல் அத்தனை தெய்வங்களையும் பரம்பொருளின் பகுதியாக்கிக் கொண்டது. பெளத்தத்தின் நாத்திகத் தன்மையும் பரம்பொருள் பற்றிய இந்துமதக் கோட்பாடும், மனிதர் தமது அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற நாடும் தெய்வத் துணையைத் தரவல்லனவல்ல. பிராத்தனைகட்கும் வேண்டுதல்கட்கும் நிஷ்டைக்கும் தவத்துக்கும் இரங்கக்கூடிய கடவுளரின் நிலைப்பு இதனாற் சாத்தியமாயிற்று. இத்தகைய கடவுளர் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவராயின், மனிதர் விளக்கி விவரிக்க முனையும் எத்தகைய

Page 22
சி. சிவசேகரம்
கடவுளருமே பகுத்தறிவுக்கு ஒவ்வாதவரே. மனிதரது அறிவுக்கு அப்பாற்பட்ட உணர்வு கடந்த பரம்பொருளை மனிதர் அறிதல் அரிது. அதனை நட்பாக்கவோ பகையாக்கவோ இடமில்லை. மனிதச் செயற்பாடுகளை நிருணயிக்கும் பரம்பொருள் மனிதச் செயல்களால் எவ்வகையிலும் பாதிக்கப்பட முடியாதது. எனவே மனித வாழ்க்கையின் செய்நெறி பற்றிப் பரம்பொருளின் விருப்பு வெறுப்பென்ற கருத்துகட்கே இடமில்லை. இங்கே, மனித இருப்பு, தன் அடிப்படையிலேயே தன்னை அறிய வேண்டிய நிலைக்கு ஏறத்தாழ நாத்திகத்துக்கு நெருக்கமாக, வந்துவிடுகிறது. மனிதருக்கோ கடவுளர், வாழ்வின் பற்றுக்கோடாகவே தேவைப்படுகின்றனர். இதையே மதங்களும் மதச்சார்புள்ள சமூக அதிகார பீடங்களும் வரலாற்றில் பயன்படுத்தி வந்துள்ளன.
தேவகுமாரர், தேவதூதர், அவதாரங்கள், தெய்வசித்தி பெற்றோர், தெய்வத்தன்மை கொண்ட மன்னர்கள் போன்ற அனைவருமே மனித சமுதாயத்தின்மீது தம் ஆளுமையைச் செலுத்தக் கடவுள் பேரைப் பயன்படுத்தினோரே. இவர்கள் அனைவருமே இக்காரணத்தாற் கெட்டவர்களோ, ஆணவ மிகுந்தவர்களோ, பிற்போக்குச் சக்திகளோ ஆகிவிடமாட்டார். ஒவ்வொருவரையும் அவரவரது வரலாற்றுச் சூழலில் வைத்தே நாம் மதிப்பிடல் நியாயம். கடவுள் பற்றிய எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் சமுதாயங்களின் நிலைமைகட்கேற்ப விருத்தியடை கின்றன. எந்தவிடத்து எல்லாம் வல்ல ஒரு கடவுளின் பேரால் மனிதர் மனிதரை அழிக்குமாறு தூண்டப்படுகிறனரோ, அந்தவிடத்துக் கடவுட் கொள்கை மானுட விரோதமான ஒன்றாகிவிடுகிறது. எந்தவொரு தெய்வத்தின்மீதான நம்பிக்கையும் தன்னை நிலைநாட்ட வேண்டி வேறுவிதமான நம்பிக்கையையும் வழிபாட்டு உரிமையையும் மறுக்க முற்படுமாயின், முன்னைய நம்பிக்கை மிகவும் பலவீனமான ஒன்றாகவே இருக்க முடியும். மனிதரைப் பிரிக்கும் கடவுட் கொள்கைகளைவிடக் கடவுள் மறுப்பு மேலானது. விலங்குகளையும் மரங்களையும் முன்னோரையும் வழிபட்டு வந்த ஆதி மனிதரது கடவுட் கொள்கைகூட, மதத்தின் பேரால் போர் தொடுக்கத் தூண்டுங் கொள்கைகளைவிட முற்போக்கானவை.
மதங்களுங் கடவுட் கொள்கைகளும் காலத்துடன் மாறி வந்தவை. மதச்சடங்கு சம்பிரதாயங்களும் வேகமாக மாறி வருவனவே. இவற்றிற் பேணத்தக்கது எது தகாதது எது என்று விதிக்க வல்லார் எவருமில்லை. காலமே மாற்றத்தின் அதி வலிய கருவி. இந்து சமயம் போன்று அதிக மாற்றங்களைக் கண்ட பெருமதங்கள் இல்லை. பிற மதங்களின் கடவுட் கொள்கைகளை மதிப்புடனோ சகிப்புத் தன்மையுடனோ கருதி வந்தமை இந்திய மத மரபுகளில் இடையிடையேனுங் காணப்பட்ட ஒன்று. அது

மானுடருங் கடவுளரும்
முற்றாக அழியும் அபாயம் இன்று தலை தூக்கியுள்ளது. காவிக் கொடியைப் போர்க் கொடியாக உயர்த்தும் போக்குப் பற்றியும் வித்தைக்காரர்களும் அவதாரங்கள், ரிஷகள், பகவான்கள் என்று தம்மைக் கூறிக் கொள்வோரும் மனிதரது பலவீனங்களைப் பயன்படுத்திக் கடவுளரை வியாபாரமாக்க முனைவது பற்றியும் இந்து இளைஞர்கள் கூடியளவு சிந்தித்துச் செயற்படுவார்கள் என நம்புகிறேன்.

Page 23
5
மதச் சுதந்திரமும் மனிதச் சுதந்திரமும்
சிமுதாயக் கோட்பாடுகள் சமுதாயத்துக்கும் மனிதருக்கும் இடையிலான உறவை வரையறுக்கின்றன. அதன் மூலம் அவை, ஒருபுறம் தனிமனிதச் சுதந்திரம் பற்றிய சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. மறுபுறம், தனிமனித உரிமைகள் தொடர்பான, உத்தரவாதங்களையும் முன் வைக்கின்றன. மனிதரின் இருப்பு சமுதாய இருப்பாகவே வரலாற்றில் இருந்து வந்துள்ளது. இச் சமுதாய வாழ்வே இன்று தனிமனிதர் செய்யக்கூடிய பலவேறு வகையான காரியங்களை இயலுமாக்கியது. இவ்வகையிற் தனிமனித நலனும் சமுதாய நலனும் இணைந்தே செயற்பட்டு வந்துள்ளன. இவ்விரண்டு நலன்களுக்குமிடையில் முரண்பாடுகள் எப்போதுமே இருந்துள்ளன. ஆயினும் அம் முரண்பாடுகள் அடிப்படையிற் சினேகமானவை. சமுதாய மாற்றத்தில் இம்முரண்பாடுகட்குத் தொடர்பாகச் செயற்படும்போதே தனிமனிதரது பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. எனவே மனிதச் சுதந்திரம் எனும்போது நாம் தனிமனிதச் சுதந்திரம் என்ற ஒன்றை மட்டும் கருத்திற் கொள்ளாமல், சமுதாயம் என்ற முழுமையினது சுதந்திரத்தையும் அதன் முக்கியமான கூறுகளது சுதந்திரத்தையும் சேர்த்தே கருத வேண்டியிருக்கிறது.
சமுதாயக் கோட்பாடுகள் காலத்துடன் விருத்தியடைந்து வந்துள்ளன. மரபுகள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற சமுதாய வழக்குத் தொடர்பான வழிகாட்டல்கள் பரவலாகச் சமுதாய ஏற்பைச் சார்ந்து நிற்பன. ஒழுக்கம், அறநெறிகள் போன்றனவற்றில் மதங்களுக்கு முக்கியமான பங்கு இருந்து

மதச் சுதந்திரமும் மனிதச் சுதந்திரமும்
வந்துள்ளது. உற்பத்தி உறவுகளிலும் தனியார் உடைமை, ஆளுமை, அதிகாரம் ஆகியவற்றிலும் மனிதரால் இயற்றப்பட்ட சட்டமுறைகளின் முக்கியத்துவம் பெரிது. இவற்றைவிட மனிதனது சிறப்பான அக்கறைக்குரிய துறைகளுள்ளும் சிந்தனையையும், நடைமுறையையும் ஆளும் வழிகாட்டல்கள் உள்ளன. இவற்றிடையே, சமுதாய நடைமுறையிற் சரிபிழைகள் பற்றிய பொதுவான உடன்பாடு எப்போதுமே இருக்க அவசியமில்லை. சில மரபுகள் மத நம்பிக்கையுடனும் சட்டத்துடனும் முரண்படலாம். மத நம்பிக்கைகள் சட்டத்துடன் மாறுபடலாம். இவ்வாறான முரண்பாடுகள் சமுதாய வளர்ச்சியின்போது தவிர்க்க முடியாதவை. இவை மாற்றத்தின் கருவிகளாகச் செயற்படுபவை.
மரபுகளும் சமய வழிகாட்டல்களும் பகுத்தறிவின் அடிப்படையிலல்லாது ஒரு பாரம்பரியத்தின் அடிப்படையிலேயே தம்மை நிலைநிறுத்திக் கொள்வன. மரபுகள் கடந்தகாலச் சமுதாய நடைமுறையின் அடிப்படையில் தம்மை நியாயப்படுத்திக் கொள்கின்றன. மதங்கள் புலனறிவுக்கும் பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்ட ஒரு ஞானத்தின் பேராலேயே பெருமளவும் தம்மை நியாயப்படுத்திக் கொள்கின்றன. சட்டங்கள் சமுதாய நிர்ப்பந்தத்தை ஏற்று மாறும் தன்மையுடையவை. மரபுசார்ந்த விதிமுறைகள் சமுதாய உட்பிரிவுகட்கு ஏற்ப மாறுபடலாம். மதங்கள் குறிப்பிட்ட ஒரு சமுதாய எல்லைக்கும் அப்பால் தமது ஆளுமையை வலியுறுத்த முனைகின்றன. சட்டங்கள் ஒரு சமுதாயத்திற்குப் பொதுவானவையாக வகுக்கப்படுகின்றபோதும், சில சூழ்நிலைகளில் மரபுகள், மதங்கள் தொடர்பான விஷயங்களில் அவை ஒரு சமுதாய அமைப்பிற்குள் விலக்குகளையோ வெவ்வேறு விதிகளையோ கொண்டு அமையலாம்.
மதங்கள் மனிதரின் புறவாழ்விற்கும் புலனுணர்வு சார்ந்த அறிவுக்கும் அப்பாற்பட்டதெனக் கூறப்படும் கருத்துகள் மூலம் தம்மை நியாயப்படுத்திக் கொள்வதால், மதங்களில் ஏற்படும் மாற்றங்கள் சமுதாய மாற்றங்களைவிடக் காலத்தால் மிகவும் பிற்பட்டவையாக அமைகின்றன. பெருவாரியான சூழல்களில், மிகுந்த தயக்கத்துடனும் இவ்வாறான மாற்றங்களின்றி மதங்களின் இருப்பு அசாத்தியமாகலாம் என்ற நிர்ப்பந்தத்தின் கீழுமே மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
எல்லா மதங்களும் ஒன்றையே போதிக்கின்றன என்பது முற்றிலும் அபத்தமான ஒரு கூற்று. எல்லா மதங்களும், தமக்குரிய சூழலுக்கமைய அல்லது தமது தோற்றுவாயின் சூழலுக்கமைய, மனித நலனை மனத்திற் கொண்டவை என்பதில் உண்மை உண்டு. ஆயினும், மனித நலன் என்பது என்ன, சரிபிழைகள் என்பன என்ன என்பது பற்றி எக்காலத்துக்குமான

Page 24
சி. சிவசேகரம்
வரைவிலக்கணங்கள் இல்லை. எனவே, மதங்களின் பொதுமை மிகவுங் குறைபாடுடைய ஒன்றாகவே காணப்படுகிறது.
மறுபுறம், பகுத்தறிவின் அடிப்படையில் மனிதர் வந்தடையும் முடிவுகள் எப்போதுமே சரியானவையாகவும் தம்முள் உடன்பாடானவை யாகவும் அமைய அவசியமில்லை. மனிதச் சிந்தனைகளதும் உணர்வுகளதும் அகச்சார்பான பண்பை நாம் முற்றாக மறந்துவிடக் கூடாது. வெறுமனே சட்டங்கள் மூலம் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியாது என்பதையும் மரபுகளும் மதங்களும் மனிதனது நடத்தையை நன்னெறிப்படுத்துவதில் ஆற்றியுள்ள நல்ல பங்கையும் நாம் மறுக்க முடியாது. அதேவேளை, மரபுகளும் மதங்களும் சமுதாய நீதியை மறுக்கவும் பயன்பட்டுள்ளன. இன்னமும் பயன்படுகின்றன. எனவே மதங்கள் பற்றிய நமது பார்வை வெறுமனே அவற்றை ஏற்பதா எதிர்ப்பதா என்ற தோரணையில் அமைய முடியாது. மதங்கள் மனித ஒடுக்கலுக்குப் பயன்பட்டுள்ளதுபோல, மனித விடுதலையிலும் பங்களித்துள்ளன என்பதையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். எந்த ஒரு மதத்தின் அடிப்படையிலும் மனித விடுதலைக்கான போராட்டத்தை அதன் இறுதி இலக்குவரை கொண்டு செல்ல இயலாதிருப்பது ஏனென்றும் நாம் கவனிக்க வேண்டும். மனித விடுதலைக்குப் பயன்பட வேண்டிய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மருத்துவமுங்கூட, இன்று மனிதர்மீது மனிதர் ஆதிக்கம் செலுத்தும் வசதியை அதிகப்படுத்தியுள்ளன. எனவே மனித விடுதலையின் எதிரி தனியே மதமல்ல.
மதம் மக்களது அபினி என்ற மார்க்ஸின் மேற்கோள் இவ்வளவு காலமும் மார்க்ஸியம் மதத்தைத் தனது பிரதான எதிரியாகக் கொள்கிறது என்று காட்டுவதற்குப் பயன்பட்டு வந்துள்ளது. கொடுமையான சுரண்டலுக்கு உட்பட்ட மனிதனுக்கு மதம் ஆறுதலளிக்கிறது. அந்த ஆறுதல் மனிதனை அமைதிப்படுத்திப் போராட்ட உணர்வை மழுங்கடிக்கிறது என்ற கருத்திலும் கொடுமையான ஒரு சூழலில் மனிதன் நாடக்கூடிய ஒரே ஆறுதலாக மதம் இருந்து வந்த உண்மையை ஒட்டியும் மார்க்ஸ் அழகாகக் கூறியுள்ளார். அபினி என்ற சொல்லை அதன் தீய விளைவுகளைப் பற்றிய இன்றைய அறிவை மனத்திற் கொண்டு நோக்கும்போது, மார்க்ஸ், மதம் ஒரு நச்சுப் பொருள் என்ற நோக்கிற் கூறியதாக யாரும் எண்ண இடமுண்டு. இது குறைபாடான வாசிப்பின் விளைவு
ஒரு மார்க்ஸியவாதி நல்ல காரணங்கட்காக மதத்தை நிராகரிக்கலாம். தனிமனிதரது மதநம்பிக்கைகளை மதிக்க மறுப்பவராகவும் வழிபாட்டு, மத அனுட்டான உரிமைகளை மறுப்பவராகவும் அவர் இருப்பாராயின், அவரது

மதச் சுதந்திரமும் மனிதச் சுதந்திரமும் மார்க்ஸியச் சிந்தனை எவ்வளவு ஆழமான ஒன்றாக இருப்பினும், அவரால் மனித இனத்தின் விடுதலைக்கு அதிகம் பங்களிக்க முடியாது. எது முக்கியமான சமுதாய முரண்பாடு என்பது பற்றிய தெளிவு ஒரு மார்க்ஸியவாதிக்கு அவசியம் மத நிறுவனங்கள் சுரண்டும் வர்க்கங்களோடு அணிவகுத்து நிற்கும்போது, அந்த நிறுவனங்களதும் அந்த மதத்தைச் சேர்ந்த மக்களதும் தேவைகட்கும் இடையிலான வேறுபாட்டை இனங்காண்பதன் மூலமே, மதத்தின் பேரால் சமுதாய மாற்றத்தை மறிக்க முனைவோரைத் தோற்கடிக்க இயலும். மறுபுறம், மதங்களின் பேரால் வெவ்வேறு வகைகளில் அடக்குமுறை ஆட்சியாளர்கட்கும் ஏகாதிபத்திய வாதிகட்கும் எதிரான கிளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. இவை பற்றிய ஒரு தெளிவான பார்வையும் நமக்கு அவசியம்.
மதங்கள் தமது தோற்றுவாயிலேயே பிற்போக்கானவையல்ல. மனித விடுதலை, சமுதாயச் சீர்திருத்தம் போன்ற இலக்குகளுடன் பல மதங்கள் பிறந்துள்ளன என நாம் அறிவோம். மதங்களுக்குள்ளே இருக்கும் அதிகார வர்க்கங்களின் ஆதிக்கத்துக்கு எதிரான கிளர்ச்சிகள் மதங்களின் பேரால் உருவாகி வளர்ந்துள்ளன. வைணவ, சைவ பக்தி இயக்கங்களின் வெகுஜனத் தன்மை பற்றி விரிவாகவே ஆராயப்பட்டுள்ளது. கத்தோலிக்கத் திருச்சபைக்குள்ளிருந்தே லத்தீன் அமெரிக்காவின் விடுதலைக்கான இறையியல் உருவானது. அரபு நாடுகளின் கொள்ளைக்கார ஷேக்குகட்கும், சுல்தான்கட்கும் அரசர்கட்கும் எதிரான குரலாகவும் இஸ்லாமிய அடிப்படைவாதம் எழுகிறது.
அல்பானியப் புரட்சியில் பர்தா அணிந்த பெண்களும், திபெத்தில் தலாய் லாமாவின் நிலப்பிரபுக்களின் கிளர்ச்சிக்கு எதிராக சாதாரண பெளத்த லாமாக்களும், இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவுவதில் ஒரு புத்த பிக்குவும் பங்குபற்றினரென்றால், மதத்தை எதிரியாகக் கருதுகிற அரசியலுடன் அந்த உடன்பாடு சாத்தியமாகியிருக்குமா என நாம் சிந்திப்பது பயனுள்ளது. மதம் தொடர்பாக ஒரு மார்க்ஸியவாதி எடுக்கக்கூடிய நிலைப்பாடுகட்கும் தேசிய இனங்கள் தொடர்பாகவும் சாதிமுறை தொடர்பாகவும் எடுக்கக்கூடிய நிலைப்பாடுகட்கும் சில முக்கியமான ஒற்றுமைகள் உள்ளன.
மத நம்பிக்கைக்கும் வழிபாட்டுக்குமான சுதந்திரம், ஒரு தேசிய இனம் தனது சுய அடையாளத்தைப் பேணுவதற்கான சுதந்திரம் போன்றது. சாதி, தேசிய ஒடுக்குமுறைகட்கெதிரான உரிமைப் போராட்டத்திற்கு வழங்கப்படக் கூடிய ஆதரவு மத அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு எதிராகவும் வழங்கப்பட வேண்டியுள்ளது. சாதி உணர்வோ தேசிய உணர்வோ மத

Page 25
சி. சிவசேகரம்
உணர்வோ தம்மளவிலேயே முற்போக்கானவை அல்ல. ஒடுக்கப்பட்ட சாதியினர், தேசிய இனங்கள், மதப் பிரிவினர் என்போர் பற்றிய மார்க்ஸிய நிலைப்பாடு சாதி ஒடுக்குமுறையாளர், தேசிய ஒடுக்குமுறையாளர், மதவெறியர் என்போர் பற்றிய நிலைப்பாட்டினின்று மிகவும் வேறுபடுகிறது.
தொழிற்சங்கப் போராட்டங்களோ முதலாளித்துவ ஜனநாயகமோ சமூகச் சீர்திருத்தங்களோ சமத்துவமான மனித சமுதாயத்தை உருவாக்கியதில்லை என மார்க்ஸியவாதிகள் அறிவர். ஆயினும் அவை தொடர்பான போராட்டங்களை அவர்கள் முழுமனத்துடன் ஆதரிக்கின்றனர். இவ்வாறே இனம், நிறம், மதம், சாதி, தேசம், பால் போன்று எந்த அடிப்படையிலாயினும் மனிதரது உரிமைகள் மறுக்கப்படுமாயின், மனிதர் ஒடுக்கப்படுவாராயின், அவர்கள் எதிர்த்துப் போராடுவது இயல்பானதும் நியாயமானதும் என்பதை ஒரு மார்க்ஸிவாதி உணராமலிருக்க முடியாது. எனவே, மத நம்பிக்கைக்கும் வழிபாட்டுக்குமான சுதந்திரம் மார்க்ஸியத்துக்கு முரணானதல்ல. மதங்களை நம்பவும் நம்பாமலிருக்கவும் மனிதருக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும். மனிதரது தெரிவுகள் மதிக்கப்பட வேண்டும். இந்தளவில், ஒரு மார்க்ஸியவாதியால் எந்த மதத்தினிடமும் இன்னொரு மதவாதியைவிடக் கூடிய சகிப்புடன் நடந்துகொள்ள முடியும்.
மதங்களின் பேரால் மக்கள் ஏமாற்றப்படுவது உண்மை. தேசம், மொழி, பிரதேசம் என்பவற்றின் பேராலும் ஜோசியம், பில்லிசூனியம், சூதாட்டம் போன்றவற்றினாலும் மட்டுமன்றி, விஞ்ஞானத்தின் பேராலும் தொழில்நுட்பம், நவீனத்துவம், அபிவிருத்தி என்பவற்றின் பேராலுங்கூட மனிதர் ஏமாற்றப்படலாம். மார்க்ஸியத்தின் பேராற் கூட மனிதர் ஏமாற்றப்படலாம். நம் முன்னுள்ள பிரச்சனை, மக்களுக்குத் தமது சூழல் மீதும் தமது வாழ்வின் மீதுமான ஆளுமை தொடர்பானது. அவர்கள் முதுகிற் சவாரி செல்வோரை மறிக்கும் ஒரு அதிகாரங்கூட அவர்கள் மீதான அதிகாரமாக மாறிவிடலாம். எனவே, ஒரு மார்க்ஸியவாதியின் பிரதான பணி, மக்கள் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க உதவுவதுதான். தாமே மக்களைவிட அதிகம் அறிந்தவரெனக் கருதும் எவரும் இதைச் செய்தல் கடினம.
மத அடிப்படையிலான சமுதாயங்களிலும் சமுதாயப் பிரிவுகளுக்குள்ளும் மதங்களால் நியாயப்படுத்தப்படும் பல்வேறு விதமான ஒடுக்குதல்கள் உள்ளன. ஆணாதிக்கம் இவற்றுள் முக்கியமான ஒன்று. மதபீடங்களின் வர்க்க நலன்கள் சுரண்டும் வர்க்கங்களைச் சார்ந்து நிற்பதும் உண்மை. ஆயினும், இவ்வாறான சூழல்களில், இச் சமுதாயங்கட்கு வெளியில் இருந்து மாற்றத்தைத் திணிக்கும் முயற்சிகள், அவை எவ்வளவு

மதச் சுதந்திரமும் மனிதச் சுதந்திரமும்
தான் நல்லெண்ணம் உடையனவாய் இருப்பினும், எதிர்மாறான விளைவுகளையே தரவல்லன. மனித சமுதாயங்களிடையே சமத்துவமான உறவுமும் அதன் அடிப்படையிலான உறவுப் பரிமாறல்களும் இருக்குமாயின், மதங்களின் அடிப்படையில் நிகழும் அநீதிகட்கெதிரான எழுச்சிகள் அச்சமுதாயங்களின் உள்ளிருந்தே எழுவது இயலுமாகும். மனித சமுதாயத்தின் பன்முகப்பட்ட பண்பு மார்க்ஸியவாதிகட்கு உடன்பாடானது. இப் பன்முகப் பண்பில் விடுதலையினதும் சமத்துவத்தினதும் கூறுகள் உள்ளடங்கியுள்ளன.
இன்று பலவிதமான தீவிர மதவாதப் போக்குகள் உள்ளன. இந்து அடிப்படைவாதம், சாதியம், இஸ்லாமிய விரோதம் என்பவற்றை வலியுறுத்துகிறது. அந்தளவில் அது முறியடிக்கப்பட வேண்டியது. கிறிஸ்தவ அடிப்படைவாதம் அமெரிக்காவிலும் மேற்கிலும் வலதுசாரி அரசியலுடன் கைகோத்து நிற்கிறது (இதற்கு மாறாக விடுதலைக்கான இறையியற் கோட்பாடு உள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதம் ஒருபுறம் முக்கியமான ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்தியாகவும் சுரண்டும் வர்க்கங்களின் ஊழல் மிகுந்த ஆட்சிகட்கு எதிரான ஆயுதமாகவும் செயற்பட்டுள்ளது. அதேவேளை அதனுட் பொதிந்துள்ள சகிப்பின்மையின் கூறுகள் ஈரானின் முல்லாக்களின் அதிகாரத்துக்கும் ஊழல்கட்கும் வசதி ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான இடங்களில், தேசியம் போன்று மத உணர்வும் ஒரேகாலத்தில், முற்போக்கான கூறுகளையும் பிற்போக்கான கூறுகளையும் தன்வசத்தே உடையது என்பதை நாம் நினைவுகூர்வது நல்லது. V−
ஒரு மார்க்ஸிவாதிக்கு, மதச் சுதந்திரம் மனிதச் சுதந்திரத்தின் ஒரு பகுதி என்றளவில், ஆதரிக்கப்பட வேண்டிய ஒன்றாகியது. மதச் சுதந்திரம் சமுதாய நீதியையும் மனித விடுதலை யையும் மறிக்கும் ஒரு கருவியாகும்போது, மதங்களில் உள்ள விடுதலைப்பாங்கான கூறுகளை வலி யுறுத்தி, ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் துணைபோகும் கூறுகளை விமர்சிப்பதற்கான தேவை ஏற்படுகிறது. மதத்தோடல்லாமல் மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்தவும் ஒடுக்கவும் எடுக்கப்படும் முயற்சிகளுடனேயே எவரும் மோத வேண்டியுள்ளது. தனிமனித உரிமைகள் என்ற பேரில் மற்றவர்களது மத நம்பிக்கைகளைப் புண்படுத்துமாறான செயல்கள் ஊக்குவிக்கப்படக் கூடாதவை. அதேவேளை, ஒருவரது மத நம்பிக்கை, இன்னொருவர், அந்நம்பிக்கை உள்ளவராயினும் இல்லாதவராயினும், அவர்மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறையாக்கப்படல் மிகவும் தவறானது. கடவுளின் சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் எவ்வாறு எந்த ஒரு தனிமனிதனுக்கும் இருக்க முடியும்? சர்வ வல்லமையுள்ள தமது கடவுள் குற்றவாளிகளைத் தக்கபடி

Page 26
சி. சிவசேகரம்
கவனிக்க வல்லார் என்ற நம்பிக்கை இல்லாதவர்களது மத நம்பிக்கை குறைபாடுடையது. சமுதாய ரீதியாகத் தவறுகளைச் சமுதாயம் திருத்தலாம். சமுதாயத்தின் செயற்பாட்டைக் கேள்விக்குட்படுத்தும் உரிமை தனிமனிதர்கட்கு உண்டு. இந்த உரிமையின் அடிப்படையிலேயே உலகின் பிரதான மதங்கள் பல உருவாக இயலுமாயிற்று.
மதமும் மனித உரிமைகளும் பற்றிய விஷயங்களில் சட்டாம்பிள்ளைத்தனமான கட்டளைகள் மனித நலனுக்குத் தீங்கானவை. எனவே இவ்வாறான முரண்பாடுகளை நிதானமுடனும் சகிப்புடனும் அணுகுவது மனித இன விடுதலைக்கு (அது பொருள் சார்ந்த புற விடுதலையாயினும் சீவன் சார்ந்த அகவிடுதலையாயினும்) நல்ல பயனளிக்கும்.

6
மு. தளையசிங்கமும் மார்க்ஸியமும்
முன்னுரை
காலஞ்சென்ற மு. தளையசிங்கத்தை விமர்சித்து எழுதும் எண்ணம் ஏறத்தாழ மூன்று வருஷங்கள் முன்பு ஏற்பட்டது. ஆயினும் மு. த. வுக்கு உள்ள முக்கியத்துவமே ஒரு குறுகிய வட்டத்துக்குட்பட்டது என்பதால் அந்த எண்ணத்தைச் செயற்படுத்தாமல் விட்டுவிட்டேன். பின்பு ஈழத்து ஏடான அலை - 19இல் (1981 ஐப்பசி-கார்த்திகை) மு. பொன்னம்பலம், மு. த. பற்றி கைலாசபதி எழுதிய கட்டுரைக்கு மிகவும் ஆக்ரோஷமாகவும் சிறிது நாகரிகக் குறைவாகவும் எழுதிய பதிலை (யாருக்கு இரண்டக நிலைமு. த. விற்கா? காகை, க்கா? வாசித்தபோதும் அந்த எண்ணம் மனத்தில் எழுந்தது. ஆயினும் எழுத வேண்டிய அவசியம் இல்லாமையால் மீண்டும் விட்டுவிட்டேன். அண்மையில் தென்னிந்தியாவில் சில மார்க்ஸிய எதிர்ப்பாளர் மத்தியில் மு. த. பற்றிய புதிய அக்கறை எழுந்துள்ளதும் அது அந்த வட்டத்துக்கு வெளியேயும் சிறிது சலசலப்பை ஏற்படுத்தி யிருப்பதால், மு. த. வின் கருத்துகள்பற்றி எழுத முற்படுகிறேன். இதன் நோக்கம் தனியே மு. த. வை விமர்சிப்பது அல்ல. மார்க்ஸியத்தைத் தாண்டிப்போவது மார்க்ஸியத்துக்கும் இந்திய சிந்தனை மரபுக்கும் முடிச்சுப் போடுவது போன்ற சில முயற்சிகளில் ஈடுபட்டுள்ள சிலருக்கும் பதில் கூறும் தேவையையும் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கிறேன்.

Page 27
& சி. சிவசேகரம்
மு. த. பற்றி விமர்சித்த கைலாசபதி, தன் விமர்சனத்தில் முக்கியமாகச் சில வாதங்களைக் கையாண்டதில், கவனயீனமாக இருந்திருக்கிறார் என்றாலும், அவரது முக்கியமான முடிபுகள் பற்றி நான் அவருடன் உடன்படுகிறேன். கைலாசபதி மு. த. வின் சிந்தனைகளில் உள்ள மேலும் பல குறைகளையும் குழப்பங்களையும் சுட்டிக்காட்டவில்லை என்பதே என் பிரதான முறைப்பாடாக இருக்கிறது. கைலாசபதி, மு. த. வைக் கொஞ்சம் மிகையாகவே மதிப்பிட்டு விட்டாரோ என்றுகூடத் தோன்றுகிறது.
மு. த. மார்க்ஸியத்தைப் புரிந்து கொள்ளாமல் அதைக் கடந்து செல்வதாகக் கூறி மாக்ஸியத்தை எதிர்த்தவர் என்ற மதிப்பீடு மிகவும் சரியான ஒன்று. மு. த. வின் தத்துவத்துக்கு ஆதாரமாக இருந்த பலவீனங்கள் பல. பொருள்முதல்வாதத்தைப் போதாது என்று கூறிக் கருத்துமுதல் வாதத்தை ஏற்பதாக கூறத் தயங்கி இரண்டையும் ஒருமைப்படுத்துவதாகக் கூறும் மு. த. வின் சிந்தனைக் குழப்பம் என்னை வியப்படையச் செய்யவில்லை. அதையெல்லாம் தத்துவ முத்துகளாக்கிப் போற்றும் போக்கும் என்னை அதிசயிக்கவில்லை. மு. த. வின் தத்துவத்துக்கு ஆதாரமாக உள்ள சிந்தனைகளையும் ஊகங்களையும் விமர்சிப்பது. எத்தகைய கருத்துத் தெளிவீனங்கள் அவரது சிந்தனைக்கு ஆதாரமாக இருந்தன என்பதைக் காட்டவும், சிலரால் அவை குருட்டுத்தனமாக, விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளப்படும்போது, அவர்கட்கு அவை மாபெரும் சிந்தனைப்போக்குகளாகத் தென்படுகின்றன என்பதை உணர்த்தவும் உதவக் கூடும்.
மு. த. வும் மார்க்ஸியமும்
மார்க்ஸியம் நல்லதுதான் என்கிற விதமாக மு. த. இடத்துக்கிடம் குறிப்பிட்டாலும், அவரது முக்கிய நோக்கு மார்க்ஸியத்தின் போதாமையை வலியுறுத்துவதும் அதைத் தாண்டிப் போக வேண்டிய அவசியத்தை விளக்குவதுமே. மு. த. மார்க்ஸியம் பற்றியும் அதன் அடிப்படைகள் பற்றியும் கொண்டுள்ள தெளிவீனமான கருத்துகளை முதலில் எடுத்துக் கொள்கிறேன்.
(1) "சரித்திரத்துக்கு மார்க்ஸியவாதிகள் கொடுத்த வளர்ச்சியானது மார்க்ஸியவாதிகளையே தோற்கடித்து வளரும் காலம் வந்து விட்டது. ஆனால் அதை மார்க்ஸியவாதிகளாலேயே உணர முடியாமல் இருக்கிறது. அதனால் அவர்கள் புதுப் புது வியாக்கியானங்களைத் திரிக்க வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். தங்களுக்குள்ளேயே பிளவுப்பட்டுச் சண்டைபோட வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். இன்னும் தர்மம் அவர்கள் பக்கந்தான் அதிகம் இருக்கிறது. ஆனால் அதன் தொடர்

மு. தளையசிங்கமும் மார்க்ஸியமும்
வளர்ச்சிக்கு அவர்களின் தத்துவப் பார்வை விட்டுக்கொடுக்கக் கூடியதாய் இல்லை" (போர்ப்பறை மு. தளையசிங்கம், ப. 75)
(2) "எப்படி ரஸ்ஸியா, சீனா போன்ற நாடுகளில் முதலாளித்துவ அமைப்பு பூரணமாக வளருவதற்கு முன்னமே பொதுவுடமை அமைப்பின் ஆரம்பமும் தொழிலாளர் சர்வாதிகாரமும் ஏற்பட்டுவிட்டனவோ, அதே வகையில் இனிமேல் பூரணமான முதலாளித்துவ அமைப்பு அல்லது அதற்குப் பின்னர் வரக்கூடிய தொழிலாளர் சர்வாதிகாரம் எதுவுமில்லாமலேயே அவற்றுக்கும் அப்பாற்பட்ட ஒரு சகாப்தத்தையும் சமூக அமைப்பையும் தோற்றுவிக்கக்கூடிய சூழல் உருவாகி விட்டது." (GUIT. 90).
(3) “மார்க்ஸின் சிந்தனைகள் இன்று பல நாடுகளில் செயல்படத் தொடங்கிய பிறகுதான் அதன் குறைகளும் நடைமுறையில் நம்பக் கூடியவகையில் நிரூபிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரப் பொதுவுடைமை மிக அவசியம் என்பதை உலகம் உணர்கிறது. ஆனால் அதைக் கொண்டு வருவதற்குரிய காரணங்களையும், விளக்கங்களையும் மார்க்ஸ் காட்டிய கோணத்தில் முற்றாக ஏற்றுக்கொள்வதும் சரியல்ல என்பதை மார்க்ஸிய சித்தாந்தம் நடைமுறையில் அனுட்டிக்கப்பட்ட பின்தான் உலகம் பூரணமாக நம்பத் தொடங்கியிருக்கிறது" (போ. 93).
(4) "வர்க்கப் பிரிவினை என்பதே அறியாமைக்கு உட்பட்ட - பழைய அறியாமைக்குட்பட்ட, காலத்தின் மனத்தோற்றமேதான். அதனால் ஆயுதமேந்திய வர்க்கப் போராட்டம் சரித்திரம் தன்னை உணராத வரைக்கும், உலகாத்மா தன் சுயத்தை அறிவுப்பூர்வமாகக் கண்டுபிடிக்காத வரைக்கும் நடைபெறும் அறியாமைக்குட்பட்ட போராட்டமாகவே இருக்கிறது. ஹெகல் (Hegel) கூறியதுபோல் தானே எல்லாமாக இருக்கிறது என்பதை உணரும் உலகாத்மா அதற்குப்பின் வர்க்கப் பிரிவினைகளையும் (அதேபோல் சாதி, இன, மொழி, தேசப் பிரிவினைகளையும்) பலாத்காரத்தையும் அடிப்படையாகக் கொண்டு போராடாது. .ஹெகலே தன் முடிவைச் சரியாக வளர்க்காததுபோல் மார்க்ஸும் அந்த முடிவைப் பிழையாகவே, தலைகீழாகவே வளர்த்துள்ளார். காந்தி, வினோபா போன்றோரே மனிதகுல அன்பையும், அகிம்சையையும், சத்தியத்தையும் அடிப்படையாய்க் கொண்டு சரித்திரத்தை வளர்க்க முயல்வதால், ஹெகல் கண்டுபிடித்த இடத்திலிருந்து சரித்திரத்தை உண்மையாக வளர்ப்பவர்கள் இவர்களாகவே இருக்கின்றனர்." (போ. 99).

Page 28
சி. சிவசேகரம்
(5) பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்ற பாகுபாடு இன்று விஞ்ஞான ரீதியாகத் தன்னை நிறுவமுடியாத குருட்டுப் பார்வையாகி விட்டது. (மெய்யுள், மு. தளையசிங்கம், ப. 42.
(6) லோகாயத வாதத்தின் இறுதிக் கோலமாக (மார்க்ஸியம்) இருக்கிறதேயொழிய, மனத்தளத்தின் அடுத்த பார்வைப் போக்கான சமய சித்தாந்தப் பார்வையின் முடிவாகவும் அது இல்லை. (மெ. 36)
(7) 'மார்க்ஸ் விட்ட தவறுகட்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவர் விஞ்ஞானமாகக் கருதியவை பூரண விஞ்ஞானமல்ல. அவர் அறிவுப் பிறழ்வாக ஒதுக்கிய ஞான அனுபூதி நிலையும் - நிர்வாண நிலை - உண்மையான அகவிஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பேயாகும். மேற்கத்தைய விஞ்ஞானம் அதை இனிமேல்தான் பூரணமாக உணரவேண்டியிருக்கிறது." (CSLIsr. 94).
மேற்குறிப்பிட்ட சில மேற்கோள்களில் மு.த. வின் மார்க்ஸிய விரோதம் தெளிவாகியிருக்கும். முதலாளித்துவ முறையை எதிர்ப்பதில் அவர் மார்க் ஸியவாதிகளுடன் உடன்பாடு காட்டலாம். அவர் இடையிடையே எவ்வளவுதான் மார்க்ஸியத்தின் நற்பண்புகளைப் போற்றிக் கூறினாலும் அவர் கூறுமாறு மார்க்ஸியத்தை தாண்டிப்போவது, இன்றைய சூழலில், மார்க்ஸியத்தை நிராகரிப்பது என்பதைவிட வேறெதையுமே குறிக்காது. இதை மூடிக்கட்டச் சிலர் எடுக்கும் முயற்சிகள் பற்றி நான் அதிகம் அலட்டிக் கொள்ளப் போவதில்லை.
மார்க்ஸிய முகாமுக்குள் பிளவுகள் (1) பற்றி மு. த. பேசுகிறார். இந்தப் பிளவுகள், கருத்து முரண்பாடுகள் ஆகியனவும் வேறுபட்ட வியாக்கியானங்களும் மார்க்ஸின் காலத்திலிருந்தே இருந்து வந்தவைதான். மார்க்ஸிய இயக்கம் ஒரு விறைப்பான தத்துவ நிலைப்பாட்டின்மேல் கட்டியெழுப்பப்பட்ட திருச்சபை அல்ல. செயற்பாட்டினூடு வளர்ச்சிபெறும் இயக்கம் ஒன்றில் தவறுகளும், தோல்விகளும் இயல்பானவை மட்டுமல்ல அதன் வளர்ச்சிக்குப் பங்களிப்பவையுங்கூட, கருத்து முரண்பாடுகளின் மூலம் மார்க்ஸியம் சிதைந்து போகவில்லை. மார்க்ஸியம் மார்க்ஸிய லெனினிஸமாகவும் சீனாவில் மாஓசேதுங் சிந்தனையாக வளரவும் தொடர்ந்து விருத்தியடையவும், மார்க்ஸிய இயக்கத்திலுள்ளான பிளவுகள் கூடத் தம் பங்கைச் செலுத்தியுள்ளன.
ரஷ்யாவிலும் சீனாவிலும் முதலாளித்துவம் வளரு முன்னமே புரட்சி ஏற்பட்டதை ஆதாரமாக வைத்து, சோஷலிச சமுதாய ஏற்படு முன்னரே அதற்கு "அப்பாற்பட்ட" ஆத்மீக அடிப்படையிலான சமுதாயம் ஏற்படும்

மு. தளையசிங்கமும் மார்க்ஸியமும்
சூழ்நிலை உருவாகிவிட்டது (2) என்று வாதிக்கும் மு.த. முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ந்ததனாலேயே அதன் முரண்பாடுகள் விருத்தி பெற்ற முதலாளித்துவத்தின் தேசிய எல்லைக்கட்கப்பால் விஸ்தரிக்கப்பட்ட சூழ்நிலை பற்றியும், அதனாலேயே சர்வதேசரீதியாக ஏகாதிபத்தியத்துக்கு எதிரான புரட்சி வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாடுகளின் எல்லைக்கு வெளியே நடத்தப்படும் சூழல் உருவானது என்று அறியமாட்டாரா? அந்தப் புரட்சிகள் ஏன் சாத்தியம் என்பதை முன் கூட்டியே மார்க்ஸியவாதிகளால் ஆதாரபூர்வமாக விளக்க முடிந்தது. மு. த என்ன ஆதாரங்களைத் தன்னுடைய புதுயுகத்தின் வருகைக்கு ஆதரவாகக் காட்டுகிறார்? இரண்டு விஷயங்களை ஒப்பிட்டு முடிபுகட்கு வருமிடத்திலோ, ஒன்றை வைத்து மற்றவற்றை விளக்குமிடத்திலோ, சில தர்க்கரீதியான அடிப்படைகளை
அவதானிக்க வேண்டாமா? மு. த. இந்த விஷயத்தில் தவறிவிட்டார்.
பொருளாதாரப் பொதுவுடமைக்கான அவசியத்தை உலகம் உணரும் அதே சமயம், புரட்சிக்கான மார்க்ஸிய காரணத்தையும் விளக்கத்தையும் ஏற்காததாலா (3) புரட்சி ஏற்படவில்லை? முழு உலகமும் இவ்வளவு எளிதாக இந்த விஷயத்தில் தெளிவு காணப்படுமாயின், ஏகாதிபத்தியத்தை முறியடிப்பதில் நமக்கு இவ்வளவு சிரமம் ஏனென்று புரியவில்லை. சரியான காரணத்தையும் விளக்கத்தையும் தரவல்ல மஹான்கள் எத்தனையோ பேர் மார்க்ஸுக்குப் பிறகு வந்து போய்விட்டார்களே!
வர்க்கப் பிரிவினை விஷயத்தில் (4) அறியாமை என்ற ஒரு வார்த்தையால் முழுப்பிரச்சனையையும் மூடிவிட்ட மு. த. வின் தெளிவீனமான வரலாற்றுக் கண்ணோட்டம் வர்ண அமைப்புப் பற்றிப் பேசும் இடத்தில் அப்பட்டமாகவே தெரிகிறது. (அதற்குப் பின்னர் வருகிறேன்). ஆனால் வர்ண பேதத்துக்கு ஆழமான தத்துவ விளக்கம் காணமுற்பட்ட மு. த. வுக்கு வர்க்க பேதத்துக்கும் ஏதாவது அகப்படாமல் போய்விட்டதா?
பொருள் முதல்வாதம் கருத்துமுதல்வாதம் என்ற வேறுபாடு விஞ்ஞான ரீதியாகத் தன்னை நிறுவ முடியாத குருட்டுப் பார்வையாகி விட்டது (5) என்று வாதிக்கும் மு. த. வின் விஞ்ஞான ரீதியான விளக்கத்தைக் கேட்டால் அசந்தே போய் விடுவீர்கள், சடமானது சடத்தின் உருவத்தைக் கடந்த சக்தி ஒளி அலையாகவும் அவற்றிற்கு அப்பாற்பட்டதாகவும் மாறுகிறது (மெ. 42. அப்பாற்பட்டது என்ன என்று விளக்காத மு. த. 'சடம் என்பது நிலையான ஓர் அடித்தளமல்ல; எனவே பொருளை முதலாகக் கொள்ள முடியாது என்பதற்கு ஆதாரமாக ஆதர் கிளாக் என்கிற விஞ்ஞானப் புனைகதையாளரையும் மேற்கோள்காட்டி அதிலும் தன்னுடைய

Page 29
சி. சிவசேகரம்
அர்த்தம் எதையோ திணித்துள்ளனர். மு. த. வுக்கு பொருள் முதல்வாதம் என்றால் சடப் பொருளை மாற்றமுடியாத முதன்மைப் பொருளாகக் கொண்ட ஒன்று என்ற வரட்டு வியாக்கியானம்தானா அகப்பட்டது? ஏதாவது வார்த்தைக்கு அகப்பட்ட அகராதியில் அர்த்தம் பார்த்துவிட்டு அதையே வரைவிலக்கணமாக்கும் குருட்டுத்தனம், கருத்து முதல்வாதம் என்கிற விஷயத்திலும் தென்படுகிறது. (அதற்கும் பின்னர் வருவோம்).
லோகாயதவாதத்தின் இறுதிக் கோலமாக மார்க்சியம் இருக்கிறது (6) என வாதிக்கும் மு. த. லோகாயதம் என்கிற பழைய பொருள் முதல்வாதம் இயங்கியல் சாராதது என்பதால் அது மாறாநிலையியல் (Metaphysics) தன்மையுடையது என்பதை அறிய மாட்டாதவரா? சமய சிந்தாந்தப் பார்வை என்று மு. த. குறிப்பிடும் (Metaphysics) மாறா நிலையியல், மார்க்சியத்தின் இயங்கியல் பார்வைக்கு முரண்பாடானதாகவே இருக்கிறது. பொருள்முதல்வாதம் கருத்துமுதல்வாதம் இரண்டையும் இணைப்பதும் அதன்மூலம் முழுமையான கோலம் ஒன்றைப் பெறுவதும் என்றெல்லாம் வாதிட்டுவிட்டு, மனத்தளத்திலிருந்து பேரறிவுத்தளத்துக்குத் தாவுவது பற்றிப் பேசும் மு. த. இந்த இணைப்புக்கான அடிப்படை பற்றித் தெளிவாக எதையுமே முன்வைக்கவில்லை. அந்த இரு தத்துவப் போக்குகளதும் அழிவை அவர் விரும்புகிறார் என்றாலும் அவரது இறுதி நிலை கருத்துமுதல்வாதமே. இதை அவரால் உணர முடியவில்லை.
மார்க்ஸியம் விஞ்ஞானமாகக் கருதுவது பூரண விஞ்ஞானம் அல்ல என்று வாதிக்கும் மு. த. (7), தான் கூறும் பூரண விஞ்ஞானம்' என்றைக்காவது மார்க்சியத்தின் இலக்காக இருந்ததா என்று கவனித்தாரா? மார்க்சியம் தன் பூரணமற்ற தன்மையையும் தான் சார்ந்து நிற்கும் விஞ்ஞானத்தின் பூரணமற்ற தன்மையையும் நன்கு உணர்ந்தே உள்ளது. பூரண உண்மை பற்றிய பாசாங்கு மார்க்சியத்துக்கு உரிய ஒன்றல்ல. விளங்காத விஷயம் பற்றி மார்க்சியவாதியின் பதில் "இப்போதைக்கு என்னால் விளக்க முடியாது" என்பதே. எல்லாவற்றையுமே விளக்கும் நிர்ப்பந்தம் சமயவாதிகட்குத்தான் இருந்து வந்துள்ளது. எனவேதான் மோட்ச நரகங்களும், பாப புண்ணியங்களும், ஜன்ம வினையும், பிறவிச்சுழலும் அவர்களை மூழ்கடித்து விடுகின்றன.
மார்க்ஸியம் பற்றிய அறிவில் எவ்வளவு தெளிவுடன் மு. த. மார்க்ஸியத்தைக் கடந்து செல்ல முற்பட்டார் என்பதற்கு மேலும் மேலும் மேற்கோள்களைக் காட்ட வேண்டிய அவசியம் எனக்கில்லை. இனி மு. த. வின் வரலாற்று அறிவுக்கு வருவோம்.

மு. தளையசிங்கமும் மார்க்ஸியமும்
"பழைய இந்து மரபின் சாதிப் பிரிவுகள் எந்த அடிப்படையில் நிறுவப்பட்டன என்பதற்குரிய பூரண விளக்கங்கள் இதுவரை காட்டப்படவில்லை. ஆனால் உண்மையில் பழைய நான்கு வர்ணங்களும் சமூகத்தின் அளவில் மனிதன் இலகுவாகக் குணங்களைக் கடந்து வளர்வதற்கு வகுக்கப்பட்ட பிரிவுகள்தான். தனிப்பட்ட மனிதன் தன்னளவில் குணங்களைக் கடந்து வாழ்வதற்கு நான்கு ஆச்சிரம இருந்தன. பிரமச்சரியம், கிரகஸ்தம், வனப்பிரஸ்தம், சந்நியாசம். அதேபோல் சமூக அளவில் பரிணாம முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்ட பிரிவுகள்தான் பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணங்களாம்.
'முழு உயிரினங்களதும் வளர்ச்சியை விஞ்ஞான ரீதியாகக் கணக்கெடுத்து அந்தக் கணக்கெடுப்புக்கு ஏற்ப மனிதப் பரிணாமத்தைச் சத்திய உச்சத்தை நோக்கித் துரிதப்படுத்தி வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டவையே அந்த ஆச்சிரம - வர்ணப் பாகுபாடுகளாகும். மறுபிறப்புக் கொள்கையோடு அவை பொருத்தப்பட்டு "தத்துவம் அசி" என்கிற இலட்சிய நிலையைச் சதா முன் வைத்து சமூக இயக்கமே பிரமிக்கும் வகையில் ஆற்றுப்படுத்தப்பட்டிருக்கிறது" (மெ. 46-47).
பண்டைய இந்திய வரலாற்றைப் புரிந்து கொள்ள எத்தனையோ இந்திய வரலாற்றியல் ஆய்வாளர்கள் தம் காலத்தை விரயமாக்கி விட்டார்கள். தளையசிங்கம் பாய்ச்சும் ஒளியில் 6000 வருஷ வரலாறு நம் கண் முன் ஒளிர்கிறது மூடர்களே உங்கள் புத்தகங்களை எல்லாம் தூரப்போடுங்கள் இதோ, வரலாறுகட்கெல்லாம் முடிவுகட்டும் வரலாறு வந்து விட்டது).
ஆனாலும், அடியேனும் ஒரு சிறு சந்தேகம்; இந்தத் தத்துவ விளக்கங்கள் மூலம் தீர்க்க முடியாத சிக்கல்கள் பல மகாபாரதம் போன்ற நூல்களிலும் உள்ளனவே! பிராமணப் பரசுராமர் அரச குலத்தவர்மீது கொண்ட சினமும் கர்ணனை அவர் சபித்ததும் ஏன்? கர்ணன் அர்ஜூனனை எதிர்த்துப் போட்டியில் கலந்து கொள்ள முனைந்தபோது கர்ணன் மன்னர் குலத்தவனா என்ற கேள்வி எழுந்தது ஏன்?
மகா மேதையான பிராமணர் உதங்கர் புலையனாக வந்த இந்திரனை அடையாளங் காணமுடியாமல் அவன் வழங்கிய நீரை மறுத்தது ஏன்? என்றுமே சாதிகள் பிறப்பாலானவை என்பதை மூடி மறைக்க முனைந்த எத்தனையோ பேரின் வரிசையில் மு. த. வும் முடங்கிவிட்டார் என்றே தோன்றுகிறது. வரலாற்றை நேர்மையாகப் பார்க்கத் தைரியமில்லாதவர்களால் அதை உருவாக்கி வழிகாட்ட முடியாது. இந்த வகையான கோழைத்தனம் எப்படிச் சத்தியுகத்துக்கு வழிகாட்டுமோ தெரியவில்லை.

Page 30
சி. சிவசேகரம்
வர்ணாசிரம தர்மத்தை அதன் வரலாற்றுச் சூழலில் மிக அனுதாபமாகவே நோக்க முடியும்; அதற்கான மார்க்கம் சாதி முறைக்கும் உற்பத்தி உறவுகட்கும் சமுதாய தொழிற்பிரிவுகட்கும் உள்ள தொடர்பை அறிவதேயொழியத் தத்துவக் குழப்பத்தில் உண்மைகளை அமுக்கி மறைப்பதல்ல.
(வியற்னாம்) "யுத்தத்தில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டும்கூட அதனால் வெல்ல முடியவில்லை என்பது எவ்வளவு முக்கியமானதோ, அவ்வளவு தூரம் கொரியா யுத்தத்தின்போது சீனா அதில் நேரடியாக ஈடுபடவில்லை என்பதும் முக்கியமானதாகும். சீனாவும் ரஷ்யாவும் அதில் நேரடியாகத் தம் படைகளை இறக்கிவிட்டால் அதன் மூலம் தமக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதின என்பது அதன் மூலம் புலனாகிறது. இது ஒரு ஸ்தம்பித நிலையாகும்." (மெ. 17).
"எனவே, ரஷ்யாவிலும் சரி, சீனாவிலும் சரி முதலாளித்துவ நாடுகளுடன் உடனிருந்து வாழும் சமாதானத்தை இன்றைய தேவைக்குரிய தந்திரமாக ஏற்றுக் கொள்கின்றன. அதன்மூலம் அதற்குரிய ஸ்தம்பிதத்தையும் நேரடியாகப் போர் தொடுக்க முடியாத பலவீனத்தையும் ஒப்புக் கொள்கின்றன." (மெ. 118).
சீனா, கொரியா யுத்தத்தில் ஈடுபட சீனா மீது அமெரிக்க அத்துமீறல்களே காரணமாயிருந்தன. மற்றப்படி லெனின் முதல் மாஒ வரை, (ட்ரொட்ஸ்கியவாதிகள் போக எந்த மார்க்ஸிவாதியுமே நாடுகள்மீதான யுத்தத்தின் மூலம் சோஷலிஸத்தைப் பரப்பும் கருத்தை முன்வைத்ததில்லை. மு. த. வின் விளக்கங்களெல்லாம் எங்கேயிருந்து வருகின்றன என்று வாசகர்களே ஊகித்துக் கொள்ளலாம்.
"எல்லைச் சண்டை காரணமாக (யுசூறி நதி எல்லை சீனாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையே எழுந்துள்ள பிரச்சாரப் போரில் திரும்பவும் அந்த இன, மொழிப் பற்றுகள் இரு பக்கங்களிலும் படையாகத் திரட்டப்படுவதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது." (போ, 77).
இனப்பற்று மொழிப்பற்று நாட்டுப்பற்று என்பன அப்படியே கெட்ட விஷயங்களல்ல. அவற்றுக்கும் ஒரு முற்போக்கான பங்குள்ளது. அது வரலாற்று வளர்ச்சியின் போக்கில் நிர்ணயமாவது இவற்றை இனவெறி, மொழிவெறி, தேசியவெறி என்பனவற்றுடன் குழப்பிக் கொண்ட மு. த. எந்த அடிப்படையில் சீனாமீது மேற்கூறிய குற்றச்சாட்டை வைக்கிறார்? வுஸ9லி நதி எல்லைப் பிரச்சனை பற்றி மட்டுமன்றி முழு சீன ரஷ்யப் பிரச்சனை தொடர்பாகவும் சீனாவின் நிலைப்பாட்டை மு. த. எப்போதாவது

மு. தளையசிங்கமும் மார்க்ஸியமும்
படித்திருக்கிறாரா? மு. த. வின் தகவல்கள் கைலாசபதி கூறியதுபோல 'என்கெளண்ட்டர் போன்ற பத்திரிகைகளினின்று (பெருமளவுக்கேனும்) கிடைத்ததாகச் சந்தேகிக்க இடமில்லையா?
"ஹெகலின் தத்துவத்தை வெல்வதற்கு எங்கல்ஸ் எப்படி வழி கூறினாரோ அப்படித்தான் மார்க்ஸியத்தையும் வெல்ல வேண்டும். அதன் நன்மைகளைக் கறந்துகொண்டு அதன் உருவத்தை அழிக்க வேண்டும். இன்னுமொரு பெருந் தத்துவத்தால் அதைச் சிதைக்க வேண்டும். சங்கரரின் அத்துவைத வேதாந்தமும் அந்த வகையிலேயே பெளதத்தை இந்தியாவில் வென்றிற்று." (போ 79).
இவர் மார்க்ஸியத்தை வெல்கிறதும் சிதைக்கிறதும் ஒருபுறம் கிடக்கட்டும். பெளத்தம் இந்தியாவில் தோற்றது ஒரு வெறும் தத்துவப் போராட்டத்தின் தோல் வியா? தேரவாத பெளத்தம் தன்னை ஜனரஞ்சகப்படுத்தியதன் மூலம் இலங்கையிலும் வேறு சில நாடுகளிலும் பிழைத்திருகிறதே! அது எந்தத் தத்துவ வளர்ச்சியின் வெற்றி? அத்வைதம் ஏன் இந்தியா முழுவதும் ஆதிக்கத்திற்கு வர முடியவில்லை? ஏன் அதனால் இந்திய எல்லைக்கு வெளியே போக முடியவில்லை? மு. த. வின் ஒற்றை வசன விளக்கங்களும் வியாக்கியானங்களும் மு. த. வின் வரலாறு பற்றிய கருத்துக் குழப்பத்துக்குப் பல இடங்களிலும் சான்று கூறுகின்றன.
மு. த. வும் மெய்யியலும் விஞ்ஞானமும்
ஹெகலை மார்க்ஸ் தலைகீழாக்கினார். மார்க்ஸைத் தலைகீழாக்கி மீண்டும் ஹெகலிடம் கொண்டு போகலாம் என்கிற மாதிரி இந்த தலைகீழாக்கும் விஷயத்தை இயந்திர ரீதியாகப் பயன்படுத்துகிறார் மு. த.
கருத்து முதல்வாதம் என்றால் கலை, இலக்கியம், தத்துவம் ஆகிய துறைகட்கு முதலிடம் கொடுத்தலும் சிந்தனையைச் செயல் தொடர்வதாகக் கூறுவதும் போ. 89) என்று விளங்கிக் கொண்டிருக்கும் மு. த. வை நினைத்துச் சிரிக்கவும் முடியாமலிருக்கிறது. சிந்தனைக்கும் செயலுக்குமிடையிலான உறவு கொள்கைக்கும் நடைமுறைக்கும் உள்ள உறவு போன்ற விஷயங்களை மிக எளிமையாக எவருமே விளங்கிக் கொள்ளக்கூடிய முறையில் மார்க்சியவாதிகள் எத்தனையோ பேர் எழுதியிருக்கிறார்கள்
விஞ்ஞானம் பற்றிய முடிவுகட்கு முக்கியமான ஆதர் க்ளாக் (Arthur Clark) என்கிற விஞ்ஞானப் புனைகதை ஆசிரியரை ஆதாரம் காட்டுமளவுக்கு மு. த. வின் விஞ்ஞான அறிவு இருக்கிறது.

Page 31
சி. சிவசேகரம்
சடத்துக்கும் உயிருக்கும் நினைவுக்கும் அப்பாற்பட்ட பேர்ஞான நிலையைக் கண்ட அநுபூதி மகான்களை மாபெரும் விஞ்ஞானிகள் என்று வர்ணித்துவிட்டு விஞ்ஞானிகள் அந்த நிலையை இன்னும் தொடவில்லை என்று கூறும் மு. த. வுக்கு அந்தப் பேர்ஞான விஞ்ஞானமும் இந்த 'அஞ்ஞான விஞ்ஞானமும் ஒரே அடிப்படையினவா ஒத்த நோக்குடையனவா என்பதையெல்லாம் கவனிக்க முடியவில்லை. சைவ சித்தாந்தமா எலும்பு முறிவு வைத்தியமா சிறந்தது என்கிற மாதிரி எப்படித்தான் சம்பந்தமற்ற விஷயங்களை ஒப்பிட முடிகிறதோ தெரியவிலலை.
மு. த. அத்வைதத்தின்மீது வைத்துள்ள நம்பிக்கை, காந்தி, வினோபா போன்றோர் காட்டும் அரசியல் சமுதாய மார்க்கம், ராமகிருஷ்ணர் முதலாக அரவிந்தர் வரையிலானோரின் ஆன்மிகக் கருத்துகள் மீதான பிடிப்பு என்பன சர்வமத ஒற்றுமை, பொருள்முதல்வாதத்துக்கும் கருத்து முதல் வாதத்துக்கும் முடிச்சுப் போடும் மெய் முதல் வாதம் ஆகிய நிலைப்பாடுகட்கு அவரை இழுத்து வந்துள்ளது. ஆனால், "புதிய யுகம் வந்துவிட்டது" என்று ஆர்ப்பரிக்கும் அளவுக்குச் சூழலின் யதார்த்தத்தை உணரவோ தன் சிந்தனையை முழுமைப்படுத்திக் கொள்ளவோ முடியாமல், சர்வோதயம் என்ற மொட்டைச் சந்துக்குள் முடங்கி விடுகிறார்.
மு. த. வின் இலக்கியப் பார்வை
தரமற்ற இலக்கியம் பற்றி மு. த. வின் கோபம் நான் அவருடன் பெருமளவும் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒன்று. ஆனால் அவருடைய இலக்கியக் கருத்துகளுடன் உடன்பாடு காணுவது எனக்கு மிகவும் சிரமமானது.
பூரண இலக்கியம் என்று சகல துறைகளையும் சகல இலக்கிய வகைகளையும் மட்டுமன்றிச் சகலவிதமான சிந்தனைப் போக்குகளையும் இணைக்கும் எழுத்தாளர் இயக்கம் பற்றிபேசும் மு. த. இத்தகைய ஒன்று வர்க்க பேதமற்ற சமுதாயமொன்றில் அல்லது அதை அணுகும் சமுதாய அமைப்பிலேயே சாத்தியம் என்பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை.
சமுதாய மாற்றங்களையொட்டிக் கலை இலக்கியத்தில் மாற்றங்கள் ஏற்படுவது பற்றிய மார்க்ஸிய நிலைப்பாட்டை அடிப்படையாக வைத்து, சோஷலிசம் வெற்றி பெற்ற சமுதாயங்களில் இன்னும் முதலாளித்துவ சமுதாயத்தில் உருவான பழைய கலை வடிவங்கள்தானே உள்ளன என்று கேள்வியெழுப்புகிறார் மு. த. இது நியாயமான கேள்வி ஆனால், பதில் மு. த. விரும்புவதுபோல சோஷலிச சமுதாயத்திலுள்ள சிந்தனைத்

மு. தளையசிங்கமும் மார்க்ஸியமும்
தேக்கமல்ல. முதலாளித்துவ சமுதாயத்தில் கலைக்கும் இலக்கியத்துக்கும் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தால் சோஷலிச சமுதாயத்தில் நடப்பது என்னவென்று விளங்கும். மு. த. வுக்கு சீனாவைக் கலாச்சாரப் புரட்சி வரையும்தான் காணமுடிந்தது. இன்று அந்தக் கலாச்சாரத் தேக்கத்தை உடைத்துக் கொண்டு சீனக் கலைஞர்கள் கண்டுள்ள எழுச்சியை மு. த. எதிர்பார்த்திருக்க மாட்டார். புதிய கலை வடிவங்கள் பற்றிப் பேசுமுன் புதிய கலை வடிவங்கள் ஏன் தேவைப்படுகின்றன என்று அறிய வேண்டாமா? சோஷலிச சமுதாயத்தால் பழைய கலைவடிவங்கள் மூலமே தன் தேவைகளை நிறைவு செய்யவும் அவ்வடிவங்களூடு செய்யக்கூடியவை யாவும் நிறையவே இருக்கும்போது புதிய வடிவங்கட்கான தேடல் பற்றி அதிகம் ஊக்கம் இருக்காது. ஆயினும் சீன ஒவியத் துறையில் புதிய பரிணாமங்கள் காணப்பட்டுள்ளன. மரபை நவீனத்துடன் இணைப்பதில் சீனக்கலைஞர்கள் சாதனைகளைச் செய்து வருகிறார்கள். புதுமை புதுமைக்காகவே' என்ற மாதிரி நிலை அங்கே இல்லை. மற்றுமொரு விஷயம் சீனாவில் சமுதாயம் பின்தங்கிய அரை நிலமான்ய சமுதாயமாக இருந்து முன்னாலே பாய்கிற ஒன்று. அங்கே நிரப்ப வேண்டிய இடைவெளிகள் பல உள்ளன. இது பற்றி அவர்கள் வெட்கப்படவும் இல்லை. தளர்ந்துவிடவும் இல்லை. கலை - இலக்கியம் பற்றிய கேள்வியை உற்பத்தி முறைகள் விஷயத்திலும் எழுப்பலாமே! மேற்கில் அடிமைச் சமுதாயம் நிலமான்யச் சமுதாயமானபோது உற்பத்தி
உற்பத்தி முறைகளில் நேர்ந்ததா? ஆனால் நிலமான்யம் முதலாளித்துவமான போது உற்பத்தி உறவுகளில் மட்டுமன்றி உற்பத்தி முறைகளிலும் மாபெரும் மாற்றங்கள் நேரவில்லையா? சோஷலிச மாற்றம் முக்கியமான உற்பத்தி உறவுகள் தொடர்பான ஒன்று. நவீன விஞ்ஞானம் (அதாவது முதலாளித்துவ வளர்ச்சியையொட்டி ஏற்பட்ட அறிவு வளர்ச்சி) இதுவரை தந்த தகவல்களையே மனிதன் பூரணமாகப் பயன்படுத்த வில்லை. முதலாளித்துவம் சுற்றாடல் பற்றிய விஞ்ஞானரீதியான அறிவை முறையாகப் பயன்படுத்த மறுக்கிறது. அதன் குறிக்கோள் இலாப வேட்கை. எனவே மேலும் மேலும் லாபம் குவிக்குமுகமாகவே புதிய விஞ்ஞான அறிவு, புதிய தொழில்நுட்பம் என்று அலைகிறது. இங்கே சோஷலிச சமுதாயம் குறைந்த தொழில் நுட்பத்தின் உதவியுடனேயே கூடிய சாதனைகளைப் புரியும் வேறுபாடு தெரியவில்லையா? எனவே புதிய அறிவுக்கான தேடலில் முதலாளித்துவம் நிறையத் தகவல்களையும் கருவிகளையும் குவிக்கலாம். மனித சமுதாயத்துக்குப் பயன்படும் தகவல்கள். கருவிகள் என்று பார்த்தால் சோஷலிச சீனமே உயர்ந்த விளைபயனைக் (Efficiency) காட்டுகிறது.

Page 32
சி. சிவசேகரம்
மு. த. வின் மெய்யுள், உருவத்தில் தமிழுக்குச் சற்றே புதுமையாக இருக்கலாம். ஆனால் இவ்வகையான எழுத்துக்கும் அது பிரகடனம் செய்யும் மெய் இயல்பு ஒரு மிகையான அடைமொழியே. (ஹென்றி மிலர் (Henry Miller) எழுதிய நடையும் இத்தகைய ஒன்றுதான். மிலரின் புத்தகங்களின் ஆபாசம் காரணமாக அவை பெற்ற செல்வாக்குத்தான் அதிகம் என்று நினைக்கிறேன்.) செய்யுள் - உரைநடை என்ற வித்தியாசங்களையும் மதிக்காதது இந்த மெய்யுள் என்று மு. த. கூறுகிறார். ஆனால் புதுக்கவிதை என்ற பேரில் வருபவை அந்த வித்தியாசங்களை மட்டுமன்றி அர்த்தம் அனர்த்தம் என்ற பேதத்தையும்கூடச் சில சமயம் 'கடந்து விடுகின்றன. மு. த. இலக்கியத்தின் உருவப் பிரச்சனைக்குள் தடுமாறுகிறார் என்றே அவரது மெய்யுள் பற்றிய கருத்தும் எழுத்துகளும் என்னை எண்ண வைக்கின்றன.
மோசஸ், புத்தர், கிருஷ்ணர், யேசு, முகம்மது ராமகிருஷ்ணர், சங்கரர் ஆகியோரை உண்மைக் கலைஞர்கள் பெரும் கலைஞானிகள் (மெ. 268) என்று கொண்டாடும் மு. த. கலை என்று கருதுவதும், கலை என்று என் சிற்றறிவுக்கு எட்டியதும் மிகவும் வேறுபட்ட விஷயங்கள்.
மார்க்சியக் கலைக் கண்ணோட்டம் பற்றிப் பேசும் மு. த. கலைச் சிருஷ்டிகளின் தரம் அந்தந்தக் காலத்துப் பொருளாதாரப் போக்கின் செல்வாக்கிலேயே தங்கியிருக்கிறது என்பது மார்க்சிய நிலைப்பாடு என்ற விதமாகக் (போ. 215) கருத்தை முன்வைக்கிறார். இது மார்க்ஸிய நிலைப்பாட்டை அவர் புரிந்து கொண்ட விதமா அல்லது மற்றவர்கள் புரிந்து கொள்ள விரும்பும் விதமா என்று தெரியவில்லை.
பீட்னிக்ஸ் (Beatniks), ஹிப்பிகள் (Hippies) என்ற போக்குகளை எல்லாம் இனி வரவிருக்கும் ஒரு பெருந் தத்துவத்தின் வருகையைக் குறிக்கும் சமிக்ஞைகள் என்று கருதும் அளவுக்கு போ. 221, ஜன்னியில் ஒருவன் உளறுவதற்கும் ஒரு கவிஞனின் கவிதை வீச்சுக்குமிடையிலான வேறுபாடு தெரியாத நிலையிலா மு. த. இருக்கிறார்?
அறுபதுகளில் ஆனந்த விகடன் காட்டிய பணமுடிச்சைப் பார்த்து மயங்கி இலக்கிய வியாபாரஞ் செய்ய ஆரம்பித்த ஜெயகாந்தனிடம் சத்தியத் தேடலை தரிசிக்கிறார் மு. த. (போ, 235), ஜெயகாந்தனுடன் மு. த. தன்னையும் மு. பொன்னம்பலத்தையும் சேர்த்துக் காணுகிறார். ஆனால் என்னால் கலையென்ற வகையில் மு. த. வின் எழுத்துகளை உயர்வாகக் கருதமுடியவில்லை. மு. பொ. என்றுமே என் அபிமான எழுத்தாளரல்ல.

மு. தளையசிங்கமும் மார்க்ஸியமும்
மு. த. வும் அதிருப்தியும்
கைலாசபதி, மு. த. அதிருப்தியை முக்கியப்படுத்துவதைச் சுட்டிக்காட்டியதையிட்டு மிகவும் கோபித்துக் கொண்ட மு. பொ. தன் கட்டுரையில் (அலை-19 "அப்படியானால் மார்க்ஸை ஹெகலிய எதிர்ப்பாளர், etc.’ என்று கூறமுடியாதா என்று தாக்கியிருக்கிறார். ஒரு கொள்கை இன்னொன்றன் எதிர்ப்பாக அமைவது ஒரு விஷயம் அது அதிருப்தியையே தன் ஆதாரமாக வைத்திருப்பது இன்னொன்று. மார்க்ஸின் முதலாளித்துவ எதிர்ப்பு, கருத்துமுதல்வாத எதிர்ப்பு என்பன அவரது சமுதாய உணர்வு அவதானங்கள் ஆகியவற்றில் தங்கியிருந்தது. முதலாளித்துவத்தையோ, கருத்துமுதல்வாதத்தையோ, மாறாநிலையியலையோ எதிப்பதாகச் சொல்லும் எல்லா முறையும் மாக்ஸ் தனக்கு ஆதரவாகக் கொள்ளவில்லை. மு. த. வின் பலவீனமே, முன்பு சொன்னதுபோல, பீட்னிக்குகளையும், ஹிப்பிகளையும் முறையாக ஆராயாமலே தன் சத்திய யுக வஸந்தத்தின் வருகை கூறும் பறவைகளாகக் கண்டதில் தெரியவில்லையா?
மு. த. வெறுமே ஹிப்பி, பீட்னிக் வகையறாக்களுடன் நிற்கவில்லை. "அதிருப்தி - எல்லாருக்கும் பொதுவான பொதுக் காரணமாக அதை மட்டும்தான் சொல்லாம்" என்று வலியுறுத்துவதுடன், கலாச்சாரப் புரட்சியையும் அதிருப்தியின் வெளிப்பாடு என்ற வகையில் வரவேற்கிறார். சமயத்தை மறுக்கும் பொருள்முதல்வாதமும் "ஆன்மீக" அடிப்படையில் கலக்கும் கால கட்டம் வந்து விட்டதற்கு ஆதாரமாக ல.ச.ச. கட்சியில் இளம் வட்டத்தினர் இன்றைய நவ சம சமாஜிகள்) தோன்றியமை, கருணாநிதிக்கு எதிராக அ.தி.மு.க. தோற்றம் இந்திரா அம்மையார் இதை மிகவும் வரவேற்பார்), ஆகியன கூடத் தென்படுகின்றன. (மெ. 155-156).
ஒரு விஷயத்தை ஆழமாக அவதானிக்காமல் மேலோட்டமாகப் பார்த்து முடிவுகட்கு வரும்போது, பனிப்புகைகூட காட்டுத் தீயின் வருகையை அறிவிப்பதாகவே தெரியும்.
முடிவுரை
மு. த. வின் குழப்பமான முடிவுகள் பலர். அவர் மாக்ஸியத்தை விமர்சிக்க முற்பட்டது மார்க்ஸிய அறிவின் அடிப்படையில் அல்ல. பூரீ ல. சு. க. ஆட்சியை சோஷலிஸம் என்று அழைக்குமளவுக்கு அவரது மார்க்ஸிய அறிவு உள்ளது. வரலாற்றை அவர் புரிந்துகொண்ட முறையும் விளக்கிய முறையும் பலவீனமானவை. அவரது தவறான விளக்கங்களை வரிசைப்படுத்திக் கொண்டு போனால் அதற்கு முடிவே இராது. மு. த. பற்றிய என் கடுமையான விமர்சனம் ஒருவேளை என் மாக்ஸிய சாரிபின்

Page 33
62 சி. சிவசேகரம்
காரணமாக இருக்கலாம். எனினும் அவரது எழுத்தில் மார்க்ஸியத்தை எதிர்க்கும் நோக்கும். அவரது உலகப் பார்வையைப் பெரிதும் பலவீனப்படுத்திவிட்டது. மார்க்ஸியத்தைத் தவிர்த்து சோஷலிச உலக அமைப்பைக் கொண்டுவர ஆன்மிக மார்க்கத்தைத் தேடுகிறார். ஆனால் திசை காண முடியாமல் சர்வோதயம் என்ற பழைய சூத்திரத்துக்குள் (ஓரிரு புதிய கோஷங்களுடன்) முடங்கிவிடுகிறார். மார்க்ஸியவாதிகள் கூறும் சோஷலிச உலகம் பற்றிய கருத்தை அவர் ஏற்றாலும் உலகின் யதார்த்தத்தை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆன்மிகத்தைத் துணைக்கழைத்து ஒரே தாவலில் சோஷலிசத்துக்கும் மோட்சத்துக்கும் தாவ முனைகிறார். முடியவில்லை.
மு. த. வின் நோக்கங்களைக் கேள்விக்குட்படுத்த நான் விரும்பவில்லை. ஆனால் அவரது நோக்கங்கள் என்னவாயிருப்பினும் அவர் காட்ட முனையும் பாதை நிச்சயமாக சோஷலிசத்துக்கு அல்ல. மோட்சம், முக்தி பற்றி எனக்கு அக்கறை இல்லை. மண்ணுக்கும் காற்றுக்கும் கடலுக்கும் உரியது என் தேகம். அதோடு நான் முடிந்துவிடும். இந்த உயிருக்கு ஆத்மா என்ற நிரந்தரத் தன்மை வழங்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. என் கண் முன் தெரிகிற விஷயங்கள் முழுமையல்லவாயினும் என்னால் உணரவும் அனுபவிக்கவும் முடிகின்றவையே மனித இனம் பற்றி ஒரு சகோதரத்துவத்தை நியாயப்படுத்தப் போதுமானவை. எனக்குத் தெரிய முடியாத விஷயங்கள் பற்றிய பாசாங்கு அவசியமற்றது.
ன்மிகம் தொடர்பான விஷயங்களை விரும்பி வாசிக்கவும் (് ഫ്രഞ്ച சமுதாய ரீதியாகத் தரும் விளக்கங்கள் என்ன்ைத் திருப்தி செய்யவில்லை. என்னால் அவற்றின் ஆழத்தையும் கட்டுக்கோப்பையுங்கண்டு வியக்காமல் இருக்க முடியாது. எனினும் என் தேடல் ஆன்மிக ஈடேற்றம் தொடர்பான ஒன்றல்ல. உடனடியாக அதைவிட முக்கியமான் காரியங்கள் கண்முன் இருக்கின்றன. எனக்குள் முடிவற்ற ஆன்மா என்று ஒன்றிருந்தால், அது தானே தன் வழியைக் கண்டுபிடித்துக் கொள்ளட்டும் முதலில் சக மனிதனுக்கு நடக்கிற கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம். ஆன்மா முடிவற்றது என்றால் அது சில காலம் பொறுத்திருக்கலாம். அது இந்த உடலோடேயே முடிகிற ஒன்றானால்
அத்தோடே முடியட்டும். என்ன நஷ்டம்?
நல்ல விஞ்ஞானிகள் பலர் இறை நம்பிக்கையாளர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் தம் சமயச் சார்பை விஞ்ஞான அறிவுத் தேடலில் பயன்படுத்தியே விஞ்ஞானத்தை விருத்தி செய்யவில்லை. விஞ்ஞானத்துக்குச் சமய விளக்கங்கள் கொடுக்க முயலும் போலித்தனம்

மு. தளையசிங்கமும் மார்க்ஸியமும்
கிழக்கிலும் மேற்கிலும் நடக்கிறது. அதேபோல் சமய நம்பிக்கைகளை விஞ்ஞான ரீதியாக நியாயப்படுத்தும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. இறை நம்பிக்கையுள்ள விஞ்ஞானி நேர்மையாளனாக இருக்கலாம். ஆனால் விஞ்ஞானத்தையும் சமயத்தையும் போட்டுக் குழப்புங் காரியங்களில் நேரான சிந்தனை இருப்பதாகத் தெரியவில்லை.
மு. த. மார்க்ஸியம் சாகும் நாள் வந்துவிட்டது என்று பிரகடனம் செய்து பல காலமாகிவிட்டது. அவர் இதோ வந்துவிட்டது என்ற சத்திய யுகம் இன்னும் வந்தபாடில்லை. கிறிஸ்துவுக்கு முன்பு இரண்டாயிரம் வருஷம் மட்டிலிருந்தே எதிர்பார்த்து வரும் தேவராச்சியம்கூடத்தான் இன்னும் வரவில்லை. என்ன செய்வது
தவறிப்போன தேடல் மு. த. வினது. ஆனால் மு.தவை முதன்மைப்படுத்த முனையும் சிலரது போக்கு மார்க்ஸிய எதிர்ப்புக்குப் பயன்படும் வலுவான சிந்தனைக் கழி எது என்று உக்கிப்போன சிந்தனைகளுள் உருப்படியாகத் தெரியும் ஒன்றைத் தூக்கும் காரியம்தான்.
தாயகம் 3 1983