கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நல்லூர் ராஜதானி நகர அமைப்பு

Page 1


Page 2

நல்லூர்ராஜதானி நகரஅமைப்பு
வ.ந. கிரிதரன்
ஸ்னேகா மங்கை பதிப்பகம்

Page 3
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு
வ.ந. கிரிதரன்
முதல் பதிப்பு டிசம்பர் 96
உரிமை கலைச்செல்விகிரிதரன்
ஒளிஅச்சு ஏகம் கம்ப்யூட்டர்ஸ், சென்னை - 2.
அச்சு பார்சன் பிரிண்டர்ஸ், சென்னை - 14
முகப்பு ஓவியம் கு. கலைச்செல்வன்
வெளியீட்டாளர்கள்
ஸ்நேகா, மங்கை பதிப்பகம், 348டிடிகேசாலை, 38த்ரான் கிளிஃபே, இராயப்பேட்டை, 510 டொராண்டோ, சென்னை - 600 014. ஒண்டாரியோ Φ (044) 822 1997 56TLnt M4H 9
ტენ. 25/-
NALLUR RAJADHANI NAGARA AMAIPPU VN CRHAAN
FIRSTEDITION : DECEMBER 1996 (C) : KALAISELVI GIRITHIARAN LASERTYPESET : YEGAM COMPUTERS, MS-2. PRINTED BY : PARSUN PRINTERS, MS-14. COVER : K. KALA/CHEL VAN
PUBLISHERS SNEHA MANGAI PATHIPPAGAM, 348, TTK ROAD, 38, THRON CLIFFEpkd, ROYAPET TAH, 510 TORONTO, CHENNA - 14. ONTARIO,
○ : (O44り 822 799ク CANADA M4H 9
Rs. 25/

முன்னுதாரணமான முயற்சி
ரெலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்துதமிழர் இலங்கையில் பண் பாட்டு வளர்ச்சி பெற்ற மக்களாய் வாழ்ந்து வந்திருக்கிறாரென்பதற்கு உறுதியான வரலாற்றுச்சான்றுகள் உள்ளன. கி.மு. மூன்றாம்நூற்றாண்டு காலத்துதமிழ் பிராமிக்கல்வெட்டுகள் அகழ்வாராய்வில் ஈழத்தமிழ்ப் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கந்தரோடை, ஆணைக் கோட்டை ஆகிய இடங்களில் நிகழ்ந்த அகழ்வாராய்வுகள் பெருங் கற்கால (MEGALTHC)நாகரிக மக்களாய்தமிழர்வாழ்ந்து, வளர்ச்சியும் பண்பாட்டு மேன்மையும் பெற்ற விதத்தினை உறுதி செய்கின்றன. தமிழகத்தில் ஏற்பட்ட அதே விதமான நாகரிகம், பண்பாட்டு வளர்ச்சி என்பன, மேற்கூறிய காலப்பகுதியில் இலங்கையின் பாரம்பரித் தமிழ்ப்பிரதேசத்தில் இருந்து, தென்னிந்திய நாகரிகத்திற்கு சமனாக வளர்ச்சியும், பண்பாட்டுப்பாய்ச்சல்களும், கல்வெட்டுகளும் போதிய உறுதியைக் கொடுக்கின்றன. கடல்வழி வாணிபம், ஈழத்தமிழரோடு ரோமர்கள் கொண்டிருந்தனர், அராபிய, சீனருடனான வணிக உறவு களையும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் முதிர்ந்த பண்பாட்டு வளர்ச்சி பெற்றிருந்த ஈழமக்கள்நடத்தியதற்கான பதிவுகளும் உள்ளன.

Page 4
கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தமிழ்-சைவமரபுள்ள அரசு யாழ்ப்பாணத்தில் உருவாயிற்று. வணிகமும், விவசாயமும்இந்த அரசின் பொருளாதார ஊற்றுக்கண்கள். செம்மை வாய்ந்த பண்பாட்டு வளர்ச்சி இந்த அரசின்காலத்தில் முக்கிய பண்பாக வெளிப்பட்டது.இந்த அரசின் ராசதானியாகநல்லூர் சிறப்புப் பெற்றது. கலாச்சார அடையாளமாகத் திகழ்ந்தது.
போர்த்துக்கேயர்வருகையுடன்இந்த அரசின்வீழ்ச்சியும் ஏற்பட்டது. பதினாறாம் நூற்றாண்டில் அடிமைப்பட்ட ஈழத்தின் மேன்மை இன்றுவரைதனது விடுதலைக்காகப் போராடிவருகிறதென்பது வரலாறு. ஈழத்தமிழரின் வரலாறு இன்னும் முழுமையாக எழுதப்படவில்லை. இலங்கையின் அரசு அகழ்வாராய்வுகளெல்லாம் சிங்கள பெளத்த, பெருமைகளை விளக்கவும் உறுதிப்படுத்தவும், தமிழரின் மேன்மையை கண்டு கொள்ளாமல் - மூடிமறைக்களும் பிரயத்தனப்பட்டனவென்பது எல்லாரும் அறிந்த விஷயம். வரலாற்று மாணவனாகப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் நான் பயின்று கொண்டிருந்த காலத்தில் இதை ஆதார பூர்வமாகவே கண்டு அறிந்து மனம் வெம்பியிருக்கின்றேன். அகழ்வாராய்ச்சித்துறையும், குறிப்பாக டாக்டர் பரண விதான போன்றோரும் ஈழத்தமிழ் வரலாற்றில் நிறையவே புழுதியையும், சேற்றுப்படலங்களையும் நறைத்து மூடியிருக்கிறார்கள். அதிகார பூர்வமான வரலாற்று சஞ்சிகைகள், நூல்கள் என்பன இன்றளவும் இம்முயற்சியில் சளையாமல் இயங்கிவருகின்றன.
துரதிருஷ்டவசமாக ஆரம்பகாலத்தில் வரலாற்றுத்துறையில்இருந்த தமிழ்ப்படிப்பாளிகள் ஈழத்துவரலாற்று உண்மைகளை வெளிக்கொணர் வதில் ஆர்வம் காட்டவில்லை. இந்த இருளிடையே பேராசிரியர் கணபதிப்பிள்ளை - அவர்தமிழ்த்துறையைச்சார்ந்தவராகஇருந்தபோதி லும் - ஆர்வத்தோடு ஒரு வெளிச்சமாய்ப் பிரவேசித்தார். பின்னர் பேராசிரியர் இந்திரபாலா ஆணித்தரமான ஆய்வுப்போக்கோடு இந்தப்பாதையை விரிவு செய்தார். இப்போது பேராசிரியர்கள் பத்மநாதன், சிற்றம்பலம் ஆகியோர்ஈழத்துவரலாற்றை மேலும் மேலும் ஆராய்வதில் அக்கறையான உழைப்போடு இயங்கி வருகின்றனர்.

இவர்களால் புதிய ஆய்வாளர்கள் உருவாக்கப்படுவது. ஈழவரலாறு மேலும் மேலும் வெளிச்சம் பெற உதவுதாக அமையும்.
நவீன அறிவியல், எல்லாத்துறைகளையும் போல வரலாற்று ஆய்விலும் பல புதுமைகளை அறிமுகப்படுத்திஆய்வுகளைநம்பகமும், வேகமும் பெறச்செய்கிறது. குறிப்பாக அகழ்வாராய்வில், அறிவியல் நிறையவே வெளிச்சம் படரவைத்திருக்கிறது. யூகமானமுடிவுகளுக்கு இதனால் இடமேயற்றுப்போய் விட்டது. வெளிப்படுத்தலென்றால் உண்மைதான்
யாழ்ப்பாணத்திலே தனியான பல்கலைக்கழகம் அமைந்தது பல திருப்பங்களை உண்டாக்கின. அவற்றிலே முதன்மையானது கட்டுப் பாடற்ற வரலாற்று ஆய்வுமுறை.
காலமும் இயற்கையும் மண்ணால் மூடியிருக்கின்றதமிழ்ப்பிரதேசம் இன்னும் தனது தொன்மைமிகு வரலாற்றை வெளிப்படுத்தாமலே வைத்திருக்கின்றது. ஆயினும் இடர்கள் நிறைந்த சூழலிலும், இந்த வரலாற்றை வெளிப்படுத்துவதில்இளந்தலைமுறை ஆய்வாளர்கள்மிக அர்ப்பணிப்போடு ஈடுபட்டிருப்பதை நான் அறிவேன். அவர்களில் ஒருவராக நான் நண்பர் வ.ந.கிரிதரனை அடையாளங் காண்கிறேன். இதையிட்டு மகிழ்ச்சியும் அடைகின்றேன்.
ஆர்வத்தோடும் அர்ப்பணிப் போடும் வரலாற்று ஆய்விற்கு வந்துள்ள இந்த அறிவுஜீவிகள், இந்தக் காலத்தில் எமக்கு அவசியம் தேவைப்படுகிறவர்கள், இவர்களின் வருகை பெருகட்டும்.
அகழ்வாராய்ச்சித்துறையில் ஒரு புயலாக நான் கலாநிதி பொ.ரகுபதியை அடையாளங்கண்டிருக்கிறேன், தமிழ்ப்பகுதியில் வலுவான அகழ்வாராய்வு செய்வதில் முன்னின்ற ரகுபதியின் EARLY SETTLEMENTS என்ற நூல் இனிவரும் ஆய்வாளர்களுக்கு ஒரு பயன் நிறைந்த கையேடு. ரகுபதியைப் போலவே ஆர்வமும் ஆய்வுணர்வும் கொண்ட கிரிதரன், கட்டிடக்கலைப்பட்டப்ப்டிப்பை மேற்கொண்டவர். அப்போதிருந்தே தனக்கு கம்பீரமளிக்கும் வரலாற்றைக் கொண்ட நல்லூர் ராஜதானி பற்றி மனதினிலே ஒப்பற்ற கனவுகளை வளர்த்துக்

Page 5
கொண்டவர், மனதுள் நிறைந்திருந்த அந்த ஆய்வுணர்வு, ரத்தினச் சுருக்கமான ஆய்வுக் கையேடாக இப்போது வெளியாகியிருக்கின்றது. சோகமும், இடர்ப்பாடுகளும் நிறைந்த வாழ்விடையேயும், தன் தாயக நினைவோடு இந்நூலை எழுதியுள்ள கிரிதரனை எல்லாரும் பாராட்ட வேண்டும். சான்றாதாரங்களைப் பெற்றுக் கொள்வதிலுள்ள சிரமங்களுக்கு நடுவே, பொறுமையும் தேடுதலும்கனியஇந்தப்பிரதியை கிரிதரன் செம்மையாக எழுதியுள்ளார். பின்னொரு காலத்தில், சுதந்திரக் காற்று வீசும் சூழலில் வாழப்போகின்ற இளந்தலைமுறை ஆய்வாளர் களுக்கு இந்த நூல், ஒரு ஆக்கபூர்வமான வழிகாட்டியாக அமையும. அதைவிட இன்னொரு ஆய்வுக்கும் இது உதவியாக அமையும்.
ஈழவரலாற்றில் நல்லூரின் பங்களிப்பு உன்னதமானது. சோழர் காலத்திலேயே சிறப்புப்பெற்றிருந்தநகரம். பின்னர்யாழ்ப்பாண அரசின் தலைநகராக கம்பீரத்தோடு பொலிந்த திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இருப்பிடம். ஆயினும் இந்த அரசின் பரப்பிடங்கள் இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. என்றாலும் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படை யிலும், தனது கட்டிடக்கலை அனுபவ ஆய்வறிவிலும் பரிச்சயம் முதிரப்பெற்ற கிரிதரன் நல்லூர் ராசதானியின் அமைப்பைப் பற்றி தர்க்கரீதியாக விளக்கியுள்ளார்.
ஒரு வரலாற்று ஆய்வாளருக்குரிய நேர்மையும், நிதானமான போக்கும் கிரிதரனிடம் முழுமை பெற்றுள்ளன. அடிப்படையற்றுக் கூறப்பட்ட பல வரலாற்று ஆதாரங்களையும் அவர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுகின்றார். அதை விரிவாகவே ஆராய்ந்து எது உண்மையெனநிறுவுகின்றார். ஒரு வரலாற்றாளனுக்கு வேண்டியஇந்த அறிவு முதிர்ச்சிஇந்த இளைஞரிடம் அமைந்துள்ள முறையே இவரது கற்றறிவின் சிறப்பை மேலும் உறுதி செய்கிறது. கிரிதரனின் ஆய்வுக் கண்ணோட்டத்தை மேலும் அவரது செம்மையும் எளிமையும் வாய்ந்த மொழிநடை மெருகுபெற வைக்கின்றது.
O O O
இதுவரைகிரிதரனைநான்பார்த்ததில்லை, எழுத்தின்மூலம்ஆர்வம் கொண்டஇளைஞராய், அறிவுத்தேடலுள்ள கலைஞனாகவே அறிந்து

வைத்திருக்கின்றேன். அவரது இந்த ஆய்வுநூல் அவரைப் பற்றிய இன்னொரு தளத்தை நமக்கு அறிமுகம் செய்கிறது. அதுவும் அறிவுச் செருக்கோடும் திறனோடும்.
இந்த நூலை முன்னுரை எழுதும் பொருட்டு இருமுறை படித்தேன். இதைப் பற்றி சிந்திக்க நினைத்த போது நெஞ்சு என்னையறியாமலே கனக்கத் தொடங்கிற்று. என்விடுநல்லூரில் உள்ளது. அங்கே போயிற்று என் நினைவு, சுத்தமான காற்றிடையே அதிகாலையில் மெல்லவே கீதமென நெஞ்சைத்தொடும் நல்லூர்க்கோயில் மணிஓசை காதோடு கேட்கிறது. வீரமாகாளி அம்மன் கோயில் சட்டநாதர், வெய்யிலுகந்த பிள்ளையார், கைலாசநாதர் கோயில் வழியாக நடந்து வருகிறேன். யமுனாரிமனதினுள்ஆச்சரியம் விளைக்கின்றது. அந்தக்காற்று, பூவரசம் பூக்கள், இனிமையான பேச்சுமொழி, தலையை ஆட்டிப் பார்க்கிற மண்ணின் அடையாளமான பனைமரங்கள், வெளிரென்ற மேகங்கள், செம்புத்தண்ணீர்.
இவற்றோடுமண்முடியுள்ளமேடுகள், உடைந்த பழையகாலகட்டிட எச்சங்கள்நினைவில் வருகின்றன.
இன்னும் யோசித்தால் நாம் வாழ்ந்த பெருமையான காலம் கண்க ளிலே வருகின்றது. கிரிதரன் அந்தப் பழைய ராசதானிக்கு நம்மை அழைத்துச் சென்று பெருமூச்சு விடவும் வைக்கின்றார். பெருமூச்சு கஷ்டத்துக்குப்பதிலாக மேலும் மன உறுதியைத் தருகிறது. தூயவான் பரப்பின் கீழே, நானும் கிரிதரனும் நல்லூர் ராசதானியின் வீதிகளில் வெகுவிரைவிலேயே பெருமையோடு தலைநிமிர்ந்து நிற்போமென அந்த மனஉறுதிசொல்கிறது.
O O O
கட்டிடக்கலையில் தமிழர் பங்களிப்பு உலக அளவிலே இன்றும் வியந்து பேசப்படுவது, அதற்கான சிற்பசாஸ்திர, கட்டிடக்கலைமரபுகள் நமது ஒப்பற்ற செல்வங்கள். இன்னும் சொன்னால் இவை தமிழரின் கட்டிடக்கலை தொழில்நுட்ப அறிவை இன்றும் வியக்க வைத்துக் கொண்டிருப்பவை.

Page 6
கிரிதரனின் கட்டிடக்கலை ஞானம் பாராட்டத்தக்கது. தனது படிப்பு எல்லைக்கு வெளியேயும் இந்த ஞானத்தை அவர் தேடித்தேடி சேகரித் திருக்கிறார். இதைஇந்தநூல் சத்தமிட்டுச்சொல்கிறது. குறிப்பாக வாஸ்து சாஸ்திரம் பற்றிய கிரிதரனின் ஆழ்ந்த விளக்கம்.
கட்டிடக்கலை,நகர அமைப்பு பற்றிய அடிப்படை அறிவை வெகு எளிமையாக கிரிதரன்விவரித்திருக்கின்றார், சின்னவிஷயங்களைக்கூட விட்டு விடாமல்நுணுக்கமானதகவல்களும் விளக்கமும் கொடுக்கிறார். ஆய்வு மாணவர்களுக்கு சிறந்த உதாரணப் பிரதியாக என்னால் இந்தப்பிரதியை அனுமானிக்க முடிகிறது.
இந்நூலுக்குரிய வரைபடங்கள் புகைப்படங்கள் அடுத்த பதிப்பில் இடம்பெற வாசகர்கள் கிரிதரனுக்கு உதவுவார்கள் என நம்புகிறேன். தகவல் தொடர்பற்ற நிலையிலே கிரிதரனின் முழு மூச்சான முயற்சி இவ்விதம் நூல், பயனுள்ள தொகுப்பாக உருவாகக் காரணமாயிற்று. இதற்காக பூமிப்பந்தெங்கும் பரவியும் தாய்மண்ணிலும் வாழும் ஈழத்தமிழர்கள் கிரிதரனை மனமாரப் பாராட்டுவார்கள். இதற்காகவே கிரிதரன் பெருமையும் பெருமிதமும் கொள்ளலாம். வாசிக்கின்ற எந்த ஈழவர் மனதிலும் பெருமிதம், உறுதி, தன்னம்பிக்கை, பிரதிக்கினை என்பனவற்றைநிச்சயம் இந்நூல் உருவாக்கும். கிளர்ந்தெழ வைக்கும். இதைவிட ஒரு நூல் ஆசிரியனுக்கு வேறென்ன பெருமை வேண்டும்?
சிறந்த நூல்களை வெளியிட்டு வரும் ஸ்நேகா பதிப்பகத்தை இந்த நூலை அழகுற வெளியிடுவதற்காக நான் பாராட்டுகிறேன். இதற்காக அவர்கள் பெருமை கொள்ளலாம்.
செ. யோகநாதன்

முன்னுரை
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு
இ லங்கைத் தமிழர்களின் பண்டையநகர அமைப்பு பற்றிஇதுவரை யாருமே கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. அரசர்களுடன் சம்பந்தப்பட்ட சரித்திரப்பூர்வமானதகவல்கள்பற்றிய ஆய்வில் கவனம் செலுத்துபவர்கள் தமிழர்களின்நகரஅமைப்புக்கலை பற்றிகவனத்தை திருப்பாமல் விட்டது துரதிர்ஷ்டமானது. விளைவு நல்லூர் ராஜதானியாக விளங்கியதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்னால் தலைநகர்களாக விளங்கிய அனுரதபுரம், யாப்பாஹ0வா போன்ற நகர்களைப் பற்றியெல்லாம் ஆய்வுகள்நடந்திருக்கையில் நல்லூர்நகர அமைப்பு பற்றிய தகவல்களைப் பெறுவதே அரிதாக இருக்கிறது. இந்நிலையில் என்னால் முடிந்த அளவுக்குநல்லூர்நகரஅமைப்புபற்றி ஆராய்ந்திருக்கிறேன்.
நல்லூர்ராஜதானியின்நகரஅமைப்புபற்றிஆராயவேண்டுமென்று நான் விரும்பியதுதற்செயலாகநிகழ்ந்தநிகழ்வல்ல. சிறுவயதில் கல்கி, ஜெகசிற்பியன் போன்றோரின் சரித்திரநாவல்களை வாசிக்கும் போது

Page 7
தஞ்சாவூர், மதுரை, காஞ்சிபுரம் போன்றநகர்களைப்போல புகழ்பெற்று விளங்கிய நல்லூர் பற்றிய சரித்திரச் சின்னங்கள் ஏன் அரிதாக காணக்கிடைக்கின்றனஎன்று எண்ணுவதுண்டு. மேலும் அறிவு வளர்ந்த போது இவற்றிற்கெல்லாம் காரணம் அன்னியராட்சியும் ஆண்ட பெருமையைப் பற்றிவாயளக்கின்றஅளவிற்கு அரிதாகக் காணப்படும் சின்னங்களைப் பாதுகாப்பதில் போதிய ஆர்வமற்றுக் கிடக்கும் எம்மவரின்மனநிலையும்தானென்பது புரிந்தது. எம்மவரின்ஆர்வமற்ற மனநிலைக்கு உதாரணமாக பின்வருவனவற்றைக் கூறலாம். இந்நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் சுவாமி ஞானப்பிரகாசர் கோப்பாய்க் கோட்டை பற்றி சிறியதொரு கட்டுரையினை எழுதி யிருந்தார். இன்று அந்தக் கோப்பாய்க் கோட்டையிருந்ததாக காணப்படும் நிலப்பரப்பு என்ன நிலையில் இருக்கிறது? இத்தகைய தொரு குழ்நிலையில் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக் கலை சம்பந்தமானபட்டப்படிப்பைபடித்துக்கொண்டிருந்த சமயம் மீண் டும் நல்லூர் நகர அமைப்பு பற்றி ஆராய வேண்டும் என்று நான் நினைத்ததற்குபின்வரும் காரணங்களைக்குறிப்பிடலாம்.
பாரம்பரியக் கட்டடக் கலை சம்பந்தமான பாடம் ஒன்றை எமக்கு கற்பித்துக் கொண்டிருந்த நிமால் டி சில்வா என்ற சிங்களப் பேராசிரியர் பண்டைய அனுரதபுரம் நகர அமைப்பு பற்றிய ஆய்வு சம்பந்தமாக எமக்கு கற்பித்துக் கொண்டிருந்த போது எனக்குநல்லூர் ராஜதானியின் நகர அமைப்பை ஆராய வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது. நண்பரும் ஒருவருடசிரேட்ட மாணவருமானதனபாலசிங்கம் என்பவர் ஒருமுறை தான் நல்லூர் பற்றி ஆராயநினைத்ததாகவும் பின்னர் அது அசாத்தியமென எண்ணிக்கைவிட்டதாகவும் குறிப்பிட்ட போது எனது நல்லூர் மீதான ஆர்வம் மேலும் அதிகமானது. சிறுவயதிலிருந்தே யாராவதுமுடியாது என்று கூறும் விடயங்களை முயன்று பார்ப்பது என் வழக்கமாகிவிட்டிருந்தது. விளைவு 'கட்டடக்கலையின் சரித்திரம்' என்ற பாடத்திற்காகனழுதவேண்டிய ஆய்விற்காக நல்லூர்ராஜதானியின்நகர அமைப்பையே தெரிவு செய்து கொண்டேன். அன்றிலிருந்து இன்றுவரை சமயம் கிடைக்கும் போதெல்லாம் நல்லூர்நகர அமைப்பு

பற்றி நான் குறிப்பிடத் தயங்குவதேயில்லை. நல்லூர் நகர அமைப்பு பற்றிய கட்டுரைகள் சில யாழ்ப்பாணத்திலிருந்து வந்த பத்திரிகையும், ஆரம்பத்தில் என்னை எழுத்துலகில் ஊக்குவித்ததுமான ஈழநாட்டின் வாரமலரில் வெளிவந்தன. 'கோப்பாய்க் கோட்டை' பற்றிய கட்டுரை வீரகேசரியில் வெளிவந்தது. அண்மைக்காலமாக தாயகம் இதழிலும் நல்லூர் பற்றி எழுதி வருகிறேன். நல்லூர் ராஜதானி போன்று சிங்கை நகர் (வல்லிபுரம்) கந்தரோடை போன்ற ராஜதானிகளின்நகர அமைப்பு பற்றியெல்லாம் ஆய்வுகள்நிகழ்த்தப்பட வேண்டும் என்பது என்அவா. வல்லிபுரம்தான்சிங்கைநகர் என்பதில் எனக்கு பூரணமான உடன்பாடு. அப்பகுதியில் மணற்றிடரில் காணப்படும் பழமையின் சின்னங்களும் வல்லிபுரம் என்பதில் வரும்புரம் என்னும் பகுதியும் என் உடன்பாட்டிற் கான முக்கிய காரணங்களில் சில. (சோழர்களின் தலைநகர்களான ஜெயங்கொண்ட சோழபுரம், உலகமாதேவிபுரம் மற்றும் பல்லவர்கள் காலத்தில் புகழ் பெற்ற காஞ்சிபுரம், மாமல்லபுரம், நந்திபுரம் போன்ற புரம் என்றுமுடியும் பல ஊர்களைதமிழகத்தில் காணலாம்) வல்லிபுரமும் மாவிட்டபுரம் போலபுரம் என்று முடிவதால் அரச, தெய்வ முக்கியத் துவம் வாய்ந்த பகுதியாக நிச்சயம் இருந்திருக்க வேண்டும். (நல்லூர் என்ற பெயரும் இத்தகையதே. தமிழகத்தில் நல்லூர் என்று முடியும் பல அரச, தெய்வமுக்கியத்துவம் வாய்ந்த ஊர்களைக் காணலாம்.)
நல்லூர் கூட சோழர்கள் விட்டுச் சென்ற எச்சம் என்பது கலாநிதி சி.க.சிற்றம்பலம் போன்றோரின் கருத்து. 'செம்பியன் பற்று, நல்லூர், மாவிட்டபுரத்திலுள்ள வளவர்கோன் பள்ளம், நவிண்டிலில் உள்ள கங்கை கொண்டான் போன்ற இடப்பெயர்கள் சோழர் இங்கு விட்டுச் சென்ற எச்சங்களாகத்திகழ்கின்றன (சிந்தனை, ஆடி 84)
வடக்கில் மட்டுமல்ல, கிழக்கிலும்திருமலை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டிய பல இடங்கள், விடயங்கள் உள்ளன. இவை பற்றியும் ஆய்வுகள்நடத்தப்பட வேண்டும் என்பதும் என் அவா. இந்த அவா நிறைவேறும் என்ற நம்பிக்கை நிறையவேயுண்டு.
வந.கிரிதரன்
dALAT

Page 8

நல்லூரும் சிங்கை நகரும்
ஆரிய சக்கரவர்த்திகள் காலத்தில்தலைநகராக விளங்கியநகர்களாக 'சிங்கை நகர் நல்லூர் ஆகியவற்றைக் கூறலாம். நாகரசர்களின் காலகட்டத்தில் கதிரமலை எனஅழைக்கப்பட்ட கந்தரோடை ராஜதானி அந்தஸ்தினைவகித்துவந்தது. அதன்பின்அந்தநிலையை அடைந்தவை மேற்கூறப்பட்ட சிங்கை நகர், நல்லூர் ஆகிய நகர்களே. வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் மேற்படி சிங்கைநகர், நல்லூர் பற்றிய விடயத்தில் ஒரு குழப்பநிலைநிலவுவதை அவதானிக்க முடிகின்றது. ஒரு சாரார் சிங்கை நகரும் நல்லூரும் ஒன்றேயெனக் கருதுகின்றனர். மறுசாரரோ நல்லூரும் சிங்கை நகரும் இருவேறு காலகட்டங்களில் இராஜதானிகளாக விளங்கிய நகர்களெனக் கருதுகின்றனர். கலாநிதி சி.க.சிற்றம்பலத்தின் கருத்துப்படிநல்லூரும் சிங்கைநகரும் ஒன்றே.
பொதுவாக நல்லூரே சிங்கை நகர் என அழைக்கப்பட்டு வந்தது எனலாம் (கட்டுரை யாழ்ப்பாண இராச்சியம் - ஈழமுரசு 25.2.94)
குவேறாசுவாமிகளின்சான்றுப்படிகரையிலிருந்துநல்லூரிற்கு வரும் வழியில் சுங்குநயனார் (Chunguinayana) அதாவது சிங்கைநகர் எனும் பலமான அரணுள்ள இடம் பற்றிக் குறிப்பு வருகின்றது. இதுவே தமிழ்
வ.ந.கிரிதரன் DG13)

Page 9
நூல்களிலும், கோட்டகம்தமிழ்ச்சாசனத்திலும் தமிழகக் கல்வெட்டிலும் வரும் சிங்கைநகர் அல்லதுநல்லூராகும் (ஈழமுரசு 11-03-94)
முத்துக்கவிராசர் என்பவரால் கி.பி.16ம் நூற்றாண்டின் முடிவில் அல்லது 17இன் தொடக்கத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் கைலாயமாலையும் முதலாவது சிங்கை சூரியன் நல்லூரைத் தலைநகரமாக அமைத்த வரலாற்றைக் கூறும் சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார்செ.இராசநாயகம், கலாநிதிக.செநடராசா போன்றவர்களின் கருத்துப்படி நல்லூரும் சிங்கைநகரும் வேறு வேறான இருநகரங்கள். "யாழ்ப்பாணத்தில் ஆரியச் சக்கரவர்த்தியின் ஆட்சி கி.பி.13ம் நூற்றாண்டில் ஆரம்பித்ததென்பர் வரலாற்றாசிரியர்கள். அம்மன்னர் செகராசசேகரன், பரராசசேகரன் என்ற பட்டப்பெயர்களை ஒருவர் பின் ஒருவராகச் குடிக்கொண்டு சிலகாலம் சிங்கை நகரிலிருந்தும் பின்னர் நல்லூரிலிருந்தும் அரசு செலுத்தினர் (க.செ. நடராசாவின் ஈழத்தமிழ் இலக்கிய வளர்ச்சி பக்கம் 6) பராக்கிரமபாகுவின் கபடசிந்தையை அறியாத செண்பகப்பெருமாள்யாழ்ப்பாணம்போய்ப்பழையதலைநகர் பாழாய்விட்டமையினால் நல்லூரிலே கி.பி. 1450ல் ஒரு புது நகரெடுப்பித்துச் சிறீசங்கபோதி புவனேகபாகு என்னும் சிங்கள நாமத்தோடு பதினேழு வருடங்களாக அரசு செய்து வந்தான்(முதலியார் இராசநாயகத்தின் யாழ்ப்பாணச்சரித்திரம் பக்கம் 75)
கைலாயமாலை, வையாபாடல் போன்றநூல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலையில் மயில்வாகனப் புலவரே சிங்கையாரியராசன் (முதல் ஆரியராசன்) நல்லூரிலேயே தனது அரசிருக்கையை ஸ்தாபித்ததாகக்கூறுவார்.
இவ்விதமாகநல்லூர்பற்றியும் சிங்கைநகர்பற்றியும்நிலவுகின்றஇரு கருத்துக்களில் சுவாமி ஞானப்பிரகாசர் முதலியார் செ.இராசநாயகம், க.செ.நடராசா போன்றோர் கருதுவது போன்று நல்லூரும் சிங்கை நகரும் இருவேறு நகரங்கள் என்பதே ஏற்கக் கூடியதாக உள்ளது. இவற்றிற்கு ஆதாரங்களாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்.
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு )

1. கேகாலையில் கொட்டகமா என்னுமிடத்தில் கண்டெடுக்கப்
பட்ட கல்வெட்டொன்று பின்வருமாறு கூறுகின்றது. 'கங்கணம்வேற் கண்ணிணையாற் காட்டினார் காமர்வளைப் பங்கயக்கை மேற்றிலதம் பாரித்தார் - பொங்கொலி நீர்ச் சிங்கைநகராரியனைச்சேராவனுரேசர் தங்கள் மடமாதர்தாம்" இவ்வெண்பாவில் 'பொங்கொலிநீர்ச்சிங்கைநகராரியர்' எனச் சிறப்பித்துக் கூறப்படுவது பற்றி முதலியார் செ.இராசநாயகம் பின்வருமாறு கூறுகின்றார். '.இச் சிங்கைநகர் அடியடியாகப் பல வாரியச் சக்கரவர்த்தி களுக்குமகோன்னத விராசதானியாவதற்கு முதன்முதலடியிட்ட வன் இவ்வுக்கிர சிங்கனே. 'பொங்கொலிநீர்ச் சிங்கைநகர்' எனச்சிறப்படை கொடுத்து விதந்தோதப்பட்டிருப்பதால், சிங்கை நகர் பொங்கியெழும் திரையொலியையுடைய சமுத்திரக் கரையோரமென்பது நிதர்சனமாயிற்று. அவ்வாறமைந்துள்ள விடம் வல்லிபுரக் கோயிலைச் சார்ந்த கடலோரத்தில் மணற்றிடரிற் புதைந்து ஆங்காங்கு கிடக்கும் அனேக பாரிய கட்டிடங்களாலும் அங்கு கண்டெடுக்கப்பட்ட பற்பல சின்னங்களாலும் வலியுற்று மெலிவுற்று உறுதி பெற்றொளிர் கின்றனவென்க(யாழ்ப்பாணச் சரித்திரம் 235-236)'சுவாமி ஞானப்பிரகாசரின் கருத்தும் இதுவே.
2. புகழ்பெற்ற முஸ்லீம் பயணியான இபின் பதூத்தா தனது குறிப்புகளில் ஆரியமன்னனைஇலங்கையின்சுல்தானெனவும், பல கப்பல்களுடன் விளங்கிய கடற்படையை அவன் வைத்திருந்தது பற்றியும் தெரிவித்திருக்கின்றான். வலிய கடற்படையை வைத்திருந்த ஆரிய மன்னர்கள் தலைநகரான சிங்கைநகரைதுறைமுகத்திற்கண்மையில் தான் வைத்திருக்க வேண்டும். இவ்வகையில் நல்லூரைவிட வல்லிபுரமே துறைமுகப்பொலிவுமிக்கதொருநகர்.
கைலாயமாலைநல்லூரினை நல்லைமுதுரர்' என அழைக்கின்றது. நல்லூரின் தொன்மையை இது சுட்டிக் காட்டுகின்றது. முதலாம்
( வ.ந.கிரிதரன் ) (15)

Page 10
இராசேந்திரசோழன்காலத்திலேயேநல்லூர் ஒரு ஆலயமமைந்த புனித ஸ்தலமாக விளங்கியதை அறியமுடிகின்றது. யாழ் கோட்டையிலிருந்து பெறப்பட்ட முதலாம் இராசேந்திர சோழனின் கல்வெட்டைப் பற்றிய ஆய்வுகளை ஏற்கனவே கலாநிதிகா.இந்திரபாலாநடத்தியுள்ளார்.இது பற்றிகலாநிதிசி.க.சிற்றம்பலம் பின்வருமாறு கூறுகின்றார்.
"இக்கல்வெட்டில் தானத்தை அளித்தவராக சாந்தன் காணப்படு கின்றான். நல்லூரிலமைந்த இந்துக் கோயிலுக்கு இவன் அளித்த மிருகங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. ' (சிந்தனை - யாழ் பல்கலைக்கழகக் கலைப்பீட வெளியீடு, ஆடி 1984 பக்கம் 121)
ஏற்கனவே புகழ்பெற்று விளங்கிய, தொன்மை வாய்ந்தநல்லூரைச் சிங்கைநகரென அழைத்திருப்பார்களாவென்பது சந்தேகத்திற்குரியது. இவற்றையெல்லாம் நோக்கும் போது நல்லூரும், சிங்கைநகரும் இருவேறானநகரங்களென்பதே ஏற்கக்கூடியதாகப்படுகின்றது.
நல்லூரும் யாழ்ப்பாணமும்
நல்லூர், சிங்கைநகர் பற்றி நிலவும் குழப்பம் போன்றே யாழ்ப்பாணம்,நல்லூர்பற்றியும்நிலவுகின்றது.நல்லூர் என்பதன்சிங்கள மொழிபெயர்ப்பே 'யாபாபட்டுண' என ஒரு சாரரும், மறுசாரார் யாழ்ப்பாணம் என்பதன் சிங்களத் திரிபே 'யாபாபட்டுண' எனவும் கருதுகின்றனர்.
G16) நல்லூர் ராஜதானி நகர அமைப்பு )

நல்லூரும் யாழ்ப்பாணமும்
க்லாநிதி சி.க.சிற்றம்பலம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றவர்களின் கருத்துப்படியாபாபட்டுணஎனக் கூறுவது நல்லூரையே.
'.யாழ்ப்பாணப்பட்டினம் (சிங்களதுரல்கள் யாபாபட்டுணஎனக் கூறுவன) என்பதும் நல்லூரையே குறித்தது எனலாம்' (யாழ்ப்பாண இராச்சியம், கலாநிதிசி.க.சிற்றம்பலம், ஈழமுரசு 25.02.94)
மேலும் சுவாமி ஞானப்பிரகாசர், எஸ். டபுள்யூ. குமாரசுவாமி போன்றவர்களின் கருத்துப்படியும் சிங்களவர் நல்லூரிற்கு வைத்த 'யாப்பநே'யாப்பா பட்டுநேயே பின்னர் யாழ்ப்பாணமாக மருவிய தென்பதையறியலாம்.
வண. ஞானப்பிரகாசசுவாமியார்களும் இடப்பெயர் ஆசிரியராகிய திரு.எஸ்.டபிள்யூ குமாரசுவாமியவர்களும் யாழ்பாடியின் கதை புனைந்துரையேயெனவும் இதுபோன்ற கதைகள் வையாபாடலிலும், தகூழின கைலாய புராணத்திலும் மலிந்து கிடக்கின்றனவெனக் கூறியதோடு, அந்தகக்கவிவீரராகவன் உண்மைச்சரிதையையாழ்ப்பாடி தலையில் வைபவமாலைக்காரர்கட்டி வைத்தாரெனவும், அப்படியொரு வன் இருக்கவுமில்லை, யாழ்ப்பாணம் பரிசிலாக ஒருவருக்குக்
வ.ந.கிரிதரன் 17)

Page 11
கொடுக்கப்படவுமில்லையெனவும், சிங்களவர் நல்லுருக்கு வைத்த "யாப்பநே", "யாப்பா பட்டுநே" யென்னும் பெயரே பிற்காலத்தில் யாழ்ப்பாணமென மருவியதெனவும், யாழ்ப்பாணன் கதையை எமது புலவர்கள்உருவகப்படுத்திவைத்தார்களெனவுங்கூறுவர்(யாழ்ப்பாணச் சரித்திரம் பக்கம் 253).
முதலியார்இராசநாயகம் கலாநிதிக.செநடராசா போன்றவர்களின் கருத்து மேலுள்ள கருத்திற்கு முற்றும் எதிரானது. யாழ்ப்பாணப் பட்டினம் என்ற தமிழ்ப் பெயரின் சிங்களத் திரிபே யாப்பாபட்டுநே என்பதே இவர்களது கருத்து.
". சிங்களப் புலவரொருவர்தங்காலையில் எழுதி வைத்த நூலில் கண்ட "யாப்பாபட்டுநே' பென்னும் பெயரை யாழ்ப்பாண வாசிகள் எவ்விதமாயறிந்தமைத்துக் கொண்டனரென்பது ஆச்சரியம். 'யாப்பா பட்டுதே'க்கும். நல்லூருக்கும் கருத்துப் பொருத்தமிருந்தாலும் முந்திய பெயரை நல்லூருக்கிட்டு வழங்கவேண்டிய அவசியமில்லை. நல்லு ரென முற்காலத்தில் தமிழர் சிங்கள நாட்டிலிட்டு வழங்கிய ஊர்ப் பெயர்களை இன்றும் அவ்வண்ணமே நல்லூரென அழைக்குஞ் சிங்களவர், யாழ்ப்பாணத்திலிருக்கும் நல்லூரென்னும் பெயரைச் சிங்களமாக மாற்றிவைத்தாரென்பது விந்தையே யாழ்ப்பாணத்திலுள்ள சிங்களப் பெயருடைய ஆர்களையுங் காணிகளையுந் தமிழர் தமிழ்ப் பெயராக்காது விட்டது அதிலும் விந்தையே, இனிப் பட்டுரு என்பது சிங்கள மொழியா? பட்டினமென்னுந் தமிழ் மொழியின் சிதைவென்பதைப் பள்ளிச்சிறுவருமறிவரே. ஆகையால் யாழ்ப்பாண பட்டின என்னுந் தமிழ்ப் பெயரையே "யாப்பா பட்டுநே'யெனச் சிங்களவர்சிதைத்து வழங்கினர் என்பது தெளிவாகும். (யாழ்ப்பாணச் சரித்திரம் பக்கம் 254)
இப்பிரச்சினைப்பற்றிய கலாநிதி க.செ.நடராசாவின் கருத்தும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. இவர் இது பற்றிதல்லதொரு விளக்கத்தைத்தந்துள்ளார்.
, , , , சிங்கனப் பெயராகக் கருதப்பட்ட "பாபா பட்டுவி' என்பது "யாபா' என்ற பதமும் பட்டுன" என்ற பதமும் இணைந்த சொற்கூட்டா கும். "பட்டுன'வென்பது தமிழிலே பட்டினம் என்று வழங்கும் துறைமுக
[18][ நல்லூர் ராஜதானி நகர அமைப்பு )

...
-
...
..
†ጅ
i.
கல்லூர் கந்தசாமி கோயி
雲 ‐ - 雲 LogL! தோற்றம்
வ.ந.கிரிதரன்

Page 12
நகரத்தைக் குறிக்கும் சொல்லின்திரிபாகும். அச்சொல் தமிழிலே சங்க கால இலக்கியத் தொகுதிகளுள் ஒன்றான பத்துப்பாட்டில் பட்டினப்பாலை என்ற பாடலில் உபயோகிக்கப்பட்டுள்ளது. இது கிறிஸ்துவிற்கு முற்பட்ட சிங்களச் சொல் என்று கொள்ள எள்ளளவும் இடமில்லை.
- - - - யாவா என்பது யாபா என மருவிவந்தது என்ற கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியதாயில்லை. அதனால் யாபா என்பது ஜாவா என்பதன் தமிழ் உருவம் என்று கருதமுடியாது. அன்றியும் அது ஜாவா என்பதன் சிங்களவடிவமுமன்று? ஏனெனில் சிங்களஇலக்கியங்களில் ஜாவாகை யாபாஎன்று குறிப்பிடும் வழக்கம் என்றும் இருந்ததில்லை. அதனால் யாழ்ப்பாணப்பட்டினம் என்ற பெயரைக் கொண்டேசிங்களப் பெயரான யாபாபட்டுன என்ற பெயர் புனையப்பட்டிருக்கிறது என்பதே பொருத்தமான முடிவாகும்.'
(யாழ்ப்பாணம் என்ற பெயரின் காரணங்கள். கலாநிதி க.செ.நடராசா, தமிழோசை 11-11-93) மேற்படி கட்டுரையில் க.செநடராசாதனதுமுடிவிற்காதாரமாகஇன்னுமொரு காரணத்தையும் முன்வைக்கிறார்.
"மேலும் ஊர்ப்பெயர்களை மற்றொரு மொழியிற் பெயர்த்து அவ்வூரவர்களால் உபயோகிக்கப்படும் வழக்கம் நடைமுறையில் இருப்பதில்லை. யாழ்ப்பாணத்து நல்லூர் அதன் சிங்கள மொழி பெயர்ப்பு என்று கருதப்படும் 'யாபனே' என்ற பதத்தால் வழங்காது ஏன் நல்லூருவ' என்று வழங்கிவருகின்றார்கள் என்பது விளங்கிக்கொள்ள முடியாததாகிவிடும். எனவே 'யாபனே' என்பது தமிழில் யாழ்ப்பாணம் என்று கூறும் பெயரின் சிங்களத்திரிபென்றே கொள்ள வேண்டும்.' (தமிழோசை11-11-93)
மயில்வாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை (முதலியார் குல.சபாநாதன் பதிப்பித்தது) அந்தகக்கவி வீரராகவனென்னும் யாழ்ப்பாணன் யாழ்பாடிப் பரிசு பெற்றதால் ஏற்பட்ட பெயரே யாழ்ப்பாணம் என எடுத்துச்சொல்லும்.
(20) நல்லூர் ராஜதானி நகர அமைப்பு )

'அக் காலத்திலே சோழ நாட்டிலிருந்து இரண்டு கண்ணுங் குருடனாகிய கவி வீரராகவன் என்னும் யாழ்ப்பாணன் செங்கடக நகரிலிருந்து அரசாட்சிசெலுத்தும் வாலசிங்கமகராசன்பேரிற் பிரபந்தம் பாடிக்கொண்டு போய் யாழ் வாசித்துப் பாடினான். அரசன் அதைக் கேட்டு மிக்க சந்தோஷம் கொண்டு அவனுக்குப் பரிசிலாக இலங்கையின் வடதிசையிலுள்ள மணற்றிடல் என்னும் இந்நாட்டை கொடுத்தான். யாழ்ப்பாணன் இதற்கு யாழ்ப்பாணம் என்ற பெயரிட்டு. '(யாழ்ப்பாண வைபவமாலை பக்கம் 25)
மயில்வாகனப் புலவர்கூறும் செங்கடகநகரென்பது சிங்கைநகரைக் குறிக்குமென்பதே முதலியார்இராசநாயகத்தின் கருத்தாகும்.
'சிங்கை நகர் என்னும் பெயரை மயில் வாகனப் புலவரோ, அவருக்குப்பின் ஏடெழுதியவர் எவரோ, "செங்கடகநகர்' என்று வைபவமாலையில் மாற்றிவிட்டனர். உக்கிரசிங்கன் காலத்தில் 'செங்கடக நகர்' என்னும் நகர் கனவிலும் அறியப்படாததொன்று' (யாழ்ப்பாணச்சரித்திரம், பக்கம் 29)
'பின்வந்த யாழ்ப்பாணத்தரசர் காலத்தில் எழுதப்பட்ட நூல்களிலெல்லாம் அவ்வரசர்கள் சிங்கைநகரிலிருந்து அரசாண்டார்க ளெனக் கூறியிருப்பதால், உக்கிரசிங்கன் தன்னிராசதானியைச் சிங்கை நகருக்கு மாற்றினானென்று கூறுவதே பொருத்தமுடைத்தாம். சிங்கை நகரே பிற்காலத்தில் செங்கடக நகரெனத் திரிந்திருக்க வேண்டும்' (யாழ்ப்பாண சரித்திரம்பக்கம் 235)
"யாழ்ப்பாணச் சரித்திரம்' என்ற மற்றுமொரு நூலினைத் தந்த ஆசிரியர் ஆ.முத்துதம்பிப்பிள்ளை என்பவரின் கருத்துப்படி கி.மு.2ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஏலேலசிங்கென்ற மன்னன் அந்தகனான யாழ்ப்பாடி என்பவனிற்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலமே யாழ்ப்பாணம் என்பதாகும். அதற்காதாரமாக அவர் தனிப்பாடற்
திரட்டில் காணப்படும்பின்வரும் பாடலைக்காட்டுவார்.
( வ.ந.கிரிதரன்

Page 13
'நரை கோட்டிளங்கன்று
நல்வளநாடுநயந்தளிப்பான்
விரையூட்டுதார்ப்புயன்வெற்
பீழ மன்னனென் தேவிரும்பிக்
கரையோட்டமாக மரக்கலம்
போட்டுனைக் காணவந்தாற்
நிரை போட்டிருந்தனையேலேல
சிங்க சிகாமணியே'
இப்பாடலின் யாப்பைக் கொண்டு, இது கி.பி. 3ம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதென்று க.செ.நடராசா கருதுவார். இலங்கையின் வடபுறத்தி லிருந்து மணற்றிடரினைத் திருத்தி வளமாக்கியவன் விபீடணனிடம் யாழ்வாசிக்குமொருவனே என்பதை வையாபாடல் கூறும். ம.க. அந்தனிசிலும்இதுபற்றிநல்லதொருகட்டுரையை எழுதியுள்ளார். அதில் அவர்மூவகைப்பாணர்களில் ஒருவரான யாழப்பாணர் வாழ்ந்தஇடமே யாழ்ப்பாணமாயிற்று என்று சொல்வார்.
தமிழருள் பழையசாதியினரான பாணர் மூவகையினராவர். அவர்களுள் ஒரு பிரிவினரேயாழ்ப்பாணர் என்பதாம்.தமிழரின்பழைய இசைக்கருவிகள்மூன்று, அவை யாழ், குழல், முழவு என்பன.இவற்றில் யாழ்மீட்டிப்பாடும்பாணரே யாழப்பாணர் என்ற பெயரைப் பெற்றனர். காலப்போக்கில் அது சாதிப்பெயராக மாறியது. எனவே யாழ்ப்பாணர் என்பது சாதிப்பெயராகும். அவ்வாறு தமிழ்ப்பெருங்காப்பியங் களிலும் இலக்கியங்களிலும் சொல்லப் பட்டிருக்கும் யாழ்ப்பாணர் எனும் சாதியினரில் ஒரு பகுதியினர் இலங்கைத் தீவின் வட பகுதியில் வாழ்ந்த இடமே யாழ்ப்பாணம் என்ற பெயரைப் பெற்றது (வீரகேசரி 9-12-1990)
இவற்றையெல்லாம் பார்க்கும் போது பின்வரும் முடிவிற்கே வர
முடிகிறது. நல்லூர் என்பதன் சிங்கள மொழிபெயர்ப்பான 'யாப்பாபட்டுநே' என்பதிலிருந்து வந்த பெயரே யாழ்ப்பாணம் என்பதிலும் பார்க்க, யாழ்ப்பாணம் என்ற தூய தமிழ்ச் சொல்லின் சிங்களத்திரிபே யாப்பாப்பட்டுநேஎன்பதே பொருத்தமுடையதாகப்
22) நல்லூர் ராஜதானி நகர அமைப்பு

படுகின்றது. யாப்பாப் பட்டுநேக்கும் நல்லூருக்கும் கருத்துப் பொருத்தமிருந்தாலும், முந்திய பெயரை நல்லூருக்கிட்டு வழங்க வேண்டியதில்லை என்ற முதலியார் இராசநாயகத்தின் கூற்றே ஏற்கக்கூடியதாக விருக்கின்றது. மேலும் அவரே பிறிதோரிடத்தில் சுட்டிக்காட்டும்' மேலும் கி.பி. 9ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டுக்கிடையே இத்துறையில் வந்திறங்கிய மேலைத்தேய முஸ்லீம் பிரயாணிகளும் ஜப்பா, 'ஸப்பா'வென அத்தொனிப்படவே கூறியிருக்கின்றனர்' (யாழ்ப்பாணச் சரித்திரம். பக்கம் 255) என்ற கூற்றும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியதே.
மேலும் கைலாயமாலையில் வரும் பின்வரும் பாடலும் யாழ்ப்பாணத்தையும்நல்லைநகரையும் பிரித்துக் கூறுவதும் கவனிக்கத் தக்கது.
'.மார்பனாம் புவனேகவாகு
நலமிகும் யாழ்ப்பாண நகரி
கட்டுவித்து,நல்லைக்குலவிய
கந்தவேட்குக் கோயிலும்
புரிவித்தானே." இவற்றிலிருந்து இறுதியாகநாம் வரக்கூடிய முடிவு இதுதான். நல்லூரும் சிங்கை நகரும் இருவேறுவேறான ராஜதானிகள், இருவேறான நகரங்கள், 'யாப்பாப்பட்டுனே யென்பது யாழ்ப்பாணத்தின் சிங்களத்திரிபே, நல்லூரின் சிங்கள மொழிபெயர்ப்பான "யாப்பாப் பட்டுனே'யினின்றும் யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்ததென்பது பொருத்தமற்றதாகவேபடுகின்றது.
( வ.ந.கிரிதரன் ) (23)

Page 14
நல்லூர் ராஜதானி வரலாற்றுத் தகவல்கள்
நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு பற்றிய தகவல்கள் வெகு அரிதாகவே காணப்படுகின்றன. நல்லூர் ராஜதானியின் முக்கிய பகுதிகளாக ஆலயங்கள், சந்தை, அரசமாளிகைகள், தொழிலாளர்க் குரிய பகுதி, குருக்கள், அரசவைக்கவிஞர், போர்வீரர், வணிகர்க்குரிய இருப்பிடங்கள், நகரைச் சுற்றியமைந்திருந்த மதில், நகரைச் சுற்றி அமைந்திருந்த ஏனைய கோட்டைகள் என்பனவற்றைக்குறிப்பிடலாம்.
பிரபலமான முருக ஸ்தலமாக விளங்கிய நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தைப் பற்றிப் போர்த்துக்கேயரின் நூல்களான Conquest of Ceylon, Early Christianity in Ceylon Guitairp praiyasafa) 6.d5ulsar காணப்படுகின்றன. Conquest of ceylon நூலை எழுதிய குவேறோஸ் சுவாமிகளின் (யெeroz)குறிப்புகளின்படிநல்லூர்க்கந்தசுவாமிஆலயம் யாழ்ப்பாணத்திலேயே பெரிய கோயிலாக விளங்கியதையும், இக்கோயிலைச்சுற்றிநெடுமதில்கள் அமைக்கப்பட்டிருந்ததையும் அறிய முடிகிறது. மேலும் மேற்குறிப்பிட்டநூல்களின்படி, மேற்படிகந்தசுவாமி
(24) நல்லூர் ராஜதானி நகர அமைப்பு )

ஆலயம் தற்போது காணப்படும் கிறிஸ்தவ ஆலயமுள்ள பகுதியிலே யிருந்தது என்பதையும் அறியக் கூடியதாகவுள்ளது. யமுனாரிக்குச் செல்லும் ஒழுங்கையில், அதற்கண்மையில் காணப்படும் கட்டடச் சிதைவுகள் இப்பெரிய கோயிலின் மதிலினைச்சேர்ந்ததென்பதேயென்று கந்தையாகுணராசா கூறுவார் (வீரகேசரி15-08-93)
யாழ்ப்பாண வைபவமாலை முதலாவது சிங்கையாரியராசன் நல்லூரில் இராசதானியை அமைத்தது பற்றிப்பின்வருமாறு கூறும்.
". . . . . . . சோதிடர்கள் தேர்ந்து சொல்லிய நன்முகூர்த்தத்தில் அஸ்திவாரம் போட்டு, நாலுமதிலும் எழுப்பி, வாசலும் ஒழுங்காய் விடுவித்து, மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும், பூங்காவும், பூங்காவன நடுவிலே ஸ்நான மண்டபமும், முப்புடைக் கூபமும் உண்டாக்கி, அக்கூபத்தில் யமுனாநதித் தீர்த்தமும் அழைப்பித்துக் கலந்துவிட்டு, நீதிமண்டபம், யானைப்பந்தி, குதிரைப்பந்தி, சேனாவீரர் இருப்பிடம் முதலிய அனைத்தும் கட்டுவித்து, தன்னுடன் வந்த காசியிற் பிரமகுல திலகரான கெங்காதர ஐயரும், அன்னபூரணி அம்மாள் என்னும் அவர் பத்தினியும் வாசஞ் செய்வதற்கு அக்கிரகாரமும் உண்டாக்கிக் கீழ்த்திசைக்குப் பாதுகாப்பாக வெயிலுகந்த பிள்ளையார் கோயிலையும் மேற்றிசைக்கு வீரமாகாளியம்மன் கோவிலையும் வடதிசைக்கு சட்டநாதேசுவரர் கோவில், தையல்நாயகியம்மன் கோவில் சாலைவிநாயகர் கோவிலையுங் கட்டுவித்துத் திலகவதியார் என்னும் பத்தினியாருடனே கிரகப் பிரவேசஞ் செய்து வாழ்ந்திருந்தான்' (யாழ்ப்பாண வைபவமாலை பக் 27)
யாழ்ப்பாண வைபவமாலையின்"உதயதாரகை'ப் பிரதியின்படி 'தென்றிசைக்குக் கைலை விநாயகர் கோவிலையும் மேற்படி மன்னன் அமைத்ததாக அறியக்கிடக்கின்றது. மேற்படி வைபவமாலையாரின் கூற்றில் மிகுந்துள்ள வரலாற்று நெறியின்மையைப் பற்றி ஏற்கனவே பார்த்திருந்தோம். சிங்காயரின் நல்லூரையல்ல, சிங்கைநகரையே முதலில்தலைநகராக்கினான் என்பதே பொருத்தமானநிலைப்பாடாகும். முதலியார் இராசநாயகத்தின் 'யாழ்ப்பாணச் சரித்திரம்' நல்லூர் இராஜதானியைப் பற்றிப்பின்வருமாறு கூறும்.
வ.ந.கிரிதரன் ) (25)

Page 15
". . . . . . . . கனகசூரியன் தன் புத்திரர்களுடனுஞ் சேனைகளுடனும் யாழ்ப்பாணம் வந்து, விஜயபாகுவுடன்போர்புரிந்து அவனைக் கொன்று தான் அரசனாகி நல்லூரிலிருந்து அரசாண்டான். தன் பழைய ராஜதானியாகிய சிங்கைநகர் அழிந்து காடாய்ப் போனதால், நல்லூர் பலவளங்களாலுஞ் செறிவுற்றிருத்தலைக் கண்டு அதனையே புதுக்குவான் வளைந்து, இராசவிதிகளும், அரண்மனைகளும், அவற்றைச்சூழ்ந்துகுதிரைப்படை, யானைப்படைக் கொட்டாரங்களும், நறுமணங்கமழும் செவ்வியமலர் பொலிந்திலங்குங் சிங்காரவனமும், பட்டாலும் பருத்தி நூலாலும் நுண்ணிய தொழில் புரமக்களிருக்கை களும், பலவகை அணிநலஞ் சிறந்த சாளரங்களோடு கூடிய மாளிகைகளும், தச்சர், கொல்லர், ஓவியக்காரர், தட்டார், இரத்தின வணிகர், புலவர், இசை நூல் வல்ல பாணர், இவர்களிற்கு வெவ் வேறிருக்கைகளும், உயர்குடி வணிகர் வாழ் மாளிகை மறுகுகளும், வேதமோதுமந்தணர் மந்திரங்களும், உழுவித்துண்ணுங் காணியாள ரோங்கிய மாடங்களும், மருத்துவர், சோதிடர் வைகும் வளமனை விதிகளும் உழுவித்துண்போர்க்குதவி பூண்டு உழுதுண்டு வாழ்வார் குடிகளுமாகிய இவைகளை வேறுவேறு தெருக்களிலமைப்பித்து இந்திரன் நகரோ, குபேரன்நகரோ" எனக் கண்டார் வியப்புறக்கவின் பொலிந்திலங்கும் நல்லூரை நல்லூராக ஆக்கினான்' (யாழ்ப்பாணச் சரித்திரம் பக்கம் 76-77)
'கனககுரிய சிங்கையாரியனின் புத்திரனான் சிங்கைப் பரராசசேகரன் காலத்து நல்லூரைப் பற்றி முதலியார் இராசநாயகம் பின்வருமாறு கூறுவார்.
'கனகசூரியனுக்குப் பின் அவன் முதற் குமாரன் சிங்கைப் பரராசசேகரன் என்னும் நாமத்தோடு கி.பி.1478இல் அரசனானான். இவனே சிங்கையெனும் பெயரை முதன் முதல் தலைப்பெயராக அமைத்தவன். இவன்தந்தையினுஞ் சிறந்தவனாய்நகரிற்கு வடபாலில் சட்டநாதர் திருத்தளியையும் தென் திசையில் கைலாயநாதர் கோயிலையும் குணபாலில் வெயிலுகந்த பிள்ளையார் ஆலயத்தையும், குடதிசையில் வீரமாகாளியம்மன்திருப்தபியையும் கட்டுவித்துத்தன்
G26) நல்லூர் ராஜதானி நகர அமைப்பு

தலைநகரை முன்னையினுமணிபெற விளங்க வைத்தான். கந்தசுவாமி கோயிலற்கண்மையில் ஓர் ஏரிஅமைப்பித்து, யமுனாநதியின்திவ்விய தீர்த்தத்தைக்காவடிகளிற்கொணர்வித்துஅவ்வேரிக்குள்ளே பெய்வித்து, அதனை யமுனையேரி (யமுனாரி) எனப்பெயர் தந்தழைத்தான்' (யாழ்ப்பாணச்சரித்திரம்பக்கம் 77)
நல்லூர்இராஜதானியைப் பொறுத்தவரையில் பல்வேறு வரலாற்று ஆவணங்களைதுணுகிஆராய்ந்தமுதலியார்இராசநாயகம் வந்தடைந்த முடிவே ஏற்கக்கூடியதாக உள்ளது. செண்பகப் பெருமாள்என்ற சபுமல் குமாராயாவின் படையெடுப்பின்போது சிங்கைநகர் உட்பட யாழ்நகர் முழுவதுமே அழிந்துவிட, அவன் நல்லூரில் புதிய இராஜதானியை அமைத்தான். கோட்டையில் ஏற்பட்ட அரசுரிமை காரணமாக அவன் விஜயபாகு என்பவனைநல்லூரில் பொறுப்பாக நிறுத்திவிட்டு சென்ற சமயம், முன்னர் செண்பகப் பெருமாளிடம் தோற்றுத் தமிழகம் சென்றிருந்த கனகசூரிய சிங்கையாரியன் தன்னிரு புத்திரர்களான பரராசசேகரன், செஜராசசேகரனுடன் மீண்டும் படையெடுத்து வந்து, விஜயபாகுவிடமிருந்து முன்னர் இழந்த இராச்சியத்தை மீளக் கைப்பற்றிக்கொண்டது வரலாற்றுநிகழ்வு.இவன்காலத்திலும், இவனது மகன் காலத்திலும் நல்லூர் இராஜதானி நகர அமைப்பைப் பொறுத்த வரையில் பலமுக்கிய மாற்றங்களைக் கண்டது. நல்லூர் இராஜதானியாகிய பின்னர் ஏற்பட்ட இந்தநிகழ்வுகள், சிங்கைநகரும் நல்லூரும் ஒன்றென நினைத்துக் குழம்பியதால் தான் போலும் கைலாயமாலையாரும், அதனைஆதாரமாகக்கொண்டு வைபவமாலை யினைப் படைத்த மயில்வாகனப் புலவரும் சிங்கைநகரை ராஜதானி யாக்கிய ஆரிய மன்னன் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளாக எண்ணிவிட்டனர் போலும், அதிகமான வரலாற்றாய்வாளர்களும் முதலியார் இராசநாயகத்தின் கருத்தினை ஏற்றுக் கொள்வதாலும் வைபவமாலையாரின்கூற்றில்காணப்படும் வரலாற்று நெறியின்மையை முதலியார் இராசநாயகத்தின் கருத்தே சீர் செய்வதாலும், அதுவே எனக்கும் சரியாகப்படுகின்றது. இந்த அடிப்படையிலேயே நல்லூர் இராஜதானி பற்றிய வரலாற்றுத் தகவல்களை சரியானதாக ஏற்றுக் கொண்டு கவனத்தை ஏனையதகவல்களின்பாற்திருப்புவோம்.
( வ.ந.சிரிதரன் 27)

Page 16
நன்னூர்க் கந்தசாமி கோயில்
ல்லூர் ராஜதானியில் அமைந்திருந்த ஏனைய பகுதிகளைப் பற்றி நூல்கள் கூறுவதைச்சிறிது பார்ப்போம்.நல்லூர் ராஜதானியின் முக்கிய அம்சங்களில் ஒன்றான நல்லூர் கந்தசாமி கோயிலைப் பற்றிய பல முரண்பாடான தகவல்கள் சரித்திர நூல்களில் காணப்படுகின்றன. கைலாயமாலையில் வரும்பின்வரும்பாடலே சர்ச்சைக்கு காரணம்.
இலக்கிய சகாப்த மெண்ணுற்
றெழுபதாமாண்டதெல்லை
அலர் பொலிமாலை
மார்பனாம்புவனேகுவாகு
நலமிகும் யாழ்ப்பாண நகரி
கட்டுவித்துநல்லைக்
குலவியகந்தவேட்குக்
கோயிலும்புரிவித்தானே
இப்பாடலில் வரும் எண்னூற்றெழுபதை சுவாமி ஞானப்பிரகாசர்,
வ.குமாரசாமி போன்றவர்கள் கி.பி.1248ம் ஆண்டைக் குறிக்குமெனக் கருதுவார்கள். மேற்படி பாடலில் உள்ள எண் என்பது ஆயிரத்தைக்
(28) நல்லூர் ராஜதானி நகர அமைப்பு )

குறிக்கும் எனவும் ஆயிரத்துடன் நூற்றெழுபதைக் கூட்ட வருவது சக வருடம் 1170 என்பதும் இது கி.பி.1248 ஐ குறிக்கும் என்பதும் இவர்களது கருத்து, டானியல் ஜோன் என்பவரின் கருத்துப்படி சகவருடம் எண்ணுற்றெழுபது என்பது கி.பி.948 ஐ குறிக்கும் என்பதாகும். முதலியார்இராசநாயகத்தின்கருத்துப்படியும் சக வருடம் 870 என்பது கி.பி.948ஐ குறிக்கும். இதில் வரும் புவனேகுபாகுவை ஆரிய மன்னனின் மந்திரியாகவும் நல்லைக் கந்தன் கோயிலைக் கட்டியதாகவும் கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்களில் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால்நல்லூர் கோவில் கட்டியத்தில் அதனை கட்டியவன் சிறிசங்கபோதி புவனேகபாகு எனக் குறிப்பிடப் பட்டிருப்பதை மறைத்துவிட முடியாது. இந்த சிறிசங்கபோதி புவனேகுபாகு என்பவனே கி.பி. 1450 இலிருந்து கி.பி.1467 வரை நல்லூரை இராசதானியாக்கிஅதிலிருந்து அரசாண்ட சப்புமல்குமாரய என்பவனாவன். கந்தையாகுணராசாவின் கருத்துப்படி இந்த இரண்டு புவனேகபாகுகளையும் உண்மைகளாகக் கொண்டு அதற்கொரு விளக்கம் காணப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது. முதல் புவனேகபாகுவைஇவர் ஒருதமிழ்ப்பெயராகவே முடிவு செய்கின்றார். நல்லூர் கந்தசாமி கோயிலைக் கட்டியவர் புவனேகவாகு (தமிழ்ப் பெயர் வீரவாகு போல) என்பதற்கு வேறிரு ஆதாரங்களுமுள்ளன. (வீரகேசரி158.93)
'எவ்வாறாயினும் கி.பி.948ம்ஆண்டில் புவனேகவாகு என்பவரால் முதன் முதலில் நல்லூர்க் கந்தசாமி கோயில் கட்டப்பட்டது எனக் கொள்ளலாம். இவரை ஓர் அமைச்சரென வரலாற்று நூல்கள் சில குறிப்பதால் சோழ அரசனின் அரசப்பிரதிநிதிஅல்லது அமைச்சர்அவர் எனக் கொள்வதில் தவறில்லை" (வீரகேசரி 15.8.93) என்ற முடிவுக்கு வந்தபின் க.குணராசாவினால் இரண்டு புவனேகவாகுவுகளுக்கு இடையில் சமரசம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இதன்படி இருவேறு புவனேகவாகுகளால் இருவேறு காலங்களில் கட்டப்பட்ட நல்லூர்க் கந்தன் ஆலயம் போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்டு, மூன்றாவது முறையாக கட்டப்பட்டது என்ற முடிவுக்கே இறுதியாக
( வ.ந.சிரிதரன் ][29]

Page 17
இவரால் வர முடிகிறது. இவரால் குறிப்பிடப்படுகின்ற வரலாற்று நூல்கள் உண்மையில் யாழ்ப்பான வைபவமாலை, கைலாயமாலை போன்றவையே. இந்நூல்களில் கூறப்பட்டுள்ளவரலாற்றுநிகழ்வுகள் பல வரலாற்று நெறியின்றி அமைந்துள்ளன என்பது முதலியார் இராசநாயகம்உட்படபலவரலாற்றாய்வாளர்களின்முடிவாகும்.இந்தப் பிரச்சனையில் முதலியார் இராசநாயகத்தின் முடிவே தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாகஉள்ளது.
"புவனேகவாகு முதலரசனாகிய செகராசனுடைய மந்திரியென் கைலாயமாலையும், அவனே நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக் கட்டினானெனவைபவமாலை கூறும். ஆனால் புவனேகவாகுநல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக் கட்டினானென்னும் கேள்வி வழக்குவரை உண்மையாகலாம். கேள்விப்பட்ட கைலாயமாலையார் நூலெழுத முன்னூறு வருடங்களுக்குள் வாழ்ந்த புவனேகவாகுவை இன்னாரென அறிய முடியாமலோ, அன்றிச் சிங்களவரன்பதை மறைத்து விட வேண்டுமெனக் கருதியோ, யாதினாலோ அவனை செகராசனுடைய மந்திரியென அலங்கரித்து விட்டார். நல்லூர்க் கந்தசுவாமி கோயிற் கட்டியத்தில் பூரீசங்கபோதி புவனேகவாகு எனப் புகழ்ந்து கூறுவது கேட்கப்படுவதால்அதனை மறைக்க எவராலும் முடியாது முடியாது!" (யாழ்ப்பாணச்சரித்திரம்பக்கம் 252)
இது இவ்வாறில்லாமல் கந்தையாகுனராசா கூறுவது போல இரு புவனேகவாகுகளால் இருவேறு காலங்களில்நல்லூர் முருகன் கோயில் கட்டப்பட்டது உண்மையாயிருந்தால்அதுஆச்சரியமானது. ஏனெனில் இருவருக்கும் புவனேகவாகு என்ற ஒரே பெயர் ஏற்பட்டது சாதாரணமாக ஏற்படக் கூடிய நிகழ்வல்ல. அதற்கான சாத்தியம்
அரிதானதே.
Geo) நல்லூர் ராஜதானி நகர அமைப்பு

நல்லூர்க்கோட்டையும் மதில்களும்
函 மிழ் அரசர்கள் தங்களது ராஜதானிகளையே கோட்டைகளாக அமைப்பது பாதுகாப்புக்காரணங்களினால் ஏற்பட்ட வழக்கம்.நல்லூர்க் கோட்டையைப்பற்றியாழ்ப்பாணவைபவமாலை, கைலாயமலை, மற்றும் போர்த்துக்கேய, கோகிலசந்தேஸம் (குயில் விடுதூது) போன்ற சிங்கள நூல்கள் ஆகியவற்றில் ஆங்காங்கே குறிப்புகள் காணப்படுகின்றன. தமிழகத்தில் தலைமறைவாகியிருந்து விட்டு, மீண்டும் படையெடுத்து வந்துகனககுரியசிங்கையாரியனைப்பற்றிவைபவமாலைபின்வருமாறு கூறும்.
"... . . . . . கனககுரிய சிங்கையாரியன் மதுரையிற் சேர்ந்த பொழுது பாண்டிநாட்டைப்பகுதியாய் ஆண்ட சிற்றரசர்பலரும் சேனைகளையும் ஆயுதங்களையும் கொடுத்துவிட, அவன் சகல ஆயுதங்களுடனேயும் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்து, மேற்கு வாசல் வழியாக நுழைந்தான்' (வைபவமாலை, பக்கம் 47) இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மேற்கு
வ.ந.சிரிதரன்

Page 18
வாசலென்பது நல்லூர்க் கோட்டையின் மேற்கு வாசலே என்பது வெள்ளிடமலை.
இம்மேற்கு வாசலைப்பற்றிபறங்கிகளின் படையெடுப்புப் பகுதியி லும் கூறப்பட்டுள்ளது.
'.யுத்தம் வாசற்புறத்தேநல்லூர்க் கோட்டையின் கோவிலுக்கு முன்னாகவிருந்த வெளியையே இடமாகநியமித்துக் குறித்தநாளிலே யுத்தத்தை ஆரம்பித்துப் பதினொரு நாளாக நடத்தினார்கள்' (வைபவமாலை, பக்கம் 70) இந்த யுத்தத்தைபற்றிப்போர்த்துக்கேயரின் குறிப்புக்களும் விபரமாக விளக்குகின்றன. Conquestof Ceylonநூலில் வீரமாகாளியம்மன் கோயிலிற்கு அண்மையில்நல்லூர்க்கோட்டையின் மேற்கு வாயில் அமைந்திருந்தும், யுத்தம் நிகழ்ந்ததும் குறிப்பிடப்பட் டுள்ளது. நல்லூர்க் கோட்டைக்கு வடக்கு வாயிலொன்று இருந்த விபரமும் அதற்குப் பாதுகாப்பாக சிவாலயமொன்று இருந்த விபரமும் வைபவமாலையில்வரும்சுபதிட்டமுனிவர்கதையில்கூறப்பட்டுள்ளன.
". . . . . . அவ்வாலயங்களில் வடமதில் வாயில்காப்பாக நின்ற சிவாலயம் ஒன்று மாத்திரமே சிவகடாட்சம் பெற்ற ஒருவனால் முதல் முதல் நிறைவேறும்' (வைபவமாலை பக்கம் 53-54) நகரின் கிழக்கு அல்லது தெற்கு வாயில்கள் பற்றிய குறிப்புகளை வரலாற்று நூல்களி லிருந்து என்னால் பெறமுடியவில்லை. போர்த்துக்கேயரின் நூல்கள் போன்ற வரலாற்று நூல்களை இந்த விடயத்தில் மீண்டுமொருமுறை நுணுகிஆராய வேண்டுமென்பது எனது அவா. அதன்மூலம் மேலும் பல உண்மைகள் கிடைக்கக்கூடும்.
சந்தை பற்றிய தகவல்கள்
போர்த்துக்கேயரின்நூல்களிலொன்றான Early Christianity in Ceylon (17th Century marative) நல்லூர் ராஜதானியிலமைந்திருந்த சந்தை பற்றியும், இச்சந்தையின் நடைமுறைகளை அரசன் தனது மாளிகையி லிருந்து பார்க்கக்கூடியதாகவிருந்ததையும் கூறுகின்றது. இச்சந்தையே முத்திரைச்சந்தையாகவிருக்க வேண்டும். தமிழரசர்காலத்தில் சந்தையில் விற்கப்படும் துணிகள் அரசாங்க முத்திரையிடப்பட்டே விற்கப்பட்டு வந்தனவென்பதை அறியக்கூடியதாகவிருக்கின்றது.
(32) நல்லூர் ராஜதானி நகர அமைப்பு )

'தமிழரசர் காலத்திற்போலவே அரசாட்சி முத்திரையில்லாத துணிகள் விற்கப்படமாட்டா முத்திரை குத்துவதற்கும் ஒரு வரி அறவிடப்பட்டது" (யாழ்ப்பாணச்சத்திரம்பக்கம் 148)இதனால்தான் முத்திரைச் சந்தை என்னும் பெயர் தோன்றியிருக்கலாம் போல் படுகின்றது.
யமுனா ஏரி
தற்போதுநல்லூர்ப்பகுதியில்அரிதாகக் காணப்படும் பழமையின் சின்னங்களில் ஒன்றான யமுனாரிபற்றியும் பல்வேறுவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. தமிழ் மன்னர்கள் நீராடப்பாவித்த கேணி இதென்பர் ஒரு சாரர், மறுசாராரோ பெரியகந்தசாமிஆலயத்திற்குரிய தீர்த்தக்கேணியென்பர்.இக்கேணியை முதலாவதுசிங்கையாரியராசன் கட்டியதாக வைபவமாலையார்கூறுவார். வரலாற்றைநுனுகிஆராய்ந்த முதலியார்இராசநாயகமோகனககுரியசிங்கையாரியனின்புத்திரர்களில் ஒருவனான சிங்கைப் பரராசசேகரன் என்பவனே கட்டியமைத்தான் எனக்கூறுவார்.
இந்த யமுனா ஏரி பழைய கந்தசாமி கோயிலிருந்த இடத்திற்கு அண்மையில் இருப்பதாலும் இந்துக்களின் புனித நதிகளில் ஒன்றான யமுனா நதியினின்றும் கொண்டு வரப்பட்ட நீரைப் பெய்வித்ததால் யமுனாரிஎன்று அழைக்கப்படுவதாக குறிப்பிடப்டடுவதாலும்நீர்த்தக் கேணியற்று பெரியமுருகன்கோயில் ஒன்றுஇருந்திருப்பதற்குசாத்தியம் குறைவாகஇருப்பதாலும்இந்தயமுனாரிஅரசகுடும்பத்தினரால்நீராடப் பாவிக்கப்பட்டது என்பதிலும்பார்க்க, பழையகந்தசுவாமிஆலயத்திற் குரிய தீர்த்தக் கேணியாகவே இருந்திருக்க வேண்டும் என்பதே பொருத்தமுடையதாகப்படுகிறது. 'ப'கர வடிவானஇக்கேணிமிகவும் அழகானது. பின்னாளில் அன்னியர்ஆட்சிக்காலங்களில் அவர்களால் நீராட பயன்பட்டிருக்கலாம். அதனால் போலும் ஜே.பி.லூயி போன் றோர் இக்கேணியானது தமிழ் அரச குடும்பத்தினரால் நீராடப்பயன் பட்டது எனக்கருதினர் போலும்,
( வநசிரிதரன் D33)

Page 19
தி
ப்பட்டுள்ளது
கட்ட
பமுனா ஏரியின்
 

நகரமைப்பில் மக்களிருக்கைகள்
நல்லூர் இராஜதானியில் மக்கள் புரியும் தொழில்களுக்கு ஏற்ப அவர்களுக்குரிய இருக்கைகளும் அமைந்திருந்தன என முதலியார் இராசநாயகம் சொல் வார். கனகசூரிய சிங்கையாரினால் மீளக் கைப்பற்றப் பட்ட நல்லூர் புதுக்கியமைக்கப்பட்டதைப் பற்றி யாழ்ப்பாணச்சரித்திரம் பின்வருமாறு கூறும்.
'நல்லூர் பல வளங்களாலும் செறிவுற்றிருத்தலைக்கண்டு அதனையே புதுக்குவான்விழைந்து, இராச விதிகளும் அரண்மனைகளும் அவற்றைச் சூழ்ந்து குதிரைப்பட, யானைப்படைக் கொட்டாரங்களும் நறுமணங் கமழும் செவ்விய மலர் பொலிந்திலங்குஞ்சிங்கார வனமும் பட்டாலும் பகுத்திநூலாலும் நுண்ணிய தொழில்புரிமக்களிருக்கைகளும் பலவகை அணிநஞ் சிறந்த சாளரங்களோடு கூடிய மாளிகைகளும் தச்சர், கொல்வர். ஓவியக்காரர். தட்டார்.இரத்தினவணிகர், புலவர் இசைநூல் வல்ல பாணர்இவர்களுக்கு வெவ்வேறிருக்கைகளும்."(யாழ்ப்பாணச் சரித்திரம்)
இவ்விதமாக நகர அமைப்புகாணப்பட்டது. இதில் எவ்வளவுதூரம் உண்மையிருந்தது என்பதை பின்னர் இந்துக்களின் நகர் அமைப்புக் கோட்பாடுகளை தற்போதைய நல்லூரில் காணப்படும் வீதி மற்றும் காணிப் பெயர்களை ஆராயும் போது கண்டு கொள்ளலாம்.
நகரில் காணப்பட்ட கட்டடங்கள் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததென்று கருதப்படும் கோகில சந்தேனபமென்னும் (குயிஸ் விடுதூது) சிங்கள நூலில் இது சப்புமல் குமாரயாவின் யாழ்ப்பான வெற்றியை புகழ்ந்து பாடுவதற்காக எழுதப்பட்டது) நகரில் அமைக்கப்பட்டிருந்த கட்டடங்களைப் பற்றியும் வருகின்றது.
'பாபா பட்டுாைவிலே சிறந்த உயர்ந்த கட்டடங்கள்திரைநிரையாக உள்ளன. பொன்மயமான கொடிகள் இவற்றினை அலங்கரிக்கின்றன. குபேரனின் தலைநகரான அழகாபுரியுடன் இது ஒப்பிடற்பாலது (யாழ்ப்பாண இராச்சியம்-கலாநிதிசிக சிற்றம்பலம் ஈழமுரசு 4.3.94)
( வந.கிரிதரன் ) 35)

Page 20
ஏனைய கோட்டைகள்
நல்லூர் ராஜதானிக்கு பாதுகாப்பாக மூன்று சிறு கோட்டைகள் இருந்ததை போர்த்துகேயரின் குறிப்புகள் கூறிநிற்கின்றன. இவை கோப்பாய், பண்ணைத்துறை, கொழும்புத்துறை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன. பண்ணைத்துறைக்குஅண்மையில் காணப்படும் கொட்டடி என்பது கோட்டையடி என்பதன் திரிபாகவே படுகின்றது. இக்கோட்டைகளை நல்லூர் ராஜதானியுடன் இணைக்கப் பிரதான விதிகள் இருந்ததையம் இவ்வீதிகள் நெடுகஆங்காங்கே காவலரண்கள் இருந்ததையும் போத்துக்கேயரின் நூல்கள் கூறுகின்றன. பறங்கிகள் நல்லூர் ராஜதானிமேல் தொடுத்த போர்பற்றியவிவரங்களை நேர்முக வர்ணனை போன்று குவேறாஸ் குருக்களின் Conquest of Ceylon விபரிக்கிறது.
36) நல்லூர் ராஜதானி நகர அமைப்பு

வெளிக்கள ஆய்வுத் தகவல்கள்
பழமையின் சின்னங்களைப் பாதுகாப்பதைப் பொறுத்தவரையில் தமிழர்கள் பொதுவாகப் பின்தங்கியவர்கள் என்றதான் சொல்ல வேண் டும். ஆண்ட பெருமையை, பழைய வரலாற்றைப் பற்றிவாயளக்கின்ற அளவுக்கு பழமையின் சின்னங்களைப் பாதுகாப்பதில் நம்மவர்கள் போதிய கவனம் செலுத்துவதில்லை என்பதற்கு நல்லூர் மட்டுமே போதுமானது. ஒரு காலத்தில் ராஜதானியாக விளங்கிய நகரில் இருக்கின்ற ஒரு சில வரலாற்றுச் சின்னங்கள் கூட பரிதாபகரமான நிலையில்தான் காணப்படுகின்றன. புதர்மண்டிக்கிடக்கும் யமுனாரி, கட்டடச்சிதைவுகளுடன் அமைதியிலாழ்ந்துகிடக்கும் பண்டாரக்குளம், தன்னகத்தே ஒரு கால கட்ட வரலாற்றைக் கூறிக் கொண்டிருக்கும் கோப்பாய்க் கோட்டையிருந்ததாக கருதப்படும் நிலப்பரப்பு இவையெல்லாம் எத்தனையோ கதைகளை கூறிநிற்கின்றன. நல்லூர் ராஜதானியின் பெருமைகளை விளக்கக்கூடிய கட்டடச்சின்னங்கள் மிகச் சொற்ப அளவிலேயே காணக்கிடந்தாலும் தற்போதும் வழக்கிலிருந்து
0 வநசிதான் ட 37)

Page 21
வரும்காணிப்பெயர்கள், விதிப்பெயர்கள்மூலம்நல்லூர்ராஜதானியின் நகர அமைப்புபற்றியதகவல்களை ஓரளவிற்கு உய்த்துணரமுடிகிறது. தற்போதுகாணப்படும் ஆலயங்களானசட்டந்ாதர்ஆலயம், வெயிலு கந்த பிள்ளையார்கோவில், கைலாசநாதர்ஆலயம், வீரமாகாளியம்மன், நல்லைக்கந்தன்ஆலயம் யாவுமே போர்த்துக்கேயரால்இடித்தொழிக்கப் பட்டுப்பின்னர்கட்டப்பட்டவை. இவைநல்லூர் ராஜதானியாகஇருந்த போது உருவான கட்டடங்களாகயில்லாது போனாலும், ராஜதானியாக நல்லூர் நிலவியபோதிருந்த ஆலயங்களின் நகல்களே என்பதால், இவையும் மறைமுகமாக நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பை எடுத்துக்காட்டும் சின்னங்களாகவே திகழ்கின்றன.
முத்திரை சந்தை
நல்லூர் ஆலயத்திற்காகக் கிழக்காகக் செல்லும் விதியும், பருத்தித் துறை வீதியும் சந்திக்குமிடத்தை அண்டிய பகுதி முத்திரைச்சந்தை என அழைக்கப்படுகின்றது. தமிழரசர்களின் ராஜதானியாகநல்லூர்இருந்த காலத்தில்இங்குதான் சந்தையிருந்திருக்க வேண்டும். இம்முத்திரைச் சந்தையென்னும் பகுதியினூடு பயணித்த பொழுது ஒரு காலத்தில் அப்பகுதியில் நிலவியிருக்கக்கூடிய சந்தைக்குரிய ஆரவாரத்தையும், மாளிகையிலிருந்து அதன் நடைமுறைகளை அவதானித்துக் கொண் டிருந்த ஆரிய மன்னனையும் ஒருகணம் நினைக்காமலிருக்க முடிய வில்லை. தொழிலாளர்க்குரிய தென்கிழக்குப்பகுதி: பொதுவாக சந்தை நகரின் மையத்திலேயே அமைந்திருப்பது வழக்கம். நல்லூர் ராஜதானி யின்மையமாகஇச்சந்தையிருந்திருக்கும் சாத்தியத்தை மனதிலெண்ணி, நகரினூடு வெளிக்கள ஆய்வை நடத்தியபொழுது பல ஆச்சரியம் தரக்கூடியதகவல்களை அறியமுடிந்தது. இச்சந்தைக்குத் தென்கிழக்காக அமைந்திருக்கும் பகுதியில் காணப்பட்ட பெயர்கள் பொதுவாக தொழிலாளர்களையே குறிப்பதையறிய முடிந்தது. தட்டாதொரு, சாயக்காரத் தெரு, கொப்பர்ஸிமித்தெரு, டையர்ஸ் தெரு போன்ற விதிப் பெயர்கள் அப்பகுதி ஒரு காலத்தில் தொழிலாளர்க்குரியஇருப்பிடமாக யிருந்திருக்கலாமென்பதைக் குறிப்பாகக்கூறிநிற்கின்றன.
[ဒa][ நல்லூர் ராஜதானி நகர அமைப்பு )

வணிகர், வீரர் அரண்மனை ஊழியர்க்குரிய பகுதி
தென்மேற்குப் பகுதியில் காணப்படும் வீதி, காணிப்பெயர்கள் பொதுவாக வணிகர்கள், அரண்மனை ஊழியர்கள், வீரர்கள் போன் றோர்க்குரிய பகுதியாக அப்பகுதியிருந்திருக்கலாமோ வென்ற சந்தே கத்தை ஏற்படுத்துகின்றன.
அரசர் அந்தணர், அரசவைப் புலவர்க்குரிய பகுதி
முத்திரைச் சந்தைக்கு வடமேற்காக அமைந்துள்ள பகுதி நல்லூர்
ராஜதானியின் முக்கியத்துவம்வாய்ந்த பகுதியென்பதை அப்பகுதியில் காணப்படும் காணி, வீதிப் பெயர்கள், பண்டாரக்குளம் போன்றவை அறிவித்துநிற்கின்றன. முக்கியமானபகுதிகளாகப்பின்வருவனவற்றைக் கூறலாம்.
1) சங்கிலித் தோப்பு
2) சங்கிலியன் வீதி
3) அரச வீதி
4) பண்டாரமாளிகைவளவு
5) பண்டாரக் குளம்
6) அரசகேசரிவளவு
7) குருக்கள் வளவு
8) அரசவெளி
9) மந்திரிமனை
சங்கிலித் தோப்பு, சங்கிலியன் வீதி, அரசவீதி, அரசவெளி, பண்டார
மாளிகை வளவு, பண்டாரக்குளம் போன்ற பெயர்களே தமிழ் அரசுக்கும் அவற்றிற்குமிடையிலான தொடர்பைக் கூறி நிற்கின்றன. பண்டார மாளிகை, பண்டாரக்குளம் போன்ற பெயர்களிலுள்ள 'பண்டார மென் பது தமிழ் அரசரைக் குறிக்குமென்பது பலரது கருத்து, முதலியார்குல சபாநாதன் இது 'பரராசசேகர பண்டாரத்தைக் குறிக்குமென்பார். பண்டாரமென்ற பெயரில் முடியும் தமிழ் மன்னர்கள் பலர் இருந்திருக் கின்றார்கள். புவிராஜபண்டாரம் அவர்களிலொருவன், பரராசேகரனின் பட்டத்து மனைவியான இராசலக்குமியின் புத்திரர்களிலொருவனின்
( வ.ந.கிரிதரன் D39)

Page 22
பெயரும் பண்டாரம், பண்டாரமாளிகைவளவு என்ற பெயரில் வழங்கப் படும். ஆறு ஏக்கர் வீஸ்தீரணமுள்ள தென்னந்தோப்பு தற்போதைய நல்லூர்ச் சந்தையை அண்மித்த, பருத்தித்துறை வீதியை நோக்கியஇவ் வளவின்பகுதியின் பண்டாரமாளிகை என்ற எழுத்துக்கள் பொறிக்கப் பட்ட தூனொன்று காணப்படுகின்றது. இதற்கண்மையில் சிறியதொரு முகப்புடன் கூடிய வயிரவர் சிலையொன்று காணப்படுகிறது. இம்முகப்பில் பின்வரும் வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இரண்டாயிரம் ஆண்டுபழமைவாய்ந்த தமிழ் மன்னர் வழிகாத்துப் பூஜித்த நல்லை தேரடிப்பதியுரைபண்டாரமாளிகை வாசல்பூநீசிபைரவர்ஆலயம் ஆதிமூலம் airly
அரசகேசரி வளவு
இப்பகுதியில் காணப்படும் காணித்துண்டொன்றின் பெயர் அரச கேசரிவளவு காளிதாசனின்வடமொழிநூலானஇரகுவம்சத்தைதமிழ்ப் படுத்திய தமிழ்க்கவிஞனான அரசகேசரியை ஞாபகமூட்டுவது இந்த வளவு அரசகேசரியை பரராசசேகரனின் மருமகனாக மயில்வாகனப் புலவர் கூறுவார்.
பரநிருபசிங்கத்தின் மைத்துனனும் பராராசசேகரன் மருமகனுமாகிய அரசகேசரி என்பவள் இரகுவம்சம் என்னும் நூலை வடமொழியிலிருந்தும் மொழிப்பெயர்த்து பிரானநடையாகப் பாடித் திருவாரூரிலே கொண்டு போய் அடைந்தான் (வைபமாலை 50. 51)
முதலியார் இராசநாயகமோசிங்கைப் பரராசசேகரனின்மைத்துனன் எனச் சொல்வார்.
. இன்ன காதையின்ற விரும்பொருட் இன்னு செஞ்சொற் றுகடபுதூயநூல் பன்னு செஞ்சொற் பரராசசேகர மன்னனின்பமனங்கொளவாய்ந்ததே
40) நல்லூர் ராஜதானி நகர அமைப்பு )


Page 23
சுவாமி ஞானப்பிரகாசரோ இரகுவம்சம் எதிர்மன்னசிங்க பரராச சேகரன் காலத்தில் இயற்றப்பட்டதென்பார்
மேற்படி பரராசசேகரன்சிங்கைப் பரராசசேகரனாஅல்லது எட்டாம் பரராசசேகரனா என்பதில்நிலவும் குழப்பத்தின் விளைவுதான் மேற்படி முரண்பாட்டிற்குக் காரணம்.
குருக்கள் வளவு
தற்போதையநல்லூர்க்கந்தசுவாமிஅமைந்துள்ள காணியின் பெயர் குருக்கள் வளவு. தமிழரசர் காலத்தில் அந்தணர்கள் வாழ்ந்த பகுதியானதால் இக்காணி குருக்கள் வளவு என அழைக்கப்பட்டது போலும்.
சங்கிலித் தோப்பும் மந்திரிமனையும்
தற்போது மந்திரிமனையென அழைக்கப்படும் கட்டடம் 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியைச் சேர்ந்ததாகக் கூறுவர். ஐரோப்பிய, திராவிடக் கட்டடக் கலையின் கூறுகளைஇக்கட்டடத்தில் காணலாம். இந்த மந்திரிமனை அமைந்துள்ள காணியின் பெயர் சங்கிலித்தோப்பு என அழைக்கப்படுகின்றது. இந்தப் பகுதி மந்திரிக்குரியதா அல்லது அரசனிற்குரியதாவென்பதைத் தீர்மானிப்பது சிறிது சிக்கலானது. இருந்தாலும்இப்பகுதிக்கண்மையில் அரசவெளி, அரசவீதி, சங்கிலியன் வீதி, பண்டாரக்குளம், பண்டாரமாளிகை என அரசகுலத்தவர்க்கே முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் இருப்பதும் மேற்படி மந்திரிமனை அமைந்துள்ள பகுதி சங்கிலித் தோப்பென அழைக்கப்படுவதும் சிந்தனைக்குரியது. தமிழரசர்க்குச் சொந்தமான தோப் பென்று இப்பகுதியில் இருந்திருக்கலாம். பின்னாளில் அன்னியர் ஆட்சிக் காலத்தில் அவர்களிற்கடங்கி பெயரிற்கு ஆட்சிபுரிந்ததமிழ் மன்னரின் வம்சத்தவர்கள் காலகட்டத்தில் அல்லது அதற்குப் பின்னாள் மந்திரியொருவனின் இருப்பிடமாகஇத்தோப்பு மாறியிருந்திருக்கலா மென்று நினைப்பதற்கும் சாத்தியங்கள் இல்லாமலில்லை.
(42){ நல்லூர் ராஜதானி நகர அமைப்பு )

இவையெல்லாம் மேற்படி வடமேற்குப் பகுதியின் முக்கியத்து வத்தைக் கூறிநிற்கும் சின்னங்களாகும்.
அரச தெய்வ முக்கியத்துவம் வாய்ந்த வடகிழக்கு
இந்த வடகிழக்குப் பகுதியில் காணப்படும் முக்கிய வரலாற்றுச் சின்னங்களாகப் பின்வருவனவற்றைக்குறிப்பிடலாம்.
1. யமுனாரி 2. தற்போதுகாணப்படும் கிறிஸ்தவ ஆலயமுள்ள பகுதி.இதுவே
பழைய கந்தசாமி கோயிலிருந்த பகுதி 3. ஒல்லாந்துக் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் மாளிகை யொன்றின் முகப்பு (கலதோரண வாயில் சங்கிலித் தோப்பு வாயிலென அழைக்கப்படுவது) இம்மகப்பு அமைந்துள்ள காணியின் பெயர் பாண்டிய மாளிகைவளவு என்பதாகும். மேற்படி சரித்திரச்சின்னங்களேஇப்பகுதி அரச, தெய்வமுக்கியத் துவம் வாய்ந்த பகுதியென அறிவிக்கும்.
(வ.ந.சிரிதரன் 43)

Page 24
கோட்டைவாசலும் Se5TTI' GOD LULJUqautb வெயிலுகந்த பிள்ளையார் ஆலயமும்
முத்திரைச்சந்தையை மையமாக வைத்துப் பார்க்கும் போது, தற்போ தையநல்லூர் பகுதியில் காணப்படும் ஒரு விதமான ஒழுங்குநிறைந்த அமைப்பு பழைய நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு முறையைக் குறிப்பாக உணத்திக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இதே சமயம் நல்லூர் ராஜதானியின் மேற்கு வடக்கு வாசல்களைப் பற்றி வரலாற்றுநூல்கள்கூறுவதுநினைவிற்கு வரவே, ராஜதானியின்கிழக்கு தெற்கு வாசல்களைப்பற்றிஏதாவதுதகவல்களைதற்போதுகாணப்படும் நல்லூர்நகர அமைப்பில் அறியமுடியுமா எனழுயன்றபோது மேலும் சில தகவல்கள் கிடைத்தன.
(44) நல்லூர் ராஜதானி நகர அமைப்பு )

பருத்தித்துறை விதி
[[و6]
4.
5அ
1. சட்டநாதர்ஆலயம்
2. கிறிஸ்தவர் ஆலயம் (பழையநல்லூர்
ஆலயமிருந்த பகுதி)
3. வெயிலுகந்த பிள்ளையார் ஆலயம்
4. தற்போதுள்ளநல்லூர் கந்தன் ஆலயம்
5. வீரமாகாளியம்மன் ஆலயம்
5. அ. பழைய வீரமாகாளியம்மன்இருந்திருக்க
வேண்டிய பகுதி
6. கைலாசநாதர் ஆலயம்
6. அ. பழைய கைலாசநாதர் ஆலயம் இருந்திருக்க
வேண்டிய பகுதி
விளக்கத்திற்காக வரையப்பட்ட படம் (உண்மையான அளவில் வரையப்படவில்லை)
வ.ந.சிரிதரன் DGs)

Page 25
வெயிலுகந்த பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள காணித்துண்டொன்றிற்கு பெயர் கோட்டை வாசல் என்பதாகும். தென்கிழக்குப் பகுதியில் உள்ள இன்னொரு காணித்துண்டின் பெயர் 'கோட்டையடி' என அழைக்கப்படுகிறது. வெயிலுகந்த பிள்ளையார் கோயிலிற்கண்மையில் 'கோட்டைவாசல்" என்ற பெயருள்ள காணித்துண்டொன்று காணப்படுவது அப்பகுதியில் தான் நல்லூர் ராஜதானியின் கிழக்கு வாசல் இருந்திருக்க வேண்டும் என்ற சிந்தனையைத் தோற்றுவிக்கிறது.இதுபோல கைலாசநாதர்ஆலயத்திற் கண்மையில் ஏதாவது "கோட்டையை ஞாபகப்படுத்தும் காணித்துண் டொன்று இருக்கின்றதா என ஆராய்ந்த போது முயற்சி வெற்றி யளிக்கவில்லை. அப்போதுதான்சிந்தையில் ஒரு பொறிபறந்தது. முத்தி ரைச் சந்தைதான் நல்லூர் ராஜதானியின் முக்கிய மையமாக இருந்திருந்தால், நிச்சயமாக ராஜதானியின் இருபெரும் வீதிகளான வடக்கு - தெற்கு, கிழக்கு-மேற்கு வீதிகளிரண்டும் சந்தைக்கண்மையில் தான் ஒன்றை யொன்று சந்தித்திருக்கவேண்டும். அப்படியென்றால் வடக்கிலிருந்துமுத்திரைச்சந்தை நோக்கிவரும்வீதிதற்போதிருப்பதைப் போல(முன்பக்க படம் பார்க்க)நல்லூர்ஆலயம் நோக்கிவளையாமல் சென்றிருக்க வேண்டும். இதே போல மேற்கிலிருந்துமுத்திரைச்சந்தை நோக்கி வரும் வீதியும் நேராகச் சென்றிருக்க வேண்டும். தற்போது காணப்படும் வெயிலுகந்த பிள்ளையார் அருகாகச் செல்லும் வீதி கிறிஸ்தவ ஆலயத்திற்கு அண்மையில் வளைந்து வந்து பருத்தித்துறை வீதியைச்சந்திக்கிறது. ஆனால் அந்த வீதிநேராக வந்திருக்கும்பட்சத்தில் சரியாக முத்திரைச் சந்தையை ஊடறுத்து மேற்காக செல்வதை அவதானிக்கலாம்.
எமது வெளிக்கள ஆய்வில் இன்னொன்றையும் அறியமுடிந்தது. முத்திரைச் சந்தையிலிருந்து அண்ணளவாக சமமான தூரத்தில் வெயிலுகந்தபிள்ளையார்ஆலயமும் சட்டநாதர்ஆலயமும்இருப்பதை அறிய முடிந்தது. கிடைக்கப்பெறும் வரலாற்று, வெளிக்கள ஆய்வுத் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது நல்லூர் ராஜதானி ஒருவித ஒழுங்கான வடிவில் இருந்திருக்க வேண்டும் என்றே படுகின்றது.
46) நல்லூர் ராஜதானி நகர அமைப்பு )

ஆக, முத்திரைச் சந்தையிலருநது அண்ணளவாக சமமான தூரத்தில்தான்நான்கு கோயில்களுமே இருந்திருக்க வேண்டும்.
போர்த்துக்கேயர்காலத்தில்இடிக்கப்பட்ட ஆலயங்களில்நல்லூர்க் கந்தன் ஆலயம் ஏற்கனவே ஆலயமிருந்த பகுதியில் கிறிஸ்தவ ஆலயமிருந்ததால் குருக்கள் வளவு என்ற பகுதியில் மீண்டும் அமைக்கப்பட்டது. இதனை மையமாக வைத்துத்தான் பின்னர் கட்டப்பட்ட கைலாசநாதர் ஆலயமும் வீரகாளியம்மன் ஆலயமும் அமைக்கப்பட்டதுபோலும். ஏனென்றால் கந்தசாமிஆலயத்திலிருந்து ஏறக்குறைய சமமான தூரத்தில் வீரமாகாளியம்மன் கோயிலும், கைலாசநாதர் கோயிலும் காணப்படுகின்றன.
இன்னுமொரு ஆச்சரியம் என்னவென்றால் மேற்படி தூரமானது முத்திரைச் சந்தையிலிருந்து வெயிலுகந்த பிள்ளையார், சட்டநாதர் ஆலயங்களிற்கான தூரத்திற்கு சமமாக இருக்கின்றதையும் கான முடிகின்றது.
முத்திரைச் சந்தையானது நல்லூர் ராஜதானியின் மையப் பகுதியென்பதை ஏற்றுக் கொண்டு பார்க்கையில் மேற்படி சந்தையி லிருந்து நான்கு திக்குகளிலுமிருந்த ஆலயங்கள் ஓரளவு சமமான தூரத்திலிருந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வரமுடிகிறது. ஆனால் தற்போதுகாணப்படும் வெயிலுகந்தபிள்ளையார்கோயிலும் சட்டநாதர் கோயிலும் முத்திரைச் சந்தையென அழைக்கப்படும் பகுதியிலிருந்து அண்ணளவாக சமமான தூரத்திலிருப்பதைப் பார்க்கும் போது போர்த்துக்கேயர்காலத்தில்இடிக்கப்பட்ட அவ்வாலயங்கள் மீண்டும் அமைக்கப்பட்ட போது பழைய இடத்திற்கு அண்மையில் அல்லது அதேயிடத்தில்தான் கட்டப்பட்டிருக்க வேண்டும் போல படுகின்றது. அதேசமயம் ஏனைய மூன்று ஆலயங்களான நல்லூர்க் கந்தசாமி ஆலயம், கைலாசநாதர்ஆலயம், வீரமாகாளியம்மன் ஆலயம்முதலியன மீண்டும் கட்டப்பட்ட பொழுது புதிய இடங்களில் கட்டப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, அவ்விதம் அமைக்கப்பட்ட பொழுதுநல்லைக்கந்தன் ஆலயத்தை மையமாக வைத்தே ஏனைய இரு ஆலயங்களும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
( வ.ந.சிரிதரன் ) (17)

Page 26
இன்னுமொரு விடயத்தையும் வெளிக்களஆய்வின் போது அறிய முடிந்தது. ஆனைப்பந்தி போன்ற போருடன் சம்பந்தப்பட்ட பகுதியில் தமிழர்களின் போர்க்கடவுளான கொற்றவையின் ஆலயமான வீரமாகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. வயல்கள் மலிந்த செம்மணியை அண்டிய பகுதியில் உழவர்களின் காவல் தெய்வமான வெயிலுகந்த பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. ராஜதானியின் பாதுகாப்பிற்காக ஏனைய இரு ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நல்லூர் ராஜதானி பற்றிய வெளிக்கள ஆய்வுத்தகவல்களை, விளைந்த ஊகங்களை பண்டைய இந்துக்களின் நகர அமைப்புக் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்த போது மேலும் பல உண்மை களை அறியமுடிகிறது.
Gs) நல்லூர் ராஜதானி நகர அமைப்பு )

U GOTOVOULUU TEGg5th ESLU ESGU) Guy Lyth
வே தகாலத்திலேயே இந்துக்களின் கட்டடக்கலைத்துறை வளர்ச்சியுற்றிருந்தது. கட்டடக்கலை பற்றிய அறிவியற்துறை வாஸ்து வித்யா(Vastu-Vidya) எனஅழைக்கப்பட்டது.இதனை விளக்கும்நூல்கள் வாஸ்து சாஸ்திர நூல்கள் (Vastu Shastras) என அழைக்கப்பட்டன. மச்யபுராண (Matsyapurama) விஷ்ணு தர்மோத்தர புராண (Vishnu dhamorapurama) போன்ற புராணநூல்களும், ஹயாசேர்சா பஞ்சார்த்திர gésuo (Hayasirsha pancharatra Agama) 6pass5Tygésuo (Vaikhanasa Agama) போன்ற ஆகம நூல்களும் ஆலய அமைப்பு முறைபற்றிய விதிகளைக்கூறும். மத்திய காலகட்டத்தில் மேலும் சில நூல்கள் இத்துறையில் தோன்றின. மானசர (manasara) சிற்பப்பிரகாச (Shipaprakasha) போன்றன குறிப்பிடத்தக்கன. தமிழிலும் சிந்தா மணி.சிற்பரத்தினம் போன்ற நூல்கள் தோன்றின. இவற்றிற்கிடையில் சிற்சில வேறுபாடுகள் காணப்பட்டாலும் பொதுவாக ஒரே கருத்தையே கொண்டிருந்தன. பொதுவாக வடஇந்திய கட்டடக்கலைநூல்களின்மூல
( வ.ந.சிரிதரன் (49)

Page 27
புராதானக் கட்டடம் (சட் டநாதர் கே ாயில் அருகே)
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு
 
 
 
 
 
 
 

ஆசிரியராகச் தேவலோகச்சிற்பியான விசுவகர்மாவைக்குறிப்பிடுவர். தென்னிந்திய நூல்களின் மூல ஆசிரியராக மயனைக் குறிப்பிடுவர். இக்கட்டடக்கலை நூல்களை கூறும் கோட்பாடுகளிலிருந்து சமயம் எவ்வளவு தூரம் கட்டட நகர அமைப்பு முறையினைப் பாதித்துள்ள தென்பதை அறியமுடிகின்றது. மத்தியகாலம் வரையில்இத்துறைபற்றிய தகவல்கள் யாவும், பொய்வழிமூலமாகவே, தந்தையிடமிருந்து மகனிற்கு என்ற முறையில் பேணப்பட்டுவந்துள்ளன. மத்தியகாலகட்டத்திலேயே முதன்முறையாக இத்துறை பற்றிய தகவல்கள் யாவும் பனையோலைச் சுவடிகளில் எழுத்து மூலமாகப் பதிக்கப்பட்டுவந்தன. 1920ம் ஆண்டில் Sella kramsch என்பவர் இச்சுவடிகள் பலவற்றை ஆராய்ந்திருக் கின்றார். இச்சுவடிகள் தரும் முக்கியமான தகவல்கள் சிலவற்றைப் பார்ப்போம். முக்கியமாகநகரஅமைப்புபற்றிக் கூறப்படும்தகவல்களை நோக்குவோம்.
பிரபஞ்சமும் இந்துக்களின் கட்டடக்கலையும்
இந்துக்களின் உபநிடதங்கள் கூறும் தத்துவங்களில் 'பிரம்மம்' அல்லது 'பிரம்மா' பற்றி விபரிக்கப்பட்டுள்ளது. உருவமற்ற, ஆதி அந்தமற்று, எங்கும் பரந்து, நீக்கமறநிறைந்திருப்பவனே பிரம்மா.இந்த உருவமற்ற பிரம்மாவின் உருவ வடிவங்கள்தான் சிவன், விஷ்ணு, பிரம்மா போன்ற தெய்வங்கள். இவ்விதமான உருவற்ற மூல வடிவத்திலிருந்து உருவானவன் தான் 'வாஸ்து புருஷன்' அல்லது "வாஸ்துதேவன்"என்பவன்.இவனை மையமாக வைத்தேஇந்துக்களின் கட்டடக்கவைத்துறை வளர்ச்சியுற்று வந்திருக்கின்றது. இவ்வித உருவ வடிவான வாள்துபுருஷனைவாஸ்துபுருஷ மண்டலம்) என மேற்படி கீட்டடக்கலை நூல்கள் வர்ணிக்கின்றன. இப்பிரபஞ்சத்தை இயக்கும் விதிகளின் உருவ வடிவமே இந்த வாஸ்து புருஷ மண்டலமாகும். ஆரம்பத்தில் எவ்விதம் உருவற்ற பிரம்மத்திலிருந்து உருவ வாஸ்து புருஷன் படைக்கப் பட்டானே அவ்விதமே கட்டடக்கலைஞர்களும் உருவற்ற புறச்சூழலை (Eார்0ாாem) உருவவடிவமான கட்டடங்களாக வடிவமைக்கும் போது, அக்கட்டடங்கள் மேற்படி வாஸ்துதேவனைத் திருப்திப்படுத்தும் வகையிலேயே அமைப்பார்கள். பிரபஞ்சத்திற்கும்
வ.ந.கிரிதரன் ) 51)

Page 28
மனிதனிற்குமிடையிலுள்ள தொடர்பைக்கட்டடங்கள் அமைப்பதிலும் பேணியவர்கள் இந்துக்கள் என்பதுஇதிலிருந்து புலனாகின்றது.
வட்டமும், சதுரமும், வாஸ்து புருஷமண்டலமும்
இந்துக்களின்கட்டடங்களையும், பெளத்தர்களின்கட்டடங்களையும் நோக்குபவர்கள் ஒன்றைஇலகுவாக அறிந்து கொள்வார்கள். பெளத்த கட்டடங்கள், தாது கோபங்கள் போன்றவை, வட்டவடிவில் அமைக்கப்பட்டன.இந்துக்களின்கட்டடங்களோசதுரஅல்லது செவ்வக வடிவங்களில் அமைக்கப்பட்டு வந்தன. அநுராதபுரம் பெளத்தர்களின் முக்கியமான நகரங்களில் ஒன்று. பண்டைய அநுராதபுரநகர, கட்டட அமைப்புத் துறையில் வட்டவடிவம் எவ்வளவு தூரம் பாதித்துள்ள தென்பதை ரோலன் டி சில்வா என்ற சிங்களப் பேராசிரியர்ஆராய்ந்து தெளிவுபடுத்தியிருக்கிறார். சந்தையை மையமாக வைத்து உருவான பண்டைய அநுராதபுரநகரைச்சுற்றிவட்ட ஒழுக்கில் வட்ட வடிவமான தாதுகோபங்கள், இருவேறு ஒழுக்குகளில் அமைக்கப்பட்டிருந்ததை அவரது ஆய்வுகள் புலப்படுத்தும், வட்ட வடிவம் இயக்கத்தை உணர்த்தும், தோற்றமும் அழிவும், இரவும், பகலும் இவ்விதமாக ஒருவித வட்ட ஒழுக்கில் நகரும் காலத்தை மேற்படி வட்டவடிவம் உணர்த்தும், மேலும் இவ்வட்ட வடிவம் நாம் வாழும் பூமிக்குரிய இயல்பையும் குறிக்கும், பொருள்முதல்வாதக் கோட்பாட்டை அதிகம் நம்பும் பெளத்தர்கள் வட்டவடிவத்தைத் தேர்ந்தெடுத்து ஆச்சர்யமான தொன்றல்ல.
மாறாக சதுரவடிவம் ஒரு இறுதியான, தெளிவான வடிவம், வட்டத்தைப்போல்இதுஇயக்கத்தைப்புலப்படுத்துவதில்லை.இந்துக்கள் இப்பிரஞ்சத்தை வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு போன்ற திசைகளால் உருவான சதுர வடிவான வெளியாகவும், அவ்வெளியில் நேரத்தின் பாதிப்பை இராசிகளாலும் உருவகித்தார்கள். நவீன பெளதிகம் கூறுவதைப்போல் இந்துக்களும் இப்பிரபஞ்சத்தை ஒருவித வெளி (Space) நேர (time) அமைப்பாகத் தான் விளங்கி வைத்திருந்தார் களென்பது இதிலிருந்து புலனாகின்றது.இவ்விதம் இப்பிரபஞ்சத்தைச்
G52) நல்லூர் ராஜதானி நகர அமைப்பு

சதுர வடிவாக உருவகித்த இந்துக்கள் இவ்விதிகளிற்கமைய உருவாக்கப்பட்ட கட்டடங்கள், நகரங்கள் என்பவற்றையும் சதுர வடிவாகவே (அல்லது செவ்வக) அமைத்தார்களென்பது ஆச்சரியமான தொன்றல்லதான்
இவ்விதம் சதுரவடிவில் அமைக்கப்பட்ட 'வாஸ்து'புருஷமண்டலத் திற்கேற்பவே நகரங்கள் அல்லது கட்டடங்கள் அமைக்கப்பட்டன. வாஸ்து புருஷனைஇச்சதுரவடிவில் இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் தெய்வங்கள் ஒவ்வொருவரும் சிறுசிறு சதுரங்களாக உருவாக்கப் பட்டார்கள். மேற்படி சதுரவடிவான வாஸ்து புருஷமண்டலம் மேலும் பல சிறு சிறு சதுரங்களாகப் பிரிக்கப்பட்டன. இத்தகைய சிறு சதுரங்கள் 'படா'க்கள் (Padas) என அழைக்கப்பட்டன. ஒவ்வொரு சிறு சதுரத்தையும் ஒவ்வொரு தெய்வம் ஆக்கிரமித்திருக்கும். வாஸ்து புருஷமண்டலத்தின் மையப்பகுதியில் பல சிறு சதுரங்களை உள்ளடக்கிய பெரிய சதுரமொன்று காணப்படும் இச்சதுரத்தை பிரம்மனிற்கு உருவகப்படுத்தினார்கள்.
3 2 3
2 1 2
3 2 3
படம் 1
( வ.ந.கிரிதரன் (53)

Page 29
1. பிரம்மாவிற்குரியது 4 சதுரங்கள் 2. அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த கடவுள்
களிற்குரியது, 2சதுரங்கள் 3. ஏனைய கடவுட்குரியது, 1 சதுரம் பிரம்மனைச்சுற்றி ஏனைய முக்கியமான தெய்வங்களைக் கொண்ட சதுரங்களும், அவற்றிற்கு வெளிப்புறமாக ஏனைய முக்கியம் குறைந்த தெய்வங்களைக் கொண்ட சதுரங்களுமாக மேற்படி வாஸ்து புருஷ மண்டலம் பிரிக்கப்பட்டிருக்கும். வாஸ்து புருஷ மண்டலத்தை 32 வகைகளில் சதுரவடிவில் உருவாக்கலாம். ஒரு சதுர வடிவான வாஸ்து புருஷ மண்டலத்திலிருந்து 4,9,16,25,36,4964,81. ଗtଭୌy 1024 சிறு சதுரங்களைக் கொண்ட முப்பத்திரண்டு வகைகளில் வாஸ்து புருஷமண்டலத்தை உருவாக்கலாமென்பதைப் பண்டைய இந்தியக் கட்டடக்கலை நூல்கள் கூறுகின்றன. இத்தகைய வாஸ்து புருஷ மண்டலங்களில் 64சிறு சதுரங்களை உள்ளடக்கிய மண்டுக மண்டலம் (manduka mandala) 81 சிறு சதுரங்களை உள்ளடக்கிய பரமசாயிக்க மண்டலம் (parama Sayikamandala) என்பவை முக்கியமானவை
படம் 2
G540C நல்லூர் ராஜதானி நகர அமைப்பு )

1. Grubupmr
2. மித்ரா
5. விவாஸ்வன்
4. ஆர்யமா
5. பிரதிவிதார
மண்டுகமண்டலத்தைப் பொறுத்தவரையில் வடக்கு-தெற்கு, கிழக்கு - மேற்காகச்செல்லும்இரு அச்சுக்களாலும் முழு சதுரவடிவமும்பிரிக்கப் பட்டிருக்கும். பரம சாயிக்க மண்டலத்தைப் பொறுத்த வரையில் முழு சதுரவடிவமும் சமச்சீரற்றுப்பிரிக்கப்பட்டிருக்கும்.
இவ்விதமாக இந்துக்களின் கட்டடக்கலைக் கோட்பாடுகளின்படி அமைக்கப்படும் ஒவ்வொரு கட்டடமும் (ஆலயமோ, மனையோ) நகரமும் உண்மையிலேயே இந்துக்களின் படைப்புத் தத்துவக் கோட்பாடுகளைப் புலப்படுத்தும் சின்னங்களாகத்தான் உருவாக்கப் படுகின்றனவென்பதை அறிய முடிகின்றது. இது சமயத்தின் பாதிப்பு எவ்வளவு தூரத்திற்கு நகர், கட்டட அமைப்புத் துறையில் உள்ள தென்பதை வெளிப்படுத்துகின்றது. (வடஇந்தியக்கட்டடக்கலைநூல்கள் கூறும் வாஸ்து புருஷ மண்டலத்திற்கும், தென்னிந்திய நூல்கள் கூறும் விளக்கத்திற்குமிடையில் சிறு சிறு வேறுபாடுகள் நிலவியபோதும் பொதுவில் பெரிய அளவில் மாற்றமில்லையென்றே கொள்ளலாம். தென்னிந்திய ஆலயநகரங்களான மதுரை, பூரீரங்கம் போன்றவற்றில் இம்மாற்றத்தை வெளிப்படையாகவே அவதானிக்க முடிகின்றது.)
வ.ந.கிரிதரன் G55)

Page 30
இந்துக்களின் நகர அமைப்பும் சாதியம்
இந்துக்களின் நகர அமைப்புக் கலையைப் பல காரணிகள்
நிர்ணயித்தன. புவியின்அமைப்பு அதிலுள்ள மண்ணின் அமைப்பு அம்
மண்ணில் நிலவி வந்த சாதிக்கட்டுப்பாடுகள் போன்ற சமுதாய
அமைப்புமுறை, சாத்திரங்கள் எல்லாமேஇந்துக்களின்நகரஅமைப்புக்
கலையில் முக்கிய பாத்திரத்தை வகித்தன. மண்ணின் அமைப்பு
முறைக்கேற்பநிலத்தை மூன்று வகைகளாகப் பிரித்தார்கள்.
1. யங்கள(Jangala): நீர், நதி, வளமற்ற வறண்ட நிலத்தை இது
குறித்தது.
2. அதுபா (Anope): நீர் வளம் மிகுந்த, குளிர்ந்த சுவாத்தியம் மிக்க, வளம் மலிந்த மண்ணைக் கொண்ட நிலத்தை இது குறிக்கும்.
3. "சாதனா (Sadhana) "யங்கல'விற்கும் 'அநுபா' விற்கும் இடைப்பட்டசாதாரணவகையானநிலத்தைஇவ்விதம்அழைத்தனர்.
(se) நல்லூர் ராஜதானி நகர அமைப்பு

மண்ணின் நிறம், மணம், அது எழுப்பும் ஒலி, அதன் சுவை, இவையெல்லாம் எவ்விதம் இந்துக்களின் நகர அமைப்புக் கலையில் பங்காற்றின என்பது பற்றி, மேற்கு நாட்டவரான Andras Vowahsen என்பவர் Living Architecture - Indian என்ற நூலில் பின்வருமாறு கூறுவார்.
மண்ணின் நிறம், மணம், ஒலி, சுவை, அது தரும் உணர்வு இவையெல்லாம் மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்கப்பட்டன. மண்ணின் நிறம் அம்மண்ணில் குடியமர்த்தப் பொருத்தமான சாதி மக்களை இனங்காட்டியது. வெள்ளை, சிவப்பு, மஞ்சள், கறுப்பு ஆகியவை முக்கியமானவை. வெள்ளைநிறமண்பிராமணர்களிற்கும், சிவப்புநிற மண் சத்திரியர்களிற்கும்,மஞ்சள்நிறமண் வைசியர்களிற்கும், கறுப்பு நிறமண்குத்திரர்களிற்கும்உரியனவாகக் கொள்ளப்பட்டன. மண்ணின் சுவைக்கும் சாதியமைப்பிற்குமிடையிலும் தொடர்பிருந்தது. இனிமை யான மண்பிராமணர்களிற்கும், காரமண்வைசியர்களிற்கும், கசப்பான மண்குத்திரர்களிற்கும் உரியதாகக் கொள்ளப்பட்டன. தட்டும் பொழுது நரிகள் ஊளையிடுவதைப் போலவோ, நாய்கள் குறைப்பதைப் போலவோஅல்லது கழுதைகள்கத்துவதைப் போலவோஒலிஎழுப்பும் மண்ணினைத்தவிர்க்க வேண்டும்.
(Living Architecture Indian Luisib 44) நில அமைப்பின்சாய்வும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. வடக்கை அல்லது கிழக்கை நோக்கிச் தாழ்ந்து செல்லும் சாய்வைக் கொண்ட மண்ணின் மீதே நகரம் அமைக்கப்பட வேண்டும். தெற்கு நோக்கிய சாய்வு மரணத்தையும், தென்மேற்கு நோக்கிய சாய்வு துன்பத்தையும், மேற்கு நோக்கிய சாய்வு வறுமையையும், பயிர் அழிவையும், வடமேற்கு நோக்கிய சாய்வு போரையும் கொண்டு வருமெனஇந்துக்கள் நம்பினார்கள்.
இவ்விதமாகநகர்அமைப்பதற்குரியநிலம்தெரிவுசெய்யப்பட்டதும் 32வகைகளில் காணப்படும்வாஸ்துபுருஷ மண்டலத்தில் பொருத்தமான வகை சோதிடத்தில் நிபுணத்துவம் பெற்ற குருக்களினால் தெரிவு செய்யப்படும். நகரம் சதுரவடிவில் (இயலாத பட்சத்தில் செவ்வக
( வ.ந.கிரிதரன் ) (sr)

Page 31
வடிவில்) அமைக்கப்படும். சிலவகையான கட்டடக்கலைச் சுவடிகள் தரும் தகவல்களின்படி பூரணமான சதுர வடிவான நகரங்கள் பிராமணர்களிற்கு மட்டுமே உரியதென்றும், ஏனைய சாதியினரைப் பொறுத்தவரையில் செவ்வக வடிவான நகரங்களிலேயே வாழ வேண்டுமெனவும் அறிய முடிவதாக Andreas Volwashsenதனது Living Architecture - Indian இல் (பக்கம் 47) கூறுவார். இவ்விதமாகப் பொருத்தமான 'வாஸ்து புருஷ மண்டல அமைப்பு தெரிவு செய்யப் பட்டு அமைக்கப்படும்நகர அமைப்பு பின்வருமாறு காணப்படும்.
1.
2.
நகரைச்சுற்றிமதில் அமைக்கப்படும். வடக்கு தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் செல்லும் வீதிகளால் பிரிக்கப்பட்ட பல சிறு சிறு சதுரங்களை உள்ளடக்கிய பெரிய சதுரமாகநகர் காணப்படும். நகரமானது வடக்கு தெற்கு, கிழக்கு மேற்காகச்செல்லும் அகன்ற இரு ராஜவீதிகளால் பிரிக்கப்பட்டிருக்கும். இவ்விதம் அமைக்கப்படும் "ராஜ பாட்டை" யானது நகரின் தன்மைக்கேற்ப அளவில் வேறுபடும். உதாரணமாக மாநகர் களைப் பொறுத்தவரையில் இந்த ராஜபாட்டை 12 மீட்டர்கள் அகலமுடயைதாகவும் சாதாரண நகரங்களைப் பொறுத்தவரை 10 மீட்டர்கள் அகலமுடையதாகவும், வெறும் சந்தையை மட்டுமே கொண்டதாகவிருக்கும்நகரமாயின் 8மீட்டர்கள் அள வுடையதாகவுமிருக்கும். நகரினைச் சுற்றிவர மதிலின் உட்புறமாகவும் பாதையொன்று அமைக்கப்படும். ராஜபாட்டையின் அகலத்தையொத்ததாக இப்பாதையிருக்கும். இதுதவிர நகரின் எந்த வகையான திசையில் எந்த வகையான மக்கள் வாழலாம் என்பது பற்றியும் பண்டைய இந்துக்களின் கட்டடக்கலை சம்பந்தமான நூல்கள் கூறுகின்றன. உதாரணமாகப் பின்வருவனவற்றைக் கூறலாம். அ. பிராமணர்கள், சோதிடர்கள், காவல்துறை தலைமை யகம், அரச அதிகாரிகள் போன்றோர் வாழுமிடங்கள் வடக்கிலும், வடமேற்கிலும்.
(ss) நல்லூர் ராஜதானி நகர அமைப்பு )

ஆ. பொற்கொல்லர்கள் போன்ற தொழிலைச்செய்பவர்கள் வசிக்கும் பகுதிகள் தென்கிழக்குப்பகுதியிலும்.
இ. சிறையதிகாரிகள், போர்வீரர்கள், இடையர்கள், மீனவர்கள் போன்றோர் வாழும் இடங்கள் தென் மேற்கிலும்,
Fo. சந்தை வடகிழக்கிலும்,
உ. அரண்மனைகள் போன்றவைகிழக்கிலும்அமைந்திருக்க வேண்டுமெனவும் மேற்படி பண்டைய இந்துக்களின் கட்டடக்கலைநூல்கள் கூறுகின்றன. இவ்விதம் முழுமை யாகக் கைக்கொள்ளப்படாது அமைக்க வேண்டி நேரினும்நிச்சயமாகநகரில் அமைந்திருக்கும் குடியிருப் புக்கள் நிச்சயமாக சாதிவாரியாகப் பிரிக்கப்பட்டு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இவையெல்லாம் இந்துக்களின் நகர அமைப்புத்துறையில் சாதி வகித்த பங்கினைத்துலாம்பாரமாக வெளிக்காட்டுகின்றன.
( வந.கிரிதரன் G59)

Page 32
தென்னிந்திய ஆலய நகரங்கள்
பூநீரங்கம், மதுரை போன்ற தென்னிந்திய ஆலய நகரங்கள் வட இந்திய கட்டடக்கலை நூல்களில் கூறப்படும் வாஸ்து புருஷ மண்டலக் கோட்பாடுகளிலிருந்து தென்னிந்தியக் கோட்பாடுகள் தத்துவார்த்த ரீதியில் சிறிது விலகியிருப்பதைப்புலப்படுத்துகின்றன. பிரதான ஆலயம் அமைந்துள்ளமையப்பகுதி ஆதிஅந்தமற்ற, உருவமற்ற பிரம்மாவிற் குரியது. இப்பகுதியில் பிரதான ஆலயம் அமைந்திருக்கும். இதனைச் சுற்றி மதில் கட்டப்பட்டிருக்கும். இதனையடுத்துள்ள பகுதி ஏனைய தெய்வங்களுக்குரிய பகுதி. அதற்கும் அடுத்த பகுதி மனிதர்களிற்குரிய பகுதி. கடைசியாகவுள்ள பகுதி பேய்கள் பூதகணங்களிற்குரியது.
(eo) C நல்லூர் ராஜதானி நகர அமைப்பு

1. பிரம்மாவிற்குரியது 2 ஏனைய தெய்வங்களிற்குரியது. 3. மனிதர்களிற்குரியது 4. பூதகணங்களிற்குரியது.
வட இந்திய வாஸ்து புருஷ மண்டலம் படைப்பைப் பற்றிக் கூறினால், தென்னிந்திய வாஸ்து புருஷ மண்டலமோ படைக்கப்பட்ட பிரபஞ்சத்தில் நிலவிடும் ஒழுங்கைப்பற்றிப்புலப்படுத்துவதை மேற்படி ஆலயநகரங்களில் காணப்படும் ஒழுங்கு புலப்படுத்துகின்றது. ஆலய நகரமான மதுரை கோபுரங்களுடன் கூடிய அழகானநகர் நான்மாடக் கூடல் என அழைக்கப்படுவது. மதுரை மீனாட்சியெனப் பெயர் பெற்ற ஆலயம், சுந்தரேஸ்வர் ஆலயம் போன்ற கோபுரங்கள் மதில்களுடன் கூடிய ஆலயங்களையும், ஆயிரங்கால் மண்டபம், ஆலயத்திற்குரிய கேணி போன்றவற்றையும் உள்ளடக்கிய பகுதியைச் சுற்றிவர மதிலும், அம்மதிலின் நான்கு புறமும் நுழைவாயிலும் அமைக்கப்பட்டுள்ளது. நல்லூர் மதுரைநகரைப் போல வெறும் ஆலய நகரமாக மட்டுமிருக்க வில்லை. ராஜதானியாகவும் விளங்கியது. அதனால்தான் நல்லூர் ஆலயநகரத்திற்கும் ராஜதானிக்குமுரிய இயல்புகளுடன் விளங்கியது. இங்கு நான் மதுரையின் ஆலய நகர் எனக் குறிப்பிடுவதற்கு ஒரு காரணமுண்டு. மதுரை மாநகரில் அமைந்துள்ள ஆலயங்கள் உள்ள பகுதியே ஒருநகராகத்தான் அமைக்கப்பட்டுள்ளது. அந்தப்பகுதியைத்
வ.ந.கிரிதரன் ) (61)

Page 33
தான் மேற்படி மதுரையின் ஆலயநகர் என்பது குறிப்பிடுகின்றது. சபுமல குமாரயாவால் தோற்கடிக்கப்பட்ட கனகசூரிய சிங்கையாரியன் தனது புத்திரர்களான பரரா சேகரன் செகராசஞ்சகரனுள் தமிழகத்தில் இறுதி காலம் வகிந்திருந்தான். அச்சமயம்இளவான பரராசசேகரனிடம் மதுரை போன்ற ஆலயநகர்கள் ஏற்படுத்திய பாதிப்பின் விளைவால் தான் நல்லூர் ராஜதானியை விரிவுபடுத்திய போது அவன் அதனை ஆலய நகரமாகவும் அமைத்தான் போலும்,
பண்டை இந்திய நகர வகைகள்
இவ்விதமாக வாஸ்து புருஷமண்டல விதிகளிற்கேற்ப பல்வேறு வகையான நகரங்கள் அமைக்கப்பட்டன. தந்தகா, சர்வதோபாத்ரா, நந்தியாவர்த்த, பத்மகா, சுவாஸ்திகா, பிரஸ்திரா, காமுகாண்ட, சதுர்முகா. இவ்விதமாகப் பல்வேறு பெயர்களில் இவை அழைக்கப்பட்டன. இவற்றில் சில வகைகள் சிறிய நகரங்கள், கிராமங்கள் என்பவற்றிற்குப் பொருத்தமாகவிருந்தன. உதாரணமாக தந்தகா' வகையினைக் கூறலாம். இத்தகைய சிறிய நகரங்கள் அல்லது கிராமங்கள் இரு பிரதான வாயில்களைக் கொண்டு விளங்கின. நந்தியாவர்த்த போன்ற வகை நகரங்கள் ஆலயத்தை மையமாகக் கொண்டு விளங்கின. வடக்கு - தெற்கு, கிழக்கு-மேற்கு என, மையத்தில் சந்திக்கும் இரு பிரதானவீதிகளுடன், மதில்களும் கொண்டு விளங்கிய வகைகளில் முக்கியமானது 'சுவாஸ்திகா' வகை, இதுவே எல்லாவகை களிலும் பிரபலமானது.
இவைதவிர வேறுவகையான சில வகைகளும் காணப்படுகின்றன. இத்தகைய வகையான நகரங்கள் குறிப்பிட்டதொரு சாதிக்கு மட்டுமேயுரியதாக விளங்கின. உதாரணமாகக் கேட்டா'வைக் (Kheta) வைக் குறிப்பிடலாம். இந்தவகைநகரத்தில் சூத்திரர்கள் மட்டுமே வாழ அனுமதிக்கப்பட்டனர். இந்துக்களின் சாதிவழிச் சமுதாயத்தின் தாழ்ந்த படியில்இருந்த காரணத்தில்குத்திரர்கள்பூரணத்துவமற்ற மனிதர்களாகக் கருதப்பட்டனர். இதனால் இவர்கள் மட்டுமே வாழ உருவாக்கப்பட்ட நகரங்களும்பூரணத்துவமற்றவையாகவே அமைக்கப்பட்டன. எந்தவித
[62][ நல்லூர் ராஜதானி நகர அமைப்பு )

முக்கியமான மையப்பகுதியையும் கொண்டிராத வகையில், முக்கியத் துவம் குறைந்த நிலையில் இத்தகைய நகரங்களின் அமைப்பு காணப் பட்டது. சமுதாயத்தில் முக்கியத்துவமற்றபடியில் வாழ்ந்த சூத்திரர்களின் நிலையை மேற்படி நகரங்களின்நகர அமைப்பு வெளிக்காட்டுகின்றது. இந்துக்களின்நகர் அமைப்புக்கலையில் சமயம், சாதி போன்றவற்றின் பங்களிப்பை பண்டைய இந்துக்களின் கட்டடக் கலை நூல்கள் தரும் தகவல்களும், தற்போதும் வெளிப்படுத்திநிற்கின்றன.
வ.ந.கிரிதரன் [63]

Page 34
நல்லூர் ராஜதானி நல்லூர் நகர அமைப்பு
இதுவரை நல்லூர் ராஜதானிபற்றிய வரலாற்றுத் தகவல்களையும், பண்டைய இந்துக்களின் கட்டடக்கவை, நகர அமைப்பு, பற்றிய தகவல்களையும் பார்த்தோம் ஏற்கனவே இருந்திருக்கத் கிடியநல்லுரர் ராஜதானி பற்றிய தகவல்களை சிற்சில இடங்களில் கோடிட்டுக் கீாட்டியிருந்தேன். இப்பொழுது இவற்றையெல்லாம் மீண்டும் முழு நீாகப் பார்ப்போம்.இந்த நகர் அமைப்பைநான் ஆய்வதற்காக எடுத்துக் கொண்ட மிகமுக்கியமான ஆரம்பப்படியாகப்பின்வருவதைக்கூறலாம். நகரின் சந்தைப்பகுதிEமயத்தில் அமைந்திருந்தது என்பதுதான் அது.
சந்தையும், நகர் மையமும் பிரதான வீதிகளும்.
பொதுவாக சந்தையென்பது பிரதான வீதிகள் சந்திக்கும் இடத்தில் அமைந்திருப்பதுதான் இயற்சிக் சந்தேயின் வெற்றிக்கு இது முக்கியம் பெளத்தர்களின் பழம்பெரும் நகரங்களில் ஒன்றான அநுராதபுரம் தொடக்கம் பண்டையநகரங்கள் பலவற்றில் சந்தையானதுநகரின் இரு
s நல்லூர் ராஜதானி நகர அமைப்பு

-「真• 口劑』
ட்டடம்
டததி ti- -i =
சிதிலம63

Page 35
பிரதான வீதிகள் சந்திக்கும் பகுதிகளில் அமைந்திருந்ததை அறியக் கூடியதாக உள்ளது. இதனால்தான் நல்லூர் ராஜதானியின் மையப் பகுதியாகவும் சந்தையிருந்திருக்கவேண்டும் என்ற முடிவிற்கு வந்தேன். முத்திரைச் சந்தை என்றழைக்கப்படுகின்ற பகுதி இச்சந்தையையே குறிப்பதாகவும் முடிவு செய்தேன். இந்த என் முடிவிற்கு மேலும் வலுவூட்டும் வகையில் இச்சந்தைப் பகுதியை மையமாக வைத்துப் பார்க்கையில்நகரில் காணப்படும் ஒழுங்கு இருக்கின்றது. அடுத்ததாக நல்லூர்ராஜதானியானது இரு பிரதானவீதிகளால் பிரிக்கப்பட்டிருந்தது என்ற முடிவிற்கு வந்தேன். இதற்காதாரமாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்.
ராஜதானிக்கு மேற்கு, வடக்கு வாயில்களிருந்ததை வரலாற்றுநூல் கள், குறிப்புக்கள் புலப்படுத்துகின்றன. மேலும்நகரின்கிழக்குப்புறத்தில் காணப்படும் காணிப்பெயர்களான கோட்டைவாசல், கோட்டையடி என்பவை அப்பகுதியில் கிழக்கு வாசல் இருந்திருக்கலாம் என்பதை உணர்த்தியது. மேற்கு வாசலிற்குப் பாதுகாப்பாக வீரமாகாளியம்மன் கோயிலும், வடக்கு வாசலிற்குப் பாதுகாப்பாக சட்டநாதர் கோயிலும் இருந்ததை வரலாற்றுநூல்கள் குறிப்பிடுவதால்கிழக்கு வாசலிற்குப்பாது காப்பாக வெயிலுகந்த பிள்ளையார் ஆலயம் இருந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தேன். நகரின் நான்கு திக்குகளின் பாதுகாப்பாக நான்கு ஆலயங்களான வீரமாகாளியம்மன் கோயில், சட்டநாதர் கோயில், வெயிலுகந்த பிள்ளையார் கோயில், கைலாசநாதர் கோயில் என்பவற்றை சிங்கைப் பரராசசேகரன் அமைத்திருத்தான் என்பது வரலாற்றாய்வாளரின் முடிவு. இதன்படிநல்லூர் ராஜதானியின் தெற்கு வாசலும் அதற்குப்பாதுகாப்பாக கைலாசநாதர் கோயிலும் இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுற்கு வந்தேன்.இவ்விதமாக முடிவெடுத்தபின்னர் ராஜதானியானதுநான்கு வாசல்களைக் கொண்டிருந்ததனால், நகரானது நான்கு வாயில்களையும் இணைக்கும் வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு என்ற இருபிரதான வீதிகளால் பிரிக்கப் பட்டிருக்க வேண்டுமென்று
(66) நல்லூர் ராஜதானி நகர அமைப்பு

முடிவு செய்தேன். இவ்விதம் நகரமானது இருபெரும் பிரதான வீதிகளால் பிரிக்கப்பட்டிருந்தது என்ற முடிவிற்கு வந்தபின்னர் சந்தையானது இவ்விரு பிரதான வீதிகள் சந்திக்குமிடத்தில் அமைந்தி ருந்தது என்ற முடிவிற்கு வருவது எளிதாயிற்று. நகரமானது நான்கு வாசல்களையும் இரு பிரதான வீதிகளையும், நான்கு வாசல்களிற்குப் பாதுகாப்பாகநான்கு ஆலயங்களையும் கொண்டதாக அமைந்திருந்தது என்ற முடிவிற்கு வந்ததும் மேலும் சில பிரச்சனைகள் தோன்றின. தற்போது காணப்படும் ஆலயங்களெல்லாம் போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்டவை. எவ்விதம் நல்லூர் ராஜதானியின் காலகட்டத்தில் இவையிருந்த இடத்தைக்கண்டுபிடிப்பது? முன்பே குறிப்பிட்டதுபோல் முத்திரைச் சந்தையென அழைக்கப்படும் பகுதியே நகரின் மையத்திலமைந்திருந்த பகுதியென்ற முடிவிற்கு வந்ததும், இப்பகுதியிலிருந்து வெயிலுகந்தபிள்ளையார் கோயிலிற்குரியதுரமும், சட்டநாதர் கோயிலிற்குரியதுரமும் அண்ணளவாகச் சமமாகயிருந்ததை தற்போதைய நகர வரை படங்களிலிருந்து அறிய முடிந்தது. மேலும் வெயிலுகந்த பிள்ளையார் கோயில் கிழக்கிலும், சட்டநாதர் கோயில் வடக்கிலும் அமைந்திருந்ததும் அவதானிக்கப்பட்டது. (ஏனைய கோயில்களைப் பொறுத்தவரையில் முன்பே வெளிக்கள ஆய்வுப் பகுதியில் குறிப்பிட்டவாறு அமைந்திருந்ததும் அவதானிக்கப்பட்டது.)
இவற்றிலிருந்தும் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன. 1. சட்டநாதர் ஆலயத்தினதும், வெயிலுகந்த பிள்ளையார் ஆலயத்தினதும் தூரங்கள் அண்ணளவாகச் சமமாகயிருப்ப தனால்இவை அவையிருந்த பழையவிடங்களில் அல்லது அவற் றிற்கண்மையில் மீண்டும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். 2. நல்லூர்க் கந்தசுவாமி கோயில் மீண்டும் குருக்கள் உளவில் அமைக்கப்பட்டதால் இதனை மையமாக வைத்து ஏனைய கோயில்களான வீரமாகாளியம்மன் கோயிலும், கைலாசநாதர் கோயிலும் அமைக்கப்பட்டன போலும். ராஜதானியின் நகர
( வநசிரிதரன் DG67)

Page 36
அமைப்பின் வடிவம்: மேலும் சட்டநாதர் ஆலயத்தினதும், வெயிலுகந்த பிள்ளையார் ஆலயத்தினதும் தூரம் சமமாக விருப்பதாலும் (முத்திரைச்சந்தை பகுதியிலிருந்து) முத்திரைச் சந்தை அமைந்திருந்த பகுதி ராஜதானியின் மையப்பகுதியாக இருந்தததினாலும் நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பின் வடிவம் சதுரம் அல்லது வட்ட அமைப்பாக இருந்திருக்கலாம். இந்துக்களின்பண்டைய கட்டடக்கலை மற்றும் அமைப்புபற்றிய தகவல்களிலிருந்து சதுர வடிவையே இந்துக்கள் பாவித்தாலும், தமிழ் அரசர்கள் இந்துக்களானதாலும் நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பின் வடிவம் சதுர வடிவமென முடிவு செய்யப்பட்டது. பண்டையஇந்துக்களின்கட்டடக்கலைநுல்கள் கூறும் தகவல்களின் படி நகரமானது சாதிவாரியாகப் பிரிக்கப்பட்டே அமைக்கப்பட்ட தென்பதை அறியமுடிகின்றது. தற்போதைய நல்லூரில் காணப்படும் காணிப்பெயர்களும் பழமையின் சின்னங்களும் இதனையே வலியுறுத்துவதால் நல்லூர் ராஜதானியும் இவ்விதமே சாதிவாரியாகப் பிரிக்கப்பட்டே அமைக்கப்பட்டு விளங்கியது என்பது கண்டுகொள்ளப்பட்டது. (உண்மையில் சாதிவாரியாக என்பதிலும் பார்க்கத் தொழில் ரீதியாக என்பதே பொருத்தம் கூடியதாக படுகின்றது.) இந்துக்களின் பண்டைய கட்டடக்கலை நூல்கள் கூறும் தகவல்களின்படி பிராமணர்கள், சோதிடர்கள் போன்றோர்க்குரிய பகுதி வடக்கும், வடமேற்கும் என்பதும், அரசர்க்குரிய பகுதி கிழக்கும் என்பதும் அறியப்படுகின்றது. ஆனால் நல்லூரில் நடத்திய வெளிக்கள ஆய்வுதரும் தகவல்களின் படி வடமேற்குப் பகுதியிலேயே அந்தணர் (குருக்கள் வளவு) அரசவைக் கவிஞர் (அரசகேசரி) ஆகியோரிற்குரிய பகுதிகள் இப்பகுதியிலேயே இருந்ததும் (பண்டாரக்குளம், தோப்பு, சங்கிலியன் வீதி போன்றன) அவதானிக்கப்பட்டது. இதற்குக் காரணம்
(68) நல்லூர் ராஜதானி நகர அமைப்பு )

வடகிழக்குப் பகுதியில் பிரதானநல்லூர் கந்தன் ஆலயமும் (தற்போது சேர்ச் காணப்படும் பகுதி) அதற்குரிய தீர்த்தக் கேணியும் அமைக்கப் பட்டதாகவிருக்கலாம். மேலும் நல்லூர் முருகன் ஆலயம் மிகப் பெரிய ஆலயமாக மதில்களுடன் கூடி விளங்கியதைப் போர்த்துக்கேயரின் குறிப்புகள் கூறுவதால், அவ்வாலயத்துக்குரிய பகுதி பெரிய நிலப் பரப்பைக் கொண்டதாக விளங்கியிருக்க வேண்டும்.இதனால் சிரமமாக இருந்திருக்க கூடும். இதனால் தான் போலும் வடமேற்குப் பகுதியில் பெரும்பான்மையான அரசர்க்குரிய பகுதிகள் அமைக்கப்பட்டன. இருந் தாலும் வடகிழக்குப்பகுதியிலும் ஒரு சில அரசர்க்குரிய பகுதிகள் இருந் திருக்கலாம். இப்பகுதியில் காணப்படும் 'பாண்டிய மாளிகை வளவு" இதனை உறுதிப்படுத்தும்.
பொற்கொல்லர் போன்ற தொழிலைச் செய்பவர்கள் வாழும் பகுதி தென்கிழக்குப் பகுதியில் இருக்க வேண்டுமென்பது பண்டைய இந்துக்களின் கட்டடக்கலை நூல்கள் தரும் கருத்து. இதனை உறுதி செய்வதுபோல் நல்லூரின் தென்கிழக்குப் பகுதியில் காணப்படும் சாயக்காரத் தெரு. போன்ற தொழிலாளர்க்குரிய பகுதிகள் விளங்கு கின்றன. இவ்விதமே போர்வீரர்கள் அரண்மணை ஊழியர்கள் போன் றோர் தென்மேற்குப் பகுதியில் வாழ்ந்திருக்க வேண்டுமென்பதை வெளிக்கள ஆய்வுத் தகவல்களும், இந்துக்களின் கட்டடக்கலை நூல்களும் உணர்த்தி நிற்கின்றன. சந்தையைப் பொறுத்த வரையில் வடகிழக்குப் பகுதியிலேயே அமையவேண்டுமன இந்துக்களின் கட்டடக்கலை நூல்கள் கூறுவதால் நல்லூர் ராஜதானியிலுமி, ராஜ தானியைச் சுற்றிவர மதிலின் உட்புறமாகப் பாதையொன்று அமைந்திருக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது.
நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு எவ்விதம் அமைந்திருந்த தென்பது பற்றி இதுவரை பார்த்தோம். பண்டைய இந்துக்களின் நகர அமைப்பைப் பார்க்கையில் சில ஆலயநகர்களாகவும், சில ராஜதானி களாகவும் அமைக்கப்பட்டிருந்ததை அறிய முடிகின்றது. நல்லூர் ராஜதானியைப் பொறுத்தவரையில் ஆலயநகரமாகவும் அதே சமயம் ராஜதானியாகவும் அமைக்கப்பட்டிருந்ததைநமது ஆய்வு புலப்படுத்து
வ.ந.கிரிதரன் DG69)

Page 37
இன்னுமொன்று.
 

(2 3E airleaf அளவில்
பெரையப்பட வில்லை)
5, ykt IIHi
GINTI நன்ரேக்க ĐHI #43 6
It is
J 1, JY ITt|Tt, ஃ лғаш1 _fuJNL ki sl.
- Arts
Crb
கின்றது. இதுவே நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு வேறு நகரங்களின் நகர அமைப்பிலிருந்து வேறுபட்டுநிற்பதற்குக் காரணம்,
அதன் சிறப்பான அம்சமும் கூட
நல்லூர் ராஜதானி
f
வெயிலுகந்தபிள்ளையார் ஆல்பம் நல்லுரர்க் கந்தன் ஆலயம் கைலாசநாதர் ஆலயம்
சட்டதாதர் ஆலயம் வீரமாகாளியம்மன் ஆலயம் முத்திரைச் சந்தை அருகிலுள்ள பிரதான சந்தி
வ.ந.கிரிதரன்
) (71)

Page 38
உசாத்துணை நூல்கள்
யாழ்ப்பாண வைபவமாலை - குலசபாநாதன் பதிப்பித்தது யாழ்ப்பாணச்சரித்திரம் - முதலியார் செ. ராசநாயகம். யாழ்ப்பாண சரித்திரம் - ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை ஈழத்துதமிழ் இலக்கிய வளர்ச்சி-கலாநிதிக.செ.நடராசா தமிழ் மனையடி சாஸ்திரம் - பி.எஸ். ஆச்சார்யா தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை Conquest of Ceylon - Oueroz F Vol 184 Tamils and Ceylon - C.S. Navaratnam The kingdom of Jaffna - S. Pathmanathan Urban and Regional Planning - Rame Gowda Urban Geography - Prof. Jeyasingam Early Christianity in Ceylon - Fr. Rev. Peiris, Fr. Meersman. Living Architecture: Indian - Andreas Volwahsen Monumental Art and Architecture of India - K. Sundaran. The arts and crafts of India and Ceylon - Ananda Coomarasamy
கட்டுரைகள்
யாழ்ப்பாணஇராச்சியம் - கலாநிதி சி.க.சிற்றம்பலம் (ஈழமுரசு
கனடா 25.2.94, 11394) வையாபாடல் - கலாநிதிக.செநடராசா (தமிழோசை கனடா
15.12.93) யாழ்ப்பாணத்து பெரிய கோயில் - க.குணராசா (வீரகேசரி158.93) யாழ்ப்பாணம் என்ற பெயர் தோன்றியது எவ்வாறு? ம.க.
அ.அந்தனிசில் (வீரகேசரி 9.12.90) யாழ்ப்பாணம் என்ற பெயரின் காரணங்கள் பற்றிய கருத்தாய்வு -
கலாநிதி க.செ.நடராசா (தமிழோசை 11.1193) ஈழமும் இந்து மதமும் - பொலநறுவைக் காலம் - கலாநிதி
சி.க.சிற்றம்பலம் (சிந்தனை ஆடி 84) The Kings of Jaffna during portuguese period - 56 it (5
ஞானப்பிரகாசர் நிலஅளவைத்திணைக்களவரைபடங்கள் Jaffna Town Planning assessment surveys. Sheet no.: A2/45/4W, A2/45/3E
Gre) நல்லூர் ராஜதானி நகர அமைப்பு )


Page 39
நுட்பம், பொதிகை, புரட்சிப்பாதை, போன்ற பத்திரிகைகள் சஞ்சிகைகளி 'கணங்களும் குணங்களும்'அமெரி அருச்சுனனின் தேடலும் அகலிசை நாவல்கள் தாயகம்" இதழிலும் " பாதை"யிலும் வெளிவந்தன. நல்து பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் தாய வெளிவந்தன. "அண்டவெளி ஆய் விஞ்ஞானக் கட்டுரைகளை வீரே இவரது 'மண்ணின் குரல்" (கனடாவி அதிமானுடா' (கவிதைத் தொகு வந்துள்ளன.தற்போது கனடாவில் வி
GİDE
 

வ.ந.கிரிதரன்
கட்டடக்கலை இலத் திரனியற் பொறியியற் தொழில் நுட்பத் துறை களில் பட்டதாரி. இவ ரின் சிறுகதைகள்,நாவல் கள், கட்டுரைகள், கவி தைகள், சிறுவர்க்குரிய ஆக்கங்கள் போன்றன ஈழநாடு, வீரகேசரி,தின கரன், சிந்தாமணி, வெற் றிமணி, சிரித்திரன், கண் - மணி, தாயகம், தேடல்,
குரல், சுபமங்களா, கணையாழி
ல் வெளிவந்துள்ளன. க்கா', 'வன்னிமண், நவசிதா, யின் காதலும் '1983" ஆகிய மண்ணின் குரல்" "புரட்சிப் லூர் ராஜதானி நகர அமைப்பு' கம், ஈழநாடு போன்றவற்றில் வு சார்பியல் தத்துவம்" பற்றிய கசரி பிரசுரித்தது. ஏற்கனவே பின் முதற் தமிழ்நாவல்) எழுக ப்பு) ஆகிய நூல்கள் வெளி
சிக்கிறார்.
föll