கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உணர்வுப் பூக்கள்

Page 1


Page 2

மணிமேகலைப் பிரசுரம் தபால் பெட்டி எண் : 1447, 7 (ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017, தொலைபேசி : 24342926, 24348082 LÉleist Joyé55F6) : manimekalai1Qdataone.in @64) &40TuLu ge:Turb : www.ta milwaman.com

Page 3
நூல் தலைப்பு இ உணர்வுப் பூக்கள் ஆக்கியோர் இ வேதா-இலங்காதிலகம்
மொழி இ தமிழ்
பதிப்பு ஆண்டு 3 2007
பதிப்பு விவரம் இ முதற் பதிப்பு தாளின் தன்மை 3 13.6 கி.கி.
நூலின் அளவு இ கிரெளன் சைஸ்
(12% x 18% Qs.6.)
அச்சு எழுத்து அளவு 13 1 புள்ளி
மொத்த பக்கங்கள் 3 188 அட்டைப்பட ஓவியம் 3 ஹரி பாபு
லேசர் வடிவமைப்பு 3 கிறிஸ்ட் கம்ப்யூட்டர்ஸ்
(C) 23725639
அச்சிட்டோர் 3 ஸ்கிரிப்ட் ஆஃப்ஸெட்
சென்னை - 94.
நூல் கட்டுமானம் 3 தையல்
வெளியிட்டோர் 3 மணிமேகலைப் பிரசுரம்
சென்னை - 17.
நூலின் விலை : ரூ. 55,00
 
 
 

2,á6om. பக்திப் பூக்கள்
1. பிள்ளையாரப்பா 2. யாசிக்கிறோம்
பெற்றோர் பாசப்பூக்கள்
3. T64- 606 .................................................................. 4. 9th Lost 5. அனுராகமான பல்லவி. 6. முதலெழுத்தானவர். 7. அற்றைப் பிறைநிலவு. 8. சுற்றுலாப்பிரியன் 9. இதயத்தில் கொலு
10. என்னாசை அப்பா
மழலைப் பூக்கள்
11. தெய்வீகத் தளிர். ............ 12. மனிதநேயக் கிரீடம் அணியுங்கள்.
மழலைப் பாடல் பூக்கள்
13. தமிழ் விளையாட்டுகள் (குழந்தை கவிதை). 14. மழையே! மழையே! (குழந்தை கவிதை . 15. பாப்பாவுக்கு (குழந்தை கவிதை).
இயற்கைப் பூக்கள்
16. வியத்தகு நயகரா நர்த்தனம். 17. நிதர்சனமான தேசப்படம். 18. காலி - மாத்தறைக் கடலலை.
19. விஷமா - விசும்பின் நீலமா!.
25
26
27
29
30
J2
S3
34
35
37
38
40
44
45
46
48
49
51

Page 4
4
20.
21.
22.
23.
24.
வானவில் கற்பனைத் தூரிகை வண்ணம். வாரி உருட்டும் பனிமனிதன். சங்கமம். நாற்சார வீட்டில் மாட்டியது.
கதம்பப் பூக்கள் (கதம்ப உணர்வுப் பூக்கள்)
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34. 35.
36.
37.
38.
39.
40.
4.
42.
43.
44.
45.
46.
47.
நூலுறவு சாம்பலில் உதித்த அறிவு. தமிழே எங்கள் உயிர். நதியினுள் வீழ் இறகல்ல. கிறிஸ்துமஸ் 2001 சிநேகித யுத்தம் இதனால் அது. மனிதநிலை மாற்றம். அச்சம் தவிர். அகவிருள் நீக்கு. அன்புள்ள சிநேகிதியே வாழ்க!. மேற்கு நாடுகளில் மன்னராலும் கரையிட முடியாத . பாரதி மீசையை முறுக்கினான். பூவரசுக்கு வாழ்த்து. தரம் கல்யாணத்தை எழுது .
மொசப்பத்தேமியா நாகரிக உயர்வு.
ஆராதனைத் தாமரை. நெஞ்சம் மறக்குமா . மறுமலர்ச்சி எதிர்பார்ப்பு திருமண வாழ்த்துச் செண்டு .
வா.வா.தை
52
53
55
57
59
60
61
63
65
66
68
69
70
72
73
75
77
79
80
81
82
83
85
87
89
90
92
94
 

பெண்மைப் பூக்கள்
48. மைவிழிப் பெண்கள் மாறுவரோ?. 49. அதுபாரும். அந்தக்காலம் . 50. புதுப்புது அர்த்தங்கள். V 51. அறிந்து கூறினான் பாரதி அன்று. 52. எப்படிச் சொல்ல
53. மலரோடு திலகம் ........................................................................... 0تاق فا-اق .54 55. செண்பக மலர் மாது. 56. விஞ்சும் பாரதிப் பெண்ணாக.
விண்ணேகியோருக்கு.
57. நூற்றி மூன்று வயதுடைய பெருமாட்டி. 58. அமைதி உன்னை. 59. தகைசார் முல்லையூரான் . 60. அவன் வித்தகன். 61. கலைச் செல்வன் அஞ்சலி . 62. கதிர்மகள் ரேலங்கி . 63. அஞ்சலி. 64. தமிழ்க் கவிதை வாரிதி - பாரதி. 65. சிவாஜி கணேசன்
பொது
66. சன்னதமாடிய சாகரமே . 67. பூப்புவிழா வாழ்த்து. 68. வாலிபம் முன்னேறட்டும் . 69. உறவுகள், அதன் குணங்கள்.
96
97 98
99
1OO
101
102
103
104.
105
107
109
111
114
115
117
119
121
123
125
127
132

Page 5
கவிதைப் பூக்கள் - க. இலங்காதிலகம்
1. எந்தன் மனம். 134 2. மலையில் பிறந்த ஆரணங்கே . 35 3. வழி - விழி 136 4. பூவையே! 137 5. என்றும் இளமைக்காதல் . 138 6. டென்மார்க் தனிமை . 139 7. இதயம் தேடுது உனை. 40 8. இடைவெளி சிறிதே. 141 9. தாகம் 143 10. இயக்கம் 144
11. (Ա) (Ծ&m. 145 12. எதை எதையோ தேடுகிறேன். 146 3. எங்கள் ஊர் பூவரசு . 147 14. அடுத்தது என்ன 148 15. போதை 149 16. அம்மா நீ அங்கு சுகமா?. 151 17. நம்பிக்கை நாற்றுகள். 153 18. அன்னியக் காற்று 155 19. வானம் . 157
20 கனவு 159 21. ஆணாதிக்கம் 160 22. என் அப்பா 61
23. பிணம் 162

24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
பிணப்பெட்டி
பிணக்குழி வாழ்வுக்காய் வதைபடுகிறோம்,
வதைபடுதலில் வாழ்கிறோம்.
சிறுமியின் கனவு மல்லிகை மாலையில் அலரிப்பூ . யாழ்ப்பாணம்
இரவல் தத்தம் இரவல் கொள்ளி.
தத்துவமும் தவமும் . இத்தனை முகங்களா?.
பொய்த்து விட்டது. வஞ்சகனால் எரிந்தது நூலகம். இதயமுள்ள இயற்கையே. கோடைக்காலம் . நான் பார்த்த ஈழம் நலமில்லை. o(9... o 09.
B60)
எனக்குள்ளும் வந்தது வசந்தம் . நாசவேலை
அறிவின் கீழ்நிலையா?. நான் யோசிக்கிறேன்.
163
164
165
166
168
169
171
172
173
174
175
176
178
179
181
182
183
184
185
186

Page 6
அன்பார்ந்தவர்களே!
அன்புள்ள வணக்கம், முதற்சங்கம் முதல் என் எழுதுகோல் வரை முகிழ் விரிக்கும் கவிதை - மனிதக் கருத்து விதை, எழுதுகோவின் கூர் முனை வடிகால் கசிவால் விழுகின்ற இதயத்து உணர்வுப் பூக்கள், கருத்தினில் பதிவதும், கண்களில் தெரிவதும் கற்பனையில் புரள்வதும் கரத்தினால் சிந்திடும். சிரிப்பு அலையாய், சிங்கார வரியாய் சிந்தனை நதியாகி சீரிய கருத்தாகும். இதயவலிகள், இழையும் ரணங்கள், உதய குதூகலம், உன்னத இயற்கை உதைக்கும் ஏமாற்றம், புதிய சிந்தனைகள் புகலிட தஞ்சமாக எழுத்தாகும் ஏட்டிலே, சன்னமாய் ஊடுருவி சலனம் உருவாக்கும் சஞ்சலமும் தரும் இதய சீற்றமுளைகள், சமூக சீர்திருத்தமும் சமைக்கும் கவிதை
மானுடத் தேவைக்கு பகுத்தறிவு தந்த, மகத்துவ மதுகை வரிகள் பாக்கள். கட்டுப்பாடற்ற கவிதைச் சிறகுகள் எட்டிட இல்லை ஏதொரு தடைகள். தவறுகளைத் தகர்த்திட தட்டிக் கேட்கும் தடுமாறாத் தகவுடை தர்ம வரிகள். உள்ளத்தில் மந்த மாருதம் வீசிடும் உன்னத சுந்தர சந்தக் கவிதைகள் உவக்கும் சந்தனத் தென்றல் வரிகள் a uol (f i EF GLJ GITT LI உருவாக்கும் கவிதைகள்.
 
 

9
இப்படியாக உணர்வுப் பூக்கள் கூடை கூடையாக இருந்தும் இங்கு இணைவது சுமார் 69 கவிப்பூக்களே.
2003-ல் வேதாவின் கவிதைகள் - கவிதைகள் 102
2004-i) குழந்தைகள் இனையோர் சிறக்க (மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் ஆகவும்
இது உணர்வுப்பூக்கள் மூன்றாவது நூலாக வருகிறது. உணர்வுப் பூக்களில் பின்பாதியில் என் கணவர் எழுதிய சுமார் 43 கவிதைகள் இணைகின்றது. இது சிறப்புரை - அனிந்துரை எழுதிய ஆசிரியர்களுக்கே தெரியாத விடயம். எம் எண்ண வரிகள் சிறிதளவாவது சிலரை மேம்படுத்துமானால் அது எமக்கு மகிழ்வு தரும். நாம் மகிழும் தமிழால் நீங்களும் மகிழ்வடையுங்கள். தமிழுடன் தரமாக வாழுவோம்.
சகோதரர்கள் இந்து மகேஷ், ஏ.ஜே. ஞானேந்திரன் ஆகியோருக்கும், மணிமேகலைப் பிரசுரத்தினருக்கும் மனமார்ந்த நன்றி. இவர்கள் தமிழ்ப்பணி மேலும் தொடரட்டும். Poovarasampoo.blogspot.com Gä FCG ITS IT si sögu LDG als Gú4 5 LÓly வண்ணமும் பூ02tamil.comல் சகோதரர் ஏ.ஜே.ஜியின் தமிழ் மனமும் சுவைக்கலாம். சரி அன்பர்களே இந்நூல் பற்றிய உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. வாருங்கள் உள்ளே போவோம்,
இஃது அன்புள்ளவள் வேதா. இலங்காதிலகம் Tif(0.045) 8606198 Lindholmvej 13-2TV 82O). AARH US.N Danmark Wetha (stofanet.dk.

Page 7
10
அறிமுகப் பன்னிர்த் தெளிப்பு
திருக இலங்காதிலகம்
எனது வாழ்க்கைத் துணைவர் திரு.க. இலங்காதிலகம். இவரின் பெற்றோர் அப்பாக்குட்டி, கந்தையா, கனகரட்னம் தந்தையாராவார், நாயன்மார் கட்டைச் சேர்ந்தவர். கழுத்துறை நியூசெட்டல் நாபெடை (Neuchatel - Neboda)யில் தேயிலை !றப்பர் தோட்டத்து பிரதம லிகிதர் ஆக தொழில் புரிந்து காலமானவர். தாயார் மேரி - கனடாவில் குடியேறி காலமானார்.
என் கணவர் சிறு வயதில் கழுத்துறையிலும், பின்னர் கொழும்பு சாகிரா கல்லூரியிலும், கோவை கிறிஸ்தவக் கல்லூரியிலும் படித்தார். கொழும்பில் இறுதியாகப் படித்த போது இவரது இருபதுகளில் அதே தேயிலை றப்பர் தோட்டத்தில் வேலை பழகுனராக தந்தையார் இவரைச் சேர்த்துவிட்டார்.
 

அதே காலத்தில் தந்தையாரின் சடுதியான இறப்பு நேர்ந்தபோது, தோட்ட நிர்வாகம் இவர் பழகிய வேலையையே நிரந்தரமாக்கினார்கள். சுமார் 23 வருடங்கள் அங்கே வேலை செய்து பதவி உயர்வுகள் பெற்றார்.
திருமணமாகி நானும் 17 வருடங்கள் கழுத்துறை மாவட்டத்துப் பசுமைத் தோட்டத்தில் வாழ்ந்தோம். இரண்டு பிள்ளைகளும் அங்கு பிறந்து வளர்ந்தனர்.
இவர் தனது இருபதுகளில் கவிதை எழுத ஆரம்பித்தார். 1986இல் இவர் டென்மார்க் வந்தபோது சில கவிதைகளைத் தனிமையில் எழுதினார். பின்னர் ரி.ஆர்.ரி. சகோதரர் அமரர் வியூகனின் (கீழ்கரவைப் பொன்னையனின்) "சாளரம்’ நிகழ்ச்சிக்கு நாமிருவரும் சேர்ந்து எழுதினோம். பின்னர் இலண்டன் தமிழ் வானொலிக்கும் சில காலம் எழுதினார் (எழுதினோம்). இவை யாவற்றையும் சேகரித்து சுமார் 43 கவிதைகளை இணைத்துள்ளோம்.
இவரது கவிதை ஆர்வமே என்னுள் கவிதைச் சுடர் ஏற்றியது. என்னைத் தூண்டியது. ஈர்த்தது. ஒருவகையில் என் முதல் குருவே இவர் தான் எனலாம் என் கவிப்பயணத்தில்.
இவரது பழைய கவிதைகள் பலவற்றைத் தொலைத்து விட்டேன். முதன் முதலில் இவர் எழுதிய வரிகளின் முதலிரு அடிகள் மட்டும் ஞாபகம் உண்டு.
தணலாக வேகுதடி தனிமை - என் தங்கமே! துயிலாத கண்ணானேன் எந்நாளும்.

Page 8
12
மிகுதி நினைவில் இல்லை. 60ஆம் ஆண்டில் இதை எழுதியிருந்தார். “சிவம்’ என்ற தனது வீட்டுப் பெயரிலும் எழுதினார். இவரது ஒரு சிறுகதை “காகம்’ சஞ்சிகை (முல்லையூரானின்)யில் வந்து, அது மறுபிரசுரமாக பாரிஸ் ஈழநாடு (திரு. குகநாதனின்) பத்திரிகையிலும் பிரசுரமானது. குழந்தைகள் நாடகம் எழுதி ஒகுஸ் நகர தமிழ் டெனிஸ் நட்புறவுச் சங்கத் தலைவராகவும் இருந்து நாடகத்திலும் நடித்தார் ஒகுஸ் பிள்ளைகளுடன்.
இவர் மிகச் சிறந்த நிர்வாகி, அன்புள்ள கணவர், ஆசையுள்ள தந்தை, மொத்தத்தில் மிகச் சிறந்த மனிதர். இவரைக் கணவராக அடைந்தது நான் செய்த பாக்கியமே. ஆண்டவனுக்கு நன்றி. என் கணவருக்கும் நன்றி. சரி இவரின் கவிதகளையும் வாசித்துப் பாருங்களேன்.
அன்புள்ளவள் வேதா. இலங்காதிலகம் டென்மார்க்

13
அணிந்துரை
ஏ.ஜே. ரூானேந்திரன்
புலம்பெயர் வாழ்வில், தமிழர்கள் முன்னேற்றம், என்னை என்றுமே வியக்க வைப்பதுண்டு. மற்றைய எந்த சமூகத்தினரிடமும் இல்லாத, ஒரு பாரிய வளர்ச்சி, எமது வெளிநாட்டுத் தமிழ்ச் சமுதாயத்திடம் நிறையவே இருப்பது கண்டு, பல உலக நாட்டவர்கள் வியக்கின்றார்கள். எப்படி உங்களால் இது முடிகின்றது என்று மலைக்கின்றார்கள. தமிழ் வானொலிச் சேவைகள், தமிழ்த் தொலைக் காட்சிச் சேவைகள், தமிழ்ப் பத்திரிகைகள், தமிழ் சஞ்சிகைகள், தமிழ் விற்பனை நிலையங்கள், வங்கிகளின் இணைவோடு வட்டிக்குப் பெருந்தொகைப் பணம் கொடுக்கும் நிறுவனங்கள் என்று அப்பப்பா எத்தனை வளர்ச்சி. பல

Page 9
14
நாட்டவர்களுக்குப் பொறாமையை ஏற்படுத்தும் அரிய சாதனை இது என்பதில் சந்தேகமே வேண்டாம். இதேபோல, புலம்பெயர்ந்த பல தமிழ் அன்பர்கள், இலக்கிய உலகிலும் சாதனைகள் செய்து வருவது, மனதிற்குக் குதூகலமளிக்கும் விடயமாக இருந்து வருகின்றது. என்றுமில்லாதவாறு, பெண்ணியம் ஓங்கி நிற்கின்றது. பெண்கள் பெருமளவில் வானொலி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றுகின்றார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு எழுதுகின்றார்கள். மாதாந்த சஞ்சிகைகளுக்கும் தமது ஆக்கங்களை அனுப்பி வருகின்றார்கள். இந்த வரிசையில், பெண்கள் பலர் கவிஞர்களாகி இருப்பது, புலம்பெயர்ந்த மண்ணில் பூவையர் புரட்சியாகி இருக்கின்றது. நாங்கள் ஆண்களுக்கு சளைத்தவர்களல்ல என்று சொல்லும் வகையில், இவர்கள் எழுதுவது, பெருமைக்குரிய விடயமாக இருக்கின்றது.
இந்த வரிசையில், இலண்டன் ரைம்ஸ் வானொலி மூலம் எனக்கு அறிமுகமாகிய சகோதரிதான் திருமதி வேதா இலங்காதிலகம். தொடர்ச்சியாக இவரின் ஆக்கங்களை இலண்டன் ரைம்ஸ் வானொலி வாயிலாகக் கேட்கும்போது, நான் மெளனமாக எனக்குள் வியந்து கொள்வேன். சில சமயங்களில் எழுத்து வடிவிலும் பாராட்டைத் தெரிவிப்பதுண்டு. இருபது வருடங்களாக டென்மார்க் நாட்டில் வளர்ந்து கொண்டு, தன் தாய்மொழி மீது காட்டும் அபிமானம், மெய்சிலிர்க்க வைக்கின்றது. எழுத்து மாத்திரமல்ல, கம்பீரமான இவரது குரலும் என்னை அசத்துவதுண்டு.
ஏற்கனவே இரு புத்தகங்களை வெளியிட்டு விட்டு,
தனது மூன்றாவது நூலுக்கு அணிந்துரை எழுதித் தரும்படி கேட்டபோது, அன்புடன் இசைந்தேன். தமிழை வளர்க்க அயராது பாடுபடும் அன்புச் சகோதரி ஒருத்தியின் நூலுக்கு

15
அணிந்துரை எழுதுவதை, எனக்கொரு பெருமையாகவே கருதுகின்றேன்.
‘குழந்தைகள், இளையோர் சிறக்க.’ என்ற நூலை வெளியிட்ட சகோதரி வேதா, அடுத்து தனது கவிதைத் தொகுப்பு ஒன்றை ‘வேதாவின் கவிதகள்’ என்ற பெயரில் வெளியிட்டார். இப்பொழுது தனது மூன்றாவது முயற்சியாக உணர்வுப் பூக்கள்’ என்ற பெயரில் ஒரு கவிதை நூலை வெளியிடுகின்றார். இதில் 69 கவிதைகள் வரை உள்ளடக்குகின்றேன் என்று குறிப்பிட்டிருந்தார். இவற்றை எனக்கு வாசிக்கும் வாய்ப்பு கிடைக்காவிடினும், இவருடைய கவிதைகள் பலவற்றை ஏற்கனவே வாசித்தவன் என்ற முறையில், இக்கவிதைகளும் தரமானதாக இருக்கும் என்பது எனது திடமான நம்பிக்கை.
இவரது இரண்டாவது நூலில், உணர்வுகள், தத்துவம், ஊர்மணம் என்று பல பிரிவுகளாகப் பிரித்து தொகுத்து எழுதியிருந்த கவிதைகளை வாசித்தபோது, இந்தப் பெண் கவிஞரின் எழுத்து ஆளுமை நன்றாகவே தெரிந்தது. குறிப்பாக ‘விளக்குமாறு’ என்ற தலைப்பில் இவர் எழுதியிருந்த கவிதை அபாரம். இன்று நம்மிடையே மறைந்து விட்ட காம்புச் சத்தகம், வளவு, ஒலை வாருதல், ஈர்க்குச்சி, வீட்டுக்கோடி (இவற்றையெல்லாம் நான் என் வகுப்பு மாணவர்களுக்கு விளக்க, பெரிய அளவில் திணறுவதுண்டு) என்ற தமிழ்ப் பதங்களையெல்லாம் கோர்த்து, அழகான ஒரு கவிதை எழுதியிருக்கின்றார்.
வீட்டை, வளவை பெருக்கும் விளக்குமாறின்
கோட்டை - வீட்டினது கோடி ஒரந்தான்
என்ற வரிகள் கவிதையின் தரத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்கின்றன. மனமுவந்து பாராட்டுகின்றேன்.

Page 10
16
அற்புதமான கவிதை. இதை இந்த நூலின் நட்சத்திரக் கவிதை என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகின்றேன். இதே போல வார்த்தை ஜாலத்தில் ‘விடியலின் சுவடுகள்’ என்ற கவிதை, பல கவிதைகளை ஒரங்கட்டி விடுகின்றது. ‘விளைச்சல் இல்லாத மனங்கள் இன்று’ என்ற கவிதையின் உவமான, உவமேயங்கள் மனதைக் கவருகின்றன. வாசிப்பதை நேசிக்கும் என் அப்பா யோசித்து வாங்கிய நூல்கள்’ என்று அழகாக எழுதிய வரிகளில், அவரது தந்தையே, இத்தனை சொல்வளத்திற்கும் காரணியாகின்றார் என்பதை கவிஞர் வெளிப்படுத்தி இருக்கின்றார். என் தமிழ் அறிவிற்கும், என் அன்புத் தந்தை தந்த அறிவுப் பிச்சைதான்
காரணம.
இவரது முதல் நூலில், ‘அகரவரி அடிகள்’ என்ற தலைப்பில், சிறு மலர்களைக் கோர்த்துக் கட்டிய ஒரு எழிலான சரம் போல, அரிய பல அடிகளை எழுதியிருக்கின்றார். ‘அப்பியாசம் அழகு தரும்’ என்ற அடி, இங்கே முதலிடத்தைப் பெறுகின்றது.
இணையப் பக்கங்களிலும், இவர் கை வரிசைகள் தெரிகின்றன. 'அலைகள்’ என்ற பக்கத்தில் அலை மோதும் இவரது சில கவிதைகளையும், ‘வார்ப்பு’ என்ற இணையப் பக்கத்தில், இவர் வார்ப்பில் வந்த வதந்தி போன்ற கவிதைகளையும் வாசித்தபோது, தமிழ் மகளுக்கு ஒரு இணைபிரியாத் தோழி இருக்கிறாள். இப்படியானவர்கள் இருக்கும்வரை இனிய தமிழ் இனி இறவாது என்ற மனத் தெம்பும் எனக்குள் வந்தது.
ஏழை தாசனின் சஞ்சிகையிலும், இவர் பற்றிய முழுவிபரத்தையும் வாசித்தபோது, 30 வருட கால எழுத்து

17
அனுபவத்தின் முதிர்ச்சி தான் எழுத்தில் தெரிகின்றது என்று மனதுள் எண்ணிக் கொண்டேன்.
என் அணிந்துரையை முடிக்கு முன்பாக, நீங்கள் எழுதிய இரு வரிகளை இங்கே தருகின்றேன்.
ஏறும்வரை தடவுவார் ஏறிவிட்டால் உதறுவார்
உலகத்தை நன்றாகப் படித்திருக்கின்றீர்கள். நான் தொடர்ச்சியான என் இரு வரிகளைக் கீழே தருகின்றேன்.
ஏற்றிவிட்ட ஏணிதனை மறந்திடாதே ஏமாற்றாதே என்றும் ஏமாறாதே.
வாயார வாழ்த்துகின்றேன். வளர்க உங்கள் இலக்கியத் தாகம்.
பிரியமுடன், ஏ.ஜே. ஞானேந்திரன்,
பாசல், சுவிஸ் Am Stausee 23 4127 Birsfelden (BL)
28.707

Page 11
18
சிறப்புரை
இந்து மகேஷ்
ஏற்றதை இணைத்து எளிய சாரமாய் வார்த்தையால் வளைக்கும் வண்ண ஆரம் உள்ளுணர்வுச் சொல்லோவியம் கவிதை உயிரின் சுகராகம் கவிதை
என்பார் வேதா.
女 உள்ளுணர்வுச் சொல்லோவியத்தை அழகுற வடிவமைத்துத் தரும் கவித்துவத்தில் அவர் தேர்ந்துவிட்டார் என்பதற்குச் சாட்சிகளாய் அவரது கவிதைகள் மிளிர்கின்றன.
புலம்பெயர் மண்ணில் இயந்திரத்தனமான வாழ்வுச் சூழலுக்குள் வலைப்பட்டுப் போனபிறகு வாழ்வை அனுபவிக்க மாட்டாமல் வாலறுந்த பட்டங்களாய் எங்கெங்கோ வழிமாறித் தொலைந்துவிட்ட நமது சமுதாயத்தை ஒன்றிணைக்கவும், ஒரு சில பொழுதுகளேனும் வாழ்க்கையை வாழ்க்கையாக இரசித்து மகிழவும் வழிசமைத்துத் தருவதற்கு எமக்குத் துணை புரிபவை கலை இலக்கியங்கள்தாம்.
see e o see அழுக்கு மனதை உழுது புழுக்கள் அனைத்தும் அழித்து புதிய உறவு தெளித்து பதியமிட்டு வளர்த்து சமுதாய மலர்வு எனும்

19
அமுதான மலர் முகிழும் உணர்வின் ஓங்காரச் சுடர்முனை
- பேனாவின் முனைபற்றி வேதா சொல்வார் இப்படி
இந்த வரிகளிலேயே அவரது பேனா என்ன சொல்ல விழைகிறது என்பதை உணர்த்திச் செல்கிறார் அவர்.
எழுதுகோல் ஏந்துபவர் எவராயினும் உள்நோக்கம் நன்நோக்கமாக உலகின்பால் அக்கறை கொண்டதாக அமைந்துவிடுமாயின் அதுவே அவர்தம் பேனாமுனைக்குச் சிறப்பினைச் சேர்க்கும். இந்த வகையில் வேதாவின் கவிதைகள் அவரது மனப்பாங்கை ஆங்காங்கே வெளிப்படுத்தி நிற்பதை இலகுவாக நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
女 பூவரசு இனிய தமிழ் ஏட்டுக்கு அவர் வரைந்தனுப்பிய கவிதைகளிலிருந்துதான் அவரது கவிதா உணர்வு குறித்த அறிமுகம் எனக்குக் கிடைத்தது.
நமது நாளாந்த வாழ்வின் அவலங்களுக்கிடையே கவிதையுலகமும் சிக்கிக் கொண்டிருக்கும் போது அங்கு பிறப்பெடுக்கும் கவிதைகளில் பெரும்பாலானவை சோகராகம் இசைப்பதென்பதும் தவிர்க்க முடியாததே.
இருப்பினும் இந்தத் துயரங்களுக்குள்ளேயே புதைந்து போய் நம்மை நாம் அழித்துக் கொள்ளாமல் சற்று நிமிர்ந்து நம்மை நாம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வாழ்வின் அர்த்தம் தேடும் முயற்சிகளில் நாம் நமது கவனத்தை திருப்பியாக வேண்டும். இத்தகையதொரு முயற்சியாகவே வேதாவின் கவிதைகளை நான் பார்க்கிறேன்.
இயற்கையை இயற்கையாய் ஏற்றுக் கொள்ளவும்.
அவற்றால் ஆனந்திக்கவும், அமைதிபெறவும் கவிமணம் படைத்தவர்களால் இயலும் என்பதை வேதாவின் பல

Page 12
20
கவிதைகள் சுட்டுகின்றன. தான் காண்பவற்றை, தன்னைக் கவர்ந்தவற்றை, தான் சந்தித்த மனிதர்களை என்று அவர் பேனா பல கோணங்களில் உலாவருகிறது.
கவியரசு கண்ணதாசன் முதல் நம்மூர்க் கவிஞன் முல்லையூரான்வரை அவர் மதிக்கும் கவிஞர்களுக்கும் கலைஞர்களுக்கும் தனது இதயத்தில் இடம் தந்திருப்பது போல தன் கவிதைகளிலும் அவர்களுக்கு நிரந்தர இடமளித்திருக்கிறார். A. கதிரவனின் ஒளிபட்டு மின்னும் காலைப்பணித் துளியிலிருந்து, நள்ளிரவில் எங்கோ தொலைவில் எவர் வீட்டிலோ குரலெடுத்து அழுகிற குழந்தையின் அழுகைச் சத்தம் ஈறாக ஒவ்வொரு தருணத் துளிகளும் இயற்கையின் கவிதைகளே.
அதனை இரசித்து மகிழ்வதும், இரங்கித் தவிப்பதும் என்று எவ்வித உணர்வையும் மெளனமாய் தன்னுள் புதைத்துக் கொள்ளாமல், வார்த்தைகளாய் வடித்தெடுத்து, அதனைக் கவிதையாக்கி மற்றவர் பார்வைக்குத் தருவதென்பது கவிமணம் கொண்டவர்களால் மட்டுமே முடியுமான காரியம் என்பதை வேதாவின் கவிதைகள் உறுதி செய்கின்றன.
女 எந்த ஒரு படைப்பாளிக்கும் தேடல் என்பது உள்ளவரைதான் அவரது படைப்புகள் உயிர்ப்புடையதாக இருக்கும்.
கவிஞர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தேடல் அதிகப்பட அதிகப்பட இன்னும் இன்னும் சிறந்தவை இந்த உலகத்துக்குக் கிடைக்கும்.
புலம்பெயர் படைப்புச் சூழலில் தேடல்மிகுந்த ஒரு பெண் கவிஞராகத் தன்னை வெளிப்படுத்தியிருக்கும் சகோதரி வேதா இலங்காதிலகம் தொடர்ந்தும் கவிதைகளைப் படைப்பது மகிழ்வளிக்கிறது.

21
.என் வேரடி மண் சமூக விழிப்புக் கொண்டதால் இப்பெண்ணிலும் அதுவுண்டு! - எனும் வேதாவுக்கு நமது சமூகத் தேவைபற்றிய புரிந்துணர்வு நிறையவே இருக்கிறது. அதன் மூலம் அவர் பெறும் அனுபவங்கள் மேன்மேலும் பல தரமான படைப்புகளை அவர் உருவாக்க வேண்டும் என்கின்ற உத்வேத்தை அவருக்கு அளிக்கும்.
தன்னுடைய இலக்கிய ஆர்வத்துக்கு தன்னுடைய இளம்பருவத்துக் குடும்பச் சூழலை - அப்பா, தாத்தா என்று - அவர் அடித்தளமாகக் காட்டி நின்ற போதும் இயல்பாகவே இவருக்குள்ள கவித்துவமும், ஆர்வமுமே உந்து சக்திகளாக இவரைச் செயல்பட வைக்கின்றன என்றே எனக்குத் தோன்றுகின்றது.
女 முன்னைய படைப்பாளிகளின் காலம், சூழல் வேறு. நமது காலம், சூழல் வேறு. இப்போது நாம் காணும் அனுபவங்களைப் பெருமளவில் அவர்கள் சந்தித்து இருக்கவில்லை என்பது உண்மை. சொந்த மண்ணைப் பிரிந்து, உற்றம் சுற்றம், உறவுகளைத் தொலைத்து, வந்து சேர்ந்த மண்ணில் நமது வாழ்வை மறுபடியும் கட்டியெழுப்புவதில் நாம் பட்ட / படுகிற துயரங்களெல்லாம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. என்றாலும் நமது வாழ்க்கைப் பாதையை நாம் செப்பனிடுவதன் மூலம் எமக்கென்றுள்ள பண்பாடு பாரம்பரியம் இவற்றைக் கட்டிக்காத்து நிற்கிறோம் என்பதில் நாம் பெருமை கொள்ள நிறையவே உண்டு. இவற்றில் எமது படைப்புகளுக்கும் பெரும்பங்குண்டு.
தானுண்டு தன்பாடுண்டு என்று எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்துவிட்டு வாழ்பவனும் என்றோ ஒரு நாள் இந்தச் சமுதாய நீரோட்டத்தில் கலந்துதான் ஆக வேண்டும். அதற்கென்றொரு காலம் கனியாமல் போவதில்லை.

Page 13
22
இதோ நமது தலைமுறைக்கு அடுத்து வந்த நமது புதிய சந்ததி நமது கருத்துகளுக்காக, வழிகாட்டுதலுக்காகக் காத்து நிற்கிறது.
எண்ணற்ற அனுபவங்களைக் கடந்து நாம் வந்துவிட்டாலும் இன்னும் எண்ணற்ற அனுபவங்கள் நம்மைக் கடந்து செல்லக் காத்திருக்கின்றன. இந்த அனுபவப் பகிர்வுகளைக் கவிதையாக்கும் ஆற்றல் பெற்ற வேதாவின் பேனா இன்னும் பல உணர்வுப்பூக்களைத் தமிழன்னைக்குத் தரட்டும்.
வாழ்த்துவோம். வரவேற்போம்!
அன்பன் இந்துமகேஷ் ஆசிரியர்
பூவரசு இனியதமிழ் ஏடு ஜெர்மனி

நன்றி
என் தமிழ்ப் பயணத்தில் களமாக, துணையாக இருந்தவர்களுக்கு மனமார்ந்த நன்றி. O TRT தமிழ் அலை வானொலி
O இலண்டன் தமிழ் வானொலி
O ஜெர்மனிய சஞ்சிகைகள் மண், பூவரசு, கலைவிளக்கு, தமிழ்நாதம்
இந்தியச் சிற்றிதழ்கள் இனிய நந்தவனம், ஏழைதாசன், உறவு, நாளை விடியும்
மலேசிய “செம்பருத்தி”
O இலண்டன் "சுடரொளி'
O பிரான்ஸ், “வெற்றிமணி”
O இணையதளங்கள், பதிவுகள், அலைகள் (டென்மார்க்), வார்ப்பு, அப்பால் தமிழ், ஊடறு வானவில் (GLebrudnfék) Tamil News dk.
தீபம் தொலைக்காட்சி O CEE i தொலைக்காட்சி O TRT தமிழ் ஒளி தொலைக்காட்சி
எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி.
2ேதா. இலத்காதிலகம்
டென்மார்க்

Page 14

25.
அப்பா பிள்ளையாரப்பா! தப்பாது உனை வணங்குவேன். முப்போதும் நெற்றியில் செப்பமாய்க் குட்டுவைத்து.
மோதகப் பிரியனே!
பாதகம் செய்வோரை பக்குவமாய்த் திருத்துவாய் பக்திக்கு உரியவனே! (அப்பர்)
எலியை வாகனமாக்கி
கலி தீர்க்கும் ஐயனே! வலி போக்கும் வள்ளலே வற்றாது அருள் தாரும். (அப்பர்)
6.10.2005 அன்று இலண்டன் தமிழ் வானொலியில் ஜெர்மனிய சிறுமி செல்வி காயத்திரி - சிவநேசன்
இசையமைத்து வானலையில் பாடினார்.
监

Page 15
26
யாசிக்கிறோம்
குமிண்சிரிப்பு உதட்டினுள்ளே குவலயம் காட்டிய கண்ணனே! குற்றமற்ற குழந்தை உருவில் குன்றென மனதில் நிற்பவனே.
யது குலத்துத் திலகமே! யட்சன் கம்சன் மருகனே! யாதவர் குலத்தில் வளர்ந்தோனே!
யாசிக்கிறோம் உன் கருணையை.
நீலவண்ணக் கண்ணா உந்தன் லீலைகள் தருமே புன்னகையை நீயும் எமது புன்னகையை நீடித்து நிலைக்க அருள்வாயே
മരയ്കgർക്
குமிண்)
குமிண்)
குமிண்)
10.9.2005 அன்று இலண்டன் தமிழ் வானொலியில் ஜேர்மனி தாமோ தில்லைநாதன் gold Star குடும்ப இசைக் குழுவுடன் திருமதி. உமா தில்லைநாதன்
List gll gil.
监

வேதா-இனங்காதிகைம் 27
பெற்றோர் umařů
பூக்கள் $
* பாவடி புனைய.
رسکے
ஒரடி பழக்கித் தமிழோடெனைச் சீரடி எடுத்து நேரோடெனைப் பாவடி புனைய வைத்தீர்களப்பா பேரடி எடுக்கச் செய்தீர்களப்பா
குறையைக் கறையாக எண்ணுவதும் மறையை முறையாக ஒதுவதும் நிறைந்த உங்கள் குணமப்பா இறைவன் தந்த வரமப்பா
“முப்பாற் குறளைத் தினமும் தப்பாது செய் மனனம் தோப்பாகும் தமிழ் அமுதம்.” எப்போதும் சொல்வீர்கள் அப்பா.
சத்தியமிகு உங்கள் பாதைகள் தித்திக்கும் வாழ்வு முறைகள் நித்தியம் என் வழிகாட்டிகள் சித்திதரும் என் நிம்மதிகள் 24.9.2004 -இலண்டன் தமிழ் வானொலியில் கலைவாணிஏகானந்தராஜா இசையமைத்துப் பாடினார்.

Page 16
28
മരയ്കgൾക്
வேறு
உறையும் உங்கள் எண்ணங்கள் மறையும் உங்கள் நினைவுகள் குறையாய், கறையாகி இதயத்தை சிறையிட்டு வதைப்பது உண்மையப்பா
உயிர்க்குருவி கூட்டினுள் உலவும் உற்சாகம் இழந்து உங்களை உபத்திரவம் செய்வது கொடுமையப்பா உன்னத மனிதர் நீங்களப்பா
கணமும் உங்களை எண்ணுகிறேன் கனமான இதயமாய் ஆகின்றேன் கடவுளை நிதமும் வேண்டுகிறேன் கருணை பொழியெனக் கேட்கிறேன் மறுபடி குழந்தையான எந்தையே அறுபடையான் திருவடி பந்தமே பெறும்படி அருளினைத் தரும்படியே மறுபடி மறுபடி கேட்கிறேன்.
26.06.2004 - இ.த. வானொலி.

ിബ7-@ബിയയ്ക് 29
9JribLDIT
நான் கனவொன்று கண்டேனே, கனவொன்று கண்டேனே என் முடியாத ஆசை, நீண்டநாள் நினைவம்மா, உன் மடிமீது சாய கனவொன்று கண்டேனம்மா நற்புதையல் கிடைத்ததென நிறைவு கொண்டேனம்மா
E_ങ്ങ് (Difig)
உன்னைப் பிரிந்து நான் பலகாலம் ஆனபோதும் பின்னை ஒருநாள் காண்பதாய் உறுதிமொழி தந்தபோதும் உனது நேரம் வந்ததெனக் காலனும் வந்திட்டான் எம்மைப் பிரிந்து நீ சென்றும் பலகாலம் ஆனபின்பும்
ബ Dig)
நீயருகில் வாழ்கின்ற நிறைவு என்றும் எனக்கம்மா
ப் பிரிந்த நினைவு எனக்கென்றும் இல் உன் மடிமீது சாய்ந்த மனநிறைவு எனக்கம்மா நற்புதையல் கிடைத்ததென நிறைவு கொண்டேனம்மா
இடன் மடிமீது)
16.06.2004 லண்டன் Time வானொலியில் செல்வி ரஜனி
திருநேசன் குரலில் சகோதரர் யூட் இசையுடன் பலதடவை பாடப்பட்டது.
监

Page 17
அனுராகமான பல்லவி. அனுபல்லவி
மீளாத்துயிலில் ஓய்வெடுக்கும், என்னை ஆளாக்கிய என் அம்மாவே முன்னை அன்னையர் தினம் நான் அறிந்ததில்லை பின்னை அறிந்த போது நீ இங்கு இல்லை.
அடிக்கடி கனவினில் உன் அன்பில் குளிர்கிறேன் நொடிக் கொருதடவை நீ அருகிலென்று உணர்கிறேன் அடிமன ஆழத்தில் உன்மேல் அன்பு படிகமாய் உறைந்தது முடிவான தெளிவு
சும்மா உடலை இங்கு சுமப்பது நாகரிகம் அம்மாவெனும் தாய்மையிங்கு அசெளகரியம் அம்மாவின் பெயரோடு அழைப்பது வழக்கம் அம்மாவெனும் பதவி முப்பதில் நிகழும்
மடல் வரைவதும் மலர் கொடுப்பதும் மறக்காமல் அன்னையர் தினத்தில் நிகழும் மற்றைய நாட்களில் தாய் - பிள்ளைவேறு மகத்தான இவ்வுறவு இந்தவொரு நாளில் தான்
 

வேதா-இனங்காதினகர் 31
எண்பத்து ஏழில் உன்னைக் கண்டேனம்மா துன்பத்தோடு பிரிவு முத்தம் பதித்தேனம்மா கண்ணிர் வழிந்தோட அழுதேன், அது எங்கள் இறுதிச் சந்திப்பென்று தெரியாது
உனக்கு ஈடு இனை யாரம்மா உருகி உருகி உலகில் தேய்ந்தாயம்மா விழியாகி வழி காட்டினாய் அம்மா ஒளியினை எமக்கு நிதம் தந்தாயம்மா
ஏவல்கள் சில சேவையாய் செய்தேன் நாவினில் சொல்வதை சிரமேற் கொண்டேன் பாவினில் ஏற்றி கவிப்பூ சூடுகிறேன் பண்பின் காவலாய் நெஞ்சில் நீயம்மா
செந்நீரும் கண்ணிரும் பிள்ளைகட்கீயும் தன்னலமற்ற இனையில்லாத் தாய்மையாம் இன்னல் இன்பம் சேவையில் பெறும் இனிய ஐரோப்பிய அன்னையருக்கு வாழ்த்துகள்
அன்னையர் தினத்தில் மட்டுமல்ல அம்மா அனுதினமும் அப்பாவோடு என்னுள் நீயம்மா அனுராகமான பல்லவி - அனுபல்லவியாய் உனக்கு அர்ப்பணிக்கும் இந்தப் பனுவல் கொத்து அம்மா.
23. (3.2CXX0, 9, (25.200 GGT GT3T Ffiji Tri"TITTGS),
屿

Page 18
32
2ஈர்ஷர்துக்கன்
முதலெழுத்தானவர்.
உயிரெழுத்தாய் அன்னை இலங்கினார் மெய்யெழுத்தாய் அப்பா கலந்தார் முதலெழுத்தாய் முத்திரை பதித்தார்
உயிர்மெய்யாய் என்னைப் படைத்தனர்.
வல்லின செயல்திறன் வாய்த்தவர் மெல்லின இதயம் கொண்டவர் எல்லின மக்களோடும் இணைந்தவர் நல்லினமென அப்பா பெயரெடுத்தவர்.
திருநீறில் திருப்தியடையும் திருவாளர் திருமுறைகளைத் திருமொழியாக எண்ணுவார் புத்தகங்களால் மனதைத் துவைப்பார் புத்துணர்வுச் சக்தியாய் உலாவுகிறார்.
முக்குளிக்கும் முதுமை நோயின் இக்கட்டில், பதுமையாக்காது உன் சக்தியாலென் அப்பாவுக்கு நன் முக்திப் பரமபதம் கொடு இறைவா
16.5.2004 - இலண்டன் தமிழ் வானொலியில் என் தந்தையார் முதுமையால் வருந்தியபோது.
些

வேதா-இனங்காதிகைம் 33
அற்றைப் பிறைநிலவு.
அன்னை மகளின் அன்புறவு அர்த்தமுடை பெண்மைப் பதிவு அன்னைமடி அற்றைப் பிறைநிலவு அர்த்தமுடை இற்றை முழுநிலவு.
அருகிருந்த மன அனைவு அருவிச்சாரல் குளிரினைவு அகவிதழ் விரித்த அனுபவநிறைவு அன்புறவுப் பால உன்னதவிரிவு.
மங்கை அருகு மணித்துளிகள் மனம் நிறைத்த நேரங்கள்
மனதிற்குள் பூக்கள் குவித்திட்ட மதுரமான மதிப்புடை நாட்கள்.
செல்லக் கனவுச் செவ்வாணமவள் நல்ல கருத்தைத் தெளிவாயவள் சொல்லத் துணியும் பெண்மையவள் வெல்லட்டும் வாழ்க்கையில் அவள்.
ஆன்மாவிற்குள் தேன் சொரிந்த அந்தச் சுகநாட்கள் அறிவுசார்ந்த சுந்தரப் பெண்ணுடன் கழிந்த சுதந்திர மூன்று நாட்கள்.
些
F.

Page 19
aaydiyogased
சுற்றுலாப் பிரியன்.
ஒற்றை முதுகுப் பையுடன் சுற்றி நாடுகள் பார்க்கும் சுற்றுலாப் பிரியனெம் வெற்றித் தலைமகன்.
56oT JEFGEDGET ILLI ITGITGT கருணை இதயமானவன் கருத்தைத் தெளிவாய்க் கூறும் காரியவாளன்.
அனுபவம் பொன்னெனும் அனுமானம் கொண்டவன் ஆயினும் அவனொரு குழந்தை மனமானவன்.
நலமான ஆரோக்கியம் வளமான வாழ்வு வல்லமையோடு வெற்றி வாரிக் கொள்வாய் வாழ்த்துகிறோம்
Ալի Ա ի
监
 

வேதா-இணங்கதிரதர்
இதயத்தில் கொலு
இனி அப்பாவை நான் காணமுடியாது இணைந்த நிழற் படங்கள் வீட்டினில் இதயத்தில் கொலுவாக இனிய நினைவுகள் இருபத்தி மூன்று மார்கழித் திங்கள் இரண்டாயிரத்து ஆறின் காலை விடியலில் இகத்தில் என்னை உருவாக்கிய தந்தையின் இனிய சுவாசம் மெது மெதுவாய் நின்றது இதமான விடுதலை உயிர்க்கூட்டிற்கு
எங்கள் வீட்டு மாமரக்குடை அவர் குன்றாத ஆதரவுக் தடையில் நாம் என்றும் சுடரான அறிவும் அன்பும் நின்று இல்லத்திற்கு ஒளி தந்தது

Page 20
ഉരമ്നgർക്
கடற்கரை மணலாய்ப் பல நினைவுகள் கலையழகுக் கிளிஞ்சல்களாய்ச் சில நினைவுகள் கொலுவாக மனதில் அழியாத சொரூபம் கொடுக்கிறது சுய ஆளுமையைச் சுயமாக எமக்கும்
தொண்ணுற்று ஆறில் அம்மா மறைவு இரண்டாயிரத்து ஆறில் அப்பா மறைவு இணையாக இல்லறம் ஐம்பத்தொரு வருடங்கள் இருவரையும் இன்று நிழல் படங்களில் இணைத்தே பார்ப்பதில் ஆத்ம திருப்தி மரணம் நியதியெனும் அவதானம் கொண்டால் இரணம் உருவாகாத நிதானம் பெறலாம் தருணத்தில் கல்லறைக்கட்டிலே சரணாலயம்.
கேரவையில் அப்பாவின் மலர்வு - 15.1.1914
கொழும்பில் அப்பாவின் மறைவு - 23.12.2006 (Vaarppu.com-9)ai 9.g3 gib)
监
(8IIT65-96 Lib
போலிகளும் இன்பங்களும் மாந்தரை ஆலிங்கனம் செய்வது வழமை போலி உறவு உள்ளம் உடைக்கும் போலி உணவு ஆரோக்கியம் கெடுக்கும் போலிப் பொருள் நம்பிக்கை உடைக்கும் போலி மேலோட்ட இன்பம் தரும்.

ിബ7-ക്രിബിയമ 37
என்னாசை அப்பா
விண்ணுலகு ஏகிய என்னாசை அப்பா மண்ணில் குமாருஉடையார் கொள்ளுப் பேரன் தொண்ணுாற்று இரண்டு வருடங்கள் வாழ்ந்தார். கண்ணாகத் தமிழைத், தாய்மண்ணை நேசித்தார். கண்கவரும் மலர்ச்செடிகள், பயிர்கள் மண்ணிலே மரங்கள் நடுவதை நேசித்தார் கண்முன் நடப்பவை எல்லாம் நன்மைக்கே’ என்ற கைத்தடியை எனக்கும் காட்டினார்.
பிணிகள் நாணி விலகியது, அவர் துணிவான துவிச்சக்கர வண்டி ஓட்டத்தால். கண்ணயர எனக்குக் கதைகள் கூறினார். காணிப் பிரபுவாய் ஊரில் இருந்தார். நானிப்படித் தமிழாட முதுகு நாண் அவர். குமாரு உடையார் பேரன் - சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரோடு ஒன்றாகக் கோவையில் குடும்பமாய் உறவாடியது பெருமையாய்ப் பேசுவார்.
விெண்ணுலகு.)
24.1.07 - இலண்டன் தமிழ் வானொலி.
监

Page 21
മരയ്കgൾക്
தெய்வீகத் தளிர்
பஞ்சுக் கன்னம் பிஞ்சு விரல்கள் கொஞ்சும் வதனம் பிஞ்சுக் கால்கள் தத்தும் நடை திக்கும் மொழி பித்துப் பிடிக்கும் சொக்கும் அழகு கன்னம் நிமிண்ட விரல்கள் பரபரக்கும் பொன்முகம் நோக்கக் கன்னம் மூடுவான் சின்ன உடலைத் தாங்கும் கால்கள் பின்னலிட ஒடிக் கண் மறைவான்.
அழகிய பூந்தேர் அசைவது போல அசந்து நிற்பேன் அழகுக் காட்சியில் ஒன்பது நூறு சொல்ல விளைந்து ஒரு வார்த்தை சொல்லில் விளக்கிட ஓராயிரம் பாவம் முகத்தில் அலையும் ஒளிரும் விழியில் அதிக ஆர்வம். கிள்ளை மொழியில் தமிழைச் சேர்த்து கொள்ளைக் கதைகள் பேசிட ஆசை.
 

Gavar-earliasquikwad 39
அள்ளிக் குழைத்து அருமையாய் மொழிய சொற்கள் இணையாது திக்கும் தவிப்பு. வானவில்லை ஏணையாக்கி ஒரு தேவதையை கானம் பாடிடக் காவலாக்கிப் பொன்தளிாைப் பஞ்சு மேகப் போர்வையில் கொஞ்சிக் கொஞ்சியே துஞ்ச விடுவேன். தெய்வீகக் குழந்தையை விழித்து மெய் தீண்ட, சொர்க்கத்து இன்பமெல்லாம் சேர்ந்துவிடும்.
3.09.2001 - TRT தமிழ் அலை வானொலி.
1.10.2002 - TRT கவிதைச் சோலை. 16.6.2006 - இலண்டன் தமிழ் வானொலி.
监
மனிதம் - புனிதம்
வாழ்வில் கணக்குப் போடுபவன் மனிதன். வாழ்க்கைக் கணிதம் தவறிடும் போது வாழ்வில் மனிதம் புனிதம் கெடுகிறது.
தூய ஆடை - நீராடுதலல்ல புனிதம் தூயமனம் பண்பின் வாழ்வே புனிதம்,
制 மனித உழைப்பு - கொள்கை - வாய்மை
மதிப்பு மரியாதை நற்பழக்கம் மனிதம்
மறந்து இவற்றை வாழ்தலில் இல்லை வனிதம்.
25.07.04

Page 22
4() 2ஈர்ஷர்துக்கள்
மனித நேயக் கிரிடம் அணியுங்கள்
குழந்தைச் செல்வங்கள், குமுதமலர்க் கொத்துகள் குடும்ப விளக்குகள், குளிர் தென்றல் அலைகள் உவகைமிகு சர்வதேச உயிர்ச்சிலைகள் உயிர் அதிசயங்கள், உணர்வுக் காவியங்கள் தாழ்வது வந்தாலும் தைரியம் தருகின்ற வாழ்வுக் கடலின் வைரத் தெப்பங்கள்.
 

வேதா-இனங்காதிலகம் 41
உலகத்து உதடுகள் உணர்ந்து புகழும் உன்னத தீபங்கள் உளி செதுக்காச் சிலைகள் மணவாதை இருளின் ஒளித் தேவதைகள் மனங்கவர் புன்னகை, மழைமின்னற் கீற்றுகள் வாழ்க்கைச் சுவடுகளின் காலடித் தடங்கள் வாழும் கவிதையாய் நடமிடும் மழலைகள்.
பெற்ற செல்வங்களைப் பேணத் தவறிடில் சுற்றம் தொலைந்திடும், பற்று அறுந்திடும் குற்ற உணர்வுடன் வெற்றி தொலைப்போம் மற்றவர் போற்றிடும் நிலை விலகிடும் காற்றுள்ள போது கறைகளைத் தூற்றாவிடில், ஆற்றில் வெள்ளமாய்ச் சேற்றோடவர் புரள்வார்.
கற்ற அறிவாலெவரும் கொற்றம் பெறலாம் நற்றமிழ் வானில் துருவ நட்சத்திரமாகலாம் பண்பு மேடையில் அன்பு வாழ்வமைக்கலாம் இன்ப நகரத்துச் சரித்திர நுழைவாயிலாகலாம் மழலைப் பூக்களை மதித்து அனைத்தால் மனிதநேயக் கிரீடம் மகிழ்ந்து அணியலாம்.
17.8.2004 - இலண்டன் தமிழ் வானொலி. புரட்டாதி, 2008 - வார்ப்பு. கொம்.
些

Page 23
42 മരയ്കgർക്
தமிழ் விளையாட்டுகள் குழந்தைக் கவிதிை
விளையாட வா தோழி - தமிழ் விளையாட்டு விளையாடுவோம் களைப்பாகிக் களிப்பாகிக் கனநேரம் ஆடுவோம் கிட்டிப்புள், எட்டுக்கோடு கிளித்தட்டு ஆடுவோமா? களிப்போடு சொல்தோழி கலகலப்பாய் ஆடுவோம்.
கோலாட்டம், கெந்தியடி கொக்கான்வெட்டு, கும்மியடி கொழுத்தாடு, பசுபுலி பல்லாங்குழி, வாரோட்டம் பம்பரம், மாங்கொட்டையடி பந்தடி, ஊஞ்சலாட்டம் எந்த விளையாட்டுத் தெரிவு என்று நீ சொல் தோழி
 

ബ7-@ബിജ്ഞ 43
அங்கே பார் போரடி அந்தத் தேங்காய் உண்போமா? கண்கட்டி ஒளிந்தாடி கண்ணாமூச்சி ஆடுவோமா? வண்டிற் சவாரிப் போட்டியை வரிசையாக எருதுகளை வடிவாகத் தொலைக்காட்சியில் வசதியாயிருந்து பார்ப்போமா?
19.8.2004 - இலண்டன் தமிழ் வானொலி.
监
கல்வி
காலமின்றி மனதுள் ஏற்றலாம் கல்வி கள்ளர் - காடையர் பிடுங்காதது கல்வி அகிலத்து மாபெரும் செல்வம் கல்வி அனைவரும் கட்டாயம் பெறவேண்டியது கல்வி.
17.07.2004
SGfaDID
இனிதாக ஒரு வழியில் மனம் ஒன்றிடில் தனிமையும் ஒருவித இன்பம் தான்.
தனிமையில் மெல்லிய இசை இனிமை தனிமையில் அமைதியான வாசிப்பு இனிமை தனிமையில் ஓவியம் வரைதல் இனிமை தனிமையில் கவி புனைவது இனிமை.

Page 24
മഞ്ഞു??0ഴുക്
மழையே மழையே! குழந்தைக் கவிதிை
மழையே மழையே பொழிவாய் மனம் குளிரப் பொழிவாய் மண் குளிரப் பொழிவாய் சர சரவென சரம் சரமாய் சள சளவென சலதரங்கமாய் மள மளவென பொழிவாய்!
குழியில் மண்ணை அகழ்ந்து பொழியும் மழையில் கலந்து களியாய்க் கைகளில் பிழிந்து குழிந்த கிண்ணங்களில் வழித்து குழுவாய் விளையாடப் பொழிவாய்! வருவாய் மழையே பொழிவாய்!
சேற்றில் காலைப் புதைக்க காற்றுக் குமிழியை ரசிக்க கல்லை வெள்ளத்தில் எறிய காகிதத் தோணிகள் செய்ய குடையைப் பிடித்துக் குதிக்க ஓடை நீரில் கலக்க ஆடை நனைத்துக் குதிக்க அடைமழையே பொழிவாய்
3.10.2004 - இலண்டன் தமிழ் வானொலி,
监

ിബ്-ക്രിബിയയ്ക്ക്
பாப்பாவுக்கு.
குழந்தைக் கவிதிை
கூடித் தமிழ் படி பாப்பா கூச்சம் களைந்திடு பாப்பா கூட்டத்தில் கேட்பதும் குறும்பாகக் கூறலும் இன்தமிழாகட்டும் பாப்பா
கூவும் குயிலினைப் போன்று குரலினிக்கத் தமிழ் பாடு பாப்பா குமரவேள் தமிழுரைத்தது போன்று குவலயம் எட்டத் தமிழிசை பாப்பா
ஏடும் எழுத்தாணியும் இணையற்ற ஏற்றம் தரும் பாப்பா ஏழு பிறப்பிற்கும் உன்னோடு எழுந்து வருவது அறிவாம்
நாலு சுவரினுள் முடங்காது நல்ல காற்றைச் சுவாசி பாப்பா சுத்தக் காற்று என்றும் நல்ல சுகத்தைத் தந்திடும் பாப்பா
வயதுக்கு மூத்தோரைக் கண்டால் நீ வணக்கம் கூறிவிடு பாப்பா வாங்கும் பொருள், உதவிகளுக்கு வளமாய் நன்றி கூறிடு பாப்பா.
8.1.06 - இலண்டன் தமிழ் வானொலி.
监

Page 25
46 ജീഴ്വഴക്
& Niagara Falls 7
வியத்தகு நயகரா நர்த்தனம்
பிரபஞ்சத்தில் ஒரு பிளவுச் சாய்வு பீறிடும் கடுகதி வேக நீர்ப்பாய்வு நூற்று அறுபத்தேழு அடி உயரம் இரண்டாயிரத்து ஐந்நூறடி அகலம் நயகரா நவீன உலக அற்புதம்! சகாரா ஏங்கும் சலசங்கம சாம்ராச்சியம் நிகரற்ற நயகரா எனக்கு அறிமுகம் நிருத்தம் அசுர அழகுப் பிரமாண்டம்
கணத்தில் நயனங்கள் அகன்று ஆரவாரம் மனங்களின் எதிர்பார்ப்பு அலாரிப்பில் ஆரம்பம் என்ன! புகையது சாரதியற்ற சலதாரையோ! கண்ணன் அருளில் நீளும் வெண்துகிலோ மடல் விரித்துப் பாவெழுதும் பாலருவியோ! மடங்காது உரசும் நீர்ப் படையெடுப்போ! திடல்களோ பள்ளமோ எதைத் தவற விட்டு குடல் தெறிக்கும் இப் பந்தய நீர்ப்பாய்ச்சல்
தரைகளை வெறுத்த அசுரத் தரங்கிணி தடங்கலின்றி தடம் புரண்டு நீ
 
 
 
 
 
 

வேதா-இனங்காதிகுைம் 47
தலைவிரி கோலமாக கரங்கள் பரப்பி தாவிப் பாயும் காளியின் மூர்க்கமாய் கண்டதைச் சுருட்டிக் காணாமற் பண்ணி அண்டத்தில் வீழும்நீ அழகுக் கண்ணி சயனமற்ற சன்னத நீர்வீச்சுச் சந்தம் நயனங்கள் கொள்ள சலதாண்டவச் சதிர்
அகண்ட பள்ளத்தாக்கில் அகிலத்து நீரெல்லாம் புரண்ட சலப்பிரவாகம் மின்சார நீரோட்டம் மிரண்டு கவிழ்ந்தால் மரண அரங்கேற்றம் சாரல் நீரில் நனைவதொரு சுகம் பாரின் சுகங்களில் இதுவொரு பரவசம் மழையாடை அணிந்த சாரலின் ரசிப்பு மழையோ! நீர்ச்சாரலோ மனத்தவிப்பு இழையோடும் குளிரிலது புது அனுபவிப்பு
இந்தப்புறம் கனடிய மண்ணிற் கால்கள் அந்தப்புறம் அமெரிக்க நீரின் விசுவரூபம் இடையில் பிளந்தது நயகராப் பள்ளத்தாக்கு மடைபாயும் நயகரா இருநாட்டுச் செல்வாக்கு கடைபோடும் நீர்க் கண்காட்சிக் கண்ணோக்கு இடைவெளியின்றி வாரி யிறைக்கும் தடையிட முடியாத சரணாகதி அருவிமாலை! எடைபோட முடியாத ஆச்சரியக் கொடை
இலண்டன் தமிழ் வானொலி, TRTதமிழ் அலை, ஜெர்மன். ஜெர்மன் சஞ்சிகை கலைவிளக்கு, 2003; 2004-ல் பதிவுகள், கொம்.
监

Page 26
8 உணர்வுர்துக்கள்
நிதர்சனமான தேசப்படம்
பதிகம் பாடியது மனதில் நினைவுப் பண் பதினைந்து வருடங்களால் (2002இல் பிறந்தமண் மதியம் இரத்மலானையால் யாழ் பயணம் அதி மகிழ்வாய் “சிரன்டிப் (Birandib)” வெள்ளிப் பறவையில் நாம், எதிர்பார்ப்பு, வியப்பில் சன்னலோர இருக்கையில் நான் அதிகரித்த ஆவலுடன் பூமியை நோக்கினேன் ஆதவன் கதிரால் மின்னும் கடற்பரப்பு அற்புதமாய் வெண்ணலைபாரம் ஈர்ப்புச் சிறப்பு
தங்கக் கடல் ஜொலித்தது நுரையோடு எங்கள் எண்ணங்களும் ஆனந்த நுரையோடு கொழும்பு, நீர் கொழும்பு, சிலாபம் ஊடாக பளிங்குக் காட்சி புத்தளம் நீள்குடா மன்னார் தலைமன்னார் இயற்கை அழகோடு கண்ணாரக் கண்டோம் விமானத்தினூடு இலங்கையின் மேற்கு வரைபடக்கோடு துலங்கியது கீழே துல்லியமாய் வானத்தினூடு தேசப்படத்தில் தாள்களில் பார்த்தோம் - எம் தேசப் படத்தையிங்த நிதர்சனமாகப் பார்த்தோம் தேகம் சிலிர்க்கும் எழில் காட்சி அது! தேசுடை, கண்கொள்ளா அற்புதம் அது என்றும் மறக்காத விமானப் பயணமது சேன்று சுகமாகப் பலாலியை அடைந்தது இன்றும் எங்கள் இரத்தினத்துவீபம் அது நன்றாய் மனதில் நர்த்தனம் புரிகிறது
27.12.2013 – TRT *, Fgi ya:.
监

வேதா-திரங்கதிகள் A9
காலி - மாத்தறைக்
கடல் அலை
அந்தி சாயும் நினைவில் சந்தம் சிந்திய அலை எந்தன் கால்கள் கழுவி பந்தாய் உருண்ட துளிரலை நீந்தி ஓயும் நினைவில் வந்தது அழகு வெண்ணலை அந்தச் சுகத்தால் கண்களில் விரிந்தது இன்ப அலை
தண்ணீர்க் கன்னி கோபமாகி வெண்னாடை தனக்கு வேண்டாமேன்று விண்ணில் சுருட்டி வீசியதோ வெண்ணலையாய் நீரில் உருள்வது தொப்பலான பாவாடையோடு பாதத்தில் அப்பிய ஈரமணலும் காய்ந்து உப்புக் கறையோடு இழுக்கும் உப்பங் காற்று உடலோடாடி சுவாசம் நிறைக்கும்
ஆழ நீலக்கடல் தொடும் வானத்தில் சாலம் காட்டும் பலவர்னச் சாயம் செந்தூர வர்ண ஆதவன் ஆவலாய் சுந்தர முகம் பார்க்கும் மந்திரக் கண்ணாடி அந்தர நீரலைப் படிகமோ. பிரதிவிம்பமோ!

Page 27
മരയ്കg&ക്
விலையில்லா சூரியச் சுவடுகளின் ஆட்சி கலை பொங்கும் கனக அலைகளின் மாட்சி தலையோடெனை நனைக்கப் பிரம்மப் பிரயத்தனம்.
கடல் அலை தாளமிடும் இரகசிய நீரில் உடல் மறைந்த சாசுவதத் தலை போல் திடலாகச் சூழ்ந்த பச்சைகளோடொரு தீவு கூடலான மரங்கள் நடுவண் ஒரு மண்டபம் உடல் சிலிர்க்கும் இயற்கைக் காட்சி கண்டோம் பாய்ச்சலாக வரும் அலைக்குக் கும்மாளம் கூச்சல் போட்டுப் பெரும் கைத்தாளம் காலி மாத்தறைக் கடலின் ஜாலியான அனுபவம்.
2.O.2003
监
நினைவு
புது நினைவு, புது எண்ணம், புது ஆலோசனை, புது ஞாபகம் புதுக் கவனம், புதுத் தியானம் பிறந்து மலரட்டும். பழைய கவலை நினைவு மறையும். ஒரு நிறத்தின் மீது இன்னொரு நிறம் கலப்பது போல. புதுநிறம், வேற்று நிறம் போல மாற்று நினைவு காண்போம் துன்ப நினைவு மறைய.
O5.O.2OO5

வேதா-இனங்காதிகைம் 51
விஷமா - விசும்பின் நீலமா?
ஆயிரம் கோடானுகோடி இரகசியங்கள்
அடக்கிய ஆழ்கடலே இடத்திற்கு இடம் நிறம் மாறும்
இரகசிய ஆழ் கடலே விஷம் உண்டதனால் நீலமாகினாயா?
விசும்பின் நீலத்தைப் பிரதிபலிக்கின்றாயா? விளையும் முத்தின் பிறப்பிடமே
விநோதமிகு உயிர்களின் விளைநிலமே
அலைகளின் அடங்காப் பெருமோசை
ஆழ்கடலின் கும்மாள ஓசையா? நீள்கடலின் துயர ஓசையா?
வீழ்கின்ற ஒவ்வோரலையும் ‘வாழ்விது ஓயாத முயற்சியெனும் இசையா? தாழ்ந்திடா முயற்சி வலையா? எத்திக்கும் முயற்சி திருவினையென்று
கத்தும் ஓயாத முயற்சிதானோ? அலைக் குழந்தை வேகமிதுவானால்
ஆழ்கடலின் வேகமெதுவாகும்? அலைகளே ஆகாய மெளனத்திற்குக் கேலியா? யாரைச் சுருட்ட ஊர் கூட்டுகிறீர்? உனக்குள்ளே ஒரு உலகை ஆக்கி
உவக்கும் விந்தைகளை உள்ளடக்கி சத்தமிட்டுப் பயம் காட்டும் ஆழ்கடலே
மொத்தமும் அறியமுடியாத சுரங்கம் நீ.
20.10.2001 - தமிழ் அலை TRT சாளரம்.
28.2.2003 - TRT கவிச்சோலை. மே-யூன், 2005 - நாளை விடியும் சிறுசஞ்சிகை.
些

Page 28
52 മജീഴ്ത്തgർക്
வானவில்
வான மண்டலத்தில் ஓணம் பண்டிகையோ
வருண பகவான் பன்னித் தெளியலோ வான மங்கையாள் காதலன் வருகையோ!
மோனம் கலைந்து அவள் மோகம் கொண்டாளே! வர்ண ஜாலமாய் நாணத்தில் சிலிர்த்தாளோ!
மானம் காக்குமவள் வண்ண ஆடையோ! மன்மதக் கணையின் கவண்விரிவோ வானவில்?
என் முன்னே விரியும் ஏழுவண்ணவில் எதற்கோ?
இளமைப் பூங்காவின் இனிய தென்றலோ!
இன்பக் காமனின் மோகமலர்ச் சொரிவோ கர்வம் பொங்கும் பருவக் கவண் விரிவோ!
கானம் இசைக்குமோ கவிதை பேசுமோ கண்ணில் தொடங்கும் வர்ண ஜாலமோ
கனிந்த பருவத்தின் காதல் வானவில் கணத்தில் தோன்றும் காணாமலும் போகும்
வனப்பு என்னவோ வசமாகிறான் மனிதன்.
29.05.2001 - TRT சாளரம் (வானொலி). 1.08.2002, 8.05.2006 - இலண்டன் தமிழ் வானொலி - காலைத் தென்றல்,
监

வேதா-இனங்காதிகைம்
கற்பனைத் துரிகை வண்ணம்
வானத்தை ரசிப்பது தனி இன்பம் வாடிக்கை அன்று சின்ன மனதுக்கு வேடிக்கை இன்றும் என் மனதுக்கு விண் மீன்களை எண்ணித் திணறுவது விண் மீன்களில் பெரியது எது கண்ணருகே தெரிவது எதுவென கண் மீன்கள் கருத்தாகக் கணக்கிடும் கழுத்தில் நோவு வரும் வரைக்கும்
மனதில் என் கற்பனைத் துளிகை மென் நீல வானம் திரை. முதலில் கண்கள் தேடி ஒடும் பதமான பஞ்சு மேகத்தை நாடும். நிலாப்பெண் குளிக்கும் நீலத் தடாகம் நீந்திப் பொங்கும் சவர்க்கார நுரையும் முன்னேறி வரும் காற்று மெத்தைகள் நன்றாய் அமர்ந்த நாய்க்குட்டி அதன்மேல்
நாய்க்குட்டி மாற அர்ச்சுனன் தேர் பாய்கின்ற குதிரையில் பிணைந்த தேர் தேய்ந்து மறைய நீலத்திரை - பின்னர் நேர்த்தியான ஒரு சோடிப் பூனை வார்க்கும் கற்பனைக்கு இல்லை இணை கற்பனை வளர பஞ்சுமேகம் சொற்பமின்றிப் பெருக்கம் அமோகம்

Page 29
54 2ஈர்ஷர்துக்கள்
வான நீலம் மறைத்தது வெண்மேகம் வந்தது அங்கு ஒரு வட்டக்குளம் வளர்ந்து பெரிதாய் நீண்டது குளம் எழுந்தார் அங்கொரு தாடித் தாத்தா விழுந்தார் அந்த நீளக் குளத்தில் எழுந்தார் வாயு பகவான் வேகமாக, கோலக் கற்பனைக்கு வந்தது முடிவு. ஈழத்தில் வந்தது என்ன இன்பமது
II. (72.2003, I 1.01.2CX23 – TRT Ryji ya MISAJ GJITGMG FFTsů. 10.07.2006 - இலண்டன் தமிழ் வானொலி.
屿
நற்சிந்தனைக்கு
வாழ்வில் காத்திராது வரும் துன்பம் வரட்டும். ஆனால் எமது உதடுகளில் பிறக்கும் வார்த்தைகளிலும், உள்ளத்தில் பிறக்கும் சிந்தனையிலும் சோகம், கொடுமை, பயங்கரம் வேண்டாம். இவற்றின் சாயல் கூட வேண்டாம். எப்போதும் ஒளி தரும் நினைவுகளும் வெற்றி தரும் வார்த்தைகளும் வரட்டும். புது விதி செய்யும் சிந்தனைகளும் பிறக்கட்டும். சதை, ரத்தம், கொலை, குண்டுவெடி, சாவு என்பதிலும் பார்க்க, மலர்கள், வண்னத்துப் பூச்சிகள், தெய்வங்கள், முத்து, பச்சைக்கிளிகள் என்று நல்லவற்றை நினைப்பது போல.
நல்லதை நினைத்து நல்லதைச் செய்வோம்.

55
வேதா-இனங்காதிகைம்
cm.
卿홍 或脚 比원 sį=••& = $ IEcm -』 편 홍 공 |- 홀 홍 통 후 현 比Ệ .c -o (= @娜娜娜娜 七细血响梦麟 西戴耀卿啊 细川幽
d明 :E E 煙醯腳
《哑曜 와概翻翻娜 舞舞舞舞蹈
&해 젊 a a 흑
கண்ணாடியாய் நொறுக்கும் வழுக்கல்
என்னே இவ் அவஸ்தை
எங்கே நான் வழுக்கி விழுவேனோ!

Page 30
മരയ്കgർക്
இயற்கையாய்ப் பெய்த பணி செயற்கையின்றித் தொங்கியபடி பொங்கிய பாற்கடலாய் கண்விரிப்பில். அங்கும் இங்கும் ஒதுக்கிய பணி ஓங்கிய உயர் மலைகளாய் சுங்க வரியில்லாச் சொத்து நுங்கு நுரையான உல்லாசம் எங்கும் பிள்ளைகள் கும்மாளம்
வரம்பின்றிப் பணிப் பந்துவீசி வம்பிழுக்கும் பிள்ளைச் சீண்டல், வாரி உருட்டும் பனிமனிதன். வழுக்கி விளையாடிச் சரசம் அழுக்கு மூடிய பணியில். இழுக்கென அறிந்தும் இரகசியமாய் வழுக்கிடும் பணியை வாயிலிட்டு வசவு வாங்கிப் பேந்த விழிப்பார்
விரலிடுக்குகளில் வெண்ணெய் வழிவதாய் விரைந்து பிறர் காணுமுன்னே விரலோடு பனியை வாயிலிட்டு விழுங்குமழகு கண்ணனின் லீலைதான். வெள்ளை வெளோரென்ற வெண்பனி வாய் கன்னங்களில் அப்பிய அழகு வெண்ணெய் திருடிய கண்ணனின் தோற்றமே வெண்ணெயுண்ணும் கண்ணனின் சிலுமிசமே.
23.O.2O06 屿

வேதா-இனங்காதிகைம் 57
FISIDıib!
வெண்திரை விரித்து, நுரைக்கோடு கிழித்து
முன்நோக்கிச் சென்றும் கருமத்தில் கண்ணினைத்து மென்னலையாலே கோடினை அழித்தது
சின்னக் கடலில் கடவைப் படகது திமிங்கிலமாய்ப் பிளந்த வாயினுள்
தின்னப் படுவதாய் நுழைவு வயிற்றினுள். சின்ன உலகம் சிறிய மாளிகை
வண்ண விளக்குகள் வசந்த உல்லாசம்.
கிண்ணங்கள் கரங்களில் கிறங்கும் நிலை
எண்ணங்கள் பின்னும் பயணிகள் நிலை. கண்கள் கணைகளை வீசும் நிலை
கன்னத்தில் மின்னும் அந்தக் கலை. அவனும் நானும் எதிரெதிர் இருக்கை
அமர்ந்தோம் இதழில் தவழும் புன்னகை சன்னலூடு கவின் மிகு காட்சியிலென்
எண்ண அலையில் கவிதைக் குமிழ்கள்.
கடற்பெண் வானைத் தாபமாய்த் தழுவிட
உடல் சிலிர்த்து உணர்வில் நெளிந்திட
அலை அலையென அதை நான் காண
கலை கலை கண்கொள்ளாக் காட்சியது

Page 31
58 മരയ്മgർക്
கடலும் வானும் இறுகத் தழுவிடும்
காட்சியில் நாணிக் கண் சிமிட்டும்
கடவைப் படகது கரை ஒதுங்கியது
இடம் அளித்தது புணர்ச்சி வேளையது.
இங்கிதம் தெரிந்த கடவைப் படகது இங்கு நமக்குமினி வேலைகளேது!
6.06.2001 - இலண்டன் தமிழ் வானொலி. TRT தமிழ் அலை. பதிவுகள் - கொம்,
监
கொள்கை குறைகாணும் கொள்கையை மாற்றுங்கள் நிறைகாணும் வழியைக் கொள்ளுங்கள் கறையற்ற வாழ்வின் வழி நற்கொள்கை முறையற்ற கொள்கை வழி பெரும் வீழ்கை.
IO. O7.04
நறுமணம் அறிவின் நறுமணம் ஊர்தாண்டிப் பரந்து செறிந்து அகில உலகெலாம் மணக்கும். முயற்சியின்மை, அறிவீனம், சோம்பல்நாற்றம் உயர்பண்பு - கற்பனை கவிதை நறுமணம்.
நறுமணம் தரும் புத்துணர்வு, சாந்தம், மகிழ்வு. நாற்றம் தரும் அருவருப்பு குமட்டல் வெறுப்பு. வெறியின் நாற்றம் அருமை உறவுகளை வெளியேற வைக்கும் புகை - களவு - பொய்யாக நாறவைக்கும்.

வேதா-இனங்காதிகைம் 59
நாற்சார வீட்டில் மாட்டியது
பாட்டி வீட்டில் படுகின்ற மாலையிலே நீட்டிய கால்களை அமர்ந்து அணைத்தபடியே கொட்டிய மழையில் தலைவாயிலில் தனியே மாட்டியே விழித்தேன் நாற்சார வீட்டிலே. சரம்சரமாய் மழைநீர் நடு முற்றத்தில் ஆரம்ஆரமாய் மழைநீர் தாழ்வாரங்களில் பூ மாதாழை மூலையில் நீரூற்றாய் வீழ்ந்தும் பேய்மழையால் நடுமுற்றம் வெள்ளப் பெருக்கம். நீரலை வட்டங்கள் வரைகளாய் வரைகளாய் நீர்க்குமிழிச் சிதறல்கள் சிறியதாய் பெரியதாய் சளக் சளக்கென மழையிருட்டும் பயமுறுத்தல். படக் படக்கெனும் திகில் மறைவு வெள்ள ரசனையில். தலை வாசல்திண்ணையால் மெதுவாய் இறங்கி தயாரித்த தோணியை வெள்ளத்தில் இறக்கி நிதானமாய் அசைய இரு கற்கள் ஏற்றியதும் இன்ப அனுபவம், ஏதும் இணையில்லா அனுபவம். கடதாசி நனைய தோணி கவிழ்ந்ததுவும் முடமாகா நினைவு கரையாத அனுபவம் என்ன தோணிவிடுகிறாயா? என்று என் பாட்டி வந்தாள் மழை நின்று நீட்டிய குடையை அவள் தரையிறக்க கிட்டியது பெரும் ஆறுதல் எனக்கு. பாட்டியருகின் துணிவு வலை விரிப்பில் வட்டமிட்டு நிலை கொண்டது பலதோணிகள்.
29.10.2002 - TRT தமிழ் அலை, இலண்டன் தமிழ் வானொலி. ஆடி, ஆவணி 24 ‘மண்’ இதழ், 2004
屿

Page 32
தனர்ஷர்துக்கள்
நூலுறவு - நூேல் + உறவு)
நூலுடன் ஒன்றிய இணைவு நூதனப் பூங்காவில் நுழைவு தெள்ளு தமிழ்த் தடாகத்திலே துள்ளி வீழ்ந்து மூழ்கையிலே அள்ளுகின்ற தமிழ் அமுதம் கள் வெறியின் மயக்கமதாம் நம்பிடும் நண்பன் கைவிடுவான் நம்பிடும் நூல்கள் துணையாகும் வெம்பிய மனதின் துணையாகும் வம்பிலிருந்து காத்து நிற்கும். நல்ல நூல் கடைச்சரக்கல்ல நல் வழிகாட்டி, நல்லாசிரியன்.
உள்ளம் நிறையும் அறிவமுதை சொல்லுதல் பிறருக்கு அனுபவத்தொகை செல்ல நூல்களின் நட்பென்பது வெள்ளத்தோடு மலர் உயர்வதாம் உள்ளமுயரக் கள்ளம் மறையும் பள்ளத்தில் விழாப் பக்துவம் நிச்சயம்.
8. (5,2 MJ - TRT 5 tfigħ: sonali m I TATT 5. 2005 - இலண்டன் தமிழ் வானொலி,
屿
 

வேதா-இனங்காதிலகர் 61
சாம்பலில் உதித்த அறிவுக்கதிர்!
எத்தனை மனங்களின் அறிவுத்தோட்டம் பித்தான மனங்களின் தாகத் தீர்த்தம் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தொன்றில் மொத்தம்ாய் எரிந்ததெம் அறிவுச் சுரபி.
எரிந்த நூலக நினைவின் பதிவு எரிந்தபடியே நெஞ்சில் நிதம் வதிவு ஆகுதியான தொண்ணுற்றேழாயிரம் நூல்கள் ஆவணமாக்க முடியா பொக்கிசத் தாள்கள் சூரியன் தொலைந்த ஆகாயமாக - அன்று பாரிய பாதிப்பின் ஓராதாயமாக - இன்று சாம்பலில் உதித்த அறிவுக் கதிர் சாம்பிய மனங்களில் ஒரு ஒளிச்சுடர் சுற்றுப்புற பச்சைப் பின்னணி வட்டம்

Page 33
62 2ஈர்ஷம் பூக்கள்
நெற்றி நிமிர்ந்த மாடிக் கட்டடம் பற்றற்ற மனமாய் வெண்மை ஞான - அகம். பெற்றோம் இன்றோர் ஆவணக் காப்பகம், மயானபூமியில் எழுந்த நினைவகமாய்
மனசு உள்ளவரை அழியாது - சாம்பலில் உதித்த அறிவுக் கதிர்! - புனர் நிர்மானம் மிதித்தது மறு தடம் - இது மனிதத்தீர்மானம் நூலகம் எரிந்த சாம்பலில் - நுண்ணறிவால் நுகர விரிந்த இருபத்தேழாயிரம் சதுரஅடி - வாசிப்பகம் மனிதத்தின் கண்கள் பெறவைக்கும் - வியத்தகு மானுடத்தின் சாதனை திறக்க வைக்கும் உள்ளக் கமலத்தில் ஒளி உலவ உதித்த கொள்ளை அழகு அறிவு மாளிகையின் உட்புக அனுமதியின்றி - கார்த்திகை 2002ல் எட்ட நின்று நிழற்படம் பதித்தோம் அற்புதம்!
இலண்டன் தமிழ் வ:னொலி, lRT Ffiji -ự&ZIGAJ. LušinyJSsir - comh.&005,
些
சக்தி ፥ጏ சக்தி ஒரு பாதி சிவன் மறு பாதி சேர்ந்த ஓர் உருவம்
அர்த்த நாரீசுவரர். 譬 சக்தியுடன் நற் சிந்தனைப் பிணைப்பு சர்வ வல்லமையுடைத்து. சக்தியுடன் தீய சிந்தனை சேர்வது சாக்கடை யுடைத்து.
சக்தி விடாமுயற்சியுடன் இணைவது சிகரம்.
...

வேதா-இணங்காதினகர்
தமிழே எங்கள் உயிர்
தாய்மொழி பேசல் தாய் வழித் தொடர்பு
தாய்மொழி தன்னினம் காக்தம் திறப்பு.
சேய் தமிழ்பேசச் செய்திடல் வனப்பு
வாய்மொழி மூலமது வளர்ந்திடும் சிறப்பு.
ஆய்வுகளினால் மனுகுல யதார்த்த உயிர்ப்பு
தேய்ந்திடாது உயிர் மொழி உயிர்த்தலெம் பொறுப்பு
நந்தவனமாய் நம்முள் நட்ட ஆதித் தமிழ்
நல்லுரமாகி வரமான அடிப்படைத் தமிழ்
நாசகார ஆயுதத்தால் கள்வரால் அழியாத் தமிழ்,
நற்றமிழால் சுற்றமும் கொற்றம் பெறும்,
சோற்றிறன் அறிவாற்றல் மொழி வயலில்
உயிர்தமிழ் விதை தூவி மொழிபுரமிடலாம்!
வானுயர் செந்தமிழ் கற்றவழி நிற்கலாம்
ஊனுயிர் தொன்மைத் தமிழாற்றலால் உயரலாம்.
ஊனமாய் கூனி வாழ்வோர் சிலரும்
ஏணிதைக் கற்கை உமிழ்வோரும் உளர்.
மூவேந்தர் ஏற்றிய முத்தமிழ் மேற்கில்
நாவேந்தத் தடுமாற்றம் பிறமொழி எரிவாயிலில்

Page 34
64 ஐryதுக்கள்
தேடிப் பைந்தமிழ் நூல்கள் ஆழப்பயில்வோம்
ப் பல்லரங்கினில் சங்கத் தமிழி வோம் மோனைத் தமிழ் மோகனமாய் வாழவெங்கும்
கூனித்தடுமாறாது கூட்டாக முயல்வோம் நாவேந்தர் பழந்தமிழை யெடுத்து நிமிர்த்துவோம்
சீரேந்தும் தடைப் பின்னடைவிழச் சாய்வைத் தடுப்போம்
"13ண்ட் சஜித்சினகயின் 15.ஆவது ஆண்டு நிறைவு விழ13:பயோட்டி ஃபாஃச்க்ஸ்பிடேயே நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் 3ஆவது பரிசு பெற்ற இரண்டு கவிதைகளில் ஒன்று. ஆடி - ஆவணி ேே.
监
என் சிந்தனை மொழிகள்
* கனவனுக்குப் பிடிக்காததை நல்ல மனைவி செய்யமாட்டாள். மனைவிக்குப் பிடிக்காததை நல்ல கணவன் செய்யமாட்டான். ஆயினும் பெரும்பாலும் பெண்னே தன் ஆசையைத் தியாகம் செய்கிறாள். அது காதலாலும் - பயத்தினாலும் நடைபெறுகிறது.
இரண்டு பக்கமும் சமமான செயல்பாட்டு முறையாக, சமமாக தராசுத் தட்டில் இருந்தால் அங்கு இல்லறம் சமமாக - சந்தோசமாக இருக்கும்.
* எழுத்தருவி பொழிந்தால் எழுவது விமர்சனத்தூறல், நோயெதிர்ப்புச் சக்தியற்றவருக்த - விமர்சனத் தூறலில் நனைந்தால் சன்னியும் இன்னோரன்ன பிறவும் வரும், பகுத்தறிவுக் குடைபிடிப்பது சாலச் சிறந்தது. பகுத்தறிவுக் தடையினால் தான் விமர்சனத் தூறலை வகுத்துத் தெளிவு
பெற முடியும். விமர்சனம் ஒரு நோயல்ல.
,

நேதர-இனங்காதிகச் 55
நதியினுள் வீழ் இறகல்ல.
கவிதை எழுதும் கனவானே காதலானேன் உன் மேலே கவிதையில் ஊறிய மையினாலே உன் காதலை எழுதுவாய் கண்ணனே
பச்சையிலைத் தண் பசுமையாளனே இச்சையாய் உன் விழிமலரிலே ஈரமண்ணாக நான் நனைகிறேனே ஈர்க்கின்றாய் என்னைக் காந்தமாசியே
உன் விழி விளக்கு மின்சாரம் என் மனக்குடிலின் பிரகாசம் என் நினைவு வலையில் உன் அன்பு இன் கவிதை தரும் தென்பு
உணர்ந்த அனுபவ உயிர் வருடல்கள் உணர்த்தும் நினைவில் உயிர் போக்கிசங்கள் சில அனுபவங்கள் நதியினுள் இறகுகள் பல அனுபவங்கள் புத்தக மயிலிறகுகள் அனுபவ மலர்க் கொத்து வாழ்வு அனுபவ வாசனையில் உயிர் நீள்வு அனுபல்லவியாய் சரணமான நிறைவு அனுபோக வாழ்வின் குழைவு, அமைவு.
23.07.20 - தீபம் தொலைக்காட்சி.

Page 35
ജീഴ്ചക്
கிறிஸ்துமஸ் - 2001
வெள்ளைப் பணிப் போர்வையிலே கொள்ளைப் பனிக் குளிரிலே வெள்ளி நட்சத்திரமாய் அவதரித்தார் உள்ளம் நிறைந்த யேசுபிரான் உலக மேய்ப்பர் ஏழைபாலன் உலகம் உய்ய அவதரித்தார் உன்னத தேவன் யேசுபாலன் உலகிற்கு வந்தநாள் கிறிஸ்துமஸ்
சரித்திரம் கூறிய கதையாக மரியாள் அந்தோனி மகனாக மீட்பவர் இரட்சகன் உதித்தார் மீறும் குதூகலக் கிறிஸ்துமஸ் நாள் தரித்திரர் தனவந்தர் பேத மின்றி பெரிய மனதுடன் தொகைப் பணம் சிரித்துச் செலவாக்கும் திருநாள் பிரிந்தவர் கூடிடும் பெருநாள்
மார்கழி முதல் நாளிலிருந்து கிறிஸ்துமஸ் நாட்காட்டி திறந்து கிரமமாய் நாளும் பரிசேந்தும் கிறிஸ்துமஸ் சிறுவரின் ஆனந்தம் சொக்கலேட் பரிசு நாட்காட்டி சிறு பொருட் பரிசு நாட்காட்டி

வேதா-இனங்காதிகைம் 67
எத்தனை பலவித நாட்காட்டி மொத்தமும் கிறிஸ்துமஸ் வணிகம்
விடுமுறைகள், பரிசுடன் ஆனந்தம் விருந்துடன் கேளிக்கை பரமானந்தம் கிறிஸ்துமஸ் தாத்தா வருவார் கிறிஸ்துமஸ் பரிசுகள் தருவார் அறிந்து ஏங்கும் குழந்தைகள் ஆவல் தீர்க்கும் கிறிஸ்துமஸ் புண்ணியநாளில் ஆனந்தமோங்கி விண்ணை எட்ட வாழ்த்துகள்.
TRT தமிழ் அலை - கவிதை பாடுவோம். - பெண்கள் நிகழ்வு.
些
0.
சிந்தை (மனம்-அறிவு-எண்ணம்-தியானம்-கவலை
சிந்தையை (மனம்) அடக்கி வாழ்ந்த, முந்தைப் பெரியோர் பலர் பெயர் பெற்றனர்.
சிந்தை (அறிவு) ஐந்தாக விலங்குகளுக்கும் ஆறு சிந்தைகள் மனிதருக்கும் என்ற பேதம் பலரில் தெரிவதில்லை.
திருக்குறளை சிந்தை செய்தல் நினைவில் வைத்தல் சிறு குழந்தைகளுக்கு ஒருவகை அறிவுப் பயிற்சியாகிறது.
II.04.05

Page 36
മീഴ്ത്തgർക്
சிநேகித யுத்தம்
உயர்வானது உன் சிநேகிதமெனும் உவகையால் உயர்ந்த இடமது என் மனமேடை ஆனதாய் உரிமையாய் ஏற்றினேன் மன ஏணியில் உன்னை உணர்வுடன் மதித்தேன் நல் மனிதனாக உன்னை உதறிவிட்டாயே நண்பா மனிதநேயப் பண்பை உன்னதம் மனிதமெனும் உலகியற் பண்பை
புகழெனும் பூக்குவியலில் புதைந்து கொண்டாய் புன்னகைத்து வலம் வந்து பூரிக்கின்றாய் பணம் தான் வேதமென மயக்கம் கொண்டாய் குணமெனும் குன்றினால் வீழ்ந்து விட்டாய் கனவானெனும் என் கவனத்தில் நழுவிவிட்டாய் மனதிலென் கணிப்பில் நீ தாழ்ந்து விட்டாய்
யாகசாலை வாழ்வுப் புரிந்துணர்வுச் சுடரில் யாதும் இயற்கையாய் இணைவது யோகம் யாசித்தும் பெறுவதல்ல களங்கமற்ற நட்பு யதார்த்தமாய் இணையும் நட்பே சுகராகம் யுகாந்தர நட்புப் பொய்த்தது நண்பா யுத்தம் என்னுள்ளே நடத்துகிறாய் நண்பா
30.7.2001 - TRT தமிழ் அலை. 2006 - இலண்டன் தமிழ் வானொலி.

வேதா-இனங்காதிகைம் 69
இதனால். அது.
யெளவனம் வந்தது. பருவம் கனிந்ததினால் மெளனம் கலைந்தது. மலரிதழ் விரிந்ததினால், செளமியம் வந்தது. சங்கமம் நடந்ததினால் கெளரவம் வந்தது. கனவு நிறைந்ததினால்
ரெளத்திரம் மறைந்தது. சாந்தம் நிறைந்தது பெளருஷம் நிமிர்ந்தது. பெருமை கொண்டது பெளர்ணமி ஒளியென செளகரியம் புகுந்தது செளபாக்கியம் நிறைந்து வாழ்வு இனித்தது.
19.05.2001 - TRT தமிழ் அலை - சாளரம் (வானொலி).
Bਰ ਨੂੰ
s தெய்வம் மனிதனைச் சோதித்தாலும் துன்பத்தில் புடமிட்ட சோதியாக ஒளியாகி வாழ்வில் மனிதன்
பிரகாசிக்கலாம். * அடிமுடி தேடும்படி ஆண்டவன் சோதிப் தி பிழம்பாகக்
காட்சி தந்தார். உஷ்ணத்தோடும் கண்களால் பார்க்க முடியாத பகல்
சோதி (சூரியன்) இந்தக் குளிர்நாட்டில் பகல் வேளையில் சந்திரன் போன்று பார்க்க முடிந்த தோற்றம் அற்புதக் காட்சி.

Page 37
2ഞ്ഞുണ്ണgർക്
மனிதநிலை மாற்றம்
வெண்ணிலா முற்றத்து வேய்ங்குழல் நாதம் வெண்சங்குகளில் மனம்கவர் வலம்புரி சின்ன இதழ்விரித்த சிறப்புத் தாமரைகள் சிற்பவேலைப் பாட்டுச் சிறப்புயர் கோபுரமாய் சீர்கொண்ட மாண்புடை மனிதப்பிறவி சீர்மை மறந்தின்று குழம்பும் மனிதப்பிறவி
பூரணம் காணாத மனித மனங்களால் பூகோளத்தில் புரையோடிய பூசல்கள் குழிபறிக்கும் வன்மகொடூரக் குமுறல்கள் குண்டுவைத்துக் குடைசாய்க்கும் கொடுமைகள் காட்டுவிலங்கை அழிக்கத்தான் குழிப்பொறிகள் நாட்டு மனிதனுக்கும் வஞ்சக குழிப்பொறிகள்
ஆறறிவு அற்புத மனித உயிர்நிலைகள் ஐந்தறிவுடை மிருகத்தின் கீழ் நிலைகள் யந்திரவாதம் முன்னேற்றம் கண்ட நிலைகள் பயங்கரவாதம் உறவை எடுக்கும் நிலைகள் பயங்கரவாதியாக ஏன் ஒருவன் மாறுகிறான் பயங்கரவாதியை அதிகாரபீடங்கள் உருவாக்குகிறது

ിമ്ന-ക്രിബിയയ്ക്ക് 71
வல்லாளனின் வல்லமை வதம் இது வழுக்கும் மனிதத்தின் வன்கண் இது வசீகரிக்கும் வன்முறை வடிவம் இது வறுமையாம் மனிதநேய வீழ்ச்சிதானிது வளர்ந்திட்ட மகோன்னத மனிதனது வளர்ச்சிப் பரிமாண தராதரம் இது
சுயசிந்தனைச் சுனையில் சுழி ஓடினால் சுயாதீன விரிந்த மன நோக்கினால் வளைந்து இணைந்த தர்மநிலையில் வளமுடை வனப்பு நிர்வாகம் காணலாம் வன்முறைக் கொடுரச் சிந்தனைகள் விலக்கலாம் நன்முறை மனிதநேய வளம் பெருக்கலாம்.
TRT தமிழ் அலையில் 17.10.2001லும் லண்டன் Timeலும்
监
அதிசயம்
முத்திரையிட்டது உலகில் ஏழு அதிசயம் இத்தரை மீதினில் நடப்பது எண்ணற்ற அதிசயம்
★
வறண்ட உலகில் திரண்ட அன்பு அதிசயம் உருண்டு திரண்ட அழகுக் குழந்தை அதிசயம் மிரண்டு விழிக்கும் உருண்ட கண்கள் அதிசயம் மின்மினி பூச்சியும் மின்னலும் அதிசயம்.

Page 38
72
ഉരയ്കg്ക്
அச்சம் தவிர் அகவிருள் நீக்கு அகண்ட தீபமாகு
நீர் வாங்கிச் சிலிர்க்கும் பசுஞ்செடியாய் மழைமேகம் கண்டு ஆடும் மயிலாய் நீரலை தழுவ நனையும் ஈரமணல் சிலிர்ப்பாய் தென்றல் தழுவும் தேன்மலர் சிலிர்ப்பாய் உண்மை உரைத்தபோது உன் உணர்வு உயிர்க்கவில்லை. ஏன் சிலர்க்கவில்லை? உண்மை எதிர் கொள்ள அச்சநிலையேன்? பொய்மை பூசி மெழுகிடில் தான் மெய்சிலிர்த்து மன மகிழ்வா? உண்மை நிறம் காணும் மன உறுதிபெறு
வண்ணத்துப் பூச்சியாய் சிறகடிக்கும் வளமான மனிதத் திறமையாம் வரம்பெற்ற நிறங்கள் காண்பாய் பச்சை இலைமீது பச்சையாய்ப் பாய்ந்து
பச்சை மாற்றி மண்ணிறமாய் மேய்ந்து
பச்சோந்தியாகி பிறர்மனம் மயக்கும் அச்சமனம் அழித்து அகண்ட தீபமாகு அன்பொளி ஏற்றி அகவிருள் நீக்கு அமிர்த சஞ்சீவியாகி நினைக்கும் தோறும் அன்பைக் கொடுப்பதில் அமுத சுரபியாகு
6,200 TRT தமிழ்அலை, இலண்டன் தமிழ் வானொலி.
监

ിബ്-ക്രിബിയയ്ക് 73
அன்புள்ள சிநேகிதியே வாழ்க!
அன்புள்ள சிநேகிதியே! வாழ்க! நீ! இன்பமள்ள இதோ வழிகளென நீ உன்னதமுள்ள பெண்மைக்கு பல உத்திகள் தென்புடன் தெளிக்கிறாய் தொடர்வாய் நீ!
அங்கம் ஐம்பது இன்றுனக்கு ஐந்நூறாய் மங்களம் பொங்கட்டும் உயர்வுனக்கு சங்கொலி முழங்கு தீபத்தின் ஒளியில் நங்கையர் நிகழ்வு வாழ்க! வளர்க
மூலையில் திறமைகளைப் பொத்திடாது, ஆக்க வேலையிற் காட்டி உயருங்களென்று நிலையினில் உயர களமொன்று தரும் கலை வழியிது, அன்புள்ள சிநேகிதியே
உடைகள் செய்ய நவீன வழிகள் இடை மெலிய யோக வழிகள் தடையற்ற அழகுடன், ஆரோக்கிய வழிகள் விடையென மூலிகை வழிகாட்டல்கள்
உயர்ந்து நிற்கும் பெண்மையனுபவம் துயர் வென்ற துறைகளின் நன்மையனுபவம் அயர்வின்றி உயர அறிமுக ஊக்குவிப்பு அம்மாடி பாருங்களது அன்புள்ள சிநேகிதியே

Page 39
74
മരയ്കg്ക്
விழித்தெழு! பெண்மையே! கேள்வி கேட்டு அழித்திடு உன் அறியாமை இருட்டு களிப்போடு உன் வித்தகம் காட்டு செழிப்பு நிலத்தினில் ஊன்றித் துளிர்த்திடு
இனிய நிகழ்வு அன்புள்ள சிநேகிதியை, கணிய வைக்கும் தொழில் நுட்பம் வாழ்க! குணிய வைக்காத இயக்கம் வாழ்க! கணனி - ஒலி அனைத்தும் வாழ்க!
“தீபம்’ தொலைக்காட்சி ‘அன்புள்ள சிநேகிதியே’யின் 50ஆவது நிகழ்வு வாழ்த்து, 19.10.2005.
监
* தினமாக நச்சரவைக் கேட்கும் இதயம்
சினம் மிகு சச்சரவை அனுபவிக்கும் இதயம்
கனமான தொந்தரவை ஒழித்திட விழையும் மனம் நெஞ்சத்துத் துப்புரவை மிக விரும்பும்.
குழந்தைகள் குழந்தைகளாயிருந்து வளரட்டும் அளந்து தந்த குழந்தைப் பருவத்தை பிளந்து பறிக்காதீர்கள், அவசரமாக வளர்ந்தவராக்கி பாதி வழியில் பறிமுதல் செய்யாதீர்கள்.
இரண்டு சிறந்தே பாதிகள் மனைவி கணவன்
திரண்ட அன்பு ஒரு பாதியில் வரண்டால்
இரண்டாகிப் பாதிப்பாவது நல்ல இல்லறம்தான்.
O6.2.2OO3

வேதா-இனங்காதிகைம் 75
மேற்கு நாடுகளில்.
வெல்லமெனும் நம் தமிழ்
வல்ல தமிழரின் முயற்சியால் இல்லம் தோறும் வாழும்
நல்ல தமிழ் இனிச் சாகாது. மேற்கு நாடுகளில் ஆகாது
மெல்லத் தமிழ் இனிச் சாகாது செல்ல மழலைகள் தமிழ் பேசி
செழிக்க முயற்சிகள் ஏராளம்.
பிறமொழி உயர்வது போல்
பிற நாகரீகம் உயர்வது போல் தேன் மொழி தமிழும் ஈடாக
வான்வரை உயர வழிகாட்டல் தன் மொழி நேசர்கள் காதலுயிர்த்து
நன்மொழியுயர சஞ்சிகை பத்திரிகை வானொலி தொலைக் காட்சிகளாய்த்
தானொலிக்கிறது மேற்கில் தமிழ்.
ஏட்டிக்குப் போட்டியென ஊடகத்தமிழ்
நாட்டுப் புகழ் மணம் விதைக்கிறது
யார் கொடுப்பது முதலென
பேர் எடுத்திட மக்களிடம்
நேர் முகமாகப் போட்டிகள்
வேர் செழித்திடும் நாட்டமுடன்

Page 40
76
മരയ്കgൾക്
மன விதையுள் இறுகிய தமிழ்
போட்டி மழையால் துளிர்க்கிறது.
காற்றலையில் பூம்புனலென கலைகள்
கரை புரள்கிறது பல்சுவைக் கதம்பம் நுரை பொங்கப் பாக்களில் தமிழ்,
உரைகள், செல்லக் கதையில் மழலைகள் நாவிற் தவழ்கிறது அழகுத் தமிழ்
நோக்களை நீவுகிறது, சுந்தரத் தமிழ் காக்கும் முனைவில் ஆரோக்கியமாய்
ஊக்கமாய் வளரட்டும் சுந்தரத் தமிழ்.
5.04.2002 - TRT 56.jp 9,60a).
监
உலகத்திற்கு உருவம் தர திலகமாகத் துலங்கும் கலகமில்லாத் தாயொரு விலகிட முடியா உறவு நூலகமான தாயினர் மேலானவர்.
O3.05.2005

ിബ്-ക്രിബങ്കശ്ശിയ്ക് 77
மன்னராலும் கரையிட முடியாத.
மனம் நெகிழ்ந்த போதும் மனம் மகிழ்ந்த போதும் மனம் குலைந்த போதும் மனம் அனாதரவான போதும் மனம் கனத்த போதும் மணித் துளியாகத் துளிர்க்கும் மனம் பின்னர் இலேசாகும் மாய மந்திரமானதும் கண்ணீர்
வல்லின மனதையும் கரைக்கும் நல்லின மனதையும் சாய்க்கும் விழியின் கரையுடைத்து, சமயத்தில் வழியும் வெள்ளப் பெருக்கு விழி வெண்படலம் உருக வழியும் உயர் பனித்துளி விழிச்சிப்பி விரிந்து கணத்தில் வழியும் முத்துகள் கண்ணிர்
கண்களில் பளபளக்கும் அபிசேகக் கனகத்துளி, வெந்நீர் திரையிட்டால் மன்னராலும் கரையிட முடியாது தேசியச் சாரல் கண்ணிர் - சமயத்தில் தந்திர உபாயக் கருவி

Page 41
78
മഞ്ഞുീഴ്വgർക്
தூசி விழுந்தாலும் இது ஓர் ஆசி பெற்ற பொது நீர் அரிய உயிரை அரிக்கும் நீர்
உப்புக் கரிக்கும் கண்ணிர் உழைப்பாளி, பணக்காரன், ஏழை இந்து, கிறிஸ்து, இஸ்லாம் கிறுக்கன் மேதையென எண்ணாதது சம்பந்தன் கண்ணிருக்குப் பாலமுதை சர்வேசுவரி ஊட்டினாள் அன்று வானத்துக் கண்ணிர் மழையில் வளமாகிறது பூவுலகின் செழிப்பு
வேப்ப மரத்துக் கண்ணிர் அப்புதலுக்கு ஒரு பிசின் இறப்பர் மரத்துக் கண்ணில் இராச்சியப் பொருளாதாரம் உயர்வு மனிதக் கண்ணின் சாதனையன்றி மரத்துக் கண்ணிரும் உயர்வுதான்! கண்ணிர் வடிக்கும் துன்பத்தால் கட்டுடலே தளர்கிறான் மனிதன்!
23.3.2003இல் TRT தமிழ் அலையில் 2 தடவை. ஐப்பசி 2006, வார்ப்பு, கொமிலும்.
监

ിബ7-ക്രിബിയയ്ക് 79
பாரதி மீசையை முறுக்கினான்
பசுந்தமிழில் பாட்டெழுதி பசியாறும் திட்டமுடன் தேசுறு தீந்தமிழ்ச் சோலைக் குளுமையின் வண்டமிழ் அழகு மாந்திட எண்ணினேன் பண்டைத் தமிழ்ப் பண்ணைப் படலைத் திறந்தேன்
மதுகை கொண்டு மணிக் கவிதை பின்ன எதுகை மலர்கள், மோனை மொட்டுகள் சீர்கள், தளைகள் ஆர்வமாய்க் கண்டேன் ஆசையாய்த் தொடுத்தேன், ஆனந்தமடைந்தேன்
இதமான கவிதைகள் எழுதி எழுதி மழையான தமிழில் தெப்பமாய் நனைந்தேன் பனுவல்கள் தாலாட்டில் பையத் தூங்கினேன் பாரதி, கம்பன், ஒளவை என் கனவில்
பாடம் தருவதாய் அமர்ந்தனர் ஊஞ்சலில் கூடம் முழுதும் தமிழ் வாசனையில் பாடலில் தர்க்கம் ஊதுபத்திப் புகையில் ஊடலைத் தொடங்கினர் கம்பனும் ஒளவையும்
எழுந்தான் பாரதி, ‘கேளடா மானிடா! எம்மில் கீழோர் மேலோர் இல்லையென்று, எடுப்பாய் மீசையை முறுக்கினான், பட்டென்று, ஊஞ்சல் அறுந்தது. நான் விழித்தேன் சட்டென்று.
9.10.2005 - TRT தமிழ் அலை வானொலி, கவிதைச் சோலை. 25.7.2004 - இலண்டன் தமிழ் வானொலி.
监

Page 42
മരയ്കമഴുക്
பூவரசுக்கு வாழ்த்து
பூவரசு நாவரசுகளின் தரிப்பிடம் பூவரசு தமிழ்ச் சோலை இலக்கியம் பூத்திட்ட பதினான்கு அகவையில் பார்த்தேன் அருமருந்தன்ன தமிழ்மரம் ஊன் நெகிழ்ந்தது ரசனையில் நான் மகிழ்ந்தேன் உண்மையில் தேன்புகழ் தமிழ் இலக்கியம் வான்தொட புலத்தில் உயரட்டும் தேன்மொழித் தமிழ் செழித்திட கூன்விழாத் தமிழ் நிலைத்திட தன்னலமற்ற சேவை மனம் நிலைத்திட என்றும் வாழ்க நிலைத்து உயர்க
监
சுனாமி. நிலை
நிலையாமை வாழ்வில் நிலைபேறு வேண்டி இவ்வுலகின் நிலைபாட்டை நிலைநிறுத்த எண்ணும் நிலையான மனநிலையை நிலைகுலையச் செய்த சாகரப் பெருக்கு மனித வாழ்வை மனித நிலையை மட்டுமா? கதவு நிலை - வீட்டு நிலைகளையும் புரட்டித் தள்ளியுள்ளது.
29.2.2004

ിമ്ന-ക്രിബ്രസ്ത്രിയമ് 81
தரம்
வண்டு எந்தத் தரம்கொண்டு தேன் அளந்தது, வானம் எந்தத் தரம் கொண்டு
Dങ്ങg Bág, குழந்தை எந்தத் தரம்கண்டு மனிதனானது குயில் எந்தத் தரம்கண்டு இசை சிந்தியது. மனிதன் மட்டும் தரமென்று மாய்ந்து கொள்கிறான் மயங்கிநின்று வந்தபாதை மறந்து நிற்கிறான் தரம் என்று இவன் பாதை இடறியிருந்தால் சிரம் நிமிர்ந்து சட்டைக் கழுத்தை நிமிர்த்தியிருப்பானா?
வைகாசி - ஆனி 2004 - பூவரசு இனிய தமிழ் ஏடு, ஜெர்மனி.
些

Page 43
82 മരയ്യര 2 basair
கல்யாணத்தை எழுது
ஆண் : தூக்குச் சட்டியோட தூரமா வாற பெண்ணே - என் வாக்கு மாறுதடி உன் வாலிப வாசனையில் காலடி அசைவிலே என் கருத்தும் அசையுதடி கணுக்கால் அசைவை என் கண்கள் மேயுதடி வயலுகரை யோரம் வைக்கின்ற உன் பாதம் இக்கிரி முள்ளாலே படும் இடைஞ்சலை நினைக்குதடி தொட்டாற் சிணுங்கியும் உன் பட்டுப் பாதத்தைக் குத்திப் பார்க்குமே என் சொத்தே செண்பகமே!
பெண் :
காதல் வெறியாலே வரும் கன்னாபின்னா மொழி காலம் முழுதும் என்னைக் காக்குமா சொல்லு மச்சான்! எத்தனை பெண்களின் இல்லறப் பாதையது சொத்தையாய்ப் போன கதை சொல்லிக் கேட்டேனய்யா! உன் சிலுமிசப் பார்வையிலே சிறிது மயங்கினாலும் உன் வலிய கரத்திலே நான் வளைந்திட மாட்டேனய்யா! கண்டதும் காதலென்று கண் மயங்க மாட்டேன் மச்சான்! கடதாசியில் எம் கல்யாணத்தைக் கணக்காகக் காட்டு மச்சான்!
25.05.2004 - இலண்டன் தமிழ் வானொலியில் திரு. யோகேஸ் தேவா நிகழ்வில்.
些

வேதா-இாைங்காதிகைம் 83
மொசப்பத்தேமியா நாகரிக உயர்வு
மொசப்பத் தேமியா பிறந்தகம். அசத்தும் நாகரிகம் ஆரம்பம் கசப்பின்றி வளர்ந்த நாகரிகம் பதித்தது பல உயர் படிகள் நதிக்கரையின் முதல் நாகரிகம் மிதிக்கிறது இன்று பல உயிர்கள் மனநோய் பீடித்த தலைமைகள் தினம் நோய் கொண்டு அலைவுகள்
நாகரிக வளர்ச்சியால் மனிதங்களை ஆக்கிரமித்தது சுயதாகங்கள் பொன் பொருள் மண்ணாசைகள் விண்ணுயர்ந்த பேராசைகள் விஞ்ஞான வளர்ச்சி - சுழலும் வாழ்வில் ஆயுதஞானம் பெருகி, ஆரம்ப நிலைக்கு மெஞ்ஞானம் அழிந்து மனிதன் கற்கால மனிதனாய் மாறுகிறான்
மிருகம் ஒன்றை ஒன்று அழிப்பதாய் மனிதனும் இன்று அதே நிலையாய் சிறுமை நிலை ஐந்தறிவுகளாய் பெருமையென வியக்கும் ஆறறிவு

Page 44
മരയ്കgർക്
மொசப்பத்தேயாவெனும் ஈராக்கை வசப்படுத்த வஞ்சின ஆக்கைகள் கண்டம் விட்டுக் கண்டம் கடந்து பிண்டமாக்கி மனித உயிர் துண்டம்
இரத்தம் - சதை - மிருகத்தனம் இரக்கமற்ற இரும்பு மனம் உயிர் - உடமை யுத்த அழிப்பு வைரமனங்களின் வன்முறை எடுப்பு யுத்த நோயில் மனித உயிர் விலைகள் மொத்த சனங்களைப் பித்தராக்கி மங்குவதேன் ஒருபுறம் மனிதம் எங்கு நாம் செல்கிறோம்!
28.3.2003 - இலண்டன் தமிழ் வானொலி. 21.12.2004 TRT தமிழ் அலை.
监
மெய்ப்பொருள்
உண்மை பேசுவது மெய்ப்பொருள் நன்மை செய்வது மெய்ப்பொருள் இறைசிந்தனை மெய்ப்பொருள் குறை தீர்ப்பது மெய்ப்பொருள் நல்ல சிந்தனை மெய்ப்பொருள் வல்ல இறைஅருள் மெய்ப்பொருள்.
0.07.04

ിത്ര7-@ബിയുള് 85
ஆராதனைத் தாமரை
தாரணி மலர்களில் தாரகை தண்ணெனும் அழகு, செழுமை தகுதியாம் அடக்கம், புனிதமுடை தாமரை மலர் தெய்வீகம் தடாகச் சேற்றில் மலரும் தண்ணிர் உயரத் தானுயரும் தற்காலம், ஆதி காலமாய் தரையிற் புகழுடை தாமரை
ஐந்தாயிரம் ஆண்டுப் பழையது ஐங்கணை என்றும் பெயராம் செந்தாமரை பெயர் கமலா இளஞ்சிவப்பு மலர் பத்மா நீலத் தாமரை நீலோற்பலம் வெண்மைத் தாமரை புண்டரீகா வெய்யோன் கண்டு மலர்ந்து வெய்யில் மறைய வாடும்
ஆத்மிக வாழ்விலும் உயரிடம். இதயம் ஒப்புவமை தாமரைக்கு இலைத்தண்டு விளக்கின் திரி
இலையோ உணவுத் தட்டு

Page 45
E.
ஐஈர்ஷர்துக்கன்
இசைந்த உணவு கிழங்கு வேர் இழைத்தனர் ஆடை நாரிலும் B.I.G|ETT Í GHLOÍTHE SHLIGIOSITIEFECTIT கடவுளர் கரங்களில் ஏந்தினர்
புத்தன் காலடியில் மலர்ந்தது புராணக் கதைகளில் இனைந்தது புத்தம், இந்துசமய அடையாளம் பூவின் அடிப்பகம் பரிசுத்தம் பிரிய உணவு யானைக்கு பாரசீகக் கலைகளில் பாவனை சரித்திரம், இலக்கியம், சமயங்கள் சிற்பக்கலை கையாண்ட தாமரை.
-y&33-l.l ii7 – ČÜtl.
காலம்
யாருக்காகவும் காத்திருக்காது சுழல்வது காலம் முற்கால முனிவர்கள் அறிவார்கள் முக்காலம் பயிர்செய்கைக்கு காத்திருப்பது தகுந்த காலம் இதமின்றித் துன்பம் தரும் பணிக்காலம் இதயத்துப் புண் ஆற்றும் இடைவெளிக்காலம் நீங்கள் கேட்க நான் வாசிக்கும் கவிதைக் காலமிது.
ե, Ամ

வேதா-இனங்காதிலகம் 87
நெஞ்சம் மறக்குமா!
பார்வை தழுவும் தூரம் வரை
ஈர்க்கும் மரகதப் பச்சை போர்வையான எழிற் கம்பளமாய்
நேர்த்தியான தேயிலைச் செடிகள் மலையின் மடிப்புகள், முகடுகளில்
மலைப்பாம்பெனப் பாதைகள் மனிதர்கள் முதுகில் கூடைகள்,
வனிதமான நிபுச்செட்டல் தோட்டத்தில்
மஞ்சு தவழும் தேயிலைச் செடிகளில்
தஞ்சமான பஞ்சுப் பனிப்படல வலைகள் " அஞ்சி உருகி வடியும் பணி நீர்
அஞ்சலித்து நனைக்கும் பூமியை அதிகாலையில் அட்டைகள் குதூகலித்துத் தொழிலாளர் பாதங்களில்
ஒட்டி இரத்தம் தடித்து விழும் பட்டுச் சவர்க்கால நுரையைப் பூசி
எட்டி அடி வைப்பார் ஏழைத் தொழிலாளர்
முந்நூறு தொழிலாளர் தடும்பத்தோடு, நாட்டின்
மூலவள இரைப்பையில் ஒரு கணையமாய் தேயிலை, இறப்பர் பயிரிட்டுப் பாதுகாத்தார்
தேட்டமான பலன் கொடுத்தார் என்னவர் தொழிற் தரம் பிரித்துத் தொழிலாளரை
தொததி வாரியாய்த் தொழிலுக்கு அனுப்புவார் தலைவன், தொண்டன், தோழனான வாழ்புை,
கலை கொஞ்சும் களுகங்கை நதியோரம்,

Page 46
தேயிலைச் செடியூடு சுறுசுறுப்பான மேற்பார்வை தேயிலைச் செடிகளின் வளர்ச்சியும் நோயும்
தொழிலாளர் தேய்வும், உணர்வும் இவரறிவார் சின்ன லீடெமது உயர் மலையில்
என்ன ஒரு குதூகலமான வாழ்வது சின்ன உலகமாய் முந்நூறு தோழிலாளர்,
பின்னிடும் சுகமும் துக்கமும் எம்முடன்
பதினேழு வருடம் தேயிலை றப்பர் தோட்டத்தில்
பதிவான வாழ்வது பசுமைக் காலம் மதிப்புடன் கனவில் திரும்பத் திரும்ப
குதித்து வருகிறது நெஞ்சம் மறப்பதில்லை மாவட்டம் களுத்துறையிலெம் இளமைத் தாம்பத்தியம்
மனமாலையுடன் ஆரம்பம், தேனில் தோய்ந்தது மழலைகள், சமூகம், உயர்வாழ்வுத் தரம்
கோன்னத பதில்
6.11.2008இல் இலண்டன் தமிழ் பெனொலியில் 3 கவிதைகளோம்.
些
 

நேதர-இனங்காதிலகர் 89
மறுமலர்ச்சி
இருமணம் இணையும் ஒருவழி யாகம் இருமனம் சேரும் திருமண யோகம் பிணையா இருமனம் திருமணப் பெயரில் இணையாதொரு வழி ஏகல் நோதல் ஆதிக்க நாயகனின் ஆதிக்க நினைவால் சாதிக்கும் நாயகியை அழுத்தும் நினைவால் பாதிக்கும் இல்லறம் - நீதியில் பேதம் மோதிப் புழுங்குதல் - மிதித்தல் சேதம்
அன்பின் கசிவு ஆங்காரமாகி - ஆதிக்கம் வன்முறைப் புற்றுநோயானால், பாதிக்கும் மென்மனம் கண்ணாடியன்றோ - சோதிக்தம் எண்ணமேன்? வேதனை அழிக்கும் ஆரோக்கியம் தனக்குள் கலங்கும் வெறுப்பான வாழ்வு தனக்கே சேதம் - பொருமுதல் தேய்வு வாழ்வு வளமான வழிமுறைத் தெரிவு தாழ்வ வழியேதம் மனக்காப்பு உயர்வு
தாலிக்குள் தாம்பத்தியத்தை முடிச்சிட்ட மூத்தோரே தாலியால் வாழ்க்கையே தடுமாறல் நியாயமா? ஒருவனுக்கு ஒருத்தியென்று ஒடுங்கியே வாழ்வதா? இருவேறு பாதையாய் திசைமாறல் மறுமலர்ச்சி திருவினை பெற்றிட திட்பமான வழிமுறை திருமண விலக்கு திருப்தியான செயல்முறை திருப்பம் நிகழ திடமான வழிமுறை தித்திக்கும் வாழ்வின் மறுமலர்ச்சித் திறவுகோல்.
8.5.30) - இந்திய "உறவு' சஞ்சீன கபில் தரம்37ல் சிவம் அறக்கட் 1ை3ரயின் கவிதைப் போட்டியில் இரண்.ாம் இடம் பெற்ற கவிதை,

Page 47
90 മരയ്കgർക്
எதிர்பார்ப்பு
உத்தமப் பண்பு உயர் எண்ணம் கொண்டு
சத்தியம் அன்பு சமதர்மம் கண்டு
ஒத்த கருத்துடன் ஒன்றாக நாமும்
புத்துணர்வோடு தமிழ் புதுவருடம் காண்போம்
பிரமாதிவருட அனுபவ முதிர்ச்சியில்
விக்கிரம வருட வெற்றிகள் காண்போம்
தெள்ளு தமிழில் கொடி பிடித்த
வள்ளுவன் பாரதி ஒளவை வடித்த
வெள்ளி மணித் தமிழ்த் துளிகள்
அள்ளி விதைத்த தமிழ் வயலில்
துள்ளிக் குதித்து சிறுமையலில்
அள்ளிக் கொத்தும் சிறுகுருவிநான்
இனம் கண்டுணர்ந்த இதமான வார்த்தைகள்
மனம் திறந்து பேசுவதால் கஷ்டமில்லை
தினம் கலந்து பழகுவதால் நஷ்டமில்லை
கனம் விலகி நெஞ்சில் கருணை விரியும்
மனம் பஞ்சாகி நெஞ்சில் பூ மலரும்
தனம் இது வாழ்வு பூ மஞ்சமாகும்

வேதா-இனங்காதிகைம் 91
‘அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணிரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை செவ்விது வள்ளுவன் செப்பியது
அகங்காரம் கொண்ட அநியாய நெஞ்சம் அக்கிரமம் செய்யும் அன்பில்லா நெஞ்சம்
அழவைக்கும் கண்ணிர் அக்கினியாகும் ஏமாற்ற எண்ணி ஏளனம் செய்தால்
ஏதம் விலகாது அமைதி அழிந்துவிடும்
பணமில்லா வறுமை கொடிது கொடிது
மனம் வறுமையடைதல் மகா கொடிது
இன்பம் எண்ணி நன்மை செய்தால்
துன்பம் விலகி அமைதி பெருகும்
அன்பும் அருளும் இணைந்து நிறையும்
அல்லல் இல்லா வாழ்வு அமையும்
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பக்கம்
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவம்
ஒவ்வொருவர் வாழ்வும் ஒரு புதுக் கவிதை
ஒவ்வொரு விதமான புது அரங்கேற்றம்
தமிழ்ப் புதுவருடப் பக்கம் பார்ப்போம்
அமிழ்தினும் இனிய அனுபவம் கோர்ப்போம்.
11.5.2000 - une கற்பகம் இதழில் வந்தது.
屿

Page 48
92 മരയ്ക്ക്
திருமண வாழ்த்துச் செண்டு
சிவப்பழகாய் முகிழ்ந்த காதல், திருமண அழகு
மழலைகள் அழகுகண்டு
மூன்று பத்து ஏழின் திருமணநாளின்
சொல் அலங்கார வளைவில்
மலர்கள் கையில் ஏந்தி மகிழ்ந்து
அவன் கரங்களில் சமர்ப்பிக்கும்
கவிதைச் செண்டு எதுகையும்
மோனையும் உண்டோ, சந்தங்கள்
சொந்தம் கொள்கிறதோ - இலக்கியமெனும்
ஆணிப்பொன் தமிழ்
ஆராதனையில் அவனை வாழ்த்துகிறாள்
தொட்டால் சுருங்கும் மலராக இன்றி பட்டால் உடையும் நீர்க்குமிழாக இன்றி நட்டாலும் வளராத மரமாக இன்றி சொட்டாக என்னுள் தேன் துளியாக நின்று
 

வேதா-இனங்காதிகுைம் 93
பட்டாக என்னோடிசைத்த பசுந்தான ஆரோகணத்திற்கு மொட்டாகி மலரான கவிதைச் செண்டு சமர்ப்பணம்.
ஆடியில் மறவாத நாள் பிறப்பு கூடியது இறைக்கு நன்றித் தெளிப்பு இயற்கையின் பிணைப்பில் இசைந்த இணைப்பு செயற்கைகள் ஏதும் புகுந்திடாச் சிறப்பு இசைந்து என்னோடு நடந்தாய் நன்றி அசைந்த அன்பு ஆதரவுக்கு நன்றி
அன்பெனும் போதை வஸ்து ஊட்டி என்னை அகமெனும் இல்லறத்தில் சிறை வைத்தவனே! இன்னும் அனுபவங்கள் வாழ்வோடு நீளட்டும் உன்னோடு வாழும் காலங்கள் நீளட்டும் இலக்கண ஆடம்பரங்களின் அலங்காரமின்று இலகு மொழியில் சிறு கவி வாழ்த்தொன்று
ஆக்கமிகு ஆரோக்கியம் - ஊக்கமிகு நிம்மதி ஏக்கத்தில் மனம் வாடா வெகுமதி தாக்கத்தை மனம் தாங்கும் நெஞ்சுறுதி காக்கும் கடவுள் எம்மை வாழ்த்தட்டும் நோக்கம் நிறைவேற நூறுதடவை வாழ்த்தட்டும் பூக்கும் இன்பங்கள் நீளட்டும் நிலைக்கட்டும்.
18.7.2004 - இலண்டன் தமிழ் வானொலி.
监

Page 49
ജീഴുgൾക്
QIII. 6III. GOG
ஒரு சொல்லுக்குப் பல கருத்துகள் உண்டு. நான் எடுத்த கருத்துகள் இவை வா! தை மகளே)
ഖ. ഖ. ഞg|
தா. தா. தை தீ. தா. தை பா.தா.தை கா.தா.தை மா.தா.தை கோ.தா.தை
பூ.தா.தை
நீ.கோ.தை
நீ.சீ. தை நீ.தூ.தை f...LDIT.605. நீ.பூ.தை நே.தா.தை நா.கா.தை ഖ.ഖ.ങ്ങgl
வா! தை மகளே) தா தா தை மகளே (அறிவு - ஞானம் தருவாயாகி (பாட்டு தருவாயாகி (பாதுகாப்புத் தருவாயாகி பொலிவு தருவாயாகி பெருமை தருவாயாகி (மலர் போன்ற உருவம் தருவாயாகி
(மாதங்களில் முதல் தை என்பதால்
நீ அரசி) (நீ இலக்குமியானவள்) (நீ தூய்மையானவள்) (நீ அழகானவள், செல்வமானவள்) (நீ பொலிவானவள்) (அன்பு தருவாயாகி நாவை காப்பாயாக
நீ வருக! வருக)

வேதா-இனங்காதிகைம் 95
(வேறு)
தை. தை. எனத் தைமகள் வந்தாள் தரணியில் நாம் மகிழ தைமகள் வந்தாள் தரணியில் உழவர்கள் தம் மகிழ்வை தகவுடன் வெளிப்பாடு காட்டும் நிகழ்வை தைப் பொங்கல் நாமம் சூட்டிய நாள் வையகம் கொண்டாடும் தமிழர் திருநாள்
பகையினை விதைத்து பகுதி வகுத்து பங்கு போடும் மனநிலை எரித்து பாங்காக நமது பண்பினை வளர்த்து பக்குவமாய் நம் திறமையை விரித்து பகிர்வோம் நம் அன்பைத் தொகுத்து பங்கிடுவோம் தித்திப்புப் பொங்கலைச் சிரித்து
30.01.2003, 14.01.2002
துதித்தென்ன
பூமாலை, புகழ்மாலை, காமாலைக் கண்ணாக்கினால், பாமாலை
படித்தென்ன பரமனைத் துதித்தென்ன.

Page 50
96 2ஈர்ஷegக்கன்
மைவிழிப் பெண்கள்
IDIQI6 (8gr?
தையலர் மெல்லியர் என்பதாலோ சிலர் தைரியம் கொண்டு முன் வருவதில்லை! தையலர் தினங்கள் பலவந்துமென்ன! கையினைத்துச் சேரும் ஆண்களிடம் கைகட்டி அடிமையாகி உரிமையிழக்கும் மைவிழிப் பெண்கள் மாறுவரோ?
அமுதுபடைக்க ஆதரவூட்ட பெண்கள் அலங்காரத் தேராக அழகுத் தேவதையாக பெண்கள் குழந்தைகள் பெருக்க குடும்பம் பேணிடவென்று மூளைச்சலவையது முன்னோர் வழியிது அன்று வேலையைப் பகிர்ந்து மகிழும் வேளையின்று வாழையடி வழமைகள் மாறும் காலமின்று
உலக சிம்மாசனத்தின் நவரத்தினங்கள் பெண்கள் உங்கள் கருத்தை உமிழ்ந்து ஒளிருங்கள் மலரிதழ் பிரியுங்கள் மெளனத்திரை விலக்குங்கள் மன்றத்தில் இலட்சிய வேட்கையுடன் திகழுங்கள் தையலர் தினங்கள் வந்துபோகட்டும் - எம் மைவிழிப் பெண்கள் மாறுவரோ!
8.03.2001 - TRTதமிழ் அலையில் ரதினி கோபாலசிங்கம். சிறு சஞ்சிகை - ‘இனிய நந்தவனத்திலும்.
监
 

வேதா-இனங்காதிகைம் 97
அது பாரும். அந்தக் காலம்
அச்சடித்த சித்திரமாய் இருந்தவள் பெண் அச்சத்தில் தாம்பூலம் மடித்தவள் பெண் பொதுவாக பெண்ணை அடிமையாக்கிய காலம் மதுவாகப் பெண்ணை மதித்திட்ட சீலம் இதுவன்றோ! அது பாரும் அந்தக்காலம் அது மாறிவரும். காலம். இந்தக் காலம்
அறிவு கொண்ட பெண்ணையன்று அடிமையாக்க முயன்றது கொன்று சுதந்திரப் பெண்ணவளாகிட முயன்று சுவடு பதிக்கிறாள் இன்று சுழன்று சுமையான சம்பிரதாயம் கொன்று சுகந்தம் வீசுதல் சுலபமன்று
எடுப்பார் கைப்பிள்ளை இல்லையவள் அடுப்பூதுவது மட்டுமன்று. அவள் தொடுப்பாள் பல கேள்விக் கணைகள் தொழில் பலபுரிந்து வழி காண்கிறாள் இழிவற்ற வழியென சுயமாக அவள் விழிப்போடு கல்வி வழியேகிறாள்
துன்பம் சூழ தலைகவிழ்ந்த பெண்ணவள் துன்பம் - அதுபாரும் அந்தக் காலம் ஆண் பெண் நிகரென அறிவாகக் கூறி நாணம் விட்டு ஞானம் பேணியவள் புதுமைப் பெண்ணாய் தலை நிமிர்கிறாள் இது பாரும் இந்தக் காலம்
14.10.2002 - TRT-Londontime.
屿

Page 51
98
മരയ്ക0 gൾക്
புதுப்புது அர்த்தங்கள்
தன் திறனை அறியாது வாழ்தல் தகவு நிலையைத் தவிர்த்து வாழ்தல் தன் மானச் சறுக்கல் பெண்ணே! தகுதி அறிந்து விழித்திடு பெண்ணே! மதிப்புடை வாழ்வு காண்பாய் புதுப்புது அர்த்தங்கள் காண்பாய்
பொதுவாக கணவன் சிறகுக்குள்ளே புதுக்கோழிக் குஞ்சாக அன்புச் சூட்டினுள்ளே பதுங்கிச் சுகம் பேணும் அன்புப் பொதியாய் புதைந்து வாழும் பேதையாக வேண்டாம் சிதைந்திடும் உன் சுயத்தை நிலை நிறுத்து எழுந்திடும் புதுப்புது அர்த்தங்கள் உணர்வாய்
கணவன் கழுத்துமாலைப் பதக்கமாக - உன் கருத்தான வாழ்வு களப்பலியாவதேன்? அன்பென்ற சொல்லில் உனை அடக்கியாளும் மென்முறை ஆதிக்கத் தட ஆழம் கண்டுகொள் யதார்த்தம் உணர்வாய் என்றும் புதுப்புது அர்த்தங்கள் காண்பாய்
சமையலறைக்குள் உன் உலகே சமைவதல்ல சுதந்திரப் பெண்ணே! சுமையாக வாழ்வைச் சுமப்பதல்ல - நீ சுதந்திரம் தொலைத்த பதுமையல்ல - நீ அமைவாக உன் வாழ்வை ஆக்கிடு - நீ புதுப்புது அர்த்தங்கள் காண்பாய்
9.05.2003 - இலண்டன் தமிழ் வானொலி.
监

வேதா-இனங்காதிகைம் 99
அறிந்து கூறினான் பாரதி அன்று
‘.ஆணும் பெண்ணும் நிகரெனக் கொண்டால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்குமாம்.” அறிந்து பாரதி அன்று கூறினான் புரிந்து வாழ்வதெம் கடன் என்பேன் மறந்து நாமிதை மதிக்காத தாழ்வு சிறந்த வாழ்வல்ல சிக்கல்களின் சூழ்வு பெண்களை அடக்கும் ஆண்மையும் வேண்டாம் ஆண்களை அடக்கும் பெண்மையும் வேண்டாம் பெண்ணும் ஆணுமிரு கண்ணெனக் கொண்டால் கண்ணொன்று இழக்கும் புன்மையும் வேண்டாம் பெண்ணை மடக்கும் உள்ளத்தின் பேதமை எண்ணத்து இடறல் துடைத்தல் உரிமை வன்முறை வண்ணங்கள் யாருக்கும் சிறுமை நன்முறை வாழ்வை வகுத்தல் பெருமை உன்னத மாற்றங்கள் உலகினில் தெளிப்பு முன்னேற்ற முறையில் முன்னோக்கல் சிறப்பு பெண் தன்னை மாற்றால் புதுமை விருப்பு மண்ணேற்கும் வகையில் வாழ்தல் பொறுப்பு
பங்குனி - சித்திரை, மண் இதழ் 2004
இலண்டன் தமிழ் வானொலி. TRT தமிழ் அலை.
监

Page 52
100
ജീഴ്വgർക്
எப்படிச் சொல்ல!
சாதிக்கும் பெண்ணின் கருத்துகள்
பாதிக்கும் உண்மைச் சிறப்புகள் எத்திக்கும் எதிரொலித்து நிலைக்கட்டும்
தித்திக்கும் விளைவுகள் முளைக்கட்டும் மதிக்கும் பெண்மைகளை அழுக்கென
மிதிக்கும் விதிகள் அழியட்டும் மிதிக்கட்டும் பெண்மை மேலேறட்டும்
பதிக்கட்டும் நற்சாதனைப் பெயர்கள்
கண்ணாடிக்குள் சிறைப்பட்ட மீன்களாய்
கண்கவரும் மனவலிமைப் பெண்களின் மறைத்திடக் கூடாத திறமைகள்
உறைந்திடாது உயரட்டும் உலகில் எத்தனை சோகங்கள் வாழ்வில்
அத்தனையும் பெண்ணுக்காய் உலகில் குத்தகைக்குக் குவிந்து கிடப்பதை
மொத்தமாய் எப்படிச் சொல்ல!
4.03.04 செம்பருத்தி மலேசிய சஞ்சிகை. இலண்டன் தமிழ் வானொலி.
监

வேதா-இனங்காதிலகம் 101
மலரோடு திலகம்
இது. என்ன!. யார் சொன்னது பெண்ணே!
இது நீயாகக் கொண்ட விலங்கு கண்ணே
என் சொந்தம் உனக்குத் தாய் தந்ததென்று
தொன்று தொட்டு தன் பந்தம் உன்னோடென்று
இன்று எதற்கிந்தத் துறவு விலங்கென்று
இன்று மலர்கள் உனைப் பார்த்துச் சிரிக்கிறது!
அன்னை உனக்கன்று திருஷ்டித் திலகமிட்டாள்
பின்னை நீ மலர் சூடிக் காஞ்சிப் பட்டணிந்தாய்
பழகிய திலகமதை நீ தூர விலக்கினாய்
அழகிய மலர்களை நீயன்றோ தள்ளினாய்!
சுய யாக அவிப்பாகம் இவையாக்கினாய்
தியாகத் தீவிரவாதியாகி நீ துவள்கிறாய்!
அற்றைச் சில பழக்க விதிக் கோடுகள்
இற்றைக்குப் பொருந்தாச் சமச் சீரற்ற அழுக்குகள்
கால மாற்றம், உயரறிவுடையாய் கணவனை இழந்திடினும்
சாலப் பொருந்தும் நெறி கடைப் பிடிக்கலாம்
கோலம் சீர்செய்து அழுக்குகள் துடைக்கலாம்
மலரோடு திலகமிட்டு நீ மங்கலப் பெண்ணாகலாம்
12.07.04 இலண்டன் தமிழ் வானொலி. 14.8.05 ஊடறு இணையதளம்.
屿

Page 53
102
മരgO gർക്
தடம் தீட்டு
கண்களில் அறிவை விரி பெண்ணே! கண்ணுள் பயத்தை ஒழி பெண்ணே! காலடிப் பதிவில் உரம் காட்டு நேரடி எடுத்துத் தடம் தீட்டு
இல்லறப் பணிமனைக் கந்தோரின் இயக்குனர் நீ தான், அடிமையல்ல! நயக்கும் சேவை வீட்டினுள்ளும், மெல்ல நானிலமெங்கும் நகர்த்திடு, வெல்ல
கண் அவன் கைகளில் அகப்பட்ட பெண் எனும் சித்திரப் பாவையாகாது வன்முறை வாழ்நாட் கைதியாகாது கண்களைத் திறந்திடு காவியம் படைத்திடு
முகிலிற்குள்ளும் நுழைகிறாள், விழித்திடு அகிலத்தை ஆய்வு செய், அகத்திணையோடு முகிழும் ஞான விரியலில் நம்பிடும் மூட நம்பிக்கைக் கருமுகிலைத் தீய்த்திடு
6.3.05 இலண்டன் தமிழ் வானொலி. 6.1.06 ஊடறு இணையத்தளம்.

வேதா-இனங்காதிகைம் 103
செண்பக மலர்மாது
சேலை சுற்றும் செண்பகமலர் மாது
மூலையில் முடங்கி முகமேன் சுருங்குவது
வேலைக்குச் சென்று வேதனம் பெறலாம்
சோலை வனம் புகும் புத்துணர்வு பெறலாம்
காலைப் புத்துணர்வு சமூகஉறவாடலில் பெறலாம்
மாலை சூடிடலாம் தன்னம்பிக்கை மலர்களால்
படிதாண்டாப் பெண்மை பழமைக்காலம்
குடிகளின் கொள்கையது அற்றைக்காலம்
முடிகடும் பெண்மையின்று நவீனகாலம்
அடிகள் தொடரலாம் அன்புச் சிறகுவிரித்தபடி
படிகள் ஏறி சிகரம் தொட்டிடலாம்
கொடிகள் தூக்கலாம் கொள்கை வெல்லலாம்
நிறைந்த பூவுலகில் சிறந்தவொரு தகைமை
குறைவின்றிக் குடியுயர்த்தும் சித்திரப் பெண்மை
நறையான அறிவை மனதினில் நடுகை
இறைநிலை உயர்வை அறிவால் உயர்த்துகை
உறைநிலை மடைமையை உடைக்க முயல்கை
கறையிலாப் பெண்மையின் களநிலைப் பெருமை.
8.3.05
监

Page 54
4. ஜுர்ஷர்துக்கள்
விஞ்சும் பாரதிப் பெண்ணாக.
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் பார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்தம் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம்.” வெம்மையாய்க் கூறினான் பாரதி அன்று தம்Iை) மாற்றிடாச் சில பெண்களும் இன்று
இருவர் கையினையும் திருமணத்தில் பெண்மை ஒருவராய் அல்லலுறும் கதைகள் பன்மை கருறுைக்கும் வஞ்சமுடை ஆண்கள் எண்ணமதை உருவாக்கி உயர்த்திட கனைக்கின்ற பெண்மை கருவிழி கண்கrரில் நீந்திரும் வேளை கருத்தாவின் கருணையும் சேராத காலை
கடந்த கால கடின மூளைச் சலவை படிந்து கிடந்து பெண்ணின் சுயங்களை கடிந்து கண்ணாம்பூச்சி ஆடி வதைக்கிறது ஒடிந்து மூலையில் அடைந்து கிடக்காது முட்டையால் வெளியேறி முழு ஞாலத்தையே சேட்டையை விரித்துப் பார்த்திடு பெண்னே
அஞ்சும் நெஞ்சை அடியோடு வெல் நேஞ்சுரம் கொண்ட அஞ்சுகமாய் நில் கொஞ்சம் அறிவினை தேடிக் கல் மிஞ்சும் திறனுடன் தொடர்ந்து செல் Iஞ்சுப் பெகர்னனைாய் உயர்வதாய்ச் சொல் விஞ்சும் பாரதிப் பேண்ணாக நில்.
- TRT தரீழ் அ71, இர:ண்டர் ې'; f::{; ب{ې ،Tاكاتب. په فات.
Martl12004 "இ&fப தந்த ப்ர்ை' சஞ்சின.க.
鉴

வேதா-இலக்காதிகைம் 105
b[TibopGSID] GIULIğGIGOLULI
நூற்றிமூன்று வயது நிறைந்த பெத்தாச்சி - என்
அற்றைச் சிறு வயதுப் பாச ஆலமரம் வெற்றியுடைய கோவை முருகேசு, சுவாமிநாதரின்
பற்றான துணைவி - வள்ளியம்மைப்பிள்ளை இற்றை இரண்டாயிரத்து ஐந்து கார்த்திகை
கொற்றமுடைத் திகதி இருபத்திரண்டில் நற்பதி கோவையில் சிவ பதமடைந்தார்
அற்புத அவர் ஆத்மா சாந்தியடையட்டும்

Page 55
O6 2ஈர்ஷர் பூக்கன்
‘வேதாவின் கவிதைகள் முன்னுரையிற் குறித்த
தோதான பெருமையுடை பாட்டனின் துணையவர் ஆலமரமன்ன கூட்டுக் குடும்பத் தோப்பின்
ஆதார சுருதியான ஆச்சி அவர் ஊர் அறிந்த உதயன் பத்திரிகையும்
நூறுக்கு மேல் அது யார் இவரென பேர் அறிந்து பேட்டி கொண்டனராம்
பேரர் பூட்டர் கண்ட பேருமாட்டியை.
பாசநிழல் அவர், ஓயாத வேலைக்காரி
பேச்சுத் துனைக்கு தேடி ஓடுவேன் நெல்லி மரத்தடியில் நெல்லிக்காய் பொறுக்கி
நெளிந்தோடும் கிணற்றடி வாய்க்கால் அருகில் விழிக்கும் பதியனிட்ட தேங்காய் முளைகளை
அழித்திடாது. பக்குவமாய் அடி வைத்து அழகான சித்திரத்தைப் பூக்களை ரசிப்பேன்
ஆச்சி வேலை முடித்து என்னருகே வரும் வரை
உண்ண எனக்குப் பால் ஆடையை
எந்நாளும் ஆசையாய் எடுத்து வைத்து அன்பாகத் தரும் என் அப்பாஆச்சி
என் பால பருவக் கொழுகொம்பு அவர் ஊற்றாக மகிழ்வு தருமெம் அனுபவங்கள்
நாற்றாக என்னுள் நம்பிக்கை ஊன்றியவை நாற்சார வீட்டிலே நாமடைந்த அனுபவங்கள்
நேற்றாகத் தெரிகிறது. மறக்க இயலாதவை.
2
:.
[ká
坠

வேதா-இலங்ாைதிகைம்
அமைதி உன்னை அர்ச்சனை செய்யட்டும்
آئیHig
*
ஜெயா நடேசன் அன்புத் தோழியவள் இதையா முடிவென எதிர்பார்த்தாள் ஜெயத்தின் கரம் இணைத்த திருவாளர் நடேசன் ஜெயம் கான காலனுடன் அடாது முயன்றவர் பண்பான மனிதனாய், பாசமுடை தந்தையாய் நண்பனாய் நலம் பேணும் நல்லுறவாய் திரு. நடேசன்

Page 56
18 2ஈர்ஷர்துக்கள்
ஜெயா! உன் கணவர் ஆத்மா சாந்தியடையட்டும் இறவாத வாழ்வு, கரையாத செல்வம் இணைவதில்லை மறவாத துன்பம், தறையாத இன்பம் வருவதில்லை நிறைவாக மனதில் தினம் சாந்தி பிறக்கட்டும் துறையாத அமைதியை உன் உறவுகள் தரட்டும் மறையும் உன் வேதனை சூழும் அமைதி காயங்களைக் காலங்கள் ஆற்றிவிடும் காயத்தழும்புகள் என்றும் தங்கிவிடும் ஆழியான வாழ்வை பிணியில் ஆக்காது செல் தோழியே இன்னும் நன்றாக நிமிர்ந்து நில் பயமின்றி நல்நினைவுகள் வழிநடத்தட்டும் ஜெயம் பெறுவாய் இதுவே வாழ்க்கையன்றோ ஈடு செய்ய முடியாத இழப்பென்றாலும் கூடுவிட்டு ஆவி போவதை யாராலும் கோடு போட்டுத் தடுப்பது இயலாது நூலோடு கரை, உறவோடு பினை பாலோடு தேனாக வாழ்ந்த வாழ்வின் ஆழ்ந்த கிதானியால் ஆறுதலடை
சிறகு
பறவைக்குத் தன் சிறது பாரமில்லை உறவுக்கு கற்பனைச் சிறகு பாரமில்லை நிறைகூடிய துன்பச் சிறகு பாரமாகிறது உறையவைக்கிறது மனித உணர்வுகளை உறவில்லா மனிதநிலை சிறகில்லாப் பறவைநிலை.

வேத"-இனங்காதிலகர் 19
தகைசார் முல்லையூரான்
என்னைக் கவர்ந்த எழுத்தாளன் எண்ணக் கருவூலம் பெரிது சின்ன இலங்கையின் முத்து டென்மார்க்கில் அவன் வலம்புரி இன்தமிழ் செய்ய உதித்தவன் இயற்பெயர் முருகேசு சிவராஜா இலங்கை வர்த்தகப் பட்டதாரி இரசனை மிது ஓவியனிவன்.
இமயக்கவி, வற்றாப்பளை வசந்தம் இலங்கையில் ஆசிரியர், சித்திரை இருபத்தொன்றில் இறைவனடி சேர்ந்தார் இன்தமிழ்த் தளபதியின் சாதனையாய் அருமை நாவல்கள், குங்குமம், சேலை 'அக்கினிக் குஞ்சுகள்’ யாழில் சஞ்சிகை “அருவுருவம்’ வானொலி இசைவடிவு ஆக்கிய கவிதை நூல்கள், போர்க்காற்று, நிர்வான விழிகள்,
சிறுகதைத் தொகுப்புகள், புதிய அலைகள் ஈழம் எழுந்து வருகிறது திறனாய்வுக் கட்டுரைகள் “கவிதை காணல்" முதற் தமிழ் வீடியோ வடிவக் கர்த்தா “காகம்’ சஞ்சிகை டென்மார்க்கிலும் களமிறக்கினான் ஐம்பத்தியொரு வயதினுள் கற்பகச் சாதனையாய் நிலைக்குமிவை

Page 57
11[) - தஈ*ஓர் துக்கள்
முல்லையூரான்! முருகேசு செல்வராசா இல்லையினி உயிருடன் என்பது நல்ல எழுத்தாளனின் இழப்பென்பது சொல்லவும் இனிமை யற்றது மூவாசை மறந்த துறவியாக முத்தமிழ் மறந்து படுக்கையில் மூன்றரை வருடமாக நோயில் மாத்திரைகளோடு மாண்புமிகு எழுத்தாளன்! என்னை நூல் செய்யத் துண்டியவர் பின்னை ஒரு அணிந்துரையை நான் பெறமுடியாது நோய் தன் வலையை விரித்து வளைத்தது இணையில்லா எழுத்தாளன் முல்லையூரான் துணையைத் தன் இழப்புக்குத் தயாராக்கி துறந்துவிட்டான் இவ்வுலகை தூயவன் ஆத்மா சாந்தியடையட்டும்
வித்தாரக் கவிஞனை வெகுவாக விழாக்களில் டென்மார்க்கில் அறிந்தோம் வசப்படுத்தி வளைத்த தமிழை வசீகரமாய் வெளிவிடுவான் ஒலிவாங்கியால் வாடி நிற்கிறோம் அவனிழப்பால் வானுலகேகிய அவனாத்மா சாந்தியடையட்டும்! வாழுமவன் ஆக்கங்கள் நீழிே வாழுமவன் பெயரும் புகழும் சாந்தி
சூரிய அந்தர் ஒலிப்டோழையில் 1. அறுதினம் கனசிெ:33, 2. பழைத்துரி, 3. கரைகேறும். இம்மூன்று " ஸ்களும் மு:யூரான் 1ா ஸ்4சிே)
2.: TRT தமிழ் அன: வானோலியில் சில பகுதி பதிவுகள் கொம்லும் சிந்தது.
齒

தோ-இனங்காதிலகம் *11
அவன் வித்தகன்
;""i_T;"" = ["=:پHT +
இலக்கியத் தமிழைக் கீர்.கீர். எனக் கிழித்துத் துலக்கி விளக்கிய சகலகலாவல்லவன். பொன் கலைக்கூடத் தலைவனானவன் தேன் தமிழ் வித்தகன் வியூகன் கீழ்கரவைப் பொன்னைபன், மக்கள் மன ஆழ் கரையைத் தொட்டவன் வாழ்வின் நீள் கரையைக் காண வேண்டாமேனத் தோள்களைச் சாய்த்த நாள் 23.9.2002
சரசுவதி அவன் நாவில் நிதம் சரசமாடினாள். சல்லாபம் செய்தாள். விரசமின்றி ரி.ஆர்.ரி தமிழ் அலையில் தமிழ் உரசல்கள் செய்தான், சுவையோடு சிறங்கினோம். கன்னித் தமிழைச் சாளரம் நிகழ்வில்
புகைப்படத்தில் கே:(பேட்ட பேய்வாடை.ண் வியூ*ன் ம்மது வீட்டிற்கு விசபம் துெ ப்தபோது என் காணருே ன்)

Page 58
112 മജീഴ്വgർക്
பின்னியெடுத்த நுண்ணறிவாளன் மண்வாசனையாளன் கண்ணியவாளன் தமிழ்க் களஞ்சியமவன் தன் வித்தகம் காட்டியெமைத் தூண்டியவன்
என் கவிதையின் கிரியாஊக்கியவன் அவன் சாளரத்தில் உச்சரிக்கவே விழிப்பாக நான் முனைந்து கவிதைகள் புனைந்தேன் அவன் இனிய சுவாசகீதம் நின்றது ஏன் இலக்கியவானமும் சிலகாலம் இருளானது வியூகனெனும் வித்தகன் விழுமிய தமிழால் வியுகம் அமைத்து இலக்கியம் விதைத்தவன் வியாபித்துள்ளான் எங்களோடு என்றும் அவன்.
(வேறு)
தந்தைக்குத் தமிழ் உரைத்தான் முருகன் அந்தத் தமிழ் உனக்குப் போதாதென்று இந்தத் தமிழ் இலக்கிய நாயகனைத் தெய்வமே சொந்தமாக்கிட அருகில் அழைத்தாயா தமிழ்அலை ரி.ஆர்.ரியின் பொக்கிசம் அவன் தூண்டாமணி விளக்கு, செங்கம்பளம் அவன் ஆண்டு ஒன்று மறைந்த போதும் நாம் ஈண்டு பெறாதது உன் தமிழமுதமே
காலநதிக் காரிய வேகத்தில் யார் வீழாதார்! வானலைக்கு வரமாக வந்தாய் சீலமுடன் நாம் தகவுபெற முன்னர் மேல் உலகம் சென்றாய் எதற்காக?

வேதா-இனங்காதிகைம் 113
தீம் தனனத் தன தினதோம் தோம். ஓம் இவ்விசையில் என்றும் நீயெம்முடன். தாராளமான உன் சுத்த தமிழுக்கு ஏராளமான ஏக்கம் சீராளன் உன்போலினியார்
ஆரமாய்ப் பரவிய தமிழ்க் கனவு ஆலாபிக்கும் உன் உத்தம நினைவு நூலாகப் பின்னி மொழியோடிணைந்து பாலாகப் பரவி, உன்னுறவு இனிக்கிறது மாலையாகிப் பிணைந்த உன் உறவு மூலையில் இதயத்தில் சுடராக உள்ளது. மதிப்புடைய உன் ஆத்மா சாந்தியடையட்டும்! உன் மனைவி பிள்ளைகள் அமைதியடையட்டும்.
இவரது இறுதி அஞ்சலிக் கூட்டம் நிகழ்ந்த இரண்டு மன்றங்களிலும், 1.02.2002 தமிழ் அலை வானொலியிலும் வாசித்ததும், ஒராண்டு நினைவுக் கவிதையையும் இங்கு ஒன்றாக இணைத்து எழுதப்பட்டுள்ளது. (12.10.2003)
监
எங்கும். முடியாத விடியலோ
எங்கும் நம்பிக்கை ஒளிக்கீற்றுகள் பரவட்டும் தங்கும் அமைதியின் அலை விரியட்டும் நெருங்கும் புதுஆண்டு சக்தியுடன் எழுந்திடட்டும் தங்கும் ஒற்றுமை விரிந்திட்டால்
எங்கும் முடியாத விடியலோ
2.1.2005

Page 59
14 2ஈர்ஷர்துக்கன்
கலைச்செல்வன் அஞ்சலி
تر \
யார் இவர். இரண்டாயிரத்து மூன்றில் பார் மிடுக்கை. டென்மார்க் ஒல்போ நகரில் சீர் கம்பீரம். இலக்கிய விழாவில் நேர் முகமாய். கண்டேன் உன்னை பார் என்றது. மனம் மறுபடியும்
இவர் பெயர். கலைச்செல்வன் துயர் அறிந்தேன். திடுக்கிட்டேன்.
ரி.ஆர்.ரி. யில். உன் காட்சிகள் தொலைக்காட்சியில்
இலக்கிய மனிதனே! இனிய உன் அணுகுமுறை இதயத்தைத் தொட்டது - என் இதயத்திலும் நீயிருக்கிறாய் இதமான அமைதி லட்சுமிக்கும் இன்ப மகன் கபிலனுக்கும் கிடைக்கட்டும் உன் ஆத்மா சாந்தியடையட்டும் பலர் இதயங்களில் நீயிருக்கிறாய்
些
நன்றி : மண் சஞ்சிகை
 
 

வேதா-இனங்காதிகைம் 115
கதிர்மகள் ரேலங்கி
இலங்கை ரூபவாகினித் தொலைக்காட்சியில்
துலங்கக் கோர்த்த தேர்ந்த மணியவள் துவளாத பைந்தமிழ்ப் பெரும் சொத்துக்காரி
தூயவள் திருமதி ரேலங்கி செல்வராசா தூவானமாய், தமிழ்த்துளிகள் அவளும் நானும்
தூவினோம் உதயதரிசனம் நேர்காணலில் தண்பதமாய் தவழ்ந்த தமிழ் அரை மணித்தியாலம்
தளமிட்டது ஆடி பதினெட்டு இரண்பாயிரத்தைந்தில்
அங்கிருந்து குலாவிய ஆனந்த அனுபவத்தால்
அதிர்ந்தேன் அவலக் கொலைச் செய்தியால்
அழகிய ரேலங்கியும் துணைவரும் கொலை
ஆவணி பன்னிரண்டில் அநியாயம் கொடுமை!

Page 60
116 മഞ്ഞുറയ്കg്ക്
பொறுக்கு மணிகளாம் ஊடகவியலாளர்களை
பொறுப்பின்றி பூமியில் உதிர்க்கும் கதம்
பூலோகப் புது யமகிங்கரர் வதம்
பூரண முடிவு காண்பது இதம்
ஆவணி மலராம் அவர்கள் முதல் மழலை
ஆவணி பத்தில் முதலடி வைத்தாளாம்! ஆவணி பதினேழில் ஓராண்டு நிறைவாம்!
ஆராதித்த பெற்றோரின் அருமை உயிர்பறிப்பு சின்னஞ் சிறிய உயிர் உலகில் உயர்ந்து
தன்னம் தனியே மனதளவிலும் உயர்ந்து கற்றோர் சபையிலே கன்னித் தமிழ் பேச வேண்டும்!
கதிர்மகள் ரேலங்கி, செல்வராசா ஆத்மாக்கள்
சாந்திக்கு எம் அஞ்சலிகள்
ஆவணி 2005 - பதிவுகள் கொம்.
监
GIIQ.
xK ஒலிகளின் சத்தம் வடிவெழுத்தாகிறது.
வடிவு - எல்லோரும் மனதார விரும்புவது.
хх மனதின் வக்கிரங்கள் நடனம் - இசை - ஓவியம்யோகாசனம் - தியானம் - பக்தி மூலம் வடிகிறது. இவை வக்கிரங்கள் வடியும் வடிகாலாகிறது.
хх வடிகட்டிய நீரும், குத்தரிசிச் சோற்று வடியலும்
சுகாதாரமுடைத்து.

வேதா-இனங்காதிகைம் 117
அஞ்சலி
தேனடையாம் தேசியத் தொலைக்காட்சி ரூபவாகினியின் தேர்ந்த அறிவிப்பாளர் திருமதி ரேலங்கியுடன் நான் தேசுடை நிகழ்வு உதயதரிசனத்திலொரு நேர் காணல் தேதி இரண்பாயிரத்து ஐந்து ஆடி பதினெட்டில் இலங்கையில்
மின்சார ஒளிவெள்ள விரிப்பு தேவலோகமோவென மிருதுவான ஒப்பனையில் ரேலங்கி தேவதையென மினுமினுக்கும் அகன்ற அழகு விழிகளுடன் என்னருகில் மிதந்தது கேள்விச் சரங்கள் என்னை நோக்கி
குளிரலையான கேள்விகள் என்னைக் குடமுழுக்காட்ட குடைவிரித்த என்தமிழ் அவரோடு கை குலுக்க குலாவிக் குழைந்தோம் பைந்தமிழோடு நாம் குமிழிகளாகத் தவழ்ந்தது தமிழ் அரைமணிநேரம்
எழிலுடன் உரையாடிய செந்தமிழ்ப் பொழுது எண்ணியொரு திங்கள் முழுமை பெறவில்லை ஆவணி பன்னிரண்டு வெள்ளியில் ரேலங்கியோடு அவர் கணவர் செல்வராசாவும் அவலக்கொலை அம்பாகியது
பாதுகாப்புடைய பெற்றோர் பந்தம் பெண்குழந்தைக்குப் பாய்மரம். பச்சிளம் குழந்தை தனியாகினாள் உலகில் பாரிலொரு பதக்கமாய் பிரகாசிக்க வேண்டிய பிள்ளை பாசமுடை பெற்றோரைப் பறிகொடுத்தது கொடுமை

Page 61
118 ജീഴ്ത്തg്ക്
எண்ணிக் கருமமாற்ற, எழுதமுடிந்த மனிதன் எஃகினால் பிரச்சனைகள் தீர்த்திட எண்ணல் எளிதானதல்ல, ஏற்புடைத்தல்ல, எடுத்துப்பேசி எளிமை வழிகாணல் பகுத்தறிவுடை மனிதத்திறன்
பிறர்வாழ்வைத் தன்கையிலெடுக்கும் மனிதன் பிரதிநிதியோ காலனுக்கு? இன்றைய புத்திசாலியோ? பிரதிபலிப்பு எவ்வகையில் வருமோ? பெருமையுடைய பிரபல ரேலங்கி - செல்வராஜா தம்பதிகள் ஆத்மசாந்தி
S r!
வேறு
மறக்க முடியாத மகிமைக் கணங்கள் அது தமிழ் மணத்தோடு ரேலங்கியருகிலிருந்த உயர் பொழுது கனமான இழவுச் செய்தியால் இதயத்திலொரு அதிர்வு தினம் பல உயிர்கள் மண்ணில் பிண்டமாகி உயர் இன மனிதப் பெறுமதி ஏனிப்படி நாணிப் படியிறங்குது
, 335isub C. sj நியாய்
ஊடகவியலாளர்களை வரிசையாக மரணப் பொறியால் பாடையலிட்டு மொழி பறிக்கும் மர்மப் பீடைக் கலாச்சார நோயுடை மனங்களை பீடுடை பெரிய தெய்வம் காக்கட்டும்! பெருமையுடை ரேலங்கி, செல்வராசாவின் பெறுமதி ஆத்துமங்கள் சாந்திபெற எம் அஞ்சலிகள்
16.08.2005 - இலண்டன் Time வானொலி, TRT தமிழ் அலை.
监

வேதா-இனங்காதிகைம் 119
தமிழ்க் கவிதை வாரிதி - பாரதி
விண்ணிலாடும் வெண்ணிலவாய் தண்ணிலவுக் கவிதைகள் என்னவென்பேன், பாரதியின் எண்ணிலாக் கவிதைகளை திண்ணிய வரிகள் ஆற்றல் மிகத் தூண்டுவதாய் மண்ணிலே மாந்தரெல்லாம் மகுடியின் நாதமாய் பண்ணிலும் இனிமையாய் இசையோடு பாடுகிறார் எண்ணி எடுத்திதை எளிமையாய்க் கையாள்கிறார் வண்ணக் கவிவரிகள் சின்னம் சிறுவருக்கும் எண்ணத்தில் வீரத்தைத் தருவதை என்னவென்பேன்
பாரதியே! தமிழ்க் கவிதை வாரிதியே! பேரதிர்வான உன் வாலிபப் பண்களுக்கு தீரமதிகம், தீர்க்கமும் பூமியில் அதிகம் ஊரதிரும் தாக்கங்கள் உருவானது உண்மை பேரதிசயம் பெற்ற கவிதையின் தாக்கங்கள் வேரதிகம் விரித்தது பெண்கள் உலகிலும் சாரமதிகமான இவன் சுந்தர வரிகளை யாரதிகம் எடுத்தாளவில்லை சுய வாழ்விலே!
பாரதியே தமிழ்ப் பாவுலகில் நீயுமொரு - யுக சாரதியானாலும் உன்வாழ்வில் சரிபாதியாக நீரதியெனக் கவிபாடிய உன் கண்ணம்மாவை ஆராதிக்காத உன் சுயவாழ்வுப் பாதையை

Page 62
120 മരയ്കg&ക്
கூரதிகம் உன் கவியானாலும் எடுத்துக் கூறாத மனிதருண்டோ நீயறிவாயா! வீரதீரனாகிலும் சரிபாதியான வாழ்விற்கு, மனைவி வேரதுவாக வாழ்கிறாளென்பது பெரிய உண்மை
ஆயிரத்து எண்ணுற்று எண்பத்திரண்டு மார்கழியில் ஆரவாரமின்றி, எட்டயபுரச் சின்னச்சாமி - இலட்சுமிக்கு ஆண்சிங்கம் சுப்பிரமணியன் பதினொராம் நாளில் அவதரித்தான். அவன் கட்டி விளையாடவொரு அருமைத்தங்கை பகீரதியும் பிறந்தாள் பெருமையாய்ப் பழம் கொடுத்த யானையே ஒருநாள் மதம் பிடித்து அவனை மிதித்தது ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்தொன்றில் அமரரானார்.
12.9.2004
监
வளம் தேடித் தந்தை வெளியே செல்ல, இளம் பெண்ணான தாயர் இணை செல்ல, உளம் முழுதும் பிள்ளைகளின் உயர்வு மெல்ல, களம் கண்டு மனம் களி கொள்ள, கண் விழித்து எமக்காய்ப் பாடுபட்டனர், கண்ணான எமது பெற்றோர் எம் வாழ்வு சிறக்க.
30.04.05

வேதா-இனங்காதிகைம் 121
சிவாஜி கணேசன் ஓராண்டு நிறைவு
அந்த நாளை திரும்பிப்பார் சினிமா விடிவெள்ளி அமரதீபம் வி.சி. கணேசன் நடிப்புலக ஞானஒளி அன்னை பராசக்தியருளிய மரகதப் புதையல் அறிவாளியான படிக்காத மேதையின் உதயம் முதல் திகதி ஐப்பசி 1927 - என்றும் முதல் மரியாதையே நடிப்புத் தவப்புதல்வனுக்கு பலருக்குக் கைகொடுத்த தெய்வம் அவன் திருமால் பெருமையால் கிடைத்த இந்தியச் செல்வம்
பாலும் பழமென நடிப்பு படையப்பா என்பது பாரதவிலாஸ் தங்கப்பதக்கம் சிவாஜியின் எண்ணம் புதிய பறவைகளுக்கு பார்மகளே பாரென நடிப்பெனும் நீலவானத்தில் மின்னும் திரிகலம் சவாலே சமாளியென சங்கிலித் தொடராக சாதித்து ஓர் இரவும் தூக்குத்தூக்கியாகாது சினிமாக் கடலில் கப்பலோட்டிய தமிழன் நடிப்பெனும் கெளரவத்தால் உயர்ந்த மனிதன்
நடிப்பில் வணங்காமுடி, ரிஷிமூலமற்ற இமயம் நடிகர்திலகம், பத்மழுநீ சிவாஜி நடிப்புலக மகரிஷி சகலரும் அன்பே ஆருயிரேயென்ற நடையழகன் ராமன் எத்தனை ராமனான நடிப்புத் தீபம் திரையுலக பைலட் பிரேம்நாத், சிம்மக் குரலோன் எங்க மாமாவைப் பார்த்தால் பசிதீரும் நடிப்பில் கர்ணன், ராஜா தர்மராஜா தங்கச் சுரங்கத்தின் நடிப்பென்றும் புது அருணோதயம்

Page 63
122 മരയ്കgർക്
நவராத்திரி நாயகனுக்கு அந்தமான் காதலியில்லை மங்கையர் திலகம், குலமகள் ராதையான நிச்சயதாம்பூல கமலாவிற்கு தெய்வப் பிறவி சொர்க்கமென இருவருள்ளமும் அன்புக்காவேரியில் ஆண்டவன் கட்டளையால் இணைந்தே நீந்தியது முரடன் முத்தாக இரத்தத் திலகமிடாத நிறைகுடம் நோயிலிருந்து கந்தன் கருணையால் புனர்ஜென்மம் (Oncemore) ஒன்ஸ்மோர் நடித்த அவன்தான் மனிதன்
படிக்காதவனானாலும் பாசமலர் டாக்டர் சிவா பந்தபாசங்களுடன் கலைக்குரிசில் ஓர் உத்தமபுத்திரன் அன்புள்ள அப்பாவாயும், அண்ணன் ஒரு கோயிலாயும் அன்புக்கரங்கள் நீட்டியது எதிர்பாராதது அல்ல உலகமெனும் அன்னை இல்லத்தைப் பிரிக்க எமனுக்கு எமன் மனோகரா பலே பாண்டியா பாபு அன்பே ஆருயிரே என அழைத்தான் - அது வசந்த மாளிகை பாவை விளக்கில் எதிரொலித்தது கமலாவின் பழநி குங்குமம் பச்சை விளக்காகவில்லை தில்லானா மோகனாம்பாளாக தில்லானா ஆடிய பணம் தேவர் மகனுக்கு வாடிய வெள்ளை ரோஜாவானது நெஞ்சிருக்கும் வரை அன்னையின் ஆணையாய் நடித்தார் எங்க ஊர் ராஜா, வீரபாண்டிய கட்டபொம்மன் கார்த்திகை பன்னிரண்டு இரண்டாயிரத்தொன்றில் நடிப்புலகப் பேசும் தெய்வம் தெய்வமகனானார் செவாலியர் சிவாஜி மறைவு ஓராண்டுக் கவிதையிது.
12.10.2002 - TRT தமிழ் அலை வானொலியில் நான் வாசிக்க, அறிவிப்பாளர் A.S ராஜா எத்தனை படங்கள் பெயரென எண்ணிக்
கூறினார். 监

வேதா-இனங்காதிகைம் 123
சன்னதமாடிய சாகரமே!
A.
l;
a
காற்று வாங்கி ரசித்த வெண்நுரையலை நேற்று உருண்டு கால்நனைத்த குளிரலை நேசமாய் ஓடிப் பின்தொடர்ந்த மென்னலை பாசமாய்த் தூது சென்ற காத லலை பத்து நிமிடங்களில் பத்ரகாளி யானதேன்? அத்துமீறி ஆங்கார ஆவேசம் கொண்டதேன்? அத்தாட்சியாய் உயிர்களைக் காவு கொண்டதேன் நிர்த்தாட் சண்யமாய் பிரபஞ்சப் பகுதியை நிலை குலைத்ததேன்?
கடலின் கர்ப்பகோசம் கடுமையாய்க் குலுங்கியதால் உடலை வருத்தும் உபாதை உனக்கானதா?

Page 64
124
മരയ്ക്കുമg&ക്
விடாய் எழுந்து வேதனை பொங்கியதா? உடல்கள் உடைமைகளை உன்மத்தமாய்ச் சுருட்டும் திடம் எப்படி வடமாகித் தேரிழுத்தாய்? படமாகத் தொலைக்காட்சியில் பார்த்து நிதம் பாடாய்ப் படுத்துகிறது வேதனை வதம் முடமாகிறது நெஞ்சம் துயர மிகுதியால் வேற்று நாடு சுமத்ராவில் பூமி யதிர்வாம் சுற்றிய கடற்பரப்பு குமுறிக் கொந்தளிப்பாம் எற்றி எறிந்த அலை 6LJust 560Tm furb பெற்ற தமிழ்நாமும் துறைமுக அலையாம் நாற்ப தகவையின்பின் தாரணவில் கிளம்பியதாம் வெற்றிடம் நிரப்ப உயர்ந்து நீண்டும் சீற்றமாய் சீவகாருண்யமின்றி 2-ul (560DL60).Du L6ör சன்னதமாடிய சாகரத்தின் சலப்பிரளயத் தாண்டவம்
ஜெர்மன் சஞ்சிகை ‘பூவரசு’ தை, மாசி 2005
些

வேதா-இனங்காதிகைம் 125
பூப்புவிழா வாழ்த்து
மொட்டுமலர் விரிந்தது. பட்டுக் கன்னம் சிவந்தது எட்டுத் திக்கும் தெரிந்தது, வட்டம் கூடிக் களிக்கிறது பளிங்கான பாலபருவம் மறைந்தது துலங்கிடும் இளம் பருவம் வந்தது - அது விளங்கிட ஊருக்கும் உனக்கும் விழா வழங்கிடும் விருந்துபசார விழா களங்கமில்லா சிறுபூவே நல்வரவு! வளர்ந்தோர் உலகிற்குள் நல்வரவு! வாயார வரவேற்கிறோம் நல்வரவு! வருக மங்களம் பொங்க வருக!
பூப்படைந்த சிறுபூவே காப்பென்றும் உனக்கு நீயே கோப்பாக நீ செழித்து வளர்க! தோப்பாகப் புகழ் பரவி வாழ்க!
அன்று மான் குட்டியான கண்ணே! இன்று தேன் சிந்தும் மலர்ப் பெண்ணே! என்றும் வான் உயர்ந்து புகழ் பெறுக! நன்று வாழ்ந்து நன்மைகள் பெறுக!

Page 65
126
ജീഴ്ത്തg്ക്
பூவொன்று வீட்டில் மகரந்தம் சிந்த தாளொன்று விரித்து முகவரி வரைந்து வாவென்று எம்மை வரவழைத்து இந்த நாளொன்றை எமக்கு வாழ்த்த ஈந்த நன்மை காண் பெற்றோருக்கு நன்றிகள்.
20.10.2002 அன்று நண்பர் குடும்பத்து நல்ல நாளுக்கு எழுதி வாசித்துப் பரிசளிக்கப்பட்டது. பிள்ளையின் பெயருக்கு பதில் பெண்ணே கண்ணே! என விளிக்கப்பட்டு, பெற்றவர் பெயருக்குப் பதில் பெற்றவர் என விளிக்கப்பட்டுள்ளது.
些
சிந்தனை
இனிமை தரும் சொற்கள் மீண்டும் மீண்டும் எதிரொலிப்பது மனித கவனத்தை ஈர்க்கும், இரத்த நாளத்தை விரிக்கும்.
நன்றாகப் புகழ்தல், அது போலியானாலும் புகழ்தல் இவ்வுலகில் போற்றப்படும் - சபையேற்றப்படும். குறைகளை எடுத்துக் கூறினால் ஒதுக்கப்படுவீர்கள். போலியான நாடகத்திற்கே அதிகப் புள்ளி கிடைக்கிறது.
சேற்றில் இருப்பவருக்குக் கூறும் நகைச்சுவையும், நல்லறிவும், வீசும் கல்லுப் போன்றது. தெறிக்கும் சேறினால் உன் வெள்ளையாடை அழுக்காகும் என்பதை மறத்தல் கூடாது.
22.O.O.S

வேதா-இனங்காதிகைம் 127
வாலிபம் முன்னேறட்டும்
தாமரை மலரில் தவழ்ந்திட்ட தமிழுக்கு சாமரம் வீசி சரம் சரமாய் கவி ஆக்க ஆதரவாகி இவளுக்கு ஆசிகள் தந்திடுக! தேனுாற்றாய் கவிகள் இதய அடையால் நீரூற்றாய் கரைபுரண்டு தவழவிடுக! பாவாண்ட ஒளவை கம்பன் வள்ளுவன் பாரதி ஈறாக, நம் ஈழ வல்லவர்கள் நடாண்ட பாடல்கள் நாவாள பண் அமைக்கும் பதம் பக்குவமாய் பலப்படுத்தி பர்வதமாய் வளரவிடுக! பைந்தமிழ் பனுவல்களின் சுடரால் பஞ்சை மனங்களில் ஒளி படர்த்தி துஞ்சும் இதயங்களைத் தட்டியெழுப்பி நஞ்சை நிலமாக்கி நல் விளைச்சல் காண விஞ்சும் ஆசையில் என் நெஞ்சம் இணைய மிஞ்சும் வினையில் நான் மொழியும் கவிதையில் ஒரு சிறு துளி இது.
கருநீல வானில் சிதறிய வைரங்கள் கருவூல உலகின் இளைய நற்சிகரங்கள் அரும்பெரும் எதிர்கால சொத்துகள் செருக்குமிகு சமர்த்து வாலிபங்கள் இலகுக்கு ஆணையிடும் இளைஞர்கள், யுவதிகள்

Page 66
128
മരയ്കg&ക്
உறங்கும் உலகைத் தட்டி எழுப்புவோர்கள் வில்லில் இருந்து விடுபடும் விசைமிகு வீறுகொண்ட அம்புகள் நீங்கள் கண்ணாடிச் சிறையின் கண்காட்சி வண்ண மீன்களல்ல நீங்கள் கண்ணியம் காத்துக் காரியமாற்றும் தமிழ்ஈழ சின்னராணிகள், சின்ன மன்னர்கள் சோம்பல் சகதியில் ஆழப் புதைந்து சாம்பல் பூத்த மனமதுவாகி பனியின் குளிரில் பதுங்கிடாது துணிவின் விளிம்பில் துடுப்பு எடுங்கள் பூட்டிய கதவுள் பூகோளம் பார்த்து ஒட்டும் காலம் தவிர்த்து, விழித்து பூகம்பமாய்ப் புறப்படுங்கள் உயிர்த்து புரவிவேகம் பூண்டு புதிய உதயம் காணுங்கள் வானவில்லான வாதாடும் வயது மானம் வீரமெனும் விவகார வயது வேகமான வெள்ளோட்ட வயது கோணலாகி கோமளம் அழியவேண்டாம் GB85TL'LumrGB DITAD GB6l6öoTLITLb
ஆட்சி கொண்டு ஆக்ஞை இடட்டும்
மது போதையில் இளமதி மயங்கி மதிப்பு மானம் தொலைக்காது நிமிர்ந்து மண்ணில் மகத்துவம் பெற்றிட வாழ்தல் மகிமை தரும் மதுர இன்பம் அகலக் குடி ஆயுளைக் குறைக்கும் பகலில் குடி பலிபீடம் நகர்த்தும் ஊரை ஆண்ட நம்முன்னோர் போல

வேதா-இனங்காதிகைம் 129
பாரை ஆண்டிட முயன்று பாருங்கள் பணமிருக்கு பசியாற பக்தியிருக்கு மனம் ஆற மேதையாய் வந்திட மேலும் படியுங்கள் சாக்கடைக் குடியால் சரித்திரம் மாற்றாது பூக்கடையாகப் பூமியை மாற்றுங்கள் கழகமும், நட்பும் தரட்டும் முக்தி குழுவும் கலகமும் தவிர்ப்பது புத்தி கூடல்களில் கூட்டாளிகளின் சக்தி தேடல்களுக்குத் துணையிருக்கட்டும் தேடல்களின் புதுமைகள் உங்கள் மன வாடல்களின் உயிர்த்துளியாகட்டும் துஷ்ட வழிமுறை இஷ்டங்கள் அஷ்ட திறமையின் நட்டங்கள் கோஷ்டி மோதல் வன்முறையில் முஷ்டி காட்டல் சுயதுன்பம் அட்டதிக்கும் புகழ்சேர்க்க கஷ்டப்படுங்கள் அதிட்டம் வரும் ஆளை அளத்தல் தவிர்த்து சுய மூளைக்கு வேலை குவித்திடுங்கள் நாளை நயத்துடன் நகர்த்திடு கன்னியே! காளையே சுய மனதிற்குப் பலம் கொடு சமுதாயத் துன்பங்களை உன் சேவையால் அமுதமாக்கு ஆதாயம் உலகுக்கு அமைதி குவியும் ஆழ் மனதில் அடையாளம் பெறுவாய் சமூகத்தில் இதயச் சுரங்க எண்ண நட்சத்திரங்கள் பதியவைத்துக் கரங்களில் ஏந்தலாம்

Page 67
130
2aygpo gർക്
கையால் மையால் காவியம் புனையலாம் மையால் பதித்து அரங்கம் ஏற்றலாம் மையல் குழையும் மான் விழிகளின் தையலிடும் தப்புத்தாளங்கள் வைகைப் புனலாம் சிந்தனைக்கு வரம்பு கட்டி வதம் புரியும் வசந்த வாசலின் வாய்ப்புத் தேடு அசந்து காதலில் வாலிபத்தை மூடாதே கருடனாகக் கருமமே கண்ணாக கரிசனை கொண்டு காரியமாற்று சாகர வாழ்வில் எம் மூலவேர் ஆதாரமான தாய் மண் வேர் கலாச்சாரம் நழுவாது பார்! மூலகாரணமது சமூகத்தின் நார்
காந்த மின்னொளி மூளையிற்பாய ஏந்தட்டும் மன்பதை உன் சாதனைகளை அதிசய மூளைகளில் அவிழட்டும் புதுமைகள் கிரிக்கெட் ஆட நிலவு செல் கின்னஸ் சாதனையாய் கீர்த்தி பெருக்கு சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை பெண் பிள்ளையானாலும் வீண் பிள்ளையல்ல என்று துணிவுடன் தூணாக நில் தங்க மூளையைத் தரமாய் வளர்த்திடு ஒருவருக்கும் தொல்லை தராது சிறுவருக்கு முன்னோடியாகு கருகவிடாதே உன் இளமையை மருவில்லாத வாழ்வு தேடு

வேதா-இனங்காதிகைம் 131
வித்தை பயில் விழுமியம் பெறு சொத்தையல்ல உன் சொந்த மூளை வானை வளைக்கும் வலிமை வாலிபம் கரும்புச் சாறென இனிக்கும் கன்னிமை வீணில் ஓய்தல் வேண்டா நிலைமை சந்திர ஒளியைத் திரட்டாவிடிலும் சரவிளக்காக சஞ்சாரமாகலாம் நிலவுக்குத் தோரணம் கட்டாவிடிலும் நிலைகுலையா வாழ்வின் பிடியில் வலை பின்னி வாலிபம் முன்னேறட்டும் தலைநிமிர்ந்து உயர் தகுதி எட்டட்டும் கலை நிறை வாலிபம் முன்னேறட்டும்
குறைகள் களைந்திடுங்கள் என் எண்ணங்களைக் குவித்திடக் கொடுத்த வாய்ப்பிற்கு, மனம் நிறைந்த நன்றிகள்.
(Svenborg) செவன்போ டனிஸ் தமிழ் நட்புறவுச் சங்க விழாவில் வாசித்த கவிதை.
屿

Page 68
132
ജീഴ്വgർക്
உறவுகள், அதன் குணங்கள்.
அன்பு வற்றியதால் ஆணவம் பெருகியது
ஆணவம் பெருகியதால் அறிவு குறைந்தது அறிவு குறைந்ததால் ஞானம் போனது
ஞானம் போனதால் சுயநலம் பெருகியது சுயநலம் பெருகித் தானம் குறைந்தது
தானம் குறைந்து பொதுநலம் காய்ந்தது பொதுநலம் காய்ந்து வெறுப்புப் பெருகியது
வெறுப்புப் பெருகி விரக்தி மிகுந்தது.
விரக்தி மிகுந்து, மனம் பாலைவனமானது
மனம் பாலைவனமாகி, வாழ்வு சிதைந்தது வாழ்வு சிதைந்து, மனிதம் நடைப்பிணமானது
மீள்வு என்பது, சுயமனதோடு இணைந்தது தாழ்வும், தன்னம்பிக்கை இளப்பில் இணைந்தது
வாழ்வு, பிறர் தரும் கொடையல்ல வசமாய், நாமாய் வசப்படுத்தும் புதையல்
வருகின்ற உறவால் பெறுகின்ற பரிசு
30-10-2000 - TRTதமிழ் அலை. 5-4-06 - இலண்டன் தமிழ் வானொலி.
屿

133

Page 69
134 മീഴ്ത്തgർക്
எந்தன் மனம்.
திராவிடப் பண்பை உணர்ந்து
தவழ்ந்து வரும் காவேரிகண்டு - எந்தன்
மனம் காதலி நினைக்கொண்டு
சிந்து கவி சிந்திடுதே
செந்தமிழின் இனிமை கண்டு
வீசும் இன்பத் தென்றல் உணர்ந்து - நங்கை
உனது குரலின் தன்மை உணர்ந்து எண்ணம் அலை மோதிடுதே
தென்னகத்தின் சிற்பம் கண்டு
தேன் பாயும் நிலவைக் கண்டு - நெஞ்சம்
மங்கை முகம் அதனில் கண்டு
ஆனந்தக் கூத்தாடிடுதே.
96.
监
 

க இனங்காதிகைம் 135
IDGogouffgo பிறந்த ஆரணங்கே
மலையில் பிறந்த ஆரணங்கே, ஈழம் பெற்ற திருமகளே மாவலி என்னும் பேரணங்கே, சிவனொளி பாதத் தலையணங்கே நம் தலைவி தந்திட்டாள் உனக்கொரு புதியபாதை நாணிச் சிரித்து மெல்லிடை அசையவா!
தலைவாரிப் பூச்சூடி குழல் அசைய நடக்கையில் நீ ஆதிபராசக்தியடி தலைவிரி கோலமாய் கூந்தல் அலைய பலி
எடுக்கையில் நீ பத்திரகாளியடி மஞ்சள் பொடியூசி மலைமகள் மடிதவழ்ந்து மானெனத் துள்ளி
வருகையில் நீ தேவக் கன்னியடி இருகரம் மேலுயர்த்தி பூமகள் நெஞ்சறுத்து வேங்கையெனப்
பாய்கையில் நீ ஓர் அரக்கியடி
மலையகம் எங்கள் தாயகம் குளிர்ந்தது உன் பிறப்பால் திருமலை எங்கள் இயற்கை வளம் உயர்ந்தது உன் சங்கமத்தால் குடியரசு கண்ட நாயகி மகிழ்ந்திட்டாள் உன்திசை திருப்பத்தால் குடிமக்கள் குறைதீர்ந்தது உன் குங்குமச் சிரிப்பதனால்
வடக்கு வளமான தேசம் வானம் பொய்த்தால் வாடிவிடும் உனக்கு வருணன் அருளுண்டு குலுங்கவைப்பாய் தரிசு நிலத்தை திருநாட்டின் தவப்புதல்வியே தீர்ந்தது உந்தன் ஊழ்வினை தியாகத்தின் பனிமலரே ஒழிந்தது கொடும் வரட்சிவினை. 26.01.1977 - பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். திருமதி. இராஜேஸ்வரி சண்முகம் வாசித்தார். முதல் மூன்று கவிதைகளில் ஒன்றாக - வேதாவின் பெயரில்.
监

Page 70
136 உணர்ஷர்துக்கன்
வழி - விழி
காகம் கரைந்திடவே பொழுதும் புலர்ந்தது காற்றும் சில்லெனவிே என்மீது தழுவியது - யாழ் புாேகவண்டியும் ஆனையிறவைத் தாண்டிடவே நெஞ்சமும் பெரும்களிப்பில் துடித்ததம்மா
விரிந்து பரந்த வெள்ளை மனலிடையே சொரிந்த பற்றையும் செடியும் கொடியும் - இது வெண்பணி மூடிய தேசக் காட்சியல்லவோ கண்களும் பெரும் களிப்பில் துடித்ததம்மா
ஒரொழுங்காய் நிற்பது தலைகளோடு தென்னைகள் ஓங்கித் தெரிவது தலைச்செல்வமாம் பனைகள் - அங்கு இடையிடையே தென்படுவது மா, மாதுளையாதலால் இதழ்கள் பெரும் களிப்பில் துடித்ததம்மா
வடலிக்கு இடையே பசுமையான தோட்பங்கள் வேலிக்கு மேலே தலையாட்டும் வாழைகள் - ஆனால் படலையிலே பதுமையென கண்கூடு மென்னவளால் உடலெல்லாம் பெரும் களிப்பில் துடிக்குதம்மா.
*նմ
坠

ஈ. இலங்காதிலகர் 13የ
பூவையே நீ எனக்காகப் பூத்தாய் பூங்கரங்களாய் நீ என்னைப் பூட்டிவிட்டாய் பூந்தளிர் இரண்டை எனக்காய் பூமியில் தந்தாய் பூரித்தேன் வாழ்வில் எந்தன் பூங்குயிலே பூந்தென்றல் நீ எந்தன் பூந்தோட்டத்தில் பூவண்டு நான் உந்தன் பூவிதழில் பூசாத நறுமணம் வீசுது பூரிப்பில் பூமழையில் நனைந்தாலும் தளிருது பூந்தேனே பூபாளம் கேட்தது உன் குரலில் பூ மைனாவே பூத்துக் குலுங்குது என் நெஞ்சம் பூங்காவிண்மாய் பூச்சூடி நீ நடந்தால் நோகாதோ பூப்பாதம் பூமாதேவியாய் உன்னைச் சுமக்கவா பூப்பந்தே பூமாலை தொடுக்கவா மல்லிகைப் பூக்கொண்டு! பூசாரியாகி அதை அணியவா உன் பூங்கழுத்தில் பூவிரல் பட்டுத் துடிக்குமI பூமோட்டு பூரண நிலவில் விளையாடுவோமா பூமணியே.
监
!ჭტჩს,

Page 71
38
என்றும் இளமைக்காதல்
வேல் விழியாளே வேங்கை நாட்டுத் தையலே உன் மையலே எனை வாட்டுதெல்லே! இரவா பகலா எனை அணைத்தால் புரியும் இளமையோ முதுமையோ காதல் வாழ்வில் இல்லுையே வைகறையில் எழுந்தால் வைகை என்கிறது வையகத்தில் நினைத்தால் உன்னருமை புரிகிறது வானத்து நட்சத்திரம் நீயாக ஜொலிக்கிறது வாடைக்காற்றும் வாட்டி வதைக்கிறது
தேன் சிந்தும் இதழ் நீ கொண்டாயோ உன் சிவக்கும் இதழ் நான் கொண்டேனோ சிரிக்தம் சில்ை என் கரம் பட்டுத் துடித்ததோ சிந்தும் புன்னகை என் உள்ளத்தை மயக்கியதோ பாவை என் நெஞ்சில் பசுமைக் கோலம் பார்த்த இடம் வஞ்சியின் மரகதக் கோலம் மஞ்சம் மனவினையில் மயிலாடும் பூந்தோட்டம் தஞ்சம் உன் மடியில் தணிந்திடும் என் ஆட்டம்.
些
5,8
 

க இனங்காதிகைச் 39
டென்மார்க் தனிமை
இளமை நிழல் ஊஞ்சலாடுது - அது இதயவானில் பறந்தாடுது இனிய தேனாய்ப் பாய்கிறது - அன்பே இன்னும் மனம் தேடுகிறது ஈருடல் ஓருயிராய் வாழ்கிறோம் ஈற்றில் நாம் ஒன்றாகவே மடிவோம் ஈசனும் சக்தியும் ஒரு பிறவியாம் ஈடில்லாப் பிறவி அதுபோல வேண்டும்
உள்ளம் உடைந்து உடல் மெலிந்தாலும் உந்தன் உணர்வுகள் சுழன்று வரும்போது உதயத்தில் நாதமாய் ஓரெழுச்சி உருவாதம் உன் நினைவில் பாடிஉலாவிடுவேன் நாள்முழுதும் ஊர்விட்டு ஊர் தேடக், கிடைத்தாயென்வாழ்வில்
ஊட்டியாய் குளிந்து நீயில்லாமல் இங்கு ஊட்டிவிடேன் அமுது நின்கையால் எனக்கு அன்பே
என்னவெல்லாம் நினைத்து ஏங்கவைத்து என் எண்ணமெல்லாம் நீயாகி வதைக்கிறாய் என் அன்பே உன்னை எண்ணாத நாளில்லை என் காலமெல்லாம் நீயில்லாது நாணில்லை ஏழேழு ஜென்மமும் நம் உறவு வேண்டும் ஏட்டில் ஜனனமாகிக் காவியம் பாட வேண்டும் ஏங்கும் இதயங்கள் எமைப் போற்ற வேண்டும் ஏன் வாழ்வில் சுகமில்லை! நம் காவியம் கூறவேண்டும்.
罗克昂.贝品
些

Page 72
1[]] 2rர்லுர்துக்கன்
இதயம் தேடுதா உனை.
பருவம் பாட்டுப் பாடுது உன் E. b6!LD 3 500TT5: 2ATEL(65 பண்பும் கட்டுப் போடுது உன் அன்பும் என்னை ஆளுது ། இச்சைக்துப் பல இடம் உண்டு இதயம் தேடுவது உன்னையே ஆசைக்குப் பல இடம் உண்டு ஆதரவாவது உன் அனைப்பே காலமெல்லாம் வருவேன் உன்னோடு
கவிபாடுவேன் உனை நினைத்து காதல் முத்து எடுப்பேன் உன்னோடு
காவியம் வடிப்பேன் கண்னே அமுது
நேஞ்சினிலே உன்முகம் - கேட்பதெல்லாம் உன் கீதம் மஞ்சத்திலே உன் நினைவு - காண்பதெல்லாம் உன் கோலம் மிஞ்சி ஒலி கேட்டால், பஞ்சாகப் பறக்தது என் எண்ணம் வஞ்சிமொழி கேட்டால் கஞ்சிகூட வேண்டாம் எனக்கு தொட்டால் இனிப ராகம் தெவிட்டாத தேன் கலசம் மீட்டால் துடிக்கும் நாதம் தென்றலாய் வீசும் மணம் தேடாத இடம் உண்டோ மறைத்திடுவாய் எனை அங்கு சிந்தாத பாலை உண்டு மயங்கிடுவாய் என் சங்கு.
IԱյն:
些
 

ஈ இனங்காதிரகம் 141
இடைவெளி சிறிதே!
ஏடெடுத்தேன் ஏழைக் கவிஞன் எண்ணங்களைத் தேடி நின்றேன் எத்தனை தூரம் வந்துவிட்டேன் எந்தன் காதலிக்கு என்ன சொல்வேன் ஏக்கத்துடன் நான் வாழ்கிறேன் ஏ! காற்றே நீ போய்ச் சொல்லாயோ டென்மார்க் தேளாய்க் கொட்டுது டெல் மீ பறந்து வந்திடவr
கூடித்திரிந்த காலம் இனிக்கிறது கூட்டாஞ்சோறு உண்டகாலம் சுவைக்கிறது கூந்தல் மார்பில் தவழ்ந்த காலம் சிலிர்க்கிறது

Page 73
142
മരയ്കgർക്
கூத்தடித்து மகிழ்ந்தகாலம் நெஞ்சைத் தொடுகிறது ஆனந்தம் அடுக்கடுக்காய் அலைபாயுது ஆரிடம் செல்வேன் என் அன்பலைகளை ஆதிமனிதன் சொன்னது இந்த இன்பங்களையா
குளிரில் குலையும் நடுங்குகிறது குவளை நீ கலங்குவது தெரிகிறது குழந்தை உள்ளமும் குயிலின் கானமும் குனிந்த நடையும் குங்குமச் சிரிப்பொலியும் அம்மம்மா. மெட்டியோசை, வளையோசை, மஞ்சத்து ஓசை, அடுக்களையோசை. அம்மம்மா. பித்தனாகிவிட்டேன் பிரிந்து வாழ்வதால் பிணமாகிவிட்டேன் பிரியமானவளே நீ இல்லாது
இகத்தில் நீ பிறந்தாய் எனக்காக அமுதே இகம் போற்ற வாழ்வதும் நாம்தானே இதயக் கமலமாகி, ஆத்மநாதமாய் நடமிடுகிறாய் இதுவும் தேவை நம் காதலை உரசிப் பார்த்திட அன்பே இடைவெளி சிறிதே இறைவன் சேர்த்திடுவான் இதயம் கலங்காது இன்முகமாய் இருந்திடுவாய் இமயம் நகர்ந்தாலும் நகரலாம் நம் இதயம் இரண்டல்ல ஒன்றுதான்.
监
7.5.I956

க இனங்காதிகைம் 143
தாகம்
தேவலோகம் இங்குத் தேவதைகள் ஒராயிரம் தேனினும் இனியகானம் தென்றலாய் வீசுது 圈 அவளில்லை இங்கு ஆறுதலுமில்லை எனக்கு - தேவி அந்தநாள் நினைவில் ஆகாயம் பார்க்கிறேன் ஆத்மா அழைப்பது உனக்குக் கேட்கவில்லையா ஆரணங்கே ஆலயம் எனக்கு நீயல்லவா பஞ்சாமிர்தம் உன் குவளையில் அல்லவா - தேவி தரிசனம் உன் பஞ்சணையில் அல்லவா
காதல் தலைமீது காத தூரம் நீ காளை கைலைபோல் காணாத ஏக்கத்தால் கருத்தும் கருகிவிட்டது களைப்பும் வருகிறது - தேவி களைந்திடமாட்டாயோ காதல் தணிந்திட மாலை விழுந்து விட்டது மலரும் வாடிவிட்டது மதிமயங்கி விட்டது மந்திரமும் ஓய்ந்துவிட்டது மஞ்சம் மாதுளையானது மதம் மானாகிவிட்டது - தேவி மயக்கம் கொடியதல்லவோ மன்னவன் நாடிவாராயோ!
屿 விடுதலை
1987
விலை கொடுத்துப் பெற வேண்டியது விட்டத்தைப் பார்த்துக் கிடைப்பதில்லை
விதைத்து அறுவடை செய்வது 6filuumurTrf 6filipsLDT“LTGöT.

Page 74
144 മരയ്കgർക്
இயக்கம்
இறைவன் இரண்டைப் படைத்தான் இரண்டும் இப்பூமியை ஆண்டனர் இல்வாழ்வில் இரண்டும் சேர்ந்தனர் இவனும் இவளும் பெற்றோரானார் பெருகியது அற்புத மனித இனம் உருவாகியது இன்பதுன்பச் சுமைகள் ஆண்டான், அடிமை அன்புள்ளங்கள் ஏங்கின இல்லாதவன், இருப்பவன் ஞானிகள் உருவாகின கல்லாதவன், கற்றவன் வேதங்கள் பாடின மொழிகள், ஜாதிகள், அரசுகள் உருவாகின பசுமையும், பஞ்சமும் பகுத்தறிவை மீட்டின பாசமும் வெறுப்பும் பலரை ஆட்டுது சிரிப்பும் அழுகையும் பாரில் கேட்குது வேதனையும் சாதனையும் குறையாது ஒலிக்குது பிறப்பும் இறப்பும் இல்லாத வீடில்லை காதலும் காமமும் இல்லாத நாடில்லை கலைஞனும் கவிஞனும் எண்ணாத எண்ணமில்லை வானிலும் மண்ணிலும் படைக்காத அதிசயமில்லை இரவும் பகலும் இறையின் செயல்பாடு நீரும் காற்றும் காப்பவன் தொழிற்பாடு ஆணும் பெண்ணும் மன்மதன் விளையாட்டு ஆயிரம் பேதமும் மனிதனின் ஏற்பாடு.
监

க இனங்காதிலகம் 145
முருகா
முருகா என் இதயக் கோயில் நாயகா சண்முகா என் வினை அறுத்த முருகா பார்த்த இடமெல்லாம் நீ ஐயா பாடம் சொல்லிக் கொடுத்த தமிழ் முனியா
நேசமாய் நான் உன்னைக் கவிபாடுகிறேன் வீசும் உன் கருணைக்காய்த் துதி பாடுகிறேன் ராக தாளம் சேர்த்து இசை மீட்டாயோ ராசநடை நடந்து காட்சி தாராயோ
கற்சிலை, வெண்சிலை, பொற்சிலை கண்டேன் உன்னை பால்முகம் வேல்முகம் ஆறுமுகமாய்ப் பெற்றேன் சாந்தி கோவிலில், குடிசையில், மரத்தடியிலும் கண்டேன் உன்னை மகனாக, துணைவனாக, தம்பியாக்கி மறந்தேன் என்னை
கரனை வதைத்துப் பெயர் சூடினாய் காப்பவன் என்று கருணை பொழிந்தாய், கந்தனாய்ப் புகழ் பெற்றாய் கோலம் பல எடுத்தாய், கோவன. ஆண்டியுமானாய் கோலமயில் மீது வந்து என்னைக் காத்தருள்வாய்.
(எழுபதுகளில்.)
屿

Page 75
146 മരയ്കgർക്
எதை எதையோ தேடுகிறான்
பாசக் கயிறு தூங்குதடா - உயிர்ப் பாசம் என்னை வாட்டுதடா உலக வாழ்வில் ஆசையடா - முருகா உந்தன் நினைவில் வரவில்லையடா
காதல் வந்துவிட்டால் நான் காளையடா காலன் வந்துவிட்டால் நான் கோழையடா ஞானம் பெற்றுவிட்டால் எவனும் துறவியடா ஞாலத்தில் அவன்தான் கலங்கரை விளக்கடா
மண்ணாசை இல்லையென்றால் மகுடங்கள் ஏது பொன்னாசை இல்லையென்றால் மாளிகைகள் ஏது உல்லாசமாய் வாழ்பவன் இறைவனிட்ட பிச்சையென்பான் உணவுக்கு வாடுபவனோ இறைவனின் லீலையென்பான்
புரட்சி வெடித்திட்டால் இப்புளுகு எம்மாத்திரம் புதிய பாதை வகுத்திட்டால் எமனையும் வென்றிடலாம் அம்புலியில் மனிதன் நடைபயின்றாலும் - இவ்வுலகில் பசும்புலியாய் உலவுகிறான் தன்னிச்சையாய் வாழ்வு நிலைத்திட்டால் எதைஎதையோ தேடுகிறான் கைகளினால் சாவு வந்திட்டால் எதையோ தேடுகிறான் விழிகளினால்,
23.04.1988ல் ஸ்கன்னபோ ‘வசந்தம்’ இதழில் பிரசுரமானது.
监

க இனங்காதிகைம் 147
எங்கள் ஊர் பூவரசு
பூவரசு பெயர் நீ ஏன் கொண்டாய்? பூக்களுக்கு நீ அரசா? பூவுடன் அரசஇலை சாயல் கொண்டதனால் பூவரசு பெயர் பெற்றாயா?
காலையில் பூத்து மாலையில் வாடும் பூவரசம்பூ காலம் மிகவும் குறைவு என்று புகட்டும் பூ பூவரசம் இலையோ நல்லுரம் பயிருக்கு பூமியில் சிலரோ போடுவார் உரம் நாசத்திற்கு எங்கள் ஊர் பூவரசு பூத்தது சிவப்புப் பூ எங்கள் ஊர் மக்களின் சிந்திய செந்நீரே அது வேலியாகிக் காவல் தருவது எங்கள் ஊர் பூவரசு இதமான நிழலைத் தருவது எங்கள் ஊர் பூவரசு கால்நடைக்கு உணவாவது எங்கள் ஊர் பூவரசு கருவிகளுக்குக் கைப்பிடியாவது எங்கள் ஊர் பூவரசு ஒரு மனிதனைக் காட்டுங்கள் எங்கள் ஊர் பூவரசு போல் செத்தபின்பும் செந்தணலாகி உதவும் பூவரசே! செஞ்சோற்றுக் கடன்தீர்த்த கர்ணனை விட நீ உயர்வே
20.42OOO
监

Page 76
148 ഉത്തൂർണ്ണമgർക്
அடுத்தது என்ன?
ஆனையிறவு அன்னியன் கையிலிருந்தது ஆத்திரம் தமிழன் மனதிலிருந்தது வெள்ளிவரை தாக்கம் தீரவில்லை வென்றெடுத்தவீர வேங்கைக்குத் தீபாராதனை
போர் மனம் கொண்டவனில்லை தமிழன் போசனம் இட்டுக் கொண்டாடுபவன் தமிழன் சுதந்திரம் தனிமனிதனின் உரிமைச் சொத்தாகும் பிறந்த மண்ணைக் கேட்பது அவன் கடமையாகும். நேசமணம் கொண்டவர் நியாயம் என்பார் போலி மனம் கொண்டவர்கள் எதிர்த்து நிற்பார்
சவச்சாலையை நிரப்புபவர்கள் சமாதானப் பிரியர்களா? சரித்திரம் அவர்களுக்கு ஞானம் புகட்டவில்லையா? சகல மக்களும் சரிசமம் என்று புரியவில்லையா? சனநாயகம் ஏன் இன்னும் சரியாக இயங்கவில்லை?
அடுத்தது என்ன? அடித்து நொறுக்கு என்பேனா? அடுத்தது என்ன? அமர்ந்து யோசி என்பேனா? அடுத்தது என்ன? அடங்காதே தமிழா என்பேனா? அடுத்தது என்ன? ஆட்சியாளர்களே சிந்தியுங்கள் என்பேனா?
உயிர்கள் விலை மதிப்பற்றது எனக்குப் புரியும் உடமைகள் உதிரியாவதில் உடன்பாடில்லை எனக்கு ஊக்கமும் ஆக்கமும் நாட்டு வளத்துக்குத் தேவை என்பேன் உயர்ந்த உன்னத முடிவே அடுத்து வரவேண்டும் என்பேன்.
24.04.2000 监

. അബിസ്മെ 149
போதை
முலைப்பாலை நுகர்ந்து முணங்கி முணுமுணுத்து ep&ter (pl. முகம் கோணாது பருகினேன் முகம் சிவக்கலானேன் போதையில் தூங்கினேன்
சிறுவனாக வளர்ந்தேன் பட்டம் பறக்கவிட்டேன் மணல் வீடு கட்டினேன் சிறகில்லாது பறந்தேன் சிறு சிறு கனவுகள் சிந்தனையில் சிறுபோதை
பள்ளி அழைத்தது படியென்றார் அப்பா வளர்த்தார் திட்டமுடன் படிப்பு சலித்தது துடிப்பு அரசியலானது விசித்திரமான போதையது
வாலிபம் வண்ணமிட்டது வளர்ச்சி மாற்றமிட்டது தோள்கள் திரண்டது தோழிகள் கண்சிமிட்டினர் உள்ளம் தோகை விரித்தது உணர்வில் ஒரு போதை

Page 77
15[]
2ஈர்ஷர்துக்கன்
தோழரோடு உலா
ErypĒTIDLILI îlesið , uGlo GTGÄRATGESTLD மதகில் வட்டமேசை மதுவும் சுவைத்தது மங்கையும் கவர்ந்தாள் மழுங்கினேன் போதையில்
நல்ல வேளை வந்தது நல்ல வேலை கிடைத்தது திசையும் மாறியது திருமணம் நடந்தது குழந்தைகள் தடும்பம் குதூகல போதையிது
ஆசைகளின் வட்டம் அதிகாரப் பதவியில் நாட்டம் தனநைதனாக நாட்டம வருடங்கள் உருண்டன வரவு - செலவு சமநிலை போதையோ உயர்நிலை
ஆசையில் நரை விழுந்தது முதுமை முன்னே வந்தது பூலோகம் மாயை ஆனது பூஜையில் மனம் மகிழ்ந்தது கல் கடவள் ஆனது போதை புது வடிவெடுத்தது.
27.4.2 - 1RI தமிழ் அவையில் அறிவிப்பாள சகோதரர்
ைே'ரகதாஸ் எயவித்தார்.

3. திசேர்ஃகாதிலகர் 5
அம்மா! நீ அங்கு சுகமா?
அம்மா! நீ அங்கு சுகமா? நான் இங்கு சுகமே
உன் முந்தானைத் தலைப்பை உராய்ந்து நடந்த நினைப்பை உன் மடிமீது தூங்கிய அந்த மறவாத நாளை எண்ணி ஏங்கும் பிள்ளை நான் கண்டு வாழ்த்த எல்லை நீளம்
அம்மா! நீ அங்கு சுகமா? நான் இங்கு சுகமே

Page 78
152 ഉരgഴgർക്
தந்தை கண்ட வழி தருமன் கண்ட நெறி தனயனே நீயும் தொடர். தடம் புரளமாட்டாயென்றாய். அறிவு தந்த அன்னை நீ அனுதினமும் தியாக ஒளி நீ
அம்மா! நீ அங்கு சுகமா? நான் இங்கு சுகமே
சிவம் என்று அழைத்து சிரசில் முத்தமிட்டு சிங்கள வெறிக்குப் பயந்து சிலோனை விட்டு அனுப்பினாய் சிந்தனையில் அது பசுமையம்மா சிரஞ்சீவியாய் நீ வாழம்மா!
StbuDn så SiriuG sæLDm? நான் இங்கு சுகமே.
监
IIpGDID - IJöIGDID
மண் பாத்திரத்தில் சோறாக்கியது பழமை திடீர் உணவு சூடாக்கி உண்பது புதுமை,
இனவாதம் மொழிவாதம் மதவாதம் பழமை
சர்வதேசியம் - மனிதநேயம் புதுமை.
5.6.04

க இனங்காதிகைம் 153
நம்பிக்கை நாற்றுகள்
மாண்புமிகு தலைவர் மன உறுதியுடன் மறுபடியும் கைப்பற்றினார் தமிழ் மண்ணை நம்பிக்கை நாற்றுகள் நம் மனதில் உறுதியுடன் துளிர்விட்டு வளரட்டும் துளிர்கள் மரமாகட்டும்
புரட்சிப்படை
9lFUSDL6Gou புறமுதுகிட வைத்தது வெற்றிவாகை கடியது தோன்றியது ஒளிமயம் விடுதலை உணர்வின் நம்பிக்கை நாற்றுகள்
புதிய யுகத்தில் புதிய சரித்திரம் படைத்தது வீரவேங்கை வீழ்ந்தது வெற்றிமாலை நாற்றங்கால் உன்வீடு நாற்று நடவு நம் நாடு நம்பிக்கை நாற்றுகளை நம்பி நடவுங்கள்

Page 79
154
2ഞ്ഞുീഴുമgിക്
நாற்றங்காலில் முளைத்த நெல் நலமாகப் பேணி நடவுக்கு வந்தது
பண்படுத்திய தரையில் பசளையிட்ட வயலில் கடின உழைப்பாளியாம் கமக்காரன் நடுவது போல்
பயிற்சி முகாமில் புடம்போட்ட தங்கங்கள் புதிய முனைப்போடு தரையிலும் கடலிலும் தன்னலம் கருதாது தலைவன் ஆணைப்படி தாக்கி அழித்த தாகம் தீராத நம்பிக்கை நாற்றுகள் நலம்பெற வேண்டுவோம்
3.5.2000 - சகோதரர் லோகதாஸ் ரி.ஆர்.ரி. தமிழ் அலையில்.
些
கொள்கை - கற்பனை
கொள்கை - பிச்சைக்காரத்தனம். கற்பனை - செல்வநிலை.
IO, 7.2004

க இனங்காதிகைம் 155
அன்னியக் காற்று
அன்னையின் கருவறையில் ஆசுவாசமாகச் சுவாசித்தேனா இதமான காற்றை? F60pbg, LDITg556) உதயமானேன் பூமியில் ஊக்கும் முதல் காற்றை எல்லாத் திசைகளிலும் ஏகாந்தமாய்ச் சுவாசித்தேன்
அன்னியச் செலாவணியை ஆனமட்டும் சேர்த்துவிட்டு இறுமாப்பு மனதுடன்
ஈரமற்ற சிந்தனையுடன் “உது என்ன. ஊத்தை நாடு ஊர் தானே உயர்ந்த நாடு.” எல்லாம் தெரிந்தவர் போல் ஏன் தான் சாடுகிறார்கள்? அன்னியக் காற்று அமிர்தமில்லையாம் அடுத்தவன் தோட்டத்து மாங்கனி ருசிக்குதாம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் யாதும் ஊரே

Page 80
156
മജീഴ്ത്തgൾക്
யாவரும் கேளிர் ஏனோ சொல்லிவிட்டான் ஏட்டிலும் எழுதிவிட்டான் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது மனித நேயம் SibsoLDusso (36igibgp6OLD காண்பது மாக்கள் நேயம் மனிதன் மனதில் சூறாவளியா? அன்னியக் காற்றில் சூறாவளியா?
சாதனை புரிபவர்கள் சிலர் சந்தோஷம் கொடுப்பவர்கள் சிலர் சமாளித்து நடப்பவர்கள் சிலர் ஊருக்காய் உழைப்பவர் சிலர் கூட்டு முயற்சியில் இவர் மனித இன வளர்ச்சியில் இதயமாவர் சாபம் கொடுக்கவும் ஒருசில சாதுக்கள் உலகில் உண்டு விசுவாமித்திரர் எனும் நினைவில் விதி செய்யும் அன்னியக் காற்றுகள்.
10.05.2000 - தமிழ் அலை TRTயில் அறிவிப்பாள சகோதரர் பிலிப்தேவா வாசித்தார்.
监

க இனங்காதிலகம் 157
வானம்
வானத்தின் கிழக்கு வாயிலில்
பொன்னிறக் கோலங்கள் ஆங்காங்கு வானவன் பொற்கற்றைகளைப் பொழிந்து
கட்டியம் கூறினான் விடியலுக்கு வித விதமான விரைவு எங்கும்
வியாபித்த பல உழைப்புகள் மண்ணில் பசி தேடுதலின் தூண்டுதலென்றால்
பட்டினி - ஏமாற்றுக்காரரின் பரிசில்
பார் எங்கும் பசுமை பளிச்சிட
பகலவன் பல விந்தைகள் செய்கிறான் கார் கதிரவனுக்குத் திரை போட
மழை பாய் விரித்தது தரையெங்கும் இடி மின்னல் சூறாவளியால்
வான் வதனம் கறுத்துச் சிலிர்த்தது வெண் முகில் கூட்டங்கள் மிதந்தன
அமைதியை வானம் அனுமதித்தது
நீலக்குடை நடுவில் நாயகன்
பவனிவந்தான் உலகில் பரம்ஜோதியாய்
நீக்கமிலா நின்மலன்
நிறைவேற்றுகிறான் பேறுகள் இவ்வுலகில்

Page 81
158
உயரப் பறந்தது வான் ஊர்தி ஒன்று
வல்லவன் மனிதனின் திறமையிது
உயரப் பறந்து போட்டான் அணுகுண்டு
வல்லவன் மனிதனின் மடமையிது
மேற்குத்திசை மாறினான் சூரியன்
அது கிழக்கானது மறுபக்கம் மேலான கடமையில் காலச்சக்கரம்
தன் கூட்டில் பறவைகள் உறக்கம் இருள் வானத்தின் உறக்கமானது
நட்சத்திரங்கள் கண்விழித்துப் பார்த்தது ஆச்சியின் அரிக்கன் லாம்புபோல
சந்திரனும் வையகத்தைப் பார்த்தது.
监
IIf
பரிகள் பூட்டிய ரதத்தில் - பகலவன் பவனிவந்தான் பரிகாசம் செய்தான் நாத்திகன். இதைப் பரிசோதனை செய்வது தெய்வ நம்பிக்கையல்ல.
பரியாரி பருத்த உடலுக்குப் பூரணம் கொடுத்தார் பரிகாரம் பலன் கொடுத்த தகவல் இல்லை.
பரீட்சையில் தோல்வியா? - சக பரிவாரம் தொல்லையா? - பரிவுகாட்ட ஆளில்லையா? பலமாகப் படி - பரம் பொருளை நாடு.
മരgO g്ക്
21.1.04

க இனங்காதிகைம் 159
கனவு
“எனக்கு ஒரு கனவு உண்டு கறுப்பும் வெள்ளையும் கை கோர்க்க வேண்டும்.’ மார்ட்டின் லூதர் கிங் முழங்கினார். மக்கள் மனதைக் கொள்ளை கொண்டது பகலில் கண்ட கனவல்ல இது வரலாற்றில் நடந்த நிஜம் இது அடிமைக்கு விடுதலை வேண்டிக் கனவு கடின உழைப்பாளிக்கு திருவினையாகக் கனவு பட்டினிக்காரனுக்கு ஒரு பிடிச் சோறு கனவு ஞானிக்கு மோட்சம் காண்பது கனவு காதலனுக்கு காதலியைக் கைப்பிடிக்கும் கனவு சுயநிர்ணய உரிமை ஓர் இனத்தின் நனவு
மகாத்மாவின் சத்திய சோதனைக் கனவு கஸ்ரோ கண்ட புரட்சிக் கனவு மண்டேலாவின் சிறைவாழ்வின் கனவு அரபாட் கண்ட சிநேகக் கனவு அனைத்தும் நனவின் வித்துக் கனவுகள் நடந்து முடிந்த சரித்திரப் பாத்திரங்கள் இன்று தொடர்வது தமிழர்களின் தமிழீழம் வென்றெடுக்கப் போவது விடுதலை வீரர்கள் வாழ்வு ஒருவனுக்கு ஒருமுறைதான் வரும் வாழ்க்கையில் நிகழ்வுகள் பலமுறைகள் வரும் நிகழ்வுகளின் பலகோணங்கள் கனவுகள் சில கோணங்களின் வெற்றிகள் நனவுகள்.
28.5.2000 - திரு. நடாமோகன் வாசித்தார், இ.த.வானொலியில்,
监

Page 82
160
മരയ്കgർക്
ஆணாதிக்கம்
அய்யர் குலத்தில் நான் பிறந்தேன் ஆயர் குலத்து அணங்கு வேண்டாம் ஆயர் குலத்தில் நான் பிறந்தேன் அய்யர் குலத்து அம்புஜம் வேண்டும்
ஆணாதிக்க நம் இனம் ஆட்டுவிக்கின்றது குலம் சொல்லி பெண்ணா வீசுவாள் காதல் வலை ஆண்தானே விரிப்பான் காதல்வலை
பெண் விடுதலை வேண்டும் பேதமை ஒழிய வேண்டும் ஆண்மையின் சிலர் ஆதரவு அத்திவாரம் இட்டதுடன் முற்றுறவு ஆணாதிக்கம் அரசு ஒச்சுமட்டும் அநீதி பெண்ணை அழுத்திவிடும் சாத்திரம் சம்பிரதாயம் ஆணாதிக்க வடுக்கள் குலம் கோத்திரம் ஆணாதிக்க வடிவம்.
监
28.5.2000
LIIQ படி படி தமிழைப் படி படித்தால் தமிழன் என்ற முகவரி படிந்துவிடும் உன் வாழ்வுப்படியிலே பனிபடிந்து சறுக்கியது வாசல்படி வாழ்க்கைப் படியில் உழைப்பு நிசப்படி

க இனங்காதிலகம் 161
என் அப்பா
நினைவு தெரிந்த நாள் முதல் நின் முகம் என் மனதில் நீங்காது என்றும் என் உணர்வில் நீ எனக்கு ஒரு முன்மாதிரி உன் மடியில் சாய்ந்த நினைவு நெஞ்சில் உன் தோளில் சவாரி நினைவு நெஞ்சில் உன் பார்வையில் நான் என்ன குழந்தையா? உன் அணைப்பில் நான் மெய் மறந்தேன்
எண்ணத்தில் உயர்ந்த மனிதர் அற்றவர்க்கு உதவும் மனம் கொண்டவர் கடமை உணர்வு கொண்டவர்
த் தண்டித் இறைபக்தி கொண்டவர் குடும்பத்தில் பற்று மிகுந்தவர்
இணையர் ங்கள் அ பின்பர் டுத் ೨qರಾ அப்பா! நீங்கள் மறைந்தும் இதயத்தில் மறையவில்லை
அப்பா எனக்குத் தங்கள் பணி செய்யும் பலனில்லை அகத்தில் உங்களை நான் ஆராதிக்கின்றேன் அன்பான உங்களை நினைத்து மகிழ்கிறேன்.
2.6.2OOO

Page 83
162
മരggർക്
favorid
சுட்டு விரல் காட்டி அவர் சுதந்திரமாய் ஊரில் வாழ்ந்தார் உயர்திணையாய் வலம் வந்தார் சூத்திரம் மாறிப் போனதால் அஃறிணை யானதினால் சவம் நீட்டி நிமிர்ந்து படுத்தது சுற்றம் சொந்தம் சூழ்ந்தும் சுமக்க நால்வர் போதும் சுரண்டிப் பிழைத்த இவருக்கு சுடுகாட்டிலும் உரிமை இருக்கு வயதான சவம் இது வரிசையான பின்னோக்கிது வசதியாக வாழ்ந்த சீமான் உயர்குல உத்தமப் புத்திரன் வட்டிகுட்டி பணக்காரன் வளைக்கரங்களின் வாடிக்கையாளன் மதுக்கடைகளின் குத்தகையாளன் ஏழையின் கண்ணிரைச் சம்பாதித்து எல்லா ஆட்டமும் அரங்கேறியது இறைவன் லீலை முடிந்தது இதயத் துடிப்பு அடங்குநிலை இமயம் சரிந்த நிலை இதுதான் வாழ்க்கை நியதி இதற்குள் இத்தனை அவதி
26.6.2000 - இ.த.வானொலியில் திரு. நடாமோகன் வாசித்தார்.
些

க இாைங்காதிகைம் 163
IfoIGLI'Ig
மருத்துவமனை அயலில், என் விற்பனை அமோகம் விற்பனை நிலையத்தில், எனக்கு சாம்பிராணித் தூபம் வாங்குவோர் தரத்திற்கு, என்னில் பல தரமுண்டு சந்தனப்பெட்டி, சவுக்குப்பெட்டி, விலையில் பேரமுண்டு பிரிவினை மனிதன், என்னைப் பிரித்தே பார்த்தான் பிரேத ஊர்வலத்தில், என் தரமே பேசுகின்றான்
சவப்பெட்டி நான், சரித்திரம் எங்கே படைத்தேன்? சமூக அமைப்பின், சேவையே என் படைப்பு விவேக மனிதன், ஏன் விசித்திர மனிதனாகினான்? வியாபார மதிப்பை, மனித இதயத்தில் விதைத்தான் கரன்சி நோட்டுகள், கதிரையில் இருந்து பேசுகிறது காகிதம் நோட்டாகி, மக்கள் கழுத்தை நெரிக்கிறது.
சகோதரர் கலைஞபன் இ.த. வானொலியில் வாசித்தார்.
屿
இன்பம் - போலி
பிறப்பெனும் இன்பம் இறப்பின் பின் போலி.
போலியான இல்லறம் நடத்துவதிலும் பார்க்க இன்பமாகப் பறந்து செல்.

Page 84
164
ജീഴ്വgർക്
பிணக்குழி
இறந்த மனித உடலின் இணைவு நான் சவக்குழி துர்நாற்றம் சூழலை அழிக்காது சுகாதாரம் சீர் குலையாது
யேசுநாதர் ஜெருசலக் கல்லறை நபிகள் நாயக மக்கா சமாதி எல்லாளன் அனுராதபுர சமாதி உலகப் போர்களின் நினைவுச் சின்னம் நாசியின் கொடுங்கோன்மை நினைவுச் சின்னம் சரித்திர மைல்கல் நான் பதிவுச் சின்னம்
உடன் பிறப்புக்கு செம்மணியில் புதைகுழி உண்மை வெளிப்பாட்டின் பெருமைப் புதைகுழி எண்ணார் கொடுமைக்கு நான் சாட்சி மாவீரர் துயிலும் வீர ஆலயம் மக்கள் மனதில் வீர காவியம் சொற்கள் அடுக்கில் நான் ஓவியம் சொந்தம் தொடர நான் ஆதாரம் சொர்க்க பூமியில் நான் நிரந்தரம்.
26.62OOO
监

க இாைங்காதிகைம் 165
வாழ்வுக்காய் வதைபடுகிறோம் வதைபடுதலில் வாழ்கிறோம்
இருவினை மனிதனை ஆட்டுகிறது இருதலைக் கொள்ளி எறும்பாகிறான் இறைவன் கட்டளை வழமை இயற்கை வாழ்வின் புதுமை
சிறுமை மனிதன் விளையாட்டிற்காய் சிறியவன் பெரியவனின் பகடைக்காய் பாலியல் - கொலை - வதைகள் பட்டினி - நோய் - வதைகள் வாழ்வா - சாவா - போராட்டம் பூவா - தலையா - தடுமாற்றம் வாழ்வுக்காய் வதைபடுகிறோம் வதைபடுதலில் வாழ்கிறோம்
நேற்றைய மனிதனை மறக்க வேண்டாம் இன்றைய மனிதனை வதைக்க வேண்டாம் நாளைய மனிதன் உயர வேண்டும் வதைகள் சிதையில் எரியட்டும் வாழ்வு வளமாய் வளரட்டும்.
2.7.2000
些

Page 85
166
മരയ്കgർക്
சிறுமியின் கனவு
“வணக்கம். அம்மா” எட்டு வயதுச் சிறுமி பட்டு உடையில் மேடையில் வானொலி மாமா கேட்டார் '676ör607 obuDr. LIgšápTur?" “மூன்றாம் வகுப்பு படிக்கிறேன்” முத்தாக வந்தது வார்த்தைகள் “நல்லது அம்மா! உங்களுக்கு பாடத் தெரியுமா? தேவாரம் பாடுவீர்களா..?” “சினிமாப் பாட்டு பாடுவேன். சித்திரம் பேசுதடி பாடட்டுமா..? “பழைய பாட்டா அம்மா? உங்களுக்கு டான்ஸ் ஆடத் தெரியுமா? பரதநாட்டியம் ஆடுவீர்களா..?” “அலாரிப்பும், ஜதீஸ்வரமும் முடித்திட்டேன் அடுத்தவருடம் அரங்கேற்றம்.” “கெட்டிக்காரி அம்மா உங்களுக்கு வருங்காலக் கனவு உண்டா? என்னவாக வர விருப்பம்?” “நான் டாக்டராக வர வேண்டும் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும்”

த இனங்காதிகைம் 167
சிரித்தார் வானொலி மாமா சிந்தனை சிறிதே சதி செய்ய சிலையாக நின்றார் மேடையில் பாட்டு - பரதம் - பட்டக்கல்வி பிஞ்சுச் சிறுமியின் கனவு பலிக்குமா? பதினெட்டு வயது வந்ததும் படித்ததை நிறுத்தி திருமணம் பதைப்புடன் பெற்றோர் தீர்மானம் eyp6örpmb 6TLGB6it BBLD600TLDITib முன்னோர் சொன்ன அறிவுரையாம் கனவை வளர்த்த பெற்றவர் கவலையை மகளுக்கு விதைப்பதா? காகிதப் படகா எண்ணங்கள்? கடமை பெற்றோர்க்கு உண்டாம் கடைச் சரக்கு வியாபாரமாம் “வானொலி மாமா!” விளித்தது சிறுமியின் குரல் வாஞ்சையுடன் சிறுமியை அணைத்து வாழ்த்துக் கூறினார் டாக்டராக அறுவை சிகிச்சை யாருக்கு? டாக்டர் தேவை சமூகத்திற்கு.
9.7.2000 -சகோதரர் பாவை ஜெயபாலன் இலண்டன் ரைம்மில் வாசித்தார்.
监

Page 86
168 മരയ്കg&ക്
மல்லிகை மாலையில் அலரிப்பூ
எல்லாளனைக் கொன்றான் துட்டகைமுனு அவன் பகைவன் யூலியஸ்சீசரைக் கொன்றான் புரூட்டஸ் அவன் நண்பன் பகைவனும் நண்பனும் எதிரியா? பதில் கேட்பதும் பிழையா? நண்பன் குத்தியது மீண்டும் அரங்கில் நயவஞ்சக நாடகமா மீண்டும் உலகில்? மனித நேயம் பணத்துக்கு விலை போனதா? சுயநலம் சுவாசத்துக்குத் துணை போனதா? சூழவுள்ள மக்கள் என்ன மந்தைகளா? சுயமரியாதை அற்ற நடைப் பிணங்களா? நாட்டு உரிமையை மீள உன் துணை என்றோம் எங்கள் உரிமையை உன் நிகழ்சிகள் பறிப்பதா? மன்னா! மண்டியிட்டு மனம் கூவுகின்றேன் மல்லிகை மாலையில் அலரிப்பூ என்கிறேன்.
12.9.2000 - கலைளூபன், நடாமோகன் வாசித்தனர்.
监
அனுபவம் - ஞானம்
பசியோடு பரிதவிப்பவனுக்கு அனுபவமும் இல்லை - ஞானமும் இல்லை.
உணவில்லா அனுபவம் உழைப்பிற்கு வழிசொல்லும்
ஞானத்திற்கு வழி சொல்லும்.
29.5.04

க இாைங்காதிகைம் 169
யாழ்ப்பாணம்
பனை, தென்னை, மா, மாதுளம் உன்னை அழைக்குது யாழ்ப்பாணம் வாழை, பலா, வெற்றிலை, கமுகு உன்னை அழைக்குது யாழ்ப்பாணம்
உரம் செரிந்த மண் நெஞ்சுரம் பெற்றவர் மண் நினைவில் நிற்கும் மண் நிகரில்லா சுவர்க்க மண்
யாழ்குடா இயற்பெயர் வளைகுடாவின் இதயம் மாங்கனி மூக்கின் சாயல் வளம் கொண்ட இயல்
செம்மண் செழிப்பில் கருமண் வனப்பில் வெண்மண் சூட்டில் 5L6ioLD6ioT (SLDiegso சுகமுண்டு என் மனதில் செளக்கியமுண்டு வடகாற்றில்
ஆறாத வடுவாக நீறுபூத்த நெருப்பாக சிதறிய முத்தாக சிறகொடிந்த பறவையாக சீரழித்த அரச படையை ஓயாத அலைகள் ஒரம் கட்டியதை

Page 87
170
മേgിക്
கண்ணாரக் கண்டு கொள்ள களிப்பில் மகிழ்ந்திட கடல் அலைகள் அழைக்கிறது புறாவும் புலுனியும் புகலிடம் தேடி ஓடவில்லை காகமும் கரிச்சானும் இடம் விட்டு அகலவில்லை மரங்கொத்தியும் மைனாவும் குண்டு வெடித்தும் மசியவில்லை ஓணானும் ஒட்டுப்பல்லியும் ஒன்னார் கண்டு ஒளியவில்லை ஒடையும் குளமும் தடை கண்டு நடுங்கவில்லை இவர்கள் இல்லம் யாழ்ப்பாணம் கயவர்கள் கைவரிசை சப்பாணி
ஓம்.ஓம்.ஓமோம். ஓம்.என்று ஆமோதிக்கும் ஒலி “ஓம் முருகா!’ என்று துதிக்கும் ஒலி கடல் அலைகள் இரையும் ஒலி பனை ஓலைகள் அசையும் ஒலி பச்சைக் கிளிகளின் கீச்சு ’ ஒலி பசுமையான என் நினைவு ஒலிகள் பரந்த யாழ்ப்பாணத்தில் கேட்டஒலிகள்
பனை, தென்னை, மா, மாதுளம் என்னை அழைக்கிறது யாழ்ப்பாணம் வாழை,பலா, வெற்றிலை, கமுகு என்னை அழைக்கிறது யாழ்ப்பாணம்
18.9.2000 - சகோதரர்கள் குமரனும், நடாமோகனும் வாசித்தனர்.
监

க இனங்காதிகைம் 171
இரவல் தத்தம் இரவல் கொள்ளி
தம்பிக்கு ஐரோப்பாவில் திருமணம் தகவல் கடிதம் பெற்றோருக்கு “தத்தம் செய்ய வரட்டுமா? தாலி செய்து வரட்டுமா? அப்பா கேட்டார் பதிலாக அங்கு அனுப்பப் பணம் இல்லை இரவல் தத்தம் ஒழுங்காச்சு இங்குக் கேட்டு சரியாச்சு
வீதி ஒரக் குடிசையிலே ஏழை உலையில் அரிசியில்லே வறியவன் அடுப்பில் நெருப்பில்லே எளியவன் பசிக்குப் பஞ்சமில்லே இரவல் அரிசி, இரவல் கொள்ளி இடுவர் யார், இடுக்கண் களையுமா?
தமிழன் போராடுவது தமிழீழம் தமிழன் கேட்பது ஆட்சியுரிமை இணைய வேண்டில்.வடக்கும், கிழக்கும் வாக்குப் பெட்டி தீர்மானிக்குமாம்! இரவல் தத்தம், இரவல் கொள்ளியாம் இரவல் சேலையில் இது நல்ல கொய்யகமாம்.
29.6.2OOO
监

Page 88
172 മരയ്കg്ക്
தத்துவம் தவமும்
தத்துவம் பேசும் ஞானியே தவமிருக்கும் துறவியே - இல்லாதவன் பிச்சை கேட்பது கோயில் வாசலிலே துஞ்சை கொள்வது மரநிழலிலே பஞ்சாய்ப் பறக்குது இடைதுயில் தத்துவமும் தவமும் வாழ்வில் துன்பத்தையும் வறுமையையும் போக்கியதா?
மேற்கு ஐரோப்பாவில் ஏழையில்லை வயோதிபர் பாதையில் உறங்குவதில்லை கோயிலில் மக்கள் நெரிசலில்லை தத்துவமும் தவமும் இங்கில்லை மனிதமும் நேசமும் பஞ்சமில்லை.
சகோதரர் அமரர் வியூகன் (கீழ்கரவைப் பொன்னையன்) சாளரம் நிகழ்வில் வாசித்தார்.
监
நற்சிந்தனைக்கு
சிவபெருமானை அழைக்காதீர்கள், அல்லாவை அழைக்காதீர்கள், யேசுவை அழைக்காதீர்கள், புத்தரை அழைக்காதீர்கள் நாங்கள் சிவபெருமானாக, அல்லாவாக, யேசுவாக, புத்தராக மாறினால் எல்லாம் நன்மையாக நடக்கும்.

க இனங்காதிலகம் 173
இத்தனை முகங்களா?
இராவணனுக்குப் பத்து முகங்கள் முருகனுக்கு ஆறு முகங்கள் பிரமனுக்கு நான்கு முகங்கள் மனிதனுக்கு எத்தனை முகங்கள் பொய்யனுக்கு இரண்டு முகங்கள் கள்வனுக்கு இரண்டு முகங்கள் கொலைஞனுக்கு இரண்டு முகங்கள் காமுகனுக்கு இரண்டு முகங்கள் வஞ்சகனுக்கு இரண்டு முகங்கள் சுயநலவாதிக்கு இரண்டு முகங்கள் அரசியல்வாதிக்கு இரண்டு முகங்கள் ஏமாற்றுக்காரனுக்கு இரண்டு முகங்கள் பரம ஏழைக்கு இரண்டு முகங்கள் பணக்காரனுக்கு இரண்டு முகங்கள் பெற்றோருக்கு இரண்டு முகங்கள் பிள்ளைகளுக்கு இரண்டு முகங்கள் ரசிப்பவனுக்கு இரண்டு முகங்கள் தூற்றுபவனுக்கு இரண்டு முகங்கள் கலைஞனுக்கு இரண்டு முகங்கள் கவிஞனுக்கு இரண்டு முகங்கள் கற்றவருக்கு இரண்டு முகங்கள் கல்லாதவர்களுக்கு இரண்டு முகங்கள் வேதம் ஒதுபவனுக்கு இரண்டு முகங்கள் நாஸ்திகனுக்கு இரண்டு முகங்கள் படைத்தவனுக்கு நான்கு முகங்கள் படைக்கப்பட்டவனுக்கு நாற்பது முகங்களா?
17.05.2001 - சாளரம் நிகழ்வுப் பொறுப்பாளர் சகோதரன் வியூகன் வாசித்தார்.

Page 89
174
മരയ്കg&ക്
பொய்த்து விட்டது
அவள் அவனை விரும்பும்போது
அவன் அவளை வெறுத்தான் அவள் அவனை வெறுத்தபோது
அவன் அவளை விரும்பினான் காதல் அங்குப் பொய்த்து விட்டது
பிரிவு அங்கு நிரந்தரமானது அண்ணன் தம்பியை நேசித்தபோது
அண்ணனைத் தம்பி வெறுத்தான் அண்ணன் தம்பியை வெறுக்கும்போது
அண்ணனைத் தம்பி நேசித்தான் பாசம் இங்குப் பொய்த்து விட்டது
பாசாங்கு இங்கு நிரந்தரமானது பெற்றோர் பிள்ளையை விரும்பும்போது
பெற்றோரைப் பிள்ளை வெறுத்தான் பெற்றோர் பிள்ளையை வெறுக்கும்போது
பெற்றோரைப் பிள்ளை விரும்பினான் உறவு இங்கு பொய்த்துவிட்டது
உறவில் ஊனம் நிரந்தரமானது.
உறவும், பாசமும் காதலுமிங்கு உண்மை இல்லாத கதையானது
ஊரில் இந்நிலை எப்படியோ ஊகம் நிழழ்போல் என் மனதில்.
监
24.05.O.

க இனங்காதிகைம் 175
வஞ்சகனால் எரிந்தது நூலகம்
தமிழாராய்ச்சி மகாநாட்டில் குழப்பம் தமிழர் கொலையுண்டு வெதும்பியது மனம் துங்கிய தமிழன் விழித்தெழுந்தான் தூவிய புரட்சியால் விழி சிவந்தான் தமிழ்ப் படை அணியெனத் திரண்டது அரசபடை அணிகண்டு நடுங்கியது கற்பழித்தான் கொலைசெய்தான் அப்பாவிகளை அழித்தான் தீவைத்தான் உடமைகளை ஆத்திரம் கண்களை மறைத்தது ஆணவம் அவனை மிருகமாக்கியது வஞ்சகனால் எரிந்தது நூலகம் வெஞ்சினத்தால் வடிந்தது கண்ணிர் சரித்திரச் சான்றிதழ்கள் அழிப்பால் சந்ததி மெளனம் சாதிக்குமா?
அரச ஆளுமை ஆட்டம் கண்டது அரச ஆளுமை ஓட்டம் எடுத்தது பழைய சரித்திரம் எமக்கு வேண்டுமா? பழைய பஞ்சாங்கம் எமக்குத் தேவையா? எரிந்த நூலகம் பழைய பல்லவி புதிய நூலகம் புதுச்சொல்லோவியம் புதிய தலைமுறை தீட்டும் காவியம் புதிய ஈழத்தில் வறுமை இல்லை புதிய ஈழத்தில் செழுமைச் சரித்திரம் புதிய ஈழத்தில் வளர்ச்சிச் சரித்திரம்
மே 31ஆம் திகதி யாழ் நூலகம் எரித்த நாள்.
监

Page 90
176
മരയ്കg&ക്
இதயமுள்ள இயற்கையே
Göff6OL 56olb கொப்பளித்து உஷ்ணம் குளிர்க் குத்தகைக்காரன் கூப்பிடும் தூரம் குடிபோனான்
களை இழந்த மரங்களை இலை மூடி மறைத்தது நிலை குலைந்திருந்த ரோஜாவில் நிற நிறமாய்ப் பூக்கள்
உழுதிருந்த வயல்களில் உணவு தானியங்கள் மேய்ச்சல் நிலத்தில் மேளம் கொட்டியது மந்தைகள் இசை மீட்டியது பறவைகள் தாளம் போட்டன முயல்கள் சுருதி கூட்டின மென் காற்று
வானம் நீலமாக வெண்முகில் வர்ணமாக இரவியவன் வலம் வந்தாலும் வருணன் சேட்டையும் இடையிடை உண்டு

க இனங்காதிகைம் 177.
ஒடுங்கித் திரிந்த மனிதர் ஒய்யார நடை நடந்தனர் ஊதலைத் தடுத்த உடைகளை உலரப் போட்டு விட்டார்கள் திரைச்சேலை விலகியது போல் தினம் ஆடையிலும் சிறு விலகல் அங்கவியலோ பார்வையில்
இயற்கையே! உன்னை இதயம் இல்லாதவன் கழ்ச்சிகள் பல செய்து சூழலை அசுத்தமாக்கினான் கருணையாக நீயோ கால மாற்றம் புரிகிறாய்.
GDui
மெய் தேய்ந்து மெல்ல வயது முதிர்ந்தது மெய்ஞானம் வளர்ந்து, மெய்ப்பொருள் உணர்ந்தது.
அடடா மனிதன் முதுமையிலா நிறைவு பெறுகிறான் பாரடா மனிதனின் வாழ்க்கையின் விசித்திரத்தை
4.07.O.
மெல்லிசை மெய்யைச் சிலிர்க்க வைத்தது சலங்கையிசை உணர்வைத் தூண்டியது பொய்யாகக் கூறினால் ஆன்மா சுத்தமானது.
26.2O3

Page 91
178
മക്കൃgൾക്
கோடைக் காலம்
கோடைக் காலம் நீண்டபகல் ஞாயிறும் சிரித்தான் கண்டிராத முகங்கள் கதிநடை பயின்றாலும் முகத்தில் களிப்புத்தான்
கோடைக் காலம் பலவர்ணப் பூக்கள் பகலவனை ஆராதித்தன கண்டும் காணாது கவலையோடு சென்றோர் புன்னகை பூத்தனர்
கோடைக் காலம் வீட்டுக் கோடியில் வெயில் சுட்டெரித்தது அங்கத்தில் ஆடை அவசிய விலகல் வெள்ளை கண்பறித்தது
கோடைக் காலம் பச்சைக்கம்பளமாக பாஸ்கரனை வரவேற்றது மணற் கடற்கரையை மக்கள் வெள்ளம்
ஆடை நீங்கி மறைத்தது.
监
2.07.O.

சு இனங்காதிகைம் 179
நான் பார்த்த ஈழம் நலமில்லை
அகதியாகப் பறந்து வந்து பதினாறு வருடங்கள் மன்னிக்கவும் ஓடிவந்து பதினாறு வருடங்கள்
ஓடி வந்த மனம் ஓலமிட்டது ஒவ்வொரு நாளும் வட்டமிட்டது ஈழத்து நினைவுகள் நிழலாடியது ஆசை முன்னே ஓடிட ஆவல் பின்னே தொடர்ந்திட மீண்டும் கார்த்திகையில் ஈழத்தில் மீறிய நினைவுகள் நனவாக மீண்டது பழைய நாள் ஞாபகங்கள்
இந்து மகா சமுத்திரத்தின் முத்து இலங்கைத் தீவைப்பார்த்து இயம்பினான் பிரித்தானிய நாட்டான் இன்று முத்து சிதறிவிட்டது சிதறிய முத்தை தொட முனைந்தேன் முத்து முள்ளாகக் குத்தியது
வல்லவன் வலியவன் வளமானவன் வாழ்கைச் சக்கரத்தை நகர்த்துகிறான் மற்றவன் கட்டுண்டான் கனமாக வாழ்க்கைச் சக்கரத்தில் சுழல்கின்றான் எளியவன் ஏழையவன் ஒதுக்கப்பட்டு வாழ்வுச் சக்கரத்தில் அழிகிறான்

Page 92
180
മഞ്ഞു?? ghجمهه
வானுயர் கட்டடம் வளர்கிறது வசதியான வண்டியும் பெருகியுள்ளது வாழக்கைச் செலவும் பருந்தாகி விட்டது பாதி வயிறு நிரப்பும் ஏழை பாயின்றி பாதை ஒரத்தில் தூங்குகிறான் பாராளுமன்றத்தில் மந்திரி சயனம்
ஆலயத்தில் ஆடம்பரம் ஆட்சியில் சுரண்டல் அர்ச்சகர் செங்கோலானது அர்ச்சனைக்கு மூலப்பொருள் தேவையில்லை நூறுரூபாய் நோட்டுப் பெரியதில்லை
போர்ச் சத்தம் வடகிழக்கில் ஓய்ந்துவிட்டது போர் அனர்த்தம் புகன்றிட முடியாது அழுது வடிந்த முகங்கள் இடிந்து போன வீடுகள்,
பல கதைகள் கூறின பலநூற்றாண்டு போயினும் பல வடுக்கள் போயினும் பம்பர உலகம் மறந்துவிடும்
கோவையில் மாவீரர் துயிலுமில்லம் கோடி மனதை கசியவைக்கும் இல்லம் நான் பார்த்த ஈழம் நலமில்லை நான் எதிர்பார்ப்பது நல்லவர் ஆட்சி.
屿
lat.1.03

க இனங்காதிலகம் 181
6CP.....6(P.....
எழுத்தாணி கொண்டு எழுந்து வா! பெண்ணே! எழுச்சியுற்ற சமூகத்தைப் படைக்க வா! பெண்ணடிமையை உடைத்திட பெண் உரிமையை நிலைநாட்ட பெண் பேதையல்ல என உணர்த்திட பெண்ணே எழு உறுதியுடன் எழு துங்கியது போதும் எழு துன்பப்பட்டது போதும் எழு மிதிபட்டது போதும் எழு பெண் எழுந்திட்டாள் என முன் செல் பெண்ணே
O.O.O3 监
வாடி
மாடி வீட்டு வாடிக்கையாளர்கள் கூடி மது அருந்தித் தள்ளாடினார்கள்.
ஊரில் தனியே வாடிநின்றாள் அவள் நீரின்றி வாடிய பயிர் போன்று. கிராமத்து வாடிவீட்டில் கூரையில்லை அயலவன் பிடுங்கிவிட்டான் தன் வீட்டுக்காக.
வாடி வாடி! என அழைத்த கணவனை
ஏண்டா ஏண்டா! என்றாள் ஆத்துக்காரி.
3.2.03

Page 93
182 മരയ്മgർക്
D56)L
நடை பாதையில் வரி வரியாகக் களைகள் நடை முறை வாழ்வில் பார்த்து நட
மொழி நடையில் பிழையிருந்தால் மன்னிக்கலாம் சொல் நடையில் பிழையிருந்தால் என்ன செய்யலாம்?
கடை நோக்கி நடை போட்டான் குடை இல்லாததினால் நனைந்தான் தடை பல வந்தாலும் நடை (பயணம்) தொடரும் என்றான் நனைந்தவன்
நடைப் பிணமாக வாழ்வதில் பயனேது நடை பாவாடை விரித்து நடக்கச் செயலாற்று.
监
14.1.03
புனிதம் மனிதம்
காசிக்குப் போவது புனிதமல்ல - காயத்திரி மந்திரம் கூறுவதும் புனிதமல்ல கயமையின்றி வாழ்வதே புனிதம்.
நாலுபேருக்குச் சோறு போடுவதல்ல மனிதம் நாணயம் - அன்பாக வாழ்வதே மனிதம்.

க இனங்காதிகைம் 183
எனக்குள்ளும் வந்தது வசந்தம்
வியாபாரிக்கு கல்லாப்பெட்டி நிறைந்தால் வசந்தம் விவசாயிக்கு வானம் பொழிந்தால் வசந்தம் அரசியல்வாதிகளுக்கு அமைச்சரானால் வசந்தம் தொழிலாளிக்கு ஆறுமாத போனஸ் கிடைத்தால் வசந்தம்
ஏமாற்றுக்காரனுக்கு ஏமாளி கிடைத்தால் வசந்தம் பிச்சைக்காரனுக்கு வங்கிக்கணக்கு ஏறினால் வசந்தம் வறுமையில் வாழ்பவனுக்கு வயிறு நிறைந்தால் வசந்தம் எழுத்தை ஆள்பவனுக்குக் கற்பனை வளம் வசந்தம். மீனுக்குத் துள்ளிப்பாய நீர் இருந்தால் வசந்தம் எனக்குள் தேடினேன் வசந்தத்தை டென்மார்க்கில் அகதியானதால் வசதி வந்தது வசந்தம் இருட்டறையில் தூங்கிக் கிடக்கின்றது.
9.4.04
监
சிந்தி. சிந்தி
உணவை சிந்திச் சிந்தி உண்டது குழந்தை உறுதியுடன் தன்னம்பிக்கையும் வந்தது நல்லதைச் சிந்தி - உயர்வடையச் சிந்தி நயமான சிந்தனை நாளும் வளரும். முந்திய சிந்தனையாளர் சிந்தியதை இன்றைய மக்கள் சிந்தித்தால் குந்தியிருந்து குதர்க்கமும் பேசார் மந்திப் புத்தியும் கிட்டே அணுகாது!
22.10.2OO3

Page 94
184 മഞ്ഞു? துக்கன்
நாசவேலை
ஊமையாக நிற்கும் தெருவோர பஸ் தரிப்பு நிலையமே மழைக்கு ஒதுங்க இடம் கொடுக்கும் பஸ் தரிப்பு நிலையமே கண்ணாடி உடை உடுத்தி ஜொலிக்கும் பஸ் தரிப்பு நிலையமே காதலர்கள் கணை தொடுக்கும் பஸ்தரிப்பு நிலையமே
விளம்பரத்திற்கு இடம் தரும் பஸ்தரிப்பு நிலையமே இருட்டடி கொடுத்து உன்னைச் சிதைத்தது ஒரு கூட்டம் இறைந்து கிடக்கிறது உன் உதிர்ந்த கண்ணாடி ஆடை உறைந்த பனித்துளியாக நிலமகள் ஆடையாக
மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்குச் சேவையென மாநகரத்து இரம்மியமாக மனம்கவரும் இடமாக மிளிர்ந்த உனக்கு இக்கதியானால் வாயில்லாப் பூச்சியாக, உண்மையே நேர்வழியாக கண்ணியமே கொள்கையாக, நீதியே தெய்வமாக போற்றி வாழும் மனிதனின் கதி என்னவோ!
24.04.2004
些
DITGOGO
கல்வியில் பூச்சியமானது காமாலை நோய் போலக் கொடியது கதிர்காமத்தில் முருகனுக்குக் காகிதமாலை அரசியல்வாதி முருகனுக்குப் பூமாலை.

க இனங்காதிகைம் 185.
அறிவின் கீழ் நிலையா?
மனிதன் பேசுவதினால் பிறரைப் போற்றுகின்றான் மனிதன் தவறியதினால் பிறரைத் தூற்றுகிறான் ஆத்திரம் பொங்கி விட்டால் ஆவேசமாகின்றான் அன்பு மேலோங்கிவிட்டால் அரவணைக்கின்றான் அனைத்தும் தெய்வமயமென ஏனோ பிதற்றுகின்றான். ஆழ்மனதின் படிமங்கள் அறிவின் ஒளியை மறைக்கின்றன அந்திமத்தின் உண்மை நிலை ஏன் ஏற்க வில்லை மனித மனம்? இங்கு அறிவு கீழ் நிலையானதா?
9.05.04
些
இல்லை இல்லை
பசி இல்லை என்றால் பஞ்சமில்லை கொட்டில் போதுமென்றால் வீட்டுப் பிரச்சனையில்லை.
சிந்தனையைத் தூண்டும் அறிவுக்கு எல்லை இல்லை சிதைவு தரும் சுவை நகைச்சுவை இல்லை சினம் தரும் சுவையும் நகைச்சுவை இல்லை
2O.I.O.O3

Page 95
188 தீrடிச் துக்க் ಕ್
நான் போசிக்கிறேன்
சிறுபான்மை இனத்தின் உரிமை பறிக்கப்பட்டது பெரும்பான்மை இனத்தின் உரிமை போற்றப்பட்டது ஜனநாயக வழியில் போராட்டம் நடந்தது அசிம்சாவழியில் போராட்டம் நடந்தது பேரினவாதம் தறிகெட்டு நடந்தது உரிமைக்குரல் உதாசீனப்பட்டது உரிமை கேட்டவர்கள் புடைக்கப்பட்டார்கள் உரிமை கேட்டவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்
சிறுபான்மையினம் போர் வெறி கொண்டது பெரும்பான்மையினத்தை போரில் வெற்றி கொண்டது போர் நிறுத்த ஒப்பந்தம் உருவானது போர்ப் பறையின் சத்தம் ஓய்ந்தது
பேரினவாதம் புதுவிமயூகம் அமைத்தனர் புல்லுருவிகள் துணை நின்று காத்தனர் நாவரத்தை வைரம் கொண்டு அறுத்தனர் சமாதானத்தைச் சன்னமில்லாது சீர்தலைத்தனர் போர்க்களத்தில் அழுதரல் ஏன்? போர்க்களத்தில் வேதங்கள் ஏன்? போர்க்களத்தில் புண்ணிய உபதேசமா? ஓர் உபாயம் தெரியாதுநான் யோசிக்கிறேன்.

த இனங்காதினசர் 1B
வேதாவின் கவிதைகள்
து வள்ளுவர். பாரதி, கண்ணதாசன் என இறவாப் புகழ் பெற்றவர்களை
அட்டையில் வெளியிட்டு, * வெளிந்திருக்கிறது வேதாவின்
:ே வெளிநாட்டில் உள்ள தழந்தைகளுக்கு ஜ் தாயின் பாசத்தைக் கோட்டும் வரியால் : “பாசங்களின் துரம் கடிதங்களாக * தேசங்களின் தூரம் தொலைபேசியாக'
வருகிறது.
பிறந்த வீட்டில் வாழ்ந்த காலமே இன்பம் என்பதைக் கூறும் பெண்ணின் * குரலாய்.
திருதிவேத: நீந்:
செல்வி என்னும் சுதந்திர சொர்க்கம் என்பது எல்லோராலும் ஏற்றுகொள்ள கூடியதாக உள்ளது. பெண்மையை போற்றும் சமுதாயமே முன்னேற்றம் காணும், பெண்மையாய் ஒரு படைப்பாளராய் உள்ள திருமதி வேதாவைப் போற்றுவோம், ஆய்வாளர் : கு. வைரச்சந்திரன் வெளியீடு : மணிமேகலைப் பிரசுரம்,
தஃப.எண். 144"
5 - 1
flat-6 . , 42.00 இனிய நந்தவனம் சஞ்சிகையில் வேந்தது.

Page 96
188 2ஈர்ஷர்துக்கன்
GOeLeLGeeeELGerELeeeEGeEEeLeer ELeeeEeereLeerELeeeL
O
| குழந்தைகள் இளையோர் ଜୋ சிறக்க.
濠 வேதா இலங்காதிலகம்
R
ل
S
ད།Sy
இவரால் மொழி பெயர்த்து எழுதப்பட்ட சில கட்டுரைகளைப் படித்தேன். புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் நம் சிறுவர்கள், இளையவர்கள், பெற்றோரின் பொது அறிவு, மொழி அறிவு, பழக்க வழக்கம், சுற்றுச்சூழல், சுகாதாரம், நல்வாழ்வு, கலை, கலாச்சாரம், உளவியல் போன்ற வாழ்வியலுக்கு வேண்டிய நல்ல அரும்பெரும் கருத்துகளை எழுதி இருக்கின்றார். ஒரு குழந்தையை எப்படிப் பெற்றெடுத்தல், வளர்த்தல், கல்வி அறிவுபூட்டல், நல்ல பிரஜையாக உருவாக்குதல் போன்ற விடயங்களை, விஞ்ஞான பூர்வமாக எழுதியுள்ளார். ஒரு குழந்தையின் மொழி வளர்ச்சி, அறிவியல், உளவியல் வளர்ச்சியைச் சார்ந்து உடல் வளர்ச்சிப் போக்கையும், வெளிக்கொண்டு வந்திருக்கின்றார்.
S.
ஆசிரியர் : வ. சிவராசா,
ஆசிரியர், "மண்" யேர்மனி,
※ வெளியீடு : மணிமேகலைப் பிரசுரம்,
த.பெ.எண்.1447, சென்னை - 17, 云 sist!)6) : eit. 40.00
ஏழைதாசன் சஞ்சிகையில் வந்தது
togogయంOOOpQGOGQGOGQXం
s
 
 


Page 97