கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வேதாவின் கவிதைகள்

Page 1


Page 2

வேதாவின் கவிதைகள்
ஆசிரியர்
வேதா
மணிமேகலைப் பிரசுரம் தபால் பெட்டி எண் : 1447 7 (ப.எ.4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24342926 தொலைநகல் : 0091-44-24346082 LSair 965&6) : manimekalaiG)eth.net

Page 3
நூல் தலைப்பு ஆசிரியர்
மொழி
பதிப்பு ஆண்டு
பதிப்பு விவரம்
elflesouo
தாளின் தன்மை
நூலின் அளவு
அச்சு எழுத்து அளவு
மொத்த பக்கங்கள்
S.
s
s
X
X>
S.
s >
s
வேதாவின் கவிதைகள்
வேதா
தமிழ்
2003
முதல் பதிப்பு
ஆசிரியருக்கு
11.6 5.d.
கிரெளன் சைஸ் (12% x 18% செ.மீ.)
11 புள்ளி
176
Cuomua)
அட்டைப்பட ஓவியம் >
லேசர் வடிவமைப்பு >
அச்சிட்டோர் S.
நூல் கட்டுமானம்
வெளியிட்டோர்
திரு. சாய்
கிறிஸ்ட் கம்ப்யூட்டர்ஸ், சென்னை - 24.
ஸ்கிரிப்ட் ஆஃப்ஸெட், சென்னை - 94.
தையல்
மணிமேகலைப் பிரசுரம், சென்னை - 17.
 

پیراهنمایک=- کرنری / ܣܮ
உள் வடிவம்
1. தளிர்கள் 25 - 33
2. குடும்ப உறவு 35 - 51
3. தத்துவம் 53- S6
4. உணர்வுகள் 58 - 74
5. காதல் + ஏக்கம் 76 - 83
6. பெண்மை 85 - 96
7. ஊர்மணம் 98 - 115
8. நிகழ்வுகள் (அனுபவங்கள்) 117-141
9. வானொலி 143 -150
10. இயற்கை 152 - 154 1 சுகம் கேட்டல் பிரார்த்தனை 156 - 160
ܗܝܕܬ
*\=6്
C3)
162-176 வி .12 ܠܓ GN வாழதது + வழா Gശ്ന

Page 4
முன் வாயிலின் அறிமுக தோரணம்
வேதா. இலங்கா திலகம்
“உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும். வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார் தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்."
- இப்பிரUTது L'Eygi
இது எனது முதல் கவிதைத் தொகுதி பிறப்பு ஆதலால் சுயவிவர தோரணங்களின் இணைப்பு, சிறப்பு அலங்காரப் பொறுப்பு ஆகிறது. தமிழும் சைவமும், சமூக சேவையும் முகிழ்ந்த குடும்ப சோலையிலே தந்தையின் தந்தை முருகேசு - சுவாமிநாதன் மலேசிய நாட்டில் “பகாங்’ எனுமிடத்தில் ஓர் 94,Řálajů LITL TT53 auantu அமைத்தார், சுல்தான் காலத்தில் அதை அரசிடம் ஒப்படைத்து 1909-ல் இலங்கை திரும்பினார்.
உரும்பராயில் ஒர் ஆங்கிலப் பாடசாலையை 1°11一ü அமைத்து ஆசிரியராகினார் - இன்று அது உரும்பராய் இந்துக் கல்லூரியாக திகழ்கிறது.
C4O
 

காரை நகரில் ஓர் ஆங்கிலப் பாடசாலை அமைக்க உதவினார் ஆசிரியரானார் - இன்று அது காரைநகர் இந்துக் கல்லூரியாக திகழ்கிறது.
கோப்பாய் சரஸ்வதி வித்யாசmலையை 1910ல் பெண்களுக்காக உருவாக்கி, பூரீஸ் பூஞரீ ஆறுமுகநாவலரின் சைவ ப்பிரகாச ஆண்கள் பாடசாலையையும் இனைத்து 1913ல் கோப்பாய் நாவலர் பாடசாலையாக உருவாக்கினார்.
ஐக்கியபோதனா ஆசிரிய கலாசாலையை நாவலடி கோப்பாயில் உருவாக்க உதவினார். இன்று இது இருபாலை - கோண்டாவில் றோட்டில் அரசினர் ஆசிரிய பயிற்சிக்
கலாசாலையாக உள்ளது.
பன்னவேலைப் பயிற்சிகலாசாலைகள்ை பூதர் மடத்திலும் நீர்கொழும்பு - கிறிமெற்றியானாவில் சிங்களவர்களுக்காவும் உருவாக்கியவர். இன்னும் சமாதான நீதவான், சிதம்பர கோவில் மடபரிபாலனர் என பல சேவைகள் செய்தவர்,
2002 மார்கழியில் அப்பாவின் நாட்குறிப்பை இலங்கையில் வாசித்து நானே அசந்துவிட்டேன். இவரது சேவைகள் ஒன்றிரண்டுதான் நான் முன்பு அறிந்திருந்தேன். இன்று இவைகளை அறியும்போது இவைகள் எனக்கு பெருமை சேர்ப்பவையன்றோ! இவரின் பிள்ளைகள், இவரின் சகோதரர் பிள்ளைகளும் இவ்விடியொற்றி வந்தவர்களே. எனது தந்தையார் இவரின் இரண்டாவது மகனாகிய நகுலேஸ்வரம் ஆவார். எனது தாயார் புத்தூரைச் சேர்ந்த சிவக்கொழுந்து - பொன்னம்பலம் ஆவார்.
என் வேரடி மண் சமூக விழிப்புணர்வு கொண்டதால், இப்பெண்ணிலும் கொஞ்சம் அதுவுண்டு, மூலம் இதுவாகும்; இனி நீளத்தைப் பார்ப்போம்.

Page 5
என் ஆரம்பக் கல்வி கோவை நாவலர் பாடசாலையிலும், புலமைப் பரிசில் பரீட்சையின் சித்தியால் யாழ் கனகரட்னம் மகாவித்தியாலயத்திலும், பின்னர் கிறீஸ்தவ கல்லூரி கோவையிலும், ஏ.எல். வரை (கல்விப் பொதுத்தராதர உயர்வகுப்புவரை) தொடர்ந்தது, பாடசாலைக் காலங்களில் பேச்சுப் போட்டி (இரண்டாம் பரிசு) நாடகம், திருக்குறள் மனனப் போட்டி, விழாக்களில் பாடல், உடற்பயிற்சிக் குழுநிலைத் தலைவி, தையல், இயந்திரத்தில் பூவேலை (விசேடப்பயிற்சி), ஓவியம், இசை (சங்கீதம்) நடனத்திலும் பங்கு பற்றியதுண்டு.
எனது சித்தப்பாவின் பிரத்தியேக மாலை வகுப்புகள் (Murugesu Tutoryயில்) நடத்தும் இடத்தில், காலையில் பாலர் வகுப்பை (நர்சரி) ஒருசில வருடங்கள் கோப்பாயில் நடத்தினேன்.
என் அப்பா ஒரு வாசிப்புப் பிரியர். அவரால் தூண்டி வளர்க்கப்பட்டது எனது வாசிப்பும். தமிழில் திருவுடையவர் என்னுடன் திருமணத்தில் இணைந்தார். தில்லானா ஆடிய அவரின் காதல் கவிதைகளும் என்னுள் கவிச்சுடரேற்றியது.
1976-ல் இலங்கை வானொலி வானலையில் என் முதல் கவிதை தவழ்ந்தது. சில கவிதைகளின் பின் இடைவேளை.
1987-ல் டென்மார்க்கிற்கு வருகை, இங்கு உள்ளூர் சஞ்சிகைகளான : அரும்பு - சஞ்சீவி - காகம் - கற்பகம் - வான்பதி ஆகியவைகளில் என் கவிதைகள் - சிறுகதைகள் - மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் வெளியாகி என் ஆர்வம் தூண்டப்பட்டன.
1993-ல் பிள்ளைகள் பராமரிப்புப் பற்றிய 3 வருட
டெனிஸ் மொழியில் பயிற்சிப்படிப்பு முடிந்த போது என் பெயருடன் “பெட்டகோ’ (Pedagogue) எனும் தகுதியும்
< 6_D»

என்னுடன் இணைந்தபோது சமூகத்திற்காக உள்ள எனது கடமை பொறுப்புணர்வாக என்னுள் விரிந்தது அன்றிலிருந்து 3 வயதிலிருந்து 14 வயதுப் பிள்ளைகளுடன் பெட்டகோவாக வேலை செய்கிறேன்.
ஐரோப்பிய வானலையில் TRT தமிழ் ஒலி - தமிழ் ஒளி 1996ggio (Tamil Radio & Television) gTairsadio GigstLiSu போது வானொலியில் ஸ்கன்டிநேவியன் நேரம் எனும் நிகழ்வை டென்மார்க்கிலிருந்து சகோதரர் திரு. T. இராஜேந்திரம் நடத்தினார். இதில் எனது ஆக்கங்கள் திரு. இராஜேந்திரத்தின் குரலிலும் எனது குரலிலும் ஒலிபரப்பாகியது எனக்கு ஊக்கமும் - உற்சாகமும் தந்தது.
Fiesf AUDio TRT வானலைக்காக லண்டனிலிருந்துமுதல் ஆடியோ
கலையக இயக்குனரும் செய்தியாளருமாகிய திரு. நடாமோகன் குழுவினரால் நடாத்தும் லண்டன் டைம் எனும் ஒலிபரப்பிலும் என் ஆக்கங்கள் ஒலிபரப்பப்பட்டது.
ரி.ஆர்.ரி (TRT) வானலையில் கவிதை நேரங்கள் - பெண்கள் நிகழ்ச்சிகள் என அவ்வப்போது கலந்து கொள்வதுண்டு. இவை அனைத்தும் ஆர்வமும் ஊக்கமும் தந்தவைகளாகும். இந்நிகழ்ச்சிகளில் இன்றும் பங்குபற்றி வருகின்றேன். நிகழ்ச்சிகள் பற்றி வானொலி - தொலைக்காட்சிகட்கு விமர்சனங்கள் எழுதுவேன். அவைகள் மதிக்கப்பட்டு இயக்குனர் நாயகம் திரு. சபாபதி. சுப்பையா குகநாதன் தொலைக்காட்சியில் தோன்றி பதில்கள் தருவது எனக்கு இன்னும் மகிழ்வையும் தூண்டுதலையும் தந்து தன்னம்பிக்கைத் தூணாகியது.
“லண்டன் டைம்’ கவிஞரும், செய்தியாளருமாகிய திரு ப. வை. ஜெயபாலன் ‘இந்த வாரக் கவிஞர்’ எனும் நிகழ்வில் ஒரு வாரக் கவிஞராக என்னை பேட்டி கண்டு சிறப்பு தந்தார்.
C7o

Page 6
இவர்கள் அனைவரின் அங்கீகாரமும் படிப்படியாகி தூண்டுகோலாகி இக்கவிதைத் தொகுதியை வெளிக் - கொண்டுவர உதவியது. ஈழத்து பிரபல எழுத்தாளரும் - டென்மார்க்கின் முன்னோடி எழுத்தாளருமான “முல்லையூரான்’ தந்த ஆலோசனைகளும் கிரியா ஊக்கியாக இருந்தன. இவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
என் அனுபவங்கள் - உணர்வுகள் - உறுத்தல்கள் - மகிழ்வுகள் - தமிழின் மீதுள்ள பற்று ஆகியன கவிதைகளாகியுள்ளன.
ஒரு சில கவிதைகள் தவிர, மிகுதி அனைத்து கவிதைகளும் ரி.ஆர்.ரி. (TRT) வானலை - லண்டன் டைம் ஆகியவைகளில் தவழ்ந்த கவிதைகளாகும். 6) அறிவிப்பாளர்களும், தொலைக்காட்சி, வானொலிகளில் என் கவிதைகளை வாசித்துச் சிறப்புச் சேர்த்தவர்களாவர். இதில் அமரராகிய சகோதரர் வியூகன்’ (கீழ்கரவைப் பொன்னையன்) கவிதைகளை அக்குவேறு ஆணிவேறாக அலசுவார்.
வானலையில் ‘சாளரம்’ எனும் இலக்கிய நிகழ்ச்சியில் அவருடன் ‘கவிசமர்’ம் நடத்தியுள்ளேன் - அது என் பாக்கியமாகும். அவரின் ஆன்மா என்னை ஆசீர்வதிக்கும் என மனதார எண்ணுகிறேன்.
தமது அரும்பெரும் நேரத்தை பாவித்த மதிப்பிற்குரிய சகோதரர் “கம்பதாசன்” கம்பன் கழக திரு. ஜெயராஜ் 'சிறு குறிப்பு’ என குறித்து பெரிய குறிப்பை எழுதித் தந்ததற்கும், இயக்குனர் நாயகமும் ஈழநாடு பத்திரிகை அதிபர் திரு. சபாபதி. சுப்பையா குகநாதன் ‘அறிமுகம்’ என எழுதித் தந்ததற்கும் என் மனமார்ந்த நன்றியைக் கூறுகிறேன்.
என் கவிதைகளை நூல் தொகுப்பாக்கிய மணிமேகலைப் பிரசுர நிறுவன குழுவினருக்கும், திரு. ரவி

தமிழ்வாணன் அவர்கட்கும் என் மனம் நிறைந்த நன்றியைக் கூறுகிறேன்.
என்னில் பாதியாகி எனக்கு முழு ஆதரவும் தந்து திட்டமாய், திட்பமாய் உதவி அளிக்கும் என் அன்புக் கணவருக்கும், நல்ல பிள்ளைகளாக இருந்து மன அமைதி தரும் அன்பு மகனுக்கும் மகளுக்கும் நன்றியைக் கூறி, அவர்கள் ஆதரவை இன்னும் வேண்டி ஆண்டவன் ஆசியையும் வேண்டுகின்றேன்! சரி.
வாருங்கள். உள்ளே செல்வோம்! வாசித்து உங்கள் கருத்துகளை அறிய தாருங்கள்
அன்புள்ளவள், வேதா. இலங்காதிலகம். Lindholmvej 13.2TV 8200 AARHUSN
DENMARK Tel. 86I0698

Page 7
அம்மாவிற்கு சமர்ப்பணம்
பிறப்பு: 12-10-1928 மறைவு 29-04-1996
அம்மா! மண்ணுலகில் நீங்கள் FEாழ்ந்த காலை
என்னுடைய கடன்கள் பூரணமாகாநிலை புலம்பெயர்ந்து வந்து டென்மார்க்கில் தனம் அமைத்த வாழ்வுக்காலத்தில் வலம் வந்து வாழும் வகை தேடலில் ஆழ மன வானில் சுழன்றவை. சுதந்திரக் கவிதைப் பூக்கள் இவை நிரந்தர நினைவுப் பூக்களாக இவை உங்களுக்கு சமர்ப்பணம் அம்மா!
ஊக்கமுள்ள ஜீவனாக என்னை
உருவாக்கி:tர்கள். கோடி நன்றிகள் அம்மா!
என்றும் உங்கள் மகள் 3Luil (3:1 by)
 

அப்பாவிற்கு நன்றி
அப்பா!
கோவையில் நாம் வாழ்ந்த வாழ்வு தினம் கோர்வையாய் நீந்தும் நேச மனம் புலம் பெயர்ந்தும் உாம் நிறைந்து வலம் வந்து சுழலும் நிக்னேவுப் பந்து
செந்தமிழும் சிறுநடையும் பழக்கி முத்தமிழ் ராஜவீதியில் தமிழ் முழக்கி நற்றமிழ் சிறக்கரேவத்து அன்புள்ள அப்பா இன்தமிழால் நான் மொழியும் பல்கோடி நன்றிகள் அப்ப?
| ::ձ11. ԱնհծiI,
3. It
C11)

Page 8
ஓர் அறிமுகம்
புலம்பெயர் மண்ணில் பல்வேறு பத்திரிகைகள், சஞ்சிகைகள் வெளிவந்தாலும் புலம்பெயர் தமிழர்களிடையே படைப்பாளிகள் பலர் உருவாகவில்லையே என்ற கவலை ஈழத்து படைப்புலகை நேசிக்கும் எம்மைப் போன்ற பலருக்கு இருந்து கொண்டே இருக்கின்றது. வெளிவருகின்ற பத்திரிகைகள், சஞ்சிகைகளை புலம்பெயர் தமிழர்கள் ஏன் பயன்படுத்துகின்றார்கள் இல்லை என்ற கேள்வி இதனால் எழுவதும் தவிர்க்க முடியாததாகிவிடுகின்றது.
தாயகத்தில் களம் இன்றி படைப்பாளிகள் கவலையுற, புலம்பெயர் மண்ணிலோ படைப்புக்கான களம் பல இருந்தும் அதனைப் பயன்படுத்துவதற்கு பலரும் முன்வராமை ஏன் என்பதை இன்றும் கண்டறியமுடியாமலிருக்கின்றது.
புலம்பெயர் மண்ணில் வெளிவருகின்ற பத்திரிகைகள் படைப்புக்களைத் தேடிச் செல்ல வேண்டிய அளவிற்கு நிலைமைகள் இருக்கின்றன என்றால், படைப்பாளிகளின் தேவையை உணர்ந்து கொள்ளலாம்.
நான் இங்கே குறிப்பிடுவது பத்திரிகை, சஞ்சிகை என்ற அச்சு ஊடகங்களையே, அண்மைக்காலத்தில் புலம்பெயர் மண்ணில் எலக்ரோனிக் ஊடகங்கள் என்று சொல்லப்படும்
C12 do

வானொலி, தொலைக்காட்சிகளின் வருகையின் பின்னர் படைப்பாளிகள் பலர் குறிப்பாக கவிதை எழுதுவதில் பலர் ஆர்வம் காட்டத் தொடங்கியிருப்பதைக் கவனிக்கலாம்.
புலம்பெயர் மண்ணிலிருந்து பல கவிதை நூல்கள் வெளிவரத் தொடங்கியிருப்பதும் அவற்றில் பல வானொலிகள் மூலம் அறிமுகமான கவிஞர்களின் படைப்புக்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
பத்திரிகைகளுக்கு எழுதாத அல்லது எழுத விரும்பாத படைப்பாளிகள் வானொலிக்கு என்றதும் எழுதிக் குவிப்பதையும் இங்கே கவனிக்க வேண்டியிருக்கின்றது.
ஏன் இந்த மாற்றம் என்பதை கவனிக்கையில், வானொலிகளில் கவிதைகளை வாசிப்பவர்கள் தாம் எழுதுகின்றவற்றை கவிதை என்று வாசித்து விட முடிகின்றது.
தொலைபேசி வழியாக வான் அலைக்கு வந்துவிடுகின்ற ஒருவர், தான் எழுதியதை எழுதியபடியே வாசிக்க முடிகின்றது.
ஆனால் பத்திரிகைகளுக்கு எழுதுகின்ற ஒருவரின் கவிதையோ அல்லது சிறுகதையோ வெளிவர வேண்டுமென்றால் அதனை அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் படித்துப் பார்த்தே வெளியிடுகின்றார்.
இந்த மாற்றம்தான் படைப்பாளிகள் பத்திரிகைகளுக்கு எழுத தயக்கம் காட்டுவதற்கு காரணமாக இருக்கலாமோ என்று கூடஎண்ணவேண்டியிருப்பது தவிர்க்க முடியாததாகிவிடுகின்றது.
நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று, வானொலி தொலைக்காட்சிகளின் வருகையின் பின் புலம்பெயர் இலக்கிய
<13_D

Page 9
உலகில் அறிமுகமான கவிஞர்களில் தன்னை ஒரு சிறந்த படைப்பாளியாக இனம்காட்டிக் கொண்டவர்களில் இந்த நூல் ஆசிரியர் வேதா இலங்காதிலகம் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்.
கடந்த ஏழு ஆண்டுகளாக ஐரோப்பிய வான் அலைகளில் வலம் வந்து கொண்டிருக்கும் ரி.ஆர்.ரி. வானொலிக்கு வருகின்ற கடிதங்களை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு அந்தக் கடிதங்கள் எந்த நிகழ்ச்சிக்காக வந்ததோ அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளரிடமே அந்தக் கடிதங்களை கொடுத்துவிடுவதையே நான் வழக்கமாகக் கொண்டிருக்கின்றேன்.
இவ்வாறு வருகின்ற கடிதங்களில் ஒரு சிலவற்றையே படித்துப் பார்ப்துண்டு. சகோதரி வேதா இலங்கா திலகத்திடமிருந்து வருகின்ற எந்தக் கடிதம் ஆனாலும் முழுமையாகப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் அளவிற்கு அவரது ஒவ்வொரு கடிதங்களும் அமைவதுண்டு. இதனால் அவர் வானொலி நிகழ்ச்சிகளுக்காக எழுதி அனுப்பிய அத்தனை கவிதைகளையும் நான் படித்துப் பார்த்திருக்கின்றேன்.
அழகியல் வேதாவுக்கு கைவந்த கலை.
எதைப் பார்த்தாலும், உடனே அதிலுள்ள கலர் கெம்மினேஷன் அவருக்கு கண்ணைக் குத்தும். அதுபோலவே அவர் கவிதைகளிலும், அழகியல் அளவுக்கதிகமாய் குத்துவதைக் காணலாம்.
ஒரு பாரம்பரியமான குடும்பத்தின் வாரிசு என்பதாலோ என்னவோ, சமூகத்தின் குறைகளைக் கண்டு அவர் கொதித்துப் போவதை அவரால் தவிர்க்க முடியவில்லை.

சமூகத்தின் குறைபாடுகளுக்கு எதிராக அவர் பல்வேறு வடிவங்களில் குரல் கொடுத்திருப்பதை இந்தக் கவிதைகள் ஊடாக நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.
ரிஆர்ரி என்ற ஊடகத்தின் ஊடாக புலம்பெயர் சமூகத்தில் ஒரு சில நல்ல படைப்பாளிகளை உருவாக்க முடிந்திருக்கின்றதே என்பதே எமக்கு ஒரு வகையில் நிறைவைத் தருகின்றது. அந்த நிறைவுக்கு காரணமான சகோதரி வேதா இலங்கா திலகம் இன்னும் பல படைப்புக்களை தமிழ் இலக்கிய உலகிற்கு தர வேண்டும், தருவார் என்ற நம்பிக்கையுடன்.
எஸ்.எஸ். குகநாதன், பிரதம ஆசிரியர், ஈழநாடு பாரிஸ், இயக்குநர் நாயகம், ரிஆர்.ரி. தமிழ்ஒளி - தமிழ் அலை
51 rue de la Parabole,
95800 Cergy, France, 19.1 2002

Page 10
வேதாவின் கவிதைகள் பற்றிய சிறுகுறிப்பு
கவிதை.
இது கலைகளின் அரசி.
தம் கற்பனாசக்தியால், விரிந்த பொருள்களை, சில சொற்களுள் அடக்கி, ஆன்ற தமிழ்ப்புலவர்கள் கவிதைகளைப் படைப்பர். இதனால் கவிதைக்குச் சூத்திரம் எனும் பெயருமுண்டு. கம்பன் கவிதைகளைக் கம்பசூத்திரம் என அழைப்பது தமிழுலகமரபு.
தமிழுலகின் கவிதை மரபு மிக நீண்டது. அம்மரபுக்காம் சான்றாக, இரண்டாயிரம் ஆண்டு தொன்மைப்பதிவுண்டு. இந்நீண்ட தமிழ்க்கவிதை வரலாற்றில், வள்ளுவன் முதல் பாரதி வரை, அழியாத்தடம் பதித்த கவிஞர் பலராவர்.
தமிழ்மொழியின் தனிச்சொத்தாய், காலம் கடந்து நிற்கும் காவியங்கள் பல, இன்று உலகில் திகழ்கின்றன. இவ்வகையில் நம் தமிழ்த்தாய் வேறு எம்மொழிக்கும் இல்லாச் சிறப்போடு, கவிதைக் குழந்தைகளால் பொலிந்து நிற்கின்றாள்.
ஆழ்ந்த தமிழ்க்கவிதைமரபின் நீண்ட வேரோட்டம் தந்த தெளிவால், தமிழ்ப்புலவோர் கவிதைக்கலையை விரிவாய் வரையறை செய்துள்ளனர். அவ்வரையறையை அறிதல் அவசியம். விரிந்த அவ்வரையறையை சுருங்க அறிதல் எங்ங்ணம்? கவிச்சக்கரவர்த்தி எனப் போற்றப்பட்ட கம்பன்

வழிகாட்டுகிறான். அவன் பார்வையூடு, ஒரு நல்ல கவிதை கொள்ள வேண்டிய வரையறைகளைக் காண்போம்.
கம்பராமாயண ஆரண்ய காண்டத்தில் ஒரு காட்சி :
பஞ்சவடி நோக்கிச் செல்லும் இராமன் முதலியோர், கோதாவரி நதியினைக் காண்கின்றனர். அவ்விடத்தில், அந்நதியின் சிறப்பை வர்ணிக்கப் புகுந்த கம்பன், சான்றோர் கவியோடு அந்நதியை ஒப்பிடுகின்றான்.
அவ்வொப்பீடாய்க் கம்பன் அமைக்கும் பாடல், கவிதைக்கலை பற்றிய விரிந்த கருத்தை, முழுமையாய் வெளிப்படுத்துகிறது. ஆற்றின் ஒழுக்கையும், கவிதை ஒழுக்கையும், சிலேடையாய்ச் சுட்டும் அக்கம்பன் கவியினுள் புகுவாம்.
“புவியினுக்கு அணி ஆய், ஆன்ற பொருள் தந்து, புலத்திற்று ஆகி, அவியகத் துறைகள் தாங்கி, ஐந்திணை நெறி அளாவி, சவி உறத் தெளிந்து, தண்ணென்று) ஒழுக்கமும் தழுவி, சான்றோர் கவி என, கிடந்த கோதா வரியினை வீரர் கண்டார்.’
புவியினுக்கு அணியாதல்; பொருள் தருதல், புலத்திற்றாதல், அவியகத்துறைகள் தாங்கல், ஐந்திணை நெறியளாவல், சவியுறத் தெளிதல், தண்ணென்ற ஒழுக்கம் தழுவுதல், என்னும் இப்பண்புகளை, கவிதைக்கும் ஆற்றுக்கும் உரிய ஒருமித்த பண்புகளாய், கம்பன் எடுத்துக் காட்டுகின்றான்.
தேவைநோக்கி, சிலேடையாய் ஆற்றுக்கும் பொருந்தும் கவிதையின் பண்புகளை மாத்திரம் நாம் காண்போம்.
<17D

Page 11
புவியினுக்கணியாதல் - பலவகை அலங்காரங்களையும் உடையதாதல், உலகில் பலராலும் கொண்டாடப்படுதல்.
ஆன்ற பொருள் தருதல் - சிறந்ததான, அறம், பொருள், இன்பம், வீடென்னும், உறுதிப் பொருட்களின் திறத்தை விளக்குதல்.
புலத்திற்றாதல் - தன்னைக் கற்போர்க்கு நுண்ணறிவை விளைப்பதும், அறிவு கொண்டு ஆராய்ச்சி செய்யச் செய்ய, நன்கு புலப்படும் ஆழ்ந்த பொருளுள்ளதுமாய், அறிவுக்குரியதாதல்.
அவியகத் துறைகள் தாங்கல் - எழுத்து, சொல், பொருள், யாப்பு அணி என்னும், தமிழிலக்கணம் ஐந்தனுள், பொருளின் பகுதிகளான, அகம், புறம் என்னுமிரண்டில், அகப் பொருளின் பாகுபாடுகளான, களவு, கற்பு என்னும் ஒழுக்கங்களின், தன்மைகளைக் கூறுதல். (புறப் பொருட்டுறைகள் தாங்குதலும், செய்யுட்கு இலக்கணமாயினும், புறப்பொருளினும் அகப் பொருள், கேட்போர் மனதுக்கு மகிழ்ச்சி விளைவிப்பதாய்ச் சிறத்தலான், அதுவே பிரதானமானதாய்க் கம்பனால் எடுத்துக் காட்டப்பட்டது. இச்சிறப்பை விளக்கவே அதற்கு அவி என்ற அடைமொழி கொடுக்கிறான் கம்பன். 'அவி’ என்பதற்கு மனத்துயரத்தை மாற்றுகின்ற என்று பொருள் கொள்க)
ஐந்திணை நெறி அளாவல் - குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்னும் ஐவகை நிலங்களுக்கும், முறையே உரியன எனப்படும், புணர்தல், இருத்தல், பிரிதல், ஊடல், இரங்கல் எனும், ஐவகை ஒழுக்கங்களையும், அவற்றிற்கு அங்கமானவற்றையும் உரைத்தல்.
சவியுறத் தெளிதல் - மயங்கவைத்தல் என்னும் குற்றத்திற்குச் சிறிதும் இடமின்றி, விளங்க வைத்தல் என்னும் அழகிற்கு முழுவதும் இடமாய் நன்றாய்ப் பொருள் விளங்குதல்.

தண்ணென்ற ஒழுக்கந் தழுவுதல் - தீயொழுக்கத்தை உணர்த்தாமல், நல்லொழுக்கத்தை உணர்த்துதல். அன்றி, மெல்லென்ற ஒசையோடு முறிவின்றிச் செல்லும் சிறந்த நடையை உடைத்தாதல். இப்பாடலூடு, கவிதைக் கலைக்குத் தான் காணும் வரையறையை, கம்பன் தெளிவு செய்கிறான்.
இயற்கலையாகிய கவிதைக் கலைக்கு, கம்பன் தரும் வரைவிலக்கணத்தின்படி, ஒரு நல்ல கவிதைக்கு,
அழகுடைத்தாதல்,
ஆழ்பொருள் தருதல்
அன்புசார் அகப்பண்புகளை உட்கொள்ளல்,
அகம்சார்ந்த ஐவகை மனவுணர்வுகளை வெளிப்படுத்தல்,
பொருட்டெளிவு உடைத்தர்தல்,
நல்லொழுக்கந் தழுவிநிற்றல், எனும் அம்சங்கள் அவசியமாம் என உணர்கிறோம்.
மேற்சொன்ன கவிதைக்கான வரையறைகளை, இன்றைய கவிஞர்கள் தம் கவிதைகளுக்கு வரம்பாய்க் கொள்வதில்லை. ஆதலால், இன்றைய கவிஞர்களின் கவிதைகள், காலங்கடந்து நிலைக்க முடியாமல், சொற்ப ஆயுளைக் கொண்டனவாய் அமைந்துபோகின்றன.
ஓசையின்பத்தை நிராகரித்து, கலைத்தன்மை வழங்கப்படாமல், தனித்த கருத்துக் கருவூலங்களாய், புதுக்கவிதை எனும் பெயரில், இன்று வெளிவரும் கவிதைகளுக்கு சரியான வரைவிலக்கணத்தை, இதுவரை யாரும் வரையறை செய்யவில்லை.
அதனால், இன்று, பலரும், தம் அறிவு விரிவிற்கேற்ப, கவிதை எனும் பெயரில் பல விடயங்களை நிறைய எழுதுகின்றனர். புற்றீசல் போல் வெளிவரும் இவ் வெளிப்பாடுகளின், ஆயுளும், தரமும், விரிந்த மரபுத் தமிழ்க்

Page 12
கவிதைகளோடு ஒப்பிடும்போது, புள்ளியாய்ச் சுருங்கிப் போகின்றன.
அங்ங்னம் வெளிவரும் ஆக்கங்களுள், கவிதைத்தன்மை முற்றும் இல்லாமலும் இல்லை. இயல்பாய்க் கவித்துவத்தைக் கொண்ட ஒருசிலரின் ஆக்கங்களில், ஆங்காங்கே கவிதைத்தன்மை மின்னக் காண்கிறோம்.
கவிதையின் வரையறைகளை கற்றுத்தேறாத அவர்தம் குறையினால், இயல்பாய் அமைந்த அவர்தம் கவித்துவ ஆற்றல், முழுமை பெறாமல் முடங்கிப் போகின்றது.
இத்தகு இயல்பாற்றல் பெற்றோர், சற்று நேரம் ஒதுக்கி, தமிழ்மொழியின் யாப்பிலக்கணத்தைக் கற்றுக் கொள்வரேல், அவர்கள் சிறந்த கவிஞர்களாய் ஆகமுடியும்.
அங்ங்ணம், சிறந்த கவிஞராகும் இலட்சணங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறார், திருமதி வேதா இலங்காதிலகம் அவர்கள். வேதாவின் கவிதைகள் எனும் இந்நூலில் இவ்வுண்மை தெளிவாகின்றது.
தாய்நாட்டின் போர்ச்சூழலால், மண்ணில் ஊறிக்கிடந்த மைந்தர்பலர், விருப்பமின்றித் தேசம் கடந்தனர்.
தேசம் கடந்தும் தமிழில் நேசம் கடவா அச்சிறப்புடையோர், மேற்குலகின் பொருள்வாழ்வில் ஒன்ற முடியாது, பெருந்தொலைவுள்ள தம் நாட்டினைப் பிரிந்து நலிவினால் வாடினர்.
தமிழ்தந்த தெம்பு அவர்தம் நெஞ்சில் நிறைந்திருந்ததால், மேற்குலக நாகரீகத்தில் கரைந்து போகாது, சூழலைத் தம்வலிமையால் தமிழ்ச்சூழல் ஆக்கமுற்பட்டனர்.
இராமன்செல்ல, காடு நாடானதுபோல, இவர்தம் இருக்கையால், மேற்குலகிலும் ஒரு தமிழ்ச்சூழல் உருவாகிற்று.

அங்ங்னம் உருவான மேற்குலத்தமிழுலகில், தமிழின்பால் காதல்கொண்ட அனைவரும் ஒன்றிணைந்தனர்.
தமிழைச் சூழலாக்கியதோடு மட்டும் நில்லாமல், அங்குள்ள சூழலைத் தமிழாக்கவும் முயன்றனர். அவர்தம் முயற்சியால் கதை, கவிதை, கட்டுரை என, புலம்பெயர் இலக்கியம் தமிழில் விரியலாயிற்று.
அங்ங்ணம் விளைந்த புலம் பெயர் இலக்கியங்களின் தரம் எங்ங்னமாய் இருப்பினும், புதுத்தேசம், புதுச்சூழல், புதுவாழ்வு என இவற்றின் மத்தியில், தமிழைமறவா நேசமிகு அவ் ஆக்க கர்த்தாக்களின் ஆக்கங்கள், இன்று தனித்து நோக்கப்படுகின்றன.
அங்ங்னம், பிறமண்ணில் தமிழ் இயற்றும் புத்திலக்கிய கர்த்தாக்களுள் ஒருவராய், தன்னையும் இனங்காட்டி நிற்கிறார். திருமதி. வேதாஇலங்காதிலகம் அவர்கள்.
வேதா இலங்காதிலகத்தின் கவிதைகளோடு, அவர்தம் உள்ளத்தைத் தரிசிக்கிறோம்.
யாழ்ப்பாணத்தின் கோப்பாய்க்கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், தகைசார்ந்த குடும்பத்தின் ஒரு கொழுந்து, அத் தகுதியால், தாய் மண்ணும், அதன் தாழ்விலா விழுமியங்களும், அவர் நெஞ்சில் ஆழப்பதிந்திருப்பது தெரிகிறது.
தமிழ்ப் பண்பாடு தரும் அக உணர்வுகளில் ஊறித் திழைத்த வேதா புதிய சூழலிலும் அப்பண்பின் வெளிப்பாடுகளைப் பதிவு செய்கிறார்.
தமிழ்த்தாய்மேல் அவர் கொண்ட காதல், ‘தமிழே அமுதே' போன்ற கவிதைகளில் அற்புதமாய் வெளிப்படுகிறது.
C2O

Page 13
வாழ்வைப் பொருளாக்கும் மேற்குலகின் அவல நிலையை, ‘மாளிகையின் பிச்சைக்காரர்களில் அற்புதமாய்ப் பதிவு செய்கிறார். அவரின் நடைபாதை நட்பிலும், மேற்குலக வாழ்வின் அவலம் தெளிவாய் வெளிப்படுகிறது.
பாரதியின் புதுமைப் பெண்ணாய், வேதா, வீறுடன் பெண்ணுரிமை பேசவும் தவறவில்லை. ‘சினேகியாக எண்ணுங்கள்.’ ‘தலைநிமிர்ந்திடு தமிழ்ப்பெண்ணே’ போன்ற கவிதைகள் இவர்தம் பெண்ணிய உணர்வுக்குச் சான்றாய்த் திகழ்கின்றன.
தேசத்தை விட்டு நீண்ட தொலைவிலிருந்தும், தாய்மண்ணின் விடுதலை பற்றிய அவரது ஆதங்கங்கள், கவிதையில் கனலாய் வெளிப்படுகின்றன.
*கனவு’ ‘சாவிலும் சரியாத சரித்திரங்கள்’ போன்ற கவிதைகள், இவர்தம் விடுதலை உணர்வின் வெளிப்பாடாய்ப் பதிவாகின்றன.
தாய்மண்ணில் வாழ்ந்த கிராமியவாழ்வின் இனிமையை மிக அற்புதமாய், ‘எங்களுர் பூவரசு’, ‘விளக்குமாறு’, ‘என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு?’ போன்ற கவிதைகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
கருத்துக்களில் மட்டுமன்றி, மொழி இன்பத்திலும் வேதா ஈடுபாடுடையவர் என்பதை, அவரையறியாமல் அவர்கவிதையில் இடையிடை வெளிப்பட்டிருக்கும், எதுகை, மோனை அமைப்புக்களும், சந்த வடிவங்களும் உணர்த்துகின்றன.
காரின் பின்னிருக்கையில், ஆசனத்தில் பிணைத்துத் தனித்துக்கிடக்கும், பிள்ளைக்கும் தாய்க்குமான, தூர இருந்தாலும் தொடர்பறாத உறவை, ‘நங்கூரமான பிணைப்பு
C22d

இது என்’, வேதா பேசுவது அவர்தம் கவித்துவத்திற்கு நல்லதோர் சான்று.
மேற்சொன்னவற்றைக் காணும்போது, தாய் மண்ணிலிருந்து நெறிப்பட்ட தமிழ்க்கல்வியைப் பெற்றிருந்தால், வேதா மிக நல்ல மரபுத் தமிழ்க்கவிஞராய் மிளிர்ந்திருப்பார் என எண்ணத்தோன்றுகிறது.
வேற்றுமண்ணிலிருந்து, விருப்பே தகுதியாய், தமிழ்த்தாயை ஆராதிக்கும் திருமதி. வேதா இலங்காதிலகம் அவர்கள் பாராட்டுக்குரியவர் என்பதில் ஐயமில்லை.
மொத்தத்தில் இந்நூலினோடு, கவித்துவம் நிறைந்த வேதாவின் ஆற்றல் புலப்படுகிறது. அவர்தம் தமிழாற்றலும், தமிழ்ப்பணியும் மென்மேலும் விரிவடைய, என்னை வாழ்விக்கும், கவிச்சக்கரவர்த்தி கம்பநாட்டான் திருவடியைப் பணிந்து வாழ்த்துகிறேன்.
‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை.
அன்பன், இ. ஜெயராஜ், அகில இலங்கைக் கம்பன் கழகம் 'கம்பன் கோட்டம்’, 300, கோயில்வீதி, நல்லூர்,
யாழ்ப்பாணம்.
つ話千六活ー {{ {{ () {} $ރިހި

Page 14
W
AWA
VY
YA | R || V || 8 || || 8 || W
5A VAG As
YYYx rts 7V Er Y RE
தளிர்கள்
தெய்வமே!
பெற்றவரின் பெரும் கனவு
தங்க மகன்
அது என்ன குரலோ
சூப்பி ஒரு வைரம்
ஒளவைப்பாட்டி
முகவரி தேடும் முகங்கள்
தூரிகையின்றி ஒவியங்கள்
தாலாட்டு
-R,Mvo xx\-18 محكملخص SY ጏል ERS5 | Y | 5 | YA | RS5 |] YA ! 585
哆离专
AY
awyrosa
2S
26
27
28
29
30
31
32
33
Y As
Y
፳፻፩

தெய்வமே
தெய்வமே! தென்பு தரும் அருவமே! தெளிவுதரும் தெய்வீகமே! துணை நின்று நேர்வழியாய் எமை என்றும் காப்பாய்!
தந்தை காட்டிய அறிவு, அன்பு சிந்தையில் நின்ற தாயின் அன்பு விந்தைகள் பலபுரியத் தூண்டும் எந்தன் துணைவனின் அன்பும் பந்தமாம் பிள்ளைகளின் அன்பும் உந்தன் கருணையன்றோ இறைவா!
பற்றுமிகு சுற்றமும் உற்றவர்களும் இற்றுவிடாத நண்பர்கள் உறவுகளும் ஏற்றமுற வாழ்விற்கு உதவியவனே! நற்தமிழால் உனை வணங்குகிறேன்.
உனை நினைந்து என்றும் போற்றுவேன். உனைத்தானே நாளும் சரணடைவேன்.

Page 15
பெற்றவாரின் பெரும் கனவு
தொடுவானத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் நினைவு மோனத்தில் ஒரு இன்னிசைச் சித்திரம் மன வானத்தில் அது துருவ நட்சத்திரம் வரும் காலத்தில் அவள் ஒரு நாட்டிய நட்சத்திரம்.
மழலையின் இனிமையால் மகிழ்வையூட்டினான் மன்னன் முகச்சாயலை மகள் முகமாக்கினான் பால்வடியும் பூவிதழால் பாடல் இசைக்கின்றாள். திக்கித்தான் பாடுகிறாள் தித்திப்பாய் இனிக்கிறது.
சின்னஞ்சிறு பிஞ்சுமுகம் பருவளழில் கொஞ்ச குறுகுறுக்கும் கருவிழி கருவண்டாய் சிறகடிக்க அலை அலையாய் சுருண்டமுடி அழகாக தோளில்விழ குயிலாகப்பாடி அவள் மயிலாக ஆடுவாள்.
பெற்றவர்கள் யாவருக்கும் பெரும்பெரும் கனவுகள்
கனவுகள் கனவாவதும் நனவாவதும் உண்டு.
நம்பிக்கை வளர்ந்து நம்பும் நிலை பெற தும்பிக்கையான் துணைபல புரிய வேண்டும்.
20-12-1976
வேதாவின் கவிதைகள்

தாங்க மகன்
தள்ளுவண்டியில் நடை பயின்ற தங்கமகனே தலை மகனே! எங்கள் வாழ்வின் இன்ப விளக்கே கண்கள் தூங்கு செல்வ மகனே!
பஞ்சுக் கால்கள் பிஞ்சு விரல்கள் கொஞ்சத் தூண்டும் அழகுகள் ஒளிவீசும் கண்கள் சின்ன உதடுகள் களி கொள்ளச் செய்யும் அழகுகள்
வித்தைகள் பயின்று வித்தகனாகி விக்கிரமனாகி விமரிசையாக வாழ்ந்திடு!
O
3O-12-1976

Page 16
அது என்ன குரலோ
அது என்ன குரலோ புது வெள்ளப் புனலோ! மதுவுண்ட வண்டாக மெதுவாக நான் மயங்க,
தேனில் குழைத்ததுவோ வேனில் குளிர் நிலவோ யாழில் இசைத்ததுவோ
ஏழிசையில் ஒன்றோ!
மெல்லவரும் தென்றல்தான் வெண்ணிலவுக் கீற்றுத்தான் என்னிதயக் கதவு தட்டும்
வெண்கலமணி நாதம் தான்.
நீரலை மெல்ல தவழ்வது போல் வானலையில் நிதம் வந்து பாடலைத் தூதுவிட்டு என் ஆவலைத் தூண்டுகிறான் மழலை நிகழ்ச்சியில் என் பேரக் குழந்தையவன்.
19-4-1999
வேதாவின் கவிதைகள்

சூப்பி ஒரு வைரம்
பிணைத்த குழந்தை பின்னிருக்கையில், பிணக்கமின்றி இணைத்த கதிரையில். கட்டி வைத்த பொய்மையாய், கண்ணாடியூடு செம்மையாய், சுட்டித்தனத்தின் தேவையாய், எட்டிப் பார்த்தது ரசனையாய்,
நவீன உலகத் தேவையிது, நங்கூரமான பிணைப்பு இது!
அன்னை வாகனம் செலுத்திட அணியாக மரங்கள் எதிரோட வாகனத்தின் உள்ளே அலையாக சாதன மூலம் இழையாக மெல்லென மன பூந்தரையில் மெல்லிசை மழைத் துளிகள்.
கண்ணாடியூடு வெளியில்,
வண்ணமய இயற்கையில்,
தன்னை மறந்த குழந்தை - மகிழ்வில்
கண்மலர் விரித்தது வியப்பில்,
கால்களை உதைத்தது களிப்பில். கைகொட்டி தானே ரசித்து மைவிழி சோர்ந்த போது, தைரியம் தந்த சூப்பி வைரம் மழலையின் வாழ்வில்!
O
28-5-2OOO
6&bs)

Page 17
36T606 IIITItg
பாட்டி நல்ல பாட்டி! பாட்டி பெயராம் ஒளவை அறிவு நிறைந்த பாட்டி அந்தக் காலப் பாட்டி!
சின்னக் குழந்தைகள் நீங்கள் சிறந்த அறிவைப் பெறுங்கள் சிந்தனையோடு தந்தாள் சிறந்த நான்கு நூல்கள்.
ஆத்திசூடி ஒன்றாம் கொன்றை வேந்தன் இரண்டாம் மூதுரை என்பது மூன்றாம் நல்வழி என்பது நான்காம்.
நாடி இவைகளைத் தேடுங்கள் நாளும் அவைகளை ஒதுங்கள் தில்லு முல்லு உலகமிது நல்லவழியே நடந்திடுங்கள் மனிதநேயம் காத்திடுங்கள் மனிததீபமாய் ஒளிருங்கள்!
28-5-2000
வேதாவின் கவிதைகள்

முகவரி தேடும் முகங்கள்
முகைவிரியா முகங்கள் முகவரி தேடும் முகங்கள்,
முடுக்கி விட்ட ஆசைகள் முளைவிடுமா வேளையில்? முயற்கொம்பாகுமா காலத்தில்? முழுநிறைவாகுமா வேளையில்?
வைத்தியர் பட்டம் முகவரி வைகலும் மொழியும் வைரவரி, தமிழ் குழந்தைகள் ஆசைவரி தகவு பெறுமா இம் முகவரி?
மொத்த பிள்ளைகள் வைத்தியரா? அத்தனை மக்கள் நோயாளியா?
நித்திய வாழ்வுயர எத்தனம் தேவை, சித்தத் தெளிவான சிந்தனை தேவை.
யதார்த்த உலகுள் புகழ்ந்திடுங்கள் சத்தியமுகவரி தேடிடுங்கள்.
தத்துவமாக வாழ்ந்திடுவோம். முத்தமிழாக நிலைத் திடுவோம்.
8-8-2000
&ba C3D

Page 18
தூரிகையின்றி ஒவியங்கள்
இளமைப் பரிசாம் அருங்கனிகள் இன்பக் காதல் தேன் துளிகள் அன்புத் தடாகத்துத் தாமரைகள் அகத்தில் விளைந்த முத்துக்கள் இருளகற்றும் சூரியன்கள் பொருள் தந்த வாழ்வுப் பொக்கிஷங்கள்
வெகுதூரம் விலகி நின்றிடினும் விலகாத அன்புவதனங்கள் தூரமாயிருந்து மனத்திரையில், தூரிகையின்றி பல ஒவியங்கள், தூவுகின்றன பலவர்ணமாக, பாவுகின்றன நினைவுதூதாக
வளர்க்கும் பாச உணர்வது இழுத்து மூட முடியாதது பாசங்களின் தூரம் கடிதங்களாக நேசங்களின் நீளம் தொலைபேசியாக மார்க்கண்டேயரின் சிவலிங்கமாக மார்க்கம் கண்டு மனம் அமைதி பெறும்.
கரிசனை, கவனத்தில் உருவகமான கட்டுத்தறிப் புடவையன்றோ பிள்ளைகள்!
20-8-2001
C32) வேதாவின் கவிதைகள்

36T6ADT’OGò
ஆராரோ தாலாட்டு அன்னையின் தாலாட்டு அறிதுயில் போன்றது அன்னையின் தாலாட்டு. ஆசைத் தாலாட்டு பிள்ளைக்கு சீராட்டு மங்காத வீரம் முளைவிடும் தாலாட்டு. தங்கத் தமிழனின் தொன்மைத் தாலாட்டு துஞ்சிடும் விழிதூங்கிட தாலாட்டு. மலர்ந்த தாமரைக்கு நீரலை தாலாட்டு புலர்ந்த பொழுதுக்கு ஊர்புள்ளோசை தாலாட்டு. உறைந்த மனதுக்கு ஊர்நினைவு தாலாட்டு நிறைந்த பணிகூட்டும் எந்திர ஒலி ஒட்டம் உறைந்த பனிக்கால எங்கள் விடியலின் தாலாட்டு. வெள்ளை ஜனத்திரளில் ஒரு தமிழனின் முகம் நள்ளிரவுச் சூரியனாய் மனம் விரிய தாலாட்டும். பிள்ளையின் சீர்வாழ்வு பெற்றோர்க்கு தாலாட்டு கொள்ளையிடும் சந்தம் கவிதைக்கு தாலாட்டு. கண்ணன் புல்லாங்குழல் ராதைக்கு தாலாட்டு கடலின் அலைகள் காதலர்க்கு தாலாட்டு. மழைமேகமூட்டம் மயிலுக்கு தாலாட்டு இழைவது வானலையில் என் கவிதைக்கு தாலாட்டு. அருமைத் தாலாட்டு இன்று அருகிவருவது பெருமை எமக்கு அதை நிலைக்கச் செய்வது ஏற்றமிகு தாலாட்டு கிராமிய பாடல்களை, போற்றி - சாற்றி - பயன்கள் பெறுவோம்.
9-72OOO
6&bs) C33)

Page 19
ನ್ಮಿಥ್ಯೂ ಶ್ಯೀಮ್ಬೋ
M
霧
SK
义胤 S. ଖୁଁ 铬 (8: வாழ்ந்த நாட்டில் நீங்கள் ー 9.
மறக்க மனம் இல்லையே 铬 என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு?
கண்ணுாறு படாது. 9. ஆற்றங்கரையினிலே. ܀ 莺
மணம் 9) 6 செல்வி எனும் சுதந்திர சொர்க்கம் 3. S. බ්‍රි) . அன்னையர் தினம் ଓଜଃ ( பாலபருவ பாதிப்பு S <స్త్ర くき>
உறவின் உயிராக ( P 5) s ஆச்சரிய விருந்து 龛 (४ . பவள நினைவுகள் 9)
ロジ శిష్టి(ಕ್ರ^ံါုါ့ဂ်ျ ́ ୪୦୪ గీ ါါ`(ဂ်)း’ (); 劉 C340 வேதாவின் கவிதைகள்
 
 
 
 
 
 
 
 
 

வாழ்ந்த நாட்டில் நீங்கள்
நெஞ்சில் உறுதி கொண்டவர் நேர்மை திறமை கொண்டவர் வஞ்சனையற்றவர் என் அப்பா வாஞ்சை மிகுந்தவர் என் அப்பா.
பாப்பா பாடல் காட்டி பாரதி பாடல் நீட்டி பாகுத் தமிழ் ஊட்டி பாசம் காட்டியவர் அப்பா.
அடிப்படைப் பால பருவம் அஸ்திவாரக் கோல உருவம், உரமாகத் தந்த எந்தை உற்சாகம் பொங்கும் சிந்தை.
வாழ்க்கையை முதுமை வெல்ல வானுலகம் அம்மா செல்ல, வாழ்ந்த நாட்டில் நீங்கள் புலம் பெயர் நாட்டில் நாங்கள்.
திறந்த மனம் கொண்ட அப்பா!
பறந்தங்கு வந்திட ஏக்கமப்பா!
12-6-2000
3600 ෙ35>

Page 20
மறக்க மனமில்லையே!
அறிவுக்கண் திறக்க நாடி அகவிளக்கென தேடி குட்டி நூலகமென, தூசிகள்
தட்டி வைத்த புத்தகங்கள்.
கொலுவைத்த நூல்கள் அலுமாரி வழிந்த அடுக்குகள்.
வாசிப்பதை நேசிக்கும் என் அப்பா யோசித்து வாங்கிய நூல்கள்.
படிக்கும் மேசையில் என் முன்னர் தடித்த கட்டொன்று வைத்தார்.
வர்ண அழகு அட்டைகள் வருடியது என் விரல்கள்.
பழகிய புத்தகப் புதுமணம் இளகியே முறுவலில் முகர்ந்தேன்.
எட்டுத் தொகை நூல்களவை; நற்றிணை குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு
G36 • வேதாவின் கவிதைகள்

ஐங்குறுநூறு, பரிபாடல் கலித்தொகை, பதிற்றுப்பத்து.
அறியா வயதில் அவை எனக்கு புரியா இலக்கிய நோக்கு.
என்றோ வாசிப்பேன் முழுமையாய்
அன்றைய நினைவு அமைதியாய்.
இடம் பெயர்வுக் காலம் இழந்த சொர்க்கம் நீளம் இன்று எண்ணும் தோறும் ஒன்று வயிற்றில் புரளும்.
நரைக்காத என் மனம் துறக்காத எண்ணம் கனம்.
சிறக்க வாசித்து உணர்ந்தால் பிறக்கும் புது கருத்துக்கள்.
திறக்க விரும்பிய நூல்களை
மறக்க மனமில்லையே!
மாய்ந்து தேடிய தந்தையின் மகத்துவத் தேடல் புதையலை மறக்க மனமில்லையே!
6-8-2002
C37)

Page 21
என்ன பெயர் இந்த பூச்சிக்கு?
பனைகள் நிறைந்த பரந்த வளவு, பற்றைகளற்ற பசும்புல்லின் அளவு பச்சைப் படுக்கை கத்தரித்த அளவு, அப்பாவுடன் கையிணைத்து ஆசையாய்
அதிகாலை வேளை அங்கு அமைதியாய், ஆசுவாச சிறுநடைவெகு ஆனந்தமாய்.
செக்கச் சிவந்த சிறு துளிகளாய்,
அக்கம் பக்கம் அசைந்து ஊர்கையில், வைக்கும் காலடியில் மிதிபடுமோவெனும், அச்சம் தரும் அழகு பூச்சிகள்,
பச்சைப் புல்மேல் சிவந்த பூச்சி.
உச்சமாய் கண்கவர்ந்த பூச்சி. குண்டு குண்டான சிறுபூச்சி வண்டு வண்டான வட்டப்பூச்சி,
கையில் எடுத்து பத்திரமாய் உள்ளம் கையில் அதை நகரவிட்டும், வெல்வெட்சிவப்பை ரசிப்பதுவும் வெல்வெட் மெதுமையை தொடுவதுவும், விநோதரசனை அனுபவம் அது, விளையாட்டு ரசனை அனுபவம் அது.
வேதாவின் கவிதைகள்

மழையின் பின்னிரவில் வெளிக்கிளம்பும் சிவப்பு கம்பள பூச்சியா அது? சிவப்பு தம்பள பூச்சியா அது?
G. G.
என்ன பெயரப்பா இந்த பூச்சிக்கு?’
சின்ன மனதின் கேள்விக்கு மின்னும் குறும்பாய் அப்பாவின் பதில் சிவபெருமானின் எச்சிலாம் அது!
சிறு புன்னகை - இதை எண்ணும்தோறும் சிவபெருமானின் தாம்பூல எச்சிலோ? என்னபெயர் இந்த பூச்சிக்கு?
நீங்கள் சொல்லுங்களேன்?
10.122OO1

Page 22
கண்ணுறுபடாது.
அம்மா எனும் நீதானே! இம்மாநிலத்தின் கண் தானே! எம்மாதிரி உபமானமும் உனக்கம்மா சும்மா உபமேயம் கூற முடியாதம்மா.
அம்மாவாகி அறிந்தேன் நான் உன் நிலைமை அதுவரை ஏனோ புரியவில்லை உன் நிலைமை இது தானோ இயற்கையின் நிலையான வழமை? இல்லையெனில் வாழ்வில் ஏது ஆளுமை?
நற்குடியில் என்னை உதிக்க வைத்தாய்! நல்லவைகளை என்னை நினைக்க வைத்தாய்! கற்பனை வளம் கொண்ட மனம் தந்தாய்! பற்பல கருத்தியம்பும் திறன் தந்தாய்!
இன்னொரு பிறவியிலும் உனக்கு மகளாக வேண்டும். பன்னூறு சேவையை நான் செய்ய வேண்டும். எண்ணுாறு கவிதையால் உன்னைப் பாட வேண்டும். கண்ணுாறுபடாது நாம் வாழ்ந்திட வேண்டும்.
1452OOO
GO வேதாவின் கவிதைகள்

ஆற்றங்கரையினிலே.
ஆற்றங்கரையினிலே அழகு மணற்பரப்பினிலே ஆனந்த மாலையிலே ஆடிடும் சில நினைவுகள் ஆனந்த குடும்பத்தின் ஆசைராகங்கள் ஆனந்த லகரியில் எட்டுமலர் பாதங்கள்.
சுற்றி சுழியாடும் சுழல்நீர் பரப்பை எட்டிப்பிடித்து எம்பிக் குதிக்க பற்றிய தாயின் கரங்களை உதறி பாயப் பதறும் பனிமலர் பாதங்கள்.
பந்தாய் சுருண்டு பாயும் அலையை பயந்து பார்க்கும் விழிகள் மூடி பற்றிய தந்தையின் கரங்கள் இழுக்கும் பயந்த சிறிய ஒரு ஜோடிக் கால்கள்.
அமைதிக் கரையின் இன்பக் கிளர்வில் ஆதரவான நெருங்கிய நடையில் அழுந்தப்பற்றிய வலிந்த கரத்தை மெலிந்த விரலால் மெதுவாய் விலக்கி பண்பாடு காக்கும் பதமான கால்கள். குங்குமக்கோலக் குறுநகையோடு - அவள் கண்ணாலே காட்டும் வண்ணம் கண்டு குறும்பு மின்ன குறுகுறுக்கும் இதயம் என்னாசைக் கண்ணே என்றின்பத்தில் கிசுகிசுக்க தனியிடம் தேடும் தவிப்பான கால்கள்.
5-11-1976
3&bs)

Page 23
திருமணம்
பஞ்சில் பொதித்து பக்குவமாய் வளர்த்து மிஞ்சும் அறிவு சிறக்க வைத்து கொஞ்சும் சிரிப்பு குலுங்க காத்து விண்ணின் நிலவாய் மின்ன வைத்து கண்ணின் இமையாய் கருத்துடன் காத்து பெண்ணிற்கு விடியலென்று திருமணம்.
திருமணம் பூவிலங்குமாகலாம் திருமணம் இரும்பு விலங்குமாகலாம்.
கணவன் கருத்தான காவலன்ஆகலாம் கணவன் கனிந்த நண்பனும் ஆகலாம் கணவன் மனித தெய்வமும் ஆகலாம்
கணவன் குடிகார பாவியும் ஆகலாம்
கணவன் கபட பூசாரியும் ஆகலாம் கணவன் கிளி குதறும் பூனையுமாகலாம்.
திருமணம் ஒரு சூதாட்டம் தான். திருவுடன் வரலாம், திரிந்தும் போகலாம்.
220/2002
Causatamai asasagsasa

செல்வி எனும் சுதந்திர சொர்க்கம்
செல்வி எனும் சுநாத மங்கலம், செல்வி எனும் சுதந்திர சொர்க்கம், செல்வி எனும் செண்பக மலர்த்தோட்டம், செல்வேன் என கொண்டது ஒட்டம்.
திருநிறை திருமதி திருவருட் கிருபையால் திருநாள் ஒன்றிலே திருப்பமாய் நிகழ்ந்தது.
வெண்குதிரை ராஜகுமாரன் பெண்மதிப்பு தருவானா? கண்ணென்று எனைப்பேணி ஆண்டகையாவானா?
நானென்று நினைத்தது நாமென்று ஆச்சுது எனதென்ற எல்லாமே எமதென்று ஆச்சுது.
நிழல் போல் வருவானோ, எனை நிழலாக நினைப்பானோ? பழகும் நீள் பயணத்தில் பிணையாக நீந்தி களிப்பானோ?
எனையாள நீ - உனையாள நானெனும் மனையாளும் - எண்ணமே வீண் நமையாள வேண்டுவது அன்பு ஒன்றுதான். கணையாழியிட்டு என் கணவனாக வந்தாலும் இணை கருத்தொருமித்த கனிந்த நண்பனாகவே நீ வேண்டும்.
O
20-6-2OO2
6&bs)

Page 24
அன்னையர் தினம்
நாட்டுக்கு நாடு அன்னையர்தின நாட்கள் வேறு பட்டாலும் ஆழ்கடல் தாண்டி அன்பைச் சுமந்து வந்த அன்னையர் தினமடல் கரங்களை அலங்கரிக்க,
பழகிய வார்தைகள் அகத்தை வருடியது. இளகி ஆனந்த விழிநீர் கோடிட்டது. நீகொடுத்து வைத்தவள் உன் அம்மாவை வாழ்த்திட, நான் இழந்துவிட்டவள் என் அம்மாவை நினைத்திருக்க.
கொடுத்து வைத்தாலும் இழந்துவிட்டாலும் - மனதில் நெடுத்து வாழ்பவள் அம்மாதானே! சொல்ல முடியாதவள் தன் அன்பின் அளவை வெல்ல முடியாதவள் அன்பை அளப்பதில்
வல்லவள், நல்லவள் என்று
வாயார வாழ்த்துவோம். வாழ்க! அன்னையர்
19-3-1999
வேதாவின் கவிதைகள்

பால பருவ பாதிப்பு
தமது மழலைகள் தமது சொத்துக்கள் தகவுடன் மதித்து வளர்த்திடலாம். தரம்நிறை பாலபருவ வாழ்வு தரங்கம் இழை மேதினி வாழ்வு.
மோதி முரண்படும் தம்பதியர் பலர் பாதி இல்லறத்தில் பிணங்குகிறார், ஏதிலார் போல் பிரிகின்றார். சூதில்லா குழந்தைகள் யாரிடமோ நாதியின்றி அடைக்கலம், இது நன்றோ? பீதியில் பிள்ளைகள் வாழ்வன்றோ!
பெற்ற செல்வங்களிற்கு பாச அரவணைப்பு உற்ற காலத்தில் பெற்றவரால் நிராகரிப்பு. மறைவான சேதத்தில் அவருடல் வாளிப்பு மழுங்காத வளர்ச்சி மருவும் மதமதப்பு. மாங்கொட்டையில் பூச்சி குடியிருப்பாய் மகத்தான பாதிப்பு மனதினுள்ளே.
இருவேறு பாதை வாழ்வுப் பயணம் ஒரு பாதையாகும் சங்கம திருமணம்.
6&bs)

Page 25
மணவாழ்வில் மழலைப் பருவ பாதிப்பு மல்லுக்கட்டி மலிவு விலையில் குதிப்பு, மாங்கனி அரிந்திட பூச்சி உதிப்பாய் தேன்கனி இல்லறம் வேப்பங்காயாய்.
சாத்திரம் பார்த்து துணை கோர்ப்பு கோத்திரம் பார்த்து துணை சேர்ப்பு பவித்திரமான பாலபருவ ஆய்வும் சித்திரசிறப்பு எதிர்கால தெளிவு. முத்திரை பதிக்கும் ஒளியான வாழ்வின் சூத்திரம் ஒன்றிது வெற்றியின் ஒளிர்வு!
2OO2س3 سن-4
வேதாவின் கவிதைகள்

உறவின் உயிராக
உறவின் உயிராக உயிரின் கருக்கள் உதரத்தில் உதிக்கும் உயிர் செல்வங்கள், உயிர் செல்வங்களின் உற்சாக கீதம், உயிரின் ஆதாரம் உறவின் நாதம்.
சிறகுகள் விரித்த சுதந்திரசுவாசம், மனதுகள் விரிந்து மகிழ்ந்த பாசம், அமைதிகள் நிறைந்த அன்பு மழை இதயங்கள் பழகிய இன்னிசை இழை;
குழைய வேண்டும் இசைந்தமையில் நுழைய வேண்டும் உறவு தறியில்
இழைய வேண்டும் இடைவெளி இன்றி தழைய வேண்டும் உறவு தடைகளின்றி.
7-10-2OOO
&&bs

Page 26
ஆச்சாரிய விருந்து
வேனில் விடுமுறையில் நாம் டென்மார்க் விஜயம், வேளை தோறும் நவின்றாள் எம் செல்வ மகள் நிஜம். நாட்கள் செல்ல அவள் கதையில் சுற்றல், தேட்டம் தமக்காம் வேற்றிடம் சுற்றல். விடுத்த தகவலால் மனதில் நிலையானோம் அடுத்த வேனிலில் தான் இனி குடும்ப சங்கமம்.
“நண்பர்கள் இருவருடன் தனக்கும் நள்ளிரவு விருந்தொன்று வேண்டும்.’ ஒரு பத்து நாட்களின் முன்னே நம்புதல்வன் விருப்பத்துடன் மொழிந்தான் தொலைபேசியில். செல்வமாய் புதல்வன் வேண்டுகோளில், செவ்வையாய் உணவும் தயார் நிலையில்.
வேலை முடிந்து நாம் ஆயாசமாய், வீட்டில் அமர்வு ஆசுவாசமாய்
திருமணநாளான நம் திருநாளது,
திருப்தியாக முடியும் நேரமுமது;
முன் கதவு தாள் விலக்கும் ஒசையிலே, மூவரையும் எதிர்பார்ப்பு வாசலிலே, புகைப்படக்காரராய் அண்ணன் முன்னாக, புகுந்தனர் மகள் - மருமகன், நண்பர்களாக,
வேதாவின் கவிதைகள்

எதிர்பாராத ஆச்சரியம்! ஒ எவ்வளவு ஆனந்தம்! எள்ளளவு சந்தேகமின்றி, தம்பங்கை எழிலாக முடித்தனர்.
அண்ணனுடன் தங்கை இரகசிய திட்டமிட்டு, அண்ணலும் கூடி இணைந்து நடித்திட்டு பேச்சின்றி பயணம் பிரித்தானியாவிலிருந்து, ஆச்சரிய வருகை டென்மார்க்கிற்கு. பூரிக்க வைத்தனர் அன்று எம்மை பூரணமாக்கினர் ஆச்சரிய வருகையை.
தேடி வராதென எண்ணிய விருந்து, ஆடி மாதத்திய வேனில் விருந்து, மாடி ஏறி நம் வாசல் வந்து நாடியது எம்மை இன்பமாய் விரைந்து. கோடியது பெறும் குடும்ப சங்கமம் ஆம்! கோடியது பெறும் குடும்ப சங்கமம்!
18-9-2000

Page 27
பவள நினைவுகள்
சங்கத்தமிழ் மேடைகட்டி சந்தங்களில் கவிதைகூட்டி சந்தோஷப்பாட்டு வேண்டுமே, அன்பே. சந்தித்ததை வாழ்த்த வேண்டுமே!
சந்தித்த கண்கள் அன்று, சொந்தமாக வேண்டி நின்று சிந்தித்ததும் தவறு அல்லவே, அன்பே வந்தித்து ஆசி வென்றோமே!
இல்லமெனும் ராஜாங்கத்தில், இன்பமெனும் சாரலிலே அன்பு வயல் பாத்தியிலே அன்பே ஆசைவிதை தூவி வந்தோமே.
நான் சிறைப்பட்ட அன்பு, வான் உயர்ந்த குன்று,
ஊன் சிறையிருக்கும் என் உயிர்நாண் - உன் அன்பு
கற்பூரமாய் காலங்கள் கரைந்துவிட்ட நேரங்கள் 6 é.
பவளநாள்’ கடந்தபோதும், துவளவில்லை இளமைமனம்.
வேதாவின் கவிதைகள்

மானிட அகவைப்பூங்காவில், தேனிடும் சூரிய அன்பனே! எம் இல்லறரசிக மன்றத்தில் நாம் சொல்லிட அங்கம் நால்வர்.
தனிமரமல்ல மனிதன், கணிதரும் தேன்சுவைத் தோப்பு அணிபெற செல்வியின் துணையோடு ஜவராய் இணைப்பு.
மருவறு வாழ்வீந்த திருவுறு இறைக்கு நன்றி! ஒருவரை ஒருவர் மதித்த, அன்பு மனதுக்கு நன்றி!
அருமை கொண்டுணர்ந்து அன்பை மதித்து வாழ்ந்தால் சிறுமையின்றி பூவுலகில் பெருமையாய் வாழ்ந்திடலாம்.
சங்கத்தமிழ் மேடைகட்டி, சந்தங்களில் கவிதை கூட்டி சுந்தரத் தமிழில் பாடுவேன் அன்பே ஸ்வரங்களில் தாலாட்டுவேன்!
* (35வது திருமணநாள் =ugust நினைவுநாள்)
21-8-2002
6&bs) C510

Page 28
22
23
24
25
தததுவம
. இறைவாமை வேண்டும் அன்றேல் பிறவாமை வேண்டும்
. பிறப்பை பெருமையுறச் செய்
விளைச்சல் இல்லா மனங்கள்
இதயம் சிரிக்க
53
54
55
56
வேதாவின் கவிதைகள்
 
 

இறவாமை வேண்டும் அன்றேல்
பிறவாமை வேண்டும்
ஆடாத ஆட்டம் ஆடி அனுபவப் பாடம் கற்றால் இறுதியில் வருவதென்ன இறப்பென்ற ஒன்றுதானே?
இறப்பென்ற ஒன்றுக்காக பிறப்பொன்று ஏன் வேண்டும், இறவாமை வேண்டும் அன்றேல் பிறவாமை வேண்டும்.
அம்மாவின் மடியில் அன்பு சுகம் தேடி அண்ணனின் கையால் அரவணைத்தாடி - பின் அன்பனின் அணைப்புத்தான் நிலைக்குமென்றால், அங்கும் மூப்பு வருகிறது மூச்சு வாங்குகிறது.
கணத்தில் மாறுகிறது கரும்பான இளமை
தினத்திற்கு ஒருநினைவு சுமையாக ஏற சிறுசுகள் வளர்ந்து சிறகுகள் முளைக்க காலத்தின் ஒட்டம் கருமங்கள் வேகம்.
பிறக்கிறோம் தனிமையில் இறக்கின்றோம் தனிமையில் இடையில் ஒரு இணைப்பு இணைப்பில் ஒரு பிரிவு இதுதான் நியதி என்றால் இறவாமை வேண்டும் அன்றேல் பிறவாமை வேண்டும் வேண்டும்.
13-2-1977
6&bs C53)

Page 29
பிறப்பை பெருமையுறச் செய்.
காற்றடிக்கும் திசையில் கருத்தசையும் மனிதா! ஏற்றம் என்ற வழியில் என்று நடை நடப்பாய்! மனிதவாழ்வு ஒரு நல்லேடு, புனிதமாக நீயும் நாடு! கணிதமாக அதைப்போட்டு, வனிதமாக வாழ்ந்துபாரு ஒருமுறைதான் பிறப்பு, பெருமையுறச் செய்வது சிறப்பு
gறுமைகொண்ட சிறுகூட்டம் கருமையாக்கும் உந்தன் வாழ்வை. சிறந்த நண்பன் நல் முத்து பிறந்து வந்தால் உன்சொத்து கறந்தபாலின் சுவைபோலே, கலந்து வாழ்ந்து களிகொள்ளு
நீரில் கலந்த பாலை நீரை நீக்கி உண்ணும் அன்னமாக பாரில் கலந்து வரும் மாசை பகுத்து உணர்ந்து வாழபழகு!
நல்ல பாம்பும் மிக சீறும், நாகரத்தினமும் அங்குவாழும், கோபம் உள்ள இடத்தில்தானே
நற்குணமும் நிறைந்து காணும்.
15-12-1990
C540 வேதாவின் கவிதைகள்

விளைச்சல் இல்லா
மனங்கள் இன்று
அன்பெனும் பருவமழை தவறி அறிவெனும் பசளையின்றி கருகி அறிஞரின் அரும்பாடு வீணாகி அகம் எனும் தோட்டம் பாழாகி
விளைச்சல் இல்லாத மனங்கள் இன்று மன உளைச்சலாலே உருமாறிக் கொண்டு - அன்பின் வலைக்குள் அடங்கா வாழ்வு கொண்டு உலைக்குள் அகப்பட்ட இரும்பாகி உருமாறிக் குலைகின்றன.
ஆதரவெனும் ஏர் கொண்டு சீர்பெறும் வண்ணம் நேர்நின்று வீட்டுப்பற்றின் பிடியினிலே நாட்டுப்பற்று உரமேற்றி வாட்டம் நீங்கி வளம் பெருக நாட்டம் கொண்டு நற்பண்பின்
விளைச்சல் இல்லா மனங்களின் மன நமைச்சல் நீங்க நாம் முயல்வோம்.
O
18-3-1999
990 C55)

Page 30
இதயம் சிரிக்க
நாலு வார்த்தை உமிழுங்கள்! நல்லதைப் பாராட்டுங்கள்! நல் மனதுடன் வாழ்த்துங்கள்!
உள்ளங்கள் உறுதிபெற உள்ளதை மொழியுங்கள் உதறுங்கள் தயக்கத்தை!
எண்ணங்கள் நிலைபெற
என்றும் நல்லதை வாழ்த்துங்கள்!
நேற்றோடு பொறாமையை காற்றோடு உதறுங்கள்!
ஆற்றாமையை இன்றுடன் அடியோடு சாயுங்கள்!
வேற்றுமையை வேகமாக
வேரோடு பொசுக்குங்கள்!
சோற்றோடு திறமையை
நாற்றாக நாட்டுங்கள்!
இறுகிய இதயத்தை இளக்கி விடுங்கள்! இளகிய இதயத்தில் உணர்வுகள் சிலிர்க்கும் உணர்வுகள் சிலிர்க்க உறவுகள் பிறக்கும் உறவுகள் பிறக்க உலகம் இனிக்கும். இதயம் சிரிக்கும்!
79222-Z----4ے
C56) வேதாவின் கவிதைகள்

*శ్రీ*స్ట్రీశ్రీ*స్ట్రీశ్రీ###### உணர்வுகள்
26. தமிழே அமுதே 27. காற்றுக்கென்ன வேலி
ဒွိ ဒွိ
28. இங்கு புலரட்டும் புதிய நம்பிக்கைகள்
29. மாளிகையின் பிச்சைக்காரர்கள்
ဎွိ
30. எங்கே எங்கள் புன்னகை
3
31. உண்மை காயப்படும்
ဎွိ
32. தலை நிமிர்ந்து நில்
33. மெளன நிழல் கலையட்டும்
5 E
34. சமன்பாடு காணும் ஞானக்குளியல்
35. அன்னியகாற்று
6
8
fi 36. Grma utălb வேண்டும்
37. மலராத புன்னகை
3
38. என்னை விட்டுப் பிரியாதே
7
2
39. பேனா முனை
7
3
40. சொல்ல நினைத்தது
*àಷ್ಟಿಕ್ಲಿಫ್ಟಿ4ಣ್ಣೀ 6&pg
C57)

Page 31
தமிழே அமுதே
அமுதென்ற நம் தமிழே1உயிரென்ற நம்தமிழே தமிழே! தமிழே! தெரியுமா, தமிழே அழிவது தெரியுமா? தனி ஒரு எதிரி வரவில்லை, தமிழரே எதிரி தெரியுமா?
அரும்புமலர் மொட்டு அம்மாவென வரும்போது அமுதத் தமிழால் விழிக்காது அந்நியபாஷையில் விழிக்கின்ற அம்மாவே முதல் எதிரியன்றோ! அழகே! அணியே அரியதமிழே பிறவொரு எதிரி உனக்கில்லை,
மறத்தமிழரே எதிரிதெரியுமா?
“தமிழன்’ என்று மொழிந்தால் தரம் குறைந்த மனநிலை தன் கண்ணைத்தானே புண்படுத்தும் ஒருநிலை வேல் என்று தமிழை விலக்கிய சூழல் பால் என்று அந்நிய பாஷையில் மாயை
உயிர்க் காற்றென்று தமிழை உள்வாங்கி அயர் வின்றி அறிவில் அரங்கேற சிறுவர் உயர்வுக்கு தாய்மொழி உரமிடுங்கள் நிகர் ஏது நம் தமிழ் சிறப்பிற்கு.
12-7-1999
வேதாவின் கவிதைகள்

காற்றுக்கென்ன வேலி?
வேலிபோட்டு தடுத்தாலும் வேகம் மீறி இயங்கும் காற்றுக்கென்ன வேலி ஆற்றுக்கென்ன அணை மனஆற்றலுக்கென்ன தடை! ஊற்றுக்கென்ன துறுகல்!
எல்லையற்ற உலகில் எண்ணிறைந்த வேலிகள்!
ஆசைக்கு பயம் வேலி, ஆற்றுக்கு கரை வேலி, வித்தக தமிழுக்கு இல்லைவேலி, விழுமிய வாழ்வுக்கு ஒழுக்கம் வேலி.
வேலி போட்டு வாழ்ந்தாலும் வெளியே வருபவர் பலரே.
ஒலை வேலி போட்டும் ஒடுங்கி வாழ்ந்தோம் நாம் மனவேலி போட்டு வாழும் மக்கள் கூட்டத்தோடும் இணைந்து வாழ இயலாதும் இருட்டில் வாழும் ஒரு கூட்டம், இரும்புவேலிக்குள்ளும் இறுகிடும் நிலை பாவம்.
4-1999ے۔ A5

Page 32
இங்கும் புலரட்டும்
புதிய நம்பிக்கைகள்
கலாச்சார வழுக்கலில் கவனங்கள் சிதறி மங்கிய சந்தோஷம் பொங்கி நிறைய எங்கும் தோன்றட்டும் புதிய சிந்தனைகள்! இங்கும் புலரட்டும் புதிய நம்பிக்கைகள்!
வாரிசுகளை முகங்களுடன் வளர்த்தெடுக்க - வழிகாட்ட செய்தி ஊடகங்களின் மெய்யான போராட்டம் நல்லவரின் சிந்தனைகளால் வல்லவரின் செயல்களால் இங்கு புலரட்டும் புதிய நம்பிக்கைகள்!
அனுகூலமாக அள்ளித் தெளிக்கும் அனுபவ மொழிகளை, அக்கறை வார்த்தைகளை சிக்கெனப்பற்றி சீர்தூக்கிப் பார்த்து சிரத்தையாக சிந்தனைக்கு எடுத்து வாழ்வின் விடியலுக்கு வசமாக்கிக் கொண்டால் இங்கும் புலரும் புதிய நம்பிக்கைகள்!
O
19-4-1999
வேதானின் கவிதைகள்

மாளிகையின் பிச்சைக்காரர்கள்
வாழ்வை சுகித்து சுவைக்காது ஒய்வின்றி உழைக்கும் பெற்றோர் மாய்ந்து மாய்ந்து வாரும் பணம் வாய்த்து எனக்கு என்ன பயன்? ஆய்ந்து பார்த்தால் இவர்களும் ஆனந்த மாளிகையின் பிச்சைக்காரர்கள்.
மனம்திறந்து பேச மணியான தோழியில்லை, மனம் இனிக்க உலாவர மதுரமாம் இயற்கையில்லை மடியில் சாய்ந்து அழுதிட மாதாவுக்கு நேரமில்லை மகிமையான வாழ்விருந்தும் நாம் மாளிகையின் பிச்சைக்காரர்கள்.
காலாற நடந்து ஆலமரநிழலிலே காத்திருக்கும் பிள்ளையாரைக் கண்டபடி ஏச காத்திருக்கும் எனக்கு காலநேரம் வரவில்லை கனக்கும் மன மாளிகையின் பிச்சைக்காரி நான்.
10-6-1999
&bs)

Page 33
எங்கே எங்கள் புன்னகை
எங்கே தங்கள் வளர்ச்சி எங்கே தங்கள் சுகம் அங்கே எங்கள் புன்னகை, அந்த நிரந்தர புன்னகை - மனமகிழ்வின் சங்கேத மொழி ஆழ்மனதின் சங்கீத வழி. மனம் விரிந்த மென்னகை மனிதின் மட்டும் கொண்ட நகை, தவழ்ந்து பிறரைத் தொத்தும் புன்னை உலகில் சிறந்த இந்த நகை, ஆண்டவன் சிரிப்பில் ஆறுதல் புன்னகை அரங்கேறும் கவிதையில் அர்த்தப் புன்னகை. அழகிய மலரால் இன்பப் புன்னகை. அன்பு மழலையால் ஆனந்தப் புன்னகை.
சமூகத்தின் மலர்வில் சாதனைப் புன்னகை சகலமும் இங்கே எமது கரங்களில்.
திருப்தி கொண்டால் தெரியும் திருப்பதி அதிருப்தி கொண்டால் பெருகும் விரக்தி
சினக்கும் முகத்தால் சிதையும் புன்னகை அனுங்கும் மனதால் அழியும் புன்னகை இருமொழி பேதத்தால் அழிந்த புன்னகை
வருமென எண்ணுவது ஆறுதல் புன்னகை.
O
14-72OOO
வெதாவின் கவிதைகள்

உண்மை காயப்படும்
மனிதம் நெஞ்சில் மறையும் வேளை மனிதநேயம் மரிக்கும் காலை புனிதம் மழுங்கும் பூவான உண்மை கணிதம் இது கச்ந்த உண்மை. கல்லடித்தால் கனி காயப்படும் பொய்யடித்தால் உண்மை காயப்படும் வாய்மை வஞ்சத்தால் வாயிழக்கும் போது தூய்மை மழுங்கி மங்கலாகும் போது பொய்மை ஊரை பாசமாய் நாடும் பொய்மை வீரமாய் வேசம் போடும். நன்மை கருத்துடன் வெளிப்பட உண்மை பளிச்சிடும் தெளிவாக,
மின்னும் வைரமே வாய்மை
மூடும் சாம்பலே பொய்மை
சங்கு சுட்டாலும் வெண்மையே
எங்கு காயமானாலும் உண்மையே.
சத்தியம் ஜெயம், புத்தன் தவம். பாரதி தமிழின் கனல் முழக்கம், குறள் தமிழின் வாய்மை முழக்கம் அறம் கூறும் முன்னோர் முழக்கம் உண்மை காத்த உத்தமர் கதைகள் உலகை ஆக்கும் நன்னெறி விதைகள். உண்மை காயமுற்றும் ஈற்றில் வண்மை கொண்டது வெல்லும் - வெல்லும்.
O
19.7-2000
&gba

Page 34
தலைநிமிர்ந்துநில்!
தலை நிமிர்ந்து நில் தன் மானத்துடன் நில்! தலை நிமிடந்திட விடார் தடுமாறாது செல்! விலை குவிந்தாலும் மானத்தை விற்காமல் செல் விலையற்றது அது மனிதத்தின் வேரெனக் கொள்!
நிலை ஊன்றிநில்! நிதானமுடன் நில்! வலை வீசுவர் வழியில் பார்த்துச் செல் தலை குனிய வைக்க தருணம் பார்ப்பார் கலை, அவர்களுக்கிது கரிசனமாய்க் காத்திருப்பார்!
திறமை தம் ஏகபோக சொத்து என்பர் திறமையுள்ளவர் தமக்கே சொந்தம் என்பர் திறமையுள்ளோரை சுயமாய் உயரவிடார் வறுமை மனங்களின் தீராத இப்பசித் துயர்.
அறிவு ஜோதியை மனதில் ஏற்று அனுபவ நீரை நிதமும் நன்கு பாய்ச்சு. அன்பு விதையை பக்குவமாய் ஊன்று அமைதி மலரை முகர்!- ஆனந்தமாய் ரசி!
தலைநிமிர்ந்திடவும் ஒரு தகுதி வேண்டும். மலை போன்று மனம் ஓங்கி உயர்ந்திட்டால் - உன் தலை குனியாது நிமிர்ந்து விடும் - நீயும்
தலை நிமிர்ந்து நல்லோருடன் கை கோர்ப்பாய்.
133-2007
வேதாவின் கவிதைகள்

மெளனநிழல் கலையட்டும்!
பாலாடை உடைந்தால் பீறிடும் இனிய பால் மேலாடை முகில் கலைந்தால் ஒளிரும் உண்மைக்கதிர்! மெளன நிழலினுள் மறைந்துள்ள மனங்களே கலையுங்கள்! மெளனம் கலையுங்கள்! இருட்டில் கூடவராது நிழல்கள்!
காற்றும் இலையும் உரசும் சங்கீதம், கரையுடன் அலையும் ஓயாத பிரசங்கம், மூங்கிலினுள் காற்று நுழையும் வேணுகானம், முக்காலமும் ஓங்கும் அர்த்த சல்லாபம். எக்காலமும் அழியும் வாழ்வில் - மனிதன் கற்கால மனிதனாய் மெளனம் ஏன்?
பிறவி ஒரு தடவை - மெருகிடும் பேச்சு எழுமோ? அறிவு ஒச்சும் பேச்சு, கருகிட திருவுளமோ? துறவு பெருக்கும் மெளன முக்காடு நழுவுமோ! நறவு பெருகும் வாழ்வு அழிய சம்மதமோ!
முட்டையுள் சிறு குஞ்சின் மெளனம் முழு உலகினுள் காலிட உதவிடா, கூண்டினுள் கைதியின் மெளனம் கூண்டிலிருந்து விடுதலைக்கு உதவிடா. உதடுபிரியுங்கள்! அவை ஊமை மொட்டுக்களல்ல! உன்னத அர்த்த பதங்கள் உலகு இழப்பதற்கல்ல! கன்னல் பேச்சு - மன்பதை மனபுழுக்க விசிறியாகட்டும்! பென்னம்பெரியமனப்பேய்கள் விலகி நல்லுறவுகள் மலரட்டும்.
O
9-4-2002
6&9)0

Page 35
சமன்பாடு கானும்
ஞானக் குளியல்
பூவிதழ் விரித்து, பூந்தாது மகரந்தம் ஏந்தி பழகும் வண்டின் வரவிற்காய் மகிழ்ந்து ஏங்கி, தேன் பரிமாறியதும், மலர் நன்றியைப் பெறுவதில்லையே! வண்டின் நன்றி நவிலா நழுவல் ஆணாதிக்கமோ?
வானுயர் ஞானம் நிறைமனிதன் வாங்கும் உதவிக்கும், தேனுயர் அனுபவத்திற்கும் நன்றி நவிலா நழுவலும், தானுயர் வாழ்வின் வழுக்கல் பாசியன்றோ! மேலுயர் படியில் தடைக்கற்களன்றோ!
சிறுசினப்பால் சிந்தனைக்கு எரிமூட்டி பெறுமதி பழக்கங்களை பொக்கிஷமாய் மதிக்காதவன் சிரஞ்சீவி அறிவிற்கு சிலுவை அறைகிறான்.
சுய குழப்பத்திலும் - மன சுக்கானை ஆள்பவன்,
நிஜ மனத்துடன் நிலைத்து நிதானிப்பவன் நிதர்சன மனிதன், நியாய மனிதன்.
வேதாவின் கவிதைகள்

ஞாலம் அளக்கும் தன் சிந்தனை ஒட்டத்தின் ஞான நோக்கில் தன்னை சமன்படுத்துகிறான். முரண்பாடுகளிலும் தனை முழுமனிதனாக சமன்பாடு காணும் இது ஞானக் குளியல்.
முடிவில்லா யுகவனத்தில் மனிதங்கள், முடியாத சூரிய சந்தன ஒளியாக, மானிடத்தின் மனித தவறுகள் அழித்து, மனிதனாகலாம் வைர ஜொலிப்புக்களாக,
மனிதனாகலாம் மனிதநேயங்கள் காக்க
மானுடப் புதுயுக வரலாறு காண
30-4-2002

Page 36
அன்னிய காற்று
அன்னிய காற்று அக்கரைச் சீர்மை அன்னியக் கூரை அகதிப் போர்வை.
அன்புக்காற்றை விலக்கி ஊடி அன்னியதேச பணக்காற்று நாடி பிளந்தோம் போர் சூழலால் வாடி வாழ்கின்றோம் அன்னிய காற்றில் ஆடி.
ஒட்டுறவில்லை ஒப்புக்கு உரையாடல் ஒன்றிடும் மனமில்லை - ஒதுங்கி உறவுக்கு வாடல் நாட்டில் மட்டுமன்று அன்னியக்காற்று, நம்மவர் மனங்களிலும் அன்னியக் காற்று.
தாய்மொழிக் காற்றை விலக்கி பிறமொழிக் காற்றை பழக்கி நறவெனும் நம் கலாச்சாரம் விலக்கி சிறகுகளை உடையாதீர்தூரவிலக்கி.
அன்னிய நினைப்பும் நம் மனமே அன்னியோன்னியமும் நம் மனமே பொல்லாத நினைப்பும் எம் மனமே நல்ல சிந்தனையும் நம் மனமே.
அன்னியர் தமிழரென எண்ணாது எம்மினமென்று எண்ணிடலாம் கண்ணியமாக அன்பை நாடி அன்னியோன்னியமாய் வாழ்ந்திடலாம்.
Ο
12-7-2002
வேதாவின் கவிதைகள்

Gafsafi IIIT bid (36.6LTD
வெண்ணிலவானத்தில் கலவரக் கோலம் வன்முறை ஆரம்ப குண்டு வெடியோலம்.
வாடிய கருக்கிருட்டு மந்தார மேகம் வையத்தின் ஜரிகைக் கோலங்கள் மாற்றம் வாசல்படியின் தந்திச் சேவை மின்னல் கடப்பாடு மறந்து ஒளிந்த கதிரவன்.
கனத்து திரண்ட கார் மேகத்தின் சோகம் கண்ணிர் மழையாக்க கடின பிரயத்தனம்.
வானத்தின் சோகம் இயற்கையின் கோலம், மாற்றிட முடியா பிரபஞ்ச ஜாலம். மானிடன் சோகம் ஞானத்தின் ஆழம் தானதன் சாரம், தன் வினைத் தாளம்.
மோக அணைப்பு வேண்டும் சோக அணைப்பு வேண்டாம்.
வேகும் தணலெனும் உணர்வுகள் யாக நெய்யான கண்ணிருடன் ஒம புகையெனும் சோகம் சாமவேதம் ஒதவேண்டாம்.

Page 37
சோகம் கவிழ்ந்து வதனமிருண்டு யாகம் செய்யும் வாழ்வு வேண்டாம் சோகத்தை வென்று யோகம் கண்டு பாகம் பண்ணும் சுப ஜெபம் வேண்டும்.
தைரிய மூலதனம் வைர நெஞ்சுடன் வருவதை எதிர் கொண்டால் - எம் பெரும் வதை சோகம் மழுங்கும் சிரிப்பலங்கார சிருங்காரம் புரளும்.
மோக அணைப்பு வேண்டும் சோக அணைப்பு வேண்டாம்.
8-6-2O
வேதாவின் கவிதைகள்

மலராத புன்னகை
புன்னகை என்பதன் பொருள் என்ன? மென்னகை எனவும் கொள்ளலாமா? நன்னகையாம் அது நானிலத்தில் என்னகை அதற்கு ஈடாகும்?
விலை கொடுத்தால் அது விரிந்திடுமா? தலையசைத்தால் அது தங்கிடுமோ? வலை விரிக்க அது பயன்படுமோ? சிலை வடித்தே அதை ரசிப்போமா?
பெண் நகையா அது பொன்னகையா? கண் அசைவிலும் அது கனிந்திடுமா? என் நினைவில் நிதம் நின்றாடும் வண்ண தோரணம் அவள் வதனத்திற்கா?
மன்மதப் புன்னகை மறைந்துவிட - அவள் சந்நிதி வாசல் சாத்தியதா? கண் விழிபட்டே கருகியதா? - இல்லை கருணையேயின்றி இறுகியதா?
1O-6-1997
6&9)0 C7

Page 38
என்னை விட்டுப் பிரியாதே
கண்ணின் ஒளியென கருத்தில் கலந்தேன்
என்னுயிர் நிழலாக உன்னை நினைத்தேன் பின்னைஏன் பிரிய எண்ணுகிறாய்?
என்னைவிட்டு விலகாதே ஆருயிரே,
பருவத்தின் பாதையில் பயணித்தோம்
இருவேறு பாதையில் இதம் கண்டோம் திருமணமேடையில் சங்கமித்தோம் ஒருபுதுப் பாதையில்இணைந்து கொண்டோம் அருகிடும் பிணக்குகள் அழிப்பாய் கண்ணே நெருங்கிடும் என்னைப் பிரியாதே கண்ணே.
உறவின் உயிராக உணர்வில் கலந்து உணர்வின் ராகமாக உடலில் கலந்து மண்ணோடு உடல் சேர்ந்து மறையும் வரை என்னோடு நீயிரு உன்னோடு நான் வருவேன்.
16-5-2001
வேதாவின் கவிதைகள் פC72

Gao II typ60GOT
ஏர் முனையாய் உலகை உழும்
சி. ஊர் முனையாம் பேனா முனை!
யார் தடுத்தும் ஒயா முனை! தீர்வெடுக்கும் தீர முனை!
அழுக்கு மனதை உழுது,
புழுக்கள் அனைத்தும் அழித்து, புதிய உணர்வு தெளித்து பதியமிட்டு வளர்த்து சமுதாய மலர்வு எனும்
அமுதான மலர் முகிழும்
உணர்வின் ஓங்கார சுடர் முனை!
மனவிருள் அகற்றும் ஒளி முனை! மனநெறிகாக்கும் கூர் முனை! மானுட காவலன் பேனாமுனை!
76-5-2007

Page 39
சொல்ல நினைத்தது.
இன்பப் பூங்காவாம் இல்லறத்தில் இணைகின்ற இருவர் இயல் இசையான இனிய நண்பர்களே என்று சொல்லத்தான் நினைக்கிறேன்!
பெண் விடுதலைபேசி நட்புநிலை மறந்து ஆண் மனதைக் கீறுகின்ற எண்ணம் எனக்கு இல்லை என்று சொல்லத்தான் நினைக்கிறேன்!
அன்பை அவமதிக்கும் அதிக்கிரம நடவடிக்கையை நான் அனுமதிப்பதில்லை என்று சொல்லத்தான் நினைக்கிறேன்!
கலந்து பேசி விரிந்து உரையாடி கருத்தொருமித்த முடிவு என்பது கனிந்த நட்பின் சிறந்த இலக்கணம் என்று சொல்லத்தான் நினைக்கிறேன்!
மெல்லத்தான் கூறுகிறேன் வெல்லம் போல் அன்பை ஈந்து உனை வெல்லத்தான் நினைக்கிறேன் என்று சொல்லத்தான் நினைக்கிறேன்!
20-6-1999
வேதாவின் கவிதைகள்

காதல்+ ஏக்கம்
நீலவான் அஞ்சலுக்காய் 76
42. இதற்கா எனை அழைத்தாய்? 77
நீ வரவேண்டும் 78
44. ஆராதனை 79
45. இனிய நாயகன் 80
46. கற்பனை 82
காதல்பித்தம் கண்களின் முத்தமடி

Page 40
நீலவான் அஞ்சலுக்காய்.
நீலவிழிகள் உனை ஏங்கி நிதம் பாட நீலவான் அஞ்சலுக்காய் நாடி தினம் தேட நீலக்கடல் தாண்டி மனம் நிதம் பறந்து ஒட நீளமாய் காலம் ஏன் நினைவிலே ஆடுது
நினைவு மாலைகளை நீளமாய் தொடுத்தெடுத்து கனவில் அவனுக்கு களிப்போடு சூடி, பின் கனவும் கலைந்துவிட கவனமும் மாறிவிட நினைவு நினைவாக நீளமாய் மாலைகள்!
பூக்களின் நடுவே ரோஜாவாய் அவன் முகம்! பாக்களின் நடுவே பல்லவியாய் அவன் முகம்! நீக்கமற நிறைந்து நினைவெல்லாம் இனிக்க - மன தாக்கங்கள் முகத்தில் தனியாக தெரிவதென்ன?
அவனின்றி என்னால் அசைய முடியாதா? அவனியில் அதுதான் இயற்கையின் நியதியா? அவனோடு சேரும் நாள் தேடித்தேடி அன்பால் இசை பாடுகின்றேன் தனியாக நின்று!
1986
w வேதாவின் கவிதைகள்

இதற்கா எனை அழைத்தாய்?
காலமெல்லாம் உன்னோடு கையிணைத்து வரத்தானே ஜாலமெல்லாம் செய்து சாதித்து வெற்றி கண்டாய் தோழர்கள் மகிழ்ந்திட தோழமை இனித்திட தோளொடு தோளாக வாழ்வுத் தோணியை ஒட்டினோம்!
எதை தவறவிட்டேன்! எதை எடுத்துவிட்டேன்! கதை முடியுமுன்னே காததுாரம் போய்விட்டாய்! வண்ணங்கள் பலவாகி வடிவழகு தோன்றுமுன்னே என்னபிழை செய்துவிட்டேன் எனைப்பிரிந்து போவதற்கு?
கண்ணிர் உருண்டோட கண்மலர்கள் வாடிவிட எண்ணமெல்லாம் உன்நினைவாய் ஏங்குகிறேன் இங்கிருந்து காலமெல்லாம் என்னோடு கையிணைக்க வாராமல் - மாய் மாலமெல்லோ செய்கின்றாய் மாயக்கண்ணனைப் போல்!
என்ன நினைத்துவிட்டாய் ஏன்பிரிந்து போய்விட்டாய்? சொன்ன சொற்களெல்லாம் சுழல்காற்றில் பறந்தனவோ? இதற்கா எனையழைத்தாய் இணையில்லா தனிமைக்கா? எதற்காக எனை நீ ஏமாற்றி ஒளிந்திட்டாய்?
1986

Page 41
நீ வர வேண்டும்!
குறும்பு மின்னும் கண்கள் மின்னலிட அரும்பு முல்லை இதழ்கள் முறுவலிட அன்புக் கரம் நீட்டி வந்தாலென்ன அள்ளி எடுத்துத் தந்தாலென்ன!
இதயமாய் கைகள் அணைத்திருக்க இமைகள் இரண்டும் மயங்கிவிட பதமாய் உந்தன் மார்பினிலே பதுமையாகிட நீ வேண்டும்!
குளிரான கடல் காற்றில் குழலோடுதுகிலாட எழிலாக இணைநடக்க என்னோடு நீ வேண்டும்!
ஈரமணலில் இருஜோடிக் கால்பதிக்க ஒரவிழி சிரிக்க ஒடிநீ வரவேண்டும்!
கண்மலர கையிணைய கடலலைகள் தாளமிட வெண் மணலை அளைந்தாட விரைந்துநீவரவேண்டும்!
விழியகல தலைசாய்த்து விதவிதமாய் கதைபேச ஒளிவீசும் நிலவினிலே ஒடிநீ வரவேண்டும்!
77-6-1986
வேதாவின் கவிதைகள்

ஆராதனை
கற்பனை மாளிகையில் நிதமும் ஆராதனை அர்ச்சனை மலர்களாய் ஆனந்த நினைவுகள், உற்சவமூர்த்தியாய் உலாவரும் உன் எழில் அற்புத நினைவுகள் அழியா கோலங்கள்!
மனமென்னும் பூங்காவில் அமர்ந்திருந்து கனவென்னும் வானவில்லின் கவர்ச்சியிலே நனவென்னும் நினைவில் ஆழ்ந்திருந்து நாயகன் உறவுக்கு ஆராதனை
நினைவுப் பூக்களால் அழகுக் கோலமிட்டு நிலவு பூத்த இரவிலே மயங்கிநின்று தேவனை அழைத்து தேன்குரல் எடுத்து தேவி இசைபாடும் தேவலோகம் அது
தேவலோகத்துத் தெய்வமா அவன்? தேவியின் உலகத்து தேவனா அவன்? தேவிமயங்க தேவன் அணைத்திருக்க ஆவி துடிக்கும் அன்பென்ற சங்கமத்தில்!
இன்பமென்ற ஊஞ்சல் தூரமாய் அசைய துன்பமென்ற ஊஞ்சல் ஒரமாய் அசைய எங்கவன் எங்குஅவன் என இதயம் ஒலமிட சங்கமம் தேடி சந்நிதியில் ஆராதனை
Z-17-1986
6&bs)

Page 42
இனிய நாயகன்
இல்லமெனும் ஆலயத்தின் இனிய நாயகன் நீதானே நல்ல நண்பனும் நீதானே நாளும் தேடுவதுணைத்தானே!
அன்பு மலர்களை தினம் தூவி அர்ச்சனை செய்வதே என் வேலை என்பும் உருக தேடுகிறேன் அங்கே நீயும் நிற்கின்றாய்!
தீபம் ஏற்றும் போதினிலும் - நெஞ்சில்
தீபமாக நீதானே தாபம் தீரும் நாளெது, என்று தாபமாகி தவிக்கின்றேன்!
ஒரு பாதி இங்கு நானாகி
மறுபாதி அங்கு உனைச் சேர்ந்து, இன்பத் தோணியில் ஆடிட அன்புத் தூது விடுகின்றேன்!
அன்பில் எனை சீராட்டி
அகம் மகிழ வைத்தாய் முகம் காண முடியாது முகவரியை வரைந்தாய்!
வேதாவின் கவிதைகள்

எனைப் பிரிய நினைத்து நீ
“எயர் பிளைட்’டில் பறந்தாய் என்றோ நாம் இணைவோம் எனும்,
எண்ணத்தில் நாள் கழிக்கின்றாய்!
எனக்காக நீ பிறந்தாய்!
உனக்காக நான் பிறந்தேன்! பிறந்தநாள் இன்றுனக்கு சிறந்தநாள் இது எமக்கு
ஒருநாள் உனைச் சேரும்
திருநாள் விரைந்து வரவேண்டும்!
வரும் நாள் யாவும் வளமான பெருநாளாய் புலரவேண்டும்!
4-12-1986

Page 43
கற்பனை
சிறகு முளைக்கவில்லை பறந்து போயிட பிறகு ஒருகாலம் விரைந்து வருமென காத்திருந்த காலம் கனிந்து வருகிறது பூத்திருந்த விழி புத்தொளி பெறுகின்றது!
ஏன் அந்த இறைவன் இப்படி பிரித்தான்? தேன் கொட்டும் வாழ்வை தேங்கிடவிட்டான்? மான் இங்கு மதியும் மயங்கிச் சோர வான் வீதியில் அவன் பறந்து சென்றான்.
ஒரு வருடம் அம்மம்மா ஒரு யுகமாய் ஒடிட ஒராயிரம் பிரச்சனை தேளாகக் கொட்டிட மங்கையின் மனதில் மன்னனின் வதனம்
கங்கையில் மிதக்கும் கமலமாய் ஒளிர்ந்தது!
கடிதங்கள் வரைவதில் காலங்கள் ஒடிட-நினைவு படிவங்கள் மனதில் நிழல்களாய் ஆடிட விடிவுகள் தேடி இதயம் ஒலமிட - பிரிவின் முடிவுகள் நாடி முகிழ்க்கும் முறுவல்கள்.
போதுமம்மா போதும் பிரிவே இனி வேண்டாம்! மோதும் துயரங்கள் முடிவுக்கு வரவேண்டும் கண்ணா என்றோடி கையில் விழ வேண்டும்! எந்நாளும் பிரியாது இணையாக வாழ வேண்டும்!
175-1987
வேதாவின் கவிதைகள்

காதல் பித்தம் கண்களின் முத்தமடி
தென்னோலைக் கீற்றிடை புகும் வெண்ணிலா ஒளி சுகம் கண்ணில் ஒளி மின்னலென என்னுள் துளி இறங்க
பால் வெண்மை நுரையோடு கால் தழுவும் அலை போலே நூல் வண்ண கலவையோடு மேல் தழுவும் சேலை போலே மெல்லென நுழைந்தாய் நெஞ்சிலே சில்லென குளிரவைத்தாய் என்னையே!
எண்ணப் பறவை கண்ணை சிமிட்ட கன்னம் இரண்டும் செவ்வண்ண கோலமிட மன்னன் மயக்கத்தில் விழிகள் மருண்டிட வண்ணப் பெண்ணாள் வடிவழகு கூடியது!
நீயே ரதியடி என் காதல் நிதியடி! நீந்துது மனமே உன் அழகு நதியிலடி
காதல் பித்தம் கண்களின் முத்தமடி! மோதல் நித்தம் முடியாத யுத்தமடி!
நோதல் என்பது குறையாத சொத்தடி சாதல் வரும்வரை சங்கீத சத்தமடி!
12-6-2000
&bs)

Page 44
48. புத்தொளி நோக்கி புறப்படுங்கள் 85
49. போற்றிப் பாடடி பெண்ணே 86
50. பெண்கள் 87
51. நல்லதோர் வீணையாம் நந்தவனப் பூவாம் 89 52. தாய்வீட்டு திலகத்திற்கு தாரைவார்ப்பு ஏன்? 90 53. பெண்கள் தினம் 92 Vş
54. சிநேகிதியாக எண்ணுங்கள் 94 Ys
55. தலைநிமிர்ந்திடு தமிழ்பெண்ணே 95
வேதாவின் கவிதைகள்
 

புத்தொளி நோக்கிப் புறப்படுங்கள்
இலங்கைப் பெண்ணே எழுந்திடம்மா! இனியும் உறக்கம் போதுமம்மா! கரண்டி பிடித்த கவனத்தை கல்விப் பாதையில் செலுத்தம்மா!
“இன்ரநஷனல்’ பெண்களுக்கு இலங்கைப் பெண்கள் சளைத்தவரா? இருக்கும் தடையைக் களைந்திட்டு இன்றே நிரூபணம் செய்வோமா?
டெனிஸ் சமூகப் பார்வையிலே நாம் கேள்விக்குறியாய் நிற்பதா? ஆச்சரியக்குறி போட்டுவிட அடித்தளம் ஒன்று அமைப்போமா?
கணவன்மாரே கைகொடுங்கள்! மனைவியின் பெருமைக்கு வழிவிடுங்கள்! புதியபாதையில் அணி சேருங்கள்! புத்தொளி நோக்கிப் புறப்படுங்கள்!
1991

Page 45
போற்றிப் பாடடி பெண்ணே!
போற்றிப் பாடடி பெண்ணே!
நூற்றில் பலரது திறமைகள் சேற்றில் செந்தாமரையைாய் உள.
ஏற்றிப் பாடி உலகறியச் செய்!- ஒளிக் கீற்றென புகழ் உலகில் பரவிட சாற்றிப்பாடடிபெண் திறமையை
சொல் நயம் பேணி சொற்போரிடு: உன் நயம் பெருக்கு உலகு சிறக்கும் கண்ணியம் காத்து கருத்திலிடம் பெறு!
பெண்ணியம் பேணி பெருமையைப் பெருக்கு - உனை தூற்றிப்பாட துணியமாட்டார் போற்றிப்பாடி ஏற்றிவைப்பார்!
அறிவு முதிர்வின் அனுபவ பெருக்கில் குறுகிய மனதை குணமாக்கி வைப்போம்!
நெறியோடு நின்று நேர்வழி சமைத்து குறியோடு சென்று பெண்மானம் காத்து போற்றிப் பாடடி பெண்ணே என கவி சாற்றிப் பாடிகளித்திருப்போம்!
8-3-1999
வேதாவின் கவிதைகள்

பெண்கள்
பெண்கள் ஆண்களின் கண்கள்! ஆண்கள் பெண்களின் கண்கள் கண்களுக்கு தீங்கு எண்ணுவரோ? காலணி என்று எண்ணுவரோ?
பெற்றவர் வாழ்வுப் பூவனத்தில் பட்டொளி வீசிடும் பெளர்ணமி சுற்றம் மகிழும் வானவில்! கற்பதில் வித்தக செல்வமகள்!
கரங்கள் இதமான சிறகாகி கன்னம் பூவான அரணாகி கன்னல் முத்தம் கனிந்து தூவி கருணை பொழியும் அவள் அம்மா!
ஒருபாதி சரிபாதி மனைதீபமாகி கண்ணின் மணியாய் கணவனைப் பேணி கற்பூரமாகி ஒளிதரும் நேர்த்தி கண்ணாளன் அவனின் காதல் கிழத்தி!
வாழ்வின் இலக்கணம் ஆனவள் பெண் வாழ்வின் கதம்ப பாத்திரம் பெண் தாழ்ந்து வீட்டில் முடங்குவது ஏன்? சூழ்ந்து தனக்கே பகையாவது ஏன்?

Page 46
மூளைச் சலவை வழமையதா? முன்னோர் வந்த வழியதுவா?
பெண்மையை அடக்க ஏன் எண்ணுகிறீர்? பெண்மை மேவிடில் ஏன் பொருமுகிறீர்? கண்களே கண்களை அழுத்துவதா? கண்கள் இரண்டும் சமமல்லவா? கண்களுக்கு தீங்கு எண்ணுவரோ? காலணி என்று எண்ணுவரோ?
20-2-2OOf
வேதாவின் கவிதைகள்

நல்லதோர் வீணையாம், நந்தவனப் பூவாம்.
நல்லதோர் வீணை என்பார்! நந்தவனப் பூக்கள் என்பார்! பெண் விடுதலை என்பார்! பேச்சோடு நின்றிடுவார்! வல்லமை காட்டி நின்றால் வக்கரித்து கோணி நிற்பார்!
பெண் பயம் விடுத்தாலும் பெண் நேர்மை பேசினாலும் பெண் கேள்வி கேட்டாலும் ஏன் பொங்குகிறது ஆணினம்?
ஆண்டான் அடிமை வழிவந்த பழக்கமா? அடக்குமுறையில் அடங்கிய புழுக்கமா? காலமாற்றக் கருத்து விரிவை ஏற்று நடக்க Eg0 தடையா?
29-32OOf
&gba

Page 47
தாய்வீட்டு திலகத்திற்கு
தாரை வார்ப்பு ஏன்?
ஆசைப் பெண் மதலை அவனியில் பிறந்த வேளை, அள்ளி எடுத்துத் திலகமிட்டு அன்னை மகிழ்வாள் அனைத்திட்டு
கரும் திலகம் நுதலில் திருஷ்டித்திலகம் கன்னத்தில், திவ்வியமாய் தீட்டுவாள் தினமும் அன்புத் தாயவள்.
திருவளர் செல்வி திருமணத்தால் திருமதியாய் பரிணமித்தால், பெணணின் மங்கல திலகம் வண்ணமாற்றம் குங்குமம்.
சேய்ப் பருவத்தில் இணைந்து தாய் தருவித்த திலகமது, கணவன் உயிர் மரித்ததும் காணாமல் ஏன் பிரிகிறது? ஆணினால் ஏன் அழிகிறது? வீணாய் ஏன் மறைகிறது?
வெதாவின் கவிதைகள்

தாய்வீட்டுத் திலகத்தை தாரை வார்த்து விலக்கல், தாய்மைக்கு அவமதிப்பு சேயின் புறக்கணிப்பு.
திலகமற்ற நுதல் ஒரு திறந்தவெளி அரங்கமெனும் காட்சி மாறட்டும்; காலமற்ற சிந்தனை ஒட்ட கருத்து விரியட்டும், கண்ணோட்டம் மாறட்டும்.
9-12-2OO1

Page 48
பெண்கள் தினம்
பெண் அபிமான பெறுபேறுகள் பெருக்கிட உயரும் குரல்கள் ஓங்கிடும் அகில உலக நாள் மங்கையர் தினம் இந்நாள்!
வான் தொடும் பெண் துன்பங்கள் தான் இன்னும் தொடர்கதைகள் ஊண் உறக்கமிழந்து பெண் ஏன் இன்னும் துயர் மூடுகின்றாள்?
விழித்துவிடு பெண்ணே!, பேசி ஒழித்துவிடு கவலைகளை - யோசி! பெண்மையே! அச்சம் விலக்கு நன்மையே நாணம் விலக்கு
வண்ணமாய் திறமை துலக்கு எண்ணங்கள் வீரமாய் எழுப்பு கனிவான பெண்மையை மாற்று! துணிவான செயல்களை ஆற்று!
மூதுரையான மூளைச் சலவைகள் மூட்டமாக உள்ளது உன்னுள் மூலபாட மூர்க்க விதியின் மூலவேர்கள் இற்றுவிடட்டும்!
வேதாவின் கவிதைகள்

ஆணுக்கு பெண் எதிரியல்ல வீனுக்கு சுதந்திர அடிமையல்ல! மானுக்கு உவமை கூறி தேனுக்கு குரலை கூறி கானுக்குள் தள்ளிடாமல் வானுக்கு உயர வாழ்த்தி வாழ்வைப் பகிர்ந்து கொண்டால் தாழ்பவர் ஆண்களல்ல! தொடரும் வாழ்வும் வீனுமல்ல! - படரும் தோல்வியற்ற ராஜவாழ்வு
8-3-2002

Page 49
சிநேகிதியாக எண்ணுங்கள்
அங்கயற்கண்ணி எனக்கூறும் பங்கஜமனங்கள் நொந்ததினால், மங்கையர் நலங்கள் குறைந்ததினால் மங்கையர் தினமொன்று மலர்ந்ததுவோ?
உடலுக்கு கண்கள் ஆதாரம், உலகுக்கு ஆண்பெண் ஆதாரம். கண்களிரண்டில் பேதமில்லை, ஆணென்றும் பெண்ணென்றும் பேதமேன்?
குத்துவிளக்காக - அகல்விளக்காக குட விளக்காகப் பெண்ணிருப்பாள்! மின்சார ஒளியாகவும் பெண்ணிருப்பாள்! தன் சாரங்கள் தனியாகக் கொண்டிருப்பாள்.
எல்லவனாய் ஒளிதரும் பெண்மை, நல்ல ஒரு இதயம் கொண்டமை, பொல்லாத பல இதயம் மறப்பதேன்? கல்லாக அதை கற்பனை செய்வதேன்?
பாரத்தை சுமத்தாது அவளிடம், பகிருங்கள் அனைத்தையும் அவளிடம். மதிப்பை கொடுத்து அவளிடம், மதிப்பை வாங்குங்கள் அவளிடம். சிநேகிதியாக எண்ணுங்கள் அவளை! சிந்துவாள் உங்களுக்காய் உயிரை
J2-3-2OO2
வேதாவின் கவிதைகள்

தலைநிமிர்ந்திடு
தமிழ்ப்பெண்ணே!
கற்பாறை இடுக்கில் தளிர்த்த பசும்செடியாய் கார்நீல இரவின் ஒரத்து தனி நட்சத்திரமாய் பலர் பார்வையில் படாது ஓரங்கட்டும் பெண்ணே! மலர்போல் மணம்பரப்ப மன்றத்தில் ஏறு!
தலைநிமிர்ந்து நில் தமிழ்ப் பெண்ணே! தலைதடவித் தடவியே தமிழ்ப்பெண்ணே தலைகீழாய் உனை மாற்றிடுவார் தலைகுனியாதே தமிழ்ப்பெண்ணே!
உன்னதங்கள் உனக்காய் உரிமையோடு காத்திருக்கு உலகம் உனக்காய் விரிந்துள்ளது பெண்ணே! உயர்ந்திட ஏதும் தடைகளில்லை பெண்ணே! உவப்போடு வெளி உலகிற்கு வா! பெண்ணே!
கருவுடன் உருவானது பெண்மை பந்தம் திருவுடன் எதிர்பார்ப்பர் அவளது சொந்தம் பெரும்புகழ் வாழ்வு வேண்டி நிற்பார், ஒரு போதும் பெண்ணை சிலர் தலைநிமிரவிடார்!
மேடையில் முன்வரிசை ஆசனங்கள் ஜாடையில் தேன் சொரியும் மொழிகள்
sebo

Page 50
பார்வையில் புரளும் அன்பு அலைகள்
பழகுகையில் பிறக்கும், ஒரு மித பாவனைகள்
அன்னைக்கு சமமாகவும் உவமை முன்னுக்கு பின்னாகவும் கயமை கண்ணுக்கு கண்ணென கூறிக்கூறியே
பின்னும் முதுகிலே கொட்டிடுவார்.
தலைகுனியாதே தமிழ்பெண்ணே! தலை நிமிர்ந்து நில் தமிழ் பெண்ணே!
2O-8-2OO2
வேதாவின் கவிதைகள்

26 pitoaoTLD
56. அன்னிய கூரையில் அகதி போர்வையில்
57. உன்னத விடியல்
58. அடுத்தது என்ன
59. யாழ்ப்பாணம்
60. வாழ்வுக்காய் வதைபடுகிறோம்
61. எங்கள் ஊர் பூவரசு
62. சாவிலும் சரியாத சரித்திரங்கள்
63. விளக்குமாறு
64. முடிவற்ற கோலங்கள்
65. உயிரை வருடும் ஊஞ்சல்
66. தண்ணிர்1. தண்ணிர். பயம்.பயம்!
67. விடாமுயற்சியின் விழுமிய காட்சிகள்
98
100
101
102
104
105
107
108
110
111

Page 51
அந்நிய கூரையில்
அகதிப் போர்வையில்
அந்நிய கூரையில் அகதிப் போர்வையில் நாங்கள் நண்ணிய வாழ்வோ எண்ணிலா கோலங்கள்! இங்கு,
விதிமுறையில்லா வாழ்வு வரைமுறையில்லா கொள்கை எதுவரை போவோமென்ற எல்லையில்லா கோலம்!
வெண்பனிக் குளிரில் ஊதல் காற்றில் கண்ணிமைமூடாது கடிதே உழைக்கும் கோலம்!
எண்ணிலா மனத்தில் எண்ணுவது கைகூடி தன்னலம் நிறைந்து தடுமாறும் ஒருகோலம்!
விட்டுவந்த உறவுகளை நெஞ்சில் சுமந்து தொட்டுவிடமாயும் துடிப்பான ஒருகோலம்!
தன்னலம் கருதாது நம்மவர் செழிக்கவென்று எம்மவர் நலம் பேணும் பலநல் மனித கோலங்கள்!
V அங்கு தாய் மண்ணின் கூரையிலே போர்நேர கார்வையிலே சேய்கூட மாய்கின்ற சோகமய கோலங்கள்!
வேதாவின் கவிதைகள்

உணவுப்பொருளுக்காய் உயிரை வெறுத்து நின்று பணமிருந்தும் கிடைக்காது கண்கள்
பஞ்சடையும் கோலங்கள்!
மரங்களின் கூரையிலேனும் மகிழ்வுவராதாவென்று மறுகிமாய்ந்து நொந்த மனித கோலங்கள்
அந்நிய கூரையில் அகதிப் போர்வையில் நாங்கள்! தாய்மண் கூரையில் போர்நேர கார்வையில் அவர்கள்!
போர்க்கால போர்வையால் உலகத்தின் கூரையில் அளவில்லா கோலங்கள், இவை எங்கள் கோலங்கள்!
25-3-1999

Page 52
உன்னத விடியல்
உலகெங்கும் பிரச்சனைகள் - செய்தி ஊடகங்களில் உரையாடல்கள், உன்னிப்பான அவதானங்கள். சந்நிதி வாசலிலே சமகால பூஜைகள், உன்னத விடியலுக்காய் உற்சாக ஆராதனைகள்.
தாய்மண்ணின் சோகங்கள் மாய்ந்து போகாதா? சேய்கண்டதாய்போல ஒய்ந்து போகாதா? கன்னலும் பாலும் கலந்து உண்ண உன்னத விடியல் உதயமாகாதா?
மக்கள் மனக் குழப்பங்கள் மாயமாய் மறையாதா? உறவுகளுடன் இணைய ஊருக்குப் போவோமா? உதவுமா ஒரு உன்னதவிடியல் இன்னல் தீர இதயம் மகிழ.?
19-4-1999
வேதாவின் கவிதைகள்

அடுத்தது என்ன?
விழுந்தது ஆனையிறவு விடுதலை வீரர்கள் கையில், விழுந்த சோர்வில் இருந்து எழுந்தது எம் மனம். அடுத்தது என்ன? முடிப்பது என்ன? எவ்வளவு உயிர்கள்? எத்தனை வாழ்வு? அவ்வளவு உயிர்களின் மொத்த விலை என்ன?
அமர்ந்து சிந்தனை தொடுத்திருந்தால் உயர்ந்த முடிவு வந்திருக்கும். Ego 6L6ídio606), Eagerவிடவில்லை, சிந்தையில் இருந்தது ஒன்றே! சிங்களம் அழிந்து விடும் என்றே!
எடுத்தது நிலைக்க, அடுத்தது என்ன? ஆள் பலம் ஓங்க, தோள் பலம் ஓங்க ஆன்ம பலம் ஓங்க வேண்டும்! ஆண்ட பூமி கையில் வர ஆசீர்வாதங்கள் குவிந்திட ஆண்டவன் அருள் நிறைய வேண்டும்!
24-4-2000
seba

Page 53
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணன் யாழ் இசைத்து வென்ற யாழ்ப்பாணம். சங்கிலியன் அரசாண்டு நின்ற யாழ்ப்பாணம். சிங்கள அரசு அமைதியைக் கொன்ற யாழ்ப்பாணம் சரித்திரம் படைக்க எதிர்நோக்குகின்ற யாழ்ப்பாணம்.
யாழ் சமரில் உயிர்இழக்கும் அரசபடை உடலை ஆள் கொண்டு வருவார் கழுத்துறைக்கு இறுதி சடங்கிற்கு, தேள் கொட்டும் நிலையாகி கலவரம் தொடங்கி சூர் கொண்டு வன்முறை நிலவரம் பன்மடங்காகி மார் தட்ட முடியாத நாம் யாழ்ப்பாணத்தார் மாய்ந்த கதை கூறி முடியாத பிலாக்கணம். ஒய்ந்த கதை எமக்கு, குற்றம்! - நாம் யாழ்ப்பாணத்தார்!
நெற்றியில் திலகமின்றி கூந்தலில் பூவுமின்றி ஒற்றை வளையலேனும் ஒரு கரத்திலுமின்றி பற்று நிறைந்து, உயிரைப் பாதுகாக்க மற்ற இனத்தவன் போல, மறைந்து வாழ்ந்தது குற்றம்! - நாம் யாழ்ப்பாணத்தார் அன்று.
உயிர்தப்பி ஓடினோம் யாழ்ப்பாணம் குயில் கூவும் பசுஞ்சோலையில் ஆடினோம்.
வேதாவின் கவிதைகள்

அம்பலவி மாங்கனியைத் துண்டு துண்டாக்கி வம்பளந்து வாயினிக்கச் சுவைத்தோம்.
மல்லிகை மலர்களை மாலையாய்த்தொடுத்தோம் மணலில் அமர்ந்து நிலாவை ரசித்தோம்.
தணலில் மீண்டும் நாம், யாழ் அமைதியிழந்தோம் வானில் பறந்து ஐரோப்பாவில் புகுந்தோம் இனியும், இறந்தும் நாம் உலாவர யாழ் எமதாகட்டும்!
23-5-2OOO

Page 54
வாழ்வுக்காய் வதைபடுகிறோம்!
வசந்தத்திற்காய் வலைவிரிக்கிறோம். வடதுருவத்தில் வரலாறு விதைக்கிறோம். வாழ்விற்காய் வதைபடுகிறோம், வதைபடுதலில் வாழ்கிறோம்.
வல்லவர் கொடுமையில் அவிந்து வேதனை எண்ணெயில் பொரிந்து வெயில் புழுவாய் துடித்து வதங்கும் வாழ்வு அழிந்து,
அன்புக் கிரீடம் தாங்கி அகத்தில் சாந்தி தேங்கி அன்னை தெரசாக்கள் நிறைந்து அன்பு ஒளிரட்டும் மிகுந்து.
ஆதிக்க ஒசை அமுங்கி அராஜக முட்கள் மழுங்கி ஆதரவு பாதை தாங்கி அறநிலை உயர்வாக ஓங்கி
மனுநெறிக்கு மனக்கடை விரித்து மனிதநேய மகிமை காண்போம்!
மகிஷாசுரர்களின் மமதை சரித்து மகாத்மாக்களை வரவேற்போம்! மாங்குயிலும் பூங்குயிலும் பாட மனதில் அருளொளி ஏற்றுவோம்!
2-7-2OOO
வேதாவின் கவிதைகள்

எங்கள் ஊர் பூவரசு
அழகிய கோவை பதியினிலே பழகிய கிளுவானை ஒழுங்கையிலே, வழமையாக பள்ளிக்காய் இளவெயில் காலையில் நடைபயில்வு. முழுமை இதயமாய் இலைகள் கிளை யில் அடை குவிவு. தழுவிய வேலிக்காய் இணைந்து ஒழுங்கில் நிரை பூவரசு.
வளர்ந்த பூவரசின் வளைவிலும் முதிர்ந்த கிளையின் பிணைப்பிலும், வளர்ந்து வெடித்து உருமாற்றம் வண்ணத்துப் பூச்சி முட்டைகள். மயிர்கொட்டிப் புழுக்களவை. மதிய உஷ்ணத் தகிப்பினால் முழுநிழல் தேடி மறுகரைக்கு சாரி சாரியாய் இடமாற்றம்.
குறுநடை தொடர வகையின்றி குறு அடிக்கும் சிறு இடமின்றி குத்தகை எடுத்த ஒழுங்கையாய் கோடாக நூல்வழி இறங்கும் புழுக்கள். குழப்பமிகு குமட்டும் காட்சி.

Page 55
குறுகுறுக்கும் விழிகளில் பயம். தப்பிடும் நினைவு மேலாக w திரும்பியே பாராது, குலை நடுங்க ஒட்டம்.
பூவரசும் மயிர்கெர்ட்டிப் புழுவும் பூரண ஆய்வு பூவரசைக் கண்டால், பூவிலும் இலையிலும் சேதம் உண்டா பூமியில் தென்படுதா புழுக்களின் எச்சம் பூவரசைக் கண்டால் விரட்டும் பயம். பூச்சாண்டி காட்டுது இன்றும் நிஜம்.
18-8-2OOO
வேதாவின் கவிதைகள்

சாவிலும் சரியாத சரித்திரங்கள்
பூவிலும் உயர்ந்த மதிப்பிடங்கள், ‘பா’விலும் நிரந்தர வதிவிடங்கள், நாவிலும் நித்திலமாய் வாழ்பவர்கள், தீவிலும் மண்ணான மாவீரர்கள்! சாவிலும் சரியாத சரித்திரங்கள் காவியமாம் வீரிய நிரந்தரர்கள்.
அதிகார மேட்டினை அலட்சியம் செய்தவர்கள், சதிகாரக் கும்பலைச் சரிக்க முயன்றவர்கள், எதிராகப் போராடி எமனைக் கண்டவர்கள், கதிராக ஈழத்தில் கணமும் வாழ்பவர்கள்!
தாயின் பூ நெஞ்சு பதறிட தங்கையின் பிஞ்சு மனம் கனத்திட தன் கரம் ஆயுதம் ஏந்தி, போர் நகரம் சென்றனர் முந்தி.
தமிழீழ தீபம் நாம் ஏந்தி தருவோம் உம் மனதுக்கு சாந்தி தமிழீழ தாயகமெனும் ஒன்றே, தருமே நிஜசாந்தி - உமக்கன்றே!
16-11-2OOO
3&bs)

Page 56
விளக்குமாறு
ஆச்சியுடன் அருகமர்ந்து கால்கள் நீட்டி பேச்சுடன் சுவை குழைத்து பழங்கதை நீட்டி ஒலைக் குவியலைச் சுற்றி வட்டமாய் மாலைப் பொழுதில் நாம் ஒன்றி மூழ்குவோம்.
ஆச்சியின் உதடுதான் சுவைக் கதைபேசும். அசுரவேகமாய் அவள் கைகள் இயங்கும். தென்னோலையை தனித்தனியே எடுத்து முன்னாற் பிடித்து அதன் ஒலையை வாருவாள், என்னாலும் இது முடியுமோ என்று நான் வியக்க!!. உன்னாலும் முடியுமென விளக்கி.
காம்புச் சத்தகம் காட்டி எனக்கு ஒம்புதல் செய்தாள் ஒலைகளை வாரிட என்ன!.ஆச்சரியம்!. அது நடந்திட என்னாலும் முடிந்தது ஒலைகளை வாரிட
கூட்டாக சேர்த்த ஈர்க்குச்சிகளைக் கட்டி
கூந்தலை வெட்டி விளக்குமாறு ஆக்கினாள் ஆச்சி விதைத்த நம்பிக்கைத் துளியது! - பின் அம்மாவிற்கு கைகொடுத்த அற்புத உதவியது.
வேதாவின் கவிதைகள்

அக்கால தேன் சிந்தும் நம் அழியா நினைவுகள், இக்காலமும் ஊன்உருக்கும் இனிய நினைவுகள். அக்காலப் பழமை அற்புத அனுபவங்கள் - சோகம்! இக்கால குழந்தைகட்கு எட்டாத அனுபவங்கள்.
வீட்டை வளவை பெருக்கும் விளக்குமாறின், கோட்டை - வீட்டினது கோடி ஒரம்தான்.
நல்லது செய்யும் பலமனிதரின் நிலையும் நாட்டில் நம்கண்முன்னே விளக்குமாறின் நிலையன்றோ!
10-4-2001

Page 57
முடிவற்ற கோலங்கள்
எந்நாளும் முற்றம் பெருக்கும் கோலம் தென்னோலை முற்றத்தில் விரித்த கோலம். சாணம் கரைத்து தெளித்த கோலம் வானம் மழைநீர் தெளித்த ஜாலம். மாக்கோலம் இணைந்த வண்ணக் கோலம் மகளிர் கைவண்ண மயக்கும் ஜாலம்.
எண்ணங்கள் இணைந்து விரல் இயங்கும் சீலம், எழுதுகோல் வடிக்கும் கவிதைக்கோலம். இயல் இசை நடன இணைவின் மேளம், இயங்கும் விரல்களின் இசைவுத் தாளம். கோலம் காட்டும் வண்ண விழிகள் கோமள உறவின் சின்னதோழிகள். நெஞ்சம் போடும் எண்ணக் கோலம் கஞ்சம் இல்லா இமயநீளம்.
விழிகளும் நெஞ்சமும் விரிக்கின்ற கோலம் மொழிகளற்ற வலிமைப் பாலம்! செழுமை கொண்டு நாளும் வாழ முழுமை கொண்டு முழுதாய் வாழ ஜாலக் காதல் ஜதீஸ்வரம் போடும் ஐம்புலன் ஒன்றிய ஐக்கியம் தேடும்.
O
9-8-2OOO
வேதாவின் கவிதைகள்

உயிரை வருடும் ஊஞ்சல்
ஊஞ்சல் கட்டி ஆடியதும் உன்னி உன்னி ஆடியதும் ஊஞ்சலாடுது என் மனதில்
உயிரை வருடுது ஒரத்தில்!
பென்னம் பெரியமாமர நிழல், எம் சின்னஞ்சிறுவர் சரணாலயம், குருவியாய் இளம் சிறுவர் நாம், மருவியாடிய நிழல் மரம், குழுமை தரும் அந்நிழல் வலை குடைகள் ஆயிரம் விரித்த நிலை.
புல்லை வெட்டி சருகு கூட்டி கல்லைப் பொறுக்கி, கட்டைகள் தட்டி அழகிய இராஜாங்கம் ஒன்று தயார், அதிலொரு சிம்மாசனம் ஏற்றுவது யார்? அப்பாவைக் கெஞ்சினோம் மரத்தில் தொற்றினார். அண்மைக் கிளையில் கயிற்றைச் சுற்றினார்.
அன்னமாய் உயரே சிறகின்றிப் பறக்கவும் விண்ணை எட்டி அளந்து பார்க்கவும் அடுத்தவீட்டு அக்கா அழகையும் நெடுத்த வேலியால் எட்டிப் பார்க்கவும் அழகிய மாமர பசுங்கொற்றக் குடைக்கீழ் ஆடும் சிம்மாசனம், அழகு ஊஞ்சல் தயார்.
3&bs) C11D

Page 58
பச்சைத் தென்னை மட்டை அரிந்து பாங்காய் வெட்டிய இருக்கையில் அமர்ந்து பின்னிப் பிணைந்து ஆடினோம்! உன்னி உயரே ஆடினோம்!
உயரே உயரே போகையில், உயிரே ஊர்ந்தது உதரத்தில். உணர்வு கூசி உருண்டதும், உருவமின்றி மறைந்ததும் ஊஞ்சலாடுது என் மனதில்,
உயிரை வருடுது ஒரத்தில்!
69-2OOO
C12) வேதாவின் கவிதைகள்

தண்ணிர். தண்ணிர்.
uund.IIuld
மாரி மழை பொழியும் மதகு நிறைந்து வழியும், பாதை ஒரவயிலிலும் பார்க்கும் தூரம் வரையிலும், பளிங்கு வானப் பிரதிபலிப்பால் பால் வெள்ளை நீர்த் தேக்கம்.
பள்ளிக்கூடம் ஏகும் நடை துள்ளி ஒட முடியா நடை, மதகு தாண்டும் அந்த நடை மனதில் திகில் விரித்த குடை, தவளைகள் ஒரு வித ராகம் பாடும், குவளை விழிகள் மித பீதியில் ஆடும். மனதில் கிலிமூட்டும் மழைவெள்ளம் அது. மனிதனை அமுக்கும் வெள்ளத் தண்ணிர் அது தண்ணிர் கரம் நீண்டு என்னை இழக்குமோ? தானாகத் தவறிநான் தண்ணிரில் விழுவேனோ? வெள்ள வனாந்தரத் தீவில் நான் தனியனோ? அள்ளிக் கரம் இணைக்க யாரும் வருவாரோ?
கொட்டும் மழையின் அன்றைய நினைவு எட்டு வயதுப்பால அனுபவ நினைவு தண்ணிர்1.தண்ணிர்! பயம்! பயம்.
O
20-10-2OOO
&bs) C113)

Page 59
விடாமுயற்சியின் விழுமிய காட்சி
பார்க்கும் காட்சி கேட்கும் ஒலி பரிசுத்தமாய் உள்வாங்கிய மனமன்றம். பக்தி பைந்தமிழ் பயின்ற பாலபருவம். பரபரக்கும் கால்கள் சிறகடிக்கும் மனம்.
பத்து அகவையுள் மனம் லயித்த காட்சியின் பம்பரம் ஆடும் நினைவுகளின் விரியல் பள்ளி செல்லும் தெருவோர வயல்களின் பசுரமரத்தானியான பசுமைக் காட்சிகள் பதம் புரிந்து பரவசப் பண்பாடுகிறது.
வயலூாடு நெடுக்கும் ஒற்றையடி வரப்பு வயிறகன்ற பெருநீள மலைப்பாம்பின் ஒப்பு. வயல் உழுகையில் சிறகடிக்கும் குருவிகள் வசியமாய் உழவர் தலைப் பாகைக்கு வட்டம்.
விதைப்புக்கு தயாராகும் விளைநிலப் பாத்திகள் விரும்பி பூச்சிபுழு பொறுக்கும் குருவிகள், விசிறிய விதை நெல்லை விதைத்திட்ட போதும் விடாமுயற்சியுடன் இரைதேடும் தேட்டம்.
காலச் சுழற்சிப் பருவங்களின் உதவிகள். வெள்ளம் நிறைந்து முளைவிட்ட வயல்கள். வெள்ளி மீனுக்காய் ஒற்றைக் காலில் கொக்குகள் வெற்றிடத்திற்கு நாற்று நடும் வஞ்சியர்.
வேதாவின் கவிதைகள்

வேண்டாத களைகளை பிடுங்கிடும் வஞ்சியர். விளைந்து முற்றி தலைசாய்க்கும் கதிர்கள், விளைச்சலைப் பாதுகாக்கும் கத்தரி வெருளிகள். விளைச்சலை அரிவி வெட்டும் காட்சிகள் வெட்டிய கதிரை சூடடிக்கும் மக்கள். விடாமுயற்சியின் விழுமிய காட்சிகள்.
நண்பகலில் வீடேக நாளும் வேறு காட்சிகள். நிகழும் மாற்றங்கள் நியமமாய் நோட்டம். நன்செய் நிலங்களால் நம்பிக்கை அனுபவங்கள் நம்நாட்டு நிகழ்வுகள் நானூறு கூறலாம்.
பத்து அகவையுள் மனம் லயித்த காட்சியிது! படிக பிரதிவிம்பப் பரிமாணம் இது
30-8-2002

Page 60
நிகழ்வுகள்
68. நடைபாதை நட்புகள் 117 69. சடங்குகள் 118 70. ஆயிரம் பூக்கள் மலரட்டும் 120 71. கனவு 121 72. புல்லாங்குழல் எங்கே கண்ணா? 123 73. இரைதேடும் பறவைகள் 124 74. பயணங்கள் தொடரும் 126 75. ஊஞ்சல் 127 76. வித்துவ விமர்சனம் 129 77. பாதிக்கும் பலிப்பூக்கள் 130 78. மனிதத்துவ மந்திரங்கள் 132 79. மணிகாட்டிக் குடை 133 80. புத்தகவரியின் ஒளி 135 81. நெஞ்சம் பூரிக்கட்டும் 136 82. தன் குழந்தை வளர்ந்திட 138 83. சேரும் நடை 140
வேதாவின் கவிதைகள்
 

நடை பாதை நட்புகள்
ஒரு மென்னகை! சிறுகீற்றுப் புன்னகை! அவசரநடையிலும் அறிமுக தலை அசைவு.
இதமான நோக்கு ஸ்திரமற்ற நிலையில் எழும் ஸ்நேகிதத் தொடர்பிது! நடைபாதை நட்புக்கு தடையேதும் கிடையாது.
நன்னூல் போன்றது, நண்பனை நெறிப்படுத்தும் நல்ல நட்பு நெஞ்சம் மலரச் செய்து, துன்பம் துடைப்பது நல்ல நட்பு.
பழகப் பழக இனிப்பது நட்பு
வளர்பிறையானது அறிவானோர் நட்பு.
தேய்பிறையானது அறிவிலார் நட்பு
நட்பின் நல்லிலக்கணம் வள்ளுவர் கூற்று. சொந்த பந்தத்து திண்ணிய உறவில் நீந்தி ஆடித் திளைத்த செறிவில், நடைபாதை நட்புகள் நமக்கெதற்கு வம்பென்று, நழுவுகின்ற மக்களோடு இன்று நம்வாழ்வு இணைப்பு.
O
22-4-1999
6&bs) «17D

Page 61
சடங்குகள்
கோத்திரம் தளிர்க்கச் செய்யும் கிரியை, சாத்திர விதிப்படி சமைக்கும் கிரியை, மாத்திட முடியாத மதமுறை என்று ஏத்தியே நாமும் எடுக்கும் சடங்குகள்.
வழுவாத வரையில் இவை வழக்கங்கள். பழுதாக வகையில்லை இவை நலங்கள்.
முழுதாக கூறினால் இவை யாவும் எழுதாத சட்டங்கள் எனவாகும்.
எட்டநின்று வேடிக்கை பார்த்து திட்டமின்றி பல கதைகள் கூறி சட்டம் சடங்கு எதற்குஎன்று மட்டம் தட்டும் மனிதரும் உண்டு.
அனாவசிய ஆடம்பர சடங்குகள், பணவீக்கம் பறைசாற்றும் சடங்குகள், வழக்கங்கள் குழம்பிய சடங்குகள் புலம்பெயர்ந்த நமது சடங்குகள்.
வேதாவின் கவிதைகள்

நமது தலைமுறையின் பாரம்பரிய சடங்குகள் இளைய தலைமுறைக்கு அனாவசிய சடங்குகள். கலாச்சார நெரிசலில், இது கலக்க வெளிப்பாடு,
காலப்போக்கிலே மாறியும் மறையலாம்.
சடங்குகள் சமூகத்தின் கலாச்சாரத் தூண்கள் சடங்குகளின் சம்பிரதாயம் பேணற்குரியது. சடங்குகள் மனிதத்தின் காவலரண்கள். சடங்குகளின் புனிதம் வாழ்விற்கு திண்மை.
6-5-1999

Page 62
ஆயிரம் பூக்கள் மலரட்டும்!
கவிதை நறுமலர்த்தோட்டத்தில் மமதையறு மலர் நாட்டத்தில் பாவிதை நாடும் ஆர்வத்தில் கவிதை பாடும் நேரத்தில்.
மனம் கிளர் தலைப்பு அமையட்டும் மன மலைப்பு தலைப்பால் தளரட்டும். தலைப்பு தக்கையின்றி, உணர்வுதரட்டும் தலைப்பு - தகவு - தளம் அமைக்கட்டும். மயக்கும் கவிதைப்பூ மலரட்டும் மணல்போல் கவிதை குவியட்டும்.
தீவிரம் கொண்டு கவரட்டும் தேர்ந்த கவிதை மலரட்டும் ஆயிரம் பூக்களாய் பூக்கட்டும் ஆயிரம் மனங்களை நெருடட்டும்.
பூக்களெல்லாம் பூமாலையாவதில்லை பாக்களெல்லாம் மனம் கவர்வதில்லை. ஊக்கமெல்லாம் ஆக்கமாவதில்லை, ஆக்கமெல்லாம் அரங்கேறுவதில்லை. நோக்கமெல்லாம் நிறைவேறுவதில்லை தாக்கமெல்லாம் தளர்வுதருவதில்லை. ஆயிரம் பூக்கள் மலரட்டும் ஆயிரம் மனங்களைக் கவரட்டும்.
5-72OOO
வெதாவின் கவிதைகள்

கனவு
அன்றைய கனவு இன்றைய நனவு இன்றைய கனவு நாளைய மலர்வு எண்ணங்களின் கனவு இலட்சியக்கனவு
வண்ணங்கள் கொண்டு வானளாவு உயர்வு.
பாழாகும் சக்தி பலனற்ற கனவால் ஆழாகும் எதிர்நோக்கு பகல் கனவால் துக்கக் கனவில் பல தாக்கங்கள் உண்டு தூக்கக் கனவில் அர்த்தமும் உண்டு தூக்கக் கனவில் வியர்த்தமும் உண்டு தூக்கக் கனவில் சொர்க்கமும் உண்டு அடிமன ஆழத்தின் அந்தரங்க எண்ணம் படிகமென புதைந்தது புதுகனவு வண்ணம்.
யேசுபிரான் உதயம் கனவில் முன்மொழிந்தது! கண்ணபிரான் உதயம் கனவில் முன்மொழிந்தது! என் கனவில் மறைந்த என் அம்மா வருவாள், தன் அன்பைக் குறைவின்றி அள்ளித் தருவாள். என் கனவால் மனநிறைவு எனக்குள்ளும் உண்டு. பின் ஒரு கனவும் எனக்குள்ளே உண்டு.
6&ba

Page 63
கழுகுகள் வட்டமிடும் கடும்போர் பூமியில் அழகிய கிருஷ்ணன் அவதாரம் வேண்டும். அழகிய தேரினை மறுதரம் செலுத்த வேண்டும். பழகிய பூமி மறுபடி எமக்கு வேண்டும், பகல் கனவு வீண்கணவல்ல என் கனவு அசல் கனவு இதுவே - நனவாக வேண்டும்.
30-72000
C122) வேதாவின் கவிதைகள்

புல்லாங்குழல் எங்கே கண்ணா?
காதலின் இலக்கணம் ராதை - கண்ணன் மோதல் இலக்கணம் வகுக்காதே கண்ணா, சீட்டுக் கட்டல்ல வாழ்வு கண்ணா, பாட்டும் பாவமும் இணைந்தது கண்ணா.
கொடுத்து வாங்குவது மதிப்பு கண்ணா கொடுத்து வாழ்வதும் வாழ்வு கண்ணா, பெண்ணை பெண்ணாக எண்ணு கண்ணா பெண்டாள எண்ணினால் நீ யார் கண்ணா.
கோகுலத்துராதையல்ல பெண்கள் கண்ணா நவயுகத்து ராதைகள் பெண்கள் கண்ணா கோகுலத்து குதூகலம் மாறிட கண்ணா கொடியரூபமேன் கொண்டாய் கண்ணா?
புல்லாங் குழலை எங்கே தொலைத்தாய் கண்ணா? புதிய ராகமேன் கேட்கவில்லை கண்ணா?
24-9-2000

Page 64
இரைதேடும் பறவைகள்
வாழுமிடத்தில் வன்முறைச்சூழல் தாழும் நிம்மதி தங்கிட தேடல் வாடும் வாழ்வு துளிர்விடநாடல், வட ஐரோப்பாவில் புகலிடம் நாடல். திரையிட முடியா உண்மைம், தினம் இரைதேடும் பறவைகள் தானே நாம்.
இரைதேடும் பறவை விரைந்தோடி வரும் போது வரை கூட அதன் விழிகளுக்குப் புரியாது வினையமே பெரிதாகும்.
நுரைபொங்கும் அலையும் திரைத்து உயர்ந்தெழுந்து கரைநோக்கி வரும்போது இரையென்று புரள்வதை இழுத்து வாரிச் சுருட்டும்.
வாலிபத்தின் வேகத்தில் வசமாகும் பெண்களை
நேசமென்று நெகிழ்த்தி மோசம் செய்யும் ஆணும் நாசவழிரகம்தானே? இரைதேடும் பறவைதானே?
வெதாவின் கவிதைகள்

அவசர உலகின் வேகத்தில், அன்பெனும் இரையின்றி வாடி அழுத்தங்கள் அதிகமாகி, இன்று அல்லாடும் பிஞ்சு மனங்கள் அமிர்தமாம் அன்பெனும் இரைதேடும் பறவைகள் தானே?
ஊடக நிகழ்ச்சிக்காய் நீவிர் இரைதேடும் பறவைகள்! ஆக்கங்கள் அரங்கேற்ற நாம் இரைதேடும் பறவைகள்!
வரை கோடற்ற வாழ்வுப் பாதையில் ஒருவகையில் இரை தேடும் பறவைகள் தானே நாமெல்லோரும்?
12-4-2000

Page 65
பயணங்கள் தொடரும்
சுகமான தாளம் தவறிய போதும் சலங்கைகள் கால்களால் நழுவிய போதும் சிநேகித நீரூற்று வரண்டபோதும் ஒவியத்தில் சாயங்கள் கவிழ்ந்த போதும் மரணங்கள் வரை தருணங்கள் தேடும் பயணங்கள் தொடரும் பாதைகள் விரியும்.
நம்பிக்கை வானம் ஒளிரும் போது அவநம்பிக்கை மேகம் கலையும் போது, வெம்பும் மனம் சிலிர்க்கும் போது தியானங்கள் வளரும் சயனங்கள் சிறக்கும். நயனங்கள் விரியும் வதனங்கள் சிரிக்கும், மயானங்கள் வரையும் பயணங்கள் தொடரும்.
தூரிகை தொலைந்தால் ஒவியம் முடிந்திடுமா? காலணி தொலைந்தால் பயணம் முடிந்திடுமா? தடைகள் இடறினும் தருணங்கள் தேடும் தன்மானம் அங்கு பெறுமானமாகும்.
படிப்பினை நிறையும் பண்பு வளரும், பக்குவம் பெருகும் பணி சிறக்கும். இலக்கு எனும் இமயம் எட்டும் இராஜ்ஜியம் நெருங்கும் இதயம் அமைதியுறும். இறுதி மூச்சு வரை பயணங்கள் தொடரும், இறுதி மூச்சு வரை பயணங்கள் தொடரும்.
9-1-2OOf
வேதாவின் கவிதைகள்

ஊஞ்சல்
ஆடலுக்கு ஒரு ஊடகம்,
பாடலுக்கு ஒரு ஊடகம்,
கவிதைக்கு ஒரு ஊடகம்,
கட்டுரைக்கு ஒரு ஊடகம்.
உணர்வுகள் உமிழும் உறவுகள்.
உணர்ச்சிகள் கரையும் உறவுகள்,
மதுக்கிண்ண பணிக்கட்டிகள்
மதுகைப் பரீட்சைகள்.
இருதோணியில் கால்கள் இச்சை நிலையூன்றல்கள் இருதலைக் கொள்ளியென இரகசிய மனவதைகள்.
பல தோணியில் கால்கள் பந்தய வெறி ஒட்டங்கள்.
அகன்ற அண்டவெளியில் அங்கீகார அலைவுகள். ரோகம் விளையும் தாக விடாய்கள் புகழ் காளானின் பூஞ்சண ஒதுங்கல்கள்.

Page 66
மந்தார மழை மூட்டம்
மங்கல் வான்வெளி நிர்ப்பந்த நனைவுகள் நிலவறை ஒளியல்கள் சந்தேக சாரலுக்கு சாதுரியக் குடைபிடிப்பு.
பரிபக்குவ நிலை
பந்தயத்து வெற்றிகள். நிரந்தர அசைவுகள் நிலையூன்றும் மந்திரங்கள். நியாயவழிகள் என்றும் நிம்மதிப் பொன் துகள்கள்.
7-8-2007
வேதாவின் கவிதைகள்

வித்துவ விமர்சனம்
பட்சணம் பக்குவமானால் பாராட்டு பக்குவம் தவறினால் நோக்காடு. வித்துவ விமர்சனம் வித்தக மகத்துவம். வித்துவ வித்தகத்திற்கு விமர்சனம் அத்திரம். வித்துவம் விமர்சிக்கப்பட்டால் விக்கித்து நிற்பதா விகடமாய் கணிப்பதா விசாரமாய் எண்ணுவதா?
பரீட்சையில் தவறிட புள்ளி குறையும் பக்குவம் தவறிட கள்ளின் சுவை குறையும். வித்தகம் விகற்பமானால் விமர்சனம் எழும், விசுவாச நோக்கிலும் விமர்சனம் எழும், பக்குவ மனதின் உள் வாங்கலால் சித்திரமென தன்னை பட்டை தீட்டலாம்! விமர்சன நோக்கு விரோத கணிப்பானால் விருத்தியின் விகாசம் விக்கித்துப் போகும். விவேகம் வழிதவறி விசுவாசம் இழக்கும். விமர்சன நோக்கு விரோத கணிப்பானால், விளைச்சலிலே தவறு தன்னை விருத்தி செய்யலாம். விமர்சனமற்ற வித்தகம் விழுமியமாகாது.
தலைக்கணம் ஏறினால் தன்னிலை புரியாது
தனைச்சுற்றி அறியாது, தன்மானம் பார்க்காது.
தற்குறிப்பேற்ற அணி தமிழுக்கு மட்டுமன்று
தனிமனிதனுக்கும் பொதுவில் கொள்வோம். தக்கது தகாதது தானறிந்தால் தண்புனல் ஆகிடும் தத்துவ வாழ்வு.
O
23-4-2002
č9ӧ0 w

Page 67
பாதிக்கும் பலிப்பூக்கள்
அனுதினம் இதயங்களுக்கு வன்முறை சூர்ணம் அழகிய ஆடையில் விசமமாய் தெளித்த வர்ணம், வன்முறை வார்த்தையின் கல்லறைப் பாடகங்கள் தொன்மை முறை இழந்த தொலைக்காட்சி நாடகங்கள்.
மனச்சாட்சி கலைத்து - வதைக்கும் வஞ்சகங்கள், மனத்தாபமிகு உணர்வுகளின் அவல தேடல்கள், மனுநெறி அழிக்கும் தொலைக்காட்சி நாடகங்கள், கலைக்காட்சியில் சுயவக்கிர வடிகால்கள்.
நாடக சாளரம் திறக்க சின்ன திரையில் ஏடாகூட காற்றலை உக்கிர பரவல். இனிய மலர்களை வீராப்பாய் கசக்குவதாய், இப்படியும் நடக்குமா எனும் எண்ணமாய், கூசி மனம் குறுகிடகாதிலுாடும் வார்த்தைகள் கூரிய நகங்களால் குத்தி கிழிக்கும் சொற்கள்.
உழைத்த உடல் - களைத்த மனதுக்கு இதமான உணர்வுதரும் குளிர் நீர் சுகமான உற்சாகமேற்றும் மென்தென்றல் சொகுசான மன்பதையின் உன்னத பொழுது போக்கு, இன்னலற்ற ஆசுவாச சாரலின்றி, தாக்கும், வன்முறைப் பாலைவனத்துள் சமூகத்தைத் தள்ளும்,
வேதாவின் கவிதைகள்

திண்முறைப் பிரயத்தன எத்தனிப்பு இது. மென்னியை அழுத்தும் சுவாச இறுக்கமிது.
சித்திர தமிழின் சிங்கார தேராகி முத்திரை குத்திய நாடக தொகுதி, ஆராதிப்பதாக நடு இல்லம் வந்து ஆலிங்கனம் செய்து ஆட்கொள்கிறது. சாதிப்பதாக சஞ்சலம் தந்து பாதிக்கும் பலிப்பூக்கள் நல்மனித தர்மங்களே!
30-4-2002

Page 68
மனிதத்துவ மந்திரங்கள்
கரையுடன் ஒயாமல் பேசும் அலை விரைவுடன் திரும்பும் ஓயாத அலை இரைவது என்ன செவிட்டுக் கரையுடன்? கரைவது என்ன பதிலொன்று பெறாமல்? திரையின் ஓயாத சுழற்சியின் அயர்வில் நுரைகளை மரியாதையிழந்து கொட்டுவதேன்? மரியாதை கொடுத்து மரியாதை வாங்கல் சரியாத மனுச்சிகரம் - புரிந்துணர்வு ஆதிமூலம். பிரியாத மனிதத்தின், மானுட மந்திரக்கோல், தெரியாத மனம் அறிவைக் குத்தகை எடுத்தால்.
கரையை அடிமை கொள்ளல் அலையில் கவனமா? இரைந்து கரையோடு இயற்றமிழ் சொற்பொழிவா? இவையேதுமின்றி அலையின் அலைக்கழிவு இங்குமங்காய் அலைக்காற்றின் அலைக்கழிப்பா? மனிதனை மனிதன் அடிமை கொண்டு புனித அறிவின் சிறப்பென கண்டு அன்றிலிருந்து வெற்றி என்றெண்ணி இன்றுவரை வாழ்வது, மண்ணில் இனிமையற்ற ஓர் அறிவுச் சாய்வு கணிதமற்ற இது ஞானத் தொய்வு. இது இசைவுநிலைக் காரணகாரிய உணர்வு இணைப்பு பரிமாண ஒப்புவமை அணி புனைவு. இலக்கிய ரசவாத இறக்கையின் விரிவு. இயல்பான கற்பனைக் கவித்துவப் பூமலர்வு
O
215-2002
C132) வேதாவின் கவிதைகள்

மணிகாட்டிக் குடை
விநாடிகள் வைர துகள்கள்! நிமிடங்கள் தங்கபாளங்கள்! மணித்தியாலங்கள் மகத்துவங்கள்! கணிப்பீடுகளில் ஏன் தவறுதல்கள்? கடிகார அசைவு மதுரமந்திரம் காலப் பிரமாணம் கவனத்தில் நழுவலாமா?
நேரக்கட்டுப்பாடு தூரம் விலக நேர நிர்ணயம் பாராமுகமாக பாரமாகிறது திட்டமிட்ட செயல். நிர்வாகத் திறமை நழுவுகிறது நாகரீகம் நிலவறையேகுகின்றது. நன்மதிப்பு ஒளிச்சேர்க்கையிழக்கின்றது நிம்மதி மயான மேகுகின்றது நம் மதி ஏன் மயங்குகிறது.
தாகத்திற்கு நீரை தாராளமாக பசிக்கு உணவை ஏராளமாக மானத்திற்கு ஆடையை பகட்டாக காணும் சாதனை மனிதன் பொன் நேரத்தை மட்டும் ஏன்? ஏன்? ஒரம் கட்டி உயர்வாழ்வின் சாரத்தை இழக்கின்றான். சுவை சந்தத்தை இழக்கின்றான்.
ბéსტი] 133

Page 69
எம் நிழல் எம்மைத் தீண்டாது எம் செயல் பிறரைத் தீண்டலாமா? நேரம் தவறும் எம் செயல் பிறரைத் தீண்டலாமா? மணிகாட்டிக் குடையின் கீழ் அணிபெறும் - வாழ்வின் மந்தகாசம்; காலத்தை மதிப்பவன் வாழ்வின் கோலம் - கவினுறு கவிதையாகும்.
31-10-2002
வேதாவின் கவிதைகள்

புத்தகவாரியின் ஒளி
புத்தகம் - புத்தியின் சகவாச சங்கமம் சுத்தமான அறிவின்- சஞ்சார மைதானம் புத்தக வரிதரும் ஒளியின் நிதானம், சித்தத்து தூசிகள் அகற்றிடும் சாதனம்.
வெள்ளமெனும் திறமைச் சேற்றிலே - பதமாய் உள்ளத்தில் பதியனிடும் உயர் அறிவு விருட்சம் தள்ளிடினும் தானாக வளரும் கற்பக தரு கள்ளர்கள் கவர்ந்திடா வாசிப்பு பொக்கிஷம்.
வாசிப்பு தீபம் ஏற்றிடும் நிறைவு வாணி கடாட்சம் ஏந்தும் நிறைவு. அகக் கோவிலுனுள் ஏற்றும் ஞானச்சுடர் அறிவு மேடையில் நம்பிக்கைக்கு முடிசூடும்.
முத்தமிழ்க் கடலில் மூழ்கிடில் மனம் புத்தக வரிகளுக்குள் சம்பூர்ண சரணம் நித்தமும் புலன்களுக்கு ஆனந்தம் சீதனம்.
புத்தமுத தத்துவ வரிகளின் ஞானம் சித்தத்துக் கனல் தணிக்கும், மனம் சிந்தும் கீர்த்தனம். பித்தம் தெளிவுறும், முகப்பிரகாசம் வேதனம் வாக்கு சுத்தமாகும், வாழ்த்துரை வருமானம். நோக்கம் உயரும் வாழ்வு வர்ணமாகும்.
பொத்திய மனக்கண்கள் திறப்பது பெறுமானம் சித்தி பெறுவதே வாழ்வில் பிரதானம்.
O
9-7-2002
&£30 <ব35> ·

Page 70
நெஞ்சம் பூரிக்கட்டும்.
பணத்தைக் கொடுத்துப் பார்! பதவியைக் கொடுத்துப் பார்! பண்பட்ட மனிதனை அடையாளம் காண்பீர்! பக்குவப்பட்டவர் என்றோ மொழிந்தனர்.
மனிதர்களே! அன்றுபோல இன்று நீங்கள் இல்லையே! மாறிவிட்டீர்கள்! வெகுவாக மாறிவிட்டீர்கள்!
உங்கள் இதயத்தை பூட்டிவிட்டு சாவியை எங்கோ தொலைத்து விட்டீர்கள்!
பேசமனமின்றி வார்த்தையை சேமிக்கின்றீர்கள்! வீசும் புன்னகையை விலக்கி விட்டீர்கள்.
நேசமிகு பார்வையையும் மறந்து விட்டீர்கள்! பாசமும் நேசமும் உலகில் வேசம் என்றே தீர்மானமா?
பணம்தான் புதையல் என்று பாழ்பட்டு போகிறீர்களே! வாழ்வின் பெறுமதிகளை நின்று நிதானித்து உணருங்கள்!
கையில் சொர்க்கத்தை வைத்துக் கொண்டு ஏன் பையில் பணம் சேர்க்க அலைகின்றீர்கள்?
பாசம், அன்பு ஆதரவு, உண்மை அனைத்தையும் பணத்தால் நிரப்பிவிடும் முயற்சியா?
வேதாவின் கவிதைகள்

பள்ளம் நிரப்பிவிட நுரைகளையல்லவா கொட்டுகிறீர்கள் பணச் சவர்க்கார நுரைகளையல்லவா கொட்டுகிறீர்கள்!
பட்டுப்பட்டு, நொந்தவர்கள் நீங்கள் வேண்டுபவை எல்லாம் கிடைத்தும்
எதைத் தேடி அலைகிறீர்கள்?
பணத்தைத் தேடி அலைந்து அலைந்து உங்கள் இதயத்துச் சாவியையன்றோ தொலைத்து நிற்கிறீர்கள்!
உங்கள் வாரிசுகட்கு உங்கள் வாழ்க்கை ஒரு மாதிரிப்படம் என்பதை மறந்து விட்டீர்களா?
அவர்கள் எடுக்கப் போகும் நற்பெயருக்கு நீங்கள் களங்க மாகிவிடாதீர்கள். சிறந்த மாதிரிப் பெற்றோர் ஆகிவிடுங்கள்!
உங்களைப் பெற்றவராக அடைந்ததற்கு
உங்கள் வாரிசின் நெஞ்சம் பூரிக்கட்டும்.
10-7-2002

Page 71
தன் குழந்தை வளர்ந்திட
குழந்தை வளர்ந்திட தாய் சிரிப்பாள்! குழறுதல் இன்றேல் தமிழ் சிறக்கும்!
பாட பாட ராகம் சிறக்கும் ஆட ஆட நடனம் சிறக்கும்!
தேடல் கூட கவிதை சிறக்கும் வாடல் இன்றி மனம் ரசிக்கும்.
பாரதிதாசன் பழம் தமிழ்க் கவிதை ஊரதிரும் வைரமுத்து புதுக்கவிதை ஒவ்வொரு கவியின் கவிதைகளும் தன்னொரு பாணி வழி செல்லும்.
வண்ணத்துப் பூச்சி வர்ணங்கள் அழகு வண்ண ஆடை புனை சொற்கள் அழகு. பாரிடை உலவும் தேவதைகள் போன்று சீருடை புனையும் சொற்களும் அழகு.
சொல்லும் பொருளும் முத்தமிடும் அழகு வெல்லும் கவிதை சிறக்கும் மெழுகு.
ஆரம்பக் கவிதை சிறுநீருற்று - பின் ஆடி அசையும் அது சிற்றாறு
வேதாவின் கவிதைகள்

அக்கம் பக்கம் தேட்டம் பெருகி
திக்கெல்லாம் புரளும் சொல் நயம் பெருகி.
பித்தம் ஏற்றும் சொற் சித்திரங்கள் தத்துவமான தமிழ் வர்ணங்கள்
முத்தமிடும் அர்த்த பதங்கள்.
முத்திரை குத்திடும் எத்தனிப்பில் நித்தம் ஓயாது கரை புரளும்.
முத்தமிழ் மென்னருவி குளிர்வில் சித்தங்கள் புன்னகைக்க மறக்கலாமா?
சித்தியடையட்டும் இன்பத் தமிழுடன்
சத்தமிடும் நித்திய சல்லாபங்கள்!
25-6-2002

Page 72
சேரும் நடை
வேர் அடியில் நீர்விட
தூர் அடி நனையாததாய், சிரத்தையாய் ஊட்டும் பாலை குழந்தை அசிரத்தையாய் நாவினால் வெளித் தள்ளுவதாய், கருத்து மலர்கள் மகிழ்வாய் தூவல் கணிப்பின்றி பெருக்கி தூரமாய் வீசல்.
நறுமணத்தை விட்டெறிந்து துர் நாற்றத்தை சுவாசிக்க பொறுப்புயார்?
அன்னநடை நடக்கும் காகம் தன்நடை கெடுவது சோகம் எந்நடை எவருக்குச் சேரும் அந்நடை நடப்பது சாரம்.
மயிலுக்கு தோகை அழகு குயிலுக்கு தேன்குரல் அழகு
மயிலுக்கு தேன்குரல் இணைந்தால், குயிலுக்கு தோகை பிணைந்தால், வெயிலில் வெண்ணிலவாகி வெளி வாயிலால் நழுவாதோ பெறுமதி ஒளி?
வேதாவின் கவிதைகள்

கண்களால் பார்த்தல் சுகம் காதினால் கேட்டல் சுகம்.
காசநோய்க்கு மலை வாசஸ்தலம் சுகம்.
தொழிற் சாலை அருகிலா களிப்பான வீணை ஒலி? கோயிலில் லயிப்போடு
களிப்புடன் கேட்க வேண்டாமோ!
5-2-2002

Page 73
வாெ னாலி
84. அந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது? 85. ரி.ஆர்.ரி. லண்டன் ரைம்
86. இனியது பிறக்கும்
144
145
87. நம்பிக்கை விடிவெள்ளிகள் 146 88. உறவுகள் சங்கமம் 2 148
150
வேதாவின் கவிதைகள்
 
 
 

அந்த அதிசயம் எப்படிநிகழ்ந்தது
நடுக்கும் குளிரே பழக்கமில்லை நாவறியா மொழி சுகமேயில்லை பழகிய ஆடை சாதகமுமில்லை குழம்பிய வாழ்வில் இன்பமுமில்லை.
தொலைக்காட்சி திறந்த போதெல்லாம் தொண்ணுாறு மொழிகள் வதையாலும் என்று இனிய தமிழ் காட்சி வரும்
என்று இதயம் அழுத போதும், நொந்த தமிழர்க்கு வந்தது அதிஷ்டம் அந்த அதிசயம் ஐரோப்பாவில் நிகழ்ந்தது. உலக தமிழர்களை ஒன்றிணைக்க உவக்கும் TRTஉதயமானது!
அந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது! முந்தை நடக்காத முன்னேற்ற நிகழ்வு!
இனிக்கா வாழ்வு இனித்தது இருண்ட வாழ்வு ஒளிர்ந்தது. இதயத்து வெப்பம் தணிந்தது. தனிமை வாழ்வு தளிர்த்தது. மறந்த தமிழை இதழ் மீட்கவும், மகிழ்ந்து மழலைகள் தமிழ் பேசவும் திறமைகள் வெளியே துலங்கவும் திக்கெல்லாம் தமிழ் வளரவும் அந்த அதிசயம் நிகழ்ந்தது 1996ல் TRTமலர்ந்தது.
O
30-3-2OOO
ზ6სტი]

Page 74
ஐரோப்பிய வானொலி
TRT 606 Lai Time
சுதந்திரவாணம், சுகமான நேரமது சிதறிய முத்துக்கள் சேருமிடமது சேர்த்த முத்துக்கள் மாலையாகும் அங்கு கூர்த்து பித்தாகி ரசிப்பர் அங்கு.
பூத்திருந்து கவரும் பூமலர்களது. காத்திருந்து சுவைக்கும் கவிதை நேரமது. எண்ண மின்னல்களின் ஒளித்தொகுப்பு திண்மைக் குரல்களால் பெறும் வனப்பு.
வடிக்கும் கவிதை அங்கு சிறப்பா? படிக்கும் வித்தை அங்கு சிறப்பா? வடித்ததை படிக்கும் நடிப்பு சிறப்பு துடிப்புடன் ரசிக்கும் புதன் சிறப்பு லண்டன் Timeன் கவிதைப் பிறப்பு gLDTıp TRTLondon TimegöT 56îlg05'i fipl'L.
|2-8-2OOO
வேதாவின் கவிதைகள்

இனியது பிறக்கும்
(TRT தமிழ் அலை வானொலி பற்றியது)
இடைவெளிவந்தாலும் இனியது பிறக்கும்! இடைவெளியின்றி இனி - அது - நிலைக்கும்!
நனி சுவையென பிறந்தது. தனியொரு சிறப்பு நிறைந்தது. கணிசுவை புதுமைகள் நிறையும், இனி தமிழ் அலை ஒயாமல் தவழும். வீசும் அலையில் குளுமை செழிவு பாசம் குழையும் வார்த்தை பொலிவு நேசம் நிறை நேயர் குவிவு பேசும் ஈழ மண்வாசம் செறிவு தேசுமதிக் கலைஞர்கள் அறிவு வாசம் வீசும் திறமைகள் விரிவு.
கடல் அலை கால்கள் தழுவிட இன்பம் மடல் விழி குளுமையில் மலர்ந்திட இன்பம் தமிழ் அலை மனதை தழுவிட இன்பம் அமிழ்ந்து இனி உலகை மறந்திட எண்ணம். மன அலையில் மகிழ்வுச் சாரல்தங்க! வானலையில் ஆடுகிறாய் தேசு பொங்க! தமிழ்அலை ஒயாது வீசி ஓங்க வாழ்த்து அலை வீசுகிறோம் வானளாவி ஓங்க
இடைவெளிவந்தாலும் இனியது பிறக்கும்! இடைவெளியின்றி இனி - அது - நிலைக்கும்!
20-7-2001
č9ӧ0

Page 75
நம்பிக்கை விடிவெள்ளிகள்
ஊடகங்களுக்குள் போட்டி
ஊன்றி நிலைக்கவும் போட்டி
உயர்ந்திடவும் போட்டி
உயிர் வாழ்ந்திடவும் போட்டி,
பூமலர்ந்து வீழ்ந்தால்
காய் ஒன்று முளைக்கும் கிளை ஒன்று முறிந்தால் புது
முளை ஒன்று முளைக்கும் துன்பம் ஒன்று வந்தால்
படிப்பினை ஒன்று தோன்றும்.
மூழ்கிடும் ஜீவனுக்கும் தருணத்தில் ஆழ்கடலில் ஒரு தெப்பம், நல் நம்பிக்கை விடிவெள்ளி, நல்லுயிர் தரும் ஜீவதுளி
முல்லைக்கு தேர் கொடுத்த பாரிகள் தொல்லையில் கைகொடுக்கும் உறவுகள் எல்லை வகுத்திடா அன்பு உள்ளங்கள் இல்லை நமக்கினி தொல்லைகள்.
வேதாவின் கவிதைகள்

துன்ப அலைகள் புரளும் புரளும் செவிட்டு கரைகளில் மோதும் மோதும் இரும்பு இதயங்கள் இறுகும் இறுகும் இற்று துருப்பிடித்து வீழும் வீழும். இளகிய இதயங்கள் இழையும் வளையும் இழைந்து இணைந்து உலகை வெல்லும்.
31-72OO1

Page 76
TRTதமிழ் அலை தமிழ் ஒளியின் 12.01.2002ல் நடைபெற்ற ஜெர்மன் ஒன்றுகூடல் - உறவுகள் சங்கம இரண்டாவது நிகழ்ச்சியில் நான் மேடையில் வாசித்த கவிதை இது:
“காசிநகர் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’ தீட்சண்ய தீர்க்க தரிசனம் ஒன்று தீட்டினான் ராஜகவி பாரதி அன்று.
பாரீசில் பேசும் உரையை இன்று ஜேர்மனியில் பேசும் உரையை நின்று பாரின் பல முனைகளில் நின்று பல் நுண்கலைத் தொழில்நுட்பங்களை வென்று பார்த்து கேட்டு ரசிக்கின்றோம் நன்று.
ஆனந்தம் உயிரின் தணியா ஆவலாய் முயற்சி உயிரின் தீராத பயிற்சியாய் அயர்ச்சியற்ற விடாமுயற்சியாய் ஈழநாடு பத்திரிகையை எமக்கீந்தான் தாழாததாகமென குழு அமைத்து TRTதமிழ்ஒளி- தமிழ் அலையைத் தந்தான்.
கலைமகளின் செல்வன் சபாபதி சுப்பையா குகநாதன் கரம்பொன் ஈன்ற தீரமைந்தனின் தாராளம் இன்றெமக்கு மூன்று ஊடகங்கள் தழைத்து ஓங்குக! நல்ல மனம் வாழ்க! தைரியம் கொடுக்கும் திருமதி. ரஜனிகுகநாதனும் வாழ்க!
வேதாவின் கவிதைகள்

TRTஐந்தாண்டு நிறைவுகொண்டாடி ஜேர்மனியின் உறவுகள் சங்கமத்தில் உறவாடி பன்னாட்டு நேயர்களைக் கலந்துரையாடி பகிர்கின்றோம் நல்வாழ்த்துக்கள் உன் நலம் நாடி
பாலைவனத்து பசும்சோலையாய் அன்று ஆலை அமைத்து, காலை மாலையாய் நின்று நீண்டு தொடரும் உன் பயணம் கண்டு ஈண்டு மகிழும் நாம் தேனுண்ணும் வண்டு.
அடிக்குமேல் அடிதாங்கிTRT இடிதாங்கும் கம்பமாய் ஓங்கி குடி கொண்ட பாரீசில் நல்லாங்கு முடிகொண்டு வாழ்க பல்லாண்டு.
BBC“தமிழோசை’ - “கீதவாணி’ கனடா கரங்களுடன் எழிலோடு பல கரங்கள் பற்றி கலையக கலைஞர்கள் ஒத்துழைப்பு பெருகி வலையென நேச நேயர்கள் பெருக்கி TRTதமிழ்ஒளி, தமிழ்அலை நாமம் உலக அலையாக ஊரெங்கும் மணக்கட்டும் வாழ்க! கலையக கலைஞர்கள்! நேயர்கள்
வாழ்க! தமிழ் ஒளி - தமிழ் அலை!
12-1-2OO2
ბრეტი] Gagd

Page 77
ஏணி
ஏற்றிவைத்த ஏணியை யார் போற்றிவைத்துப் பார்க்கின்றார்? நூற்றில் ஒருவர் உளரா பார்? தூற்றி வசைபாடாதார் யார்? தூசி துடைத்து வைப்பார் யார்? தூக்கி மூலையில் போடுகின்றார்.
ஏறும்வரை தடவுவார் ஏறிவிட்டால் உதறுவார் எழுதாத வழமை இதுபார்! எங்குமே நடக்கின்றது பார்!
தமிழ் அலையும் ஒரு ஏணி பார் தாவி நீயும் ஏறலாம் பார்
கவிழ்ந்து கண்ணை மூடிடாது நேர் கம்பீரமாய் தமிழைக் கேட்டுப்பார்!
26-4-2OO1
வேதாவின் கவிதைகள்

90. விடியலின் சுவடுகள்
91. கவிகனல் மூட்டுகின்றாள்
92. பூணாரங்கள்

Page 78
விடியலின் சுவடுகள்
கடலில் வீழ்ந்து ஆதவன் காரிருளில் மறைந்தான். திடலில் தவழ்ந்து ஏறி, பின் திங்களைக் கவர்ந்தான். இரவு அரக்கனை அவன் இடம் விட்டு அழித்தான். இரத்தினக் கம்பளம் பூமியில் விரித்தான்.
பஞ்சு முகில் பொன் திரைகள் புதுநாள் விடியலின் சுவடுகள், பூவிதழ் மோகன விரியல்கள் பூவண்டிற்கு தேன் சொரியல்கள்
ஆவினம் வரிசையில் ஊர்வலமாய் ஆரஞ்சுப் பட்டுச் சேலையுடனாய் செம்பஞ்சு வானம் குடைபிடிக்க சேவல் கூவி கட்டியம் கூற, பொன் செம்பரிதி பொலிய வருவான் பூமகளுக்கு சீர் கொண்டு தருவான்.
கூடு திறந்த பறவைகள் கும்மாளம், தேடும் இரைக்கு முயற்சியின் நீளம். வாடும் பயிருக்கு வார்க்கும் நீர் உயிர்மூச்சு, விலையில்லாக் கதிரோனின் சுகாதாரக் கதிர்வீச்சு. விடிகாலை புத்துணர்வு அனுபவச் சுகமூச்சு. விடியலின் சுவடுகளின் விவரணம் சொர்ணம். விடியலின் சுவடுகள் முடிவற்ற வர்ணனைகள்.
O
26-8-2OOO
C152) வேதாவின் கவிதைகள்

கவிக் கனல் மூட்டுகிறாள்
நீண்ட நெடும் பாதையில் என்னுடன் நிலாமகள் நடை பயின்றாள், வெண்ணிலாமகள் நடைபயின்றாள்.
பூத்திருந்த இளமதி காத்திருந்த தென்றல் நோக்கில், குளிர்மதியாகி நின்றாள் கவின்மதியாகி நின்றாள்.
நிழல்களின் பாராளுமன்றம்
திகிலினைக் கிளப்பிட, நிலா நிம்மதி வளர்த்தாள் நம்பிக்கை வளர்மதியாயிருந்தாள்.
இலையுதிர் மரங்களிடை
கலையழகைத் தந்தாள், எழிலினைக் கூட்டுகின்றாள், என் எண்ணத்தைக் கிளறுகிறாள்.
மதுரச போதையாக
மனக்கிண்ணத்தில் கற்பனை எண்ணெயை ஊற்றுகிறாள் வண்ணக் கவிக்கனல் மூட்டுகிறாள்.
3-8-2001
Seba ○

Page 79
பூனாரங்கள்
தேனளவு பார்த்து தேடியலையும் வண்டுகள் நாணமுடன் பார்க்கும் நல்லின மலர்கள் வானத்து வாயிலின் விண்மீன் தோரணங்கள் கோணலின்றி வளரும் கோமேதகக் காதல் சீனத்து மென்மையாம் சிங்காரப் பட்டும் தானாக முளைக்கும் காளான்கள் அனைத்தும் பூணாரங்கள் இப்பரந்த பூகோளத்தில்! பூஷணங்கள் இப்பிரபஞ்ச சொர்க்கத்தில்!
அறிவு பெருக்கும் உந்தலின் ஆர்வத்தில் அறிவுக் கதிரால் உலகை வர்ணமாக்கும் ஆறாம் அறிவுசார் உன்னத மனிதனும் அற்புத அதிசய அலங்கார மன்றோ!
ஒருமுறை முகிழும் மானிட வாழ்வு வெறுமையில் கழிதல் வீணான தாழ்வு. தகைசால் அறிவு தக்கபடி பெருக்கி பகைசால் உறவை பதமாய் விலக்கி நகையால் உலகை நளினமாய் வென்று மிகையாய் வகையாய் வாழ்தல் நன்று.
O
13-8-2002
வேதாவின் கவிதைகள்

சுகம் கேட்டல் பிரார்த்தனை
93. அர்ப்பண மலர் - மீரா!
94. வந்துவிடு சுகமாகி 157 95. முல்லையூரானே!

Page 80
அர்ப்பண மலர் மீரா!
கண்மூடித்தூங்கிவிட்டாள் - இனி கவலைகள் மீராவுக்கு இல்லை - அதை கைமாறித் தந்துவிட்டு - அவள் கடமை என்று போய்விட்டாள்.
தன் வீட்டைக் காக்கவில்லை அவள், தண்மை இழந்து அது கிடக்கின்றது. நாட்டைக் காக்க என்று அவள் நம்மை விட்டுப் போய் விட்டாள்.
எத்தனை நினைத்திருந்தோம் நாம் எதையுமே நினைக்கவில்லை மீரா, பதினாறு வயதினிலே தன் பந்தங்களை அறுத்துவிட்டாள்.
உயிர்கூடு சிதறியது. உருவும் இல்லை, உயிரற்ற உடலேனும் வீடு வரவில்லை. துப்பாக்கியை ஏந்தியே நீஇப் பாக்கியம் பெற்றுவிட்டாய். எத்தனை உயிர்களம்மா! - அங்கு சத்தமின்றி போகுதம்மா! சல்லடைக் கண்களாகி அவை சலனமற்றுப் போகுதம்மா!
ஈழப்போரின் அர்ப்பண மலர்களில்
காலத்தில் நீயும் ஒரு அர்ப்பண மலரம்மா!
என் தங்கைமகள் மீரா - ராமச்சந்திரன் இன்று,
கண்மூடி அமைதி பெறுகிறாள் மாவீரர் சமாதியில்.
O
//-72-7222
வேதாவின் கவிதைகள்

வந்துவிடு சுகமாகி
(TRTதமிழ் அலை “சாளரம்’ தமிழ் இலக்கிய நிகழ்ச்சி செய்யும்
சகோதரர் கரவையூர் பொன்னன் - “வியூகன்’ சுகயீனமாகியது கேட்டு)
சாமரம் வீசுவதான சாதகக் காற்று
சாகசம் செய்த சாதுரியக் காற்று
‘சாளரத்’தால் வந்த தமிழ் காற்று
சாதிக்க வேண்டும் மறுபடி தாழ்திறந்து.
“சாளரச்’ சக்கரவர்த்தியின் ஒய்வினால்
சக்கரவாகமான நேயர்கள், மனதால் சரளமாய் அவர் சுகமாகி மறுபடியும்
சாளரம்’ திறந்திட சரவணனை யாசிக்கின்றோம்.
உடல்நிலை திடகாத்திர நிலையாகி உயிரான மனைவி மக்கள் மகிழ்நிலையாகி உன் கடமைகள் தொடரட்டும். - ஓர் உடன்படிக்கை இன்றே செய்வோம்!
“மறுபடி உன் தமிழ்ப் போர் வேண்டும்.
மகத்துவம் தமிழ் அலைக்கு வேண்டும். தமிழ் அலைக் காற்று “சாளர”த்தால் வேண்டும் தமிழ் கவிச்சமர் உன்னுடன் தொடுக்க வேண்டும்.”
&gb0 G157)

Page 81
ஒப்பந்தம் சரிதானா? ஒத்துக் கொள்வாயா? ஒழுங்காயுனைக் கவனித்து ஒத்துழைப்பு தருவாயா? வியூகம் அமைத்து வேண்டுதல் விடுகின்றோம்!
வண்ணமயிலோன் தருவான் வரப்பிரசாதம் வல்லினமாய், வைர உடலோடு வந்திடு!
வித்தகச் செருக்கு விளங்கிட வந்திடு!
விதந்தோத முடியா விழுமிய தமிழோடு விளக்கம் கூறி விளம்பிட வந்திடு!
வந்திடு சுகமாக வரவேற்க காத்துள்ளோம்! வந்திடு சுகமாக, வரவேற்க காத்துள்ளோம்!
4-2-2002
வேதாவின் கவிதைகள்

முல்லையூரானே!
முருகேசு சிவராஜா
வற்றாப்பளையீந்த எழுத்தாளனே!
டென்மார்க் தமிழின் முன்னோடியானவனே! உன்னோடு பழகிய பொன்னோடும் நினைவை மனக்கண்ணோடு எண்ணி மகிழ்கின்றோம்.
நோய் இன்று உன்னைப் போர்த்தி
பாய் போட்டு எடுக்கும் ஆரத்தி ஒய்ந்திட வேண்டும்! ஆரத்தித் தட்டைப்பிடுங்கி ஒரத்தில் கொட்டி விட்டு உன்னை நேரத்தில் தட்டி, தமிழ்சாரத்தைப் பேசவேண்டும் வா!
மனோசக்தி மாபெரும் சக்தியாம்!
மனோசக்தியை உனக்காக குவிக்கின்றோம் மானசீகமாய் மல்லுக் கட்டுகிறோம்! எம்மணம் மகிழ குணமாகி வழமைக்கு வா!
அல்லலில் வாழும் மக்களுக்காய்
சொல்லை உழுதிடும் உன் பேனா எல்லையின்றி எழுதிட வா! முல்லையூரானே எழுந்து வா!
6&ba

Page 82
முல்லைத் தீவானே!உனக்கு
எல்லை எதிலும் வேண்டாம்! கொல்லைப் புறத்தால் தமிழ் சொல்லாமல் ஒடிடாது வில்லை எடுத்து செந்தமிழ் சொல்லை நாணாக்கி ஏற்று!
நல்லை முருகனே திகைக்க
வெல்லத் தமிழை வென்றிடவா! தொல்லை தரும் நோய் குணமாக
வல்ல இறையருள் குவியட்டும் உனக்கு
முல்லையூரான் சுகயினமாகி கோமாவில் உள்ளார் என அறிந்த போது எழுதியது. லண்டன்1imeல் வானொலியில் வாசிக்கப்பட்டது)
25-8-2002
வேதாவின் கவிதைகள்

வாழ்த்து - விழா!
96. சித்திரையாளே!
97. புதிய தை 98. அவசரமானால் ஆரூடம் கேட்கலாம்!
99. துல்லியமான சல்லிவேர்கள்
100. பொங்கிய சங்கமம்
101. சித்ரபானுவே!
102. நானும் என் கவிதையும்
K59 TSG
Se
<ಿ
క్రై
守列
162
164
165
167
169
171
172
<ಿ
క్రై
雯

Page 83
சித்திரையாளே
சிறப்போடு வா!
புத்தாயிரத் தமிழ்மகளே! முத்திரைவிழுந்த முழுமகளே!
எத்திரைவரினும் நீவருவாய், விக்கிரம வருட சித்திரையே!
பத்திரமாக பசுமையோடு வா!
சித்திரையாளே! சிறப்போடு வா!
கொடிகள் நாட்டவில்லை கோலம் இடவில்லை மடியோடு மனதில் கோலம், முற்றத்தில் பொங்கவில்லை வெடிகளற்ற வரவேற்பு முடிவோடு வா! நல்ல முடிவோடு வா! கவிபாடி வரவேற்கின்றோம்!
உலகம் வெகுவாகக் கெட்டுவிட்டது, கலகம் அரசகட்டில் ஏறிவிட்டது மனிதநேயம் மனிதனிடம் அற்றுவிட்டது அநியாயம் மனிதனிடம் முற்றிவிட்டது சித்திரையாளே! சிந்தையில் நின்று சீர்திருத்திவிடு விக்கிரம வருடமே! விக்கினங்கள் போக்கிவிடு!
கடிதாக எமது பூமி, எம், கரங்களில் வந்துவிட உரமான வழிகாட்டு - எம்
உபத்திரவம் தீர்ந்துவிட
வேதாவின் கவிதைகள்

உயிர் கொடுக்கும் எம்மினம், உதிரம் சிந்தும் எம்மினம், சல்லடைக் கண்களாகும் எம்மினம், சரித்திரம் படைக்க வேண்டும். சித்திரையாளே! சிறப்போடு வா! சிவந்த மண்ணைப் பச்சையாக்க வா!
13-4-2000

Page 84
புதிய தை
புதிய தை மகள் பிறந்தாள் அதிக குளிரில் பிறந்தாள்
புதியதாய் அவள் பிறந்தாள் மதிய ஒளியாய் பரந்தாள்.
எதிர் கொள்ளும் காலப்படியவள் எதிர்நோக்கும் ஜாலவிடையவள் எதிர்கொள்ளும் புது நம்பிக்கையவள் புதிர் விடையின் பொது சாவியவள்.
புதிய தை தொடங்கி நாம்
பொதியான பிரிவை மறப்போம் எரிக்கின்ற கவலைகள் சரிப்போம் சிரிக்கின்ற வாழ்வை விரிப்போம்.
வீசும் பார்வையில் கனிவு பொங்க
பேசும் மொழியில் அன்பு பொங்க
வெல்ல வார்த்தைகள் பொழிந்து
நல்ல நெறியோடு வாழ்ந்து
சொல்லச் சிறந்த உதாரணமாய் இல்லம் சிறக்க வாழ்ந்திடுவோம்!
பொங்கும் மங்களம் தங்க
எங்கள் ஈழத்தில் பொங்க முழங்கும் போர் முரசு அடங்க இலங்கும் இறையே அருள் வழங்குக!
O
16-7-2OOf
வேதாவின் கவிதைகள்

(965FUTIDITGO Taib
ஆருடம் கேட்கலாம்
பிருந்தாவனத்தில் அடுப்பு மூட்டி காமனின் கரும்புகளால் அழகூட்டி கோகுலத்துப் பசுக்களில் பாலெடுப்போம். கலகலப்புடன் பால்சோறு ஆக்கிடுவோம். வழியெங்கும் ஆனந்த தூபம் தூவுவோம்! விழி மலர்களால் சித்ர பானுவை வரவேற்போம்!
பிரபஞ்ச கால மாளிகையின், புதிய கோபுரம் சித்ரபானு! வியன்மிகு சித்ரபானு புத்தாண்டு பயன்மிகு புதுமைகள் கொண்டு நயன்தந்து நம்பிக்கை சேர்க்கட்டும் மயன் அமைக்கும் மாண்புமிகு ஆண்டாகட்டும்.
தன்னைப் புதுப்பிக்கும் ஒவ்வொரு ஆண்டும் அன்னை போல் தனித்தன்மை பெறவேண்டும் முன்னை ஆண்டிலும் பன்மடங்கு எம் முன்னேற்றம் சிறப்புடன் நிகழ வேண்டும்.
விரியும் பூக்களின் அழகு வடிவம் பிரியும் இதழ்களால் உலகறியும் நிகழும் நிகழ்வுகளால் புத்தாண்டு வடிவம் நிறை கணிப்பாக ஆண்டிறுதியில் அறிவோம்.
Séba

Page 85
அவசரம் எமக்கானால் ஆறுதல் பெற அறிவான சோதிடரை அழைத்து ஒரு ஆரூடம் சொல்லக்கேட்கலாம், சிறு ஆத்ம திருப்தியும் அதில் பெறலாம்.
சித்ரபானுவே வருக! நமது வெற்றிக்கு உத்தரவாதமேனும் தருக!
14-4-2OO2
வேதாவின் கவிதைகள்

துல்லியமான சல்லி வேர்கள்
(கவிஞர் கண்ணதாசனின்நினைவுநாளுக்காக)
கண்ணதாசனே!மாகவிதைதாசனே! கண்ணன் துதி பாடிய முத்தையாவே வண்ண வரிகளால் கவிவலை பின்னியவனே எண்ண ஏணியால் உயர்ந்து நிற்பவனே! கிண்ண மேந்தியே பெயர் பொறித்தவனே! மதுக்கிண்ண மேந்தியே உலகில் பெயர் பொறித்தவனே!
முச்சங்க முத்தமிழ் சோலையில் நீ, மூதறிவுக் கவிதோப்பு அமைத்தாய் மூப்பில்லாத் தமிழுக்கு அழகு செய்தாய், முடிசூடா மன்னன் நீசெந்தமிழ் தர்பாரிலே!
எளிமை வசனங்களின் ஏகாதிபத்தியத்தில் செழுமைத் தேன்கவி விதைகள் விதைத்தாய். காதல் மண்டலமே கிறங்க - மயங்க காதல் கவிரச் மோகம் பிழிந்தாய்.
கலங்கிய நெஞ்சங்கள் கைபற்றும் கோலாக துலங்கியது உன்யதார்த்த தத்துவங்கள். தத்துவம் பேசிய உன் வித்தகக் கவித்துவம், வித்தகவானில் ஒரு மாபெரும் தனித்துவம். வித்தக கவிஞரில் நீவைரப் பெட்டகம்! முத்தாரம் நீதமிழர் உள்ளத்தில்!

Page 86
சிறுகூடல் பட்டியில் அவதரித்த சிந்தனை மணியே சினிமாவெனும் சாதனத்தால் சாதனை சாதித்தாய் ஆஸ்தான கவிஞராக அரசவையில் அமர்ந்தாய்! அர்த்தமுள்ள இந்துமதம், யேசுகாவியமாய் அனுபவ முத்துக்கள் பல அறிவுடன் தந்தாய். இசை - உன் எழுத்தாணி அசைவால் ஆரோ கணித்தது; நீ அந்த இசையால் ராஜகவியானாய்!
நூறு வயதாகும்வரை ஓடிவிளையாட ஒரு நோயில்லா மேனி வேண்டுமென்றாய்! 24.6.1927ல் பிறந்து 1710.1981ல் மறைந்தாய். உன்பிரிய வார்த்தை உயிலின்படி, நீ உன் மரணத்தின் பின் விமர்சிக்கப்படுகிறாய்! மறைந்தும் வாழ்கின்ற வரம் கொண்டாய்.
உன் அடியொற்றி முளைவிட்ட கவிஞர்கள் ஏராளம்
உன் கவிதையின் துல்லியமான சல்லிவேர்கள் என்னுள்ளம் தாராளம்.
2-72OO2
வேதாவின் கவிதைகள்

பொங்கிய சங்கமம்
நன்றி தெரிவிக்கும் நற்பண்பை யொட்டி நாட்டில் உழவர்கள் தொன்று தொட்டு காட்டும் நன்றியின் நாள் என்று பட்டிப் பொங்கல் திருநாள் இன்று. உழவர் திருநாளின் மறுநாள் இன்று. மழவு மனதில் ததும்பி நின்று களவு இன்றி குலவுது இன்று செலவு ஆனது ஆனந்தம் ஒன்றே.
பொங்கிய பொங்கல் பச்சரிசி பாலுடன் தங்கி மனதில் தித்திக்கும் ருசியுடன் உறவுகளின் சங்கமம் இதயத்தில் தேங்கி சிறகுகள் விரிக்கிறது மகிழ்வில் ஓங்கி.
சாலை கொள்ளா நேய நெருக்கம் மாலைசாய இணைந்து பெருக்கம் முகமறியா நேயர்களை நெருங்கி முகமன் கூறவும் முடியாத நெருக்கம் பல திறமைகள் சங்கம மேடையில் கலகலத்தது நள்ளிரவும் தாண்டி

Page 87
அன்பு நெஞ்சங்களுடன் அளவளாவுதல் தென்பு தரும் இனிய உணர்வுமோதல் “வாடி.வாடி.’ பாடல் சிருங்காரம் கோடி தடவை காதில் ரீங்காரம் தூங்கி எழுந்து மறுநாள் காலையும் ஓங்கி ஒலித்தது குறிப்பிடும் நிலையே.
15-1-2002 (12-1-2002 உறவுகள் சங்கமம் பற்றியது).
வேதாவின் கவிதைகள்

சித்திரபானுவே!
பூதல ஆண்டு வானில் மறுபடியும்
பூக்கின்றது புத்தாண்டு புது நட்சத்திரம்! பூ வாண மத்தாப்புகள் விரிந்து உதிர்ப்பு பூக்கின்ற ஆண்டிற்கு பூரித்த வரவேற்பு
சித்திரையில் புகும் சித்திரபானுவே வருக! முத்திரைகளாக நற்பலன்கள் தருக! மித்திரனாக வருடமுழுதும் மிளிர்க! ஒத்திருந்து நம்மினத்தை ஒருவழிப்படுத்துக!
புலரும் புத்தாண்டு புத்துணர்வு புதையலாகுக! புதிய எதிர்பார்ப்பு புதுப்புனலாகி சுதி - லயமுடன் சுற்றி சுழல்கிறது. புதியவராக நாமாகுகிறோமா?
நடந்தவைகள் கழிக்கப்படுகிறது. கடந்தவருடம் புதைக்கப்படுகிறது. கிடந்த ஆசைகள் துளிர்விடுகிறது படர்ந்து பறந்து உயர்ந்திட துடிக்கிறது.
விழிகள் பெரும் எதிர்பார்ப்பில் ஒளிகளாக விடியுமென நேர்ந்திருக்க - காத்திருக்க விரிகிறது வியன்தரும் புத்தாண்டு விடியும் தமிழ் ஈழமென எதிர்கொண்டு.
O
6&bs)

Page 88
255.2002-ல் டென்மார்க் - 'ஒல்போ' நகர உள்ளூர் வானொலி முதல் ஆண்டுமலர் "வான்பதி' வெளியீட்டுவிழாவில்நான் வாசித்த கவிதையில் சிலபகுதிகள்.
நானும் என் கவிதையும்
நானும் என் கவிதையும் தலைப்பு தேனும் பாலுமாய் இனிப்பு எப்படிக் கற்றேன் இதை என்பது தெரியாத வித்தை இது.
ஏற்றதை இணைத்து எளிய சாரமாய் வார்த்தையால் வளைக்கும் வண்ண ஆரம். உள்ளுணர்வுச் சொல்லோவியம் கவிதை உயிரின் சுகராகம் கவிதை.
உணர்வுகளின் ஆத்மார்த்த ஆதங்கம் உள்ளே குமிழியிடும் ஆழத்து அவஸ்தைகள் உருண்டு கனத்த குறுகுறுப்புகள் உருவற்ற உச்சாடன உணர்வுகளின் உடன்பட்ட சுற்றி வளைப்பு கைதிநான். உன்மத்தம் கொண்ட கைதி நிலையல்ல உணர்ந்து விகாசிக்கும் உயிர்ப்புநிலை.
முகமூடியற்ற அங்கீகார எத்தனங்கள் முகஸ்துதியற்ற பகிரங்க வெளிப்பாடுகள். முளைவிட்ட உணர்வு வித்துக்கள் எழுத்தாணியூடு எட்டும் விடுதலை என் முகவரிக்கு எழில் சேர்க்கும் விலை. மனித வானத்தில் ஒரு பிறை கணித பெளர்ணமியாக அக்கறை.
C172) வேதாவின் கவிதைகள்

சமூக சேவை குடும்ப சொத்தாக சமய சேவையும் இணைந்து கொத்தாக தமிழ்ச் சேவையாளர் என் தந்தையின் தந்தை கோமான் முருகேசு சுவாமிநாதர் கோப்பாய் நாவலர் பாடசாலை ஸ்தாபகர் பூதர்மட பன்னவேலை பயிற்சிகலாசாலை ஸ்தாபகர்.
மண்ணின் குணம் நீருக்குண்டு இப் பெண்ணிலும் கொஞ்சம் அதுவுண்டு மூலம் இதுவானாலும் இக் கோலம் கொள்ள ஆலம் விழுதாக ஆதியில் அப்பா, சீலமிகு நூல்கள் தேடி பாலம் தொடுத்தார் தமிழுடன் என்னை.
பாசமுடன் வெகுதூண்டுதலாய் வாசி - வாசி யென்று ஆவலாய் யாசித்தார் - நேசித்து வாசித்தேன். ஆசியானது மோசமாகவில்லை!
திருமணவானில் கையிணைத்த துணைவரும் திறமையான கவியாளர் - தமிழன்பர் காதல் தில்லானா ஆடிய அவரின் கவிதைகள் திறவுகோலானது - எனக்கு திருப்பு முனையானது.
திட்டமான கவனிப்பில் திறமை விரிந்தது. திட்பமாய் திருத்தமாய் தினமும் வளர்கிறது.
இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரியில் இணைந்தது 1976ல் என் முதல் கவிதை.
6&bs) C173)

Page 89
இலக்கணமாய் வளர்கிறது இன்று மேற்குலகில். என் மொழியால் சில வர்ணங்கள் TRT வானொலி - தொலைக்காட்சிக்கு பூசுகிறேன்.
கடந்த பதினாறு திங்களாக, என் கணவர், நடந்த டென்மார்க் செய்திகளை தொகுக்க, “ஐரோப்பிய வலம்”TRTதமிழ் அலை வானொலிக்காய் வாசிக்கின்றேன்.
தொட்ட டெனிஸ் கல்வி முடிய எட்டுவருடத்திற்கும் மேலாக சிறு பட்டு முகத்துப் பாலருடனும், சிட்டு முகத்து இளையோருடனும் “பெட்டகோவாக’AARHUSல் தொழில்.
மனிதமனம் ஒரு கடலானது மெளனம் இறப்பிற்குச் சமமானது. பட்டுப்போன மரக்கட்டையாக, பயனற்ற ஒரு கல்லாக - நான் பாழடைந்த தனிவழிப் பாதையாக பாலைநிலமாக வாழ உடன்பாடில்லை.
தூரத்துவானை ஒரத்தில் தொட்டு தூசி பெருக்கி மனம் துலங்கவிட்டு உணர்ச்சி வண்டலின் கீழ் உறைந்த உணர்வு தோண்டும் உறவுக்கார உழவன் பாவாணனாக இஷ்டம்.
உருவமற்ற உணர்வை உலகுக்காக மொழியில் உயிரோவியமாக்கும் கலைஞனாக இஷ்டம்.
வேதாவின் கவிதைகள்

எழுதுகோலெனும் மனமந்திரக் கோலால் எழுத்தை ஆளும் மாயக் கலைஞனாக இஷ்டம்.
நானெனும் சுயநலக் கூட்டுப் புழுநிலைமாறி வண்ணத்துப் பூச்சி வனப்புடையவன் கவிஞன்.
தவழும் பனுவல்களின் வீரிய சிறகுகள் தவறுகளை தடங்கலின்றி தீண்டும், தகவற்ற எல்லைகளைத் தாண்டும் எல்லைக்குள் முடங்கி அடங்காதது.
எல்லை வரையறைகள் இல்லாதது சிந்தனைப் பிரளயம், சீரிய கருத்து நிந்தனை வரி நீதி பொறுப்பு அக்கறை விழிப்பு- அலங்கார சேர்ப்பு அடுக்கு மொழி அமைந்த சிறகுடன் மேலேமேலே - கீழே கீழே வலம் இடமென்னும் வரையறையின்றி வானம்பாடியாய் சிறகடிக்கும்.
வஞ்சனை - துரோகம் - களவு - ஏமாற்றம் வக்கிரம் பொய்யெனும் உணர்வு வயலின் உக்கிர விளைச்சல் மானிடப் பாத்தியில் நீதியை விதைக்கும் விதையாய் கவிதை அநீதியைச் சுடும் பந்தமென கவிதை ஓ! இது வித்தியாசமான விதைப்பு
இது இரகசிய விதைப்பல்ல. ஆம்! ஒரு பகிரங்க விதைப்பு! - நாட்டிற்கும் அறுவடை சேரலாம், சிலர் வீட்டிற்கும் அறுவடை சேரலாம்!

Page 90
காதல்வீரம், சோகம் - பெண்மை காமம் சிலேடை - சிருங்காரம் தாய்மண், போர், மரணம் என சொற்றொடர் புரளும் என்கவிதைகள் மற்போரும் புரியும் மனசுக்குள்.
எத்தனையோ கவிதைகள் கையிருப்பு. அவை அத்தனையும் எனக்கு விருப்பு. ஆர்வமற்றவருக்கு இதுகேட்க அலுப்பு. இவ்வளவு நேர எடுப்பு - மனகடுப்பானால், இனி இதிலிருந்து உங்களுக்கு விடுப்பு. இவைகளை வாசிக்க தந்த வாய்ப்புக்கு நன்றி கூறுவது என் பொறுப்பு.
நன்றி வணக்கம்.
வேதாவின் கவிதைகள்
 


Page 91
இரு அறிஞர்கள்.
தமிழே அமுதே' என்ற தமிழ்த்தாய் மேல் அவர் கொண் பற்றியும் மாளிகையின் பிச்ை நடைபாதை நட்புகள் மேற்கு: அவலத்தைப் பற்றியும் சிரே எண்ணுங்கள் தலை நீ பெண் ஒேர பெண்ணுர் விளக்குவதாகவும் கனவு, சரியாத சரித்திரங்கள் விடுத எங்களூர் பூவரசு, விளக்குமாறு, ஆகிய கவிதைகள் கிராமியத்தி பலவற்றையும் இக்கவிதைகள்
=
"ஒரு பாரம் பரிய ம என்பதாலோ என்னவோ, சமூ இவர் கொதித்துப்போவதை அ சமூகத்தின் குறைபாடுகளுக் வடிவங்களில் குரல் கொடுத்தி ஊடாக நீங்கள் உணர்ந்து கொ
- ', பிரதம ஆசிரியர் F.
 
 
 

கவிதை ாட காதல்
சக்காரர், !
வாழ்வு நகிதியாக SS »6 இந்நூலாசிரியை
L | TI LILJI திருமதிவேதா சாவிலும் H
தலையுணர்வை விளக்கியும்: என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு ன் இனிமையையும் இன்னும் உணர்த்துகின்றன.
திருது இ ஜெயராஜ்
கில இலங்கை கம்பன் கழகம்.
ான குடும் பத்தின் வாரிசு கத்தின் குறைகளைக் கண்டு, வரால் தவிர்க்க முடியவில்லை. கெதிராக அவர் பல்வேறு ருப்பதை இந்தக் கவிதைகள் ஸ்வீர்கள்."
- 1 . இய்க்குநர் ஆர்க் தமிழ் தொலைக்காட்சி
ஆ=
エ ே ইহঁ ဒ္ဓိ இ చెవ్రె వ్రి