கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருக்கோணாசல வைபவம்

Page 1


Page 2
6 வீரகத்தி விந
திருக்கே
6)6)
இந் திருகோ ழரீமான் வே. அ அவர்களால் 1889 சத்தியருபமாக

ாயகர் துணை
T6)f 60
J6)Jub
நூல்
SoTL6O6) அகிலேசபிள்ளை 9 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது

Page 3
ii திருக்கோணாசல வைபவம்
நூலின் பெயர் : திருக்கோணாசல வைபவம் ஆக்கியோன் : பூரீமான். வே. அகிலேசபிள்ளை.
பதிப்புரிமை : த.த.ஞானேஸ்வரன்.
முதற்பதிப்பு : 1950
இரண்டாம் பதிப்பு : 1999 மூன்றாம் பதிப்பு : 2000
விலை : ரூபா. 150/=
தத்துவ ஞானத் தவச்சாலைப் பிரசுரம் 31/21, டோசன் வீதி, கொழும்பு -2, பூரீலங்கா. தொலைபேசி: 094-1-331439
 

திருக்கோணாசல வைபவம் iii
කි)-
பதிப்புரை
இற்றைக்கு சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன் தென் குமரிநாட்டின் ஒர் அங்கமாக இலங்கை இருந்தது. அக் காலத்தில் தென் குமரிநாட்டை ஆண்டவன் "நிலந்தரு திருவிற் பாண்டியன்” என்று தொல்காப்பியம் வாயிலாக அறியக்கிடக்கிறது. இவன் “ தென்றிசையாண்ட தென்னவன்” என்று சிலப்பதிகாரத்தாலும் "வாடாச் சீர்த் தென்னவன்” என்று கலித்தொகை யாலும் "நெடியோன்” எனப் புறநானூற்றாலும் குறிக்கப்பட்டான். தென் குமரிநாடு எழுநாடு, முநாடு என இரு பிரிவுகளைக் கொண்டிருந்தது. எழுநிாடு ஏழ்நாடு எனவும் அழைக்கப்பட்டது. இந்த ஏழ்நாடு ஏழ்தெங்கு, ஏழ் மதுரை, ஏழ் முன்பாலை, ஏழ் பின்பாலை, ஏழ்குன்று, ஏழ் குணக்கரை, ஏழ் குறும்பனை என்று ஏழு மானிலங்களை உள்ளடக்கியதாக இருந்திருக்க வேண்டும். அதனை அடியார்க்குநல்லார் வாயிலாக அறிய முடிகிறது. எழ்நாட்டை ஆண்ட காரணம் பற்றி நெடியோனுக்கு "ஏழ்வாணன்” என்ற பெயரும் வழங்கிற்று. இலங்கையின் பண்டைய பெயர் "எழு” என்றும் அதனால் அங்கு வழங்கிய மொழியும் "எழு” என்று அழைக்கப்பட்டதாக சிங்கள வரலாற்று நூல்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. இந்த எழுநாட்டு மக்கள் "எழுவர்” என அழைக்கப்பட்டதாக புறநானூற்றில் “வால்மீகியார்” கூறுகிறார். இவ்வாறே மூநாட்டு மக்கள் "மூவர்” என அழைக்கப்பட்டனர். இவர்கள் கடலோடிகளாக வாழ்ந்தவர்கள். இக்கடலோடிகளே 'மூவர்ஸ் (Moors) என்று ஆங்கிலேயரால் பிற்காலத்தில் அழைக்கப்பட்ட கடலோடிகள். இவர்கள் திரைகடலோடி வாணிபம் செய்தவர்கள். மேற்கே எகிப்து, பாபிலோனிய நாடுகளுடனும் கிழக்கே சீனத்துடனும் இவர்கள் தொடர்பு கொண்டிருந்தனர். இத்தென் குமரிநாட்டை ஒருகுடைக்கீழ் ஆண்ட தென்னவன் "ஏழ்வாணன்".
முதலாவது கடற்கோளால் குமரிநாடு அழிந்துபோக மக்கள் பலரும் புலம் பெயர்ந்து வடக்கேயும் கிழக்கேயும் மேற்கேயும் சென்று வெவ்வேறு நாடுகளில் குடியேறினர். கடற்கோள் அழிவினின்றும் எஞ்சிய நிலப்பரப்பை மீண்டும் கட்டி எழுப்பி ஒளி வீசும் நாடாக ஆக்கிய பெருமை ஏழ்வாணனையே சாரும். இவ்வாறு செல்வச் செழிப்பும் பண்பாட்டுச் சிறப்பும் மிக்க நாட்டை ஒளி மிக்க நாடு எனும் பொருள்தர “எல்லம்" என்றும் "இலங்கை” என்றும் அழைத்தார்கள். “எல்லம்" என்ற பெயர் பிற்காலத்தில் "ஏழம்" ஆகவும் "ஈழம்" ஆகவும் திரிபடைந்தது. அதே போல “ஏழ்வாணன” “எல்வாணன்" ஆகினான். “எல்’ என்றால் ஒளி எனப் பொருள்படும். இதே சொல் வடமொழியில் இரவை குறிக்கும்.

Page 4
iv திருக்கோண்ாசல வைபவம்
தென்தமிழ் மக்களையும் அவர்கள் பண்பாட்டையும் வெறுத்த ஆரியர் "எல்வாணன் இடத்துக்கொண்ட குரோதம் காரணமாக, இருளை ஆள்பவன் எனும் பொருள்பட இராவணன் எனும் பெயரிட்டு அழைக்கலானார்கள்.
இலங்கை வரலாற்று நூல்களில் ஒன்றான “இராசாவளி"யில் துவாபர யுகத்தில் இலங்கையை இராவணன் என்ற மன்னன் ஆட்சிசெய்ததாகவும், அவன் காலத்தில் ஒரு பெரிய கடல்கோள் ஏற்பட்டதாகவும், அதில் அவனுடைய கோட்டையும், 25 மாளிகைகளும், இன்றைய மன்னாருக்கும் தூத்துக்குடிக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த 4 லட்சம் வீதிகளும் நீரில் ஆழ்ந்து போனதாகக் கூறுகிறது. இக்காலம் கி.மு. 2387 என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். ஒளியிழந்து இலங்காது (பிரகாசியாது) இருந்த நாட்டை இலங்கும் நாடாக மாற்றிய முன்னவனை, இலங்கை வேந்தன் என்று இதிகாசங்கள் புகழ்ந்து பேசும். இவன் ஒரு சிவபக்த னாகவும் சிறந்த சன்மார்க்கனாகவும் விளங்கினான். இலங்கையை சிவ பூமிய்ாக ஆக்கிப் பல சிவாலயங்களை கட்டினான். அவன் வழிபட்ட சிவத்தலங்களில் பிரதானமானது திருக்கோணேஸ்வரம்.
இப்புனிதக் கோவிலின் உண்மை வரலாறு இன்று மறைக்கப்பட்டும் திரிபுபடுத்தப்பட்டும் வருகிறது. அதனை தவிர்த்து உண்மை வரலாற்றை உலகறியச் செய்யவும், தமிழினம் தன்னுடைய பழம்பெரும் பாரம்பரியச் சிறப்பை அறிந்து அதனைக் காத்து தலைநிமிர்ந்து வாழவும், உண்மை வரலாற்று நூல்களைத் தேடிப் பதிப்பிக்க முன்வந்தோம்.
அதன் முதற் பணியாக 1889ம் ஆண்டளவில் ரீமான். வே. அகிலேச பிள்ளை என்பவரால் எழுதப்பட்ட திருக்கோணாசல வைபவம் என்னும் இக்கோவிலின் உண்மை வரலாற்று 1999ல் மறுபதிப்புச் செய்தோம்.
பல ஆர்வலர்களின் வேண்டுகோளுக்கிணங்க, திருக்கோணாசல வைபவத்துடன் கோணேசர் கல்வெட்டை பண்டிதர் ச. சுப்பிரமணியம் அவர்களின் பொழிப்புரையுடனும் பண்டிதர் இ. வடிவேலு அவர்களது திருக்கோணாசல நாகதம்பிரான் பற்றிய கட்டுரையுடனும் சேர்த்து மீண்டும் பிரசுரிக்கிறோம். தமிழ் உலகு எமது பணிக்கு ஆதரவு நல்கும் என்பது நம்பிக்கை.
பதிப்பாசிரியர். அடியார்க்கடியன் தத்துவ ஞானத் தவச்சாலை கொழும்பு. 20-06-2000

திருக்கோணாசல வைபவம் V
îA.--
இரண்டாம் பதிப்புரை
தேனினும் இனிய தெய்வத் தமிழ் இன்று திக்கெட்டும் பரவும் வண்ணம் பாரினில் பலபேர் பலவிதத்திலும் தம்மாலான பங்களிப்பை நல்கிக்கொண் டிருக்கும் இந்நாளில் யானும் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தினவு எடுத்துக்கொண்டிருந்தது. அப்போ, கோணேசர் ஆலயத்தில் அண்மையில் திருக்கோணமலையைச் சேர்ந்த நண்பர் ஒருவரால் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்ட மணிக்கூட்டுக் கோபுரக் கும்பா பிஷேக மலர் எனக்குக் கிடைத்தது. அம்மலரின் ஊடாக திருக்கோணேசப் பெருமானின் மகிமையையும், அக் கோவிலின் பல நூற்றாண்டுப் பின்னணி யைக் கொண்ட வரலாற்றையும் ஓரளவு அறிந்துகொள்ள முடிந்தது.
இப்புனிதக் கோவிலின் உண்மையான வரலாறு இன்று ஒருசிலரால் திரிபுபடுத்தப்பட்டு வருகிறது. இதனால் எமது வருங்கால சந்ததியினர் உண்மை வரலாற்றை அறியாது தவறாக வழிநடத்தப்படலாம். அதனைத் தவிர்க்க இக்கோவில் பற்றிய பழமையான வரலாற்று நூல்கள் ஏதும் கிடைக்குமா எனத் தேடிக்கொண்டிருந்த வேளையில், 1889ம் ஆண்டளவில் பூரீமான். வே. அகிலேசபிள்ளை என்பவரால் எழுதப்பட்டு 1950ல் அவரது வழித்தோன்றல் ழரீமான். அ. அளகைக்கோன் என்பவரால் வெளியிடப்பட்ட திருக்கோணாசல வைபவம் எனும் நூல்பற்றி அறிந்தேன். அதன் பிரதியை பெற முயன்றபோது அந்நூல் இன்று கிடைத்தற்கரியதாகவும் ஒரே ஒரு பிரதிமட்டும் ழரீமான். வே. அகிலேசபிள்ளை அவர்களின் வழித்தோன்றல் திரு அ. கணேசலிங்கம்அவர்களிடம் இருப்பதாகவும் அறிந்தேன்.
எனது திருமலை நண்பர் ஒருவர் மூலம் திரு. அ. கணேசலிங்கம் அவர்களுடன் தொடர்புகொண்டு அந்நூலை மறுபதிப்புச் செய்ய அனுமதியையும் ஒரு பிரதியையும் கேட்பித்தேன். திரு அ. கணேசலிங்கம் அவர்கள் பெருமனம்கொண்டு அதன் பிரதியையும் மறுபதிப்புக்கான அனுமதியையும் தந்துதவினார்கள். அத்துடன் இத்தகைய பயன்தரு முயற்சிகளை மேலும் விரிவுபடச் செய்யுமாறும் கேட்டுக்கொண்டு தமது ஆதரவையும் வாழ்த்துகளையும் நல்கினார்கள். அவர்களுக்கு எனது மனங்கனிந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்.
மேலும் எனது வேண்டுகோளுக்கிணங்க இந்நூல் வெளிவருவதற்கு ஆரம்பம் முதல் பக்கதுணையாக இருந்து, வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் வெளியிடவுதவிய நண்பர் திருமலை திரு. கணேஸ் கீர்த்திதாஸ் அவர்க ளுக்கும் எமது அன்புகலந்த நன்றிகள் உரியன.

Page 5
vi ܫ திருக்கோணாசல வைபவம்
இறவாத புகழுடைய தமிழ் நூல்கள் தமிழ் மொழியில் வருதல் வேண்டும் என்ற நோக்கில் சமயம், தத்துவம், அறவியல், வரலாறு முதலிய துறைகளில் நல்ல பல நூல்களை ஆக்கியும் அச்சேற்றியும் வரும் சித்தர் மெய்ஞான ஆய்வக பிரசுர உரிமையாளர் அடியார்க்கடியன் அவர்கள் இந்நூலை சிறப்பாக பிரசுரித்து உதவியமைக்கு எனது நன்றிகள் உரியதாகட்டும்.
காலங்கள் மாறும் போது கூடவே கருத்துகளும், கலாசாரங்களும் மாறலாம். ஆனால் உண்மை வரலாற்றை மாற்றவியலாது. அப்படி மாற்றினாலுங்கூட வரலாறு, மாற்றியவர்களை மன்னிக்காது. இது உலகறிந்த உண்மை. எனவேதான் பழமை வாய்ந்த நூலென ஒதுக்காமல் மாற்றம் ஏதும் செய்யாமல், கருத்துக்களை உள்ளது உள்ளபடியே புதுப்பொலிவுடன் பிரதியாக்கம் செய்து வெளியிடுகிறேன்.
எனது இந்த முயற்சிக்கு ஊக்கம் தந்து உறுதுணையாக இருந்த எனது பெற்றோருக்கும் எனது தாழ்மையான வந்தனங்களைச் சமர்ப்பிக் கின்றேன்.
ஓம் என்ற ஓங்கார ஒலிக்கு உருத்துடையவர் சிவன் ஓம் என்ற ஓங்கார ஒலிக்கு கருத்துடையவர் சிவன் ஓம் என்ற ஓங்கார ஒலிக்கு பலம் சேர்ப்பவர் சிவன் ஓம் என்ற ஓங்கார ஒலிக்கு நலம் சேர்ப்பவர் சிவன் ஓம் ஓம் ஓம் இதுவே ஓம் நமசிவாய எனும் மாமந்திரம்
5lbL g5tb60LJuJIT ஞானேஸ்வரன்
ஹம்பேர்க் - ஜேர்மனி. 1999 - 4 - 12

திருக்கோணாசல வைபவம் vii
முதலாம் பதிப்புரை
இற்றைக்கு அறுபது வருடங்களுக்கு முன் எமது தந்தையார் பூரீமான் வே. அகிலேசபிள்ளை அவர்கள் வெகு பிரயாசத்துடன் பல விடங்களிலும் சென்று சென்று தேடி எடுத்த நூல்களிலிருந்து தேர்ந்து எடுத்துக் கோத்து இச் சரித்திரத்தைத் தெளிவான வசனநடையில் எழுதியுள்ளனர். இதை அச்சேற்றி வெளியிடுவதற்குத் தடையாகப் பல வசதிக் குறைவுகள் நேர்ந்தமையின், வெளியிடாது 1-1-1910 ல் சிவபதமடைந்தார்.
இற்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன் இவ்விடம் வந்த பூரீமான் பொன். இராமநாதன் துரையவர்கள் இந் நூலைப் பற்றிக் கேள்விப்பட்டு, எமது தமையனார் அ. இராசகோன் அவர்களிடம் கேட்டு வாங்கிப் பார்வையிட்ட பின் இதை வெளியிடும்படி கேட்டார்கள். அவரும் அதற்கிசைந்து வெளியிடுவதற்கு எத்தனித்தார். பின் அவரும் நோய்வாய்ப் பட்டுத் தேகவியோகமானார்.
அக்காலந் தொடக்கம் திருக்கோணமலையிலுள்ள சைவ சமயிகள் பலரும் இந்நூல் இன்னும் சிலகாலமிருந்தால் சிதைந்து போகுமாகையால் இதனை அச்சேற்றி வெளியிடும்படி எம்மைக் கேட்டுக்கொண்டார்கள், நாமும் அவர் கேள்விக்கு உடன்பட்டுப் பிரகடனஞ்செய்து முடித்தோம்.
அ.அளகைக்கோன்.
திருக்கோணமலை,
விகிர்தி வருடம் 1950.

Page 6
viii திருக்கோணாசல வைபவம்
6.
பதிப்புரிமை
வரலாறு ஒரு வரப்பிரசாதம். இது எல்லாத் தேசத்திற்கும், எல்லா இன மக்களுக்கும் பொருந்தும். இப்படிப்பட்ட வரலாற்றுப் பின்னணியைத் தக்கவைக்க எடுக்கும் முயற்சி என்பது முழு மனித குலத்திற்குஞ் செய்யும் மகத்தான தொண்டு என்பதை நாம் முதற்கண் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் திரிபுபடுத்தப்பட்ட வரலாறுகளும் இன்று நம்மிடையே உலாவி வலம் வந்துகொண்டுதான் உள்ளன. இவற்றின் உள்நோக்கங்கள் ஒரு சிலரை மாத்திரம் திருப்திப்படுத்தப் பயன்படுவதனால் உண்மையான வரலாற்றில் உள்ள உயிரோட்டம் அவற்றில் இருப்பதில்லை.
கிழக்கிலங்கையின் பாரிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட திருக்கோணமலையும், திருக்கோணேசர் ஆலயமும் எவ்வித திரிபுக்கும் அப்பாற்பட்டது. காரணம், மகா வல்லமை பொருந்திய மாதொருபாகன் மாதுமை அம்பாள் சமேதராய் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஒரு புனித தலமாக 'இன்னும் விளங்குவதுதான்.
எனது மூதாதையரான ரீமான் வே. அகிலேசபிள்ளை அவர்களால் 1889ம் ஆண்டு ஆக்கப்பட்ட திருக்கோணாசல வைபவம் என்னும் நூல் பல பெரியோர்களின் இடையறாத வேண்டு கோளுக்கிணங்க 1950 ஆண்டு எனது தந்த்ையாரான ரீமான் அ. அளகைக்கோன் அவர்களால், பிரசுரித்து வெளியிடப்பட்டது. இன்று இவ்வரிய நூல் எம்மிடையே அருகி மறைந்து போய்விடுமோ என நான் கிலேசங்கொண்டிருந்த சமயம், Hamburg, Germany இல் வசிக்கும் இலங்கையரான திரு. தம்பையா ஞானேஸ்வரன் என்பவர் தனது தாய் தந்தையரின் வேண்டுகோளின்படி, அவரின் நண்பர் மூலமாக என்னைத் தொடர்புகொண்டு இவ்வரிய நூலை மீண்டும் வெளியிட்டு மக்களிடையே பிரபல்யம் அடையச் செய்யவேண்டும், குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினருக்கு கடலுடன் சூழ்ந்த திருக்கோண மலையின் உண்மைச் சரித்திரம் என்றும் அகலா பசுமையுடன் அவர்களின் மனங்களில் கமழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை எனக்கு வெளிப்படுத்தி இந் நூலின் மறுபதிப்புக்கு என்னுடைய சம்மதத்தைக் கோரினார். நான் எனது பூரண சம்மதத்தை அவருக்குத் தெரிவிப்பதோடு, இதுவரை காலமும் பத்திரப்படுத்திப் பாதுகாத்து வைத்திருந்த இந் நூலின் பிரதியை மறுபதிப்பிற்காக அவரிடம் கொடுத்து அவரது முயற்சிக்கு எனது ஆதரவை யும், ஆசிகளையும் நல்குகின்றேன். - ஓம் நமசிவாய.
.tތތޗަޗައިކޯރަ(ހަށިސީހޅި ސޮބޮއްޝަޞަޢަޑަހ イ。 ཉན་སར་བ་ན།།་་་་ : " وروسية - م AGANSHALINGAM / جترترہ
V U MAka T K AP A LA Y Mr G " Mrk, YSVANAT HA Svv AM S VAN KOVA

திருக்கோணாசல வைபவம் ix
முன்னுரை
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரால், பாடல்பெற்ற சிவக்ஷேத்திரங் களுள் ஒன்றாகிய திருக்கோணாசலத்தின் சரித்திரம் வடமொழி நூலாகிய தகூழிணகைலாய மான்மியத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருப்பதாக அறியக் கிடக்கிறது. அந்நூல் கோணைநாயகர் கோயிற் பூசகர்களாகிய இருபாகை முதன்மைகளிடமிருந்து, சில வருடங்களின் முன் மோசம்போய்விட்டது.
தென்மொழியில் செகராசசேகர மகாராசாவினாற் பாடப்பெற்ற தகூழிணகைலாய புராணமொன்றே இவ்விடத்து வழங்குகின்றது. அதுவன்றி பிற்காலத்தில் சில வித்துவான்களால் அந்நூலை ஆதாரமாகக்கொண்டு பாடப்பெற்ற கோணவரைப் புராணம், கரசைப் புராணம் எனும் நூல்களுமுள. அவைகளினும் திருக்கோணாசல மான்மியம் மிகச்சுருக்கமாகச் சொல்லப் பட்டிருக்கின்றது. இதுவன்றி, குளக்கோட்டு மகாராசாவினால் ஆக்கப்பட்ட கம்பைச் சாத்திரம், பெரிய வளமைப் பத்ததி, கல்வெட்டு என்னும் மூன்று நூல்களுமுண்டு. அவைகளில், குளக்கோட்டு மகாராசா திருப்பணி செய்த சரித்திரமும், கோணைநாயகர் கோயிற் சட்டதிட்டங்களும் சொல்லப்பட் டிருக்கின்றன.
திருக்கோணாசல மான்மியத்தை அறியப் பேரவாக்கொண்டிருக்கும் நம் சுதேசிகளுக்கு மேற் சொல்லப்பட்ட நூல்கள் கிடைப்பது மிக அருமையா யிருக்கின்றது. அதுபற்றி, மேற்சொல்லப்பட்ட நூல்களை மிகுந்த பிரயாசத் தினாற் சம்பாதித்து, அவைகளிலுள்ள சரித்திரங்களனைத்தையும் ஒன்றாகத் திரட்டி, யாவரும் எளிதில் அறியும்பொருட்டு வசனநடையிலியற்றி அரங் கத்தில் விடுத்திருக்கின்றேன்.
ஆயினும், தகூழிணகைலாய மான்மியம் என்னுந் தேன் சமுத்திரத்தை உண்டு தெவிட்டியிருக்கும் மகாத்துமிகள், அச்சமுத்திரத் தினின்றும் உற்பத்தியான சிறு கைவாய்க்கால் போன்ற இந் நூலைத் தம் உள்ளங்கைத் தேனாகக் கருதுவார்களாக.
ஆன்றோர் இதனுருவத்தைக் கண்டு இகழாது, காணப்படும் பிழை களைத் திருத்திச் சுத்தமாக்கிக் கைக்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டு நிற்கின்றேன்.
இங்ங்ணம் ஆக்கியோன். திருக்கோணமலை, சர்வதாரி. (1889)

Page 7
Χ திருக்கோணாசல வைபவம்
மதிப்புரை
Dr.K.Kanapathipillai, B.A., Phd. (London),
Vidhvan Annamalai University, Professor of Tamil University of Ceylon.
திருக்கோணமலை ஈழநாட்டிலுள்ள பழைய ஊர்களுள் ஒன்று. இது பலவகையாலும் சிறப்புற்று விளங்கியது. மிகப்பழைய காலந்தொட்டே இது தமிழ்க் கலைக்கும் பண்பாட்டிற்கும் நிலைக்களமானது. சைவ மக்களால் தக்ஷணகைலாசம் என்னும் பெயரால் அழைக்கப்பட்டுத் தூய்மை செறிந்த இடமாகப் போற்றப்பட்டது. சைவ நாயன்மார்களுள் ஒருவராகிய திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகளின் தேவாரத் திருப்பதிகத்தைப் பெற்ற பெருமையும் திொன்மையும் வாய்ந்தது. நீர்வளத்தை அளிக்கும் குளங்கள் பல அண்மையில் உள்ளமையால் குறைவற்ற உணவுப்பேற்றினை உடையது. இயற்கை பாதுகாப்பமைந்த பெருந்துறைமுகத்தைக் கொண்டுள்ளமை யினால் இன்று ஆசியநாடுகளிலுள்ள சிறந்த கடற்படைத் தளங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இத்துணைப் பெருமைவாய்ந்த திருக்கோண மலையோடு தொடர்பு பூண்ட வரலாறுகளும் புராணக்கதைகளும் பலவுள. நம் கலையும் பண்பாடும் வீழ்ச்சியுறாது வளரவேண்டுமாயின் இவற்றை யெல்லாம் நாம் கட்டாயமாக அறிந்திருக்கவேண்டும். அவ்வறிவைப் பெறு தற்கு அறிஞர் அகிலேசபிள்ளையவர்கள் ஆராய்ந்து தொகுத்தியற்றிய "திருக்கோணாசல வைபவம்” என்னும் இந் நூல் பெரிதும் பயன்படும் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை.
இலக்கண இலக்கிய அறிவிற் சிறந்தவரும் கவிஞருமாகிய பிள்ளை யவர்கள் சமயப் பற்றும் மிகுதியாயுடையவர்கள். அது இந்நூலைப் படிப்பவர் எவர்க்கும் எளிதிற் புலனாகும். ஆசிரியர் இந்நூலைத் தவிர, கோணை நாயகள் பதிகம், வெருகல் சித்திரவேலாயுதசுவாமி பதிகம், விசாலாட்சியம்மை பெருங்கழிநெடில் விருத்தம் முதலாக இப்பட்டினத்தோடு தொடர்பு பூண்ட பல தோத்திர நூல்களையும் இயற்றியுள்ளார். அறிஞர் அகிலேசபிள்ளை அவர்கள் புரிந்த அருந்தொண்டிற்குத் தமிழுலகமும் சைவ உலகமும் என்றும் கடப்பாடுடையன. பிள்ளையவர்கள் இயற்றிய நூலை அச்சேற்றி உலகிற்குப் பயன்படச்செய்த அவர் புதல்வர் அளகைக்கோன் அவர்க
ளுக்கும் நாம் என்றும் நன்றி உடையவராயிருத்தல் வேண்டும்.
க.கணபதிப்பிள்ளை.
விகிப்தி வருடம் ஆவணி மாதம் ሳ•ሓbዛ ( 18)Ib [bff 6fi

திருக்கோணாசல வைபவம் xi
6. மதிப்புரை கோணைநாயகர் கோயில் ஆதீனவாசிரியர் பிரம்மறி கு.கு.கா.கு.ப.கு. யோகீஸ்பரக்குருக்கள் அவர்கள் எழுதியுதவியது
தகூடிணகைலாசமாகிய திருக்கோணாசலத்தின் வரலாற்றுச் செய்தி களையும், சிறப்புக்களையும் முறையாகவும் தொடர்ச்சியாகவும் பண்டைக் காலச் சைவமக்கள் எவரும் எழுத முன்வராதிருப்ப ரீமான் வே. அகிலேச பிள்ளை அவர்கள் பல வருடங்களாக ஆராய்ச்சிசெய்து தொடர்புற இந் நூலைக் கரலிகிதப் பிரதியாக எழுதி, 1889-ம் ஆண்டில் நிறைவு செய்து வைத்தார்கள்.
குளக்கோட்டு மகாராசாவாற் கட்டப்பட்ட ரீ கோணைநாயகரது ஆலயமும் மற்றும் திருப்பணிகளும் பின் வந்த பறங்கியராற் கையாளப்பட நேர்ந்த அமையத்தில், மனம் பொறாத சில சைவமக்கள் ஆலயத்தில் உள்ள விக்கிரகங்கள், மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் ஆதியவற்றைப் பாதுகாக்கும் முறையில் எடுத்து, நகரத்தின் சில ஒதுக்கிடங்களில் குழி தோண்டிப் புதைத்து மறைத்ததாகக் கர்ணபரம்பரையான வதந்திகள் உள.
தற்போது சில ஆண்டுகளின் முன்னதாக, திருக்கோணாசல நகரத்தின் ஒரோர் பகுதிகளில் பூரீ கோணைநாயகரது ஆலயப் பொருட்கள், விக்கிர கங்கள் ஆதியவைகளில் சில பூப்பரப்பின் கீழ் எடுக்கப்பட்டதாக வதந்திகள் உண்டு. தற்போது சில தினங்களின் முன்னதாக திருக்கோணமலை நகர சபையார் தோண்டுவிக்கத் தொடங்கிய ஒரு கிணற்றில் சுமார் மூன்று அடி ஆழத்தில் மூன்று தாம்பர விக்கிரகங்கள் எடுக்கப்பட்டு, நகரசபை மண்ட பத்தில் சைவமக்களுடைய பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததைக் கொண்டு, கர்ணபரம்பரையாக நாம் அறிந்துள்ள பழங்காலச் சரித்திரங்கள் உண்மையென்று தீர்மானிக்கலாம்.
பறங்கிக்காரர் கோணேசராலயத்தைக் கைப்பற்றியவுடன், அதன் தங்கமயமான கோபுரச் சிறப்பையும், அமைப்பையும் கண்டு வியந்து, அக் கோணேசராலயத்தைப் படம்பிடித்து வைத்துக் கொண்டுதான் தரைமட்டமாக இடித்து, அக் கற்களைக் கொண்டுதானே தற்போது அரசாங்கப் பாதுகாப்பு ஸ்தலமாக உள்ள கோட்டையின் புறமதில்களை கட்டுவித்தனரென்பர். அவர்கள் அப்போது பிடித்த கோணைநாயகரின் ஆலயப் படம் போர்த்துக்கல் தேசத்தில் தற்போது இருப்பதாக அறிந்து, அங்கிருந்து அதன் பிரதிப்படம்

Page 8
xii திருக்கோணாசல வைபவம்
ஒன்று இங்குள்ள சில சைவமக்களின் முயற்சியால் எடுக்கப்பட்டுள்ளது. அதன் அமைவையும் சிறப்பையும் உற்றுநோக்கிய சைவமக்கள் பூரீ கோணைநாயகரது ஸ்தலத்தில் ஓர் ஆலயத்தை அமைத்து, தற்போது அகப்பட்ட விக்கிரகங்களை யெல்லாம் ஆங்குப் பிரதிட்டை செய்து பூசை நடைபெறச் செய்ய வேண்டுமென அவாவுறுகின்றனர். பின்னர் இங்ங்னமெல்லாம் நிகழவிருந்த “திருக்கோணாசல வைபவத்தைச் சீரழியாது சிறப்புறத் தொடர்புசெய்து முன்னர் எழுதிவைத்த பூரீமான் வே. அகிலேசபிள்ளை அவர்கட்கும், அக்கரலிகித பத்திரத்தையெல்லாம் பேணிவைத்துத் தற்போது அச்சிற்பதிப்பித்துச் சைவமக்கட்கு உதவிய அன்னார்தம் புத்திரன் ரீமான் அ. அளகைக்கோன் அவர்கட்கும் சைவ உலகம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது.
பிரம்மறி கு.கு.கா.கு.ப.கு யோகிஸ்பரக்குரு.
விகிர்தி வருடம் ஆவணி மாதம் கஅ (18)ந் நாள்

திருக்கோணாசல வைபவம் xiii
6. சிறப்புப் பாயிரம்
யாழ்ப்பாணம் நவாலியூர் திரு. க. சோமசுந்தரப்புலவர் அவர்கள் எழுதி உதவியது
கலித்துறை
வானாடருந் தொழுங் கோணா சலதல மான்மியத்தை மேனாளுரைத்தநன் னுாலுள் விழுமிய வேதிரட்டித் தானாக வேயொரு நூலுரைத் தான்தமிழ் நன்கறிந்த ஆனாப் பெருஞ்சீ ரகிலேச பிள்ளை அருந்தவனே. (1)
வண்டு பலமலர் நாடிச்செந் தேனை மகிழ்ந்தெடுத்துக் கொண்டொரு கூட்டினிற் கூட்டிவைத் தாலெனக் கூறுபன்னூல் கண்டு விழுமிய சேர்த்தெடுத் தேகற்ற வர்மகிழ்ச்சி கொண்டு சிறந்திடக் கோணேசர்மான்மியங் கூறினனே. (2)
தொழுவார்க்கருள் திருக்கோணேசன் பாதத்துணை பிடித்தே வழுவா நெறிசே ரகிலேச பிள்ளை வரைந்தவந்நூல் அழியா தவன் தருமைந்த னளகையர் கோனருளால் எழுதா வெழுத்திலிடுவித் துலகினுக் கீந்தனனே. (3)
எப்பா வலர்க்கு மியையமுக் கோண வியல்பையுரை அப்பா வலனுநல் லச்சிற் பதிப்பித் தளித்தவனும் இப்பாலுறுதிகள் யாவையு மெய்தியிமையவரோ டப்பா லுலகினும் பல்லூழி வாழி யமர்ந்தினிதே (4)
y - க.சோமசுந்தரப்புலவர்.
நவாலியூர் 9-8-SO

Page 9
Xiv
பொருளட க்கம்
பதிப்புரை
இரண்டாம் பதிப்புரை
முதலாம் பதிப்புரை
பதிப்புரிமை
முகவுரை
மதிப்புரைகள்
சிறப்புப் பாயிரம்
பொருளடக்கம்
திருக்கோணாசல வைபவம் திருக்கோணமலைச் சரித்திரம் மச்சேந்திரபருவதச் சரித்திரம்
மாவலிகங்கைச் சரித்திரம்
அகஸ்தியமுனிவர் சரித்திரம்
இர்ாவணன் சரித்திரம்
விட்டுணுமூர்த்தி சரித்திரம் கன்னிகைத்தீர்த்தம் உற்பத்தியான சரித்திரம் இராமர் சரித்திரம்
வரராமதேவர் சரித்திரம் குளக்கோட்டுமகாராசா திரிகோணாசலத்தில் திருப்பணி செய்து . ஆடகசெளந்தரி சரித்திரம்
திருக்குளச் சரித்திரம் திருக்கோணைநகரிற் குடியேறிய சரித்திரம் குளக்கோட்டுமகாராசா மணம்புரிந்த சரித்திரம் குளக்கோட்டுமகாராசா சிவபதமடைந்த சரித்திரம் கயவாகுராசன் சரித்திரம்
நளச்சக்கரவர்த்தி சரித்திரம் மாருதப்புரவீகவல்லி சரித்திரம்
புவனேகவாகு சரித்திரம் பரராசசேகரன், செகராசசேகரன் சரித்திரம் ஆரியச்சக்கரவர்த்தி சரித்திரம் தனியுண்ணாப் பூபாலவணிணிமை கனகசுந்தரப்பெருமாளிடம் . தம்பலகமச் சரித்திரம்
தற்கால சரித்திரம் வெள்ளைவில்வத்தடி கோணநாயகர் கோயிம் சரித்திரம் குளக்கோட்டுமகாராசா மதுரையிலிருந்து அழைத்து வந்த . வெருகற் சரித்திரம் கோணேசர் கல்வெட்டு பொழிப்புரையுடன் இலங்கையிலுள்ள வரலாற்றுத் சைவாலயங்களும் தீர்த்தங்களும் திருக்கோணமலைத் திருப்பதிகம் தேவாரம் திருப்புகழ் திருக்கோணாசல நாகதம்பிரான் திருக்கோணேசர் பஜனை
அநுபந்தம்
பின்னுரை
பக்கம் iii
vii viii ix
xiii Χίν
;
12 15
19 23
25
25 28 32 34 40 45 46
47
51
51 51
52
52 53 57
59 60 6 66 69
102
104
113 21 123 126

自导999@@巨时四间唱点四용神官그6 的gge용되‘ෆශේෂදාම(fඩ 'gger 12996 ශ්‍ර官83日官制 :편im后363世 편홍日官府3

Page 10
bold
புலவர் மரீமான் வேலுப்பி
திருகோன
 

ளை அகிலேசபிள்ளை
OIL 60)(6)

Page 11
றபட உதவி நா.கணபதிப்பள்ளை
D
Guthrig (Barr Utto ("TBOOTC GUI ஆலயம் இடித்து அழிக்கப்பட்ட போது விடுபட்ட ஆலயத்தின் கற்றுாண் ஒன்று tn 60,000u ydy cyfu') efo 44,000 (Lith அமைந்திருந்த இடத்தை 15 GOGOIGNY, ir GJAT, hoy, TTT RAJONO IL CUID TÜL 36ö ஸ்தாபிக்கப்பட்டு இன்று இப்படிக் காட்சியளிக்கிறது.
 
 
 
 

நிழற்பட உதவி: நா.கணபதிப்பள்ளை
கோணேஸ்வரர் கோவில் - விநாயகர் விக்கிரகம்

Page 12
நிழற்ப உதவி. நா.கணபதிப்பள்ளை
தற்போது உள்ள கோணேஸ்வர ஆலயத்தைக் கட்டிவித்த சிவபக்தர் உயர் திரு சிவரத்தின உடையார் அவர்கள் மூல ஸ்தானத்தில் ஸ்தாபிப்பதற்காக, நருமதை ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சுயம்பு லிங்கத்தை ரிஷிகேசம் சுவாமி சிவானந்த சரஸ்வதி மஹாராஜ் அவர்களைக் கொண்டு ஆசிர்வதிப்பித்து எடுத்து வருகிறார். இந்த லிங்கம் தான் இன்று முல ஸ்தானத்தை அலங்கரிக்கிறது.
 

நிழற்பட உதவி; நா.கணபதிப்பள்ளை
இன்று காட்சியளிக்கும் கோணேஸ்வர ஆலயத்தைக் சட்டிவித்த சிவபக்தர் உயர் திரு சீவரத்தின உடையார் அவர்களால் நருமதை ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டு மூல ஸ்தானத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சுயம்பு லிங்கம்

Page 13
நிழற்பட உதவி: நா.கணபதிப்பள்ளை
மாதுமைசமேத கோணேஸ்வரர்
| உதவி: நா.கணபதிப்பள்ளை
கோணேஸ்வரர் கோவில் விக்கிரகங்கள்
 
 

炎
கணபதிப்பள்ளை
நிழற்பட உதவி; நா
ர் கோவில்
திருக்கோணேஸ்வர
பிகா நடேஸ்வரர்
○LD

Page 14
நிழற்ப உதவி. நா.கணபதிப்பள்ளை
336੦੦606ਪ ਤੇਰT660 - 66 6ਪੰਥਧ ਧ56
மலையில் அமைந்திருந்த மஹாவிஷ்ணு கோவிலில் இருந்த - லக்சுமி சமேத மஹாவிஷ்ணு சிலைகள்.
 
 

அலங்காரத்துடன் மூல லிங்கேஸ்வரர்

Page 15
திருக்கோணேஸ்வரத்தில் திரு. கிர்த்திதாஸ் அவர்களால் அண்மையில் அமைக்கப்பட்ட ஆலய மணிக் கோபுரம்
 

திருக்கோணேஸ்வரம் - தென்கயிலை மலை 9 ਰੰਥੀt6 அமைந்த பழமைவாய்ந்த கல்ஆல் (ஸ்த்தல விருட்சம்)
கோணேஸ்வரத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பஞ்சமுக நாகேஸ்வரர் (ஐந்துதலை நாகம்) வாழும் புற்று

Page 16
நிழற்பட உதவி: நா.கணபதிப்பள்ளை
6000 ஆண்டுகளுக்கு முன் இராவணன் தன் தாயாருக்கு அந்தியக் கடமைகள் செய்வதற்கா கண்ணியாவில் அமைத்த ஏழு வெண்ணிர் ஊற்றுக் கிணறுகள்
 

திருக்கோணமலை - கண்ணியாவில் அமைந்துள்ள சிவன் கோவில் (இன்றைய நிலை)
கண்ணியாவில் அந்துள்ள 7 வெண்ணிர் ஊற்றுக் கிணறுகளின் இன்றைய தோற்றம்

Page 17
துவாபரயுகத்தில், இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன் இலங்கையை ஆண்டவனும், தென் கலையை பெயர்த்தவனுமான,
தமிழ் வேந்தன் இராவணனின் ஆற்றலை வெளிப்படுத்தும்
கற்பனா சொரூபம். கோயிற் கோபுரத்தல் அமைந்துள்ளது
இராவணன் தென்கயிலையை பெயர்ப்பதற்காக மலையைத் தன்
வாலினால் வெட்டியதால் ஏற்பட்ட இராவணன் வெட்டு
 
 

6
வீரகத்தி விநாயகர் துணை.
திருக்கோணாசல வைபவம்
புண்ணிய பூமியாகிய பரதகண்டத்தில் உள்ள பல நாடுகளுள் மிகவுஞ் சிறந்து விளங்குகின்ற ஈழநாடாகிய இலங்கையிலே தக்ஷணகைலாயம், திருக்கேதீஸ்வரம், முனீஸ்வரம், கரசையம்பதி, கண்டகிவடகாந்தாரம், குமரபுரம், மாவிட்டபுரம், வல்லிபுரம், பொன்னாலயம், பிரளயவைரவர் கோயில், திருக்கோயில், நகுலகிரி, சோதிஷ்காமகிரி, உகந்தகிரி, கந்தபருவதம், மச்சேந்திரபருவதம், தேனுபருவதம், திரிகூடபருவதம், சிவசோதிபதம், சமனாசலம், விநாயகாசலம், சப்பிரகாமம், சுவேலகிரி, அசுவகிரி, கழனிமலை முதலிய புண்ணிய ஸ்தலங்களும் மாவலி கங்கை, மாணிக்க கங்கை, காவேரி கங்கை, நகுலகிரித் தீர்த்தம், கன்னியாத் தீர்த்தம், நவக்கிரித் தீர்த்தம், யமுனாரித் தீர்த்தம், அமுதகளி முதலிய புண்ணிய தீர்த்தங்களும் உண்டு. இவைகளுள் தகூடிணகைலாயம், திருக்கேதீஸ்வரம் என்னும் இரண்டு ஸ்தலங்களும் சிவபெருமானுக்கும், வல்லிபுரம், பொன்னாலயம் என்னும் இரண்டு ஸ்தலங்களும் விட்டுணுவுக்கும் கனன்டகிவடகாந்தாரம், சோதிஷ்காமகிரி, கந்தபருவதம் என்னும் மூன்று ஸ்தலங்களும் சுப்பிரமணியருக்கும் விசேஷ ஸ்தலங்களாகும். இலங்கை யானது மகாமேரு பருவதத்தின் சிகரங்களுள் ஒன்றை வாயுபகவான் பறித்துத் தென் சமுத்திரத்தின் மத்தியில் வைத்ததினால் உற்பத்தியானதாலும், தக்ஷணகைலாயம் இருப்பதாலும், குபேரன் முதலிய தேவர்களிருந்து அரசு செய்தமையாலும், பரதகண்டத்திலுள்ள மற்றுந் தேசங்களைப் பார்க்கிலும் மிகுந்த விசேஷமுடைய தாயிருக்கின்றது.
* இலங்கையின் வரலாற்றுத் தொன்மைவாய்ந்த சைவாலயங்கள் - பார்க்க பக்கம் 102

Page 18
2 திருக்கோணாசல வைபவம்
திருக்கோணமலைச் சரித்திரம்
திருக்கைலாச மலையிலே சிவபெருமான் அனந்தகோடி சூரியப் பிரகாசமுள்ள சிங்காசனத்தின் மேலே தமது அருட்சத்தியாகிய உமாதேவி யாரோடு இடப வாகனத்தின் மேல் வீற்றிருந்தருளினார். அப்போது பிரமா, விட்டுணு, இந்திரன் முதலிய தேவர்களும், கணநாதர்களும் சிவபெருமான் முன்பு வந்து, அட்டாங்கமும் பூமியிற்றோயும்படி விழுந்து திருப்பாதங்களை நமஸ்கரித்து எழுந்து நின்றார்கள். சிவபெருமான் அவர்கள் மீது திருவிழிக் கடை பரப்பி அனுக்கிரகம் பாலித்தார். அதன் பின்பு சிவபெருமான் சகல தேவர்களையும் நோக்கித், தேவர்களே! பிரமாவுக்குப் படைத்தற் றொழிலை யும், விஷ்ணுவுக்குக் காத்தற் றொழிலையும், உருத்திரனுக்கு அழித்தற் றொழிலையும், ஆதிசேடனுக்குப் பூமியைத் தாங்குந் தொழிலையுங் கொடுத்தோம் என்று சொல்லியருளினார். அதுகேட்ட வாயுபகவான் சிவபெருமான் முன்பு வந்து திருவடிகளை வணங்கி வாய்புதைத்து நின்று, சுவாமி! பதின்னாலு உலகங்களிலும் இயங்குகின்ற என்னைப் பார்க்கிலும் இந்தச் சேடன் மிகுந்த வலிமையுடையவனா? என்றான். அது கேட்ட ஆதிசேடன் அதிக கோபங்கொண்டு, கால மதியுடைய வாயுபகவானே! எப்போதும் என்னுடைய போசனமாய் இருக்கப்பட்ட உனக்கு என்ன பலமிருக்கிறது? என்றான், அப்போது வாயுபகவான் ஆதிசேடனை நோக்கி, சேடனே! உன்னைப் போல நான் கெரு விக்குப் பயப்படமாட்டேன். ஆனால் உன்னுடைய ஆன்மாவையும் நான் தாபரிக்கிறேன் என்பதை நீ அறியாமல் இந்தச் சபையிலே உனது வீரத்தைக் குறித்துப் புகழ்ந்து பேசினாய். ஆயின், சிவபெருமானுடைய உத்தரவைப் பெற்று நாமிருவரும் யுத்தஞ் செய்யலாம் வருவாயாக என்று அழைத்தான். ஆதிசேடனும் அதற்கு இசைந்தான். அதன் பின்பு இருவரும் சிவபெருமானிடம் உத்தரவு பெற்று யுத்தஞ் செய்ய எத்தனிக்கும் போது, தேவர்கள் இருவரையும் நோக்கி, நீங்கள் யுத்தஞ் செய்து உங்கள் வீரபராக்கிரமத்தை எங்களுக்குக் காட்ட எத்தனித்து விட்டீர்கள். ஆனால் நாங்கள் சொல்லும் பிரகாரமே நீங்கள் நடக்க வேண்டும். அது எவ்விதமெனில், ஆதிசேடன் திருக்கைலாச மலையின் சிகரங்களைத் தனது பனாமகுடங்களினால் மறைத்துக் கொள்ள வேண்டும். அப்போது வாயு பகவான் தனது வல்லமையினால் ஒரு சிகரத்தையாவது பறித்தெடுக்க வேண்டும். அப்படிச் செய்வீர்களானால் உங்கள் வல்லபத்தை நாங்கள் அறியலாம் என்றார்கள். தேவர்களுடைய வாக்கை இருவரும் கையேற்ற பின்பு, ஆதிசேடன் வெள்ளிமயமாகிய திருக்கைலாய மலையை அடியிலிருந்து சுற்றிக் கொண்டு போய் முடிகளைத் தனது பணாமகுடங்களினாலே மறைத்துக் கொண்டிருந்தான். அப்போது வாயு பகவான் மிகுந்த பராக்கிரமத்துடன் பிரசனன்டமாக வீசினான். இவர்கள் செய்யும் கொடிய யுத்தத்தினால் அண்ட கோளங்கள் அசைந்தன. சப்த

திருக்கோணாசல வைபவம் 3
சமுத்திரங்களும் வரண்டன. அட்ட நாகமும், அட்ட யானையும், அட்ட குலபருவதங்களும் தத்தம் இருப்பிடம் விட்டு அடி பெயர்ந்தன. முகிற் கூட்டங்கள் தீய்ந்தன. அக்கினி பகவானும் வெப்ப மாகினன். உலகத்திலுள்ள சராசரங்களெல்லாம் அச்சம் கொண்டன. பிரமா, விட்டுணு, இந்திரன் முதலிய தேவர்களெல்லாம் அயர்ச்சி கொண்டு, சிவபெருமான் முன்பு வந்து, திருப்பாதங்களை வணங்கி, வாய் புதைத்து நின்று, சுவாமி! ஆதிசேடனும் வாயு பகவானுஞ் செய்கின்ற கொடிய யுத்தத்தினால் அண்ட புவன சராசர மனைத்தும் இமைப்பொழுதுக்குள்ளாக ஒழிந்து விடுவதற்கு ஏதுவாயிருக்கின்றது. ஆகையால் தேவரீர் திருவுளமிரங்கிக் கிருபை பாலிக்க வேண்டும் என்று விண்ணப்பஞ் செய்தார்கள்.
அப்போது சிவபெருமான் பிரமாவை நோக்கி, பிரமனே! இந்த உத்தர கைலாய பருவதத்திலே தெற்குப் பக்கத்திலுள்ள திரிகோண சிகரத்திலோர் கைலாயபீடத்தைச் சீக்கிரம் உண்டாக்குவாயாக என்று திருவாய்மலர்ந் தருளினார். உடனே பிரமாவானவர் உத்தரகைலாயமானது எவ்வித அலங் காரங்களை உடையதாக இருக்கின்றதோ அதுபோலத் திரிகோண சிகரத் திலே மிகவும் உத்தமமான ஒரு கைலாயபீடத்தைச் சீக்கிரத்திலே செய்து முடித்தார். அதன் பின்பு சிவபெருமான் அனந்தகோடி சூரியர்களது ஒளியைப் போலும் பேரொளியையுடைய சொர்ண மயமான இலிங்க ரூபியாகிப் பிரமாவினாற் சிருட்டிக்கப்பட்ட திரிகோண கைலாயபீடத்தின் மீது உலகமாதா வாகிய உமாதேவியார் இடப்பாகத்தின் மேவ எழுந்தருளியிருந்து, ஆதி சேடனை நோக்கி, சேடனே! நான் உனக்கு ஓர் இரகசிய வார்த்தையைச் சொல்லப் போகிறேன் மிகுந்த கவனத்தோடு கேட்க வேண்டும் என்று சொல்லியபோது, ஆதிசேடன் தனது ஆயிரந்தலைகளிலே ஒருதலையைச் சாய்த்தான். அப்போது சிவபெருமான் சேடனை நோக்கி, “சேடனே! கேட்பா யாக, குமரிக் கண்டமானது மற்றைய கண்டங்களைப் பார்க்கிலும் மிக விசேஷ முடையது. அதுவன்றித் தக்ஷண திசையில் உள்ளவர்களையும் இரகூழிக்க நாம் சித்தங்கொண்டோம்” என்று திருவாய் மலர்ந்தருளினார். ஆதிசேடன் தனது தலையிலே ஒன்றைச் சாய்த்துச் சிவபெருமானுடைய திருவாக்கைக் கவனமாகக் கேட்குந் தருணத்திலே, வாயுபகவான் சிவபெரு மான் எழுந்தருளியிருந்த திரிகோண சிகரத்தையும் அதற்குப் பக்கத்திலுள்ள வேறு இரண்டு சிகரங்களையும் பறித்தெடுத்தான். அதுகண்ட சிவபெருமான் வாயு பகவானை நோக்கி வாயுவே, இப்போது நீ பறித்தெடுத்த மூன்று சிகரங் களிலே திரிகோண சிகரத்தைவிடுத்து, மற்றை இரண்டு சிகரங்களில் ஒன்றைத் தொண்டை நாட்டிலும் ஒன்றைச் W சோழ நாட்டிலுங் கொண்டுபோய்
தொண்டை நாட்டில் வைக்கப்பட்ட சிகரம் திருக்காளத்தியெனப் பெயர்பெறும். சிலந்தி, யானை, கண்ணப்பநாயனார், சிவகோசரியார், நக்கீரர் முதலியவர்கள் முத்தியடைந்த ஸ்தலம்.
V சோழ நாட்டில் வைக்கப்பட்ட சிகரம் திருச்சிராப்பள்ளியெனப் பெயர்பெறும். செவ்வந்திப் புட்பத்துக்காகச் சிவபெருமான் மேற்கு முகமான ஸ்தலம்.

Page 19
திருக்கோணாசல வைபவம்
வைத்து வருவாயாக என்று திருவாய் மலர்ந்தருளினார். வாயு பகவான் சிவபெருமானுடைய திருவாக்குப் பிரகாரஞ் செய்து முடித்தான். அதன் பின்பு சிவபெருமான் வாயு பகவானை அழைத்து, நாம் எழுந்தருளியிருக்கும் திரிகோண சிகரத்தை எடுத்துக்கொண்டு போய் ஈழநாட்டிலே சமுத்திரக் கரையிலே வைப்பாயாக என்று சொல்லி அருளினார். அதைக் கேட்ட வாயுபகவான் வசந்தருதுவாகிய சித்திரை மாதத்திலே ஞாயிற்றுக் கிழமையும் பூரணைத் திதியும் அத்த நக்ஷத்திரமும் விருத்தி யோகமும் பத்திர கரணமுங் கூடிய சுபதினத்திலே குரு ஒரையிலே சனி முதலிய கிரகங்கள் மகர முதலிய ஆட்சி ராசிகளிலே இருக்க, இடப லக்கினத்திலே சிவபெருமான் வீற்றிருந்தருளிய திரிகோண சிகரத்தை எடுத்துவந்து, திரிகூடபருவதத் துக்கு முப்பது யோசனை தூரத்திலே சமுத்திரக் கரையிலே வைத்தான். அன்று தொடக்கம் அது தகூடிணகைலாயம் எனவும் திரிகோணமலை யெனவும் பெயர் பெற்றது.
திருகோணமலையானது முத்தி நகரங்களுள் ஒன்றாகிய மதுரைக்கு கிழக்குப் பக்கமாகவிருக்கும். திருகோணமலை பூமியின் கீழாக ஒரு யோசனை ஆழமும், பூமியின் மேலாக ஆறு தண்டம் உயரமும், பதினைந்து தண்டம் அகலமும் உள்ளதாயிருக்கும். இத் திரிகோண பீடத்திலே ஒன்பது பிரகாரமுண்டு. முதலாவதாகிய நவரத்தினப் பிரகாரத்தின் நடுவிலே கற்பகவிருகூடி மூலத்திலே ஆயிரம் ரத்தினத் தூண்களும், நூறு பொற் றுாண்களும் நிரைத்துச் சிந்தாமணியாற் செய்யப்பட்ட ஓர் இரகசிய ஆலய முண்டு. அவ்வாலயத்துக்குப் பரமானந்தம் என்னும் பெயருண்டு. இந்த ஆலயமானது ஆறு மண்டபங்களையும், விசித்திர ரத்தினப்பிரகாச முள்ள நாலு கோபுர வாயில்களையும், கொடிகளால் விளங்குஞ் சிகரங்களையும், இரத்தினத் தோரணங்கள் அசைகின்ற சாளர வாயில்களையும் உடையதாக இருக்கும். அந்தச் சிந்தாமணி ஆலயத்தின் நடுவே சூடாமணியாற் செய்யப் பட்ட விமானம் ஒன்றுண்டு அதன் கொடிமுடியானது கோடி சந்திரப்பிரகாசமும் வெண்மை நிறமும் மூன்று கோணமும் பராசத்தியின் ரூபமும் உடையதாக இருக்கும். அந்தச் சூடாமணி விமானத்தினுள்ளே பஞ்சப் பிரமமயமா யுள்ள இரத்தின மஞ்சத்தின் மத்தியிலே பதுமாசனத்தின் மீதிலே கோணைநாயகர் ஒரு திருமுகமும், மூன்று திருக்கன்ைகளும், புட்பபாணம், கருப்புவில், அங்குசம், பாசம் என்பவைகளோடு கூடிய நான்கு திருக்கரங்களும், அனந்தகோடி சூரியப் பிரகாசமும், புன்சிரிப்பும் உடையராய், உலகமாதாவும் தாமெடுத்த மூர்த்தத்துக்கு ஏற்ற வடிவுகொண்டவரும் ஆகிய அன்னமென்னடையம்மை என்னுந் தமது தேவியார் இடப்பாகத்தின் மேவ வீற்றிருந்து அருளுவர்.
இரண்டாவதாகிய மரகதப் பிரகாரத்திலே புத்தி என்னுஞ் சத்தியோடு மகேசுரன் வசிப்பார். மூன்றாவதாகிய சூரியகாந்தப் பிரகாரத்திலே பதினொரு

திருக்கோணாசல வைபவம் 5
உருத்திரர்கள் வசிப்பார்கள். நான்காவதாகிய சந்திரகாந்தப் பிரகாரத்திலே சிவசொரூப முள்ள ஐம்பத்தொரு சக்திகளும், சதாசிவத்தைத் தியானித்துக் கொண்டிருக்கும் ஒன்பது சக்திகளும் வசிப்பார்கள். ஐந்தாவதாகிய மாணிக்கப் பிரகாரத்திலே நடராஜமூர்த்தியும் ஏழு கோடி மகாமந்திரங்களும் உண்டு. ஆறாவதான படிகரத்தினப் பிரகாரத்திலே விநாயகர், சுப்பிரமணியர், வைரவர், மகாகாளர், சிவகுமாரர், ஐயனார், நந்தி, பிருங்கி, துர்க்கை, உருத்திரசத்தி, கணங்கள், காமதேனு, இடபம், உருத்திரன், உருத்திராணி இவர்கள் யாவரும் வசிப்பார்கள். ஏழாவதான நீலரத்தினப் பிரகாரத்திலே அளவிறந்த பிரம்மாக்களும் விட்டுணுக்களும் இந்திரர்களும் தேவரிஷிகளும் பிரமரிஷிகளும் வசிப்பார்கள். எட்டாவதான சொர்ணப் பிரகாரத்திலே அமரர் சித்தர். அசுரர், கருடர், கந்தருவர், கின்னரர், கிம்புருடர், நிருதர், தைத்தியர், இயக்கர், விஞ்சையர், முனிவர், உரகள், பூதர், பைசாசர், அந்தரர், ஆகாய வாசியர், போகபூமியர் என்னும் பதினெண் கணத்தவர்களும், செயை, விசயை, சுபர், இறீ, சிறீ, மதி, துஷ்டி, சாந்தி, வேதா, காந்தி, சிர்த்தா, கீர்த்தி, புஷ்டி என்னுந் தேவ கன்னியர்களும், உருத்திர கூட்டங்களும், பூத சேனாதிபர்களும், தெய்வ பசுக்களும், சிந்தாமணி, சூடாமணியும் சங்கநிதி, பதுமநிதிகளும் அப்சர ஸ்திரீகளும் இருபத்தேழு நக்ஷத்திரங்களும் பன்னிரண்டு ராசிகளும் நான்கு வேதங்களும் இருபத்தெட்டு ஆகமங்களும் பதினெட்டு ஸ்மிருதிகளும் பதினெண் புராணங்களும் ஆறு சாஸ்திரங்களும் அறுபத்துநான்கு கலைஞானங்களும் உருத்திர சாரூபர்களும் நவக் கிரகங் களும் வசிப்பார்கள். ஒன்பதாவதான இரசதபிரகாரத்திலே பிரணவமயமான அநேக வெள்ளை யானைகளும் சதுர்வேத ரூபமான அனேக குதிரைகளும் அநேக பூதகணங்களும் வசிப்பார்கள். இந்தப் பிரகாரத்திலே உன்னதமான நாலு கோபுரங்களையுடைய நாலுவாயில்களுண்டு. அந்த நாலு வாயில் களின் வழியாகப் பிரமலோகம் தேவலோகம் நாகலோகம் அயோத்தியாபுரி என்னும் இடங்களுக்குப் போகக்கூடியதாக இருக்கும். இப்பிரகாரத்துக்கு அப்பால் நாலுதிக்கிலும் நாலு யோசனை தூரம் வரைக்கும் சாம்பூநதம் என்னும் பொன்மயமான பூமியுண்டு . அதிலே மந்தாரம் பாரிசாதம் குங்குமம் அகில் சல்லியகரணி சந்தானகரணி மிருத்துசஞ்சீவி முதலிய விருகூடிங்களாற் சூழப்பட்ட சிங்காரமான நந்தவனங்களும், அவ்வனத்தின் நடுவிலே அன்னப் பகூஷிகள் வசிக்கின்ற ஓர் பொற்றாமரைத் தடாகமும், அட்டகுல பருவதங் களும், சப்தநதிகளு முண்டு. அனேக உருத்திரர்களும் பூதகணங்களும் அவ்வனத்திலே வசிப்பார்கள். அந்தப் பொன்மயமான பூமி ஒருவெள்ளி மதிலாற் சூழப்ப்ட்டிருக்கும். அந்த வெள்ளிமதிலுக்கப்பால் ஒரு பொன் மதிலுண்டு. அந்தப் பொன்மதிலிலே எட்டுக்கோபுரவாயிலுண்டு. அவற்றிலே கிழக்குவாசலிலே விநாயகரும், தென்கிழக்குவாசலிலே வீரபத்திரரும், தெற்கு வாசலிலே நந்தியும், தென்மேற்கு வாசலிலே வைரவரும், மேற்கு வாசலிலே சுப்பிரமணியரும், வடமேற்கு வாசலிலே பத்திரகாளியும், வடக்கு வாசலிலே

Page 20
6 திருக்கோணாசல வைபவம்
மகாகாளரும், வடகிழக்கு வாசலிலே ஐயனாரும் தங்களுடைய கணங்க ளோடு கூட வசிப்பார்கள். தகூடிணகைலாயத்துக்கு எட்டுத்திக்கிலும் இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்னும் திக்குப்பாலகர்கள்; சசி, சுவாகா, சங்காரி, தாமசி, பார்க்கவி, சதாகதி, சம்பர்க்கரி, உருத்திராணி என்னும் தங்கள் மனைவியரோடு கூட வசிப் பார்கள். திருக்கோணமலைக்கு மூன்று கோணத்திலும் வேதா, விரிஞ்சி, பூசிருஷ்டர், பதுமநாபர், பிதாமகர், கமலவாசி, சுயம்பு, சதுர்முகர், விசுவ சிருஷ்டர் என்னும் ஒன்பது பிரமாக்களும், விட்டுணு, தாமோதரர், கிருஷ்ணர், வாசுதேவர், அச்சுதர், சரோருகா, Uபதுமநாபர், கேசவர், நாராயணர், சக்கரபாணி என்னும் பத்து விட்டுணுக்களும் சங்கரர், சம்பு, கிரீசர், சமாரிஷர், கலாதரர், விருபர், பகவான், சூலி, வாமேசர், தீபதிமூர்த்திமான், கங்காதரர் என்னும் பதினொரு உருத்திரர்களும் வசிப்பார்கள்.
திருக்கோணமலையிலே ஏழு குகைகள் உண்டு. அதில், வடக்குத் திசையிலுள்ள குகையிலே அகஸ்தியர், புலஸ்தியர், வாம தேவர், அரிதர், உரோமசர், புலகள், உசத்தியர், வசிட்டர் முதலிய ரிஷிகள் பிரதிஷ்டையுடன் இருப்பார்கள். வடமேற்குக்குகையிலே நாகலோகத்துக்குப் போகும் வழி யுண்டு. வடகிழக்குக் குகையிலே மோகூ வீடுண்டு. மேற்குக் குகையிலே மகாவலிகங்கை வந்து பிரவாகிக்கும், தென்மேற்குக் குகையிலே வெள்ளி யினாற் செய்யப்பட்ட ஓர் ஆலயமுண்டு. அந்த ஆலயத்து வாசலிலே அநேக பூதங்கள் காவலாக இருக்கும். மேற்குக் குகையிலே இரத்தின தீர்த்தமும், கிழக்குக் குகையிலே மவுத்திக தீர்த்தமும் உண்டு.
(1)(JR r)

திருக்கோணாசல வைபவம் 7
மச்சேந்திர பருவதச் சரித்திரம்
சிவபெருமானிடத்திலே அருமையான வரங்களைப் பெற்றவனும், கெட்டசித்தமும், மூடபுத்தியும் உடையவனுமாகிய இரணியன் என்னும் ஓர் அசுரன், இந்திராதி தேவர்களுக்கெல்லாம் மிகுந்த நிட்டுரங்களைச் செய்துவந்தான். தேவர்கள் அவனுடைய இடுக்கண்களைச் சகியாதவர் களாகி, மேலுந் தாங்கள் வருத்தத்தை அடையாமல், மந்திர சித்தியுள்ள ஒரு கங்கணத்தைத் தங்கள் கையிற் தரித்திருந்தார்கள். அதைக் கண்ட இரணியன் மிகுந்த கோபங்கொண்டு, அக் கங்கணங்கள் எல்லாவற்றையும் அறுத்துச் சமுத்திரத்தில் எறிந்து விட்டு, தனது குலகுருவாகிய சுக்கிராச் சாரியனை அழைப்பித்து, அக் கங்கணங்களிலுள்ள மந்திர சித்தியெல்லாம் ஒழிந்து போகும்படியாக ஒரு கிரிகையைச் செய்வித்தான். அப்போது தேவர் கள் மிகுந்த வியாகூலத்தோடு திருக்கோணமலைக்கு வந்து, கோண நாயகரைப் பிரார்த்தித்துக்கொண்டு கோபுர வாயிலில் நின்றார்கள். அச் சமயத்திலே விட்டுணு மூர்த்தி அவ்விடம் வந்து, தேவர்களை நோக்கி " தேவர்களே! உங்கட்கு நேரிட்ட துன்பம் யாது? அதைச் சொல்லுங்கள். நான் தீர்த்து உங்களைக் காத்துக்கொள்வேனென்றார். தேவர்கள் நடந்த சங்கதிகளை விபரமாகச் சொன்னார்கள். அதைக் கேட்ட விட்டுணு மூர்த்தி தேவர்களைப் பார்த்து, நான் இவ்விடம் திரும்பி வரும்வரைக்கும் அமுத பானஞ் செய்துகொண்டிருக்கக் கடவீர்கள் என்று சொல்லி, பின்பு, கோண நாயகர் எழுந்தருளி இருக்கும் ஆலயத்துட் பிரவேசித்துச் சுவாமியுடைய திருவடிகளை வணங்கி வாய்புதைத்து நின்று, தேவர்களுக்கு நேரிட்ட துன்பங்களையும், அவர்கள் திருக்கோபுரவாயிலில் வந்து நின்று முறையிட்ட தையும் சொன்னார். அப்போது கோணநாயகர் விட்டுணுவைப் பார்த்து, இரணியன் நம்மிடத்திலே மிகுந்த வரத்தைப் பெற்றுக்கொண்ட தன்மையி னாலே எப்போதுந் தேவர்களை வருத்துகின்றான். ஆனால், நீ இப்போது மச்ச ரூபங்கொண்டு சமுத்திரத்துட் பிரவேசித்து, இரணியன் எறிந்த கங்கணங்கள் எல்லாவற்றையும் எடுத்துவந்து தேவர்கள் கையிற் கொடுத்து, அவர்களை இரட்சிப்பாயாக என்று திருவாய்மலர்ந்தருளினார்.
அதைக்கேட்டு விட்டுணுமூர்த்தி மச்ச ரூபங்கொண்டு, சமுத்திரத்துட் சென்று, இரணியனால் எறியப்பட்ட கங்கணங்க ளெல்லாவற்றையும் எடுத்துவந்து, திருக்கோணமலைக்கு முன்பாகத் தலையையும் திரிகூட பருவதத்துக்கு நேராக வாலையும் வைத்து, தாமெடுத்துக்கொண்ட மச்சக் கூட்டை விட்டு வெளியே வந்து, தேவர்களுக்குக் கங்கணங்களைக் கொடுத்துத் தேவலோகத்துக்குப் போகும்படி அனுப்பிவிட்டு, பின்பு கோணநாயகருடைய திருப்பாதங்களைப் பூசை செய்து வணங்கி விடை

Page 21
8 திருக்கோணாசல வைபவம்
பெற்றுக் கொண்டு தன்னிருப்பிடத்திற்குப் போனார். அந்த மச்சக்கூடானது ஒரு பெரிய மலையாகி, தக்ஷணகைலாயமாகிய திருக்கோணமலையுடன் அணைந்திருக்கின்றது. அந்நாள் துவக்கம் அம்மலைக்கு " மச்சேந்திர பருவத மெனவும், திருக்கோணமலை நகருக்கு மச்சேந்திரம் எனவும் நாமங்கள் உண்டாயின. மச்சேந்திர பருவதத்திலிருந்து செப, தப, தியானாதிகள் செய்பவர்கள் விட்டுணு சித்தியைப் பெறுவார்கள். திருக் கோணமலைக்கு அருகிலுள்ள கந்தசுவாமி மலையை தரிசிப் பவர்கள் சுப்பிரமணியருடைய பதவியைப் பெறுவார்கள்.
C3%)(JSR 8r)
மச்சேந்திர பருவதத்தின் வழியாகவே தற்காலத்திலுள்ளவர்களி திருக்கோணமலைக்குச் சென்று சுவாமிதரிசனஞ் செய்துவருகிறார்கள்

திருக்கோணாசல வைபவம் 9
மாவலிகங்கைச் சரித்திரம்
ஆதிகாலத்திலே, திருக்கைலாயமலையிலே, நவரத்தின சிங்கா சனத்தின் மீது சிவபெருமானும் உமாதேவியும் எழுந்தருளியிருக்கும் போது, உமாதேவி சிவபெருமானை நோக்கி, சுவாமி! தேவரீருடைய சடாமகுடத்தி னுள்ளே சத்தங் கேட்கிறது, யாது காரணமென்று வினவினார். சிவபெருமான் உமாதேவியைப் பார்த்து, வாராய் தேவியே! சடையிலே யாதுமில்லை. என் சிரசிலுள்ள சலத்தின் சத்தம் என்று சொல்லியருளிய போது, உமாதேவி பின்னும் உற்றுப்பார்க்கும் அளவில் ஒரு பெண்ரூபம் தோன்றியதைக் கண்டு ஐயம்கொண்டு சடாமகுடத்தை அவிழ்த்துப் பார்க்க எத்தனித்தார். அப்போது சடாமுடியில் இருந்த கங்கா தேவியானவள் பயப்பட்டு விந்து ரூபமானாள். அ.துணர்ந்த சிவபெருமான் தலை சொறிவதுபோல் தனது திருக்கரத்தை சடையுள்வைத்து விந்து ரூபமான கங்காதேவியை நகத்தினால் எடுத்து தெளித்தார். கங்காதேவியானவள் இலங்கைக்கு உத்தரபாகத்தில் உள்ள லவண சமுத்திரத்திலே வந்துவிழுந்து பாதாளத்திலே போயிருந்து சிவபெரு மானை நோக்கி தோத்திரம் செய்துகொண்டு இருந்தாள். கங்காதேவி தோத்திரம் செய்யும் சத்தமானது சிவபெருமானுடைய திருச்செவிகளுக்கு கேட்டமையால் உடனே கங்காதேவியை அழைத்து, கங்கையே! எனக்கு அதிக பிரீதியும் அற்புதமுமான சிவனொளி பாதமலையில் உள்ள எனது இரு பாதத்தின் மத்தியிலும், நவக்கிரியிலும், தக்ஷணகைலாயத்திற்குப் பக்கத்திலும், திருக்கேதீஸ்வரத்திலும், கதிர்காமத்திலும், தர்மார்த்த மோகூடித்தை நமது அடியார்கள் அடையும்பொருட்டு போய் இருப்பாயாக என்று திருவாய் மலர்ந்தருளினார். அதைக் கேட்ட கங்கையானவள் அதிக மகிழ்ச்சி அடைந்து, சிவனொளிபாத மலையிலே உள்ள சிவபெருமானுடைய இருபாதத்தின் நடுவில் இருந்து மாவலிகங்கை எனவும், மாணிக்க கங்கை எனவும், காவேரி கங்கை எனவும் பெயர்கொண்டு சுபதினத்திலே பிரவா கிக்கத் தொடங்கினாள். இந்த மூன்று கங்கையிலும் மாவலிகங்கையானது அதிகபலத்தோடும் சத்தத்தோடும் நுரையும் குமிழியும் கொண்டு புண்ணிய விருகூடிங்கள் கரையிலே சூழ்ந்துநிற்க வடக்குமுகமாகப் பிரவாகித்து திருக் கோணமலைக்கு வந்து மேற்குப் பக்கத்திலுள்ள குகையிலே தங்கிப் பின்பு வெளியே புறப்பட்டு, கிழக்குப் பக்கமாக சமுத்திரத்தில் பாயும். மாணிக்க கங்கையானது கிழக்கு முகமாக பிரவாகித்து கதிர்காமத்தை அடைந்து கிழக்குச் சமுத்திரத்தில் பாயும். காவேரி கங்கையானது மேற்கு முகமாகப் பிரவாகித்து திருக்கேதீஸ்வரத்தை பிரதசுஷிணம் செய்துகொண்டு சமுத்திரத் திற்பாயும். இந்த மூன்று கங்கையும் அனேகதிளைகள் கொண்டு பல நாமங் களைப் பெற்று " நதிகளாகவும், நதங்களாகவும் சமுத்திரத்தில் பாய்கின்றன.
" நதி பெண் ஆறு. நதம் ஆண்ஆறு

Page 22
1O திருக்கோணாசல வைபவம்
இலங்கையில் உள்ள கங்கைக்குள் மாவலிகங்கை அதிகம் விசேடம் உடையதாய் இருக்கிறது. சிவபெருமான் மாவலிகங்கையை உலக ரக்ஷகத் துக்காக உண்டாக்கினார். மாவலிகங்கையானது தகூடிணகைலாயமென்னும் சிரசு தொடக்கம் சிவனொளிபாதம் என்னும் காலவரையும் வியாபித்து, ஒரு புருடவடிவாய் இருக்கிறது. மாவலி கங்கையைக் கண்ணினால் கண்டாலும், மனதினால் தியானித்தாலும், ஸ்நானம் செய்தாலும் போகம், மோகூடிம் இரண்டும் கிடைக்கும். ஒருவன் நூறு யோசணைக்கு அப்பால் இருந்து இக்கங்கையை நினைத்தாலும், இதில் ஸ்நானம் செய்தவர்களைத் தீண்டி னாலும், அவன் அனேக பலன்களை அடைவான். இறந்தவர்களுடைய அத்தியை இக்கங்கையில் இட்டால் அவவத்தியானது எத்தனை வருடம் இருக்குமோ அத்தனை வருடகாலம் அவர்கள் சொர்க்க லோகத்தில் இருப்பார்கள். பூமியில் விழுகின்ற மழைத்துளிகளை கணக்கிட்டாலும் இக்கங்கையில் ஸ்நானம் செய்தவனுக்குக் கிடைக்கும் பலனை சொல்வது அரிதாகும்.
பகீரதி என்னும் கங்கை விட்டுணுவினுடைய பாதத்தில் நின்றும் உற்பத்தியானது போலவே, மாவலிகங்கை சிவபெருமானுடைய பாதத்தின் நின்றும் உற்பாத்தியாய் இருக்கின்றது. சித்திரை மாதத்து சித்திரை நக்ஷத்திரத்திலும்; வைகாசி மாதப் பூரணைத் திதியும், விசாக நக்ஷத்திரமும் கூடிய தினத்திலும்; ஆனி உத்தரத்திலும், ஆடி மாதப் பூரநகூடித்திரமும் அமாவாசையும் கூடிய தினத்திலும், ஆவணி மாத மூல நக்ஷத்திரமும் பானு வாரமும் கூடிய நாளிலும், புரட்டாதி மாதத்திலே திருவோண நாள் கூடிய சனிக்கிழமையிலும்; ஐப்பசி மாதத்தில் சதய நாள் கூடிய சுக்கிர வாரத்திலும்; கார்த்திகை மாதத்திலே கார்த்திகை நக்ஷத்திரத்திலும்; மார்கழி மாதத்திலே திருவாதிரை நாளிலும் தை மாதத்தே பூரணை கூடிய பூச நாளிலும்; மாசி மாதத்திலே பூர்வபக்ஷத்து சப்தமித் திதியிலும்; பங்குனி உத்தரத்திலும் அர்த்தோதயம், மகோதயம், பஞ்சபருவம், அயனம் சங்கிராந்தி, விஷப்புண்ணிய காலம், கிரகனகாலம் முதலான மற்றும் புண்ணிய காலங்களிலும் விதிப்படி சங்கற்பம் செய்து ஸ்நானம் செய்வார்க ளாயின் கொலை, களவு, கள்ளுன்ைனல், குருநிந்தை, பொய் என்னும் பஞ்சமா பாதகங்களினால் உண்டான தீங்குகளெலலாம் நீங்கி இம்மையிலே இந்திர போகத்தை அனுபவித்து மறுமையிலே முத்தி அடைவார்கள். இக்கங்கையிலே நீசன் ஸ்நானம் செய்வானாயின் மறு பிறவியிலே உயர் குலத்தில் வந்து பிறப்பான், தேவர்கள் எல்நானம் செய்தால் நல்ல பதவியைப் பெறுவார்கள். முனிவர்கள் ஸ்நானம் செய்தால தவசித்தி அடைவார்கள். இராக்கதர்கள் ஸ்நானம் செய்வார்களாயின் தேவர்களாகப் பிறப்பார்கள். அரசர்கள் ஸ்நானம் செய்வார்களாயின் மறுபிறவியிலும் இராசரீகத்தைப் பெறுவார்கள். பிராமணர்கள் ஸ்நானம் செய்வார்களாயின் பிரமபதத்தை

திருக்கோணாசல வைபவம் 11
பெறுவார்கள். வைசியர்கள் ஸ்நானம் செய்வார்களாயின் குபேரனைப் போலும் மிகுந்த செல்வத்தைப் பெறுவார்கள். சூத்திரர் ஸ்நானம் செய்வார்களாயின் மறுபிறவியிலே பிரமகுலத்திலே வந்து பிறப்பார்கள். விலங்கு சாதிகள் பகூழிசாலங்கள் ஸ்நானம் செய்யுமாயின் மறுபிறவியிலே மானுடராகப் பிறக்கும். அன்னதானம், சொர்ணதானம், கோதானம், பூதானம், கன்னிகா தானம், திலதானம், துலாபார தானம் முதலிய தானங்களை கொடுப்பத னாலும், பதினாலு உலகங்களிலுமுள்ள அறுபத்தாறுகோடி என்னும் கணக்கான தீர்த்தங்களிலே ஸ்நானம் செய்வதனாலும், நாலு வேதங் களையும் சாங்கோ வாங்கமாக அத்தியயனஞ் செய்வதினாலும், நைமி சாரணியம் புட்கரம் குருஷேத்திரம் காசிப்பிரயாகை மதுரை முதலிய புண்ணிய ஸ்தலங்களில் இருந்து நூறு வருடம் தவம் செய்வதினாலும் உண்டாகும் பலன்கள் இந்த மாவலிகங்கையிலே ஒருதரம் செய்யும் ஸ்நானத்தினால் உண்டாகும்.
CD3%)GSRS)

Page 23
12 திருக்கோணாசல வைபவம்
அகத்தியமுனிவர் சரித்திரம்
சகலபுவன சராசரங்கள் அனைத்தையும் ஈன்ற உலகமாதா வாகிய உமாதேவி இமயபருவதராசனுக்குப் பிள்ளையாகப் பிறந்து, திருக்கைலாசத் திலிருந்து யோகநிட்டை சாதிக்கும் சிவபெருமானை நோக்கித் தவஞ் செய்து கொண்டிருக்கும் போது, இந்திராதி தேவர்கள் அனைவரும் சிவபெரு மானிடத்து வந்து சூரபதுமன் செய்யும் ஆக்கினைகளை விபரமாக முறையீடு செய்தார்கள். அப்போது சிவபெருமான் தேவர்களைப் பார்த்து, “ தேவர்களே! இமயபருவதத்திருந்து நம்மை நோக்கித் தவசுசெய்யும் பர்வதவர்த்தனியை திருமணம் புணர்ந்து உங்களுக்கு இடுக்கனன் செய்கின்ற சூரபதுமன் முதலிய அசுரர்களை எல்லாம் சம்மாரஞ் செய்யும்பொருட்டு ஒரு புத்திரனைத் தருவோம். நீங்கள் யாதுக்கும் அஞ்சாது போகக்கடவீர்கள் என்று திருவாய் மலர்ந்தருளினார். அதன் பின்பு சிவபெருமான் இடபதேவரைப் பார்த்து நாம் திருமணத்தின் பொருட்டு இமயபருவதத்துக்கு எழுந்தருள வேண்டி இருப்பதால் பிரம்மா விட்டுணு இந்திரன் முதலிய தேவர்களுக்கும் ரிஷிக் கூட்டங்களுக்கும் தெரிவித்துவரக் கடவாய் என்று சொல்லி அருளினார். அதைக்கேட்ட இடபதேவர் சிவபெருமான் சொல்லியருளிய பிரகாரம் சகலருக்கும் அறிவித்தார். அ.தறிந்த தேவர்களும் முனிவர்களும் மற்றும் கணத்தவர்களும் திருக்கைலாசத்திலே வந்து கூடினார்கள். அவ்வேளை வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அதுகண்ட தேவர்கள் எல்லாம் மிகவும் அச்சம் கொண்டு சிவபெருமான் முன்பு சென்று சுவாமி உத்தரம் தாழ்ந்து தக்ஷணம் உயர்ந்த படியால் எங்களுக்கு மிகுந்த ஆச்சரியமும் அச்சமும் உண்டாகின்றது. இந்த ஆபத்தை தேவரீர் விலக்கி அருள வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள், சிவபெருமான் விட்டுணுவை நோக்கி நமது திருமணக்கோலம் காணும் பொருட்டு, சப்த சமுத்திரங்களையும் குடங்கையில் அடக்கிய அகத்திய முனிவன் இவ்விடம் வந்தமையால் தான் உத்தரம் தாழ்ந்து தகூyணம் உயர்ந்தது. ஆகையால் அம்முனிவனை நம்மிடம் அழைத்து வாரும் என்று சொல்லி அருளினார். அதைக் கேட்ட விட்டுணு மூர்த்தி சிவபெருமான் திருவாய் மலாந்தருளிய பிரகாரம் செய்து முடித்தார். அப்போது சிவபெருமான் அகத்திய முனிவனை நோக்கி, பூமி அந்தரம் சுவர்க்கம் என்னும் மூன்று உலகத்திலும் உனக்கு மேற்பட்ட முனிவரை யாம் கண்டதில்லை, நீ இப்போது நமது திருமணக்கோலம் காணும் பொருட்டு இவ்விடம் வந்தமையால் உத்தரம் தாழ்ந்து தக்ஷணம் உயர்ந்துவிட்டது. ஆகையால் நீ இவ்விடம்விட்டு உனது வாசஸ்தலமான பொதிகைமலைக்குப் போய்விடவேண்டும், ஆனால் தகூடிணகைலாயத்துள்ள மாவலிகங்கைக்கு அருகான கரசயம் பதியிலும் " மறைசைப் பதியிலும்
# மறைசைப்பதி - வேதாரணியம்

திருக்கோணாசல வைபவம் 13
நமது திருமணக்கோலக் காட்சி காணப்பெறுவாய் என்று திருவாய்மலர்ந் தருளினார். அதுகேட்ட அகத்தியமுனிவர் மிகுந்த சந்தோஷத்துடன் அவ்விடம் விட்டு நீங்கினார். அப்போது உத்தரம் தக்ஷணம் இரண்டும் தராசு நுனிபோன்று பேதம் இல்லாது இருந்தன. அதன் பின்பு சிவபெருமான் திருமணக்கோலம் கொண்டு சகல தேவர்களும் புடைசூழ்ந்துவர இமயபருவதத்துக்குச் சென்று பர்வத இராசகுமாரியைத் திருமணம் புணர்ந்து தேவி சமேதராக இடபாரூட ராகி திருக்கைலாயத்தில் வீற்றிருந்து அருளினார்.
பின்பு அகத்தியமுனிவர் தக்ஷணதிசைக்குப் போகும் போது ஆகாயம் வரை அளாவிநின்று தவத்தவர்களுக்கு நிட்டுரஞ் செய்யும் கிரவுஞ்சனெனும் அசுரனுக்கு சாபமிட்டும், அப்பாற் சென்று தமக்கு வஞ்சனைசெய்த வில்வலன், வாதாவி என்னும் இருவரையும் கொன்றும், இன்னும் அனேக அற்புதங்களை உலகத்தவர்கள் காணும்படி செய்தும், காசி முதலிய புண்ணிய ஸ்தலங்களை தரிசித்துக்கொண்டும், ஈழநாடாகிய இலங்கையை அடைந்து உத்தரகைலாயத் திலே திருமணக் கொண்டாட்டம் இருப்பதால் தகூடிணகைலாசமாகிய திருக்கோணமலையிலும் அக்கொண்டாட்டம் இருக்கும் ஆகையால் திருக் கோணமலைக்குச் சென்று கோணநாயகரைத் தரிசிக்க இது காலமல்லவென்று நினைத்துத் திருக்கோணமலைக்கு முக்காத வழியிலுள்ள கழனிமலையை அடைந்து சிவபெருமானை பூசைசெய்து கொண்டிருந்தார்.
அன்னாள் துவக்கம் கழனிமலைக்கு திரிகோண கண்டவரை என்னும் ஒரு நாமம் உண்டானது. அதன் பின்பு மாவலிகங்கையானது சிவனொளி பாத மலையிலிருந்து உற்பத்தியாகி சமனாசைலதத்தை வலப்பிரதசுஷ்ணஞ் செய்துகொண்டு திருக்கோணமலைக்கு வந்து கோணநாயகருடைய திருப் பாதங்களை விளக்கிச் செல்வதை அகத்திய முனிவர் கண்டு, இக்கங்கை மிகவும் பெருமை உடையதாய் இருப்பதால் இதிலே ஸ்நானம் பண்ண வேண்டும் என்று கருதி, மாவலிகங்கையை அடைந்து, தண்டு கமண்டலம் முதலியவற்றைக் கரையிலே வைத்து, கங்கையில் இறங்கி ஸ்நானம் செய்யும் போது, ஓர் அசரீரிவாக்கு அகத்திய முனிவருக்கு சொன்னதாவது: "முனிவனே! இந்த மாவலிகங்கைக்கு நிகரான தீர்த்தம் எவ்விடத்தி லாயினும் கிடைப்பது அரிது. ஆகையால் இக்கங்கையில் வந்து தீர்தமாடும் நமது அடியவர்கள் எப்போதும் நம்மைத் தரிசிக்கும் பொருட்டு, திருகோணமலைக்குத் தென் பக்கமாகவும் சிவனொளிபாத மலைக்கு வட பக்கமாகவும் மாவலி கங்கைக்குக் கிழக்குப் பக்கமாகவும் மிகுந்த பெருமிதங்களைப் பொருந்திய கரசையம்பதி என்னும் இடத்துக்குச் சென்று, அவ்விடத்திலே நம்மை நினைப்பாயாக என்று சொல்லியது. அசரீரி வாக்குச் சொல்லிய யாவற்றையும் கேட்டு நின்ற அகஸ்திய முனிவர் ஆனந்த பரவசம் கொண்டு, சில நாழிகை அவ்விடத்தில் நின்று, கோணநாயகரை நோக்கி பலவாறான

Page 24
14 திருக்கோணாசல வைபவம்
தோத்திரங்களைச் சொல்லித் துதித்துக் கொண்டு. பின்பு கரசையம்பதியை அடைந்து, அவ்விடத்திலே விசுவகர்மாவை அழைத்து, அவனை நோக்கி, இவ்விடத்திலேயே விநாயகர், சிவபெருமான், உமாதேவி, சுப்பிரமணியர், சண்டேசுவரர் முதலிய தேவர்கள் எழுந்தருளி இருக்கும் பொருட்டு அலங் காரமான ஆலயங்களையும், இடபம், பலிபீடம், துவச ஸ்தம்பம் முதலிய வகைகளையும் சீக்கிரம் உண்டுபண்ணுவாயாக என்று சொன்னார். அதைக் கேட்ட விசுவகர்மா கோணநாயகருடைய கிருபையினாலே விசித்திரமான ஆலயங்கள், மண்டபங்கள், திருமடைப்பள்ளி, முதலியவைகளை உண்டு பண்ணி, தேவர்களும் அதிசயிக்கும்படியாக ஐந்து திருவீதிகளையும் உண்டு பண்ணினான். அதைக்கண்டு அகத்தியர் மிகுந்த சந்தோஷம் அடைந்து, சிவலிங்கப்பெருமான் முதலிய தேவர்களை அவ்வவர்களுக்கு உண்டு பண்ணப்பட்ட ஆலயங்களிலே தாபித்து, பஞ்ச சுத்தி செய்து, மகுடா கமத்திற் சொல்லிய பிரகாரம் மாவலிகங்கைத் தீர்த்தத்தினாலே மகாநியாச பூருவமாக அபிஷேகம் செய்து, சோடச உபசாரங்களால் பூசித்து, சிவலிங்கப் பெருமானுக்கு தீர்த்தேஸ்வரன் என்னும் திருநாமமும் கொடுத்து, சாட்டாங்க பூருவமாக நமஸ்கரித்து, தோத்திரம் செய்து கொண்டு இருந்தார்.
அப்போது சிவபெருமான் பாலவயது உள்ளவராயும், சந்திரனை அணிந்தவராயும், உமாதேவி சமேதராக, திருமணக்கோல வடிவுகொண்டு, ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கத்தின் நின்றும் பிரசன்னப்பட்டு அகத்திய முனிவருக்கு காட்சிகொடுத்தார். அதைக்கண்ட அகத்திய முனிவர் ஆனந்த பரவசம் கொண்டு உரோமஞ் சிலிர்ப்ப, ஆனந்த அருவி சொரிய பலதரமும் சிவபெருமானுடைய திருப்பாதங்களை நமஸ்கரித்து எழுந்து, சுவாமி! இந்தக் கோலத்துடன் இவ்விடத்திலே சதாகாலமும் இருந்து, மாவலிகங்கையில் வந்து தீர்த்தமாடி தேவரீரையும் தரிசிக்கின்றவர்களுக்கு கிருபைபாலித்து அருளவேண்டும் என்று பிரார்த்தித்தார். அப்போது சிவபெருமான் அகத்திய முனிவரைப் பார்த்து, "முனிவனே! நீ கேட்டபிரகாரம் வரம் தந்தோம்” என்று திருவாய் மலர்ந்தருளி " சிவலிங்கத்தே மறைந்தருளினார். அதன்பின் அகத்தியமுனிவர் திருகோணமலையை அடைந்து பாவநாசத் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து கோணநாயகரையும் அன்னமென்னடை அம்மையையும் தரிசித்துக்கொண்டு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு திருக்கேதீஸ்வரத்தை அடைந்து பாலாவிக் குளத்தில் ஸ்நானம் செய்து கேதீஸ்வரரையும் கெளரி யம்பிகையையும் தரிசித்து, அவ்விடத்திலே ரீ கண்டரென்னும் நாமமுள்ள ஓர் இலிங்கத்தை ஸ்தாபித்துச் சிலநாள் அவ்விடமிருந்து பூசைசெய்து பின்பு சிவபெருமானிடத்தில் வேண்டிய வரங்களையும் பெற்றுக்கொண்டு சோழ நாட்டையடைந்து வேதாரணியத்திலும் சிவபெருமானுடைய திருமணக் கோலக் காட்சியைத் தரிசித்துக்கொண்டு பொதியமலைக்குப் போனார். * அகத்தியரால் தாபிக்கப்பட்ட சிவலிங்கம் தற்காலம் அகத்தியர் எஸ்தாபனம் என வழங்கிவருகின்றது.

திருக்கோணாசல வைபவம் 15
இராவணன் சரித்திரம்
தேவலோகம்போல் விளங்கும் இலங்காபுரியை அரசுசெய்த விச்சிரவசு என்பவனின் புத்திரனாகிய தசக்கிரீவன் பதினாயிரவருட காலம் அருமையான தவஞ்செய்து, மிகுந்த வரங்களைப் பெற்றுத் தனது தமையனாகிய குபேர னிடத்தில் இலங்கை அரசுரிமையைக் கைக்கொண்டு, பாவ புண்ணியங் களைச் சிறிதுங் கவனியாமல் தேவர்களுக்கு மிகுந்த நிட்டுரங்களைச் செய்து, இராச்சியபரிபாலனஞ் செய்துவரும் நாளையில், ஒருநாள் தாயாகிய கைகேசி நெற்குற்றிக் கொண்டு நிற்பதைத் தசக்கிரீவன் கண்டு, தாயே! பூமி அந்தரம் சுவர்க்கம் ஆகிய மூன்று உலகங்களும் அஞ்சும்படி நான் அரசு செய்பவனாயிருக்க நீ யாது காரணத்துக்காக நெற்குற்றுகின்றாயென வினவினான். அப்போது கைகேசி மகனை நோக்கி, மகனே! சிவலிங்கப் பெருமான் பேரிலே நான் கொண்டிருக்கும் அன்பு மிகுதியினாலே அவருடைய திருவுருவத்தை மாவினாலே நாளொன்றுக்கு ஆயிரஞ்செய்து, மாவலி கங்கைக் கரையிலே வைத்துப் பூசைசெய்து, பின்பு அவ்விலிங்கங்களைக் கங்கையில் விடுவது வழக்கமாதலால், நாளைக்கு மா இல்லாததினால் நெல் குற்றுகின்றேனென்று சொன்னாள்.
அதைக்கேட்ட தசக்கிரீவன் மிகுந்த கோபங்கொண்டு தாயைப் பார்த்து, எட்டுத் திக்கிலும் வசிக்கின்ற அட்ட கசங்களுடைய கொம்புகளை அடிகளோடு முறித்தெறிந்த பராக்கிரமசாலியாகிய நான் உன்க்குப் பிள்ளையாக இருக்க, நீ சிவலிங்கப் பெருமானைப் பூசிப்பதற்கு அவரைப் போல மாவினால் உருவஞ்செய்ய வேண்டியதென்ன? இதோ நான் திருக் கைலாசமலைக்குச் சென்று சிவபெருமானிடத்தில் ஓர் இலிங்கம் வாங்கி வந்து தருகிறேன். நீ வைத்துப் பூசை செய்வாயாக என்று சொல்லி, ஒரு சிங்காரமான தேரில் ஏறி உத்தரகைலாயத்தை அடைந்து சிவபெருமானை நோக்கிப் பிரார்த்தித்தான். அப்போது சிவபெருமான் ஒரு வயோதிப பிராமண வடிவம் கொண்டு வந்து, தசக்கிரீவனுக்கு ஒரு சிவலிங்கத்தைக் கையில் கொடுத்து மறைந்தருளினார். தசக்கிரீவன் சிவலிங்கத்தைக் கொண்டு திரும்பி வரும்போது, தேவர்கள் கண்டு, விட்டுணு மூர்த்தியிடத்தில் போய், "சுவாமி! தசக்கிரீவன் சிவபெருமானிடம் சிவலிங்கம் வேண்டிக்கொண்டு போகிறபடியால் எந்தக் காலத்திலாவது அவனை நாங்கள் வெல்லுவது கூடாது. ஆகையால் தேவரீர் இதற்கு ஓர் உபாயம் செய்ய வேண்டும்” என்று பிரார்த்தித்தார்கள். அதைக் கேட்ட விட்டுணுமூர்த்தி, உடனே வருணபகவானை அழைத்து, வருணனே! நீ தசக்கிரீவனுடைய வயிற்றில் பிரவேசித்து சலப்பாதயை அதிகரிக்கச் செய்வாய்” என்று சொல்லி அருளினார். அதன் பின்பு, விட்டுணு முத்தி விநாயகரிடம் சென்று நடந்த சம்பவங்களை விபரமாகச் சொல்லி

Page 25
16 திருக்கோணாசல வைபவம்
நீர் இப்போது தசக்கிரீவன் முன்பு சென்று அவன் கொண்டு போகின்ற சிவலிங்கத்தை எந்தவிதத்திலும் வாங்கி பூமியில் வைப்பீராக என்று சொல்லி அனுப்பினார். அப்போது விநாயகர் ஒரு பிராமணர் வடிவம் கொண்டு தசக்கிரீவன் முன்பு போனார். அவ்வேளையில் தசக்கிரீவனுக்கு சலஉபாதை அதிகரித்ததனாலே அவ்விடத்தில் நின்ற பிராமணரை நோக்கி, ஐயரே! நான் சலபாதைக்குப் போய்வரும் வரைக்கும் இந்த சிவலிங்கத்தை வைத்துக் கொள்ளும் என்று சொல்லி பிராமணர் கையில் கொடுத்துவிட்டுப் போனார். அப்போது வருணனின் தசக்கிரீவனுக்கு சலபாதையை மிகவும் அதிகரிக்கும்படி செய்தான். அதனால் தசக்கிரீவன் விரைவில் வராது தாமதித்தான். நெடு நாழிகை வரைக்கும் தசக்கிரீவன் வராததைக் கண்ட விநாயகர் சீக்கிரமாக "சிவலிங்கத்தை பூமியில் வைத்து விட்டு மறைந்தருளினார். பின்பு தசக்கிரீவன் வந்து பார்க்கும் போது பிராமணன் இல்லாததினால் நெடு நாழிகையாகத் தேடித் திரிந்தான் அப்போது ஒரு பெரிய ஆலயமும் அதன் உள்ளாக தான் கொண்டு வந்த சிவலிங்கமும் இருப்பதைக் கண்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்தான். அதன் பின்பு தசக்கிரீவன் மறுபடியும் திருக்கைலாசத்துக்குச் சென்று சிவபெருமானிடம் ஒரு சிவலிங்கம் வாங்கிக் கொண்டு வரும் வழியிலே, விநாயகர் ஒரு சிறுபிராமணப் பிள்ளை வடிவத்தோடு தசக் கிரீவனுக்கு எதிராகப் போனார் அவ்வேளை வருணன் தசக்கிரீவனுக்கு சலபாதை அதிகரிக்கும்படி செய்தான். அப்போது, தசக்கிரீவன் பிராமணப் பிள்ளையைக் கண்ட மாத்திரத்திலே அதிக சந்தோஷங்கொண்டு பிராமணப் பிள்ளையை நோக்கி, ஐயரே! நான் சலபாதைக்குப் போய்த் திரும்பி வரும் வரைக்கும் இந்தச் சிவலிங்கத்தைப் பூமியில் வையாமல் உமது கையிலே வைத்துக்கொள்ளும் என்று சொன்னான். அப்போது, பிராமணப்பிள்ளை தசக் கிரீவனை நோக்கி, நான் சிறுபிள்ளையாகையால் நெடுநேரம் வரைக்குங் கையிலே வைத்துக்கொள்ள மாட்டேன். ஆனால் மூன்று தரம் உன்னை அழைப்பேன். நீ வராதிருந்தால் பூமியிலே வைத்துவிடுவேனென்று சொல்லத் தசக் கிரீவனும் அதற்குச் சம்மதித்துப் பிராமணப்பிள்ளை கையிற் சிவலிங்கத்தைக் கொடுத்துவிட்டுச் சலபாதைக்குப் போய் உட்கார்ந்தான். அவன் போனவுடனே பிராமணப் பிள்ளை மூன்று தரம் அழைத்தும் வராததி னால், பூமியிலே பள்ளமான ஒரு இடத்தில் சிவலிங்கத்தை வைத்தார். தசக்கிரீவன் திரும்பி வந்து பார்த்த போது சிவலிங்கம் பூமியிலே இருப்பதைக் கண்டு அதிக கோபங்கொண்டு, தனது இருபது கைகளினாலும் இலிங்கத் தைத் தூக்கினான். அந்த "இலிங்கம் தூக்கப்படாமல் பசுவின் காதுபோலக்
* விநாயகராற் பூமியில் வைக்கப்பட்ட சிவலிங்கம் எழுந்தருளியிருக்குந் தலத்துக்கு வைத்திய
நாதம் என்று பெயர் வழங்கிவருகின்றது. அந்தத்தலம் காசிக்கப்பாலுள்ளது. * இலிங்கம் பசுவின் காதுபோலக் குழைந்ததினால் அந்தத் தலத்துக்கு கோகர்னமென்றும்.
அந்த லிங்கத்துக்கு கபாலலிங்கம் என்றும் பெயருண்டாகி வழங்கிவருகின்றது. கோகனமென்னும் ஸ்தலம் துளுவநாட்டிலுள்ளது.

திருக்கோணாசல வைபவம் 17
குழைந்தது. அதைக்கண்ட தசக்கிரீவன் அதைவிட்டு பின்னும் சிவலிங்கம் வாங்கும் பொருட்டுத் திருக்கைலாசத்துக்குப் போகும்வழியில், விட்டுணு மூர்த்தி ஒரு வயோதிகப் பிராமணவடிவங் கொண்டு தசக்கிரீவன் முன்வந்து, நீ யார்? எங்கே போகின்றாய்? என்று வினவினார். அப்போது தசக்கிரீவன், பிராமணரை நோக்கி ஐயரே! நான் இலங்காபுரியை அரசு செய்யும் அரசன். என் பெயர் தசக்கிரீவன். சிவபெருமானிடத்திலே சிவலிங்கம் வாங்கும் பொருட்டு கைலாசத்துக்குப் போகிறேன் என்று சொன்னார். அதைக் கேட்ட பிராமணர், தசக்கிரீவனைப் பார்த்து, அரசனே! உம்முடைய புத்தி நன்றா யிருக்கிறது! ஏனெனில் நீ அரசுசெய்யும் இலங்காபுரிக்கு உத்தரபாகத்தில் தகூடிணகைலாயம் இருக்கின்றது, அவ்விடத்திலுள்ள இலிங்கங்கள் மகா விசேஷமுடையன. அதில் ஒரு இலிங்கத்தை நீ பெற்றுக் கொள்ளாமல், இவ்வளவு பிரயாசப்பட்டு உத்தர கைலாசத்துக்கு வருவானேன்? என்று சொன்னார். அதைக்கேட்ட தசக்கிரீவன், அதிக சந்தோஷங்கொண்டு, தனது தேரிலேறி விரைவாகச் செலுத்திக்கொண்டு தகூடிணகைலாயத்துக்கு வந்து, வடக்குத் திக்கிலே தேரை நிறுத்தி, இறங்கி வந்து கோணநாயகர் எழுந்தருளி யிருக்கும் ஆலயவாயிலில் நின்று பலவாறான தோத்திரங்களைச் சொல்லிப் பிரார்த்தித்தான். அவ்வாறாக நெடுநேரம் வரையிலுங் கோணநாயகரைப் பிரார்த்தித்தும் இலிங்கம் கிடையாததினால், மிகுந்த கோபங்கொண்டு, தக்ஷணகைலாய மலையின் கீழ் இறங்கிவந்து தனது இருபது கைகளினாலும் கைலாயமலையைக் கட்டிப்பிடித்து, பாறும்படி அசைத்தான். அவ்வேளை கைலாயபருவதமானது சற்றாயினும் அசையாதிருந்தது. அதைக்கண்ட தசக்கிரீவன், உக்கிரகோபம் உடையவனாகி மலையடியினின்று வெளியே வந்து, கையிலிருந்த வாளினால் பருவதத்திற்குத் தெற்குப் பக்கத்தில் ஓங்கி வெட்டினான். அப்போது பருவதத்தில் ஒரு சிறுதுண்டு உடைந்து மேற்குப் பக்கலிற் போய்விழுந்தது. வாளும் இரண்டு துண்டாக முறிந்தது. அதன் பின்பு, கைலாசமலையின் கீழாக இறங்கித் தனது இருபது புயங்களி னாலுந் தூக்கினான். தசக்கிரீவன் கைலாச பருவதத்தை வெட்டித் தூக்கியபோது. அந்த அதிர்ச்சியினால், இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரி, கந்தமாதனம் என்னும் சப்தகுல பருவதங்களும்; வாசுகி, அனந்தன், தக்கன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க் கோடகன் என்னும் அட்ட நாகங்களும்; ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பபந்தம், சாருவபூமம், சுப்பிரதீபம் என்னும் அட்ட கசங்களும்; இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ாசானன் என்னும் அட்டதிக்குப் பாலகர்களும் தங்கள் இருப்பிடம்விட்டு அசைவுகொண்டார்கள். சப்த சமுத்திரங்களும் கொந்தளித்தன. பதின்னாலு உலகங்களும் நடுங்கின. பிரமா, விட்டுணு, இந்திரன் முதலிய தேவர்களும் அச்சமுற்றார்கள். தக்ஷண கைலாசபருவதத்திலே எழுந்தருளியிருக்கும் அன்னமென்னடையம்மையுந் துணுக்குற்றுக் கோணநாயகரைத் தழுவி

Page 26
18 திருக்கோணாசல வைபவம்
யணைத்தாள். அப்போது கோண நாயகர், புன்சிரிப்புக் கொண்டு, தேவியைப் பார்த்து, “பெண்ணே! அஞ்சாதிருக்கக் கடவாய்!” என்று திருவாய்மலர்ந் தருளினார். பின்பு கோணநாயகர் வீராசன முறையாக இருந்து, தமது திருப்பாதத்தின் பெருவிரலினால் கைலாயமலையை ஊன்றினார். அப்போது கைலாயமலையானது, தசக்கிfவனை நசுக்கியது. அதனால் அவனுடைய பத்துவாயிலுமிருந்து இரத்தங் கொப்பளிக்க உரத்த சத்தமிட்டுக் கொண்டு சமுத்திரத்துக்குள்ளாக அமிழ்ந்தினான். அவ்வேளை தேவர்களெல்லாம் மனமகிழ்ச்சிகொண்டு, தசக்கிரீவன் மாண்டுபோய்விட்டான். இனி எங்களுக் குண்டான அச்சமும் நீங்கியது என்று சொல்லி அவன் ஏறிவந்த தேரையுஞ் சமுத்திரத்துள் அமிழ்த்தி, புட்பமாரிபெய்து ஆனந்தக் கூத்தாடி இன்பசமுத் திரத்தில் மூழ்கியிருந்தார்கள்.
சிலகாலஞ் சென்றதன்பின் தசக் கிரீவன் சமுத்திரத்துளிருந்து வ்ெளியே வந்து கோணநாயகர் எழுந்தருளியிருக்கும் ஆலயத்துக் கோபுரவாயிலில் நின்று, "சுவாமி நாயினுங் கடையேனாகிய நான் ஆணவமிகுதியினாற் செய்த குற்றங்களைப் பொறுத்தருள வேண்டும்” என்று பிரார்த்தித்தான். பின்பு தனது தலையிலொன்றைத் திருகி, அதையொரு சுரைப்பத்தரை யாகவும், கையிலொன்றை முறித்து அதிலுள்ள எலும்புகளைத் தடியாகவும், விர ல களை முறுக் காணிகளாகவும், நரம்புகளைத் தந்திகளாகவும் சேர்த்து ஒரு வீணையாகச் செய்து, அவ் வீணையைக் கையிலேந்திக்கொண்டு கோபுரவாயிலில் நின்று, இசைக்குற்றம், உடற் குற்றம், பாடற்றொனிக்குற்றம், யாவும் நீக்கிச் சாமவேதத்தை இன்னிசையாகப் பாடினான். அப்போது இனிமையான இராகத்துடன் பாடுவதைப் பிடியன்னமென்னடை திருச்செவி சாய்த்துக் கேட்டு, மனமகிழ்ந்து, சுவாமியைநோக்கி, கோபுரவாயிலில் நின்று இனிமையான இராகத்துடன்
பாடுகின்றவன் யாவனென்று கேட்க, கோணநாயகர் இடபதேவரைப் பார்த்து, கோபுரவாயிலில் நின்று பாடுகின்ற இராவணனை எனக்கு முன்பாக அழைத்து வருவாயாக என்று கட்டளை யிட்டார். அப்படியே இடபதேவர்
இராவணனிடஞ் சென்று, அழைத்தபோது, இரத்தஞ் சிந்திய முகங்களோடுங் குறுகிய கரத்தோடும் வீணா தனன்டத்தைத் தோளிலே சாத்திக்கொண்டு, சுவாமியின் முன்வந்து திருப்பாதங்களை வனங் கினான். அப்போது கோணநாயகர் திருவுளமிரங்கி, குறைந்த அவயவங்க ளெல்லாவற்றையும் பின்பு உண்டாகும்படி செய்து, ஒரு வாளும், தேரும் கொடுத்து, ஓர் இலிங்கமும் ஈந்து, இலங்காபுரிக்குப் போகும்படி விடை கொடுத்தார். இராவணன் பின் னும் பல தரஞ சுவாமியுடைய திருவடிகளை நமஸ்கரித்துக்கொண்டு போனான், -
(%%)(RNÖ)

திருக்கோணாசல வைபவம் 19
விட்டுனுமூர்த்தி சரித்திரம்
இராவணன் இலிங்கத்தையுங் கையிலேந்திக்கொண்டு வரும்போது, விட்டுணுமூர்த்தி ஒரு பிராமண வடிவத்துடன் திருக்கோணமலைச் சாரல் வழியாகப் போனார். அப்போது இராவணன் பிராமணரைக் கண்டு முனிவரே நீர் யார்? எங்கிருந்து வருகின்றீர்? எவ்விடம் போகின்றீரென வினவினான். முனிவர் அதற்கு உத்தரமாக: நான் இப் பூலோகத்தில் உள்ள சிவஸ்தலங் களைத் தரிசித்துக் கொண்டு, கோணநாயகர் எழுந்தருளியிருக்கும் திரி கோணாசலத்தைத் தரிசிக்கும் பொருட்டு இலங்காபுரி மார்க்கமாக வருகிறேன் என்றார். அதைக்கேட்ட இராவணன், ஐயா! நீர் இலங்காபுரி மார்க்கமாக வருகிறேனென்று சொன்னீரல்லவா? அவ்விலங்காபுரியில் ஏதேனும் விசேஷ சம்பவங்கள் உண்டா? நான் அறியும்படி சொல்ல வேண்டுமென்று கேட்டான். அப்போது முனிவர் இராவணனைப் பார்த்து, இலங்காபுரியை அரசு செய்யும் அரசனொருவன் உளனாம். அவன் சமுத்திரத்தில் வீழ்ந்துவிட்டான் என்பதைக் கேள்வியுற்ற அவனது தாயார் மனக்கவலையால் உயிர் துறந்துவிட்டாள். இதுதான் அவ்விடத்திலுள்ள விசேஷ சம்பவம். வேறுயாதும் யான் அறியே னென்று சொன்னார். அந்தச் சொல்லைக் கேட்டவுடன் இராவணன் மயங்கிப் பூமியில் விழுந்து பெருமூச்செறிந்து புலம்பினான். அவ்வேளையில் முனிவர் இராவணனை நோக்கி, நீ யாது காரணத்துக்காகப் புலம்புகின்றாயென வினவ இராவணன், இறந்துவிட்டாளென்று நீர் சொல்லிய பெண் எனது தாய். நான் இலங்கையை அரசு செய்யும் அரசன். என் பெயர் இராவணன். எனது தாயாருக்காகவே இவ்விடம் வந்து மிகுந்த வாதனைகளெல்லாம் அனுபவித்து கோணநாயகரிடத்தில் இவ்விலிங்கத்தை வாங்கினேன். நான் இலங்காபுரிக்குப் போவதற்கு முன்பாக எனது தாயார் இறந்துவிட்டபடியால் இச் சிவலிங்கத்தை யான் இனி என்ன செய்ய வேண்டும்? என்று முனிவரைக் கேட்டான். முனிவர் அதற்கு உத்தரமாக, நீ உனது தாயார் இறந்துவிட்டா ளென்னுந் துக்கத்தினாற் புலம்புகின்றாய். ஆனாற் கையிலே சிவலிங்கத்தை வைத்துக் கொண்டு அழுவது தகுதியல்ல, அவ்விலிங்கத்தை என்கையிலே தருவாயாக என்று சொன்னார். இராவணனும் அதற்கிசைந்து சிவலிங்கத்தை முனிவர் கையில் கொடுக்க, அவர் அதை வாங்கி, திரிகோணாசலத்துக்கு நிருதி திக்கில் வைத்துவிட்டு, பின்பு இராவணனை நோக்கி, பின்வருமாறு சொல்லத் தொடங்கினார்.
கேளும் இராவணா! பூமியிலே, பிறப்பதும் இறப்பதும் அவரவர் வினைப்பயனின்படியன்றி வேறொன்றல்ல. தோற்றப்படும் பொருட்களெவையோ அவையாவும் தோற்றிய விடத்திற்றானே பின்னும் போய் ஒடுங்கும். நீர் மேற் குமிழி போலவும், ஆகாயத்தின் மின் போலவும் உண்டாகி மறைகின்ற

Page 27
2O திருக்கோணாசல வைபவம்
இவ்வுடம்பை மெய்யென்றுணர்வது தப்பிதம். தாய், தந்தை, மனைவி, மக்கள் முதலிய உறவினர்கள் எல்லாம் வினைப் போகத்தினால் வந்தவர்கள். அவர்கள் நமக்குத் துணையென்று அறிவுடையோர் ஒருபொழுதும் எண் ணார்கள். இறந்தவர்களுக்காகத் துக்கிப்பது மடைமையே அன்றிப் பிறி தொன்றல்லவென்று பலவாறான தேற்றரவைச் சொல்லி, அவனுடைய துக்கத்தை ஒருவாறு சாந்தி செய்து, பின்னும் சொல்லுவார்: “இராசனே! உலகத்தில் அரிய தவங்களைச் செய்தும், புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கியும், சிவத்தலங்களை தரிசித்தும், விரதாதிகளை நோற்றும் புத்திரர் களைப் பெறுவது, தாங்கள் நற்கதி அடைதற்பொருட்டேயாம். அது எவ்வா றெனில், சிவபெருமான் அருளிய ஆகமங்களில் சொல்லிய பிரகாரம் கன்மாதி முதலிய ஈமக் கிரியைகளை புத்திரர் செய்து நிறைவேற்றுதலேயாம். ஆதலால் நீயுன் தாயாருக்குச் செய்யவேண்டிய கன்மாதியை இந்தப் புண்ணிய கூேடித்திரமாகிய திருகோணாசலத்தில் செய்து நிறைவேற்றுவா யானால் உனது தாய் நற்கதியடைவாள். இதில் நீ சற்றும் ஐயம் கொள்ள வேண்டாம்” என்று சொன்னார். அப்போது இராவணன் முனிவரை நோக்கி, ஐயா! இந்த திரிகோணாசலம் மிகுந்த மாட்சிமை உடைய புண்ணிய கூேடித்திரம் என்று சொன்னிரே, யாது காரணத்தினால் மகத்துவம் உடையது? அச் சரித்திரத்தை அடியேனுக்கு விபரமாகச் சொல்ல வேண்டும் என்று ரார்த்தித்தான். அப்படியே சொல்லுகிறேன் என்று முனிவராக வடிவெடுத்து பந்த விட்டுணுமூர்த்தி தகூடிணகைலாசமாகிய திரிகோணாசல மான்மியங் ளைச் சொல்லத் தொடங்கினார்.
"கேளும் இராவணா! இந்தத் திரிகோணாசலத்தின் மகத்துவங்களை விபரமாகச் சொல்லுதற்கு யான் வல்லவனல்ல. ஆனால் சுருக்கமாகச் சொல்லுகிறேன். இந்த இலங்கை மண்டலத்தில் பொன்னுலக வாசிகளாகிய குபேரன் முதலிய தேவர்கள் இருந்து இராச்சியபரிபாலனம் செய்ததினால் இவ் விலங்கைக்கு ஈழமண்டலம் என்னுமோர் பெயர் உண்டாயிற்று. அன்றி யும், சிவபெருமான் திருவுளங்கொண்டு எழுந்தருளி இருக்கும் சிவஸ்தலங் களுள் ஒன்றாகிய, பாலாவியாறு சூழப்பட்ட மாதோட்ட மென்றழைக்கப்படும் திருக்கேதீஸ்வரத்தையும், அகத்தியமுனிவர் மாவலிகங்கைக் கரையில் பூசித்த சுயம்பு இலிங்கமானது எழுந்தருளியிருக்கும் கரசையம்பதியையும், சுப்பிரமணியக் கடவுளுடைய திருக்கரத்திலிருக்கும் வேலாயுதமானது பூர்வீகத்தில் பூமியின் கண் வந்து வீற்றிருந்த வெருகற்பதியையும், சுப்பிரமணியக் கடவுள் தேவிமாருடன் எழுந்தருளியிருக்கும் தலங்களுள் ஒன்றாகிய திருக்கோயில் என்னும் தலத்தையும் பூலோகத்தின் மத்தியில் இருந்து மேருமலையானது பிரகாசிக்கும் தன்மைபோல இலங்கை மத்தியில் மிகுந்த மாட்சிமை கொண்டு வளர்ந்தோங்கியிருக்குஞ் சிவனொளிபாத மலையையும், அகத்தியமுனிவர் திருமணக்கோலம் காண்பதற்கு தக்ஷண

திருக்கோணாசல வைபவம் 21
கைலைக்கு வந்து சிவபெருமானைச் சிலகாலம் பூசித்துக்கொண்டிருந்த கழனி மலையையும், சுப்பிரமணியக் கடவுள் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்து முத்துலிங்க தேசிகருக்குத் தரிசனங்கொடுத்துத் தடுத்தாண்டடிமை கொணடு எண்ணிலாத் திருவிளையாடல்களைச் செய்திருக்கின்ற கதிரை மலையையும், மாருதப்புரவீகவல்லியின் குதிரை முகத்தை மாற்றிய தீர்த்தம் உண்டாகியிருக்கும் கீரிமலையையும், ஆறுமுகக் கடவுள் அடியார்களுக்கு அனுக்கிரகம் செய்யும் பொருட்டு மனமுவந்து எழுந்தருளியிருக்கும் உகந்த மலையையும், இன்னும் அனேக விஷேச ஸ்தலங்களையும் தீர்த்தங்களையும் தன்னுள் அடக்கியிருக்கும் இலங்கை மண்டலத்தில், மிகுந்த மாட்சிமை பொருந்திய இத் திரிகோணாசலமானது எந்தத் தலத்திற்கும் மிக மேலான தாய் இருக்கும். பூலோகத்தில் உள்ள நவகோடி சத்திபீடத்தில் இது அதி சத்திபீடமென்று சொல்லப்படும். இத் திரிகோணாசலம் தக்ஷணகைலாயம் என்றும், இவ்விடத்திலுள்ள தீர்த்தம் பாவநாசத் தீர்த்தம் என்றும், இத் தலத்துக்குரிய விருகூடிம் சுவேதகூவிளம் என்றும் சொல்லப்படும். இம்மலைச் சார்பில் வண்டுகளானது புஷ்பங்களில் மொய்த்திருப்பது போல, சதாகாலமும் தேவர்கள் முனிவர்கள் யோகிகள் யாவரும் வசிப்பார்கள். பிரம்மாவும் விஷ்ணுவும் காலம் தவறாமல் கோணநாயகருடைய திருவடிகளைப் பூசை செய்து கொண்டிருப்பார்கள். எண்ணுக்கடங்காத வைரவர்களும் காளிகளும் மலையைச் சுற்றி காவலாக நிற்பார்கள். மாவலிகங்கை இடைகலையாகவும், காவேரிகங்கை பிங்கலையாகவும், ஆகாயகங்கை சுழுமுனையாகவும் மலையின் கீழாகப்பாய்ந்து, கோணநாயகருடைய பாதங்களை விளக்கிச் செல்லும் பாதாளலோகத் தெல்லைவரைக்கும் ஊடுருவி, அண்டமுகட்டை பளாவி வளர்ந்து, சொல்லப்பட்ட மூன்று கங்கைக்கும் நடுவில் சமுத்திரத்தில் இருக்கும் இம்மலையானது, முக்கோணவடிவுடையதாக, பக்கங்களில் ஏழு குகைகளையும் நடுவிலோர் தமனியமண்டபத்தையும் தன்னுள் அடக்கி இருக்கும். மலைக்குக் கிழக்குத் திசையிலிருக்கும் குகைவழியாக ஆகாய கங்கை வரும். தெற்குத் திசையிலுள்ள குகையில் உருத்திரமூர்த்தி வசித் திருப்பார். மேற்குத் திசையிலுள்ள குகை விட்டுணு லோகத்துக்குப் போகும் பாதையாக இருக்கும். வடக்குத் திசையிலுள்ள குகையில் முனிவர்கள் இருந்து தவஞ்செய்வார்கள். தென்மேற்குத்திசையிலுள்ள குகையில் வெள்ளி பினால் செய்யப்பட்ட ஒருகோயில் உண்டு. அக்கோயிலை ஒரு பூதம் |த்திருக்கும். வடமேற்குத்திசையிலுள்ள குகை பாதாள லோகத்துக்குப் போகும் பாதையாக இருக்கும். வடகிழக்குத் திசையிலுள்ள குகை மோகத்தைக் கொடுக்கும் இடமாய் இருக்கும். இதில் முன் சொல்லப்பட்ட தமனியமண்டபத்தின் நடுவாக இருக்கும் ரத்தின சிங்காசனத்தில் உலகமாதாவாகிய பிடியன்னமென்னடை சமேதராகக் கோணநாயகர் 1ழுந்தருளியிருப்பார். இத் திரிகோணமலைக்கு சோமவாரம், சுக்கிரவாரம், சிவராத்திரி, திருக்கார்த்திகை, பங்குனி உத்தரம் முதலாக மற்றும்

Page 28
22 திருக்கோணாசல வைபவம்
புண்ணிய காலங்களிலும் வந்து அபிடேகஞ் செய்வித்து, வில்வத்தினால் அர்ச்சனை செய்விப்பவர்களும், திருவிளக்கேற்றி வைப்பவர்களும் இம்மையில் இந்திரபோகத்தை அனுபவித்து, மறுமையில் மோகூடிவீட்டை பெறுவார்கள். சதாகாலமும் இம்மலையைத் தரிசிப்பவர்கள் பெறும் பேற்றை இன்னதென்று சொல்வதற்கு யாவராலுங்கூடாது. முற்சென்மங்களில் தாங்கள் செய்துகொண்ட தபோபலத்தினால் இத்தலத்தில் வந்து பிறப்பார்கள். இவ் விடத்தில் இறப்பவர்கள் யமதூதருடைய வாதனையின்றித் தேவர்கள் கொணரும் புஷ்ப ரதத்தில் ஏறிப்போய்க் கோணநாயகருடைய பாதநிழலை அடைவார்கள். இவ்விடத்தில் செய்யும் தான தருமங்கள் எல்லாம் ஒன்று, கோடியாக விருத்தியாகும். அனாசாரத்துடன் இம்மலைக்குச் செல்பவர்களும், இவ்விடத்திற் செய்யலாகாத குற்றங்களில் யாதாயினும் ஒன்றை செய்பவர்களும் இரெளரவாதி நரகங்களில் விழுந்து வருந்தி, பின்னும் எளிய பிறவிகளாகப் பிறந்து வருத்தமடைவார்கள். "அரசனே! இத் திரிகோணமலைக்கு மேலான தலமும், மாவலிகங்கைக்கு மேலான தீர்த்தமும், கோணநாயகருக்கு மேலான கடவுளும் பூமி, அந்தரம், சுவர்க்கம் என்னும் மூன்றுலோகங்களிலும் கிடைப்பதரிதாகும். ஆகையால் உனது தாயாகிய இராத்திரிகரிக்கு இந்தப் புண்ணிய தலத்தில் கன்மாதியைச் செய்து நிறைவேற்றுவாயானால் பெறுதற்கரிய மோகூடி வீட்டை அடைவாள். இது சத்தியம்” என்று இராவணனுக்கு திரிகோணாசல மான்மியத்தை முனிவராகிய விட்டுணுமூர்த்தி சொல்லி முடித்தார்.
C2%)CSRS)

திருக்கோணாசல வைபவம் 23 கன்னிகைத் தீர்த்தம் உற்பத்தியான சரித்திரம்
அப்போது முனிவர் சொல்லியவற்றை எல்லாம் இராவணன் கேட்டுத் தனது தாயாருக்கு இப்புண்ணிய ஸ்தலத்திற்றானே கன்மாதியைச் செய்து நிறைவேற்ற வேண்டுமென்னும் விருப்பங்கொண்டு, முனிவரை நோக்கி, "ஐயா! நீரே ஆசாரியராகவிருந்து, என் தாயாருக்குக் கன்மாதியைச் செய்து நிறைவேற்ற வேண்டும்” என்று பிரார்த்தித்தான். அதைக் கேட்ட முனிவர், மிகுந்த சந்தோஷம் கொண்டு, அப்படியே செய்கிறேன் வாருமென்று இராவணனை அழைத்துக் கொண்டு, திரிகோணமலைக்கு மேற்குத் திக்கிலுள்ள கன்னிகா என்னுந் தலத்துக்குப் போய், அவ்விடத்தில் தனது கையிலிருந்த தண்டினால் ஏழிடத்தில் ஊன்றினார். முனிவர் ஊன்றிய ஏழு இடத்திலும் கடுஞ்சூடு, இளஞ்சூடு, கடுங்குளிர், இளங்குளிர் முதலிய ஏழுவகைப் பேதமுள்ள சலத்துடன் ஏழு கூவல்கள் உண்டாகின. அப்போது முனிவர் இராவணனை நோக்கி, இந்தப் பூங்காவனத்தில் தெய்வப் பெண்கள் எப்போதும் வந்து விளையாடிப் போவதால், இக்கன்னிகா மிகவும் விசேஷமான தலமாயிருக்கும். இத் தீர்த்தமானது, பாதாள லோகத்திலிருந்து உற்பத்தியானது. இது குமரித்தீர்த்தமென்று அழைக்கப்படும். இவ்விடத்தில், இறந்தவர்களுக்கு அந்தியேட்டி செய்து, இத்தீர்த்தத்திற் பிண்டமிடுவார் களானாற் கங்கை முதலிய நதிகளில் இறந்தவர்களடையும் கதியிலும் பெருமிதமான கதியை அடைவார்கள் என்று முனிவர் சொல்ல, இராவணன் முனிவருடைய பாதங்களில் விழுந்து நமஸ்கரித்து, சுவாமி தேவரீரைப் பார்க்கினும் பெரியாரை யான் ஒருபோதுங் கண்டதில்லை. இனிக் கால தாமதஞ் செய்யாமற் கன்மாதியைச் செய்து முடிக்க வேண்டுமென்று சொல்லி, அந்தியேட்டிக்கு வேண்டிய பொருட்களை அழைப்பித்துக் கொடுத்தான். அப்போது முனிவர் ஒரு மண்டபம் கட்டுவித்து, அதிலிருந்து ஆகமவிதிப்படி அந்தியேட்டி செய்து, இராத்திரிகரியினுடைய உயிரை மகாசாலப் பிரயோகத்தினால் அழைத்து, முடியப்பட்ட புற்றளிகையி லாவாகித்து, தகனஞ்செய்து, மற்றும் கிரமங்களையும் முடித்துப் பின்பு, பாஷாணஸ்தாபனஞ் செய்து, இராவணனுடைய கையினால் எள்ளுந் தண்ணீருமிறைப்பித்து, பிண்டமிடுவித்து, பின்பு இராவணனை நோக்கி, இதோவிருக்கும் பாஷாணத்தை உனது புயத்தில் வைத்துப் போய்க் கன்னிகைத் தீர்த்தத்திற் போட்டு ஸ்நானஞ்செய்து வருவாயாக வென்றார் அப்படியே இராவணன் செய்து முடித்த பின்பு, விபூதிகொடுத்து, ஆசீர்வாதஞ செய்து, இராவணனையும் அழைத்துக் கொண்டு திரிகோணாசலத்துக்கு வந்து, உனது தாயார் நற்கதியடைய வேண்டுமென்று நினைத்துக் கொண்டு கோணநாயகருடைய திருப்பாதங்களை நமஸ்கரித்துவாவென்று சொல்ல,

Page 29
24 திருக்கோணாசல வைபவம்
அவனும் அப்படியே செய்து முடித்தான். அதன் பின்பு முனிவர் இராவணனை அழைத்துக் கொண்டு மலையடிவாரத்தில் வந்து, பலவித தானங்களையும் கொடுப்பாயாகவென்று சொன்னார். அப்போது சிவபெருமான், பிரமா, விட்டுனுவாகிய முனிவர் இம்மூவரும் பிராமணவடிவத்துடன் இருந்து, முகிற்கூட்டங்கள் பொன்மழையைப் பெய்தாலொப்ப இராவணன் கொடுக்குந் தானங்களை வாங்கினார்கள். பின்பு அம்மூவரும் இராவணனை நோக்கி, உனது தாயார் மேலான பதவியைப் பெறுவாளென்று ஆசீர்வதித்து, தனித்தனியே ஒவ்வொருவரும் ஒவ்வொரு இலிங்கம் அவன் கையிற் கொடுத்து, இந்த மூன்று இலிங்கத்தையும் இம் மலையின் மூன்று கோணத் திலும் வைப்பாயாக வென்று சொல்லி மறைந்து போனார்கள். அப்போது, இராவணன் அதிசயமுற்று, கோணமலையை மும்முறை வலஞ்செய்து, கோணநாயகருடைய பாதங்களை நமஸ்கரித்து, மூன்று இலிங்கத்தையும் மூன்று கோணத்திலும் வைத்து, சுவாமியிடம் விடைபெற்றுத் தேரிலேறிக் கொண்டு இலங்காபுரிக்குப் போனான். முனிவர் அந்தியேட்டி செய்து தர்ப்பை சுட்ட போதில் இராத்திரிகரி பதைபதைத்து உயிர் துறந்தாள் என்பதை இராவணன் அறியாதவனாகி, இலங்காபுரியை அடைந்து, தனது தாயை நினைத்துச் சில நிமிஷங்களாகத் துக்கித்து, பின்பு தேற்றரவு கொண்டு இராச்சியபரிபாலனஞ் செய்திருந்தான்.
விட்டுணுமூர்த்தி உண்டாக்கிய ஏழு கூவல்களுந் தற்காலம்
இருக்கின்றன. இவ்வூரவர்கள் அவ்விடத்திற்றானே அந்தியேட்டி செய்விக்கின்றார்கள்.
C39GOCQSRS)

திருக்கோணாசல வைபவம் 25
இராமர் சரித்திரம்
பின்பு இராவணன் இலங்காபுரியை அரசு செய்து வரும் நாளில், அயோத்தியிலிருந்து அரசுசெய்த தசரதச் சக்கரவர்த்தியின் குமாரராகிய பூரீராமர் இலங்கைக்கு வந்து, துட்டகண்டராகிய இராவணன், கும்பகர்ணன், கவந்தன், கரணதூஷணன் முதலிய இராகூடிதர்கள் எல்லோரையுங் கொன்று, விபீஷணனை இலங்கைக்கு அரசனாக்கி வைத்துப் பின்பு சீதாதேவி இலக்குமணன் முதலியவர்களோடு திரிகோணாசலத்துக்கு வந்து, கோண லிங்கரையும், பிடியன்னமென்னடையம்மையையும் தரிசித்து, வேண்டிய வரங்களைப் பெற்றுக்கொண்டு சென்றார்.
வரராமதேவர் சரித்திரம்
அதன் பின்பு, சோழமண்டலத்திலிருந்து அரசுசெய்த மனுநீதி கண்ட சோழனின் வம்சத்தவராகிய வரராமதேவர் என்பவர், சிவபெருமான் பேரிற் கொண்ட அன்பு மிகுதியினால் அவரெழுந்தருளி இருக்குஞ் சிவத் தலங்க ளெங்குஞ் சென்று தரிசிப்பதிலும், சிவபூஜை செய்வதிலும், சிவசரித்திரங் களைக் கேட்பதிலும், சிவனடியார்களைச் சிவனெனப் பாவித்து அவர்களுக்கு அன்னம், சொர்ணம் முதலியன கொடுத்துப் பாதுகாப்பதிலும் தனது காலத்தைக் கழித்து வந்தார். அப்படியே செய்துவரும் நாளில், ஒருநாள் திரிகோணாசல மான்மியத்தைக் கேள்வியுற்று அவ்விடம் போய்ச் சுவாமியைத் தரிசிக்கவேண்டும் என்னும் விருப்பமுடையவராகி, மந்திரியை நோக்கி, நாம் திரிகோணாசல தரிசனம் செய்யவேண்டி இருப்பதால், ஆகவேண்டிய வைகளைத் திட்டஞ்செய்வாய் என்று கட்டளையிட்டார். அப்போது மந்திரி யானவன் பிரயாணத்துக்கு வேண்டியவைகளை யெல்லாஞ் செய்துமுடித்து அரசருக்கு அறிவிக்க, அவரும் மகிழ்ச்சிகொண்டு மந்திரி முதலான வர்களுடன் மாளிகையை விட்டுப் புறப்பட்டு வந்து, மரக்கலத்திலேறித் திரிகோணாசல சமுத்திரக் கரையில் வந்து இறங்கினார். அதன் பின்பு, வரராமதேவர் கோணமலையைத் தரிசித்துக் கொண்டு, பாவநாச தீர்த்தத்தில் இறங்கி ஸ்நானஞ்செய்து, அநுட்டானம் முடித்துக் கொண்டு, திருக்கோயிலுட் பிரவேசித்து, கோணலிங்கரையும் தேவியையும் கண்டு, சுவாமி! இந்தப் புண்ணிய க்ஷேத்திரத்தில் தேவரீர் எழுந்தருளியிருப்பதை இந்தநாள் வரையிலும் யான் அறியாதிருந்தேனே என்று சொல்லி, ஆனந்த வருவி சொரிய, நாவானது குழற, பலவித தோத்திரங்களைச் சொல்லி, அட்டாங்க நமஸ்காரம் செய்து போனார். பின்பு, திரிகோணாசலத்தில் சிலகாலம் தங்கியிருந்து, நித்தியமுங் காலந்தப்பாது கோணநாயகருடைய பாதார விந்தங்களைப் பூசை செய்து வணங்கிவந்தார். ஒருநாள் கோண

Page 30
26 திருக்கோணாசல வைபவம்
நாயகர் வரராமதேவர் பேரில் திருவிழிக்கடைபரப்பி, அன்பனே! நீ இத் திரிகோணாசலத்தின் மகத்துவத்தையறிந்து, இவ்விடம் வந்து மிகுந்த பத்தியுடன் நாடோறும் நம்மைத் தரிசனஞ் செய்து வருகின்றாய். ஆனால், இனி உனது தேசத்திற்குச் சென்று, சத்துருக்களை வென்று, சகலசம்பத்துங் குன்றாமலிருந்து இராச்சிய பரிபாலனஞ் செய்து, பின்பு நமது பதவியில் வந்து சேருவாயாக என்று திருவாய்மலர்ந்தருளினார். அதைக் கேட்ட வரராமதேவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்து, பின்னுஞ் சிலநாளிருந்து சுவாமி தரிசனஞ் செய்துவந்தார். அதன் பின்பு, மிகுந்த திரவியங்களையும் பலவித இரத்தினாபரணங்களையும் மலையின் கீழாகவிருந்த ஒரு கூவலிற் சேமித்து, அத்திரவியங்கள் இவ்வளவென்றெழுதப்பட்ட ஒரு செப்பேட்டையும் அதில் வைத்துவிட்டு, திரிகோணாசலத்தைப் பிரதகூடிணஞ்செய்து, கோணநாய கரிடம் விடைபெற்றுக்கொண்டு, சோழமண்டலம் போய்ச் சேர்ந்து, மனுநீதி குன்றாமல் கோணநாயகருடைய திருவடிகளை மறவாத சிந்தையுடன் இராச்சியபரிபாலனஞ் செய்துவந்தார். அக்காலத்தில், கோணநாயகருடைய அனுக்கிரகத்தினால் வரராமதேவரின் மனைவி கருப்பமுற்றுப் பத்துமாதமுஞ் சென்றதன்பின்பு, நவக்கிரகங்களும் கோணகேந்திரங்களில் ஆட்சி உச்சமாய் இருக்கச் சுபலக்கினத்தில் ஓர் ஆண்மகவைப் பிரசவித்தாள். அ.தறிந்த வரராமதேவர் பிராமணர் முதலியவர்களுக்கு அன்ன, சொர்ணங்களை அள்ளியிறைத்து, கோணநாயகருடைய கிருபையினால் நமக்குக் கிடைத்த பாக்கியம் இது என்று சொல்லி, குழந்தையை இருகையாலும் எடுத்து, பூரணசந்திரோதயம் போல விளங்கும் முகத்தை உற்றுப்பார்த்தார். அப்போது குழந்தையின் நெற்றியில் விலங்கின் கொம்பு போன்ற ஒரு சிறு கொம்பு உண்டாயிருப்பதைக் கண்டு, குளக்கோட்டன் என்னும் நாமந் தரித்து, மிகுந்த பரிவுடன் வளர்த்து வந்தார். ஐந்து வயது சென்றதன் பின்பு, வேதம் ஆகமம் ஸ்மிருதி முதலியவைகளையும், ரத, கஜ, துரக, பயிற்சிகளையும், தனுர்வித்தைகளையும் கற்பித்தார். அப்போது குளக் கோட்டன் மற்றும் நூல்கள் எல்லாவற்றினும் பதிநூல்களையே மிகுந்த கவனமாகப் படிப்பாராயினர். சில காலஞ் சென்றதன் பின்பு ஒருநாள் சூரிய குலத்து அரசர்களின் குருவாகிய வசிட்டமுனிவர் வரராமதேவருடைய கொலுமண்டபத்துக்கு வந்தார். அதுகண்ட அரசர் ஆசனம் விட்டெழுந்து போய், அவருடைய பாதங்களை வணங்கி, அழைத்து வந்து, ஓர் ஆசனத்தில் இருத்தி பின்பு தனது மனைவியையும் குளக்கோட்டனையும் அழைப்பித்து, முனிவருடைய பாதங்களை வணங்கிப் போகும்படி கட்டளையிட்டார்.
அவர்களும் அப்படியே செய்து, விடைபெற்றுக்கொண்டு சென்றார்கள். அதன் பின்பு, வசிட்டமுனிவர் வரராமதேவரை நோக்கி, கேளும் இராசனே! கோணநாயகருடைய கிருபையினால் உமக்குக்கிடைத்த புத்திரன் சாமுத்திரிக நூல்களிற் சொல்லப்பட்ட முப்பத்திரெண்டு லக்ஷணங்களும் அமைந்தவனாகவும்

திருக்கோணாசல வைபவம் 27
வாலைப்பருவம் அடைந்தவனாகவும் இருப்பதனால், காலதாமதஞ் செய்யாமல் அவனுக்கு முடிசூட்டி, இராச்சியபாரத்தை ஒப்பு விக்கக் கடவாய் என்றார். அதுகேட்ட அரசர் மிகுந்த சந்தோஷம்கொண்டு, சுபமுகூர்த்தம் வைப்பித்து, பட்டணத்தை அலங்காரஞ் செய்வித்தார். பின்பு முகூர்த்தத் தினத்தில் இரத, கஜ, துரக, பதாதிகளும், மந்திரி, பிரதானிகளும் இருபக்கத்திலும் சூழ்ந்து நிற்க, சப்த சமுத்திரங்களும் ஏகோபித்து ஒலித்தாற் போலப் பேரிகை முதலிய வாத்தியங்கள் ஒலிக்க, அந்தணர் ஆசீர்வாதம் செய்ய, சகலவித ஆடம்பரத்துடன் வசிட்டமுனிவர் தனது இருகரத்தினாலும் நவரத்தினக் கிரீடத்தை எடுத்து குளக்கோட்டனுடைய சிரசில் தரித்து ஆசீர்வதித்தார். பின்பு, குளக்கோட்டமகாராசன் சிம்மாசனத்தை விட்டெழுந்து வசிட்ட முனிவரையும் தாய் தந்தையரையும் நமஸ்கரித்தான். அப்போது வசிட்டமுனிவர் குளக்கோட்டுமகாராசனுக்கு வாழ்த்துதல் செய்துகொண்டு தன் ஆச்சிரமம் போய்சேர்ந்தார். அதன் பின்பு, குளக்கோட்டு மகாராசன் இராச்சியப்பரிபாலனம் செய்துவரும் நாளையில் வரராமதேவர் இகவாழ்வை நீத்து கோணநாயகருடைய பாதாரவிந்தத்தை அடைந்தார். அப்போது குளக்கோட்டு மகாராசன் பிதாவுக்குச் செய்யவேண்டிய ஈமைக்கிரியைகள் அனைத்தையும் விதிப்படி செய்துமுடித்து, பின்பு பிரசைகள் எல்லாரும் புகழ்ந்து வாழ்த்தொலி செய்யும்படியாக எட்டுணையேனும் மனுநீதி குன்றாமல் செங்கோல் செலுத்தி இராச்சியபரிபாலனம் செய்துவந்தான்.
C939GOGSRSQ)

Page 31
28 திருக்கேர்ணாசல வைபவம்
குளக்கோட்டுமகாராசா திரிகோணாசலத்தில் திருப்பணி செய்துமுடித்த சரித்திரம்
பின்பு சோழமண்டலத்திலுள்ள ஒரு பிராமணர் சிவபெருமான் எழுந்தருளியிருக்குந் தலங்களெங்குந் திரிந்து சுவாமிதரிசனஞ் செய்து கொண்டு, திரிகோணாசலத்துக்கு வந்து, கோணலிங்கரையும் பிடியன்ன மென்னடையம்மையையுந் தரிசித்துப் பின்பு மலைச்சாரலில் இறங்கிப் படுத்து நித்திரைசெய்தார். அவ்வேளையில் ஒரு பூதமானது வந்து வேதியனைத் தட்டி எழுப்பி, நீர் யாவர்? எங்கிருந்து வருகிறீர் என்று வினவிற்று. அப்போது பிராமணர் பூதத்தை நோக்கி, நான் சோழ மண்டலத்தில் இருப்பவன் சிவதலயாத்திரை செய்துகொண்டு, கோண லிங்கரைத் தரிசிக்கும் பொருட்டு இவ்விடம் வந்தேன் என்று சொன்னான். அவ்வேளையில் பூதமானது பிராமணனை நோக்கிச் சோழமண்டலத்தை அரசு செய்துவந்த வரராமதேவர் இவ்விடம்வந்து சுவாமிதரிசனம் செய்துகொண்டு போகும்போது, இம் மலையின் கீழுள்ள ஒரு கூவலில் அனேக திரவியங்களை சேமித்துவைத்து அக்கூவலைப் பாதுகாத்துக்கொள்ளும்படி எனக்குக் கட்டளையிட்டுப் போனார். இச்சங்கதியை வரராமதேவருடைய பிள்ளைகளுக்குத் தெரிவிப்பாய் என்று சொல்லிப் போயிற்று. பின்பு, பிராமணர் சிலநாள் இருந்து கோண லிங்கரைத் தரிசித்து விடைபெற்றுக்கொண்டு, சோழமண்டலத்துக்குச் சென்று, பூதம் சொல்லிய யாவற்றையும் குளக் கோட்டு மகாராசனுக்கு விபரமாகச் சொன்னார். அப்போது குளக் கோட்டு மகாராசன் திரிகோணாசலத்தை தரிசனம் செய்யவேண்டும் என்று தம் உள்ளத்தில் தீர்மானித்து, மந்திரிகளை நோக்கி, யான் திரிகோணாசலத்துக்குப் போய் கோணநாயகரைத் தரிசித்து, அவ்விடத்தில் ஒரு திருப்பணியையும் செய்து முடிக்கவேண்டியிருப்பதால் அதற்கு வேண்டும் எத்தனங்கள் செய்து பிரயாணப்படுங்கள் என்று கட்டளை யிட்டான். அப்போது மந்திரிகள் மனநிறைவின்படி கையினால் செய்து முடிக்கும் திறமையுடையவர்களும், சிற்பநூல் வல்லவர்களுமாகிய உலககுரு ஆசாரி, சித்திரகுரு ஆசாரி, சதுர்வேதகுரு ஆசாரி, அட்சரகுரு ஆசாரி, வாமதேவகுரு ஆசாரி என்னும் ஐந்து ஆசாரிமார்களையும் அழைத்துக் கொண்டு, வேண்டிய திரவியங்களையும் ஒரு மரக்கலத்திலேற்றி, சேனைத்தளங்களையும் பிரயாணத்துக்கு ஆயத்தப்படுத்தி, அரசனுக்குத் தெரிவித்தார்கள். கோணநாயகருடைய பாதாரவிந்தம் என்னும் தெப்பத் தினால் பிறவியாகிய சமுத்திரத்தைக் கடக்கப்போகின்ற குளக்கோட்டு மகாராசன், மிகுந்த சந்தோஷம் கொண்டு, சகலரோடும் மரக்கலத்தில் ஏறி கோணநாயகர் எழுந்தருளியிருக்கும் சமுத்திரக்கரையில் வந்திறங் கினார். பின்பு குளக்கோட்ட மகாராசன் சிரசின்மேல் கூப்பியகையுடன்

திருக்கோணாசல வைபவம் 29
கோணமலையை மும்முறை வலம்வந்து, பாவநாசத் தீர்த்தத்தில் இறங்கி ஸ்நானம் செய்துகொண்டு, திருக்கோயிலினுட் சென்று அட்டாங்க நமஸ் காரம் செய்து, அனற்படுமெழுகென மனமிகவுருக உரோமஞ்சிலிர்ப்ப ஆனந்தவருவி சொரிய பரவசம்கொண்டு, சிலநாழிகை வரைக்கும் கோண நாயகருடைய பாதங்களை வணங்கி நின்று, பின்பு தனது பிதாவாகிய வரராமதேவர் பொன் நிரப்பி வைத்திருக்கும் கூவலை நாடிப்போனார். அப்போது, பூதமானது எதிர்கொண்டு வந்து, இராசனே! உமது பிதாவானவர் இக்கூவலில் மிகுந்த திரவியங்களைச் சேமித்துவைத்து, இச்செப்பேட்டையும் என்கையில் தந்து, காவலாக வைத்துப் போனார். ஆகையால் இத்திரவி யத்தையும் செப்பேட்டையும் ஏற்றுக்கொள்ளுமென்று சொல்லி ஒப்பித்தது. அதன் பின்பு, குளக்கோட்டு மகாராசன் தனது முதன் மந்திரியை நோக்கி, ஆதியாகிய கோணநாயகரும் பிடியன்னமென்னடையம்மையும் எழுந்தருளி யிருப்பதற்கு, இந்திரலோகத்திலு மில்லையென்று சொல்லத்தக்க ஒரு கோயிலைக் கட்டி முடிக்கக்கடவாயென்று கட்டளையிட்டான்.
அப்போது மந்திரி மிகுந்த சந்தோஷங்கொண்டு, முன்பு இராவண னால் கோணமலையில் வெட்டித்திறந்திருக்கும் இடத்தில் ஒருபகுதியை உலகத்தவர்கள் எக்காலமுங் காணும்படியாக விட்டு, மற்றப்பங்கைக் கற்களினால் அடுக்கிக் கட்டியடைத்துப் பின்பு சுபமுகூர்த்தத்தில் அத்திவார மிட்டு, சாதிக்கற்களினால் தளவரிசை இசைத்து, ஆகாய கங்கை, மாவலி கங்கை, காவேரி கங்கை என்னும் மூன்று கங்கையும் சந்திக்கும் சுழிமுனை யில் நவரத்தினங்களினால் முக்கோணமாக ஒரு சபையைக் கட்டி முடித்து, பொற்றகட்டினால் மேற்றளம் இசைத்து அதன் மேற் கற்பலகை பரவி, நடுவனாக பூகம்பழப் பிரமாணமான ஒரு துவாரம் விட்டு, அதன் மேல், தூபிக்குச் சொன்ன அங்கிஷப்படி தூபி செய்துமுடித்து பொற்சிகரமும் வைத்து, பின்பு முக்கோண சபையின் நடுவனாக இரத்தினங்களினால் ஒரு சிங்காசனமியற்றி, அதன் நடுவிலும் பூகம்பழம் அளவானதோர் துவாரம் விட்டு, சிங்காசனத்துக்கு இருபக்கத்திலும் இரண்டு தூண்டாமணி விளக்கு விதிப்படி செய்வித்துத் தூக்கி பின்பு அர்த்தமண்டபம், மகாமண்டபம் முதலிய மண்டபங்களையும் விநாயகர், சுப்பிரமணியர் முதலிய தேவர்களுக்கு ஆலயங்களையும், திருமஞ்சனசாலை, யாகசாலை, பாகசாலை, புட்பசாலை, வாகனசாலை, விழாமண்டபம் முதலியவைகளையும் இரத்தினப் பிரகாசமாக விதிப்படி கட்டிமுடித்து, ஐந்து வீதியும் திருத்தி, பாவநாசச் சுனையையும் வெட்டிப் படித்துறைகளும் கட்டி, தாமரைத் தடாகங்கள், கூவல்கள், பிரமாலயங்கள், மடங்கள், அன்னசத்திரங்கள், நாற்கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், குளக்கோட்டு மகாராசன் வசிப்பதற்கு மாளிகை, சந்திரகாந்த மேடை, முதலியவைகளையும் செய்துமுடித்து, நந்த வனங்களையும, உண்டுபண்ணி, ஐந்துமாவனத்தைச் சுற்றி மதிலுங்கட்டி,

Page 32
3O திருக்கோணாசல வைபவம்
நாலுவாயிலும் விடுத்து ஒவ்வொரு வாயிலிலும் ஆகாயத்தை அளாவும் படியாக நாலு கோபுரம் கட்டிச் சிகரங்களும் வைத்து, மதிலுக்குப் பிற்பக்கத்தில் தெப்பக்குளமும் வெட்டி அக்குளத்திற்கு மேற்குத் திக்கில் நின்ற வெள்ளை வில்வவிருகூடித்தடியில் தெப்பத் திருநாளுக்குக் கோண நாயகர் வந்து வீற்றிருப்பதற்கு அலங்காரமான ஒரு மண்டபமும் கட்டி முடிப்பித்தான்.
அதன்பின், கோணநாயகரையும், பிடியன்னமென்னடையம்மையையுந் திருக்கோயிலுள் வைத்துப் பிரதிஷ்டைசெய்வதற்கு, குளக்கோட்டு மகாராசன் தங்குலகுருவாகிய வசிட்டமுனிவரை வரும்படியாக நினைத்தான். அப்போது வசிட்டமுனிவர் அவ்விடம் வந்து கும்பாபிஷேகம் செய்வதற்கு சுபமுகூர்த்தம் வைத்து குளக்கோட்ட மகாராசனுக்குத் தெரிவிக்க அரசன் அளவிடற்கரிய சந்தோஷம் கொண்டு, வீதிகள் எங்கும் பூம்பந்தர்கள் இட்டு வாழைகள் கட்டி பூரண கும்பங்களும் பாலிகைகளும் வைத்து, விளக்கேற்றி சொர்ண லோகம் போல்ச் சிங்காரஞ் செய்வித்தான். அதன்பின்பு வசிட்டமுனிவர் கும்பாபிஷேகத்திற்கு செய்ய வேண்டிய கிரமங்கள் அனைத்தையும் விதிப்படி செய்துமுடித்து, தேவர்கள் புட்பமாரிபெய்ய, முனிவர்கள் வாழ்த்தொலிசெய்ய மங்கள வாத்தியங்கள் முழங்க: விபூதி, பஞ்சாக்ஷர, ருத்திராகூடித்தின் மேன்மை விளங்க, சிவனடியார்களின் வினைகள் நீங்க, தான தர்மங்கள் ஓங்க; குளக்கோட்டு மகாராசன் மனமானது மகிழ்ச்சியில் தேங்க, சைவ சமயம் தழைத்தோங்க, கோணநாயகரையும் பிடியன்னமென்னடையம்மை யையும் இரத்தின சிங்காசனத்தின் மீது ஸ்தாபித்து, வேத விதிப்படி கும்பா பிஷேகம் செய்து, பின்பு விநாயகர், சுப்பிரமணியர் முதலிய தேவர்களையும் அவரவர்களுக்குக் கட்டப்பட்ட ஆலயங்களில் வைத்து பிரதிஷ்டைசெய்து, குளக்கோடடு மகாராசனுக்கு ஆசீர்வாதம் செய்து, வசிட்டமுனிவர் தமது இருப்பிடத்துக்குப் போனார்.
அதன்பின்பு, குளக்கோட்டு மகாராசன் ஆகம விற்பனராகிய பாசுபதர்களை பூசைக்கு நியோகித்து, நாளொன்றுக்கு இரண்டவண அரிசியும் மற்றும் பொருளும் குறைவறக் கொடுத்து, ஆறுகாலப் பூசையும் நடத்துவித்து, சந்தோஷ உளத்தனாயிருக்கும் நாளையில், திருவிழாக்காலம் சமீபித்தது. அப்போது குளக்கோட்டு மகாராசன் நவரத்தினங்களால் குயிற்றப்பட்ட திருவாபரணங்கள், சுடர் திருவாசிகை முதலிய திருவாசிகைகள் கணக் கில்லாத சத்திரசாமரங்கள் அழகு பொருந்திய ஐந்து தேர் பொற்கேடகங்கள் முதலியவைகளையும் செய்வித்து சுபமுகூர்த்தத்தில் துவசாரோகணம் செய்வித்து, அங்குரார்ப்பணம் யாகம் முதலிய மற்றும் அங்கங்கள் எல்லாம் சிறக்க, பலவித வாத்தியங்கள் ஒலிக்கக், குடை கொடி ஆலவட்டம் நிழற்ற, சாமரையிரட்ட, சிவனடியார்கள் ஹரஹர என்று சொல்லுஞ் சொல்லானது

திருக்கோணாசல வைபவம் 31
எவ்விடத்திலும் தழைக்க, தேவர்கள் புட்பமாரி பெய்ய, பிடியன்ன மென் னடையம்மை வாமபாகத்திலும், ஸ்கந்தமூர்த்தி நடுவிலும் வீற்றிருக்க, கோணநாயகர் திருவீதி வருகின்ற திருக்கோலத்தை குளக்கோட்டு மகாராசன் கண்டு, பேரானந்தம் கொண்டு திருநாளை நடாத்துவித்து, பங்குனி உத்தரத்தில் இரதோட்சவ, தீர்த்தோற்சவங்களும் செய்வித்து ஆனந்த சமுத்திரத்தில் மூழ்கி இருந்தான்.
இவையாவும் இற்றைக்கு நாலாயிரத்து நானூற்றெழுபத்தேழு (4477) வருடங்களுக்கு முன் நிகழ்ந்தவைகளாகும். அதன் பின்பு குளக்கோட்டு மகாராசன் ஒருநாள் நாற்கான் மண்டபத்தில் வந்திருந்து ஆதியாகிய கோணநாயகரின் நித்திய பூசைக்காக நாளொன்றுக்கு இரண்டவண அரிசி சோழமண்டலத்திலிருந்து அழைப்பித்து மற்றும் பொருட்களும் விடுத்து நித்திய நைமித்தியங்களிற் குறைவராமல் நடாத்தி வருகின்றோம்; நமக்குப் பிற்காலம் இது காரணங்களை யாவர் நடத்தப் போகிறார்கள் என்று தனக் குள்ளே ஆலோசித்து பின்பு அவ்விடத்தில் தானே குளங்களைக் கட்டி வயல் வெளிகளைத் திருத்தி வைப்பேனாயிற் கோணநாயகருக்கு ஒரு போதும் நித்திய நைமித்தியங்களுக்கு குறைவராது என்று தீர்மானித்து, மாவலிகங்கைக்கு சமீபமாயுள்ள ஓர் இடத்தில் அல்லைக்குளம் என்று அழைக்கப்படும் குளத்தையும் கட்டி வயல்வெளிகளையும் திருத்தி, செய்கை பண்ணுவித்தார். அவை அதிகம் பிரயோசனத்தை கொடாதது கண்டு வெண்டரசன்குளம் முதலிய குளங்களையும் வயல் வெளிகளையும் திருத்திச் செய்கை பண்ணி வைத்தார். அவைகளும் தன் மனத்துக்குத் திருப்தியாக இராததினால் மிகுந்த வியாகூலத்துடன் இருந்தார்.
C326)GSRS)

Page 33
32 திருக்கோணாசல வைபவம்
ஆடகசெளந்தரி சரித்திரம்
இ.'திவ்வாறிருக்க, பலவளங்களுஞ் செறிந்த கலிங்கதேசத்தில் அசோகமாநகரத்தை ஆளும் அசோகசுந்தரனென்னும் அரசனின் மனைவி யாகிய மனோன்மணி சுந்தரியென்பாள் ஒரு பெண்மகவைப் பிரசவித்தாள். அக் குழந்தையானது சீவிமுடித்த குழலோடும், குறையாத பற்களோடும் பிறந்தது. அதைக் கண்ட அசோகசுந்தரன் மிகுந்த அதிசயங்கொண்டு, சோதிடநூல் வல்லவர்களை அழைப்பித்து, பிள்ளையின் பலாபலன்களை விசாரித்தான். அப்போது சோதிடர்கள் அரசனை நோக்கி, இராசனே! இந்தக் குழந்தை பெண்ணாக விருந்தாலும் செங்கோல் செலுத்தி அரசுசெய்யக்கூடிய இராச யோகத்திற் பிறந்திருக்கின்றது. ஆனால், இத்தேசத்தை ஆளமாட்டாது; பரதேசத்தை ஆளும். ஆயின், இக் குழந்தையை நீர் மாளிகையில் வைத் திருப்பீர் ஆயின், வேற்றரசர்கள் உம்மோடு யுத்தஞ்செய்து இராச்சியத்தைப் பறிப்பார்கள். தேசவளங்கள் குன்றும். இன்னும் பலவகையான இக்கட்டுகளும் உமக்கு வந்து நேரிடுமென்று சொன்னார்கள். அதைக்கேட்ட அரசன் மிகுந்த வியாகூலமுற்று, மந்திரிகளுடன் யோசித்து, ஒரு பொற்பேழை செய்வித்து, அதற்குள் பிள்ளையை வைத்துப் பூட்டி, சமுத்திரத்தில் விடுவித்தான். அப்பேழையானது இலங்கைச் சமுத்திரக்கரையில் வந்து அடைந்தது. அதைக் கண்டவர்கள் அப்போது உன்னாச்சிகிரி என்ற இடத்திலிருந்து இலங்கையை அரசுசெய்யும் மனுநேய கயவாகுவுக்குப் போய்த் தெரிவித்தார்கள். அரசன் அதைக் கேட்டவுடன் மிகுந்த மகிழ்ச்சிகொண்டு, சேனை தளங்களுடன் பிரயாணப்பட்டு, அவ்விடம் போய்ச் சேர்ந்து, பேழையை எடுத்துத் திறந்தான். அப்போது மகாலசுஷ்மி போலும் அழகுள்ள குழந்தையைக் கண்டு அதிசயித்து, தன் இருகரத்தினாலும் எடுத்து மார்போடணைத்து முத்தமிட்டான். அப்போது அக்குழந்தை நகைத்தது. அக்காரணத்தினால், அவ்விடத்துக்குப் பானகை யென்னும் பெயருண்டாகித் தற்காலமும் வழங்கிவருகின்றது. அதன் பின்பு இராசன் குழந்தையைச் சிவிகை மீது வைத்துக்கொண்டு தன்னிருப்பிடம் போய்ச்சேர்ந்து, பிள்ளையில்லை என்னும் மன வியாதியினாற் பீடிக்கப் பட்டிருக்குந் தனது மனைவி கையிற்கொடுத்து, குழந்தை வந்த வரலாற்றை யுஞ் சொன்னான். அரசன் மனைவி மிகுந்த சந்தோஷமடைந்து, பிள்ளைக்கு ஆடகசெளந்தரி என்னும் பெயரிட்டு அன்பாக வளர்த்தாள். ஆடகசெளந்தரி வளர்பிறைபோல நாளுக்குநாள் வளர்ந்து, வாலைப் பருவத்தை அடைந்தாள். அப்போது மனுநேய கயவாகுராசன் ஒருநாள் ஆடகசெளந்தரியை நோக்கி, மகளே! எனக்குப் பிற்காலம் இராச்சியபாரத்தை ஒப்புக்கொண்டு மனுநீதி குன்றாமல் அரசுசெய்து வரவேண்டியது மல்லாமல், உனது இராச்சியத்தின் கீழ் எவ்வித பாரிய வேலைகளைச் செய்யத் தொடங்கும் போது, நீ பூதங்களை அழைப்பித்து அப்பணிவிடைகளைச் செய்விப்பாயாக வென்று சொல்லி,

திருக்கோணாசல வைபவம் 33 விசித்திரயூகி என்னும் மந்திரியையும் அழைத்து, ஆடகசெளந்தரிக்கும் மந்திரிக்கும் பூதங்களை அழைக்கின்ற ஒரு மந்திரத்தை உபதேசஞ்செய்தான். பின்பு மனுநேய கயவாகு வினைவழியே ஊழ்வந்து முற்றியதாற் சிவபதம் அடைந்தான். அதன் பின்பு ஆடகசெளந்தரி இராச்சியபாரத்தை ஒப்புக் கொண்டு அரசுசெய்தாள்.
C3%)CSRS)

Page 34
'34 திருக்கோணாசல வைபவம்
திருக்குளச் சரித்திரம்
அக்காலத்தில் ஆடகசெளந்தரியின் ஏவலாளர் சிலர் இராக்கினியின் முன்பாக வந்து, பாதங்களை வணங்கி, தாயே! நும் அரசாட்சியின் கீழுள்ள திருக்கோணமலையில் சோழமண்டலத்துள்ள சைவனொருவன் வந்து மிகவும் அலங்காரமுள்ள கோயில்கள் மடங்கள் முதலியவைகளை உண்டுபண்ணி, அதிக ஆடம்பரத்துடன் இருக்கின்றானென்று சொன்னார்கள். அதைக்கேட்ட இராசபெருமாட்டி, மிகுந்த கோபங்கொண்டு, விசித்திரயூகி என்னுந் தனது முதன்மந்திரியை நோக்கி, நீ இந்தக் கணமே திருக்கோணமலைக்குப் போய் அக்கோயிலையும் இடித்துச் சமுத்திரத்திற்றள்ளி, அந்தச் சைவனையும் ஒடத்தில் ஏற்றி அனுப்பிவிட்டு வருவாயாகவென்று கட்டளைபண்ணி, ரத, கஜ, துரக பதாதிகளையுங்கூட்டி அனுப்பிவைத்தாள். மந்திரியானவன் இராசபெருமாட்டியின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, திருக்கோணா சலத்துக்கு வந்து சேர்ந்து, சூரியப்பிரகாசமாய் இலங்கும் பொற்சிகரங்க ளமைந்த கோயில்களையும் மற்றுஞ் சிறப்புக்களையுங் கண்டு, இத்திருப் பணியைச் செய்து முடித்தவன் தேவலோக வாசியாயிருக்க வேண்டும் என்று தன் உள்ளத்தே தீர்மானித்து, தான் ஏறிவந்த யானையை விட்டிறங்கி, குளக்கோட்டு மகாராசன் வீற்றிருக்கும் தமனியமண்டப வாயிலில் வந்து நின்று, உத்தரவு பெற்று உட்பிரவேசித்து, குளக்கோட்டு மகாராசனுடைய பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தான். அப்போது குளக்கோட்டு மகாராசன் ஆசீர்வதித்து, ஒரு பொற்பீடத்தில் உட்காரும்படி உத்தரவு செய்தான். சிலநாழிகையின் பின், சகலரையும் அறுசுவையுடன் போசனம் அருந்தச் செய்தபின், மந்திரியை அழைத்துக் கொண்டு சபாமண்டபத்துக்கு வந்து தாம்பூலம் அருந்தி, பரிமள சுகந்தம் பூசி, சம்பாஷணை செய்துகொண்டு இருக்கும் சமயத்தில், குளக்கோட்டு மகாராசா மந்திரியை நோக்கி, நீர் இவ்விடம் வந்த காரணம் யாதென்று வினவினார். அவ்வேளையில் மந்திரி பயபக்தியுடன் எழுந்துநின்று, மகாராசரே! தாங்கள் இவ்விடத்தில் எவர்களும் மனத்தாலும் நினைத்தற்கரிய மேலான ஒரு தருமத்தைச் செய்கின்றீரென்று உன்னாச்சிகிரியில் இருந்து அரசுசெய்யும் எங்கள் இராசபெருமாட்டியாகிய ஆடகசெளந்தரி கேள்விப்பட்டு, தாங்கள் செய்து முடிக்குந் திருப்பணி முதலிய தருமங்களுக்குத் தான் செய்ய வேண்டிய உதவிகள் யாதுமிருந்தாற் கேட்டுவரும்படி இவ்விடத்திற்கு என்னை அனுப்பினார் என்று, ஆடகசெளந்தரி சொல்லிய யாவற்றையும் முற்றாக மறைத்துச் சொன்னான். அப்போது குளக்கோட்டு மகாராசா புன்னகை செய்து, மந்திரியை நோக்கி, உனது இராசபெருமாட்டி உன்னிடஞ் சொல்லியது இவ்வாறன்று; இக்கோயிலையும் இடித்துக் கடலிற்றள்ளி, என்னையும் ஒடத்திலேற்றி அனுப்பிவிட்டு வரும்படி சொன்னதேயாம் என்று ஆடகசெளந்தரி சொல்லிய சரித்திரத்தை விபரமாகச்

திருக்கோணாசல வைபவம் 35
சொன்னார். அதைக்கேட்ட மந்திரி மிகவும் ஆச்சரியமுற்று, தாங்கள் தேவ ராசர்களில் ஒருவரேயன்றிப் பூலோக ராசரல்ல. ஆனால் எனது பெருமாட்டி சிற்றறிவாற் சொல்லியவைகளைத் தேவரீர் மன்னிக்கவேண்டும். என்று பின்னும் அரசருடைய பாதங்களை வணங்கினான். அப்போது குளக்கோட்டு மகாராசா மந்திரியை இருகையாலும் தழுவி, விசித்திரயூகமந்திரி என்னும் பெயர் உனக்கே தகும். உங்கள் இராசபெருமாட்டி நமது வம்சத்தைச் சேர்ந்தவளாயினும் அவ்விபரங்களை அறியாமற்றான் நமக்கு இவ்வித வசனங்களைச் சொல்லியனுப்பினாளென்று ஆடகசொளந்தரியின் விபரங் களை மந்திரிக்குச் சொல்லி, பின்னுஞ் சொல்லத் தொடங்கினார்: இது இவ்வாறிருக்க, ஆதியாகிய கோணநாயகருக்கு எக்காலத்துக்கும் நித்திய நைமித்திகங்களுக்குக் குறைவுவாராமற் செய்யவேண்டுமென் றெண்ணிச் சில குளங்களையுங் கட்டி, வயல்வெளிகளையுங் திருத்தினேன். அவை யெல்லாம் என் மனதிற் கிசையவில்லை. ஆனதால், எப்போதும் மாறாமடை பாயக் கூடிய ஒரு குளம் கட்டுவதற்குத் தகுந்த இடம் எவ்விடத்திலுண் டென்பதை எனக்குத் தெரியச் சொல்லவேண்டும் என்றார். அதற்கு உத்தர மாக, மந்திரி மகாராசனை நோக்கிச் சொல்லுவான்: இத்திருக்கோண மலைக்குத் தெற்குப்பக்கமாக நீர் சொல்லியபடி ஒரு வசதியுள்ள இடமிருக் கின்றது. எவ்விதமெனில், நான் இப்போது சொல்லிய இடத்தில் இரண்டு பெரிய மலைகளிருக்கின்றன. அவ்விருமலைகளையும் ஒன்றாகப் பொருந்தும் படி இடையிலோர் கட்டுக்கட்டவேண்டும். அப்படிக் கட்டி முடித்தால் ஒரு பெரிய குளமாகுமென்று சொன்னான். அப்போது குளக்கோட்டு மகாராசா மிகுந்த சந்தோஷங்கொண்டு, மந்திரியைப் பார்த்து, நீர் சொல்லியபிரகாரம் அவ்விரண்டு மலையையும் ஒன்றாகச் சேர்த்துக் கட்டுவது மிகவும் பிரயாச மல்லவா? எவ்விதம் கட்டிமுடிக்கலாமென்று கேட்டார். அப்போது மந்திரி மகாராசாவை நோக்கி, மகாராசாவே கற்பரசியாகிய எமது இராசபெருமாட்டி யைத் தேவரீர் விவாகஞ்செய்து கொள்வீரானால், ஒன்பது நாளைக்குள்ளாக அக்குளத்தையுங் கட்டி, வயல் வெளிகளையுந் திருத்தி ஒப்பிப்பேனென்று வாக்குக்கொடுத்தான். அதைக் கேட்ட குளக்கோட்டு மகாராசன் மிகுந்த சந்தோஷங் கொண்டு, நீர் சொல்லிய பிரகாரமாகக் குளத்தையுங் கட்டி, அக்குளத்தால் நீர்பாய்ந்து நெல்விளையக்கூடிய வயல்வெளிகளையுந் திருத்தித் தந்தபின் உமது இராசபெருமாட்டியை விவாகஞ் செய்து கொள்வே னென்று வாக்குப்பண்ணி, தனது கையிலிருந்த கணையாழியையுங் கொடுத்து, மந்திரியை அனுப்பிவைத்தான். பின்பு மந்திரியானவன் உன்னாச்சிகிரிக்குப் போய்ச்சேர்ந்து, ஆடகசெளந்தரியைக் கண்டு வணங்கி, குளக்கோட்டு மகாராசாவினுடைய குலம், மரபு, குணாதிசயம் முதலியவை களையும் மகாராசா தன்னிடம் கேட்ட கேள்விகளையும், தான் மகாராசனை விவாகத்திற்கு இசையச் செய்த சங்கதிகளையும், கோணநாயகர் கோயிற் பெருமிதங்களையும் விபரமாகச் சொல்லி, மகாராசாவினுடைய கணையாழி

Page 35
36 திருக்கோணாசல வைபவம்
யையுங் கொடுத்தான். அப்போது ஆடகசெளந்தரி மிகுந்த சந்தோஷங் கொண்டு, மந்திரியின் யூகபுத்திக்காக அவனை மிகவும் வியந்து, பின்பு மந்திரியை நோக்கி, மலைபோலும் புயங்களையும் குறுகிய கால்களையு முடைய பூதங்களிற் சிலவற்றை அழைத்துக்கொண்டு போய் மகாராசா வுடைய மனமானது மகிழ்ச்சியடையும் படி கூடியவிரைவில் குளத்தையுங் கட்டி, வயல்வெளிகளையுந் திருத்திமுடித்து, பின்பு மகாராசாவையும் இவ்விடம் அழைத்து வருவாயாகவென்று கட்டளையிட்டாள்.
ஆடகசெளந்தரியின் கட்டளைப்படி, மந்திரியானவன் மனுநேய கயவாகு தனக்குபதேசித்த மந்திரத்தினாற் சில பூதங்களை அழைத்துக் கொண்டு திருக்கோணமலைக்கு வந்து, குளக்கோட்டு மகாராசாவைக் கண்டு, தேவரீர் காலதாமதஞ் செய்யாமற் பிரயாணப்படவேண்டு மென்று சொன்னான். அப்போது மகாராசா பேரானந்தங் கொண்டு, கோணநாயகரின் சந்நிதிக்குச் சென்று விடைபெற்று, மந்திரி முதலானவர்களோடுங் கூடிப்போய், ஒரு சோலையில் அலங்காரமான மண்டபமொன்று முடிப்பித்து, மந்திரியுடன் தங்கினார். அப்போது மந்திரி பூதங்களை நோக்கிப் பணியைத் தொடங்கும்படி கட்டளையிட, அவர்கள் சென்று ஆகாயத்தையளாவி நிற்கின்ற மரங்களைப் பிடுங்கி, ஊற்றுக்காணும்படியாக மண்டபப்படி வெட்டி, இருமலைகளையும் ஒன்றாகப் பொருத்திக்கட்டி, அலைகள்மோதிக் கட்டை உடையாதபடிக்குப் பெரிய கற்களை அடுக்கிக் கட்டினார்கள். அப்போது குளக்கோட்டு மகாராசா திருப்பணி செய்விக்கும் பொருட்டுச் சோழ மண்டலத்திலிருந்து அழைத்து வந்த, முன்சொல்லிய ஐந்து ஆசாரிமார்கள், மண்டபப்படியிலிருந்து மதகு வரைக்குஞ் செப்புப் பீலி வைத்துக் கபால சூத்திரம் போல இடைகலை பிங்கலை சுழுமுனையாக, மதகுகளை வகுத்துக் கட்டி, விசைகொண்டு வருகின்ற நீரானது, வந்து விழுந்து ஆறிப்பாயும்படி உடல்மையக் கிணறு, சிரமையக் கிணறு என்னும் இரண்டு கிணற்றையும் கட்டி, தண்ணிர் அதிகம் ஓடாமலும் நில்லாமலும் போக வரத்தக்க இரண்டு நாசிமதகுங்கட்டி, அம்மதகுகளின் மேல் சிகர குப்பாய மாகக் கற்பலகைகளைப் பரவி, கிழக்குப் பக்கத்திலுள்ள மையக்கிணற்றில் வந்து விழுகின்ற எவைகளையும் வெட்டித்தள்ளும்படி சக்கர கிருதியாக ஓர் இயந்திரமும் வைத்துத் தேவர்களும் வியக்கக் கூடிய பிரகாரமாகக் குளங்கட்டி முடித்தார்கள். பூதங்கள் அக்குளத்தால் தண்ணிர் பாய்ந்து நெல் விளையக்கூடிய இரண்டாயிரத் தெழுநூறு அவன நெல் விதைக்கும் வயல்வெளிகளையுந் திருத்தி, அவ்வெளிகளுக்கு நீர் பாயும்படியாக வாய்க்கால்களையும் வெட்டி, மாவலிகங்கை நீரும் குளத்தில் வந்து விழும் படி செய்து முடித்ததன் பின், கொட்டியாபுரத்திலுள்ள காடுகளை வெட்டித் திருத்தி, கதலி, பலா, மா, புன்னை, இருப்பை, பூகம் முதலிய மரங்களை அதிகமாகவைத்து அலங்காரமான சோலையாக்கி, அவ்விடத்திலும்

திருக்கோணாசல வைபவம் 37
வயல்வெளிகளைத் திருத்தி முடித்தார்கள். பின்பு ஆசாரிமார்கள் திருக்குளத்தின் பெரியமதகுக்குக் கதவும் போட்டுப், பூட்டிட்டு, திறவுகோலைக் குளக்கோட்டு மகாராசனுடைய கையிற் கொண்டுவந்து கொடுத்தார்கள். அப்போது குளக்கோட்டு மகாராசா மிகுந்த சந்தோஷங்கொண்டு, மந்திரி யுடன் போய்க் குளக்கட்டில் நின்று குளத்தின் சிறப்பைப் பார்த்து, மந்திரியை நோக்கி இத்திருக்குளமானது, கோணநாயகருடைய கிருபையினால் முடிந்த தென்று சந்தோஷத்துடன் சம்பாஷணை செய்துகொண்டிருக்கும் சமயத்தில், மாவலிகங்கை நீரானது குளமெங்கும் பரவி, இன்னும் அதிகமாகப் பெருக்கெடுத்து வருவதைக் குளக்கோட்டு மகாராசா கண்டு, அச்சங் கொண்டு, மதகு திறக்காவிடில் கங்கைநீரானது இன்னும் சொற்ப நேரத்துக்குள் குளக்கட்டை உடைக்கு மாதலால், மதகைத் திறக்க யார் வல்லவரென்று துக்கித்து, பின்பு காத்தற் தொழிலையுடைய மஹாவிட்டுணு மூர்த்தியை நினைக்க, அவரும் அவ்விடம் வந்துசேர்ந்தார்.
அப்போது குளக்கோட்டு மகாராசா அவருடைய பாதங்களில் விழுந்து, நமஸ்காரஞ் செய்து, “சுவாமி மாவலிகங்கையானது பெருகித் திருக்குளத்தில் வந்து நிரம்பியபடியால், குளத்தின் மதகைத்திறந்து, கங்கை நீரை வெளியிற் போக்க வேண்டும். அப்படிச் செய்வதற்கு தேவரீரல்லாமல் மற்றொருவராலுங் கூடா” தென்று சொல்லிப்; பின்னும் அவருடைய பாதங்களை வணங்கினான். அப்போது விட்டுணுமூர்த்தி குளக்கோட்டு மகாராசனை நோக்கி, அரசனே! நீ இக்குளம் கட்டத் தொடங்கும்போது விக்கினேசுவரரை நினையாது விட்ட குறையினாற்றான் இது சம்பவித்தது. ஆகையால் விநாயகக் கடவுளை இக் குளக்கட்டினருகில் தாபிக்க வேண்டுமென்று சொல்லி, திருக்குளத்தின் பக்கலில் விநாயகரை ஸ்தாபித்து, அபிஷேகஞ் செய்து, முப்பழம், பணிகாரம் அவல், எள்ளுண்டை முதலியவைகளை அவர் முன்பு வைத்து நிவேதித்து, விதிப்படி பூசைசெய்து முடித்த பின்பு, விட்டுணுமூர்த்தி மண்டுப ரூபங்கொண்டு குளத்துட் பிரவேசித்து மதகைத் திறந்தார். விட்டுணுமூர்த்தியால் ஸ்தாபிக்கப் பட்ட விநாயகர் கட்டளைப் பிள்ளையாரென்னும் பெயருடன் திருக்குளக் கட்டருகில் தற்காலமும் இருக்கின்றார். அப்போது கங்கைநீரானது வெளியே பாய்ந்து, விநாயகக் கடவுளை வலஞ்செய்து, வயல் வெளிகளிற் பாயத் தொடங்கியது. அதைக் கண்ட குளக்கோட்டு மகாராசா விநாயகக் கடவுளை நமஸ்கரித்து, பின்பு விட்டுணுமூர்த்தியை நோக்கி, சுவாமீ" எக்காலமும் இத் திருக்குளத்துக்கு யாதொரு குறையும் நேரிடாதபடி தேவரீர் காத்துக் கொள்ள வேண்டுமென்றார். அதற்கு விட்டுணுமூர்த்தி குளக்கோட்டனை நோக்கி, நானும் பிரமதேவனும் அடிமுடி தேடி இன்னுங் காணாதிருக்குங் கோணநாயகருக்காகவே இக்குளத்தை நீ கட்டிமுடித்தாய். இதற்கு யாதொரு குறைவும் வராமல் எக்காலமும் யான் பாதுகாத்துக்கொள்வேன் என்று திருவாய் மலர்ந்தருளினார்.

Page 36
38 திருக்கோணாசல வைபவம்
பின்பு விட்டுணுமூர்த்தி விநாயகரைத் தோத்திரஞ் செய்து கொண்டு அண்ணமார், வதனமார், நாயமார், மங்கலர், காளமாமுனி, இலங்கைச் சந்திகாவலர் முதலியவர்களையும், எழுராசாக்களையும், வைரவக் கூட்டங்களையும், காளி, பத்தினி முதலியவர்களையும் குளக்கட்டில் காவலாக நிறுத்தி, அவர்களை நோக்கி, ஒரு வருடம் பாற்பொங்கல், ஒருவருடம் பழம் பாக்கு வெற்றிலை முதலிய வகைகளில் மடை குறை வில்லாமல் உங்களுக்குக் கிடைக்கும். ஒருகாலம் குறைவுகண்டாலும், நீங்கள் மனதிற் கிலேசமடையாமல் திருக்குளத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது. இருபத்தெண்னுழி சென்ற பின்பு, யாமிவ்விடம் வந்து உங்கள் குறைகளைத் தீர்ப்போம். இதுவன்றி, மழையில்லாக் காலத்தில் விதி முறையாகப் பச்சைப்பட்டுக் கொண்டு வந்து நேருவார்களாகில் மழை யுண்டாகும் படிக்கும்; சிவப்புப்பட்டு நேருவார்களாகில் வெயிலுண்டாகும் படிக்குங் கிருபைசெய்யுங்கள் என்று கட்டளை பண்ணி, பின்பு, குளக்கோட்டு மகாராசனை நோக்கி, நானிப்போது சொல்லியபிரகாரம் வருடந் தோறும் வழுவின்றி நடாத்திவர வேண்டியது என்று திருவாய்மலர்ந்தருளிப் போயினார். பின்பு குளக்கோட்டுமகாராசன் விட்டுணுமூர்த்தி சொல்லியபிரகாரம் வேள்வி முதலிய சடங்குகளைச் செய்து நிறைவேற்றி, விநாயகக்கடவுளிடம் விடை பெற்று, மந்திரியையும் அழைத்துக் கொண்டு தம்பலகமத்துக்குப் போய், வயல்வெளிகளின் சிறப்பையுங் கண்டு, அம்மார்க்கமாகத் திருக்கோணா சலத்துக்கு வந்து சேர்ந்தார்.
விட்டுணுமூர்த்தி சொற்படி, குளக்கட்டிலுள்ள தேவதைகளுக்குப் பாற்பொங்கல், மடை முதலிய வேள்விகளைக் குளக்கோட்டு மகாராசனால் உண்டு படுத்தப்பட்ட ஒரு பத்ததிப்படி தற்காலத்தில் உள்ளவர்களும் செய்து வருகின்றார்கள். மழை வெய்யில் தேவையான காலங்களில் பட்டு நேருகிற வழக்கம் இப்போதும் நடைபெற்று வருகின்றது.
பின்பு குளக்கோட்டு மகாராசா கோணநாயகரையும் பிடியன்ன மென்னடையம்மையையும் மற்றுந் தேவர்களையும் வணங்கி, அடியவனாகிய யான் செய்துமுடிப்பித்த "திருக்குளமானது எக்காலமும் மாறாமடை பாயவும், வயல்வெளிகளெங்கும் விளைவு பெருகவும் கிருபைபுரிய வேண்டுமென்று பிரார்த்தித்து, அனுக்கிரகம் பெற்றுக்கொண்டு, மாளிகைக்குப் போய்ச் சேர்ந்தார். அதன்பின்பு, குளக்கோட்டு மகாராசா தனது மந்திரிகளை நோக்கி, ஆதியாகிய கோணநாயகருக்கு நித்திய நைமித்தியங்களுக்குக் குறைவு வராமல் மாறாமடைபாயுந் திருக்குளமும் உண்டு பண்ணி, வயல்வெளி களையுந் திருத்தியிருக்கின்றோம். ஆகையால் அவ்வவ்விடங்களிலிருந்து
# கந்தளாய்க்குளம் A.D. 275 கண்டியை அரசுசெய்த மகாசேனன் என்பவனால் ஒருமுறை பழுதுபார்ப் பிக்கப்பட்டது. பின்பு கிரெகோரி கவர்னர்காலத்தில் BARBER என்னும் இஞ்சினியரால் 1870 ஆண்டு பழுதுபார்க்கப்பட்டது.

திருக்கோணாசல வைபவம் 39
செந்நெல்விளைவு உண்டாக்குவதற்கு மிகுந்த குடிசனங்கள் வேண்டு மாகையால், நீங்கள் உத்தரதேசஞ் சென்று, குடிசனங்கள் அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டார். மந்திரிகள் குளக்கோட்டு மகாராசா சொற்படி சென்று, குடிசனங்களை அழைத்துவந்தார்கள். அக்குடிசனங்களின் சந்ததியில் உள்ளவர்கள் தற்காலமும் இருக்கின்றார்கள். அவர்கள் சிந்து நாட்டாரென்று அழைக்கப்படுகின்றார்கள். குளக்கோட்டு மகாராசா அக் குடிசனங்களைத் தம்பலகமம் கொட்டியாபுரம் என்னும் பகுதிகளிற் குடியேற்றி, அவர்களுக்கு வேண்டிய பொருட்களுமுதவி, விளைநிலங்களைச் செய்வித்து, திருக்குளத்தால் நீர்பாயுஞ் சிறப்பையும், விளைவின் பெருக்கத்தையுங் கண்டு, கோணநாயகருக்கு இனி ஒருபோதும் நித்திய நைமித்தியங்களுக்கு குறைவு வராதென்று மிகுந்த சந்தோஷத்தை அடைந்தார். அதன்பின்பு, கட்டுக் குளத்தூரிலும் சில விளைநிலங்களைத் திருத்தி அவ்விடங்களிலும் குடிசனங்களை இருத்திவைத்தார்.
C3%)GSRSQ)

Page 37
4O திருக்கிோணாசல வைபவும்
திருக்கோனநகரிற் குடியேறிய சரித்திரம்
அதன் பின்பு குளக்கோட்டு மகாராசா கோணநாயகருக்குத் திருத்தொண்டுகள் செய்வதற்குக் குடிசனங்கள் வேண்டுமென்றெண்ணி, உத்தரதேசஞ் சென்று, மருங்கூர் என்னும் இடத்திலிருந்து முப்பது குடிசனங் களை அழைத்துவந்து, அவர்களைத் தானத்தாராக்கி, அவர்களுக்கு விளை நிலம் குடிநிலம் முதலியவைகளுங் கொடுத்து, திருக்கோணாசல நகரிற் குடியிருத்திவைத்தார். அதன்பின்பு காரையூரிலிருந்து இருபத்தொரு குடியை வரிபிடித்துவந்து விளைநிலம் முதலியவைகளையுங் கொடுத்துத் திருக் கோணாசல நகரிற் குடியிருத்திய பின்பு: கொல்லன், குயவன், ஏகாலி, நாவிதன், வள்ளுவன் அவர்கள் ஒவ்வொருவரிலும் ஐவைந்து குடிகளை அழைப்பித்து, அவர்களுக்கு வேண்டிய பொருட்களுமுதவி, ஐந்து குடிமை களையுந் திருக்கோணாசலநகரிற் குடியிருத்திவைத்தார்.
அதன் பின்பு தானத்தாராகிய முப்பது குடிகளுக்கும் குளக்கோட்டு மகாராசா சொன்னதாவது; நீங்கள் கோணநாயகருக்குச் செப்யுந் திருத்தொண்டுகள் யாதெனில், திருக்குளத்திலுள்ள ஏழு ராசாக்களுக்கும் பீதாம்பரமீதல், அறைமுதலில் வரவுசெலவுக் கணக்கெழுதல், திருச்சூகரத் திருவிளையாட்டு நடத்தல் முதலியவைகளாம் என்று சொல்லி, அவர்களில் ஏழுகுடி மனுஷருக்கு இராயரென்னும் பட்டமும்கட்டி, ஒரு குடிக்குக் கருகுலக் கணக்கன் என்னும் பட்டமுங் கொடுத்து, ஏழுகுடிராயரில் ஏழுபெண்களைத் தெரிந்து மாணிக்கங்களெனப் பெயர்கொடுத்து, அவர்களை நோக்கி, நீங்கள் ஏழுபேருங் கோணநாயகருக்கு முன்புநின்று நடனஞ்செய்தல், ஆலாத்தி யெடுத்தல், கோணநாயகர் திருச்சூகரத் திருவிளையாட்டுக்கு எழுந்தருளும் போது சுவாமிக்கு முன்பாகத் தங்க ஈட்டிகளைக் கொண்டு சென்று திருச்சூகரங் குற்றுதல், திருச்சூகரத் திருவிளையாடல் முடிந்தபின்பு உள் மண்டபத்தில் நின்று சகலருக்கும் மஞ்சனிரூற்றுதல் முதலியவைகளாமென்று சொல்லி கோயிற்றொழும்பு செய்யவிடுத்தார்.
பின்பு வரிப்பத்தாராகிய இருபத்தொரு குடிகளையும் நோக்கி, நீங்கள் கோணநாயகருக்குச் செய்யுந் திருத்தொண்டுகள் யாதெனில், திருக்கோயி லில் அலகிடுதல், கோமயந் தெளித்தல், பாத்திரங்கள் சுத்தி செய்தல், திருவிளக்கேற்றுதல், புட்ப பத்திரமெடுத்தல், மாலை கட்டுதல், பூரண கும்பங்கள் வைத்தல், பாலிகைபோடுதல், அபிஷேகத் திரவியங்கள் திட்டஞ் செய்தல், பழம் பாக்கு வெற்றிலை சந்தன மிழைத்தல், பீதாம்பரங்கள் செய்து கொடுத்தல், நடனமாதர்களுக்குப் பின்னின்று பண்ணோடு பாடுதல், வாத்தியஞ் செய்தல், திருச்சுண்ண மிடித்தல், கொடியேற்றுதல் இறக்குதல்,

திருக்கோணாசல வைபவப 41
நெற்குற்றுதல், தீர்த்த மெடுத்தல், எரிதுரும்புதவுதல், திருக்கோயிலுட் பணிவிடை முற்றுஞ் செய்தல் முதலியவைகளாமென்று சொல்லி, அவர்களில் ஐந்து குடிமனுஷருக்குப் பண்டாரத்தாரென்னும் பட்டமுங் கொடுத்துக் கோணநாயகர் சந்நிதியிற்றொழும்பு செய்யவிடுத்தார்.
அதன்பின்பு, திருநெல்வேலியிற் சிவபெருமான் கோயிலிலிருந்து முதன்மை செலுத்திவந்த மனுஷரில் ஒரு குடியையழைத்து, அவருக்குக் கனகசுந்தரப்பெருமாளென்னும் பட்டஞ்சூட்டி, கட்டுக்குளப்பற்று முற்றையும் அவருக்குச் சுதந்திரமாகக் கொடுத்து, குளக்கோட்டு மகாராசா அவருக்குச் சொன்னதாவது; நீர் கோணநாயகரின் உற்சவகாலங்களிற் கையிற் காப்புக் கட்டி, முன்னிடு செலுத்தி, விழாநடத்துவித்தலும், திருவாபரணங்களையும் மற்றுந் திரவியங்களையும் பாதுகாப்பதுமேயாம்; என்று சொல்லி, திருவாபரணங்கள் இன்னதென்றும், திரவிய இருப்பு இவ்வளவென்றும் பதியப்பட்ட "பெரியவளமைப் பத்திரம்” என்னுஞ் செப்பேட்டையும் அவர்கையிற் கொடுத்து, இனிமேல் கோணநாயகருக்கு வருந்திரவியங்களின் கணக்கை இதிற் பதிந்து வரவேண்டுமென்று கட்டளைசெய்து, உங்கள் மனுஷர். திருநெல்வேலிச் சிவபெருமான் கோயிலில் முதன்மைசெலுத்தி வருவது போலவே நீர் கோணநாயகள் கோயிலிலிருந்து முதன்மை செலுத்தி வருவீராக வென்று சொல்லி, நிலாவெளியென்னுங் கிராமத்திற் குடியிருத்தி வைத்தார்.
கனகசுந்தரப்பெருமாளின் வம்சத்தவர்கள் திருக்கோணாசல நகரிலும், கட்டுக்குளப்பகுதியில் குச்சவெளியென்னுங் கிராமத்திலும், கொட்டியாபுரப் பகுதியில் சம்பூர், கிளிவெட்டி என்னுமிடங்களிலும் தற்காலத்திலு மிருக்கிறார்கள். இதில் குச்சவெளியிலிருப்பவர்கள்தான் தம்பலகமம் கோணநாயகர் கோயில் முன்னிடு செலுத்தி வருகின்றார்கள். “பெரியவளமைப் பத்ததி” என்னுஞ் செப்பேடும் அவர்கள் வசத்திற்றானே இருக்கின்றது.
அதன்பின்பு, குளக்கோட்டுமகாராசா காஞ்சிபுரத்திலுள்ள புலவரொரு வராகிய சிவசிதம்பரப்பெருமாளென்பவரை அழைப்பித்து, சித்திரவித்தாரப் புலவரெனப் பட்டமுங் கொடுத்து, கம்பைச் சாத்திரம் என்னும் ஏட்டையும் அவர்வசங் கொடுத்து, நீர் எப்போதும் கோணநாயகருக்கு முன்பாக நின்று திராவிடவேதத்தைப் பண்ணோடு பாடவேண்டுமென்று சொல்லி, கொட்டியாபுரப் பகுதிக்கு அழைத்துப்போய், அப்பகுதியில் நீர் குடியிருப்பதற்குத் தகுந்த ஓரிடத்தைத் தெரிவு செய்து கொள்ளுமென்று சொல்லிப் பலவிடங்களையும் அவருக்கு காட்டியும், அவர் பிரியப்படாமல், பின்பு தமக்கு விருப்பமான ஓரிடத்தைக் கண்டு, இவ்விடம் நமக்குச் சம்பூர்ணமான இடமென்று சொல்லிய போது, அவ்விடத்திற்றானே அவரைக் குடியிருத்தி வைத்தார். அந்நாள் துவக்கம் அக்கிராமத்துக்குச் சம்பூர் எனப் பெயர் வழங்கிவருகின்றது.

Page 38
42 திருக்கேர்ணாசல வைபவம்
குளக்கோட்டு மகாராசராற் கொடுக்கப்பட்ட கம்பைச்சாத்திரம் இப்போதும் புலவன்வம்சத்தாரிடம் இருக்கின்றது.
இவ்விதமாகக் கோணநாயகர்கோயிற் றொழும்புகள் செய்வதற்குக் குடிசனங்களை நியமித்து, தத்தம் பணிகளை அவரவர் செய்து வருகின்ற ஒழுங்கைக் கண்டு, குடிசனங்கள்மேற் குளக்கோட்டுமகாராசா மிகுந்த அன்பைவைத்துப் பாதுகாத்துவரும் நாளில், ஒருநாள் குளக்கோட்டு மாகாராசா இக்குடிசனங்களுக்கிடையில் நமக்குப் பிற்காலம் யாதேனுங் கலகமுண்டாகுமாயின் நடுவுநிலைமையாக நீதிசெலுத்தக் கூடிய ஒருவரில்லாவிடில் ஒருபோது கோயிற்றொழும்புக்கும் இடையூறு நேரிடக்கூடு மென்று தன்னுள்ளே சிந்தித்து, பாண்டிய ராசாக்களிருந்து அரசு செய்த மதுரைப் பட்டணத்திலிருந்து, சந்திரகுலத்தில் வந்தவதரித்த திருமலைநாடன் என்னும் ஒருவரை அழைத்து வந்து, “தனியுண்ணாப் பூபாலவன்னிமை” யென்னும் பட்டமுஞ் சூட்டி, குளக்கோட்டு மகாராசா வன்னிமையை நோக்கிச் சொல்லுவார்: கேளும் வன்னிமையே! நீர் பஞ்சமா பாதகங்களையும் விலக்கி, பரதாரங்களைத் தாயாகக்கருதி, தஞ்சமென்றவர்களுக்குத் தண்ணருள் புரிந்து, தன்னுயிர் போல மன்னுயிரையும் பாதுகாத்து, துட்டநிக்கரக சிஷ்ட பரிபாலனம் என்பதைக் கைக்கொண்டு, கோணநாயகர் கோயிற்றொழும்பாளர் சகலருக்கும் முதலாகவிருந்து திருக்கோணாசலநகரை அரசுசெய்யக் கடவாயென்று சொல்லி இரத்தினசிம்மாசனத்தில் இருத்திவைத்தார்.
திருமலைநாடன் தனியுண்ணாப் பூபாலவன்னிமை மற்றும் வன்னி மைகள் சகலரும் திருக்கோணாசலநகரிற் குடியிருந்தவிடத்துக்கு இப்போதும் பூபாலக்கட்டு என்று பெயர் வழங்கி வருகின்றது.
பின்பு ஒருநாள் பாசுபதர்கள், தனியுண்ணாப் பூபாலவன்னிமை, கனகசுந்தரப்பெருமாள், சித்திரவித்தாரப்புலவன், தானத்தார், வரிப்பத்தார் முதலாக மற்றுஞ் சகலரையுங் குளக்கோட்டு மகாராசா வசந்தமண்டபத்துக்கு வரும்படிசெய்து அவர்களை நோக்கிச் சொன்னதாவது: “ஒருவன் பூவுலகின் கண் பிறந்து ஏகசக்கிராதிபதியாகி உலகம் முழுவதையும் அரசுசெய்து இந்திர போகத்தை யனுபவித்திருந்தாலும், அதனால் உண்டாகும் பயன் யாதுமில்லை. சிவபெருமானுடைய பாதங்களை நமஸ்கரித்து, அவருக்குத் திருத்தொண்டு செய்வானாயின் இம்மையிற் புகழையும் மறுமையில் முத்தியையும் அடைவானென்பது சத்தியம். இதுநிற்க, கோணநாயகருடைய சந்நிதியில் நீங்கள் நடத்தவேண்டியவைகளை யான் விபரமாகச் சொல்லு கின்றேன். அவ்விதம் எக்காலத்தும் நடத்திவரவேண்டியது. அவை யாதெனில்: ஒவ்வொருநாளும் கோணநாயகர் எழுந்தருளியிருக்கும் இரத்தினசபையி னுள்ளாகப் பசுநெய்யூற்றி, ஆயிரந் தீபமேற்றி, ஆலயங்களடங்கலுக்கும்

திருக்கோணாசல வைபவம் 43
பதினாயிரம் விளக்கேற்றி, சந்தனம் கஸ்தூரி முதலிய வாசனைத் திரவியங்களைப் பன்னீரிற் கரைத்து வீதியெங்குந் தெளித்து, பூரண கும்பங்கள் வைத்து, முளைப்பாலிகை பரப்பி, வாழை கமுகு நாட்டி, தோரணங் கட்டி, வீதியெங்கும் அலங்கரித்து, குங்குமப்பூ கோரோசனை கஸ்தூரி முதலிய திருமஞ்சனத் திரவியங்களரைத்துப் பன்னீரிற் கரைத்து கோணநாயகருக்கும் பிடியன்னமென்னடையம்மைக்குந் மற்றுந் தேவர் களுக்கும் அபிஷேகஞ்செய்து, பற்பல நிறமுள்ள பட்டுப் பீதாம்பரங்களையும் இரத்தினாபரணங்களையும் அணிவித்து, பரிமளச்சுகந்த புட்பமாலைகளை யுஞ்சாத்தி, விநாயகருக்கு வெள்ளிக்கிண்ணத்தில் ஆறுதளிகையும், சுப்பிரமணியக் கடவுளுக்குப் பொற்கிண்ணத்திற் பன்னிரண்டுதளிகையும் கோணநாயகருக்கும் தேவிக்கும் தங்கக்கிண்ணத்தில் அறுபத்துநாலு தளிகையும், மற்றுந் தேவர்களுக்கு ஐம்பொற்கிண்ணத்தில் நூற்றிருபத்தெட்டுத் தளிகையும், முன்னுாறு கிண்ணத்தில் பிடியமுதும் பழவர்க்கங்களும், தங்கக் காளாஞ்சியில் தாம்பூலமும் வைத்து நிவேதித்து, தீபதுாபங்கொடுத்து பின்பு, மகாமண்டபத்துக்கு வந்து, அவ்விடத்தில் ஒருமுழ நீளமும் அகலமும் உயரமும் உள்ளதாகச் சாதத்தைச் சொரிந்து தட்டி, அதைச் சுற்றி இருபத்தேழு பிடிசாதம் வைத்து, நெய்யிற்றோய்த்து ஐந்துதிரி கொளுத்தி அவ்வன்னக்குவியலிற் குத்தி, பால் பழம் பணிகாரவகை முதலாக மற்றும் நிவேதனத்துக்குரிய பொருட்களெல்லாவற்றையும் அவ்விடம் படைத்து, எங்கும் வாசனை கமழும்படி தூபங்களிட்டு, தீபாராதனை செய்து, சோடச உபசாரமுங் கொடுத்து, அர்ச்சனை செய்து, மகுட ஆகமப்பிரகாரம் பூசை நடத்த வேண்டியது. ஒவ்வொரு வருடத்திலும் உற்சவம் நடத்தி, பங்குனி உத்தரத்தில் ரதோற்சவம் நடத்த வேண்டியது. இப்படியே எக்காலத்திலும் நித்திய நைமித்திகங்கள் குறைவின்றி நடாத்திவருவீர்களாயின் கோண, நாயகருடைய திருவருள் எத்துணையாகுமோ அத்துணைப் பாக்கியத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள்” என்று சொல்லி, பின்பு தனியுண்ணா பூபால வன்னிமையை நோக்கி, கட்டுக்குளப்பகுதி நாட்டிலிருப்பவர்களிடம் வருட மொன்றுக்கு ஆறு அவண நெல்லும், கொட்டியாபுரப் பகுதியிலிருப்பவர் களிடம் வருடமொன்றுக்கு நூறு அவண அரிசியும், எப்போதும் கோயிலுக்குச் செலவாகும் பழம் பாக்கு வெற்றிலை பால் தயிர் நெய் இருப்பை நெய் புன்னை நெய் முதலியவைகளும் வாங்க வேண்டியது. இருப்பை புன்னைப் பருப்புகளைக் கொட்டியாபுரப் பகுதியிலுள்ள இறையாத தீவென்னுமிடத்திற் செக்காட்டி எண்ணைய் எடுத்துக் "கெவுரிமுனையிலுள்ள ஓடக்காரனிடம் அந்நாட்டவர்கள் ஒப்பிக்க வேண்டியது. அவர்களால் அனுப்பப்படும் எண்ணெய், ஆநெய் முதலியவைகளைக் கோயில் வாயிலுக்குக் கிழக்குப் பக்கமாகக் கட்டி யிருக்கும் ஏழு கிணற்றிலும் விட்டுவைக்க வேண்டியது.
# கெவுரிமுனையென்பது இப்போது கெவுளியாமுனையென வழங்குகின்றது.

Page 39
44 திருக்கோணாசல வைபவம்
இதுவன்றி, ஆடை, ஆயம், கடல் வரத்துக்களுங் கோணநாயகருக்கே உரித்தாகும். மாறா மடைபாயுந் திருக்குளத்தையுங் கட்டி வயல்வெளி களையுந் திருத்தி எனக்காக அல்லது எனது வம்மிசத்தார்களுக்காக விடவில்லை. ஆதிநாயகருக்காகவே விட்டிருக்கிறேன். அனேக திரவியங் களையும் இருப்பில் வைத்திருக்கிறேன். அவைகளில் எட்டுணையேனுந் திருடினவர்களும், அவர்களுக்கு உதவி செய்தவர்களும், நாணத்தினால் அல்லது பாக்கிய மிகுதியினால் தங்கள் தொழும்பைச் செய்யாமல் கூலியாள்விடுத்துச் செய்வித்தவர்களும் இம்மையில் வறுமையுற்றுச் சந்ததியற்றுப் பொல்லாத வியாதிகளாற் பீடிக்கப்பட்டு மனவருத்தத்தோடு அலைந்துதிரிந்து, மறுமையில் எண்ணிலாத நரகங்களில் விழுந்து வருந்துவார்கள். இது சத்தியம்! சத்தியம்!! என்று சொல்லி, பின்பு தனியுண்ணாப் பூபாலவன்னிமையையும், கணகசுந்தரப் பெருமாளையும், சித்திரவித்தாரப் புலவனையும் நோக்கி, எனக்குப் பின்பு கயவாகு மகாராசன் இவ்விடம் வந்து கோணநாயகரைத் தரிசித்து இன்னும் அநேக விளை நிலங்களையுந் திருத்திக் குளங்களையுங் கட்டிக் கோணநாயகருக்காகவே விடுவான். அவன் வரமுன்பு பாசுபதர்கள் இறந்து விடுவார்கள். பின்பு பிராமணர் பூசை செய்வார்கள். அதன்பின்பு, இன்னும் அநேக ராசாக்கள் வந்து மிகுந்த திரவியங்களை இருப்பில் வைத்துச் சுவாமி தரிசனஞ்செய்து போவார்கள். அப்போது காலபேதத்தினால் பொய் களவு கொலை முதலிய பஞ்சமாபாதகங்களும் மிகும். அக்காலம் நீசர்கள் இலங்கையை அரசு செய்வார்கள். அப்போது கோணநாயகரைக் கொண்டு போய்க் கழனி மலையில் வைத்துப் பூசைசெய்து வணங்கக்கடவீர்கள் என்று சொல்லி, பின்பு சகலருக்கும் விடைகொடுத்தனுப்பினார். அதன்பின்பு, ஒருகாலத்தில் இவ்வருமானங்களிற் குறைவு கண்டாலும் கோணநாயகருக்கு நித்திய நைமித்திகங்கள் குறைவில்லாமல் நடைபெறுவதற்காக, மத்தளம், நாகம், பல்லவம், வெள்ளைக்கல் என்னும் திருக்கோணமலைக்கு நான்கு திசைகளிலுமுள்ள நான்கு மலைகளில் தொகையான திரவியங்களை இருப்பாக வைத்து, தேவதைகளைக் காவலாக நிறுத்தி, இத்திரவியங்கள் யாவுங் கோணநாயகருக்குச் சுதந்திரமான தென்று கற்களில் வரைந்து
வைத்து, பின்பு கோணநாயகருடைய பாதங்களை வணங்கி விடைபெற்றுக் கொண்டு, ஆடகசெளந்தரியை விவாகஞ்செய்தற் பொருட்டு, மந்திரிமார் முதலிய சகலருந் தன்னைச் சூழ்ந்துவர உன்னாச்சிகிரிப் பட்டணம் போய்ச் சேர்ந்தார்.
C939GOGSRSQ)

திருக்கோணாசல வைபவம் 45 குளக்கோட்டு மகாராசா மணம்புரிந்த சரித்திரம்
பின்பு குளக்கோட்டு மகாராசா ஆடகசெளந்தரியை வேத விதிப்படி விவாகஞ்செய்து, சிலகாலம் உன்னாச்சிகிரிப் பட்டணத்திலிருந்து, பின்பு கோணநாயகரைத் தரிசிக்க வேண்டுமென்னும் எண்ணம் மேற்பட்டதனால், ஆடகசெளந்தரியையும் அழைத்துக் கொண்டு, காடு மலை ஆறுயாவுங் கடந்து, திருக்குளத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்போது ஆடகசெளந்தரி தோழிப் பெண்களுடன் திருக்குளத்தில் இறங்கிப் புனல் விளையாடி, பின்பு, போகும் போது குளக்கட்டில் ஓரிடஞ் சற்றுத் தாழ்ந்திருப்பது கண்டு, இவ்விடம் தாழ்ந்து விட்டதென்று இராசகுமாரத்தி தன்கையாற் றொட்டுக்காட்டி, பின்னால் வந்த தாதியர்கள் கற்களையடுக்கி மண்வெட்டிக் கொட்டிச் சில நிமிஷங்களுக் குள்ளாகப் பள்ளமானது நிமிரும்படி உயர்த்திக் கட்டினார்கள். (அவ்விடத்திற்கு இப்போதும் “பெண்கள் கட்டு” என்று பெயர் வழங்கி வருகின்றது.) சில நிமிஷங்களில் அவ்வேலையைப் பெண்கள் செய்து முடிப்பாராயின், இராச குமாரத்தியுடன் வந்த பெண்களின் பெருக்கத்தை யாமெம்மாத்திரமென்று சொல்லக்கூடும். பின்பு, குளக்கோட்டு மகாராசாவும் நாயகியும் அவ்விடம் விட்டு நீங்கித் தம்பலகமத்துக்கு வந்து, விளை நிலங்களின் சிறப்பையுங் கண்டு, அம்மார்க்கமாகவே திருக்கோணாசலத்துக்கு வந்து, இருவரும் பாவநாசத் தீர்த்தத்தில் மூழ்கி, கோயிலுட்சென்று, கோணநாயகரையும் பிடியன்னமென்னடையம்மையையும் மற்றும் தேவர்களையும் வணங்கி விடைபெற்றுக் கொண்டு உன்னாச்சிகிரிப் பட்டணத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள். பின்பு குளக்கோட்டு மகாராசா அவ்விடத்திற் சில காலம் இருக்கும் போது, ஆடகசெளந்தரி கருப்பமுற்று, பத்துமாதமும் சென்றதன் பின் ஓர் ஆண்மகவைப் பெற்றாள். அப்புத்திரனுக்கு இராசசிங்கன் எனப் பெயரிட்டு, பருவகாலத்தில் வித்தியாரம்பம் செய்வித்து, அன்பாக வளர்த்து வருங் காலத்தில், ஊழ் வலிப்படி ஆடகசெளந்தரி சிவபதமடைந்தாள். அதன் பின்பு, குளக்கோட்டு மகாராசா புத்திரனோடு சிலகாலமிருந்து, வாலைப் பருவமானவுடன் மணிமுடிசூட்டிப் பட்டாபிஷேகஞ் செய்து, இராச்சிய பரிபாலனத்தை அவனிடம் ஒப்புவித்து விட்டு, திருக்கோணா சலத்துக்கு வந்து சேர்ந்தார்.
C932GOGSRS)

Page 40
46 திருக்கோணாசல வைபவம்
குளக்கோட்டு மகாராசா சிவபதமடைந்த சரித்திரம்
பின்பு, குளக்கோட்டு மகாராசா ஒருநாள் காலையிலெழுந்து, பாவநாசத் தீர்த்தத்தில் மூழ்கி, பீதாம்பரப் பட்டணிந்து, விபூதி உருத்திராக்ஷந் தரித்து, விதிப்படி அனுட்டானம் முடித்து, பிராமணர்களுக்கு அன்ன சொர்ண தானங் கொடுத்து, தனியுண்ணாப் பூபாலவன்னிமை முதலாக மற்றுஞ் சகலருக்கும் வேண்டிய திரவியங்களையும் பூஷணங்களையுங் கொடுத்து, பின்பு வாசனை பொருந்திய புட்பங்களாய்ந்து கையிலெடுத்துக் கொண்டு கோபுரவாயிலையணுகி, இடபதேவரிடம் விடைபெற்று, கோணநாயகரையும் பிடியன்னமென்னடையம்மையையும் பிரதகூடிணஞ் செய்து, பின்பு சுவாமி சந்நிதியில் வந்து நின்று, மனங்கசிந்துருக உரோமஞ்சிலிர்ப்ப ஆனந்தவருவி சொரிய இராகத்துடன் பலவாறான தோத்திரங்களைச் சொல்லி, சுவாமியி னுடைய பாதங்களிற் புட்பங்களைச் சொரிந்து நமஸ்கரித்து, சுவாமி பிறவி யாகிய சமுத்திரத்தில் விழுந்து வருந்திக் கிடக்கின்ற நாயினுங் கடையனாகிய என்னைத் தடுத்தாண்டு அருள்பாலிக்க வேண்டுமென்று பின்னும் அட்டாங்கமும் பூமியிற்றோயும்படி வணங்கினார். அப்போது கோணநாயகர், குளக்கோட்டு மகாராசாபேரிற் திருவிழிக்கடைபரப்பி அருள்பாலிக்க, இரசவேதையினால் இரும்பு பொன்னாவதுபோலக் குளக்கோட்டு மகாராசா அன்புருவாகி அனல்படுமெழுகென மனமிகவுருகிப் பேரின்ப சமுத்திரத்தி லமிழ்ந்தி, ஆனந்தபரவசமாக நின்று, சுவாமீ" உடல் பொருள் ஆவி என்னும் மூன்றும் தேவரீருக்குரிய தாகையால் இந்தக்ஷணமே ஒப்புக்கொள்ள வேண்டுமென்று சொல்லிப் பிரார்த்தித்தார். அப்போது குளக்கோட்டு மகாராசாபேரில் கோணநாயகர் கிருபைகொண்டு, தமது திருப்பாதங்களின் கீழ் சதாகாலமும் ஒரு தாமரை மலராக இருக்கும்படி அணுக்கிரகித்தார். பின்பு, பாசுபதர்களும் வன்னிமை முதலிய மற்றுஞ் சகலரும் கோயிலுட் சென்ற குளக்கோட்டு மகாராசா இன்னும் வெளியே வராதிருப்பது யாது காரணமென்று எங்குந் தேடிப்பார்த்தார்கள். ஓரிடத்திலாவது மகாராசனைக் காணாததினால் மிகுந்த வியாகூலங் கொண்டிருக்கும் போது, பாசுபதர்கள் கோயிலுட் சென்று, கோணநாயகர் எழுந்தருளியிருக்கும் இரத்தினசபையின் வாயிலில் நின்று எட்டிப்பார்த்த போது, கோணநாயகரின் திருவடியின் கீழ் ஒரு தாமரை மலரானது புதிதாக அலர்ந்திருப்பதைக் கண்டு, வெளியே வந்து, சகலருக்குந் தெரிவிக்க, எல்லோரும் குளக்கோட்டு மகாராசானுக்குக் கிடைத்த அரிய பதவியை நினைந்து நினைந்து பேரானந்த சமுத்திரத்தில் மூழ்கிப் பின்பு கோணநாயகருடைய திருத்தொண்டுகளைச் செய்து வாழ்ந்திருந்தார்கள்.
Cl396)G&SC)

திருக்கோணாசல வைபவம் 47 கயவாகுராசன் சரித்திரம்
அதன் பின்பு கயவாகுராசனென்பவன் அநுரதபுரியிலிருந்து அரசு செய்து வரும் நாளையில், திருக்கோணாசலத்துக்கு மூன்று நாழிகை தூரத்திலுள்ள நிலாவெளியூருக் கருகாயுள்ள தாமரைத் தடாகத்திற் கோணநாயகர் கோயிற் சைவர்கள் சிலர் போய்ப் பூப்பறித்த போது, நிலா வெளி மலையிலிருக்கும் விகாரையிலுள்ள சமணர்கள் சிலர் புட்பம் எடுக்கப் படாதென்று தடுத்தார்கள். (அத்தாமரைத் தடாகமும் விகாரையுந் தற்காலமு மிருக்கின்றன.) சைவர்கள் அவர்கள் சொல்லைக் கேளாமல் அவர்களை அடித்துத் துரத்திவிட்டுப் புட்பங்கள் ஆய்ந்து கொண்டு திருக்கோணா சலத்துக்கு வந்தார்கள். சமணர்கள் அநுரதபுரத்துக்குப் போய்க் கயவாகு ராசனுக்கு நடந்த சங்கதிகளைச் சொன்னார்கள். முன்பு சைவ சமயத்தி லிருந்து பின்பு சமண சமயத்திற் பிரவேசித்தவனாகிய, கயவாகு ராசன் மிகுந்த கோபங்கொண்டு, இப்போது நான் அவ்விடம் போய்க் கோயிலையும் இடித்துத்தள்ளி, அவ்விடத்திலுள்ள சகலரையும் சிரச்சேதஞ் செய்கின்றே னென்று சொல்லிக்கொண்டு, சேனை தளங்களுடன் புறப்பட்டு, காடு மலை யாவற்றையுந் தாண்டி மிகுவிரைவில் வந்து திருக்குளக்கட்டை அடைந்தான். அப்போது சடுதியில் கயவாகு ராசனுக்கு இரண்டு கண்ணும் பார்வை யில்லாமற் போனது. அவ்வேளையிற் குருடனாகிய கயவாகுராசன் மிகுந்த வியாகூலத்தை அடைந்தான். அரசனுடன் கூடவந்த சமணகுருமார் சிலர் மாந்திரீகத் தொழிலாலும் ஒளடதப் பிரயோகங்களாலும் கணப்பொழுதிற் சோஸ்தப் படுத்துகிறோம் என்று சொல்லிச் செய்தும் சித்திபெறாததினால் மெளனமாய் இருந்துவிட்டார்கள். அப்போது சிவபெருமான் ஒரு பிராமண வேடங்கொண்டு அவ்விடம் வந்து, கயவாகுராசனை நோக்கி, நீ கோண நாயகருடைய கோயிலை இடிப்பேனென்ற சொற் குற்றத்தினாற்றான் உனக்குக் கண்ணொளி மறைந்தது. ஆனால் இவ்வீபூதியை உனது நெற்றியிற் பூசுவையேல் பார்வை யுண்டாகு மென்று சொல்லித் தமது திருக்கையினாற் பையிலிருந்து விபூதியையள்ளி அரசன்கையிற் கொடுத்தார். அரசன் இரண்டுகையினாலும் அவ் விபூதியை வாங்கி, கோணநாயகரைத் தோத்திரஞ் செய்து நெற்றியிற் சாத்தியவுடன், ஒருகண் பார்வை உண்டாயிற்று. அப்போது கயவாகுராசன் பிராமணனுடைய பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தான். அவ்வேளை பிராமணவடிவாகவந்த சிவபெருமான் மறைந்தருளினார். அதைக் கண்ட கயவாகுராசன், ஆனந்தப் பரவசனாகி எளியேனாகிய என்னை ஒரு பொருட்டாக எண்ணி, பிராமண வேடங்கொண்டு இவ்விடம் வந்து எனக்கு கண்பார்வையைத் தந்தருளியவர் சிவபெருமானே யன்றி வேறொருவர் அல்லரென்று தீர்மானித்து, தன்னுடன் வந்தவர்களை நோக்கி, உலகத்துக்குக் கருத்தாவாகிய சிவபெருமான் ஒருவரே தெய்வம், அவர் அருளிய வேதமே வேதம். எச் சமயத்திற்கும் மேலான சைவ

Page 41
48 திருக்கோணாசல வைபவம்
சமயமே சமயம். அச்சிவபெருமான் ஒருவரே ஆன்மாக்களுக்கு மலபரிபாகஞ் செய்து முத்தியளிக்கவல்லவர் என்று சொல்லிச் சிவபெரு மானைப் பலவாறாகத் தோத்தரித்து, திருக்குளத்தின் சிறப்புக்களையுந் தன் ஒருவிழியாற் கண்டு மகிழ்ச்சிகொண்டு, சிவபெருமானுடைய கிருபை யினால் தனக்குக் கண் தழைத்தவிடத்திற்கு கண்டழையூரென்றும், திருக் குளத்துக்குக் கண்டழைக்குளம் என்றும், பெயரிட்டு, அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தம்பலகமம் வந்து, வயல் வெளிகளின் சிறப்பையுங் கண்டு சந்தோஷமுற்று, கோணநாயகர்பேரிற் கொண்ட அன்பானது பின்னின்று பிடித்துத்தள்ள மிகவிரைவில் வந்து திருக்கோணாசலச் சமுத்திரக்கரையை யடைந்து, கோணநாயகர் கோயிற் பொற் சிகரங்களைக் கண்டவுடன் பூமியில் விழுந்து அட்டாங்க நமஸ்காரஞ் செய்தான். அப்போது, கயவாகு ராசனுக்கு மற்றக்கண்ணும் பார்வைபெற்றது. ஆதலால், அவ்விடத்திற்கு கண்டழைக் கல்லு என்று பெயரிட்டான். (இப்போதும் திருக்கோணநகரில் ஒரு பகுதியை கண்டழையென்று வழங்கிவருகின்றார்கள். கயவாகு மகாராசன் கோண நாயகர் கோயிலுக்குத் தீங்குசெய்ய வருகிறானென்பதைக் கேள்விப்பட்ட பாசுபதர்கள் அவன் வருமுன்னரே சமுத்திரத்திற் பாய்ந்து உயிர் துறந்துவிட்டார்கள். பின்பு கயவாகுராசன் திருக்கோணநகரில் தனது சேனைகளை நிறுத்தி கோணநாயகள் சந்நிதியுட் சென்று, பாவநாசதிர்த்தத்தில் இறங்கி ஸ்நானஞ்செய்து, கோயில்வாயிலில் நின்று, ஏழையேனையு மொருபொருட்படுத்தி, பிரம விட்டுணுக்களுந் தேடியுங் காணாத திவ்விய மலர்ப்பாதமானது பூமியிற் படும்படியாக நடந்துவந்து, எளியேனுக்குக் கண்பார்வையுங் கொடுத்தருளிய கடவுளே! எனது ஆணவமிகுதியினாற் தேவரீருடைய கோயிலை இடிப்பேனென்று சொல்லிய சொற் குற்றத்தை மன்னித்து, எளியேனை யடிமைகொண்டு கிருபை புரியவேண்டுமென்று பலவாறான தோத்திரங்களைச் சொல்லி நமஸ்கரித்தான். பின்பு கயவாகு ராசன், தனியுண்ணா பூபாலவன்னிமை முதலாக மற்றுஞ் சகலரையும் நோக்கி, இன்னேரம்வரையிலும் பூசை நடவாதிருப்பது யாதுகாரணத்தினா லென்று வினவினான். அதற்கு உத்தரமாக கனகசுந்தரப் பெருமான் கயவாகு ராசனை நோக்கி, தாங்கள் இக்கோயிலுக்குத் தீங்கு செய்ய வருகிறீ ரென்பதைப் பாசுபதர்கள் அறிந்து அச்சங் கொண்டு சமுத்திரத்தில் விழுந் திறந்து விட்டார்கள். ஆதலாற் பூசை செய்வதற்கு வேறொருவரு மில்லை யென்று சொன்னார்கள். அதைக்கேட்ட கயவாகுராசன் ஆற்றொணாத் துயரமடைந்து, திருக்கோணசலேஸ்வரா! நாயினுங் கடையேனாகிய என்பொருட்டால் தேவரீருக்குப் பூசையில்லாமற் போக நேரிட்டதே! இதற்கு யாது செய்வேன்! என் செய்வேனென்று சத்தமிட்டுக் கொண்டு பூமியில் விழுந்து அயர்ந்தான். அப்போது கோணநாயகர் ஒரு பிராமணவடிவமாகக் கயவாகுராசனுக்குச் சொர்ப்பனத்திற் றோன்றி, ராசனே! நீ கவலைகொள்ள வேண்டாம். பாசுபதர்கள் தங்கள் ஊழ்வலிப்படி இறந்து விட்டார்கள். இப்போது

திருக்கோணாசல வைபவம் 49
சதுர்வேத விற்பன்னராகிய இரண்டு பிராமணர் மகுட ஆகமங் கையிற் கொண்டு சமுத்திர மார்க்கமாகத் தெப்பத்தில் வருகிறார்கள். அவர்களை நீ போய் எதிர்கொண்டு கைகொடுத்திறக்கி வந்து பூசையை நடத்துவிப்பா யென்று சொல்லி மறைந்தருளினார்.
அப்போது கயவாகு ராசன் விழித்தெழுந்து, மனக்கவலை நீங்கி, தான் கண்ட சொப்பனப்படியே இரண்டு பிராமணர் தெப்பத்தில் வருவதைக் கண்டு ஆனந்தங் கொண்டு, சமுத்திரக்கரைக்குப்போய், தெப்பம் வந்து சேர்ந்தவுடன், ஒருவருக்கு வலக்கையையும், ஒருவருக்கு இடக்கையையுங் கொடுத்து இறக்கிவந்து, வலக்கையைக் கொடுத்தழைத்தவருக்கு வேதநாயக முதன்மை என்றும், இடக்கையைக் கொடுத்தழைத்தவருக்கு சைவநாயக முதன்மை என்றும் பட்டமுங்கொடுத்து, இருபாகை முதன்மைகளென் றழைத்து, இருவரையும் நோக்கி, சுவாமிகாள்! ஆதியாகிய கோணநாயக ருக்கு இரண்டுகாலப்பூசை நடத்துவது தவறிப்போனமையால், அதற்குண்டான பிராயச்சித்தஞ் செய்து பூசையை நடத்துங்கள் என்று சொன்னான். அப்போது பிராமணர் இருவருஞ் சமுத்திரத்தால் வந்த தோஷம் நீங்கும் பொருட்டு, பாவநாசத் தீர்த்தத்தில் மூழ்கி, அனுட்டானஞ் செய்து கொண்டு, திருக்கோயி லுட்சென்று, கோணநாயகரை வணங்கிக் கொண்டு, பிராயச்சித்தஞ் செய்து முடித்து, பின்பு மகுட ஆகமவிதிப்படி பூசைசெய்தார்கள். கயவாகு ராசனும் கோணநாயகரைத் தரிசனஞ் செய்து மகிழ்ச்சி கொண்டிருந்தான். அதன் பின்பு கயவாகு ராசன், தெப்பத்தில் வந்த பிராமணர் இருவருக்கும், சமுத்திரத் தில் விழுந்து இறந்த பாசுபதர்களின் பிள்ளைகளாயிருந்த இரண்டு பெண் களை விவாகஞ் செய்வித்து, அவர்களுக்கு வேண்டிய பூஷணாதி திரவியங் களைக்கொடுத்து, கோணநாயகருடைய பூசையை நடத்துவித்தான். அப்போது “பிராமணர் இருவரும் அரசனை நோக்கி, நாங்கள் இவ்விடத்தில் தனிக்குடியாக இருப்பதால் எங்களுக்கு நன்மை தீமை வருங்காலம் நாங்கள் என்ன செய்வோமென்று கேட்க, அரசன் அவர்களைப் பார்த்து, அவைகளைக் குறித்து நீங்கள் அஞ்சவேண்டாம். உங்களுக்கு நன்மை தீமை சம்பவித்த காலங்களில் தானத்தார் வரிப்பத்தார் இருவரும் அப்பணிவிடைகளைச் செய்வார்களென்று சொல்லி, அரசன் தானத்தார் வரிப்பத்தார்களைப் பார்த்து, இவர்களுக்கு வாழ்வு தாழ்வு வருங்காலங்களில் அப்பணிவிடைகளை நீங்களே செய்யவேண்டு மென்று சொல்லி, அவரவர் இன்ன இன்ன தொழும்புகள் செய்ய வேண்டு மென்று கட்டளைசெய்து, அக்கட்டளைகளை ஒரு செப்பேட்டில் எழுதிப் பிராமணர் கையிற் கொடுத்தான்.
அதன்பின்பு ஒருநாள் கயவாகு ராசன் திருவீதியைச் சுற்றிக் கொண்டுவரும் போது மலையின் கீழாக மிகுந்த சத்தம் உண்டாவதைச் செவிசாய்த்துக் கேட்டு, யாது காரணத்தினால் இம்மலையின் கீழ் மிகுந்த

Page 42
50 திருக்கோணாசல வைபவம்
சத்தம் உண்டாகின்றது? என்று வினவினான். அப்போது பிராமணர் அரசனை நோக்கி, ஆகாயகங்கை, மாவலிகங்கை, காவேரிகங்கை இம் மூன்றும் பாய்ந்து செல்லுகின்ற சுழிமுனையிற் கோணநாயகர் தேவிசமேதராக எழுந்தருளியிருக்கின்றார். அம் மூன்று கங்கையுஞ் சுவாமியைப் பிரதகூடிணஞ் செய்து பாயும். அக்கங்கைகளில் தேவர்கள் முனிவர்கள் வந்து தீர்த்தமாடிக் கோணலிங்கரையுந் தேவியையும் பூசைசெய்து போவார்கள். இப்போதும் அவர்கள் வந்து தீர்த்தமாடுகிறாகள். அதனாற்றான் இவ்வொலி உண்டா கின்றது என்று சொன்னார்கள். அரசன் அதைக்கேட்டு மனமகிழ்ச்சி கொண்டு, பிராமணரை நோக்கி, நீங்கள் என்ன பிரயாசமெடுத்தாயினும் அத் தீர்த்தங் களை மொண்டு கொண்டு வந்து கோணநாயகருக்கு அபிஷேகம் செய்ய வேண்டுமென்று சொல்ல, பிராமணரும் அதற்கிசைந்து, பொற்குடங்களை எடுத்துக்கொண்டு, மலையின் கிழக்குப் பக்கத்தில் உள்ள குகை வழியே சென்று தீர்த்தம் எடுத்துவந்து, கோணநாயகருக்கு அபிஷேகஞ் செய்தார்கள். பின்பு கயவாகு மகாராசன் சிலகாலம் திருக்கோணாசலத்திலிருந்து, கோண நாயகருக்கு அதிகமாக இரத்தின பூஷணாதிகளையும் பீதாம்பரங்களையும் சம்பாதித்து, அறை முதலில் இருப்பாக வைத்து, ஆயிரத்து முன்னூற் றைம்பது அவன நெல்விதைப்புத் தரையையும் திருத்தி, குளங்களையும் கட்டி அவ்விடங்களிற் குடிகளையும் இருத்தி, குளக்கோட்டு மகாராசன் நாளொன்றுக்கு இரண்டவண அரிசி நிவேதனத்துக்கு நியமித்திருப்பதை அறிந்து தன் உபயமாக நாளொன்றுக்கு ஓர் அவண அரிசி சேர்த்து, நாளொன்றுக்கு மூன்று அவண அரிசி நிவேதனத்துக்கு நியமித்து, வடக்கு கரம்பகம், தெற்கு சங்கமக்கண்டி, கிழக்கு வங்காளக்கடல், மேற்கு முனிச்சரம் ஆகிய இந்நான்கு எல்லைக்குட்பட்ட இடங்களால் வருகின்ற வருமானி யங்களில் பத்தில் எட்டுப்பங்கு கோணநாயகருக்கும் இரண்டு பங்கு பிராமணர்களுக்கு மென்று நியமனஞ் செய்து, முன்னிருந்த செப்பேட்டிலும் வரன் முறையாக எழுதி, சொல்லப்பட்ட நாலு எல்லைக்கும் எல்லைகல் நாட்டி, கோயிலதிகாரி முதலாக மற்றுஞ் சகலருக்கும் வேண்டிய திரவியங் களையுங் கொடுத்து, கோணநாயகர் திருவிழாக்காலத்தில் எழுந்தருளி வருவதற்குப் பொற்கேடகங்களுஞ் செய்துவைத்து, பங்குனி உத்தரத் திருநாளுங் கண்டு சந்தோஷமடைந்து, தனியுண்ணா பூபாலவன்னிமை முதலாக மற்றுஞ் சகலரையும் நோக்கி, நீங்களும் உங்கள் சந்ததிகளும் கோணநாயகருக்கு எக்காலத்திலாவது தொழும்பு செய்யாது விடுவீர்களாயின் வறுமையினாலும் நோயினாலும் வருந்துவீர்களென்று சொல்லி, பின்பு கோணநாயகரிடம் விடைபெற்றுக்கொண்டு தன் இருப்பிடம் போய்ச்சேர்ந்தான்.
C3%)C&S.)

திருக்கோணாசல வைபவம் 51 நளச்சக்கரவர்த்தி சரித்திரம்
அதன் பின்பு, நிடத நாட்டிலிருந்து அரசு செய்த நளச் சக்கரவர்த்தி, திருக்கோணாசலத்தின் பெருமையைக் கேள்வியுற்று வந்து, பாவநாசதீர்த்தத்தில் மூழ்கி, கோணநாயகரையுந் தேவியையும் தரிசனஞ் செய்து, விலைமதித்தற்கரிய மரகதரத்தினம் பதித்த ஒரு "முக்கோணப் பதக்கமுஞ் சாத்தி, இன்னுமனேக திரவியங்களும் அறைமுதலில் இருப்பாகவைத்து, செப்பேட்டிலும் கருகுலகணக்கிலும் பதிப்பித்து, பின்பு கோணநாயகரிடம் விடைபெற்றுக் கொண்டு, நிடததேசத்துக்குப் போனார்.
மாருதப்புரவீகவல்லி சரித்திரம்
பின்பு உத்தரதேசத்திலிருந்து மாருதப்புரவீகவல்லி என்னும் இராசகுமாரத்தி தனது முகம் குதிரைமுகத்தை ஒத்திருந்ததாற் சோழமண்டலத்திலுள்ள தீர்த்தங்களில் மூழ்கியும் சிவஷேத்திரங்களைத் தரிசித்தும் விரதாதிகளை நோற்றும் அம்முகரூபம் மாறாதிருந்ததினால், மிகுந்த வியாகூலங் கொண்டிருக்கும்போது, ஈழ மண்டலத்திலுள்ள கீரிமலைத் தீர்த்தத்தில் நீ போய் ஸ்நானஞ் செய்வாயானாற் சோஸ்தமடைவா யென்று சொப்பனங் கண்டு, அப்படிக்கு அவ்விடம் வந்து தீர்த்தமாடி, சுய ரூபம் பெற்று, அவ்விடம் நின்று நீங்கித் திருக்கோணாசலத்துக்கு வந்து சுவாமிதரிசனஞ் செய்து, விடைபெற்றுக்கொண்டு உத்தரதேசத்துக்குச் சென்றாள்.
புவனேகவாகு சரித்திரம்
அதன் பின்பு, புவனேகவாகு என்னும் அரசன் திருக்கோணாசலத்தின் பெருமையைக் கேள்வியுற்று வந்து, பாவநாசதீர்த்தத்தில் படிந்து, கோணநாயகரைத் தரிசித்து, அனேக திரவியங்களையும், நகைகளையும் அறைமுதலில் வைத்து, கருகுலக்கணக்கிலும் செப்பேட்டிலும் பதிப்பித்து, கோணநாயகரிடம் விடைபெற்றுக் கொண்டு, தனது தேசத்துக்குப் போய் அரசு செய்திருந்தான்.
# நளச்சக்கரவர்த்தி கொடுத்த முக்கோணப் பதக்கம் 1854ல் தம்பலகமம் கோணநாயகர் கோயிலி
லிருந்து, பின்பு களவுபோய்விட்டது. அப்பதக்கத்தின் பிற்பக்கத்தில் நளச் சக்கரவர்த்தி உபய மெனப் பெயர் வெட்டப்பட்டிருந்தது.

Page 43
52 திருக்கோணாசல வைபவம் பரராசசேகரன், செகராசசேகரன் சரித்திரம்
அதன்பின்பு, யாழ்ப்பாணத்திலிருந்து செங்கோல்செலுத்தி அரசுசெய்த பரராசசேகரன், செகராசசேகரன் என்னுமிருவரும், திருக்கோணாசலத்துக்கு வந்து, பாவநாசச்சுனையில் தீர்த்தமாடி இரவிகுல திலகனாகிய குளக்கோட்டு மகாராசாவைத் தடுத்தாட்கொண்ட பூரீ கமலபாதமிதுவே என்று சொல்லிக் கோணநாயகருடைய பாதங்களில் விழுந்து நமஸ்காரஞ் செய்து, அனேக இரத்தினாபரணங்களையும் திரவியங்களையும் அறைமுதலில் இருப்பாக வைத்து, கருகுலக்கணக்கிலும் செப்பேட்டிலும் பதிப்பித்து, சுவாமி சந்நிதியில் திருவிளக்கேற்றத் திரிக்கு நூல் குறைவாயிருந்தமையால், ஏழு குளமுங் கட்டி, ஏழு வெளியுந் திருத்தி, அதிற் குடிசனங்களையும் இருத்தி, எப்போதும் கோணநாயகர் கோயிற்றிருவிளக்குக்கு நூல் குறையாமல் நீங்கள் கொடுக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளைசெய்து, தமது தேசத்துக்குப் போய் அரசுசெய்திருந்தார்கள். ( அக்காலந் தொடக்கம் அவ்வூர் திரியாய் என்னும் பெயர் பெற்றுத் தற்காலமும் வழங்கிவருகின்றது.)
ஆரியச்சக்கரவர்த்தி சரித்திரம்
அதன் பின்பு, ஆரியச்சக்கரவர்த்தி என்பவன் யாழ்ப்பாணத்திலிருந்து அரசு செய்துவரும் நாளில், திருக்கோணாசலமான்மியத்தை அறிந்து வந்து, பாவநாசச்சுனையில் தீர்த்தமாடி, கோணநாயகரையும் பிடியன்னமென்னடை யம்மையையும் தரிசித்து, அனேக திருவாபரணங்களையும் திரவியத்தையும் அறைமுதலில் இருப்பாகவைத்து, கருகுலக்கணக்கிலும் செப்பேட்டிலும் பதிப்பித்து, கோணநாயகரிடம் விடைபெற்றுத் தனது தேசத்திற்குச் சென்று அரசு செய்திருந்தான்.
C939GOCQSRS)

திருக்கோணாசல வைபவம் 53 தனியுண்ணாப் பூபாலவன்னிமை கனகசுந்தரப்பெருமாளிடம் திரவிய இருப்பு விசாரித்த சரித்திரம்
பின்பு ஒருநாள், தனியுண்ணாப் பூபாலவன்னிமையும் கோயிற் பூசகள் களாகிய இருபாகை முதன்மையும் ஏவலாளரை நோக்கி, நீங்கள் நிலாவெளி யூருக்குப் போய், கனகசுந்தரப்பெருமாளைக் கண்டு, பெரியவளமைப் பத்ததியையும், செப்பேட்டையும் எடுத்துக்கொண்டு நாங்கள் வரும்படி சொன்னதாகச் சொல்லி, சீக்கிரம் அழைத்துவாருங்கள் என்று அனுப்பி னார்கள். அவர்கள் நிலாவெளிக்குப் போய், வன்னிமையும் இருபாகை முதன்மையும் சொல்லிய யாவற்றையும் கனகசுந்தரப் பெருமாளுக்கு அறிவித்து, சீக்கிரத்தில் அழைத்து வந்தார்கள். அப்போது, தனியுண்ணாப் பூபாலவன்னிமையும் இருபாகைமுதன்மையுந் தவிர மற்றுஞ் சகலரும் எதிர்கொண்டு அழைத்துவந்து, வசந்த மண்டபத்தில் இருத்தினார்கள். அவ்வேளை, தனியுண்ணாப் பூபாலவன்னிமை கனகசுந்தரப் பெருமாளைப் பார்த்து, காற்றையும் கடலையும் கனலையும் முகிலையும் கூற்றையும் கோதையர் மனதையும் அளவிட்டாலும் உம்முடைய இருதயம் அளவிடற்கரியதா மென்று சொல்லிப் புன்முறுவல் செய்தார். அதைக்கேட்ட கனகசுந்தரப் பெருமாள் வன்னிமையை நோக்கி, தாங்கள் என்பேரில் எத்துணை அபிமானம் வைப்பீர்களோ அத்துணைப் புத்தியும் விசாரமும் எனக்கு உண்டாகும் என்று சொல்ல, வன்னிமை சந்தோஷங்கொண்டு, வரராமதேவர் முதலிய ராசாக்கள் ஆதியாகிய கோணநாயகருக்காக அறை முதலில் வைத்த பொன் எவ்வளவென்றும், நகைகள் எவ்வளவென்றும் நான் அறிய விரும்புகிறபடியால் விபரமாகச் சொல்ல வேண்டுமென்று கேட்டார். அப்போது கனகசுந்தரப் பெருமாள் பெரியவளமைப்பத்ததியைப் பார்த்துச் சொன்னதாவது:
வரராமதேவர் அறைமுதலில் வைத்த
பொன் களஞ்சு . . 68000
பொன்நகை களஞ்சு 634 குளக்கோட்டுமகாராசா அறைமுதலில் வைத்த
பொன் களஞ்சு . . 80481
பொன்நகை களஞ்சு 1512 கயவாகுராசன் அறைமுதலில் வைத்த
பொன் களஞ்சு . . 15.0022
பொன்நகை களஞ்சு 24000

Page 44
54 திருக்கோணாசல வைபவம்
நளச்சக்கரவர்த்தி அறைமுதலில் வைத்த
பொன் களஞ்சு . . 802.11
பொன்நகை களஞ்சு 2048 புவனேகவாகு அறைமுதலில் வைத்த
தங்கம் களஞ்சு . . 100284
தங்கநகை களஞ்சு 3206
பரராசசேகரனும் செகராசசேகரனும்
அறைமுதலில் வைத்த
பொன் களஞ்சு . . 72000
பொன்நகை களஞ்சு 781 ஆரியச்சக்கரவர்த்தி அறைமுதலில் வைத்த
பொன் களஞ்சு . . 21000
பொன்நகை களஞ்சு 1206 ஊரவர்கள் கோயிற்படியில் வைத்துக் கும்பிட்ட
பொன் களஞ்சு . . 21000
இவையாவும் குகைக்குள்ளே பெரியபண்டகசாலையில் இருக்கும் இருப்பு. கருகுலக் கணக்கனிடத்திலும் இக் கணக்கு உண்டு. இதுவன்றி, நித்தியபூசைச் செலவுக்கு எடுப்பதற்கு பெரிய அறைமுதலில் இப்போது இருக்கின்ற பொன் களஞ்சு 48,000. இது வெளியில் இருக்கின்ற திரவியம், இதுவன்றிக் குளக்கோட்டுமகாராசா தொகையான திரவியங்கள் வைத்திருக்கு மிடங்கள் வேறேயுண்டு. அது எவ்விடங்களெனில், திருக்கோணமலை உச்சியில் நின்று பார்க்க நாலுதிக்கிலும் தெரிகின்ற மத்தளமலை, நாகமலை, பல்லவமலை, வெள்ளைக்கல்மலை என்பவைகளேயாம். அவற்றில், மத்தள மலையில் 1,50,000 களஞ்சு பொன் உண்டு. அதற்கு சொர்ண வைரவரும், சொர்ண கணபதியும், ஆபதோத்தாரண வைரவரும், பத்திர காளியும், நாகமலைத் தேவதைகள் அனைத்தும் சொர்ணகணபதியில் அடக்கம், கடலரசனும், கடலரசு நாயகியும், ஒன்பது லக்ஷம் வைரவர்களும் காவலாக நிற்பார்கள். இவர்களெல்லாரிலும் எண்மடங்கு பெலமுடைய பொத்தக மொட்டையனும் காவலாக நிற்பான். பல்லவமலையில் 50,00,000 களஞ்சு பொன் உண்டு. அதற்கு சொர்ண வைரவரும், உதிரமாகாளியும், லக்ஷம் வைரவர்களும் காவலாக நிற்பார்கள். வெள்ளைக்கல் மலையில் 4,00,000 களஞ்சு பொன் உண்டு. அதற்கு ஆபதோத்தாரண வைரவரும், இரத்த சாமுண்டியும், இரண்டு லக்ஷம் வைரவர்களும் காவலாக நிற்பார்கள். நாகமலையில் 88,00,000 களஞ்சு பொன் உண்டு. அதற்கு அகோர வைரவரும், துர்க்கையும், மூன்று லக்ஷம் வைரவர்களும் காவலாக நிற்பார்கள். பல்லவமலைத் தேவதைகள் அனைத்தும் பத்திரகாளியிலடக்கம். வெள்ளைக்கல்மலைத் தேவதைகளனைத்தும் ஆபதோத்தாரண வைரவரி

திருக்கோணாசல வைபவம் 55
லடக்கம். மத்தளமலைத் தேவதைகளனைத்தும் இடபதேவரிலடக்கம். இவையன்றி, திருக்குளக்கட்டில் ஏழு இடத்தில் 1,50,000 களஞ்சு பொன் உண்டு. அவையாவுக்கும் மகாகாள வைரவர் காவலாக நிற்பார். இவை யாவும் மதுரைக் களஞ்சுக் கணக்காக விருக்கும். இதுவன்றி, பாவநாசக் குளத்துக்கு உத்தரதிக்கில் ஒரு தாதகிவிருகூடிம் உண்டு. அதனடியில் ஆறுகோணமுள்ள கல்லொன்று நாட்டப்பட்டிருக்கும். அதில் நாகரபாஷையில் எழுத்துக்கள் வெட்டப்பட்டிருக்கும். அக்கல்லின் கீழாக ஒரு செந்தூரக் கிடாரமுண்டு. அதில் அறுநூற்று நாற்பத்தெட்டுப் பலஞ் செந்தூரம் உண்டு. பன்னிரண்டு களஞ்சு இரும்பை உருக்கி, ஒருபணவெடை செந்தூரமிட்டால் ஏழுமாற்றுப் பொன்னாகும் என்று கனகசுந்தரப் பெருமாள் சொன்னார்.
(முன்சொல்லப்பட்ட மலைகளில், நாகமலையென்பது கட்டுக்குளப் பகுதியிலுள்ள குச்சவெளியென்னும் ஊரிலிருக்கின்றது. அதை நாச்சியார் மலை, வெள்ளாட்டிமலை, நாகமலை என்றும் வழங்கிவருகிறார்கள். மாசி பங்குனி மாதங்களில் அம்மலையிலிருந்து ஊறிவருகின்ற நீரருவிகள் மலையடிவாரத்திற் பாய்கின்ற உப்பாற்றில் வந்து கலக்கின்றன. அக்காலத்தில் அவ்விடத்தில் வருகின்ற நண்டுகள், மச்சங்கள் யாவும் கல்லாகப் போகின்றன. அக்கல்நண்டுகளை அவ்விடத்துள்ளவர்கள் எடுத்து வந்து விற்கின்றார்கள். அவை நீர்க்கடுப்பு முதலிய சில ரோகங்களுக்கு மிகுந்த உபயோகமான மருந்தென்று வைத்தியர்கள் சொல்லுகிறார்கள். பல்லவமலையென்பது கொட்டியாபுரத்தில் இருக்கின்றது. மத்தளமலையென்பது சமுத்திரத்திலிருக் கின்ற புறாமலைக்கு வடக்குப்பக்கத்திலுள்ள மலை, வெள்ளைக்கல்மலை எவ்விடத்திலென்பது தெரியவில்லை.)
அப்போது, தனியுண்ணாப்பூபாலவன்னிமை கனகசுந்தரப் பெருமாளை நோக்கி, இராசாக்கள் கொடுத்த திரவியங்களும் திருவாபரணங்களும் எவ்விடத்தில் இருக்கிறதென்பதை விபரமாகச் சொல்ல வேண்டுமென்று கேட்க, கனகசுந்தரப் பெருமாள் பெரியவளமைப் பத்ததியைப் பார்த்துச் சொல்லியதாவது: ஆலயத்தின் கிழக்குவாயிலில் ஏழு கற்படிக்குக் கீழாக தெற்குப் பக்கத்தில் முக்கோணக்கல்லொன்று வைத்துக்கட்டியிருக்கும். அதனடியில் முற்கோணக் கற்கதவுண்டு. அக்கதவைத் திறந்து உட்பிர வேசித்தால் முப்பத்தாறு முழத் தாழ்வுக்கப்பால் ஒரு பண்டகசாலை உண்டு. அதில் இராசாக்கள் கொடுத்த திரவியங்கள் இருப்பாக வைக்கப்பட்டிருக் கின்றன. அதற்கு வீரபத்திரரும், ஐந்துதலைநாகமும், வைரவர்களும் காவலாக நிற்பார்கள். இவர்கள் மூத்தநயினாரிடத்திலடக்கம். வடக்குவாயிலில் ஒன்பது கற்படிக்குக் கீழ் மேற்குப்பக்கமாக அறுகோண முள்ள கல்லொன்று வைத்துக்கட்டியிருக்கும். அதன்கீழ் முப்பத்தாறுமுழத் தாழ்வுக்கப்பால் ஒரு பண்டகசாலை உண்டு. இராசாக்கள் கொடுத்த நகைகள் அங்கு இருக்

Page 45
56 திருக்கோணாசல வைபவம்
கின்றன. அதற்குப் பத்திரகாளியும் ஐயனாரும் இரண்டு துவாரபாலகர்களும் நாலுவைரவரும் காவலாக நிற்பார்கள். இவர்கள் ஆபதோத்தாரண வைரவரிலடக்கம். இதுவன்றி, கோணநாயகர் எழுந்தருளியிருக்கும் சிங்கா சனத்துக்கு வடக்குப்பக்கமாக முக்கோணக்கல்லொன்று பரவுகல்லோடு பரவியிருக்கும். அக்கல்லை எடுத்தால் வாசலொன்று தோற்றும். அவ் வாயிலின் வழியாகப் பந்தவிளக்குக் கொண்டுபோக, அறுபத்து நாலுமுழ நீளத்துக்கு மிகுந்த நெருக்கமான பாதையாக விருக்கும். அதற்கப்புறம் வெகுவிசாலமான மண்டபமொன்றுண்டு. அதில், உற்சவகாலங்களில் எடுக்க வேண்டிய திருவாபரணங்களும், பட்டுப்பீதாம்பரங்களும் தங்கம் பொன் வெள்ளி முதலியவற்றால் செய்து முத்து பவளம் இவைகளாற் குஞ்சங்கள் தூக்கிய குடைகளும் ஆலவட்டங்களும் நவரத்தினமிழைத்த திருவாசி களுமிருக்கும். திருவிழாக்காலங்களில் இவைகளை எடுக்கும்போது விநாயருக்குப் பூசைசெய்து எடுத்துக்கொள்ள வேண்டியது. சிங்காசனத்திற்குத் தெற்குப்பக்கமாக ஆறு கோணமுள்ள கல்லொன்று பரவு கல்லோடு பரவியிருக்கும். அக்கல்லை உயர்த்தினால் வாயிலொன்று தோன்றும். அவ்வாயில் வழியே பந்தவிளக்குக் கொண்டுபோக, நாற்பதுமுழத்துக்கப்பால் ஆறுமுழ அகலத்தில் ஒரு கிணறுண்டு. அதன்மேற் பலகை போட்டு அப்பாற் போக, நூற்றிருபது முழத்துக்கப்பால் மிகுந்த விசாலமுள்ள மண்டப மொன்றுண்டு. அதில், ஒரு கோடி களஞ்சு பொன்னுண்டு. அந்தத் திரவியம் கோயில்வருமானங் குறைந்த காலத்தில் எடுத்துச் செலவிட வைத்தது. எடுக்கும் போது விநாயகருக்கும், சொர்ண வைரவருக்கும் பூசை செய்து, மன்றாட்டம் பெற்று எடுக்க வேண்டியது. நித்திய நைமித்திகங்கள் குறைவின்றி நடத்தி, நாளொன்றுக்குப் பதினாறரைப் பொன் மிச்சங்கண்டு வருகின்றது. அந்தப்பொன் முழுவதும் கருகுலக் கணக்கிற் பதிந்து, கருகுலக் கணக்க னுடைய களஞ்சிய வீட்டில் இருப்பாக இருந்து வருகின்றது. குளக்கோட்டு மகாராசா முன் சொல்லப்பட்ட திரவியங்கள் யாவையும் அந்த அந்த இடங்களில் திட்டம்பண்ணி வைத்து, பெரியவளமைப் பத்ததியென்னுஞ் செப்பேட்டிற் பதித்து, எங்கள் முன்னோர் கையில் அவ்வேட்டைக் கொடுத்துச் சொல்லிய கட்டளைப்படி நாங்கள் நடந்து வருகிறோமென்று கனகசுந்தரப் பெருமாள் சொன்னார். அதைக் கேட்ட தனியுண்ணாப் பூபாலவன்னிமையும், இருபாகமுதன்மையும் அளவிடற்கரிய சந்தோஷங் கொண்டு, கனகசுந்தரப் பெருமாளுக்கு வெகுயூஷணாதி திரவியங்களுங்கொடுத்து, நிலாவெளி யூருக்கு அனுப்பினார்கள். (குளக்கோட்டுமகாராசா கனகசுந்தரப் பெரு மாளிடத்திற் கொடுத்த செப்பேடு "பெரியவளமைப் பத்ததி”, கனகசுந்தரப் பெருமாளின் சந்ததியில் உள்ளவர்களிடம் தற்காலத்திலும் இருக்கின்றது.) அதன்பின்பு, தனியுண்ணாப் பூபாலவன்னிமை முதலாக மற்றுஞ் சகலரும் கோணநாயகருக்கு நித்திய நைமித்திகங்களில் குறைவுவராமல் நடாத்தி, அவருடைய திருத்தொண்டுகளைச் செய்து வாழ்ந்திருந்தார்கள்.

திருக்கோணாசல வைபவம் 57
தம்பலகமச் சரித்திரம்
அப்படியே கோணநாயகருக்கு நித்திய நைமித்திகங்கள் குறைவு வராமல் நடந்துவருங் காலத்தில், பறங்கிக்கலக முண்டானது. அப்போது, இருபாகைமுதன்மையும் மற்றுஞ்சகலரும் குளக்கோட்டுமகாராசா முன் செப்பேட்டில் எழுதிவைத்திருக்கும் பிரகாரம் கோணநாயகர் முதலாக மற்றும் எழுந்தருளிநாயகர் சகலரையும், திருவாபரணங்களிற் சில வற்றையும், தூப தீபம் முதலிய மற்றுஞ் சாமான்களையும் எடுத்துக் கொண்டு போய்க் கழனிமலையில் வைத்துப் பூசைசெய்து வந்தார்கள்.
அப்போது, கண்டியிலிருந்து அரசுசெய்த இராசசிங்கன் என்பவ னுக்குக் கோணநாயகர் ஒரு பிராமணவடிவமாகச் சொப்பனத்தில் தோன்றி, நாமும் தேவியும் இப்போது கழனிமலையி லிருக்கின்றோம். நாம் எழுந்தருளியிருப்பதற்குத் தம்பலகமத்தில் ஓர் ஆலயத்தைக் கட்டி முடிப்பாயாக என்று சொல்லி மறைந்தருளினார். உடனே அரசன் விழித்து, இந்த வசனங்களை நம்மிடம் வந்து சொல்லியவர் கோணநாயகர்தானென்று தீர்மானித்து, வேண்டிய திரவியங்களை விடுத்து, தன்னிடம் கணக்கப் பிள்ளையாக விருந்த இப்றாம் முகாந்திரம் என்னும் தம்பன்கடவைச் சோனகனொருவனை முதலாளியாக வைத்து, இற்றைக்கு ஏறக்குறைய இருநூற்றைம்பது வருடங்களுக்கு முன் தம்பலகமத்தில் தற்காலமிருக்கும் கோயிலைக் கட்டிமுடித்து, கோணநாயகரையும் தேவியையும் மற்றுந் தேவர்களையும் கழனி மலையிலிருந்து எழுந்தருளப் பண்ணிக் கொண்டுபோய்த் தம்பலகமத்தில் தான்முடிப்பித்த ஆலயத்தில் வைத்து, ரதிஷ்டைசெய்து, நித்திய நைமித்திகங்களெல்லாம் முன்போல நடக்கும்படி திட்டம் பண்ணி, இருபாகை முதன்மை, கனகசுந்தரப் பெருமாள், சித்திர வித்தாரப் புலவன், தானத்தார், வரிப்பத்தார் முதலிய சகலரையும் நோக்கி, ஆதியில் குளக்கோட்டுமகாராசா உங்களுக்குக் கற்பித்தபடி கோண நாயகருக்கு நித்திய நைமித்திகங்களை நடத்திவர வேண்டுமென்று கட்டளைசெய்து, கண்டிநகருக்குப் போய்ச் சத்துருக்களை வெற்றிகொண்டு இராச்சியபரிபாலனஞ் செய்திருந்தான்.
பறங்கிக்காரர் திருக்கோணாசலத்துக்கு வந்து, குளக்கோட்டு மகாராசனாற் கட்டப்பட்ட கோயிலையும், ஆயிரக்கால் மண்டபம் முதலிய வைகளையும் இடித்து, பாவநாசக்குளத்தையும் மூடி, பின்பு கோயில் முதலிய வற்றிலிருந்த சாதிக்கருங்கற்களை எடுத்துத் தற்காலமிருக்கும் கோட்டையைக் கட்டி முடித்து, திருக்கோணாசலநகரை அரசுசெய்தார்கள். அக்காலத்திற் திருக் கோணாசலத்துக்குப் போய் பூசைசெய்யப்படாதென்று நிட்டுரமான கட்டளை செய்தார்கள். தற்காலமிருக்கும் கோட்டையின் வாசலுக்குக் கதவு

Page 46
58 திருக்கோணாசல வைபவம்
நிலையில் வைக்கப்பட்டிருக்கும் கல்லில், “முன்னங் குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப் பின்னும் பறங்கி பிரிப்பான்” என்னும் பாட்டு வெட்டப்பட் டிருக்கின்றது. மற்ற இரண்டு வரிகளும் அதிகம் விளக்க மில்லாமல் அழிந் திருக்கின்றன.
Co32COQR&o)

திருக்கோணாசல வைபவம் 59 தற்கால சரித்திரம்
தற்காலத்தில் அரசு செய்யும் ஆங்கிலேயர் இந்நகரியை அரசாளத் தொடங்கிய பின்பு, சோமவாரம், சுக்கிரவாரம், திருக்கார்த்திகை, சிவராத்திரி, பங்குனி உத்தரம், ஆனி உத்தரம், மார்கழித்திருவாதிரை, தைப்பூசம், மாசிமகம் முதலிய புண்ணியகாலங்களில், யாவரும் தங்கள் இட்டப்படி திருக்கோண சலத்துக்குப் போய் பூசைசெய்து வணங்கி வருவதற்கு உத்தரவு கொடுத்தார்கள். அப்படியே சர்வசித்து வருடம் புரட்டாதி மாதம் வரையிலும் நடைபெற்று வந்தது. பின்பு, ஐப்பசி மாதந் தொடக்கம் மாதத்தின் முதலாம் மூன்றாம் சுக்கிர வாரங்களிலும், திருக்கார்த்திகை சிவராத்திரி மாசிமகம் என்னும் மூன்று புண்ணிய காலங்களிலும் மாத்திரம் இருநூறு சனத்துக்கு மேற்படாமல் யுத்தவீரர்களின் காவலோடு திருக்கோணாமலைக்குப் போய், பூசைசெய்து வணங்கி வரவேண்டுமென்று கட்டளையிட்டிருந்தார்கள். இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன், இவ்வூரிலிருந்த கதிரவேலு முதலியார் என்னும் ஒரு பிரபு, ஆங்கிலேய அரசாட்சியாருடைய உத்தரவைக் கொண்டு, பறங்கிக் காரரால் மூடப்பட்ட பாவநாசக்குளத்தின் மையத்தில் ஒரு கிணற்றை வெட்டிக் கட்டிவைத்தார். ஆடி அமாவாசை முதலிய புண்ணிய காலங்களிற் சிலர் அக்கிணற்றில் ஸ்நானஞ் செய்து வந்தார்கள். பின்பு அவ்வழக்கையும் அரசாட்சியார் தடைசெய்துவிட்டார்கள். அக்கிணறு, இப்போது கோட்டையி லிருக்கும் யுத்த வீரருக்காகக் கட்டப்பட்ட வைத்திய சாலையின் பாவிப்புக்காக விடப்பட்டிருக்கின்றது. இது வன்றித் தம்பலகமத்திலிருக்கும் கோணநாயகர் கோயிலில் இப்போதும் நித்திய நைமித்திகங்களும் திருவிழா முதலியவைகளும் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. பறங்கிக் கலகத்துக்குச் சிலகாலத்தின் முன் வன்னிமைகள் சந்ததியற்றுப் போனபடியால், அவ்வம்சத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் திருக்கோணநகரை அரசுசெய்து வந்து, பின்பு பறங்கிக் கலகத்துடன் பெண்ணடிகளும் அற்றுப்போய்விட்டன. ஆதலால் இப்போது அரசாட்சியாரால் தம்பலகமத்துக்கு நியமிக்கப்படும் வன்னிமைகளே கோண நாயகர் கோயிற் பராபரிப்பையும் நடத்திவருகிறார்கள். இருபாகைமுதன்மை, கனகசுந்தரப‘பெருமாள், சித்திரவித்தாரப்புலவன், தானத்தார், வரிப்பத்தார் இவர்களின் சந்ததியார்கள் இப்போதும் குளக்கோட்டு மகாராசாவினால் தங்கள் முன்னோர்களுக்கு முற்காலத்தில் கொடுக்கப்பட்ட விளைநிலம் முதலியவை களின் வருமானங்களைப் பெற்றுச் சீவனஞ் செய்துகொண்டு, குளக்கோட்டு மகாராசன் தங்கள் தங்களுக்கு நியமித்த பிரகாரம் கோணநாயகரின் தொழும்ட களைச் செய்து வருகின்றார்கள். திருக்கோணாசலநகரில் பறங்கிக்காரருடைய கலகத்தின் பின் பதினாறு தேவாலயங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. குளக்கோட்டு மகாராசாவினால் தாபிக்கப்பட்ட நகரிகாவற்காளி யென்னும் பத்திரகாளிகோயில் பட்டணத்துநடுவில் இப்போதுமிருக்கின்றது.

Page 47
6O திருக்கோணாசல வைபவம் வெள்ளை வில்வத்தடி கோணநாயகர் கோயிற் சரித்திரம்
முற்காலத்தில் குளக்கோட்டுமகாராசா கோணநாயகருக்குத் தெப்பத்திருவிழா நடத்துவதற்கு ஒரு தெப்பக்குளத்தை உண்டுபண்ணி, அகற்குத் தெற்குப்பக்கமாக நின்ற ஒரு வெள்ளைவில்வவிருகூடித்தின் கீழ் தெப்பத்திருநாளுக்குக் கோணநாயகர் கோயிலிலிருந்து எழுந்தருளிவந்து வீற்றிருப்பதற்கு ஒரு மண்டபத்தையுங் கட்டினார். பறங்கிக் கலகத்தின் பின்னுள்ளவர்கள் அம்மண்டபத்தை ஒரு கோயிலாக்கி, இலிங்கப்பிரதிஷ்டை செய்து, வெள்ளை வில்வத்துக் கோணநாயகர் கோயிலெனப் பெயரிட்டு வழங்கிவந்தார்கள். அக்காலத்தில் கும்பகோணத்திலிருந்த குருசிரேஷ்ட ராகிய சங்கராச்சாரியாரவர்கள் இவ்விடம் வந்து, வெள்ளை வில்வத்தடி கோணநாயகர் கோயிலிற்றங்கியிருக்கும்போது ஒருநாள், அவ் வெள்ளை வில்வ விருக்ஷத்தை உற்றுப்பார்த்து, நீ இனி ஏன் நிற்கின்றாயெனச் சொல்லி விபூதியை அள்ளி யெறிந்துவிட்டுப் போனதன் பின்பு இவ்விருகூடிம் பட்டுப் போனதென்று கர்ண பரம்பரையாகக் கேள்வி.
C326)CSRS)

திருக்கோணாசல வைபவம் 61
குளக்கோட்டு மகாராசா மதுரையிலிருந்து அழைத்துவந்த திருமலை நாடான் தனியுண்ணாப் பூபாலவன்னிமை
முதலாக திருக்கோணநகரியை அரசு செய்த
வன்னிமைகளின் நாமங்கள்
திருமலைநாடான் தனியுண்ணாப்பூபால வன்னிமை சுந்தரநாத 外 9y அரசுநிலைதவறாத தன்தாரதார பிறர்தாரகுமார மனுநீதிதவறாத மணடலநாயக
பசுபதி
இலங்கைகாவல குணதுங்கராம
அமராபதி
சந்திரசேகர யுவனேயகாவல் குறும்பர்கள் கோமான் மாற்றலர்பெருமான் செகதுங்கபோச கைலாசநேச
வெற்றிநாயக தன்னாண்மைகுன்றாத் பொன்னவராய உத்தமமொழியான் செல்வநாயக வெற்றிநாயக
LD(Gbğ5jbTuu86
முருகநாயக
சுப்பிரதேக
9. 9.
分999.yy
9.
y

Page 48
62
நல்லநாயக வல்லிகாவல் பிள்ளைநாயக பெரியகாவல் சிதம்பரநாயக பரமநாயக கதிரைநாயக சேதுகாவல
திருக்கோணாசல வைபவம்
தனியுண்ணாப்பூபால வன்னிமை
وچ
இவருக்குச் சந்ததியில்லாததினால், சந்திரகுலத்தில் வந்தவதரித்த திருமலைநாடன் தனியுண்ணாப் பூபாலவன்னிமை வம்சம் அற்றுப்போய் விட்டது. பின்பு, இரண்டு இராயரும், இரண்டு பண்டாரத்தாரும் காரைமா நகரத்துக்குப் போய், கங்கை குலாதிபர்களில் ஒரு ஆண்பிள்ளையையும், மதுரையில் திருமலைநாடன் தனியுண்ணாப் பூபாலவன்னிமையின் வம்சத்தில் ஒரு பெண்பிள்ளையையும் அழைத்துவந்து, இருவரையும் மணஞ்செய்வித்து, திருக்கோணநகரி அரசுரிமையையும் ஒப்பித்தார்கள்.
செகராசநாத
குருநாதராம
96)56t
60556)
கனகராய படைகாத்த எதிரிகளிரியும் கணபதிராய ஐந்தருராம தருமநெறிப் படைவீரங்கொண்ட
மதுரைவாசக தியாகராச கரசைகாவல அன்னசத்திர வரையாதளிக்கும் கதிரைமாமலைப் ஏகாந்த
6J ULDL நல்லைநாத சொக்கநாயக
பூபாலவன்னிமை

திருக்கோணாசல வைபவம்
சுந்தரநாத
பாலகராய வீரராமப் குணதுங்கராம நாகமாமணிப்
கைலாயநாயக புவிராம சோமநாயக
உலகநாயக சூரிய நாயக நந்தி நாயக இலக்குமிநாயக சந்திரதேவ வெற்றிநாயக
உலகநாயக
வைரவநாயக
அரசுகாவல திருமலைப்பெருமாள் சிதம்பரநாத புட்பநாயக
பூபாலவன்னிமை
sy
63
இவருக்குப் பின் சந்ததியில்லாததினால் இராயரும் பண்டாரத்தாரும் சோழமண்டலத்துக்குப் போய், காராளகுலத்தில் ஒரு ஆண்பிள்ளையையும், தனியுண்ணாப்பூபாலவன்னிமையின் வம்சத்தில் ஒரு பெண்பிள்ளையையும் அழைத்துவந்து, விவாகம் முடித்து, திருக்கோணநகரியை அரசுசெய்யும்படி
வைத்தார்கள். காராளசிங்க நந்தியசிங்க மதராசசிங்க திருமலைராயசிங்க இராமசிங்க இலக்குமிசிங்க சந்திரசிங்க அடைக்கலங்காத்தசிங்க கங்கைகாவலசிங்க மருதநாயகசிங்க கனகநாயகசிங்க இலங்கைகாவலசிங்க
பூபாலவன்னிமை
努

Page 49
64 திருக்கோணாசல வைபவம்
கைலாயசிங்க பூபாலவன்னிமை குமாரவேற்சிங்க திருவம்பலசிங்க பரமானந்தசிங்க அம்புயாபதிச்சிங்க சிவஞானமுத்துச்சிங்க சித்தநாயகசிங்க நாகமாமணிச்சிங்க சிதம்பரநாயகசிங்க நல்லநாயகசிங்க அருணநாயகசிங்க வீரசுந்தரசிங்க சொக்கநாயகசிங்க தருமநாயகசிங்க அத்திநாயகசிங்க முத்தையநாயகசிங்க பசுபதிநாயகசிங்க இராசரத்தினசிங்க எதிரிவீரசிங்க 99
இவருக்குப் பின் சந்ததியில்லாததினால் முன் சொல்லிய இராயரும் பண்டாரத்தாரும் மருங்கூருக்குச் சென்று, அவ்விடத்திலுள்ள காராளகுலத்தில் ஒரு ஆண்பிள்ளையை அழைத்துவந்து, திருக்கோணநகரில் வன்னிமை வம்சத்திலிருந்த ஒரு பெண்ணுக்கு விவாகஞ் செய்து அரசுரிமையை ஒப்பு வித்தார்கள்.
நடராச குமாரசிங்க பூபாலவன்னிமை வெற்றிக் وو ^ وه இராமநாத s y இலக்குமிநாத gy ༡༡ நல்லைநாயக y * தில்லைநாதக் ཉ 99 எல்லைகாவல sy y சாரங்கநாயக s sy, கங்கைகாவல 99 இலங்கைகாவல ܙܕܼ தனிமைநாயக 4. sy
சந்திரராய

திருக்கோணாசல வைபவம்
6D66)T இரகுநாத சுப்பிரதேக தருமநாயக வேதநாயக கொற்றவராச தண்டுவார்மிண்டக எதிரிகள் நாயக G8a5TLD6MTJ TLD திருமலைராய அடைக்கலங்காத்த படைவீரங்கொண்ட அம்புயாபதிக் சரவண
சேதுநாத சித்திரமொழிக் மனுநேபநாயக ஆரியநேய குணரத்தின
65
குமாரசிங்க பூபாலவன்னிமை
y
99 99
y y
9.
劳 y
9
9. 99
99. 99
y g
yy 99
9yy
9. 9.
劳 9.
99 g
re
இவருக்குப் பின் சந்ததியில்லாததினால் வன்னியவம்சத்தைச் சேர்ந்த பெண்கள் இருபத்துநான்குவருடம் அரசு செய்தார்கள். அவர்கள் நாமங்கள் காணப்படவில்லை. அதன்பின் பெண்களின் வமிசமும் சந்ததியற்றுப் போய் விட்டது. அக்காலத்தில் ஆரியச்சக்கரவர்த்தி திருக்கோணாசலத்துக்கு வந்து எழுபத்தைந்து வருடத்தின்பின் பறங்கிக்காரருடைய கலகமுண்டானது. அக் காலத்தில் வன்னியருடைய ஆளுகை இல்லை. இதிற் சொல்லப்பட்ட வன்னிமைகள் சகலரும் திருக்கோணாசலநகரிற் குடியிருந்த இடத்திற்கு இப்போதும் பூபால கட்டு என்று பெயர் வழங்கிவருகின்றது.

Page 50
66 திருக்கோணாசல வைபவம்
வெருகற் சரித்திரம்
பூர்வீகத்தில் வெருகற்பதியில் ஒரு சித்திரவேலானது சுயம்பாக எழுந்தருளியிருந்தது. அக்காலத்தில் இருந்தவர்கள் அதைப் பூசித்து வணங்கி வந்தார்கள். பின்பு திருநெல்வேலியிலிருந்து திருக்கோணமலையில் வந்து குடியிருந்த நல்லை நாதச்செட்டியார் என்னும் ஒருவர் கதிர்காமத்துக்குப் போகும் பொருட்டுப் பிரயாணப்பட்டுப் போய், வெருகற்பதியில் ஒருநாள் இரவு தங்கினார். அன்றிரவு சுப்பிரமணியக்கடவுள் அவருக்குச் சொப்பனத்தில் தோன்றி, அன்பனே! நீ நமக்கு இவ்விடத்தில் ஓர் ஆலயத்தைக் கட்டிமுடிக்கக் கடவாய் என்று திருவாய்மலர்ந்தருளினார். உடனே நல்லைநாதச்செட்டி கண்விழித்து, ஆனந்தவருவி சொரியச் சந்நிதிவாயிலிற் சென்று, சுவாமி ஏழையாகிய யான் திருப்பணி செய்துமுடிப்பது எவ்வாறென்று சொல்லிப் புலம்பி, மிகுந்த வியாகூலத்துடன் இருந்தார். மறுநாளிரவு சுவாமி அவருக்குச் சொப்பனத்தில் வந்து தோன்றி, நீ யாதுக்கும் அஞ்சவேண்டாம். இவ்விடத்தில் இருந்து நாலுநாழிகை தூரத்திலுள்ள அரிப்பு என்னுமிடத்திற் பாதைக்கருகாக ஒரு புற்றிருக்கிறது. அதன் அருகில் ஒரு மாவிலங்கைமரம் நிற்கின்றது. அப்புற்றின் பக்கத்தில் திரவியக் கிடாரங்கள் புதைந்திருக்கின்றன. அவற்றில் ஒரு திரவியக் கிடாரத்தை நீ எடுத்து வந்து திருப்பணியைச் செய்து முடிக்கக் கடவாய் என்றுசொல்லி மறைந்தருளினார். மறுநாட் காலையே நல்லைநாதச் செட்டியார் அவ்விடத்துக்குப் போய்த் தான் கண்ட கனவின்படி திரவியக் கிடாரம் இருப்பதைக் கண்டு, எடுத்துவந்து, மிகுந்த சிங்காரமாகத் தற்காலத்தில் இருக்குங் கோயிலைக் கட்டிமுடித்தார். பின்பு கும்பாபிஷேகஞ் செய்வதற்கு எத்தனித்து, எழுந்தருளி நாயகர் வேண்டுமே என்று மன வியாகூலங் கொண்டிருக்கும் போது, சித்திரவேலாயுத சுவாமியானவர் ஒருநாளிரவு நல்லைநாதச் செட்டியாருக்கு சொப்பனத்தில் தோன்றி, நாமும் தேவிமாருமாகக் கங்கைத்துறையில் எழுந்தருளி யிருக்கின்றோம். எம்மைக் கொண்டுவந்து நீ கட்டிமுடித்த ஆலயத்தில் வைத்துப் பிரதிட்டைசெய்வாய் என்று சொல்லி யருளினார். பின்பு நல்லைநாதச் செட்டியார் சுவாமியுடைய கட்டளைப்படி கங்கைத் துறைக்குப் போய், அவ்விடம் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணியக் கடவுளையுந் தேவிமாரையும் எடுத்துவந்து திருக்கோயிலுள் வைத்துப் பிரதிட்டை செய்துமுடித்தார். பின்பு நல்லைநாதச் செட்டியார் அநேக திரவியங்களைச் செலவிட்டு விலையேறப்பெற்ற திருவாபரணங் களையும் மற்றும் பொருட்களையுஞ் செய்வித்து, அறைமுதலில் இருப்பாக வைத்து, நித்திய நைமித்திகங்களைக் குறைவின்றி நடப்பித்துவந்தார். அதன்பின்பு கண்டிநகரை அரசுசெய்த அரசனிடம் மதித்தற்கரிய விலையுள்ள மாணிக்கங்கள் இருக்கும் என்பதை நல்லைநாதச் செட் டியார் அறிந்து, கண்டிநகருக்குப் போய், அரசனைக் கண்டு, தான் இரத்தினப்

திருக்கோணாசல வைபவம் 67
பரீட்சையில் மிகுந்த வல்லவன் என்று அறிவித்தார். கண்டிராசன் செட்டியாரை நோக்கி, நம்மிடமிருந்து பலவித இரத்தினங்களையும் பரீட்சை செய்பவர்களுடன் நீரும் ஒருவராக இரும் என்று சொன்னார். நல்லைநாதச்செட்டியார் அதற் கியைந்து சிலகாலம் அவ்விடம் தங்கியிருந்தார். அக்காலத்தில் அரசன் ஒருநாள் சில மாணிக்கங்களைப் பரீட்சை செய்யும்படி இவரிடங் கொடுத்தான். செட்டியார் மூன்றுநாள் வரையில் அம்மாணிக்கங்களைப் பரீட்சிப்பவர் போலத் தனது பொறுப்பில் வைத்திருந்து, பின்பு ஒரு மாணிக்கத்தைக் களவாய் எடுத்துக்கொண்டு, வெருகலுக்கு வந்து சேர்ந்தார். அதை அறிந்து அரசன் மிகுந்த கோபங்கொண்டு, தூதர்களை விடுத்துச் செட்டியாரைப் பிடிப்பித்து, சிரசு தெரியும்படியாகப் பூமிக்குட் புதைத்துச் சிரசானது இடறுண்ணும்படி பட்டத்துயானையை மதங்கொடுத்து விடுங்கள் என்று கட்டளை பண்ணினான். அரசன் சொற்படி யானைப் பாகர்கள் யானைக்கு மதங்கொடுத்து வந்து விட்டார்கள். பாகருடைய சொற்படி செய்கின்ற யானையானது நல்லை நாதச் செட்டியாருக்குக் கிட்டவும் போகாமற் பின்னின்று உரத்த சத்தமிட்டது. அப்போது அரசன் மிகுந்த ஆச்சரியங் கொண்டு, செட்டியாரைப் பூமியினின்றுந் தோண்டி எடுப்பித்து, அவரை நோக்கி, நீர் யார்? உமது தொழில் யாது? நீர் இருப்பது எவ்விடம்? என்று விசாரித்தான். நல்லைநாதச் செட்டியார் அரசனை நோக்கி, இராசனே! நான் திருக்கோணமலையில் வசிப்பவன். சித்திரவேலாயுத சுவாமியின் கிருபையினால் வெருகல் என்னுந் தலத்தில் ஒரு கோயில் கட்டிப் பிரதிட்டை செய்திருக்கின்றேன். அந்தச் சித்திரவேலாயுத சுவாமிக்கு ஒரு பதக்கம் செய்விப்பதற்காகவே தங்களுடைய மாணிக்கத்தைக் களவாக எடுத்தேன் என்று உண்மையைச் சொன்னார். அப்போது அரசன் மிகுந்த சந்தோஷங் கொண்டு, செட்டியாரையும் அழைத்துக் கொண்டு வெருகற்பதிக்கு வந்து கங்கையில் இறங்கி ஸ்நானஞ் செய்து, திருக் கோயிலுட் சென்று சித்திர வேலாயுதசுவாமியையும் வள்ளிநாயகி தெய்வ நாயகியையுந் தரிசித்து, அன்பு மிகுதியினால் அநேக திருவாபரணங்களை அறை முதலில் வைத்து, சுவாமிக்குப் பதக்கம் செய்து சாத்தும்படிக்கு அம்மாணிக்கத்தையுஞ் செட்டியாரிடங் கொடுத்து, அநேக வயல் வெளி களையுந் திருத்துவித்துச் சித்திரவேலாயுத சுவாமிக்காக விட்டுக் கண்டி நகருக்குப் போய் அரசு செய்திருந்தான். பின்பு நல்லைநாதச் செட்டியார் விலையேறப்பெற்ற ஒரு பதக்கத்தைச் செய்வித்து, அதில் நடுநாயகமாக அம்மாணிக்கத்தை வைத்து இழைப்பித்துச் சித்திரவேலாயுதசுவாமிக்குச் சாத்தி மிகுந்த சந்தோஷ மடைந்தார். பின்பு நல்லைநாதச் செட்டியார் சித்திரவேலாயுதசுவாமியின் திருவடிகளை வணங்கி அவருடைய திருத் தொண்டுகளைச் செய்துகொண்டு சில காலம் இருந்து பின்பு சிவபத மடைந்தார். அப்பதக்கம் இற்றைக்குச் சில வருடங்களுக்குமுன் களவுபோய் விட்டது. இதுவன்றிக் கொட்டியா புரத்தில் திருமங்கலாய் என்னு மிடத்தில் வன்னியவம்மிசத்தைச் சேர்ந்த திருமங்கலை என்னும் ஒரு பெண்ணினால்

Page 51
68 திருக்கோணாசல வைபவம்
ஒரு சிவன்கோயில் கட்டப்பட்டது. பின்பு அக் கோயிலிலிருந்த சிவலிங்கத்தை அவ்விடத்தில் உள்ளவர்களும் ஒரு வன்னிமையுமாக எடுத்துவந்து கரசையம்பதிக்கு அருகாயுள்ள கங்குவேலி என்னுமிடத்தில் ஒரு கோயிலைக் கட்டி, அதில் வைத்துப் பிரதிட்டை செய்தார்கள். அது கங்குவேலிச் சிவன் கோயிலென மிகவும் பிரபல்யத்துடன் வழங்கி வருகின்றது. இதுவன்றி, சம்பூரில் ஒரு பத்திர காளி கோயிலும், இலங்கைத் துறையிலிருந்து இப்போது ஈச்சிலம்பற்றையில் எடுத்துவந்து வைத்துப் பிரதிட்டை செய்திருக்கும் செண்பகநாச்சியம்மன் என்று அழைக்கப்படும் ஒரு காளிகோயிலும், நீலாப்பனை என்னுமிடத்தில் ஒரு பத்தினியம்மன் கோயிலும் இருக்கின்றன. இம் மூன்றும் குளக்கோட்டு மகாராசா காலத்தில் உள்ளவைகளாக வழங்குகின்றன.
முற்றும்.

திருக்கோணாசல வைபவம் 69
6
சீர்கவி இராஜவரோதயம் ஆக்கிய
கோணேசர் கல்வெட்டு
பொழிப்புரை - பண்டிதர் ச. சுப்பிரமணியம்
காப்பு
உதய மால்வரை ஒனகதிரென்ன என் இதய அம்புயத்து என்றும் விளங்கு மதக டாசல வாரன மாமுக முதல்வ னைங்கர முர்த்தி பதாம்புயம்
பொழிப்புரை
வலிமையும் பெருமையும் வாய்ந்த ஆனைமுகத்தையுடைய முழு முதற் கடவுளாகிய ஐங்கர மூர்த்தியின் தாமரை மலர் போன்ற பாதங்கள் உதயகிரியில் உதித்து எழுந்து வருகின்ற சூரியனைப் போல என்னுடைய இதயமாகிய தாமரையில் எப்போதும் பிரகாசித்திருப்பதாக.
அதக வலிமை, ஆசல் - பெருமை, வாரணம் - யானை, கதிர் - சூரியன், அம்புயம் - தாமரை.
சிறப்புப் பாயிரம்
I. சொல்லுற்ற சீர்க்குளக் கோட்டுமன் சொல்லிய சொற்படியே
கல்வெட்டுப் பாடெனப் பாடினன் பாதிக தைபொருளாய் அல்லுற்ற கண்டரின் பாதத்தை நெஞ்சி லழுத்தியிகல் வெல்லுற்ற சீர்க்கவி ராசவ ரோதய விற்பனனே.
பொழிப்புரை
பூரீ கண்டராகிய கோணேசப் பெருமானின் திருவடிகளைச் சிந்தையிலே திடமாய் இருத்தித் தியானிப்பதாலே முக்குற்றமும் வென்ற சிறந்த இராசவரோதயராம் வித்தகப் புலவர், போற்றப்படும் சீர் மிக்க குளக் கோட்டு மன்னரது ஆணைப்படியே “கல்வெட்டு” பாடுக எனலும் இந்நூலைப்பாடினார். நூலிலே பாதிகுளக் கோட்டு மன்னர் வரலாறாகிய கதையும், பாதி அவராலான திருப்பணியாகிய விடயமும் அமைந்துள.

Page 52
7O திருக்கோணாசல வைபவம்
அல்-உற்ற, கண்டன்-நீலகண்டர்-சிவன், மனிதருக்குப் பகையா யுள்ளவை; காமம் வெகுளி மயக்கம், இகல் - வெகுளி சிவ சிந்தையால் அவற்றை வென்றவன். அரசர்களின் சாதனை, மெய்க் கீர்த்தி எனக் கல்லில் வெட்டி எழுதப்படும் கல்வெட்டு.
2. திருமருவு மனுநீதி கண்டசோழன்
செகமகிழு மரபில்வரு ராமதேவன் ருமருவு திரிகயிலைப் பெருமைகேட்டுத்
தானுமவன் வந்ததுவு மவன் சேயப்பின்பு
மருமருவு மாலயங்கள் கோபுரங்கள்
மணிமதில்சூழ் மண்டபங்கள் மலிநீர்வாவி
கருமருவு மகினிர்சேர் திருக்குளஞ்செய்
காதையதுங் கல்வெட்டாய்க் கழறுவாமே.
பொழிப்புரை
உலகோர் போற்றும் மனுநீதிச் சோழர் மரபினரான வரராமதேவர் எனும் அரசர், திரிகோணமலைப் பெருமையைக் கேட்டறிந்து அவர் அங்கு தரிசனம் செய்ய வந்ததும் அவரது புத்திரனானவன் பின்பு தரிசிக்க வந்து தங்கியிருந்து ஆலயமும் கோபுரமும் மதில் சூழ்ந்த மண்டபங்களும் நீர் நிறைந்த வாவியும் மழை நீரைத் தேக்கி வைத்திருக்கும் திருக் குளமும் ஆகியவற்றை அமைத்து வைத்த வரலாறும் என்பவற்றைக் “கல்வெட்டு” எனும் பெயருடைய நூலாகக் கூறுவோம்.
(இவை இரண்டும் நூலாக்கியோன் கூறிய பாயிரம்)
3. சொல்லரிய திரிகயிலைப் பெருமையெல்லாந்
தூயபுராணக்கதையிற் சொன்னதுண்டு
வல்லமைசேர் வன்னிமையு மற்றுந்தானம்
வரிப்பத்தா ராதியோர் வந்தவாறும்
நல்லதொரு பூசைவிதி நடத்துமாறும்
நடப்பதின் மேலினிநடக்கு நடத்தையாவும்
சொல்லெனவே சோதிடத்தினிலையேகண்ட
கவிராசன் வருங்காலஞ் சொல்லுஞ்சீரே.
பொழிப்புரை
சொல்லற்கரிய இத் திரிகோணமலைப் பெருமைகள் புனிதமான தெட்சணகைலாய புராணம் முதலியவற்றில் கூறப்பட்டுள. அன்றியும் ஆளுமை பெற்றவரான வன்னிமையாரும, தனத்தாரும், வரிப்பத்தரும் முதலிய பலவகைக் கோயிற் தொண்டுகளுக்கு உரியவருக்கு நியமனம்

திருக்கோணாசல வைபவம் 71
செய்து கொடுத்த ஆவணங்களும், அவர்களை வருவித்தவாறும் நன்கு ஆலயப் பூசை விழாக்களை நடத்திவரும் முறைமை கூறும் ஆவணமும், நடந்ததன் மேல் எதிர்காலத்தில் நிகழவுள்ளவைகளையும் சொல்லுக என்று உரைக்கவே சோதிட நூல் உண்மையை உணர்ந்த கவிராசன் வருங்கால நிகழ்வு கூறும் சீரும்.
வன்னியர் - பேரூர் ஆட்சியுரிமையுடையோர். தானத்தர் வரிப்பத்தார் கோயிற் கடமை புரிவோர். இவர்கள் தமிழகத்திலிருந்து கொண்டு வந்து குடியேற்றியவர்கள்.
4. சீரிலங்கு நாடதனா னாளொன்றுக்
கிரண்டவனச் செம்பூச்சம்பா
ஏரிலங்கு மரிசிவரக் கறியமுது
பலசெலவு மிந்தேயிசன்
பாரிலங்கு பூசைதனை நடத்துகின்றேன் பின்யிது பகிர்வாராரென்
றேரிலங்கு குளக்கோட்டன் நாற்கால்மணி
டபத்திருந்தே யெண்ணினானால்,
பொழிப்புரை
சிறந்த நாட்டின் வருவாயிலிருந்து தினமும் இரண்டவணம் சம்பா நெல் அரிசி கொண்டு சமைத்த அன்னம் கறியமுதோடு நிவேதனமும் மற்றும் தூப தீப தாம்பூல உபசாரம், முதலானவுமாக உலகிலே ஈசனார் பூசையை நிகழ்த்தி வருகிறோம். பின்வரு நாளிலே இந்த நியமங்களைத் தவறாது பகிர்ந்து செய்பவர் யாவரோ என்று அழகு மிக்கவனான குளக் கோட்டு மன்னன் நாலு தூண் மண்டபத்திலிருந்தவாறு எண்ணினான்.
அவணம் - முகத்தல் அளவை புசல் போன்றது நாற்கால் - நாலு தூண் செம்பூர் சம்பா - சம்பா நெல் வகையில் ஒன்று செம்பூர் - சம்பூராகவுமாம்.
5. திருந்துதிரி கயிலைவெற்பிற் சிவாலயமுங்
கோபுரமுஞ் சிறக்கநாட்டிப்
பரிந்துலகோர் பவமறுக்கும் பாவநா
சச்கனையும் பரிவாய்ச்செய்து
தெரிந்த புகழ்த்திருக்குளமும் வயல்வெளியுந்
திருத்தியரற் கென்னவிந்து
பரிந்தரனின் றொழும்புசெய வாள்வேண்டு மெனநினைத்தான் பருதிவேந்தன்.

Page 53
72 திருக்கோணாசல வைபவம்
பொழிப்புரை
திருத்தமான கோணேசப் பெருமானுக்குச் சிவன் கோயிலும் கோபுரமும் சிறப்புறச் செய்து, பரிவோடு மக்களின் பாவம் போக்கும் பாவநாச தீர்த்தக் குளமும் பக்தியுடன் செய்து, திருக் குளமும் வயல் வெளியும் திருத்தியமைந்து இவை சிவன் பணிக்னெ நிபந்தம் செய்து, அன்புகூர்ந்து சிவதொணி டுகளைக் கிரமமாகச் செய்து வரப் பணியாளர் வேண்டுமே என்று அஞ்ஞா சக்கரமுடைய மன்னன் சிந்தித்தான்
பரிதி - வட்டம் - அஞ்ஞா சக்கரம்.
б. பருதிகுலத் துதித்தகுளக் கோட்டிராசன்
பங்குனியுத் தரம்பதினைந் தேதிதன்னில்
வரிசையுடன் சென்றுமருங் கூரிலேகி
வளவரினல் லோரைமரக் கலத்தினேற்றி
அரியதிருக் கோணமலை நாதற்கென்றே
யந்நகரி லையாறு குடியுமேற்றி
உரிமையிது வுங்கள் பர வணியாமென்றே
உரைசெய்தான் சதுர்வேத ஞானமுர்த்தி
பொழிப்புரை
சூரிய குலத்தவனான குளக் கோட்டன் பங்குனி மாதம் பதினைந்தாந் தேதி பங்குனி உத்தரநாளில் அரசுவரிசைகளோடு தமிழகஞ் சென்று மருங்கூரிலே சோழர் மரபினரான நல்லாரைத் தேர்ந்து மரக்கலங்களிலேற்றி, அருமையான கோணேசருக்கென்று அந்நகரிலே முப்பது குடும்பங்களைக் குடியேற்றி, உங்களுக்கு இந்த நிலம்வீடு பிறவும் சிவதொண்டும் மரபுரிமையான முதுசொமாகும் என்று உறுதி செய்தான் நால் வேதமும் உணர்ந்த அம்மன்னன்.
பருதி-பரிதி-சூரியன், ஐயாறு-என்பது ஐந்துவகை ஆறாறு குடி களுமாகும்.
Z இத்தலத்தி லரண்கயிலை யாலயத்தி
லியற்றுமுறை முதலதனிலிருப்பும்வைத்து
நித்தம்வரும் வரவினொடு நிதம்பூசைக்கு
நேர்ந்திடுஞ் செலவெழுத நியமஞ்செய்து
அத்தர்முன்ன ராலாத்தி நடனமாடல்
பன்றிகுற்ற லதிகபட்டு அரசற்கிதல்
இத்தனையுந் தானத்தார் செய்வீரென்ன
வெழுகுழக்கு ராயபட்ட மிந்தான் வேந்தன்.

திருக்கோணாசல வைபவம் 73
பொழிப்புரை
இச் சிவதலத்தில் அரணாலயக் களஞ்சியத்தில் நியமங்கள் செய்யும் முறைக்கு மூலதனமும் இருப்பு நிதியாக வைத்து, நித்தியமும் கோயிலுக்குச் சேரும் வருவாயோடு தினமும் செலவாகும் பொருள் விபரமும் கணக்கு எழுதி வைக்க நியதி செய்து, இறைவன் சந்நிதியிலே ஆலாத்தி எடுத்தல் நடனமாடுதல், பன்றி வேட்டைப் பணி, உயர்ந்த பட்டுச் சாத்துதல், எசமானுக்குக் காளாஞ்சி வழங்கல் ஆகிய பணிகளைத் தானத்தார் என்னும் வகுப்பினருக்கு நியமித்து அவர்கள் பெயருடன் இராயர் என்ற பட்டமும் வழங்குக என்று ஏழு குடியினருக்கு வரிசை வழங்கினான்.
வேட்டைத் திருவிழாவில் வேடுவர்போல் வேடமணிந்து வீதியில் உடனுலாப் போதல் பன்றிகுற்றல் எனப்பட்டது. அத்தர் - சிவன்.
8. வேந்தனின்னு மரன்றொழும்புக் காட்போதா
தெனநினைந்து மீண்டேகாரை
வாய்ந்தவள நாடுசென்று வரிபிடித்தான்
முவேழு குடி வாழ்வோரைச்
சேர்ந்திடப மாதமதி லீரைந்தாந்
தேதிதிங்கள் சிறந்தசோதி
ஏய்ந்தகன்னி முகூர்த்தமதி லரன்றொழும்பு செயவிடுத்தா னிராசராசன்.
பொழிப்புரை
இராசாதிராசனான அரசன் மேலும் ஆலயப்பணிக்கு ஆட்கள்
போதாதென நினைத்து மீட்டும்காரைக்கால் எனும் வளமார்ந்த நகரிலே
போய், வரிப்பற்றார் எனப்படும் பெயருடன் வாழும் இருபத்தொரு குடி
யினரை வைகாசி மாதத்தில் பத்தாம் தேதியில் திங்கள் வாரமும் சோதி
நாளும் கூடிய கன்னி லக்கின முகூர்த்தத்திலே சிவன் பணி புரிவதற்கு
உரியராகக் கொண்டுவந்து குடியிருத்தினான். r
வரிபிடித்தான் - வரிப்பற்றார்.
9. சந்நிதியி னிவிர்செயுந் தொழும்புமக்குச்
சவித்தார நாமுரைக்கத் தானிர்கேளும்
நன்னயஞ்சேர் பட்டாடை கொய்தல்கட்டல்
நல்லபுட்ப பத்திரங்களெடுத்தல் தூர்த்தல்
மின்னுநிறை விளக்கேற்றல் தளிசைதட்டு
முட்டிவைக ளழகுறவே விளக்கல் தீர்த்தம்
உன்னிதமா யெடுத்தல் நெல்லுக் குற்றல்சாணி
யொழுகுதல்மற் றெளிதுரும்பு முவந்தேயிதல்.

Page 54
74 திருக்கோணாசல வைபவம்
பொழிப்புரை
இறைவன் சந்நிதியில் நீவிர் செய்யும் பணிகளை விரிவாகச் சொல்கிறேன் கேட்பீராக; நலம்மிக்க பட்டாடையைக் கொய்து மடித்துக் கொடுத்தல், கட்டுதல், பூப்பத்திரங்கள் எடுத்தல் தூவுதல் ஒளிமிக்க தீபமேற்றல் திருவமுதுத் தட்டு குடம் முதலிய பாத்திரங்களைத் துலங்கத் தூய்மை செய்தல் தீர்த்த நீரை உரியவாறு எடுத்துதவுதல், நெல் குற்றுதல் சாணந் தெளித்தல் மற்றும் யாகத்துக்கும் மடைப்பள்ளிக்கும் எரிக்க வேண்டிய சமித்து விறகுகளைச் சேகரித்துக் கொடுத்தல் இப்பணிகளை உவந்து ஏற்று இயற்றுவீராக!
சவித்தாரம் - விரிவாக - விபரமாக - விஸ்தாரம் என்பது கொய்தல் கொய்சகமாக மடித்தல் - தளிகை - தளிசை - திருவமுது. எரிதுரும்பு
சமித்து விறகு.
10. செய்யநட னஸ்திரிக்கு முட்டுவகை
கொட்டலொடு சிறக்கப்பாடல்
ஐயமற நரபெலியாள் டனக்கரும்பா
வாடையிட லதுவேயன்றித்
துய்யகண்ணங் கொடியேற்றி லிறக்கல்கட்டல்
சுமத்தலொடு சந்தனம தரைத்தேயிதல்
மெய்யெனவே ஆலயத்துட் பணிகளெல்லாம்
விளக்கமுடன் துப்பரவாய் விரைவாய்ச் செய்தல்
பொழிப்புரை
நல்ல நடனமாதருக்கு மிருதங்கம் தாளம் ஒலிப்பித்தலோடு, சிறப்புறப் பக்கம் பாட்டுப் பாடுதல், ஐயமில்லாமல் நரபலிவாங்கும் காளிதேவிக்கு அருமையான பாவாடை போடுதல் அதுவுமன்றி தூய்மை யான அழகிய கொடி ஏற்றுதல் கட்டுதல் இறக்குதல் வாகனம் சுமத்தல் சந்தனம் அரைத்துக் கொடுத்தல் இவ்வாறாக உண்மையாகவே ஆலயத்தின் உள்ளே செய்ய வேண்டிய பணியாவும் விளக்கமுறுமாறும் துப்பரவாகவும் செய்து வருதல்.
நடனஸ்திரி - நடனமாதர். முட்டுவகை - மிருதங்கம் முதலியன. கொட்டல் - முழக்குதல் - அடித்தல் பாடல் - பக்கப்பாட்டு - பிறப்பாட்டு - பாடுதல். நர பலி - மனிதனைப் பற்றி நிற்கும் ஆணவத்தை பலியாக வாங்கும் - காளி - துர்க்கை, பாவாடை இடல் - பாவாடைபோடுதல் - உடைவிசேடம் - அன்னப்பாவாடை எனப்படும் சோறு அவித்துப் படைத்தலுமாகும். கொடி - என்றது வெள்ளை கட்டுதல் அவிழ்த்தலையும் குறிக்கும் சுமத்தல் வாகனம் காவுதல் முதலியன.

திருக்கோணாசல வைபவம் 75
11, நீர்பாயும் பள்ளவெளி நெல்விளையுந்
தரையவர்க்கு நிசமாயிந்து
பார்க்கரிய வைங்குடிக்குப் பண்டாரத்
தாரெனவேபவிஷமிந்து
வார்குலவு களபமுலைப் பிழநடையைக்
கோணமலை வரதன்றாளை
நேர்த்தியதாய் வழிபடுகிர்க் குளக்கோட்டன்
றன்னுளத்தி னினைக்கலானான்.
பொழிப்புரை
நீர்பாய்கின்ற பள்ளவெளியெனும் நெல்விளை நிலம் அப்பணி யாளருக்கே உரித்தாக ஈந்து, உலகில் அருமையான அந்த ஐந்து குடி யினருக்கும் அவர் பெயர்களோடு பண்டாரத்தார் எனும் விருதுநாமமும் சேர்த்து வழங்கும்படி மதிப்பளித்து, கச்சணிந்து களபகஸ்தூரி சாத்திய ஸ்தனங்களும் பிடியனநடையுமுள்ள மாதுமை அம்மையின் பாதமும், கோணேசராகிய வரந்தரும் பெருமான் பாதமும் என்று நேர்த்தியாக வழிபடும் கிரமச் சிறப்புள்ள குளக்கோட்டு மன்னன் சிந்திப்பான்
பவிசு-கெளரவம்-பட்டம். வார்-மார்புக்கச்சு களபம் சந்தனப்பூச்சு. பிடி நடை-மாதுமையைக் குறிப்பது வரதன்-வரமளிப்போன் நேர்த்தி-நன்கு-நியதி.
12. தானம்வரிப் பத்தாரென் றிசைத்தனம்யா
மிவர்க்குறுகண் தானேவந்தால்
மானபங்கமடையாமனடுத்திர்ப்ப
தாரெனவே மதுரைக்கேகித்
தானமதிக் குலத்துதித்த தனியுண்ணாப்
பூபாலன் தனைக்கொணர்ந்து
தேனமர்பூந் தொடைமார்பன் றிருக்கோன
நகர்க்கரசு செய்ய வைத்தான்.
பொழிப்புரை
தானத்தார்வரிப்பத்தார் என ஆலயப் பணியாளரை நியமித் தோம்; இவர்களுள் பிணக்கு வழக்குகள் தோன்றினால், எவருக்கும் மானபங்க முண்டாகாதவாறு விசாரித்துத் தீர்க்க உரியவர் யாரென நினைந்து மீண்டும் மதுரைக்குச் சென்று, உயர்ந்தவானில் சந்திரன் வமிசத்திலுதித்தவனான “தனித்துண்ணாப்” பூபாலன் என்பவனை அழைத்து வந்து தேன்பொருந்திய மலர்மாலை அணிந்த மார்பனான குளக்கோட்டன், திருக்கோணமலை நகரிலிருந்து அரசு புரியும் மன்னனாக அமர்த்தினான்.

Page 55
76 திருக்கோணாசல வைபவம்
உறுகண் - இடையூறு - பிணக்கு வழக்கு மானபங்கம் - மரியாதைக் கேடு, தனி உண்ணான் - விருந்தினரோடன்றித் தனியே உண்ணாதவன் - பட்டம்.
13. வைத்தபுகழ் வன்னிமையே சொல்லக்கேளாய்
மகத்தான பாசுபதர் மறையோர்தங்கள்
சித்தமது நோகாமனரீதிசொல்வாய்
சிவபூசை முதலொழுக்கந் தவறினாலுங்
குற்றமென வெண்ணிமிக்க கோபங்கொண்டாற்
கோணமலை நாதரிடஞ் சொல்வர் சொன்னாற்
சுற்றுமே பிரமகத்தி வம்சமுற்றுந்
தொலையாது மற்றவர்க்குச் சொல்வேங்குற்றம்.
பொழிப்புரை
புகழ்நாட்டிய வன்னியனாரே ! நீதிமுறை செலுத்தும் வகையைக் கேட்பீர்; மாண்புடைய பூசகரான பாசுபதர்கள் - வேதியர் - மனம் வருந்தும்படி நடவாமல் பெருங் குற்றமென்றெண்ணி அவர்களைக் கோபியாதீர், கோபித்தால், அவர்கள் கோணேசர் முன் முறையிடுவர். முறையிட்டால், அது பிரமகத்திப் பாவம் போலவே சந்ததியில் வந்தவரையும் பிடிக்கும்; விட்டுத் தொலையாது; மற்றவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு வகுத்துரைப்போம் கேட்பீர்.
பிரம கத்தி - பிராமணனைக் கொன்ற பாவம் வம்சம் - வமிசம் - மரபில் வந்தோர்.
14. சுதமிகு வன்னிமையே குற்றஞ்செய்தாற்
றுலங்குவிலங் கடியுயிருக் குயிரேவாங்கு
நிர்த்தமிடு மடவியர்கள் குற்றஞ்செய்தா
னிறைபுனலி னரிறுத்தி வைத்துத் தேங்காய்வாங்கு
மற்றமதி நூதன்மடவார் குற்றஞ்செய்தால்
மணிகடக மேற்றியடி வழமையார்த்தே
இத்தகைய விராசாங்கஞ் செய்நியென்றே
இரத்னமணி யாசனத்திலிருத்தி வைத்தான்.
பொழிப்புரை
தூயவரான வன்னியரே! மற்றவர் தவறு செய்தோராயின் அவரை விலங்கு பூட்டலாம், அடிக்கலாம், வாடவிடலாம், உயிர் பறிக்கலாம்; தீர்த்தம் கொண்டு தரும் அறிவினர்களை நிறைந்த நீர்நிலையில் நிறுத்தி வைத்து அஞ்சாமலே தண்டனை செய்; மற்றைய மதிபோலும் நெற்றியுள்ள மகளிர்

திருக்கோணாசல வைபவம் 77
தவறிழைத்தால், நீதி நூல் வழமை பார்த்து மண்கடகம் சுமக்க வைத்தும் அடித்தும் தண்டிக்கலாம்; இவ்வாறு செய்தல் உனக்கு உரிமையான கடமையாம், என்று மணியாசனத்தில் ஏற்றி வைத்தான்.
உருக்குதல் - பசி முதலியவற்றால் வாடவிடுதல் - உயிர் வாங்கல் - மரண தண்டனை, மடவியர் - அறிவிலார். தேங்காய் - திகைத்துப் போயிராமல், வாங்கு - கருவிகளால் - ஊறு செய் மடவார் - பெண்கள் வழமை - வழக்கம்
15. வையமகிழ் வன்னிமையே யின்னுங்கேளாய்
மனுநீதி தவறாதே கோபம்பாவம்
ஐயமற உன்தாரந் தாரமாகு
மயலகத்தோர் தாரமெல்லா நின்றாயாகும்
மெய்யையெடு பொய்யைவிடு வினைசெய்யாதே
வெறுமையுளோர்க் குதவிசெய்வா யிகல்பண்ணாதே
மையனைய கண்டர்திருக் கோணைநாதர்
மகாபூசை திருப்பணியும் வழங்கச் செய்யே.
பொழிப்புரை
உலகத்தோர் விரும்பி ஏற்பதற்குரிய வன்னியரே! இன்னமும் கூறும் அறிவுரையை அறிந்து கொள்ளும்; மனுநீதியில் வழுவாதீர்; கோப முறாதீர்; அது பாவம் விளைவிக்கும்; சந்தேகமின்றி உமது தாரமே உம் மனையாளாகும்; பிறர் மனை விரும்பேல்; அயல் மனைகளில் உள்ளவரது மனைவியர் உமது தாயரென நினைவீராக; மெயப் யுரையைத் தெரிந்துகொள்வீர்; பொய்யுரையைப் புறம்போகவிடுக; தீவினை எதுவும் செய்யாதீர்; வெறுங்கையரான வறிஞருக்கு உதவுவீர்; யாருடனும் பகைமை கொள்ளாதீர்; கரியகண்டரான கோணேச நாதருக்கு சிறப்புப் பூசையும் மற்றும் ஆலயப் பணிகளும் வழக்கம் போல வழுவாது நிகழ்ந்து வருமாறு நடத்துக.
தாரம் - மனையாள். வினை - தீவினை. வெறுமை - வறுமை. இகல் - பகைமை.
76. வைத்தகட்டுக் குளத்தூரா ரரன்றொழும்பு
செய்யவிந்து வெளியோர்மேலோர்
அத்தர்முன்னர் காப்பணிதல் முன்னிடு
விழாநடத்த லவனமாறு
சுத்தநெல்லாங் கொப்புவித்த லடையாயத்
தீர்வைகடல் வரத்துங்கோனை
அத்தனுக்கித் தனையுமென வருள்புரிந்தா
னரசர் முடி யழுத்துந்தாளான்.

Page 56
78 திருக்கோணாசல வைபவம்
பொழிப்புரை
கட்டுக் குளத்தூரில் வாழும் குடிகள் சிவதொண்டுகள் செய்து வரவும், இந்து வெளி - நிலாவெளியூரில் வாழ்வோராகிய மேலோர், சிவ சந்நிதியிலே காப்புக் கட்டுதலும் முன்னிடு விழா நடத்தலும் செய்வார்கள்; அவர்களுக்கு ஆறு அவணம் சுத்தநெல் ஒப்படைக்க வேண்டும்; மற்றும் பொருந்தும் ஆயத்தீர்வையும் கடல் வழியாக வரும் வருவாயும் கேணேசப் பெருமானுக்குரியவை; களஞ்சியத்தில் சேர்க்க என்று அரசர்கள் தம்முடி பொருந்த வணங்கும் தாளோனாகிய குளக் கோட்டன் ஆவணஞ் செயதான்.
ஆயத்தீர்வை - சிற்றாறு கடலேரி என்பவற்றைக் கடந்துசெல்ல அமைத்த பாலம் படகுப் பாதைகளுக்கு அறவிடும் வரி. கடல் வரத்து - கடற்றொழில் முதலியவற்றிலிருந்து வரும் இறைப் பொருள்.
17 தானதிக திருமலைக்கு நாற்காத
வழிதிருத்தித் தானுங்கோனை
மானபரற் கெனவளித்தேன் கொட்டியா
புரப்பதியோர் மகிழ்ந்தேசெய்தல்
ஆனவலர் வெற்றிலைபாக் கருங்கதலிக்
கனியினுட னரைத்தசாந்தும்
ஊனமறு பாறயிர்நெய் யரிசியொடு
நூறவன முகந்தேயிதல்.
பொழிப்புரை
திருமலைக்கு நாலுகாத வழிபரந்த நிலத்தைச் செம்மையாக்கிக் கோணேசருக்கே உரியதாக்கிக் கொட்டியாரம் எனப் பெயர் கொடுத்தோம்; அங்கு வாழும் மக்கள் செய்ய வேண்டிய பணி ; மலரும் வெற்றிலை பாக்கு வழைப்பழமும் அரைத்த சந்தனச் சாந்தும் குற்றமில்லாத பால் தயிர் நெய்யும் அரிசியும் நூறு அவணம் நெல்லும் உவப்போடு ஆலயத்துக்கு உதவ வேண்டும்.
18. ஈதலதே ரண்டமுட னிருப்பைபுன்னைப்
பருப்பிவைக ளிறையாத்திவிற்
சேதமற ஒப்புவிக்கச் செக்காட்டி
யெண்ணெயவர் திருந்தஆடி
ஒதரிய செவுளிமுனை மிகாம
னிடங்கொடுக்க வுகந்தேகோனை
நிதமுறு கருகுலநற் கணக்கிலுள்ள
படிகினற்றி னிறைவாயூற்றல்

திருக்கோணாசல வைபவம் 79
பொழிப்புரை
முன் சொன்னவையுமின்றி, ஆமணக்கு இலுப்பை புன்னை என்பவற்றின் பருப்பு என்பவையும் சேதமில்லாமல் இறையாத் தீவினரிடம் ஒப்புவித்தல் வேண்டும்; அங்குள்ளார் அந்தப் பருப்பைச் செக்கிலிட் டாட்டிப் பெற்ற எண்ணெயைப் பாத்திரங்களிலே அடைத்து, சொல்லரிய "செவுரி முனை” யிலுள்ள தோணிக்காரனிடம் சேர்க்க வேண்டும்; பெற்ற எண்ணெயை அவன் கோணைநாதராலயத்து நீதி நடக்கும் களஞ்சி யத்திலுள்ள கணக்கின்படி எண்ணெய்க் கிணறுகளில் ஊற்றி நிரப்ப வேண்டியது கடன்.
எரண்டம் - ஆமணக்கு. இருப்பை - இலுப்பை புன்னை இவற்றின் விதையில் எடுக்கும் பருப்பில் பெறும் எண்ணெய் தீபம் எரிக்கப் பயன் படுவது. செக்கு-எண்ணெயூற்றும் எந்திரம். செவுரி முனைகோணை நகரை யடுத்துள்ள ஒரு பகுதி. மீகாமன் - தோணி ஒட்டுவோன். நீதம் - நீதி கிணறு - தாங்கி, கருவுலம் - கருவூலம் - களஞ்சியசாலை
19 வாசலுக்குத் தென்கிழக்கா யெண்ணெய் நெய்க்கு
கிணறேழு வரைந்துகட்டி
மாசகலத் துலாப்போட்டு வாளியிட்டு
மதில்கட்டிக் கதவுமிட்டு
ஏசகல வெண்ணெயதி காரமென
நிலமையும் வைத் திதயங்கூர்ந்து
ஓசைதிக ழெனினெய்நெய்க ளொருநாளுங் குறையாத ஆற்றுங்கண்டான்
பொழிப்புரை
கோயில் வாயிலுக்குத் தென்கிழக்கே எண்ணெயும் நெய்யும் சேமித்து வைக்க அவ்வகைக் குரியவையாக ஏழு கிணறுகள் கட்டி வைத்து. அதிலிருந்து தேவைக்கு எண்ணெய் எடுப்பதற்கு மாசில்லாத துலாவும் போட்டு வாளியும் சேர்த்து அவற்றைச் சூழப் பாதுகாப்பான சுற்று மதிலும் வாயிலும் கதவும் அமைத்து, குறை நேராதபடி எண்ணெயதிகாரம் என அதற்கு ஒரு பொறுப்பாளரையும் நியமித்து, மனம் மகிழ்ந்து புகழ்மிக்க இந்த நெய்யும் எண்ணெயும் எந் நாளும் குறையாமல் ஆலயப்பணிக்கு குறைவின்றி ஊறி ஊற்றாக வரவும் செய்தான்.
20. ஊற்றிருந்து தாதுக்குந் தாதகித்தா
ரணிமார்ப னுகந்தேகோனை
நாற்றிசைக்குந் திட்டமிட்டு நவரத்ன
மணியனையி னன்பாய்வந்து

Page 57
8O திருக்கோணாசல வைபவம்
விற்றிருந்து பாசுபதர் வருகயாந்
திருக்குளத்தை விளங்கச்செய்ய
ஏற்றுகைக்குங் கோணமலை யிறையிடம் போய் விடைவாங்கி யிவண் சொல்லென்றான்.
பொழிப்புரை
தேன் ஊற்றோடு மகரந்தமும் சிந்தும் ஆத்தி மலர்மாலை அணிந்த மார்பனான குளக்கோட்டு மன்னன் விருப்போடு கோண நகருக்கு நாலு திசையிலும் குடியேற்றவும் விளைவு பெருக்கவும் எண்ணித் திட்டமிட்டு சிவசிந்தை அன்போடு வந்து நவமணி ஆசனத்தில் விற்றிருந்து பூசகரான பாசுபத மறையவரை அழைத்து ‘பூசுரரே!” நாம் நாடு விளக்கமுற ஒரு திருக் குளம் அமைக்க எண்ணிணோம் அதனை நிறைவாக்குவதற்கு இடபமூர்ந்துவரும் கோணேசர் திருவுளமறிந்து விடைபெற்று வருவீராக. சிவன் திருவுளம் யாதென இங்கே எமக்குச் சொல்வீராக என்றுரைத்தான்.
தாது உகுத்தல் - மகரந்தம் சொரிதல், தாதகி - ஆத்தி - சோழ மன்னரணி மாலை. ஏற்று உகைக்கும் - எறு + உகைக்கும் - இடபவாகனம் ஏறிவரும்.
21. சொல்லவந்த பாசுபதர் திரிகயிலைப்
பரமனடி தொழுதெங்கோமான்
நல்லதிருக் குளமியற்ற விடைவாங்கி வாருமென்றார் நாதாவென்ன
எல்லையிலா நீர்தாங்கி நீடுழி
நெல்விளையு மென்னச்சொல்ல
மல்லனையுந் திரடோளான் குளக்கோடற்
குரைக்கவவன் மகிழ்வுபூத்தான்.
பொழிப்புரை
அரசன் சொல்ல, அப்பணியாற்ற வந்த பாசுபதர்கள், திருக் கோணேசரை வழிபட்டு, “பெருமானே!” எங்கள் அரசர், ஒரு திருக் குளம் அமைப்பதற்கு உமது அனுமதி பெற்று வருமாறு விடுத்தார்; திருவுளம் யாது? பெருமானே! என விண்ணப்பித்து நின்றார்! “எல்லையில்லாத நீரைத்தாங்கி நின்று, நீடுழி நிலைத்து, அதிக நெல் விளைவைப் பெருக்கும் திருக்குளமாகுமது" என்று, பெருமான் அருள, அனுமதி பெற்ற அவர்கள் அரசனுக்கு வந்து அறிவிக்க அவன் பெரும் மகிழ்வு பூத்தான்.
மல் அணையும் திரள்தோள் - ஆண்மை வளம் பொருந்திய திரண்டதோள்.

திருக்கோணாசல வைபவம் 81
22. தானதிக கணபதியே கோணமலைப்
பெருமானே சண்முகனேமாலே
நானுமொரு திருக்குளத்தை யியற்றுதற்கு
உங்களரு னடக்கச் செய்வீர்
வானவரே யெனவணங்கி விடையும் பெற்று
மவுனமுட னிரத்தினமண்டபத்தினின்று
தேனமருந் தொடைமார்பன் சேனைகுழத்
திருக்குளத்தின் நிசைநோக்கித் திருந்தச் சென்றான்.
பொழிப்புரை
தானே முதன்மை பெற்ற விநாயகரே, கோணேசரே, ஆறுமுகப் பிரானே, திருமாலே சிறியேனான நானும் ஒரு திருக்குளம் அமைக்க முயலுகிறேன்; அதற்கு முன் துணையாக உங்கள் கருணையும் உடன்வர அருள்வீராக; வானவர்களே வரம் வேண்டுகிறேன் என வணங்கி விடைபெற்று, அமைதியோடு மண்டபத்திலிருந்து புறப்பட்டுத் தேன் பொருந்திய மாலை மார்பனான மன்னன் சேனை புறஞ் சூழ்ந்துவரத் திருக்குளம் அமைக்க வேண்டிய திசை நோக்கி நலமுண்டாகச் செல்வானாயினான்.
23. திருந்துகலி பிறந்தைந்நூற் றொருபதுட
னிரண்டாண்டு சென்றபின்னர்
புரிந்திடப மாதமதி லீரைந்தாந்
தேதிதிங்கள் புநர்தநாளில்
தெரிந்தபுக ழாலயமுங் சினகரமுங்
கோபுரமுந் தேருர்விதி
பரிந்திரத்ன மணிமதிலும் பாவநா
சக்சுனையும் பகுத்தான் மேலோன்.
பொழிப்புரை
சுழன்றுவரும் காலச்சக்கரத்தில் கலியுகம் பிறந்து ஐந்நூற்றுப் பன்னிரண்டு (512) என்னுமாண்டெனும் ஆண்டு கழிந்தபின் விருப்போடு வைகாசி மாதத்தில் பத்தாம் தேதி திங்கட்கிழமை புனர்பூசம் கூடிய சுபவேளையிலே பிரசித்திபெற்ற திருக்கோயிலும், தேவகோட்டங்களும், கோபுரமும், தேரோடும் வீதியும், பரிவுடனே மணிகள் பதித்த மதிலும், பாவநாசத் தீர்த்தக்கிணறும் ஆகியவற்றை வகுத்தமைத்துவைத்தான் மேலவனான மன்னன்.
இடப மதி - இடபராசியில் சூரியன் சஞ்சரிக்கும் வைகாசி மாதம் , மதி - மாதம். ஆலயம் - சிவாலயம். சினகரம் - கோயிற் பொதுப்பெயர் சுற்றாலயங்கள். சுனை - மலையிலுள்ள நீர்நிலை - கிணறு.

Page 58
82 திருக்கோணாசல வைபவம்
24. மேலான திருக்குளமு மிதற்கடுத்த
நாலாண்டில் விளங்கச் செய்து
சேல்பாயு மாவலிநீர் வரவழைத்துத்
திசைசெல்லுங் சிறப்புங்கண்டு
சீலமுட னிர்மிகுதி வரவெருவி
மதகடையார் திறப்பாரென்று
பாலாழி தனிற்றுயிலும் பச்சைமுகி
நனைநினைத்தான் பருதிவேந்தன்.
பொழிப்புரை
இதற்கடுத்துவந்த நாலாம் ஆண்டில் (517) பெரிய திருக்குளமும் கட்டி மீன்கள் பாயும் மஹாவலிகங்கை நீரை அங்கு தேக்கி வைத்து, அந்நீரானது தான் கருதிய நாலுதிசையிலும் பாசனத்துக்குச் செல்லும் படி யான வழிவாய்க்காலும் ஆக்கிச் சிறப்புற்றமை கண்டு, அங்கே ஆற்றுநீர் அளவிறந்து பெருகிவரப் பார்த்துப் பயந்து, நீர் வெளியேற்றும் மதகின் அடைப்பாகிய கதவை யாவர் திறந்துவிட வல்லாரென்று சிந்தித்து, பாற்கடலிலே அறிதுயில் கொள்ளும் பச்சை முகில் வண்ணரான திருமாலை உதவுமாறு வேண்டுதல் செய்தான் பரிதி ஏந்திய மன்னவன்.
மதகு அடை - நீர்வெளியேறும் மதகின் கதவு - பாலாழி - பாற்கடல்
2S. வேந்தனுளந் தனினினைக்கப் பாந்தளிடை
துயிண்மாயன் விழித்துப் பார்த்தே
ஏந்திலங்கா புரியதனிற் றிருக்குளத்துக்
கெமைநினைந்தா னிறைவ னென்றே
காந்தண்மலர்ப் பதஞ்சிவப்பக் கடிதெனவங் கரிவரலுங் காலில் வீழ்ந்து
பூந்திருசேர் மணிமார்பா மதகினடை
திறப்பதுநின் புகழ்ச்சி யென்றான்.
பொழிப்புரை
அரசன் தன் மனத்திலே தியானித்த மாத்திரமே, பாம்புப் பாயலிலே படுத்துறங்கும் மாயப்பிரான் விழித்தெழுந்து பார்த்து, பெருமைமிக்க இலங்கா புரியிலே திருக்குளப்பணி முற்றுப்பெற “எம்மை நினைந்து அழைகின்றான் அரசன்’ என்று காந்தள் மலர் போன்ற பாதங்கள் சிவக்க அதிவேகமாக விஷ்ணு தேவர் வந்தருளுதலும், கண்ட வேந்தன் பாதங்களில் வீழ்ந்து வணங்கிநின்று, "மலர் மகள் மருவும் மார்பினராகிய மாதவரே! மதகின் கதவைத் திறந்து நீர் வெளியேறிச் செல்ல விடுவது உமதுபுகழுக்கு உரிய அருட்செயலாம்” என்றான் மன்னன்.

திருக்கோணாசல வைபவம் 83
பாந்தள் - அனந்தனாகிய பாம்புப் படுக்கை - ஏந்து - மேலான. காந்தன் - கார்த்திகைப்பூ கடிது- விரைதல், அரி - மாயன். பூந்திரு மலர்மகள் - இலக்குமி.
26. என்றருள மாலவனு மிறையவனுக்
கஞ்சலென்றே யிலங்கைத் தீவில்
மன்றல்கமழ் செஞ்சடையான் கோணலிங்கற்
கேகுளநீ வருந்திச் செய்தாய்
இன்றமரர் முதலெவரு மடையாத
பவிள்சுபெற்றா யிறைவாவென்று
வன்றிறல்கொள் விசுவசுரு பத்துடனம்
மதகினடை திறந்தான் மாலோன்
பொழிப்புரை
என்று அரசன் வேண்டுதலும், திருமாலும் அரசனுக்கு “அஞ்சாதே" என அபயம் தந்து அரசே! இலங்கைத் தீவில் நறுமணம் கமழும் செஞ்சடையராகிய கோணேசப் பெருமானுக்காக நீ வருந்தித் திருக்குளம் ஆக்கினாய், அதனாலே இன்று தேவர்களும் அடைய முடியாதகிர்த்தியைப் பெற்றவனாகின்றாய்; அரசனே என்று ஆசிகூறி, மாயன் விசுவசு ரூபங்கொண்டு மதகின் கவைத் திறந்து அருள் செய்தார்.
மன்றல் - நறுமணம். அடையாத - பெறமுடியாத, அடை - கதவு. வன்திறல் கொள் வலிமையும் பேராற்றலும் கொண்ட, விசுவசுரூபம் - அனைத்தும் தன்னுள் அடங்கியுள்ள தெய்வீகப் பேருருவம்.
27. மாலோன்மா மதகினடை திறப்பவைந்து
கரத்தோனை வலமாய்நீத்தம் பால்போலத் திரைகொழித்துப் பழனமெங்கும் பரவிநிற்கும் பாண்மைகண்டு ஆலால முண்டவர்க்கு மம்பிகைக்கு
மர்மெனவே யகம்பூரித்துச் சேல்பாயுந் திருக்குளநின் கிருபையினாற்
றினநடக்குஞ் செய்கை கண்டேன்.
பொழிப்புரை
திருமாலே மதகின் கதவைத் திறந்துவிடச் செய்து, அவ்வழியிலே வெளியேறும் நீரானது, அங்கே கோயில்கொண்டுள்ள ஐங்கரனை - வினாயகரை - வலம் சூழ்ந்து பால் வண்ணத் திரை வீசிச் சென்று (பாசன) வயல்களெங்கும் பரந்துநிற்கக் கண்டு, "கோணேசருக்கும்

Page 59
84 திருக்கோணாசல வைபவம்
மாதுமையம் மைக்குமாக இந்த நீர் வாரியும் விளைவும் எல்லாம் உரியவாம்" என மனம்பூரித்து, மீனுலாவும் திருக்குளமும் சூழலும் எல்லாம் மாயவரே! உம் மருளாலே என்றும் நிலைத்திருக்கும் சிறப்பையும் காணப்பெற்றேன்.
நீத்தம் - நீர். ஆலாலம் உண்டவர் - நஞ்சுண்ட சிவன்.
28. கனடருளு மாலவனே திருக்குளநின்
காவலெனக் கரியோன் சொல்வான்
எண்டிசையும் புகழ்மருவு மிபமுகனு
மெழின் முனியு மிறைவரேழும்
மண்டடல்சேர் புத்தியரு மங்கலரும்
விரனொடு வதனனையன்
அண்டர்புகழ் வயிரவரு மிலங்கைசந்தி
காவலன் சீரண்ணமாரும்
ப்ொழிப்புரை
“இச்செயலை நிறைவாக்கிக் கண்டருளும் திருமாலே இக்குளமும் உனது காவலிலே என்றும் உளதாம்” என மன்னன் விண்ணப்பிக்க, கரியமாலும் சொல்லியருளுவார்; அரசே! எட்டுத் திசையாரும் புகழும் யானைமுகப் பிரானும் ஏழு முனிவர்களும், வலிமிக்க புத்தியட்டகதேவரும், மங்கலரும்; வீரனும், வதனமாரும், ஐயனாரும். தேவர்கள் போற்றும் வயிரவ மூர்த்தியும் இலங்கையிலுள்ள சந்திகாவலரும், சிறந்த அண்ணமாரும் (இப்பாடலின் பொருள் தொடர்ந்து 30ம் பாடலிலே நிறைவாகும்.)
இபமுகன் - யானை முகன் - கணேசர் ஏழு இறைமுனியும் - தலைமை மிக்க எழுமுனிவரும் - சப்தரிஷிகள். புத்தியர் - புத்திதத்துவத் தலைவரான தேவர். மங்கலர் - நன்மைபுரியும் தேவதைகள் வீரன் - கிராம தேவதை (எழில் முனி - கானமாமுனி, இறைவர் ஏழு அரசர்கள் எனவும் கூறுவதுண்டு.)
29. எட்டிசைமணி வெட்டிகொண்டே யேழரைச்சுற்
நாமரத்தை யினிதாய் வெட்டித்
தட்டியொரு காலாலே யெற்றியது
வீழமுன்னந் தரணிமிதில்
ஒட்டியொரு குளஞ்சமைத்தாங் குறுநீருங்
கண்டருளை யுற்றவிரன்
அட்டதிக்கும் புகழ்மருவு நிலசோ
தையன்படையு மரசன்மாரும்

திருக்கோணாசல வைபவம் 85
பொழிப்புரை
எட்டுத் திசையும் சூழ்வர மண்வெட்டியால் மண்ணைத் தோண்டிய பின்பு அடிமரம் ஏழரை முழுச்சுற்றளவு கொண்ட பெரு மரத்தை, தானொருவனே வெட்டித் தறித்து ஒரு காலாலுதைத்து அம்மரம் சாய்ந்து நிலத்தில் வீழும் நேரத்துள்ளே, சூளுரைத்து நிலத்தில் ஒரு குளம் வெட்டி அதிலே நீரூற்றும் வரக்கண்டு தெய்வ அருளும் பெற்ற வீரனென எட்டுத் திசையினரும் புகழும் “நீலசோதையன்’ படையினரும் அரசரும்
எட்டிசை - எண்திசை - எண்டிசை - விகாரம். எற்றி - உதைத்து. ஒட்டி - ஒட்டுதல் - சபதம் -சூள். நீலசோதையன் - நீலன் எனும் வானரவீரன் போன்றவன்.
30. மாருதிநேர் முன்னோடி மாயூதர்
பற்பலரு மற்றுளோரும்
நீர்தாங்கு திருக்குளத்துக் கட்டுவழி
நில்லுமென நிறுத்திவைத்துப்
பார்தாங்கு பத்தினியைக் கன்னியரைக்
காளிதனைப் பரிவினோடு
கார்தாங்ககு திருக்குளக்கட் டினையகலா
திருத்திரென்றான் கமலக்கண்ணன்.
பொழிப்புரை
அனுமன்போல முந்திஓடி ஏவல்புரியும் பூதங்களும், பப்பரரும் மற்றுமுள்ள பணிபுரிந்த திறலோரும் ஆகியவரை அழைத்து நீர்தாங்கி நிற்கும் குளக்கட்டு வழியில் காவலராக நிற்பீராக என்று காவலராக நிறுத்தி, உலகத்தைத் தாங்கி நிற்பவரான பத்தினித் தெய்வம் ஏழு கன்னியர் காளி என்பவரையும் அன்போடழைத்து நீவிரும் நீர்கொண்ட குளக்கட்டில் அகலாமலிருந்து ஊறுவராது காப்பீராக என அருளினார் தாமரைக் கண்ணரான திருமால்.
மாருதி - அநுமான். பற்பலர் - மிகப்பலராயுள்ளவரும்.
31. நன்னயஞ்சேர் பாகிலையும் பாலழசி
நிருவிளக்கு நல்லதுரபஞ்
சொன்னபடி யேதருவார் குறைவுறினுந்
திருவுளத்திற் சோர்வுவேண்டாம்
மன்னுபச்சைப் பட்டுவரின் மழையுதவுஞ்
சிவப்பு மகாவெயிலே காட்டும்
இன்னலின்றி யிருமிருபத் தெண்னூழி
சென்றபின்யாம் வருவோமிங்கன்.

Page 60
  

Page 61
88 திருக்கோணாசல வைபவம்
பொழிப்புரை
மன்னன் மற்றொருநாள் குடிமக்கள் யாவரையும் அழைத்து மண்டபத்தே பேரவைகூட்டி, அவர்களுக்கு நல்வரவு முகமன் கூறி அறிவுரை கூறுவானானான். சர்வலோகநாதனான கோணேசர் அருளாலே திருக்குளமும் வயல்வெளியும் அமைந்தமையை சொல்லக் கேட்டவர்கள் கவலைதீர்ந்து “அர அர சங்தர சிவ” எனப் பலகாலும் சிவநாம கோஷம் செய்து கோணேசர் பாதங்களைப் பணிந்திறைஞ்சினர்.
"ஹரஹர சங்கர சிவ சிவநாமங்கள் - தொடர் மொழியாகச் சொல்லப் படுவன
36 இறைஞ்சுகின்ற அனைவரையு மிருகையா
லுறத்தழுவி யெங்கோன் சொல்லும்
மறம்பெரிது புரிவதற்கும் அறஞ்சிறிது செய்வதற்கும் மனமேகனிடீர்
கறங்குதிரைக் கடல்புடைசூ முலகமெலாந்
தனிபுரந்துங் காண்பதென்னோ
திறங்கொளுஞ்சீர்க் கோணலிங்கர் திருப்பணியும்
பூசைகிளும் செய்யவேண்டும்
பொழிப்புரை
வணங்கிய மக்கள் யாவரையும் இருகைகளாலும் அணைத்துத் தழுவி மன்னன் பின்னும் கூறுவான். “மாந்தர் மறங்களைப் பெரிதும் செய்வதற்கும், அறங்களைச் சிறிதளவே செய்வதற்கும் மனமே காரணமா யுள்ளது. அறிவீர்; சுழலும் திரைகடல் சூழ்ந்த உலகம் முழுவதையும் தனி ஒருவனாய் ஆளும் உரிமை பெற்றும் அதனால் இறுதியிற் பெறும் சுகம் யாது? முற்றும் இழந்து இறந்திடலே; வேறென்னே; ஒழிவற என்றும் உளதாம் செல்வம் இறைவருட் செல்வமே உறுதி; ஆதலினால் ஸ்திரமான கோணேசப் பெருமானின் திருப்பணிகளும் பூசை விழாக்களும் திறம்பாது செய்துவர வேண்டும்.”
சொல்லும் - சொல்லுவாரானார். மறம் - பாவம். கண்டீர் - அறிவீர் கறங்குதல் - கழல்வது புரத்தல் - காத்தல் - ஆளுதல். என்னே - யாதுபயன் - வினா, பயனில்லை என்பது. திறம் - ஸ்திரம் - நிலையானது.
37. செய்யதிருக் கோயிலெங்கும் பதினொரா
யிரம்விளக்குச் சிறக்கவையும் மையனைய கண்டர்திரு வுட்பணிக்கா
யிரமானெய் வார்த்துவையும்

திருக்கோணாசல வைபவம் 89
செய்யசந்தம் புனுகுபன்னிர் தனிற்கரைத்துத்
தெளித்தெங்குஞ் சிறக்கச்செய்யும் துய்யகந்தப் புகைக்குடங்க ளிடையிடைவா
சனைகமழத் துலங்கவையும்.
பொழிப்புரை
செம்மையான திருக்கோயிலில் விளக்கம் பெறவேண்டும் மிடங்களில் எங்கெங்கும் பதினொராயிரம் விளக்குகள் சிறப்புற ஏற்றுவீர். நீலகண்டப் பெருமானின் கோயிலுட் பணிகளுக்கு ஆயிரம் பசுநெய் வார்த்துவைப்பீர். சிறந்த சந்தனச் சாந்து புனுகு பனிநீருடன் கலந்து கரைத்துத் தெளித்து வளாகம் முழுதும் புனிதமுறச் செய்வீர், சுத்த வாசனைப் புகை கமழும்படி தூபக்குடங்களை ஆங்காங்கு வைப்பீர்;
ஆன் + நெய் - ஆணெய். கந்தம் - வாசனை. புகை - தூபம் தூமம்.
38. ஜங்கரற்கு வெள்ளியினா வறுதளிசை
யறுமுகவற் கிரட்டிபொன்னால் தங்கமதா லரன்றனக்கெண் னெண்டளிசை
யரண்முர்த்தஞ் சார்ந்துளோர்க்குத் துங்கமிகு மைம்பொன்னா னுாற்றிருபத்
தெண்டளிசை சொன்னோமின்னும் இங்கதிக பிடியமுதுக் கிசைந்தகினர்ன
முன்நூறு மியற்றிவையும்
பொழிப்புரை
விநாயகருக்கு வெள்ளித்தட்டில் ஆறுதளிசையும், முருகனுக்குப் பொற்றட்டில் பன்னிரண்டு தளிசையும், சிவனுக்குத் தங்கத்தட்டில் அறுபத்துநான்கு தளிசையும், சிவபிரானது கேவல மூர்த்தமாயுளவர்க்கு - தட்சணாமூர்த்தி முதலியோர் - ஐம் பொன்னாலான தட்டுகளில் நூற்றி இருபத்தெட்டுத் தளிசைகளும், தளிசைகளாக வைக்க வேண்டும் என்று சொன்னோம்; இன்னும் இங்கே நந்தி பலிபீடம் திக்குப்பாலர் முதலியவர்க்குப் பிடியமுதாகப் பலியிடப் பொருத்தமாக முன்னுாறு அமுது உருண்டைகள் கிண்ணங்களிலே வைப்பீர்.
இரட்டி - இருமடங்கு 6 x 2 = 12 , 8 x 8 = 64 அம்பிகைக்கு
அளவு கூறப்படாவிடினும் சிவ நிவேதத்துக்குரிய அளவே அள்வாகக் கொள்க.

Page 62
90 திருக்கோணாசல வைபவம்
39. மையனைய கண்டருக்குத் துய்யசம்பா
வரிசிவகை வகுத்தெடுத்தே
ஐயமற வமுதுசெய்து அலங்காரத்
தளிசைகளி லழகாய்வைத்துத்
துய்யதிருக் கறியமுது சுரபியின்பாற்
குழம்பினொடு துகடீர்துய்ய
வெய்யதிருப் பணிகாரம் வகைவகைவா
சனைகமழ விளங்கவையே.
பொழிப்புரை
கோணேசரின் அமுதுக்காகச் சுத்தமான சம்பா அரிசியே தேர்ந் தெடுத்து குற்றமற அமுதாக்கி அலங்காரமான தளிசைகளாக வரிசையாக வைத்து, புனிதமான கறியமுதும் சேர்த்து, பசுவின் பால், தயிரோடு, சுத்தமான விரும்பத் தகும் வடை மோதகம் முதலிய பட்சணங்களும் வாசனை கமழ விளக்கமுற நிவேதிப்பீர்.
சுரபி - பசு. குழம்பு - தயிர். துகடீர் - துகள் + தீர் - குற்ற மற்ற.
40 வையமகிழ் கற்கண்டு சீனிவெல்லம்
வடிவாஞ்சர்க் கரைகிழங்கு வதைத்தேன்நெல்லி
துய்யகனி வருக்கமெலா மங்கண்வைத்துச்
சுத்தமுள புத்துருக்கு நெய்யுமுற்றி
ஐயமற முன்புவைத்தே யிளநீர்வைத்தாங்
கழகான பத்திரமுந்தூபம் வைத்து
மெய்யதிருப் பூசையுமக் காகுமென்று
விளங்குமகா மண்டபத்தின் மீண்டுஞ்செய்யே.
பொழிப்புரை
மக்களுக்கு உவப்பான கற்கண்டு சீனி வெல்லம் சர்க்கரைக் கிழங்கும் இராவிலே எடுத்த தேனும் நெல்லிக்கனி முதலான முக்கனி வகைகளும் படைத்து, சுத்தமான புத்துருக்கு நெய்யும் சொரிந்து, சந்நிதியிலே இளநீரும் வைத்து, அங்கே பத்திர புஷ்பமும் தூப தீபமும் பொருந்த வைத்து, செவ்விய பூசனை பெருமானே உமக்கே உரியது ஏற்றருள்க என்று விளங்கும் மகாமண்டபத்திலே மீண்டும் பூசை செய்ய வேண்டியது.
சர்க்கரைவள்ளிக் கிழங்கென்பதும் ஒருவகை இராசவள்ளி என்பர் நிவேதனமாகும் மூலவர் சந்நிதியில் பூசையான பின்னர் மகா மண்டபத்திற் பூசைசெய்ய மேலும் மகாமண்டபத்தில் ஒரு படையல் பூசை விபரம் மேல் வருகிறது.

திருக்கோணாசல வைபவம் 91
41. செய்யமகா மண்டபத்தி னாப்பணங்கன்
சிறந்தவொரு முழமகல நீளமாகத்
துய்யசம்பா வடிசிலது சொரிந்துதட்டித்
துகளிலொன்பான் முன்றுபிடி சுற்றில்வைத்து
வெய்யதிருக் கறியமுது பணிகாரம்பால்
வேண்டியசர்க் கரைகனிதேன் வெகுவாய்நெய்யும்
பெய்துவைத்து திரிநிறுத்தி மகிழ்வாய்நீரும்
பெட்புடன் பா கிலைதூபம் பெருகச் செய்யே.
象
பொழிப்புரை
சிறந்த மகாமண்டபத்தில் நடுவிலே விளக்கமுற்ற ஒரு முழ நீளவகலம் உள்ளதாகச் சம்பா அரிசிச் சோறு சொரிந்து பரப்பி மட்டஞ் செய்து மேலும் சுற்றிவர இருப்தேழு அமுதுருண்டைகள் வைத்து விரும்பத்தகும் கறியமுதும் பணிகாரவகையும் பாலும் சர்க்கரையும் கனிவகையும் தேனும் நெய்யும் சொரிந்து தீபத்திரிகளும் நாட்டி, உவப்பான இளநீரும் விருப்புடன் தாம்பூலம் தூபவகையும் நிறைவுபெற அமைத்து வைத்து.
நாப்பண் - நடுவிலே. தட்டி - சமமுறப்பரப்பி. வெய்ய - விரும்பத்தக்க கறியமுது - கறி. பெய்தல் - சொரிதல். திரி - திரிதீபம். மகிழ்வாய் நீர் - எவரும் விரும்பி ஏற்றுண்ணும் இளநீர். பெட்பு - விருப்பு.
42. எப்போது முப்போது மிப்பழத்தென்
கோணமலை யிறைவன் பூசை
தப்பாம னி விர்செய்க தந்திரமந்
திரங்கிரியை தானாசாரம்
இப்படியே செய்திடுவீர் ரிதுதவறி
லெளியவரை யிறைஞ்சி நிற்பீர்
மெய்ப்புடனிவ் வெல்லையுள்ளோர் செய்தொழும்பு
தவறிலிடர் முழ்கிவீழ்வார்.
பொழிப்புரை
எந்த நாளும் காலை மதியம் சாயம் ஆகிய மூன்று காலத்திலும் நியமித்த படி தென் கோணமலை நாதருக்குரிய பூசனையைத் தவறில்லாதபடி நீவிள் செய்து வருக; ஆகமம் சொன்னபடி மந்திரமும் கிரியையும் ஆசாரமும் வழுவாது இவ்வாறாகவே செய்து வருவீராக; இந்த நியதியில் வழுவினால், நீவிர் நமது மதிப்பிழந்து எளியவருக்கு வணங்கி ஏவல் புரிபவராவீர்; மெய்யாகவே இந்தத் திருமலை எல்லையிலே வாழும் மககள் தங்கள் தொண்டுகளிலே தவறிவிடுவாராயின் இடர்களுள்ளே சிக்கிக் கேடுறுவர் என அறிவீர்.

Page 63
92 திருக்கோணாசல வைபவம்
தந்திரம் - ஆகமம் - இருபத்தெட்டுள. அவற்றில் கோணேசர் வழி பாட்டில் பூசனைக் கிரமவிதி கொள்ளப்படுவது ஒன்று. மகுடாகமம் என்பது.
43. வாரிவளஞ் சூழிலங்கை வேந்தரானோர்
மகாகோனை நாதருக்கு வளவர்வேந்தன்
பாரிலங்கு பூசைதனக் கீந்தசொர்னம்
பலவரவு மெடுத்தழிவு பண்ணுவாரேற்
கூரியதோர் குட்டமுதல் வியாதிக்காளாய்க்
கூட்டுமன்றி நாட்டவர்க ளிட்டுசெம்பொன்
நேரிகலிற் கொள்கைகொண்டு குறையாடி
நீசருமிப் பதியாள்வார் நியமந்தானே.
பொழிப்புரை
மஹா கோணேசருக்கே உரியவையெனச் சோழமன்னர் மரபினனான குளக்கோட்டனாலே உலகிலே விளக்கமுறும் பூசை முதலிய திருப்பணிகளுக்கென மூலதனமாக வைத்த பொன்னும் மற்றும் பல்வேறு வருவாய்களுக்குமானவற்றை, கடலாலே வலஞ் சூழப்பட்டுள்ள இலங்கையின் மன்னராயினும் மற்றெவராயினும் அபகரித்தெடுத்தழித்து அநுபவிப்பாராயின், அப்பாவம் அவர்களுக்குக் கொடிய குட்டரோகம் முதலான கர்மநோய் தொடரச் செய்யும், அன்றியும், நாட்டு மக்கள் தேடிய பொன்னும் பொருளும், நேரும் பகைமை போர் என்பவற்றால் பிறர் கொள்ளையிட்டும் சூறையாடியும் கவர்ந்து கொள்ளுவர். நாடு சுயாட்சியை இழந்து விடும்; அந்நியரான நீசரும் நாட்டை ஆக்கிரமித்து ஆளுவார். இதுவே நியமமாகிவிடும்.
வாரி-கடல் வலஞ்சூழ் - சூழ்ந்திருத்தல், சொர்ணம் - பொன் பொருள். கூரிய - கொடிய குட்டம் - குஷ்டரோகம். இகல் - பகை - போர். கொள்ளை - குறை - பறித்தெடுத்தல். நீசர் - ப்ண்பில்லாத இழிந்தோர்.
44 தானதிக வரசருடனமைச்சார்தாமுந்
தக்கயிர தானியொடு தருமஞ் செய்வோர் ஆனநெறி முறைதவறா மறையோர்தாமும்
அகலாத கற்புடைய அரிவைமாரும் ஈனரொடு முடர்மொழி தன்னைக் கேட்டே
யிவர்கள்புரி நெறிமுறையை யிகழும்ந்தாள் மானபர னாலயத்துப் பூசைதானு
மகிழ்ச்சிமங்க விகழ்ச்சியுமங் கெழும்புந்தானே. பொழிப்புரை
உயர் பதவியுள்ள, அரசர் அமைச்சர் தகுதி வாய்ந்த பிரதானி என்பவரோடு தருமம் செய்பவரும் அமைந்த ஒழுக்க நெறிமுறை தவறாத

திருக்கோணாசல வைபவம் 93
வேதியரும் நீங்காத கற்புநிலையுள்ள உத்தம மகளிரும் ஆகிய இவர்களே, இழிந்தோரும் மூடருமாகிய அந்நியர் கூறும் உரைகளை உறுதிமொழியெனக் கேட்டு நம்பி, மேலே குறிப்பிட்ட நல்லோரும் தங்களுக்குரிய மேலான ஒழுக்க நெறி ஆசாரங்களைப் புறக்கணித்து வழுவவிடும் அந்த நாளிலே, மஹா கோணேசரின் ஆலயத்துப் பூசை முதலிய நியமங்களும் மக்களுக்கு மன நிறைவு தராமல் மங்குதலாலே அவை போற்றப் பெறாமல் இகழப்படும்
நிலை உண்டாம். VN
45 எழுகிரனத் திரதிகயிலைப் பெருமான்பூசை
யிப்படியே முறைதவறி நடக்குங்காலம்
பழுதிறிகழ் கயவரகு வருவானந்நாட்
பாசுபத ரிறப்பர்பழ மறையோர் சேர்வார்
பொழுதுகுலக் கயவாகு ராசராசன்
பூசைவிதிக் கேகனக நாடுமிந்து
தொழுதுநின்றே யாலயத்திற் றொழும்புதிட்டஞ் சொல்லியவனனுராச புரியிற்சேர்வான்.
பொழிப்புரை
ஒளிமிகும் கோணை நாதரது பூசைகளும் இவ்வாறு முறைதவறிட் போகும் காலத்திலே குற்றமற்று விளங்கும் கயப்பாகு மன்னன் அங்கு வருவான். அப்போது பூசகரான பாசுபதர்கள் இறந்துபடுவர், பழைய வேதியரான அந்தணர் பூசிக்க வந்து சேருவார், அப்போது அரசன் அவர்களைப் பூசனை விதிகளையும் ஒழுங்கு செய்து, வேண்டிய பொன்னும் நிலங்களும் தானம் செய்து, பெருமானைத் தரிசனஞ் செய்திருந்து பணியாளர், தொண்டுகள் என்பவற்றையும் முறைப்படுத்திய பின் அநுரதபுரம் செல்வான்.
46 சேர்ந்த பின்னர் மறையவர்கள் கோணைநாதர்
திருப்பூசை வெகுகாலஞ் செய்யும் போதில் மாந்தளிர்போன் மேனியுடைப் பறங்கிவந்து
மாகோனைப் பதியழிப்பன் வருமந்நாளில் ஏந்த தென்பாற் கழனிமலை யென்றொன்றுண்டாங்
கீசனுக்கு ஆலயமங் கியற்றும் பின்னு கோந்தறைசே ருலாந்தரசு வருமந்நாளிற்
குலவுசிங்க இரவிகுலங் குறைந்தேபோகும். பொழிப்புரை
அதன்பின் வேதியர்கள் கோணேசர் பூசையை நீண்டகாலம் செய்து வருவர், அவ்வேளை மாந்தளிர் போலும் மேனியுள்ள பறங்கியர் என்னும்

Page 64
94 திருக்கோணாசல வைபவம்
அந்நியர் வருவார்கள், அவர்கள் இந்தநகரத்தை அழிப்பார்கள், அந்த நாளிலே இந் நகருக்குத் தென் திசையில் கழனிமலை என்றோரிடம் உண்டு. அங்கு எந்தை ஈசனுக்கு ஆலயம் அமைத்து வழிபடு வீராக, இது நிகழ்ந்து சில காலத்தில் கண்கெட்ட குருடர் போன்ற ஒல்லாந்தர் களின் ஆட்சி நடக்கும், அக்காலத்துடன் சூரியகுலச் சோழர் பரம்பரை செயலற்றுவிடும்.
கழனிமலை - தம்பலகாமம். சிங்க இரவிகுலம் - சிங்கராசி அதிபதியான சூரியன் குலத்து அரசர். கோந்தறை - குருடு - கண்தோண்டப்பட்டவர் - கோம்பை எனும் சொல்வழக்கை நோக்குக. கண்ணறை - கண்கெட்டான். காண்க.
4グ போனபின்ன ரிலங்கைவடு கரசராள்வார்
போதிலங்கைப் பதிசிறிது பிடிப்பன்லாந்தா
தானிலங்கை யரசனுக்கு வேறோர்மன்னன்
தானுதவ மாற்றானைக் கடலிற்சேர்ப்பன்
தேன்மருவு மலங்கல்புனை வடுகராசன்
செப்பமுடன் மற்றெவரு மகிழக்கோனை
மானபரன் றனைமணிப்பொற் கோயிலுள்ளே
மாதனத்து மிதுவைத்து வணங்குவானால்,
பொழிப்புரை
மன்னர் மரபு மறைந்தபின் இலங்கையை வடுகர் அரசாளுவர். அப்போது இலங்கையில் சிலபகுதியை ஒல்லாந்தர் பிடித்து ஆளுவர். இலங்கை யரசனுக்கு வேறொரு மன்னன் உதவ அவன் பகைவரை நாட்டை விட்டுக் கடலுக்கோடச் செய்வான். தேன்பொருந்திய மலர்மாலை அணிந்த வடுக மன்னன் செவ்விதாக எவரும் மகிழ ஆட்சி செய்து கோணேசருக்கு ஆலயம் அமைத்து அழகிய ஈசனை ஆசனத்தில் தாபனம் செய்து வணங்குவான்.
48 வணங்குமரன் பூசைமுன்போல் நடக்கும் போது
மகாவிலங்கைப் பதியதனை மருவுஞ் சிங்கன்
இனங்குநவ ரத்தினத்தாற் பொன்னான் முத்தா
லிறையவருக் காலயமங் கியற்றுங்காலம்
சுணங்கலில்லை மானுடர்க்குத் துக்கமில்லைச்
சொல்லரிய போகமெல்லாந் துய்த்துவாழ்வர்
மணங்கமழுந் திரிகயிலைப் பெருமான்பாதம்
மனத்திருத்தி மகிழ்ச்சியுடன் வாழ்வார்மக்கள்

திருக்கோணாசல வைபவம் 95
பொழிப்புரை
வணக்கம் பெறும் கோணேசர் பூசை முன்போல நிகழும் காலத்தில், பொருந்திய இலங்கை ஆட்சியைப் பெற்ற சிங்கன் என்பவன், நவமணி பொன் முத்துக்கள் இணைத்து இறைவனுக்கு ஆலயம் எழுப்பும் காலம் தாமதமின்றி வரும்; அப்போது மனிதருக்குத் துக்கமில்லாது போகும்; சொல்லற்கரிய சுகபோகம் பெற்று வாழ்வர்; தெய்வ மணம் கமழும்; மக்கள் கோணேசர் பாதத்தைத் தியானித்து மகிழ்வுடன் வாழ்வார்கள்.
49. மாதமதின் மும்மரி மகிழ்ந்து பெய்யும்
மகத்தான சைவநெறி வளர்ந்தேயோங்கும்
ஒதரிய முற்கதையுஞ் சொன்னேன்பின்ன
ருற்றுவருங் காதையெல்லா முற்றுஞ்சொன்னேன்
ஆதரவா யாறுபத்து நாலதான
அறிவுடைய சோதிடர்க ளன்பாய்முன்பு
நிதியுட னெழுதிவைத்த சரிதமிது
நிச்சயமென் றறிந்து கொள்வீர் நியமந்தானே
பொழிப்புரை
தொடர்ந்து தவறாது மாதம் மூன்று மழை பொழியும், மேலான சைவ சமய ஒழுக்க நெறிகளும் தழைத்து வளரும் அறிமின். இதுவரை சொல்லற்கரிய முன் நிகழ்ந்த வரலாறும் சொன்னோம்; இனிமேல் எதிர்காலத்து நிகழ்வனவும் சொன்னோம்; ஆதரவோடு அறுபத்து நான்காகிய கலைகளும் வல்ல அறிவால் மிக்க சோதிட கணிதர் அன்போடு முன்னமே நீதியுடன் எழுதிவைத்த சாத்திரங்கள் கூறும் வரலாறு இதுவேயாம்; இது உண்மையென அறிவீராக; நியதி யாயுள்ளதும் இதுவே.
50. தானதிக வாரிதிப்பொற் கரையிற்கல்லாற்
சரிவரப்பொற் கோயில்கட்டிக் குளமுங்கட்டி
மானபுர னாலயத்துச் சோலைதோப்பு
மண்படபநிர் வாவிமணி மதிலுங்கட்டி
ஆனதிருப் பணியாறு பத்துநாலா
மாலயமுஞ் சுற்றிமீக வழகாய்க்கட்டித்
தானதிக வரனருளாற் பூசையாதி
தவறாம னடத்தினனித் தரணிமீதே,
பொழிப்புரை
ஆழ்நீர்க் கடலின் அழகிய கரையிலே விதிமுறையே கற்கோயிலும் கட்டி, குளமும் கட்டி, பெருமையுற்ற சிவாலயத்துக்கு சோலையும் தோப்பும்

Page 65
96 திருக்கோணாசல வைபவம்
மண்டபம் நீர்வாவி அழகிய மதிலும் அமைத்த, ஆகிய திருப்பணியோடு கற்றாலயங்கள் அறுபத்து நான்கும் சூழவர அழகுறக் கட்டி, தானே யாரினும் மேலவனான சிவனருளாலே நித்திய பூசை விழா முதலிய யாவும் தவறில்லாமல் நடத்தி வந்தான் மன்னவன் இந்நாட்டிலே.
51. மிதெழுந்து நாற்றிசையு மதிலுங்கட்டி
வெளிக்கதவு மிரண்டிட்டுப் பூட்டும்போட்டு
ஆதிபர னாலயம்பொற் றகட்டால்வேய்ந்து
அவிர்கிரனத் தேர்முன்று மழகாய்ச் செய்தே
பாதிமதி தரித்தபர னருளினாலே
பங்குனியுத் தரத்திருநாட் பவிசுங்கண்டேன்
நிதியுட னிப்படிநீர் தவறில்லாம
னிச்சயமாய் நடத்துமென்றான் நிருபர்கோமான்
பொழிப்புரை
மேலேழுந்து நிற்க நாற்றிசையும் சூழ்மதிலும் கட்டி, வெளிக் கதவுகளும் இரண்டு பொருத்திப் பூட்டும் போட்டு, ஆதி முதல்வனான சிவன் கோயில் பொன் தகட்டினாலே வேய்ந்து, ஒளிவிளங்கும் மூன்று தேரும் அழகுறச் செய்வித்து, பிறைச் சந்திரனணிந்த பிரானருளாலே பங்குனியுத்தரநாள் முதலாய் நடத்தும் திருவிழாவும் நிகழ்த்திக் கண்டுகளித்தோம்; நீதியுடன் தவறில்லாமல் வருங் காலமெல்லாம் நிச்சயமாக நீவிரும் வழிவருவோரும் நடத்திவந்து கோணேசர் அருள் பெறுவீராக என்று மக்களுக்கு அறிவுறுத்தினான் மன்னவன். கிரணம் அவர்-ஒளி கிளரும். பாதிமதி-பிறைமதி, பங்குனிமாத உத்தர நட்சத்திரம். பவிசுதிருவிழா வைபவம். நிருபர் கோமான்-இராசாதி ராசன்.
52. மாறாத புனல்பாயும் திருக்குளமும்
வயல்வெளியும் வருந்திச் செய்தே
விறாக வென்மரபோர்க் கியாமற்
கோணமலை விமலற்கிந்தேன்
பேறான பெரியோரே யிதற்கழிவு
நினைப்பவர்கள் பெட்புநீங்கி
நிறாரப் போவரிது நிச்சயநிச்
சயங்கோனை நிமலராணை
பொழிப்புரை
என்றும் வற்றாது நீர்பெருக்கும் திருக்குளமும், நெல் விளை நிலமும்
ஆகியவற்றைச் சிரமத்துடன் செய்து, அவற்றை என் மரபில் வருவோர்க்கு
பெருமிதமாக உரியதாக உதவாமலே, கோணேசப் பெருமானுக் குரித்தாக

திருக்கோணாசல வைபவம 97
உவப்போடு உதவினேன்; மேலான மனிதப் பிறப்பும் கோணேசர் தொண்டராம் பேறும் பெற்ற பெரியோரே! இந்தச் சிவ புண்ணியத்திற்கு இடையூறான கேடு நினைப்பவர்கள் பெருமையனைத்தும், வாழ்வும் குன்றிப்போய் அழிந்துபடுவர்; இது நிச்சயம் நிச்சயம் முக்காலும் நிச்சயம். இக் கூற்றுக்கு நிமலரான கோணேசப் பெருமானே சான்று
ஆணை.
வீறு - பெருமிதம். பெட்டி - பெருமை. நீறு - சாம்பல் - அழிவு
53 ஆணையிது வரன்றொழும்பு செய்வோர்யாரு
மவரவருக் கமைத்தபணி யதையெஞ்ஞான்றுங்
கோணமலை நாதருக்கு செய்குவாரேற்
குற்றமின்றி மகிழ்ச்சியுடன் குணமாய்வாழ்வார்.
நானமுற்றுச் சொர்னமெத்திக் கூலியாளை
நயந்தேவி யரண்பனியை நடப்பிப்பாரேல்
ஆனையினா லாக்கமுஞ்சந் ததியுமற்று
அல்லலுற்று வறுமையினா லலைவாரன்றே.
பொழிப்புரை "cሬ
கூறிய இது சிவபிரானது ஆணையாம். சிவதொண்டு செய்பவர் யாவரும் அவ்வவருக்கென நியமித்த பணிகளை எந்நாளும் கோணேசருக்கு வழுவாது செய்து வருவாராயின், அவர்கள் குற்றங்குறை சாராமல் மகிழ்வோடும் குண நிறைவோடும் சிறப்பாய் வாழ்வார், அரன் அருளால் அமைந்த செல்வ வாழ்வாலே செருக்குற்றுச் சிவப்பணி புரிய நாணிக் கூலியாளரை ஏவிப் பணி செய்வித் திருப்பராயின், அவர்கள் ஆணையின் படியே தங்கள் ஆக்கமும் இழந்து சந்ததியும் அற்றும் போய்த் துன்பமுற்று, வறுமையினாற் பீடிக்கப்பட்டு அலைவார்கள்.
சொர்ணம் மெத்தி - செல்வம் மிகப்பெற்று. நடப்பித்தல் செய்வித்தல்
54. அன்னவரன் பூசைவிதி யபிஷேகம்
விழாநடத்த லழகாயெங்கும்
மின்னுநிறை விளக்கேற்றல் கிராமதே
வதைபூசை விளங்கச் செய்தால்
இன்னலின்றி மாக்களெலா மிருநிதிசந்
ததிகளுட னினிதாய்வாழ்வார்
சொன்னவிந்த முறைதவறில் விளைவழிந்து பஞ்சமுற்றுச் சோருமாக்கள்.

Page 66
98 திருக்கோணாசல வைபவம்
பொழிப்புரை
அந்தக் கோணேசரது பூசை முறைகள், அபிஷேகங்கள், விழாக்கள் என்றிவற்றைச் கிரமமாக நடத்துதலும், அழகுற எங்கும் பிரகாசிக்க விளக்குகள் ஏற்றுதலும், கிராம தேவதை பூசைகளை ஒழுங்காகச் செய்தலும் ஆகிய கடனைச் செய்து வந்தால், பெருமானருளாலே இங்குள்ள மக்களும் (மாக்களோடு) யாவரும் இன்னல் எதுவுமின்றிப் பெருஞ் செல்வ வளங்களுடன் சந்ததிச் சிறப்பும் பெற்று இனிதாக வாழ்ந்திருப்பர்; சொல்லிய இந்த முறைகளிலே தவறுவீராயின் அதனாலே விளைவு குறைந்தழிந்து பஞ்சமும் உண்டாகி எல்லாரும் சோர்ந்து துன்புறுவர் மாக்களுடன் மக்களும்.
55 மாதயவார் வன்னிமையே தானம்வரிப்
பத்தவரே மற்றுளோரே
ஆதரவா யாலயமுங் சினகரமு
மணிமதிலு மழகுவாய்ந்த
சேதமிலாப் பூங்காவுந் தினநடத்திக்
கொள்ளுமெனத் திட்டஞ்செய்து
காதலுடன் றிரிகயிலைப் பெருமைதனைக்
கண்டிதயங் கருணை பூத்தான்.
பொழிப்புரை
பெரிய தயவுள்ளம் கொண்ட வன்னியரே தானத்தாரே வரிப்பத்தவர்களே மற்றுமுள்ள கோயிலில் பணி புரிவோரே, நீவிர் யாவரும் ஆதரவாகச் சிவாலயமும் சுற்றாலயங்களும் மதிலும் அழகுள்ள பழுதற்ற பூங்காவும் ஆகிய அனைத்தையும் குற்றம் குறை நேராமல் என்றும் பாதுகாத்து நடத்துவீராக என்று, வேண்டியவாறு திட்டங்கள் யாவும் செய்து, தினமும் அன் போடு கோணை நாதரையும் தரிசித்து மற்றும் பணிக்கிரமங்களையும் நோக்கி உள்ளம் உவந்து கருணை நிறைந்தவனாயிருந்தான். யாவும் கோணேசப் பெருமானின் பேரருளே என உளம் பூரித்தான்.
56. தானதிக பவநாசந் தன்னின்முழ்கிச்
சரிரசுத்தி பண்ணித்தர்ப் பணமுஞ்செய்தே
ஆனதிரு மணிநிறு தரித்துக்கொண்டே
யதிகபட்டா டையுமுடுத்தங் கலர்பூவேந்தி
மானபர னாலயத்தை வலமாய்வந்து
வருபாதங் கழுவியுட்போய் வணங்கக் கண்டார்
போனவர சன்றிரும்பாப் புதுமையென்னோ
போய்ப்பாரும் பாசுபதர் புகுந்தேயென்றார்.

திருக்கோணாசல வைபவம் 99
பொழிப்புரை V
இவ்வாறிருக்கும் நாளில் ஒருநாள் குளக்கோட்டு மன்னன் பாவநாசத் தீர்த்தச் சுனையிலே மூழ்கிட உடலும் உளமும் தூயவனாகித் தருப்பணமும் செய்து, உரியதான உருத்திராக்க மணிமாலை விபூதியும் அணிந்து கொண்டு, பொருத்தமான பட்டு வஸ்திரமும் தரித்து பூசனைக்குதவும் அலரும் பருவப் பூப் பத்திரங்களும் எந்தி, மாட்சிமை பொருந்திய ஆலயத்தை புறத்தே வலம் சூழ்ந்து வந்து, பாதங்களைக் கழுவிக் கொண்டு கோயிலினுட் போய்ப் பெருமானை வணங்குதலைக் கண்டார்கள் அங்குள்ளவர்கள். நீண்ட நேரமாயும் உள்ளே புகுந்த மன்னன் மீண்டு வெளிவராத அற்புதம் என்னையோ? உள்ளே சென்று பாருங்கள்; பூசகர்களாகிய பாசுபதர்களே புகுந்து பாருங்கள் என அங்குள்ளார் பலமுறையும் வேண்டினர்.
சரீர சுத்தி - உடம்புச்சுத்தி - புறத்தூய்மை; இதனோடு அகத் தூய்மையுமாம் தர்ப்பணம் - தருப்பணம் - மந்திரத்தோடு கையிலே நீரை எடுத்து இறைத்தல். திருமணி நீறு - திருநீறும் திருமணியும் - மணி உருத்திராட்ச மணிமாலை. சிவபூசை தரிசனகாலத்தில் பட்டாடை அணிவது நியதி, ஆடம்பரத்திற்கண்று. அலர்பூ - அலரும் பருவத்துப் போது, ஆலய தரிசன முறை கூறப்பட்டுள்ளது.
57. என்றுசொலப் பாசுபத ரெங்கும்பார்ததே
யிரத்னமணி வாயிலினின் றெட்டிப்பார்த்தார்
பொன்றிகழும் பதத்தருகோர் சிவக்கொழுந்து
புஷ்பித்தே யலர்ந்துநிற்கும் புதுமைகண்டு
இன்றயற்கு மாலோற்கு மெவர்க்குங்கிட்டா
விரும்பதவி கிடைத்ததுவோ விறைவர்கோவே
என்றவர்கள் வெளியில்வந்தே யெவர்க்குஞ்சொல்ல
விருகண்ணிர் மழை பொழிந்தா ரிருந்தோரெல்லாம்.
பொழிப்புரை
புறத்தே நின்ற அன்பர்கள் இங்ங்ணம் வேண்டுதலும், அவ்வாறே பாசுபதரும் உட்புகுந்து மன்னனை எங்கும் தேடிப் பார்த்துக் காணாதவராய், பின்பு கருவறையின் மூலத்தானம் - மணிகள் அழுத்திய வாயிலில் நின்று எட்டிப் பார்த்தனர்; அப்போது கோணேசுவரின் பொன்போல் மிளிரும் திருவடி களின் முன்னே அற்புதமாக - அபூர்வமான - ஒரு சிவக்கொழுந்து - தாமரை மலர் பூத்திருக்கின்ற புதுமையையே கண்டார்கள். கண்டோர் இன்று பிரம விஷ்ணுக்களும் மற்றெவர்க்கும் கிடைத்தற்கரிய பெரும் பதவி - சாயுச்சிய முத்தி - பெற்று விட்டீரோ! மன்னர் மன்னரே என்று வியந்து, பின் வெளியிலே வந்து எல்லோருக்கும் தாம்கண்ட அதியற்புதத்தைப் பத்திபரவசராய் எடுத்

Page 67
1OO - திருக்கோணாசல வைபவம்
துரைத்தலும், அதனைக் கேட்ட யாவரும் அதிசயித்து மெய்மறந்து, ஆனந்த
கண்ணி பெருகப் புளகம் பூத்து, சிவசிவ எனப் போற்றினர்.
சிவக்கொழுந்து - உள்ளக்கமலம் - அதுவே இறைவனடியில் ஒன்றியது.
புஷ்பித்தல் - மலர்தல் . அயன் மால் - பிரம விஷ்ணு
58 எல்லார்க்கும் பெரியவனே யெளியவர்க்கு
மெளியவனே யெங்கள்கோவே மல்லாருந் திணிபுயனே திரிகயிலைத்
தொழும்பு செய்து மவுனத்தோடே அல்லாருங் கண்டர்பத மடைந்தனையோ
வெனவாழ்த்தி யன்பினோடும் எல்லாரு மரன்றொழும்பு தனைநடத்தி
மகிழ்ச்சியுட னிருந்தாரன்றே.
பொழிப்புரை "
எல்லோரிலும் பெரியவனே,எளியவர்க்கு எளியவந்தருள்பவனே, எம்பெருமானே, வளமார்ந்த திணிந்த தோளினனே, தென்கயிலைப் பெருமானின் திருப்பணியையே எந்நாளும் திரிகரணசுத்தியோடு செய்து வந்த, ஒழிவிலே ஒழிவில் ஒடுக்கமாக மோனமாக நீலகண்டரானசிவனடி நீழலில் ஒன்றியுற் றிரோ! என்று பற்பலவான வாழ்த்துரைத்து வணங்கி, அன்போடும் அனைவரும் சிரத்தையோடும் சிவப்பணியை நடத்தி வருவாராய் மகிழ்வின் வாழ்ந்தனர்.
“எல்லாருக்கும். திண்புயனே” விளி அனைத்தும் குளக் கோட்டனைக் குறித்தன.
59 சீர்மேவு கயிலைமலை தன்னில்வாழுங்
சேடனுடன் பிரசண்ட வாயுதானும்
ஏர்மேவு மெதிரிடைவந் துற்றபோது
எழுச்சிகண்டு சேடனுட னினிதாய்த்தானே
கூர்மேவு கொடு முடியைப் பிடுங்கி வாயு
கோணேச மலையென்று குறித்தபோது
தார்மேவு மீஸ்வரனு மகிழ்ந்தந்நாளிற்
சாற்றுவா னுமையவட்குத் தனித்துத்தானே.
பொழிப்புரை
சிறப்புமிக்க வடகயிலையில் வாழும் ஆதிசேடனும் பிரசண்ட வாயு
தேவனும், சீர் பொருந்திய எதிரிடையான போட்டி வந்தமையால்,
வாயுதேவன் சேடனுடன் மாறாகக் கிளர்ந்தெழுந்து மகிழ்ச்சியோடுதன்

திருக்கோணாசல வைபவம் 1O1
வலிமையால், கயிலாயத்தின் உயர்ந்த சிகரமொன்றைப் பறித்தெடுத்து ஈழநாட்டில் விழ எறிந்து இது கோணேசமலையாம் என்று பெயர் சூட்டி யபோது, சிவபிரானும் உளம் மகிழ்ந்து அன்று உமையம்மைக்குத் தனிமையிலே கூறுகின்றார்.
பிரசண்டம் -மிக்க வேகமும் வலியும் எதிரிடை போட்டி. எழுச்சி கொண்டு - கிளர்ந்தெழுந்து. ஏர் மேவும் -சிப்பு அழகு -அழுநாட்டவர்க்குக் கிடைக்கவேண்டிய சிறப்புக் காரணமான போட்டி, கூர் - உயர்வு கொடுமுடி - சிகரம்.
60. தானாக முன்றுகமுஞ் சென்ற பின்பு
தனிமைபெறு கலியுகத்தின் சரிதஞ்சொல்வோம்
சேனாடர் புகழ்ந்திடவே பறங்கிவந்து
சிவசமயந் தனைமாற்றித் திங்குசெய்வான்
கோனான ராசசிங்கம் வந்துதோன்றிக்
குவலயத்தோர் புகழ்ந்திடவே யிழநாட்டில்
தானாக வரசுசெய்யும் பறங்கிதன்னைத் 9.
தழந்தாள்வான் றாரணியோர் தழைக்கத்தானே.
பொழிப்புரை
இயல்பாகவே முதல் மூன்று யுகமும் கழிந்தபின் எஞ்சிய கலியுகத்திலே நிகழும் வரலாறு கூறுவோம்; தூரதேசத்தார் புகழும்படி பறங்கி வந்து சைவசமயத்தை மாற்றித் தீங்கு செய்வான்; பின் அரசனாக இராசசிங்கன் என்பவன் தோன்றி உலகத்தோார் புகழும்படி ஈழநாட்டிலே தானே தனியரசு நிலைநாட்டுவான்; அன்றியும் பறங்கி முதலான அன்னியரை விலக்கி நீக்குவான். அதனால் உலகிலுள்ளார் முன்னை யுகத்திற் ப்ோல அறந்தழைக்க அமைதியுடன் வாழுமாறு ஆளுவான் எனக் கூறியருளினார். 令 சேண்நாடார் - தூரதேசத்துள்ளவர். கோன் - அரசு. குவலயம் - பூமி - உலகம்.
சிவதர்மம் தழைக்க; தாரணியோர் தழைக்க; நலமே வளர்க என மங்கள வாழ்த்துரை வழங்கியவாறு நூலும் உளமும் நிறைவாக்குகின்றார் நூலாசிரியர்.
நினைத்த காரியம் அநுகூலமேபுரி பெருமான் அருள் நிறைக. (திருப்புகழ்)
நலமுற நல்கிய கோணையோன் நாடல்நம்
குலம்முழுதுந்தொழு குலமெனக் கூட்டலே.
C39)CSRS)

Page 68
102
திருக்கோணாசல வைபவம்
* இலங்கையில் உள்ள வரலாற்றுத் தொன்மை வாய்ந்த சைவ ஆலயங்களும், தீர்த்தங்களும்
தகூடிணகைலாயம்
திருக்கேதீச்சரம்
முனிச்சரம்
கரசையம்பதி
குமரபுரம்
மாவிட்டபுரம்
வல்லிபுரம் பொன்னாலயம்
பிரளயவைரவர் கோயில்
திருக்கோயில்
நகுலகிரி சோதிஷ்காமகிரி உகந்தகிரி கந்தபருவதம் மச்சேந்திரபருவதம் தேனுபருவதம்
- திருக்கோணமலை. பதிகம் பாடல் பெற்ற
சிவஸ்தலம். மன்னாருக்குச்சேர்ந்த மாதோட்டத்திலுள்ளது. பதிகம் - பாடல் பெற்ற சிவஸ்தலம். சிலாபத்துக்கருகாயுள்ள சிவஸ்தலம். புவனேக வாகுராசனாற் பிரதிட்டை செய்யப்பட்டது. திருக்கோணமலைக்குத் தெக்ஷணதிசையிலே மாவலிகங்கைக் கருகாயுள்ள சிவஸ்தலம் அகத்திய முனிவருக்குத் திருமணக்கோலங் காட்டிய ஸ்தலம்.
- முல்லைத் தீவுக்கும் முள்ளியவளைக்கும்
நடுவாயுள்ளது. சுப்பிரமணிய ஸ்தலம்.
- யாழ்ப்பாணத்திலுள்ளது. மாருதப்புரவீகவல்லி
என்னும் இராசகுமாரி தனது முகம் குதிரை முகத்தை ஒத்திருந்தமையால் நகுலகிரித் தீர்த்தத்தில் ஸ்நானஞ் செய்து சுயரூபம் பெற்றுக் கொண்டஸ்தலம். சுப்பிரமணியஸ்தலம்
- யாழ்ப்பாணத்திலுள்ளது. விஷ்ணுஸ்தலம்.
யாழ்ப்பாணத்திலுள்ளது. விட்டுணுதலம். தற்காலம் புன்னாலையென வழங்குகின்றது. யாழ்ப்பாணத்திலுள்ளது. தற்காலம் பளையில் வைரவர்கோயிலென வழங்குகின்றது.
- மட்டுக்களப்புக்குச் சேர்ந்தது. சுப்பிரமணிய
ஸ்தலம் யாழ்ப்பாணத்திலுள்ள கீரிமலை சிவஸ்தலம் கதிர்காமம்.சுப்பிரமணியஸ்தலம். கதிர்காமத்திலுள்ள உகந்தமலை. திருக்கோணமலையிலுள்ள கந்தசாமிமலை.
- திருக்கோணமலைக்கு அருகிலுள்ள மலை. - மாத்தறைக்குக் கிட்டவிருக்கிறது. அது பசு
ரூபம் போன்ற ஒரு மலை.

திருக்கோணாசல வைபவம்
திரிகூடபருவதம்
சிவசோதிபதம் விநாயகாசலம் சப்பிரகாமம் சுவேலகிரி
கழனிமலை
நல்லூர்
வெருகல்
மகாவலிகங்கை
மாணிக்கங்கை காவேரிகங்கை
நகுலகிரித்தீர்த்தம்
கன்னியாத்தீர்த்தம்
நவக்கிரித்தீர்த்தம்
யமுனாரித்தீர்த்தம் அமிர்தகளி
103
- திருக்கோயிலுக்கு நேரே சமுத்திரத்துக்குள்
அமிழ்ந்திக்கிடக்கின்றது. அது இராவணன் கோட்டையென்று வழங்கி வருகின்றது. சிவனொளிபாதம் என்னும் மலை கதிர்காமத்திலுள்ள பிள்ளையார் மலை
- கண்டிக்குச் சேர்ந்தது
இராவணனைச் சம்மாரஞ்செய்யும் பொருட்டு இராமர் இலங்கைக்கு வந்து பாசறைவீடு கட்டியிருந்த மலை. அது தற்காலம் பசறையென வழங்குகின்றது. வதுளைக்குச்சேர்ந்த மலை. திருக்கோணமலைக்குச் சேர்ந்தது. அகத்தியர் திருமணக்கோலங் காணும் பொருட்டு தக்ஷணகைலாயத்துக்கு வந்து சிவபெருமானைத் தியானித்துக் கொணடிருந்த
D6D6). யாழ்ப்பாணத்திலுள்ள சுப்பிரமணியஸ்தலம். புவனேகவாகு ராசனாற் பிரதிட்டை செய்யப் பட்டது.
- திருகோணமலைக்கு இருபத்தைந்து நாழிகை
தூரத்துக்கப்பாலுள்ள சுப்பிரமணியஸ்தலம். சிவனொளிபாத மலையிலிருந்து உற்பத்தி யாகிப் பிரவாகிக்கின்றது.
கதிர்காமத்திலுள்ளது
திருக்கேதீச்சரத்திலுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள கீரிமலைத்தீர்த்தம். மாருதப்புரவீகவல்லியுடைய குதிரைமுக ரூபத்தை மாற்றிய தீர்த்தம் இதுவேயாம். திருக்கோணமலைக்கு நாலு நாழிகை துரத்தி லுள்ளது. இராவணனுடைய தாய்க்கு அந்தி யேட்டி செய்யும் பொருட்டு விட்டுணுமூர்த்தி யால் உண்டாக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ளது.
- யாழ்ப்பாணத்திலுள்ளது.
மட்டுக்களப்பிலுள்ளது. C39)GSRS)

Page 69
1 Ο4, திருக்கோணாசல வைபவம் திருக்கோணமலைத் திருப்பதிகம் திருஞானசம்பந்தர்
பண் - புறநீர்மை
திருச்சிற்றம்பலம்
நிரைகழல் அரவம் சிலம்பொலி யலம்பும்
நிமலர் நீறணி திருமேனி வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த
வடிவினர் கொடியணி விடையர் கரைகெழு சந்துங் காரகிற் பிளவும் அளப்பருங் கனமணி வரண்றிக் குரைகடல் ஒதம் நித்திலங் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே.
பொழிப்புரை.
முறையாகப் பொருந்திய வீரக்கழலின் ஒலியும், அழகிய சிலம்பின் ஒலியும் முறையே வலப்பாதத்திலும், இடப்பாதத்திலும் ஒலிக்கின்ற திருவடி களையுடையவரும், மும்மலங்கள் இல்லாதவரும், திருநீறணிந்த திருமேனியை யுடையவரும் மலையரசன் மகளாகிய மாதுமையம்பாளை இடப்பாகத்திற் பொருந்திய வடிவத்தையுடையவரும், இடபக்கொடியை யுடையவருமாகிய கோணஸ்வரப் பெருமான் சந்தனம், அகிற் கட்டைகளையும் அளவற்ற இரத்தின மணிகளையும், முத்துக்களையும், அலைகளால் கடற்கரையிற் குவிக்கின்ற சப்திக்கின்ற சமுத்திர நீராற் சூழ்ந்த கோணமாமலையில் எழுந்தருளியிருக்கின்றார்.
கழல் - ஆண்களனிவது, சிலம்பு - பெண்களனிவது, மும்மலம் -ஆணவம், கன்மம், மாயை, சந்து - சந்தனம், ஒதம் - நீர்
2. கடிதென வந்த கரிதனை யுரித்து
அவ்வுரி மேனிமேற் போர்ப்பார்
பிடியன நடையாள் பெய்வளை மடந்தை
பிறைநுத லவளொடும் உடினாய்க்
கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து கொள்ளமும் நித்திலஞ் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றும்
கோணமாமலை அமர்ந்தாரே

திருக்கோணாசல வைபவம் 105
பொழிப்புரை
தேவர்கள், முனிவர்களைக் கொல்ல விரைவாக வந்த கயாசுரனாகிய யானையின் தோலை உரித்து அதனைத் தனது திருமேனியில் அணிந்தவரும், பெண்யானையின் நடையையொத்த அழகிய நடையையுடையவளும், வளையல் களை யணிந்தவளும், பிறைபோன்ற நெற்றியுடையவளுமாகிய மாதுமையோடு சேர்ந்து கோணேஸ்வரப் பெருமான், பயங்கரமாக ஒலிக்கின்ற கடலாற் சுழப்பட்டுச் சேற்றினையும், முத்துக்களையும் தாங்கி வந்து கரைகளிற் சேர்த்துக் குடிமக்களை நெருங்குகின்ற அலைப்பெருக்கத்தையுடைய கோணமாமலையில் எழுந்தருளி யிருக்கின்றார்.
கொள்ளம் - சேறு, பிடி - பெண்யானை, களி - யானை.
3. பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம்
படர்சடை முடியிடை வைத்தார்
கனித்திளந் துவர்வாய்க் காரிகை பாகமாக
முன்கலந்தவர் மதில்மேல்
தனித்த பேருருவ விழித்தழல் நாகந்
தாங்கிய மேரு வெஞ்சிலையாக்
குனித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்ந்த
கோணமாமலை அமர்ந்தாரே.
பொழிப்புரை
குளிர்ச்சி பொருந்திய இளம்பிறைச் சந்திரனையும், அழகிய தலையை உடைய நாகபாம்பினையும், பரந்த சடைமுடியிற் தரித்தவரும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயினையுடைய மாதுமையை இடப்பாகத்திலே கொண்டவரும், மூன்று புரங்களய வந்து அழிவுசெய்த தாரகாரக்கன், கமலாரக்கன், வித்துன்மாலி என்னும் அசுரர்களின் மீது ஒப்பற்ற பெருவடிவங்கொண்டு மேருமலையை வில்லாக வளைத்து, வாசுகியென்னும் பாம்பை நாணாகப் பொருத்தித் தாங்கி நெற்றிக் கண்ணால் விழித்து அவ்வசுரர்களை அழித்து அருள்புரிந்த கோணேஸ் வரர் ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த கோணமாமலையில் எழுந்தருளியிருக்கிறார்.
4. பழித்திளங் கங்கை சடையிடை வைத்துப்
LIT/big,60DL LD256.016060Ilf GUTigu It
விழித்தவன்தேவி வேண்ட முன்கொடுத்த
விமலனார் கமலமார் பாதர்.
தெளித்துமுன் அரற்றுஞ் செழுங்கடல் தரளஞ்
செம்பொனும் இப்பியும் சுமந்து
கொழித்துவன் திரைகள் கரையிடைச் சேர்க்குங்
கோணமாமலை அமர்ந்தாரே.

Page 70
106 திருக்கோணாசல வைபவம்
பொழிப்புரை
பெருகி வந்த கங்கா நதியைத் திருச்சடையிற் தரித்தவரும், அழகிய மன்மதனைப் பழித்தது போல நெற்றிக் கண்ணால் விழித்துச் சாம்பர் ஆக்கிப் பின்னர் மன்மதனுடைய மனைவி இரதியானவள் பணிந்து வேண்ட மன்மதனை முன்போல் உயிர்பெற்றெழச் செய்தவரும், மலமற்றவரும், செந்தாமரை போன்ற பாதங்களை யுடையவருமாகிய கோணேசர், ஒலிக்கின்ற கடலானது முத்துக் களையும், செம்பொன்னையும், சிப்பிகளையுஞ் சுமந்துவந்து வலிய அலைகளல் கரைகளிலே சேர்க்கின்ற கோணமாமலையில் எழுந் தருளியிருக்கின்றார்.
தரளம் - முத்து, திரை - அலை
S. தாயினும் நல்ல தலைவரென்றடியார்
தம்மழ போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவிநின் நகலா
மாண்பினர் கானர் பல வேடர்
நோயிலும் பிணியும் தொழிலர்பால் நீக்கி
நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த
கோணமாமலை அமர்ந்தாரே
பொழிப்புரை
பெற்றதாயினும் மேலான அன்புள்ள தாயாகிய தலைவனென்று அடி யார்கள் கோணேசப்பெருமானுடைய திருவடிகளில் வணங்கி வாயினால் வாழ்த்தியும் மனத்தினால் நினைத்தும் துதிப்பார்கள். என்றும் நீங்காது நிற்கின்ற மகாஞானிகள் காணும்படியாகப் பலபல வேடங்களை யுடையவராகியும், நோயினாலும், தீராப்பிணியினாலும் வருந்துகின்ற அன்பர்களின் துன்பத்தை நீக்குபவரும், இடப்பாகத்தை விலக்கிப் பூநூலை அணிந்தவருமான கோணேசர், கோயிலாலும், சுனையாலும், கடலாலும் சூழப்பட்டு சிறந்து விளங்கும் திருக்கோணமலையில் எழுந்தருளியிருக்கின்றார்.
பிணி - மும்மலப்பிணியுமாம்.
6, பரிந்துநன் மனத்தால் வழிபடும் மாணி
தன்னுயிர் மேல்வருங் கூற்றைத்
திரிந்திடாவண்ணம் உதைத்தவர்க் கருளுஞ்
செம்மையார் நம்மையாளுடையார்
விரிந்துயர் மெளவல் மாதவி புன்னை
வேங்கை வர்ைசெருந்தி செண்பகத்தின்
குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில்சூழ்
கோணமாமலை அமர்ந்தாரே.

க்கோணாசல வைபவம் 1O7 திரு
பொழிப்புரை
பக்தியோடும், தூயஉள்ளத்தோடும் வழிபட்ட மார்க்கண்டேயனுடைய உயிரை எடுக்க வந்த கூற்றுவனை அழிந்துபோகும்படி உதைத்து அருள்புரிந்த மேலான அருளாளரும், கருணையினால் நம்மை யெல்லாம் ஆட்கொண் டருளுகின்ற வருமாகிய கோணேசப்பெருமான் பரந்து உயர்ந்து வளர்ந்த வன மல்லிகையும், குருக்கத்தியும், புன்னையும், வேங்கையும் வண்மையான செருந்தியும் செண்பகமும், குருந்தும், முல்லைக் கொடிகளும் படர்ந்து விளங்கும் சோலைகள் சூழ்ந்த கோணமாமலையில் எழுந்தருளியிருக்கின்றார்.
மாணி - பிரமச்சாரி, (மார்க்கண்டேயர்) கூற்று - இயமன், மெளவல் - முல்லை, மாதவி - குருக்கத்தி வேங்கை - வேங்கை மரம், செருந்தி செருந்திமரம் குருந்து - காட்டுநாரத்தை
Z பாடல் கிடைக்கவில்லை.
8. எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால்
ஏத்திட ஆத்தமாம் பேறு
தொடுத்தவர் செல்வம் தோன்றிய பிறப்பும்
இறப்பறியாதவர் வேள்வி
தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை
தன்னருள் பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர் விரும்பும் பெரும் புகழாளர்
கோணமாமலை அமர்ந்தாரே.
பொழிப்புரை
கயிலாயமலையை எடுத்த இராவணனுடைய அகங்காரத்தைத் தனது காற்பெருவிரலால் மிதித்து அழித்தவரும், இராவணன் வருந்தி இறைவனாகிய கோணேசரைத் துதிக்க அவனுக்கிரங்கி இஷ்டமான அதிகாரச் செல்வத்தைக் கொடுத்தவரும், பிறப்பிறப்பு இல்லாதவரும் தம்மைப் புறக்கணித்த தக்கனுடைய வேள்வியை அழித்துப் பின்னர் அவன் மீதுகொண்ட கருணையினால் அருள்புரிந்து வாழ்வளித்தவரும் எல்லோராலும் விரும்பப்படும் பெரிய கீர்த்தியையுடைய வருமாகிய கோணேசப் பெருமான் திருக்கோணமலையில் எழுந்தருளியுள்ளார்.
ஆத்தம் - இஷ்டம், வேள்வி - யாகம்
9. அருவரா தொருகை வெண்டலை ஏந்தி
அகந்தொறும் பலியுடன் புக்க பெருவராயுறையும் நீர்மையர் சீர்மைப் பெருங்கடல் வண்ணனும் பிரமன்

Page 71
108 திருக்கோணாசல வைபவம்
இருவரும் அறியா வண்ணம் ஒள் எரியாய்
உயர்ந்தவர் பெயர்ந்த நன் மாற்கும்
குருவராய் நின்றார் குரைகழல் வணங்கக்
கோணமாமலை அமர்ந்தாரே.
பொழிப்புரை
அருவருப்படையாமல் ஒரு கையில் மணி டையோட்டை (பிரம்மகபாலம்) எந்தி வீடுகள் தோறும் பிச்சையேற்ற பெருமைக்குரிய குணத்தையுடையவரும், சிறந்த கரிய கடல் போன்ற நிறத்தையுடைய மகாவிஷ்ணுவும், பிரம்மாவும் ஆகிய இருவரும் முறையே அடியையும், முடியையும் தேடி அறிய முடியாதபடி ஒளிப்பிளம்பாய் உயர்ந்து விளங்கியவரும், திருவடியைக் காணமுடியாது மீண்டு வந்த திருமாலுக்குக் குருவாய் நின்றவருமாகிய இறைவன் திருக் கோணமலையில் எழுந்தருளியிருக்கின்றார்.
வெண்டலை - பிரம்மகபாலம், சீர்மை - சிறப்பு
10 நின்றுணுஞ் சமனும் இருந்துனுந் தேரும்
நெறியல்லாதன புறங்கூற
வென்று நஞ்சுண்ணு பரிசினர் ஒரு பால் மெல்லியளொடும் உடனாகித்
துன்றுமொண் பெளவ மெளவலுஞ் சூழ்ந்து
தாழ்ந்துறு திரைபல மோதிக்
குன்றுமொண் கானல் வாசம் வந்துலவும்
கோனமாமலை அமர்ந்தாரே.
பொழிப்புரை -
நின்றநிலையில் உண்ணுகின்ற சமணரும், இருந்து உண்ணுகின்ற தேரரும் (புத்தர்) குதர்க்கமாக வாதஞ் செய்து சைவநெறியைப் புறங்கூறி, நன்னெறியல்லாத சமய நெறிகளைக் கூற அவர்களின் சமயக் கொள்கைகளை மறுத்து வென்றவர்களும் அவர்கள் ஊட்டிய நஞ்சை யுண்டவர்களாகிய அடியார்கள் இருபக்கமும் சூழ்ந்து நிற்க, இடப் பாகத்தை மாதுமைக்குப் பகிர்ந்தளித்த அர்த்தநாரீஸ்வர வடிவினராகிய கோணேசர் நெருங்கி அலைமோதுகின்ற சமுத்திரக்கரையில் வளர்ந்த மல்லிகையின் மணமும் கடல் அலைகளால் மோதப்படும் குன்றுகளிலுள்ள சோலைமலர்களின் நறுமணமும் வந்து வீசுகின்ற திருகோணமாமலையில் எழுந்தருளி யிருக்கின்றார்.
பெளவம் - சமுத்திரம்

திருக்கோணாசல வைபவம் 109
11. குற்றமில்லாதார். குரைகடல் சூழ்ந்த
கோணமாமலை யமர்ந்தாரைக்
கற்றுனர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞான சம்பந்தன்
உற்ற செந்தமிழார் மாலை யிரைந்தும்
உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர்
சுற்றமுமாகிக் தொல்வினை யடையார்
தோன்றுபவர் வானிடைப் பொலிந்தே
பொழிப்புரை -
இறத்தல் பிறத்தலாகிய குற்றமற்றவராயும், ஒலிக்கின்ற கடலாற் சூழப்பட்ட கோணமாமலையில் எழுந்தருளியிருப்பவருமாகிய கோணேசப் பெருமானைக் கற்றுங் கேட்டும் நல்லுணர்வு பெற்றுச் சீர்காழியில் அவதரித்த ஞானக் குழந்தையும், உயர்ந்த ஞானக் கருத்துக்களைக் கூறுகின்ற வருமாகிய திருஞானசம்பந்தர் அருளிய செந்தமிழ் மாலையாகிய பத்துப் பாடல்களையும் படிப்போரும், அதனைக் கேட்போரும் சான்றோர்களுக்கு உறவாகி முன்னை வினைவந்து சூழாமல் மேலான உலகங்களில் சிறப்போடு வாழ்வார்கள்.
திருச்சிற்றம்பலம்

Page 72
11O திருக்கோணாசல வைபவம்
திருக்கோணமலைத் திருப்புகழ்
தனத்த தானன தனத்தான தானன தனத்த தானன தனத்தான தானன தனத்த தானன தனத்தான தானன தனதான
விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை தரித்த ஆடையு மணிப்பூணு மாகவெ மினுக்கு மாதர்க ளிடைக்காம முழ்கியெ மயலுரறி
பொழிப்புரை
உடலைவிற்று வாழும் பெண்கள் தங்கள் உடம்பில் ஆடைகள் அணிந்து அணிகலன்கள் பூண்டு மேகலை என்று சொல்லப்படுகின்ற ஒட்டி யாணம் கட்டி உடம்பை அழகுபடுத்தி மினிக்குகின்றார்கள். அவர்களுடைய காமஇச்சையில் மயங்கினேன்.
மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர்
நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல வெறுப்ப தாகியெ உழைத்தேவி டாயப்படு கொடியேனைக்
பொழிப்புரை
அந்தக் காம மயக்கத்தினால் என்னை இந்தப் பூமியிலுள்ளவர்கள் இவனும் ஒரு காமியென என் கண் முன்னேயே நின்று இகழவும் நான் அவ மானத்தையும் புறந்தள்ளி இந்த உடம்பின் காமவேட்கையால் மீண்டும் காமதாகந் தணியாத கொடியவனானேன்.
கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயும் ஒரு வாழ்வே
பொழிப்புரை
காமக் கலக்கத்தினால் மலஞ்சோரும் இந்த உடம்பின் மிகுந்த
நோய்களுக் காளாகித் தவிக்காமல், உன்னைக் கவிமாலையால் போற்றித்
துதிக்கும் என்னை ஈடேறச் செய்கின்ற ஒப்பற்ற பெருவாழ்வுடையவனே!

திருக்கோணாசல வைபவம் 111
கதிக்கு நாயக உனைத்தேடி யேயுக
முரைக்கு நாயெனை அருட் பார்வை யாகவே கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் தரவேணும்
பொழிப்புரை
மேலான மோட்சகதி அருளுகின்ற தலைவனாகிய கோணேசப் பெருமானே! உன்னைத் தேடித்தேடி, உன்புகழையே பாடுகின்ற, நாயிற் கடைப்பட்ட என்னையும் உனது அருட்பார்வையாகிய கருணையினால் உன் திருவடிப் பேறடைவதற்கு அருள்புரியவேண்டும்.
மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்
திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக வடிப்ப மாதொரு குறப்பாவை யாழ்மகிழ் தருவேளே
பொழிப்புரை
தென்கயிலைமலையின் தலைவனாகிய உன்னையே இச்சித்துச் சிவகாமியா யமர்ந்துள்ள மாதுமையாளின், திருக்குமாரனாகிய ஆறுமுகங் கொண்ட சண்முக தேசிகனே! அழகிய வடிவுடைய குறமகளாகிய வள்ளி யம்மையாருக்கு இன்பத்தைத் தருகின்றவனே! 1,
வசிட்டர் காசியர் தவத்தான யோகியர்
அகத்ய மாமுனி இடைக்காடர் கிரனும் வகுத்த பாவுறு பொருட்கோல மாய்வரு முருகோனே
பொழிப்புரை
வசிட்டர், காசிபர் தவப்பேறுடைய யோகியர்கள், அகத்தியமா முனிவர், இடைக் காட்டுச் சித்தர், நக்கீரன் என்பவர்கள் பாடிய பாக்களின் தத்துவப் பொருளையே திருமேனியாகக் கொண்டு எழுந்தருளுகின்ற முருகப்பெருமானே!.
நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கோணாமலை தலத்தாரு கோபுர நிலைக்குள் வாயினில் கிளப்பாடு பூதியில் வருவோனே
பொழிப்புரை
நான்கு வேதங்களையும் நிலைக்கச் செய்கின்ற மேலான
அந்தணர்கள், திருக்கோணமலைத் தலத்தில் உயர்ந்து விளங்கும்
கோபுரவாசலில் நின்று பாடும் அனுபூதிப் பாடலின் பொருளாக விளங்கி

Page 73
112 திருக்கோணாசல வைபவம்
வருகின்றவனே!
நிகழ்த்து மேழ்பவ கடற்குறை யாகவெ
எடுத்த வேல்கொடு பொடித்துரள தாவெறி நினைத்த காரியமறுக் கூல மேபுரி பெருமாளே
பொழிப்புரை.
புண்ணிய பாவங்களுக்கேற்ப நிகழுகின்ற ஏழு பிறப்புக்களையும், தனது திருக்கரத்திலேந்திய, கடல்கோள் போன்று அழிக்கும் ஒப்பற்ற வல்வேலினால் பொடிப் பொடியாகும் படி செய்து, நினைத்த காரியங்களெல்லாம் அனுகூலமாக முடியும்படி அருள்புரிகின்ற பெருமாளே.
CD2320 OG DERSO
முத்தையாச் சாமியார்
முத்தையாச் சாமியார் திருக்கோணேஸ்வரத்தில் நீண்ட காலமாக வாழ்ந்து வருபவர். இவர் மலையி லுள்ள பல குகைகளுக்குச் செல்லப் பலமுறை முயன்றிருக்கிறார். பயங்கரமான சூழ்நிலைகளால் உள்ளே போக முடியாமல் திரும்பியதாகவும் அவ் வேளைகளில் இந்த ஐந்துதலை நாகத்தைத் தான் அங்கு கண்டதாகவும் கூறுகிறார். திரு. கீர்த்திதாஸ் அவர்களிடம் இப்படி ஒரு ஐந்து தலை நாகம் இருக்கும் செய்தியை பல காலத்திற்கு முன்பே கூறியிருக்கிறார். ஆனால் அதனை அன்று எவரும் நம்பவுமில்லை பொருட்படுத்தவுமில்லை. இன்று அச்செய்தி மெய்யாகி விட்டது. ஐந்துதலை நாகம் காட்சி கொடுத்த செய்தி கண்கண்ட சாட்சியாக அமைகிறது. இதுபோல அவர் அறிந்திருக்கும் மற்றும் பல சுவையான செய்திகள் காலத்தால் மெய்ப்பிக்கப்படலாம். சிவமயமாக விளங்கும் சித்தர்களை இவ்வுலக ஜெகஜாலப் பித்தர்கள் அறியமாட்டார்கள். முத்தையாச் சித்தரிடம் இருந்து பல செய்திகளை தொகுத்து எமது அடுத்த வெளியீட்டில் தருவோம்.
அடியார்க்கடியன்
C326)GSRS)
 

திருக்கோணாசல வைபவம் 113
to
திருக்கோணேசர் துணை.
திருக்கோணாசல நாகதம்பிரான்
பண்டிதர் திரு. இ. வடிவேலு
புண்ணிய பூமியாகிய ஈழநாடாகிய இலங்கையிலே தக்ஷண கைலாயம் எனப்படும் திருக்கோணேஸ்வரத்தில் 15-08-1999 இல் ஓர் அதிசயம் நடை பெற்றது. ஐந்து தலைகளையுடைய நாக பாம்பொன்று முதன் முதலாக இராவணன் வெட்டுக்குச் சமீபமாகக் கிழக்குப் பக்கத்தில் காட்சியளித்தது. அவ்விடத்தில் காவலில் நின்ற படைவீரர் ஒருவரும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவரும் இந்தப் பாம்பைக் கண்டார்கள். அதனைக் கோவிலில் பூசை செய்த குருக்களும் அவருடைய தந்தையாரும் கண்டதாகக் கூறு கிறார்கள்.
இந்தச் செய்தியை அறிந்த ஒரு சில நாட்களுக்குள் கோணேசர் கோவிலுக்குச் சென்றிருந்தேன். நாக பாம்பு காணப்பட்ட இடத்துக்கு அருகி லுள்ள பெரிய புற்றினுள் அது சென்றிருக்கலாம் என்று உத்தேசித்த அன்பு இல்லத் தந்தை திரு.ச.சுந்தரலிங்கம் அவர்கள் அந்தப் புற்றுக்கு அருகிலுள்ள மரத்தடியில் பால் வைத்ததாகவும் அறிந்தேன்.
நாக பாம்பை முதன் முதல் கண்ட படைவீரர் அந்த நேரத்தில் அங்கு காவலில் நின்றிருந்தார். அவரிடம் விசாரித்தேன். சுமார் மூன்று அடி நீளமானதாகவும், ஐந்து தலைகளை உடையதாகவும் வெள்ளை நிறமுடைய தாகவும் இருந்ததாகக் கூறினார். ஐந்து தலைகளிலும் வாய் வழியே நாக்குகள் வெளியே தெரிந்ததாகவும் கூறினார்.
குளக்கோட்டு மன்னனுடைய தந்தை வரராமதேவன் கோணேஸ் வரத்தைத் தரிசித்த வரலாறும், கோணேசர் கோவில் திருப்பணி செய்வதற் குரிய திரவியங்கள் மலைக் குகையுள் வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்தத் திரவியங்களுக்கு பாம்புகளும் பூதங்களும் காவலாக இருந்ததாகவும் கோணேசர் கல்வெட்டுச் செய்தியெனக் கர்ண பரம்பரையாகப் பேசப்பட்டு வருகின்றது.

Page 74
114 திருக்கோணாசல வைபவம்
கோணேஸ்வரத்தில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் முத்தையாச் சாமியார் மலையிலுள்ள குகைகளுக்குச் செல்லப் பலமுறை முயன்றதாகவும் பயங்கரமான சூழ்நிலையில் உள்ளே போக முடியாமல் திரும்பியதாகவும் நாக பாம்புகளை தான் அங்கு கண்டதாகவும் கூறுகிறார். இவற்றையெல்லாம் நாம் நம்ப முடியாமல் இருந்தாலும், ஐந்துதலை நாகம் காட்சி கொடுத்த செய்தி கண்கண்ட சாட்சியாக அமைகிறது.
ஈழத்திலும், தமிழ் நாட்டிலுமுள்ள ஆலயங்களில் நாக வழிபாட்டுக் குரிய சன்னிதிகள் (பரிவார மூர்த்தியாக) காணப்படுகின்றன. நாகதம்பி ரானுக்குத் தனிக் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெறும் இடங்களுமுண்டு. இந்த வழிபாடு மக்களுடைய உள்ளத்தில் எவ்வாறு இடம் பெற்ற தென்பது சிந்தனைக் குரியதே.
யோக சாஸ்திரத்தில் பிராண சக்தியை (குண்டலினி) பாம்பு வடிவில் கற்பனை செய்து விளக்கம் தரப்படுகின்றது. பூமியைத் தாங்கிக் கொண் டிருப்பவன் ஆதிசேடன் என்ற பாம்புதானென புராணங்கள் கூறி, நாக வழி பாட்டுக்கு மக்களை இட்டுச் செல்வதால் ஆதிசேடனுடைய வரலாறுகளை அறிய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
புராண நோக்கில்:-
ஆதிசேடன்:-
பூமியை தனது ஆயிரம் தலைகளில் தாங்கி நிற்பவன் ஆதிசேடன் என்று புராணங்களில் கூறப்படுவது தத்துவக் கதை. கத்துருவின் மகன் நாகன். பாம்பு உருவம் கொண்டவன். இவனே புராணங்களில் கூறப்படும் ஆதிசேடன். மந்தர கிரியை மத்தாக வைத்து தேவர்கள் திருப்பாற் கடலைக் கடைந்து அமிர்தம் பெறுவதற்கு மந்தர கிரியைப் பெயர்த்துத் தேவர்களுக்கு உதவியவன். பிரம்ம தேவனுடைய ஆணையினால் பாதாள உலகத்தில் தலைமை பூண்டவன். வலிமை மிக்க இவன் வாயு தேவனுடன் போரிட்டுத் தோற்றவன். திருக்கயிலாய மலையைத் தனது ஆயிரம் பணா முடிகளினால் முடிநிற்க (பணா முடி - பாம்புத் தலை) வலிமை மிக்க வாயுதேவன் தனது வலிமையினால் திருக்கயிலாய மலையின் சிகரங்களில் மூன்றைப் பிடுங்கி வீசினான். அவற்றிலொன்று காளத்தி மலை. மற்றது திருச்சிரா மலை. அடுத்தது திருக்கோண மலை. (ஆதாரம்: “அபிதான சிந்தாமணி")
திருமால் திருப்பாற் கடலில் பள்ளி கொள்வதற்குப் படுக்கையாகவும் இருக்கையாகவும், குடையாகவும் உதவுகிறவன் ஆதிசேடன். பதஞ்சலியாகப்

திருக்கோணாசல வைபவம் 115
பிறந்து தவஞ் செய்து பெறுதற்கரிய பேறுகளையும், பேரறிவையும் பெற்றவன். பதஞ்சலி ஆதிசேடனுடைய அவதாரம். தில்லையம்பலத்தில் ஆனந்த நடன மாடும் அம்பலத்தரசனுடைய திரு நடனத்தைத் தரிசிப்பதற்காக ஆதிசேடன் தவஞ்செய்து இறையருள் பெற்றவன். அத்திரி மகரிஷியின் மனைவியான அனுசூயாவின் திருப்பாதத்தில் விழுந்து அஞ்சலி செய்யும் பேறு பெற்றதனால் (பாத"அஞ்சலி) பதஞ்சலி எனவும் பெயர்பெற்று வியாக்கிரபாத முனிவருடன் சிதம்பரத்தில் இருந்து அம்பலத்தரசனின் ஆடல்கண்டு ஆனந்த மடைந்தவர். இவர் “பதஞ்சலி யோக சூத்திரம்” என்னும் நூலை இயற்றினார்.
தேவர்கள் திருப்பாற் கடலைக் கடைந்து அமுதம் பெறுவதற்கு வாசுகி என்னும் பெயரோடு நாணாக இருந்து உதவியவன். கடைந்தெடுத்த அமுதத்தைத் தேவர்கள் கலசத்தில் வைத்திருந்த போது அமுத கலசம் இருந்த இடத்தை நக்கியதால் நா பிளவுபட்டவன்.
சிவபெருமான் தனது ‘திருச்சடையில் சந்திரனையும் சந்திரனுக்குப் பகையான பாம்பையும் (ஆதிசேடன்) அணிந்து பகை நீக்கம் செய்து வாழும் தத்துவத்தை உணர்த்திய போதும் அதை உணராத ஆதிசேடன், தானிருக்கும் இடத்தின் பெருமையினால் தனக்குப் பகையான கருடனைப் பார்த்து கருடா செளக்கியமா? என்று செருக்குக் கொண்டான். அவனுடைய செருக்கை அடக்குவதற்காக, கருடன் சிவபெருமான் தலையிலனிந்திருந்த பாம்பை இழுத்தெறிய அது ஆயிரம் துண்டுகளாக பிளவுபட்டது. பின்னர் இறைவனின் கருணையினால் ஆயிரம் பிளவுகளையும் ஆயிரம் தலைகளாகப் பெற்றான் ஆதிசேடன். t
மேலே கூறப்பட்டவை புராணக் கதைகள். இக் கதையின் தத்துவார்த்த நிகழ்ச்சிகள் மானுட தேகத்திலே நிகழ்கின்றன. இதை, யோகிகள், மகரிஷிகள், ஞானிகள் என்போர் யோக சாஸ்திரங்களில் விளக்கிக் கூறியுள்ளார்கள். மானுட தேகத்தில் மூலாதாரத்தில் இருந்து எழுப்பப்படும் குண்டலினி சக்தியை சுழுமுனை நாடி வழியாக மேலே எழுப்பும் போது அக்குண்டலினி சக்தியானது ஆறாதாரச் சக்கரங்களிலும் இருந்து பல அற்புதங்களை நிகழ்த்தி, பின் சிரசிற்கு மேலேயுள்ள சகஸ்ராரத்தை அடைந்து ஜீவப் பிரம்ம ஐக்கியத்தை ஏற்படுத்தும். இந்தத் தத்துவ விளக்கமாக அமைவது தான் ஆதிசேடனின் வரலாறு.
விஞ்ஞான நோக்கில்
ஆதிசேடன் (DRACO)துருவ நட்சத்திரத்தைச் சுற்றிப் பாம்புபோல வளைந்திருக்கும் மண்டலம். பூமியை ஆதிசேடன் தாங்கி இருக்கின்றதென்று

Page 75
116 திருக்கோணாசல வைபவம்
இதனை புராணங்கள் கூறுகின்றன. அதனை நிரூபிப்பது போல, துருவமானது 56800 ஆண்டில் சுற்றும் சுழற்சி வட்டத்திற்குள் இருக்கும் ஒரே நட்சத்திர மண்டலம் ஆதிசேடனே. இதிலுள்ள ஒரு நட்சத்திரத்தை வைத்தே “பிராட்லி” ஒளிப் பிறழ்ச்சி உண்மையைக் கண்டுபிடித்தவர் (ஆதாரம் கலைக் களஞ்சியம்)
திருக்கோணேஸ்வரத்தில் ஐந்துதலை நாகம் தோன்றிய பின்னர் பக்தர் களுக்கு நாக வழிபாடு பற்றி அறியும் ஆர்வம் உண்டாகி இருக்கின்றது.
நாகர்:-
இவர்கள் ஒரு மனித சாதியார். வாசுகி முதலிய நாகங்களின் குலத்திற் பிறந்து நாக முத்திரை பெற்றிருத்தலின் இப்பெயர் பெற்றனர். இவர்கள் வாழ்ந்த இடம் நாகநாடு, நாகமலை முதலியன. (ஆதாரம்: மணிமேகலை)
இவர்கள் நாக வழிபாடு செய்பவர்கள். நாகர் பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டில் பரவலாக வாழ்ந்த ஒருவகைச் சாதியினர். இவர்கள் தங்கள் முடியின் மேல் ஐந்து தலை, மூன்று தலைகளையுடைய நாக வடிவ மொன்றைத் தரித்துவந்தமையால் இப்பெயர் பெற்றனர். இவர்கள் நாக வழிபாடு செய்து வாழ்ந்தார்கள்.
நாகப் பிரதிஷ்டை
ஒரு படம், ஐந்து படங்களுள்ள நாக பாம்பையோ அல்லது இரட்டை நாகங்களையோ, கருங்கல்லில் செதுக்கி, அந்தச் சிலையை முதல் நாள், தானிய வாசம், ஜலாதி வாசம் செய்வித்து, பிரதிஷ்டை செய்விப்போர் அன்றிரவு உபவாசமிருந்து, மறுநாள் நாகசிலைக்கு சாஸ்திர முறைப்படி ஹோமம், அபிஷேகம், பூசை முதலியன செய்வித்து, நாக பாம்பு வாசஞ் செய்யும் புற்றின் அருகிலேயோ அல்லது நாகம் வாசஞ் செய்யும் மரத்தினடியிலேயோ ஆலயம் அமைத்து விதிப்படி பிரதிஷ்டை செய்து பூஜித்து பக்த ஜனங்களுடன் பிராமண போசனம் செய்விப்பது. இப்படிச் செய்விப்பவர்கள் புத்திர பாக்கியம் பெறுவர்.
நாக பலி:
நாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயத்தில் பால், பழம், முதலிய
பலியைப் புஷ்பங்களோடும் கறுப்பு வஸ்த்திரங்களோடும் சந்தனத்துடன் சூரியன் அஸ்தமிக்கும் போது புற்றில் இடவேண்டும். இப்படி இடுவதால்

திருக்கோணாசல வைபவம் 117
பூமியைத் தாங்கும் ஆதிசேடன் முதலிய நாகர்கள் சந்தோஷிக்கின்றார்கள். இப்படிச் செய்பவர்களுக்கு வேண்டிய இஷட சித்திகள் கிடைக்கும். (ஆதாரம்: அபிதான சிந்தாமணி)
நாக வழிபாடு:-
ஆதிமனிதர் இயற்கையின் தாக்கங்களுக்கு அஞ்சி சூரியன், நெருப்பு, சூறாவளி, பெருமழை, முதலியவற்றை தமது ஆற்றலுக்கு மேற்பட்ட சக்திகள் என நினைத்து வழிபட்டனர். காலக்கிரமத்தில் சூரியன், அக்கினி, வாயு, வருணன், என்ற தெய்வப் பெயர்கள் தோன்றின. அவ்வாறே கொடிய விலங்குகள் பறவைகள், பாம்புகளுக்கும் அஞ்சி அவற்றையும் தெய்வங் களாக நினைத்து வழிபட்டார்கள். இந்த வகையில் வந்ததே நாகவழிபாடு இது காலக்கிரமத்தில் ஆலயங்களில் வழிபாடு தெய்வமாக அமைந்து விட்டது. வழிபாட்டுக்குரிய மிருகங்களாய் இருந்தவற்றை காலக்கிரமத்தில் தெய்வங்களுக்கு வாகனங்களாகவும் அமைத்துக் கொண்டார்கள்.
"பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்” என்று ஒரு பழமொழி யுண்டு. மனிதனுடைய உள்ளத்தில் பயம் என்ற உணர்வு அலைகள் ஏற்படும் போது தற்காப்புக்காகப் பக்தி என்ற உணர்வலைகளும் ஏற்படுகின்றன. இதனால் பயபக்தி என்ற குணப் பண்பினால் மனிதன் ஆட்கொள்ளப்படுகிறான்.
ஏக தெய்வ வழிபாட்டுக் கொள்கையை உடையது இந்துமதம். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று கூறுகின்றது திருமந்திரம். சிவனே முழுமுதற் கடவுளென்ற கோட்பாட்டையுடைய இந்துக் குலத்தில் பல தெய்வக் கோட்பாட்டுச் சிந்தனைகள் தோன்றிய போது, பல தெய்வக் கோட்பாட்டுச் சித்தாந்தங்களும் தோன்றின. இதனால் சண்மதக் கோட்பாட்டை ஆதிசங்கரர் வகுத்தார். சைவம், வைஷ்ணவம், சாக்தம், காணபத்தியம், கெளமாரம், செளரம் எனப்படும் ஆறுமதக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட மூர்த்திகளைப் பயபக்தியோடு மக்களை வழிபடச் செய்வதற்காக புராண இதிகாசங்களும் எழுதப்பட்டன. இந்த வரலாறுகளை ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்படும் ஆலயங்களில் பரிவார மூர்த்திகளாக நவக்கிரக வழிபாடும் அமைந்தது இராகு, கேதுக்களையும் பிரதிஷ்டை செய்தார்கள் இவ்வாறு வந்தமைந்ததே நாக வழிபாடு.
பயபக்தியினால் ஏற்பட்ட நாக வழிபாடு இந்துக்கள் வாழும் எல்லா இடங்களிலும் உள்ள ஆலயங்களில் இடம் பிடித்துக் கொண்டது. நவக் கிரகங்கள் ஒன்பதில் சாயா கிரகங்களாகிய இராகுவும், கேதுவும் சர்ப்பங்களே.

Page 76
118 திருக்கோணாசல வைபவம்
இவர்களின் தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்கள் நாக தோஷம் நீங்குவதற்காக செம்பாம்பு, கரும்பாம்புகளை உலோகத்தால் செய்வித்து ஜோதிட சாஸ்திரப்படி உரிய நைவேத்தியங்கள் படைத்து ஆலய அர்ச்சகர்கள் மூலம் சாந்தி செய்வித்து நாகதோஷத்தை நீக்கிக் கொள்வர். மகப்பேறு இல்லாதவர்கள் இப்படிச் செய்து பேறு பெற்றார்கள்.
நாகவழிபாட்டு இடங்கள்:-
பேராலயங்களில் நாகதம்பிரானுக்குத் தனிச் சந்நிதி அமைத்தது போல பல இடங்களில் தனிக் கோயில்களுங் கட்டி நாகப் பிரதிஷ்டை செய்தும் வழிபட்டு வருகிறார்கள்.
1. நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலிலுள்ள அம்பாளுக்கு நாகம் அர்ச்சனை செய்து வழிபட்டதான நீண்ட வரலாறொன்று அறியக் கிடக்கின்றது.
2. இந்தியாவில் அநேக ஆலயங்களில் உள்ள தல விருட்சங்களின் அடியிலும் ஆலய எல்லைக்கு உட்பட்ட ஆலமர அரசமரத் தடிகளில் உள்ள மேடைகளில் நாக விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப் பெற்று வழிபாடு நடைபெற்று வருகின்றது.
3. இலங்கையில் பல இடங்களிலும், நாகதம்பிரானுக்குத் தனி ஆலயங்கள் காணப்படுகின்றன. யாழ் மாவட்டத்திலுள்ள புத்தூரில் உள்ள நாக தம்பிரான் கோவில் மிகப் பிரசித்தமானது.
4. இராகு, கேது வழிபட்ட தலமாக விளங்குவது திருக்கேதீஸ்வரம். அந்த ஆலயத்தில் பாம்புகள் எதேஷ்டமாக சுற்றித் திரிவதைக் காணலாம். நிர்மாலியப் பூக்களை அள்ளி எடுக்கும் போது அதனுள்ளும் சில சமயங்களில் பாம்பு இருக்கும்.
5. திருக்கோணமலை மாவட்டத்தில் நாகதம்பிரான் கோவில்கள் பல இருந்த போதிலும் சேனையூர் நாகதம்பிரான் கோவில் மிகப் பிரசித்தமானது. அற்புத நிகழ்ச்சிகள் பல அக்கோவிலில் நடை பெறுகின்றன.
6. திருக்கோணமலையில் மனையா வெளியிலுள்ள வல்லப சக்தி அம்பாள் கோவிலில் நாக தம்பிரானுக்குத் தனி வழிபாட்டுச் சந்நிதி காணப்படுகின்றது.

திருக்கோணாசல வைபவம் 119
7. கந்தளாய்க் கட்டளைப் பிள்ளையார் கோவிலிலுள்ள நாகதம்பிரா னுக்கு நீண்ட வரலாறுகளுண்டு. அதற்குத் தனிக் கோவிலுமுண்டு.
8. உவர்மலைக் கண்ணகை அம்மன் கோவிலிலுள்ள நாகதம்பிரான் கோவில் நம்பிக்கைக்குரிய சந்நிதியாக விளங்குகின்றது. நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறுவதாக மக்கள் கூறுகின்றார்கள்.
9. மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்டாரியா வெளி நாகதம்பிரான் கோவில் மிகப் பழமை வாய்ந்தது. அற்புதங்கள் பல அங்கு நடைபெறுவதாகக் கூறுகிறார்கள்.
10. மட்டக்களப்பில் நாககட்டு என்று எல்லோராலும் பக்தியோடு வழி படப்படுவதும் தரவை என்று கூறப்படுவதுமான இடம் கிரான் என்ற ஊருக்குச் சமீபமாக இருக்கிறது. தரவையிலுள்ள நாகதம்பிரான் கோவில் மிகப் பிரசித்தமானது.
நாக தம்பிரனுக்குத் தனிக் கோயில்கள் உள்ள இடங்களில் நாகம் வாசஞ்செய்யும் புற்றுக்களும் காணப்படுகின்றன. அந்தப் புற்றிலுள்ள நாகத்துக்கு பால் பழம் வைத்து மக்கள் வழிபட்டு வருகிறார்கள். அவர்களிடமுள்ள நம்பிக்கையால் நாக தம்பிரான் அவர்களுக்கு இஷட சித்திகளை வழங்கி வருவதாகக் கூறப்படுகின்றது.
நிறைவு
“நம்பிக்கை ஏற்படுவது கஷ்டமாயிருக்கலாம் ஆனால்
நம்பிக்கையின் அவசியத்திலிருந்து மட்டும் நாம் தப்பமுடியாது” (தத்துவ கலாநிதி - ராதா கிருஷ்ணன்)
திருக்கோணேஸ்வரத்தின் மகிமையை அறிந்து, பெருமான் மீது பக்தி பூண்டு வாழும் மெய்யன்பர்களே! இன்று உலகம் பூராவும் தமிழ் பேசும் இந்துக்கள் பரவலாக வாழ்ந்து வருகிறார்கள். இவ்வாறு வெளி நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்து அன்பர்கள் அனைவரும் ஈழத்துக் கயிலாயமாகிய திருக்கோணேஸ்வரத்தின் வரலாற்றையும் அதன் அருட் பொலிவினையும் தெய்வீகக் கீர்த்தியையும் அறியும்படி செய்ய வேண்டுமென்ற தணியாத தாகத்தின் காரணமாக, இந்நூல் சிவத் தொண்டனாகிய திரு. க. கீர்த்திதாஸ் என்பவரால் வெளியிடப்படுகிறது. அவர் கேட்டுக்கொண்டதற்கு அமைய இதனைத் தொகுத்து இங்கு வழங்குகிறேன்.

Page 77
12O திருக்கோணாசல வைபவய
15.08.99 இல் கோணேஸ்வரத்தில் ஓர் அற்புதம் நடைபெற்றது. ஐந்து தலை நாகபாம்பு ஒன்று பலருக்கு காட்சி கொடுத்துள்ளது. அது தோன்றிய இடத்தில் அதற்கொரு ஆலயம் அமைக்க வேண்டும் என்று அன்பர் கீர்த்தியின் அடியுள்ளத்தில் பதிந்து விட்டது. இவர். மாதுமையம்பாள் சந்நிதிக்கு முன்னால் மணிக்கோபுரம் கட்டும் திருப்பணியை மேற் கொண்டு தாராள சிந்தையோடு செய்து நிறைவேற்றியவர். இவருடைய நண்பன் திரு. தம்பு, தம்பையா ஞானேஸ்வரன் என்பவர் ஜேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
ஐந்து தலை நாகம் கோணேஸ்வரத்தில் தோன்றிய செய்தியறிந்து ஞானேஸ்வரனுக்கு நாகதம்பிரான் மீது நம்பிக்கையும் கோணேஸ்வரத்தின் மீது பாசமும் ஏற்பட்டு கனவிலும் நனவிலும் அதே சிந்தனை உடையவராக வாழ்கிறார்.
தத்துவ கலாநிதி ராதா-கிருஷ்ணன் கூறியது போல அந்த நம்பிக்கையின் அவசியத்திலிருந்து, தப்பமுடியாமல் திரு. த. ஞானேஸ்வரன் இந்தத் திருப்பணித் தொண்டுக்குத் தன்னை அர்ப்பணித்து, நாக தம்பிரானுக் நல்லதோர் ஆலயங்கட்டுவதற்கு முன்வந்துள்ளார். திருக்கோணமலையி வாழும் பொரியோக்களின் ஆலோசனைகளைப் பெற்று, பரிபாலன சபை தலைவர் திரு. மு. கோ. செல்வராசா அவர்களுடைய அனுசரனையுட6 நாகதம்பிரானுக்கு நல்லதோர் கோவில் கட்டும் திருப்பணியைத் தொடங்கியுள்ளார்.
கோணேசப் பெருமானுடைய ஆலயத்தின் இரண்டு வீதிகளுக்கும் வெளியே நாகதம்பிரான் கோவில் கட்டுவதற்கு கோணேசர் கோவில் அமைந்திருக்கும் பாங்கு பொருத்தம் உடையதாயிருப்பதால் ஆகமவிதி தடையாயிராது. நாகதம்பிரான் ஆலயமும் ஆகம விதிக்கமைவாச அமைந்திருப்பதும், கோணேசப் பெருமானின் திருவருட் செயலேயாகும்.
"எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணியராகப் பெறின்" (திருக்குறள்)
தொண்டர்க்குத் தொண்டனாகிய திரு.க.கீர்த்திதாசின் ஊக்கமும் நம்பிக்கையாளர் திரு. த. ஞானேஸ்வரனுடைய தியாகமும் வாழ்க.
责 褒 责 索 卖 壳、麦 安

திருக்கோணாசல வைபவம் 121
6. திருக்கோணசர் பஜனை
சுவாமி கெங்காரனந்தாஜி அவர்கள் இயற்றியது
இராகம் : காபி தாளம் : ஆதி
மரகதமலை போன்ற தென்கயிலை மாமலையில் நர்த்தனம் ஆடும் நர்த்தக மணியே
மரகதக்கால் சிலம்பொலி கேட்க திருமலை இறைவா
வந்தேன் உன் தாள் இணைக்கு
வருக வருக என்று வரவேற்று வரம் தந்த வரதநாயகா வரருஜி ருஜித்தோர் இகருஜி அறியார்சிவனே சிவனே
இராகம் : சகானா
நீராம்பல் பூமணத்தை நீர்வாழ் நீரினம் நுகர்வதில்லை நீரலையில் கலந்து வரும் சிலம்பொலி நாதத்தை
மூடர்கள் மூடதையால் உணர்வாரில்லை மூர்த்தி ஸ்தலம் தீர்த்தம் என்ற முப்பெரும் ஸ்தல
பெருமையை உணர்ந்தோர் மூப்பும் பிணியும் அகற்றி முக்தி இன்பம் அடைவார்
ஐயம் இல்லை என் ஐயனே
இராகம் : சிந்துபைரவி
உளக்கண் திறக்கும் திறவுகோல் இங்குதான் உண்டுவேறு எங்கும் தேடவேண்டாம் உச்சிமலையில் தவக்குகையில் உள்ளடக்கி உள்நோக்கி இருந்தால் அகக்கண் திறக்கும் உண்மை கோரக்க முனிவர் செய்த தவப்பயனால்
திருமலையில் வந்தமர்ந்ததிருமலை தேவா கொடுமைகளை மாளவைத்து அருள்புரியும்
அருட்பெரும் கருணைக் கடலே

Page 78
122 திருக்கோணாசல வைபவம்
இராகம் : மலஹரி
வேதனையும் சோதனையும் நிறைந்த உயிரோட்டம் நிற்கும் வேளையில் உயிர்ப்பிக்கவும் இரட்சகனே வத்சலப்பிரியனே உன் திருத்தாள் மகிமையை எவ்வாறு எடுத்துரைப்பேன் சின்மயானந்தனே தெட்சண கயிலைமலை அமிர்தா உன் பொற்பாதத்தை பத்ரபுஷபம் தூவி பூஜிக்க அருள்புரிவாய்
இராகம் : மத்யமாவதி
மிலேச்சரால் அழித்தும் அழியாமல் நின்று செங்கதிர்
வீசிநிற்கும் செஞ்சடையவனே மானசீகலிங்கத்தை மனதால் பூஜை செய்து மெளனமாய்
இருக்கும் மெளனிகளால் அன்றி உன்னை வேறாரறிவார் தங்கத் தமிழில் நொந்து உருகி உன்
திருப்புகழ் பாடி வாழுநல்லடியாரை தங்கப் பாதமலரில் வைத்து அணைத்திடுவாய்
சோபிதலிங்க அருள்மணியே

திருக்கோணாசல வைபவம் 123
அனுபந்தம்
அன்பர்களே!
உலகத்திலுள்ள ஒவ்வொருவரும் தாம் வசிக்கும் இடத்தின்
பெருமை இத்தன்மைத்தென விபரமாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகையால், நாம் வசிக்கும் இத் திருக்கோணமலையின் மகத்துவங்களை அறிய அநேகர் விருப்பமுடையவர்களா யிருப்பீர்களென நினைத்து இத்தலத்தின் மகிமையை உங்களுக்குத் தெரிவிக்கின்றேன். இவ்வூருக்குத் திருக்கோணமலை எனவும், தகூஷணகைலாய மெனவும், மச்சேச் சுர மெனவும், திரிகூடமெனவும் நாமங்கள் உண்டு. இத் திருக்கோணமலை இலங்கா தீபத்துள் ஒன்றாயிருப்பதால், இலங்கை மகிமையைச் சுருக்கமாகத் தெரிவித்து, பின்னர் திருக்கோணமலையைப் பற்றிப் பேசுவோம். இலங்கையானது உத்தர கைலையின் உற்பத்தி எவ்வாறெனில் :
இத் தகூடிணகைலாயத்திலே வெள்ளரசு கண்டகவடம் , சோதிவிருகூrம் சாயாவிருகூடிம் சுவேதகூவிளம் சுவர்ணதரு கருநெல்லி முதலிய மேன்மையுடைய விருகூடிங்களும், சுகந்த புஷ்பசாதிகளும், நூதனமான பகூரிசாலங்களும், விசேஷமான மிருகசாதிகளும், கிருஷ்ணசர்ப்பம், மகாசர்ப்பம் முதலிய சர்ப்பசாதிகளும் உண்டு. திருக் கோணமலைக்கு நான்கு திக்கிலும் நான்கு யோசனைக் குள்ளாக வசிக்கப்பட்டவர்கள் சகலரும் தத்தமக்குரிய தொழில்களைச் செய்து பிரயாசமில்லாமல் அதிகம் திரவியத்தைச் சம்பாதித்து, தேக செளக்கியத் தோடும் சந்தோஷத்தோடும் வசிப்பார்கள். இத் தலத்தில் யாசகஞ் செய்து சீவிப்பவனும் தேக சுகத்தை யுடையவனாய் இருப்பான். இத் திருக் கோணமலைக்கு நான்கு திக்கிலும் நான்கு யோசனை துாரத்துக்குள்ளாக இறக்கப்பட்ட சீவசெந்துக்களெல்லாம் யம தூதருடைய ஆக்கினைக்குள் அகப்படாமல் மோகூடிவீட்டைச் சேருவார்கள். இந் நகரியில் வசிப்பவர்கள் தங்கள் தங்கள் தோட்டங்களை மூன்று பங்கிட்டு, ஒரு பங்கு தருமத் துக்கும், இரண்டு பங்கு தங்கள் பாவிப்புக்கும் வைத்திருக்க வேண்டும். இள் விடத்தில் உண்டாக்கப்படும் காய் கனி கீரை தானியம் முதலியவைகளில் நாலில் ஒரு பங்கு கோணை நாயகருக்குக் கொடுத்தல் வேண்டும். அப்படிக் கொடாதிருப்பார்களாயின் சமுத்திரத்தில் ஆமையாகப் பிறப்பர்கள். சிதம்பரத்தில் கனகசபையும், மதுரையில் இரசதசபையும், நwான காசியில் இரத்தினசபையும், திருநெல்வேலியில் தாம்பிரசபையும், தக்ஷா901கைலாயத்தில் சூடாமணிசபையும் உண்டு. தகூடிணகைலாயத்தில்

Page 79
124 திருக்கோணாசல வைபவம்
வசிப்பவர்களுக்குப் போகம் மோகூடிம் இரண்டையுங் கொடுப்பதற்காகக் கோணைநாயகர் சகளநிட்கள ரூபியாக எழுந்தருளியிருக்கின்றார். முற்செனனங்களில் தாங்கள் செய்த தபோபல மேலீட்டினால் இத் திருக்கோணமலையில் பொன் முதலிய தாதுவர்க்கங்களும் அதிகமாக விளையும் , இத் திருக் கோணமலைக் கு மேலான தலமும் , மாவலிகங்கைக்கு மேலான தீர்த்தமும் எவ்விடத்திலுங் கிடைப்பதரிது. இத் துணைப் பெருமிதங்களை யுடைய தகூடிண கைலாயத்திலே சோழ மண்டத்திலிருந்த மனுநீதி கண்ட சோழனின் வம்சத்தைச் சேர்ந்தவரும் வரராமதேவரின் புத்திரருமாகிய பாலசிங்க மகாராசா என்பவர். பரத கண்டத்தினுள் தொண்ணுற்றெட்டுச் சிவஸ்தலங்களுள் மிக மேலானது தகூடிணகைலாயமென வேத சிவாகமங்களாலுணர்ந்து, அக் கைலாயத்திலே ஒரு சிவாலயத்தை உண்டு பண்ணுவது மிக மேலான தருமமெனக் கருதி, இற்றைக்கு 4479 வருடங்களுக்கு (கிறிஸ்து பிறக்க 2590 வருடங்களுக்கு) முன் இவ்விடத்துக்கு வந்து, கைலாயமலையில் ஒரு சிவாலயத்தை உண்டு பண்ணினார். அவர் கோணைநாயகருடைய பதமுத்தியடைந்தபின், பறங்கிக்காரால் அவர் கட்டிய சிவாலயம் இடி த்துக் கடலிற்றள்ளப்பட்டது. பின் குளக்கோட்டு மகாராசன் இவ்விடம் வந்து, ஆலயத்தை உண்டு பண்ணிக் குடிசனங்களையு மிருத்திய அக்காலத்தில், சைவசமயப் பயிரானது வளர்பிறைச் சந்திரன்போல நாளுக்குநாள் வளர்ந்தேறிவந்தது. பறங்கிக்காரர் இவ்விடம் வந்தபின், மிலேச்ச கண்டங்களிலிருந்து பரசமயப் பறவைகள் சில ஒருங்குகூடிப் பறந்துவந்து, இலங்கையிலெங்கும் பரவி, சைவசமயப் பயிரை ஒரு வாறு மேயத் தொடங்கின. அவற்றிற் சில பறவைகள் வந்து நாமிருக்கும் திருக்கோணமலைச் சார்பிலும் பதுங்கியிருந்து, சில காலஞ்சென்றதன்பின், தாய் வசிப்பதற்குத் தக்க கூண்டுகளையுங் கட்டி, நம்மூரிலுள்ள சைவசமயப் பயிரை மேய்வதற்கு ஒருவாறு முயற்சி செய்துவருகின்றன. அப்பறவைகள் நம்மூரிலுள்ள சைவசமயப் பயிரை மேய்வதற்கு முன், அப் பயிர் மோசம் போகாமற் பாதுகாப்பதும் வளர்ப்பதும் நம்மவர் கடனே யாம். ஆயின், அப்பயிரானது வளர்வதற்கு நாம் செய்யவேண்டிய முயற்சிகள் சிலவுள. அவை யாவையெனில், முதலில் வித்தியா சாலைகளென்னும் வேலிகளை யடைத்து, பின்பு, சைவசமயக் குருமாரும் அறிவாளிகளுமாகிய முகிற் கூட்டங்களெல்லாம் ஏகோபித்துத் திரண்டு, கல்வியென்னும் நன்னீர்ச் சமுத்திரத்திலே சலத்தைக் குடித்து, ஒற்றுமையென்னும் மலையிலே காலையூன்றி, பரசமய பண்டிதர்களுடைய மனமென்னும் தேசத்திலே இடித்து முழங்கி, விடா முயற்சியென்னும் மின்னலை இடைவிடாது மின்னி, பத்திரிகை வாயிலாகவும் புத்தகங்கள் வாயிலாகவும் சைவசமய உண்மையென்னும் பிரசண்ட மாருதமாகிய சுழல்காற்றையும் வீசி, பிரசங்கமென்னும் மழையையும் மாதமும்முறை

ருக்கோணாசல வைபவம் 125
பொழிந்து, சைவசமயப் பயிர் மோசம்போகாது காத்துக்கொள்வதற்குக் கைலாயபதியாகிய கோணைநாயகருக்கு அன்பென்னும் சம்பளத்தைக் கொடுத்து, அவரையே காவலாளியாக நியமிப் போமாயின், நம்மூரிலுள்ள சைவசமயப் பயிர்வளர்ந்து சிறப்படைவதற்கு யாதுஞ் சந்தேகமுண்டா? இல்லை, இல்லை. அப்போது நம் மூச்சு சைவசமயப் பயிரை மேய்வதற்கு நோக்கங்கொண்டு வந்திருக்கும் பரசமயப் பறவைகளெல்லாம், அறிவாளி களும் பிறருமாகிய முகிற் கூட்டங்கள்யாவும் ஒற்றுமை என்னும் மலையிலே காலூன்றி யிருப்பதையும், விடாமுயற்சியாகிய மின்னல் மின்னுவதையும், சைவசமய உண்மையென்னும் பிரசண்டமான காற்று வீசுவதையும் பரசமயப் பண்டிதர்களுடைய மனமாகிய ஆகாயத்திலே இடிமுழக்க முண்டாவதையும், பிரசங்கமழை மாதம் மும் முறை பொழிவதையும் சச்சிதானந்த சிவஞானப் பிரகாச சபையென்னும் மணி வாலசூரியனுடைய வெப்பம் அதிகமாயிருப்பதையும் வித்தியாசாலை களென்னும் வேலிகள் நான்கு பக்கலிலும் மிகப் பெலமாயிருப்பதையும், காவலாளியாகிய கோணைநயாகர் சைவசமயப் பயிர் மோசம் போகாது எப்போதும் விழிப்பாயிருந்து காப்பதையும் கண்டு, நாம் இனிமேல் இவ்வூரிலுள்ள சைவசமயப் பயிரை மேய்வதற்கு இடம் வாயாதெனக் கருதி, மழை காற்று மின்னல் இடி முழக்கம் முதலியவைகளைச் சகிக்கமாட்டாமல் அஞ்சி நடுங்கி, ஒடுங்கி, தாம் இருந்துவந்த மிலேச்ச கண்டங்களை நோக்கி ஒட்டெடுக்கு மென்பதிற் சந்தேகமில்லை. ஆதலால், அன்பர்களே! இப் பூமி தகூடிணகைலாய பூமியாக இருப்பதால் பூமிநயம் பற்றிச் சைவ சமயப் பயிரானது மிகவும் செழிப்பாக வளர்ந்தோங்கும். ஆனால், நீங்கள் எல்லாரும் அப் பயிரை வளர்க்க மிகவும் விருப்ப முடையவர்களாய் இருக்கின்றீர்கள் என்பதையும் நான் நன்கறிந்திருக் கிறேன். ஆதலால், நீங்கள் இப்போது முதலாக ஆவசியகம் செய்ய வேண்டியது வித்தியாசாலைகளென்னும் வேலிகளைக் கட்டுவதேயாம். இதற்குப் பிரயத்தனங்களைச் செய்ய முயலுங்கள்! முயலுங்கள்!
வே.அகிலேசபிள்ளை

Page 80
126 திருக்கோணாசல வைபவம்
பின்னுரை
“இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும். மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை. திறமையான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணங்கச் செய்தல் வேண்டும்.” என்று உள்ளம் வெதும்பிப் பாடினான் பாரதி.
இன்று பழங்கதைகள் உருமாறி, பொருள்மாறி, புதுக் கதையாய் புழுகு உரையாய் வரலாற்றுச் சவக்குழியாய் மாறிவருகின்றன. இது கண்டு துடியாது, எழுச்சி கொண்டு வெடியாது, பாமரராய், விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொல நாம் வாழுகிறோம்.
உலகெலாம் பரந்துவாழும் தமிழினம் இன்று புது வேகத்துடன் கிளர்ந்து எழுந்து விட்டது. சூரியன் அஸ்தமிக்காத பிரித்தானிய சாம்ராச்சியம் என்று பெருமைபேசிய பிரித்தானிய மண்ணிலிருந்தே இருபத்திநாலு மணி நேரமும் உலகெலாம் தமிழ் முழக்கம் கேட்கச் செய்கிறார்கள் எமது இளைஞர்கள். "திறமையான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணங்கச் செய்தல் வேண்டும்” என்ற வாய்மைக்கமைய பிறநாட்டார் நம் பண்பாட்டை, வரலாற்றை, கலாசாரப் பாரம்பரியத்தை அறிந்து வியக்கிறார்கள். அவர்கள் கேட்கும் கேள்வி களுக்குப் பதில்கூற முடியாது நம்மவர்கள் திணறுகிறார்கள். இந்தப் பரிதாப நிலையிலிருந்து அவர்களைக் காக்கவும், ஆர்வமுள்ள பிறநாட்டாருக்கு எம் வரலாற்றை எடுத்து உரைக்கவும் ஏதுவாக சென்ற ஆண்டு, நூற்றாண்டுப் பழமை வாய்ந்த “திருக்கோணாசல வைபவம்” என்னும் பழங்கதையை திரு. தம்பையா ஞானேஸ்வரன் அவர்கள் மறுபதிப்புச் செய்தார்கள்.
அந்நூலுக்குக் கிடைத்த வரவேற்புக் காரணமாக அதனை மீண்டும் பிரசுரிக்கிறோம். இந்நூலின் விற்பனையால் பெறப்படும் நிதி, எமது பாரம்பரிய கலாசாரச் சுவடுகளை மறையாது காக்கவும், நினைவுச் சின்னங்களை அழிவில் இருந்து காக்கவும், மேலும் இது போன்ற வரலாற்று நூல்களைப் பிரசுரிக்கவும் உபயோகிக்கப்படும்.
பல சமய ஸ்தாபனங்கள், எம்மிடையே இருந்தும் அவை நிர்வாக வேட்கையும், அதிகார விருப்பும் கொண்டு பதவிக்கும் பவுசுக்கும் போட்டி போட்டுக் கொண்டு நிற்கும் வேளையில் நாம் அவற்றை விட்டு விட்டு "எம் கடன் பணிசெய்து கிடப்பதே" என்று செயற்பட விளைகிறோம்.
எமது கலாசார விழுமியங்களை, உலகெலாம் அறியச் செய்து அவை அழியாமல் காக்க முழு அளவிலான முயற்சிகளில் ஈடுபடுதலே எமது நோக்கம்,
அடியார்க்கடியன்


Page 81