கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வானுறையும் தெய்வத்தினுள்

Page 1
3.
:|()
No.
| . |- |-
: |-
|-
:
:|-
-- No, |× 邯郸
歴
!明
 
 

|
: 榭
-F
556 fu 360
エ

Page 2


Page 3
6nu Tig. O 1160
வி.கெளர்
நனவிலி ட விபுலானந் குருக்கள் மட்டக்க

றையும் தனுளர்
ரிபாலன்
பதிப்பகம், தர் வீதி, LDLiid,
களப்பு.

Page 4
நூலின் பெயர்
6ᎧI6ᏡᎠᏑᏴ
ஆசிரியர்
பதிப்புரிமை
பக்கம்
எழுத்து :ー
தாள் :ー
வெளியீடு :ー
அச்சகம் :ー
அட்டை
பிரதிகள்
முதல் பதிப்பு ;ー
அன்பளிப்பு
வானுறையும் தெய்வத்தினுள்.
நாடகம்.
வி.கெளரிபாலன்.
ஆசிரியருக்கு.
xiii--21
10 பொயின்ட்.
17
t நனவிலி பதிப்பகம், விபுலானந்தர் வீதி. (G5(Cb35356îT LDLLD, மட்டக்களப்பு.
ரெயின்போ மினிலாப்,
113, வித்தியாலயம் வீதி, திருக்கோணமலை. 026-23078,27498
10-09-2002- மட்/களுதாவளை ம.வி நடைபெற்ற முரீ ராமகிருஷ்ண பண்பாட்டரங்கில் இந் நாடகம் அளிக்கை செய்யப்பட்டபோது பதிவுசெய்யபப்ட்ட சில காட்சிகள்.
1OOO.
15 - தை - 2003.
40/=

RAMAKRISHINA MISSION (Ceylon Branch)
Ashrama & Children's Homes, Ramakrishnapuram, Batticaloa. Sri Lanka.
a 065-22752
வாழ்த்துச் செய்தி
y\ G\\sŠ\Gù\ WWAGS)\x)\\ \ \Gsù\GS)\\ S) 6ù(soè(sò o\Qöy)\ös x\\ Q6\\YSW33 \sÖ W\od\bGSGSSw G\GS\GS)GS\ QsN6\\\)$6\) giv (Siy QS Gls\SYW 66sW 96(GS6SV BWy}\ Kèỳs\\\ \wiv yon $d\\ \swGWWW , Y\W\\ \ SÐASAGOGOA \Š ESWWy W qrTTLLiLiqO OLGLLTTqOLOL OTLLqOLSLL S qqqLcLLL SOgLL \\GSINGIDA A (VyọVQIGIOADWAWES, GQGANGIN W NIDòặ\fÀGWYDGOVA. SÐASKRA A Đ_(\56\\\Gå\ ặW\\\\e, \\SSồ\ằv\ G\\\Q6\\\ G\ \\ặbị\sổ\\\\e, 9) \\ \\\ seAsñ\\ßeb (èibW\VbQ\\\\ öb - geAöß\\\ e\S)6ñ\W)\ Q\ \(\V\Ä) TqiqLLLOiOLOLTTiLLA OTLLO SgTTTLT STLiiLOiLiiLiLLLLLLL 3WWWQysi\\\\\.
j\b S\QassW\\ \Weos\ e\s\\ asov ,\\\\\ SIÐAGÖNGIDIGAWA W Ŵ\GA GA\W\QSMAGÒNIAÐFESA' ĠAGNÒ SÐADEGWAY SIDGW qALLLqiA qLAAAAALL S Liq TLTLAA AqAqAqqTTTLL OTLLAL tỷGO) GOV\\ \\_sòV WDW \ G D LVESTMASÒ SÐAGD\DặÐASV GWWW. ATLqLOTTOLOLiLiOiLLLLLLL LS LOiLiqLkOTTOLL ccLLL TLOLTTALqT V s\o 9AGS)\Oy ASV GV A. No V \ V 6) QSAy S\ay \OW 8, Q S\\sW\s\\yog A SASS) SS\s\\\\SS\s\\i) v Vyvvosy \ \) gyoyoS6YW \o Q\ \y ogYSsvoo\oov \\லுத்துகிலுேல்\
مواد، s1ى r ما نوم د یه إحدى أكها n، لدىk
do i - ll - h o o A

Page 5
வானுறையும் தெய்வத்தினுள்
அணிந்துரை
இந்தியா, தாய்த்தெய்வ வழிபாட்டையும் தனது தொல்வழிபாட்டம்சங்களில் ஒன்றாகக் கொண்டது. இதற்கு மானிடவியல் வரலாற்று அடிப்படையில் பல்வேறு வியாக்கியானங்கள் செய்யப்பட்டாலும், வாழ்வின் பிரிக்க முடியாத பாகங்களாக அமையும் ஆண், பெண் நிலைகள் சமய வழிபாட்டில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம். என் தெய்வம், உன் தெய்வம் என்ற வேறுபாடுகள் அழுத்தம் பெற்ற போது முக்கியமாக சிவ வழிபாடு, வைஷ்ணவ வழிபாடு என்ற ரீதியிலான வேறுபாடு உருவாகிய போது ஹரி - ஹர வடிவம், சங்கர - நாராயண வடிவம், சிவ - ராம் வடிவம் என்றெல்லாம், இரண்டும் ஒன்றே என்ற கருத்து அழுத்தம் பெறுவதைக் காண்கிறோம். இது போலவே சக்தி வழிபாடு சிவ வழிபாடு தனித்தனியாக முதன்மை பெற்றபோதும் இரண்டும் வேறு வேறல்ல எனக் காட்ட சிவ - சக்தி வடிவம் அர்த்த நாரீஸ்வர வடிவமாகவும், வைஷ்ணவத்தில் ராதா - கிருஷ்ண வடிவமாகவும், லஷ்மி நாராயணனாகவும் போற்றப்படுகிறது. இங்கே ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். வேறு வேறு உருவங்களின் சேர்க்கையாக அர்த்த நாரீஸ்வரம் இருந்தாலும் அதனுள் நின்ற பேருணர்வு ஒன்றேதான், வேறல்ல என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்து சமயங்களின் தெய்வக் கொள்கையில் இரண்டு நிலை அழுத்தப்படுகிறது. ஒன்று தெய்வத்தை நிர்குணமாகப் பார்ப்பது, குணங்களுக்கு அப்பாற்பட்டது. இன்னுமொன்று பரம்பொருளாகிய நிர்குணம் குணங்களுடன் கூடி நிற்கும் சற்குணம் அல்லது சகுண வடிவம் ஆகும். மேலே குறித்த சொற்பிரயோகங்கள் அத்வைத வேதாந்திகளாலும், விசிஷ்டாத்வைதிகளாலும் கையாளப்படுவது சைவ சித்தாந்தம் இதனையே இறைவனின் சொரூப நிலை என்றும் தடத்த நிலை என்றும் குறிப்பிடும். ஆனால் சைவ சித்தாந்தம் அவதாரக் கொள்கையை ஏற்பது இல்லை. ஆனால் வேதாந்திகளும், விசேடமாக விசிஷ்டாத்வைதிகளும் அவதாரக் கொள்கையை ஏற்கின்றனர். இந்த அவதாரக் கொள்கையை ஏற்பதில் முக்கியமான ஒரு அம்சம் இறைவனை மனித நிலைப்படுத்துவது ஆகும். இங்கு மனித நிலைப்படுத்துவது என்பதிலும் நாம் கவனிக்க வேண்டியது பரம் பொருள் மனித உருவில் வந்ததே தவிர, அது
erra 7— 111 -

ss.,6ha56IIrfuTGA)siä, தனது இயல்பேயான நிர்க்குணமாகிய பரம் பொருளேதான் என்பதாகும். வியவகாரிகம் எனப்படும் மாற்றத்திற்குள்ளாகும் சம்சார உலகில், என்றும் மாறாத உண்மையானது எடுத்து விளையாடும் தோற்றம்தான் அவதாரம், "மாற்றமாம் வையகத்தில் வேவ்வேறே வந்தாலும்" "மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனாக”வே நிற்பது பரம்பொருளின் தன்னியல்பு மேலே குறித்தவை மாணிக்கவாசகரிடம் இருந்து நான் கையாண்ட சொற்றொடர்கள். இதிலே சைவ சித்தாந்தம் அவதாரக் கொள்கையை ஏற்பதில்லை என்றாலும் மாணிக்கவாசகரின் "மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே தேற்றனே" என்ற சொற்றொடர் அவதாரக் கொள்கையை வலியுறுத்தி நிற்பதாகவே கருத இடமுண்டு. குருந்தமரநிழலின் கீழ் மாணிக்கவாசகருக்கு திருப்பெருந்துறையுறை சிவன் குருவாயெழுந்தருளினான் என்றால், அதே சிவன் அவதாரமாகி வந்து அலகிலா விளையாட்டுடையவனாகிச் செல்லமாட்டான் என்று எப்படி மறுத்துக் கூறலாம்.
பரம்பொருள் அலகிலா விளையாட்டுடையது என்றால் அதன் விளையாட்டுகளில் ஒன்றுதான் அவதாரம் என்கின்ற பேரிறக்கம் அல்லது திருவருகை, ஆனால் அதனுடைய திருவருகை வெறும் விளையாட்டுக்கல்ல. அதற்குப் பின்னால் ஒரு தொடர் வளர்ச்சி நோக்கம் உள்ளது. அவ்வக் காலத்தின் தர்ம வளர்ச்சிக்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும் ஒரு ஓட்டத்தை, உந்து சக்தியை உண்டாக்கி எல்லாத் துறைகளிலும் அதன் வெளிச்சத்தை ஏற்றி வைப்பதே பரம் பொருளின் திருவருகையின் நோக்கம். இதனால் தான் இயேசுநாதர் “நிறைவு செய்யவே நான் வந்தேன்’ என்று குறிப்பிடுகிறார். நிறைவு செய்யவருகின்றதாகிய ஒன்று தன்னிறைவில்லாத ஒன்றாக இருக்கும் நிலையில் எதை நிறைவு செய்யும்? எனவே தான் நிறை பொருளாகிய ஒன்றே சிறுத்திருக்கும் மனித அறிவை, இயல்பை, உணர்வை பேரறிவிற்கும், பேரியல்பிற்கும்,பேருணர்விற்கும் இட்டுச் செல்லும். அவ்வாறாக சிறிய வாழ்வை பெரிய வாழ்வாகப் பெருகச் செய்ய வருகை தரும் பெரிய நிறைபொருளின் வருகை திருவருகை எனப் பெயர் பெறுகிறது.
இவ்வாறாகத் திருவருகை நிகழ்த்தும் இறைவன்.
குறிப்பாக இந்து சமயத்தின் ஒரு பிரிவாகக் குறிக்கப்படும் வைஷ்ணவ
சம்பிரதாயத்தின் படி காக்கும் தெய்வமாகிய விஷ்ணு அல்லது
திருமால் யுகந்தோறும் அவதரிப்பவராகக் குறிக்கப்படுகிறார். திருமால் G- 1V )

Page 6
வானுறையும் தெய்வத்தினுள்
பத்து அவதாரங்கள் தான் எடுத்ததாகவும், இதில் இறுதியான கல்கி அவதாரம் இனி நிகழ விருப்பதாகவும் சில புராணங்கள் குறிப்பிடும். சில புராணங்கள் முப்பத்திரண்டு அவதாரங்கள் எனவும் குறிக்கும். ஆனால் இதிலே புராணங்களைச் சான்று காட்டுவதைவிடவும் அவதாரப் புருஷராகக் குறிக்கப்படும் பூரீ கிருஷ்ணரின் கீதா வாக்கியத்தை சுருதியாகக் கொள்வதே தக்கது. கீதையிலே பூரி கிருஷ்ணர் "நல்லோரைக்காக்கும் பொருட்டாக யுகந்தோறும் நான் அவதரிக்கிறேன்" என்றுதான் குறிப்பிடுகிறாரேயன்றி அதற்கொரு கணக்கீடு வைத்துக் குறிப்பிடவில்லை. இதிலே இரண்டு விடயங்களை நாம் கவனத்திற்கு எடுக்க வேண்டும். “நான்” என்று முரீ கிருஷ்ணர் குறிப்பிடுவது புறவுருத் தோற்றமாகிய வடிவ ஆளுமையைக் குறிப்பது அல்ல. குணங்களுக்கு அப்பால்பட்ட எல்லையற்ற பரம் பொருளைக் குறிப்பது. “மூன்று குணங்களையும் நீ கடந்தவனாகுக” என்று பார்த்தீபனுக்கு உபதேசிக்கும் போதும், "தர்மம்-அதர்மம் என்ற இருமை நிலைகளையும் தாண்டி என்னைச் சரணடைவாயாக’ என்று குறிப்பிடும் போதும் குணங்கள் கடந்த நிர்குணப் பரம்பொருள் நிலையையே சுட்டுகிறார். எனவே குணங் கடந்ததாகிய பரம் பொருள் கல்யாண குணங்களுடன் கூடிய ஈஸ்வர வடிவமாகவும், மனித உருவெடுத்து விளையாடுவதாகவும் வரும்போதும், தான் வரித்த உருவம், குணம், அதற்குச் சொந்தம் கொண்டாடும் மதம் என்ற நிறுவனம், எல்லாவற்றையும் தாண்டிய பரம் பொருள் என்ற நிறைநிலை நோக்கு நம்மை ஆற்றுப் படுத்தவே "வருகை புரிகின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்னுமொன்று,யுகந் தோறும் நான் அவதரிக்கிறேன்’ என்பதிலும், எங்கெங்கே, எப்படி, எவ்வெவ்வுருவில் அவதரிப்பேன் என்பவற்றைத் தாண்டி ஒவ்வோர் யுக வளர்ச்சிக்கும் (யுகம் என்பதை இங்கு நால் யுகங்களாகக் குறிப்பதாய்க் கருதாமல் ஒவ்வோர் காலகட்ட மாற்றங்களிற்குரிய இடை வெளியாகக் காண்பதே பொருத்த முடையது) ஊடாக மனித மனம் நிறைவைத் தேடி நகரும் தேடலுக்கான உந்து சக்தியாகி வருவதையே குறித்து நிற்கிறது. மனித மனத்தின் வளர்ச்சியென்றும் மட்டுப்படுத்தாமல் பரிணாமத்தின் கீழ் நிலையில் உள்ளவற்றையும் மேம்படுத்துவதும் அவதாரவருகையின் நோக்கமாகும். இவ்வாறாக உயிரினங்களின் படிவளர்ச்சிக்கான உந்துகையின் ஒட்டத்தை, ஒரு கால வரலாற்றோடு முற்றுப்படுத்தி அல்லது இறுதிப் படுத்துவது பிழையாகும். அவ்வாறான பார்வை காலவரலாற்றோட்டத்தை, இடையீடு அற்ற ஓட்டத்தை, குறித்தவொரு உன்னதமான வருகையோடு கத்தரித்து விடுவதாகும். அத்தோடு குறித்த
G-- V -

வி.கெளரிபாலன் கோட்பாட்டிற்குள் மட்டும் அடைத்து விடுவதும் தவறாகும். அவ்வாறு காலகட்டத்திற்குள்ளும், கோட்பாட்டிற்குள்ளும் அடைத்து, வளர்ச்சி என்பது மட்டுப்படுத்தப்படும் போது, அதையும் உடைத்து, ஓட்டத்தை திறந்து விடுவதற்காகவே ஓர் அவதாரத்தின் வருகையும் அவரைச் சார்ந்த சீடர்களதும் வருகையும் ஒரு மாற்றத்திற்கான இயக்கமாக உருவாகிறது.
இவ்வாறாக ஒரு தொடர் வளர்ச்சியை
முன்னெடுப்பதான நோக்கத்தைக் கொண்ட அவதாரத்தின் அல்லது திருவருகையின் ஒரு வருகையாகவே பூரீராமகிருஷ்ணரின் வருகை நிகழ்கிறது. முரீ ராமகிருஷ்ணரின் வருகையுடன் அன்னை சாரதாதேவியாரதும், விவேகானந்தர் உள்ளிட்ட பலசீடர்களதும் வருகையும் சேர்ந்தே நிகழ்கிறது. பூரீ ராமகிருஷ்ணரதும் அன்னை சாரதா தேவியாரதும் வருகை அர்த்தநாரீஸ்வரம் எனக் கொண்டால், குரு தேவரதும் சீடர்களதையும் சேர்த்து ஈஸ்வர கோ(ஷ்)டி என்றழைக்கலாம். பூரீ ராமகிருஷ்ணர் தனது சீடர்களைப் பார்த்து உங்களிற் சிலர் இயேசு நாதரின் சீடர்களாகவும் இருந்தீர்கள் என்று குறிப்பிடுவதன் மூலம் ஒன்றை நாம் அவதானிக்கலாம். அதாவது இனம், மதம், இடம், காலம் தாண்டி எவ்வாறு ஒரு மனித குலத்தின் தொடர்வளர்ச்சிக்கான மறைமுக ஒட்டம் இடையறாமல் தொழிற்பட்டு வருகிறது என்பதே அது. எனவே இந்த இடையறா ஒட்டத்தின் இலக்கு என ஒன்றை நாம் குறிப்பிடுவதாயின் இனம், மதம், நாடு என்ற இக எல்லைகள் தாண்டிய ஒன்றாகத்தான் இருக்கும். அதனால்தான் ஸ்வாமி விவேகானந்தர் பூரீ ராமகிருஷ்ண அவதாரத்தின் குரலாக மேற்கில் ஒலித்தபோது அங்குள்ள கிறிஸ்தவ மதத்தவரிடத்திலெல்லாம் புதிய யுகத்தின் குரலாக அது எதிரொலித்தது. ழரீ ராமகிருஷ்ணர் மதங்கள் தாண்டிய பேரனுபவம் உடையவராயிருந்ததால் மதங்களின் இணைப்பை ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் சகோதரத்துவத்தின் குரலையே விவேகானந்தள் சர்வதேச அரங்கில் எழுப்பினார். இதனால் பூர் ராமகிருஷ்ண அவதார வருகையின் மகிமை என்பது மதங்கள் தாண்டிய, மேற்கு - கிழக்கு என்ற பேதம் தாண்டிய மெய்ம்மையை புலப்படுத்தி நிற்பதில் தான் அடையாளம் காணப்பட வேண்டும்.
இந்தியாவின் மறுமலர்ச்சி அல்லது புதிய யுகம் என்பது பூரீ ராம கிருஷ்ணயுகம்_என்பதாகவே அமைகிறது. மரீ
HY wi-Y =S Vi-X

Page 7
வானுறையும் தெய்வத்தினுள் ராமகிருஷ்ணரின் அல்லது அவரும் அவரது ஈஸ்வர கோடிகளின் வருகை என்பதே புதிய யுகத்தின் மாற்றங்களிற்கான வாசலைத் தட்டித் திறக்கின்ற வருகையாகவே அமைந்தது. பூர் ராமகிருஷ்ணரின் வருகையினோடு எழுகின்ற ஆன்ம ஒலியலைகளின் ஈர்ப்பில் வங்காளத்தின் கற்றோர் தேசமே அள்ளுண்டு மொய்த்துக் கொள்கிறது. பல்கலைக்கழக பட்டதாரிகளும், அறிவு ஜீவிகளும், கலைஞர்களும், சாதாரண நிலையிலுள்ள பக்தர்களும் எனப் பல்லோரும் கற்றறிவில்லாத ஒரு தற்குறி போன்று தோற்றமளித்த பூரீ ராமகிருஷ்ணரில் எவ்வாறு ஈர்ப்புக் கொண்டனர் என்பதுதான் பரம இரகசியம். ரகசியங்களின் ரகசியமான மறைஞான ரகசியம் அந்தத் தற்குறித் தன்மைக்குப் பின்னால் ஒளிவிட்டுக் கொண்டிருந்ததே அத்தகைய ஈர்ப்புகளின் பரம ரகசியமாகும். இந்தப் பரம இரகசியத்தின் பிரிக்க முடியாத இயங்குபாகமாகத்தான் அன்னை சாரதா தேவியார் இருந்தார். இவரும் கற்றறிவில்லாத ஒரு கிராமத்துப் பெண் போலவேதான் இருந்தார். ஆனால் கிராமத்துப் பெண் போன்ற தோற்றமாகிய களிம்பை நீக்கி பொன் போல் ஒளிரச் செய்தவர் பூரீ ாமகிருஷ்ணர், தேவி உபாசகராக இருந்த பூரீ ராமகிருஷ்ணர் அன்னை சாரதா தேவியாரையும் சத்தியாகவே கண்டது மட்டுமல்ல தேவிக்குரிய பூசனைகளையும் செய்து அம்மா என்றே அன்பினாலாய புனித வார்த்தைகளால் நீராட்டினார். கங்கையில் இருந்து ஒரு புனித விக்கிரகத்தை மீட்டெடுப்பது போல இந்த உலகமே அம்மா
என்றழைக்குமாறு புனித அன்னையாகக் கண்டெடுத்துக் கையளித்தார். முறி ராமகிருஷ்ணரின் சீடர்கள் வயதால் தம்மை ஒத்திருந்த அன்னை சாரதா தேவியாரை குரு தேவரின் மகா சமாதிக்குப் பின்னரும் அன்னை பவதாரணியாகவே போற்றிப் பூசித்தனர். சாரதா தேவியாரும் அதற்கேயுரிய தகைமை கொண்டு விளங்கினார். ஒரு பரமதாயகவே வாழ்ந்து காட்டினார்.
பூரீ ராமகிருஷ்ணரும் சாரதாதேவியாரும் வாழ்ந்து காட்டியது என்பதே ஒரு பூரண தெய்வீக வாழ்வே தான். அர்த்தநாரீஸ்வரம் என்பதற்கான புதிய வாழ்வியல் அர்த்தத்தைப் புனிதப்படுத்தி நின்றவர்கள்தான். “இல்லாளும் இல்லறத்தவனும் இறைவனுக்கு ஒக்க நடப்பாராயின் அதுவே தெய்வீகமாம்.” என்ற குருதேவரின் வாக்கிற்கு அவர்கள் தாமே உதாரணமாய் நின்றார்கள். இல்லறம் என்பதை துறந்து விடாமல் அதையே இக்காலத்தில் பிசிறின்றிய ஆன்மீக வாழ்க்கைக்குரிய பாதையாகவும் காட்டி, இல்
-V1

வி.கெளரிபாலன் வாழ்க்கையை ஆமோதிப்பதன் மூலம் சமூக வாழ்க்கைக்குரிய அன்பு மார்க்கமாகவும் காட்டி நின்று புதிய யுகத்தின் தோற்றுவாயாகி நின்றார்கள். ஆணும் பெண்ணுமாய் இணைந்து (பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே) நின்ற ஆன்மீக வாழ்வின் அர்த்த நாரீஸ்வரம் ஒரு புதிய இணை வடிவமாக பின்னால் அமைகிறது. இல் வாழ்வோராக இணையாமலேயே ஆன்மீக வாழ்வின் இணை வடிவங்களாய்த் திகழ்ந்த பூரி அரவிந்தரும், அன்னையும், ஸ்வாமி பூர் ரமதாஸம் அன்னை கிருஷ்ணபாயும் என விரிகின்ற தொடர்ச்சியின் பிந்திய இல்வாழ்விலும் இணை பூத்த வடிவங்களாக சர்வமத சங்கத்தின் ஸ்தாபகரான எம் குரு தேவர் பூரீ நந்தகோபால கிரியும் அன்னையும் திகழ்ந்தனர். முறி நந்த கோபால கிரி அவர்கள் மகாசமாதி எய்திய பின்னர் அன்னை இன்னமும் சர்வமத சங்கத்தின் வழிகாட்டியாக இருந்து வருகிறார்)
மேற்கண்டவாறாக ஆன்மீக வாழ்விலும் பெண்கள் ஆண்களோடிணைந்த பிரதானமான பங்காளிகளாக மாறும் சூழலை ழரீராமகிருஷ்ணமிஷனின் வருகையோடு நாம் புதிய யுகத்தின் அடையாளமாகக் குறித்துக் கொள்ளலாம். முறி இராமகிருஷ்ணர் மகா சமாதி எய்திய பின்னர் அன்னை சாரதா தேவியாரின் பங்களிப்பென்பது பன்முகப்பட்டதாயிருந்தது. குரு தேவரின் சீடர்களுக்குப் பரம தாயாகவும், மிஷனோடும் தொடர்பேயற்ற தம்மோடு அன்பு பூண்ட சாதாரண மக்களுக்கும் தாயாகவும், பல்வேறு உலக அபிலாசைகள் கொண்ட இனபந்துக்களிடையேயும் அவர்கள் தரும் இடர்களுக்கு நடுவிலும் ஒரு சுமைதாங்கியாக பொறுமையின் வடிவமாகத் திகழ்ந்த அன்னை மேற்கிலிருந்து விவேகானந்தரின் சீடர்களாக, பக்தர்களாக சமூக சேவகர்களாக வந்தோர்க்கெல்லாம் ஆசியும், அன்பும், தீட்சையும் வழங்கும் ஆன்மீக குருவாகவும் அன்புத் தாயாகவும் திகழ்ந்தார். எண்ணிறந்த மக்களுக்கு தமது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல், அவர்களின் கர்மங்களை வாங்கிக் கொண்டு ஞான தீட்சை வழங்கி, அவர்கள் கடைத்தேறுவதற்காக, தான் துன்பங்களைத் தீயாகத் தாங்கி நோற்று நோன்பிலும் சுடர்விட்டொளிர்ந்தவர் தூய அன்னை சாரதா தேவியார்.
இவ்வாறான அன்னையின் பெருமையை
பிறருக்காக அவர் எய்திய உபத்திரவங்களை பொறுமையின் நடுவிலும்
தாய் காளியின் கணலொத்த வீரியத்தை, கணத்தினில் காட்டி, EVul>

Page 8
வானுறையும் தெய்வத்தினுள் மனத்தகத்தில் கிரிஷ் எய்திய மன நோயை அதிர்ச்சி வைத்தியத்தினால் வீழ்த்தியதையும் இங்கே கெளரிபாலன் ஒரு நாடகச் சித்திரமாகத் தீட்டியுள்ளார். நவீன இலக்கியப் படைப்பாளிகள் தீண்டுவதற்கு விரும்பாத ஒரு கருப் பொருளைக் கையாண்டதன் மூலம் ஆன்மீக ஆழத்தையும் காட்டத் தன்னைத் திறந்து வைத்துள்ளார். தமிழின் நவீன படைப்பாளிகளில் ("கடலும் கரையும்’ என்னும் சிறுகதைத் தொகுதியில்) மு.பொன்னம்பலம் முரீ இராமகிருஷ்ணரதும் அவரது குருவான தோட்டாபுரியினையும் பாத்திரங்களாக வைத்து ஒரு சிறு கதையை எழுதியதற்குப் பின்னால், கெளரிபாலன் தான் பூரீ ராமகிருஷ்ணர்-அன்னை சாரதாதேவியாரின் ஆன்மீக வாழ்வின் சில அம்சங்களை இந்த நாடகத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார். இந்த நாடகம் ஒரு கற்பனையல்ல. அன்னை சாரதா தேவியாரின் விரிவான வாழ்க்கை வரலாறு என்னும் நூலைத் தழுவியே அன்னை சாரதாதேவியாரின் மீதான ஒரு கவன ஈர்ப்பைச் செய்யுமுகமான வாழ்க்கைப் பதிவுகள் தான் இங்கு நாடக வடிவமாகிறது. இங்கே கெளரிபாலன் அழுத்துகின்ற சில விடயங்கள் மிகவும் கவனத்திற்கெடுக்கப் பட வேண்டியன. அன்னை சாரதாதேவியாரை வழிபாட்டுக்குரிய பிரதிமையையாக மட்டும் கவனிக்கப்படுவதை மீறி அவரை ஒரு வாழ்வியலின் அர்த்தத்தை முழுதுரைத்து சமூகம் விதிக்கின்ற சடங்காசாரத்திணிப்புக்களை துணிவுடன் எதிர் கொள்பவராகவே காண்கிறார். இந்த இடத்திலே தான் விவேகானந்தரின் சிஷயையாகிய நிவேதிதாவையும் நாம் நினைவில் கொள்ள வேண்டிய நிலை வருகிறது. இந்தியாவில் பெண் கல்வியின் தேவையை வலியுறுத்தி பெண்களிற்கான கல்லூரிகளையும் நிறுவிய சகோதரி நிவேதிதா பின்னர் முரி அரவிந்தர் போன்றோருடன் தொடர்பு கொண்டு தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான பணிகளிலும் இணைந்து முன்னிற்கிறார். இங்கேதான் அன்னை சாரதாதேவியின் ஆன்மீக ஒளியில் சுடரேற்றிக் கொண்ட புதிய விழிப்பெய்திய பெண்மையையும் நாம் நினைவு கூர வேண்டியுள்ளது.
"வானுறையும் தெய்வத்தினுள்’ என்பது கெளரிபாலனின் இந் நாடகத்தின் தலைப்பு. இந்தத் தலைப்பு “வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த” அன்னை “வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுபவரா” யிருப்பதை மறை முகமாய் உணர்த்தி வள்ளுவரின் குறளுக்கு இலக்கணமாய் வாழ்ந்த அன்னையின் வாழ்க்கையை எம் முன்னே வைக்கிறது. தொடக்கத்திலே பாரதியின்
C-X-

டவி.கெளரிபாலன் பாடலோடு நாடகம் தொடங்குகிறது. பாரதி ஒரு ராமகிருஷ்ண பாரம்பரியத்தில் வந்தவன். நிவேதிதாவின் சீடன். பாரதிக்கு பெண் விடுதலையின் அவசியம் பற்றி வலியுறுத்தியவர் நிவேதிதாவே. எனவே பாரதியின் பாடலுடன் இந் நாடகம் ஆரம்பிப்பது ஒரு பொருத்தப்பாடுடன் தான் அமைகிறது.
அன்னை சாரதாதேவியாரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்துதான் பல விடயங்களை கெளரிபாலன் தெரிவு செய்திருக்கிறார் என்பதுடன் வரலாற்றில் உள்ளபடியே புனைவுகள் ஏதும் இன்றி கையாண்டிருக்கிறார் என்பதால் நாடகமாகவும், மெய்மையோடும் இது திகழ்கிறது. ஆயினும் சம்பவங்களின் தெரிவு இதில் ஆசிரியரைச் சேர்ந்ததாக உள்ளதால் தெரிவு எமது காலத்திற்கும் பொருந்தி வரக்கூடியதாகவும் அதே சமயம் ஒரு சில சம்பவங்களே ஆயினும் தெரிவின் தன்மையினால் அன்னை சாரதா தேவியாரின் முழுமைக்குரிய ஆளுமையை அடையாளப்படுத்தி நிற்கிறது. ஒரு வாழ்க்கை வரலாற்றை மேடையாக்கம் செய்யும் போதோ, திரைப்படமாக்கும்போதோ, மெய்விவரணப்படுத்தும்போதோ மிகவும் கவனிக்கப்பட வேண்டியது தேர்ந்தெடுக்கும் சம்பவக் கீற்றுகள் குறித்த வரலாற்றுக்குரியவரின் வாழ்க்கைக்கான வெளியை வானத்து மின்னல்கள் போல் கோடிழுத்துக் காட்டுவதாயிருக்க வேண்டும் என்பதாகும். இதிலே காட்சி-1 அன்னை முர் சாரதாதேவியார் பூரீ ராமகிருஷ்ணரே வணங்கும் தகைமையுடையதான பண்பைக் கொண்டவராகக் காட்டுவதும், அன்னையை விதவைக் கோலத்தை உடையவராக்கிப் பார்க்க விரும்பும் சமூகத்தின் சடங்காசார கீழ் மனோபாவங்களையும் அதை அவரே அலட்சியம் செய்து மல்லுக்கட்டாமல் ஒதுங்குவதும், பின்னர் மனநோயுற்ற கிரிஷ்சுக்கு எதிர்த்தாக்குதல் நிகழ்த்தி மாறி மாறி அறைவதும், இந்த அறை மோசமான சமூகச் சடங்காசார பித்த மனோபாவத்தின் மீது விழுவது போல் காட்டுவதும், அன்னையின் சகோதரர்கள் சொத்துடைமையின் மீது கொண்ட மோகங்களைக் கண்டு அசூசை கொள்வதும், மதத்தாலும், இனத்தாலும் வேறுபடுத்திப் பார்க்கப்படும் அம்ஜன் என்னும் முஸ்லிமாகிய ஏழையை அன்பு கொண்டு உபசரிப்பதும், கள்வனாயிருந்த போதும் அவனை வெறுத்தொதுக்காதமையும், வெறுப்புடன் உணவிடும் நளினியிடம் தனது மகனாகிய சரத்தும் போல (மகன் என்று குறிப்பிடுவது பூரீ ராமகிருஷ்ணரின் சீடராகிய சரத் என்னும் ஸ்வாமி சாரதானந்தாவை) ஏழை முஸ்லிமாகிய அம்ஜனும் தனக்கு மகனே

Page 9
வானுறையும் தெய்வத்தினுள் எனக் குறிப்பதுவும், இறுதியாக பலரும் தமது தகுதிக்கு மீறியவாறு அன்னையிடம் தீட்சை பெற்றுச் செல்வதை 'அம்மா' என்றழைத்தவுடன் உருகிப் போகும் தாய்மையின் கருணையாகக் காட்டுவதும் என இவை எல்லாம் அன்னையின் எல்லையற்ற, ஆளுமை கடந்த ஆளுமையினை கண் முன்னே கொண்டு வருகின்றன.
கெளரிபாலனின் இந்த நாடகத்தை வாசிப்புக்குட்படுத்திக் கொண்டிருக்கும் போது றி ராமகிருஷ்ணரின் சீடர்களுள் ஒருவராகிய நாடக எழுத்தாளரும் கலைஞருமான கிரிஷ் நினைவு எனக்கு வந்து போனது. அவரால் எழுதப்பட்ட பல புராண இதிகாச வரலாற்று நாடகங்களை பூர் ராமகிருஷ்ணரே பார்த்துப் பாராட்டி இருக்கிறார். அதே போல பூரீ ராமகிருஷ்ணரினதும், அன்னை சாரதாதேவியாரதும் வாழ்க்கைச் சம்பவங்களைக் கொண்டு பின்னப்பட்டு எமது காலத்திற்குரியதான பார்வைக்கும் பொருந்தத்தக்கவாறு (அம்ஜன் என்ற கள்வனாக பிறரால் ஒதுக்கப்படும் முஸ்லீம் மகனை தன் மகன் போலவே ஆதரிக்கும் அன்னை தமிழ் - முஸ்லீம் என்ற வேறுபாட்டைத் தாண்டிப் பார்க்க வேண்டிய அன்பின் தூண்டுதலை எமக்கு உணர்த்தும் வகையில்) கையாளப்பட்டுள்ளது. அத்துடன் கணவனை இழந்த பெண்களைக் கைம்மைக் கோலத்துடன் காண நினைக்கும் அதே சமயம் அந்தக் கோலத்திற்குரியவளின் முழுவியளமும் ஆகாது எனவும் நினைக்கும் சமூகத்தின் இரட்டை மனோநிலையை அன்னை சாரதா தேவியார் மனதிற்குள் எடுக்காது ஊதி விடும் தன்மையும் இன்றைய எமது சூழலுக்கும், நிலைக்கும் பொருத் தப் பாடுள்ளதாகவே உள் ளது. இத்தகைய பொருத்தப்பாடுகளையும் கருத்தில் வைத்து சம்பவங்களை நல்ல தேர்வுகளுடன் கையாண்டு நாடகமாக்கிய கெளரிபாலனை மனமுவந்து நான் பாராட்டுவதுடன் அவரது சகல கலா முயற்சிகளிற்கும், நல் வாழ்விற்கும், குருதேவரதும், அன்னையினதும் ஆசீர்வாதம் கிட்ட வேண்டும் என வேண்டியும் அமைகிறேன்.
சு.வில்வரெத்தினம், திருக்கோணமலை 12.11.2002,
we-PN - X1

முன்னுரை
“அன்னை பூரி சாரதாதேவி விரிவான வாழ்க்கை வரலாறு என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்ட இந் நாடகமானது, சாரதாதேவி அவர்களின் சில ஆளுமைகளை கவன ஈர்ப்புச் செய்கிறது. சாரதாதேவி அவர்கள் இன்று வழிபாட்டுக்குரிய ஒருவராக மாத்திரமே கவனிக்கப்படுகிறார். ஆனால் இவர் வாழ்ந்த காலத்தில் தான் வாழ்ந்த சமூகத்தின் வரட்டுத்தனங்களையும், கட்டுப்பாடுகளையும் ஒரு புரட்சி என்று இல்லாமலே மீறல்கள் செய்தார். இதனால் பல துன்பங்களை சந்தித்தார். அவற்றை தாய்மை என்னும் தனது தனித்துவமான ஆளுமைப் பண்பு மூலம் எதிர் கொண்டார். வாழ்தல் மீதான புதிர்களையும், பிரச்சினைகளையும் கூர்மையான அவதானிப்பின் மூலம் தன் பிரச்சாரங்களில் தெளிவு படுத்தினார். ஆளுமை மிக்க ஒரு பெண்மணியின் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள் மூலம் இந் நாடகமானது அவரது தனித்துவமான பண்புகளை அடையாளப்படுத்துகிறது. இந் நாடகம் எழுத்துருப் பெறுவதற்கும், இந்த நாடகப் பிரதி நூல் உருப்பெறுவதற்கும், தூண்டுதலாக இருந்த திரு. சி.கணேசமூர்த்தி அவர்களுக்கும், “அன்னை பூரி சாரதாதேவி விரிவான வாழ்கை வரலாறு” என்னும் நூலைத் தந்துதவியதுடன் “வாழ்த்துச் செய்தியும்" தந்த சுவாமி அஜராத்மானந்தா ஜீ அவர்களுக்கும், அணிந்துரை தந்த சுவில்வரெத்தினம் அவர்களுக்கும், இந் நாடகத்தை பின்னணிப் பாடல்களுடன், அரங்க அளிக்கை செய்த கீதாவுக்கும் இந் நாடகத்தில் பங்குபற்றிய குருக்கள்மடம் சாரதா மணி கீத பஜனைக்குழு மாணவ, மாணவிகளுக்கும், இந்நூலை அழகுற அச்சிட்டுத் தந்த ரெயின்போ மினிலாப் அச்சகத்தினருக்கும் எனது மனமுணர்ந்த நன்றிகள்.
வி. கெளரிபாலன்,
16.11.2002.

Page 10
வானுறையும் தெய்வத் ar
சமர்ப்பணம்
வாழ்தண் அறத்லத
தம் வாழ்விலுகு
മffകg ബ'യ്ക്കു
ബ്രഷ്ട്രമ്മമീഴ്ക്ക്നീഡ്വൈ. ര§മ്മഗ്,ബഗ്,ബീബ)
ബൈബ്രി.
(9മഗ് ബ്ള്യുീഗുമ്മ)
- Tra
XC

asTL if - I
(திரை - பாரதியார் மகா சக்தி வாழ்த்து பின்னணியில் இசைக்கத் தொடங்க திரை மெல்ல விலகத் தொடங்கும். அரங்கின் நடுவில் காளியின் படம் இருக்கும். மறுபுறம் பூரி ராமகிருஷ்ணரின் படமும் இருக்கும் அது பின்னர் பயன்படுத்தப்படும். இப்போது காளியின் படமே அவைக்குத் தெரியும்-படம் ஒரு கதிரையிலோ அல்லது ஸ்ரூலிலோ இருக்கலாம். பூரீ ராமகிருஷ்ணர் ஆழ்ந்த தியானத்தில் காளியின் படத்துக்கு முன்னால் அமர்ந்திருப்பார். ஆண் சீடர்கள் சிலரும், பெண் சீடர்கள் சிலரும் அங்கும் இங்கும் தீவிரமாக அலைந்து ஒரு பெரிய பூசைக்கான ஆயத்தத்தில் இருப்பார்கள். பூசைக்கான பாத்திரத்தை கழுவுதல், பூப்பறித்தல், மாலை கட்டுதல், நெய்வேத்தியங்கள் செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள் பாடல் முடிய திரை முற்றாக விலகி இருக்கும்)
தவத்தினை எளிதாப் புரிந்தனள், யோகத் தனிநிலை ஒளியெனப் புரிந்தாள் சிவத்தினை இனிதாப் புரிந்தனள், முடச் சித்தமும் தெளிவுறச் செய்தாள்; பவத்தினை வெறுப்ப அருளினள் நானாம் பான்மை கொன்று அவள் மயம் புரிந்தாள், அவத்தினைக் களைந்தாள் அறிவென விளைந்தாள் அனந்தமா வாழ்க இங்கவளே! (பாரதியார் மகா சக்தி வாழ்த்து.அழறி சாரதா தேவி வி.வா.வ.பக்கம் 425)
(பாடல் முடிய அன்னை ஏதாவது ஒரு பகுதியில் இருந்து அரங்கிற்குள் வருவார். அன்னை வர்ணச் சாறி உடுத்தி, நெற்றியில் திலகம் இட்டு, கம்மல், வளையல்கள் அணிந்திருப்பார். கையில் ஏதாவது ஒரு பொருளுடன் வந்து முறி ராமகிருஷ்ணருக்கு அருகில் அமர்வார்.)
ராமகிருஷ்ணர்- (நிஷ்டை கலைந்து அன்னையைப்பார்த்து) அம்மா உன் முகம் ஏன் இவ்வளவு சோர்வுற்றுக் கிடக்கிறது.
K09

Page 11
வானுறையும் தெய்வத் ဓ†
அன்னை -
ராமகிரு :-
அன்னை:-
ராமகிரு :-
அன்னை:-
ராமகிரு
அன்னை:-
ரமகிரு :-
நகபத்தில் நீங்கள் இருந்தும் தனிமை என்னை வாட்டுகிறதே சுவாமி.!
(எழுந்து கொண்டே) யோகின்மா குருக்களின் மனைவிமார் என எவ்வளவோபேர் இருந்தும். கூண்டுக் கிளிபோல் நகபத்துக்குள்ளேயே அடைந்து கிடந்தால் நான் தான் என்ன செய்வதாம் (அன்னையும் எழுந்து கொள்கிறார்)
ஒதுங்கி இருப்பது என்னுடன் கூடப்பிறந்ததாக இருக்கிறதே.
அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்கிறாய்.தாயே.
(மிகுந்த துயருடன்)பிள்ளைப் பேறில்லாத பெண் எந்த மங்கள காரியங்களும் செய்யத் தகுதி அற்றவள் எனப்பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். குரு தேவா. ஒரு பிள்ளைகூட அம்மா என்றழைப்பதற்கு என்தலையில் எழுதவில்லையா.
(அட்டகாசமாகச் சிரித்து) ஹா.ஹா.ஒரு குழந்தை அம்மா என்று அழைப்பதையா உன் மனம் அவாவுகிறது. பின்னாளில் ஆயிரம். ஆயிரம். குழந்தைகள் அம்மா.அம்மா.என்று அழைக்கும் குரலால் உன் காதுகள் அடைக்கப் போவதை நீ உணரவில்லையா.
சுவாமி.இவள் சாதாரண கிராமத்துப் பெண்.
(மீண்டும் சிரித்தல்) ஹா.ஹா.அம்மா..! மைத்ரோயி என்னும் ஆன்மீக சாதகியர் தன் கணவரிடம் என்ன கேட்டார் தெரியுமா.
C029

வி.கெளரிபாலன்
அன்னை- தெரியும் .சுவாமி.மரணமிலாப்
பெருநிலையை இந்தச் செல்வத்தால் அளிக்க முடியாதென்றால் அது எனக்கு எதற்கு.? மரணமில்லாப் பெருநிலையை அளிக்கக் கூடிய செல்வத்தை எனக்குத் தாருங்கள். என்று கேட்டதாக கூறியிருக்கிறீர்கள் சுவாமி.
ராமகிரு- அன்னையே.உஇன்னுடன் கூடப் பிறந்தவர் இறந்தபோது உன் அன்னையும் தந்தையும் எவ்வளவு வேதனைப்பட்டனர், துடித்தனர் என்பதை நீ அறியாயா. ஏன் நீயே எவ்வளவு துவண்டு போனாய் என்பதை ஒரு கணம் சிந்தித்துப்பார். (பின் காளியின் படத்தைப் பார்த்து) அம்மா. இவளது மனத்திலிருந்து காமத்தை வேருடன் களைந்து விடு. (பின் அன்னையைப் பார்த்து) அம்மா. உனக்கு எதற்கு இந்த வம்பெல்லாம்? நாய். நரிகளைப் போல் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதும் பிறகு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வதும் எதற்காக..? உனக்குத் தெரியாதா என்ன..? எதற்கு இதெல்லாம்.? இவை எதுவும் இன்றியே நீ மகாராணி போல் இருக்கிறாய் வாழ்நாள் முழுதும் இப்படியே இரு.!
அன்னை:- (பெருமூச்சுடன் தனக்குத் தானே) என்
மனத்தவிப்பை நான் எவ்வாறு உரைப்பேன்.
ராமகிரு :- (அன்னையின் முணுமுணுப்பைக்
கேட்டபடி- தன்பாட்டில்) முதல் குழந்தை பிறந்ததும் ஒரே அமர்க்களம். ஆடை என்ன. ஆபரணம் என்ன. ஆனால்
乏 འའའའ CO39

Page 12
வானுறையும் தெய்வத்தினுள்
அன்னை:-
ராமகிரு
ராமகிரு
அன்னை :
ராமகிரு
அன்னை:-
ராமகிரு
அந்தக் குழந்தை இறக்கட்டும், கண்ணிரும் கம்பளையும் தான் மிச்சம்.
(நறுக்கென்று) என்ன..? பிறக்கின்ற குழந்தைகள் எல்லாமா இறந்து விடுகின்றன.?
(குதூகலமாகக் கூவுகிறார் ) ஐயோ..! அப்பா. உண்மை தெரியாமல் நல்ல பாம்பின் வாலை அல்லவா மிதித்து விட்டேன். எளிமையானவள். வெகுளி என்றெல்லாம் நினைத்திருந்தேனே. ஆகா. இவளோ என்றாள் எப்படி நறுக் கென்று கேட்கிறாள்.1 (அன்னையும், ராமகிருஷ்ணரும் நகர்ந்து காளியின் படத்துக்கு அருகில் செல்லுதல்பின்னணியில் - பாரதியார் மகாசக்தி வாழ்த்து கம்மிங்கில் ஒலிக்கும்)
அம்மா இன்று என்ன திகதி.
1873 மே மாதம் 25ம் நாள்.
இன்று என்ன விஷேச தினம்.
பலஹாரிணி காளி தேவியின் வழிபாட்டிற்கு உகந்த அமாவாசை தினம்.
ஆம். பலஹாரிணி காளிதேவி இன்று உன் உடலில் காட்சி தருவாள் அன்னையே..! (ராமகிருஷ்ணர் கூறியபடி மனையில் அமர்கிறார்-பின் அன்னையைப் பார்த்து) அன்னையே அந்த மணையில் வலப்புறமாக வடக்கு நோக்கி அமர்வாய். (அன்னை அமர்தல்-ராமகிருஷ்ணர் அன்னையின் மீது புனித நீரைத்
E604

ராமகிரு
ராமகிரு
வி.கெளரிபாலன் தெளித்தல் சீடர்கள் பூசைக்கு உதவுதல்சிலர் பக்தியுடன் சூழ நிற்றல்)
:ー ஒ.அன்னையே.எல்லா ஆற்றல்களுக்கும்
தலைவியான திரிபுரசுந்தரியே. முழு நிறைவாம் கதவினைத் திறப்பாய்.
இவளது உடலையும் உள்ளத்தையும் புனிதப்படுத்துவாய்! இவளில் எழுந்தருளி அருள்பாலிப்பாய்!
(அ. ழறி. சா. தே. வி. வா. வ. பக்கம் - 83)
(ராமகிருஷ்ணர் அன்னையின் மீது பதினாறு வகை திரவியங்களையும் வீசி பூசை செய்தல் - பின்னணியில் தேவாரம் LJITLÚRU(8úb)
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
முர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய அரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே
(அ.ழரீ.சா.தே.வி.வா.வ. பக்கம் - 180)
மங்களமாம்அனைத்திற்கும் மங்களமானவளே! அனைத்துச் செயல்களுக்கும் மூலகாரணியே, அடைக்கலம் தருபவளே. முக்கண்ணியே, சிவபெருமானின் நாயகியே, கெளரீ, நாராயணி, உன்னை வணங்குகிறேன், உன்னை வணங்குகிறேன். (அ.ழரீ.சா.தே.வி.வா.வ.பக்கம் - 83) (ராமகிருஷ்ணர் அன்னையை விழுந்து வணங்குதல்-தாயே. அம்மா.மாகாளி.
Y Y €0.53

Page 13
வானுறையும் தெய்வத்தினுள்
ராமகிரு
அன்னை:-
என்று கூவுதல்-மற்றவர்களும் வணங்குதல்பின் ராமகிருஷ்ணர் தானும் எழுந்து அன்னையும் எழும்புதல்)
அன்னையே நீ பெற்ற இன்பத்தை உலகுக்குரைப்பாயா..!
என்னுள் ஆனந்த நிறைகுடம் ஒன்று பொங்கித் ததும்பிக் கொண்டிருப்பதை உணர்கின்றேன். அந்த அனுபவத்தை என்னால் கூற முடியாது. சுவாமி. (அரங்கை விட்டு எல்லோரும் வெளியேறுதல்)
a5JrLöf ~ 2
(எல்லோரும் அரங்கை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும்
போதே சில கிராமவாசிகள், ஆண் களும் , பெண் களுமாக, அரங்கிற்குள் வந்து அமர்ந்து கதைத்துக் கொண்டிருப்பார்கள்
இப்போது ராமகிருஷ்ணரின் படம் அவையைப் பார்த்தபடி இருக்கும். பின்னணியில் கிரீஷ் சந்திர கோஷ் அன்னை பற்றி எழுதிய பாடலின் முதல் இரண்டு பந்தி பாடப்படும்)
துக்க இரவு கழிந்து விட்டது "நான்” “எனது” என்ற கோரமான கனவு கலைந்து விட்டது வாழ்வு சாவு என்ற பிரமை இனி இல்லை.
ஞான சூரியன் உதிக்கின்றான் அன்னை புன்முறுவல் புரிகிறாள் வரம், அபயம் இரண்டையும் தாங்கிய கரங்களுடன் அவள் காட்சி தருகிறாள். (அறு.சா.தே.வி.வா.வ. பக்கம் - 261)
(பாடல் முடிய ஒரு பெண் உரைஞர் கிராமவாசிகளுள் இருந்து எழுந்து வருவார்)
606
063

வி.கெளரிபாலன் உரைஞர்:- ரீ ராமகிருஷ்ணரின் மகா சமாதி
நிலைக்குப் பின் அன்னிை கல்கத்தாவில் இருந்து ரீ ராமகிருஷ்ணர் உதித்த காமார்புகூர் என்னும் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார். திண்ணையில் குந்தி இருந்து வம்பளக்கும் கூட்டத்துக்கு அன்னையின் மதிப்பு புரியவில்லை. அங்கே .(உரைஞர் மீண்டும் கூட்டத்துடன் சேர்ந்து விட அன்னை அரங்கிற்குள் வருவார்)
ஒருவர் :- (நெற்றியில் கை வைத்து) அதில் வருவது
uusi JÜUT.
மற்றவர் :- (பார்த்து விட்டு) அது ராமகிருஷ்ணன்
பொண்டாட்டி.
இன்னொருவர். அது ஆரப்பா ராமகிருஷ்ணன்.
மற்றவர் :- அவன் தானப்பா.கோயில்களில் பித்தம் பிடித்துத் திரிந்தவன்.
இன்னொருவர்: ஓ.பித்தன் பொண்டாட்டியா(எல்லோரும்
சிரிக்கின்றார்கள்)
ஒருவர் :- அது சரி அவன் செத்துப் போனான் என்று
தானே கேள்விப்பட்டோம்).
மற்றவர் :- அப்ப. இவள் விதவையா.
இன்னொருவர். (பரிகாசமாக) இவள் என்ன விதவை போலா
இருக்கிறாள்.(அன்னை நடுவில் வந்து அமைதியாக புன்முறுவலுடன் நிற்கிறார். அன்னை சிகப்புக்கரை இடப்பட்ட வெள்ளை நிற சாறி அணிந்து, கம்மல், மற்றும் கையில்வளையல்கள் அணிந்திருக்கின்றார் நெற்றியில் திலகம் இல்லை)
C07 GR

Page 14
வானுறையும் தெய்வத்தினுள்
ஒருவர் :-
இன்னொருவர்:-
மற்றவர் :-
ஒருவர் :-
மற்றவர் :-
இன்னொருவள்:-
பிரசன்னா மாமி.
ஒருவர் :-
உரை6ர்:-
அவள் கூந்தலை மொட்டை .அடிக்க வேண்டும்.
அபச்சாரம். அபச்சாரம். நாட்டில் மழையே இல்லாது போய்விட்டது.
அவள் தனி வெள்ளைப்புடவையே அணிய வேண்டும்.
கம்மலைப் புடுங்கி எறி.
இவள் என்ன உல்லாச விதவையா..?
அவள் யிைல் இருக்கும் வளையல்களை உடைத்துப்போடு.
(இவர்கள் கூச்சல் பொறுக்க முடியாது அரங்கின் நடுவுக்குவந்து) நிறுத்துங்கள். நிறுத்துங்கள் உங்கள் கூச்சலை. சுவாமி ஹரீ ராமகிருஷ்ணர் எங்கே அய்யா இறந்தார். அந்த மகானுக்கு ஏது மரணம்., மரணமில்லாப் பெருநிலையை அடைந்து விட்ட அந்த மகானின் மனைவி எப்படி ஐயா. விதவையாவாள். இதை அறியா மூடர்களே விலகிச் செல்லுங்கள்.
b................... எங்களுக்கு அறிவுரை கூறுவதைا விட்டு.விட்டு.அவளுக்கு (அன்னையைக் காட்டி) அவளுக்கு கூறு. (கிராம வாசிகள் கோபமாக அரங்கை விட்டு வெளியேற அன்னை அதே புன்முறுவலுடன் நிற்க உரைஞர் அரங்கின் முன்பகுதிக்கு வந்து)
அன்னைக்கு மற்றுமொரு சோதனை.சுவாமி
K083

உரைஞர்:-
வி.கெளரிபாலன் முரீராமகிருஷ்ணரின் இல்லறச் சீடரான கிரீஷ் என்னும் வடிவில் வந்தது. இல்லறச் சீடரான இவள்.எங்கே துறவியாகி விடுவாரோ.எனப் பயந்த இவர் மனைவி, மருந்துகள், மந்திரம் போன்றவற்றின் மூலம் அவர் மனதை திருப்ப முனைந்தார்.விளைவு விபரீதமாக..! அவருக்கு சித்தப் பிரமை பிடித்து விட்டது.இவர் அன்னையைக் காண காமார்புகூருக்கு வந்து சேர்ந்தார். அங்கே தனிமையில் இருந்த அன்னையை சித்தப் பிரமையால் தாக்கப் புகுந்தார். (உரைஞர் விலக-கிரீஷ் அரங்கிற்குள் பிரவேசித்து சித்தப் பிரமை பிடித்தவர் போல் அங்கும் இங்கும் அலைந்து பின் அன்னையை தாக்க முனைதல் - அன்னை ஒடுதல்-கிரீஷ் துரத்துதல் - ஓடிச் சோர்ந்த அன்னை தன் சுயரூபம் காட்டி கிரீஷ்சை கன்னத்தில் மாறி, மாறி அறைதல்-கிரீஷ் மூர்ச்சையாகி விழுதல்-பின் அன்னை சினம் அடங்கி கனிவுடன் கிரீஷ்சை அழைத்துக் கொண்டு அரங்கை விட்டு வெளியேறுதல்)
பின் அன்னை காமார்புகூரில் இருந்து தான் பிறந்த இடமான ஜெயராம் பாடிக்கு வந்து சேர்ந்தார். அன்னைக்கு அங்கே பக்தர்களினால் வரவேற்பு அளிக்கப்பட்ட போதும்.அன்னையின் தம்பிமார்களான காளிக்குமார், பிரசன்னகுமார் இருவரும் தொல்லை கொடுப்பவராகவே இருந்தனர்.
(உரைஞர் விலக-பின்னணியில் கிரீஷ் அவர்களின் பாடலின் மற்றய பந்தி பாடப்படும்- இபோது ராமகிருஷ்ணரின் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டிருக்கும். அன்னை அரங்கின் நடுவில் வந்து நிற்க பக்தர்கள் அன்னையிடம் வந்து ஆசி பெற்று காணிக்கை
CO99

Page 15
வானுறையும் தெய்வத்தினுள் செலுத்திச் செல்வார்கள்)
உரத்த குரல் எழுப்பி துந்துபி முழங்க ஜெய கோஷம் செய்யுங்கள் மரணத்தை வெல்வதான அவளது திருநாமம் புவி முழுவதும் நிறைந்துள்ளது.
(அழரீ.சா.தே.வி.வா.வ.பக்கம் -261)
(பாடல் முடிய பிரசன்னாகுமார், காளிக்குமார் இருவரும் சண்டை இட்டபடி அரங்கிற்குள் வருதல்)
காளிக்குமார்:-
பிரசன்னா குமார்
காளிக்குமார்:-
பிரசன்னாகுமார்
காளிக்குமார்
பிரசன்னாகுமார்
அன்னை:-
அன்னை:-
உன்னை கொல்லாது விடமாட்டேன்.
என் எல்லைக்குள் வந்து பயிர் போட்டது நிதான்.
உனக்கென்று ஏதடா இருக்கு.
எனக்கு குழந்தைகள் அதிகம், எனக்குத்தான் செலவும் அதிகம். எனக்குத்தான் கூட நிலம் வேண்டும்.
பொத்தடா வாயை.உன்னை யார் இரண்டாவது கலியாணம் கட்டச் சொன்னது.
அதைக் கேட்க நீயார். (இருவரும் அடி தடி சண்டை என்று போகிறார்கள்)
சண்டையை விடுங்கள் விலத்திப் போங்கள். (அன்னை தம்பிமாரை விலக்குதல். அவர்கள் தொடர்ந்தும் சண்டை போடுதல் அன்னை அவர்களை விட்டு விட்டு அரங்கின் முன் பகுதிக்கு வருதல்)
(ஒரு சீடரைப் பார்த்து) அப்பா.இந்த
KOG

வி.கெளரிபாலன் உலகியலில் உழலும் இந்த மனிதர்களின் சண்டையை என்னால் தீர்க்க முடியாது-இவர்கள் சொத்தைப் பிரித்து பாகப் பிரிவினை செய்வதற்கு எனது மகன் சரத்தை அழைத்து வாருங்கள். அவன் தான் சாரதானந்தன். அவன் ஒருவன் தான் உலகப்போக்கும் மனிதப்போக்கும், உணர்ந்தவன். அவனால்தான் இது (Լքlգեւյլն...... (சீடர் வெளியேறுதல்-பின்னணியில் கிரீஷ் அவர்களின் பாடலின் கடைசி இரு பந்திகள் LJffLÜ_1(Blb)
கலங்காதே மகனே. குருதேவரின் திருப்பாதங்களைஇதோபார். தொல்லைகள் யாவும் போய்விடும். வேதனைகள் அனைத்தும் தீர்ந்து விடும். என்று அன்பு மொழி கூறுகின்றாள் அவள். இரு கண்களிலும் கருணை பொங்க என் அருகில் நிற்கிறாள் மங்கலமான அவள் மக்களைக் காக்கும் தேவியல்லவா.
(அழரீ.சா.தே.வி.வா.வ.பக்கம்-261)
(பாடல் முடிய சாரதானந்தரும் சீடரும் அரங்கிற்குள் வருதல்-அன்னை ஒதுங்கி நிற்றல்-சாரதானந்தர் தம்பிகளுடன் உரையாடுதல்)
சாரதானந்தர்- குழந்தைகளே அன்னையின் மகிமையை
உணர வேண்டும்.அவருக்கு தம்பியாகப் பிறந்ததே பெரும் பயன் என்பதை உணரவேண்டும். பூரீ ராமகிருஷ்ணரின் அருள்வாக்கை நீங்கள் படித்தல் வேண்டும். நீங்களும் ஆன்ம ஒளி பெறவேண்டும்.
KTTS
محصیحا "

Page 16
வானுறையும் தெய்வத்தினுள்
பிரசன்னாகுமார்:-
காளிக்குமார்.
உரைஞர் :-
சாரதானந்தர்:-
庄Lf
அன்னை:-
ઈLif :-
அன்னை:-
அது கிடக்கட்டும் என்னுடைய குடும்பச் செலவுக்கு ஒரு வழி பண்ணும்.
சொத்தை பிரித்துத்தாரும்.
சாரதானந்தர் எல்லோரும் ஏற்கும் வகையில் காணி,வீடு என்று எல்லாச் சொத்தையும் பாகம் பண்ணிக் குடுக்கிறார்.
(அவர்களிடம் இருந்து விலத்தி வந்துசீடரைப் பார்த்து) பார்.இவர்களின் சண்டையால்நாம் ஆத்திரப்படுகிறோம். அன்னையைப் பார்.அவர் சிறிதளவாவது பதட்டம் அடைகிறாரா. என்ன சமநிலை. என்ன அமைதி.
முற்றிலும் உண்மை சுவாமி. (அன்னையிடம் வந்து) அன்னையே. பாகப் பரிவினை முடிந்தாயிற்று இனிமேல் நீங்கள் எங்கே தங்குவீர்கள்.
குருதேவர் அடிக்கடி சொல்வார். எலிகள் தோண்டிய வலைகளில் பாம்புகள் வாழ்க்கை நடத்தும் என்று.
அன்னையே சொத்துக்கள் பிரித்தாயிற்று இன்னும் இவர்கள் தங்களுக்கு வரும் காணிக்கைப் பொருட்களுக்காக அடிபடுகிறார்களே..!
இவர்கள் எல்லாம் என்ன ஜன்மங்கள். எப்போது பார்த்தாலும் பணம் பணம் என்று சாகிறார்களே தவிர பக்தி வேண்டும். ஞானம் வேண்டும். என்கிற நினைப்பு
tel2G

சீடர் :ー
அன்னை :-
fULT :ー
96T60)6OT:-
உரைஞர்:-
மறந்தாவது இவர்களுக்குத் தோன்றுகிறதா..?
அம்மா குருதேவரிடம் கேட்டு அவர்களுக்கு தேவையான பணத்தை அளித்து விடுங்களேன்..!
மகனே. அவர்களின் ஆசைதிரக்கூடியதா.! என்ன..! கொடுக்கக் கொடுக்க கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் ஆசைக்கு முடிவே இல்லை. உலகியல் மாந்தருக்குத் திருப்தி என்பது உண்டா என்ன..!
அம்மா. இவர்களுக்கு மத்தியில் உங்களால் எப்படி வாழ முடிகிறது.
அப்பனே. குப்பைகளுக்கிடையில் ஒரு தாமரை மலரைப் போல் இருப்பதை உணர்கின்றேன். அப்பா. (அவர்கள் உரையாடிய படி வெளியேற உரைஞர் அரங்கின் நடுவுக்கு வருவார்)
மற்றுமொரு சோதனை அன்னைக்கு காத்திருந்தது. அது ஆச்சாரப் பைத்தியமான அன்னையின் தம்பி மகள் நளினி என்னும் வடிவில்.இவள் ஒரு நாள் நடுச்சாமத்தில் எழுந்து குளிக்கச் சென்றாளாம்.அப்போது ஏன் சாமத்தில் குளிக்கப் போகிறாய் என்று கேட்ட போது. காகம் சிறுநீர் கழித்ததால் நான் தீட்டானேன் என்றாளாம். ஒரு நாள் அன்னையைக் காண அம்ஜத் என்னும் ஏழை முஸ்லீம் வந்தான். (உரைஞர் விலக.அம்ஜத் சோர்வாக அரங்கிற்குள் வருதல்)
yY ʼR V ー!Bメ

Page 17
வானுறையும் தெய்வத்தினுள்
"Dubg;5 :- அம்மா.தாயே..அக ஒளி ஊட்டும்
அன்னையே.
அன்னை : (உள்ளே இருந்து வந்து) ஆ.அம்ஜத்தா
வாமகனே. உள்ளே வாப்பா.
அம்ஐத் :- அம்மா.இந்த ஏழை.புனிதப்பட்ட
இடத்தை மிதிக்கத் தகுதி உடையவனா.
அன்னை : அப்பனே. ஏழை, பணக்காரன், பாவி,
கீழ்ச்சாதி, மேல்ச்சாதி என்ற இன மத பேதமற்ற குருதேவரின் இடமப்பா இது.நீ சஞ்சலமில்லாது உள்ளே வாப்பா.
அம்ஐத் :- என் பாக்கியம் அன்னையே.
அன்னை :- அப்பா அம்ஜத் எப்படி இருக்கிறாய்.உன்
குடும்பம் எப்படி இருக்கிறது.
அம்ஜத் :- இன்சா.அல்லா. என்னத்தைச்சொல்வேன்.
அம்மா.தினமும் ஒரு துன்பம் என்னை வாட்டுகிறது தாயே.
g|ങIങ്ങിങ്ങ് :- அப்பா முதலில் உன் மனதில் இருந்து
துன்பத்தை விலக்கிவிடு.எங்கே போயிருந்தாய் இவ்வளவு நாள்.
அம்ஜத் :- மீண்டும் திருடிய குற்றத்துக்காய் சிறையில்
இருந்தேன் தாயே. அம்மா. 966)T என்னை கைவிட்டு விட்டாள்.என் வாழ்வு மட்டும் ஏன் துயர் நிறைந்ததாகவே இருக்கிறது.
அன்னை - அப்பனே அப்படிச் சொல்லாதே. வாழ்க்கை
என்பது துன்பமும் இன்பமும் நிறைந்தது. சதா காலமும் ஒருவரால் இன்பமாக
143

அம்ஜத் :-
(அம்ஜத் நளினி உணவுடன்
நளினி
வி.கெளரிபாலன் மட்டுமே வாழ்ந்து விட முடியாது. அது போல் என்றென்றும் ஒருவர் துன்பத்திலேயே துவளவும் முடியாது. துன்பங்கள் வந்தே தீரும், ஆனால் அவை நிலைப்பதில்லை. அஞ்சாதே துன்பம் நேர்கையில், எனக்கு அம்மா ஒருத்தி இருக்கிறாள் என்பதை நினைவுபடுத்திக் கொள்.
அம்மா.உங்களுடன் பேசும்போது என் மனம் அமைதி அடைகிறது.
அப்பனே நீ களைத்துப் போயிருக்கிறாய். உட்கார் உனக்கு நல்ல உணவு படைக்கச் சொல்கிறேன். (உள்ளே பார்த்து) நளினி இங்கே வா.அம்ஜத் வந்திருக்கிறான் அவனுக்கு உணவு கொண்டுவந்து பரிமாறு (பின் அம்ஜத்தைப் பார்த்து) அப்பனே எனக்கு உள்ளே வேலை இருக்கிறது. இருந்து சாப்பிட்டு விட்டுப் போ..!
தரையில் இருத்தல் - அன்னை வெளியேறுதல் உள்ளே வருதல்)
(அம்ஜத்தைப் பார்த்து திடுக்கிட்டுதனக்குத்தானே) கடவுளே.இவனோ முஸ்லீம். இவனுக்கு உணவு பரிமாறினால் என் தீட்டை எந்தக் குளத்தில் கழுவித் தீர்ப்பதாம்.
(நளினி வேண்டா வெறுப்பாக எட்ட நின்று தட்டைப் போடுதல்பின் அருவருட்புடன் எட்டி நின்று உணவு பரிமாறுதல்-அன்னை வெளியே வருதல்அன்னை நளினி உணவு பரிமாறும் முறையை காணுதல்-அதிர்ந்து போய் ஓடி வருதல்)
斉 153

Page 18
வானுறையும் தெய்வத்தினுள்
அன்னை :-
அம்ஐத்
அன்னை -
நளினி
(நளினியைப் பார்த்து) விலத்து.விலகி நில்.இப்படியா ஒருவருக்கு உணவு பரிமாறுவது .தள்ளிப் போ.
விடுங்கள் அம்மா. உணவு கிடைக்கிறதுதானே..!
அப்படி இல்லையப்பா.அன்பாய் பரிமாறும் ஒரு புடி உணவும் ஒரு மனிதனின் முழுப்பசியையும் தீர்த்து விடுமப்பா.நீ ஆறுதலாகச் சாப்பிடப்பா. நான் பரிமாறுகின்றேன். (அன்னை அருகில் அமர்ந்து கரிசனையாய் உணவு பரிமாறுதல்)
(தனக்குத் தானே) இந்தக் கிழவியின் தொல்லையால் ஊரில் இருக்க முடியாது போனாலும் போகலாம். இளைஞர்களைப் பிடித்து காவியைக் குடுத்து துறவியாக்கி விடுகிறார். பெற்றோர்கள் எவ்வளவு கஷடப்பட்டு தங்கள் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். அது போதாதென்று இன்று முஸ்லீமை வீட்டிற்குள் வைத்து உணவளிக்கிறார். கடவுளே எங்கள் ஆச்சாரம் எல்லாம் கெட்டுப் போய்விட்டது.
(அம்ஜத் உணவு உண்டு எழுந்து போதல் அன்னை
அம்ஜத் உணவு உண்ட இடத்தை துப்பரவு செய்தல்-நளினி அன்னையை நெருங்கி வருதல்)
நளினி
அன்னை :
அத்தை ஊரார் பார்த்தால் உங்களை ஜாதியை விட்டு விலக்கி விடுவார்கள்.
வாயை மூடு.! எனக்காவது ஜாதியாவது.! சரத் எனக்கு எப்படி மகனோ. அதே
16Ꮥ

உரைஞர் -
வி.கெளரிபாலன் மாதிரி இந்த அம்ஜத்தும் என்
மகன்தான். (அன்னையும் நளினியும் அரங்கை விட் வெளியேறுதல்)
Småf lll அன்னை மீண்டும் கல்கத்தா பயணமாகிறார். அங்கே அன்னையின் குழந்தைகள். கோலப்மா. யோகின்மா. கெளரிமா. இன்னும் முக்கிய சீடர்கள் அன்னையைக் காண ஆவலாய் இருந்தார்கள்.
(உரைஞர் விலக-சீடர்கள் தங்களுக்குள் உரையாடுதல்)
யோகின்மா:-
கெளரிமா :
யோகின்மா
அன்னை கல்கத்தா வருகிறாராம் (சந்தோசமாய் கூவுதல்)
(உற்சாகமாக) ஆம். சாரதானந்தர் அன்னையை அழைத்து வரச் சென்றுள்ளார்.
அன்னையுடன் இருந்த அந்த நாட்கள் எவ்வளவு இனிமையானது.அன்னை ஒரு நாள் சொன்னார் யோகின்.பார். நம் குழந்தைகள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் இருக்க ஒரு இடமில்லை.மரங்களுக்கு கீழும். வெட்டைவெளிகளிலும் அலைந்து திரிகின்றார்கள். என் மனம் எவ்வளவு வேதனை உறுகிறது என்றார்.பின் ஒரு நாள். அன்னை கங்கையில் குளிக்கச் சென்றாராம். அப்போது அன்னையை உரசியபடி குருதேவர் கங்கையில் இறங்கி நீருடன் நீராகக் கரைந்து போனாராம் பின் அந்த கங்கைக்குள் இருந்து நரேன் எழுந்து அந்த கங்கை நீரை தெளித்தானாம் அது உலக மக்கள் தலைகளில் எல்லாம் விழுந்ததாம்.
矛 17

Page 19
வானுறையும் தெய்வத்தினுள்
fLİT
கெளரிமா;-
கோளப்மா:-
கெளரிமா
சீடர் :-
கெளரிமா
எல்லோரும்:-
சீடர்
யோகின்மா:-
df LÄT
அதன் பின். நரேன் அமெரிக்கா சென்று ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தியதும் திரும்பி வந்து பூரீ ராமகிருஷ்ணமிசன் என்னும் சங்கத்தை அமைத்து உலகம் முழுவதும் ஆன்மீக ஒளிபரப்பி வருவதும் நாம் அறிந்த உண்மை தானே.
ஒரு முறை குருதேவர் என்னிடம். கெளரிமா.நீ யாரை அதிகம் நேசிக்கிறாாய் என்னையா.,அவளையா? என்று அன்னையை காட்டிக்கேட்டார்.
அதற்கு நீ என்ன சொன்னாய்.
அதற்கு பதிலை ஒரு பாடலாகவே பாடிக் காட்டினேன்.
அது என்ன பாட்டு.
(பாடுதல்) கண்ணா நீ ஒன்றும் ராதையை விட பெரியவன் அல்ல. துன்பத்தில் மக்கள் உன்னை அழைக்கின்றனர். உனக்கு துன்பம் வரும் போதோ...'ஓ ராதே’ என்று நீ அவனை அழைக்கிறாய். (அ.ழரீ.சா.தே.வி.வா.வ.பக்கம்-228)
அற்புதம்.அற்புதம்.அற்புதமான பாடல்.
ஒரு முறை எனக்கு ஒரு சந்தேகம் வந்தது.
அப்படி என்ன சந்தேகம்.
அன்னை தம்மிடம் தீட்சை பெற
வருபவர்களுள் பலர் அதற்கான தகுதியற்றவர்கள் என்பது தெரிந்திருந்தும்
Gl 8G

வி.கெளரிபாலன் அவர்களுக்கு தீட்சை அளிப்பார். அது ஏன் அம்மா என்று கேட்டேன்.
யோகின்:- அன்னை அதற்கு என்ன சொன்னார்.
伊Lm :- மகனே! என்னிடம் தீட்சைக்காக
வருபவர்களுள் பலர் ஒன்றுக்குமே உதவாதவர்கள் என்பது தெரியும். அவர்கள் செய்யாத பாவங்கள் எதுவுமே இல்லை.ஆனால் அவர்கள் என்னை அம்மா என்று அழைத்ததும், நான் அனைத்தையும் மறந்து விடுகிறேன். அவர்களும் தங்கள் தகுதிக்கு அதிகமாகவே என்னிடமிருந்து பெற்றுச் செல்கிறார்கள். என்று கூறில்,ார்.
(இப்போது சீடர்கள் பரபரக்கிறார்கள்.அன்னை வந்து விட்டார். அன்னை வந்து விட்டார். என்று கூவுகிறார்கள்-அன்னை சபைக்குள் இருந்து அரங்கிற்கு சாரதானந்தர் பின் தொடர வருகிறார். சுர வரிசை பின்னணியில் ஒலிக்கத் தொடங்கும் சுர வரிசை முடிந்து பாடல் தொடங்க அன்னை அரங்கின் மையத்துக்கு வருவார் பின்னணியில் பாடல் கோரசாக ஒலிக்கும்)

Page 20
வானுறையும் தெய்வத்தினுள்
கபப கபப கபப கபப / மதத மதத மதத மதத //
ஸ்ா; ஸ்ரீக் ! பாப தாநித / பா; // பாப தாநித பாப தாநித பாப தாநித / பாநிஸாக // ύ , , , , , ! நிய நிய நிய / நிய நிய நிப // ரீ: தா: /; UID 36f /ஸா, கா, // LIFT, 6tor, dissT ;; /; ஸ்க்ா ஸ் / க்ா ; // ;ஸ் க்ா ஸ் க்ா, க்ா, / க்ா,ரீஸ் / if : // ;ஸ் க்ாத் ப்ாம்க்ர்ரி / ஸ் ; /; Gro f as // upm : ຂໍ້ ຫຼື m6 | தா ; / ; த நீஸ் // ரீ ; க் ரீநி / ஸ்ா, கா, / பா, ஸா, //
அன்னையே வருக அன்னையே வருக
அருட்பெரும் செல்வப் பெருக்கே வருக
மன்னாவுலகத்து மன்னுமோர் நெறியினை
மாண்புறக் காட்டிய மாதா வருக!
மதியத்தன்றுனை மணையி லேவைத்து
மண்டியிட்டேத்திய மறையோர்க்கருளினை
கதி பெற வேண்டி நின் காதற் சேய்களின்
கண்ணிர் துடைக்கக் கருணையேவருக. (ug6)60TÜ T.6äb6 - Jäbib - 100)

வி.கெளரிபாலன்
முதலாவது அரங்க அளிக்கை :-
இந்தியாவிலிருந்து வருகை தந்த பூரீ சாரதாமடத்து சந்நியாசிகளான ட்ரவிராஜிகா அமல ட்ரானாஜி மற்றும் ப்ரவிராஜிகா ரமா ப்ராணாஜி ஆகியோரை வரவேற்கும் முகமாக மட்/குருக்கள் மடம் கலைவாணி மகாவித்தியாலயத்தில் 2001-09-19ம் திகதி நடைபெற்ற விழாவில் அளிக்கை செய்யப் பட்டது.
இரண்டாவது அரங்க அளிக்கை :-
இந்தியாவிலிருந்து ராமகிருஷ்ணமிசன் சுவாமி ஆத்மபிரியானந்த ஜி மகராஜ் அவர்கள் வருகை தந்து சிறப்பித்த மட்/களுதாவளை மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற "ராமகிருஷ்ண பண்பாட்டரங்கில்” அளிக்கை செய்யப்பட்டது.
இவ் இரு அரங்க அளிக்கையின் போதும் பங்கு பற்றிய குருக்கள் மடம் சாரதா மணி கீத பஜனைக்குழு மாணவ, மாணவிகள் 6) (() Οι (3. N.
1) இராசதுரை கேமராஜ் 2) விஸ்வேஸ்வரன் - அனுசாந்தி 3) பாக்கியராஜா - பத்மப்பிரியா 4) gibi 6öojyfg3={r - 846 (15606ÖÖf"ı illiflu bir 5) துரைராசா - மதனா 6) புவிநாயகம் - இளஞ்சிகா 7) திருநாவுக்கரசு - அபிராமி 8) செல்வராசா - ஜெகதா 9) விஸ்வேஸ்வரன் - அரவிந்தன் 10) துரைராசா - தrசிகா 11) கோணேஸ்வரன் - இளங்கோவன் 12) tாலச்சந்திரன் - நவநீதன்
பின்னணிப் பாடலுடன், அரங்க அளிக்கை மற்றும்
ஒட்டனை :- திருமதி கீதாதேவி - கெளரிபாலன். தலோ : திரு.புரிசிதரன். நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்பு. திரு.சி.கணேசமூர்த்தி.
محسیسح