கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வசந்தங்களும் வசீகரங்களும்

Page 1

assius

Page 2

வசந்தங்களும் வசீகரங்களும்
இரா. சடகோபன்
வசந்தங்களும் வசீகரங்களும்

Page 3
இந்நூல் இலங்கைத் தேசிய நூலக சேவைகள் சபையின் சலுகையுடன் அச்சிடப்பட்டுள்ளது. இதில் உள்ளடங்கியுள்ள பொருள் சபையின் கருத்துக்களைப் பிரதிபலிக்கமாட்டாது என்பதனைக் கவனத்திற் கொள்ளவும்.
Vasanthangalum Vasigarangalum
Author & Publisher %caméas CSAaaarpan BA Attorney - At - Law I/7, Sri Saranankara Road, Dehiwala.
Tel : 075- 512999
First Edition
28, December, 1998
Copyright Publisher
ISBN 955 - 96.629-O-2
Subject Collection of Poems
Price Rs, 1 OO/-
Cover Art & Design by the Author அட்டைப்பட ஓவியம், வடிவமைப்பு: நூலாசிரியர்
Printer
Unie Arts (Pvt) Ltd 48B, Bloemendhal Road, Colombo - 13. Tel 33OI95.
இரா. சடகோபன் 2

சிவந்து
hlňIJIÓ hI6OJILIDTo.
56)T6T6
பிரவகிக்கும்
சுரண்டலெனும் காட்டாற்று வெள்ளத்தில் அள்ளுண்டு செல்லாமல் எதிர் நீச்சலிடும்
நியாய கீதங்கள்
என் தாய்
என் தந்தை
ஆகியோருக்கு
SD D6
JIDÍ LJ60Tb
வசந்தங்களும் வசீகரங்களும்

Page 4
பொருளடக்கம் பக்கம்
(i) என் மனப்பதிவுகளைப் பகிர்ந்து கொள்கிறேன். 05 (i) கவிதைக்கு இலக்கணம் உண்டா?. 17
(i) நூல் பற்றி CCLCCSLSLCLSSLLSCLCCLLLLLCCLCCCCLCLSCC CCCCCLL 20
(iv) சில வார்த்தைகள் LCCCCCLLLLLCCLLCLLLCLLLLLLL0LLLLLLLLCLCCLLLLLLL 29
கவிதைகள்.
(1) கவிதைப் புத்தகம் 32 (2) மனமுகையை முகிழாயோ SLLLLLLLLLSLLLLLSLLLLLSLLLLLLLLLLLL LL LLLLLLLLLLLLL0LLLLLLLLLLLLLL 34 (3) இந்த வண்ணங்கள் 38 (4) நினைவுகளே கனவுகளா?. 42 (5) ஒரு சராசரிக் காதலன். 48 (6) தேனீர் மலர்கள். 52 (7) ஒரு மாலை நேரத்துப் பரபரப்பில். 60 (8) நித்தம். நித்தம். 66 (9) உணர்வுகள் இல்லாத சிந்தனை. 70 (10) புதிய பாதை ஒன்றைத் G:54-«ա 74 (1) அத்தாணி மண்டபத்தை அசுரர்களால் அலங்கரித்து. 78 (2) ஓர் எச்சரிக்கை. 82 (3) வசந்தங்களும் வசீகரங்களும். 86
இரா. சடகோபன்

GVGØMT மனப்பதிவுகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.
என்னைப் பொறுத்த வரையில், இவ்விதம் "அச்சில் வெளிவரப் போகும் எனது சொந்த நூலுக்கு முன்னுரை எழுதுவது. ”இதுவே முதல் தடவை. இதனால் எதனை எழுதுவது என்ற பயமும் கூடவே எழுந்தது. எனவே உரத்துச் சிந்திக்காமல் மனதில் இதுவரை உறங்கிக் கிடந்த சில மனப்பதிவுகளை மட்டும் அப்படியே எழுதி விடுவது என்று தீர்மானித்தேன்.
★ ★ ★
சில குழந்தைகளைக் கவனித்திருப்பீர்கள். பெற்றோர் எதனைச் செய்ய வேண்டாமென்று திரும்பத்திரும்ப சொல்கிறார்களோ அதனையே திரும்பத் திரும்ப செய்துகொண்டிருக்கும். அப்படிச் செய்வதன் மூலம்தான், தான் பிறரின் கவனத்தைக் கவர முடியும் என்று அது கருதுகின்றது. இதனைப் புரிந்து கொண்டு அதன் செய்கையை பொருட்படுத்தாது விட்டு விட்டால் குழந்தை பிறரின் கவனத்தை எப்படி கவர்வது என்று வேறு வழிகளைத் தேட ஆரம்பித்து விடும்.
குழந்தைக்கு மட்டுமா இந்த மனோபாவம் சொந்தம். குழந்தை வளர்ந்து பெரியவனானதும் இந்த மனோபாவமும் வளர்ந்து விடத்தான் செய்கின்றது. அந்த வகையில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஒவியர்கள், பாடகர்கள்,நடனம், நாடகத் துறையைச் சேர்ந்தவர்கள். 9)ճւյգ
வசந்தங்களும் வசீகரங்களும் s'

Page 5
சமூகத்தின் ஒவ்வொரு துறையினரும், வித்தியாசமாக. சமூகத்தின் மேன்மையானவர்களாக.உயர்ந்தவர்களாக. சிறப்பானவர்களாக தம்மை இனங்காட்டிக் கொள்ளவே முயற்சிக்கின்றார்கள். இதுஎன்? இதுதான் மானிடத்துவத்தின்பண்போ ! இதனை அப்படியே விட்டுவிட வேண்டுமா? இல்லை இதில் இருந்து மீள எத்தனிப்பதன் மூலம் மானிடத்துவத்தின் இயல்பில் இருந்து விடுபடுவதால் சமூகம் வேறு உயர்வான பண்புகளை வரித்துக் கொண்டு வி முடியுமா?
அதனை உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகின்றேன். ஏனெனில் இந்த மானிடப் பாரம்பரியம் எனக்கும் சொந்தமானதுதான் என்று கருதுகின்றேன். எனது மனோபாவம் கூட இப்படித்தான் இருந்திருக்கின்றது. நானும் கூட என்னை இந்த சமூகத்தில் இருந்து வித்தியாசமானவனாக பார்க்கவே முயற்சித்திருக்கின்றேன் என்பது எனது செயல்களில் இருந்து தெரிகின்றது. மானிட வாழ்வின் சகல துறைகளையும் தூண்டித்துளாவி கிண்டிக்கிளறி, பிய்த்துப் பிராண்டி எவ்விதத்திலாவது தெரிந்து கொண்டுவிட வேண்டும் என்று செய்த முயற்சிகள் எல்லாம் வெறும் பித்துக் குளித்தன்மையானவைகள் என்பது காலம் கடந்து தான் புரிந்தது. இப்படித் தோல்வியடைந்தவன் நான் மட்டும் தானா? இல்லை உங்களில் பலரும் அப்படித்தானா என்பதனை நீங்கள்தான் தெரிவிக்க வேண்டும். சில வேளை இதனை 'தோல்வி'என்று சிந்திக்காமல் வெற்றி என்று சிந்திப்பது மன ஆரோக்கியமானது என்று (Oh! Positive thinking) 80556)ITLorr?
★ ★ ★
நான் நடந்து வந்த பாதையை மீட்டுப் பார்க்கிறேன். அப்படிச் செய்வ்து இன்னும் எவ்வளவு தூரம் நாம் நடக்க வேண்டும் என்பதனை
இரா. சடகோபன் 6

கணக்கெடுத்துக் கொள்ள உதவும் என்று யாரோ சொல்லியிருக்கின்றமை ஞாபகத்திற்கு வருகின்றது. நல்ல யோசனை அதற்கு இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்கிறேன். சிலவேளை எனது கவிதைகளை புரிந்துகொள்வதற்கும் அது உதவியாக இருக்கும். ஆனாலும் இப்படிச் சொல்வதன் மூலம், கட்டாயப் படுத்தி இதனைப்படிப்பதற்கு உங்களை நான் தூண்டுவதாகக் கருதக்கூடாது. உங்கள் தனி மனித சுதந்திரத்தில்
தலையிட எனக்கு உரிமையில்லை.
எங்கள் குடும்பம் பெரியது. மொத்தம் ஒரு டசன் அங்கத்தவர்கள். ஒரு டசன் என்பதற்கு பதிலாக 12 பேர்கள் என்று சொன்னால் அது உங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஒரு கோடி என்று சொல்வதிலும் பார்க்க நுாறு இலட்சம் என்று சொல்வது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பத்திரிகைத்துறையைச் சேர்ந்தவர்களின் அபிப்பிராயம். தெரிந்தோ தெரியாமலோ நான் பத்திரிகையாளன் என்பதனை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டியதாயிற்று. அப்படி வெளிக்காட்டுவதன் மூலம் எனது எழுத்தாற்றலை மிகைப்படுத்திக் காட்டுவதாகவோ, அல்லது எழுத்துத்துறையில் 'வல்லவன் ’ என்பதனை பறைசாற்றிக்கொள்ள முயற்சிப்பதாகவோ நீங்கள் கருதக்கூடாது. ஏனெனில் நான் தொழில் பார்க்கும் அலுவலகம்கூட எனது எழுத்தாற்றலை இன்னமும் அங்கீகரித்ததாகத் தெரியவில்லை. தமிழ்ப்பத்திரிகையாளர்கள் என்பவர்கள், அவர்கள் தொழில் புரியும் 'ஆசிரிய பீடங்களின் எழுது
வினைஞர்களாகவே கணிக்கப்படுகின்றனர் என்பது கசப்பான
வசந்தங்களும் வசீகரங்களும் 7

Page 6
உண்மை. வெளியுலகத்தில் இவர்கள் வெறுமனே, கொச்சையாக
பேப்பர் காரன்' அல்லது நிருபர் மட்டும்தான்.
அது கிடக்கட்டும் ! எங்கே விட்டேன். ஆம், எனது குடும்பத்தைப்பற்றி. எனது குடும்பத்தில் எல்லாமாக பன்னிரண்டு பேர். நிறையதங்கைகள், நிறைய அக்காமார், அண்ணன், தம்பி. நான் நடுவில் வந்தவன். எனவே எல்லா பாத்திரங்களிலும் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக்கிடைத்தது. குடும்பத்தில், எமக்கிடையே நிறைய சின்னச் சின்ன சண்டைகள், சச்சரவுகள், போட்டிகள் பொறாமைகள்.
இத்யாதி.இத்யாதி.
சாப்பாடு. உடுப்பு எது கிடைத்தாலும் பன்னிரண்டு சமபங்குகளாகப்பகிரப்பட வேண்டும். எனவே முதலாளித்துவத்தின் மீது வெறுப்பும், சோசலிஷத்தின் மீது பற்றுதலும் ஏற்பட் தில் வியப்பில்லை. சமூகத்தினரில் மிகச் சிலர் உண்டுகளித்து சுகித்திருக்கும்போது, பெரும் பான்மையானவர்கள் உழைப்பதற்கு போதிய உளதியமின்றி வாடி, துன்பத்தில் மூழ்கியிருக்கும் இந்த சமூக முறைமை மீது கோபம் ஏற்பட்டது. எனது கவிதைகளில் பல, நியாயமான அந்தக் கோபத்தைப் பிரதிபலிப்பன.
★ ★ ★
எனது தந்தையார் ஒரு கலை ஆர்வலர். அந்தக்காலத்தில் இந்தியாவில் இருந்து நாடக, கூத்துக் கலைஞர்கள் இலங்கைவந்து தோட்டப்பகுதிகளில் நாடகம், கூத்து போன்றவற்றை நடத்துவார்கள். அவர்களை வீட்டுக்கு அழைத்துதங்கவைத்து உபசரித்து விருந்து வைப்பதில் எனது தந்தையார் திருப்தியுறுவார். ஒருமுறை அப்படி வந்தவர்களிடம் வீட்டில் இருந்த ஒரே ஒரு ஆர்மோனியப் பெட்டியையும் அவர்களுக்கு வாரி வழங்கி
இரா. சடகோபன் 8

விட்டதாக எனது அம்மா அடிக்கடி குறைபட்டுக்கொள்வார். ஆனால் எனது தந்தையார் அதற்காக வருத்தப்பட்டதுகிடையாது. இப்படி கலைத்துறையுடன் எனது குடும்பம் கொஞ்சம்சம்பந்தப்பட்டிருந்தது என்பதில் எனக்குத்திருப்தி
கூத்து மற்றும் நாடகக் கலைஞர்களைத் தவிர மலையக மெங்கும் அலைந்து திரிந்து பாட்டுப் புத்தகங்களை விற்கும் இந்திய கவிஞர்களும் எமது வீட்டில் தங்குவார்கள். இவர்கள் சுதந்திரப் போராட்ட பாடல்கள், மாரியம்மன் தாலாட்டு, மற்றும் தாமே இயற்றிய பல்வேறு துறைகளிலான பாடல்களை பாடி விற்பார்கள். இப்படி வந்து தங்கிய கவிஞர் ஒருவர் ஒரு சமயம் ஒரு பெரிய புத்தக மூட்டையைக் கொண்டு வந்து வைத்து விட்டு பிறகு வந்து எடுத்துக் கொள்வதாக சொல்லிவிட்டுப் போனார். ஆனால் அவர் பிறகு வரவேயில்லை. அவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாது.
இந்த புத்தகமூட்டை நீண்ட பல வருடங்களாக துாசுபடிந்து யாரதும் கை படாமல் பத்திரமாக அட்டாளை யில் கிடந்தது. அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். 'வாண்டுமாமாவின் கதைகள், கண்ணன், மாஸ்டர் பாலகுமார், 007-துப்பறியும் சிறுவன், அம்புலி மாமா என்பனவே எமது வாசிப்புக்களாக இருந்தன. இதனைத் தவிர எனது அக்காமார் படித்துவிட்டு வைக்கும் நா. பார்த்தசாரதி, அகிலன், கல்கி, சாண்டில்யன் முதலியோரது நாவல்களையும், மற்றும் பிடி. சாமி, மாயாவி, மேதாவி, சிரஞ்சீவி முதலானோரின் துப்பறியும்
கதைகளையும் களவாகப்படிப்பதுண்டு.
இந்தவாசிப்பு பத்தாம் வகுப்புக்களை அடைந்தபோது இலக்கியத் தேடல்களுக்கு வழிவகுத்தது. அப்போது ஒருநாள் மேற்படி இந்திய
வசந்தங்களும் வசீகரங்களும் 9

Page 7
பாட்டுக்காரரின் உறங்கிக்கொண்டிருக்கும் புத்தக மூட்டையைப் பிரித்துப்பார்ப்பது என்று தீர்மானித்தேன்.
அந்த மூட்டைக்குள் ஒரு பெரும் புத்தக பொக்கிஷமே இருந்தது. அப்போது பத்தாம் வகுப்பில் தமிழ் இலக்கியமும், தமிழ் இலக்கிய வரலாறும் நாம் படித்துக்கொண்டிருந்தோம். இந்த புத்தக மூட்டை தமிழ் இலக்கியத்தை நிதர்சனமான எனது கண்முன் கொண்டு வந்தது. இந்த மூட்டையில் கலிங்கத்துப்பரணி, கலித்தொகை, தனிப்பாடல் திரட்டு, சங்ககாலக் கவிஞர்கள் பாடல்களும் விளக்கமும், விவேக சிந்தாமணி, சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சாகுந்தலம், நளதமயந்தி, மகாபாரதம், மேக துாதம், கூளப்ப நாயக்கன் காதல், பாரதியார் கவிதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், ஆயிரத்து ஓர் இரவு அரபுக் கதைகள், பாரசீகக் கவிஞர்களின் கவிதைகள், ஷேக்ஸ்பியர் நாடகங்களின் மொழிபெயர்ப்புக்கள், ஜாவர் சீதாராா6னின் எழைபடும்பாடு, டால்ஸ்டாயின்அன்னாகரினினா இப்படி நுாற்றுக்கனைக்கான இதே வகை நுால்கள் அடுக்கப்பட்டு உறங்கிக்கிடந்தன. இவை பலவும் அப்போது எனது அறிவுக்கெட்டாதவைகளாக இருந்தன. ஆனால் நிச்சயமாக இலக்கியத் தேடலைத் தூண்டின. பாடசாலையில் இலக்கியப்பாடத்தில் நான் முதன்மை மாணவனானேன். அப்போது தமிழ் மொழி, இலக்கியம் ஆகிய பாடங்களை எமக்குப் படிப்பித்த , 'சின்ன பண்டிதர்' என்று அழைக்கப்பட்ட சண்முகலிங்கம் மாஸ்டரை நினைவு கூர்கிறேன். நான் க.பொ.த (உ/த) வகுப்பில் தமிழ் மொழியில் சிறப்புச் சித்தியெய்தியமைக்கு இவரும் மேற்படி நூல்களும் காரணமாக அமைந்தன.
★ ★ ★
எனது வகுப்பில் எல்லோரும் டாக்டர், எஞ்சினியர் ஆக
வரவேண்டுமென்று விரும்பிய போது நானொரு கவிஞனாக, எழுத்தாளனாக வரவேண்டுமென்று விரும்பினேன். இக்காலத்திலேயே
இரா. சடகோபன் 10

கவிதை எழுதும் ஆர்வம் எழுந்தது. எமது பாடசாலையில் (நாவலப்பிட்டி கதிரேசன் குமார மகா வித்தியாலயம்) தமிழ் இலக்கிய மன்றத்தின் ஆதரவில் மூன்று கையெழுத்துப்பிரதி பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. அறிவுச் சுடர் (எம்முடையது) வெள்ளி நிலா (ஜெ. சகாயசிலனை ஆசிரியராகக் கொண்டது) மாலைமதி (க. குமாரசாமியை ஆசிரியராகக் கொண்டது.) இந்த கையெழுத்துப் பிரதிகள் எமது கல்லூரியிலும் சக பாடசாலைகளிலும் வெற்றியுடன் வலம் வந்தன.
இந்த கையெழுத்துப்பிரதிகள் பாடசாலை நாட்களுடன் நின்று போய்விட்டாலும் அது ஆரம்பித்து வைத்த இயக்கம்’ எம்முடன் வளர்ந்தது. எமக்கு ஆரோக்கியமானதொரு நண்பர் குழாத்தை பெற்றுத் தந்தது. நண்பர் ஜெ. சகாயசீலன் பத்தாம் வகுப்புடன் கொழும்புக்கு வந்து விட்டார். இங்கே அவர் வெள்ளி நிலா கலாலயம் என்ற அமைப்பை நிறுவி பல நாடகங்களை எழுதித் தயாரித்தார் என்று பின்னர் அறிந்தேன்." இப்போதும் இந்த அமைப்பு இயங்கி வருவதாகத் தெரிகின்றது.
★ ★ ★
எமக்குக் கிடைத்த ஏனைய நண்பர்கள் மயில்வாகனம், குமாரசாமி, ஜெயசீலன், ஆனந்தகுமார், விவேகானந்தன், சிவப்பிரகாசம், யோகரட்ணம், ஹூசைன்,ஹஸ்கின், கனகராஜ், தர்மசீலன், ஆர்.டி. பாலா போன்றோர் எமக்குள்,உள்மனதில் எழுந்த பல்வேறு விகாரங்களின் போது, ஆரோக்கியமான, திடகாத்திரமான மனோவியல் உருவாக்கத்துக்கு காரணமாக இருந்தார்கள். பிற்காலத்தில் தபால் அதிகாரியாக நாவலப்பிட்டிக்கு வந்த ரத்தினசபாபதி ஐயர் முற்போக்கு இலக்கியத்தை
வசந்தங்களும் வசீகரங்களும் 11

Page 8
முதன்முதலாக எமக்கு அறிமுகப்படுத்தினார். இவர் வாயிலாக 'கணையாழி', 'மல்லிகை ஆகிய சஞ்சிகைகளையும் அதில் எழுதிய எழுத்தாளர்களையும் தெரிந்து கொண்டோம்.
இக்காலத்தில் நாவலப்பிட்டியில் ‘மாலி' என்ற மகாலிங்கம், ஆப்தீன் போன்றோர் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். இருந்தாலும் அப்போது இவர்களுடன் எமக்கு பரிச்சயம் இருக்கவில்லை.
★ ★ ★
கல்வியைப் பொறுத்தவரையில் பத்தாம் வகுப்பில் இருந்து பதினோராம், பன்னிரண்டாம் வகுப்புகளுக்குச் சென்றதும், பின் பல்கலைக் கழகத்துக்கு சென்றமையும் பகீரதப் பிரயத்தனங்களாகவே இருந்தன. குடும்பத்தின் நிதிநிலைமையே இதற்குக் காரணம். எனினும் இக்காலத்தில் பாடசாலையில் நான் பெற்றிருந்த அங்கீகாரம், சிரேஷ்ட மாணவர் தலைவர் என்ற பெருமை, சிரேஷ்ட மாணவர் தமிழ் மன்ற தலைவராக தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் தெரிவு செய்யப்பட்டமை எனக்குள் பெருமிதத்தையும், தன்னம்பிக்கையையும் 'வாழ்வின் இலக்கு என்ன என்ற தேடுதலையும் தோற்றுவித்தன.
1976 ஆம் ஆண்டு, கல்லுாரி தமிழ் இலக்கிய மன்றத்தின் ஆண்டுமலரான 'நற்றமிழ் அருவியை மிகச்சிறப்பாக வெளியிட்டமையும் இதனை வெளியிடுவதற்கு நாம் ஏற்பாடு செய்திருந்த பெருவிழாவும் கல்லூரிக்கும், எமக்கும் பெருமையைத் தேடித் தந்தன. இந்த விழாவில் பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் ராமகிருஷ்ணன், அப்போது சிரேஷ்ட விரிவுரையாளராக இருந்த கலாநிதி சின்னத்தம்பி ஆகிய கல்விமான்கள் விருந்தினராகக் கலந்து கொள்ள இணங்கியமை எமக்கு
இரா. சடகோபன் 12

மகிழ்ச்சியூட்டின. இந்த விழாவுடன் தொடர்புடைய அரசியல் நிகழ்வுகள் எமக்குப் பெரும் பாடத்தைக் கற்றுத் தந்தன.
இக்காலத்திலேயே தேனீர் மலர்கள்' என்ற தலைப்பில் கவிஞன், என்ற அந்தஸ்தினைப் பெற்றுத் தந்த கவிதையை நான் எழுதினேன். இந்தக் கவிதை பேராதனை பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் அகில இலங்கை'இளங்கதிர் கவிதைப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றது. தொடர்ந்து பல கவிதைப் போட்டிகளில் வெற்றி கிட்டியது. எனவே இக் கவிதைத் தொகுப்பில் பல வெற்றி பெற்ற கவிதைகளைக் காணலாம்.
★ ★ ★
இக்காலத்தில் எம் பாடசாலையில் ஒரு சிறப்பான ‘மாணவர் அணி' உருவாகி இருந்தது. பாடசாலைகள் மட்டத்திலும், வட்டார, மாகாண மட்டத்திலும், அகில இலங்கை ரீதியிலும் இவ்வணி பாடசாலைக்குப் பெருமை சேர்த்தது. விவாதம் ,நாடகம், கட்டுரை, பேச்சு மற்றும் பல்வேறு கலைகலாசாரப் போட்டிகளில் இவ்வணி வாகை சூடியது. இவற்றில் பலவற்றுக்கு நான் தலைமை தாங்கினேன். இக்காலத்தில் எமது கல்லுாரி அதிபர்களாக இருந்த திரு. எஸ்.வி. ஆறுமுகம், திரு. வி. மாரிமுத்து போன்றோர் எமக்கு ஊக்குவிப்பாளர்களாக அமைந்தனர். கல்லுாரியில் இருந்து நான் விலகிய போது அதிபராக திரு. எஸ். வி. ஆறுமுகமே இருந்தார். அப்போது அவர் மிகுந்த மகிழ்ச்சியுடனும், பெருமிதத்துடனும் எனக்களித்த இரண்டு பக்க நற் சான்றுப்பத்திரத்தை இப்போதும் நான் எடுத்துப் படிப்பேன். அத்தகையதொரு சான்றிதழைத் தான் இதுவரை யாருக்கும் வழங்கியதில்லை என்று அவர் என்னிடம் மிக நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.
女 ★ ★
இந்த அனுபவங்களுடன் நான் கொழும்புப் பல்கலைக்கழகத்துள் நுழைந்தபோது அங்கே என்னை, என் எழுத்துக்களை அறிந்தவர்கள் சிலர்
வசந்தங்களும் வசீகரங்களும் e 1.

Page 9
இருந்தனர். நான் பல்கலைக்கழகத்தில் நுழைந்த தறுவாயிலேயே பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் நடத்திய அகில இலங்கை ரீதியிலான 'இளந்தென்றல் கவிதைப் போட்டிக்கு நான் ஏற்கனவே அனுப்பி வைத்திருந்த (1978ம் ஆண்டு)"நினைவுகளே கனவுகளா” என்ற கவிதை மூன்றாம் பரிசை பெற்றிருந்தது. இந்த விடயம் எனக்கு நல்லதொரு அறிமுகத்தினைப் பெற்றுத்தந்தது. அத்துடன் கொழும்புப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு இலக்கிய கலை, கலாசார நடவடிக்கைகளிலும் பங்கேற்கும் சந்தர்ப்பத்தினைப் பெற்றுத்தந்தது. இக்காலத்தில் இரண்டு நாடகங்களை பல்கலைக்கழகத்திலும், பல்கலைக்கழகத்துக்கு வெளியிலும் மேடையேற்றினேன். “பாதை தெரியாத பயணிகள்” என்ற கவிதை நடையில் அமைந்த தாளலய நாடகம், நடைமுறைகள்’ என்ற, சமூக நிகழ்வுகளின் தொகுப்பு ஆகிய இந்த இரண்டு நாடகங்களில் “நடைமுறைகள்” என்ற நாடகம் பல்கலைக்கழக நாடக விழாவில் (1980) மூன்றாவது சிறந்த நாடகமாகத் தெரிவு செய்யப்பட்டது. அப்போது 'Sun என்ற ஆங்கில பத்திரிகையில் கடமையாற்றிய இலக்கிய விமர்சகர் கே.எஸ். சிவகுமாரன் இந்நாடக விழாவுக்கு வந்திருந்து எமது நாடகங்கள் Luigi) 'sun' uséfloo Sussi) 'Colombo undergrades show Great maturity' என்ற தலைப்பில் விமர்சித்திருந்தார். இந்த விமர்சனத்தில் இவர் தெரிவித்திருந்த கருத்துக்கள் எமக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஊக்குவிப்பையும் தந்தன.
★ ★ ★
மிகவும் இறுக்கமான, இராணுவத்தனமான கெடுபிடிகள், ஒழுங்கு முறைகள் ஆகியவற்றின் பிடியில் சிக்கிக் கொண்டிருந்த லங்கையின் இந்தியத் தோட்டத்தொழிலாளர் (கடும்பத்தில் பிறந்ததாலோ
இரா. சடகோபன் 14

என்னவோ விபரம் தெரிந்த நாளில் இருந்தே இதன் இரும்புப்பிடிக்குள் இருந்து விடுபட வேண்டும், இந்த சமூகத்தை விடுவிக்க வேண்டும் என்ற உத்வேகம் எனக்குள் கொளுந்து விட்டு எரிந்தது. இந்த உணர்வுகளை சிலபோது எனது கவிதைகளில் வெளிப்படுத்தினேன். இத்தகைய பின்னணியால் இயல்பாகவே இடதுசாரித்தத்துவங்களிலும் இயக்கங்களிலும் பிடிப்பும் பற்றுதலும் ஏற்பட்டன. இந்த 'சமூக விடுதலை உணர்வுகள் பல்கலைக்கழகத்தில், அதன் மாணவர் இயக்கத்தில்,
தீவிரமாகப் பங்கு கொள்ள வைத்தன.
இந்த உணர்வுகள் அனைத்துமே 1983 இனக்கலவரத்தால் மழுங்கடிக்கப்பட்டன. பலரும் பலதிசைகளில் தெறித்து ஒடினோம். இதுவரை என்னுள் வளர்ந்திருந்த நாட்டுப்பற்றுக் கூட இல்லாமல் போய் விட்டது. 'நீ இந்தியன், இந்த நாட்டிற்குச் சொந்தமானவன் அல்ல என்று அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டினர். இந்த பாதிப்பில் இருந்து மீண்டும் சுமுகமான வாழ்க்கைக்குத் திரும்ப எத்தனை ஆண்டுகள். இப்போதும் நான் அந்த பழைய நான் அல்ல. என்பது தான் உண்மை. அன்று ஜூலையில் ஏற்பட்ட அந்த பாதிப்பு எல்லோர் வாழ்விலும் மாபெரும் பள்ளத்தையும் இடைவெளியையும் தோற்றுவித்து விட்டது. நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்வின் ஒரு பகுதியினை இழந்து விட்டோம்.
எம்முள் வரலாற்றுக்காலம் முழுவதும் இருந்து வந்த இடைவெளிகளும் இப்போதும் விரிவடைந்து கொண்டுதான் போகின்றன. இந்த யுத்தத்தில் கூட, இனப் பிரச்சினையின் இறுதி வேக்காட்டில் கூட நம் அனைவரையும் இணைக்கும் சக்தி எங்கேயோ ஒடிப்போய் விட்டது. நாம் நமக்குள் அந்நியர்களாக, மூன்றாம் பிரஜைகளாக இப்போதும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இதனைத்தவிர
வசந்தங்களும் வசீகரங்களும் 15

Page 10
நம்மால் என்ன செய்ய முடியும் என்ற மனநிலை மட்டும் தான் இதற்குக் காரணமா? ஆம், அந்த வேகத்தில் நம்மால் ஓடமுடியவில்லை. நம் தலைவர்கள் நம்மை பகடைக் காய் களாக்கி விட்டார்கள். நமது
தலைவர்கள் யார் என்பது கூட நமக்குத் தெரியவில்லை.
இதற்கு மேலும் எழுதினால் இது சுய சரிதம் ஆகிவிடும். இப்போதும் பலர் அந்த முடிவுக்கு வந்திருப்பார்கள். ஆனால் இதனை நான் சொல்லி விடவேண்டும் என்று கருதினேன். இந்த உணர்வுகளையே எனது கவிதைகளும் உணர்த்துவதாகக் கருதுகின்றேன். உங்கள்
விமர்சனங்களுக்கும், கருத்துக்களுக்கும் கட்டாயம் மதிப்பளிப்பேன்.
இறுதியாக இணைக்கப்பட்ட சில கவிதைகளைத் தவிர ஏனைய கவிதைகள் தொடர்பாக கையெழுத்துப் பிரதி நூலாக இருந்தபோது தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் பலதையும் தனியாக இணைத்துள்ளேன். கையெழுத்துப் பிரதி நூலுக்கு, அப்போது கொழும்புப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளராக இருந்த திரு. இ. பாலசுந்தரம் வழங்கிய முன்னுரையையும் அப்படியே தந்துள்ளேன்.
நன்றி
இரா. சடகோபன்
1/7, பரீ சரணங்கரா வீதி,
பாமன் கடை, தெஹிவல. 10 - 02-95
இரா. சடகோபன் 15

கவிதைக்கு இலக்கணம் உண்டா.
கவிதைக்கு இலக்கணம் இல்லை என்பர் சில கவிஞர். இவ்வாறு கூறுபவர்களிற் பலர் மேலைக் கவிஞர்கள். இலக்கணம் இருக்கிறதோ இல்லையோ, அவர்களிற் சிலர் எவ்வாறு கவிதையை விபரிக்கின்றனர் எனப் பார்ப்போம்:
வொலஸ் ஸ்டீவன்ஸ் (Wallace Stevens) அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு கவிஞன். வாழ்ந்த காலம் : 1897-1955 அவன் சொன்னான் All poetry is experimental - எல்லாக் கவிதைகளும் பரிசோதனைக் கவிதைகள் தாம். அவன் கவிதையின் உருவத்தைப் பற்றி மாத்திரமல்ல, உள்ளடக்கத்தையும் கருத்துக்கு எடுத்து, அதன் ஆழத்தை ஆன்மீக ஈடுபாட்டுடன் சமப்படுத்தினான். அவன் கூறுகிறான்: After One has abandoned a belief in god, poetry is that essence which takes its place as life's redemption. 9 July GusiT DITs) - 5L66ir நம்பிக்கையைக் கைவிட்ட பின்னர், வாழ்க்கையின் மீட்சிக்காக, அவ்விடத்தைப் பெறும் சாராம்சம் கவிதைதான். கவிதையை அவர் ஆன்ம ஈடேற்றத்துக்காக சமப்படுத்துவதை இங்கு நாம் காணலாம்.
ஒரு பட்டுப் புடவையை புழுக்களைக் கொண்டு நெசவாளன் நெய்வது போலவே, கவிஞனும் தன் கவிதையாக்கத்தைத் தருகிறான் என்ற கருத்துப்பட வொலஸ் ஸ்டீவன்ஸ் கூறுகிறார் : The poetmakes silk dresses out of worms. g.g. gig (56.85th 96ü6)6. IT?
கவிதையை நாம் எவ்வாறு படிக்க வேண்டும் என்றும் இந்த 9Guoflá,655 056,365i Ji (pépTri. One reads poetry with One's nerves. இதனைத் தமிழில் இப்படி நாம் கூறுவோமா? கவிதையை யொருவர் தம்
வசந்தங்களும் வசீகரங்களும் 17

Page 11
கூருணர்வுநிலைதனில் படிக்கிறார். அதாவது எமது கூரிய உணர்ச்சிகளைப் பிரயோகித்துப் படிக்க வேண்டும் என்கிறார். அது மாத்திரமல்ல கவிஞன் உலகத்தை எவ்வாறு பார்க்கிறான் என்பதையும் புதுமையாக அவர் கூறுகிறார் : A poet looks at the world as a man looks at a Woman. UTi55ies6m? எவ்வளவு நுட்பமாக, வியந்து, ரசித்துப் பார்க்கவேண்டுமென்பது இங்கு சொல்லாமற் சொல்லப்படுகிறதல்லவா? உலகத்தையே கவிஞர் பெண்ணாக்கி விட்டார். ஒரு பெண்ணை ஆண் பார்ப்பது போல கவிஞன் உலகத்தைப் பார்க்கிறான் என்று கூறும் கவிஞன், Aristole is a skeleton என்கிறார். அதாவது அரிஸ்டோட்டில் என்ற கிரேக்க அறிஞன் வெறுமனே உணர்ச்சியற்ற ஒர் எலும்புக் கூடு என்கிறார். கவிதையின் அடிநாதம்உணர்ச்சிஎன்பது இங்கு வெள்ளிடைமலை,
இதனை விளக்குவது போல அவர் தொடர்கிறார் :poetry must resist the intelligence almost Successfully GT6iTápmi.g56060T5 தமிழில் இவ்வாறு உணர்த்தலாம் என நினைக்கிறேன்: புத்தியை எதிர்த்து, இயலுமளவு வெற்றியைக் கவிதை காண வேண்டும். வொலஸ் ஸ்டீவன்சின் இன்னொரு கூற்றை மாத்திரம் எடுத்துக் கொள்வோம். One cannot spend one's time in being modern, when so many important thingsare to be. இதன் விளக்கம் என்னவென்றால் மேலும் பல மிக முக்கியமானவை இருக்கையில், நவீனத்துவத்தைக் கிரகிக்க ஒருவர் முழு நேரத்தையும் செலவிட முடியாது. அதாவது, மரபைப் புறக்கணிக்க முடியாது. புதுமை மாத்திரம் எல்லாம் அல்ல. மரபும், நவீனத்துவமும் - இரண்டுமே தேவை என்பது தான் இதன் பொருள்.
இனி, வொலஸ் ஸ்டீவன்சிலிருந்து உவிலியம் வேர்ட்ஸ்வர்துக்கு (William Wordsworth) வருவோம். இவர் 19 ஆம் நூற்றாண்டு ஆங்கிலேயக் கவிஞர். வாழ்ந்த காலம் 1770-1850 இவரை மனோரதியக் (Romantic)கவிஞர் என்பர். இயற்கையோடியைந்த வாழ்வை
இரா. சடகோபன் 18

சித்திரிக்கும், இயற்கையைப் பாடிய கவிஞர்களை மனோரதியக் கவிஞர் Tsirui. 96 ji jigaOTITsi: Emotion recollected in tranquillity is poetry. அதாவது அமைதிச் சூழலில் திரட்டப்பட்ட உணர்ச்சி வடிவமே கவிதை. இதனைக் கவிஞர் இவ்வாறு ஆங்கிலத்தில் விளக்குகிறார்: Poetry is spontaneous outflow of powerful feelings : it takes its origin from emotion re collected in tranquillity. g56060Ti சுருக்கமாக இவ்வாறு தமிழில் கூறலாம் :
வலிமை உணர்வுகளின் தன்னியல்பான ஊற்றுப் பெருக்கே கவிதை. அமைதியான முறையில், உணர்ச்சியை மீட்டெடுக்கும் போது கவிதை ஊற்றெடுக்கிறது.
கவிதையைப் பற்றிப் பலரும் பலவாறு கூறியிருப்பினும், இரு கவிஞர்கள் கூற்றை மாத்திரம் நாம் கண்டோம். இக் கவிஞர்களின் கூற்று எனக்குப்பிடித்தமையால் இங்கு தந்தேன். இக் கூற்றுகளுக்கு உடன்படாத கவிஞர்களும் இருக்கின்றனர். அத்தகையவர்களின் கூற்றுக்களையும் இங்கு தருவதாயின் அது ஆய்வுக் கட்டுரையாகிவிடும்.
நண்பர் சடகோபன் கவிதைகளை எடை போடுவது எனது நோக்கமல்ல. அவருடைய முயற்சிகளும் கவிதை என்ற படுதாவில் இடம் பெற்றுவிடுகின்றன. அவை எவ்வாறு இ ய் நயம் பெறுகின்றன என ஆராயின் அது திறனாய்வு ஆகும். .
- கே. எஸ். சிவகுமாரன் -
21, முருகன் பிளேஸ்,
கொழும்பு - 6,
19.12.1995
வசந்தங்களும் வசீகரங்களும் 19

Page 12
நரல் பற்றி
புதிதாக ஒரு இடத்துக்கு, ஒரு நாட்டுக்கு அல்லது எங்காவது செல்வதற்கு முன்பு அவ்விடம் பற்றிய, அல்லது நாட்டைப் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டு செல்வது அச் செயலில் நம்மை முழுமையாக ஈடுபடுத்துவதற்கு உதவும். ஏன், ஒரு புதிய மனிதரை சந்திப்பதற்கு முன்னர் அவர் பற்றிய பல விபரங்களை அறிந்து கொண்டு சென்றால் சந்திப்பினை பயனுடையதாகவும் சுவாரஸ்யமானதாகவும் ஆக்கலாம். சந்திப்பின் போது அவரே மறந்திருக்கும் அவரைப் பற்றிய தகவல் ஒன்றினை தெரிவித்தால் அவரை ஆச்சரியத்துக் குள்ளாக்குவதுடன் கவர்ந்து விடவும் கூடியதாக இருக்கும்.
ஒரு புராதன சின்னத்தைப் பார்த்தால். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்த அரசன் ஒருவனின் சிம்மாசனத்தை பார்க்கச்சென்றால். யார் அந்த அரசன்?. அவனது அரசாட்சி எப்படி இருந்தது? என்ற கேள்விகளுக்குப் பதில் தெரிந்தால். உண்மையில் அந்த சிம்மாசனத்தில் அந்த அரசன் வீற்றிருப்பது போன்ற ஒரு காட்சி கண்முன் வரும். அந்த அனுபவம் எத்தனை அற்புதமானது. இதனை அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் அது புரியும். நான் அனுபவித்திருக்கின்றேன். அனுராதபுரத்துக்கும், பொலன்னறுவைக்கும் சென்ற போது, சீகிரியாக் குன்றில் ஏறிய போது. தேவநம்பிய திஸ்ஸ மன்னனையும், நிஸ்ஸங்க மல்லனையும், காசியப்பனையும் எப்படி தரிசிக்காமல் இருப்பது. நிஸ்ஸங்க மல்லனின் அந்த கல் சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்த போது."நாம் தான் நிஸ்ஸங்கமல்லன்” என்று நினைத்துப் பார்த்த அந்த ஒரு கணம். அதுதான் வாழ்வின் 'உன்னதமான நிமிடம். அது மீண்டும் வருமா? வராது. வந்தால் அது புதிய அனுபவமாகத்தான் இருக்கும்.
இரா. சடகோபன் 20

நூல் பற்றி. என்று கூறிவிட்டு எதற்கு இந்த வேறுபட்ட ஆலாபனை என்று கேட்கிறீர்களா?. “யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்” என்பது கவிதை தொடர்பான பழைய கோட்பாடு. இது மனிதனின் மிக அடிப்படையான ஆச்சரிய உணர்வின் பாற்பட்டது. எந்த ஆச்சரியத்தையும் தனியாக மனிதன் வியக்க விரும்புவதில்லை. நான் ஆச்சரியத்தைக் கண்டேன். கண்டு விட்டேன். என்பதை நாலு பேருக்குக் கூறினால் தானே அது ஆச்சரியம் தான் என்பதனை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள். இதுவும் ஒரு விதத்தில் சுய நலமே. மற்றவர்கள் நினைப்பது போல் சுய நலம் என்பது கெட்டது அல்ல. அது பிறரின் நலனைப் பாதிக்காத வரையில். பிறரைத் துன்புறுத்தாத வரையில்,
இன்னமும் போதிப்பதில் இருந்து நான் விடுபடவில்லை. போதிப்பது கூட கவிஞனின் ஒரு குணநலன் தானே. இதில் இருந்து"நூல் பற்றி” என்ற எனது தலைப்பைத் தொடர்கின்றேன். இந் நூலில் இடம் பெறும், அநேகமாக எல்லாக் கவிதைகளுமே எனது 18வது வயது முதல் 30வது வயது வரையுள்ள காலத்தில் எழுதப்பட்டவைகள். மனிதனின் இந்தப் பருவத்து சிந்தனைகள்’ எந்த வகையைச் சேர்ந்தன என்பதனை விளங்கப்படுத்தத் தேவையில்லை. எனவே இளமைக் கால சிந்தனைகளே இதில் அதிகமுள்ளன என்று யாரும் குறைபட முடியாது. இவை சில வகை உணர்ச்சிகளின் வடிகால்களாகவும், நியாய உணர்வுகளால் உந்தப்பட்ட
சிந்தனைகளாவும் உள்ளன என்றும் கூறலாம்.
1983 ஆம் ஆண்டு நம் அனைவரதும் வாழ்வின் திருப்பு முனை என்பது யாவரும் அறிந்ததே. அதன் பின்னர் எமது வாழ்வு எங்கே? என்று தேடும் பணி பெரிதாகி விட்டது. 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29ஆம் திகதி சாவின் மிக அருகில் இருந்து மீண்டமை புதிய பிறவியையே எனக்கு அளித்தது. எனினும் அந்த மிகக் கசப்பான 'கறுப்பு அனுபவத்தினை
வசந்தங்களும் வசீகரங்களும் 21

Page 13
எவ்வளவு முயன்றும் மனதில் இருந்து அழித்துவிட முடியவில்லை. வாழ்வில் எடுக்கக்கூடிய ஒவ்வொரு இறுதித் தீர்மானத்தையும் அந்த அடிகள் மாற்றி எழுதின. நாங்கள் தொடர்ந்தும் வாழ்வைத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றோம். இதுவரை எம்முள் வாழ்ந்திருந்த கோட்பாடுகள் பொய்த்துப் போய் விட்டதால் ஏற்பட்ட 'சூன்ய நிலைமையால் கவிதைகள் மறந்து போய் விட்டன என்பது தான் உண்மை. மீண்டும் உருவாக முயற்சிக்கின்றேன். முடியுமா?
இந்த நூலின் அனேகமான கவிதைகள் கையெழுத்துப் பிரதித் தொகுப்பாக இருந்த போது அதனை அச்சில் கொண்டு வர வேண்டும் என்று பலரும் என்னிடம் விருப்பம் தெரிவித்தனர். பலர் தமது கருத்துக்களை கவிதைகளாகவே வடித்துத் தந்தனர். அவற்றையும் இங்கு சுருக்கமாகத் தருகின்றேன்.
(1)
இதயத்தைக் கொள்ளை கொள்ளும் வண்ணத் தமிழ்க் காவியங்கள் மனதை மயக்கும் ஒவியங்கள் கதிரவனைக் கண்டவுடன் மலர்ந்த - இந்த வண்ணங்கள் விழித்தெழும் எரிமலைகளாய் இதயத்தை சல்லடை போடுகின்றன சுதந்திரம் தேடிய தேனீர் மலர்கள் விட்டில் பூச்சிகளாய் கண்ணfர் மல்கிய போது கண்ணிர் வழியத்தான் செய்தது.! அணை கடந்த வெள்ளம் போல் பெருகி ஒடும் காதல் வசந்தங்களுக்கு - இங்கே அணைபோடுகின்றது சீதனம்.!
இரா. சடகோபன் 22

இத்தனைக்கும் வசந்தங்களும் வசீகரங்களும் கற்பழிக்கப்பட்டு விட்டனவோ?
- ஜயந்தி மாலா - 28-06-82
★ ஜயந்திமாலா அருள் செல்வநாயகம் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். எழுத்தாளர் அருள் செல்வநாயகத்தின் புத்திரி. கொழும்புப் பல்கலைக்கழகத்தில் என்னுடன் படித்தவர். சிறிது காலம் ரூபவாஹினியில் செய்தி வாசிப்பவராகக் கடமையாற்றினார்.
(2)
விரகக் கவிதைகளில் பரவசம் கொண்டும்
சராசரி காதலனில்'சரமாரி பெய்தும் பிரசவ வேதனை பிரச்சினைகள் நோக்கி நிரந்தரத் தீர்வினை நினைக்கவும் அஞ்சும் சரித்திரக் கவிஞர் வழியினைத் தவிர்க்கும் அருந்திறன் உந்தன் கவிதையில் கண்டேன் தடத்தின் வழியினில் தானுமே செல்லா திடத்தினைக் கொண்டு படைப்பினை நொந்து விடத்தினைத்தானும் தீர்வாய் நினைக்கும் வேதனை மாந்தர் கிடைத்திடா உலகினைப் படைக்கும் வகையில்
தொடர்க நின் தொண்டு
- க. ஞானேஸ்வரன் - 03.07.82
க. ஞானேஸ்வரன் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் எமது
பொருளியல் விரிவுரையாளர். தற்போது பேராதனை பல்கலைக்
வசந்தங்களும் வசீகரங்களும் . 23

Page 14
கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர். பல வகையில் எம்மை ஊக்குவித்தவர்.
(3)
நித்தம் நித்தம் தோன்றும் பிரச்சினையை சித்தம் தடுமாறாமல் செப்பி விட்டீர் உணர்வுகள் இல்லாத சிந்தனைச் சிதறல்களை உணர்ச்சிகளால் உயிர்ப்பூட்டி உரைத்து விட்டீர் வசந்தத்தின் இதமான வசீகரத்தை - எம்மை சுகந்தமாக சுவைத்திட செய்தீர் புதுயுகம் காண புறப்பட்ட தோழனே! கலியுக மாந்தர்க்கு வழிகாட்டினர் உந்தன் கவிதைகளால் .
- சிவஜோதி தம்பிராஜா -
0.07.82
★ பல்கலைக் கழகத்தில் எமக்கு ஒரு வருடம் ஜூனியர்.
(4)
மனித மனத்தின் அடித்தளத்தில் உருத் தெரியாது, பொங்கிப் பிரவகித்து வழியும் எண்ண அலைகளுக்கு உருக்கொடுத்து, உருவகித்து, உணர்ச்சியளித்து, இன்றைய இயந்திர வாழ்வில் மறக்கடிக்கப்பட்டு விட்ட, இதயத்தின் இதமான பகுதிகளை தொட்டுத் தழுவி நிற்கின்றது நின் கவிதைகள். தனி மனித எண்ணங்களைத் தாலாட்டுவதுடன் மட்டுமல்லாது சமுதாய மேம்பாட்டுக்கும் கவிதை பாடியுள்ளீர். எங்கோ! யாரோ. கூறியதுபோல். “கவிதைகள் ஒத்தடங்களாக இருந்து மனதிற்கு
இரா. சடகோபன் 24

இதமளிப்பது மட்டுமன்றி, எரிசரங்களாகப் புறப்பட்டு சமுதாயத்தை வழிப்படுத்தவும் வேண்டும்.” உங்கள் வசந்தகீதத்தில் வனப்பும் வசீகரமும் மட்டுமல்ல, உறங்கிக் கிடக்கும் உள்ளங்களை மெல்லத்தட்டி, உயரிய சிந்தனையை ஊட்டும் வலுவும் உள்ளது. மனித மனங்களை உள்ளவாறு கண்டறியும் ஆற்றல் உங்களுக்கு உண்டு என்று கருதுகிறேன். கவிஞர்கள் இறைவனின் படைப்பில் அற்புதமானவர்கள்.
- தர்சினி சண்முகசுந்தரம் -
14.07.82
★ தர்சினி, நாம் இறுதியாண்டில் பயின்ற போது பல்கலைக்
கழகத்தில் முதலாம் ஆண்டில் சட்டம் பயின்று கொண்டிருந்தார்.
(5)
குடித்த கவிமதுவின் மயக்கமதனை மடித்த கடதாசியில் அடக்கவொண்ணா, 'மாடுகளாய் எண்ணுகின்ற மாக்கள் சிலரை மாந்தர்களாய் மாற்றிடவோர் மார்க்கம் தேவை” "காதலுக்கே இத்தகைய கடுமையான போரென்றால் எத்தனையோ ஆகஸ்டுக் கலவரங்கள் எதிரிலுண்டு இத்தகையவரிகள் என்னை எங்கெங்கோ கொண்டு சென்று கத்திவிட வேண்டும் போல் கவியுணர்வைத் தந்தன.
- அன்னபூர்ணம் பேரின்பராஜா - விரிவுரையாளர் தமிழ்த்துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்
23 - 08 - 82
வசந்தங்களும் வசீகரங்களும் 25

Page 15
(6)
கவிதை உருவில் ஒர் காவியம் படைத்திருந்தாய் வரைந்திருந்த படங்கள் கூட அசைந்தாட வடித்திருந்தாய் சராசரி காதலனை'நினைக்கையில் நான் மயங்குகிறேன் "காதலனாய் நானிருத்தல்”அதற்கான காரணமோ? கண்கலங்கவைத்தனவா தேனீர் மலர்கள் என்றெண்ணித் திரும்புகையில் உந்தன் வசந்தங்களும் வசீகரங்களும்
வரையறைகள் அற்ற இந்த ·寅 கலையுலகில் உன்னை
ஒர்நாள்.
- எஸ். ஜஸ்டின் பீற்றர் - 10 - 09 - 82 ★ பல்கலைக் கழகம் தந்த நண்பர்களில் ஒருவன்.
(7)
LLLLLLLLLLLLLLLLLLLLLLLS தலைப்பைப் பார்த்து இதுவோர் மலர்வனம் என்று எண்ணி எம் மலரின் மதுவை முதலில் பருகுவது என்று தேனியாய் அலைந்த போது மதுவனம்'ஒன்றே இருக்கக்கண்டு வியப்பில் ஆழ்ந்தேன். ஒவ்வொரு கவிதையிலும் புதுமை பல உண்டு புதுமையிலும் ஏக்கம் நிறைய உண்டு ஏக்கத்திலும் ஊக்கம் இருப்பதைக் கண்டேன். சில விடங்களில் கம்பனையும் நக்கீரனையும்
மை நி
இரா. சடகோபன் 28

கண்டித்துள்ளீர் என்றாலும் கவிதையின் உட் கருத்து மனதை வருடாமல் இல்லை.
கவிதையில் மட்டும் நான் ஓர் கண்ணதாஸன் அல்ல, ஒவியத்திலும் நான் ஓர் மணியின் செல்வன்’ என்று ஆங்காங்கே முத்திரை பதித்துள்ளிர்
- சீ. சாந்தி - 05 - 02 - 1984
女 நான் சந்தித்த நல்ல பெண்மணிகளில் ஒருவர்
(8)
உங்கள் உரிமைகளை உணர்வதற்காய்,
அவதானமாக "வசந்தங்களும் வசீகரங்களும்”
புரட்டினேன் கவிதைப் புத்தகம் சொல்லிற்று
நான் புனிதமானவள் என்னை இறுதிவரை இப்படியே இருக்க விடுங்கள்’
உணர்வுடன் ரொம்பரசித்தேன். இது இந்தக் கவிதைப் புத்தகத்திற்கு மட்டுமா? அதில் பெண்ணையுமல்லவா வரைந்துள்ளீர்.
கதிரவனைக் கண்டவுடன், உணர்வைக் கற்பனையாக்கினீரா? புதுக் கோலம் தான். வேண்டுகிறேன் அதை தான். இந்த வண்ணங்கள் சித்திரங்களாக இருந்ததனால் சிறை வைக்கப்பட்டதை உணர்ந்தவர்கள். இப்போ இடையிடையே வெடிக்கும் எரிமலைகள். கவிதைக்காகவே உங்கள் சிந்தனை இதுவென்றால் மனவருத்தம் எனக்குண்டு.
வசந்தங்களும் வசீகரங்களும் 27

Page 16
இங்கே சிந்தனை,உணர்வு ஆகிய இரண்டு வகைப்பட்ட ஆதங்கங்களின் வெளிப்பாடுகளை பதின்மூன்று வருடங்களுக்குப் பின்னர் நோக்கிய போதும் அவை இப்போதும் அப்படியேதான் இருக்கின்றன. "வசந்தங்களும், வசீகரங்களும் இன்றும் யதார்த்தம் தான். ஒழுக்கத்தை உருவாக்க சுதந்திரம் இல்லையெனில் சுதந்திரம் இல்லாத ஒழுக்கத்தை யாம் வேண்டோம்”
இப்படி பல வரிகள் சிந்தனையை வலுப்படுத்தின.
காலமெல்லாம் நானுந்தன் கண்மணியாய்க் காண வேண்டும் உன்றனுக்கு அன்பு செய்து ஆதரவாய் இருப்பதுவும் நின்றனது சிந்தனைகள் அறிவார்ந்த பேச்சுக்கள் ரசனைக்குத்துணைநின்று, அத்தனைக்கும் ஈடுதந்து, ஆத்மாவில் ஒன்றுதலே காதலென்று கருதுகிறேன்"
எத்தனை பேர்களுக்குப் புரியுமிது..?
- தேவா - விரகேசரி?
28.07.1994
★ தேவ கெளரி, வீரகேசரி ஆசிரியபீட அங்கத்தவர். சமகாலத்து
பத்திரிகையாளர்.
இங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் விமர்சனங்கள் அல்ல. அவை வெறும் புகழுரைகள். ஆதலால் விமர்சனத்தை உங்களிடம் விட்டு விடுகின்றேன். கவிதைகளுக்கு மெருகூட்டுவதற்காக ஆங்காங்கே சித்திரங்களையும் வரைந்திருக்கின்றேன் என்பதனையும் மனம் கொள்க.
நன்றி
- நூலாசிரியர் -
இரா. சடகோபன் 28

சில வார்த்தைகள்.
இரா. சடகோபனின் வசந்த கீதங்களினால் வசீகரிக் கப்பட்டவனாய் இந்த முன்னுரையை எழுத ஆரம்பிக்கிறேன்.
நெஞ்சிலே பெருமகிழ்ச்சி; நினைவிலே புதுமலர்ச்சி
புத்தகப் பூச்சிகளாய் அலைகின்ற
இன்றைய மாணவர் மத்தியிலே
இத்தகைய கலைக் கோலங்களைக் காணும் போது
ஏற்படுகின்ற மகிழ்ச்சி கொஞ்சமானது அல்ல தான்.
தனிமனித உணர்வுகளை, சமூகமுரண்பாட்டுக் கோலங்களை,
துல்லியமாகத்தரிசிக்கின்ற அழகான கவி மலர்கள்.
நியாயங்களுக்காகப் போராடுகின்ற
O ர்மையான கலைப்படைப்பக்கள் விஞரின் நே l
ஆனந்தமான காதல் மயக்கக் கீதங்களை விட அழுகின்ற தேனீர் மலர்கள்' போன்றன
ஆத்மாவை ஆழத்தொட்டு நிற்கின்றன
ஆங்காங்கே சில கவிதைகள் மேலும்
இறுக்கமானவைகளாக இருந்திருக்கலாம்
என்பதனையும் சொல்லி வைக்க வேண்டும்
வசந்தங்களும் வசீகரங்களும் 2

Page 17
கவிஞனாக மட்டுமன்றி ஒவியக்கலைஞனாகவும் நெஞ்சிலே கலையெழுதி, வென்று நிற்கும் கவிஞருக்கு என் அன்பான வாழ்த்துக்கள். அச்சிலே இந்த அழகிய கவிமலரைக் காணும் நாளுக்காய் காத்திருக்கின்றேன்.
கலாநிதி இ. பாலசுந்தரம் தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்
கொழும்பு பல்கலைக் கழகம் கொழும்பு - 3
5, நவம்பர் 1980.
(இந்த முன்னுரை 1980 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்தில், அப்ப்ேது தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளராக இருந்த கலாநிதி இ. பாலசுந்தரம் அவர்களால் எழுதப்பட்டது. நூலாசிரியர் அப்போது இப்பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர். இம் முன்னுரை எழுதப்பட்ட போது கையெழுத்துப் பிரதியாக இருந்த இந் நூல் இவ்வளவு காலத்துக்குப் பின்பு நூலுருப் பெறுகின்றது. இதனை அச்சிலே பார்க்க விரும்பியவர்களில் கலாநிதி பாலசுந்தரமும் ஒருவர். இதனை அவர் தனது முன்னுரையின் இறுதி வரிகளில் குறிப்பிட்டுள்ளார். இத்தறுவாயில் அவரை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்) ޗަރ
இரா. சடகோபன் 30

நன்றி
இந்நூலை இத்தனை சிறப்பாக வெளிக்கொணர ஊக்குவித்து உதவிய வீரகேசரி நிறுவன நிர்வாகப் பணிப்பாளர் எம். ஜி. வென்சஸ்லாஸ்
கையெழுத்துப் பிரதிகளை ஒப்பு நோக்கி உதவிய மித்திரன்' ஆசிரியர் செல்வி சூரியகுமாரி பஞ்சநாதன், ‘வீரகேசரி ஆசிரிய பீட பத்திரிகையாளர்கள் இராசையா ராஜலிங்கம், எஸ். சித்ராஞ்சன், வீரகேசரி ஒப்புநோக்காளர் கந்தையா சிவராஜா.
அழகுற கணனி அச்சுப் பொறித்துதவிய திருமதி செல்வகுமார். பக்கவடிமைப்புக்குப் பொறுப்பான நில்மினி, கனம் மிக்க நூலாக அச்சுப் பதித்துத்தந்த யுனி ஆர்ட்ஸ் நிறுவன அதிபர் திரு. பொ. விமலேந்திரன் மற்றும் சேவையாளர்கள்.
தேசிய நூலகச் சேவைகள் சபைத்தலைவர் ஹென்றி சமரநாயக்க, பணிப்பாளர் எம். எஸ். ஒ. அமரசிறி, வெளியீடுகளுக்கான அதிகாரி எச். என். பீரிஸ்.
என் வாழ்க்கைத் துணைவி எஸ். கிறேஸ் அன்புச் செல்வங்கள் ஷர்மினி, தன்ரக்ஷன்
இந்நூலுருவாக்கத்துக்கு உதவிய சகலருக்கும் என் இதயபூர்வமான நன்றிகள்
- நூலாசிரியர் -
வசந்தாங்களும் வசீகரங்களும்

Page 18

கவிதைப் புத்தகம்
என் எண்ணங்கள் என் கற்பனைகள் என் சிந்தனைகள் எல்லாமே என் உரிமைகள்
என்னை உங்கள்
காமப் பார்வைகளால் கற்பழித்து விடாதீர்கள்.
என் மடல்களின் மறுபுறங்களை ரசிப்பதற்காய் உங்கள் எச்சில் விரல்களால் புரட்டாதீர்கள்.
என் அலங்காரங்களை கலைக்காதீர்கள்.
நான் புனிதமானவள்
என்னை இறுதிவரை இப்படியே இருக்க விடுங்கள்
10, ஏப்ரல் 1980
வசந்தங்களும் வசீகரங்களும் 38

Page 19
இரா. சடகோபன்
3.
 

மனமுகையை முகிழாயோ
நானுன்னை நோக்குகையில்
மண்ணை நீ பார்க்கின்றாயே
மண்ணை நீ பார்ப்பதற்கா
நானுன்னை நோக்குகின்றேன்.
வசந்தங்களும் வசீகரங்களும்

Page 20
என்னை நீ பார்த்திருப்பாய்
எல்லோரும் பார்ப்பது போல்
எத்தனைபேர் பார்த்திருந்தும்
அத்தனைபேர் பார்த்ததுபோல்
நானுன்னைப் பார்க்கவில்லை
உன்னை நான் பார்ப்பதெல்லாம் உன் மனதை அறிவதற்கே
மண்ணை நீ பார்ப்பதென்றால்
மண்தான் உன் காதலனோ
மண் மீது காதலென்றால்
என் மனதை ஏன் கெடுத்தாய்
நானறிவேன் உன்மனதை
வான்மதியை ரசிப்பதற்காய்
மாலையில் நீ மலர்கின்றாய்
காலையிலே நான் வந்தால்
கண்களை ஏன் மூடுகின்றாய்
கண்களை நீ மூடுதற்கா
காலையில் நான் வருகின்றேன்
இரா. சடகோபன் 36

உன்னதம உன் காதலென்றால்
ஊமையாய் இருந்திடாதே
ஊமையாய் இருந்ததனால்
“பறக்கின்ற பஞ்சினைத்தான்”
"பைங்கிளிகள் பார்த்தனவே"
"பைங்கிளிகள்” நீயுமல்ல நானுமல்ல
பாவையுன் மனமுகையை
எனக்கொருகால் முகிழாயோ.
3, ஜூன் 79
வசந்தங்களும் வசீகரங்களும் 37

Page 21
இரா. சடகோபன்
 

இந்த வண்ணங்கள்
இந்த வண்ணங்கள்
வண்ணங்களாகவே இருந்திருந்தால் உங்கள் சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கா உங்கள் தூரிகைக்கு இந்த வண்ணங்கள் கலவையான பொழுதுகளில் எல்லாம்
நீங்கள் சித்திரம் தீட்டத் தயங்கியதில்லை.
வரலாற்றின் பல காலங்களில் நாங்கள் சித்திரமாகவே இருந்திருக்கின்றோம் நாங்கள் சித்திரமாகவே இருந்ததனால்தான்
நீங்கள் எங்களை சிறையில் வைத்தீர்கள்.
நீண்ட உங்கள் பயணங்களில் எல்லாம் நாங்கள் சுமைதூக்கிகளாகவே இருந்திருக்கின்றோம் அந்த சுமைகளை இறக்கி வைத்த போதோ !
அவை உலகத்துக்குப் புதிய சுமைகளாகின
வசந்தங்களும் வசீகரங்களும் 39

Page 22
எங்களை நீங்கள் கசையால் அடித்த போது கல்லாக இருந்து தாங்கிக் கொண்டோம் கடப் பாறைகளால் உடைத்த போதோ ! கண்ணிரைத் தவிர வேறு வழியே இருக்கவில்லை. பாரதக் கதையில் படித்திருக்கின்றோம் துச்சாதனன் துகிலுரிந்தது பற்றி ! எங்கள் கதைகளிலும் எத்தனை துச்சாதனர்
கண்ணனை மட்டும் தான் காணவேயில்லை.
இந்தத் துச்சாதனர் துகிலுரிவதில்லை துகிலுக்கு விலைகூறுகின்றார்கள் அந்தக் கண்ணன் கூட அவளுக்கு (திரெளபதைக்கு) ஆறாவது காதலனாமே (ஒரு கதை)
காதல் என்று நீங்கள் சத்தமிட்டுச் சொல்வதெல்லாம் கன்னியரின் அடிமைக்குக் கைச்சாத்திடத்தானோ கறை படிந்த உங்கள் கொள்கைக்கு
காதலெல்லாம் வெறும் கண்துடைப்பே.
மலர்களில் தேன்பருக உரிமையுண்டு உங்களுக்கு பதிவிரதா பட்டம் மட்டும் எங்களுக்கு பகல்போதுகளில் வீட்டுக்குக் காவல் வைக்கிறீர்
பெண்ணுரிமை என்று மட்டும் கவிதை புனைகிறீர்
இா கோபன் 40

உடல் பொருள் ஆவிதனை உங்களுக்காய்த் தந்த பின்னும் சீதனத்தால் எம் வாழ்வை சூனியமாய்ச் செய்கின்றீர் காலமெல்லாம் எம்வாழ்வைக் கண்ணிராய்க் கரைப்பதற்கு
கற்பென்ற சொல்கொண்டு கதைகள் பல எழுதுகின்றீர்.
இருந்துவிட்டோம் நாமிங்கு சாதுகளாய் வெறும் போதை தரும் வஸ்தாகப் பலகாலம் இனிமேலும் இந்நிலையை அனுமதித்தல். எம் வாழ்வின் நிதர்சனமே புளித்துப் போகும்.
இந்த வண்ணங்கள்.
எப்போதும் வண்ணங்களல்ல,
இந்தச் சித்திரங்கள்.
எப்போதும் சித்திரங்களல்ல,
இந்தச் சுமைகள்.
எப்போதும் சுமைகள் அல்ல,
இவை உறங்கும் எரிமலைகள்,
விழித் தெழுதல் கூடும்
8, மார்ச் 1981
வசந்தங்களும் வசீகரங்களும் 41

Page 23
42
இரா. சடகோபன்
 

ங்னைவுகளே
கனவுகளா?
1978கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் நடத்திய அகில இலங்கை ரீதியிலான 'இளந் தென்றல் கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கவிதை
அந்திவானம் சிவந்திருக்கின்றது அரை இருட்டினில் அமர்ந்திருக்கின்றேன் கோல மதிவரும் வேளை கோபம் கொண்டிருந்தான் மாலைச் செம்பருதி
அழகான அந்த அந்தி நேர்த்தில்.
கடற்கரை மணலில் மோதிய அலையெலாம்
எந்தன் மனதினில் எழுந்து மோதிய நினைவுகள் அனைத்தையும் திண்ணிய தோற்றமாய் அதனதன் வடிவினில் அழகிய வண்ணத்தில் கரைத்துக் கரைத்துப் பிரதிமை காட்டின.
எங்கோ தூரத்தில் எழுந்த கிண்கிணி மணியின் நாதமும் மங்கி யொலித்தது ஆங்கோர் சேய்மையில் தெரிந்த தோருயரிய கோபுர மீதினில் படிந்த செவ்வொளி கிளர்ந்து தோன்றி கடுகி மறைந்தது ஈங்கோர் புரத்தினில் கூடிய பற்பலர் நாட்படு திசைகளில் பலவித மொழிகளில் பல்லினக் குரல்களில் பலபடப் பேசி
வசந்தங்களும் வசீகரங்களும் 48

Page 24
பரந்து பறந்து விரைந்து சென்றனர். எந்தன் உள்ளமோ தூரத்தே வானத்தில் தெரிந்த செம்மை படர்ந்ததோர் புள்ளியை நோக்கி. நோக்கி. கனன்றெரி சுடர்தனில் மூழ்கிமறையும் நினைவுகள் மீண்டும் . மீண்டும் மீண்டும் வருமோ என்றதோர் கனவினில் ஏக்கப்பெருமூச் செறிந்திருந்தது.
எந்தன் கண்களில் எந்தன் உள்ளத்தில் உணர்வினில் கூட சதா ஒர் கனவு. சமத்துவம் காணும் சமதர்மக் கனவு, உணர்ச்சிமயமாய் ஒவ்வொரு கணமும் நித்திய காலமும் கனவில் மிதக்கின்றேன் குடும்பம், தனிச் சொத்து, அரசின் தோற்றமும் ஆண்டான், அடிமை, பண்ணை வளர்ச்சியும் முதலாளி, தொழிலாளி, ஏழை, பணக்காரன் என்ற நிகழ் காலமும். சமத்துவம் காணும் சமதர்மப் பாதையில் முதல் மைல் கற்கள். வரலாறு பதித்த காலடிச் சுவடுகள். வர்க்கமுரண்பாட்டை தகர்க்கும் பணியில் முதலாளும் வர்க்கம் இன்று ஆணிவேரற்று அடிமரம் இற்று வெற்றுக் கோம்பாய் அணையும் விளக்கு இறுதியில் ஒரு தரம் அதி சுடர் விட்டு அணையும் தன்மைபோல் கண நிலை வாழ்வில் களித்திருக்கின்றது.
அதிசுடர்விட்டு அணையும் விளக்கின் கணநிலை வாழ்வில் ஒரு சில வரிகள்.
இரா. சடகோபன் 4.

அவனுக்கு அதிகம் பசி அவருக்கு ஆன்மீகப் பசி அன்னதானம் ஆலயத்தில் நடந்தது அனாதை ஆலயம் சென்றான் அன்பரும் அநாத ரட்சகனிடம் சென்றார் அநாதை ஆவலுடன் நோக்கினான் அன்றும் முதல் பந்தியில் முதலாளி) லைகள் அமர்ந்திருந்தன. அன்பருக்கிப்போது வயிற்றுப்பசி போலும் அமர்ந்து கொண்டார் முதலையுடன் முதலையாக அடங்காப் பசியுடன் சென்றவன் அதிகம் பசியுடன் ஆறாப் பசியினன் ஆயினான் அன்பர்திருவாயில் வடையும் பாயசமும் அடக்கம் அடைந்தன அநாதைக்கு உமிழ் நீர் சுரப்பது வற்றி விட்டது அநாத ரட்சகனின் புன்னகைக்கு அர்ச்சனைகள் ஆயிரம்
அன்பர்கள் செய்தனர்.
ஆன்மீகத் தத்துவம் அன்றாடம் பேசி குன்றிடாப் பண்பினை மன்றாடியுரைத்து குலம் தழைத்தோங்கும் குணசீலர் வாழும் எமதருமை வள நாட்டில்.
நித்திலத்திலங்கும் மணிமுகத்து செம்பவளம் வெண்தரளம் என விளங்கி மின்னற் கொடியொன்று இழைந்தோட தேக்கிய செங்கனியிதழ் அமுதுண்டு
வசந்தங்களும் வசீகரங்களும் - AS

Page 25
கனிமுத்தம் ஈந்தேன் என்பொற் செல்வியே உன்னைக் கைவிடேன் உன்னையல்லால் ஒரு பெண்ணை நான் பாரேன் தென்னவன் மேலாணை என்னன்னையின் மேலாணை இது சத்தியம். என மொழிந்து நங்கை நல்லாள் தம் கரம் பிடித்த கலியுகன் வாயெல்லாம் பல்லாக வழியெல்லாம் விழிவைத்து எச்சிலிலை தேடுகின்றான்.
எனவிடுத்து ஆங்கே சென்றால் . நம்நாட்டின் ஒரு புறத்தே வாழும் மக்கள் தம்மினத்தின் மொழிகாப்போம் தமிழினத்தின் துயர்துடைப்போம் சிறைக்கஞ்சோம் எனக்கூறி சீறிப் போருக் கெழும்
நிலை கண்டோம்
ஈழமென்ன பாரதமென்ன உலகெங்கும் சென்றாலும் இக்கதிதான் காணுகின்றோம் இனவெறியர் இந்நாட்டில் இருந்தாலும் இழி செயல்கள் பல மிகவே செய்தாலும் இதற்கெல்லாம் காரணங்கள் அறிதல் வேண்டும் இதுவகற்ற வழி யொன்றும் காணல் வேண்டும்.
வளர்கின்றவறுமைக்குக் குறைவேயில்லை வாய்த்ததோர் துன்பத்துக் களவேயில்லை தளர்கின்ற உரிமைக்குத் தரமேயில்லை அடைகின்ற இன்னல்கள் மிகவே தொல்லை
இரா. சடகோபன் 丛6

இரப்போர்க்கும் இறப்போர்க்கும் பஞ்சமில்லை மரம் முறிந்து வீழ்வதற்கு புயலுமில்லை எம் மனம் தளர்ந்து சோர்வதற்கு யாதுமில்லை மலை நாட்டில் வாழுகின்ற எம் சமுதாயத்தை மாடுகளாய் எள்ளுகின்ற மாக்கள் சிலரை மனிதர்களாய் மாற்றிடவோர் மார்க்கம் தேவை அதற்காக எம்முயிரை ஈந்தோமில்லை.
அழுகிய புண்ணுக்கு ஒத்தடம் கொடுப்பதால் வலிதீரலாம் - அது தீர அறுத்தெறிந்து மருந்திடல் வேண்டுமன்றோ?. புவியனைத்தும் புதுமை வெள்ளம் பிரவகித்து பொதுஉடமை பூத்து எழில் காட்ட வேண்டும்
புவனியெங்கும் வாழுகின்ற மக்களெல்லாம் சமத்துவமாம் இசைதன்னை இசைக்க வேண்டும் செவியனைத்தும் சமதர்ம திசை நோக்கி பொழிகின்ற இசையின்பம் நுகர வேண்டும்.
சிவந்த செவ்வந்திப் பொழுது கறுப்பாகிக் கொண்டிருந்தது வாரிதியின் பேரலைகள் கருமை கொண்டன தொடுவானத்தின் விளிம்பில் சோகமயம் கப்பியது வெண்ணிலவின் தண்மதிக் கற்றைகள் சற்றே தலை காட்டின நெஞ்சத்து நினைவலைகள் கனவுகளாய் நீண்டன.
2396ਗ 1977
வசந்தங்களும் வசீகரங்களும் 7

Page 26
48
多
இரா. சடகோ
 

ஒரு சராசரி காதலன்
கனகமணிச் சதங்கைகளாக நடனமிடும் உன் நினைவுகளை மறக்க முயல்கிறேன் - அவை மணியொலிகள் கேளாத செவிட்டுமை போல்
மெளனக்கண்ணிர் வடிக்ங்ஸ்றன.
உன் இதழசைந்து மொழிமலர மனம் ஏங்கினேன் இதழசைந்த போது மட்டும் கண் கலங்கினேன் உன் புன்னகையை எனக்குமட்டும் ஏன் மறைக்கின்றாய்
மறைத்ததனால் என்மனதைப் புண்படுத்தினாய்.
வசந்தங்களும் வசீகரங்களும் 49

Page 27
உன் நயனத்தின் நளினங்கள் நான் ரசித்தவை - அவை ரசிப்பதற்கு மாத்திரமே நடனமிடுபவை - உன் நயனங்கள் நெடும்பயணம் சென்று விட்டதால் - என்
விழித்திரைகள் இமைப்பதையே மறந்துவிட்டன.
உன் கண்களுக்குள் காந்தத்தை வைத்த பின்னரும் என் காலிரண்டை கயிறு கொண்டு கட்டி விட்டதேன் உன் கரங்களிலே வீணையினைத் தந்த பின்னரும்
உன் விரல்களை ஏன் விடுவிக்கத் தயங்கி நிற்கிறாய்.
உனக்காகப் படகுவிட நதிதேடினேன் நதிகிடைத்த போது உன்னை கரைகாணிலேன் கரை மீது நானிருந்து மனம் வாடினேன்
மனம் வாடித்தவிப்பதற்காஉனை நாடினேன்.
முகாரி இசை என் வீட்டில் குடிபுகுந்ததால் மோகனங்கள்’ என்னை விட்டுப் பிரிந்து விட்டன ராகமாலிகை கேட்டு ரசிக்க நினைத்தேன் தனி ஆவர்த்தனம் தவிர வேறில்லையாம்.
என் வாழ்வை நீகூட சபித்த பின்னரும் உன் பெயரை ஆயிரமாய் ஜெபித்திருக்கிறேன் அதற்காக நீ வருந்தப் போவதில்லை தான் ஆனாலும் நான் வருந்தித் தவமிருக்கிறேன்.
இரா. சடகோபன் 50

என் கவிதைகளை நான் மறந்து தொலைத்திருக்கிறேன் உன் சிரிப்பொலியை ஒரு போதும் மறந்ததில்லையே என் உணர்வுகளை பலகாலம் இழந்திருக்கிறேன்
உன் நினைவுகளை ஒரு நாளும் பிரிந்ததில்லையே.
என் வாய் மொழியை காற்றில் விட்டுத் தவித்திருக்கிறேன் உன் மெளனங்களை எப்போதும் நினைத்திருக்கிறேன் - என் உறக்கத்தைப் பல நாட்கள் தவிர்த்திருக்கிறேன் - உன் நெஞ்சத்து நினைவை எண்ணி இனித்திருக்கிறேன்.
என் உலகத்தில் உறங்காதவன் நான் மட்டுமே - என் விழிப்புக்கு உன் நினைவுகளே துணையிருக்கட்டும் என் மாளிகையில் விடிவிளக்கு அணைவதில்லைதான்
என் கண்ணிரால் அவற்றுக்கு நெய் வார்க்கிறேன்.
மல்லிகையால் மலர்க்கிரீடம் சூட நினைத்தேன் பல்லாக்கு வாங்கப்போன. கதையாய் ஆனேன் பல்லவிகள் தொடர்ந்துவரல் நியதியென்றால்
இச்சரணங்களை பல முறை நான் சமர்ப்பிக்கிறேன்.
நவம்பர் - 1980
வசந்தங்களும் வசீகரங்களும் : Si:

Page 28
இரா. சடகோபன்
52
 

தேனீர் மலர்கள்
பேராதனை பல்கலைக் கழக தமிழ்ச் சங்கம் 1976ஆம் ஆண்டு நடத்திய அகில இலங்கை ரீதியிலான பொன்விழாக் கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கவிதை
சித்தத்தில் விளைந்த நல் முத்துக்கள் என்றெண்ணி சிதறிய என் கருத்துக்கள் அனைத்தையும் சீர்தூக்கி சிந்தையில் இருத்தினேன் முகிழ்த்தன சில அரும்பு மொட்டுக்கள் களித்தன கமலப் பூக்கள், சிரித்தன செம்மலர்கள்
கண்ணீர்மல்கி அழுதன, அவை ‘தேனீர் மலர்கள்
காலை இளம் செம்பருதி வானம் சிவக்கக் கண்டான் காரிகை அவளுள்ளம் இன்றெமது வயிற்றுப் பசிதீர வழியென்ன,
பாலிருப்பின் மழலைமொழி செவ்வாய் இதழ் வண்ணன் சீர் பெறுவான்
வசந்தங்களும் வசீகரங்களும்

Page 29
காசிருப்பின் உழைப்பின் கோலவுடல் கணவன் முகம் மலரும் மாசற்ற மக்கள் முகம் காண வழியில்லை, என்நெஞ்சம் விம்முவதேன் மூச்சிருப்பின் இத்தொல்லை தொடர்ந்து வரும் துன்ப மன்றோ?
பேச்சகற்ற வழியென்ன செய்திடலாம் பேதை நெஞ்சில் கனன்றெழுந்த
அக்கினியின் நற்புதல்வன்
அவளுள்ளம் சிவக்கக் கண்டான்
அது கண்டு கண்ணீர்மல்கி அழுதன - அவை தேனீர் மலர்கள்
பன்னெடும் காலமாக பழம்பெரும் ஒடமதில் பயணம் செய்தோம் ஒடமின்று ஒட்டைக்கு இலக்காகி உடைந்து சிதறி விட்டது
ஒட்டி வந்த பாதை. !
அது ஒநாய்க் கோட்டைக்குச் செல்லும் பாதை உதிரம் குடிக்கும் உண்ணிகள் நிறைந்த பாதை அட்டையின் தந்தையும் கோட்டானின் பாட்டனும் ஆந்தையின் அண்ணனும் கழுகின் கூட்டமும் வாழும் பாதை புரட்சிப் பாதையில்தான் இத்தனை இன்னலெனின் வாழவழியின்றி தவித்து ஒடும் வழியிலும்தான் எத்தனை இன்னல்கள்
மீண்டும் ஒரு முறை நாம் கடந்து வந்த பாதைதனை திரும்பிப் பார்ப்போமானால். அழுதன தேனீர் மலர்கள் எம் வரலாறு உருக்கம் நிறைந்தது, உணர்ச்சி பொருந்தியது
உணர்வுபூர்வமாய்க் காணப்பட்டு நெஞ்சம் நெகிழச் செய்வது
இரா. சடகோபன் 5.

இதனைப் படைத்திட எம்மிடை ஒரு படைப்புச் சிற்பிக்கும் பஞ்சம் எதிர்காலத்தைத் துணிவுடன் எதிர்கொள்ள ! சிறப்புற சிருஷ்டிக்க ! ஏற்றமுறச் செய்ய, தியாக தீர நெஞ்சங்களுக்குப் பஞ்சம் இதனை நினைந்து கண்ணீர் மல்கி அழுதன தேனீர் மலர்கள்
குட்டினர். குட்டினர். குனிந்திருந்தோம் சாடினர். சாடினர். எம்மை சூடிடும் காலம் எப்போ வரும் என்று ஏங்கி இருந்திட்டோம். இன்றெமக்கு இருக்கவும் இடமில்லை நிற்கவும் நிலமில்லை ஒடவும் துப்பில்லை - நாடவும் வக்கில்லை எம்மவர் வாழுமிடம் சாக்கடைக்குச் சமமாம் எம்மவர் பேசும் பேச்சு இழிவழக்கின் இழிவாம் இத்தனையும் சொல்லிப் பழிக்கு மிந்தத் திருக்கூட்டம் சிவப்பு விளக்கின் கீழ் வெறும் தெருக்கூட்டம் இன்று தெருக்கூட்டம் நாளை தெருக்கூட்டும் இதனை எண்ணி சிரித்தன செம்மலர்கள். ஆனால் இன்று எம் நிலைகண்டு இரங்கி ஏங்கி கண்ணீர்மல்கி அழுதன. அவை ‘தேனீர் மலர்கள் யாமிருக்கப் பயமேன் சிரித்தது அழகனின் திருமுகம் மலைநாட்டில் திருப்புதல்வன், குன்று தோறாடும் குமரேசன் குறிஞ்சிக் குமரன் ஞான பண்டிதன் சிரிக்கிறான் அபயக்கரம் நீட்டி புன்னகை புரிந்து களிக்கிறான்
வசந்தங்களும் வசீகரங்களும் SS -

Page 30
யாரைப் பார்த்து. "மலையகம் என்றொரு பசுங்கோயில் அங்கு வாழும் மக்கள் யாவரும் தேவவாழ்வு வாழ்கிறார்கள் இனிய உணவை வயிறு நிறைய உண்கிறார்கள் அவர்கள் கரங்கள் அல்லும் பகலும் கந்தக்கடவுளை தொழுகின்றன குழந்தைகளின் கடைவாயில் பால் வழிந்தோடுகின்றது அவர்கள் முகங்களில் அலைமகளும், கலைமகளும் கொஞ்சி விளையாடுகிறார்கள்” என்று அவன் காதில் யாரோ
தப்பான செய்தி சொல்லி விட்டார்கள்.
தேயிலையின் விலையுயர்ந்து செல்லுது - ஏலச்
சந்தையிலே நல்லவிலை கொள்ளுது - என்று பத்திரிகைச் செய்தி யொன்று சொல்லுது
மலையகத்தில் பசிக்கொடுமை துள்ளுது உடுக்க உடை இருக்க இடம் இல்லையாம் - என்று
அதே செய்தி மேலும் எமை எள்ளுது யாம் உழைக்கும் உழைப்பு எங்கே செல்லுது
தலை நகரில் மாடியேறி செல்லுதா - இல்லை தருமவான்கள் கரத்தில் அது மின்னுதா?
அப்படித்தான் இருக்கவேணும் நினைக்கிறேன் - பதுக்கல் தருமவான்கள் உண்டு கொழுத்துத் தூங்குறார்
சிவந்த என் விழிகள் இமைக்க வில்லை குவிந்த என் இதழ்கள் சிரிக்கவில்லை
இரா. சடகோபன் 56

என் மனம் எங்கோ செல்லத் துடிக்கின்றது . எனது உள்ளம் எதை நினைத்தோ ஏங்கித் தவிக்கின்றது எனது எண்ணங்கள் என்னிடமில்லை எனது இதயம் எதனைக்காணவோ விரைகிறது இவை அர்த்தமற்ற செயல்கள் அல்ல இவற்றுக்கு நியாயம் கற்பிக்கவும் நான் தயாரில்லை இரத்தம் சிந்தவும் சித்தம் தடுமாறவும் புத்தி பேதலிக்கவும் துப்பாக்கி காரணமோ? தூரத்தே தெரியு தொரு சிவப்பு வெளிச்சம் அதனை விரைந்தே அடைந்துவிட எனக்கு ஆசை - ஆனால் பெரியதொரு பள்ளத்தாக்குக் குறுக்கிடுகின்றதே இதனைக் கடக்க சிவப்பு வெளிச்சத்தை அடைய எத்தனை காலம் நாம் இன்னும் இன்னலுற வேண்டும் முப்பதாண்டுகளோ? நாற்பதோ? அதிகமோ? அது வரைக்கும் இந்த முள்ளின்மேல் நான் இருக்க வேண்டுமோ? சுலபமான பாதை ஏதேனும் உண்டா? “உண்டு”. யார் பேசுவது? "நான் தான் உன் ஆத்மா பேசுகிறேன்” “ஒ நீயா? என்னவழி சொல்லேன்” “சிந்தனை செய் புதிய பாதை புலப்படும்” "அப்படியானால் இதுவரை யாம் சிந்தித்ததில்லையா?” 'உண்டு. மிக மந்தகதியில்” எனக்குப் புதிய பாதை தெரிகின்றது. என்னுடன் வருவது யார்?
வசந்தங்களும் வசீகரங்களும் 57

Page 31
காலொடிந்தவரும் கையில்லாதவரும் குருடரும் செவிடரும் . என்னுடன் வருகின்றார்கள் தூரத்தே சிவப்பு வெளிச்சம் மங்கலாகத் தெரிகின்றது என்மனம் சோர்கிறது. தளர்கிறது. அதனால். கண்ணிர் மல்கி அழுதன ‘தேனீர்மலர்கள்
கல்தோன்றி மண்தோன்றா காலத்தின் முன்தோன்றிய மூத்த தமிழ் வரலாற்றினையும் - சேர சோழ பாண்டியர்தம் செல்வமகள் வரலாற்றையும் அதன் பின் தீந்தமிழர், மறத் தமிழர் வரலாற்றையும் சற்றே நோக்கின் இவர்களிடம் பொறுமையில்லை. ஒற்றுமையில்லை நான் தமிழன் எம்பண்பாடு - கலாசாரம் கலைகலைக்காகவே
கோஷங்கள்தான் இவருக்குப் போடத் தெரியும்
தென் தமிழர் வட தமிழர் இன்னுமோர் தமிழரென்று மலைநாட்டுத் தமிழர்தனைத் தள்ளிவைத்தனர் யாம் மனிதர் . உழைக்கும் வர்க்கத்தினர் என்றதொரு பேரணியின் கீழ் திரண்டு உண்மைச் சுதந்திரத்தை அனுபவித்து அடிப்படை உரிமைகளை அடையப்பெற்று. அதுவன்றோ உன்னதமாம் வாழ்க்கையாகும்
அதனை எண்ணி கண்ணிர்மல்கி அழுதன தேனீர் மலர்கள்
உலகமெனும் பரந்து விரிந்த கடலினுள்ளே ஆழ்ந்து மூழ்கி நோக்கின் தெரியும்
இரா. சடகோபன் 58,

அதனுள்ளே லட்சாதி லட்சம் மக்கள் ஏழையென்று மண்ணுழுது பொன்படைக்கும் மக்கள் கூட்டம் இரும்பினைக் கரும்பாக்கும் மற்றோர் கூட்டம் இகழ்ந்து சுரண்டி வாழும் பிறிதோர் கூட்டம் இதில் இறுதிக் கூட்டத்தை அழித்தல் வேண்டும் அந்நிலை எம்மை வந்தடைதல் வேண்டின் உழைக்கும் கரங்கள் உயர்தல் வேண்டின் ! வயல்வெளியில் செம்மலர்கள் பூக்க வேண்டின் !
அதனை நினைந்து கண்ணீர்மல்கி அழுதன - தேனீர் மலர்கள்
மென்மையாக இருந்த என்மனம் இன்று ஏன் இப்படிக் கணக்கிறது. எழுந்த சிந்தனைகள் உடைந்து வீழ்ந்தன கட்டிய கோட்டைகள் சரிந்து சிதைந்தன
பொங்கிய எண்ணங்கள் வழிந்து அழிந்தன !
வரலாறு காணாத வண்ணப் பூக்கள் வாடி வதங்கின
வண்ணமிழந்தன, பத்துடன் பதினொன்றாய் மடிந்தன
எனது அழுகையில் பங்குகொள்ள யாருமில்லை எனது துன்பத்தில் தொடர்ந்து வர எவருமில்லை என் சிரிப்பில் . எனக்குத்தான் சிரிக்க சந்தர்ப்பமேயில்லையே
இதனால் கண்ணிர் மல்கி அழுதன - தேனீர் மலர்கள்
28 மார்ச் - 1976
வசந்தங்களும் வசீகரங்களும் 恳输

Page 32
60
இரா. சடகோபன்
 

ஒரு மாலை நேரத்துப்
பரபரப்பில்...!
இத்தனை நேரமும் இங்கு நான் நிற்கிறேன் கணங்கள் கணங்களாய் காலமும் சென்றது எந்தன் பஸ் இனை எண்ணிப் பார்க்கிறேன் எண்ணற்ற பஸ்கள் வந்துதான் போயின, ஆயினும் எனக்கோர் பஸ்வரவில்லையே என்றுநான் ஏங்கினேன் ஒரு சில போதுகள்.
எத்தனை எங்கியே வருந்திய பொழுதிலும் ஆங்கவன் வருந்தியே துக்கித்திருக்கிறான், என்று கருதியும் பஸ் வரக் கூடுமா?
எந்தனைப் போலவே எத்தனை மனிதர்கள் இங்கு நிற்கிறார் என்று பார்க்கிறேன் எண்ணற்ற மக்கள் என்னைப் போலவே ஏடாகூடமாய் ஏங்கி நிற்கின்றார். இந்த மனிதன் எங்கே போகிறார்? என்று மட்டும் புரிவதில்லை
குதியினில் உயர்ந்த செருப்பினை அணிந்த அரிவையர் பலரும் அங்கு நிற்கின்றனர். கரங்களில் பயணப் பைகளைச் சுமந்து குடும்பத் தலைவர்கள் நின்றிருக்கின்றனர்.
வசந்தங்களும் வசீகரங்களும் 1.

Page 33
அத்தனை பேருக்கும் அவரவர் வேலைகள் வீட்டை நோக்கும் விடியாத கவலைகள். அருகினில் இருந்த டியூடோரி வகுப்பு அப்போது முடிந்ததால் அதனின்று வந்த ஆயிரம் மாணவ மாணவி கும்பல்கள் வந்த ஒர் பஸ்ஐ மொய்த்துக் கொண்டனர். வலிமையதெஞ்சும் தியரிக்கிணங்க முண்டியடித்து ஏறிய பலரொடு வந்த ஒர், பஸ்'உம் சீறிச் சென்றது. அப்போதங்கே புதிதாய் பலபேர் மேலும் வந்து குழுமிக் கொண்டனர் அந்தக்கும்பலில் நானும் ஒருவனாய் காத்திருக்கின்றேன். இத்தனை நேரமும் இங்கு நான் நிற்கிறேன் எத்தனை ஏங்கியே வருந்திய போதிலும் * ஆங்கவன் வருந்தியே துக்கித்திருக்கிறான் என்று கருதியும் பஸ் வரக்கூடுமா?
வந்த மனிதர் சென்று கொண்டிருந்தனர் புதிதாய் பலபேர் வந்து கொண்டிருந்தனர் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு பாணி எந்த மனிதரும் ஒன்றுபோல் இல்லை நெஞ்சினில் கனத்த எண்ணச் சுமையுடன் அகத்தின் அழகை முகத்திலே காட்டி. ஆயிரம் பேரை பார்த்து விட்டேன்.
இந்த மனிதர் எங்கே போகிறார்? என்று மட்டும் புரிவதில்லை !
மலை முகட்டில் இருந்து விழும் ஒரளுவி மண்ணில் வீழ்வதனால் நோகுமே என நினைத்தால்
இரா. சடகோபன் 62

நினைத்ததனால் மாத்திரமே வீழாமல் இருந்திடுமா? இத்தகைய மானிடர்கள் எத்தனைபேர் வந்து விட்டார் அத்தனை பேர் முகங்களிலும் அழகான பாவமில்லை அழனும்போல் என்றொருவர் முகத்தை வைத்திருப்பார் ነ ஆத்திரத்தால் ஆகிருதி துடிக்க நின்றிருப்பார் வேடிக்கை என்றொரு சிறுவன் வந்து விட்டால் வேலை வெட்டிகளை மறந்தே பார்த்திருப்பார் மனிதர் அனைவருமே இப்படித்தான் பிழையான முடிவுகளில் முட்டிக் கொள்வதனால் முட்டியதால் மாத்திரமே நொந்தவர்கள் ஆவார்கள்.
உள்ளே புழுக்கங்கள் உறங்காத நிலையில் தவித்தவை அனைத்துமே தத்துவ முத்துக்கள் வெப்பத்தின் சலனத்தால் மழைபொழிய முடியுமெனில் வெப்பமே மழைத்தாயின் கர்ப்பமாய் இருந்திருக்கும். அக்கினியின் கர்ப்பத்தில் அணுக்களே குழந்தையெனில் பிரசவம் ஒவ்வொன்றும் பேரழிவின் பிரகடனம்.
இந்த மனிதர் எங்கே போகிறார்? என்று மட்டும் புரிவதில்லை !
இத்தனை நேரமும் இங்குநான் நிற்கிறேன் எத்தனை ஏங்கியே வருந்திய போதிலும் ஆங்கவன் வருந்தியே துக்கித்திருக்கிறான் என்று கருதியும் பஸ் வரக்கூடுமா? இதுவரைகால் நின்றிருந்தும் இன்னும் பஸ்வரவில்லையெனில் இனிமேலும் பஸ்வருமோ? என்நெஞ்சம் கசிகிறது
வசந்தங்களும் வசீகரங்களும்

Page 34
பலர் மனமோ கனல்கிறது. அந்த நேரத்தில் ஆங்கொருபஸ்வர அனைவரும் அதனை நோக்கி ஓடினர் அன்னை தந்தையர் இளைஞர் யுவதிகள் கிழடுகள் கட்டைகள் குழந்தைகள் குட்டிகள் அனைவரும் அவதியில் சமத்துவம் கண்டனர்
அரிவையர் கோரியது சமவுரிமை - இங்கு அனைவரும் கோரியது முன்னுரிமை. முண்டியடித்து ஏறியதில் முன்னவன் கால்களை மிதித்துவிட்ட குதியுயர் செருப்புகள் கோரின மன்னிப்பு பின்னவள் இடையினில் கிள்ளியதால் ஒரு மன்னவன் தேடிய 'மணி மொழிகள் எந்தன் காதுகள் என்ன வரம் பெற்றனவோ ! எந்தன் கண்கள் என்னதவம் செய்தனவோ !
பல்லவன் அங்கே பாரதத்தில்-இங்கு வன்னியன் வந்தால் எப்படியோ?
அத்தனை மனிதரும் “அடைந்து” விட அக்கினி வாயுவை உமிழ்ந்துவிட்டு அரியசேவையை ஆற்றிடும் வீரன்போல் அப்பால் சென்றது இ.போ.ச
இந்த மனிதர் எங்கே போகிறார்? என்று மட்டும் புரியவில்லை !
இந்த நேரத்தில் அந்திக் கருக்கலில் அரையிருட்டினில் நின்றிருக்கிறேன் அரையிருட்டினில் நடந்தவை அனைத்தும்
இரா. சடகோபன் 6.

அர்த்த ராத்திரியில் நடக்கத்தக்கவை ஆடையணிந்தே இருந்த போதும் ஆடையொன்றும் அவர் பொருட்டல்ல இத்தனை நேரமும் இங்கு நான் நிற்கிறேன் எத்தனை ஏங்கியே வருந்திய போதிலும் ஆங்கவன் வருந்தியே துக்கித்திருக்கிறான் என்று கருதியும் பஸ் வரக்கூடுமா?
எத்தனை விதங்களில் எழுந்து நடக்கும் வார்த்தைகள்
மானிடப் பண்பின் மனவிகாரங்கள் திக்கற்ற சாயலில் தெய்வீகச் செயல்கள் அன்பினை அழைத்திடும் அரிவையர் பார்வைகள் ஆயிரம் ஆயிரம் அரசியல் பேதங்கள் இரு வேறுவர்க்கத்தின் பிளவுகள் போட்டிகள் அடித்தளம் எனப்படும் பொருளியல் கூற்றுக்கள் சிந்தனை. சிந்தனை. அறிவியல் கருத்துக்கள் அனைத்தையும் நானிங்கு அலசிப் பார்க்கிறேன் எத்தனை எத்தனை வார்த்தைகள். வார்த்தைகள்.
இத்தனை நேரமும் இங்குநான் நிற்கிறேன் எத்தனை ஏங்கியே வருந்திய பொழுதிலும் ஆங்கவன் வருந்தியே துக்கித்திருக்கிறான் என்று கருதியும் பஸ்வரக்கூடுமா?
இந்தமனிதர் எங்கே போகிறார்?.! என்று மட்டும் புரிவதில்லை !
இலங்கை வானொலி 'வாலிபர் வட்டம் நிகழ்ச்சியில் இடம்பெற்றது প্রতীটো - 1979
வசந்தங்களும் வசீகரங்களும்

Page 35
-外) %物%km
げ、シェ園%シ*杉 死丝附概也 砂Qシ
-君括包}
八
邝)| @旧非抛言|
இரா. சடகோபன்
 

நீத்தம். நீத்தம்! --
புனனுனிநீர் வெண்பனித்துகள்கள் இன்னும் மறையவில்லை தான் "ஆ" சாமச் சேவலின் கடைசிச் கூவலு?9 முன்பே
எம் கால்கள் நடக்கத் தொடங்கி விட்டன.
is 8 ፀ7 வசந்தங்களும் வசீகரங்களும்

Page 36
நெடிதுயர்ந்த மலை முகடுகளில்
இளந் தென்றலுடன் குளிர்ச்சாரல் இன்னும்
வீசி ஓயவில்லைதான் - ஆனால்
எங்கள் காலையுணவின் முதற்கவளம்
வயிற்றுக்குள் செல்லு முன்னரே
நாம் கொழுந்தெடுக்கத் தொடங்கிவிட்டோம்
பசிய நிற தேயிலைச் செடிகளிடை
காலையிளம் செம்பருதி
ஒளி வீசத் தொடங்கவில்லை தான் - ஆனால்
இதுவரைகால் பத்துறாத்தல்
கொழுந் தெடுக்காதிருந்திருந்தால்
கங்காணி காளி முத்து
கன்னத்தில் அறைந்திருப்பார்.
முருக்கை மரக்கூட்டத்திடைக் கிளிக்கூட்டம்
முருக்கம் விதை தின்ன இன்னும்
வரவில்லைதான் - ஆனால்
நாங்கள் எங்கள் மதிய உணவுக்காய்
இரா. சடகோபன் 68

கால் வயிற்றுப் பசி தீர்க்க
நெடு நாளாய்க் காத்திருக்கோம்.
அந்தி நில வொளியில்
ஆயிரமாய் முயல்வந்து
அருகம்புல் உண்ண
ஆயத்தம் செய்யவில்லை தான் - ஆனால்
அடுத்த நாள் பொழுதுக்காய்
அரிசியைக் காணாது
கடகத்தைக் கவிழ்க்கையில் தான்
ஐயையோ. நித்தம் இப்பிரச்சினைதான்.
GLID 1980
வாங்கங்களும் வசிகரங்களும் 89

Page 37
இரா. சடகோபன்
70
 

உணர்வுகள் இல்லாத
சிந்தனை
இரவின் விடியாத்தன்மையில் வாழ்வில் ஆங்காங்கே வட்டமிடும் கலையாத கனவுக் குமிழிகளில் உழன்று காலத்தைத் தண்ணிராய்
வடிய விட்டு. கால் நூற்றாண்டின் கழிவில் பெருமூச்சு விட்டு ஆயிரம் கோட்பாடுகளில் ஒன்றிலும் மனம் செல்லாமல் அற்பத் தனங்களை எண்ணிக்களித்து அந்தக்காலத்தில். எனத் தொடங்கும் உரை வீச்சுக்களில் மன உளைச்சல் பட்டு. மாலைப் பொழுதின் மயக்கத்தில் சிந்தனை விளைத்த சீற்றங்களில் களைத்து
வசந்தங்களும் வசீகரங்களும் 71.

Page 38
பிரபஞ்சத்தின் மீது. வாழ்வின் மீது. சீற்றம் கொண்டு,
பாடசாலை விட்டுச் செல்லும் வெண் சிட்டுக்களில்
எங்கே அவள் என்று இடையறாது துழாவி நித்தம் நித்தம் தேடி ஏமாறுவதில் இன்பம் கண்டு.
அவள் அனுபவத்தில் கவிதைபாடக் காத்திருக்கும் நண்பனுக்கு பொறாமையுடன் வாழ்த்துக் கூறி, காதல் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாமல்
தவித்து,
பாலியல் வடிகாலுக்கு பாதை தெரியாமல் அனுபவித்தறியாத அமெரிக்காவின் நிர்வாணக் கடற்கரையை, நைட் கிளப்புக்களை, காணும் ஆசையை அடக்கிக்கொண்டு,
*மேத்தா பாணிக் கவிதைகளை மனனம் செய்து காதல் கடிதங்களுக்குப் பயன்படுத்தி.
* கவிஞர் மு.மேத்தா, நாவலாசிரியர்கள் ஆதவன், அகிலன், நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், மணியன் ஆகியோர் இக்காலத்தில் இளைஞர்களைப் பாதித்த எழுத்தாளர்கள்.
இரா. சடகோபன் 72

ஆதவன் சொற்றொடர்களால் அடுத்துப் பேசியவர்களின் மொழிநடையைப் பழித்து. தனித்திருக்கும் சந்தர்ப்பங்கள் குறுக்கிடும் போதுகளில் எல்லாம் வாழ்வின் இருண்ட பகுதிகளையே சிந்தித்து. சிந்தித்து. அரசின் கல்விக்கொள்கையைக் கண்டித்து, இலக்கியம் படிப்பதாக நினைத்து அகிலன், நாபா, ஜெகா மணியன்களைப் புகழ்ந்து தேர்தல் காலங்களில் அரசியல் பேசி. வாழ்க்கைச் செலவுகளை வாயாரத்திட்டி.
உணர்ச்சிகளால் அன்றி உணர்வுகள் இல்லாத சிந்தனை யால் கழிந்து கொண்டிருக்கும் கணங்களைக் கூட பெளதீகப் பொருளாக மறந்து விட்டு,
ஓ! வெறும் கற்பனையில் வாழ்ந்து நானும் கழித்து விட்டேன் கால் நூற்றாண்டு.
14 DTsj 1979
வசந்தங்களும் வசிகரங்களும் 7.

Page 39
忽 彩黎多
7.
இரா. சடகோபன்
 

புதியபாதை ஒன்றைத் தேடி
புதிய பாதை ஒன்றைத் தேடி.என்ற இக் கவிதை 1981ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக் கழக தமிழ்ச் சங்கம் நடத்திய 'இளந்தென்றல் கவிதைப் போட்டியில் முதலாம் இடத்தை வென்றது.
புதிய ராகங்களைப் புரிந்து கொள்வதற்கு மெளன இசைகளை ரசிக்கத் தெரிய வேண்டும் நியாய கீதங்களின் ஆத்மநாதங்கள்தான் புதிய பாதையின் வெற்றி வேதங்கள். ஆபிரிக்க கறுப்பு நண்பனுக்கு நாம் சொந்தக்காரர்கள் ஏனெனில் - அவன் வாழ்வும் எம்வாழ்வும் புகழ் பூக்காத ஒரு மரத்தின் இரண்டு கிளைகள் ஆனாலும் - இவை அர்ச்சிக்கப்படாத மலர்கள் அல்ல.
நாங்கள் நீண்டகாலமாக மண்வெட்டியைப் பிடித்திருப்பதால் தான் உங்கள் வீணைகள் எங்கள் கரங்களுக்குள் அடங்குவதில்லை உங்கள் ஜாஸ்' இசைகளை மாலை வரை ரசித்துக் கொண்டிருங்கள் - எம் வாழ்வில் ஆலைச்சங்கொலியும் காலைப் பிரட்டுத்தப்பும்தான்' இன்னிசைக் கீதங்கள்.
உங்கள் தம்பூராக்கள் எங்கள் வியர்வையால் ஆலாபனை செய்யப்படுவதனால்தான் எங்கள் அழுகுரல்கள் கூட உங்களுக்கு இனிய கீதமாக இருந்திருக்கின்றது. எங்கள் வயிற்றுப்பசிக்காக
வசந்தங்களும் வசீகரங்களும் 75

Page 40
நாங்கள் நிரப்பும் கொழுந்துக் கூடைகளால் தான் கட்டில் சுகங்கள் உங்களுக்குக் கொட்டிக் கொடுக்கப்படுகின்றன. வரலாற்றுக் காலங்களில் நாங்கள் வடித்த வியர்வையாலும் கண்ணிராலுமே இந்தக் கடல்கள் எல்லாமே நிறைந்து விட்டன - அவற்றின் உவர்ப்புக்குக் காரணம் தெரியாத நீங்கள் உல்லாசப் படகு விடுகின்றீர்கள்.
இந்த உலகின் வசந்தங்களும் வசீகரங்களும் எல்லோருக்குமே பொதுவானவைகள் தான் - இருந்த போதும் தென்றலை நீங்கள் வைத்துக்கொண்டு புயல்களை மட்டும் எமக்குத்தந்தீர்கள்.
பசி பட்டினியை விடவும் இடிமின்னல்கள் கருணைமிக்கவை என்பதனை புரியவைத்ததற்கு நன்றிகூறுவதும் பண்பாடுதான்- ஏனெனில் பிறந்தபின் தாலாட்டுதற்கு ஒய்வுதராத நீங்கள் இறந்தபின் ஒப்பாரி பாடுதற்கு அரை நாள் “போதுமென்றீர்கள் பாரம்பரியங்களை நாங்கள் மறந்து விட்டபின் பண்பாடு எங்கே நினைவிருக்கின்றது. மலைமுகடுகளின் இனிமையையும் மேகம் கவிழ்தலின் அழகையும் குயில் கூவலின் மோகனத்தையும் மயிலாடலின் நளினத்தையும் அசையாது இசையோடு ரசிக்கும் உங்கள் காதுகளும் கண்களும் மலையடிவாரத்தில் எங்கள் குடில்களின் அவல ஒலங்களையும் கத்தல்களையும் கதறல்களையும் கோபதாபங்களின் சீற்றங்களையும், ருத்ரங்களையும்
*ஏனைய தொழிலாளர்கள் அனுபவிப்பது போல் மகப் பேறுகால விடுமுறை தோட்டத் தொழிலாளருக்கு இல்லை. அதே போல் யாரும் இறந்து போய் விட்டால் அரை நாள் மட்டுமே விடுமுறை வழங்கப்படுகின்றது
இரா. சடகோபன் 76

கிஞ்சித்தும் உணரவில்லை என்ற போதுதான் - நீங்கள் செவிடர் என்பதும் குருடர் என்பதும் ஊமை என்பதும் தெரிந்தது- ஆனால் நீங்கள் ராட்சதர்' என்பது மட்டும் மறந்துபோய் விடவில்லை. இறந்தகாலம் என்பது அவை பதித்துவிட்ட நினைவுகள் எம்கண்கள் நிழலாடும் நிகழ்காலங்களே. கோரமான - உங்கள் வரலாற்றுக் காலடிச்சுவடுகள் எங்கள் நெஞ்சின் அடித்தளத்தில் கொடூரமாகப் பதிந்து போய் விட்டன. உங்கள் கற்கோட்டைகளைத் தகர்ப்பதற்கு எங்கள் கரங்கள் வலிமை பெற்று வருகின்றன. உங்கள் மனோராஜ்யங்களின் இன்பக்கனவுகள் விரைவில் மடிந்துவிடப் போகின்றன. வாழ்வின் நிதர்சனங்கள் அனைத்துமே யதார்த்தங்கள் என்றால் உங்கள் சொல் ஜோடனைகள் அனைத்துமே கறைபடிந்தவைகள் எங்கள் வாழ்வை கொச்சைப்படுத்த எழுந்த புனிதப் பிரகடனங்கள் எங்கள்மொழி, எங்கள் பேச்சு, எங்கள் பாடல் எல்லாமே புதிய வாழ்வின் நீண்ட ஒத்திகைகள் உங்கள் தர்மத்தின் அநீதியான தீர்ப்புக்களுக்கு நாங்கள் தலைவணங்கப் போவதில்லை உங்கள் குருதிக் கோலங்களின் நாற்றங்காலில்தான் எங்கள் புதிய வித்துகளை விதைக்கப் போகின்றோம்
புதிய பாதையின் புரட்சிக் கீதங்கள் தான் மெளன இசைகளின் புதிய ராகங்கள் புதிய ராகங்களைப் புரிந்து கொள்வதற்கு - நாங்கள் மெளன இசைகளை ரசித்துக்கொண்டிருக்கின்றோம் - ஏனெனில் நியாய கீதங்களின் ஆத்ம நாதங்கள் தான் புதிய பாதையின் வெற்றி வேதங்கள்.
5 ஜனவரி 1981
வசந்தங்களும் வசீகரங்களும் לל

Page 41
இரா. சடகோபன் 78
 

அத்தாணி மண்டபத்தை அசுரர்களால் அலங்கரித்து...!
காலம் யுகங்களெல்லாம் காற்றோடு பாட்டிசைக்கும்
தேனின் இனிமையெல்லாம் வாழ்வில் துலக்கமிடும்
பூவின் இதழ்களைப்போல் புதிய வாழ்வொன்று
படைத்தற்காய் காத்திருந்தோம்
காத்திருந்தோம் காத்திருந்தோம்
வசந்தம் ஒன்றைத் தேடி வந்து
வான் முகட்டைப் பார்த்திருந்தோம்
வான் முகட்டைப் பார்த்திருந்து
வீண் கோஷம் போட்டிருந்தோம்
வசந்தங்களும் வசீகரங்களும் 7g

Page 42
வெண்மதியை நாடி வந்து
துன்மதியை அடைந்து விட்டோம்
துன்மதியை அடைந்ததனால்
துயரங்களைத் தொடர்கின்றோம்
தங்கத் தேரொன்றை தேடி இழுக்க வந்தோம்
தேடி இழுக்க வந்து தேடாமல் நின்று விட்டோம் வெண்கொற்றக் குடையின் கீழ் வேழம் ஏறி வந்தோம் வேழம் ஏறி வந்து வேதனையைத் தானடைந்தோம்
பூமியிலே புதுவரசு புதிதாய் படைக்கவந்தோம்
புதிதாய் படைக்கவந்து பூமியின்றித் தவிக்கின்றோம்
அத்தாணி மண்டபத்தை அசுரர்களால் அலங்கரித்தோம் அசுரர்களால் அலங்கரித்து அவதிகளைத் தானடைந்தோம்
பித்தர்களைப் பிடித்து வந்து பேயோட்டக் கூறி வைத்தோம்
பேயோட்ட வந்தவர்கள் பேய் பிடித்துப் போனார்கள்
உன்னதங்கள் எம் வாழ்வில் ஊமைகளாய் இருப்பதனால்
சன்னதங்கள் எல்லாமே தலைகீழாய் மாறினவோ !
பொருள் தேடி புகழ் படைக்க பூமியிலே பிறந்தோம்
பிறந்து விட்ட காரணத்தால் பிச்சைக்காய் அலைந்தோம்
மண்ணுழுது பொன் படைக்க மாடுகளாய் உழைத்தோம்
மாடுகளாய் உழைத்ததனால் மனம் நொந்து செத்தோம்
இரா. சடகோபன் 80.

சதை ரத்தம் எலும்பெல்லாம் வியர்வையாய் வடித்தோம்
வியர்வையாய் வடித்து விட்டு வீண்துன்பம் அடைந்தோம்
காலைக் கண்ணிரை மாலைவரை வடித்தோம்
மாலை வரை வடித்த பின்பும் மனத்துயர்தான் அடைந்தோம்
அந்தகாரம் எம் வாழ்வில் சூழ்ந்து விட்டபின்
நீண்ட மெளனங்களும். பெருமூச்சுக்களுமே
எங்கள் ஜீவத்துடிப்பினை பிரகடனப்படுத்துகின்றன
புதிய காலையின் புலர்வு என்பது அமைதியான வாழ்வின் 'விடிவாக இல்லாமல்
அபாய அறிவிப்பின் ஆரம்பமாகவே உள்ளது
அக்கினிகள் வருணனுக்கு
அடி பணிய மறுத்திருப்பின்
அவை எம்முள் வெளிப்பட்டு
உலுத்தர்களை பொசுக்கட்டும்
29 --JLII 1982
வசந்தங்களும் வசீகரங்களும் 81

Page 43
€.• YOL:7
정원
Ș
 
 

ஒரு எச்சரிக்கை...!
என்னை நீ அறிந்து கொண்டாய்
என் கவிதைகளால். உன்னை நான் அறிந்து கொண்டதோ
உன் கண்களால் தான்
உன் வீட்டு ஜன்னலோரத்து வேலியில் மலர்ந்திருக்கும் சிவந்த செவ்வரத்தம் பூக்களை
இவன் அப்படி என்ன ரசிக்கின்றான்.?
வசந்தங்களும் வசீகரங்களும் 88

Page 44
ஆச்சரியப்பட்டார்கள் ஊரார்
அவர்களுக்குத் தெரியாது
நான் ரசிப்பது செவ்வரத்தையை அல்ல
உள்ளிருக்கும் செண்பகப் பூவை என்று
பால் நிலாக்காலத்தில்
பனி இரவில்
நான் வானத்தைப் பார்ப்பதெல்லாம்
உன் மதிமுகம் அங்கு
மலர்ந்திருக்கின்றதா என்று தான்
நிலாக் கன்னியின்
வானக் கூந்தலில்
மின்னி ஒளிரும்
நட்சத்திரங்கள் கூட
உன் சிவப்புக்கல் தோடுகளைத்தான்
நினைவு படுத்துகின்றன
உன் காதுகளில் நான் சொல்லிவிட்ட
எல்லா ரகசியங்களும்
இரா. சடகோபன் ~~

இந்தக் காற்றுக்கும் தெரிந்திருக்கின்றது
அது என் கண்முன்னாலேயே
வானத்துக்கும் பூமிக்கும்
மரங்களுக்கும் செடிகளுக்கும்
அவற்றைப் பிரகடனப் படுத்துகின்றது
எனக்கு ஒரு சந்தேகம்
அவற்றுக்கு மனிதர்களின் மொழி தெரியுமா?
இருந்தும் ஒரு எச்சரிக்கை மறந்தும் நீங்கள்
மனிதர்களின் மொழியை
உச்சரித்து விடாதீர்கள்
ஏனெனில் அவை
வஞ்சனையும் சூழ்ச்சியும்
வெஞ்சினமும் கொண்டவை
ΟΠΤΑ: 1984
வசந்தங்களும் வசீகரங்களும் 85

Page 45
இரா. சடகோபன்
 

வசந்தங்களும் வசீகரங்களும்
(to
காவியத்தின் நயமெல்லாம் கடந்த விழிகள் கற்கண்டின் சுவையெல்லாம் வழங்கும் வாய்தான் காவனைத்தும் தேன்துளிர்த்து வார்க்கும் இதழ்கள் முத்தனைத்தும் ஒளி சேர்க்கும் முல்லைப் பற்கள் வேழத்தின் கொம்பொடித்து கடைந்த மேனி சோலை மலர் மாருதம்போல் வாய்த்த தன்மை காலையிளம் பருதியெனும் சிவந்த முகம் அழகுக்கும் அனைத்துக்கும் நிகராகா தொன்று படை எனவிடுப்பின் படைத்திடுவான் நான் முகனும் மன்பதையின் மாதரசி மன்மதையே உன்னை.
சந்திரன் தோற்றதன்ன தகையுடை எழிலே போல்வாய்
வசந்தங்களும் வசீகரங்களும் 87

Page 46
இந்திரன் சாட்சியாக அழகுடன் இலங்குகின்றாய் புவியிதன் கவிதையாவும் உன்னறு இன்பம் கூறும் என்னறு கண்ணே 1 மணியே ஏற்றமுற்றொளிர்வாய் என்றும். தெள்ளிய மலரே, மதியே! துள்ளிடும் மானைப் போல்வாய் வெள்ளிடும் அழகைக் காட்ட பள்ளியில் பயின்றாயாமோ? வள்ளியே அமுதப் பெண்ணே ! அள்ளியென் உள்ளம் கொண்டாய் கிள்ளிய ரோஜா வணையாய்
கள்ளியென் இதயம் எங்கே?
மலர் திருநின் முகத்தைக் கண்டு மனதிலோர் வியப்புக் கொண்டு மன்பதை பொருட்கள் யாவும் உன்னெழில் நிகர்க்கா தென்று தண்மதி நிலவும் அங்கே தவிப்புடன் இருந்தபோது, தந்தத்தின் கடைசல் என்று என்னுள்ளே கூறிக் கொண்டேன். கவிஞரும் போற்றும் வண்ணம் கலைநுகர் வதனம் பெற்றாய் வண்டினம் மொய்த்த தன்ன
இரா. சடகோபன் 88

கார் குழல் முகில் போல் நின்றன் கால்களில் வீழ்ந்து பணியும் கனதன கணககும்பம் குடநிகர் மார்பின் குன்றம் மூழ்கிட இன்பம் நல்கும் பதுமையின் எழிலைமிஞ்சும் பாவையார் சமைத்தார் உன்னை நிலமது நோக்கும் நின்றன் நித்திலக் காந்தக் கண்கள் நிகர்க்குமோ நீ நிலத்தின்பம் யாவும் காதலின் காவியம் படித்தால் கூடலில் புனிதம் உளதோ? - அன்றி உடலல்ல உள்ளம் ஒன்றும் புணர்ச்சியில் விரசம் உளதோ
என்றுதான் கேட்கத் தோன்றும்
கனியிதழ் அமுதின் சுவையும் - செங் கனியிதழ் காதல் மொழியும் காதலில் அன்றி ஒருங்கே கண்டிடல் மாந்தர்க் கெளிதோ?
உன்மனம் காண எண்ணி
என்மனம் தவித்த நாட்கள் இன்முகம் காணும் வரையில் இயற்றிட முடியாதன்பே இத்தகு போதில் என்றன், தவித்திடும் இதயம் மகிழ,
வசந்தங்களும் வசீகரங்களும் 89

Page 47
நின்முகம் காட்டி என்னை
தகையுடன் ஏற்றாய் அமுதே !
குன்றிடா இன்பஜோதி தென்றலின் சுகந்த கீதம் அன்புடை அமுதச் சுடரே ! அன்றுடன் கலந்தாய் என்னில் என்றும் நீ வாழ்வாய் என்னுள் ஒன்றுமே பிரிக்கா வண்ணம் அன்றிலாய் மாறி நித்தம் கணங்களில் வாழ்வோம் கண்ணே !
ኣ፡ነk
大 ★ ★
வெண்ணிலவின் தண்னொளியால் செய்த சிற்பம் வெண்பனியின் வெண்ணிறம் போல் தூயதன்மை கண்ணொளியோ காந்தம்போல மின்னொளிதான் செந்தமிழின் வண்ணத்தால் வரைந்த வடிவம் மைந்தனிவன் முகங்கண்டால் மாதரெல்லாம் மையலினால் மனம் தவிப்பர் ஆகையினால் மனமிழந்தாள் வனிதையிவள் மன்னனிடம்
அன்றுமுதல் சுந்தரனும் குடிகொண்டான் அவள் மனதில்,
பருவமலர் என்று சொன்னால் அவளைத்தானோ
பாரதியின் பாட்டில்வரும் புதுமைப் பெண்ணோ
இரா. சடகோபன் & М 90

உருவத்தில் பளிங்கினையே மிஞ்சுகின்றாள் கருங்குழலோ சூல்கொண்ட முகிலின் சாயல் நயனங்கள் கருவண்டை புறங்காணும் வண்ணம் பன்னெழிலால் கொள்ளை கொண்டாள் சுந்தரனை கம்பனென்ன கண்டுவிட்டான் கத்தரிக்காய்
காவியங்கள் அனைத்திலுமே இவள் போல் இல்லை.
★ ★ ★
தூரிகை எந்தன் கையில் வண்ணங்கள் நீயே யன்றோ சித்திரம் தீட்ட எண்ணி திரைக்கு நான் அலைந்த போது துர்க்குறி போல வந்து சிறிய நின் தந்தை நின்றார் கொட்டினேன் எந்தன் மனதை
கொண்டல்கள் கொட்டும் மழைபோல்
வசந்தங்களும் வசீகரங்களும் 91.

Page 48
(2)
அன்பினில் கலந்து நம் இதயங்கள் இணைந்தபோது கருத்தினில் மட்டுமன்றி காலத்துக்காகவும் கைத்தலம் பற்ற நான் கனவு கண்டேன் அத்தகுபோதில் சிறிய நின் தந்தை "படித்த ஓர் தறுதலை மடையனே, நீசனே ! சிறுக்கியின் குலந்தனில் பிறந்தவன் சீர்பெரு மேன்மையென் குலந்தனில் பெண் தனை விரும்புதல் பண்பாமோ?” என்றனன் மிக்கு சினத்துட்ன். “ஆதியில் இருந்தே நாங்கள் சாதியை மதித்து வந்தோம் பாதியில் வந்த நீயோ பரம்பரைப் பறையனாவாய் நிதிகுவைமிக்க எங்கள் செல்வியை விரும்பும் அழகிய நச்சுப் பாம்பே ! நெஞ்சிலுன் நினைப்பை நீக்கு
பூமியில் வாழ்வு வேண்டின் புலம்பலை நிறுத்து இன்றே
ஊனுடல் உனக்கு வேண்டின் ஊமையாய் இருத்தல் நன்று
இரா. சடகோபன் 92

மீண்டுமென் படிமிசை உனதடி வைத்தாயென்றால். படித்தவன், நீயிதை புரிந்து கொள்வாய் இளமையை மீறும் இந்த உணர்ச்சிகள் உதவாதப்பா
e e e 9. இதனை நீ உணரா விட்டால் சாக்கடை சவக்கிடங்காகும்
"இளமைத்துடிப்பு உந்தன் இமைகளை மறைக்கிறது பதவிப் பெருமையோ உன் திமிரினை வளர்க்கிறது காமப் பித்தனைப் போல் தலை தடுமாற்றம் கொண்டாய் தறுதலைப் போக்கால் பண்பின் நெறிதனை மறந்தாயாமோ பரத்தையின் உற்ற மகனே, பண்பினை எங்கே கண்டாய் சிறுத்தையின்சீற்றமிது, சிந்தை கொள் ! இறுதியில் ஒருவார்த்தை இதமாகக் கூறுகின்றேன் அப்பனே! முழுதாக உனக்கு முதுகெலும்பு வேண்டுமெனில் முடிவினை மாற்றிக்கொள், மறந்துவிடு மணிமொழியை
அமைதியாய் உறங்குமிந்த எரிமலையை உசுப்பாதே"
★ ★ ★
கோபுரத்தின் மீதொரு கொக்கிருந்ததன்ன கொடியநின் தந்தை மனம் கொக்கரிக்கின்றது நானிலத்தின் நான் பெரியன், நானே செல்வன் என்றபெரு மமதைச் செருக்கால் நீ நிலத்தை அடிமையாக்கும் மடமைப் போக்கால்
கொலைக் கஞ்சாப் பாதகனாய் மாறத்தக்கார்.
வசந்தங்களும் வசீகரங்களும் 93

Page 49
சூழ்நிலையால் ஏற்பட்ட வஞ்சகத்தின் வெம்மையிங்கே சாதி எனும் அக்கினியாய் இதயத்தைச் சுடுகிறது மத மொழி இனவெறிகள் இல்லையாகும் இலக்கை நாம் அடைதலொன்றே தேவையாகும் வெண்பொன் குழற் கன்னி, வெண்ணிலவுப் பெண்ணரசி ! உன்சிறு தந்தை சொல்லால் ஊனுடல் கொதிக்கலுற்றேன் தன்மானச் சிறுமையென்றால் புரிந்திடக் கண்டு கொண்டேன் ஈனரென்றால் இத்தகைய மனிதரைத்தான் சொல்ல வேண்டும் அன்றுமுதல் என்னுள்ளம் அனற்பிழம்பாய் கனல்கிறது
உன் பேரன்பை எண்ணி ஊமையாய் இருந்து விட்டேன்.
காதலினால் காவியங்கள் எத்தனையோ படைத்து விட்டோம் ஆனபின்னும் காதலினை நாம் அறியத் தவறிவிட்டோம் - காதல் காவியங்கள் அத்தனையும் கானலைப்போல் விழல் நீராய் கண்ணில்லா குருடர் முன்னே ஒவியமாய் ஆயினவோ ! - காதல் காவியங்கள் அனைத்தையுமே இலக்கியமாய் ஆக்கிவிட்டோம் இலக்கியமாய் ஆக்குதற்கா காவியங்கள் நாம் படைத்தோம்?
இரா. சடகோபன் 9.

(3)
இம்மாந்தர் அனைவருக்கும் இயல்பான இதயமில்லை இதயத்தின் மெல்லுணர்வை எங்கேயோ புதைத்து விட்டார் பொருளாசை புகழாசை கெளரவத்தின் மீதாசை சாதி மத மொழிவெறிகள் இனவெறிகள் மற்றவையும் இரும்புப் பெட்டியினை வட்டமிட்டே செல்கின்றன பழம்பெருமை பேசுவதில் நன்நெறிகள் விளம்புவதில் பண்புடைமை கூறுவதில் அனைத்திலுமே இவர் சமர்த்தர் ஆனாலும் இவர் மொழியில் இவையாவும் “ஊருக்குத்தான் உபதேசம்"
நெல்லுக் கிறைத்த நீரால் புல்லினங்கள் வாழ்ந்திடலாம் புல்லினங்கள் வாழ்ந்திடவா நெல்லுக்கு நீரிறைத்தோம் ! உடைமை என்ற சொற்கருத்து உரிமையையே மறுப்பதெனில் உடையவர்கள் அனைவரையும் உழுதற்கு அனுப்ப வேண்டும் உழுபவர்கள் அனைவருக்கோ உண்பதற்கே உணவில்லை
வசந்தங்களும் வசீகரங்களும் 95

Page 50
இவர் தவிர தொழில் புரிவோர் என்று பல எண்ணற்றோர் உடையோரும், எளியோரும், உழுவோரும் தொழிலோரும் அனைவருமே மனிதர்கள் தான், இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் சாதியென்றும் பேதமென்றும் எதற்காக பார்தனிலே பழைமைக்கும் பழிதீர்க்கும் மடமைக்கும் முடிவுகட்டி தொழிலுக்கும் தோழமைக்கும் சிறப்பு நல்கி தொடர்ந்தபெரு இன்பமெங்கும் பாய்ச்சல் வேண்டும்.
சுதந்திரங்கள் முதியோரின் பூர்வீகச் சொத்தென்றால் இளைஞரென்ன இவர் வீட்டு பன்றிநிகர் அடிமைகளா? ஒழுக்கமென்னும் பொன்னகையை முன்வைத்து இளைஞரது சுயவுரிமை சுதந்திரத்தை விலைகேட்டால் ஒழுக்கமென்ன இவர்களது உடன் பிறப்பா? இல்லை மைத்துனரின் வழி உறவா, கேட்கின்றேன் சமூகச் சட்டமெனும் தளை கொண்டு பிணித்து விடில். பிணித்ததினால் மாத்திரமே இவர் ஒழுக்க சீலரென்றால் சமூகத்தில் ஒருவருமே ஒழுக்கத்தை அறிந்தறியார் உணர்வு வயப்பட்ட சிந்தனையில் ஊறியதே ஒழுக்கமாகும்.
உணர்வு வயப்பட்ட உணர்ச்சியுடன் சிந்தனையில் ஊறிய உண்மை ஒழுக்கத்தை உருவாக்க வ்ேண்டும் - அதுவன்றி ஒழுக்கத்தை உருவாக்க சுதந்திரம் இல்லையெனில் சுதந்திரம் இல்லாத ஒழுக்கத்தை யாம் வேண்டோம்.
காவலர் இருப்பதால் களவினைத் தடுக்கலாம் கள்வனே உணர்ந்தால்தான் களவினை ஒழிக்கலாம் மக்களது சுகதுக்கம் சரிசமமாய் இருந்து விட்டால் மாற்றானை அவன் கண்டு மருகிடவும் மாட்டானே மந்திரத்தில் ஆனதெல்லாம் தந்திரத்தில் யாம் கொணர்வோம் மாந்தர்களை மந்தையென்ற மனிதர்களை யாம் மதியோம்.
இரா. சடகோபன் 96

கன்னல்மொழி பேசும் காந்தக்கண் காரிகையே - நம் htsகளை நனவாக்கக் கரம் நீட்டி அழைக்கின்றேன் ம லுத்தர்கள் வாழுமிந்த சாக்கடையைச் சீராக்க பம்மால் முடிந்த சிறு நன்கொடையை நாமளிப்போம் உன்தாய் உன்தந்தை உற்றமற்ற சுற்றங்கள் அனைவரும் இவ்வுலகின் உருவெளியில் உயிருள்ள துணிக்கைகளே அவர் செய்யும் அடாவடிகள் கொடும் வினைகள் வஞ்சனைகள் அத்தனையும் இயலாமை பலவீனம் இவை தம்மின் வெளிப்பாடே உலகெங்கும் உன்னதங்கள் பெருகிவரும் இந்நாளில் நாமிங்கே காதலுக்காய் கடுஞ்சமரே புரிகின்றோம். தேனென்றும் மானென்றும் மயிலென்றும் குயிலென்றும் கண்மணி என்றும் கற்கண்டென்றும் அமுதமென்றும் வசந்தமென்றும் பூங்குழலி, மாங்குயிலி, வேய்ங்குரலி இன்னும் பலவென்றும் எத்தனையோ பெயர் சொல்லி நானுன்னையழைத்து விட்டேன் இத்தனைக்கும் என்னை நீ! சுந்தரனே' என்று மட்டும் சுருக்கமாக அழைத்து விட்டாய் இலக்கியத்தில் பல்லாண்டாய் பல நூறாண்டாய் இக்கதியே காணுவதால் இவ்விடயம் ஆண்களெல்லாம் பலவீனர் ஆகிவிட்டார், ஆகையினால் இன்றுன்னை 'அடி என்று அழைக்கமட்டும் அனுமதிடீ
ஏது கூறின் நிகராகா வண்ணத் தமிழ்மாதே உன் கூந்தல் நறுமணத்தை நக்கீரன் அறிந்திருந்தால் இறைவனிடம் அப்படியோர் வாதினையே தவிர்த்திருப்பான் மன்மதனும் உன்னெழிலை ஒரு முறை பார்த்திருப்பின் ரதி என்பாள் பதிதன்னை எப்போதோ இழந்திருப்பாள்
முல்லைப்பல் வரிசை என்று முன்னவனோ பாடிவைத்தான்
வசந்தங்களும் வசீகரங்களும் 97

Page 51
பாடியவன் உன்பல்லை முதல் பார்க்கத் தவறி விட்டான் உனக்காக என்கரங்கள் எப்போதும் நீண்டிருக்கும் அந்திமதி வரும் வேளை வெண்மணலில் காத்திருப்பேன்
கணங்களை யுகங்களாக்கி காத்திட வைத்திடாதே !
★ ★ ★
வேய்ங்குழல் கண்ணன் மீட்ட கானுறை விலங்கினமெல்லாம் ஆடுதல் அசைதலின்றி அருமையாய்க் கேட்டண வாமே வேய்ங்குழல் நிகர்க்கும் தன்மை காதலில் மடலுக்குண்டோ காதலன் விடுத்த செய்தி கன்னியின் கரத்தில் தவழ்ந்து கற்கண்டாய் இனித்த போதும், காதலன் துன்பம் கண்டு அஞ்சனம் கொண்ட கண்கள் வெஞ்சினம் உமிழ உள்ளம் வெந்தணல்பட்ட மலராய் வெந்திடும் நிலையில் இருந்தாள் - ஆயின் பாரதப் போர்க்களத்தில் கீதையின் சாரம் சொன்ன கண்ணனே நேரில் வந்து காதினில் உரைத்ததைப் போல் சிந்தையிலின்பம் கொண்டு சிறுமடல் வரையலுற்றாள்
இரn 98

மன்னவ நின் மடல் கண்டேன் மனதை இழந்தேன் செந்தமிழை உளமெல்லாம் நிறைத்து விட்டாய் நீயிருந்த இடமெங்கே தேடுகின்றேன், கோபம் வேண்டாம் நீயென்றால் தமிழன்றோ? தமிழென்றால் நீயன்றோ? உன் அன்பு உள்ளத்தில் ஆத்மாவில் நான்கலந்த நாள் முதலாய் உன் சீற்றம் நியாயத்தின் கீதமெனக் காணுகின்றேன் தலைமுறைகள் தவறு செய்தால் தனயர் நாம் அவை தொடரோம் எதுவரினும் நானுனது கரங்களையே சார்ந்திருப்பேன். உலகமெனும் பெருஞ்சுவரில் உன்னதமாய்த் தீட்டப் பெற்ற காதலினைக் களம் கொண்ட காவியங்கள் பலவுண்டு - அக் காவியங்கள் அனைத்திலுமே காதலுக்கு வெற்றியில்லை கவிஞனது கல் நெஞ்சோ காண்போரது மனநிலையோ காவியங்கள் அனைத்திலுமே இறுதியிலே அழுகுரல்தான் "சுற்றங்கள் படைத்து விட்ட உறவுகளைக் காட்டிலும்
உள்ளங்கள் புரிந்து கொண்ட உறவுகளே வலிமை” எனில்
வசந்தங்களும் வசீகரங்களும் 99

Page 52
ஆயிரம் அப்பாக்கள் அலையென எதிர்த்தாலும் அத்தனைக்கும் முடிவு கட்ட அறப்போரில் இறங்கிடுவோம் எம் காதல் காவியத்தை மங்களமாய் முடித்திடுவோம். என்றெமது சமுதாயம் இளையோரை மதிக்கிறதோ அன்றேதான் நம்மவர்கள் வான்வீதி வலம் வரலாம் இளைஞரது ஆற்றல்கள் இலைமறைவாய் இருக்கும் வரை முன்னேற்றம் என்றதொரு பாதையை நாம் காண்பதில்லை
அர்த்தமுள்ள இந்துமதம் ஆயிரத்தைச் சொல்லட்டுமே ஆலயங்கள் தோறும் பல கோபுரங்கள் உயரட்டுமே இறைவன் என்றொருவன் இருக்கின்றானோ தெரியவில்லை இத்தனைக்கும் இவராடும் கூத்துக்கள் அப்பப்பா.
ஆனாலும் உங்களுக்கு ஒன்று மட்டும் சொல்லுகிறேன் காதலுக்கே இத்தகைய கடுமையான போரென்றால் மொங்கோலிய வேந்தன் வந்து கோவில்களை இடித்தது போல் எத்தனையோ ஆகஸ்ட்டுக் கலவரங்கள் எதிரிலுண்டு இத்தனைக்கும் அக்கடவுள் அசையக்கூடத் துணியவில்லை ஆகையினால் ஒற்றுமையே இன்றெமது வழியாகும். கதை பேசும் முதியோர்கள் கனலுமிழும் இளையோரை வதைப்பதெனில் இயலாமை, பலவீனம், ஆற்றாமை இவையன்றி வேறில்லை விசித்திரத்தின் வசீகரங்கள் விளைக்கின்ற செயல்களினால் விபரீத விந்தைகளை விரும்பி மனம் களிக்கிறது அது தவிர்த்து இளையோரை ஆக்கமதில் புகுத்திவிடில் புதுமைகளும் புரட்சிகளும் நவநவமாய் நடத்திடலாம்.
இரா. சடகோபன் 100

கற்பனையில் விளைந்ததெல்லாம் காதலென்றால் காமத்தைக் காதலென்று கூறிடலாம் காதலென்ற தாகத்துக்கு கட்டிலொன்றே நீராகா கொண்ட பெருங்காதலது உண்மையென்றால் தசை ரத்தம் எலும்பென்ற பெளதீக வார்த்தைகள் பொருட்டல்ல காலமெல்லாம் நானுந்தன் கண்மணியாய்க் காணவேண்டும் உன்றனுக்கு அன்பு செய்து ஆதரவாய் இருப்பதுவும் நின்றனது சிந்தனைகள் அறிவார்ந்த பேச்சுக்கள் ரசனைக்குத்துணை நின்று அத்தனைக்கும் ஈடுதந்து ஆத்மாவில் ஒன்றுதலே காதலென்று கருதுகிறேன்.
கவியுள்ளம் கண்டதெல்லாம் காதலென்றால் கலையுள்ளம் கொண்டதெல்லாம் கோலமல்ல மயிலாடுங் கோலம் கண்டு 'அஞ்சுவதுண்டோ - இல்லை குளிர்வாடை வீசக்கண்டு வருந்துவதுண்டோ தென்றலுக்குப் பாட்டிசைக்கக் கொண்டல் முயன்றால் அந்தக் கொண்டலையே கோபுரங்கள், முத்தமிடட்டும் மலைமலையாய் எதிர்ப்பு வரின் மயங்குவதில்லை - எமது தலைதனையே கொய்தாலும் தயங்குவதில்லை பெரியநின் மார்பில்சாய பேரவாவுற்றேன் அன்பே !
பெருந்தடை நீக்கி என்னை உன்னவளாய் ஆக்கிக்கொள்.
சீதனம் என்றபெரு மாமத யானையினை காதல் என்ற சிறு அங்குசத்தால் பிணித்து விடில் பெண்ணடிமை அடக்குமுறை இங்கிருந்து ஓடிவிடும்
வசந்தங்களும் வசீகரங்களும் 101

Page 53
ஆகையினால் காதலினைத் தீர்வென்று நானிங்கு அறுதியிடத் துணியவில்லை - ஏனென்றால் காதலென்ற மன உணர்ச்சி பிரச்சினையாய் உருவாக காரணமாய் இருப்பதுவும் பொருளியலின் அடிப்படையே இத்தகைய பிரச்சினைகள் அத்தனைக்கும் முடிவாக பொருளியலின் அடிப்படையே காரணமாய் இருப்பதனால்
பொருளியலின் அமைப்பினிலே மாற்றமொன்று அவசியமே
ஏகாந்தப் பெருவெளியில் பெருகியதோர் ஒளிவெள்ளம் மிகநெருங்கி என்முன்னே விரைவாக வருகிறது விரைந்து வந்த மிகச் சிலர்கள் கருந்திரையை இழுத்துவந்து பாய்கின்ற ஒளி வெள்ளம் பாயாமல் மறைத்து விட்டார் இவ்வுலகின் துன்பங்கள் அத்தனைக்கும் உருக்கொடுத்து இப்புவியின் வஞ்சனைகள் அனைத்துமே உருவாக இம்மாந்தர் புவனிதனில் மனிதர் என்று பிறந்து விட்டார் எம்வாழ்வில் எதுவரினும் இடர்தொடர்ந்து மிகுவரினும் இன்னலுக்கு முகம் கொடுத்து இரையாகா திருப்பதொன்றே எம்காதல் சிறப்பினுக்கு உயர்வான மதிப்பாகும்.
இரா. சடகோபன் 102

மாதம் பல சென்ற பின்னும் மாற்றமோ காணவில்லை கீதமென்று நினைத்ததெல்லாம் சற்றேனும் சுவைக்கவில்லை காதலென்று கேட்டவுடன் கடும்புலியாய் மாறுகின்றார் சாதலினைக் கண்டதுபோல் சத்தமிட்டே துள்ளுகின்றார் வேதங்கள் ஒதும் இந்த சாத்தான்கள் உள்ளவரை காதலர்க்கும் நன்மையில்லை காலத்துக்கும் நன்மையில்லை வாதமென்ற நோயினுக்கு வைத்தியரை அழைத்தவர்கள் காதலென்ற நோய்க்குமட்டும் கடும் விஷத்தைத் தந்தார்கள் பாதகங்கள் பஞ்சமென முன்னோர்கள் சொன்னார்கள்
பாதகர்கள் காதலினை மூவிரண்டாய்க் கொண்டார்கள்.
சிறையெனும் சுற்றங்கள் சிதறிடில் கவலையில்லை
கறையெனும் தந்தை தனயர் காணவே ஒப்பவில்லை
வசந்தங்களும் வசிகரங்களும் 108

Page 54
பிறையினைப் போல உறவு கரைந்திடில் கலங்கமாட்டேன் வஞ்சகி என்று வையம் தூற்றினும் சோர்வு கொள்ளேன் என்துணை நீயேயென்று என்றோ நான் கண்டு கொண்டேன் நின்றனை எண்ணி யாவும் துறந்திட முடிவு செய்தேன் நன்றொரு திட்டம் வரைக நாமதை உயர்வு செய்வோம் கதைகளில் மட்டுந்தானா காதலர் வாழ்ந்திருந்தார் ரோமியோ ஜூலியட்டின் காதலை சுவைக்கின்றார்கள்
வசந்தியின் காதலென்றால் வஞ்சனைபுரிகின்றார்கள்.
பழிவரும் என்று அஞ்சிப் பயந்திடல் இனியும் நன்றோ கழிவுறும் நாட்கள் பலதை கனவினில் வாழ்ந்தேன் அத்தான் தோழியென் வசந்தா வசத்தில் பொன்மடல் அனுப்ப நினைத்து தொழில்புரி நிலையம் சென்றால் தொல்லையே என்று எண்ணி வழியிலே உள்ள முல்லைச் சோலையில் காத்திருந்தேன் விழிகளில் காளான் முளைக்க இமைகளோ இமைக்கவில்லை எழில் முகம் என்று காண்பேன் எண்ணமோ வானில் பறக்க நாழிகைப் பொழுதாய் நானும் நாணத்தை மறந்திருந்தேன் இழிகுணம் கொண்ட மாந்தர் இகழுதல் கூடுமென்றா ஆழியென் கரத்திலிட்டு அதனையே பார்த்திரென்றாய். ஷகவிதையில் தேன் பருகும் அற்புதக் காதல் விளக்கே ! என் சிறு எண்ணக்கருவை ஏட்டினில் கொட்டிவிட்டேன் கவிதையில் குறையிருப்பின் சிந்தையில் கொள்ள வேண்டாம் ஆயிரம்.திரையிட்டாலும் அன்பெனும் அம்பு துளைக்கும் சொல்லவோ பல உண்டெனினும் சொல்லிட சொற்கள் போதா சொல்லியே முடித்த போதும் சொன்னதோ ஒன்றுமில்லை
இரா. சடகோபன் 104.

சொல்லிட முயலுகின்றேன் சொற்களால் என்ன முடியும் சொற்களால் சொல்லி விட்டேன் சொன்னவை புரியாவிட்டால் கண் உனைக்காணும் போது கண்களால் சொல்லுகின்றேன்
கண்களின் மொழியாலன்றோ காதலை உரைக்க முடியும்.
★ ★ ★
இலக்கியத்தின் சுவை சொல்லும் பழங்காதல் நினைவு பையவே பாவையினை பிடர் பிடித்துந்த, அவளும் சுந்தரனின் செந்தமிழை சுவைக்க மன ஆவலுடன் தென்றலிலே கொம்பின்றி தவிக்கின்ற பூங்கொடிபோல் சிலிர்க்கின்ற சிற்றிடையாள் கடற்கரைக்கு வந்தாள் காத்திருந்த சுந்தரனோ கரையுடைத்த காதற்பெருக்கால் காவியத்துக் காதலரின் காதலெல்லாம் திரட்டி வந்து இந்தா நீ பருகென்று இதழில்தன் இதழ்பதித்தான் இருவரது இதயங்களும் கனவுலகில் மிதக்க. ஒ எங்கெங்கு பார்த்தாலும் அங்கெல்லாம் இனிமை. கார்முகிலின் நடுவிலொரு களங்கமிலா மதிமிளிர கண்டுவந்த கருவண்டோ காதலினால் துவண்டுவிழ நெஞ்சமெலாம் மோகமெனும் மந்திரத்தில் நிறைந்ததுபோல் இன்பமிகு உணர்வுகளால் வான் முகட்டைத் தொட்டேன் காதலெனும் வானூர்தி காற்றினிலே மிதப்பது போல் விண்ணெல்லாம் என்னுள்ளம் களிகொண்டு துள்ள சப்தங்கள் இயக்கங்கள் சலனங்களைக் கடந்து வாத்ஸாயனர் வரைபுகளின் மரபுகளை வென்றேன் காதலினைக் காமமென்று மறைபொருளில் கண்டோர்
காணவில்லை. கண்டதெல்லாம் காணலைப்போல் பொய்யே.
வசந்தங்களும் வசீகரங்களும் 105

Page 55
அந்த ஒரு கணப்பொழுதில் அத்தனையும் மறந்தான் மாலைமதி வந்ததென அழகு முகங்கண்டான் சொற்களிலே சொல்ல வொண்ணா சித்திரம் போல் நின்றான் அலையலையாய்க் காத்திருக்கும் எதிர்ப்பினையும் மறந்தான் சொல்லிடவோர் எல்லையில்லா முத்திரைகள் தந்தான் பாவையவள் தந்து விட்ட போதையிலே மூழ்கியதால் பறப்பது போல் உணர்ந்து அவன் பகற்கனவு கண்டான் இருவேறு உள்ளங்கள் இணைந்ததனால் இன்பப் பெருக்கினையே கண்ட அவ்வின மக்கள் இருவர் இவ்வுலகில் வேறெவரும் இலரே போல் இருந்தார்.
காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்ட மோகத்திரைகள் கணப்பொழுதில் மறைய தன்னிலையடைந்த சுந்தரனும் மனிதர் பலவீனர் ஆகும் இந்த உணர்ச்சிகளை நொந்தான் உணர்ச்சிகளே மானிடர்க்கு உண்மைகளை உணர்த்துவதால் உணர்ச்சிகளும் உணர்வுகளும் உண்மையின்பால் சார்ந்திருப்பின் உணர்ச்சிகளால் எழுகின்ற வக்கிரங்கள் தோற்றுவிடும் உணர்ச்சியெனும் யாழ் நரம்பு உண்மைகளை மீட்டி விடின் இவ்வுலகின் துன்பங்கள் மலினப்பட்டு மறைந்து விடும் வாழ்வில் இன்பம் மட்டும் இருந்து விடில் சுவையில்லை
துன்பம் மட்டும் தொடர்ந்து வரின் வாழ்வில்லை.
இரா. சடகோபன் 106

G)
மைவிழியே, மான்விழியே, சேல்விழியே, தேன்மொழியே! கருவிழியைக் காட்டி என்னை உணர்விழக்கச் செய்து விட்டாய் கள்மயக்கம் ஊட்டி என்னை உணர்விழக்கச் செய்வதற்கா காதல் என்ற சொல்லால் என்னை கடற்கரைக்கு அழைத்து வந்தாய் எம்முன்னே இருப்பதுவோ எண்ணற்ற பிரச்சினைகள் எண்ணற்ற பிரச்சினையில் காதல் ஒரு பிரச்சினையா என நோக்கி வினவுங்கால். காதல் ஒரு பிரச்சினைதான் என எடுத்துக் கொண்டாலும் கனன்றெறியும் பிரச்சினைகள் எத்தனையோ பலவுண்டு என்றெமது தலைவர்களின் வழிகாட்டல் தவறியதோ அன்றே நம்வாழ்வின் வசந்தங்கள் மறைந்துவிட போராட்ட வக்கிரங்கள் ஆர்ப்பரித்தல் தொடங்கின மனிதரது மனநிலைகள் கீழ்நிலைக்கு வழிகாட்ட இன்று நாம் சீரழிவின் உச்சநிலை வந்து விட்டோம் மனிதர்கள் வாழுகின்ற சூழ்நிலையே இங்கில்லை மனிதரது மனநிலைகள் மகிழ்ச்சியின்றித் தவிப்பதனால் மாற்றாரின் உரிமைகளில் மண்போட வந்து விட்டார்
வசந்தங்களும் வசீகரங்களும் 107

Page 56
மனநிலைகள் மாறும்வரை பொறுத்திருத்தல் முடியாது உணர்ச்சிகளின் போராட்ட எல்லைவரை வந்து விட்டோம்.
பசி, பசி, பசியென்று பசித்தோர்க்கு உணவில்லை மொழி, மொழி, மொழியென்று மொழிக்காகக் கூவுகின்றார் பசித்தோர்க்கு உணவிருப்பின், மொழியொன்றும், பொருட்டல்ல பொருளாதார) ளமைப்பில் சீரிருப்பின் மொழிவளரத் தடையுமில்லை மொழிக்காக உயிர் துறப்பேன்’ என்றுரைத்தல் மான மெனில் மானமென்றால் என்னவென்று நன்றுரைக்க வான்புகழ்கொண்ட அந்த வள்ளுவனும் தவறிவிட்டான் தமிழ் மொழிக்கு மட்டுமல்ல ஜகத்தினை வென்றிடும் அவ்வாங்கில மொழியெனினும் இதனையே கூறுகின்றேன் இன்றெமக்கு மொழியல்ல வாழ் வொன்றே வேண்டுகின்றேன். வான்மதியே உன்னுள்ளம் நானறிவேன் யாம் கண்ட கனவுகளும் உயர்வான எண்ணங்களும் இச் சீர்கெட்ட சமுதாயம் ஒரு சிறிதும் உணராது நாளை ஒரு நாளுணரும் போதினிலே நாமிருக்கப் போவதில்லை எம் போன்ற எத்தனையோ இதயத்தார் இங்கிருப்பார் அத்தனை பேர் கருத்துக்கும் எம் கனவுகளை சமர்ப்பித்து எதிர்காலம் என்று ஒரு நாள் இவர்க்கிருப்பின், அதற்காக அணிதிரண்டு வருவோரின் வரிசையிலே முன்னிற் போம் மேற்கே வளரு மந்த மேன்மைக் கலைகளுக்காய் மேற்குத் திசை நோக்கி எம் அணியினையும் சீரமைப்போம்.
★ ★ ★
சிலையெனச் சமைந்திருந்த சுந்தரி சொல்லலுற்றாள். இத்தனைபேர் மத்தியிலும் தனிமையை நான் உணர்கின்றேன் எத்தனை உயர்வாழ்வு வாழ நான் நினைத்திருந்தேன் வசந்தங்கள் வாழ்த்த, உன்மார்பினில் சாய்ந்து, நித்தம். சுகந்தத்தின் இன்பவிருந்தை சுவைத்திட வேண்டுமென்று.
இரா. சடகோபன் 108

ஒ. பகல் நேரப்போதுகளின் கனவுக் குமிழ்கள். மழைமேகக் கருக்கலின் கடைசித் தூறல்கள். காலையிளம் பருதியின் முன் புல்நுனி நீர் வெண் பனித்துகள்கள். புற்றீசல் குஞ்சுகளின் மணி நேரக் குழாவல்கள்.
ஆழ்கடல் ஒரத்தில் அருமையாய்க் கிடைக்கின்ற உவர் நீர்மத்தியிலே நன்னீர்த் திவலைகள் போல் என் துணை வாழ்க்கைக்கு நின்றனை மனதில் கொண்டேன் ஹிட்லரின் குணத்தைப் பெற்றோர் கையிலே தேனைத்தந்து குடித்திடல் வேண்டாமென்று கட்டளை செய்கின்றார்கள்.
வசந்தத்தின் வசீகரங்கள்
கோடையில் உணர்தல் போல சிலநாள் காதல் வாழ்வை
எம் இதயங்கள் மறந்திடாது தாஜ்மகாலின் பெருமையெல்லாம்
அதன் உருவமைப்பில் அல்ல உள்ளிருக்கும் உன்னதமாம்
மாபெரிய காவியந்தான் மனதினில் விகாரம் கொண்ட
பலவீனர் வாழும் இங்கு காதலில் வெற்றியென்றால்
கடத்தலில் மட்டும் தானோ? அவ்வகைக் காதல் கூட
அவசரக் கோலந்தானே உன்னவர்கள் என்னவர்கள்
வசந்தங்களும் வசீகரங்களும் 109

Page 57
அனைவருமே பேதைகள் தான் தம்முடனே ஆயிரமாம்
பேதைமையை உள் வைத்து தம்மினத்தின் விடுதலைக்காய்
தவியாகத் தவிக்கின்றார்கள்.
நாமிருவர் இணைவதற்கே எத்தகைய சிக்கல்கள் சிக்கல்களே போராட்ட சிந்தனைக்கு முதல் படிகள் தம்முள்ளே உணர்ச்சிகளை தணித்தற்காய் போராடி போராட்ட சாகரத்தில் புரையோடிப் புண் கண்டோர் பொறுத்திருந்து பொறுத்திருந்து புண்ணழுகிப் போய் விட்டார். புதியதொரு சமுதாயம் படைத்தற்கு இதுவன்றி பூமியிலே வேறெதுவும் காலநிலை தோன்றாது போராட்ட சாகரத்தில் புரையோடிப் புண்கண்டோர் புண்கண்ட காரணத்தின் தாற்பரியம் புரிந்து கொண்டு புதிய தோர் வரைபுதனை தமதாக்கிக் கொண்டு விட்டார்.
★ ★ ★
மன்னவ நின் மனக்கருத்தை மதிக்கின்றேன் மேற்கே வளருகின்ற மகோன்னத சமுதாயத்தின்
இரா. சடகோபன் 110

மேன்மைக் கலைகளை நாம் வியக்கின்றோம அவர்வியக்க நாமிங்கு அரிசியைத்தான் தின்கின்றோம் அவர்வியக்கும் சாதனைகள் நாமிங்கு புரிவதெனில் அணிதிரளும் புது வணியை வாகை சூடும் பேரணியாய் அதிவிரைவில் ஆக்கிடுதல் அவசியமும் ஆகையினால் எமக்கிருக்கும் பிரச்சினைகள் போராட்ட அவசியங்கள் புனரமைக்கும் சாதனங்கள் அனைத்தையும் முன்வைத்து அணிதிரளும் புதுவனியை அணிசெய்யச் சென்றிடுவோம்
அக்கினியின் கர்ப்பத்தில் விளைந்த இரு முத்துக்கள் ஆத்மாவில் ஒன்றிக் களிப்புடனே நீண்டநாள் வேள்வியினை முடித்தற்காய் சமுதாயக் கொந்தளிப்பில் அள்ளுண்டு அதற்காகத் தம் வாழ்வை அர்ப்பணித்து காட்டாற்று வெள்ளம் போல் கரை புரளும் குருதிப் புனல்களிலே நீராட ஒடக்கரைதனிலே நிற்கின்றன.
ஒவசந்தமே ! உன் வசீகரங்களைக் காட்டி என்னைக் கவர நினைத்தாய். அதனை உன்னுடனே வைத்துக்கொள் ஒருநாள் திரும்பி வந்தால் உன் புன்னகையின் நடை நயத்தை மறக்காமல் ரசிக்கின்றேன்.
டிசம்பர், 1987
வசந்தங்களும் வசீகரங்களும் 111

Page 58
இந்த அஸ்தமனம்
நாளைய விடியலுக்கான ஆரம்பம்
இரா. சடகோபன் 112
 


Page 59
மானுடத்துவம் என்ற கோட்பாட்டுக்கு முன்பு வர்க்கம் இனமொழி பேதங்களால் நா கிழிக்கப்பட்டு அல்லலுறு அனைவருக்கும் மத்தியில், சமூக அனைத்தையும் ஒழித்துக் வேண்டும் என்ற சீற்றத்துடன் இளைஞர் வரிசையில் முன்செல்ட அன்று அந்த இளைஞனைக் கண் இரண்டு தசாப்தங்களுக்கு மு நூலாசிரியர் இரா. சடகோபன் எனது மாணவன். அன்று கல்லூரி பல்கலைக்கழகத்திலும் தன் பொறுப்பறிந்து சாதனைகள் பல பத்திரிகையாளராகத் தன் பேனா வழிகாட்டுகிறார் என்பதில் பெரு
நாவலப்பிட்டி தெ "மொள்பவில்ல" தோட்டத்தின் தம்பதிகளின் புதல்வரான இை புவியியல் சிறப்புப்பட்டதாரியும்,
இலக்கியம் கவிதை
பத்திரிகைத்துறை என ஆழக்கால் பல விருதுகளும் கிடைத்து கலைஞருமாவார்.
Printed By: Unie Ari
 

மாபெரும் b, சாதியம், ார்நாராகக்
புறப்பட்ட
Jaargetrta:Gal டேன். அது ன்பு: இந் அப்போது யிலும், பின் * NFPGLU படைத்த அவர் இன்றும் தடம்மாறாமல் வால் ஆயிரக்கணக்கான இளைஞர்க்கு மையடைகிறேன்.
TGMTGino Luntenguildio அமைந்துள்ள இராமையா - அடைக்கம்மாள் பர் கொழும்பு பல்கலைக்கழகத்தின்
சட்டத்தரணியுமாவார்.
நாடகம், விமர்சனம், சிறுகதை
பதித்த இவருக்கு அவ்வவ்துறைகளில் 1ள்ளதுடன் இவர் ஒரு ஓவியக்
எஸ்.வி.ஆறுமுகம், எம்.ஏ நாவலப்பிட்டி கதிரேசன்குமிார மகாவித்தியாய ஒய்வுபெற்ற அதிபர்)
ISBN 955-96629-0-2
swt) Ltd., Colombo - 13,