கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம்

Page 1


Page 2

(சிறுகதைத் தொகுதி)
கோகிவா மகேந்திரன்
6heນefuff@
க்களம்
கலை இலக்கியக்
தெல்லிப்பழை.

Page 3
VAUVU ORU VRULRIPPANTHRIDDAM. (R Collection of Short Stories)
BŲ
KOHILA MAHeNDRAN
Publishers & Copyright
Lyceum of literary & Resthetic Studies - Tellippalai.
DAT6 OF PUBLICATION 17th Julա 1997.
PRINTERS Sevuanthi (Pvt) Ltd, 130, Sri Gumananda MonuUatha, Colombo - 3. T.P : 337782.
PAGES : 44
PRC6 : ise/.

மாதா - திருமதி. சி. செல்லமுத்த பிதா - திரு. செ. சிவசுப்பிரமணியம் (முன்னைநாள் அதிபர், தெல்லிப்பழை சைவப்பிரகாச வித்தியாசாலை) குரு - மகாஜனாவின் சிற்பி, அமரர் தெ.து. ஜெயரத்தினம்
ஆகிய
மூன்று தெய்வங்களுக்கு
இந்நால்
FLDfIL600TLD
ịiị

Page 4
_്B.
பிறழும் நெறிகள்.
மரணிப்பிலும் உயிர்க்கும்.
ஒவி.
சமுதாயம் ஒரு சறுக்குப்பாறை. 4. வாழ்வும் ஒரு வலைப்பந்தாட்டம். S4
மனிதம் மதலைகளிடம் மட்கம். 7.
ஆழ்ந்த அனுதாபங்கள். ES
GTfupsb............. SG
விலை. 7
மனதையே கழுவி.
சர்ப்பமரணம்.

வாழ்த்து
றிேவினைத் தேடும் ஆர்வம், ஆராய்ச்சி, முயற்சி, ஊக்கம், பெறுமதி மிக்க பேச்சைஎழுத்தினைப் பேணும் பண்பு, சுறுசுறுப் பாகச் சுற்றிச் சுழன்றுபல் பணிசெய் தாலும் சிறுமைகள் கண்டால் பொங்கிச் சிலிர்த்தெழுதலும்நீ செய்வாய்!
விண்ணத்தில் உயர்வு, பேச்சில் இனிமை, செய் பணியில் தாய்மை, உண்மை என் பனகைக் கொண்டே ஓங்குக, உயர்க! உன்கைவண்ணத்தில் எமது பிள்ளைச் செல்வங்கள் வளர, அந்த விண்ணைஇம் மண்ணிற் காண வேண்டும்நீ - ஈதென் ஆசை!

Page 5
'ஏரகம், பொற்பதி வீதி, கொக்குவில்.
பண்ணை, எழுத்தை, நாடகத்தைப் பாலித்திடுமோர் அதிபரென்றும் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, உறையுள் இழந்த மாணவர்கள் எண்ணற் றோரைக் கைதாக்க ஏற்ற பணிகள் மேற்கொள்ளும் பெண்இக் கோகிலா வென்றும்
பேசக் கேட்க வேண்டுமடி!
நானம் படைத்தோர் கல்வியினை நடத்தம் காலம் நமக்குற்ற ஊனம் ஒழியும்; தமிழரினம் உயரும் பகைஉட் பூசலெலாம் போன வழியும் தெரியாமல் போம்; நம் கலையும் பண்பாடும் ஆன நிமிரும்; எண்கண்ணுள்
அந்தக் காலம் தெரிகிறது!
சோ. பத்மநாதன்
அதிபர், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி திருநெல்வேலி.
vi

'கோகிலா மகேந்திரனுக்கு அறிமுகம் அவசியமில்லை. ஆசிரியர், அதிபர் என்ற பணிநிலைச் செயற்பாடுகளுக்கு மேலாக எழுத் தாளர், கலைத் திறனாய்வாளர், நாடகக் கலைஞர், சமூகச்சிந்தனை யாளர் முதலிய பன்முகப் பரிமாணங் களை எய்தியவர் அவர்."
பேராசிரியர் கலாநிதி. நா. சுப்பிரமணியன். தலைவர், தமிழ்த்துறை, யாழ். பல்கலைக் கழகம். 2001.97
"Kohila Mahendran is one of the three authors Who have been Studied in a dessertation Submitted recently to University of Jaffna for the degree of Master of Philosophy."
Professor A. Sanmugadas. Dean Faculty of Arts, University of Jaffna. 30-04-97.
vii

Page 6
திருமதி கோகிலா மகேந்திரன் அவர்கள் ஒரு ஆசிரியை என்ற வகையிலும் நாடகத்துறையில் ஈடுபாடு கொண்டவர் என்ற வகையிலும் கல்வி கலை இலக்கியம் எனப்படும் முத் தறைகளிலும் பண் பாட்டுப் பங் களிப்புச் செய்து வருபவராகிறார்.
கோகிலா மகேந்திரனைக் கடந்த ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக அவர் செல்வி கோகிலா சிவசுப்பிரமணியம் ஆகத் திகழ்ந்த காலத்திலிருந்து அவதானித்து வந்துள்ளேன்.
சமூகப் பிரச்சினைகளைப் பகுப் பாய்வுசெய்து நோக்கும் இவர் தமக்கே யுரியவகையில் அவற்றுக்கான தீர்வு களையும் உணர்த்தி விடுகிறார்.
பேராசிரியர்
சு. வித்தியானந்தன் 8. 5. '86
Viii

பிறழும் நெறிகள்
அவர்கள் அவனைப் பார்த்த பார்வைகள் இன்னும் அவனது உடம்பில் ஈக்களாயும் எறும்புகளாயும் மொய்த்துக் கிடந்தன.
அப்படி என்னதான் விசித்திரமாய்ப் பார்க்கிறார்கள்? அவனத வகுப்பிலே நீதரனைப் 'பிரின்சிப்பலு’க்குத் தெரியும். அவன் ஒவ்வொரு தவணையும் எப்படியோ முதலாம் பிள்ளையாக வந்த விடுகிறான். இவ்வளவு பாடங்களையும் வரி தவறாமல் நினைவில் வைத்துக் கொள்கிறான். தவணை முடிவில் நடக்கும் அசெம்பிளியில் மேடையில் ஏறிப் பிரிண்சிப்பலிடம் றிப்போர்ட்” வாங்குகிறான். எல்லோரும் கை தட்டுவார்கள். இவன் மட்டும் தட்ட மாட்டான்.
"சரியான சப்பல் கட்டை அவனை என்ன பாராட்டுறது?"
சிலவேளைகளில் இவனும் அவனும் ஒன்றாக நடந்து செல்லும் போது, 'பிரின்சிப்பல் நீதரனைப் பார்த்துச் சிரிக்கிறார். அவனது முதகிலே தட்டி,
"இப்ப என்ன பாடம் தம்பி?" என்று கேட்கிறார். மற்றவன் கோபி! அவனையும் 'பிரிண்சிப்பலுக்கு நல்ல நினைவு. அவன் அதிகமாக விளையாட்டுப் போட்டிகளில், அவர்களத பிரிவில் ‘சாம்பியனாக வந்து விடுகிறானே!

Page 7
கோகிலா மகேந்திரன் 2
வெளியே தருத்திக் கொண்டிருக்கும் பற்களுடன், அவன் எவ்வளவு வேகமாக ஓடுகிறான்?
சிறுத்தை ஓட்டம்!
இவன் பல தடவை கோபியுடன் ஒடிப் பார்த்திருக்கிறான். அவனைப் பிடிக்க முடிவதென்ன? கிட்டவே போக முடியவில்லை!
சும்மா பாய்ந்து பாய்ந்து ஓடுவான்!
சென்ற வருடம் உயரம் பாய்தலில் ஒரு புதிய சாதனையை நிலைநாட்டினானாம். அடுத்த நாள்.அதற்கடுத்த நாள். எல்லாரும் வகுப்பில் அவனது புகழையே பாடிக் கொண்டிருந்தார்கள்.
"கோபி என்ன மாதிரிப் பாய்ந்தான். என்ன மச்சான்?"
"டேய். அவன் கடைசியா இரண்டு தரம் தட்டிப் போட்டான். பிறகு, குளுக்கோசையும் போட்டிட்டுப் போய். அப்பிடியே சர்க்கஸ்காரன் மாதிரியெல்லோ பாய்ந்தான்.?"
"நீ ஐஞ்சு மணி வரையும் நிண்டு பாத்தனியோ?”
"ஒமடா. றெக்கோட் எண்ட உடனை நாங்கள் உவனைத் தாக்கிக் கொண்டு திரிஞ்சு. பெரிய முசுப்பாத்தியடா..."
"டேய். இவன் றெக்கோட்' உடைச்சிட்டான் எண்ட உடனை பாரதி இல்லத்தாக்களுக்குச் சரியான எரிச்சல் வந்திட்டு 5L-IT...."

பிறழும் நெறிகள் 3
இவனுக்கு ஏற்பட்ட உணர்வுகளுக்கு உதாரணிக்க ஒன்றுமில்லை.
"பெரிய கெட்டித்தனம் மதில் பாயிற மாதிரிப் பாயிறது." இவனை ஒருவருக்கும் தெரியவில்லை. பிரின்சிப்பல் ஒருநாளும் இவனோடு கதைக்கவில்லை. இவனது கண்களில் தீவிரம் எரிந்தது!
கண்ணன் கூடப் படிப்பிலே மொக்குத் தான். சரியான தாங்காளி வகுப்பில் என்ன பாடம் நடந்தாலும் நித்திரையாகிப் போவான். ஆனால் அவனையும் எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. அன்றொரு நாள், இவனும் கண்ணனும் விளையாடிக் கொண்டிருக்கும் போது, 'வைஸ் பிரிண்சிப்பல் கண்ணனைக் கூப்பிட்டு,
"கண்ணன் இஞ்சை வாரும், கன்ரீனுக்குப் போய் ஒரு ரீ வாங்கிக் கொண்டு வாlரா?" என்று கேட்டு இரண்டு ரூபாத்தாளைக் கொடுக்கிறார்.
இவனை அப்படி ஒரு வேலை செய்விப்பதற்குக் கூட ஒரு ஆசிரியர்களும் கூப்பிடுகிறார்களில்லை.
கண்ணன் அதிகமாகக் காலையில் தேவாரம் படிப்பான். வெள்ளிக்கிழமைகளில் சிவபுராணம் சொல்லிக் கொடுப்பான். ஆனால் இவனுக்குப் பாடவராதது.
"வாய் திறந்தால் கழுதை கத்தினது போல் இருக்கு." என்று சமயபாட ஆசிரியர் ஒரு நாள் கூற, எல்லாரும் விழுந்த விழுந்த சிரிக்கிறார்கள்.

Page 8
கோகிலா மகேந்திரன் 4.
"சிரிச்சால் எல்லாருக்கும் என்ன பெரிய குயில் போலை (Ö |1(ზ6ზ?”
நுணுக்கங்கள் நிறைந்த மனம், நுணுக்கங்கள் நிறைந்த தண்பத்தை இவனுக்கு நீண்ட காலமாகவே கொடுத்தக் கொண்டிருந்தத.
சரி பரவாயில்லை. இப்போது மீனா "பிரின்சிப்பலிடம்" போயிருக்கிறாள். இன்னும் சிறிது நேரத்தில் ‘பிரின்சிப்பல் இவனைக் கூப்பிடுவார்.
இனிமேல் அவனை எல்லோருக்கும் நிச்சயமாயும் நிஜமாயும் தெரிந்தவிடும். பிரின்சிப்பலுக்கும், ஆசிரியர்கள் எல்லாருக்கும், ஏனைய வகுப்பு மாணவர்களுக்குந் தான்.
ஆனால். !
இவர்கள் எல்லாம் என்ன அப்படி விசித்திரமாய்ப் பார்க்கிறார்கள்?
அவனது அடி வயிற்றில் இருந்த, வேகமாக ஏதோ ஒன்று உச்சியை நோக்கி எழுந்து செல்கிறது.
மீனா ஏன் கிளாஸ் ரீச்சரிட்டைப் போய்ச் சொல்லேல்லை ? அவ புது ரீச்சர் ஒருத்தருக்கும் அடிக்க மாட்டா. எல்லாரோடையும் அன்பாத்தான் கதைப்பா. அவட்டைச் சொன்னா. எனக்கு அடி விழுறது ஐமிச்சம் எண்டுதான் பிரின்சிப்பலிட்டைப் போய் இருக்கிறாள். போகட்டும் ! பிரின்சிப்பலிண்ரை அடிக்கு நான் என்ன பயமே?

பிறழும் நெறிகள் 5
அவன் தனக்குள் கறுவிக் கொண்டான் ஒருத்தியால் இவ்வளவுதான் இளைக்க முடியும் இவ்வளவுதான் கறக்க முடியும் என்பது போல் இருப்பாள் மீனா. வீட்டிலே வறுமை, ஆனாலும் படிப்பிலே. சூரி.
அவன் எதிர்பார்த்த படியே, "பியோன் வகுப்புக்கு வந்த அவனை அழைத்தான்.
"வசந்தனைப் 'பிரின்சிப்பல்' வரட்டாம்!"
"அப்பாடி! இண்டைக்காவது பிரின்சிப்பல் எண்ரை பேரைச் சொல்லிப் போட்டார் "
அவனது மனதின் மூலை யொன்றில், லேசான பயம் தோன்றியிருந்தாலும் பெருமளவு திருப்தியே உள்ளுர வியாபித்திருந்தத.
இனி யெண்டாலும். வசந்தன் எண்டால் ஆரெண்டு பிரின்சிப்பலுக்குத் தெரியும்.'
அவன் தயங்காமல். ஒரு மகாவீரன் போலப் 'பியோனாக்குப் பின்னால் நடந்தான். என்ன பயம்?
வாழ்க்கையின் தயரங்கள் அவனத முகத்திற்கும் வந்திருந்ததைப் பிரின்சிப்பல் கவனித்ததாகத் தெரியவில்லை.
இந்த விசாரணையை மிக விரைவாக நடத்தி முடித்துத் தண்டனையையும் வழங்கி விட்டால், தான் அடுத்த அலுவலைப் பார்க்கலாம் என்பதிலேயே அதிபர் குறியாக இருந்தார்.

Page 9
கோகிலா மகேந்திரன் 6
"வசந்தன். கெதியா வாடா உன்னை." குரலில் கசப்பும், அவசரமும், அலட்சியமும் ததம்பி நின்றன. உதட்டோரம் ஏளனம் சுழித்த நின்றது.
அவன் போய் அவருக்கு முன்னால் நின்றான். மறுபக்கத்தில் மீனா நிற்பதை, இரத்தம் ஒழுக நிற்பதை அவன் கடைக்கண்ணால் பார்த்து விட்டுப் பின்னர் கீழே நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
பிடிவாதத்தை உணர்த்தும் அவனது மெல்லிய உதடுகளைக் கவனிக்காமலே அவர் கேட்டார்.
"யார் இந்தப் பிள்ளைக்குப் பிளேட்டாலை வெட்டினத?"
"எனக்குத் தெரியாத சேர். நான் காணேல்லை,” ஏன் உடனே உண்மை சொல்ல வேண்டும்? இவர் கொஞ்ச நேரம் செலவழித்து விசாரிக்கட்டுமே!
"என்ன.. ? உனக்குத் தெரியாதோ? நீ தான் வெட்டினத எண்டு அந்தப் பிள்ளை சொல்லுத."
"அவ சொல்லுறது கட்டாயம் உண்மை எண்டால். பிறகு ஏன் என்னைக் கேட்டனிங்கள்?"
அவர் திரும்பி மீனாவைப் பார்த்தார்.
"இவன் தான் சேர்! பரிமளா, கலா, பானு. எல்லாரும்
கண்டவை. நீங்கள் வேணுமெண்டால் அவையையும் கூப்பிட்டுக் கேளுங்கோ சேர்."

பிறழும் நெறிகள் 7
பரிமளா வந்தாள். கோணலான உதடுகளுடன்! "இவன் எப்பவும் பின்னாலை இருந்து மீனாவோடை சேட்டை விடுறவன் சேர். பின்னலைப் பிடிச்சு இழுப்பான். பட்டம் சொல்லுவான். யூனி ஃபோமுக்கு மை தெளிப்பாண். இண்டைக்கும் முதல் யூனிஃபோமிலை வால் கட்டித் தொங்க விட்டவன். இவள் திரும்பி 'என்ன..? நீ விட விட ஆகலும் சேட்டை விடுறாய், தெரியுமோ என்னைப் பற்றி. என்று வெருட்டினாள். இவன் உடனை தன்ரை கொம்பாஸ்க்குள்ளை கிடந்த பிளேட்டை எடுத்த அவளின்ரை கையைச் சதக்' எண்டு வெட்டிப் போட்டான்."
பானு வந்து சொன்னாள்,
"நானும் கண்டனாண் சேர். நான்தான் பிறகு என்ரை லேஞ்சியாலை இவளின்ரை கையைக் கட்டி விட்டனான்."
அதிபர் இதன் பின் தாமதிக்கவில்லை!
"பத்தாம் வகுப்புக்கு வந்திட்டாய்! பொம்பிளைப் பிள்ளைய ளோடை என்ன சேட்டையடா உனக்கு? ம். இதை விட்டா நீ நாளைக்கு வாளும் கொணந்து வெட்டுவாய். என்ன.?"
தனது 'ஸ்பெஷல்' பிரம்பால் காலிலும், கையிலும், முதசிலும் மாறி. மாறி.
இவன் நெளிந்தான். வளைந்தான். ஆனால் அழவில்லை வாயிலிருந்து ஒரு சத்தமுமே வரவில்லை. ஒவ்வொரு முறையும் அவர் பிரம்பை ஓங்கும் போது, அதைத் தடுக்கும் முயற்சியாய்க் கையால் மறித்தவன் நாலு அடிகள் விழுந்தவுடன் எட்டித் தொங்கிப் பிரம்பைப் பறித்துக் கொண்டான்.
அதிபர் விக்கித்துத் தான் போனார்! இப்படி ஒரு மாணவனை அவர் தமது இருபத்தைந்து வருட ஆசிரிய வாழ்வில் சந்தித்தாரில்லை.

Page 10
கோகிலா மகேந்திரன் 8
"நான் இவனைக் கவனிக்கிறன். நீர் ஒரு பிறிவ்வேக்ற் ஓடை போய்க் காயத்திற்கு டிஸ்பென்சரியிலை மருந்து கட்டிக் கொண்டு வாரும்." என்று கூறி மீனாவையும் அவளத சிநேகிதிகளையும் வெளியே அனுப்பிய அதிபர் வசந்தனின் வகுப்பாசிரியை திருமதி கேதீஸ்வரனைக் கூப்பிட்டனுப்பினார்.
அவர்கள் இருவரும் ஆங்கிலத்தில் உரையாடியதில் அவனுக்கு அதிகமாய் ஒன்றும் புரியவில்லை.
"ஜூவினைல் டெலிங்குவன்ட். எண்றொரு சொல் அடிக்கடி கேட்டத.
அவன் பறித்துக் கொண்ட பிரம்புடன் வெளியேறித் தைரியமாய் நடந்த வகுப்பறைக்கு வந்தான்.
"லெஃப்ற். றைற். லெஃப்ற்.ஜூவினைல் டெலிங்குவன்ற். லெஃப்ற். லெஃப்ற்.”
அதிபரின் பிரம்புடன் கம்பீரமாய் நடந்து அவன் வகுப்பறைக்குள் வருவதைப் பார்த்தது. அவனை ஒரு "ஹீரோ. போல நினைத்து. அந்தப் பார்வையின் அர்த்தங்கள் பற்றி அவனுக்குத் தப்பரவாக அக்கறையில்லை.
'றிதரனைப் பாக்கிறியள். கோபியைப் பற்றிக் கதைக்கிறியள் கண்ணனை ரசிக்கிறியள். இண்டைக்கு ஒருக்கா என்னையும்
எல்லாரும்.
ஆங்கில ஆசிரியர் வகுப்பறைக்கு வந்தார்.

பிறழும் நெறிகள் 9
"சேர். ஜூவினைல் டெலிங்குவன்ற் எண்டால் என்ன கருத்த" அவன் திடீரென எழுந்து நின்று கேட்டபோது, அவருக்குத் தலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை.
"ஏன் கேக்கிறீர்? "ஜூவினைல் டெலிங்குவன்ற் எண்டால் பால்யக் குற்றவாளி எண்டு கருத்து."
ஒ. சும்மா கேட்டனான்.
அச்சுவேலிக்குப் போகும் வழியில் வருகிற பால்யக் குற்றவாளிகள் பாடசாலை அவன் நினைவுக்கு வந்தது. அங்கே தான் இவனையும் அனுப்பப் போகிறார்களோ?
அனுப்பட்டும்.
மாலையில் கல்லூரி விட்டதும், பிரம்பை நாலு தண்டாக முறித்த எறிந்து விட்டு வீடு நோக்கி நடந்தான். வழியில் வாசிகசாலையில் நின்று 'பந்தடி' பார்க்கலாம். ஆனால் அப்பா மணிக்கூட்டை முன்னால் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார். மூன்று நாற்பதுக்கு அவன் வீடு போய்ச் சேராவிடில், "எங்கை நிண்டிட்டு வாறாயடா ?” என்ற அவரது குறுக்கு விசாரணையில் இருந்த தப்பவே முடியாதது.
அவனைப் பொறுத்த வரை வீடு ஒரு சிறைக் கூடம். அங்கிருந்து எங்கேயும் போக முடியாது. அவன் அங்கு வாழும் ஒரு மரக் கட்டை!
அந்த நாலு சுவர்களுக்குள்ளிருந்து அவன் எப்போதம் படிக்க வேண்டும். எதைத்தான் படித்தத் தொலைப்பது? மரக்கட்டை எப்படிப் படிக்கும் ?

Page 11
கோகிலா மகேந்திரன் O
ஒரு நாள் ராணிமுத்து வாசித்ததை அப்பா கண்டு விட்டார். மரக்கட்டைக்கும் கூட வலிக்கக் கூடிய தண்டனை கிடைத்தத. அவனத உலர்ந்த மனம் அன்றிலிருந்த மேலும் உலர்ந்து போனத. அதன்பின் அவனது அறைக்கு ஒவ்வொரு நாளும் "செக்கிங்' நடக்கும். பாடப் புத்தகம் தவிர, வேறெதவும் வைத்திருந்தால். கழுகுக் கண்கள். அவர் எப்படியும் கண்டு பிடித்த விடுவார்.
"அவனுக்கு வயத வந்திட்டுத. இனிக் கண்டிப்பாய் இருக்க வேணும் அவனோட. yy
"இந்த வயதிலை படிக்காட்டிப் பிறகு கஷ்டப்படுவான் நல்லா."
"இந்த வயதிலை கண்ட பெடியளோடை ஊர் சுத்த விடப்பிடாது."
"சினிமாப் பைத்தியம் இப்ப தொடங்கினா. பிறகு ஒண்டும் மிச்சமில்லை."
"இந்த நாளையிலை, கதைப்புத்தகம் வாசிச்சு ருசி கண்டானெண்டால் பிறகு நிப்பாட்ட ஏலாதது."
"சந்திக்குச் சந்தி நிண்டு கதைக்கிற பழக்கம் இப்பத்தைப் பெடியளுக்கு. அதுக்கு இவனை விடப்பிடாத."
இந்த வசனங்களை அடிக்கடி அப்பா சொல்லும்போத கேட்க இவனுக்கு ‘விசர் வரும். சம்மட்டியால் யாரோ ஓங்கி அடித்தத போன்ற வேதனை நெஞ்சைக் கவ்வும். ஆனாலும்

பிறழும் நெறிகள் 11
ஒன்றும் எதிர்த்தக் கதைக்க முடியாத, ஒரு நாள் ஒரு வார்த்தை திரும்பிச் சொல்லி விட்டதற்கு அப்பா பூட்ஸ்' காலால் போட்டு உதை உதையென்று உதைத்து விட்டது சீவியத்தில் அவனால் மறக்க முடியாத,
அப்பா "பொலிசாக இருந்து றிரையர்' பண்ணியவர் என்பதற்கு இந்த உதை' தவிர வேறு சாட்சி தேவையில்லை.
அம்மா ஒரு சடம்: வாழ்க்கையைப் பெரும் சுமையாகச் சுமப்பத போன்ற மெளனம். அப்பா எத செய்தாலும் அத சரியாகத்தான் இருக்கு மென்ற எண்ணமுந்தான். அம்மா கதைப்பது மிக அருமை! ஏன் அவனுந்தான்.
வீட்டிற்குப் போய்ச் சேர்ந்த நீண்ட நேரமாய் அவனுக்கு மனதில் ஓர் உறுத்தல் கலந்த மகிழ்வு இருந்து கொண்டேயிருந்தத.
அவனத பிரத்தியேக உலகங்கள் யாவும் நொருங்கிவிட வழக்கம் போலவே. அறையில் அடைபட்டுக் கிடந்த போது.
வெளியே பேச்சுக் குரல்!
யார் இது? கேதீஸ்வரன் ரீச்சர்!
'அம்மாடி. இவ ஏன் இஞ்சை வந்தவ இப்ப? வேறை என்னத்தக்கு. நான் பிளேட்டாலை வெட்டினதை அப்பாவுக்குச்
சொல்ல. பிரம்பு பறிச்சதை.
அவன் இன்றுடன் தொலைந்தான்!

Page 12
கோகிலா மகேந்திரன் 12
உறுத்தல் கலந்த மகிழ்வு இப்போது வேதனை கலந்த நடுக்கமாகி விட்டத.தரை பிளந்துவிடத் தலைகுப்புற விழுவத போன்ற உணர்வு வீட்டை விட்டு ஓடி விடலாமா? அவன் விரித்திருந்த பக்கத்தை முடிவிட்டு மெதுவாக எழுந்தான். பூனையைப் போலப் பதங்கி வெளியே வருவதற்கும், ரீச்சர் கூப்பிடுவதற்கும் சரியாக இருந்தத.
"வசந்தன். வசந்தன்! எங்கை தான் உம்மடை வீட்டை வந்திருக்கிறன். உம்மைக் காணேல்லை."
"என்ரை குழப்படியை அப்பாட்டைச் சொல்ல வந்தவ ஏன் இவ்வளவு அன்பா என்னைக் கூப்பிட வேணும்? அப்பாட்டைச் சொல்லிப் போட்டுப் போறது தானே'
விலகிப் போக முடியாமல் அவன் முன்னால் வந்த நின்றான்.
"எப்பிடி. வசந்தன் பள்ளிக் கூடத்திலை குழப்படியோ? ஒழுங்காய்ப் படிக்கிறானோ?”
அப்பா கேட்க, இவனுக்குக் குருதி யெல்லாம் உறைந்து விட்ட உணர்வு!
"ஒ. அவன் படிக்கிறான். இப்ப முந்தியை விடப் படிப்பிலை கவனம். வீட்டிலை என்ன செய்யிறானெண்டு அறியத்தான் வந்தனான்."
இதென்ன? அவன் காண்பது கனவா? அன்றி நனவா? "வீட்டிலை அவன் ஒரு குழப்படியும் செய்யேலாது. நான் வலு ஸ்ரிக்ற் அவன் 'ஸ்கூலா'லை வந்தால் உந்த அறையை விட்டு எங்கையும் போக ஏலாத, படிக்கத்தான் வேணும்."

பிறழும் நெறிகள் 13.
"ஒ. அப்பிடித்தான் நானும் எதிர்பார்த்தன், நான் எதிர்பார்த்தது சரி நீங்கள் கண்டிப்பாய் இருந்தாலும் அவன்ரை அம்மா அன்பா இருப்பாவெண்டு நினைக்கிறன்."
“சீ. சீ. அன்பெண்ட கதையே இல்லை. சும்மா செல்லம் கொட்டிப் பிள்ளையளைப் பழுதாக்கப்பிடாது பாருங்கோ. நான் அவட்டையும் சொல்லியிருக்கிறன். தேவையில்லாமல் அவனோடை கதைக்கப்பிடாதெண்டு. அவ என்ரை சொல்லை மீற மாட்டா. அப்பா பெரிதாகச் சிரித்தத் தன் வெற்றியை நிலைநாட்டிக் கொள்கிறார்.
"நான் உங்களோடை பிறகு ஒரு நாளைக்கு வந்த ஆறுதலாக் கதைக்கிறன்."
ரீச்சர் போய்விட்டா.
போகும்போது இவனைப் பார்த்து ஒரு சிரிப்பு!
வாழ்வுக்கும் இவனுக்கும் என்ன பகைமை என்று அறியத் தான் வந்தாவோ?
இரவும் இதே சிந்தனை தான்! கனவிலும் . இவன் மீனாவைப் பிடித்து அவள் முகமெல்லாம் கீறிச் சட்டையைக் கிழித்தப் போடுகிறான்.
கனவு கலைந்த பின் ஓர் உணர்வு அவளை நாளைக்கு அப்படித்தான் செய்ய வேண்டும் ! அவள் ஏன் 'பிரின்சிப்பலிடம் போய்ச் சொன்னவள் ? மூச்சை அடைக்கும் ஆத்திரம் இவனுக்கு
வக்கிர உணர்வுடனேயே அடுத்த நாள், பாடசாலைக்குச் சென்றான்.

Page 13
கோகிலா மகேந்திரன் 14
போய்ச் சேர முதலே "ரீச்சர் அவனைக் கூப்பிட்டா, ஏன்.? ஒரு வேளை இனித்தான் அடி. கிடி. ஏச்சு. பேச்சு..?
"தம்பி வசந்தன். டிப்போவிலை போய் ஒரு பேனை வாங்கியாரும். இந்தாரும் காசு."
இதவரை ஒருவரும் இவனைத் 'தம்பி என்று கூப்பிட்டதில்லை. ஒருவரும் அவனை நம்பிக் காசு கொடுத்தது மில்லை. V
அவன் தறதற' வென்று முழுசிக் கொண்டே அந்த வேலையைச் செய்த முடித்தான்.
முதல் 'பீரியேட் ரீச்சர் தான்! "என்ன வசந்தன் விளங்கிச்சுதா..?" "வசந்தன் கொப்பியைக் கொண்டாரும் பாப்பம்."
"வசந்தன் இண்டைக்கு வடிவான 'சேர்ட் போட்டிருக்கிறார் என்ன?”
"வசந்தன் இண்டைக்கு எல்லாக் கணக்கும் சரியாச் செய்திட்டார். கெட்டிக் காரன்."
அவனால் நம்பத்தான் முடியவில்லை! ஒரு வேளை ரீச்சர் நடிக்கிறாவோ? ரீச்சர் மனம் நிறையத்தான் பேசுகிறாரென்பதை அந்தக் கண்கள் சிரித்த உணர்த்தகின்றனவே?
மீனாவுக்குச் செய்ய நினைத்ததைச் செய்யவிடாமல் ஏதோ ஒன்று அவனைத் தடுத்த விட்டத.
அவனை அவ்வாறு சாந்த மடையச் செய்த.
(காங்கேயன் கல்விமலர் - 85)

மரணிப்பிலும் உயிர்க்கும்
அந்த இரவு . இதயப் பரப்பில் தயரக் கருமுகில் கவிந்து மூடியது!
கண் விழித்தேன்!
தக்கம் வரண்ட தயர் இரவு:
நேரம் சென்று உதித்த நிலவு முக்கால் வட்டத்திலிருந்த அழுத கொண்டிருப்பது யன்னலுாடே தெரிந்தத. கனவின் பயங்கரம் இன்னும் மனதை விட்டகலவில்லை.
அந்தச் சிவப்பு நிறக் ஹெலிகாப்டர் இன்னும் எங்கள் வீட்டைச் சுற்றிச் சுற்றிப் பறப்பதும் திடீரெனத் தாழ்ந்து குண்டு போட்டு நிமிர்வதம் போல. அத கனவுதான் என்று அமைதியடைய இதயம் அடம்பிடித்து மறுக்க, அதனுடன் அறிவு போராடிக் கொண்டிருந்தது.
எழுந்து முன் கதவைத் திறந்து வெளியே வந்தேன். கதவுகளைத் திறந்த போது, பந்தாகக் காற்று நுழைந்த எண்ணில் குளிர்ந்தது. வானத்தில் கரு முகில்கள் இடை இடை தொங்கி

Page 14
கோகிலா மகேந்திரன் 6
இருந்தன. உதிர்தலும் தளிர்தலும் காட்டும் முற்றத்த வேப்பமரம், நிலாவெளிச்சத்தில் கிளையும் இலையுமாக நிலத்தில் நிழலைப் பின்னியிருப்பதைப் பார்த்தக் கொண்டு சிறிது நின்றேன்.
தம்பி எழுந்து ‘ஆட்டுக்கொட்டில் பக்கம் சென்றான். நான் கதவு திறந்த ஓசை அவனை எழுப்பியிருக்கலாம். யார்தான் 'ஆழ்ந்த உறக்கம் கொள்ள முடிகிறது இப்போது?
வாடை பட்டு மீண்டும் உடல் குளிர்ந்தது. கனவின் நினைவு மனதில் மறையவில்லை.
'எஞ்சினியர் ஒருவர் தான் கட்டிய ஒரு வீடு இடிந்த விழுந்து விட்டது போல் கனவு கண்டார். கனவு கண்ட ஒரு மாதத்தில் அவர் மாரடைப்புக்கு ஆளானார். இன்னொருவர் தன் கால் கல் ஆகிவிட்டது போல் கனவு கண்டார். சில மாதம் கழித்து அவரது கால் பக்கவாதத்தால் செயலற்றுப் போய்விட்டது.
நோய் வெளிப்படும் முன்பே அதை ஒருவரின் நரம்புத்தொகுதி உணர்ந்து மூளைக்குத் தெரிவிக்கிறது. மூளைக்கு வரும் இந்தச் செய்தியே எமக்குக் கனவாகத் தோன்றுகிறத.
பிரபல ரஷ்ய டாக்டர் வாசிலி கசட்சின் அவர்களின் இந்தக் கருத்த மனதின் முன்னால் வந்த நின்றத.
அப்படியானால் எனக்கும் ஏதோ நோய் வரப்போவதை என் நரம்புத் தொகுதி எனக்கு அறிவிக்கிறதா? இல்லை. எமது சூழலில் நடைபெறும் நிகழ்வுகளால் மனதில் ஏற்பட்டிருக்கும் பய உணர்வே இந்தக் கனவாக வெளிப்பட்டதா?

மரணிப்பிலும் உயிர்க்கும் 17
சிந்தனையில் தெளிவு ஏற்படாமலே உள்ளே சென்று சுவர் மணிக்கூட்டில் நேரம் பார்த்தேன்.
பன்னிரண்டு ஐம்பத்திரண்டு!
நடுச்சாமம்!
இரவு பன்னிரண்டு மணிக்கும் ஒரு மணிக்கும் இடைப்பட்ட நேரம் மனிதனின் உயர் இயக்க நேரங்களில் ஒன்றென ஒரு சோவியத் ஆராய்ச்சியாளரின் முடிவும் நினைவில் வந்தது.
'ஹோலின் நீளமும் நடந்து திரும்பிப் படுக்கச் செல்ல ஆயத்தமான போது தம்பியின் குரல் கேட்டத.
"அக்கா. இஞ்சை வந்த பார் ஆட்டை, கெதியா வா.
"ஏன்? என்னடா?"
ஆட்டின் மெல்லிய அழு குரலும் கேட்கவே விரைந்து சென்றேன்.
சிருஷ்டிக்கான வதை முடித்த பிரசவம் நிகழ்ந்திருந்தத. கறுப்புக் குட்டி ஒன்று தாயின் பக்கத்தில் கிடந்த, அதன் நக்குதலைப் பெற்றுக் கொண்டிருந்தத. மற்றொரு வெள்ளைக்குட்டி சற்றுத் தொலைவில், இன்னும் முகத்தை நீர்ப்பை மூடிய நிலையில், நீரும், சேறும், குருதியுமாய் அசைவற்றுக் கிடந்தது. எனக்குத் தெரிந்த முதலுதவி அறிவைப் பயன்படுத்தி வெள்ளைக் குட்டியை மூச்சுத் திணறலில் இருந்து மீட்டுத் தாய்க்கு அருகே வைக்கோல்,

Page 15
கோகிலா மகேந்திரன் 18
பரப்பிபடுக்கவிட்டு நான் படுக்கைக்கு மீண்ட போது இரவு இரண்டு மணிக்கு மேல்!
யன்னலின் வழியாக மறுபடியும் வேப்பமரம் அசைந்தது. விடியற் காலையில் ஏதோ கனவு கண்டு அழுதபடியே எழுந்து வந்த மகனுக்கு
"எங்கடை "ஜே எல்லே ராத்திரி இரண்டு குட்டி போட்டு நிக்குத, போய்ப் பாருங்கோ.” என்று நான் சொல்ல, அவனது அழுகை முகத்திலிருந்த விலகி இலேசான விடியல் தெரிந்தது. திடீரெனச் சிரித்துக் கொண்டு அவன் 'ஜே' யிடம் ஒடிய போது, முகத்தில் பாலே பொழிந்தத.
"ஐயோ. பட்டுப்போலை சின்னக் குட்டி.." என்று அவன் அவற்றை ஒடி அணைத்த போது, அவன் கன்னத்தில் இன் கனிகள் கனிந்தன.
"என்ன பேர் வைக்கப் போlங்கள் குட்டியளுக்கு?” மகனைத் தாக்கி அணைத்தபடி கேட்டேன். அவன் விரல்களால் என் கழுத்தைக் கட்டிக்கொண்டான். அந்த விரல்களின் அன்புப் பிரவகிப்பு உடலெல்லாம் வர்ஷித்தது.
"ஒண்டுக்குச் சீனா மற்றதுக்குத் தானா'
அறையில் இருந்து தம்பி குரல் கொடுத்தான்.
"மாமா சொல்றது நல்ல பேர்! கறுப்புக்குட்டி "சீனா வெள்ளைக்குட்டி தானா'

மரணிப்பிலும் உயிர்க்கும் 19
மகன் இணக்கமாக ஒத்துக் கொண்டதில் எனக்கும் மகிழ்வு தான்.
இரவு நேரத்தில் சடுதியாக இந்தப் பிரசவங்கள் எப்படி நிகழ்ந்தன என்று மகன் கேட்ட நீட்டுக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல நான் திணறிக் கொண்டிருந்தபோது, கறுப்புக் குட்டி எழுந்த விழுந்து, பின் எழுந்து சென்று தாயின் முலையைத் தேடிப் பிடித்த
"சீனா பாப்பா குடிக்குத. தானா பாவம் என்னம்மா..?" என்று சொல்லிக் கொண்டே என் அணைப்பிலிருந்து விடுபட்ட மகன் வெள்ளைக் குட்டியைத் தாக்கித் தாயின் அருகில் விட்டான்.
நீளமாய் முன்னே தருத்திக் கொண்டு நுனியில் மட்டும் வளைந்திருந்த தன் கொம்பினால் வெள்ளைக் குட்டியைத் தள்ளி விழுத்திவிட்டுக் கறுப்புக் குட்டிக்கு மட்டும் தாய் பால் கொடுத்த அதிசயத்தை நான் விழிகள் விரிய நோக்கி வியந்து நின்றேன்.
"ஏன் தள்ளுத இதை? ஏன் பால் குடாதாம்?" என்று கேட்ட படி மீண்டும் மகன் அதைத் தாக்கி விட்டான். 'ஜெ' மீண்டும் அதை இடித்து விழுத்தித் தன் பின்னங்காலைத் தாக்கி இடறிக் கொண்டு தான் கட்டி நின்ற மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது.
"நாங்கள் போனாப் பிறகு சில வேளை தனிய வைச்சுக் குடுக்கும்" என்று அந்த விடயத்தை இலேசாய் முடித்தக் கொண்டு நான் உள்ளே திரும்பினேன்.
அன்று மாலை.

Page 16
கோகிலா மகேந்திரன் 2O
சாயங்காலத்தின் குமிழிகள் உள்ளே இருக்க நான் வேலையில் இருந்து திரும்பிய போது மகன் பொதுமிப் பொதுமி கண்கள் சிவக்க அழுது கொண்டிருந்தான். என்னைக் கண்டவுடன் அடிவயிற்றிலிருந்து மிகுந்த உரக்கவும் திடீரென்று உடைந்தும் வந்தது அழுகை,
என்னவென்று விசாரித்ததில், "ஜெ' வெள்ளைக் குட்டிக்குப் பால் குடாதாம், குட்டி அழுத பாவம்' என்று முறையிட்டான்.
அவன் அன்று பகல் முழுவதம் அவ்விடத்திலேயே அமர்ந்து வெள்ளைக் குட்டியைப் பால் குடிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுத் தோற்றுப் போனதாய் அம்மா சொன்னாள்.
நான் உடைமாற்றிக் கொண்டு வந்த "ஒருக்கா இந்த 'ஜே யைப் பிடியுங்கோ. வெள்ளைக் குட்டியை ஊட்ட விடுவம்," என்று கணவரையும் அழைத்த, நான் முன் காலைப் பிடிக்க, கணவர் கொம்பைப் பிடிக்க, அம்மா குட்டியைப் பிடித்த முலையடியில் விட்டார். அப்போதம் "ஜே திமிறிப் பின்னங்காலைத் தாக்கிக் குட்டியை எட்டி உதைத்தது. எவ்வளவோ முயன்றும் அது தன் குட்டிக்குப் பால் கொடுக்க மறுத்தவிட்டத.
éé y}
சனியன்.
கருணையின் காற்று இதற்குள் எப்படி உயிர்க்கும்?
"ஏனம்மா, இத. தானே பெத்த குட்டிக்குப் பால் குடா தாம்? அதகும் ஆம்பிளைப் பிள்ளைக்கு.?"
நான் முதன் முறையாய் ஒரு ஆய்வுக்கு ஆரம்பித்தேன்.

மரணிப்பிலும் உயிர்க்கும் 21
இப்பத்தையப் பொம்பிளையள் சில பேர் தங்கடை பிள்ளையஞக்குப் பால் குடுக்கிறேல்லை. தங்கடை வடிவு குறைஞ்சு போமெண்டு. அத மாதிரித்தான் இதகும் நினைக்குதோ?
ஒரு சில பெண்களின் குற்றங்களைப் பொதுமைப்படுத்தி என்னைச் சீண்டி ரசிக்கும் தன் வழமையான இயல்புக்கு வந்தார் കങ്ങഖ്,
"பெட்டைக் குட்டி தன்ரை இனம். அதைக் கவனிக்குத. கிடாய்க் குட்டி வேறை இனம் எண்டு இன அழிப்பு நடத்தப்பாக்குது."
அறையில் படித்தக் கொண்டிருந்த தம்பி தன் பங்கிற்கு நியாயம் கூறினான்.
இருமியபடி வெளியே வந்த அம்மா, "அத உப்பிடித்தான் பிள்ளை சில ஆடுகள். ஒரு குட்டிக்குப் பால் குடாதது. அண்டைக்குப் பிறந்த உடனையும் இந்தக் குட்டியை அது காணேல்லைப் போலை. இத தன்ரை குட்டி இல்லை எண்டு நினைக்குத போலை” என்றார்.
இந்த ஆய்வில் மிகத் தீவிரமாக நாங்கள் ஈடுபட்டிருந்த போத, 'ஹெலிகாப்டர் ஒன்று பறந்து வரும் சத்தம் கேட்டது.
"அம்மா. ஹெலி வருத, அம்மா" என்று மகன் கூற முன்னரே, ர்.ர்.ர்.டும்.டும்' என்று ஆகாயத்திலிருந்து சுடும் சத்தம் கேட்டது.
"அம்மா. சுடுறாங்கள் அம்மா" என்று கத்தியபடியே குசினுக்குள் பயந்த ஓடிய மகன், வழமை போல் புகைக்கூண்டின் பிளாற் றுக்குக் கீழே படுத்துக் கொண்டான்.

Page 17
கோகிலா மகேந்திரன் 22
வானத் தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருந்தது.
காத செவிடுபடும் சத்தம்! அலுமாரியில் ஆயத்தமாக இருந்த பஞ்சுத் தணிகளை எடுத்து மகனின் காதில் வைத்தேன். ஒவ்வொரு சூடும் எங்கள் தலை மேலேயே விழுவது போன்ற உணர்வு!
பிளாற்றின் கீழே படுத்துக் கிடந்த எல்லார் முகத்திலும் இறுக்கமாக ஒரு பயம் அப்பிக் கிடந்தது. வீட்டின் மொத்தத்திலும் ஒரு நிச்சயமற்ற இருட்டு இருந்தத.
"ஏன் அம்மா சுடுறாங்கள்" மகன் என் காதில் மெதவாகக் கேட்டான்.
y5
"தெரியேலை ராசா.
"வான் ஏதும் றோட்டிலை போறதைக் கண்டிருப்பாங்கள்" என்றான் தம்பி
"மாடுகள் நடந்து போற சரசரப்புச் சத்தம் கேட்டிருக்கும்" இது கணவர்.
"எங்கடை வீட்டையும் சுடுவாங்களோ அம்மா?"
"சொல்ல ஏலாது ராசா."
என் மடியில் கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்த மகன் திடீரென்று எழுந்தான்.

மரணிப்பிலும் உயிர்க்கும் 23
"வெளியாலை போகப்பிடாது ஐயா, இதிலை படுங்கோ."
"வாறன் அம்மா." என்று வேகமாக ஓடியவன், வெள்ளை ஆட்டுக் குட்டியைச் சிரமத்துடன் தாக்கிக் கொண்டு ஓடிவந்தான்.
"பாவம் அம்மா அத. "ஜே இடிக்கும். அவங்கள் மேலே இருந்து கண்டிட்டுச் சுட்டாச் செத்துப்போம்" என்று கூறி அதைத் தன் மடியில் வைத்துக் கொண்டே பிளாற்றின் கீழ் இருந்தான்.
ர்.ர்.ர்.டும்.
தாக்குதல் நாலு மணி நேரம் தொடர்ந்த பின், சந்தர்ப்ப வசமாய் எங்கள் வீட்டில் சன்னங்கள் ஏதும் படாத நிலையில் ஹெலி பறந்து சென்று மறைந்தத. பறந்த உயிர்கள் திரும்பி வந்த நிலையில் நாங்கள் மீண்டும் உயிர்ப்படைந்தோம். வலியை உணர முடியாத அவ்வளவு நிறையவே வலித்தத மனதினுள்.
"பால் குடிக்காமல் தானா சாகப்போகுத, பாவம்" இரவு மீண்டும் மகன் நச்சரிக்கத் தொடங்கி விட்டான்.
மகன் பாவித்த பழைய 'போச்சி ஒன்றில் குளுக்கோசு நீர் விட்டுப் பருக்கியதில் சிறித பருகிய தானா படுத்து நித்திரையாகி விட்டது.
அடுத்து இரண்டு நாள் இப்படியே அடிக்கடி குளுக்கோசு கொடுத்ததில், இப்போது நாங்கள் போய், "தானாக்குட்டி' என்று கூப்பிட்டால், உடனே எங்கள் பின் ஓடிவந்த மடியில் படுத்து, குளுக்கோசு குடிக்கும் நிலைக்கு வெள்ளைக் குட்டி மாறியிருந்தத.

Page 18
கோகிலா மகேந்திரன் 24
அது அவ்வாறு குடிக்கும் போத, மகனின் முகத்தில் தோன்றும் சிரிப்பு: அவனது முரண்டு, பிடிவாதம், அழுகை எல்லாவற்றையும் இந்தச் சிரிப்பு கழுவிக் கொண்டு போய்விடும்.
குளுக்கோசு கொடுப்பதிற் தாமதித்தால் 'அம்மா’ என்று கூப்பிட்டுத் தன்னை நினைவுட்டும், தானா.
நாலு நாள் நிறைந்த ஒரு காலை வானத்திரையில் சூரியன் ஒளித்தடம் தலங்கத் தொடங்கிவிட்டது.
கறுப்புக்குட்டி தள்ளித் தள்ளி ஓடி, சுவர்ப் பத்திரிப்புக்களில் ஏறித் திரிய வெள்ளைக் குட்டி நாலு காலும் ஒட்டி, முதகை ஒட்டகம்போல் வளைத்து மயிர்கள் சிலிர்த்திருக்கக் குளிர்ந்து நடுங்கிப் பெரும் பரிதாபமாய் நின்று கொண்டிருந்தது.
"அம்மா, தானா செத்தப் போமோ அம்மா? தானா’க்கு வருத்தமோ அம்மா?"
மகன் என்னைப் பிராண்டினான்.
"இல்லை ராசா.அதக்குச் சாப்பாடு காணாது. சத்து ஒண்டும் இல்லை. ஏதும் பால்தான் வாங்கிக் குடுக்க வேணும்"
அன்று மாலையே அதற்குப் பால்மா வாங்கப்பட்டத.
பாலைக் குடித்துவிட்டு அத மஞ்சள் திரவமாய் மலங்கழித்த
போது தன் சிரிப்பை எல்லாம் கழற்றி வைத்துவிட்டவன் போல் வெற்று முகத்தடன் திரிந்தான் மகன்.

மரணிப்பிலும் உயிர்க்கும் 25
அன்று அந்திப் பொழுதில் ஒரு மெல்லிய முனகல் கேட்டு நாங்கள் எல்லோரும் ஓடிப்போய் பார்த்தபோது, ‘தானா ஒரு மூலையில் பதங்கிக் கிடக்க, அதன் மேல் அத அசைய முடியாதபடி தன் கால்களைப் பரப்பிக் கிடந்தது 'ஜெ.
திடீரெனப் பயந்த ஒரு அமனிதமான குரலில் கூக்குரலிட்டு விட்டான் மகன்.
"செத்துப் போச்சோ அம்மா?"
"இல்லை இல்லை. அது சாகேல்லை" என்று அவனைத் தேற்றிக் குட்டியை இழுத்துத் தாரத்தில் விட்டேன். ஆயினும் அத நிற்க முடியாமல் சோர்ந்து விழுந்தத.
மிருக வைத்தியர் ஒருவரை மிக அவசரமாய்ச் சென்று அழைத்து வந்தான் தம்பி
அவர் ஒரு ஊசி போட்டு, அதற்குக் கொடுக்க வேண்டிய மருந்தகளையும் எழுதித் தந்தார்.
தாயை நிறுத்தி அதன் பாலைக் கறந்து அதையே போச்சியில் விட்டு ஒவ்வொரு நாளும் பருக்கச் சொன்னார்.
தாய்ப்பால் அந்தக் குட்டிக்குத் தேவையான உணவுக் கூறுகள் யாவும் சரியான செறிவிலும் விகிதத்திலும் சரியான வெப்ப நிலையிலும் வழங்கப்படும் என்றும், அதைப் பருகும்போதே குட்டி போதிய நோய் எதிர்ப்புச் சக்தியைத் தன் உடலில் பெறும் என்றும், நோய்க் கிருமிகள் உள்ளே சென்றுவிடும் சந்தர்ப்பமும் தாய்ப்பால் குடிக்கும் போதே அரிதாக இருக்கிறதென்றும் பெரியதோர் விளக்கம் தநதாா.

Page 19
கோகிலா மகேந்திரன் 26
அவரது ஆலோசனைகள் தவறாமல் செயல்படுத்தப்பட்டன.
குட்டி சற்றுச் சுறுசுறுப்பு அடைந்து மெதுவாக ஒடித்திரிய ஆரம்பித்த போத, சந்தோஷத்தின் சிறகுகள் மகனுக்குள் முளைத்திருந்தன. குட்டி எந்த நேரமும் அவனுக்கு அருகிலேயே படுத்து உறங்கும். அவன் குளிக்கச் சென்றாலும் பின்னே செல்லும், சாப்பிட வந்தாலும் பின்னாலே வரும். பறவை சிறகைச் சிலுப்பினத மாதிரிக் கைகளைத் தாக்கி அதை அணைத்துக் கொண்டு அவன்!
இப்போது தானா' வுக்குக் கொம்புகள் முளைத்த விட்டன: 'ஜே கட்டி நின்ற மரத்தக்கு அருகே முருக்கங் குழையைக் கொண்டு வந்து போட்டான் தம்பி அதனைச் சாப்பிட விரைந்த ஓடி வந்தத 'ஜெ. அருகில் விளையாடிக் கொண்டிருந்த "தானா வும், 'சீனாவும் ஓடிவந்து, தமத சிறிய கொம்புகளால் 'ஜே' யை இடித்துத் தள்ளின. முருக்கங் குழையைத் தாக்கிக் கொண்டு தாரத்தே ஓடி இரண்டும் உண்டன. மகனுடைய முகத்தில் பிரபை கொள்ளும் பிரகாசம்!
பப்பாசிக் குழாய் ஒன்றில் கயிறு கட்டித் தோளில் தொங்கப் போட்டிருந்தான் அவன்.
"உதென்ன ராசா?" என்ற என் கேள்விக்கு அவன் தந்த பதில்,
g
"இனி ஹெலி வரட்டும் அம்மா, பாப்பம்." என்று:
சித்திரைக்கே உரித்தான வாசனை மூச்சை வேப்பமரம் வெளியிட ஆரம்பித்திருந்தது. அதில் படர்ந்திருந்த 'ஆட்டுப்பூ

மரணிப்பிலும் உயிர்க்கும் 27
மரத்தில் நீலம் நீலமான பூக்கள். குப்பென்று மகிழ்ச்சி பரவியத என்
நெஞ்சில்,
காலை ஒன்று கிழக்கில் விடிந்தத' என்று தொடங்கும்
மகாகவியின் காவியத்தை வாசிக்கத் தொடங்கினேன்.
(d666S soa5 - &Got '86)
() () ()

Page 20
ஒலி
IDIதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ கண்ணன் சொன்னானாம் தேவர்களுக்கு ஆறு மாதம் பகற்காலம், ஆறுமாதம் இராக்காலமாம்!-தேவர்களுக்கென்ன, துருவ வாசிகளுக்கும் அப்படித்தான் வெள்ளிக்கோளில் இவர் போய் வசித்தால், இவருக்கும் நாற்றுப்பன்னிரண்டு நாள் இரவும், நாற்றுப்பன்னிரண்டு நாள் பகலுமாய் இருக்கும். இதென்ன பெரிய அதிசயமே? ~ அந்த ஆறுமாத இரவு முடிந்து விடியும் காலம் மார்கழியாம்! அதனால் அத சிறப்பான மாதமாம்!
கண்ணனுக்கு மனச்சந்தோஷமாக இருக்கட்டும்! இவருக்கு இந்த மாதம் முழுதுமே 'ரென்சனாக இருந்தது: உயரமும் அமைதியான கண்களுமாய் அவர், அவரைச் சுற்றி ஒரு நெருக்கமும் புழுக்கமும் எப்போதம் இருந்தன. அவருக்குள் இருந்து இடையிடை கானமிசைத்த ஒருசில பறவைகளும் பறந்து விட்டது போல!
எத்தனையோ முறை திருப்பித் திருப்பிச் செய்ததில் இரண்டு குவிவுவில்லை கொண்டு அமைக்கப்பட்ட இந்தத் தொலைகாட்டி இம்முறைதான் சரியாக வந்திருக்கிறது. மார்கழி மாதத்தின் அதிசயங்களில் ஒன்றாய் இன்று வானம் மிகத் தெளிவாயும் இருக்கிறது. முற்றத்தில் நிறுத்தப்பட்ட தாங்கியில் தொலை காட்டி யைப் பொருத்தினார் மாஸ்டர்.

ஒலி 29
மேற்கு வானில் மிகத் தெளிவாய் தெரியும் வியாழன். தொலைகாட்டியூடாகப் பார்த்தபோத, பல்வேறு நிறங்களை வெளிவிட்டு மிக அழகாய் ஜொலித்த அந்த விநாடி அற்புதமாய் இருந்தது. தொலைகாட்டியூடாக வெள்ளொளி நிறப்பிரிகை அடையும் அழகு! (Chromatic Aberation) அவர் சந்தோஷிக்கிற ஒரு கணம்:
பிரதான வீதிக்கும் மாஸ்டரின் வீட்டு மதிலுக்கும் இடையில் ஒரு அடி தாரமிருக்கும். வீதியை மருவியபடி வீடு பஸ்ஸில் இருந்து இறங்கியவுடன் வீட்டு வாயிலில் நுழையலாம் என்று அப்போது நினைத்து மனைவியின் சீதனப் பணத்தில் ஆசையுடன் வாங்கிய வீடு! இப்போது..?
சற்று முன்னர் தான் பெரும் ஒலி எழுப்பியபடி கனரக வாகனங்கள் அந்த வீதியால் நீண்டு சென்றன. அவை சென்றதன் அடையாளமாய் இரண்டொரு வேட்டொலிகள். பின் வெறிச்சோடிப் போன தெரு சோர்ந்து வழிகின்ற வீதியோரத் தென்னைகள்
மிக அருமையாயும் அதிசயமாயும் ஒரு பத்து நிமிடம் அவரது செவிப்பறை மென்சவ்வை எந்த ஒலிஅலையும் தாக்கவில்லை! அந்த அமைதியைப் பயன்படுத்தியே அவர் இந்தத் தொலைகாட்டியை அமைத்த முடித்தார்.
மீண்டும் தொலைகாட்டியைக் கிழக்கு நோக்கித் திருப்பி ஒருகூட்டமாகத் தெரிந்த 'கார்த்திகை நட்சத்திரங்களைப் பார்த்தார். அதற்கு அருகில் மாடம் போலத்தெரிந்த 'ரோகிணி அதற்கும் கீழே பிரபலமான அந்த ஒரியன் (Orion) எட்டாம் வகுப்பு விஞ்ஞ்ான பாடத்தில் வானியல் அறிமுகம் செய்யப்பட்டு, அதற்கான ஆசிரியர் பாசறைக்கும் சென்று வந்த பின்னர்தான் இந்த நட்சத்திரங்களைத் தேடிப் பார்ப்பதில் மாஸ்டருக்கு ஒரு பிரியம் ஏற்பட்டிருந்தது.

Page 21
கோகிலா மகேந்திரன் 30
"அப்பா. உதக்குள்ளே என்ன தெரிது. ?"
நீர் காலுக்கடியில் குளிர்ந்து பெருகுவது போல, அவரது காலுக்குள் ஓடிவந்தான் அவரது மழலை மகன்.
"இதக்குள்ளையோ கண்ணா. இதுக்குள்ளை தெரியிறது ஒரியன் எண்ட வேட்டைக்காறன் நட்சத்திரம். அங்கை. அதிலை ஒரே நேருக்கு மூண்டு பிரகாசமாத் தெரிது. அததான் வேட்டைக்காரன்ரை 'பெல்ற்'. மற்றப் பக்கமா மூண்டு. அததான் அவன்ரை வாள். அந்தப் பக்கம் தனிய ஒரு நட்சத்திரம். அதுதான். அவன்ரை தலை. இனி உவனுக்குப் பின்னாலை கிழக்குப் பக்கத்திலையிருந்த இரண்டு நாய் வரும்."
மாஸ்டர் மகனை அணைத்தபடி, விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கையில் அந்தச் ‘சத்தம் கேட்டது. பஸ் கண்ணாடிகள் நொருங்கிய பின்பும் அப்படியே சிலசமயம் நிற்பத போல, மகனது முகம் ஆயிரம் நடுங்கலுடன் நொருங்கி நின்றது. வீட்டு யன்னல்கள் உண்மையாகவே அதிர்ந்து-நொருங்காமல் ஓய்ந்தன. மாஸ்டரின் இதயம் ஒரு முறை நின்று விட்டுப் பின் தடிக்க ஆரம்பித்தது போல ஒரு உணர்வு வழக்கம் போல. மனம் விறைப்படைந்து அமைதியிழந்தத. உலகம் வண்ணமிழந்து போனத போல்.
வான் கொண்ட நட்சத்திரங்களைத் தொடர்ந்து பார்க்க முடியவில்லை! சந்திரன் சோகை பிடித்தாற் போல், மேற்றிசையில் சாம்பல் பூசி வெளிறித் தெரிந்தான்.
"என்னப்பா. பெரிய வெடியாயிருக்குத. ? உங்களுக்கு. என்ன செய்யுத. ? படுங்கோ இப்பிடி. "
உள்ளேயிருந்து ஓடி வந்தாள் மனைவி

ஒலி 31
இப்போது சில காலமாய். பெரிய ஒலிகளைக் கேட்டவுடன் அவர் சமநிலை இழந்த, அந்தரப்படுவத அவளைப் பதற வைத்தது.
"எனக்கு ஒண்டும் செய்யேலை. நீ பதகளிப்படாதை. இப்பதானே உதாலை போனவங்கள். எங்கை வெடிச்சுதோ தெரியேல்லை.கண்ணிவெடி போலைதான் இருக்கு."
மனைவியைப் போலியாய் சமாதானம் செய்தவர் சாய்கதிரையில் மெதவாக அமர்ந்த விட்டார்.
நேற்று முழுதும் பாடசாலையில் தன்னைப் பூச்சாண்டி காட்டிய அந்த 'மின் சுற்றுக் கணக்கை இப்போதாவது செய்த பார்த்து விடலாம் என்றால்.. ?
வடக்குப் புறத்தில் இவரது வீட்டு மதிலை எல்லையாகக் கொண்ட டியூற்றறி யிலிருந்த மெதுவாகக் கசமுச வென்று வந்து கொண்டிருந்த ஒலி இப்போத இந்தக் குண்டுச் சத்தத்தைத் தொடர்ந்து பெரும் இரைச்சலாகக் கேட்க ஆரம்பித்தது. அவர்கள் குண்டு வெடிப்புப் பற்றி அலசுகிறார்கள்! அவர்களிலும் பிழை இல்லைத்தான் இனி, அவர்களின் டியூசன் மாஸ்டர் வரும் வரையில் சில சமயம் வந்த பின்னரும் இந்த இரைச்சல் தொடரும்!
சென்ற வாரத்தில் ஒரு நாள் இப்படித்தான் இவர்கள் இரைந்து கொண்டிருந்த போது,
மனைவி மதிலுக்கு மேலே எட்டிப் பார்த்து "ஸ்" என்றதும், அவர்கள் "பயித்தங்காய் தலையை நீட்டுத, இஞ்சை பாரடி பயித்தங்காய் கதைக்குத." என்று மனைவியின் பட்டத்தை ச் சொல்லி எள்ளிநகையாடி, மேலும் பலமாய்ச் சிரித்துக் கதைத்ததும், இன்றைக்கும் இந்த மதிலில் ஞாபகமாய்க் கிடக்கிறது:

Page 22
கோகிலா மகேந்திரன் 32
"சரி இனி ஒரு வேலையும் செய்ய ஏலாத சாப்பிடுவம், சாப்பாட்டைப் போடு."
மாஸ்டர் சாப்பிடப் போன போது, முன் கடையில் இருந்து "ஐ ஆம் எ டிஸ்கோ டான்ஸர். பாடல் ஒலிக்கத்தொடங்கியது.
"கொஞ்ச நேரத்தக்கு முந்தி அவங்கள் போன உடனை கடையை இழுத்துப் பூட்டினவங்கள், இப்ப அதுக்கிடையிலை திறந்த வைச்சுக் கொண்டு "ரேப்பும் போடத் தொடங்கிட்டாங்கள்."
எரிச்சலுடன் புறுபுறுத்தாள் மனைவி
அது 'றெகோடிங் பார் அல்ல: ஒரு சிறிய சிற்றுண்டிச் சாலைதான்!
ஒரு மாதத்திற்கு முன் ஒரு மழை நாள் இரவில், இந்தக் கடைக்காரனுடன் கதைக்கப் போனதம் அவமானப்பட்டுத் திரும்பி வந்ததும் இவர் மனக் குகையில் மிக ஆழமான ஒவியமாய் 6).j60), 4 Lt. (bsbgbgs.
மெலிதான குளிர்காற்று 'சலக் சலக்' என்று மரத்தின் இலைகளோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தது. வீட்டில், பஸ்ஸில், தெருவில், பாடசாலையில், கடையில். என்று எல்லா இடத்திலும் உலகம் ஒலியால் ஆக்கப்பட்டிருந்த எரிச்சலில், குடையை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் விசிறிக் கொண்டு வேகமாய்ப் போன இவர்,
"தம்பி, இஞ்சை என்ன கலியாண வீடோ நடத்திறியள் ஒவ்வொரு நாளும். ?" என்றார்.

ஒலி 33
இவரை ஒரு பயித்தியம் போல் நிமிர்ந்து பார்த்தான் கடைக்காரப் பெடியன்.
"நீங்கள் கடையிலை உந்தப் பாட்டுக்களை உவ்வளவு சத்தமாவிடப்பிடாது."
"விட்டா. உமக்கென்ன செய்யுத.?”
தண்ணீர் தெறித்தது போல் அந்தப் பதில்! உங்களுக்கு என்ற மரியாதை உமக்கு' என்று குறுகிவிட்டதிலும் இவர்
ஆவேசமடைந்தார்.
“எனக்கு இடைஞ்சலாய் இருக்குத. ஒண்டும் சிந்திக்க முடிதில்லை" உரப்பாகச் சொன்னார்.
"சத்தம் போடுறதாலை தான் எங்களுக்கு யாபாரம் நடக்குத. ஆனபடியால் அது எங்கட உரிமை, நீர் அதைத் தடுக்கேலாத."
அதை விட உரப்பாகினான் அவன்.
"வழுக்குப் போடுவன்" வெருட்டிப் பார்த்தார்.
"இப்ப பொலிசு எங்கையிருக்கு? கோடு எங்கையிருக்கு? வழக்குப் போட. போட்டுப் பாருமன்."
அவன் சவால் விட்டான்.
"நெடுக இரைச்சலுக்கை வாழ்றவையின்ரை காது கெதியிலை மெல்லிய ஒலிகளைக் கேட்கிற தன்மையை இழந்திடுதாம். பிறகு காதுக்குச் சாணை பிடிக்கேலாது."

Page 23
கோகிலா மகேந்திரன் 34
அவர் கொஞ்சம் இறங்கி வந்து நிலைமையை விஞ்ஞான ரீதியாக விளக்க முற்பட்டார்.
"நான் அதைப் பற்றிக் கவலைப்படேல்லை."
"இனி மேல் இந்த மனிசனோடை கதைக்கிறதிலை பிரயோசனமில்லை," என்பது போல எழுந்து தன் வியாபாரத்தைக் கவனிக்க உள்ளே போய் விட்டான் பெடியன்.
அவர் தோல்வியுடன் மெளனமாய் வீடு திரும்பினார். அந்த மெளனத்தில் புயலின் கனம் இருந்தது. நிழல் விழுத்தம் பெரு மரங்கள் வீதியில் பயங்கரமாய்த் தோன்றின.
"நீங்களேன் கதைக்கப் போனீங்கள் ?" என்று மனைவியும் கேட்டபோத,
"சூழல் மாசடையிறதைப் பற்றி உனக்கு என்ன இழவு தெரியும்? சும்மா கத்தாமல் வாயைப் பொத்திக் கொண்டு கிட."
கடைக்காரப் பெடியன் மேலிருந்த ஆத்திரத்தையும் மனைவிமேல் கொட்டித் தீர்த்தார். இந்த ஓவியம். எப்படி அழியும்?
"ஒரு ஐஞ்சாறு மாசத்தக்கு முந்தி, கனரக வாகனங்கள் போனால் இரண்டு மூண்டு நாளைக்குச் சுற்றாடல் அமைதியா இருக்கும். இப்ப அதகும் இல்லை. அதகள் போய் ஐஞ்சு நிமிசத்திலை எல்லாம் 'நோர்மல்". இனிமேல் யாழ்ப்பாணத்துச் சனத்தை ஒருத்தராலும் பயப்பிடுத்த ஏலாது போலை கிடக்கு."
சாப்பிட்டு முடிந்த பின்னும் மாஸ்டரின் சிந்தனைகள் அத் திசையிலிருந்து ஓயவில்லை. வெளியே ஒலிகளும் ஓயவில்லை.

ဝှသ်) 35
இப்பொழுது தெருவில் வாகனங்களும் மெதவாக ஒடத்தொடங்கி விட்டிருந்தன. ஒரு மோட்டார் சைக்கிள், சிறிது நேரத்தின் பின் பலமாக "ஹோர்ன் அடித்தபடி ஒரு கார். தொடர்ந்து ஒரு லொறி.!
எந்த ஒலியும் வீட்டினுள் நுழையாமல் தடுக்கும் முயற்சி போல யன்னல்கள், கதவுகள் எல்லாவற்றையும் அடித்துச் சாத்தினார். “சீ. நான் படுக்கப் போறன். நாளைக்கு விடிய எழும்பி ஏதும் அலுவல் பாப்பம்."
என்று அலுத்தக் கொண்டபடி படுக்கச் சென்றார்.
மேற்குப்புற வீட்டிலிருந்து ஆணி அடிப்பத போல ஒரு சத்தம்: இடையிட்டு. இடையிட்டுக் கேட்டுக் கொண்டேயிருந்தது. அந்த வீட்டின் பத்து வயது வாண்டுப் பையன் ஏதோ உடைக்கிறான்.
தன் உலகம் பாடசாலை, வீடு, சத்தம் என்று சுருங்கி விட்டதில் பெரிதும் மன வெறுமை அடைந்திருந்தார் மாஸ்டர்.
நித்திரை வர மறுத்தத!
எல்லாவற்றையும் தலையைத் திருப்பி நோட்டம் விடுகிற மின் விசிறி சுழன்று கொண்டிருந்தும், புழுக்கம் அசைய மறுத்து அழுத்தமாய் மண்டிக்கிடந்தது. இந்த மார்கழியில் அந்தப் புழுக்கம் அதிசயமாய் இருந்தது இவருக்கு:
பத்து மணிக்குப் பிறகு எழுந்த சென்று இரண்டு மில்லி கிராம் (2mg) "வலியம் (Valium) மாத்திரையில் ஒன்றை விழுங்கிவிட்டு வந்து படுத்தார்.
"என்னப்பா நித்திரை வரேல்லையா?"

Page 24
கோகிலா மகேந்திரன் 36
மகனை நித்திரையாக்கிவிட்டு வந்த மனைவியின் குரலில் கவலை மிதந்தது.
"இண்டைக்கு நித்திரை வராத போலைதான் கிடக்கு." நித்திரை வராது என்ற எண்ணம் மனதில் கடுமையான பரபரப்பும் அந்தரமும் கொண்ட ஒரு நிலையைத் தோற்றுவித்திருந்தது.
முன் கடையின் 'டிஸ்கோ’ பாட்டுக்கள் இன்னும் கேட்டுக் கொண்டேயிருந்தன. வழக்கமாய்ப் பத்து மணியுடன் முடிந்து போகின்ற பாடல்கள்? இன்று.?
பின்புற வீட்டிலிருந்து ஒரு முடியின், கீழ் விழுந்த உருளல். கண்ணாடிப் பாத்திரங்களின் முணு முணுப்பு ஒலி எழுப்பும் சூழல் முழுவதையும் அறைந்த. சாகடிக்க வேண்டும் போல இவருக்குள் ஒரு வேகம்! ஆனால் செய்ய முடியாதே!
படுக்கையில் அமைதியற்றுப் புரண்டார்.
மனதில் மெல்லிழையாக ஊர்ந்திருந்த ஒரு வேதனை ஊதிப்பெருகி ஊடுருவ ஆரம்பித்தத.
இரைச்சல் இருதய நோய் உயர்குருதி அமுக்கம் ஆகியவற்றைக் கொண்டு வருகிறத என்றும், அதவே சூழலை மாசுபடுத்தவதில் முதலிடம் வகிக்கிறது என்றும் அண்மையில் எங்கோ வாசித்த நினைவு.!
தனக்கும் இருதயநோய்தான் ஏற்பட்டு விட்டதோ?
எங்கோ, என்ன எங்கோ? தமிழ் நாடு சுகாதார அமைச்சர் டாக்டர் எச்.வி ஹண்டே தான் இவ்வாறு பேசியிருந்தார். அவருக்குப் புரிகிறத:

ဝှ6လ်) 37
"யாழ்ப்பாணத்திலை இருக்கிற சனம் ஒண்டுக்கும் இது விளங்குதில்லையே?
சின்ன வயதிலேயே இதை நன்றாகப் புரிய வைக்க வேண்டுமென்று எட்டாம் வகுப்பிலேயே சூழல் மாசடைதலைப் பற்றி.!
அந்த அலகை வகுப்பில் கற்பித்தபோது, காண்டீபன் கேட்டான்.
"கிருமி நாசினியள், செயற்கைப் பசளையஸ் தண்ணியோடை சேந்தாத் தண்ணி மாசடையது எண்டு சொல்றம். ஏனெண்டால் அதகள் நஞ்சுகள். ஆனால் ஒலி காத்திலை கலந்தா. வளி எப்பிடி மாசடையும்? ஒலி நஞ்சுப்பொருளே. இல்லையே. ?”
"எந்த ஒரு பொருளும் அளவுக்கு அதிகமான செறிவிலை ஒரு இடத்திலையிருந்து, அதன் மூலம் மனித இனத்துக்குத் தீமை செய்யிறபோது அத மாசாகும். நீரும் கூடச் சில சந்தர்ப்பங்களில் மாசுப் பொருளாகும். வெப்பமும் சில சந்தர்ப்பங்களிலை மாசாகும்."
இவற்றைக் காண்டீபனுக்குப் புரிய வைப்பதில் மாஸ்டிர் நீண்ட நேரம் செலவிடவேண்டி இருந்தது.
முன்கடைப் பெடியனுக்கு எவ்வளவு நேரம் செலவழித்தம் புரிய வைக்க முடியவில்லை!
ஏதேதோ சிந்தனைகளுடன் உறங்கிப்போனார் மாஸ்டர். அதவும் ஆழமான நித்திரையல்ல! கனவுகள் நிறைந்த, அமைதியற்ற, அடிக்கடி விழிப்பு ஏற்படுகிற நித்திரை:

Page 25
கோகிலா மகேந்திரன் 38
தான் ஒரு பயங்கர மனநோயாளியாய் அங்கொடை ஆஸ்பத்திரியில், இரும்புவலைக் கட்டிலுக்குள்ளே படுத்துக் கிடந்து - மனைவியைப் பார்த்துப் பேய்ச் சிரிப்புச் சிரிப்பதாய்.
கனவுகளும் வாழ்க்கையும் எந்தப் புள்ளியில் சந்திக்கின்றன என்று மாஸ்டருக்குத் தெரியவில்லை.
அந்தக்கனவு முடிவதற்கிடையில் ஒரு பயங்கர ஓசை நட்சத்திரங்களும் நடுங்கித் தயருறும் நள்ளிரவில் அந்த ஓசை. மிக அண்மையில் கேட்டத.
கெட்டித்தப்போன முகத்தடன் எழுந்து படுக்கையில் அமர்ந்தார். மெதவாக எழுந்து கதவுக்கருகில் சென்றார். திறந்த வெளியே பார்ப்போம் என்று நினைத்தார்.
"ஐயோ, ஐயோ, கதவைத் திறக்காதையுங்கோ: இந்தக் காலத்திலை என்ன அவசரம் எண்டாலும் இரவிலை கதவைத் திறந்த வெளியிலை போகப்பிடாது."
கதறியபடி ஓடி வந்த மனைவி அவர் கையைப்பிடித்துத் தடுத்தாள். முப்பதாயிரம் வருட முதமையும் பயமும் அந்தக் கணத்தில் அவள் முகத்தில் குடியேறியிருந்தன.
வாழ்வில் எப்போதுமே மனைவி சொல்லைத் தட்டி அறியா தவர் போலப் பணிந்த திரும்பி வந்து படுத்தார் இவர்.
"அற்ப ஜீவிகள்-மனிதனோடு ஒப்பிடும்போது ஒரு இத்துனியாயித் தெரிகிற வைரசுக்கள், பற்றீரியங்கள், பூச்சிகள், புரத்தோசோவன்'கள் சில சமங்களில் மனிதனை எப்படி

ဝှလ်) 39
ஆட்டிப்படைத்து விடுகின்றன என்பத பற்றி எமது வைத்தியர்களைக் கேட்டால் சொல்லுவார்கள் கதை கதையாய்! பூச்சிகள் சில. ஒரு மனிதனைப்படுத்திய பாட்டைப் பற்றிச் சிறுகதை எழுதிய ஒரு எழுத்தாளனுக்கு இந்தியாவில் சில வருடங்களுக்கு முன் இலக்கியச் சிந்தனைப் பரிசு கிடைத்திருக்கிறது:
இந்த ஒலி, உயிர்கூட இல்லாத இந்த ஒலி மனிதனைச் செய்யும் வதை. இதைப்பற்றி ஏன் நான் ஒரு கதை எழுதக்கூடாதரி எழுதினால் என்ன் கிடைக்கும் எனக்கு? இந்த நாட்டில் தமிழனுக்கு என்ன கிடைக்கும்.? சூடுதான் கிடைக்கும்:
'ஒன்றும் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. காலையில் எழுந்து அந்த மின்சுற்றுக் கணக்கைச் செய்து விட்டு இதை எழுதத்தான் வேண்டும்.
நினைத்தபடியே கொஞ்சம் உறங்கிப்போனவர் மீண்டும் கண்விழித்த போது, "போற்றி என் வாழ் முதலாகிய பொருளே” என்ற பாடல் உச்ச உரப்பில் வானில் மிதந்து வந்த கொண்டிருந்தது. இது திருவெம்பாவைக்காலம் என்பத இவருக்கு நினைவுக்கு வந்தத.
அமைதியான காலைப் பொழுதை விழுங்கிக்கொண்டிருந்த அந்தப் பாடல், அருகில் இருந்த வைரவர் கோயிலில் இருந்த ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது:
இரவு முழுவதும் வதைபட்டதில் கண் எரிந்தத. தலை சுற்றவது போலிருந்தது. மனதில் தொடர்ந்து அந்த 'ரென்சன் ഉ_ങ്ങiബ്ദ,
பல பலா விடியலுற்றபோத, தமி தமி என மழை தமித்துக் கொண்டிருக்க,

Page 26
கோகிலா மகேந்திரன் 40
"இஞ்சரப்பா! என்னாலை தலை நிமித்த முடியேல்லை. கொஞ்சப் பிளேன்' கொணந்து தாரும் பாப்பம்." என்று மனைவியை எழுப்பினார்.
அவள் எழுந்து குசினிக்குள் போய் ஐந்து நிமிடம்கூட இருக்காது! திடீர் என்று எங்கிருந்தோ தோன்றிய ஐந்து 'ஹெலிகொப்டர்கள் தாங்க முடியாத இரைச்சலுடன் அந்த ஊரின் மேல் வட்டமிட்டுப் பறக்கத் தொடங்கின.
அறிகுறி இல்லாத ஆக்கிரமிப்பு: ஆகாயத்திலிருந்தும், தரையிலிருந்தும் இடைவிடாது கேட்ட சூட்டுச் சத்தங்கள் ஊசி இழைகளாய் உயிர் நரம்பையே ஊடுருவின.
கோவிலில் திருவெம்பாவைக்குக் கூடிநின்ற சிலர் குழறியபடி தெருவில் ஒடுவது கேட்டத. காலையில் எழுந்து வைத்தியரிடம் செல்ல வேண்டும் என்ற நினைவு முற்றாக விடைபெற்றுவிட்டது.
மனதின் "ரென்சன்’ ‘அங்சைற்றி ஆகியவை அதிஉச்ச நிலையை அடைய. படுத்த கட்டிலின் கீழ் பதங்கிக் கொண்டார் மாஸ்ரர்.
"நீ வெளிலை போகாதை." என்று மனைவிக்குப் பணித்த வார்த்தைகள் பிசினைப் போல் தொண்டையில் ஒட்டிக் கொண்டு, மிகக் கடினப்பட்டு வெளியில் வந்தன.
y
சோகமே மெளனமாய் உருக்கொண்டு சிலையாய்ச் சமைந்தது போல் சுவர் மூலையில் நின்றாள் மனைவி அவளை ஒட்டிக்கொண்டு அவளின் சேலையைப் பிடித்தபடி அழுதுகொண்டு மகன், மனைவியின் கண்களிலும் ஈரம், கண்ணிருக்குத்தேவையான உரம், பயத்திலிருந்தும் கிடைக்கிறதா?

அதிகாலையில் தாங்கள் தலாவில் ஏறி, பட்டை மூலம் நீர் பாய்ச்சுகையில், பறவைகளின் உதயத்திசை தமக்குத் தேனிக்கும் என்று மாஸ்டரின் தந்தையார் முன்னர் ஒரு முறை கூறியத இப்போது அவர் மனதில் படமாய் மட்டும் விரிந்தத.
(அமிர்தகங்கை - புரட்டாதி '86)
* * *

Page 27
சமுதாயம் ஒரு சறுக்குப் பாறை
மல்லிகா என்னும் ஆட்டுக் குட்டி!
விடியும் நேரத்திற்கு எப்போதமே ஒரு தனி அழகு உண்டு:
அதிலும் தமிழினத்தின் முப்பத வருட நீண்ட போராட்டத்தின் முடிவில், உள்ளே குமையும் ஊமைத் தன்பங்களையெல்லாம் விழுங்கிவிட்டு, அதற்குமேலே எழுகின்ற புதிய தைப்பொங்கல் விடியற்காலை அபார அழகைத் தந்த கொண்டிருந்தத.
தக்கமோ மகிழ்வோ அல்லது இரண்டுமே சேர்ந்தோ ஒரு உரமான உணர்வு நெஞ்சைக் கவ்வி அடைக்க, அந்த அழகைத் தரிசித்தபடியே கண் விழித்தாள் தங்கராணி
மல்லிகா என்னும் ஆட்டுக்குட்டி முருக்கங்குழையும், பசுஞ் செடிகளும் நிறையத்தின்று மொழு மொழுவென்று வளர்ந்து குட்டிபட்டுக் கன்னிக் குட்டித்தாய்ச்சியாக நின்ற நேரம்!
நேற்றைய நிகழ்வுகள் எதுவும் மனதை விட்டகலவில்லை. செல்லம் பாவித்த சொல்லம்புகளுக்கு மேலாகத் தானும்

சமுதாயம் ஒரு சறுக்குப் பாறை 43
சொல்லியிருக்கக்கூடிய பலவிடயங்கள் மனதில் ஒடி ஓடி வந்த கொண்டிருந்தன.
"உண்ரை அவர் வெளிநாட்டிலை என்ன வெல்லாம் செய்தவர் எண்டு எங்களுக்குத் தெரியாதோ?” என்றாவது கேட்டிருக்கலாமோ?
சீ! அவளின் தரத்திற்குத் தானும் இறங்கிக் கதைக்காமல் மெளனமாக இருந்து விட்டத தான் சரியோ?
இரவெல்லாம் நித்திரையின்றி இவற்றை மனதிலேயே எழுதி எழுதி மனதிலேயே கிழித்துப் போட்டிருந்தாள்.
"சம்பரப்பிள்ளை வாத்தியார் என்ன செய்தவ ரெண்டு எங்களுக்குத் தெரியாதோ?" என்று செல்லம் கேட்ட கேள்வி!
சில வசனங்களைக் குத்தலாகச் சொல்கையில் ஏற்படும் குரூரமான மனநிறைவைச் செல்லம் அப்போது அடைந்திருக்கலாம், ஆனால்! நெஞ்சு முழுவதும் உப்பாகக் கரிப்பது போலிருந்தது தங்கராணிக்கு, செல்லத்தின் மனதின் சத்திய ஆழத்திலிருந்து இந்தக் கேள்விபிறந்திருக்குமா? இல்லை, வெறும் நுனிநாக்கிலிருந்து பிறந்த வார்த்தைகள் தானா ? கிளிப்பைக் களற்றிக் கிறனெற்றை எறிந்தது போல, நெஞ்சில் விழுந்து வெடித்துச் சிதறி எரியூட்டிய வார்த்தைகள்!
தைப்பொங்கல் என்ற நினைவு திடீரென வந்தவுடன் பாயைச் சுருட்டி கூடவே மனதின் எண்ணங்களையும் சுருட்டி, மூலையில் போட்டுவிட்டு, தலையை அள்ளி அள்ளுகொண்டையாய் முடித்தக்கொண்டு வெளியே வந்தாள் தங்கராணி

Page 28
கோகிலா மகேந்திரன் 44
ஒவ்வொரு காலையிலும் எழுந்தவுடன் அவள் வழமையாய்ச் செய்யும் வேலை ஆட்டுக்கொட்டிலைக் கூட்டி மல்லிகாவுக்கு முருக்கங்குழை தாக்குவததான்!
அந்த ஆடு மல்லிகா ...! முற்றத்தைக் கூட்டவென விளக்குமாறு எடுக்க வீட்டின் கோடிப்புறம் போனவள், மல்லிகா நின்ற கொட்டிலைப் பார்க்காமல் திரும்ப முடியாதவளாக ஒரு விநாடி திரும்பிப் பார்த்தாள்.
வெள்ளை நிறத்தில் கபிலப் புள்ளிகளுடன், நிமிர்ந்த, நேரிய கொம்புகள் இரண்டை நீட்டி நிற்கும் மல்லிகாவின் கொட்டில் வெறுமையாக இருந்தத. பிழுக்கைகள் எதுவுமின்றி நிலம் சுத்தமாகக் கிடந்தது. கிடங்கு வெட்டி மல்லிகாவைப் புதைத்த இடத்தைக் கண்கள் வலியவே சென்று தழாவின. வாழைக் குட்டிகளின் நடுவில் புரட்டிப் போடப்பட்டிருந்த அந்தப் புதிய மண்ணின் அருகே சதீஸ் நின்று பார்த்துக்கொண்டிருந்தான். அவன் எப்போது படுக்கையிலிருந்து எழுந்து வந்தான் என்று தெரியவில்லை.
மல்லிகாவின் வயிற்றில் நிறை மாதமாக வளர்ந்திருந்த குட்டி வெளியே பிறந்து விட்டிருந்தால் கூட, அது தாயின் இழப்பை சதீஷ் அளவிற்குக் கொண்டாடியிருக்காது ? சதீஷின் கவலையை ஆற்றவே முடியாத போலிருந்தது. மாலை நேரங்களில் வெட்டைகளுக்குச் சென்று செடி கொடிகளை மேய்ந்துவிட்டு வரும் மல்லிகாவைக் கொட்டிலில் கட்ட யாரும் போகாவிட்டால் வீட்டு வாசலுக்கு வந்து படியில் இரண்டு கால்களை வைத்து நிமிர்ந்து உள்ளே எட்டிப்பார்த்து, "மே.மே." என்று கூப்பிடும்.
அது தன்னைத்தான் கூப்பிடுகிறதென்று ஓடிப்போகும் சதீஷ், அதன் கழுத்தில் கட்டிய தடியை அவிழ்த்த, முதகில் தடவி

சமுதாயம் ஒரு சறுக்குப் பாறை 45
அழைத்துச் சென்று கொட்டிலில் கட்டிவிட்டு வருவான். இதுவரையில் யாருடைய தோட்டக்காணிகளுக்குள்ளும் மல்லிகா நுழைந்ததாய்ச் சரித்திரமே இல்லை. அப்படியான மல்லிகா!
சதீஷினால் அந்த இழப்பைத் தாங்க முடியாதுதான்!
"சதீஷ். இண்டைக்குப் பொங்கலெல்லே ராசா! அப்பா தோட்டத்தாலை வர முந்தி மாவிலை தோரணத்தைக் கட்டு மேனை."
அவனை முதகில் தடவி ஆறுதல் படுத்திவிட்டு வீட்டைக் கூட்டி, முற்றத்தையும் கூட்டிச் சாணி தெளித்தாள் தங்கராணி
அப்போததான் நித்திரை விட்டெழுந்து தலையைச் சொறிந்த கொண்டு முற்றத்திற்கு வந்த கெளசி, "அம்மா நான் கோலம் போடட்டே?” என்று எந்தவிதமான பாவமும் அற்ற குரலில் கேட்டாள். அவளது குரலில் இருக்க வேண்டிய தள்ளலையும் மல்லிகா கொண்டுபோய் விட்டதா?
சட்டியில் கரைத்திருந்த கோதமை மாவில் பழந்தணி நுனியைத் தோய்த்துத் தோய்த்து, கோடுகளைக் கீறுகையில் பன்னிரண்டே வயதான கெளசியின் அழகிய நீள விரல்கள், கோலங்களை உருவாக்கும் அழகைத் தனக்குள் ரசித்து நிறைந்தவாறே அடுப்பை மூட்டிப் பானையை ஏற்றினாள் தங்கராணி
அடுப்பில் பாளை மூண்டு நன்றாக எரிந்து கொண்டிருந்தபோது, மிளகாய்க் கன்றுக்கு நீருற்றிவிட்டுத் தோட்டத்திலிருந்த திரும்பி விட்ட கனகர் குளித்துவிட்டு அள்ளு செம்பில் நீரும் கொண்டு வந்தார். சதீஷ் வந்து அப்பாவுடன் சேர்ந்து குடத்தில் நீர் விட்டு

Page 29
கோகிலா மகேந்திரன் 46
மாவிலையும் தேங்காயும் பூவும் வைத்து தலைவாழையிலை மேல் நிறைகுடம் வைத்தான். செல்லம் வீடும், தங்கராணி வீடும் தமத பொங்கல்களைப் பரஸ்பரம் பரிமாறிக்கொள்வது எத்தனையோ வருடகால வழக்கம். இம்முறை செல்லம் பொங்கல் தர வரமாட்டாள் என்றே நினைத்தாள் தங்கராணி கடந்த பல வருடங்களில் இரு வீடுகளினதும் அந்தஸ்துகள் சமமாக இருந்திருக்கின்றன. கடந்த இரு வருடங்களாய். மெது மெதவாக அந்தச் சமநிலை குலைந்தவருகிறதே!
செல்லத்தின் கணவன் சிவராஜா வெளிநாடு சென்றதன் பின் பணமும் சேரச்சேரக் கொஞ்சம் கொஞ்சமாக நிறம்மாறி, இப்போது முற்றாகவே சுயநிறம் அற்றவளாகிவிட்டாள் செல்லம். இப்போதெல்லாம் அவளத மனம் இருந்த இடத்தில் அதற்குப் பதிலாகத் திமிரும் அகங்காரமும்தான் கொலு வீற்றிருக்கின்றன. உடம்பில் செங்குருதிக்குப் பதிலாக சவுதியின் ரியால் தான் ஒடுகிறத.
இல்லாவிட்டால் இப்படியெல்லாம் செய்யக் கூடியவள் அல்ல அவள்!
"பிள்ளை கெளசி, அங்கை குசினி அலுமாரி அடித்தட்டிலை
சக்கரையும் பயறும் வைச்சிருக்கிறன். எடுத்தக் கொண்டு வா மேனை . "
கோலம் போட்டு முடித்துக் கை கழுவிக் கொண்டு எழுந்த கெளசி உள்ளே செல்ல,
"கசுக்கொட்டை, முந்திரிகை வத்தல், நெய். ஒண்டும் இல்லையோ அம்மா ?” என்று கேட்டான் சதீஸ்.

சமுதாயம் ஒரு சறுக்குப் பாறை 47
"கொண்ணன் இருந்திருந்தால் எல்லாம் போட்டுச் செய்திருப்பன்." என்பது தங்கராணியின் அழுகை ஊடறுத்த பதில்,
"முண்டு வருஷத்துக்கு முந்திப் போனவனை இப்ப நினைச்சு அழாமல் வேலையைப் பார் தங்கம்."
என்று கூறிக்கொண்டே வட்டமாய் உருட்டி மூலை பிடித்த பிள்ளையாருக்கு அறுகம்புல் குத்தி வாழையிலையில் வைத்தார் கனகர்.
'லட்சத்திலை லட்சமா. ஈ, எறும்பு வாழ்க்கை வாழ்ந்த போனவனே என்ரை பிள்ளை ? அல்லத செல்லத்தின்ரை மேன் மாதிரிப் பயந்த வெளிநாட்டுக்குப் பறந்தவனே? அப்பிடி எண்டாத்தான் கவலைப் படவேணும்.
நினைக்க வேண்டாம் என்று தானே கூறும் விடயத்தைத் தானும் ஒருமுறை நினைத்த முடித்தார் கனகர்,
"செல்லம் மாமியவை எல்லாம் போட்டு வடிவாப் பொங்குவினம். எண்ணம்மா?" என்று மீண்டும் கசுக்கொட்டையை நினைவில் கொண்ட சதீஷ். போன வருஷம் கொளுத்தி மீதம் இருந்த இரண்டு பூவிறிசுகளை எடுக்க உள்ளே ஓடினான்.
“அவை இந்த முறை எங்களுக்குப் புக்கை தராயினம். அவரையின்ரை வெளிநாட்டுக் குறோட்டனிலை ஒரு இலையை எங்கடை மல்லிகா திண்டிட்ட கவலையிலை."
நேற்றைய சம்பவத்தை மீண்டும் நினைவுக்குக் கொணர்ந்தாள் கொளசி. வெளிநாட்டுப் பணத்தில் கட்டிய புதிய வீடு, வெளிநாட்டு

Page 30
கோகிலா மகேந்திரன் 48
ரிவி டெக், வெளிநாட்டு அல்சேஷன் நாய், வெளிநாட்டுச் சட்டைகள், மணிக்கூடுகள், வெளிநாட்டுக் ஹொண்டா, குறோட்டனும் வெளிநாட்டுக் குறோட்டன்!
பால் பொங்கிக் கிழக்கே சரிந்ததை ஒரு விநாடி மகிழ்வுடன் பார்த்தாள் தங்கராணி ஒரு விநாடிதான்!
"பால்பொங்கிட்டுத. அரிசியைப் போடுங்கோவனப்பா." சலனமற்று அந்த வார்த்தையைச் சொன்னாள்.
மல்லிகாவின் பால் நிறைந்த முலையையும், இன்றோ நாளையோ குட்டிபோடப் போகிறேன் என்றிருந்த வயிற்றையும் பார்த்தும் கூடவா அதற்குப் பூவரசங்குழையில் 'என்றெக்ஸ்’ ஊற்றிக் கொடுக்க மனம் வந்தத செல்லத்திற்கு ?
வேலியின் மறுபுறத்தில் செல்லத்தின் நடமாட்டம் தெரிந்தத. சிவராஜா வெளி நாட்டுக்குப் போக முன்னர் இவள் அறிந்திருந்த செல்லத்திற்கு இப்போத நாலு செல்லம் உடம்பில் குடியிருக்கிறார்கள் என்று சொல்லக் கூடிய தோற்றம் ! எல்லாம் வெளிநாட்டுப் பட்டர் செய்த வேலையோ?
பெட்டியில் இருந்த பச்சை அரிசியைக் கைகளில் எடுத்துப் பொங்கல் பானையை மூன்று முறை சுற்றி அரிசியைப் பானையில் போட்டார் கனகர். மூன்றுமுறை அவ்வாறு போட்டபின் மீதி அரிசியைத் தான் வாங்கிப் பானையில் கொட்டினாள் தங்கராணி
பொங்கல் வெந்த கொண்டிருந்தது, தங்கராணியின் மனதைப் போலவே! வழக்கமாகக் கொட்டிலில் கட்டி நிற்கும் மல்லிகா மாலை நேரங்களில் தான் வெட்டைக்கு மேயப் போகும். அதுவும் கழுத்தில் பெரிய தடிகட்டிய நிலையில் ! மேயப் போகும் வழியில்

சமுதாயம் ஒரு சறுக்குப் பாறை 49
செல்லத்தின் பெரிய இரட்டைக் கேற் திறந்திருந்தால். இடையிடை மல்லிகா எட்டிப் பார்த்தத உண்டு தான்! ஆனால் அப்போதெல்லாம் அதை ஒரு பெரும் பிரச்சினையாய்த் தங்கராணி உணர்ந்ததில்லை.
"எங்கடை அருமந்த குரோட்டன்ஸ், வெறி பியூற்றிஃபுல் குறோட்டன்ஸ், வெளிநாட்டிலும் நுவரெலியாவிலுமிருந்தும் கொணந்த குறோட்டன்ஸ், யப்னாவிலை ஒரு இடத்திலையும் இல்லை இப்படிக் குறோட்டன்ஸ், உங்கடை மல்லிகா கடிக்கப் பாக்குத." என்று கண்ணை உருட்டி வாயை நெளித்து, வெகு 'ஸ்ரைலா ஓரிரு முறை செல்லம் முறையிட்டதைக் கணக்கில் எடுக்காத தன் தவறை உணர்ந்து ஒரு நிமிடம் வருந்தினாள் இவள்.
இப்படிச் செய்வார்கள் என்று தெரிந்திருந்தால் வேலிப் பொட்டைப் பார்த்துக் கவனமாக அடைத்திருக்கலாம். செத்தப்போன தன் விவேகத்திற்கு, ஆட்டிற்கு, போய்விட்ட மகனுக்கு மூன்றுக்கும் சேர்த்துக் கொஞ்ச நேரம் மெளன அஞ்சலிசெலுத்துவத போலிருந்தத தங்கராணியின் நிலை.
வாழ்க்கை வள்ளம் வறுமை அலைகளுக்குள் போராடினாலும் அமைதியான குடும்பம் இவருடையது. அந்த அமைதியுடனே பொங்கலை நடத்தியிருக்கலாம். சீ. மல்லிகா எல்லாவற்றையும் வெறுமையாக்கி விட்டத.
மல்லிகாவைக் கட்டியிருந்த கயிறு உக்கியிருந்ததைத்தான் இவள் கவனிக்கவில்லை யென்றால். உக்கியிருந்த கயிற்றை அறுத்தக்கொண்டு செல்லத்தின் வீட்டினுள் அத நுழைந்ததம் பல நிமிடங்களாய்த் தெரியவில்லை. கனகர் தோட்டத்திற்குப் போய்விட, சதீஷம் கெளசியும் பின் வளவில் படலப்பட்டம் விட்டுக்கொண்டிருக்க, இவள் மும்முரமாக மத்தியானச் சமையலில் ஈடுபட்டிருந்த நேரம் மல்லிகா மெளனமாய்த் தன் மரண ஊர்வலத்தைத் தொடங்கிவிட்டத.

Page 31
கோகிலா மகேந்திரன் 50
செல்லம் மல்லிகாவிற்கு நஞ்சூட்டி அது இறக்குந் தறுவாயில் போட்ட ஒருமரண ஒலத்திற்றாண் இவள் வந்து வெளியே எட்டிப் பார்த்தாள்.
மல்லிகாவின் குரலை உடனே இனம்கண்டு அடுப்பில் குழம்பு பொங்கி ஊற்றினாலும் ஊற்றட்டும் என்று இவள் செல்லம் வீட்டிற்குத் தடித்துப் பதைத்து ஓடிப்போனாள்.
நாலு காலையும் வீசி எறிந்து உதறிநடுங்கிக் கொண்டிருந்தத மல்லிகா, அப்போதும் கூட இவள் புரிந்த கொள்ளவில்லை.
“என்ன செல்லமக்கா..? என்ன நடந்தது மல்லிக்கு ?" என்று கேட்டபடி அருகில் சென்றபோதுதான் மல்லிகாவின் தலைப் பக்கத்தில் கிடந்த பூவரசங் குழையில் 'என்றெக்ஸ் நெடி
விஷயம் விளங்கி விட்ட ஒரு கணத்தில் குபிரென்று தீப்பற்றியத மாதிரி இவள் முகத்திலும் கண்களிலும் படர்ந்த கோபத்தை அடக்கிக்கொண்டு செல்லத்திலும் செல்லத்தின் பிள்ளைகளிலும் தெரிந்த மெளனத்தை மேவிக்கொண்டு மீண்டும் கேட்டாள்.
"ஏன் அக்கா இப்படிச் செய்தனிங்கள்.?”
"நாங்கள் என்ன செய்தனாங்கள்? தோட்டத்தக்கு அடிச்ச 'என்றெக்ஸ்' மிச்சம் உதலை ஊத்திக்கிடந்தது. உண்ரை மல்லிகா உன்னைப் போலை கெடுவிலை வந்து திண்டதுக்கு நாங்களே பாடு?"
முதல் அம்பே நஞ்சு தோய்த்த வந்தது.
சில வருடங்களுக்கு முன் இருந்த செல்லம் எங்கே? இப்போது அந்தச் செல்லத்திற்குள் எத்தனை செல்லங்கள்?

சமுதாயம் ஒரு சறுக்குப் பாறை 51
குரூரமான செல்லத் திமிர் கொண்ட செல்லம் : உயிர்களில் கருணை யற்ற செல்லம்! அடுத்தவரை அவமரியாதை செய்து மகிழும் செல்லம்!
செல்லம் சொன்னது வெறும் பொய்யைத் தவிர வேறில்லை என்று அந்தக் கண்களின் இடுக்கிலும், உதட்டில் நெளிந்த வஞ்சகச் சிரிப்பிலும் எழுதி ஒட்டியிருந்தத. ஆயினும் தங்கராணி பொறுமையுடன் கேட்டாள்.
"ஆடு வந்த உடனை நீங்கள் என்னைக் கூப்பிட்டிருக்கலாமே அக்கா ?”
"ஆடு எங்கை வந்தது? நீங்கள்தானே எரிச்சலிலை அவிட்டு விடுறணிங்கள்? பிறகேன் உங்களைக் கூப்பிடுவான்?”
பார்வையில் இருந்த சிறிதளவு தோழுமையையும் அவசரமாக விலத்திக்கொண்டு கூறினாள் செல்லத்தின் மூத்தவள் ராஜி.
"நீங்கள் பக்கத்து வீட்டிலை இவ்வளவு வசதி வாய்ப்பா இருந்தும் ஒரு அந்தரம் ஆபத்துக்கும் நான் உங்களிட்டைக் கடமைப் படேல்லை. நான் என் பாடாய் இருந்தன். நான் உங்களுக்கு என்ன செய்து போட்டன் எண்டு நீங்கள் இப்பிடி..?"
சரேலென்று தங்கராணியின் பார்வை கூர்மையாகி செல்லத்தின் கண்களுக்குள் பதிந்தது. குரல் வேகமாகி இறுக்கிற்று. பின்னர் திடீரென்று இளகிக் கண்களில் நீரும், குரலில் தளதளப்பும் தோன்ற, வசனம் முடியாமல் நடுவில் நின்றத.
"நாங்கள் உனக்கு எவ்வளவு உதவியள் செய்திருப்பம். ஆனால் நீ உன்ரை ஆட்டைவிட்டு எங்கடை வடிவான குறோட்டன்ஸை அழிக்க வேணும் எண்டு நாண்டு கொண்டு நிண்டாய். கடவுள் தீர்ப்பு" என்று செல்லம் சொல்லிக் கொண்டிருக்

Page 32
கோகிலா மகேந்திரன் 52
கையில் அவசரமாகக் குறுக்கிட்டு, இவள் கேட்டாள் "நீங்கள் என்ன செய்தனிங்கள்?"
அப்போது தான் அந்த கிறனேற் செல்லத்தினால் வீசப்பட்டது.
f
9. . . . நாங்கள் உனக்கு ஒண்டும் செய்யேல்லைத் தான். சம்பரப்பிள்ளை வாத்தியார் என்னசெய்தவர் எண்டு எங்களுக்குத் தெரியாதே?"
அதற்கு மேல் தங்கராணி எதுவும் கதைக்கவில்லை. ஒரு விநாடியில் சாதாரணப் பட்டுப் போனவள் மாதிரி இறந்து விட்ட மல்லிகாவைத் தறதறவென்று இழுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தாள். வாழைக் குட்டிகளுக்கிடையில் வெட்டிப் புதைத்தாள்.
உள்ளே புகைந்த புகைந்த வெகுநேரம் எரிந்து கொண்டிருந்த ஒரு உணர்வு இன்னும் வெகு நேரம் புகையும் என்று தோன்றியத.
வெற்றிலை, வாழையிலை, வாழைப்பழம், தேங்காய், இராசவள்ளிக்கிழங்கு போன்ற பொருள்கள் தொடர்பான 'கொடுக்கல் வாங்கல்களுக்கு அடிக்கடி கனகரிடம் வந்து சந்தோஷமாய் கதைத்துத் தேநீர் அருந்திப்போகிற சிதம்பரப்பிள்ளை உபாத்தியாருக்கும் மல்லிகாவின் கொலைக்கும் என்ன தொடர்பு?
பொங்கல் முடிந்து, மூன்று இலைகளில் படைத்த, கர்ப்பூரம்
காட்டிப் படையலைச் சுற்றிவந்த சூரியனை வணங்கினார்கள் தங்கராணி குடும்பத்தினர்.
மார்கழி முப்பது நாளும் ஒவ்வொன்றாக வைத்து வழிபட்ட பிள்ளையார்களை ஒன்றாக ஒருதட்டில் வைத்து கோயில் குளத்தில் போடுவதற்காக எடுத்துச் சென்றான் சதீஷ்,
படைத்த இலைகள், பொங்கல்ப்பானை, வாழைப்பழம் போன்ற பொருள்களை உள்ளே எடுத்துச் சென்றாள் கெளசி.

சமுதாயம் ஒரு சறுக்குப் பாறை 53
திருநீறும், சந்தனமும், குங்குமமும் எல்லோருக்கும் விநியோகம் செய்தார் கனகர். செல்லம் வீட்டிற்குப் பொங்கல் கொடுப்பதா, இல்லையா ? மனக்கடலில் சிந்தனை எனும் கரு ஆர்ப்பரித்துத் தள்ளி எழுந்து, வாயைப் பிளந்து, இறுதியில் கனகருடன் ஏதம் கலந்தாலோசிக்காமலே, அயல் வீட்டுடன் பகை' இருக்கக் கூடாது என்று நிதானமான முடிவுக்கு வந்த ஒரு சிறு பெட்டியில் பொங்கல் எடுத்துக்கொண்டு செல்லம் வீட்டினுள் நழைந்தாள் தங்கராணி
முற்றத்தில் கட்டி நின்ற "வெளிநாட்டு அல்சேஷன் நாயின் முதகைத் தடவிக்கொண்டு,
"நீ பொல்லாத பெட்டை என்ன ? முன் வீட்டு முத்தையாப் பரியாரியாற்றை கோழிக் குஞ்சுகளைப் பிடிக்கப்பிடாத எண்டு உனக்கு எத்தினை தரம் சொல்லியிருப்பன்.ம். இண்டைக்கும் இரண்டு முடிச்சுப் போட்டாய் என்ன. எண்டாலும் ஆள்குறி தவறாமல் பிடிக்கிறதிலை வலுகெட்டிக்காரி. நைஸ் டெய்சி."
என்று கொஞ்சிக் கொண்டிருந்த செல்லத்தின் வார்த்தைகள் தங்கராணியின் செவிகளில் தெளிவாகவே விழுந்தன.
சமுதாயம் என்ற பாறையில் பணம் என்ற படிகளைக் கொண்டு வேகமாகவே ஏறிய செல்லம்!
(rtypbnC - 11.01. 87)
-0 + ()

Page 33
வாழ்வும் ஒரு வலைப் பந்தாட்டம்
முந்தின விடுமுறை நாளின் மகிழ்வை நினைத்து ஏங்கி, மறு நாள் பிறந்தும் விடுபடாத தயரில் மூழ்க்கிக் கிடக்கும் இந்தத் திங்கட்கிழமை, பல சமயங்களில் இவளுக்கு வெகு தயரம் மிக்கதாய் இருந்திருக்கிறது.
அவற்றைப் போலில்லாமல் இந்தத் திங்கட்கிழமை மாலை உற்சாகம் நிறைந்ததாய்த் தொடங்கியிருப்பது போலவே, உற்சாகம் நிறைந்து முடியவேண்டும் என்று அவள் மனதார விரும்பினாள். இறைவனை வேண்டினாள்.
இலை தளிர் காலத்து அறிகுறியாய் மைதானத்தைச் சுற்றியிருந்த பெரு மரங்கள் யாவும் பூத்து நிறைந்திருந்தன. அருகே நிற்பவர்களை மணம் வீசி மகிழ்வித்தன. இந்தப் பருவகால விதிகள் அவளுக்கு நிறையவே பிடிக்கும்!
வலைப் பந்தாட்ட விதிகளும் கூடத்தான்!
மையத்தில் நின்று விளையாடும் தேவகி அபாரமாக ஆடிக்கொண்டிருந்தாள்! அவளிடம் வருகின்ற பந்துகள் யாவும்

வாழ்வும் ஒரு வலைப் பந்தாட்டம் 55
பெரும்பாலும் தவறாமல் சிறை தாக்கு வோளிடம் சென்று பேற்றுக் கெய்யும் மதிவதனியிடம் சென்று கொண்டிருந்தன. மதிவதனி கொக்கு' என்ற பிரபலமான அவளத பட்டத்திற்குப் பொருத்தமாய் நல்ல உயரம் ! அவளிடம் பந்து போய்விட்டால். நின்ற நிலையில் எட்டிப் போட்டால் போதம்! பந்த தவறாமல் வளையத்தினூடாக விழுந்து கை தட்டலைப் பெற்றுக் கொள்ளும்.
இன்றைய வெற்றி எப்படியும் அவளது கல்லூரிக்குத் தான் வரும்! வரவேண்டும்! இல்லாவிட்டால்..?
"என்ன மிஸ். ரங்காதரன். இண்டைக்கு நாங்கள் வெல்லுவமோ ?" இறுதிப் போட்டியைப் பார்ப்பதற்குத் தானாகவே ஆர்வம் கொண்டு சைக்கிளில் வந்திருந்த நல்லநாதன் மாஸ்டர் அருகில் வந்த கேட்டார்.
"எங்கடை வெற்றியைப் பொறுக்க மாட்டாமல் அவையின்ரை ஆக்கள் இடையிலை கிறவுண்சிலை பூந்து குழப்பியடிக்காட்டில் போதம். அசைக் கேலாத எங்கடை வெற்றியை..."
தீர்க்கமான நம்பிக்கையுடன் கூறிக் கொண்டே ஸ்கோர் போர்ட் டைப் பார்த்தாள்.
ஐந்துக்கு ஆறு:
ஆட்டம் ஆரம்பித்த ஏழு நிமிடங்கள் முடிந்த நிலையில்
எதிரணிதான் முன்னுக்கு நின்றது! ஆயினும் அவளுக்கு அபரிமிதமான நம்பிக்கை !
"கஷ்டம் போலை கிடக்கு, என்ன ?." நல்லநாதன் மாஸ்டர் கேட்டார். இவள் மெளனமானாள். நல்லதை எதிர்பார்த்துக் கூடப் பழக்கமில்லாத ஆசிரியர்கள்! தான் நம்பும் போது மற்றவர்களை

Page 34
கோகிலா மகேந்திரன் 56
நம்பவைக்க வேண்டியத என்ன நிர்ப்பந்தம் என்ற கேள்வி மனதில் தோன்ற அமைதி பெற்றாள்.
எதிரணியின் மைய ஆட்டக்காரியான பிள்ளை குறி வட்டத்தினுள் வந்து பந்தைப் பிடித்த வேகமாய் தமது பேற்றுக் கம்பத்தின் பக்கமாய் வீசி எறிந்தாள். மைய ஆட்டக்காரி குறி வட்டத்தனுள் வரலாமா? இவளுக்குக் கண்களில் புன்னகை மறைந்த சிறிது எரிச்சல் தெரிந்தது. நடுவர் இந்த நிகழ்வுக்கு ‘விசில்' ஒலிக்கவில்லை. ஒரு வேளை காணாமல் இருக்கலாம். சில வேளை கண்டும் காணாதத போல் இருக்கலாம்.
மனதில் தோன்றிய அரிப்புணர்வை மெதவாகத் தடைத்தெறிந்து விட்டுத் தொடர்ந்து ஆட்டத்தைக் கவனித்தாள்.
எதிரணி மாணவி ஒருத்தி பிடித்த பந்து கைதவறி விழுந்து கொண்டிருக்கையில் ஜானகி எடுத்தெறிந்தாள். வெளியே நின்ற பார்வையாளர் சிலர் சத்தமிடத் தொடங்கினர்.
"தட்டிப் பறிக்கவே வந்தனிங்கள்?"
"அம்பயர் எவ்வளவு லஞ்சம் வாங்கினீர்?"
"நிப்பாட்டு விளையாட்டை." பலமாய் எழுப்பப்பட்ட கோஷங்கள் சிறிது நேரத்தில் மெதுவாக ஓய்ந்தன. கோஷங்கள் நீதியை அநீதியாயும், உண்மையைப் பொய்யாகவும் மாற்றி விடுமோ? மாற்றி விடும் போலத்தான் தெரிந்தது.
உள்ளத்தின் அடித்தளத்தில் தோன்றிய எதிர்ப்புணர்வை மிக நிதானத்துடன் சமாளித்தக் கொண்டாள். நிமிர்ந்து பார்த்தாள். நீலவானில் வெண் மேக பிசிறுகள் ஒன்றை ஒன்று தரத்திச் சென்றன.

வாழ்வும் ஒரு வலைப் பந்தாட்டம் 57
தரத்துகின்ற நினைவுகளின் துயர் மனதில். இன்று மட்டும் வென்று விட்டால், பழைய தயரங்கள் யாவும் மறைந்த
விடும்.
தமிழ்ப் பெண்ணாய்ப் பிறந்ததில், உயர்கல்வி வாய்ப்புகளின் கதவுகள் தரப்படுத்தல் என்ற கோலினால் தாழிடப்பட்டிருந்த நிலையில் தான் புத்தி ஜீவியான அவள் ஒரு ஆசிரியையாக நேர்ந்தத. அத ஒரு வகையில் ஒரு விபத்தத்தான்!
ஆயினும் ஆசிரியையாக வந்த பிறகு, டெலிவிஷனில் தோன்றும் வெறும் விம்பம் போல இருக்க அவள் விரும்பியதில்லை. தன்னால் முடிந்த எதையும் கல்லூரிக்காகச் செய்யும் உயிர்ப்புள்ள ஜீவனாக இருக்க வேண்டும் என்ற நினைவு அவளுக்குள் எப்போதும் இருந்தது.
இதவரை தோல்விகள் என்ற நிழல்களைத் தரத்தியே வந்த வாழ்வாக இருந்த போதிலும், இனிமேலாவது மனதக்கு நிறைவாய் ஏதோ செய்ய வேண்டும்.
கல்லூரிக்கு இவளைப் போலவே புதிதாக வந்த அதிபர் ஒரு ஆசிரியர் கூட்டத்தில் சொன்னார்.
"கடந்த சில வருடங்களாக எமது கல்லூரியின் வலைப்பந்தாட்ட அணி சிறப்பாக இல்லை. நாங்கள் மாவட்டப் போட்டிகளில் பங்கு பெறவில்லை. பங்குபற்றிய ஓரிரு சிநேக பூர்வமான போட்டிகளிலும் வெற்றிபெறவில்லை. இவ்வருடம் இந்த அணியைப் புத்தயிர் பெறச் செய்ய வேண்டும். ஒரு சுறுசுறுப்பான இளம் ஆசிரியை இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் யார் விரும்பி ஏற்றுக் கொள்வீர்கள்?"

Page 35
கோகிலா மகேந்திரன் 58
மெளனத்தின் சிறப்பை யுணர்ந்து எல்லா ஆசிரியைகளும் வாய்திறவாமல் உட்கார்ந்திருந்தார்கள். இவளுந்தான்!
இருக்கும் வேலைகள் போதாதென்று. 'வலைப்பந்தாட்டப் பொறுப்பாசிரியை' என்று இன்னொரு பதவியையும் வாங்கிக்கொண்டு பின்னர், பதவி என்று சுமப்பதா? சிலுவை என்று சுமப்பதா?
ஒருவரும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், புதிய ஆசிரியையான, இவளின் தயக்கத்தை அதிபர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.
"ரீச்சர். மிஸ் ரங்காதரன். உங்களைத்தான். இந்தப் பொறுப்பை எப்படியும் நீங்கள் தான் ஏற்றுக் கொள்ள வேணும். முடியாதெண்டு சொல்ல முடியாத. கல்லூரி நன்மைக்காண்டித்தான் கேக்கிறன்."
புதிய அதிபர் கல்லூரியில் சில நல்ல முன்னேற்றங்களை விரும்புகிறார்! ஆசிரியர்கள் எல்லாரும் அவரை நட்டாற்றில் கைவிடுவதம் பிழைதான். அவள் ஏற்றுக் கொண்டாள்.
அதன் பின்னர் சூறைக் காற்றில் அகப்பட்ட தளிர் மாதிரி. அவள் பட்ட பாடுகள்!
எல்லாப் புண்களும் இன்றைய வெற்றியால் மறைந்து போகும்! இடைவேளைக்கு ஐந்து நிமிடங்களேயிருக்கையில். "ஸ்கோர் போர்ட் ஒன்பது பதினொன்று காட்டுவதால் மனம் சிறிது சஞ்சலப்படுகின்றத. ஒரு வேளை தோற்றுப் போய் விடுவோமோ ?
தோல்வியை ஏற்றுக் கொள்வத ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறத? பாதுகாப்பு உணர்வு இல்லாதவர்கள் தான் கலைஞர்களாகிறார்கள் என்று எங்கோ வாசித்த நினைவு!

வாழ்வும் ஒரு வலைப் பந்தாட்டம் 59
தோல்வியை ஏற்றுக் கொள்ள விரும்பாதவர்கள் தான் விளையாட்டில் அக்கறை கொள்கிறார்களா?
இவர்களின் பேற்றுக் கம்பத்தின் பக்கமாய் வேகமாய் வரும் பந்தை மதிவதனி பிடிக்கப்போகும் போது, தள்ளிப்பாய்ந்த வந்த எதிராளி ஒருத்தி மதிவதனியின் கால்களை முழங்கால் கொடுத்தத் தடக்கி மடக்கி விட்டாள். அவள் இடறிக் கீழே விழ பந்த எதிரணிக்குச் சென்றது.
மனதிற்குள் எரிந்தத இவளுக்கு! வாழ்க்கையிலும் செய்கிறார்கள்! இங்கும் செய்கிறார்கள்! ஒரே மனிதர்கள், அதே மனிதர்களின் பிள்ளைகள்!
போட்டிக்குப் பொறுப்பாக இருந்த உயர் அதிகாரியிடம் சென்றாள். மிகவும் தீட்சண்யமான பார்வை இவளுக்கு அப்பார்வைக்கு அவரது எலும்புக்கடடு நிச்சயம் உதிர்ந்திருக்கவேண்டும். உதிராத படியால் அவர் நிமிர்ந்த கேட்டார்.
"என்ன மிஸ்.? என்ன பிரச்சினை?"
"காலைத் தடக்கி விழுத்தியினம், வேணுமென்டு இடிக்கினம். வெளியாக்கள் அம்பயரைக் குழப்பினம்., ஃபவுல் கேம் விளையாடினம். எல்லாத்துக்கும் அம்பயர்ஸ் பேசாமல் நிண்டால். இதென்ன சேர் விளையாட்டு. "
கால்களின் இடையில் வாலைச் செருகும் நாயின் பணிவுடன் தான் கேட்டாள்.
"அதுக்கொண்டும் செய்யேலாது. அம்பயரின்ரை தீர்ப்புத்தான் முடிவு என்னோடை கதைக்க வரப்பிடாது. பொம்பிளையளோடை பெரிய கரைச்சல்."

Page 36
கோகிலா மகேந்திரன் 60
அவர் சிறிய குட்டி நாய் போல் வள்ளென்று பாய்ந்தார். அவர் கண்கள் வழக்கம் போலவே, எல்லாப் போட்டிகளின் போதும் இருப்பத போலவே, சிவந்திருந்தன!
சொல்லை மிஞ்சிய மொழி கண்ணிர். அந்த மொழியின் உதவியுடன் இவள் திரும்பி வந்தாள். அதிபர் வந்திருந்தால் அவரிடம் முறைப்பட்டிருக்கலாமோ? அவர் தான் வரவில்லையே, பிறகென்ன?
இவள் வலைப்பந்தாட்ட அணியைக் கூட்டிக் கொண்டு கல்லூரியிலிருந்த புறப்பட்டபோது, தன்னுடன் வரும்படி வேறு எந்த ஆசிரியர்களையும் கேட்கவில்லை. கேட்க வேண்டிய அவசியமிருப்பதாய் எண்ணவில்லை. அது கூடப் பிரச்சினையாகப் போய் விட்டதாம்.
அடக்கமாக இருப்பத, விலகி நடப்பத நல்ல தென்று நினைத்தாள். அத்ை "அடக்கமோ? புத்திசாலித்தனமான அகம்பாவம். இவை எல்லாம் என்ன ஆக்கள். தான் பெரிசெண்ட திமிர். தனக்கு ஒருத்தற்றை உதவியும் தேவையில்லை எண்ட கொழுப்பான நினைப்பு."
ஒரு ஆசிரியையால் அந்த நிகழ்வு இப்படி வர்ணிக்கப்பட்ட தாய் சற்று முன் கமலநாதன் மாஸ்டர் சொன்னார்.
பத்மநாதன் ரீச்சராகத்தான் இருக்கும்!
தற்செயலாக நடப்பத போன்ற பாவனையில் தனது
முழங்கையினால் கோமதியின் நெஞ்சில் ஓங்கி இடிக்கிறாள் ஒரு மாணவி ஒரு கணம் நெஞ்சைப் பிடித்தக் கொண்ட கோமதி,

வாழ்வும் ஒரு வலைப் பந்தாட்டம் 61
மறுகணம் அதை விழுங்கிச் சமாளித்துக் கொண்டு முன்போலவே விளையாடுகிறாள்.
வலைப்பந்தாட்டக் கோஷ்டியைக் கல்லூரியில் மூன்று மாதமாய் மாலை தோறும் விடாமல் பயிற்சி கொடுத்தபோது ஏற்பட்ட பிரச்சினைகள் கொஞ்சமா?
அடி மனதில் ஒரு ஊமை அரிப்பு:
விளையாட்டுப் பயிற்சிக்கென வந்த மேனகா ஏன் தனது படத்தைக் கொண்டு வந்தாள்? சரிஏதோ கொண்டு வந்தாள். அது உண்மையாகவே தொலைந்த போயிருந்தால் உடனேயே இவளிடம் வந்து சொல்லியிருக்கலாமே. மிஸ் ரங்காதரன் என்று ஒரு ஆசிரியை வலைப்பந்தாட்டப் பொறுப்பாசிரியையாக இருப்பது அவளுக்கேன் நினைவு வராமல் போயிற்று? அவள் ஏன் நாகேஸ்வரன் மாஸ்டரிடம் சென்று "என்ரை ஃபோட்டோவைக் காணேல்லை." என்று சொல்ல வேண்டும்?
பெண் பிள்ளைகள் தமது பிரச்சினைகளை ஆண் ஆசிரியர் களிடம் சொல்லித் தீர்த்துக்கொள்ள விரும்புகிறார்கள். இது போன்ற நிகழ்வுகளை~அவற்றின் உளவியல் காரணங்களை ஒதுங்கி நின்று ஒரு புறநோக்குடன் ஆராய முடிந்தால் நல்லது, முடியுமா?
அதிபர் இவளிடம் வந்து "என்ன மிஸ், உங்கடை 'நெற்போல் பிறக்ரிஸ்’ நடக்கிற நேரம் பெரிய பிரச்சனையளாம். நீங்கள் எனக்கும் சொல்லேல்லை. தெரியாதது மாதிரி இருக்கிறியள். பிள்ளையளின்ரை ஒழுக்கத்தை நீங்களெல்லோ கவனிக்கவேண்டும்?" என்று இவளது அக்கறையில் குறைகாணும்

Page 37
கோகிலா மகேந்திரன் 62
தோரணையில் கேட்டிராவிட்டால் "யார் போய் எதை எங்கு சொன்னால் எனக்கென்ன?" என்று பேசாதிருந்திருக்கலாம்.
பின்னர் விசாரித்ததில் அவள் விரும்பியே அந்தப் படத்தை ஒரு மாணவனிடம் கொடுத்துவிட்டுக் காணவில்லை என்பதாய் ஆண் ஆசிரியர் ஒருவரிடம் முறையிட்டாள் என்று தெரிந்தது.
தனது புகைப்படத்தை மிக விரும்பிமாணவர்கள் களவெடுத்தச் செல்வதால் தான் அவ்வளவு அழகாக இருக்கிறேன் என்பதை மறைமுகமாய் ஆண் ஆசிரியர்களுக்குச் சொல்வதை அவள் விரும்புகிறாளா?
எவ்வளவு ருசிகரமான உண்மை?
தனது சொந்த முகம் எப்படியும் இருக்கட்டும்! மற்றவனுக்கு எந்த முகத்தைக் காட்டுவது என்பதுதான் எல்லோருக்குமே பிரச்சினை.
மேனகா என்ன இருந்தாலும் நல்ல டிஃபெண்டர். ஆனாலும் இத்தகைய பிரச்சினைகளால் அவளை ரீமில் வைத்திருக்க முடியாமல் போயிற்று.
பிறகு புதிதாக பாமதியைத்தேடி, அவளைப் பயிற்றி. சூழ்நிலையில் ஏற்பட்ட ஒரு தவிர்க்க முடியாத தன்மையினால் இவள் வலைப்பந்தாட்ட ஆசிரியையாக வந்த போதிலும் அவள் அதற்காக ஒவ்வொரு நிமிடமும் பாடுபட்டது என்னவோ நிஜம்!
இன்றைய வெற்றி அந்தக் கஷ்டங்களை மறக்க வைத்தவிடும்!
இடைவேளைக்கான 'விசில்' ஊதப்பட்டபோது இரு பகுதியினரும் 'கோல்' போட்டிருந்தனர்.

வாழ்வும் ஒரு வலைப் பந்தாட்டம் 63
பதினொன்று-பதினொன்று.
இடைவேளையின் போது இவள் வீராங்கனைகள் ஏழுபேரையும் கூப்பிட்டு வைத்து உற்சாகப்படுத்தினாள்.
"நாங்கள் தான் எப்படியும் வெல்லப்போறம். பயப்பிடாமல் விளையாடுங்கோ.என்ன?"
"உடம்புகளைக்கிறவை குளுக்கோசு சாப்பிடுங்கோ.மனம் களைக்கப்படாத, ஒருத்தரும். "
"டிஃபென்டேர்ஸ் பக்கம் தான் கொஞ்சம் வீக். உங்கலட பாட்னேர்ஸை விட்டிட்டு விலகப்பிடாது நீங்கள்..?”
"தேவகி கட்டைதானே. அவக்குப் பந்து போடேக்கை 'லோவர் பாஸ்" போடுங்கோ."
"தேவகி நீர் கோமதிட்டைக் குடுக்கிற மாதிரிக் காட்டிச் "சீற் பண்ணிப் போட்டு நேரை மதிவதனிக்கு எறியும்."
இவளது ஆர்வம் நிறைந்த உற்சாக மொழிகளைக் கேட்டுக் கொண்ட மாணவிகள் மீண்டும் மைதானத்தில் இறங்கினார்கள்.
இன்று வெற்றியுடன் பாடசாலை திரும்பும் போது, அதிபரும் ஏனைய ஆசிரியர்களும் மனத்தடையற்ற முறையில் இவளையும் இவளது மாணவிகளையும் பாராட்டத் தானே போகிறார்கள்! அந்த நிமிட மகிழ்வுக்காக எத்தனை கஷ்டமும் படலாம்:
தனக்குத் தெரியாத சில நுட்பமான விடயங்களைப் பயிற்றுவதற்கு விசேட பயிற்சியாளர் ஒருவரைப் பிடிப்பதற்கு இவள்

Page 38
கோகிலா மகேந்திரன் 64
அலைந்த அலைச்சல்! நாய் அலைச்சல் என்றுதான் சொல்ல வேண்டும். எத்தனை இடம் தேடி. எத்தனை பேரை விசாரித்தது.
கப்ரின் தெரிவாவது சுலபமாய் முடிந்ததா? உண்மையில் நல்ல ஆட்டக்காரியான, மையத்தில் விளையாடும் தேவகியை அணித்தலைவியாகத் தெரிவு செய்த போது, பத்மநாதன் ரீச்சர் அருகில் வந்த,
"என்னப்பா. எங்கடைதஷி இருக்கிறா.அவவைப் போடுமன் கப்ரினாய்" என்றாள்.
துஷி 'சிறைக்காவலர் நிலையில் விளையாடும் பிள்ளை.
ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கே கல்லூரியின் எல்லா நிகழ்வுகளிலும் முக்கியத்தவம் வழங்கப்படுகிறத என்று மதில்களில் எழுதப்படுவதை மெய்ப்பிக்க இவள் விரும்பவில்லை.
"தகுதி எண்டு பாத்தா. தேவகி தான் பொருத்தம். நான் இதிலை ஒரு மாற்றமும் செய்ய ஏலாது ரீச்சர்." என்றாள் இவள்.
மனச்சாட்சி அவளுக்குள் மிகப்பலமாய் ஒலித்ததில் அவள் இதனைத் தீவிரமாய்ச் சொல்லிவிட்டாள். ஆனால் அன்று முதல் பத்மநாதன் ரீச்சரின் குரல் பல இடங்களில் ஒலிக்கத் தொடங்கியத,
"இவ. நேற்றைக்கு வந்தவ. இவக்கு நெற்போல்' பற்றி என்ன மண்ணாங்கட்டி தெரியும் ?”
"இந்தியா யூனிவேர்சிற்றியிலை இவக்கு நெற்போலும் படிப்பிச்சவை யாமோ ?”

வாழ்வும் ஒரு வலைப் பந்தாட்டம் 65
"எத்தனை சீனியர் ரீச்செர்ஸ் இருக்கினம். நேற்று வந்த அதிபருக்கு வால் பிடிச்சு எல்லாப் பதவியளையும் தட்டிப் போடுவினம்"
"இவ ஓடி ஆடி விளையாட மாட்டா. அப்பிடிப்பட்ட உடம்பு பிறகு இவ என்னத்தைப் பிள்ளையஞக்குப் பழக்கிறத"
"இடைக்கிடை பின்னேரத்திலை அதிபர் வீட்டையும் போறவவாம். அந்தாளும் என்ன செய்ய. குடுத்திட்டுத."
குரல்கள் கொறிப்புகளாயும் கொக்கரிப்புகளாயும் மாறிய போது இவள் கொஞ்சம் அதிர்ந்து தான் போனாள். இருந்தாலும் பயந்த ஒதங்கி விடவில்லை.
வேகமாக வந்த பந்து ஒன்றினை ராஜினியும் மாணவி ஒருத்தியும் பிடித்தக் கொள்ள,
புளுவின்ரை போல். புளுவின்ரை பந்தது.' என்று வெளியார் கத்திய கத்தலுக்கு நடுவர் பணிந்து போனார்.
பொதவாகவே நடுவரை வெளியார் நெறிப்படுத்தம் நிலை வரவர அதிகரித்தக் கொண்டே வந்தத.
நீல நிறம் வென்று விடுமோ? "அம்பயர் தன்ரை மனச் சாட்சிக்குச் சரியா நடக்க வேணும்." இவள் சற்று உஷ்ணத்துடன் தான் கத்தினாள். ஆனால் அந்தக் குரல் மைதானத்தினுள் நழையாமல் காற்றுடன் கலந்த மறைந்ததது.
அடுத்து வரும் கணங்களின் ஆச்சரியத்திற்கு காத்திருப்பத தான் வாழ்வு ஆம்! அடுத்தடுத்த இரு கோல்களை இவள் கல்லூரி போட்டதால் ஸ்கோர்,

Page 39
கோகிலா மகேந்திரன் 66
பதின்மூன்று - பதினொன்று ஆயிற்று!
அடுத்து வந்த ஒவ்வொரு கணமும் யுகமாக நீடித்தத. மாச் முடிவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்களே இருக்கின்றன.
பந்த மாறி மாறி நடுப்பகுதியிலேயே நிற்கிறது!
ஒருவருக்குப் போய்க் கொண்டிக்கும் பந்தை நடு வழியில் தட்டி எடுத்துக் கொள்ளும் திறன் கோமதிக்கு நன்றாகவே கை வந்திருந்தத. இந்தந் திறனைப் பயிற்றுவதற்கென்றே விசேடமாய் வந்த கோபி, பிள்ளைகளைத் தனியாகக் கன்ரீனுக்குக் கடட்டிச் சென்று ரீ' கொடுத்த போதம், வேறு கல்லூரிகளுக்கிடையிலான போட்டிகளைப் பார்க்க வென்று தனியாக அழைத்தச் சென்ற போதும், பெற்றோர் இவளை நோக்கி எய்த அம்புகள் பல.
"பொறுப்பாசிரியர் எண்டிருக்கிறா. அவக்கு இந்தப் பிள்ளையஸ் போனதெண்டு தெரியாதாம்."
"தெரியாட்டால் அவ அந்தப் பதவியை ராஜினாமாச் செய்ய வேண்டியது தானே?"
பிள்ளைகளைக் கூப்பிட்டு, "நீங்கள் ஏன் எனக்குச் சொல்லாமல் கோபியோடை மாச் பார்க்கப் போனனீங்கள் ?" என்று கேட்டாள்.
"அது 'ஸ்கூல் நேரமில்லை மிஸ். சனிக்கிழமை நாங்கள்
எங்கையும் போறதக்கு உங்களிட்டை ஏன் மிஸ், சொல்ல வேணும்?"
அதுவும் சரிதான்!

வாழ்வும் ஒரு வலைப் பந்தாட்டம் 67
அதிபரிடம் போனாள். அவர் சொன்னார்,
“அவை போனா உங்களுக்கென்ன மிஸ்.எங்கையும் போகட்டன்."
"பிள்ளையளின்ரை ஒழுக்கத்தை நீங்கள் தானே கவனிக்க வேணும்" என்று கேட்ட அதே அதிபர் தான்! சந்தேகமில்லை!
அந்த நிகழ்காலத்தின் குரூரத்திலிருந்து தப்பியத பெரும் விடயம் எனலாம். சிறிது காலம் இந்தப் பதவி வகித்தால் போதம். கெட்டியான சருமம், உணர்ச்சியற்ற சருமம், தானே வந்து விடும் போல் தோன்றியத அவளுக்கு:
இவர்கள் கல்லூரியின் "ஸ்கோர் கூடியதைத் தொடர்ந்து ஆட்டம் விறுவிறுப்படைத்தது. கோமதி, ஜானகி, மதிவதனி எல்லோருக்கும் கைகளாலும் கால்களாலும் பந்தாலும் நல்ல அடி! தாறுமாறான "ஃபவுல்கள் எல்லாம் கவனிப்பாரற்று பறந்தன. அவுட் போல் களெல்லாம் இன் போல்' களாய் மாறித் தொடர்ந்து பாய்ந்தன. கால் வழுக்கிக் கீழே விழுந்து விட்ட தேவகியின் மேல் பாய்ந்த உழக்கிக் கொண்டு ஓடினாள் ஒருத்தி. இவ்வாறெல்லாம் அகோரமாய் ஆடியதில் "ஸ்கோர்,
பதினாலு ~ பன்னிரண்டு ஆகியத!
கல்லூரி அணியைத் தெரிவு செய்வதற்காய் கல்லூரியில்
இல்லங்களுக்கிடையே போட்டி நடத்திய போதும் இப்படித் தான் அகோர ஆட்டங்கள் நடந்தன.

Page 40
கோகிலா மகேந்திரன் 68
வேறு கல்லூரிகளிலிருந்த வருவிக்கப்பட்ட இரண்டு அம். பயர்கள் இருக்கக் கல்லூரி ஆசிரியை ஒருவர் தனக்கு அவர்களை விட அதிகம் தெரியும் என்று இவளிடம் கூறிக் கொண்டே ஒரு விசிலைத் தாக்கிக் கொண்டு ஊதத் தொடங்கியதே யாரும் நம்ப முடியாத வேடிக்கை நிகழ்வு! அந்த ஆசிரியையின் பிள்ளைகள் அணிகளில் விளையாடினார்கள் என்பது தெரிந்தவர்களுக்கு அது வேடிக்கையாகத் தோன்றாத மதிலில் எழுதப்படுபவற்றிலும் சில உண்மைகள் உண்டு தான்!
வேடிக்கையான அந்த நிகழ்வை நிறுத்த இவள் பட்டயாடு! சரி, இன்றைய சாம்பியன் கிண்ணத்தடன் அவற்றையெல்லாம் மறந்த விடலாம்!
அவர்கள் எவ்வளவு முயன்றும் ஸ்கோரை பதினாலு - பதின் மூன்றுக்கு மேல் உயர்த்த முடியவில்லை.
நேரம் கூட ஒரு நிமிடம் அதிகமாகவே தரப்பட்டு விட்டத. முடியவில்லை!
வெற்றிதான்!
மனம் நிறைந்த பூரிப்புடன், எல்லாம் மறந்து, கல்லூரியினுள் நழைந்த போது முதலில் எதிர்ப்பட்டத மிஸிஸ். சவுந்தரநாய கந்தான்!
"எப்படி மிஸ். ரங்காதரன் மாச். ?"
sy
"வெற்றி தான். !

வாழ்வும் ஒரு வலைப் பந்தாட்டம் 69
அவள் கைதரக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் சற்று உயர்ந்த கைகள், எதிர்பார்ப்பின் தோல்வியினால் தாமாகவே தாழ்ந்து கொண்டன.
"எண்டாலும் எங்கடை பிள்ளையளின்ரை இந்தச் சிவப்பு உடுப்புச் சரியில்லை. பட்டிக்காடு மாதிரிக் கிடக்கு. சீ. "
பொறாமை பொறாமைக் குவியல்கள்!
அவள் இதைப் பொருட்படுத்தாமல் அதிபரைத் தேடி விரைந்தாள். அணி பெருமித நடையுடன் பின் தொடர்ந்தத.
"சேர்! சாம்பியன் கப் கொண்டுதான் வந்திருக்கிறம்."
"ஆ" எண்டாலும் இந்த முறை ரீமின்ரை டிசிப்பிளின் அவ்வளவு சரியில்லை எண்டுதான் எல்லா ரீச்சேர்ஸம் சொல்லினம். நான் எப்படியும் 'மாச்" முடியட்டும் எண்டு பேசாமல் இருந்தனான். அடுத்த வருஷம் இந்தப் பொறுப்பை மிஸிஸ். பத்மநாதனிட்டைக் குடுப்பம் எண்டு யோசிக்கிறன்."
கூறிக் கொண்டே அதிபர் உள்ளே போனார். •
இவள் மனதில் ஒரு சூன்ய உணர்வு தோன்றியதைத் தொடர்ந்து அங்கு சில நிமிடங்கள் பொருள் பொதிந்த அமைதி நிலவியத.
தனக்குக் கோபம் வரக்கூடும் என இவள் எதிர்பார்த்தாள். ஆனால் வரவில்லையே!
(வீரகேசரி - 01.02. 87)
令令令

Page 41
மனிதம் மதலைகளிடம் மட்டும்
மரணத்தின் நிறமாய்க் கணக்கும் இருளில் சொட்டச் சொட்ட நனைந்தவாறு படுத்தக் கிடந்தத அந்தக் கட்டை.
தன்மீது தனக்கே ஏற்பட்டிருக்கும் சுயவெறுப்பைச் சுய மோகமாய் மாற்ற எவ்வளவோ முயன்றும் முடியாமற் போன தோல்வி மரணக் களையாய் முகத்தில் அப்பிக் கிடந்தத.
எவ்வளவோ கஷ்டப்பட்டுப் படிப்பித்த நல்ல நிலைக்கு ஆளாக்கிய பிள்ளைகள் ஒருவரும் அருகில் இல்லாதததால் தகிக்கும் தனிமை, தனிமையால் ஏற்பட்ட மூன்று வருடகால வெறுமை, வெறுமையில் வெதும்பி வந்த சுயவெறுப்பு:
காற்று, வெயில், மழை, குளிர் எதவும் பாராமல் வாழ் நாள் முழுவதம் உழைத்த உழைத்தச் சேர்த்த வலுவான உடல்: இப்படி ஆலவிருட்சம் விழுந்தது போல் திடீரெனப் படுக்கையில் விழும் என யார்தான் எதிர்பார்த்தார்கள் ?
மூன்று வருட காலம் ஒரு தனிப் பிரமச்சாரி போல் வாழ்ந்த பெரிய வீட்டின் மேற்குப்புற அறையில் வடக்குப் பக்கமாய் ஒரு கட்டில்!

மனிதம் மதலைகளிடம் மட்டும் 7
கட்டிலின் மையப் பகுதி வெட்டப்பட்டு இருக்கிறது. சிறுநீரும், மலமும் அதனூடாகக் கீழே வைக்கப்பட்டிருக்கும் மண்கடடையில் விழுவதற்கு வசதியாய்!
தப்பல் பேணி ஒன்று தலைக்குப் பக்கத்தில் இருக்கிறத. ஆனால் கிழவன் தலையை நிமிர்த்தித் தப்பக் கூடிய நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை.
வாய் மெதுவாகத் திறந்திருக்கிறத!
ஒரு கோப்பை கடான தேநீருக்கோ அல்லது ஒரு வாய் பாலுக்கோ அந்த இருளின் ஆழத்தில் அத காத்திருப்பதாய்த் தெரிகிறத.
முள்ளை முள்ளே எடுப்பத போல கிழவன் எதிர்பார்க்கும் தேநீரின் சூடு கிழவனின் உள்ளச் சூட்டைக் குறைக்குமோ ஒருவேளை?
திறந்த வாயினூடே இலையான்கள் போய் வருவது பார்க்க அருவருப்பை யூட்டுகிறத.
சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு வரை பார்க்க அதிக மகிழ்வு தரும் பட்டாடையும், வெள்ளிப்பூண் பிரம்பும், கண்ணாடியும், மலேய வாசனைத் திரவியமுமாய்த் திரிந்த உடல்:
மாலையிலிருந்த கை, கால் ஆட்டம் கூட இல்லை. கட்டிலுக்கு மேலே தெரியும் சூனிய வெளியில் கண்கள் நிலைகுத்தி நிற்கின்றன. அந்தக் கண்களில் மெதவாக நீர் கசிகிறத.
உயிர் பிரியும்வரை மன உணர்வுகளும் பொசுங்குவ தில்லையோ? மனதில் என்னென்ன நினைவுகளோ?

Page 42
கோகிலா மகேந்திரன் 72
பல வருடங்களுக்கு முன்னமே இறந்து போன மனைவியை நினைத்திருக்கலாம். அவள் இருந்திருந்தால் இப்போது தலைமாட்டில் உட்கார்ந்த அழுத கொண்டிருக்க மாட்டாளா?
வெளிநாட்டில் மிக வசதியாய் வாழுகிற பிள்ளைகளை நினைத்திருக்கலாம். கனடாவில், ஜேர்மனியில், சவூதியில், லண்டனில்.
சீ. அது மனதார எரித்தச் சாம்பராக்கிய நினைவுகளாக இருக்கும். இவர் படுக்கையில் விழுந்த முதல் நாள், பாதர் சிக். என்று எல்லாருக்கும் கேபிள' கொடுத்த போதும், "சிறீலங்காவின்ரை இண்டைய சூழ்நிலையில் நாங்கள் வர ஏலாது. பிளீஸ் டூ த நீட்ஃபுல். எங்களுக்காக எதற்கும் காவலிருக்க வேண்டாம். என்று தான் அவர்கள் எல்லாரும் சிவநாயகத்திற்குப் பதில் அனுப்பியிருந்தார்கள். அந்தப் பதில் வந்தத கிழவனுக்கும் தெரியும்! இங்கே ஒன்று நடந்து விட்டால் கூட அவர்கள் யாரும் வரப் போவதில்லை. அப்படியானால் இந்த மரணச் சடங்குகளை யார் நடத்தவத?
இந்தக் கடவுள் இருக்கிறாரே அவர் ரியலி கிறேற்'. எப்படியோ எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரு வழி கண்டுபிடித்தத் தீர்த்து விடுவார்
ஆம்! மிஸ்டர் சிவநாயகம் குடும்பம்தான் மரணச் சடங்கை நடத்தப் போகிறத!
ஆ. இப்போததான் நினைவு வருகிறது.
கடந்த வாரம் வரையில் ஒடி ஒடிக் கவனித்த விட்டு 'வீட்டை சிவநாயகத்தக்கு எழுதிப் போட்டார் எண்டாப் பிறகு.

மனிதம் மதலைகளிடம் மட்டும் 73
அந்தப் பக்கமே எட்டிப் பார்க்காத போன உறவினர் பலரையும் கூடக் கிழவர் நினைத்திருக்கலாம்.
அவரின் "ல" சுரங்களுக்காகவே ஓடிவந்த உறவினர்கள் மிஸ்டர் சிவநாயகம் குடும்பத்தையும் சேர்த்துத் தான்!
ஏன்? வீடு எழுதும் வரை வில்லங்கமாய் வந்த சேர்ந்து வேலைகள் எல்லாம் செய்து விட்டு, வீட்டை எழுதி வாங்கிக் கொண்ட பிறகு, இத கெதியாய் அங்காலை போட்டால் எங்களுக்குக் கரைச்சல் இல்லை. என்று விவேகமாய் விலகி நிற்கின்ற சிவநாயகம் குடும்பத்தைக்கூட இந்த இறுதி நேரத்தில் நினைத்திருக்கலாம்.
கடந்த இரண்டு மூன்று தினங்களாய் தேநீரோ, பாண் தண்டோ கொண்டு வருகிற சிவநாயகம் வீட்டு வேலைக்காரச் சிறுவன் முனுசாமி, தெருவிளக்கின் மங்கிய ஒளியில் எங்காவது தென்படுகிறானா என்று பார்த்துப் பார்த்துப் பூத்துப் போன கண்களில் அந்த எதிர்பார்ப்பின் ஒரு வெளியீடாய் நீர் வந்தும் இருக்கலாம்.
போராளிகளைத் தேடும் போர்வையில் சீருடைகள் அந்தக் கிராமத்துள் நுழைந்த போது. உறவினர்கள், அயலவர்கள் அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர். இந்தக் கிழவனை, படுக்கையில் பாரிசவாதமாய் விழுந்து விட்ட கிழவனை, அழுைத்துப் போக வேண்டுமென்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.
அந்த மூன்று நாளும் தலைமாட்டில் இருந்த சோடாவை எடுத்தச் சொட்டுச் சொட்டாய்க் குடித்து. உள்ளே நுழைந்த சீருடைகளின் பல்வேறுபட்ட கேள்விகளுக்குப் பதில் கூற முடியாமல் திணறி. அவமானத்தால் சினந்து . சிறுத்து ...!

Page 43
கோகிலா மகேந்திரன் 74
அந்த மூன்று நாளின் பின் தான் நிலை மோசமாயிற்று! இயற்கை மரணத்தின் முன் 'அதிரடி மரணம்' ஏற்பட்டு விடுமோ என்ற பயமும் இந்த நிலை வர ஒரு காரணம்.
சிவநாயகம் வீட்டு வேலைக்காரனின் நிழல் தெரிந்தமாதிரி இருந்தத. ஆம். அத அவன் தான்!
அவன் கிட்ட வந்து பார்த்தான். கிழவனின் வாய் ஏதேர் முணுமுணுத்தது. அவனுக்குத் தெளிவாகப் புரியவில்லை. கண்களில் இருந்து வடிந்திருந்த நீர் கிழவனின் வாயில் உப்பாகக் கசந்த கரைந்தத.
வீட்டில் பொழுது போகவில்லை என்று முனுசாமிக்குப் பின்னாலேயே வந்திருந்த மிஸ்டர் சிவநாயகத்தின் கடைக்குட்டி மகன் அமுதனைக் கைதட்டி அழைத்தான் முனுசாமி.
"அமுத இங்கிட்டு வாங்க. வந்து பாருங்க. கிழவன்ரை ஒடம்பு குளிருத. ஏதோ சொல்லுத. ஒண்ணும் புரியலை. சாவப்போவுத". ஆறு வயத அமுத அருகில் வந்தான்.
கடந்த சில தினங்களாக இந்த வீட்டிற்கு வருவதற்கோ, தாத்தாவைப் பார்ப்பதற்கோ, அம்மா அமுதனை அனுமதிப்பதில்லை.
இன்று அம்மாவிற்குத் தெரியாமலே முனுசாமியுடன் வந்த விட்டான் அமுதன்.
அமுதனுடன் அன்பாக நடந்த கொள்கிற தாத்தா. இடையிடையே 'சொக்கலேட்டும்', 'பிஸ்கட்டும், மாம்பழங்களும் கூடத் தருகிற தாத்தா!

மனிதம் மதலைகளிடம் மட்டும் 75
"கெட்டிக்காரனாப் படிச்சு, டொக்டரா வந்து. றொபின் சித்தப்பா போலை கனடாவில் வேலை பாக்கவேணும்."
என்று சொல்லி அவன் கன்னத்தில் கிள்ளுகிற தாத்தா! அமுதன் அருகில் வந்த உன்னிப்பாகக் கவனித்தான். "தே.த்.த.ண்."
அவனுக்குப் புரிந்து விட்டத.
மாநிற மேனியில் பட படத்த அமுதனின் கனவுக் கண்களில் பயமும், பரிதாபமும், அவசரமும் தெரிந்தன.
வேகமாய் வீட்டுக்கு விரைந்தான்.
"அம்மா . தாத்தா சாகப் போறார். அம்மா. பாவம் . தேத்தண்ணி கேட்டார்."
"உன்னை ஆர் அங்கை போகச் சொன்னது? சாகிற ஆக்களைக் குழந்தைப்பிள்ளையன்பாக்கப்பிடாத. பேய் முனுசாமி. விசரா. அமுதுவை ஏனடா அங்கை கூட்டிக்கொண்டு போனணி"
அம்மாவுக்கு ஏன் இப்படிக் கோபம் வருகிறதென்று அமுதனுக்குப் புரியவில்லை. அவனத ஆர்வம் பொசுக்கென அணைந்த விட்டது.
அம்மா அப்பாவிடம் சென்றாள்.
"மெய்யேங்கோ. கிழவன் எல்லே சாகப் போதாம்"

Page 44
கோகிலா மகேந்திரன் 76
மிஸ்டர் சிவநாயகம் ஒகோ...' என்று சிரித்தார்:
"சாகிறவரைப் பிடிக்கப் போநீரோ. கெதியாப் போம். நானும் வாறன்." அப்பா ஏன் சிரிக்கிறார் என்பதும் அமுதனுக்குப் புரியவில்லை.
மிஸிஸ் சிவநாயகம் நதியா சாறி ஒன்று எடுத்து உடுத்துக் கொண்டு புறப்பட்டாள். கையில் சுடுநீர்ப் போத்தலும், படுக்கை விரிப்புகளும், தலையணைகளும்!
"இரவைக்கு அங்கைதான் படுக்கவேணும். என்னப்பா."
மிஸ்டர் சிவநாயகத்திடம் கூறிவிட்டு அமுதனையும், முனுசாமியையும் கூட்டிக் கொண்டு புறப்பட்டாள்.
"அம்மா. கெதியாப் போவம். அவர் தேத்தண்ணி கேட்டுக் கன நேரமாச்சு." அமுத ஒட்டமாய் ஓடினான்.
ஓடிச் சென்று முகத்தைப் பார்த்தான். மீண்டும் அதே அசைவு.
"தே.த்.த.
"அம்மா. வாத்தக் குடுங்களன்."
குழந்தைத் தனமும், கற்பனையும் மிதக்கும் கண்களில் அவசரம்:
"அது. மோல்ரோவா எங்களுக்கெல்லோ கொணந்தனான். அவருக்கு உயிர்போய்க் கொண்டிருக்கு. இப்ப ஒண்டும்

மனிதம் மதலைகளிடம் மட்டும் 77
குடுக்கப்பிடாது. தொண்டைக்கு அங்காலை போகாதது. நீ குழந்தைப்பிள்ளை, உனக்கு விளங்காது. இஞ்சாலை வா."
அம்மா கதவைச் சாத்திவிட்டு வெளியே வந்தாள். அமுதனின் ஆர்வமும், எதிர்பார்ப்பும் மீண்டும் குண்டூசியால் குத்தப்பட்ட பலுான் போல் சுருங்கி விட்டன.
அங்கு வந்த சேர்ந்த மிஸ்டர் சிவநாயகம் அந்த வீட்டின் 'ஹாலை அளவெடுப்பத போல் குறுக்கும், மறுக்கும் நடந்தார்.
'செத்த வீட்டை எப்பிடிச் சிறப்பாச் செய்யலாமெண்டு யோசிக்கிறன்.' என்றார்.
வீட்டின் முன்புறத்தைத் தப்பரவாய்க் கூட்டுமாறு முனுசாமிக்கு உத்தரவிட்ட மிஸிஸ் சிவநாயகம், வீட்டின் உட்புறத்தை ஒழுங்குபடுத்துவதில் ஈடுபட்டாள்.
இவர்கள் இந்த நேரத்தில் வந்து அமர்க்களப்படுவதை அவதானித்து எட்டிப் பார்த்த முன் வீட்டு முத்தையாவிடம்,
"அந்தக் காலத்திலை அந்தாள் என்ன மாதிரிஉடம்பு சும்மா சுண்டினால் ரத்தம் வாற நிறம்..” என்றார் சிவநாயகம்.
"இரும்புப் பெட்டிக்கை பூட்டினத மாதிரித்தான் மனமும். நல்ல மனுசன் பாவம். பிள்ளையளைக் காண முடியேல்லை. ஆனால் நாங்கதான் பிள்ளைக்குப்பிள்ளையாய் ஒரு குறையுமில்லாமல் பாக்கிறம்."
இது மிஸிஸ் சிவநாயகம்!

Page 45
கோகிலா மகேந்திரன் 78
தான் இடையிடை தேநீர் கொடுத்தம் கிழவன் தனக்கு ஒரு சதமும் தரவில்லை என்பத நினைவு வர முத்தையா மெல்ல நழுவி விட்டார்.
தாத்தா கேட்ட தேத்தண்ணி என்ற சொல் அமுதனின் மனதை ஆயிரம் ஆணிகளாய் அழுத்துகிறத.
"செத்த வீட்டை வலு திறமா நடத்த வேணும். என்னங்கோ?”
"நல்ல காலம். நாங்கள் ஊருக்கு வந்தாப் பிறகு கடுமைப்படுத்தினத. இல்லாட்டி ஆர் செத்த வீடு நடத்தறது என்னப்பா?"
"ஒரு நானூறு கதிரைக்கு ஒடர் குடுங்கோவன்."
இந்த நேரத்தில் உள்ளே வந்த பக்கத்த வீட்டுப் பாக்கியக்காவிடம்,
"நாங்கள்தான் தன்னை நல்லாப் பாப்பம் எண்ட நம்பிக்கையிலை போன வெள்ளி அந்திக் கருக்கல் நேரத்திலைதான் வீட்டை எங்களுக்கெழுதி விட்டவர்"
அம்மா சொல்வது கேட்கிறத.
"உந்தாளுக்கு உயிர் கெதியாப் போகாது. நான் உதிலை இருந்து எத்தினை நாள் சாப்பாடு குடுத்தனான். எனக்கு ஒரு பரப்புக் காணி எண்டாலும் எழுதேல்லை. உந்தளவு காணியும் ஆள இனிப் பிள்ளையள் வரப் போயினமே? எக்கணம் ஆரும் கொண்டு போற சொத்தத்தானே.. ஆ."

மனிதம் மதலைகளிடம் மட்டும் - . 79
வாய் நிறைந்த வெற்றிலைக் காவியை எட்டிக் குரோதத்தடன் சேர்த்தத் தப்பினாள் பாக்கியக்கா.
புழுதியாய் இருந்த முற்றத்தைக் குளிர்மைப்படுத்த வாய்க்காலில் ஓடி வந்த நீர் இந்தத் தப்பலினால் ஒரு விநாடி சிவந்து பரவிப் பின் சாயை தெரியாமல் கலந்து மறைந்தத.
அமுதன் மீண்டும் தாத்தாவுக்கு அருகில் போய்ப் பார்க்கிறான். அதே அசைவு. தே.த்.
ஆயிரம் ஊசிகள் ஒரே கணத்தில் அவன் இதயத்தைத் தளையிடுகின்றன. பக்கத்த அறைக்குச் சென்றான். சுடுநீர் போத்தல் மோல்ரோவா' வுடன் அப்படியே இருக்கிறது. வெளி முற்றத்தக்கு வருகிறான்.
நிலவு வெண்மையாய் பூக்கக் தொடங்கி விட்டாலும் இருள் மேகங்கள் நிலவை மறைத்திருக்கின்றன.
"டே. முனுசாமி. தாத்தா மருந்த கேட்கிறாரடா"
"அம்மா. அம்மோய். தாத்தாவுக்கு மருந்த வாத்தக் குடுக்கட்டுனுங்களா ?"
அம்மா முனுசாமியின் காதில் குறுக்கிய படியே அடிக் குரலில் கூறுகிறாள், "மடையா. இனி மருந்து குடுக்கப் படாத, குடுத்தா உயிர் நடு வழியில் நிண்டிடும்."
தெருவில் சீருடைகளின் நடமாட்டத்தை அவதானித்த நாய் ஒன்று பெரிதாகக் குரைக்கிறது.

Page 46
கோகிலா மகேந்திரன் 80
"நாயும் குலைக்குத. உயிர் போய்க் கொண்டிருக்கு."
வேறு வேலை செய்யுமாறு அம்மா உத்தரவிடுவதற்கிடையில் முனுசாமி வெளியே ஓடி விட்டான்.
"எட்டுச் செலவுக்கு அவர் விரும்பிச் சாப்பிட்டதெல்லாம் படைக்க வேணும்."
"அந்திரட்டி மேளம் பிடிக்க வேணும்."
"அவற்றை படம் போட்டுப் புத்தகம் அடிச்சு வெளியிலை இருக்கிற எல்லாருக்கும் அனுப்ப வேணும்."
"கண்ணிர் அஞ்சலி அடிக்க வேணும். நான் ஒருக்கா நடராஜா மாஸ்டர் வீட்டை போய் அஞ்சலிக் கவிதை ஒண்டு எழுதுவிச்சுக் கொண்டு வாறன்."
அப்பா சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே போக ஆயத்தமாகிறார்.
"பேப்பருக்குக் குடுக்க வேணும். றேடியோக்கும் குடுக்க வேணும்."
"அதுகளையும் பாருங்கோ. பேந்து நேரம் போடும்." அம்மா அவசரமாய்க் கூறுகிறாள்.
அமுதன் தாத்தாவின் கட்டிலுக்கு அருகில். அவர் முகத்தில் கண் பதித்து, அவர் சொற்களில் மனம் செலுத்தி.

மனிதம் மதலைகளிடம் மட்டும் 81
தெளிந்த நீரோடை போன்ற அவன் முகத்தில் சிந்தனை ரேகைகள்:
சிந்தனை பாடசாலைக்கு...!
இரண்டு வாரமாய் பாடசாலை மூடிக் கிடந்தத. இன்னும் பலர் வந்து சேரவில்லை. அதனால் நேற்று ஆசிரியையும் தமிழும் கணக்குமாய் அதிகம் கற்பிக்காமல் இவர்களோடு கதைத்துக் கொண்டிருந்தார். அமுதனுக்கு அத சந்தோஷம்.
"நீங்கள் பிள்ளையஸ் எப்பவும் உதவி தேவைப்படுகிற இடத்திலை அதைச் செய்ய வேணும். நாங்கள் செய்யிறதை எல்லாம் கடவுள் பாத்துக் கொண்டிருக்கிறார்."
ஆசிரியையின் வசனங்கள் எண்ணங்களாய் அவன் மனதில் சுழலிடுகின்றன.
"ரீச்சர் சொல்றது ஒரு நாளும் பிழையாய் இருக்கிறேல்லை நரம்பில்லாத நாக்கின் சுழற்சியால் வெளிப்படும் கருத்தற்ற சத்தங்கள் பலவற்றைப் போட்டுப் போட்டு களைத்தப் போன ஊர்ப் பெண்கள் விறாந்தையில் ஆங்காங்கே உறங்கிவிட்டனர்.
"அமுதா. ஏன். நீ இன்னும் படுக்கேல்லை? உள்ளுக்கு வந்த கட்டில்லை படு.மெத்தை கிடக்கு."
"நான் இதிலை படுக்கிறன் அம்மா."
கிழவன் படுத்திருந்த அறைக்கு முன்னால் ஒரு பாயை இழுத்தப் போட்டுக் கொண்டான் அவன்.

Page 47
கோகிலா மகேந்திரன் 82
"மோல்டோவா குடிச்சிட்டு படு" அம்மா கோப்பையில் கொண்டு வந்தார். அதை வாங்கி வைத்தக் கொண்டு அம்மா அந்த இடத்தை விட்டு அகலும் வரை காத்திருந்தான் அமுதன்.
அம்மா போன பின்னர் கோப்பையுடன் தாத்தாவின் அறையுள் நழைந்தான். வெளியே யாரோ வருவத போல் இருந்தத. கொண்டு போன கோப்பையைத் தாத்தாவின் தலைமாட்டில் இருந்த அலுமாரியில் மறைத்த விட்டு வந்த படுத்தக் கொண்டான்.
"அமுதா மோல்ரோவா குடிச்சிட்டியா..."
"ஓம். அம்மா"
அப்பாவும் அம்மாவும் "மோல்டோவா குடிப்பத தெரிந்தது.அமுது தன்னை மறந்து கண்ணயர்ந்த வேளையில் பூமி பாளமாய் வெடித்துத் தன்னை விழுங்குவது போல ஒரு கனவு.
திடீரென்று விழித்தக் கொண்டான். மெதுவாக எழுந்து தாத்தாவுக்கு அருகில் வந்தான். உதடுகள் இன்னும் அசைந்தன. தே.' என்ன சொல் என்பது புரியாதவர்களுக்குப் புரியாத,
அலுமாரியில் வைத்த மோல்ரோவாவை எடுத்தான் அமுது, கரண்டியும் எடுத்துக் கொண்டான். ஆசிரியையின் சொற்கள் மீண்டும் அழுத்தமாய் மனதில்.:
ஒரு கரண்டி பாலைக் கிழவனின் வாயில் விட்டான். கிழவன் விழுங்கிக் கொண்டார். இன்னும் ஒரு கரண்டி. மீண்டும் ஒரு கரண்டி,

மனிதம் மதலைகளிடம் மட்டும் 83
தாத்தா சிரிப்பத போல அமுதவுக்குள் ஒரு கற்பனை.
"தாத்தா நீங்கள் கேட்டதை நான் தந்திட்டன் தாத்தா."
மோல்ரோவா கோப்பையைக் கீழே வைத்து விட்டு, மருந்துப் போத்தலை எடுத்தான்.
கட்டிலோடு சாய்ந்திருந்த அமுதனின் உடலைத் தாத்தாவின் கைகள் மெதவாகத் தடவுவத போல் ஓர் உணர்வு.
உண்மையாகத் தடவினாரா? அல்லத கற்பனைதானா? தனக்கு இனிப் போதம் என்று மகிழ்வுடன் சொல்கிறாரா?
வானுக்கு உச்சி எல்லாம் பூப்பூத்த மகிழ்வு அமுதனுக்குள். நிறைவும் பூரிப்புமே தானாக அவ்விடத்தை விட்டகன்றவன் மீண்டும் சென்று படுத்தக் கொண்டான்.
மறுநாள் காலை அந்த வீடு பரபரப்புடன் விடிந்தது. வெள்ளை வேட்டிகள், திருநீற்றுப் பூச்சுகள், ஊத்தை படாத உருப்படிகள் சகிதம் வந்த பலர் கட்டிலைச் சுத்தி அமர்ந்து தேவாரம் பாடுகின்றனர்.
மிஸ்டர் சிவநாயகமும் மனைவியும் பம்பரமாய்ச் சுழன்று பல வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
இலங்கை வானொலி தனது காலை அறிவித்தலில்,
முன்னாள் பிரபல வழக்கறிஞர் நமசிவாயம் காலமானார். அன்னார் காலம்சென்ற ஞானமணியின் அன்புக் கணவரும், றொபின்

Page 48
கோகிலா மகேந்திரன் 84
(கனடா), லோஜி (ஜேர்மனி) பாமா (லண்டன்), நிக்ஷன் (சவுதி) ஆகியோரின் அன்புத் தந்தையும் சிவநாயகம் (நீர்ப்பாசனத் திணைக்களம்) அவர்களின் சிறிய தகப்பனாரும் திருமதி கலாவல்லி சிவநாயகம் அவர்களின் பேரண்புக்குரிய மாமனாரும் ஆவார். அன்னாரின் தகனக் கிரியைகள் இன்று பிற்பகல் நாலு மணியளவில் அவர்களின் குடும்ப மயானத்தில் நடைபெறும். இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி திரு. சிவநாயகம் குடும்பத்தினர் அன்புடன் கேட்டுக் கொள்கின்றனர். என்று அறிவித்தத.
அமுதன் இன்னும் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தான். அவன் கனவில், "அமுதா. அண்ணாந்து நீ சிரித்தால் நிலவுக்குக் கேட்குமடா. என்று தாத்தா சொல்லிக் கொண்டிருக்கிறார்.
(வீரகேசரி - 7.07. 38)
+ 4 +

ஆழ்ந்த அநுதாபங்கள்
இருளும் ஒளியும் மரணத்தைத் தழுவி விட்ட. பின் அந்தி நேரம்:
முற்றத்தில் நிலா வெளிச்சத்தில் தெரிகிற ~ பவள மல்லிகை மரத்தில் நிலைத்த பார்வையுடன் நின்றேன்.
பவளமல்லிகை பூத்திருந்ததை நான் காணவில்லை! ஒரு வகை நிர்க்கதியான உணர்ச்சியால் என் கண்கள் நீர் சுரந்தன:
ஆனால் நான் அழவில்லை!
பக்கத்து வீட்டுப் பரமசாமி அண்ணை பேப்பர் வாங்க வந்தார்.
எனது நிலா முற்றம் நாய்க் குரைப்பின் அச்சத்தில் உறைந்திருந்து, இப்போது தான் சற்று விடுபட்டிருக்கிறத.
"பேப்பரைக் கெதியாத் தாருங்கோ போவம்," அவரது குரலில் ஒரு அதிகாரம்.
பேப்பர் எங்களுடையது-அவர் நாள் தோறும் வாங்கி வாசிப்பவர் என்ற உண்மையை. என்ன செய்வது? எங்காவது எழுதி ஒட்டலாம்!

Page 49
கோகிலா மகேந்திரன் 86
அவருக்குத் தரப்பட வேண்டிய சட்டப்படி பேப்பரை மிக விரைவில் தந்த, அனுப்பிவிடாதத ஒரு குற்றம் போல. رقبظالاتکے அதிகாரக் குரல்
ஒன்றும் பேசாமல் அன்றைய தினசரிகள் இரண்டையும் எடுத்த வந்த அவரிடம் தந்தேன்.
அவரைப் பின் தொடர்ந்து படலை வரை சென்று, படலையை ஆமைப் பூட்டுப் போட்டுப் பூட்டி விட்டுத் திரும்ப, இருளைப் பிய்த்தக் கொண்டு ஒற்றையாய் ஒரு கூக்குரல் ஒலம்:
என்னவாய் இருக்கும்?
களவோ ? கொலையோ ? அதைப்பற்றி அக்கறைப்பட்டுப்
போய்ப் பார்க்கும் மனத்தணிவோ மனிதாபிமானமோ யாரிடமும் இல்லை!
"படலையை வெள்ளெனப்பூட்டினால் வராங்களோ?"பரமசாமி அண்ணை நக்கலுடன் சிரித்து விட்டுத் தன் வீட்டினுள் நழைந்தார்.
நுழையும் போது தன் வீட்டுப் படலையை மறக்காமல்
பூட்டிக் கொண்டே போனார்.
விடிந்த பின் சிலவேளை என்ன நடந்த தென்று தெரியவரும்! சில வேளை வராது! ஒரு தினுசாய், மனமில்லாமல் அலட்சியமாய் வெறுப்புடன் கூடவே மெதவாய் ஒரு நாவலை எடுத்துப் பிரித்தேன்.
படலையில் மீண்டும் ஒரு "ரோச்' வெளிச்சம்! யாராக இருக்கும்?

ஆழ்ந்த அநுதாபங்கள் 87
யாராக இருந்தாலும் அவசரமாய் ஓடிப்போய்த் திறக்கக் கூடாத திறந்தவர்கள் பட்ட பாடுகள், கெட்ட கேடுகள் தெரியும் தானே? அனுபவங்கள் எல்லாம் எமக்குச் சிறந்த முன்னுதாரணங்களாய் இருக்க வேண்டும்.
"ஆரத. ஆ. ஆரத.?" படலையில் நிற்பவனுக்குக் கேட்டிருக்கும்.
"அது நான் தான். பாப்பாண்ணை . திறவுங்கோ."
என்னுடைய வீட்டுப் பெயர் பாப்பாண்ணை என்று தெரிந்தவர். தெரிந்ததாள். பெண் குரல் போல் இருக்கிறத, பயமின்றித் திறக்கலாம்.
"அட நீரே. பபி. நான் ஆரோவெண்டு .
பபி மாநிறம்! குறு குறு விழி:
"நான் தான் அண்ணை, உங்களிட்டைக் கதைப் புத்தகம் ஏதும் இருந்தால் வாங்கியரட்டாம் அம்மா. 'கறன்ரும் இல்லை வேறை வேலை ஒண்டும் செய்ய ஏலாத, பொழுது போகேல்லையாம் இரவைக்கு வாசிக்க. 99.
'ஏதும் இருந்தால்' என்ன ? இருக்கிறத என்று தெரிந்து தானே வருகிறார்கள்!
பபி அல்லது பபியின் அம்மா படுத்திருந்தபடியே வாசித்தது. அப்படியே நித்திரையாகி, புத்தகம் ஏதோ ஒரு பக்கம் திறந்த நிலையில் நித்திரையாகி புரளும் உடம்பின் கீழ் அகப்பட்டு நசிந்து கசங்கிச் சிலசமயம் கிழிந்து அழுக்காகி.

Page 50
கோகிலா மகேந்திரன் 88
ஐயோ. உங்கள் கையில் விரிந்து கிடப்பது வெறும் புத்தகம் அல்ல. எழுதியவனின் இதயம் என்பதை நீங்கள் எல்லாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறீர்கள்!
யாழ்ப்பாணத்தின் எந்த மூலையில் எந்த நாலுக்கு வெளியீட்டு விழா நடந்தாலும் அந்த இடத்திற்குப் போய் விலை கொடுத்து அந்த நாலை வாங்கி வந்தவிடும் விசர் என்று தெரிந்து.
குறைந்த பட்சம்-வெளியீட்டு விழாவுக்குப் போகாவிட்டாலும், பூபாலசிங்கத்தில் தேடிப் பிடித்து அந்த நூலை வாங்கிவிடும் பணி என்று புரிந்தது.
"உள்ளுக்கு வாருமன்."
"இல்லை நான் இதிலை நிக்கிறன், கெதியாத் தாருங்கோ நாய் குலைக்குத போவம்.”
நிலவு தனித் துப் போய் ஒளியிழந்த ஊர்ந்த போய்க்கொண்டிருக்கிறது. "உங்களிட்டை இந்தக் குழந்தைப் பிள்ளைகள் வாசிக்க - பெரிய எழுத்திலை நல்ல புத்தகங்கள் - ரஷ்யன் பப்ளிகேஷன்ஸ் இருக்கும். உங்கடை மகன் வாசிக்கிறதெண்டு என்ரை மகன் வந்து சொன்னவர். இரண்டு புத்தகம் தந்தீங்களெண்டால் ஒரு கிழமையில் திருப்பித் தந்திடுவன்," என்று எண்பத்தெட்டில் கேட்டு வாங்கிய பூரணம் ரீச்சர், எண்பத்தொன்பதிலும் அந்தப் புத்தகங்களைத் தந்ததாய் நினைவில்லை.
"நான் திருப்பித் தந்திட்டன் எண்டுதான் ஞாபகம். எதுக்கும் நீங்கள் இன்னொருக்கா வீட்டிலை வடிவாய்ப் பாருங்கோ," என்று

ஆழ்ந்த அநுதாபங்கள் 89
பூரணம் ரீச்சர் சொன்ன பிறகு, நான் எந்த முகமூடியைப் போட்டுக் கொண்டு திருப்பிக் கேட்கலாம்?
சும்மா சொல்லக் கூடாத!
மனதையே கழுவி வெளியே தள்ளி விடுவதில் இந்த மனிதர்கள் மகா சமர்த்தர்கள்!
முன் வீட்டில் வீடு கழுவும் சத்தம் கேட்கிறத!
நாளைக்குத் திவசமோ?
"நான் இந்த ஈழத்தில் கவிதை வளர்ச்சி பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதிறன். உங்களிட்டை இருக்கிற கவிதை நால்களை ஒருக்காத் தந்தியளெண்டால்."
பல்கலைக்கழகப் பிறவி ஒன்று:
திருப்பி நான் பல நேரம் கேட்டபோதம், ஆய்வுக் கட்டுரை இன்னும் எழுதி முடியேல்லை, இன்னும் எழுதி முடியேல்லை, முடியேல்லை. என்று:
அந்த ஆய்வுக் கட்டுரை தேடிக் கொடுத்த பட்டம் வந்த விட்டத. என்னுடைய புத்தகங்கள் தான் வரவில்லை!
இவர்கள் எல்லாம் கெட்ட மனிதர்களா?இல்லை, நிச்சயம் அப்படிச் சொல்ல முடியாத இவர்களில் பலர் கோயில் குளத்தில் கூட அரை நம்பிக்கையும் பக்தியுமுள்ளவர்கள்.
குற்றஉணர்வை மறைக்கத்தான் பக்தி தலைவிரித்தாடுகிறதோ? அத குற்றம் என்று அவர்கள் உணர்வதே இல்லை என்பதுதான் சரியாய் இருக்குமோ?

Page 51
கோகிலா மகேந்திரன் 90
"எங்கை? இதிலை கிடந்த கயல்விழியைக் காணேல்லை.?" அலுமாரியைத் திறந்த பார்த்த என் மனைவி ரெளத்திர மூர்த்தம் பெற்றாள்.
"யாரிட்டையோ குடுத்திட்டன் ஞாபகமில்லை"நான் இரகசியம் பேசுவது போன்ற குரலில்!
"புத்தகங்களைக் குடுக்கிற தெண்டால் ஒரு கொப்பியிலை எழுதி வைச்சிட்டுக் குடுங்கோ எண்டு எத்தனை நாள் சொன்னனான். எவ்வளவு பெறுமதியான புத்தகங்கள் எல்லாம் தானம் பண்ணிப் போட்டு நிக்கிறியள். உங்களுக்கு வீட்டைப் பற்றி ஏதும் சிந்தனை இருந்தாத்தானே. s
அவள் எனக்கு மரண மண்டனை விதிக்க ஆயத்தமானவள் போல நின்றாள்.
மனிதர்கள் எவ்வளவு அழகாக மனிதர்களைப் புரிந்து கொள்கிறார்கள் தெரியுமா?
"நாளைக்கு ரெஸ்ற்பாப்பாண்ணை, அந்தக் கல்விஉளவியல் புத்தகம், முத்தலிங்கம் எழுதினத, ஒருங்காத் தாங்கோ ரெஸ்ற் முடிஞ்ச உடனை தாறன்."
ஏதோ சோதனை விடயம். புண்ணியமாய்ப் போகட்டும் என்று நினைவு வந்ததம் பிழையாகப் போயிற்று.
சீப்பைத் தப்பவிட்ட பிடரிச் சுருளுடன் இராசமலர். முத்தலிங்கத்தின் புத்தகத்தையும் எங்கேயோ தப்ப விட்டு விட்டாள் என்பததான் என்னுடைய ஊகம்!

ஆழ்ந்த அநுதாபங்கள் 91
எப்போத நான் கண்டாலும் "ஐயோ மறந்திட்டன் நாளைக்கு" என்று 'ஸ்ரீறியோரைப் பதில்தான்.
ஒரு வேளை மறந்து போவத உண்மையாகவுமிருக்கலாம். மூளை தனக்கு முக்கியமில்லை என்று கருதம் விடயங்களை உடனே மறந்தவிடுமாம்.
ஒருவர் தனத காதலன் அல்லத காதலி சந்திக்கும்படி கூறிய இடத்தையும் நேரத்தையும் ஒரு போதும் மறப்பதில்லையாம்!
சரிதான்!
என்னிடம் புத்தகம் இரவல் வாங்கியது அப்படி என்ன பெரிய முக்கிய விடயமோ, இராசமலரின் மூளை மறந்த விடாமல் இருக்க?
என்னுடைய மூளையும் மறந்த விட்டால். தொல்லை தீர்ந்தத!
பணம் இரவல் கொடுத்தவர்களே பலர் சிரித்தச் சமாளித்தவிடும் போது, இத என்ன புத்தகம் தானே, போனால் போகிறது. வெறும் நால் விடயம்.
அப்படி நினைக்க முயன்ற போத, என்னுள் ஏதோ ஒன்று இடிந்து தகர்ந்து போயிற்று:
மறதி என்பது இறைவன் மனிதனுக்குக் கொடுத்த வரங்களில் அதி அற்புதமானது!
நான் யார், யாருக்கு எந்தெந்தப் புத்தகங்கள் இரவல் கொடுத்தேன் என்பதில் அரைவாசியாவது மறந்த போனபடியால் இப்படி இருக்கிறேன்.

Page 52
கோகிலா மகேந்திரன் 92
இல்லாவிட்டால்..?
உள்ளே தீ எரிந்தாலும் முகத்தில் நிலவைப் பொழியும் திறமை என்னிடம் இல்லை.
எனக்கு வருகின்ற கடிதங்களுக்கு முடிந்தவரை ஒழுங்காகப்
பதில் எழுதகிற குணம் எனக்கு இருந்தத. இத போன்ற கடிதங்களைக் காணும் வரை!
அன்புடையீர்!
நாங்கள் எமது ஊரில் புதிதாக ஆரம்பித்துள்ள சனசமூக நிலையத்தில் ஒரு நல்ல நால் நிலையத்தை அமைக்கத் தீர்மானித்துள்ளோம். (பேஷாய்த் தீர்மானிக்கலாம் யார் வேண்டாம் என்றத?)
நீங்கள் வெளியிட்ட நால்களில் இவ்விரண்டு பிரதிகளை எமக்கு அன்பளிப்பாகத் தரவேண்டும். (ஒகோ. அப்படி வாருமன் வழிக்கு)
நீங்கள் அந்த நால்களை எமத சனசமூக நிலையத்தில் அல்லத யாழ் நவீன சந்தையில் உள்ள 'எகஸ்' என்ற கடையில், 10/10/. க்கு முன் ஒப்படைதால் நல்லத. (புத்தகம் இலவசமாய்த் தரவேண்டும், அதைக் கூட நீர் வந்த எடுக்க மாட்டீர். நான் நீர் குறிப்பிடும் இடத்தில் குறிப்பிட்ட திகதியில் ஒப்படைக்க வேண்டும்! நீர் என்ன என்னை அவ்வளவு வெங்காயம் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்!)
உங்கள் அன்புள்ள (စ္).............. உமக்கு என்னிடம் சரியான அன்பு) செயலாளர், சனசமூக நிலையம்.

ஆழ்ந்த அதுதாபங்கள் 93
புத்தகங்களை அன்பளிப்பாக வழங்க எனக்கு ஒருவரும் கிடைக்காமல் நான் மிகுந்த ஏக்கத்தடன் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன் என்பததான் உமது கணிப்பா?
சுக். சுக். சுக்கு நாறாகக் கிழித்தப் போட்டேன் கடிதத்தை.
இதைப் போல பல கடிதங்கள்:
பாடசாலைகளில் இருந்து. சனசமூக நிலையங்களில் இருந்தது. போட்டிகள் வைத்தப் பரிசு கொடுப்பவர்களிடமிருந்தது.
கலைக்கக் கலைக்கத் திரும்பி வரும். வருவதாகச் சொல்லப்படும் செய்வினைப் பேய் மாதிரி
மனதில் குடைச்சல்!
'அமெரிக்க லைபிரரி ஒண்டுக்கு எங்கடை எழுத்தாளர் எல்லாற்றை புத்தகமும் அனுப்பப் போறன், உங்கடை புத்தகங்களிலை இவ்விரண்டு தாருங்கோ.
இப்போது அறிமுகமாகிறவர் ஒரு ஏஜண்ட் அமெரிக்கன் லைபிரரி எப்போதும் பணம் கொடுத்தத்தான் நால்களை வாங்கும். அன்பளிப்புக் கேட்காத, ஆனால் இவர் பணத்தைப் பற்றி மூச்சு விட்டதும் இல்லை!
"உங்கடை புத்தகம் அந்த லைபிரியிலை போட்டாச்சு, இந்தா காட்லோக்' வந்திருக்கு, பாக்கப் போறியளே?"
தன்ரை புத்தகம் அமெரிக்கா லைபிரரியிலை இருக்கெண்டு தெரிஞ்சால் போதும், அதிண்ரை உற்பத்திச் செலவைப் பற்றி மறந்து போடுவான் இந்தப் புகழ் விரும்பி எழுத்தாளன் என்ற நினைவு

Page 53
கோகிலா மகேந்திரன் 94
மனித சிந்தனைகளை அப்படியே படம் பிடித்தத் திரையில் விழுத்த ஒரு கருவி இருந்தால். ஆகா என்ன அற்புதமாய் இருக்கும்?
இங்கே தேவையான புத்தகங்கள் எல்லாம் அன்பளிப்புச் செய்யப்படும்' என்றொரு போட் எழுதி படலையிலை மாட்டிவிட்டால் பிரச்சினை இல்லைப் போலிருக்கிறது.
தர்மமும், பண்புகளும். 'மனேர்ஸ். எல்லாமே புராண இதிகாசங்களில் மட்டும் சிறைப்பட்டுப் போன பின்பு. !
"எண்ணண்ணை? யோசிச்சுக் கொண்டு நிக்கிறியள். ? புத்தகம்." படலையில் நிற்கும் பபி அவசரப் படுத்துகிறான்.
குருட்டு இருளில் சாவின் தயரம் முகத்திலறையும் சூழல்!
நாளை இருப்பத நிச்சயமற்றத. புத்தகங்களை என்ன கொண்டா போகப் போகிறோம்?
மெளனமாய் உள்ளே வந்த நாவல்களை எடுத்த பபியிடம் கொடுக்கிறேன்.
நீங்கள் யாரும் ஆழ்ந்த அந தாபங்களை அடித்தத் திணித்த எனக்கு அனுப்ப வேண்டாம்.
ஏனென்றால். நான் ஒரு ஈழத் தமிழ் எழுத்தாளன்.
நான் இவற்றையெல்லாம் பழக வேண்டும் பாருங்கள்.

ஆழ்ந்த அதுதாபங்கள் 95
மை இருள் உலகத்தை மலைப்பாம்பு போல் விழுங்கி இருக்கிறத.
தங்கை விரித்த தலையுடன் இருக்கிறாள்.
மாலையில் முழுகினாள். இன்னும் தலை காயவில்லையாம்!
(மல்லிகை - ஆவணி 'es)
-> <- ()

Page 54
எரியும்.
மென் காற்றின் இதம் உடலின் மயிர்க்கால்கள் வழி உட்புகுவது உணர்கிறாள். அந்த நினைவு வரும்போதே, கம்" மென்று ஒரு குளிர்ச்சி
முற்றத்தில் நிற்கும் ரோஜாக்களுக்குச் சேகர் நீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறான்.
ம்மா. என்ன மாதிரி ஒரு நெளிவுடன் தண்ணீர் விரைகிறத! இந்த நீர் அவளைப் போலவே, அவசரமாக வேலைக்குப் போகிற மாதிரி பகிடி விடுவது மாதிரி சிரிப்பது மாதிரி வெட்கப்பட்டுத் தயங்குவத மாதிரி. என்ன அழகு!
இந்த ரோஜாச்செடிகள் இலைகளும், முட்களும், தண்டுகளும், கிளைகளும், வேர்களும் நிரம்பி எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும் யார் அதைக் கவனிக்கிறார்கள்?
ஆனால், அதன் மேல் ஒரு மொட்டுப் பிடித்த, மொட்டு வளர்ந்த, ஒரு பூ விரிந்தால். அன்றைக்கு முழுதும் அதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்!
எட்டு வருடங்களாக இவளும் தன்மேல் அப்படி ஒரு பூப் பூக்கும் என்று ஏங்கி.

61 figh. 97
எட்டு வருடங்கள் கீழிறங்கி நின்று பார்க்கும் போத தெரியும் கவிதை!
"என்னைப் பாரேன்' என்று சுண்டி யிழுக்கிற சேகரின் ஆண்மை, வாள் வீச்சு மாதிரித் தண் தண் னென்று பிசிறின்றி வந்து விழுகின்ற அவனுடைய பேச்சு, மனதெல்லாம் சாரலடித்த மாதிரி ஒருநாள் அவர்களது கல்யாணம், அவள் நன்றாகவே வியர்த்திருந்த முதலிரவு எல்லாமே ஒவ்வொரு கவிதை போல...!
ஆனால் அதன் பின் எட்டு வருடமாய்.
ஒவ்வொரு மாதமும் அவள் பூப்பதற்கு எதிர்பார்ப்பாள். மாத முடிவில் அவளத கருப்பை குருதி வடித்த அழுத ஓயும்.
அவளுக்கும் அவளத கருப்பைக்கும் நடக்கும் நிழல் யுத்தத்தில் அவள் எப்போது வெற்றி பெறப் போகிறாள்?
காத்திருத்தல் என்பத அத எதற்காக இருந்தாலும். மிகவும் அவஸ்தை தருவது:
திடீரென ஒரு தோட்டம் போல் கொத்தக் கொத்தாய்ப் புஷ்பிக்க முடிந்தால். கொத்தக் கொத்தாய் வேண்டாம். ஒரு பூப் பூக்க முடிந்தால். எவ்வளவு நன்றாய் இருக்கும்?
மாலை நேரங்களில், சேகர் வெளியே நண்பர்களுடன் பேசிப் பொழுது போக்கப் போய்விடுகின்ற பொழுதுகளில் இப்படியே கிணற்றடிக் கல்லில் அமர்ந்து கனகாம்பரப் பூக்களுடன் பேசுவது எத்தனை நாளைக்கு அமைதி தரும்?

Page 55
கோகிலா மகேந்திரன் s 98
இந்த நேரத்தில் அவள் அருகில் பிஞ்சுப் பாதங்கள் மெல்ல நிலத்தில் பதிய விழுந்து எழுந்த ஓடி வரும் மழலை ஒன்று இருந்தால்..?
வழியாதா?
என்றொரு கும்மாளக் கடத்தடன் நெஞ்சு பொங்கி
அம்மாவும் இப்படிப் பதினேழு நீண்ட வருடங்கள் காத்திருத்தல்' செய்தாளாம். இறுதியில் இவளைப் பெற்று வெற்றி பெற்றாள்.
அம்மா திருமணம் செய்யும் போத அவளுக்குப் பதினேழு வயது! பதினேழு வடங்கள் 'இறை வணக்கமும் நம்பிக்கையுமே தணை எனக் காத்திருந்தபின் முப்பத்து நாலு வயதில் பூத்தாள். அப்போத கூட உயிர் பிழைத்தத அதிசயம் எனும் வகையில் 'சிசேரியன்' தந்த வெற்றி
இவள் படித்து, உத்தியோகமாகிக் காதலித்துக் கஷ்டப்பட்டுக் கலியாணம் ஆகும் போதே இருபத்தெட்டு, அம்மாவைப் போல் பதினெட்டு வருடம் காத்திருக்க நாற்பத்தைந்து பிறகென்ன ? மென போஸ்' காலம் வந்த விடும், மயிர் நரைத்த பின் வாழ்வு பச்சையாகுமா? V−
இம்முறை இவள் தெரிவு செய்த கலண்டரில் கூட ஒரு மழலைப்பையன் சுட்டு விரல் நீட்டிச் சிரிக்கிறான். சிவப்பு, வெள்ளைக் கோடுகள் கொண்ட அந்த 'ரி சேட் அவனது சுருட்டத்தலை படத்தின் பின்னணியில் தெரியும் நீலவானம், தென்னங் கீற்றுகள், சிட்டுக் குருவி எல்லாமே இவளுக்குப் போதை ஊட்டினால்.

எரியும். 99
இடையிடையே ஒருவரும் பார்க்காத சந்தர்ப்பங்களில் இவள் அந்தக் கலண்டரைத் தாக்கி நெஞ்சோடு அணைத்தக் கொள்வதண்டு. யாரும் கண்டால் பைத்தியம் என்று மந்திகைக்குத் தான் அனுப்புவார்கள்!
முற்றத்தில் இறங்கி நடந்தாலும் வெறும் பாதத்தில் குறுணி மண் வேதனையைக் கிளறும்.
அலை காற்றும் கூட ஜீவனைச் சுடுவதாய் உணர்ந்த பிறகு, ஒரு நாள் இவளும் சேகரும் 'கைன கோலோஜிஸ்ற் றிடம் சென்றனர்.
"ப்பமிலி பிளானிங் ஆலோசனை கேக்க வாறவையை விடப் பிள்ளை இல்லை எண்டு வாறவையின்ரை தொகை கூடிட்டுத இப்ப.” வைத்திய நிபுணர் சிரித்தார்.
“ரென்சன் தான் காரணம். வாழ்வை அநுபவிக்கத் தெரியேல்லை எங்களுக்கு ~ அல்லது முடியேல்லை எங்களாலை. வாழ்க்கைக்குத் தேவையான வசதியள் எல்லாத்தையும் விஞ்ஞானம் எங்களுக்குச் செய்து தந்திருக்கு. ஆனால் 'விடோன்ற் ஹாவ் ரைம். எங்களுக்கு நேரமில்லை. "வீ ஆர் ஒல்வேய்ஸ் ரயாட்' தனக்குத் தானே சொல்லிக் கொண்டு வந்ததை நிறுத்தி, வழமையான சில கேள்விகளைக் கேட்டார்.
பெயர், வயத, தொழில், திருமணமாகி எவ்வளவு காலம் பீரியட்ஸ் ஒழுங்காக வருமா என்று.
பிறகு சில சோதனைகள்.

Page 56
கோகிலா மகேந்திரன் 100
சில வாரங்கள் கழித்த எல்லாச் சோதனைகளும் முற்றாக முடிந்த பின் அவர் சொன்னார்,
"நான் முதலே ஊகிச்சன், உங்கள் இரண்டு பேரிலையும் உடல் ரீதியாக ஒரு குறையும் இல்லை. யூஆர் பெர்ஃபெக்ட்லி ஒல் றைற். பிள்ளை இல்லை எண்ட கவலை, ரென்சன் இதுகள் மனதிலை இருக்கப்பிடாத, ரிலாக்ஸ். கடவுளைக் கும்பிடுங்கோ. நம்பிக்கையோடை இருங்கோ. இதுதான் நான் சொல்லலாம். ரெஸ்ற் ரியூப் பேபி" உருவாக்கித்தாற காலம் இது. இங்கை இன்னும் வரேல்லை. நான் வேறை என்ன செய்யலாம்?"
இவள் விரதம் பிடித்தாள். ஆசனங்கள் செய்த பழகினாள். நிலாக் சேஷன் எக்ஸ்சைர்சஸ் செய்தாள், சேகருடன் சண்டை போட்டு அவனைக் கொண்டும் சிலவற்றைச் செய்வித்தாள்.
நிலவு பொழியும் தளியில் ஒவ்வொரு இரவும் அமிழும் அந்திப் பொழுதில் வீட்டில் நின்ற கறுப்பு மறி ஆட்டுக்குட்டி இவள் மடியில் ஏறிப் படுத்து உறங்கும்.
"உனக்கு முருக்கங் குழை வேணு மோடீ?"
"மே."
"முருக்கங் குழை வேண்டாமே அப்ப என்ன வேணும்? முசுட்டை வேணுமே?”
"...(to..."

எரியும். 101
"இப்ப யாழ்ப்பாணத்திலை, சாப்பாடே கிடையாத நேரத்திலை உனக்கு முசுட்டை வேணுமே? அத கிடந்தால் நாங்கள் சொதி வைக்கலாம், வறை வறுக்கலாம் போடி . உனக்கு முசுட்டை
இல்லை."
"(3to ...."
புதினம் பார்க்கும் மேகத் தலைகள் தம்முட் குழம்பித் தவித்தத் திரியும்.
குளிர்ந்து இருண்ட பகற்பொழுதுகள் அடுக்கடுக்காய் நின்ற பல மாரிகளுக்குப் பிறகு மாலையில் மேற்கு வானில் ஒரு நட்சத்திரம் மினுங்கியத.
பக்கத்த வீட்டுப் பாப்பா மான் விழியைத் தாக்கிக் காற்றில் எறிந்து ஏந்தினாள் இவள்.
"அண்ரீ. என்னை விடுங்கோ. "
சென்ற மாதம் இருபத்தாறாம் திகதி சனிக்கிழமை.
சனியோடு சனி எட்டு, மூன்று சனி இருபத்திரண்டு, நாலு சனி இருபத்தொன்பத, ஞாயிறு முப்பத, இன்றைக்குத் திங்கள்
சோமவாரம். முப்பத் தொரு நாள்.
இருபத்தாறு நாள் எங்கே என்று பார்த்தத் தவறாமல் வருவது. இம்முறை.
ஓ. மலர் ஒன்று விரிந்தது ரோஜாவில்

Page 57
கோகிலா மகேந்திரன் 102
"இஞ்சாருங்கோ. இண்டைக்குச் சோமவாரம். ஒருக்காச் சிவன் கோயிலுக்குப் போட்டு வருவமோ?"
"என்ன? என்ன விசேஷம் இண்டைக்கு. வேலையாலை வந்தால் களைப்பாய் இருக்கெண்டு படுக்கிறaர். இண்டைக்குக் கோயிலுக்கு வெளிக்கிடுறீர்.”
இவள் சேகரை நெருங்கி வந்தாள்.
"இந்த முறை நாலைஞ்சு நாள் தள்ளிப் போட்டுத. ஒருக்கால் போய்க் கடவுளைக் கும்பிடுவம்."
சேகர் சிறிதாய்ச் சிரித்தான். மலர்ந்த சிரிப்பு:
கோயிலுக்கு நடந்த போனார்கள். "என்னாலை உங்கடை சைக்கிளிலை இருக்கேலாது. நீங்கள்
குலுக்கி எடுத்துப் போடுவியள்." காலுக்கு மேல் கால் வைத்த மெல்ல நடந்த போனாள்.
"கவனம் பிள்ளை தேகம் நோகத் தக்கதாய் ஒரு வேலையும் செய்யாதை இடிக்கிறது, அரைக்கிறது ஒண்டும் செய்ய வேண்டாம்." அம்மாவின் அறிவுறுத்தல் மனதில் அடிக்கடி ஒலித்தத.
"நாப்பது நாள் முடிய டொக்டரிட்டைக் காட்டுவம். என்ன?” சேகர் நம்பிக்கையோடிருந்தான்.
மாமி இவளைக் கண்ட போதெல்லாம் வெட்டவெளியை வழித்த நெட்டி முறித்தாள்.

6 flyth... O3
அடி வயிற்றில் ஏதோ பிறாண்டுவது மாதிரி ஓர் உணர்வு. மெதவாக வயிற்றைப் புரட்டுவது போல!
"மோர்னிங் சிக்னெஸ்' அறிகுறிகள் இவ்வளவு விரைவாகவே தோன்றிவிடுமா? அப்படியானால், காலை நேரத்தில் அல்லவா அவை தோன்ற வேண்டும்?
அடுத்த வாரமும் கோயிலுக்குப் போய் வந்த சிறிது சாப்பிட்டாள். வயிறு 'உம்' மென்று ஊதி உப்பினாற் போல் இருந்தது. ஏன் அவளால் வழமை போல நிறையச் சாப்பிட முடியவில்லை?
கருப்பையும், இரைப்பையும் வேறு வேறு அல்லவா? கண்ணாடியில் ஒரு முறை தன்னைப் பார்த்துக் கொண்டாள்.
வயிறு மிகச் சிறிதளவு பெருத்திருக்குமாறு. உணர்ந்தாள். முகத்தில் ஒரு மினு மினு மினுப்பு:
வெள்ளரிப் பழத்தைப் பிளந்த வைத்த மாதிரி ஒரு நிறமும் குளுமையும்!
பிளவுஸ்' எல்லாம் இனி அவிழ்த்துத் தைக்க வேண்டும் அண்டர் ஸ்கேட்டும் புதிதாக வாங்க வேண்டிவரும். 'பிரா' அட்ஜஸ்ட் பண்ணலாம்.
அன்றும் வழமைபோல் விடிந்தது. ஒவ்வொரு நாளும் நகரும் போத ஒரு புதுவித மகிழ்வு:
இரு நாற்றெண்பத நாளில் நாற்பத்தைந்து நாள் போனால், இன்னும் இருநூற்று முப்பத்தைந்த நாள் இருக்கு. அம்மாடி!

Page 58
கோகிலா மகேந்திரன் 104
"என்னப்பா இண்டைக்கு ரீ இல்லையே?"
"இண்டைக்கு என்னாலை எழும்பேலாத. நீங்கள் தான் அடுப்பை மூட்டிச் சுடுதண்ணிவையுங்கோ. தலையைச் சுத்துத."
சேகர் வழமையான சிரிப்புடன் விறகை வைத்து அடுப்பை மூட்டினான். அவன் கொடுத்த தேநீரைக் குடித்தவிட்டு ஒரு நாளும் இல்லாமல் முகத்தக்கு மஞ்சள் பூசிக் குளித்தாள் இவள்.
"மெய்யேங்கோ. எங்கயும் குங்குமப்பூ வாங்கலாமோ?"
"பிள்ளை. குங்குமப்பூ பத்தாம் மாதத்திலை தான் சாப்பிடுறது. இப்ப தொடக்கம் வாங்கக் கட்டுமே பிள்ளை .."
கிணற்றடியில் முகம் கழுவி வந்த அம்மா, விபூதி பூசிய அரைவாசியிலேயே மகளுக்குப் பதில் சொன்னாள்.
மனதில் ஒரு சந்தோஷம். குளிர் காற்று அடித்த மாதிரி வேகமாய் ஒரு கணம் வந்த மோதிவிட்டுப் போனத.
கலண்டர்த் தம்பியைப் பார்த்துச் சிரித்தாள் இவள்.
நான் உண்மையாகவே நீ போட்டிருக்கிற மாதிரி ஒரு "ரி சேட் வாங்கப் போறன். ஒ. பார்.
ஓடி வந்த தள்ளிய ஆட்டுக்குட்டியிடம் சொன்னாள், "உண்ரை சின்னச் சின்னக் கறுப்பு மயிர், என்ரை மடியிலை இனி விழப்பிடாத. மே. தள்ளி நில்."
திடீரென்று ஒரு.
“என்னப்பா ?"

67 fluyth. 105
காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டாள்.
“பொம்மர் வாறான். பொறும் பாப்பம் எங்கை போறான் எண்டு.”
பக்கென்று வயிற்றில் ஒரு பயம் பந்தாய்ச் சுழன்றத.
"ஐயோ. டைவ் பண்றான். நீர் ஓடும். கோயில் பக்கம்
ஒடும்."
சொல்லிக் கொண்டே சேகர் மேற்கு நோக்கி ஓடினான். இவளும் ஓடினாள். ஒடும்போது ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். ஏதோ ஒன்று கறுப்பாய், சிறு புள்ளியாய், இவர்களின் வீட்டுக்கு மேலே இறங்கி வந்த கொண்டிருந்தது.
"ஐயையோ. போட்டிட்டான்." வயிறு நிரப்பி வந்த விமானம் கறுப்பு முட்டை ஒன்றைப் பிரசவித்த விட்டத.
இன்னும் வேகமாய். முடிந்தளவு வேகமாய் ஓடினாள். எழுபத்தைந்த மீற்றர் ஒடியிருப்பாள்.
கண்ணைப் பறிக்கும் மின்னல் வெளிச்சம். காத உடையும் சத்தம். இதயம் நின்றுவிட்டது போன்ற உணர்வு. சுற்றிவர இருந்த நாற்பத ஐம்பது வீடுகளின் யன்னல் கண்ணாடிகள் சலங்கை என அதிர்ந்து வெடித்தன.
பொம்மர் பொழிந்த பின் போய்விட்டது. வீட்டின் முன்புறம் சேத மடைந்து கிடந்தது. முன் விறாந்தைச் 'சீலிங்கில் வேட்டை வாளி கட்டியிருந்த கூட்டை முற்றாய்க் காணவில்லை. பக்கத்த வீட்டு மலர்விழியின் வீடு முற்றாகச் சேதம்.

Page 59
கோகிலா மகேந்திரன் 106
நெஞ்சு அடைக்க, தயரம் அதை உடைத்துக் கண்களில் நீராய் நிறைய, இவளுக்கு பாத்ரும் போக வேண்டும் போல இருந்தது. போனாள், திரும்பி வந்தாள்!
"அம்மா! எனக்குச் சுகமில்லைமல் வந்திட்டுத."
"என்ன ?" சேகரிடம் ஒரு அதிர்வு தெரிந்தது.
விரக்தி, ஏமாற்றம், இழப்பு அல்லது சோகம்
இவற்றுள் ஒன்று அல்லது இவை எல்லாம் கலந்த ஒன்று:
ஒரு நினைவு முகம் வெளியில் சிரித்தது போன்ற. கொழுத்திக் கொண்டிருக்கும் வெயில்!
தகித்தக் கொண்டிருக்கும் மனம் !
தகித்தக் கொண்டிருக்கும் வெயில்!
கொழுத்திக் கொண்டிருக்கும் மனம்!
கொழுத்தி . தகித்து.
தகித்து. கொழுத்தி.
கொழுத்தி. கொழுத்தி.
ஓ! எரிக்க வேண்டும். எரிக்க வேண்டும் எல்லாரையும்!
(மல்லிகை - மார்கழி '9)
-() () ()

விலை
அழகாய் மஞ்சள் மஞ்சளாய்ப் பூத்திருந்த பூவரச மரத்தில் காக்கைக் கூட்டம் உட்கார்ந்து கரையப் பூமியை விடியல் தொட்டது. வெள்ளைக் கொக்குகள் வரிசை வரிசையாய்ப் பாடசாலைக்கு வரத் தொடங்கி விட்டன.
"இப்பிடி ஒரு றிசல்ற்ஸ்', ஸ்கூலின்ரை வரலாற்றிலையே வந்ததில்லை".
"ஆறு பிள்ளையளெல்லே எட்டு 'டி' எடுத்திருக்கு."
"அது ஒரு தரும்பு, மற்ஸிலை 'ஏ' டிவிசனிலை எல்லாப் பிள்ளையும் எல்லே டி எடுத்துத் தள்ளியிருக்கு. நாற வீதம் டி."
y
"கெட்டிக்காறப் பிள்ளையஸ் எடுக்கும் தானே.
"நீ வேண்டாமெண்டு விட்ட கிளாஸ் - பேந்த விசர்க்கதை கதையாதை - மூர்த்தி மாஸ்டர் ஒரு பிடி பிடிச்சத உண்மை. அந்தால் தானே கிளாஸ் ரீச்சரும்."
"அவங்கள் சரியான குளப்படி எண்டெல்லோ நான் விட்டனான். சும்மா கிண்டிக் கிண்டிக் கேள்வியள் கேட்டபடி நிப்பாங்கள்."

Page 60
கோகிலா மகேந்திரன் 108
"மூர்த்தி மாஸ்டர் லீவே எடுக்கிறேல்லை, எத்தினை நாள் பின்னேர வகுப்பு எடுத்திருக்கும். கஷ்டப்பட்டால் பலன் வருந்தானே. உனக்குத் தெரியுந்தானே முந்தி யொருக்கா..."
உஷ்ணமான கோடை காலத்தில் ஒரு பூவை வருடுவது போல் வருடி வருடி இந்தப் பூமியின் இருளைச் சூரியன் அகற்றிய பிறகு வரும் காலைப் பொழுது, உடலுக்கும் மனதக்கும் மிகச் சந்தோஷமானது. அப்படியான ஒரு நேரத்தில் வகுப்பினுள் நழைகிறார் மூர்த்தி மாஸ்டர்.
"குட் மோர்னிங் சேர்."
"குட் மோர்னிங் பிள்ளையஸ். சிற் டவுண். இண்டைக்கு அறுபத் தெட்டாம் அலகு. அட்சர கணிதக் கோவைகள் படிப்பம் என்ன ?."
"என்ன சேர்.இன்னும் 'சிலபஸ் முடியேல்லை~ யாழ்ப்பாண மாவட்டப் பொதுத் தேர்வும் முக்காவாசியிலை போய்ச் செய்தனாங்கள்."
ரூபியின் செல்லமான முணு முனுப்பு.
"பேப்பர் செய்யாமல் ஃபைனலுக்குப் போக ஏலாத சேர்"
பிரசன்னாவின் பயம்
"என்ன சேர் முன்னோடியிலை தான் வரும் போல இருக்கு."
கீதாவின் சோகம்!

விலை 109
"சேர், சிலபஸ் முடிப்பியளோ, மாட்டியளோ?"
குரலை உயர்த்திய வாசுவின் கோபம். அவனுக்கு வரம்பாய் இரு புருவம்.
"என்ன செய்யிறத பிள்ளையஸ்? ஆண்டு 10 சிலபஸ் வலு நீளம். அதையும் முடிச்சு, ஆண்டு 11 உம் முடிக்கிற தெண்டால்..? பாருங்கோவன் எத்தினை நாள் மோர்னிங்கிளாஸ் போட்டிட்டம், முடியுதில்லை. பாப்பம்."
"ஐயோ சேர். அப்ப சிலபஸ் முடியாதோ?"
மொழி கடந்த கவிதையாய் மல்லிகாவின் முகத்தில் ஒரு பரபரப்பு.
"சேர், மற்ஸ் பெயிலெண்டால் ஏ.எல் படிக்கேலாத சேர்." தயங்கிய தமயந்தியின் நிழல் தாழ்வாரத்தில் போய் விழுந்தத.
மூர்த்தி மாஸ்டருக்குப் பொறுக்கவில்லை. போன வருடம் கற்பித்த ஆசிரியர் எதையும் ஒழுங்காகக் கற்பிக்காததால் வந்த வினை. ஆனாலும்.
இந்த மாணவி 'ஏ.எல் லுக்குப் போகாமல் விடுவதைத் தடுக்கக் கூடிய திறன் அவருக்கு இல்லையானால் அவர் ஏன் இந்த வருடம் வகுப்பை ஏற்றிருக்க வேண்டும்?
உணர்வுகள் அம்புகளைப் போலச் சீறிக்கொண்டு மேலே வந்த போது.

Page 61
கோகிலா மகேந்திரன் 110
"பிள்ளையஸ். பயப்பிடாதேங்கோ. உங்களுக்குச் 'சிலபஸ முடிச்சு, றிவிசனும் செய்து. வடிவா ஆயத்தப்படுத்திச் சோதினைக்கு விடுறது என்ரை பொறுப்பு. அதை நான் எப்படியும் செய்வன்."
சொல்லிவிட்டார் !
வம்பர் 10
கண்கள் குழி விழுந்த, உடல் மெலிந்து , பேயறைந்தவன் போல் இருந்தான் விஜயன், நெற்றியில் கையை வைத்துப் பார்த்தார் மூர்த்தி மாஸ்டர். மலேரியாவின் ஊர்த்தவ நடனம் சற்றும் குறைவதாக இல்லை. வானில் நிலாக் கொம்பு முளைத்து விட்டது. நேர்ஸ் சொன்னது நினைவில் வந்தது, "உங்கடை மகனுக்குப் பக்கத்திலையே இருங்கோ. உடம்பிலை ஏதாவது மாற்றம் தெரிந்தால் கூப்பிடுங்கோ."
"கடவுளே. அப்பிடி ஒண்டும்." என்று வேண்டிக் கொண்ட அதே வேளை "மற்ஸ் பெயிலெண்டால் ஏ.எல் படிக்கேலாத சேர்" என்ற குரலும் உள்ளே கேட்டத. இதயத்தின் ஆழத்தில் இருந்து பெரு மூச்சு ஒன்று எழுந்தத. மண்டையில் முட்சக்கரங்கள் சுற்ற ஆரம்பித்த விட்டன.
6 Jub Jii II
இன்னும் மயக்கம் தெளியவில்லை. வாயிலிருந்த ஏதேதோ
குழம்பிய சத்தங்கள் வெளி வந்த கொண்டிருந்தன. அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தார் மூர்த்தி மாஸ்டர்.

மணிக்கட்டிலிருந்த கடிகாரம் கதறியது. பார்த்தார்.
8, OO
இண்டைக்கும் ஸ்கூலுக்குப் போக ஏலாது என்ற நினைவு தோன்றியதம் இதயத்தில் சுருக் கென்று வலித்தது.
நவம்பர் மாதத்த மழை மின்னல் ஒன்று இவரது மன எண்ணத்தைச் சரி பிழை பார்த்த விட்டுப் போனது.
நவம்பர் 2
"ம்.ம்..ம்.ஆ. அம்மா.அம்மா."
விஜயன் எலும்பும் தோலுமாய் மாறியிருந்தான். வாய் தன்னிச்சையாக அரற்றிக் கொண்டிருந்தது. ஆனால் மூர்த்தி மாஸ்டர் அதைக் கவனிக்கும் நிலையில் இல்லை. அவரது மனதில் ஒரு தேவாசுர யுத்தம் நடந்த கொண்டிருந்தது.
இண்டைக்கும் ஸ்கூலுக்குப் போகாமல் விடுவதா?
விஜயனின் குழி விழுந்த கண்கள் கண்ணிற்குள் வந்தன.
'ஏதாவது நடந்து விட்டால்..?
'அம்மா என்று அரற்றுகிறான். அந்த அம்மாவும் இல்லை. நானும் ? அதே கணத்தில் தமயந்தியின் தயங்கிய குரல் காதில்
ஒலிக்கிறது. இண்டைக்கும் போகாட்டில். இன்னும் ஐந்து அலகு முடியாமல் இருக்கு. இனி றிவிசன் எப்ப? பேப்பர் செய்யிறது எப்ப?

Page 62
கோகிலா மகேந்திரன் 112
s
ரூற். ரூற்.
8, OO
கடிகாரத்தைப் பார்த்தார்.
8, OO
இன்னும் நான் சொல்றது கேக்கேல்லையோ?” என்று மணிக்கடடு அவரைக் கேட்பத போலிருந்தத.
தயங்கிய குரல் அழுத்தி ஒலித்தத.
குழிந்த கண்கள் மெதுவாய் மூடின.
புறப்பட்டு விட்டார்.
IDழையின் ஈரத்தில் எதிர்பார்ப்புக்கள் நனைந்திருந்தன.
'ரூற். ரூற்.
4.00
"தாங்க்யூ சேர்" என்று மாணவர்கள் கத்துகின்ற ஒலி அவர் காதில் தேளாக - தேனாக அல்ல ~ நுழைந்தத. ஆனால் இன்று அந்தத் தாங்க்யூவில் ஒரு விசேட இனிமை இருந்தது உண்மைதான். இன்று நாலு மணிவரை "எக்ஸ்ரா கிளாஸ்' போட்டு ஒரு மாதிரி அவர் 'சிலபஸை முடித்த விட்டார்.

விலை 113
"நல்ல காலம். இரண்டு நாள் சேரைக் காணேல்லை எண்டு நான் பயந்த போனன்."
"இண்டைக்கு ஒரு ஆவேசம் வந்த மாதிரிப் படிப்பிச்சார் என்ன ?”
"சேரின்ரை பிள்ளை ஆஸ்பத்திரிலையாம்."
“சேர். இப்ப ஆஸ்பத்திரிக்குப் போlங்களோ?"
மாணவர் சொன்ன எதவுமே காதில் விழாமல் சைக்கிளைத் திறந்து.
ஏறி.
gy
“சேர். உங்களைப் பிரின் சிப்பல் வரட்டாம்.
ஏதோ புரிந்தும், புரியாத மாதிரி-உலகமே சூனியமாய். நண்ணறிவின் உள் உணர்வுத் தட்டி எழுப்பலில் விழித்துக் கொண்டார்.
"சேர். ஆஸ்பத்திரிஒரு 'மெசேஜ்' குடுத்திருக்கு. உங்கடை பிள்ளை."
புரிந்தது. புரிந்தே விட்டத.
"ஐயோ விஜயன். இந்த அப்பனை. விட்டு. இல்லை. இல்லை. இ.ந்.த விசர் வாத்தியை விட்டிட்டுப் போட்டியா..?"

Page 63
கோகிலா மகேந்திரன் 14
எல்லாத் தேதிகளையும் போலவே அந்தத் தேதியும் இறுதியில் நிறமிழுந்து போயிற்று.
"உங்களுக்குத் தான் சேர் இதுக்கு நன்றி சொல்ல வேணும் நீங்கள் என்ன விலை குடுத்து இதைச் சாதிச்சனிங்கள் எண்டு எனக்குத் தெரியும் சேர்." - அதிபர்.
"சேருக்கு விஷேசமா ஒரு பாராட்டு எழுதிப் பேப்பருக்குக் குடுங்கோ சேர்” ~ உப அதிபர்.
"சேர். ஒரு f குடுக்கிறம். கட்டாயம் வரவேணும் நீங்கள்" -யாரோடும் சொந்தம் கொண்டு விடுகிற முகமும் முறுவலும் கொண்ட ரவி
இவை எதவும் மூர்த்தி மாஸ்டரின் காதில் விழவில்லை. வானப் பெருவெளியில் நட்சத்திரப் புற்கள் முளைக்கும் நேரத்தில் அவர் மகன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
(உலக ஆசிரியர் நாளை ஒட்டி எழுதப்பட்டது - '94)
-() () ()

மனதையே கழுவி
சூரியன் சீறிச் சினந்தபடி சிவப்புப் பந்தென எழுந்துவிட்ட ஒரு காலைப் பொழுதில், நான் அந்தப் பிரபல கல்லூரியின் அதிபர் அறையினுள் (குளிர்ந்த வாடைபோல் ~ மன்னிக்கவும்- தவறுதான்) நுழைந்தேன். எனக்கும் கொஞ்சம் மதிப்பு இருக்கத் தான் செய்தது. அதிபர் கதிரையைக் காட்டிச் சிரிக்க நானும் பெருமையுடன் அமர்ந்து கொண்டேன்.
“என்ன விஷயம்?"
"இல்லை. ஒரு சின்ன விஷயந்தான். மாவிட்டபுரத்திலை இருந்து இடம் பெயர்ந்த ஒரு பிள்ளை. சரியான கஷ்டம். நான் ஒரு கவுன்சிலர் எண்டு எண்னை நம்பிச்சொன்ன விஷயங்களை உங்களிட்டைச் சொல்லப்பிடாது. எண்டாலும் சொல்கிறன்."
"சொல்லுங்கோ"
தன்னைச் சுற்றி ஒரு வட்டம் வரைந்து கொண்டு எதிலும் ஒட்டாமல் நடப்பத போல் நடந்த வந்த அவள் எனக்கு முன் அமர்ந்தாள். அவளின் கழுத்து வளைவில் மட்டும் தான் இளமை நெடி அடித்தத.
முகத்தைப் பார்த்தேன். தனிமை, தக்கம், அவமானம், ஏக்கம், சோர்வு, வெறுப்பு, விரக்தி. இவற்றில் ஒன்று அல்லது

Page 64
கோகிலா மகேந்திரன் 116
இவற்றில் பலவற்றின் சேர்வை! அந்த முகத்தின் மொழியற்ற செய்தியை என்னால் சரியாக வாசிக்க முடியவில்லை. மூலகங்களில் அடர்த்தி கூடியது எது? ஒஸ்மியமா? பாதரசமா? இரசாயனவியல் எல்லாம் ஒழுகிப்போய் நீண்ட காலம்! ஒ. மனித மனத்தின் கூறுகள் மிகப் பயங்கரமான அடர்த்தி கொண்டவை!
"தங்கச்சி சொல்லுங்கோ" வட்ட விழிகள். வரம்பாய் இரு புருவம், கண்ணுக்குள் அம்பு மாதிரித் துளைக்கும் பார்வை. இவை அவளுடையவை!
"என்ரை பிள்ளை எப்பிடி எண்டாலும் படிக்க வேணும். என்னைப்போலை படிக்காமல் இருந்திட்டுப் பிறகு கஷ்டப்படப்பிடாது."
அவளிடமே ஒரு குழந்தை மனம் நிறைந்த வழிந்தத. அவளுக்கும் ஒரு குழந்தையா?
அதைச் சொல்லும் போதே அழுகை வெடித்துப் பொங்கிச் சரிந்தது. என்னைப் பார்த்த படி இருந்த முகத்தை எதிர்ப் பக்கம் திரும்பி வழிந்த கண்ணிரைத் தடைத்தாள். முள் நிறைந்த வாழ்வுப் பாதையில் முதல் சுவட்டைக் கண்டிருப்பாள்!
ஸ்ரூலில் இருந்த கைலேஞ்சியை எடுத்துக் கொடுத்த அந்த அழுகைக்கு நேரம் கொடுத்த நான், கொஞ்சம் அருகில் சென்று அவளின் தோளைத் தொட்டு எனது ஒத்தணர்வைக் காட்ட முயன்றேன். பிறரின் தொடல்களுக்கு அருகதை அற்ற பிறவி தான் என்பத போல் நான் தொட்ட தோளைச் சற்று இழுத்து.
"என்ரை சகோதரங்கள் ஒருத்தரும் எனக்குக் கிட்டவும் வாறதில்லை." என்றாள். இதயத்தில் வெகு நாளாய் எரிந்த நெருப்புத் தரைமீது வைக்கப்படுகிறதோ?

ഥഞ്ഞ പ്രഖ് 117
சிறித தயங்கினாள். நான் தன்னுடன் வருகிறேனா என்று "செக்' பண்ணவோ!
"உங்கடை பிள்ளையைப் படிப்பிக்க வேணும். ஒருத்தரும் உதவி செய்யாத படியால் அத உங்களுக்குக் கஷ்டமா இருக்கு."
நான் அவளின் உணர்வுகளையும் மீள எடுத்துக் கூறி அவளுடன் அருகே நடந்த கொண்டிருப்பதை உறுதி செய்தேன்.
எங்களைச் சுற்றி இருந்த பச்சை வண்ணம் பூசப்பட்ட சுவர்களை வெறித்தபடி சிறித நேரத்தைச் செலவழித்தாள். சுவரில் தொங்கிய அழகான பூக்கள் கொண்ட கலண்டரைத் தாண்டி அறைக்கு வெளியே நின்ற பட்ட மரம் ஒன்றில் அவள் பார்வை நிலைத்தத.
"அந்த மரம் ஒரு விதவை மாதிரி நிக்குத. அதுக்கு மேலை இருக்கிற வெள்ளைக் குருவி அதக்கு ஆறுதல் சொல்லுது," என்று சொல்லும் போது அவளின் கண்ணிமை மயிரில் புல்லின் மேல் பனித்துளி போல் நீர்!
"நீங்கள் படிக்கேல்லை எண்டு சொல்lங்கள். ஆனால் ஒரு கவிஞனைப் போலை நல்ல வடிவாக் கதைக்கிறீங்கள். ஒரு வேளை நான் அந்த வெள்ளைக் குருவி மாதிரி இருப்பன்"
அவளுடைய குறியீட்டை நான் புரிந்து கொண்டதை உணர்த்தினேன்.
மெதுவாகச் சிரித்தாள். விரக்தி கலந்த புன்னகை தான், என்றாலும் அழகாக இருந்தது. அப்போத தான் அவளது உடையைக்

Page 65
கோகிலா மகேந்திரன் 118
கவனித்தேன். மெல்லிய மஞ்சளும் பச்சையும் சேர்ந்த எளிமையான சட்டை என்றாலும் அந்தத் தெரிவில் ஒரு கலைத்துவம் இருந்தது.
"நான் விதவையோ இல்லையோ எண்டு எனக்குத் தெரியாது. அவரும் நானும் விரும்பித்தான் கலியாண்ம் செய்தனாங்கள். அததான் எண்ரை சகோதரங்களுக்குக் கோபம். தொண்ணுாறாம் ஆண்டு சண்டை தொடங்கேக்கை வவுனியாவுக்குப் போனார். திரும்பி வரேல்லை. சிலபேர் சொல்லிச்சின்ம் வவுனியாவிலை அவரைக் கண்டதெண்டு. நானும் செஞ்சிலுவைச் சங்கம் எண்டும் அதெண்டும் இதெண்டும் அலையாத இடம் இல்லை. காலும் ஒய்ஞ்சு போச்சு. நாலு வரியம் முடிஞ்சுத. இனிக் காவல் இருக்கேலாத. சீலை உடுத்தாத்தானே வெள்ளைச் சீலைக்கு மாற வேணும். எனக்குச் சீலை உடுக்க வழியில்லை"
கத்தியால் கீறிய ரத்தக்கட்டி போல் ஒவ்வொரு சொல்லும் வெளிவந்தது.
நான் இன்னும் சற்று அவளை நோக்கிச் சரிந்து எனது நெருக்கத்தை வெளிப்படுத்த முயன்றேன்.
"உங்கடை அவர் இருக்கிறாரோ இல்லையோ எண்டு தெரியாத நிலைதான் உங்களை ஆகவும் வேதனைப்படுத்துத."
என்னைத் தொடர்ந்து அவள் அந்த நிச்சயமற்ற உணர்வுக்குள் வந்தாள்.
"ஆமி பிடிச்சு எங்கையும் அடைச்சு வைச்சிருக்கிறானோ அல்லது ஆள் இல்லையோ. அல்லாட்டில்."

மனதையே கழுவி 19
"அல்லாட்டில்?"
"எங்கையும் வேற கலியாணம் செய்த எண்ணையும் பிள்ளையையும் மறந்துவிட்டாரோ?"
வானத்தை நோக்கி மிகத் தீனமாய் அவலமாய் ஒரு பெருமூச்சு விட்டாள், தொடர்ந்தாள்.
"திரும்பத் திரும்ப இதை யோசிக்க எப்பிடித் தலையிடி வராமல் இருக்கும்? எனக்கு ஒரே தலையிடி, காலமையும் சமைக்கேல்லை. அரை றாத்தல் பாண் வாங்கி நானும் பிள்ளையும் சாப்பிட்டது. எனக்கு இருபத்தேழு வயதாகுத. நான் சாப்பிடாமல் கிடப்பன். அத ஐஞ்சு வயசுப் பாலன். வயித்தைச் சுருட்டிக் கொண்டு கிடவெண்டால் கிடக்குமோ? நீங்கள் சொல்லுங்கோ அம்மா?"
"சின்னப்பிள்ளை பசி இருக்க மாட்டுத'
எனது பதிலின் பின் நெரிந்த புருவங்களைச் சற்றுத் தளர விட்டாள்.
"பெரியாஸ்பத்திரி டாக்குத்தர் ஐயாட்டைப் போனனான். அவர் மருந்து தரேல்லை. வருத்தம் ஒன்றும் இல்லையாம். மனக் கவலைதானாம். அவர் தான் சொன்னார். உங்களிட்டைப் போகச் சொல்லி.”
நிச்சயமற்ற தன்மை, இழப்பு, கணவரின் இழப்பை இவள் மனம் இன்னும் முற்றாக ஏற்றுக் கொள்ளவில்லை. இழப்பின்

Page 66
கோகிலா மகேந்திரன் 120
தயரத்தை வெல்லும் படிகளுக்கூடாக இவளை மெதுவாக அழைத்துச் செல்ல வேண்டும் என்று நான் மனதில் எழுதிக் கொண்டேன்.
"இந்தப் பிள்ளைக்கு இரண்டு இடியப்பம் அவிச்சுக் குடுப்பம் எண்டு நேற்று அக்கா வீட்டிலை ஒரு விறகுத் துண்டு எடுத்தப் போட்டன் எண்டு அவ என்னவெல்லாம் பேசினா தெரியுமே? நான் அறுதலியாம். மூதேசியாம். நானும் பிள்ளையும் பட்டினி கிடக்க அவைக்குச் சாப்பிடுற சாப்பாடு எண்ணெண்டு செமிக்கும்? மாவிட்டபுரத்திலை எங்கடை வீட்டிலை இருந்த காவோலை காணும் சமைக்க. ஆமிக்காறன் வந்தான். அம்மாவையும் விட்டிட்டு உடுத்த தணியோடை ஓடி வந்தம்."
வார்த்தைகள் காற்றில் தொற்றிக் காற்றையும் பெருமூச்சாக்கின. "உங்கடை அம்மா, வீடு, வளவு, காணி எல்லாத்தையும்
இழந்து வந்திருக்கிற நேரத்திலை அவரும் இல்லாமல் போனதை உங்களாலை தாங்க ஏலாமல் கிடக்கு."
ஒருவகை நிர்க்கதியான உணர்ச்சியுடன் மீண்டும் அவள் கண்கள் நீரைச் சுரந்தன. இப்போது சற்று நீண்ட நேரமாய் அழுதபடி இருந்தாள். நான் தடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அழுது முடிந்து மீண்டும் அந்த மரத்தை வெறித்தப் பார்த்தபடி யோசனையில் ஆழ்ந்தாள்.
அந்த நாளை அந்த ஏதோ ஒரு நிகழ்வை ஒரு சித்திரத் தொகுதியைப் புரட்டுவது போல மனத்திரையில் காட்சி காட்சியாய்க் கண்டு கொண்டிருக்கிறாளோ?
"நீங்கள் மனதிலை காணுற அந்தக் காட்சியைப் பற்றி எனக்கும் சொல்லுறியளா.. ?”

மனதையே கழுவி 121
இமைகளை ஒரு முறை அழுத்தி மூடித் திறந்தாள்.
"அண்டைக்கு விடிய ஐந்தரை இருக்கும். தாரத்தில் பொம்பர் ஒண்டு பதிஞ்சு குண்டு போட்டுத. ஆறு மணிக்குப் படபடவெண்டு சூடு கேட்டுத, பிள்ளைக்கு அப்ப ஒரு வயது. பிள்ளை படுத்திருந்த இடத்துக்குப் பக்கத்திலை ஒரு சன்னம் வந்து விழுந்தித. கோயிலடிக்குப் போன இவர் ஓடி வந்தார். ஆமிக்காரன் கோயிலடிக்கு வந்திட்டான் எண்டார். 'பிள்ளையைத் தாக்கு எண்டார். அவர் சைக்கிளை எடுக்க நான் பிள்ளையோடை சைக்கிளிலை ஏறினேன். அம்மா மாட்டடியிலை சாணகம் அள்ளிக் கொண்டு நிண்டது. 'அம்மா ஓடிவாணை எண்டு கத்திக் கொண்டுதான் சைக்கிளில் ஏறினேன். எங்களுக்கு முன்னாலையும் பின்னாலையும் சன்னங்கள் விழுது. எப்படி வந்தனாங்கள் எதாலை வந்தனாங்கள் எண்டு தெரியாதது. அம்மா வரவில்லை. வெத்திலைத் தோட்டத்தக்குள்ளே நிக்கிறா எண்டு பின்னாலை வந்த ஆக்கள் சொன்னவை. கொஞ்ச நேரத்திலை அவ்விடத்தில் பொம்பர் அடிச்சுத."
"அம்மா."
"அம்மா இருந்தா இப்பிடி என்னை அழுதுகொண்டு திரியவிடாது"
"அதை எல்லாம் திரும்ப நினைச்சுப் பாக்கேக்கை. n
"நெஞ்சை ஏதோ இறுக்கிற மாதிரிக் கிடக்கு. தலை எல்லாம் விறுவிறுக்குத. அங்கை இருந்த வெத்திலைத் தோட்டம் காணும் எங்கடை சீவியத்துக்கு, கமுகும், தென்னையும், வெத்திலைத் தோட்டமும் சுத்தி இருக்க எவ்வளவு செல்வமாய் இருந்தது எங்கடை வீடு”

Page 67
கோகிலா மகேந்திரன் 122
"பிறகு?"
"பிறகு கொஞ்ச நாள் பிள்ளையார் கோயிலடியில்தான் படுத்தனாங்கள். ஒருநாள் இவர் சொன்னார், இனி இப்பிடி இருந்த என்ன செய்யிறத? வெங்காயம் கட்டிக் கொண்டு வவுனியாவுக்குப் போட்டுவாறன் எண்டு. நானும் பிள்ளைக்குச் சாப்பாடு குடுக்கத்தானே வேணுமெண்டு ஒமெண்டன். பிள்ளையைக் கவனமாய் பாத்தக்கொள் வாறன் எண்டு சொல்லிட்டுப் போனார். வரேல்லை."
இலக்கும் பாதையும் இல்லாமல் சுழலுவதே இந்த மனதக்கு வழக்கமாகிப் போய்விட்ட ஒன்று!
"அவர் இனிமேல் வரமாட்டார் எண்டு நினைக்க எப்பிடி இருக்கு உங்களுக்கு?"
உடைந்த நொருங்கி உருக்குலைந்து போய் இருந்த அவளின் கைகளைப் பற்றியபடி கேட்டேன்.
"எனக்கு அவரிலை சரியான கோபம் வருத." சறக்கென்று வாழை இலை கிழிப்பது போல் பதில் சொன்னாள்.
"என்ன கோபம்?"
"என்னையும் பிள்ளையையும் தனிய விட்டிட்டு ஏன் போவான் எண்டு!"
"அவர் ஒருவேளை இந்த உலகத்திலையே இல்லை எண்டால்."

மனதையே கழுவி 123
"அப்பவும் கோவம் தான்”
"எப்பிடி?”
"ஏன் என்னை இப்பிடி விட்டிட்டு செத்தப் போனாயெண்டு?”
”......99bے“
தன் உணர்வுகளைச் சரியாக அடையாளம் கண்டு கொண்ட அவளின் கண்கள் இப்போது சிவப்பு அடைந்தன.
இந்தக் கோபத்தையும் நான் கையாள வேண்டி இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டேன்.
"உங்களுக்கு அவரிலை சரியான கோபம். ஆனால் இல்லாத ஒருவரிலை கோபப்பட்டு என்ன செய்வீங்கள்?" அவள் பேசுவது போன்ற பொதுவான நடையில் கேட்டேன்.
"ஓ. அப்பிடி நினைக்கேக்கை ஏதோ குற்றம் செய்யிற மாதிரி இருக்கு ;"
இந்தக் குற்றப்பழி உணர்வையும் பார்க்க வேண்டும். மன டயரியில் குறித்துக் கொண்டேன்.
"எனக்குக் கொஞ்சம் தண்ணி தாlங்களா குடிக்க ?” நளான் கொடுத்த ஒரு கப் தேநீரை ஒரே மூச்சில் குடித்த முடித்தாள்.
இழப்பு, கோபம், குற்றப்பழி உணர்வு, நம்பிக்கை இன்மை. இன்னும், இன்னும்! மனம் என்பது பெரிய பள்ளத்தாக்கு!

Page 68
கோகிலா மகேந்திரன் 124
"உங்களுக்கு அவர், வீடு, காணி எல்லாம் ஒரே காலத்திலை இல்லாமல் போனது தாங்க முடியாததாலை அவர் உங்களை விட்டிட்டுப் போனது கோவம். இல்லாத ஒருவரோடை கோபிக்கிறன் எண்டு ஒரு குற்றப்பழி உணர்வு, பிள்ளையை எப்பிடிப் படிப்பிக்கிறது எண்டு ஒரு நிச்சயமில்லாத நிலை. இதகளிலை எது உங்களைக் கூடப் பாதிக்குத?”
"ஓம் அம்மா, எல்லாம் சேர்ந்து ஒரே தலையிடி, இந்தப் பிறவியிலை இந்தத் தலையிடிமாறாது, செத்தால் என்ன எண்டிருக்குச் சிலவேளை."
கனியாத நாவல் பழம் தின்றதுபோல் தொண்டை அடைத்திருந்தது. ஒகோ. தற்கொலை எண்ணம் வேறு இருக்கிறதா? காற்றின் ஒவ்வொரு அசைவிலும் கூடக் காலன் வந்துகொண்டிருக் கிறானா இவளுக்கு?
"அப்பிடி எண்டால் உங்கடை பிள்ளை"
"அதை நினைச்சுத்தான் இன்னும் சாகாமல் இருக்கிறன். அந்தப் பிள்ளையை ஐயோ நான் எண்ணெண்டு வளர்க்கப் போறன்? என்னண்டு படிப்பிக்கப் போறன். அது எங்கை எண்டாலும் நல்ல பள்ளிக் கூடத்திலை படிக்க வேணும். ஆனால் என்னட்டை இப்ப மிஞ்சியிருக்கிறது கவலையும், வறுமையுந்தான். இதுதான் என்னை அதிகம் பாதிக்குத."
"நீங்கள் சொல்லுறதெல்லாம் எனக்கு விளங்குத, நாங்கள் அடிக்கடி சந்திப்பம், கதைப்பம். இரண்டு பேருமாச் சேர்ந்து மெல்ல மெல்ல உங்கடை பிரச்சினைகளைத் தீர்க்கப் பாப்பம்."

மனதையே கழுவி 25
"அம்மா, உங்களோடை கதைச்சத எனக்கு நல்ல ஆறுதலாக இருக்கு. என்ரை பிள்ளையை ஒரு நல்ல பள்ளிக் கூடத்திலை சேர்க்க உதவி செய்த விடுங்கோ."
நான் தலையசைக்க, சோகப் பாசி பூத்த அந்த முகத்தில் புன்னகை அரும்பு கட்டுகிறது.
செப்டெம்பர், ஒக்டோபர், நவம்பர் மாதங்கள். தேதிகள் அலங்கோலமாயின.
இழப்பின் படிகளுக்கூடாக இவளை அழைத்தச் செல்லல், கோப உணர்வை வெளியேற்றல், குற்றப்பழி உணர்வில் இருந்து விடுவித்தல், தானே குடும்பத் தலைவியாக அமர்ந்த பிள்ளையை வழிநடத்தலாம் என்று உணரச் செய்தல், இறுதியாகப் பிள்ளை ஒரு நல்ல பாடசாலையில் சேர உதவுதல், எனக்குள் பல காட்சிகள் படமாய் விரிந்தன.
வரண்ட காற்று மண் புழுதியையும் சருகுகளையும் வாரி இறைத்த படி சுழன்று வந்து கொண்டிருந்தத.
"உங்கடை பள்ளிக் கூடத்திலை இந்தப் பிள்ளையைச் சேத்தால் உதவியா இருக்கும். அவ எப்பிடியும் கஷ்டப்பட்டுப் படிப்பிச்சிடுவா."
நான் நிமிர்ந்தேன்.
"ஒ. அதுக்கென்ன? உங்களுக்குச் செய்யாத உதவியா ?” எனக்குக் கொலர் இல்லை. இருந்திருந்தால் உயர்த்தியிருப்பேன்.

Page 69
கோகிலா மகேந்திரன் 126
ஆனால் எனக்கு எவ்வளவு மதிப்பு : மதிப்பையும் மரியாதையையும் கட்ட்ாயப்படுத்தினால் அவை, அவை அல்ல!
"சேர்க்கலாம். இப்படியான பிள்ளைகளைச் சேர்க்கத்தானே வேணும்"
"ஓ." எனத முகம் ரோஜாப் போல விரிந்தத. "அதுவும் எங்கடை அயல் கிராமம் மாவிட்டபுரம். கட்டாயம் செய்ய
வேணும்.”
"ஆ." எனக்குள் ஐஸ்கட்டிகள் பல இறங்கி.
"ஆனால் ;"
"ஆனால்?"
"ஒரு ஐயாயிரம் ரூபா தந்தியளெண்டால் எங்கடை பாடசாலை அபிவிருத்திச் சபைக்கு உதவியாக இருக்கும். நான் மற்றவை சிலரிட்டைக் கூடவும் வாங்கி இருக்கிறன். நீங்கள் ஒரு ஐஞ்சு தாங்கோவன்."
'களாம் புளாம்” எண்டு எனக்குள் ஒரே வெப்பியாரம்.
"சிதறுவான்"
நெஞ்சுக் கூட்டில் கொதிநீர் கொட்டுகிறது. மனத் தடாகத்தில்
பெரும் புயல் வீசுகின்றது, கண்ணீர்ப் பிசின் இதய அறைகளை இறக்குகிறது.

மனதையே கழுவி 127
ஒரு 'கவுன்சிலர் செய்யத் தேவையில்லாத வேலைக்குப் போனதற்கு எனக்கு நல்ல தண்டனை!
மனிதர்கள் எவ்வளவு அழகாக மனிதர்களைப் புரிந்து கொள்கிறார்கள் தெரியுமா?
மனதையே கழுவி வெளியே தள்ளி விடுவதிலும் இந்த மனிதர்கள் மகா சமத்தர்கள் தெரியுமா?
ஆனாலும் நாங்கள் முயன்று கொண்டே இருப்.ப்.ப்.
(மல்லிகை - தை '95)
-() () ()

Page 70
சர்ப்பமரணம்
இரவு பெய்த மழையில் மரம் எல்லாம் சொட்டச் சொட்ட நனைந்து பூ வெல்லாம் குளித்திருந்தது. இன்னும் சரியாக விடியவில்லை என்பதுடன் மழை இருட்டும் இருந்தது. மழை இருட்டில் அந்தப் பாம்பின் கருமை நிறம் மேகத்தின் வடிவத்தில் அதன் தோல் வரி அலை. இருளா ஒளியா மரணத்தைத் தழுவுகிறத?
அழுதே கழியும் ஊமை இரவுகளின் பின் பல்லு விளக்காத முகத்துடன் பவனி வருகின்ற சூரியன் இன்று புதிய உலகொன்றைக் கண்டு வழி தவறிப் போவோமா என்று மலங்க மலங்க விழித்து வெளியே வராது ஒளித்து நின்றான். நான் கதவைத் திறந்து முன் புறத் தோட்ட்த்தில் கால் வைத்தேன்.
அப்போது தான் அந்தப் பாம்பு பற்றை மறைவில் ஒளித்திருந்த விட்டு என்னைக் கண்டு மிரண்டு, கண்ணை மூடிக் கொண்டு ஓடி. கண்ணை மூடிக் கொண்டு என்பது பிழை. பாம்புக்குக் கண் மடல்கள் இல்லை. பிறகு எப்படிக் கண்ணை மூடுமாம்? ~ கடதாசிப் பூ மரத்தில் ஏறி அதன் கிளைகளில் மறைந்தது.
"ஐயோ!" காலுக்கு மிக அருகில். ஒரு சென்ரி மீற்றர் தாரத்தில் பாம்பு ஓடியதால் அதிர்ச்சியும் பயமும் அடைந்து, நான் போட்ட கத்தல் குறைந்தது நூறு மீற்றருக்குக் கேட்டிருக்கும்.

சர்ப்பமரணம் 129,
திெல்லிப்பழை தர்க்கையம்மன் ஆலயத்தின் கோபுரத்துக்கு அருகில் நின்றிருந்த நான்-எனது தலைக்கு நாறு மீற்றர் தாரத்தில் அந்தக் குண்டு வருவதைக் கண்டு அதிர்ச்சியும் பயமும் அடைந்து, போட்ட குழறல் குறைந்தது ஐநூறு மீற்றருக்குத் தெளிவாகக் கேட்டிருக்கும்.
"ஐயோ. போட்டிட்டான் அம்மாளாச்சீ." மனிதர்கள் எல்லாம் வேகமாய் ஓடுகிறார்கள் எங்கே என்று தெரியாமல்! நான் இன்னும் பலருடன் கோபுரத்தின் கீழ் பதங்கிக் கொண்டேன். எங்கும் புகை, இருள். செவிச் சவ்வு பிளந்து விடும் ஒலிகள்!
இருளைப் பிளந்து கொண்டு ஒற்றையாய் ஒரு அழுகை ஒலம்! என்னுடையதுதான்!
"ஐயோ. என்ரை பிள்ளை " "சீனக் சகடை மீண்டும் சுற்றுகிறத. எனது தலையும் கூடவே உடல் மிக நன்றாக. குளித்தத போல் வியர்த்து விட்டத. இதயத் தடிப்பு. கதவு காற்றுக்கு அடிப்பது போல் படார். படார்’ என்று கேட்கிறது.
வெளியே வந்து பிள்ளையைத் தேடவும் முடியாமல். உள்ளே நின்று தேடாமல் நிற்கவும் முடியாமல். எண்ன வேதனை இத?
"ஐயோ, எனக்குப் பிள்ளை இல்லாமலே இருந்திருக்கலாமே!"
"இந்த நேரம் பாத்துக் கடலை ஆச்சிட்டைக் கடலை வாங்க வெண்டு ஓடினானே!"
"எனக்கு மேலை விழுந்தா விழட்டும். பிள்ளையைத் தேடிப் பிடிக்காம என்னாலை நிக்க ஏலாது."

Page 71
கோகிலா மகேந்திரன் 130
எனத சொந்தப் பாதுகாப்பு உணர்வு இடிந்து தகர்ந்து போயிற்று. சனத்தைப் பிளந்து கொண்டு வெளியே ஒடுகிறேன். அப்போது.
இரண்டாவது குண்டு எனது தலைக்கு இருநாறு மீற்றர் தொலைவில்.
ஓடுகிறேன். ஓடுகிறேன். மனதக்குள் பல கறுப்புக் &5Ꮺ6ᎠéᏂ6ᎥᎢ!
சிேயாவின் பைத்தோன் போன்ற பாம்புகள் - தனது தலையை விட மிகப் பெரிய இரையை - சில சமயம் மான்களைக் கூட. விழுங்கி விடுமாம்.
இந்தப் பாம்பு எனது ஒரு வயதக் குழந்தையை விழுங்கி விடுமோ?
எச்சிலை விழுங்கினேன். புண் மீத மருந்து தடவியது போல் எரிந்தது.
உள்ளே பாய்ந்து சென்று குழந்தையைப் பார்த்தேன். குழந்தை புற்பாயில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது.
இது உறக்கந்தானா..? அல்லது.? மேலே ஏறிய பாம்பு கூரை வளை மூலம் உள்ளே இறங்கி..?
இது ஒரு வேளை 'ஆபிரிக்கன் மம்பா' வாக இருந்தால்..? கடித்த ஒரு நிமிடத்தக் கிடையில் மரணம் நிகழ்ந்துவிடுமாமே..?
"கடவுளே. ' கடவுளிடம் நம்பிக்கை குறைகிற போதும். (இவ்வளவு அக்கிரமமும் நடக்கும் போது, தனது வாழிடமாகிய கோயிலிலேயே குண்டு விழுகிற போதும் ஒன்றும் பேசாமல் கல்லாய்

சர்ப்பமரணம் 13
இருக்கிற கடவுள்.?) ஏன் என்று தெரியாமலே கடவுளைக் கடப்பிட்டுக் கொண்டு குழந்தையின் மூக்கின் கீழே புறங்கையை வைத்தப் பார்க்கிறேன்.
"அப்பாடா" குழந்தை மூச்சுவிட்டு உறங்கியத!
s ப்ேபாடா!
கடலை ஆச்சியைக் கட்டிக் கொண்டு தலையைக் கடலைச் சுளகுக்குக் கீழே போட்டுக் கொண்டு ~ இந்தா ~படுத்திருக்கிறான்.
தலைக்கு வரும் குண்டைச் சுளகு காப்பாற்றிவிடும் என்பத போல!.
என்னைக் கண்டதம் எழுந்த ஓடி என் முந்தானைச் சேலையைப் பிடித்தச் சிரிக்கின்றான்.
y3
"அம்மா காசு விழுந்தோச்சு கடலை இல்ல. மூன்று வயதக்குள் அடங்காத தடியாட்டம்.
கோயில் வாசலில் இரத்தக் குவியல் ! காயப்பட்டவர்களையும் மரண வாசலுக்குச் சென்றவர்களையும் காவிக் கொண்டு அம்புலன்ஸ் வண்டி ஒன்று பறந்து போகிறது.
கோயில் சூழலை அசுத்தமாக்கிவிட்ட திருப்தியில் சகடை மறைந்த போகிறத.
"ஐயோ! சகடையே! உனக்கு மரணம் இல்லையா?” மூன்று வயதை இடுப்பில் சுமந்து கொண்டு ~ நிறையவே ஆழ்மனதில் பயத்தையும் நிரப்பிக் கொண்டு ~ வீட்டுக்கு வருகிறேன்.

Page 72
கோகிலா மகேந்திரன் 132
எனது நிலா முற்றம் கூட ஏதோ ஒரு அச்சத்தில் உறைந்து போய்க் கிடக்கிறது. மரம், செடி, கொடி, எதுவும் அசைய வில்லையே!
நான் பாம்புக்குப் பயம். பாம்பு எனக்குப் பயம். நல்ல வேடிக்கை இது : பாம்புக்கான பயம் மறைந்து விட்டதென்று யார் சொன்னது? நேற்றிரவுக் கனவிலும் இதே பாம்பு வந்ததே ! கனவில் வரும் பாம்பு வேறு ஏதோ ஒன்றின் 'சிம்பல்' என்று உளவியலாளர்கள் சொன்னால் சொல்லட்டும்! எனக்கு வந்தது அசல் பாம்புதான்!
வானத்தில் வேட்டு முழக்கங்களுடன் தோன்றுகிற சீபிளேன்!
கொறித்த விழிகளுடன் திசைகளை அளந்து விட்டு. சீ. பிளேன் தலைக்கு மேல் வட்டமிடுவதை உணர்ந்து. குழந்தையின் நித்திரையைக் குழப்பித் தாக்கித் தோளில் போட்டுக் கொண்டு. பங்கரை நோக்கி ஓடுகிறேன்.
"குழந்தை கவனம். பக்கத்திலை குண்டு விழுந்தால் காதச் சவ்வு வெடிச்சிடும்."
கணவரின் குரல் செவிகளிலும் புலன்களிலும் அடிக்கடி மோதிச் சிலிர்த்து fங்காரித்த வண்ணம் இருக்கிறது.
குழந்தை ஒரு சாட்டுத்தான்! மூட்டை மாதிரி முடங்கிக் கொண்டு, வீடே அதிருகிற மாதிரி இருமுகிற பாட்டிக்குச் சீ-பிளேன் என்றால் பயமில்லையா? அல்லது இள ரத்தம் ஓடுகிற என் கணவருக்குத்தான் இல்லையா?
மூட்டைக்குள்ளிருந்து எலும்பும் நாருமான குச்சுக்கையை வெளியே நிட்டி, "தம்பி, சகடை எதாலை போகுத மேனை ?"எண்று

சர்ப்பமரணம் 133
கேட்கும் போது, நடுங்கும் பாட்டியின் குரல் வயதினால் மட்டும் வந்த தென்று சொல்ல முடியாது.
பங்கர் வாசலில். பனை மரங்களின் நடுவில் ஒரு பாம்புச் செட்டை. இதற்குள்ளே நுழைந்த பாம்பு வளர்ந்திருக்கிறது. வளர்ச்சிக்கு இடம் கொடாத தோலைக் கழற்றிவிட்டது.
"முந்த நாளும் உதக்குள்ளை ஒரு செட்டை கிடந்தத மேனை.”
பாட்டியின் குரல் நடுக்கத்தடன் கேட்டது. ஆறு வாரங்களுக்கு ஒரு முறைதானே பாம்பு தோல் கழற்றுமாம்? அப்படியானால். இந்தப் பங்கருக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட பாம்புகள் வாழுகின்றனவா?
பங்கருக்குள் போனால் தலைக்கு மேலே பாம்பு!
வெளியே நின்றால். தலைக்கு மேலே சீ-பிளேன்!
கண்ணை மூடினால் பாம்பு. திறந்தால் சீ-பிளேன! இல்லை திறந்தால் பாம்பு. மூடினால் சகடை ஒ. கனவுதானா?
அந்தச் சத்தம். அவ்ரோதான்! மனம் சரியாகவே பாகுபடுத்தி அறிந்து கொள்கிறது. ஆனால் எதுவாக இருந்தால் தான் என்ன ? அவ்ரோ. சீ-பிளேன், சகடை, பொம்பர், ஹெலி எதுவாக இருந்தாலும் அந்தச் சத்தம் கேட்டவுடன் எனக்குள் பல பாம்புகள் ஓடுவதுபோலத் திடீரென்று ஒரு பயம் மனத்தை இறுக்குகிறது.
எந்தப் பெரிய வியாதி வந்தாலும் இப்படி ஒரு வேதனை இருக்கும் போலத் தெரியவில்லை. அந்த வேதனையை எப்படி

Page 73
கோகிலா மகேந்திரன் 134
விபரிப்பது என்றும் புரியவில்லை. எங்கோ வேகமாக ஓட வேண்டும் போல ஒரு அந்தரம். ஆனால் அசைய முடியாத ஒரு விறைப்பு.
ஒரு நாள் அந பவம் எப்போதும் நடக்கப் போவதில்லை, இது அநேகமாகக் குண்டுபோடப் போவதில்லை' என்று எவ்வளவு தான் அறிவு மனம்-நனவு மனம்- சொல்லிக் கொண்டாலும். தன்னாட்சி நரம்புத் தொகுதி எல்லாம் தனக்கே தெரியும் என்பது போல் நடந்து கொள்கிறத. பாத்றாமுக்குப் போக வேண்டும் போல இருக்கிறது. உள்ளே நுழைந்தேன்.
பாம்பு இனங்களில் பத்தில் ஒன்பது பகுதி தீமை அற்றவை. சீ-பிளேன். அவ்ரோ வகைகளில் பத்தில் பத்தும் தீமையானவையே!
ஆகவே பங்கருக்குள் நழைந்தேன். புகையும் புழுக்கமும் இறுக்க எங்கோ ஒரு இருட்குகையில் பாறையின் இடிபாடுகளில் அமுக்குவது போல், யாரோ கழுத்தை நெரிப்பது போல், மூச்சு அடைத்தது.
மனம் என்பது பெரிய பள்ளத்தாக்குத்தான்!
ஆழம், இருட்டு, அடர்த்தி!
அன்று கனவில் தோன்றிய அந்தப் பாம்புக்கு மஞ்சள் நிறமான கண்வில்லை. இந்த மஞ்சள் கண்கள் ஊதாக் கடந்த கதிர்களைப் பிரித்துப் பார்வையைக் கூர்மை அடையச் செய்யும் என்று எனக்குக் கனவிலும் நினைவு வருகிறது பாருங்கள்:
"நீ என் மனைவியைக் கொலை செய்தாய். நான் உனக்குச் சாபம் போட்டிருக்கிறன்." பாம்பு பேசுகிறது.
"பாம்பு சாபம் போடுவதை நம்ப நான் ஆயத்தமில்லை. நான்
புத்தி ஜீவி”

சர்ப்பமரணம் 135
என்பது நான் சொல்லாத பதில்.
பயங்கரமாக நாக்கை நீட்டிக் கொண்டு அது என்னைத் துரத்துகிறது. இத "தீமையற்றதாக இருக்கலாம்" என்று எனக்குத் தோன்றவில்லை. நான் ஓட்டமாய் ஓடுகிறேன்.
"என்னை ஒன்றும் செய்யாதே" என்று கெஞ்சுகிறேன். பாம்பு செவிடு' என்பது என் மனதில் உறைக்கவில்லை.
வ்ேரோவின் சத்தம் என்னை நோக்கி வருகிறத.
இரவு நேரம்! அமாவாசை! இப்போது பாம்பு எனக்கு மிக அண்மையில் வந்து விட்டது. அதன் கண்கள் பூனையின் கண்கள் போலப் பிரகாசமாய்! என்னை நணுக்குக் காட்டியில் பார்ப்பது போல் தெளிவாகப் பார்த்திருக்கும்.
நாக்கை நீட்டி என்னைத் தொட்டுப் பார்க்கிறது. எனது உடல் மணத்தை அச்சொட்டாக அறிந்திருக்கும். இனிமேல் தப்புவது சாத்தியமில்லையோ?
"உட்பக்கம் வளைந்து, ஊசி போலக் கூர்மையான உன் பற்களால் என்னுடலில் நீநஞ்சு செலுத்த நான் விடப் போவதில்லை."
நான் திடீர்த் துணிவுகொண்டேன். வேகமாய் ஓடி, வேலியில் கிழுவங் கதியாலை முறித்தேன். விசையுடன் ஓங்கி தலையில் ஒரு போடு போட்டேன்.
"டும்."
என்னை நோக்கி வந்து கொண்டிருந்த அவ்ரோவின் சத்தத்தின் மத்தியில் அந்த "டும்." சத்தம் மிகத் தெளிவாகவே கேட்டது.

Page 74
கோகிலா மகேந்திரன் 136
"நீ என்னிடம் தப்பி விட்டாய். ஓ. என்னை . என்னை 9..... (9b.... (9b..... முடிந்து விட்டாயா ?”
முனகிக் கொண்டே உயிரை விட்டது பாம்பு.
கண் விழித்தேன்.
பூமியில் பாதம் பரவாத பரவசம் மனதில் இருந்தது.
தெருவெல்லாம் ஒரே களபுளா! இவர்கள் எல்லாம் எங்கே ஓடுகிறார்கள் வலு உற்சாகமாய் ?
"டேய் . பிளேன். yy
"னிங் னிங் னிங். s
"மச்சான் அவ்ரோ. y
“பீப்.பீப். சரியடா..."
"இண்டைக்கு இரண்டாவது ஆளும் முடிஞ்சார். இனிமேல் இந்தப் பக்கம் தலையும் வைக்க மாட்டார்!"
எல்லாரும் சிரித்துக் கொண்டே ஓடுகிறார்கள் பார்க்க!
மே தினக் கடட்டத்தை விட. அதிகளவு சனம்! நான் இப்போது பாம்புக்குப் பயமில்லை!
ஒ. பிளேனுக்குந் தான்!
(புரட்டாதி - '95)
() () ()


Page 75
கோகிலா ம
எழுபதுகளில் எழுத்துலகில் பிரகாசித்த திருமதி கோச் பெண்ணியம் சார்ந்த கருத் ரீதியான அணுகுமுறைய கவனிப்பைப் பெற்றுத் திகழ்
மனித சொருபங்கள் எண் இலக்கிய அறுவடை என மேற்கொள்ளப்பட்டது. தொட முரவப்பாடுகளிள் அறுவடை சிறுகதைத் தொகுதிகளுள் சாகித்திய விருதினைப் பெ சோதரனுடன் இவர் இணைந்த சிறுகதைத் தொகுதி 1984இ
நாவல் இலக்கியத்தினைப் ஒருநாள் கலையும், தூவான நாவல்கள் நாலுருப் பெற்று நாவல்களை எழுதியுள்ள கே நாடகங்களையும் எழுதியுள்
தற்போது நாடகத்துறையி கொண்டுள்ள இவர் நா பாடத்தக்கான உதவி த கிரேக்கத்தின் தொல்சீர் அ அண்மையில் கலை இ வெளிக்கொணர்ந்துள்ளார்.
புலோலியூர் ஆ !
 

கேந்திரன்
பிரவேசித்து எண்பதுகளில் நிலா மகேந்திரண் தனது ந்துக்களாலும் உளவியல் பினாலும் சகலரினதும்
பவர்.
iற இவரது முதலாவது ன்பதுகளின் ஆரம்பத்தில் ர்ந்து வெளிக்கொணரப்பட்ட பிரசவங்கள் ஆகிய இரு பிரசவங்கள் இலங்கை |ற்றது. தனது இலக்கிய வெளியிட்ட அறிமுகவிழா இல் அரங்கேறியது.
பொறுத்தவரை துயிலும் ம் கவனம் ஆகிய இரண்டு |ள்ளன. இவை தவிர பல ாகீலா 10க்கும் மேற்பட்ட 'TT.
லேயே மிகுந்த அக்கறை டகமும் அரங்கியலும் நூலாகக் கொள்ளத்தக்க ரங்கு எனும் நூலினை இலக்கிய களத்தினூாடு
இரத்தின வேலோன் தினக்குரல்.