கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரசவங்கள்

Page 1


Page 2

பிரசவங்கள்
கோகிலா மகேந்திரன்
சிவன் கல்வி நிலையம் Gauce - S

Page 3
È
PRICE Rs 20/-
PIRASAVANGAL A short story Collection in Tamil by
K) HILA MAHENDRAN
First Edition: April 1986 Published by : SIVAN KALVI NILAYAM
WILICIDDY TELLIPPALADI.
Printed at : AMBIKA PRESS
Kurumpasiddy, Tellippalai.

பொருளடிக்கம்
நாள் தோறும் அற்புதம்
al-T6OT sferauru
17
மனத்திருப்பம் 28
மனிதர்கள் 34 சடப்பொருள் என்றுதான் நினைப்போ? 2. مجھے ஒரு மேடையில் இரு துருவங்கள் 49 மனிதாபிமானம் மறுபரிசீலனைக்கு
55
முன் به u عه
கிழிந்து போன வாழ்க்கைகள்
7O
நா?ளய ஒட்டைகள் 79
சாம்பல் படர்ந்த தணல் 89 பட்டங்கள் மீண்டும் பறக்கும் 98 $urarahu vilasdir.
1○7
உச்ச அறுவடை
1 7

Page 4

நாள் தோறும் அற்புதம்.
சிந்தனையில் மிக ஆழமாக ஊன்றிப் போய்விட்ட அவளுக்கு குருநாகலில் இருந்து கண்டிக்குப் போய்க் கொண்டிருக்கும் அவளது பஸ் "மாவத்தேகம நகரைத் தாண்டி விட்டதுசுடத் தெரியவில்லை. "சென்ற வாரம் அவள் வாழ்வில் தோன்றிய பிரச்சனையை அவள் சமாளித்தவிதம் அவள் மனச்சாட்சிக்குச் சரியானதா? தவருனதா?" முடிவு செய்யமுடியாத நிலையில்தான் அவள் மனச் சாட்சி பற்றியே ஆராய ஆரம்பித்து விட்டாள். அவள் அமர்ந்திருந்த எக்ஸ் பிரஸ் பஸ் அடிக்கொருதரம் இங்கும் அங்கும் நெளிந்து வளைந்து மேலேறும் பாதையிலே மிக வேகமாக ஒடிக்கொண் டிருக்கிறது. அதன் வேகமும் குலுக்கமும் அவள் வயிற்றைக் குமட்டுகின்றன. தலை சுற்றுகிறது! ஆனல் அவளின் தலைச் சுற்றலுக்கு அந்த பஸ்ஸின் வேகம் மட்டுந்தான் காரணமா? இல்லை! அவள் மனதில் வெகு வேகமாக அலை அலையாக எழும்பி அடங்கிச் சுற்றிச் சுழலுகின்ற, நடந்து முடிந்த, கசப்பான நினைவுகள் தான் முக்கிய காரணம்!
பஸ்ஸின் யன்னலினூடாக வெளியே பார்க்கிழுள் அவள். தூரத்தே தெரியும் மலைத் தொடர்களிலிருந்து பனிப் படலங்கள் அலை அலையாய் மேல் எழுந்து பரம்புவது அவன் மனதின் எண்ண அலைகளை அவளுக்குப் படம் பிடித்துக் காட் டுவது போலத் தோன்றுகிறது.

Page 5
21 நாள் தோறும் அற்புதம்
போன திங்கட்கிழமை பின்னேரம் 4-30 மணி இருக்க லாம். புரபஸர் சங்கரின் அறையின் வெளியே நின்று கொண்டிருந்த அவள் மெதுவாகத் திறந்திருந்த அறைக் தேவினூடாக அவர் இருக்கிருரா என்று பார்க்கிருள்:
அவர் அவரது அறையில் இருப்பது அத்தி பூத்தாற் போலத்தான்! எந்த நாள் எந்த நேரம் வருவார், எங்கே இருப்பார் எப்போது திரும்புவார் என்பதெல்லாம் அநேக மாக அவருக்கே தெரியாத விஷயங்கள்: நல்ல காலமோ அல்லது அவளின் கெட்ட காலமோ அன்று அவர் அறை யில் இருந்தார். மே  ைச யின் மீது வைக்கப்பட்டிருந்த * டேபிள் பான் வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது அவர் மேசையில் அமர்ந்து ஏதோ அவசர அவசரமாக எழுதிக் கொண்டிருக்கிருர், அவள் தயங்கியபடியே நின்று கொண்டிருக்கிருள். அவள் நினைத்து வந்த உதவியை அவரி டம் கேட்கலாமா? எப்படிக் கேட்பது? அதற்கு (P56 அவளின் குழப்ப நிலை பற்றிச் சொல்ல வேண்டுமே! அவருக்கு நேரம் இருக்குமோ என்னவோ? எந்த மாணவனுக்கோ மாணவிக்கோ என்ன பிரச்சினை என்ருலும் தன்னைச் சந்தித் துப் பேசத் தயங்கக் கூடாது என்று அவரே எத்தனை முறை வகுப்பில் சொல்லியிருக்கிறர்}
அவள்தான் தேவை இல்லாமல் பயப்பட்டுக் கொண்டு . * கூ இஸ் வெயிட்டிங் அவுட் கமின் பிளிஸ். "
அவள் வெளியே நின்று கொண்டிருந்ததைச் சிறிய கதவு தீக்கல் வழியாக அவர் அவதானித்துவிட்டார். மெதுவாக அறைக் கதவைத் திறந்து கொண்டு அவள் உள்ளே போகிருள்.
" ஒ1 மிஸ் மேரி சிற் டவுன். என்ன ada Luth? ” ’
வழக்கமாக அவர் குரலிலும் கண்களிலும் தெரிகிற அன்பும் ஆதரவும் மாறவில்லை.

கோகிலா மகேந்திரன் / 3
19 உங்களுக்குக் கஷ்டம் கொடுக்கிறதுக்கு மன்னிக்க வேணும் சேர். உங்களிட்டை இருந்து ஒரு சிறிய. இல்லை பெரிய உதவி பெறலாமா என்று."
* ஒ யெஸ்! எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. என்ன உதவி வேணும் உனக்கு? பாடங்கள் ஒண்டும் உனக்கு விளங்காமல் இருக்கிறேல்லையே! '
திறந்து வைத்திருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்தி நிமிர்ந்து உட்காருகிருர் அவர். ஒரு விநாடி எ ப் படி க் கேட்பது என்று தயங்கி நிமிர்ந்த அவள்,
" ..பினுன்சியல் புரொபிளம் சேர். வீட்டிலை ரொம்பர் கஷ்டமான நிலை. அப்படியிருந்தும். '
அவள் சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்கு முதலே அவர் குறுக்கிடுகிருர்,
**இந்தச் சின்ன விஷயம் தாளு மேரி? டோன்ற் வொரி எபௌட் யுவர் புரொபிளம் எனி மோர் இப்ப நான் அவசரமா வெளிலே போறன். நாளைக்குப் பின்னேரம் ஆறு மணியளவிலை இஞ்சை வந்து காசைப் பெற்றுக் கொள்வி Syrir b ... ””
என்று கூறிவிட்டு அவளது பதிலை எதிர் பாராதவர் போல அவர் எழுந்து விட்டார்.
தாங்க் யூ வெரி மச் சேர். " அறையை விட்டு வெளியேறி "ஹோலை நோக்கி நடந்த அவள் இதயத்தில் அம்மாவின் நினைவு ஒடி மறைகிறது.
அப்பா இறந்த பின்னர் அவளையும் தம்பியையும் வளர்ப் பதற்கு அம்மா தான் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிருள்!
அவள் சர்வகலாசாலைக்குத் தெரியப்பட்ட போதுகூட ஊரில் எல்லாரும்,

Page 6
4 / நாள் தோறும் அற்புதம்
"இந்தப் பொம்பினெப் பிள்ளையைப் படிப்பிச்சு என்னத் தைக் காணப்போகிருய்? பி. ஏ. படிச்ச பெட்டையஞக்கு இப்ப வேலையும் கிடைக்கிறேல்லை. ஏன் அநியாயமாய்க் காணியை வித்துச் சுட்டுச் செலவழிக்கிறன் எண்டு சொல் லுருய்? "
என்றுதான் அம்மாவைக் கேட்டார்கள் ஆளுல் அம்மா "மேரிக்குக் கர்த்தர் திறந்துவிட்டிருக்கிற வழியைத் தான அடைக்கப் போருர்? அவள் எப்பிடியோ சோதினை பாஸ் பண்ணிப் போட்டாள். போய்ப் படிக்கட்டும். நான் காணியை ஈடு வைச்சு, நகையை வித்துப் படிப்பிச்சு முடிச் சிட்டன் எண்டால். பிறகு அவள் தம்பிமாரையும் என்னே gth Lunt dias (DFTL Lin (56tl''
என்று சொன்னபோது, மேரி என்னமாதிரி ஆனந்தக் கண்ணிர் விட்டாள்!
**இந்த மூண்டரை வருச காலமாக் காணியை ஈடு வைச்சு ஒரு மாதிரிச் சமாளிச்சாச்சு. இன்னும் ஒரு தவணை தானே. ! ?
என்று கூறி இம்முறை அம்மா தனது ஒரே நகையாக இருந்த சங்கிலியை விற்றுக் காசு அனுப்பியிருந்தார்.
அவள் ஒரு கவலையீனப் பிறவி. ஹோல் பீஸ்" கட்டு வதற்குக் காசை எடுத்துக் கொண்டு பாங்கிற்குப் போன வழியில் எப்படியோ பேஸைத் தொலைத்து விட் டா ள். அவளாகத்தான் பஸ்ஸினுள் நழுவவிட்டாளோ அல்லது யாராவது பிக் பொக்கற் அடித்தானே அது கர்த்தருக்குத் தான் வெளிச்சம்! 'பாங்" கிலே போய் நின்று “பேஸ்" தொலைந்துவிட்டதை அவதானித்தபோது , அவளுக்கு ஒரு நிமிஷம் இதயமே நின்றுவிட்டது போலிருந்தது. இனி என்ன செய்வது ? அம்மாவுக்கு இந்தக் கவலையீனத்தை எழுதினுல் என்னமாதிரிக் கவலைப்படுவார்; கஷ்டப்படுவார்! இவ்வளவு நாளாக அவளைப் படிப்பிக்கப்பட்ட கஷ் டம்

கோகிலா மகேந்திரன் / 5
போதாதென்று. எப்படியும் இந்தத் தவணை மட்டுந்தானே
ஸ்பெசல் செய்து கொண்டிருந்த அவளுக்கு எப்படியும் "கிளாஸ்’ கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை நிச்சயமாய் இருந்தது. பிறகு வேலை கிடைத்துவிடுந்தானே! இப்போ தைக்கு என்ன செய்யலாம் என்று யோசித்த அவளுக்குத் திடீரெனப் புரபஸரின் ஞாபகம் வந்தது. அவரது ஆதரவான பேச்சும், ஆழ்ந்த அறிவும், தெளிவாகப் படிப்பிக்கும் திறமை யும், மாணவர்களுடன் தாராளமாகப் பழகும் குணமும் அவளுக்கு எப்போதுமே பிடித்தமானவை. இதற்கு முன்பும் வறிய மாணவர் பலருக்கு அவர் பண உதவி செய்திருப் பதைப் பலர் கூற அவள் கேள்விப்பட்டிருக்கிருள். அவள் கேட்டால் அவர் நிச்சயமாய் உதவி செய்வார். ஆனல் அம்மாவுக்குத் தெரிந்தால் வீணகக் கவலைப்படுவார்.
* ஒரு பொம்பிளைப் பிள்ளையை ஆரோ தெரியா தவங் அளிட்டைக் கைநீட்டிக் காசு வாங்சிற நிலையிலை விட்டிட் டீரே யேசு " என்று கூறிக் கலங்குவார். ஆஞல் அம்மா வுக்கு ஏன் சொல்ல வேண்டும்? காசைத் தொலைத்தது அவளுடைய தவறு. அதைச் சமாளிப்பதும் அவளுடைய கடமைதான். கஷ்டம் வருகிற காலத்தில் ஒரு பெரியவரிடம் உதவி கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? எப்படி இருந்தாலும் அவளின் சிநேகிதிகளுக்கெல்லாம் இதைப் பற்றிச் சொல்லக் கூடாது. புரொபஸரிடம் கடன் வாங்கி ஞள் என்று தெரிந்தால் அவளே ஒரு மாதிரி இழிவாகப் பார்ப்பார்கள், ‘புரொபசஸரிடம் கேட்கத்தான் ஒருமாதிரி அந்தரமாக இருந்தது. எப்படியோ அதுவும் கேட்டாகி விட்டது. நாளைக்கு ஆறு மணிக்கு வந்து ஒருத்தருக்கும் தெரியாமல் வாங்கிக் கொண்டால் பிரச்சினை எ ல் லா ம் தீர்ந்த மாதிரித்தான்.
* இசரட்ட யண்டகோ " எ ன் று பின்னலிருந்து நடத்துனர் கத்திய மாத்திரத்தில் ஒரு நிமிடம் தடைப் பட்ட அவளின் சிந்தனை அடுத்த நாளைய நிகழ்ச்சிகளுக்குத் தாவுகிறது.

Page 7
6 / நாள் தோறும் அற்புதம்
அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை !
ஒரு நாளும் பின்னேரத்தில் லைபிரரிக்கு'ப் போயே அறியாத அவள் அன்று லைபிரரிக்குப் போகிறேன் என்று ஐந்தரை மணிக்குப் புறப்பட்ட போது அவளது "ரூம் மேட்" திரேசா கூட,
* எட நீ இண்டைக்கு லைபிரரிக்குப் போறியா? அது தானே பாத்தன். என்னடா மழை பெய்யுதெண்டு "
என்று கேலி செய்தாள். அவள் போகிற முக்கி பமான விஷயம் அவளுக்கல்லவா தெரியும். அவள் பதில் எதுவும் கூழுமலே ஒரு புன்னகையுடன் புறப்பட்டு விடுகிருள்.
அவள் புரபஸரின் அறையை அடையும்போது நேரம் ஐந்தேமுக்கால்தான் இருக்கும். கதவு சாத்தப்பட்டே இருக் கிறது. ஆயினும் உள்ளே "லைட்" எரிந்து கொண்டிருப்பது கதவுக்கு மேல் இருக்கும் கண்ணுடி வழியாகத் தெரிவதிலி ருந்து "புரபஸர்" உள்ளே தான் இருக்கிருர் என்பதை அனு மானித்துக் கொண்ட அவள் தயக்கம் எதுவுமின்றிக் கதவைத் தட்டுகிருள்.
உள்ளே பூட்டப்பட்டிருந்த கதவைத் தானே எழுந்து வந்து திறந்துவிட்ட புரபஸர்,
*முதல் வருட மாணவருக்கு நாளேக்கு ஒரு "டெஸ்ட்? இருக்கு, அதுதான் கேள்விகள் தeாரிச்சுக் கொண்டிருக் கிறன்.""
என்று, தான் அறைக் கதவைப் பூட்டிக் கொண்டிருந் தமைக்கு விளக்கம் தருபவர் போலக் கூறினர்.
* பட் யூ கமின் மேரி ' என்று அவளை உள்ளே அழைத்து மறுபடியும் கதவைப் பூட்டி வீட்டு வந்து தன் கதிரையில் அமருகிருர். அவள் இன்னும் நின்று கொண்டே இருப்பதைப் பார்த்து,

கோகிலா மசேந்திரன் / 7
9 சிட் டவுண் மிஸ் ' என்கிருர், அவரது வேலையைக் குழப்பிய குற்ற உணர்வு மனதை உறுத்த அவள்,
* நோ சேர், சொறி ஃபோர் டிஸ்ரேபிங் யூ எனும்போது,
** நோ யூ சிட் டவுண் பெஸ்ட், ஐ வான்ட் யூ ரு டெல் மீ த ஃபுல்ஸ்ரோறி ஒப் யுவர் ஃபமிலி ருடே.” என்கிருர். நன்றியுணர்வுடன் அவரைப் பார்த்த அவள் அவருடைய மேசைக்கு முன்ஞல் போடப்பட்டிருந்த மறு கதிரையில் அமர்ந்து கொள்கிருள்.
யெஸ்! உன் தந்தை என்ன வேலை செய்கிருர் மேரி?” அவரது முதற் கேள்வியிலேயே கண்கள் பனித்துவிடு ன்ெறன.
"என்ரை அப்பா இறந்து பத்து வருடமாகுது சேர்."
"ஓ ஐ ஆம் சொரி! நான் உன் ரை மனதைப் புண்படுத் நிற கேள்வியைக் கேட்டிட்டன். எக்ஸ் கியூஸ் மீ! ஆனல். இவ்வளவு காலமும் உன்ரை குடும்ப நிலையைப் பற்றி நீ ஏன் என்னட்டை ஒண்டும் சொல்லேல்லை? இனிமேலாவது என்ன ? புரொபிளம் எண் டாலும் என் ன ட்  ைட வந்து சொல்லத் தயங்கப்படாது. என்ன? டோன்ற் ஹெசிட்
* . F fu umr?””
அவள் தலையை மட்டும் ஆட்டியதைத் தொடர்ந்து அவரே கேட்கிருர்,
"அப்பிடியெண்டா இந்த மூண்டரை வருஷ காலமா எப்பிடி உன்ரை நிதி நிலைமையைச் சமாளிச்சாய்? தந்தை இறக்கும்போது சேத்து வைச்ச சொத்து இருந்ததோ?”
"அவர் சொத்து ஒண்டும் சேர்த்து வைச்சிருக்கேல்லை, அம்மாவின்னர சீதனமாக இருந்த சொத்தை எ ல் லா ம் கரைக்கப்போட்டு ஒண்டிரண்டு காணியை மட்டுந்தான் விட்டிட்டுப் போனர்."

Page 8
8 / நாள் தோறும் அற்புதம்
"ஏன்? வருத்தமாய் அதிக நாள் இருந்தவரா?" “இல்லை . ஆளுல். அவர்." அவள் சொல்ல வந்ததைச் சொல்லலாமா dat-nist என்று தயங்குகிருள்.
*கம் ஒன் மேரி யூ கான் டெல் மீ எனிதிங்க். எதுவும் வெளியிலை போகாது '
உறுதிமொழியின் பின்னரும் அவள் மெளனமாகவே இருப்பதைப் பார்த்த அவர்,
* நீ என்னை நம்பாவிட்டால். பரவாயில்லை. சொல்ல வேண்டாம். உன் குடும்பக் கதையளை எல்லாம் யாரோ ஒருத்தனுக்குச் சொல்ல வேணும் எண்டு நான் எதிர்பார்க்க முடியாது தான் ’ என்று கூறி எழுந்து, தன் கைப்பை யைத் திறக்கிருர்.
'யாரோ ஒருத்தனுக்கு ?? என்ற சொல்லுக்கு அவர் கொடுத்த அழுத்தத்தை அவள் கவனிக்கத் தவறவில்லை. Hi[و
" நான் இவ்வளவு உதவி செய்தும் நீ என்னைத் தூரவே வைக்கிருயா? " என்று கேட்ப து போல அவளுக்குத் தோன்றியது. ܗܝ
"சோதனையிலை உனக்குக் 'கிளாஸ்" கிடைச்சிட்டால், பிறகு நீ பண விஷயமாக் கஷ்டப்பட வேண்டி நேரிடாது. ஆணுல். எப்பவுமே தயங்காமல் என்னட்டை உதவி கேட்க லாம் . இதிலை ஐந்நூறு ரூபா இருக்குது. மேலும் தேவை
யெண்டால் கேட்கலாம். '
என்று கூறித் தன்னுடைய கைப்பையில் இருந்து வெளியே எடுத்த ஒரு "என்வலப்பை" அவள் இருந்த பக்க மாக நகர்த்தி வைப்பதற்காகத் தன் இடத்தை விட்டு எழுந் திருக்கிருர்,
நன்றிகள் நிறைந்த இதயத்துடனும் மதிப்புகள் நிரம் பிய கண்களுடனும், அவரைப் கிார்த்த அவள்,

கோகிலா மகேத்திரன் / 9
" உங்கடை அன்புக்கும் உதவிக்கும் பிரதியுபகாரமா ான்னலை எதுவுமே செய்ய முடியாது சேர் " என்று கூற, "அப்படியா? " என்று கேட்டு மெதுவாகச் சிரித்தபடி, அவளை நோக்சிச் சில அங்குலங்கள் நகர்ந்து வந்த அவர்
** அதுதான் உன்ரை குடும்ப விஷயங்களைச் சொல்லக் கூடிய தூரத்திலே கூட என்னை வைக்கமுடியாது எண்டு சொல்லாமல் சொல்லி உன்ரை நன்றியைக் காட்டிட்டியே." என்று கூறி மேலும் கேலியாகச் சிசிக்கிருர்.
"அப்பிடி இல்லை சேர். இறந்துபோயிட்ட என்ரை அப்பாவைப்பற்றி யாரிட்டையும் கூடாமல் கூறக் கூடாது எண்டு என்ரை அம்மா கர்த்தர் சாட்சியா என்னட்டைச் சத்தியம் வாங்கியிருக்கிரு. அதஞல்தான் தயங்கினேன். உண்மை என்னவெண்டால் அவர் குடிச்சக் குடிச்சே தன்ரை உள்ளத்தையும் உடலையும் பணத்தையும் அழிச்சிட்டாராம். அம்மா அவரைத் திருத்தி நல்லவராக வாழவைக்கத் தான் செய்யாத முயற்சியள் இல்லை எண்டு எப்போதும் சொல்லிக் கவலைப்படுவா. எனக்கு ஐந்து ஆறு வயது இருக்கும்போது ஒருநாள் ஒரு பொம்மையை உடைச்சுவிட்டதுக்காக என்னை மரத்தோடை கட்டிவைச்சு அவர் அடி அடி எண்டு அடிச்சதை நினைச்சா இப்பவும். p
அவளது வார்த்தைகள் முடியுமுன்னரே அவள் கண்களின் நீர்த் துளிகள் தோன்றிக் கன்னங்களில் வழிந்தோடுகின்றன. தான் நின்ற இடத்திலிருந்து நிதானமாக அவளைநோக்கி நடந்து வந்த " புரபஸர் " தன் கைகளால் அவள் நாடியைப் பிடித்து நிமிர்த்தி அவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் தன் கைகளால் துடைத்துவிட்டு, வெகு சாதாரணமாக,
நடந்து முடிஞ்ச நிகழ்ச்சியளைப் பற்றிக் கவலைப்படக் குடாது. மேரி நடப்பதைச் சந்தோஷமா அமைச்சும் கொள்ள வேணும் . '
என்று கூறி அவள் கைகளை எடுத்து அழுத்திப் பிடித்துக் கொள்கிருர். அவர் வார்த்தைகளில் தொனித்த இரு

Page 9
10 நான் தோறும் அற்புதம்
பொருள் நயத்தைச் சற்றே புரிந்துகொண்ட அவள் உடம்பு
நடுங்கிப் பதறுகிறது. திடீரென்று அவள் மனச்சான்று.
* நீ இப்போது செய்துகொண்டிருக்கும் சொல் என்ன என்டதை எண்ணிப் பார்த் தாயா? அது தவறு என்று உனச்குத் தோன்றவில்லையா?*
என்று எச்சரித்து ஒய்கிறது. **இந்த அறையில் நீ தனியே புரொபஸ்ரு டன் அமர்ந் திருந்து கதைப்பதையும் அவர் எழுந்து உன் கண் ணிரைத் துடைத்து உன் கைகளைப் பற்றிக் கொள்வதையும் யாராவது பார்த்தால். " பார்க்க முடியாது என்பது நிச்சயந்தான். ஆனல்
** நீ எப்போது செய்யும் காரியங்களை மற்றவர்களின் கண்களில் இருந்து மறைக்க விரும்புகிறயோ அப்பொழுது நீ தவறு செய்கிருய் என்று அர்த்தம்"
என்று மகாத்மா கூறியிருக்கிருரே ! **ஆம் ! நான் செய்வது தவறுதான்." ஏதோ ஒரு உறுத்தல் அவள் நெஞ்சை முள்ளெனக் குத்த அவள் திடீரெனத் தன் கதிரையை வீட்டு எழுந்துவிடுகிருள். அவளது கதிரையின் பக்கத்தில் நின்றிருந்த புரபஸர்,
* என்ன மேரி ? என்று கேட்டவாறு எழும்பிய அவளைத் திடீரென்று தன் அருகில் இழுத்து அணைத்துக் கொள்கிருர்,
அவளது நிலையை உணர்ந்து கொண்டு, அவரது பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு. சில அடி தூரம் பின்னுேக்கி நகர அவளுக்குச் சில நிமிடங்கள் எடுக்கின்றன. இப்போது அவன் நேஞ்சினுள் வெடித்துக்கொண்டு கிளம்பும் உணர்ச்சி ஆத்திரமா ? அழுகையா? அவமானமா? வெளியே ஓடிவிடும் அவசரமா ? அவளுக்கு எதுவுமே புரியவில்ல!
முதலில் தோன்றிய ஆத்திரத்தில் காலில் அணிந்திருந்த செருட்பைக் கழற்றச் சிறிது குனிந்த அவள் திடீரென்று தன்

கோகிலா மகேந்திரன் / 11
நிலையை உணர்ந்து கொண்கிருள். அவளது காலணியைக் தழற்றி அவரை அறைந்து விடுவதோ, வாயில் வந்தபடி அவரைத் திட்டி விடுவதோ கடினமான காரியம் அல்ல, ஆணுல் அவள் இருக்கும் நிலையை மறக்கக்கூடாது.
உள்ளே பூட்டப்பட்டிருக்கும் அறை அவர் வெறிகொண்டால் எதுவும் செய்யலாம் ! கூச்சலிட்டாலும் பயனில்லை ! ஓடிவரும் உலகம்,
*இந்த நேரத்தி%ல நீ ஏன் இஞ்சை வந்தனி ?" என்று அவளைக் கேட்குமே தவிர, இந்த அறிவாளிகள், பெரியவர்கள் மீது பழி சொல்லாது. பழி சொல்கிறதோ, சொல்லவில்லையோ, ஏதாவது நடந்துவிட்டால், அதனல் பாதிக்கப்படுவது அவனா அல்லது வெளி உலகத்தில் பண் புடன் குடும்பம் நடத்துகிற அவரா?
யேசுவை நினைத்து ஒரு கணம் துதித்து அவளுக்கு அவர் வேதத்தில்,
"தீமையை எதிர்க்காதே! மற்றவர்களை ஒருபோதும் தண்டிக்காதே! அப்போதுதான் நீயும் தண்டிக்கப்பட மாட்டாய் நீ மன்னித்தால் நீயும் பிறரால் மன்னிக்கப் tu69aintti ...'
என்று கூறியிருக்கும் வாக்கியங்கள் நினவுக்கு வந்து மறைகின்றன. அவளது உடம்பில் ஏற்பட்டநடுக்கம் இன்னும் நிற்கவில்லை.
*" துரோகி ! உன்னைப் போன்ற வேஷதாரியளை உலகம் நல்லவன் எண்டும், பண்புள்ளவன் எண்டும் போற்றிக் கொண்டிருக்குதே! ஆருக்கு வேணும் உண்ரை உதவியும் நாய் தின்ஞக் காசும். '
என்று குமுறித் கள்ள, முட்டிக் கொண்டு வந்த வார்த் கைகளை யேசுவின் அருள்வாக்கு இதயத்துக்குள்ளேயே அமுக்கி விடுகிறது. அவள் வாய் திறந்து எதுவுமே பேச

Page 10
12 / நாள் தோறும் அற்புதம்
வில்லை. திடீரென்று ஒரு வெறி உடல் எங்கும் பரவ. ஒரு முறை அவரை வெறித்து நோக்கிவிட்டு வெகு வேகமாக அறையின் கதவைத் திறந்து கொண்டு வெளியேறிய அவள் காதுகளில்,
"நீ இப்ப என்னட்டை இருந்து விலகி ஓடலாம் மேரி ஆனல் உன்ரை "டெஸ்ட் ஆன்சர் பேப்பர்ஸ்" என்  ைர கைக்கு வரத்தான் வ்ேணும்.'
என்று நிதானமாகக் கூறிச் சிரிக்கின்ற புர பே ஸ ரி ன் சொற்கள் கேலியாக ஒலிக்கின்றன. அதைக் கேட்டும் கேளாதவள் போல வேகமாக நடக்கிருள் அவள். வெளியே நன்ருக இருட்டிவிட்டது லைபிரரியைத் தாண்டி, அதற்கு மூன்ஞல், 'சங்கப்பலகை" என்று மாணவர்களால் வர்ணிக் கப்படும் மண்டபத்தையும் தாண்டிப் படிகளில் இறங்கிக் கொண்டிருந்த அவளுக்கு முன்னல் எதிரே வந்த யாரோ ஒருவன், M
** என்ன வேகம் நில்லு பாமா? என்ன கோ பம் சொல்லலாமா? " என்று தனக்குத்தானே சொல்லிக் கொள் வது கோல் பாடிப் போகிருன். இந்தச் சங்க ப் பல  ைக "ரிமாக்சை” எல்லாம் கேட்டு ரசிக்கும் நிலையில் அவள் இல்லை. அவள் நடையின் வேகம் அவளுக்கே ஆச்சரியத்தை விளை விக்கிறது.
இரண்டு அடுத்தடுத்த திருப்பங்களில் இப்படியும் அப்படி யும் திரும்பிய பஸ்ஸின் ஆட்டத்தில் அவளுக்குப் பக்கத்தில் இருந்த பெண் அவள் மடியில் விழுந்து எழும்புகிருள்: மேரி அவளை எரித்து விடுவதுபோலப் பார்க்கிருள். அந்தப் பார்வையில் தெரிந்த கோபம் - அவள் மடிமீது விழுந்து எழும்பியதால் அல்ல - வேடதாரிப் பெரியவர்களின் நினை விஞல் ஏற்பட்டது என்பது அவளுக்குப் புரியப் போகிதா?
*2சொறி மிஸ்?"
என்று அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட அந்தப் பெண் நிமிர்ந்து தன்னை நிலைப்படுத்திக் கொள்கிருள். பஸ்

13 / நாள் தோறும் அற்புதம்
சகலகெதர வைத் தாண்டி விட்டதை அவதானித்த அவள் சிந்தனை மேலும் சங்கிலி போலத் தொடருகிறது.
இருளைக் கிழித்துக் கொண்டு வேகமாக நடந்த அவள் தன் அறைக்குள் நுழைந்து கட்டிலில் படுத்து அழுகிருள்! அழுகிருள் அழுது கொண்டே இருக்கிருள். அவள் கண்களில் இருந்து பாயும் கண்ணிரைவிட இதயத்தின் ஆழ த் தி ல் இருந்து வெடித்துப் பாயும் இரத்த ஆறு அதிக வேதனை யைக் கொடுக்கிறது. சிறிது நேரத்தில் அங்கே வந்த அவளது ரூம் மேட், *" வாட் இஸ் திஸ் மேரி? வை ஆர் யூ சிறையிங்? " என்று கேட்டு அவள் பக்கத்தில் அமர்த்து கொள்கிருள்.
* ஒண்டுமில்லை திரேசா லைபிரரியிலை இருந்து படிச்சுக் கொண்டிருக்கேக்கை . திடீரெண்டு "நீ இம்முறை சோதனை பெயில்" எண்டு மனதுக்குன்ளை ஏதோ ஒண்டு சொல்லிச்சுது. தொடர்ந்து தாங்க ஏலாத தலைவலி"
"அடி பைத்தியம்! உனக்குக் கிளாஸ் கிடைக்காட்டி குரியன் மேற்கைதான் உதிக்கும். வேண்டாத கற் பனை யோடை ஏன்டி அழுகிருய்? இரு. டிஸ்பிரின் வாங்கித் As Tapair..."
என்று கூறி அவ்ஸ் முதுகில் தட்டிவிட்டு வெளியே போகிருள் திரேசா.
அவள் இதயத்தின் வேதனைக் கீறல்களை, அவள் மனச் சாட்சியின் போராட்டங்களை, அவள் மனதின் விம்மல்களை, அவள் நெஞ்சத்தின் கண்ணிரை இந்த டிஸ்பிரின் போக்கி விடப் போகிறதா? அவள் தனக்குள்ளேயே சிரித்துக்கொள் ருெள். தடந்த நிகழ்ச்சிகள் யாவும் அவள் மனதிற்குள் எழும்பிக் குதித்து அவளைக் குழப்பு குழப்பென்று குழப்பு மின்றன. அவள் எங்கே தவறு செய்தாள்? அவரிடம் உதவி (கட்டதே தவரு? அவரைப் பற்றி முன்பே அறியாமல் போனது தவரு? பணம் பெறுவதற்குத் தனியே போனது

Page 11
14 / நாள் தோறும் அற்புதம்
தவரு? அறைக் கதவை அவர் தாளிட்டபோது பேசாமல் இருந்தது தவரு? இவ்வளவும் நடந்த பின்னரும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல், வெறுப்பையும் கசப்பையும் காட் டாமல் ஓடி வத்துவிட்டது தவறு? இல்லை, சர்வகலா சாலைக்குப் படிக்க் வந்ததே தவரு?
சீ! இப்போது என்னதான் தவறு நடந்துவிட்டது? அவள் ஏன் தன்னைத் தானே வருத்திக் கொள்ள வேண்டும்? சினிமா விலே ஆயிரக் கணக்கானவர்கள் பார்க்கக் கூடியதாக இதை விடக் கேவலமாக நடித்துப் பணம் பெறுகிறர்களே! அவர் களையும் சமூலம் ஏற்றுக் கொண்டு தானே இருக்கிறது? தனது வாயில் இருக்கும் ஒரு சிறு நெருப்புக் குச் சி யில் தொங்கிக் கொண்டிருக்கும் மோதிரத்தைத் தனக்குப் பக் கத்தில் இருக்கும் பெண்ணின் வாயில் இருக்கும் நெருப்புக் குச்சிக்குக் கையை உபயோகிக்காமல் மாற்றுகிற விளையாட் டுக்களை எல்லாம் இத்தப் பல்கலைக் கழக மாணவர்கள் *கோயிங் டவுனிலும் " "கொ சி பார்ட்டியிலும்" ஏற்றுக் கொள்கிருர்கள் தானே! அவளுக்குத் தெரியாமல் அவள் மனம் அறியாமல் நிகழ்ந்துவிட்ட இந்தச் சிறு விபத்திற் காக அவள் ஏன் தன்னை வதைத்துக் கொள்ள வேண்டும்? இல்லை, இல்லை" எப்படி என்ருலும் தவறு தவறுதானே! பாராவது பார்த்திருந்தால் “சரி” என்ரு சொல்லப் போகி ருர்கள்? தெரிந்தும் தெரிந்தும் தவறு செய்து தாங்கள் வாழ்க்கையில் தவறே செய்வதில்லை என்று மேடை ஏறிப் பிரசங்கம் செய்துகொண்டு உலகையே ஏமாற்றிப் பெரு வாழ்வு வாழும் எத்தனையோ சமூகத் துரோகிகளை மலர் மாலை போட்டு வரவேற்றுக் கெளரவித்துப் பாராட்டு வழங் கும் சமூகம், தெரியாமல், அறியாமல் தவறு செய்து விடுகிற அல்லது தவறுக்கு ஆளாக்கப்பட்டு விடுகிற பெண்களை மன்னிப்பதே இல்லையே!
ஏதேதோ நினைத்துக் குழம்பிக் கொண்டிருந்த அவன் இதயத்தில்,

கோகிலா மகேந்திரன் / 15
" தவறுகள் இல்லையே என்று சொன் ஞல் நம்மைத்தான் ஏமாற்றி நலித்திடுவோம் தவறுகள் அனைத்தையும் எடுத்துரைத்தால் - தேவன் தவறினை மன்னித்து வாழ்வளிப்பான்"
என்ற கருத்தில் அமைந்த ஆங்கிலப் பிரார்த்தனைக் கீதம் நினைவுக்கு வருகிறது.
யேசுவே! நான் செய்தது குற்றமோ இல்லையோ எனக் குத் தெரியாது. என்ரை வெறுப்பைக் காட்டாமன், செருப் பைக் கழத்தி முகத்திலை அடிடாமல் உம்மடை வேத வாக் கியங்களே நி ைச்கக் கொண்டு ஓடி வந்திட்டது சரியோ மீனழயோ தெரியேல்லை. தவறு எங்கையிருத்தாலும் மன்னிச் சிடும் பிதாவே. 1"
என்று உள்ளம் உருகிப் பிரார்த்தித்த அவள், அவளை யும் அறியாமல் நிம்மதியாசத் தூங்கி விடுகிருள்.
பிறகென்  ை? வார இறுதியில் வீட்டிற்குப் போனபோது காசைத் தொலைத்து விட்டதை மட்டும் அம்மாவிடம் கூறி ஞள். இந்தப் போராட்டங்களையெல்லாம் கொட்டி,
"நான் இந்த முறை சோதனை பாஸ்பண்ண மாட்டன் அம்மா என்று அலற வேண்டும் போல் இருந்தது. ஆனல் தன் னேத்தானே அடக்கிக் கொண்டாள். பெற்ற உள்ளம் இதை யெல்லாம் கேட்டால். ஏற்கனவே இருக்கும் "பிரஸ் ஸ்ரை" LLLTTTL TLTLTT0 L LLTT TTTTLTTTTTSS LLLTL TLLL LLLLCLLTL போம்! அவளது பரம பிதா அவளுக்கு உதவாமல் இருந்து dLü Gum60?prm?
அம்மா எட்படியோ அயல் வீட்டில் பணம் கடன் வாங்கித் தந்தார்.

Page 12
கோகிலா மகேந்திரன் / 16
**இந்தப் பணக் கஷ்டங்களைப் பற்றியெல்லாம் கவ லைப் படாமல் கவனமாகப்படி மேரி கர்த்தர் ஆசீர்வதிப்
ዚ ዞሆዥዘፕ
என்று கூறி அனுப்பிய அம்மானிடம் விடைபெற்று அவள் இப்போது கண்டிக்குப் போய்க் கொண்டிருக்கிருள். ஆஞலும், இனியும் அவள் சோதனை “பாஸ்' பண்ணுவது என்ருல் ஏதாவது அற்புதந்தான் நடக்க வேண்டும். அப்படி ஏதாவது ஏற்படுமென்றே அவளுக்குத் தோன்றுகிறது.
"நாள் தோறும் அற்புதம் எதிர்பாருங்கள் ஜெயிக்கும் போதும் எதிர்பாருங்கள்".
என்ற கீதத்தை அவள் உதடுகள் முணுமுணுக்கின்றன.
۔
(1972 மார்கழியில் குயில் சிறு சஞ்சிகையில் பிரகரமானது)

உன்னத தரிசனம் !
“岛 கவலைப்படாதை தரேன்! எந்தக் காரணமென் டாலும் மெதட்ரின் " " இன்ஜேக்சன் " குடுத்தால் வெளிை வகும் காரணம் தெரிஞ்சிட்டால் "ட்ரீற்மென்ற் சுகம் நான் இதை வெற்றிகரமா முடிக்கேல்லை எண்டா தான் udog Luuuuu?žu u SarGunraverufližu. **
கலக்கியிருந்த p5@grasflabir agaTashT ஆதரவுடன் துடைத்தேன்.
அன்று மாலையே மங்கைக்கு மெதட்ரின் கொதிக்கன் பட்டது. இந்த மருந்து கொடுக்கப்படும்போது மூண்ய மேற்பட்டையிள் கட்டுப்பாடுகள் பலவீனமடைவதால், நோயாளி சொல்லக்கூடாது என்று சாதாரணமாக நினைக்கிற செய்திகள் அனைத்தையும் சொல்லிவிடுகிருர். எனது உதவி யாளர் ஒருவர் யங்கையிடம் கேள்விகள் கேட்டுப் பதிலைப் பெற்று " றெக்கோட் பண்ணிக் கொண்டிருந்தார்: நோயாளி என்னைப் பார்க்காத முறையில் தலைப்பக்கத்தில், கதவுக்கு வெளியே நான் உட்கார்ந்திருந்தேன்.
' கொஞ்ச நேரத்துக்கு முந்தி ஏன் அழுதணிங்கள்?" உதவியாளர் கேட்டார்.
காலையில் நரேன் அவளைக் கூட்டி விந்தபோது கூட, அவளது கண்களில் நீர் ஆருகப் பெருகியபடி இருந்தது.
நரேனின் தங்கை மங்கை

Page 13
18/உன்னத தரிசனம்
நான் நரேன் வீட்டில் தங்கியிருந்த ஒரு வ்ருட காலத்தில் குழந்தைபோல ஒடித்திரிந்த மற்கை * ஏன் மங்கை அழுகிறீர்?" நான் வழமையாக அவளுடன் பழகும் உரிமையுடனும் அன்புடனும் சாலையில் கேட்டேன். பதிலுக்கு இன்னும் பல மாக "விக்கி விக்கி அழத் தொடங்கினுள் அவள்: நரேன் சொன்குன்,
* இப்பிடித்தான் ஒரு கிழமையா இருக்கிருள். யார் என்ன கேட்டாலும் பதில் இல்லை. எதையோ நினைச்சுக் கொண்டு சூனியத்தை வெறிக்க வெறிக்கப் பாத்துக் கொண்டு இருக்கிருள். எனக்கு எந்தச் காரணமும் தெரியேல்லை. ? ? .
கலங்கியிருந்த நரேனின் கண்களை ஆதரவுடன் துடைத்த எனக்கும் தான் ஒரு காரணமும் தெரியவில்லை!
"வாழ்க்கை முழுதும் அழுது கொண்டிருக்க வேண்டிய நிலக்கு வந்திட்டன். இந்த அழுகை பெரிசில்லை. '.
* ரன் ? . ஏன் நீங்கள் வாழ்க்கை முழுதும் அழ வேறும். ? ?. மடை திறந்த வெள்ளம்போல-வெட்டப் பட்ட நாடியிலிருந்து பீறிட்டுப் பாயும் குருதிபோல - அவள் பேசத் தொடங்கினள். அதைச் * சுருக்கெழுத்தில் எடுக்க முயன்றிகுந்தால். உதவியாளர் திணறியிருப்பார். தல்ல காலம் பதிவுசெய்ய நினைத்தார் 1 தப்பினர்! அவ்வளவு வேகம் !
நரேனின் வீட்டில் நான் தங்கியிருந்த அந்த ஒரு வருட காலத்தில். மங்கை காலையில் செய்யும் தேவி பூஜைக்கான ஆயத்தங்களில், இந்த வேகத்தை நான் தரிசித்திரும் aGapara
வெளிநாட்டிலே மனே தத்துவ டொக்டராகப் பட்டம் பெற்று நான் திரும்பிய அதே காலத்தில், நரேன் கண் வைத்திய நிபுணராகப் பட்டம் பெற்றுத் திரும்பியதும். இருவருக்கும் கண்டி பெரியாஸ்பத்திரியிலேயே இடங்

கோகிலா மகேந்திரன்/ 19
கிடைத்ததும் . தன் தாயையும் ஒரே தங்கையையும் கண்டிக்கே அழைத்து வந்து அவன் ஒரு வீடு பார்த்துக் கொண்டதும் . அவனது வற்புறுத்தலுக்கு இணங்கி தானும் அவனுடைய வீட்டில் ஒகு அறையில் தங்கியதும் . அப்போது பார்த்த மங்கைபா இவள் ? எவ்வளவு மாறிப் போய் Gaullenr6ir !
என் கூர்மையான காது அவள் பக்கம். 1
"நான் அவரோடை நடத்தப்போற வாழ்க்கையின்ரை ஒவ்வொரு நாளையும் கற்பனைக் கண்ணிலே கண்டு கோட்டை கோட்டையாகக் கட்டியிருந்தனே! எவ்வளவு பயித்தியச் காறி - நான். ! '.
ஓகோ ! இது காதல் தோல் விக் கதையா ?
நான் அதிர்ஷ்டக்காரன் காதலில் வெற்றி பெறப் போகிறேன்! எல்லோருக்கும் அந்த மாதிரி அமைந்துவிடுமா?
இன்னும் ஒரு மாதத்தில் எமது திருமணத்தை நடத்துவது என்று எங்கள் வீடுகளில் செய்யப்பட்டிருந்த இனிமையான முடிவை, நரேனுக்குக்கூடப் போன வாரந் தான் சொல்லியிருத்தேன்
கலாதான் மணப்பெண் என்று அறிந்தபோது,
டே நீ கள்ளன். எனக்கு இவ்வளவு நாளாச் சொல் லேல்லை. ' என்றவன் முகத்தில் பல சிந்தனைக் கோடுகள்.
மருத்துவக் கல்லூரி வாழ்வுபற்றி அவன் சிந்தித்திருக்க Gamyb |
மருத்துவக் கல்லூரியில் நான் அடி எடுத்து வைத்த இரண்டாவது நாள் ! ‘ழுகிங்" என்ற பெயரில் நடைபெறும் கோமாளிக் கூத்துக்கள். அசிங்கமான கேள்விகள் பதில்கரி, வெறுப்படைந்த இதயத்துடன் அனற்றமி டிசெக்சனுக்காகச் சடலங்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து, எனக்குக் கொடுக்கப்பட்ட சடலத்தின் இலக்கத் தைத் தேடிக்கொண்டு அந்த இடத்திற்குப் போனபோது,

Page 14
20 உன்னத தரிசனம்
அங்கு ஏற்கனவே அந்த " பொடி' யில் என்னுடன் வேலை செய்யப்போகிற மற்றைய மூன்று மாணவர்களும் நின்றிருக் கிருர்சள், ஒருவர் நரேந்திரன் - நான் முதல் நாளே ஆவ குடன் அறிமு சம் செய்துகொண்டிருந்தேன். இன் ஞெகுவர் ஒரு சிங்கள மாணவி என்பது பேச்சிலும் உடையிலும் தெரிந்தது. இறுதியாக. ஸ்ரெச்சரின் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்ற அந்த. எனக்கு அவளுடைய பெயரும் அப்போது தெரியாது.
அவள்தான் என் மனேவியாகப் போகிறவள் என்று தெரிந்தபின் நரேன் அன்று நடந்த மிகுதி நிசழ்வுகளையும் நினைத்துப் வார்த்திருப்பான்.
சில நிமிடங்களில் ளங்கள் "சீனியர் " மாணவர்கள் சிலர் அவளைச் சூழ்ந்துகொண்டார்கள். "ராகிங்" ஆரப் பமாகி விட்டது தெரிந்தது.
** மிஸ். எத்தப் பள்ளிக்கூடத்திலேயிருந்து வாறிங்கள்?" "மகாஜனக் கல்லூரி. " மெதுவான இனிமையான குரல்.
"ஒ. சட் அப் பார் சொன்னது அது கல்லூரி எண்டு. அது "காற்றிள் செட்". றிப்பீற். ‘மகாஜஞ காற்றிள் செட் எண்டு சொல்லு. " .
- ஒரு அதிகார கர்ஜனை3
"மகாஜஞ காற்றிள் செட்" அவள் முணுமுணுக்கிருள். * ஆட்டு மந்தையிலை இருந்து வாற நீ விலங்குகளிலை எந்த இனம்?"
"ஆடு. ’’ ஒ. ஹோ. ஹோ. பலமான சிரிப்பொலி1 அவள் தன் குனிந்து மேளனமாக. நாங்களுந்தான்! ஒரு தடியைக் சையில் வைத்து, லாவகமாகச் சுழற்றிய படி, அந்தப் பக்கம் வத்த ஒருவன்,

கோகிலா மகேந்திரன் 121
** மிஸ், நீர் "பொடி' யை வெட்டிப் படிக்கிறதுக்கு வந்திருச்கிறீர் என்ன ? இந்தச் சவத்தின் ரை உறுப்புக்கள் எல்லாத்தையும் அடையாளம் காண உமக்குத் தெரியுமா? இது என்ன சொல்லும் பாப்பம். '
என்று கேலியுடன் கேட்டவாறே, சட லத்தின் பறைக்கப் பட வேண்டிய பகுதியை அந்தத் தடியால் தொட்டுக் காட்டி ஞன். அவள் குனிந்த தலை நிமிரவில்லை.
" மிஸ். பதில் வேணும். சொல்லும் கெதியா. " , 'உம்மடை வாய்க்கை என்ன பொன் சட்டியே இருக்கு. வாயைத் திறந்து சேட்ட கேள்விச்குப் பதில் சொல்லுமன். ' .
இல் ஞெரு கர்ஜனை 1 இதுவரை மெளனமாக நின்றிருந்த நான் எனது நிலையை - நானும் ஒரு முதல் வருட மாணவன் என்பதை மறந்தவஞய்,
*ராகிங் என்ற போர்வையிலை தரக்குறைவான கேள்வி பளுக்கு எப்பிடிப் பதில் சொல்லிறது ?"
என்று சொல்லிவிட்டேன். நன்றி உணர்வு நிரம்பிய கண்களால் என்னை ஏறிட்டு நோக்கிய விழிகளை என் விழிகள் சந்தித்தன! ஒரு கணம் தான் ! அடுத்த நிமிடம் மாணவர் படை முழுவதும் என்மேல் பாய்ந்தது.
** நீர் என்ன அவஷக்கு வக்காலத்து வாங்க வாரீர்? அவ என்ன உம்மடை மச்சாளே! "
என்று ஒரு குரல் 1
"" தரக் குறைவைப் பற்றி எங்களுக்குச் சொல்லித்தர வந்திருக்கிறியோ ? தரமாகச் சொல்லித்தாறன். சொல்லு இந்தச் சவத்தைக் கட்டிப் பிடித்து மூத்தமிட்டு "ஐ லவ் யூ மை டார்லிங்" எண்டு சொல்லு. ம்....!
இன்னெரு குரல்

Page 15
22 / உன்னத தரிசனம்
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு மெளனமாக நின்ற நரேன் இப்பொழுது அவற்றை இரை மீட்டிருக்க symbo”
'இல்லாட்டால் . அவர் என்னட்டைத் துளி அளவு அன்பு கூடக் காட்டேல்ல எண்டதை நான் அறியாமல் இருந்திருப்பஞ? பயித்தியம். நான் சரியான பயித்தியத் தான். இல்லை இல்லை நாள் பயித்தியம் இல்லை."
மங்கை தொடர்ந்து கொண்டிருந்தாள்.
அன்பு
எதிர்த்து ஒரு வசனம் சொல்லிவிட்ட குற்றத்திற்காக அந்த வாரம் முழுவதும் எனக்குத் தாராளமான "ராகிங்" கிடைத்தது. நான் பொறுமையுடன் அனைத்தையும் தாங் கிக் கொண்டேன். அதற்கெல்லாம் ஈடு இணையற்ற பரிசா கக் கலாவின் அன்பு எனக்குக் கிடைத்தது.
அடுத்த வாரம் இரண்டாம் வருட மாணவர் எமக் களித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்ட கலா தாளுக வந்து என்னுடன் கதைத்தாள்:
'அண்டைக்கு எனக்காண்டிக் கதைக்கப் போய், பிறகு உங்களுக்கு நல்ல ராகிங் கிடைச்சுதாம். எனக்கு மனம் சரியான வேதனையாய் இருந்திது"
என்ருள்
"அதிலை என்ன? நான் ஒரு ‘போய்" தானே! எதையும் தாங்கிக் கொள்ளலாம். ஆனல் பொம்பிளைப் பிள்ளையளை அவை இப்பிடி "ராகிங்" செய்யிறதை நான் முழுதா வெறுக்கிறன்.""
**முதல் வருசத்திலை எல்லாரும் இப்பிடித்தான் சொல் விறதாம். அடுத்த வருசம் பாருங்கோ. நீங்களே புதிசா வாற கேள் சை’ இதைப்போல ‘ராக்" பண்ணப் பழகிடு வீங்கள். **

கோகிலா மகேந்திரன் 23
இல்லை. இல்லை. நிச்சயமா இல்லை. அடுத்த வருசம் புதிசா வாற மாணவியளை நான் என்ரை "சிஸ்ரேர்ஸ்’ எண்டு நினைச்சு அன்போடையும் பண்போடையும் நடத்தி றதை நீங்கள் இருந்து பாக்கத்தானே போறியள்.'
அவள் சிரித்தாள், அதன் இனிமையில் நான் முதல் முறையாகத் தடுமாறினேன். நாளடைவில் எமது உள்ளங் களில் பல ராகங்களில் கீதங்கள் பிறந்தன.
வகுப்பின் ஒய்வு நேரங்களில் தத்துவம், சமயம், இலட் சியங்கள், கொள்கைகள், காதல் இப்படிப் பல விடயங் களை நானும் கலாவும், நரேனும் விவாதிப்போம், பல விதமான கருத்துக்களைப் பரிமாறுவோம்; இறுதியில் மூவ ரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு முடிவுக்கு வருவோம். "நாங்கள் ஒரு நாளும் படமாளிகைக்குப் போகேல் லத்தான். ஒரு நாளும் பூந்தோட்டம் போகேல்லைத்தான். ஆளுல்.'
மங்கையின் குரல் எனக்குள் தவழுமல் விழுந்து கொண் டேதான் இருந்தது!
நாங்களுந்தான். பலர் அறியப் படமாளிசைகளுக்குச் செல்வதையும், பேராதனைப் பூந்தோட்டமே கதி என்று இடப்பதையும், கண்டி நகர வீதிகளில் கை கோர்த்துக் கொண்டு உலாவுவதையும் நாங்கள் இருவருமே வெறுத் தோம். அதனுல்தான் எங்கள் காதல் என் நெருங்கிய நண் பன் நரேனுக்குக் கூடத் தெரியாமல் இருந்தது. ஆயினும் இனம் காண முடியாத அன்பின் ஆழம் இதயத்தின் அடி யில் பலமாக இறுகியிருந்தது. இனிமேல் தான். திருமணத் தின் பின். அதை இளகச் செய்ய வேண்டும்.
இன்று காலேயில் கூட, உள்ளம் முழுவதும் நான் கலா வுடன் தொடங்கப்போகும் வாழ்க்கை பற்றிய இனிய நினை வுகளில் மூழ்கியிருக்க, எனது அறையில் அமர்ந்து நோயாளி ஒருவரைப் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் பரபரப் புடன் ஓடி வந்தான் நரேன்.

Page 16
24 ! உன்னத தரிசனம்
*நீ எதிர்பாராத ஒரு பேஜண்டைக் கொண்டு வந் திருக்இறன்’ என்ருன். முகத்தில் ஆழமான கவலையின் ரேகைகள் பளிச்சிட்டன. அதற்கு முன் எப்போதும் அது னது முகத்தில் அவ்வளவு கலவரம் காணப்பட்டதில்ஸ் நான் சில நிமிடங்கள் அவன் முகத்தையே பார்த்தபடி பேச மறந்து நின்றேன். பின்னர் தான் என் நினைவுக்குத் திரும்பி,
*"யார் பேஜண்ட்? காணேல்லை என்ன நடந்தது??? என்று அவசரப்பட்டேன். அவன் வெளியே போய் நோயா ளியை அழைத்து வந்தாள். நான் அதிர்ச்சியில் பிரமித்து நின்றேன்.
மங்கை
"என்னட்டை அவருக்கு அன்பு இல்லை எண்டால் . எங்கடை வீட்டிலை தங்கியிருந்த காலத்தில் நான் காலை யிலை செய்யிற தேவி பூஜைக்குத் தவற மல் வாறஸ் அவ்வளவு கவனம் செலுத்தியிருப்பரா?'
என்ன சொல்கிருள் இவள்? இப்போது என் நி3ளவில் அவளது வார்த்தைகள் தவிர வேறு எதுவும் தேரின்ற
வில்லை!
“விளங்காத பாடங்களைக் கேட்கப்போக, ந ரேன் அண்ணு ஏசிப்போட்டு அனுப்பிற போதெல்லாம், தானே
வலியக் கூப்பிட்டு . .
*இஞ்சை வாமங்கை . நான் சொல்லித்தாறன். அவன் மடைன், மற்றவையின்ரை உள்ளம் இவ்வளவு புண் படும் எண்டு தெரியாத மடையன் எண்டு சொல்லி அன் போடை என் பாடங்களைச் சொல்லித் தந்திருப்பரா?"
அவள் தொடர்ந்து கொண்டிருந்தாள், ஆளுல் அதற்கு மேல் என்னுல் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்க முடி
uudio).
"இந்தப் பேஜண்டை இதுக்கு மேலை ஒண்டும் ாேக்க வேண்டாம், லெற் ஹேர் ஸ்லீப். செடேற் ஹேர். "

கோகிலா மகேந்திரன் / 25
ான்று உதவியாளருக்குப் பணித்து விட்டு எழுத்து என் அறைக்கு வந்தேன்.
உலகமே எனக்கு முன்னுல் சுழல்வது போலிருத்தது; இப்படி ஒரு ஆசையையா மங்கை வளர்த்துக் கொண்டிருக் கிருள்? நரேனின் தங்கை எனக்கும் தங்கை என்ற நினைவில் நான் அன்புடன் பழகியது இத்தனை தவருகப் போயிற்ரு? காரணம் தெரிந்து விட்டால் மருத்துவம் சுலபம் ான் றேனே!
இப்போது காரணம் தெரிந்த பிள்.! மருத்துவத் தைப்பற்றி நினைக்கவே பயமாக இருந்தது எனக்கு
நல்ல காலம்! அவள் என் பெயரைச் சொல்ல முதலே "கற் பண்ணிவிட்டேன். காரணத்தை வேறு விதமாகத் திரித்துக்கூறி ந ரே னை ச் சமாதானப்படுத்தி விடலாம். ஆளுல் மங்கையின் நோயை மாற்ற முடியாது!
அவளது அடிமனதின் ஆவலைப் பூர்த்தி செய்ய முடியு மானுல்
மங்கையின் கோட்டை உடையக் கூடாது என்ருல் .
என்னுடைய கோட்டை உடைய வேண்டும்! ாள்ளுல் அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியுமா?
இரவின் நீண்ட மணித்தியாலங்களில் நடந்த இருபக் கப் போராட்டத்தின் இறுதியில் ‘வாழ்க்கையில் ஒரு தியா நம் செய்தோம்’ என்ற நிம்மதியாவது இருக்கட்டுமே என்று முடிவு செய்தேன். ஆனல் கலா என்னை மன்னிக்க மாட்டாள் என்பது நிச்சயமாய்த் தெரிந்தது. இரவிர வாக இருந்து விரிவான கடிதம் ஒன்று எழுதுகிறேன். ால்லா விபரமும் எழுதி, இறுதியில்,
'கலா, நீ என்னை மன்னிக்க வேண்டும் என்று கேட் பதற்குக்கூட நான் தகுதியற்றவன் சரி, நீ என்ளே மன் அரிக்க வேண்டாம். சபிக்காதே! அது போதும் ."

Page 17
26| உன்னத தரிசனம்
என்று எழுதி முடிக்கிறேன்;
மணமேடையில் நான் மாப்பிள்ளைக் கோலத்தில் அமர்ந் திழுக்கும் எதிர்காலத் தோற்றம் கற்பனையில் விரிகிறது.
உடுத்திருக்கும் உடையின் அழகிலே, உட்கார்ந்திருக் கும் இடத்தின் தனித்துவத்திலே, சூழலின் பொலிவிலே நான் தான் மாப்பிள்ளை என்பதை அறிந்து கொள்வதில் எந்த விதக் கஷ்டமும் இல்லையாயினும் என் இதயத்தினுள் யாராவது புகுந்து பார்த்தால் . நான் தான் மாப்பிள்ளை என்பதைச் சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள்.
என் பக்கத்தில் பதுமை போல் உட்கார்த்திருக்கும் மங்கையைத் திரும்பிப் பார்க்கிறேன். அவளது உதடுகளில் நாணம் கலந்த லேசான முறுவல் தெரிகிறது. அவளது அடி மனதின் ஆழத்தில் இருந்து வெளிப்படும் அமைதி யான அந்தப் புன்னகையைப் பார்க்கிறபோது என் மன நின் ஒரு மூலையில் விபரிக்க முடியாத ஒரு நிறைவு ஏற்பட் டாலும், நெஞ்சத்தின் மேற்பகுதியில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் லேக்கம் அதையெல்லாம் விரட்டி வீடு கிறது:
தாவி கட்டும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஐயர் தன் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறா. அடிக்கொரு தடவை பந்தலின் வாசல் பக்கம் பார்ப்பதி லேயே நான் நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கி Gp av
என் கடிதம் கலாவுக்குக் கிடைத்திருக்குமா? அவன் என்னைப் புரிந்து கொன்வாளா? என் முடிவு சரி என்று ஏற் றுக் கொள்வாளா? அப்படி ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் என்னை மன்னிப்பாளா? எனது அழைப்பை ஏற்றுத் திரும ணத்திற்கு வருவாளா? வந்து என்னே ஆசீர்வதிப்பாளா?
'இல்ல். அவள் வரமாட்டாள். எப்படி வகுவாள்? என்னதான் இருந்தாலும் தன் காதலன் இன்னெரு

கோகிலா மகேந்திரன் / 27
பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவதைப் பாரிப்பது போன்ற கொடுமையான காட்சி ஒரு பெண்ணுக்கு வேறு இருக்க முடியுமா?"
இப்படி எத்தனையோ ஆயிரம் வேள்விகளும் பதில் களும் எழுந்து இதயத்தை நெ குடி உறுத்த நான் வாசலைப் பார்த்தபடியே சின் யாக உட்கார்ந்திருக்கிறேன்.
aSLtttLTTTTTTLTL TLLLL TTTTLTT TtTTSLTLLLLLTLSS STLLLLLTTS TTTLLLL கெட்டி மேளம்." ஐயரின் குரல் எங்கோ சென்று விட்ட என் நினைவுகளை இந்த உலகுக்கு மீட்டு வர, வாசலைப் பார்த்த படியே தாலியை வாங்குகிறேன்.
அதோ! அதோ! என் நம்பிக்கை வீண் போகவில்லை. அந்தக் காரில் வந்து இறங்குவது கலாதான். காரிலிருந்து இறங்கிப் பற் தல நோக்கி விரைவாக ஓடிவரும் கலாவின் முகத்தில் இருக்கும் உணர்ச்சிக் கோடுகளை ஆராய்ந்தபடியே .'நிறுத் துங்கோ! நிறுத்துங்கோ!. என்ரை கல்லறையிலை தான் இன்ஞெரு பெண்ணுேடை வாழ முடியும்.!"
ஐயோ! எத்தனையோ முயன்றும் இத்தக் கற்பனையை என்னுல் நிறுத்த முடியவில்ல். மறுதாள். அதற்கடுத்த நாள். அடுத்த வாரம் . அதே கற்பன. கலாவின் அதே குரல் ,. நாலாம் நாள் கலா என்னிடம் வந்தாள். அவளது முகத்தில் அசாதாரண அமைதி நிலவியது. எதுவுமே பேசா பல கடிதம் ஒன்றை என்னிடம் நீட்டினுள். நான் அவசர மாய்ப் பிரித்துப் படித்தேன்.
"என் பெருமதிப்பிற்குரிய மோகன் ' என்று அக்கடி தம் தொடங்குகிறது.
(25-5-76 இல் வாஞெலியில் ஒலிபரப்பான கதை சில மாற்றங்களுடன்)

Page 18
மனத்திருப்பம்
அந்தத் தனியார் மருத்துவ மனையில், "ஹில்டா வாட்' டின் 58-ம் இலக்க அறையில் குடிகொண்டிருந்த கனமான அமைதியின் தடுவில், படுக்கையில் சாய்த்து கொண்டே அந்தச் சஞ்சிகையைப் பிரித்தேன். மனதில் சுற்றிச் சுற்றி வத்து கொண்டிருந்த என் பயம் கலந்த நினைவுகளை மறக் கடிக்கலாம் என்று அதில் ஒரு சிறுகதையைப் படிக்கத் தொடங்கினல், அதுவும் என் காலை வாரிவிட்டது. பெண் பார்க்க வருவதும், சீதனம் கேட்பதும் படித்த ஆந்தப் பெண் கண்ணகி போல் ஆவேசம் கொண்டு அந்த ஆட வனைத் திட்டித் தீர்ப்பதும். அவன் அசடு வழிய எழுந்து போவதும் என்று . திரும்பத் திரும்பப் பல சஞ்சிகைக ளில் படித்துப் புளித்துப்போன யாதார்த்தமற்ற கதை,
புளித்த பின்னரும் படித்தால் மனதில் எப்படி நிலைச் கும்? கண்கள் தான் பார்த்தனவே தவிர, இதயம் தன் வோக்கிலே தாவி ஓடி, பழையபடி எனது நோயைப் பற் றிய சிந்தனைகளில் அமிழ்ந்து கொண்டது.
பக்கத்து அறையில் அன்று காலைதான் "அட்மிற்றெட்
ஆகி இருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி மெதுவாக எட்டிப் பார்த்தாள்.
"நீங்கள் எந்த ஊர்? என்ன வருத்தம்?
என்னுடன் கதைப்பதற்கு ஆயத்தமாகிருள் என்பதைப் புரிந்து கொண்டேன் நானும் தனியாகப் படுத்திருந்து

கோகிலா மகேந்திரன் 129
சிந்தனையில் ஆழ்ந்து போவதை விடச் சிறு போது என்னை மறந்து உரையாடுவோமே என்ற நி%னவில்,
"நாங்கள் தெல்லிப்பழை . நீங்கள்..?? என்று பதிற் கேள்வி கேட்டேன். நான் எப்போது கேட்பேன் என்று எதிர்பார்த்திருந்தது போல விடுவி டென்று உள்ளே வந்து கதிரையை இழுத்துப்போட்டு உட் கார்த்து கொண்டு, கதை கதையாகப் பொழிய ஆரம்பித்து விட்டாள் அந்தப் பெண்.
கையை அபிநயித்து, முகத்தைச் சுருக்கி, குரல் ஏற்றி இறக்கி ஒரு சுய ரசிப்புடன் அவள் சொல்லிக் கொண்டு வந்த யதார்த்தமான வாழ்க்கை அநுபவம் அந்தச் சஞ்சி கையில் வந்த பிரபவ எழுத்தாளரின் கற்பனைக் கதையை வி. ரசனையுள்ளதாக இருந்த படியால். என்னை மறந்து அட்சரம் தவருமல் கிரகித்துக் கொண்டிருந்தேன்.
'எனக்கு நாளைக்குத்தான் ஒப்பரேஷன். இண்டைக்கு வந்து அங்மிற் பண்ணச் சொன்னவர் டொக்ரர்.”*
"என்ன ஒப்பரேஷன் உங்களுக்கு?" நானும் கதையில் ஆர்வம் கொள்வதை என் கேள்வி மூலம் காட்டிக்கொண்டேன்.
"வூம் ஒப்பரேசன். ச ல ம் போறதில்லை. இப்ப தொடங்கி மூண்டு வருசம், என்ரை மகன் போனத்தோடை தொடங்கின வருத்தம்" "
கருப்பை கீழே இறங்கியதால் ஏற்பட்ட வருத்தம் என் பதை விளங்கிக் கொண்ட அநுதாபத்துடன்
"ரன் உங்கடை மகனுக்கு என்ன நடந்தது?’ என்று 0ли“.6)Gара;
"தனக்குக் கீழை மூண்டு பெண் சகோதரம் இருக்கிற தைப் பற்றியோ, தகப்பன்ரை கெளரவத்தைப் பற்றியோ யோசிக்காமல் அவள் தான் நினைச்ச பொம்பிளையைத் கட்டிக் கொண்டு போயிட்டான். '

Page 19
30 / மனத்திருப்பம்
அந்த வேதனை இந்த நோய் வருவதற்குக் காரணமாக இருக்குமா என்று நான் சிந்தனையில் ஆழமுதல் அவள் தன் தொணியை மிகவும் குலைத்துக் கொண்டு என் முகத்தரு கில் குனிந்து சொல்கிருள் .
'அவை எங்கடை சபை சந்திக்குச் சேராத ஆக்கள் பிள்ளை. அண்டையோடை நான் அவனைக் கைகழுவி விட் டிட்டன். கதைக்கிறதில்லை ஆணுலும் மனம் கவலைப் படாமல் இருக்க முடியுமே நினைச்சு நினைச்சு அழுது அழுது, அண்டைக்குத் தொடங்கின வருத்தந்தான்."
இந்தக் கதை ஒன்றும் புதிதான ஆச்சரியமல்ல என் பதைப் புரிந்து கொண்டே நான் சொன்னேன்.
"அதைப் பற்றி ஏன் கவலைப்பட வேணும் ? பிள்ளைப் பராத்தை வைராக்கியத்தோடை வெட்டி எறிஞ்சு கவலைப் படுறதை விட அவையளை அணச்ச நடத்திறதுதான் நல் லது எப்பிடியும் மகன் மகன் தானே! மருமகள் மருமகள்
int(sur
எனது ஆரோக்கியமான பதிலை ஏற்றுக் கொள்ள அவ ளால் முடியவில்லை. அந்த யோசனையை மிகக் குரூரமாக எதிர்த்துத் தமது சந்ததியின் உயர்வையும் பெருமைகளையும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். பசையற்றதாக இருந்தாலும் இரசனையுடன் சொல்லப்பட் டதால் அலுக்காமல் கேட்டுக் கொண்டிருந்தேன். அவளை மஞே பலாத்காரம் செய்ய என்னுல் முடியுமா? அவளது இதயத்தில் தனது மருமகளின் மேல் முசிழ்த்த வெறுப்பை எப்போதுமே அவள் புணராலோசனை செய்ய மாட்டாள் என்றே எனக்கு நிச்சயமாகத் தோன்றியது. எத்தனே எழுத் தாளர்கள் தான் "முற்போக்கு இலக்கியம்’ என்ற பெயரில் எழுதி எழுதிக் கிழித்தும் சாதிப் பிரச்சினை சம்பந்தப்பட்ட ஆதிவித்துக்கள் இன்னுந்தானே அழிந்து போகவில்லை?

கோகிலா மகேந்திரன், ! 31
அறைக்கு வெளிதுே நின்று "ஸ்ரெச்சர்களின் நடமாட் டங்களையும், தாதிப் பெண்களின் ஒட்டங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என் தங்கை,
**டொக்டர் வாழுர்" என்று அறிவித்ததைத் தொடர்ந்து அந்தப் பெண் தனது அறைக்குச் சென்று விட்டாள்.
மூன்று நாளாக, என்னைப் படுக்கையைவிட்டு எழும்பக் கூடாது என்று கட்டளை போட்டிருந்த வைத்திய நிபுணர் அன்று மெதுவாக எழுந்து நடமாடும்படி கூறிச் சென்றது எனக்குப் பெரிய விடுதலையாக இருந்தது.
அன்று மாலை மெகவாக எழுந்து சென்று எனது அறைக்கு மறுபச்சுத்தில் துரொம் போசிஸ் நோய் என்று அநுமதிக்கப்பட்டிருந்க ஒரு ஆசிரியையுடன் நான் உரை uurruq-4 GassmrGiTuggsjö (356siiv.
“gugurt t'jush.. guq gurri jush...” பத்து வயதும் நிரம்பாத ஒரு சிறுபையன் நாங்கள் இருந்த அறையில் மெதுவாக எட்டிப் பார்த்து, "இடியப்பம் வேணுமா அம்மா?." என்று கேட்டான். நான் அவனை உள்ளே அழைத்து,
இேடியப்பம் என்ன விலை தம்பி?" என்று கேட்டேன்.
"ஒரு இடியப்பம் பதினஞ்சு சதம். உங்களுக்கு எத்தினை வேணும்?"
என்று கேட்ட சிறுவனிடம் நாங்கள் இரண்டு பேரு மாக இடியப்பம் வாங்கிக் கொண்டு, ஐந்து ரூபாத்தாளை அவனிடம் கொடுத்து,
“எங்கை ஒன்பது இடியப்பம் கணக்கைச் சரியாப் பாத்து மிச்சம் எவ்வளவு என்டு சொல்லு பாப்பம் "

Page 20
32 / மனத்திருப்பம்
என்று என் ஆசிரியப் புத்தியை அவனிடம் காட் டிக் கொண்ட போது, சத்திர சிகிச்சைக்காக வந்திருந்த அந்தப் பெண்ணும் அங்கே வந்தாள்.
நீங்கள் இடியப்பம் வாங்கேல்லையோ? வாங்கினல் இரவுச் சாப்பாட்டுக்குப் பிரச்சனை இல்லையே!"
நான்தான் கேட்டேன். அவள் கண்ணைச் சுருக்கி மூக் கைச் சுளித்து விட்டு, இடியப்பம் தந்த பையன் அப்பால் நகர்ந்தவுடன் சொன்னுள்,
"நீங்கள் வாங்கிச் சாப்பிடுறியள் எனக்கெண்டால். என்ன சாதி குலம் எண்டு தேரியாமல் கண்டவையிட்டை யும் வாங்கிச் சம்சயத்தோடை சாப்பிடச் சரிவராது. அதி லும் பாக்க நானே போய்க் குசினியிலே சமைச்சுச் சாப் பிடப் போறன் ."
துரோம் போசிஸ் ஆசிரியையும் நானும் மெதுவாக முகம் பார்த்து முறுவலித்துக் கொண்டோம். எத்தனை அறப் போராட்டக் குழுக்கள் முனைந்தாலும் இந்தப் பிரச் சினை தீராது
மறுநாள் மாலை! சத்திர சிகிச்சைக்குத் தரப்பட்ட அனஸ்தேசியா' தந்த மயக்கத்திலிருந்து அந்தப் பெண் விழித்து விட்டாள் என்பதறிந்து நானும் மெதுவாக எழுத்து அவர்களின் அறைக்குள் போய்ப் பார்த்தேன். துரொம் போசிஸ்" ஆசிரியையும் உள்ளே வந்தார்.
நோயாளிக்கு அருகில் இரண்டு பெண்கள்.
பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியும், அண் மையில் திருமணமானவள் போல் தோன்றிய ஒரு இளம் பெண்ணும் நின்றிருந்தனர். தாலி அணித்திருந்த இளம் பெண் கரைத்துத் தந்த தோடம்பழச் சாற்றில் சில கரண் டிகளை நோயாளி குடித்தாள். அவளது கண்களில் பணித் திருந்த நீரை அவதானித்துக் கொண்டே நான் கேட்டேன்
G 2
இரண்டு பேரும் உங்கடை பிள்ளையன் தானே!"

கோகிலா மகேந்திரன் / 33
தோயாளி பதில் சொல்ல முயன்ற போதும் அதற்கு முன்னரே அந்த இளம் பெண் சொன்னுள்
“இல்லை. அவதான் மகள். நாள் மருமகள்.'" ''g''
எதிர்பாராத வியப்பில் என் விழிகள் ஒரு முறை உயர்ந்து தாழ்ந்தன. மருமகள் வாயில் விடும் தோடம் ழச் சாற்றினைக் கண்கள் பனிக்க அவர் அருந்தும் காட்சி யில் மீண்டும் என் விழிகள் லயித்து நின்றன. தோடம் பழக் கோப்பையைக் கழுவ என மருமகள் வெளியே சென்ற போது, நோயாளி என்னை அருகில் அழைத்து,
எனக்கு ஒப்பரேஷன் எண்டு நான் சொல்லி அனுப் பேல்லை. எப்பிடியோ கேள்விப்பட்டு வந்திருக்கினம்! என்ன செய்யிறது. என்னுலை கோவிக்கவும் முடியேல்லை .'
என்ருள். நான் சிரித்துக் கொண்டேன்.
வழமைபோல இடியப்பக்காரத் தம்பியின் குரல் கேட் டது. நான் திரும்ப முதலே அத்தப் பெண் தனது மகளிடம் சொன்னுன்
"பிள்ளை நீங்களும் இடியப்பம் வாங்கி வையுங்கோ வன், இரவுக்குச் சாப்பிடலாம். நேத்து நான் சமைச்சுச் சாப்பிட்டன் இண்டைக்கு என்னுலை எழும்போலாது. என்னை விட்டிட்டுப் போய்ச் சமைக்க உங்களாலையும் முடி யாது கூப்பிடுங்கோ வாங்குவம் .'
அவர்கள் இடியப்பம் வாங்க, என் மனம் பறந்து போய்த் தன் பாட்டில் அசை போட்டது. உள்ளத்தில் இருக்கும் சில வக்கிரமான பிடிவாதங்களை உடல் பலவீனம்” மாற்றி விடுகிறதா?
(மல்லிகை 1979 ஜுலை இதழில் பிரசுரமானது)

Page 21
மனிதர்கள்
'இது திறம் நூல் பாருங்கோ' 'சீலை சுருங்குமோ எண்டு கேக்கிறன். நீங்கள் நூலைப் பற்றிச் சொல்லிக் கொண்டு நிக்கிறியள் ??
வெள்ளிக் கம்பிகளாய்த் தூற்றலடிக்கும் மழையைச் சிறிதேனும் பொருட்படுத்தாமல் அந்தப் பிரபல கல்லூ ரிக்கு வேகமாகச் சென்று கொண்டிருக்கும் சிறுவர்களை, அந்தப் புடைவைக் கடை முகப்பில் நின்று நான் தீர்க்க மாகப் பார்க்கிறேன்; இந்தக் கல்லூரியில் சில நிகழ்ச்சி களைத் தரிசிப்பதுதான் இன்று என்னுடைய செடூல் . .
இதென்ன காணும் கதை, நூலைப்போல சீலை எண்டு நீர் கேள்விப்படேல்லை! திறம் நூல் எண்டால் திறம் சீலை எண்டது தானே கருத்து “
பாடசாலை ஆரம்பமாவதற்கு அறிகுறியாகக் கேட்ட மணிச் சத்தத்துடன் நானும் நுழைத்து, மின்சாரக் கம்பி ஒன்றில் அமர்ந்து ஒய்யாரமாக ஊஞ்சலாடிக் கொண்டி ருந்த தேன்சிட்டுக்கு அருகில் அமர்த்து கொண்டேன். தனிக் கம்பியில் அமர்ந்திருச்கும் சிட்டு இரண்டு கம்பிகளை ஒரே நேரம் தொட்டுக் கொண்டால் சில கணங்களில் எனது நிலைக்கு வந்துவிடும் என்று நிாைக்க எனக்கு இலேசாகச் சிரிப்பு வந்தது;
இது யார்? ஆசிரியர் அறையின் முன்னுல் நீண்டு செல் லும் நடைபாதையில் ஓர் ஆசிரியருடன் கதைத்துக்சொண்

கோகிலா மகேந்திரன் / 35
டிருக்கும் இந்த மாணவி யார்? அருகில் சென்று முகத்தை உற்றுப் பார்த்தேன்;
எப்போதோ பார்த்த முகம் போல
ஒகோ. நான் நேற்று இரவு தரிசித்த வீட்டில் அந்த மேனிசயில் இருந்து படித்துக் கொண்டிருந்த பெண்பிள்ளை அவதான்!
அவர்களுக்கு அருகில் சென்று அந்த நடைபாதைக் குந்தில் அமர்ந்து கொண்டபடியால் அவர்களின் உரையா டல் ஒலியை எனது முளையத்தின் கேட்டல் பிரதேசம் மிகத் தெளிவாகப் பதிவு செய்தது.
“எங்கடை சயன்ஸ் பேப்பர் நீங்கள் தானே சேர் திருத்தியது? எனக்கு ஐப்பத்தாறு மாக்ஸ் எல்லே எங் கடை கிளாஸ் ரீச்சர் பதினறு எண்டு எழுதி வைச்சிருச் கிரு சேர்'
‘நான் திருத்தினப் போலை எல்லாப் பிள்ளையளின்ரை மார்க்சும் எனக்கு ஞாபகம் இருக்கோ? வேணு மெண்டா உள்ளை போய் உம்மடை மார்க்ஸ் செக்' பண்ணிச் சொல் றன். நீர் இதிலை நில்லும்
அ த ஆசிரியர் இவ்வாறு கூறிவிட்டு, நடை பாதை யில் கம்பீரமாக நடந்து சென்று ஒரு அறையினுள் நுழைந் தார். நானும் அவரைப் பின் தொடர்ந்து பறந்தேன். அவர் அலுமாரியைத் திறந்து ஒரு கடதாசிக் கட்டை எடுத்துப் பிரித்துக் குறித்த சுட்டிலக்கத்தைத் தேடி விடைத் தாளை எடுத்தார், நான் மேலே நின்று எட்டிப் பார்த்தேன். விடைத்தாளில் ஐம்பத்தாறு புள்ளிதான் இருந்தது.
"சீ சீ . இப்பத்தை வாத்திமார் பெரிய மோசம். பாவம் அந்தப் பிள்ளை. ஐம்பத்தாறைப் பதினறெண்டு பதிஞ் சிருக்கிருங்கள். கேடு கெட்ட வாத்திமார். "
நான் எனக்குள் திட்டிக் கொண்டேன். அவர் அந்த விடைத்தாளை எடுத்துப் பிரித்துப் பிரித்துப் பார்த்தார்; புரட்டிப் புரட்டிப் பார்த்தார். கடைசிப் பக்கத்தைப்

Page 22
36 மனிதர்கள்
பார்த்தார். பின்னர் முன் பக்கத்தைப் பார்த்தார். இறு தியில் திடீரென்று எதையோ கண்டு பிடித்தார் போல,
"இஞ்சை பாருங்கோவன் இந்தப் பிள்ளை செய்திருக் கிற வேலையை"
என்ருர், இவரது பதட்டமான பேச்சினல் கவன: கலைக்கப்பட்ட இன்னெரு ஆசிரியர்,
"வட் கப்பீண்ட்?’ என்று கேட்டார்.
'இந்தப் பேப்பரிலை இருக்கிற மாக்ஸ் என்னுடைய றைற்றிங் இல்லை. நான் திருத்திய மையும் இல்லை. மற்றப் பேப்பஸிலை எல்லாம் நான் இடது பக்கத்திலை போட்டிருக் இறன். இதிலை மட்டும் வலது பக்கத்திலை மாக்ஸ் போட் டிருக்கு இது ஏதோ மாதிரி நான் திருத்தின விடைத் தாளை எடுத்துப் போட்டு இந்தப் பிள்ளை வேறை பேப்பர் வைச்சிருக்குது."
என்ருர் முந்தியவர்:
இப்போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாங்களும் அந்தக் காலத்தில் சோதனை நேரத்தில் எத்த னையோ திருவிளையாடல்கள் செய்திருப்போம். சில சமயங் களில் கேள்விகளை முன் கூட்டியே அறிந்து கொள்வோம். ஆசிரியர் கவலையீனமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் புத்த கம் வைத்துப் பார்த்தெழுதுவோம். 'றிப்போட்டில் இருக் கும் ஒன்றுகளை ஏழுசளாகவும் ஒன்பதுகளாகவும் மாற்றி விடுவோம்.
ஆனல் இது ஒரு புதிய திருவிளையாடல் நான் இப்போது உசாரானேன்.
அந்த அறை அலுபாரியின் மேல் ஏறிநின்று கொண்டு தொடர்ந்த உரையாடலைக் கவனித்தேன்;
* அப்பிடியே. எப்பிடி அந்தப் பிள்ளை "ஆன்சர் ஸ்கி ரிப்ற் மாத்திச்சுது?’ என்று இரண்டாவது ஆசிரியர் கேட்.

கோகிலா மகேந்திரன் / 37
"நாங்கள் பேப்பர்ஸ் திருத்தினப் பிறகு பிள்ளை பளுக்கு விடைத்தாள் காட்டிறது தானே ! அப்ப இந்தப் பிள்ளை நான் திருத்தின விடைத்தாளை எடுத்துப் போட்டு வேறை ஒண்டு புதிசாப் "பிரிபெயர் பண்ணித் தானே மாக்ஸ் போட்டு வைச்சிருக்க வேணும் "
நான் எவ்வளவு கண்காணிப்பாக இருந்தும் ஒரு மாணவி தன்னை இப்பிடி ஏமாற்ற முனைந்த நிகழ்ச்சி அந்த ஆசிரியரை நன்முக உலுப்பியிருக்க வேண்டும். அவர் கண் கள் சிவந்து விட்டன. “விசுக்கென்று வெளியே போய் நடைபாதையில் நின்று கொண்டிருந்த அந்த மாணவியை அழைத்து வந்தார்.
**இந்தப் பேப்பர் எப்பீடி இந்த பண்டிலுக்குள்ளே வந்தது? சொல்லு உண்மையை"
என்று உறுமிஞர். "சேர், சத்தியமா எனக்கு உதைப்பற்றி ஒண்டும் தெரி uLumrğ5 GaFrf ʼ ʼ
என்று அந்தப் பிள்ளை மாயக் கண்ணிர் வடித்தது. "என்ன தெரியாது? இதிலை இருக்கிற எழுத்து என்ரை எழுத்தில்லை. இந்த மை, நான் திருத்தின மை இல்லை. நீ ஆரைப் பேக்காட்டுமுய்? நாங்கள் எல்லாம் முழுப் பேயர் நீதான் புத்திசாலி எண்டு நினைச்சியோ. சொல்லு உண் an LDou...'
அவரது குரல் உச்ச உரப்பில் ஏறி ஒலித்தது. இப் போது அந்தப் பெண் பிள்ளை மெதுவாக ஏதோ முணு முணுத்தது. நான் அலுமாரியை விட்டிறங்கி அந்தப் பிள் ளையின் முகத்திற்கு முன்னே நின்று கொண்டு கவனித்தேன்.
"சேர். சத்தம் போடாதேங்கோ. நான் நாளேக்கு நூறு ரூபா காசு கொணந்து தாறன். இதைப் பற்றிப் பிரின்சிப்பலிட்டைச் சொல்லா தேங்கோ. எனக்கு ஐம்பத் தாறு மாக்ஸ்தான் எண்டு கிளாஸ் ரீச்சரிட்டைச் சொல்
Gyti Gasrir GBF ri ...”

Page 23
38 / மனிதர்கள்
அந்த ஆசிரியர் திகைத் துப் போய்விட்டார். என்பது அவரது முக இறுக்கத்தில் தெரிந்தது. ஆரும் வகுப்பில் இருக்கும் ஒரு சிறிய மாணவி கேட்கும் கேள்வியா இது
என்று ஆச்சரியமடைந்திருக்க வேண்டும் அவர்.
எப்படி இந்த மனதில் இந்தப் பிஞ்சு உள்ளத்தில் . இந்த வெள்ளை இதயத்தில் இந்த லஞ் சக் குணம் ஊறியது என்று நினைத்திருக்க வேண்டும் அவர்.
** என்னடி . லஞ்சம் தரப்போறியோ எனக்கோ. என்னைப் பேய்க்காட்டப் பார்த் தாய் . முடியேல்லை . இப்ப லஞ்சம் தர வெளிக்கிட்டிருக்கிழுய் என்ன. வாறன்"
என்று பலமாக உறுமிய படியே அவர் அவளை அதி பரின் அறைக்குள் இழுத்துச் செல்லுகிருர்,
"ஆளைத் தெரியாமல் இந்தப் பெட்டை லஞ்சம் குடும் கப் பாத்திட்டுது. என்னட்டை அல்லது உன்னட்டைக் கேட்டிருக்கலாம் என்ன மாஸ்டர். சி ??
என்று ஒரு ஆசிரியர் ' பகிடி விடுவதும் மற்றவர்கள் சிரிப்பதும் எனக்கு ரசிக்கவில்லை. முதல் நாள் இரவு இந்தப் பிள்ளையின் வீட்டில் நான் தரிசித்த சம்பவங்கள் என் நினைவில் பொறி தட்டுகின்றன. அந்த ஆசிரியருக்குப் பிடிபடாத காரணம் எனக்குப் புரிகிறது.
இரவு நேரங்களில், பொழுது போகா திருக்குப் போது இடையிடை ஒவ்வொரு தமிழ் வீடுகளைத் தரிசிப்பது என் வழக்கம் என்பதால்தான் அன்றும் அந்த வீட்டிற்குப் போயிருந்தேன். உள்ளே. கணவனும் மனைவியும் பேசிக் கொள்வது முற்றத்தில் செல்லும்போதே எனக்குத் துல்லிய மாகக் கேட்டது. வாசல் கதவின் மேலே இருந்த "கிறில் ' துவாரத்தினூடாக உள்ளே நுழைந்து நானும் ஒரு கதிரையில் அமர்ந்து கொண்டேன் இந்தப் பெண் பிள்ளை அருகில் இருந்த மேசை ஒன்றிலிருந்து படித்துக்கொண்டிருந்தது இன்னெரு சிறிய . இரண்டு வயது மதிச்சுக்கூடிய ஆண் குழந்தை தாயின் மடியில் அமர்ந்து விளையாடிக்கொண் டிருந்தது. அவர் சொன்னுர்,

கோகிலா மகேந்திரன் / 39
" நேற்றைக்கு ஒபீஸுக்கு ஒரு மனுசன் வந்திது தப்பா தமிழ் வாத்தி . மனிசனுக்கு உலகத்து நடப்புக் கிடப்பு ஒண்டும் தெரியேல்லை "
* ஏன்? என்ன செய்தார்?" இது மனைவியின் கேள்வி. " மனுசன் முதல்லை என்னட்டை வத்து . நீங்கள் தானே வட்டுக்கோட்டைப் பள்ளிக்கூடங்களின் ரை சலறி செய்யிற 506armrriak 676tiat:(G G3an Le Larri ”.
" ஓ நான் தான் என்ன விஷயமாய் வந்திருக்கிறியள் எண்டு கேட்டிருப்பியள் "'.
*" கேட்டன் அப்பிடித்தான். தனக்கு நாலு வருசமா இங்கிரமெண்ட் போடேல்லையாம். ஒருக்காப் போட்டுத் தருவியளோ எண்டு கேட்டிது மனுசன்'.
"இப்ப நேரமில்லை: நாளைக்கு வாருங்கோ பாப்பம் எண்டு சொல்லியிருப்பியள் ??.
இதென்னப்பா . நான் சொன்ன மறுமொழியெல் லாம் அப்பிடி அப்பிடியே உனக்குத் தெரியுதெண்டால் பிறகேன் நான் கதையைச் சொல்லுவான்? நீ சொல்லி
* இல்லையப்பா. நீங்கள் வழக்கமா அப்பிடித்தானே சொல்லிறதெண்டு சொல்லிறனீங்கள். அதுதான் சொன்ன ஞன். நீங்கள் சொல்லுங்கோ . பேந்து ?
படித்துக் கொண்டிருந்த இந்தப்பிள்ளை தனது புத்தகத்தி லிருந்து கண்களை விலக்கி இவர்கள் வெகு சுவாரசியமாக உரையாடிக் கொண்டிருந்த கதையைக் கேட்டுக்கொண்டிருப் பதை நான் உன்னிப்பாகப் பார்த்தேன்;
* பிள்ளை சோதினைக்கு நல்ல வடிவாப் படிக்குது ”” என்று நான் என்னுள் முணுமுணுத்துக் கொண்டேன். அவர் தொடர்ந்து சொன்னர்,
" மனுசன் போட்டுது. இண்டைக்குக் காலையிலை வந்திட்டுது. வந்து தம்பி இண்டைக்கு வரச்சொன்னியள்,

Page 24
40 / மணிதர்கள்
அந்த இங்கிரமெண்ட் விஷயம் எண்டு குழைஞ்சுகொண்டு நிக்குது. ’’
* பிறகு . . . பிறகு
* எங்களுக்கு எத்தினை வேலை ? உங்கடை ஒராளின்ரை வேலையே பாக்கிறது? களைப்புக்கு ஒரு தேத்தண்ணி கூட வாங்கித் தருவாரில்லை. உங்களுக்கென்ன? பள்ளிக்கூடத்தின் டேய் படியடா எண்டு போட்டுச் சும்மா இருக்கிறதுதானே, எண்டு சத்தமாய்ச் சொன்னன். அங்கை இருந்த எல்லாக் கிளாக்மாரும் திரும்பிப் பாத்தினம். ஆஒல் பாவம் மனுசனுக்க அநுபவம் இருந்தால் தானே . அப்பவும் விளங்கேல்லை . **.
"இங்கிரமெண்ட் விஷயம் அங்கை அவர்தான் செய் யில்து. அவருக்கு ஒரு நூறு ரூபா குடுத்தால் உடனே செய்விக்கலாம் எண்டு மனிசனைக் கூப்பிட்டு இரகசியமாகச் சொல்லத் தெரியா தேயப்பா ?
*" என்ன எனக்கு அவ்வளவு மூளையில்லையே! அப்பிடித் தான் கடைசியிலை சொன்னன். கிழவன் முழிசு முழிசெண்டு முழிசிப்போட்டுக் காசை எடுத்துத் தந்திது" .
d 6
"அவர் லேசிலை காசு வாங்கமாட்டார் நான் ஒரு மாதிரி அவரைக் கெஞ்சிக் கிஞ்சி இதைச் செய்விச்சுத் தாறன், நீங்கள் ஒரு ஐஞ்சு நிமிஷம் வெளியிலை நில்லுங்கோ. எண்டு சொல்லி ஆஃா அமத்திட்டன் **
*" ம் . அவர் வெளிலை போக நீங்கள் வேலையை
முடிச்சுக் குடுத்தீங்களாக்கும் . அது போக. இப்ப காசு 6rfti Goju u unir ? ””
"ஏன் அது உனக்கே? நான் கஷ்டப்பட்டுச் சேர்த்தது!
அது எனக்கொரு சேட்" வாங்கவெண்டு அங்கை லாச்சியில் வைச்சிருக்கிறன் ??

கோகிலா கோந்திரன் 141
கதை முடியப் போகிறது என்பதை உணர்ந்த பெண் பிள்ளை முகத்தைத் திருப்பிப் புத்தகத்தைப் பார்க்கத் தெ7டங்கியது. தாயின் மடியில் இருந்த குழந்தையும் அழத் தொடங்களே, நானும் எழுந்து உள்ளே நுழைந்த வழியால் வெளியேறினேன்.
அந்தப் பெண்பிள்ளைதான் இன்று -
இங்கே -
* எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - அது நல்ல வனவதும் தீயவளுவதும் அன்னை வளர்ப்பதிலே "
அயல் வீட்டு வானெலியில் ஒலிக்கும் அந்தப் பாடல் மிக அர்த்தம் பொதிந்ததாய் என் செவிப்பறை மென்சவ்வைத் தாக்குகிறது.
உலகில் எந்தக் காரியத்தையும் பணம் கொடுத்துச் சம்பாதிக்கலாம் என்பது பிள்ளையின் உள்ளத்தில் பசுமை யாகப் பதிந்திருக்கிறது: இது பிள்ளையின் தவழு ?
இப்படியே காசைக் கொடுத்துக் கொடுத்து எல்லாம் செய்ய முயன்று, இந்த அநீதியான செயற்பாடுகள் காரண மாக உள்ளம் வேதனைப்படும்போது இறைவனிடம் சென்று,
* கடவுளே! உனக்கு ஆயிரம் ரூபா காசு தாறன். எனக்கு மன அமைதியைத் தஈ ' என்று கேட்குமா இந்தப்
Gairant 2
என் சிந்தனை ஒர் எல்லை 4 கோட்டைக் காணவில்லை இப்போது ஆவி நிலையில் இருக்கின்ற நான் மறுபிறவியில் ஒரு நாயாகப் பிறந்தாலும் காரியமில்லை. ஆனல் ஒரு லஞ்ச " மனிதனுய்ப் பிறக்கக்கூடாது என்று இறைவனிடம் விண்ணப் பிக்க வேண்டும் என்ற முடிவுடன் நான் கயிலாயம் செல்கிறேன்.
(31-12-83 இல் இலங்கை வானெலியின் தமிழ்ச் சேவை 1 இல் சிறுகதை நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது)

Page 25
சடிப்பொருள் என்றுதான் நினைப்போ ?
கிலை ஐந்து மணியாகியும் வெயில் கனல் வீசிற்று; பங்குனிக் காய்ச்சல் சுள்ளென்று உடலில் கட்டது.
பத்துநாள் சாப்பாடு இல்லாமல் பட்டினி கிடந்த நாய்க் கூட்டத்தின் முன்னுல் சாப்பாட்டுப்பார்சல் எறிந்ததுபோல. அத்த மினிபஸ்” ஸைக் கண்டதும் சனங்கள் பாய்ந்து ஏறிய காட்சிக்குப் பொருத்தமான உதாரணமாய் அவளுக்கு அதுவே தோன்றியது.
** எந்த நேரத்தில் எது நடக்குமோ? எப்பேரிது போக்கு வரத்து எல்லாம் திடீரென ஸ்தம்பித்துப் போய்விடுமோ என்ற பதட்டத்தில் மக்கள் பாய்ந்தார்கள்; அவர்களிலும்
பிழையில்லைத்தான் !
ஆளுறும் அவள் நாயாகவில்லை!
அவளுக்குத் தெரியும். கிரிசாம்பாள் மரதிரிக் கடைசி வரையில் நின்முலும் "மினிபஸ்ஸின் மினிப் பெடியன் விட்டுவிட்டுப் போகமாட்டான். பாய்ந்தோடிப்போய் கும்ப லுக்குள் சேர்ந்து நசுக்குப்படாமல் இறுதியாகத் தனித்து நின்ற அவளை "மினிப் பெடியன்" இராஜ உபசாரம் செய்து வரவேற்ருள்.
** அக்கா, இடமிருக்கு வாங்கோ . உதிலை அடுத்த சந்தியிலை கனபேர் இறங்குவினம், இருக்கிறதுக்கு சீற் கிடைக்கும். வாங்கோ .'

கோகிலா மகேந்திரன் / 43
அவன் உபசாரம் செய்யாமல் இருத்திருந்தாலும் அவள் ஏறித்தான் இருப்பாள். "நெருக்கடி ' என்று இதை விட்டு விட்டு, அடுத்ததற்குக் காத்திருப்பதில் பயனில்லை. அடுத்ததும் இப்படி அல்லது இதைவிட மோசமான நிலையில்தான் வரம் கூடும்.
மேலே நீலநிற மேகத்தில் வெண்பஞ்சு முகில்ாள் தலை தெறிக்க ஓடிக்கொண்டிருந்தன.
** அக்கா மேலை ஏறுங்கோ ! இதிலை நிண்டா விழுந் திடுவியள். உள்ளுக்குப் போங்கோ .."
அவள் மேலே ஏறியபின் திரும்பிப் பார்த்தான் புற்போட்டின் ஒற்றைக்கால் தூங்கலில் ஏழுபேர்.
முகத்தை எந்தத் திசையில் திருப்பினுலும் மூக்குச் கண்ணுடி உடைந்துவிடும்போல இருந்தது. "பாங்க் கிலிருந்து புறப்படும்போதே, கண்ணுடியைக் கழற்றி, ‘ஹான்ட்பரக்" கில் வைத்துக்கொள்ளாத தன் மறதியைத் தனக்குள்ளாகவே நொந்துகொண்டாள் ஒற்றைக் காலை யாரோ சப்பாத்துக் காலால் நசித்தார்கள் வலியினுல் முகத்தைச் சளித்துக் கொண்டவள். " நசிபடும் இனத்தில் நானும் ஒரு பிரதிநிதி’ என்று நினைத்து உடனேயே சிரித்துக்கொண்டாள்,
** அண்ணை, காலை எடுங்கேரி, என்ரை கால் சம்பலாப் போச்சு . **
"ஒ . ஐ ஆம் சொறி . தெரியாமல் மிதிச்சிட்டன் ."
முன்னுல் நின்ற அரை நரைக் கிழவர் வாயெல்லாம் பல்லாக மந்தகாசம் செய்து அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். ஆண்களின் வியர்வை நெடி அவளைச் சுற்றிலும் அனல் காற்ருய் வீசியது சீ . உடலெங்கும் புழுக்கள் நெளிவது போல ஒரே அரியண்டம்,
* ஒரு பொம்பிளை வேலைக்குப் போறதெண்டால், தனிக் கார் எடுத்து வைச்சு ஒட்டிக்கொண்டு போற வசதியிருக்க வேணும். அல்லது நடந்து போகக்கூடிய அளவு தூரத்தில்

Page 26
44 / சடப்பொருள் என்றுதான் நினைப்போ
வீடு இருக்கவேணும், இரண்டும் இல்லாட்டி வேலைக்குப் போகப்படாது .'
அவளைவிடக் குறைந்த வயது - அவளைவிடக் குறைந்த சம்பளம் - அந்த டைப்பிஸ்ட் கிளார்க் சத்தியா. சுகந்தரும் சுகந்தங்களையும் பூசிக்கொண்டு, பாங்க் "கிற்கு வருவதைப் பார்க்க, அவளுக்குப் பெரிய அசூயை கிளப்பும். என்ன செய்வது? அப்பாவும், தாத்தாவும் ஊரை ஏமாத்திச் சேர்த்து வைத்த காசு லட்சம் லட்சமாய் இருக்கவேணுமே கார் வாங்க?
ம் . பெருமூச்சு ஒன்று பேரிதாய்க் கிளம்பி வெளிச் சுவாசமாய் முடிவடைவதற் கிடையில் -
* மினிபஸ் " பிரேக்" போட்டதைச் சாட்டாக வைத்துக் கொண்டு பின்னல் நின்று தன் முழு உடலும் அவள் மேல் படும்படி அவளுக்குபேல் சாய்ந்தான் ஒரு "கூலிங் கிளாஸ் ??
அது எதிர்பாராத சாய்வு அல்ல. திட்டமிட்ட சாய்வு என்பதை அவள் இலகுவில் புரிந்துகொண்டாள். ஆனலும் உடனடியாக ஒன்றும் செய்ய முடியாத நிலை. வாயுள் கசந்து எச்சிலை வெளியே எட்டித் துப்பினள். அவன்மீது விழுந்திருக்க வேண்டியது, பாதையோரத்தில் சங்கமமாகியது.
இரண்டாவது முறையாக அவன் அவளது இடுப்புப் பகுதியில் கைபடும்படி நெரித்தபோது, ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் நின்ற அவனது உள்நோக்கம் என்ன வென்று கண்டு பிடிக்க முடியாதிருந்தது அவளால், அவன் காதருகில் குனிந்து மிக மெலிதாகவும், அமைதியாகவும் அவள் சொன்குள்.
'தம்பி, நாங்கள் கலியாணம் கட்டிப் பிள்ளையும் பெத்த ஆக்கள்' பக்கத்தில் வேறு யாருக்கும் கேட்டிருக் கலாம் நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனல் அவனுக்குக் கட்டாயம் கேட்டது என்பது, அவன் இறக்கம், இறக் கம்’ என்று கத்திக் கொண்டு விழி பிதுங்கியபடி பாய்ந்து இறங்கியவேகத்தில் தெரிந்தது.

கோகிலா மகேந்திரன் 145
உண்மையாகவே திருமணம் செய்வதற்கு முன்னுல் கூட, இப்படியானவர்களுக்கு இப்படி அமைதியாகவே சொல்லியிருக்கலாம் என்று இப்போது அவளுக்குத் தோன் றியது. ஆனல் அப்போது அப்படி முடியவில்லையே!
அம்பனை முதல் மாசியப்பிட்டி வரை அவளுக்குப் பக் கத்தில் அமர்ந்திருந்த கிழவி, மாசியப்பிட்டிச் சந்தியில் கடகத்தையும் தூக்கிக்கொண்டு இறங்கியவுடன் பின்னல் அமர்ந்திருந்த ஒரு 'சதுர மூஞ்சி', திடீரெனப் பாய்ந்து வந்து அவளுக்குப் பக்கத்தில் இருந்த போதே அவளுக்குச் சிறிது சந்தேகம் இருந்தது.
" இது ஏதோ கொழுவலுக்குத் தான் ஆள் வந்திருக்கு, "பிக் பொக்கற்’ ஆகவும் இருக்கலாம் என்ற சந்தேகத் தில் அவள் தனது ‘ஹாண்ட்பாக்கை" எடுத்து அவன் இருந்த பக்கத்திற்கு மறுபக்கம் மிக அவதானமாய் வைத் துக் கொண்டாள்.
அவன் தள்ளத் தள்ள, அவளும் தள்ளித் தள்ளி, இனி மேல் தள்ள முடியாத அளவிற்கு ஒதுங்கியிருந்த போது,
அவன் மார்பில் குறுக்காகக் கட்டியிருந்த கையை அவள் பக்கம் நீட்டி, அவள் மார்பில் படும்படி திருப்பிய போது,
அந்த ஒரு கணத்தில் - அவள் தான் ஒரு பெண் என்பது, இதன் விளைவாய் என்ன நடக்கும் என்பது - எதையும் நினைத்துப் பார்க்கா மல் திடீரென எழுந்து, அவனது கன்னத்தில் பளீர் பளிர் என்று திவலை பறக்க அறைந்த நிகழ்ச்சி -
'சனியன். மூதேசி. அம்மாசிப்பீடை."
அப்போது அவளால் நிதானமாக இருக்க முடியவில்லை" இதோ. இப்போது பிதுங்கிக் கொண்டு ஒடுகிருனே! இவ னைப் போலத்தான் அவனும் அன்று அடுத்த தரிப்பில் பாய்ந்து விழுந்து இறங்கிக் கொண்டான். அதன் பின்னர்

Page 27
46/ சடப்பொருள் என்றுதான் நினைப்போ
தான் இவளுக்குச் சல கண்டமாய் வியர்த்துக் கொட்டிற்று. பஸ்ஸில் இருந்த மற்றவர்கள்,
என்ன பிள்ளை? என்ன பிரச்சனை? என்ன நடந்தது? என்று கேட்க, இவள் பதில் ஒன்றும் சொல்லாமல் மெளனக் கண்ணிர் வடித்தாள்.
* 'இதென்ன கேள்வி? ஒரு குமர்ப்பிள்ளை, ஒரு பெடி யனுக்குக் கை நீட்டி அடிக்கிற தெண்டால், என்ன நடந்தது எண்டு கேட்கவேணுமே?"
என்று இவளுக்கு வக்காலத்து வாங்க, இவள் அதற்கும் மெளனமாய் இருந்த நிகழ்ச்சி இன்னும் பசுமையாய் மன தில் நிழலாடுகிறது.
ஒரு நாள் மட்டுமா?
ஒருவனுக்கு ஒரு நாள் ஊசிக்குத்தல் இன்னுெருவனுக்கு இன்னெரு நாள் பிளேட் கீறல் 1
"உன்ரை வறட்டு ருங்கியாலை நீ ஒரு நாளைக்கு எக் கச்சக்கமாய் பிரச்சினைப்படப் போருய்" என்று அம்மா சொல்கிருள்
இப்படி எத்தினை நாள்கள்தான் சமாளிப்பது?
**இவங்களெல்லாம் என்னுேடை சொறியிற துக்கு, நான் வடிவாகத் தகதகவெண்டு சொர்ண விக்கிரகம் மாதிரி இருக்கிறது மாத்திரம் காரணமில்லே நான் நடக்கிற போது பார்த்தால், மலர்ந்த புஷ்பங்கள் இரண்டு தத்துவது போலத் தோன்றியது மட்டும் காரணமில்லை, என்ரை கழுத்திலே ஒரு தாலிக் கொடி இல்லாமல் இருக்கிறதும் ஒரு காரணம் என்று உணர்ந்த நாள்களில் தான், அது வரை வீட்டில் பேசப்பட்டு வந்த திருமணங்களை எல்லாம் தட்டிக் கழித்து வந்தவள். திடீரெனத் திருமணத்திற்குச் சம்மதித்தாள்.

கோகிலா மகேந்திரன் / 47
இன்னும் ஏழு நாள்கள் ஆறு, ஐந்து நாலு, மூன்று, இரண்டு. நாள்கள் வேகமாய்க் கொடிகட்டிப் பறந்தன. இப்பொழுது அவள் கழுத்தில் கொடி ஏறிவிட்டது!
கொடியோடு பஸ்ஸில் ஏறும் போது ஒரு ஆறுதல் "அப்பாடா இனிமேல் இந்தக் குரங்குகள் சேட்டை விடாதுகள்."
உண்மைதான்! அவள் எதிர்பார்த்தபடி சில மாதங்களாய் அவளோடு ஒருவரும் சொறியவில்லை. அவளுக்கு அருகில் ஒரு "சீற்’ வெறுமையாக இருந்தாலும் கூடச் சில சமயங்களில் நின்று கொண்டிருக்கும் சாரங்களும் வேட்டிகளும், காற்சட்டை களும் அதில் அமர விரும்பாதவர்கள் போல நின்று கொண் டிருந்தார்கள்
ஒவ்வொருமாதமும் இந்த மூன்று நாளும் வேலைக்குப் போவது, அது பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட தண் டனை அவளால் நடக்கவே முடியவில்லை! தேகமெல்லாம் ஒரே அலுப்பு 'பாங்க்” இலிருந்து பிரதான "பஸ் நிலை பத்திற்கு வரச் சோம்பல் பட்டுக் கொண்டு அவள் போங்' கிற்கு முன்னுல் இருந்த 'ஹால்ற்றிலே நின்று கொண் டிருந்தாள். வீதியில் ஐன நடமாட்டம் குறைவு தான் இப் போது யார்தான் தேவையில்லாமல் வீதிக்கு வருகிருர்கள்? 'ஹாண்ட்பாக்’கிலிருந்த 'நீடர்ஸ் டைஜஸ்டை எடுத்து வாசித்துக் கொண்டிருந்தாள்.
யாரோ இருவர் சைக்கிளில் வந்தமாதிரி இருந்தது. அவள் கவனிக்கவில்லை.
கழுத்தில் ஏதோ அட்டை ஊர்ந்தது போல. என்ன இது?
அவள் சிந்தனை புத்தகத்தைவிட்டு மீண்டபோது, அந்த வெளுத்த வெள்ளைச் சாரங்கள் இரண்டும் தூரத்தில் பறந்து கொண்டிருந்தன.

Page 28
48 / சடப்பொருள் என்றுதான் நினைப்போ
"ஐயோ என்ரை தாலிக் . தாலிக்கொடி . கள்ளன். கள்ளன். ' அவள் பலமாகக் குழறிக் கொண்டிருந்த போது, நல்ல காலமாக அவ்விடத்தில் வந்த 'பாங்க்” மனேஜரின் கார் அவர்களைப் பிடித்துத் தாலிக்கொடியை மீட்டெடுத்தது. அடுத்த நாள் அவளது கணவரே சொல்லிவிட்டார்; 'நீர் கொடியை வைச்சிட்டு ஒரு மாலையைப் போட்டுக் கொண்டு போமன். பளபளவெண்டு மின்னிற உந்தக் கொடி யாலே உம்மடை உயிருக்கே ஆபத்து'
கொடியினல் உயிருக்கு ஆபத்து என்பது உண்மை தான். ஆனல் கொடியில்லாவிட்டால் சுய கெளரவத்திற்கும் மரியாதைக்கும் ஆபத்து. இதைஎப்படி இவரிடம் சொல்வது? பழைய நிகழ்வுகளின் கனம் இவருக்கு என்ன தெரியும்? நீரில் ஊறிய சாக்குப் போல அவளுக்குள்ளே இதயம் கனத்தது.
இப்போது அவள் மீண்டும் கன்னி போலத் தோற்ற மளிக்கிழுள். மீண்டும் பிரச்சினை.
இன்று அந்தக் கூலிங்கிளாசுடன் ஏற்பட்ட பிரச்சினை யில் கலங்கிய கண்களை மறைந்துக்கொள்ள, அவள் "ஹாண்ட் பாக்’கிலிருந்த பத்திரிகையைத் தூக்கிப் பார்த்துக் கொண் டாள்.
"சும்மா நோஞ மான" எண்டு பத்திரிகையில் ஏதோ எல்லாம் எழுதிருங்கள். இதைப்பற்றி. இந்த வகையான பெண்களின் பயணப் பிரச்சினை பற்றி. பொது வாகனங் களில் பெண்கள் கெளரவமாகப் பயணம் செய்ய முடியா திருக்கும் நிலை பறறி மக்கள் குரல் பகுதிக்கு எழுத வேணும். '
இந்த நினைவுடனே உறங்கிப் போனவள் அடுத்த நாள் வேலைக்குப் புறப்பட்டபோது ஹான்பாக்"கில் ஊசி, பிளேட் ஆகியவற்றுடன் நினைவாக ஒரு காஞ்சோண்டி மரக்கொப் பையும் எடுத்து வைத்துக்கொண்டாள்.
சொறியிறவன் ஒரேயடியாகச் சொறிஞ்சு கொண்டு இருக்கட்டும்!
(காஞ்சோண்டி - நாகஞ்குறி) (மல்லிகை ஜூன் 1982 பெண்ணின் குரல் இல, 7 1984 இல் மறுபிரசுரம்)

ஒரு மேடிையில் இரு துருவங்கள்
உடல் தீணி பெற்றுக் கொள்ளும் காலங்களை விட உள்ளம் உணவு பெற்றுக் கொள்ளும் பொழுதுகள் அதிகம் இனிமையானவை அப்படியான ஒரு மாலைப் பொழுதிலே தான் நாங்சள் அந்த அழகான மண்டபத்தில் கூடியி தற் தோம், எண்ணிப்பார்த்தால், 'பத்துப் பேர்தான் தேறும்" என்ற போதிலும், ஒவ்வொருவரும் இன்னும் பத்துப்பேரின் அறிவின் கூட்டு மொத்தங்கள் என்று சொல்லக்கூடிய புத்தி ஜீவிகள். நான் அமைதியாக இருந்தேன்;
கண்களை மலர்த்தி வைத்துக் கொண்டிருந்த எனது நிலையையும், ஒரு பக்கம் மெதுவாகச் சாய்த்து வைத்துக் கொண்டிருந்த என் தலையையும் பார்த்தாலே, மிக உள் னிப்பாக அந்தச் சொற்போரை நான் தரிசிக்கிறேன் எள் பது எவருக்கும் இலகுவில் புரிந்துவிடும்.
மழை வெளியே மூசி விளாசிக் கொண்டிருந்தது
"கவிதை என்பது உள்ளிருந்து பிறப்பது. உள்ளே ஜனனிக்கும் போதே ஓசையுடனும் சந்தத்துடனும் பிறந்து அதன் பின்பே வெளிப்படுவதாதலின் ஓசையோ சந்தமோ அற்ற வெறும் துண்டு வரிகளை நாம் கவிதை என்று கொள்ள முடியாது . *
*" கவிதை என்பது உணர்வு பூர்வமானது அதற்கு ஓசை முக்கியம் அல்ல. அப்படியே ஒசை முக்கியம் என்று எடுத்துக் கொண்டாலும் கூடப் புதுக் கவிதைகளில் ஓசை

Page 29
50 / ஒரு மேடையில் இருதுருவங்கள்
இல்லை என்று யார் சொன்னது? வெண்பாவும் விருத்தமு மாகக் காச் பூத்த, சீர் பூத்த, பார் பூத்த, என்று நீங்கள் படித்துப் படித்துப் பழகிட் போன ஓசை இல்லாதிருக்கலாம். ஆணுல் நல்ல தரமான பல புதுக் கவிதைகளில் ஏதோ ஒரு வகையில் ஓசை நயம் இருக்கத்தான் செய்கிறது .'
வானத்தின் விட்டத்தைப் பார்த்தபடி எனக்குள் விஞ எழுப்பிக் கொண்டிருந்தேன் நான்.
"படித்துப் படித்துப் பழகிப்போன பழக்க தோசத்தி குல்தான் தாம் ஒன்றைக் கவிதை என்றும், மற்றதைக் கவிதை அல்ல என்றும் சொல்கிருேமென்ருல், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நாம் பரிசோதனை செய்து பாாக்க லாம் பழக்கம் எதற்கும் உட்படாத ஒரு சிறு குழந்தை யைத் தீர்ப்புச் சொல்லப் பயன்படுத்தலாம். யாப்பு விதி களில் அடங்கிய ஒரு சிறு பாடலையும் எந்த விதியிலும் அடங்காத ஒரு புதுக்கவிதையையும் பிள்ளையிடம் கொடுத்து எது நல்ல பாட்டு என்று கேட்டால், நிச்சயமாக எதுகை மோனை அமைந்த பாடலையே பிள்ளை தெரிவு செய்யும் ."
19எதுகை, மோனை அமைந்து விட்டதஞழல் மட்டும் அது பாடல் என்ருே, எதுகை மோனை அமையாததால் மட்டும் அது பாடல் இல்லை என்றே நாம் நிச்சயமாகக் கூறமுடியாது. தான் கொண்ட கருத்தை அழகுறவும், உணர்வு பூர்வமாகவும் சொல்லும் முறையில் எது சிறப் புப் பெறுகிறதோ அது கவிதையாகும். மற்றது அல்ல
*"ممه ف5fTCgt
இலக்கியத் துறையில் நவீனப் போக்குகளை வெகுவாக ஆதரிக்கின்ற புதுமைவாதியான அரவிந்தனுக்கும், மரபுகள் பேணப்பட வேண்டும் என்பதில் மிக அழுத்தமாக இருக் கின்ற பழமை விரும்பியான பண்டிதர் பிலிப் நாயகத்திற் கும் இடையில் மிக உக்கிரமாகவும் ஆக்ரோசத்துடனும் நடைபெற்ற அந்த விவாதத்தை நான் தொடர்ந்து கவ னித்துக் கொண்டிருந்தேன்.

கோகிலா மகேந்திரன் 151
பகுத்தறிவு ஆளுகின்ற இந்த யுத்தில், இலக்கியத்தில் ஆர்வமுள்ள ஒரு சில புத்தி ஜீவிகள் இடையிடை இப்படி யான கலந்துரையாடல்களையும, சந்திப்புக்களையும, விவாத மேடைகளையும் ஒழுங்கு செய்வது எங்கள் தொகுதியில் சில வருடங்களாக இருந்து வரும் வழக்கம். நானும் ஒரு சந்திப்பையும் தவறவிடாமல் எப்படியோ வந்து சேர்ந்து கொள்வேன்.
ஆரம்பத்தில். எனக்கு இவை புதிதாக இருந்த கால கட்டத்தில், நானுந்தான் இவற்றைப்பற்றி வெகு உக்கிர மாகச் சிந்தித்துத் தலையைப் போட்டுப் பிய்த்துக் கொள் வேன். எது இலக்கியம்? எது நீண்டகாலம் நிலைத்து நிற் கும்? எப்படியான வாசகனை எதிர்பார்த்து நாம் ஆக்க இலக் கியம் படைக்க வேண்டும்? என்பது போன்ற கேள்விக ளுக்கு மிக "சீரியஸ் ஆக விடை தேடிக்கொண்டிருப்பேன். ஆளுல் இப்போது இப்போதுதான் விடை தெளிவாகத் தெரிகிறதே!
இப்படியானதொரு கூட்டத்தில், இப்படியானதொரு கேள்விக் கொத்திற்கு விடை தேடிக்கொண்டிருந்த போது தான், ஒரு நாள் மிகப்பிரியமான இளம் எழுத்தாளரி அரவிந்தனை நான் முதலில் சந்தித்தேன்.
"எத்தினை படைப்புக்களை நாங்கள் பிரசவிச்சாலும் அதுகளைத் தொகுத்து ஒரு புத்தகம் வெளியிட முடியாத எங்கடை நிலைதான் மிச்சம் பரிதாபகரமானது " என்று புத்தக வெளியீடு பற்றி நான் கொண்டிருந்த அபிப் பிராயத்தைக் கூறிய போது,
*அதுக்குத்தானே நான் ஒரு நல்ல திட்டத்தோடை வந்திருக்கிறன்' என்று அவர் கூறிய பதில் என்னை மேலும் அதைப்பற்றி உசாவத்துTண்டியது.
"நாங்கள் பத்து எழுத்தாளர் சேர்ந்து ஆளுக்கு ஜத் நூறு ரூபாய்ப்படி போட்டு ஒரு தொகுதி அடிக்கப்போறம்,

Page 30
52 / ஒரு மேடையில் இரு துருவங்கள்
பிறகு புத்தகம் வித்து, அந்தக் காசைத் திருப்பிக் குடுட் பம் அல்லது அறுநூறு ரூபா பெறுமதியான புத்தகங்களைக் குடுப்பம். அந்தத் த எழுத்தாளர் தங்கடை காசை எடுத் துக் கொள்ளலாம் எப்பிடி என்ரை ஐடியா ?
ஒரு கூட்டுறவு மூயற்சியாக அமைந்த அந்த எண்ணக் எனக்கும் சிறப்பானதாகவே பட்டது. அடுத்த நாளே ஐந் நூறு ரூபா கொடுத்து நானும் அந்தக் கூட்டிலே சேர்ந்து கொண்டேன்.
நூல் வெளிவந்தது. நாட்டின் பல இடங்களிலும் வெளியீட்டு விழாக்கள் நடந்தன. பலரது பாராட்டுக் ளை அது பெற்றது. முதற் பதிப்பின் புத்தகங்கள் எல்லாம் விற்பனையாகி முடித்தது. அடுத்த பதிப்பும் வெளியாகியது. வருடங்கள் பல நழுவி ஓடிவிட்டன. நான் கொடுத்த பணம் திரும்பவில்லை என்பது மாத்திரமல்ல அடிக்கப்பட்ட புத்தகப் பிரதிகளில் ஒன்றுகூட எனக்குத் தரப்படவில்லை என்பதுதான் மிக அதிசயமானது!
அடுத்து வந்த பல இலக்கியச் சந்திப்புகளில் அரவிந்தனைக் மாணவில்லை. எனது கடிதங்கள் பல பதிலற்றவையாகின!
சரி, இவன் கெட்டித்தனமாத்தான் என்னை ஏமாத்திப் போட்டான்" என்று நான் முடிவு செய்து, அதைப்பற்றி மறந்தும்போய் . இன்றுதான் மீண்டும் சந்திக்கிறேன்.
இதோ மிக ஆவேசமாய் புதுக்கவிதைதான் சிறந்த இலக்கியமாகும் என்று வாதிடுகிருர்.
மற்றவர் . அந்தப் பழமை விரும்பியான பண்டிதர் பிலிப்நாயகம். அவரும் அடிக்கடி இந்தக் கலந்துரையாடல் களுக்கு வருபவர்தான். ஆனலும் கவிஞர் கிறிஸ்தோபரின் செத்தவீடு நடக்கும்வரையில் நான் அவரைப்பற்றி அதிகம் அறிந்திருக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
சிறந்த கவிஞரும், எங்கள் எல்லோருக்கும் நண்பரு மாகிய கவிஞர் கிறிஸ்தோபர் இளவயதில் திடீரென்று

கோகிலா மகேந்திரன் / 53
மாரடைப்பினுல் காலமான செய்தி எங்கள் எல்லோரையும் பெ#மளவில் பாதிக்கத்தான் செய்தது. பண்டிதர் பிலிப் நாயக மம் கவிஞர் கிறிஸ்தோபருமோ ஆத்மார்த்தமான நண்பர்கள்.
** என்ரை மணிசி நான் தன்னுேடை கதைச்சுப் பொழுது போகிறநேரத்தைவிட, உன்னுேடை கணநேரம் கதைக்கிறன், சுடித்திரியிறன் எண்டு தொண தொணக கிருளப்பா. *
என்று கவிஞர் பண்டிதரிடம் அடிக்கடி கூறிக்கொள்வார். அதனுல் போலும் செத்தவீட்டிற்குட பண்டிதர் வந்தவுடன் கவிஞரின் மனைவி தலைமயிரைப் பிய்த்துககொண்டு "ஒ" வென்று கதறி அழுதாள்.
** என்ரை பொம்பிளைப் பிள்ளையஸ் இரண்டுச்கும் ஒரு சதமும் சேத்து வைக்காமல் போயிட்ட rரே கவிதை கவிதையா எழுதி வைச்சிட்டுப் போயிருக்கிருர், நான் அதுகளையா எடுத்து இந்தப் பிள்ளையளைக் கரைசேக் கிறது . ? " என்று அவள் குழறி அழுததில் பண்டிதரும் உணர்ச்சிவசப்பட்டுப்போஞர்.
** பிள்ஃா தங்கச்சி! அவன் கிறிஸ்தோபர் என்னட்டை எவ்வளவு அன்பாய் இருந்தான். நான் என்ரை மன முட்டுக்களை அவனிட்டைத்தான் தீர்த்துக் கொள்ளிறனுன், இனி எண்டாலும் உன்ரை பிள்ளையஸ் அநாதையள் எண்டு நினைச்சுக் கவலைப்படாதை மேனை நான் அதுகளுககுத் தகப்பன்போலை இருந்து எல்லாம் நடத்தி வைப்பன் "
என்று எங்கள் முன்னிலையில் பண்டிதர் அவளைத் தேற்றிய போது, அவை வெறும் மன ஆறுதலுக்காக, எல்லோரும் சொல்கிற உணர்வு பூர்வமான வசனங்கள் என்றுதான் நான் நினைத்தேன். ஆணுல் .
பண்டிதர் எஞ்சினியராக இருக்கின்ற தனது மூத்த மகனுக்கும், கணக்காளராக இருக்கின்ற இரண்டாவது மகனுக்கும் இந்த இரண்டு பெண்களையும் திருமணம்செய்து

Page 31
54 / ஒரு மேடையில் இரு துகுவங்கள்
கொடுத்திருக்கிருர் என்று சென்ற வாரம் அறித்தபோது, நான் ஒரு சில நிமிடங்கள் மூச்சுவிடவே மறந்துவிட்டேன். இது "ஆராய்ச்சி மணிகள் அறுபட்ட மண்" என்று அடிக்கடி விரக்தியுடன் நான் நினைத்துக்கொள்வது தவரு ? பண்டித ரைப் போல இன்னும் மனிதர்கள் .
இப்போது இந்த மேடையில் அரவிந்தனும் பண்டிதர் பிலிப்நாயகமும் மோதிக்கொள்கிருர்கள்,
* எந்த இலக்கியம் நிலைத்திருக்கும் எது நிலைக்காது என்பது மக்களைப் பொறுத்தது. மக்களால் விரும்பப்படும் இலக்கியம், நீண்டகாலம் நிலைத்திருக்கும். "
என்று கூட்டத்தில் ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருந்த போது, நான் திடீரென்று எழுந்தேன்;
உள்ளத்தில் உண்மை ஒளி கொண்டு தான் செய்யக் கூடியதைச் சொல்பவன், சொல்வதைச் செய்பவன் எது சொன்னலும், எது எழுதினுலும் அது இலக்கியம். எழுதுவது ஒன்முகவும் செய்வது ஒன்ருகவும் கொண்டு மன இருளுடன் உலாவுபவன் எதை எழுதினுலும் அது எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் அது இலக்கியமல்ல "
GT6ãy Gapdir.
என் குரலில் இவ்வளவு வலிமை எப்படி வந்தது என்று புரியாமல், மெளவிக்கும் சுவர்களுக்கு மத்தியில், அத்து * அவை " என்னைப் பார்த்து விழிக்கிறது.
(1984 ஆவணி தொண்டன் சஞ்சிகையில் பிரசுரமானது. )

மனிதாபிமானம் மறுபரிசீலனைக்கு .
மெல்ல இசைக்கும் கால் சங்கிலியும், காதில் இரக சியம் பேசும் ஜிமிக்கியுமாக அழகான பெண்தான் அவள்!
செழுமையான அழகிய கதுப்புக் கன்னங்களில் நீர்வடிய அவன் அந்த அறைக்குள் வந்தபோது, விச்ராந்தியாகக் கால் நீட்டிக் கொண்டு கட்டிலில் அமர்ந்து தேநீரை உறிஞ் சிக் கொண்டிருத்தேன். அருகில் இருந்த ஒரு ஆசனத்தில், திருமதி இராமேஸ்வரன் ஒய்வாக அமர்ந்திருந்தார்.
""காலமை தந்தி வந்த உடனையே நான் போய்ப் பிரின்சிப்பவிட்டைச் சொன்னணுன், அவ விடமாட்டன் எண்டு சொல்லிப்போட்டா இப்ப அண்ணை வந்திருக்கிருர் கூட்டிக்கொண்டு போக! அம்மாக்குச் சரியான கடுமை turrh...''
உடைகளை நறுவிசாகத் துவைத்து வெளிக் கொடி யில் காயப்போட்டபின் தனது அறைக்குள் நுழைந்த பெண் கள் விடுதிப் பொறுப்பாளரிடம் அவள் பெரிதாக விசும்பிக் கொண்டே இப்படிச் சொன்ன போது,
"அதுக்கு நான் என்ன செய்கிறது பிள்ளை சில பேர் பொய் சொல்லிக்கொண்டு வெளிக்கிட்டுப் போறதால் அவ விடமாட்டன் எண்டு சொல்லுரு. நீர் ஆகும் உமக்குப் படிப்பிக்கிற ஒரு ரீச்சருக்குச் சொல்லி அவவோடை போய்க் கேட்திப் பாருமன்.'"

Page 32
56 / மனிதாபிமானம் மறுபரிசீலனைக்கு
என்று சொல்லி அவளை அப்பால் அனுப்பிய பொறுப் பாளர் எங்களைப் பார்த்தார். நானும் திருமதி இராமேஸ் வரனும், "என்ன விஷயம்" என்பது போல விழிக்க அவர் சொன்னர்.
"காைைம பேச்சுப் போட்டியள் நடந்து கொண்டி ருக்கேக்கைதான் தந்தி வந்தது. நான் தான் உடைச்சு வாசிச்சஞன். இந்தப் பிள்ளையின்ரை "கேஸ்" பெரும்பாலும் உண்மையாயிருக்கலாம். அப்ப தொடக்கம் அழுது கொண்டு திரியுது, பாவமாக் கிடக்கு எண்டாலும நாங்கள ஒண்டும் செய்யேலாது 'பிரின்சிப்பல்" சரியான “ஸ்ரிகற்". இலேசிலை போக விடமாட்டா "
பிரபலமான அந்தப் பெண்கள் கல்லூரியில் இல்லப் பேச்சுப் போட்டிச்கு நடுவர்களாகச் சென்றிருந்த எங்க ளுக்கு இப்போது விடயம் மெதுவாகப் புரித்தது. போட்டி கள் யாவும் முடிந்த பின் விடுதிப பொறுப்பாளர் அறையில் தேநீர் அருந்தி ஒய்வெடுத்துக் கொண்டபோது தான் இந்த நிகழ்வை நாங்கள் தரிசிக்க நேர்ந்தது.
"என்னண்டாலும் தாய்க்குச் சு சமில்லை எண்டு தந்தி வந்திருக்கேக்கை கட்டாயம் போக விட வேணும். பாவம் இந்தப் பிள்னை போக முந்தி அவவுக்கு ஏதும் நடத் திட்டா. ”
என்று நான் கருணைபொங்கும் எனது கருத்தைத் தெரி வித்து உரையாடலைத் தொடங்க,
* ஒம் இந்தப் பிள்ளையின்ரை தாய் தகப்பன் இருக்கிற கடலூர் இஞ்சையிருந்து இருநூறு மைல் இருக்கும். ### போய்ச் சேர ஒரு நாள் செல்லும் பாவம் "
என்று விடுதிப் பொறுப்பாளர் தொடர,
'இந்தப் பொம்பிளேபள் அதிபராய் இருந்தால் எங்கை யும் இப்பிடித்தான். அவைக்கு எல்லாத்திலயும் சந்தேகம் ஒரு விஷயத்திலையும் விட்டுக்குடுக்க tô"t: tạ6ữth, đụormủ

கோகிலா மகேந்திரன்/57
பிடி எண்டு நிப்பினம் ' என்று அதிபரின் நிஷ்டூரத் தன்மை யைத் தாக்கி மூடித்தார் திருமதி இராமேஸ்வரன்.
சில நிமிடங்கள் அறையில் பூரண மெளனம் நிலவியது. ஆனுலும் ஒருவரும் அந்தச் சிந்தனையில் இருந்து விடு படவில்லை என்பதை,
* ஒரு பிள்ளை இரண்டு பிள்ளை பிழை செய் பிற தாலை எல்லாரும் அதிண்ரை பலனை அநுபவிக்க வேண்டி இருக்கு " என்று அந்த மெளன நிமிடங்களின் முடிவில் விடுதிப் பொறுப்பாளர் கூரியது உறுதிப்படுத்தியது.
**இதுதான் நான் அதிகமா ஒரு பொம்பிளேயின்ரை அதிகாரம் உள்ள கல்லூரிகளில படிப்பிக்கவே விரும்பி றேல்லை. அவைக்கு ஆக்களைப் புரிஞ்சுகொள்ளத் தெரியாது. மனிதாபிமானமும் அவ்வளவா இருக்கிறேல்லை. '
அந்த மாணவியின் அழகிய கவனங்களைக் கறைப்படுத்தி யிருந்த கண்ணிர்த்துளிகள் என்னையுந்தான் உணர்ச்சிவசப் படுத்தியிருந்தன. பொதுவில் அந்த அதிபரின் செயல் அபத்த மfண தென்ற முடிவுக்கே எல்லாரும் ஏகமனதாக வந் திருந்தோம்.
எங்களது கடுமையான காரசாரமான விமர்சனத்துக்குள் அகப்பட்டு அந்தக் கல்லூரியின் பெண் அதிபர், படாதபாடு பட்டுக்கொண்டிருக்கையில், அந்த மாணவி வேகமாய்த் திரும்பி வந்தார்.
1 மிஸ், பிரின்சிப்பல் என்னைப் போகச் சொல்லிட்டர் மிஸ் கடவுள் என்னைக் கைவிடேல்லை. அம்மாக்கு ஏதும் நடக்க முந்தி நான் போயிடுவன் மிஸ் , '
நம்பிக்கைகள் நைந்து போகாமல் அவள் பேசியமுறை எங்களுக்குள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
நான் நேரத்தைப் பார்த்துக்கொண்டேன். மாலை ஐந்து மணிதான்.
"நீ கெதியாப் போன, இண்டைக்கு மெயிலைப் பிடிச்சிடலாம். அல்லது போறது கஷ்டமாயிருக்கும்’

Page 33
58 / மனிதாபிமானம் மறுபரிசீலனைக்கு
எனக்கு முன்பின் தெரியாத மாணவியானலும், அவளது தோற்றத்தில் தெரிந்த பரிசா பப் என்னை அவளிடம் அன்பு கொள்ளச் செய்து , கனிந்து பேச வைத்தது.
** அங்கை போய் நிலமையை அறிஞ்சு, எங்களுக்கும் அறிவியும் என்ன ? ?"
என்று விடுதிப் பொறுப்பாளர் கூறிக்கொண்டிருக்கையில் * பிள்ளை நீர் கதைச்சுக்கொண்டு நிண்டு மினச் செட் டால், மெயில் போயிடும். கெதியாப் போமன். '
என்று திருப தி இராமேஸ்வரன் துரிதப்படுத்திஞர். எங்கள் அனைவரதம் வார்த்தைகள் அவளுக்கு இதமான ஒத்தடங்கள் ஆகியிருக்கவேண்டும். அவள் போய்விட்டாள் !
தாட்டின் கல்லூரிசள் பலவற்றில் காணப்படும் நிர்வாகப் பிரச்சினைகளை நாங்கள் தொடர்ந்து அலசிக்கொண்டே தேநீர் அருந்தி மூடித்தோம்.
'இத்தனை பிள்ளேயஸ் படிக்கிற இவ்வளவு பெரிய கல்லூரியிலே கொஞ்சம் "ஸ்ரிக்ற் " ஆக இல்லாவிட்டால் நடத்தவுந்தான் ஏலாது. பிள்ளை பள் பேய்ச்காட்டப் பார்க்கும். '
அந்த மாணவியைப் போக அநுமதித்து விட்டார் என்ப தாலோ என்னவோ இப்போது நாங்கள் அதிபரிலும் அவ் வளவு பிழை இல்லை என்பதுபோல் கதைத்துக்கொண்டோம்,
மாலை மக்கி இருள் கவியத் தொடங்கும் நேரத்தில், நானும் திருமதி இராமேஸ்வரனு சல்லுரரியை விட்டுப் புறப்பட்டு வீதிக்கு வந்தோம். நகரில் இருந்து நாலு கிலோ மீற்றர்களுச்கு அப்பால் உள்ள அந்தக் கல்லூரியில் இருந்து நசருக்கு வருவதற்கிாக, அங்கே டநப்டட ஆயத்தமாய் நிறுத்தி வைக்சட்பட்டிருந்த ஒரு "மினிபஸ் ஸில் நாங்கள் மிகவும் அவசரமாய் ஏறிக்கொண்டோம்.
முன்பக்கம் இருந்த ஒரு இருக்கையைத் திருமதி இராமேஸ் வரனுக்குக் காட்டிவிட்டு நான் பின்பக்கம் சென்றேன். ஒன்றை ஒன்று எதிர் எதிராகப் பார்த்தபடி இருந்த இரண்டு இருக்சைகளில் ஒன்றில் எனச்கு ஒட்டிக்கொள்ள ஒரு சிறிய இடம் கிடைத்தது.

சோ கிலா மகேந்திரன் / 59
"அரும்பொட்டிலை இருக்கிறியள் கவனம் விழுந்தி டா தேங்கோ " என்று திருமதி இராமேஸ்வரன் சொல்வதைக் கவனித்துக்கொண்டே நான் நிமிர்ந்தபோது, எனக்கு முன்னல் இருந்த இருக்சையில் "அவள் " இருந்தாள். முத்துப் பல்வரிசை தெரிய, அந்த அழகிய கிறுபடக் கன்னங்சளில் குழிவிழ என்னைப் பார்த்துச் சிரித்தாள். நானும் விகல்ப மில்லாமல் சிரித்துவிட்டு, அவளுக்கு அருகில் பார்த்தேன். அருகில் இருந்த அவனைப் பார்த்து
" இதுதானே உம்முடைய அண்ணு ?" என்று சேட்க நினைத்தேன். ஆனல் ஏதோ ஒன்று அந்தக் கேள்வியைக் கேட்கவிடாமல் தடுக் சக் கேள்வி தொண்டைக் குழியில் அடைத்துக்கொண்டு நின்றது. திருமதி இராமேஸ் வரனை நிமிர்ந்து பார்த்தேன். அவரும் இவர்களையே கவனிக் கிருர் என்று தெரிந்துகொண்டேன். அவனையும் அவளை யும் அப்படிப் பார்த்தபோது எனக்குச் " சுருக் கிெல் றது போலவே அவருக்கும் இருந்திருக்கவேண்டும்.
"நீங்க பெயிலுக்குத் தானே போறிங்க ? அப்ப வழியிலை ஸ்ரேசனடியிலை இறங்சலாம். என்ன?
ஏதோ கேட்க நினைத்த நான் வேறு ஏதோ சேட்டு வைத்தேன்.
"இப்ப நேரம் ஐந்தனர தானே 1 மெயிலைப் பிடிச்சிட லாம். பயப்பிடத் தேவையில்லை ".
முன்னுல் இருந்த திருமதி இராமேஸ்வரன் மிகுந்த அக்கறையுடன் கூறினர். ஆஞல் அதற்கு அவள் சொன்ன பதில் எங்கள் இரு வரையும் ஒருங்கே துணுக்கு ற வைத்தது. இல்லை. நாங்கள் இப்ப போகேல்லை. இப்ப இரவிலே பயணம் செய்யிறது சரியான பயம் எண் டு அண்ணையும் சொல்ருர், அதோடை எனக்கு ரெயின் பயணம் ஒத்துக் கொள் றதும் இல்லை. நாங்கள் இங்ல்ை தெரிஞ்ச ஒரு வீட்டிலே இரவு தங்கிவிட்டு விடிய பஸ்ஸிலைதான் போப்போறம் ’ அவள் வெகு இயல்பாகச் சொன் ஞள். அவசரமாகப் டோய் தாயின் முகத்தைப் பார்த்துவிடவேண்டும் என்ற துடிப்பு இப்போது எங்கே போயிற்று? திடீரென்று இந்த சாவகாசத் தன்மை எப்படி வந்தது இவளிடம் ?

Page 34
60 / மனிதாபிமானம் மறுபரிசீலனைக்கு
அப்படியானுல் .. ? *" விடியப் போறதெண்டால் இரவு ஹொஸ்டல்லை படுத்திட்டு விடிய வெளிக்கிட்டிருக்கலாமே ?*
இதுவும் நான் கேட்க நினைத்தும் கேட்காத கேள்விகளில் ஒன்று.
* மினிபஸ் " நகரத்தின் புகையிரத நிலையத்தைத் தாண்டிச் சென்றுகொண்டிருந்தது. அவர்கள் இறங்கவில்லை. காதுகளுக்கருகில் மந்திரம் ஓதுவது போல் இருவரும் ஏதோ முணுமுணுத்துக் கொண்டனர். கையில் இருந்த புத்தகத் தைப் பிரித்து நான் வாசிப்பது போலப் பாவனை செய்து கொண்டேன். ஆனலும் என் அறிவுக்குத் தெரிந்த அளவு இேங்கிதம்' என் கண்களுக்குத் தெரியாமல் போனதால், அவை அடிக்கடி புத்தகத்தை விட்டு விலகி முன்ஞல் பார்த் துக் கொண்டன.
இப்போது அவன் அவளது சேலைத் தலைப்பை எடுத்துத் தன் கைவிரல்களுக்கிடையில் பிசைந்து கொண்டிருந்தான் * மினி பஸ் ஸில் ஒலித்துக் கொண்டிருந்த சினிமாப் பாடல் ஒன்று அபஸ்வரமாக எனக்குக் கேட்டது.
நகரின் மத்தியில் பிரதான சந்தைக்கருகில் வத்து மினி பஸ் நிறுத்தப்பட்ட போது, அவர்கள் இருவரும் இறங்கி எங்களுக்கு "டாட்டா" காட்டிவிட்டுத் தெற்குப் புறமாய்ச் சென்றனர். அவர்களின் கைகளில் இருந்த தலையணைகள் அவர்களது நடைக்கேற்ற தாளத்துடன் அசைந்து கொண் டிருந்தன. இருளில் சிறு பொட்டுக்களாக அவர்கள் சென்று மறையும் வரை அவர்களையே பார்த்துக் கொண்டு நின்ற நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டோம். "ஒரு அதிபரின் அப்பழுக்கற்ற மனிதாபிமானம் இப் படியா பயன்படுத்தப்பட வேண்டும்?'
**இந்த வருங்கால நாயகர்கள் எங்கே போகிறர்கள்??? என்பது போன்ற விடை காணப்படாத பல கேள்வி கள் அந்தச் சிரிப்பில் மறைந்து நின்றன.
என் மனதை ஏதோ ஒன்று ஆழமாகக் குடைய நான் நிதானமாய் தபாற் கந்தோரின் தொலைபேசியை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்,
(19-08-84) ஈழமுரசில் பிரசுரமானது)

உதயத்துக்கு முன்.
சிதம்பரம் போகாத குறைதான் இந்தச் சிதம்பரத் தில் வந்து போக்கிக் கொண்டது என்று நினைத்தவாறே காங்கேயன் துறை மணலில் காலடி வைத்தேன். அறு சுவை உணவும், தேவையான வசதிகளும். சிதம்பரம கப்பலின் இனிமையான நினைவுகள் தேய்வதற்கிடையில் தாய் மண் காலில் தட்டுப்பட்ட சிலிர்ப்பு
** ஆர் நிக்னச்சது. இஞ்சை உயிரோடை, வந்து சேருவம் எண்டு. "காம்பு’க்குள்ளை விட்டு ஒரேயடியா ச் சுட்டுத் தள்ளப் போருங்கள் ஈண்டும் கதையள் அடிபட்ட தெல்லே...”*
எல்லோர் மனதிலும் இப்படியான சிந்த%னகள் ஓடி யிருக்க வேண்டும். அத ல்ை தான் ஒரு வரும் ஒருவரோடும் கதைத்துக் கொள்ளவில்லை.
இங்கேயும், சிதம்பரம் கப்பலேத் தோற்கடிப்பது போல. பாடசாலைகளின் சாரணப் படையினரும், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் படையினரும் தொண்டர் கிளும் .
"சும்மா சொல்லப் பிடாது. அன்பான வரவேற்புத் தான்." வடமராட்சி வயிர முத் தரைத் திரும்பிப் பார்த் தேன். அவருக்கு என்னைத் தெரியவில்லை! ஏனக்கும் அவ ரைத் தெரியவில்லை!
காரணம் wேறு ஒன்றுமல்ல . 1 இருவர் கண்களிலும் நீர்த் திரை

Page 35
62 ! உதயத்துக்கு முன்
எழுபத்தி யேழிலையும் இப்பிடித்தான் வந்து இறங் இ ைநாங்கள் என்ன தம்பி.”
அவருக்குப் பழைய நினவு குமிழியிடுகிறது போலும் " *gair ஐம்பத்தெட்டிலேயும் வந்து இறங்கின நாங்கள் தானே. எனக்கு இது மூன் டாம்முறை...”*
பக்கத்தில் நரைத்த தலைமயிர்க்காரர் ஒருவர் தனது பழையகால ஆங்கிலத்தில் "ஐம்பத்தெட்டையும்" நினைவுக்குக் கொண்டு வருகிருர்.
"அப்ப. ஒருபடி யாழ்ப்பாணம் வந்தாச்சு. இனி என்ன யோசினை அண்ணை.?*
அகதிகளுக்கான விசேட பஸ்ஸில் ஏற ஆயத்தமாகின்ற வயிரமுத்தரைப் பார்த்து நான் கேட்கிறேன்.
கொழும்பில் வயிரமுத்தருடன் பதினைந்து வருடங்கள் அந்நியோன்யமாகப் பழகிய தில் நான் அவரை *அண்னை என்றும் என்னைத் 'தம்பி" என்றும் அழைப்பது வழக்க மாகி விட்டதே தவிர எங்களுக்குள் வேறு இரத்தத் தொடர்புகள் இல்லை.
அந்தக் கேள்விக்கு அவர் பதில் சொல்ல முதல் அதே கேள்விக்கு அவர் 77 இல் சொன்ன பதில் இப் போதும் என் செவிப்பறை மென்சவ்வைத் தெளிவாகத் தாண்டுவது போல ஒரு உணர்வு
அப்போதும் இப்படித்தான். ! காங்கேசன் துறையில் இறங்கி வீட்டிற்குச் செல்ல பஸ்ஸிக்குக் காத்திருந்த போதுதான் அவரிடம் கேட்டேன்?
* அண்ணை, இனி என்ன யோசினை? ??
இதென்ன கேள்வி தம்பி. ஒரு இரண்டு கிழமை யாழ்ப்பாணத்திலை சுத்திப் போட்டு. தெரிஞ்சாக் க%ளச் சொந்தக் காறரைப் பார்த்துக் கதைச்சிட்டுத் திரும்பி வண்டி ஏறிறது தான்."
அன்று இந்தப் பதிலால் நான் துணுக்குற்று அவரைப் பார்த்தேன்.

கோகிலா மகேந்திரன்/63
* உங்கடை கடை முளாசி முளாசி எரிஞ்சதை நான் ஒபீஸ் டொப் புளோரிலே நின்டு பார்த்து விறைச் போய் நிண்டிட்டன். •[$ଧିଥsଇଁt ଘt ன் ைவலு அமைதியாத் திரும்பிப் போறது எண்டு சொல்லுறியள்."
மிகச் சிறுவயதில் ஒரு தேத் தண்ணிக் கடைப் பெடிய னய் கொழும்புக்கு வந்து, இரவு பகல் நித் திரையின் மாடு போல் உழைத்த பணத்தை எறும்பு போலச் சிறு கச் சிறுகச் சேர்த்து ஒரு சிறிய சாப்பாட்டுக் கடைை விலைக்கு வாங்கி, இறுதியில் ஒரு பெரிய சைவ ஒட் ல் முதலாளியாகவே மாறி. இன்று கொழும்பிலே சொந்த வீடும் கடையுமாக மிக வசதியாக வாழும் அவர் கதை அவரது ஒட்டலின் தோசையைப் போலவே எனக்குப் புளித்துப் போன ஒன்று. எத்தனை முறை மென்று மென்று தின்றிருக்கிறேன்!
'தம்பி" என்று அழைக்கப்படும் இரத்தத் தொடர் பற்ற உறவினனகி, அவரது வீட்டிற்குப் பல முறை சென்று, அந்தக் குளிரூட்டப்பட்ட அறைகளையும், és Tij ருடிகளையும், பெரிய அளவிலான கலர் டி. வி. குளிர் சாதனப் பெட்டி ஆகியவற்றையும் கண்டு வியந்து, வாயூறி, "நாம் எப்போதாவது வாழ் நாளில் இப்படி வாழ்வோமா? என்று ஏங்கியிருக்கிறேன் பலமுறை.
அவர் சொன்னர் மீண்டும் அமைதியாக என்ரை மனிசிக்கும் பிள்ளையஞக்கும் யாழ்ப்பாணக் காத்தே ஒத்து வராது தம்பி. இங்கத்தைக் காத்துக்கு அவைக்கு வருத் தம் வந்திடும், இஞ்சை எங்கடை அப்பு வீட்டுக் கிணறு சும்மா மகாஞ்ச நஞ்சமல்ல முப்பத்தைஞ்சடி ஐ மு ம். அதிலை அப்பு தண்ணி அள்ளிறதை இவை விசித்திரமாப் பாத்துக் கொண்டு நிற்பினம். அதைக் குனிஞ்சு பாக்கவே பயமாயிருக்குமாம். எப்பிடி இதிலை தண்ணி அள்ளிற தெண்டு இளைய மகன் விசித்திரமாக் கேட்பான்."

Page 36
4ே/உதயத்துக்கு முன்.
இனி இஞ்சத்தை ஒழுங்கையளும் கிடுகுவேலியளும். மழை காலம் வந்தா ஒரே அரியண்டம். வீட்டுக் கு வெளிலை இறங்கேலாது. அங்கையெண்டா என்ன மாதிரி காலிலே மண் படாமல் திரியலாம்.
பின்னூல் நின்று கொண்டு கூறிய நாகமுத்தர் மரை விக்கும் யாழ்ப்பாணம் பிடிக்கவில்லை. ஆனலும் யாழ்ப் பாணத் தமிழ் மட்டும் இவர்களை விட்டு விடாமல் ஒட் டிக் கொண்டிருப்பதை நினைக்க எனக்கு இலேசாக முறு
என்ன அங்கிள். உங்கடை சப்னவிலை கேள்வி சைக்சிள் பண்ணினல் பகிடி பண்ணுவின மாம். ஜீன்ஸ் பெல்ஸ் போட்டா ஒரு மாதிரிப் பாப்பினமாம். இரவி2 நைற் கிளாஸ் டியூசனுக்கு போயிட்டு லேட்டா வீட்டை வந்தா முணுமுணு எண்டு கதைப்பின மாம். இங்  ைக எப்படிப் படிக்கிறது? என்னலை எண்டா ஏாை. தான் வாற வீக் கலம்புக்குப் போயிடுவன்.
ஓ. எல் எடுக்கப் போகும் மூத்த மகளின் பிரலாபத் தில் கொழும்புத் தமிழ் கொஞ்சி விளையாடியது என் னவோ உண்மை தான்.
இங்கை ஒரு பிரெண்ட் வீட்டுக்குப் போறதெண்டா ஆம் பஸ்ஸஅக்கு ஒரு மணித்தியாலம் தின்று தூங்க வேணும், அங்கை என்ருல் நினேச்ச உடனை போய் வந்தி 4- ாைம். இனி இங்கை ஒரு என்ரர்ரெயின் மென்ற்சும் இல்லை.
இது மகன். குடும்பம் முழுவதும் ஒரே குரல்! எனக்கு ஒரு பலத்த சநதேகமே ஏற்பட்டு விட்டது காடையர்களினுல் இவர்களின் கடை எரிக்கப்பட் டதா இல்லையா?
* அப்ப. கடை என்ன மாதிரி. நடத் த ப் போlங்கள்? . "" அவர்களிடம் காணப்படாத தடுமாற் றம் என்னிடந்தான் காணப்பட்டது.

கோகிலா மகேந்திரன் /65
"அது சின்ன வேலை தம்பி. அங்கை உள்ளுக்கு ஒன்டும் கன சாமான் இல்லை. எல்லாம் மூட்டை மூட் டையா நான் அகத்தி வீட்டிலை வைச்சிட்டன் வெறும் சட்டிடந்தான் எரிஞ்சது. . அது . ஒரு கிழமையிலை எல்லாம் சரிப் பண்ணிப் போடுவன் நான். ep,
அவர்கள் சொன்னது போலவே இரண்டு வாரத்தில் கொழும்பு திரும்பி விட்டார்கள். நான் இழுத்து இழுத்து - Y as வேலையையும் விட முடியாத நிர்பபந்தத்தில் தை மாதம் ஒரு மாதிரிக் கொழும்பு போய்ச் சேர்ந்தேன்.
வயிரமுத்தர் கடும்பம் ஏற்னெவே கொழும்பு திரும் பிக் கடையையும் சீர்ப்படுத்தியிருந்தது எனக்கு நல்ல தா ம்ெ போய் விட்டது. இல்லாவிட்டால். என் சாப் பாடு. . 2
1983இல் யூலை மாதம் 25 ம் திகதி திங்கள் கஜ நான் "ஓபிசு" க்குப் போய்ச் சேர்ந்த பின்னர் தான் எனக் குப் பிரச்சனையே தெரிய வந்தது.
ஒபிஸ்? மேல் மாடியில் நின்று பார்த்தால், கீழே வீதியில் அகப்பட்டவன் எல்லாம் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தான்.
"பறைத் தெ மிலோ. 2-tbul... Foib Sears?” அலுவலகத்தை விட்டு நகர முடியாத நிலையில் நானும் என்னைப் போல் அதற்குள் அகப்பட்டுக் கொண்ட வேறு இருபது ஊழியர்களும் இரவும் அங்கேயே தங்க வேண்டி யதாயிற்று.
பயமும் பதட்டமும் பதகளிப்புமாய். மிக நீண்டு G3F68 Ano Sjö 25 Araúdáv.........
அநுமான் கொழுத்திய இலங்கை எப்படி இருந்திருக் கும். கண்ணகி கொழுத்திய மதுரை எப்படி இருந்திருக் கும் என்பதை எல்லாம் கற்பனையில் கண்டு படித்ததை இப்போது நிதரிசனமாய்ப் பார்க்க நேர்ந்ததால் நித்திரை

Page 37
66/ உதயத்துக்கு முன் .
வராத கண்களோடு அந்த மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
நடுநிசியில் வயிரமுத்தரின் கடையும் எரிவதை என் ஞல் தெளிவாகக் காண முடிந்தது. எழுபத்தேழில் அயை ரது கடை தான் எரிந்ததே ஒழிய அலங்காரமான வீடு பத்திரமாகவே இருந்தது.
AthoQyp atop... ... ...
அவரின் வீட்டினுள் குண்டர்கள் நுழைவ  ைத யும் பொருட்கள் எல்லாவற்றையும் பொறுக்கி வந்து தெரு வில் போட்டு நெருப்பு வைப்பதையும், இவர்கள் ஏரல் லாம் அவசரமாக வீதி பில் ஓடுவதை பும் நான் நேரே பார்த்துக் கொண்டிருந்தேன்,
இரண்டு நாட்கள் ஒருவாறு அலுவலகக் கன்ரீனில் சாப்பிட்டுக் கொண்டு அங்கேயே நாட்க%ளக் கடத்திய பின்னர் மூன்ருவது நாள் அலுவலகச் சிற்றுாழிபர் சிலர் கருகிய எச்சில் பாண் துண்டுகளை எங்கள் மேல் எறியத் தொடங்கி விட்டார்கள்.
இனியும் இங்கே இருக்க முடியாது என்ற நிலையில், மூன்ருவது நாள் காலை, எங்கள் மேலதிகாரி ஒருவரின் துணையுடன் ஒரு வாறு தேஷ்டன் கல்லூரி மு கா  ைம அடைந்த போது, அங்கு வயிரமுத்தர் தீனமான பார் வையுடன் இருந்தார் .
"உடுத்த உடுப்புத் தான் தம்பி. வேறை ஒன்டும் இல்லை" என்ற அவரது குரல் தழுதழுததது.
"உயிராபத்து ஒண்டும் இல்லாமல் நீங்கள் தப்பினதே பெரிசு அண்ணை. உங்கடை கடையும் வீடும் எரியிறதை நான் மேலே நிண்டு பாத்துக் கொண்டு தான் இருந்த ஞன்."
யாருக்கு யார் ஆறுதல் கூறுவது என்று தெரியாத நிலையிலும் நான் அவருக்கு ஆறுதல் கூறினேன்.

Gasraar Lo63533reir /67
அலுவலகத்துக்கு வந்தபின் வீட்டிற்குத் திரும்ப முடி யாமலே முகாமிற்கு வந்து சேர்ந்த எனக்கும் உடுத்த உடுப்புத் தான். ஆனலும் என்னுடைய குடும்பம் ய்ாழ்ப் பாணத்தில் இருந்த படியால் எனது இழப்புகள் குறைவு
"இவள் பிள்ளைக்கு ரேண்ஸ் ஆம் தம்பி. மாத்திற துக்கு ஒரு உடுப்பும் இல்லை. அவள் ஒரு இடத்திலை இருந்த இரையா இருக்கிருள். எங்கடைநிலைமை இப்பிடி வரும் எண்டு ஆர் கண்டது.
வயிரமுத்தரின் கண்கள் நீரால் நிறைந்ததை நான் அன்று தான் முதன் முதலாகப் பார்த்தேன் எழுபததே ழில் கூட அசையாமல் இருந்தவர்.
எங்களுடைய தொழிற் சங்கம் மூலமாக எனக்கக் கிடைத்த இரண்டு பழைய சாரங்களில் ஒன்றே வயிர முத்தரின் மகளுக்கு உதவியது.
பச்சை அரிசியை அரை அவியலில் அவித்து விட்டு, மைசூர்ப் பருப்புச் சாம்பாருடன் மூன்று முறையும சாப் பிட்டதும், எல்லாருக்கும் வயிற்ருேட்டம் வந்து முகாமில் இருந்த சில மருத்துவக் கல்லூரி மாணவரின் உதவியினல் மருந்து குடித்ததும், வெறுந் தரையில் அப்பனே என்று படுத்துறங்கியதும, குளிககாமல் முழுகாமலே இரண்டு வாரங்களைக் கடத்தி விட்டதும், எல்லாம் முடிந்து போன கதை இப்போது.
"இனிமேல் கொழும்பு வாழ்க்கை சாவராது தம்பி, நான் இம்முறை பாங்க் இ?ல கிடக்கிற காசை எடுத்து, அப்பு வீட்டுக் குப் பக்கத்திலை காணி வாங்கி வீடு கட்டி றதா யோசிக்கிறன் .,,
வயிர முத்தரின் திடகாத்திரமான பதில் என் சிந்தனை களிலிருந்து என்னை மீட்டெடுக்கிறது.
"என்னை இங்கை ஒரு கேள்ஸ் ஸ்கூலிலே சேத்து விடுங்கோ அப்பா..."

Page 38
68 ! உதயத்துக்கு முன்.
இது அவர் மகள் தானு?
இவர் கடை ஒண்டை எங்கடை ஊரிலை போடட் டும். அங்கை பெரியகடை ஒண்டும் இல்லை. நல்ல வியா பாரம் வரும் தம்பி ..." - மனைவி
" எங்களுக்குப் பலமுள்ள இடங்களிலே இருந்து தான் நாங்கள் எங்கடை உரிமைசளுக்குப் போராட வேணும் அங்கிள். பலமில்லாத இடங்களிலே போயிருந்து இனியும் மொக்குத் தனமா வாங்கிக் கட்டப் பிடாது.
வயிரமுத்தரின் மகன் நன்முகச் சிந்தித் திருக்கிருன் என்பது அவன் தொடர்ந்த கருத்துரையில் தெளிவா கியது.
நன்முகக் காய்ந்து பாளம் பாளமாய் வெடித்துப் போயிருந்த களிமண் தரையிலும் சில மாடுகள் வெற்றி கர மாய் உழுது கொண்டிருந்த காட்சியை அகதிகளின் பஸ் தெல்லிப்பழையைத் தாண்டிக் கொண்டிருந்த போது என் சண்கள் உன்னிப்பாய் உற்று நோக்கின. " உழத் தெரிந்த மாடுகள் ' என்று நான் முனு முனுத்துக்கொண் டேன்.
அவர்கள் தங்கி விட்டார்கள் நான் - அரசாங்க உத்தியோகத்தன் - மீண்டும் போக வேண்டியவனனேன்! ஒருவருடம் வேகமாகத்தான் போய்விட்டது
1984 - ஆகஸ்ட் நான் இரண்டு வார விடுமுறையில் நடந்ததைக் கேள்விப்பட்டு வடமராட்சி வயிரமுத்தர்
குடும்பத்தைப் பார்க்கப் போகிறேன்!
கோயில் முகப்பிலே அவர் சூனியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். எலுமிச்சம் பழத்தை நறுக்கிப் பத்து நாள் பங்குனி வெயிலில் காயப் போட்டது போன்ே தோற்றத்துடன் மனைவியும் மகளும் !

கோகிலா மகேந்திரன் /69
மகனைக் காணவில்லை
** தம்பி எங்கடை மண்ணிலையே நாங்கள் அகதிகளா யிட்டம் பாத்தியே ? ?" எனக்கு உயிர் நெருப்பில் விழுந்து துடிப்பது போல ஒரு -
இனிமேல் .. ?
58, 77, 83, 84 . எல்லாம் என் நினைவுகளில் பக்கம் பக்கமாய் . 1 நான் கையில் இருந்த தினசரி
ஒன்றின் " எடிற்றேறியலை " உரத்துப் படித்தேன். அது இப்படி முடிந்திருந்தது.
** இது உதயத்துக்கு முந்திய காரிருள் - ".
(ஒக்டோபர் 84 களம் ' சஞ்சிகையில் பிரசுரமானது)

Page 39
கிழிந்து போன வாழ்க்கைகள்
gரவுக்கன்னி தன் காலின் இருட் சலங்கையைக் காலையில் கழற்றி எறிந்துவிட்டு, உசாராவதற்கு முன் னரே அவன் விழித்துக் கொண்டான்.
"இண்டைக்குக் கொழும்புக்குப் போகவேணும்" என்ற நினைப்பே இரவெல்லாம் ஒரு மன அமைதியின்மை யைத் தோற்றுவித்திருந்தது.
"எலாம்" அடிக்காமலே அவன் எழுந்து கொண்டான்
“முந்தி என்டால் எலாம் அடிக்க அடிக்க என்ன மாதிரிச் சோத்து மாடு மாதிரிப் படுத்துக் கிடப்பாய்" நான் பிரட்டிப் பிரட்டி எழுப்ப வேணும். இப்ப."
இவனுக்குத் தேநீர் போட்டுக் கொண்டிருந்த அம்மா அங்கலாயித்தாள். உண்மைதான். ! இப்ப.?
எழுந்தவுடனேயே காவில் சக்கரத்தைப் பூட்டிக் கொண்டான். இவனுடனேயே அதிகாலையில் கண் விழித்து விட்ட தென்றலின் இதத்தை அனுபவிக்க முடியவில்லை. மனதில் ஒரு பயம் பயம் என்று சொல்ல முடியாது. ஒரு படபடப்பு. ஆ. யெஸ். “ரென்சன்", அதுதான் சரியான சொல்
எதிர்கால நம்பிக்கையின் வச்சிர விழுதாய் அந்த "இன் ரவியூ லெட்டர்" குட்கேசுக்குள் அது இருக்கிறதா *ன்று நான்காவது முறையாகப் பார்த்து விட்டு எழுந்து கக்கூசுக்குப் போனன்,

கோகிலா மகேந்திரன் 171
கிணற்றடியில் முகம் கழுவும்போது காற்றுக் குளிர்ந்து சிலுசிலுத்தது. கூடவே ஒரு வெடிச்சத்தமும் கேட்டது" எல்லாம் பழகிப்போன சத்தந்தான்!
"தம்பி "ஐடென்ரிக் காட் எடுத்து வைச்சணியோ? பார்மோனை. பேந்து அவங்களிட்டைத் தப்பேலாது." தேநீரைக் கொண்டு வந்து அவனிடம் தரும்போது அம்மா அக்கறையுடன் கேட்டாள்.
'டி. ஆர். ஒவிட்டைக் கை எழுத்து வாங்கின துண்டு எடுத்திய்ே தம்பி?”
ஐயா அப்போதுதான் எழுந்து வந்தார். "மூண்டு நாலு இடத்திலை செக்கிங்" காம். கவனம் அண்ணை' - இது தங்கை ரமணி
என்னட்டை என்ன கிடக்கு "செக் பண்ன? ஒரு நாளைக்கு மாத்திப் போடுற உடுப்பும், அம்மா தாற இடி ய்ப்பப் பாசலும், ஒரு இருநூறு கு" காசும் தானே"
இவன் சிரித்தான் உயிரற்ற சிரிப்புத்தான்!
அண்ணை, காற்சட்டையிலை உள்ளுக்கு ஒரு * பொக் கற்? தைச்சு விட்டனன் அதுக்குள்ளை வை strapo.”
'அண்ணை, கொழும்பி%ல எனக்கு என்ன வாங்கியரு வாய்? என்று கேட்கும் தங்கைதான இவள்?
"யாழ்ப்பாணத்துக்கு முதல் மினிபஸ் எங்கடை சந்தி யிலை ஆறுமணிக்கெண்டவை. (நாலு மனி தொடக்கம் பஸ் ஒடுறது பழங்கதை எல்லோ?) அதைப் பிடிச்சால் நல்லது.”
சீப்பில் சுருள் மயிர் கெளவிக் கொண்டது எண் ணெய்ப் போத்தல் திறந்து மூடியது உடுப்புக்கள் அடுக் குக் குலைந்தன. பவுடர்த் துகள்கள் நிலததில் பறந்து சிநதின!
இவன் புறப்பட்டு விட்டான்!

Page 40
72/ கிழிந்து போன வாழ்க்கைகள்
"அம்மா, ஐயா ரமணி போட்டு வாறன்’ "போட்டு வா ராசா. கவனம் அவங்கள் ஏதும் கேட்டாத் தன்மையா மறுமொழி சொல்லு தம்பி3
அம்மாவின் கண்களில் நீர் கோத்துக் கொண்டது ஏன்?
சைக்கிள் சில்லுகள் வேக உருண்டன! இவன் மினி பஸ்ஸினுள் ஏறும்போது வெளியே மெல் வி 6) I பில் நீர்த்துளி பட் ம் எழுந்த ம
#o: "ಕಿ: వE% திரும்பி வாறனுே இல்லையோ??
இவன் மனதில் இந்த எண்ணும் மிதப்புக் கொண்ட போது, ஒரு நெகிழ்வு 9 நஞ்சின் உள்ளே
"மினிபஸ் ஆறுமணிக் கெண்டியள் ஆறஞ்சாகுது..? ஒம், ஓம். வெளிக்கிடப் போறம்.?? தாலாட்டிக் கொண்டு புறப்பட்டான் மினிபஸ்காரன் "கிறவுட் சேக்கிறதுக்காக அரைவாசித் தூரம் இப் பிடித்தான் திாலாட்டிக் கொண்டு போவினம், சிரிப்பு -ன் ஒரு குரல் திரும்பிப் பார்த்தான்,
பனங் குருத்து நிறம், முட்டை மென்சவ்வு மென்மை நீர் கழுவிய பூந் தெளிவு, மாங் குருத்துக் குளிர்ச்சி எங்கோ பார்த்த சிரிப்பு ஒ. மூளையில் பொறி திட்டியது “எங்களோடை ஏ. எல் படிச்ச ரஞ்சினி ஐஞ்சு வரிச மாச்சுது மாறிட்டாள்??
“என்ன? விடிய வெள்ளென சூட்கேசோடை?” "கொழும்புக்குப் போறன்?? “ஒ. ஐசீ. என்ன விசேஷம்? 'ஒரு இன்ரவியூக்குப் போறன். உங்களுக் கென்ன? எப்பவோ வேலை கிடைச்சிட்டுது. நீங்கள் லக்கி.??
“இந்த நேரத்திஅல கொழும்புக்கு ஏன் போறிங்க? உயிர் பெரிசோ? உத்தியோகம் பெரிசோ? அதுவும் உங் களைப் போலை வாட்ட சாட்டமான போய்ஸ்.9

Basir6.svir un Gass @raw / 7"
"உத்தியோகம் வந்தாப்பிறகு உயிர் பெரிசாம்தான் இருக்கும். இப்ப உயிரைக் காப்பாத்த உத்தியோகம் தேவையாக் கிடக்கு. என்ன செய்யிறது”
அவளது பூ முகத்தின் பணிக்குளிர் தொட்டும் மலர்ச் சியை இவன் மணப் பூரிப்புடன் பார்த் தான் என்று நிச் சயமாக எழுத முடியாது. ஏனெனில் இவன் மனம் முற் ருக உலர்ந்து போய்க் கிடந்தது,
**என்று தணியுமிந்த சுகந்திர தாகம். என்று மடியு மெங்கள் அடிமை பின் மோகம்" பாடல் முடிந்தவுடன் அதிகாலையில் யாழ்நகர் தன்னில் பணிபடிகின்றது” என்ற பாடல் மினிபஸ்ளின் ரேப்பில் ஒலிக்கத் தொடங்கியது. *கண்கள் சொல்லும் காதல் ராகம்” போன்ற பாடல்க%ள மினிபஸ்காரர் கூட மறந்து விட்டது அதிசயந் தான் என இவன் நினைத்துக் கொண்டான்.
"மினிபஸ்" யன்னலுரடாக வெளியூே பார்த்தான். பச்சை நிறத்தில் நிரையாய் எழுந்து (காக்கன் பயிர், (கொஞ்ச நாள் மறந்து போயிருந்த குரக்கன், வரகு / எல் லாம் இப்ப எங்கடை ஆக்கள் போடத் தொடங்கிட்டி னம் பட்டினிப் பயந்தான்) அணி வகுத்து நிற் கம் வீார் போல தோட்டக் காரனைக் கண்டதும் வீரிட்டுக் கத்தி நாலாபுறமும் சிதறி ஓடும் கிளிகள் எங்கள் மக்கள் ஒடு வது போல
மனதில் திடீரெனத் தோன்றும் உவமான உவமே சங்கள் கூட இப்படி அமைகின்றனவே என்று எண்ணித் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
திடீரென்று ஒரு நினைவின் உந்தலில் சூட்கேசைத் திறந்து. "ஐ டென்ரிற்றிக் காட் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டான், மினிபஸ் இன்னும் தாலாட்டிக் கொண்டிருந்தது!
*அண்ணை, நான் ஏழு மணி கொழும்பு பஸ்ஸைப் பிடிக்க வேணும். கொஞ்சம்.”

Page 41
74/கிழிந்து போன வாழ்க்கைகள்
"ஒம். ஓம். கட்டாயம் ஆறே முக்காலுக்குப் போயிடுவம் பயப்படாதையும்.”
மனித நேயம் சாஸ்வத மானது தான் சுன்னகத் துக்கு அப்பால் பேயோட்டம் ஒடி அவன் இவனை யாழ்ப் பாணத்தில் இறக்கியபோது, நேரம் ஆறு ஐம்பத்தைந்து இவனது உயரமான கால்கள் மண்ணை வேகமாய் மிதித்து முன்னேறின. கொழும்பு பஸ்ஸில் சனங்கள் ஏறிக் கொண்டிருந்தார்கள். இவனது "ரிக்கற் நீட்டப் பட்ட போது, இப்படிச் சொல்லப்பட்டது.
'தம்பி, இது அடுத்த பஸ்ஸிக்கு, கீழை இறங்கி நில்லும்’ நின்ருன்!
"ஹலோ, மச்சான் நீயும் கொழும்புக்கே? ஒன்பது மணி பஸ்ஸிக்கே?
"ஹலோ! ஏன். ஒன்பது மணி? அடுத்த பஸ் இப்ப வெளிக்கிடும்.”
"இல்லை மச்சான். இண்டைக்கு ஒரு பஸ் "பிறேக் டவுனம்'. இனி அடுத்த பஸ் கொழும்பாலை வந்துதான் வெளிக்கிடும். வாவன் உதிலை போய் ஒரு ரீ குடிச்சிட்டு உப்பிடிச் சுத்திப் போட்டு வருவம்.”
இவன் நம்பாமல் உள்ளே போய்க் கேட்டான். "ஒம். அடுத்த பஸ் இண்டைக்குக் கொஞ்சம் "லேற்’ ஆகும். கொஞ்சந்தான் எட்டு எட்டரைக் கெல்லாம் வெளிக்கிட்டிடும”
வினடிகளின் வளர்ச்சி நிமிடத் துளிகளாகி மடிகிறது. "வாவன் மச்சான். ரவுணுக்கை போய் லாத்திக் கொண்டு திரும்ப வருவம்*
“சீ. பயணம் எண்டு வந்திட்டுத் திரும்பிப் போக গুঞ্জ மாதிரிக் கிடக்கு எனக்கு உதுகளிலை நம்பிக்கை இல்லைத் தான். எண்டாலும் என்னத்துக்கு?
"வாவன் உதிலை இருப்பம்,?

கோகிலா மகேந்திரன்/75
இருவரும் அவ்விடமிருந்த தார்ப் பீப்பா ஒன்றில் ஏறி மதிலுக்கு மேல் குந்திக் காலை ஆட்டிக் கொண்டனர்;
இவர்களைப் போலவே அந்த ஏழு மணி பஸ்ஸஅக்கு வந்த இன்னும் பலர்
“சீ... நேரத்துக்குத் தெரிஞ்சிருந்தா காலமை ஆறு தலா எழும்பிச் சாப்பிட்டுக் கீப்பிட்டு வந்திருக்கலாம். - ஒரு அரைக் கிழவர்.
சூரியப் பிரகாசம் இப்போது உலகத்தின் மீது வியா பிப்போமா, வேண்டாமா என்பது போல் மாய்மாலம் காட்டிற்று.
???மச்சான் எப்பிடி வாழ்க்கை ه . . . . .nr و )* "என் ரை வாழ்க்ேையா? என்ரை வாழ்க்கை ஒரு தைக்க முடியாத ஊசி எண்டு சொல்லன். 象款
*புதுக்கவிதை மணம் அடிக் குது." "என்ன மணம் அடிச்சா லென்ன, உண்மை  ையத் தான் சொல்லுறன். வெளிநாடு போவ மெண்டால் அதுக் கும் காசு வசதிப்படேல்லை.
தம்பியவை ஏன் உதிலை, உயரமான இடத்திலை கண் ணுக்கு எத்துப்படுகிற இடத்திலே இருக்கிறியள்? வில்லங் கத்தை விலைக்கு வாங்கவோ? இஞ்சை வாருங்கோ'
அரைக் கிழவன் அழைப்பில் சிந்தனைச் சரம் அறுந்து போக இருவரும் இறங்கி உள்ளே நடந்தனர்.
கண் கொள்ளாக் கனவும், நெஞ்சு கொள்ளாத ஆசை யுமாய் முதல் இன்ரவியூக்குப் போய் வந்த காலத்தை நிசனத்துக் கொண்டு இவன் மணிக்கூட்டைப் பார்த்தான். "எட்டு மணியாச்சு, பஸ்ஸைக் காணேல்லை" - கேட் 607 ilir.
**வந்திடும். கொழும்பிலை ஏதும் பிரச்சனையோ தெரி யேல்லை. ஒம்பதுக்கு முன்னம் வந்திடும்" - ஆபீஸ் பதில்
**யாழ்ப்பாணத்துச் சனம் பயணம் வந்தால் திரும் பிப் போகாதெண்டு தெரியும். அது தான் சரியான நேரத்

Page 42
76 கிழிந்த போன வாழ்க்கைகள்
தைச் சொல்லாமல் பேய்க் காட்டினம்" ஒருவர் புறுபுறுத் தார்.
"றெயினே விட்டிட்டு. இது பாதுகாப்பெண் டு கூடக் காசு கட்டி இஞ்சை வந் தா. காசை பும் வாங் கிப் போட்டு. * - மற்றவர் தொடர்ந்தார்.
அந்த இரண்டாவது மனிதரின் உதடுகளின் இறக்கத் தில் ஒரு முரட்டு அபஸ்வரம் எட்டிப் பார்த்தது.
மணி எட்டரை ஆனபோது இடியப்பப் பாரிசலைத் திறந்து இருவரும் சாப்பிட்டனர். உடம்பிலே வியர்வை பங்குனி மாத வியர்வை நசநசத்தது. மனப் புழுக்கம்
வேறு.
"எத்தின் மணிக்கு பஸ் வரும்? உண்மையைச் சொல் லுங்கோ அல்லது எங் கிடை காசைத் தந்து விடுக்கோ, நாங்கள் போறம்.
ஒன்பது மணிக்கு ஒருவர் குரல் உயர்த்தினர். "காலமை ஏழு மணிக்கு வெளிக்கிட்டா, இரவு எட்டு மணிக்காவது கொழும்பு போய்ச் சேரலாமெண்டு வந்தம். இப்ப. பத்து மணிக்கு மே%ல வெளிக்கிட்டுச் சாமத் திலை கொண்டு போய் விடப் போறியள். அதுக்குப் பிறகு நாங்கள் எங்கை போறது? - இன்னெரு மொட்டைத் தலை உதவிக்கு வந்தார்.
"நானும் இரவு நித்திரை முழிச்சிட்டு நா%ளக்கு இன் ரவியூக்கு ஃபிறெள் ஆகப் போக ஏலாது மச்சான்"
இவனும் கவலைப் பட்டான். **ஆ. இஞ்சை பஸ் வந் திட்டு து. பின்னல் இருந்த மஞ்சள் சாறிப் பெண் பையைத் தூக்கிக் கொண்டு எழுந்த போது பத்து மணி
வந்து நின்ற பஸ்ஸில் இருந்து "டிரைவர் இறங்கி உள்ளே போர்ை, ஒரு சிறு  ைபயன் வாளியும் தண்ணி யும் துணி 'மாய் ஒடி, பஸ்ஸின் பக்கங்களைக் கழுவத் தொடங்கினன், இன்னெருவன் படாரென்று குனிந்து பஸ்

கோகிலா மகேந்திரன் /77
ஸின் கீழ்ப் படுத்துக் கோண்டான். மற்றவன் பின் சில் லைக் கழற்றத் தொடங்கிஞன்,
பஸ்ஸகுக்குச் செக்கிங்" நடக்கிறது! பஸ்ஸைக் கண்ட வுடன் சூட்கேசைத் தூக்கிக் கொண்டு எழுந்த இவன் பத்து நிமிடம் கழித்து மீண்டும் அமர்ந்து கொண்டான். *"டேற்றி ராஸ் கல்ஸ். ஏழு மணி புஸ் எண்டிட்டுப் பத்து மணிக்கும் வெளிக்கிடுகிற யோசன இல்லை. இது தானே தமிழனுக்கு வந்த கேடு. ஒவ்வொரு த் தனும் தன் தன் லாபம் .
முன்ல்ை நின்ற "நீல சேட்" ஆங்கிலத்தில் திட்டிக் கொண்டார்.
"பதினெரு மணிபோலை வெளிக்கிட்டா த் தா ஞம் நல்லது. நாவற்குழிலை அவங்கள் சாப்பிடப் போடுவாங்க ளாம். கரைச்சல் இல்லையாம். .
உள்ளே, பஸ் புறப்பாடு பற்றிக் கேட்கப் போனவர் திரும்பி 0 ந்தார்.
"அவங்கள் சாப்பிடப் போற நேரம் இவைக்கு இப் பத் தான் தெரிரு கதாமோ?" - வழுக்கைத் தலை சிரித் தார்.
*அடுத்த பஸ் ஒரு மணிக்காம். இரண்டும் கிட்டக் கிட்டப் டோனல், ஒண்டுக் கொண்டு பாதுகாப்பாம்.
*ஒ இரண்டு பஸ் அடுத் தடுத்துப் போனுல், வழிலை கொள்ளையடிக்கிற வங்களுக்கும் லாபம்”.
பஸ் ஸின் கிருத்த வேலைகள் முடிந்து, டீசல் அடித் து? "டயர் " மாற்றி, பஸ்ஸில் பிரயாணிகள் ஏறிய போது நோம் பதினுெரு மtை!
"இனி என்னப்பா சுணக்கம்? *"டிரைவர் குளிக்கிரு ராம் வருவாராம்". **குளிக் . கிரு. ராம், வரு. of f...... ሀb” ፵ ஒருவர் வார்த்தைகள்ை அக்கக்காய்ப் பிரித்தார். **இவ்வளவு நேர முந் கான் ஒவ்டொரு கார ண ம் சொல்லிப் பேய்க் காட்டினியள். இனியும் பேய்க் காட் டேலாது.

Page 43
78இழிந்துபோன வாழ்க்கைகள்
நாங்கள் எல்லாரும் சேந்து மறியல் இருப்பம்". “உங்கடை பஸ் மூண்டையும் கொழும்புக்கு ஓடவிட மாட்டம்"
பிரயாணிகள் எல்லாரும் சேர்ந்து சாத்வி போராட்டம் ஆரம்பிக்க ஆயத்தமான போது (இந்தக் காலத்திலுந் தான்) டிரைவர் வந்து பஸ் எடுத்தார்.
"உன்ரை இன்சவியூ நேரத்துக்கு போயிடுவம், பய பிடாதை ரவி?"
"என்ன நிச்சயம்? வழியிலே?"
இவன் சிரித்தான். மீண்டும் உயிரற்ற Թունւյ!
(ஜூன் 1985 -மல்லிகையில் பிரசுரமானது.)

நாளைய ஓட்டைகள்
தினது காலத்தில் தான் "எஸ். எஸ். வி. பரீட் சைக்கு விண்ணப்பம் போட்டுப் போட்டு விரல் இளைத் ததை நினைவு படுத்திப் பார்த்தார் மணியம் மாஸ்டர் இப்படி எல்லாம் செய்யலாம் என்ருல். எவ்வளவு சுலப மாய். ஒரே முறையில்..? அவரது சிந்தையில் துங்கும் நுரையுமாய்ச் சிந்தனை வெள்ளம் பெருக்கெடுத்து அகல அலையாய்ப் டாய்ந்தது.
சுவருக்கு மேலே இருந்து வந்து விழும் பொட்டல களைப் பிணத்தைக் கண்ட முதலை போல ஆசைப்பட்டு அள்ளி எடுத்துக் கொள்கிருர்கள் மாணவர்கள்.
"ஹெவிகொப்டரிலை இருந்து விழுகிற உணவுப் பொட்டலங்களை ஒரு வேளை நாங்கள் இப்பிடித்தான் ஆசைப்பட்டு அள்ளி எடுக்க வேண்டிய காலம் கெதியா வரப்போ குது. எண்டு நினச்சிருந்தனன். இதுகள் இந்த மறு மொழியளை அந்த மாதிரி எல்லே அள்ளுதுகள்???
பக்கத்தில் சுவரில் சாய்ந்தபடி நின்றுகொண்டிருந்த இரத்தினம் மாஸ்டரிடம் மெதுவாய்ச் சொன்னர் பணி it.
"இந்தப் பள்ளிக் கூடத்திலை உது வழக்கம். மாஸ் -ர். ஒருவன் வந்து கேள்விப் பேப்பரைப் பறிச்சுக் கொண்டு போவான். பேந்து மறுமொழிப் பொட்டலங்கள் சரமாரியாய் வந்து விழும். நான் இரண்டு வருசத்துக்கு

Page 44
80/ நாளைய ஒட்டைகள்
முந்தி ஒருக்கா வரேக்கையே இப்பிடித்தான். இப்ப இல் னும் மோசமாயிட்டுது. நீங்கள் உப்பிடிச் சும் மா கண் டும் காணு 5 மாதிரி இருக்க வேண்டியது தரன். உம்
இலேசாகச் சிரித்த படி சர்வ சாதாரணமாப் மெழுகு உருகும் இயல்போடு இப்படிச் சொன்னர் இரத் தினம்.
அப்ப, அவை செய் பிற தும் நாங்கள் பார் த் து க் கொண்டு நிக்கிறதும் சரி எண் டு சொல்லுறிபளோ?"
மனதில் தோன்றிய எல்லாக் கேள்விகளை பும் இப் படித்தான் குவித்தார் மணியம்.
"நல்ல சரியும் பிழையும் "ஒப்புர வொழுகு" எண்டு தான் ஒளவையாரும் சொல்லியிருக்கி முர். அதிகமான ஆட் கள் செய்யிறதுதான் சரி, பிறகு வாங்கிக் கட்ட ஏலு மே???
"பலர் செல்லும் வழியில் செல்வது அறநெறியல்ல. தன் மனச்சாட்சி எதைச் சரி என்று சொல்கிறதோ அதன் படி செய்பவன்தான் அறவோன். அவனே eig Gär... ?” o
மசாத் 0ா காந்தியைப் பற்றி மு. வ. இப்படி எழுதி பதை எப்போதோ வாசித் த நினவு! "
"நான் உகாத்மா இல்லைத்தான் எண்டாலும்.
*அறிஞர் செல்லும் வழிபில் சென்று ஒழுகு' எண்டு தான் ஒ வைப்பாட்டியும் நினைச்சிருக்கும். 19
இரத்தினம் மாஸ்டரை விட்டு நீங்கி ஜீ. சீ. ஈ சாதா ரண தரப் பரீட்சை நடந்து கொண்டிருந்த அந்த மண்டபத் தின் பின்புறத்தை நோக்கி வேகமாய் நடந்தார் மணியம்.
கல்லு வைக் துச் சுற்றப்பட்ட பொட்டலம் ஒன்று அவ ரின் தலைக்கு மேலே வந்து விழுந்தது. அ த ல்ை ஏற் பட்ட வலியைத் தாங்கிக் கொண்டே வீங்கிப் போன ப குதியைத் தடவிப் பார்த்துக் கொண்டார் அவர்! மு ன்னுல் இன் னென்று; பின்புறத்தில் வேருென்று.

Gast8arr LoGagStratv/81
எலும்புகளை எண்ணக்கூடிய உடம்புதான் மணியம் மாஸ்டருக்கு "நரம்பு மனிதர்?’ என்றும் சொல்லலாம் உடம்பில் உள்ள வலுவை விட உள்ளத்து வலு அதிகம்" "சுர்" என்று தலையில் ஏற்பட்ட வலியை முகத்தில் காட்டிக் கொள்ளாமலே பொட்டலத்தைப் பிரித்தார்,
அன்றைய விஞத்தாளின் ஏழாம் எட்டாம் கணக்குகள் முற்ருகச் செய்யப்பட்டிருந்தன. அவரும் ஒரு கணித மனிதர்கான். ஒரு நிமிடம் செய்யப்பட்டிருந்த கணக்கு களைச் சரி பார்த்தார்.
efrrsă l முன்னல் விழுந்த பொட்டலத்தை எடுப்போம் என்று குனிந்த பின்னர்தான் தெரிந்தது அதைக் காணவில்லை. பின்புறம் திரும்பினர் அதையும் காணவில்லை. பக்கத் திலே பார்வையைச் செலுத்தினர்.
ஒரு பெண் பிள்ளை மளமளவென்று அந்தக் கடதாசி யைப் பார்த்து எழுதிவிட்டுப் பின்னல் இருந்த மற்ருென் றிடம் நீட்டியது.
ஒரு கணம் மணியம் மாஸ்டரின் பின் மண்டையில் புழுககள் நெளிந்த ைஉடம்பைத் திடீரெனச் சாக்கடையில் போட் டுப் புரடடி எடுத்தது போல் ஒரு உணர்வு,
"என்னைப் பேயன் எண்டு நினைக்கிருங்கள். கண் ணுக்கு முன்னலை என்ரை நேர்மைக்குச் சவால் விடுகினம்"
"நாளைக்கு இவை என்னையே இந்த இடத்திலை இருத்தி இவ்வளவு கணக்கையும் செய்துதா எண்டு கேட்பினம்..”*
"தமிழன்ரை பண்பாடு நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுத்த பண்பாடு ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த பண்பாடு. எப்பிடியும் வாழலாம் எண்டில்லாமல் இப் பிடித்தான் வாழவேணும் எண்டதிலே அழுத்தம் கொடுத்த பண்பாடு. அந்தப் பண்பாட்டு ஊற்றுககள் எந்த யுகத் திலையும் அடைபடக் கூடாது."

Page 45
82/நாளைய ஒட்டைகள்
கன நேரச் சிந்தனைதான்!
எட்டி அந்தக் கடதாசியைப் பறித்துக் Gésir 67 LTri மணியம்! எல்லா மாணவர்களும் அவரை நிமிர்ந்து பார்த் தனர். அந்தப் பார்வைகள்? ஒரு மாதிரித்தான் இருந்தன.
இேண்டச் செடிக்குள்ளை வலியப் போய்த் தலையைக் குடுக்கிறீர் மணியம்."
முன்னுக்கு நின்ற இரத்தினம் ஓட்டமும் நடையுமாய் அந்த இடத்திற்கு வந்தார்.
"பரவாயில்லை! பாப்பம்.
மண்டபத்தின் முன்பக்கத்திலிருந்து ஒவ்வொரு பிள்ளை யின் விடைத்தாள்களையும் தட்டிப் பார்த்துக் கொண்டே வந்த, மணியம் இடையில் காணப்பட்ட பொட்டலக் தாள்கள்' எல்லாவற்றையும் பறித்துக்கொண்டார். மொத் தம் நாற்பது - ஐம்பது கடதாசிகள் இருக்கும்.
இவ்வளவையும் பேசாமல் அவதானித்துக் கொண்டு மெழுகுப் பொம்மையாய் மேசையில் இருந்த பிரதம மேற் பார்வையாளரின் மேசையில் அவற்றைக் கொண்டு சென்று வைத த போது,
"நாங்கள் உதுகளைக் கண்சாடையா விட்டாத்தான் நல்லது. இல்லாட்டிச் சோதனை நடத்தி முடிக்கேலாது. மற்றது பின்னோம் வீட்டை போய்ச் சேரவேணும். இனி இந்தக் காலத்திலை சட்டத்தையும் இறுக்கிப் பிடிக்கப் .என்ருர் அவர் همه ای L-fTلا
அந்தப் பரீட்சை மண்டபத்தில் தான் சிந்தனையா லும் கொள்கையாலும் தனித்து நிற்கும் உணர்வு இப் போது முதல் முறையாக மணியத்தாருக்கு ஏற்பட்டது.
"நான் சடடத்துக்குப் பயப்பிடேல்லை. மனச்சாட்சிக் குப் பயப்பிடுறன்" மெதுவாக, ஆகுல் உறுதியாகக் கூறி விட்டு நகர்ந்தா " .

கோகிலா மகேந்திரன்i 83
**ஆம் ஐ எ பிளாக் சீப்?"
தன்னைத் தானே கேட்டுக் கொண்டார் பதில் தெளி வாகவில்லை,
சோதனை முடிந்து சில நிமிடங்கள் சென்றிருக்காது மணியம் மா ஸ்டரைச் சுற்றிவர வியூகம் அமைத்தது போல ஒரு கூட்டம். முப்பது நாற்பது இளைஞர்களைக் கொண்டது. படிப்படியாக அவரை நெருங்கிக்கொண்டி ருந்தது.
அவராகப் புறப்பட்டு வந்தேன். அதுவாகத்தான் வீடு திரும்பப் போகறேனே?"
சகாந்தியை ஆபிரிக்க: வில் இப்படித்தான் அணுகி அடித்து நொருக்கினர்களோ?"
**யேசுவை இப்படித்தான்"
அவரது நினைவுகள் மெளன மரணமாகின்றன அவர் கள் நெருங்கி விட்டார்கள்
"என்ன மாஸ்டர் பிள்ளையன் எழுதின பேப்பரைக் கிழிச் செறிஞ்சீராம்"
"நீங்களே சங்கடை பிள்ளையருக்கு கலை வைக்கப் பார்க்கிறியள் என்ன?"
"உனக்கு எங்களைப் பற்றி விளங்கேல்லை. அது நான் ரன்ன??
ஒருவன் முறைக்கும் கண்களுடன் மிக அருகில் வந்து விட்டான் நிர்ப்பயமாய் நிற்க மணிபத்தாரால் முடியவில்லை. கல்லூரிச் சுவரொன்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண் டார். அருகிலே நின்றவனை நிமிர்ந்து பார்ததார். அது கல்லூரித் தனமான முகமாய் இல்லை. மீசை அப்போது தான் மெதுவாக அரும்புகின்ற கோலம். அவனுக்கு மிஞ்சி மிஞ்சிப் போனுல் பதினறு வயதுதே இருக்கும் .னக் காட்டி
r 1n 35I

Page 46
84/நாளைய ஒட்டைகள்
"நான் பார்த்தெழுதின பேப்பரைத்தான் எடுத்தஞன், பிள்ளையள் தாங்களா *ழுதின பேப்பரை எடுக்கேல் ‰ሀ(8u፡?””
சிறந்த பேச்சாளரான அவரது குரல் இப்போது ஏனே ஈனஸ்வரத்தில் ஒலித்தது.
“சரி, பார்த்தெழுதினுல் ਫਰੰ6ਹ பிழை? அவை *tạ” எடுத்தால் உமக்கு என்ன நட்டம்?"
“எனக்குத் தனிப்பட்ட முறையிலை ஒரு நட்டமும் இல்லைத்தான். ஆளுல் எங்கடை சமுதாயத்துக்கு நட்டம். அவை நாளைக்குத தன்னம்பிக்கை இல்லாமல் வாரப் போயினம், "சிற்கும் மற்றவையை எதிர்பார்ப்பினம். ஒழுக்கமும் கீட்டுப்பாடும் இல்லாமல் வருவினம், அறிவை வளர்த்துக் கொள்ளாமலே "சேர்ட்டிபிகற்றுகளைத் துரக்கிக் கொண்டு திரிவினம். உண்மையான திறமைசாலியை தாங்கள் கண்டு கொள்ள Cuplgunruddi Gurgh...'",
விழுங்கி விழுங்கி மெதுவாகச் சொன்னலும் இறுக்க மாகவே சொன்னர் மணியம்.
"உந்தப் Hலம்பலும் கிழட்டு உபதேசமும் எங்களுக் குத் தேவையில்ஜல. நாளேக்குத் தொடக்கம் நீ இந்தப் பள்ளிக்கூடம் வரப்பிடாது. வநதால் எலும்பை முறிச்சுக் கையிலை தருவம்.
"சிேறித்த ஓங்கிய கையை மெதுவாகப் பின்னெடுத் ** கொண்டு அவன் விலகிரு.
*ள்ளிலிருந்து ஆட்சள் உதிர்ந்து கொண்டே இருந் கார்கள். மணிம் மாஸ்டரும் இறங்கி நடந்தார்.
இரவு வெகுநேரமாகியும் அந்த நினேவு மனதில் பச் "Hன்னகப் பரவி ஆறமறுது.திரா தேவியுடன் இழுத்துப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தது.

கோகிலா மகேந்திரன் 185
படுக்கையை விட்டு எழுந்து, லாம்பைத் தூண்டி விட்டு மேசையில் அமர்ந்தார் அவர்.
**இந்த நடுச்சாமத்திலை எழும்பி இரு ந் து என்ன படைக்கிறியள்?" டி ரிச்சலுடன் முனகிக் கொண்டே மனைவி மறுபுறம் திரும்பிப் படுத்தாள்.
"நான் கடமையைச் செய்ததற்காய் அ வ மா ன ப் படுத்தப்பட்டேன், அச்சுறுத்தப்பட்டேன்."
என்று மேலதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதினுல் என்ன? லாச்சியைத் திறந்து பேனவை எடுத்தார்.
தேவையில்லாத பிரச்சனைகளை வாங்கிக் கொண்டு வாறது. இங்கே வந்து சாமம் சாமமா எழுதிறது. மற்ற வாத்திமா ரெல்லாம் பாத்துக் கொண்டு பேசாமல்தானே நிண்டவை? இவருக்குத்தான் தான் ஏதோ பெரிய அரிச் சந்திரன் என்ற நினைப்பு தரு வாங்கள் வாங்குங்கோ!"
மறுபடியும் புறுபுறுத்துக் கொண்டு மனைவி எழுந்து உட்கார்ந்தாள்.
என்ன செய்யப் போறியள் இப்ப?
*டி. ஈ. க்குக் காயிதம் எழுதப் போறன்.
"இப்பதைப் பள்ளிக்கூடத்துப் பொடியள் டி. ஈ. எண் டாப்போலை பயந்திடுவாங்களோ? நீங்கள் எல்லோ பிரின் சிப்பல் முதல் டி. ஈ. வரை எல்லாருக்கும் பயந்து அவை சொல்லிறதை அப்பிடியே செய்வியள்?"
பேணுவைப் பறித்து லாச்சிக்குள் போட்டு மூடினள் மனைவி. "இப்ப பேசாமல் வந்து படுங்கோ. தாளைக்குத் தொடக்கம் சோதினைக்குப் போகாம்ல் விடுங்கோ..?
* அப்ப. அவங்கள் வரப்பிடாது எண்டு சொன்னதுக் காண்டி நான் போகாமல் விடுகிறதோ? நான் செய்தது பிழை என்று ஏற்றுக் கொள்றத்தா?”

Page 47
86/நாளைய ஒட்டைகள்
வேதனையில் மனமரங்கள் வெறுமையாய் உதிருகின் றன. அவருக்கு அது ஒருவகையில் தனிமை தரும் வேதனை.
நான் செய்தது சரி எண்டு சொல்ல. என்ன உற் சாகப்படுத்தா விட்டாலும் ஆறுதல்படுத்த இளைஞர்கள் தான் இல்லை யெண்டால். வயது வந்தவர்களும் இல்லை. நான் தனி தனித்துவமான தனி தனிமைப்படுத்தப் பட்ட தனி ."
நெஞ்சு அடைக்க வெறுமனே கண்களை மூடிப் படுத் திருந்து விட்டு விடியற்காலை எழுந்தார்.
கழுவிய முகத்தைக் கண்ணுடியில் பார்த்தார். ஒரு இரவில் - ஒரே ஒரு இரவில் துன்பம் ஒரு மனித முகத் தில் தன் அடிச்சுவட்டை இவ்வளவு அழுத்தமான கோடு களாய்க் கிழிக்க முடியும் என்பதை அவராலேயே நம்ப முடியாதிருந்தது.
சோதனைக்குப் போகாமல் விடுவோம் என்று ஒரு மனம் நினைத்தது. அத்தகைய தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இன்னெரு மனம் உள்ளிருந்து போராடியது, பயந்த முதல் மனதைச் சுய கெளரவம் கொண்ட மனித மனம் வென்றது .
குளித்தல், சாப்பிடுதல், உடுப்புப் போடுதல், தலை இழுத்தல் எல்லாவற்றையும் அனிச்சைச் செயல்களாக முடித்துக் கொண்டு அவர் புறப்பட்டார்,
குறித்த கல்லூரி ஆசிரியர் ஒருவர் - மணியம் மாஸ் டரை நன்கு தெரிந்தவர் - வழியில் எதிர்ப்பட்டார்.
*உங்கடை பெடியள் மிச்சம் மோசமாய் நடக்கிருன் கள். கேள்விப் பேப்பரை பறிச்சுக் கொண்டு ஓடுறது மட்டு மரியாதை இல்லாமல் கதைக்கிறது. வெருட்டி ஒது."

கோகிலா மகேந்திரன் ! 87
ஒரு எதிர்பார்ப்பு இவராவது தனக்குச் சாதகமாய்.
இந்தக் காலத்துப் பெடியளே அவங்கடை இஷ்டத் துக்கு விடவேணும் மாஸ்டர். காலத்துக்குத் தக்கபடி நாங்கள் மாறவேணும்."
"அவன்கள் சொன்னதும், இவர் சொல்றதும் ஒண்டு தான். இவர் கொஞ்சம் மரியாதையாய்ச் சொல்கிருரி அதுதான் வித்தியாசம்."
மீண்டும் தனிமை! மீண்டும் தோல்வி கல்லூரி அதி பரை அதிபர் அறையில் கண்டு கதைத் தார்.
நீங்கள் கோபம் வந்த உடனே யோசிக்காமல் செய் திட்டியள் போலை இருக்கு. இப்பத்தைப் பெடியளோடை மிண்டப்பிடாது."
ஆயிரம் ஈட்டிகள் ஏக காலத்தில் நெஞ்சைத் துளைக் 5 வில்லை. ஆத்மாவையே ஈட்டி முனைகளின் நர காக்கினியில் வாட்டுவது போல உணர்ந்தார் tዐጥ6iህ L-fተ • அதிபர்
கூடவா இதற்கு ஆதரவு
அதே இடத்தில் இருந்து தனடி மேலதிகாரிக்கு தனது நிலயை விளக்கிக் கடிதம் எழுதினர்
, , இசஞல் ஏற்பட்ட உளத்தாக்கத்தினல் இக்கல் லூரியில் தொடர்ந்து நோக்குநராகக் கடமையாற்ற முடி யவில்லை என்பதை உங்களுக்கு அறியத் தருகிறேன்."
கடிதத்தை ஒட்டி முகவரி இட்டார். அப்போது அங்கே தற்செயலாக வந்தாா மணியத்தாரின் கல்லூரி நண்பரும், அயற் பாடசாலை அதிபருமாகிய பொன்னம் Lu Guoth
படேய் மணியம் கேள்விப்பட்டேன் எல்லாம்."
** ub... tბ ... ჭ°

Page 48
88/நாளைய ஒட்டைகள்
படிக்கேக்கை இருந்த துணிவும் நேர்மையும் இப் பவும் உன்னட்டை இருக்கு . அந்த அறிவு. நேர்ம்ை. Siflarnear சந்தோஷமாயிரு க்கு எனக்கு.,
"அப்ப. நான் செய்தது சரியே.
“டேய் விசரா! பிழையெண்டு யார் சொன்னது? இப்பிடித் தான் எல்லாரும் இருக்கவேணும். gaipant g. படிக்கிறதிலும் சோதஇ வைக்கிறதிலும் என்ன அர்த்தம்? உன்ரை துணிவு. நான் பாராட்டிறனடா.1
ஈர விறகில் புகை பொங்கியது போல மணியத்தாரின் மனதில் ஒரு நிறைவு.
இன்னும் ஒரு மனிதன் இருக்கிருன். நாளைய எங்கள் சமுதாயம பற்றி நியாயமான அச்சம் கொள்ள, என் னைப் போல இன்னும் ஒரு மனிதன் இருக்கிருன் நான் தனி அல்ல.
"மணியம் நீயும் நானும் சொன்ன உவங்கள் கேட்க மாட்டாங்கள். சொல்லுறவை சொன்னல் கேட்பான்கள். நீ வா.
மணியம் மாஸ்டரின் மனம் இப்போது நிச்சலன மாய் இருந்தது அவர் எழுந்து பரீட்சை மண்டபத்தை நோக்கி நடந்தார்.
(14-7-85 ஈழநாடு €umrgrህዐ6ህዘክá) பிரசுரமானது

சாம்பல் படர்ந்த தணல்
Hதிய ஆசிரியர் வகுப்பினுள் நுழைந்த போது நான் எழும்பவில்லை என்பதில் களங்க மற்ற வியப் புக் கொண்டி ருக்க வேண்டும் குகநாதன். நான் ஒரு போதும் இவ் வாறு ஆசிரியர்களை அலட்சியப்படுத்துபவன் அல்லன் தான். என்னுடைய விழிகள் ஆசிரியரைப் பார்த்தும் பார்க்கா தவை போலக் கீழ் நோக்கி இருந்தன.
** டேப். சசி. Lig ff&# Fri GaunrayamLrrr......” நான் வரட்சியாகச் சிரித்தேன். **வரட்டன். வந்தால் என்ன இப்ப.”*
"எல்லாரும் எழும்பினமடா, நாங்களும் எழும் பு வம். g
நீ வேணமெண்டால் எழும்பன், என்ன என்னத் துக்குக் கூப்பிட்டுக் கொண்டு நிககி ரப்?"
எனது குரலில் ஒர் அசாதாரண அழுத்தம் இருந்தது எனக்கே வியப் பாய் இருந்தது.
புதிய ஆசிரியருக்கு மரியாதை தராமல் எனது பண் புப் பகுதியின் கதவைச் சாத் திக் கொண்ட போதும், பழைய நினவுகள் புகாமல் எனது மனக் கதவைச் சாத் திக் கொள்ள முடியவில்லை என்னுல் .
வயிற்றைக் குமட்டிய கசப்பு மேலே எழுந்து நெஞ் சில் வழிவது போல ஒரு உணர்வு!
நான் ஆரும் வகுப்பில் தான் இந்தக் கல்லூரிக்கு வந்தேன். அநத முதல் நாள்.

Page 49
90/ சாம்பல் படர்ந்த தணல்
யோகேஸ்வரன் மாஸ்டர் வகுப்பாசிரியராக வகுப் இறுள் துழைந்த போது என்ன மாதிரி அந்த உற்சாகத் துடன் எழுந்து “குட்மோனிங்’ சொன்னேன் அந்த உற் சாகம் . அந்த நம்பிக்கை . அந்த நல்லெண்ணம். சி. இப்போது தலையை வேகமாக உலுப்பிப் பெரு மூச்சு விட்டுக் கொண்டது நான் தான்
எனது 10ரமண்டையில் உண்மையான விஷயங்கள் உறைப்பதற்கு, ஐந்து நீண்ட. மிக நீண்ட வருடங் கிள் எடுத்திருக்கின்றன.
யோகேஸ்வரன் மாஸ்டர் சிரிக்கும் போது மொட்டு ஒன்று மெல்ல இதழ் விரியும் அழகும் கவர்ச்சியும் தென் படும். அந்தச் சிரிப்புத் தான் என்னை முதலில் கவர்ந்தது என்று சொல்லலாம். ஆல்ை வெறும் வெளித் தோற்றத் தில்ை மட்டும் ஆகர்ஷிக்கப்பட்டுப் போன குழந்தையாக, அல்லது "பேயனக" நான் இருந்தேன் என்று சொல்வ பி54ம் என்னல் ஏற்றுக் கொள் முடியவில்லை.
"கம்" மென்ற மல்லிகை வாசனை திடீரென்று கனதி இறுள் புகுந்து தொடுவது போல, அந்தச் சிரிப்பும் வெள் ாேவெளேரென்ற உ.ை யும், நேர்த்தியான தலை இழப் 4ந் தான் என்னைத் திடீ ரெனத் தொட்டன. என்பது உண்மை தான். நான் மறுக்கவில்லை. பின்னர். c நிகழ்வுகள்.
ஆங்கில பாடம் முடிவடைவதற்கான மணி அடிக்கும் திரும்பிப் பார்த்தால் அடுத்த சமய பாடத்திற்கு ஆயத் *மாக யேகேஸ்வரன் மாஸ்டர் வந்து காவல் நிற்பார் மணி அடித்த மறு விநாடி. திரும்பிப் பார்த்தால் அவரைப் பார்க்கலாம் என்ற நியதி. இந்த ஐந்து வருட காலத்தில் ஒரு நாள் கூட இந்த நியதி மீறப்பட்டதில்லை:
Lgs fFri மாணவர்களின் பெயர் கண்க் கேட்கிருர் போல் இருக்கிறது. பக்கத்தில் இருந்த குகநாதன் எழுந்து

சுோகிலா மகேந்திரன்/91
நின்று தன் பெயரைச் சொல்கிருன், தொடர்ந்தும் வேறு சில கேள்விகள். இப்போது என்னுடைய (p60AD. . . . .
"தம்பி. உம்மடை பேர்.? f 6... . . . . . . . . . . . .''
தம்பி, உம்மைத்தான் கேட்கிறன். பேரைச் Gcartrefi) லுமன்."
6ਸੇ ' நான் இருக்கபடியே கூறிவிட்டுத் தலையைக் குனிந்து கொண்டேன். என் நினைவுகள் அறுபடாத சங்கிலி:ாக.
அவர் சொல்லிக் கொண்டிருப்பார். "அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்,
அன்பே சிவமாவது யாரும்." நாங்கள் இது வரையில் எழுதி முடிக்கும் போது மணி அடித்து விடும். அடுத்க நாள் வந்து யாரையும் எதுவும் கேட்காமல் வெகு இயல்பாகத் தொடங்குவார்.
"...அறிகிலார் "அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே.
இது ஒரு நாளைய விதிவிலக்கு அல்ல. நியதியே அது வாய். வழக்கமே அதுவாய் ...,
வேறு எந்த ஆசிரியரிடமும் காணப்படாத இந்தப் பங்சுவாலிற்றியே என்னை அதிகமாய்க் *வர்ந்திருந்தது.
எந்த ஒரு நிகழ்வுக்கும் நேரம் தவரு தவராக, எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தன் கடமையைச் சரியாகச் செய்து முடிக்கத் தவரு தவராக யோகேஸ்வரன் மாஸ்டர் எனது மனதில் வளர்ந்திருந்த போது.
புது ரீச்சர் கரும்பலகையில் ஒரு கணக்கு எழுதியிருக் கிரு. குகநாதன் முதல் கேதீஸ்வரன் வரை இல்லாரும் அதைப் பார்த்து எழுகிச் செய்து கொண்டிருக்கிருர்சள், நான் எழுதவில்லை. என்ன எழுதி. என்ன செய்து..?

Page 50
92 / சாம்பல் படர்ந்த தணல்
ஆரும் ஏழாம் வகுப்புகளில் "ஏ" வகுப்பில் இருந்த நான் எட்டாம் வகுப்பின் ஆரம்பத்தில் "சீ வகுப்பிற்குத் தள்ளப்பட்டேன். அந்த வகுப்பிலே முதல்நாள் வேற்றுத் தெருவில் கால் வைத்து விட்ட உணர்வு தான் ஏற்பட் டது எனக்கு எலலா மாணவர்களும் கூடிக் கூடிக் கதைத் தார்கள். கூடிக் கூடி விளேயாடினர்கள் என்ன அவர்கள் சேர்த்துக் கொள்வதாயில்லே அது ஒன்றும் புதுமை அல்ல. வேடிக்கை அல்லது விபரீதம் என்னவென்றல் நான் வலி யவே சென்று அவர்களிடையில் புகுந்து கொண்டபே" தும் அவர்கள் என்ன விலக்கியே வைத்தனர்.
'உவர் "ஏ" வகுப்பாலை வந்தவர். பெரிய கொம்பு எண்ட எண்ணம்.”
*அங்கை ஒரு இழவும் தெரியாமல் தானே இஞ்சை தள்ளுப்பட்டுப்போஞர். பேந்தென்ன கொம்பு.???
**டே மச்சான். உவரை நாங்கள் மொனிட்டார் வைக்க விடப்பிடாது..?
"உவரை முதலாம் பிள்ளையா வரவும் விடப்பிடாது
டேய் ரவி. நீ கவனமாய்ப் படி..".
நான் விலகி ஓடவே விரும்பினேன். ஆஞலும் நான் அஞ்சியோ அல்லது அருவருத்தோ விலகி ஒட முடியாத நிர்ப்பந் தம் இருந்தது. யோகேஸ்வரன் மாஸ்டர் வந்தார்.
அன்பைப் பற்றி அரைமணி நேரம் பிரசங்கம் செப் தார். எல்லாரும் எல்லாரையும் அன்புடன் நடத்த வேண் டும் என்ருர். யாரும் யாருடனும் G34, nru tib (3. u Tu- i Fr. U- (* தென்றா. எந்த ஒரு மாணவனுக்கும் ஏதும் பிர்ச்சினை இரு கதால் தன்னிடம் தனிமையில் வந்து சொல்லலாம் என்ருர்,
உதடும் தொண்டையும் காய்ந்து plator fiat 5 air தொய்ந்து போன நிலையில், ஒருநாள நான் அவரிடம் சென்று தனிமையில் எனது பிரச்சினையைக் கூறினேன் எனது மனப்பதிவுகளைப் புரட்டி அவரிடம் சொல்லும்

கோகிலா மகேந்திரன்/93
போது, ஒருவேளை நான் மிகவும் பாதிப்படைந்து காணப்
பட்டிருக்கிலாம்
"என்னுலை அந்த வகுப்பிலை சரிக்கட்ட ஏலாது
Gigiri...''
என்று அழாக் குறையாக நான் அவரிடம் சரண் அடைந் தேன்.
அவர் மிக இயல்பாக அந்த வகுப்பில் குகநாதனைக் கூப்பிட்டார்.
'இவளை இனிமேல் உன்ரை நண்பன் போல நீ நடத்த வேணும். உன்ரை ஆக்களிட்டையும் சொல்ல வேணும், நான் நாளைக்குக் கவனிப்பன்?
என்று கட்டளே இடுவது போலவே சொன்னர். குக நாதன் பணிந்து விட்டான்.
அப்போது குகநாதனிடம் தோன்றிய ஒரு புன்முறு வல் அந்தப் புன்முறுவலே ஒரு அழுத்தமான நட்புக்குப்
பாதை காட்டி விட்டது.
இன்று. குகநாதன் எனக்கு ஒரு சிறந்த நண்பன் அந்த வகுப்பின், "ஹீரோ” குகநாதன் என்பதைப் புரிந்து தெரிந்து கொண்டு அவனைக் கொண்டு விடயத்தைச் சுலபமாயும் வெற்றிகரமாயும் முடித்த திறமை. யோகேஸ்வரன் மாஸ்டரைப் பற்றிய "இமேஷ் மேலும் ஒருபடி உயர்ந்து பதிந்து கொண்டது,
புது ரீச்சர் கணக்குச் செய்தவர்களைக் கொண்டுவரும் படி கூறி கொப்பிகளை திருத்திக் கொடுக்கிருர், நான் கொண்டு போகவில்லை. செய்தால் தானே கொண்டு போகலாம்? நான் செய்ய மாட்டேன்!
ஏதாவது ஒன்று தெரியவில்லை என்ருல். அது எது வாக இருந்தாலும், யோகேஸ்வரன் மாஸ்டரிடம் கேட்க லாம். பேச்சுப் போட்டிச் தீர்லல்சாரில், நான் அவரிடம் பேரளுல் அவர் முதலாம் དཚ་ எடுக்கக்கடிய விதமாய்

Page 51
94சாம்பல் படர்ந்த தனல்
பயிற்றி விடுவார். நாடகப் பயிற்சி அதை விடத் திறம் பாட விடயங்களிலே சந்தேகம் இருந்தால் கூட அவரி டம் கேட்க முடியும். ஒரு சமய பாட ஆசிரியருக்கு விஞ் ஞான கணித அறிவு கூட இருந்தது எனக்குப் பல காலம் வியப்பாகவே இருந்ததுண்டு. மனித உறவின் மிக நுட்ப மான பகுதிகளைத் தொட்டுக் காட்டி அவர் எழுதும் சிறு கதைகள் அதைவிட அதிசயிக்கத் தக்கவை
பத்திரிகையிலே யோகேஸ்வரன் மாஸ்டருடைய பெயர் அடிக்கடி வரும் ஊரிலே சனசமூக நிலையத்தின் செய லாளராக இருந்து அவர் ஆற்றும் சேவைகள் பற்றியும், பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக அவர் புரியும் பணிகள் பற்றியும். நான் அடிக்கடி இவற்றை வாசித்து மகிழ்ந்திருக்கிறேன்.
"எங்கடை யோகேஸ்வரன் மாஸ்டர் எவ்வளவு பெரிய ஆள்.? நாள் செல்லச் செல்ல இவரைப் போலவே ஆக வேண்டும் என்ற நப்பாசை எனக்குள் ஊறலெடுத் திருந்தது.
**கணக்கு இன்னும் காட்டாத ஆக்கள் எழும்புங்கோ" புதுரிச்சர்தான் கத்துகிருர், நான் எழும்பவில்லை.
'தம்பி. அந்த மூலையிலே இருக்கிறவர். நீர் காட் ug:"Y GLumre.Gurrr”
**@తుడి)**
இருந்தபடியேதான் பதில்
*ereir snrt"...G... - didahy?'
*செய்யத் தெரியரது.”
"கொப்பியைக் கொண்டாரும் பாப்பம்."
*கொப்பி கொண்டரேல்லை.
ஏதோ எண்ணத்தில் அவர் எழும்பி.வேருெரு கணக்கு எழுதுகிருர் எனது எண்ணங்கள் கலைவதாய் இல்லே

கோகிலா மகேந்திரன் /95
அன்று மெதுவாக மழை பெய்திருந்ததில் ஒழுங்கை யெல்லாம் ஒரே சேறும் சகதியுமாய் இருந்தது பாடசாலை விட்டுவிட்ட உற்சாகத்தில் வீட்டை நோக்கி வேகமாக விட்டேன் சைக்கிளை சிறிதே சரிவான ஒரு இடத்தில்.
"Fpir- sat... &..."" தொம்மென்று. விழுந்தேன் சேற்றில், சைக்கிளை ஒரு வாறு நிமிர்த்திக் கொண்டு பார்த்தால். முழுதும் களி மண்.
என்னைக் கடந்து சென்ற மாணவர்கள் பலரின் முகத் தில் ஞானச் சிரிப்புக்கள்
"டேய். இஞ்சை பாற்ரு சசியை.
ஊனமடைந்த மிருகம் போல நான் தொண்டி நொண்டி சைக்கிளையும் தள்ளிக் கொண்டு நடக்கத் தொடங் குகையில், பின்னல். யோகேஸ்வரன் மாஸ்டரி வந்தார்.
"என்ன தம்பி சசி. விழுந்திட்டீர் போல இருக்கு." "ஒம். சேர். *சிலிப்” பண்ணிட்டுது..? அவர் தனது சைக்கிளை விட்டு இறங்கி விறுவிறென்று தனது சேட்டைக் கழற்றினர்
"இத் தாரும் இந்த சேட்டைப் போடும் நான் வயது GSur 27 gair ?aJ y b G3 o 3 ay r szol G... u to 55 v r b - Brito aoŭ 3? டிப் போனல் எல்லாரும் சிரிக்கப் போயினம் . th ... . . இந்தாரும்.”
சேறு நனேந்த சேட்டைக் கழற்றி விட்டு நான் அவர் தந்த சேட்டை வாங்கி அணிந்து கொண்டேன்.
இதன் பின்னர் யோகேஸ்வரன் மாஸ்டர் ஒருமனிதரி என்பதை விட, ஒரு "தெய்வம்" என்பது போலவே எனக் குள் ஒரு நினைவு.
எனது நம்பிக்கைகள் யாவும் பூச்சி வெட்டிய வெளி டிச் செடி போல விறுவிறென்று வாடிப் போகும் படிசமீ பத்தில் அந்தச் சம்பவம் நடந்தது.

Page 52
96/ சாம்பல் படர்ந்த தன்னல்
சிறிய கொட்டிலாக இருந்த யோகேஸ்வரன் மாஸ் டரி வீட்டில், பெரிய தோர் இரண்டு மாடிக் கட்டிட வீட் டிற்கான அத்திவாரம் இடப்பட்டது முதலே இந்த மனச் சறுக்கல் ஏற்பட்டது. அத்திவாரப் இடப்பட்டது மட்டு மல்ல இரண்டே மாதத்தில், அங்கு ஒரு பெரிய மாளிகை எழுந்து கம்பீரமாய் நின்றது.
குகநாதன் ஒரு நாள் சொன்னன். *"சனசமூக நிலையத்திலை கொள்ளையடிச்ச காசாம்.? தொடர்ந்து,
"பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலை தலைவரா இருந்து லட்சக் கணக்கிலை கொள்ளையடியாம்...??
"சனமெல்லாம் திட்டுதாம்." "ஒண்டுக்கும் கணக்கு வழக்கு ஒழுங்கா வைச்சிருக் Ossiphourth...'"
.பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகத்துக் கெண்டு சேத்த காசுகளும் வீட்டுக்குள்ளை போயிட்டுதாம்." என்று பல விமர்சனங்கள் . பலர் விமர்சனங்கள் முதலில் நான் நம்ப மறுத்தேன்.
பாடசாலையில் எமது வகுப்பு நவராத்திரிப் பூஜை செய்த போது, மாணவர்களிடம் சேர்த்த காசில் செலவு போக, நாலு ரூபா மிச்சம் என்று. அதைப் பத்துப் பத்துச் சதமாக மா ஃறி நாற்பது மா ன வ ரு க்கு ம் கொடுத்த யோகேஸ்வரன் மாஸ்டர் இப்படி என்ருல்.
ஆனலும் ... ?
"எறும்பூரக் கற் குழியும் என்பது போல எல்லாரும் மீண்டும் மீண்டும் சொல்லும் போது.
எனக்கும், அடி வயிற்றை ஏதோ ஒன்று முறுக்குவது போல இருக்கும் எனது கோபுர உயரமான விம்பத்தைத் திடீரென்று குழி தோண்டிப் புதைத்து விடுவது எப்படி? யோகேஸ்வரன் மாஸ்டர் முதல் நாள் வகுப்பினுள் நுழைந்த போது என்ன மாதிரி அதீத உற்சாகத்துடன்

கோகிலா மகேநிதிரன் 197
எழுந்து குட்மோரீனிங்" சொன்னேன்? அந்தஉற்சாகம். அந்த நம்பிக்கை. அந்த நல்லெண்ணம் எல்லாம் இப் படித் திடீரென ஒரு நாள் கருகிச் சாம்பக் கூடும் என்று நான் கனவு தானும் கண்டதில்லை.
நான் பக்கத்தில் இருந்த குகநாதனச் சுரண்டிக் கேட்டேன், டேய். அப்ப இவ்வளவு நாளும் எப்பிடி யோகேஸ்வரன் மாஸ்டரை இந்தச் சனம் நம்பினது?”
"அவர் கணக்கு வழக்கு வைக்காட்டியும் காசை வீட்டை கொண்டு போகேல்லை எண்ட நம்பிக்கையை அந்தக் குடிசை வீடு ஏற்படுத்திச்சுது. இப்ப அது மாளி கையா மாறிட்டுது "பாங் எக்கவுன்ற்’ தெரிஞ்சிட்டுது.” இனம் புரியாததோர் சறுக்கல் என் மனதில் மீண் டும் ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியாதிருந்தது
**டேய். அப்ப." வசனத்தை முடிக்காமலே முன்னுல் நிமிர்ந்து பார்த் தேன்.
த புதிய ஆசிரியை என்னையே சில கனம் வெறித்துப் பார்த்துவிட்டு,
நானும் வந்த நேரம் தொடக்கம் பார்க்கிறேன். நீர் எனக்கு மரியாதை தாறதாக் கானேல்லை. இருத்த இடத் திலையே இருந்து எதிர்த்துக் கதைச்சுக் கொண்டு இருந் தீர், கணக்கும் செய் ரீயல்லை. சரியெண்டு விட்டன். இப்ப பக்கத்திலை இருக்கிறவரையும் கனக்குச் செய்ய விடாமல் கதைச்சுக் குழப்பிக் கொண்டிருக்கிறீர். எழும்பி வகுப்புக்கு வெளியிலை போம். எழும்பும் கெதிலே.
என்று இரைந்தார். நான் எந்த வித எதிர்ப்பும் காட்டாமலே எழும்பி வகுப்புக்கு வெளியே வருகிறேன். வந்து நின்று மேலே வானத்தை நிமிர்ந்து பார்க்கிறேன். வானம் மழை மேகங்களோடு குழம்பாகிக் கிடந்தது. என்னிடமிருந்து ஒலேசான ஒரு "விம்மல்" தெறித்து மீண்டது.
(1985 யூலை தொண்டன் இதழில் பிரசுரமானது)

Page 53
பட்டங்கள் மீண்டும் பறக்கும்
காற்றேடு கைகுலுக்கும் பனைமரச் சலசலப்பு விரிசல் காடான வானம்! வெம்பிய மனதின் வெம்மை வீச்சாக வந்து விம்ம லாய் வெடித்ததில் கண் நிறைய அழுகை வந்தது பொன் னுப்பிள்ளைக்கு.
'பொங்கல் என்ன பொங்கல் 6T6traig, p" நிறையப் புலம் - முழங்கால் உயரத்திற்கக் குதிரை வாலிப்புல் - பொங்கல் நாளின் நாலரை மணி
சீனியம்மானுக்கு முன்ஞல் குந்தியிருக்க பொன்னுப் பிள்ளை, சேலைத் தலைப்பை எடுத்துக் கண்ணைத் அடைத் துக் கொண்டாள். ༧
"மெய்யே பொன்னுப்பிள்ளை. உன் ரை மேை அவங்கள் பிடிச்சுக் கொண்டு போய் இண்டைக்கு எத் தினை நாள். தெரியாமல் கேட்கிறன். g
"பொக்குவாய் நிறைந்திருந்த புகையிலையைப் பின் புறம் திரும்பித் துப்பிவிட்டுத் தன். சந்தேகத்தைத் திரை நீக்கம் செய்கிருர் சீனியம்மான்,
*சனியோடு சனி எட்டு, ஞாயிறு ஒம்பது, திங்கள் uš957... இண்டைக்குப் பத்து நாளா வீட்டிலை உஆல வைக்கேல்லை. அம்மாள். இரவிலே ஒருத்தரும் கண்ணுேடை கண் மூடுறேல்லை.

கோகிலா மகேந்திரன்/99
தேன் கூட்டைப் போலச் சுறுசுறுப்பாய் இருந்த நிறையப் புலத்தைஒரு புறை சுற்றிப் பார்த்தார். சீனி யம்மான், மேற்குப் புறப்பன்னைப் பற்றைக்குப் பின்னல் ஒரு நாலு வயதுப் பையன் "வெளிக்கு" இருந்து கொண் டிருந்தான். அவனுக்கு முன்னுல் ஒரு ஆறு வயது கையிலே கொப்பிக் கடதாசியில் செய்த ஒரு ஆறு மூலைப் பட்டத் துடன் ஒடிக் கொண்டிருந்தது.
இவர்களுக்கு வடக்கே பொங்கல் பட்டம் ஏற்றும் பெரிய கட்டம்
இங்கிலாந்தில் இருந்து இரண்டு வருடத்திற்கு முன் இளைய மகன் அனுப்பிய "சுவேற்றரை இழுத்து விட்டுக் கொண்டார் அம்மான், V
**ஆம்பிளைப் பிள்ளையன் எல்லாம் வெளிநாட்டிலை இநக்கிறது எவ்வளவு நிம்மதி?* என்று மனதிற்குள் நிக்ாத்துக் கொண்டார்,
"பங்கை பார் அந்த மூலையை..!" "பீநாறிப் பத்தை."
**போன வருசம் நான் உதை அடியோடை வெட்டி விட்டனன். இப்ப பார் போன வருசத்தை விட மூண்டு மடங்காய் வளந்து நிக்குது."
சளி பிடித்த மூக்குடன் - சீறிச் சீறி - முக்கி முக்கிசி சொன்னர் அம்மான் பொன்னுப் பிள்ளைக்குப் புரிந்ததாய்த் தெரியவில்லை.
ஆ. என்ன சீனியர்? என்ன இந்தப் பக்கம்?" என்றபடி வந்தார் நாகலிங்க மாஸ்ட7, - சிரிப்பை அடக்கிப் - அன்னன் கயாக்கி, புன்னகைக்குள் சிரிப்பு அடங்காமல் பொங்கியதில் வாயெல்லாம் பல்லாக அவர் \தோன்றினர்.
**ந்ான் எந்த நாளும் இந்தப்பக்கம் வாறஞன் நீதான் இண்டைக்குப் புதிச7ய் வாகுய். அது கிடக்கடி

Page 54
100/பட்டங்கள் மீண்டும் பறக்கும்
உனக்கென்ன வயது? எனக்கென்ன வயது? நீ என்ன மாதிரி என்னைச் "சீனியர் எண்டு கூப்பிடலாம்???
இப்படிக் கேட்டார் சீனிவாசகம் என்ற சீனி அம்மான் "நீங்கள் விசயம் விளங்காமல் கதைக்கிறியள். நீங்கள் arrair gigs dor thah) & afuit (Senior) The oldest man in this village (iš 5 apartifiéão LÁ5 GAuuugi shqeu uso Goîstř) அதுதான் சீனியர் எண்டு கூப்பிட்டனன்."
என்று நாகலிங்கம் மாஸ்டர் தன் வரிமையான நகைச்சுவைப் பாணியில் பேசிய போதும் பொன்னுப் பிள்ளைக்குச் சிரிப்பு வரவில்லை. இதைக் கவனித்த சீனி ubtonrcär
**பொன்னுப்பிள்ளை பெடியனைப் பற்றிப் பெரீசாக் கவலைப்படுரு. அதுதான் கதைச்சுச் கொண்டிருந்தனுன்." என்ருர்,
"நான் எந்தக் கோயில்லை பேச்சுக்குப் போனலும் இப்ப உதைத்தான் சொல்லிறனுன் துன்பத்தை நீயே தேடிக்கொள் யாராவது அதை உனக்கு ஏற்படுத்தினுல் அதற்காக நன்றி செலுத்து. ஏனெண்டால் துன்பந்தான் உன்ரை மனதை வலிமைப்படுத்தும் எண்டு ஒவ்வொரு சமுதாயத்துக்கும் அது பொருத்தம். நீ மனவருத்தப்ப டாதை அக்கா எல்லாம் நல்லதுக்குத்தான் நடக்குது.”
ஆசிரியர்களின் குணத்தை அப்பட்டமாய்க் கொண்ட நாகலிங்க மாஸ்டர் ஒரு குட்டிப் பிரசங்கமே செய்து விட்டார்.
கைக்கு வராத மேகங்களைத் தன் பூஞ்சைக் கண்ணுக் குள் அடக்க முயன்று கொண்டிருந்தார் சீனி அம்மான் திடீரென அழும்பிய "கொக்கன்’ பட்டத்தின் "விண்’ கனிரென்று கேட்டது.
"இந்தளவு இன வட்டனுகளும் இதிலை நிண்டு பட் டம் விடுறதைப் பாக்க எனக்கு வயித்தைப்பத்தி எரியுது.

கோகிலா மகேந்திரன் /101.
என்ரை பெடியனும் வருஷம் வருசம் ஆளளவு உயரச் செம்பிராந்தன் ஏத் துறவன். அண்டைக்கும்."
பொன்னுப்பிள்ளையின் ஒவ்வொரு சொல்லும் துன்பப் பாணியில் புதைந்து ஊறிப் பிய்ந்து வருகின்றன. அவளது தொண்டையில் வலியோடு கூடிய வரட்சி.
"குட்டை மாட்டையும் நெட்டை மாட்டையும் ஒண் டாச் சேத்து ஏர் பூட்டின மாதிரி, ஒண்டாச் சேர ஏலாத விசயங்களை நாங்கள் சேக்கப் பாக்கிறம். ஆன, சேர வேண்டிய துகளைச் சேக்கிறமில்லை. இதுதான் பிழை." விடயத்தைப் பொதுமைப் படுத்திப் பொன்னுப்பிள் ஃாயைத் திசை திருப்ப முயன்ருர் நாகலிங்க மாஸ்டர்.
வாடைக் காற்று மிகி வேகமாய் அடித்துக் கொண்டி ருந்தது!
தங்க பிரேம் மூக்குக் கண்ணுடியைத் தூக்கி விட்ட படி எழுத்து நின்ருர் சீனியம்மான் வேட்டியைத் தூக்கி முழங்காலுக்கு ஒரு அடி மேலே மடித்துக் கட்டிக் கொண் டார். உயர்ந்து நின்று அவரது முழங்கால்களை வருடிய புல்லுக் கதிர்களைத் தடவி விட்டுக் கொண்டார்.
'முந்தி நாங்கள் இந்தக் காணிக்கை தான் வரகு போடுகிறது தைப பொங்கலுக்குப் பட்டம் வி.வரேக்கை இப்படித் தான் வரகுக் கதிர் காலை முட்டும் அது ஒரு சந் தோஷந்தான் இப்ப எல்லாம் விட்டிட்டம்.ம்.”
திப்பி திப்பியாய் இளமைக் காலச் சம்பவங்கள் பல நெஞ்சில் எழுத்து நிறைந்து வரப் பெருமூச்சு விட்டுக் கொண்டார் அம் மான்.
"இப்ப பேந்தும் அந்தக் காலம் வரப்போகுது . எல் லாக் காணிக்கையும் மரவெள்ளி வரகு குரக்கன் போடச் சொல்லித்தான் பெடியளும் சே8ல்லுருங்கள். ஆஞல் ஆர் செய்யிறது உங்களுக்கு?"
árveňry ở Lorrariosio

Page 55
102/பட்டங்கள் மீண்டும் பறக்கும்
வெளி நாடுகளில் குடியேறிவிட்ட தனது பிள்ளைகள் இங்கு வருவதோ, இந்தக் காணிகளில் பயிர் செய்வதோ, சாத்தியமில்லை என்பதை வேதனையுடன் நினைத்து மாஸ் டர் கூறியதை ஒப்புக் கொண்ட அம்மான், நிமிர்ந்து பார்த்தார்.’
'அங்கற்று. 40...... உன் ரை ஆறு மூலை தலை
esâsığır. Gölü. அதுன்ரை வால். நீளம் காணு தடா. அதை வலி. வலிச்சுக் கொண்டு வாடா. நான் வால் கட்டித் தாறன்." என்ருர்,
‘பூக்ன? என அழைக்கப்பட்ட புவனசிங்கம் அப்படியே பட்டத்தை வலித்துக் கொண்டு வந்தான்.
வாற வருசம் நாங்கள் இந்த ஊரிலை ஒரு பட்டம் ஏத்தல் போட்டி வைக்கப் போறம். The Odest man of the village declaied open the bridge (6).J. TupéSá) வயது கூடிய மனிதர் பாலத்தைத் திறந்து வைத்தார்) எண்டு அண்டைக்கு எங்கடை பள்ளிக் கூடத்திலே சுந்த ரலிங்க மாஸ்டர் "இங்கிலிஷ்" படிப்பிக் கேக்கையே எனக் கொரு நினைவு வந்திது. அந்த விழாவுக்குச் சீனியம்மான் தான் பிரதம விருந்தினர். நாங்கள் வயதுக்கு மூத்த ஆக்களைக் கெளரவிக்க வேணும். என்ன சொல்லுறியள்
ythin itai p'
கேட்டார் மாஸ்டர்.
இதைக் கேட்டுச் சிரித்த சீனியம்மானின் மேலே போன உதடு பற்களில் ஈரம் இல்லாமையால் நடுவழி யில் நின்று கொண்டது. பின்னர் அதைக் கஷ்டப்பட்டுக் கீழே இறக்கினர் அவர்.
இப்பொழுது கடற்கரைப் பக்கமிருந்து பதினைந்து
இருபது வெடி ஒலிகள் நிலம் அதிரும் உரப்புடன்-எழுந்து வந்தான்.

OsmrRaior ue0a Arah/10)
"நாங்கள் முந்கிச் சீனவெடி தானே கொழும்தித் தைப் பொங்கல் கொண்டாடுறஞங்கள். இப்ப பாரன் என்ன. விசேஷமான வெடியள் எண்டு. "p a
கூறிக் கொண்டே உடம்பில் நசநசத்த வியர்வையைச் சால்வையால் துடைத்துக் கொண்டார் அம்மாள்
வெள்ளிப் பூண் போட்ட பிரம்பை நிறுத்திப் பிடிதித் ப்டியே ஆகாயத்தில் தெரிந்த பட்டங்களை எண் ண தீ தொடங்கினர்.
"பாம்பன், ஆறுமூலை, பிராந்தன், செம்பிராந்தன், கொக்கன், வெளவால், படலம் கறுப்புச் சொக்கப் பிராந் தன், சிவப்பு எட்டு மூலை, மணிக்கூட்டுப் பட்டம், ஆள்ப் பட்டம், அங்காலை ஒரு வெள்ளைப் பெட்டிப் பட்டம்" தெற்கை ஒரு நட்சத்திரப் பட்டம். கு. இந்த முறை ஏராளம் பட்டம். எனக்கு இதைப் பார்க்க வலு சந்தோஷம், எங்கடை ஊர்ப் பெடியள் எல்லாம் நிறை யப் புலத்துக்கை கூடிக் கொடி ஏத்திறது ஒரு சந்தோ வந்தான். a' gh
அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு பட் டம் தலைகுத்தி விழுந்தது. பிறகு ஒன்று, பிறகு இன் னென்று. சற்றுப் பொறுத்து வேருென்று - இதற்குள் பத் துப் பன்னிரண்டு பட்டங்கள். விழுந்து விட்டன.
"என்ன சங்கதி? எல்லாம் விழுது?" என்ருர் மாஸ்டிர் "காத்துக் கூடிப் போச்சு. காத்துக் கூடிஞலும் பட் டம் நிக்காது. குறைஞ்சாலும் நிக்காது. எதுவும் அளவா இருந்தாத் தான் நல்லது. g) 9
என்ருர் அம்மான். மேக மூட்டத்தில் இதுவரை மறைந்திருந்த சூரியன் உற்சாகமின்றி அரை மனதுடன் இப்போது வெளியே தெரிந்தான். ,
பொன்னுப்பிள்ளை தொடர்ந்து புலம் பிக் கொண் குத்தாள். அதை மாற்ற முடியாமல் இப்போது அதைச்

Page 56
104/பட்டங்கள் மீண்டும் பறக்கும்
சகிக்க அல்லது ரசிக்கத் தொடங்கியிருந்தனர் அம்மா ணும் மாஸ்டரும்!
சட்டென்று காற்றில் குளிர் கலந்த மாதிரி இருந்தது “gGuari gCBuurt'" பட்டம் ஏற்றிக் கொண்டிருந்த கும்பலில் ஒரு சல சலப்பு:
"ஐயோ! வாழுங்கள் என்ருெரு குரல். "ஐயோ! அவங்கள் வாருங்கள்" ஏகோபித்து இரைச் சலாய் பல குரல்கள்,
இரண்டு நிமிடந்தான் சென்றிருக்கும்! நிறையப் புலத்தில் ஒரு ஈ காக்காவும் இல்லை! நாகலிங்க மாஸ்டர் வேலிக்கு மேலால் பாய்ந்து விழுந்து ஓடியதையும், தன் பருத்த தேகம் குலுங்கி அசைய பொன்னுப்பிள்ளை அரக்கி அரக்கி ஓடியதையும் பஞ்சன், பூனை, சூட்டி, உதச்சி இவர்கள் எல்லாம் கால் தரையில் படாமல் ஓடியதையும் பார்த்தும் சீனியம்மான் ஏனே ஒடவில்லை. அவர் ஓட விரும்பவில்லை என்பதை விட அவரால் ஓட முடிவில்லை என்பது அதிகம் பொருந் தும்!
இரத்த மெல்லாம் வடிந்து பூமியில் இறங்கிக் கொண் டிருப்பதைப் போன்றதொரு பலவீனத்துடன் சீனியம் மான் புற்றரையில் படுத்து விட்டார்.
"வரட்டன் . . வந்தாப் பிறகு பாப்பம்." நினைத் Så GodsmressàrLrrrř. ,
"ஒண்டு, இரண்டு, மூண்டு, தாலு. ஆறு, எட்டு பத்து. இருவது, முப்பது. அப்பாடி ஒரு நிமிஷம் போட்டுது. ஒருத்தரையும் காணேல்லை."
மெல்லத் தலையை உயர்த்திப் பார்த்தார்! ஒருவரும் இல்லை! எழுந்து உட்கார்ந்தார்! ஒருவரும் இல்லை! எழுந்து நின்று நாலு புறமும் திரும்பிப் பார்த்தார் ம். ஹீம். ஒருவரும் இல்லே!

கோகிலா மகேந்திரன்/103
கள்ளிப் பற்றை மறைவில் இருந்து பஞ்சனும், பூனே யும் வெளியில் வந்தனர்.
**டேய். ஒண்டும் இல்லையடா..."
சில நிமிடங்களில் சூட்டியும், குட்டியும், உதச்சியும் பட்டங்களுடன் தோன்றினர்.
"டேய். உவங்கள் சும்மா கத்தியிருக்கிருங்கள்.”
**னடமச்சான். நான் கையிலை வைச்சிருந்த கொக் கணையும் விட்டிட்டு ஓடிட்டன் அது இம்மடைக்கு அள வெட்டிச் செம்மைக்குப் போயிருக்கும்."
"நல்ல காலம் என் ரை பட்டம் உந்த அண்ணவொண் ஞவிலை கட்டி விட்டது."
உடல் வியர்க்கவும் உள்ளம் பதறவும் தான் தனியாய் நின்ற அந்த ஒரு நிமிடத்தை நினைத்துப் பார்த்தார் சீனி யம்மான்.
"என்னவாம்? ஏனும் பெடியள் ஒடினவங்கள்??? என்று கேட்டுக் கொண்டே பக்கத்துக் காணிப் பனை மறைவிலிருந்து வெளியே தோன்றி அருளினர் மாஸ்டர்.
"கதிரன் அந்த நாகதாளிப் பத்தைக்கை பாம்பைக் கண்டிட்டு ஐயோ எண்டானம், அந்த நேரம் முேட்டாண் லொறி ஒண்டு போன தாம். லொறி போற சத்தத்தையும் ஐயோவையும் ஒரு மிக்கக் கேட்ட உடன "ஐயோஜீப்" எண்டானும் பஞ்சன். "ஐயோ வாருங்கள் எண்டாகும் உதச்சி."
என்று சொல்லித் தன் பொக்கை வாய்ச் சிரிப்பைச் சிந்திஞர். அம்மான்,
தீடீரென்று ஆழமான சிந்தனைக் கோடுகள் அம்மா னின் முகத்தில் தோன்றின.
"பங்கை பார் பொன்னுப்பிள்ளை. முழங்கால் உய ரப் புல்லு உந்த 'நேருக்குப் படிஞ்சு ஒரு பாதை வந் திட்டுது: ஏன் சொல்லு பாப்பம்." என்ருர்,

Page 57
106/பட்டங்கள் மீண்டும் பறக்கும்
ஒ. நீங்கள் உந்த மிதியடிக் காலோடை எந்த நாளும் நடந்து நடந்து அந்தளவு புல்லும் செத்துப்போச்சுது."
"ஒரு நாளைக்கு மாத்திரம் நான் மிதிச்சிருந்தா, அது அந்த மிதிப்பையும் தாங்கிக் கொண்டு நிமிந்து நிக்கும். ஒவ்வொரு நாளும் திருப்பித் கிருப்பி ஒரே இடத்திலை மிதிக்க. அதுகள் செத்துப்ாேச்சுது."
பொன்னுப்பிள்ளை இதன் உட்கருத்தைப் புரிந்து கொள் ளக் கூடிய அளவு நுண்மதி பெற்றவளாய்த் தோன்றவில்லை அவள் நாகதாளி முள்பட்டுக் கிழிந்துபோன பஞ்சனின் பட்டத்திற்குத் தானும் சேர்ந்து ஒட்டுப் போட்டுக் கொண் டிருந்தாள்.
"இப்ப இஞ்சை நடந்த விசயத்தைப் பாத்தார். நீ முதல் சொன்ன கருத்துப் பிழை போலை கிடக்கு நாக லிங்கம்" என்ருர் அம்:ான்.
“முந்தி எங்கடை ஊரிலை நுளம்புக்கு டி.டி.ரி அடிக் கிற வங்க ள் இப்ப அடிக்கிறேல்லை. ஏன் தெரியுமோ அம்மான்...???
"தெரியேல்லை சொல்லு."
"இப்பத்தை நுளம்புகள் அந்த மருந்தைத் தாக் குப்பிடிக்கத் தக்கதாய் இசைவாக்கம் பெற்றிட்டுதாம். அண்டைக்கு இவன். சயன்ஸ் படிப்பிக்கிற கோபி சொன்ன வன். அதைப்போலத் தான்.நான் சொன்ன கருத்துத்தான் சரிஒரு துன்பம் வந்தா .அந்தத்துன்பத்துக்குப்பிறகு அதைத் தாக்குப்பிடிக்கக் கூடிய ஆக்கள் வருவினம். நீங்கள் இருந்து பாருங்கோ." என்ருர் நாகலிங்க மாஸ்டர்.
பல்த்த காற்றின் மத்தியில்.இப்போது பட்டங்கள் மீண்டும் பறந்து கொண்டிருக்கின்றன!
(நீர்ப்பாசனத் திணைக்களத் தமிழ்ப் பணபாட்டுக் கிழ கம் அகில இலங்கை ரீதியில் நடத்திய சிறுகதைப் போட் டியில் பரிசு பெற்றது. பேரருவி- ଦୃଢ଼ ଓ ଶୀol. 1985)

பிரசவங்கள்
வெளியே வீசிய நவம்பர் மாதக் குளிர் காற்றில் உடல் சில்லிட்டது. வானத்து முகில்கள் மழை பெய்யலாமா என்று தங்களுக்குள் குசுகுசுத்துக்கொண்டன. அந்தக் குசுகுசுப்பின் ஒலி படிப்படியாக அதிகரித்து, மெல்லிய இடி ஒலியாய்க் கேட்கத் தொடங்கியது.
இரண்டு மணி நேரம் அவகாசம் இருக்கிறதென்று உட்கார்ந்தேன். ஒரு சிறுகதை எழுதிவிடலாம். மனதில் சிந்தனை பொத்துப் பொத்தென்று ஓடி வருகிறபோது, அமர்ந்து எழுத நேரமில்லாமல் இருக்கின்றது. நேரம் எப்போதாவது அரிதாய்க் கிடைக்கிறபோது மூளை மரத்து விடுகிறது. இது என்ன பொம்மலாட்டம் ?
சீ. இன்டைக்கு எப்படியும் ஒரு கதை எழுதியே ஆகவேணும்
பேணுவைக் கையில் எடுத்து விட்டேன். எதைப்பற்றி எழுதலாம்? ஒரு மனிதனைப் பற்றி எழுதலாம்? மனிதனைப் பற்றித்தானே எழுத வேண்டும்? பின்னே என்ன குரங் கைப் பற்றியா எழுதுவது? இது என்ன குரங்கு மனம்?
அப்படியல்ல. ஒரு சாதாரண மனிதனின் புத் தி போகும் விதத்தைப் பற்றி இந்தச் சமுதாயம் இப்படிப் பட்டி. மனிதனைத்தான் பிரசவிக்கும் என்ற உயர்ந்த தத் துவத்தைப் புரிந்து கோள்ளிக் கடியதாய்.

Page 58
108/பிரசவங்கள்
*நான் பெரிசு. இவன் என்ன விடக் குறைவு?? என்று செயற்படுகிற ஒருவனைப் பற்றி?
"சாதிப் பிரச்சனையை விட்டால் இவைக்கு வேறை கதி இல்லை." என்று சொல்வார்கள். புதிதாய் ஏதும்.
பத்து வருடத்திற்கு முன் தான் பேணு தூக்கியபோது எதை எப்படி எழுத வேண்டும் என்ற தீர்மானங்களைவிட நம்பிக்கைகளே அதிகமாய் இருந்தன.
காலம் செல்லச் செல்ல எனக்கென்று ஒரு முறை ஒரு வடிவமைப்பு, ஒரு நடை, ஒரு தேடல், ஒரு கொள் கைப் பிடிப்பு எல்லாம் இயல்பாய் அமைந்து விடும் என்று எதிர்பார்த்தேன். இன்று " அண்ணளவாக " அவை, பொருந்தி விட்டனதான் ஆணுலும் அந்த " அண்ணள வாக " என்பதில் முன்னேற்றங்கள் மட்டுமல்ல, பிற்சரிவு களும் தொக்கி நிற்கத்தான் செய்கின்றன.
வாழ்நாளில் காலேப் பொழுதுதான் இப்போது எனக்கு மதியமாவதற்குள் இன்னும் பல மனிதர்களைத் தனி நபர் களாயும், இரட்டைகளாயம், பலரர்யும், கூட்டங்களா யும் வேடிக்கை பார்த்துவிட வேண்டும். மிக அருகே சென்று பார்க்க வேண்டும். அவர்களின் சிந்தனைகள், செயற்பாடுகள், அதில் உள்ள செருகல்கள். விரிசல்கள், அவர்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புகள், குமுறல்கள், அவ்ற்றின் வடிவங்கள், குளிரிதல்கள். உள்மன ஏக்கங்கள் பெருமூச்சுகள், சின்னத்தனங்கள், பெருந்தன்மைகள் எல் லாவற்றையும் ஊடுருவிப் பார்த்து விடவேண்டும். அவற் றைப் பின்னர் கலைநயத்துடன் எழுதவேண்டும்.
சிறிது உளவியலும் தெரிந்தால் நல்லது. கொஞ்சம் கனமாகவே அப்போது உள்ளங்களைப் பார்க்கலாம். ஒரு கை வில்லே கொண்டு வார்த்தால், வண்ணத்துப் பூச்சி யின் வாயுதுப்புகளும் பூட்டுக் கால்களும் வடிவாகவே தெரியும் !

கோகிலா மகேந்திரன்/109
பேணு மூடியைக் கழற்றிவிட்டுக் கலதத் தலைப்பைக் கடதாசியில் எழுதுகிறேன்.
* ஊடுருவல் ” நல்ல தலைப்பு ! என்னை நானே பாராட்டிக் கொண்டேன்.
யாழ்ப்பாண மண்ணின் இன்றைய நிலையைத் தெட் டத் தெளிவாய்ப் படம் பிடிக்கும் இக்கதையில் நல்ல பழகு தமிழ்ச் சொற்களும், எமது கிராமத்திற்கேயுரிய மண்வாசனை மணக்கும் சொற்களும், திசைத் தமிழ்ச் சொற்களும் நிறையவே கையாள வேண்டும். அதன் கார ணமாய் என் கதையின் காரணமாய் தமிழ் மொழி செழிக்க வேண்டும்!
g5 turr... gGunt என்னைப் பிடிச்சுக் கொண்டு போகாதேங்கோ நான் ஒண்டும் உங்களுக்கு எதிராய் எழுதேல்லை. மக்களைத் திசை திருப்பும்படி உணர்ச்சிளைத் தூண்டி எழுதேல்லே. ஐயோ. என்னைச் சுடாதேங்கோ. உண்மையைத் தான் இப்ப நடக்கிறதைத் தான் எழுதின ஞன். சத்தியா எனக்கு வேறை ஒண்டும் தெரியாது."
பேணுவைப் பிடித்தட்டி மேசையில் படுத்து சீ . இதென்ன பயங்கரக் கனவு ?
உடல் இன்னும் வெட வெடத்துக் கொண்டிருந்தது. இது வேண்டாம் புதிதாய் இன்னென்று சிந்திப்போம்!
கொழுத்தி விட்ட ஈர்க்கு வாணம் போல், கரீரென்ற சீறலுடன் மேலே சென்று "படார்" என்று வெடித்து தீப் பொறிகளால் சித்திரம் வரைந்து ஒளி பரப்புவது போல், அந்த அமைப்பிலே புதிதாய் ஒரு சிறு கதை.
கொஞ்சம் அமைதியாக இருந்தால், கதையைச் சிந் தித்து எழுதி முடித்து விடலாம், இதென்ன ஒரே இரைச் சல்? வெளியே மழை *சோ" வென்று பொழிந்து கொண்

Page 59
110/பிரசவங்கள்
டிருந்தது. அந்த இரைச்சல் சிந்தனைத் தடை பண்ணிக் கொண்டிருந்தது. இடி மின்னல் வேறு
ஒரு சிந்தனையும் பொறி தட்டவில்லை விளக்கை அணைத்து விட்டுப் போர்வையை இழுத்து மூடிக்கொண்டு படுத்தேன். கதை எழுத நினைத்தும் எழுதாத கனம் - கனவில் கைது செய்யப்பட்ட பயம் நித்திரை வர மறுத்தது.
இந்த மனம் ஒன்றை நினைத்து அது நடைபெறவில்லை யென்ருல் அது உடனே அமைதி இழந்து விடுகிறது . அதற் கும் தான் நினைத்த தெல்லாம் நடந்தாக வேண்டும்" குரங்கு மனந்தான் !
சும்மா படுத்துக் கிடந்து உருண்டபோது, ஒரு கற் பனை, பொறி தட்டியது. சரி, அதை அப்படியே எழுதி விடுவோம். எழுந்து உட்கார்ந்தேன்
தனி வழியால் வந்து கொண்டிருந்த ஒரு ஒழகான பேண்ணை ஒருவன் மேய்ந்த கதை. ஃபண்ணடிமைத் தன மும், ஆணதுக்க் வெறியும் நல்லாகவே உறைக்கும்படி இதை எழுதலாம்.
கதிரையில் அமர்ந்து, மறுபடியும் பேரவைத் திறந்து பைலில் இருந்து பேப்பரை எடுத்து வைத்து ஆயத்த மானபோது ஒரு உள் மனம்,
*அந்தப் பெண் அந்த நேரத்தில் ஏன் அந்த வழி யில் தனியே வந்தாள்? கதாசிரியர் வேண்டுமென்றே அவளை அந்தப் பாதையில் கொண்டு வருகிறர். இது யதார்த்தி மற்ற மிகை கதையின் இப்பகுதியை வாசிக்கும் போது, கதை தான் வாசிக்கிருேம் என்று தெரிவதால், கதையின் தரம் பின்தங்கி விடுகிறது.??
என்று பிதற்றியது. பல விமர்சனங்களைக் கேட்ட பழக்க தோஷம் இந்த எழுத்தாள மணிம் இப்போது விதி லும் பிழை கண்டுபிடிக்கத் தொடங்கியிருந்தது, என்க்கே

கோகிலா மகேந்திரன் 111
அதிசயமாய்த் தெரிய, மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது.
வெளியே மழை கடுமையாய்ப் பொழிவதன் இடை யில் "தாடல்" என்ருெரு சத்தம். ஊயிங்.. ஊயிங். என்று ஊழிக்காலக் காற்று. என்ன விழுந்தது?
யன்னலூடாக "ாோச்" அடித்துப் பார்த்ததில், மரங் கள் பேயாட்டம் ஆடுவதும், மழை வானமே பிளந்தது போல் கொட்டுவதும்தான் தெரிந்தது. "விடியட்டும் பார்ப் போம்" என்று மீண்டும் படுத்துக் கொண்டேன்,
பூச்சிகள்- பலவகைப் பூச்சிகள், போர்வைக்குள் புகுந்து மாயாஜாலம் காட்டின. அவைக்கும் குளிரோ? எழுந் திருந்து போர்வையை உதறியபோது, ஒன்றிரண்டு சட் டைக்குள் புகுந்து முதுகு வழியே ஊர்ந்தன.
ஒரு மனிதனைக் கதையில் அறிமுகம் செய்ய வேண் டும், அவனுக்குப் பெயர் வேண்டாம் ஒரு அரைமணி நேரம் அவனை அருகில் நின்று பார்க்க வேண்டும். அவனுடைய சிந்தனைகளைக் கேட்டு, அவனுடைய உணர்ச்சி களை ஊடுருவி, அதிலிருந்தே அவனைப் புரிந்து கொண்டு.
மீண்டும் ஒரு கெட்ட கனவு கண்டு விழிப்படைந் தேன். இம்முறை கனவு நினைவுக்கு வரவில்லை. மூச்சு முட்டுவது போல் ஒரு உணர்வு மட்டும் ஏற்பட்டிருந்தது
அணில் ஒன்று மிக அருகில் "கீச். ச்ே." என்று விடாமல் அலறுவது கேட்டது. அணில் கீச்சிட்டால் எங்கோ அருகில் பாம்பு இருப்பதாய் அம்மர் அடிக்கடி சொல்வது நினைவு வந்த போது கொஞ்சம் பயம் போல ஒன்று தோன்றியது.
எதைப் பற்றிய யம்?

Page 60
112/பிரசவங்கள்
"வீட்டிலை எல்லாரும் நித்திரை. நான் மாத்திரம் கொட்டக் கொட்ட மூழிச்சுக் கொண்டிருக்கிறன். என்ற நினைவில் இந்தப்பயம் மேலும் அதிகரித்தது.
மீண்டும் தடால்" என்ருெரு சத்தம்! எழுந்து *லைற்றைப் போட்டேன். ஏதோ ஒரு மரம். தென்ஃ: மரம் அல்லது பனை மர ம் அல்ல து மு ற் றத் து நாவல் விழுந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆயி னும் வெளியே போய்ப் பார்க்கும் சிந்தனே வரவில்லை. சிந்தனை வந்தாலும், துணிச்சல் நிச்சயமாய் வரவில்லை.
புதிய கதைக்கான கரு ஏதும் மனதில் முளைக்கிறதா என்று தேடிவிட்டுப் போர்வைக்குள் மீண்டும் புகுந்து கொண்டேன்,
பல்லி ஒன்று சொச் சொச். சொ." என்று சொல்லிக் கொண்.ே சுவரில் வாலை அசைத்து அசைத்து ஊர்வலம் வருவதைக் கண்கள் ஒத்திட்டு நோக்கின சிந் தனையில். கரு, உத்தி, உருவம் ஆகிய மூன்று படிகளி லும் உயரக் கூடிய ஒரு கதை?
வெளியே டோப் முற்றத்தில் அமர்ந்து சில மணிநேரம் நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தால், சில சம யம் ஆழமான கற்பனைகள் வரும். அந்த ஊர்ளமேஜர். அதற்குத்தான் எத்தன பெயர்கள். பெரியகரடி பிக் டிப்பர், கலப்பை உடு. சப்தரிஷி மண்டலம். அதை வடக்கு வானில் கண் டவுடன் ஒரு கற்பனை உதிக்கும் இன்று அதற்கும் இடமில்லாமல் இந்தப் பேய் மழை!
சிந்தனைக் கூட்டைக் கிளறி, அதைப் பிய்த்துப் பிழிந்து தேன். எடுக்கக் கூடியதாய் ஒரு கதை
மீண்டும் தேடல்
கலைந்து, காற்றில் அலைந்து கொண்டு, கழுத்தின் வழியே வழிந்த நீண்ட கருங்கூத்தலைத் தூக்கி முடிந்து கொண்

கோகிலா மகேந்திரன்/113
டேன். முடிந்த பின்பும் அஃலந்த முன்புறக் கூந்தல் போலவே-வேளியே வீசிய காற்றைப் போலவே-மனதின்
நினைவுகளும் பறந்தன.
மீண்டும் தடால்" என்ற சத்தம். இப்போது "ற்ை” தாஞகவே 'டிம் பண்ணிக் கொண்டது. கதவைத் திறந்து, வெளியே "ரோச்" சுடன் சென்ற தம்பி திரும்பி வந்து
வெளிலே தென்னை மரம் லேற் வயரிலே விழுந்திட் டுது. அதாலை மூலையில் நிண்ட “லைற் போஸ்?றும் முறிஞ் சிட்டுது. வயர் நிலத்திலை முட்டுது. தண் லை கறன்ற் வருது. ஒருத்தரும் வெளிலை போக வேண்டாம்” ன அபாய அறிவிப்புத் தந்தான்.
சிறிது நேரத்தில் மின்சாரம் முற்ருக நின்று விட்டது. இருளில் திரும்பவும் படுத்துக் கொண்டேன். இயல்பான கதையமைப்பு, தெளிவான நடை, முழுமையான பாத் திரப் படைப்பு இருக்க வேண்டும். கதையோடு ஒட்டா மல் அந்நியமாக ஒலிக்கிற குரல்கள் இருக்கக் கூடாது. லிேந்து புகுத்தப்பட்ட சம்பவங்கள் வரக்கூடாது. நீதி வாக்கியங்களோ பிரச்சார வாடையோ தொனிக்கக் கூடாது
விடியட்டும் பார்க்கலாம் எனக்குள் ஒரு புதிய ஊற்றுக்கண் திறக்காமலா போய்விடும்? நேரம் கரைந்து கொண்டிருந்தது.
நேரில் பார்ப்பது போன்ற உணர்வையும், தன்னுேடு லயிக்கச் செய்யும் ஒரு முத் திரையையும், படிந்த சுவடு கரைப் பதித்துச் செல்லும் தன்மைடையும் கொண்டு ஒரு கதை அழகாக எனக்குள் உருவாகாமலா போய்விடும்?
விடியவில்லை. கீழ்வானம் ஒளி முடி தரிக்கும் உன்னதம் தரிசனமாகும் தேரத்தில் தான் எழுத்திருந்தேன். மனல் போர்த்த

Page 61
114/பிரசவங்கள்
ஒழுங்கை யெல்லாம் பாதம் மறைய வெள்ளம் இன்னும் ஒடிக் கொண்டிருந்தாலும், ம~ழ விட்டிருந்தது. சோம் பலை உதறிச் சுருட்டிய பாயுடன் தூர வீசிவிட்டு எழுந்து வெளியே வந்தேன்.
பிஞ்சுகள், முதிர்ந்தன என்ற பேதமின்றி மரங்களி லிருந்து எல்லாம் உதிர்ந்து கிடந்தன. விழுந்து போன நாலு தென்னகளை விட, இதோ விழுகிறேன் என்ருெரு தென்னே-பக்கத்து மணியர் வளவுத் தென்னே-எங்கள் வீட்டை நோக்கிக் குறி வைத்துச் சரிந்து நின்றது. இனி மெலிதாக ஒரு காற்றடித்தாலும் கூடக் கட்டாயம் விழுந்து விடுவேன் என்று அது பயமுறுத்திக் கொண்டிருந் 点岛·
"மணியரிட்டைப் போய் உந்தத் தென்னையை உடனே தறிக்கச் சொல்லிச் சொல்லிப் போட்டு வா தம்பி."
அம்மா அவசரமாஞள். w மணியர் வந்து சற்று முற்றும் பார்த்தார்
*"எனக்கு அவசரமான வேலை கிடக்கு. நீங்களே தறிச்சு மரத்தையும் எடுங்கோ.
G). Ifiu uGrnusn flutrufið Gsm ல் லி விட்டு அவர் நகர்ந்தபோது நான் அதிசயித்தேன்.
"ஏன் தென்னையை எங்களுக்கு விடுகிறர்.? வைச்சு நட்ட மரம் காணிக்காறனுக் கெல் லோ உ ரித் து இதென்ன கோதாரி.??
அம்மா புறுபுறுத்துக் கொண்டிருந்தாள்.
"உதை அடி மரத்தோடை ஒரே அடியாத் தறிக் கேலாது. தறிச்சா எங்கடை வீட்டுக்கு மேலை விழும். இரண்டு மூன்று துண்டு போட்டுத் தான் தறிக்க வேணும். தறிகூலி நூறு ரூபாக்கு மேலை வரும். அந்த அளவுக்கு விறகு விக்காது. அது தான் அவர் மெல்ல நழுவிட்டார்"

கோகிலா மகேந்திரன்/145
தம்பி அவரைக் கணித்த போது, இது என் மரமண் டையில் புரியாதது பற்றி நான் எனக்குள் அவமானப்பட் டேன். என்னுடைய உளவியலும் நானும்
உயிரோடு இருந்த போது அதன் பயன்களும் அது வும் தனக்கென்றிருந்த மனிதர், இப்போது - அது இறந்த பின்னர், அதற்குக் கொள்ளி போடும் கடமை தனக் கில்லை என்பது - எல்லாம் லாப நட்டம் கணக்கு ப் பார்க்கும் மனம்
இவரை இந்த மணியத் தாரை, இவரது மணஇயல்பை ஒரு கதையாக்க வேண்டும் ஒரு தல்ல கதையைப் படிக் கிருேம் என்ற உணர்வு வாசகனிடம் தோன் ரு மல், வாழ்க்கையைப் பார்க்கிருேம் என்று நினைக்கும்படி இக் கதை அமைய வேண்டும். மனிதனை அவனுக்கே புதிதாய் இது நினைவுபடுத்த வேண்டும். இத்தகைய அநீதிகளை எதிர்த் தும் ஒரு நாள் புரட்சி வெடித்தே தீரும் என்பதை இறுதி யில் குறிப்பாய்க் காட்ட வேண்டும்.
அந்த மழை மேகங்கள் தம் கிருதிறமிழகது வெள்ளை யாகிப் பின் சிறிது நேரத்தில் சிவக்க ஆரம்பித்தன என்று முடித்தால். வெறி குட். நல்ல ஐடியா..!
ஒரு கவிதைக்குரிய இனிமையுடன் மையத்திலிருந்து பிறழாமல் கதாபாத்திரங்கள், நடை ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்தி, வாசகன் மனதை ஒரு நிமிடம் பிராண் த.விடக் கூடியதாய் ?
திடீரென ஒரு சிந்தனே! நான் எழுதப் போகும் கையில் வரும் பாத்திரங்
களின் எதாப்பி, சில நிஜ மனிதர்களுக்கு அப்படியே
பாருந்தும்,

Page 62
116|பிரசவங்கள்
"என்ரை கதையை ஆர் எழுதச் சொன்னது?” என்றி அவர்கள் நேரடியான மிரட்டலுக்கு வரலர்ம் தொப்பி தம + கு அரைகுறையாய்ப் பொருந்துவதாய்க் கற்பனை செய்து மனதினுள் தவிப்பவரிகள்,
"இது உதவாத கதை. இது கதையே அல்ல. இது ஒளி அல்ல. இருள்” என்று ஏதாவது பிதற்றி வாசகர் கடிதம் பகுதிக்கு எழுதலாம்.
எந்தத் தனி நபருக்கும் பிரத்தியேக தளம் இல்லாத ஒரு கதை, தொப்பி ஒருவருக்கும் பொருந்தாமல் - சற் றேனும் பொருந்தாமல், திறமையாய் ஒரு கதை - அப் படி எழத முடியுமா? அப்படிஎழுதுவதால்ை. கொரில் லாக்களைப் பற்றித் தான் - ஐ மீன் கொரில்லாக் குரங்கு களைப் பற்றித் தான் எழுதலாம்.
எனக்குள் ஒரு தெளிவு
இப்போது நான் பேணுவை மூடி வைக்கவில்லை. என் ஆத்மாவில் பட்ட ஒரு காயம், தன்னை ஆற்றிக் கொள்
ஈாவாவது சிறுகதையாக மேலே வந்துதான் ஆகவேண்டும். னைது பேணு தாள்களில் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது
(1986 ஜனவரி - மல்லிகையில் rairtrars)

உச்ச அறுவடிை
அண்ணுந்து பார்த்து மந்தகாசமாய்ச் சிரித்தேன் நான், மனம் அடிக்கடி பரவசத்தால் சிலிர்த்துக் கொண்டது. எனது இருபத்தைந்து வருட வாழ்வுக் காலத்தில் இது போன்ற தொரு வீட்டை நான் உண்மையில் கண்டதில்லை!
எவ்வளவு சிரமப்பட்டுத் தேடியும் ஒகு தூக துணிக் கையையும் காண முடியவில்லை! அழைப்பு மணியின் ஒலிக்கு வெளியே வந்து எங்களே உள்ளே விட்ட பையன்- இப் போதுதான் தெரிகிறது அவன் இவர்களின் வேலைக்காரப் பையன். ஒரு வாளியில் நீர் வைத்துக்கொண்டு ஒவ்வொரு சதுர சென்ரி மீற்றர் சுவர்ப்பரப்பையும், நிலப்பரப்பையும் கழுவிக்கொண்டு- துடைத்துக்கொண்டு. ஒவ்வொரு மின் விளக்குகளின் அலங்காரத்தையும் பார்த்து ரசிக்கக் குறைந்த பட்சம் அரைமணி நேரம் தேவையாகலாம்!
வீட்டில் ஒருவரும் இல்லாதது போன்ற அசாதாரண அமைதி நிலவியது. அங்கிருந்த "செற்றி ஒன்றில் அமர்ந்த போதும், பயணத்தில் அழுக்கடைந்திருந்த எனது உடுப்பி ஞல், அந்த ‘செற்றி" அழுக்கடைந்து விடுமோ என்பது போல் ஒரு மனப்பயம்! என்ன அறியாமலே அதன் நுனி யில் கொஞ்சமாய் அமர்ந்து கொண்டேன். எனக்குச் சற் றேனும் பொருத்தமில்லாத ஒரு இடத்திற்கு வத்து விட் டது போல் எனக்குள் ஒரு உணர்வும் உறுத்தலும் தோன்ற நண்பனைப் பார்த்தேன்.

Page 63
118 / உச்ச அறுவடை
அப்போது அந்தப் பெண் உள்ளிருந்து வெளியே வந் தாள் அவளைப் பார்த்தால் திருமணம் செய்த பெண் போலவே தோன்றவில்லை.
வசந்தத்தின் வாத்சல்யம்- அல்லது அழகின் அகராதி! ஆனல் அந்தக் கண்களில். என்ன அது? ஏதோ ஒரு வெறுமை ஏதோ ஒரு வேதனை !
நண்பன் அறிமுகம் செய்தான் முதலில் அவளை, ** இவதான் மிஸஸ் சிவநேசன் , ' பிறகு என்ன ? இவர். மிஸ்டர் கெங்காதரன்."
"கொழும்பிலை ஒரு இன்ரவியூவுக்கு வந்தனுங்கள். அது தான் உங்கடை வீட்டிலை ஒரு நாளைக்குத் தங்க லாமெண்டு முந்தி இன்ஃபோம் பண்ண முடியேல்லை . பை த வே எங்கை சிவநேசன்? காணேல்லை ஆளை ?"
அவள் முகம் திடீரென்று மாறியது. இதயத்தின் வெளி வானில் ஏதோ அமர்க்களங்கள் நிகழ்வதை முகம் பளிச் செனக் காட்டியது.
உங்களுக்குத் தெரியாதே? நீங்கள் ஒகஸ்ட் டிரபிள்ஸிக் esú August troubles) o 9 es 9lenj6)ráf Fisé Gas diva) ura கும் , '
* தெரியாது, ஏன்.. ? என்ன ? வட் ஹாப்பிண்ட்?" (What happened)
நண்பன் மிக அவசரமாய்க் கேட்டான்.
"அதிலை எங்கடை கடையள் 'ஜிவெல்லரி ஷொப் (Jewellary shop) மெடிக்கல் ஸ்ரோர்ஸ் எல்லாம் முழுதா எரிஞ்சது தெரியுந்தானே. இந்த வீடு மட்டுந்தான் மிச் Fuh கொஞ்ச நாள் இந்தியாவிலை போய் இருந்தம். பிறகு திரும்பி வந்தம். அவருக்கு. ஒரு மாதிரி "
அவள் சொல்லி முடிக்க முதல் அவர், மிஸ்ரர் சிவ நேசன் வந்தார்.

கோகிலா மகேந்திரன் / 119
வாயில் ஒரு சிகரெட்டுடன் மிக மெதுவாக நடந்து வந் தார். முகத்தில் ஒரு இறுக்கம் தெரிந்தது. முகச் சிரிப்பு மருந்துக்குத்தானும் எங்களைக் கண்டதஞல் தோன்றவில்லை
"ஹலோ சிவா!' - நண்பன் எழுந்தான் அவரிடமிருந்து பதில் "ஹலோ" இல்லை. மெதுவாக வந்து "செற்றி"யில் அமர்ந்தார். நான் மீண்டும் அவள் முகத்தை உற்றுப் பார்த்தேன். ஏதோ ஒரு மன உளைச்சல் முகத்தில் அப்பிக் கிடத்தது.
*ராஜி சிகரெட் பக்கற் ?"
அவள் அதை எடுத்துக் கொடுத்தாள். முடிந்த சிக ரெட்டை அது அவரது உடலில் எவ்வளவு நிக்கோடிஆணச் சேர்த்திருக்கும்? - எறிந்து விட்டு அவர் மற்றதைப் பற்ற வைத்தார்.
‘'இப்படித்தான் நாள் முழுவதும் செயின் ஸிமோக்ெ (Chain Smoxing). iš SGMT uyub Gasst Gir@spóivån ” எனக்குப் புரிந்தது! நிமிர்ந்து பார்த்தேன்! நாட்டின் மந்திரி ஒருவருடன் சிவநேசன் சேர்ந்து நின்று எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சவரில் பளிச்சென்று தொங்கியது.
சில ஆண்டுகளின் முன் இவர், பிரபல அரசியல் வாதிகளின் நண்பன்!
அவர்களின் அரசியல் வெற்றிக்காய் உழைத்தவரும் கூட செலவும் செய்தவர் தலே நகரில் செல்லச் செழிப் புடன் வாழ்ந்த முக்கிய வர்த்தகப் பிரமுகர்,
இன்று ஒரு மன நோயாளி ! இந்த அழகான வீடு . அருமையான மனைவி. கட்டளை களை எதிர்பார்த்து நிற்கும் வேலைக்காரர் . இந்தப் Gurruiu முகங்களை எல்லாம் களைந்து பார்த்தால் எஞ்சுவது ஒரு பரிதாபத்திற்குரிய மனிதர் சிவநேசன் !

Page 64
120 ! உச்ச அறுவடை
"சிவா. எனக்குத் தெரியாது . பட் யூ சுட் கீப் யுவ்ர் Gafóid% 65gapul (You should keep Yourself occupied) இப்பிடி வீட்டிலை நெடுக இருந்தால், யூ வில் பிக்கம் வேர்ஸ் (You will become worse atti 60 sub sg Gaiah 2
சிவதேசனுசனுக்கும் நண்பனுக்குப் முன்னர் இருந்தி ருக்கக் கூடிங் நெருக்கம் அவனை நெகிழ வைத்திருக்கலாம்;
2தான் எத்தினை பேரை வைச்சு வேலை வாங்கினதாம் எத்தினை பேர் தன்னட்டைச் சம்பளம் வாங்கினவையாம். இப்ப எந்த முகத்தோடை தான் ஆரிட்டையும் போய் வேலை எண்டு கேக்கிறதாம் "
மனைவி தான் சொன்ஞர். அவரது முகத்தில் மேலும் கரிக்கோடுகள்!
வேலைக்குத்தான் போகவேண்டாம். சும்மா எங்கை யும் பிரண்ட்ஸ் வீட்டை விசிற் போவமெண்டாலும் வாரு ரில்லை, கோயிலுக்குப் போனல்கூட ஐஞ்சு நிமிசம் நிக்க மாட்டார். வா வா போவம் என்ருர் ??
அழகிய மனைவியின் அழுகை கலந்த குரல் 1 “ Orð gav Godprefir 6řva gyu'i (He is tensed up). Jiyanipurm &lay ஓரிடத்தில் நிக்க முடியாது." எனக்கு அதுவும் புரிந்தது. * இந்த நிலையிலை நாங்கள் இஞ்சை நிக்கிறது உங்களுக்கு இடைஞ்சல். நாங்கள் வேறை இடம். "'.
ஏதோ ஒரு நினைப்புத் தந்த அவசரத்தில் நண்பன் கூறினன். " நோ. நோ. யூ மே புற் அப் ஹியர் வெல். ஆனல் நீங்கள் சத்தம் போடக்கூடாது. சத்தம் போட்டா இவராலே தாங்க ஏலாது.",
நானும் நண்பனும் அவள் காட்டிய. எமக்கென ஒதுக்கப் பட்ட அறையில் நுழைந்து கொண்டோம்.

கோகிலா மகேந்திரன் / 121
* இலட்சியம் என்றது ஒரு தங்கக் கோபுர நினைவு மச்சான். அதை அடையிறதுக்கு எத்தினை பேரை நாங்கள் புடம்போட வேண்டியிருக்கு. "
- ஆழ்ந்த சிந்தனேயுடன் உடுப்பு மாற்றிக்கொண்டிருந்த seriaw Lustr.
"இஞ்சை சாகிறவை சாக - வெளிநாட்டுக்கு அகதியாப் போறவை போக - ஏதோ ஒரு நாட்டுக்கு ரிக்கற் எடுத்துப் பறக்கிறவை பறக்க - மிச்சம் இஞ்சை இருக்கிறவை எல்லாம் மனநோயாளியளா மாறப் போறமோ எண்டு எனக்கு ஒரு பயமாக்கிடக்கு மச்சான் " - நான்.
"எங்சடை ஊரிலை இப்பிடித்தான் ஒரு மனுசி , ' நான் கதை சொல்லத் தொடங்க, நண்பன் கட்டிலில் குந்தி யிருந்து கேட்டுக்கொண்டிருந்தான்.
அதுக்கு ஒரே ஒரு பொம்பிளைப்பிள்ளை . கலியாணம் செய்து குடுத்து . ஒரு பேரப்பிள்ளையும் இருக்கு '
8 ... b ... '"
* மருமேன் ஏதோ ஒரு கொம்பனிலை வேலை செய்தவர் இவர் ஒராள் தாளும் " தாஞ " . பயத்திலை மனுசன் வேலையை விட்டிட்டு வந்திட்டுது." .
A. of . b ... ” ’
வேலையும் இல்லாமல் ஒண்டும் இல்லாமல் இப்பிடி எத்தினை தாளைக்கு மாமா, மாமியோடை இருக்கிறதெண்டு. மனுசியையும் பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு ஜெர்மனிக் குப் போட்டுது . அத்தாள்.'"
ம? அகதியா .. ? ?"
* யெஸ் . அங்கை போனல் "காம்ப்" தானே? ஆணுல் அவை போன உடன இந்தத் தாய் மனுசிக்கு ஒரு மாதிரி ந்ைதிட்டுது”
49e ageri GBunrbay...” ” .

Page 65
122 ! உச்ச அறுவடை
* விசரெண்டில்லை. இப்பிடித்தான் ஒரு டிபிரெஸ்ஸன் (depression) போலை. மகளையும் பேரனையும் கண் காணுத தேசத்துக்கு விட்டிட்டன் எண்டு. ”
th p p
*" வீட்டிலை இருக்க ஏதோ செய்யுதஈம், பேரன் உலாவின இடங்களைப் பாக்க அந்தரமா வருதாம் . எழும்பி எங்கையும் ஒடவேணும்போல இருக்காம் . நான் சொல்லுறதென்னண் டால். இந்த எத்ணிக் புரொபிளம் (ethnic problem) முடிய முந்தி நாங்கள் எல்லாம் சைக்கோ கேசஸ் (psycho case) ஆகப் போறம் . " .
வெளியே கனத்த மழை பெய்யத் தொடங்கியிருந்தது மனம் கைத்துச் சிரித்தேன் தான்.
* ஒம் மச்சான். நீ சொன்ன பிறகுதான் நானும் யோசிக்கிறன். எங்கடை வீட்டிலை கூட அம்மா. ஓரளவுக்கு மன நோயாளிதான் "
ஏன்? ל ע * 'இல்லை. அடிக்கடி என்னைக் கூப்பிடுறது இரவில் பத்துப் பதினஞ்சு தரம் எழும்பி வந்து படுக்கையிலை என்னைப் பாக்கிறது. நான் எங்கையும் வெளிலை போனுல் ஒழுங்கை யிலே வந்து நிண்டு பாத்துக்கொண்டு நிற்கிறது '
'இது உன்ரை அல்மா மாத்திரமில்லை. வடக்குக் கிழக்கிலை இண்டைக்கு ஆம்பினைப் பிள்ளையஸ் வைச்சிருக்கிற எல்லாத் தாய்மாரின்ரை நிலையுந்தான் . ”
** Sredir nu - 6 rua fib C35 arsiv ? ”” (What about girls?) நான் அவனை விளங்கிச் சிரித்துவிட்டு,
" இதெல்லாம் ஒவ்வொரு வகை உளத் தாக்கங்கள் தான் "" என்று முடித்தேன்.
அவன் எழுந்து குளிக்கச் செல்லும்போது, "ஆணுல் இவர் சிவநேசன் இவ்வளவு களைக்கத் தேவை யில்லை. பாங்கிலை கொஞ்சக் காசெண்டாலும் இருக்கும்:

கோகிலா மகேந்திரன் / 123
இந்த வீட்டிலை ஒரு அறையை றென்ருக்கு (Rent) விட்டாலும் ஆயிரம் ரூபா வரும் "
என்ருன். "ஆணு மச்சான் இண்டைய வெயில்கள் நேற்றைய நிழலிலை இளைப்பாற முடியாது. தெரியுமோ உனக்கு ? இந்த இண்டைய நிலையின்ரை யதார்த்தத் தன்மையை அவற்றை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்குது போராடுது. உள்மனம் எண்ட சப் கொன்சியஸ் (Sub conscious) அதை ஏற்றுக் கொள்ளிற வரையிலை பிரச்சினைதான்
வெளியில் தட்டப்பட்ட கதவின் ஒசை எமது மெல்லிய உரையாடலை இடைநிறுத்தியது.
பெண்மையின் சோபிதமும் நளினமும் இழைய, சோகம் மாருத முகம் கையில் தேநீர்க் கோப்பைகளுடன் நின்றது. இவ்வளவு நிகழ்வுகளும் மிக ஒழுங்காக என் நினைவுக்கு வர இப்போதும் அந்த முகம் எனக்கு முன்னே மிக நிஜம் போல வந்து நின்றது. பிறகு. தொட்டம் தொட்டமாய்ச் சில நினைவுகள்.
** நீ எப்போதாவது போஸ்டர் ஒட்டியிருக்கிருயா?* * உன்னை இந்த வேலைக்குத் தெரிவு செய்தால் நீ அவா களுக்கு உதவமாட்டாய் என்பது என்ன நிச்சயம் ?"
* குறைந்தபட்சம் இருபது இயக்கங்களின் பெயரைச் சொல்லமுடியுமா ? ""
போன்ற விசர்க் கேள்விகளை " இன் ரவியூ வில் சந்தித்து, மிகுந்த மன அலுப்புடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தவேளை யில் மீண்டும் மன விசிறி அதே திசையில் சுழல ஆரம்பித் திருந்தது.
மினி பஸ்ஸில் அருகில் இருந்த நண்பனைத் தட்டிச் சொன்னேன்,
** இரண்டு மூண்டு மாதத்துக்கு முந்தி பப்ளிக் லைபிறறி யிலை ஒரு சைக்கோ புத்தகம் எடுத்து வாசிச்சனன் "

Page 66
124/ உச்ச அறுவடை
" எனக்கு நித்திரை வருது . எண்டாலும் சொல்லு கேக்கிறன் . "
* அதிலை ஒரு பரிசோதனை . அறுபது மாணவர் தேர்ந் தெடுக்கப்படினம் . டைனமோமானி எண்ட கருவியிலை ஒரு அளவு விசையைப் பிரயோகிச்சபடி . கருத்தில்லாத சொல்லுகள் சிலதைக் கவனிக்கும்படி கேக்கப்படினம். ??
**கருத்தில்லாத சொல் எண்டால். ' * இப்ப அஇ,ை கநபா . இப்பிடிச் சொல்லுகள் . " * ம் . விளங்கிச்சுது. ’’ "பிறகு அதிலை அவைக்குச் சோதினை வைச்சு எவ்வளவு சரியாச் சொல்லினம் எண்டு பாக்கிறது . "
粤”。。1h s "பிறகு அவை பிரயோகிக்கிற விசையைக் கூட்டி அதே மாதிரி வேறை சொல்லுகளைக் குடுக்கிறது. திருப்பியும் பெறுபேற்றைப் பாக்கிறது. என்ன நித்திரையோ? "
'இல்லை. சொல்லு . " **இதிண்ரை முடிவு எப்படி வந்ததெண்டால். ஒருத்த ஞலை தாங்கக்கூடிய அளவு விசையில் நாவில் ஒரு பங்கைச் செலுத்தேக்கைதான் அவன்ரை திறமை உச்ச அளவைக் காட்டுது , '
"இப்ப ஏன் உதைச் சொல்லுருய் எண்டு விளங்கேல்லை” " இல் ைஒரு மனுசனுக்கு ஒரு கஷ்டமும் ஒரு பிறெஸ் ஸரும் இல்லாட்டிலும் அவன் உருப்படியா ஒண்டும் செய்யமாட்டான் எண்டு நினைச்சன். '"
“எனக்கு இன்னும் விளங்கேல்லை." 'சரி நீ நித்திரை கொள். அவங்கள் "செக்கிங்" குக்கு நிறுத்தினு எழுப்பிறன்.'
நண்பன் நித்திரையாகி விட்டான்.

கோகிலா மகேந்திரன் / 123
எனக்கு அரை நித்திரையில், மகனன் உடல் மின்கம்பத்தில் கண்ட பொன்னச்சி மகனைப் பூஸாவுக்கு அனுப்பிவிட்ட முத்தம்மா. பாடசாலை போன மகன் திரும்பாத நாளிலிருந்து உலை வைக்காத நேசம்.
குமுதினிப் படகில் குடும்ப அங்கத்தவர் மூன்று பேரை ஒருமித்து இழந்துவிட்ட இராசு
அந்த வாசிக சாலைக் கட்டடத்தை எப்போதும் வெறிச் சோடப் பார்த்து நிற்கும் பூரணம் .
விமானக் குண்டினுல் தலை பிளந்த மகனை நினைத்து விசராகிப் போன மணி .
வீட்டுக்குப் பக்கத்தில் "காம்ப் போட்டிட்டாங்கள் என்று விழியைப் புரட்டும் விசாலாட்சி.
தரைமட்டமான வீட்டை மாலை தோறும் பார்த்துக் கதறும் கயிலை,
'நீ முந்தி வீரத்தாய் பாடம் படிச்சனியேணை" என்று மகன் தன்னைக் கேட்பதாய் பிதற்றும் செல்லம் .
இவர்களில் யாரை நான் முதலில் நினைத்தேன், யாரைப் பிறகு நினைத்தேன், யாரைக் கனவில் கண்டேன் என்று தெளிவாகச் சொல்ல முடியாத ஒரு நிலையில். இன்னும் இன்னும் மனம் பலரைத் தேடித் தேடி
பலரைத் தேடித் தேடி இறுதியாய் மீண்டும் அந்த மிஸஸ் சிவநேசன்!
வீட்டிற்கு வந்த நண்பன் சொன்ஞன். "அவர், சிவநேசன் தன்னைத்தானே சூட்" பண்ணித் தற்கொலை செய்திட்டாராம். தெரியுமே உனக்கு?"
இலேசாக அதிர்ந்தேன் நான். "மை கோட். அவரைக் காப்பாற்றியிருக்கலாம். ரென்சன். அங்சைற்றி அது காலப் போக்கிலை மாறல் கூடிய வருத்தம். அநியாயம்- சீ."

Page 67
124/ உச்ச அறுவடை
மிேஸஸ் சிவநேசன்." இப்போது அதிகமான அதிர்வு எனக்குள் கொழும்புக்குப் போனதும், அவர்கள் வீட்டில் தங்கிய துத், திரும்பி வந்ததும், நண்பனுடன் கதைத்தவையும் மீண்டும் கோடுகளாய். கோலங்களாய்.
என்ன அவவுக்கு??? "ஒண்டு மில்லை. அவ இயக்கத்திலை சேந்திட்டா; வீட் டில ஆள் இல்லையாம் "
சஇேப்ப அந்தப் பரிசோதனை முடிவு உனக்கு விளங்கும் 6&vës, LùLurrrt... ”"
* விளங்குது மச்சான். மிஸஸ் சிவநேசன் எங்கடை சமுதாயச் சுட்டி.."
*எங்கடை இனம் தாங்கக் கூடிய மொத்த அமுக்கத் திலை நாலிலே ஒரு பங்கு பிரயோகிக்கப்படுது'
அதனுலை தான் உச்ச அளவு செயற்றிறன் விளைவா வருது. "
அருகில் இருந்த கதிரையில் சாய்ந்து அமர்த்தேன் நான் . "நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம். ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணும் நற் குடிப் பெண்ணின் குணங்களாம்."
பாரதி எனக்கு முன்னே வந்து பாடுகிருஞ? எனக்குள் ஒரு தெளிவும் முடிவும் ஏற்பட்டன.
உச்ச அளவு அறுவடையில் நானும் ஒருதுளி என் மன திள் எத்தினையோ இரகசியங்களுடன் இந்த நினைவுகளும் முடிவும் இரகசியங்களாய்ப் புதைந்தன:

56 č35E JAIfSir
* நூலுருவில் வராதிருக்கும் என் சிறுகதைகள் அனைத்தையுமீ நுணுக்கமாய்ப் படித்து குறை நிறைகளைக்கூறி, நூலுக்கானவற்றைத் தெரிவு செய்த திரு க. உமாமகேஸ்வரன் அவர்கள்
இந்த நூலில் வரும் கதைகளைப் பிரசுரித்த பத்திரிகை, சஞ்சிகை ஆசிரியர்கள்.
* நூல் அச்சாவதில் பெரிதும் உதவிய திரு
ந. காளிதாசன் அவர்கள்.
அம்பிகா அச்சகத்தினர், குரும்பசிட்டி
விழிசிட்டி, கோகிலா மகேந்திரன் தெல்லிப்பழை, 総5=04=66
அம்பிகா அச்சகம், குரும்பசிம்டி

Page 68
--
ASAAA ASALASAAA ASALLMM SLLLLLLSLLLLLSLLLSLe AALSLALLSAALLALSLALLSeSALSeSeSeSeSeSee ASA
சிவன் கல்வி நீல
:
1. மனித சொரூட
2 முரண்பாடுகள
3. அறிமுக விழா (சிறுகதைத் தொடு
4.
துயிலும் ஒரு
5. பிரசவங்கள்
ALMLMLMLMLMLMMALLLAALLLLLAALLLLLAALLLLLA LALALeALL LALeLALALALeLeLeASAeLeeSAeLe
அட்டை திருமகள்
 

AS SLSLSA eLeLe eLeLSeLe ee SeLSAe L eSeSeLSe eSeSqqSeSAAMMAqL SAAeAeAASe SAe S eA Le e SLLLLS LeS
(சிறுகதைத் தொகுதி)
ரின் அறுவடை
(சிறுகதைத் தொகுதி)
گLu|
ள் ነ s
பங்கள்
8
குதி, விமர்சனங்களுடன்)
நாள் கலையும்
(நாவல்)
(சிறுகதைத் தொகுதி)
لسمسم
LL ALSeLSSLASLSLSLS SASLSS LASLSS LSASSSLSL LASeLSSLASLSeLAeSALSLSqSeLSLSLeLSeLSSSeSLSLSLSLeSL SLLLSLSTqS
அழுத்தகம், சுன்னுகம்