கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2008.04-06

Page 1
፴ወርጋ (@ናጋሪmö፳/m/ ፩
 

鸥
ZW
Š 历 动 Š
朝

Page 2
فعال تحکیم گھ2
உன்னிடம் துவக்கு இருக்கிறது நான் பசியோடிருக்கிறேன்
நான் பசியோடிருப்பதால் உன்னிடம் துவக்கு இருக்கிறது
உன்னிடம் துவக்கு இருக்கிறது எனவே நான் பசியோடிருக்கிறேன்
நீ துவக்கை வைத்திருக்கலாம் ஆயிரந் தோட்டாக்களையும்
மேலுமொரு ஆயிரத்தையும் வைத்திருக் அத்தனையையும் நீ
என் பஞ்சை உடம்பின் மீது வீணாக்க நீ என்னை
ஒரு முறை, இருமுறை, மும்முறை, ஈராயிரம் முறை, ஏழாயிரம் முறை கொல்லலாம் ஆனால் நெடுங்காலத்தில்
நான் உன்னிலும் வல்ல ஆயதபாணியா
உன்னிடம் துவக்கு இருந்து என்னிடம் பசி மட்டுமே இருந்தால்.

ஒTோஸ் றெனெ கஸ்ற்றியோ (குவாட்டமாலா, 1936-1962)
தமிழில்: மணி

Page 3
புதியஜனநாயகம் புதியவாழ்வு புதியபண்பாடு
கலை இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ்
ஏப்ரல் - ஜூன் 2008 பிரதம ஆசிரியர்
க. தணிகாசலம் தொ.பே. 021-2223629
ஆசிரியர் குழு
இ. முருகையன் சி. சிவசேகரம் குழந்தை ம. சண்முகலிங்கம் கல்வயல் வே. குமாரசாமி சோ. தேவராஜா அழ. பகிரதன் ஜெ. சற்குருநாதன் மாவை வரோதயன்
கணினி அச்சு, பக்க வடிவமைப்பு
கு. மதுராளினி ஓவியங்கள்
எஸ். டி. சாமி முகப்பு ஓவியம், பின் அட்டை ஓவியம்
எஸ். சுகேசனன்
தொடர்பு : ஆசிரியர், ஆடியபாதம் வீதி,
கொக்குவில். 021-2223629, 011-2335844 Sair6oIebereo thayakam 10 yahoo.com,
thajakamogmail.com : www.thajakam.com அச்சுப்பதிப்பு: கெளரி அச்சகம் 011-2432477
விநியோகம் : வசந்தம் புத்தகசாலை
44, 3ம் மாடி, கொழும்பு மத்திய சந்தைத் தொகுதி, கொழும்பு - 11 Tel 011-2335844, 2381603
வெளியீடு தேசிய கலை இலக்கியப் பேரவை SBN No. 978-955-8637-23-4
 
 

கவிதை
சபிக்காதிருக்க
செம்மலர் மோகன் Luis காலப்பெருவெளி கலைச்செல்வி பக்
அநாதைகள் தேசம் இராகலை மோகன் பக் சிட்டுக்குருவியின் பாடலும் சிங்கத்தின் கர்ஜனையும் சந்திரகாந்தா முருகானந்தன் பக் தூசிபடிந்த சாய்மனைக் கதிரை நாட்கள் துவாரகன் பக் கண்ணாடியின் பாடம் வனஜா நடராஜா பக் பாம்பு விழுங்கிய நிலத்தில் கிடந்த
மோதிரங்கள் தீபச்செல்வன் பக் உரிமை முழக்கம் குறிஞ்சிநாடன் Luis மொழிபெயர்ப்புக் கவிதைகள் தமிழில் மணி
சிறுகதை
P.W.D. p. dalasiastb Ludis செல்விருந்தும் வருவிருந்தும் அயிராமி பக் ஏன்? ம.பா.மகாலிங்கசிவம் பக் மதமாற்றம் தி.சி.ஜெகேந்திரன் Ludiš திருக்கல்வண்டி க. செந்தில்குமார் பக் கனவுலகின் வெளியே
பவானி சிவகுமாரன் பக்
தொடர்நடைச்சித்திரம்
வலிகாமம் மண்ணின் மாந்தர்கள்
10 14 19
26
29 48
55 60
15 27 35 47
56
குழந்தை குமாரசாமி மாவை வரோதயன் பக்.11
விந்தை மனிதர்
காதுசோதிடர் புவனஈசுவரன் பக் கூடுவிட்டுக் கூடுபாய இயலுமோ? ஆதவா அ. சிந்தாமணி பக்
சிங்கள மொழிபெயர்ப்புச் சிறுகதை
அதிகாரமும் அறிக்கையும் தமிழில் வல்வையூரான் பக்
பின்வரலாற்றியல் தொடர்கதை ஆங்கிலேயனின் பரிசு 7. நீராடற்படலம் ஜெகதலப்பிரதாபன பக்
மொழிபெயர்ப்புக் கட்டுரை புனிதர்கள் வீதியிலிறங்கும் போது அருந்ததி ரோய் தமிழில் ஏகலைவா Luis
5L6GOU படைப்பிலக்கியமும் பல்கலைக்கழகங்களும் 3. அங்கீகாரத்துக்கான ஆவல் சி.சிவசேகரம Ludiš
18
49
20
40
30
51.

Page 4
புதியஜனநாயகம் y
ஏப்ரல் - ஜூன் 2008
கலை இலக்கிய ச
மக்களும் ே
மெது மண்ணில் போருக்கான கதவுகள் அரசால் மீண்டும் அகலத் திறக்கப் பட்டுள்ளது. பலமுனைகளில் படைகள் முன்னேற முயல்கின்றன. இப்போரில் ஏற்படப்போகும் பாரிய இழப்புக்கள் பற்றி எல்லோருமே கவலையுறுகின்றனர். சமாதானத்துக்காக மக்கள் ஏங்கியபோதும் போர் தொடர்கிறது. இப்போரின் தாக்கம் போர் முனைகளுக்கு அப் பாலும் குணர் டு வெடிப்புக்கள், கொலைகள், ஆட்கடத்தல்கள், கைதுகளாக - மனித உரிமை மீறல்களாக - அனைத்து மக்களையும் பாதிப்புக்கும், அச்சத்துக்கும் உள்ளாக்குகின்றன.
ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னன் போல் இல்லாது போனாலும், போர்க்களத்துக்கு வெளியே உள்ள மக்களில் பெரும்பாலானோர் போர்க்களத்தின் நினைவற்று தமது அன்றாடக் கடமைகளில் மூழ்கி இருக்க முனைகின்றனர். நுகர்வியப் பொருளாதார வட்டத்துக்குள் சிக்கவைக்கப்பட்டுள்ள மக்கள், உதிரிகளாக்கப்பட்டு நுகர்பொருட்களுக்கான தேடலிலும், உழைப்பிலுமே தமது வாழ்வின் பெரும்பொழுதை கழிப்பதற்கு நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். ஆனால் இவர்கள் ஒதுங்க முயன்றாலும் போரின் பக்கவிளைவுகள் இவர்களை விடுவதில்லை. அவற்றில் ஒன்றான அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றமி மக்களை திக்குமுக்காடச் செய்கிறது. அதிலும் மிக வசதி படைத்த சிலரைத் தவிர இன, மொழி, மத, பிரதேச வேறுபாடுகளின்றி அனைத்து மக்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். அரிசி, மா, சீனி, பால்மா, எண்ணெய் விலைகள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகள், சேவைகளுக்கான கட்டணங்கள் யாவும் இன்று நாளுக்கு நாள் விஷம் போல் ஏறிவருகின்றன. போரினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வடக்குக் கிழக்கில் இதன் பாதிப்பு மேலும் அதிகமானது.
இதற்கு எதிரான மக்களின் உணர்வுகளை வடக்குக் கிழக்கின் போர்ச் சூழலும், தெற்கில் போருக்கான அரசியலும் மழுங்கடித்து வருகின்றன
C 70حے طsلمAv
 
 

வாழ்வு புதியணிபாடு
இதழ் இல: 70
முகவிஞ்ஞான இதழ்
(TdpaDa)rapis
தொழிற்சங்க இயக்கங்கள் நசுக்கப்பட்டுள்ள நிலையிலும் இவ்விலை வாசிகளுக்கு எதிரான சம்பள உயர்வுக்கான போராட்டங்கள் சில இடையிடையே நடந்து வருகின்றன. மக்கள் தமக்குள் புகைந்து கொண்டே போர்ச்சூழலின் அச்சத்துடன் இச் சுமைகளையும் தாங்கி வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கையின் அரசியலில் மக்களின் உணர்வுகளை இலகுவாகத் தூண்டி விடக் கூடிய இனவாத அரசியலே முனைப்படைந்து இன்றைய போராக தொடர்ந்தாலும், அரிசி விலை, பாண் விலைகள் அதிகரித்தமைக்காகவே ஆட்சிகள் மாற்றப்பட்ட வரலாறும் இங்கு இடம் பெற்றுள்ளது. அதிலும் அரிசி விலையை ஏற்றிய ஆட்சியாளர்கள் தரையில் நிற்க அஞ்சி கப்பலில் ஏறித் தம்மைப் பாதுகாத்துக்கொண்ட 1953 ஹர்த்தால் - நாடு தழுவிய அனைத்து மக்களின் எழுச்சி - இலங்கை வரலாற்றில் முன்னுதாரணமான ஒன்றாகும். அனைத்து மக்களும் ஒன்றிணையும் இதுபோன்ற போராட்டங்களில் அன்று பலர் தம்மைப் பலிகொடுக்கவும், சிறைகளில் வாடவும் நேர்ந்தது. பல்லின நாட்டின் தேசிய இனங்கள் தத்தமது போராட்டங்களுக்குள் மட்டும் தம்மைக் குறுக்கிக் கொள்ளாமல், பொதுப்போராட்டங்களில் ஏனைய இன, மதத்தவருடன் ஒன்றிணையும் போதே ஒருவரது உரிமைகளை ஒருவர் மதிக்கின்ற உயர்ந்த ஜனநாயகப் பண்பாடு உருவாக வாய்ப்பு ஏற்படுகிறது.
இத்தகைய போராட்டங்களுக்கூடாக இன, மத பேதமற்று மக்கள் ஒன்றுபடுவது,தேசிய இனங்களின் விருப்புரிமைகளை நிறைவு செய்யும்
சமுகநலன் சார்ந்த தேசியத்தை முன்னிறுத்தவும்,
Ꭷ
நவகொலனிய நலன்களுக்கு துணைபோகும் அதிகார வர் கி க ஆட்சியாளர்களுக்கு இடையூறாகவும் அம்ையும் என்பதற்காவே இங்கு மக்களியக்கங்களைப் பிளவுபடுத்தும் பேரினவாத அரசியல் முனைப்படுத்தப்பட்டது.
பிரித்தானிய கொலனி ஆதிக்கத்துக்கு எதிராக அன்று வாலிபர் காங்கிரஸ்
Eーの"* を" zoos豊

Page 5
இலங்கையின் பூரண சுதந்திரத்துக் கான கோரிக் கையை வலியுறுத்தி, தேர்தல் பகிஷ்கரிப்பையும் மேற்கொண்டது. இவ்வமைப்பில் ஹன்டி பேரின்பநாயகம் உட்பட வடபகுதியின் பெரும்பாலான கல்வியாளர்களும், தென்பகுதி கல்வியாளர்களும் இணைந்திருந்தமை கடந்த நூற்றாண்டின் முப்பதுகளில் நடந்த வரலாறு. இந்த வரலாற்றுத் தடத்தை வழிதவற வைத்ததில அகப்புறக் காரணங்கள் எவை இருப்பினும் இனப்பிரச்சினைக்கு ஏற்புடைய தீர்வை அன்றிலிருந்து இன்றுவரை மறுத்துவரும் தெற்கின் இனவாத அரசியலே பிரதான காரணம் என பது உணரப்படவேண்டும். அரை நூற்றாண்டுக்கு மேலான
அயலார்
இன்று தேசிய இனப் பிரச்சனையை வி அதிகமாக மனித உரிமை மீறல்களும் நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்து போவதும் ஊடக சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தல்களும் பற்றி பேசப்படுகின்றது. சிங்கள ஊடகங்களிலுப தென்னிலங்கையிலும் மட்டுமில்லாமல் தமிழ ஊடகங்களிலும் வடக்கு கிழக்கிலும் இதுவே நிலைமையாக உள்ளது. சர்வதேசச் சமூகட எனப்படுவதும் இவ்வாறான அணுகுமுறையையே கடைப்பிடிக்கின்றது.
வெறுஞ் சடங்குத் தனமான தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு பற்றிய பேச்சுக்கல் பேசப்படுகின்றனவேயொழியச் சுய நிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வு பற்றி சர்வதேசச் சமூகம் எந்தவிதமான அக்கறையையு காட்டவில்லை. அவர்களுக்குத் தேவையானது அவர்களது உலகமயமாக்கல் வேலைத் திட்டத்துக்கு இடையூறில்லாத ஒரு சூழல். அவர்கள் எந்த ஒ( தேசிய இனத்தின் சார்பாகவும் குறுக்கிடுவது ஏ6 என்று நமக்கு இதுவரையில் தெளிவா விளங்கியிருக்க வேண்டும். ஆனால் எங்களுக்கு வ காட்டுகிற தலைவர்மாருக்குத் தான் இன்னமு விளங்கவில்லை.
அரசாங்க மனித உரிமை மீறல்கள் பற் கண்டன அறிக்கை அமெரிக்காவின் மிகப் பெரி மனித உரிமை என்.ஜி.ஓ. நிறுவனமான மனி உரிமைக் கண்காணிப்பகத்தினின்று வெளி வருகி போதும் அமெரிக்கா இலங்கைக்கான நிதியுதவிை நிறுத்தப் போவதாகச் சைகை காட்டுகிற போதுப் நமது தலைவர்களும் தமிழ் ஊடகங்களு மக்களிடையே எதிர்பார்ப்புக்களைத் தூண்டிவிடுகி
 

ஜனநாயக அரசியலின் அறுவடையாகவே இன்றைய போரை நாடு எதிர்கொள்கிறது.
காரணங்களை விடுத்து விளைவுகளுடன் போராடும் அரசியல் வழிமுறையே இன்றுவரை தொடர்கிறது. போர்களில் வெற்றிகள் தோல்விகள் ஏற்படலாம். ஆனால் மக்களது மனங்களை ஆயுதங்களால் வெற்றி கொள்ளவோ தோல்வியுறச் செய்யவோ முடியாது. நீதியும், சமத்துவமும், சமாதானமும் நிலைபெற உதவும் அரசியற் தீர்வின் மூலமே மக்களின் மனங்களில் நல்லிணக்கத்துக்கான விதைகளை இடமுடியும்.
-ஆசிரியர் குழு
526
விதமான கருத்துக்களைப் பரப்புகின்றனர். அவர்கள் மூச்செடுப்பதற்குச் சிறிது ஒய்வெடுக்க முனி னமே அமெரிக் கா இலங்கையின் பாதுகாப்புக்கும் பயங்கரவாத எதிர்ப்புக்குமான ஆயுதங்களை வழங்குவதாக முடிவு செய்து விடுகிறது.
இந்தியாவின் கதையும் வித்தியாசமானது அல்ல. ‘சுதந்திரத்தின் பின்பான இலங்கைக்கு முதலில் படைகளை அனுப்பிய நாடு இந்தியா 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் போது இந்தியப் படைகள் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்திருந்தன. தரையிறங்கவில்லை. 1987 பற்றி நாம் மறந்திருக்க நியாயமில்லை. 1977க்குப் பிறகு இந்தியாவின் அரசியல் குறுக் கீட்டை நியாயப்படுத்துகிற விதமாகவே இலங்கையின் அயற்கொள்கை அமைந்தது. அன்று, சீனாவோ பாகிஸ்தானோ அல்லாமல், அமெரிக்காவே இலங்கையில் இந்திய நலன்கட்கு முரணாக அடிவைக்கும் சூழல் இருந்தது. இன்று சீனாவையும் பாகிஸ்தானையும் காட்டி இந்தியா தமிழரைக் காக்கக் குறுக்கிட வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் விழுந்து கும்பிடுகிற போதும், இந்தியாவின் குறுக்கீடு தமிழ் மக்களுக்கு ஒவ்வொரு வகையிலும் பாதகமாகவே இருந்து வந்துள்ளது. ஆனாலும் தமிழ்த் தலைமைகளும் பெரிய தமிழ் ஊடக எசமானர்களும் இதை முடிந்த வரை மூடிக்கட்டப் பார்க்கிறார்கள். இந்தியா தனது தென்னாசிய மேலாதிக்க நோக்கத்தை நிறைவேற்ற அமெரிக்காவின் உதவியை நாடுகிறது. அதற்கு விலையாக அமெரிக்கா இந்தியா மீதான தனது ஆதிக்கத்தை
9VORI - ěah 2008

Page 6
வேண்டி நிற்கிறது. இந்தியாவைச் சீனாவுக்கும் முடிந்தால் ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் எதிராகப் பயன்படுத்துவதே அமெரிக்க நோக்கம். இந்தியா மீதான வலுப்படுத்துகிற நோக்கிலேயே அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா தாமதமின்றி ஒப்பமிட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இந்திய ஆளும் வர்க்கங்கள் அதை விரும்பினாலும் மக்களிடையே அதற்கான ஆதரவு குறைவு. அமெரிக்காவுடனான நெருங்கிய நட்பை விரும்புகிற வசதி படைத்த ஒரு சிறுபான்மையினர் மூலம் அமெரிக்கா தனது எண்ணத்தை நிறைவேற்றப் பார்க்கிறது. இதன் ஒரு பகுதியாகவே இலங்கை தொடர்பான இந்திய-அமெரிக்க முரண்பாடுதான் இலங்கையிற் போரும் தீர்வும் பற்றிய கருத்து வேறுபாடுகளாக வெளிப்படுகின்றன. இலங்கைத் தமிழர் பற்றியோ சிங்களவர் பற்றியோ கூட அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் அற்ப அக்கறையும் இல்லை. இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கங்கள் அமெரிக்காவின் உலக மேலாதிக்க நோக்கங்கட்குக் கேடில்லாமற் கவனித்துக் கொள்வதுதான் அமெரிக்கக் கவலை. இந்திய மக்களின் கடும் எதிர்ப்பை எப்படிச் சமாளித்து அமெரிக்காவுடன் ஒத்துழைப்பது என்பது தான் இந்திய ஆளும் வர்க்கங்களின் கவலை. எவ்வளவு தூரம் அமெரிக்காவுக்குப் பணிந்து போவது அல்லது பணிந்து போவதாகக் காணப்படுவது என்பதே இன்று இந்தியாவின் பாராளுமன்ற அரசியலில் நடக்கிற விவாதம்.
இலங்கையில் நடக்கிற அப்பட்டமான மனித உரிமை மீறல்களும் சனநாயக, அடிப்படை உரிமை மீறல்களும் இலங்கை பற்றிய கண்டனச் சொற்களை வரவழைக்கலாம். இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துகிறவிதமான நடவடிக்கைகளில் இந்தியாவோ அமெரிக்காவோ இறங்குகிற வாய்ப்பு உண்டு. ஆனால் அதற்கும் தேசிய இனப்பிரச்சனையின் தீர்வுக்கும் போரின் முடிவுக்குமிடையில் ஒரு உறவுமில்லை. மனித உரிமை மீறல்களை நிறுத்திச் சனநாயகத்தை நிலைநிறுத்துகிற நோக்கம் யாருக்குமே இல்ல. அவை யாவும் அவர்களைப் பொறுத்தவரை இலங்கையிற் குறுக்கிடுவதற்கான வாய்ப்பு வசதிகள் மட்டுமே.
இலங்கையின் F856) தேசிய இனங்களினதும் சுயநிர்ணய உரிமையை ஏற்று அதன் அடிப்படையில் சகல சமூகப் பிரிவுகட்கும் நீதியான ஒரு தீர்வு வரும் வரை இலங்கையில் ஏற்படுத்தக் கூடிய எந்த விதமான அமைதியும் நிலையானதாக இருக்க முடியாது. எனவே தான் போர் நிறுத்தம் என்பது அவசியமான ஒரு முதற்படியே ஒழியத் தன்னளவில் முழுமையான
brvWeb -70 C

/ 3^Vo ཡོད
புதிய சந்தா விபரம்
இலங்கை ஒரு ஆண்டு - ரூபா 300.00 இரண்டு ஆண்டு - ரூபா 600.00 மூன்று ஆண்டு - ரூபா 900.00 ஆயுள் சந்தா - ரூபா 15000.00
56. T ஒரு ஆண்டு - டொலர் 20.00 இரண்டு ஆண்டு - டொலர் 40.00 மூன்று ஆண்டு - டொலர் 60.00 ஆயுள் - டொலர் 1000.00
பிரித்தானியா ஒரு ஆண்டு - ஸ்ரேலிங்பவுண் 8.00 இரண்டு ஆண்டு - ஸ்ரேலிங்பவுண் 15.00 மூன்று ஆண்டு - ஸ்ரேலிங்யவுண் 20.00 ஆயுள் சந்தா - ஸ்ரேலிங்பவுண் 350.00
ஐரோப்பிய நாடுகள் ஒரு ஆண்டு - ஈரோ 10.00 இரண்டு ஆண்டு . ஈரோ 20.00 மூன்று ஆண்டு - 30.00 ஆயுள் சந்தா - (BJा 600.00
அவுஸ்திரேலியா ஒரு ஆண்டு - டொலர்2000 இரண்டு ஆண்டு - டொலர்40.00 மூன்று ஆண்டு - டொலர் 60.00 \ ஆயுள் சந்தா - டொலர் 1000.00
ஒரு நடவடிக்கை அல்ல. அதை உருவாக்கவோ நடைமுறைப்படுத்தவோ நாட்டின் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்தவோ கண்காணிக்கவோ அந்நியப்படைகளை வரவழைப்பதால் அந்தப் பிரச்சினைகள் தீரமாட்டா என்பது போகத் தேசிய இனப்பிரச்சனை மேலும் மோசமாக்கப்படுகிற அபாயம் நிச்சயமானது.
நாட்டில் சட்டமும் ஒழுங்கும் ஒரு பிரச்சனை ஆகியுள்ளது. இதுதான் முதல் முறை அல்ல. யூ.என்.பியின் 17 ஆண்டுகால ஆட்சியின் போது நடந்ததை எல்லாம் நாம் எளிதாக மறந்து விட முடியாது.
என்றென்றைக்கும் வரலாறு கூறுகிற பாடம் ஒன்றே. மக்கள் போராட்டத்தின் மூலம் அன்றி வெளியார் குறுக்கீட்டின் மூலம் சனநாயகமோ விடுதலையோ வெல்லப்பட்டதில்லை.
-ஆசிரியர் குழு

Page 7
சிறுகதை
தொலைக் காட்சியில் நடந்து கொண்டிருக்கும் அந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியை அந்த மாணவன் /ހަޗަ "ரெக்கோட்" செய்து கொண்டிருந்தான். அந்த நிகழ்ச்சி ஒரு டெஸ்ட் மெட்சும் அல்ல. தமிழகப் பாட்டுக் கலைஞர்கள் இங்கே வந்து ര 5000 ரூபா டிக்கெட்டில் நடத்தும் மெகா இசை நிகழ்ச்சியும் அல்ல! அது பாராளுமன்றத்தில் இன்று நடந்து கொண்டிருக்கும் ஒரு விவாதம். பொதுமராமத்து திணைக்களத்தை மாற்றம் செய்து, நெடுஞ்சாலை போக்குவரத்து 季ーミ அமைச்சாக மாற்றுவதற்கான soutsib. sea
விவாதத்தை தொடக்கி வைத்துபி” பேசுகையில் அந்த அரசியல்வாதி எவ்வளவு/ ஏளனமாகப் பேசுகிறான்!" P.W.D." என்றால் ச் Public Works Department 66ip of gigsLD636). அதன் உண்மையான அர்த்தம் "பாரே வெடகரன தெமலு.!" (பாதையில் வேலை செய்யும் தமிழன்) என்று சிங்கள மக்கள் சொல்கின்றார்கள் எனச் சத்தமிட்டுச் சொன்னார். பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி ஆசனத்தில் உள்ளோரும் எதிர்க் கட்சி ஆசனத்தில் உள்ளோரும் மேசையைத் தட்டி ஆரவாரம் செய்தார்கள்.
அந்த நாடாளுமன்ற உறுப்பினர், சபையின் கரகோஷத்தின் பின் இன்னும் சற்று ஊக்கமாகப் பேசினார். "அரச சபை" (State Council) காலத்திலிருந்து இன்று வரை பொது மராமத்து வேலை ஒரு திணைக்களத்துக்கு உள்தான் இருந்தது. இங்கே வேலை செய்யும் அத்தனை தொழிலாளர்களும் பிரிட்டிஷ்காரர்கள் கூட்டி வந்த இந்தியத் தமிழர்கள்! இங்கே மேற்பார்வை செய்பவர்களும், "ரைட்டர்களும்", பொறியியலாளர்களும் யாழிப்பாணத் தமிழர்களே! இந்த டிப்பார்ட்மெண்டில் தார் கொதிக்க வைப்பவரும், தார் ஊற்றுபவரும், கல்லு கோச்சி ஒட்டுபவரும் தமிழரே! இனிமேல் "P.W.D." (பாதையில் வேலை செய்யும் தமிழர்கள்) என்னும் சொல்லுக்கே இடமில்லை! அது நெடுஞ்சாலை, போக்குவரத்து அமைச்சாக மாற்றப்படும்!" என்றார்.
இந்த நிகழ்ச்சியைத் தொலைக் காட்சியிலிருந்து, சி.டீ தட்டுக்கு அந்த மாணவன் பதிவு செய்து கொண்டான். அவன் வரலாறு
 
 
 
 
 

மு. சிவலிங்கம்
படிக்கும் ஒரு கலைப் பட்டதாரி. அவன் அந்த அரசியல் வாதியின் பேச் சில அவமானப் பட்டவனாக, தன்னை உணர்ந்து வேதனைப் பட்டான். நாட்டில் மக்கள் மன்றத்தில் சட்டங்கள் உருவாக்கப்படும் போதோ, மாற்றம் செய்யப்படும் போதோ, சக குடி மக்கள் அவமதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களை நினைவூட்டிப் பார்த்தான். இதே போன்று இன்னும் ஒரு சட்டமும் அவன் இதயத்தைத் துளையிட்டு நெருடியது.
அன்றொரு நாள். பல வருஷங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் குடியுரிமைப் பற்றி விவாதம் நடந்தது. அப்போது ஒரு அரசியல்வாதி எழுந்து பேசினார். "பிரதமர் நேரு சொல்கிறார் பெருந் தோட்டத் தொழிலாளர்கள் தன்னுடைய குழந்தைகள் இல்லையென்று. பிரதமர் சேனநாயக்க சொல் கிறார் எனினுடைய குழந்தைகள் இல்லையென்று. அப்படியென்றால் இவர்கள் யாருடைய குழந்தைகள்?"
இந்தக் கேள்வியைக் குறுக் கிட்டு இனி னொரு அரசியல வாதியும் பதில சொல்கிறார். "அவர்கள் அநாமதேயக் குழந்தைகள் அலி ல. பெரு நீ தோட்ட தீ தொழிலாளர்கள் . பிரிட் டிஷ் காரர்களின் குழந்தைகள்!"
சபையில் ஆரவாரம் செய்து, கை கொட்டிச் சிரிக்கின்றார்கள் "பிரிட்டிஷ்

Page 8
சிறுகதை
குழந்தைகள்", "அநாமதேயக் குழந்தைகள்" என்று தன் இனத்தின் மேல் கொட்டிய சொற் பதங்களையெல்லாம் நினைவூட்டிப் பார்த்த போது, அந்த மாணவனின் நாடி, நாளக் குழாய்கள் வேகமாகத் துடித்தன. அவன் மெளனித் துப் போய் நின்றான். அவன் 'ரெக்கோட்' செய்த சீ.டி. தட்டு நகைப்புடன் அவன் கையில மினி னுகினி றது! "இநீத நாடு உருவாகுவதற்கும் , உயர்வடைவதற்கும் தன்னுடைய முன்னோர் எத்துணை தியாகம் செய்துள்ளனர்?" அவனது சொந்த வரலாறு அவனை மெதுவாகப் பின்னோக்கி இழுத்துச் செல்கின்றது.
கடந்த காலத்தின் துயர நினைவுகள், புரையோடிய மனப் புண்ணிலிருந்து சீழாகக் கசிந்தன. கொலனிய வெள்ளை மனிதர்கள் கண்டிப் பட்டினத்தைப் பிடித்துக் கொண்ட காலம் .... 1823 இலரிருந்து 1832 வரை. பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காக, இலங்கை வனாந்தரத்தில் முதல் மனிதத் தடம் பதித்த தெனி னாட்டுதி தமிழர் களர் , மலைப் பிரதேசங்களில் ஏறி வந்து இடறி விழுந்தனர். இருணி ட காடு. பறவைகளின் சத்தங்களோ, வண்டு, பூச்சிகளின் ஒசைகளோ, காற்றின் அசைவில் எழும்பும் மரஞ்செடி கொடிகளின் சல சலப்புக்களோ, கேட்காத ஒரு நிசப்தமான சூழல் . துரத்தில் மிகவும் இனிமையான ராகத்தில் உளிகளின் ஓசைகள் மட்டுமே கேட்கின்றன. சிற்பிகள் சிலைகள் செதுக்கி ஊருக்குள்ளே சுமந்து வருவார்கள் என்று கதைகள் கேட்ட ஞாபகம் வருகின்றது. உளிச் சத்தங்களைத் தொடர்ந்து போய் பார்த்தால், மிகவும் பயங்கரமான ஒரு வேலைத்தளம் தென்படுன்றது.
நெட்டுயர்ந்த மலைப்பாறைகளில் கயிறுகளில் தொங்கிக் கொண்டு, கற்பாறைகளை உளிகளால் துளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். கறுத்தக் கறுத்த உருவங்கள். மேல் சட்டை இல்லாது, தலைப்பாகை, கீழ்ப்பாய்ச்சிகளுடன் சிலர். தலைப்பாகை கோவணத்துடன் சிலர். மீண்டும் உளிச் சத்தங்கள் ஒரே சீராகக் கேட்கின்றன. களைப்பில் கைகள் ஓய்ந்திருக்கும் போது நெற்றியில் கொப்பளித்த வியர்வையை வழித்து வீசுவதை அறிய முடிகிறது.
சிலர் வித்தை காட்டுவதைப் போல அந்த மலைப் பாறையில் எந்த விதப் பிடிமானமும் இல்லாமல், இடுப்பில் கட்டியிருக்கும் கயிற்றின் துணையோடு இன்னும் மேலே ஏறுவதும், கீழே இறங்குவதுமாக இருந்தார்கள். கயிற்றின் மறுமுனைகள் மலை உச்சியில் நிற்கும்
gbmwelwb. --70
 
 
 

மரங்களில் கட்டப்பட்டிருக்கின்றன. கரணம் தப்பினால் மரணம் என்பது போல கயிறு அறுந்து விட்டால், உயிரும், உடலும் உருக்குலைந்து சிதறிப் போகும். "பஞ்சம் பொழைக்க" வந்த பூமியில் அவர்களுக்கு மரணம்.
அணு தினமும் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வு
கீழே தொப் பரிகள் அணிந்த வெள்ளைக்காரர்கள் ஒரு புறமும், முண்டாசு கட்டி, கோட்டு வேட் டி அணிந்த கறுத்த மனிதர்கள் மறு புறமுமாகவும் நின்றுக்கொண்டு "ஏயப் " "ஒய் !" என று சத் தமிட்டுக் கொண்டிருந்தார்கள். மலைப் பாறைகளில் துளையிட்ட ஓசைகள் ஓய்ந்தன.
மீண்டும் வித்தை காட்டுவதைப் போன்ற காட்சிகள். உயரத்தில் சின்ன உருவங்களாக தோன்றும் அவர்கள் கயிற்றின் துணையோடு மலை உச்சிக்கு ஏறி விட்டார்கள். பின்னர் திரும்பவும் வெள்ளைக் கயிறுகளோடும் சிறு சிறு பொட்டலங்களோடும் துளையிட்ட கற்பாறைக்குள் வெடி மருந்துகளைக் கொட்டி, வெள்ளைக் கயிற்றையும் துளைக்குள் இறுக்கி அடைத்து விட்டுக் கயிற்றின் மறு முனையைப் பிடித்துக் கொண்டு மலையுச்சியில் மீண்டும் ஏறுகின்றார்கள். -
ஏறியவர்கள் வெடி மருந்துக்குள் செல்லும் வெள்ளைக் கயிறு என்ற திரியைப் பற்ற வைக்கின்றார்கள். தொப்பிக்காரர்களும், முண்டாசுக்காரர்களும் திரும்பிப் பார்க்காமல் தொலைத் தூரம் ஓடுகின்றார்கள்!
சிறிது நேரத்தில் இடிச் சத்தத்துடன் மலைப் பாறைகள் வெடித்துச் சிதறுகின்றன. ஆகாயத்தில் உயரப் பறந்த கற் சிதறல்கள் பூமியில் கொட்டிய பின் . தொப்பிகளும் முணி டா சுகளும் 99. வருகினி றன. மலையுச்சியில் இருந்தவர்களும் அநீத வனாந்தரத்தின் வேறு திசையிலிருந்து செடிகளை நீக்கிக் கொண்டு வருகின்றார்கள்.
பகல் வேளை, சாப்பாட்டு நேரம். தொப்பிகளும் முண்டாசுகளும் தூரத்திலிருக்கும் கூடாரத்துக்குள் செல்கின்றன.
கல் உடைக்கும் தொழிலாளர்கள் தங்கள் கட்டுச் சோற் றை அவிழ்த் துச் சாப்பிடுகின்றார்கள்.
அவர்களின் வேலைத் தலத்துக்குப் பின்புறமாகப் பார்த்தால், நீண்டு வளைந்து வளைந்து பாம்பு படுத்துக் கிடப்பது போல் 'சர்க் கார் பாதை’ உருவாகி வருவதைக் காணலாம்! பாதைகள் எப்போதும் நதிகளின் அருகிலேயே செல்வதைக் கவனிக்கலாம். ஆறுகள்தான் பாதைகளுக்குப் பாதை காட்டும்
స్థా 2Voña - ěah 2008

Page 9
சிறுகதை
புவியியல் விஞ்ஞானத்தை மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன!
மலைப் பாறைகளை உடைத்துப் பிளந்து நொறுக்கிய தொழிலாளர்கள், சரளைக் கற்களை உடைக்கத் தொடங்கினார்கள். சரளைக் கற்கள் உடைப்பது மலைப் பாறைகளை உடைப்பதை விட ஆபதி தானது. எத்தனையோ தொழிலாளர்கள் கற் சில்லுகள் பட்டுக் கணி களை இழந்தார் கள் . குருடராகிய தொழிலாளர்கள், கொடுப்பனவுடன் இந்தியா திரும்பினார்கள். அவர்களுக்கு வெள்ளைக்காரன் கொடுத்த 'கருணைக் காசுகளையும் கூடக் கங்காணிகள் தங்கள் கோவணத்தில் செருகிக் கொண்டார்கள்!
முழு மலைப் பிரதேசங்களுக்கும் பாதைகள் விரிந்தன. பேராதனைப் பாலம், ரம்பொடை பாலம். சங்கிலிப் பாலம் என்று பாதைகளைத் தடை செய்யக் குறுக்கிடும் ஆறுகளின் மேல் பாலங்கள் அமைந்தன.
கட்டுகின்ற பாலங்கள் இடிந்து விழும் போதும் கட்டிடத் தூண்களை எழுப்புவதற்கு அடித் தளம் அமைக் கும் போதும் , வெள்ளைக்காரர்களுக்கு கங்காணிகள் ஒரு ‘மந்திரம்' சொல்லிக் கொடுத்தார்கள். கொடிய வெள்ளைக்காரர்கள் முதலில் அந்த மந்திரம் மூட நம்பிக் கையெண் று சொன்னார்கள். பின்னர் தமது நோக்கங்கள் நிறைவேற எதையும் செய்வதற்குத் தயாராகினார்கள். "பிரிட்டிஷ்காரர்களுள் பெருந்தோட்டம் செய்யும் ஸ் கொட் லாந்துக்காரர்கள், சாதியிலும், அறிவிலும் குறைந்தவர்கள். ஆனால் வியாபாரத் துறையில் மூளைசாலிகள்" என்ற தகவலும் உண்டு.
***
ஒரு நாள் பெளர்ணமி இரவு.
தஞ்சாவூர் சீரங்கன் கங்காணி மல்லனையும், மாடனையும் அழைத்து, குசு குசுத்தான். மூன்றாவது நாளில் சீரங்கன் கங்காணியின் உத்தரவுப்படி மல்லனையும் மாடனையும் அழைத்துக்கொண்டு ஆண்டிக் கங்காணி தலை மன்னாருக்குக் குதிரை வழிப் பாதையூடாக நடந்தான். அன்று, ஒற்றையடிக் காட்டுப் பாதைகள், இந்தியத் தொழிலாளிகள் நடந்து நடந்து தெளிவாகத் தெரிந்தன.
சீரங்கன் கங்காணியின் தேவைகளை சரி வரச் செய்து கொண்டு வந்தால், தனக்குச் சீமைத் துரை மூலம் செல்வாக்கு உயரும். தரகுப் பணமும், தலைப் பணமும் கிடைக்கும் என்று ஆணி டி கங் காணி நினைத் துப் பார்த்து பூரிப்படைந்தான்.
37wę8 770 جس C
 

மன்னார் கரையில் மலபார் வள்ளங்கள் ஆடிக் கொண்டிருந்தன. ஆண்டி கங்காணி மல்லனையும், மாடனையும் வள்ளத்தில் ஏற்றிக் கொண்டு அக்கரைக்குச் சென்றான். நெளிந்து நெளிந்து அலைகளை அள்ளி வீசும் நீலக் கடல் அவனுக்குக் கொஞ்சம் பரிச்சயப் பட்டது. மல்லனும் மாடனும் சீரங்கன் கங்காணியின் 'ஜோலியை முடித்துக் கொண்டு தங்கள் பெண்சாதி, பிள்ளைகளை பார்த்து வருவதிலும் பெரு மகிழ்ச்சி கொண்டார்கள்.
அக் கரையில் இறங்கிய ஆணி டிக் கங்காணி சேலத்துக்கும், செங்கல்பட்டுக்கும் சென்றான். சீரங்கன் கங்காணி கேட்டபடியே 16 வயதில் இரண்டு இளஞ் சிறுவர்களை மிகக் கச்சிதமாகப் பிடித்துக் கொண்டான். சிறுவர்களின் பெற்றோர்களிடம் பணத்தைக் கொடுத்தான். "இந்தாலே! செங்கான்! ஒம் மவனுக்கு சீமான் குடுத்த வெள்ளிக் காசு 80 ரூவா! 'சென்டு' காணி வாங்கிக்கோ! தேவத குடுத்தப் பணம். துண்ணு தொலைச்சுப்புடாதேலே! மூணு மாசம் எண்ணி முடிய, கூலிக் காசோட ஒண்ட்ர பக்கிகள ஊர்ல கொண்டாந்து உட்றேன். லே! வரட்டுமா லே!" என்று ஒவ்வொரு பெற்றோரிடமும் கூறி விட்டு வேகமாக நடந்தான். பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர்கள், எதையெதையோ சொல்வதற்கு வாயைத் திறந்தும், அவைகளைக் கேட்க விரும்பாது, அந்த இடத்தை விட்டு நழுவி விடுவதிலேயே அவன் கவனமாக இருந்தான். ஓட்டமும், நடையுமாகக் கடற் கரைக்கு வந்து சேர்ந்தான். சிறுவர்களை வள்ளத்தில் ஏற்றி மன்னார்க் கரையை வந்தடைந்தான்.
மன்னாருக்கும் கம்பளைக்கும் காட்டு வழிப் பாதை 200 மைலாகும். ஏழு நாட்களில் ஆண்டி கங்காணி கம்பளை வந்து சேர்ந்தான். சீரங்கன் கங்காணி, ஆண்டி கூட்டி வந்திருந்த காளைகளைப் பார்த்து, திருச்சி மலைக் கோட்டை கோயில் உச்சியில் அமர்ந்து விட்டதைப் போல் ஆடி மகிழ்ந்தான். சீமை துரை கொடுத்த கப்பல் மார்க் "வைன் மதுவை அருந்திய போதையில், சிறுவர்களை வெறித்துப் பார்த்தான். "பச்ச மஞ்ச மாதிரி திரேகம். தக்காளிப் பழம் மாதிரி மூஞ்சி. பாலுந் தயிரும் துன் னுட்டு மினுங் கும் பாப் பாண் மாதிரி பொன் னுடம் பாய் இருக் கானுஹ! இந்தப் பிஞ்சுஹள சீமத் தொரமார்ஹ கண்டுகிட்டா ஆவத்து, ஆவத்து!" என்று சீரங்கன் கங்காணி சுற்றும் முற்றும் பார்த்தான்.
அவன் பயந்ததிலும் பல காரணங்கள் இருந்தன. காடழிக்க ஆரம்ப காலத்தில் ஆண்கள் கூட்டமே வந்தார்கள். பெண்கள் வர வேண்டிய அவசியம் இல்லாத அந்தக் காலத்தில்,
ØVOR t 名* 2003 స్ట్ কের।

Page 10
சிறுகதை
அவர்கள் மத்தியில் பாலியல் இச்சைக்காக தனி னினச் சேர்க் கை பழக்கம் மலிந்து போயிருந்தது. இந்தப் பழக்கத்தில் விருப்பம் அற்றவர்கள் கங்காணிகளை, வெள்ளைக் காரர்களை, சக தொழிலாளர்களைக் கொலை செய்த ரகசியங்களும் இருந்துள்ளன. சீரங்கன் கங்காணி மாடனைக் கூப்பிட்டான் "மாடா! பேராண்டிகளுக்கு நெல்லுச் சோத்தப் போடு!" என்றான்.
காடுகள் படர்ந்த பள்ளத் தாக் கு. மத்தியானம் முடிந்து ஒரு மணிக்கே மேகம் மூடி விடும். வெண்ணிறப் புகை கவிழ்ந்து விடும். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாது. இது மழைக் காலமும் கூட.
சேலம், செங்கல்பட்டிலிருந்து வந்திருந்த சிறுவர்களுக்கு, கடல் பயணம், காட்டுப் பயணம் இங்கே சிறிப் பாயும் பனி மூட்டங்களுக்குள்ளே ஒருவரையொருவர் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டிய புதினங்கள் யாவும் குதூகலத்தையே கொடுத்தன. இந்தியாவில் மழையும், குளிரும் இல்லாமல் எந்நேரமும் புழுதி பறக்கும் வெய்யில் பூமி, காற்று வீசாத படர்ந்த வெளி, வெடித்துக் கிடக்கும் வானம் பார்த்த வயல் நிலங்கள். பச்சை பசுமை காண முடியாத அந்த வரண்ட சூழலில் வாடிக் கிடந்த சிறுவர்களுக்கு, இலங்கை வனாந்தரம் சொர்க்கமாகத் தெரிந்தது.
இங்கே காண்பதெல்லாம் பச்சை, பசுமை! மரஞ்செடி கொடிகளும் பூத்துச் சிரித்தன! கோட்டிச் சிந்தும் நீர் வீழ்ச்சிகள் 8Ꭼ8l Ꭶ எழுப்பின! எங்குமே தண்ணிர் தண்ணீர்! அந்த இரண்டு விடலைச் சிறுவர்கள் இலங்கை பூமியை விட்டு இந்தியாவுக்குச் செல்ல விரும்ப வில்லை. இங்கேயே வாழ்ந்து வளர வேண்டும் என்று
ஆசை கொணி டார் கள் . அவர் களினி ஆசைகள் அர்த்தமற்றவை என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை!
ஒரு நாள் சித்திரை பெளர்ணமி.
ஆண்டிக் கங்காணி சேலத்து சிறுவனை கோவில் பூசைக்கு போய் வரவேண்டும் என்று, காலையிலேயே காட்டு ஓடையில் குளிக்க அழைத்துச் சென்றானி , குளித்து வந்த சிறுவனுக்கு வேட்டி உடுத்தி, வெற்றுடம்பில் திருநீறு பூசி, சந்தனக் குங்குமமிட்டு, காதுகளில் காட்டரளி பூக்களைச் செருகினான். மலைக் கடவுள் முருகனுக்கு குறிஞ்சிப் பூ பிடிக்கும் என்பதால் குறிஞ்சிக் காட்டுக்குப் பூப்பறிக்க நுழைந்தான். குறிஞ்சிப் பூக்கள் பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒரு முறைதான் பூக்குமாம். அவன் பூக்களுக்குப் பதிலாக குறிஞ்சி இலைகளால் பச்சை மாலை கட்டிச், சிறுவனுக்குச் சூட்டினான். அந்த சின்ன இளம் குருத்து
ENWayib --70 C

மறுமலர்ச்சிக் கவிதைகள் (கவிதைத் தொகுப்பு) தொகுப்பும் பதிப்பும்
செல்லத்துரை சுதர்சன் தமிழ்த்துறை, பேராதனைப் புல்கலைக்கழகம் விலை : 250.00 பதிப்பு : டிசெம்பர் 2006 |கிடைக்குமிடம் : வசந்தம் புத்தகசாலை
கொழும்பு-11 தொ. பே 2335844, 2381603
ܓܠ
V
வியப்புக்கான காரணங்கள்
மிரட்டல்கள். அடிக்கு மேல் அடிகள் நிழல்களும் அச்சங்களும் உறுதியின்மைகள் ஒடுக்குமுறையும் புலப்பெயர்வும். ஒரு
சர்வாதிகாரிக்குப் பின் இன்னொருவன் இருண்ட இடம் ஒவ்வொன்றினின்றும்
இரண்டு கற்கள்
ஒவ்வொரு தெரு முலையிலும் முன்று
அல்லது அதிகமான வாய்ப்புக்கள் ஒவ்வொரு உணவகத்திலும் நான்கு
அல்லது அதிகமான தகவல் தெரிவிப்போர் நான் இன்னமும் உயிரோடிருக்கிறேன் அது எனக்கு வியப்பூட்டுகிறது
ஹோஸ்ே லூயிஸ் வலே -
gvpni - ëë 2008

Page 11
சிறுகதை
காலையில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை. ஆண்டி கங்காணி அவனுக்கு ஒரு குவளை கொம்புத் தேனும் தவிட்டுக் கொயப் யாப் பழங்களும் கொடுத்தான்.
சிறுவன் இவர்கள் காட்டும் அன்பு, பாசம், ஆதரவு யாவற்றையும் நினைத்து இன்னும் குழந்தையாக மாறி, மகிழ்ச்சியில் திளைத்தான். இது வரை காலமும் பெற்றோரும், உற்றாரும் இவ்வாறு பரிவு காட்டியதில் லை என்று நினைத்தான். ஆண்டிக் கங்காணி சோடனை செய்திருக்கும் அந்தச் சிறுவனைப் பாலம் கட்டும் இடத்துக்கு அழைத்துச் சென்றான். சீரங்கன் கங்காணி சீமைத் துரைகளை அழைத்து வரச் சென்றிருந்தான்.
மல்லன் பூசைப் பொருட்களுடன் ஆண்டி கங் காணியைத் தொடர் நீ தானி . பாலம் நிர்மாணிக்கும் ஓர் உயர்ந்த கட்டிடத்தின் அருகில் பூசையை ஆரம்பித்தார்கள். சீரங்கன் கங்காணியும், சீமைத் துரைகளும் வந்து விட்டார்கள். சேலத்து சிறுவனைச் சாம்பிராணி போடச் சொன்னார்கள். கண்களை இறுக மூடிக் கொண்டு, பால் போல் எரிக்கும் அந்த பெளர்ணமி வெளிச்சத்தில் கிழக்குத் திசையைப் பார்த்துக் கும்பிடச் சொன்னார்கள். சிறுவனும் அவ்வாறு செய்யவே, மல்லன் உடனே அவனை அடித்தளம் வெட்டியிருக்கும் குழிக் குள் தள்ளி விட்டான்! குழுமியிருந்த கூலியாட்கள் கறி களை வேக வேகமாக குழிக் குளிர் உருட்டி விட்டார்கள். அவசர அவசரமாக மணல், சிமிந்தி சாந்துகளைக் கொட்டினார்கள். வெளி ளைக் காரர்கள் கணிகளை மூடிக் கொண்டார்கள். சீரங்கன் கங்காணி பலமாகச் சிரித்தான். "சீமத் தொரைமார்களே! நர பலி குடுத்துட்டோம். இதுக்கு மேல கட்டு ஒடையாமே, கட்டரம் ஏந்திரிக்கும் பாருங்கோ" என்று வீர திரமாகப் பேசினான்.
எங்கோ பிறந்து வளர்ந்து மாபெரும் சமுத்திரத்தைக் கடந்து வந்த அந்தப் பாலகனின் உயிரும், உடலும் அந்தப் பாலத்தைக் காப்பதற்குப் புதைக்கப்பட்டன!
இந்த நரபலி பூசை. மீண்டும் வைகாசி பெளர்ணமியில் நடந்தது. செங்கல் பட்டு சிறுவனின் உயிர் தானத்தோடு இன்னொரு பாலத்தின் கட்டிட வேலையும் முடிவடைந்தது!
இவி வாறு G8 Lo T L L T f பாதை வேலைகளுக்கும் ரயில் பாதை வேலைகளுக்கும் "பஞ்சம் பொழைக்க வந்தோம்" என்று இந்த தேசத்தின் அனைத்து நிர்மாணத்துக்கும் அடித்தளமாக்கப் பட்டிருக்கும் தமிழர்களின் உயிரும் உடலும் ஆத்மாவும் இந்த நாட்டின்
பாதைகள் முழுவதிலும் பதிக்கப் பட்டிருப்பதை
70ح۔ طالماتیات
 
 

யாரறிவர்? ஒவ்வொரு புகை வண்டி நுழையும் சுரங்கங்களிலும் எத்தனை தமிழ் உயிர்கள் காவு கொடுக்கப்பட்டுள்ளன?
உலகம் அறியாத இந்தக் கொடுமைகளைப் போன்றே, தாய்லாந்து நாட்டு சயாமியக் காடுகளில் சயாம் மரண ரெயில் பாதை அமைப்பதற்கு பல லாயிரக் கணக் கான மலேஷரியத் தமிழர் களை பல வநீதமாக ஜப்பானியர்கள் இழுத்துச் சென்று, ரயில் பாதை அமைத்தார்கள். மிகக் கொடுரங்களைச் சந்தித்த அந்த மக்கள், மலைக் காடுகளில் அகால மரணங்களால், ஆயிரம் ஆயிரம் பேர் புதையுண்டு போன வரலாறுகள், இன்று மெல்ல மெல்ல மனிதாபிகளினால் வெளிவரத் தொடங்குகின்றன!
துயரங்களே தமிழரின் தொடர்கின்ற சரித்திரங்களாய். பாதைகள் அமைத்துக் கொடுத்த தமிழர்களுக்கு அந்த அரசியல்வாதி எள்ளி நகையாடி சூட்டிய "P.W.D." பட்டம் எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது.!
சொநி த சமூகதி தினி புணி பட்ட வரலாறைப் படிக்கும் அந்த மாணவன், மின்னி மினுங்கிக் கொண்டிருக்கும் அந்த சீ.டீ. தட்டின் துவாரத்தில் சுண்டு விரலை விட்டு, ஆத்திரம். ஆத்திரமாகச் சுழற்றிக் கொண்டிருந்தான்!
宏索玄素
(யாவும் கற்பனையல்ல.)
/ 911'60Lil 11 விளக்கம்)
கொழும்பு விளக்கமறியல் சாலையில் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாகத் தடுத்து வைக் கப்பட்டுள்ள ஐந்து மலையக ஆசிரியர்களில் ஒருவரான எஸ். சுகேசனன் ஓவியருமாவார்.
விளக்கமறியலில் இருந்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் இருபத்திநாலாம் (24-12-2007) திகதி இரவு 3.32 மணிக்கு முன் அட்டைப்படம் இவரால் பூர்த்தி செய்யப் பட்டுள்ளது. மழை வெள்ளத்துள் தனித்து விடப்பட்டு அழுகின்ற சிறுவனின் தனிமையை சித்திரிப்பதாக இவ் ஓவியம் அமைகிறது.
அத்துடன் டிசம்பர் மாதம் பதினேழாம் (17-12-2007) திகதி இரவு 11.30 மணியளவில் வரைந்து முடித்த ஓவியமே பின் அட்டையை அலங்கரிக்கிறது. சிறுவன் ஒருவன் தனது விரலிடுக்கினூடு விழிகளால் எதையோ கூர்ந்து அவதானிப்பதாக இப்படத்தில் சித்திரிக்கப்
சூட்டுள்ளது. ン

Page 12
தலிதை
சபிக்கதி
உனக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகளால் அவதிப்படுகிறாய். உன் உதடு யார் யாரையோ சபிக்கிறது.
கழுகுக் கண்களில் பட்ட குஞ்சுகளாய் நாங்கள் உன் மனம் காயத்துடனேயே...
திட்டமிட்டு திட்டமிட்டே திரைக்கப்பால் முடி மறைக்கப்படும் குமுறல்கள். அழகழகாக மறைக்கப்பட்டு முகமுடிக்குள்ளிருக்கும் துரோகம் கிழிக்க முற்பட்டு கீழ் தள்ளப்பட்டு மிதிக்கப்பட்டோம்.
வறுமை வடுக்களில் விடுபட எழுந்த எம் உடல் பற்றியே எண்ணியுருகி வற்றிப்போகும் உன் உடல் சுரண்டி சுரண்டியே கீறல்பட்ட கோடுகளாய் தெரியும் சுருக்கம் தந்த தோல் எம்பி எம்பி எழமுடியாமல் ஏமாற்றத்தையே எதிரொலிக்கும் கன்னக்குழி எல்லாமாய்...
உன் கனவுகள் நிரப்பப்படாத வெற்றிடமாயது பாட்டியிடமிருந்து உனக்கும் உன்னிலிருந்து எனக்குமாய் தொப்புள்கொடி உறவாய் தொடமுடியாத் தூரமாய். . .
C.

டூகிக்.
செம்மலர் மோகன்
i ܓܲ6ܐܰܕܶ WWW W R ཞུ། །
S svŅ
Grւնւյլգ Աpւգպմ»? இருக்கும் அரசியல் இழிதலை முறை. சீ சியென்று உதறித் தள்ளும் வரை ஈரப் படுத்தப் படாமல் ஆழப் புதைக்கப்பட்டே வரண்டுவிடும் வாழ்க்கை.
மீட்சிக்காய் திரைகிழித்து முண்டியெழ முயற்சிசெய்.
போராடிப் பெறும் புதுவுலகம் நமக்கில்லாமல் போகலாம் நாளைகள் நம்மைச் சபிக்காமலிருக்கட்டும்!
(கொழும்பு விளக்கமறியல் சாலையிலிருந்து)
D 9VORI - Sadh 2008

Page 13
சிதாடர்நடைச்சித்திரம்
வலிகாமத்து ம DTSGÜTE
ஆறு மணிக்கு யாரும் அலாரம் வைக்கத் தேவையில்லை. 'டாண் டாண் டாண்." என்று ஞானவைரவர் கோவில் மணி அந்த வேலையைச் செய்யும். சரியான நேரத்தில் அந்த மணி அடிக்கப்படாவிட்டால் "குழந்தையர் உங்க இலப் லைப் போல’ என்று ஊர் வா பப்கள் முணுமுணுக்கும். அவ்வளவு தூரம் ஞானவைரவர் கோவிலுடன் ஒன் ரிபவராக குழந்தையர் இருக்கிறார்.
ஆள் உயரம் அவ்வளவு இல்லை; ஐந்தடிக்கு மேற்படாது. மடித்துக் கட்டிய சாறம், வெறும் மேல் , வெறும் காலுடன் அந்தக் கோயிலையும் மடத்தையும் வளைய வருவார். மார்பிலும் தலையிலுமாக நரைத்த முடி அவரது முதுமையைக் காட்டும், கூடவே சுத்தமாகச் சவரம் செப்த முகத்தின் சுருக்கங்களும் அதற்கு ஆதாரமாக இருக்கும்.
வெள்ளைக் காரணி ஆட்சி இருந்த காலத்திலேயே அவர் மத்திய வங்கியின் சிறாப்பர் சேவையில் இணைந்து விட்டார். அந்தக் காலத்தில் மெற்றிக்குலேசன் பாஸ் பண்ணி, கோட், சூட் போட்டு உத்தியோகத்திற்குப் போனவர். குமாரசாமி என்பது அவரது பெயராக இருந்தாலும் உறவினர், ஊரவர் அவரைக் குழந்தை' என்ற செல்லப் பெயராலே அழைப்பர். உறவு முறையைப் பொறுத்து அண்ணை, மாமா, பெரியப்பா என்ற முறைகள் விகுதியாகச் சேரும்,
எங்களுக்கு அவர் பெரியப் பாவாக மட்டுமல்ல. சில கட்டுக் கோப்பான அன்றாட நடைமுறைகளில் அவர் எமக்கெல்லாம் ஆதர்ஷ புருஷனாகவும் விளங்குகிறார்.
மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்கு நேர் கிழக்காக ஐந்நூறு யார் தூரம் மட்டில் நடந்து வந்தால் யமன் பொன்னம்பலம் வீடு கழியப் பாதையின் ஒரமாய் வலது கைப் பக்கமாக மடம் இருக்கிறது. எதிர்ப் பக்கம் வீமனி காமம்
gebrw 3, V2. --70 G
 

மகாவித்தியாலயம், அறுபது அடி தூரத்துக்கு மடத்தின் முன் விறாந் தைப் பகுதி நீண்டு கிடக்கிறது. நீள வாட்டிற்குச் சிலாகைகளால் அடித்த மறைப்பு நட்ட நடுவில் ஒரு படலை, வாசல், படி இருக்கிறது. உள்ளே சிங்கம், நாய், குதிரை போன்ற மரத்தில் செய்த வாகனங்கள்
2.Voči - Sadh 2003

Page 14
சிதாடர்நடைச்சித்திரம்
வைக்கப்பட்டிருக்கின்றன. அதன் உட்புறமாக இரண்டு தொங்கலிலும் இரண்டு அறைகள். மேற்கு வளத்து அறை ஞான வைரவர் கோவிலின் களஞ்சியசாலை. கிழக்கு வளத்து அறையில்தான் குழந்தையரின் குடியிருப்பு.
தனி அறையாக இருந்தாலும் ஒரு வீட்டிற்கு உரிய அத்தனை தளபாடம், தட்டு முட்டுச் சாமான்களும் அதனுள் உள்ளன. தெற்கு வளமாக யன்னல் ஓரத்தில் ஒரு சொகுசுக் கட்டில், எதிர்ப்புறத்தில் மேசை, சின்னதாக ஒரு அலுமாரி, மண்ணெண்ணெய் அடுப்பு, ஹொட் பிளேட், அயன் பொக்ஸ் எல்லாம் இருக்கும். அறை வாசலில் ஒரு சாய்மனைக் கதிரை. உள்ளே மேசையின் மேல் ஒரு பிலிப்ஸ் வால்வ் றேடியோ. அதன் ஏரியல் கம்பி, வைரவர் கோவில் மூலஸ்தானத்தின் பின் பக்கமாக உள்ள பனையின் அரைவாசி உயரத்தில் கட்டப்பட்டிருக்கிறது. அந்த றேடியோவில் ஒல் இந்தியா றேடியோவும், பி.பி.சியும் தான் அதிகம் ஒலிக்கும். அதுவும் செய்தி, நல்ல சங்கீதம் என்றால் மட்டும் தான். மற்றும்படி அது ஓய்ந்து கிடக்கும்.
அவரது அறையில் இருந்து கிழக்குப் பக்கமாக இருபது அடி தூரத்தில் ஞானவைரவர் கோவிலின் மூலஸ்தானம். கோவில் ஒன்றும் பெரிய கோவில் அல்ல. ஆனாலும் மூலஸ்தானம், உள் மண்டபம், வெளி மண்டபம், சுற்றுப் பிரகாரம் என்று சில அமைப்புகளைக் கொண்டிருக்கிறது.
கோயிலுக்குக் கிழக்கு வளாகத்தில் கிணறு. கிணற்றடியில் இருந்து ஒரு வாய்க்கால் பிரதான பாதைப் பக்கமாகச் செல்கிறது. பிரதான பாதையில் ஒரு தண்ணிர்த் தொட்டி, அருகில் ஒரு சுமைதாங்கிக் கல்லு.
smWava - 70 g
 
 

கோவிலின் கிழக்கு வளத்தில் குழந்தையரின் தங்கை செல்லம்மாவின் வீடு. செல்லம்மாவின் வீட்டிற்கு முன்னால் உள்ள சந்தியில் இருந்துதான் தம்பக தம்பி ஒழுங்கை வடக்கும் பக்கமாகச் செல்கிறது. செல்லம்மா கொஞ்சம் ஆதிக்க வல்லமை உள்ள பெண்மணி. குழந்தையர் கொழும் பில் தொழில் பார்த்த காலத்தில், ஞான வைரவர் கோவிலைப் பராமரிக்கும் பொறுப்பு தற்காலிகமாக தங்கை செல்லம்மாவிடம் விடப் பட்டிருந்தது.
செல்லம்மாவின் மேற்குப் பக்க எல்லை மெல்ல மெல்ல விஸ்தாரமாகி, சுமைதாங்கிக் கல்லோடு வியாபித்து கிணற்றைச் சுற்றிப் பெருத்து கோயிலுக்கு உரிய காணியின் சில பகுதிகளையும் கைப்பற்றியிருந்தது. இதை அறிந்து கொண்ட குழந்தையர் தனி தொழிலுக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு ஊரோடு வந்து விட்டார்.
ጰ கோவில் அவரது மூதாதையரால் பராமரிக்கப்பட்டு வந்தாலும் அதன் அடுத்த வாரிசு குழந்தையர் தான் என்பதால் அது இன்னொரு உரிமைக்காரர் கைக்கு மாறுவதை அவர் விரும்பவில்லை. நிலைமை மல்லாகம் நீதிமன்றம் வரை போனது. கோவிலின் தென்புறமாக இருந்த பத்து ஏக்கர் தோட்டக் காணியையும் கிணற்றில் கோயிலுக்குரிய பங்கினையும் அவரால் மீட்டுக் கொள்ள முடிந்தது.
இனியென்ன இவற்றைப் பராமரித்தாக வேண்டுமென்பதால் அவர் கோயில் மடத்திலேயே தங்கிவிட்டார். மனைவி பிள்ளைகள் அளவெட்டியில். குடும்பப் பிரிவு மறுபுறமாக மல்லாகம் கோட்டுக்குப் போனது. ஆனாலும் குழந்தையர் கோவிலைப் பராமரிப்பதே தன் பிரதான பணியென்று இருந்து விட்டார்.
பத்துத் தர இருபது அளவில் சுவர் எழுப்பி, ஒடு போட்டுக் கிடந்த கோவிலை மண்டபம், மூலஸ்தானம், கோபுரம், சிலைகள், வாகனம், சுற்றுப் பிரகாரம் என்ற மட்டத்துக்கு உயர்த்தினார். உறவினர் ஊரவரது பொருள் உதவியுடன் தனது சிரமத்தையும் முழுமையாக ஈடுபடுத்தி அதனைச் சாதித்தார்.
'தம்பி வைரவருக்கு ஒரு காண்டாமணி செய்ய வேணும், காண்டாமணிக்கு ஒரு தூண்
29 9%8 - Seð 2008 s.

Page 15
சிதாடர்நடைச்சித்திரம்
எழுப்ப வேணும்' என்று அடிக்கடி ஊரவரை உணர்வுப்படுத்தி அதனையும் செய்து விட்டார். அதைத்தான் இப்போது காலையும் மாலையும் சரியாக ஆறு மணிக்கு அடித்து வருகின்றார்.
குழந்தையருக்கு இப்போது வயது அறுபதைத் தாண்டியிருக்க வேண்டும். அவரது செயற்பாடுகளில் முதுமையின் தளர்வு தெரிகிறது. அடிக்கடி தொய்வு வந்து சிரமப் படுத்துகின்றது. ‘மூச்செடுக்கக் கஸ்ரம், நடக்கக் கஸ்ரம், குனிஞ்சு நிமிர்ந்து ஒண்டும் செய்ய ஏலாது என்று அடிக்கடி கூறுகின்றார். கை உதவிக்கு, துணைக்கு ஆள் தேவை. ஆனாலும் அவரது றாங்கி அதற்கு சற்றேனும் இடம் கொடுக்காது. சுயமாக தனது தனித்துவத்துடன் இயங்கிக் கொள்ளவே முயல்கிறார்.
தனியாக தான் சமைத்துச் சாப்பிடுவதாக ஒரு சோறு, இரண்டு மரக்கறி அவியல் தேவைக்கு ஏற்ப தேங்காய்ப்பூ, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்துக் கொள்வார். எதையும் மேல்மிச்சம் என்று வெளியே வீச மாட்டார். தேங்காய்ப் பூவைத் துருவி, மெல்லப் பிழிந்து பால் எடுத்துவிட்டுத் தேங்காய்ப் பூவையும் உணவின் பாகமாகக் கறியுடனோ, சம்பலாகவோ சேர்த்துக் கொள்ளுவார். அது வயிற்றுப் போக்கைச் சுகப்படுத்தும் என்பது அவரது வியாக்கியானம்.
இரவில் இடியப்பம், பிட்டு, அவரது தேவைக்கு ஏற்பச் செய்து சாப்பிட்டுக் கொள்வார். அரிசி மா இடித்து வறுக்கும் வேலையை எங்கள் அம்மாவிடம் ஒப்படைத்து விடுவார். தனது பென்சன் திகதியை ஒட்டி அதற்கான நாளைக் குறிப்பார். சிவப்புப் பச்சை அரிசியை வாங்கிக் கொண்டு வருவார். தெல்லிப்பழை வரையில் போய் கண்ணப்பர் கடையில் வாங்கி வந்தால்தான் அவருக்குத் திருப்தி.
அரிசி பிடைப்பது, நெல்லு உமி, கல்லு அகற்றக் கிளைவது, ஊற விடுவது, இடிப்பது, வறுப்பது, ஆறவிட்டு துணிப் பையில் பொதி செய்வது வரை அத்தனை பக்குவத்தையும் திரும்பத் திரும்ப நினைவுபடுத்துவார். விடிய அதிகாலையில் ஊறவிட்ட அரிசியை, சின்னாச்சி வந்து இடித்து வறுத்து முடிய மாலை ஐந்து ஆறு மணியாகிவிடும். அரிசி மாவைப் பொதி செய்து கொடுத்ததும் அவர் தனது கணக்கு அறிக்ைைய வாசிப்பார். அரிசியின் விலை தவிர இடித்தது, வறுத்தது, விறகு, கூலி வரை கணக்குப் பார்த்து சதக் கணக்கு பிசகாமல் அம்மாவின் கையில் கொடுத்துவிட்டுப் போவார். மிளகாய்த் தூள் இடிப்பதானாலும் இதே நடைமுறைதான்.
அவரது போக்கு வரத்துக்கு என்று அவரிடம் ஒரு றலி சைக்கிள் இருந்தது. அது வாங்கிப் பத்து வருசம் கடந்திருக்கும். இன்னும் banWelwb - 270 €
 

புதுசு போலவே இருந்தது. கிழமைக்கு ஒரு தரம் எண்ணெய் போட்டுத் துடைப்பார். முதிரைப் பலகையை வெட்டி பொலிஷ் பண்ணி, கரியரில் பூட்டி வைத்திருக்கிறார். ஸ்ரான்ட், டைனமோ, லைற், பிறேக், ரயர், ரியூப், காற்று அமுக்கம் எல்லாம் ரிப் ரொப்பாக இருக்கும். அவரைத் தவிர வேறு யாரிடமும் அதனை ஒடக் கொடுக்க மாட்டார். அவருக்கு சுகவீனம் வந்தால் மட்டும் அந்த வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கும். அதுவும் பாடசாலை விடுமுறை என்றால்தான் அந்தச் சந்தர்ப்பத்தைத் தருவார்.
நடு அச்சில் இடது பாதத்தை வைத்து இரண்டு மூன்று முறை கெந்தித்தான் சைக்கிளில் ஏறுவார். சீற்றில் ஏறியபின் மட்டுமட்டாகவே அவரது பாதங்கள் பெடலை மிதிக்கும். வலு நிதானமாக மிதித்து ஓடி எங்கள் வீட்டிற்கு வருவார்.
இறங்கும் போதும் நடு அச்சில் கால் வைத்தே குதித்து இறங்குவார். ‘தம்பி! நாளைக்கு உனக்குப் பள்ளிக்கூடம் இல்லைத்தானே! காலமை என்னோட ஒருக்கால் வாறியே! தெல்லிப்பழைக்குப் போக வேணும்.” எங்கள் பதிலை எதிர்பார்க்க மாட்டார். அது எங்கள் அம்மா, அப்பாவின் அனுமதியாக வருவதை எதிர்பார்ப்பார். குழந்தைப் பெரியப்பாவின் சைக்கிளில் தெல்லிப்பழைக்குப் போவது என்றால் மனம் இறக்கை கட்டிப் பறக்கும். போவது அவருக்கு உதவியாக அல்ல, ஒட்டுனராக, மறுநாள் எப்போது விடியும் என்று இருக்கும்.
மடத்தை விட்டு எங்கு செல்வதானாலும் ‘ரிப் ரொப் பாகவே வெளிக்கிடுவார். தோய்த்து கஞ்சி, நீலம் போட்டுக் காய வைத்து, அயன் பண்ணிய வெள்ளை வேட்டி, நஷனல் அவரது சீருடை. அதில் ஒரு துளியேனும் அழுக்கு இருக்க அனுமதிக்க மாட்டார். வெள்ளாவிக்குப் போன இடத்தில் கிழிந்து போனால், அல்லது முள்ளுக் கிள்ளு இழுத்துப் பொத்தல் விழுந்தால் அதற்குச் சமனான துணி வைத்து ‘டாணி பண்ணிப் பாவிப்பாரே ஒளிய இலகுவில் தூக்கி வீசிவிட மாட்டார். அப்படி வீசுவதானாலும் அது கோவில் விளக்குக்குத் திரி சுற்ற, பாத்திரம் துடைக்க என்று பயன்படும்.
காலையில் ஏழு மணி என்றால் ஏழு மணிக்கு அவரது மட வாசலில் நாம் நின்றாக வேண்டும். சைக்கிள் பாரிற்கு மேலாக ஏறி நான் சைக்கிளை பலன்ஸ் ஆக்கி கால்களால் நிறுத்தி வைத்திருக்க வேண்டும். அவர் பின் அச்சில் வலது காலை வைத்து கெந்தி ஏறி பின் கரியரில் இடப் பக்கமாக இருந்து திடப்படுத்திக் கொள்ளுவார். இனி நான் உன்னி உழக்க வேண்டும். பின்னுக்கு இருந்து அவர் ஆணையிட்டுக் கொண்டிருப்பார்.
‘உந்தா உதில கிடங்கு கிடக்குது, வலப்பக்கமாய் வெட்டி எடு, உதில ரெயில்வே
sWpr a 2008s"

Page 16
சிதாடர்நடைச்சித்திரம் குறொஸ்ஸிங், எப்பன் ஊண்டி உளக்கு, அப்பதான் ஒரே வீச்சாய் ஏறலாம். தடி தண்டு கிடக்குது கவனமாய் விடு. சிலிப் பண்ணி விட்டுவிடும். அங்கின பிராக்குப் பாக்காதை, நேர பாத்து ஒடு.” என்று செடில் பிடித்துக் கொண்டே இருப்பார்.
“நேர ஆஸ்பத்திரிக்குப் போ! ஓரமாச் சைக்கிளை நிப்பாட்டு.!” என்று நிறுத்து விப்பார். ஏறியது போலவே நான் பாரில் இருந்து பலன்ஸ் பண்ண அவர் மெதுவாக இறங்குவார். தடிப்பான ஒரு சீலைப் பை நான்காக உருட்டி மடித்து அதன் வாயில் உள்ள மெல்லிய பட்டியால் சுற்றிக் கட்டி இடுப்பில் செருகியிருப்பார். அவரது கைப் பைக்குள் சில்லறைக் காசுடன் ஐந்து சத முத்திரையும் இருக்கும்.
ஆஸ்பத்திரியில் மருந்து எடுக்க துண்டு எடுக்கும் போது ஐந்து சத முத்திரை ஒட்ட வேண்டும். ஆஸ்பத்திரி உள்ளே போய் அவர் மருந்து எடுத்து வரும் வரை நான் சைக்கிளுக்குப் பாதுகாப்பாக நிற்க வேண்டும். வரும் போது இருந்ததை விட அவர் இப்போது கொஞ்சம் சுகம் பெற்றவராகத் தெரிவார். பின்னர் முன்பு போல்
காலப் பெருவெளியில் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டதும் ஜீவன் ஒன்று உள்ளிருந்தும் ஜடப் பொருள் போல்
உணர்வற்று கிடப்பதனால் நீ யார்? நான் யார்? இனங்காணத் தெரியவில்லை. உண்மையில் நீயும் நானும் ஒரு கருவில் உயிர் பெற்ற இரட்டை குழந்தைகளாகவும் இருக்கலாம் சகோதரா! ஆனால் காலப் பெருவெளியில் கண்டதையும் கற்றுவிட்டோம் ஆதலால் நான் வாழ வேண்டுமெனில் cS நீ கொல்லப்பட வேண்டும். இல்லை, நீ வாழ வேண்டுமெனில் நான் கொல்லப்பட வேண்டும் கருவில் நாம் இரட்டைப் பிறவிகள் இங்கே தெருவில் நீ பினம் மறைவில் நான் தான் கொலையாளி இதுதான் கொல்லுதலில் வெல்லுதல் என காலப் பெருவெளியில் - நாம் கற்றுக் கொண்ட பாடங்கள்!
g, gymwelwb. --70 C
 
 
 

ஏறிச் சவாரி தொடங்கும். “தம்பி உதால போஸ்ற் ஓபிசுக்கு விடு பாப்பம்’ போஸ்ற் ஓபிசுக்கு பென்சன் எடுக்கப் போகிறார். எனக்கு சைக்கிள் காவல் காக்கும் பணி.
பென்சன் எடுத்ததும் இருபது ரூபாய்க்கு மணி ஒடர் எடுத்து தபாலிலும் அளவெட்டிக்கு அனுப்பி விடுவார். அது நீதிமன்றக் கட்டளைப்படி அவர் தனது மனைவி பிள்ளைகளுக்குச் செலுத்தும் தாபரிப்புப் பணம். மீதியைச் சரியாகக் கணக்குப் பார்த்து கைப் பைக்குள் இட்டுக் கட்டியபடி கண்ணப்பர் கடைக்குப் போவார். அங்கே ஒவல்ரின், சீனி, பிஸ்கெற், அரிசி, பருப்பு எல்லாம் ஒன்றுக்கு இரண்டு தரம் விலை கேட்டு, நிறுவை சரிபார்த்து வாங்குவார். சில்லறைக் காசு பிழைக்காமல் கொடுத்து, “பில்’லையும் வாங்கி வைத்துக் கொள்ளுவார். பின் வீடு நோக்கிய பயணம் தொடரும். ஒரு அரசாங்க அதிபருக்கு கார் ஓடிய பெருமை போல் மனம் பூரித்துக் கிடக்கும். நாங்கள் தனியாகப் போக முடியாத தெல்லிப்பழைக்கு பிரதான வீதி வழியாக சைக்கிளில் போவதற்கு குழந்தையர் தரும் சந்தர்ப்பத்தை மதித்தாக வேண்டும்.
2O9R) - Seh 2008

Page 17
&tufig(nჩ
-
渔
\ 外鉴圭芬< ރަރިيt 8
நாங்கள் கொழும்பிலை ஒரு வீட்டிலை இருந்தனாங்கள். ஒரு காட்டுப்புறம் மாதிரி ஒரு இடம். எங்கடை சொந்தக்காரனும் ஊர்க்காரனுமான ஒரு 'பிரெண்டின்ரை வீடுதான்.
அவனும் எங்களோடை தானி கொழும்புக்கு தன்ரை குடும்பத்தோடை அகதியா வந்தவன். ஆனால் வாடகை வீட்டில் குடியிருந்து பட்ட அனுபவத்திலை ஒரு வீடு தான் குடியிருக்க சொந்தமாக வாங்கியிட்டான். நாங்கள் அப்பவும் வாடை வீடுதான்.
யாழ்ப்பாணத்திலை இருந்து வாறவைக்கு கொழும்பிலை வாடகை வீட்டு அனுபவம் ஒரு தனிச் சு(மை)வை. இருந்திருந்து ஒவ்வொரு வீட்டிலையும் இருந்து பாக்கேக்கை தான் ஒவ்வொரு அனுபவத் தைப் பெற்றுத் தெளிவம் . வீட்டுக்காரராலையும் எங்களோடை வந்து தங்குகிற விசிற்றே சாலையும். உதாரணத்துக்கு ஒரு விசிற்ரேசின்ரை கதையை நான் உங்களுக்குச் சொல்லப் போறன். இதிலை சரி பிழையை நீங்கள் ஒருக்காச் சொல்லுங்கோ பாப்பம். நாங்கள் யாழ்ப்பாணத்திலை இருந்து கொழும்புக்கு வந்து புதுசிலை அல்லோல கல்லோலப்பட்டு அவையை இவையைப் பிடிச்சு சந்து பொந்துகள் புறாக் கூடுகளையெல்லாம் வீடெண்டு காட்ட எங்கடை முகத்திலை விருப்பு வெறுப் பொண்டையும் காட்டாமல் வேணாம் எண் டதைப் பேந்து சொல்லுறம் எண்டு ஹவுஸ் ஒணேர்சுக்கு சொல்லிப்
sMWe 2 -70
 
 
 

போட்டு வாறதை இப்ப நினைக்கச்
சிரிப்புத்தான் வருகுது. காத்து வராத அறையைக் காசாக்கிப் போடுற அவா அவைக்கு. குடியிருக்கிறதுகளின்ரை பாட்டைப் பற்றி அவைக்கென்ன. அப்பிடி இருக்கேக்கை ஒரு நல்ல வீடு-இரண்டு அறை, ஒரு ஹோல், கிச்சின் அம்பிட்டுது. ஆளைப் பிடிச்சுச் சுத்தம் செய்து வீட்டை என்ரை மனசிற்கேத்த மாதிரிப் பண்ணிப்போட்டன். அப்ப எங்கடை சொந்தக்காரக் குடும்பம் ஒண்டு பெற்றாவிலை லொட்ஜிலை இருந்ததுகள் . நானும் எட்டு வயதுப் பிள்ளையும் மூன்று வயதுப் பெண் பிள்ளையும் தானே வீட்டிலை எண்டிட்டு ஒரு றுமை அதுகளை சும்மா வந்து இருக்க விடுவம் எண்டிட்டு அவையளை ‘நீங்கள் வந்து சும்மா இருங்கோ. காசு தரவேண்டாம்” எண்ண, அவை என்ன நினைச்சினமோ நினைக்கேல்லையோ நான் கேக்கிறனே எண்டதுக்காக எங்களோடை வந்து இருந்தினம்.
என்ரை அவர் யாழ்ப்பாணத்திலை தான் வேலை. நான் தான் குடும்ப பொறுப்பு எடுத்து நடத்தினனான். நான் விடியவும் எழும்ப வேணும். பிள்ளையஸ் பள்ளிக்கூடம் நேசறி போறதுகள். அவையின்ரை றுாமுக்காலை தான் குசினிக்குப் போறது. அவை எல்லாரும் பெரிய ஆக்கள். அவை படுத்திருப்பினம். நான் அவையைக் கடந்து போய் காலைச் சாப்பாடு முடிச்சு மகனை வெளிக்கிடுத்தி ஸ்கூலுக்குக் கூட்டிக் கொண்டு போய் விடுவன். பிறகு மகளைத் தயார் பண்ணி நேசறிக்கு கொண்டு போய் விட்டிட்டு மாக்கற் முடிச்சு வரேக்கையும் அவை படுத்திருப்பினம்.
நான் பேந்து ‘எழும்புங்கோ வீடு கூட்ட வேணும்’ எண் டு சொல்ல எழும் புவினம். முகங்களை பாத் றுTமிலை (ஒரு கிணறு தண்ணியிலை) கழுவிக் கிழுவிப் போட்டு வந்து வெளியிலை செற்றியிலை இருப்பினம். தண்ணிக்கும் கொழும் பிலை பில் என்பது அவைக் குச் சொன்னாலும் விளங்காது. நான் ‘தேத்தண்ணி குடிச்சீங்களோ' எண்ண இல்லை' எண்டு போட்டு
5) 2Yord - éirith 2008

Page 18
சிறுகதை
பெரிய கதை அமளியிலை இருக்க நான் போய் ரீ போட்டந்து குடுப்பன். குடிச்சுப் போட்டு ரீ கப்பைக் கதிரைக்கடியிலை வைப்பினம்.
நானும் கால மை வேலை முடிச் ச களைக்குக் கொஞ்ச நேரம் அவையளோடை அளவளாவுவன். கதைக்கப் பேச நல்ல மனிசர். நேரம் ஒன்பதரை பத்து ஆகுது. எனி மத்தியானச் சாப்பாட்டுக்கு துவங்க வேணும். ‘காலமைச் சாப்பாட்டை முடியுங்கோவன்’ எண்ண அவை அலுங்கல் உலுங்கல் பட்டு காலைச் சாப்பாட்டை முடிப்பினம் மனசின்றி. ஏனெண்டால் அவை ஒன்பது ஒன்பதரைக்குத் தானே நித்திரையாலை எழும்பி ரீ குடிச்சதுகள். பாவங்கள்.
என்ரை ஆக்கினைக்குச் சாப்பிட்டு முடிய மதிய சமையலுக்கு நான் ஆயத்தம் செய்ய அவர்கள் அவசர அவசரமாக பாத்றுமுக்குள் போய் தங் கடை உடுப் புகளைத் தோயப் க் கத் துவங்கியிடுவனம். சமையல் முடிய நான் நேசறிப்பிள்ளையை ஒடிப்போய் பதினொண்டரைக்கு எடுத்துக் கொண்டு வர அவை படுத்திருப்பினம். நான் வந்து தேசிக்காய்த் தண்ணி கரைச்சுக் கொண்டு ஒண்டரைக்கு ஓடிப் போய் இரண்டு மணிக்கு ஸ்கூல் முடியிற பிள்ளையையும் எடுத்தந்த பிறகு சாப் பாடு குடுக் கேக் கை அந்த குடும்பத்தின் ரை தலைவி சோறு கறி சட்டி பானையள் எல்லாத்தையும் தனக்கு முன்னாலை வைச்சு எல்லாருக்கும் பங்கிடுவா.
பேந்து இரவுச் சாப்பாடு. இப்பிடியே இரண்டு இரண்டரை மாதம் வாழ்க்கை ஓடுது. இதுக்கை எனக்கு வேலைச் சுமை கூடிப் போட்டுது போலை. நெஞ்சுக்குத்து முதுகுக் குத்தெண்டு எனக்குப் புதுப் புது வருத்தங்களும் வரத் தொடங்கியிட்டுது.
ஒரு நாள் நான், “என்னாலை ஏலாமல் இருக்குது அன்ரி. இண்டைக்கு இரவைக்கு நீங்கள் புட்டவியுங்கோ’ எனக் கேட்க, "புட்டை என்னத்துக்கு? பாணைச் சாப்பிடுவம்” எண்டா. எனக்குப் பாணெண்டால் கண்ணிலையும் காட்டக் கூடாது. சிறிமாவின்ரை ஆட்சி பஞ்ச காலத்திலை புழுப் பாண் பச்சைப் பாண் திண்ட அனுபவத்திலை பாணெண்டாலே தொட்டுப் பாக்கிறேல்லை அவ்வளவு அருவருப்பு. அவையிலை ஒரு ஆள் அரை இறாத்தல் இன்னும் இருந்தால் முக்கால் இறாத்தலும் சாப்பிடும். எனக்குப் பிடிக்காததாலை நான் எல்லாருக்குமாய்ச் சேர்த்து புட்டுத்தான் அவிக்கிறனான்.
gorwev29 - 70 (

இண்டைக்கொருநாள் கேக்க அந்த மனிசி அவிக்க மாட்டன் எண்டிட்டுது. நான் சுகவீனமாய் இருக்கிற நாளிலை பாண் வேண்ட வெளிக்கிட்டால் ‘என்ன பாணோ புட்டவியுங்கோ’ எண்ணுவா. எனக்கு ஆளைச் சாடையாய் விளங்கிற மாதிரி இருக்குது. என்ரை மனுஷன் யாழ்ப்பாணத்திலை இருந்து வேலை அலுவலாய் கொழும்புக்கு வந்து இப்ப இரண்டு கிழமையாய் நிக்கிறார். அவர் ஒவ்வீசுக்குப் போறதும் வாறதுமாய் இருப்பார். இந்த நாட்களிலை, சிலவேளையிலை அவ குசினிக்கை ஓடியந்து குசினியை அடைச்சுப் பிடிச்சுக் கொண்டு என்னாலை வேலை செய்ய முடியாதபடி இடிச்சுக் கொண்டு இடைஞ்சலாய் நிற்பா. நான் “ஏன் அன்ரி நீங்கள் வெளியிலை போய் நில்லுங்கோ. இதுக்குள்ளை நீங்கள் நிக்கிறது எனக்கு வேலை செய்ய ஏலாமல் இருக்குதெண்டு’ சொன்னால்; “ஏன் பறவாயில்லை. நான் செய்யிறன்” எண்ணுவா, அப்ப நான் இடைஞ்சல் படாமல் வெளியிலை வந்து பாத்தால் வீட்டு வாசல்லை என்ரை புருஷன் வந்து நிற்பார். அப்ப எனக்கு நல்ல சந்தோசம். அவர் வாற நேரம் எனக்கு வேலையில்லாமல் இருக்கிறது. அவரோடை ஃபிறீயாக் கதைக்கலாம் எண்டு.
ஆனால் என்ரை மனிசன் என்னை “அன்ரி எங்கை” எண்டு கேட்பார். நான் அவா குசினிக்கை எண்ண, "அவ வேலை செய்ய நீங்கள் இதிலை கதிரையிலை சுகமாயிருக்கிறியளோ’ எண்டு ஏசுவார். ‘நான் இல்லை. இவ்வளவு நேரமும் நான்தான் வேலை செய்தனான். இப்பதான் அன்ரி குசினிக்கை வந்தவ. அதுக்குள்ளை இரண்டு பேர் நிண்டு வேலை செய்யேலாது. ஒரு ஆள் உள்ளுக்கை போனால் மற்றாள் வெளியிலை வரேலாது. அவ்வளவு இட்டுமுட்டான சின்ன இடம் தெரியும் தானே” எண்டு சொல்ல; அவர் “தெரியும் தெரியும்” என பல்லை நெறுமியிட்டு தன்ரை அன்ரியைப் பார்க்கக் குசினிக்குப் போவார். போய் “என்ன அன்ரி வேலை போல” என கேட்க அவ சிரிச்சு “அதுக்கென்ன” என்று கூறி தானே முழு வேலையளையும் செய்தது மாதிரி ஒப்புக் கொள்ளுவா. எனக்கு தர்மசங்கடமாயிருக்கும். பேந்து என் கணவன் தன்ரை அன்ரி எங்கடை வீட்டிலை வந்து செய்யுற வேலையளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக அவவின் ட குடும்பத்தோடையே எந்த நேரமும் கதைச்சுக் கொண்டு இருப்பார், என்னோடை கதையாமல். நான் வேலை செய்யாமல் இருக்கிற ஆத்திரத்திற்கு இந்த நிகழ்வு. அதாவது குசினிக்குள் அவ வேலை
2SOR) - Seh 2008 :

Page 19
சிறுகதை
செய்ய வருவதும் நான் குசினியால் வெளிவருவதும் என் கணவன் வருவதும் கணவன் நான் வேலை செய்வதில்லை அன்ரிதான் வேலை செய்வதாகக் கூறுவதும் கணவன் சமையல் வேளைகளில் வீட்டிற்கு வரும் போது இடம்பெறுவது ஒரே மாதிரித் தொடரவே, அவ என் கணவனி வரும் வேளைகளில் மட்டும் வேலையைப் பொறுப்பு எடுப்பது எனக்கு வினையாகிறது.
ஒரு நாள் கையிலை காசில்லை. நான் என்னிடம் காசில்லை எனக் கூறினன். அவ ஐயாயிரத்தை வைச்சுக் கொண்டு தன்னட்டைக் காசில் லை எனக் கூறினா. ‘‘உதிலை இரண்டாயிரத்தை தாங்கோ’ என நான் கேட்டு வாங்கி விடுறன்.
இரண்டாயிரம் எத்தனை நாளைக்கு காணும். நாலாம் நாள் நான் மீதிக் காசையும் கேட்கிறன். அவ காசை எடுத்துத் தருவதற்கு மனச் சங்கோசப்படுகிறா. இரண்டு இரண்டரை மாசமாய் எங்கடை செலவிலை தானே அவை சாப்பிட்டவை. என் கணவன் கொழும்பில் இருந்திருந்தால் நான் இவர்களிடம் காசு கேட்டிருக்க மாட்டன். அவர் தருவார் தானே. அவர் யாழ்ப்பாணத்துக்குப் போனவர். ஆனையிறவு அடிபாட்டுக்கை அங்கை அம்பிட்டிட்டார். இங்காலை வரேலாது. அதுதான் நான் இவையிட்டை காசு கேட்கிறன்.
இவடை புருஷன் மூன்று பிள்ளையஸ் வெளிநாட்டிலை தானே உழைக்கினம். அவை வந்து இரண்டரை மாதமும் நான் ஒரு காசும் வேணி டாமல் அவையஞக் குச் சாப் பாடு போட்டனான் தானே. என்ரை அவர் இல்லாத இடத்திலை இந்த அன்ரி காசு எனக்குத் தந்தே தீரவேணும் எண்டது எனக்கு மிக மிக சரியாய்ப் படுகிது.
அவாவால் தன்ரை பணத்தைப் பேசாமல் எடுக்க மனசு வருகுதில்லை. நான் ஒரு தீர்மானத்திற்கு வாறன். ‘அன்ரி நீங்கள் இஞ்சையிருக்கிறது உங்களுக்கு கரைச்சல். எங்களுக்கும் கரைச்சல். நீங்கள் இஞ்சையிருந்தால் என்னட்டை காசில்லாட்டால் நான் உங்களிட்டைக் கேட்கத்தான் செய்வன். அப்ப உங்கடை காசு முடிஞ்சு போகும். ஏன் உங்களுக்குச் சிரமம். அதாலை நீங்கள் வேறை இடத்திலை இருக்கிறது தான் சரி. நீங்கள் வேற விடெடுங்கோ. வீடெடுத்தால் சமைச்சுச் சாப்பிடலாம். லொட்ஜிலை கடைச் சாப்பாடுதானே” என்று கூறுகிறேன். அவ “ஏன் ஏன்” என்கிறா.
awəb -70
 
 

அவவை எங்கடை வீட்டிலை கூட்டியந்து விட்ட அவவின் நெருங்கிய உறவினரும் எங்களுக்கு கொஞ்ச தூரத்து உறவினரும் எங்கள் வாடகை வீட்டிற்கு வருகிறார். நான் இவர்களை வேறிடத்தில் இருத்தும்படி கூறுகிறேன். அவர் அவ சொன்ன கதையளை வைத்துக் கொண்டு என்னிடம் பல குற்றச்சாட்டுக்களையும் வைத்து ஞாயம் கேட்கிறார். “உங்கள் கணவன் அவர்களிடம் கடமைப்பட்டவர். அவையைப் பார்க்க வேண்டியது உங்கள் கடமை” என்கிறார்.
நான் அவற்றை கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் நடந்ததுகள் பற்றியும் விபரிக்காமல் “அவை அவைக்குத் தெரியும் அவை அவை செய்யுறது சரியோ பிழையோ எண்டு. எனக்கு நான் செய்யிறது சரி. அவையை கூட்டிக் கொண்டு போங்கோ’ என உறுதியாகச் சொல்கிறேன். அவர் என் கணவர் எனது இந்த நடத்தையால் என் மீது கோபிப்பார். அப்போது என்ன செய்வேன் எனக் கேட்கிறார்.
“அவர் அவர்களிடம் கடமைப்பட்டிருந்தால் அவர் தான் அவைக் குச் சேவை செய்ய வேண்டியதே ஒழிய அவர் கடமைப்பட்டதற்காக அவரைக் கட்டிய அவர் மனைவி அவர் பிள்ளைகள் எல்லாம் அவர்களுக்கு அடிமைச் சீட்டு எழுதிப் பிறந்து வரேல்லை. நான் எனக்கு வேலைப்பழு அதிகரிக்கக் கூடாது எண்டதுக்காகவே அதிகம் பிள்ளைகளைப் பெறாமல் இரண்டு பிள்ளைகளை மட்டும் பெத்தனான்’.
அரசாங்க உத்தியோகத்திலிருந்த நான் குடும்பத்தோடை இரட்டைச் சுமையைத் தாங்க ஏலாது எண்டு தான் வேலையைக் கைவிட்டனான். எனவே தயவு செய்து அவர்களைக் வீட்டால் கூட்டிக் கொண்டு போய் வேறிடத்தில அவையை விட்டு எனக்கு நிம்மதி தரும்படி அவரிடம் கோருகிறேன்.
அவர் கூட்டிச் செல்கிறார். அந்த மனிசி அழுது அழுது சூட்கேசைத் தூக்கிச் செல்கிறது. அவவின் பிள்ளைகள் என் பிள்ளைகளுக்கு முத்தம் கொடுத்துப் பிரிகின்றனர். என்னிடம் எந்தவித சலனமும் ஏற்படவில்லை.
கொழும்பிலை இருக்கிற வாடகைக் குடியிருப்பாளர் பற்றி எவருக்கும் நல்லபிப்பிராயம் ஒரு போதும் இருப்பதில்லை. ஆண் மூச்சுக் கொணி டவள் என் பார்கள் . இவள் தன் இடைஞ்சல் களைத் தானே முடிவெடுத்து களைவதாலா? இதில் எங்கே சரி பிழை என்ற முடிவை உங்களிடம் எதிர் பார்க்கிறார் வாடகைக் குடியிருப்பாளர்.
9V9N - ëstë 2008

Page 20
விந்தை மனிதர்
الخ
* '';
到 辜
u(ጫህል)r “õrጫሠቧል6የ
இது நான் இந்தியாவுக்குப் போன நேரம் ஒரு வீடியோக் கஸற்றிலை ஒருவர் போட்டுக் காட்டின ஒரு கதை. அந்த வீடியோ மாதிரி நிறைய வந்திருக்குது. எண்டாலும் தொலைக்காட்சியிலை காட்ட விடமாட்டார்கள். சாமி வேஷம் போட்டு ஊரை ஏய்க்கிற பல பேருடைய கதைகளை ஒரு விஞ்ஞானச் சங்கக்காரர் எடுத்து ஊர் ஊராகப் போய்க் காட்டி வருகிறார்கள். இது ஒன்றொன்றாக அடித்து நுளம்பை ஒழிக்கிற வேலை. இதெல்லாம் அரசாங்கஞ் செய்ய வேண்டியது. செய்கிறதாகத் தெரியவில்லை. ஏதோ இயன்றதைச் செய்கிறார்கள். இவர்கள் இல்லாமற் பண்ணுகிற ஒவ்வொரு கள்ளச் சாமிக்கும் இன்னும் பத்துப் பேர் முளைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நான் கண்ட நல்லொரு கதையைச் சொல்கிறேன்.
தமிழ் நாட்டிலே ஒரு சின்ன ஊருக்கு ஒரு சாமியார் போயிருந்தார். அவரிடம் அற்புதமான ஒரு மந்திர சக்தி இருந்ததாகத் தெரியவந்து ஆட்கள் அவரிடம் கூட்டங் கூட்டமாகப் போவார்கள். நினைத்த காரியஞ் சொல்லுகிறது எண் பார்கள். அந்த மாதிரி ஒரு சக்தி. சாமியாருக்குக் காதாலே வாசிக்க முடியும். அது
brWeb -70 C س
 
 
 

தான் அவருடைய மந்திர சக்தி. இந்த வீடியோக்கார விஞ்ஞானிகளும் இந்தச் சக்தியைப் பற்றி அறிய வேண்டுமென்று கூட்டத்தோடு கூட்டமாகப் போய் இருந்தார்கள். சாமியாருக்கும் வீடியோக்காரரைக் கண்டதில் கொஞ்சம் புளுகமாக இருந்திருக்கும்.
சனங் கொஞ்சந் திரண்ட பிறகு சாமியார் தன்னுடைய தியானத்தை முடித்து விட்டுக் காரியத்தில் இறங்கினார். சாமியாரிடம் பலன் கேட்க விரும்புகிறவர்கள் ஒரு சிறு காகிதத் துண்டில் தங்களுடைய கேள்வியை எழுதி அதைச் சுருட்டி ஒரு தட்டிற் போட வேண்டும். கேள்விகளை எல்லாம் சேர்த்த பிறகு, சாமியார் தட்டை வாங்கி அதிலிருந்து ஒரு காகிதச் சுருளை எடுத்து வலது காதிற் பிடித்துக் கேள்வியைக் காதால் அதிலுள்ள கேள்வியை வாசிப்பார். பிறகு யார் அக் கேள்வியைக் கேட்டது என்று விசாரிப்பார். விசாரித்த பிறகு காகிதச் சுருளை விரித்துக் கேள்வியை மறுபடி வாசித்துக் காட்டுவார். அச்சொட்டாக இருக்கும். கேட்டவருக்கான மறுமொழியையுஞ் சாமியார் சொல்லுவார். இப்படித் தட்டிற் போட்ட எல்லாக் கேள்விகட்கும் மறுமொழி சொல்லப்பட்டது. வீடியோக்காரர்களும் சாமியாரைப் பரீட்சித்துப் பார்த்தார்கள். கேள்வியை அவர் சரியாகவே வாசித்துப் பொருத்தமான பதிலுஞ் சொன்னார். அடுத்து இரண்டு நாட்கள் இருந்து கவனித்தார்கள். எதுவுமே விளங்கவில்லை. இனி மூட்டையைக் கட்ட வேணடியது தான் என்ற முடிவோடு இருந்தவர்களுக்கு அன்று மாலை ஒரு புதினங் காத்திருந்தது.
சாமியார் யாரோடோ பேசியபடி நடந்து கொண்டிருந்தார். அவருடன் காணப்பட்டவர் ஒழுங்காகக் கூட்டத்துக்கு வருகிறவர் என்பதும் ஒழுங்காகக் கேள்வி கேட்பவர் என்பதும் நினைவுக்கு வந்தது. அவரை விசாரிக்கலாம் என்று முடிவு கட்டினார்கள்.
அடுத்த நாள், சாமியார் முதலாவது கேள்வியைக் காதில் வைத்து வாசித்து விட்டுக் கேள்வி கேட்டவர் யார் என்று கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார். பதிலே வரவில்லை. சுற்று முற்றும் நோட்டம் விட்டார். கேட்டவரைக் காணவில்லை. கூட்டத்திற் சலசலப்பு ஏற்பட்டது. சாமியார் மெல்லக் கழன்று விட்டார். மறுநாள் சாமியார் ஊரிலேயே இல்லை. வீடியோக்காரர்கள் ஊரைக் கூப்பிட்டு நடந்ததை விளக்கினார்கள்.
9VORI - ěah 2008

Page 21
விந்தை மனிதர்
சாமியாரின் விளையாட்டு மிகவும் எளிமையானது. சின்னக் குழந்தைகட்கும் இயலுமானது. சாமியாரின் தட்டிலிருந்து எடுத்த முதலாவது சுருளில் இருந்தது இரண்டாவது கேள்வி. முதலாவது கேள்வி சாமியாரின் முன்னேற்பாட்டின்படி கேட்கப்பட்டது. அவருடைய கூட்டாளி அதைத் தானே கேட்டதாகச் சொல்வான். அந்தக் கேள்வி இருந்ததாகச் சொல்லப்பட்ட தாளில் இருப்பது அடுத்த கேள்வியல்லவா. எனவே காதால் வாசித்த முதலாவது கேள்வியை உறுதிப்படுத்துகிற மாதிரி அதைச் சொல்லிக் கொண்டு அடுத்ததை வாசித்து நினைவில் வைத்துக் கொள்வார். இப்படியே முன்கூட்டியே ஒவ்வொரு கேள்வியாக வாசித்து வாசித்துக் காதால் வாசிப்பதாகப் பாவனை செய்து கடைசிக் கேள்வி வரை விளையாட்டை ஆட முடியும். கடைசிக் கேள்விக்கு ஆயத்தமாக ஒரு வெற்றுச் சுருள் இருக்கும். அல்லது நேரமாகி விட்டது என்று நிறுத்தி விட்டு மறுநாள் புதிதாகத் தொடங்கலாம்.
சாமியாரைப் பொறியில் மாட்டிய விதந்தான் வீடியோக்காரரின் கெட்டித்தனம். சாமியாரின் கூட்டாளி தான் எப்போதுமே முதலாவது கேள்வி கேட்பவர். ஒவ்வொரு நாளும் எல்லாரும் வராததால் அதை யாரும் அறிய நியாயமில்லை - வீடியோக்காரர்களைத் தவிர. சாமியாருடன் பேசியபடி போன ஆள் மீது ஐமிச்சம் வந்தவுடன் அவனைப் பின்தொடர்ந்து போய் சாமியாரின் கள் ளத் தனம் எலி லாம் கணி டுபிடித் துப் பொலிஸ"க்குத் தகவல் கொடுத்தாயிற்று என்றும் அவன் உடனேயே ஊரைவிட்டுப் போகாவிட்டால் அவனையும் பொலிஸில் ஒப்படைத்து விடுவதாக மிரட்டினார்கள். ஆள் ஓடிப்போய் விட்டதனால் மறு நாள் சாமியாரிடம் முதலாவது கேள்வி கேட்ட ஆளைக் கூட்டத்திற் காண முடியா மற் போய் விட்டது. சாமியாரின் நிலைமை சங்கடமாகிவிட்டது.
சாமரியாரை ஏனி தப் பிப் போக விட்டார்களோ தெரியவில்லை. ஒரு வேளை இந்தச் சாமி ஒரு சில்லறைத் திருடன் என்பதால் போக விட்டிருக்கலாம்.
மந்திரச் சக்தியுள்ளவர்கள் என்றும் ஜோசியர்கள் என்றும் ஊரை ஏய்க்கிறவர்களை மட்டும் ஏன் பிழை சொல்ல வேண்டும்? அதை எல்லாம் நம்ப நாங்கள் ஆயத்தமாய் இருப்பதால் தானே அவர்களாற் பிழைப்பு நடத்த முடிகிறது!
70 ہے۔ طالماA
 
 

ზამN ് ..." ది
பட்டியல் இடுவோம் தினம் ஒன்று பிரகடனம் செய்வோம் : பட்டியலில் இடம் பிடிக்கப் போரிடுவோம்!
மீண்டும். . .
குண்டு மழை பொழிவோம் அவசர காலம் பிரகடனம் செய்வோம்
பதவிக்காக క్ష W SEKS கொலை செய்வோம் ,
மனு சமர்ப்பிப்போம்: அநாதைகளை கண் கண்ணிர் விடுவோம் அடுத்த கணம் ' கண்ணிவெடி புதைப்
து * எதிர்ப்பவருக்கு கண்ணீர்ப் புகையிடிப்போம் : கதைத்தால் சிறையிடுவோம். பத்திரிகை எரிப்போம் ":...ွှ); வானொலி தடுப்போம்: நியாயம் கூறி . ஆதரவு தேடுவேர்
தலைதரித்து உடல் எரிப்போம் : உரிமை முழுதும் ` உண்டு என
உலகை ஏமாற்றுவோம்
இராகலை மோகன்
9

Page 22
மொழிபெயர்ப்பு சிறுகதை
அதில்ாதமும்
சிங்கள மூலம்: தமிழில் மொழிய
கொன்ஸ்டபிள் மானவடு வீதிச் சோதனையின் பின்பு நாளாந்த அறிக்கையை எழுதிக் கொண்டிருந்தான். மிகவும் பயங்கரமான நிகழ்ச்சிகள் பலவற்றிற்கு முகம் கொடுத்த இன்றைய நாளின் அறிக்கையை எழுதுவதென்பது அந்தளவு தூரம் இலகுவாக இல்லாவிடினும் சார்ஜன் இப்பாவின் மனம் அதனை வாசித்து முடித்த பின்பே ஆறுதலடையும் என்பதனால் முடிநிதளவு விரைவில் அதனை எழுதி முடிப்பதற்கு அவன் எண்ணம் கொண்டான். பல மாதங்கள் விடுமுறையில் போவதற்குக் கிடைக்காதமையாலும், அடுத்த பதவி உயர்வின் பொருட்டுப் பேராசையுடன் இருப்பதனாலும் சார்ஜன் இப்பாவிற்கு அறிக்கை வழங்குவது என்பது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல. எப்படியாயினும் வடக்கில் நிலவுகின்ற அமைதியற்ற சூழ்நிலையினால் பொலிஸாரின் நடவடிக்கைகள் மற்றைய நாட்களைவிட மிகவும் செயற் திறனோடு கூடியதாக இருந்தது. அரச பணியைப் போன்று சுற்றாடலின் பயங்கரமும் துனி பங்களாக இருக் கினி ற சிறு தர
 

அறில்ல்ைவுேம்
GLøfleFøi GLJÓTTIT ாக்கம்: வல்வையூரான்
அதிகாரிகளுக்கு மாகாணத்தின் பொலிஸ்மா அதிபருக்கு அறிக்கை அனுப்புவது ஏனைய நாட்களை விட விரைவுபடுத்த நேர்வது இலகுவானதோர் நடவடிக் கை அலி ல. கொன்ஸ்டபிள் மானவடு இன்றைய நாளின் அறிக்கையை நன்றாக எழுதுவதற்கு முயற்சி செய்தான்.
‘நானும் 5018ஆம் இலக்கமுடைய புதிய கொன்ஸ் டபிளும் நகரத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் ஐந்தாம் மைல் கட்டைக்குப் பக்கத்தில் வீதியைச் சோதனை செய்து கொண்டிருந்தோம். இந் நாட்களில் வெடிகுண்டின் அச்சம் இருந்தாலும் இந்தப் பிரதேசத்தில் சமாதானச் சூழல் நிலவுவதால் நாங்கள் இலகுவாக சோதனையரில ஈடுபட்டிருந்தோம். பக்கத்தில் இருந்தது மாந்தை என்னும் தமிழ்க் கிராமம் ஆகும். அங்கு வசிப்பவர்கள் எங்களுக்குத் தெரிந்தவர்களே. அங்கு பொலிஸாருக்கு உளவு வழங்கும் ஒரு தமிழ்ப் பெண்கூட இருந்தாள். எங்களது நிலையப் பொறுப்பதிகாரி அவரை நன்கு அறிவார். ஆனால் நாங்கள் ஐந்தாம் மைல் கட்டையைக் கடந்து செனி நு கொண்டிருக்கும் போது விசில் அடிக்கும் சப்தம் ஒன்று கேட்டது. எனக்குள் சந்தேகம் ஏற்பட்டது. பக்கத்திலுள்ள சிறு காட்டுக்குள் இருந்து இந்த விசில் சப்தம் எழுந்து வருவதாக எனக்குத் தோன்றியது. நாங்கள் இருவரும் பெருந்தெருவில் இருந்து விலகி காட்டுக்குள் எட்டிப் பார்த்தோம். குரங்கு போன்ற மிருகம் ஒன்று மரம் ஒன்றில் கொப்புக்கு கொப்பு தாவிக் கொண்டிருந்தது. 5018 குரங்கைச் சுடுவதற்கு ஆயத்தமானார். அநியாயமாக மிருகம் ஒன்றைச் சுடுவதை நான் விரும்பவில்லை. நாங்கள் இருவரும் மேலும் தூரம் போகும் போது மீண்டும் விசில் சப்தம் கேட்டது. அந்தத் தடவை காடு பூராவும் சல்லடை போட்டுப் பார்த்தும் குரங்கு இருக்கவில்லை. ஆபத்தின் அறிகுறி அது என நான் நினைத் தேனி . நாங்கள் முனி யோசனையோடு சுற்றாடலைச் சோதனை செய்து பார்த்தோம் . கிளேமோர்

Page 23
éltDufóluvujůu fge:5ag5
குண்டுகள் இரண்டு பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு நாங்கள் உடனடியாக இராணுவத்திற்கு தெரியப்படுத்தினோம். நாங்கள் திரும்பி வரும்போது குரங்கு பெருந்தெருவில் இறந்து கிடந்தது”.
அறிக்கையை எழுதி முடித்த மானவடு அதனை இரு தடவைகள் கவனமாக வாசித்துப் பார்த்துவிட்டு இந்தத் தடவையும் அறிக்கை தாமதமாகியதால் அச்சத்துடன் சார் ஜன் இப்பாவிடம் கொண்டு சென்றார். சார்ஜன் நீரிழிவு நோய்க்கான மாத்திரையை விழுங்குவதற்கு ஆயத்தமாக இருந்த காரணத்தினால் மானவடு அறைக்கு வெளியே நின்று கொண்டு அறிக்கை சரிதானா எனச் சரி பார்த்துக் கொண்டான். இப்பா மானவடுவை அழைத்தார். தனது கரத்தினை தலைக்குமேலே உயர்த்தி ‘சல்யூட் மரியாதை செய்யும் போது சார்ஜன் இப்பா நெற்றியை சுருக்கியவாறு மரியாதையை ஏற்றுக் கொண்டு மானவடு அறைக்குள் வருவதற்கு அனுமதி வழங்கினார்.
பருந்து ஒன்று கண்ணில் சிக்கிய இரையைப் பார்ப்பதைப் போன்று சார்ஜன் இப்பா அந்த அறிக் கை யைப் பார்த்தார் . துர் அதிர்ஷ்டமான மீசையை அங்கும் இங்கும் ஆட்டியபடியே அவர் மேசையின் மேல் இருந்த சிவப்பு நிறப் பேனையினால் அறிக்கையின் மீது இரண்டு மூன்று கோடுகளைப் போட்டார். சில வாசகங்களைச் சுற்றி அடைப்புக் குறியிட ஆரம்பித்து அதில் அரைவாசியை வாசித்து, பேனாவினால் அடையாளம் இட்டுவிட்டு மானவடுவை முறைத்துப் பார்த்தார். மேசையின் மீதிருந்த தண்ணிர்க் கிளாசிலிருந்து சிறிதளவு நீரைக் குடித்தார். மீண்டும் மீதிப்பகுதியை மெதுவாகவே வாசித்தார். அந்தப் பகுதிபற்றி அவரது அவதானம் செல்லவில்லை. அவர் தலையைத் தடவி மீசையை ஆட்டிக் கொண்டே மீண்டும் ஒரு தடவை வாசித்தபடி சில வாசகங்களின் கீழ் இரண்டு கோடுகள் வீதம் கீறி நீல நிறப் பேனையினால் சித்திரம் ஒன்றை வரைவதைப் போன்று மேலும் சில கோடுகளை வரைந்தார். மானவடு இப்பாவை கண்கள் என்னும் ரவைக் குண்டுகளினால் பல தடவைகள் தாக்கினாலும் பங்கரினுள் இருக்கும் அவரை அவை ஒன்றும் செய்யவில்லை. அறிக்கையை வாசித்து முடிக்கும் போது சார்ஜன் இப்பாவின் * பிரஷர் குறிப் பிட் டளவு உயர் நீ து விட்டிருந்தமையினால், மேலும் ஒரு மாத்திரையை விழுங்கி அதனை கீழிற்கு இறக்கிக் கொண்ட அவர் வழக்கம் போன்று மந்திரத்தை உச்சாடனம் செய்யத் தொடங்கினார்.
"gnw* = 70
 
 

‘என்ன இந்த அறிக்கை?. இவ்வளவு சேர்விஸ்காரனாக இருந்தும் எழுதி இருக்கிற விகாரம். இங்கை பார் இங்கு குண்டு அச்சம் இருந்தாலும், இந்தப் பிரதேசத்தில் சமாதானச் சூழல் நிலவுவதாக நீ சொல்லுறாய். இது என்ன ஆச்சிமாருடைய கதைமாதிரி. கழுதைக் கதை. தமிழங்களுக்கு வெள்ளை அடிக்கிறாய். அதைத்தான் நாங்கள் இப்பொழுதும் செய்யிறம். இங்கை பார், பக்கத்திலை இருக்கிறது எங்களுக்கு அறிமுகமான ஒரு தமிழ்க் கிராமம் என்றும், அங்கு ஒரு தமிழ்ப் பெண் எங்களுக்கு உளவுத் தகவல் வழங்குவதாகவும் சொல்லுறாய். * சிங்களவன் மூடன். பணியாரம் சாப்பிடும் இராட்சதன்” என இந்த நாட்டில் இருந்த ஜனாதிபதி ஒருவர் சொல்லிய கதை பொய்யா? அது போதாது என்று தமிழ்ப்பெண் ஒருத்தி எங் கடை லொக் காவுக் கு உளவு வழங்குவதாகவும் சொல்லுறாய். நீ அவளுக்குப் பின்னால எதுக்காவது போயிருக்கிறியோ? நீ பெரியவரையும் மாட்டப் பார்க்கிறாய். இதுகளைப் பெரியவர் தெரிஞ்சு கொண்டால், நானுஞ் சரி நீயுஞ் சரி. ரெண்டு பேரும் முடிஞ்சம். அதை ஒரு பக்கத்திலை வைப்பம். குரங்கு ஒன்று எங்களுக்கு உளவு சொல்லிச்சுதாம். விசில் அடிச்சுதாம். எந்தளவு தூரம் கல்லைப் பிளக்கிற பொய் ஐஸே இது? அது போதாதென்று ஒரு குரங்கினாலை இரண்டு பொலிஸ் காரர்கள் காப்பாற்றப்பட்ட விடயமும் சொல்லுறாய். பொலிஸ் காரணி ஒருவனுடைய உயிர் அரசாங்கத்திற்குப் பெறுமதி வாய்ந்ததா? எல்.ரீ.ரீ.ஈக்காரங்களுக்கு அரசாங்கத்தின் இந்த கூலிப்படைக்காரர்கள் பெறுமதி வாய்ந்தவர்களா? ஆகக் குறைஞ்சது கிராமத்தில் இருக்கும் அந்தப் பெண்ணுக்கு, பிள்ளைகளுக்காவது பெறுமதி உண்டா. எழுதும் ஓய். இன்னும் ஒரு அறிக்கை. இந்த அறிக்கையை அனுப்பினால் பொலிஸை நாய்க்குத் தான் கணக்கெடுப்பார்கள்’.
மானவடு மீண்டும் அறிக்கையை எழுத ஆரம்பித்தான்.
‘’ நானும் 50 18 ஆம் இலக் க கான்ஸ்டபிளும் ஐந்தாவது மைல் கட்டைக்கு பக்கத்தில் வீதியைச் சோதனை செய்து கொணி டிருந்தோம் . இநீத நாட்களில குணி டுவெடிப்பு அச்சம் நிலவியது. எந்த வேளையிலும் குண்டு வெடிப்பதற்கு இடம் இருந்தது. நாங்கள் முன் யோசனையோடு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம். தமிழ்க் கிராமம் பயங்கரவாதக் கிராமம். அவர்கள் எல்.ரீ.ரீ.ஈயினர் க்குத் தகவல் வழங்குவது எங்களுக்குத் தெரியும். ஐந்தாம் மைல் கட்டைக்கு அண்மையில் போகும் போது விசில் சப்தம் ஒன்று
2VORI - Sadh 2008

Page 24
மொழிபெயர்ப்பு சிறுகதை
கேட்டது. சிறிய மரங்களுடைய காட்டுக்குள் எட்டிப் பார்த்த போது பயங்கரவாதிகள் ஒளிந்திருந்து இலக்குப் பார்ப்பது தெரிந்தது. நாங்கள் சுடத் தொடங்கினோம். அவர்கள் ஆயுதங்களைப் போட் டுவிட்டுத் தப் பி ஓடிவிட் டார் கள் . அந்தச் சுற் றாடலிலி பொருத்தப்பட்டிருந்த கிளேமோர் குண்டு’ ஒன்றைக் கண்டெடுத்தோம். நாங்கள் அதுபற்றி இராணுவத்திற்கு அறிவித்துவிட்டு வரும்போது பயங்கரவாதிகள் வழி வழியே இறந்து கிடந்தார்கள்.
அவசர அவசரமாக மேலும் ஒரு அறிக்கையை எழுதிக் கொண்ட மானவடு அதனை எடுத்துக் கொண்டு சார்ஜன் இப்பாவிடம் சென்ற போது அவர் பொலிஸ் நிலையத்தில் உலவிய வாறு உடற் பயிற்சி செய் து கொண்டிருந்தார். இரு கரங்களையும் பரப்பி உடலை நேராக வைத்தபடி பயிற்சி செய்து கொண்டிருந்த அவரது உடல் சிறிது வளைந்து காணப்பட்டது. முழங்காலிலோ பாதத்திலோ ஏதாவது ஒரு இடத்தில் உள்ள நோயின் ஆரம்பமாக அதனைக் கொள்ளலாம். இது எலும்பு சம்பந்தமான நோயின் முன் அறிகுறி என அனுமானம் செய்த அவர் அதற்கு சிங்கள ஆயுர்வேத மருந்து குடிக்க வேண்டிய தேவை இருந்தும் தாமதித்தது விடுமுறையைப் பெற்றுக் கொள்வதன் வசதியீனம் என்று கூறினாலும், மனைவிக்கு மூன்றாவது பிள்ளைப் பேறுக் காலம் வந்திருப்பதும் இடைத் தடங்கலாகத் தெரிந்தது. உடலை நோக்கியபடி உலவும் சார்ஜன் இப்பா இடைக்கிடை, இந்தப் பிரச்சினையையும் மேலும் வேறு பிரச்சினைகளையும் மனைவிக்கு இரகசியமாகச் சொலி வதைப் போன்று உதடுகளை அசைத்துக் கொண்டார். பனைமரம் ஒன்றை நோக்கியதைப் போன்று "லெப்ட்ரைட் பயணத்தில் ஈடுபடும் சார்ஜன் இப்பாவை தான் வந்த கடமை முடிவதற்கு இன்னும் எவ்வளவு நேரம் கழியப் போகின்றதோ என்ற ஏக்கத்தோடு மானவடு மீண்டும் மீண்டும் நோக்கினான். அவன் இன்னமும் மாலை வேளைக்கான தேனீரையும் அருந்தவில்லை. உண்மையாகவே இப்பாவின் கரைச்சலினாலேயே அவனுக்கு அதற்கு நேரம் கிடைக்காமற் போயிற்று. நடந்த வேகத்தை சிறிதேனும் குறைக் காமலேயே சடுதியாக கொன்ஸ்டபிள் மானவடுவின் பக்கம் பார்த்த சார்ஜன் இப்பா ‘வேலை முடிந்ததா?’ என வினவினார்.
‘சேர். சேர் எல்லாம் முடிஞ்சிது’ நின்றவாறே சல்யூட் அடித்தபடி கூறினான் LDsk6016u6.
e

‘இன்னும் மூன்று சுற்று. நிப்போ எத்தனை தடவைகள் இதைப்பற்றி கேட்டவர் என்று உமக்குத் தெரியுமா?’ அவனுக்கு வேண்டியது அறிக்கை.
என்னுடைய லீவ் அப்பிளிக்கேசனுக்கும் விளையாடிப் போட்டான் தானே. மனுவழிக்கு பிள்ளை கிடைக்கிறதுக்கு நான் இல்லாமல் முடியாதோ என்று நிப்போ கேட்கிறான். என்ரை மனுஷிக்குப் பிரசவ வேதனை ஏற்பட்டு அம்மா ஆட்களும் இல்லாமல் , தனிச் சிருக்கிறா. சார்ஜன் இப்பாவை ஏசும் போது நிப்போ, “பொலிஸ்காரங்கடை ஆடை அவிழாது என்றா நினைக்கிறாய்?’ மேலும் கதைச்சால் நானும் நல்ல நல்லதுகள் சொல்லவேண்டி வந்திடும். அந்த அளவிற்குப் போனால் தொழிலும் இல்லாமற் போகும்'. இன்னும் ஒரு றவுண்ட் சார்ஜன் இப்பா கதைத்தபடியே நடக்கின்றார். அவரது முகத்தைச் சுற்றி வியர்வை வடிகிறது. ‘‘சேர் நல்லதொரு ஸ் போட்ஸ் மண் மாதிரி” மானவடு கூறினான்.
‘வம்பு. பிரஷர்காரன், நீரிழிவுக்காரன், ஸ்போட்ஸ்மென் ஆகிறது அடுத்த பிறவியிலை, தமிழங்கடை பிரச்சனை தீர்ந்த அன்று அடுத்த பிறவியிலாவது மனுசனாகலாம்’- தேகப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சார்ஜன் இப்பா அறைக்கு வருவதற்கு இன்னும் மணிக் கணக்கில் கழிந்தது.
அணிந்திருந்த கிழிந்த கையுடன் கூடிய பெனியனையும், குப்பை நாற்றம் அடிக்கிற நீளக் காற்சட்டையையும் கழற்றி வட்ட வடிவமான கூடையில் போட்டுவிட்டு, வியர்வையில் நனைந்த உள் களிசான் அப்படியே இருக்க; மேலும் நாற்றமடிக்கிற ஒரு கழிசானையும் கைக் கட்டை பெனியனையும் அணிந்து உத்தியோகபூர்வ கோட்டையும் போட்டுக் கொண்டு கடமை அறையில் சென்றமர்ந்து கொண்ட சார்ஜன் இப்பா மான வடுவை உள்ளே வருமாறு சைகை காட்டினார். மானவடு நம்பிக்கையீனத்தோடு அறிக்கையைச் சமர்ப்பித்தான். அறிக்கையைக் கெளவிக் கொண்ட சார்ஜன் இப்பா சிவப்பு நிற பேனை என்கின்ற வாளினைக் கையில் ஏந்திக் கொணி டது நல்லதுக்கு அல்ல என்பது மானவடுவின் நம்பிக்கை. தொண்டையைச் செருமியவாறு அறிக்கையை ஒரு தடவை வாசித்த சார்ஜன் இப்பா மானவடுவை முறைத் துப் பார்த்தவாறு, இரு தடவைகள் தென்னந்தும்பு மீசையை அசைத்துக் கொண்டார்.
‘மானவடு உன்னாலை இந்த அரச கடமைகளைச் செய்ய முடியாது. மாட்டு மூளையோடை வேலை செய்து அறிக்கை
எழுதிறதுக்கு முடியாது ஓய். பெரியவரும்
ஆ 9VORI - Sadh 2008

Page 25
சிமாழிசிபயர்ப்பு சிறுகதை
நிப்போகாரன் இல்லாமல் வேலையைக் கவர் பண்ணி கொண்டு என்னோடை விளையாடுற விதம் தெரியும்தானே. அவன் எனக்கு லீவும் தரவில்லை. "மருத்துவச்சி வேலை பார்க்கப் போறியோ?” என்று என்னைக் கேட்டான். எனக்கென்றால் இந்தத் தொழிலே வேண்டாம் என்றிருக்கு. அவனிடம் இந்த அறிக் கை போனால் என்ன நடக்கும் என்று யோசிச்சுப்பார். இது ஒரு சீரியஸ் கேஸ். உங்களுக்கு மூளை என்று சொல்லி ஒன்று இல்லைத்தானே. இந்த வாசகத்தைப் பார் ‘இந்த நாட்களில் அச்சம் நிலவியது. எந்த வேளையிலாவது குண்டு வெடிக்கக் கூடியதாய் இருந்தது. மானவடு இது என்ன மோட்டுக் கதை. இது யுத்த காலம் ஒய். அப்படியிருக்க யுத்த காலத்திலை குண்டு வெடிக்கிறது சொல்ல வேண்டிய ஒன்றா? ஒரு அறிக்கை எழுதும் போது எந்தளவு தூரம் சிந்திக்க வேணும்? இது மடத்தனமான மோட்டு வேலை. சிங் களவனுக்கு மூளை இல்லை. இல்லையென்றால் தமிழர்கள் அடிக்கும் வரை பார் த துக் கொணி டு இருப் பார்களா, அவங்களா லை எதனையும் சூட்சுமமான முறையில் செய்யிறதுக்கு முடியும். அதனாலை தான் எங்கடை ஆட்கள் மரங்கள், கல்லுகள் மாதிரி குணி டுகளுக் குத் தலை யைக் குடுக்கிறாங்கள். நான் இங்கை குப்பை கொட்டுற விதத்தைப் பார். ஆறுமாதமா பிள்ளைகளைப் பார்க்க இல்லை. கிடைக்கப் போறது கறுப்பா வெள்ளையா என்று ஆறு மாதத்திலை தெரியாது. யுத்தம். செத்தவீட்டு யுத்தம். எத்தனை வருசமா நாங்கள் இந்தக் கறுமத்தை அனுபவிக்கிறது? இந்த அறிக் கையிலை தமிழ் க் கிராமம் பயங்கரவாதக் கிராமம் என்றதை முழுவதுமாக வெட்டிப் போட வேணும். இந்த அறிக்கைகள் முக்கிய பிரச்சினையாக இருப்பது உந்த தமிழ்க் கிராமம் பற்றித்தான். மனித உரிமைக்காரங்கள், அந்த என்.ஜி.ஓக்காரர்கள் தமிழ்க் கிராமத்துக்கு நெருப்பு பிடித்தது பற்றி ஆராயிறாங்கள். மானவடு எனது கண்புருவம் துடிக்குதுதானே? உம்முடைய அறிக்கை என்னுடைய செளக்கிய நிலவரத்தை நாசமாக்கும் எண்டது எனக்குத் தெரியும். மற்றது, முதலிலை சுட்டது நாங்களா, அவங்களா? சொல்லும்”.
‘'சேர் நாங்கள்.’ சிறிது நேரம் யோசித்துவிட்டு மானவடு கூறினான்.
“கழுதை, எருமைமாடு, பசுமாடு, காளை மாடும் சொல்லும் தமிழ்க் கிராமத்திற்கு தீ மூட்டியது யார் என்று. சிங் களவங் கடை மூளையை இல லா மறி செயப் த து இங்கிலீஸ்காரங்கள் என்றா நீ நினைக்கிறாய்?”
brwala -70
 
 
 

7
கல்லெறி தூரம்
(கவிதைத் தொகுதி) நூலாசிரியர் : சி.சிவசேகரம்
வெளியீடு
தேசிய கலை இவக்கியப் பேரவை
விலை : 150.00
பதிப்பு : ஜனவரி 2008
கிடைக்குமிடம் : வசந்தம் புத்தகசாலை
கொழும்பு-11
தொ. பே 2335844, 2381603 /ހި ܓܠ
தேசிய கலை இலக்கியப் \ பேர்வையின் தேசிய மாநாடு
கடந்த தாயகத்தில் குறிப்பிட்டவாறு தேசிய கலை இலக்கியப் பேரவையின் தேசிய மாநாடு கடந்த ஏப்ரல் 04ம், 05ம் திகதிகளில் குறித்தபடி நடாத்த இயலாது போயுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தேசிய கலை இலக் கரியப் பேரவையின் தேசிய மாநாடும் 35வது ஆண்டு விழாவும் எதிர்வரும் 2008ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் 23ம், 24ம் (சனி, ஞாயிறு) திகதிகளில் கொழும் பில் தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவர் கவிஞர் திரு. இ. முருகையன் தலைமையில் நடைபெறும்.
உறுப்பினர்கள் அனைவரையும் பேரவையுடன் தொடர்பு கொள்ளும்படி வேண்டப்படுகின்றோம்.
பொதுச்செயலாளர்
]தேசிய கலை இலக்கியப் ശേഖ ܓܠ
23)
2N2r) - éiril 2008 .i.

Page 26
6luDITE6luuhüu égæ5øgs
‘ஓம் சேர். இலங்கையின் கடைசி மன்னர்களை ஆங்கிலேயர்களிடம் பிடித்துக் கொடுத்தது யார் சேர்? அதுதான் மிகப் பெரிய குற்றமானது!!”.
‘’ நாணி இங் கை அனுபவிக்கிற துன்பங்களைப் பார் . எனக்கு இருக்கிற நோய்களைக் காட்டி என்னாலை பென்சன் போக முடியும் . அப் படிப் போனா ல எனது பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் யார் சாப்பாடு போடுறது? என்ன செய்யிறது? சீல் பண்ணின பெட்டியில கெளரவமா கம்பீரத்துடன் போகும் வரைக்கும் முள்ளைச் சாப்பிடுறன்’
மானவடு மேலும் ஒரு அறிக்கையைத் தயார் செய்ய நேர்ந்தது. அடுத்த அறிக்கையில் எதையாவது வெட்டிப் புதியவற்றைச் சேர்த்து அதற்கு உயிர் கொடுப்பதற்கு முயன்றான்.
‘இலக்கம் 4020 மற்றும் 5018 ஆகிய இலக் கங்களைக் கொணி ட பொலரிஸ் கொன்ஸ்டபிள்கள் நகரைக் கடந்து ஐந்தாம் கட்டைக்குப் பக்கத்தில் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பயங்கரவாதிகளின் இரண்டு குழுக்கள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தினர். பொதுமக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதனால் பயங்கரவாதிகளை இனங் காண்பது இலகுவாக இருக்கவில்லை. அதனால் சில பயங்கரவாதக் குழுக்கள் தழிழீழ விடுதலைப் புலிகள் என்று சொல் லிக் கொண்டு கூட பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டார்கள். இதனால் மிகவும் சூட்சுமமாக பணி நடவடிக்கைகளில் ஈடுபட நேர்ந்தது. நவம்பர் 20ஆம் திகதி நாங்கள் இருவரும் வீதிச் சோதனையில் ஈடுபடும் போது ஏதோ ஒரு குழு எங்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு ஆயுத்தமாவது தெரிந்தது. நாங்கள் அதுபோன்ற குழு மீது பாதுகாப்பு நடவடிக்கையாக மிகப் பாதுகாப்புடன் இருந்து தாக்குதல் தொடுப்பதற்கு முடியுமாக இருந்தும் அப் படிச் செய்ய விலி லை . ஆனால பயங்கரவாதிகள் எங்களைச் சுட்டார்கள் நாங்களும் சுட்டோம். பயங்கரவாதிகள் தப்பி ஓடிவிட்டார்கள். நாங்கள் திரும்பி வரும் போது மாநி தை கிராமத்திற்கு நெருப் L வைத்திருந்ததைக் கண்டோம். இதனைச் செய்தது யார் என்பதை நாங்கள் அனுமானிப்பது கடினம் சிலவேளைகளில் அரச படைகளுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு விரோதமான குழு இதனைச் செய்திருக்கலாம். இது உண்மையான அறிக் கை 6T 60 கெளரவத் துடனும தெரியப்படுத்துகின்றோம்”
gorwevěb. --70 (

அறிக்கையை மீண்டும் வாசித்த மானவடு இதனை சார்ஜன் இப்பா வாங்கிக் கொள்வார் என நினைத்தாலும் அதனை சார்ஜனிடம் , ஒப்படைக்க வேண்டிய சுபநேரம் பற்றிக்கூட யோசித்தான். இதன் பொருட்டு அரசபணி ஆரம்பமாகும் 5 FT 6) 6) நேரதி தைத் தேர்ந்தெடுத்தான். சூரியன் சிரித்த வண்ணம் அவனது பக்கம் நளிந்த திருட்டுத் தனமான பார்வையோடு பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவன் சார்ஜன் இப்பாவின் அறைக் குச் சென்றான். சுற்றிவர எவ்வித மாற்றங்களும் தெரியாவிடினும், இப்பா மற்றைய நாட்களைவிட அழகாக ஆடை அணிந்திருந்தார். நன்றாக ஸ்திரிக்கை செய்த ஆடைத் தொகுதியை அணிந்திருந்த அவர் உத்தியோகபூர்வ பணியின் பொருட்டுச் செல்வதற்கு எதிர்பார்த்திருக்கும் நாளாக இருக்கலாம் என மானவடு நினைத்தான். சில வேளையரில் இநீ த அறிக் கையை நிப்போவிடம் எடுத்துச் செல்வதற்காகக் கூட இருக்கலாம். மானவடு அறைக்குள் நுழைந்து மரியாதை செலுத் தி அறிக் கையைச் சமர்ப்பித்ததும் அதனைப் பார்த்து அவர் முகத்தைச் சுழித்துக் கொண்டது மற்றைய நாளைவிட மாறுபட்டிருந்ததை மானவடுவினால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆயினும் அவன் தலையைக் குனிந்த வண்ணம் நின்றான். ‘இந்த அறிக்கையை எழுத வேண்டியது ஆங்கிலத்தில் . நிப்போவுக்குச் சிங்களம் தெரியுமா? மற் றையது யுத்த நிறுத் தக் கண்காணிப்புக் குழுவுக்கும் இதன் பிரதி அனுப்ப நேரும் . வெள்ளைக் காரனுக்குச் சிங் களம் தெரியுமா?’ அறிக் கையை பின் னுக் குத் தளர் ளரியவாறு அதிகாரி அமைதி இல்லாதவிதமாகக் கதைத்தார்.
‘'சேர் முன்பும் அறிக்கை எழுதியது சிங் களத் திலை தானே. எங்களுக்கு ஆங்கிலத்திலை அறிக்கை எழுதிறது கஷ்டம். இம்முறை ஏற்பட்ட பிரச்சனை செய்வதற்கு முன் நினைத்துப் பார்க்கக் கூடிய ஒன்றல்ல’.
‘அப்படிச் சொல்லிச் சரிவராது ஐஸே. நீர் மூன்று மொழிகளுக்குமான ‘ எலவுன்ஸ்’ எடுக்கிறனிர் தானே. இந்த மாகாணங்களின் தொடர்பு மொழி இல்லாமல் எப்படி வேலை செய்யிறது? தமிழங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும் எண்டு பாரும். சிங்களவனுக்கு ஒரு மொழி தான் தெரியும் என்றது வெட்கம் 36b606bujt?”
அதிகாரி மானவடுவின் அறிக்கையை மேசையின் ஒரு மூலையில் வீசினார். மானவடு தெரிந்த அளவிற்கு எழுதுவோம் என்று நினைத்துக் கொண்டு அறையை விட்டு
24) 9Wpr. - ah 2008 ia

Page 27
brweva -70
சிமாழிபெயர்ப்பு சிறுகதை
வெளியேறினான். சார்ஜன் இப்பா ஒரு இரவுக்குள் வேடத்தை மாற்றிக் கொண்டது எப்படி என்று அவன் நினைத்தான்.
இணைந்திருந்த பொது அறைகளில் அதிகாரிகள் சிலர் நடைபணியின் காவற் கடமையைப் பொறுப்பேற்கச் செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். மேலும் சிலர் இரவுக் காவற் கடமையைச் செய்து முடித்துவிட்டு வந்து, சீருடைகளைக் கூடக் கழற்றாமல் இறந்தவர்களைப் போன்று படுக்கையில் விழுந்து கிடந்தார்கள். மானவடு நண்பன் ஒருவனைச் சநீதித்து சிறிது நேரம் கதைப் பதற்கு நினைத்தாலும், அவனும் அவசர அவசரமாக காவற் கடமைக்குச் செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். ஆயினும் மானவடு நண்பன் முன்னால் தோன்றினான்.
‘மானவடு, சார்ஜன் இப்பாவை நேற்று மாரடைப்பு வந்து கொண்டு போனது தானே?” ‘என்ன நான் இப்பவும் சந்திச்சனான் தானே. கடவுளின்ரை புண்ணியத்திலை மனுஷன் அந்தமாதிரி இருக்கிறார்’ மானவடு பதில் கூறினான்.
‘ஓம். ஓம். வவுனியா ஆஸ்பத்திரி சவச்சாலையைப் போய்ப் பார்’ நண்பன் சிரித்துக் கொண்டே கூறினான்.
‘அப்படியென்றால் இப்ப இருக்கிறது ஒரு புது ஆள்’ மான வடு தனக் குள் கூறிக் கொண்டான்.
“அவன் மிகக் கேவலமானவன். அவன் ஒரு பாதி இங்கிலீஸ்காறன்’ மானவடு தன்னால் எழுதப்பட்ட முதல் அறிக்கையை எழுத்துக் கூட்டி ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம் செய்தான்.
பொலிஸ் சிப்பாய் 5018 தன்னுடைய பாதுகாப்பு தொடர்பாக எழுதிக் கொணர்ட அறிக்கை.
“4020ஆம் இலக்க கொன்ஸ்டபிளுடன் வீதிச் சோதனை செய்யும் எதிர்பார்ப்புடன் இருந்தோம். அப்படி இருக்கின்ற வேளையில் மாந்தை பெண் ஒருவரிடம் இருந்து எங்களது பொறுப்பதிகாரியான சார்ஜன் இப்பாவுக்குத் தகவல் ஒன்று கிடைத்திருந்தது. சார் ஜன் இப்பாவுக்கும் இந்தப் பெண்ணுக்கும் இடையில் தொடர்பு இருந்தது. இதனால் அந்தப் பெண்ணினுடைய உளவுத் தகவல் நம்பிக்கை வைக்கக் கூடியது என்பதனால் நாங்கள் அவதானமாக அரச பணியைச் செய்ய நேர்ந்தது. நாங்கள் சோதனை செய்யும் வீதியின் சூழலில் குணி டு பொருத்தப் பட்டிருப்பதாகவும் , பயங்கரவாதிகள் காட்டில் ஒழிந்திருந்து உளவு வழங்குவதாகவும், மிருகங்களைக் கூட உளவு பார்ப்பதற்காக ஈடுபடுத்தியிருப்பதாகவும் பெண்
 
 
 

5.
விளக்கியிருந்தாள். மாந்தை கிராமத்தில் அதிகமானோர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக் கதி திறீ கு ஆதரவான மாவீரர் குடும் பங்களைச் சேர்ந்தவர்கள். இந்தக் கிராமத்தில் குண்டுகள் மற்றும் ஏனைய யுத்த உபகரணங்கள் களஞ்சியப்படுத்தி இருப்பது பற்றி நாங்கள் தெரிந்து கொண்டிருந்தோம். இந்தக் கிராமத்திற்குப் பக்கமாக உள்ள வீதி இராணுவத் தினரினி போக் குவரத் துக் கு இலகுவான மார்க்கம் என்பதனால் அடிக்கடி இராணுவ வாகனங்கள் பயணம் செய்தன. ஆபத்தான சூழ்நிலை நிலவினாலும்; அடிக்கடி சோதனைக்கு உள்ளாவதனாலும், அக்கம் பக்கம் பற்றி உளவுத் தகவல்கள் கிடைப்பதனாலும் பயங்கரவாதிகளுக்கு அவர்கள் நினைத்த விதமாகச் செயற்பட முடியவில்லை. இவை அனைத்தையும் தெரிந்து கொண்டே நாங்கள் வீதிச் சோதனைகளில் ஈடுபட்டோம். நாங்கள் பணியில் ஈடுபடுவதற்குத் தீர்மானிக் கப்ட்ட நாளிற்கு முதல் நாள் பொலிஸ் சார்ஜன் இப்பாவுக்கு உளவுத் தகவல்கள் வழங்கும் தமிழ்ப் பெண் தெருவீதியில் சுட்டுப் போடப்பட்டிருந்தாள். அவளது மரணத்திற்கு பொலிஸ் பொறுப்புச் சொல்ல வேண்டும் எனக் கூறப்பட்டது. எப்படியோ இந்த மரணம் நிகழும் என்பதை சார்ஜன் இப்பா தெரிந்து கொண்டிருந்தார். பெண் அவரைச் சந்தித்துவிட்டு போகும் சந்தர்ப்பத்தில் பொலிஸில் உள்ள ஒருவர் நன்கு திட்டமிட்டு இதனைச் செய்தது எங்களுக்குத் தெரியும். அதன் பொருட்டு மாந்தை கிராமத்தில் எதிர்ப்பு நிலவுவது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. சார்ஜன் இப்பாவோ என்றால், இந்தப் பெண் பொலிஸிற்கு உளவு சொல வது என்ற போர்வையில் வந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உளவு வழங்கியிருக்கலாம் என்று கூறியிருந்தார் . அவ்வாறு சமீபதி தி ல நிப்போவுக்குக் கிடைத்த உளவுத் தகவலுக்கு அமைய உணர் டான சந்தேகத்தை சமணர் செய்வதற்கு சார் ஜன் இப் பா இவ்வாறு செயற்பட்டிருக்கலாம் என நினைப்பதற்கு முடியும். நாங்கள் குறித்த நாளனி று பணியில ஈடுபடும்போது இராணுவத்தின் ட்ரக் வண்டி ஒன்று வேகமாகப் பயணித்தது. அதற்குப் பின்னால் சிவில் ஆடைகள் அணிந்த குழுவினர் இருந்த ட்ரக் வண்டி சென்றது. அவர்கள் எங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டு சென்றார்கள். உண்மையில் அவர்கள் எங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டு சென்றார்கள். உண்மையில் அவர்கள் எங்களைப் பார்த்தா சிரித்தார்கள்? என நான் 4020இடம் கேட்டேன். சார் ஜன் இப்பாவைப் பார்த்துச் சிரித்திருக்கலாம் என அவர்
2Yord - éirith 2008

Page 28
άlipτιβόιμμήύι βραδωρ5
கூறினார். அது மிகவும் ஆச்சரியமான பதில் என நான் நினைத்தேன். இன்னும் சிறிது தூரம் போகும் போது சிறுகாட்டின் மரம் ஒன்றின் மீது குரங்கொன்று இருந்ததைக் கண்டோம். நாங்கள் மதகுக்குப் பக்கத்தில் நின்று சோதனையில் ஈடுபட்டிருந்தோம். அந்தக் குரங்கு எங்களுக்குப் பக்கத்தில் வந்து எங்களைப் பார்த்தபடி நின்றது. அது கெட்ட விதமாகப் பார்ப்பதாக நான் 4020இடம் கூறினேன். அது சிரித்ததாக 4020 கூறியிருந்தான். குரங்கின் முகம் சிரிக்கும் முகம் தானே என்று கேட்பதற்கு நான் நினைத்தாலும் கேட்கவில்லை. நாங்கள் அந்த இடத்தை முடித்துக் கொண்டு பத்து மீட்டர் தூரம் அளவிற்குப் போகும் போது குரங்கு எங்களை
சிeருக்குருவியி சிருதீகத்
எனக்குப் பிடித்த அந்த S சிட்டுக் குருவிகளின் இனிய பாடல் ஒயத் தொடங்கிவிட்டது
முர்க்கம் கொண்ட சிங்கத்தின் கர்ஜனை வார்த்தை விலங்கோடு வாடி வதைபட்டு சிதைபடுதல் நெடுநாளாய்த் தொடர்கையில் தரைமீனின் துடிப்பைப் போல் பிடுங்கி வைத்த மனதோடு துடிக்கிறேன் சுவாசக் காற்றுக்காய்.
முதுகில் நெட்டித்தள்ளி முகம் குப்பற வீழ்த்திவிட்டு பளார் என்று அறைவதான 4. நிஷடுரச் சொற்களின் கடினம் அடர்வன நடுவே தனிமையில் ஒரு கொடிய விலங்கின் முன்னதாய் O திக்கு முக்காட வைக்கிறது.
அவலக்குரலெழுப்பி அபயம் தேடும் மரணப் பறவையாய்த்தானும் சத்தமிட்டுக் கத்திட முடியாமல் பகிர்வதற்கு வார்த்தைகளற்று ஒடுங்கிப் போயிருக்கிறேன் குடும்ப வன்முறைச் சிறையில். தினம் பிளக்கும் மணவெடிப்பில் விபரிக்க முடியாத பாதாளத்தில் புதைக்கின்ற இதய வெளியில் அனல் தெறித்துப் பற்றிடினும்
bMWe 270 (
 
 
 

நோக்கி விசில் அடித்து சைகை செய்தது. குரங்கின் மொழி எனக்குப் புரியவில்லை அந்த இடத்திற்கு அப்பால் குண்டு ஆபத்து இருக்கலாம் என 4020 கூறியிருந்தார். நாங்கள் மீண்டும் திரும்பி இராணுவத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவுக்கு தெரிவிப்பதற்கு நினைக்கும் போது இராணுவ வாகனம் ஒன்று குண்டு வெடிப்பில் இரையாகிப் போனது. நாங்கள் நகர்ப்பக்கமாக வரும் போது சிவில் ஆடைகள் அணிந்த குழுவினர் ட்ரக் வண்டியில் ஏறிப் பறந்தார்கள். நாங்கள் வந்து கொண்டிருக்கும் போது மாந்தை கிராமம் தீப் பற்றிக் கொண்டிருந்தது. ஒப்பம் : 5018
?ášo CyCu6gsòb శ్రీవీ విరగ్రీe256Crub
விளாசி எரிய முடியாமல் உருகி இறுகுகிறது
Param.
முலை யோனி கருப்பை
எதுவுமே இனி வேண்டாம் ஒரு
பிறப்பிலும் இடர் தந்து என்னை
வதைத்தெடுக்க
ஒரு கொங்கை
அறுத்தெறிந்து ஆணாதிக்க அகம்பாவத்தை
எரிக்க கண்ணகி போல்
முடியவில்லை கற்புள்ளவளே தானெனினும் வல்லமை வாராதோ வஞ்சி
எனக்கு 6LDsbesor(LDT 6Luasir
இனியும் சொல்

Page 29
brweve -70
சிறுகதை
“.G.R. நேற்றுக் கேட்டவர். பின்னேரம் வீட்ட போகமுதல் தந்திட்டுத்தான் போகவேனும் என்ன?”
“ஓம் சேர்’ என்ன தரவேணுமெண்டு சொன்னவர்? டீ.ஈ. எண்டாப் பிறகுதான் மிச்சம் காதிலை விழுந்தது. பின்னேரம் என்ன றிப்போட்டைக் குடுக்கிறது? ஏன் பிறின்ஸிப்பலின்ரை கதையைக் கவனிக்காம விட்டனான்? இந்த மனக் குழப்பத்துக்கு என் நண்பன் செந்தில்தான் காரணம். ஏன் அப்பிடிச் செய்தவன்?
** சேர் வெளர் ளனை எனின யோசனையிலை வாறனியள்? 7.45க்குப் பிறகு 7.10 எண்டு சைன் வைச்சிருக்கிறியள். போய் மாத்திப் போட்டு வாங்கோ’
சேட்டிற் பிடித்து இழுக்காத குறையாகப் பியோன் கூப்பிட்டபோது திடுக்கிட்டுப் போனேன். ஏன் நேரத்தைக் கவனிக்காமல் விட்டேன்? காலமை அவன் தான் என்னைக் குழப்பிப் போட்டான். ஏன் அப்பிடிச் செய்தவன்? அவனைப் பற்றி நான் ஏன் யோசிக்க வேணும். போனாப் போகட்டும். நான் என்ரை வேலையைப் பாப்பம்.
"குட்மோனிங் சேர்”
 
 
 

வணக்கம் பிள்ளையளர் . இருங்கோ. இண்டைக்கு என்ன படிக்க வேணும்?”
“என்ன சேர்?” “பொறுங்கோ. றெக்கோட்புக்கைப் பாப்பம். இண்டைக்குத் தெரிநிலைவினை குறிப் புவினை படிக்க வேணும் . தெரிநிலை வினை எண்டால் என்ன?”
‘ஓடினான். நடந்தான். அதுகள் தான் சேர்’
“ஓம் அது உதாரணம். நான் என்னெண்டெல்லோ கேட்டனான்?”
** சேர் . தெரிநிலை வினை, குறிப்புவினை அண்டைக்குப் படிப்பிச்சுப் போட்டியள்’
‘நாயளே. இதை முன்னுக்குச் சொல்லியிருக்கலாம் எல்லே. மாலைக் காட்சி பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கோ’ ஒரு நாள் கூட ஆயுத்தம் இல்லாம வகுப்புக்கு வந்ததில்லை. ராத்திரி நோட்ஸ் ஒவ் லெசனிலை என்ன படிப்பிக்கிறதெண் டு எழுதினனான்? ஞாபகம் வருகுதில்லை. கொப்பியையும் இண்டைக்கு ஸ்ராவ் றுாமுக்கை விட்டிட்டு வந்திட்டன். ஏன் குழம்பிப் போய் இருக்கிறன்?
ஏன் அவன் அப்பிடி நடந்தவன். ஏதேனும் கோபம் எண் டா மறிச்சுப் பேசிப் போட்டுப் போயிருக்கலாம். அதுக்கு இப்பிடியே செய்யிறது? சிலவேளை அதுதான் காரணமா இருக்குமோ? ஓம் அப்பிடித் தான் இருக்க வேணும். அணி டைக்கு அவசரமா ஐயாயிரம் ரூபா தேவையெண்டு வந்த நேரம் நான் காசில்லை எணர் டு பொயம் சொனி னது அவனுக் குதி தெரிஞ்சிருக்குமோ, நான் என்ன செய்யிறது. எனக்குக் குடுக்க விருப்பம் தான். ஆனா அது மாமி அனுப்பின காசு. மனிசி குடுக்க வேண்டாம் எண்டு நிண்டு கொண்டாள்.
அது அவனுக்கு என்னெண்டு தெரியும்? சிலவேளை தெரிஞ்சிருக்கலாம். ஏனெண்டாக் கனகன்ரை மச்சான் தான் காசு கொண்டு வந்தவன். கனகனும் செந்திலும் 'பிரெண்ட்ஸ்'. கதைக்கேக்கை சொல்லி இருப்பனோ? இருக்கலாம். அவனைக் கண்டு உண்மையைச் சொல்ல வேணும். இல்லாட்டி என்னைப் பற்றி என்ன நினைப்பான்?
“சேர் பெல் அடிச்சிட்டுது சேர்”
互>

Page 30
சிறுகதை
'டேய் நாயே என்னை எழும்பிப் போகச் சொல்லிறியே? நல்ல பழக்கங்களைப் பழகவேணும்” ‘' இல்லை சேர். நான் அதுக்குச் சொல்லேல்லை. சமய ரீச்சர் வந்து அப்போத தொடக்கம் காவல் நிக்கிறா’ ‘அப்ப ஏன்ரா முன்னுக்குச் சொல்லேல்லை?”
* * ၇ ၇ ၇ာ அடுத்த பாடம் என்ன, செவ்வாய்க்கிழமை இரண்டாம் பாடம் ஒன்பதாம் வகுப்புக்கு.
“குட்மோணிங் சேர்’ “வணக்கம் இருங்கோ’ இண்டைக்கு என்ன படிப்பிக்க வேணும். எதெண்டாலும் கிடக் கட்டும். இண்டைக்குப் படிப்பிக்கேலாது எண்டது முதல் வகுப்பிலேயே தெரிஞ்சிட்டுது. ஏதாவது எழுத்து வேலை குடுப்பம். “பிள்ளையஸ் மாலைக் காட்சியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கோ’
அவன் ஏன் அப்பிடிச் செய்தான்? காசு தரேல்லை எண்டதுக்காகக் கோவிக்கிற ஆளில்லை அவன். மற்றது கனகனும் அவரவற்றை கதை அவரவரோடை தான்.
அப்பிடி எண்டா என்னவா இருக்கும்? சிலவேளை முந்தநாள் நாங்கள் பள்ளிக் கூடத்திலை அவனைப் பற்றிக் கதைச்சதை ஆரும் போய்ச் சொல்லி இருப்பினமோ? ஓம். அப்பிடித் தான் இருக்க வேணும். சமூகக்கல்வி I.S.A. ஆக எங்கடை சந்திரன் சேரை எடுத்ததைப் பற்றித் தானே கதைச்ச நாங்கள்? செந்தில் ஏன் எடுபடவில்லை எண்டு நான் கேக்க, காசிநாதன் சேர், ‘சந்திரன் சமூகக்கல்வியிலை எவ்வளவு கெட்டிக்காரர். டிப்ளோமா மெறிற்றிலைஎல்லே பாஸ் பண்ணினவர். அப்ப அவருக்குத் தானே கிடைக்கும். செந்திலைப் பற்றி உமக்குத் தெரியுந்தானே?” எண்டு சொன்னவர்.
“ஓம் அவன் பெரிய கெட்டிக்காரன் எண்டு இல்லைத்தான். அதுக்காகக் கெட்டித்தனம் இல்லாட்டி I.S.A. ஆக வரேலாதே?”
இவ்வளவும் தான் நான் கதைச்சது. இதிலை ஆரும் முதற் பகுதியை மட்டும் எடுத்துக் கண்ணும் மூக்கும் வைச்சு அவனுக்குச் சொல்லி இருப்பினமோ?
ஓம் இருக்கலாம். ஒண்டைக் கதைக்க இன்னொண்டா மாத்தி ஆக்களைக் கொழுவி விடுறவை எங்கடை ஸ்ராவ் றுாமுக்கையும் இருக்கினம்.
 

அப் பிடி எணர் டா அவன் வந்து கேட்டிருக்கலாம் தானே? அதுக்கு இப்பிடியே செய்யிறது.
“சேர், பெல் அடிச்சிட்டுது”
“சரி, கட்டுரையை எழுதி வையுங்கோ நாளைக்குத் திருத்துறன்”
“தாங்யூ சேர்’
சிலவேளை இப்பிடி இருக்குமோ? நேற்றுப் பின்னேரம் அவன்ரை மகளை ஏத்திக் கொண்டு போய் வீட்டடியிலை இறக்கினது பிடிக்கேல்லையோ?
இருண்ட நேரம் ரியூசன் முடிஞ்சு தனிய வரேக்கை உதவி செய்யத்தானே வேணும்? நண்பன்ரை மகள் எண்டா எனக்கும் மகள் தானே? கிட்டத்தட்ட அதே வயதிலை எனக்கும் மகள் இருக்கிறாள் தானே?
இது இப்பிடிப் பிரச்சனையாப் போகும் எண்டு ஏன் நேற்று யோசிக்கேல்லை?
மோட்டச் சைக்கிள்ளை தச்சேலாத் தட்டுப்பட அவள் பிழையாக விளங்கி ஏதும் வீட்டிலை போய்ச் சொல்லியிருப்பாளோ? சீ. நினைக்கவே அந்தரமாக் கிடக்குது. நான் ஏன் தேவையில்லாத வேலை பாத்தனான்?
எதுக்கும் பின்னேரம் அவன்ரை வீட்டை போய்க் கேட்டுப் பாப்பம்.
米 本 se
“வா மச்சான் என்ன கனநாளைக்குப் பிறகு எங்கடை யோசனை வந்திருக்கு?”
“ஒண்டுமில்லைச் சும்மாதான் வந்தனான்” என்ன வடிவாச் சிரிச்சுக் கதைக்கிறான்? கோபமா இருந்தாலும் வீட்டுக்கு வந்த ஆளை வரவேற்கவேணும் எண்டு நினைக்கிறானோ?
‘என்ன யோசிக்கிறாய்? அவசரமே, இரன் கதைப்பம்’
“ஓம் நான் சும்மா பாத்துக் கொண்டு போவம் எண்டு வந்தநான். அது சரி என்ன காலமை கண்டிட்டுத் தெரியாத மாதிரிப் போனணி?
‘எப்ப? காலமையோ? நான் உன்னைக் காணேல்லையே? ஒ. அதே அது என்ரை மோட்டச்சைக்கிள் பிறேக் பிடிக்க மாட்டன் எண்டிட்டுது. அதுதான் அங்காலை இஞ்சாலை திரும்பாமக் கவனமா ஓடிக் கொண்டு போனனான்’.
率 冰 米
99
9Wprja kalah 2008 T

Page 31
கவிதை
தூசிபடிந்த சாய்மனைக் கதிரை நாட்களாக நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்வு.
கொழுத்தும் வெய்யிலில் கொட்டித் தள்ளும் இலைகளின் உதிர்ப்பில் பேய்க் காற்றுத் தாண்டவத்தில் எல்லாமே அள்ளுண்டபடி,
சிவப்பு கறுப்பு பொட்டிட்ட ஒரு தனியன் வண்ணத்துப்பூச்சி செழிப்பிழந்து போன நித்திய கல்யாணிப் பூக்களில் நம்பிக்கையுடன் தேடித் தேடித் தேனெடுக்கும் நாதிகூட, நம் வாழ்க்கையிலிருந்து மெல்ல மெல்லக் கைநழுவிப் போகிறது. அதற்கிருக்கும் திராணிகூட இல்லாமற் போய்விடுமா?
i
வீதிகளும், வெளிகளும், வெறுமையாகிப் போன நம் கதைகளையே மீண்டும் மீண்டும் சுமக்கின்றன. வரிசை கட்டிக் கொள்வதும் நேரம் கடத்தும் காத்திருப்பும் நரம்புகளும் எலும்புகளும் வெளித்தெரியும் காற்றுப் பைகளாக்குகின்றன. சொரசொரத்துப் போன கடதாசிப் பூக்களில் இருக்கும் ஈர்ப்புக் கூட இந்த நடைப்பினங்களில் இல்லை.
பழுப்பேறிப் போன சோம்பேறி இருட்டில் முன்று நாளாக உதறிப் போடாத அழுக்குப் படிந்த போர்வையுடன் நேரத்திற்கு நேரம் கம்மிக் கொண்டு மண் நிரப்பின சிரட்டையில் எச்சில் துப்பிக் கொண்டிருக்கும் ---. இந்தத் தரித்திரத்தை என்னவென்று சொல்வது?
அழுக்கு முட்டையாய் அம்மிக் கொண்டு நீண்டு கிடக்கும் தூசி படிந்து போன சாய்மனைக் கதிரையாக நகர்ந்து கொண்டிருக்கின்றன நாட்கள்.
காத்திருப்புக்களின் நடுவே பழுத்துப் போன இலைகளாக உதிர்ந்து கொண்டிருக்கிறது வாழ்வு
 

துவாரகன்
8 $3 "김 奇 皆 M 2 $\ つ

Page 32
بھیجتی تھی۔
னெக்கொரு கனவுன்டு" ( Have a
Dream) எனும் பிரபலமான உரையை மார்ட்டின் லூதர் கிங் ஆற்றிய வாஷிங்டன் பேரணியின் 40 ஆண்டு நிறைவு இது அவரின் அந்த கனவுக்கு என்ன நடந்தது என்று மீண்டும் நினைவுகூர இது பொருத்தமான தருணமாயிருக்கலாம்
விக்கிரகங்கள், தமது காலங் கடந்ததும் (சுயவிருப்புடனோ தம்மையறியாமலோ) அவை எந்த மனத்தடைகளையும் வெறித் தனத்தையும் அசமத்துவத்தையும் எதிர்த்துப் போராடினார்களோ, அவற்றை வளர்ப்பதற்காக எவ்வாறு விற்பனைப் பண்டங்களாக்கப்பட்டு பறித்தெடுக்கப்படுகின்றன என்பது சுவாரசிய மானது ஆனால் "எல்லாமே விலைக்கு என்கிற இக்காலத்தில் விக்கிரகங்களுக்கு மட்டும் ஏன் விலக்கு சமூகத்தின் எல்லாமும், உலகின் ஒவ்வொரு உயிரியும், சர்வதேச நாணய நிதியக் (MF) காசோலைக்கும் அமெரிக்க ஏவுகணைகட்கும் இடையில் உழல் கிற இந்த யுகத்தில் விக்கிரகங்கள் மட்டும் தப்பிச் செல்ல முடியுமா?
மார்ட்டின் லூதர் கிங் மும்மூர்த்திகளில் ஒருவர். முண்டியடித்து முந்திவருகிற மற்ற இருவரையும் "மோகன்தாஸ் காந்தி, நெல்சன்
 

முற்குறிப்பு: 1968 இல் மார்ட்டின் லூதர் கிங் ஆற்றிய எனக்கொரு கனவுன்டு" என்ற புகழ்பெற்ற உரையின் நாற்பதாண்டு நிறைவை யொட்டி 2008இல் பிபிசி வானொலி (BBC Radio 4) நடாத்திய சிறப்பு நிகழ்வில் அருந்ததி ராய் அவர்கள் ஆற்றிய 15 நிமிட உரையின் தமிழாக்கம் இது
விலக்கி அவரைப் பற்றி மட்டும் சற்றுக் கடினம். இவர்கள் போராட்டத்தின் முப்பெரும் கொலனிபர்கட்கு எதிராகக் முறைக்கு உட்பட்டவர்களதும் சொந்தக்காரர் கட்கு எதிராக 20լի நூற்றாண்டின் வன்முறையற்ற விடுதலைப் போரட்டங்களை பேசித்தீர்க்கப்பட்ட CLUDE268.5 600611 மூவரும் (ஏறத்தாழ) ஒருசேர அடையாளப்படுத்துகின்றனர்.
சமூகங்களின் மேன்மக்களும் யாருடைய பெயரால் சுதந்திரத்திற்கான போராட்டங்கள் நடத்தப்பட்டனவோ, அந்த மக்களும், இன்று
தங்களுடைய புதிய IFIDISIF505 கவர்ந்திழுப்பதற்கான அதிட்டச் சின்னங்களாக
mascots) அவர்களை பயன்படுத்துகிறார்கள்.
சின்ன அற்புதம், ஆண்டவரின் வானவிற் தசம் எனவும் அறியப்பட்ட மண்டேலாவின் தென் ஆபிரிக்கா எப்படி இருக்கிறது? தாமறிந்த ஒரே அதிசயம், எத்தனை விரைவாகத் தமது வானவில்" தனியார் மயமாக்கப்பட்டுக் கூறு

Page 33
GUTLILIG. அதியுச்ச ஏலக்காரர்களுக்கு விற்கப்பட்டது என்பதுதான் என்கின்றனர். தென்னாபிரிக்கர்கள். 1994 இல் பதவியேற்று இரண்டே ஆண்டுகளில், எவ்வித விளக்கமுந் தராமல், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், "சந்தைப் பொருளாதாரத் தெய்வத்தின் (Market God) முன் பன்டியிட்டுவிட்டது Bill தாராளவாதத்தின் கவரோட்டிப் GLILIGT என்னும் இடத்தை ஆர்ஜென்ற்றினாவிடமிருந்து தனதாக்கிக் கொள்ளு கிற அவசரத்தில் அது தனியார் மயமாக் கலுக்கும் கட்டுமானத் திருத்தத்துக்குமான நாபெரும் வேலைத் திட்டமொன்றை நிறுவி புள்ளது.
நிலமற்ற 25 மில்லியன் மக்களுக்கு விவசாய நிலங்களை மறுபங்கீடு செய்வதாக அளித்த உறுதி இருண்மையான நகைச்சுவைக் குரியதாகி விட்டது. மக்கள் தொகையில் 60 சதவீதமானோர் நிலமற்றவர்களாக இருக்கும் போது, கிட்டத்தட்ட எல்லா விவசாய நிலமும் 50,000 வெள்ளை இன விவசாயிகளிடம் சிக்கிக் கிடக்கிறது (ஜோஜ் புஷ் அண்மையில் தென்னாபிரிக்காவிற்குச் சென்றி ருந்த போது, அதிபர் தாபொ ம்பெகியை (Thab Mbeki) LILE5 விஷயத்தில் IEEE தொடர்பாளராகச் சொல்லியிருப்பதில் அதிசய மில்லை). நிறப்பாகு பாட்டுக்குப் பிந்திய (postபு:Ineid) காலத்தில், அதி ஏழ்மைப்பட்ட 40 தவிதக் கறுப்பினக் குடும்பங்களின் வருமானம் இறக்குறைய 20 சதவீதத்தால் வீழ்ந்துள்ளது. இரண்டு மில்லியன் பேர் தமது விடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தினமும் 600 பேர் ாப்ட்ஸால் மடிகிறார்கள். மக்கள் தொகையில் 40 விதமானவர்கள் வேலையில்லாமலுள்ளனர். இவ் வென்னிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது.
 

باقری بوده و با هف
அருந்ததி ராய் தமிழில் ஏகலைவா
பெருவணிக நிறுவனமயமாக்கலின் விளைவாக ல மில்லியன் பேரின் வீடுகளுக்கு தன்னிர் இன்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இரு வாரங்களுக்கு முன் டேர்பனில் நகரின் சாட்ஸ்வேர்த் பகுதியில் வசிக்கும் தெரெசா (Teresa Naidoo) வீட்டிற்குச் சென்றிருந்தேன். முந்தைய நாள் தான் அவரது கணவர் எய்ட்ஸால் இறந்திருந்தார். சவப்பெட்டி வாங்க அவரிடம் பணமில்லை. அவரும், அவரின் இரு குழந்தைகளும் HIV பாதிப்புக்குட் ட்டவர்கள். தண்ணீர் பில் கட்டாததையும், நீண்ட நாள் வாடகை நிலுவையையுங் காரணங் HTԼդ அரசாங்கம் அவரின் தன்னி இணைப்பைத் துண்டித்துவிட்டது. "கட்டணஞ் செலுத்தாப் பண்பாடுடையோர் (போe ofnon
ayment) எனக் கூறி அவரதும் அவர் போன்ற மில்லியன் கணக்கோரின் துயரங்களை அரசு அலட்சியப்படுத்துகிறது.

Page 34
இதைவிடப் பெரிய சர்வதேசக் கேவலமாக அமையக்கூடிய விதமாக, இதே தென்னாப்பிரிக்க அரசாங்கம் நிறப் பாகுபாட்டுக் காலத்தில் கொம்பனிகள் வகித்த பங்கிற்காக அக் கொம்பனிகளை நட்ட ஈடு (reparation) வழங்குமாறு வற்புறுத்துவதற்கெதிராகத் தீர்ப்பளிக் குமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு நீதிபதியொருவரைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கான விளக்கம் ஏதெனில் இந்த நட்ட ஈடுகள் (reparations), வேறு விதமாகச் சொன்னால் நீதி, அந்நிய முதலீட்டை மறிக்கத் தூண்டும் என்பதாகும். அப்படியாயின், நெல்சன் மண்டேலாவின் "ஆண்டவரின் வானவிற் தேசம்" உருவாக்கும் நல்லெண்ணத்தின் பயனாகக், கறுப்பின மக்களை சுரண்டிப் பெருத்த இலாபமீட்டியவர்கள் மேலும் நலன் பெறுமாறு, நிறப் பாகுபாட்டுக் காலக் கடன்களைத் தென்னாப்பிரிக்காவின் ஏழைகளே கட்டித் தீர்க்க வேண்டும். ஜனாதிபதி தாபொ ம்பெகியை அரசாங்கத்திலுள்ள அவரது சகாக்கள் இன்னமும் “தோழர்” என்று அழைக்கின்றனர். தென் ஆபிரிக்காவில் ஓர்வெலிய (Orwelian) அங்கதம் நிச வாழ்வு' என்கிற வகைக்குள் அடங்குகிறது.
மார்ட்டின் லூதர் கிங்கின் அமெரிக்காவைப் பற்றி சொல்ல என்ன மிஞ்சி இருக்கிறது? ஒரு வேளை, ஒரு எளிய கேள்வியை எழுப்புவது நன்று. அவர் இன்று உயிரோடு இருந்திருந்தால், இன்னமும் ஒவ்வொரு அமெரிக்கனின் உள்ளத்திலும் உன்னதமான அமெரிக்கர்களின் அலங்காரப்பீட அடுக்கில் தனக்கான அசைக்க முடியாத இடத்தில் ஆறுதலாக அமர்ந்திருக்க விரும்பியிருப்பாரா? அல்லது தனது பீடத்திலிருந்து கீழிறங்கி, வெற்றுப் புகழாரங்களை உதறித் தள்ளிவிட்டு தன் மக்களை மீண்டும் பேரணியில் திரட்ட வீதிக்கு வந்திருப்பாரா? 1967ம் ஆண்டு எப்ரல் 4ம் நாள், தான் கொல்லப்படுவதற்கு ஓராண்டிற்கு முன், மார்ட்டின் லூதர் கிங் நியூயோர்க் நகரின் றிவர்ஸைட் தேவாலயத்தில் (Riverside Church) 9 -60JuTib SoTT). (916) J35) உரைகள் இன்று தனியார் உடைமை என்பதால், என்னால் அவரது கூற்றைச் சுருக்கித் தான் தர இயலும்). உலகின்
|| 3rw82 -70 (3
 

அதிபெரிய வன்முறையாளன் என அவர் குறிப்பிட்ட தனது நாட்டின் அரசாங்கத்திறகு எதிராகக் குரலுயர்த்தாமல், சேரிகளில் (ghetto) வாழ்வோரின் வன்முறைகட்கு எதிராக மீண்டும் குரல் கொடுக்க என்றென்றைக்கும் தன்னால் இயலாது என அங்கு அவர் சொன்னார். அமெரிக்க ஐக்கிய நாட்டை, உலகின் மிகப்பெரும் வன்முறை வாணிபம் செய்யும் வியாபாரி என்றழைத்தார்.
1967க்கும் 2003க்கும் இடையிலான 36 வருடங்களில் அவர் தனது மனதை மாற்றிக் கொள்ளும் வகையில் ஏதேனும் நடந்திருக்கிறதா? அல்லது அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த குடியரசுக் கட்சியினதும் ஜனநாயக கட்சியினதும் அரசாங்கங்கள் ஈடுபட்ட வெளிவெளியானதும் மறைமுகமானதுமான போர்கட்கும் தொகையான படுகொலைகட்கும் பின்பு அவர் தனது கருத்தில் மேலும் உறுதி உடையவராகி இருப்பாரா?
மார்ட்டின் லூதர் கிங் முதலில் ஒரு போராளியாகத் தன் பொதுவாழ்வைத் தொடங்கவில்லை என்பதை நாம் மறக்கலாகாது. பிரசாரகராகவும், இறை நம்பிக்கையாளராகவுமே அவர் தொடங்கினார். 1964ல் நோபெல் அமைதிப் பரிசை வென்றார். முன்னுதாரணமான கறுப்பினத் தலைவராக, உதாரணமாக அதிக போர்க்குணமுடைய மல்கொம் எக்ஸ் போலன்றி, அவர் ஊடகங்களால் உயர்த்திப் பிடிக்கப்பட்டார். அதற்கும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே, உள்நாட்டு இனவாதக் கொள்கைகளையும் அமெரிக்காவின் இனவாத வியட்நாம் போரையும் வெளிப்படையாக ஒன்றிணைத்துப் பேசினார். 1967ல், விட்டுக்கொடுப்பற்ற, போர்க்குணமுடைய உரையொன்றில் அவள் வியட்நாம் மீதான அமெரிக்காவின் படையெடுப்பைக் கண்டனஞ் செய்தார். எந்தத் தேசம் வெள்ளையரையும் கறுப்பரையும் ஒரே மேசையில் அருகருகாக அமர்த்த மறுக்கிறதோ, அதே தேசத்திற்காக ஒன்றுசேர்ந்து கொன்றபடியும் இறந்தபடியும் கறுப்பு, வெள்ளை இளைஞர் கள் முரட்டுத் தனமான ஒருமைப்பாட்டுடன் ஒரு ஏழை வியட்நாமின் கிராமத்தின்
9%S = Seð 2008

Page 35
6luprvý96luvuíýüu(š a5úb60j
குடிசைகளை எரிக்கும் தொலைக்காட்சிப் படிமங்களின் கொடிய முரண்நகையைப் பற்றி நெஞ்சுருக்கும் சொல்வன்மையுடன் அவர் பேசினார். வியட்நாம் போர் மீதான இக் கண்டனம் துரோகச் செயலாகியது. அவர் அவரது முன்நாட் கூட்டாளிகளின் கண்டனத்திற்காளானார். அமெரிக்கப் பத்திரிகைகளால் நச்சுத்தனமாகச் சாடப்பட்டார். தனது இலக்கிற்கும் நாட்டிற்கும் மக்களுக்கும் தனது பயனுடைமையை அவர் குறுக்கிக் கொண்டு விட்டாரென வாஷிங்டன் போஸ்ற் எழுதியது.
நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை கறுப்பு அமெரிக்கர்களிடையே வளர்ந்துவந்த போர் எதிர்ப்பு உணர்வுக்கு அற்புதமானதொரு மாற்றுத் தர்க்க முறையைத் தர முன்வந்தது. தனது நாட்டிற்காக போரில் தனது பங்கை வழங்க நீக்ரோவுக்கு முதன்முறையாக வியட்நாமில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதென அது கூறியது. தமது மக்கள் தொகை விகிதாசாரத்துடன் ஒப்பிடின், வெள்ளையர்களின் இரு மடங்குத் தொகையிற் கறுப்பர்கள் வியட்நாமில் மடிகின்றனர் என மார்ட்டின் லூதர் கிங் அவதானித்திருந்ததை அது தவிர்த்திருந்தது. போரில் இறந்தவர்களின் சடலப் பைகள் வந்த பின்பு, கறுப்புப் படைவீரர்கள் சிலரது உடல்கள் தெற்கின் வேறுபடுத்தப்பட்ட புதைகுழிகளில் அடக் கஞ் செய்யப்பட்டதைச் சொல்லாமல் தவிர்த்தது. அரசாங்கப் புள்ளி விவரங்களின் படி அமெரிக்கச் சனத்தொகையில் 12 சதவீதமான ஆபிரிக்க-அமெரிக்கர்கள், மொத்த ஆயுதப் படைகளில் 21 சதவீதமாகவும் அமெரிக்க ராணுவத்தில் 29 சதவீதமாகவும் இன்று இருப்தைப் பற்றி மார்ட்டின் லூதர் கிங் என்ன சொல்லியிருப்பார்? அதை ஆக்கமுடன் நோக்கிக், கறுப்பர்களுக்குச் சாதகமான நல்லேற்பாட்டின் அதிபயனுடைய நிலை என்றிருப்பாரோ?
வாக்குரிமைக்காக பாடுபட்டுப் போராடியபின், 14 மில்லியன் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் (அதாவது வாக்களிக்கும் வயதுடையோரில் 13 சதவீதத்தினர்), இன்று கொடுங்குற்றங்கள் தொடர்பாகக் குற்றவாளிகளாகக் காணப்பட்தற்காக வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளனர் என்பதைப் பற்றி என்ன கூறுவார்?
எனினும் அனைத்தினும் அதி பொருத்தமான கேள்வி இதுவே: ஆயுதப் படைகளில் ஐந்திலொரு பங்கினராகவும் அமெரிக்க ராணுவத்தில் மூன்றிலொரு பங்கிற்குக் கிட்டுதலாகவும் உள்ள கறுப்பின ஆண்களுக்கும் பெண்களுக்கும் மார்ட்டின் லூதர் கிங் என்ன சொல்லக் கூடும்?
வியட்நாமில் அமெரிக்காவின் பங்கை விளங்கிக் கொண்டு தமது மனச்சாட்சிப்படி (போரிற் பங்கேற்க) LDOlds(gib (conscientious objection) FITg55ul LJTG பற்றி சிந்திக்க வேண்டுமென மார்ட்டின் லூதர் கிங் வியட்நாமிற் போரிட்டுக் கொண்டிருந்த கறுப்பினப் படை வீரர்களைக் கேட்டுக்கொண்டார்.
1967 ஏப்ரலில் மன்ஹட்டனில் நடைபெற்ற மாபெரும் போரெதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற் பேசிய ஸ்டோக்லி
5 Tj 6OLDé 56ö (Stokely Carmichael) f6) ül
bAWe 2 - 70 C
 

மக்களிடமிருந்து திருடிய நிலத்தைத் தக்க வைத்துக் கொள்ள மஞ்சளின மக்கள் மீது தொடுத்திருக்கும் போருக்கு வெள்ளை மக்கள் கறுப்பு மக்களை அனுப்புகிற காரியம் என்று கட்டாய ஆட்சேர்ப்பை வர்ணித்தார். என்ன மாறியுள்ளது? கட்டாயமான ஆட்சேர்ப்பு வறுமை காரணமான ஆட்சேர்ப்பாகியுள்ளதை இன்னொருவிதமான கட்டாயப்படுத்தலாகியுள்ளதை விட? ஈராக் மீதும் ஆப்கானிஸ்தான் மீதுமான படையெடுப்பும் ஆக்கிரமிப்பும் வியட்நாமில் அமெரிக் காவின் படையெடுப்பினின்று நெறிசார்ந்த நோக்கில் எவ்வாறேனும் வேறுபட்டது என்று மார்ட்டின் லூதர் கிங் இன்று சொல்வாரா? இப் போர்களிற் பங்குபற்றுவது நீதியானதும் நெறிசார்ந்ததும் என்பாரா? ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் கூட்டாளியாக இருந்த சமயத்தில், குர்தியருக்கும் ஈரானியருக்கும், ஈராக்கியருக்கும் எதிரான தனது குற்றங்களில் மிக மோசமானவற்றை சதாம் ஹ"சேன் இழைத்த போது அரசியல்ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் சதாம் ஹ"சேன் போலவொரு சர்வாதிகாரிக்கு ஆண்டுக்கணக்காக அமெரிக்க அரசு உதவியதை அவர் சரியென்று சொல்லி இருப்பாரா? சதாம் ஹ"சேன் செய்தது போன்று, அச் சர்வாதிகாரி சற்று முரண்டத் தொடங்கியதும், ஈராக்கிற்கு எதிராக போருக்கு சென்றதையும் நூற்றுக்கணக்கான தொன் g5600-6ffu u(3) 6flug,605 (depleated uranium) ஈராக்கின் வயல்கள் மீது வீசியதையும், அதன் நீர் வழங்கல் அமைப்புகளைச் சீரழித்ததையும், அரை மில்லியன் குழந்தைகளின் சாவுக்குக் காரணமான பொருளாதாரத் தடையை விதித் ததையும் , ஐ.நா. ஆயுதப் பரிசோதகர்களைக் கொண்டு நிராயுதபாணியாகும்படி அதை வற்புறுத்தியதையும் சில நிமிடங்கட்குள் ஏவக்கூடிய பேரழிவு ஆயதங்களை ஈராக் கொண்டிருப்பதாகப் பொதுமக்களை நம்ப வைத்ததையும் அந்நாடு மண்டியிட்ட நிலையில் இருக்கையிற் படைகளை அனுப்பி அதைக் கைப்பற்ற ஆக்கிரமிப்புப் படையை அனுப்பி அதன் மக்களை அவமானப் படுத்தியதையும் அதன்
2 Cord - éirith 2008

Page 36
சிமாழிபெயர்ப்புக் கட்டுரை
இயற்கை வளங்களையும் உட்கட்டமைப்பையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொணர்ந்ததையும் நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்கள் பெறுமதியான மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை பெக்டெல் (Bechtel) போன்ற அமெரிக்க கொம்பனிகளிடம் ஒப்படைத்ததையும் பற்றி என்ன சொல்லியிருப்பார்? வியட்நாம் போருக்குதிெராகப் பேசும் போது, இன்று பலருங் காட்டாமல் தவிர்க்கிற சில தொடர்புகளை மார்ட்டின் லூதர் கிங் எடுத்துரைத்தார். இனவாதத்திற்கும் பொருளாதாரச் சுரண்டலுக்கும் போருக்கும் இடையேயான தொடர்புகளை அவர் வெளிப்படையாக விவரித்தார். ஐக்கிய அமெரிக்க அரசு தனது குரூரங்களையும் இனவாதத்தையும் பொருளாதாரச் சண்டித்தனத்தையும் போர் இயந்திரத்தையும் ஏழை நாடுகட்கு ஏற்றுமதி செய்கிறது சரியென்று தன் மக்களிடம் கூறுவாரா? அமெரிக்க ரொட்டி எவ்வளவு பெரிதோ கறுப்பு அமெரிக்கர்களது பங்கும் அவ்வளவு பெரிது என்பதால் அவர்கள் ஆபிரிக்க, ஆசிய, மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்க மக்கள் அமெரிக்க வாழ்முறைக்காக தருகின்ற கொடிய விலையைப் பற்றி அக்கறையேயின்றி அமெரிக்க ரொட்டியில் தங்கள் பங்கிற்காகப் போரிட வேண்டுமென்றுஞ் சொல்லுவாரா? 'பேரமெரிக்கக் B601660)6Or’ (Great American Dream) seg565 (5.bgub மிக வேறுபட்டதும் மிக அழகியதுமான தன்னுடைய சொந்தக் கனவின் மீது ஒட்டுவிப்பதை ஆதரிப்பாரா? மாறாக அவ்வாறு செய்வது தனது நினைவினதும் தான் ஆதரித்த ஒவ்வொன்றினதுஞ் சிதைப்பெனவுங் காண்பாரா? கறுப்பு அமெரிக்கர்களின் சமூக உரிமைப் போராட்டம் நமது காலத்தின் மிக உன்னதமான அரசியற் போராளிகளையுஞ் சிந்தனையாளர்களையும் மேடைப் பேச்சாளர்களையும் எழுத்தாளர்களையும், நமக்கு அளித்துள்ளது: மார்ட்டின் லூதர் கிங் (Martin Luther King Jr), LDT605tb 6td.6s) (Malcolm X), ..UT6fi sort (35mbLDf (Fannie Lou Hamer), 66loT (8ud55í (Ella Baker), (gub6) ust 6066 (James Baldwin), அத்துடன் உன்னதமான, மாயவித் தைக் கார, 9iL155Tu356T60T (p5LDLDgil 965 (Muhammad Ali). இந்த பாரம்பரியத்தின் அணிகலன்கட்கு உரித்தானவர்கள் uJTir? கோலின் பவல் (Colin Powel)? கொண்டலீசா ரைஸ் (Condoleezza Rice)? 60)LDáfa56ð Lu6).16ð (Michael Powell)? இவர் களெல்லாம் அந்த விக்கிரகங்களதும் முன்மாதிரியானோரதும் எதிர்மறைகள். மேம்போக்காய் நோக்குகையிற் கறுப்பின மக்களின் பொருள்சார்ந்த வெற்றிக்கான கனவின் ஸ்தூலவடிவங்களாக இவர்கள் தோன்றுகின்றனர். ஆனால் உண்மையில் மாபெருந் துரோகத் தை அடையாளப் படுத்துகின்றனர். பத்திரிகையுலகிற்கும், கறுப்பின மக்களின் எழுச்சிக்கும் எதிராக அமெரிக்க ஐக்கிய அரசின் ஒளிரும்
gwelwb. --70
 

ஆடல்மனையின் அலங்கார வாயில்களைக் காத்து நிற்கும் அலங்கரிக்கப்பட்ட காவலாட்கள் இவர்கள். இனவாதப் போர்களிலும், ஆபிரிக்க உல்லாச வேட்டைப் Luuj6007 s5 d66f9)Lö (African Safaris) bsöU6Ooflü புள்ளிகளைத் தேடும் புஷ் நிர்வாகம் இவர்களது பங்கையும் பணியையுஞ் சொல்லி வைக்கும். கறுப்பு அமெரிக்காவின் புதிய குறியீடுகள் இவர்கள் தான் என்றால் பழைய தலைவர்களைத் தூக்கி கிடப்பிற் போட வேண்டும். ஏனென்றால் அவர்களும் இவர்களும் ஒரே அலங்காரப்பிட அடுக்கிற்கு உரியவர்களல்ல. ஏனென்றால் 60LD is LDT if is g6m (Mike Marqusee) g5 601 g) Redemption Song" 66rst 9p35T60T 1555,556) விவரித்தவாறு ஐக்கிய அமெரிக்க அரசில் மட்டுமன்றி g 60Gd5 5.d5)b Egiló Fig5 (Black Power), பாக்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்ட முகம்மது அலி தனது வயதான காலத்தில் ஒய்வூதிய விளம்பரத்திற் காட்சி தந்தது போன்று சுருங்கித்தான் போய் விட்டது.
கறுப்பு அமெரிக்கா தங்களின் உண்மையான நாயகர்களுக்கு, தங்களுடைய தரப்பிற் போராடிய போற்றப்படாத வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமென மனதார நினைத்தால் இந்த உலகம் அவர்களுக்கு மரியாதை செய்ய நினைத்தால் மீண்டும் வாஷிங்டனை நோக்கி ஒரு எழுச்சிப் பேரணி அவசியம். மீண்டும், நம்பிக்கைகள் மாளாமல் இருக்க நம் எல்லோருக்காகவும்,
மொ.பெ. குறிப்பு: இம் மொழிபெயர்ப்பு (எளிய அடித்தட்டு நிலையில் சீவிக்கின்ற) ஒரு கறுப்பு அமெரிக்க நண்பனுடனான உரையாடலின் விளைவானது. மூலக்கட்டுரையும் அதன் ஒலி வடிவமும் அந் நண்பனாலேயே வழங்கப்பட்டது. “ஆசியர்களுக்கு இன்னொரு ஆசியரின் கட்டுரையைப் படிக்கும் போது தொடர்பில்லாதது என்ற எண்ணம் ஏற்படாது. அதிலும் குறிப்பாக இலங்கையர்களுக்கு ஒரு அண்டை நாட்டு எழுத்தாளரை வாசிப்பதில் சிரமங்களேதும் இராது என நம்புகிறேன்” என்ற குறிப்புடன் அனுப்பப்பட்டிருந்தது. அருந்ததி ராயின் உரையுடன் நண்பரது சிறிய பிற்குறிப்பொன்று இணைக்கப் பட்டிருந்து.
பி.கு: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக தெரிவாவதற்காக போட்டியிடும் பராக் g9L//Tuor (Barak Obama) egL/2/735-uy?tof7öâTra இருப்பதால் அமெரிக்காவில் கறுப்பு அமெரிக்கர்களுக்கு சமத்துவம் கிடைத்துவிட்டதாக நினைக்கக் கூடாது ஒபாமா அமெரிக்க அதிகார வர்க்கத்தின் இன்னொரு வாரிசு ஒருவேளை ஒபாமா ஜனாதிபதியாகத் தெரிவானால் அமெரிக்கா வருங்காலத்தில் யுத்தம் எதையும் செய்யாதென்றெல்லாம் கனவுகாண வேண்டாம். எம் போன்ற எளிய கறுப்பு அமெரிக்கர்களுக்கு வாழ்வே கடுமையானதொரு போராட்டம்
ஆறியோதிஸ்மன்.
本影 2word - éirith 2008

Page 37
சிறுகதை
மதமாற்
‘ஐயாவுக்கு ஊரு எங்கிட்டு?” என்று கேட்பவர்கட்குச் சிரித்தபடியே அய்யாத்துரையார் சொல்வது 'ஊர் இல்லை”. அவர் ‘யாதும் ஊரே என்கிற கருத்தில் அதைச் சொல்லவில்லை என்று பலருக்குத் தெரியாது. வழக்கமாகவே வேடிக்கையாகப் பேசுகிற மனிதர் ஏதோ நோக்கம் வைத்துத் தான் சொல்லுகிறார் جلال என்று நினைத்துக் கொள்வார்கள். சிலர் ஊரைக் கேட்பதும் பிறகு வடக்கா மேற்கா N என்றோ இன்னாரைத் தெரியுமோ என்றோ தொடர்வதும் மனிதரைப் பற்றித் தங்களுக்கு முக்கியமான சில தகவல்களைத் திரட்டுவதற்காக என்பதால், இவர் பதிலைத் தவிர்க்கிறார் என்று நினைப்பவர்களும், ஆளைப் பார்த்தால் "பிழையானபகுதி மாதிரித் தெரியவில்லை என்று மேலும் துருவா மற் போயப் விடுவார்கள். அய்யாத்துரையாருக்கு உண்மையாகவே ஊர் இல்லை. ஊருக்குப் பேர் ‘இல்லை’ என்று நினைக்க வேண்டாம். அவருடைய ஊர் இப்போது இல்லாமலே போய்விட்டது. ஐம்பது ஆண்டுகட்கும் மேலாக அவருக்கு இருந்து வந்த ஊரில் முதலில் மனிதர்கள் இல்லாமற் போனார்கள். பிறகு கொஞ்சங் கட்டாக்காலி மாடுகளும் நாய்களும் சேதப்பட்ட வீடுகளும் தெருக்களும் மரங்களும் இருந்தன. பிறகு அவை எல்லாமே இல்லாமலாகி விட்டன. இப்போது ஆள் நடமாட்டம் இல்லை என்று சொல்ல முடியாது. இருக்கிறது. ஆனால் ஒரு ஊருக்குரிய நடமாட்டம் இல்லை. இதற்கும் மேல் நான் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
அய்யாத்துரையாருடைய ஒரு நல்ல குணம், போனதை நினைத்து வருத்தப்படமாட்டார். 'நடந்தது நடந்து விட்டது, அது தலைவிதி' என்கிற கொள்கையாலில்லை. ‘நடந்ததை நினைத்து வீணாக்குகிற நேரத்தில் உருப்படியாக எதையுஞ் செய்யலாமே என்கிறது தான் அவருடைய கொள்கை. நடந்தது ஒரு படிப்பினை என்றால் அந்தப் பாடத்தை மட்டும் மனதிற் பதிய வைத்துக் கொள்வதற்கு மேலாகக் காலத்தின் பிணங்களை அவர் நெஞ்சிற் சுமந்து செல்வதில்லை. இனியுஞ் சுமந்து செல்ல மாட்டார் என்பது நிச்சயம். ஊர் இல்லாமற் போய்க் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள்
 

தி.சி. சிஜகேந்திரண்
இருக்க வேண்டும். இப்போது அவரும் தனது ஊரைப் போல ஆகிவிட்டார்.
இப்போது பிரச்சினை என்னவென்றால் மருத்துவமனையிலிருந்து கொண்டு வரவுள்ள அவருடைய உடலை என்ன செய்வது என்பது தான். அவர் கடைசியாக வாழ்ந்த இடம் நாவலப்பிட்டி. ஊரைவிட்டு வெளியேறிய பிறகு பிள்ளைகள் ஒவ்வொருவருடன் ஒவ்வொரு ஊராக இருந்து பார்த்துக், கடைசியாக அவருடைய பென்சன் காசுடனும் மனைவியினுடைய பென்சன் காசுடனும் மட்டுமட்டாகச் சமாளிக்கலாம் என்ற தைரியத்தில் நாவலப்பிட்டியில் ஒரு வீடெடுத்துக் கடைசி ஐந்து வருடமாக இருவரும் இருந்து வருகிறார்கள் . மகனி அணி புச் செல் வண் குடும்பத்துடன் வவுனியாவில். மூத்த மகள் வள்ளியம் மை கலியாணமாகி இப் போது ஹொங்கொங்கில், இளைய மகள் தேன்மொழி குருநாகலில் தனியார் மருத்துவமனையொன்றில் தாதியாக வேலை. கணவரும் மருத்துவ சேவையில். பிள்ளைகள் இல்லை.
9VoRr Ss Stadh 2008 :

Page 38
சிறுகதை
கனகம்மா என்கிற கனகேசுவரியின் பிரச்சினை என்னவென்றால் கணவரின் விருப்பத்தை எப்படி நிறைவேற்றுவது என்பதுதான் . அய்யாத்துரையார் ஒரு அறிவுறுத்தல் போல அதை எவரிடமும் சொல்லவில்லை. ஆனால் அவருடன் நெருங்கிப் பழகிய எவருக்கும் அவரது விருப்பு வெறுப்புக்கள் பற்றித் தெரியும். கனகம்மாவின் கவலை ஏதென்றால் அவர் உயிரோடு இருந்த போது வந்து போகாத கனகம்மாவின் உறவினர்கள் சிலபேர் வரப்போவதாக அறிவித்திருந்தார்கள். எல்லாரும் வந்து சேர முன்பே சில முடிவுகளை எடுத்தாக வேண்டும். அய்யாத்துரையாருடைய தம்பி ஒருவர் வரக்கூடும். அவர் எதிலுங் குறுக்கிட மாட்டார். தமையனில் நல்ல மரியாதை. வரப் பிந்தும் என்று சொல்லியிருந்தார். ஹொங்கொங்கில் இருந்த மகள் தான் கூடிய விரைவில் வருகிறேன் என்றும் தனக்காக எந்த ஏற்பாட்டையும் மாற்ற வேண்டாம் என்றும் தகவல் அறிந்தவுடனேயே சொல்லி விட்டாள். மகன் செல்வன் வேலை அலுவலாக வடக்கே போய் வரப் பிந்தும் என்று மருமகள் மேனகா தகவல் அனுப்பியிருந்தார். மருமகளுக்குப் பிள்ளைகளுடன் வருவது சிரமம் என்று கனகம்மா மருமகளை மறித்துவிட்டார். செல்வன் தாயின் முடிவை ஏற்கக் கூடியவன். தேன்மொழியை இந்தியாவுக்குப் பயிற்சிக்காக அனுப்பியிருந்தார்கள். அவள் வருவதோ ஐமிச்சம். மருமகன் கூடிய விரைவில் வருவதாகத் தொலைபேசியிற் சொன்னார்.
கனகம்மாவின் உடனடியான கவலை தன்னுடைய தமையன் வந்து சேர முதல் மருமகன் வந்து சேர வேணி டும் என்பதுதானி , அய் யாத் துரையாருடன் முப்பத்தைந்து ஆண்டுகளாக வாழ்ந்த அவருக்குக் கடவுளிடம் கேட்டு எதுவுமே கிடைக்காது என்று நிச்சயமாகத் தெரியும். என்றாலும் ஒரு நப்பாசை. பலபேர் லொத்தர் சீட்டு வாங்குகிறோமே, அந்த மாதிரி ஒரு சின்ன எதிர்பார்ப்பு என்று வைத்துக் கொள்ளுங்கள். எந்தச் சாமியிடம் கேட்பது என்று நிச்சயமில்லை. ஏனென்றால் கடைசியாக எப்போது நேர்த்திக் கடன் வைத்தேன் என்றே அவருக்கு நினைவில்லை. அதைவிட, நல்லதோ கெட்டதோ நடப்பதுதான் நடக்கும் என்கிற விதமாக, விதி பற்றியது போல, ஒரு மனப் பழக்கம். இதுவரை எதையும் சமாளிக்க ஒரு துணை இருந்தது. இப்போது இல்லை. எனவே கடவுளே காப்பாற்று என்று வேண்டிக் கொண்டார்.
米 米 米
கனகம்மா பயந்த விதமாகவே தமையன் பொன்னம்பலம் வேளைக்கே வந்து விட்டார். உண்மையில் அய்யாத்துரையாருக்கும் அவருக்குஞ்
C

சரிவராது. ஆனாலும் பகைமையில்லாமல் நடந்து கொள்வார்கள். அய்யாத்துரையார் இரண்டு விஷயங்களில் மிகுந்த கண்டிப்பாயிருந்தார். ஒன்று நேர்மையினம். மற்றது சமூகக் கேடான சடங்கு சம்பிரதாயங்கள். பொன்னர் அய்யாத்துரையாருக்கு எதிர்மாறு. எனவே இருவரும் தங்களது பாதைகள் வேறு என்று ஒருவர் வழியில் மற்றவர் குறுக்கிடாமற் சமாளித்து வந்தனர். அய்யாத்துரையார் இருந்த போது அவரையும் கனகம்மாவையும் தன் வழிக்குக் கொண்டு வர இயலாத பொன்னர், அவர் போனபிறகு தனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறமாட்டார் என்பது கனகம்மாவின் மதிப்பீடு. அது பிழையாகவில்லை.
- ‘சரி, கனகம். இனி அய்யாத்துரையை என்ன செய்யப் போறாய்?’ என்ற பீடிகையுடன் தொடங்கிய பொன்னர் கனகம்மா அய்யாத் துரையாருடைய விருப்பங்களைப் பற்றி விளக்கிச் சொல்ல வாய்ப்பளிக்கவில்லை எனலாம். மிகுந்த சிரமத்தின் நடுவே கனகம்மாவாற் சொல்ல முடிந்ததெல்லாம், அய்யாத்துரையார் இருபத்து நான்கு மணிநேரத்திற்குள் தன்னை எரித்தாலுஞ் சரி புதைத்தாலுஞ் சரி ஒன்றுதான் எனவும் ஒருவிதமான கிரியைகளையும் தான் இறந்த பிறகு எக்காலத்திலுஞ் செய்வதை விரும்பவில்லை எனவும் தனக்குத் தெரியும் என்பது தான். “இருபத்திநாலு மணித்தியாலத்திலை புதைக்க அய்யாத்துரை என்ன சோனகனே? இப்பிடிச் செய்யெண்டு அய்யாத்துரை எங்கேன் எழுதி வைச்சானே?’ என்ற அஸ்திரத்துடன் அந்த வாதங்களை முறியடித்ததாக நினைத்த பொன் னருக்குக் கனகம் மா மறுமொழி சொல்லவில்லை. மெளனம் என்றால் சம்மதம் என்று மட்டுமில்லை, சம்மதமின்மை என்றும் பொருள் கொள்ளலாம் என்று கனகம்மாவின் முகங் காட்டியது.
* சிலவைப் பற்றி யோசிக் கிறியோ? சகோதரஞ் சொந்தக்காரரெண்டு நாங்கள் ஏன் இருக்கிறம்? யோசியாதை.” என்று இன்னொரு கோணத்திலிருந்து பொன்னம்மாவின் மனஉறுதி என்ற கோட்டையைத் தாக்கினார். “உம்மட்டைக் கேட்டனானே' என்று சொல்லப் பொன்னம்மாவின் நாக்குத் துடித்தது. வாக்குவாதத்தை வளர்த்து அய்யாத் துரையாரின் இறுதி நிகழ் வைக் கேவலைப்படுத்த அவர் விரும்பவில்லை.
பொன்னர் பலவிதமான உபாயங்களைப் பாவித்தாலும் கனகம் மா அசைகிறதாகத் தெரியவில்லை. கனகம்மாவுடன் கோபித்தால் அது எதிர்மாறான விளைவுகளையே தரும் என்று நினைத்து அடுத்த தந்திரோபாயத்தைத் திட்டமிடத் தொடங்கினார். மருமகன் தேவநேசன் வர முன்னம் வீட்டுக்கு வரக்கூடிய உறவினர்களது ஆதரவைத் திரட்டிக் கனகம்மாவைத் தன் பக்கம் திருப்பலாம்
36

Page 39
சிறுகதை
என்று எண்ணம் ஓடியது. தேவநேசன் வர முன்னம் ஒரு நெருக்குவாரத்தை உண்டாக்கி விட்டால், தேவநேசனைச் சமாளிப்பது எளிது என்று அவரது சிந்தனை ஓடியது. ஏனென்றால், தேவநேசன் மருமகன். இரத்த உறவுமல்ல. அதைவிட, அவன் கிறிஸ்துவ சமயத்தவன். "சரி கனகம், நான் சொல்லிறதைச் சொல்லி விட்டன். யோசிச்சுப் பார். இருவத்திநாலு மணித்தியாலம் எண் டாலும் எங்களின் டை சமயச் சடங்குகளை எல்லாஞ் செய்யேலுந்தானே. முந்தி இந்த எம்பாமிங் அது இதெல்லாம் வர முன்னம் நாங்களும் பொழுதுபட முதலே சவமெடுத்தனாங்கள் தானே!" என்று ஒரு சமரசக் கருத்தைச் சொல்லியபடி எழுந்து போய் முன் விறாந்தையில் இருந்தவர்களிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினார்.
率 寧 夔
எடுத்த எடுப்பிலேயே சாவீட்டுப் பிரச்சினையைத் துக்கிக் கனகம் மாவுடனான முரண்பாட்டை வெளிப்படுத்தப் பொன்னர் என்ன மடையரா? அதைவிடவம் உறவினர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் இன்னும் வரவில்லை. வந்திருந்தால் அவர்களுடன் தனியே பேசித் தன் கட்சிக்கு ஆதரவு திரட்டியிருக்கலாம். வந்தவர் களிற் பலர் மலையகத்தவர்கள். சிங்களவர்களும் முஸ்லிம்களும் ஓரிருவர் இருந்தனர். யாழ்ப்பாணத்தவர்கள் ஒருவேனை இருந்தாலும் பொனி ருைக்குத் தெரிந்தவர்கள் இஸ் லை. எனவே பொதுப்படையாகவே சமயச் சடங்குகள் பற்றிப் பேசத் தொடங்கினார்.
சிலர் தங்களுடைய சடங்கு முறைகள் பற்றிக் கொஞ்சஞ் சொன்னார்கள். பொன்னருக்கு அதிற் பெரும்பகுதி புதினமாகவே இருந்தது. மலையகத் தமிழரிடையிலும் பலவேறுபட்ட நடைமுறைகள் இருப்பது பற்றித் தெரியப் பொன்னருக்கு அதிசயமாக இருந்தது. அவருக்குத் தெரிந்த இந்து சமயம் சைவச் சாதிமான்களுடையது மட்டுந்தான். வடக்கில் மற்றவர்களுடையது பற்றித் தெரியும் என் றாலும் அவை எளிய சனங்களுடையது' என்பதால் அவை பற்றி அவர் அக்கறைப் பட்டதில்லை.
கதை திசைமாறிக் கிறிஸ்துவ மதமாற்றப் பிரசாரகாரர் பற்றித் திரும்பியது. சனங்களுடைய அறியாமையைப் பயன்படுத்தி அவர்கள் மதம் மாற் றுவதாக வம் கவர் டப் படுகிறவர் களி இயலாமையால் மதம் மாறுகிறதாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. தமிழ் கொஞ்சந் தெரிந்த சிங்களவரான ஹேவாகம "சமயங் மாறுவாங் சுட்டி நாங் விரோதங் இல்லா. அந்த கொளு மனிசங் கண் சரி பண்ணறாங், காது சரி பண்ணறாங் சொல்லி கிறிஸ்தியானு ஆகமங்காரங் பொய் வேல
 

பகிர்வு (கவிதைகள்) நூலாசிரியர் : ஜெ.சுபாஷினி பதிப்பு முதற்பதிப்பு ஆண்டு : 2006ஆம் ஆண்டு பெப்ரவரி
விலை : LITT 175.00
கிடைக்குமிடம் : வசந்தம் புத்தகசாலை
கொழும்பு-11
தோபே : 2335844, 238 1603
நிச்சயத்துடன்
எல்லாவற்றையும் இடித்துத் தள்ளும் ஒரு
இடைவிடாத இரைச்சல் LIT
ஒரு சனத்தின் விதி அவர்களது
நடத்துகிறது.

Page 40
சிறுகதை
பண்ணறாங். அதி தாங் நமக்கி கேன்தி!” என்றார். “உங்களைப் போல தான் எனக்கும் இந்த வேதக்காரர் எண்டாக் கண்ணில காட்டேலாது. எங்கடை சமயகாரரை எல்லாங் காசையும் படிப்பையுங் காட்டிப் பாழாகிப் போட்டாங்கள்’ என்று பொன்னர் அதைத் தொடர்ந்தார். “கிறிஸ்து ஆகம சுட்டி நாங் விரோதங் இல்லா. பொய் வேல சுட்டித் தாங் கேன்தி வராங்’ என்று திருத்தினார் ஹேவாகம. “ஓம், ஓம். நாங்களும் அப்பிடித்தான்” என்று சொல்லிவிட்டுத் தனக்கு அருகில் இருந்த நாற்பது வயது மதிக்கத்தக்கவரைப் பார்த்து “என்ன சொல்லிறீர்?’ என்று கேட்டார். அதுவரை வாயே திறக் கா திருந்த அந்த மனிதர் ‘நமக்கென்னாத் தெரியுமுங்க. அவுங்கவுங்க பிரச்சென அவுங்க அவுங்களேடெ. . ஆளுங்களெ அவுங் க பாட்டு லெ விட்டுப் புட் டாத் தொந்தரவில்லே. இவங்க யாரோட பணத்தெ எடுத் தி யாருக்குக் குடுக்கிறாங்க ஏங் குடுக்கிறாங்கண்ணு புரியல்லே. என்னம்மோ நம்ம அய்யத் தொரே ஜயா மாதிரி நாமல் லாம் மத் தவங்களுக்கு நல் லதெ மாத்திரம் நெனைக்கலாம் னா. சாமி கும் புடக் கூடத் தேவல் லிங்க, சாமியே தேடிவந்து நம் ம ஏத்துக்கும்.” ராமர் என்கிற ராமுப்பிள்ளை பேசுகிற போதே அவரது நாத் தழதழத்தது.
‘' ஆரென்ன சொன்னாலும், நான் சொல்லிறன். . இந்த மதம் மாத்திற வேலைக்கு ஒரு முடிவு கட்ட வேணும். நாங்கள் ஒத்துமையா நிண்டா, இந்த வேதக் காறரை ஓட ஓடத் துரத்தேலும்” என்று சொல்லியபடி சுற்றும் முற்றும் நோட்டம் விட்டார். வாசலடியில் உறவினர்கள் இரண்டு மூன்றுபேர் தெரிந்தனர். மற்றவர்களிடம் “எக்ஸ்கியூஸ்” என்று சொல்லிவிட்டு அவர்களை உள்ளே போக விடாமல் அவர்களோடு போய் அமர்ந்து பேசத் தொடங்கினார். பொன்னருடைய கட்சி கொஞ்சம் பலப்பட்டிருக்க வேண்டும். மிகவும் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
米 米 米
வாசலில் ஒரு மோட்டர் சைக்கிள் வந்து நின்றது. அதிலிருந்து இளம் வயதினனான ஒல்லியான உயரமான ஒருவன் இறங்கி வந்தான். அவனைக் கண்டதும் சிறிது முன்பு பொன்னருடன் பேசிக் கொண்டிருந்த ராமர் ஓடிச் சென்று ‘' வந்தட்டீங்களா தம்பி! அம்மா நீங்க வரணும்னுதான் உள்ளார பாத்துக்கிட்டிருக்காங்க. வாங்க, வாங்க..". என்று தேவநேசனின் கையைப் பற்றித் தோளில் அணைத்தபடி வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.
அவர்கள் உள்ளே போனதும் தான் பொன்னருக்கு வந்தவன் மருமகன் தேவநேசன்
 

என்றும் தன்னோடு கதைத்துக் கொண்டிருந்தவர் சகோதரிக்கும் மைத்துனருக்கும் நெருக்கமான நண்பர் என்றும் விளங்கியது. தலைக்கு மேலே வெள்ளம் போகு முன்பு தடுக்கிற வேகத்துடன், உள்ளே பாயம் நீ து சென்றபடி, மற்ற உறவினர்களையும் துணைக்கழைத்தார். அவர்களும் தயங்கித் தயங்கிப் பின் தொடர்ந்தனர். ‘வடக்கத்தியானும் வேதக்காறனும் சேர்ந்து காரியத்தைக் குழப்பிப் போடப் போறாங்கள்” என்று புறுபுறுத்தபடி நுழைந்தவர், 'தம்பி. தேவநேசன் எண்டு நினைக்கிறேன்.” என்றார். தேவநேசன் நீங்கள் யார் என்று கேட்க முன்னமே “நான் பொன்னம்பலம், ஐயாத்துரையின்டை மச்சான், கனகத்தின் டை அண்ணன். செத்த வீட்டுச் சடங்குகளை எல்லாம் எப்பிடிச் செய்யிறது எண்டு கொஞ்சம் முந்திக் கனகத்தோடை கதைச்சு இப்ப நாங்கள் முடிவெடுத்திட்டம். நீரும் நேரத்துக்கு வந்தட்டீர். இனிச் சட்டுப் புட்டெண்டு வேலையைத் துவங்கினாத் தான் நாளைக்குக் காலமை மச்சான் விரும் பின ιD Π 5 ή இருவத்திநாலு மணித்தியாலத்திலை எல்லாத்தையும் முடிக்கேலும்” என்று ஒரே மூச்சிற் சொல்லி முடித்தார்.
‘அங்கிள், மாமி என்ன சொல்லிறா?” என்று தேவநேசன் கேட்கப், பொன்னர் ‘தம்பி, நீர் பிறத்தி ஆள். அதோடை வேதக்காறனும், உமக்கு எங்கட சைவப் பழக்க வழக்கங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் விளங்காது. இந்த மாதிரி நேரங்களிலை சொந்தக்காறர், வயசிலை மூத்தவை, ஆம்பிளையள் தான் முன்னுக்கு நிண்டு நடத்திறது எங்கடை வழக்கம். மருமேன் எண்ட மரியாதைக்காக நீர் வருமட்டும் பாத்துக் கொண்டிருந்தம். மாமியிட் டை நான் எல்லாம் கதைச் சுக் கொள்ளுறன்” என்றார். தேவநேசன் வாயடைத்துப் போனான். தேன்மொழி அல்லது செல்வன் வந்திருந்தாற் கதை வேறு. சமயத்தைச் சொல்லித் தேவநேசனைக் கட்டிப் போட்டாயிற் று. கனகம்மாவின் பக்கமாகப் பரிதாபமாகத் திரும்பிப் பார்த்தான்.
கனகம்மா நிதானமாகத் தமையனைப் பார்த்து ‘இருக்கும் வரையும் அவருடைய மனமறிஞ்சு அவருடைய விருப்பப்படியே ஆறுதலாக அவரைச் சீவிக்க விட்டனான். அவரும் என்னுடைய நம்பிக்கையளிலை குறுக்கிட்டுக் கோயிலுக்குப் போகாதை, திருவிழாவுக்குப் போகாதை, சாமி கும்பிடாதை, திருநீறு பூசாதை எண்டு ஒரு நாள் தன்னும் மறிச்சதுமில்லைத் துணைக்கு வரச் சொல்லிக் கேட்டாக் கோயிலுக்குக் கூட்டிக் கொண்டு போகமாட்டன் எண்டதுமில்லை. அவர் என்டை உணர்வுகளை மதிச்சு நடந்த மாதிரி நானும் அவரின்டை உணர்வுகளை மதிக்காட்டி நானென்ன தரவழி.”. என்று முடிக்க முன்னே,

Page 41
சிறுகதை
பொன்னர் "ஓம் கனகம், நீ சொல்லிறதெண்டா முற்று முழுதாச் சரி. நான் இல்லையெண்டா சொன்னன். அய்யாத்துரை இருந்த மட்டுக்கும் அவன் டை மனங் கோணாமல் நடந் தனி, அப்பிடித்தான் தமிழ்ப் பெம்பிளையஸ் இருக்க வேணும் . நான உன் னை ப் பெற் றரிப் பெருமைப்படுறன். . இனி ஆள் இல்லை. என்ன செய்தாலும் மனம் கோண இடமில்லைக் கண்டியே. அப்ப, இனஞ் சனத்தின்டை மனங் கோனாமைச் செய்யிறது தான் சரி. என்ன சொல்லிறாய்?" என்று இன்னொரு திசையில் காய் நகர்த்தினார்.
கனகம்மாவுக்கு இந்த விவாதத்தைத் தொடரவும் விருப்பமில்லை. ஆனாலும் திரும்பத் திரும்ப 'அவரின் டை விருப்பத்துக்கு மாறா என்னாலை ஏலாது." என்பதற்கு மேலாக அவரால் எதையுஞ் சொல்லவும் இயலவில்லை. பேச வந்தவர்களுக்கு அய்யாத்துரையார் மீது இவ்வளவு காலமும் என்ன அக்கறை இருந்தது என்று கேட்டு அவர் களது மனதைப் புண் படுத் தவம் மனம்வரவில்லை.
பொன்னர் தனது கட்சியின் வெற்றியை உறுதி செய்து விட்ட இறுமாப்புடன், "பார் கனகம், நாங்கள் உன்டை மனிசனைக் கனம் பண்ணத்தான் இதையெல்லாஞ் செய்யப் பாக்கிறம், யோசியாதை, அவன் எங்களிலை ஒருத்தன். அனாதை மாதிரிப் போக விடேலுமா? அவன்ட சாதி என்ன பரம்பரை என்ன! எல்லாம் பாத்துத் தானே அவனை உனக்குச் செய்து வைச்சம் ஏதோ கெட்ட காலம் அய்யாத்துரைக்கு இந்தக் கொம் யூனிஎம்ட் கொள்கையளிலை புத்தி பிழைச்சுப் போச்சுது. நாங்கள் அவனை மீட்டெடுத்திடுவம். . சும்மா யோசியாதை. ஆரந்தக் கொம்யூனிஸ்ற் கட்சி வாத்தி? அவன்டை ஊரில் ஆக்கள் அவன்ட செத்த வீட்டிலை போய்ப் பார்த்தவை சொல்லிச்சினம். சொந்தக் கார ரெஸ் லாஞ் சேர்ந்து ஆளுக்கு நெத்தியிலை நெஞ்சிலை தோளிலை கையிலை எல்லாந் திருநீறு பூசிச் சந்தனப் போட்டும் வைச்சு மனிசியின் டை தாலியும் அறுத்து ஒழுங்கு மரியாதையாப் பூசாரி பரியாரி பறைமேளம் எல்லாம் வரவழைச்சு ஆளைச் சுடலைக்கு அனுப்பினவையாம். அது தான் எங்களின்டை மரபு. லண்டன் போனாலென்ன கனடா போனாலென்ன போனவையின்டை கொள்கையளைக் கேட்டுக் கொண்டு இருக்கேலுமோ? இனஞ் சனம் சொன்னது தான் சட்டம், மரியாதை"என்று அருகாக நின்ற உறவினர்களைப் பார்த்தார். எல்லாரும் ஆமோதிப்பது போல நின்றனர். கனகம் வேதனையில் அழுதபடி தலை குனிந்து நின்றார். தேவநேசனால் ஒன்றுமே பேச முடியவில்லை.
ராமர் அவர் பேசி ஓய்ந்து ஒரு நிமிடம் விட்டு "ஐயா, கொஞ்சம் மின்னாடி நீங்கதானே
39
 

சொல்லிக்கிட்டிருந்தீங்க யாரையும் ஏமாத்தி மதம் மாத்தறது தப்புன்னு. இப்போ மோசம் போனவங்க பேச்சு மூச்சில்லாமக் கெடக்கறப்ப அவுங்களை ஓங்க மதத்துக்கு மாத்தப் பாக்கிறீங்களே, இது என்னாங்கையா நாயம்? அய்யாத்தொரெ ஐயா கடவுளெ நம்பல்லே, மனுசனை நம்பினாரு பணத்தெ மதிக்கல்லே, மனுசனோட கொணத்தே மதிச்சாரு. அது அவரோட மதம்னு வெச்சுருக்குங்க. அதெப்போய் நாம்ப மாத்தணும்னா, அது உசுரோட இருக் கெறவனை ஏமாதி தறதெ வெட மோசமில்லிங்களா?”
பொன்னருக்கு ராமரை அறைய வேண்டும் போலத் தோன்றியது. அவர் வாய் திறக்கு முன்னமே கனகம்மா அவரைப் பார்த்த பார்வையில் இருந்த தெளிவுந் தீர்மானமும் எல்லோரதும் வாய்களைக் கட்டிப் போட்டு விட்டன.
GELledr, பேசு, இது உன் நாக்குத் தான் பேசு, இது உன் உடல் தான் 萎 பேசு உன் வாழ்வு இன்னும் உனது
ETT.
διαπεύουα உலையில் எவ்வாறு சுவாலைகள் முர்க்கமாய் எரிவன எனவும்
இரும்பு சிவப்பாய் ஒளிர்கிறது எனவும
பூட்டுக்கள் தம் தாடைகளைத்
திறக்கின்றன எனவும்:
ஒவ்வொரு சங்கிலியும் உடைகிறது"
பேசு உடலினதும் சாவுக்கு
Up6óirgil குறுகிய இம் மணிநேரத்தின் நீளம்:
போதுமானது பேசு, ஏனெனில் உண்மை இன்னுஞ்
GLI3r, JÉ Gló56ulón ಡಿಕ್
வேண்டுமோ அதையெல்லாம் பேசு

Page 42
பின்வரலாந்நியல் தொடர்கதை
ತಿನ್ಶಿàà(ಜೀಖ! 7. நீராடற் UL
5ணிணன் பேராசிரியர் பெருமுடிக் கோவின் ஆலோசனைக்கு உட்பட்டிருப்பான் என்பதை நீங்கள் ஏற்கனவே ஊகித்திருப்பீர்கள். அவன் திரும்பிச் சென்று இங்கிலாந்திற் கூடிய காலம் தங்கியிருந்து படிப்பைத் தொடருவது அவனது தாய்க்கு விருப்பமானதாயிருக்கும் என்பதில் அவனுக்கு ஐயமில்லை. தகப்பனை எப்படி வளைத்துப் போடுவது என்பதில் மட்டும் கொஞ்சம் பிரச்சினை இருந்தது. அம்பை ஆச்சி முலமே அது இயலும் என்று யோசித்தான்.
தமிழர் தகவல் தொழில்நுட்பத்தை மிகவும் மேம்படுத்தியிருந்தாலும் மலிவான முறையில் தகவல் பரிமாறுவதற்கு இயலாதபடி பல சிக்கல்களை உருவாக்கி விட்டனர். தனது கைத் தொலைபேசி முலம் தொடர் பு கொள்வதாயின் தனது மாதாந்த வாழ்க்கைச் செல் புெத் தொகையிற் கணிசமான பகுதி போய்விடும். அதைவிட அம்பை ஆச்சியுடன் பேசுவதற்கு அவர்கள் வீட்டில் தொலைத்தொடர்பு வசதிகள் இல்லை. ஊரில் உள்ள தமிழுலகச் சமூக நலத் தொலைத்தொடர்பாடல் மையம் ஒன்றுக்குப் போக வேண்டும். ஆகவே விட்டிற்குக் கடிதம் எழுதிப் போடலாம் என்றும் தாயார் மூலம் ஆச்சியைக் கொண் டு தகப் பனாரை ச் சமாளிக்கலாம் என்றுந் திட்டமிட்டபடியே கண்ணயர்ந்து போனான்.
ஆனாலுங் கணினனுக்குச் சிரமம் வைக் காமலே பேராசிரியர் பெருமுடிக்கோ கண்ணனுடைய தந்தை சிவாவுக்குத் தன்னுடைய ஆலோசனையை விளக்கி ஆங்கில அறிவியல் ஆய்வில் கண்ணனுக்குப் பிரகாசமான ஒரு எதிர் காலம் உண்டு என்று வற்புறுத்துகிற விதமான கடிதமொன்றை ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார். அது பற்றிக் கண்ணன் மறுநாட் பகலிலேயே அறியப் பெற்றான். எனவே வீட்டாருக்கு விளக்கி எழுத வேண்டிய தேவை தவிர்க்கப்பட்டது.
கண்ணனைக் காலை விரிவுரைகள் முடிவிற் சந்தித்த ஒ சி மின் அவனுடைய முடிவு அவனுக்கு மகிழ்ச்சியளிக்க அவனை வாழ்த்தி விட்டுக் கண்ணன் இங்கிலாந்துக்குப் போனால்
 

பனின் பரிசு 6ούό
சிஜகதசி பிரதாபனர்
முன் வரலாற்றுச் சுருக்கம்"
தமிழர்கள் உலகை ஆளுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும் கண்ணன் என்ற ஆங்கில இளைஞன் ஈழ மாநிலத்தின் வன்னி மண்டலத்திலுள்ள எருதுக்கடவைப் பல்கலைக் கழகத்திற் பொறியியல் படிக்க வந்து பிற நாட்டு மாணவர்களுடன் பலவாறான அனுபவங்களைப் பெற்றிருப்பதும் உங்களுக்குத் தெரியும் விதி அவனுடைய படிப்பில் அவனது மதியுரையாளர் பேராசிரியர் பெருமுடிக்கோவின் வடிவிற் குறுக்கிடுகிறது பேராசிரியர் பெருமுடிக்கோ முதலில் அவன் தனது ஆங்கில ஆய்வு முயற்சிகட்கு உதவினாற் பண உதவி கிடைக்கும் என்கிறார் கண்ணனின் ஆங்கிலப் பற்றுக் காரணமாக அதற்கு உடன்படுகிறான். ஆனால் அந்தத்திட்டத்தை மாற்றிக் கண்ணன் இங்கிலாந்து மீண்டு அங்கிருந்து ஆங்கிலமும் அறிவியல் பற்றிய ஆய்வுகட்கும் பங்களிப்பதுடன் இடையிடையே வன்னிக்கு வந்து போகும் விதமாகவும் ஆலோசனை முன்வைக்கப்படுகிறது. கன்னனுக்கு மனக் குழப்பமாக இருக்கிற போது வியந்நாமிய நண்பன் ஒசிமின் அவனுடன் உரையாடுகிறான், கண்ணன் தான் எடுக்கவுள்ள முடிவைத் தடுமாற்றமின்றி மேற்கொள்ள, வீட்டரின் சம்மதத்தைப் பெற வேண்டும் என்பதை உணருகிறான். அவன் மீண்டும் இங்கிலாந்து போவதை அவனது தந்தையார் ஏற்பாரா என்பதையும் கண்ணன் இங்கிலாந்துக்குப் போவதற்கு வேறுந் தடைகள் ஏற்படுமா என்று அறிய மேற்கொண்டு வாசியுங்கள்."
மறுபடியுங் காண வாய்ப்பு இராது என்பது பற்றித் தனது மனவருத்தத்தையுங் கூறினான். அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் அவர்களை நெருங்கி வந்த நாராயணன் ' என்ன இன்றைக்கு நமது ஆங்கிலப் பிள்ளை மிகவும் உற்சாகமாக இருக்கிறார்" என்று சொல்லியபடி அவர்களது உரையாடலிற் குறுக்கிட்டான். கண்ணன் என்ன சொல்லுவதென்று முடிவு செய்வதற்கு முன்னமே ஒ சி மின் "திருவாளர் கண்ணன் ஊருக்குப்

Page 43
விண்வரலாந்நியல் சிதாடர்கதை
போக முடிவு செய்து விட்டார்” எனிறு நாராயணனிடம் சொன்னான். பாடங்களுடன் திண்டாடுகிற தானே ஊருக்குத் திரும்பிப் போக நினைக் காத போது திறமைசாலியான கண்ணன் திரும்பிப் போக நினைக்கிறான் என்பதை நாராயணனால் நம்ப இயலவில்லை. ‘ஏய், கண்ணா? என்ன சிக்கல்? பணந் தான் சிக் கல என றாலி நான் என்னாலானதைத் தருகிறேன். நீ படிக்கக் கூடியவன். படிப்பைக் குழப்பாதே’, என்று நீட்டிக் கொண்டு போகக் கண்ணனாற் சிரிப்பை அடக்க முடியவில்லை. என்றாலும் இந்தப் பொறுப்பு உணர் வில் லாத முட்டாள் கனடாக்காரனுக்குள் ஒரு இரக்க சுபாவமுள்ள மனிதன் மறைந்து இருப்பதை நினைக்கக் கண்ணனுக்கு மனம் நெகிழ்ந்தது. அழவேண்டும் போலத் தோன்றியது. கண்ணன் வாய் திறக்க முன் னமே ஒ சி மினி நாராயணனிடம் அவன் கவலைப்படுகிற விதமாகக் கண்ணனுக்கு ஒன்றும் பிழையாகப் போகவில்லை என்று விளக்கினான். வழக்கம் போல அவசரப்பட்டு வாயைத் திறந்த நாராயணன், வழக்கம் போலவே கதையை மாற்றி, ‘கண்ணா நீ போகிறதில் எங்களுக்கு விருப்பமிலி லை என்றாலும் நீ போகத்தான் போகிறாய் என்றால் உனக்கு நாங்கள் ஒரு பிரியாவிடைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று கண்ணனிடஞ் சொல்லிவிட்டு, ‘என்ன சொல்கிறாய் ஒ?” என்று ஒ சி மின்னிடம் திரும்பினான். ஒ சி மின் தனது நிதானமான பேச்சு வழக்கிற்கமைய “அது ஒரு சுவாரசியமான ஆலோசனை’ என்றான். சில கிழக்கு ஆசியப் பண்பாடுகளில் எடுத்த எடுப்பில் ஓம், இல்லை என்று சொல்வதைத் தவிர்க்கப் பயன்படுகிற ஒரு சொல் ‘சுவாரசியமான’ என்று நாராயணனுக்கு விளங்கவில்லை. பொதுவாக அவனுக்கு ஒன்றுமே இலேசில் விளங்காது என்று உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். எனவே, ‘' சரி. அடுத்த வெளி ளரி எலி லாருமி எருதனாற்றுக்குப் போகிறோம். ஏற்பாடுகளை நான் கவனித்துக் கொள்கிறேன்’ என்று சொல்லியபடியே உணவகத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
smweve -70
 
 
 

எருதனாறு என்கிற செயற்கை ஆறு பற்றி முதலாவது படலத்திலேயே சொனி னது நினைவில்லாதவர்கள் தங்களது நினைவாற்றலை மீட்டெடுக்க ஒரு மருத்துவரைக் கலந்து ஆலோசிப்பது நல்லது. என்றாலும் எருதனாறு பற்றி மேலுஞ் சில விடயங்களை இங்கு சொல்வது அடுத்து நிகழவுள்ள பிரியாவிடையின் போது நடக்கிறவற்றை விளங்கிக் கொள்ள உதவும். இந்த மாதிரி விளக்கங்களை வாசிக்கப் பொறுமை இல்லாதவர்கள் இந்தப் படலத்தின் நடுப் பகுதிக்கு நேரடியாகப் போகலாம். ஆனாற் கணிணனுடைய பிரியா விடை நிகழ் வினி முக்கியமான சில பகுதிகளைத் தவறவிட்டால் அதற்கு நான் பொறுப்பில்லை.
எருதனாறு ஈழ மாநிலத்தின் வன்னி மண்டலத்தின் வவுனியா மாநகருக்குப் புறம்பாக அமைந்துள்ள ஒரு சுற்றுலாத் தலமான பண்டாரவன்னியத்தில் அமைக்கப்பட்ட ஐம்பது கூப்பிடு தொலைவு (அதாவது 17 கிலோமீற்றர் நீளமான செயற்கையான ஆறு). அதில் ஒரு பகுதி குளிப்பதற்கும் நீச்சல் பழகுவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கான இன்னொரு பகுதி பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகட்கானது. பல்கலைக்கழகத்திற்கு அண்மியதாக நீச்சல் பழகும் பகுதிக்குத் தெற்காக உள்ள பகுதி பொழுது போக்காகத் தெப்பம் விடுவதற்கானது. இப் பகுதியில் நீரின் ஆழங் குறைவானது. ஆகக்கூடிய ஆழம் நாலரை முழம் (2.05 மீற்றர்). சில இடங்களில் இரண்டு முழ ஆழமும் உண்டு. எனினும் அந்த இடங்களில் நீரின் வேகஞ் சற்று
D 9VOÑ ěah 2008

Page 44
பின்வரலாந்நியல் சிதாடர்கதை
அதிகம் என்பதால் அப்பகுதியிற் தெப்பம் விட வேண்டாம் என்ற எச்சரிக்கை திரவப் பளிங்குத் திரைகளில் தமிழிலும் இடையிடை கிரேக்க, அரபு, இன் கா, கிக் குயு போன்ற அயல் மொழிகளில் சுற்றுலாப் பயணிகளின் இன அடையாளங்கள் பற்றிய தகவல்கட்கமைய வந்து வந்து போகும்.
அவ்வாறான எச்சரிக்கையை மீறித் தெப் பத் திலிருந்து நீரிலி விழுந து காணப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களிற் பெரும்பாலானோர் ஐரோப்பியர். அதற்குக் காரணம் அவர்கட்கு எழுத்தறிவு போதாமை என்ற கருத்து நிலவினாலும், உண்மையான காரணம் அவர்கள் எதையும் ஒழுங்கு முறையாகச் செய்கிற பழக்கம் அற்றவர்கள் என்பது தான். வீதிகளைக் கூடக் கடக்க வேண்டிய இடங்களிற் கடக்காமல் வாகனங்களில் மோதிக் காயப்பட்டும் திரும்பத் திரும்ப அதே பிழையை விடுகிறவர்கள் என்பது தமிழரிடையே ஐரோப்பியர் பற்றி பொதுவான மதிப்பீடு. செருமானியரும் (முன்பு ஜேர்மன்காரர்) ஆங்கிலேயரும் பிற எல்லாரிலும் மோசம் என்றுஞ் சொல்லப்படுகிறது.
கண்ணனுக்கு இது பற்றித் தெரியும். தமிழர் ஆங்கிலேயரைத் தாழ்வாகக் கருதுவது பற்றி அவ்வைப் பாட்டி அவனிடம் நிறையச் சொல் லியிருக்கிறார் . எனினும் தமிழர் ஆங்கிலேயரைத் தாழ்வாகக் கருதுவதை நியாயப்படுத்துகிற விதமாகச் சில விடயங்களில் ஆங்கிலச் சமூகம் நடந்து கொள்வதையிட்டும் அவ்வைப் பாட்டி மனம் வருந்தியிருக்கிறார். காணித் தகராறுகள் முதலாக அறி ப விடயங்கட் கெல்லாம் தமிழ்ப் பேரரசின் ஆளுனர்கட்கு முறைப்பாட்டு மடல் (பெட்டிசம் என்றால் தான் இப்போதுள்ளவர்கட்கு விளங்கும்) அனுப்புவது போல வேலைகள் ஆங்கிலேயரின் மரியாதையைக் குறைக்கிற காரியங்கள் என்பது அவ்வைப் பாட்டியின் கருத்து.
இவற்றையெல்லாங் கருத்திற் கொண்டு தான் கண்ணன் ஆங்கிலேயரின் பெருமைக்கு இழுக்கு ஏற்படாத விதமாகத் தனது நடத்தையில் மிகவுங் கவனமாக இருந்தான். எனவே அவன் இதுவரை ஒரு நாளுமே தெப்பம் விடப் போனதில்லை என்று நான் சொல்லாமலே உங்களுக்கு விளங்கும். எனவே எருதனாற்றின் குளிப்புக்கான பகுதியில் ஆனந்தமாக முழுகி எழுவதுதான் அவனது விருப்பிற்குரிய செயலாக இருந்தது. பெரும்பாலும் தனியாகவே அவன் எருதனாற்றுக்கு வந்து போவதால் அவனுடைய வகுப்பு மாணவர்கள் யாரும் அவனை வேறு
 

நீர் விளையாட்டுக்களுக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு இருந்ததில்லை. ஆனாலும் வள்ளுவர் ஊழ் முந்துறும்’ என்று சொன்னதற்கமைய, நாராயணனின் பிரியாவிடை நிகழ்ச்சி நிரலின் வடிவில் கணிணனுடன் விதி கொஞ சம் விளையாடியது.
புதனன்று மாலை கண்ணனின் அறைக்கு நாராயணன் தனது நிகழ்ச்சி நிரலுடன் வந்தான். காலை பத்து நாழிகைக்கு எருதுக் கடவையில் ஒன்று கூடல். பதினொரு நாழிகை வரை இளநீர் விருந்து. பதினொரு நாழிகை பதினைந்து நாடிகள் முதல் பதினைந்து நாழிகை வரை நீர் விளையாடல். பதினாறு நாழிகைக்குப் பகல் உணவு. பதினேழு. மன்னிக்க வேண்டும். உங்களில் பலருக்குத் தமிழரின் நாழிகைக் கணக்குத் தெரியாது. தமிழ் நாள், இப்போது காலை ஆறு மணி என்று சொல்லப்படுகிறதே அப்போது தான் தொடங்குகிறது. நாளுக்கு அறுபது நாழிகை. ஏழரை நாழிகை ஒரு சாமம் என்று இரவுக்கும் பகலுக்கும் நாலு நாலாக எட்டுப் பகுதிகளாக நாள் பிரிக்கப்படும். நாழிகைக்கு அறுபது நாடி. நாடிக்கு அறுபது வினாடி. இந்தக் கணக்குத் தெரியாதவர்கட்காக முதலிலிருந்து மணிக் கணக்கிற்கு நேரத்தைச் சொல்லுகிறேன்.
அதற்கு முனி ஒரு முக்கியமான எச்சரிக்கை. இன்று அதிகாலை நான்கு அல்லது ஐந்து மணி என்று இப்போது சொல்லக் கூடிய நேரம் தமிழரது நாட்கணக்கில் நேற்று இரவு நாலாஞ் சாமத்திற்குரிய பொழுதைக் குறிக்கும். காலை 10.00 மணிக்கு எருதுக்கடவையில் ஒன்று கூடல். 10.24 வரை இளநீர் விருந்து. 10.30 முதல் நண்பகல் 12.00 வரை நீர் விளையாடல். பிற்பகல் 12.24க்குப் பகல் உணவு. பிற்பகல் 1.12 முதல் 3.00 வரை இசை நிகழ்ச்சி. 3.00 முதல் 3.24 வரை வாழ்த்துரை. அதன் பின் விடுதி திரும்புதல்.
கண்ணனுக்கு அன்றைய நிகழ்வுக்கு யார் வரப் போகிறார்கள் என்று அறிய விருப்பமாயிருந்தது. அதற்கான காரணம் அயர்லாந்துக்காரரான ஓ கென்னாவும் பேர் தெரியாத அவுத் திரேலியனும் வராமல் விடுவார்கள் என்ற நப்பாசை தான். எனவே நாராயணனிடம் ‘எத்தனை பேருக்கு ஏற்பாடு?” என்று கேட் டானி , ' வகுப் பில் உள்ள தமிழரல்லாத எல்லாரும். யாமாகுச்சியைத் தவிர” என்றான். கண்ணனுக்கு இது இரட்டை ஏமாற் றமாக இருந்தது. நாராயணனி வேணி டுமெனிறே யாமா குச் சியைத்

Page 45
பீர்வரலாந்நியஸ் சிதாடர்கதை
தவிர்த்திருப்பானோ என்று சிந்தனை ஓடியது. கண்ணன் அப்படி யோசிக்கக் கூடும் என்பதை ஊகித்தவன் போல நாராயணன் "அவனுடைய பப்பானியர் சங்க ஒறிகாமிப் போட்டியில் அவன் இறுதிச் சுற்றுக்குத் தெரிந்தெடுக்கப்பட்டதால் ஈழ மாநிலத் திர்ை கழக கில அமைந்து ள எா திருக் கோணமலை என் கரிற துறைமுகப் பெருநகரிலப் உள் ள யப் பானியப் பெருமனி றத்திற்கு அன்று மாலை போக வேண்டியிருப்பதாகவும் மறுநாள் வெள்ளிக்கிழமை பிற்பகலில் திரும்பி வந்து சந்திக்கிறதாகச் சொன்னான்' என்று விளக்கினான். "சொன்னாற் போல, இரண்டு தமிழர்கள், நெடுவேல் நம்பியும் இ ைஎாயா ர்ை குடி மாறனும் வருவதாக ச் சொன்னார்கள்’.
தமிழர்கள் இந்தமாதிரி வீண் காலச் செலவாகும் நிகழ்ச்சிகளிற் பங்குபற்றுவது கிடையாது. எனினும் அதிதிகளாக வந்த அயலவர்களின் மனதைப் புண்படுத்தக் கூடாது எனும் தமிழர் பணி பாட்டிற்கமையத் தமிழர் ஓரிருவர் பங்குபற்றுவதுணி டு. அவர் கட்கு அதனாலான நேர இழப்பீட்டை ஈடுசெய்யும் சன்மானம் வழங்கப்படுகிறது என்பது பற்றி அயல் மாணவர்கள் அறிய மாட்டார்கள்.
எல்லாருமாக இருபத்து மூவருக்கான ஏறி பாடுக எர் செபப் யப் பட்டிருந்ததாக கி கணினனிடஞ் சொல்லிவிட்டு நாராயணன் சென்றான்.
எருதனாற்றில் நடந்தவை பற்றி அறிய ஆவலாக இருப்பிர்கள் என்பதாலும் வியாழனன்று குறிப்பிடத்தக்கதாகக் கண்னனின் வாழ்வில் எதுவும் நடக்காததாலும் உங்களை நேரடியாகப் பிரியா விடை நிகழ்ச் சிக்கு அழைத் துச் செல்கிறேன்.
事 庫
எல்லாரும் இளநீர் விருந்திற்குப் போய்த் தமக்காக ஒதுக்கப்பட்ட அறையில் அரைவட்டமாக விரிக்கப்பட்ட பாய்களில் அமர்ந்து கொண்டனர். இளநீர் பரிமாறுபவர் வந்து முதலில் நெ.வே. நம்பியிடமும் இ.கு. மாறனிடமும் அவர்கட்கு எல் வகையான இளநீர் வேண்டும் என்றும் வழுக்கலுடனா அல்லது வழுக்கல் விலக்காமலா என்றும் கேட் டார். இதற்கான காரணம் எவ்விதமான பாரபட்சமுமல்ல. தமிழர் வெளி வெளியாகப் பாகுபாடு காட்டமாட்டார்கள் என்று அவ்வைப்பாட்டி கண்ணனுக்குச் சொன்னவற்றில் இருந்து நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
தமிழரஸ் லாதாருகி கு நூTற்றுக் கும் அதிகமான இளநீர் வகைகள் பற்றியும் அவை
తైw حTT][ G
 

ஹ ஸ்தோ அப்பு அமெரிந்தியர் துப்பாக்கி ரவைகட்கும் சாபங்கட்கும்
இடையே விதைக்கப்பட்டிருந்தார் அவருடைய எலும்புகளிலிருந்து புதிதாக ஒரு சோளக் கன்று'
முளைப்பதாக நம்புகிறேன்.
முகமுடியணிந்தவன் உண்மையைக் கிணற்றுக்குள் வீசக்
Egils அதற்காக நான் அழத் தொடங்கிய போது அதை எல்லா இடத்திலுங் கண்டேன்.
க்ளேடியா லார்ஸ்
மீறல்கள் (கவிதைத் தொகுப்பு) ஆசிரியர் : இதயராசன் வெளியீடு :
தேசியகலை இலக்கியப் பேரவை ଛାଏଁଡୀ]]ର []' : 150.00
கிடைக்குமிடம் வசந்தம் புத்தகசாலை
கொழும்பு-11 \ளுதா.ைபே 2335844, 238,603 グ
இ) gvpni - ëë 2008

Page 46
பின்வரலாற்றியல் சிதாடர்கதை
பரிமாறப்படும் விதங்கள் பற்றியும் தெரிந்திருக் நியாயமில்லை. எனவே தெரியாதவர்கள் தமி விருந்தினரைப் பின்பற்றித் தமக்கும் இளநீரை பெற்றுக் கொள்ளலாம் என்பதே நோக்கம் என் நான் சொல் ல வேணி டியதில் லை. நம் வழுக்கலுடன் சூரியகாந்திச் செவ்விளநீரும் மாற வழுக்கல் விலக்காத சீமைப் பச்சை இளநீரு கேட்டனர். மாறனைப் பின்பற்றி வழுக்கல் விலக்கா இளநீர் கேட் டவர்கள் தங்கள் பிழைை விரைவிலேயே உணர்ந்தனர்.
வழுக்கலுடன் கேட்டவர்கட்குக் களிம6 கிணி ணம் ஒன்றில் இளநீரும் வழுக்கலு கொடுக்கப்பட்டது. மற்றவர்கட்குக் காயின் முை வெட்டப்பட்டுத் துளையிடப்பட்டுக் கொடுக்கப்பட்டது அதற்கு உறுஞ் சு குழல் ஒன்று கேட்டு பெற்றிருக்கலாமெனினும் மாறன் அண்ணாந் குடிப்பதைக் கண்டு மற்றவர்களும் அண்ணாந் குடிக்கப் போய் ஆற்றுக்குப் போக முன்னே தம்மைக் கொஞ்சங் குளிப்பாட்டிக் கொண்டார்கள் மாறன் கோம்பையைப் பிளந்து கொண்டு வருமா கேட்டு வழுக்கலை எடுத்து உண்டான். ஆனாலு அதிலும் அவனைப் பின் பற்ற யாருக்கு மணந்துணியவில்லை. கண்ணன் மாறனின் பொறியி விழாவிட்டாலும் அவனுக்கு இன்னுமொரு பொ காத்திருந்ததை அவன் அறிய மாட்டான்.
தெப் பங்கள் மூன்றுக்கு நாராயண6 ஏற்பாடு செய் திருந் தான் . கணிணனுக்கு தெப்பத்தில் ஏற மனமில்லை. ஆனாலும் வே வழியின்றி மாறன் ஏறிய தெப்பத்தைத் தவிர்த் ஒ சி மின் ஏறிய இன்னொரு தெப்பத்தில் ஏறினால அதில் ஏறிய பின்பு தான் அதில் ஒ கென்னாவு அவுத்திரேலிய நாட்டவனும் தனக்குப் பின்னா வந்து ஏறி நின்றதைக் கண்டான். இன்னொ தெப்பத்திற்கு மாறிச் செல்ல இயலாமல் மற்ற தெப்பங்களில் எட்டெட்டுப் பேர் ஏறிவிட்டனர்.
தெப் பத்தின் எதிரெதிர் முனைகளி இருவர் நின்று நீண்ட தண்டுகளால் ஆற்று படுக்கையில் ஊன்றித் தெப்பத்தை உந்தி வலித்து செல்வார்கள். முதலில் ஒ சி மின்னும் வங்கா மாநிலத்தவனான சத்தியசித்தராயனும் தண் வலித்தார்கள். மூன்று தெப்பங்களும் ஆற்றி வடக்காக நீச்சல் பழகுவதற்கான பகுதிை நோக்கிச் சென்றன. அதன் பின்பு அவுத்திரேலியனு நம்பியும் திரும்பித் தெற்கு நோக்கித் தெப்பத்தை செலுத்தினார்கள் . தொடங்கிய இடத்ை நெருங்கியதும் அவுத்திரேலியன் கண்ணை நோக்கி ‘இனி நாங்கள் ஆங்கிலேயரி தோள்வண்ணம் பார்ப்போம்” என்று சொல்லியட
C 70 حب طالماB
 

இ)
கண்ணனிடம் தண்டை நீட்டினான். இது நல்லதல்ல என்று நினைத்த ஒ சி மின் **கண்ணன் எங்கள் விருந்தாளி. அவன் ஒய்வெடுக்கட்டும்’ என்றான். ‘கண்ணன் எங்கள் விருந் தாளி என்கிறதாலேயே அவனுக்கு இந்தக் கவுரவதி தைக் கொடுக்கிறேன்’ என்று மிகவும் பணிவாகவே அவுத்திரேலியன் விடை கூறினான். தன்னால் வீண் விவாதம் ஏற்படக் கூடாது என்று நினைத்த கண்ணன் ‘இது போல வாய்ப்பு இனி எப்போது கிடைக்குமோ தெரியாது’ என்று சொல்லியபடி தண்டைப் பெற்றுக் கொண்டு
தெப் பத்தின் தென் மேற்கு முனைக் கு
நகர்ந்தான். அதே நேரம் ஓ கென்னா நம்பியிடம் தண்டை வாங்கிக் கொண்டான்.
ஒ கென னா " அயர் லா நீதிற் படகுகளில் துடுப்பு வலிக்கிற போது பாடிப்பாடி வலிப்பார்கள். முன்பு கெல்ற்றிக்கில் இருந்த பாட்டுக்களை எல்லாம் இப்போது தமிழிலும் பாடுவார்கள். என்றாலும் கெல்ற்றிக்கில் போல வராது” என்றான். ‘அப்படியானால் பாடு” என றாணி அவுதி திரேலிய னி . ‘‘ இது எங்கெங்கேயோ போகிறது” என்ற எண்ணம் கண்ணன் மனதிலும் ஒ சி மின் மனதிலும் ஒரே நேரத்தில் எழுந்தது. கண்ணனை நோக்கி ஒ சி மின் நகர இயலாமல் அவுத்திரேலியன் காலை நீட்டியபடி தெப்பத்திற்குக் குறுக்காக அமர்ந்திருந்தான்.
ஒ கென்னா இரண்டு பாட்டுக்களை முடித்து விட்டு மூன்றாவதைத் தொடங்கிய உடனேயே அவுத்திரேலியன் அவனிடம் ‘இது எங்களுக்கு விளங் காத பாட் டு, வேண்டுமானால் எங்கள் எல்லாருக்கும் விளங்குகிற விதமாகப் பாடு’ என்று ஆணையிட்டான். அதற்கிடையில் தெப்பம் ஆற்றின் ஆழங் குறைந்த பகுதியை நெருங்கி விட்டது. கணிணனி எதிர்த் திசையில் நோக்கியதால் அதைக் காணவில்லை. ஒ கென்னா பாடிய பாட்டுக்கள் ஆங்கிலேயர் அயர்லாந்தில் ஆட்சி நடத்திய காலத்துப் பாட்டுக்கள். கெலற்றிக் கில் பேசவும் தடைவிதிக்கப்பட்டதால் ஆங்கிலத்திலேயே பாட்டுக்களை இயற்றிப் பாடினார்கள். பெரும்பாலான பாட்டுக்கள் ஆங்கிலேய வெறுப்பைக் காட்டுகிறவை. அவைதான் பின்பு கெல்ற்றிக்கிற்கு வந்து இனித் தமிழில் ஒ கென்னா பாடப் போகிறவை. தமிழில் அவை குறும்பா என்கிற தமிழ் எள்ளற்பாடல் வடிவில் அமைக்கப்பட்டன.
9V9N - ëstë 2008

Page 47
விண்வரலாந்நியல் சிதாடர்கதை
‘அயல்மண்மேல் ஆசை மிகக் கொண்டார்
அயர்லாந்தில் ஆங்கிலரும் வந்தார் பயிர் வயல்கள் பறி செய்தார் பகையை அதிற் விளைசெய்தார் புயல்விளையப் பஞ்செனப் பறந்தார்”
கண்ணனால் அதைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. பதிலுக்குப் பாட அவனுக்கு இயலாமல் இல்லை. ஆனால் ஆங்கில எழுச்சிப் பாடல்கள் அவனுக்கே குழி பறித்துவிடும் என்பதாற் பேசாமல் இருந்தான். ஆனாலும் அவனது முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை ஒ சி மின் காணத் தவறவில்லை. எனவே அடுத்த பாட்டுத் தொடங்கிய கையோடேயே ஒ சி மின் ‘நான் ஒரு வியற்நாமியப் பாட்டுப் பாடுகிறேன்” என்றான். ‘அதைப் பகலுணவுக்குப் பின் வைத்துக் கொள்ளலாம்” என்று அவுத்திரேலியன் முறைப்புடன் சொன்னான். இது கை கைலப்பில் முடியப் போகிறது என்று நினைத்துச் செழியன் இருவருக்கும் நடுவே நுழையப் பார்த்தான். அவுத்திரேலியன் திடீரென்று எழுந்து நின்றான். தெப்பம் ஆட்டங் கணி டது. அதனால் அவுத்திரேலியன் சரிந்து விழப்பார்த்த போது கண்ணன் மேல் மோதக் கண்ணன் தலை குப்புறக் கவிழ்ந்து தண்ணிரில் விழுந்தான். கையில் வைத்திருந்த தண்டு மேலே எம்பிக் கண்ணனின் தலையில் அடியுண்டது. கண்ணன் மயக்கமானான். தண்ணிர் வேகமாக ஓடிக் கொண்டிருந்த பகுதியாகையால் நீரோட்டம் அவனை இழுத்துச் சென்றது.
来 率
இந்த இடத்தில் கதையை நிறுத்தி அடுத்த படலத்தை வாசிக் கும் வரை கண்ணனுக்கு என்ன நடந்தது, நீரில் மூழ்கி இறந்து போனானா, அல்லது கோமா என்கிற நெடுமயக்கத்தினுள் ஆழ்ந்தானா, அவனைக் காப்பாற்ற யாருமே துணியவில் லையா என றெல்லாம் நினைத்து வருநீதிக் கொண்டிருக்கிற விதமாக இந்தப் படலத்தை இங்கே நிறுத்தவோ கண்ணனைக் கோமாவில் வைத்துக் கொண்டு கதையை இன்னும் நாலு படலங்களுக்கு இழுத்தடிக்கவோ நான் என்ன சின்னத்திரைத் தொடருக்குக் கதை எழுதுகிற ஆளா?
நீங்கள் அஞ்சக் கூடிய விதமாக எதுவும் நடக்கவில்லை. தெற்குப் புறமாக இடது கரையோரமாக நீச்சல் உடையில் போய்க் கொண்டிருந்த தமிழ்ப் பெண்கள் நால்வர்
brwo -70
 
 

கண்ணன் விழுந்ததைக் கண்டார்கள். அவர்களில் இருவர் உடனேயே நீரிற் குதித்து மயங்கிக் கிடந்த கண்ணனை மீட்டெடுத்துக் கரை சேர்த்து விட்டனர்.
தெப் பத் தை ஒற்றைத் தணர் டுடன் நிலைப்படுத்திக் கரையோரமாகக் கொண்டு செனி நூறு நிறுத்த நீரோட் டமி துணை செய்யவில்லை. எனவே ஏறத்தாழ ஒரு நாழிகை நேரம் (இருபது நிமிடம் என்று வைத்துக் கொள்ளுங்கள்) போராடியதன் பின்பே ஒ கென்னாவால் தெப்பத்தைக் கரைக்கு ஒதுக்க முடிந்தது.
கண்ணன் கரைசேர்க்கப்பட்ட இடத்தை அவர் களர் அடைந்த போது நானர் கு பெண்களுமாகச் சேர்ந்து அவனுக்கு மயக்கந் தெளிவித் து எருத னாறு முதலுதவி நிலையத்திற்குக் கொண்டு சென்றுவிட்டனர்.
அவுத்திரேலியனும் ஓ கென்னாவும் கண்ணனை அவமதிக்கத் திட்டமிட்டது உண்மை. ஆனாலும் அவனை ஆற்றில் விழுத்தத் திட்டம் தீட்டிக் கொண்டு அவர்கள் வரவில்லை. என்றாலும் ஒ சி மின் மனதில் அவர்கள் பற்றி ஏற்பட்ட எண்ணத்தை அவர்களால் மாற்ற இயலவில்லை.
கண்ணனுக்கு முதலுதவி மையத்தில் ஒரு மாற் று வேட் டி அணிவித்து வெளியே அனுப்பினார்கள். நீச்சலுடையில் நின்ற நான்கு பெண்களால் துாக்கிச் செல்லப் பட்டதை நினைத்துப் பார்க்கவே கண்ணனுக்குக் கூச்சமாக இருந்தது. அவர்களுக்கு நன்றி சொல்லக் கூட மறக் குமளவுக் கு அவனைக் கூச் சமீ தின்றுவிட்டது. முதலுதவி மையத்திலிருந்து வெளியே வநீத போது அவனுக்கு எதிர்ப்பட்டவள் அங்கி. அங்கி அவனைத் தேடிவரவில்லை. தன்னுடைய தோழிகள் இருவரைத் தேடி வந்த வேளை அவர்கள் முதலுதவி மையத்தில் இருப்பதாக அறிந்து அங்கு வந்தாள். கண்ணனுக்கோ "இவள் என்ன இங்கேயும் வந்துவிட்டாள்?’ என்று தான் எண்ணம் ஓடியது. கண்ணனுக்குச் சங்கடமான சூழ்நிலை ஏற்படுகிற போதெல்லாம் அங்கியும் வந்து நிற்கிறதை நினைக்க, அவள் தனக்கென்று உலகத் தமிழர் உளவு நிறுவனம் நியமித்த உளவாளியோ என்ற யோசனை அவன் மனதிற் தோன்றியதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். எனினும் தமிழருடன் பழகிக் கற்ற போலியான முறுவல் ஒன்றை அவள் திசையில் உதிர்த்து விட்டு அவளது பதில் முறுவலைக் கண்டுங் காணாதது போல நடந்தான்.
gVpR - šah 2008

Page 48
பின்வரலாந்நியல் சிதாடர்கதை
அன்றைய பிரியாவிடை நிகழ்ச்சி நிரலில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்று நீங்கள் ஊகித் திருப் பீர்கள். பகல் உணவு பிந்தி விட்டதால் இசை நிகழ்ச்சி சுருக்கப்பட்டு விட்டது. கண்ணன் நிகழ்ச்சிக்காகத் தயாரித்து வைத்த பாட்டைப் பாடினான்.
‘தேஞ்சு நதிமிசை நிலவினிலே
தென்றலில் ஆடிவரும் தோணிகளிலே சுந்தர ஆங்கிலப் பெண்களுடனே
சிந்துகள் பாடி விளையாடி வருவோம் கனடா மாநிலத்துக் கனிவளங்கள் கோண்வோள் மீன்களுக்கு
மாறுகொள்வோம் அமெரிக்க நாட்டில் வளர் காடுகளைந்தே
ஆங்கிலத் தளவாடம் செய்து
கொடுப்போம் அவுத்திரேலியரின் பால்வளங் கொண்டு
ஆங்கில அப்பிள் பழ விருந்தளிப்போம் நியூசிலாந்தில் மிகும் கம்பளி கொண்டு
நியூகாசில் கரி பரிசளிப்போம்”
கணி ணனி இதை ஆங்கிலத் திற் பாடியதால் நாராணயனை விட யாருக்கும் பாட்டு விளங்கவில்லை. என்றாலும் பாட்டின் மெட்டும் கணி னணினி குரலும் எலி லாருக் கும் பிடித் திருந்தது. கணிணன் நீரில் விழக் காரணமாயிருந்த அவுத்திரேலியனுக்கும் ஒ கென்னாவுக் கும் கணிணனைத் தாங்கள் இவ்வளவு காலமும் மனம் நோகச் செய்தும் அவன் பகைமை பாராட் டாமலே நடந்து கொண் டமை மனதை நெகிழச் செய்தது. அந்தளவில் கண்ணன் நீரில் விழுந்ததும் நன்மைக்கே என்று தான் சொல்ல வேண்டும். எல்லாரும் கண்ணனுக்கு வாழ்த்துக் கூறிப் பிரிந்து சென்று கொண்டிருக்கையில் அங்கி வந்து சேர்ந்தாள்.
'இவளிடமிருந்து விரைவில் விடுதலை கிடைக்கும்’ என்ற எண்ணத்துடன் ' என்ன விடயம்?’ என்று மரியாதையாகவே கண்ணன் அவளிடங் கேட்டான். விபத்திற்குட்பட்ட கண்ணன் இங்கிலாந்துக்குத் திரும்பிச் செல்ல இருப்பதால் அவன் சில மருத்துவப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டியுள்ளது என்று முதலுதவி மையத்தினர் அவள் உட்பட வேணி டிய பரிசோதனைகளின் பட்டியல் ஒன்றைத் தந்ததாக அவனிடம் கொடுத்தாள். பரிசோதனை முடிவுகள் சாதகமாக இலலாது போனால் அவனி வைத்தியத்திற்குட்பட்ட பின்னரே பயணத்திற்கு
 

அனுமதிப்பர் என்றும் அவனிடம் விளக்கிய அங்கி அவனுடைய மனதில் எழுந்த கவலையை உணர்ந்தவள் போல ‘எல்லாம் உன்னுடைய நன்மைக்காகத் தான். அதைவிட வந்த இடத்தில் உனக்கு ஏதுங் கெடுதலென்றால் அது நமக்குப் பெருமையில்லை” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டாள். அருகில் நின்ற நாராயணனும் ஒ சி மின்னும் "பயப்படாதே! எல்லாஞ் சரி வரும்” என்று ஆறுதல் சொன்னார்கள்.
率
(கண்ணன் நினைத்தது போல அடுத்த வாரமே ஊர் திரும்ப முடிந்ததா; அல்லாமல், நம்முர்த் தனியார் மருத்துவ மனைகளிற் போல தெரியாமற் போய் அகப்படுகிறவர்களுக்கு அந்தச் சோதனை, இந்தச் சோதனை என்று மாறிமாறிச் செய்வது போலச் செய்து, அவனைக் கிழமைக் கணக்காக மருத்துவமனையில் தங்க வைத்தார்களா; அவனுடைய விபத்துப் பற்றிய தகவல் வீட்டாருக்குத் தெரிய வந்து அவர்கள் பதைத்துப் போயிருப்பார்களா என்றெல்லாம் உங்களுக்குக் கேள்விகள் இருந்தால் அடுத்த படலத்திற் கட்டாயம் அவற்றுக்கான விடைகளைக் காணலாம்.)
7.
தாயகம் வாசகர் ཡོད།
வட்டங்கள்
தாயகம் வாசகர்களை ஒன்றிணைப் பதற்காகவும் ஆக் கபூர் வமான விமர்சனங்களை வெளிப்படுத்தி பரந்தளவில் தாயகம் சஞ்சிகையைப் பிரபல்யப்படுத்தவும் எழுத்தாளர்களையும் வாசகர் களையும் இலக்கிய ஆர்வலர்களையும் அவர்கள் வாழும் பகுதியில் பத்துப் பேருக்கு உட்பட்டதாக வாசகர் வட்டங்களை அமைக்கும்படியும் அவற் றிடையே இணைப் பினை ஏற்படுத்துவதற்கும் தாயகம் ஆசிரியர் குழுவுடன் தொடர்பு கொள்ளும்படி வேண்டுகின்றோம்.
ஆசிரியர் குழு uY ܓ
2Vlov - Sadh 2008 - -

Page 49
திருச்செல்வத்தின் இளைய மகன் செல்வன் படுசுட்டி. எட்டு வயதான அவன் பெரும் குழப்படிகாரன். மாரிகாலம் வந்து வயல் கிணற்றில் வான் பாய்ந்தாலே இவனுக்கு கொண்டாட்டம் தான். பள்ளிக் கூடத்திற்கு களவொழித்து பெரிய ஆட்களுடன் வயல் கிணறுகளில் நீந்தப் போய்விடுவான். ஒரு முறை முருகன் கோவில் கேணியில் தாழப் போய் தெய்வாதீனமாகத் தப்பித்தான்.
இவன் வளரும் அழகிய வயலும் இயற்கை வளங்களும் கூடிய மாதகல் பாணாவெட்டி அம்மன் கோவில் குளக்கரையில்தான் ஒவ்வொரு தைப்பொங்கலுக்கும் மாட்டுச்சவாரி நடைபெறும். சவாரிக் குணத்தார்தான் ஒவ்வொரு முறையும் தனது கறுத்த நாம்பனை வைத்து வெல்லுவது 6p60)LD.
செல்வன் ஒருமுறை தானும் சவாரி ஒட்ட ஆசைப் பட் டானி . பள்ளிக் கூடத் துக் கு களவொழித்து வேலிப் பொட்டுக்கால் அவனின் அப்பம்மா வீட்டின் கோடியில் கட்டியிருந்த கறுத்தக் கன்றுக்குட்டியை நைசாக அவிழ்த்துக் கொண்டான். தன் வீட்டில் இருந்து எடுத்து வந்த கூரான ஆணியை அப்பப்பா கூரையில் செருகி வைத்திருந்த பிரம்புத் தடியின் நுனியில் செருகிக் கொண்டான். கறுத்தக் கன்றுக்குட்டியின் பின் புறமாய் குத்திக் கலைத்தான். கன்றுக்குட்டி துள்ளிக் குதித்துக் கத்தியபடி வளவைச் சுற்றி
Bბიw Jaბ\ბ2 -70 G
 
 

ல் வன்த
ஓடி தென்னையில் கட்டியிருந்த 66,5uDліў தன் தாயிடம் சென்று பாலைக் குடித்துவிட்டது. வயலில் இறைப்பு முடிந்து களைப்புடன் வீடு வந்த அப்பப்பா பிரம்பு முறிய முறிய அடித்த அடியில் குணத்தாரின் கறுத்த நாம்பனை விட வேகமாய் பறந்தான் செல்வன் தன் வீடு நோக்கி.
மூன்று நாளாய் தீ தழும் பு மாறவில்லை. வகுப்பு மாணவர் நையாணி டி பணி னினர் . வெட்கத்தில் வீடு வந்தவன், திணிணைப் பக்கம் யாரோ பெரியவர்கள் சிலர் கதைப்பதை வேடிக்கை பார்க்க ஓடினான். ஆச்சரியம்! சவாரியில் இவனின் கற்பனைக் குருநாதர் குணத்தாரும் இவனின் சித்தப்பா சண்முகத்தாரும் தான். .
குணத்தார் சொன்னார். “இந்த முறை தைப் பொங்கலுக்கு திருக்கல் வண்டி சவாரிதான். இவனி சக் குணத் தானி இதுக் கெணி டே புதுத்திருக்கல் வாங்கீட்டானாம். அதுதான் மாஸ்டர் நான் உங்கட திருக்கல் வண்டியைக் கேட்க வந்தனான்’ என செல்வனின் அப்பாவிடம் கேட்க அவர்; “கோவிக்காதீங்கோ. அது எனக்கு அய்யா தந்தது’ நானே முக்கிய பயணத்துக்கு மாத்திரமே பாவிக்கிறது. இன்னும் புதுசாய் பொக்கிசமாய் வைத்திருக்கிறன்.” என்று சொல்லி முடிக்க முன் நடையைக் கட்டினார் குணத்தார். செல்வன் அன்று இரவு நித்திரையே கொள்ளவில்லை. அவன் கனவில் திருக்கல் வணி டிச் சக் கரந் தான் சுழன்றது. தைப் பொங்கலுக்கு பத்து நாளே இருந்தது. ஒரு நாள் அதிகாலை ஐந்து மணி. பனி மூண்டிருக்க, அப்பப்பா வீட்டின் பின் கொட்டிலுக்குள் திருக்கல் வண்டி அசையும் சத்தம் கேட்டும் அப்பப்பா ஏதோ அசட்டையில் இருந்துவிட்டார். குழப்படிச் சூரன் செல்வனும் அவன் சகா ரகுவும் தான். திருக்கலைச் செல்வன் இழுத்துப் பிடிக்க; ரகு ஒரு மாதிரிப் பெரிய காளையைத் திருக்கலில் கட்டினான். அப்பப்பா வயலுக்குப் போகும் வரை காத்திருந்த செல் வணினி சவாரி அவர் கிளம்பியதும் தொடங்கியது. “ஒவ் ஒவ்” என்ற
9V9rŠÚ - ?ětě):2008 |

Page 50
சிறுகதை
சத்தம் கேட்டு அப்பம்மா வள்ளி அம்மா ஓடி வருமுன் திருக்கல் வண்டி பறந்தது வயல் வரம்புகளைப் பிளந்தபடி! இரண்டு பொடியளும் ஏறி ஒன்றாக கயிற்றைப் பிடித்து ஓடினார்கள்.
இருவர் மனதிலும் வானத்தில் இந்திரன் தேர் ஓடும் சந்தோசம் - ஐ.யா.கூ. ஒவ். ஒவ்.
சந்தோசமும் நிலைக்கவில்லை. வானத்தில். இந்திரன் தேரோட்டியது பாட்டி
சொன்ன கற்பனை. “படுபாவி பொம்பர்தான்”
நான் கண்ணாடி முன் C நின்றேன் 866 eાb re அழகு பார்க்கும் கண்ணாடி 6 முன் நின்றேன் ·
நானே உலகின் அதிசயம் என எனக்கு அறிவித்தாய் ஒவ்வொருவருக்கும் நீ தான் உலகின் முதல் அதிசயம் என அறிவிக்கின்றாய்
මෙ%tib
எல்லோருக்கும் தான்
நான் சிரித்துப் பார்த்தேன் நீ சிரித்தாய் நான் அழுது பார்த்தேன் நீ அழுதாய் நீ எனக்கு உணர்த்தினாய்: உன் செய்கைகளே உன்னைத் தீர்மானிக்கின்றன
கண்ணாடியே! உன் முன் நின்று ஆடைகளை குலைத்தேன் நீயும் குலைத்தாய் ஆடைகளை சீர்செய்தேன் நீயும் சீர் செய்தாய்
૭ાb
நீ கற்பித்தாய் நம் அழகு நம்மிடமிருந்து தான் வெளிவருகின்றதென. நான் உன் முன்னால் நின்ற போது
brweb -70

நம் சாபக்கேட்டின் நிஜம் என அந்த பிஞ்சு உள்ளங்கள் உணர்ந்த நாள் அன்று தான். எங்கேயோ போட்ட வான்குண்டு வழிதவறி சிரிக்க வைத்த செல்வனையும் அவன் சகா ரகுவையும் பதம் பார்த்தது! திருக்கல் ஓடும் ஆசையில் பறந்த பிஞ்சுக் குழந்தைகளின் உடல்களும் சிதறிப் பறந்தன.
திருக் கல வணி டியரினி சக்கரம் பரந்தாமனின் கைச்சக்கரம் போல் சுற்றிச் சுற்றி சுழன்று வீழ்ந்தது. பிஞ்சு உடல்களின் மேல்!
TSITAT.pdSăr UATULö
என் விம்பத்தை மட்டுமா
காட்டினாய்
உன்னைப் பார் உன்னைப் பார்க்கத் தொடங்கு உன்னை நீயே பார்க்கப் பழகுதல் ஞானம் என்றாய்
18)
aword is éirith 2008 é.

Page 51
விந்தை மனிதர்
கூடுவிட்டுக் கூடு இயலுமோ
சிவிடுவிட்டுக் கூடு பாய்கிற கதை, சின்ன வயசிலை கேள்விப் பட்டிருக்கிறன். எண்டாலும் எந்தக் கூட்டிலை இருந்து எந்தக் கூட்டுக்கு ஆர் ஏன் శిలిత பாய்கினம் எண்டு தெரியாது. பிறகு மாமா வீட்டிலை கிடந்த பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைப் புத்தகம் தூள் தூளாக் கொட்டிண்ண முதல் கொஞ்சம் வாசிச்சன். அப்ப தான் விளங்கிச்சுது. விக்கிரமாதித்த மகாராசா கூடுவிட்டுக் கூடு பாயிறகிலை வலு விண்ணர் எண்டு. தன்னுடைய உடம் பைக் கொண்டு போயப் க் கவனமா எங்கினையேன் ஒளிச்சு வைச்சுப் போட்டு அவரின்டை ஆவி வேறை ஒரு உடம்புக்குள்ளை போய்ப் பூந்து பல வேலையளுஞ் செய்து போட்டுத் திரும்பி வந்து தனி னுடைய உடம்புக்குள்ளை நுழைஞ்சு ஒண்டும் நடக்காத மாதிரித் தன்னுடைய வேலையைக் கவனிச்சுக் கொள்ளும்.
இநீத விளையாட்டு வேறை ஆக்களுக்குந் தெரியும் எண்டதாலை, கள்ளன் பொலிஸ் விளையாட்டு மாதிரி நெடுகிலும் நடந்து கொண்டு போகும். இதாலை தானோ என்னவோ எங் கடை ஆக் களர் செதி துப் போன ஆக்களின்டை உடம்புக்குள்ளை கண்ட நிண்ட ஆவி எல்லாங் கூடு விட்டுக் கூடு பாய்ஞ்சு குழப்படி பண்ணாமல் எரிச்சுப் போடுறவை எண்டு நினைச் சனி , கிற ஸ்தவ சமயத் தாக்கள் புதைக்கினம். ஏதேன் ஆவி கூடு விட்டுக் கூடு பாய்ஞ்சு புதைச்ச உடம்போடை வெளியாலை வெளிக்கிடுமோ எண்டு யோசினையா இருந்துது. வேதாள சிங்கத்திட்டைக் கேட்டன். அவன்டை உண்மையான பேர் எனக்குச் சத்தியமாத் தெரியாது. பேய், பிசாசுக் கதையள் அவனுக்கு நிறையத் தெரியும் எண்டதாலை அவனுக்குப் பெடியங்கள் வேதாள சிங்கம் எண்டு பேர் வைச் சுப் போட் டாங்கள் . அவனுக்கும் வாத்திமாரோடை சரிவராது. கெட்டித்தனமா எட் டாம் வகுப் போடை ஒரு மாதிரிப்
BrAvაyavბ2 - 70 64.
 

பள்ளிக்கூடத்தாலை கழண்டிட்டான். என்னாலை ஏலேல்லை. எண்டாலும் வழிவழிய என்னைக் கண்டாக் கதைப்பான்.
அவன் என்னைப் பாத்து ‘‘ எடேயப் கடலைக் கொட்டை” (சிந்தாமணிக் கடலை எண்டு ஒரு சாதிக் கடலை இருந்ததாலை எனக்குப் பட்டப் பேர் சிந்தாமணிக் கடலை. அதைத்தான் வேதாள சிங்கன் இப்பிடி மாத்திக் கூப்பிட்டவன்) ‘வேதக்காரர் மரப்பெட்டியிலை இறுக்கி அடைச்சு ஆழப் புதைச்சு மேலாலை கல்லும் வைக்கிறவை கணி டியோ! ஆவியஞக்கு மணி அளைய அவ்வளவு விருப்பமில்லை. கிட்டவும் போகாது. பயப்பிடாதை’ எண்டு ஆறுதல் சொன்னான்.
அதிலை எனக்கு அப்ப ஒரு துக்கம் என னெணி டா லி , ஐம் பதி தொமி பதிலை பண்டாரநாயக்கா சுட்டுச் செத்த மூட்டத்திலை தான், அவருக்குக் கொஞ்சம் முந்தித் தமிழரசுக் கட்சி எம்.பி. வன்னியசிங்கத்தாரும் செத்தவர். பண்டாரநாயக்காவை எரிக்காமைக் கொண்டு போய் ஹொறகொல் லை வளவுக்குள்ளை புதைச்சுப் போட்டினம். அப்ப யோசிச்சனான், வன்னியசிங்கத்தாரின் டை ஆவி போய்ப் பண்டாரநாயக்காவின்டை உடம்புக்குள்ளை பூந்து வெளிக்கிட்டு வந்திருந்தால் எங்கடை இனப் பிரச்சினை எல்லாம் சரியாப் போயிருக்குமெண்டு. பிறகும் யோசிச்சன். பண்டாரநாயக்காவை வேறொரு பேயன் இன்னொருக்காச் சுட்டுப்

Page 52
விந்தை மனிதர்
போட் டாலப் வர்ை ரிைய சிங் கதி தார் தானி சித்திரபுத்திரருக்கு மறுமொழி சொல்ல வேனும் எண்டு. எண்டாலும் அதுக்கெல்லாம் ஒரு இடமும் வையாமல் பண்டாரநாயக்காவைப் புதைச் ச இடத்துக்கு மேலாலை பென்னம் பெரிய ஒரு பாறாங்கல்லையுமெல்லோ வைச்சுப் போட்டினம், இந்தியா விலை பகுத்தறிவாளர்கள் என்டிறவை கடவள் இல்லைச் சமயம் வேனாம் சாதி வேணாம் எண்டெல்லாஞ் சண்டை பிடிச்சுக் கொஞ்சக் காலமா அங்கை பேய், பிசாசு, ஆவி என ட கதையள் குறையவா இருந் துது. படங்களிலையும் அவ்வளவா வராது. இப்ப எல்லாந் தலைகீழாப் போயிட்டுது. அம்மன், பத்திரகாளி, முருகன் எண்டெல்லாம் சாமியின்டை பேரைச் சொல்லிச் சொல்லிப் பேய் பூதத்தின்டை கதைதான் ரீவியிலை காட்டுகினம் எண்டாப், பகுத்தறிவுக்காரரும் அப் பிடித்தான் படம் எடுக்கினை. எங்கடை சனமும் ஆவெண்டு பாத்துக் கொண்டு இருக்குது. அதிலை இப்ப இப்ப கூடுவிட்டுக் கூடு பாயிற கதையரும் எல்லோ வருகுது. எண்டாலுஞ் சொல்லிறன், எங்கடை தலைவர் மார் கூடுவிட்டுக் கூடு பாயிற மாதிரி எந்த ஆவியாலும் பறியாது பாருங்கோ, கட்சி எ னி டா லுங் கூட்டணி எண் டா லும் நினைச் சவுடனை ஒணி டிலை வந்த ஆள் இன்னொண்டிலை போய் அப்பிடியே அடையாளம் மாறிப் போம். எந்த ஆவியாலையும் அதை அடிக்கேலாது.
இந்த நாளிலை இன்னொரு மாதிரிக் கூடுவிட்டுக் கூடு பாயிற விளையாட்டு நடக்குது போலை தெரியுது. முந்தி ஒரு காலம் ஆரேன் பெரிய அரசியல் கொலையளைச் செய்தால் தாங்கள் தான் செய்தது எண்டு கெட்டித்தனம் பேசுவினம். பிறகு இனந்தெரியாதவை எண்டு ஒரு சாதி ஆக்கள் தான் செய்தினம் எண்டுதான் எல்லாப் புதினகாரரும் சொல்லி வந்தினம். இப்ப என்னெண்டா, எது நடந்தாலும், நாங்களில்லை இன்னொரு பகுதி தான் செய்து போட்டுது என்டுதான் கோறனமேந்து சொல்லும், அது மாதிரித்தான் பல மாதிரி இயக்கக் காறரும் கதைக்கினம்.
கண்ணுக்கு முன்னாலையே என்னென்ன அட்டுழியமெல்லாஞ் செய்து போட்டுப் போதுமான சாட்சியம் இல்லாமை எண்டு ஆக்களாலை எப்படிக் கழர ஏலுது எண் டு யோசிச்சன் , சிலவேளை செய்ததாத் தெரியிற ஆக்கள் வேறை அலுவலுக்காகக் கூடுவிட்டுக் கூடு பாயிற நேரம் வேறை ஆரேன் அவையின்டை கூட்டுக்குள்ளை
grwz-70 C

பூந்து வேலை செய்து போட்டுப் பழியை மற்ற வைக்கு மேலை போட ஏலுந் தானே! இதெல்லாம் எங்களுக்கு விளங்காது. எண்டாலும் கோறனமேந்துக்கு எல்லாந் தெரியும். அவை வீனா ஆரையுந் தண்டிக்க மாட்டினை.
புளிப்பக விமானங்கள் போப் அப்பாவிச் சனத்தைக் குண்டு போட்டு அழிக்கிறது எண்டு சொல்லுகினம். நான் நினைக்கிறன் இதுவும் கூடுவிட்டுக் கூடு பாயிற தரவழியளின் டை வேலையாத் தான் இருக்க வேணும்.
GLITTEFJAG GLJITSU ஆயுதந்தரித்தபடி சூரியன் வந்தாயிற்று
உற்சாகத்துடன்
நித்திரையிலிருந்து ஒரு போர் வாள் போல நிர்வானமாகத் துள்ளி எழுகிறேன்.
மினூறு வேல் இடவேளோ மினூற்கோ
-ཛོད༽
தாயகம் ஆக்கங்களை வரவேற்கிறது
தாயகம் சஞ்சிகைக்கான சிறுகதை, |கவிதை, கட்டுரை, முன் அட்டை, பின் அட்டைகளுக்கான ஓவியங்கள் ஆகியவற்றைப் படைப்பாளர்களிடமிருந்து வரவேற்கிறோம். ஆசிரியர் குழுவினால் தகுதி கண்டு | பிரசுரிக்கப்படும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
5. Jia:fi: Tafalë RNR. பிரதம ஆசிரியர் # ya al ஆடியபாதம் ീഴ്ച, C.C.S.M.Complex, கொக்குவில் Colombo-11 தொ. பே. 021 2223829 T.P. 2335844,
/ 23S1603 ܓܠ
5) 20:29, srl - éirith 2008

Page 53
கட்டுரை
Uapuölaviugi
3. அங்கீகாரத்
‘சிெஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி” எனர் று அங்கீகாரம் பெறுவதற்காக விஸ்வாமித்திரர் படாதபாடுபட்டதாகக் கதை உண்டு. இந்த மாதிரி அங்கீகாரத்திற்கான வேட்கை படைப்பாளிகள் சிலருக்கு ஒரு வெறியாகி விடுகிறது. இதற்கான காரணம் இத்தகைய படைப் பாளிகள் யாருக்காக எழுதுகிறார்கள், ஏன் எழுதுகிறார்கள் என்கிற கேள்விகட்கான பதில்களில் அடங்கியுள்ளது. படைப்பின் நோக்கம் சாதனை, புகழ், பணம் போன்றவையாக அமைகிற போது, வெற்றி தோல் விகள் அந்த அளவு கோல்களைக் கொண்டே அளவிடப்படுகின்றன. அவர்கள் தமது வளர்ச் சிக் காகச் சில 660) 5 T 6 அங்கீகாரங்களை வேண்டுகிறார்கள். அவர்கள் வேண்டுகிற விதமான அங்கீகாரம் அவர்கள் வேண்டுகிற இடங்களிலிருந்து கிடையாத போது அவர்களது ஏமாற்றம் பகையுணர்வாக மாறுகிறது. தாங்கள் எதிர்பார்த்தது கிடையாததற்கான காரணங்களைப் பிறரினி தவறான நோக்கங்களாகக் கற்பிக்க முற்படுகிறார்கள். இத்தகைய நடத்தை தன்னுடைய எழுத்தில் நம்பிக்கையுள்ள படைப்பாளிகளிடம் காணப்பட நியாயமில்லை. இன்று படைப்பாளிகட்குப் பலவிதமான பரிசுகளும் அங்கீகாரங்களும் அரச நிறுவனங்களிடமிருந்தும் தனியார் நிறுவனங்களிடமிருந்தும் பொது அமைப்புக்களிட மிருந்துங் கிடைக்கின்றன. இவற்றில ஏகம் பெரும் பாலானவை சொல்லப்பட்ட காரணங்கட்காக வழங்கப் படுகின்றதிலி லை. எனினும் இவ்வாறான பரிசுகளையும் அங்கீகாரங்களையும் பட்டியல் இடுவதில் ஒரு திருப்தி அவற்றைப் பெறுகிற சிலருக்கேனும் o— 6яi (6. அதைவிட, எதிர்பார்த்திருந்த பரிசோ அங்கீகாரமோ கிடையாத போது அதனாற் கொதிப் பு அடைகிறவர்கள் உள்ளனர். அவற்றைப் பெறுவதற்காகப் பலருக்குப் பரிணி னால் அலைகிறவர்களும் இருக்கிறார்கள். எனினும் ஒரு படைப்பாளிக்குத் தனது படைப்பின் பெறுமதியை விட இவ்வாறான அங்கீகாரங்களது பெறுமதியே உயர்வானதாகக் தெரிகிறதென்றால் அது வருந்தத்தக்க நிலை.
பல்கலைக்கழகப் பேராசிரியர்களது பாராட்டுதல்களும் மெச்சுதலும் இந்த நாட்டில்,
 

பல்கலைக்கழகங்களும்
தூலிலிரன ஆவன
சீ. சிவசேகரம் குறிப்பாகத் தமிழ் எழுத்துத் துறையில், அளவு மீறிய முக்கியத்துவம் பெற்றுள்ளன என்று நினைக்கிறேன். இன்னமும் பலவேறு நூல்கட்கான முனி னுரைகள் பல கலை கி 35 p ab Lj பேராசிரியர்களிடமிருந்து வேண்டப்படுகின்றன. ஆனால் அந்த நூல்களுடன் தொடர்புடைய துறையில் அந்த முன்னுரையை எழுதியவருக்கு எத்தகைய பரிச்சயம் உள் ளது என்பது முன்னுரையை வாசிக்கிற போதே விளங்கிவிடும். இங்கே பல்கலைக் கழகப் பேராசிரியர் என்றால் எல்லா விடயங்களைப் பற்றியுங் கருத்துரைக்க வல்லவர் என்கிற ஒரு மூட நம்பிக்கையை நூலாசிரியர்களோ வெளியீட்டாளர்களோ தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். முன்னுரைகளிற் கணிசமானவை நூலின் பிரதியை மிக மேலோட்டமாக வாசித்து அல்லது வாசியாமலே எழுதப்பட்டிருப்பதை நாம் அவதானிக்கலாம். சில நூல்கள் பற்றிய எனது விமர்சனங்களில் இதைக் குறிப்பிட்டிருக்கிறேன். ஒரு நூலுக் கு ஏன் முனி னுரை தேவைப்படுகிறது, எழுதப்படும் முன்னுரை எதைக் கூற வேண்டியுள்ளது என்கிற விடயங்களில் உள்ள கவனத்தை விட, யாரைக் கொண்டு எழுதுவிப்பது, எழுதுகிறவரது பட்டம் பதவிகள் எத்தன்மையன என்பதிலேயே பலர் கூடுதலான கவனங் காட்டுகின்றனர். சில முன்னுரைகள் வெறுமனே வாழ்த்துரைகளாக அமைகின்றன. எவரதும் வாழ்த்துக்களை வேண்டுவதற்கு நூறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு நூலின் எழுதப்பட்ட ஒவ்வொரு பக்கமும், முடிந்தால் ஒவ்வொரு வாக்கியமும், வாசிக்கிறவருக்குப் பயனுள்ளதாகவோ சுவைக்கக் கூடியதாகவோ இருப்பது நல்லது.
ஒரு முன்னுரை நூலாசிரியராற் சொல்ல இயலாத ஆனால் வாசகர்கள் அறியத் தகுந்த விடயங்களைக் கொணி டிருந்தால் அது சிறப்பானது. எனினும் முகம் மறுக்க முடியாமலோ வேறு நெருக்குவாரங்களாலோ எழுதப்படுகிற முன்னுரைகள் அவ்வாறு அமைவது அருமை. மாறாக, நுாலாசிரியரே ஒரு பயனுள்ள முன்னுரையை எழுதலாம். ஜோஜ் Bேணாட் ஷா தனது நாடக நூல் கட்கு மிக நீளமான முன்னுரைகளை எழுதுவார். சில சமயம் நாடகப் பிரதியை விட நீளமான முன் னுரைகள் எழுதப்பட்டிருந்ததாகவும் நினைவுணி டு.
9V9N - ëdh 2008

Page 54
கட்டுரை
அவ்வாறான முன் னுரைகள் நாடகங்கள் சொல்லுகிற செய்திக்கும் மேலாக அதனுடன் தொடர்புடைய சமூகத் தொடர்பான விடயங்கள பல சுவைபடக் கூறப்பட்டிருக்கும். சில சமயம் நாடகப் பிரதியை விட முன்னுரையிலேயே ஷா கூடிய அக்கறை காட்டினாரா என்றும் எண்ணத் தோன்றும்.
ஒரு படைப்பாளியின் வாழ்நாளுக்குப் பின்னர் அவரது நூல்கள் தொகுக்கப்படுகிற போது அல்லது அப் படைப்பாளியை வாசகர்கள் அறியாத ஒரு சூழலில் (குறிப்பாக வேறு நாட்டவரின் நூல். வேற்று மொழியிலிருந்து மொழி பெயர்ப்பு போன்ற நிலைமைகளின் கீழ்) ஒரு முன்னுரை படைப்பையும் படைப் பாளியையும் விளங் கிக் கொள்ள உதவுகின்றது.
ஆங்கிலத்தில் வெளிவரும் நூல்களில் (நமது நாட்டவரது நூல் களைச் சேர்த்துச் சொன்னாலும்) படைப்பையும் படைப்பாளிகளையும் இன்னொருவர் மெச்சியோ வாழ்த்தியோ அறிமுகப் படுத்தியோ எழுதுகிற முன்னுரைகள் குறைவு நூலை வாசித்து விளங்கிக் கொள்ள உதவுகிற அளவுக்கு மேலாக முன்னுரைகள் எதுவுமே எழுதப் படுவதிலி லை. தமிழில் வருகிற முன்னுரைகளை வாசிக்கும் போது இது நமது படைப்புலகின் பண்பாட்டுப் பிரச்சனைகளில் ஒன்று போலவே தோன்றுகிறது. அங்கீகாரத்திற்கான தேவையே முன் னுரைகளிலும் ஆதிக் கஞ் செலுத்துகிறது.
இந்த விதமாகச் சான் றோரதும் சமூகத்தினதும் அங்கீகாரத்திற்கான பசியை நன்கு பயன்படுத்தத் தெரிந்தவர்கள் அதன் மூலம் தம்மை வளப்படுத்திக் கொள்கின்றனர். நமது பண்பாட்டு நீரோட்டத்திற் சின்ன முதலைகளும் உள்ளன பெரிய முதலைகளும் உள்ளன. இவை ஒரு புறமிருக் கப், படைப் பாளிகள் வேணி டுகிற அங்கீகாரத்தைப் பற்றிச் சிறிது கவனிப்போம்.
படைப் பாளிகளிற் சிலர் இவ்வாறான அங்கீகாரத்தை முன்னுரைகளில் வேண்டுகிறார்கள் தங்களது படைப்பாற்றலைக் கல்வித் தகுதி மிக்க யாராவது மெச்சுவதை அவர்கள் விரும்புகின்றனர் அவ்வாறு மெச்சுகிறவருக்குக் குறிப்பிட்ட எழுத்துத் துறை சார்ந்த அறிவோ அனுபவமோ இருப்பதை விட உயர் பதவியும் பட்டங்களும் இருப்பது முக்கியமானது. அடுத்தபடியாகத் தகுதி வாய்ந்த யாரையாவது பிடித்து ஒரு பாராட்டுரையைப் பலரும் வாசிக்கக் கூடிய ஒரு பத்திரிகையில் பார்க்க விரும்புகின்றனர். அண்மைக் காலங்களில் வெளியீட்டு விழாக்களில் நாலைந்து பேர் மேடையேறிப் படைப்பையும் படைப்பாளியையும் வானளாவப் புகழுவதை விரும்புகிறார்கள். இவை பல காலமாகவே ஏற்கப்பட்ட இலக்கிய உலக
swevo -70 (5
 

நடவடிக்கைகள் ஆகிவிட்டன. இவற்றுக்கும் மேலாகப் பரிசுகட்கும் விருதுகட்குமான போட்டா போட்டியும் நமது படைப்பாளிகளின் சீர்குலைவிற்கும் பங்களிக்கின்றன.
பாராட்டுக்கள் எதிர்பார்க்கப்பட்ட இடங்களில் இருந்து வராத போது ஏற்படுகிற ஏமாற்ற உணர்வு அது கிடையாமையைத் தமக்கு எதிராக யாரும் பயன்படுத்தக் கூடுமோ என்று அஞ்சுகிற மனநிலைக்கும் அதற்கெதிரான தற்காப்பு நடவடிக்கைகட்குங் காரணமாகிறது. அதற்குமப் பால் தம் மை அங்கீகரிக்க மறுத்தோருக்குத் தீய நோக்கங் கற்பிக்கிற நடவடிக்கைகள் வரை சிலரைப் போகத் தூண்டுகின்றது.
முன்னுரையோ விமர்சனமோ ஒருவரது கருத்து என்பதை நாம் ஏற்க ஆயத்தமாக இருந்தால், எவரதும் ஒரு கருத்து நியாயமானதா மிகையானதா வலிந்து குற்றங் காணுவதா என அறிவதற்கு உள்ள தேவைக்கு மேலாக நாம் சிரமப்பட வேண்டியதில் லை. பயனுள்ள கருத்துக்கள் ஒரு படைப்பாளியின் உயர்வுக்கு உதவும் . பயனறி ற வை, மிகுதியான புகழுரைகளாயினும் நியாயமற்ற கண்டனங்கள் ஆயினும் ஒரு பெறுமதியுமற்றவை.
ஆனாலும் பல லைக் கழக விரிவரையாளர் களை இவி வாறான கருமங்கட்காக நாடிச் செல்வது படைப்பாளிகள் பலரை ஒரு நோய் போலப் பீடித்துள்ளது. அவ்வாறு தேடிக் கிடைக்கிற விரிவுரையாளரைப் பேராசிரியர் என று அழைப் பதும் ) போதனாசிரியர்களை விரிவுரையாளர்கள் என்றும் இல்லாத தகைமைகளையும் கலாநிதிப் பட்டங்களையும் சுமத்தி விடுவதும் அங்கீகாரம் தேடுவோரது தேவையாக மட்டுமன்றி அதை வழங்குகிறவர்களது தேவையாகவுங் கூடத் தெரிகின றன. இப் போது கலாநிதிப் பட்டங்களையும் பேராசிரியர் பதவிகளையும் விற்பனை செய்யக் கூடிய சர்வதேச நிறுவனங்கள் உள் ளன. நம் மரிடையே உலாவுகற சில கலாநிதிகளும் பேராசிரியர்களும் போலி மருத்துவர்கள் G3Lu IT 6) Lj (8Lu IT 6\fuu m 66I Lu L' L bi 85 60) 6IT Li பயன்படுத்துகின்றது பற்றி நம்மிற் சிலரேனும் அறிவோம்.
எங் காவது தமது நுT லுக் கான முன்னுரைகளில் முகமனாகக் கூறப்படுகிற சில சொற்றொடர்களைத் தங்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரமாகச் சிலர் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவதுண்டு. இந்த அழகில் நூலை வாசியாமலே எழுதுகிற முன்னுரைகளிலிருந்து இவ்வாறான அங்கீகாரங்களைத் தேவைக்கு
9V9N - ëstë 2008 O

Page 55
25-15 әрі மேலாகவே பெற இயலும். வேண்டிய அங்கீகாரங் கிடையாத போது சிலர் நடந்து கொள்ளுகிற விதத்தைக் காட்ட நானறிந்த சில தருணங்கள் பற்றிக் கூறுவது பயனுள்ளது. இந்தியாவிலிருந்து ‘சரஸ்வதி ஆசிரியர் விஜயபாஸ்கரன் ஒருமுறை யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த போது கைலாசபதி வீட் டி ல விரு நீ துணி ன அழைக்கப்பட்டார். பேச்சுத் துணைக்கு மேலும் ஒருவர் வேண்டும் என்று யாரை அழைப்பதென்று யோசித்து, ஜூவா வைக் கூப் பிட் டால டானியலுக்குப் பிடிக் காது, டானியலைக் கூப்பிட்டால் ஜீவாவுக்குப் பிடிக்காது, இருவரையும் கூப்பிட்டு இருவரும் மோதினால் விருந்தாளிக்குச் சங்கடம். எனவே முற்போக்கு எழுத்தாளர் வட்டத்திற்கு வெளியே தேவனை அழைத்தார். கைலாசபதி இருவரையும் அழையாமல் ஏன் தேவனை அழைத்தார் என்ற கேள்வியை தேவன் வேடிக்கையாக எழுப்ப, ஜீவா அதற்கு ஒரு சாதிய விளக்கம் கொடுத்துக் கைலாசபதியைப் பற்றித் தவறான எண்ணத்தை எழுப்பினார். டானியல் கைலாசபதியை நன்கு அறிந்தவராதலால் அதை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. கைலாசபதி தன்னை அழையாததைத் தனக்கு மறுக்கப்பட்ட அங்கீகாரமாக ஜீவா கருதியதாலோ என்னவோ பின்பு ‘நிலவிலே பேசுவோம்’ என்ற என்.கே. ரகுநாதனின் கதையை வைத்துக் கைலாசபதி மீது எஸ். பொன்னுத்துரை முதலாக யேசுராசா, மு. பொன்னம்பலம் போன்றோரும் தமிழகத்தில் வெங்கட் சாமிநாதன் என்கிற மாக்ஸியத் துவேஷி வரை அவதூறு கிளப்பிய மூன்று தசாப்தங்களில் கைலாசபதிக் குச் சார்பாக ஜீவா வாயப் திறக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் முன்பு என்.கே. ரகுநாதன் எழுதும் வரை அந்த அவதூறு நெருப்பில்லாமல் புகையுமா என்ற விதமாகக் கிளப்பப்பட்டே வந்தது. ஆனாலும் கைலாசபதி இதற்காக யாரிடமும் பகைமை பாராட்டவும் இல்லை. தனக்காகச் சாட்சி சொல்லும்படி யாரையுங் கேட்கவுமில்லை.
கைலாசபதியிடம் முன்னுரை கேட்டு மறுக்கப்பட்டவர்கள் இருக்கலாம். எனினும் அரசியல அடிப் படையிலோ கல விதி துறைசார் நீ தோ தொடர் புடையவர்களே பெரும்பாலும் அவரிடம் முன்னுரை கேட்டிருப்பர். முன்னுரைகளை அறிமுகமாகவும் படைப்பை அறிமுகப்படுத்துகிற விதமாகவும் எழுதுகிற கைலாசபதி விமர்சனப் பாங் காகவும் எழுதுவதுண்டு. லக்ஷ்மண ஐயரின் உறவினர் என்ற அடிப் படையில் அவர் மூலமாகக் கைலாசபதியிடம் தனது சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை கேட்ட ஒருவர் கைலாசபதியின் விமர்சனப் பாங்கான சில கருத்துக்களைத் தாங்க
rweve -70 G
 

செ.யோகநாதன்
இலங்கை முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் முக்கிய படைப்பாளியாகவும் செயற்பாட்டாளராகவும் விளங்கி அண்மையில் மறைந்த எழுத்தாளர் செ. யோகநாதன் அவர்களுக்கு தாயகம் தனது அஞ்சலியைத் தெவிரித்துக் கொள்கிறது. ஏறக்குறைய 40 வருடங்களாக இலங்கை இலக்கிய வாழ்வில் ஏனையோருடன் இணைந்து கொண்டார்.
நாவல், குறுநாவல், சிறுகதை, குழந்தை இலக்கியம், சினிமா ஆகிய துறைகளில் அநேக நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
*யோகநாதனின் கதைகள் வாழ்வின் யதார்த்தத்தைச் சித்தரிக்கின்ற வேளையிலேயே அதன் உள்ளடக்க வலுவினையும் பெற்றிருக்கின்றன. கதைகளின் கலையழகு வெகு இயல்பாகவே உள்ளடக்கத்தோடு ஒட்டி நிற்பதற்கு எழுத்தாளரின் சிந்தனைத் தெரிவு, பார்வை என்பனவே காரணமாகும். யோகநாதனின் கதைகள் இத்தகைய அம்சங்களைப் பூரணமாகப் பெற்றிருக்கின்றன” என்று பேராசிரியர் கைலாசபதி செ. யோகநாதனின் ஆரம்பகால எழுத்துக்கள் பற்றிச் சிலாகித்துள்ளார்.
தேசிய கலைஇலக்கியப் பேரவையின் தாயகம்" சஞ்சிகையின் முன்னோடி இதழாக செ.யோகநாதன் வெளியிட்ட ‘வசந்தம்" சஞ்சிகை அமைந்திருந்தது எனலாம். வசந்தம்" சஞ்சிகையினூடாக இலங்கை எழுத்தாளர்கள் மக்கள் எழுத்தாளர்களாக பர்ணமிக்கும் வகையில் பலரை உருவாக்குவதில் செ. யோகநாதனின் பங்களிப்புக் கணிப்புக்குரியதாகும்.
2%' = Sð 200& :

Page 56
கட்டுரை
முடியாமல் வெகு காலங்கடந்து தன்னுடைய ஆற்றலைக் கைலாசபதி அடையாளங் காணாது விட்டபோதும் தனக்கு அங்கீகாரம் பிற இடங்களிலிருந்து கிடைத்ததாகத் தனது சிறுகதைத் தொகுப் பின் முன் னுரையில எழுதியிருந்தார். அந்த நூலை நான் விமர்சித்து எழுதிய நீண்ட விமர்சனக் குறிப்பில் அவரது கதைகளின் பலவீனமான அமைப்பைப் பற்றி எழுதியிருந்தேன். அதற்கான பதில், ஒரு சஞ சிகையில , கூறப்பட்ட விமர்சனக் கருத்துக்கட்குச் சம்பந்தா சம்பந்தமில்லாமல் வேறு சிலர் மூலங் கூறப்பட்டு தனிப்பட்ட தாக்குதல்களின் தோரணையிலே வெளியானது.
1970 6 ബി സെ வெளியான ரஷ ய விண்வெளிப் பயணங்கள் பற்றிய ஒரு தமிழ் நுT லை விமர்சனத்திற்காக அதனி ஆசிரியரிடமிருந்து பெற்ற என் சக ஆசிரிய நண்பர், என்னையே ஆங்கிலத்தில் விமர்சித்து எழுதுமாறு கேட்டார். சோவியத் தூதரகத்தில் இருந்து பெற்ற தகவல்களை வைத்து எழுதப்பட்ட அந்த நூலில் சினிமாத் தனமான கிளுகிளுப்புச் சிறிது இருந்தது. தகவல்கள் முழுமையற்றும் இருந்தன. எனவே அவை பற்றியுங் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். விடுவாரா நூலாசிரியர். ஒரு கலைப்பீடப் பேராசிரியரைப் பிடித்துத் தனது நூலை வானளாவப் புகழ்ந்து அதே நாளேட்டில் எழுத வைத்தார். இதுதான் விமர்சனங்களை எதிர் கொள்ள நாம் பழகியுள்ள விதம் . என்னுடைய கருத்துக்களை மறுத்து எவ்வளவு கடுமையாக எழுதியிருந்தாலும் நூலாசிரியரை மதித்திருப்பேன். ஒரு கலாநிதி கண்டித்தால் அதற்குப் பதில் ஒரு பேராசிரியரது புகழுரை. இந்த அணுகுமுறையினி நடுவே தனது நூலுக்கான எனது முன்னுரையில் எனது கடுமையான விமர்சனக் கருத்துக்களைப் பண்போடு ஏற்றுப் பகைமை பாராட்டாத பெனடிக்ற் பாலனையும் நினைவு கூராமல் இருக்க இயலாது.
கைலா சபததியரினி அங்கீகாரங் கிடைக் காததாலி அவரைத் தாக் கி எழுதியவர்களில் எஸ். பொன்னுத்துரை முக்கியமானவர். மு. தளையசிங்கத்தின் மாக்ஸிய விரோத எழுத்துக்களின் தோற்றுவாயையும் அவரது கருத்துக் குழப்பத்தையும் விமர்சித்துக் கைலாசபதி எழுதியதை மு. த. வட்டம் இன்றுவரை மன்னிக்கவில்லை. கைலாசபதி மெய்யாகவே மகாகவியின் கவிதைகளை, முக்கியமாக அவற்றின் உள்ளடக்கத்தின் அடிப்படையில், மெச்சவில்லை. அது சரியான மதிப்பீடா இல்லையா என்பது பற்றிக் கருத்து வேறுபடலாம். எடுத்த எடுப்பில் இருட்டடிப்பு என்றும் பாராபட்சம் என்றும் பேசுகிறவர்கள்
E 3/NW22 -70 C
 

தங்கள் கையில் அற்ப அதிகாரம் வந்த போது நடந்து கொண்ட விதங்களை 1980களிலிருந்து கண்டிருக்கிறோம்.
கைலாசபதி நூல் விமர்சனங்களென அதிகம் எழுதியவரல்ல. ஆனால் அவரது எழுத்தாளர் பட்டியலில் இடம்பெறுவதை அவரது அங்கீகாரம் என்றும் பெறாமையை நிராகரிப்பு எனிறுமி படைப் பாளிகள் எவரும் நினைத்திருந்தால் அது கைலாசபதியின் கட்டுரைகளின் நோக்கத்தை விளங்கிக் கொள்ளாமையேயன்றி வேறெதையுங் குறிக்காது. விமர்சனம் என்றாலே பாராட்டு என்று எதிர்பார்ப்பதும் பாராட்டுகிறவர்கட்கு ஒரு தகுதி வரிசையை அவர்களது பட்டம் பதவிகளின் அடிப்படையில் உருவாக்குவதும் கெஞ்சி இரந்தோ தனிப்பட்ட செல்வாக்கின் மூலமோ பெற்ற பரிசுகளையும் விருதுகளையும் விளம்பரப்படுத்தித் தம்மைத் தகுதியுடையோராகக் காட்டிக் கொள்வதும் நாமே நமக்கென உருவாக்கிக் கொண்டுள்ள வியாதிகள்.
“கலாநிதிகள்” “பேராசிரியர்கள்’ என்று நக்கலாகப் பேசிக் கொள்ளுகிறவர்கள், தம் மையும் ஒரு ஆளாக மதிக்க ஒரு கலாநிதியோ பேராசிரியரோ அகப்பட்டால் அவர் பின்னே நாயாய் அலை வதையும் நாம் காணுகிறோம். இது மிக மோசமான ஒரு தாழ்வுச் சிக்கலின் வெளிப்பாடென்றே நினைக்கிறேன்.
பல்கலைக் கழகங்களையும் பல்கலைக் கழக விரிவுரையாளர்களையும் இழிவாகப் பேசுவதையே வழமையாகக் கொண்ட சிலர் தங்களுக்கு வேண்டிய எவரும் பல்கலைக்கழக விரிவுரையாளராகினால் தங்களது கதையைக் கொஞ்சம் மாற்றிக் கொள்கிறதை நாம் கவனிக்கலாம்.
பல்கலைக் கழகங்கள் தூய்மையின் உறைவிடங்களல்ல. எந்த ஒரு நிறுவனமும் தன்னைச் சூழவுள்ள சமூகத்தை விட அதிகந் தூயதாக இருப்பது கடினம். சமுதாய நோய்கள் பல கலைக் கழகங்களைப் பிடிக்கின்றன. அதைவிடத் தம்மைப் பிறரினும் அறிவால் உயர்ந்தோராகக் காட்டுகிற தேவையும் கணிசமானோரிடம் உண்டு. எவரிடமுந் தனது ஆற்றலுந் தகைமையும் பற்றிய நிச்சயமின்மை அதிகமாக இருப்பின் அவ்வளவுக்கு அவர்கள் தம்மை உயர்ந்தோராகக் காட்டிக் கொள்ள வேண்டியுள்ளது. தங்களது தோல்விகட்குரிய பொறுப்பனைத்தையும் பிறர் மீது சுமத்துகிற போக் கை நாம் இவ்வாறானவர்களிடங் காணலாம்.
தமக்குப் பல்கலைக் கழக நியமனங் கிடையாதது பற்றிப் பதி திரிகைகளில
298) = Seð 2008

Page 57
கட்டுரை
விளக்கங்களையும் விவாதங்களையும் அண்மைக் காலங்களில் அதிகமாகவே கண்டிருக்கிறேன். இவ்வாறான விவாதங்களில் பதவிகட்கான தெரிவுகள் எவ்வாறு நடக்கின்றன என்பது பற்றிய கற்பனைகள் அதிகம். அதைவிடப் பல்கலைக் கழகங்களைச் சொட்டை சொல் வதையே வழக்கமாக்கிக் கொண்டவர்கள் கூட இவ்வாறான விவாதங்களில் தங்களுக்கு விளங்காத கதைகள் கூறுவதையும் இன்று காணுகிறேன்.
பல கலை கி கழகங்களையும் விரிவுரையாளர்களையும் கேவலமாகப் பேசிக் கொண்டு திரிகிற அதே இலக்கியப் பிரமுகர்கள் தங்களை ஒரு மாணவர் அமைப்போ ஒரு பல்கலைக்கழகக் கல்விப் பிரிவோ கூட்டத்திற் பேசவோ சிறப்பு விருந்தினராகவோ அழைக்கிற போது மெய்சிலிர்த்துப் போய்த் தம்மை அழைத்த ‘சான்றோரை மெச்சிப் புகழ்வதையும் நாம் காணுகிறோம்.
உணி மையிலி நமது பலி கலைக் கழகங்கள் கடந்த கால் நூற்றாண்டிற்குள் மிகவுஞ் சீரழிந்துள்ளன. வடக்கு-கிழக்கில் உள்ளவற்றின் நிலை பரிதாபமானது. தரத்தை உயர்த்தப் போராட வேண்டியவர்கள் தங்களது பதவிகட்காக அரசியல் நடத்துகின்றனர். யாழ் பல்கலைக்கழகத்தில் யாழ்ப்பாணச் சமூகத்தின் பெரிய நோயான சாதி வெறி இன்னமுஞ்
Uாம்பு விழுங்கிய நிலத்தி
உடைந்த வானத்தின் கீழாக நிலவு தொங்கிக் கொண்டிருந்தது நட்சத்திரங்கள் பேரிரைச்சலோடு புழுதியில் விழுந்து கிடந்தன.
கனவு நிரம்பிய அழகிய வாழ்வில் புழுக்கள் நெளிந்தன. எனது காதலியின் முகம் ஒடுங்கிக் கொண்டிருந்தது.
அச்சம் அவளின் முகத்தில் கசிந்து நாடி வழியாக வழிந்து கொண்டிருந்தது.
எனது கைகள் சோர்ந்திருந்தன. நாம் அணிந்திருந்த
70ح۔ طالما^3
மோதிரங்கள் கொஞ்சம் கொஞ் கரையத் தொடங்
&Deal 6bu Diņ மரணம் பிசுபிசுத்த
அவள் எனது கன் அச்சம் பிறிடக் க நான் அவள் உத ஏக்கம் வழியக் க
நமது கண்கள்
தத்தளித்த வாழ்வி அந்தரத்தின் துய ஆடிக் கொண்டிரு
சிறிய துண்டு நில கசங்கிய துணி (
 

செயற்படுகிறது. எனவே தான் இவ்வாறான இடங்களில் வழங்கப்படும் கவுரவப் பட்டங்கள் பெறுமதியற் றவையாகினி றன. ஆயினும் பெறுமதியற்ற இப் பட்டங்களை நிராகரிக்க மனமின்றி அவற்றால் மகிழ்வதும் அவை கிடையாத போது வெதும் புவதும் அங்கீகாரத்திற்கான ஏக்கத்தின் வெளிப்பாடே அன்றி வேறெதுவுமல்ல.
ஒரு நல்ல படைப்பாளி, தான் யாருக்காக எழுதுகிறேன் என்று தெளிவுடன் இருக்கிறார்; தான் என்ன நிலைப்பாட்டிலிருந்து சூழவுள்ள உலகை நோக்குகிறார் என்பதில் தடுமாறாமலிருக்கிறார். தனக்குரிய அங்கீகாரம் யாரிடமிருந்து எதற்காக வேண்டும் என்பதிலும் உறுதியுடனிருக்கிறார். அது கிடைக்கிறதோ இல்லையோ அவரது உழைப்பும் ஊக்கமும் அதனாற் தளருவதில்லை.
யாராலும் யாரையும் எளிதாக இருட்டிக்க இயலாது. போலியான விளம்பர ஒளியை விட இருள் பரவாயில்லை.
ஒரு படைப்பாளி முதலில் தனக்கு உண்மையுடையவராக இருக்க வேண்டும். அப்படி இருக்கிறவருக்கு நடுநிலை, சத்தியத் தேடல், தூயகலை என்பது போன்ற பம்மாத்துக்கள் தேவைப்படா. பல்கலைக்கழக அங்கீகாரம் ஒரு பொருட்டாகவும் இராது.
ல் கிடந்த மோதிரங்கள்
தீபச்செல்வன் - பாம்பு விழுங்கிய FLDTuiu நிலத்தின் மீதியில் கின. நமது சொற்கள்
உயிரற்றுக்கிடக்க களிலும் உரையாடல்கள் .மடிந்து கிடந்தன ملوية
*னங்களில் எனது முகம் சுருங்கிக் கன்டாள் கொண்டிருந்தது. டுகளில் ண்டேன். நமக்காய் சிரட்டையில்
எடுத்து வைத்திருந்த கஞ்சியில் ஒரு துண்டு செல் த்தில் வந்து விழுகிறது. 555le
நமது உடல்களில் த்தில் விசம் பரவ ரிக்கப்பட்டிருந்தது. துண்டு நிலமும் சிதைகிறது.
evor :e é'ei 2008 go

Page 58
தன் முன்னே வந்து நின்ற கலாநிதி. திலகவதி கருணாகரனை ஆச்சரியமாகப் பார்த்தாள் ஜெயராணி. பத்து வயது குறைந்து விட்டிருந்தது அவளுக்கு, மேக்கப்மன் ஹர்ஷா அபயவர்த்தனவின் கைவண்ணத்தில். ஒப்பனை அறைக்கு வெளியே கதிரையில் சிந்தனையில் மூழ்கியிருந்த ஜெயராணிக்கு, திலகவதியை அடையாளம் காணவே சில செக் கண்கள் தேவைப்பட்டன. திலகவதியை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தாள்.
விளக்குகள் பளிச் சிட்டன. கமரா ஜெயராணியை நோக்கித் திரும்பியது. குண்டுசி விழும் நிசப்தம். சமிக்கைகள்.
‘' வணக்கம். இன்றைய ‘மாண்புறும் மாதர்' நிகழ்ச்சியில் சந்திக்கப் போகும் பிரபல்யம் யார் என்பதை அறிய எல்லாரும் ஆவலாய் இருப்பீர்கள். கலாநிதி திலகவதி கருணாகரன். மனித உரிமைகள் அமைப்பின் தெற் காசிய நாடுகளிற்கான முனி னாள் ஒருங்கிணைப்பாளர், சமூக சேவகி. வடக்கு கிழக்கில பெற்றோரை இழந்த பெணி குழந்தைகள், விதவைகள் உள்ளிட்ட "ஈஸ்வரி அபயகரம்’ என்னும் அமைப்பை நிறுவி நடாத்த வருபவர். வணக்கம், டொக்டர் திலகவதி கருணாகரன்’.
“வணக்கம்”.
 
 

கமரா சிறிது அசைந்து இருவரையும் உள்வாங்கத் தொடங்கியது. ஜெயராணி அந்தத் தனியார் தொலைக் காட்சி நிலையத்தில், மகளிர் நிகழ்ச் சித் தயாரிப் பாளர் மட்டும் அல்ல, அறிவிப்பாளருங் கூட. அது தவிர அரசியல் வாதிகள், பாதுகாப் புத் துறை அதிகாரிகள், கல விமானி கள் எனப் பலதரப்பட்டோரைச் செவ்வி காணவும் அவளது ஆங்கில அறிவு அத் தொலைக் காட்சி நிலையத்திற்குத் தேவைப்பட்டது. துணிச்சலான கேள்விகளும், அணுகுமுறையும் ஜெயராணிக்கு நாடு முழுதும் விசிறிகளைத் தந்திருந்தது. அவளது நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு மட்டுமல்ல, அவளது உடை, காதணி, தலையலங்காரம் என்று ரசிக்கவும், விமர்சிக்கவும் பெண் விசிறிகள் அதிகம்.
‘ஒரு புகழ் வாய்ந்த நிறுவனமொன்றில் பொறுப்பான பதவியிலிருந்த உங்களுக்கு இங்கு , பதட் டமான சூழலில சேவையாற் ற
வேண்டுமென்ற மனப்பாங்கு எப்படி வந்தது?”
'உண்மையைச் சொல்வதென்றால் எனது தாயைப் பராமரிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தான் நான் இங்கு வந்தேன்’
இங்கில்லையா?”
2279 R). Is é 'idh 2008 . . . . . .'

Page 59
சிறுகதை
* எம் பெற்றோர்க்கு நாங்கள் ஆறு பெணிகள் . அறுவரும் வெளிநாடுகளில் குடியேறினோம். எனது பிள்ளைகள் படித்து அங்கு வேரூன்றி விட்டார்கள். எனது கணவர் இறந்து விட்டார். அதன் பின் என் தந்தையும் இறந்து விட அம்மா இங்கே தனித்து விடப்பட்டார். வாழ்ந்த இடத்தை விட்டு வெளியேற மறுத்து விட்டார். எனது சகோதரங்களை விடப் பொறுப்புகள் குறைந்த நிலை எனக்கு. இங்கு வந்தேன்’.
‘அநாதைகள், விதவைகட்கு ஆதரவு தர வேண்டுமென்று நீங்கள் நினைத்தது எப்போது?’
‘’ நாணி ஐந்து சகோதரிகளுடன் பிறந்ததினாலோ என்னவோ, சிறுவயதிலிருந்தே பெண் களென்றால் ஒரு அனுதாபம் . ஒரு சொ."ப்ட் கோணர்’ என் மனதில் இருந்தது. போர்ச் சூழலில் பெற்றோரை இழந்த குழந்தைகள் - குறிப்பாகப் பெண் குழந்தைகள், கணவனை இழந்த விதவைகளைப் பார்த்ததும் ஏதாவது இவர்கட்குச் செய்தே ஆக வேண்டுமென்ற எண்ணம் என் மனதில் தோன்றியது”
‘இடம், நிதி போன்ற பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?”
“சிறு வயதில் வறுமையில் வாடியவர்கள் நாங்கள். தந்தை ஒரு விவசாயி. இருந்த நிலங்களை விற்று எம்மைப் படிப்பித்தார். சிறிய வீட்டுடன் எஞ்சியது ஒரு சிறுகாணி தான். நாங்கள் நல்ல நிலைக்கு வந்ததும் எல்லோரும் சேர்ந்து வசதியான பெரிய வீடொன்றை எமது பெற்றோர்க்கு கட்டிக் கொடுத்தோம். அதில் தான் இன்று ஈஸ்வரி அபயகரம் இயங்குகிறது”
*. நிதி?” ‘‘ வெளிநாட் டிலி உள் ள எனது சகோதரிகள் உதவுவதுடனி , அவர்கள் அங்குள்ள எம்மவரிடமும், நிதி நிறுவனங்களில் இருந்தும் பணம் பெற்றுத் தருகிறார்கள். இங்கும் அரசு சார் பற்ற நிறுவனங்களிடமிருந்தும் உதவிகள் கிடைக்கின்றன’
“அடுத்த கேள்விக்குப் போகுமுன் ஒரு தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது. ..ஹலோ”
“ஹலோ, நான் கனகா அருந்தவநாதன், தெகிவளையிலிருந்து. திருமதி திலகவதி கருணாகரனுடன் பேச விரும்புகிறேன்”.
“கேளுங்கள்’. 'திலகவதி. நான் உங்கள் பக்கத்து வீட்டில் வசித்த கனகா. நினைவிருக்கிறதா?”
‘’ நனி றாக நினைவிருக் கிறது. சொல்லுங்கள்’.
5( 70 حب بن طالماح مجھ.
 

“உங்கள் பெற்றோர்கள் நிலங்களை விற்று உங்களனைவரையும் படிப்பித்ததாகச் சொன்னீர்கள். உங்களில் இருவர் டொக்டர்ஸ். ஒருவர் பொறியியலாளர். மூவர் பி.எச்.டி ஹோல்டர்ஸ் அப்படித்தானே?” ‘ஆமாம். சரி’ “பெண்கள் என்றால் பிறந்தவுடன் சீதனம் சேர்க்கத் தொடங்கும் எம்மவரிடையே உங்கள் பெற்றோர்கள் வித்தியாசமானவர்கள். அதனால் தான் நீங்கள் இந்த நிலைக்கு உயர முடிந்தது”. 'உண்மைதான். என் பெற்றோர்க்குப் பெரிதாகப் படிப்பு இல்லாவிட்டாலும் முற்போக்கு எண்ணமிருந்தது. இன்னுமொன்று தெரியுமா, கனகா?”
‘என்ன?” “நாங்கள் ஒருவரும் சீதனம் கொடுத்து மணக்கவில்லை. கொடுப்பதற்கும் ஒன்றும் இருக்கவுமில்லை. எம்மை விரும்பி வந்த மணமகனி மார் கி கு பெற்றோர் எம் மை மணஞ்செய்து வைத்தனர். கல்வி, பெண்களுக்கு இழை கி கப்படும் சீதனம் போனி ற பல கொடுமைகளிலிருந்து மீள உதவும்”.
“ஒரு ஆணின் உயர்வுக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்ணால் தன் வாழ்வை நன்றாக அமைத்துக் கொள்ள முடியாதா என்ன? நீண்ட நாட்களின் பின் உங்களைத் தொலைக்காட்சியில் பார்த்ததும் உரையாட விரும்பினேன். உங்கள் முயற்சிகள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள். வணக்கம்”.
“வணக்கம்” ‘வெளிநாட்டில் வசதியான வாழ்வைப், பதவியை உதறிவிட்டுச் சிக்கலான சூழலில் தாய்நாட்டில் பணி செய்யும் மனப்பக்குவம் நம்ப முடியாத ஒன்று”.
'நீங்கள் இளையவர்கள். எது தேவை, எதற்கு முதலிடம் கொடுப்பது என்பதை அனுபவம் தான் கற்றுத் தரும். எனது தாய் இறக்கும் வரை, ஈஸ்வரி அபயகரத்தில் எம்முடன் சந்தோசமாக இருந்தார்’
இதற்கு ஜெயராணி தலையை அசைத்து விட்டு, முகம் மலரப் புன்னகைத் தாள். கேள்விகள் , பதிலி களர் , சாதனைகள் , சோதனைகள் என்று நீண்ட நேர்காணல் முடிவுற்றது.
‘’ நன்றி, டொக்டர் திலகவதி கருணாகரன் . கல வி, தொழிலி , சமூக சேவையெனிறு உங்கள் அனுபவங்கள் "மாணி புறும் மாதர் நேயர்களுக்கு முன் மாதிரியாக, உதவியாக அமையும். வணக்கம்”.
“வணக்கம்”.

Page 60
சிறுகதை
“நாளை இலக்கியவானில் ஒளிவீசும் ஒரு பெண் தாரகையைச் சந்திக்க இருக்கின்றோம் அதுவரை வணக்கம் கூறி விடைபெறும் நான் ஜெயராணி மகாதேவன்”.
கணிணாடித் தடுப்பிற்கு அப்பால் தொலைக்காட்சிகளின் முன் நேரடி ஒளிபரப்பைட் பார்த்துக் கொண்டிருந்தனர் தமிழ்ப் பிரிவுத் தயாரிப்பாளரும், தொழில்நுட்பவியலாளர் ரஞ்சித் சுமணசிறியும் . ஈறுகள் தெரியச் சிரித்து விடைபெறும் ஜெயராணியைப் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சித், ‘என்ன வயசிருக்கும் ஜெயராணிக்கு.? இருபத்தெட்டு. முப்பது இருக்குமா?”
“இங்க அப்பொயின்ட்மென்ட் கிடைச்ச பன்ரெண்டு வருசத்துக்கு மேல. கூட இருக்கும் கதவைத் தளர் ளரிக் கொணி டு தொலைக்காட்சி நிலையத்தின் வெளியே வந்த ஜெயராணியைத் தாக்கிய வெப்பக் காற்று எயார்கண்டிஷனின் அருமையைக் கூறியது. ஆறு மணிக்கே இருட்டி விட்டது. தெருவிளக்கை வட்டமிடும் ஈசல்கள் நகர்ப்புறத்தே இருந்தது தொலைக்காட்சி நிலையம். ஆள்நடமாட்டப் பொதுவாகவே குறைவு அந்தத் தெருவில் மூச்சிரைக்கும் வேகநடை. பிரதான வீதியை அண்மித்து விட்டாள். முகத்தில் ஓரிரண்டு மழைத்துளிகள் விழவே கைகள் தன்னிச்சையாய ஹான்ட்பாக்கினுள் துழாவின. குடையை மேக்க றுாமில் வைத்து விட்டது தெரியவந்தது. திரும்பி செல்வதா விடுவதா என்று தடுமாற்றம். அதற்குள் நனைந்து விடுவாய் என்றது மனம். கார் ஒன்று டயர்கள் தேயக் கிரீச்சிட்டு நிற்கவே திடுக்கிட்டு: திரும்பினாள். இறங்கும் ஷட்டர் வழியே திலகவத கருணாகரனின் முகம் தெரிந்தது.
‘‘நான் கொட்டஹெனா போறன் . நீங்கள்?”
“மட்டக்குளி” ‘ஏறுங்கோ. ஆமர் ஸ்ரீட் ஜங்சனில் இறக்கி விடுறன்’.
திலகவதி அனுசரணையில் ஆமர் ஸ்ரீ கடை வாசலில் நனையாமல் இறங்க முடிந்தது இறங்கியவள், தூரத்தில் சிக்னலில் மாட்டி கொண்டு அவள் செல்ல வேண்டிய பள நிற்பதைப் பார்த்தாள். ஒடிச் சென்று ஏறுவதற்கு5 பாதி நனைந்து விட்டாள்.
வீதி அபிவிருத்தி மேலோங்கி, மை துாறும் முன்னே வெள்ளம் தேங்கி விடு கொழும்பு வீதிகளில் பஸ் ஆமை வேகத்தி ஊர்ந்தது. மழை பலத்ததால் ஷட்டர்கள் எல்லா மூடப்பட்டிருந்தன. துறைமுக ஊழியர்கள் வேை முடிந்து வரும் நேரம். நெரிசலில் இடிபட்டு பலவித கலவை மணங்களில் மூச்சுத் திணற
brW2 - 70
 

ളിമ്നy ി%ി soa)/ ഉിമ്ന ബ്രി
செய்த தவறென்ன தோழர்களே! ஆண்டு ஒன்று போயினும் மீண்டும்நீர் வருவீரெனக் காத்திருக்கிறோம் வாசல் கதவுகளைத் திறந்து வைத்தபடி
கொலை செய்தீரோ, கொள்ளையடித்தீரோ, பயங்கரவாதப் பண்ணிசைத்தீரோ? நீவிர் செய்த தவறென்ன தோழர்களே இலங்கை மணித்திருநாடு சிறக்கவென சிங்களச் சோதரருடன் சிநேகம் கொண்டது
தவறா ! நிலைமாற வேண்டுமெனில் மலையகத்து
மாந்தர்தாம்
விழிபெற வேண்டுமென்றீர் மேல்கொத்மலை திட்டத்தை எதிர்த்தீர் திரண்டெழுந்தார் மக்களெல்லாம் ஏனோ, நீர் சிறை சென்றீர் ல் உழைப்பாளர் உலகெலாம் ஒன்றாய்
உணர்ந்தோதி ஒன்றுபடவேண்டுமென்றீர் எல்லா மக்களும் எல்லா இனத்தவரும் எல்லா உலகமும் இன்பம் பெறவேண்டுமென்றீர்
இனிதாய் வாழ்வதையே இலக்கெனக் கொண்டீர்
இவையே நீர் செய்த குற்றமெனில் சி விசாரணையேன் விடுதலையேன் f es f விலங்குடைக்க விரைவார் b இலங்கை மக்கள் விரைவாய்!
S)
செண்பகன்
9
S
,
9Wpril - ah 2008.

Page 61
சிறுகதை
இரண்டு மணித்தியாலங்கள் பயணித்து இறங்கிய போது மழை தூறல் போட்டுக் கொண்டிருந்தது. நனைந்து கொண்டே போக வேண்டியது தான். பார்மஸியைக் கண்டதும் தான் பம்பர்ஸ்’ நினைவு வந்தது. வாங்கிக் கொண்டு வீடு வந்த போது அப்பா மகாதேவனி காத்துக் கொண்டிருந்தார். அவள் கேட்கும் முன்னே பதில் சொன்னார்.
‘அம்மாக்கு சூப் குடுத்தன். பின்னேரம் டியும் குடிச்சா’.
தலையை ஆட்டிவிட்டு அறைக்குள் நுழைந்தாள். உணர்வற்றுப் போன கை, கால்கள் குச்சியாய் மாறிவிட, வெறும் எலும்புக் கூட்டைத் தோலாய் போர்த்தது போல் கட்டிலில் கிடந்த அம்மாவைப் பார்த்தாள். கண்கள் திறந்தபடி இருந்தன. இவளைக் கண்டதும் முகத்தில், கண்களில் மாற்றம், ஒருவித பரவசம் தெரிந்தது. இவ்வளவு நேரம் முழிச்சுக் கொண்டு தான் இருந்தீங்களா அம்மா, இன்னும் எத்தினை நாளைக்கு? இந்தக் கேள்விகள் மனதில் எழுந்ததும் கணிகளில் நீர் நிறைந்தது. குணப்படுத்தலாம் என்ற நம்பிக்கை போய்ப் பல மாதங்களாகிவிட்டன.
D 6 மளவெனி நு 60 L 866) 6T மாற்றிவிட்டு, “நைட்டி'யை அணிந்து கொண்டாள். தோளில் புரணி ட முடியை அள்ளி ஒரு "க்ளிப்புக்குள் அடக்கிக் கொண்டாள். தாயின் உடலை ஈரத்துணியால் துடைத்து விட்டாள். உடல் முழுதும் பெளடர் பூசி விட்டுப் "பம்பர்ஸ்ஸை மாற்றினாள். மூச்சைப் பிடித்துக் கொண்டு மெதுவாய்த் தாயைத் துTக்கி, நிலையை மாற்றித் திருப்பிப் படுக்க வைத்தாள். அம்மாவின் வேலை முடிந்து, குளித்து விட்டு
“மத்தியானம் சாப்பிட்டு கறியெல்லாம் 'ப்ரிஜ்'ஜிக்கை வைச்சிட்டன்’
இதற்கு அர்த்தம், எனக்கு பசிக்குது, சாப்பாடு தா என்பது. ஜெயராணிக்கும் பசித்தது. எழுந்து பிட்டுக் குழைப்பதற்குத் தயாரானாள். வணக்கம் மாண்புறும் மாதர் நிகழ்ச்சியில் இன்று நீங்கள் சந்திக்க இருப்பது திருமதி.கோமதி ரீனிவாசன். பிரபலங்களுக்கு விளம்பரம் தேவையில்லை. எழுத்தாளர், பெண்ணிலைவாதி, சமூகசேவகி என்று பல்துறை விற்பன்னர்.
கைகள் வேலையில் மும்முரமாய் இயங்க, மனம் மறுநாள் நிகழ் விற்குத் தயாராகியது. இந்தக் கோமதி ரீனிவாசனை ஏற்கனவே சில நிகழ்வுகளில் சந்தித்திருக்கிறாள். பெண்ணியம் பேசுபவள். அதில் ஊறியவள். ஒரு நிகழ் வில் பெண்ணிற்கு இழைக்கப்படும் கொடுமைகளை அடுக்கிக் கொண்டே போனாள் 70۔ طالما۱ھ
 
 

கோமதி. பார்வையாளர் கேள்வி நேரத்தில் ஜெயராணி, ‘சீதனம் பற்றிப் பேசுகிறோமே. உண்மையில் இந்தச் சீதனம் கேட்பது யார்? மணமகளின் தாய் அல்லது சகோதரி தானே? பெண்ணிற்குப் பெண் தான் எதிரி.’ என்ற தோரணையிற் சொல்லப் போக அங்கிருந்த பெண்ணியவாதிகள் வெகுண்டு விட்டார்கள். முக்கியமாகக் கோமதி.
தன் மகனிடம் வாங்கித் தான் தன் பெண்ணிற்குத் திருமணம் என்ற நிலைமை இருக்கும் வரை பெண்களைக் குறை சொல்ல முடியாது. இதற்குக் காரணம் ஆணாதிக்கம்.” என்று காரசாரமாய் - வழமை போல் - அடித்துச் சொல்லிவிட்டாள் கோமதி.
நாளைக்கு கேக் கிற கேள்விகள் பெண் ணியம் தொடர்பான SF 6) பரிமாணங்களையும் உள்ளடக்கி இருக்கோணும். அப்பிடி இப்பிடி நிதானித்தால் கோமதியிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டி வரும். ஜெயராணியரினி மனம் மும் முரமாய் க் கேள்விகளைத் தயாரிக்கத் தொடங்கியது. என்னைப் போல தான் கோமதியும் என்னிட்ட கவனமாய் இருக்கோணும் எண்டு தன்னை தயார் படுத் துவா வோ? ஜெயராணி சிரித்துக் கொண்டாள்.
ஃபிரிஜ்ஜிலிருந்த கறிகளை எடுத்துச் சூடாக்கிப் பிட்டுடன் அப்பாவிற்குப் பரிமாறினாள். தாய்க்கு சூப் சிறிது சிறிதாகப் புகட்டிவிட்டு வர நேரம் பத்து மணியாகிவிட்டது. சாப்பிட வந்து அமர்ந்த போது பசி காணாமற் போயிருந்தது. சாப்பாட்டைப் பார்க்கவே பிடிக்கவில்லை. டீ குடித்தால் நன்றாயிருக்கும் என்றது மனம்.
தேநீருடன் தொலைக்காட்சி முன்னால் அமர்ந்தாள். 'நெஞ்சம் மறப்பதில்லை’ நிகழ்வில் பழைய பாடல்கள். 'அத்தைமடி மெத்தையடி.. சட்டென்று நெகிழ்ந்தது ஜெயராணியின் மனம். தன்னைத் தன் தங்கைகளைத் தாய் சிறுவயதில் பாடித் தூங்க வைத்தது ஞாபகம் வந்தது. தாலாட்டுப் பாடியதில்லை. இந்தப் பாடல் தான் அவர்களுக்குத் தாலாட்டு. இனிய குரல் அவள் அம்மாவிற்கு.
ஜெயராணியின் தங்கைகள் இருவரும் மணமாகி வெளிநாட்டில் தங்கி விட்டார்கள். ஜெயராணிக் கு ஏனோ மணவாழ் கி கை கூடவில்லை. பெற்றோரைப் பராமரிக்கும் பொறுப்பு ஜெயராணி தலையில் விழ, அவளும் திருமணத்தைப் பற்றி நினைப்பதையே மறந்து விட்டாள்.
அறைக் குள் சென்று விளக் கைப் போட்டாள் ஜெயராணி. தாய் விழித்திருப்பது தெரிந்தது. நித் திரையே வராதா அம்மா
2O9NY | Soh 2008

Page 62
சிறுகதை
உங்களுக்கு? இதுக்கு ஒரு முடிவில்லையா? உடலை அசைக்க முடியாது. கதைக்க முடியாது கதைப்பதை உணர முடிகிறதா என்பது கூடத் தெரியவில்லை. திரவச் சாப்பாடு. கிட்டச் சென்று பார்த்த போது தான் கண்களில் நீர் கசிவது தெரிந்தது. ஏன்? என்ன காரணம்? அந்தப் பாட்டு இங்கு வரை கேட்டு விட்டதா? தலையைக் கோதி விட்டாள். தன் அழுகை வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டாள். எவ்வளவு நேரம் தலையைத் தடவியபடி இருந் தாளோ தெரியவில்லை. நினைவுகள் கலைந்த போது தாய் உறங்கி விட்டது தெரிய வந்தது. வெளியே வந்தாள். தந்தையின் அறையிலிருந்து குறட்டைச் சத்தம் கேட்டது. கோமதி எழுதிய பெண்ணியம் தொடர்பான புத்தகங்கள், சிறுகதைகளை வெளியே எடுத்தாள். வேகமாகக் குறிப்பெடுக்கத் தொடங்கினாள். அதிகாலை நாலுமணிக்கு எழுந்து சமைக்க வேண்டும்.
முடிந்ததும், அடுத்த நாள் நிகழ்விற்கான மேக்கப் சாதனங்கள், உடைகள், பொருத்தமாய்
எழுஎழு எழுவென
எங்கும் முழக்கம்
எதிர்வரும் பகையினை
அதிரடி சுடச்சுட 22نی அழித்தவர் கலங்கிட
அயலவர் மகிழ்ந்திட
அரியென எழுவென G249
அழைக்கும் முழக்கம்
冰 率 米
தடுதடு தடுவென
தனயரின் முழக்கம்
எதிரிகள் ஏவிடும்
எறிகனை பொடிபட எம்மவர் நலம்பெற
எதிரிகள் துயர்பட எழுந்திடு எரியென
எங்கும் முழக்கம்
米 本 s:
நடுநடு நடுவென
நாட்டார் முழக்கம் எதிர்வரும் பகைவரின்
எலும்பினை முறித்து வெற்றிக் கொடியினை
வினைதரு கழனியில் விதைத்திட வாவென
வீர முழக்கம் 6
米 米 率
Erweve -70 (
 
 

நகைகள் எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டுப் படுக்கைக்குச் சென்ற போது மணி
பதினொன்று முப்பது.
இமைகள் கனத்த வேளையிலும், மனம்
இயந்திரமாய்க் கேள்விகளைத் தயாரித்தது.
s . ஆண்களிற்குச் சமனாய் கல்வி,
தொழில், அந்தஸ்து என்று உயர்ந்து விட்ட
) போதும், பெணி சீதனம், ஆணாதிக்கம்
) என்பவற்றிலிருந்து தப்ப முடியவில்லையே. என்ன
காரணம் இயலாமையா அல்லது.
. விக்கர் செக்ஸ் என்று குறிப்பிடுவது
பற்றி.
F . கல்வி, தொழில் இவற்றைப் பார்த்துக்,
5 கேட்கும் சீதனம் கொடுக்க பெற்றோரும்,
ா மணமகளும் தயாராக இருக்கும் போது, இதில்
ந் பெண்ணியம் எங்கு வருகின்றது..?
5. நிஜ உலகின் வேலைப்பளு, இயந்திர வாழ்க்கை இவற்றையும் மீறி மறுநாள்
ா கனவுலகில் காலடி வைக்கும் ஆயத்தத்துடன்
ப் ஜெயராணி உறங்கிப் போனாள்.
LDLLDL LDL66)6OT
மறிகடல் அலையென محصے 芦 எழுந்திடு புயலென
ര)4) எம்தாய் நிலத்தினை
எய்திட நினைக்கும்
G எச்சில் நாய்களை
C の方の方4タ விரட்டி எழுவென
முதியோர் முழக்கம்
率 事
தடுதடு தடுவென
தம்பியர் முழக்கம் அந்நியர் பதிக்கும்
அசுத்தக் கால்களை அகற்றித் தமது
தாயகம் காத்திட உலகத்து இளைஞரின்
உரிமை முழக்கம்
9Voñ ar Žadh i 2008 ägs

Page 63
குறிப்பு
ஓகஸ்
இன்னமுந் தொலைவிலேதான்,
இளவேனிலின் சாடைக
மலரத் துடிக்கின்ற பூக்கள் சில தமது சுற்றுப் பட்டைை
ஏறத்தாழ குளிர்காலமான இவ்
இலைகள் இன்னமும்
தோட்டத்து முலைகளில் மறை அவற்றின் காய்ந்த இ6
இரவு இன்னமும் இருந்த இடத் ஆயினும் விடியலின் ெ
வானத்தில் விட்டு,
நிறங்கள் எப்போதேன்
காற்றாக நமது முச்சும் எண்ெ பயன்படுவதையிட்டு வரு
ஈற்றில், சில விளக்குகளேனும்
இரவில் எரிகின்றன.
உனது கிண்ணத்தைச் சாய்த்
அனைத்தையும் உதறி: உவைன் தேவையில்ை நம்மை நாமே விடுவித்துள்ளோ காலத்தை முக்கியமற்
சிறையுண்ட மனிதன் தன் விழி
கூண்டுகள் கரையும்:
காற்றும் நெருப்பும் நீரும் மண் அவனுக்கு அத்தகைய அத்தகைய தோட்டங்க
உன் பாதங்களிற் குருதி வழி:
நீ சும்மா நடப்பதால் நீரூற்றுகிற இப் பாலை
ஏதோ ஒன்றேன் மலரும்.
பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி நிறுவப்பட்ட பி சிறையிடப்பட்டனர். சுதந்திரத்தின் பின்னே நா சிறைவாசம் அனுபவித்த ஒரு இடதுசாரிப் பை

5, 1952"
எனினும் ஸ் உள்ளன
யக் கிழித்து அவிழ்த்து விட்டன
இலையுதிர் யுகத்தில் ஒலிக்கக் கேட்கலாம்: i55 56öpul. சைக்குழுக்கள் இசைப்பன.
ந்திலேயே உள்ளது சஞ்சிறகுகளை
ஓடிச் செல்கின்றன.
|ணய்யாக நமது குருதியும் நந்தாதே -
து விடு, தயங்காதே! விட்ட நமக்கு
)6)
ாம்,
றதாக்கியுள்ளோம்.
களைத் திறக்கையில்
ணுைம் - அனைத்துமே
விடியல்களை களை வாக்களித்துள்ளன.
கிறது, Fைஸ்
மட்டுமே பயில்
-Fைஸ் அகமட் Fைஸ்
(தமிழில்: மணி)
றகு ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிரானோர் ட்டின் அதி முக்கிய கவிஞர் Fைஸ் நீண்டகாலமாகச் டப்பாளி.

Page 64