கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2001.05

Page 1
கோபாலகிருஸ்ணகாந்தி அ
தாலை 10 மணிக்கு
கொழும்புத் தமிழ்ச் 7, 57 வது ஒழுங்கை (உருத்திரா மா
தொலைபேசி 01
வெய் முகவரி இணைய தபால் முகவரி
WW ad
 

புதிய நூலகத்தை திறந்து
தானிகர் மேன்மை தங்கிய
வர்கள் 28.05.2001 அன்று
தரும் காட்சி
சங்கம்
வத்தை), கொழும்பு  ேெ.
-
W. Colombo.tamilsangan.org ing Colombotamilsa nga m.org

Page 2
இதயம் திறந்து.
‘ஓலை’ யின் 3வது இதழ் உங்கள் முன் விரிகின்றது. வாசகர். களாகிய உங்களின் இயன்றளவிலான அன்பளிப்பினால்தான் ‘ஓலை’வெளிவருகின்றது. எனினும் இதுவரையிலான இயன்ற அன்பளிப்பு ஒலை யின் தயாரிப்புச் செலவை ஈடுசெய்வ. தாயில்லை. எனினும் ‘ஓலை’ தொடர்ந்து கிரமமாக வெளிவரும் என்பது எமது உறுதி. இதனை எதிர்காலத்தில் ஓர் இலக்கிய ஏடாக பரிணமிக்கச் செய்யும் எண்ணமும் எமக்குண்டு என்பதை ‘ஓலை’யின் இரண்டாவது இதழில் இதயம் திறந்து கூறியிருந். தோம். ‘ஓலை’ யின் வாசகர்களாகிய எழுத்தாளர்கள், கலை. ஞர்கள், பத்திரிகையாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், கொழும். புத் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் அனைவரிடமும் ஓர் அன்பான வேண்டுகோள். உங்களால் மனமுவந்து அளிக்கக்கூடிய இயன்ற நிதித் தொகையை எமக்கு விரைவில் அனுப்பி உதவுங்கள்.
நிதிமிகுந்தவர் பொற்குவை தாரீர்! நிதிகுறைந்தவர் காசுகள் தாரீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும் இப்பெருந்த தொழில் நாட்டுவம் வாரீர்!
உங்கள் நிதி அளிப்புக்களை காசோலையாகவோ அல்லது வைப்பாகவோ Colombo Tamil Sangam Ltd - 56007 dig av: 6015662 Commercial
Bank, வெள்ளவத்தை - இற்கு அனுப்பி வைக்கலாம்.
மீண்டும் மறுமடலில்.
- இலக்கியக்குழு
‘ஓலை’ பக்கம் 2

சங்கப்பலகை
r 爱 Κ3
தமிழக அறிஞர்களைக் கெளரவிப்பு ད།
04.05.2001 இலிருந்து 08.05.2001 வரை கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்ற கம்பன் விழாவுக்கு வருகை தந்திருந்த தமிழக அறிஞர்களைக் கெளரவிக்குமுகமாக கொழும்புத் தமிழ்ச்சங்கம் தேநீர் விருந்தொன்றினை 07.05.2001 அன்று திங்கட்கிழமை பி. ப. 4.00 மணிக்குச் சங்கத் துணைத்தலைவர் கலாசூரி இ. சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் அளித்தது. இத்தேநீர் விருந்தில் தமிழக அறிஞர்களான திருவாளர்கள் த.இராமலிங்ம், நா.நஞ்சுண்டான், எஸ். என். குப்புசாமி, இரா. மாது. புலவர் க. மீ வெங்கடேசன், புலவர். தி. சு. மலையப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
لم ܢܠ
பழம்பெரும் பத்திரிகையாளர் திரு. ரா. மு. நாகலிங்கம் அவர்களுக்குப் பாராட்டு
12.05.2001 அன்று சனிக்கிழமை பி.ப. 5.30 மணிக்கு பழம்பெரும் பத்திரிகையாளர் திரு. ரா. மு. நாகலிங்கம் அவர்களைப் பாராட்டுமுகமாக சங்கத்தலைவர் சோ. தேவராஜா அவர்களின் தலைமையில் தேநீர் விருந்து நடைபெற்றது. ஜனாப். முகம்மது சமீம், கலைஞர் சோக்கல்லோ சண்முகநாதன், பேராசிரியர் சோ. சந்திரசேகரம், கலாசூரி இ. சிவகுருநாதன் ஆகியோர் திரு. நாகலிங்கம் அவர்களின் கலை, இலக்கிய பத்திரிகைத் துறைப் பணிகள் பற்றி உரையாற்றினர். 1963 பெப்ரவரியிலிருந்து கண்டியிலிருந்து வெளிவந்த "செய்தி" வார இதழின் ஆசிரியராக இருந்து இவர் ஆற்றிய பணிகள் மலையக வரலாற்றில் பதிவுக்குரியன. لم
ས། r புதிய நூலகத் திறப்பு விழா
கொழும்புத் தமிழ்ச்ச சங்கத்தின் புதிய நூலகம் இந்திய உயர் ஸ்தானிகர் மேன்மைதங்கிய கோபாலகிருஷ்ணகாந்தி அவர்களினால் 28.05.2001 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு திறந்து வைக்கப்ட்டது.
لصـ ܢܠ
‘ஓலை’ பக்கம் 3

Page 3
r O a N சுகாதாரக கருததரங்கு சங்கத்தின் ஏற்பாட்டில் 13.05.2001 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு சங்கத்தலைவர் சட்டத்தரணி சோ. தேவராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சித்த ஆயுள்வேத வைத்தியர் செல்வி. இ. மங்களாம்பிகை, ரேய்கிநிபுணரும் மனநல ஆலோசகருமான டாக்டர் எஸ். ஜெகராஜன் ஆகியோர் விடயங்களையிட்டு ஆலோசனைகள் வழங்கினர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை சங்கத் துணைத்தலைவர்
೧೮6ುಖಿ. சற்சொரூபவதிநாதன் பொறுப்பேற்று நடாத்தினார். صـ
பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் 77வது பிறந்ததின விழா)
27.05.2001 அன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப. 500 மணிக்கு சங்கத்தலைவர் சட்டத்தரணி சோ. தேவராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நினைவுப் பேருரையை கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் பேராசிரியர் சி. மெளனகுரு அவர்கள் "ஈழத்தமிழர் இசை வளர்ந்ததும் வளரவேண்டியதும்"என்ற தலைப்பிலே
நிகழ்த்தினார். أص
நூல்நயம் காண்போம்.
9 05.05.2000 இல் ஆரம்பித்து பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இலங்கை எழுத்தாளர்களால் எழுதி வெளியிடப்படும் நூல்கள் இங்கு நயம் காணலுக்காக எடுத்தாளப்படுகின்றன.
திகதி நூலின்பெயர் நூலாசிரியர் நயம்
கண்டவர்
11.05.2001 நெஞ்சில் ஒரு பாரதிபுரம்
நிறைவு என். சித்திரவேல் தி. கேசவன் (45) (சிறுகதைத் வெளியீடு :
தொகுப்பு) ஈழத்து இலக்கியச்சோலை
திருகோணமலை
“ஓைை” பக்கம் 4

u ஈழத்தமிழர் இசை வளர்ந்ததும் N உட்வளர் வேண்டியதும் வி
- பேராசிரியர் சி. மெளனகுரு
தலைவர், நுண்கலைத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்
2705.2001 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் 77வது பிறந்ததின விழா நிகழ்வில் பேராசிரியர் சி. மெளனகுரு அவர்கள் நிகழ்த்திய நினைவுப் பேருரையிலிருந்து.
இலங்கைத் தமிழர் இசை என்று இன்று உலகம் பூராவும் அறியப்பட்ட இசை சிங்கள மக்களது இசை மாத்திரமே. சிங்கள இசை போல தமிழ் இசையும் இலங்கையில் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால் இது பற்றி எம் மத்தியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.
இலங்கைத் தமிழர் மத்தியில் 4 வகை இசை மரபுகள் காணப்படுகின்றன.
செந்நெறி இசை மரபு (கர்நாடக இசை, பண்ணிசை) கிராமிய இசை மரபு (பிரதேசப் பண்புகளுடையது) வெகுஜன இசைமரபு (சினிமா, இசை, பொப்பிசை முதலியன) மக்கள் இசை (மக்கள் பிரச்சினை கூறும் இசை)
இந்நான்கு இசை மரபுகளுக்கும் வரலாறுண்டு. செந்நெறி இசை மரபே நாம் வளர்த்த இசை மரபாகும். உயர்கல்வி நிறுவனங்களிலும், பாடசாலைகளிலும் இம்மரபுபாடத்திட்டத்திற்கமைய வளர்க்கப்படுகிறது. கிராமிய இசை மரபு கிராம மக்களால் வளர்க்கப்பட்டதாயினும் 1960 களுக்குப் பின் பாடசாலைகளில் இம்மரபு அறிமுகம் பண்ணப்பட்டது. வெகுஜன இசை சினிமா மூலமாகவும், 1940 களிலிருந்து வானொலி மூலமாகவும், 1980 களுக்குப் பின்னர் ரெலிவிஷன் மூலமாகவும், சில இசைக் குழுக்களாலும் வளர்க்கப்படுகின்றது. இவ்வெகுஜன இசை மக்களை மயக்கத்தில் ஆழ்த்துவதும், செந்நெறி, கிராமிய இசை மரபுகளை நீர்த்துப் போக வைக்கும் தன்மை கொண்டதுமாகும்.
இவ் இசைகட்கு மாற்றாக மக்களிசை ஒன்றும் நம்மிடையேயுண்டு. ஈழத்து மெல்லிசையுடன் இம்மரபு ஆரம்பமாகிறது. செந்நெறி இசை, கிராமிய இசையிலிருந்து பெறும் ஜீவசத்து இதன் அடிநாதம். ஈழத்துத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை இவ்விசைமரபு உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. தமிழர் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள் பற்றிப்பாடும் ஒலி நாடாக்கள் பல வந்துள்ளன. தென்னாசியாவில் இம்மக்களிசை மரபு வளர்ந்து வரும் மரபாகும். இம்மரபு திட்டமிட்டு வளர்க்கப்பட வேண்டிய மரபுமாகும்.
‘ஓலை’ பக்கம் 5

Page 4
கொழும்புத் தமிழ்ச்சங்கN
புதிய நூலகத் திறப்பு விழா - 28.05.200
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் நவீனமயப்படுத்தப்பட்ட புதிய நூலகம்
இந்திய உயர் ஸ்தானிகர் மேன்மை தங்கிய கோபாலகிருஸ்ணகாந்தி அவர்களினால் 28.05.2001 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு சம்பிரதாய பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
சரியாக காலை 10.00 மணிக்கு வருகைதந்த இந்திய உயர் ஸ்தானிகர் அவர்களையும், கொழும்பு இராமகிருஸ்ண மிஷன் தலைவர் சுவாமி ஆத்மகனானந்தா அவர்களையும் சங்கத்தின் முன்னாள் தலைவரும். இந்நாள் துணைத் தலைவருமான கலாசூரி. இ. சிவகுருநாதன் அவர்கள் மாலை சூட்டி வரவேற்று அறிஞர் பெருமக்கள் புடைசூழ புதிய நூலகம் அமைந்த மேல்மாடிக்கு அழைத்துச் சென்றார். முன்வாயிலில் நாடாவை வெட்டி நூலகத்தை சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்த பின்னர் தூதுவர் அவர்கள் உள்சென்று மங்கல விளக்கேற்றி வைத்தார். கலாசூரி இ. சிவகுருநாதன், சங்கத்தலைவர் சோ. தேவராஜா, சங்கப் பொதுச்செயலாளர் ஆ. இரகுபதி பாலழறீதரன் ஆகியோரும் மங்கல விளக்கேற்றினர். நூலகத்தின் சகல பகுதிகளையும் ஆர்வமுடனும், அக்கறையுடனும் பார்வையிட்ட தூதுவர் அவர்கள் மூதறிஞர் ராஜாஜி எழுதிய "சக்கரவர்த்தித் திரு. மகன்” நூலின் முன்பக்கத்தில் "சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி அவர்களின் பாதத்தில் என் நமஸ்காரம்" என்று தமிழில் எழுதிக் கையெழுத்திட்டார்.
கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவிக்ளின் தமிழ் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் நிலமாடியில் அமைந்த சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சங்கத்தலைவர் சட்டத்தரணி சோ. தேவராஜா அவர்களின் தலைமையில் ஆரம்பமாகின. வரவேற்புரையை சங்கத் துணைத்தலைவர் திரு. பெ. விஜயரெத்தினம் அவர்கள் மிக இரத்தினச் சுருக்கமாக நிகழ்த்தினார்.
தலைமையுரை : திரு. சோ. தேவராஜா (கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர்)
இந்திய மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் இடையிலான பணியாட்டு உறவும் நெருக்கமும் வரலாறு தொட்டு வளர்ந்து வருவதாகும். இந்தியாவின் தமிழகத்திலிருந்த அறிஞர்கள் கலைஞர்கள் இங்கு வந்து மகிழ்வித்து செல்வது போல் நம்நாட்டு கலைஞர்களும் அறிஞர்களும், எழுத்தாளர்களும் தமிழகம் சென்று உறவைப் பலப்படுத்தும் இருவழிப் பணிபாட்டுப்பாலம் அமைத்து செயற்படுவதில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம். தமிழகத்து எழுத்தாளர்களின் நூல்களை இலங்கைக்கு இறக்குமதி செய்து எமது நூலகங்களுக்கெல்லாம் வழங்கி உறவை வளர்ப்பது போல் ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களையும் தமிழகத்திற்கு அனுப்பி நூலகங்களில் பெற்றுக் கொள்ளவும் எதிர்காலத்தில் வழிகள் திறக்கப்படவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
‘ஓலை’ பச்சம் 6
 

எமது தமிழ்ச்சங்கம் அடுத்த ஆண்டில் அறுபதாவது வயதை எட்டுகிறது. இச்சங்கம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1942ஆம் ஆணர்டு ஸப்தாபிக்கப்பட்டது. சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை கட்டியானிடோர் காலத்தில் உருவாக்கப்பட்ட போதும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பால் கவரப்பட்டவர்களாகவும் மகாத்மா காந்தியின் சுயராஜ்ய கோரிக்கையின் மீது பக்தி கொண்டவர்களாகவும் எமது ஸ்தாபகர்கள் விளங்கியிருக்கிறார்கள். தணிமானமும் தனித்துவமும் மிக்க அறிஞர்களாகச் செயற்பட்டுள்ளார்கள். இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் தேசிய அபிலாஷைகளைக் கட்டியெழுப்பி பன்மைச் சமூகப்பண்பாட்டைச் சமபலத்துடன் சமத்துவ நெறியில் கட்டியமைக்க அரும்பாடுபட்டு வந்துள்ள எமது ஈழத்திருநட்டின் அறிஞர் பெருமக்களின் உணர்வு எம்மைப் புளகாங்கிதமடையச் செய்கிறது.
இந்திய தேசிய சுதந்திரத்திற்கு வழிவகுத்த போராட்டத்தில் காந்தியடிகள். ராஜாஜி ஆகியோர் முக்கியத்துவமுடைய. பெரியோர்கள் ஆவர். இவ்விரு பெரியார்களின் குடும்பங்களையும் திருமண பந்தத்தால் இணைத்த பெருமைக்குரியவராக விளங்கும் துரதுவர் கோபாலகிருஷ்ண காந்தி எங்கள் திறப்பு விழா வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதால் வீரத்துறவி விவேகானந்தரின் தோற்றப் பொலிவையும் ஆத்ம பலத்தையும் உங்கள் வரவின் மூலம் நாம் பெற்றுக் கொள்கிறோம்.
கொழும்புத் தமிழ் சங்கத்திற்கும் இந்திய தூதரகத்திற்கும் பல்லாண்டுகளாக உறவும் தொடர்பும் உள்ளன. 1948ஆம் ஆண்டில் இச்சங்கத்திற்கு நிதிதிரட்டுமுகமாக ஏற்பாடு செய்யப்பட்ட பொருட்காட்சியை அண்றைய இந்தியத் தூதுவராக இருந்த வி. வி. கிரி ஆரம்பித்து வைத்தார்.
1982இல் மகாகவி பாரதியின் நூற்றாண்டு விழா இலங்கையில் கொண்டாடப்பட்ட வேளையில் தமிழக அமைச்சர் இரா. நெடுஞ்செழியன் இச்சங்கத்திற்கு வருகை தந்து சிறப்புரை ஆற்றியது குறிப்பிடத்தக்கது. இத்தொடர்பினால் முன்னாள் முதலமைச்சர் எம்ஜி இராமச்சந்திரன் இந்நூலகத்திற்கு 10 ஆயிரம் நூல்கள் வழங்கினார். இதை அண்றைய தூதுவர் தீக்ஷித் வைபவ ரீதியாக கையளித்தார். கனேடிய தூதரகமும் இந்நூலகத்திற்கு போட்டோஸ்ப்ரப் இயந்திரத்தை வழங்கியுள்ளது.
இன்று எமது தமிழ்ச்சங்க வெப்தளத்தை ஆரம்பித்து வைப்பதற்கு சுங்க அதிகாரி இராமச்சந்திரன் கணனி இயந்திரத்தை அன்பளிப்புச் செய்துள்ளார்.
ஆசியுரை : சுவாமி ஆத்மகனானந்தா (தலைவர் கொழும்புராமகிருஷ்ணமிஷன்)
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று உலக மக்கள் அனைவரையும் வேறுபாடு எதுவும் இல்லாது அவர்களுடைய குலம். குணம். சாதி, சமய வேறுபாடுகளை கடந்த நிலையில் அனைவரையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய உயர்ந்த உள்ளம் பணிபாடு தமிழர்களுடைய பெருமைக்குரிய விடயம். கொழும்புத் தமிழ்ச் சங்கத்திலேயும் இப்படிப்பட்ட ஒரு மகத்தான ஒரு பணிபாட்டை நாம் காணலாம். சகல சமயத்தவர்களும் சகல இனத்தவர்களும் இங்கு வரவேற்கப்படுகிறார்கள். எல்லோருக்கும் இங்கு இடம் இருக்கிறது. அவ்வாறான பாரம்பரியத்தைக் கொண்டது தமிழ்ச்சங்கம்.
"gébev” (Uású 7

Page 5
சுவாமி ஆத்மகணானந்தா அவர்களின் ஆசியுரையைத் தொடர்ந்து பிரதம அதிதி இந்திய உயர்ஸ்தானிகர் அவர்கள் நூலகத்தின் இணையத்தளத்தினை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
பிரதம அதிதி உரை : மேன்மைதங்கிய கோபாலகிருஸ்ணகாந்தி (இந்திய உயர்ஸ்தானிகர்)
இம்மணிடபத்தில் பாரதியை, வள்ளுவனை, கணிணதாசனை காணர்கிறேன். ஆனால் கண்ணதாசனின் புன்னகையைப் பார்த்தால் ஏதாவது பேசிவிட்டுப்போ என்று சொல்வது போல் தோன்றுகிறது. இது ஒரு தமிழ்ச் சங்கம். இங்கு தமிழில் தான் பேச வேண்டும். ஆங்கிலத்தில் பேசினால் கோயில் பிரசாதத்தைக் கரங்களால் வேண்டி கத்தி கரணர்டி கொண்டு சாப்பிட்டது போல் ஆகும். கோயில் பிரசாதத்தை கரங்களால் தான் சாப்பிட வேண்டும். ஆனால் நான் இந்த இடத்தில் நூறு ஆங்கில வார்த்தை பேசும் நேரத்தில் ஐந்து தமிழ் வார்த்தையைத்தான் பேசமுடியும். ஆங்கிலத்தில் ஒரு சொல்லுக்கு இடத்திற்கு ஏற்றாற்போல் கருத்து மாறுபடும். ஆனால் தமிழில் அப்படி அல்ல மெய்யைத்தான் பேச வேண்டும்.
இலங்கைக்கு பல நாடுகள் பலவித உதவிகள் செய்துள்ளன. சீனா, பண்டாரநாயக்கா ஞாபகர்த்த மண்டபத்தைக் கட்டிக் கொடுத்துள்ளது. ஜப்பான் பாராளுமன்றத்தைக் கட்டிக் கொடுத்துள்ளது. ஆனால் இந்தியா என்ன செய்துள்ளது என்று யாராவது கேட்டால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சைவத்தையும் பின் பெளத்தத்தையும் தமிழ் கலாசாரத்தையும் கொடுத்துள்ளது என்று சொல்லுங்கள். -
தொடர்ந்து பம்பலப்பிட்டி மாணவர்களின் "பல்லியம்" இசை நிகழ்ச்சி இடம் பெற்றது. சங்கச் செயலாளர் திரு. ஆ. இரகுபதிபாலழறிதரன் நன்றி நவின்றார். கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளின் தமிழ் வாழ்த்துடன் விழா நிறைவுற்றது. .
விழாவின் போது கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களுடன் உரையாடியபோது பெற்றுக்கொண்ட நூலகம் பற்றிய வேறு தகவல்கள் சில
* புதிய நூலகக் கட்டிடத்திற்கும், நூலகத் தளபாடங்களுக்குமான முழுச் செலவையும் (சுமார் 33 இலட்சம் இலங்கை ரூபாய்) தற்சமயம் அமெரிக்காவில் வதியும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் (1981/83) அமரர் பொ. சங்கரப்பிள்ளை அவர்களின் குடும்பத்தினர் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
* சங்கத்தின் பழைய சிறிய வீடொன்றில் இயங்கிவந்த நூலகத்தின் நூலகப் பொறுப்பாளர் பதவியை திரு. இ. க. கந்தசாமி அவர்கள் 1964இல் ஏற்றார். இவர் இப்பொறுப்பை ஏற்கும் போது 300 நூல்களும் 3 அலுமாரிகளும் தான் இருந்தன. நூல்களை வகைப்படுத்திப் படிவேட்டில் பதிந்து அன்பளிக்காகவும் விலையாகவும் மேலும் நூல்களைப் பெற்றார். 1975 வரை நூலகப் பொறுப்பாளராக திரு. இ. க. கந்தசாமி பணியாற்றிய காலத்திலும், பின்பு இவர் 1975-1996
‘ஓலை’ பக்கம் 8

காலப்பகுதியில் சங்கச் செயலாளராகப் பணியாற்றிய காலத்திலும் எடுத்துக் கொண்ட முயற்சியே இன்று இந்நூலகம் அடைந்துள்ள வளர்ச்சிக்குக் காரணம் * நூலகத்தின் சிறுவர்பகுதி 30.09.98 புதன்கிழமை (விஜயதசமி) அன்று ஆரம்பித்து வைக்கப்பெற்றது. இவ்வைபவத்தில் தேசிய நூலக சேவை ஆலோசனைச்சபை உறுப்பினர் ஜனாப். எஸ். எம். கமால்தீன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இதனை ஆரம்பித்து வைத்தார். * புதிய நூலகம்சங்கரப்பிள்ளைதகவல் ஆய்வுமையம்"எனப்பெயரிடப்பட்டுள்ளது. * கொழும்புத் தமிழ்ச்சங்கக் கட்டிடக் குழுச்செயலாளர் திரு. ஜெ. திருச்சந்திரன், நூலகக் குழுச் செயலாளர் திரு. க. குமரன் ஆகியோரின் பணிகள் பாராட்டுக் குரியன.
தொகுப்பு : செங்கதிரோன்
/ கொழும்புத் தமிழ்ச்சங்கம் ༄།
50வது “நால்நயம் காண்போம்”
இடம் கொழும்புத் தமிழ்ச்சங்கம் - சங்கரப்பிள்ளை மண்டபம்
காலம் ! 13.07.2001 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி
தலைமை சட்டத்தரணி சோ. தேவராஜா - தலைவர் கொழும்புத்
தமிழ்ச்சங்கம்
பிரதம அதிதி திரு. எஸ். எழில்வேந்தன் - பணிப்பாளர் சக்தி FM
நூல் : இளநலம் (குமாரசம்பவம் எட்டாம் சுருக்கம் இன்ப ஆடல்
முழுதும் கொண்ட கலைச்சுவைப் படையல்)
வடமொழியில் காளிதாசன்
தமிழில் இ. முருகையன்
நயவுரை : த. கோபாலகிருஷ்ணன் (செங்கதிரோன்)
சிறப்புரை பிரதம அதிதி
நன்றியுரை திரு. ஆ. இரகுபதி பாலழுநீதரன்
(கொழும்புத் தமிழ்ச்சங்க பொதுச் செயலாளர்) அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்!
05.05.2000 இல் ஆரம்பித்து பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இலங்கை எழுத்தாளர்களால் எழுதி வெளியிடப்படும் நூல்கபள் இங்கு நயம் காணலுக்காக எடுத்தாளப்படுகின்றன.
திரு. சோ. தேவராஜா திரு. ஆ. இரகுபதி பாலழுநீதரன் தலைவர் பொதுச்செயலாளர்
கொழும்புத் தமிழ்ச்சங்கம் 757 ஆவது ஒழுங்கை (உருத்திரா மாவத்தை) கொழும்பு - 6
ン ܢܠ
‘ஓலை’ பக்கம் 9

Page 6
தமிழில் இலக்கிய இலக்கண அறிவை வளர்க்க விரும்பும் அனைவரும்
இவ்வகுப்புகளில் சேர்ந்து கொள்ளலாம். மேலும், கவிதை, சமஸ்கிருதம் என்பனவற்றையும் கற்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விசேடமாக நன்னூல், தொல்காப்பியம் ஆகிய நூல்கள் வாயிலாக இலக்கண அறிவை விருத்தி செய்து கொள்ளலாம். அறிவை விருத்தி செய்யும் நோக்குடன் கற்பவர்களும் பரீட்சை நோக்கில் கற்பவர்களும் இவ்வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம்.
பன்மொழிப்புலவர் த. கனகரத்தினம் அவர்கள் தலைமையில் சிறந்த பண்டித புலவர் குழாம் இவ்வகுப்புகளை இலவசமாக நடத்தி வருகின்றது.
பண்டிதர் க. உமாமகேஸ்வரன், பண்டிதர் எஸ். சுப்பிரமணியம், பண்தர் க. சிவகுருநாதன், ஆகிய விரிவுரையாளர்களின் சேவைக்குச் சங்கம் நன்றி பாராட்டுகின்றது. இப்பணி சங்க ஆரம்ப காலத்திலிருந்து தொடர்ந்து வளர்ந்து வந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் தொல்காப்பிய, சித்தாந்த வகுப்புகளை நடத்திய புலவர் சிவம் கருணாலய பாண்டியனார். அவரைத் தொடர்ந்து கலாநிதி க. செ. நடராசா, பன்மொழிப்புலவர் த. கனகரத்தினம். தமிழவேள் கந்தசுவாமி ஆகியோர் சங்க வரலாற்றில் முக்கிய இடம் பெறுகிறார்கள். இவர்களது தமிழ்ப் பணியின் தொடராகவே இப்போதைய வகுப்புக்களும் நடைபெற்று வருகின்றன.
யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கத்தால் நடாத்தப்படும் பிரவேச பாலபண்டித பண்டித பரீட்சைகளுக்குத் தோற்ற விரும்புவோருக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்படும். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினைப் பரீட்சை மத்திய நிலையமாக்கும் ஒழுங்குகளும் உண்டு.
புதிய பிரவேச பண்டித வகுப்பில் சேர விரும்புவோர் ஓகஸ்ட் மாதம் 30ஆந் தேதிக்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
சனி, ஞாயிறு தினங்களில் வகுப்புக்கள் இலவசமாக நடைபெறும், மேலதிக விபரங்களுக்குக் கொழும்புத் தமிழ்ச்சங்க கல்விச் செயலாளர் புலவர் திரு. அ. திருநாவுக்கரசு அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.
புலவர். அ. திருநாவுக்கரசு கல்விக்குழுச் செயலாளர்
‘ஓலை’ பக்கம் 10
 

NNNNNN
"நாளாந்தம் நாம் பல்வேறு நிகழ்வுகளிலும், பல்வேறு இடங்களிலும் தமிழ்ப் பிழைகளை காண்கிறோம். ஒரு சிலரே அத்தவறுகளை திருத்த முயல்கின்றார்கள். ஏனையோர் மெளனமாக இருக்கின்றார்கள். இதனால் தமிழ் மொழியின் சிறப்புத்தன்மைக்கு களங்கம் ஏற்படுகின்றது. நாம் ஒவ்வொருவரும் எமது தமிழ் மொழியில் பற்றுள்ளவராக இருக்க வேண்டும். தமிழ் மொழியின் சிறப்பை உணர்ந்து அதனை ஆர்வத்துடன் ஒழுங்காக பயன்படுத்துவது அவசியமாகும். இளமையிற் கல்வி சிலையில் எழுத்து அதற்கிணங்க இளம் பராயத்திலே சரி வர தமிழைப் பேச, எழுத, வாசிக்க கற்றுக் கொண்டால் பிற்காலத்தில் தமிழறிஞர்களாக வரமுடியும்" என கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் சட்டத்தரணி திரு. சோ. தேவராஜா அவர்கள் சிறுவர்களுக்கான "கூடிப்பயில்வோம்" மொழித்திறன் பயிற்சிநெறியை தமிழ்ச்சங்கத்தில் 21.04.2000 அன்று வைபவரீதியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் கொழும்புத் தமிழ்ச்சங்கம் இளம் சமூகத்தினரிடையே அறிவுத்திறனை வளர்க்கும் நோக்கில் பல்வேறு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இவற்றில் ஒன்றே "கூடிப்பயில்வோம் மொழித் திறன் பயிற்சிநெறியாகும். பெருந்தொகையான சிறுவர்கள் இப்பயிற்சிக்கு சேர்ந்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இதன் மூலம் பெற்றோர்களுக்கு தமது பிள்ளைகள் தமிழ் மொழியை சீராக கற்க வேண்டுமென்பதில் உள்ள ஆர்வத்தை புரிந்து கொள்ள முடிகிறது என்றார்.
கொழும்புத் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர்களில் ஒருவரும், நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளரும், பயிற்றுவிப்போர்களில் ஒருவரான செல்வி. சற்சொரூபவதிநாதன் தனதுரையில் இக்கூடிப்பயில்வோம்" பயிற்சி நெறி பாடசாலைச்சூழல், கட்டுப்பாடுகள், பரீட்சைகள் போன்றவற்றை மறந்து சிறுவர்கள் மற்றவர்களுடன் இணைந்து மனந்திறந்து குதூகலத்துடன் மகிழ்ச்சியாக மொழித்திறனை வளர்க்கும் நிகழ்ச்சியாகவுள்ளது. கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் வாரந்தோறும் பிரதி சனிக்கிழமைகளில் காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரைநடைபெறும் இந்நிகழ்வில் பல்வேறு துறைகளில் ஆற்றலும், அனுபவமுமுள்ளவர்களால் பேச்சு, உரையாடல், இலக்கியம், கவிதை, விவாதம், நடனம், நாட்டியம், விளையாட்டு ஆகியவை மூலம் மொழித்திறனை வளர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
‘ஓலை’ பக்கம் 11

Page 7
பண்டைய மொழிகளில் தமிழ்மொழி பல்வேறு சிறப்புக்களை கொண்டுள்ளது. தமிழ் மொழியில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சொற்கள் உண்டு. ஒரு சொல்லுக்கு பல கருத்துக்கள் உண்டு. இலக்கணமும் தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த இலக்கணத்தைக் கற்பிக்க வேண்டிய முறையில் கற்பிக்க வேண்டும். அதனால் தான் கற்பவர்கள் இலக்கணத்தை ஆர்வத்துடனும் அதன் சிறப்புத் தன்மைகளையும் இலகுவாக உணர முடியும் என்றார்.
பயிற்றுவிப்போர்களான புலவர் திரு. அ. திருநாவுக்கரசு, புலவர் திருமதி பூரணம் ஏனாதிநாதன், திரு. எஸ். மோசேஸ் ஆகியோர் தமிழ்மொழியின் சிறப்புக்களை வெவ்வேறு கோணங்களில் இலகு நடையில் விளக்கினர். சங்கீதபூசணம் க. கணபதிப்பிள்ளை சிறுவர்களுக்கான தமிழ்ப்பாடல்களை பண்ணிசையுடன் பாடி அனைவரையும் மகிழ்வித்தார். செல்வி இந்துஜா கணேசராஜா தமிழ் வாழ்த்துப்பாடினார். உபசெயலாளரான ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி நன்றியுரை ஆற்றினார்.
இக்கூடிப்பயில்வோம்" சிறுவர் நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து பயின்று வருகிறார்கள். சுழற்சி முறையில் பயிற்றுவிப்பாளர்களாக பண்டிதர் திரு. உமா மகேஸ்வரன், செல்வி சற்சொரூபவதி நாதன், புலவர் திரு. அ. திருநாவுக்கரசு, புலவர். திருமதி பூரணம் ஏனாதிநாதன், திரு. எஸ். மோசேஸ் ஆகியோர் பயிற்றுவிக்கின்றார்கள்.
த. சிவஞானரஞ்சன்.
நன்றி!
கொழும்புத தமிழ்ச்சங்கத்திற்கு முதன்முதலாக கணனி இயந்திரம் ஒன்றை அன்பளிப்புச் செய்தமைக்கு, 12/3 பிரான்சிஸ் வீதி, வெள்ளவத்தையைச் சேர்ந்த சங்க ஆயுள்கால உறுப்பினர் திரு. எஸ். இராமச்சந்திரன் (சுங்கத் திணைக்களப் பணிப்பாளர்) அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் 27-05-2001 இல் நடைபெற்ற சங்க ஆட்சிக்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
(500/=) காசோலையை அனுப்பிவைத்த எழுத்தாளர் சுதாராஜ் (திரு. சிவசாமி இராஜசிங்கம். 583,அனுராதபுர வீதி, புத்தளம்)
அவர்களுக்கு சங்கத்தின் இலக்கியக் குழுவின் உளமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.
நன்றி! 'ஒலைக்கு தனது அன்பளிப்பாக ரூபாய் ஐந்நூற்றிற்கான
‘ஓலை’ பக்கும் 12
 
 

தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உலகு தழுவி வாழும் தமிழ் மக்கட்கும். தமிழில் ஈடுபாடு உள்ள மற்றையோர்க்கும். தமிழ் மொழியைக் கற்கவும். தமிழர் வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு பற்றி அறிந்து கொள்ளவும். வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக அளிக்கும் நோக்கத்தைத் தன்னுள் கொண்டது.
உலகினி பல பகுதிகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும், தமிழ் கற்க விரும்பும் பிறரும், தமிழ்க் கல்வியை அரிச்சுவடி முதல் ஆராய்ச்சி வரை பெறும் வகையில் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தினர் கல விதி திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
ല്
தமிழ் இணைய பல்கலைக்கழகம்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்
தமிழ் மக்கள் ஒரு மொழியினர். பல நாட்டினர். நட்டிலும் சிறுபான்மையர். உலகில் நாற்பதுக்கும் மிகுதியான நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள். தங்களுடைய மரபுகளையும்.
எல்லா
விழுமியங்களையும், பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டும். இத்தேவையை நிறைவேற்ற அவர்கள் தங்கள் மொழி. கலை, இலக்கியம் இவற்றோடு தொடர்பு நீங்காது வாழ வேணடும். உலகு தழுவி வாழும் தமிழ் மக்களின் கலாச்சாரத் தேவைகளை மனத்திற் கொண்டு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் 1999 - இல நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டின நிறைவு விழாவில், தமிழ் இணையப் பல்கலைக் கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள். இந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் இத்தமிழ் இணையப் பல கலைக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இப்பாடத்திட்டத்தின் கீழ், தமிழகப் பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் பத்தாவது வகுப்பு வரை கற்பிக்கப்படும் தமிழ் மொழிப் பாடங்களை பல தகுதி நிலைகளில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வகுப்புகள் 1 முதல் 8 வரை உள்ள பாடங்கள் அடிப்படை நிலை, இடைநிலை, மேல்நிலை என்ற மூன்று நிலைகளைக் கொணர்டிருக்கும். வகுப்புகள் 7 முதல் 10 வரை உள்ள பாடங்கள், தொடக்கக்கல்வியையும், உயர்நிலைக் கல்வியையும் இணைக்கும் ஒரு
பாடப்பிரிவாக வழங்கப்படும்.
‘ஓலை’ பக்கம் 13

Page 8
இப்பாடத்திட்டத்தின் கீழ் தமிழ்மொழி. பணிபாடு, இலக்கியம். வரலாறு. கலைகள் ஆகியவை அறிமுக நிலை முதல் ஆய்வு நிலை வரை, பல்வேறு பாடத் தொகுதிகளாக வகுக்கப்பட் டுள்ளன. இவை சான்றிதழ் (Certificate), Lil Lulli (Diploma), ul Luis (Degree) 6Taip eyp6oigpi Lur gjöf "LAGSG6ITATS Integrated Credit Scheme, வழி வழங்கப்படும். இப்பாடத்திட்டங்கள் மொத்தம் 96 மதிப்பிலக்குகளைக் கொண்டிருக்கும்.
655 O
பல்கலைக்கழகத்திற்கு நூலகம் ஒரு இன்றியமையாத கருவூலமாகும். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தினி இணையத் தள நூலகம் பெரிய அளவில், சங்ககால இலக்கியங்கள். தற்கால இலக்கியங்கள். பல ஆய்வேடுகள், பிற படைப்புகள். அகராதிகள் ஆகியன இடம்பெறும் வகையில் உருவமைக்கப்பட்டு வருகிறது.
காறிக்கோள்
உலகளாவிய தமிழ்ச்சமுதாயத்தினர்க்கும் தமிழில் ஈடுபாடுள்ள மற்றையோர்க்கும் தமிழ்மொழி. இலக்கியம். பண்பாடு பற்றிய கல்விச்சாதனங்களை உருவாக்கி இணையம் வழியாக அளித்தல். பார் தழுவி வாழும் தமிழர்கட்கு, அவர்கள் தேவைக்கேற்பப் பாடத்திட்டங்களை உருவாக்கி அளித்தல். அவர்கள் தங்கள் பாரம்பரியத்தோடு தொடர்புடன் வாழத் துணைபுரிதல். உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் உருவாக்கும் கல்வியறிவுச் சாதனங்களைத் தொகுத்து அவற்றைப் பரவலாகத் தமிழ் மக்கட்கு வழங்கும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுதல். தமிழ்மொழி, இலக்கியம். பண்பாடு தொடர்பான பாடத்திட்டங்களை வகுத்தல், கேள்வியறிவுக்காகவோ, அல்லது சான்றிதழ், பட்டயம், பட்டம் பெறுவதற்காகவோ கற்போருக்கு இப்பாடங்களைக் கற்க வாய்ப்பளித்தல், வரையறுக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்தோருக்கு, அவர்கள் கற்ற பாடங்களின் தகுதிக்கேற்ப, தஞ்சை, தமிழ் பல்கலைக்கழகம் வழி சான்றிதழ்! பட்டயம்/பட்டம் வழங்க ஏற்பாடு செய்தல்.
‘ஓலை’ பக்கம் 14

s மூத்து எழுத்தாளர் / கலைஞர் / பத்திரிகையாளர் விபரம் ஈழத்து எழுத்தாளர் / கலைஞர் / பத்திரிகையாளர்களின் முழுமையான விபரங்களைத் திரட்டித் தொகுத்து கொழும்புத்தமிழ்ச்சங்கநூலகத்தில் ஆவணப்படுத்தி வைக்கும் முயற்சியினை கொழும்புத் தமிழ்ச்சங்கம் மேற்கொண்டுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக அண்மையில் கொழும்புத் தமிழ்ச்சங்க ஸ்தாபக வாரம் (22.03.2001 - 25.03.2001) கொண்டாடப்பெற்றபோது அதன் நிறைவு நாளான 25.03.2001 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் / கலைஞர் / பத்திரிகையாளர் ஒன்றுகூடல் நிகழ்வின் போது சமூகமளித்திருந்தவர்களுக்கு விபரங்களைச் சேகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் நேரில் கையளிக்கப்பட்டன. முகவரிகள் கிடைத்தவர்களுக்கு தபாலில் அனுப்பப்பட்டும் வருகின்றன. இதுவரை இவ்விண்ணப்பப்படிவங்கள் கிடைக்கப்பெறாதோர் கொழும்புத் தமிழ்ச்சங்கத்துடன் தொடர்பு கொள்ளும்படியும், விண்ணப்பப்படிவங்கள் கிடைக்கப்பெற்றோர் தாமதியாது அவற்றை பூரணப்படுத்தி அனுப்பி வைக்கும்படியும் அன்பாக வேண்டப்படுகின்றனர்.
) - இலக்கியக்குழு - ܢܠ
-(சங்கப் பதிவேட்டிலிருந்து. N ஆகுற்ம்புத் தமிழ்ச்சங்கம் ஆற்றும் தமிழ்ப்பணிக்கு எனது பாராட்டும் நீல்றிச் உரித்தாகுக. தமிழ்ச்சங்கம் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய முத்தமிழையும் வளர்க்க வேண்டும் என்பது எனது பணிவான 6)ύ60ό600τυυώ.
9,969 அ. இராகவன்
சங்கப் பதிவேட்டிலிருந்து .
இன்று இக்கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் திருவாசகம் பற்றி யான் பேசினேன். அங்கத்தினர்களும் பொதுமக்களும் ஏராளமாக வந்திருந்து இன்புற்று என்னை இன்புறுத்தினர். இச்சங்கத்தின் தமிழ்த் தொண்டினை மனதாரப் பாராட்டுகிறேன். இலங்கையில் இச்சங்கத்தின் அருந்தொண்டு இன்றியமையாதது. இவர்கள் மூலம் தமிழ்க்கொடி எந்நாளும் ஓங்கி உயர்க
திருவாசகமணி கே. எம். பாலசுப்பிரமணியம் 25.5.72 திருச்சி .18
‘ஓலை’ பக்கம் 15

Page 9
கொழும்புத் தமிழ்ச் சங்கம் 7. 57 வது ஒழுங்கை உருத்திரா மாவத்தை கொழும்பு - 05. தொலைபேசி 01-583759
NANDA
29, Sапgат
Cole

est Wishes
iron
PRINTERS
itha Mahwatha,
pri bo 13