கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2003.05

Page 1
ஆசிரியர் : Gl:
நிலை 15 கொழும்புத் தமிழ்ச்ச
திரு. கே. சண்முகலிங்கம் (கிழக்கின சமய அலுவல்கள் அமைச்சரின் ே தலைமையில் 'சங்ககால சமூகமும் இ எனும் தலைப்பில் பேராசிரியர் சிெ
கிழக்குப் பல்கலைக்கழகம்) அவர்க
கொழும்புத் தட 7, 57 வது ஒழுங்கை (உருத்திரா
தொலைபேசி
வெய் முகவரி WW இணைய தபால் முகவரி : ctsே
 
 

ங்க மாதாந்து மடல் =மே
பின் ஏற்பாட்டில் 2704:2003 அன்று அபிவிருத்தி மற்றும் முளப்லிம் மலதிக செயலாளர்) அவர்களின் லக்கியமும் - ஒரு மீள்பார்வை' மளனகுரு (நுணிகலைத்துறை, ர் சொற்பொழிவாற்றுகிறார்.
ழ்ச் சங்கம்
மாவத்தை) , கொழும்பு 06.
O1-8637.59
Colombo.tamilsangam.org EL I Teka. Ik
விலை இயன்ற அன்பளிப்பு

Page 2
ངོང་ آن کالات 魏 (Uili (Best Corup.linents fron
λ
PARA DISE
INDUST TRES
Reg : 59699
Trade Mark S.M. K Dollar.
Distributors of Soap, Various kinds of oil, Dollar Mark Gingilly oil & EAU-DE-COLOGNE Golden Rose Brand Vinegar and Oman Water
14712, MRIGAMA ROAD,
NEGOMBO Y TEL: 031-341 93 ÉÉ 2S 2. 57N, (ନର୍ତ(ଷ୍ଟିଟି

இதயம் திறந்து.
பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பற்றிய பெருமைகளைப் பறை சாற்றுவதில் தமிழர்கள் பின்நிற்பதில்லை. காலம் காலமாக பரம்பரை பரம்பரையாக நாம் அதனைத்தான் அதிகம் செய்து வருகிறோம். ஆனால் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதால் மட்டும் தமிழ் மகிமையடைந்து விடப் போவதில்லை.
நவீன கலை இலக்கிய வடிவங்களான நாவல், சிறுகதை, நாடகம், கவிதை, திரைப்படம் பற்றியும் நவீன விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் கண்டுபிடிப்புக்களான அச்சு, வானொலி, தொலைக்காட்சி, இணையம் போன்ற ஊடகச் சாதனங்களை தமிழ்மொழி, இலக்கியம், பண்பாட்டு வளர்ச்சிக்கு எவ்வளவு உச்சமாகப் பயன்படுத்தலாம் என்பது பற்றியும் நமது சிந்தனைத் தளம் விரிவடைய வேண்டும். "அறிவியல்" தமிழை மேலும் வீச்சோடு வளர்த்தெடுக்கும் வகையிலும் தமிழ்ப்பணி அமைதல் அவசியம். கம்பனையும், வள்ளுவனையும், இளங்கோவையும் புகழ்பாடுவதோடு மட்டும் நின்றுவிடாமல் சர்வதேச தரத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய தகுதிவாய்ந்த ஆக்க இலக்கியங்கள் இக்காலத்திலும் எதிர். காலத்திலும் தமிழில் படைக்கப்படுவதற்கான திறனை நாம் தேடல் மூலம் பெற முனையவும் வேண்டும். இதற்கு அடிப்படையாக இளந்தலை முறையினரிடையே தமிழ் மொழி மீது உணர்வுபூர்வமான பற்றுதலையும், அறிவுபூர்வமான அணுகுமுறைகளையும், தேடலுக்கான முனைப்பையும் ஊட்டி வளர்ப்பது மூத்த தலைமுறையினரின் முக்கிய பணியாகும். மேற்கூறப்பட்ட சிந்தனைகளை யொட்டிய கருத்துக்களுக்கும், படைப்புக்களுக்கும் 'களம்' தரவும் அதனையொட்டிய முயற்சிகளுக்கு முன்னுரிமையளிக்கவும் கொழும்புத் தமிழ்ச் சங்கம் தயார். 'ஒலை'அதற்கு உறுதுணையாக விளங்கும்.
நன்றி. மீண்டும் மறுமடலில்.
- ஆசிரியர்
கியோர்ேபொறுப்புi
같TTTTFT T
சிகர் 1 "ஓலை" - 16 மே 2003)

Page 3
29.03.2003 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு,கொழும்புத் தமிழ்ச்சங்கம், சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்ற
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் கூடிப் பயில்வோம் மாணவ மாணவிகள் வழங்கிய
நியதி
பங்குபற்றிய சிறுவர், சிறுமியர்
01. செல்வியோ,சதுர்த்திகா I), செல்வன்.சி.ருக்ஷன் 02. செல்வன்.த.பதுருடென் 11. செல்வி.பா.மதுரா 03. செல்வி.போ.ஓரிரண்யா 12. செல்வன்.அடேவிற் டில்ஷான் 04. செல்வன்.ஞா.ரஜீவன் 13. செல்வி.லம்பிகாவிர்வினி 05. செல்வி.சு.மயூரா 14. செல்வன்.ம.மிதுடிைன் 06. செல்வன்.ரீ.புவிசுதேஷ் 15. செல்வி.ம.சகானா 07. செல்விழரீ.அஷ்வினி 16. செல்வன்.தி.ஆதிதர்ஷன் 08, செல்வன்.சி.திவாகர் 17. செல்வி.ரா.பசோனிகா
09. செல்விருரீ.சிவதாகினி
ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கற்றல் தொடர்பான விடயங்களில் குழுச் செயற்பாடு முதன்மை பெற்றுவிட்டன. இங்கு மாணவர் செயற்பாட்டுரீதியாகவும், பெளதிகரீதியாகவும் குழுவாகச் செயற்பட்டு கற்றல் அணுபவத்தினைப் பெறும் நிலை காணப்படுகின்றது. இவ்வாறான குழுச் செயற்பாடுகளுக்குச் சிறுவர் அரங்குகள் பெரிதும் உதவுகின்றன. இச் சிறுவர் அரங்கு சிறுவர்களை அறிவூட்டும், மகிழ்வூட்டும் கலை வடிவமாக செயல்வடிவம் பெறுகிறது.
29.03.03 அன்று காலை 10.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க
"ஓடு" - 16 மே 2003) பக்கம் 2
 

சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்ற 'கூடிப்பயில்வோம்' மாணவர்களின் நியதி சிறுவர் நாடகம் இவ்வடிப்படையினை உணர்ந்து கொண்டு அதற்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளனவா? இந்நாடகத்தில் சிறுவர்கள் இயல்பாக ஈடுபடும் படித்தல், பாடுதல், ஆடுதல், விளையாடுதல், கதைசொல்லல் முலம் கருத்தினைப் பார்வையாளருக்கு பகிர்ந்தமையைச் சிறுவர்களின் அடிப்படை உணர்வு வெளிப்பாடுகளாகக் கருதலாம். இவை ஒவ்வொன்றும் தனியாகவும், இணைத்தும் பாரிய மாற்றங்களை சிறுவர்களிடம் ஏற்படுத்த வல்லன. அத்தோடு சிறுவர்களுக்கான நீதிக்கதைகள் சிலதைக் காட்சிப்படுத்தியுள்ளமை மிக பொருத்தப்பாடாய் அமைந்தன. சிறுவர் உணர்வுரீதியப்ாக இதை உள்வாங்கி வன்முறைப் போக்கிலிருந்து விடுபட்டு சரி, பிழை அறிந்து தம்மை ஒழுங்குபடுத்த வாய்ப்பு ஏற்படும். இன் வாய்ப்பானது அவர்களின் ஆளுமையினை விருத்தி செய்ய உதவும்.
சிறுவர் நாடகங்களில் பயன்படுத்தப்படும் கதைகள் - பாத்திரங்கள் அவர்களுக்குப் பொருத்தமாய் இருப்பது அவசியம். பொருத்தப்பாடு இல்லாத கதையும், பாத்திரங்களும் அவர்களை நெருக்கீடுகளுக்குள்எாாக்குவதாகவே அமையும். இந் நாடகத்தில் இவைகள் இரண்டும் கவனத்தில் கொள்ளப்பட்டு அதற்கு ஏற்பநாடகம் நகர்த்துவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கு கொண்ட பாத்திரங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட பாத்திரங்களை முடிந்தளவு வெளிப்படுத்தியுள்ளமையைக் கவனத்தில் கொள்ள வேண்டியதுடன் அவர்களைப் பாராட்டம்ை வேண்டும். பின்னிசைப் பாடல் சில இடங்களில் காட்சியுடன் ஒத்துப்போகத் தவறியிருப்பினும் அது
Učí sí 3 "ஓ'ை - 16 மே 2013)

Page 4
நாடகத்தினை இடையூறு செய்யாத வகையில் நகர்த்தப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது. சிறுவர்களுக்கான நாடக ஒப்பனையில் சிறுவர்களின் முகம் பார்வையாளன் தெளிவாய்ப் பார்க்கும் வகையில் வேடத்திற்குத் தேவையான ஒப்பனை மட்டும் செய்யப்பட்டிருந்தமை ஒரு சிறப்பு அம்சம். சிறுவர் நாடகத்தில் பார்வையாளராக இருப்பவர்கள் அந் நாடகத்தை நகர்த்திச் செல்லும் பங்காளர்களாகவும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதேவகையில் இந் நாடகத்தில் பங்கு கொண்டவர்களின் பெற்றோர். சகோதரர்கள், உறவினர்கள். நாடக. விரும்பிகள் பார்வையாளராகப் பங்கு கொண்டமையைநல்ல விடயமாகக் கருதினாலும், சிறுவர்களின் நாடகத்தினைப் பார்ப்பதற்குச் சிறுவர்கள்
“GAZ-2" - 16 Gul 2003) பக்கம் 4
 
 

பங்கு கொள்ளாமை ஒரு துறையாகவே எனக்குத் தோன்றுகின்றது.
இந் நாடகத்திற்குக் கருத்துரை எழங்குவதற்கு அழைக்கப்பட்ட திரு.வ.இராசையா அவர்கள் நிகழ்விற்குப் பொருத்தமான விடயங்களை வழங்கினார். பங்கு கொண்ட மாணவர்களுக்குப் பரிசளித்து ஒளக்கப்படுத்தியமை நல்ல விடயமே. ஒட்டுமொத்தமாய் நோக்கும்போது இக் கடிப்பயில்வோம் மாணவர்களிற்கு நாடகப் பயிற்சியினை வழங்கி அதனை நிகழ்த்திக் காட்டிய சஜீவாகரனின் முயற்சியை வரவேற்கவேண்டியதுடன் பாராட்டவும் வேண்டும். இணைந்து உழைத்த வ.சிவஜோதி (ஆட்சிக்குழு உறுப்பினர்) த.சிவஞானரஞ்சன் (கல்விக் குழுச்செயலாளர்) ஆகியோமினது உழைப்புக்கள் மதிக்கப்படல் வேண்டும். நிறைவாக சிறுவர் நாடக அரங்கப் பயிற்சிகள் யாவும் சிறுவர்களை மன அழுத்தங்களில் இருந்து விடுபடவைத்தது. தெளிவான சிந்தனையை, படைப்பாற்றலை, விடா முயற்சியை, தன்னம்பிக்கையை உருவாக்கி சக சிறுவருடன் கூடிச் செயற்படும் இயல்பினையும், தன்னடக்கத்தினையும் ஏற்படுத்தி நல்ல ஆளுமையுள்ள மனிதனாக வருவதற்கு வழிசெய்கிறது.
ஆகவே இக் 'கடிப்பயில்வோம்' மாணவர்களின் பயிற்சிப் பட்டறைகள் தொடர்ந்தும் நடத்தப்படல் வேண்டும் என்பதே எனது அவா. இப் பணி. யினை உரிய புரிந்துணர்வுடன் அதன் அடிப்படை உண்மையினை உணர். ந்து தமிழ் சங்கத்தினர் செயற்படுவர். அவர்களுடன் நாமும் தொழிற்படு: வோமாக,
அ. ந. நடா
(ை சவ மங்கையர் கழகம்)
&
,睹 黜 邯 翡 கு உதவ விரும்புவதற்க நிதி அன்பளிப்
:
*, A : ill Mið
GILLIT, I Colombo Tamil Sal ngams Ltd, or 5:11.00014906T commercial
: шта.
". :
சங்கம்' என்ற ெ - Nur v.
ப்படச் , வாறு :
¥ Göï
55 as 5 "ஒr' - 1 மே 2003)

Page 5
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் கூடிப்பயில்வோம் மாணவ மாணவியர் வழங்கிய நியதி (29.03.2003) நிகழ்ச்சியின் முடிவில் திரு.வ.இராசையா அவர்கள் கூறிய கருத்துரையின் சுருக்கம்
: இது ஒரு கோலாகலமான நிகழ்ச்சி : சிறுவர்களது பாட்டும் கூத்தும் நடிப்: பும் கலந்து பரிமளித்த ஒரு புதுமை
யான கலைக்கோலம். இந்நிகழ்வைப் போல இந்தச் சபையும் புதுமையானதாகவே இருக்கின்றது. இந்தச் சிறுவர்களது தாய் தந்தையரும் பாட்டன். பாட்டி. சகோதரர் முதலியவர்களும் இங்கே வந்திருக்கக் காண் கின்றேன். இது ஒரு குடும்ப நிகழ்வு போலவே காட்சி தருகிறது. உங்கள் வருகையால் இந்தக் 'சmடிப் பயில்வோம்' சிறுவர்கள் உற்சாகம் அடைந்தார்கள். "எங்களது கலைவிழாவைப் பார்க்க எங்கள் அம்மா அப்பா வந்திருக்கிறார்கள்' என்னும் மகிழ்ச்சி அவர்களுக்கு,"எங்கள் பிள்ளைகளின் கும்ாளத்தைப் பார்க்கிறோம் என்னும் பெருமிதம் உங்களுக்கு,
கலைத்துவம் சார்ந்த திறமைகள் எல்லாம் குழந்தைகளிடம் இயல்பாகவே காணப்படுகின்றன. அவதானித்தால் நாங்கள் அவற்றைக் கண்டு கொள்ள லாம். குழந்தை தனது சிரிப்பிலே, அழுகையிலே தனக்குள்ள மகிழ்ச்சியை, துன்பத்தை, கோபத்தை வெளிப்படுத்துகிறது. தாய் பிள்ளையைப் படுக்கையில் கிடத்தித்துங்கவைத்துவிட்டுப் போய் தனது வேலைகளைக் கவனிக்கிறாள். பிள்ளை துங்கியிருக்க மாட்டானோ என்ற சந்தேகம் வருகிறது. "என்ன, இன்னும் தூங்கவில்லையோ!" என்று கேட்கிறாள். "தூங்கிவிட்டேன்!" என்று உடனே பதில் தருகிறான் பையன், இதிலே அவனுடைய நடிப்பு வெளிவருகிறது. வானொலியில் பாட்டைக் கேட்டு சிறுவர்களும் அப்படியே பாடுகிறார்கள், தொலைக்காட்சியில் நடனம் வரும்போது அதைப்பார்த்து ஆடுகிறார்கள்.
குழந்தைகளிடம் இவ்வாறு இயல்பாகவே முகிழ்த்துவரும் திறமைகள் முறையாக வளர்க்கப்படுவதில்லை, அவை கருகிப் போகின்றன. பிற்காலத்தில் பள்ளிப் பாடங்கள் என்னும் கடலில் மூழ்கிப் போகின்றன. இது தவிர்க்கப்படல் வேண்டும்; அவர்களது கலைத்திறமைகள் வளர்த்தெடுக்கப்படல்
“5;&D) s” - i 6 (Fai 2003) பக்கம் 6
 
 

வேண்டும்' என்னும் நல்ல நோக்கில் நமது தமிழ்ச்சங்கம் சுரப்பயில்வோம்' என்னும் பயிற்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறது. இந்தப் பயிற்சியின் முதலாவது அறுவடையாக இன்றைய நிகழ்ச்சி இங்கு அரங்கேறியிருப்பதைக் கண்டோம்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்திலே சிறுவர்களுள் சிலர் தமது கொவ்வைச் செவ்வாய் திறந்து பாடிய தமிழ் வாழ்த்துடன் நாங்கள் நிகழ்ச்சியில் சங்கமித்தோம். அடுத்த கனம் சிறுவர்கள் அனைவரும் பட்டாம்பூச்சிகள் போல மேடையில் வந்து மொய்த்துக் கொண்டனர். அவர்கள் நரக்கும் பாத்திரங்களுக்கு ஏற்ற எளிமையான உடைகள், அவற்றின் வண்ணக்கோலம் அவர்களது துடிப்பான இயக்கம்-இற்ைறில் நமது மனம் லயித்தது. குெப்பறை, விளையாட்டு மைதானம், காடு. பழத்தோட்டம் என மேடை மாறிக் கொண்டேயிருந்தது. இல்லை, சிறுவர்கள் தமது நடிப்பினால் அத்தகைய சூழலை நமது கண்முன் கொணர்ந்தார்கள்!
விலங்குகள், தம்மிச்சையாக மேடையில் வந்து உலாவின. உறுமின! முறுகின. அந்த மேடை அசல் வனம் என்ற உணர்வை நமக்குத் தந்தது! அடுத்த கணம் குறத்தி பாடிக்கொண்டே வந்தாள். காடு நாடாகிவிட்டது. மீண்டும் காடு அங்கே நரிகளின் ஊளையும், யானையின் பிளிறலும், பல்லினப் பறவைகளின் ஒலிகளும் எழுந்தன. நாங்கள் மெய்மறந்து இவற்றை ரசித்தோம். இந்தச் சிறுவர்கள் துருதுருவென்று ஓடியாடி பந்துபோல் உருண்டும் முயல்கள் போலத்தாவியும் மேடையில் உலாவியமை மனத்தைக் கிளுகிளுக்க வைத்தது. பலவண்ணப்பூக்களை வரிசையாக வைத்துத் தொடுத்த மலர்ச்சரம் போல இந்த நிகழ்ச்சி முழுவதும் அமைந்திருந்தது. சிறுவருக்குச் சுயநம்பிக்கையை சுயசிந்தனையை உண்டாக்குவதாகவும், செயல்திறனை வளர்ப்பதாகவும், இசை, நடிப்பு முதலியவற்றில் ரசனையை மேம்படுத்துவதாகவும் முழு நிகழ்ச்சியும் அமைந்திருந்தது.
சிறுவர்களது பங்களிப்புகளிலே இது சிறந்தது. இது தாழ்ந்தது என்று தரம் கணிப்பது நல்லது அல்ல. இந்த நிகழ்ச்சியிலே பங்கு பற்றிய சிறுவன். சிறுமி ஒன்னொருவரும் நன்றாகவே செய்தார்கள். அவர்கள் ஒன்னொருவரையும் பாராட்டுகிறோம். அவர்களது திறமைகள் வளர்க என வாழ்த்துகிறோம்.
நியதி' என்னும் பெயரில் சிறுவர் வழங்கிய இந்த நிகழ்வினைப் பார்த்தபோது எங்கள் ஒன்வொருவருக்கும் நமது சிறுவயது விளையாட்டுகளின் இனிய நினைவுகள் மனத்தில் வந்திருக்கும். சிறுவர் சாடி திருவிழா நடத்துவது, பள்ளிக்கூடம் நடத்துவது, மன்ை சோறுகறி சமைப்பது என அவை எண்க1ை0/- யான விளையாட்டுகள்! இவைபற்றிய அந்தநாள் அனுபவங்களை இன்று நாம் மனத்திலே மீட்டு மகிழ்ளது போல, இந்தச் சிறுவர்களும் இந்தக் கலைக்
பக்கம் 7 "ஓலை’ - 16 மே 2003)

Page 6
கோலத்தில் தாங்கள் பங்கு பற்றிய இனிய அனுபவங்களை பின் ஒருநாளில் நினைந்து பேசி மகிழ்வார்கள் என்பது நிச்சயம்.
கொழும்பு போன்ற நகரங்களில் உள்ள சிறுவர்களுக்கு அயல் என்பதும் விளையாட்டுத் தோழர் என்பதும் இல்லை என்றே கொள்ள வேண்டும். கிராமத்துச் சிறுவர்களைப் போல இவர்கள் ஆசைதிர விளையாட வசதி கிடையாது. இந்தக் குறைபாட்டை ஒரு சிறிதாவது நீக்கும் வகையில் கொழும்புத் தமிழ்ச்சங்கம் கூடிப்பயில்வோம்' என்னும் பயிற்சியை நடத்தி வருகிறது. தமிழ்ச்சங்கத்துக்கு எங்கள் வாழ்த்து இந்தப் பயிற்சியைக் கலை ஆர்வமும் சேவை மனப்பான்மையும் கொண்ட மூன்று இளைஞர்கள் நடத்தி வருகிறார்கள். த.சிவஞானரஞ்சன், ச.ஜீவா. கரன், வ.சிவஜோதி ஆகிய அந்த மூவரையும் நாம் எல்லோரும் மனமாரப் பாராட்டுகிறோம். அவர்கள் பணி தொடரவேண்டும். இங்கு நடைபெற்றது போன்ற சிறுவர் நிகழ்ச்சிகளை அவர்கள் ஆண்டுதோறும் அரங்கேற்ற வேண்டும் என வாழ்த்துகிறோம்.
ിuബിb GDLടിb ஈழத்துத் தமிழ் நூற் கண்காட்சி - 2003
ஈழத்து, புலம் 6ിu് தமிழ் எழுத்தாளர்களின் எழுத்து வடிவங்கள் காட்சியில் இடம்பெறும். அரசியல், அழகியல், ஆன்மீகம். இதிகாசம், இசையியில், சமயம், வரலாறு, ஓவியம், ஓலைச்சுவடிகள், நாவல், நாடகம், சிறுகதை, சிறுவர் இலக்கியம், கவிதை, திரைப்படப்பரத தொல்லியல், நூலகவியல், போராட்டப்பதவுகள், சிறு சஞ்சிகை விவசாயம், புவியியல், சோதிடம், மொழிபெயர்ப்பு. என விரியும் ஈழத்து நூல்களின் கண்காட்சி உங்கள் படைப்புகளுடன் படித்து முடித்த நூல்களும் ஈழத்து எழுத்தாளர்களின் ஒலி ஒளி இழை நாடாக்களும் அனுப்பலாம். அனைத்து எழுத் தாளர்களின் பழைய புதிய படைப்புக்களையும் அமரத்துவமான படைப்பாளிகளின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களையும் அனுப்புங்கள்.
தொடர்புகட்கு R.MAHENDRAN (ypióca glypso) 34 REDRIFF ROAD, PLAISTOW, LONDON E 13 OJX, U.K.
TE: 004420 85867783
‘ஓலை’ - 16 (மே 2003) பக்கம் 8

குறுங்காவியம்
செங்கதிரோன் எழுதும் ளைச்சல்
(கவிஞர் நீலாவணனின் வேளாண்மைக் காவியத்தின் தொடர்ச்சி)
(செல்லையாவை அன்னத்திற்குக் கேட்டுப் போகிறார்கள்)
பக்கம் 9
"செல்லனுக்கென்றே அன்னம் சின்னனிலிருந்தென் எண்ணம்!" சொல்லுவாள் பெத்தா, சொல்லி(ச்) சொந்தத்தைச் சேர்த்து வைப்பாள். மெல்லமாய்க் கனகம் காதில் மென்மேலும் ஒதிஒதி செல்லனைக் கேட்டுப் போகச் சிரத்தையாய் நின்று வென்றாள்.
செழிப்புடன் சேமம் எங்கும் சேர்ந்ததோர் சிறந்த நாளில் 'கொழுக்கட்டை' கொண்டு போக கூப்பிட்ட சுற்றம் சூழ, குளக்கட்டுக் கோயில் சென்று கும்பிட்டு வந்த பின்னர் வெளிக்கிட்டார் கந்தப்போடி வீட்டுக்கு அழகிப் போடி,
கொல்லையில் நின்ற கன்றுக் குட்டியொன் றோடி வந்து செல்லனின் வீட்டுத் திக்கில் சென்றது. அழகிப்போடி "வில்லங்கள் இல்லை" என்றார். வீதியை எட்டிப் பார்த்து "நல்லது முழிவியள்ளம் நடவுங்கள்" என்று சொல்ல,
‘ஓலை’ - 16 மே 2003)

Page 7
வெற்றிலைப்பகளி, பாக்கு வெண்கல வட்டா வொன்றில் முற்றிய கோழிச்சூடன் முழுச்சீப்பு; உள்ளே எல்லாம் ஒற்றைப்பட வைத்து மேலும் ஒரு துண்டு மஞ்சள், தேசி சுற்றியே வெள்ளைச் சீலை சுமக்கின்றாள் கனகம் முன்னால்,
கொழுக்கட்டைப் பெட்டி, பின்னால் குலையோடு கோழிச் சூடன், முழக்கட்டை போல வெள்ளை மொந்தனும், தயிரும் காவில்; புழக்கத்தில் உள்ள நல்ல புழுங்கலும், தேங்காய் வேறு. வழக்கம் போல் ஊரார்நின்று வழியிலே புதினம் பார்த்தார்.
- இன்னும் விளையும்
தாயகத்தில் ஒலை
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின்மாதாந்த மடலாக வெளிவருகிறது ஒலை. இதன் 12வது இதழ் கவிஞர் நீலாவணன் நினைவுச் | சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. கவிஞர் நீலாவணன் பற்றிய கட்டுரைகள், கவிதைகள், படைப்புகள், அவர் நினைவாக இடம் பெற்ற கவிதா நிகழ்வு பற்றிய செய்திகள் என்பவற்றைத் தாங்கி வந்துள்ள இம்மடலின் ஆசியர் செங்கதிரோன்.
விபரங்களுக்கு 7,57 வது ஒழுங்கை, உருத்திரா மாவத்தை, கொழும்பு -06 முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்
நன்றி : தாயகம் கலை இலக்கிய சமூக விஞ்ஞான இதழ் -மார்ச் 2003
தேசிய கலை இலக்கியப் பேரவை 405. ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
‘ஓலை’ - 16 (மே 2003) பக்தம் 10

சங்கம் வளர்த்த சான்றோர்கள் (கொழும்புத் தமிழ்ச்சங்கத்தை வளர்த்த அறிஞர்கள்)
இ. 乐。另一
(ஒலை 14வது இதழின் தொடர்ச்சி)
முதலியார் சு.பொன்னம்பலம் அவர்களின் பின்பு கொழும்புத் தமிழ் முன்னேற்றக் கழகத்தின் (தமிழ்ச்சங்கத்தின்) தலைமைப் பொறுப்பை ஏற்றவர் அ.சபாரத்தினம் அவர்கள். 1942ம் ஆண்டு மார்ச்மாதம் 22ம் திகதி |'கொழும்புத் தமிழ் முன்னேற்றக் கழகம்' |(இன்றைய கொழும்புத் தமிழ்ச்சங்கம்) ஆரம்|பிக்கப்பட்டதும் தமிழ் உணர்வும், ஆர்வமும் உள்ள அறிஞர் பலர் இக்கழகத்தில் உறுப்பினர்களாயினர். அதனால் அவ்வாண்டு ಭಟ್ಟ ஆகஸ்ட் மாதத்தில் பொதுக்கூட்டம் ஒன்று நிகழ்ந்தது. அப்போது 'கொழும்புத் தமிழ் s:...: முன்னேற்றக்கழகம்' எனும் பெயர் கொழும்புத் தமிழ்க்கழகம்' என ஆயிற்று. இலங்கைப் புகையிரதப் பகுதிப் பிரதம கணக்காளராகவிருந்த திரு.அ.சபாரத்தினம் அவர்கள் தலைவராகவும், திரு.சே.க.சண்முகம்பிள்ளை அவர்கள் செயலாளராகவும், திரு.சி.வேலுப்பிள்ளை அவர்கள் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர். முதலாவது ஆட்சிக்குழுவில் பதினாறு பேர் அங்கம் வகித்தனர். பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்களும், ஆ.வி.மயில்வாகனம் அவர்களும் அப்போது ஆட்சிக்குழுவில் அங்கம் வகித்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.
முதலாம் ஆண்டில் (1942/43) ஆயுள் உறுப்பினர்களாகச் சேர்ந்திருந்தவர்கள் நால்வரே. கு.பாலசிங்கம், தி.உருத்திரா, என்.எம்.எம்.மொகிதீன், நாகூர் மீரா முகமட் ஹனிபா ஆகியவர்களே அவர்கள். சாதாரண உறுப்பினர் தொகை 192 ஆண்டுப் பொதுக்கூட்டங்கள் (ஆண்டு மகாசபைக் கூட்டங்கள்) சைவ மங்கையர் கழகத்தில் நடைபெற்றன. சங்க அலுவலகம் வாடகையாகப் பெற்ற இல:292, காலி வீதி, கொழும்பு -06 முகவரியிலமைந்த
பக்தம் 11 ‘ஓலை’ - 16 (மே 2003)

Page 8
இல்லத்தில் இயங்கியது. கொழும்புத் தமிழ்க் கழகத்தின் 1வது ஆண்டு நிறைவுவிழா வெள்ளவத்தை 34வது ஒழுங்கை சைவமங்கையர் கழக மண்டபத்தில் திரு.அ.சபாரத்தினம் அவர்களின் தலைமையில் 09.05.1943 அன்று நடைபெற்றது.
03.12.1944 இல் கலித்தொகை மாநாடு நடைபெற்றது. பண்டிதர் கா.பொ.இரத்தினம் அவர்களால் 04.02.1945இல் பிரவேச பண்டித வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. கழக நிதிக்காக 1944 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 3ம் திகதி வெள்ளவத்தை 'பிளாசா' படமாளிகையில் 'ஹரிச்சந்திரா" எனும் பேசும் படம் காண்பிக்கப்பட்டது. இதற்கு திரு.ஏ.கார்டினர், திரு.எஸ்.இரத்தினநாதர் ஆகியோர் உதவியிருந்தார்கள். கழகத்தின் 1ம், 2ம் ஆண்டு அறிக்கைகள் அச்சிட்டு வெளியிடப்படவில்லை. மூன்றாம் ஆண்டறிக்கையே (1 944சித்திரை - 1945 பங்குனி) முதலில் அச்சிட்டு வெளியிடப்பட்ட ஆண்டறிக்கையாகும். மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தில் 04 ஆயுள் உறுப்பினர்களும் 192 சாதாரண உறுப்பினர்களும் இருந்துள்ளனர். மூன்றாம் ஆண்டில் 89 சாதாரண உறுப்பினர்கள் புதிதாகச் சேர்ந்து மூன்றாம் ஆண்டின் இறுதியில் மொத்தம் 285 உறுப்பினர்கள் இருந்துள்ளனர். திரு.அ.சபாரத்தினம் அவர்கள் 1942 ஆகஸ்டிலிருந்து 1946வரை தலைவராக இருந்துள்ளார். இக்காலத்தில் சங்கத்திற்கென சிறந்ததொரு யாப்பு வகுக்கப்பட்டது. அரச கருமமொழி தொடர்பான தெரிவுக்குழுவுக்குக் கொழும்புத் தமிழ்க்கழகம் 31.10.1945 இல் அறிக்கை சமர்ப்பித்தது. 1942 இலிருந்து 1946 வரை முறையே டாக்டர் சி.பொன்னம்பலம் (1942 மார்ச் / ஆகஸ்ட்); திரு.சே.க.சண்முகம்பிள்ளை, திரு.மு.கணபதிப்பிள்ளை ஆகியோர் செயலாளர்களாகப் (கழக அமைச்சன்/ காரியதரிசி) பணியாற்றினர். நீதியரசர் ந.நடராசா கியூ.சி.அவர்கள் காப்பாளராக (1944/1945) விளங்கியுள்ளார்.
1944-1945ம் ஆண்டின் சங்கத்தின்செயற்பாட்டுக்குழு வருமாறு
போஷகர் : திரு.என்.நடராசா, கியூ.சி. தலைவர் : திரு.அ.சபாரத்தினம்
பதலைவர்கள்
டாக்டர் த.நல்லைநாதன் திரு.க.கனகரத்தினம் திரு.ஏ.கார்டினர் திரு.எஸ்.இரத்தினநாதர் திரு.க.மதியாபரணம்
காரியதரிசி : திரு.மு.கணபதிப்பிள்ளை உப காரியதரிசி : திரு.வ.ந.மாணிக்கவாசகர் தனாதிகாரி : திரு.அ.வ.இரத்தினராசா உப தனாதிகாரி : திரு.சி.வேல்முருகு
‘ஓலை’ - 16 மே 2003) Ú55á 12

நூல் நிலையப் பொறுப்பாளர் : திரு.இ.காத்தமுத்து
இல்ல அமைச்சர் : திரு.ப.செ.நடராசா
அக்கத்துவக் காரியதரிசிகள் : திரு.இ.சிவராசா
திரு.ந.பாலசுப்பிரமணியம்
கணக்குப் பரிசோதகர் : திரு.வி.நல்லசேகரம்பிள்ளை
நிருவாக சபை உறுப்பினர்கள்
1. திரு.குல.சபாநாதன் 6. திரு.கே.ச.சண்முகம்பிள்ளை 2. திரு.மு.வயிரவப்பிள்ளை 7. திரு.பெ.கணபதிப்பிள்ளை 3. திரு.ஆ.பொ.கந்தசாமி 8. திரு.சி.சண்முகநாதன் 4. திரு.இ.புலேந்திரன் 9. திரு.ஈ.எல்.தம்பிமுத்து 5. திரு.சோ.நடராஜன் 10. திரு.என்.எம்.ஹனிபா
11.திரு.கா.பொ.இரத்தினம் பின்வரும் தமிழறிஞர்கள் கெளரவ உறுப்பினர்களாக விளங்கினர். 1.சுவாமி விபுலாநந்தர் 6.திக்கம் சி.செல்லையாபிள்ளை 2.வித்துவான் சி.கணேசஜயர் 7.பண்டிதர் மு.கதிரேசன் செட்டியார்
3.சிவங்.கருணாலய பாண்டியப் புலவர் 8.நாவலர் எஸ்.சோமசுந்தர பாரதியார் 4.நவாலியூர் க.சோமசுந்தரப் புலவர் 9.ஆர்.கே.சண்முகம் செட்டியார் 5.நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் 10.சி.இராசகோபாலச்சாரியார்
1945இல்தான் 'கொழும்புத் தமிழ்க்கழகம்' 'கொழும்புத் தமிழ்ச்சங்கம்'
ஆயிற்று.
-தொடரும்
அன்புமணி தரும் தகவல்
ஒலை-12 (ஜனவரி 2003)நீலாவணன் நினைவுச் சிறப்பிதழில் வெளிவந்த 'பசுநெய் விசுவலிங்கம்' (அமரர் நீலாவணன் அவர்கள் அம்மாச்சி ஆறுமுகம் எனும் புனைபெயரில் எழுதிய விருத்தாந்த சித்திரம்) இதுவரை எதிலும் அச்சேறாதது எனக் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் அது 'மலர்' (மார்ச் 70) சஞ்சிகையில் வெளிவந்துள்ளதாக எழுத்தாளர் அன்புமணி இரா.நாகலிங்கம் அவர்கள் (18, நல்லையாவிதி, மட்டக்களப்பு) அறியத்தந்திருந்தார். அதன் போட்டோ பிரதியையும் அனுப்பி வைத்திருந்தார். ஒப்பிட்டுப் பார்த்ததில் இவ்விருத்தாந்த சித்திரம் சிறுசிறு மாற்றங்களுடன் 'மலர்' -மாாச்70 இதழில் பசுநெய் பஞ்சலிங்கம்' என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவந்தது. தகவல் தந்த அன்புமணி அவர்களுக்கு 'ஒலையின் நன்றிகள்.
-ஆசிரியர்
பக்கம் 13 ‘ஓலை’ - 16 (மே 2003)

Page 9
அவளைப்பற்றி எண்னத்தைச் சொல்ல? இன்றா நேற்றா அவள் தோன்றி எப்ப தோன்றினாளோ யானறியேன்! இளமையோ இளமை
குன்றாத இளமை
இப்பவோ அப்பவோ எப்பவும் அவள் அப்படியே! அன்றொருநாள் மனோரம்யமான வேளையில் இதமாகப் பழகினாள் - தன் தளிர்க்கரங்களாலே என்னுடலை வருடினாள்! உடல் சிலிர்த்தது - ஆ இவளல்லவோ பெண் - அவள் சுகந்தமென்ன அவள் தரும் சுகமென்ன எங்குமவள் என்னை இருக்கவே விடவில்லை! சோபனாவாய் சோபித்தாளவள் மோகனாவாய் மோகித்தாளவள் வசந்தியாய் வசந்தமானாள் காஞ்சனாவாய்க் கனவில் வந்து நளினமாய் நகைத்தாள் - அவள் சுகத்தின் சிகரம் இன்பத்தின் உச்சி - நான் என்னை மறந்தேன் என்நாமம் கெட்டேன்! அவள் தாலாட்டில் கிறங்கினேன்; அவள் மென் மடியில் உறங்கினேன்.
மறுநாள்-- பெண் வேங்கையாய் மாறினாள். சீறினாள். குமுறினாள், குதித்தாள், கொந்தளித்தாள்! மரஞ்செடிகளைப் பிய்ச்சுப்பிடுங்கினாள்! பதைபதைத் தெழுந்தேன் அவளா இவள் - ஏங்கினேன்! உக்கிர தாண்டவமென்ன எதையும் உருட்டும் போக்கென்ன? விருட்டென மறையக்கதிரவனும் விநயமாய்க் கேட்டேன் நானும். "வக்கிர புத்தியேனோ? வந்தெனை உலுப்பியதேனோ? ஊர் கிடுகிடுக்க
மணல் பறந்தது; வானம்
‘ஓலை’ - 16 (மே 2003) U55ó 14
 

பக்கம் 15
புனல் கறந்தது.
அவள் சினத்துக்கு காரணம் யாதோ? யாரோ? சத்தியமாய் நானில்லை! பெண் இவள் பேயாய் மாறியதேன்? எவருமறியாது திகைக்க ஏதுமறியாப் பேதைபோல் அமைதியானாள் - விந்தையிலும்விந்தை! முல்லையில் முறுவலித்தாவள்; குறிஞ்சியில் குமரனைத் தழுவினாள். நெய்தலில் வான் பார்த்து மகிழ்ந்தாள். மருதலில் வருணனடி வருடினாள்; வெறும் பாலையில் பகலவனை வரித்தாள். என்ன தான் சொல்வேன்! பெளர்ணமி நிலவில் என்றும் பதினாறாய் பதுமையாய் நின்றவள். திடீரெனப் பத்தடி பாய்ந்தாள் - அலைக்கரங்களால் திரை கடலைத் தாக்கினாள். தன் நீலச்சேலையைத் தூக்கி ஆடினாள் - ஊழிக்கூத்தா அன்றி பாரிஸ் நகரத்து மூலான் ரூஜா? கண்கண் ஆட? ஹோவென்று சிரித்தாள்- சற்றும் அடக்கமின்றி ஆர்ப்பரித்தாள். பிறிதொரு நாள் - மலையாய் வான் பார்த்துக் கிடந்தாள் - ரசித்தேன்!
மலைத்தேன் - சிலையானேன்! அறிந்தாளா என்ன? சடாரென
வெண்முகில்களை இழுத்துத்தன் பொன்மேனியை மூடினாள். நாணமுமுணர்டோ இவளுக்கு? அவள் போக்கே மர்மந்தான்! அவளைப் பற்றி அவளுக்குத்தான் தெரியும் ஏனெனில்
இயற்கையன்றோ அவள்
米米米米米米
- திலகா விவேகானந்தன்
‘ஓலை’ - 16 (மே 2003)

Page 10
அஞ்சவி!
* கொழம்புத் தமிழ்ச்சங்கத்தின் துணை நிதிச் :
செயலாளர் சிபாஸ்க்கரா அவர்களின் அன்புத் தாயார் (காலஞ்சென்ற புகையிரத அதிபர் 1 சின்னத்தம்பியின் மனைவி சங்கானை தொட்டி லடி பொன்னம்பலம் மாஸ்ரரின் மகள்) இளைப்பாறிய ஆசிரியை திருவாட்டி நாகேஸ்வரி ! சின்னத்தம்பி அவர்கள் 15.04.2003 அன்று கொழும்பில் காலமானார்.
曹 * கொழம்புத் தமிழ்ச்சங்க ஆயுள் உறுப்பினர் திரு.பசுபதிப்பிள்ளை கதிரவேலு (சட்டத்தரணி) அவர்கள் : 16.04.2003 அன்று கொழும்பில் காலமரனார்,
曹 事 இவர்களுக்கு ஓலை'தனது அஞ்சலி. யைச் செலுத்துகிறது. 20.04.13 ஞாயி 嘯 ற்றுக்கிழமை நடைபெற்ற கொழும்புத் : �) தமிழ்ச்சங்க ஆட்சிக்குழுக் கூட்டத் கிங் தில் இவர்களின் மறைவையொட்டி மெளனாஞ்சலி செலுத்தப்பட்டது.
上 量
'ஒளி' - 1 மே 2003) பர்தம் 16
 
 
 

Tī TLi)
என் கவிதை அத்தனையும் தத்துவம்! - வரும்
இளையதலை முறையினர்க்கோர் பொக்கிஷம்!
அன்புவழி எனும் வாழ்க்கைச் சித்திரம்'- பூமியில் அம்ரனாய்த் திரிவோர்க்கு வளர்திரம்!
அளிக்குமது நல்லவர்க்கு கெளரவம்- வாழ்வதில்
அல்லலுறு மாந்தருக்கு ஒளாடதம்!
ஒளியூட்டி இருனோட்டும் சந்திரன்! பாடல்
ஒவ்வொன்றும் உலகுய்யும் மந்திரம்!
வாழ்க்கையதன் வழிசொல்லும் வித்துவம்! எனது
வரலாற்றின் கதை சாறும் புத்தகம்!
சூழ்க நலம் என்பாட்டின் ஆசைகள் இது
சுபபநலத்தார் அறியாத பாதைகள்!
அடிமைவிலங் குடைக்கின்ற கத்தியல் -காணும்
அவலத்தை ஒட்டுகின்ற பெரும்புயல்
மிரமைபறு மானிடர்க்கு நெம்புகோல்! மேலும், மேலாகச் சொல்வதெனில் அம்புபோல்!
சட்டத்தை மதிக்குமென் பாடல்கள்!-பார்பும்
மதர்மர் சிந்தனையின் தேடல்கள்!
கொட்டுமழை அருவியென ஓடிடும்! என்றும்
குறைவில்லா யாப்பணிகள் சூடிடும்!
இறையச்சம் தனைநாளும் பேணிடும்! பால்
இயல்சுற சிறிதளவு நாணிடும்!
குறைவில்லா இல்வாழ்க்கைப் பெட்டகம்!-சுனா கொண்டேகி, கரைசேர்க்கும் ஒட்டகம்!
காசுக்குக் கரையாத இரும்பது- நல்ல
கலைxபுள்ளத் தோருண்ணும் பீரும்பது
மாசுபடி பாதசுடர் நெருப்பது ஏனை
மதிக்கின்ற மனிதர்களின் விருப்பிது!
-"கவிமணி'அகெளரிதாசன்
ஆலங்கேணிகிழக்கு
Uigiúil 17 "ஓலை" - 1 மே 2013

Page 11
சங்கப்பலகை
திகதி
Tஅறிவேர் ஒன்று கூடல் H இலக்கியச் சொற்பொழிவு
விடயம்
நிகழ்த்தியவர்
[}2.[].1,2[ዘ]3
இலக்கியக் கலந்துரையாடல்
7[13 ] 19, 4.2(M) தமிழ் மொழியை திரு.3. யோகராஜா
(23) இரண்டாம் மொழியாகக் (விரிவுரையாளர், களனிப் பல்கலைக்
கற்பித்தல் கழகம், மொழியியல்துரை)
3...N) குடும்பமும் நல்லுவும் திரு.8.J.யோகராஜா
(214) விரிவுரையாளர், களனிப் பல்கலைக்
கழகம், மொழியியல்துறை
(...)
(205)
சிலப்பதிகாரத்துக் கானல்வரி
புரானவித்தகர் திரு.மு.தியாகராஜா
நால்நயம் காண்போம்.
நயம் காணலுக்காக எடுத்தாளப்படுகின்றன.
05.05.2000இல் ஆரம்பித்து பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.3பிமணிக்கு நடைபெற்று வரும் இந்நிகழ்ச் சியில் இலங்கை எழுத்தாளர்களது நூல்கள்
திகதி நூலின் பெயர் நூலாசிரியர் நயம் கண்டவர்
4). அதிதிரன் பண்டிதர் திரு.சி.கந்தசாமி
(8)
மகேஸ்வரன்
3ቕ W} †.3ዕ]i}3 அடங்காப்பற்று அருனா திரு.த.நித்தியானந்தன்
(9) பண்டாரவன்னியன் செல்லத்துரை ஆசிரியர்.
ாேரELIறு தெமட்டகொட
விபுலானந்த வித்தியாலயம்
'o' - 16 (od 2003) {JấJửi 18

சங்கத் துணைத்தலைவர் திரு.பெ.விஜயரத்தினம் அவர்களின் தலைமையில், 'பனிமலர்' லண்டன், புதுசு' -யாழ்ப்பாணம் இதழ்களின் முன்னாள் ஆசிரியர் திரு.நா.ரீசபேசன் அவர்களால் "லண்டனில் வெளிவரும் தமிழிதழ்கள்" எனும் பொருளில் சிறப்புச் சொற்பொழிவுநிகழ்த்தப்பட்டது.
தமிழக அறிஞர்களுக்கு வரவேற்பும் கலந்துரையாடலும்
கொழும்பு கம்பன் விழாவுக்கு (1-04.2003 - 9.04.2003) வருகை தந்திருந்த தமிழக அறிஞர்களுக்கான வரவேற்பும், கலந்துரையாடலும் 17.04.2003 வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கு சங்கத்துணைத்தலைவர் பெ.விஜயரத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சங்கத் துணைத்தலைவர்களுள் ஒருவரான டாக்டர் ஜின்னாதர் ஷரிபுத்தின் வரவேற்புரை நிகழ்த்தினார். பின்வரும் தமிழக அறிஞர்கள் வருகை தந்திருந்தனர்.
பேராசிரியர் ஒளவை நடராஜன் (முனர்னான துணைவேந்தர். தமிழ்ப்
பல்கலைக்கழகம், தஞ்சாவூர்) பேராசிரியர்கப.அறவாணன் (துணைவேந்தர். மனோனி மணியம்
சுந்தரனார் பல்கலைக்கழ கம்)
டாக்டர் அ அறிவொளி
திரு எனப் எண் குப்புசாமி முதலியார் (தலைவர். வேலூர்க் கம்பன் கழகம்) கம்பகாவலர் திமுருகேசன் (செயலாளர். புதுச்சேரிக் கம்பன் கழகம்) கி.கலியானசுந்தரம் (இனைச் செயலர். புதுச்சேரிக் கம்பன் சழகம்) நகோவிந்தசாமி முதலியார் (தலைவர். புதுச்சேரிக் கம்பன் கழகம்)
பக்கம் 19 "see" - If |Gull 2003)

Page 12
பேராசிரியர் கசச்சிதானந்தம் (புதுச்சேரி)
பாவலர்மணி சித்தன் (புதுவை) இரத்தின சின்னச்சாமி (தமிழாசிரியர், புதுச்சேரி)
இவர்கள் அனைவரும் சிற்றுரைகள் ஆற்றினர். சங்கத் துனைப் பொதுச் செயலாளர் திரு.ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இலக்கியச் செயலாளரும், கொழும்புத் தமிழ்ச்சங்க மாதாந்த மடல் 'ஒலை"யின் ஆசிரியருமான திரு.த. கோபாலகிருஷ்ணன் நன்றி நவின்றார். சங்க வெளியீட்டு நூல்களும், ஒலை'பிரதிகளும் நிதிச்செயலாளர் தி.கணேசராஜாவினால் தமிழக அறிஞர்களுக்கு அன்பளிக்கப்பட்டன.
Aifft 關
(சொற்பொழிவு)
கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகக் குழுவின் ஏற்பாட்டில் இலங்கைத் தமிழர்: வாழ்வும் வகிபாகமும்" என்ற தலைப்பில் நிகழ்த்தி வரப்பெறும் சொற்பொழிவு சிற்றாய்வேடு வெளியீடு வரிசையில், 27.04.2003 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு பேராசிரியர். சி.மெளனகுரு (நுண்கலைத்துறை கிழக்குப்பல்கலைக்கழகம்) அவர்களின் மேற்படி சொற்பொழிவும், சிற்றரய்வேடு வெளியீடும் திரு.கே.சண்முகலிங்கம் (மேலதிகச் செயலாளர், கிழக்கின் அபிவிருத்தி மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு) அவர்களின் தலைமையில் கொழும்புத்தமிழ்ச்சங்க குமாரசுவாமி விநோ தன் கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது.
* தமிழ்ச்சங்கத்தின் மற்றுமொரு சிற்றாய்வேடான பேராசிரியர் சிமெளன. குரு அவர்களின் சங்ககால சமூகமும் இலக்கியமும் ஒரு மீள்பார்வை' நாலைச் சங்க அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். விலை ரூ 100/=
சங்கப்பலகை தயாரிப்பு ! சி.சரவணபவன் (ஆட்சிக்குழு உறுப்பினர்)
"g)" - 6 de 2003 பத்தம் 20
 

பழைமையும் புதுமையும்
பழைமை கழிதல் புதுமையுடன் சேரல் வழமைதான் என்றிடிலுந் திதே பழுதில்லா நல்லனவாம் என்ப நிலைப்ப தொழித்தலொடு பொல்லா தனபுகுதலும்,
ஓரெழுத் தேனும் உகந்தவிடம் மாறிடுங்கால்
சீர்மை தவறிடுமே செந்தமிழில் - ஓராதேன்
வேரதுக்க மாற்றார்தம் வேற்று மொழிவழக்கை
சேர்த்தான் தமிழழிக்கத் தான்.
O
தன்கா லுறுதி தனைநோக்கான் மாற்றார்கால்
பொன்ஆம் எனவெண்ணிப் பற்றிடுவான் - தன்கால் நடையிழந்த தாம்காக்கை நாடியுவந் தன்ன நடைபயிலப் போனகதி போல்
O
ஒன்றோடொன் றொன்றின் இரண்டாம் அசைசீர்கள் ஒன்றோடொன் றொன்றிIகு ஓசைதரும் - அன்றேல் கணக்குத் தவறுவபோற்றான்கவியும் சொல்சேர்
பினத்துக் குவமை பெறும்
O
தாயைப் பிழைத்தோன் தமிழைப் பிழைத்தழிப்போன் சேயாவா ரோர்சூலில் ரரென்றே - தாயேபோல் தாய்மொழியை நெஞ்சத்துள் தாங்கு பிழைநேரா தூய்தாய் வளருந் தமிழ்
O Cl
- ஜின்னாஹர்
H
Uá5ú, 21 "ஓலை" - I (t 2003)

Page 13
பன்மொழிப்புலவர்.த.கனகரத்தினம்
மாங்காய்ப்பழம் விற்றவனின் கதையை டாக்டர் மு.வரதராசன் குறிப்பிடுகிறார். அவன் விற்றது மாம்பழம்தான். ஆனால், அவன் மாங்காய்ப்பழம், மாங்காய்ப்பழம் என்று கூவி விற்றான். அவனைத் திருத்த முயன்றவர் மாம்பழம் என்றே சொல்லப்பா. வாழைக்காய்ப்பழம், பலாக்காய்ப்பழம் என்று சொல்கிறாயா?இல்லையே. இதை மட்டும் ஏன் மாங்காய்பழம் என்று சொல்கிறாய்? இனிமேல் சொல்லாதே' என்றார்.
சொல்லிலே என்ன இருக்கிறது?பழம் நன்றாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள்' என்றான் அவன்.
இன்னொருவர் அவனுக்கு மேலும் விளக்கம் அளித்தார். மாங்காய்ப்பழம் என்றால் பாதி காயாகவும் பாதி பழமாகவும் இருக்கிறது என்பது பொருள். வாங்குவோர் அரைப்பழம் ஆகையால் புளிப்பாக இருக்கும் என்று வாங்க மாட்டார்கள் என விளக்கமளித்தார். மாம்பழம் என்றால் நன்றாகப் பழுத்தபழம் என்று தானே தெரிந்துவிடும்' என்றார். பழம் விற்பவன் மாம்பழம் என்பதன் பொருளை ஏற்றுக் கொண்டான். 'தொடர்கள் அமைவதற்குத் தொடக்கத்தில் மனத்தில் தோன்றிய எண்ணங்களின் போக்கே காரணம்' என்கிறார் டாக்டர் மு.வரதராசன் அவர்கள்.
எமது நாட்டிலும் தேங்காயை அறிந்தவர்கள் தேங்காய்மரம் என்கின்றனர். மாங்காயை அறிந்தவர்கள் மாங்காய்மரம் என்கிறார்கள். பாக்கை அறிந்தவர்கள் பாக்குமரம் என்று கூறுகிறார்கள்.
தேங்காய் மரம்- தென னை என்பதையும் மாங்காய் மரம் - மாமரம் என்பதையும் பாக்குமரம் - கமுகமரம் என்பதையும் கற்றுக் கொள்ளப் பயிற்சி தேவைப்படுகிறது. ஆங்கில மொழியின் செல்வாக்கும் இத்தகைய பிழைகளுக்குக் காரணமெனலாம். தமிழை இரண்டாவது மொழியாகக் கற்றுக் கொள்ளும் போது இத்தகைய பிழைகள் நேர்வது வழக்கம்.
நாம் வெகுதூரம் செல்ல வேண்டியதில்லை. கடையொன்றிற்கு நேரே செல்வோம். அங்கே விற்கப்படும் நெய்வகைகளை நோக்குவோம். பசுவின் பாலிலிருந்து எடுக்கப்படும் நெய் பசுநெய். எருமையின் பாலிலிருந்து
‘ஓலை’ - 16 (மே 2003) பக்தம் 22
 

எடுக்கப்படும் நெய் எருமை நெய். எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய் எண்ணெய் (எள் + நெய்). அவ்வாறு தேங்காயிலிருந்து எடுக்கப்பட்டது தேங்காய் நெய் என்றும், கடலையிலிருந்து எடுக்கப்பட்ட நெய் கடலைநெய் என்றும், மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட நெய் மண்ணெய் (மண் + நெய்) என்றும் கூறப்படல் வேண்டும்.அவ்வாறு கூறப்படுவதில்லையே ஏன்?
தேங்காய் நெய் - தேங்காயெண்ணெய், கடலை நெய் - கடலையெண்ணெய், மணர்ணெய் - மண்ணெண்ணெய் என்றும் கூறப்படுகின்றனவே. அவற்றில் எள்ளின் நெய்யாகிய எண்ணெயும் கலந்து நிற்கிறதே! இத் தொடர்கள் பிழையாகப் பேசப்படுகின்றன; எழுதப்படுகின்றன. இன்று செய்யத்தக்கது யாது? பெரும்பாலோரின் தவறுகளைத் திருத்துவதில் சிரமம் உண்டு.
வழக்கு வழுவில் சில சொற்கள் எடுத்துக் கொள்வோம். இவை பெரும்பாலும் ஒத்த ஒலி அமைப்புடையனவாகவிருக்கலாம். பொருள் விளக்கமின்றி அவை பிரயோகிக்கப்படுகின்றன. இத்தகைய வழக்கு வழுக்களால் வாக்கியப் பொருள் மாற்றமடையும். கூட்டத்திற்கு வருகை தந்தனர் என்றதைக் குறிப்பிட வேண்டிய அறிக்கையாளர் 'கூட்டத்திற்குப் பலர் சமூகமளித்தனர்' என்று எழுதியிருந்தார். சமூகம் என்பது Society - கூட்ட மக்கள் இவ்விடத்தில் ச + முகம் = சமுகம் என்ற சொல்லே வழங்கப்பட்டிருக்க வேண்டும். இலங்கையில் பல சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்' என்று எழுதுவது சரி. சமூக அபிவிருத்திச் சங்கம், சமூக அபிவிருத்தித்திட்டம், சமூகசேவை எனவரும் இடங்களில் சமூகம் என்ற சொல் உபயோகிக்கப்படலாம்.
தவறான சொற்களும் தொடர்களும் விரைவிலே அழிந்து போகக் கூடியவை. எழுத்து வழக்கில் அவை ஒருபோதும் இடம்பெறுவதில்லை. எனினும் சில வேளைகளில் இலக்கியத்திலும் புகுந்து விடுகின்றனவே? அவற்றிற்கு யாம் செய்ய வேண்டியன எவை? மொழி சமூகத்தின் ஆக்கம். பெரும்பாலும், பெரும்பான்மையோர் வழக்கே ஆதிக்கம் பெறுகிறது. 'ஊருடன் ஒத்துவாழ்' என்பது எவ்வளவிற்குப் பொருத்தம்? என்பது சிந்தனைக்குரிய விடயம். எந்த மொழியும் தருக்கமுறைக்கு ஒத்த இலக்கண விதிப்படியே வளர்ச்சியடையும்.
(D
cJá9ú 23 “gạ6D6v” - 16 (ao 2003)

Page 14
தமிழர் தேசம்
இலங்கைத் தீவின் எழிலிரு கரைகள் இலங்கும் வடக்கு கிழக்கென இன்று.
இந்தப் பாகமே எங்களது தேசம் சொந்தப் பூமி, சுதந்திர நாடு. சிங்களவர் தேசம் தோன்றும் முன்னம் எங்களவர் தேசம் எழுந்து நின்றது.
நாக நாடு என இதை நாமும் ஏகமாக இயம்பி வந்தோம்.
தேவநம்பியதீசன் அரசிலும் நாவில் இனித்தது நம் தமிழ் மொழியே. குமரி நாட்டின் தென்கோடி தன்னில் அமைந்திருந்தது எம் அன்னை பூமி! அன்றந்த இராவணன் ஆட்சி செய்ததும் இன்றிந்த நாடே! இது வரலாறு
சோழ பாண்டிய சோதர குலங்கள் ஆளும் ஒரு நாடாய் அமைந்ததும் இதுவே.
எல்லாளன் என்னும் ஏந்தல் அவன் அன்று நல்லரசு செய்த நாடும் இதுவாம்.
காகவண்ண தீசன் கட்டி அரசாண்ட தீகவாவியும் நம் திருநாட்டின் அங்கம்.
பட்டிப்பளை அதன் பழம் பெயராகும் எட்டுத்திசையும் இதன் புகழ் நடந்தது. ஆரியச் சக்கரவர்த்திகள் என்னும் சூரியர் ஆண்ட சுதந்திர பூமி.
சங்கிலியன் பண்டார வன்னியன் என்னும் மங்கா முடிமன்னர் மண் இதுவாகும்.
கலிங்க மாகோன் கால் வைத்தீங்கு பலமுடன் ஆண்டான் பல்லாண்டு காலம்.
‘ஓலை’ - 16 மே 2003) Uá3ó 24

பாண்டியன் வம்சம் பராக்கிரமபாகுவும் ஈண்டிந்த நாட்டின் இணையிலா வேந்தன்.
இனி எங்கள் நாட்டில் தமிழ்க்கொடி பறக்கும்! தனி ஒரு தேசம் தமிழர் நாம் ஒன்று.
இன்றிந்தத் தேசம் ஈழமென அறிக! நன்றிது சிறக்க நாம் வாழ்த்துவமே! ஆழியது சூழ்ந்த அழகு மிகு தேசம் வாழிய என்றும் வாழியவே!
- வாகரைவாணன்
அமைதி
பூமி மாதா
இன்னமும்
பார்த்துக் கொண்டிருக்கிறாள்!
பொறுமைக்கான நோபல் பரிசு
தனக்குத்தான் கிடைக்குமென்று
-மாவை வரோதயன்
மண்டுகஇஸம் சுதந்திரம் மாரிகாலம் போல் வேதனையின்றிப் மாறி மாறி வரும் பிரசவித்ததால் சமாதானக் காற்றுகள்! விலை கூறியின்று தமிழர்கள் மட்டும் விற்கப் பார்க்கிறோம்! இன்னும் -செங்கதிரோன் தவளைகள் போல.
-பட்டணத்தடிகள்
ஏழை
காலமெல்லாம் கண்ணிரென்று கருவறையில் தெரிந்திருந்தால் கலைந்திருப்பேன் கர்ப்பத்திலே கடைசிவரை பிறந்திடாமல்
-குலேந்திரா (திருக்கோவில்)
ωό6ώ 25 “2606av” - 16 (Gao o 2003)

Page 15
இலக்கிய வாழ்வில் இடறிய சம்பவங்கள்
கலாபூஷணம்.ஏ.இக்பால்
1959களில் நான் 'ஹாலிஎல" தமிழ் வித்தியாலயத்தில் கற்பித்துக் கொண்டிருக்கின்றேன். பதுளை வெலகெதரயிலுள்ள அரசாங்க உத்தியோகத்தர்கள் வாழும் "ஸ்மரி" ஒன்றில் தங்கிக் கொண்டேன். பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு வானொலியில் பேசவேண்டும் எனும் ஒரு நப்பாசை. அக்காலம் வானொலிப் பேச்சு 15 நிமிடங்களுக்குத் தயாரிக்க வேண்டும். நான், சீறாப்புராணம் பற்றி ஒரு ஆய்வு செய்து, 15 நிமிடங்களுக்குப் பேசக்கூடியதாகத் தயாரித்த "சீறா விருந்து" என்னும் பேச்சை அழகிய கையெழுத்தில் எழுதி இலங்கை வானொலி, முஸ்லிம் நிகழ்ச்சிப் பகுதிக்கு அனுப்பிவிட்டேன்.
ஒரு வாரத்திற்கிடையில் இப்பேச்சு எடுபட்டதாகவும், 30.03.1959 இரவு 8.30 - 845க்கு ஒலிபரப்பப்படும் என்றும், ஒலிப்பதிவு அன்று காலை நடைபெறும். அதற்கான புகையிரத இலவசச்சீட்டு அனுப்பி வைக்கப்படுமென்றும் தெரிவித்திருந்தார்கள்.
நான், மிகவும் குதூகலமடைந்தேன். வானொலியில் எனது குரலும், பேச்சும் ஒலிபரப்பப்போகின்றதென்றும், வானொலியின் கன்னிப்பேச்சை உன்னிப்பாக நானே கேட்கலாம் என்பவைகளே என் குதூகலத்திற்குக் காரணமெனலாம்.
29ம் திகதிவரைப் போக்குவரத்துக்குரிய இலவசச்சீட்டையும், அழைப்புக் கடிதத்தையும் எதிர்பார்த்து ஏமாந்தேன். அதுமட்டுமல்ல, அந்த நிகழ்ச்சியை நீக்கிவிட்டார்கள் என்றே எண்ணிக்கொண்டென். அன்றிரவு, மறுநாள் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியை அறிவித்தார்கள். அதில, எனது பேச்சும் இரவு 8.30க்கு ஒலிபரப்பப்படுவது பற்றியும் கூறினார்கள். நான் தங்கும் "ஸ்மரி"யி. லுள்ள நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் ஏ.ஸி.எம்.பாச்சா என்பவர் "நாளை காலை உடனே கொழும்பு செல்லுங்கள்" என என்னை வேண்டினார். 30ஆந் திகதி அதிகாலை பதுளையிலிருந்து கொழும்பு "பஸ்" எடுத்து காலை ஒன்பது மணிக்குக் கொழும்பை அடைந்தேன். கொழும்புமருதானையிலிருந்து ஐந்து சதம் டிக்கட் எடுத்து "ரொலி பஸ்ஸில் ஏறி "ஆமர்ஸ்டீட்' வந்தேன். எனக்குத் தெரிந்த, எங்கள் குடும்பநண்பர், மோகனசுந்தரம் எனும் நண்பரை சுலைமான் நேசிங்ஹோமில் சென்று சந்தித்தேன். அவர், அங்கே "டெலிபோன் ஒப்ப
‘ஓலை’ - 16 மே 2003) Uásó 26

ரேற்றராகக் கடமை புரிந்து கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் அறைத் திறப்பைத் தந்து, வெளியே செல்ல ஆயத்தமாக வரும்படி சொன்னார். வந்ததும் "இங்கிருந்து பொரல்ல செல்லும் "ரொலி பஸ்ஸில் ஏறி, அங்கிறங்கி ஒரு டெக்ஸ்ஸியில் ஏறி, றேடியோ சிலோன் என்று மட்டும் சொல்லுங்கள். அங்கே உங்களை இறக்கிவிடுவான்" என்றார். அப்படியே நான் நடந்து கொண்டேன். இலங்கை வானொலியினுள்ளே சென்றேன். அங்கே, முஸ்லிம் நிகழ்ச்சி அதிகாரியை அண்டினேன். அவரது மேசையில் எனது பேச்சுப்பிரதி இருப்பதைக் கண்டேன். என்னை நானே அறிமுகப்படுத்தியதும், மகிழ்ச்சியடைவது போல் பாசாங்கு செய்து, "நாங்கள் உங்களுக்குப் பிரயாணச் சீட்டை அனுப்ப மறந்துவிட்டோம்" என்ன செய்வதென்பதில் சிந்தனை ஒட்டத்துடன் இருக்கிறோம். நல்லவேளை, உங்களை அல்லாஹ் எங்களிடம் சேர்த்துவிட்டான். வாருங்கள் ஒலிப்பதிவு செய்ய ஸ்டுடியோ செல்வோம்" என்றார். உடனே, ஒலிப்பதிவு நடந்தது. நான் வந்ததுக்கும் சேர்த்துப் பயணப்பணம் கேட்டேன். அவர்கள், "வந்ததற்குத் தரமுடியாது. போவதற்குத் தருகிறோம்" எனப் பயணச் சீட்டைத் தந்தனர். பணம் 30/= ம் தந்தார்கள். நண்பர் மோகனசுந்தரத்துடன் இரவைக் கழித்துப் பேச்சையும் கேட்டுவிட்டு, காலை புகையிரதத்தில் பதுளை புறப்பட்டேன். நான் வானொலி நிலையம் போகாமலிருப்பதற்கே இந்த உத்தியை அவர்கள் செய்திருக்கின்றார்கள். போகாமல் விட்டால், அவர்களே வாசித்துப் பணத்தை அபகரித்துக் கொள்வார்கள். முதன் முதல் வானொலி நிலையத்துள் புகுந்த பொழுதே, அதுபற்றி எனக்கு நல்லபிப்பிராயமே எழவில்லை. வானொலியில் பங்கு கொள்ளவே கூடாது எனும் மனநிலையுடன்தான் நான் பதுளை வந்து சேர்ந்தேன். குறிப்பிட்ட முஸ்லிம் அதிகாரி - எதுகை மோனையுடன் அடுக்குமொழி அடுக்கும் திறத்தினர். அவர் முஸ்லிம் நிகழ்ச்சி அதிகாரிப் பதவியிலிருந்து விலகிய பின்தான் மீண்டும் வானொலித் தொடர்பு ஏற்பட்டது.
"கவிதைப் பொழிவு" என முதன் முதல் பெயர் கொடுத்து 15.03.1966 இரவு 8.30 - 8.45 வரை "நவீன உலகம் கண்ட நபிகள் நாயகம்" எனும் தலைப்பில் பொழிவு செய்தேன். இதில் விசேடம் என்னவென்றால், திக்வெல்லயில் 2002இல் 'கலாபூஷண" விருது பெற்ற ஒருவர் பற்றி தினகரனில் ஒரு குறிப்பு வெளி. யானது. அதில், அவர்தான் "கவிதைப் பொழிவு" என்னும் பெயரை முதன்முதல் கையாண்டதாகக் குறிப்பிட்டுள்ளது. சரித்திரத்திரிபுகள் கண்களுக்குமுன்னே எவ்விதம் நடைபெறுகின்றன என்பதற்கு இது ஒரு சான்று.
தொடர்ந்து வானொலி முஸ்லிம் நிகழ்ச்சி, தமிழ் நிகழ்ச்சிகளில் கவிதைப் பொழிவுகள், இலக்கியப் பேச்சுக்கள், இலக்கியச் சந்திப்புகள், கலந்துரையாடல்கள், உரைச் சித்திரங்கள், சிறுகதைகள்,நாடகம் தவிர்ந்த யாவற்றையும் நிகழ்த்தியது மட்டுமல்லாமல், "மெளலானா றுாமியின் சிந்தனைகள்" எனும் எனது நூலே வானொலியில் கவிதைப்பொழிவாகச்
Ujøó 27 ‘ஓலை’ - 16 (மே 2003)

Page 16
செய்ததுதான். இப்படி நிகழ்ந்து வரும்போது, அறிஞர் சித்திலெவ்வை பற்றிய விசேட பேச்சொன்றை நிகழ்த்த அழைத்தனர். அதன் எழுத்துப் பிரதியைப் பார்வையிட்டவர்கள் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் இஸட்.எல்.எம்.முகம்மத், எம்.ஏ.முகம்மத் ஆகியோரே. 04.02.1981 இரவு 8.05 - 8.15 வரை ஒலிபரப்பப்பட்ட அந்நிகழ்ச்சியின் ஒலிப்பதிவு 02.02.1981 பி.ப.4.00 மணிக்கு நடைபெறுவதாக அறிவித்திருந்தனர். அன்று சரியாக 4.00 மணிக்கு நான் சமூகமளித்தேன். பி.ப.5.00 மணி வரை என்னை அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை. பி.ப.5.30 மணிக்கு ஆயிஷா ஜுனைதீன் வந்தார். பிரதியைக் கையில் தந்தார். அப்பிரதியின் ஈரல் பகுதிகள் யாவும் வெட்டப்பட்டிருந்தன. அதனால், நான் பேசுவதில்லை" எனக்கூறி, வெளியேற முற்பட்டபோது, "இதற்கும் எனக்கும் தொடர்பில்லை" தயவு செய்து உதவிப்பணிப்பாளர் வி.அப்துல் கபூரிடம் கூறிவிட்டுச் செல்லுங்கள்" என்று மன்றாடினார். அதன் படி சென்றேன். உதவிப்பணிப்பாளரிடம் வெட்டப்பட்டிருக்கும் பகுதியை விட்டால், இப்பேச்சில் விஷயங்களேயில்லை என்பதை, வாசித்துக் காட்டி நிறுவினேன். அவர், சில சொற்களை மட்டும் தவிர்த்து வேறு சொற்கள் போடும்படி கேட்டார். அவ்விதம் செய்தேன்.அதன் பின், ஒலிப்பதிவுக்காக ஆயிஷா அவர்கள் ஸ்டுடியோவுக்கு அழைத்துச் சென்றார். அப்போது "நீங்கள் ஒரு பட்டதாரி, இதை வாசித்து நிர்ணயிக்கும் பொறுப்பை ஏன் செய்யவில்லை" எனக் கேட்டேன். "தயவு செய்து இதுபற்றி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்" என மறுத்துவிட்டார். ஒலிப்பதிவு முடிந்து மீண்டும் உதவிப்பணிப்பாளரைச் சந்தித்தேன். "என்னைத் திருப்திப்படுத்துவதற்காக இவ்வொலிப்பதிவைச் செய்துவிட்டீர்கள். ஒலிபரப்பும்போது, நீங்கள் நினைப்பது போல் பதிவை அழிக்க முடியும். அவ்விதம் ஏதும் நடந்தால் நான் வழக்குத் தொடர்வேன்" என ஆத்திரத்துடன் கூறினேன். "என்னில் நம்பிக்கை வையுங்கள். அப்படி ஏதும் நடக்காது" என வி.ஏ.கபூர் உறுதியளித்தார். வெளியே வரும்போது ஆயிஷா என்னிடம், "சரி, அவர்கள் நினைத்தமாதிரி ஒலிபரப்புச் செய்துவிட்டால், நீங்கள் வழக்குத் தொடர்ந்து வெற்றி பெறுவீர்களா?" என்று கேட்டார். "வழக்கில் வெற்றி பெறுவேன் என்று நான் சொல்லவில்லை. வழக்கு வைப்பதினால் தார்மீக ரீதியில் யாவரும் இதை அறிவார்கள் என்பதே எனது துணிவு" என்றேன். சிரித்துக் கொண்டு சென்றுவிட்டார்.
இவர்கள் இவ்விதம் செய்வதற்கு அன்றைய அவர்களது தென்னிந்தியப் பிற்போக்கு முஸ்லிம்களின் அனுசரணை முக்கிய பின்னணியாகத் திகழ்ந்தது. அடுத்து, பிரதிகளைத் திருத்திய இருவரும் தமிழ் இலக்கியப் பரிச்சயமற்றவர்களாக இருந்தனர். சித்திலெவ்வையின் நாவல் பற்றிக் கூறும்போது, எனது பேச்சில் வேதநாயகம் பிள்ளை, ராஜமையர் போன்ற தமிழ் முதன் நாவலாசியர்களின் பெயர்கள் வருகின்றன. முஸ்லிம் நிகழ்ச்சிகளில் அப்படி வரலாமா? எனும் குறுகிய மனமுடையோராய் அவர்களிருந்தனர். அதனால், வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் பங்கு கொள்வது பெரும்
'ഝേ' - 16 (0 2003) பக்கம் 28

அவமானம் என நினைத்து ஒதுங்கினேன். என்றாலும், அவர்கள் விடுவதாகயில்லை. முன்னைய பாணியே இன்றும் வானொலியைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் நிகழ்ச்சித் தயாரிப்பு வரலாற்றில் கலாநிதி எம்.எம்.உவைசுக்குப்பின், மின்னுபவர்கள் குத்தூஸ், வி.ஏ.கபூர், றவரீத் எம்.ஹபீல், எம்.அஷ்ரப்கான், எம்.எம்.இர்பான், புர்கான்பீ இப்திகார் போன்றவர்கள்தான். ஒரு திறமைசாலி, கல்வித் தகைமைசாலி நூறாணியா ஹஸன் குரல்வளம் குறுக்கிடுவதால் திறமைகள் வெளிவர மற்றவர்கள் இடமளிக்கவில்லையோ விளங்கவில்லை. சர்வதேச அந்தஸ்தில் தகுதி. யுடைய முஸ்லிம் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கக்கூடியவர்கள் இப்போதங்கில்லை. விரித்துக் கொண்டு போனால் இடறியேற நேரிடும். இரசிகர்கள், இலக்கிய, சமயக் கரிசனையாளர்கள் விளங்குவார்கள்தானே!
(D தொடரும்
FasLugosllupslag......... கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் பேசுகின்ற ஒரு வாய்ப்புக் கிடைத்தமைக்காக மிகவும் மகிழ்கின்றேன். இச்சங்கம் தமிழர்க்கு ஏற்றபெற்றியில் நல்ல தொண்டு செய்து வருவதறிந்துமிக்க மகிழ்ச்சி. தமிழ்க் குழந்தைகட்கு ஏற்ற பாடநூல்களும் வெளியிட்டுத் தமிழ்ச்சங்கம் புதிய காலத்திற்கேற்ற புதிய சூழ்நிலைகளுக்கேற்ற வகையில் தொண்டு புரிவது வரவேற்கத்தக்கது. தாங்கள் அன்புடன் அளித்த நூல்கள் எனக்குப் பெரிதும் பயன்படும். எல்லாவற்றிற்கும் என் பணிவான நன்றி.
கோ.விசயவேணுகோபால்
இணைப்பேராசிரியர் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
கொழும்பு மதுரை, 625021
30.04.82 - தமிழ்நாடு. இந்தியா
Uású 29, ‘ஓலை’ - 16 மே 2003)

Page 17
62ეი1&\ வாவிக் கரையோரம் மரத்தில் கயிற்றினால் இழுத்துக் கட்டப்பட்டிருந்த தோணியின் முடிச்சை அவிழ்த்து நீரில் தள்ளி இறக்கினான் படகோட்டி (மீனவ) மனிதன். காலநிலை சீராக இருந்தது. காற்று அளவாக வீசிக்கொண்டிருந்தது. படகோட்டி இருக்கையில் அமர்ந்து தோணியின் இருபக்கமும் துடுப்புக்களால் வலிக்க தோணி நீரைக் கிழித்துக் கொண்டு வாவியின் ஆழமான மையப்பகுதியை நோக்கி வேகமாக விரைந்தது. நீர் தனக்கு வழிவிடுவதைக் கண்ட தோணிக்குத் தலை சற்றுக் கனத்தது.நீரை வலிந்து வம்புக்கிழுக்க எண்ணிய தோணி நீரைப் பார்த்து,
"பார்த்தாயா? உன்னைக் கிழித்துக் கொண்டு நான் போகும் பயணத்தை. நான் வந்தால் எனக்கு மரியாதையாக வழிவிடவேண்டும் என்பது உன் கடமையாகிவிட்டது" என்றது.
"மீனவன் துடுப்புக்களால் வலிக்கிறான். காற்றும் துணை செய்கிறது. நானும் வழிவிடுகிறேன். நீயும் பயணிக்கிறாய். இதில் உனக்கு மட்டும் என்ன தனியான பெருமை வேறு" என்று நீர் அமைதியாகப் பதில் சொன்னது.
"காற்றின் துணையில்லாமல் நான் பயணிக்கமாட்டேன் என்கிறாயா? அதற்குத்தானே படகோட்டி மனிதன் இருக்கிறான். துடுப்புக்கள் இருக்கின்றன. என்னை உருவாக்கியவன் அவன்தானே. காற்று என்ன பெரிய ஆளா?" என்று சும்மாயிருந்த காற்றையும் வீணே கொழுவி வம்புக்கிழுத்தது தோணி.
காற்று, "ஏய் தோணியே! வார்த்தைகளை அளந்து பேசவும். அவசியமானவற்றைப் பேசவும் பழகிக் கொள். வீண் பேச்சுப் பேசாதே. உனது வாழ்க்கையின் பெரும்பகுதியை நீருக்குள்ளேயே கழிக்கப் போகிறவன் நீ நீரில்லாவிட்டால் உனது தேவையும் இல்லை. நீருடன் நல்ல உறவை வைத்துக் கொள். அதுதான் உனக்குப் பயன் தரவல்லது. உனது பயணத்திற்கு நீர் மட்டுமல்ல நானும்தான் உதவுகிறேன். இவற்றை மறந்து
‘ஓலை’ - 16 மே 2003) Uású 30
 

பேசாதே. இப்படியான பேச்சுக்களினால் நீயும் துன்பத்தை விலைக்கு வாங்குவது மட்டுமல்ல உனது எசமான் மனிதனையும் அல்லவா ஆபத்தில் மாட்டிவிடப் போகிறாய்" என்று புத்தி புகட்டியது.
பின்புநீரும் காற்றும் படகோட்டியைப் பார்த்து "தோணியை உருவாக்கியும் ஒட்டியும் வருகிற நீதானே அதற்கு எசமான். எனவே தோணிக்குப் புத்தி சொல்லிச் சரியாக வழிநடாத்துவதும் உனது கடமையல்லவா! தோணியின் வீம்புப் பேச்சைக் கேட்டுக் கொண்டு நீயும் சும்மா வாய் மூடி மெளனமாக இருக்கிறாயே?" என்று ஒருமித்துக் கூறின.
படகோட்டி மனிதன் இப்பேச்சுக்கள் எதுவும் காதில் கேளாதவன் போல் பாசாங்கு பண்ணிக் கொண்டு தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று மீன்களைப் பிடிக்கும் நோக்கில் வலையை எடுத்து வீசத்தொடங்கினான். தோணி நீரையும் காற்றையும் நோக்கிக் கைகொட்டி ஏளனமாகச் சிரித்தது.
தோணியின் ஏளனச் சிரிப்பு ஒய்ந்து சிறிது இடைவேளைக்குப்பின் நீரும், காற்றும் காதுக்குள் குசுகுசுத்தன. சற்று நேரத்தின் பின் திடீரென்று காற்று பலமாக வீசத் தொடங்கிற்று. வாவியில் நீரலைகள் எழுந்து தோணியை முட்டி மோதின. நேரம் செல்லச் செல்ல காற்றின் வேகம் அதிகரித்துப் புயல் ஆக அடிக்க ஆரம்பித்தது. படகோட்டி படகில் நின்று தள்ளாடினான். நீரலைகள் உயர எழுந்து தோணிக்குள்ளும் நீர்புக ஆரம்பித்தது. படகோட்டியால் கட்டுப்படுத்த முடியவில்லை.
அந்தோ! படகு குப்புறக் கவிழ்ந்தது. படகோட்டி நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தான். நீரும் காற்றும் ஆளை ஆள் பார்த்து அர்த்தபுஸ்டியுடன் அமைதியாகச் சிரித்தன. CD
சங்கப்பதிவேட்புலிருந்து.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் மறுமுறை
யும் பேசும் பேறுபெற்றேன். மிக மிக மேலோங்கி
வருவது கண்டு மகிழ்கிறேன். சங்கத்தின் தமிழ்த் தொண்டு மேலும் மேலும் ஓங்குக.
தெ.பொ.மீனாட்சி சுந்தரன்
23.05.76
Uá4ф 31 'gബയെ' - 16 (u) 2003)

Page 18
தாவீது அடிகளாரின் திருவுருவப்படத் திறப்பு விழாவும் சிறப்புச் சொற்பொழிவும்
இடம் ; கொழும்புத் தமிழ்ச்சங்கம்,
குமாரசுவாமி விநோதன் கருத்தரங்கக் கூடம் காலம் 31.05.2003 சனிக்கிழமை மாலை 5.30 மணி தலைமை ; கலாசூரி.இ.சிவகுருநாதன் அவர்கள்
(தலைவர், கொழும்புத் தமிழ்ச்சங்கம்)
(தாவீது அடிகளாரின் திருவுருவப்படத்திரை நீக்கம் அருட்தந்தை பேராசிரியர் நீமரியசேவியர் அடிகள்)
தாவீது அழகள்
முப்பத்தி ஐந்து மொழிகளில் ஆழ்ந்த புலமையும் மேலும் சுமார் எழுபது மொழிகளில் பரிச்சயமும் பெற்றிருந்த வியத்தகு மனிதர் ஒருவர் 1981ம் ஆண்டு மே மாதம் 31ந் திகதி நள்ளிரவு யாழ்ப்பாணத்தில் காலமானார்.
1981ம் ஆண்டு மே மாதம் 31ந் திகதி இரவு யாழ்ப்பாண நூல் நிலையம் தீக்கிரையானதைக் கேட்டு அடைந்த அதிர்ச்சியினால் அவருடைய உயிர் போயிற்று என்று கூறுவர். அவர் இறக்கும் பொழுது அவருக்கு வயது எழுபத்துநாலு ஆகும்.
வியத்தகு மனிதர்
இந்த வியத்தகு மனிதர் வேறு யாருமல்ல. புகம்பெற்ற மொழி வல்லுநர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் சீடரும் அவருடைய வழியில் நின்று சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதியை ஆக்கியவரும் தாவீது அடிகள் என்று தமிழ்மக்களால் அன்புடனும் பெருமையுடனும் அழைக்கப்பட்டு வந்தவருமான வணக்கத்துக்குரிய பிதா ஹயசிந்து சிங்கராயர் டேவிட் (தாவீது) என்பவரே ஆவார். தமிழ் மொழியின் சேவையில் அவர் தன்னை ஈடுபடுத்துவதற்கு முன்பு அவர் டேவிட் சுவாமி என்று அழைக்கப்பட்டு வந்தார். சம்பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள் அவரைத் தாடிக்காரச் சுவாமி என்று அழைத்ததுமுண்டு.
‘ஓலை’ - 16 (மே 2003) பக்தம் 32
 

தாவீது அடிகள் 1907ம் ஆண்டு ஜூன் மாதம் 28ந் திகதி பருத்தித்துறையிலுள்ள தும்பளை என்னும் ஊரில் யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரியில் ஆசிரியராகவிருந்த ஆபிரகாம்பிள்ளை டேவிட் என்பவருக்கும் பாவிலுப்பிள்ளை என்பவரின் மகளாகிய எலிசபேத்து என்பவருக்கும் மகனாகப் பிறந்தார்.
கல்லூரி ஆசிரியர்
தாவீது அடிகள் தனது முதலாம் வகுப்பிலிருந்து தனது தந்தையார் படிப்பித்துக் கொண்டிருந்த யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரியில் படித்து வந்தார். 1912ம் ஆண்டு அக்கல்லூரியில் அவர் சேர்ந்திருந்தார். 1924ம் ஆண்டுவரைஅக்கல்லூரியில் பயின்று இலண்டன் மற்றிகுலேசன் பரீட்சையில் தேறியிருந்தார். அதன் பின்பு தனது மதமான கத்தோலிக்க மதக்குருவானவர் ஆவதற்குப் படித்துப் பயிற்சி பெறுவதற்காக கொழும்பிலுள்ள புனித பேனாட் செமினறியில் சேர்ந்து படித்துப் பயிற்சிபெற்று குருவானவர் ஆனார். தாவீது அடிகள் தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மதகுரு660ITT.
குருப்பட்டம் பெற்றுக் கொண்ட தாவீது அடிகள் 1933ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து 1936ம் ஆண்டு ஜூன் மாதம் வரை கொழும்பிலிருந்து யுனிவேசிற்றிக் கல்லூரியில் பயின்று சரித்திரப் பாடத்தில் இலண்டன் பல்கலைக்கழகத்தின் இளங் கலைமாணி (ஆனர்ஸ்) பரீட்சையில் முதலாம் பிரிவில் தேறியதோடல்லாமல் பிரித்தானிய சாம்ராஜ்யத்தில் முதல் மாணவனாகவும் தேறியிருந்தார். அதைவிட யுனிவேசிற்றிக் கல்லூரியில் பொருளாதாரப் பாடத்தில் தங்கப் பதக்கமும் பெற்றிருந்தார். அங்கு காலஞ்சென்ற கலாநிதி என்.எம்.பெரேரா, அடிகளுடைய விரிவுரையாளர்களில் ஒருவராக இருந்தார்.
கொழும்பு யுனிவேசிற்றிக் கல்லூரியில் தனது படிப்பை முடித்துக் கொண்ட தாவீது அடிகள் தனது பழைய கல்லூரியான சம்பத்திரிசியார் கல்லூரியில் ஓர் ஆசிரியராகச் சேர்ந்து கொண்டார். அப்பொழுது அவருடைய தந்தை ஆபிரகாம்பிள்ளையும் அங்கு ஆசிரியராக் கடமையாற்றிக் கொண்டிருந்தார்.
நல்லூர் அறிஞர்
தாவீது அடிகள் சம்பத்திரிசியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் புக்ழ் பரவி இருந்தது.
கொழும்பில் தனது படிப்புகளை முடித்துக் கொண்டு யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிய பின்புதான் த வீது அடிகள் சுவாமி ஞானப்பிரகாசருடன்
பக்கம் 33 'ഝേ' - 16 (0 2003)

Page 19
நெருங்கிப் பழகலானார். தமிழ் மொழி ஒதுக்கப்பட்டிருந்த அந்தக் கால "ஆங்கில இலங்கை"யில் படித்த தாவீது அடிகள் சுவாமி ஞானப்பிரகாசரிடம் தமிழை முறையாகக் கற்பதற்குப் போயிருந்தார். ஆனால் சுவாமி ஞானப்பிரகாசரோ அவரை முதலில் சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொள்ளும்படி சொன்னதோடு அல்லாமல் அதை ஒரு கட்டளையாகவும் கூறியிருந்தார். அத்துடன் தானே தாவீது அடிகளுக்குச் சமஸ்கிருத பாடம் சொல்லிக் கொடுக்கவும் முன் வந்திருந்தார். சுவாமி ஞானப்பிரகாசரே வியக்கும் அளவுக்கு தாவீது அடிகள் சமஸ்கிருதத்தைப் பயின்று கொண்டார்.
தாவீது அடிகள் தமிழ் மொழியை முறையாக ஆழமாகக் கற்கத் தொடங்கியது 1948ம் ஆண்டில், அவர் இங்கிலாந்துக்குச் சென்றதன் பின்பேயாம். தனிநாயகம் அடிகள் தமிழில் ஆற்றிய சொற்பிரவாகங்களை 1947ம், 1948ம் ஆண்டுகளில் கேட்க நேர்ந்த தாவீது அடிகளுக்குத் தானும் அவரைப் பின்பற்றவேண்டும் என்று ஒர் உற்சாகம் பிறந்திருந்ததாக தாவீது அடிகள் இக்கட்டுரையாளனுக்கு நேரிலும் எழுதிய குறிப்புகளின் மூலமும் தெரிவித்திருந்தார்.
சம்பத்திரிசியார் கல்லூரியில் படிப்பித்து வந்த தாவீது அடிகள் 1947ம் ஆண்டில் இந்தியாவுக்குச் சென்று அங்குள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், பம்பாய்ப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் 1948ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை மொழி ஆராய்ச்சிகள் செய்து வந்தார். அதன்பின்பு அவர் அங்கிருந்து இங்கிலாந்துக்குச் சென்று இலண்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1952ம் ஆண்டு ஜூன் மாதம் வரை பயின்று வந்தார். 1949ம் ஆண்டில் அவர் சமஸ்கிருதம், பாளி முதலிய இந்தோ ஆரியமொழிகளில் முதுமானிப் பட்டத்தையும் 1952ம் ஆண்டில் தமிழ், தெலுங்கு முதலிய திராவிட மொழிகளில் செய்த ஆராய்ச்சிகளுக்குக் கலாநிதிப்பட்டமும் பெற்றார். பின்பு ஜெர்மன் நாட்டுக்குச் சென்று அங்குள்ள முயோன்ஸ்டா என்னும் பல்கலைக்கழகத்தில் டிசம்பர் மாதம் வரை ஜெர்மன் மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
அதன்பின்பு இலங்கைக்குத் திரும்பி தனது பழைய கல்லூரியாகிய சம்பத்திரிசியார் கல்லூரியில் படிப்பித்தலைத் தொடர்ந்துவந்தார். 1967ம் ஆண்டில் ஆசிரியத் தொழிலிலிருந்து ஒய்வு பெற்றுக் கொண்டார்.
மொழி ஆராய்ச்சி
தாவீது அடிகள் 1970ம் ஆண்டில் தனது சொற்பிறப்பு ஒப்பியல் அகராதியில் திட்டமிட்டிருந்த ஒன்பது பாகங்களில் முதலாம் பாகத்தை வெளியிட்டார். இரண்டாம் பாகம் 1972ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. மூன்றாம் பாகம் 1973ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இம்மூன்று பாகங்களும் யாழ்ப்பாணம் ஆசீர்வாதம் அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டன. நாலாம் ஐந்தாம்
‘ஓலை’ - 16 (மே 2003) Uф4ф з4

பகுதிகளை ஆட்டுப்பட்டித் தெருவிலுள்ள ஸ்பாட்டன் அச்சகத்தில் பதிப்பித்திருந்தார். அவர் இறப்பதற்கு முன்பு தனது அகராதியில் ஒன்பது பாகங்களையும் வெளியிட்டிருந்தார்.
தாவீது அடிகளின் அறிவு வளர்ச்சியில் அவருக்கு உற்சாகம் அளித்தவர்களென்று தனது தந்தை ஆபிரகாம்பிள்ளையையும், சுவாமி ஞானப்பிரகாசரையும், தனிநாயகம் அடிகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனிநாயகம் அடிகள் தான் ஆங்கிலத்தில் வெளியிட்டுவந்த தமிழ்ப்பண்பாடு (Tamil Culture) என்னும் இதழில் தாவீது அடிகளின் பன்னிரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டிருந்தார்.
தாவீது அடிகளைப் போன்று அபூர்வமான முளையும் பல மொழிகளில் புலமையும் உடைய ஒருவர் தோன்றுவது அரிதினும் அரிது. அவர் ஒரு தமிழராகப் பிறந்தது தமிழ் மக்களின் பாக்கியமாகும். பெருமையாகும். அவர் ஆராய்ச்சி செய்து வைத்திருக்கும் எல்லாவற்றையும், அவை அழிந்தோ தொலைந்தோ போவதற்கு முன்பு, தேடிப் பிடித்து புத்தக வடிவில் வெளிக் கொண்டு வருவதோடல்லாமல், அவருடைய மொழி ஆராய்ச்சியின் முடிவுகளைக் கற்றறிந்த தமிழ் மக்கள் உலகத்துக்கு எடுத்துச் சொல்லவும் வேண்டும்.
- அருள் மா.இராசேந்திரன்
ம் காங்கள் 믿_西과 Th
ஒலை ஓங்கி வளர்வதற்காக உதவிக் கரங்கள் வழங்கிய இவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்
செ.பானுதேவா- இலண்டன் (5LIT.3000.00
வி.கோபாலகிருஸ்ணா -சுவிஸ்சர்லாந்து 15OO.OO
S.ஹரிகரன் - கொழும்பு 04 1000.00 ஏ.பீர்முகம்மது - சாய்ந்தமருது 500.00 எம்.வி.எம்.முஸ்லிம் கட்டுகளில்தோட்டை 500.00 K.கணேஸ் (தலாத்து ஒயா) 500.00 திருமதி.B.ஸ்க்கரியா-ஹப்புகளில்தலாவ 200.00
மோகனதாஸ் -கொழும்ப 200.00 M.S.Mராவ்வி - கட்டு ஸ்தோட்டை 2OOOO
Ú55(ó 35 ‘ஓலை’ - 16 மே 2003)

Page 20
2 புடோலங்காயா?
பன்மொழிப்புலவர் த.கனகரத்தினம் அவர்கள் புடலங்காய் என்று சொல்லுதல் தவறான வழக்கு என்று ஒலை 10. சொல்வளம் பெருக்குவோம்(4)இல் குறிப்பிட்டுள்ளமை தவறாகும். ஏனெனில் புடல் என்னும் தெலுங்குச் சொல்லுக்குத் திரட்சி அல்லது பருத்தல் என்று பொருள். இதன்படி புடலங்காய் என்பதற்குப் பருத்தகாய் என்பதே பொருள். இந்தச் சொல்லைப் பிரிப்பதாயின் புடல் + கம் + காய் என்றே பிரித்துப் பொருள் காணுதல் வேண்டும். இது புளி + கம் + காய் என்பது போல, புடல் -, புடைத்தல் - புடைப்பு எனவும் வழங்கும். புடை எனும் சொல்லுக்குப் பக்கம் (இடுப்பு) என்றும் பொருள். இதன்படி பெண்கள் இடுப்பில் வைத்துச் சேலை கட்டுவதால் அது 'புடைவை' என்று அழைக்கப்படலாயிற்று. வாகரைவாணன், வித்துவான், சென்னைப்பல்கலைக்கழகம், ”ஆரணியகம்”, 479/3, புதியகல்முனை விதி, நாவற்குடா, மட்டக்களப்பு
区 区 凶 பன்மொழிப்புலவரின் பதில் சொல்வளம் பெருக்குவோம் பகுதியைஆர்வத்தோடு ஊன்றி வாசிக்கும் வாசகர்களுக்கு எமது நன்றி. அக்கட்டுரையில் (ஒலை-10) புடோல் என்ற சொல்லின் பிழையான வழக்கை எடுத்துக் காட்டியிருந்தேன். வாகரைவாணன் என்ற வாசகர் புடல் என்ற சொல்லும் சரியானது. பிழையின்று என எழுதியிருக்கிறார். புடல் என்ற பேச்சு வழக்கும் இருக்கின்றது. ஆனால், அவர் கூறுவது போல் ”புடை” என்ற அடியிலிருந்து புடல் வராது. புடோல் என்று சொல்லும் வரலாமல்லவா? புடை + அல் = புடையல் (படை + அல் = படையல் போன்று) என்றுதானே வரவேண்டும். அன்றியும் புடல் தெலுங்குச் சொல் என்கிறார். (1) பிறமொழிச் சொற்களுக்கும் தமிழிலக்கணப்படி அடிச்சொல் காண்பது
எவ்வாறு பொருந்தும்? (2) புடோலங்காய் என்பதற்குரிய தெலுங்கு மொழிச் சொல் 'பொட்லகாய’
என்பதாகும். (வாழைக்காய் = அரடிகாய) புடைத்தல் காரணமாகப் புடோலங்காய் வருமென்பது ஒரு புடை ஒக்கும். புடோ லங்காய் உவமையில் வரும் போது புடோலங்காய் மனிதன் என அழைப்பர். புடோலங்காய் போலநீட்சியுடைய மனிதன் என்பது பொருள். இவர் ஒரு புடோலங்காய் என்பது உருவகம். புடோலங்காய்க்கு ஆங்கிலேயர் வைத்த பெயரையும் சிந்தித்துப் பார்க்கவும். (Snake Gourd) அதாவது பாம்புபோல நீட்சியுடைய காய் என்பது பொருளாகும். புடை என்பதற்குப் பக்கம், (நெல்) புடைத்தல், திரட்சி, எல்லை என்ற பொருள்கள் உள.
"ൡ” - 16 (0 2003) பக்கம் 36
 

புடைவை என்ற சொல் பெண்கள் இடுப்பில் வைத்துச் சேலை கட்டுதலால் வந்தபெயர் என்ற விளக்கம் தந்துள்ளார் வாகரைவாணன். இந்த விளக்கம் பிழையானது. புடைவை = புடை + வை. புடைதல் - நெசவு செய்தல் . எனவே புடைவை என்பது நெசவு செய்யப்பட்ட சீலை என்ற பொருளே சரியானது. 'வை' என்பது தொழிற் பெயர் விகுதி, வைத்தல் அன்று. (நன்னூல் தொழிற் பெயர்விகுதிகள் பக்கம் அரு (85) பார்க்க)
பன்மொழிப்புலவர் த.கனகரத்தினம்.
D
கால நிகழ்வுக் கருத்தாய் தமிழின் சோலை மலர்ந்த சுந்தரக் கவிக்கோ நீலா வணனின் நினைவில் கமழ்ந்து ஒலை ஏடெம் உளம் கனத்ததே! உணர்மை உறவறியும் ஊர்ப்பணியை "வேளாணிமை சொன்ன வழியே துணிந்ததனால் செங்கதிரோன் கன்னல் சாறாக கனிந்தே"விளைச்சல்" வரும் உன்னிப்பாய் காப்போம் உளத்தே! 143/23 எல்லை வீதி, மட்டக்களப்பு. கவிஞர் வெல்லவூர் கோபால் 14.03.2003
தாங்கள் தொடர்ந்து எனது பெயருக்கு அனுப்பும் ஒலை இதழ்கள் கிரமமாகக் கிடைக்கின்றன. மிக்க மகிழ்ச்சி. தமிழ்ச் சங்கத்தினால் தொடர்ந்து நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிகளைப் பத்திரிகை வாயிலாகவும் ஒலையின் வாயிலாகவும் அறியும்போது எனக்குப் பெரும் ஆச்சிரியமாகவும் உள்ளது.
காரணம், வாழ்க்கைச் செலவு மிகுந்த கொழும்பு நகரில் இவ்வாறான நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்துவது மிகவும் கடினமான பணியே. இப்படியான பணியைச் செய்துவரும் தமிழ்ச் சங்கத்திற்கும் அதன் இலக்கியக் குழுவினருக்கும் எனது இதயம் கனிந்த பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.
"Kavignar Kurinjivanan C.V.P. Maanickam 31, Sagamam, Thambiluvil, Thirukkovil.
14.03.2003
பக்தம் 37 ‘ஓலை’ - 16 (மே 2003)

Page 21
D "ஒலை" 11ஆம் 12ம் இதழ்கள் கிடைக்கப்பெற்றன. மிக்க நன்றிகள்.
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் பணிகள் பற்றி நான் மிக நீண்ட காலமாகவே அறிவேன். அண்மைக்காலங்களில்-கடந்த சில வருடங்களாகமிகவும் அரிய பணிகளைச் சங்கம் ஆற்றி வருவதையும் அவதானித்து வருகின்றேன். கடல் கடந்து வந்துவிட்டாலும், உடலும், உயிரும் மட்டுமே இங்கிருக்க, உணர்வுகளெல்லாம் தாயக நினைவுகளிலேயே தவித்துக் கொண்டிருக்கும் வாழ்வே எங்களுடையது. இங்கும் இயன்றளவு தமிழ்ப்பணியில் ஈடுபடக் கிடைத்தமையை இவ்வுலகில் நான் பெற்ற தலைமை இன்பமாகக் கருதுகிறேன்.
நிற்க. அண்மையில் கொழும்புவந்திருந்த போது தங்கள் சங்கத்திற்கும் வந்திருந்தேன். எழுத்தாளர் விபர விண்ணப்பப்படிவமொன்றினைப் பெற்றேன். அத்துடன் அதனை அனுப்பி வைக்கிறேன். அதற்கு இருவாரங்களுக்கு முன்னர் மல்லிகை டொமினிக் ஜீவா அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொள்ளும் பாக்கியமும் கிடைத்தது.
சங்கத் தலைவர், மதிப்பிற்குரிய சிவகுருநாதன் அவர்கள் எனது ஆசிரியர். ஆம். சட்டக்கல்லூரியில் அவரது சில வகுப்புக்களில் அமர்ந்து பாடம் கேட்கும் பேறுபெற்றவன் நான். மற்றும், திரு.இரகுபதி பாலழறிதரன் அவர்களை நான் மிகவும் நன்கு அறிவேன். கொழும்புதமிழ் இளைஞர்பேரவைத் தலைவராக அவர் இருந்ததும், நிறைந்த பணிகளைச் சிறந்த முறையில் ஆற்றியதும் 1977தேர்தலிலே சூறாவளிச் சுற்றாக மேடையெல்லாம் முழங்கியதும் இன்னும் பசுமைபோல இருக்கிறது. இவற்றையெல்லாம் எழுதுவது நான் அன்னியனல்லபுதியவனல்ல- என்பதை அறியத்தருவதற்காகத்தான்.
கவிஞர் நீலாவணன் நினைவாக "ஓலை12"வரப்போகிறது என்பது எனக்குத் தெரிய வந்தபோது மிகவும் தாமதமாகிவிட்டது. அதனால் என்னால் அனுப்பப்கூடியதாகவிருந்த சில தகவல்களை அனுப்பமுடியவில்லை. இத்துடன் அவற்றை அனுப்புகிறேன். முடிந்தால் அடுத்துவரும் இதழ்களில் பிரசுரித்தால் மிகவும் நன்றியுடையவனாவேன்.
மேலும், ஒலைக்கான எனது சிறு அன்பளிப்பினைச் செய்யவேண்டிய கடனும், கடமைப்பாடும் எனக்கு இருக்கிறது. விரைவில் அதனை அனுப்பிவைப்பேன். 1975 அல்லது 76ஆம் ஆண்டில் என்று நினைக்கின்றேன். "சுதந்திரன்" பத்திரிகை நீலாவணன் நினைவு வெண்பாப் போட்டியை நடாத்தியது. அதில் "நீலாவணன் கவிக்கு நேர்" என்ற இறுதிவரியைக் கொடுத்து முதல் மூன்று வரிகளையும் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது. அந்த வெண்பாப் போட்டியில் எனக்கு முதற்பரிசு
‘ஓலை’ - 16 (மே 2003) பக்தம் 38

கிடைத்தமையை நான் மிகுந்த பெருமையாக இன்றும் கருதுகிறேன்.
அந்த வெண்பா வருமாறு: "சொல்லெளிமையாற் குழவி தூயகலைவனப்பால் நல்ல எழில் நங்கை நயந்தரலால் - தொல்குரவர் தோலாக் கருத்தொளியால் தூவைரம் இவ்வனைத்தும் நீலாவணன் கவிக்கு நேர்"
1 Petra Court பாடும்மீன் கபூரீகந்தராசா Epping, Vic.3076
Australiya.
19.03.2003
P தங்களின் மாதாந்த தமிழ் ஒலை 12 கிடைக்கப்பெற்றேன். நன்றி. கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் வெளியீடான ஒலை இலக்கண, இலக்கிய நகைச்சுவையும் அடங்கிய முச்சுவை விருந்தாக அமைந்ததைப் பாராட்டுகிறேன்.
மதுரைத் தமிழ்ச் சங்கம் வளர்த்த "தமிழ்" என்றுதான் வரலாறு. அதுபோன்றே ஈழத்தில் கொழும்புத் தமிழ்ச் சங்கம் வளர்த்து, வளர்ந்து வரும் தமிழ் , தமிழுலகம் முழுதும் இத்தரணியில் தவழ்ந்து வர தமிழ் அன்னை தலை நிமிர்ந்து வலம் வருவாளாக!
40, சொயிசா கலை வீதி இரா.இராஜகோபால் நாவலப்பிட்டி, 21.03.2003
D தாங்கள் அனுப்பும் ஒலைகள் கிடைத்தாலும் ஒழுங்கு தவறாமல் அனுப்புமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன். "ஒலை" எனும் பெயரைக் கேட்கும் போது, அதனைக் காணும் போது மனோரம்மியமான இலக்கிய உலகில் சஞ்சரிப்பது போன்றதொரு பூரிப்பு:சங்ககாலத்தில் அதனோடு, ஒட்டிய காலங்களில் நடமாடுவது போல் உணர்வு ஒலைச் சுவடிகளைக் கரங்களில் ஏந்தி இன்புறுவது போன்ற இன்பக் கிளுகிளுப்பு உண்மையில், இது வெறும் புகழாரம், முகஸ்த்துதி என்று மட்டும் எண்ணி விடாதீர்கள். எனது இதயத்தின் ஆழத்திலிருந்தே எழுந்த வார்த்தைகள் இவை. இம்மடலுக்கு 'ஒலை'என்ற பெயர் மிகமிகப் பொருத்தம். எனக்கு மிகவும் பிடித்தமாயுள்ளது. வாழ்த்துக்கள். ஒலை தொடர்ந்தும் மடல் குவிந்து தமிழ் மணம் பரப்பட்டும்.
B17/1, செண்பகச்சோலை ஸக்கரியா
ஹகஸதலாவ, 25.04.2003
υόόώ 39, 'gബയെ' - 16 (u) 2003)

Page 22
தாங்கள் தொடர்ந்து அனுப்பி வரும் ஒலை இதழ்கள் கிடைக்கப்பெற்றேன்.
இதழுக்கு இதழ் கனதியும் வீச்சும் செறிவும் கொண்ட புதிய இலக்கிய பரிணாமத்தை நோக்கி ஒலையின் இதழ்கள் விரிவதை அவதானிக்கக் படிமபனவாக உள்ளது. காலத்தை வென்று உங்கள் இலக்கிப பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்.
"Pravagham" உக்குவளை அக்ரம் No. 9, Maltalle Rädd, Lk Llywell,
STi l:Tıkl.
Ո777-ի5[143է)
Ա5.D4.BIII3;
* என்னையும் ஒரு பொருட்டாக நினைத்து, 'ஒலை" என்னும் உயர்ந்த மடலைத் தொடர்ந்து அனுப்பிவருவது குறித்து மிக்க இறும்பூதெய்துகின்றேன். என்னுடன் ஒரே பாடசாலையில் பயின்ற என்னுடைய அண்ணாவும் எனது எழுத்துலக வழிகாட்டிகளில் ஒருவருமான கவிஞர் நீலாவணன் அவர்களுக்கு உயரிய கண்ணியத்தை தமிழ்ச்சங்கம் தருவது குறித்து மேலும் இறும்யூதெய்துகின்றேன்.
கெஹல்ல றோட், அல்ஹாஜ் எம்.வை.எம்.முஸ்லிம் 1.P கட்டுகாளப்தோட்டை. முன்னைநாள் கல்விப்பணிப்பாளர் 2.04.003
Thanisangam
FrOri: SMMC LaaLLMLaaLOGHC LLLLLS SLLLLLC MLLMMLMCLLMMMSLHLHHLL TO: -cts-Buraka. Ik?"
5в. Saturday, March 22, 2CO35.37 PM
Subject tharik ficf OE
in una Clailing fiT III dia.Lnd Dr. Jinnah's rill's daughter.received the magazine lai and so happy to read it...really sirilaiuukau, taihil is great. Ur dubig a god stvice, tlitik you #gi, Dr. Nahiti. 95b state bank colony Wicst, de WakotĖai extin. Biwaganigaidt. Li:IIInill 11:4clu
"ஓலை’ - 16 மே 2003) பதிசம் 40
 

இர>
بن يخ حسية
, , VDING= olவளளவததையல தரம வயநத
2労
மின்சாரப் பொருட்களுக்கு நாடுங்கள் ཊི་
மாளிப்டர் எலெக்ட்ரிகள் & எலக்ட்ரோனிக்ளப்
387 A, காலிவீதி, வெள்ளவத்தை தொலைபேசி 360648
7 Difla (VBest 62of rayolirruet af frotriz
U EVAVELLERY
s 37, GREEN's RoAD, NEGOMBO a እ * 崑 TEL: 031-32131 丝 7)\\ この翁sや

Page 23
ܒܩܠܐ
வெள்ள
நித்தியகல்யாணி ந
அப்பழுக்க
பெல்ஜியம் சர்வதேச இரத்தினக் (International Gem
உறுதிப்படுத்தப்பட்டு உத்தரவாதமளிக்கப்பட்(
பைகளில் மூடித்
ിബ
நித்தியகல்யா
230 காலி வீதி, ! தொலைபேசி :
தொலை நக
மின்னஞ்சல்
 

வத்தை
கை மாளிகையில்
ற்ற வைரம்
(Belgium) கல்லியல் நிறுவனத்தினால் Inological Institute) - பரிசோதிக்கப்பட்டு டு - மாற்றமுடியாதபடி தாளிடப்பட்டது.
வத்தை
FENOM EGGUM
கொழும்பு - 06. 36.3392, 362427
ல் 504933
Inithikalast.lk
*