கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2003.08

Page 1
ஆசிரியர் : செங்
ജ്ഞ19, கொழும்புத் தமிழ்ச்சங்க பு
07-10-1931-09-0
கொழும்புத் தமிழ் 7, 37 வது ஒழுங்கை (உருத்திரா
தொலைபேசி (
வெப் முகவரி WWWC இணைய தபால் முகவரி : ctsஇet
 
 

ச் சங்கம்
மாவத்தை), கொழும்பு : 08,
1-3637.59
olombo.tamilsangam.org Ireka. Ik.
விலை:இயன்ற அன்பளிப்பு

Page 2
H
LDIT
T
öi
f
. சிவகு
T
தன்
H
Th
க்
(t
G
D
西1凸H
F
፩
இனி
நணர்
பன்
ஓர்
 

இதயம் திறந்து.
ஒலை -19 (ஆகஸ்ட் 2003) எதிர்பாராதவிதமாக அமரர் இ.சிவகுருநாதன் அவர்களின் அஞ்சலிச் சிறப்பிதழாக விரிகிறது. 09.08.2003 அன்று இவ்வுலகை நீத்த கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் அமரர் இ.சிவகுருநாதன் அவர்கள் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். 1993/94 இல் காப்பாளர்களில் ஒருவராகவும், 1995/96 இல் துணைத் தலைவர்களில் ஒருவராகவும், 26.10.97 - 11.12.99 காலத்தில் தலைவராகவும்; 12.12.99 - 14.07.2001 காலத்தில் மீண்டும் துணைத்தலைவர்களில் ஒருவராகவும், 15-07-2001 முதல் மரணிக்கும்வரை மீண்டும் தலைவராகவும் தமிழ்ச்சங்கப் பணி புரிந்தவர். அன்னாரின் அஞ்சலிச் சிறப்பிதழாக விரிந்துள்ள இவ்'ஒலை இதழில் அன்னாருடன் கல்லூரி வாழ்க்கையில் - பல்கலைக்கழகத்தில் - பத்திரிகைத் துறையில் -சட்டத்துறையில்-கொழும்புத் தமிழ்ச்சங்கப் பணியில் நெருங்கி ஊடாடியவர்கள் பலரின் ஆக்கங்கள் இடம்பெற்று அன்னாரது ஆளுமைகளை வெளிப்படுத்துகின்றன. அமரர் இ.சிவகுருநாதனின் பணிகள் மேலும் விரிவாக ஆராயப்பட்டு வெளிப்படுத்தப்படுவதற்கு இவ்வஞ்சலிச் சிறப்பிதழ் அடிகோலும் என நம்புகின்றோம்.
அன்னாருக்கு 'ஒலை' அஞ்சலி செலுத்துவதுடன் அவர் பிரிவால் துயருறும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
நன்றி. மீண்டும் மறுமடலில்.
பக்கம் 1 ‘ஓலை’ - 19 ஒகுஸ்ட் 2003)

Page 3
நண்பன் சிவகுருநாதன்
-பேராசிரியர் கா.சிவத்தம்பி (காப்பாளர், கொழும்புத் தமிழ்ச்சங்கம்)
சிவகுருநாதனுக்கும் எனக்குமிடையேயிருந்த உறவு மிக நெருக்கமானது. 1949-ல் சாஹிராக் கல்லூரியில் நாம் இருவரும் பல்கலைக்கழக புகுமுக வகுப்பில் மாணவராய் சேர்ந்தோம். இளைஞர்களாயிருந்து இன்று பேரர்களாகி விட்ட நிலைமை வரையிலும் ஒருவர் இரகசியத்தை மற்றவர் அறிந்த இணக்கமான உறவு நமக்கிடையேயிருந்தது. அதிர்ஷ்டவசமாகக் குடும்ப மட்டத்திலும் அந்த உறவைப் போற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்புமிருந்து வந்தது. தனக்கு ஒன்று நடந்து விட்டால் எனக்கு அதை உடனே தெரிவிக்க வேண்டுமென்று அவர் சொல்லிய அளவுக்கு நம்மிடையே இறுக்கமான உறவு இருந்தது.
இந்தயிடத்தில் சிவகுருநாதனை நமது சங்கத்தின் மறைந்த தலைவராகப் போற்றும் வேளையில், நான் சிவகுருநாதனது பொது நிலை வாழ்க்கை பற்றியே பேச வேண்டும்- குறிப்பிட வேண்டும். தனிப்பட்ட எனது சொந்த சோகத்தை பகிரங்கப்படுத்துவதற்கான இடம் இதுவல்ல நான் அப்படிக் கொள்ளவும் கூடாது.
நமது பொது வாழ்க்கையில் சிவகுருநாதன் என்ற மனிதனுக்கு இருந்த இடம் யாது?
சிவகுருநாதன் இந்த நாட்டுத் தமிழ் தேசிய இதழ் ஒன்றின் ஆசிரியராக 34 வருடங்கள் கடமையாற்றியவர். சிவகுருநாதன் தன் வாழ்க்கையில் பார்த்த பிரதான உத்தியோகம் பத்திரிகை தொழில்தான். இவர் இலங்கையின் புதினப் பத்திரிகையின் வளர்ச்சியையே தனது M.A.க்கான ஆராய்ச்சிப் பொருளாகவும் கொண்டிருந்தார். அந்த நூலை தமிழ்ச்சங்கமே வெளியிட்டது. அந்த நூலின் விற்பனை மூலம் வெளியீட்டு விழா அன்றே கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கு 47,500 ரூபாய்க்கு மேலாகவே கிடைத்தது. தான் எழுதி நீண்டகாலம் வெளியிடாமற் வைத்திருந்த நூலை தமிழ்ச் சங்கத்திற்கு கொடுத்து அந்த வெளியூரீட்டு விழாவை தானே முன்னின்று நடத்தி வைத்தார்.
‘ஓலை’ - 19 ( ஓகஸ்ட் 2003) பக்கம் 2

இது சிவகுருநாதனை விளக்குவதற்கான ஒரு நல்ல குறியீடு Symbol
ஆகும்.
சிவகுருநாதனோடு ஒரு நாள் பழகியவர்களுக்குக் கூடத் தெரியும் சிவகுருநாதன் என்றுமே தன்னைப் பற்றி பேசியதில்லை. உண்மையில் மற்றவர்களைப் பற்றித் தெரிந்திருந்த அளவுக்கு தனது புகழை தானே தெரிந்திருந்தவர் அல்லர்.
34 வருட காலமாக ஏறத்தாழ இரண்டு தலைமுறை எழுத்தாளர்களை இவர் வெளிக் கொணர்ந்தார். அவருடைய மறைவின் பொழுது நாட்டின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள், எழுத்தாளர் சங்கங்கள் அவர் சிறப்பைப் பற்றிக் கூறியபொழுது தான் சிவகுருநாதனின் அந்தப் பரிமாணம் புலனாகிறது. இன்னொன்று, இது மிக மிக முக்கியமானது. சிவகுருநாதனது மறைவின் பின்னர் அவரது வீட்டுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற மிகப் பெரும்பாலானோரைஅவர் குடும்பத்தினருக்குத் தெரியாது. வந்தவர்கள் அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நீதிபதிகள், மிகப்பெரிய உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற அங்கத்தவர்கள், அரசியல்வாதிகள் எழுத்தாளர்கள். தமிழ் ஆர்வலர்கள் என மிக மிகப் பலர்.
உண்மை இதுதான். சிவகுருநாதன் தன்னைப் பற்றி மற்றவர்களுக்குப் பறை சாற்றவுமில்லை. தனது நட்புக்கள் அறிமுகங்களை சொந்த இலாபங்களுக்காகப் பயன்படுத்தவுமில்லை.
இன்றைய நமது சமூக வாழ்வில் இதனை ஓர் அதிசயம் என்றே சொல்வேன்.
சிவகுருநாதன் தமிழ்ச் சங்க வட்டத்துள் அழைத்து வரப்பட்டவரே.
சிவகுருநாதனது பல்வேறு பணிகளைப் பற்றி நோக்கும் பொழுது இவர் அந்த பரிச்சியங்களை வெறுமனே தன்னைப் புகழ்வதற்குக் கூட பயன்படுத்தவில்லை என்பது தெரிகிறது.
சிவகுருநாதன் ஒரு சட்டத்தரணி. அவர் சட்டத்தை விரும்பியே படித்தார். பகுதிநேரத் தொழிலாகச் சட்டக்கல்லூரித் தமிழ் வழி விரிவுரையாளராக இருந்தவர். வகுப்பிலும் அவர் விடயத்தைக் கூறிப் படிப்பித்தாரே தவிர தன்னை முதன்மைப்படுத்தவில்லையென்றே மாணவர்கள் கூறுவர்.
உண்மையில் சிவகுருநாதன் மறைவினால் நாம் இழந்து நிற்பது தன்னை முனைப்புப் படுத்தாது தன் பணிகளை செவ்வனே செய்து வந்த ஒருவரையே.
பத்தம் 3 ‘ஓலை’ - 19 ஒகுஸ்ட் 2003)

Page 4
அரசியலிலும் சரி, இதழியலிலும் சரி சமூக வாழ்க்கையிலும் சரி, சமயப் பணிகளிலும் சரி, இன்று நமக்குத் தேவைப்படுவோர் இத்தகையவரே!
தான் செய்யும் காரியங்களின் நன்மைபற்றித் தானே சிந்திக்காதவர் ஒருவரை இழந்துள்ளோம்.
நான் மீண்டும் வற்புறுத்திக் கூற விரும்புகின்றேன். சிவகுருநாத aரிடமிருந்து இந்தப் பண்பு நமது இன்றைய பொதுவாழ்க்கைக்கு அத்தியாவசியமானதொன்று.
சிவகுருநாதனிடம் ஒரு அங்கதச் சாயல் புன்னைேகயிருந்தது. Satiri{i, Smile அதுதான் அவரை வாழ வைத்தது. ஆனால் அது எவரைபும் கெடுதல் செய்யவில்லை, மானுட விரோதப் பண்பாக மாறவில்லை. இவருடைய படத்தைக் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் வைத்திருப்பதன் மூலம் நமது தலைமுறையில் வாழ்ந்த மறக்கப்படக்கூடாத ஒருவரின் நினைவைப் போற்றுகின்றோம் என்பதே கருத்து.
கலாநிதி. ஆ. கந்தையா (அவுஸ்திரேலியா) அவர்களின் வருகையின் போது.
‘ஓலை’ - 19 ஒrட் 2003) U55ú 4
 

鲤黜
T 丽叶 IgE. J. L. - மாணர்புமிகு நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
கிலாகுரி சிவகுருநாதனை நாம் இழந்துவிட்டோம். இப்படிப்பட்ட நேரங்களில்தான் மரணத்தின் மத்தியில் நாங்கள் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற சுடலை ஞானம் எங்களைக் கவ்விப் பிடிக்கின்றது. சிரிக்கச் சிரிக்கப் பேசிச் சிந்தனையைத் தூண்டிவிடும் சிவகுருநாதன் இன்று இல்லையே. எங்கு தான் போய்விட்டார் என்று மனம் பரிதவிக்கிறது. ஆனாலும் வாழ்ந்த காலத்திலேயே மனித வாழ்க்கையின் நிலையாமையை முற்றாக உனர்ந்திருந்தவர் திரு.சிவகுருநாதன் அவர்கள். அவரின் முக்கிய குணாதிசயங்கள் அதற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றன. அவை யானை என்று ஆராய்ந்தால் அவரின் தலையாய துணம் தன் புகழ் பேசாத தன்மை, வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்தவர்கள் பொதுவாக அடக்கமுடைமையைக் கடைப்பிடிப்பார்கள். சந்தர்ப்பம் அறிந்து சர்ச்சைகளைத் தவிர்த்து செழுமையான வார்த்தைகளையே பேசுவார்கள். தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று சிந்திக்க மாட்டார்கள். தான் என்பது ஒரு மாயை என்பதை அவர்கள் முற்றாக அறிந்து வைத்திருப்பார்கள். ஆனாலும் தங்கள் நிலையில் இருந்து மாறுபடமாட்டார்.
"நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மானப்பெரிது"
தன்நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு மலையின் உயர்வை விட மிகவும் பெரியதாகும் என்று வள்ளுவர் கூறியவாறு தன் நிலையில் இருந்து மாறுபடாமல் வாழ்ந்தவர் சிவகுருநாதன். ஆனாலும் அடக்கமுடைமையைக் கடைப்பிடித்து எல்லோரையும் அனைத்து உறவு கொண்டு வாழ்ந்ததால் இன்று மலை போல் எங்கள்
மத்தியில் அவர் புகழ் ஓங்கி நிற்கிறது.
தன் நிலையில் இருந்து மாறுபடாமை அவரின் அடுத்த சிறப்பம்சம், எங்கு சென்றாலும் தான் ஒரு யாழ்ப்பாணத் தமிழ் பேசும் இந்து மதத்தினர் என்ற எண்ணத்தைக் கைவிடாத நிலையில் நெற்றியில் திருநீறு துலங்கச் சென்று வருவார். யோக சுவாமிகளின் அரவணைப்பு அவருக்கு அளித்த அருங்குனம்.அது இஸ்லாமியர் காநாட்டுக்குக் கூட இந்தத் திருநீற்றையே
USSú 5 “g767)#2” — 19 (ĝ4567z*o 2003)

Page 5
அணிந்து சென்று இஸ்லாமியர் இதயங்களில் இடம் பிடித்த இனிய மனிதர் திரு.சிவகுருநாதன் அவர்கள். தன் நிலையில் இருந்து மாறுபடாமலே மற்றவர்களைத் தன்னிடம் கவர்ந்திழுத்தவர் அவர். அதற்கு அவரின் இனிய சுபாவமே காரணம். இனிய சுபாவம் என்று கூறும் போது தன்னைப் பற்றிய சிந்தனை இல்லாது மற்றவர்களின் சுக துக்கங்களில் பங்கு பற்றிய அவரின் பாங்கே அவரைப் பழகுவதற்கு இனியவராக்கியது.
அவரின் மற்றைய குணாதிசயம் எடுத்த காரியத்தைத் திறம்பட நடத்தி முடிக்கும் அவரின் ஆற்றல். சூழலுக்கு ஏற்ப, நடைமுறைச் சாத்தியமான தீர்மானங்களையே எடுப்பார். தன்னிலை மாறாது நடைமுறைச் சாத்தியமான தீர்மானங்களை அவர் எடுத்த போது அவரின் இன்னொரு முக்கியமான குணாதிசயம் அவர் நடத்தையில் பளிச்சிட்டதை நாங்கள் காண். கிறோம். அது தான் அவரின் நம்பகத் தன்மை, தான் யாருக்காக உழைத்தாரோ அவர்களின் நல்லெண்ணத்தைப் பெற்று அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்தொழுகினார். இதில் இருந்து அவர் வெறும் கைப்பொம்மையாகக் கடமை ஆற்றினார் என்று கருதக்கூடாது. நடைமுறைச் சாத்தியங்களை அவதானித்து புரிந்துணர்வுடன் காரியங்களைச் சாதிக்கப் பழகிக் கொண்டவர் அவர். ஒரு நிகழ்வு ஞாபகத்திற்கு வருகிறது. 1994ல் திரு.லயனல் ட்.பெர்ணாண்டோ அவர்கள் லேக் ஹவுஸ் தவிசாளராக நியமிக்கப்பட்டார். அப்பொழுது பழம் பெரும் பத்திரிகை ஆசிரியராக விளங்கிய திரு.சிவகுருநாதன் அவர்களை அழைத்து எவ்வாறு தன் பதவிக் கடமைகளை பலதரப்பட்ட அரசியற் கட்சிகளின் ஆதிக்கத்தின் கீழ் அதுகாறும் கடைப்பிடித்து அவர் ஒழுகி வந்தார் என்று திரு.சிவகுருநாதனிடம் கேட்டார். அதற்கு யன்னல் அண்டையில் உட்கார்ந்திருந்த திரு.சிவகுருநாதன் அவர்கள் லேக்ஹவுஸ் தலைவர் இந்த யன்னல் ஊடாக வெளியே குதி என்றால் உடனே அதைச் செய்வேன்" என்றார். சிரிப்பை உண்டாக்கிய இந்தக் கருத்து பலரைச் சிந்திக்கவும் வைத்தது. கடமை. யைச் செவ்வனே ஆற்றிப் பத்திரிகை வாசகர்களுக்கு ஒரு தரமான தினப் பத்திரிகையை அளிப்பதாகில் கொள்கைகளை நெறிப்படுத்தும் லேக் ஹவுஸ் தவிசாளரைப் பகைத்துப் பிரயோசனம் இல்லை. உடனே, தமிழ் நாட்டில் கூறுவது போல் தண்ணியில்லாக் காட்டுக்கு அனுப்பி வைத்து விடுவார்கள். ஆகவே நடைமுறைச் சாத்தியமான காரியமே தொடர்ந்து பதவி வகித்து மக்கட் சேவை செய்ய உதவும் என்பதை அவர் எடுத்து விளம்பியதுடன் அரசாங்கங்கள் லேக் ஹவுஸ் தவிசாளர் ஊடாக எப்படி பத்திரிகையாளர்களைத் தமது பலமான அதிகார வரம்பினுள் வைத்துச் சுதந்திரத்தை நசுக்கி கட்டி ஆண்டு வந்தார்கள் என்பதையும் தன் கூற்றினுாடு சூசகமாகத் தெரியப்படுத்தினார்.
éé
ஓலை’ - 19 ( ஓகுஸ்ட் 2003) − Uäзф 6

பொதுவாக மக்கள் கூட்டத்தில், சூழலுக்கு ஏற்றவாறு நடைமுறைச் சாத்தியமான காரியங்களில் ஈடுபட்டு தம் அடிப்படைக் கொள்கையில் இருந்து பிறழாமல் காரியங்களைக் கொண்டு நடத்தும் சாரார் ஒரு விதம். சூழலுக்கு ஏற்றவாறு ஆடித் தமது சொந்த நலன்களைப் பாதுகாத்து சுயமாக நன்மை தேடுவோர் வேறொரு விதம். கொள்கைகளை விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று அடிப்படைக் கொள்கைகளுக்கும் நடபடிமுறையான தேவையற்ற விடயங்களுக்கும் வித்தியாசம் காட்டாமல் போராட்டத்தில் இறங்கி பதவியைப் பறிகொடுத்து நல்லவற்றைச் செய்ய முடியாமல் மற்றவர்களைக் குறைகூறியே காலத்தைக் கடத்துவோர் இன்னொரு சாரார்.
இவர்களுள் தனது குறிக்கோள்களை முன்வைத்து, வெறுமனே மனித இயல்புகளோடு தொடர்புடைய அடிப்படைத் தேவையற்ற விடயங்களை அசட்டை செய்து, அன்புடனும், சமயோசித புத்தியுடனும், செயல் திறனுடனும் கடமையாற்றுவோரே இந்த மூன்று வர்க்கத்தினரிலும் உயர்ந்தவர்கள் ஆவர். தேவையற்ற விடயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கொள்கைகளுக்காகப் பாடுபடுபவன் என்று மார்தட்டி, தன் மேலதிகாரிகளைப் பகைத்து, தனது கருமங்களைச் சரிவரப் பார்க்க முடியாதவரிலும் பார்க்க முதல் வர்க்கத்தவர் மேலோர். சுய இலாபத்திற்காக அடிவருடிகளாகப் பவனி வருபவர்கள், தாமும் நடைமுறைச் சாத்திய வழியில் செல்பவர்கள் என்று கூறிக் கடமை ஆற்றினாலும் மக்கள் அவர். களை இனங்கண்டு கொள்வார்கள். அவர்களே கடை வர்க்கத்தவர்கள்.
திரு.சிவகுருநாதன் அவர்கள் அவருக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி சுயமாக நன்மைகள் பல பெற்றிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. சொத்து சுகம் தேடவில்லை. தியாக வாழ்வே வாழ்ந்தார். தமிழுக்காக வாழ்ந்தார். தமிழ் மக்களுக்காக வாழ்ந்தார். இந்து மதத்திற்காக வாழ்ந்தார். ஆனால் தமிழர் அல்லாதோரைப் புறக்கணிக்கவில்லை. இந்துக்கள் அல்லாதோரை வெறுக்கவில்லை.
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளரின் சங்கத் தலைவராக இரண்டு தடவைகள் அவர் பதவி வகித்ததில் இருந்து, தமிழர் அல்லாதோரும் அவர் மீது வைத்திருந்த மதிப்பை நாம் உணர முடிகிறது. அச் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர் அவர் ஒருவரே என்பதை நாம் மறக்கக் கூடாது.
முஸ்லிம் எழுத்தாளர்களை அவர் ஊக்குவித்ததால் முஸ்லீம் ஊடகவியலாளர் சங்கம் அவருக்கு விசேட கெளரவம் அளித்தது. ஆகவே தனது மொழி, மதத்தில் ஈடுபாடு கொண்ட ஒருவர், மற்றைய மொழி
Uá3á 7 ‘ஓலை’ - 19 ஒகுஸ்ட் 2003)

Page 6
யினரையும் மதத்தினரையும் கவரலாம் என்ற தத்தவத்தை உலகுக்குணர்த்தியவர் திரு.சிவகுருநாதன் அவர்கள்.
அவரை முதன் முதலில் நான் சந்தித்தது 1971ம் ஆண்டில். என்னிலும் பார்க்க வயதில் கூடிய அவர் என் மாணவராகச் சட்டக் கல்லூரியில் முதல் வருட வகுப்பில் அமர்ந்திருந்தார். அவர் யார் என்று அறிந்து பார்த்ததில் அவரே தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன் என்று தெரியவந்தது.
பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் எங்கோ கூறியிருந்தது போல் திரு.சிவகுருநாதனுக்குள் தேடல் தணியாத ஒர் ஆய்வு மாணவர் என்றுமே உறைந்திருந்தார் எனலாம். அதனால்த்தான் லேக் ஹவுஸில் தினகரன் பிரதம ஆசிரியராகக் கடமை ஆற்றிய காலத்தில் சட்டம் படித்துச் சட்டத்தரணி ஆனார். முது மாணிப் பட்டத்திற்காக ஆய்வுக் கட்டுரை எழுதிப் பட்டமும் பெற்றார்.
என்னைப் பார்த்து, உங்களைப் பின்பற்றியே நாங்கள் பலதையும் செய்கின்றோம் என்று அவர் அடிக்கடி சொல்வார். ஆனால் அது தவறு. அவர் வழியில்த்தான் நாங்கள் செல்ல வேண்டியிருக்கிறது. முதுமையை மறந்த முறுக்கு, ஆற்ற வேண்டும் என்ற அவா, அன்பினில் விளைந்த உறவுமுறை, ஆற்றிய சேவைகளைப் பறைசாற்றாத கண்ணியம், தன்நிலை மாறாது பிறருடன் ஒத்துழைக்கும் பாங்கு, தற்புகழ் பேசாத தன்மை - இவையெல்லாம் நாங்கள் தான் அவரிடம் இருந்து கற்க வேண்டிய பாடங்கள்.
சிவகுருநாதன் என்ற அந்த சுறுசுறுப்பான அன்புள்ளத்தை எங்களால் இனிப்பார்க்க முடியாது, பேச முடியாது. ஆனால் அவர் வழி நின்று எங்கள் வாழ்க்கையைப் பயனுள்ளதாக ஆக்க அவர் வழி கோலுவார் என்ற திடநம்பிக்கையில் எம்மைத் தேற்றிக் கொள்ளுவோம். (ID
ஸ்தாபக தின விழா 2008ன் போது
பண்டிதர் கா.பொ.
இரத்தினத்துடன்.
‘ஓலை’ - 19 ( ஓகஸ்ட் 2003) Uő5á 8
 

oči
ருவுருவம் திருஇசிவகுருநாதன்
செந்தமிழறிஞர் தினகரனிதழி சிவகுரு நாதரெம் செம்மல் சிவன்கழல் சேர்ந்தனர்" என்று வந்தவோர் செய்தி நெஞ்சினை நொருக்கி வருத்தலும், நீறொளிர் நெற்றிச் சுந்தர வதனன் தோன்றிப்புண் நகைத்து தோன்றலும் மறைதலு மியற்கை தந்தவித் துயரம் தவிரெனக் கொழும்புத் தமிழ்ச்சங்கச் சுவர்ப்படத் திவர்ந்தார்.
- தில்லைச்சிவன்
45/1, அம்மன் வீதி
நல்லூர்
1008-2003
அமரர். குமார் பொன்னம்பலம் அவர்களின் உருவப்படத் திறப்புவிழாவின் போது.
பக்தம் 9 ‘ஓலை’ - 19 ஒகுஸ்ட் 2003)

Page 7
கந்தையா நீலகண்டன் (தலைவர், கொழும்புத் தமிழ்ச்சங்கம்)
கொ ழும்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்து தலைவராகவே மறைந்த கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் மறைவு சங்கத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
26.10.1997 முதல் 11.12.1999 வரையும் மீண்டும் 15.07.2001 முதல் தன் இறுதி மூச்சு வரையும் அமரர் சிவகுருநாதன் எமது சங்கத்தின் தலைவ. ராகப் பணிபுரிந்த பெருமைக்குரியவர்.
கொழும்புத்தமிழ்ச் சங்கத்தின் பணிக்கு தன்னை அர்ப்பணித்து, தமிழ்ச் சங்கத்தின் தலைமைத்துவமே தன் வாழ்வின் இறுதி அத்தியாயமாகக் கொண்டு அமரத்துவம் அடைந்திருக்கும் திரு.இ.சிவகுருநாதனின் ஆழ்ந்த தமிழ் அறிவும் அவரின் பேச்சுத் திறமையும் அத்தலைமைத்துவத்திற்கு மெருகூட்டியிருந்தது.
தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு தனிப்பாணியை வகுத்து தினகரன் பிரதம ஆசிரியராகப் பல ஆண்டுகள் அவர் செய்த பணி, சட்டத்தரணியாகி, இலங்கைச் சட்டக் கல்லூரியில் தமிழ் மொழிமூலம் சட்ட நுணுக்கங்களை இளம் சமுதாயத்திற்கு போதித்த திறமை, பல மேடைகளில் இனிய தமிழில் சுவை பொருந்திய கருத்துக்களை உதிர்த்து சபையினைக் கவர்ந்த சாதனை - இவை எல்லாம் அவரின் வாழ்வின் சிறப்புக்கு மகுடம் வைத்தன என்று சொல்லலாம்.
பழகுவதற்கு இனியவராக எல்லோரையும் அணைத்து உறவு கொண்டு இன்பம் கண்ட புனித உள்ளமாக அவரை நாங்கள் அறிந்து இருந்தோம்.
வாழ்வின் இறுதிக் கட்டத்தில் சங்கத்தின் பணிகளில் ஆர்வத்துடன் அவர் ஈடுபட்டு உழைத்தபோது அவரை நாங்கள் இவ்வளவு கூடிய விரைவில் இழப்போம் என்று கனவிலும் நினைக்கவில்லை. அடுத்த ஆண்டுப் பொதுக்
‘ஓலை’ - 19 ( ஓகஸ்ட் 2003) U63d 10
 

கூட்டத்தில் மீண்டும் தலைவராகத் தெரிவு செய்ய ஆட்சிக்குழு அவரை ஒருமனதாக நியமித்த வேளையில், அவருக்கு சவால் விட்டு வேறு எவரும் நியமனம் தாக்கல் செய்ய விரும்பாதகட்டத்தில், தலைவராகவே தலைவர் மறைந்து விட்டார். தமிழ் உள்ளங்கள் கலங்கின. இன்றும் கலங்கிக் கொண்டிருக்கின்றன. சமீப காலத்தில் ஊடகங்களின் வாயிலாக வேறு எந்தத் தமிழ் மகனுக்கும் கிடைக்காத அளவு ஏக்கம் மிகு அனுதாப அலைகளைக் கண்டோம். அவை அமரரின் பெருமைக்குச் சான்று பகிர்ந்து நிற்கின்றன.
அமரரின் அருமைத் துணைவிக்கும் பிள்ளைகளுக்கும் ஏனைய உறவினர்களுக்கும் அமரரின் மறைவு தமிழ்ச் சங்கத்தின் இழப்பு என்று கூறி, அவர்களின் துயரத்தில் நாங்களும் பங்கு கொண்டு தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அவர்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இறுதியாக, தனிப்பட்ட முறையிலும் நான் சில வார்த்தைகளைக் கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன். 26.10.1997 அன்று நடந்த பரபரப்பான ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் அமரர் திரு.இ.சிவகுருநாதனை ஏகமனதாகத் தலைவராகத் தமிழ்ச் சங்கம் தெரிவு செய்தபோது அக்கூட்டத்தில் தற்காலிகத் தலைவராகக் கடமையாற்றி அமரரின் தெரிவைப் பிரகடனப்படுத்திய நிகழ்வு என்றும் மறக்க முடியாதது. இப்பொழுது அவரின் மறைவின் பின் அடுத்த ஆண்டுப் பொதுக்கூட்டம் வரை, அவர் விட்டுச் சென்ற தலைமைப் பதவியில் எதிர்பாராத முறையில் அமர வேண்டிய நிலையும் எனக்கு ஏற்பட்டிருக்கின்றது. சட்டக் கல்லூரி மாணவனாக இருந்த காலந்தொட்டு அமரரின் அன்பில் தோய்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பல கட்டங்களில் எனக்கு உற்சாகம் தந்து ஓர் அண்ணன் போன்று கை கொடுத்துத் தூக்கிவிட்டவர் அவர். என்னைப்போன்று பலர் அந்த நல்ல உள்ளத்தின் அன்பில் தோய்ந்திருக்கின்றார்கள். எனவே, அப்படியான தம்பிமார்களில் ஒருவராகவும் அமரருக்கு என் தனிப்பட்ட அஞ்சலியையும் செலுத்தி அவரின் குடும்பத்தினருக்கும் எங்கள் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
gŠ»
U53ú 11 ‘ஓலை’ - 19 ஒகுஸ்ட் 2003)

Page 8
சட்டத்தரணி, அல்ஹாஜ் எஸ்.எம்ஹனிபா
அரசாங்க சேவையில் உயர்பதவிகள் வகித்தவரான ஜனாப் ஏ.எம்.ஏ.அஸிஸ் அவர்கள் 1948ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபராகப் பணிபுரியத் தொடங்கினார். கண்டி சென் அந்தனிஸ் கல்லூரியில் முன்னைய ஆண்டு சிரேஸ்ட தராதரப் பத்திரப்பரீட்சைக்காகப் படித்துத் தேறிய நான், அவரின் ஆலோசனையின் பேரில் 1948ம் ஆண்டு மே மாதம் (அவர் அதிபராவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர்) ஸாஹிராக் கல்லூரியில் எச்.எஸ்.சி.முதலாண்டு மாணவனாகச் சேர்ந்தேன். அடுத்த ஆண்டு, பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சைக்கும் எச்.எஸ்.சிக்கும் தோற்றுவதற்கான இரண்டாம் ஆண்டில் நான் இருந்த சமயம். எச்.எஸ்.சி.முதலாமாண்டு வகுப்பில் எஸ்.இரத்தினநாதன் என்ற யாழ்ப்பாண மாணவர் ஒருவர் வந்து சேர்ந்தார். அதிபர் ஜனாப் அஸிஸ் அவர்கள், சமூகக் கல்வி பற்றிய பாடமொன்றை எடுத்தார். அவர், முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களை ஒரே வகுப்பாகச் சேர்த்துப் பாடம் கற்பித்தார். இந்த வகுப்பில் தான் நான் முதன்முதலாக இரத்தின. நாதன் என்ற மாணவனைச் சந்தித்தேன். சில சமயங்களில், தமிழ் கற்பித்த திரு.என்.சண்முகரத்தினம் அவர்களும் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களை ஒன்றாகச் சேர்த்து வகுப்பு நடத்துவார் அப்பொழுதும் நாங்கள் சந்தித்ததுண்டு.
அன்றைய காலகட்டத்தில், இப்பொழுதைய பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை இருக்கவில்லை. பல்கலைக்கழகம் சேர விரும்புபவர்கள் யூ.ஈ.என அழைக்கப்பட்ட பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட் சைக்குத் தோற்றுதல் வேண்டும். யூ.ஈ.என்றால் யுனிவர்சிட்டி என்ட்ரன்ஸ் என்பதாகும். அத்துடன் அவர் எச்.எஸ்.சி. (உயர் தராதரப் பத்திரப்) பரீட்சைக்கும் தோற்ற விரும்பினால், கல்வித் திணைக்களத்திற்கு விண்ணப்பித்தல் வேண்டும். அத்தகையவரின் பரீட்சை விடைத்தாள்கள், பல்கலைக்கழகத்தில் திருத்தி புதுமுகப் பரீட்சைக்கான புள்ளிகள் அங்கு குறிக்கப்பட்ட பின்னர், கல்வித் திணைக்களத்திற்கு அனுப்பப்படும். பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகாதவர்கள் எச்.எஸ்.ஸி.யில் சித்தியெய்தினால், சுமாரான நல்ல
‘ஓலை’ - 19 ( ஓகஸ்ட் 2003) J53á 12
 

தொழில் பெறக்கூடிய வாய்ப்பு அப்பொழுதிருந்தது. அதனால்தான் ஒரே பரீட்சை எழுதி இரண்டு பெறுபேறுகள் (யூ.ஈயும், எச்.எஸ்.சியும்) பெறும் நிலைமை அப்பொழுதிருந்தது.
இனிய சம்பவம்
ஸாஹிராக்கல்லூரியில் தமிழ்ச் சங்கம் அக்காலப் பகுதியில் பெரும்பாலும் செயலிழந்திருந்தது. அதனை மீண்டும் செயல்படச் செய்வதில் சிலர் முன்னின்றுழைத்தனர். 1949ம் ஆண்டுக்கான தலைவராக நான் தெரிவு செய்யப்பட்டேன். கூட்டங்கள் பிற்பகல் மூன்று மணியளவில் தொடங்கி மாலை ஐந்து மணிவரை நடைபெறுவதுண்டு. பல மாணவர்கள் கூட்டத்தில் பங்குபற்றுவதற்குப் பின்வாங்குவர். அவர்களை கூட்டத்திற்கு வரும்படி வற்புறுத்தும் பொறுப்பு என்னிலும், செயலாளரிலும் தங்கியிருந்தது. ஒரு கூட்டத்திற்கு வரும்படி இரத்தினநாதனிடம் கேட்டேன். 'எனக்கு பகல் 2.45 இரயில்தான் வீடு போக "சீசன் டிக்கட்' வைத்திருக்கிறேன். நான் வீடு போக முடியாது போய்விடுமே" என்று அங்கலாய்த்தாார். "சரி பஸ்ஸில் போகலாம்தானே" என்றேன் நான். "என்னிடம் காசில்லையே' என்றார் அவர். 'எவ்வளவு காசு வேண்டும். நான் தருகிறேன்' என்று நான் சொன்னதால் கூட்டத்தில் பங்குபற்றியதோடு, நல்ல சொற்பொழிவொன்றும் நிகழ்த்தினார். அதன் பின் ஒவ்வொரு கூட்டத்திலும் தவறாமல் கலந்து கொள்வார். பிற்காலங்களில் அவர் நகைச்சுவை ததும்பச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்கு ஸாஹிராக் கல்லூரித் தமிழ்ச்சங்கம் பயிற்சி தந்தது. இந்தச் சம்பவத்தை அவர் பின்னைய காலங்களில் பல பொதுக்கூட்டங்களில் சொல்லி மகிழ்ந்தார்.
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம், கல்ஹின்னைத் தமிழ் மன்றத்தின் நூறாவது பிரசுர வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு முன்பு இரத்தினநாதனாயிருந்து பின்பு சிவகுருநாதனாக மாறிய கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் தலைமை வகித்தார். தலைமையுரையில் தனக்குத் தமிழில் "பேரார்வம் வர வழிகாட்டியவர்களில் பிரதான பங்குள்ளவர் எஸ்.எம்.ஹனிபா அவர் ஸாஹிராவிலும் என்னை வற்புறுத்தித் தம்ழ்ச்சங்கச் செயற்பாடுகளில் பங்குபற்றச் செய்தார். நாங்கள் ஸாஹிராவில் ஒன்றாக இருந்தோம், பின்பு பல்கலைக்கழகத்தில் ஒன்றாக இருந்து ஒரே காலத்தில் தொழில் பார்த்தோம். இப்பொழுது, கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இருவரும் இணைந்து செயல்படுகின்றோம்." என முழங்கினார்.
பக்தம் 13 ‘ஓலை’ - 19 (ஓதுவிட் 2003)

Page 9
ஸாஹிராக் கல்லூரியில் நாங்கள் இருந்த காலத்தில் எங்கள் கண்ணியத்திற்குரிய ஆசிரிர் ஜனாப் எஸ்.எம்.கமால்தின் அவர்களின் வழிநடத்தலில் மரதன் அஞ்சல் ஒட்டக் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற ஸாஹிராக் கல்லூரித் தலைமைத் தமிழ் ஆசிரியராயிருந்து ஒய்புே பெற்றிருந்தவரான) பண்டிதர் மு.நல்லதம்பி அவர்களுக்கு ஒரு சிறந்த வரவேற்பு நடாத்தி, கவிதையில் வாழ்த்துப் பத்திரம் வழங்கினோம். மேலும் "உதயம்" எனும் பெயரில் மாணவர்களின் ஆக்கங்கள் தாங்கிய கல்லப்பி சஞ்சிகையும் நடத்தினோம். இதிலெல்லாம் சிவகுருநாதன் பங்கு கொண்டார்.
கல்கி, தூரன் வருகை
எமது தமிழ்ப்பணிக்குச் சிகரம் வைத்தாற் போல், ஸாஹிராக் கல்லூரித் தமிழ்ச் சங்கம், 1950ம் ஆண்டில் தமிழ்நாட்டின் தலைசிறந்த நாவலாசிரியர் "கல்கி" ரா.கிருளப்ணமூர்த்தியையும், கவிஞர் பெரியசாமிதாரன்
- - ཟ ཟླ - - - 1ܘ ܕ ܕ ܐ ܐ 8 ܩܵ படத்தின் மத்தியில் பாதிபராக் கல்லூரி அதிபர் கலாநிதி ஏ.எம்.ஏ.அன்பீஸ் (இடமிருந்து மூன்றாவதாக பெ.தூரன்) அவரின் வலதில் (இடமிருந்து ஐந்தாவதாக கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி) அவரைபடுத்து ஜனாப் எஸ்.எம்.கமால்தீன்,
நிற்பவர்களில் நாவானதாக அதிபரின் பின்னால் திரு.ஆர்.ரினதுருநாதன் ஐந்தானதாக ஜனாப் எனப்.எம்.திரனிபா ஆறாவதா ஜலாப் எப்.எல்.எம். ஹனிபா. கடைசியில் மு:மீராம் சாஹிர் தமிழ்ச் சிறுகதை நூல் வெளியிட்டவர்)
அமர்ந்திருப்பவர்களில் முதலாவது திரு.பொ.கந்தையா தமிழாசிரியர்} திரு.எஸ்.சண்முகரத்தினம் (தமிழாசிரியர்) கடைசியாக இருப்பவரைத் தெரியாது.
நிற்பவர்களில் முதல் மூன்று பேரும் தெரியாது.
"தினை' - 19 ( திகரிப்ட் 2003) பரீதம் 14
 
 
 
 

அவர்களையும் வரவேற்று மாபெரும் சட்டம் ஒன்றை நடாத்தியது. அவர்கள் இருவரும் பம்பலப்பிட்டியில் காசில் லேனில் டாக்டர் நல்லைநாதன் வீட்டில் தங்கியிருந்தனர். அதிபர் ஜனாப் ஏ.எம்.ஏ.அளபீஸ் எனக்கு அறிமுகக் கடிதம் தந்து டாக்டர் நல்லைநாதன் வீட்டிற்கு அனுப்பி, அவர்களை அழைக்கும் ஷபடி கேட்டார். அவர்கள் கூட்டத்திற்கு வந்து பேசுவதற்குச் சம்மதித்தனர். அடுத்த நாள் அதிபரின் காரில் சென்று. அவர்களைக் கல்லூரிக்கு அழைத்து வந்தேன்.
கல்லூரியின் தமிழ்பேகம் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்ட மாபெரும் கூட்டம் அன்று நடந்தது. கூட்ட முடிவில் தமிழ்ச்சங்க உத்தியோகத்தர்கள், அதிபர் ஆகியோர் அவர்களுடன் புகைப்படம் எடுத்தோம்.
பல்கலைக்கழத்தில் நாமிருவரும் தமிழ்ச்சங்க நடவடிக்கைகளில் பங்குபற்றினோம். பேராதனையில் வெளியான முதல் இரண்டு "இளங்கதிர்" இதழ்களை நான் பொறுப்பாயிருந்து வெளியிட்டேன். அவர் ஏழாவது "இளங்கதிர்" ஆசிரியராகயிருந்தார். பேராசிரியர் கா.சிவத்தம்பி கலாநிதி க.கைலாசபதி ஆகிய இருவரும் எங்கள் சகாக்களே, ஒரே காலத்தில் பல்கலைக்கழகத்தில் பயின்றோம். எம்மில் மூவர் சமகாலத்தில் 'தினகரன்" பத்திரிகையின் ஆசிரியர் பீடத்திலிருந்தோம், கலாநிதி கைலாசபதி, குறுகிய காலமே பத்திரிகை ஆசிரியராக இருந்தார். பின்பு, அவர் தமிழ் விரிவுரையாளராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதல் பீடாதிபதியாகவும் கடமையாற்றினார். நாங்களிருவரும் தொடர்ந்து லேக் ஹவுஸ் பணியிலேயே இருந்தோம்.
என்னுடன் நெருக்கமாக இருந்த "தினகரன்" பிரதம ஆசிரியர் திரு.ஆர்.சிவகுருநாதன், சுகவீன மாயிருக்கிறார் என்று தெரியவந்ததும், அவர் வீட்டுக்கு என் மனைவியுடன் போன சமயம், சிரித்தவாறே "என்னைத் தெரியுமா?" என்று கேட்டேன். அவரும் சிரித்துவிட்டு "ஏன் தெரியாது, எங்கட எஸ்.எம்.என்று பதிலளித்தார். மரணத்திற்கு இருவாரங்களுக்கு முன்புதான் இது நிகழ்ந்தது. அவரின் பிரிவு, தமிழ் தெரிந்த அனைவருக்குமே பேரிழப்பு. அவர் எப்பொழுதுமே சாதி, சமய வித்தியாசங்கள் பார்த்ததில்லை. எல்லோருக்கும் தன்னாலியன்றளவுக்கு நல்லதையே செய்வார். யாருக்கும் தீங்கு செய்ததாக நான் கேள்விப்படவில்லை. அவரின் தமிழுணர்வு வலிமையானது. அவர் பணி அவரின் நற்பெயர் என்றென்றும் நிலைத்திருந்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அமையும் என்பதுறுதி.
(LTD
பக்கம் 15 ‘ஓலை’ - 19 ஓதுவிட் 2003)

Page 10
செந்தமிழ்த் திறம்வல்ல சிவகுருநாதன்
இலக்கியச் செம்மல்.செ.குணரத்தினம் முன்னாள் அரசு அமைச்சுச் செயலாளர் முன்னாள் கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர்.
நண்பர் சிவகுருநாதன் இறையடி சேர்ந்த செய்தி கேட்டு மிகுந்த துன்பத்துக்கு உள்ளானேன். சிவகுருநாதனை நான் யாழ்ப்பாண இந்துக்கல்லூரி மாணவர்களாய் இருந்த காலத்திலிருந்தே நன்கறிவேன். அவரும், அவரது சகோதரர்களும் எனது காலத்தில் இந்துவில் கற்றனர். இந்துக்கல்லூரியில் ஒவ்வொரு நாளும் பாடசாலை தொடங்குமுன் இறைவழிபாட்டுடனேயே கல்லூரி ஆரம்பிக்கும். அக்காலைப்பொழுதில் சிவகுருநாதனே தேவாரதிருவாசகம் பாடி ஆரம்பித்து வைத்தல் என் கண்முன்னே நிழலாடுகின்றது. அவருக்கு இளமையிலேயே நல்ல சங்கீத ஞானமும் இராகங்களில் பரீட்சயமும் உண்டு. அத்துடன் கணிரென்ற இனிய குரலும் வாய்த்தது ஒரு வரப்பிரசாதமே.
அதன்பிறகு சிவகுருநாதனைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே சந்தித்தேன். புதிய மாணவனாய்ச் சென்ற என்னை அன்போடு அனுசரித்து மாணவர் கூட்டத்தின் பகிடித் தொல்லைகளில் இருந்து அவர் என்னைப் பேணியதை என்னால் மறக்க முடியாது. 1954 - 55ம் ஆண்டு பேராதனைத் தமிழ்ச்சங்க இதழாகிய "இளங்கதிர்" ஆசிரியராக விளங்கினார். பேரறிஞர்களாகிய க.கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி போன்றோர் இருந்த காலத்தில் சிவகுருநாதன் இளங்கதிர்' ஆசிரியராக விளங்கினார் என்பது பெருமைப்படத்தக்க விஷயம்.
ஷெல்லியின் கவிதையொன்றினைத் தழுவி நான் எழுதிய கவிதையை அவ்வாண்டு மலரில் வெளியிட்டு எனக்கு ஒரு தகைமையைப் பெற்றுத் தந்தார் என்பதைக் குறிப்பிடாமல் விடமுடியாது. அவ்வாண்டு தமிழ்ச் சங்கம் நடத்திய நாடகத்தில் நடித்துப் பின்னாளைய பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி இவர்களுடன் சங்கத்துக்கு இரண்டு புலமைப் பரிசில்கள் ஏற்படுத்த நிதி சேகரித்துக் கொடுத்ததும் நினைவு கொள்ள வேண்டியவொன்று.
அதன்பிறகு சிவகுருநாதன் தினகரன் ஆசிரியராகப் பணியாற்றினார். பத்திரிகையை மிகச்சிறந்த முறையில் வெளியிட்டார். பேராசிரியர் க.கைலாசபதி
4 s,
ஓலை’ - 19 ( ஓகஸ்ட் 2003) U630, 16

ஏற்படுத்திய மறுமலர்ச்சியை அவரது நண்பரான சிவகுருநாதன் விரிவுபடுத்தி வளர்த்தார். தினகரன் ஞாயிறு இதழ் பத்திரிகை உலகில் விதந்து பாராட்டப்பட்டது. பல இதழ்களுக்கு முன் மாதிரியாய் அமைந்தது என்றால் மிகையல்ல.
சிவகுருநாதன் எழுதிய ஆசிரியத் தலையங்கங்கள் அற்புதமானவை. சுருங்கச் சொல்லி கனமான பாரிய விஷயங்களையும் தனது சொல்லாட்சித் திறமையால் கற்றோரும் வியக்கும்படி எழுதினார். புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்தார். பிரதேசவாரியான தனித்துவங்களைப் பேணி நாடு முழுக்கவும் மறைந்து இருந்த திறமைகளை வெளிக்கொணர்ந்தார். தமிழில் துறைபோன பேரறிஞர்களை எழுதும்படி துண்டி காத்திரமான படைப்புக்கள் பல வெளிவரக் காரணமாக இருந்தார்.
எல்லா இனமக்களையும் அரவணைத்து எல்லோர் மதிப்பையும் பெற்ற சிவகுருநாதனின் சாணக்கியம் வியந்து போற்ற வேண்டியவொன்று. ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் அவர் செய்த சாதனை சரித்திரமாகிவிட்டது.
பலகாலமாக நான் கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவராக இருந்த காலத்தில் எனது ஆலோசகராகவும் நம்பிக்கைக்குரிய நண்பராகவும் விளங்கிய சிவகுருநாதன் அதன்பின் தமிழ்ச் சங்கத் தலைமையை ஏற்றுத் திறம்படக் கருமங்கள் ஆற்றினார். அவரது நகைச்சுவை பிரபலமானது. நகைச் சுவையைக் கையாள்வது மிகக் கடுமையானவொன்று. ஆனால் சிவகுருநாதனுக்கு அத்திறமை இயற்கையாய் அமைந்தது.
நான் பிரதேச அபிவிருத்தி இந்து கலாச்சார தமிழ்மொழி அமைச்சின் செயலாளராக இருந்த காலத்தில் அவரது ஆலோசனைகளைப் பெற்றேன். பல ஆக்கபூர்வமான முயற்சிகளை முன்னெடுக்க அவரின் பங்களிப்பு உதவியது.
சிவகுருநாதன் ஒரு சிறந்த நண்பர். குறைகளைப் போற்றாது குணத்தைப் போற்றுபவர். பேராசிரியர் சு.வித்தியானந்தனுக்கு உற்ற துணையாக இருந்தார். அவர் தேகவிலோகம் அடைந்த பொழுது, எனது தலைமையில் இரங்கல்க் கூட்டம் நடாத்தி அவருக்கு அஞ்சலி செலுத்த சிவகுருநாதனே முன்னின்று உழைத்தார். அவ்வாறே பேராசிரியர் க.கைலாசபதியின் இறுதி மரியாதைகளிலும் முக்கியபங்காற்றிக் கெளரவித்தார். இப்படி நட்புக்கு மதிப்புக் கொடுத்து உற்ற நேரத்தில் உதவும் பாங்கு அவரைச் சமூகத்தில் மிகக் கெளரவமான இடத்தில் வைத்தது.
இவைதவிர அவரது பன்முகப்பட்ட ஆளுமைகள் எத்தனையோ, சட்டத்தரணியாக, சட்டக் கல்லூரி ஆசிரியராக அவர் ஆற்றிய சாதனைகளை நன்கு அறிந்த பலர் போற்றுவார்கள்.
சிவகுருநாதனுடைய ஆத்மா சாந்தி அடையவும் அவரது அளப்பரிய சேவைகள் நின்று நிலைக்கவும் யான் பிரார்த்திக்கின்றேன். &
U55dì 17 ‘ஓலை’ - 19 ஓகஸ்ட் 2003)

Page 11
பத்திரிகைத்துறைப் பெரியார் கலாசூரி இ.சிவகுருநாதன்
பேராசிரியர் சோசந்திரசேகரன்
(துணைக்காப்பாளர், கொழும்புத் தமிழ்ச்சங்கம்)
அண்மையில் எம்மை விட்டுப் பிரிந்த கலாசூரி இ.சிவகுருநாதன்
அவர்கள் பத்திரிகைத்துறையில் மூன்று தசாப்த காலத்துக்கு மேலாகப் சிறப்புப் பணியாற்றியதுடன் கொழும்புத் தமிழ்ச்சங்கத்திலும் பல ஆண்டுகள் பணி புரிந்தவர் வழக்கறிஞரான இ.சி.அவர்கள் சட்டக்கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். அறிவுத்துறையில் சட்டம், தமிழியல், பத்திரிகையியல் என்பவற்றில் ஆழ்ந்த ஞானமும் மிக்கவர். இச்சில வரிகளே அன்னாரின் தனித்துவமான ஆளுமையை சிறப்பாக விளக்கும்,
தமிழ்ப்பற்றும் தமிழ்த் தேசிய உணர்வும் சமயப் பற்றும் மிகுந்த பெரியாராக ĜIFT jĖ #5 சிவகுருநாதன் அவர்கள் ஏனைய இனத்தவராலும் சமயத்தவராலும் பெரிதும் மதிக்கப்பட்டவர். இவ்விடயத்தில் ஐயா அவர்கள் தனித்தவம் மிக்கவர் என்றே கூற வேண்டும். அவர் காலமாகிய பின்னர் கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் அவருடைய முளல்லீம் நண்பர்கள் இரங்கல்க் கூட்டம் நடத்தியதை இவ்விடத்திலும் குறிப்பிட்டே யாக வேண்டும். அவரால் ஊக்கமும் உத்வேகமும் பெற்ற முளப்லீம் எழுத்தாளர்கள் ஏராளம்.
அன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்த போது அவருடைய பல தலைமையுரைகளை நான் கேட்டதுண்டு. கை தேர்ந்த சொற்பொழி. வாளரான ஐயா அவர்கள் மேடையில் அமர்ந்து கூட்டத்தின் சூழ்நிலையை ஒரு பார்வை பார்த்துவிட்டு, ந்ைதிருக்கும் சட்டத்துக்கு ஏற்றாற் போல் நகைச்சுவையாகவும் பொருள் பொதிந்த முறையிலும் அவையான உரையொன்றை நிகழ்த்துவார். சகலரும் முகத்தில் புன்னகை தவழு அன்னாரின் பேச்சை இரசிப்பதை நான் எப்போதுமே அவதானித்துள்ளேன்.
"ஓ'ை - 19 ஒதனிட் 2/3) பத்தம் 18

நூல் வெளியீட்டு வைபவங்களில் உரையாற்றும் போது குறிப்பிட்ட நூலாசிரியரின் சிறப்புகள், அவரது பின்புலம் தொடர்பான பாராட்டத்தக்க அம்சங்கள் என்பவற்றை உள்ளடக்கிபதாகவே அவரது உரை ஆரையும். எழுத்துத் துறைக்குப் புதிதாக வருபவர்களைத் தட்டிக் கொடுத்து, உற்சாகப்படுத்தியே எப்போதும் அவர் பேகனார்.
தினகரனில் பிரதம ஆசிரியராகப் பணியாற்றியபோது பல்வேறு அரசியல் தலைமைகளின் சிந்தனைகளைப் புரிந்து கொண்டு அவற்றுக்கேற்ப நெகிழ்வுடன் செயற்பட்டு வெற்றி கண்டவர் ஐயா அவர்கள். திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜயவர்த்னா, ஆர்.பிரேமதாப், டி.பி.விஜயதுங்க போன்ற பலரின் பதவிக்காலத்தில் அனைவரும் திருப்தியுறும் வகையில் அன்னார் பணியாற்றினார். இதனை ஒரு சாதனை என்று கூடச் சொல்லலாம்.
தமிழ்ச்சங்கத் தலைவராகப் பணியாற்றியபோது, சங்கத்தின் பணிகளுக்குத் தன்னை அர்ப்பணித்துச் செயலாற்றினார், மறையும் ைேர சங்கத்தையே நினைவில் கொண்டு சகல உறுப்பினர்களையும் அரவணைத்துச் சென்ற பாங்கு அன்னாருக்கே உரியது.
వ్లోక్తేశ్లే இஜ்
எழுத்தாளர் லெமுருகபூபதி (அவுஸ்திரேலியா) அவர்களின் வருகையின் போது.
Uś3ół 19 "தி”ை - 19 ஒதர்ட் 2003)

Page 12
கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் மறைவு குறித்துப் பாடப்பட்ட அஞ்சலிப்பா
வெண்பா
கொழும்புத் தமிழ்ச்சங்கச் சீர்தலைவர் தம்மின் எழுபத்தோ ராமாண்டில் இன்று - அழிவில்லாத் தெய்வபதம் சேர்ந்தார் தமிழுக்குப் பேரிழப்பாம் ஐயன் சிவகுருநா தன். - கட்டளைக் கலித்துறை தவமெது செய்தாள் தமிழ்த்தாய் நினைமக னாய்ப்பெறவே புவிபுகழ் மேன்மைக் குரியனாய்ப் பெற்றாள் பெருமையுற்றாள் கவலழிந் தாள்தனைக் காக்கப் பிறந்தான் குமரனென்றே சிவகுரு நாதத் திருவே உயர்தமிழ்த் தேசிகனே.
அவைமுதற் கோன்மை அனைவரும் ஏற்றல் அரிதெதிலும் அவைமுதல் ஆசனம் ஐயனே நீபெறும் ஆற்றலுற்றாய் புவிதனில் உன்புகழ் பேசிடற் கூடுமோ போனதெங்கே சிவகுரு நாதத் திருவே உயர்தமிழ்த் தேசிகனே.
எவர்க்கும் இனியோன் இளகிய நெஞ்சுடை ஏந்தலராம் உவப்பரே யாரெவ ராயினும் உள்மன ஒப்புதலால் தவப்பணி சேவைச் செயலென எண்ணிச் செயல்புரிந்தார் சிவகுரு நாதத் திருவே உயர்தமிழ்த் தேசிகனே.
உவமைக் கெவருளா ருன்றனுக் கையனே ஒர்ந்திடுங்கால் எவர்தனும் நெஞ்சினுக் கேற்பிலை என்செய ஏற்புடைத்தோ கவர்ந்தனன் ஆவியைக் காலனும் செய்பழி கூடிநின்றான் சிவகுரு நாதத் திருவே உயர்தமிழ்த் தேசிகனே.
கவல்மிகக் கொண்டனர் கைகடந் தேகினை காரணத்தால் இவண்பதி வாழ்மு வினத்தவர் தாமும் இனிப்புவியில் எவண்ஒரு பேருன் இடைவெளி தீர்ப்பார் எனநினைந்தே சிவகுரு நாதத் திருவே உயர்தமிழ்த் தேசிகனே. புவிவிடுத் தேகிய போழ்திலும் உள்ளம் பதிந்தவன்நீ நவின்றிடில் நின்பிரி வாலெம் நிலையுமே நிற்கதியாம் கவிந்ததோ கார்முகில் கற்றவர் நெஞ்சுள் கதியிதுவோ சிவகுரு நாதத் திருவே உயர்தமிழ்த் தேசிகனே.
கவியாக்கம் ஜின்னாஹர் ஷரிபுத்தீன் (துணைத்தலைவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்) 09.08.2003
‘ஓலை’ - 19 ( ஓகஸ்ட் 2003) Ú53á 20

தினகரன் முன்னாள் ஆசிரியர் சிவகுருநாதனின் மறைவையொட்டிய ஈழவேந்தனின் இரங்கள்செய்தி
தி ரு.சிவகுருநாதன் அவர்களின் இளமை வாழ்வு எமது இல்லத்திற்கு அண்மையிலுள்ள சாமியார் வீதி கொழும்புத் துறையில் அமைந்திருந்தது. எம் இருவருக்கும் ஏறக்குறைய ஒரே வயது. என்னை விட ஒரு வயது மூத்தவர் அவர். நாம் இருவரும் யாழ் தூயயோவான் கல்லூரியில் ஒன்றாகக் கல்வி பயின்றவர்கள். "என்னை எனக்கு அறிவித்த எங்கள் குருநாதன் யோக சுவாமி அவர்களுக்கு நாம் இருவரும் அடியவர்களாக விளங்கினோம். எனினும் நான் பெற்ற பேறு 1964 வரை யோக சுவாமிகள் மறையும் வரை அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சிவகுருநாதன் அவர்கள் பின் இடம் பெயர்ந்ததினால் அவ்வாய்ப்பு அவருக்குக் கிட்டவில்லை. எனினும் என்னை மிஞ்சிய பாடும் குரல் வளம் இவர் பெற்றிருந்ததினால் யோக சுவாமி முன்னிலையில் பண்ணோடு பல பாடல்கள் இவர் பாடிய நிகழ்ச்சிகள் என் நினைவலைகளில் மோதுகின்றன. எனினும் சிலவேளைகளில் சிவபுராணத்தை பாடும் வாய்ப்பினை எனக்குத் தந்து பெருமை சேர்த்தார். அத்தோடு தமிழ், ஆங்கிலம், மெய்யியல் அறிவை எனக்கு ஊட்டியதோடு அங்கு வருகை தந்த அறிவுமிக்க அடியார்களைக் கொண்டு எனக்குப் பாடல்களை நடாத்தினார்.
இவற்றையெல்லாம் நினைவுகொண்டு தான் யோகசுவாமிகள் 1964ல் மே மாதம் மறைந்த போது என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு என் இரங்கல் செய்தியை 'தினகரனில்' தலைப்புச் செய்தியாக வெளியிட்டு எனக்கு பெருமை சேர்த்த நிகழ்ச்சியை நான் மறைப்பதற்கில்லை "காக்கும் என் காவலன் காண்பதரிய பேரொளி" இன்று எம்மிடையே இல்லை என்று செய்தி வெளியிட்டதாகவும் இருக்கிறது.
தினகரனில் நீண்டகாலமாக ஆசிரியராக விளங்கிய அவர் நான் எழுதிய பல அரசியல், இலக்கியக் கட்டுரைகளை வெளியிட்டு எனக்குப் பெருமை வழங்கியதோடு அவரின் தமிழ்ப்பற்றையும் எடுத்துக்காட்டினார். அவரோ ஏரிக்கரை தினகரன் செய்தி இதழின் தலைமை ஆசிரியராக
u jad) 21 ‘ஓலை’ - 19 ஓகஸ்ட் 2003)

Page 13
விளங்கியதனால் அவரோடு என் கருத்துக்கள் அடிக்கடி மோதும். மோதுகின்ற போது எம் வாதங்களில் சூடு பிறக்கும். பின்பு அவர் தரும் குளிர்பானம் எம் இருவரிடையே தோன்றிய சூட்டினைத் தணிக்கும்.
கொழும்புத் தமிழ்சங்கத்தின் தலைவராக நீண்ட காலம் விளங்கிய இவர் தான் பேசிய நிகழ்ச்சிகளில் நான் வெளியிட்ட நூல்களுக்கும் தலைமை தாங்கி மனம் திறந்து என்னை வாழ்த்தியவர். 2000 ஆண்டு திசெம்பர் நான் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவரைக் கண்டு உரையாடியபோது பலர் என்னோடு பேச அஞ்சியவேளையில் நான் நாடு கடத்தப்பட்ட நிகழ்ச்சிப் பின்னணியை ஒளிவுமறைவின்றி இம்மக்களுக்கு எடுத்துரையுங்கள் என்று வெளிப்படையாகக் கூறி அதிர்ச்சி வைத்தியம் செய்த அவர் துணிவை நான் பாராட்டாது விடின் நான் நன்றி கொன்றவனாகக் கருதப்படுவேன். எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு" என்ற வள்ளுவர் வாய்மொழியை நான் எவ்வாறு மறக்கமுடியும்.
நான் நாடு கடத்தப்பட்ட நிலையில் சிலகாலம் நான் கொழும்பிலேயே தங்கியிருந்தேன். அப்பொழுது கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அத்தோடு நான் வெளியிட்ட இருநூல்கள் இவர் தலைமையில் வெளிவந்தன. "செல்லரித்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு புதுவாழ்வு கொடுத்த g560örLifypg, g5IT (SuDigbj6OTITi"6T6im Birgilb "Sir Ponnambalam Ramanathan" - என்ற ஆங்கில நூலும் இவர் தலைமையில் வெளிவந்துள்ள நூல்களாகும். இவ்விரு நூல்களின் வெளியீட்டிலும் அவர் நெஞ்சைத் தொடும் முறையில் வாழ்த்திய வாழ்த்துரைகளை நாம் மறக்க நினைத்தாலும் மறக்க
முடியாது.
சுருங்கக் கூறின் அரசியல் மாறுபாடுகளிற்கப்பால் உள்ளம் ஒன்றிய நிலையில உறவு பூண முடியும் என்பதற்கு தலைசிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய ஒரு மூத்த செய்தி இதழ் ஆசிரியரை நாம் இழந்துவிட்டோம். இவ்இழப்பை எளிதில் நாம் ஈடுசெய்ய முடியாது.
இப்பெருமகனின் இன்னுயிர் இறையோடு கலந்து இன்புறுவென இறைஞ்சி நிற்கிறேன்.
80. புங்கங்குளம் வீதி மா.க.ஈழவேந்தன் கொழும்புத் துறை பொதுச்செயலாளர் யாழ்ப்பாணம் தமிழீழ விடுதலை அணி
‘ஓலை’ - 19 ( ஓகஸ்ட் 2003) (Uő4áő 22

சிவப் பொலிவு தேங்குடுந் சிவகுருநாதன்
சிவப்பொலிவு தேங்குஞ் சிவகுருநா தச்சீர் சிவத்துட னாயினையே தேரும் - நவத்திருவைக் கொண்டிலங்கு கின்றாய் கொழும்புத் தமிழ்ச்சங்கம் விண்டு புலம்புகின்ற தே.
திருநீற்றுப் பூச்சுத் திகழ்ந்தொளிரு நெற்றி தருகோலந் தற்பரனே தானாம் - உருவைநினைந் தொன்றிடச் செய் ஐய உனையென்று காணிபதினி நன்றோ வுனதுசெயல் தான்.
திண்ணியநெஞ் சத்துடனே சீரார் தினகரனுக் கெண்ணரிய கீர்த்தியினை எய்துவித்தாய் - விண்ணினிலின் றெந்த வெளியீட்டை ஏற்றங் கியக்குகிறாய் சுந்தர சோர்விலநீ சொல்.
எவர்க்கு மினியவனாய் என்றுமின்சொல் பேசும் சிவத்திருசேர் செய்யவுளச் செம்மல் - தவத்திருவாய்த் திங்களெனத்தேர் செவ்விச் சிவகுருநா தன்சேர்ந்தான் பொங்குமுளப் புண்ணியன்தாள் போற்று.
பொன்மனச் செல்வனெனப் போற்று முலகமுனை நின்நினைவே யில்லாது நீ வாழ்ந்தாய் - அன்பமைதிச் செந்திருவே ஐய சிவகுருநா தப்பெரியோய் எங்குன்னைக் காணர்போம் இனி
- பணிடிதர் சிஅப்புத்துரை
Uásó 23 ‘ஓலை’ - 19 ஒகுஸ்ட் 2003)

Page 14
மறைந்தும் மறையாதவர்
ஆ.இரகுபதி பாலறுரீதரன் (பொதுச்செயலாளர். கொழும்புத் தமிழ்ச்சங்கம்)
உயர்ந்த கம்பீரமான தோற்றம், எப்பொழுதுமே வெண்ணிற அல்லது மஞ்சள் நிற ஆடை, நெற்றியில் திருநீற்றுப்பூச்சும், சந்தனப் பொட்டும், முகத்தில் குறும்புச் சிரிப்பு, எந்நேரமும் காலிவீதியிலோ, உருத்திராமாவத்தையிலோ, வெள்ளவத்தை மூர் வீதியிலோ இன, சமய, சமூக வேறுபாடில்லாமல் யாரோடாவது உரையாடிக் கொண்டிருப்பார். அவர்தான், வாழும்வரை கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவரும், 'தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியரும், இலங்கை சட்டக் கல்லூரியின் சட்ட விரிவுரையாளரும், சட்டத்தரணியும், இலங்கை பல்கலைக்கழகம் கொழும்பு, இலங்கை பத்திரிகைச் சபை ஆகியவற்றின் பகுதிநேர விரிவுரையாளரும், கடன் இணக்க சபை அங்கத்தவரும், இலங்கை பத்திரிகை சபை முன்னாள் தலைவரும், கப்பித்தாவத்தை பிள்ளை. யார் கோவில், முகத்துவாரம் இந்துக் கோவில்களின் தர்மகர்த்தாவும், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பிரசுர வெளியீட்டுக் குழுக்களுக்கான முன்னாள் தலைவரும், இலங்கை கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியக் குழுவின் முன்னாள் தலைவருமான கலாசூரி-இரத்தினதுரை சிவகுருநாதன் அவர்கள்!
இத்தனை துறைகளையும் என்னவென்று செயற்படுத்தினார்?ஒரு புன்சிரிப்பு, ஒரு பகிடி, ஒரு பழமொழி, ஒரு திருக்குறள், ஒரு பழைய சினிமாப்பாடல், ஒரு பட்டினத்தார் பாடல், அவ்வளவுதான் அனைத்து விடயங்களும் வெற்றிகரமாக முடிந்துவிடும்! இதுதான் சிவகுருநாதன் ஐயாவின் சிறப்பு!
ஏறத்தாள முப்பத்து நான்கு ஆண்டுகள் ஒரு புகழ்பெற்ற பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்துதமிழ், முஸ்லிம் எழுத்தாளர்களை வளர்த்தெடுத்த பெருமை அன்னாருக்கு!
இது ஒரு ஈடிணையற்ற சாதனை ஆட்சிகள் மாறிய போதும் அமரர் சிவகுருநாதன்தான் பிரதம ஆசிரியர்! இன்று வெளிவரும் அனுதாபச் செய்திகள், இரங்கல்க் கூட்டங்கள் அன்னாரின் பெருமை பகரும்.!
புகழ்பெற்ற தமிழ்ச்சட்டத்தரணியாகத் திகழ்ந்த இவர் சட்டக்கல்லூரியின் தமிழ் விரிவுரையாளராக அருமையான தொண்டு புரிந்தார். அவர் புரிந்த பணி அன்னாரது இறுதிக்கிரிகைகளில் கலந்து கொண்ட எண்ணிறைந்த சட்டத்தரணி.
‘ஓலை’ - 19 ( ஓகஸ்ட் 2003) பக்கம் 24

களையும், இன்றைய சட்டக்கல்லூரி மாணவர்களையும் கண்டு புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
அமரர் இ.சிவகுருநாதன் ஒரு M.A. பட்டதாரி என்பது பலருக்குத் தெரியாது. அதுபோலவே அன்னார் மிக அருமையாகப் பாடுவார் என்பதும் ஒரு சிலருக்கே தெரியும். ஒரு இனிமையான அதே நேரத்தில் என்மனதை விட்டு நீங்காத ஒரு நிகழ்வை மட்டும் உங்களுடன் பகிர்ந்து விட்டு இச்சிறு கட்டுரையை அமரரின் நினைவாகச் சமர்ப்பிக்கின்றேன்.
ஏறத்தாள ஒரு வருடத்திற்கு முன்பு கொழும்புத் தமிழ்ச்சங்கநிகழ்வொன். றிக்காக திருகோணமலை சென்றிருந்தோம். தலைவர் சிவகுருநாதன் பேராசிரியர் சோ.சந்திரசேகரன், பேராசிரியர் எம்.ஏ.நுஹற்மான், கல்லூரி அதிபரும் எமது சங்கத்தின்நிதிச்செயலாளருமான தி.கணேசராஜா போன்ற புத்திஜீவிகளுடன் பொதுச்செயலாளர் என்றரீதியில் நானும் சென்றேன்.
என்ன இனிமையான அனுபவம்! திரு.சிவகுருநாதனும் பேராசிரியர் சந்திரசேகரனும் பழைய சினிமாப்பாடல்களைப் பாடி ஒரு கலக்கு கலக்கி விட்டார்கள. (வயது சென்றவர்கள் பழையபாடல்கள்தானே பாடுவார்கள்என்பது வேறுவிடயம்) எனக்கோ பாடவராது. ஆனால் அனைத்து பழைய பாடல்களும் அத்துப்படி! கணேசராஜாவும் அப்படித்தான். அப்பொழுது ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. "பழைய சினிமாப்பாடல்கள்" என்றநிகழ்வொன்றை கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் ஏற்பாடு செய்வதென்றும், அந்நிகழ்வில் தலைவர் சிவகுருநாதன், பேராசிரியர் சந்திரசேகரன் உட்பட இன்னும் சிலர் பாடுவதாகவும், என்னை தொகுத்து வழங்கச் சொல்லித் தலைவர் கேட்டுக் கொண்டார்,நானும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன்.
சில மாதங்கள் கடந்தன. தலைவர் சுகவீனமுற்றார். "அப்பலோ"வில் அனுமதிக்கப்பட்டார். எனக்கோ அதிர்ச்சி, அவரைப்பார்க்கச் சென்றேன்.-அங்கு பலர் வந்திருந்தனர். நான் சற்று எட்ட நின்றேன். என்னைக் கண்ணுற்ற அவர் "இரகு" என அழைத்து அருகில் வரும்படி கை காட்டினார். நான் அவர் அருகில் சென்று அவரது சுகம் பற்றி விசாரிக்குமுன் அவர், "இரகு அந்தப் பழைய சினிமாப் பாடல் நிகழ்ச்சி செய்து போட்டீரா?" என்று கேட்டார். நான் சொன்னேன் "ஐயா நீங்கள் இல்லாமலா?" என்றேன். ஐயா உடனே "நான் வெகு விரைவில் சுகமாகி வந்துவிடுவேன்! அந்தநிகழ்வை வெகு சிறப்பாகச் செய்வோம்.நான்குறைந்தது இரண்டு பழைய பாடல்களாவது பாடவேண்டும். நிகழ்ச்சி முழுச் செலவும் எனது" என்று கூறினார். ஆனால் நடந்தது என்ன? எனது உள்ளமும் கண்களும் பனிக்கின்றன! ஐயாவுக்கு மிகவும் பிடித்த பாடல்கள்,
"துன்பம் நேர்கையில் யாழெடுத்துநீ இன்பம் சேர்க்க மாட்டாயா?" "ஒளி படைத்த கண்ணினாய்வா! வா! வா!"
I YY
U53á 25 ‘ஓலை’ - 19 ஓகஸ்ட் 2003)

Page 15
இலக்கிய வாழ்வில் இடறிய சம்பவங்கள்
கலாபூஷணம்.ஏ.இக்பால்
இன்று வரை நான் எழுதிய பத்து நூல்களில் நான்காவது நூல் "பாக்கிர் மார்க்கார்" அதை எழுதி முடித்த கதை பெரிது. தேர்தலிலோ, அவர் சார்ந்த கட்சியிலோ பாக்கிர் மார்க்காரை ஆதரிக்காத நான், சமூகநிலை நோக்கி அவர்பற்றிய இலக்கியத்தரம் வாய்ந்த நூலொன்றை எழுதிவிட்டேன். இந்நூலில் இலக்கியம் மட்டுமல்ல, விமர்சனம், உண்மைக்கதை மூன்றும் நிறைந்துள்ளன. மூன்றையும் முற்று முழுதாக ஒதுக்கிவிட முடியாது. எப்படியோ ஒன்றை ஒதுக்கும் போது, இரண்டு மிஞ்சும், இரண்டையும் ஒதுக்கும் போது ஒன்றாவது மிஞ்சும்.
"பாக்கிர்மார்க்கார்" நூல் வெளியீட்டை 1990 ஜூலை 13இல் நடத்துவதாகத் துணிந்துவிட்டோம். அழுத்கம ஆசிரிய கலாசாலை மஷஹசர் மண்டபத்தில் பிரமாண்டமாக நடத்த உத்தேசிக்கப்பட்டுவிட்டது.
கல்வி உயர்கல்வி அமைச்சராக அப்போதிருந்த லலித் அத்துல முதலி அவர்களைப் பிரதம அதிதியாக எடுப்பதெனவும், தலைமை, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.பாயிஸ் முஸ்தபா அவர்களே வகிக்க வேண்டுமெனவும், கெளரவ அதிதியாக எதிர்க்கட்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன அவர்களை அழைப்பதெனவும், பேச்சாளர்களில் ஒருவராக தினகரன் பிரதம ஆசிரியர் ஆர்.சிவகுருநாதன் அவர்களை அழைப்பதெனவும் இன்றைய மந்திரி இம்தியாஸ் பாக்கிர் மார்க்கார் அவர்கள் தீர்மானித்தார்கள். நூல் ஆய்வுக்கு எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களை எடுப்பதெனவும், இந்நூலை அர்ப்பணம் செய்துள்ள எம்.ஐ.உதுமாலெவ்வையைப் பேச்சாளர்களாக அழைப்பதாகவும் நான் தீர்மானித்துக் கொண்டேன்.
அப்பிரமாண்டமான விழாவின் பேச்சாளர் ஆர்.சிவகுருநாதன்பற்றி எனக்கு மிக மதிப்பிருந்த போதிலும், ஹாஸ்யமாக எதையாவது அள்ளிவைத்துவிடுவாரோ என்ற பயம்நிறைய இருந்தது. 1982இல் ஹோட்டல் தப்ரபேனில்நடந்த எஸ்.முத்துமீரானின் "உருவகக் கதைகள்" வெளியீட்டில் அவர் கதைத்த கதை மேலெழுந்தது. "முத்துமீரான் நல்ல மனிதன். ஊரிலிருந்து வந்து, என்னை லேக்ஹவுஸில் சந்திக்கும் போது, தயிர்ப்பானைகளுடனே வந்திறங்குவார்" என்ற இந்த வசனம் உண்மைதான். ஆனால், மற்றவர்கள் இது பற்றி என்ன நினைப்பார்கள் என்பது மிக முக்கியமானது. 1986களில் "றன்முத்து" ஹோட்டலில் "அவள் நெஞ்சுக்குத் தெரியுமா?" எஸ்.ஐ.நாகூர்க்கனியின் நாவல்
6.
ஓலை’ - 19 ( ஓகஸ்ட் 2003) பக்கம் 26
 

வெளியீட்டின் போது,அந்நூலின் அட்டை பற்றிய பேச்சில் "எஸ்.ஐ.நாகூர்க்கனி 'ஸவுண்டர்ஸ் பிளேஸை"அண்மி வாழுகிறார், சோப் பெக்டறிநிறைந்த இடமது. புத்தகத்தின் அட்டையும் சோப்கவர் போல்தானுள்ளது. வாழைத்தோட்டத்துக்கு இவர் ஒரு எஸ்.ஐ.தான்" என்று பேசினார். இப்படி ஏதாவது அள்ளி வைப்பாரோ என்பதே எனக்கேற்பட்ட பயத்துக்குக் காரணமெனலாம்.
நான் முதல் முதல் சிவகுருநாதனைச் சந்தித்த போது, அவர் என்னிடம் கேட்டது "புளுஸபயர் மாணிக்கக் கல்" ஒன்றுதான். அதற்குக் காரணம் நான், வேர்வலையை அண்டியதர்காநகரில் இருப்பதுதான். கேட்டபடி நான் கொடுத்து இருக்கின்றேன். இறப்பதற்கு ஒரு வருடத்துக்குள் ஒரு பச்சைநிறக்கல் கேட்டார். "பெரிடொட்" எனும் பச்சைக்கல் பட்டை தீட்டி மூன்று கரட் கொடுத்தேன். அவர் பணம் தர எவ்வளவோ முயற்சித்தார்.நான்வாங்கவேயில்லை. சந்திக்கும்போது, அடிக்கடி அதைப்பற்றிக் கூறுவார். முன்பிருந்த தொடர்புகளைக் கூட்டத்தில் மேடையில் கூறிவிடுவாரோ என்ற அச்சம் எனக்கிருந்தது.
ஒருமுறை லேக்ஹவுஸில் அவரது காரியாலயத்தில் சந்திக்கும் போது, நாளைய 'தினகரனு"க்குரிய தலையங்கப் பொருளைக் கூறி "ஒருதலையங்கம் எழுது" என்று என்னைக் கேட்டார்.நான் எழுதிக் கொடுத்தேன். "இவ்விதம் அவர் சொல்வதென்றால் மிக விருப்பமான நம்பிக்கைக்குரியவரிடம் தான் சொல்லுவாராம்" என்றுமற்றவர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். உண்மையில் விடயம் அப்படியல்ல. அவருக்குப்பிடித்தமானவருக்கு இயல்பாக எழுத முடியுமா?என்பதை அறிவதற்கே அப்படிச் செய்வதென பின்பொருமுறை அவர் சொல்லவே கேட்டிருக்கின்றேன்.
திரு.அ.அமிர்தலிங்கம் எம்பி, எதிர்க்கட்சியிலிருக்கும் போது, உலகம் சுற்றினார். ஒருமுறை நானும் எம்.எஸ்.எம்.இக்பாலும் சிவகுருநாதனைச் சந்திக்க இராமகிருஷ்ண வீதிக்குச் சென்றோம். வீட்டில் அவரில்லை. இராமகிருஷ்ண மண்டபத்தில் அமிர்தலிங்கம் அவர்களின் கூட்டமொன்று நடந்தது. எனக்கு அங்கே செல்ல அதிக விருப்பம். ஏனென்றால், மட்டக்களப்புப் பகுதியினருக்கு அமிர்தலிங்கத்தின் பேச்சைக் கேட்பதில் அதிக விருப்பம். ஆனால், யாழ்ப்பாணப் பகுதியினருக்கு செ.இராஜதுரை எம்பியின் பேச்சைக் கேட்பதில் அதிக விருப்பம். அந்த நாட்டத்தில்தான் அங்கே சென்றோம். இ.சிவகுருநாதன் அவர்கள் அங்கேயிருந்தார். கூட்டம் முடிந்ததும் சந்தித்தோம். அந்நேரம் அமிர்தலிங்கம் அவர்களைக் கூட்டத்திலிருந்த அநேகர் சந்தித்தனர். சந்தித்தவர்களிடம் அவர்களது பிள்ளைகளைச் சந்தித்த சங்கதியையும் அவர்கள் அந்நாட்டில் சுகமாக இருப்பதையும் கூறிக் கொண்டிருந்தார். அச்சமயம் எம்.எஸ்.எம். இக்பால் அமிர்தலிங்கம் அவர்களை அணுகி, "உங்கள் கட்சியில் முஸ்லிம்கள் பற்றிய அரசியல் அணைப்பு பற்றி இருப்பவைகள் எவை?" என்று கேட்டார். அவரோ, "இதுபற்றி எனக்கு இப்போது கூறமுடியாது, எழுத்தில் எழுதியனுப்புங்கள் விரிவாகப் பதில் தருகிறேன்" என்றார். எம்.எஸ்.எம். "எனக்கதற்கு நேரமில்லை, இருந்தால், சுருக்கமாகச் சொல்லுங்கள்" என்றார். அருகில்நின்ற சிவகுருநாதன்,
Uśøó 27 ‘ஓலை’ - 19 ஒகுஸ்ட் 2003)

Page 16
"இக்பால், அவர்களிடம்நீகேட்பதுபற்றி ஒன்றுமில்லை. வாபோவோம்" என்றார். இவ்விதம் மனத்திலிருப்பதை உறைப்பாகவும், சிரிப்பாகவும் கூறும் வல்லமை வேறுயாருக்கும் இல்லை. எனவே, எனது புத்தக வெளியீட்டுக்குப்புத்தகம் பற்றிப் பேச வந்த சிவகுருநாதனுக்குச் சொன்னேன், "இன்றைய கூட்டத்தில் உங்கள் பேச்சு புத்தகம் பற்றி மிக 'ஸிரியஸாக இருக்க வேண்டும். சிலேடையாகவோ, மற்றவர்கள் பிழையாக நினைக்கக் கூடியதாகவோ இருந்தால், உங்களைக் கொழும்புக்கு போகாமல் கடத்தி விடுவேன்" என்று சிரித்துச் சிரித்துச் சொல்லிவிட்டேன். பேச்சு மிக அற்புதம், உயர்வும் இலக்கியச் சிறப்பும் உடையதாயிருந்தது. நான் நினைத்துக் கொண்டேன். நான் கூறியதாலேயே இவரது பேச்சு இப்படியாயிற்று என்று. உண்மையில் அவர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காருடன் மிகவும் அன்புடையவர். அதனால்தான் அப்படி மிக ஆழமாகப் பேசினார்.
கூட்டம் முடிந்த கையுடன் "என்னைக் கொழும்புக்கு உடனே அனுப்பிவிட வேண்டு"மென்றார். இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ஒரு ஜிப்பில் சிவகுருநாதன் அவர்களை ஏற்றினார். நான் அப்போது அவருக்கு நன்றி சொன்னேன். "டேய்! இக்பால் என்னை நீபயங்காட்டினாய்என்ன?" என்று அவரது இயல்பான சிரிப்புடன் கூறினார். இந்த மனிதனை எப்பொழுதும் மறந்துவிட முடியாது.
"இவர்கள் இப்பொழுதும் வாழ்கிறார்கள்" எனும் தலைப்பில் வாழ்க்கையில் தட்டுத்தடுமாறிய சிலரின் வரலாற்றுச் சம்பவங்களை "கீர்த்தி" எனும் புனை பெயரில் 'தினகரனில்' எழுதி வந்தேன். அன்றைய பிரபல்யம் வாய்ந்த ஒரு மந்திரியாரின் செயல்பற்றி எழுதினேன். அவர் திருகோணமலைப்புகையிரதத்திற்கு கோட்டைக்கு வந்தபோது அவரது சகோதரரும் தாயும் மூன்றாம் தரப் பெட்டி வந்துநிற்குமிடத்தில் நின்றிருக்கிறார்கள். மந்திரியார் தாய் சகோதர. னுடன் கதைத்து விட்டு, எந்தவிதச் சலனமுமின்றி அவரது முதலாம் தரப் பெட்டியை நோக்கிச்சென்றுவிட்டார். சகோதரனுக்கு பெருங்கவலை. எனனைத் தான் விடலாம். நோயாயுள்ள தாயை அவரது முதலாம் தரப் பெட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கலாம் என அங்கலாய்த்தார். மந்திரியார் அப்படிச் செய்ததற்குக் காரணம்: அவரது பெட்டியில் ஒரு பெண் - வைப்பாட்டி இருந்திருக்கிறாள். பின்பு அதைச் சகோதரன் பிரயாணத்தின் போது அறிந்துவிட்டான்.
இச்சம்பவத்தை மந்திரியார் என்றில்லாமல், ஒரு சமூக சேவை மனிதர் செய்ததாகச் சுவாரசியமாக எழுதிவிட்டேன். எப்படியோ மந்திரியார் மோப்பம் பிடித்துத் தன்னைத்தான் எழுதியுள்ளதென்பதை அறிந்து தினகரன் ஆசிரியர் சிவகுருநாதனை அண்மியிருக்கிறார். கீர்த்தி என்பவர் யார்? என்பதை அறிய அதிகப் பிரயத்தனம் செய்துள்ளார். கடைசி வரை சிவகுருநாதன் அதைத் தெரிவிக்கவேயில்லை. இந்தப் பியூச்சரை"நிறுத்துகிறேன். ஆனால் பத்திரிகா தர்மப்படி எழுதியவரைக் கூறமாட்டேன்' எனக் கூறி பியூச்சரை நிறுத்திவிட்டார். பத்திரிகா தர்மத்தை முழுமூச்சாய்பேணியதில் சிவகுருநாதனை முதல்வரெனக் dist6 ITLD.
‘ஓலை’ - 19 ( ஓகஸ்ட் 2003) பக்தம் 28

அவரிறந்த செய்தி ஒகஸ்ட் 9 காலையில் ஊடகங்களிலெல்லாம் ஒலித்தது. சனிக்கிழமை காலை உடனே ஒர் அனுதாபக் கவிதை பிறந்தது. அதை உடனே எழுதி, காலை 9.30 மணிக்கு தினகரன் ஆசிரியர் பார்வைக்கு பெக்ஸ்செய்தேன். இன்றுவரை அது பிரசுரமாகவேயில்லை. அக்கவிதை இதோ:
நீ இறக்கவில்லை!
எந்தவொரு சலனமும் எழுந்திடா வண்ணம் ஏற்புடனே தினகரனை ஆட்சி செய்த மன்னன் பந்தமுடன் இலக்கியத்தைப் படித்துணர்ந்ததாலே பழுதறவே ஆளுதற்குச் சட்டங்கள் கற்றார்!
பத்திரிகை இயலுக்குப் பாத்திரவா னாகும் பத்திரிகை வரலாற்றைப் பதித்துயர்ந்த வல்லோன் நித்தமவர் சித்தியுடைச் செய்திகளைப் பதித்து நிதமுமெங்கள் மனங்களிலே நிலைபெற்ற பெரியோன்!
தமிழ்ச்சங்கத் தலைவன் தமிழ்க் காவல் செய்வோன் தமிழ் தெரிந்த இனங்களையே தம்மினமாய்க் கொள்வோன் நமதுறவை நீக்காத நல்ல பெரும் மனிதன் நானிலத்தை நீத்தாலும் நம்மிடையே வாழ்வான்
ஒர் யுகத்தின் தமிழ்க் காவல் புரிந்ததினாலிங்கே ஓர்மையுடன் உனது புகழ் பாடிநிற்போம் நாங்கள் பேர்புகழும் உமையளித்த பெற்றோர்கள் பெருமை பெற்றிடுவர் மனைவிமக்கள் பெரும்பேறு பெறுவர்!
சிவகுருநாதன் எனும் சிறப்புமிகு நாமம் சிறந்த பெரும் சேவைகளுக்குரித்துடைய நாமம் நவயுலகும் நயக்கின்ற விகடமெலாம் கூறி நடக்கின்ற கூட்டத்தைச் சிரிக்க வைக்கும் தூயோன்!
இனிக்கு மிவை உம்முடைய சிறப்பம்சமாகும் இனியிவைகள் கேட்பதற்கு யிங்கு நீயில்லை என்றாலும் உனைநினைக்கும் செயல்களிங்கதிகம் எம்மிடத்தே நிறையவுண்டு நீ இறக்கவில்லை!
eS
பக்கம் 29 ‘ஓலை’ - 19 ஓகஸ்ட் 2003)

Page 17
இரங்கல் செய்திகள்
Accept Heartfelt condolence on the demise of Sivagurunathan president
09.08.2003 Anbumani, Thangeswari Batticaloa
சிவகுருநாதன் அவர்களது மரண துயரத்தில் பங்கு கொள்கிறேன். தமிழுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் இலக்கியவாதிகளுக்கும் அவர் ஆற்றிய தமிழ்ப்பணி மரணத்தை வென்று வாழும்.
Ouvi அன்புடீன் 09.08.2003
கலாசூரி சிவகுருநாதன் செய்திக்கு கண்ணிர் அஞ்சலி குடும்பத்தினருக்கும் சங்கத்தினருக்கும் கூறுங்கள்.
மட்டக்களப்பு கலாசூரி வெ. விநாயகமூர்த்தி
1208.2003
கணிணிர் அஞ்சலி அமரர் கலாசூரி சிவகுருநாதன் அன்பாலும் அறிவாலும் ஆற்றல் பெற்று பணிபாலும் பாசத்தாலும் பலர்மனதில் இடம்பிடித்து அடக்கமும் அமைதியும் அதிகம் கொண்ட எங்கள் தமிழ்ச்சங்கத்தின் மூத்த தலைவரே.
அறிஞராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் நிர்வாக உறுப்பினராகவும் தலைவராகவும் சேவை செய்து பெயர் பெற்ற சிவகுருநாதன்
அய்யா அவர்களே.
‘ஓலை’ - 19 ( ஓகஸ்ட் 2003) பக்தம் 30

தங்கள் மரணம் கேள்விப் பட்ட உடன் எனது மனமே மயங்கியது எனது கணிகளில் கணிணிர் வடிந்தது தங்களின் உருவம் எனது மனதில் நிலையாக நின்றது 40 ஆண்டுகள் தினகரன் ஆசிரியராகவும் இன்னும் பலஆண்டுகள் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் இன்னும் ஜனாதிபதி பிரதமர்கள் வசம் பல பரிசுகள் பெற்று கெளரவிக்கப்பட்டவரே.
தமிழ் மக்கள் வளர்ச்சிக்காகவும் தமிழ் மக்கள் கல்விக்காகவும் தமிழ் மக்கள் சாந்தம் சமாதானம் தமிழ்மக்கள் சமயவளர்ச்சி கடவுள் பக்தி ஆகிய நல்வழிகளோடு வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு வாழ வழி காட்டி அயராது உழைத்தவருமான எங்கள் தலைவர் சிவகுருநாதன் அய்யா அவர்களே உங்களின் மரணம் எமது சமுதாயத்திற்கு ஒருபேரிழப்பாகிவிட்டது. கலாசூரி சிவகுருநாதன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வதோடு
அன்னாரின் குடும்பத்தினர்க்கும் எங்கள் அனுதாபத்தையும் கவலையையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கொழும்புத் தமிழ்ச் சங்க உறுப்பினர் கோ.ஏ ழுமலை இல9, ஷார்லிமணிரோட்
வெள்ளவத்தை
கொழும்பு -08
Uá3á 31 ‘ஓலை’ - 19 ஓகஸ்ட் 2003)

Page 18
சிவகுருநாதன் ஐயா!
தலைநகர் தமிழ்ச் சங்கத்தை (த்)
தாங்கிய தகைமையோனே! நிலையிலா உலகை நீத்து
நிமலனின் அடியைச் சேர்ந்தாய்! விலையிலா தினது சேவை
விளம்புதல் அரிதே எங்கள் தலைவனாம் உனை இழந்து
க்கிறோம் தவிக்கிறோமே!
西
ஐயகோ உந்தன் ஆவி
அடங்கிற்றாம் என்று வந்த செய்தியைச் செவிகள் கேட்கச்
செய்த நாம் கொடுமை என்ன? செய்வது அறியோம்; சித்தம்
சிதறிடல் ஆகிப் போனோம்! பெய்யுதே விழிகள் நீரை
பெருகுதே கணர்ணிச் வெள்ளம்
நோயினில் நுடங்கித் தேகம்
நொஞ்சிய போதும் உந்தன் தாயினில் பற்றைப் போல
தமிழ்ச்சங்கம் மீது வைத்துப் போயினை ஐயா! தொண்டு
புரிந்தது போது மென்றா ஓய்வினை எடுத்துக் கொணர்டு
உயிரினைப் போக்கினாயோ?
சிவகுருநாதன் ஐயா!
சீர்பெறு தமிழ்ச்சங்கத்தை (ப்)
புவியினில் ஏற்றிவைக்கப்
புரிந்த நற்பணியும், எம்மை
"ஓலை’ - 19 ஒகண்ட் 2003) பக்கம் 32

அவையினில் முந்தி நிற்க
ஆற்றிய அரிய தொண்டும்
அவம் ஒரு போதும் போகா'
அவனியில் நிலைத்து நிற்கும்!
நகைச்சுவைப் பேச்சே உந்தன்
நாவினிஸ் நடனமாடும். பகைவரும் விரும்பும் நல்ல
பகிடி கள் சொல்வி என்றும் முகையவிழ் முல்லை போலும்
முறுவலை முகத்தில் பூக்கும் வகையினில் வாழ்ந்தாய் சென்று வானிலும் வாழ்வாய் நன்றே!
ஆக்கம் : செங்கதிரோன், கொழும்புத் தமிழ்ச்சங்கம். 09.08.23
型
தமிழ்நாடு ஜனார்த்தனன் வருகையின் து.
பக்கம் 33 ‘ஓலை’ - 19 ஒகார்ட் 2003)

Page 19
கீர்த்தனம்
(1) சந்ததம் நினைவோடே - மனத்தினில்
சந்ததம் நினைவோடே.
(2) செந்தமிழ் நாவலன் சிவகுருநாதன் - உயர்
அந்தமில் சிறப்பும் அனைத்தும் பொலிந்தோங்க
(3) சந்ததம் நினைவோடே - மனத்தினில்
சந்ததம் நினைவோடே
(4) அன்பும் அறவாழ்வும் ஆற்று தவமுறையும்
இன்ப நலவுரையும் எணர்னிஸ் குணநிறைவும் தன்புகழ் தானறியாத் தன்மைத் தகையாளணி மண்புகழார் எங்கள் சிகுருநாதன் மாநிலத்தே
(பாட்டுக்கொரு புலவன் பாரதியெடா என்ற மெட்டு)
(1) சிந்தைக் கினியன் சிவகுரு நாதனே படா
செந்தமிழ் செல்வன் எங்கள் செல்வமேயடா அந்தமில் கல்விகேள்வி ஆன்றவனே படா இந்த அவனி புகழ் பரவும் அன்பனே யடா
(2) சங்கம் வளர்க்க வந்த தலைவனேயடா
தமிழ் தழைக்க காத்து உதவினாண்டா
சைவம் வளர வழி தந்தவனடா
இந்த தமிழினம் வாழவழி காட்டினானடா
(3) தினகரன் பத்திரிகை காலிக்கவந்த ஆசிரியனடா தினமுமுன் ஆற்றல் கண்டுபோற்றினோமட நகைச்சுவைப் பேச்சைக் கேட்டு நயத்தோமடா தங்கள் ஆற்றல் கணர்டு வியந்தோமடா.
ஆக்கம் : சி.அமிர்தலிங்கம்
ஆட்சிக்குழு உறுப்பினர் தமிழ்ச்சங்கம்
"ஒல" - 19 ஒதரிப்ட் 2003) Uá8ú 34

எளிமை என்பதன் குறியீடு
சோ.தேவராஜா
தமிழர் சமுகத்தில் ஜனநாயக மனப்பாங்கு என்பது மருந்துக்கும் கிடைக்குமா என்பது வரவர அருகிப் செல்வதை அவதானிக்க முடிகிறது.
எதையும் முடிந்த முடிபாக திடமாக்கி வைத்து - மறுபேச்சின்றி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விழுமியங்களை காலதேச வர்த்தானங்களைக் கடந்து - விறைப்பாக அடிதொழுதேற்றும் ஆரோக்கியமற்ற சூழல் எங்கும் நிலவுவதைக் காணமுடியும்.
பழைமையில் ஊறிய பண்புசார் குணவியல்புகள் மனிதர்களின் ஆளுமையில் பாரிய தாக்கங்கள் செலுத்துவதனை பரக்கக் காணலாம். அத்தகைய பண்புகள் மீது கேள்வியெழும்போது அவர்களின் ஆளுமைப் பண்பின் ஆதிக்க விக்கிரகத்தின் சரிவை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாத அவலம் ஏற்பட்டு விடுகிறது.
ஒவ்வொரு மனிதரும் அவ்வச் சமுதாயத்தின் பிரசவிப்பேயாவர். சமுதாயத்திலிருந்து விலகி அதிமானுடராய் எவரும் உற்பளிக்க முடியாது. சமுதாயத்தின் தேவையே தலைவர்களை தீர்மானிக்கிறது.
தமிழர்களின் அரசியலில் பழைமைப் பண்புகள் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு தமிழர் கலை - இலக்கிய செல்நெறிகளைத் தீர்மானிப்பதில் அவற்றின் பாதிப்பு அதிகமில்லையெனலாம். நவீன உலதுசார் ஜனநாயகப் பண்பு என்பது கலை - இலக்கியத்தின் பழைமையான ஆதிக்க ஆர்ப்பாட்டங்களை மீறி தன்னைத் தக்கவைத்துள்ளது எனலாம்.
இலங்கையில் கலை - இலக்கிய எழுத்துத்துறையில் நவீன இலக்கி யத்தின் எழுச்சியும் - இழிசனர் வழக்கு என எள்ளல் செய்யப்பட்ட மக்களின் பிரதேசப் பண்பு சார் வழுந்தமிழகிய பேச்சு மொழிப்பயன் டாட்டுக்கான அங்கீகாரமும், பழத்திலக்கியத்தில் பாய்ச்சலை ஏற்படுத்தியமை தமிழர் சமுதாயத்தில் ஜனநாயக வரவைக் கட்டியம் கூறிநின்றன.
பக்ரீம் 35 "ஓலை" - 19 ஒகார்ட் 203)

Page 20
அரசியல் தலைமைத்துவ ஆதிக்கத்துக்குரிய பின்வரும் பத்து அம்சங்களில் சில- கலை இலக்கியத்துறையிலும் தலை காட்டத்தான் செய்தன.
1. மேற்குடிப் பிறப்பு.
2. பணபலம்.
பல்கலைக்கழகப்பட்டம் அல்லது சண்டியர் சகவாசம்.
3.
சிங்கள முஸ்லிம் விரோதமும் குரோதமும், உயர்மத மேலாண்மை. ஆடம்பர ஆதிக்க நடைமுறை. கண்களில் காணற்கரியராயிருத்தல்
தீர்க்கதரிசனம்' மட்டும் உரைத்தல்
ஆடம்பர வாகனப் பாவிப்பு
10. சிறப்புத் தோற்ற உடலழகுஇவ்வம்சங்கள் கூடியோ குறைந்தோ இருப்பினும் தமிழர்தம் சங்கங்களின் தலைமையைத் தீர்மானிப்பதில் முக்கியத்துவமுடையனவாகும்.
இத்தகைய தமிழர் சமூகப் பின்புலத்தில் காலமானவரான இ.சிவகுருநாதன் தினகரன்' பத்திரிகையாளரான வரலாறும் வாழ்வும் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக வந்த காலமும் கவனிப்புக்குரியனவாகும்.
வடக்கு - கிழக்கில் தமிழ் பேசும் மக்களிடையே ஏற்பட்ட இன ஒடுக்கலும் இடப்பெயர்வும் புலப்பெயர்வும் அகதிவாழ்வும் கொழும்பில் தமிழர்கள் பட்டதுயர்களிலும் இருந்து மீண்டு நிதானத்துடன் அமைதிதேடி கூடிக் குலவும் மையமாக கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஜனநாயகப்படுத்தப்பட்டமைக்கு தலைவர் இ.சிவகுருநாதன் அவர்களின் ஆளுமை பண்பு பெரும் பங்களித்ததெனலாம்.
ஈழத்துப் பத்திரிகைத் துறையில் கலாநிதி க.கைலாசபதி ஆழப் பதித்த சுவட்டினை அடியொற்றி ஈழத் தமிழிலக்கியப் பரப்பினை அகலப்படுத்த முயற்சித்தவர்களுள் ஒருவர் சிவகுருநாதனாவார். குறிப்பாக முஸ்லிம் எழுத்தாளர்களின் தளமாக தினகரனை முக்கியப்படுத்திய பரந்த மனப்பாங்குடையவராயிருந்தார்.
பல்லினத் தேசியப் பண்பாட்டில் யாவர்க்கும் இனியவராக இலங்கையில் எல்லோருக்கும் அறிமுகமானவராக வாழ்ந்தார் சிவகுருநாதன். ஆரம்ப
‘ஓலை’ - 19 ( ஓகஸ்ட் 2003) பக்கம் 36

காலக் கல்விப்புலமும், பல்கலைக்கழக வாழ்வும் இவரது ஜனநாயகப் பண்புக்கு ஆழ அத்திவாரமிட்டன எனலாம்
தலைவர் சிவகுருநாதன் இத்தகு ஆளுமைப் பண்புகளுடன் விளங்குவதற்கு மிக முக்கியமான காரணம் அவர் காட்சிக்கெளியராக வாழ்ந்தமையாகும். அவரின் வாழ்வின் இறுதி அத்தியாயங்களில் இன்ப நல நாட்டம் என்பது தமிழ்ச்சங்க கலை - இலக்கியக் கூட்டங்களிலும் இலக்கிய விவாதங்களிலும் உள-உடல் ஆரோக்கியம் பற்றிய அறிவியல் அரங்குகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தமையிலேயே உள்ளதெனலாம்.
எந்தவொரு விடயத்திலும் தீர்மானத்திலும் தளரா உறுதியும் நேர்மையும் நம்பிக்கையும் கொண்டவராய் விளங்கியவர்.
எளிமை இனிமை நேர்மை - எதற்கும்
தெளிவாய் துணிவாய் நிற்றல்
பணிவு அன்பு அமைதி - பிழைக்குப்
பணிய மறுக்கும் தகுதி - என வாழ்ந்து எமக்கு உற்சாகமும் உறுதுணையுமாக இருந்து மகிழ்வூட்டியவர் சிவகுருநாதனாவார்.
கணிடவுடன் கதைப்பதும்
கடையில் தேநீர் குடிப்பதும்
வாழ்வு எப்படிப் போகுதென
வியளங்கள் பேசிக்களிப்பதும்
அயலட்டை உறவை மதிப்பதும் - பிறர்
உறவைப் பேசிக் குதுகலிப்பதும்
அன்பளிப்புப் பொருட்கள் கொடுப்பதும்
அளவளாவி ஆசையில் திளைப்பதும்
தமிழ்விழா எடுப்பதில் மகிழ்வதும்
நாடகம் ஆடுவம் நாமிங்கே
அனைவரும் கூடுவோம்
ஒன்றாயெங்கும் என்றாசுவாசப்படுத்துவார் எவர் இனி
என்று வாழ்ந்த காட்சிக்கெளியர் - தலைவர் சிவகுருநாதன் காலம் நாம் கண்ட தமிழ் வரலாறாயிற்று!
ஆய்வுப்பொருளாய் அமைந்த சிவகுருநாதன் வாழ்வையும் வளத்தையும் நாம் பாடிப் பரவுவோம்.
UőSaó 37 ‘ஓலை’ - 19 ஓகஸ்ட் 2003)

Page 21
மலேசிய எழுத்தாளர் பீர் முகம்மது அவர்களின் வருகையின் போது.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் நடைபெற்ற கல்ஹின்னை தமிழ் மன்றத்தின் நூறாவது நூல் வெளியீட்டு விழாவின் போது.
- 19 ( ஒலிப்ட் 2003) பரிசும் 38
 
 

雷
அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்திருந்த ஈழத்தின் பிரபல முத்த எழுத்தாளர் கவிஞர் அம்பி (அம்பிகைபாகன்) அவர்கள் "அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த தமிழர் நிலை" எனும் தலைப்பில் உரைநிகழ்த்தினார். நிகழ்விற்குச் சங்கத் துணைத்தலைவர் திரு.த.இராஜரட்னம் அவர்கள் தலைமை வகித்தார்
நால்நயம் காண்போம். 5ெ.05.2000இல் ஆரம்பித்து பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.30மணிக்கு நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் இலங்கை எழுத்தாளர்களது நூல்கள் நயம் காணலுக்காக எடுத்தாளப்படுகின்றன. -
திகதி நூலின் பெயர் நூலாசிரியர் நயம் கண்டனர்
| 8.[)?.2ዕ]ሀ3 தேசத்தின் եl ItalT (513 51/ முருகேசு ரவீந்திரன்
III) LIITI-իլ 1ւյթեll ճllԵIThireji {இலங்கை ஒலிபரப்புக்
சட்டுத்தாபனம்}
Jế3ửi 39 "ஒலி" - 19 ஓகஸ்ட் 2003)

Page 22
பேருரைத் தொடர் - இலங்கைத் தமிழர் வரலாறும்
சாசனங்களும்
கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் "இலங்கைத் தமிழர் வாழ்வும் வகிபாகமும்" என்ற தலைப்பிலான பேருரைத் தொடரின் ஏழாவது உரையாக இலங்கைத் தமிழர் வரலாறும் சாசனங்களும் என்ற பொருளில் பேராசிரியர் சி.பத்மநாதன் (வரலாற்றுத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்) உரையாற்றினார். இந்நிகழ்வு சங்கத்துணைத்தலைவர் திரு.த.இராஜரட்னம் அவர்களின் தலைமையில் 04.07.2003 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு (இரண்டாவது அமர்வு) பேராசிரியர் சோ.சந்திரசேகரம் (சங்கத் துணைக்காப்பாளர்) அவர்களின் அறிமுக உரையுடனும், 11.07.2003 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு (மூன்றாவது அமர்வு) பேராசிரியர் விநித்தியானந்தன் (பொருளியல் பேராசிரியர், யாழ்.பல்கலைக்கழகம்) அவர்களின் அறிமுகவுரையுடனும் இரு தினங்கள் நடைபெற்றன. இப்பொருளிலான சொற்பொழிவின் முதலாவது அமர்வு 27.06.2003 அன்று நடைபெற்றது. அதன் தொடர்ச்சியே 4.07.2003, 11.07.2003 ஆகிய தினங்களில் நடைபெற்ற சொற்பொழிவுகளாகும்.
நிகழ்த்தியவர்
(2.07.203 அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த கவிஞர்,அம்பி
(213) தமிழர் நிலை (அம்பிகைபாகன்)
6.07.2003 தமிழகத்தில் இன்றைய தமிழ் டாக்டர் ஹிமானா (2Jef) இலக்கியத்தின் வளர்ச்சி சையத் தமிழ்நாடு)
23, ()7.2003 கலாபூஷணம்
ஈழத்தின் நாட்டுக்சுத்தின்
(215) பிரதியாக் h. மதிப்பீம்ே LJ/s 5IISIALi
பிரதியாக்கமும், மதிப்பீடும் தேவதாசன் B.A.
3().()7.2O)3 கண்ணகி என்ற கதாபாத்திரம் மட்டுவில்
(2ff) ... Lyri's
"ஓலை" - 19 ( ஓகஸ்ட் 2003) பதிகம் 40
 

சலரோக நோயாளர் பராமரிப்பு கலந்துரையால்
觀
觀
翡
Til agai
கொழும்புத் தமிழ்ச்சங்கக் கல்விக்குழுவின் ஏற்பாட்டில் .ெ07.03 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சங்கப் பொதுச் செயலாளர் திரு.ஆ.இரகுபதிபாலறிதரன் அவர்கள் தலைமையில் சலரோக நேபாளர் பராமரிப்பு சம்பந்தமான கலந்துரை. யாடல் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பின்வரும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
1 கலந்துரையாடலின் நோக்கம் --திருதசிவஞானரஞ்சன்
(கல்விக்குழுச் செயலாளர்) 2. பராமரிப்பில் உணவின் பங்கு - திருமதிரி.விநாயகமூர்த்தி
(உப அதிபர், தாதிகள் பயிற்சிக் கல்லூரி யாழ்ப்பாணம்) 3 சவரோகமும் ஏனைய தொற்றாத்
தன்மை நோய்களுக்கான தொடர்பும் - டாக்டர் எனப்.முரளி 4. நோயைக் கட்டுப்படுத்துவதில்
மன உளைச்சலைத் தவிர்ப்பதன் அவசியம்-திரு.காவைத்தீளப்வரன்
(உளவள ஆலோசகர்) சங்கத்துணைத்தலைவர் மு.கதிர்காமநாதன் அவர்கள் கருத்துரை கூறினார். டாக்டர்.எஸ்.முரளி அவர்களால் நோய் சம்பந்தமான இலவச பிரகரங்கள் வழங்கப்பட்டன.
பதிகம் 41 "ஒல" - 19 ஒகார்ட் 2003)

Page 23
சிறப்புச் சொற்பொழிவு - குறளும் உரைகளும்
09.07.2003 புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சங்கக் காப்பாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் தலைமையில் தமிழ்நாடு, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி அவர்களால் குறளும் உரைகளும் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் தஞ்சாவூர்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் க.பாஸ்கரன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
214வது அறிவோர் ஒன்றுகூடல் 16.07.2003 புதன்கிழமை மாலை 5.30 மணி
தமிழகத்தின் பிரபல புனைகதை எழுத்தாளரும், பேச்சாளருமான டாக்டர் ஓபிமான சையத் அவர்கள் தமிழகத்தில் இன்றைய தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி" எனும் தலைப்பில் உரையாற்றினார். சங்கத் துணைத்தலைவர் திரு.த.இராஜரட்னம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அறிமுக உரையை சங்கத் துணைத்தலைவர் டாக்டர் ஜின்னாஹற் ஷரிபுத்தின் நிகழ்த்தியதுடன் புரவலர் ஹாசிம் உமர் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
‘ஓலை’ - 19 ஒசாப்ட் 2003) பச்சும் 42
 

215வது அறிவோர் ஒன்றுகூடல் 23.07.2003 புதன்கிழமை மாலை 5.30 மணி
|ஈழத்தின் நாட்டுக் கூத்தின் பிரதியாக்கமும், மதிப்பீடும்" எனும் பொருளில் கலாபூஷணம் பாஷையூர் தேவதாசன் B.A.(2002ம் ஆண்டு வடகிழக்கு மாகாண ஆளுனர் விருது பெற்றவர்) அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்வுக்குச் சங்கத் துணைத்தலைவர் திரு.த.இராஜரட்னம் அவர்கள் தலைமை வகித்தார்.
மாத்தளை சோமுவின் சிட்னி முதல் நோர்வே வரை - நூல் அறிமுகமும் சிறப்புச் சொற்பொழிவும்
25.07.2003 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்குச் சங்கத் துணைத்தலைவர் திரு.த.இராஜரட்னம் அவர்களின் தலைமையில் மாத்தளை சோமுவின் சிட்னி முதல் நோர்வே வரை எனும் நூலின் நால் அறிமுகத்தினை வீரகேசரி ஆசிரியபிடத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கே.விஜயன் நிகழ்த்தினார். உலகளாவிய தமிழ்’ எனும் தலைப்பில் மாத்தளை சோமு அர்ைகள் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
புதிய சிறுவர் நூலகத் திறப்புவிழா கொழும்புத் தமிழ்ச் சங்க 贰 புதிய சிறுவர் நால கத் திறப்புவிழா 21.07.03 ஞாயி ற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு சங்கத் துணைத் தலைவர் டாக் டர் ஜின்னாஹய் ஷரிபுத்தீன்: அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பிரதம : விருந்தினர் பாம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி அதிபர் தி.த.முத்துக்குமாரசுவாமி அவர்கள் நூலகத்தைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக திரு.மு.தயாபரன் (சங்க அதிகாரி) அவர்கள் கலந்து கொண்டார்.
Jắ3ửi 43 "ஓலை' - 19 ஓகார்ட் 2003)

Page 24
வரவேற்புரையை சங்க : நூலகச் செயலாளர் திரு. 4.குமரன் அவர்களும், "சிறுவர் கதை நேரம்": எனும் நிகழ்வினை சங் 拂 கப் பொதுச்செயலாளர் :
ரீதரன் அவர்களும் நிகழ்த்தின f.
20வது மாதாந்த தமிழிசை நிகழ்ச்சி கொழும்புத் தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்பட்டு வரும் மாதாந்த தமிழிசை நிகழ்ச்சித் தொடரின் 20வது நிகழ்வு "வயலின் சோலோ" - 26.07.2003 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.டபிள்யூ.எஸ்.செந்தில்நாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பின்வரும் இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர்.
வயலின் - திருவிஎன்.பாலமுரளி மிருதங்கம் - திரு.பத்மவதன் கடம் - திரு.சக்திதரன் மோர்சிங் - திரு.கஜன்
ஒலை'-16 (மே 2003) வெளியீடு கொழும்புத் தமிழ்ச்சங்க மாதாந்த மடல் 'ஒலையின் 1வது இதழின் வெளியீடு 30.07.2003 அன்று நடைபெற்ற 21வது 'அறிவோர் ஒன்று கூடல் நிகழ்ச்சியின் போது சங்கத் துணைத்தலைவர் திரு.த.இராஜ ரட்சணம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முதற்பிரதியை சங்க நிதிச்செயலாளர் திரு.தி.கணேசராஜா அவர்கள் பெற்றுக் கொண்டார்.
சங்கப்பலகை தயாரிப்பு : சி.சரவணபவன் (ஆட்சிக்குழு உறுப்பினர்)
"ஓ'ை - 19 ஒத்ளிட் 2003) பக்கம் 44
 
 

ട}ഗ്ഗി~ * ঊষ\{2=
露 தமிழ்ச் சங்கத்தின் குரலாப் s
S.
தரணி எங்கும் ஒலிக்க ஒலை ஒயாமல் வர வளர எம் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் !
fÄlib tisijGl jlenauli
உருத்திரா மாவத்தை ീഖിബ്ത് R Bljna)GpELIdfl: 361381 寇

Page 25
வெள்ள
நித்தியகல்யாணி ந
அப்பழுக்க
பெல்ஜியம் சர்வதேச இரத்தினக் (International Gem உறுதிப்படுத்தப்பட்டு உத்தரவாதமளிக்கப்பட் பைகளில் மூடித்
ിബiണ്
நித்தியகல்ய
230, காலி வீதி,
தொலைபேசி :
萨
தொலை நக் மின்னஞ்சல் :
家
-5°.
 

வத்தை
கை மாளிகையில்
i) ഖ്വ
(Belgium)
கல்லியல் நிறுவனத்தினால்
mological Institute) - பரிசோதிக்கப்பட்டு
டு - மாற்றமுடியாதபடி
தாளிடப்பட்டது. வத்தை Teos eteltuas
கொழும்பு - 06. 密63392。362427
his 504933
Imithkall (slit.lk
2
ar
དབྱེ་