கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2004.04

Page 1
ിjui ' +
ஒலை 25 2 கொழும்புத் தமிழ்
திருவள்ளுவர் ஆண்டு : திபி 2035 ே
07032004 அன்று கொழும்புத் தமிழ் மகளிர்தின நிகழ்வில் திருமதி அபு சங்கத் துணைப் பொதுச் செயலாக
ஊடகவியலாளர் செல்வி சற்சொரூ
சமகாந்தன், எழுத்தாளர் அ
கொழும்புத் தமி 7, 57 வது ஒழுங்கை (உருத்திரா
தொலைபேசி :
வெப் முகவரி YA WA'Y', இணைய தபால் முகவரி : (ஆர்.
 
 
 
 

ழ்ச்சங்க மாதாந்த மாசிகை
மழம் (சித்திரை) 1 ஏப்ரல் 2004
* சங்கம் கொண்டாடிய சர்வதேச வனேஸ்வரி (கொழும்புத் தமிழ்ச் ார்) எழுத்தாளர் திருமதி.பத்மா
னினலட்சுமி இராஜதுரை:
பிழ்ச் சங்கம்
மாவத்தை , கொழும்பு - 05.
11-3637.59 colombo. tanils: Inga Il.org
Lu rek:.lk Signso : 25=

Page 2

இதயம் திறந்து.
இலங்கைத் தமிழ் நூல் பதிப்பாளர் ஒன்றியம் எனும் அமைப்பொன்று பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் ரீதர்சிங் தலைமை. யில் 14.03.2004 அன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சி தரும் செய்தியாகும். இலங்கையில் தமிழ் நூல் வெளியீட்டு முயற்சிகள் முடங்கிவிடுவதற்குக் காரணம் நூல் வெளியீட்டாளர்களுக்குச் சரியான சந்தைப்படுத்தல் வசதியின்மையேயாகும், அண்மைக் காலமாக அடிக்கடி இலங்கையில் தமிழ் நூல் வெளியீடுகள் நடைபெறுவது நல்ல அறிகுறி எனினும் தரமான நூல்களைத் தரக்கூடிய தனிநபர்களும், பதிப்பகங்களும் இச்சந்தைப்படுத்தல் பிரச்சினை காரணமாகச் சங்கடப்படுவதால் வெளியீட்டு முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதில் முட்டுக்கட்டைகள் எழாமல் இல்லை. இப்பிரச்சினைகளின் ஆழ அகலங்களை இனம் கண்டு அவற்றிற்குத் தீர்வுகாணுவதில் இந்த ஒன்றியம் நிறுவனரீதியாகச் செயற்படும் என நாம் எதிர்பார்க்கலாம்.
ஈழத்துத் தமிழ் நூல்கள் முழவதும் ஒரே இடத்தில் கிடைக்கச் செய்வதற்கும். அதற்கு முன்னோடியாக ஈழத்தில் வெளிவந்த தமிழ் நூல்களின் பெயர் விபரத்தொகுப்பொன்றை வெளியிடவும், ஈழத்துத் தமிழ் நூல்களின் விற்பனைக் கண்காட்சிகளை நாடளாவிய ரீதியில் ஆங்காங்கே நடாத்துவதற்கும். ஈழத்துத் தமிழ் நூல்களின் வாசகர் பரப்பினைக் கூட்டுவதற்கும், எழுத்தாளர்களை நூல் வெளியீட்டு முயற்சியில் அச்சமின்றி ஈடுபடவைப்பதற்கும் மொத்தத்தில் இலங்கையில் தமிழ்ப் புத்தகப்பணிபாட்டுப் புரட்சியை உருவாக்கவும் இவ்வமைப்பு நன்கு திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். எழுத்தாளர் - வெளியீட்டாளர் - வாசகர் ஆகிய முத்தரப்பு உறவைக் கட்டியெழுப்புதல் இதற்கு அவசியமானது. இந்த அமைப். பின் செயற்பாடுகளுக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஒத்தாசை வழங்கும். "ஓலை"யும் அதற்கு உறுதுணையாக விளங்கும் என்பது உறுதி
நன்றி. மீண்டும் மறுமடலில்,
- ஆசிரியர்
ஒலையில் வெளிவரும் ஆக்கங்களுக்கு ஆக்கியோரே பொறுப்பு
பக்கம் 1 "ஓனை' - ஜூ (, ஒரப்ரல் 2004)

Page 3
ஒன்பதாம் ஆண்டுத் தமிழ் பாடநூல் தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல்களுக்கான செயல் அமர்வில் 21.02.1996 களிலிருந்து இரு நாட்கள் மஹரகம தேசியக் கல்வி நிறுவனத்தில் நானும் கலந்து கொண்டேன். பேராசிரியர் நுஃமான் அவர்களும் அங்கே மேற்பார்வை யோசனைகளில் கலந்து கொண்டார்.
இடைவேளை நேரம் பேராசிரியர் எம்.எ.நு.மான் அவர்கள் என்னைச் சந்தித்து "1996க்குரிய கலாபூஷண விருது வழங்கும் தெரிவக்குழுவில் நானும் இருக்கின்றேன். முன்னைய விருதுகள் சிலவற்றை நீங்கள் விரும்பாததால் தங்களுக்களிக்கப்படவில்லை. இதனால், ஒரு தேக்கம் அங்கே ஏற்படுவதைக் குறிப்பிடுகிறார்கள். கலாபூஷண விருதைப் பெறவதற்குரிய உங்கள் சம்மதத்தை நான் பெறுவதாகக் கூறியுள்ளேன். உங்களுக்குச் சம்மந்தந்தானே?" எனக் கேட்டார்.நான் "சம்மதமில்லை" என்றேன். "இல்லை, நாளை நான் இங்கு வருவேன், யோசித்துச் சொல்லுங்கள்" என்றார். மறு நாளும் அதே பதிலையே நான் சொன்னேன். "அப்படியில்லை, இன்னும் யோசியுங்கள் பின்னேரம் வருவேன்" என்றார்.
பாடநூல் செயலமர்வில் இருந்த மற்றவர்களுக்கு இவ்விடயம் தெரிய வந்ததால், அவர்கள் என்னை எடுக்குமாறு வற்புறுத்தினார்கள். இறுதியாக அவர்கள் சொன்னார்கள் "அரச விருது என்பதாலும், பணம் பத்தாயிரம் கிடைக்கும் என்பதாலும் கட்டாயம் இதை நீங்கள் எடுங்கள், சரி விருதைத்தான் விடுவோம் செலவழிக்கப் பணம் வருகிறதல்லவா?" என்றார்கள். இறுதியாகப் பணத்தைச் செலவு செய்யலாம் என்ற எண்ணத்துடன் எடுப்பதெனத் தீர்மானித்தேன். பின்னேரம் வந்த பேராசிரியரிடம் எனது முடிவைக் கூறிவிட்டேன்.
11.04.1996 இல் கலாசார சமய அலுவல்கள் அமைச்சிலிருந்து மேலதிகச் செயலாளர் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களிடமிருந்து எனக்கொரு கடிதம் வந்தது. 96 மே 22 இல் கொழும்பில் நடைபெறும் விழாவொன்றில் சிறந்த கலைஞர்களுக்கான கலாபூஷண விருது வழங்கப்படவிருப்பதாகவும், ஏற்க விரும்பினால் சம்மதத்தையும், சுயவிபரக் குறிப்பொன்றையும், புகைப்படப் பிரதி ஒன்றையும் 26.04.1996 க்கு முன்னர் அவருக்குக் கிடைக்கக் கூடியதாக அனுப்பும்படி அக்கடிதம் கூறியது. குறிப்பிட்ட தவணைக்குள் அவற்றையெல்லாம் அனுப்பிவிட்டேன்.
‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004) பக்கம் 2
 

08.05.96இல் கலாசார சமய அலுவல்கள் அமைச்சிலிருந்து மேலதிகச் செயலாளர் எஸ்.எச்.எம.ஜெமீல் அவர்களிடமிருந்து இன்னொரு கடிதம் வந்தது. அதில் "அவசர வேலை ஒன்றின் நிமித்தம் என்னுடன் தொலைபேசித் தொடர்பினை உண்டாக்கவும்" என்ற சுருக்கத்துடன் அலுவலகம், வீடு இரண்டிலுமுள்ள தொலைபேசி இலக்கங்களும் பொறிக்கப்பட்டிருந்தன எனக்கொன்றுமே விளங்கவில்லை.
மேலதிகச் செயலாளர் எஸ்.எச்.எம். ஜெமீலுடன் தொலைபேசித் தொடர்பு கொண்டேன். அவர், "நீங்கள் வசிக்கும் பகுதி அரசாங்கப் பாராளுமன்றப் பிரதிநிதி ஒருவரிடமிருந்து ஒரு சிபாரிசுக் கடிதம் பெற்றுத் தரவேண்டும்" எனக் கேட்டார். நான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. என்றாலும், அவருக்குத் தெரியாமல் எனக்கு இவ்விருது கிடைக்கும் சங்கதியை எனது இலக்கிய வாழ்வைத் தெரிந்த இரு சிங்களப் பிரதிநிதிகளுக்கு அறிவித்தேன். ஒருவர் அப்போது பிரதிச் சபாநாயகராயிருந்த அனில்முனசிங்க அவர்கள். மற்றவர், வேர்வலைப் பிரதான அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எதிரிவீர பிரேமரத்னா அவர்கள்.
இவர்கள் இருவரும் எனக்கு உடனே பதில் தந்தார்கள். 02.05.1996 இல் எழுதிய பிரதிச் சபாநாயகர் அனில் முனசிங்கா அவர்களின் கடிதம். (சிங்களமொழி)
"காலம் கடந்தாவது உங்களுக்கு இவ்விருது கிடைப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். புகழ் பெற்ற எழுத்தாளரும் கவிஞருமானநீங்கள் தமிழ் மொழி மூலம் பல நூல்கள் வெளியிட்டிருப்பதை நான் அறிவேன்" என்று நான் தொடர்ந்து எழுதிய வானொலி எழுத்துக்கள் பற்றி விதந்து நல்வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தது.
16.5.1996ல் எழுதிய எதிரிவீர பிரேமரத்ன அவர்களின் கடிதம் (சிங்கள. மொழி) "உங்களுக்குக் கலாபூஷண விருது கிடைப்பது தொடர்பாக எனது மகிழ்ச்சியையும் நல்வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் எதிர்காலம் மேலும் வெற்றியடைவதாக அமைய எனது பிரார்த்தனைகள்" என்பதைத் தெரிவித்தது.
இக்கடிதங்களை, கலாபூஷண விருதளித்த 22 மே 1996 அன்று ஜோன் டி சில்வா அரங்கில் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களிடம் காட்டிவிட்டு எடுத்துக் கொண்டேன்.
ஜோன் டிசில்வா அரங்கில் கலாச்சார அமைச்சர் லக்ஷ்மன் ஜெயகொடி அவர்கள் அருகில் தபால் தகவல் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவும் கலாசார அமைச்சின் செயலாளர் உயர் உத்தியோகத்தர் சிலரும் நின்றிருந்தனர். கலாபூஷண விருதுக்காக எனது பெயர் அழைக்கப்பட்டவுடன் என்னை மேடைக்கழைத்துச் சென்றனர். அப்போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
பக்கம் 3 ‘ஓலை’ 25 (ஏப்ரல் 2004)

Page 4
தனது ஆசிரியரென என்னை அமைச்சருக்கு அறிமுகம் செய்தார். உடனே அமைச்சர் கையிலிருந்த விருதை பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கையில் கொடுத்து எனக்களிக்குமாறு வேண்டினார். இந்தக் காட்சி ஆசிரியம் தந்த உயர்வெனப் பார்த்து மெய்சிலிர்த்தேன்.
நான் எழுத்துலகில் புகுந்த காலம் பேனையையே தூக்கியிராத ஜெமீல் போன்றவர்கள் தங்களை மேன்மைப்படுத்துவதில் தாங்களே முன்னிற்பவர்கள். இவர்கள் மரத்தில் வளரும் கொடி போன்றவர்கள். ஒட்டி வளர்ந்து மேலெழுந்து நின்று நாங்கள் தான் அம்மரமென முகங்காட்டுபவர்கள். அப்போதுதான் நினைத்தேன் ஏனிந்த விருதைப் பெற்றேன் என்று.
"வாழ்வோரை வாழ்த்தும்" கூத்தில் அவரும் பங்காளர்தான். அது வரலாற்று முக்கியம் பெற்றாலும், ஒழுங்கினத்துக்கு எடுத்துக்காட்டான ஒன்று. வாழ்வோரை வாழ்த்தும் கடைசிக் கட்டத்தின் முந்திய வருடந்தான் என்னையும் அவர்களுக்கு நினைவு வந்திருக்கின்றது. அழைப்பு வந்தது. இந்த ஒழுங்கீன வரலாற்றைச் சுட்டிக்காட்டி அவ்விருதைப் பெற மறுத்து விட்டேன். என்றாலும், பிரதி அமைச்சர் அவர்களின் அழைப்பு கலைவாதி கலில் மூலம் வந்தது. "ஒழுங்கினப்பிழையை ஒத்துக் கொண்டால் இவ்விருதை எடுப்பீர்கள்தானே?" எனும் கேள்வி எழுந்தது. "ஒத்துக் கொண்டதன் பின் பார்க்கலாம்" என்றதும் முடிவு பிழையானால் - பிறகு நான் வராமல் விட்டால். என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அதைப் பெறாததினால் மனநிம்மதி அதிகம் அடைந்தேன்.
உண்மையில் "வாழ்வோரை வாழ்த்தும்" அந்நடவடிக்கை இலக்கிய வரலாற்றில் மிக முக்கிய இடம் பெறுகின்றது. பிரதிஅமைச்சர் அவர்கள் தான் கற்ற ஆசிரியர் ஒருவர் கலை இலக்கியத் தொண்டின் முக்கியஸ்தர் எனக் கண்டு, அவரை முதல் வாழ்த்த எத்தனித்த கைங்கரியத்தின் உதயந்தான் "வாழ்வோரை வாழ்த்துவோம்" என்பது. அம்முதல்வரே வாழ்த்துவதற்கு முன் மரணமாகிவிட்டார். வாழும் போது வாழ்த்த எத்தனித்தமை கைகூடாமல் சாகும் போதாகிவிட்டது. அதனால்தான், ஒழுங்கு முறை குலைந்ததோ என நான் எண்ணுவதுண்டு. இந்தக் காலத்தில் அமைச்சின் ஆஸ்தானத்தில் எஸ்.எச்.எம்.ஜெமீல், மானாமக்கீன், கலைவாதி ஆகியோர் இருந்தனர். இவர்களை நான் சந்தேகித்ததுண்டு. உண்மையில், ஆஸ்தானத்தில் வல்லமை பெற்றவர் ஜெமீல்தான். மானாமக்கீன் வெள்ளை மனமுடையவர். அவர், அது நடந்தேறப் பணத்துக்குப் பாதை சமைத்தவர் மட்டுந்தான். பிற்காலம் புகுந்தவர்கள் அட்டகாசம் செய்திருக்கலாம். கலைவாதி ஒட்டியவர்தான். ஒட்டுதல்தான் அவருக்குரிய கலை, இவற்றையெல்லாம் பார்த்த அருட்டுணர்வில் எனக்கொரு கவிதை பிறந்தது. எழுதித் "தினந்தந்தி" ஏட்டிற்கனுப்பினேன். அதன் ஆசிரியர் அப்போது ஆர்.சிவகுருநாதன் அவர்கள்தான். 23-29 ஜூலை 1995 "தினந்தந்தி" இதழில் வெளிவந்த கவிதையிது:
'3606' - 25 (eJUg65 2004) பக்கம் 4

புதைபொருள்:
குப்பை கூழங்கள் கொட்டி மூடவே குழி பெரும் மடுவாய்த் தோண்டினோம். செப்பனிட்டுத் திருவிழா வொன்றில் சென்ற தேரொன் றங்கிருந்தது.
தேரை இழுத்து மேலே எடுத்தோம் தொடர்ந்து சோடனை செய்த ஒர் யானையும் சேர்ந்ததன் பின் தலை யெடுத்தது சேர்த்ததனையும் மேலே இழுத்தோம்.
அறிவுப் பொக்கிஷ நூல்கள் வந்தன இதைத் தொடர்ந் தின்னும் கிட்டும் கூறி முடித்திட முன் ஒரு பொட்டலம் குவிந்தது வாழ்வோரை வாழ்த்தும் ஏடுகள்:
நாணி மூக்கினை மூடினர் யாவரும் நான்கு பக்கமும் பட்டயம் திட்டிய கூறுடன் செப்பே டொன்றிருந்தது குறுமணிச் சிறு எழுத்துக்கள் மின்னின.
டிக்கட்' எழுதிய 'கண்டக்டர் கலைஞரும் டீசண்ட்டாய்ச் சீனடி செய்த கலைஞரும் தக்கதாய் மையத்துக் கழுவிய கலைஞரும் தடபுடல் றபான் பிச்சைக் கலைஞரும்
வாழ்த்துக்கள் பெற்றனர் இவ்வரம்பினுள் ஒன்று வழமையாய்க் 'கத்னா செய்யு மோர் கலைஞரை வாழ்த்திடு முன்னே அமைச்சு மறைந்தது வழி தொடர்வோர் இதை வாழ்த்திட வேண்டும்.
இத்தனை புதைபொருள் தேசிய வடிவமாய் எழுந்தன இன்னுமிதனைத் தோண்டினால் மெத்தப் பெருமைகள் மேலெழும் என்பதால் மெதுவாய்க் குப்பையைக் கொட்டி மூடினோம்:
இக்கவிதையைத் "தினந்தந்தி" புதுக்கவிதை வடிவத்தில் உடைத்துத்தான் வெளியிட்டிருந்தது.
- தொடரும்
பக்கம் 5 ‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004)

Page 5
காசி ஆனந்தன்
நறுக்குகள்
மீறல் நிமிர்வு பூனை கழுத்தில் தேவை
பயில்வான்களல்ல வீரர்கள்.
உன் உடலின் கூனல் பற்றிய
5666)
விடு.
நூறு எலிகளாய்
பூனையின் இல்லாத கழுத்தைக் நிமிர்வா? கடித்துக் குதறுவோம்.
ஏடுகளில் முன்பக்கத்தில் அட்டையில்.
ஒவியம் வீடுகளில் பின்பக்கத்தில் அகலத்துணியில் அடுப்பங்கரையில்.
‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004) Uக்கம் 6
 
 
 
 
 
 

என்றார்கள்.
வீரர்களை வளர்த்தோம்.
இன்று 'வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பீர்' என்கிறார்கள்.
மரங்கள் வளர்கின்றன.
தங்க வளையலைக் கழற்றி போராளியிடம் தந்தாள்.
செலவுக்கு வைத்துக் கொள்.
உங்களில் பலருக்கு கைகளே இல்லை.
எனக்கு எதுக்கு வளையல்?
‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004)

Page 6
எனக்கு கவியானம் வேனாம் சேர்!
எஸ்.முத்துமீரான்
இன்னும் இருள் ஒழுங்காகப் பிரியவில்லை. விடியச் சாமத்தின் வரவினை வரவேற்று, என் வளவிற்குள் நிற்கும் மாமரத்திலிருந்து, குயிலொன்று ராகமெடுத்து கூவிக் கொண்டிருக்கிறது. சுபஹசத் தொழுகையை, என் வீட்டிற்குப் பக்கத்திலுள்ள ரகுமானியாத்தைக்காவில் நிறைவேற்றி விட்டு வந்து, வீட்டு விறாந்தையில் கிடக்கும் சாய்மணக் கதிரையில் அமர்ந்து குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கிறேன்.
"இன்னாங்க தேத்தண்ணி. அது செரி இண்டைக்கு நீங்க வட்டைக்க போய்ப் பாத்திட்டு வாறதா சென்னிங்க. போகலியா"
"இவன் அத்துறசூல் வாறெண்டு சென்னான், அவனுக்காகத்தான் காத்துக் கிரிக்கன். அவன் வந்தாப் போறதான். வட்டைக்க அவன் வயக்காரனும் காத்திக்கிரிப்பான்."
"அந்த அத்துறசூல்" லூசி எங்க போய்ப் படுக்கானோ..! அவன் உட்டுப் போட்டு நீங்க போயிற்ரு வாங்க."
"அவன் சென்னா வருவான். அவன் வரட்டும்."
"ஒங்களுக்கு இந்த லூசி, பேயணுகள் இல்லாட்டி ஒரு வேலயிம் ஒடாதே." என் மனைவி, அவளுடைய ஆத்திரத்திற்கு ஏற்றவாறு, என் ஆளுமையில் கிறிவிட்டு, குசினிக்குள் போகிறாள்.
எனக்கு பலவிதமான நண்பர்கள் இருக்கிறார்கள். இவர்களில் படித்தவர்கள், படியாதவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், காவாலிகள், முழுப் பைத்தியம், அரைப்பைத்தியம் எனக் கூறிக் கொண்டே போகலாம். அப்படிப்பட்டவர்களில் ஒருவன் தான் அப்துல்றசூல் சொல்லப் போனால் எனக்கு இவன், துரத்து சொந்தக்காரன். என் தாயாரின் மச்சான் முறையான இஸ்மாயில் என்பவரின் மகன்தான் இவன். சின்ன வயதிலேயே இவனுடைய தந்தை இவன் தாயை 'தலாக்' சொல்லிவிட்டு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் முடித்துக் கொண்டதினால், இவனுக்கு தந்தையின் பாசம், முழுமையாக கிடைக்காமல் போய்விட்டது. இவன் நல்ல கெட்டிக்காரன். பத்தாம் வகுப்பு வரை படித்தும், இவனால் படிப்பை ஒழுங்காகத் தொடர முடியாமல் போய்விட்டது. பாவம்! தந்தையின் கண்டிப்பும் தூய்மையான அரவணைப்புமில்லாமல், இவன் தன் இளமைக் காலத்தை, தான்தோன்றித் தனத்தின் காங்கையில் கருக்கிக் கொண்டான். சின்ன வயதிலேயே தன் வயதிற்கு மேற்பட்ட செயல்களில் ஈடுபட்டு துன்பங்களையும், துயரங்களையும்
‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004) பக்கம் 8

வாங்கி, இளமைக் காலத்தையெல்லாம் கானல் நீராக்கிக்கொண்ட இவன், சின்ன வயதிலேயே திருமணம் முடித்து அவ்வாழ்க்கையை முதலிரவிலேயே இழந்து விட்டு இன்று, யாருக்கும் பாரமில்லாத மனநோயாளியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். இவனுக்கு வயது நாற்பதுக்கு மேல் இருக்காது. இவன், கொஞ்சக் காலமாக தனக்கு ஒரு வாழ்க்கைத் துணை வேண்டுமென்று, என்னை சதா நச்சரித்துக் கொண்டிருக்கிறான்.
"என்னாப்பா, வட்டைக்க போகலியா?"
"போகணும், மகள். இன்னமும் இவன் அத்திறகுலக் காணல்லியே. பொழுதும் நல்லா எழும்பிற்று. நேரத்தோட போயிற்றா வரலாமெண்டா. இந்த மடயன் எங்க பெயித்தானோ?"
"அந்த லுசி எங்க போய்ப் படுக்கானோ. அவன உட்டுப் போட்டு, நீங்க நம்மட காற எடுத்துக்கு போயிற்ரு வாங்க."
"வட்டைக்க காறுலயெல்லாம் போகப்புடா, மகள். மனிசன் எரிச்சய்படுவான். அதிலயும் கயற்றயடிறோட்டு ஆக மோசம். எல்லா இடமும் குண்டும் குழியாரிக்காம். அதால சைக்கிள்ள போறதான் நல்லம் புள்ள.
"நேத்தும் நல்ல கறியில்ல. இண்டைக்கு நேரத்தோட போனாத்தான் கரவல மீன் என்னத்தையிம் வாங்கலாம். பிந்தினா, மாயவல மீனத்தான் வெச்சிரிப்பான்."
"மெய்தான் மகள். இவன்ட மாயவல, மீன், வாய்க்கும் வழங்கா, அத வாங்கிறத்த, சுங்கான் கருவாட வாங்கி, வழுதிலங்கா போட்டு பாலாணம் காச்சினா, ரெண்ட கப்பச் சோறு கூடத் திங்கலாம்."
"இப்ப எங்க, சுங்காங் கருவாடு தங்கத்தப் பாக்க வெலயாக் கெடக்கு. இந்தப் பொடியனுகள்ள சண்டயால, எல்லாம் ஒறுப்பாத்தான் இரிக்க. இப்ப யாவாரியெல்லாம் பொலநறுவப் பக்கத்திக்கு போறத்திக்கு பயப்புர்றான்.
"அது செரி, இப்ப ஆருக்குத்தான் மகள் உசிரிருக்கு பயமில்ல. சும்மா கேக்காம பாராமநாயச் சுர்றாய் போல, மனிச சுட்டுத் தள்றான். கேக்கப்பாக்க ஆளில்லாம எல்லாரும் சண்டியனாய் பெயித்தானுகள்."
"எல்லாருக்கும் அல்லாட கூலி கெடக்காமலா போயிரும். வட்டைக்க இன்னேரம் வயற்காரன் காத்துக்கிருப்பான்."
புலுபுலுத்து விடிய வாறெண்டு செல்லிப் போட்டுப் போன இன்த மடயன், இன்னங் காணல்லியே மகள். அவன் வந்தா, முஸ்பாத்திக்கு எதயாவது கதச்சிக்கு வருவான்"
"இந்த லூசிகள்ள கதயெல்லாம் ஒங்களுக்கு அலுக்கிறல்லியா?"
"அவன் அத்துறசூல் பாவம், மகள். ஏதோ, கொஞ்சம் கூடக் கதச்சாய் போல அவனநாம லூசெண்டு செல்லலாமா?இவளவு காலத்திக்கு ஆருக்கும்
பக்கம் 9 ‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004)

Page 7
அவனொரு அநியாயம் செஞ்சிரிக்கானா? ஆரும் வேலக்கு கூப்பிட்டு அவன் எப்பயிம் ஒண்ணாண்டிரிக்கானா? இந்த ஊரிக்கரிக்கிறவன் எவன் கூப்பிட்டாலும், ஒண்ணாங்காம போய், அவன் செல்ற வேலய செஞ்சிதானே குடுக்கான். அவன் செய்யிற வேலயஞக்கு, இவனுக்ளென்ன பெரிய சம்புளமா குடுக்கானுகள். பாவம். அவன்ட கஸ்ர காலம் அவனப் போட்டுக்கு ஆட்டிது. இந்த ஊரான் அவனிட்ட சும்மா வேல வாங்கிறத்திக்காக, அவன லூசாக்கிப் போட்டானுகள். ஆனா, அவனொரு மனிச நேசமுள்ள ஏழ எங்கிறத, எல்லாரும் மறந்திற்ரம்."
அப்துறசூலைப் பற்றிய என் எண்ணக் கருவில் சிக்குண்டு, என் மகள் சிலையாகி நிற்கும் போது, தாயைத் தேடி அழுது கொண்டு, என் பேரன் வருகிறான். அப்பொழுது, இரவெல்லாம் கொட்டிய பனியில் கொடுகிக் கிடந்த காகங்கள் இரண்டு, என் வீட்டு முற்றத்தில் குலைதள்ளி, தாய்மைப் பொலிவோடு நிற்கும் வாழை மரத்திலிருந்து கத்திக் கொண்டிருக்கின்றன. மடல் விரித்து மலர்ந்திருக்கும் வாழைப்பூவில் சின்னக் குருவியொன்று தேன்குடித்துக் கொண்டிருக்கிறது. வாசல் முற்றத்தில் விழுந்து கிடக்கும் மாதுள, எலுமிச்சை மரங்களின் பழுத்த இலைகளை, என் மனைவி பொறுக்கிக் கொண்டிருக்கிறாள்.
"சேர்."
"அத்திரசூல், வந்திற்ரியா? இவ்வளவு நேரமா எங்க போன.?"
"லாவு படுக்கல்ல சேர். அவன் டூவன்ட ஊட்டுக்க ஒரே நொளம்பு. விடியச் சாமாந்தான் ஒழுப்புளம் நித்திர கொண்ட. அதாலதான் கொஞ்சம் பிந்திப் பெயித்து."
"செரி, நீ போய் சைக்கிளத் தள்ளிக்கா."
"டே. அத்திறகுல்! சேற கவனமா ஏத்திக்கு பொய் கவனமாக் கொண்டந்திரு. அவரு பிறசர்கார மனிசன், வெயிலுக்கயிலுக்க போகாம நேரத்தோட வந்திருங்க. இன்னா பேஞ்ச மழைக்கு, கயற்ரயடிறோட்டு, நல்ல பள்ளமும் படுகுழியிமாத்தான் கெடக்கும். எதுக்கும் கைக்காவலுக்கு கொடயயிம் எடுத்துக்குப் போங்க."
அப்துறசூல் என்னைச் சைக்கிளில் வைத்து மிதித்துக் கொண்டு போவதைப் பார்த்து எங்கள் நாய் பொட்டு, கடவலடியில் நின்று ஊழையிடுகிறது.
இளஞ்சூரியனின் ஆலிங்கனத்தில் சிந்தையிழந்த இயற்கை, பனியின் பிடியிலிருந்து படிப்படியாக விலகிக் கொண்டிருக்கிறது.
வினாடிகள் சளையாமல் நிமிடங்களை விழுங்கிக் கொண்டிருக்கின்றன.
அப்துறசூல் சைக்கிளை பக்குவமாக மிதித்துக் கொண்டிருக்கிறான். மாட்டுப்பளை பெரிய பாலத்தைக் கடந்து செல்லும் எங்கள் இருமருங்கிலும்
‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004) பக்கம் 10

உள்ள மாட்டுப்பளை வட்டையிம், வக்காத்தீவு வட்டையிம் விளைந்து, உருண்டு பிரண்டு பொன்நிறமாகக் கிடக்கின்றன.
"இவண்ட றோட் டெல்லாம் மிச்சம் மோசமாக் கிடக்கு, கொஞ்சம் கவனமாப் பாத்துப் போ."
"செரி சேர். நீங்க கரியலக் கொஞ்சம் றைற்ரா புடிச்சிக்கிரிங்க. இன்னங் கொஞ்சம் நேத்தயால, கயற்ரயடி றோட்டு வந்திரும். அந்த றோட்டுக்கு போனா லேசாய் போகலாம்."
"அது செரி, நீதண்ணிச்சோறு திண்டயா..?"
"இல்ல சேர்."
"அப்ப.நம்முட தாயத்தின்னிர மக்கள்ள கடயிலநீத்தாட்டு. அப்பம் சுட்டு வெச்சிரிப்பானுகள் திண்டு போட்டுப் போகலாம்."
"செரி சேர்."
அக்கரைப்பற்று பிரதான றோட்டில் வாகனங்கள். வருவதும் போவதுமாக இருக்கின்றன. அப்துறசூல் தனக்குத் தெரிந்த பழைய சினிமாப் பாடலொன்றை புதிய ராகத்தில் பாடிக் கொண்டு சைக்கிளை வேகமாக மிதித்துக் கொண்டிக்கிறான்.
இஞ்ச பள்ளம் குழியப் பாத்தோட்டு. எனக்கு பின்னால இரிக்கிற கஸ்ரமாக் கிடக்கு"
"செரி சேர். நீங்க கொஞ்சம் ஆடாம இரிங்க, ஒங்கிட ஒடம்பு கொஞ்சம் பாரந்தானே. அதால எனக்கு வலஞ்சி புடிச்சோர்ற கஸ்ரமாயிருக்கு"
இளஞ்சூரியனின் சூட்டில், விளைந்து கிடக்கும் வேளாண்மையில் படர்ந்திருந்த பனி விலகிக் கொண்டிருக்கிறது. பனியைத் தடவி வரும் தென்றல், எங்கள் இருவரையும் பதமாகத் தொட்டுச் செல்கிறது. றோட்டோரங்களில் கிளைகள் பரப்பி செழித்து நிற்கும் ஆல, வம்மி, மதுர மரங்கள் பூத்து நிற்கின்றன.
"சேர், கயற்ரயடி றோட்டுக்கு வந்திட்டம்"
"அப்ப, கவனமாகப் பாத்துப் போ."
"இந்த றோட்டு எனக்கு தண்ணிபட்ட பாடு. இந்த றோட்டில இவன்ட பஸ்சு காறு வாறல்லியே. எப்பரிந்தாய் போல ஒண்டு ரெண்டு ஒழவு மிசின் இல்லாட்டி மாட்டு வண்டில்கள் வரும். ச்சா. வட்டயப் பாருங்க சேர், சும்மா உருண்டு தெரண்டு கெடக்கு. இன்னும் ரெண்டு மூணு கெழமயாலகத்தி கொழுவுவான்"
பள்ளமும் குழியுமாக் கிடக்கும் கயற்ரயடி கிறவல் றோட்டால் அப்துறசூல், அதன் தன்மைக்கு ஏற்றவாறு வளைந்து கொடுத்து சைக்கிளை ஒட்டிக் கொண்டிருக்கிறான். நடுறோட்டில் குந்திக் கொண்டிருந்த ஆட்காட்டி
பக்கம் 11 ‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004)

Page 8
பறவையொன்று எங்களைக் கண்டு எழுந்து சப்தமிட்டுப் பறக்கிறது. ஆட்காட்டிப் பறவையொலியில் சிந்தையிழந்த குரங்கொன்று குந்தியிருந்த கூளாமரத்திலிருந்து குதித்து, வளைந்து கிடக்கும் வேளாண்மைக்குள்ளால் பாய்ந்தோடுகிறது. வயல்களிடையே அட்டாளைப் பரண்களும், ஒத்தாப்புகளும் எழுந்து நிற்கின்றன. சில இடங்களில் புரைகளும் அதனோடு சேர்ந்த பணியாரக் குடில்களும் காணப்படுகின்றன. வயல்களுக்கு போகும் மக்கள், நடையிலும், சைக்கிளிலும் போய்க் கொண்டிருக்கின்றனர். வானம் மப்பும் மந்தாரமாகக் கிடக்கிறது.
"சேர்! தாயத்தினின்ர மக்கள்ள கட வந்திற்ரு."
"அப்ப, சைக்கிள ஒரமா நித்தாட்டு. காலத்தால என்னத்தையிம் வயித்தில போட்டுக்கு போவம்."
"போடியார்! வாங்க. வாங்க. வட்டயெல்லாம் கக்கக்கனிண வெளஞ்சி கெடக்கு. இந்த மொற எல்லாருக்கும் அல்லா நல்லா மொகம் பாத்திரிக்கான். ஆனா, வெளஞ்ச வெள்ளாமயவெட்டி எடுக்கத்தான், ஆக்களில்லாாமக் கெடக்கு. வெள்ளாம வெட்டுக்கு வந்த பழுகாமம், போரதீவுப் புள்ளயயெல்லாம், புலிப் பொடியனுகள் வரச் சொல்லி, நேத்துப் பின்னேரம் ஊருக்கு பெயித்தானுகள். சில வயல, வெட்டின கொறயோட உட்டுப் போட்டுப் பெயித்தானுகள். எல்லாம் சிக்கலாத்தான் கெடக்கு."
அதத்தான் கொஞ்சம் பாப்பமெண்டு வாறன். ஆறு மாத்தயப் பொழப்பு. சும்மா உடலாமா? இதுக்கு பட்ட கஸ்ரமும் செலவும் அல்லாக்குத்தான் தெரியிம். வெட்டுக்கு முன் காசி வாங்கிற்ரு போனவனுகளே, இன்னா அன்னாண்டு கழுத்த இழுத்துக்கு ஏமாத்திறான். இதுக்குள்ள வானமும் ஒருமாதிரி அளகொழப்பப்பட்டுக்கு கெடக்கு."
"எல்லாத்தையிம் அல்லா ஹயராக்கி வெப்பான், போடியார். நீங்க ஒண்டயிம் யோசியாம கடைக்குள்ள வாங்க"
"அத்துரசூல், வாவன். ஒனக்காகத்தானே நிப்பாட்டின."
"வாவன். இப்பான் போட்ட றொட்டியிம் சம்பலும் இரிக்கு. சுடச் சுட அப்பமுமிரிக்கு. தேவயானத்த வந்து தின்னண்டப்பா."
"தம்பேய்! கொஞ்சம் சீனியிம் கொண்டந்து வெய்.ம். கெதியாத் திண்டு போட்டெடு. எங்களுக்கு ரெண்டு ரீயிம் போட்டுக்கா. எனக்கு சீனி கொச்சம் கொறச்சிப் போடு."
வயல்களுக்குள் விளைந்து கிடக்கும் வேளாண்மைகளில் வந்துழுந்து. நெல்மணிகளைக் கொத்தித் தின்னும் கிளிகளையும், குருவிகளையும், வயற் காரனுகளும், ஆட் காப் பெடியனுகளும் சப்தமிட்டு விரசிக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் சப்தத்தில் பயந்து, கிளிகளும், குருவிகளும் பாட்டம் பாட்டமாக, பரந்து விரிந்து கிடக்கும் வயல்வெளிகளில் பறந்து திரிகின்றன. காலைச் சாப்பாட்டை முடித்த கையோடு மீண்டும் எங்கள்
‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004) பக்கம் 12

சைக்கிள், கயற்ரயடி றோட்டால் ஒடிக் கொண்டிருக்கிறது. அப்துறசூல் ஈஎம் ஹனிபாவின் இஸ்லாமிய கீதமொன்றை, உரத்த குரலில் பாடிக் கொண்டு சைக்கிளை பதமாக மிதித்துக் கொண்டிருக்கிறான். ஏறு வெய்யில் எங்கள் இருவரையும் விரசிக் கொண்டிருக்கிறது.
'சேர்!. என்ர கலியான வெசயம்?"
"அவரு அகமலெவ்வ. என்ன செல்றாரு?"
"அய்யாயிரம் காசி, இப்ப கொண்டு குடுத்தாலும் லாவைக்கு கலியாணம் முடிக்கலாம். நேத்துநான் போனவிடத்த அப்படித்தான் அவரு சென்னாரு."
"இது, எனக்கிண்டா ஒண்டும் வெளங்கல்ல. ஒன்னப் பகடி பண்ணத்தான் இப்பிடிச் செல்றானாக்கும்."
"இல்ல சேர், அவரு மெய்யாத்தான் சென்னாரு. அவர்ர மகளுக்கும் என்னக் கலியாணம் முடிக்க ஆசதானாம்."
"அவன் அகமலெவ்வயிம் ஒன்னப் போல ஒருவன்தான். அவனும் விறக்கில்லாம கதப்பான்."
"இல்ல சேர், அவருக்கு மகரு வேணுமாம். அதுக்குத்தான் அய்யாயிரம் காசி கேக்காரு. இஸ்லாத்தில மகருதானாமே முக்கியம். அவரு சென்னாரு அவர்ர மகளக் கலியாணம் முடிக்க நம்முட ஊரில கடும் போட்டியாம். எண்டாலும் அந்தப் புள்ளய எனக்குப்பண்ணித்தாறத்திக்கு அவருக்கு நல்ல விருப்பமாம். நீங்கதான் எனக்கு ஒதவி செய்யணும்."
"அதெல்லாம் செய்வம். அவன் அகமலெவ்வட மகளும் கலியாணம் முடிச்சி உட்ட புள்ளதானே. அதுக்குள்ள இவரென்ன பெரிய புதுனம் காட்ற..?"
"ஒம், சேர், அந்தக் கலியாணத்தில ஒரு புள்ளயிம் இரிக்கு. என்ன செய்யலாம். எத்தினநாளைக்கு நான் அங்கயிஞ்ச நக்குச் சோறு திண்டிக்கு திரியிற? எனக்கிண்டு ஒரு பொண்டாட்டி இரிந்தா எனக்கிந்த நில வருமா..? அதுக்குத்தான் சேர், கலியாணம் பண்ணக் கேக்கன்"
"செரி, அத நான் பாக்கன். அன்னா அவன்ட மிசின் வருது, கவனமாய் பாத்துப் போ. மழ பேஞ்சி றோட்டெல்லாம் குண்டு குழியாய் பெயித்து, கன காலத்திக்கு பொறகு சைக்கிள்ளவாறத்தால, இடுப்பெல்லாம் பச்சப்புண்ணா நோகிது. சீ! இந்த றோட்டு எவளவு மோசமாக் கெடக்கு."
"இத நம்முட எம்பிக்கிற்ற நீங்கதான் செல்லி, வாற மொறக்கி கெறவல் போடச் செல்லணும். அவருக்கு உங்கிட செல்லுத்தான் நல்லா ஏறும். இல்லாட்டி வாற போகத்திக்கு இதால ஆருமே போக்குவரத்து செய்யேலா."
"எங்கட எம்பிர ஊட்ட லாவக்கி போய், இந்த றோட்டப்பத்தி கட்டாயம் செல்லணும். எம்பி காசி குடுத்தாலும், இந்தக் கொந்திறாத்துக் காறனுகள் ஒழுங்காச் செய்யனுமே. அவனுக்கிவனுக்கு பந்தத்தக் குடுத்து, அரவாசிக்
Uá6ђ 13 ‘ஓலை’. 25 (ஏப்ரல் 2004)

Page 9
காச அவனுகள்ள வாயில் போட்றுவானுகள். இப்ப இந்த ஒலகமே பந்தத்திலதானே இயங்கிது."
"அது மெய்தான்"
அப்துரசூல் பக்குவமாக சைக்கிளை மிதித்துக் கொண்டிருக்கிறான். வயல் முழுக்க குருவி, கிளி விரட்டுபவர்களின் சப்தம், வானைப் பிளந்து கொண்டிருக்கிறது. இளஞ்சூரியனின் ஏறுவெய்யிலில், றோட்டோரத்தில் கூதல் காய்ந்து கொண்டிருந்த வயது போன குரங்கொன்று, எங்களைக் கண்டு பல்லை இளித்துக் காட்டி விட்டு, வயலுக்குள் பாய்ந்தோடுகிறது.
"நேத்து லாவு நம்மட செனத்தாண்ட செய்யதிட்ட, நான் கலியாணம் முடிக்கப் போறனெண்டு சென்னதிக்கு அவன் ஒனக்கென்னடா லூசிகலியாண மெண்டு பகடி பண்றான். அப்ப, நான் கலியாணம் முடிக்கப் போடாதா?"
"நீ என்ன மண்ணங்கட்டிக்கு இதெல்லாம் போய் அவனிட்ட இவனிட்ட செல்ற..? எல்லாத்திக்கு முன்ன அவன் செய்யதே ஒரு லூசிதானே."
"என்ர கலியாண ஆசதான் எல்லாத்திக்கும் காரணம். எனக்கென்ன அப்பிடி கெழட்டு வயசா?"
"ஒனக்கு வயசில்ல, ஒண்ட போக்காலதான் ஒனக்கு வயசாங். வண்டிலொண்டு வருகிது. பாத்துப் போ."
ஏறுவெய்யில் சினமடைந்து, இளங்காலையைத் துரத்திக் கொண்டிருக்கிறது. சினமடைந்து கிடக்கும் ஏறுவெய்யிலின் சூட்டில், விளைந்து கிடக்கும் வயல்களில் படர்ந்திருந்த பனியெல்லாம் அழிந்து பச்சைப் பசேலென்று கிடக்கின்றன.
"சேர்,நீங்க மட்டும் மனம் வெச்சாத்தான் எனக்கு கலியாணம் நடக்கும். ஒங்கள உட்டா எனக்கு ஆருதான் ஒதவி செய்யப் போறாங்க..? பெத்த தாயே என்ன லூசெண்டு செல்றா. நானும் கலியாணம் முடிச்சி, என்ன லூசெண்டு செல்றவங்களுக்கு முன்னால வாழ்ந்து காட்டப்புறன்."
"அன்னா கரத்தொண்டு வரிகிது, சைற்ரால போ. கோடி மாடு போல கெடக்கு"
" சேர்! அகமலெவ்வமாமாக்கு மகரு குடுக்க எனக்கு அய்யாயிரம் காசி தாங்க. ஒங்களுக்கு அஞ்சி தரம் அச்சிக்கு போன நன்ம கெடைக்கும்."
"ங், செரி பாப்பம், நீ பாத்து சைக்கிள ஒட்டு" "அப்ப, அவருக்கு குடுக்கிற மகருக்காசி அய்யாயிரமும்?"
"நான் ஊட்ட போய்த் தாறன் நீ சைக்கிள பாத்து மிரி" கயற்ரயடி றோட்டில், அப்துறசூல் புழுதியைக் கிளப்பி, சைக்கிளை மிதித்துக் கொண்டிருக்கிறான். அவன் கலியாணக் கற்பனையில் மிதந்து கொண்டிருப்பதை அறிந்த ஏறுவெய்யில் எங்கள் இருவரையும் துரத்திக் கொண்டிருக்கிறது.
‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004) பக்கம் 14

"சேர், தலமவாத்திர மக்கள்ள தேயிலக்கட வந்திற்ரு. அன்னா நம்முட வயக்காரன் ஆதங்காக்காவும், நம்மளக் காத்துக்கு நிக்காரு. கடயில என்னயிம் குடிச்சிப் போட்டு போறயா..?"
"வாங்க போடியார்! ஆதங்காக்கா விடியச் சாமத்திலேயே வந்து, ஒங்களக் காத்துக்க நிக்காரு. டீ போடட்டா..? இப்பான் கூட்ட முட்டக் கோசுமிரிக்கு. அத்திறகுல், அங்கால குடிலுக்க சைக்கிளக் கொண்டு போய்த் தள்ளி வெச்சிப் போட்டு வாவன்."
"செரி, ஆதங்காக்காக்கும் சேத்துநல்லா மூணுடீ போட்டுக்கா. எனக்கு கொஞ்சம் சீனி கொறச்சிப் போடு."
"இன்னாங்க முட்டக்கோசு. நல்லாரிக்கும் எடுத்து தின்னுங்க." "அத்திறகுல் எடு. ஆதங்காக்கா நீங்களும் ஒன்ட எடுங்க."
எல்லோரும் தேனிரை அருந்தி விட்டு என் ஆம வட்டை வயலைப் பார்ப்பதற்கு கால்நடையாக நடந்து போகிறோம். என் வயலுக்கு பக்கத்திலுள்ள ஆலயடியோடை ஆறுவற்றி, சிலுகு தண்ணிரோடு கிடக்கிறது. வற்றிக் கிடக்கும் ஆற்றிலுள்ள குண்டு குழிகளுக்குள் தத்தளிக்கும் மீன்களை, கொக்குகளும், உண்ணியன்களும் சேர்ந்து பிடித்துண்பதில் விசையேற்றி விட்ட பம்பரம் போல் சுழன்று கொண்டிருக்கின்றன. வயற்காரன் ஆதங்காக்கா, வரம்புகளில் சர்ந்து கிடக்கும் கதிர்களை நீக்கிக் கொண்டு முன் செல்ல நானும், அப்துறசூலும் பின்னால் செல்கின்றோம்.
"கவனமாப் பாத்து வாங்க. அண்டைக் கடிச்ச காத்துக்கு, வெள்ளாமயெல்லாம் நல்லாச் சாஞ்சுழுந்திற்கு."
வயற்காரனின் சொற்படி நடந்து போய், அவன் அழகாகக் கட்டிரிக்கும் அட்டாளைப் பறணில் ஏறி இருந்து விளைந்து உருண்டு திரண்டு கிடக்கும் என் வயலைப் பார்க்கிறேன். நான் பறணில் இருப்பதைக் கண்டு எங்கள் கண்டத்து வட்டவிதானை சொளகண்ட மீராலெவ்வை பறனடிக்கு வருகிறான். தென்றல் காற்று இதமாக வீசிக் கொண்டிருக்கிறது. சின்னச் சின்னக் குருவிகள், தங்கள் இஷ்டப்படி அங்குமிங்கும் பறந்து நெல்மணிகளைக் கொத்தித் திரிகின்றன.
"போடியார வட்டைக்க காண்ற, கரடி பொறக் காண்றாய் போல இரிக்கு. பொறகு சொகமா?"
"ஒரு மாதிரிக் கெடக்கு வட்டான. நம்முட தொழிலுக்கு எங்க நேரமிரிக்கு? இண்டைக்கு வந்ததே பெரிய காரியமாச்சி. ஆதங்காக்காட கரச்சலாலதான் இண்டைக்கும் வந்த, அது செரி, ஒங்களுக்க தெரிஞ்ச வெட்டுத்தத்தி எங்கயிமிரிக்கா?"
"இப்பதான் நம்முட வகுத்துப் பக்கீர்ர மக்கள்ள கடயில, கொக்கட்டிச் சோலயில இரிந்து வெட்டுத் தத்தியொண்டு வந்து கெடக்கு. இண்டைக்கு
Uásább 15 ‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004)

Page 10
பேசி நாளைக்கு வயல வெட்டச் செல்லுவோமா?"
"ஒம், வட்டான அந்தத் தத்தியப் பேசி, நாளைக்கு வெட்டுவம், றேட்டு என்ன மாதிரியாம்?"
"அத, வட்டைக்க நடக்கிறாய் போல பேசிக் குடுக்கலாம்"
"ஆதங்காக்கா. நீங்க வட்டானைக்கு கூடப் போய், அந்தத் தத்தியப் பேசி நாளைக்கு வெட்ற வேலயப் பாருங்க, வானமும் ஒரு மாதிரி அளகொழப்பமாக் கெடக்கு"
"வெளஞ்ச வெள்ளாமய என்னத்திக்கு வெச்சிரிக்கிற.? இரிக்கரிக்க நமக்குத் தான் நட்டம். இண்டைக்கு கத்தி கொழுவினாலும் நமக்கு நல்லம்தான். வெளஞ்ச வெள்ளாம ஒரு நாளக்கு கெடந்தா. ஒரு மூட நெல்லு கொட்டுங்கும். அதிலயிம் மூணு மாத்தயான். வெள்ளாமைக்கு கொட்டுங்க செல்லத் தேவல்ல."
"அப்ப, நீங்க போய் எல்லாத்தையிம் பேசிப் போட்டு ஊட்ட வாங்க. மத்த அடுக்குகளப் பாப்பம். எனக்கும் ரெண்டு மூணு வழக்கெழுதிற வேலயிம் கெடக்கு. அப்ப நாங்க வாறம்." வட்டானையும், வயற்காரனும் வகுத்துப் பக்கீர்ர மக்கள்ள வட்டைக் கடைக்குப் போகின்றனர். நானும் அப்துறசூலும் தலைமை வாத்திர மக்கள்ள கடைக்குள்ள வைத்த சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊருக்கு வருகின்றோம். எங்களுக்கு முன்னால் சறுக்கல்ல சமுறுதீனும், வாணம் பாத்தாண்ட வதக்கும் ஆலயடியோடையில் மீன் பிடித்துக் கொண்டு நடந்து போகின்றனர். மின்னல் வேகத்தில், மீன் கூடையோடு நடந்து கொண்டிருக்கும் அவர்கள் இருவரையும் முந்திக் கொண்டு அப்துறசூல் சைக் கிளை மிதித்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய வேகத்தில் கயற்ரயடி கிறவல் றோடெல்லாம் புழுதி கிளம்பிக் கொண்டிருக்கிறது. ஏறுவெய்யில் உக்கிரமடைந்து சிங்காரம் கொழுத்துவதால், அதன் வெப்பத்தைத் தாங்க முடியாமல் பறவைகள், றோட்டோரங்களில் நிற்கும் மதுரமரங்களில் குந்திக் கொண்டிருக்கின்றன.
"சேர், என்ர வெசயத்த லாவைக்கே முடிச்சிரணும். என்னைப் பேயன் லூசி, பொண்ணயன் எண்டு கேலி செய்யிற, இந்த ஊராண்ட கண்ணுக்கு முன்னால கலியாணம் செஞ்சி, என்ர பொண்டாட்டியோட நான் போகணும்."
"நீ, எதயிம் யோசியாத, நான் சென்னாச் செல்லுத்தான். அவன் அகமலெவ்வ கேட்ட காசி அய்யாயிரத்தயிம், இப்ப ஊட்ட போய்த் தாறன். நீ அதக் குடுத்துப் போட்டு, லாவக்கே காவின் எழுதப்பள்ளில துண்டெடுக்கச் செல்லு. ஒனக் குத் தேவையான சாறன் சட்டய நான் எடுத்தாறன். செரிதானே?"
"செரி, சேர்.
அப்துறசூலின் கட்டுக்கடங்கா மகிழ்ச்சி, கயற்றயடி கிறவல் றோட்டை மூச்சுப் பிடித்து விழுங்கி வந்து அக்கரைப்பற்று பிரதான தார் றோட்டில்
‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004) பக்கம் 16

பெருமூச்சு விடுகிறது.
"இஞ்ச! பேர் ரோட்டுக்கு வந்திட்டம் இனிக் கொஞ்சம் கவனமாய் பாத்துப் போ."
என் சொல்லுக்கு மதிப்பளித்து, அய்துறசூல் சைக்கிளைப் பக்குவமாக ஒட்டிக் கொண்டிருக்கிறான். பஸ்களும் கார்களும் போவதும் வருவதுமாக இருக்கின்றன.
சேர், கறி வாங்கிறயா?ஒலுவில்ல மீன் புடிச்சிரிக்கான் போல கெடக்கு. இன்னா, நம்முட செய்யதிர மீரானும் தலப்பாக்கட்டிர அவக்கனும் பொட்டி நெறய மீன் கட்டிக்கு போறானுகள்."
"நல்லதாய் போச்சு. நீ மார்க்கட்டில சைக்கிளநித்தாட்டு. கறி என்னயிம் வாங்கிற்றுப் போனாத்தான் ஊட்ட தப்பலாம்."
சூரியன் மூச்சுப்பிடித்து, உச்சியைப் பிடிக்க ஒடிக் கொண்டிருக்கிறான். சந்தையின் ஓரத்தில், சில கட்டாக்காலி நாய்கள் சண்டை பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, பொறுக்க முடியாமல் காகங்கள் கத்திக் கொண்டிருக்கின்றன.
"இஞ்ச, சைக்கிள வெச்சிக்கிற்ரு நீ, இவடத்தயே நில்லு. நான் போய் மீனப் பாத்து வாங்கிற்ரு வாறன்."
சந்தையில் கடல் மீன்களோடு, குளத்து மீன்களும் பரவலாகக் கிடக்கின்றன. வெளியில் மரக்கறிகள் குவிந்து கிடக்கின்றன. வகிறண்ட வெள்ளயன் பொன்னங்கணியையும், வள்ளலயிம் வைத்துக் கொண்டு கத்துகிறான்.
"அத்துறசூல், என்ன இவடத்த நிக்கற?"
"நானும்,நம்முட லோயர் சேரும் அவர்ர ஆமவட்ட வயலுக்க போய் வந்து அவரு மீன் வாங்கப் போறாரு நான் அவரு வருமட்டும் காத்துக்கு நிக்கன்"
"அது செரி ஒனக்கும் நம்முட பீயிறுக்கி அகமலெவ்வட மகளுக்கும் கலியாணமெண்டு நீ சென்னயாம். மெய்தானா?"
"அவரு அகமலெவ்வ மாமாதான் மொதல்ல எனக்கிட்ட கேட்ட."
"அதிலென்ன, விருப்பமெண்டாச் செய்யிறானே. ஒனக்கென்ன வயசா..? ஒன்ட ஒடம் பிரிக்கிற சைசிக்கு, நாலு பொண்ணும் முடிக்கலாம்."
"அவரு அகமலெவ்வ மாமாட மகளுக்கும் நல்ல விருப்பமாம்" "பொறகென்ன, லாவைக்கே காவின எழுதினா, விசயம் முடிஞ்சி"
"நீங்க செல்றாய் போல, லாவைக்கு காவின்தான். லோயர் சேர், அவரு அகமலெவ்வ கேட்ட மகருக்காசி அய்யாயிரத்தையும் இப்ப தாறெண்டு செல்லிரிக்கிறாரு. எனக்கு உடுப்பும் அவருதான் எடுத்துத் தரப் போறாரு.
பக்கம் 17 ‘ஓலை’. 25 (ஏப்ரல் 2004)

Page 11
"ஒனக்கென்ன, நீபுடிச்சாலும் பெரிய புளியங்கொம்பத்தான் புடிச்சிரிக்காய். அவர உட்றாம விசயத்த சூட்டோடச் சூட்டாய் பாத்துக்க."
"நான் உடமாட்டன். லாவைக்கே காவின் எழுதினாத்தான் என்ர நெஞ்ச மண் திங்கும்"
"கலியாணத்தில் படும் உசாரத்தான் இரிக்கிறாய்"
"பின்ன, நான் எத்தின நாளைக்கு இப்பிடித் தனிக்கட்டாயா இரிக்கிற? என்னோட ஒத்தவனெல்லாம் கலியாணம் முடிச்சி, ரெண்டு மூணு புள்ளயளோட இரிக்கானுகள். இந்த ஊருக்க எவனுக்கு என்னப்பத்தி ஒரு கவலரிக்கு? எல்லாரும் என்னக் கூட்டிக்கு போய் நல்லா வேல வாங்கிறானுகள். ஆராவதுஒருவன் அஞ்சி சதக் காசி, ஒழுங்காத் தாறானா? ஏதோ, நானும் அல்லா படச்ச படப்புத்தானே.? மத்தவனுகளுக்கிரிக்கிற ஆச எனக்கு மட்டும் இல்லியா..?"
"இப்ப, இதெல்லாம் ஒனக்கு ஆரு, இல் லெண்டு சென்ன? ஒன்ட கோலத்தாலதான் ஊரான் அப்பிடி உன்ன நெனக்கான். சும்மா வாறவன் போறவனோட அந்தக் கதய இந்தக் கதயக் கதச்சிக்கிற்ரு இரிந்தா, ஒன்ன எவன் கணக்கெடுக்கப் போறான்? முதல்ல, இந்தத் தலயில சுத்திரிக்கிற சீலத்துண்ட எடுத்தெறி. அளிக்கம்ப கொறவன் மாதிரி இரிக்காய். அப்பதான் ஒன்ன மனிசன், மனிசனாக் கணக்கெடுப்பான். எந்நேரமும் வெள்ளாமைக்கு எண்ணடிக்கிறதப் பத்தியிம், ஆத்த மறிச்சி கட்டுக் கட்றதப் பத்தியிம், கடக்கரையில் மீன் புடிக்கிறதப் பத்தியிம் கதச்சிக்கிரிந்தா, எந்தப் பொம்புள ஒன்னக் கலியாணம் முடிக்க வரப் போறாள்? எல்லாம் நமக்குள்ளதான் இரிக்கு. நாமளே நம்மளப் பேயனாக்கிற்ருமத்தவனக் கொற சென்னாச் செரி வருமா."
"நானினி அப்பிடி நடக்கமாட்டன் மச்சான். ஒன்ட, செல்படிதான் இனி நடப்பன். நீயும் அவரு அகமலெவ்வ மாமாட்ட கொஞ்சம் நல்லாச் செல்லு. அவர்ர புள்ளயிம் நல்ல வடிவு. எனக்கு அந்தப் புள்ளய கலியாணம் முடிக்க செல்லொண்ணா ஆச."
"காதர் ஒங்கு மாமீர மகன், அத்திறகுல் என்ன செல்றாரு"
"வாங்க சேர், லாவைக்கு அவருக்கு கலியாணமாம். கால் நெலத்தில படாம நிக்காரு."
"மச்சானுக்கு புத்தியெல்லாம் சென்னியா" "எல்லாம் செல்லிரிக்கான். இனி அவரு ஒழுங்கா நடந்தாச் செரிதான்"
"ங், அதயிம் பாப்பமே. ஏதோ அவரும் மனிசன்தானே. அவருக்கும் ஆசபாசம் இரிக்காமலா போகும்? அவர்ர ஆசயயிம் நெறவேத்தி வெய்க்கத்தானே வேணும். அப்ப நாங்க வாறம். அத்திசூறல் சைக்கிள எடு."
எங்கள் சைக்கிள், றோட்டை விழுங்கி என் வீட்டுக் கேற்ரடியில் வந்து
‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004) பக்கம் 18

நிற்பதைக் கண்ட என்நாய் பொட்டு, வாலைக் குழைத்து அணுகிக் கொண்டு வருகிறது. எங்கள் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது போல், எங்கள் வீட்டு மணிக்கூடு பதினொரு தரம் அடித்து ஒய்கிறது.
"அத்திறகுல், இன்னா, இந்த மீனையிம் சாமானையிம் கொண்டு போய், லாத்தாட்ட குடுத்திட்டு, என்ர ஒபிசிக்க வா"
நான் வாங்கி வந்த மீனையிம், மரக்கறி சாமானையெல்லாம் எடுத்துக் கொண்டு போகும். அத்துறசூலுக்கு பின்னால், எங்கள் பூனை கத்திக் கொண்டு போகிறது.
என் காரியாலய அறையிலுள்ள மேசையில், வழக்குத் தோரணைகளும், சட்டப் புத்தகங்களும் பரவிக் கிடக்கின்றன.
"இன்னா, இதில அய்யாயிரமிருக்கு. இதக் கொண்டு அவன் அகமலெவ்வட கையில குடுத்துப் போட்டு லாவைக்கு காவின் எழுத, பள்ளிக்கு போய்த் துண்டெடுக்கச் செல்லு." அப்துறசூல் காசை வாங்கிக் கொண்டு, தெறிபட்ட அம்புபோல் பறக்கிறான்.
"இஞ்ச ஒங்களத்தான். கையக்காலக் கழிவிற்கு, தண்ணிச்சோறு திங்க வாங்க. இண்டைக்கு கூனிச் சம்பல்தான். சுடுசோத்துக்குநல்லாரிக்கும் வந்து தின்னுங்க."
என் மனைவி தன் சமையலின் திறமையை வெளிச்சம் போட் டுக் காட்டிவிட்டு,நான் வாங்கிவந்த மீன்களை அறுத்துதுப்பரவு செய்யும் போது, எங்கள் பூனை அவள் பக்கத்தில் இருந்து ஓயாமல் கத்திக் கொண்டிருக்கிறது.
"ச்சா! கன்னாளைக்கு பொறகு கூனிச் சம்பல் நல்லாத்தான் இரிக்கு."
காலைச் சாப்பாட்டை முடித்து விட்டுப் போய், விறாந்தையில் கிடக்கும் கதிரையில் ஆறுதலாகக் குந்திருந்து இன்றைய பத்திரிகைகளைப் பார்க்கிறேன். வீட்டு முற்றத்தில் பூத்துக் குலுங்கிநிற்கும் மல்லிகைச் செடியில், அழகான வண்ணத்துப்பூச்சிகள் இரண்டு, அதன் மேல் பறப்பதும், இருப்பதுமாகத் திரிகின்றன. காலதேவனின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் சூரியன், உச்சியை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறான்.
கார்த்திகை மாதக் காங்கையைச் சுமந்துவரும் காற்று, உசாராக வீசிக் கொண்டிருக்கிறது.
மொழு கண்ட உதுமாலெவ்வை, றகுமானியாத் தைக்கா மோதின் லுஹர் தொழுகைக்கான பாங்கை ராகமெடுத்து விடுகின்றார்.
அப்பொழுது, காசோடு போன அப்துறசூல் பேயறைந்தவன் போல் வந்து நிற்கிறான்.
"என்ன அத்திறகுல். என்ன நடந்த?" என் கேள்விக்கு விடையாக, அவன் நேத்திரங்கள் குளமாகின்றன. எண்ணற்ற இன்பச் சுமைகளை இதயத்தில்
பக்கம் 19 'ളഞ്ഞുണ്' - ഉ5 ( ബ്രUgൺ ഉOOI)

Page 12
கொண்டு, இளம் வானம்பாடி போல் பறந்து சென்ற அவன், மீள முடியாத துயரத்தில் கூனிக் குறுகி நிற்கிறான்.
"எனக்கு கலியாணம் வேணாம் சேர்."
"ஏன்ரா, என்ன வெசயம்?"
"அவன் அகமலெவ்வ என்னப் பகடி பண்ணத்தான், அவன்ட மகள எனக்கு கலியாணம் பண்ணித் தாறெண்டு சென்னயாம். லூசிக் கென்னடா கலியாணமெண்டு எனக்கு நல்லா ஏசி, அறஞ்சிம் போட்டான்."
"சீ ஈமான் இசுலாம் தெரியாத குடிகாரப் பயல். அந்த நாயிர செல்லக் கேட்டுக்கு, இப்பிடியெல்லாம் நடந்த ஒனக்குத்தான் முதல்ல செருப்பாலடிக்கணும்."
"அவன் என்ன நல்லாப் பேயனாக்கிப் போட்டான். அவனுக்கு எவ்வளவு வேலயத்தான், சும்மா செஞ்சி குடுத்திட்டன். அவன்ட மகள் சவுதிக்கு போக, நாளைக்கு கொழும்புக்கு போறயாம். அவன் சப்பு லெவ்வக்கனியும், அங்கதான் குந்திக்கிரிக்கான். அவனும் எனக்கு தாறுமாறா ஏசினான். எல்லாம் என்ர தலவிதி."
"அவன் கெட்டான் கழிசறநாய். ஒழுங்கா பொண்டாட்டி புள்ளயஞக்கு சோறுழச்சி குடுக்கேலா, அதுக்குள்ள இவகெல்லாம் பெரியாக்கள். சீ! சவுதிக்கு காரனுகளுக்கு பொண்டாட்டி, புள்ளயள வித்துப் பொழக்கிற பொண்ண நாய்கள்.
ஒன்னப் போல ஒரு உழைப்பாளி. அவன்ட மகளுக்கு மாப்புளயாக் கெடச்சாப் போதா. டேய்! நீ எதையிம் யோசியாம சும்மார்ரா. நான் ஒனக்கு ஒழுங்கான பொண் பாத்து கலியாணம் முடிச்சித் தாறன்."
"சேர், இனி எனக்கு கலியாணமே வேணாம். இந்த ஊரான் நெனக்கிறாய் போல, நான் மகுத்தாகும் வரைக்கும் லூசாகவே இரிந்து மகுத்தாய் போறன். சேர், என்ன எவன் என்ன சென்னாலும் பரவாயில்ல. ஆனா,நீங்க மட்டும் இந்த லூச, ஒரு மனிசனாய் பாத்துகிட்டாப் போதும்."
அப்துறசூலின் இதய வேதனையின் காங்கையில், மானிடம் வெந்து கருகிக் கொண்டிருக்கிறது.
"அத்துறசூல், நீ சாப்பிட்டியா?வா வந்து சாப்பிடு."
அப்துறசூல் என்னை மதித்து, குசினிக்குள் சாப்பிடப் பேர்கிறான். அவன் எனைக்கு என்றுமே, மானிட நேசமுள்ள மனிதன்தான்.
“ஓலை’ - 25 (ஏப்ரல் 2004) பக்கம் 20

விதிகள். விலக்குகள்
வாழ்க்கை கொஞ்சம் புரிகிறதுநீ வளர்க்கும் ஆசைகள் தெரிகிறது! மூர்க்கம் கொண்ட பிறவிகளாய் ஒரு முடிவும் இன்றி விரிகிறது!
யாக்கை எல்லா மனிதருக்கும் பெரு யாகம் எனவே வாய்த்தாலும் சேர்க்கை, குணங்கள், செயல்களிலே உன் செறிவும் சரிவும் சிரிக்கிறது!
காக்கை நிறமும் கறுப்புநிறம்! இசை கனியுங் குயிலும் கறுப்புநிறம்! காக்கை குயிலாய் ஏற்புறுமோ?இசை கனியுங் குரலும் வாய்ப்புறுமோ?
பார்க்கப் பார்க்க ஆசைவரும் எழிற் பாங்கென(ப்) படைத்த மனிதருக்குள் பார்த்தவர் விழிகள் சுழிக்கின்ற உடற் பான்மைகள் குறைகள் படைத்ததுமேன்?
மலர்கள், கனிகள், நறுமணங்கள் மனம் மகிழும் நிலைகள் அவைக்குள்ளே மலமும், பிணமும் மணக்கின்ற சில மலர்கள் கனிகள் வகுத்ததுமேன்?
புலரும் பொழுதுகள் பலருக்கும் நன் புளகம் அளித்தே புலர்ந்தாலும் அழுதே புலம்பும் குரல்கள் களையும் துயர் அமைவாய் நிதமும் கேட்பதுமேன்?
பக்கம் 21 ‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004)

Page 13
தாய்மை பேசும் தெய்வநிலை' அதன் தரத்தை மறக்கும் பெண்மைகளும் ஆண்மை காவல் அரசநிலை' அதன் அறத்தை மறக்கும் ஆண்மைகளும்
நேர்மை இழந்தோ நீ படைத்தாய்? இந் நீதிகள், விதிகள் ஏன்வகுத்தாய்? சீர்மை வகுத்தென் சிந்தைக்குள் நான் சிக்கிச் சுழன்று சிந்தித்தேன்.
விதிகள் அதற்குள் 'விலக்குகளாய் நீ விதைக்கும் நிலைகள், விளக்கங்கள் புதிதா? இல்லை பெரும்பழுது! இது புரிந்தால் வாழ்க்கை பெருந்தெளிவு!
பழிகள். பிழைகள் செய்யாமல் உன் படைப்புத் தவத்துள் பிழைக்காமல் விலையில் மனிதப் பிறப்புதனில் எனுள் விளக்காய் அமர்ந்து ஆள்வாயே!
- நீர்கொழும்பு நதருமலிங்கம்
‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004) பக்கம் 22
 

சொல் புதிது; பொருள் புதிது என்று சொன்ன மகாகவிபாரதி, புரட்சி, பொது உடைமை ஆகிய புதிய சொற்களைத் தமிழுக்குத் தந்தது போல், அவன் வழியில் நின்று 1937ல் பண்பாடு என்னும் புதிய சொல்லைத் தந்தவர் இரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் என்பார் பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள். (தமிழர் பண்பாடு கம்பன் காவியம் 5ம் தொகுதி - பக்கம் 1)
இச் சொல் (பண்பாடு) பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, தமிழில் பண்பு, பண்புடைமை, சால்பு, சான்றாண்மை, ஆகிய சொற்கள் திருக்குறள் கலித்தொகை கம்பராமயணம் ஆகிய நூல்களில் பயின்று வந்துள்ளன.
பண்பாடு எனும் சொல் லத்தீன் மொழியிலுள்ள Cultura, CultuS ஆகிய சொற்களின் நேரடி மொழி பெயர்ப்பாகத் தோன்றினாலும் (இவ்விரண்டு லத்தின் சொற்களுக்கும் நிலத்தைப் பண்படுத்துதல் அழகு. ஆபரணம், தோட்டம் என்றெல்லாம் லத்தீன் அகராதியில் பொருள் தரப்பட்டுள்ளது) இசைவு, செவ்வை, பொருத்தம் என்னும் பொருட்களைக் கொண்ட பண் என்னும் சொல்லிலிருந்தே பண்பு, பண்பாடு ஆகிய சொற்கள் பிறந்திருத்தல் வேண்டும். எனவேதான் அறிஞர்கள் பண்பாடு என்னும் சொல்லை = பண் + படு எனப்பிரித்து விளக்கம் தந்திருக்கின்றார்கள். ஆனால் பேராசிரியர் அறவாணன் அவர்கள், பண்பு பண் ஆகிய சொற்கள் குறிக்கும் பொருளுக்கும் பண்பாடு என்னும் சொல் தரும் பொருளுக்கும் இடையே இணக்கம் இருப்பதாகத் தெரியவில்லை என்கிறார். மேலும் பண்பு + படுதல் = பண்பாடு ஆயிற்று என்பதில் பகரம் - உகரம் கெட்டதற்குத் தக்க காரணம் காட்ட இயலவில்லை. ஆகையால் இவ்விரு சொற்களையும் மூலச் சொற்களாகக் கொண்டு 'பண்பாடு என்ற சொல் உருவாயிற்று என்ற கருத்துப் பொருத்தமில்லை என்றுரைக்கும் அவர் பண்பாடு என்னும் வினைச் சொல்லின் அடியாகப் பண்பாடு தோன்றியிருக்கும் என்பார். இவரது இந்தக் கருதுகோளுக்கு அனுசரணையாக, உடன்படு - உடன்பாடு. வழிபடு வழிபாடு ஆகிய சொற்களை முன்வைப்பார்.
பண்பாடு என்னும் சொல் தோன்றுவதற்கு முன்பு Cultura என்னும் லத்தீன் சொல்லின் பொருளைக் குறிக்க கலாசாரம் என்னும் வட சொல் (?) தமிழில் பயன்படுத்தப்பட்டது. இன்றும் இச்சொல் வழக்கில் இருந்து வருகின்றது. ஆனால் பண்பாடு, கலாசாரம் வேறு வேறு பொருளைக் கொண்டவை என்ற அர்த்தத்தில் படித்தவர்களாலேயே எழுத்திலும், பேச் சிலும் இவ்விரு சொற்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையைக் கற்றோர் அறிந்து கொள்வது நல்லது.
கலாசாரம் என்னும் சொல்லில் இருந்தே கல்ச்சர் (Culture) என்னும் சொல் பிறந்ததாக ஜகத்குரு காஞ்சி சங்கராச் சார்ய சுவாமிகள் குறிப்பிட்டுள்ளமைக்கு (ஒலை 14) அவ்விரு சொற்கள் குறிக்கும் பொருள், அவற்றை உச்சரிக்கும் போது
Udisastb23 ‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004)

Page 14
எழும் ஒசை ஆகியவற்றில் காணப்படும் ஒருவித ஒற்றுமை மட்டுமன்றி, சுவாமிகளுக்கு இயல்பாகவே வடமொழி மீது உள்ள பெரும் பற்றும் ஒரு காரணம் எனலாம்.
எனினும், சமஸ்கிருதமும், லத்தீனும் சகோதர மொழிகள் என்பதால் அம்மொழிகளில் உள்ள சில சொற்களிடையே ஒப்புமை (பொருளிலும், ஒசையிலும்) இருத்தல் கண்கூடு. இதற்கு எடுத்துக்காட்டாக Mater (லத்தீன்) மாதா (வடமொழி) DEUS (லத்தீன்) தேவா (வடமொழி) ஆகிய சொற்களைக் கொள்ளலாம். (Mater, DEUS) என்னும் சொற்களுக்கு மாதா, தேவன் என்று பொருள்.)
கலாசாரம் என்னும் சொல்லை அறிஞர் பலரும் வடமொழி எனக் குறிப்பிடினும் அதன்பகுதியாகிய கலா, கலை எனும் தமிழ்ச் சொல்லின் திரிந்த வடிவம் (நிலவு, நிலா ஆனதுபோல) என்பதே மறைமலை அடிகள், பரிதி மாற் கலைஞர் முதலானோர் கருத்தாகும். இதன் அடிப்படையிலேயே சூரிய நாராயண சாஸ்திரியார் பரிதிமாற் கலைஞன் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். இது தமிழுலகம் அறிந்த செய்தி.
மேலும் கலா என்பது ஒரு தமிழ்ச் சொல் என்று புலவர் குழுவினர் தொகுத்த கழகத் தமிழ் அகராதியும் (பக்கம் 293) குறிப்பிட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது.
பண்பாடு என்னும் சொல் அதிகமாக எழுத்திலும், பேச்சிலும் அடிபடும் காலம் இது. பண்பாடு என்றால் என்ன என்ற கேள்விக்கு பலரும் பலவிதமான விளக்கங்களைத் தந்திருக்கின்றார்கள்.
ஆங்கில மொழியில் உள்ள Culture என்னும் சொல் லத்தீன் மொழியில் Cultura என்னும் சொல்லை அடியொற்றிப்பிறந்ததாகும். இச்சொல் (Culture) பற்றி நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரும் விவாதமே நடைபெற்றது. மத்தியூ ஆர்னல்ட் (Mathew Arnold) என்னும் பேரறிஞர் இச்சொல்லை (Culture) பிரபலப்படுத்திப் பேசியும் எழுதியும் வந்த போது அவரது கருத்தை பிரடெரிக் ஹரிசன் (Frederic Harrison) என்பவர் மறுத்து எழுதினார்.
மத்தியுவின் கருத்துப்படி (Culture) என்பதுஅறிவு, குணம் முதலியன மேலும், மேலும் நிரம்பிச் சமுதாயத்தை மென்மேலும் பேணுகின்ற மனநிலை என்பார் பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள்.
பண்பாடு என்னும் சொல்லுக்குப் பொதுவாக இரண்டுவிதப் பொருளினையே அறிஞர் தருவர். ஒன்று - மனிதரின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சமயச் சடங்குகள், பல்வேறு கோட்பாடுகள் அனைத்தும் பண்பாடு என்பார் ஒருசாரார். ஆனால் பிறிதொருசாரார் மனிதனின் திருந்திய மன அறிவு நிலையே (Intelectual Devolopment) u6iuTG 616ruf.
இவ்விரு கருத்துக்களையும் சீர் தூக்கிப் பார்க்கும் பொழுது மனிதனின் திருந்திய அறிவு நிலையே பண்பாடு என்று சொல்லுவதே பொருத்தமாகும். லத்தீன் மொழியில் Cultura ஆங்கிலத்தில் Culture தமிழில் பண்பாடு ஆகிய சொற்கள் குறிக்கும் துல்லியமான பொருள் மனிதனின் திருந்திய பக்குவப்பட்ட
‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004) பக்கம் 24

மனிநிலையே ஆகும்.
பண்பு' எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல் என்று கலித்தொகையும் பண்புடையார் பட்டுண்டுலகம் என்று வள்ளுவமும் பேசுவதும் மேலே தரப்பட்ட மூன்று சொற்களின் கருத்தினையே என்பதைக் கற்றோர் அறிவர்.
இதனையே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவப் பெருந்தகை,
நிலத்திற் கிடந்தமை கால் காட்டும், காட்டும்
குலத்திற் பிறந்தார் வாய்ச் சொல்
என்றுரைத்தார்.
இவ்வினிய கருத்தை வள்ளுவருக்கு முன்பு வாழ்ந்த கிறிஸ்து யேசுவும், கெட்ட கனிதரும் நல்ல மரமில்லை. நல்ல கனிதரும் கெட்ட மரமில்லை ((லூக் 6: 43 - 44) என்று அழகாகக் குறிப்பட்டுள்ளார்.
நிலத்தைப் பண்படுத்துதல் ஆங்கிலத்தில் Agriculture என்று குறிக்கப்படும். இச்சொல் Ager, Cultura என்ற லத்தீன் சொல்லின் திரிபாகும். (Ager - வயல், Cultura - பண்படுத்துதல்) இச்சொல்லைப் போலவே, பண்பாடு என்னும் தமிழ்ச் சொல்லும் நிலத்தைப் பண்படுத்துவதிலிருந்தே பிறந்திருத்தல் வேண்டும் என்பார் தனிநாயகம் அடிகளார். மேலும் அவர் உழவுத் தொழில் நிலத்தை எவ்வாறு பண்படுத்துகின்றதோ அவ்வாறே மக்கள் மனத்தையும் பண்படுத்துவது பண்பு என்பார். அடிகளாரின் இவ்விளக்கம் பண்பட்ட நிலத்தில்தான் பயிர்கள் நன்கு செழித்து வளரும் என்ற கூற்றை அப்படியே அணி செய்கின்றது. ஆக பண்பாடு என்பது பேராசிரியர் அறவாணன் சொன்னதுபோல் தனிமாந்தரின் உயர் குணச் சீர்மையைக் காட்டும் மனத்தின் இயல்பு. இது மனிதப் பருவத்தின் குழந்தைக் குணம் அன்று. மாந்தர்ப்பருவத்தின் தெய்வக்குணமாகும்.
பண்பாடு நாகரிகம் ஆகிய இரண்டு சொற்களும் ஒரே கருத்தினைக் கொண்டவை என்று சொல்வோர் இக்காலத்திலும் உளர். ஆனால் இவ்விரு சொற்களையும் அணுகி ஆராயும் போது அவை இருவேறு பொருளைக் கொண்டிருப்பதை அவதானிக்க முடியும். நாகரிகம் என்னும் சொல்லின் அடிச் சொல்லாக நகர் என்னும் சொல் அமைந்திருப்பது போல் civilization என்னும் ஆங்கிலச் சொல்லின் அடிச் சொல்லாக விளங்குவன Civilis, Civilitas, Civitas ஆகிய லத்தீன் சொற்களாகும். மேற்படி ஆங்கிலச் சொல் நகரத்து மக்களின் புறவாழ்க்கை முறையை எடுத்துச் சொல்கிறது. இதைப் போன்றே நாகரிகம் என்னும் சொல்லும் அதனை ஒத்த பொருளையே கொண்டுள்ளது. இதனை டாக்டர் மா.ராஜமாணிக்கனார் நாகரிக வளர்ச்சியின் காட்சிச் சாலை கடைத்தெருவே என்று சுருக்கமாகவும், சுவையாகவும் சொல்லி விடுகின்றார்.
நாகரிகம் என்னும் தமிழ்ச்சொல், பண்பாடு என்னும் பொருளில் சங்க இலக்கியத்திலும், திருக்குறளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இப்பயன்பாடு ஒரு விதிவிலக்காகக் கொள்ளப்பட வேண்டும் என்பதை தனிநாயகம் அடிகளாரின் பின்வரும் வாசகம் உறுதி செய்கின்றது. நாகரிகம் நகர வாழ்க்கையையும் நகர - வாழ்க்கையால் பெறப்படும் நலன்களையும்
Uđ6b 25 ‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004)

Page 15
குறிப்பதுடன் அறிவியல் துறையால், பொருளியல் துறையால் மக்கள் அடைந்து வரும் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் குறிக்கத்தான் பயன்படுத்தப்பட வேண்டும்.
முடிவாக பண்பாடு - என்பது மனத்தோடு தொடர்பு கொண்டிருப்பது போல நாகரிகம் மனிதனின் புற வாழ்க்கையை எடுத்துக் காட்டும் கண்ணாடியாக விளங்குகின்றது.
இதனால் - பண்பாடுள்ளவன் நிச்சயமாக நாகரிகம் உள்ளவனாக இருப்பான் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. அதே போன்று நாகரிகம் உள்ளவன் பண்பாடு உள்ளவனாக இருப்பான் என்று எண்ணுவதும் பேதமையாகும்.
- வாகரைவாணன்
வரதட்சனை ஒழிந்திடுமா?
-இணுவை சக்திதாசன், டென்மார்க்
பன்னிர்ப் பந்தலுக்காய் போர்வைக்குள் காத்திருக்கும் சீதைகள்! சுகங்கேட்கிறோமே! கண்ணில் முகங்கழுவி - தினம் தன்னை மறந்து அகம் சிரிக்க மறந்த தங்களுக்காய் வாளும் கோதைகள்! gg6)16oft IDT - 6)IT
தட்சனை கேட்கின்றாய்! தவமிருந்து பெற்ற பிள்ளை வேண்டாம் மகனே! ஊமையாய் பிறந்துவிட்டால் தட்டிக்களிக்கலாமோ! சீதனமென்னும் மாயப்
பேயைக் கொழுத்தி பெருமை பேசிடும் புதியசாலை பெண்களுக்கு மட்டும் திறந்து வைப்போம்! என்னவிந்த சிறுமை சீதனக்கொடுமை! திறவுகோல் உன்னிடம்
திரும்பிப் பாராதே! சில்லறைக்காசாய் திறந்துவிடு முதலில் - ஆயிரம் சிதறுது மனசு! திறவுகோல் உன் பின்னாலே! சீர்பெற சீதனமென்ன? கணக்கு! கள்ளியென முளைக்கும் கண்களென்கிறோமே முள்ளை வெட்டியெறிந்து பார்வைக்கு ஏற்றமிகு சமுதாயத்தை தங்களிடம் பணங்கேட்கிறதா? ஏற்றி வைப்போம்!!
(ID
‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004) பக்கம் 26

அமரர் திரு.சேனாதிராஜா (வண்ணை. சே.சிவராஜா) முன்னாள் பிரதி அதிபர் யாழ் இந்துக்கல்லூரி
கொழும்புத் தமிழ்ச்சங்க அங்கத்தவரும், யாழ் இலக்கிய வட்டத்தின் மூத்த எழுத்தாளருமான வண்ணை சே.சிவராசா அவர்கள் ஈழத்து எழுத்தாளர் வரிசையில் நினைவு கூரப்பட வேண்டியவர்களில் குறிப்பிடத்தக்கராவார். இவர் 1950 களின் இறுதி. யிலிருந்து இலக்கிய உலகத்திற்கு, அவ்வக் கால ஓட்டத்தினைப் பிரதிபலிக்கும் கதை<கள், கவிதைகள், கட்டுரைகள் பலவற்றையும் எழுதியுள்ளார். ஆரம்பத்தில் சஞ்சிகைகள், பத்திரிகைகளில் இவரது ஆக்கங்கள் வெளிவந்தன. இறுதியாக இவரால் 1999ம் ஆண்டு எழுதி, வெளியிடப்பட்ட "சிவாவின் சிறுகதைi. கள்" என்ற சிறுகதைத் தொகுதி, சிறுகதை ஜறதஐத ட (தற42002 இலக்கியத்திற்கான அரச சாகித்திய விரு” தையும் வடக்கு - கிழக்கு மாகாண சாகித்திய மண்டல விருதினையும் பெற்றுக் கொடுத்தது.
இலங்கை எழுத்தாளர்களது நூல்கள், நயம் காணலுக்காக நடைபெற்று வரும், கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் "நூல்நயம் காண்போம்" நிகழ்ச்சி ஆரம்பித்த காலத்தில் ஓர் எழுத்தாளன் என்ற ரீதியில் வண்ணை சே.சிவராஜா அவர்கள் அங்கு தவறாமல் வருவதுண்டு. அன்றைய தினம் நயம் காணும் நூலினை, நயம் காண்பவர் தனது நயவுரையாக கூறிய பின் நடைபெறும் கருத்துரையில் இவர் தனது விமர்சன குறிப்புகளைக் கூறி, நிகழ்ச்சி சிறப்பற அமைய உதவினார். நயம் காணப்பட இருக்கும் நூலினை, நயம் காணப்படும் தினத்திற்கு முன் ஆழமாக வாசித்து வந்தால் மட்டுமே அதைப்பற்றி விமர்சிக்க முடியும் என்ற கருத்தினைக் கொண்டு இருந்ததால். தன்னைத் தயார் நிலைப்படுத்தியே செல்வார். அத்துடன் அவர் தனது கருத்துக்களை ஒளிவுமறைவின்றி, அச்சமின்றி, துணிவுடன் வெளியிடுவார். வண்ணை சே.சிவராஜா அவர்கள் ஆசிரியராக இருந்த காரணத்தால் கல்வியின் நோக்கம் "சமூக இசைவாக்கம்" என்ற கருத்தினை ஏற்று இருந்ததால் தான். தலித்தியம், பெண்ணியம், சூழலியம் போன்ற பிரச்சினைகளைத் தொட்டுச் செல்லாமல் மிக கவனமாக தனது கருத்துக்களை வெளியிடும் ஆற்றல் படைத்திருந்தார்.
பக்கம் 27 ‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004)

Page 16
ஆரம்ப காலத்தில் தனது ஆக்கங்களை "வண்ணைவராஜன்
"முக்கண்ணன்" "சிவகவி" "ஊடாடி" என்ற புனை பெயர்களில் எழுதி வந்த இவர், பின் வண்ணை சே.சிவராஜா என்ற பெயரில் எழுதினார். பல்வேறு சமய, சமூக நிகழ்ச்சிகள் நடைபெறும் முக்கிய தினங்களில் இவரது கவிதை, கட்டுரைகள் பத்திரிகைகளில் தவறாமல் வெளிவந்தன. மாணவர்களின் அறிவு வளாச்சிக்காக அறிவுசார் விடயங்களை ஆரம்பத்தில் எழுதினார். மாணவனாக இருந்த காலத்தில் யாழ் இந்தக்கல்லூரிச் சஞ்சிகையான "இந்து இளைஞன்" சஞ்சிகையில் ஆரம்பித்த இலக்கிய ஆர்வம், "சுடர் பத்திரிகையில் தொடர்ந்து இவரை சிறந்த எழுத்தாளராக்கியது.
இலக்கிய ஆர்வம் கொண்டவரான இவர் தான் எழுதிய வாசித்த கவிதை, கதைகள், கட்டுரைகள், பேட்டிகள், கேள்வி - பதில் போன்ற விடயங்களை தனது நண்பர்கள், அன்பர்கள், அயலவர்கள், மாணவர்கள் யாபேரையும் கட்டாயப்படுத்தி வாசிக்க வைப்பார். அத்துடன் அவர்களின் கருத்துக்களையும் கேட்டுக் கொள்வார். தனது பிள்ளைகளும், சிறுவர்களாக இருந்த காலத்தில் அவர்கள் தரத்திற்கு ஏற்றதாக வெளிவரும் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து ஊக்குவித்தார். சிறுவர் மலர்கள், கலைமகள், ஆனந்தவிகடன், குமுதம் போன்ற சஞ்சிகைகளையும் ஒழுங்காக வாங்கி தாம் வாசித்த பின் ஏனையோருக்கும் வாசிக்கக் கொடுப்பார். இவ்வாறு வாசிப்பு பழக்கத்தினை ஏற்படுத்த விரும்பினார். தனது வீட்டின் இரு அறைகளை புத்தகத்திற்கான அறைகளாக வைத்திருந்தார். ஓர் அறையில் தனது புத்தக தேட்டங்களையும், மற்ற அறையில் பொது விடயங்கள், சுற்றறிக்கைகள், பத்திரிகைத் துணுக்குகள் போன்றவற்றையும் வைத்திருந்தார். வாசிப்பு மனிதனைபூரணப்படுத்துவதால் எந்த விடயத்தைப் பற்றி ஆலோசனை கேட்டாலும் ஆலோசனை கிடைக்கும் எனச் செல்பவர்களுக்கு ஆலோசனை சொல்லும் பண்பாளராக விளங்கினார்.
இளைஞனாக இருந்த காலத்தில் இருந்து பல்வேறு சமய, சமூக தாபனங்களில் தலைவர், செயலாளர் போன்ற பதவிகளை வகித்து அவற்றின் வளர்ச்சிக்கு உதவிய பெருமை இவருக்கு உண்டு.
யாழ்.இலக்கிய வட்ட செயலாளராகவும் இலங்கை இலக்கிய பேரவை செயலாளராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. புகழ்பூத்த யாழ்.இந்துக்கல்லூரியின் பிரதி அதிபராக அருந்த இவர் நிர்வாகத்திறனும், ஆளுமையும் கொண்டவராக விளங்கினார். தோற்றத்தில் கூட ஆளுமை உடையவராகவும், முக வசீகரமும், எளிமையான தன்மையும், எவரையும் தன்பால் ஈர்க்கக் கூடிய தன்மைகளையும் கொண்டு காணப்பட்டார். நல்ல பண்பாளராக விளங்கிய இவர் அன்பும், இன்சொல்லும் பேருபகார சிந்தையும், விருந்தோம்பலும் கொண்ட நிறை மனிதராக திகழ்ந்தார்.
-ஜெயபாலரட்ணம்
‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004) பக்கம் 28

ஆண்டவனே!
தாமரைத்தீவான்"
1. ஏமாற்றி ஏமாற்றி வந்தாரே, நாமும்
ஏமாறி ஏமாறி வந்தோமே! ஆமாமாம் இன்றும் அதேவழிதான், அட அவர்கள் இன்னும் திருந்தலையே!
2. வந்தனர் பெற்றன்ர் வாழ்கிறார் முன்னமே வாழ்ந்தவர் நாமிங்கு மாளுகிறோம்! பிந்தியதை முந்த விட்டதெல்லா மெங்கள் பேதமையே - அறியாமையதே!
3. கையிற் கிடைத்ததை விட்டுவிடாமலே
காத்திடவே ஒரு காலில் நிற்பார்! மெய்யாகவே அவர் மேலோங்கிப் போவதில் மெத்த மகிழ்ச்சிதான் - ஓர் துயரம்?
4. எம்மையும் சேர்த்துமே போயிருந்தாலிங்கு
எந்தத்துயரும் வளர்ந்திருக்கா! தம்மைத்தாம் பார்த்துமே போனதினாலின்று சந்தி சிரிப்பது யார்க்கிழிவோ?
5. உள்ளம் கொடுக்காதே என்றுரைக்கும், ஆனால்
உதடுதருவதாய் நாள் கடத்தும்! அள்ளித்தரப் பெறச் சுக்குமில்லை, அது அற்புதமான மிளகுமில்லை!
6. சூனாவை நீக்கியே தந்திரம் காட்டுதல்
தூய விடுதலை ஆகிடுமோ? தேனாகப் பேசியே செய்கையில் நஞ்சிடல் தீர்வாகியே நம்மை வாழ்த்திடுமோ?
7. கேட்டுக்கிடைக்கா உரிமைகளைப் புவி
கிண்டி எடுத்தே தரும்வரையும் வேட்டுக்களே வழியாகப் படுமெனில் வேதனைதான் - பெருஞ் சாதனைதான்!
8. எத்தனை காலந்தான் ஏமாற்றுவார், நாமும்
ஏமாறுவோம்? அட, ஆண்டவனே! பற்றாக்குறைக் கிந்தப் பாலைவனத் தழல் பாதிக்குதே பயிர் பச்சைகளை?
பக்கம் 29 ‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004)

Page 17
சங்கப்பலகை
தாய் நாடா தஞ்சமா - நாடகம் 03.03.2004 புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு சங்கத் துணைத் தலைவர் இரா.கந்தரலிங்கம் அவர்களின் தலைமையில் இலண்டன் கிங்ஸ்பெரி தமிழ்ப் பாடசாலை அதிபர் திருமதிகுணா வேலுப்பிள்ளை அவர்களின் கதை-வசனம்-நெறியாள்கையில் இலண்டன் தமிழ் முதியோர் நிலையம் வழங்கிய "தாய் நாடா? தஞ்சமா?" என்ற நாடகத்தின் வீடியோக் காட்சி இடம் பெற்றது.
சர்வதேச மகளிர் தினம் 07.03.2004 மார்ச் 08 இடம் பெறும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்குச் சங்கத் துணைத் தலைவர் செல்விசற்சொரூபவதிநாதன் தலைமையில் 'வளர்ச்சிப்பாதையில் நாம் என்ற தொனிப் பொருளில் சர்வதேச மகளிர் தினவிழா இடம் பெற்றது. பின்வரும் நிகழ்வுகள் நடைபெற்றன.
பெண்ணின் பெருமை - பாடல் இசைத்தவர் திருஎஸ்ப்.கணேஸ்வரன் (தென்றல் அறிவிப்பாளர்) வரவேற்புரை திருமதி.பத்மா சோமகாந்தன் (ஆட்சிக்குழு உறுப்பினர், கொழும்புத் தமிழ்ச்சங்கம்
தலைமை செல்வி சற்சொரூபவதி நாதன் (துணைத்தலைவர். கொழும்புத் தமிழ்ச்சங்கம்)
"ஓE' - ஒ8 (ஒரப்ரல் 2001) பக்கம் 30
 
 
 

பிரதம அதிதி கலாநிதிதிருமதிமனோன்மணி சண்முகதானப் "வளர்ச்சிப் பாதையில் யப்பானியப் பெண்கள்"
சிறப்புரைகள் திருமதி.ஆனந்தி பாலசிங்கம்(துணை ஆசிரியர், தினகரன்) "ஊடகத்துறையில் பெண்கள் திருமதிதித்யவதி நித்தியானந்தன் (ஆய்வு அலுவலர். இந்துசமய கலாசார விவகாரத் திணைக்களம்)
ப்வுத்துறையில் பெனர்கள்"
SR: ୫:
拂 诽
அரட்டை அரங்கு "பெண்கள் இன்னமும் தாழ்த்தப்பட்ட நிலையிலா உள்ளனர்?"
(சபையினர் பங்குபற்றும் நிகழ்ச்சி)
||||||||||||||||||||||| ھ سے خm | 懿 鼎 i.
雌 A. 播
| 枋
মুণ্ডািঢ় எழுதிய நம்ம கதை" - வில்லுப்பாட்டு நிகழ்ச்சி வானொலிக் கலைஞர் ஜெயந்தியும் குழுவினரும் நெறியாள்கை சற்சொரூபவதி நாதன் நன்றியுரை திருமதிஅபுவனேஸ்வரி (துணைப் பொதுச்செயலாளர். கொழும்புத் தமிழ்ச்சங்கம்)
பக்கம் 31 "ஓலை" - 28 (ஒரப்ரல் 2004)

Page 18
சிறப்புரை
12.03.2004 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சங்க ஆட்சிக்கு உறுப்பினர் திருமதி.பத்மா சோமகாந்தன் தலைமை யில் திருமதி. மீரா வில்வராயர் (அழகியற் துறை, தேசிய கல்வி நிறுவனம்) அவர்கள் 'சுவாதித் திருநாள் மகாராஜா' பற்றிச் சிறப்புரை நிகழ்த்தினார். இதன் போது அவர் பாடிய பாடல்கள் சபையில் பாடப்பட்டு விளக்கங்கள் வழங்கப்பட்டன.
பாடல் செல்வி வானதி உதயசங்கர்
வயலின் - திருமதி. ஜெகதாம்பிகை
கிருபானந்தமூர்த்தி
மிருதங்கம் - திரு.மா.கேசவன்
சுகாதாரக் கருத்தரங்கு
13.03.2004 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு சங்கத் தலைவர் திரு.பெ.விஜயரத்தினம் தலைமையில் அதி இரத்த அமுக்கம்' தொடர்பான கலந்துரையாடலும் பரிசோதனையும் இடம் பெற்றன. டாக்டர்வமுரளி அவர்களால் அதிஇரத்த அமுக்கம், அதன் பாதிப்பு தொடர்பாக சிலைட்" காட்சி காண்பிக்கப்பட்டுக் கருத்துரைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நுகர்வோர் தினம்
16.03.2004 செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்குச் சங்கத் தலைவர் திரு.பெ.விஜயரெத்தினம் தலைமையில் இடம்பெற்ற சர்வதேச நுகர்வோர் தின விழாவில் சிறப்புரைகள் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர்களான திரு.வெ.சபாநாயகம் (பாவனை யாளர் அலுவல்கள் அதிகாரசபை உறுப்பினர்), சட்டத்தரணி இரா.சடகோபன் ஆகியோரால் நிகழ்த்தப்பட்டன.
"ஓலை". ஒ5 (ஏப்ரல் 2004) பக்கம் 32
 
 
 

82வது ஸப்தாபக தினவிழா கொழும்புத் தமிழ்ச்சங்க ஸ்தாபக தினத்தை (22.03.1942) முன்னிட்டு 62வது ஸ்தாபகதினவிழா 21.03.2004, 22.03.2004 ஆகிய இருதினங்கள் சங்கத்தலைவர் திரு.பெ.விஜயரெத்தினம் அவர்களின் தலைமையில் கொழும்புத் தமிழ்ச்சங்கம், சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வுகள் வருமாறு,
21.03.2004 ஞாயிற்றுக்கிழமை
--
ஐ:
பிரதம அதிதி - ஜனாதிபதி சட்டத்தரணிதிரு.க.கண்காஸ்வரன் மாலை 5.30 - மங்கல விளக்கேற்றல் 535 - தமிழ் வாழ்த்து
செல்வி கவினாளி சிறீஸ்கந்தராசா செல்வன் நிர்மல் சிறீஸ்கந்தராசா 5.40 - சங்க கீதம் 545 - வரவேற்புரை: உடப்பூர் வீர சொக்கன்
(ஆட்சிக்குழு உறுப்பினர், கொழும்புத்தமிழ்ச்சங்கம்) 5.5) - தலைமைxபுரை 5.55 - சிறப்புச் சொற்பொழிவு ஆர் கோபிநாத்
முகாமைத்துவப் பணிப்பாளர், வரை ஆயுட் காப்புறுதிக் சுட்டுத்தாபனம், இலங்கை) "அன்றும் இன்றும் என்றும் திருக்குறள்" 6.25 - பிரதம அதிதி உரை 6.30 - உரை : திரு.வெ.சபாநாயகம்
(ஆட்சிக்குழு உறுப்பினர், கொழும்புத்தமிழ்ச் சங்கம்) "சங்கம் வளர்த்து அன்றோர்கள் வரிசையில் சேர், சிற்றம்பலம் கார்டினர் (முதல் காட்பாளர்) அவர்கள் ஆற்றிய பணிகள்" t40 சிறப்பு அதிதி உரை
பக்கம் 33 "ஓலை" - ஒ5 (ஏப்ரல் 2004)

Page 19
4ே5 - உரை திருமதி.பத்மா சோமகாந்தன்
(ஆட்சிக்குழு உறுப்பினர், கொழும்புத் தமிழ்ச்சங்கம்) "சங்கம் வளர்த்த சான்றோர்கள் வரிசையில் க.ச.அருணந்தி (முன்னாள் தலைவர்) அவர்கள் ஆற்றிய பணிகள்" .ே55 - கலைநிகழ்வு
"இலக்கியக் கதாபாத்திரங்கள் புத்துயிர் பெற்றுவந்தால்." பங்குபற்றுவோர்; செல்விகள். எல்.பவித்ரா, வி.சரோஜா, ஜே.றோமானி, ஆர்.காஞ்சனா, ஆர்.கங்காதேவி, என்.வினோஜினி
நீர் கொழும்பு, விஜயரத்தினம் இந்துக்கல்லூரி மாணவிகள் 755 - நன்றியுரை கா.வைத்தீஸ்வரன்
(நிதிச் செயலாளர், கொழும்புத் தமிழ்ச்சங்கம்) 8.00 - தமிழ் வாழ்த்து.
(நிகழ்ச்சித் தொகுப்பு - செல்வி சற்சொரூபவதி நாதன் (துணைத் தலைவர் கொழும்புத் தமிழ்ச்சங்கம்)
22.0$.200虫 திங்கட்கி бор
பிரதம அதிதி : மாண்புமிகு நீதியரசர் கபூரிபவன் அவர்கள்
(மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்} சிறப்பு அதிதி : திரு.செ.இராகவன் அவர்கள்
(தலைமையதிகாரி சர்வதேசப்பிரிவு கொமர்சியல் வங்தி) மாலை 5.30 - மங்கல விளக்கேற்றல் 5.35 - தமிழ் வாழ்த்து
செல்கிரி கிர்த்தனா இராஜேந்திரா செல்வி ஹம்சத்வனி சிவநாதன் 54 - சங்க கீதம்
"ஓலை’ - ஐகு (ஒரப்ரஸ் ஒப்ப்பு) பக்கம் 34
 

நீர்தி =
fi, -
fi, -
5 -
, -
-
பூக்கர் 35
வரவேற்புரை
சட்டத்தரணி- ஆர்.சடகோபன் (ஆட்சிக்குழு உறுப்பினர். கொழும்புத்தமிழ்ச்சங்கம்) தலைமையுரை
சிறப்புச் சொற்பொழிவு திருமதி,ரபி.வலன்ரீனா பிரான்சிஸ் (விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்) "மட்டக்களப்பில் புனைகதை இலக்கிய வளர்ச்சி"
கொழும்புத் தமிழ்ச்சங்க முத்த உறுப்பினர்கள் மூவர் "சங்கச் சான்றோன் விருது-2004" வழங்கிக் கெளரவிப்பு பிரதம அதிதி உரை
சிறப்பு அதிதி உரை
உரை:
பன்மொழிப் புலவர் - த.கனகரத்தினம் "சங்கம் வளர்த்த சான்றோர்கள் வரிசையில் திரு.மு.வ. ஆயிரவப்பிள்ளை (முன்னாள் தலைவர்) அவர்கள் ஆற்றிய பணிகள்" "இசைநிகழ்வு"
திரு.பகவத்சிங் நித்தியானந்தன் (தயாரிப்பாளர், இசைப்பிரிவு. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ்ச் சேவை)
நன்றியுரை
ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி (பொதுச்செயலாளர், கொழும்புத்தமிழ்ச்சங்கம்)
தமிழ் வாழ்த்து
நிகழ்ச்சித் தொகுப்பு - செங்கதிரோன்
"36)51” – 35 J6 gXX)

Page 20
குறுந்திரைப்படக்காட்சி 25.03.2004 வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் அவர்கள் தலைமையில் 'ஸ்கிறிப்ற் நெற் வழங்கிய சமாதானச் சுருள் குறுந்திரைப்படக் காட்சி இடம் பெற்றது. பேராசிரியர் சோ.சந்திரசேகரம் (துணைக்காப்பாளர்) அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த நிகழ்வில் அறிமுக உரை திரு. அயன்மாஸ்ரர்ஸ் (திட்டப்பணிப்பாளர் - ஸ்கிறிப்ற் நெற்) அவர்களாலும் நன்றியுரை திரு.கா.ஞானதாஸ் (திட்ட இணைப்பாளர், ஸ்கிறிப்ற் நெற்) அவர்களாலும் நிகழ்த்தப்பட்டன. ஏழு குறுந் திரைப்படங்கள் காண்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் சபையோர் குறிப்புரையும் இடம் பெற்றது.
காண்பிக்கப்பட்ட குறுந்திரைப்படங்கள்:
போருக்குப்பின்.
திரைக்கதை : யமுனாராணி செல்லத்துரை
இயக்கம் ஜெயரஞ்சனி ஒளித்துப்பிடித்தல்.
திரைக்கதை & இயக்கம் : டிலோன் வீரசிங்க
g560) ...
திரைக்கதை & இயக்கம் : அல்பேட் பவுலஸ் அதிகாலையின் இருள்.
திரைக்கதை & இயக்கம் ; ஆனந்த அபேநாயக்க மூக்குப்பேணி.
திரைக்கதை & இயக்கம் : இராகவன் செருப்பு.
திரைக்கதை & இயக்கம் கெளதமன் அழுத்தம்.
திரைக்கதை & இயக்கம் : ஞானதாஸ்
அகவை 90 பூர்த்தி விழா 27.03.2004 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்குச் சங்கத் தலைவர் திரு.பெ.விஜயரெத்தினம் தலைமையில் சங்க முன்னாள் தலைவர் திரு.கா.பொ.இரத்தினம் அவர்களது அகவை 90 பூர்த்தி விழா நிகழ்வு இடம்பெற்றது.
“ஓலை’ - 25 (ஏப்ரல் 2004) − பக்கம் 36

றிவோர் ஒன்று கூடல் - !
திகதி விடயம் நிகழ்த்தியவர்
10.03.2004 சிலப்பதிகா த் தொடர் புராணவித்தகர் மு.தியாகராசா
(240) வாழ்த்துக் காதை
24.03.2004 புறநானுற்றுச் சைவப் புலவர் சு.செல்லத்துரை
(241) சிந்தனைகள்
31.03.04. சிலப்பதிகாரத் தொடர் புராணவித்தகர்
(242) வாழ்த்துக்காதை திரு.மு.தியாகராஜா
நால்நயம் காணர்போம்.
05.05.2000இல் ஆரம்பித்து பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.30மணிக்கு நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் இலங்கை எழுத்தாளர்களது நூல்கள் நயம் காணலுக்காக எடுத்தாளப்படுகின்றன.
திகதி விடயம் நிகழ்த்தியவர்
05.03.2004 இலங்காபுரி நாகரிகம் பேரறிஞர் வைத்திய கலாநிதி (128) கே.பாலசுப்பிரமணியம்
12.03.2004 | வாக்கேயகாரர் வரிசையில்
மீரா.வி (129) சுவாதி திருநாள் மகாராஜா திருமதி.மீரா.வில்வராஜா
19.03.04. -
(30) சோதிடமும் பகுத்தறிவும் கலாநிதி.க.கணேசலிங்கம்
2ಜ್ಜು! தமிழ்ப்புலவர் வரிசை -III பண்டிதர் சி.அப்புத்துரை
பக்கம் 37
சங்கப்பலகை தயாரிப்பு :
சி.சரவணபவன் (துணை
நிதிச்செயலாளர்)
‘ஓலை’. 25 (ஏப்ரல் 2004)

Page 21
கொழும்புத் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் முனைவர் கா.பொ.இரத்தினம் அவர்களின் 90வது அகவை பூர்த்தியை (10.03.2004) யொட்டி கொழும்புத் தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் 28.03.2004 அன்று நடைபெற்ற விழாவில் 'செங்கதிரோன் வழங்கிய கவிவாழ்த்து.
அகவை தொண்ணுறு அடையும் ஐயா! நீவிர் சுகம் இனும் பெற்றுச் சுடர்க! சுடர்கவே! வேலணை உங்களை விதைத்தது- இன்று விருட்சமாகி விளங்கவும் வைத்தது.
ஆசிரியம் உங்கள் ஆரம்பப்பணி - பெரியோர் அதனைப் பேசிடும் வண்ணம் பெரிதாய்ப் புரிந்தனை! பண்டிதமணியிடம் படித்துத் தமிழில் பண்டிதர்' ஆகும் பாக்கியம் பெற்றனை!
தமிழுடன்ஆங்கிலம் அறிந்தனை! எனினும் அமிழ்தாம் தமிழை அரியணை ஏற்றவும் அறிவியல் மொழியாய் அதனை ஆக்கவும் குறிதவறா தொரு கொள்கையில் என்றுமே நெறிதவறாது நீர்! நீடு உழைத்தனை!
தமிழ் மறை'திருக்குறள் தரணியில் புகழ் பெற தனியனாய் நின்று தமிழ்ப் பணிபுரிந்தனை! 'தமிழ்மறைக் கழகம் தாங்கள் அமைத்து ஆற்றியபணிகளோ அளவில் பெரியன.
தலைநகர் கொழும்புத் தமிழ்ச்சங்கம் தங்கள் தலைமையில் அன்று தலைநிமிர்ந்தெழுந்தது! மூச்சே தமிழாய் முன்னின்றுழைத்தனை! முருகு' எனும் சஞ்சிகை அன்று முகிழ்ந்தது.
சங்கத்தலைவனாய் சான்றோர் நீங்கள் சரித்திரம் சொல்லும் சாதனை படைத்தனை எங்கும் தமிழாய் எல்லாம் தமிழாய் இருக்கவே என்றும் இடையறாது ழைத்தனை!
‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004) பக்கம் 38
 

'சங்கச் சான்றோன்' விருதினை வழங்கியும் சங்கை செய்ததில் முதல்வர் நீங்களே!
உங்கள் பணிகள் உயர்ந்தவை - இன்று உலகம் முழுவதும் உரைக்கப்படுவன பண்டிதர்' என்றால் இரத்தினம் என்றே பலரும் அறியும் பாங்கில் உயர்ந்தனை!
பாராளுமன்றத்தில் பதினெட்டு ஆண்டுகள் போர்செய்து தமிழழைப் போற்றி வைத்தனை! -தமிழுக்கு புறக்கணிப்பு எங்கோ அங்கெலாம் ஓடி அறப்போர் ஆடிய ஆண்மைச் சிங்கமே!
போர் என்று வந்தால் உன்னில் புயலும்தான் தோற்றுப் போகும்! ஆம் - சொற்போர் என்று வந்தால் உன்னில் புயலும்தான் தோற்றுப் போகும்!
பண்டிதர் எழுந்து நின்றால்
பாராளுமன்றம் - சற்றுப்
பயத்திலே ஆடிப்போகும்!
கேள்விகள் கேட்டுக் கேட்டுக் கிலிகொள வைப்பார் -நாட்டில் பேர் பெற வாழ்ந்தோன்! உம்மைப் பெற்றவள் பேறு பெற்றாள்!
தளர்வுறும் வயதில் இன்னும் தமிழையே எண்ணி எண்ணி கிளர்வுறும் கிழவன் -நாங்கள் கிழவனாய்க் காணவில்லை!
இளைஞனாய் என்றும் எங்கள்
இதயத்தில் ஏற்றி வைத்து அகவையோ நூறைக் காணும் ஆவலில் உள்ளோம் நீண்ட ஆயுளைப் பெற்று நூறு ஆண்டுகள் வாழ்க வாழ்க!
CTD
Udisastb 39 ‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004)

Page 22
வும் கரங்கள் ஒலை ஓங்கி வளர்வதற்காக உதவிக் கரங்கள் வழங்கிய இவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்
இ.வாசன், லண்டன் 2000.00 செல்விதங்கம்மா அப்பாக்குட்டி, தெல்லிப்பழை 1000.00 சைவப்புலவர்.சு.செல்லத்துரை, இளவாலை, யாழ்ப்பாணம்600.00 சி.ஜெயவர்மன், கொழும்பு -06 500.00 சுலைமான் லெவ்வை, சீனன்குடா, திருகோணமலை 500.00 கா.வை.சிவப்பிரகாசம், கண்டி 500.00 அல்ஹாஜ் எஸ்.எம்.எம்.மப்ரூப், கண்டெஸ்ஸ 250.00 மருதுர்வாணன், மருதமுனை (கி.மா) 200.00
“ஓலை’ - 25 (ஏப்ரல் 2004) பக்கம் 40
 

lp53
4- GIGOJEl
கண்ணன் ஒவியம் வரைகிறான். கண்ணன் ஒவியம் தீட்டுகிறான். இந்த இரண்டு தொடரில் வரைதல், தீட்டுதல் என இரண்டு சொற்கள் உள்ளன. வரைதல் என்றால் என்ன? திட்டுதல் என்றால் என்ன.
ஒரு யானையை ஓவியமாக்க நினைக்கும் கண்ணன் முதலில் கரிக்கோலால் யானையின் உருவத்தைக் கோடுகளுக்குள் கொண்டுவர முயல்வான். பிறகு கோடுகளால் உறுதி செய்யப்பட்ட யானை உருவத்தைக் கலையும் கவர்ச்சியும் மிக்கதாக ஆக்க அதே கரிக்கோலால் திற்றுதல் வேலை செய்வான். இந்தத் திற்றுதல் வேலையே திட்டுதல் என ஆயிற்று.
ஆக, வரைதல் என்பது கோடுகளையும், தீட்டுதல் என்பது மெல்லிய வேலைப்பாட்டினையும் குறிக்கும் என அறிதல் வேண்டும். நம் பக்கத்து வீட்டுக்காரர் நிலம் வாங்கினார். நம்மை அழைத்துச் சென்று தாம் வாங்கிய நிலம் இதுவரை உள்ளதென்று காட்டினார். அவர் சொன்ன இதுவரை என்பதின் 'வரைக்கு' என்ன பொருள். ஓர் இடத்தை வேறொரு இடத்திலிருந்து பிரித்தறிதற்கு நாம் என்ன செய்கிறோம். கோடு போடுகிறோம். இந்தக் கோட்டுடன் என் நிலம் உள்ளது என்பதைத்தான் இதுவரை என் நிலம் உள்ளதென்று சொல்கிறோம். கோடும் வரையும் ஒன்றே.
வரைவு, வரைவு கடாதல், வரைவுமலதல், வரைவுவேட்டல், வரைவு நீட்டித்தல், வரைடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் என்னும் சொல்லாட்சிகள் யாவும் 2600 ஆண்டுகட்கு முற்பட்ட தொல்காப்பியத்திலேயே இடம் பெற்றனவாகும். இந்த வரைவுகள் யாவும் திருமணம் குறிப்பன.
மனம்போன போக்கில் ஆண் பெண் உறவு நிலைகள் மக்களினத்தில் தொடக்க காலத்தில் இருந்தன. விலங்குகளைப் போல் அலைந்து திரிந்து கொண்டிருந்த காலத்தில் இந்த நெறிமுறையற்ற வாழ்க்கை பெரிய சிக்கலைத் தோற்றுவிக்கவில்லை. குடும்பமாக ஊராக நாடாகக் கூடி வாழத் தொடங்கிய போது ஆண் பெண் உறவில் கட்டுப்பாடும் நெறிமுறைகளும் தவிர்க்க முடியாத தேவையாகிவிட்டன.
தமிழினம் ஆண் பெண் உறவில் கடந்து வந்த இந்த நிலையைத்தான் "வரைவு' என்னும் இந்தச் சொல் புலப்படுத்திக் கொண்டுள்ளது. ஆணும் பெண்ணும் உனக்கு நான் எனக்கு நீ என ஒர் எல்லைப்படுத்திக் கொண்டு
ué65ub 41 ‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004)

Page 23
வாழத் தொடங்கிய போதுதான் வரை - வரைவு என எல்லைப் பொருளில் திருமணம் குறிக்கும் இச்சொல் பிறந்தது.
திருவள்ளுவர் காலம் வரை பொதுமகளிரைக் குறிக்கச் சில சொற்கள் தமிழில் இருந்தன. பரத்தையர், பொருட்பெண்டிர், விலைமகளிர் என்பன அவற்றுள் சில. குடும்ப மகளிரைப் போல ஒருவனோடு நெறிபிறழாது எல்லைப்படுத்திக் கொண்டு இவர்கள் வாழ்க்கை அமையவில்லை. ஆதலால் இவர்களை வரைவின் மகளிர் (வரைவு இல் மகளிர்) என வேறொரு புதுச்சொல்லால் வள்ளவர் சொல்லிக் காட்டினார்.
-இன்னும் அறிவோம்
(D
நன்றி : தமிழறிவோம்' - முனைவர் கு.அரசேந்திரன்
( !,ങ്ങuji இரண்டு தட்டிகளும்
எங்கிருந்தோ, எப்போதோ இங்கு வந்து, எண் வீட்டில் தங்கிவிட்ட பூனையொன்று நாளடைவில் கருவுற்று, பருப்பமாகிக் கொழு, கொழுவெனக் குட்டிகளிரண்டை வட்டியாய்ப் போட்டது சுட்டியாய்க் குட்டிகள்பெட்டி, படுக்கை, புத்தக றாக்கை சட்டி, முட்டிகள், அடுக்களை, முற்றம். என்றெல்லாம் அங்கெல்லாம் துள்ளித் திரிந்தன! மல, சலம் கழித்தும் மகிழ்ச்சியைக் கண்டன! ஒருநாள் தாயுடன் குட்டிகள் இரண்டையும் பிடித்து, பெட்டியொன்றினுள் போட்டு அடைத்து ஊரின் புறத்தே மீன்சந்தையொன்றினுள் உதறிவிட்டு வீடு வந்தேன்!
‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004) பக்கம் 42

பெருமூச்சொன்றை நீளமாய்விட்டு கழுவிக் காய்ந்த படுக்கையை விரித்து கட்டிலில் போட்ட தலையணை உதறி, தொல்லை கழிந்த களிப்பு மிகைத்துக் கைகளை, கால்களை நீட்டி நிமிர்த்தி நிம்மதியாய் நான் கண்ணயர்ந்திட்டேன்!
米
ஒருமணித் தியாலம் தூங்கி இருப்பேன்! சிறு, சிறு பொதிகளாய் பஞ்சுச் சுமைகளாய் நெஞ்சை அழுத்தின, பிஞ்சு நகங்களால் நெஞ்சையும், மார்பையும் விறாண்டி எடுப்பதை உணர்ந்து விழித்து அஞ்சி எழுந்தால். ஆடுகளமாய் என்னுடலாக்கி, எல்லை இல்லாக் கொள்ளை மகிழ்வில் "எல்லே" ஆட்டம் போட்டன குட்டிகள்! குட்டிகள் இரண்டையும் கெளவி நடந்து, வந்த களைப்பில் பூனைத் தாயும் கட்டிலின் அருகில் குந்தி இருந்தது!
米
பிறந்தகம் பிரிந்து இடம்பெயர்வோர்க்குச் சுவர்க்கம் கிடைப்பினும் தாயகமே மேல்! உதைத்தாலும், வதைத்தாலும் தாயக மணிணே உயிரெனக் கொள்வர் உறைவிடம் கொள்வர்! என்ற உண்மையை என்னுள் பூனைகள் உணர்த்திய பாங்கினை எண்ணி வியந்தேன்!
ck
- ஏறாவூர் தாஹிர்
பக்கம் 43 ‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004)

Page 24
7ー N
கன்னித் தமிழ்க் காவலனே ain.Giun.Suilaeol-sungai
ஈழத்தாய் ஈன்ற எழில்சேர் இரத்தினமே! நீளப் புகழ்பெற்ற நேர்மையனே! - ஆழமுள்ள அன்பை வெளியிட்டு ஆர்வமாய் வாழ்த்துகின்றோம் நன்றி மறவாதே நாம்.
*** நன்நூலார் சொன்ன நல்லாசான் பண்புகளைக் குன்றாது பெற்ற குருவிளக்கே! என்றென்றும் வாய்மை வடிவான வள்ளுவனார் வாய்மொழியின் மையத்துள் வைத்தாய் மனம்.
sé le le இலக்கியம் கற்பிக்க ஏற்றநூல் தந்தாய் உலகத் தமிழ் மன்றம் தோன்றப் - பலம் வாய்ந்த மூலவனாய் நின்றுநீமுன்முயற்சி செய்தாய்நீள் காலமெலாம் கூறுதற்கே காண்.
a கன்னித் தமிழ் மொழியின் காவலனாய் வாழ்ந்துவந்தாய் என்றும் நீவாழ்வாய் தமிழுடனே - அன்றுநீ நாடாளும் மன்றத்தில் நற்தமிழில் செய்தஉரை வாடாது வாழ்ந்தே வரும்
sé le 2. Qış->
ク ܠܐ
‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004) பக்கம் 44
 
 

ਜ N
ஆதித் தமிழ் மொழியை ஆட்சிமொழி ஆக்குதற்கு வாதித்து வந்தவனே வன்மையுடன் - நீதிபெற நீள்காலம் போராடி நீபெற்ற மேன்மையினை வாழ்த்திடுமே வையகத்தார் வாய்
a பனநூற் பரப்பைப் பகுத்துளத்தால் ஆய்ந்தளந்த பன்மைச் சிறப்புடைய பண்டிதனே! - முன்னோக்கிக் காலத்தால் நீசெய்த கனன்போன்ற தொண்டுரைப்போம் ஞாலத்தில் உள்ளவரை hாம்.
w
கவிஞர் ஆரையூர் அமரன் 。一 ܥܸܠ
=N
ஈழத்து எழுத்தாளர்களே!
ஈழத்து எழுத்தாளர்களின் நூல் வெளியீடுகளை ஆவணப்படுத்தும் பொருட்டு பின்வரும் விவரங்களை 'ஒலை'க்கு அறியத்தருமாறு தயவாய்க் கேட்டுக் கொள்கிறோம். முடியுமானால் அவற்றின் ஐந்து பிரதிகளை அனுப்பி வைத்தால் நூல்நயம் காண்போம்' நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ளப்படும். அதில் இரு பிரதிகளைத் தமிழ்ச்சங்கநூல் நிலையத்திற்குப் பெற்றுக் கொண்டு அதற்கான கொடுப்பனவும் வழங்கப்படும்.
நூலின் பெயர் நூலின் வகை
நூலாசிரியர் பெயர் :
நூலாசிரியர் முகவரி : தொலைபேசி நூல் வெளியீடு நடந்த இடமும் திகதியும்: வெளியீட்டாளர் / பதிப்பகத்தின் பெயர்:
வெளியீட்டாளர் / பதிப்பகத்தின் முகவரி:
o'Olofó o loopo) :
ク 3-ܓܠܠܐ
Uáább 48 ‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004)

Page 25
D ஒலைகள் ஒழுங்காக கிடைக்கின்றன. நேற்று ஒலை-19 கரம் எட்டியது.
ஆம். அமரர் சிவகுருநாதன் அஞ்சலிச் சிறப்பிதழ். அதன் முகப்பிலுள்ள படம் பார்த்து 1950 இறுதியாண்டுகள் என் மனத்தில் நிழலாடின. ஆமாம் 1956 - 58 வரை பேராதனிய பல்கலைக்கழகத்தில் கற்றவன். கலாநிதி வித்தியானந்தனின் மாணவன். கலாநிதி கைலாசபதியுடன் துரோகி, கள் நாடகத்தில் வில்லனாய் நடித்தவன். கலாநிதி சிவத்தம்பியும் என் நண்பனே. அக்காலம்' என் உள்ளம் நிழலாடியது. ஆம்
நீங்கள் ஆற்றும் பணி அளப்பரியது. செங்கதிரோனாய் ஒலை நாளும் உதிக்கவேண்டும். உலகிற்கு 'ஒளி' கொடுக்க வேண்டும். எம்மவர் புகழை நம்மவர் எல்லோரும் அறியச் செய்யவேண்டும்.
136, M.C.Road, A.P.V.Gomez Matale. B.ADip in. Edu 21.02.2004 Justice of the Peace
தங்களின் 'ஒலை' இதழ் 19 கிடைக்கப்பெற்றேன். நன்றி. நான் அறியாத மறைந்த பல பெரியார்கள் பற்றி 'ஒலை' வாயிலாக அறிந்து கொள்ளக் கூடியதையிட்டு மகிழ்ச்சி
ஆத்திக்குளி அ.பேபி சறோஜா முருங்கன் 23.02.2004
ஒலையின் 20வது இதழ் இன்று கிடைத்தது.
தாவீது அடிகளுக்குத் தமிழ்ச்சங்கம் எடுத்த விழாவுக்கு யாழ் மறைமாவட்ட ஆயர் அவர்களும் மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்களும் மட்டக்களப்பு - திருகோணமலை மறை மாவட்ட ஆயர் அவர்களும் அனுப்பி இருந்த வாழ்த்துச் செய்திகளையும் ஆசிர்களையும் 20வது ஒலையில் வெளியிட்டு தாவீது அடிகளுக்கு மேலும் பெருமை வழங்கி இருப்பதோடு தமிழ்ச் சங்கத்தினதும் ஒலையினதும் பெருந்தன்மையையும் வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள்.
3A, kynsey Road, அருள்.மா.இராசேந்திரன் Colombo -08 02.03.2004
‘ஓலை’ - 25 (ஏப்ரல் 2004) பக்கம் 46
 

> வாழ்த்துவோமடி
தலைநகரில் செந்தழுக்கோர் சங்கமடி - அது தனித்துவமாய்த் தலைநிமிர்ந்து நிற்குதடி கலைமணம் பரப்பிஅது அறிவினையும் தருகுதடி காலைக் கதிரவனின் ஒளியதிலே தெரியுதடி
ஒலையாய் உலகெங்கும் உலாவரவேணுமடி - அங்கு ஓங்காரநாதமாய் தமிழோசை ஒலிக்க வேணுமடி மாலைகுடி மக்களதை வரவேற்க வேணுமடி மகிழ்ச்சியிலே நாமிங்கு கரகோஷம் செய்வமடி
சங்கம்சார் வல்லோரை வாழ்த்துவோமடி - எம் சிந்தைநிறை நன்றியையும் சொல்லுவோமடி தங்கத்தமிளெங்கள் உயிர் அல்லவா அதைத் தவறாது கட்டிக் காப்பதுநம் கடனல்லவா 258, பேராதனை, கண்டி கலாபூஷணம் ரூபராணி 01.03.2004
> தங்கள் தமிழ்ச் சங்கத்தின் தொண்டு மிகவும் உபயோகமானது. சஞ்சிகை என்றால் சினிமா விளம்பரம் அரசியல் விளம்பரம் பெண்களின் கவர்ச்சிப்ப விளம்பரங்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இந்தியாவில் இருந்து வரும் நல்ல விடயங்களைத் தாங்கி வந்த சஞ்சிகைகள் கூடி இன்று கூடியளவு மேற்சொன்ன விடயங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கின்றன. இந்நிலையில் தாங்கள் வியாபார நோக்கை விடுத்து நல்லதொரு சஞ்சிகையை வெளியிடுவது நினைத்துப் பார்க்க முடியாத விடயம்.
நிற்க - அமரர்களான கவிஞர்கள், கதாசிரியர்கள், கலைஞர்கள் ஆகி. யோரைக் கெளரவிக்கும் முகமாக நீங்கள் அவர்களுடைய படைப்புக்களையும் அவர்களுடைய வரலாறுகளையும் வெளியிடுவது சிறப்பானது. எங்களுக்கெல்லாம் அவர்களைப் பற்றி நன்கு அறியக்கூடியதாக உள்ளது. அதேவேளை ஒருமாத சஞ்சிகையில் அவர்களைப் பற்றிய தகவல்களே முழுவதுமாக இருப்பதால் கவிதை சிறுகதைகள் ஒன்றோ இரண்டுதான் இடம் பெறுகின்றன. ஆகவே சிறுகதைகள் கவிதைகள் ஆகியவற்றைக் கூடுதலாக வெளியிடவும் அத்தோடு இன்று நம்மிடையே வாழ்ந்து வரும் எத்தனையோ கவிஞர்கள் கதாசிரியர்கள் நல்ல படைப்புக்களை உருவாக்கி வருகிறார்கள். அவர்களை நீங்கள் உ iசகப்படுத்த வேண்டும்.
ஆத்திக்குளி, முருங்கன் PPஅந்தோனிப்பிள்ளை
().20()4
பக்கம் 47 ‘ஓலை’ 25 (ஏப்ரல் 2004)

Page 26
D I acknowlege with thanks the receipt of the Booklet-Olai 960n No.20.
It has valuable contents of reading materials in keeping with the present trend.
Wish you all the best.
My prayers and blessings for the successive publication of this book let.
Bishop's House, R.T.Rev.Dr.J.Kingsley Swampillai Batticaloa. 27.03.2004
> ஒலை இதழ்கள் கிடைக்கப் பெற்றேன். பல்வேறு கடமைகள் காரணமாகக் கடிதத் தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.
ஒலையின் உள்ளடக்க விடயங்கள், சிறுகதைகள், கவிதைகள், ஆரோக்கியமானவை.
"மனித யந்திரம்" யோகேஸ் எழுதிய டாக்டரின் கதை சிறப்பானது. தலைநகர டாக்டர்களுக்கு ஒரு முன்னுதாரணம். கவிதைகள், சிறப்புக் கட்டுரைகள், நினைவுக் கட்டுரைகள் யாவும் மனதுக்குள் ஒரு திருப்தியை உண்டாக்குகின்றது.
கவிஞன், எழுத்தாளன், பத்திரிகையாளன் காலமானபின் அவனை நுகர்வோர் சமூகம் அல்லது தேசம் நினைத்துப் பார்ப்பதில்லை என்றாலும் அதற்கென்றே ஒரு இறுக்கமான பத்திரிகை உலா வருகின்றதென்றால் அதனைப் பாராட்டி வணங்குவது சிறப்பு. வணக்கத்துக்குரியோர்க்கு வணக்கம் செய்து வணங்க வைத்த "ஒலை" வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.
தி.இராஜகோபாலன் Keepoosalla Secretary Punduloya TRISELF
04.04.2004
‘ஓலை’. 25 (ஏப்ரல் 2004) பக்கம் 48

ܠܓ
محی
frn
ܠ ܡܡ
射
தமிழ்ச் சங்கத்தின் குரலாய்
M
தரணி எங்கும் ஒலிக்க
ஒலை ஓயாமல் 6) IDT
வளர எம் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் !
Filöih 566 lenaulih
உருத்திரா மாவத்தை வெள்ளவத்தை y ljTamauLuff : 23638 2 కెNL ഗ{്ട

Page 27
வெள்ள
நித்தியகல்யாணி ந
அப்பழுக்கறி
பெல்ஜியம் (
சர்வதேச இரத்தினக்க (International Gemin உறுதிப்படுத்தப்பட்டு உத்தரவாதமளிக்கப்பட்டு
பைகளில் மூடித்
வெள்ள6
fljulötull 230, காலி வீதி, ெ தொலைபேசி : 23 தொலை நகல்
மின்னஞ்சல் :
FNS
 

வத்தை
கை மாளிகையில்
]] ഖ്വ
Belgium) ல்லியல் நிறுவனத்தினால் nological Institute) - பரிசோதிக்கப்பட்டு
- மாற்றமுடியாதபடி நாளிடப்பட்டது.
வத்தை
Ooteauer
காழும்பு - 06. 63392, 2362427
; 2504933
ithikal Goslit.lk
森
f 21
や