கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2004.06

Page 1
ஆசிரியர் Gli ஒலை 27 கொழும்புத் தமி
திருவள்ளுவர் ஆண்டு : திபி 203க்
22.05.2004 அன்று பாண்டிச்சேரி தலைவரும் பேராசிரியருமான மு நடைபெற்ற சந்திப்பின் போது,
கொழும்புத் தட 7, 57 வது ஒழுங்கை (உருத்திரா
தொலைபேசி : வெப் முகவரி = היוו זוויוו இணைய தபால் முகவரி : ($டு
 
 

HIBI6്
ழ்ச்சங்க மாதாந்த மாசிகை
ஆடவை (ஆணி) ன் O)
பல்கலைக்கழக நாடகத்துறைத்
னைவர் கே.ஏ.குண்சேகரனுடன்
மிழ்ச் சங்கம்
மாவத்தை ) , கொழும்பு - 06.
011 - 37 .colombo. ta milisangan.org
eureka.k.
Cena 2/E.

Page 2

இதயம் திறந்து.
கடந்த ஏப்ரல் மாதம் அடுத்தடுத்த இரு தினங்களில் (19/20) ஈழத்தின் முற்போக்கு எழுத்தாளர்கள் இருவரது இழப்புக்களை ஈழத்து இலக்கிய உலகம் எதிர் கொண்டது. ஒருவர் ஒய்வு பெற்ற அதிபர் மருதமுனையைச் சேர்ந்த இஸ்மாயில் எனும் இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மருதூர்க்கொத்தன் அவர்கள். மற்ற இழப்புதினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் ராஜ பூரீகாந்தன் அவர்கள். இருவருமே ஈழத்து இலக்கிய உலகில் ஆழமாகத் தடம் பதித்தவர்கள்.
ஏதோ கிறுக்கித் தள்ளி விட்டு அதனைப் புத்தகமாகப் போட்டு கலை இலக்கிய ஈடுபாடும் அறிவும் இல்லாத பிரமுகர்' களைப் பிரதமவிருந்தினராக அழைத்து நூல் வெளியீடு செய்து தங்களையும் எழுத்தாளராகவும் இலக்கியவாதியாகவும் பெயர் சூட்டிப் பம்மாத்துப் பண்ணும் பலரை இலக்கிய உலகம் அறிந்து வைத்துள்ளது. அத்தகையோரை அசட்டை செய்யுமாற்போல் அடக்கமாகவும், அமைதியாகவும் அதேவேளை ஆழமாகவும் கலை இலக்கியப் பணிகளை ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் முன்னெடுத்தவர்கள் இந்த இருவரும். விருதுகள் தேடி வேட்டையாடாமல் எழுத்துப் பணியை ஓர் இலக்கிய 'வேள்வி' யாக நடாத்திய இவ்விருவரினதும் இழப்பு, உண்மையிலேயே ஈடுசெய்யமுடியாதவை. இருவருக்கும் 'ஒலை' அஞ்சலி செலுத்துவதுடன் அன்னாரின் குடும்பத்தினர்களின் துக்கத்தையும் பகிர்ந்து கொள்கிறது. வெறுமனே அஞ்சலிக்கூட்டங்களுடன் நின்றுவிடாமல் இருவரினதும் இலக்கியப்பணிகளும், படைப்புக்களும் முழுமையாக வெளிக் கொணரப்பட்டு ஆய்வுக்குட் - படுத்தப்படல் அவசியம். இது ஈழத்து இலக்கியத்துக்கு மேலும் உரமூட்டும் என்பது உறுதி.
நன்றி. மீண்டும் மறுமடலில்.
- ஆசிரியர்
ஒலையில் வெளிவரும் ஆக்கங்களுக்கு ஆக்கியோரே பொறுப்பு.
பக்கம் 1 "ജ്ഞ' - ഉ7 (്യങ്ങ് ഉ00!)

Page 3
இலக்கிய வாழ்வில் இடறிய சம்பவங்கள்
கலாபூஷணம் .ஏ.இக்பால் ,
1995 மார்ச் மாதப் பிற்பகுதி என நினைக்கின்றேன், மானா மக்கீனும் அல்ஹாஜ் ஹாஷிம் ஒமரும் தர்கா நகர், புதிய பாதை வழியாகக் காரில் வந்து கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டதும் காரை நிறுத்தி மானா மக்கீன் கதைத்தார். அல்ஹாஜ் ஹாஷிம் ஒமரையும் அறிமுகப்படுத்தினார். இருவரும் பாக்கிர் மார்க்காரைப் பார்த்துவிட்டு வருவதாகக் கூறினார்கள். நான் இருவரையும் வீட்டுக்கழைத்தேன். எங்கேயோ போவதாகவும், வரும் போது நேரமிருந்தால் வருவோம் என்றனர். நான் வீடு திரும்பிவிட்டேன். "யார் இந்த ஹாஷிம் ஒமர்? என்பதில் அதிகம் சிந்தனை செய்து முடிவாக "ஓமர் ட்ரஸ்ட்டின்"அதிபராகவிருக்கலாம் என முடிவு செய்து கொண்டேன். அவர்கள் வீட்டுக்கு வருவார்களா? என்பது சந்தேகம்தான்.
திடீரென மானாவும் ஹாஷிம் ஒமரும் வந்துவிட்டார்கள். அன்றைய தினம் மத்திய கிழக்கின் மகோன்னத உணவு வகைகள் பூந்தி, மஸ்கட், கிறேப்ஸ், பெற்றீஸ், கட்லஸ், சம்சா, கொச்சி வாழைப்பழம், பாதாம் பருப்பு, பிஸ்கட் யாவும் இருந்தன. மானாவும், ஒமரும் புதிய விருந்தினரைப் பெரிதாக வரவேற்பதாக எண்ணினாலும், இவை, வேறு விருந்தினருக்காகத் தயாரிக்கப்பட்டவை. விருந்தளித்து அவர்களுடன் கதைத்த பின், எனது புத்தகங்கள் இரண்டினை ஹாஷிம் ஒமருக்கு அன்பளிப்புச் செய்தேன். மிகவும் மகிழ்ச்சியுடன் அவர்கள் சென்றுவிட்டார்கள.
1995 ஏப்ரல் 19ஆம் திகதி எனக்கொரு பதிவுத்தபால் அல்ஹாஜ் ஹாஷிம் ஒமரிடமிருந்து வந்தது. அதனுள் ரூபா 1000.00 க்காக காசோலை ஒன்றி. ருந்தது. நான் கொடுத்த புத்தகங்களுக்கான அன்பளிப்பு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் அதை ஏற்க மறுத்தேன். அவர், "எங்கள் கம்பெனி நியதிப்படி எழுதிய காசோலை கணக்கிலாகிவிடும்" எனப்பதில்தந்து அதை மாற்றி எடுங்கள் என அன்புக் கட்டளையிட்டார்.
பின் பொருசமயம் "ஒமர் ட்டிரஸ்ட் இவர்களுடையதுதானா?" என மானாவிடம் கேட்டேன். இல்லை என மானா விளக்கி, "இவர்தான் அவராகவிருந்தால், பாக்கிர் மார்க்கார் வீடு சென்றிருக்கமாட்டாரே! ஒமர் ட்டிரஸ்டுக்கும் பாக்கிர்மார்க்காருக்கும் கட்டிட விடயத்தில் பெரும் லடாய் அல்லவா" என்றார்.
"3606"-27 (6ot sooq) பக்கம் 2
 
 
 
 

இலக்கிய உலகில் நூல் வெளியீடுகளில் பலநூறு நூல்களைப் பல்லாயிரம் ரூபாய் பணம் கொடுத்துப் பெற்றுச் சாதனை படைப்பதற்கு முக்கிய காரணகர்த்தா மானா மக்கீன்தான் என்பதை இலக்கிய உலகம் மறக்காது. தனது கட்டுப்பாட்டுக்குள் செயற்பட வேண்டுமென மானா மக்கின் நினைத்தாரோ, வேறு காரணங்களோ இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால், ஹாஷிம் ஒமர், "புரவலர்" எனும் பெயரைத் தாங்கி உயர்ந்து விட்டார். இலக்கிய உலகிலும், இலக்கிய கர்த்தாக்கள் மத்தியிலும், மக்கள் நடுவிலும் சனரஞ்சகமான புரவலராக சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் மத்தியில் ஹாஷிம் ஒமர் உயர்ந்து விட்டார்.
கம்பனுக்கு ஒரு சடையப்ப வள்ளல், ஒமர் புலவருக்கு ஒரு சீதக்காதி போன்று இலக்கிய வரலாற்றில் அரசர்கள் காலத்தில் அரசர்களே புரவலராக மிளிர்ந்தனர். தமிழ் இலக்கிய மரபுப்படி "புரவலர்" என்றால், ஒரு காப்பியத்தையோ, ஏனைய படைப்புக்களையோ படைத்துமுடிக்கும் காலமெல்லாம் அய் புலவரின் குடும்பத்துக்குரிய வாழ்க்கைச் செலவு முழுவதையும் கொடுத்துப் புலவரை கஷ்டங்கள் அண்டாது காப்பாற்றும் பொறுப்புடையது என்பதர்த்தமாகும். இம்மரபு முறை நவீன காலத்தில் இல்லாமலாகிவிட்டதால், முதல் நூலுக்குப் பல்லாயிரம் ரூபாப்பணம் கொடுத்துச் செலவைக் குறைப்பதால் "புரவலர்" என்னும் புகழ்மிகு பெயரை அல்ஹாஜ் ஹாஷிம் ஒமர் பெற்றுக் கொண்டார்.
தமிழ் இலக்கிய உலகெலாம் அல்ஹாஜ் ஒமர் அவர்களை மானா மக்கின், புரவலர் செலவிலேயே எடுத்துச் சென்று அறிமுகம் செய்த பெருமைக்குரியவராகிறார். சென்னை நகர வளர்ச்சிக் குடியிருப்பு முதன்மைச்சாலையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட "உலகத்தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்"தில் புரவலர் வரிசையில் ஹாஷிம் ஒமரும், ஆட்சிக்குழுவினர் வரிசையில் மானாமக்கினும் பணியாற்றிமைக்குரிய பெருமையை மானா மக்கின்தான் பெறுவார். மலேசியா, தாய்லாந்து, ஹாங்ஹாங், தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர், ஜெனிவா, பினான்கு, பிரான்ஸ், குவைத், துபாய் ஆகிய இடங்களிலெல்லாம் உள்ள தமிழ் அறிஞர்கள் புரவலர் வரிசையிலும், ஆட்சிக்குழு வரிசையிலும், ஆலோசகர் வரிசையிலும் நிரம்பியிருந்து இக்கழகத்தைக் கட்டியெழுப்பினர் என்பது முக்கியமானதொரு சம்பவம்.
மானாவும், புரவலரும் பிரிந்து இரு பாதைகளான போதும் அவரவர் பாதையில் அவரவர் உயர்ந்து நிற்பது தெரிந்ததே. அரசின் அந்தஸ்தில் முன்னைய அரசிலும் இன்றைய அரசிலும் அந்தஸ்துயர்ச்சியில் பணிப்பாளர் குழுவிலொருவராக அல்ஹாஜ் ஹாஷிம் ஒமர் அவர்கள் தெரிவாகி உயர்ந்து நிற்கிறார். மானாவும், புரவலரும் முன்போல் ஒன்றாகிவிடமாட்டார்களா? என்னும் ஆதங்கம் என்போன்றோருக்கு ஏற்படுவது நியாயமே.
பக்கம் 3 "థాంD6ు" - 27 (யூன் 2004)

Page 4
புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் ஒமர் அவர்களின் தொடர்பு கிடைத்த பின், 1996 டிசம்பரில் "இலக்கிய ஊற்று" எனும் கட்டுரைத் தொகுதியையும், 1998 மார்ச்சில் "மாயைத் தோற்றம்" எனும் சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டேன். இந்நூற்களுக்கு நான் வெளியீட்டு விழாக்களே வைக்கவில்லை. 1999 ஜூலையில் "புதுமை - the new" எனும் ஆங்கிலப் பெயர்ப்புடனான கவிதைத் தொகுதிக்கு வெளியீட்டு விழா வைத்தபோது, புரவலரை அழைத்தேன். அவர் நூலைப் பெறுவதற்காக வீரகேசரி உதவியாசிரியர் கே.விஜயன் அவர்களை அனுப்பினார். கூட்டம் தொடங்குமுன் விஜயன் இச்செய்தியைச் சொன்னார். கூட்டம் தொடங்கியதும் புரவலர் ஹாஷிம் ஒமர் இவ்வெளியீட்டு விழாவுக்குச் சமூகமளித்தார். வேறு வேலை இருந்த போதும், இவ்விழாவுக்கு வந்து முதல் நூலைப் பெறவேண்டுமெனும் அவா அவரிடம் ஊன்றி நின்றதால் சமூகமளித்துப் பொன்னாடை போற்றி விழாவைச் சிறப்பித்தார். இதன்பின், 2000த்தில் வெளியான "பிரசுரம் பெறாத கவிதைகள்" தொகுதியை விழாக்களில்லாமலே வெளியிட்டேன். வெளியீட்டு விழாக்கள் புத்தகம் விற்க ஓர் நல்ல உத்திதான். என்னைப் பொறுத்தளவில் இதுவரை பத்து நூற்களை வெளியிட்டுள்ளேன். அதில் இலாபமே அடைந்துள்ளேன். இலங்கையில் புத்தகங்களை விற்று இலாபமடையவும் உத்திகள் உண்டு.
புரவலர் நட்பும், மானா மக்கீனின் நட்பும் ஒரேவிதமாக இறுக்கமாகப் பேசிக் கொள்ளுமளவு விரிவடைந்தே இருந்தது. மானா மக்கினின் எழுத்துக்கள் வினாவிடை உத்தியில் வாசகர்களை இணைத்துக் கொள்ளும் பண்புடையவை. வரலாற்றுக் கணக்கெடுப்புக்களை மிக நுணுக்கமாக ஆயுந்தன்மை மானாவிடம் நிறைந்துள்ள சங்கதிக்கு ஒர் உதாரணம்: 28.04.1996 களில் சொல்லேருழவர் ம.க.அ.அந்தனிசில் "தினகரனி"ல் "யாழ்ப்பாண அரசரைச் சந்தித்த இஸ்லாமிய யாத்திரீகன்" எனும் கட்டுரையை எழுதினார். அக்கட்டுரையில் தவறுண்டென அஸ்.அப்துஸ்ஸமதவர்கள் 02.06.96 இல் ஒரு கடிதம் எழுதினார். அதற்கும் அந்தனிசில் பதில் கொடுத்தார். தொடர்ந்து 23.06.96 இல் செல்விதங்கேஸ்வரி "புத்தளத்தில் இபின் பதுதாவை சந்தித்த அரசன் ஆரியச் சக்கரவர்த்தியான மாத்தாண்ட சிங்கையாரியன்" எனும் கட்டுரையை எழுதி அந்தனிசில் கட்டுரையை ஆதரித்து அ.ஸ்.வை ஒரு தட்டுத்தட்டினார். அ.ஸ்.அப்துஸ்ஸமதின் "புத்தள மன்னன் ஒரு முஸ்லிமே என்று இந்திய வரலாறுகள் கூறுகின்றன" எனும் கட்டுரையும் அதே நாளில் தினகரனில் வெளிவந்தது. அ.ஸ்.ஓர் ஆக்க இலக்கிய கர்த்தா. வரலாற்று ரீதியாக இலக்கியம்தான் அவருக்கு எழுத முடியும். ஏன் இப்படி வாங்கிக் கட்டுகிறார் என அங்கலாய்த்த நான், தற்செயலாகச் சந்தித்த மானாவிடம் இச்சங்கதியைச் சொன்னேன். பிரமித்துப் போன மானா மக்கின் "நானிவை. களைப் படிக்கவில்லையே, அவை உன்னிடமுண்டா" எனக்கேட்டார். நான்
"gp606"-97 (60f 2004) பக்கம் 4

அவற்றை உடனே அவருக்குக் கொடுத்தேன். 30.06.96 'தினகரனி"ல் "பதின்மூன்றாம் நூற்றாண்டு பாண்டியன் ஆட்சியில் ஆறாம் பாண்டியனாகத் திகழ்ந்தவர் கிழக்கரை சுல்தான் தகிபுதீன்" எனும் நீண்ட கட்டுரையை ஆதாரபூர்வமாக எழுதினார். இதன்பின், 14.07.96 இல் ஏ.என்.எம்.சாஜஹான் "இலங்கை மீது படையெடுத்த குலசேகர பாண்டியனின் தளபதி ஆரியச் சக்கரவர்த்தி மரிக் குல் அ. லம் தகிபுத்தின் அப்துர்ஹற்மான்" எனும் கட்டுரையை எழுதினார். இக்கட்டுரை காரசாரமில்லை. அதன்பின், 21.07.96 இல் "ரவீந்திரன்" புத்தளத்தில் இபின்பதுதா சந்தித்த ஆரியச் சக்கரவர்த்தி யார்?" எனும் கேள்வியுடன் எழுதிய கட்டுரை அ.ஸவுக்குப் பதில் கொடுப்பதாகவும், கேள்விக்கணையாகவுமிருந்தது. மானா மக்கினுடைய கட்டுரைக்கு எவரும் பதில் கொடுக்கவில்லை. ஆதாரபூர்வமாக அவருடைய உத்தியில் வெளுத்துவாங்கிவிட்டார். வரலாற்று முதிர்ச்சி மானாவிடம் நிறைந்து நிற்பதை அவருடன் கதைக்கும்போதே காணலாம்.
நான் எப்பொழுதும் எழுதி அனுப்பும் எந்த விடயத்துக்கும் பிரதி வைத்திருப்பேன். முதன் முதலாக 30.03.1959 இல் இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிக்கு அனுப்பிய "சீறா விருந்து" எனும் பதினைந்து நிமிடப் பேச்சின் பிரதி என்னிடமில்லை. இவ்விடயத்தை மானாவிடம் சொன்னேன். "அதைத் தட்டச்சு செய்தவன் அக் காலத்தில் நான் தான். அழகிய கையெழுத்து காரணமாக அதை நானே வைத்துக் கொண்டேன்" என்று கூறி அப்பிரதியைத் தந்தார்.
புரவலர் ஹாஷிம் ஒமர் 2000 ஆண்டென நினைக்கின்றேன் "ஒரு தமிழன் பார்வையில் இருபதாம் நூற்றாண்டு வரலாறு" எனும் நூலின் வெளியீட்டு விழா தமிழ்நாட்டில் நடந்த போது முதல் பிரதிவாங்கச் சென்றார். வெளியீட்டு விழா பற்றிப் பத்திரிகைகள் பறைசாற்றின. புரவலரைக் கண்டபோது. இந்த நூலின் பிரதி ஒன்று கேட்டேன். அதற்கவர் "அந்நூல் 26 x 18 செ.மீ.அளவுள்ளது. 600 பக்கங்களுக்கதிகமானது. அப்புத்தகத்தை அதிகளவு தொகை, கொண்டு வருவது கஷ்டம். இரண்டேயிரண்டு பிரதிகள் கொண்டு வந்தேன். ஒன்றை ஒருவருக்குக் கொடுத்துவிட்டேன். எனது பிரதியை வானொலி நண்பரொருவர் பார்க்கக் கேட்டார். கொடுத்தேன் இன்னுமில்லை. அடுத்தமுறை இந்தியா செல்லும் போது, உனக்கு ஒரு பிரதி தருவேன்" என்றார். இவ்விடயம் பற்றிக் கதைத்துப் பல மாதங்களாகிவிட்டன.
25.02.2001 இல் சுகதாஸ் ஸ்ரேடியமண்டபத்தில் ஏ.சிறாஹில் அவர்களின் "என் உயிரும் உன் முகவரியும்" எனும் கவிதை நூல் வெளியீட்டு, விழாவுக்குச் சென்றேன். அங்கே, புரவலர் ஹாஷிம் ஒமரும் வந்திருந்தார். அவர், வீடியோ படமெடுக்கும் சர்மாவுடன்தான் வந்திருந்தார். ஐரிஎன் தொலைக்காட்சியின்
பக்கம் 5 "ൡ" - ഉ7 (്യങ്ങ് 2004)

Page 5
பணிப்பாளர் குழுவில் புரவலரும் ஒருவர் என நினைக்கின்றேன். அக்காலம் நூல் வெளியீட்டுச் செய்திகள் அத்தொலைக்காட்சியில் செய்தியாக ஒளிபெருக்கும். இது சம்பந்தமாகவும், இலக்கியம் சம்பந்தமாகவும் அவருடன் கதைக்கும் போது, கதை காரசாரமாகிவிட்டது. ஏன் சூடேறி விட்டதெனலாம். அக்கதைச் சூட்டுடன் வெளியேறிய புரவலருடன் நானும் காரசாரமானேன். காரசாரமாய்க் கதைத்துக் கொண்டு சென்றவரிடம், சட்டைப்பையிலிருந்த பேனையை எடுத்தக்காட்டி அசைத்தேன். "கவனம்" என்றும் கூறிவிட்டேன். சென்றவர் திரும்பி வந்து உடனே, எனது பேனையைப் பறித்துக் கொண்டார். சூடும் தணிந்தது. நான் அதைப் பறித்துக் கொண்டேன். இச்சம்பவத்தால், புரவலர் என்னோடு மிகக் கோபமாயிருக்கிறார் என நானே நினைத்துக் கொண்டேன்.
அன்றைய றாஹிலின் நூல் வெளியீட்டு விழாவில் பேச்சாளர்களாகக் கலந்து கொண்டவர்கள் 99% வீதமானோர் வானொலி, தொலைக்காட்சி சேவையில் வேலை செய்யும் ஊடகவியலாளர்கள் தான். அநேகமாக ஊடகவியலாளர்களது நூல் வெளியீடுகளில் இவ்விதந்தான் இங்கே நடப்பது இயல்பு. அதனால் தான், இலக்கிய உலகில் அவர்களது படைப்புகள் உயர்வதில்லை. படைப்பிலக்கியம் பற்றிய விமர்சனத்துக்குரியவர்கள் அப்படைப்பிலக்கியம் சார்ந்தோரும் அது சார்ந்த விமர்சகர்களுந்தான். ஊடகவியலாளர்கள் படைப்பிலக்கியவாதிகளல்ல. படைப்பிலக்கியவாதிகள் ஊடகவியலாளராக முடியும். உதாரணங்கள்: நாவற்குழியூர் நடராசா, சானா, எம்.எம்.உவைஸ் இப்படி அநேகம் கூறலாம். இவ்விடயம் ஆய்வுக்குரியது.
07.01.2004 இல் "ஞானம் கலை இலக்கியப் பண்ணை" அங்குரார்ப்பணக் கூட்டம் தமிழ்ச்சங்க விநோதன் கேட்போர் கூடத்தில் நடந்தது. அக்கூட்டம் முடிந்த பின், வெளியே புரவலர் ஹாஷிம் ஒமர் என்னை அணுகி "இக்பால் நீங்கள் கேட்ட ஒரு தமிழன் பார்வையில் இருபதாம் நூற்றாண்டு வரலாறு நூலின் இரண்டாவது பதிப்பு உங்களுக்காகக் கொண்டு வந்திருக்கின்றேன். எப்படி எடுப்பது?" எனக் கேட்டார். "உங்கள் காரியாலயத்துக்கும் எனக்கு வரமுடியும். 10ஆம் திகதி தமிழ்ச்சங்கத்தில் நவசோதியின் "ஒடிப்போனவன்" நூலின் இரண்டாம் பதிப்பு வெளியீடும் இருக்கின்றது. நீங்களும் வருவீர்கள். நானும் வருவேன்" என்று சொன்னேன். "அப்படியானால், நான் கொண்டு வருகிறேன்" என்றார். "நீங்கள் வருவீர்கள்தானே?" என்று மீண்டும் கேட்டேன். வராவிட்டாலும், நூலைக் கிடைக்கச் செய்வேன்" என்றார். அப்போதுதான், றாஹிலின் நூல் வெளியீடன்று நடந்த காரசாரச் சண்டையைச் சொல்லி, "நீங்கள் என்னுடன் பேசமாட்டீர்கள் என்று நினைத்தேன்" என்றேன். "என்ன கதையிது. அந்த நிமிடமே அவ்விடயத்தை நான் மறந்துவிட்டேன்" என்று சிரித்தார். விசித்திரமான மனிதரிவர்.
“බ්‍රවරග60” - 27 (g6) 2OO49 பக்கம் 6

வேர்வலை மருதானையைச் சேர்ந்த பெண்ணொருத்தி சொன்ன கதையொன்றை மீட்டேன். புரவலரை அப்பெண் தேடி அவர் வீடு சென்றிருந்தார். அப்பெண்ணின் மகளுக்குக் கல்யாணம், கல்யாணச் செலவுத் திட்டத்தில் ரூபா ஐயாயிரம் அவருக்குத் தேவை. வீடு சென்ற சமயம் புரவலர் வெளிநாடு சென்றுவிட்டார். அவர், மனைவியும் அவர் வரும் நாள் பற்றித் தெரியாதிருந்தார். வந்தவர் கதையைக் கேட்ட புரவலர் மனைவி வீட்டுக்குள் சென்று எடுத்து வந்ததை, அவர் கையுள் வைத்துப் பொத்தி, "இதை வைத்துக் கொள்ளுங்கள். என்னிடமுள்ளது இவ்வளவுதான்" என்று கூறியிருக்கின்றார். திறந்து பார்த்த அப்பெண் மனமகிழ்ந்தார். அவர் எதிர்பார்த்த தொகையைவிட இருமடங்கு இருந்ததுதான் அதற்குக்காரணம்.
இச்செய்தியைப் புலவலரிடம் கூறினேன். "என்னைவிட, இவ்விஷயத்தில் அவள் சிறந்தவள்" என்று சிரித்துக்கொண்டே சொன்னார். அவர், எனக். களித்த 560 பக்கங்கள் கொண்ட ஐ.சண்முகநாதன் (நாதன்) எழுதிய "ஒரு தமிழனின் பார்வையில் இருபதாம் நூற்றாண்டு வரலாறு" நூலைச் சுமந்து வீடு வந்தேன்.
- தொடரும்
/三 s N
ஈழத்து எழுத்தாளர்களே!
ஈழத்து எழுத்தாளர்களின் நூல் வெளியீடுகளை ஆவணப்படுத்தும் பொருட்டு பின்வரும் விவரங்களை 'ஒலைக்கு அறியத் தருமாறு தயவாய்க் கேட்டுக் கொள்கிறோம். முடியுமானால் அவற்றின் ஐந்து பிரதிகளை அனுப்பி வைத்தால் நூல் நயம் காண்போம்' நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ளப்படும். அதில் இரு பிரதிகளைத் தமிழ்ச்சங்க நூல் நிலையத்திற்குப் பெற்றுக் கொண்டு அதற்கான கொடுப்பனவும் வழங்கப்படும்.
நூலின் பெயர் : நூலின் வகை : நூலாசிரியர் பெயர் - நூலாசிரியர் முகவரி: தொலைபேசி :
நூல் வெளியீடு நடந்த இடமும் திகதியும்: வெளியீட்டாளர் / பதிப்பகத்தின் பெயர்: வெளியீட்டாளர்/ பதிப்பகத்தின் முகவரி: நூலின் விலை :
N づ
பக்கம் 7 "ஓலை" - 27 (யூன் 2004)

Page 6
காசி ஆனந்தன் நறுக்குகள்
இனவெறி பொன்னாடை
மாடுகள் பசியால் காணாமல் போகும் அழுத
மனைவியின் கண்ணிரைப் பொன்னாடையால்
துடைத்தார் புலவர்.
புறப்பட்டார்.
அடுத்த மனிதர்களையே விழாவுக்கு. காணவில்லை.
ஒருமைப்பாடு பொய்மை தனித்தன்மை கட்டைச் சங்கிலியில் விடு கண்ணிர் என் கூடவே ܐܵܐ ஹடிக்கிறதாம் இரு' நாய். என்கிறான்.
நீளச் சங்கிலி அவன் வாங்க இறக்கைகளில் கடைத்தெரு நான் போகிறாள் பறப்பது சீமாட்டி. எப்படி?
"ஓலை" - 27 (யூன் 2004) பக்கம் 8
 
 
 
 
 
 
 
 

நான
நெஞ்சைத் தொடும் உனக்கு.
அடுத்தவன் தலையில் வைக்கும் மொனாலிசா.
எனக்கு
அடுத்தவன் காலில் மிதிபடும்* கோலம்.
- இன்னும் வரும்
ஈழத்தில் வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ்களின் வரிசையில்.
கடந்த காலங்களில் ஈழத்தில் வெளிவந்துநின்று போய்விட்ட ஈழத்து இலக்கியச் சிற்றிதழ்கள் பற்றிய விபரங்களை 'ஒலை இதழ்களில் தர எண்ணியுள்ளோம். அவ்வாறான சிற்றிதழ்கள் வெளிவரத் தொடங்கிய காலம்- வெளியீட்டாளர். அதன் ஆசிரியர் - எப்பிரதேசத்திலிருந்து வெளிவந்தது- எத்தனை இதழ்கள் வெளிவந்தன - எப்போதுநிறுத்தப்பட்டது - நின்றுபோன காரணம், அவ்விதழ்களில் எழுதிய எழுத்தாளர்கள். - அவ்விதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள். அவ்விதழ்களின் அளவு, பக்கங்கள் பற்றிய விபரம் மற்றும் ஈழத்து இலக்கிய உலகில் அவ்விதழ்கள் ஏற்படுத்திய தாக்கங்கள், பங்களிப்புகள் முதலிய விபரங்களை உள்ளடக்கியதான கட்டுரை ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம். 'ஒலையின் ஒவ்வொரு இதழிலும் அவ்வாறான சிற்றிதழ்கள் ஒவ்வொன்றின் விபரமும் தனித்தனியே வெளியிடப்படும். எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் உங்களுக்குத் தெரிந்த 'சிற்றிதழ் பற்றி எழுதி அனுப்புங்கள். அத்துடன் அவ்வாறான சிற்றிதழ்களின் பழைய பிரதிகளை ஆவணப்படுத்துமுகமாக விலைகொடுத்து வாங்கவும் தயாராயுள்ளோம். அவ்வாறான பிரதிகள் கைவச
முள்ளவர்கள் 'ஒலையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
- ஆசிரியர்
பக்கம் 9 "ജ്ഞ' - ഉ7 (്യങ്ങ് ഉool)

Page 7
C சொல்வளம் பெருக்குவோம் (10)
பன்மொழிப்புலவர்.த.கனகரத்தினம்
தமிழ் மொழியும் அதன் வழிமொழிகளும் பால் பகுப்பை (ஆண், பெண்) பொருள் நோக்கில் கொள்கின்றன. பால் பகுப்பில் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின் பால் என 5 வகுப்புக்கள் உள. சமஸ்கிருதத்தில் மூன்று பால்கள் (ஆண்பால், பெண்பால், அலிப்பால் என) கூறப்படுகின்றன. இவை பொருள்நோக்கில் அன்றிச் சொல்நோக்கிற் பகுக்கப்படுகின்றன. தமிழ்ப் பால் வகுப்பு இலகுவானது. இறைவன் என்பதன் பெண் பால் இறைவி. தமிழன் என்பதன் பெண்பால் தமிழிச்சி. அப்பன், அம்மை; எசமானன் - எசமாட்டி, வீரன் - வீரி (வீராங்கனை); மகன் - மகள், திருவாளன் - திருவாட்டி, கணக்காளன் - கணக்காட்டி என்றவாறு வழங்கி வருகின்றன.
இவ்வமைப்பில் ஆண், பெண் எனும் இருபாற்கும் பொதுவாய் வரும் சில பெயர்களும் உள. ஆணாயினும் பெண்ணாயினும் ஒரே சொல்லால் அவற்றைக் குறித்து வழங்குகின்றோம்.
புலவன் என்ற சொல்லின் பெண்பால் புலமையாள் என்றே அமைய வேண்டும். புலவி என்று கூறமுடியாது. கணவன் என்ற சொல்லின் பெண்பால் கணவி என்று கூறல் பிழை. (மனைவி என்பதே பெண்பாற் சொல்) வழக்காற்றில் புலவர் என்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாகவே வழங்கலாம். ஒளவையார் ஒரு புலவர். கம்பர் ஒரு புலவர்.
இவ்வாறே மந்திரி எனும் சொல் ஆண் மந்திரியையும் குறிக்கும். பெண் மந்திரியையும் குறிக்கும். அவ்வாறே, காரியதரிசி, செயலர், நோயாளி, வியாபாரி, குற்றவாளி, சுத்தவாளி, எதிரி முதலிய சொற்களும் இருபாற்கும் பொதுவாய் வரும்.
ஜனாதிபதி என்ற சொல்லை எடுத்துக் கொண்டால் ஜனங்களின் (சனங்களின்) அதிபதி - தலைவன் என்ற பொருளைத் தரும். எனவே, ஜனாதிபதியின் பெண்பாற் சொல் என்ன?இது சமஸ்கிருதச் சொல் என்பதைக் கவனத்திற் கொள்ளல் வேண்டும். இச்சொல் தற்பவமாகச் சனாதிபதி எனவும் எழுதப்படுகிறது. இதனைக் குடியரசுத்தலைவர் எனலாம். எனவே ஜனாதிபதி என்பதன் பெண்பாற் சொல்லை ஜனாதிபத்தினி எனலாமா?பதி என்பதன் பெண்பாற் சொல் பத்தினி. சக்கரவர்த்தி என்பதன் பெண்பாற் பெயர் சக்கரவர்த்தினி என வழங்கும். சமஸ்கிருதத்தில் ஜனாதிபதி என்பதன் பெண்பாற் பெயர்
"ஓலை" - 27 (யூன் 2004) பக்கம் 10
 

ஜனாதிபத்தினி என்றே வழங்கும். சிங்களத்தில் பெண் ஜனாதிபதியை விளிக்கும் போது ஜனாதிபதினி என்றே விளிக்கின்றார்கள்; வழங்குகின்றார்கள். தமிழிற்றான் அச்சொல்லின் பொருளைச் சரியாக விளங்கிக் கொள்ளாமல் உபயோகிக்கின்றோமா?பொருளைப் பற்றிச் சிந்திக்காமல் ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் புலவர், மந்திரி என்ற சொற்கள் போலப் பொதுவாகக் கொள்ளல் பொருத்தமா? என்பது ஆராயப்பட வேண்டிய சொற்பிரயோகLDFTGÖLD.
ஜனாதிபதி என்ற சமஸ்கிருதப் பதத்திற்குக் குடியரசுத் தலைவர் என வழங்கலாம். தலைவன், தலைவி என்ற இருசொற்களுக்கும் தலைவர் என்பது பொதுவாக அமையும். Chairman என்ற சொல்லின் இடத்தில் Chair person என்ற சொல் உபயோகிக்கப்படுகிறது. Chairman என்பது ஆண்பால். தவிசாளன் அல்லது தலைவன் என்ற பொருளில் நிற்பது. இச்சொல்லுக்குத் தவிசாளர் அல்லது தலைவர் என்ற சொல்லை உபயோகித்தால் ஆண் பெண் என்ற இருபாலாருக்கும் பொதுவாக நிற்கும்.
விதவை என்ற சொல்லின் ஆண்பால் விதவன் அன்று. தபுதாரணி என்பதாகும். குமரன் என்பதன் பெண்பால் குமாரி அன்று. குமரி ஆகும். குமாரி என்பது அரச குமாரியைச் சுட்டும்.
கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகளுக்கு ஒருமுறை ஒரு சங்கடம் ஏற்பட்டது. கடவுள் ஒருவன் எனினும் உமையுடன் சேர்ந்த சிவனைக் கவிதையில் விளிக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. சிவன், உமை இருவர் என்று கூறவும் விரும்பவில்லை. ஆணையும் பெண்ணையும் சுட்டும் ஒருவர் என்ற சொல்லை இலக்கணகாரர் தந்தார்களே! அதனால் கவியாகிய நானும் பிழைத்தேன் என்று கவி செய்திருக்கிறார். ஈண்டு ஒருவர் என்ற சொல்லின் நுட்பம் சிந்திக்கத்தக்கது. (ஒருவன், ஒருத்தியை ஒருவர் எனச் சுட்டுகிறார்)
சமஸ்கிருதம் போன்ற பிறமொழிகளிலிருந்து சொற்களை எடுத்துத் தமிழை வளமாக்கும் போது மொழியை அறியாமையால் சில தவறுகளைச் செய்கிறோம். சிரோமணி, சிரேஷ்ட, சியேட்ட, கலாசாரம் என்ற சொற்களை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
சிரஸ் + மணி; சிர: மணியாகிச் சிரோமணியென்றே புணர்ந்து நிற்கும். தலையிற் சூடும்மணி - உயர்ந்த விலை மதிப்பற்ற மணி என்ற பொருளில் சிறந்தவர்களுக்குப் பட்டங்கள் வழங்கும் போது சிரோமணி என்ற சொல்லை உபயோகிக்கின்றோம். சிரோன்மணி என்று கூறுவது பிழை. சிரோமணியென்று வழங்குவதே சரி. சமஸ்கிருத இலக்கணத்தில் சிரோமணிப்பட்டம் பெற்ற எமது சமஸ்கிருத ஆசிரியர் சீதாராம சாஸ்திரி அவர்களும் வியாகரண சிரோமணி சீதாராம சாஸ்திரி என்றே அழைக்கப்பட்டார். போற்றப்பட்டார்.
பக்கம் 11 "ണ്ണുങ്ങിണ്ഡ" - 97 (്യങ്ങ് ഉ00!)

Page 8
22032003, 23032003 இரு தினங்கள் நடைபெற்ற கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் அறுபத்தியோராவது ஸ்தாபகத்தின் விழாவின் இறுதிநாளான 28.03.2003 அன்று மலையக கலை இலக்கிய பேரவைத் தலைவர் சாரல் நாடன் y அவர்கள் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவு.
m
மலையக
இவக்கியம் - மறுபக்கம்
சாரல் நாடன்
D60)6)ULó55 இலக்கியம் என்று குறிப்பிடப்படுவது, இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் «^m−m − M வாழ்க்கையைப் பற்றிய இலக்கியம் என்ற நிலையைக் கடந்து, வளர்ச்சியடைந்து இந்திய வம்சாவளித் தமிழர்களாக இலங்கையில் வாழுகிற இன்றைய அரசியல், கல்வி பொருளாதாரத்துக் கூடாகத் தம்மை இனம் காட்டத் துடிக்கின்ற ஒரு மக்களைப் பற்றிய இலக்கியம் என்று பொருள் கொள்ளலாம் என்று நான் நினைக்கின்றேன்.
மலையகத் தமிழர், மலையக இலக்கியம் என்ற சொற்பிரயோகங்களுக்கு இது காலவரையிலும் அரசியல் அங்கீகாரம் கிடைக்காது போனாலும் ஊடகங்களும், பத்திரிகைகளும், நூல்களும், இந்தச் சொற்களைத் தொடர்ந்து பாவித்து வருகின்றன.
மலையகத் தமிழர்கள் ஆரம்ப காலங்களில் ரயில்வேத் திணைக்களத்திலும், ரஸ்தா அமைப்புக்களிலும், அரசாங்க பணிமனைகளிலும், துறைமுகங்களிலும் பணியாற்றியுள்ளனர். இதனைக் கூறிய இர.சிவலிங்கம் இன்று அவர்கள் அழிவை எதிர்நோக்குகின்றனர் என்றும் தன்னுடைய நூலில்
“ඉ6GöÜ” - 27.(g6) 2004) பக்கம் 12
 
 
 
 
 
 

குறிப்பிடுகின்றார். இது திருச்சியில் அச்சடிக்கப்பட்ட நூல். திருச்சி என்று நாமின்று அழைக்கும்நகரம் திருச்சினாப்பள்ளி என்று அறியப்பட்ட காலத்தில், அங்கு தன் தலைமையகத்தைக் கொண்டு இயங்கியதுதான் இலங்கை லேபர் öbu66)96öı. (Ceylon labour Commission) 9lgbi G6),6îuîı'L 6025(3u J(Bâ56Ibüb, அறிக்கைகளும், இந்தியத் தொழிலாள மக்களை இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு அழைத்துச் சென்ற முறைமைகளும் வரலாற்று ஆவணங்களும் திருச்சினாப்பள்ளியில்த்தான் அச்சடிக்கப்பட்டன.
188 ஆண்டுகளுக்கு முன்புவரை இலங்கையை கண்டியிலிருந்து அரசாண்ட யூரீவிக்கிரமராஜசிங்கன் என்ற கண்ணுசாமியினதும், அவரது மனைவி வெங்கடமள்ளா வினதும் சரிதங்களைக் குறித்த ஆதாரங்களே நம்மிடம் இல்லாதபோது ஏறக்குறைய அதேகாலத்தில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தைப் பற்றிய ஆதாரங்களும் இல்லாமல் போனது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை.
மலையகத் தமிழ் இலக்கியம் என்ற கலாநிதி க.அருணாசலம் எழுதிய நூலுக்குப் பதிப்புரை எழுதிய எஸ்.எம்.ஹனிபா "இப்படியான ஒரு நூல், நாலைந்து தசாப்தங்களுக்கு முன்பு வெளிவந்திருத்தல் வேண்டும். அப்பொழுது ஒருவரும் இத்தகைய பெரு முயற்சியில் ஈடுபடவில்லை. அப்பொழுது எவரேனும் எழுதியிருந்தால் தற்போது கிடைப்பதற்கரிதாகி. யுள்ள பல நூல்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கலாம்" என்று தன் கவலையைக் குறிக்கிறார். 1994ல் எழுதப்பட்ட இப்பதிப்புரையும் 1940 ஜ எட்டிய காலகட்டத்தைத் தான் குறிக்கிறது.
ஆக அதுவரைக்கும் மலையக இலக்கியம் குறித்த - மண்குறித்த மக்கள் குறித்த இலக்கியம் எழுதப்படவில்லை என்ற எண்ணமே நிலவுகிறது. இந்த எண்ணம் தவறானது என்று நமக்கு நினைவுபடுத்த வீரகேசரியில் மு.நித்தியானந்தன் எடுத்துக் காட்டிய 'ராமசாமி சேர்வையின் சரித்திரம்' உதவி பண்ணியது. ஆக 1931ல் கோதண்டராம நடேசய்யர் எழுதிய ராமசாமி சேர்வையின் சரித்திரம்' முதற் சிறுகதையாகக் கொள்ளலாம். அதற்கு முன்னர், ஏறக்குறை 130 ஆண்டுகளுக்கு உட்பட்ட இந்த மக்களின் வாழ்க்கை கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும், வாய்மொழிப் பாடல்களாகவும் வெளிப்பட்டு இருக்கின்றன.
1910களில் தேயிலைத் தோட்டத் தெம்மாங்கு, தேயிலை கொய்யும் தெம்மாங்கு, கும்மியோ கும்மி கோப்பிக்காட்டுக் கும்மி பஞ்சக் கொடுமைச் சிந்து நொண்டிச் சிந்தும் சிந்துக்கும்மியும் என்ற தலைப்புகளில் பி.பண்டாரம், டி.கே.எம்.ஜபார், வில்சன் ஆகியோர் மக்கள் படும் துன்பங்களையும், பஞ்சக் கொடுமையினால் ஏற்பட்ட பரிதவிப்புகளையும், இரயில் வண்டிப்பாதை
பக்கம் 13 "ஓலை" - 27 (யூன் 2004)

Page 9
அமைப்பதில் படும் துயரங்களையும் புத்தக வடிவில் வடித்துள்ளனர். இவ்விதம் வெளியான பிரசுரங்கள் எல்லாமே கும்மி, தெம்மாங்கு, சிந்து என்ற பாடல் வகைகளில் அமைந்திருப்பதை அவதானிக்கலாம். தமிழ் மக்களிடையே ஆழவேரூன்றியிருக்கும் பண்பாட்டு அம்சங்களையும் நாட்டுப் பாடல்களின் செல்வாக்கையும் அடியொற்றியே மலையகத்து ஆரம்ப எழுத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
கறுப்பன் என்ற பெரிய கங்காணியின் சுயசரிதை, அவர் சொன்னதை வைத்து ஆங்கிலத்துரையால் எழுதப்பட்ட நூல் ஒன்றே பத்தொன்பதாம் நூற்றாண்டில் நமக்குக் கிடைக்கின்ற ஒரே நூல், Autobigraphy of Periya Kangany
"கோணக்கோண மலையேறி
கோப்பிப் பழம் பறிக்கையிலே
ஒரு பழம் தப்பிச்சின்னு
ஒதச்சானப்யா சின்னதொர” என்று தன்னுடைய ஒருநாள் உழைப்பை, உழைப்பின் பவுத்திரத்தை அது உதாசீனப்படுத்தப்பட்டதாக எண்ணி ஆத்திரப்படும் துரையை அது உதையாக உருவெடுப்பதை எவ்வளவு உணர்வுபூர்வமாக மேற்குறித்த பாடலில் காணுகிறோம்.
"கூனி அடிச்ச மலை
கோப்பிக் கண்னு போட்ட மலை
அணர்ணனைத் தோத்த மலை
அந்தா தெரியு தடி என்ற வரிகளில் கோப்பி காட்டு வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்பை, தன் உடன் பிறப்பை இழந்துவிட்ட பெண் ஒருத்தி முறையிடுவதை எத்தனை அனாயசமாகக் கூறுவதைக் காணுகிறோம்.
"கணிடிக்கும் கம்பளைக்கும்
பதினாறு கட்ட, எங்க
கணிடாக்கையா பெண்டாட்டிக்கு
கருப்பட்டி கொணர்ட" என்ற பாடலில் தான் வந்த கண்டிச் சீமைக்கும் தான் முதலில் வேலை தொடங்கிய கம்பளைக்கும் உள்ள நடை தூரத்தை பேச்சுவாக்கில் பாடலாக்கும் லாவண்யத்தைக் காண்கிறோம். இந்த மக்களின் ஆரம்பம், இந்த நாட்டில் - இந்தியாவின் விவசாய வாழ்க்கையிலிருந்து இலங்கையின் பெருந்தோட்ட வாழ்க்கைக்கு மாறியதை இத்தகு வாய்மொழிப்பாடல்களிற் தான் அறிய முடிகிறது. எழுத்து வாசனை அறியாத அந்த ஏழைக் குடிமக்கள் பட்ட துன்பந்
"ஓலை" - 27 (யூன் 2004) பக்கம் 14

துயரங்களை அவை காலங் காலமாகக் கூறி நிற்கின்றன. 1867ல் தேயிலை பயிரிடும் வரையிலும் இத்தகு பாடல்கள் இதே உருவில்தான் உயிர் வாழ்ந்தன.
இந்தப் பாடல்கள் வரலாற்றுத் தகவல்களைத் தரும் மூல ஆதாரமாகவும் அமைகின்றன.
மானிருக்கும் புதுத்தோட்டம்
மயிலிருக்கும் அம்பா கோட்டே
தேனிருக்கும் ரசவளையாம்
தேடிப் போவோர் கோடிப் பேரு! என்ற பாடல் கண்டி பள்ளக்கெளயில் 3995 ஏக்கரும் பயிரிடப்பட்டிருந்த காலத்தில் பாடப்பட்ட பாடல். புதுத்தோட்டம், அம்பா கோட்டே, ரஜவளை என்பவைகள் அத்தோட்டத்தில் அமைந்த உட்பிரிவுகளுக்கு - divisions அமைந்த பெயர்கள். கண்டி பள்ளக் கெள இன்று சிதைந்து உருமாறிப் போனாலும் அதன் ஆரம்பம் இந்தப் பாடலிலே இன்னும் உயிர் வாழுகிறது.
மலையக இலக்கியத்தின் ஆரம்பம் இப்படித்தான் அமைந்திருக்கிறது. இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் கொழும்பை மையமாக்கி இந்திய வம்சாவளிமக்கள் செயல்படத் தொடங்கினர். படித்த இந்தியர்கள் இங்கு தொழில் புரிய ஆரம்பித்தனர். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் என லாரிமுத்துக் கிருஷ்ணா, சத்யவாகீஸ்வர அய்யர், நல்லம்மா நடேசய்யர், மீனாட்சியம்மை, டி.சாரநாதன், எச்.நெல்லையா, மீராமுகைதீன், ஏ.சாம்ஜோன் ஆகியோரைக் குறிப்பிடலாம். மலையக இலக்கியத்திலும், அந்த மக்களின் வாழ்க்கையிலும் இவர்களின் பணி காலத்தால் அழியாத ஒன்று.
இலங்கை தென்னிந்தியர் சங்கம், பாரத சமுதாயகிளப், இலங்கை சீர்திருத்தக்கழகம், இலங்கை இந்தியர் சங்கம் என்று பல அமைப்புகள் செயல்பட்டன. தஞ்சைபால கான சபா, இலங்கை சபோதவிலாசபா, சரஸ்வதி விலாச சபை என்ற நாடக மன்றங்கள் மருதானையிலும் ஜிந்துப்பிட்டியிலும் அல்லி அருச்சுனா, சத்தியவான் சாவித்திரி, குலேபகாவலி, சகுந்தலா, சதாரம், சங்கீத கோவலன் போன்ற நாடகங்களை வாரந்தோறும், மேடையேற்றினர். இவைகள் செய்திகளாக அந்தக் காலத்தில் வெளியான பத்திரிகைகளில் இடம்பெற்றுள்ளன. புதுமைப் பித்தனுக்குக் காசு சேர்த்து அனுப்பியிருக்கிறார்கள். இந்தியப் பஞ்ச நிவாரணத்துக்கு ரூபா 206,718யை 1900ம் ஆண்டிலேயே சேர்த்து அனுப்பியுள்ளனர்.
லங்காமித்ரன் 1916, ஜனமித்ரன் 1918, தேசநேசன் 1921, தேசபக்தன் 1924, இலங்கை இந்தியன் 1928, ஜனநேசன் 1928 போன்ற பத்திரிகைகள் தோன்றி மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கின. குறிப்பாக ஜனமித்ரன் ஏட்டில் லாரிமுத்துக்கிருஷ்ணாவும் தேசபக்தன் ஏட்டில் நடேச ஐயரும் தோட்ட
பக்கம் 15 “බුවරග60" - 27 (g607 2004)

Page 10
மக்களின் பரிதாபகரமான வாழ்வு குறித்து பல கட்டுரைகளை எழுதினர். கொழும்பை மையமாக்கிச் செயல்படுவதில் லாபமிருக்கலாம். ஆனால் அது மக்களைச் சென்றடைய வேண்டாமா?"லட்சக்கணக்கான மக்கள் தோட்டங்களில் தான் இருக்கிறார்கள். அவர்கள் இல்லாவிட்டால் இந்நாட்டுக்கு ஓர் இந்தியனும் வந்திருக்கமாட்டார்கள்" என்று சாரநாதன் எழுதினார்.
இந்தியர்களுள் பெரும்பான்மையோர் மத்திய மாகாணத்தில் இருப்பவர்கள். மத்திய மாகாணத்தையாவது ஒற்றுமைப்படுத்தினால் வருங்கால அரசியல் நிர்வாகத்தில் இந்தியர்களுக்குப் போதிய இடம் கிடையாமற் போகாது என்பது திண்ணம்' என்று நடேச அய்யர் தீர்க்கதரிசனம் கூறினார். அவரே அட்டனில் குடியேறிச் செயல்பட ஆரம்பித்தார். ஏழு தமிழ்தினசரிகள் இந்திய வம்சாவளியினரால் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்றுவந்தன.
அட்டன் 1929, மஸ்கெலியா 1936 வட்டகொடை 1939, கொட்டகலை 1942, புசல்லாவை 1947, நாவலப்பிட்டி 1948 பூண்டுலோயா 1958, தலவாக்கொல்லை 1962, பதுளை 1964, கண்டி 1965, பலாங்கொட 1971, ராகலை 1974 என்று மைய நகரங்களாக இருந்து - செயல்பட ஆரம்பித்த மலையக மறுமலர்ச்சி மீண்டும் கொழும்புக்கே வந்து விட்டிருக்கிறது. இது ஆரோக்கியமான வளர்ச்சியாகக் கொள்ளமுடியாது.
நூல் வெளியீடுகள், கருத்தரங்குகள், நூல் பற்றிய அறிமுகங்கள் கொழும்பில் நடப்பதும், அதில் மலையக எழுத்தாளர்கள் ஒரிருவரே கலந்து கொள்வதும் என்ற நடைமுறை ஆரோக்கியமானதல்ல. மலையகத் தோட்டங்களில் நிலவரம் எப்படியிருக்கின்றதென்பதைப் பாராது. கொழும்புப் பத்திரிகைகளிலே அறிக்கைவிடும் மலையக அரசியல்வாதிகளைப் போல, இலக்கியவாதிகள் இருக்கக்கூடாது. மலையக எழுத்தாளர்கள் என்று வகைப்படுத்துவது ஓரங்கட்டுவதைப் போன்ற ஒரு செயல். அடிப்படையில் நாங்கள் இலங்கை எழுத்தாளர்கள். இலங்கையின் மலையகப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். இந்தக் கண்ணோட்டத்திற் தான் இவர்கள் அணுகப்படல் வேண்டும். இப்படி அணுகும் போக்கு இலங்கைப் படைப்பாளி. களிடமும், விமர்சகர்களிடமும் காணக்கிடைப்பதில்லை. ஈழத்துக் கவிதை பற்றிக் கூறுகையில் மலையகத்துக் கவிஞர்களைப் பற்றிக் கூறாது விடுவதும், சிறுகதைகளைப் பற்றிக் கூறுகையில் மலையகச் சிறுகதை எழுத்தாளர்களைப் பற்றிக் கூறாது விடுவதும், ஆய்வாளர்களைப் பற்றிக் கூறுகையில் மலையகத்தைப் பற்றி எண்ணியும் பாராது விடுவதும் இனியும் தொடரக்கூடாது. இந்த மூன்று துறைகளிலும் இந்நாட்டின் அதிஉயர்ந்த 'சாகித்ய பரிசு மலையக இலக்கிய கர்த்தாக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நாவல்துறையொன்றில் தான் அந்தப் பரிசு இவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. இந்த நிலைமையில் ஒரு மாற்றம் கலாநிதி. க.அருணாசலம்
"ஓலை" - 27 (யூன் 2004) பக்கம் 16

அவர்களால் தொடங்கப்பட்டதெனினும், அது தொடரவேண்டும்.
மலையகத்தில் உடல் உழைப்பாளர்களாகத் தென்னிந்தியர்களே இருந்துள்ளனர். இடைநிலை உத்தியோகத்தர்களாக (டீமேக்கர், கிளாக்கர், கண்டக்டர்) வட, கிழக்கு மாகாணத்தவர்களே அதிகமான இருந்துள்ளனர். தோட்டப் பாடசாலை ஆசிரியர்களாகப் பெரும்பாலானவர்கள் இந்தப் பிரதேசத்தவர்களே இருந்துள்ளனர். வெற்றிலை, சுருட்டு விற்பவராக இவர்களே இருந்துள்ளனர். சுருங்கக்கூறின் உடலால் உழைப்பவர்களாக தென்னிந்தியர்களும். மூளையால் உழைப்பவர்களாக வடகிழக்கு மாகாணத்தவர்களும் இருந்துள்ளனர். இலங்கை இந்திய காங்கிரஸ், தமிழ் காங்கிரஸின் மறு உருவாகவே இருந்தது. தமிழ் காங்கிரஸின் உதவித் தலைவராக ஐ.எக்ஸ். பெரைரா இருந்திருக்கிறார். ஜி.ஆர்.மோத்தா அட்டனில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசுகையில் "காங்கிரஸ் பந்தமே! பேசாதே" என்று மக்கள் கூக்குரல் எழுப்பினர். பிரஜாவுரிமைசட்டம் இலங்கை பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட வுடன் - இந்தியர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் பிளவு ஏற்பட்டது. ஜி.ஜி.பொன்னம்பலத்தை நம்பிய இலங்கை இந்திய காங்கிரஸ் நட்டாற்றில் வீழ்ந்தது.
1949 வரையிலும் மலையகச் சிந்தனைகளோடு எந்தவிதமான படைப்புக்களையும் நடேசய்யரையும் மீனாட்சியம்மையையும் தவிர வேறெவரும் தரவில்லை. கறுப்பன் என்ற பெரிய கங்காணியின் சுயசரிதையைப் போன்று தமிழில் எழுதுவதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு இருந்திருக்கின்றன. கறுப்பினத் தலைவர்களாக உயர்ந்த படிப்பறிவற்ற ஒரு சிலரின் சுயசரிதைகள் வெளி வந்திருக்கின்றன. 1876ல் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை என்ற தமிழினப்புலவர் நாவலப்பிட்டிக்குச் சென்று ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளதை, தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை தன்னுடைய "தமிழ்ச் சுடர்மணிகளில்" பெருமையாகக் குறித்தெழுதுகிறார். (பக். 190)
மலையகத்தவர்களைக் கூட்டமாக, ஒரு சமூகமாகக் கண்ணோட்டம் செலுத்தி எழுதி இருக்கிறார்களே தவிர, "இதோ ஒரு மலைநாட்டான்" என்று குறித்து எழுதவில்லை. அப்படி எழுதப்பட்ட ஒரு சிறுகதைதான். நடேசய்யரின் திரு.ராமசாமி சேர்வையின் சரிதம். ஆனால், அந்தச் சிறுகதை தோன்றுவதற்கு
ஆண்டுகள் பலவாகின. 1931ம் ஆண்டு பிறக்க வேண்டி வந்தது.
"ஒருவன் தன் உழைப்பால் எவ்விதம் உயர்ந்த நிலையை அடையலாம் என்பதைப்பற்றி விளக்க ஒரு நண்பரது சரித்திரத்தைச் சொல்ல விரும்புகிறேன்" என்று வாசகனிடம் நேரிடையாகவே பேச ஆரம்பித்து, "ஏழ்மையில் பிறந்து ஏழ்மையில் வளர்ந்து 12 வயதிலே கோயில் திருவிழாவில், காதில் பொன் கடுக்கனாடத் தலையில் சரிகை வேஷ்டி, கையில் தங்கக்காப்பு,
பக்கம் 17 "ஒலை" - 27 (யூன் 2004)

Page 11
10 விரல் பொன் மோதிரங்கள், இடுப்பில் புதுவேஷ்டி, கையில் புதுக்குடை, காலில் புதிய செருப்புப் போட்டு வெகு உல்லாசமாய்க் காணப்படும் "ஆள்கட்டி பெரிய கங்காணியின் வயப்பட்டு, இலங்கைக்கு வரும் ராமசாமி என்ற மாடு மேய்க்கும் இந்திய விவசாயக் குடும்பத்துப் பையனின் கதை இது. "தோட்டத்து அடிமை வாழ்வின் சித்திரவதையிலிருந்து எப்படியும் தோட்டம் விட்டுப் போக வேண்டும் என்றெண்ணிச் சமயம் பார்த்திருந்து ஒட நினைத்திருந்தவன், 'கங்காணிக்குத் தெரியாமல் ஓடுகிறவர்கள் காவற்காரர்களால் பிடிக்கப்பட்டு கங்காணியின் வீட்டுமுன் நிறுத்தப் பெற்றிருக்கும் கம்பத்தில் கட்டப்பட்டு அடிக்கப்படுவதைத் தினந்தோறும் காணும் ராமசாமிக்கு ஒடவும் தைரியம் வரவில்லை. விதியை நொந்து ஒருவேளை பலகாரத்திற்கும், நாலு பணம் வேட்டிக்கும் அடிமையானோமே என்ற எண்ணத்திலே வருந்தி மற்றைய தொழிலாளர்கள் போல் வேலை செய்யத் தலைப்பட்டான்" என்று கதையை அற்புதமாக, உண்மைக்கு மாறாத யதார்த்தங்களோடு எழுதியிருக்கிறார். இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் எப்படி ஏமாற்றப்பட்டு வந்தார்கள் என்பதை அறிவதற்கு இந்த ஒரு கதையே போதும். நடேசய்யரின் சிறுகதையும் இது ஒன்றுதான். கலகா தோட்டத்து கடுதாசி தோட்டம், என்று ஒரு வரி வருகிறது. மலையகத்தில் ஒவ்வொரு தோட்டத்துக்கும் ஆங்கிலத்தில் ஒரு பெயரும் தமிழில் இன்னொரு பெயரும் இருந்து வந்திருப்பதை இன்றைய நாளில் பலரும் மறந்து போனார்கள். தெல்தொட்டைப்பகுதியில் உள்ள Little Valley என்ற 1500 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட தோட்டத்தின் இன்னொரு பெயர்தான் கடுதாசித் தோட்டம் என்பது. அம்பலமான டீ எஸ்டேட்ஸ் கொம்பனிக்குச் சொந்தமாயிருந்து ஜோர்ஜ் ஸ்டுவர்ட் கம்பெனியால் மேற்பார்வை செய்யப்பட்ட தோட்டம். கருவானை தோட்டம் பசுமலை தோட்டம் என்று மேலும் இரண்டு தோட்டங்கள் குறிக்கப்படுகின்றன. கம்பளையில் இருந்த Castle Milk தோட்டத்துக்குத்தான் தமிழில் பசுமலை தோட்டம் என்பது. கலகாவைச் சேர்ந்த Kirawana தோட்டத்துக்குத்தான் கருவானை என்ற தமிழ்ப்பெயர். ஆக இன்று இல்லாமல் போய்விட்டிருக்கும் தோட்டங்களையும், அன்றைய வழக்கிலிருந்த தமிழ்ப் பெயர்களுடன் தன்னுடைய சிறுகதையை எழுதி இருப்பதை வியக்காமல் முடியாது.
தோட்டங்களுக்கான தமிழ்ப் பெயர்கள் இன்று மறைந்து வருகின்றன. இதுகாலவரையிலும் அவைகள் தோட்ட மக்களால்தான் உயிர்வாழ்ந்தன. இன்றோ அவர்கள் தம் தோட்டத்தில் அமைந்திருக்கும் பாடசாலைகளை முன்னிறுத்தித் தம்மை இனங்காட்டுகின்றனர். பாடசாலைகளோ தோட்டத்தின் ஆங்கிலப் பெயர்களால் இனங்காட்டப்படுகின்றன. லெச்சுமி தோட்டம் என்பதே இல்லாமல் போய்விட்டது. (Glascow, KirkOSWali) என்றால்தான் இன்று புரிகிறது. பளிங்குமலை தோட்டம் என்பதை இன்று தேடி கண்டுபிடிக்க
"3606"-27 (607 2004) பக்கம் 18

வேண்டியிருக்கிறது. Chryster Farm என்றால்தான் எல்லாருக்கும் புரிகிறது. 1977க்குப்பிறகு படிப்படியாக தோட்டங்களில் ஏற்பட்டு வரும் நிலைமையிது.
1960க்கு முற்பட்ட காலங்களில், தமது தொழில் சார்ந்த அனுபவங்களை வைத்துக் கொண்டு பலர் மலையகக் கதைகளை எழுதி இருந்தாலும், இதய சுத்தியான நேர்மையுடன் எழுதியவர்களென்று அ.ந.கந்தசாமியையும், அ.செ. முருகானந்தத்தையுமே காணுகிறோம். நாவல் படைப்பதில் தி.ஞானசேகரம் தனது அற்புதமான எழுத்தாற்றலை தனது குருதிமலையில் காட்டியுள்ளார்.
தாம் பெற்ற சமுதாய முக்கியத்துவத்தாலும், தமக்குக் கிடைத்த கல்வி சம்பத்தாலும், பிரிட்டிசார் மேற்கொண்ட பிரித்தாளும் சூழ்ச்சியாலும் மலையகத்தில் தோட்டப்புறங்களில் நிர்வாகஸ்தர்களாகவும் இடைநிலை உத்தியோகஸ்தர்களாகவும் பணியாற்றியவர்களிலும் பார்க்க மருத்துவர். களாகவும் ஆசிரியர்களாகவும் பணியாற்றியவர்களிடையே இந்த மக்களிடையே பழகவும், அவதானிக்கவும் வாய்ப்புக்கள் அதிகம் இருந்திருக்கின்றன. அவர்களில் மற்றும் சிலர் தாம் வரித்துக் கொண்ட இடதுசாரிக் கொள். கைகளால் தொழிலாளர் குறித்த பார்வையைச் செலுத்தியுள்ளனர். இவைகளெல்லாம் மலையக இலக்கியச் சோலையை வளம் படுத்துவதாக அந்தந்தக் காலங்களில் தோன்றி மறைந்த பத்திரிகைகளிலும், சிற்றேடுகளிலும் எழுதப்பட்டன.
மலையக இலக்கியகர்த்தாக்களென்றறியப்பட்ட பலரின் எழுத்துக்கள் இவ்விதம் பத்திரிகைகளிலும் சிற்றேடுகளிலும் தான் இன்னும் உயிர் வாழுகின்றன. படைத்த அவர்கள் தம் படைப்பின் துடிப்பை மாத்திரமே பிரதானமாக எண்ணினர். அவைகளை மீட்டிப் பார்க்கவோ, மீளப் படைக்கவோ அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை. நினைப்பும் இருக்கவில்லை. அதற்கான அவசியம் இல்லாதது போலத்தான் நமது பெரும்பாலான எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன. உடல் உழைப்பாளர்களாக அறியப்பட்ட, கல்வி அறிவு பெறாதிருந்த அவர்களது காலத்தில் அது சரியானதாக இருந்திருக்கலாம். இன்று நிலைமை வேறு. தமது காலத்தைய ஆதாரங்களாக எதையுமே விட்டு வைக்காத அவர்களின் வாழ்க்கை முறைமை நமக்கு கற்றுத் தருவதெல்லாம், நம்மை ஆவணப்படுத்தலுக்காக உந்தச் செய்கின்றன.
மறுமலர்ச்சிக் கதைகள், சுதந்திரன் கதைகள் என்று இலங்கையிலும், கணையாழிக் கதைகள், சரஸ்வதி படைப்புகள் என்று தமிழகத்திலும் புத்தகங்கள் வர ஆரம்பித்திருப்பது இந்த உந்துதலால்தான். இந்த உந்துதலை மலைநாட்டை நோக்கி அழைத்து வந்த துரைவி பதிப்பகத்தின் மலையச் சிறுகதைகள் தொகுதியும் உழைக்கப் பிறந்தவர்கள் தொகுதியும்
பக்கம் 19 "ஓலை" - 27 (யூன் 2004)

Page 12
இந்த விதத்தில் குறிப்பிட்டுக் கூறத்தகுந்தவைகள். அவை இரண்டும் வெளிவந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. அதைச் சொல்லிக் கொண்டேயிருப்பதில் அக மகிழ்ச்சி ஏற்படலாம். இந்த சமுதாயத்தில் அந்த வழியில் சென்று வர நம்மில் பலர் உருவாக்கப்படல் வேண்டும்.
சிதம்பரநாத பாவலர், சி.வி.வேலுப்பிள்ளை, மலைச்செல்வன் ஆகி. யோரின் நாவல்களை, இன்றைய தலைமுறையினரிடமிருந்து பறித்து விடுவது, இளந்தலைமுறையினரை ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையைத் தெரியவிடாமல் வைத்திருப்பது மாத்திரமல்ல, அந்தப் படைப்பாளிகளைப் பற்றிய ஒரு பூரணமான கணிப்பைச் செய்வதற்கும் தடையாக இருக்கிறது. சி.வி.வேலுப்பிள்ளை இறந்து இன்று பத்தொன்பது ஆண்டுகளாகிவிட்டன. அவரைப்பற்றிய ஒரு மதிப்பீட்டைச் செய்திருக்கிறோமா? அவரது தொடர்கதைகளாகப் பத்திரிகைகளில் வெளிவந்த நாவல்களின் பெயரைச் சொல்லிக் கொண்டிருப்பது அவரை இத்தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவது ஆகுமா? குடியுரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்திய வேளையில் "இந்த நாட்டில்தான் பிறந்தேன், என் கண்கள் ஒளியைக் கண்டது இந்த நாட்டில்தான், இந்தநாட்டில்தான் நான் கண்களை மூடுவேன்" என்று உறுதியாகப் பறைசாற்றிய அந்த மக்கள் கவிமணியின் படைப்புகள் நூலுருவாக வேண்டியது அவசியம். சாரல் பதிப்பகம் "வாழ்வற்ற வாழ்வு" என்ற நாவலைப் புத்தகமாக்கியிருக்கிறது. 290 பக்க நாவல் அது. சி.வியின் Born to labour தமிழில் தேயிலை தேசம் என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. சிக்கன்ன ராஜூவின் குறுநாவல் வேரறுந்தமரங்கள்" வெளிவந்துள்ளது. வட, கிழக்கு மாகாணங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரதேச சபை உறுப்பினர்களும் ஓரளவுக்கு இலக்கியப் பணிகளுக்கு உதவி செய்கின்றனர். மலையகத்தைப் பிரதிநிதித்துவம் பண்ணுகிறவர்கள் பத்திரிகைகளில் அறிக்கை விடுவதோடு அமைந்து விடுகிறார்கள். தமக்குக் கிடைத்த வாய்ப்பை, தமிழகத்துப் புத்தகங்களை வாங்கி குவிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.
சென்ற ஆண்டு, சமூக அபிவிருத்தி அமைச்சு வாங்கிக் குவித்திருப்பவைகள் லட்சத்துக்கு அதிகமாகத் தமிழகத்து நூல்களைத்தாம். இதில். எத்தனை புத்தகங்களை மலையகத்து மாணவர்கள் வாசித்து விளங்கிக் கொள்கிறார்கள் என்பது நமக்கு விளங்கப் போவதில்லை.
வடக்குப் புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் தமிழ் மொழி அமுலாக்கல், இந்து கலாசார அமைச்சு 2001ம் ஆண்டு வழங்கிய நன்கொடையைப் பயன்படுத்தி "சுதந்திரன் சிறுகதைகள்" என்ற பெரும் சிறுகதைத் தொகுதி அச்சிட்டு வெளியிடப்பட்டது என்பதைக் கூட நம்ப மறுப்பவர்களாக
"ஓலை" - 27 (யூன் 2004) பக்கம் 20

இருக்கின்றனர். இலங்கை அரசியலில் ஒதுக்கி வைக்கப்பட்ட மலையகம் இலக்கிய உலகிலும் அதே நிலைக்குத் தான் தள்ளப்பட்டிருக்கிறது. மத்திய மாகாணத்து தமிழ் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தமக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சிங்கள புத்தகத்தை வாங்கியதை 2001ம் ஆண்டு கண்டோம். இந்நிலையில் ஒரு பதிப்பகம் மலைநாட்டில் தொடர்ந்து செயல்படுவதற்கான சூழ்நிலை உள்ளதா என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அரசியலில் முக்கியத்துவம் பெறுபவர்கள் இத்துறையிலும் கவனம் செலுத்தினால், இது நடைபெற முடியாத செயலல்ல என்பதை நடேசய்யரின் சரித்திரம் நமக்குக் கூறி நிற்கிறது.
நடேசய்யரின் நூல்களையும், அவரது மனைவி நல்லம்மாவின் நூல்களையும் 1940க்கு முற்பட்ட காலப்பகுதியில் இலங்கையில் தொடர்ந்து வெளியிடுவதற்கு அவரது அரசியல் முக்கியத்துவம் தான் காரணமாக அமைந்தது. நடேசய்யரின் அரசியற் செயற்பாடுகள் அட்டனை மையமாக்கிய பிறகு அட்டனில் சகோதரி அச்சகம்' ஒன்றை அமைத்து, தனது அரசியல் அறிக்கைகளையும், தானெழுதிய நூல்களையும் வெளியிடுவரானார். தனது மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட அந்த அச்சகத்திலிருந்து இந்திய தொழிலாளர் துயரச் சிந்து' என்ற இரண்டு பகுதிகளில் வெளியான கவிதை நூலையும் (1931) நீ மயங்குவதேன்? என்ற அவரது முதற் சிறுகதையை உள்ளடக்கிய நூலையும், நரேந்திரபதியின் நரகவாழ்க்கை என்ற -Best Seller நூலையும் வெளியிட்டார்.
சி.வி.வேலுப்பிள்ளை தனது பிரகாசமிகுந்த அரசியல் வாழ்க்கையின் போதுதான் தனது நவீனத்தையும், கவிதைகளையும் நூல் வடிவில் தந்து இலங்கை மக்களைக் கவரலானார். தம்மை மையப்படுத்திய அரசியலை முன்னெடுப்பவர்கள் படித்தவர்களாகவும், சமுதாய நோக்குடையவர்களாகவும் கூடவே இலக்கிய கர்த்தாக்களாகவும் இருக்கும் போது சாத்தியமாகிற இச்செயற்பாடுகள் பணபலத்தை மாத்திரம் வைத்து அரசியல் செய்யும் போது செயற்படுவதில்லை. இன்று அந்த நிலைமைதான்.
மறைந்த செளமிய மூர்த்தி தொண்டமான் அடிக்கடியும் ஜனாப் அஸிஸ் ஒருமுறையும் தம்முடைய பிறந்தநாள் மலர்களை வெளியிட்டிருந்தனர். நூல்கள் அச்சில் வெளிவராத மலையகத்தில் 1988 வரை ஆண்டுதோறும் அவைகள் வெளிவந்தன. 1983ல் ஏற்பட்ட அனர்த்தங்களும், அதனால் ஏற்பட்ட அச்சநிலையும் மலையக இலக்கியத்தை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது என்ற போதிலும் அதன்பின்னர்தான் தம்மை இலக்கியத்தில் ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடையே தோன்றியுள்ளது.
மலையக வெளியீட்டகம் என்ற அமைப்பை மூன்று எழுத்தாளர்கள்
பக்கம் 21 "ஓலை" - 27 (யூன் 2004)

Page 13
ஆரம்பித்ததும் அதன் விளைவாக இருபதுக்கும் குறையாத நூல்கள் இன்று வெளிவந்திருப்பதும் குறிப்பிட்டுக் கூறியாக வேண்டிய செயலாகும்.
நூல்கள் வெளியிடுவதோடு அதைச் சந்தையில் விற்க வேண்டிய செயலில் இறங்கும் போது உள்ள சிரமத்தை நூல்களை வெளியிடுபவர்களைக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. வீரகேசரிப் புத்தகங்களை வெளியிட்ட காலத்தில் மலையகத்தில் பதினேழு புத்தக விற்பனை நிலையங்கள் இருந்தன. இன்று எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் கொழும்பு - பூபாலசிங்கம் ஒன்றுதான். மலைநாட்டில் இலக்கியப் புத்தகக் கடையென்று எதுவுமே இல்லை.
இதழில் பிரசுரிக்கத்தகுந்த படைப்புகள் தொடர்ச்சியாக எமக்குக் கிடைப்பதில் உள்ள காலதாமதமே, உரிய காலத்திற்குள் இதழைக் கொண்டு வருவதில் எதிர்நோக்கும் பிரதான சவாலாக உள்ளது' என்று மூன்றாவது மனிதன் எழுதுகிறது. நமது சிறந்த படைப்பாளிகள் பலர் இப்போது எழுவதில்லை என்பதே நமது அனுபவமாக உள்ளது என்றும் அது கூறுகிறது.
தாமும் எழுத வேண்டும். இலக்கிய உலகில் பிரபல்யம் பெறவேண்டும் என்ற 'போலிப்புகழுக்கு ஆசைப்பட்டு எழுதுவதிலும் பார்க்க, குமுறும் கொந்தளிக்கும் தமது உள்ளத் தவிப்புகளையும் ஏக்கங்களையும் கொடுமைக்கும் அநீதிகளுக்கும் எதிராகத் தமது போர்க்குரலையும், எழுச்சியுறத் துடிக்கும் மனோநிலையையும் வெளிப்படுத்துவதற்கேற்ற ஒரு வடிகாலாகவே பயன்பட்டு வந்திருக்கிறது.
இலங்கை சுதந்திரமடைந்த வேளையில் இலங்கைச் சனத்தொகையில் 16 சதவீதமிருந்தவர்கள் இன்று 5சதவீதமாகிவிட்டார்கள். இலங்கை சனத்தொகையில் தொழில் புரிபவர்களாக 33 சதவீதமிருந்தவர்கள் இன்று 5 சத வீதமாகிவிட்டனர். அந்நியச் செலவாணியின் முக்கியத்துவம் இன்று தேயிலையைப் பொறுத்தமட்டில் குறைந்துவிட்டது. இது இன்னும் குறையும். ஆனால், தேயிலைத் தோட்ட மக்கள் என்ற ஒரு பகுதியினர் இருக்கவே செய்வர். அவர்களது இலக்கியம் தொடர்ந்துமிருக்கும்.
அறிவைப் பாதுகாப்பதற்கு காட்டிய சிரத்தையில் கால்வாசியேனும், அறிவைப் பரப்புவதற்கு, ஆசியக் கண்டத்தவர்களும், ஆபிரிக்கக் கண்டத்தவர்களும் காட்டவில்லை என்பது பலரது கணிப்பாகும்.
அது உண்மைதான் என்பதை நாம் இன்று உணர்கிறோம்.
ܐܠܓ
“ඉරන60" - 27 (gරහ් ඉO04) பக்கம் 22

CF (BJSU U6)6OS
சிறப்புச் சொற்பொழிவு 09.05.04 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்குச் சங்கத் துணைத்தலைவர் திரு.ஆ.இரகுபதிபாலழறீதரன் அவர்கள் தலைமையில் பூரீமதி ருக்மணி (தமிழ்நாடு) அவர்களால் 'திருக்குறள்
விளக்கும் காவியங்கள்' என்ற பொருளில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.
கலந்துரையாடல்
13.05.04 வியாழக்கிழமை மாலை 5.00மணிக்கு குமாரசாமி விநோதன் கருத்தரங்கக்கூடத்தில் அவுஸ்திரேலியா நியூ சவுத்வேல்ஸ் சாள்ஸ் ஸ்ருவேட் பல்கலைக் கழக நூலகத்தின் பருவ இதழ் பகுதியின் துணைத்தலைவரும் சமூக விஞ்ஞானக் கற்கைநெறிக்கான இணைப்பாளருமான கலாநிதி மு.குணசிங்கத்துடனான ஒர் கலந்துரையால் இடம் பெற்றது. இந்நிகழ்வில் நூலகங்களும் அது தொடர்பான செயற்பாடுகள் அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றியும் ஆராயப்பட்டது.
அறிஞர் சந்திப்பு 22.05.04 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு குமாரசாமி விநோதன் கருந்தரங்கக் கூடத்தில் சங்கத்தலைவர் திரு.பெ.விஜயரத்தினம் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு பாண்டிச்சேரிப் பல்கலைக்கழக நாடகத்துறைத் தலைவரும் பேராசிரியருமான முனைவர் கே.ஏ. குணசேகரனுடனான சந்திப்பு இடம்பெற்றது.
பக்கம் 23 "ஓலை" - 27 (யூன் 2004)

Page 14
சுகாதாரக்கருத்தரங்கு 23.05.04 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு கல்விக்குழுவின் ஏற்பாட்டிலான ஆரோக்கியத்தில் ஆன்மீகத்தின் பங்கு' என்ற பொருளில் சுகாதாரக் கருத்தரங்கு சங்கத் தலைவர் திரு.பெ.விஜயரத்தினம் அவர்கள் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில்
கருத்தரங்கின் நோக்கம் - திருமதி.அ.புவனேஸ்வரி
(துணைப்பொதுச்செயலாளர்) ஆன்மீக மேம்பாடு ஆரோக்கியத்திற்கு அவசியமா
-டாக்டர் எம்.யோகவிநாயகம் நோயாளரைப் பராமரிப்பதில் ஆன்மீகத்தின் பங்கு
திரு.காவைத்தீஸ்வரன் - (நிதிச் செயலாளர்) ஆகியோரது உரையைத் தொடர்ந்து ஆழச்சுவாசித்தல், ஓங்காரம், தியானம் என்பன பற்றிய விளக்கமும் செய்முறைக் காட்சிகளும் திரு.கா.வைத்தீஸ்வரன் அவர்களால் செய்தும் காண்பிக்கப்பட்டன.
தமிழ்ப்புலவர் வரிசை - V 28.05.04 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சங்கத்தலைவர் திரு.பெ.விஜயரெத்தினம் அவர்கள் தலைமையில் கலாபூஷணம் பண்டிதர் சி.அப்புத்துரை அவர்களால் தமிழ்ப்புலவர்கள் பற்றிய தொடர் உரை நிகழ்த்தப்பட்டது.
நால்நயம் காண்போம். 05.05.2000இல் ஆரம்பித்து பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.30மணிக்கு நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் இலங்கை எழுத்தாளர்களது நூல்கள்
நயம் காணலுக்காக எடுத்தாளப்படுகின்றன.
திகதி நூல் ஆக்கம் நயம் காண்பவர்
14.05.2004 வெண் தாமரையின் மடுளுகிரிய சோக்கல்லோ (135) பேரழகு விஜயரட்ண சண்முகநாதன்
1.திரு.எஸ்.நடராசா 2ಙ್ಗಂ। சிங்கப்பூரின் கதை டாகடா |2.திரு.கே.கணேசலிங்கம்
சிவம் 3.திரு.கமலாகரன்
"ஓலை" - 27 (யூன் 2004) பக்கம் 24

அறிவோர் ஒன்று கூடல் ~ இலக்கியச் சொற்பொழிவு
திகதி விடயம் நிகழ்த்தியவர்
05.05.2004 தேசவழமைச்சட்டங்கள் திரு.இராஜஇராஜேஸ்வரன்
(246) தங்கராஜா
(247) அரங்கேற்றம் திரு.மு.தியாகராஜா
19.05.2004 அந்திமாலையிலான புராணவித்தகர்
(248) மாறுபட்ட சிந்தனைகள் திரு.மு.தியாகராஜா
(சிலப்பதிகாரத் தொடர்)
19.05.2004 பூம்புகார் நகரில் நிகழும் புராணவித்தகர்
(249) இந்திர விழா திரு.மு.தியாகராஜா
(சிலப்பதிகாரத் தொடர்)
சங்கப்பலகை தயாரிப்பு :
சி.சரவணபவன் (துணை நிதிச்செயலாளர்)
சோதினைக் காலம்.
17. 7. 1976
findigalpaig.
தமிழர் வரலாற்றிலே இன்று ஒரு பெரிய தியாகங்கள் வழியே தமிழினத்துக்கு ஒரு சுபீட் சமான எதிர்காலம் கட்டியெழுப்பப்பட வேண்டும். அதற்குப் புதிய முறையிலே புதுக் கட்டிடத்திலே இன்று முதற்பணி தொடங்கும் கொழும்புத் தமிழ்ச் சங்கம் பெரும் பணியாற்ற வேண்டும்
பேராதனைப் பல்கலைக் கழகம்
ஆ.வேலுப்பிள்ளை தமிழ்த்துறை
பக்கம் 25
"ஓலை" - 27 (யூன் 2004)

Page 15
- நீ பி. அருளானந்தம்
"மாமன் மருமோன் எண்டுற மரியாதையேயில்லாமல் ரெண்டு பேரும் மச்சான்மார் மாதிரி தோளில கைபோட்டுத்திரியிறிய ளென்ன?" என்று அக்கா கோப்பியை எங்கள் இருவருக்கும் தருகிற கையோடு ஏசுவதுபோல் பேசுகிறா. மருமகனோ சிரிக்கிறான்.
அக்கா சொல்வதைக் கேட்க எனக்கென்றால் அது வெட்க மாத்தானிருக்கு. ஆனாலும், தோளுக்கு மிஞ்சினால் தோழன்தானே?
அதுவும் அவன் வெளிநாடு சென்று வந்திருக்கிறான் மேலைத்தேய நாகரிகத்தைக் கற்றுவந்து அதையெல்லாம் இப்போது எனக்குக் கற்பிக்கும் குருவல்லவா அவன்.
"அவனைப் போய் மருமகன் என்று வெருட்டி நடப்பிப்பது இனிமேல் நடக்குமா..?"
அவன் இங்கு வந்த வேளை எனக்கும் வயல் விதைப்பு முடிந்துவிட்டது. அதனால் சதா அவனுடனேயே நான் ஊர் சுற்றித் திரிகிறேன்.
இந்த ஊரில் உள்ள பட்டிக்காட்டானெல்லாம் என்னையொரு பட்டணத்தான்நிலையில் வைத்தே பார்ப்பவராயிருந்தார்கள். மற்றவரிலிருந்து நான் ஒரு பிறிம்பான மனிதன் என்று காட்டக் கூடிய அனைத்துத் திறமையும் எனக்கிருந்தது. நான் போடுகிற விதம் விதமான உடுப்புகள், நடை, பேச்சு எல்லாமே வித்தியாசமாயிருக்கப்பார்த்துக் கொள்வதில் என் கவனிப்பு இருந்து வந்தது.
இப்போது என் அக்கா மகன் - இவன்தான் என் மருமகன் வந்திருக்கிறான். என் போக்குக்கேற்றதாய் நடந்து கொள்ளும் நல்லதொரு மருமகன் அவன்.
"நீ எப்போ திரும்பிக் கனடா பயணம்?" - நான் அவனைக் கேட்டுப் பார்த்தேன்.
"ரெண்டு வருசமாகும் மாமா!." அவன் ஒரு நீண்ட காலத்தைச் சொன்னான். "ரெண்டு வருசமா!" எனக்கென்றால் அதைக் கேட்டவுடனே நல்ல சந்தோஷம். இப்படியே கொஞ்சநாள் ஜாலியாக பொழுது கழியும் என்பதை
"ஓலை" - 27 (யூன் 2004) பக்கம் 26
 

நினைக்கவே தித்திப்பாக இருந்தது. இதை விட இன்னுமோர் நல்ல சேதி!
மூன்று நண்பர்களோடு கெனடாவில் இருந்து அவன் வந்திருப்பதாகச் சொன்னான்.
நாங்கள், கனடா" என்று சொல்வதை இவன் 'கெனடா என்று அமெரிக்க ஸ்டைலில் அழகாக உச்சரிக்கிறான். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.
"மாம்மா!. அவங்களும் இங்க வருவாங்கள். அவங்கள் என்னட்ட வரவும் நான் உங்களை அவங்களுக்கு இன்ருடியுஸ் பண்ணிவைக்கிறன். நல்ல பெடியங்கள் மாமா அவங்கள்."
கண்களை சிமிட்டிக் கொண்டு சொன்னான். அதைக் கேட்க எனக்கும் மனசுக்குக் குளிச்சியாயிருந்தது. அட்லாண்டிக்காவில் போய் இறங்கி பனிப்பிரதேசத்தைப் பார்த்த குளிர்ச்சி அது.
மருமகன் வரும்போது பல 'விஸ்கி' போத்தல்களையும் கொண்டு வந்திருந்தான். உயர்ரக சிகரெட்டுகள், சேட்ஸ், டிரவுசர்ஸ், கொலோன் இத்தியாதியெல்லாம் கொண்டு வந்திருந்தானா. சேட், டிரவுசர்ஸ் ஒரு சோடி எனக்கும் தான் கொடுத்தான். ஆனால், அந்த விஸ்கியை மாத்திரம் வேறு நண்பர் ஒருவர் வீட்டுக்குக் கொண்டுபோய் அந்த வீட்டு நண்பருக்கும் ஒரு டிரிங்' (Drink) கொடுத்து பேதமில்லாமல் நானும் அவனும் எதிரெதிராக கிட்டவாக இருந்து டிறாம்" (Dram) கணக்கில் வார்த்து உள்ளேபோட்டுக் கொண்டிருந்தோம்.
முதல் எடுப்புக்கு ஒரு டிறாம்' குடித்துவிட்டு இரண்டாவது எடுப்புக்காய் வாயும் கிளாசும் காய உட்கார்ந்திருந்த அந்த நண்பருக்கு மீண்டும் ஒரு புல் கிளாஸ் மருமகன் வார்த்துவிட்டான்.
அதுக்குப் பிறகு எங்கள் பாடுதான். அதிகத்துக்கு அதிகத்துக்குப் போட்டு மருமகனுக்கு வெறிவந்து விட்டது. கழுத்திலிருந்த நரம்புகள் குறுக்கும் நெடுக் குமாய் ஓடிப்பிணைந்து வீங்கியிருந்தது அவனுக்கு. வெறியேறினால் அப்படித்தான் இருக்குமாம்.
அவன் டேஸ்டை எடுத்து சாப்பிட்டுக் கொண்டு "ஒரு பாட்டுப்பாடுங்களன் மாமா" என்று கேட்டான்.
தண்ணியடித்துக் கொண்டு பாட்டுக்கள் பாடுவதிலே எனக்கொரு தனிக்
"குவழி" உண்டு. பழங்காலத்து சினிமாவில் உள்ள சோகப் பாடல்களைப் படித்து
வெறியாயிருப்பவரையெல்லாம் அழவைத்து விடுவதில் எனக்குத் திறனு
முண்டு. இதுவெல்லாம் எனக்கு கள்ளுக் கொட்டில் பழைய அனுபவம்.
அதனால் அவன் சொன்னவுடனே சோகராகத்தை இசைக்கத் தொடங்கி
னேன். 'அமிர்தவர்ஷினிக்கு மழை பெய்யுமோ இல்லையோ அதை நானறியேன்.
பக்கம் 27 "ஓலை" - 27 (யூன் 2004)

Page 16
ஆனால், நான் பாடும் பாட்டுக்கு மருமகன் மூக்கைச் சிந்தி அழுவான் என்று நன்றாகவே நம்பிக்கையுற்றேன். இந்த நம்பிக்கையூடே சோகப்பாட்டு ஒன்றை மனசை உருக்கும் வண்ணமாக இழுத்துவிட்டேன். வீட்டுக்காரநண்பர் ஒரு மண் பானையை வைத்துக் கொண்டு 'கடம் வித்துவான் மாதிரி தலையை ஆட்டிக் கொண்டு தபுக்கு தபுக்கென்று அடித்து கணிசமான அளவுபாட்டுக்கேற்றதாய் சுருதி சேர்த்தார்.
போச்சடா. அவன் அழுதே விட்டான். எனக்கு வெற்றிதான்! ஆனால், பாட்டைக் கேட்டது முதல் இதயத்தை அழுத்துகிற வதைப்புடன் அவன் துடித்தான்.
துயரம் தான் மிக வினோதமான மனிதர்களை பிறருக்கு அறிமுகப்படுத்துகிறது.
சோகத்தை தாங்கிக்கொள்ள இயலாது "இங்கேயிருந்து வெளிக்கிடுவம் மாமா!" என்றான் அவன்.
அக்கண ஆனந்தம் எனக்கு பறந்ததாய்விட்டது. அவனை நான் துன்புறச் செய்திட்டேனோ?. என்றுதான் திகிலுற்றேன். என் கையை இறுகத்தன் கைகளால் பிடித்துக் கொண்டு அவன் வீதியில் நடந்தான். தசையும், நரம்பும் முறுக்கேறி முயங்கி இருப்பதை அவன் என்னைப் பிடித்திருக்கும் கிடுக்குப் பிடியில் உணர்ந்தேன்.
நாற் சந்திக்கு வந்ததும் சந்தியில் உள்ள மதகில் என்னை அவன் உட்காரச் சொன்னான். நான் உட்காரவும் அருகே அவனும் இருந்துவிட்டான். அவன் இருக்கும் வேளையில் கண்கள் அவனுக்கு இலந்தைப்பழம் போல் சிவந்திருக்கக் கண்டேன்.
"கெனடா நல்லதொரு இடம் மாமா எனக்குத்தான் அங்க போய் வாழத்தெரியாமல் போச்சு. அகதிகளெண்டு எங்களை அங்கீகரிச்சு அவங்கள் கூடுதலாய் எங்களுக்குக் காசைத் தந்தாங்கள். ஆனா, காசைக் கண்டோடன எங்கட வீடுகளை நாங்க மறந்தம். குடி, அது இது எண்டு எங்கட நோக்கங்களே பிறகு மாறிப் போச்சு.
எல்லாத்துக்கும் கெடுதியாய், டிரக்ஸ்சுக்கும் போதை வஸ்துகளுக்கும் அடிமையாயிட்டம்" சொல்லிக் கொண்டு வந்தவன் இடை நடுவில் நிறுத்தினான். நான் தலைகுனிந்தபடி கீழே நிலத்தைப் பார்த்துக் கொண்டு அவன் சொல்கின்றதெல்லாம் கேட்டவாறிருந்தேன். அவன் சொல்லிவந்த கதை இடையே தடைப்பட்டுவிட்டதும் உடன் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தேன்.
எனக்கு இயல்பாகவே கற்பனா சக்தி அதிகம். போதை வஸ்துக்கள் என்று அவன் சொல்லவும் அவன் முகத்தை நான் உற்று நோக்கினேன். அங்கே அவன் முகத்தில் பொப்பி மலர்த் தோட்
“බ්‍රග60” - 27 (gගනී. ඉOO4) பக்கம் 28

டத்தையே பார்த்த மாதிரி இப்போது எனக்கு இருந்தது.
"இருக்கும் இவன் போதைவஸ்துக்கு அடிமைப்பட்டுப்போய் இருப்பான்" என்று நான் நினைத்துக் கொண்டிருக்க, அவன் தன் கதையை மேலும் தொடர்ந்தான்.
"ஆரம்பத்தில் எனக்கு இங்கிலீசே தெரியேல்ல மாமா? நானும் இங்க வந்திருக்கிற என்ர அந்த மூண்டு பிரன்சும் அகதிக்காசு வர அதை எடுத்துக் கொண்டு முதல்முதலாடிஸ்கோவுக்குப் போனம். கெனடியன் கெனடியன் தான் மாமா கரெக்டா அந்தத் தியதிக்கு எங்களுக்கெல்லாம் காசனுப்பி வைச்சிடுவான்.
"பிறகு" என்று கேட்டுவிட்டு நான் வாயைப் பிளந்து கொண்டிருக்க வேண்டியதாய் இருந்தது.
அவன் சிகரெட்டை எடுத்து நெருப்புப் பற்ற வைத்தான் பற்களை எல்லாம் சேர்த்து இறுகப்பதித்துக் கொண்டு இதழ் விரித்து புகையை உறுஞ்சி உள்ளே இழுத்தான். அவன் செய்வதெல்லாமே ஒரு புதிய பாணியாக எனக்குத் தெரிந்தது. அவன் செய்கைகள் ஒவ்வொன்றும் எனக்கு இரகசிக்கும் படியாக இருந்தது.
அவன் கண்களை நன்றாக அகல விழித்து மேலே வானிலுள்ள நட்சத்திரங்களை எண்ணிப் பார்ப்பது போல் சிறிது நேரம் இருந்துவிட்டு
"மாமா நான் கெனடியன் கேளைத் (Girl) தான் கலியாணம் முடிச்சன். வெள்ளைக்காரி" என்றான்.
எனக்கு திக்கென்று இருந்தது. "பாவி. படுபாவி. இவ்வளவு நாளா இது இங்க வீட்டுக்கும் தெரியாதே." என்று நினைத்துவிட்டு அந்த அதிர்ச்சியை என்னிலிருந்து வெறியேற விடாது அடக்கி மறைத்துக் கொண்டு.
"எப்படியடா இதெல்லாம் நடந்தது?" என்று குரலைத் தாழ்த்தியவாறு கேட்டேன்.
"டிஸ்கோவுக்குப் போய்த்தான் பிடிச்சன். அங்கபோய் குடிச்சிட்டு வெறியில பாட்டுப் பாடிக்கொண்டிருந்தோமா மாமா. அவளும் கொக்கா கோலாவை வைச்சு குடிச்சுக் குடிச்சுக் கொண்டு என்னையே குறிப்பாப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
எங்கள் நாலு பேருக்கிளையும் என்னைத்தான் வடிவாய் பார்த்து தனக்குக் கிட்ட வாவென்று கூப்பிட்டாள் . சா. ரோஸ்சாய்பூ இதழ் மாதிரி பார்க்க அவளிருந்தாள் மாமா"
நீரின் அதிர்விலிருந்து தண்ணிர் வளையங்கள் இடைவிடாமல் விரிகின்றது போல அவன் சொன்னதும். அவள் எப்படி இருப்பாள் என்று சிந்தனையை நான்
பக்கம் 29 "ஓலை". 27 (யூன் 2004)

Page 17
விரிய விட்டேன்.
பூவெல்லாம் நான் கண்டதுதானே. இவன் சொல்லும் அந்தப் பூவையை நான் காணாது அவள் அழகை எப்படித்தான் அறிவேன். அவன் கை விரல்கள் கால்சட்டைப் பைக்குள் சென்று புகைப்படம் ஒன்றை வெளியே கொண்டு வந்தது.
"அடப்பாவி!. எல்லாம் திட்டம் போட்டுத்தான் தயாராய் வைத்துக் கொண்டிருக்கிறாயா?" என்று நினைத்துக் கொண்டு அவன் தந்த புகைப்படத்தைப் பார்த்தேன்.
"வெள்ளைக்கார பொம்பிளையஞக்கு அழகேயில்லை. சுறா மீன் மாதிரி வெளிறிய தோற்றந்தான் அவயளுக்கு. என்று சிலரை இங்கவரேக்க மட்டும் பார்த்துப் போட்டு தப்புக் கணக்கு போட்டுவிடுறம். உதெல்லாம் எவ்வளவு மடைத்தனமென்று அவளைப் பார்த்தவுடன் நான் நினைச்சன்"
அந்த அளவுக்கு கொள்ளை அழகுடன் அவள் காட்சியளித்தாள். செழுமையான மார்பகங்களோடு பாறையில் இருந்து செதுக்கப்பட்டவள் போல் அவள் இருந்தாள். அச்சு அடையாளமெல்லாம் மர்லின்மன்றோ என்ற கவர்ச்சி நடிகை மாதிரி இருந்தது.
அவளைப் போலவே காங்கை அடிக்கும் கண்களின் வசியம் இவளுக்குமிருந்தது. இதைக் கொண்டு இவளை அழகி என்று யாரும் சொல்லத் தயங்க முடியாது என்று நான் நினைத்தேன்.
அந்த வெள்ளைக்காரிக்கும் அவனுக்குமுள்ள உள்ளிரகசியத்தைக் கேட்டு பிடுங்கிக் கொள்ள எனக்கு அதிகம் ஆவலாயிருந்தது.
"பிறகு. பிறகு. நடந்ததைச் சொல்லன்?" என்றேன். "மாமா வேல்ட் இன்டர் நசனல் லாங்விச் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?"
"?. நான் விழித்தேன் "சைகையால விளக்கிறது. அப்ப எனக்கு இங்கிலீஸ் தெரியாது அதால அந்த மெதேட்டைத் தான் நான் பிக்கப் பண்ணினன். அதுவே அவளுக்கு என்மேல கூடுதலா ஆசையை வளர்த்திட்டுது. பிறகு. பிறகு ரெண்டு பேருமா அடுத்தடுத்து அந்த டிஸ்கோவுக்கு வந்து சந்திச்சம். எனக்கும் பிறகு அவளால இங்கிலிஸ் கொஞ்சம் கொஞ்சமா இம்புரூவாயிட்டுது"
"அதுக்குப் பிறகு" இது நான். "அதுகள் எல்லாத்துக்கும் கொள்ளையாயங்க காசு வேணுமே மாமா. அதை எப்பிடி கெனடாவில் தேடுறதெண்டு நான் மூளையைப் போட்டு குழப்பினன். அவள் மாதிரி ஒரு வெள்ளைக்காரியை என்னை மாதிரி ஒருவன்
"ஓலை" - 27 (யூன் 2004) பக்கம் 30

வைச்சிருக்கிறதெண்டா முதலாவது காசு வேணும். அடுத்தது 'பொடிபில்ட்' பண்ணி உடம்மை ஸ்ரோங்காய் வைச்சிருக்கவேணும். ரெண்டாவது விஷயத்தைப்பற்றி எனக்குக் கவலை இருக்கேல்ல ஆனா, காசு?. அதுக்கும் அங்க சில பிரன்ஸ்சால வழி கிடைச்சுது. ஹெரோயின் பிசினஸ் அது. முதலில சம்பளத்துக்குக் கடத்தினன். பிறகு கையில காசு சேரநானே அதை காசு கொடுத்து வாங்கிச் சொந்தமா அந்த பிசினஸ்சை பெரிசாச் செய்தன். வாங்கேக்க அது நல்ல சரக்கோவெண்டு பார்க்க முதலில நான்தான் ரெஸ்ட் பண்ணி பார்க்கவேணும். அதுக்காக அதை சூடாக்கி மூக்கு விரிய வாடை பிடிக்கத் தொடங்கினன். ஆ. சொர்க்கமே பூமியில வந்ததுமாதிரி ஒரு சுகம் மாமா. அப்பிடி. அப்பிடியாய்த்தான் அது இருக்கும். என்ன மாதிரி அந்தப் போதையிலே வருகிற இன்பசுகம் இருக்குமெண்டு உங்களுக்குச் சொல்ல எனக்குத் தெரியாமலிருக்கு"
அந்த நினைப்போடு தன் அருகிலே முன்பு வைத்த சிகரெட் பெட்டியை மதகில் இருந்தவாறே அங்குமிங்கும் அவன் தேடினான். நான் அவனது தவிப்பைப் புரிந்து கொண்டு. பார்த்து அதை எடுத்துக் கொடுத்தேன். அதிலொரு சிகரெட்டை எடுத்து அவன் பற்றவைத்துக் கொண்டான். சிறிது நேரம் கதைக்காமலிருந்து தன் நினைவிலே அவன் ஆழ்ந்திருந்தான்.
நான் எதிரே தெரிந்த மரத்தில் உள்ள வறண்ட கொண்டல் காய்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தக் காய்கள் காற்றுக்கு ஒன்றுடன் ஒன்று அடிபட்டு சப்தம் எழுப்பின. ஏனோ என்மனம் சலனப்பட்டது. ஆள்காட்டி குருவிகள் எழுந்து தூரத்திலிருந்து கத்துவது கேட்டது. அக்காவின் சாகரக் கண்களிலிருந்து கண்ணிர் வழிந்து கீழே விழுந்து சிதறி என் காலில் பட்டது போல் நினைப்பு வந்தது. உடனே திடுக்கிட்டு விட்டேன்.
என்னைத் திரும்பிப் பார்த்து "என்னமாமா..?" என்று கேட்டு விட்டு, "கேளுங்களன்மாமா. என்று அவன் பிறகும் உள்ள மிச்ச சொச்சங்களை சொல்ல ஆரம்பித்தான்.
"எங்களுக்குத்தான் கட்டுப்பாடுகள் ஒழுக்கமெல்லாமிருக்கு ஆனா, வெள்ளைக்காரங்களிட்ட அது இல்லையெண்டுநாங்கள் நினைக்கிறது பிழை மாமா. நான் அவளை கலியாணம் முடிக்க நினைச்சன் ஆனா. அவள் தன்ர பேரன்சிட்டயும், பிறதரிட்டயும் கேட்டு சம்மதப்பட்டாய் பிறகுதான் சரிவரும் , எண்டதாய் சொல்லிட்டா.
இப்ப என்னட்ட சரியான காசிருக்கு. ஒண்டுக்கு ரெண்டெண்டு காரும் இருக்கு. ஒருநாள் வீட்டுக்கு டின்னருக்கு வாவெண்டு கூப்பிட்டாள். நான் காரை எடுத்துக் கொண்டு அவளின்ர வீட்ட போனன். என்னையவங்கள் பாத்திட்டு. "இவன் அகதியாய் வந்தவன். இப்ப கையில கழுத்திலயெல்லாம் பெரிய நாய்ச்சங்கிலி மொத்தத்தில் கோல்டை அடுக்கியிருக்கிறான்.
பக்கம் 31 ‘ஓலை’ - 27 (யூன் 2004)

Page 18
சிமெக்கிலின் செய்யிறான் போல. ஹெரோயின் பிஸ்னஸ்சாத்தான் இருக்க வேணும். வேண்டாம் விட்டிடு இவனை" - எண்டிருக்கிறாங்கள்.
"ஏன் அவளுக்கு நீ செய்த யாவாரம் முதலில தெரியேல்லயா..? நான் ஒரு குறுக்குக் கேள்வியை அவனிடம் கேட்கவேண்டியிருந்தது."இல்லை மாமா. இவ்வளவுக்கும் அவளுக்கு நான் அதைப்பற்றி செல்லேல்ல. ஆனா, அவள் நல்லவள் மாமா!. என்னையே கலியாணம் முடிக்கவேணுமெண்டு அவங்களிட்ட பிடிவாதம் பிடிச்சாள். அதால, அவங்களும் பிறகு ஒமெண்டிட்டாங்கள். நானும் இங்க வீட்டுக்குத் தெரியாமல் அவளை கலியாணம் முடிச்சன். அதுக்குப்பிறகு ஒரு வடிவான ஆம்பிளைப் பிள்ளையும் கிடைச்சுது. ஆனா, நான் ஹெரோயினுக்கு அடிமையாயிட்டன். அதில்லாமல் என்னால் ஒண்டுமே செய்யேலாத நிலை. பிறகு, பிசினஸ்சிலயும் என்ரை சாமான்களும் சில இடங்களில் அடிபட்டுப் போயிட்டுது. காசுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக் கஷ்டங்கள் வந்திச்சு. எப்பிடியாச் சம்பாரிச்சனோ அப்படியே வந்ததெல்லாம் வந்த வழியாவே போயிட்டுது. என்னோட இருக்கப் பிடியாம அவளும் பிள்ளையைக் கொண்டு வெளிக்கிட்டு தனியவிடு பாத்து போயிருந்திட்டாள். அதுக்குப் பிறகு அவளுக்கும் எனக்கும் நல்ல ஒரு உறவும் இருக்கேல்ல. பிள்ளையை மட்டும் வந்து நீங்கள் எப்பவும் பார்க்கலாமெண்டாள். என்னிலதான் எல்லாய் பிழையளும் அவளில பிழையில்ல மாமா."
இப்படி துக்கம் வந்து அதிகத்துக்கு, அதிகத்துக்கு வளர்ந்திட்டா அழுகை கிடையாதுதான். அவன் அதிகம் சலிக்காமல்தான் இவ்வளவையும் எனக்கு சொல்லிக் கொண்டிருந்தான். என்றாலும் அவனுக்கு ஏற்பட்ட துன்பம், கண்ணிர், வலி, காயம், மனப்புண் முதலியவைகளை என்னாலும் ஓரளவு உணர்ந்துகொள்ள முடிந்தது. அவனைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது. என் மருமகனல்லவா அவன். ஆறுதலுக்காக கொஞ்சம் அவனின் முதுகை தடவிவிட்டேன். இப்போது சிறிது தேறியவனாய் அவன் மாறியிருந்தான் என்றாலும் அவன் தன் பிள்ளையை பற்றி சொல்லும் போது மிகவும் குற்ற உணர்வோடு துடிதுடிப்பதை நான் நன்றாக அவதானித்தேன்.
"அந்தப் பிள்ளையின்ரைபாடு. எங்கயிருக்கு அந்தப் பிள்ளை" என்று பிள்ளையைக் குறித்து விவரம் கேட்டேன்.
"எல்லாம் பெயிலியர். வாழ்க்கையே எனக்குப் பெயிலியர். அப்படியென்று நெடுமூச்செறிந்தான். அவனது குரலின் ஆழமும், அழகும், செழுமையும் போகப் போக மறைந்து கொண்டு வருகிறது மாதிரி இருந்தது. கிணற்றுக்குள் இருந்து கூப்பிடுபவன் போல "மாமா." என்றான்.
என்னவென்று கேட்டேன்.
"என்ரை பிள்ளை. என்ரபிள்ளை.
"ஓலை" - 27 (யூன் 2004) பக்கம் 32

இப்போதுதான் அவன் கண்களில் கண்ணிர் புலுபுலுத்தது. முட்புதருக்குள் மாட்டிக் கொண்ட ஆட்டுக்குட்டிபோல் கத்தினான். புதிய பறவை' படத்தில் சிவாஜிகணேசன் மூக்கை சீறுவது போல சய்தமாக சீறிவிட்டு
"ஒருநாள் நான் நல்லவெறி. காரைக் கொண்டு அவளிட்டப் போனன் DIT DIT" 6T6ösmpsT6öy
" ஏன் போனாய்? அண்டைக்குப் போய் சண்டை பிடிச்சியே?" நான் கேட்டேன்.
"இல்லை." "பிறகென்ன செய்தாய்?" "பிள்ளையைத்தா?" காரிலகொண்டு போயிற்று கொண்டந்து விடுறன் என்டன்"
"உங்களுக்கு இப்ப நல்லவெறி. பிறகு ஒருநாள் ஆறுதலாக வந்து கூட்டிக்கொண்டு போங்களன்?" என்றாள்.
நான் அவளிண்ட சொல்லைக் கேட்கேல்ல. விடென்ரை பிள்ளையையெண்டு நாண்டு கொண்டு நிண்டன்.
அதுக்குப்பிறகு. என்னதான் செய்யிறதெண்டு என்ரை காருக்க கொண்டுவந்து பிள்ளையை விட்டாள்.
"பிள்ளைக்கு பெல்ட்டைப் போட்டுவிடுங்கோ" எண்டாள். "பிள்ளை பிரியாயிருந்து விளையாடட்டுமெண்டு சொல்ல உடனேயே நான் காரை அதால எடுத்திட்டன்.
நான் அடிச்சிருந்தது ஹெரோயின். பயங்கர ஸ்பீட்டா காரை விட்டன். இல்லை பிளேன் மாதிரி பறந்தன். பிள்ளை சிரிச்சுச் சிரிச்சு புதினம் பார்த்துக் கொண்டிருந்தான். அதெல்லாம் கனநேரமாயில்ல. கைய்ஸ்பீட். நோ. இப்ப எனக்கு கொன்றோல் இல்லை. கார். அது பிரண்டிட்டது. தலகிழாப் பிரண்டிட்டுது. பிரண்டு. பிரண்டு. பிள்ளையும் அதுக்கதான். உருண்டு பிரண்டு. அப்பிடித்தானிருக்கும் எனக்கொன்றுமே பேந்து நினைவில்ல.
குழந்தை. குழந்தை. ஒன்தஸ்பொட்.நான் கொஸ்பிட்டலில முழிச்சன். இப்போது எனக்கு முதுகைக் காட்டிக் கொண்டு திரும்பி அவன் இருந்துகொண்டான்.
அவன் அழுகின்றானா. என்ன செய்கிறான்? என்பதில் என்கவனம் செல்லவில்லை. அந்தக் குழந்தை இறந்ததுதான் எனக்குக் கவலையாக இருந்தது. அந்தக் குழந்தை கைகால் உடைந்து கபாலம் நொருங்கி, உடம்பெல்லாம் கிழிந்து சிதிலமாகிக் கிடக்கும் காட்சியே என்மனக்கண்கண்டு கொண்டிருந்தது.
பக்கம் 33 "ஓலை" - 27 (யூன் 2004)

Page 19
இனிமேல் என்னத்தைக் கேட்பது என்று சோம்பிப்போய் நான் சும்மா. விருந்தேன். எல்லா அழிவிற்கும் சீர் குலைவிற்கும் காரணம் அந்தப் போதை வஸ்துக்கள்.என்று எனக்கு அந்த போதைவஸ்தின் மேல் ஆத்திரம் வந்தது. அதற்குப்பிறகு அளவு கணக்கில்லாமல் தான் போதை வஸ்துக்களை பாவித்துக்கொண்டதாக அவன் சொன்னான்.
ஒருநாள் நூறு கிராம் ஹெரோயினொடு தான் பொலிசில் மாட்டிக் கொண்டதாகவும், உள்ள சொத்து எல்லாம் விற்று செலவழித்து வழக்காடியும் வழக்குத் தள்ளுப்படாது கோட்டில் தனக்கு சிறைக்குத் தீர்ப்பு வழங்கியதால் எட்டுவருடங்கள் சிறைவாசமிருந்து வாடியதாகவும், அதற்குப் பிறகு மூன்று வருடங்கள் நன்நடத்தையில் (Good Conduct) அவன் சீவிக்க வேண்டுமென்று தீர்ப்பு இருந்ததாகவும் அவன் சொன்னான்.
இந்தக் காலத்தில் ஒருநாளுக்கு ஒரு ரின் பியர் - மிஞ்சினால் இரண்டு ரின் பியர் மட்டுமே தனக்கு குடிக்கலாமென்று கட்டுப்பாடு இருந்ததாகவும்
எந்த பாருக்கோ (Bar) டிஸ்கோவுக்கோ செல்லமுடியாது என்று பொலிஸ் தனக்கு சட்டம் போட்டுவிட்டதாகவும் விசனத்துடன் அவன் சொல்லி அழுதான். இனிமேல்தான் கெனடாவில் வாழ முடியாது என்று கண்டு சிறீலங்காவிற்கு வந்தேன் என்று தன் கதையை சொல்லி முடித்தான்.
எல்லாம் பார்த்து, கேட்டு, சுவாசித்து, ருசித்து, உணர்ந்து, கழித்து, இன்பமாய் வாழ்ந்த கட்டை இன்று இந்த மதகில் இருந்து கொண்டிருக்கிறானே என்று எனக்குப் பரிதாபமாயிருந்தது.
வெளிநாடு என்று நினைக்கவே எனக்கொரு பயமாயிருந்தது. "மருமோன் காலேல நான் வாறன்ரா" என்று சொல்லிவிட்டு என்வீட்டுக்கு நான் போனேன். வந்துபடுத்து நித்திரை கொண்டு காலையிலேயே நான் எழுந்து விட்டேன்.
வழமையாகக் குடிக்கின்ற கோப்பியைக் கூட அன்று காலையில் நான் குடிக்கவில்லை. இரவு சாப்பிடாமல் வெறுவயிற்றுடன்படுத்துவிட்டதால் வயிறு புகைச்சலாகவும் காய்ந்து ஒட்டியும் இருந்தது. குசினிக்குப்போனேன். பழஞ்சோற்றுக் கஞ்சி பானையில் இருந்தது. சோற்றைப் பிழிந்து தனியே எடுத்துவிட்டு கஞ்சியை மட்டும் கிண்ணம் நிரம்பவிட்டு மடக்கு மடக்கென்று வயிறு முட்டக்குடித்து வயிற்றைக் குளிரச் செய்தேன்.
"இனிமேல் இப்படி ஒரு சோலியே வாணாலிலும் வேண்டாம்" என்று எண்ணித் தீர்மானித்தபடி என் தொழிலை நினைத்து தலைவணங்கிக் கொண்டு ஒழுங்காக நேரே என் வயலைப் போய் பார்க்கக் கிளம்பினேன்.
GÐ
"ஓலை" - 27 (யூன் 2004) பக்கம் 34

தமிழறிவோம்
G. - OTib - Day
இரவு, இரா, இராத்திரி என்றெல்லாம் சொல்லும் சொற்களுக்கு இருள்
வேளை' என்பதே பொருள். இச்சொற்களின் அடிச்சொல் இர் . இரு எனக் கருமைப் பொருளில்தான் உள்ளது.
பல்லாயிரம் ஆண்டுகளாக மாந்தன் இரவில் இருளில்தான் கிடந்தான். ஒளியை அவன் இரவில் பார்த்ததே இல்லை. வானத்து நிலவும் மீன்களும் மட்டுமே அவனுக்குத் தெரிந்த இரவு விளக்குகள்.
இருளில் இரவில் அடைபட்டுக் கிடந்த அந்தநாள் மாந்தன் சற்றேறக்குறைய ஐம்பதாயிரம் ஆண்டுகட்கு முன்னர்தான் நெருப்பை உருவாக்கக் கற்றுக் கொண்டு சிறு மன அமைதி பெறத் தொடங்கினான். இந்த நெருப்பு அவனுக்குச் சிறு ஆறுதலைத் தந்தது, என்றாலும் கதிரவனின் வெளிச்சத்திற்காகவே அவன் இரவெல்லாம் காத்துக் கிடந்தான். கதிரவன் தோன்றிய வேளையே அவனுக்கு முழு மகிழ்ச்சியைத் தந்தது. அதனாலேயே கதிரவனை அவன் தெய்வமாக வணங்கினான்.
ஒரு நாளின் தொடக்கத்தைப் பழங்கால மாந்தன் கதிரவன் வரத்தொடங்கிய நாளிலிருந்தே கணக்கில் எடுத்துக் கொண்டான். தினம், Day என்னும் சொற்கள் இந்த உண்மையை உணர்த்திக் கொண்டுள்ளன. மரக்கட்டைகள், கற்கள் ஆகிய இவற்றை ஒன்றோடொன்று தேய்த்துத்தான் ஆதிமாந்தன் தீயை உருவாக்கினான்.
'தேய்' என்னும் வினைச்சொல்தான் இரண்டு பொருள்கள் ஒன்றோடொன்று தேய்தலால் உண்டான நெருப்பைக் குறிக்கவும் தேய் - தேயு எனச் சொல் அளித்தது. அதே 'தேய்' என்பதுதான் பின் தீ எனவும் ஆயிற்று. நெருப்பினைத் தெய்வமாக வணங்கப்பட்டதன் அடிப்படையில்தான் தே-தேய் தேய்வம் - தெய்வம் எனவும் தே -தேய்வு-தேவு - தேவன் எனவும் ஆன கடவுள் குறிக்கும் சொற்கள் நெருப்பின்வழிப் பிறப்பதாயின.
இந்தியாவில் வடவிந்திய மொழிகள் மொத்தம் இருநூறுக்கும் மேல் உள்ளன. இந்த அனைத்து மொழிகளையும் உள்ளடக்கி ஆர்.எல்.தர்னர் என்பார் ஒரு நான்கு மடல அகராதியை எழுதியுள்ளார். இந்த அகராதியில் 'தினம்' என்னும் சொல்லிற்கு அவரளித்த விளக்கம் மிகச் சிறப்பாகவுள்ளது. தீ என நெருப்பை, வெளிச்சத்தைக் குறித்த சொல்தான் தீ-தீன்-தின் - தின - தினம்' என வெளிச்சம் வந்து அதாவது கதிரவன் வந்த நாளைக் குறிக்க
பக்கம் 35 "ඉ6න6p” - 27 (g667 ඉOO4)

Page 20
அடிப்படையாகியுள்ளது. தினம் என்பதற்குத் தர்னர் தந்த விளக்கம் இதுவே. தினத்தை அதாவது வெளிச்சத்தைத் தரும் கரத்தை உடைமையினாலேயே கதிரவன் 'தினகரன்' எனப்பட்டான் என்பது தர்னர் தரும் விளக்கமாகும்.
dina - day Mn. (in cmpds. in Rv) (Di) Shine)
Dinakara - 'sun', Kar. (dina -, kara) – R.L. Turner) 'day' என்னும் ஆங்கிலச்சொல் தீ - திஸ் (dies) என்ற இலத்தீன் சொல்லிலிருந்தே பிறந்துள்ளது. இந்தத் தீ - திஸ் என்பதற்கும் அங்கு ஒளி, வெளிச்சம் என்பதே மூலப்பொருள். ஆச்சு போர்டு ஆங்கில அகராதி day - என்னும் சொல்லிற்குப் பொருள் விளக்கம் செய்யும் போது முதற்பொருளாக day - the time between Sunrise and Sunset 6767g) 2.60).JgBg576iténgl. day, (die) -time of Sun light 676óTugs (fl. 19.960fu607 Tif BIT' (Bid (O6).j6iférdid. day and night என்னும் அன்றாட வழக்கில் day பகல் மட்டும் குறிப்பது காண்க.
தினமும், day யும் தமிழின் தீயில் சுடர் விடுகின்றன.
puff;
நன்றி : தமிழறிவோம்' - முனைவர் கு.அரசேந்திரன்
Emu
ஒலை" க்கு உதவ விரும்புவோர் தங்கள் நிதி அன்பளிப்புக்களை காசோலை அல்லது வைப்பாக 獸
Colombo Tamil Sangam Society Ltd, கணக்கு இல:1100014906 - Commercial Bankவெள்ளவத்தைக்கு அனுப்பலாம்.
ee
காசுக் கட்டளையாயின்
"செயலாளர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்" என்ற பெயரில் வெள்ளவத்தை தபால் அலுவலகத்தில் மாற்றப்படக்கூடியவாறு அனுப்ப முடியும். கொழும்புத் தமிழ்ச்சங்க அலுவலகத்தில் நேரடியாகவும் செலுத்த முடியும்.
محصن سننے - - - - ܗܝ.- ܢ /n ܐܲܪܥ
"ஓலை". 27 (யூன் 2004) பக்கம் 36
 
 
 

திறனாய்வு சில அடிப்படை அம்சங்கள்
கே.எஸ்.சிவகுமாரன்
திறனாய்வு தொடர்பாகப் பலரும் பல விதமாக விபரித்து எழுதியுள்ளனர். திறன் சக ஆய்வு சமன் திறனாய்வு என்பது வெளிப்படை. ஒன்றின் திறனை அறிவது அவ்வளவு இலகுவானதல்ல. திறனறிதல் ஒன்றும் புதிதானதல்ல. திருக்குறள் காலத்திலிருந்தே இப்பதம் புழக்கத்திலுள்ளது. அதே சமயம், ஒரு பயிற்சி நெறியாகப் பழங்காலத்திலே திறனறிதல் மேற்கொள்ளப்படவில்லை.
நமது மொழியைப் பொறுத்த மட்டிலே தி.செல்வகேசவராய முதலியார் எழுதிய பல கட்டுரைகள், குறிப்பாக மகாகவி கம்பன் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்கள் திறனாய்வு அடிப்படையில் அமைந்திருந்தன. இவரைத் தொடர்ந்து மறைமலை அடிகள் எழுதிய சில கட்டுரைகள் ஓரளவு திறனாய்வுப் போக்கிலே அமைந்திருந்தின. 'ஒரளவு' என்று குறிப்பிடப்படுவது ஏனெனில், இக்கட்டுரைகளிலே குறிப்பாக 'முல்லைப் பாட்டு' பற்றிய கட்டுரை போன்றவற்றில் பழைய உரையாசிரியர்களின் போக்கும் காணப்படுவதனால் தான்.
'கம்பராமாயண ரசனை'யாக வ.வே.சு.ஐயர் எழுதிய விமர்சனக் கட்டுரைகள் ஆரம்பகால நவீன திறனாய்வுக் கட்டுரைகளாகும்.
கு.ப.ராஜகோபாலன், பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி) ஆகிய இருவரும் எழுதிய 'கண்ணன் என்ற கவி' என்ற புத்தகம் உடனிகழ்காலத் திறனாய்வு முயற்சியின் ஆரம்ப வெளிப்பாடு எனலாம். மகாகவி சுப்பிரமணிய பாரதியை ரசனைப் பாங்காக மட்டுமன்றி, நெறிப்படுத்தப்பட்ட திறனாய்வு அடிப்படை அம்சங்களையும் உள்ளடக்கியதாய் இந்த நூலை இவர்கள் எழுதியுள்ளனர். கு.ப.ரா.மறைந்து விட்டார். 'சிட்டி'சென்னை அடையாறில் வசித்து வருகிறார்.
ஈழத்தைப் பொறுத்த மட்டிலே மறைந்த சுவாமி விபுலாநந்தரின் கட்டுரைகள் நவீன திறனாய்வு முயற்சிகளுக்கு முன்னோடி எனக் கொள்ளலாம்.
a
இலக்கியத் திறனாய்வின் போது, ஏக காலத்தில் பல விஷயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. "இலக்கியம் மொழியால் ஆக்கப்படுவதனால், முதலில் மொழித்திறன் பற்றிய ஆய்வும், மொழி குறிக்கும் பொருள், காலதேச வர்த்தமானத்திற்குக் கட்டுப்பட்டனவாய் இருப்பதால், சரித்திரம் சமுதாயம்
பக்கம் 37 "ஓலை" - 27 (யூன் 2004)

Page 21
என்பன பற்றிய ஆய்வும், இலக்கியத்தைப் படிப்போர் அனுபவத்தெளிவுடன் இன்பமும் பெறுகின்றனராகையால், இன்ப நுகர்ச்சியின் இயல்பு பற்றிய ஆய்வும் குறைந்த பட்சம் இன்றியமையாதனவாகின்றன" என்று கூறுகிறார் மறைந்த பேராசிரியர் க.கைலாசபதி,
இந்த நூற்றாண்டின் மாபெரும் தமிழ் ஆய்வறிவாளர்களுள் ஒருவரும், திறனாய்வுத் துறையில் முதலிடம் பெறுபவருமான அமரர் கைலாசபதி மேலும் தெளிவுபடுத்து முகமாகப் பின்வருமாறு கூறுவார்.
"சுருக்கமாகக் கூறுவதானால், ஓர் இலக்கியப்படைப்பின் மொழிநுட்பம், வாழ்க்கை நோக்கு அல்லது தத்துவம், இன்பச்சுவை என்பன ஒன்று சேர்ந்தே அதற்கு நிறைவை அளிக்கின்றன. இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையன. ஒன்றையொன்று ஆதாரமாகக் கொண்டன" (பார்க்க: 'திறனாய்வுப் பிரச்சினைகள் க.கைலாசபதி)
ஆங்கிலக் கவிஞரும், திறனாய்வாளருமான டி.எஸ்.எலியட் கூறியிருப்பது போல "கலைப்படைப்புகளை விளக்கித் தெளிவாக்குதல், அழகுணர்வைச் செம்மைப்படுத்துதல் ஆகியன திறனாய்வு மூலமே செயற்படுகிறது. பதரையும், நெல்லையும் இனங்காணத் திறனாய்வு அவசியமாகிறது." திறனாய்வாளன் ஓர் இலக்கியப் படைப்பை ஆய்ந்து, ஒர்ந்து, தேர்ந்து வெளியிடுகிறான்.
ஈழத்தின் மற்றொரு தமிழ் ஆய்வறிவாளரும், கல்விமானுமாகிய பேராசிரியர் கா.சிவத்தம்பி திறனாய்வு ஒரு தேடுதல் முயற்சி என்பார், "இலக்கியத்தன்மை, அதன் நோக்கம், அது ஏற்படுத்தக் கூடிய தாக்கம் ஆகியன பற்றிய ஆய்வுநிலை நின்று தேடுதல் இலக்கிய விமர்சனமாகும்."
a
நமது நாட்டு ஆய்வறிவாளர்களிலே கைலாசபதி, சிவத்தம்பி ஆகிய இருவருடன், மூன்றாவதாகக் குறிப்பிடப்பட வேண்டிய திறனாய்வாளர் மு.தளையசிங்கம் என்பது இக்கட்டுரையாளரின் கணிப்பு. முன்னைய இருவரையும் போலவே, மறைந்த தளையசிங்கமும் ஓர் தேடல் முயற்சியிலேயே ஈடுபட்டார். முன்னைய இருவரும் இலக்கிய வரலாற்றாசிரியர்களாய் நூல்கள் பல எழுதியிருப்பது போலவே இவரும் "ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி" என்ற நூலை எழுதியிருக்கிறார். முன்னைய இருவரும் தமது நூல்களிலே திறனாய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கியிருக்கிறார்கள். கைலாசபதியும் சிவத்தம்பியும் சமகால இலக்கியப் படைப்பொன்றைத் தனியே எடுத்து இதுவரை (அதாவது நூல் வடிவில்) திறனாய்வு செய்யவில்லை. தளையசிங்கமும் அப்படிச் செய்யாவிட்டாலும், தன்னைப் பற்றியும் எஸ்.பொன்னுத்துரை பற்றியும் இவர் திறனாய்வுப் போக்கிலே எழுதியுள்ள பகுதிகள் இவர் ஒரு சிறந்த விமர்சகர் என்பதைப் பறைசாற்றுகின்றன.
嘻嘻嘻嘻嘻嘻
"ஓலை" - 27 (யூன் 2004) பக்கம் 38

திறனாய்வின் அடிப்படை அம்சங்கள் என்னும் பொழுது அத்துறை பற்றிய அம்சங்கள் மாத்திரமன்றி, அத்துறையில் ஈடுபடுபவர்கள் தொடர்பான அடிப்படை அம்சங்களும் கவனத்திற்குட்பட்டவை.
ஈழத்திலே பல திறனாய்வாளர்கள் அல்லது விமர்சகர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பலர் பல்கலைக்கழக ஆசிரியர்களாகவும், கல்வி போதனாசிரியர்களாகவும் இருக்கிறார்கள். பலர், அருமையான', 'ஆழமான கட்டுரைகளை எழுதி வருகின்றனர். துரதிஷ்டவசமாக இவை நூல் வடிவில் வெளியாகவில்லை. சில நூல்களுக்குச் சிலர் எழுதிய முன்னுரைகள், எம்.ஏ.நுஃமான், கிருஷ்ணராஜா, மு.பொன்னம்பலம், கலாநிதிகள் சபா ஜெயராஜா, மெளனகுரு, சித்திரலேகா மற்றும் பல புதிய கண்டு பிடிப்புகள் எழுதிய ஆராய்ச்சி பூர்வமான எழுத்துக்கள், சஞ்சிகைகளில் வெளிவந்த பலவிதமான பார்வைக் கட்டுரைகள் அத்தனையையும் திரட்டி ஒரு பெரிய நூலாக வெளியிட்டாலே அது ஒரு பாரிய செயலாக அமையும்.
குறிப்பிட்ட இந்தக் கல்விமான்களுடன் பத்திரிகைகளில் பத்திகள் எழுதும் தெளிவத்தை ஜோசப், லெமுருகபூபதி, அந்தனி ஜீவா, எஸ்.திருச்செல்வம், இக்கட்டுரையாளர் மற்றும் பலரும் சில வேளைகளில் விமர்சனச் சாயல் கொண்ட திறனாய்வுகளை மேலோட்டமாகச் செய்துள்ளனர். செம்பியன் செல்வன் சில ஈழத்துச் சிறுகதைகளைத் தொகுத்துச் சில விமர்சனக் குறிப்புகளை எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மு.தளையசிங்கமும், இக்கட்டுரையாளரும் தாங்கள் விமர்சகர்கள் அல்லர் என்று பகிரங்கமாகவே குறிப்பிட்டுள்ளனர். திறனாய்வு' என்றால் என்ன என்பதை நன்கு அறிந்து வைத்ததனாலேயே அவர்கள் தாம் திறனாய்வாளர் அல்லர் என்று கூறினர்.
ஆனால், பலருக்கு இந்தத் திறனாய்வு அல்லது விமர்சனம் என்பதைத் தரம் பிரித்துப் பார்க்கும் திறனில்லைப் போல் தெரிகிறது. வசதியை முன்னிட்டோ, சோம்பல் காரணமாகவோ, அறியாமையினாலோ, அபிப்பிராயம் கூறுபவர்கள் அனைவருமே விமர்சகர்களாகக் கருதப்படுகின்றனர்.
செ.கணேசலிங்கன், மு.பொன்னம்பலம், யோகா பாலச்சந்திரன், எம்.ஏ.ரகுமான், லெமுருகபூபதி. ஜாவத் மரைக்கார், மு.பவரீர், சொக்கன், மயிலங்கூடலூர் நடராசன், கு.பாலகுமாரன், சேரன், வில்வரத்தினம் இப்படிப்பலரும் சிலவேளைகளில் விமர்சகர்களாகக் கருதப்பட்டுவந்துள்ளனர். இவர்கள் விமர்சனச் சாயல் படிந்த அபிப்பிராயங்களைத் தெரிந்திருக்கக் கூடுமாயினும். நெறிப்படுத்திய முறையில் விமர்சனஞ் செய்பவர்களாக இவர்கள் தம்மை இது வரை இனங்காட்டிக் கொள்ளவில்லை. தமக்குள்ளே 'ஆழமாய் எழுதுவதாக நினைத்துக் கொண்டாலும், ஆழமான விமர்சனங்களை இவர்கள் எழுதியதாய் இக்கட்டுரையாளர் இதுவரை உணரவில்லை.
ஒரு படைப்புப் பற்றிய விரிவான (ஆழமான) ஆய்வு திறனாய்வு எனலாம். சுருங்கச் சொல்லி (மேலோட்டமாக) விளக்குவது மதிப்புரை எனலாம்.
பக்கம் 39 "ஓலை" - 27 (யூன் 2004)

Page 22
மதிப்புரை பக்க வரையறைக்கு உட்பட்டது. திறனாய்வுக்கோ, அத்தகைய கட்டுப்பாடு இல்லை. அனைவரும் புரிந்து கொள்வதற்காக எழுதப்படுவது மதிப்புரை. எனவே எளிமை, சுருக்கம் அவசியமாகிறது. இலக்கியப் பயிற்சி மிக்கோருக்காக விரிவாக, அடிக்குறிப்புகளுடன் , விரிவுரைகளுடன் திறனாய்வு எழுதப்படுகிறது.
புகழ்வதும், கண்டிப்பதும் திறனாய்வன்று. முழுக்க முழுக்கப் புகழ் மாலையும் அல்லது முழுக்க முழுக்கக் கண்டனமும் விமர்சனமாகாது. இலக்கியக் கொள்கைக்கேற்பத் திறனாய்வுப் போக்கு அமைகிறது.
w
பத்தி எழுத்தாளர்கள் (கொலம்னிஸ்ட்ஸ்), இலக்கியப் பத்திரிகையாளர்கள் (லிட்டரறி ஜேர்னலிஸ்ட்ஸ்) காலந்தோறும் கலை, இலக்கியம் தொடர்பான பத்திகளையும், மதிப்புரைகளையும் எழுதி வருகிறார்கள். இக்கட்டுரையாளரும் அத்தகையவர்களுள் ஒருவர்.
இந்தப் பத்தி விமர்சனம் பற்றிய குறிப்புக்கள் இங்கு அவசியமாகின்றன. திறனாய்விலிருந்து அல்லது இலக்கிய விமர்சனத்திலிருந்து இது சிறிது வேறுபட்டது என்பதை விளக்கச் சில வரிகள்:
மேலோட்டமான விமர்சனக் குறிப்புக்கள், தகவல்கள். அறிமுகம், மதிப்புரைகள் இப்பத்திகளில் அடங்குகின்றன. இடவசதியின்மை, ஜனரஞ்சகம், கண்டனத்தவிர்ப்பு, (விமர்சனம் என்றால் கன்னாபின்னா என்று திட்டிக் கண்டிப்பதல்ல) திட்டவட்டமான முடிவுரைகளை வழங்காமை, பொருளைச் சுருக்கமாகத் தொகுத்துக் கூறல், கவர்ச்சித் தலைப்பு, இடம் பொருள் ஏவலுக்கேற்ப அழுத்தம் மாறுபடல் போன்றவை பத்தி விமர்சனங்களுக்குப் பொதுவான அடிப்படை அம்சங்கள்.
a
திறனாய்விலே பல உட்கூறுகள் இருக்கின்றன: இலக்கியக் கொள்கை, இலக்கிய வரலாறு, இலக்கியத் திறனாய்வு, மதிப்புரை, இலக்கியப்பத்தி எழுத்து, அறிமுகம், இலக்கியச் சந்திப்பு-பேட்டி-செவ்வி.
இலக்கியக் கொள்கை எத்தனை வகைப்படும் போன்ற விபரங்களையறிய பேராசிரியர் க.கைலாசபதி எழுதிய இலக்கியமும் திறனாய்வும்' என்பன என்ற நூலைப் படித்துப் பாருங்கள். நமது நாட்டு இலக்கிய வரலாறுகள் பல வெளிவந்துள்ளன. இவற்றிலே மறைந்த பேராசிரியர் சோ.செல்வநாயகம் எழுதிய நூலில் நமது சமகால இலக்கியம் பற்றிய சில விபரங்கள் அடங்கியுள்ளன. பேராசிரியர்கள் சு.வித்தியானந்தன், பொ.பூலோகசிங்கம், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, அ.சண்முகதாஸ். எஸ்.தில்லைநாதன் போன்றவர்களும் மற்றும் பல்கலைக்கழகத்தினரும் ஏனையோரும் ஈழத்து இலக்கிய வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்துத் தந்துள்ளனர். மறைந்த கனகசெந்திநாதன், மு.தளையசிங்கம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
"ജ്ഞ" - ഉ7 (്യങ്ങ് ഉ00ധ பக்கம் 40

ஆனால் முழுமையான இலக்கிய வரலாறுகள் இனிமேல் தான் எழுதப்பட வேண்டும். சில்லையூர் செல்வராசன் ஆரம்ப ஈழத்துத் தமிழ்நாவல்கள் பற்றிய தகவல்களைத் தொகுத்துத் தந்துள்ளார்.
நூல் வடிவில் முழுமையான இலக்கியத் திறனாய்வு தனியாக இன்னும் வெளிவரவில்லை. நா.சுப்பிரமணிய ஐயர், செம்பியன் செல்வன். சிதில்லை. நாதன் போன்றோர் சில விமர்சனக் குறிப்புகள் அடங்கிய நூல்களை எழுதியுள்ளனர். சொக்கன், மயிலங்கூடலூர் நடராசன் போன்றோர் ஓரளவுக்குத் திறனாய்வு எனக் கூறக்கூடிய நூல்களை எழுதியோ, தொகுத்தோ வெளியிட்டுள்ளனர். நூல் வடிவில் வராவிட்டாலும் பல திறனாய்வுக் கட்டுரை. கள் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளியாகியுள்ளன. இவற்றிலே LI6u, gᏏᎫᎿᏝfᎢ6016Ꮱ26Ꭰ1.
மதிப்புரைகள் தரமான முறையில் வெளிவந்துள்ள போதிலும், நூல் வடிவில் தொகுக்கப்படவில்லை. இம்முயற்சிகள் புத்தகங்களாகத் தமிழில் வந்தால் பிரயோசனமாக இருக்கும்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் புதினப் பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் காலத்திற்குக் காலம் வெளிவந்த நல்ல தரமான திறனாய்வுகளையும் மதிப்புரைகளையும் சேர்த்துத் தொகுத்து வெளியிட்டால் பிற்கால மாணவர்களுக்கு அது பெரிதும் பயனளிக்கும்.
இது போன்ற பத்தி எழுத்துக்களும் தொகுக்கப்பட வேண்டும். எஸ். பொ, தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா, லெ.முருகபூபதி, ஆ.இரத்தின வேலோன். ஆர்.சடகோபன் இக்கட்டுரையாளர் போன்றோர் பல தரமான பத்திக் கட்டுரைகளை எழுதியுள்ளனர்.
இவ்விதம் சிறு சிறு நூல்களும் திறனாய்வின் சகல அம்சங்களும் பிரதி பலிக்கக்கூடிய நூல்களும் வெளிவந்தால், திறனாய்வின் அடிப்படை அம்சங்கள் பற்றித் தெளிவு ஏற்படக் கூடியதாய் இருக்கும்.
தமிழ் நாட்டிலே பல திறனாய்வு நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நமது நாட்டிலே அவ்விதம் நூல்கள் வெளிவருவதேயில்லை. பேராசிரியர் கைலாசபதியின் ஆரம்ப முயற்சிகளைத் தொடர்ந்து பலர் அங்கு நல்ல திறனாய்வு நூல்களை எழுதி வருகின்றனர்.
இக்கட்டுரையிலே மறதி காரணமாகக் குறிப்பிடப்படாதோர் சிலர் இருக்கலாம். கால அவகாசம் கிடைக்காததால், சம்பந்தப்பட்ட சகல நூல்களையும் கண் முன்னே கொண்டு வர முடியவில்லை. அறியத்தந்தால் பின்னர் விரிவாக எழுத முடியும்.
(ஈழ முரசு இரண்டாவது ஆண்டுமலர் -05.02.1986. இதில் சில பகுதிகள் கட்டுரையாளரின் கலை இலக்கியத் திறனாய்வு என்ற நூலிலும் இடம் பெற்றுள்ளன)
பக்கம் 41 "ളങ്ങബ' - ഉ7 (്യങ്ങ് ഉ00)

Page 23
சிறுகதை
IDDII[][]|D
மருதமுனை மஜீத்
செல்வம் தேம்பித் தேம்பி நின்றான். அப்படி ஒரு கோலத்தில் நான் அவனை ஒருபோதும் சந்திக்கவில்லை. பளிரென வெகுளிபோல சிரித்துக் கொண்டு என்னை வளைய வருவான். கண்ணிரில் அவன் முகம் தோய்ந்திருந்தது. காலைக் கதிரவனின் ஒளிக் கீற்றுக்கள் அவனுடைய கருங்காலி உடலில் பட்டுத் தெறித்தன. அந்தத் துயரமான சூழ்நிலையிலும் கூட நான் மனதுக்குள் அந்த விகச்சிப்பை வெகுவாக இரசித்தேன். அவன் உடுத்த சாரத்துடன் வந்திருந்தான். சேட் அணிய வேண்டும் என நான் கட்டளை இட்டபின் இன்றுதான் வெற்றுடம்புடன் அவனைக் காண்கிறேன்.
"செல்வம், ஏன் அழுகிறாய்..?"
அவன் பதில் சொல்லவில்லை. அவனுடைய கேவல் மேலும் அதிகரித்தது. குலுங்கினான். எனக்கருகில் நின்ற ஜீவா சொன்னான் "சேர். அவன்ர அம்மா செத்துப் போச்சி."
எனக்குச் சுரீரென்றிருந்தது. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர், அவன் தனது தாயின் சுகவீனம் பற்றி எனக்குச் சொல்லியிருந்தான். அப்பொழுது நாங்கள் மயிலிட்டி மீன்துறைக்குச் சென்றுகொண்டிருந்தோம்.
"ஐயா. அம்மாவுக்குக் கடுமையான காச்சலுங்க" என்றான். நான் அதனைச் சரியாகக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. மறந்துவிட்டேன். இப்போது அந்த அம்மா இறந்துவிட்டாள். அவன் தனது அம்மாவைப் பற்றி, பல தடவை என்னிடம் பெருமையாகப் பேசி இருக்கிறான். மாவிட்டபுரம் அவனுடைய ஊர். மாவிட்டபுரக் கோயில், வடபகுதியில் மிகவும் பிரபல்யமான கோயில். அந்தக் கோயில் வீதியைக் கடந்து ஒரு நூறு மீற்றர் நடந்தால் அவனும் அம்மாவும் வாழ்ந்த அந்தக் குடிசை தெரியும். நான் அங்கு சென்றி. ருக்கிறேன். பண்டிதர் சச்சிதானந்தம் ஐயாவின் வீடும் அந்தக் கோயில் வீதி. யின் முகப்பில் தான் இருக்கிறது. ஒருநாள் ஐயாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். வழியில் என்னைக் கண்ட செல்வம், தனது குடிசைக்கு வருமாறும் என்னை அழைத்தான். ஒரு பனந்தோப்புக்குள் அந்தக் குடிசை இருந்தது. செல்வத்தின் அம்மாவும் என்னை விழுந்து விழுந்து ஆதரித்தாள். ஒரு பழைய கதிரையைத் தூசி தட்டி என்னை இருப்பாட்டினாள். யானை மார்க் சோடா வாங்கித் தந்தாள்.
அந்தப் பனந் தோப்புக்குள் மேலும் சில குடிசைகள் இருந்தன. அவை அனைத்தும் செல்வத்தின் சாதிக்காரர்கள் வாழும் இல்லங்கள். சச்சி
"9606" - 27 (607 2004) பக்கம் 42

தானந்தம் ஐயா அவர்களின் வீட்டில் இருந்து எட்டிப் பார்த்தால் தூரத்தில் செல்வத்தின் குடிசை தெரியும்.
அடுத்தநாள் பலாலி ஆசிரிய கலாசாலை வாசிகசாலையில், பண்டிதர் சச்சிதானந்தம் அவர்கள் என்னைக் கண்டார்கள். அப்போது அவர் முகத்தில் படர்ந்த அருவருப்பு. இன்றும் என் மனதில் பசுமையாகப் படிந்துள்ளது. அவர் சைவப்பழம், தமிழும் கல்வி உளவியலும் எங்களுக்கு அவர் கற்பிப்பார். நாங்கள் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தோம். வேட்டி, சால்வை அணிந்து வகுப்புக்கு வருவார். அறிவுக் கடல் நல்ல வாசகன். ஒழிந்த நேரங்களில் வாசிகசாலையில் தான் அவர் புத்தகங்களில் மூழ்கி இருப்பார். ஆனால். அவர் உயர்ந்த சாதிக்காரன்.
நான் செல்வத்தின் அம்மா செத்துக்கிடந்த இடத்துக்குச் சென்றேன். குடிசை முற்றத்தில் ஒரு பழைய பாயில் பிரேதம் வைக்கப்பட்டிருந்தது. மூக்குத்தியும், தோடும் பளபளத்தன. குய்யோ முய்யோ என்று ஒப்பாரி வைத்து அழ அங்கு ஆட்கள் இல்லை. அடுத்த குடிசைகளில் வசிக்கும் செல்வத்தின் சாதிக்காரர்கள் பத்துப் பதினைந்துபேர் அங்குமிங்கும் தொட்டம் தொட்டமாக நின்று கதைத்துக் கொண்டிருந்தனர்.
என்னுடன் வந்த 'ஜீவா அந்த வளவுக்குள் வரவில்லை. படலைக்கு வெளியே நின்றுவிட்டான். அவன் உயர்ந்த சாதிக்காரன். செல்வத்தின் வீட்டு முற்றத்தில், அவனுடைய சாதிக்காரர்கள் யாரும் அவனைப் பார்த்து விட்டால்.
செல்வத்துக்கு யாரும் துணையில்லை. அவனுடைய அம்மாதான் அவனுக்கு எல்லாம். அவளும் போய்ச் சேர்ந்துவிட்டாள். அவன் அநாதையாகிவிட்டான். இன்னும் அவன் கேவல் ஓயவில்லை. எனக்கும் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க இயலவில்லை. எனது கண்களும் பனிக்கத் தொடங்கின. என்னிடம் இருந்த பணத்தை செல்வத்தின் கைக்குள் திணித்துவிட்டு கலாசாலைக்குத் திரும்பிவிட்டேன்.
(02)
பலாலி ஆசிரிய கலாசாலையின் அதிபர் எட்வேட் அவர்கள். அவருடைய நரைத்த தலையைப் போல, பழுத்த அறிவாளியாகவும் இருந்தார். கருணையும், மனிதாபிமானமும் மிக்கவர்.
அவருடைய நிர்வாகம் அற்புதமானது. கற்பித்தல் பயிற்சியை மட்டுமன்றி சிறந்த தலைமைத்துவப் பயிற்சியையும் அவர் மாணவருக்கு வழங்கினார். கல்லூரி நிர்வாகத்தில் மாணவரையும் இணைத்துக் கொண்டார். அதற்காக ஒரு பாராளுமன்றத்தையும், மந்திரி சபையையும் அமைத்திருந்தார். நானும்
பக்கம் 43 'ണ്ണുങ്ങബ' - ഉ7 (്യങ്ങ് ഉ004)

Page 24
அவருடைய அமைச்சரவையில் ஒருவன். எனக்கு உணவு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது.
ஆசிரிய பயிற்சி பெறும் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மாணவர்களுக்கு அவர்களுடைய சமய ஆசாரப்படி உணவு வழங்குவது எனது கடமை. அத்துடன் சிற்றுாழியர்களைப் பராமரிப்பதும் எனக்கு மேலதிகமாக வழங்கப்பட்டிருந்த இலாக்காவாகும்.
உணவு அமைச்சர் பதவி மிகவும் பொறுப்புவாய்ந்த பதவியாகும். மாமிச உணவுக்காரர்களுக்கு வேறாகவும், மரக் கறி உணவுக்காரர்களுக்கு வேறாகவும் உணவு தயாரித்தல் வேண்டும். இரண்டு குசினிகள். சாப்பாட்டு மண்டபமும் இரண்டு இருந்தன.
சாப்பாடுகள் தரமாகவும், மலிவாகவும் இருத்தல் வேண்டும். சோறு கொஞ்சம் குழைந்துவிட்டால், அல்லது கறியில் உப்புக் கூடிவிட்டால் போதும். அன்று முழுவதும் சாப்பாட்டுப் பகிஷ்கரிப்பும், ஆர்ப்பாட்டமும் நடக்கும். உணவு மந்திரியைத் தாக்கத் தொடங்கிவிடுவார்கள். உணவுக்காக மாணவர்களிடம் இருந்து பெறப்படும் மாதாந்தக் கட்டணம், சமச்சீராக அதிகரிப்பில்லாமல் இருத்தல் வேண்டும். ஒரு மாதத்தில் ஐந்து ரூபா கூடிவிட்டால். அவ்வளவுதான். எல்லா மாணவர்களும் வீதியில் இறங்கிவிடுவார்கள்.
"உணவு மந்திரியே இராஜிநாமாச் செய்." "மாணவர்களைக் கொள்ளை அடிக்காதே"
செல்வம் கலாசாலையில் சுகாதாரத் தொழிலாளி. அவனுடன் இன்னும் ஐந்து பேர் அந்த வேலைகளுக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். ஜீவா தலைமைச் சமையற்காரன். தாவர உணவுக்கும், மாமிச உணவுக்கும் அவன்தான் பிரதான மேற்பார்வையாளன்; ஆலோசகன். அவனுக்கு உதவியாக மேலும் ஆறுபேர் வேலை செய்கின்றனர். எல்லாத் தொழிலாளரும் சாரன் மட்டும் உடுத்துக் கொண்டு வேலை செய்வார்கள். சேட் போடமாட்டார்கள். உணவு மந்திரியாக நான் பொறுப்பேற்றதும், தொழிலாளர்கள் அனைவரையும் அழைத்து, எல்லோரும் நாளை முதல் சேட் அல்லது பெனியன் அணிந்து கொண்டுதான் வேலைக்கு வரவேண்டும் என்று பணிப்புரை வழங்கினேன். அவர்களுக்கு சேட் வாங்குவதற்காக ஒரு மானியமும் வழங்கினேன். அன்று முதல் எல்லோரும் ஒழுங்காக உடுத்துவந்தார்கள். செல்வம் நல்ல சேட்டும், கட்டைக் காற்சட்டையும் அணிந்து வந்திருந்தான். அவனுக்கு வயது இருபத்திரண்டு. பார்க்க அழகாக இருந்தான். எப்பொழுதும் ஒரு சீப்பை வைத்துக் கொண்டிருப்பான். அடிக்கடி தலையை ஒழுங்காகச் சீவிக் கொள்வான். அவனிடம் எனக்குச் சிறு கழிவிரக்கம் இருந்தது. நன்றியும், விசுவாசமும் உள்ள ஒரு தொழிலாளியாக இருந்தான். எல்லாத் தொழி.
"ஓலை" - 27 (யூன் 2004) பக்கம் 44

லாளரும் கூவில் கள்ளுக் குடிப்பார்கள். செல்வம் குடிக்கமாட்டான். புகைக்கமாட்டான். ஜீவாவுக்கும் அவனிடம் இரக்கம். ஆனால், நெருங்கிப் பழகமாட்டான். அவன் உயர்ந்த சாதிக்காரன்.
விறகு கொத்துவது, மீன் வெட்டுவது, கொச்சிக்காய், வெங்காயம் அரிவது, மரக்கறி நறுக்குவது ஆகிய வேலைகளைச் செல்வம் செய்வான். குசினியைச் சுற்றித் தேங்கி நிற்கும் அழுக்கு நீரோடையை அவன் சுத்தம் செய்வான். குசினிகள் இரண்டினதும் முழுச் சுத்தமும் அவனுக்குப் பொறுப்பாக்கப்பட்டிருந்தது.
நான் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் சந்தைக்குச் செல்வேன். ஒருநாள் மைலிட்டி மீன் துறைக்குச் செல்வோம். மீன் வாங்குவோம். அடுத்தநாள் சுன்னாகச் சந்தைக்கு அல்லது பருத்தித்துறைச் சந்தைக்குச் செல்வோம். மரக்கறிகள் வாங்குவோம். மற்றொருநாள் யாழ்ப்பாணம் இறைச்சிக் கடைக்குச் செல்வோம். இதற்காக கலாசாலை வாகனம் பாவிக்கப்பட்டது. செல்வம் என்னுடன் சந்தைகளுக்கு வருவான். கொள்வனவு செய்த பொருட்களைப் பொதி செய்து வாகனத்தில் ஏற்றுவான். பருத்தித்துறையில் மாம்பழமும், பலாப்பழமும் வாங்கிச் சாப்பிடுவோம். பருத்தித்துறைப் பழங்களுக்குத் தனிச் சுவை உண்டு. செல்வம் மாம்பழத்தை வெட்டித் தருவான். பலாப்பழத்தை வெட்டி சுளைகளைப் பிடுங்கித் தருவான். வேன் சாரதி சாப்பிடமாட்டான். அவன் உயர்ந்த சாதி. செல்வத்தின் கையிலிருந்த எதனையும் வாங்கிக் கொள்ளமாட்டான்.
ஒரு தடவை மாவிட்டபுரம் கோவில் திருவிழாவுக்கு நான் சென்றிருந்தேன். செல்வமும் உடன் வந்திருந்தான். அவனை கோயில் வீதியைத் தாண்டி உள்ளேவர அனுமதிக்கவில்லை. நான் உள்ளே சென்றேன். கோயில் வீதியைச் சுற்றி வந்தேன். கடைகளையும், காட்சிகளையும் கண்டு ரசித்தேன். செல்வம் வரவில்லை. இறைச்சியும், மீனும் தாராளமாகச் சாப்பிடும் நான் ஒரு முஸ்லிம். கோயில் வீதியைக் கடந்து உள்ளே செல்லலாம். சைவனாகப் பிறந்து, ஆசாரங்களை ஒழுங்காகக் கடைப்பிடிக்கும் செல்வம் கோயிலுக்குள் செல்ல முடியாது. இது என்ன நியாயம்? என்ன ஒழுக்கம்? என்ன நெறி முறை? என்று நான் ஆக்ரோஷமாக வாதித்துள்ளேன். சந்தர்ப்பம் கிடைத்தால் பண்டிதர் சச்சிதானந்தம் ஐயாவுடன் தர்க்கிக்கவும் ஆயத்தமாக இருந்தேன்.
மைலிட்டி மீன்துறைக்குச் சென்று திரும் புகையில் தேநீர் அருந்துவதற்காக நாங்கள் ஒரு தேநீர்க்கடைக்குச் சென்றோம். கடைக்காரன்றைவரையும், என்னையும் உள்ளே அழைத்துக் கொண்டான். செல்வம் உள்ளே வரவில்லை. கடைக்காரனும் அவனை அனுமதிக்கவில்லை. வெளியே கிடந்த ஒரு பழைய நெடிய வாங்கில் அவன் அமர்ந்துகொண்டான். அவனுக்கே அவனைப் பற்றிய ஒரு தாழ்வு மனப்பான்மை. எங்களுக்கு எவர்
பக்கம் 45 "ஓலை" - 27 (யூன் 2004)

Page 25
சில்வர் பாத்திரத்தில் தேநீர் வழங்கினார்கள். ஆனால் செல்வம். அவனுக்கு ஒரு பழைய மூக்குப் பேணியில் தேநீர் கொடுத்தார்கள். எனக்குத் தாங்க முடியவில்லை. நான் கடைக்காரனை சற்று உறுத்தலாகப் பார்த்துக் கேட்டேன்.
"ஏன் இந்தப் பாரபட்சம். அவனும் மனிதன் தானே."
"சேர். அவன் இளக்க சாதிக்காரன். அவனை உள்ளே எடுத்தால். கடைக்கு ஆட்கள் வரமாட்டினம்."
"அவன் சைவன். உங்கட சாதிதானே. நீங்கள் கும்பிடும் கடவுளைத்தான் அவனும் கும்பிடு." கடைக்காரனின் முகம் சிவந்து வருவதை அவதானித்தேன். மேலே பேசவில்லை. நிறுத்திக் கொண்டேன்.
கல்லூரிக்குத் திரும்பியதும் நான் செல்வத்தைக் கடிந்தகொண்டேன். "செல்வம். நீஎன்னோடு கடைக்குள் வந்திருக்கலாம்." "சேர். வரயேலாதுங்க. வந்தால் அடிதான் விழும்." தான் இளக்க சாதிக்காரன் என்றும், மற்றவர்கள் தன்னை ஒதுக்குகிறார்கள் என்றும் அந்த இருபத்திரண்டு வயது வாலிபன், சற்றும் உறைப்பில்லாது சர்வ சாதாரணமாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான்.
"செல்வம். ஏன் நீ மதம் மாறக் கூடாது. எங்கட இஸ்லாம் மதத்தில இந்தச் சாதித் துவேஷம் கிடையாது. கிறிஸ்தவ சமயத்திலும் இல்லை. நீ இஸ்லாம் மதத்துக்கு வா. அல்லது கிறிஸ்தவ சமயத்துக்குப் போ. உன்னை மனிதனாக அங்கே மதிப்பார்கள்."
அவன் ஒன்றும் பேசவில்லை. குசினித் திண்ணையில் இருந்துகொண்டு, கொச்சிக்காய் அரிந்தான். அவனுடைய கண்கள் கலங்கியிருந்தன. சிலவேளை கொச்சிக்காயின் காரம் பட்டு அழுகிறானோ தெரியாது.
(03)
ஆசிரியனாக, அதிபராக, கல்விப் பணிப்பாளராக நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 35 வருடங்களாகச் சேவையாற்றிவிட்டுத் தற்போது ஒய்வு பெற்றுள்ளேன். சமூகப் பணிகளும், சமயப் பணிகளும் என்னை ஆட்கொண்டுவிட்டன. தப்லீக் ஜமாஅத் அடிக்கடி எனது கிராமத்தைத் தரிசிக்கின்றது. அவர்களைப் பள்ளியில் வரவேற்று உபசரிப்பதில் நான் திருப்தியடைகிறேன்.
அன்றும் ஒரு ஜமாஅத் பள்ளிக்கு வந்திருந்தது. அக்குழுவில் இருபது பேர் இருந்தனர். அவர்களுக்குப் பள்ளியில் பகற்சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டது. நாலு பேருக்கு ஒரு சகன். நானும் சகனில் சாப்பிடுவதற்காக
“ඉංග60" - 27 (g6) ඉOO4) பக்கம் 46

உட்கார்ந்தேன். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, சகன் பங்காளி ஒருவர் மென்மையாகக் கதைத்தார்.
"நான் ஐம்பது வருடங்களுக்கு முன் இந்த மருதமுனைக்கு வந்திருக்கிறேன்"
"அப்படியா .. எங்கே வந்தீர்கள்.?" "மஜித் சேரின் வீட்டுக்கு."
"மஜித் சேர். இந்த ஊரில் நான் மட்டும் தான் அந்தப் பெயரில் இருக்கிறேன். எனக்கு உங்களை ஞாபகம் இல்லை."
அவர் என்னை உற்றுப்பார்த்தார். "சேர். என்னைத் தெரியவில்லையா..? நான் மாவிட்டபுரம். பலாலி ஆசிரியர் கலாசாலையில்." எனக்குப் புகைமூட்டத்துக்குள் இருந்து புனிதமான ஒரு உருவம் வெளிப்பட்டு வருவது போல ஞாபகங்கள் கவிந்தன."
"நீங்க."
"நான். சேர். செல்வம்."
எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை.நான் பலாலி ஆசிரியர் கலாசாலையில் பயிற்சியை முடித்துக் கொண்டு வந்த கையோடு, செல்வம் எனது வீட்டுக்கு ஒரு தடவை வந்து சில தினங்கள் தங்கிச் சென்றது எனது நினைவுக்கு வந்தது. நாற்பது வருட நினைவுகள். பொங்கி வந்தன.
"சேர். நீங்க பலாலியில் இருக்கும் போது கூறிய புத்திமதிகள் என் நினைவில் பதிந்துவிட்டன. ஈழப் போர்க்காலத்தில், மாவிட்டபுரத்தில் உள்ள அனைவரும் இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்துவிட்டனர். அவர்களுடன் நானும் குடும்பத்துடன் வந்துவிட்டேன். எனக்கு முஸ்லிம் மக்கள் ஆதரவு தந்தார்கள். எனது குடும்பத்துக்காக அவர்கள் வீடு தந்தார்கள். தொழில் தந்தார்கள். தமிழ் மக்கள் எங்களை உதாசீனப்படுத்தினார்கள். நீண்ட கால யோசனையின் பின் நாங்கள் குடும்பத்துடன் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டோம். இப்போது எனது பெயர் "முபாறக்"
பக்கத்தில் இருந்த மற்றொருவர் சொன்னார். "முபாறக் சாகிப் சாதாரண ஆளில்லை. இப்போ. பெரிய கோடீஸ்வர முதலாளி. வவுனியாவிலும், கொழும்பிலும் அவருக்குக் கடைகள்."
"அல்ஹம்துலில்லாஹ்"
a
(யாவும் கற்பனையல்ல)
பக்கம் 47 "3606"-27 (607 2004)

Page 26
D 963, L160Luff
தாங்கள் அனுப்பி வைத்த 'ஒலை 22, 23 வது இதழ்கள் கிடைக்கப் பெற்றேன். வழக்கம் போல இவ்விதழ்களிலும் பல நல்ல விடயங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
கவிஞர் நீலாவணனின் 'வேளாண்மைக் காவியத் தொடர்ச்சி (செங்கதி. ரோனின் விளைச்சல்) தெளிந்த நீரோடை போன்று இடையிடையே ஹாஸ்ய ரசனையுடன் வளர்ந்து செல்வது தொடர்ந்து படிக்கும் ஆவலைத் துண்டுகிறது.
"கதிர்காம வில்லா" கலாபூஷணம் க.சபாநாயகம் மில் ஒழுங்கை மல்லாகம்
15.05.2004
D ஒலை 20வது இதழினைத் தாமதமாகவே படிக்க முடிந்தது. அதிலே வெளியாகியுள்ள நவமணி எழுதிய இலங்கைச் சிறுவர் சஞ்சிகைகள்' கட்டுரை சம்பந்தமாக இன்னொரு தகவல் 1960 காலப்பகுதியில் என நினைக்கிறேன் கொழும்பிலிருந்து 'சிறுவர் சுடர்' எனும் சஞ்சிகை ஒன்று வெளிவந்து கொண்டிருந்தது. நான் முதன் முதலாக எழுதிய பரிசு" சிறுவர் கதை கூட அதிலேதான் வெளிவந்திருந்தது. மேற்கொண்டு விவரங்களை நவமணி போன்றவர்களே தேடிப்பெற வேண்டும்.
டாக்டர் சுப்பிரமணிய வீதி பொ.சணர்முகநாதன் கந்தரோடை
சுன்னாகம்
2105.2004
> கடந்த ஒலை 20ல் இலங்கைச் சிறுவர் சஞ்சிகைகள் சம்பந்தமாக சில
குறிப்புகள்' என்ற நவமணியின் கட்டுரை கண்டேன்.
அதில் சிறுவர் சஞ்சிகையான 'கண்மணி வந்ததும் அது கருகியதையும் நவமணி அறியாரோ?
கண்மணி சிரித்திரன் வெளியீடு. 1978-80 காலப்பகுதியில் வெளிவந்தது.
திக்கவயல் சிதர்மகுலசிங்கம்
"ஓலை" - 27 (யூன் 2004) பக்கம் 48
 

ܔ
SS)
مج> ح
* ঊষg
勾
தமிழ்ச் சங்கத்தின் குரலாய்
தரணி எங்கும் ஒலிக்க ஒலை ஒயாமல் வர வளர எம் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் !
---
வகுப்பு 1 தொடக்கம் 10 வரை
க.பொ.த (சாதாரணம்)
க.பொ.த (உயர்தரம்) (கலை / விஞ்ஞானம் / வர்த்தகம்) ஆங்கிலம் / தமிழ் பேச, எழுத, வாசிக்க
சட்டக் கல்லாரி புகுமுக வகுப்புகள்
அனைத்தம் நடைபெறுகின்றன
frålnih 56Ó6 lenGuilh
உருத்திரா மாவத்தை வெள்ளவத்தை
R 6gTeOne Luff : 23638
SNS ൧{്ട

Page 27
வெள்ள
நித்தியகல்யாணி
அப்பழுக்க
பெல்ஜியம்
சர்வதேச இரத்தினச் (International Gen: உறுதிப்படுத்தப்பட்டு உத்தரவாதமளிக்கப்பட் பைகளில் மூடித்
GlGIGITGI
judicibul
230 காலி வீதி, தொலைபேசி : :
தொலை நக மின்னஞ்சல் :
 

வத்தை
நகை மாளிகையில்
ற்ற வைரம்
(Belgium) கல்லியல் நிறுவனத்தினால் lmological Institute)
- பரிசோதிக்கப்பட்டு
டு - மாற்றமுடியாதபடி
தாளிடப்பட்டது.
வத்தை Te(ODM ego6u6aprin
கொழும்பு - 06. , 227
ல் 2504933 Ν Inithkall Gislt. Ik Ż
ശ്യൂ(S