கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2006.03

Page 1


Page 2
With Best Compliments from
Qəri D)
Jewe
No : 41, Greens
Tel: O3
 
 
 
 
 
 
 
 

2llers
Road, Negombo. L-2237.504

Page 3
கொழும்புத் தமிழ்ச்ச திருவள்ளுவர் ஆண்டு ::
மெய்ப் பொருள் காண்பதறிவு
ஒலை 30
ஆசிரியர் குழு : பெ. விஜயரெத்தினம் த. கோபாலகிருஷ்ணன் தெ. மதுசூதனன் கலாநிதி வ. மகேஸ்வரன் தா. சண்முகநாதன் எஸ். எழில்வேந்தன் ந. கணேசலிங்கம் க. உதயகுமார்
சி. அமிர்தலிங்கம்
தொகுப்பாசிரியர் : வ. சிவஜோதி
அச்சுப்பதிவு : கீதா பதிப்பகம் கொழும்பு-13 தொலைபேசி 0777 350088
அட்டைப்படம் : மதிபுஷ்யா
வெளியீடு : கொழும்புத் தமிழ்ச்சங்கம் 7/57 வது ஒழுங்கை (உருத்திரா மாவத்தை) கொழும்பு - 06, இலங்கை. தொலைபேசி: 011-2363759 தொலைநகல்: 011-2363759 இணையத் தள முகவரி : www.colombotamilsangam.org மின்னஞ்சல் முகவரி : tamilsangam Qsltnet. Ik
-ܢܠ
@వా6ం 30)
РҒр: போது உள்பட் Lugia)st தொடர்
960)LDU பரந்த ஆசிரிய
அது L சமுதா (Ց(ԱքLDչ அறிை விடயத இதழிலி
என ந
இல
குறைப பங்களி இனத்த பெண்6
(լptջեւ III பெண் பெண் LDL (60 ஆண்க
நவி
சரியா
(լքlգԱմք வேரை
மரபு இ மேம்ப
96LTE நவீன தெளிற சூழ்நி:
மர புதிய தே6ை ତତuମୌ।
எமது

CD ங்க மாதாந்த இதழ் தி. பி. 2037Atனம் (மார்ச்) பங்குனி 2006
ந்தில் இலக்கியச் சிற்றிதழ்கள் பல வெளிவந்த ம், அவை வாசகர்களின் பரந்த வாசிப்புக்குப் ட்டுள்ளதா? என்றால் இல்லை என்னும் விடையே க அமைகிறது. ஈழத்தில் ஒரு இலக்கியச் சிற்றிதழ் ந்து வரமுடியாமைக்கு இதுவும் ஒரு காரணமாக பலாம். எனவே, ஒரு இலக்கியச் சிற்றிதழ் வாசகரின் வாசிப்பை நிறைவு செய்வதற்கு அவ்விதழின் பர் குழுவிற்கு அதிக பங்கு உண்டு என்றால் மிகையாகாது. இவ்வாசிரியர் குழுவானது மிகவும் யப் பொறுப்பு மிக்கதானதாகவும், தமது இனக் த்தின் அறிவுத் தேடலை நிறைவு செய்யவும், வ மேம்படுத்தவும் கூடியதுமான கட்டுரைகளையும், ானங்களையும், உள்ளடக்கிய ஆக்கங்களை தமது b பதிப்பதன் மூலம் அதை நிறைவு செய்ய முடியும் ம்புவோம்!
)க்கியச் சிற்றிதழ்களில் காணப்படும் இன்னொரு பாடு ‘பெண்கள் தொடர்பான இலக்கியத்தின்’ ரிப்பு மிகவும் அரிதாகவே காணப்படுவதாகும். ஒரு நின் பங்காளியாகப் பெண் விளங்குகிறாள் எனவே ணைத் தவிர்த்து ஒரு சமூகம் முன்னேற்றம் அடைய து. பெண்ணை அடையாளப்படுத்தும் ஒரு கூறாக கள் தொடர்பான இலக்கியம் விளங்குகிறது. கள் இலக்கியமானது வெறுமனே பெண்களால் மே எழுதப்பட வேண்டும். என்பதை விடுத்து 5ளும் அதனை மேம்படுத்த உதவவேண்டும்.
iனம் என்பது மரபின் தொடர்ச்சியே. ஆகவே மரபை க விளங்கிக் கொள்ளாமல் நவீனத்தை விளங்க ாது ஏனெனில்: எந்தவொரு சமுதாயமும் தனது அறியாமல் அது முன்னேற முடியாது. வேரான இலக்கியத்தின் ஊடாக நவீன இலக்கியவிழுதுகளை டுத்துவது முக்கியமானதாகும். மரபு இலக்கியத்தின் 5 - நவீன இலக்கியத்தை விளங்கிக் கொள்ளவும்,
இலக்கியத்தின் ஊடாக மரபு இலக்கியத்தை ந்து கொள்ளவும் ஒரு பாலமாக விளங்க வேண்டிய லை உருவாக்கப்பட வேண்டும்.
பையும் நவீனத்தையும் கேள்விக்கு உட்படுத்திப் பொருள்கோடல் மரபுகளைக் கட்டமைக்க வேண்டிய வ நம்முன்னே உள்ளது. அத்தேவைகளின் ஒரு ப்பாட்டுக் குறியீடாக ‘ஓலை’ விளங்கும் என்பது நம்பிக்கையாகும்.
{ பங்குனி 2006 )

Page 4
0. பெண்ணியல் வாதமும் பெண்க
() களஞ்சியம்
O இயல் விருது 2006
0 மொழி பெயர்ப்புக்கலை
0 சேவா சதன்
0 சுஜாதாவும் புறநானூறு பாரதியும் பெண்விடுதலையும் - முன்னோடி - வேதநாயகம்பிள்ை வார்த்தைச் சிறகினிலே ஆழத்தை அறியும் பயணம் - க. நூல் மதிப்பீடு
V 29uurt
0 தமிழர் வரலாறும் பண்
() கவிதைகள் - கனிவுமதி, கிரு () பேசாப் பொருளை பேசத் துணி () நாயக்கர்கால இலக்கியங்கள் அறியவாகும் அக்காலப் பெண்
0 சங்கச் சான்றோன் விருது பெ
ஒலையில் இடம் பெறும் ஆக்கங்
பொறுப்பாவார்கள். கருத்த
(பங்குனி 2006)

6Tee
*ன் கல்வி மேம்பாடும்
- சோ. சந்திரசேகரன்
b
பாரதி புத்திரன்.
DG
சட்டநாதன்
பாடும்
ஷ்ணவேணி, ஆழியாள் ந்த ஆண்டாள் - ஜே. ஆன்யாழினி
6) Tufoortab
கள் நிலை - சா. பாலுசாமி
லுவோர்
களுக்கு அவற்றைப் ಇಂಡಿಯಾ களும் அவர்களையே சாரும்.
(ஓலை 20)

Page 5
նlՍ
ஏறத்தாழ 25 ஆண்டு காலத்துக்கு முன்னரே சர்வதேச பெண்கள் இயக்கம் பெண்கள் சமூக, பொருளாதார ரீதியாக எதிர்நோக்கும் அசமத்துவ நிலை பற்றி விரிவான கருத்துக்களைச் சர்வதேசரீதியாகப் பிரசாரம் செய்தது. மேலைநாடு கீழைநாடு என்று வேறுபாடின்றி பெண்கள் ஒரு தனிப்பட்ட குழுவாக இவ்வாறான அசமத்துவ நிலையை எதிர்நோக்கினர். கேம் பிரிட்ஜ் பல கலைக் கழக உயர் அதிகார பீடம் பெண்பாலாருக்கு இளங்கலைமானிப்பட்டத்தை வழங்குவதை நிராகரித்தவிடத்து (மே மாதம் 1877), இந்தியாவில் பெண்கள் கல்வி கற்கத் தொடங்கினால் விதவையாகும் வாய்ப்புகள் உண்டு எனப் பயமுறுத்தல் விடுக்கப்பட்டன என அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அபிவிருத்திச் செயற்பாட்டில் பெண்களுக்கு எதுவித பங்களிப்பும் இருக்கவில்லை என்ற மரபுவழிக்கருத்து நிராகரிக்கப்பட்டு பண்டைக்கால [5f 6I 6TT Abi T ab fab i g56oi (Alydrate civilization/ மேம்பாட்டுக்குப் பெண்களின் பெரும்பங்கு பற்றிய ஆய்வுகள் வெளிவந்துள்ளன.
கடந்த மூன்று தசாப்த காலத்திய பெண்களின் மேம்பாட்டுக்குக் கல்வியும் பாடசாலைகளும் எவ்வாறு உதவமுடியும் என்பது பற்றி விரிவான முறையில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகள் பலவிடயங்களில் வளர்முக நாடுகளை விட முன்னேற்றங் கண்டுள்ளன. இதற்குக் காரணம் பெண் விடுதலை இயக்கங்களின் முயற்சிமட்டுமன்றி அந்நாடுகளின் நிதி வளங்கள், நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட பெண் குழுக் கள் , பொதுமக்களின் நிர்ப்பந்தங்களைக் கருத்திற்கொள்ளும் நிறுவன அமைப்புகள் என்பன காரணமாயின. நிறுவன (p68)puJIT601 356)65 (p68)pdig (Fromal Schooling) அப்பால் இடம் பெறும் முறைசாராக் கல்வி ஏற்பாடுகள் (Nonformal education) தாம் பெண்கள் தொடர்பான அடிப்படையான நிலை மாற்றங்கள் ஏற்படக் காரணமாக இருந்த தென்றும் எதிர்காலத்திலும் முறைசாராக் கல்வி இவ்விடயத்தில் முக்கிய பங்களிப்பைச் செய்ய உள்ளது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சார்பளவில் முறையான பாடசாலை முறையானது பெண்கள் விடயத்தில் பழமை பேணும் பண்புடையதாக, இலகுவில் மாற்றத்துக்கு
@ఐణం 30)
 
 

{% •
ண்களின் கல்வி மேம்பாடும்
பேராசிரியர். சோ. சந்திரசேகரன்
உட்படாததாக இருந்து வந்துள்ளது என்ற நிலைப்பாட்டில் பல உண்மைகள் உண்டு.
பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களை வலுப்படுத்தப் பிரதானமான ஒரு காரணியாக விளங்குவது கல்வி என்பதைப் பெண்களின் இயக் கங்கள் நண் கு உணர்ந்துள்ளன. கல வியினால் சமூகம் எவ்வாறு முன்னேற்றமடையும்? பெண்களின் வாழ்க்கை எவ்வாறு மேம்பாடடையும் என்பதை (i_K4) என்ற பெண்களும் கல்வியும் என்னும் விடயம் பற்றிய சிந்தனையாளர் விரிவாக எடுத்துக் காட்டினார். இக்கருத்து அரசாங்கங்களாலும் சர்வதேச நிறுவனங்களாலும் இன்னும் சரியாக ஏற்றுக் கொள்ளப் படவில் லை என்று கருதப்படுகின்றது.
‘பெண்களும் கல்வியும் பற்றிய ஆய்வு வரலாற்றை நோக்குமிடத்து, 1970 களில் செய்யப்பட்ட ஆய்வுகள், கல்விவாய்ப்புகளில் காணப்பட்ட பால்ரீதியான அசமத்துவ நிலை பற்றி விரிவாக ஆராய்ந்தன. 1980களில் செய்யப்பட்ட ஆய்வுகள் பெண்கல்வி சமுதாய மேம்பாட்டுக்கு ஆற்றும் பங்களிப்பு, கல்விக்கும் பெண்களின் ஊதியத்துக்குமுள்ள தொடர்பு, பெண்களின் கல்வி வாய்ப்புகளைத் தீர்மானிக்கும் காரணிகள் என்னும் விடயங்களைப் பற்றி ஆராய்ந்தன. 1990 களில் உலகவங்கியின் உதவியுடன் செய்யப்பட்ட ஆய்வுகள் பெண்கல்வியைத் தடை செய்யும் காரணிகள், அவர்களுடைய கல்வியால் கிடைக்கக் கூடிய சமூக, தனியாள் நன்மைகள் பற்றியன. இவ்வாய்வுகள் அனைத்தும் கல்வி எவ்வாறு பெண்களின் மேம்பாட்டுக்கான ஒரு வளம் என்பதை எடுத்துக் காட் டின. இவ்வாராய்ச்சிகள் தொடர்ச்சியாகக் கண்டறிந்த ஒரு விடயம் பாடசாலைக் கல்வி பெண்களின் வருமானங்களைக் கூட்டினாலும் அவர்கள் பொருளாதர விடயங்களில் ஆணிகளில் தொடர்ந்து தங்கி இருப்பார்கள் என்பதாகும். பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்குக் கல்வி அவசியமாயினும் அவர்களுடைய கீழ்ப்படிவான நிலையை மாற்றக் கல்வி மட்டும் போதாது என்பது மற்றொரு ஆய்வு முடிவு. உயர்தரமான பாடசாலைக் கல்வியினைப் பெற்ற பின்னரும் பெண்கள் அரசியல் துறையில் உயர்நிலைக்கு வரவில்லை. இலத்தின் அமெரிக்க
டுங்குனி 2006)

Page 6
GO நாடுகளில் பெண்களின் கல்வி சமத்துவ நிலையை நெருங்கி விட்டமையால் அந்நாட்டு ஆய்வுகள். அவ்விடயத்துக்கு அப்பால் சென்று பெண்கள் ஆசிரியர் தொழிற் சங்கங்களிலும் பல கலைக் கழக நிலையிலும் அரசியற் செயற்பாடுகளிலும் பங்கேற்பது பற்றியதாக அமைந்தன. அணி மைக் கால மூன்றாம் தலைமுறை ஆய்வுகள் பின்வரும் விடயங்கள் பற்றியனவாக அமைந்துள்ளன: - கல வித் துறை மாற்றங்களில் பெணி
ஆசிரியர்கள் கொள்ளும் பங்கு; - வரலாற்று நூல்களில் பெண்களும் இனத்துவ அம்சங்களும் (Ariety) கையாளப்படும் முறை; பெண்களின் தொழில் மற்றும் தனிப்பட்ட அடையாளங்களுக் கிடையில் நிலவும் பதட்டங்கள்; பாட ஏற்பாட்டில் பாலியல் கல்வியை இணைப் பதால் ஏற்படும் கருத்து வேறுபாடுகள். பெண்ணிலைவாதக் கோட்பாடானது சமூக உறவுகளை முழுமையாக அறிந்து கொள்வதற்கு பெண்களுக்கும் அவர்களுடைய வாழ்க்கைக்கும் ஒரு மைய இடத்தை வழங்குகின்றது; பால்நிலை (Gender) என்ற சாளரத்தினுடாகப் பெண்களை ஒடுக்கும் பொறிமுறைகளை அக்கோட்பாடு இனங்காட்டுகின்றது. இச் சிந்தனைகளுடன் செயற்படும் பால்நிலை ஆய்வாளர்கள் கல்வி நிறுவனங்களைப் பற்றி விரிவாக ஆராய்வதன் மூலம் பாட ஏற்பாடு, கற்பித்தல் முறைகள், சகபாடிகள் தொடர்புகள், இணைப்பாட ஏற்பாட்டுச் செயற்பாடுகள் என்பன பற்றி விளங்கிக் கொள்ள முற்படுகின்றனர். பாடசாலை சமூகநகர்வுக்கும் வேலை வாயப் ப் புகளுக்கும் கலாசார மேம்பாட்டுக்கும் பேருதவியாக அமைவதாக நம்பப்படுவதால், பெரும்பாலான நாடுகளில் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது (வளர்முக நாடுகளில் ஒன்பது ஆண்டுகளுக்கு) இவ்வாறான பயனுடைய நிறுவனமாகப் பாடசாலைக்கல்வி விளங்கினாலும் பெண் ணியல ஆயப் வாளர்கள் கல வி நிறுவனங்களின் அடிப்படையாக விளங்கும் பழமைத்தன்மையை (ConservativSim) ஆண்வழிச் சமுதாயத் திணி விழுமியங்களையும் விதிமுறைகளையுமே கொண்டு விளங்குவதாகக் கூறுகின்றது. பாடசாலைக் கல்வி பற்றிய பெண்ணியல்வாத அறிஞர்களின் ஒரு முக்கிய விமரிசனம் இதுவாகும் . " பாடசாலைகள் பெண்களுக்கு வலுவூட்டுவதில்லை; மாறாகப் பாடசாலைகள் அவர்களைக் கீழ்ப்படிவுள்ளவர் களாக் குகின்றது’ எண் று அவர்கள் வாதிக்கின்றனர்.
டுங்குனி 2006)

மேலை நாட்டுப் பாடசாலைகள் வளர்முக நாட்டுப் பாடசாலைகளைவிட கூடிய அளவுக்குத் திறந்த தன்மையையும் சனநாயகப் பாங்கினையும் கொண்டு விளங்கினாலும், அங்கு பால்நிலை அடிப் படையிலேயே பல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன; பாடசாலை அதிகார அமைப்பு, ஆசிரியர் எதிர்பார்ப்புகள், வகுப்பறைச் செயற்பாடுகள், சகபாடிகளின் தொடர்புகள் என்பவற்றில் இப் பால் நிலை அம்சங்கள் பிரதிபலிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
(பெரும்பாலும் ஐக்கிய அமெரிக்க ஆய்வுகள்). நடைமுறையிலுள்ள கல வி முறையை நிராகரிக்கும் தீவிரவாதக் கல்விச் சிந்தனை, நவமார்க்சிய கல்விச் சிந்தனை என்பவற்றின் சாயல்களை இப்பெண்ணியல்வாத ஆய்வாளர் சிந்தனைகளில் காண முடிகின்றது (பெட்டி 1, 2)
/ N
பெட்டி 1
தீவிரவாதக் கல்விச் சிந்தனை (சில உதாரணங்கள்)
N பாடசாலைக்கல்வியின் காரணமாகவே பிள்ளைகளின் படைப் பாற் றலும் புத்தாக்கச் சிந்தனைகளும் சிதைக்கப் படுகின்றன;
w பாடசாலைகள் ஒழித்துக்கட்டப்பட்டு பாடசாலைகளற்ற சமூகமொன் று (deshooling Society). 6J bu(65.5 LIL6) (86u6OởTGLib (Ivan Illich)
w பாடசாலைகளால் பொருளாதார அபிவிருத்தியன்றி பல பொருளாதாரப் பிரச்சினைகளே தோன்ற முடியும்.
N கல்வியை யாரும் பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது; பிள்ளைகள் தமது கல விக்குத் தாமே பொறுப்பேற்க
s வேண்டும்.
ノ ܢܠ
N
பெட்டி 2 நவமாக்சியக் கல்விச் சிந்தனை
கல்வியை யாவருக்கும் சமமாக வழங்கி ஒரு வர்க்க பேதமுள்ள சமூகத்தை ஏற்படுத்தி விடலாம். என்பது வெறும் கற்பனை. நுணுகி நோக்கினால் சகல கல்வி முறைகளும் வர்க்கபேதமுள்ள சமூக அமைப்பினைக் காலங்காலமாக மீள் உற்பத்தி செய்வதில்
வெற்றிகண்டுள்ளன.
الضر ܢܠ
@ఐణం 30)

Page 7
பால்நிலை ஆய்வாளர்கள் இன்று அதிகார (Power), சமூகத்தைச் செம்மைப் படுத்துவதில் அரசின் பங்கு என்றும் விடயத்தில் அதிக அக்கறையைச் செலுத்துகின்றனர். இவ்வாய்வு அணுகுமுறையை அவர்கள் பாடசாலைக் கல்வியில் பயன்படுத்தியபோது, பாடசாலைகள் ஆணி , பெணி என்ற இருவகைப் பட்ட வகைப்பாடுகளை உருவாக்குகின்றன. என்றும், அரசானது பாடசாலைக் கல்வியின் மீது செலுத்தும் ஏகபோக உரிமை காரணமாக இவ்விடயத்தில் அரசும் சம்பந்தப் படுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.
பால் நிலைப் பட்ட வேறுபாடுகளை உருவாக்குவதில் எவ்வாறு பாடசாலைகள் செயற்படுகின்றன என்னும் விடயம் பற்றிச் Connel என்ற சிந்தனையாளர் விரிவாக ஆராய்ந்துள்ளார்.
பாடசாலைகள் அரசின் சிந்தாந்தங்களைப் பரப்புவதிலும் வலுப்படுத்துவதிலும் முன்னின்று செயற்படுகின்றன என்பது (AlthuSSer) என்ற சமூகவியலாளரின் கருத்து. பாடசாலைகள் தாமாகச் செயற்படுவதில்லை; மாணவர்களும் ஆசிரியர்களும் தமது வீடுகளிலும் சமுதாயத்திலும் கற்ற விழுமியங்கள், உளப் பாங்குகள், நம்பிக்கைகள் என்பவற்றுடன் பாடசாலைக்கு வருகின்றனர். இவை பாடசாலைகளில் மீண்டும் வலியுறுத்தப் படுகின்றன; பாடசாலைக் கலாசாரம், ஒழுங் கமைப்பு, மாணவர் தொடர்புகள், பாடநூலி களில் ஆண்களும் பெண்களும் கையாளப் படும் முறை என்பவற்றில் இவ்வம்சங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன என இவ்வாய்வுகள் தெரிவிக்கின்றன.
1980களில் செய்யப்பட்ட ஆய்வுகள் பாடநூல் கள் எவ்வாறு எதிர்மறையாகப் பார்க்கின்றன என்பதை எடுத்துக்காட்டின. பாடநூல்கள் பெண்களை மட்டமானவர்கள் (inferior) எனக் காட்டாவிட்டாலும் அவர்களைக் குறைந்த ஆளுமை உடையவர்களாகவும் அவர்களுடைய பங்களிப்புக்கு வரம்புகள் உண்டு என்ற முறையிலும் சித்திரித்தன. பாகிஸ்தான், இலங்கை, மாளவி (Malawi), மெக்சிக்கோ போன்ற நாடுகள் சர்வதேச நிதிநிறுவனங்களின் உதவியுடன் பாடநூல்களிலும் பாடஏற்பாட்டிலும் காணப்பட்ட பெண்கள் பற்றிய எதிர்மறைச் சித்திரிப்புகளை மாற்ற முயன்றன.
பாடநூல்கள் மூன்று அடிப்படைகளில் மாற்றங்களுக்குள்ளாயின;
(ஓலை 30)

ᏣᎧ - ஆண்களுக்கு முதலிடம் அளிக்கும் உதாரணங்கள், ஆண்வர்க்கச் சார்பான மொழி நடை என்பன மாற்றத்துக்குள்ளாயின.
- பெண்களும் ஆண்களும் செய்யும் பணிகள், சமுதாயத்தில் அவர்கள் கொள்ளும் பங்கு தொடர்பான வழமையான சித்திரிப்புகள் மாற்றப்பட்டன (உதாரணமாக, பெண் சமைத்தல், வீட்டு வேலை செய்தல், பிள்ளைகளுக்குப் பாடம் கற்பித்தல், ஆண் சாய்வு நாற்காலியில் பத்திரிகை பார்த்தல், அலுவலக மேசையில் அமர்ந்திருத்தல்.) - ஆண்கள், பெண்கள் பற்றிய மாற்றுப் படிமங்களுக்கு இடமளித்து, பால் தொடர்பற்ற சித்தரிப்புகள் (பெண் அலுவலக வேலை செய்தல், வாகனம் ஒட்டுதல், ஆண்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்லல்)
பெண்களின் கல்வியை மேம்படுத்தப் பாடசாலைக்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளில் (முறைசாராக் கல்வியில்) கூடிய அக்கறை செலுத்தப் பட்டது. இந்தியா, பாகிஸ்தானி , வங்காளதேசம் ஆகிய பெண்கல்விவாய்ப்புகள் திருப்தியற்ற முறையில் காணப்பட்ட நாடுகளில் இவ்வழிமுறை விரிவான முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. வங்காள தேசத்தில் 10 இலட்சம் பிள்ளைகள் ஆரம்பப் பள்ளி வயதுப் பிள்ளைகளில் 8 சதவீதமானவர்கள் இதனால் பயனடைந்தனர். சர்வதேச ரீதியாக ஏற்கப்பட்டுள்ள பெண்கல்வி தொடர்பான மில்லேனியம் அபிவிருத்தி இலக்கினை இந்நாடுகள் அடைந்து கொள்வதற்கு முறைசாராக் கல்வி ஏற்பாடுகள் (இந்தியாவில் திறந்த பாடசாலை, வங்காள தேசத்தின் கிராமமுன்னேற்றக் குழுவின் - BRAC - பாடசாலைகள்) பயன் படுத்தப்படுகின்றன. வங்காளதேச BRAC பாடசாலைகளில் 70 சதவீதமானவர்கள் பெண்களாவர். பெண் பிள்ளைகளின் தன்னம்பிக்கை விருத்திக்கான பாடஏற்பாடு அங்கு பயன்படுத்தப்படுகின்றது (பெட்டி 3)
‘பால்நிலைச் சமத்துவத்தை நோக்கி முன்னேறுதல்; 2015ஆம் ஆண்டளவில் ஆரம்ப, இடைநிலைக் கல்வியில் ஆண் - பெண் வேறுபாட்டை நீக்கி பெண்களுக்கு வலுவூட்டுதல் - மில்லேனியம் அபிவிருத்தி இலக்கு
(3) J
ー{ பங்குனி 2006)

Page 8
G6)
உலகளாவிய ரீதியில் தொடக்கக் கல்வி நிலையில் (1 - 9 ஆந்தரம்) முன்னேற்றம் ஏற்பட்டு பெணிகளுக்கான வாயப் ப்புகள் அதிகரித்திருந்தாலும் சில புதிய பிரச்சினைகளும் தோன்றியுள்ளன.
முதலாவது, உலகமயமாக்கம் ; இதன் காரணமாக கல்வியின் நோக்கு திசை மாறிப் பாடசாலைகள் போட்டி உலகில் வாழ்வதற்கான பயிற்சியை வழங்க முற்பட்டுள்ளன. திறானப்வு மனப்பாங்கு, சுயசிந்தனை விருத்தி என்னும் கல்வியின் நோக்கங்களும் தனியாள் வளர்ச்சி, சமூக அபிவிருத்தி இலக்குகளும் கைவிடப்பட்டு விஞ்ஞான தொழில்நுட்பக் கல்வி முக்கியத்துவம் பெற்று வருகிறது. உலகமயமாக்கத்தின் விளைவாக பெண்களின் நிலை மாற்றம் கல்வியிலன்றித் தொழிற் சந்தையின் தேவைகளால் நிர்ணயிக்கப்படும் நிலை தோன்றியுள்ளது. வறுமையால் வாடும் வளர்முக நாடுகள் தாம் கடன் பட்ட சர்வதேச நிதிநிறுவனங்களின் அமைப்புச் சீராக்கக் கொள்கைகளுக்கு அடிபணியவேண்டி உள்ளது. அரசாங்கச் செலவுகளைக் கட்டுப்படுத்துவது இதன் ஒரு முக்கிய அம்சம். இதனால் அரசாங்கத்தின் கல்விச் செலவு கட்டுப் படுத்தப்படுவதால் வறிய குடும் பங்களில் பெணி கல்வி பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இக்கொள்ளைகள்
பெண்களையும் சிறுமிகளையும் பெரிதும்
பாதித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன; வளர்முக நாடுகளின் ஆரம்பக் கல்வியும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. எதிர்காலத்தில் பெண் கல்வி அலட்சிய படுத்தப்படக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம்.
- வளர்முக நாடுகளில் ஆராய்ச்சிக்கும் போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லையாதலின் பெண் கல்வி நிலைமைகள் உட்பட பால்நிலை ஆய்வு முயற்சிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
- உயர்கல்வித்துறையில் ஏற்பட்டு வரும்
பங் 2006

தனியார் மயமாக்கம் உயர் கல்வியை வணிகமயப்படுத்தி வருவதால் பெண்களின் உயர்கல் வியில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம்.
- இன்று ஆசிரியர்கள் மாற்றத்தின் முகவர்களாகக் கருத் தாக்கம் செய்யப்படுகின்றனர். ஆனால் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்துமுன்னர் மாற்றம் அவர்களுக்குள் நிகழவேண்டும். ஆசிரியர்கள் வழமையான பாரம் பரிய பால் நிலைக் கருத்துக்களையே உடையவர்கள் என்பதால், பெண் கல்வி மேம்பாட்டுக்கும் பெண்களின் மேம்பாட்டுக்கும் உதவும் வகையில் பொருத்தமான ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் தேவையும் மற்றொரு பிரதான பிரச்சினையாகும் . வளர்ச்சியடைந்த நாடுகளில் இவ்வம்சத்தில் மிகுந்த அக்கறை செலுத்தப்பட்டு வந்துள்ளது. வளர்முக நாடுகளில் விசேட சந்தர்ப்பங்களில் மட்டுமே இவ்வம்சம் கருத்திற்கொள்ளப்படுகின்றது.
r பெட்டி 4
பெண்களின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதோ பிரதான நீரோட்டத்தில் இணைவதோ அல்ல; மாசுபடிந்த நீரோடையில் பாய்வதும் அல்ல; அதனைச் சுத்தப்படுத்துவதும் அதனைத் தூய்மையான சிற்றருவிகளாக ஆக்குவதுமே எமது நோக்கம்; எமது போராட்டம் அராஜகம், அநீதி, அசமத்துவம், வன்முறை என்பவற்றுக்கு எதிரானது; நாம் போராடுவது சமூக, பொருளாதார, சுற்றாடல் நெருக்கடிப் போக்குகளை திசை திருப்பி மாற்றங்காணவே.
Bella Abzug
ஐ. அமெரிக்க முன்னை நாள் காங்கிரஸ்
அவை உறுப்பினர் - தீவிர பெண்ணிலைவாதி 一ノ ܐܵܝܓܵܠ
ള്
@ఐeం 30)

Page 9
/ இயல் வி
"இயல் விருது' ஒவ்வோராண்டும் கனடி பல்கலைக்கழகத் தென்னாசிய மையமும் இை வாழ்நாள்ச் சாதனைகளைப் போற்றிப் பாராட்டி
இந்த விருது 2001 இல் தொடங்கி வழ சுந்தரராமசாமி, கே. கணேஷ், வெங்கட் ச வழங்கப்பட்டிருக்கிறது. 2005ஆம் ஆண்டுக்க பேராசிரியர் ஜோர்ஜ் எல். ஹார்ட்டுக்கு வழங்
முன்னையவர்களில் கே.கணேஷ், பத்மந குறிப்பிடத்தக்கது. மற்ற இருவரும் தமிழகத்தைச் எந்த அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டார்கள் தான் வெளிச்சம்.
தமிழியல் சார்ந்த ஒர் ஆராய்ச்சி மாணவருக் ஆராய்ச்சியாளர்களுள் ஹார்ட் ஒருவர் என்பது
தமிழ் ஒரு செவ்வியல் மொழி என்று அ உட்பட பதினெட்டு மொழிகளில் புலமை பெற்ற செறிவிலும் ஊறித் திளைப்பவர். புறநானூறு முழுவதும் கழித்து விடலாம். அப்பொழுதும் ட இருக்கும் என்பது இவரது கருத்து.
ஹார்ட் கெளரவிக்கப்பட வேண்டியவர் என்
மொழி பெயர்
தமிழில் அறிவுப் பரவலுக்கு மொழிபெயர்ப் கூற்றுப்படி பன்னாட்டு நல்லறிஞர்கள் ஆக்கிய பலர் உழைத்து வருகிறார்கள். இந்தக்கணம் 6
இதுவரை படைப்பிலக்கியவாதிகளாக அறியப்ப செயற்பட்டு வருகின்றார்கள். ஆனால் இப்போது பெற்று சங்கம் ஒன்றையும் உருவாக்கியுள்ளா இன்று என்னும் தலைப்பில் ஒரு தொகுப்பையும் சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளும் பேசப்பட் மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களின் பட்டியலும் பெயர்ப்புக் கலை இன்று' எனும் நூல் வெளி
Geroako 30

ய இலக்கியத் தோட்டமும் டொரான்ரோ ணந்து தமிழுக்குத் தொண்டு செய்பவர்களின்
வழங்கும் விருது.
}ங்கப்பட்டு வருகிறது. இதுவரை முறையே ாமிநாதன், பத்மநாப ஐயர் ஆகியோருக்கு ான பரிசு கலிபோர்னியா பல்கலைக்கழகப் கப்படுகிறது.
ாபஐயர் ஆகியோர் ஈழத்தவர்கள் என்பது சார்ந்தவர்கள். இதுவரை விருது பெற்றவர்கள் என்பது போற்றிப் பாராட்டும் நிறுவனங்களுக்குத்
க்கு, தமிழுக்குப் பெருமையும் வளமும் சேர்த்த
நன்கு புரிந்து கொள்ள முடியும்.
ஆணித்தரமாக வலியுறுத்திக் கூறுபவர்; தமிழ் வர்; கம்பனின் கவிநயத்திலும் சங்கத் தமிழின் சொல்லும் செய்திகளைப் பயின்றே வாழ்நாள் புதிய புதிய செய்திகள் கிடைத்துக் கொண்டே
ாபதில் சந்தேகமேயில்லை.!
ர்ப்புக் கலை
பு ஆற்றிய பங்களிப்பு விரிவானது. பாரதியின் நூல்களைத் தமிழறிந்தோருக்கு வழங்குவதில் வரை அது தொடர்கிறது.
ட்ட பலர் பல்வேறு குழுக்களாக, இயக்கங்களாகச் மொழிபெயர்ப்பாளர்கள் தமக்குள் ஒருங்கிசைவு ர்கள். மேலும் “மொழி பெயர்ப்புக் கலை” . ) வெளியிட்டுள்ளார்கள். மொழிபெயர்ப்பாளர்கள் ட உரைகளும் மொழிபெயர்ப்பாளர் குறிப்புகளும் இணைந்த அரியதொரு தொகுப்பாக “மொழி |வந்துள்ளது.
-டுங்குனி 2009

Page 10
Ꮹ8Ꭰ
சிந்தனைக்காக அதிலிருந்து.
“படைப்பை மொழியெர்ப்பது - அதிலும் மொழிபெயர்ப்பது - பலவிதங்களில் தனித்த படைப்பை மொழிபெயர்ப்பதென்பது ஒருவர் கே முற்படுவது போன்றது. ஆனால் நிறைவேறே முயற்சி. எப்போதும் சாத்தியம் இன்றி தள்ளிப்ே இருக்கிறது அது. ஒரு படைப்பின் நுழை6 வேண்டியுள்ளது. அவ்வகையில் வாசிப்பும் மெr எனலாம்.” (ரவிக்குமார் பக் 11)
இன்று வாசிக்க வேண்டிய நூல்களுள் ஒன
“மனிதன் வாசிப்பதனால் ஒரு பூரண ம கூற்று. ஆனால் நடைமுறையில் புத்தகங்கள் ஒ ‘ஆம்’ என்று திருப்திகரமாகப் பதில் கூற மனிதாயப் பண்புகளை வளர்த்தெடுக்க வா நம்மை விழிக்கச் செய்யாதபட்சத்தில் நாம் இயல்பாக எழுவதில் நியாயம் இல்லாமல் இல் பார்த்தால் ‘புத்தகங்கள்’ ‘வாசிப்பு அடிப்பன
ஆனால் ஒரு நல்ல புத்தகம் என்ன செய் கொள்வதில் தப்பில்லை.
ஒரு நீதிபதி ஒரு நாவல் புத்தகத்தைப் மனைவிக்கும் தந்து படிக்கச் செய்தார்.
புத்தகம் செய்யத் தூண்டிய விந்தை : தமக் மாளிகை போன்ற பங்களாவையும் மகளிர் நிை நீதிபதி. அவரது மனைவி தன் சொத்து நகைச் அள்ளித் தந்தார்.
அந்த மகளிர் நிலையம் : சென்னை சே
அந்த நீதிபதியின் பெயர் : சர். வெங்கட
அந்த மனைவியின் பெயர் : லேடி ஆண்
இந்தச் செயலைச் செய்யத் தூண்டிய பு
சென்னையிலும் இதே போல் மும்பா உருவாவதற்குத் தூண்டிய புத்தகம் (நாவலி
இது போல் நிறைய உதாரணங்கள் உ6
W
(பங்குனி 2006)

குறிப்பாகப் பெண்களின் படைப்பை ஒரு ஆண் ன்மை கொண்டதாயிருக்கிறது. ஒருவர் எழுதிய ண்ட கனவை மற்றவர் வேறொரு இடத்தில் காண வ முடியாத ஒரு ஆசையாக இருக்கிறது இந்த பாவதாக - அதனால் புதிரும், ஈர்ப்பும் நிரம்பியதாக வாயிலில், அடையாளங்களைக் கழற்றி வீசிவிட ாழிபெயர்ப்பின் சில கூறுகளைக் கொண்டிருக்கிறது
iறு தான் இந்த நூல்.
T சதன்
னிதனாகின்றான்” என்பது பலரும் சொல்லும் ஒருவரை பண்படுத்தியிருக்கிறதா? என்று பார்த்தால் முடியும். இருப்பினும் பலரை மேன்மைப்படுத்த சிப்பு உதவவில்லை. நாம் வாசிக்கும் புத்தகம் அதை ஏன் வாசிக்க வேண்டும்? இந்தக் கேள்வி லை. நம்மைச் சார்ந்தவர்களின் நடவடிக்கைகளைப் டையான மாற்றங்களைக் கொண்டுவரவில்லை.
யும்? என்று எப்பவோ படித்ததை இங்கு பகிர்ந்து
ப் படித்தார். தான் படித்த புத்தகத்தைத் தன்
$குச் சொந்தமாக இருந்த பல ஏக்கர் நிலத்தையும் லையத்துக்கு நன்கொடையாக எழுதிக் கொடுத்தார் கள் அனைத்தையும் அந்த மகளிர் நிலையத்துக்கு
த்துப்பட்டில் இன்றுமுள்ள “சேவாசதன்”
உசுப்பாராவ்
TLT6f
த்தகத்தை எழுதியவர் : பிரேம் சந்த்
(நாவலாசிரியர்)
யிலும் அபலைப் பெண்களுக்கான இல்லம் b) சேவாசதன்.
ண்டு. ஆனால் ஈழத்தில் புத்தக, வாசிப்பு.??
4ހ
@ణ6ం 30)

Page 11
சுஜாதாவும்
சுஜாதா எனும் பெயருக்குரியவர் பெண் ப கணிப்பொறி அறிஞர், நாவாலாசிரியர், கட்டுரை விட தமிழ்த் திரைப்பட உலகிலும் நன்கு அ படங்களை இயக்கிய ஷங்கரின் படங்களுக்கு
இதைவிட சுஜாதா அசட்டுத் துணிச்சல்கார செவ்விலக்கியங்கள் குறித்தும் எழுதுவார். தற்ே இருக்கும் மனுஷபுத்திரன் உயிர்மை பதிப்ப தொகுப்புகளாக வெளியிட்டு வரும் பெருமையு
தமிழ்ப் பேராசிரியர் தொ. பரமசிவம் அவர் நமது கவனத்துக்குரியன.
224 பக்கங்களையுடைய புறநானூறு ஓர் 6 நூலின் முதல் ஐந்து பக்கங்களும் பேறு பெற்ற சொல், தொடர், பொருள் கருத்து எனக் கு கொண்டிருக்கின்றன. சங்க இலக்கியங்களைத் வே. சாவின் முன்னுரைகளை மட்டும் படிப்பவர்கள்
‘மள்’ என்னும் சொல் சுஜாதாவின் உரையி:ே சுஜாதாவிற்கு கல்லும் கள்ளும் ஒன்றாகலாம்; அறிந்தும் அறியாமலும் செய்யப்படும் பிழைகள் 1 துரோகம்.
அச்சுப்பிழைகள் என்று கவசம் தேடும் பி. பிறகும் பொருளையே புரட்டிப் போடும் மூலபா
LITL6Üb 6I6Ööi 27 - 6h 16Üb6omtu'u (6)J6Üb6)Tñi - UL
பாடல் எண் 33 - தனிமகள் (தனிமகன்)
45 - மலைந்தோன் (மிலைந்தோன்)
மலைதல் - போரிடல், மிலைதல் தலையில் 'ஆர்' என்பது சோழர்களின் அடையாளப்பூ இடங்களில் ‘ஆத்தியை ‘அத்தி’ என்று சுஜ மரபுப்படி பூக்காத தாவரம். ஆர் என்னும் பூை ‘சங்க இலக்கியத் தாவரங்கள்’ நூல் (கு. சீனிவா நிகழ்காலப் பெயர் மந்தாரம்.
நிலம் பற்றிய புரிதலில் சுஜாதா மற்றுமெ என்றால் உப்பங்கழி. மண் நீரும் கடல் நீரு என்பார்கள். இந்த இடத்தில் மலரும் பூ நெய் எண் 48) என்பது வாசகர் பற்றிய அலட்சிய செவ்விலக்கியம் ஒரு நாவல் அளவு தான் எ6
இவ்வாறு விரிந்து செல்கிறது. விரிவாகப் படி 2003 ஐப் பார்க்கவும்.
சுஜாதா போன்ற பலர் தமிழில் இன்னும் !
அலட்சிய மனோபாவம் ஒரு நோய்க் கூறாகே ܢܠ

G9)
NA
புறநானூறும்
டைப்பாளி அல்ல. இவர் ஆண் படைப்பாளி. ரயாளர் என பலமுகம் கொண்டவர். இவற்றை றியப்படுபவர். முதல்வன், போய்ஸ் உள்ளிட்ட
கதை, வசனம் தீட்டியவர்.
ர். சங்க இலக்கியம், புறநானூறு உள்ளிட்ட போது ‘உயிர்மை' எனும் இதழின் ஆசிரியராக கம் மூலமாகச் சுஜாதாவின் படைப்புகளை ம் உண்டு.
கள் புறநானூறு குறித்து எழுதிய குறிப்புகள்
எளிய அறிமுகம் (முதல் தொகுப்பு) என்னும் றவை. எஞ்சிய எல்லாப் பக்கங்களும் எழுத்து, தறைவில்லாத அளவு பிழைகளைச் சுமந்து தேடி அலைந்து தொகுத்த D -. ர் கூட இந்தப் பதிப்பினை மன்னிக்க மாட்டார்கள்.
ல மிகச் சாதாரணமாக ’மல் லாகி விடுகின்றது. புள்ளும் புல்லும் ஒன்றாகலாம். மூலபாடத்தில் படைப்பாளிகளுக்குச் செய்யப்படும் அப்பட்டமான
ழைகளைப் பெரிய மனதோடு ஒதுக்கி விட்ட டப்பிழைகளில் சில இதோ:
டர்க்கை இங்கு முன்னிலையானது)
ம் சூடல்
, இதனை 'ஆத்தி’ என்றும் கூறுவர். மூன்று ாதா உரையெழுதியிருக்கிறார். அத்தி தமிழ் வ ஏ.கே. ராமானுஜம் (Abaham என்று குறிக்க, 'சன்) 'பாகினியா பர்பூரியா’ என்று விளக்குகிறது.
ாரு சாதனையினைச் செய்திருக்கிறார். கழி’ ம் சந்திக்கும் இடம். இக்காலத்தில் ‘காயல்' தல். 'கழியிலே மலர்ந்த நெய்தல்' ( பாடல் மனோபாவம் மட்டுமல்ல; புறநானூறு என்னும் ன்று கருதும் பேதைத்தனமும் கூட.”
டிக்க வேண்டுமென்றால் இந்தியா ருடே யூலை
உண்டு. வாசகரை முட்டாள்களாகவே கருதும்
வ உள்ளது. ള്لم
(பங்குனி 2006)

Page 12
(இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச்சிந்தனை மரபிலும் நவீன தமிழ் இலக் கிய உருவாக்கத்திலும் பாரதியின் ஊடாட்டம் விரிவானது; ஆழமானது. பாரதியை முன் வைத்து கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்குமான ஓர் உரையாடலைத் தவிரமாக பலரும் பல நிலைகளில் மேற்கொண்டு வருகின்றனர். நேற்றைக்கும் இன்றைக்குமான ஓர் இழையாகப் பாரதியை முன் வைத் து உரையாடுவதற்கான முழுச்சாத்தியப்பாடுகள் உண்டு.
அந்த ரீதியில் பாரதிபுத்திரன் கலை, அரசியல், பண்பாடு, வரலாறு, இலக்கியம், விடுதலை ஆகியவற்றைக் கூர்மையாகக் கவனித்துத் தன்ளைவில் தெளிவான கருத்துகளை முன்வைத்திருப்பவர். இவரது கருத்துகளை எல்லோரும் தெரிந்து அறிந்து புரிந்து கொள்ள ஓர் உரையாடல் வகையில் “ தம்பி - நான் ஏது செய்வேனடா!” எனும் தலைப்பில் ஒரு நூல் வெளிவந்துள்ளது. பா. இரவிக்குமார், இரா. பச்சியப்பன் ஆகிய இருவரும் இணைந்து பாரதிபுத்திரனுடன் விரிவான உரையாடலை மேற்கொண்டு அவற்றைத் தொகுத்து நூலாக்கியுள்ளனர்.
அதில் , பெண் விடுதலை குறித் து வெளிப்பட்ட சில கருத்துகளே ‘பாரதியும் பெண்விடுதலையும் எனும் தலைப்பில் இங்கு இடம் பெறுகிறது. பாரதி பற்றி பாரதிபுத்திரனின் வாசிப்பு, தேடல், ஆய்வு பாரதிக்குள் பயணம் போக எத்தனிப்போருக்கு வெளிச்சம் பாய்ச்சுகிறது.)
குறிப்பும் தேர்வும் : மூர் கருத்து முதல்வாதியாக இருந்த பாரதி,
பங்குனி 2006 }
 

புராண இதிகாச மரபுகளை ஏற்ற பாரதி எவ்வாறு பெணி விடுதலையை
முன்னெடுக்க முடியும்?
பாரதி கருத்துமுதல் வாதி என்பதில் ஐயமில்லை. உலகத்தோற்றமும் உலக இயக்கமும் அதற்கு அப்பாற் பட்டதொரு சக்தியின் விருப்பு வெறுப்புச் சார்ந்தது என்பது அவன் கருத்து. ‘இவ்வுலகு அதனது லீலை என்பதிலும் ‘ஆக்கம் நீக்கம் யாது மதன் செய்கை’ என்பதிலும் அவன் உறுதி கொண்டிருந்தான். ஆயினும் இவ்வுலக வாழ்வின் இத்தனையாயிரம் போராட்டங் களுக்கும் இங்குத் தேடிக்கொள்ள வேண்டிய காரணங்களோ செய்துகொள்ள வேண்டிய தீர்வுகளோ இல் லையென்று அவன் கூறுகிறானா என்பதுதான் நாம் எண்ணத்தக்கது. அவன் எழுதுகிறான்.
‘உலகம் பொய்; அது மாயை; அது துன்பம்; அது விபத்து; அதை விட்டுத் தீர வேண்டும்” இந்த வார்த்தைதான் எங்கே பார்த்தாலும் அடிபடுகிறது. ஒரு தேசத்திலே படித்தவர்கள், அறிவுடையோர், சாஸ்திரக்காரர் எல்லோரும் ஒரே மொத்தமாக இப்படிக் கூச்சலிட்டால், அங்கே லெளகிக காரியங்கள் வளர்ந்தேறுமா? மனம்போல் வாழ்க்கை யன்றோ? பூர்வமதாசார்யார் ‘பாரமார்த்திக மாகச் சொல்லிப் போன வார்த்தைகளை நாம் ஓயாமல் லெளகிகத்திலே சொல்லிக் கொண்டிருப்பது சரியா? வெகு ஜனவாக்கு நமது தேசத்தில் பலித்துப்போய் விடாதோ? இகலோகம் துன்பமென்று நம்பினால், அது துன்பமாகத்தான் முடியும். இந்த உலகம் இன்பம், இதிலுள்ள தொழில், வியாபாரம், படிப்பு, கேள்வி, வீடு, மனைவி, மக்கள்,

Page 13
எல்லாவற்றிலும் ஈசன் அளவிறந்த இனபத்தைக் கொட்டி வைத்திருக்கிறான். விதிப்படி நடப்போர் இந்த ஸ" கங்களை நன்றாக அனுபவிக்கிறார்கள். ஈசனுடைய விதி தவறும் கூட்டத்தார் துன்பமடைகிறார்கள்.
மாயா வாததி தைப் புறக் கணித் து இயற்கையின் ஒழுங்கின்படி வாழும் வாழ்வில் மலரும் இன்பத்தை பாரதி வற்புறுத்துகிறான். ஆகவே இவ்வுலகத்தின் போக்கினைப் படித்தவர்களும் அறிவுடையோர்களும் சாத்திரக்காரர்களும் மாற்றியமைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். மதவாதிகளின் தத்துவமுடிவுகளை அன்றாட வாழ்வில் கைக் கொள்வது தவறு என்கிறான். இது கருத்து முதல் வாதத்திலிருந்து அவன் விலகிநிற்கும் போக்காகும்.
பெண்விடுதலை குறித்துப் பேசும் போது அவன் புராணப் புனைவுகளுக்குள் நின்று பேசுகிறானா என்பது நுட்பமாகப் பார்க்கவேண்டிய இடமாகும். பெண்களுக்கு விடுதலை கொடுப்பதில் ஆரம்பப்படிகள் என்று அவன் எட்டு அம்சங்களை வலியுறுத்துகிறான்.
1. பெண்களை ருதுவாகு முன்பு விவாகம்
செய்து கொடுக்கக்கூடாது.
2. அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தல் கூடாது.
3. விவாகம் செய்துகொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடம் கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப் படுத்தக்கூடாது.
4. பிதுரார்ஜித்தில் பெண் குழந்தைகளுக்கு ஸமபாகம் செய்து கொள்வதைத் தடுக்கக்கூடாது.
5. விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம் , கைத் தொழில்
(ஓலை 30)

-GD
முதலியவற்றால் கெளரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரிகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடம் கொடுக்க வேண்டும்.
6. பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன் பேசக் கூடாதென்றும் பழகக் கூடாதென்றும் பயத் தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப் பட்ட நிபந்தனையை ஒழித்துவிட வேண்டும்.
7. பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக் கல வியின் எல் லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்.
8. தகுதியுடன் அவர் அரசாட்சியில் எவ்வித உத்தியோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக்கூடாது.
ஆக, சுய விருப்பம் சார்ந்த குடும்பவாழ்வு, சமுதாய வாழ்வு, அறிவு பெறும் உரிமை அரசியலி உரிமை ஆகியவற்றைப் பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்கிறான் பாரதி. ஆரம்பப்படிகளைப் பெண்ணுக்குக் காட்டினோ மென்றால் பின்னர் அவர்கள் தமது முயற்சியால் பரிபூரண விடுதலை நிலைமையை எட்டி மனுஷ்யஜாதியைக் காப்பாற்றுவார்கள் என்கிறான். 'பெண் உயராவிட்டால் ஆண் உயராது என்பது அவன் முடிவான கருத்து. இதனைக் கொண்டு பாரதியின் பெணி விடுதலை உள்ளர்த்தங்களைப் புரிந்து கொள்வது நமது பொறுப்பு! அவன் கொண்ட பொருளில் வேதகாலம் என்பது கட்டுப்பாடற்ற உண்மையான சுதந்திரம் நிலவிய காலம்! அது எய்துக மீண்டும்' என்பது அவனது வேணவா! மற்றபடி எந்தவொரு புராண இதிகாசக்கருத்தியலுக்குள் அவனது பெண் விடுதலை எண் ணங்கள் முடங்கிக் கொள்வதாகத் தெரியவில்லை.
{ பங்குனி 2006)

Page 14
G2)
பெண்ணைத் தெய்வமாகக் காண்பதன் அடிப்படை என்ன?
பெண்ணிடம் மூன்று தன்மைகளைக் காண்கிறான் பாரதி. ஒன்று, ஞானம்! பெண்ணுக்கு ஞானம் கடவுளால் இயல்பாகத் தரப்பட்ட ஒன்று என்று கொண்டான். அது இவ்வுலகில் ஆண்களால் சில மூடர்களால் கெடுக்கப்பட்டது என்கிறான். அடுத்த தன்மை, ஆற்றல்! அவள் உயிரினைக் காப்பவள்; உயிரினைச் சேர்ப்பவள்! ஆணுக்கும் வலிமை தரும் முலைப்பாலினை உடையவள்; மானம் சேர்ப்பவள்: கலி அழிப்பவள். ஆகவே ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை. பெண்ணுக்கு ஆண் தலை குனிய வேண்டும் மூன்றாவது தன்மை, அன்பு பெண்மையின் அன்பு இரண்டு நிலைகளை உடையது. ஒன்று காதல், மற்றொன்று தாய்மை. கன்னத்தே முத்தம் கொண்டு களிப்பினும், கைகளைத் தள்ளும் பொற்கை ஒன்று! அன்னமுட்டிய தெய்வ மணிக்கை ஒன்று ஆக, காதல் கொண்டு ஈனுவதும் கனிவு கொண்டு காப்பதும் அவளே!
தெய்வம் என்பது வாலறிவு, சுத்த அறிவு! தெய்வம் என்பது பல்லுலகும் பல உயிரும் படைத்தளித்துத் துடைத்திடும் ஆற்றல்! சிவமாய் நிற்கும் அன்பு ஆக, இம் மூன்றும் தாம் தெய்வம். இவை இருக்கும் பெண்மை அதுதான்!. ஆதலால் காதல் செய்யும் மனைவியைச் சக்தியெனக் கண்டு தோந்து, கடவுள் நிலையை அவளால் ஆண் அடைதல் வேண்டும்!.
"காதல் ஒருவனைக் கைபிடித்தே - அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து" என்று பாடுகின்றபோது ஆணைச் சார்ந்து, உதவி புரிபவளாகத்தான் பெண்ணைப் பார்க்க முடிகிறதே தவிர, இதில் பெண் விடுதலை எங்கிருக்கிறது?
(பங்குனி 2006)

ஒரு கவிதையை அதன் நேரடியான சொற் பொருளை மட்டும் கொணி டு பொருளுணர்வது எந்த வகையிலும் சரியானதல்ல. அதன் வெளிப்பாடு, தொனி, உத்தி எனப் பல்வேறு நிலைகளையும் சேர்த்துப் பார்த்துத் தான் பொருளுணர வேண்டும்.
பெண்கள் கூறுவதாக அமைந்த இப்பாடலில் ஆணொடு தனக்கான உறவுநிலையில், அன்பினால் பிணைக்கப்பட்டு அறம் சார்ந்த குடும்ப வாழ்வில் பங்கேற்பது என்ற கருத்தும் ஆர்வமும் தொனிக்கிறது ‘ஆடவனே செயலாற்றுபவன்; நாம் அவனுக்கு வெறும் துணைக்கருவி மட்டுமே” என்று இதற்குப் பொருள் கொண்டால், “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்’ என்பதற்கும் 'சாதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வச்சாதி படைக்கவும் செய்திடுவோம்’, ‘என்பதற்கும் எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை' என்பதற்கும் என்ன பொருள் கொள்வது?
அதுபோல் 'பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா என்ற பாடல் ஆண் கூற்றாக அமைகிறது. அதில் ‘அன்னமூட்டிய தெய்வமணிக்கைகள் ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்’ எனும் இடத்தில் தாயையும் "காற்றிலேறி அவ்விண்ணையுஞ் சாடுவோம் காதல் பெண் ணொருத்தி கடைக்கண் பணியிலே’ என்ற இடத்தில் காதலியையுைம் ஆணையிடுமிடத்தில் வைத்துப் பேசவில்லையா?
பாஞ்சாலி சபதத்தில் ‘பெட்டைப்புலம்பல் என்று பாரதி எழுதுவது பெண்ணைத் தாழ்மை செய்வதில்லையா..?
ஒன்றைக் கவனியுங்கள். நாம் எல்லோரும் ஆணாதிக்க மரபில் வாழும் சமுதாயத்தில் அதன் பணி பாட்டில் , மொழியில்
- ஒலை 30)

Page 15
வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்முடைய கருத்துகளும், சிந்தனைகளும், மொழியும், உணர்வும் கூட, நுாற்றுக் கு நுாறு நம்முடையதா? சமுதாய உறவில், குடும்ப உறவில், படிப்பில், நாம் சிந்தித்தும் சிந்திக் காமலும் நம் புவனவற்றில் , ஏற்றுக்கொண்டுள்ளனவற்றில் எத்தனை விழுக்காடு நம் சொந்த வெளிப்பாடுகளாக இருக்கின்றன என்பதை அளவிடவியலுமா?
‘பெட்டைப்புலம்பல்” என்ற தொடரில், ‘பெட்டை' என்னும் சொல் இழிவான பொருளில் பயன்படுத்தப்படுவது நம் ஆணாதிக்கச் சமுதாயத்தின் விளைவு. ஏறக்குறைய ஒரு மரபுத்தொடராகவே மாற்றம் கொண்டு வழக்காற்றில் இடம்பெற்றுவிட்ட சொல். அது நம் எல்லோருக்குள்ளும் கிடக்கிறது; பாரதியிடமும் கிடந்தது. அதை அவன் பெண் ணியல் பேசுகின்ற ஒருவன் பயன்படுத்தியிருக்க வேண்டாம். ஆனால் அதைப் பயன்படுத்திய தவறை அவன் செய்திருக்கிறான். இருந்த போதும் பாரதி அதனை உணர்வெழுச்சியின் விளைவாக, தன் சொற்களஞ்சியத்தினின்று எண்ணிப்பார்க்காமல் செய்த பயன்படுத்தலா? அல்லது கருத்து ரீதியில் அது சரியெனச் சிந்தித்துப் பயன்படுத்தியதா?
பாஞ்சாலியைத் துச்சாதனன் முடிபற்றித் தெருவில் இழுத்து வரும்போது, வீதி மருங்கில் நின்று வேடிக்கை பார்த்த மக்களை எண்ணி நொந்து வீரமிலா நாய்கள்’ என்று கொதித்துவிட்டு, அவர்களின் பயனில்லாப் புலம்பல் ‘பெட்டைப்புலம்பல்' என்கிறான் பாரதி. ஆனால் துரியோதனன் பாஞ்சாலியை மானபங்கம் செய்ய ஆணையிட்டபோது விகர்ணன் அவையினரை நோக்கிப் பாஞ்சாலியின் சார்பில் பதிலுரைக்க வேண்டுகிறான்.
@ఐణం 30)

G3)
பெண்ணரசு கேட்கின்றார் பெண்மை வாயால் பெண்ணரசு என்ற சொற்பயன்பாடு தமிழில் ஒருவேளை இருந்திருக்கக்கூடும். "பெண்மை வாய்' என்ற தொடர் வேறு யாரிடமாவது இருந்ததுண்டா?
ஒரு இலக்கியத்தையோ அல்லது மாபெரும் படைப்பாளிகளையோ மதிப்பிடும்போது அவர்களது காலம் முதலியவற்றைக் கணக்கில் கொண்டு முழுமையிலிருந்து செய்தல் நல்லது. மாறாக ஒரு தொடரோ, ஒரு சொல்லோ அவர்தம் ஆளுமையையும் உணர்வையும் நோக்கையும் முழுமையாகக் காட்டக்கூடுமா?
பெண்மை குறித்து பாரதியின் முத்தாய்ப்ான கருத்து இதுதான் என்று நினைக்கிறேன்;
உயிரைச் சேர்க்கும் உயிரினைக் காத்திடும் உயிரினுக் குணவா யின்ப மாகிவிடும் உயிரி னுமிந்தப் பெண்மை இனிதடா.
பெண்விடுதலையைச் சொந்தவாழ்க்கையில் செயல்படுத்தியிருக்கிறாரா?
சிந்திக்கின்ற எந்த மனிதனுக்கும் வாழ்க்கை என்பது போராட்டமாகவே அமையும். சமுதாயம் மற்றும் குடும்பத்தினருடன் மட்டுமன்றித் தன்னுடனேயே ஒரு போராட்டத்தை நிகழ்த்த வேண் டியவனாகவும் இருப்பானி . சரியானதென்று அவன் எண்ணியதை யெல் லாம் அவன் உடனடியாகச் செயல்படுத்தி விடவும் முடியாது.
பாரதி தன்னொடு தானே போராடுகிறான்.
ஆண் என்பதாலும் ஆணாதிக்கச் சிந்தனை கொணி ட தொரு கருத்தியலுக்குள் வளர்ந்ததாலும் தன்னுள் இருக்கின்ற பழைய சமூகக் கருத்தியல் தடைகளை உடைத்துக் கொண்டு வெளியே வரவேண்டியவனாகவே பாரதி இருக்கிறான். அதனைச் செய்தபோது அவன் தன்னுடனும் பிறருடனும் போராட வேண்டியிருந்தது.
ള്
H பங்குனி 2006)

Page 16
வேதநாயகம் ls
(பெண் விடுதல்
N
1826 - 1889
المـ ܢܬ
தமிழ்ப் புனைகதை இலக்கியத்தின் முன்னோடி வேதநாயகம்பிள்ளை அவர்கள். இவரது பிரதாப முதலியார் சரித்திரம் தமிழ்ப்புனைகதை வரலாற்றில் ஒரு திருப்பு 60) D LJ LD I s அமைந்தது. இதைவிட பத் தொன் பதாம் நுாற் றாணி டு தமிழ் மறுமலர்ச்சியில் வேதநாயகம்பிள்ளையின் சிந்தனையும் செயற்பாடும் கவனிப்புக்குரியதாக இருந்துள்ளது. தமிழ்ச் சூழல் ஐரோப்பிய சிந்தனை மரபுகளுடன் தாக்கம் செலுத்தும் காலத்தில், அந்த மரபுகளை உள்வாங்கி தமிழ்ச் சிந்தனையில் புதிய சாளரங்கள்
டுங்குனி 2006)
 
 
 

ப்ளை அவர்கள்
லை முன்னோடி)
தெ. மதுசூதனன்
உருவாவதற்கு வேதநாயகம் பிள்ளை பிரக்ஞைபூர்வமாகச் செயற் பட்டுள்ளார்.
திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள குத்துரில் 1826.10.11 இல் சவரிமுத்துப் பிள்ளைக்கும் ஆரோக்கியமேரி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் வேதநாயகம்பிள்ளை. இவர்களது குடும்பம் ஆரம்பத்தில் சைவசமயப் பின்புலத்தில் வளர்ந்த குடும்பம். பின்னர் கத்தோலிக்க கறித் தவ சமயத்தை தழுவியது. கிராமத்திலேயே தனது ஆரம்பப் பள்ளியில் படிப்பைப் படித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் நன்கு புலமை கொண்டவாராகவும் கற்றோர் மட்டத்தில் கவனிப்புக்குரிய இளைஞராகவும் வளர்ந்தார். தமிழில் பாடல்கள் புனையும் அளவுக்கு தமிழில் அதிகம் நாட்டம் உடையவராகவே இருந்தார்.
வேதநாயகம்பிள்ளை தம் இருப்பத்தியி ரண்டாம் வயதில் 1848ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி நீதி மன்றத்தில் ஆவணக் காப்பாளராக நியமனம் பெற்றார். தனது பணியில் மிகுந்த உற்சாகத்துடனும் பொறுப்புடனும் செயற்பட்டு வந்தார். 1850 ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்றத்திற்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டி இருந்தது. இப் பணிக்கு u 6) i விண் ணப் பித் திருந்தனர். அப் பணிக்கு வேதநாயகம் பிள்ளையும் விண்ணப்பம் அனுப்பியிருந்தார். வேதநாயகம்பிள்ளையே தகுதியானவர் எனக்கருதி மொழி பெயர்ப்பாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
(ஓலை 30)

Page 17
ஆங்கில அரசு உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்வதற்கு எழுத்துத் தேர்வு ஒன்றை 1856ல் நடத்தியது. இத்தேர்வில் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதுவரை ஆவணக் காப்பாளராவும் மொ ழ ப  ெப யா’ ப பாள ரா கவு ம திறமையாகப்பணியாற்றிய வேதநாயகம்பிள்ளை 1857ல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி பெற்றார். அதுவரை நீதிபதி பதவிக்கு இந்தியர் எவருவே நியமிக்கப்படவில்லை. இவரே தமிழகத்தில் முதல் இந்திய நீதிபதி என்னும் பெருமைக்கு உரியவராகவும் இருந்தார்.
வேதநாயகம்பிள்ளை தரங்கம்பாடியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார். பின்னர் 1858ம் ஆண்டு சீர் காழிக் கு மாற்றப் பட்டார் . இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மயிலாடுதுறைக்கு மாற்றப்பட்டார். தான் பதவியில் இருந்த ஒவ்வொரு இடத்திலும் அந்த மக்களுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார். சமுதாயப் பணியும், இலக்கியப் பணியும் அவரை மேன் மேலும் U600i Lil L. மனிதராக வளர்த்தெடுத்தது. ஆங்கிலேய அதிகாரிகளின் பல்வேறு இன் னல் களுக்கும் ஆட்பட்டு அவற்றுக்கெதிராகச் சளைக்காது போராடி வந்தார். நீதிபதி பதவியிலிருந்து 1872ம் ஆண்டு ஒய்வு பெற்றார்.
வேதநாயகம்பிள்ளை நீதிபதி பதவியில் இருந்து ஒய்வு பெற்று மயிலாடுதுறையில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் மிக மோசமான பஞ்சம் ஏற்பட்டது. 1876-78 ஆண்டுகளில் ஏற்பட்ட இந்த மாபெரும் பஞ்சத்தின் காரணமாக பட்டினிச் சாவுகள் நிகழ்ந்தன. மிக மோசமான நோய்களுக்கு மக்கள் ஆளாக்கப்பட்டனர்.

மக்களைத் துன்புறுத்திய பட்டினிக் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேதநாயகம் பிள்ளை செல்வந்தர்களிடம் உதவி நாடினார். அதைவிட தம் சொந்தச் செலவில் மயிலாடுதுறையில் கஞ்சித் தொட்டியைத் தொடங்கிப் பசித்த மக்களின் துயரைத் துடைக்க முயற்சி செய்தார்.
1859 லேயே நீதிநூல் என்ற இலக்கிய நூலை எழுதி வெளியிட்டிருந்தார். இருப்பினும் ஒய்வுக்குப் பின்னர் முழுநேர இலக்கியப் பணியில் ஈடுபடத்தொடங்கினார். அக் காலத்தில் தமிழில் உரை இலக் கியம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. வேதநாயகம்பிள்ளை உரைநடை இலக் கியத் திலும் தனது கவனத்தைக் குவித்துவந்தார்.
அக்காலகட்டத்தில் இருந்த பெண்களின் முன்னேற்றம் குறித்து அதிகம் அக்கறைப்பட்டார். "பெண் கல்வி', 'பெண் மானம்' என்ற இருசிறு நூல்களை எழுதி வெளியிட்டார். பெண்மதி மாலை கவிதை நூலையும் எழுதி வெளியிட்டார்.
1869ம் ஆண்டில் இந்தக் கவிதை நூலுடன் பெண் கல்வி பற்றிய உரைநடையையும் சேர்த்து ஒரு நூலாக வெளியிட்டார். 1870ம் ஆண்டில் பெண்மானம்' என்ற மற்றொரு நூலையும் எழுதி அனைத்தையும் ஒருசேர இணைத்து 'பெண்மதி மாலை' எனும் பெயரில் வெளியிட்டார்.
‘இந்தத் தேசத் தல பெண் களை அடிமைகளைப் போலவும் மிருகங்களைப் போலவும் நடத்துவது மிகவும் பரிதவிக்கத் தக்க விஷயமாயிருக்கிறது. ஜாதியும், செல்வமும் எவ்வளவு உயர் வோ, அவ்வளவும் ஸ்திரீகளுடைய நிர்ப்பாக்கியம் பெரிதாயிருக் கின்றது. உயர்த்த பிராமணர் முதலானவர்கள் ஸ்திரீகளை விலைக்கு வாங்குவது போல் வாங்கி நிஷடூரமாக நடத்துகிறார்கள்” (பெண்மதி மாலை)
-டுங்குனி 2006)

Page 18
G6)-
பெண்களை அடிமையாக நடத்துவது இந்திய மரபுகளுக்கு எதிரானது என்பதையும் அவர் எடுத்துக் காட்டி, பெண்ணடிமைத் தனதுக்கு எதிராக உரத் தகுரலில் வாதாடுகிறார். இந்துக்கடவுளர் தம் மனைவியரைத் தம் உடலின் ஒரு பகுதியில் வைத்திருப்பதையும் இராமாயணம், பாரதம், நைடதம் போன்ற காவியங்களில் பெண்களுக்கு உயர்ந்த இடம் கொடுக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
மேலும் அக்காலத்தில் பெண்கள் கல்வி கற்பதற்குக்கூட பரவலான எதிர்ப்பு நிலவியது. இதற்கு எதிராகவும் வன்மையாக குரல் கொடுத்து வந்தார். பெண்கள் ஏன் கல்வி கற்க வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துப் பேசிவந்தார்.
“பெண்கள் சமையல்காரிகள் அல்ல. எங்கள் உடலிலிந்து உதிக்காமல் எங்கள் முலைப்பால் உண்ணாமல், நீங்கள் வளர்ந்தீர்களா? அடிமை என்று நீங்கள் எங்கள் தலையில் மிதிப்பது நியாயமா? ஐரோப்பிய மாதர்களைக் கண்டு நாங்கள் பொறாமை கொள்ளும்படி செய்து விட்டீர்கள். இந்த நாட்டில் பிறந்து என்ன இலாபத்தைக் கண்டுவிட்டோம்? என்று பெண்கள் ஆண்களிடம் மன்றாடுகிறார்கள்.” (பெண்மதி மாலை) பெண்கல்வியால் சமுதாயத்துக்கு ஏற்படக்கூடிய நன்மைகளை எடுத்துப் பேசுகிறார். மேலும் கல்வியறிவில் லா பெண்களால் குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் ஏற்படக்கூடிய தீமைகளையும் விளக்குகிறார். கவ்வியறிவில்லாத பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியை போதிக்கமுடியாது. குழந்தைகளை நல்வழிப்படுத்த முடியாது என்றெல்லாம் எச்சரிக்கை செய்கிறார்.
மேலும் விதவைகளின் மறுவாழ்வு, குழந்தை மணம் பற்றியும் சிந்திக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்கள் மனநிலையில் இருந்து பேசுகிறார். தனது பிரதாப முதலியார் சரித்திரம்' எனும்
டுங்குனி 2006)

புதினத்தில் கூட விதவைகளின் மறுமணத்தை வலியுறுத்துகிறார். குழந்தை மணத்துக்கு எதிராக சுகுணசுந்தரி புதினத்திலும் குரல் கொடுக்கிறார்.
"பெண்களுடைய மனமும் ஆண்களுடைய மனமும் ஒரே தன்மையாயிருப்பதால், பெண்களுக்கு மட்டும் கல்வியை போதியாவிட்டால் அவர்களுடைய உள்ளம் எப்படி நல்வழியில் நிலை கொள்ளும்? “காசுக்கொருகுதிரையும் வேண்டும், காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும். என்பது போலவும், ‘புல்லுண்ணாத பசுவும் வேண்டும், பூரணமாக் கறக்கவும் வேண்டும்.’ என்பது போலவும், பெண்கள் படிக்காதவர்களாக இருக்கவும் வேண்டும் நல்லவர்களாக நடக்கவும் வேண்டும் என்றால் எப்படி நம்முடைய மனப்போக்கு நிறைவேறும், மாவுக்கும் ஆசை பணியாரத்துக்கும் ஆசையா?
இவ்வாறு ‘நல் லொழுக் கத்திற் கே கல்வியறிவு என்ற அடிப்படையில் கருத்தாடல் செய்யும் பாங்கு கவனத்துக்குரியது பெண்களின் கல்விக் கண் திறக்கப்படும் பொழுது ஏற்படக் கூடிய நல்லொழுக்கம் எத்தகையது என்பது பற்றிய அக்கால கட்டத்து சிந்தனையோட்டத்தின் வழிநின்று கருத்தாடல் செய்வதன் பின்னுள்ள நோக்கம், ஆர்வம் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல.
'கற்றவர்களும் கல்லாதவர்களும் உள்ளத்தின் இயல்பு' 'கடவுளை உணர் தற்குக் கல்வி 'உண்மையறிவுக்கு கல்வியறிவு', 'கல்வியே பெண்வடிவம் ‘காலத்திற்குத் தக்கபடி பழக்க வழக்கங்கள்’ ‘நூல்கள்’ ‘பெண் கல்வியை மறுக்கவில்லை’ ‘முற்காலத்தில் பெண்கள் படித்தார்கள் போன்ற எண்ணக்கருக்கள் சார்ந்து பெண்கள் படிக்க வேண்டும்.பெண்களுக்கு கல்வி அவசியம், அறிவு என்பது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்கள் படிப்பதை வரலாற்று ரிதியில் தெளிவுபடுத்தும் பாங்கு என்று பெண்நிலை சார்ந்த கருத்தோட்டத்துக்கு பொருள்கோடல் செய்கிறார். சமூக வரலாற்று இலக்கியத் தரவுகளில் இருந்து
—0@ఐణం 30)

Page 19
பெண்விடுதலைக்கான கருத்தைக் கட்டமைக்கும் திறன், ஆளுமை வேதநாயகம் பிள்ளையிடம் உறுதியாக வெளிப்பட்டது.
1850களுக்குப் பின்னர். தமிழில் பெண்கல்வி குறித்து அக்கறைப்பட்டதுடன், பெண்கள் சமூகம் முன்னேற்றம் காண வேண்டுமானால் கல்வி ஒரு கருவியாக இருக்க முடியும் என்பதை அறிவுபூர்வமாக உணர்ந்து செயற்பட்டவர். அந்த வழியிலேயே பெண்விடுதலைக்கான சிந்தனையும் நடைமுறையும் வெளிப்பட்டது. தமிழ்ச்சமூகம் நவீன சமுகமாக உருப்பெற வேண்டுமாயின் பெண்களின் முன்னேற்றம் பெண் களுக்கான கல்வி அத்தியாவசியமானது என்பதை பலருக்கும் எடுத்துரைத்து வந்தார்.
இந்தப் பின்னணியில் தான் பெண்களுக்கான தனிப்பள்ளியை 1869ல் மாயூரத்தில் தொடங்கினார். தன் சொந்தச் செலவில் அவர்களுக்கு கல்வி அளித்தார். பெண் கல்வி வேண்டுமென்ற அவரது முழக்கம் சிந்தனை நடைமுறைசார்ந்த செயற்பாடாகவும், கலாசார மாற்றத்துக்கான அடித்தளமாகவும் இருப்பதை இனங்காணலாம்.
பெண்கல்வி, விதவை மறுமணம், சாதி ஒழிப்பு, குழந்தை மணக் கொடுமை போன்றவற்றை இலக்கியமாக்கி எடுத்துச் சென்றவர் , இருபதாம் நுாற் றாணி டில் பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்த பாரதியார், திரு வி. க, பாரதிதாசன் போன்றோருக்கு முன்னோடியாக வேதநாயகம் பிள்ளை இருந்துள்ளார்.
ஆங்கிலக் கல்வி பெருமளவில் பரவாத அந்தக் காலத்தில் வேதநாயகம் பிள்ளை வழக்கறிஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் முறையில் ஆங்கிலத்தில் இருந்த நீதி, நிர்வாகம் தொடர்பான சட்டங்களைத் தமிழில் மொழி பெயர்த்து ‘சித்தாந்த சங்கிரகம்’ என்னும் பெயரில் 4862ல் வெளியிட்டார்.
@ఐణ 30)-

-G7)
நீதிமன்றங்களில் தமிழே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று விரும்பி 1860-61களில் அளிக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து 1863ல் வெளியிட்டார்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற முழக்கத்துக்கான நடைமுறைசார்ந்த செயல் வாதத் தில் நம் பிக் கை கொண் டு செயற்பட்டுள்ளார். இன்று பின்னோக்கிப் பார்க்கும் போது வேதநாயகம் பிள்ளை பல வேறு முயற்சிகளுக்கு ஓர் முன்னோடியாக இருந்து செயற்பட்டுள்ளார். இந்தச் செயற்பாடுகளின் விfயமின்மைதான் தமிழகச் சூழல் எதிர் கொள்ளும் இன்றைய நெருக்கடிகளுக்கான பிரதான காரணமாகும்.
வேதநாயகம் பிள்ளை தான் வாழ்ந்த காலத்தில் தமிழின் மறுமலர்ச்சிக்கு உரிய களங்களில் தீவிரமாக இருந்து செயற்பட்டுள்ளார். நமது முன்னோடிகளில் வேதநாயகம்பிள்ளை பன் முக ஆளுமையுடன் இயங்கரி, ஓர் தனித்துவமான மனிதராக வாழ்ந்து நமக்குப் புதிய வளங்களை கொண்டு வந்து சேர்த்துள்ளார்.
வேதநாயகம்பிள்ளை பெண்களின் சுய முன்னேற்றம் பெண்களின் தன்னிலைத்துவம் மீது அதிகம் அக் கறை கொண் டவராகவே இருந்துள்ளார். பெண்கள் அடிமைத்தன தப்பெண்ணங்களிலிருந்து விடுபட்டுச் சுதந்திர ஜீவிகளாகச் செயற்பட வேண்டும் என்பதை தனது எழுத்தில் சாத்தியமாக்கியவர். பெண் களின் சுதந்திரத்துக்கு எதிராக தொழிற்படும் போக்குகளுக்கு எதிராக போராடியவர். தமிழ்ச்சூழலில் பெண்களின் முன்னேற்றத்துக்கும் சீர்த்திருத்ததுக்கும் பாடுபட்டவர் சிந்தித்தவர் என்ற ரீதியில் பெண்ணிய முன்னோடி என்ற தகுதிப்பாட்டுக்கு மிகப்பொருத்தமானவராகவே வேதநாயகம் பிள்ளை இருந்துள்ளார். ള്
டுங்குனி 2003)

Page 20
Gs)
வார்க்கைச் ఆగ్రgagరా
ر
இலக் கியம், இலக்கியமா?
வாழ்க்கை வாழப்படும் விதத்தை நாம் உண ஏற்படும் அனுபவங்கள் சமூக சரித்திரம் பற்றிய பின் உள்ளன. மேலும் கதை எழுதும் போது ‘இந்த பதிவு செய்யப் போகிறோம்' என்று சொல்லிக் அமைவதில்லை. கவிதையும் அப்படி அமைவதில்ை சுயம் வாழ்க்கைச் சரித்திரம் அரசியல் எல்லாம் கதை, கதையாக அமைய வேண்டும். கவிதை, ச தான் இருக்க முடியும். குறிப்பிட்ட ஓர் உந்துதல் அ இயக்கமுடியும்.
பின்னணி முக்கியம்
என் கவிதைகளுக்கான விமரிசனத்தை ஒரு அவரது கருத்து எதைச் சார்ந்து இயங்குகிறது எ சாதி, மத, இன ஒடுக்கு முறை, மற்றும் ஆன அல்லது ஒட்டுமொத்தமாகவோ ஏற்றுக்கொண்ட தகுதியும் இல்லை என்பது என் உறுதியான நி அணுகவும் விமர்சிக்கவும் தகுதியானவர்களுக் பெண் எழுத்தையும் அப்படித்தான் அணுக வே6
OBIDITJPLDIrrb !
பொதுவான தமிழ் இலக்கியச் சூழல் மோசம நிறைய இருக்கிறது. பிரெஞ்சில் சார்த்தருக்கும் கூத்தருக்கும் ஆகாது. போர்வேக்கும் நெருடா நம்மவர்கள் இப்போதோ பின்னால் திட்டுகிறார்கள் கொள்கிறார்கள். விரோதம், கோபம், அரசியல், ந ஆகியனவையும் இங்கே நடக்கிறது.
எழுத்து என்பது
‘மற்ற எழுத்தாளர்களின் தாக்கத்துக்கு :ெ என்று எனக்குத் தோன்றவில்லை. எழுத்து என்ப மட்டும் நிகழ்வதோ இல்லை. கடந்த காலம். எழுதப்பட்ட இலக்கியம் ஆகியவற்றிலிருந்து ஒரு பெறுகிறார். எழுத்தாளன் சுவீகரித்துக் கொள்ளு வடிவமைக்கிறது. என்னைப் பொறுத்தளவில் என சொல்லியாகிய வியாச தேவரைத் தவிர வேறு எ ஏற்படுத்தியதில்லை”
21

சிநகினிலே.)
ர்வது, சொந்த வாழக்கையில் செய்யும் தேர்வுகள், பிரக்ஞை இவை எல்லாம் ஒரு படைப்பாளியின் க் கதையில் பெண்ணியம் சார்ந்த கருத்தியல்களைப் 3 கொண்டு எழுத முடியாது. கதைகள் அப்படி லை. கண்ணுக்குப் புலப்படாத எல்லைக்கோடுகளுடன் கலந்த ஓர் இடம் வெளிப்பாடு. இது நேரும் போது கவிதையாக உருவாக வேண்டும் என்ற முனைப்புத் அல்லது உந்துதல்கள் மட்டுமே ஒரு படைப்பாளியை
தொகுப்பு : மூர்
།
எழுத்தாளர் அம்பை, பனிக்குடம் (இதழ் 3 மார்ச்- ஏப்ரல் 2004)
வர் செய்யும் போது அவரது பின்னணி மற்றும் ான்பது மிக முக்கியம். ஏனெனில் இங்கு இருக்கும். ண் மைய சமூகத்தை இதில் ஏதோ ஒன்றையோ ஒருவரால் என் படைப்பை விமர்சிக்க எந்தத் லைப்பாடு. என் கவிதையை அதன் தரவுகளோடு கு எப்போதும் என் கவிதை இடமளிக்கும். பிற
ண்டும்.
- கவிஞர் மாலதி மைத்ரி, மாற்று 2 (அக் - டிசம்பர் 2004)
ானதாக இருக்கிறது. இலக்கியச் சூழலில் அரசியல் காம்யுக்கும் ஆகாது. ஒளவையார்க்கும் ஒட்டக் வுக்கும் ஆகாது. இது அனைவருக்கும் தெரியும். ர். ஆனால் நேரில் பார்க்கும் போது கட்டிப்பிடித்துக் யவஞ்சகம் இரண்டு குழுவிலும் சேர்ந்து ஏமாற்றுதல்
ஏழுத்தாளர் : சுரேஷ்
காஞ்சம் கூட ஆளாகாமல் ஒருவர் எழுதமுடியும் து ஒரு வெற்றிடத்தில் நிகழ்வதோ தன்னிச்சையாக , கலாசாரம், மரபு, வரலாறு, முன்னோர்களால்
எழுத்தாளர் தான் எழுதுவதற்கான உத்வேகத்தை ம் கலாசார மரபு அவருடைய படைப்பாளுமையை ள்னுடைய அறிவறிந்த நிலையில் மாபெரும் கதை ந்த எழுத்தாளரும் என்மீது நேரடியான தாக்கத்தை
எழுத்தாளர் பிரதிபாரே (ஒவியா) புதுவிசை (ஜனவரி - மார்ச் 2006)
@వాణం 30)

Page 21
மேற்கிலிருந்து நமக்கு வந்த சிறுகதை வடிவம்; வ. வே. சு. அய்யர் அவர்களால் தான் தமிழில் ஸ்தாபிதம் அடைந்தது. உருவப்பிரக்ஞையுடன் கூடிய கதைகளை அவர் தமிழுக்குத் தந்துள்ளார். கதை சொல்லும் முறையில் தேர்ச்சியும் நுட்பமும் அனுபவச் செழுமையும் உடையவர்களாக புதுமைப்பித்தன், மெளனி, லாச. ரா. சு. ரா, ஜெயகாந் தனி , ஜெயமோகன் ஆகியோரைக் கூறலாம்.
தமிழில் - சாபவிமோசனம், மகாமசானம், பாற்கடல் பிரபஞ்சகானம், பிரசாதம், மாடன் மோட்சம் போன்றவை உலகத்தரத்தைத் தொடுவன எனலாம். ஈழத்திலும் சில நல்ல கதைகளை எழுதியுள்ளார்கள். தொழுகை, தேர், வேலி, அரசனின் வருகை, கோளறு பதிகம், பக்குவம், யதேச்சை, வலி என்பன சிலநல்லகதைகள்.
இப்பின்னணியில், பவானியின் ‘கடவுளரும் மனிதரும்’ எனும் தொகுதியில் உள்ள கதைகளைப் பார்க்கும் போது, நாம் ஓரளவு ஏமாற்றமே அடைகின்றோம். சிறுகதை வடிவம் பற்றிய பிரக்ஞை பவானியிடம் இருக்கிறது. சொல்லும் திறனிலும் சோடை போனவர் அல்ல. இத்தொகுதியில் இருபது கதைகள் இருக்கின்றன. அவற்றில் பலகதைகள், புதிர் போடும் பாங்கில் அமைந்துள்ளன. நிறைவேறாத காதலின் துயரை, தோல்வியை இவரது கதைகள் பேசினும் அவற்றை இவரால் அழுத்தமாகத் தரமுடிவதில்லை.
இவரது காதல் கதைகள் ஓரளவு மெளனியை நினைவூட்டினாலும் அவரது
(ஓலை 30
 

க. சட்டநாதன் கதைகளில் - இவரது கதைகள் போலல்லாது பால் உணர்வு (e) உடற்தளத்திலிருந்து நகர்த் தப் படுவதோடு, அக் காதல் இசையுடனும் வேதாந்த விசாரத்துடனும் இணைக்கப்படுவதால் ஒரு அமானுஷ்யத் தன்மையைப் பெற்றுவிடுகிறது. அவரது கதைகளில் வரும் காதலர்கள் இணையமுடியாத துக்கம், லெளகிகத் தளத்துக்கு உரியதான போதிலும், அவர் இத்துக்கத்தை - விபரிக்கும் விதத்தில் - வாழி வில் சகல துக் கங்களுக்கும் ஆதாரமாய்ப் பொதுமைப்படுத்தி விடுகிறார். இதுவே மெளனியின் வெற்றி, இந்த வெற்றி, சிறிதளவு கூட பவானிக்குச் சாத்தியமாவதில்லை.
இவரது பெரும்பாலான கதைகள், வலுவான முகாந்திரம் ஏதுமில்லாமல் நகர்த்தப்படுகின்றன. நகர்த்தப்படுகின்றன என்பது கூடத்தவறு; சொல்லப் படுகின்றன. பல இடங்களில் யதார்த்தம் குலைந்து, மனோரதியப் பாங்கு தலைதூக்குகிறது. கதையின் முடிவுகள் வாசகரசனையைக் கருத்தில் கொணி டு, எதிர்பாராத திருப்பங்களுடன் புனைவு கொள்கின்றன.
இவரது பெண்கள், புதுமைவிரும்பிகள். போலத் தோற்றம் காட்டியபோது உண்மையில் அப்படி அல்ல. லட்சிய மயப் படுததப் பட் டவர்களாகவே தோன்றுகின்றார்கள். இவர்களில் சிலருக்கு, மாங்கல்யம் புனிதமானது. மாலை வடிவில் இருந்தால் கூட (வதனி - ஒருநினைவு) கணவன் மனிதனாக அல்ல தெய்வமாகி விடுகிறான். (மாயா - மனிதன்). புற நடையாகத் தோற்றம் தருபவள் 'சந்திப்பு கதையில் வரும் கோமதி, இவள்
- பங்குனி 2006)

Page 22
ᏣᎧ
தற்துணிபும், தனக்கேயான முடிவைத் தானே தேர்வு செய்யக்கூடிய திறனுமுடையவளாக இருக்கின்றாள். ‘விடிவை நோக்கி கதையில் வரும் அன்னமும் சற்றுவித்தியாசமான பெண் தான். இவருடைய கதைகளில், லூஸ"னின் ஷ"சுன் போலவோ, இப்சனின் நோரா போலவோ யாரும் வருவதில்லை. குறைந்த பட்சம் ஜெயகாந்தனின் கோகிலா போலவும் யாருமில்லை என்றே கூறலாம்.
இவருடைய கதைகள் பற்றிய மதிப்பீடுகள் - முன்னர் வந்தவை - மிகையானவையாகவே எனக்குப் படுகிறது. அறுபதுகளில், அதுவும் ஒரு இளம் பல்கலைக்கழக மாணவி - ஆண் பெண் உறவு பற்றிச் சிலாகித்தது, பலருக்கு வியப்பைத் தந்திருக்க் கூடும். அதன் பாற்பட்டதே இத்தகைய மிகை மதிப்பீடுகள் என நாம் கருதலாம்.
இவ்வாறு கூறுவதால், பவானியிடம் ஆற்றல் ஏதும் இல்லை என்று நான் மதிப்பிடுவதாகக் கருதக்கூடாது. குறிப்பாக கதைமாந்தர்களது உணர்ச்சி பாவங்களையும் மன உணர்வுகளையும் உட் கசியும் நெகிழ்ச்சிகளையும் எழுத்தில் வடிப்பது மிகச்சிரமம், பவானிக்கு இக்கலையாற்றல் இயல்பாக வாய்த்திருக்கிறது. அத்தகைய வெளிப்பாடுகளை அவரது படைப்புகளில் பரவலாகப் பார்க்கமுடியும்;
9 அவள் குரலில் தொனித்த உல்லாசமும்
நானச்சாயலும்.
O இரண்டு வருடங்களாகச் சிரிக்காததாலோ என்னவோ சாருவின் உள்ளத்தில் சதா சிரிப்பு குமிழிட்டுக் கொண்டிருந்தது.
9 அலட்சியம் பொங்கும் ஆண்மை வடிவம். உலகையே விலைக்கு வாங்கும் தோரளை.
பங் 2006 H

9 சதுப்பு நிலம் போன்ற அவன் மனம் பாலசிங்கத்தின் வார்த்தைகளை உறுஞ்சி விழுங்கிக் கொண்டது.
9 முத்துவின் இமையாத வெறிநோக்கு மீனாவின் அடிவயிற்றைக் கலக்கியது. அவன் முகத்தில் பீதி படர்ந்தது.
இவரது படைப்புக் களில் விசேட குறிப்பிடக் கூடிய கதைகள் என அழியாப்புகழ் (வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்ட கற்பனைப் புனைவு)கனவு, கானல் ஆகியவற்றைக் கூறலாம். இக்கதைகள் சொற் சிக்கனத்துடன் ஒருளவு மெளன இடைவெளிகளையும் கொண்டுள்ளன.
இக்கதைகளில் கனவு கதைபற்றிச் சிறிது பார்ப்போம். இக்கதை, தமிழ்தந்த சிறப்பான கதைகளில் ஒன்றல்ல; குறைகள் இருந்த போதும் மனதைத் தொடும் வகையில் அமைந்துள்ளது. மிகை உணர்ச்சி ஏதுமில்லாத தன்மை இக்கதையின் மேலதிக தகுதியாகும்.
முத்து தனியன் முப்பத்தியெட்டு வயது முதிர் இளைஞன். திருமணமாகாதவன். அதற்கான வாய்ப்போ, வசதியோ அற்றவன். ‘ஏண்டா முத்து இவ்வளவு நாளைக்கும் எத்தினை ஊர்க் கலியாணங்களுக்கு உழைச்சுக் கொட்டியிருப்பாய். நீ மட்டும் தனி மரமாய் நிண்டுவிட்டாய். நீயும் ஒரு கலியாணத்தை எப்ப கட்டப் போறாய்.? உண்டை கண்ணுக்கு முன்னாலை வளந்த பெடியன் கள் கூடத் தகப் பனா யப் விட்டுதுகள்...? இது மலையாளத்தான் கடையில் கூடத்தேநீர் அருந்தும் சகபாடி பாலசிங்கத்தின் நாக்கு வளைப்பு. ஒரு சமயம் நண்பர்களுடன் சிவன் கோவில் திருவிழாவுக்குப் புறப்பட்ட போது சுரேந்திரன்
-6ణ6ం 30

Page 23
கேலிக்குரல்; "உனக்கோர் திருவிழா. ஒரு பெட்டையைப் பார்த்துக் கண்ணடிக்கத் தெரியாத பெட்டைக் குருநாதி.”
இக்கூற்றுக்கள் முத்துவை பாதித்தன, உடைந்து போக வைத்தன. அவனுக்குத் திருமண ஆசைகள் இருந்தன. பால் உணர்வின் விகசிப்பு - அதனடியான Pபarion னும் உண்டு. இது ஒரு வகையில் உளவியல் பாங்கான தாக்கம் தான்.
செல்லப்பர் வளவில் குடியிருக்கும் ‘பென்டிக் கோஸ்ட் பெண்களை அவர்கள் குளிக்கும் போது மாமரத்தில் ஏறியிருந்து தினம் தினம் ரசிப்பான். வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் குச்சு ஒழுங்கையில், ஆறுமுகத்தின் மகள் மீனாவும் வறுத்தலை விளான் பொடியன் யோகேஸ்வரனும் காதல் செய்வதும் இவனுக்கு ரசிப்பைத் தருகிறது. காதலர்கள் பிரிந்து, மறுநாள் சந்திப்பதான ஏற்பாடு. இந்த ஏற்பாட்டால் இவண் உசாராகி விடுகிறான். ஆள் நடமாட்டம் ஏதுமற்ற அவ் ஒழுங்கைக்கு யோகேஸ்வரன் வர முன்னர், இவன் வந்து, மீனாவின் வழியை அடைத்தபடி - ‘இதெல்லாம் என்னாலும் முடியும். என்ற தோரணையுடன் கூறுவான்: "அவன் வராட்டில் என்ன நான் இருக்கின்றன். இப்படிக் கிட்ட வாவன் மீனா!. அவனிட்டைப் போகலாம் என்னட்டை வரக் கூடாதா. வாவன்!. பேசியதோடு அமையாது அவளது கைகளைப் பிடித்து இழுத்து அணைத்துக் கொள்ளவும் செய்கிறான். மீனா அலறுகிறாள். எட்டிப் பார்த்த பென்டிக்கோஸ்ட் பெண்களும் அலறுகிறார்கள். அந்த இடைவெளி மீனாவைக் காப்பாற்றி விடுகிறது. முத்துவும் தனது தவறை உணர்ந்து கண் கலங்குகிறான்.
செய்தி அறிந்த ஆறுமுகம் யுத்தசன்னத்தனாய் ஆகிவிடுகின்றான்.
@వా6ం 30)

ᏣlᎠ
ஆறுமுகம், அவனது தம்பி கந்தையா, சரவணை, சின்னையா, தம்பித்துரை, சிதம்பரம் என ஒரு படையே முத்துவைத் தேடிப்புறப்படுகிறது.
‘முத்துவை விட்டு வைச்சால் ஊரிலை ஒரு குமர் உலாவேலாது.’ என்பது ஆறுமுகத்தின் கோஷம். அவனுக்குத் துணையாக, அவனது சகபாடிகள் கொலை வெறியுடன் முன் நகர்கிறார்கள். கதையில் இறுதிப்பகுதி இப்படி அமைந்துளது.
“டேய் முத்து. வாடா வெளியிலை”. ஆறுமுகம் கத்தினான். பதில் இல்லை. மீண்டும் மீண்டும் கத்தினான். ஆறுமுகம் கொதிப்பேறிய ஆறுமுகம் வாசல் கதவை ஓங்கி உதைத்தான். கதவு படாரென்று திறந்து கொண்டது. உத்தரததிலிருந்து தொங்கிய கயிற்றின் நுனியிலே முத்துவின் உடல் ஊசலாடிக் கொண்டிருந்தது. ஊசலாடும் அந்த உடலைப் பார்த்தவாறு எல்லோரும் மரம் போல் நிற்கின்றார்கள்.
குற்ற உணர்வின் பாதிப்பால் முத்து உயிரை மாய்த்துக் கொள்ளுகிறான். தேர்ந்த கலைஞரும் இயக்குநருமான அரவிந்தனின் சிதம்பரம் திரைப்படத்தில் இப் படி 69 (5 காட் சி. மனதை உறையவைக்கும் காட்சி. படத்தில் சோரம் போன மனைவியின் நிமித்தம் கணவன் தூக்கில் தொங்குகிறான்; ஆனால் இங்கு மானபங்கப்பட்ட தவிப்புடன் முத்து. முத்துவின் மரணம் மனித இருத்தலின் அவலத்தையும் அபத்தத்தையும் காட்டி நிற்கிறது.
மணி ஒன்பதரை இருக்கும் மலையாளத் தானுடைய தேனீர் கடையில் வேலை
★
பங்குனி 2006)

Page 24
வெட்டியென்று தேடி அலுத்தவர்களும், வேலை வெட்டி இல்லாது பிழைக்கத் தெரிந்தவர்களுமாக, வழக்கமாய்க் கூடிப் பொழுது பொழுதாய் அமர்ந்து தேனிர் உறிஞ்சும் ஏழெட்டுப் பேரும் ஊர் வம்பு பரிமாறிக்கொண்டு இருந்தனர். நாற்பது நிமிஷத்துக்கு ஒரு முறை தொலைவில் பாடசாலை மணியடிக்கும் ஓசை சோம்பும் காற்றில் மிதந்து வந்தது. இடைக்கிடையே தெருப் புழுதியைக் கடைந்தெழுப்பி எறிந்துகொண்டு ‘கார்’கள் கீரிமலையை நோக்கி விரைந்தன. எங்கோ அருகில் மீன்காரக் கிழவி ஆதிக்கத்தின் நடுங்கின குரல் அபஸ்வரக் கேரலாய் எழுந்தது. முற்றின மொந்தன் தார் ஒன்றைச் சுமக்க மாட்டாமல் சுமந்தபடி முத்து தெருவில் தாண்டித் தாண்டி நடந்து கொண்டிருந்தான். நாயர் கடை வாசலில் உட்கார்ந்திருந்த பாலசிங்கம் முத்துவைக் கண்டதும் குரல் கொடுத்தான்.
‘முத்து, எங்கையடா அப்பா உவ்வளவு அவசரமாய்? காலம் பற தேத்தண்ணிக்குக் கூட வரேல்லை?” முத்து வாசலடிக்கும் வந்தாலும் வாழைத்தாரை இறக்கி வைக்க முயலவில்லை. அவன் முகம் அதன் இயல்பான சிரிப்பில் மலர்ந்தது. அந்த முகம் சிரிப்பதற்கென்றே ஆக்கப்பட்டது. போல் தோன்றியது. அவனுடைய மெல்லிய உதடுகள் மலர்ந்து விரியும் அந்த அகன்ற சிரிப்பில் குழந்தைச் சிரிப்பின் கவர்ச்சியும் கபடமற்ற தன்மையும் பொலிந்தன.
*நாளைக்குப் பிரக்கிராசி வீட்டிலை பொன்னுருக் கல்லே இண்டைக்கு விடியவே
(பங்குனி 2006)
 

- பவானி
வரச் சொல்லிட்டினம் அதுதான் தேத்தண்ணிக்கும் வரக் கிடைக்கேல்லை’ பாலசிங்கம் சிரித்தான்.
அது தானே ஆளின் டை அசுமாத் தத்தையே காணேல்லை எண்டு நினைச்சன். ஏண்டா முத்து இவ்வளவு நாளைக்கும் எத்தினை ஊர்க் கலியாணங்களுக்கு உழைச்சுக் கொட்டியிருப்பாய்? நீ மட்டும் தனிமரமாய் நிண்டுவிட்டாய். நீயும் ஒரு கலியாணத்தை எப்பகட்டப் போறாய்? உன்டை கண்ணுக்கு முன்னாலை வளந்த பெடியன்கள் கூடத் தகப்பனாய் விட்டுதுகள் என்று கண்களைச் சிமிட்டிக் கேலிக் குரலில் இழுத்தான் பாலசிங்கம். முத்துவின் இதயம் படபடக்கத் தொடங்கியது. அவன் உதடுகளில் விளையாடிய புன்முறுவல் துடைத்து விட்டாற்போல் மறைந்தது. அங்கு மிங்குமாகத் தவித்துத் தவித்து அலை பாய்ந்த அவன் கண்கள் தாழ்ந்து விட்ட இமைகளின் பின்னால் தஞ்சம் புகுந்தன. கலவரம் படிந்த முத்துவின் முகத்தைப் பார்க்கப் பார்க்க பாலசிங்கத்துக்கு வேடிக்கையாக இருந்தது.
“எனக்கு. எனக்கு என்னத்துக்கு தம்பி. கலி. கலியாணம்? என்டை ஒரு வயித்தைக் கழுவிறதே திணடாட்ட மாயிருக்கு. அம்மா இருக்குமட்டும் இருந்தா. அவ அவ செத்து இருவத்தி மூண்டு வருஷமாகுது. நானும் தனிய இருந்திட்டன். மிச்ச நாளைக்கும் இப்படியே, தடுமாறினான் முத்து. அவன் குரலில் ஆத்திரத்தின் மெல்லிய இழை யோடியது.
ஒலை 30

Page 25
மேலும் அங்கு நிற்க விரும்பாதவன் போல் முத்து ‘வாறன்தம்பி’ என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு எட்டி நடக்கலானான்.
‘முத்துவைப் போலை வெக்கறையை நான் எங்கையும் கண்டதில்லை பாலசிங்கம் பக்கத்தில் பூனைத்துக்கம் தூங்கிக் கொண்டிருந்த பரமுவிடம் அலுத்துக் கொண்டான்.
பாலசிங்கத்தின் சொற்கள் முத்துவின் மனதை கலங்கிய குட்டையாக்கிவிட்டன. சதுப்பு நிலம் போன்று அவன் மனம் பாலசிங்கத்தின் வார்த்தைகளை உறிஞ்சி விழுங்கிக் கொண்டது. அவன் மனதிலே நினைவுக் குமிழிகள் வெடித்தன. அவனிடம் பட்டம் விடக்கற்றுக்கொண்ட பெடியன்கள் இன்று ஆண்பிள்ளையாகிக் கலியாணம் செய்து குடும் பமாகி விட்டார்கள். இப்படியொரு வாழ்வை முத்து வெறுத்தான் என்றல் ல. ஆனால் . முத்து நெட்டுயிர்த்தான். முத்துவுக்கு வயது முப் பத் தெட் டு எண் றால் எவரும் நம்பமாட்டார்கள். அவனது ஒல்லியான வாலிப உருவம் இளமை மாறா முகவெட்டும் இருபது வயது இளைஞனுடையது. முத்துவின் அடக்கமான சுபாவத்தையும் நான இயல்பையும் கண்டு அவன் நண்பர்கள். அவனைப் ‘பெட்ட்ைக் குருநாதி’ என்று பட்சத்துடன் கிணி டல் செய்தனர். அப்போதெல்லாம் முத்துவும் அவர்களோடு சேர்ந்து லஜ்ஜையோடு சிரிப்பான் ஆனால் அவன். மனதிலோ எரிச்சல் குமுறும், பெண் ணினத்தையே குழிதோணி டிப் புதைக்கவேண்டும் போல் அவனுக்குத் தோன்றும். ஆனால் மேலுக்குச் சிரித்துக்
(ஓலை 20)

கொள்வான். எப்போதும் சிரித்துக்கொள்வான். முத்துவுக்கு ஐந்து வயதாய் இருக்கும்போது அவன் தந்தை யாரோ ஒருத்தியோடு ஓடிப் போய் விட்டாராம் . எவ்வளவோ காலத்துக்குப் பிறகுதான் இவ் விஷயம் அவனுக்குத் தெரிய வந்தது. ஆனால் அந்தச் சம்பவம் ஒரு விதத்தில் அவன் மனதில் பதிந்து விட்டது. சதா அழுத கோலமாய் இருந்த அவன் தாயின் முகம் மங்கிய குழந்தைப் பருவ நினைவாய் முத்துவின் மனத்திரையில் இன்றும் நிழலாடியது. அதுதான் அவன் தந்தை ஒடிப்போன சமயமாயிருக்கவேண்டும். முத்துவுக்குத் தன்தாயைப் பற்றிய முதல் நினைவே அந்த அழுத முகம் தான். கணவன் ஓடிப்போன பின் முத்துவின் தாய்க்கு இருந்த தெல்லாம் முத்துதான். அவனையும் இழந்துவிடுவோமோ என்ற பயம் அவளுக்கு. தன் அரவணைப்புக்கு வெளியே அகல விடாது அவனைக் கட்டிக் காத்து வளர்த்தாள். முத்து தாயின் உரிமைப் பிணைப்பிலே கட்டுண்டு கிடந்தான். இன்று கூட அந்தத் தாயை நினைக்கையில் அவன் கண்களில் நிர் நிறைந்தது. ஏன், அவள் செத்த அன்று கூட முத்துவின் தேவை தானே அவளுக்குப் பெரிதாய்ப்பட்டது. அப்பொழுது முத்துவுக்கு வயது பதினைந்து. அன்று சிநேகிதரோடு அரட்டை அடித்துவிட்டு விட்டடிற்கு வரும் போது இரவு மணி ஏழு. அவன் தாய் நெஞ்சு வலி என்று படுத்திருந்தாள். அந்த நெஞ்சு வலியோடும் அவள் எழுந்து வந்து முத்துவுக்குச் சோறு போட்டுத் திரணை திரணையாகக் குழைத்துக் கொடுத்துவிட்டுத் தான் மீண்டும் படுத்துக்கொண்டாள். அவன்
டுங்குனி 2006)

Page 26
G.D.
தாய் இறந்த பிறகு அந்த ஊரே முத்துவை சுவீகரித்துக்கொண்டது. ஒவ்வொருத்தர் வீட்டில் ஏதாவது சில்லறை வேலை செய்து சாப்பாட்டுக்குப் பிழை இல்லாமல் வாழ்ந்து வந்தான். போதாதற்கு வீட்டில் ஆடு, கோழி, என்று வளர் நீ தான் . இட் டவேலை எதுவாயினும் முகங்கோணாது அந்த இயல்பான வெள்ளைப் புன்னகையோடு செய்து முடித்து விடுவான். முத்து என்றால் எல்லோருக்கும் ஒரு பட்சம் எதிரே வரும் வாத்தியார் ராமலிங்கத்தைக் கண்டதும் முத்துவின் நடையின் வேகம் தானே குறைந்தது.
என்ன முத்தம்மா, வாழைத்தாரும் கையுமாக அன்னை நடைபோடுறாய்? துலைக்கே? முத்து அசட்டுச் சிரிப்புச் சிரித்தான். வாத்தியார் எப்போதும் அவனை முத்தம்மா என்றுதான் அழைப்பார். அது ஏதோ பெரிய ஹாஸ்யம் என்பது அவர் நினைப்பு. ஆனால் முத்துவின் காதுகளிலோ நாராசமாய்ப் பாய்ந்தது அச் சொல்! முத்து வாத்தியாரை வெறுத்தான் என்று சொன்னால் சாதாரணமாய்ப் போய்விடும். அவரிடம் முகங்கொடுத்து பேசவே அவனுக்கு மனமில்லை.
‘இல்லை. உப்பிடிப் *பிரக்கிராசி' யார் வீட்டை வரைக்கும்.” என்று இழுத்தான்.
* உன்னை வீட்டுப் பக்கமாகவும் காணேல்லை. விறகும் கொத்தாமக் கிடக்கு.
‘உங்கடை விறகைக் கொத்துறத்துக்கு வேறை ஆள் பார்த்துக்கொள்ளுங்கோ என்று மறுத்து விட முத்துவின் நா துடித்தது. தனது வெறுப்பையெல்லாம் வார்த்தைகளில்
டுங்குனி 2006)-

உமிழ்ந்துவிடத் துடித்தான். ஆனால், வாத்தியாருடைய கைத்தடியின் வெள்ளிப் பூணைப் பார்த்து முறுவலிக்க மட்டுமே அவனால் முடிந்தது.
‘அதுக்கென்ன, நாளைக்கு மத்தியானமாய் வந்து கொத்திப் போடுறன்’ என்றான் பணிவாக, வாத்தியார் தன்னுடைய அலுவல் முடிந்த திருப்தியில மேலே நடந்தார். தலைப் பாரத்தைச் சற்று நகர்த்திக் கொடுத்த முத்து மனக் கசப்பைச் சுவைத்தவாறு நடக்கலானான்.
மணி பன்னிரண்டரை இருக்கும்போது முத்து ‘பிரக்கிராசி' யாருடைய மனைவி பொன்னம்மாவை அணுகினான். பொன்னம்மா கவனித்து விசாரிக்கும்மட்டும் சுவரோடு சுவராய் நின்றான் முத்து.
ஆட் டுக் குக் கஞ் சித் தணிணி வைக்கவேணும் ஒருக்கா வீட்டை போட்டு வரட்டே? என்று முணுமுணுத்தான்.
* பந்தி போடுற நேரத்திலே போக நிக்கிறாய்! ஆடென்ன சாகப் போகுதே, கொஞ்சம் செல்லப் போவேன்’ என்றாள் பொன்னம்மா. முத்துவின் முகத்தில் கவலை தொட்டது.
‘இல்லையக்கா, அது குட்டித் தாச்சி ஆடு. பாவம் நான் இரண்டு எட்டிலை போட்டு வாறன் . இப்ப போனதும் வந்ததுமாய் வந்திடுவன்' அவன் குரலில் வற்புறுத்தல் தொனித்தது.
‘சரி, சரி போட்டு ஒடியா’ முத்து ஓட்டமும் நடையுமாகத் தன் இரண்டறை மண்வீட்டை அடைந்தான். தாய்மைப் பூரிப்போடு குலுங்கிக்கொண்டு நின்ற
@ఐణం 30)

Page 27
ஆட்டுக்குக் கஞ்சியைக் கொண்டு போய் வைத்தவன் நேரே விட்டு வேலியோடு வளர்ந்த மாமரத்தில் மளமளவென்று ஏறினான். மேல் மரத்துக்கு ஏறி மாவின் சடைத் த கிளைகளில் மறைந்து கொண்டான். முத்துவின் வேலிக்கும், பக்கத்தில் செல்லப்பருடைய வளவு வேலிக்கும் இடையில் ஒரு குச்சொழுங்கை ஓடியது. செல்லப்பருடைய வளவையும், வளவிலிருந்த சின்னக் கல் வீட்டையும் பென்தகொஸ்த் சபையினர் வாடகைக்கு எடுத்திருந்தனர். செல்லப்பர் வளவில் கிணறு ஒழுங்கைப் பக்கத்து வேலியோடு இருந்தது. கிணற்றைச் சுற்றிக் கிடுகுகளால் அடைப்புக் கட்டியிருந்தது. முத்துவுக்கு மாமரத்தில் இருந்து பார்க்க செல்லப்பரின் வளவு முழுவதும் தெரிந்தது. முத்து மாமரத்தில் ஏறிச் சிறிது நேரத்தில் பென்னடிகொஸ்ட் பெண் ணொருத்தி குளிப்பதற்கென்று குறுக்குக்கட்டோடு கிணற்றடிக்கு வந்தாள். முத்துவின் இதயம் படபடக்கத்தொடங்கியது. உடலெங்கும் புல்லரித்தது. அந்தப் பெண் வாளி வாளியாகத் தண்ணிரை அள்ளி அள்ளி ஊற்றிக் கொண்டாள். அவளுடைய ஈரச் சேலை அவள் உடலோடு ஒட்டிக் கொணர் டது. அவளுடைய வெறுமையான தோள்களும் கைகளும் நீரில் நனைந்து மினுமினுத்தன. முத்து விழுங்கும் கண்களால் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் முத்து மாங்காய் பறிப்பதற்கொன்று மரத்தில் ஏறியிருந்தபோது தான் முதன் முதல் தற்செயலாய் இப்படியொரு காட்சியைக் கண்டான். அன்று முதல் இது அவனுக்கு நித்திய நடவடிக்கை ஆகிவிட்டது. அந்தப்
(ஓலை 30)

-Gs) பெண்குளித்து முடித்தாள். அவள் உருவம் பார்வையிலிருந்து மறைந்ததும் முத்து மரத்திலிருந்து இறங்கிப் பிரக்கிராசி’ வீட்டைப் பார்க்க நடந்தான்.
வேலியோரமாக, ஒடித்து விழுத்திய முருக்கம் இலைகளை முத்து பொறுத்திக் கொண்டிருந்தான். பள்ளிக்கூடத்தின் கடைசி மணி தொலைவில் கேட்டது. சற்று நேரத்துக்கெல்லாம் ஒழுங்கையில் தாழ்ந்த பேச்சுக் குரல் கேட்டது. சத்தம் போடாமல் நகர்ந்த முத்து வேலிக் கிடுகின் நீக்கிலில் கண் வைத்துப் பார்த்தான். ஆறுமுகத்தின் மகள் மீனாவும் அந்த வறுத்தலை விளான் பெடியன் யோகேஸ்வரனும் சல்லாபித்துக் கொண்டு நின்றனர். அந்த ஒழுங்கை கிட்டதட்டச் சன நடமாட்டமே அற்றது. முத்து கிடுகு நீக்கில் வழியே வைத்த கண் வாங்காமல் பார்த்தான். சைக்கிளில் சாய்ந்தபடி நின்ற யோகேஸ்வரன் குனிந்து மீனாவின் காதுக்குள் என்னவோ ரகசியம் பேசினான். மீனா சிணுங்கலும் சிரிப்புமாய் அவன் முகத்தைத் தள்ளிவிட்டாள்.
‘என்ன பெரிய விலை வைக்கிறாய் மீனா யோகேஸ்வரன் அவள் கன்னத்தைக் கிள்ளினான்.
'உமக்கு வரவரக் கை நீளுது மீனா செல்லமாய் கோபித்தாள். முத்துவின் இதயத்தில் கூரிய வேதனை குடைந்து கிளறியது. நிராசையின் கைப்பு நெஞ்சில் கரித்தது. சீச்சீ நாமும் ஒரு பிறவியா என்று அவன் மனம் அலுத்துக் கொண்டது. பள்ளியாலை இன்னும் வெளிக்கிடாத பெடியன். அவனுக்கு கூடினது வயது பதினெட்டு இருக்கும். அதுக்கிடையிலை
டுங்குனி 2006)

Page 28
அவனுக்கு ஒரு பெட் டை. நானும் இருக்கிறனே ஆம்பிளைச் சிங்கம்! உப்பிடி ஒரு நாளாவது சீவியத்திலை. நான் தானே உதுக் கொல் லாம் வகையற்றவன் : உதவாதவன் என்று முத்துவின் மனதில் எண்ணங்கள் மின்வெட்டின. யோகேஸ்வரன் கைக் கடிகாரத்தைப் பார்த்தான்.
நேரமாகுது நாளைக் கும் இந்த நேரத்துக்கு வாறன். சரியே? மீனாவின் தோள்களை ஒரு கணம் வளைத் து அணைத்தவன் சைக்கிளில் ஏறி மறைந்தான். மீனாவும் அவனைத் தொடர்ந்தாள். திடீரெனத் தெளிவாகச் சுந்தரனின் கேலிக் குரல் முத்துவின் காதுகளில் சவ்வுபிரிவதுபோல் ஒலித்தது. ‘ஒரு பெட்டையைப் பார்த்துக் கண்ணடிக்கத் தெரியாத பெட்டைக் குருநாதியாய் இருக்கிறாய் முத்து இதை எப்பொழுது சொன்னான்? ஒ. அன்று சுந்தரனும் மற்றப் பெடியன்களும் திருவிழாவுக்குப் புறப்படும்போதே முத்து தானும் அவர்களோடு வருவதாகச் சொன்னான். அப்பொழுது தான் சுந்தரன் இப்படிக் கேலி செய்து ‘உனக்கேன் திருவிழா' என்று கேட்டான். முத்துவின் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. அந்தச் சம்பவம். முத்து நெடு நேரமாக வேலியடியில் குந்திய படி இருந்தான்.
அடுத்த நாள் முத்து வேளைக்கே வேலியடிக்கு வந்துவிட்டான். சிறிது நேரத்தில் மீனா வந்தாள். முத்து வேலிப் பொட்டு வழியே பார்த்தான். மீனா புத்தகக்ட்டை மார்போடு அனைத்தவாறு பென்ஸிலின் வால் கட்டையைச் சப்பியபடி நின்றாள். முத்துவுக்கு தன் நெஞ்சத்தின்
(பங்குனி 2006)

ஆற்றாமை தன் மீதே வெறுப்பாக உருவெடுத்தது. அந்த வெறுப் பின் வேக தி தை, உநீ தலை அவனால் தாங்கமுடியவில்லை. யோகேஸ்வரனை இன்னும் காணவில்லை. சருகுகள் சரசரக்காமல் மெல்ல வேலியை விட்டகன்ற முத்து தனி னுடைய படலையால் வெளிக்கிட்டுத் தெருவால் சுத்திக்கொண்டு குச்சொழுங்கைக்குள் புகுந்தான். அவனைக் கண்டதும் ஒரு கணம் திகைத்த மீனா சுதாரித்துக்கொண்டு அவனை நோக்கி விறுவிறென்று நடக்கத் தொடங்கினாள். அவள் அருகே வந்ததும் முத்து வழியை மறைத்துக் கொண்டு நின்றான்.
‘எப்பிடிச் சுகமே முத்து? நான் ராசமணி அக்காவைப் பாத்திட்டு வாறன் மீனா சிரித்தாள். முத்து அவளையே வெறித்துப் பார்த்தான்.
'மீனா. அவன் உதடு காய்ந்து நா மேலண்ணத் தோடு ஒட்டிக்கொண்டு மரத்துக் கிடந்தது உதட்டில் நாவை ஒட்டினான்.
'மீனா. முத்துவின் தொண்டை முறுகி வார்த்தைகள் பிரயாசையோடு நிறுத்தி நிறுத்தி வெளிவந்தன. "யோகேஸ்வரன் இன்னும் வரக் காணேல்லை மீனா. பரவாயில்லை. முத்துவின் இமையாத வெறி நோக்கு மீனாவின் அடிவயிற்றைக் கலக்கியது. அவள் முகத்தில் பீதி படர்ந்தது. அவன் வராட்டில் என்ன? நான் இருக்கிறன் இப்படிக் கிட்ட வாவன் மீனா. அவனிட்டைப் போலாம். என்னட்டை வரக் கூடாதே?. வாவன் முத்து எட்டி அவள் கையைப் பிடித்திழுத்தான்.
(ഉജ്ഞ 30)

Page 29
‘ஐயோ! ஐயோ!' மீனா கிறீச் சென்று கத்தினாள். அவன் பிடியில் திமிறித் திமிறிக் கத்தினாள். கிட்டவா, கிட்டவா, என்று முணுமுணுத் தபடி முத்து அவளை அணைத்துப் பிடிக்க முயன்றான். மீனாவின் கூப் பாட் டைக் கேட் டு ஓடி வநீத பென்டிகோஸ்ட் பெண்கள் வேலியால் கத்த முத்து திடுக்கிட்டுத் திரும்பினான். அந்த ஒரு கணத்தைப் பயன்படுத்திக் கொண்டு மீனா அவன் பிடியிலிருந்து நழுவி ஓட்டம் பிடித்தாள். முத்து சிலைபோல் நின்றான். அவன் முகத்தில் பட்ட நகக் காயங்களிலிருந்து ரத்தம் கசிந்தது. குழப்பம் தோய்ந்த முகத்தோடு கண் கலங்க நின்றான். பிறகு மெல்லத் தன் இரு கைகளையும் தூக்கிப் பிடித்துப் பார்த்தான். நாயாரின் கடையில் சுருட்டுப் பற்றவைத்துக் கொண்டு நின்ற பாலசிங்கம் தூரத்தில் ஐந்நூறு பேர் கூட்டமாய் வருவதை உன்னிப்பாய்க் கவனித்தான். ஆறுமுகம். அவனுடைய தம்பி கந்தையா, வேறு சரவணை, சின்னையா, தம்பித்துரை, சிதம்பரம் என்று கணக்கெடுத்த பாலசிங்கம் பொல் லுத்தடியளோடை எங் கை படையெடுக் கிறாங்களோ என்று முணுமுணுத்தான். கடையை விட்டுத் தெருவில் இறங்கிய பாலசிங்கம் குரல் கொடுத்தான்.
‘என்ன ஆறுமுக அண்ணை, எந்தச் சண்டைக்கு இவ்வளவு ஆரவாரமா. ஆறுமுகம் தொணி டை கிழியக் கத்தினானான்.
‘எல்லாம் உன்டை முத்தான் முத்து இருக்கிறானே, நாசமாப் போவான் அவனை ஒரு கைபாக்கத்தான். அவனை எலும்பு எலும்பா முறிச்சுப் போடாட்டில் என்டை பேர் ஆறுமுகம் இல்லை.

"ஏன் இப்ப முத்துப் பெடியன் என்ன செய்திட்டான்?”
‘என்ன செய்திட்டானோ? ஒழுங்கைக்குள்ள எண் டை மேளிலை கை வைக் கப் பார்த்தவனல்லே! நல்ல வேளை அந்தப் பெண் டிகோஸ் ட் மனிசியளிர் வந்து குளறினதாலை அவள் இண்டைக்குத் தப்பினாள். அவனை விட்டு வைச்சால் ஊரிலை ஒரு குமர் உலவேலாது. நான் அவனுக்கு வேலை பார்க்கிறன். ஆறுமுகம் காறித் துப் பிவிட்டுத் தன்னுடைய ஆட்களோடு நடந்தான். சுருட் டைக் கொடுப்புக்குள் சொருகியபடி 'உவன்டை மேள் பெரிய பத்தினிப் பெண்தான்’ என்று முணுமுணுத்த பாலிசிங்கம் சற்றுத் தூரத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தான். முத்துவின் படலையைத் தள்ளும் போது குட்டித்தாச்சி ஆட்டின் பரிதாப ஒலம் தான் அவர்களை வரவேற்றது. பாவம் பிரசவ வேதனை போலும்.
டேய் முத்து, வாடா வெளியிலை? ஆறுமுகம் கத்தினான். பதிலில்லை. மீண்டும் மீணி டும் கத்தினான் ஆறுமுகம் . கொதிப்பேறிய ஆறுமுகம் வாசல் கதவை ஓங்கி உதைத்தான். கதவு படாரென்று திறந்துகொண்டது. உத்தரத்திலிருந்து தொங்கிய கயிற்றின் நுனியிலே முத்துவின் உடல் ஊசலாடிக் கொணி டிருந்தது. ஊசலாடும் அந்த உடலைப் பார்த்தவாறு எல்லோரும் மரம் போல் நின்றார்கள். குட்டித்தாச்சி ஆட்டின் வதையுண்ட வேதனை யோலம் கிறீச்சிட்டு எழுந்தது. ஒரு கணம் எங்கும் நிறைந்து தங்கிய அந்த ஒலம் மெல்ல மெல்ல தேய்ந்து அடங்கி ஓய்ந்தது.
ള്
(பங்குனி 2006)

Page 30
நூல் மதிப்பீடு
கல்வெட்டின் மூ6
நூல் : 23UUIT வெளியீடு : கலையழகன்
வெளியீடு பூந்தோட்டம்,
நெல்லியடி கிழக்கு, கரவெட்டி,
அச்சு ; அழகன் பதிப்பகம்,
கிளிநொச்சி. தொகுப்பு : மு. வளநாடன் ஆண்டு : ஐப்பசி 2005
டுங்குனி 2006)
 

്ff, കഞ്ഞഗ്രഞ്ഞ . .
பிறப்பும் இறப்பும் மாறிமாறி வரும். இது உலக நியதி, அதிலும் மனிதனின் இறப்பு வித்தியாசமானது. அதாவது பிறப்பிலிருந்து வாழ்ந்து கடைசியில் இறக்கின்ற போதும் சடங்குகள் தலைதூக்குகின்றன. இறப்பது ஆணோ, பெண்ணோ, சிறுபிள்ளைகளோ அது தொடர்கதையேதான். இறந்தவரின் உடல் சுடலைவரை சென்றுவிட்ட பின்பும் காடாத்து, எட்டு, அந்தியேட்டி. என பலவாறான சடங்குகள் தொடர்ந்து “கல்வெட்டு’ சம்பிரதாயம் தலைதூக்கத் தவறுவதேயில்லை.
கல்வெட்டுக்கு திட்டமான வரையறைகள் இல்லைத்தான். எனினும் ஒருவர் இறந்து விட்டால் கல்வெட்டு இல்லாது அந்தியேட்டி நடத்துவது கெளரவப் பிரச்சினையாகி விடுகின்றது. இக்கல்வெட்டில் இறந்தவரைப் பற்றிய சிறு வாழ்க்கைக் குறிப்பு மட்டுமே எழுதப்பட்டிருக்கும் . திதிவெண்பா, தோத்திரப் பாடல்கள், குடும் பத்தின் மூத்தவராகக் காணப்படுவரிலிருந்து ஊரிலுள்ளவர்கள் வரை புலம்புவார்கள். உயிரோடு இருக்கும்போது துாற்றும் வாய்கள் கூட ஒப்புக்குப் புலம்பும் அழகே தனி. அதனையும் அவரவராக நினைத்துக் கல்வெட்டு எழுதியவரே புலம்பிவிடுவார். அத்தோடு ஏதாவது சில பாமாலைகள், முன் அட் டையில் அவரவர் விரும் பிய தெய்வத்தின் படம். பின் அட்டையில் கீதாசாரம் உள்ளுக்குள் இறந்தவரின் படத்துடன் தொடங்கி கடைசியில் நன்றி நவின்றுவிட்டு வம்சாவழியோடு தேற்றமும் இருக்கும்.

Page 31
இக்கல்வெட்டு அந்தியேட்டி அன்று வாசிக் கப்பட்டதும் அனைவருக்கும் கொடுக்கப்படும். வருபவர்கள் ஆவலோடு வாங் குவார்கள் . புரட் டுவார்கள் . மேலோட்டமாகப் பார்த்துவிட்டு வீடுவரை கொண்டு செல்வார்கள்(?) ஆனால் அது வீட்டில் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றது என்றால் கேள்வியே தொக்கி நிற்கும்.
என்றாலும் மாற்றங்கள் நிகழ்ந்துவரும் காலங்களில் சில அரிதான சந்தர்ப்பங்களால் கல்வெட்டின் மரபுகளை உடைத் து வெளிவர முடிகிறதற்கு ஒரு நல ல உதாரணமாக நாம் ‘ஐயா’ என்ற நினைவு மலரைக் கொள்ளலாம்.
புதுத்தோட்டம், நெல்லியடி கிழக்கு, கரவெட்டியைச் சேர்ந்த அமரர் பொன்னன் முருகேசு என்பவர் போராளிக் கவிஞர். கலைஞர் மு. வளநாடன் அவர்களின் தந்தை. அவரின் இறப்பின் பின்னான அந்தியேட்டிக்கு வளநாடன் அவர்கள் ‘ஐயா” என்ற தலைப்பிட்டு இருபதுபேரிடம் அவர்கள் மனதில் இருக்கின்ற அவர்களின் ஐயா பற்றிய படிமங்களை கவிதையாகத் தாருங்கள் என்று கேட்டதன் பயனாக இருபது பேரின் மனஉணர்வுகள் கல்வெட்டின் மரபுகளை மீண்டுமொருமுறை மாற்றியுள்ளது என்று சொல்லமுடிகிறது.
புதுவை இரத் தினதுரை, என் . சண்முகலிங்கன், சோ. பத்மநாதன், வேலணையுர் சுரேஷ், த. ஜெயசீலன், தி. திருக்குமரன், முருகு பாரிமகன், நடராசா இராமநாதன், அரசண்ணா, கா. சுஜோ, பு. சத்தியமூர்த்தி, வி. பி. ஜோசப், பிறேமா மதுரநாயகம், பொன். காந்தன், திருநகரூர் ஜெகா, வை. நாகநாதன், அல்வாயூர் கே. ஆர். திருத்தவராசா, கி. கலைச்செல்வன், கி. அகத்தியமன், மு. வளநாடன் உள்ளிட்டோர் தங்கள் தங்கள் தந்தை
@వా6ం 30)

(இ) பற்றிய உள் உணர்வின் சிதறல்களைக் கொட்டியுள்ளார்கள்.
எதுவித முன்னுரையோ, அடைமொழியோ இல்லாது கல்வெட்டுமரபு மீறப்பட்டமை தொடர்பாக எழக்கூடிய கேள்விகள் அனைத்துக்கும் பதிலாக மு. வளநாடன் ‘தூது’ என்னும் தலைப்பிட்டு எழுதியுள்ளது வித்தியாசமான வெளிப்பாடு.
“கல்வெட்டு அடிக்கச்சொல்லி எல்லோரும் சொன்னார்கள். அதில் அவ்வளவாக எனக்கு உடன்பாடில்லை. நீயொரு புதுமை விரும்பி அதனால் கவிதைத் தொகுதி செய்ய விழைந்து விட்டேன்.” எனவும்.
“நான் தூதாக எழுதியதைப் புலம்பலாகவும் எடுக்கலாம். முன்னுரையாகவும் எடுக்கலாம். அவரவர் பார்வையைப் பொறுத்தது.” என்று சொல்லும் இவர் ‘கல்வெட்டு அடித்துக் கொடுத்தால் மறுநாள் எண்பது வீதமானவர்கள் வீட்டில், பத்திக்குள் கிடக்கும். இத்தொகுதி நிச்சயம் அவரவர் வீட்டுப் புத் தக றாக்கைக்குள் பாதுகாப்பாய் இருக்கும். பாதுகாக்கப்பட வேண்டுமென்பதே எனது நோக்கம்”. எனத் தூது அனுப்புகிறார் தன் ஐயாவுக்கு!.
‘தோளிலிட்டுத் தாக்கி வளர்த்து தேசத்தில் எம்மையும் ஆளாக்கிவிட்ட எண் தந்தை ஆவி பிரியும் அக்கணத்தில் அருகிருக்காத்தயர் எனக்குள்
கொள்ளி வைக்கக் கூடக்
கொடுத்து வைக்காப் பாவியானேன்.” என்று கூறும் வேலணையூர் சுரேசின்
மனப்பதிவும்.
“அன்பையூட்டினாய் அறிவை வளர்த்தாய்
ஆசையில்லா மனம்படைத்தாய்!
பங் 2006

Page 32
GO
இன்பமாய் என்றும் திளைத்த ஈர்த்திடும் மனிதனாய் திகழ்ந்தாயய்யா!...”
‘* கடன் தீர்க்கத் தலைமுறை ஒன்று போதாது” என்று சொல்லும் அரசண்ணாவின் கவிதையும்.
‘தேசம்
தேசியம்.
தேசிய உணர்வுக்கு.
உங்களை விஞ்சிய பாடம் எது உங்கள் மகனாக
என்ன தவம் செய்தேனோ.”
எனத் தன் மன உணர்வுகளை என். சண்முகலிங்கன் அவர்களும்.
‘அவர்
என்னோடேயே இருக்கிறார்
எனக்கான எல்லைகளாக
அவர் ஒழுகும் ஒழுக்கம்
வேலியிட்டுக் கொண்டேயிருக்கிறது’.
என நீளும் பு. சத்தியமூர்த்தியின் பகிர்வும்.
'நால் நிலையம் போக வழிகாட்டி
பின் அதுவே கதியென்று
நான் கிடக்க
செல்லமாய் காத திருகி
வீடு கொண்டு வருவீரே
அந்தப் பழிகிடப்பின் அறுவடைகள்
இப்போதான் வீடு வருகின்றன
காணத்தான் நீங்கவில்லை.” வி.பி. ஜோசப் அவர்களின் ஐயா பற்றிய பகிர்வும் ஐயாவுள் இருக்கின்றன.
“மகன் தந்தைக் காற்றும் உதவி . அவன்
தந்தை என்னோற்றாண் கொல் எனும் சொல்”
என்னும் குறளுக்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது.
இம்மாற்றமானது மு. வளநாடனில் தான்
(பங்குனி 2006)

தோன்றியது என்பதல்ல. பேராசிரியர் என். சண்முகலிங்கன் அவர்கள் கூட ‘அம்மாவின் கதை. அப்பாவின் கதை’ என கல்வெட்டின் மரபை மாற்றியுள்ளார். அவர் போன்று இன்னும்பலபேர்.
முதலில் புலம் பல களாக இருந்த கல்வெட்டுக்கள் இறந்தவர் எந்தநோயால் இறந்தாரோ அந்த நோய்பற்றியும் அதனைத் தடுப்பது பற்றியதுமான குறிப்புகளோடு பொதறிவுக் குறிப்புக்களும் சேர்த்து வந்தது ஒரு மாற்றம் தான். எனினும் அக்கல்வெட்டு நூல்கள் எந்தளவுக்குப் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டன என்பது கேள்விக்குறியே. பத்திக்குள் செருகப்படுகின்ற ஆபத்தைக் கடந்து புத்தக றாக்கைக்குள் வைக்கப்படும் தகுதிநிலை யைப் பெற்று அடுத்த தலைமுறைகயினருக்கு பெறுமதியான சொத்தாகக் கையளிக்கப்படும் நிலைக்கு கல்வெட்டுகளும் உயரமுடியும் என்ற நம்பிக்கையை ‘ஐயா” தருகிறது.
‘‘கெஞ்சு மீண்டும் கெஞ்சு மிஞ்சினால் நீ முந்து” என்று கூறிவந்த பொ. முருகேசு அவர்களின் இரு புகைப்படங்களுடனும், மனதை ஈர்த்தெடுக்கும் வர்ணங்களுடனும் கையடக்கமான நல்லதொரு வடிவமைப்பைக் கொணி டு 8ց եւ IT வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஒவ்வொருவருடைய புத்தக றாக்கைக் குள்ளும் ‘ஐயா” இருக்கவேண்டும் என்ற நல்லதொரு கருத்து மு. வளநாடன் மனதில் உதித்தது போன்று பள்ளிகளின் நூலகங்கள் மற்றும் பொது நூலகங்களிலும் வைக்கப்பட வேண்டியதும் கொடுக்கப்பட வேண்டியதும் மிக அவசியமானது.

Page 33
தமிழர் வரலாற
தெரிந்ததும் தெரியாததும்
பேராசிரியர் சி. மெளனகுரு
கிழக்தப் பல்கலைக்கழகம், இலங்கை
நூல் : தமிழர் வரலாறும் பண்பாடும்
(தெரிந்ததும் தெரியாததும்)
ஆசிரியர் : பேராசிரியர் சி. மெளனகுரு
அச்சு : குமரன் அச்சகம்
டாம் வீதி. கொழும்பு
ஆண்டு : ஆவணி 2005
 

GD ம் பண்பாடும்
- வ. மகேஸ்வரன
தமிழர் வரலாறும் பண்பாடும் குறித்த கருத்து நிலைகள் மிகவும் முக்கிய மானவையாக முன் வைக்கப்படுகின்ற அல்லது அலசப்படுகின்ற காலமிது. அண்மைக்காலம் வரை வரலாறு, பண்பாடு முதலான விடயங்கள் பற்றி நாம் அறிந்தவை. அல்லது எமக் குக் கையளிக்கப்பட்டவற்றின் நம்பகத்தன்மை மீதான சந்தேகங்கள் ஆய்வாளரிடையே எழுந்தமை காரணமாகவே இன்று மீள் பரிசீலனை செயப்ய வேணி டிய நிலையேற் பட்டது என்பதை மறுப் பதறி கிலி  ைல. எமக் குக் கையளிக்கப்பட்ட வரலாறுகள் யாவும் ஒருவகையில் எம்மீது திணிக்கப்பட்டவையே. இது மட்டுமன்றி அவை அதிகாரம் சார்ந்த நிறுவனங்களினி குரலாகவுமே காணப்பட்டன. தமிழகத்தில் காலத்துக்காலம் செல்வாக்குச் செலுத்திய மதங்கள், நிலை பெற்ற அரசுகள், அரசுகளின் ஆட்சி அதிகாரத்துக் குத் துணை போன அதிகாரிகள் ஆகியோரதும் வரலாறுகளே முழுச் சமூகத்துக்குமான வரலாறுமாகியது. பெரும் பான்மையோராக அவர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்த பொதுமக்கள் எங்கே, அவர்களின் வரலாறுகள் எங்கே? அவர்களின் பணி பாடுகள் எண் ன? என்பவற்றைக் கருத்திற் கொள்ளாது, அதிகாரத் திணி குரலே முழுச்
டுங்குனி 2006)

Page 34
32 .வரலாற்று நியமமாகியது - سیمات அதையே முன்னாள் ஆய்வாளர்கள் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் காலம் போக்கினர். இவ்வாறான எழுதுமுறைகள் மீதான எதிர்விளைவுகளாக அண்மைய ஆய்வுகள் பல வெளிக் கிளம்பின. அவற்றினை அனுசரித்து எழுதும் முறைமையுடையதாகவே இச் சிறு கைநூலைக் கணிப்பிடமுடிகின்றது.
அமரர் இரா. சிவலிங்கம் அவர்களது நினைவுப் பேருரையே இவ்வாறு நூல்வடிவம் பெற்றுள்ளது. சிறு நூலாகவிரும்பினும் ஆறு உபதலைப்புகளில் மிகவும் கனதியான வினாக்களை எழுப்பி அவற்றுக்கான விடை தேடும் முறையில் இது எழுதப்பட்டுள்ளது. ஜேர்மனிய நாட்டு நாடாகாசிரியர் பெட்டோல் பிரசட் என்பாரின் கவிதை வரிகளுடன் ஆரம்பமாகும் அறிமுகமே.!! - இது என்ன வரலாறு, இது என்ன பண்பாடு என்று வாசகரைச் சிந்திக்கத் தூண்டுகின்றது.
இதன் தொடராக பண்பாடு, வரலாறு, தொடர்பான கோட்பாடுகளை முன்வைத்து மையம், இடைநிலை, விளிம்பு மக்களை இனங்காட்டுகின்றார். அடுத்த பகுதிகள் இரண்டில் தமிழர் பண்பாட்டு வரலாற்றில் தெரிந்த பக்கங்களையும், தெரியாத பக்கங்களையும் சுட்டுகின்றார். பொதுவாகத் தமிழ் இலக்கிய வரலாற்று எழுத்தாளர்களது கருத்து நிலைகளே இங்கு
டுங்குனி 2006)

கவனத்திலெடுக்கப் பட்டுள்ளது என்பதையும் மனங்கொள்ள வேண்டும். அவற்றுள்ளும் தெரியாதவை என்ற பகுதியில் சோழர் வரலாறு குறித்தவையே முதன்மைப் படுத்தப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. (இடைக் கால வரலாறு மட்டுமல்ல நம் வரலாறு என்பன அடிப்படையில் உணர்தல் அவசியமாவது. கல்வெட்டுச்சான்றுகள் பல்லவ, பாண்டியர் காலங்களிலும் விஜய நகர நாயக்கர் காலங்களிலும் கிடைத்துள்ளன. அத்துடன், மராட் டியரது மோடி ஆவணங்கள், ஐரோப்பியர் காலத்து ஒலை ஆவணங்கள், அரிய கையெழுத்துச் சுவடிகள் ஆகியவற்றை ஆயப் வுக் குட்படுத் தி வரலாற்றில் நிகழ்ந்த வக்கிரங்கள் பற்றி ஆரம்ப நிலையில் பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன.) " இவற்றின் தொடர்ச்சியாக மையத்துள் ஏற்பட்ட முரண்பாடு, மையத்துக்கு வெளியேயான தமிழர் பணி பாடு ஆகியவற்றையும்
பதச்சோறாக இனங்காட்டுகின்றார்.
இறுதியாக, மாற்று வரலாறு, அடித் தளத்திலிருந்து வரலாறு, அடித்தளமக்கள் வரலாறு, பெண்ணியவரலாறு, புதிய வரலாறு ஆகியவற்றுக்கான அறிமுகக் குறிப் புளும் இடம் பெற்றுள்ளன. இவையனைத்தையும் நிரல் படுத்திய இந்நூலின் பிரதான நோக்கமாக அமைவது
தமிழர் வரலாறும் பண்பாடும், மையம்.
{@వాణం 30

Page 35
மேட்டிமை ஆகிய தளங்களைக் கடந்து அடிநிலை என்ற தளத்தையும் இணைத்துப்பார்க்க வேண்டுமென்பது ஒன்று. மற் றையது அவ்வாறான பார்வைகளும் ஆய்வுகளும் பிரதான கல்வி நீரோட்டத்துடன் கலக்கவேண்டும் என்பது.
அப்போதுதான் தமிழர் வரலாறும் u 60oi U T (6 dó சரியான வகையில்
முழுமைபெறும் என்பது ஆசிரியரது முடிவு.
ஆசிரியர் குறிப்பிடுவது அல்லது குற்றஞ்சாட்டுவது பொதுமையில் ஏற்றுக் கொள்ளக் கூடியவொன்றே. எனினும் ஆரம்பகால இலக்கிய வரலாற்று வரைவாளர்களுக்குக் கிடைத்த சான்றுகளின் போதாமையையும் இங்கு மனங்கொள்ள வேணி டும் . கையளிக் கப் பட்ட இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டே இதனைக் கட்டமைக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கிருந்தது. ஆயின் இடைக்காலத்துச் சான்றுகள் கல்வெட்டு ரூபத்தில் வந்த போதும் அவற்றைக் கவனத்தில் கொள்ளாமல் விட்டது ஆய்வாளரது குறைபாடே, மேலைத்தேய வழியினூடாக இந்திய வரலாற்றைக் குறிப்பாகத் தமிழ்நாட்டு வரலாற்றைக் கற்ற UKUK பிள்ளை, 714 மகாலிங்கம், C மீனாட்சி முதலியோருடைய ஆய்வுகள் இவைகுறித்துக் கவனஞ் செலுத்தின. ஆயின் நமது இலக்கிய, பண்பாட்டு ஆய்வாளர்கள் அவை குறித்த
@ఐణ 30)

பிரக்ஞையற்றவர்களாக விருந்தனர். இதனால் தான் நமது பண்பாடும் வரலாறும் முழுமையாக ஒத்துப் போகமுடியவில்லை. இதற்கு அறிகையின்மை மாத்திரமன்றி, ‘தன்முனைப்புக் கொள்கையும் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆகவே அவர்கள் வெறும் வரலாற்றாசிரியர்களாகவே இவர்களால் அடையாளப்படுத்தப்பட்டனர் போலும். மாறாக பேட்டன் ஸ்ரெயின், ஜோர்ஜ் ஸ்பென்ஸர், கத்தலின்கோவ், லெஸ்லிஓர், காரசிமா, சண்பகலஷமி, சுப் பராயலு போன் றோர். வரலாற்றாசிரியர்களாகவிருந்த போதும் அவர்கள் வரலாற்றைப் புரட்டிப்போட்ட போதுதான் நமக்கான விழிப்பு ஏற்பட்டது. வரலாற்றிலும் பண்பாட்டிலும் மெய்மையும், பொயப் மையும் புலனாகியது. (தமிழியலாளர்களாகவிருந்தபோதும் பேராசிரியர்கள் வானமாமலை, க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகியோரது பங்களிப்பை இவ்விடத்தில் கவனங்கொள்ளல் அவசியம்) இப்போது தான் வீரயுகத்திலும், பொற்காலத்திலும், நமக்கான இடம் எங்கே என்ற தேடல் தொடங்கியது. அந்தத் தேடல் இன்று பல வகையில் முகங்காட்டத் தொடங்கியுள்ளது. அதற்கான அறிகை நிலையை இநீ நுால் கோடிட் டுக் காட் டுவதும லி லாது. சிநீதிக்கவும் தூண்டுகின்றது.
இ
டுங்குனி 2006)

Page 36
G34D
கனிவுமதி
வாசல் வந்த வரவேற்றார்கள் பெற்றோர்கள் உள்ளே அழைத்து உபசரித்தார்கள் உறவினர்கள் வெட்கம் பூத்து தேநீரோடு வந்தேன் பார்வையால் பருகினாய் நீ வந்தவர்கள் வரதட்சணை குறித்து கதைத்தார்கள் வேலைக்கு விண்ணப்படிவம் நிரப்பிக் கொண்டிருக்கிறேன் நான்
0 எனக்கு நீ தாலிகட்டிய காரணத்திற்கு என்னை வேலைக்குப் போக வேண்டாமென சொல்ல உனக்கு உரிமை இருக்கிறது
என்னை கவிதை எழுதவேண்டாமென சொல்ல உனக்கென்ன உரிமை இருக்கிறது
() நீ எனக்கு போடும் உணவை விட என் மீது நீ காட்டும் அதிகாரத் திமிர் கொஞ்சம் அதிகம் தான் தொலைக்காட்சியில் வரும் தொடர்நாடகங்களில் பெண்கள் நிலை கண்டு பரிதாபப்படும் அம்மாவுக்கு புரியுமா என் நிலை
()
டுங்குனி 2006)
IOJ!9ے
கர்ப்பின்
வேறுப நீயெல்
பெண்
தேவை
தேவை எழுந்த நான் (
வெறும்
சேர்வத்
திருமண
39siggs'6
எங்களு நீர்க் கு
உன்
ஒன்று
இரண்
ஈரமில்
அடுக்
960)L
என் கி
படுக்ை
ëff፬fftU சமாதிய மல்லின்

கவிதைகள்
இடமின்றித் தவிக்கும் னியைக் கண்டு க்கம் முகம் திருப்பும் லாம் பேசக் கூடாது விடுதலை பற்றி க்காக பணியும் நீ கள் முடிந்ததும் போய்விடுவாய் கேட்கிறேன்
உடல்கள்
து மட்டுமா
னம்
()
நரில் போட்ட ழாயும் உள்ளமும் தான்
டிலும்
506)
«Ο
த மாடியில் வந்து க்கப்படுக் கிடக்கிறது
ராமத்து வாழ்க்கை
()
கயறையில்
நெடிக்குள்
பாகும்
கை வாசம்
() - கனிவுமதி (ஓலை 30)

Page 37
தீபமாய் ஒளிரவும்
தீயாய் எரிக்கவும் எப்படி முடிகிறது இவர்களால்? பிரமன் தீக்குளித்துவிட்டுத் தீர்ப்பெழுதினானோ பெண்களுக்கு இந்தத் தீபத்தீக்குணம்
பெறுமானம் இல்லாத வெகுமானம் பெண்களுக்கு
ஜனனாயகச் சந்தையில் சமத்துவம் என்பது மேடைப் பேச்சோடு சமாதியாகிப்போகும் சமாச்சாரம் ஆகிறது.
இங்கே பல வாய்களுக்கு அவல் கிடைக்காததால் வெறும் வாயை மென்ற பழக்கத்தில், கண்ணகிக்கும், சீதைக்கும் கற்புப் பரிசோதனையை அம்பல மேடையில் அரங்கேற்றுகின்றன அலங்கோலமாய்.
960) LU
பிறந்த வீட்டில் கறுப்பி
அண்டை நாட்டில் சிலோன் அகதிப் பொண்ணு
இலங்கை மத்தியில்
தெமள "
வடக்கில் கிழக்கச்சி
 

இந்த நீறுபூத்த வாழ்க்கைக்கு யார் பொறுப்பு? ஆண்களை மட்டும் . எத்தனை ஆண்டுகளுக்குக் குற்றம் சொல்லிக் குடைவத?
பெண்களுக்குள்ளும் பெரும் பீடைகள் கண்டு களையெடுத்தச் சமத்தவம் காண்பதே சமூக தர்மம் ஆண் கிழித்த கோட்டுக்குள் அடங்கிப் போகவா - இந்த அற்புதப் பிறப்பெடுத்தோம்? நெருப்பானவள் நீ! யாரோ கிழித்துப் போட்ட கோடுகளை அழித்துப்போடு! உன் வலி அறிந்தவள் நீ! உன் சுயத்தோடு உன்னை நீயே வரை சற்றுத் திரும்பிப் பார் நெருப்பாக நிற்பாய் நீ!
. ம. கிருஷ்ணவேணி
பாளம்
மீன்பாடும் கிழக்கில் நானோர் மலைக்காரி
மலையில் முதார்க்காரியாக்கும்
ஆதிக்குடிகளிடம்
திருடப்பட்ட தீவாயிருக்கும்
என் புகுந்த நாட்டில்
அப்பாடா!
பழையபடி நான் கறுப்பியானேன்.
- ஆழியாள்
டுங்குனி 2006)

Page 38
《──་་་་་་་་་་་་་་་་་་་་་་་།G6)
کا
(பங்குனி 2006)
ஆளாளுக்கு ஒப்பனை மேடையேறுகிறோம்
இயங்கியல்
நம்மைத் தத்தமது வட்
வரையறுத்துள்ளது.
உன் ஒப்பனை கலைu
என்னைக் குலைக்க ம
சம பருமன்களைச் சுப வேடிக்கையதுவல்ல
ஒப்பனையற்றிருத்தல்
பாத்திரமேற்பிற்கான
ஒத்திகையென்பதை
ஆளாளுக்கு மறந்து விடாதிருக்கிறோம்.
இதனால் தான் போலு
நம்முடைய வட்டங்கள் ஒன்றையொன்று இடை வெட்டிக் கொண்டதேயி வெளியே பலரும் மெ. நம் இயங்கியலுக்குள்( ஒத்திசைவை. எத்தனையோ வருடத் ஒருவித கலையலங்கா சலிப்பேதுமின்றிய பாலி
நம் அரங்கேற்றம்.
ஆனாலும் என்னவோ வட்டங்கள் மையொழு வெண்தாளில் பீச்சியடி ஏக்கம் மிகுந்த கனவு
இப்பவும் என் இரவுகள்

யேற்றி
.டத்துள்
பாது நானும் >னமின்றி நீயும்
)க்க வேண்டியிருக்கிறது.
கூட ஒருவித
பில்லை
ச்சுகிறார்களாம்
ளோடும்
திரை நீக்கத்தில் ரத்துடன்
பனையில்
கக் கரைந்து ப்பதாய் கள் மட்டும்
60 ஆகர்ஷியா
(30 ܣܗoܗg)-

Page 39
பேசாய் பொருளை
ඡමfoෙෆ්r
தமிழ் இலக்கியத்தில் காதலும் காமமும் என்றுமே ஆணி களின் நாவினாலேயே பாடப் பட்டுள்ளன. அவர்கள் காதலை நோக்கியவாறல்லாமல், வேறு பார்வைக்குரியது பெண்களின் காதல், பெண்ணின் காதல் மூர்க்கமானது. அத்தனை மூர்க்கத்தையும், இதயத்தின் ஆழத்தில் தோன்றும் மெல்லிய உணர்வுகளுடன் குழைத்து வெளிப்படுத்த அவளாலேயே முடியும். உணர்வு, மாற்றங்களுக் குள்ளாகையில், மொழியும் மாறுபடுவது இயல்பு. இந்த வகையில், ஒளவை முதல் இன்றைய குட்டி ரேவதி வரை காதலை வெளிப்படுத்தப் பெண் தேர்ந்து கொண்ட மொழி வேறு. இதனால், பெண்ணின் பார்வையில் எத்தனை முயன்று ஆண் பாடினாலும், அத்தனையும் பெண்ணின் மொழியில் அடிபட்டுப் போய்விடுகிறது. ஆணின் பார்வை தாணி டிய பெணி காதலுக்கு உதாரணமாகக் கீழ்வரும் பாடலைக் காட்டலாம்.
‘மூட்டு வேண்கொல் தாக்கு வேண்கொல்
ஒரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு ஆசு ஒல்லெனக் கூவு வேண்கொல் அலமரல் அசைவளி அலைப்பவெண் உயவுநோ யறியாது தஞ்சும் ஊர்க்கே’
- ஒளவையார்
ஆணிகளாலாக் கப்பட்ட மொழியுலயு கிலிருந்து வெளியேறி, தங்களுக்கான மொழியைப் பெண் கள் உருவாக்கி யுள்ளமையைச் சுட்டும் நிலையில், பெண் மொழியின் பணி புகளை, பிரெஞ்சு பெண்ணிலையாளர், ஹெலன் சிக்ஸியின் வார்த்தைகளில் பார்க்கலாம்.
“பெண் மொழி அராஜகம் மிக்கது; ஆண் எழுத்துக்களில் உள்ள ஒழுங்கு முறைகளைத் தலைகீழாகப் புரட்டிப்போடுவது; படைப்பவர்
@asం 30)

-GD ாய் பேசத்துணிந்த
9 - TOT
- ஜெ. ஆன்யாழினி
6u T ở đ5 ff எண் ற எழுவாயப் களைத் தகர்த்தெறிவது. y
இந்த வகையில் , பெண் மொழிப் படைப்புகளுக்குரிய சிறந்த எடுத்துக் காட்டுகளில் ஆணி டாள் பாடல் களும் தவிர்க்க முடியாதனவாகிவிடுகின்றன. சங்ககாலம் தொட்டுப் பேசப்பட்டு வந்த அகத்திணை மரபை, அது உட்கொண்டிருந்த விடயங்களைப் புரட்டிப் போட்டு ஒரு புதிய தளத்திலே காதலின் பாதங்களைப் பதித்து விடுகிறாள் ஆண்டாள்.
ஆணி டாளது 2. பிரபந்தங்களுமே அகத்திணையின் பாற்பட்டவை தான். இரண்டுமே தலைவனை அடையத்துடிக்கும் தலைவியின் தவிப்பை வெளிப்படுத்தி நிற்பவை தான். தன் காதல் கைகூடும் பொருட்டு நோன்பிருத்தல், இயற்கையால் வருந்துதல், கூடவளைத்தல், தூதனுப்பல், காமம் மிகும் போது தன் ஏக்கத்தைத் தாய்மாரிடமும் பூக்களிடமும் வெளிப்படுத்துதல் என அவளது பெரும்பாலான பாடல்கள் அகத் திணையின் மரபுக் குட்பட்டனவாக அமைந்திருப்பதை மறுப்பதற்கில்லை. ஆன போதும், காதலின் உணர்ச்சி வேகத்தை மரபுத்தலைவியரி லிருந்து மேம்பட்ட அளவிலேயே அவள் வெளிப்படுத்தியிருப்பதையும் நோக்கவேண்டும்.
பெண் மொழியை அடைவதற்குப் பெண் என்ன செய்ய வேண்டும் என்பதை ஹெலன் சிக்ஸி கீழ்க்கண்டவாறு விளக்குவார்.
‘‘அவளுக்கேயுரிய பொருட்களையும் உறுப்புகளையும் ஆழமாகப் புதையுண்டு அடையாளம் இழக்காமல் கிடக்கும் அவளது உடம்பு சார்ந்த மிகப்பெரிய ஆட்சிப் பரப்பினையும் மீண்டும் ஆதிவலுவோடு திரும்பப்பெற்று எந்த
டுங்குனி 2006)

Page 40
GE).
விதமாகவும் தன்னைத் தானே தணிக்கை செய்து கொள்வதைத் தவிர்த்து அப்படியே பொங்கிவழிய வேண்டும்”
இந்த அம்சங்களை ஆண்டாளது பாடல்களில் தெளிவாக அடையாளங்காண முடிகிறது. 96) 6TTg, * மெயப் ப் பொருட் காதல்’ தலைவனுடனான உடல்சார்ந்த இன்பத்தை வெளிப்படையாகவே வேண்டி நிறக்கிறது;
'குற்றம் அற்ற முலைதன்னைக்
குமரன் கோலப் பனைத்தோளோடு
அற்ற குற்றம் அவைதீர
அணைய அமுக்கிக் கட்டீரே"
தலைவனிடத்துத் தன்னைக் கொண்டு செல்லும் படி கேட்கிறது;
é é
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆயர் பாடிக்கே என்னை உய்த்திடுமின்’
காதலைப் புறக்கணிக்கும் தலைவனை மிரட்டிவும் துணிகிறது;
6 6
ஒரு பெண் கொடியை வதைசெய்தார் எனும் சொல் வையத்தார் மதியாரே”
காதல் கைகூடாதவிடத்துத் தன்னழகைத் தீர்க்கவும் விழைகிறது; இறுதியாகத் தலைவனைக் கண்ட போதான அனுபவத்தைக் கிளர்ச்சியோடு இவ்விதம் உடல், உறுப்புகள் குறித்து உணர்வு நலனை வெளிப்படுத்துவதன் வழியிலும் ஆண்டாள் மொழியினைப் பெண் மொழியாக அடையாளப்படுத்தலாம்.
பெண் மொழி வெறுமனே உணர்வு வெளிப்படுத்தலுக்கு உதவுகின்றதேயல்லாமல், மிகச் சிறந்த இலக்கியத்துக்கான ஊடகமாக அது விளங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு என்றுமே எதிர்மொழிக் கையாளுகைக் காரரால் கூறப்பட்டு வருவதொன்று. இதை மறுதலிக்கும் வண்ணம், ஆண்டாள் பாடல்கள் இலக்கிய நயத்திலும் சிறந்தவையாக விளங்குவதைக்
(பங்குனி 2006)

காணலாம்.
6 6
மாமுத்த நிதிசொரியும் மாமுகில்கள் தாள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறங்கொண்ட தாளாளன் வார்த்தையென்னே
காமத்தீயுள் புகுந்து கதுவப்பட்டிடைக் கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கிலக்காய் நான் இருப்பேனே’
எனும் பாடலொன்றே இக்கருத்துக்குச்
சான்றாகும்.
இன்னதென்று வெளியே சொல்ல முடியாததான அக உணர்வுகளை மிக நுணுக்கமாக வெளிப் படுத் துவதிலும் ஆணி டாளது பெண் மொழிச் சிறப்பு வெளிப்படுவதைக் காணலாம். உதாரணமாக, அவள் கையாண்ட இரு உவமைகளை நோக்கலாம்.
1. மழைக்காலத்தில் எருக்கஞ் செடியில் பழுத்த இலைகள் உதிர்வது போல - இன்று விழுவது போல - ஒசிந்து தளர்ந்து தளர்ந்து விழும்படியான நிலையில் இருக்கிறேன்.
2. பெரிய கொசுக்கள் விளாம்பழத்தின் மீது மொய்த்து, உள்ளிருக்கும் கனிரசத்தை உறிஞ்சிவிட்டபின் ஒடு மிஞ்சும். அது போல் என் நெஞ்சம் பறிபோய், வெற்றுடம்பாய் இருக்கிறேன்.
இங்ங்னம் இலக்கியச் சுவையிலும் வெளிப்பாட்டு முறையிலும் சிறப்புற்றிருக்கும் ஆண்டாள் பாடல்கள் பேசிய பொருள் தான், அதுவரை காலமும் பேசாப் பொருளாக அசைந்து விடுகிறது.
பல்லவ - பாண்டியர் கால இலக்கியத் துறையில் பெரும் அடையாளமாக ஆண்டாள் அடையாளங் காணப்படுகிறாள். இக்கால ஏனைய அக இலக்கியங்களைப் போல

Page 41
ஆண்டாள் பாடல்களும் பக்திச் சாயம் பூசியே நோக்கப்படுகின்றன. பக்தியைப் பேச காதலை ஓர் உத்தியாகவே நாயன்மாரும் ஆழ்வாரும் கையாண்டனர். ஆயின், ஆண்டாள் பாடல்களை நோக்கும் போது, காதலைப் பேச பக்தியை ஓர் உத்தியாகவே அப்பெண் கையாண்டாளோ எனவோ எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில், ஆண்டாளது உணர்வுகள் இதே வார்த்தைகளில் வேறு யாரோ ஒருவன் மேல் பாடப்பட்டிருந்தால் ‘ஏற்புடைமை' என்பது அவளது பாடல்களுக்கு வழங்கப்பட்டிருக்குமா என்பதையும் நோக்க வேண்டியுள்ளது.
இந்த நிலையில் இன்னுமொரு வகையில் ஆண்டாள் பாடல்களை ஆராய வேண்டியுள்ளது. அதாவது நாயன்மாரோ, அன்றி, ஏனைய ஆழ்வாரோ பாடாத அளவிற்கு அகத்தின் உச்சியைப் பாட அன்றைய சமூகநிலை ஆண்டாளில் எத்தனை தாக்கம் செலுத்திற்று எனப் பார்க்க வேண்டியுள்ளது. எக்காலத்திலும் காமம் அல்லது உடலின்பம் என்பது கீழ், மேல் வர்க்கத்தினருக்கு அத்துணை மறைக்கப்பட்ட பொருளாய் இருந்ததில்லை. அதைக் குறித்துப் பேசுவதிலும், அதனைப் பெற்றுக் கொள்வதிலும் அவர்களுக்கு நியமங்கள். பெருமளவில் தடையாயிருந்ததில்லை. ஆயினும், நடுத்தர வர்க்கத்தினரிடையே காமம் என்றும் பேசாப் பொருளாகவே இருந்து வந்திருக்கிறது. நியமங்கள் கொண்டு மூடிமறைக்கப்பட்டு, ஆணி களால் கூட வெளிப் படையாகப் பேசப்படாததாய் விளங்கியிருக்கிறது. ஆண்டாள், இந்த நடுத் தர வர்க் கத்துக் குரியவள். பெருமாளுக்குச் சேவை செய்யும் குடும்பத்தின் ஒழுக்க முறைமைக்குள் வளர்ந்தவள். ஆனால், அவளுக்குக் காமம் பற்றிப் பேசுதல் இயலுமாயிருந்திருக்கிறது. இந்த நிலையை அவளுக்கு அளித்தது எது? இதனையும் இரண்டு கோணங்களில் நோக்கலாம்.
1. அக்கால சமூகம் இன்றைய நிலையைப் போலன்றி, பெண்ணுக்கு பால்நிலை பற்றியும் அதுசார் உணர்வுகள் பற்றியும் பேசும்
@asం 30)

G9)
உரிமையை அளித்திருக்கிறது. அவ்விதம் பெண் பேசும் போது அதற்குரிய ஏற்புடமையைத் தந்திருக்கிறது எனத் தீாமானிக்கலாம்.
2. யாதவ குலத்தவனான கண்ணனைக் காதலித்ததால் , தன் னையும் ஒரு இடைப்பெண்ணாகப் பாவனை செய்து ஆண்டாள் வாழ்ந்திருக்கிறாள் என்பதை அவள் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. உரையாசிரியர் பெரியவாச்சான் பிள்ளையின் வார்த்தையில் கூறின், இடைமுடியும் இடைப் பேச்சும் முடைநாற்றமுமாயப்’ ஆண் டாள் விளங்கினாள் எனலாம் . இடைச்சியரைப் போல கூந்தலை முடிக்க, அவர்களைக் கண்டிருத்தல் போதும் , முடைநாற்றம் பெற, வெண்ணெய்யை உடலில் பூசிக் கொள்ளல் போதும். ஆனால், இடைப்பேச்சும் பேச அவர்களோடு கூடிப் பழகியிருக்க வேண்டும். ஆக, ஆண்டாள் இடைப் பெணி களுடன் மிகுந்த பழக்கமுடையவளாய் இருந்திருக்கலாம். இதற்கு, கண்ணனது குலத்தினர் என்பதால் அவர்கள் மேலுணி டான இயல்பான ஈடுபாடோ, அல்லது அக்கால சமூக அமைப்பில் கோயிலுடன் இடையர் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பே வழிவகுத்திருக்கலாம். எது எப்படியோ, ஆண்டாளது இந்த இடைத்தொடர்பு, வைதீக உயர்குலப் பெண்களது மொழிப் புலத்தைத் தாண்டிக் காமம் சார்ந்து வெளிப்படையாகப் பேசும் ஆளுமையை அவளுக்குத் தந்திருக்கலாம்.
எங்ங்ணமாயினும் தமிழ் இலக்கிய உலகிலே அதுவும் இடைக்காலப் பகுதியிலே பெண்களால் மட்டுமன்றி பெண்கள் நிலைப்பட்டு நின்று பாடிய ஆண்களாலும் பேச முடியாத பொருளை ஆண்டாள் பேசத்துணிந்திருக்கிறாள் என்பதே அவள் ஆளுமையின் வீச்சுக்கு மிகப்பெரிய பரிமாணத்தை அளித்திருக்கிறது எனலாம்.
ള്
டுங்குனி 2006)

Page 42
GO
நாயக்கர்கால இலச் அறியலாகும் அக்கா
ஆணாதிக்க வர்க்க சமுதாயத்தில் ஆண் பெண் உறவு நிலை என்பது பெண்களின் நிலை என்றே சுருங்கப்பொருள் கொள்ளும் தன்மையது. ஆதலால் நாயக்கர் காலச் சமுதாயத்தில் பெண்களின் நிலையைப் பெண்ணியல் நோக்கில் இலக்கியங்களின் வாயிலாகவும் சேசு சபைத் துறவிகளின் மடல் கள் மற்றும் ஓலைச் சுவடிகள் வாயிலாகவும் அறியக் கூடியனவற்றை இக்கட்டுரை முன்வைக்கிறது.
நாயக்கர் காலம்
விஜயநகர ஆட்சிக்குப் பின் 16, 17, 18ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தை நாயக்க மன்னர்கள் ஆட்சிசெய்தனர். மதுரை நாயக்கர், தஞ்சை நாயக்கர், செஞ்சி நாயக்கர், வேலூர் நாயக்கர் என இடங்களும் அரசர்களும் வேறுபடினும் பல வேறு நிலைகளில் இவர்கள் வேறுபாடற்றவர்கள் தமிழகத்தின் பல்வேறு போக் குகட்கும், பரிமாணங் கட்கும் , சிக்கல்கட்கும் இவர்களது ஆட்சி பெரிதும் காரணமாக அமைந்துள்ளது.
நாயக் கர் காலத் தமிழகத்திலும் நிலமானிய அமைப்புமுறை மிக இறுகிய வடிவத்தைப் பெற்றிருந்தது. அத்துடன் ஆட்சியமைப்பும் அதிகார நிலையில்
(பங்குனி 2006)

க்கியங்கள் வாயிலாக லப் பெண்கள் நிலை
(p6oo6ovT6nir &FT. u TFT Ló
இராணுவத்தன்மை பெற்றிருந்தது நாடு, பாளையப் பட்டுகளாகப் பகுக்கப்பெற்று வட்டாரத்தன்மை ஓங்கியிருந்தது. நவீன அறிவியற் பார்வையும் கல்வியறிவும் பெறாத அச்சமூகத்தில் பழைய மதிப்பீடுகள், குறிப்பாக வைதீக மதிப்பீடுகள் மேலாண்மை
பெற்றிருந்தன.
இலக் கியங்கள் சமூகத்தினி பிரதிபலிப்புகள் என்பது உணி மையேயெனினும் தற் கால
இலக்கியங்களுக்கும் முன் சுட்டப்பட்ட கால கட்ட இலக் கியங்களுக்கும் அடிப்படையில் பெரும் வேறுபாடு உண்டு. ‘உள்ளது புனைதல்’ (Kalin/ அக்கால இலக்கியங்களில் இல்லை. அவை வாழ் வைப் பற்றிய உணர்மையான பிரதிபலிப்பாக அமையவில்லை. மிகுந்த புனைவியற்றன்மை பெற்றுள்ளன.
குறிப்பாக, நாயக்கர்கால இலக்கியங்கள் பெரிதும் நாடக ஒழுக்குடையவை. ஆதலால் அவற்றின் ஊடாகச் சமூகத்தைக் காணும் போது பல இடைவெளிகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, பெண்களின் பங்குகள் குறித்த எதிார்த்தமான தகவல் களர் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. உழைக்கும் வர்க்கப் பெண்கள் குறித்தும் விலை மகளிர் குறித்தும் கிட்டும் அளவிற்கு,
ஒலை 30

Page 43
உயர் குடி மற்றும் நடுத்தர குடும்பப் பெண்கள் குறித்த தகவல்கள் கிட்டவில்லை.
பெண்கள் பற்றிய பொது மதிப்பீடுகள்
குடும்ப அமைப்பின் இறுக்கத்திற்கேற்பப் பெணி களின் போக் கு 029! 60) LD UL] வேண்டுமென்பது வற்புறுத்தப்படுகிறது.
இனிய குரல் வளமும் பேரழகும் உடையவளாகவும் நோயற்ற குடும்பத்தில் பிறந்தவாகவும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நால்வகைக் குணங்களை உடையவளாகவும் மாமன்- மாமியைப் பணிப வளாகவும் விருந் தினரைப் போற் றுபவளாகவும் கணவன் கூறுவதையெல்லாம் கேட்பவளாகவும் அவனது இச்சைகளை நிறைவெற்ற இரதிபோல் லீலை புரிபவளாகவும் இருப்பவளே ‘கற்புடைய மனைவி' என்று குமரேச சதகம் (76) தண்டலையார் சதகம் (6) அறப்பளிச்சுர சதகம் (14) முதலிய நூல்கள் வலியுறுத்துகின்றன. இத்தகைய பத்திரினை மனைவியாகக் கொள்பவர் ‘செததும் சாகாதவர்' என்னும் குமரேச சதகம் (31) தமயந்தி, அனுசூயை, நளாயினி, வாசுகி போன்றோரின் கற்புத்திறத்தைப் பொற்றியுரைக்கிறது. மடமாதர் கற்கே மழைக்குக் காரணம்
என்கிறது அறப்பளிச்சுர சதகம் (24) ஐந்து
@ఐణ 30)

-GD பேரைக் கணவர்களாக ஏற்றுக்கொள்ட திசெளபதியைத் திருக்கழுக்குன்றக் கோவை தூற்றுகிறது.
கட்ருய்பாருகள்
இலக்கியங்கள் கூறும் பத்தினிப் பெண் ணினி மற்றொரு பரிமாணம் கவனிக்கத்தக்கது.
கற்புடைய இல் லாளாக ஒருத்தி இருந்தபோதும் அவளுக்கு எவ்வித உரிமையும் கொடுக் கப்படவில்லை. பெண்டிருக்கு அழகு பேசாதிருத்தல்; குலமகளுக்கழகு கொழுநனைப் பேணுதல் என வெற்றி வேட்கை (11,12) மொழிகிறது. பெண்ஜென்மம் ஜென்மமே அல்ல. பெண் புத்தி உதாவது எனும் கருத்தினைத் தண்டலையார் சதகம் முன் வைக்கிறது. கணவனை எதிர்த்துப் பேசும் மனைவி சன்மத்தில் அங்காரகன் - அதாவது சனி போன்றவள் என்கிறது குமரேச சதகம்.
ஆளும் வர் கி க ம கொடுரமான சுரண்டலைச் செய்து சமூகத்தை முற்றடிமை கொள்ளும் போது, அடக்கப்படுகின்ற சமுதாயத் திணி OLD fl Plusfl60) LD, பேச்சுரிமையையே முதலில் தட்டிப் பறிக்கிறது. அது போலவே குடும்பம் என்னும் சுரண் டலைமைப்பிற்குள் பெண்ணின் மொழியுரிமையும் பேச்சுரிமையும் மிகக் கடுமையாகவும் வஞ சகமாகவும்
பறிக்கப்பட்டதையே அவை காட்டுகின்றன.
-டுங்குனி 2006)

Page 44
G2)
பேச்சுரிமை இழந்து, பல்வகையான குணநலங்கள் கற்பிக்கப்பட்டுப் பெண் என் பவள் ஆணினி குடும் பத் தேவைக்குரியவளாகவும் பிற உடைமைப் பொருள்களைப் போன்றதொரு உடைமைப் பொருளாகவும் கருதப்பட்டாள் என்பதை
உணரமுடிகிறது.
சீதனம்
திருமணம் முடித்த பெண்கள் தம் பெற்றோர் விட்டிலிருந்து ஏராளமான பொருட்களை தனமாகக் கொணர்ந்தமையை ஐவர் ராஜாக்கள் கதையும் திருவிளையாடற் புராணமும் பட்டியலிட்டுக் கூறுகின்றன. இவை உயர்வு நவிற்சியாத் தோன்றிடினும் சீதனம் வழங்கும் வழக்கமிருந்ததைச் சுட்டுகின்றன.
நாட்டு மக்கள் தத்தம் நிலைகளுக்கேற்பச் சீதனங்களை வழங்க, அரசர்கள் நாட்டினையே சீதனமாக வழங்கியுள்ளனர். செவப்ப நாயக்கனுக்குத் தன் மனைவியின் தங்கையை மணமுடித்துத் தஞ்சாவூர்ப் பகுதியை அச் சுதராயண் சீதனமாக வழங்கியுள்ளான்.
பலதாரமணம்
குலப்பெண்ணுக்குக் கற்பொழுக்கத்தை வற்புறுத்தும் நாயக்கர்கால இலக்கியங்கள், ஆடவனுக்கு அதனை வற்புறுத்தவில்லை. ஆணாதிக்க நிலவுடைமைச் சமுதாயத்தில் ஓர் ஆணி எத்தனை பெணி களைப் பெற்றிருக்கின்றானோ அந்த அளவிற்கு மதிப்பு உயரப்பெற்ற தன்மையைப் பார்க்க முடிகிறது.
டுங்குனி 2006)

விஜயநகர மன்னர்களும், நாயக்க மன்னர்களும் மிகப் பெரிய அந்தப் புரங்களைப் பேணினர். விஜயநகர மன்னர் ஒருவருக்கு 12 ஆயிரம் மனைவியர் இருந்ததாகும் அவர்களுள் நான்காயிரம் பேர் அரசன் எங்குச் சென்றாலும் கால் நடையாகவே உடன் சென்று சமையல் செய்வது வழக்கம் என்றும் நிக்கோலே காண்டி கூறுகிறார். இரண்டர் தேவராயருக்கு 700 க்கு மேற்பட்ட மனைவியரும் ஆசைநாயகியரும் இருந்தனர் என அப்துல் ரசாக் குறிப்பிடுகிறார். கிருஷ்ணதேவராயர் அந்தப் புரத்தில் பணி னிரணி டாயிரம் பெணி கள் இருந்தனரெனப் பீயஸ் கூறுகிறார். திருமலைநாயகருக்கு 200 மனைவியரும் மறவர் நாட்டுக் கிழவன் சேதுபதிக்கு 47 மனைவியரும் இருந்துள்ளனர். மனைவியர் எண்ணிக்கை குறித்து வெளிநாட்டு பயணிகள் தரும் குறிப்புகள் மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றிடினும் அளவு கடந்த எண்ணிக்கையில் மனைவியர் இருந்தனர் எனக் கொள்ளத் தடையில்லை.
மன்னர்களிடையே இருந்த பலதார மணமுறை, மக்களிடையேயும் இருந்ததைப் பள்ளு இலக்கியங்கள் காட்டுகின்றன.
உடன்கட்டையேற்றம்
உடைமைப்பொருளாக அமைந்து, சொத்திற்குக் குழந்தைகளைப் பெற்றுத் தந்து வாழ்ந்த போதும், தனக்குப் பிறகு பெண்களுக்கு உயிருடன் இருக்கும் உரிமையைப் பெரும்பகுதி ஆடவர்கள், குறிப்பாக உயர் குடியினர் தர மறுத்துள்ளனர். ஆதலால் கணவன் இறந்ததும் மனைவி உடன்கட்டை ஏறும்
(ஓலை 30

Page 45
வழக்கம் இருந்துள்ளது. கணவனை இழந்த பெண்கள் அனைவரும் உடன்கட்டை ஏறினரெனக் கூறவியலாவிட்டாலும் பெருந்தொகையான பெண்கள் உடன்கட்டை ஏறினமைக்குச் சான்றுகள் கிட்டுகின்றன.
பிரயான்கோ என்னும் சேசுசபைத் துறவியின் 1659ஆம் ஆண்டு மடல் திருமலை நாயக்கர் இறந்ததும் அவர்தம் 200 மனைவியரும் உடன்கட்டையேறியதைக் குறிப்பிடுகிறது. கி.பி. 1713 இல் பீட்டர் மார்ட்டின் என்ற சேசுசபைத் துறவி எழுதிய மடலில் கி.பி. 1689இல் மதுரையை ஆண்ட மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கரின் மனைவி முத்தம்மாள். தன் கணவன் இறந்தபோது கருவுற்றிருந்தமையால் இறக்காமல் குழந்தை ஈனி ற பின் னர் உடன் கட்டையேறியமையைக் குறிப்பிடுகிறது. கி.பி. 1710 இல் கிழவன் சேதுபதி என்ற மறவர்நாட்டு மன்னன் இறந்தபோது அவர்தம் 47 மனைவியரும் உடன்கட்டை ஏறியதை மார்ட்டின் என்ற சேசுசபைத் துறவி நேரில் கண்டுள்ளார். டிவில்லட் என்ற துறவிக்கு அவர் எழுதியுள்ள மடல் உள்ளத்தை உருக்குவதாய் உள்ளது.
ஒரு பெரிய ஆழமான பள்ளம் , இராமநாதபுரம் நகரத்திலிருந்து சற்று தூரத்தில் வெட்டப்பட்டு, ஏராளமான விறகுகளால், நிரப்பப்பட்டது. அதில் இறந்த அரசரின் உடல் வைக் கப்பட்டது. பிராமணர்கள் பல சடங்குகளைச் செய்து கொண்டிருக்கும் போது விறகுகளில் நெருப்பிடபப்ட்டது. கொள்ளகளின் அடிப்பாகும் சுறுசுறுப்பாக எரியத் துவங்கும் போது தலையிலிருந்து பாதம் வரை
@ఐణ 30)

G3) நகைகளால் அலங்கரிக் கப்பட்டு, மலர்க்கிரீடங்களை அணிந்த துரதிர்ஷ்ட மிக்க பெண்கள் அணிவகுப்பாகத் தகன மேடையைச் சுற்றி வந்தனர். அரசி, அரசனது வாளினை அவனது வாரிசிடம் கொடுத்து நாட்டைக் காக்கும் படிக் கூறினாள். 'ஆ' எத்தகைய மானுட மகிழ்ச்சி கிட்டியுள்ளது. நரகத்தில் நான் உயிர் வாழப்போகிறேன்’ என்று கூறித் தனது கடவுள்களின் பெயர்களையெல்லாம் உரக்கக் கூறிக் கொணி டு பெரும் அழுகையோடு நெருப்பில் வீழ்ந்தாள்.
மற்ற பெண்கள் ஒருவர் பின் ஒருவராகத் தொடர்ந்தார்கள். சிலர் தங்கள் சாவை உறுதியோடும் சிலர் நினைவிழந்த பிரமை நிலையிலும் பயத்திலும் சந்தித்தனர். இத்துரதிர்ஷ்டப் பலியாடுகள் காட்டிய உறுதியானது போலியானது ஏனெனில் நெருப்பினர் வெம் மை யை உணரத் தொடங்கியதும் கடுமையான முயற்சிகள் செய்து வெளிவர விரைந்தனர் ஆனால் ஈம நெருப்பின் ஓரத்திற்கு வருவதற்கு முயன்று தோல்வியுற்றனர். காதைத் துளைக் கும் கூக் குரலும் முனகல்களும் எங்கும் வியாபித்திருந்தது. இவ்வோலங்களை அமுக்கவும், எரிகின்ற நெருப்பை மேலும் அதிகரிக்கவும் விறகுக் கட்டைகளை அப்பெண்களின் தலைகளில் விழுமாறு தூக்கியெறிந்தனர். இதன் பின் அவர்களது குரல் கள் இறுதியாக மங்கிப்போயின.
உடன் கட்டையேற்றம் பெண்களின் விருப்பத்தின் பாற்பட்டதாய் இருக்க
பங்குனி 2006

Page 46
GD
நியாயமில்லை. கணவனது மரணத்தால் ஏற்படும் ஆதரவற்ற நிலையும் விதவைக்குச் சமூகம் கொடுத்த இழிந்த நிலையும் அவர்களை ஒப்புக் கொள் ளச் செய்திருக்கலாம் ஆயினும், அரச மாதர்கள் உடன்கட்டை ஏறினமைக்கு ஆணாதிக்கச் சிந்தனையான தன்னுரிமைச் சுயநலமே காரணமாதல் வேண்டும்.
அடிமை நிலை
குடும்ப அமைப்பைப் போலவே சமூக நிலையிலும் பெண் டிர் உரிமையற்று வாழ்ந்து வந்துள்ளனர். பெண் களை அடிமைகளாக விற்கும் நிலை இருந்துள்ளது. ஹென்றி காஸ் அடிகளார் 1548இல் எழுதிய மடலில், முத்துக்குளியல் துறையில் பெண அடிமைகள் இருந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சீர்காழியில் கிடைத்த மூன்று ஒலைகள் அடிமைகள் விலைக்கு விற்கப்பட்ட செய்தியைத் தருகின்றன.
இரணர் டாம் ஓலையில் , " ரெட் டி கடலங்குடியிலிருக்கும் இராமச்சந்திர நாயகர் தம் மடிமையான முத்தன் மற்றொருவன் வெளிச் சான், அவன் பெண்சாதி பார்வதி ஆகிய நால்வரையும் கோபால சக்கரம் குளிகை பதினாலு பொன்னுக்குக் குண்ன மருதூர் மாகாணம் மங்கநல்லூரிலிருக்கும் சுப்பிரமணிய முதலியாருக்கு விற் ற செயப் தி காணப்படுகிறது.
மூன்றாம் ஒலையில், கஞ்ச நகரத்தில் வாழ்ந்த அப்பாச்சி முதலியாருக்கு சுப் பாபடையாச்சி தம்மிடம் இருந்த அடிமைகள் இராமன், இராமன் மனைவி முக்கட்டை, இவர்கள் பிள்ளைகள்
(பங்குனி 2006)

ஆகியோரை எண்பது பொன்னுக்கு விற்ற செய்தி எழுதப்பட்டுள்ளது.
ஆணும் கொத்தடிமைக் காரனாகும் வழக்கத்தைப் பள்ளு நூல்கள் தரினும் அடிமைகள் வாழ்ந்த விற்கப்பட்ட செய்தியை இவ்வோலைகள் உறுதிசெய்கின்றன.
கைம்மை நிலை
கணவனை இழந்த பெண்களுக்குச் சமூகத்தில் எவ வித மதிப்பும் இருக்கவில்லை; இழித்தும் பழித்தும் பேசப்பட்டனர். விதவையும் அழகற்ற மகளிரும் எதிரில் வருதல் தீய சகுனம் என்கிறது அறப்பளிச்சுர சதகம் (64) பொருளற் று வறுமையுற் றவனை மங்கலமிழந்த மாதரும் அவமதிப்பர் என்கிறது திருவேங்கட சதகம் (69)
பரத்தமையொழுக்கம்
முந்தைய கால கட்டங்களினும் பரத்தரமையொழுக்கம் நாயக்கர் காலத்தில் மிகுதிப்பட்டிருந்ததை இலக்கியங்கள் காட்டுகின்றன. சோழர் காலத்தில் ‘தளிச்சேரிப் பெண்டுகள்’ ‘பதியிலாளர்கள்’ எனும் பெயர்களில் கோயில் களில் கலைப்பணியாற்றி வந்தோர் பெற்றிருந்த அரச உதவிகள் நாயக்கர்கள் காலத்தில் மிகவும் குறைவுபட்டமையால் அவர்கள் பரத்தமைத் தொழிலை முழுமையாகச் சார்ந்து வாழத் தலைப்பட்டனர் என்று நாயக் கர் கால இலக் கியங்கள் பரத்தமையைப் பரம்பரைத் தொழிலாகக் குறிப்பிடுகின்றன.
மாணிக்கமாலை என்ற தாசி, தனக்குப் பெண்மகவு பிறந்தவுடன் ‘பொன் காய்க்கும் பூடு ஒன்று பெற்றது போல் மகிழ்ந்தாள்’
@ఐణ 39)

Page 47
என்கிறது கூளப்ப நாயக்கன் விறலிவிடு தூது (164-165). தாசிகளின் பெயர்கள் தங்கியிருந்த ஊர்கள், பகுதிகள் முதலியனவற்றை இந்நூல் விரிவாகப் பேசுகிறது. அவர்தம் வாழ்நிலைகள், பழக்கவழக்கங்கள், சூழ்ச்சிகள், பொருளாசைகள், சமுதாய உறவுகள் குறித்த பல்வேறு தகவல்களை விறலி விடுதூது நூல்கள் குறிப்பிடுகனிறன. பரத்தமையால் ஒருவன் சீரழிவதைப் பாடுபொருளாகக் கொண்ட விற்றலிவிடு தூது என்னும் இவ்விலங்கிகய வடிவம் நாயக்கர் காலத்தில்தான் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
புல் லுவிற்றும் கீரை விற்கும் பொன் பொடுப்பார் காண் நமக்கு கொல்லிமலைப் பாவாய்! குலதெய்வம் பல்விழுந்த கூனற் கிழவன் கொடுக்கும் பணயமதில் நானக் குழலே நரையுண்டோ? - மானமின்றி அப்பன் வருவான் அதன் பின்னே மகன் வருவான் தப்பு முறை யென்றுநீ தள்ளாதே (கூளப்ப நாயக்கன் விறலிவிடு தூது 234. 236)
என்னும் பகுதி, சமுதாயத்தின் மேல்தளத்து மகக்ளிடையே மட்டுமன்றி அனைத்துப் பிரிவினிலும் பரத்தைமையொழுக்கம் பரவியிருந்தமையைச் சுட்டுகிறது. இவ்வாறு குடும்ப உறவைச் சிதைக்கும் வண்ணம் இத்தீயவொழுக்கம் பல்கிய காலத்தில், புலவர்கள் அதனைக் கண்டித்துள்ளனர். ஆயினும் அந் நுால் கள் மிகுந்த ஆபாசத் தன் மை கொணி டதாக அமைந்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
@వాణం 30)

-GS) நாயக்க மன்னர்கள் பரத்தமையைப் போற்றி வளர்த்துள்ளனர். அரசு சில உரிமைகளை அவர்களுக்கு வழங்கியுள்ளது கல்வியறிவும் கலைத் தேர்ச்சியும் பெற்ற பரத் தையர்க் கு அரசு உதவி கிடைத்துள்ளது. அரசனிடம் மானியம் பெறும் நிலையிலும் தாங்கள் பெற்ற மானியத்திலிருந்து ஒரு பகுதியைக் கோயில்களுக்குத் தானமாக வழங்கும் நிலையிலும் இருந்ததாகக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. பலதரப்பட்ட மானிய நிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட விளைச்சலில் பங்குபெறும் உரிமையும் தேவரடியார்களுக்கு இருந்தது. இவற்றிலிருந்து, பாலியல் நெறிமுறைகளைப் பொறுத்த மட்டில் நாயக்கர் காலச் சமூகம் நெகிழ்ந்து கிடந்த நிலையினை உணர முடிகிறது. சிற்றிலக் கரியங்கள் , தனிப்பாடல்கள், சிற்பங்கள், ஒவியங்ளில் வெளிப்படும் பாலுறவுத் தனி மை, அக் காலத்தின் வரம் பற்ற பாலுறவு ஒழுக்கக் கேட்டை உணர்த்துகின்றக. 'பரத்தையர் மாலை' என்ற தனி நூலும் வரதுங்கராம பாண்டியரால் “கொக்கோகம்’ என்னும் வட மொழி நுாலினி மொழிபெயர்ப்பும் தமிழில் தோன்றியுள்ளதைக் காணும் போது பெண்களின் ஒரு பிரிவினர் பெற்ற இழிநிலையை உணரமுடிகிறது.
சமூகத்தில் பெண்கள் மீதான பாலியல் வணி முறைகளும் எல் லையற்றுச் சென்றுள்ளன. கோயிலில் சேயிழை தன்னைச் சார்ந்தவன். கன்னி கழியாத பெண்ணைக் கெடுத்தவன் ஆகியோரைக்
(பங்குனி 2006)

Page 48
G6)
கருப்பணசாமி சதகம் (33) குறிப்பிடகிறது. குடிமக்கள்மட்டுமன்றி அரசர்களும் பெண்கள் மீது பாலியல் வணி முறை கொண்டிருந்துள்ளனர். விஜய நகரப் பேரரசைப் பற்றிய குறிப்புகளைத் தந்த அப்துல் ரசாக்,
“தனது ஆட்சிப் பகுதியில் எங்கேனும் ஓர் அழகான பெண் தென்பட்டாலும் அவள் அரண்மனைக்குத் தருவிக்கப்பட்டு விடுவாள். அதன்பின் அவள் உறவினர் யாரும் தொடர்புகொள்ள முடியாது’ என்கிறார்.
தாழ்குழப் பெண்கள்
தமிழ் இலக்கிய வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வட்டாரத் தன் மை பெற்ற இலக் கியங்களும் தாழ்நிலையில் வாழ்ந்த பகுதி மக்களைப் பாத்திரங்களாகக் கொண்ட இலக்கியங்களும் தோன்றியுள்ளன. வேளாண்மையோடு தொடர்புடைய பள்ளர், பறையர், கள்ளர், மறவர், கொல்லர், தச்சர், கருமார், கம்மாளர் முதலிய பிரிவுப் பெண்களை பற்றிய செய்திகள் இவ் விலக் கியங்களில் காணப்படுகின்றன.
இவர் களில் பெரும் பாலோர் வேளாண்மையிலும் நூல் நூற்றல், மீன்பிடித்தல் பேர்றவற்றிலும் ஈடுபட்டுள்ளனர். கடுமையான உடல் உழைப்பாளிகளான இவர்களை வேறுவகையாக இலக்கியங்கள் சித்திரித்துள்ளன.
பள்ளியரே வட்டம் போடுங்கடி - ஐயன் பன்னிரு தோள்வெற்றி பாடுங்கடி கள்ளை எடுத்துக் குடியுங்கடி - கூடிக்
(பங்குனி 2006)

கூட்டாய்க் கும்மி அடியுங்கடி
எனத் திருமுருகன் பள்ளும், பிற பள்ளு நூல்களும் ஆணிகளோடு சேர்ந்து பெண் களும் மது வருந்துவதைப் பாடுகின்றன. இதுபோலவே கற்பொழுக்கம், ஒருவன் ஒருத்திக் கோட்பாடு போன்றனவும் இவர்களிடையே கடுமையாகப் பின்பற்றப்படவில்லை.
ஊரகந் தனில் இருக்கும் குடும்பர் ஆருக்கும் இது பிடிக்குமோ உடைச் சி கொழுந் தி கடைச் சி முலையில்
தெறிந்த சேற்றைச் சுரண்டியே தூரகந்தனில் பழுத்த பலவின் சுளையைத் தின்னெனக் கொடுக்கிறான் துடிக்கிறாள் அவள் உடுத்த சேலையை அவிழ்க்கிறான் பாரும் பள்ளிரே (திருமலைமுருகன் பள்ளு 167) என்பது போன்ற நடுகைப் பகுதிகள் வரம் பற்ற பாலுறவுச் செயல் களைக் கூறுகின்றன. இத்தகு அடித்தள உழைக்கும் பெண்களைத் திட்டவும் அடிக்கவும் பணி ணை விசாரிப் பாணி கள் உரிமைபெற்றிருந்தனர். அத்துடன் தங்கள் காமவேட்கையைத் தீத்துக்கொள்ளவும் பயன்படுத்தியுள்ளனர். (பட்பிரபந்தம் 105, திருமலை முருகன் பள்ளு 152)
நிலமானியச் சமுதாய அமைப்பில் நில மற்ற கூலிப் பெணி களை எவ்வாறெல்லாம் மேல் தட்டு மக்கள் பயன்படுத்திக் கொண்டனர் என்பது புலப்படுகிறது. அத்துடன் உயர்குடிப் பெண்களிடம் இல்லாத வகையில் இவர்கள் தம் கணவரை 'அவன், இவன்’ எனவும் ‘வாடா, போடா' எனவும் பேசும் உரிமை
ஒலை 30

Page 49
பெற்றிருந்தமையும் பள்ளு குறவஞ்சி இலக்கியங்கள் காட்டுவது குறிப்பிடத்தக்கது.
சில எத்தனிப்புகள்
தமிழக வரலாற்றைப் பொறுத்த மட்டடில், பெண்கள் நீண்ட காலம் அரசாண்டதும் நாயக்கர் காலத்தில் தான் என்பது
குறிப்பிடத்தக்கது. மங்கம்மாள் மற்றும் மீனாட்சி ஆகிய இருவரும் ஆட்சி
புரிந்துள்ளனர். ஆயினும் பெண்கள் எனும் வகையில் வேறுபட்ட தன்மைகள் ஏதும் இவர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்ததாகத்
தெரியவில்லை.
அடுத்து, நாயக்கர் காலத்தில் தோன்றிய புராணக் கதைச் சார்புப் பாடல்களான
அல்லியரசாணிமாலை, பவளக்கொடி,
போன்றவற்றில் பெண்கள் மேலாண்மை புரிபவர்களாகச் சிந்திரிக்கப்பட்டுள்ளனர். இது செவ்வியல் இலக்கியப் போக்கிலிருந்து
மாறுபட்ட பெண்மையர் சித்திரிப்புகளாக
அமைந்துள்ளன.
ஆகவே, பெண்ணியல் நோக்கில்
இலக்கியங்களின் துணையோடு நாயக்கர் காலச் சமுதாயத்தில் பெண்களின்
நிலையைக் காணும் போது, அவர்கள்
பேச்சுவரிமை பறிக்கப்பட்டவர்களாகவும்,
சொத்துடைமைக்காகக் கற்புக்கோட்பாடு
வலியுறுத்தப் பெற்றவராகவும், ஆணின் பாலுறவு மற்றும் பிற தேவைகளுக்காக
(ஓலை 20)

GD
வாழ்வோராகவும், சமூக உரிமைகளற்ற வர்களாகவும், சுய சார்பு சிறிதுமின்றி
வாழ்ந்தோராகவும் இருந்துள்ளமையை
அறிய முடிகிறது.
குறிப்புகள்
1. R. Sathyanatha Aiyar, History of the
Nayaks of Madura, P.30
2. தே.வே. மகாவலங்கம், விஜயநகரப் பேரரசில் நிலைபெற்றிருந்த பொருளாதார வாழ்க்கை வரலாறு. ப.
17
3. அ. பிரான்சிஸ், சேசுசபை மடல்களும்
தமிழ்ச்சமுதாய வரலாறும் (கட்டுரை). தமிழ்க்கலை 1.2. ப. 43-44 (மேற்கோள் கடிதப் பகுதி சுருக்கமாகத்
தரப்பட்டுள்ளது)
4. கல்வெட்டு - இதழ் 17 ப.2
5. விரிவிற்குக் காண்க: கோ. கேசவன்,
புராணக்கதைச் சார்புப் பாடல்களில்
ஆண் பெண் உறவுநிலை.
6. முனைவர் அ. இராமசாமி அவர்களின் ‘நாயக்கர் காலத் தமிழிலக்கியங்கள்
காட்டும் சமுதாயம் (வெளியிடப் பெறாத
ஆயப் வேடு. மதுரைக் காமராசர்
பல்கலைக்கழகம், 1986) இது தொடர்பாக
விரிவான தகவல்களைத் தருகிறது.
ള്
பங்குனி 2006

Page 50
(8)
"சங்கச் சான்றே 22.03.2006 இல் கொழும்புத் தமிழ்ச் சங்கத் தின விழா (தாபக தின விருது -2006’ வழங்கிக் கெளர சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள்
திரு.கு.நி.டேவிற்.பீரிளம் திரு.சி.செந்
இவர்களை ஓலை
‘ஓலை’ கொழும்புத் தமிழ் சாதாரண சந்தா விபரம் - (அஞ்சல் ଗ8F;
இலங்கை தனிப்பிரதி ரூபா இந்தியா ஒரு வருட
ஏனைய நாடுகள்: ஒரு வ
ஒலை க்கு உதவ விரும்புவோர் தங்க அல்லது வைப்பாக
4-l. 5Zai பிரோ பி:ே الیایی
கணக்கு இல. 77000/4908 rே/4:வெள்ளத்தைக்கு 프gl காசுக் கட்டளையாயின் "செயலாளர் கெ வெள்ளவத்தை தபால் அலுவலகத்தில் கொழும்புத் தமிழ்ச் சங்கம் அலுவலகத்தி
岑
քՈՊծ է أمرك لي)
 
 
 
 
 
 

ான் விருது -2006"
சங்கத்தின் அறுபத்தி நான்காவது விழா)வில் "சங்கச் சான்றோன் விக்கப்படும் கொழும்புத் தமிழ்ச்
மூவர்.
தில் நாதன் திரு.ச.சரவணமுத்து
வாழ்த்தி மகிழ்கிறது.
}ச் சங்க மதாந்த இதழ் * ஒரு வருடம் (2006) MON PLĖLUL) 菲
104 ஒரு வருடம் ரூபா 5004
இந்திய ரூபா வைக்
Ld5 TLD. 巽
ாழும்புத் தமிழ்ச் சங்கம்" என்ற பெயரில் ாற்றப்படக்கூடியவாறு அனுப்ப முடியும்: ஸ்நேரடியாகவும் செலுத்த முடியும்:

Page 51
്
With Best Compliments from
Mr. V. Nanc
No : 22, RO: KudapaduWa Tel: 031-4
266/5, Chil Periyamulla,
Te: 031
ܢܠ
 
 

da Kumar
sary Road , Negombo 492 1154.
aW Road
Negombo 2237.340
ހުހ

Page 52
With Best Co
Mr. V. Thillagc
Schhan Const
17/3, Don B Ethukala O777.
 
 
 

тpliтепts froт
rajah (Engineer) rUction UUork
DSCO MaWatha,
Negombo 531632