கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2006.05

Page 1
2
E
ព្រឹ
 


Page 2
Will Be SI COFFIF).
இலங்கையில் நூல்கள் விநியோகம், பதிப்புத்துறையில் பு
(TIDIDG GLIT
பூஜி 50, 52. பீப்பிள்ஸ் தொலைபேசி: 011-2472362
Iß5it5MjTü: cheman
UG 50, 52, People's Park,
 
 

ir Ver T5 frO777 :
விற்பனை ஏற்றுமதி இறக்குமதி தியதோர் சகாப்தம்
த்தகசாலை
பார்க் கொழும்பு-11. தொலைநகல் : 011-2448624 ladu (Gyahoo.com
Colombo-11. Sri Lanka.

Page 3
கொழும்புத் தமிழ்ச்ச திருவள்ளுவர் ஆண்டு :
6
நலில்
காண்பதறிவு 566)6 ஒலை 32 (փլգա ஆசிரியர் (3)R Y எமது பெ. விஜயரெத்தினம் (LDLQu வ. சிவஜோதி டவர் தெ. மதுசூதனன் ஆள் கலாநிதி வ. மகேஸ்வரன் நின்று த. கோபாலகிருஸ்ணன் 앞_6) எஸ். எழில்வேந்தன் ந. கணேசலிங்கம் 6 க. உதயகுமார் 69(b சி. அமிர்தலிங்கம் இருந்
s இல்ல தொகுப்பாசிரியர் : தா. சண்முகநாதன் வேை (LD956
அச்சுப்பதிவு : 6
பதிப்பகம் தில்6 35T(glibi - 13 தொலைபேசி 0777 350088 தில்6
6TLDg அட்டைப்படம் : அவர்
T6 LT6 (6b குருபர g
வெளியீடு : 6T (g கொழும்புத் தமிழ்ச்சங்கம் வாங் 7/57 வது ஒழுங்கை ોિઠETિ (உருத்திரா மாவத்தை) அடிச் கொழும்பு - 06, இலங்கை. தொலைபேசி: 011-2363759 g தொலைநகல்: 011-2363759 களு இணையத் தள முகவரி : கொ WWW.colombotamilsangam.org மின்னஞ்சல் முகவரி : தாழ tamilsangam (asltnet.lk U தோ ܢ
 

O Fங்க மாதாந்த இதழ்
தி. பி. 2037/விடை (மே) - வைகாசி 2006
ம்மவரின் பல்வேறு கலைவடிவங்கள் எப்படி புற்றிருக்கின்றதோ அதேபோல்தான் எழுத்துக் ஸ்யும். எழுத்தை மட்டும் நம்பி எம்மால் வாழ பாது. ஏதாவது ஒரு வழியில் அனுசரணைபெறாது மாதாந்தச் சஞ்சிகைகளைக் கூட நடாத்த பாது, நடத்துவோம் என்று நம்பிக்கையோடு புறப்பட் கள் கூட பின்னாளில் பல்வேறு இன்னல்களுக்கு ாகினர். தட்டுத்தடுமாறி இன்னும், இன்றும் சிலர் று பிடிப்பது மகிழ்ச்சிக்குரியது. வாழ்த்துக்கள்! ழயுங்கள்! ஒன்றுபடுங்கள்!
மது மாசிகையான ‘ஓலை’க்கும் இதே நிலைதான். பலமான தமிழ்ச் சங்க அமைப்பின் அனுசரணை ந்தும்கூட நாங்களும் தத்தக்கபித்தக்க தான். லாவிட்டால் மே மாதம் முதலாம் திகதி வெளிவர ண்டிய இதனை உங்களுக்கு யூலை மாதம் லாம் திகதி தரமாட்டோம்.
ம்மவர் எமது கலைகளை எப்படி நேசிப்ப லையோ அப்படியே எழுத்துக்களையும் நேசிப்ப லை. எமது கலைகளை எமது கலைஞர்களை கதைகளை எம்மவர் நேசிப்பதில்லை. இவர்கள் ர்களுக்கு ‘பூசைக்கு ஆகாத மலர்கள்’
iன்றிலிருந்து நாம் ஒரு விரதம் எடுப்போம். எமது த்தாளர்களது நூல்களை விலைகொடுத்து குவோம். யாருக்கும் 'ஒசி’யாக வாசிக்கக் டுக்க மட்டோம். எழுத்தாளர்களது வயிற்றில் க்கமாட்டோம்.
}துவரை ‘ஒலையை சொல்லொணாத் துன்பங் க்கு மத்தியில் தனியாகவும் கூட்டாகவும் முன் ண்டு வருவதற்கு உழைத்த அனைவருக்கும் சிரம் த்தி வணங்குகின்றோம். எதிர்காலத்தில் இதை பத்துடன் முன்னெடுத்துச் செல்ல முன்வருவோரை ழமையுள்ள வணக்கத்தோடு வரவேற்கின்றோம்.
(வைகாசி 2006)

Page 4
விளைச்சல் (குறுங்காவியம்)
களஞ்சியம்
U (UTafful
0 வேதசகாயகுமார் பார்:
U இலக்கியம் சினிமா?
0 தமிழ் இலக்கிய வரலா
முன்னோடி - ஞானப்பிரகாச சு
வார்த்தைச் சிறகினிலே.
ஆழத்தை அறியும் பயணம்
நூல் மதிப்பீடு
ய யாழ்ப்பாண அகராதி.
கவிதைகள் - இரா. சடகோட
சமுகத்தில் முன்மாதிரியாக வா
அமரர் நா. சோமகாந்தனுக்கு
சங்கப்பலகை
மறுவோலை
ஒலையில் இடம் பெறும் ஆக்கங்
பொறுப்பாவார்கள். கருத்த
வைகாசி 2006

(56).T.
வையில். O. O. O.
வாமிகள்
|ன், ஏறாவூர் தாஹிர்,
ழ்ந்தவர் கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்.
அஞ்சலி,
களுக்கு அவற்றைப் படைத்தவ ர்களே
களும் அவர்களையே சாரும்.
an —Qవాణు 32)

Page 5
குறுங்காவியம்
(கவிஞர் நீலாவணனின் “வேளான
இதுவரை : அன்னம்மா - செல்லையா கல்
கல்யாணத்திற்கு அழைப்பு
ஆடியும் கழிந்து மாத
ஆவணி ஆயிற்
போடியார் கந்தர் - ெ
புத்திரச் செல்வம்
ஈடிலார் ஈழகிப் போடி
எழில்மகள் அன்
சோடியாய்ச் சேரும்
சொல்லினர் வட்
கல்யாண நாளன்று மாப்
மாப்பிள்ளையைக் கூட்டிப்
கல்யாண நாளில் அ
காலையில் தோ
நெல்லினைக் குவித்து
நிறைகுடம் வை:
செல்லையா தலையி
சிறுகென அரைத்
புல்லுமாம் அறுகும் !
புதுநீரில் குளிக்க
(ஓலை 32)
 

-G)
9
- செங்கதிரோன்
ன்மைக் காவியத்தின் தொடர்ச்சி)
பாண ஏற்பாடுகள் எல்லாம் பூர்த்தியாகிவிட்டன.
நம்
றுாரில்
பொன்னு
செல்லன்
னம்மாவைச்
நாளை
டா' வைத்தே.
பிள்ளைத் தோழன் வந்து
போதல்.
ன்று
ழன் வந்து
மேட்டில்
த்த வீட்டில்
ல் பாலும்
ந்த மஞ்சள்
தப்பிப்
வார்த்தார்.
( வைகாசி 2006

Page 6
(வைகாசி 2006)
மாப்பிள்ளை வே
மாலையாய்ச்
கூப்பிட்ட சொந்த கூறைகொள் ஊர்ப்பட்ட உரித்
6liffghl6)LDIT85
மாப்பிள்ளைத் தே
மச்சானைக்
பெண்ணின் வி
அன்னத்தின் வீட்டு அடைந்ததும்
G
பெண்ணெலாம்
பீரங்கி வெடி
முன்னாலே அழக முகமெலாம்
அன்னமோ அை
அணங்கென
நீள் முடித் தேங்
நிறைகுடம்; பால் நிறத் துணி பரப்பிய பல
கால்களைத் தூக
கவனமாய்
கோலத்தைக் கை
குதுாகலம்

19. bÜ19
சால்வை இட்டு
5 காரர்
பெட்டி ஏந்தி
நுக்காரர்
F செல்ல
ாழன் முன்னே
கூட்டிப் போனார்.
ட்டை அடைதல்
} வாசல்
அங்குநின்ற குரவை வைத்தார்; யின் ஒசை!
கிப் போட்டி
மலர நின்றார்.
றயின் உள்ளே
அழகுக் கோலம்.
காயோடு படியில் வைத்த
|யை மேலே
கை மீது
5கிச் செல்லன்
ஏறி நிற்கும் ண்டு நெஞ்சில்
கொண்டார் கந்தர்.

Page 7
அன்னத்தைத் தே
அலையவே
எண்ணத்தைப் பு
என்னவோ கி
சொன்னதைக் கே
‘சுறுக்கா. {
புன்னைப்பூ சொரி
பொண்டுகள்
பதினெண்
நாலடி நான்மணி நானாற பால்கடுகங் கோவை பழ இன்னிலை சொல் காஞ்சி கைந்நிலை வாங்கீழ்க் க
1. நாலடியார்
3. இன்னாநாற்பது
5. கார் நாற்பது
7. ஐந்திணை ஐம்பது
9. திணைமொழி ஐம்பது
11. கைந்நிலை
13. திரிகடுகம்
15. பழமொழி
17. முதுமொழிக்காஞ்சி
( ᎦᎮᏍ)oᏙ) 32 )
 

நடிக் கண்கள்
நின்ற செல்லன்
ரிந்த பொன்னு
கனகம் காதில்
கட்ட பெத்தா
கா.!’ என்று சொல்ல
ரிந்தாற் போல
முறுவல் பூத்தார்.
- இன்னும் விளையும்.
கீழ்க்கணக்கு
ற்ப தைந்திணைமுப் மொழி மாமுலம்
யுடன் ஏலாதி யென்பனவே ணக்கு
நான்மணிக்கடிகை
இனியவை நாற்பது
களவழி நாற்பது
ஐந்திணை எழுபது
10. திணைமாலை நூற்றைம்பது
12. முப்பால்
14. ஆசாரக்கோவை 6. சிறுபஞ்சமூலம்
18. ஏலாதி
१.१.१११११
(வைகாசி 2006 )

Page 8
GD- - LC களஞ்
«биU/
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்ப் புலை மிக முக்கியமானவர். அவரது, புலமை ஆய யாவும் விரிவானவை. ஆழமானவை. பல்கை விட்டுச் சென்றுள்ள தடங்கள் கனதியானவை.
பேராசிரியர் பதவி கிடைத்த பொழுது ஆற்றிய கொண்டது ‘தமிழ்மொழி இலக்கியத்துக்கு இல கட்டுரை பல்கலைக்கழக ஆய்வுச் சஞ்சிகையில் தவிசுத் தொடக்கவுரை ஈழத்து இலக்கிய எழுதப்படுவதற்குமான முதன் மாதிரியாக அ
இன்று அவரது நினைவு நாளில் (12.05 முக்கியத்துவத்தைச் சமகாலப் பொருத்தப்பாட்டி நமக்கு புதிய புதிய பார்வைகள் கருத்துநி6ை
பேராசிரியரது பன்முக ஆளுமையை புலை ஆராய்ச்சிக் கருவிகளைக் கண்டுகொள்ள மு
(வேதசகாயகும
நவீன ஈழத்துப் படைப்புலகம் குறித்து தமிழக வெளிப்படுத்துவது மிகமிகக் குறைவு. இரு செய்துள்ளார்கள். அவர்களுள் ஒருவரே எப் குறித்து கட்டுரை எழுதியுள்ளார்.
காலத்தின் நேர்மையான பதிவுகளை சட்ட என்கிறார்.
சட்டநாதன் படைப்புலகில் சமூகச் சூழல் தன் பழமையின் பிடியிலிருந்து தன்னை விடுவித் நில உடைமை, உயர்சாதி, என்ற இறந்த ச அழுத்துகின்றன, இயல்பான வாழ்வை இழந் முன்னிறுத்தி இதைத் துலக்குவதில் படை மானுடமனங்களில் இவற்றின் தடயங்கை மொழிப்படுத்துவதில் தான் இவரது கவனம் படி சரி விகிதத்தில் இவரது எழுத்துகளில் கலந்
இவ்வாறு தேவசகாயகுமார் குறிப்பிட்டுள்ள
க.சட்டநாதன் தனித்துவமானவர்; முக்கிய
( வைகாசி 2006)

FuLIúD Y
தொகுப்பு - மூர்
'éiuir
oப் பாரம்பரியத்தில் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை |வு' மரபுகள் மற்றும் படைப்பிலக்கிய முயற்சிகள் லக்கழகத் தமிழ்த்துறைப் பாரம்பரியத்தில் அவர்
தொடக்கப் பேருரையின் பொருளாகப் பேராசிரியர் ங்கையின் பங்களிப்பு' எனும் விடயமாகும். இதன் ஒக்டோபர் 1948இல் வெளியாயிற்று. பேராசிரியரின் வரலாறு வரன்முறையாக ஆராயப்படுவதற்கு மைந்தது. 1968) நாம் பேராசிரியரது பன்முகப்பணிகளின் ல் வைத்து பொருள் கோடல் செய்ய, அப்பொழுது Uப் பிரச்சினைகள் மேற்கிளம்புவதை உணரலாம்.
மயை கற்றுக்கொள்வதன் மூலம் நாம் நமக்கான டியும்.
ார் பார்வையில்.)
த்தவர்கள் தமது கருத்துக்களை அபிப்பிராயங்களை ப்பினும் ஆங்காங்கு சிலர் சில முயற்சிகளைச் ). வேதசகாயகுமார். இவர் ஈழத்தமிழ்ச்சிறுகதை
நாதன், ரஞ்சகுமார் கதைகளில் காண முடிகிறது
னை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. துக்கொள்ளப் போராடும் சமூகம் அது. ஆனால் ாலத்தின் எச்சங்கள் சுமையாக அதன் கழுத்தை து தள்ளாடுகிறது. புறப்பார்வையில் நிகழ்வுகளை ப்பாளி நம்பிக்கை கொள்ளவில்லை. மாறாக ாத் தேடுகிறார். உணர்வுகளின் நுட்பங்களை ந்துள்ளது. எனவே இதில் வெற்றிகளும் சரிவுகளும் துள்ளன.
ார். உண்மையில் ஈழத்துசிறுகதை உலகில்
மானவர்.
(ஓலை 32)

Page 9
இலக்கியம்
தமிழ் இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் இை மலையாளம், சிங்களம் போன்றவற்றுடன் ஒt உணர்ந்துகொள்ள முடியும்.
தமிழ்த் திரைப்படங்களில் தமிழர் வாழ்ட வித்தியாசங்கள் யாவற்றையும் அடையாளப்படுத் இல்லை. ஆனால் மலையாள திரைப்படம், 6 அந்தந்த மொழி, சமூக பண்பாட்டு உணர்வுக யோடி வருவதைக் காணலாம். இந்தித் திை திரைப்படங்கள் இந்தித் திரைப்படங்களாக இரு ஜீவன் தான்.
குருதத் காஷ்மீர் பிராமண வகுப்பின் ஒரு பிரி குருதத் என்ற பெயரும் தோற்றமும் அவ6 திரைப்படங்களில் வங்காள வாழ்வும் வங்கத் இது போன்ற தன்மைகள் தமிழ்த்திரைப்பட இயக் என்ற கேள்வியை நாம் கேட்டுப் பார்ப்பதில் கொண்டவர்கள் தமிழ்த்திரைப்பட உலகில் உ பண்பாட்டு அரசியல் கூறுகள் அவற்றில் பேச
தமிழ் இலக் தமிழில் எழுதப்பட்டுள்ள தமிழிலக்கிய வரலாறு எழுதிய ‘தமிழிலக்கிய வரலாறு’ எனும் நூல் மிக
தமிழிலக்கிய வரலாறு எழுதியல் பற்றிய சிந்த ஒரு அடிப்படையை வழங்கியமையிலும் இ ந் அமைப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு காலப்ட காலப்பின்னணிகளையும் அவ்விலக்கியங்களுடை தெளிவாக விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது வரலாறு ஒரு பாட நூல். அதைவிட இத்துரை ஒரு கற்கை நெறியாக தமிழ் இலக்கிய வர அதற்கான முதற் பெரும் பாடநூலாக எழுதப்
இன்றுவரை இந்நூல் பல பதிப்புகளைக் மவுசைஇழக்காமலேயே உள்ளது. பல்கலைக் வகிபாகம் முக்கியமானது. இதன் விளைவுதான் வரலாறு போன்ற நூல்கள் நமக்கு கிடைத்தை கையளிப்பாக கடத்தும் திறன் மிக்கதாக உ6 ஆளுமை, ஆய்வு. உள்ளிட்ட பண்புகள் யாவும் காலத்தின் கட்டாயம். அத்துடன் ‘ஈழத்துத் தளங்களில் வைத்து நோக்குவதற்கான ஆய்லி கவனம்குவிக்க வேண்டும். இதற்கான உரைய பெற வேண்டும். பேராசிரியர் செல்வநாயகம் வழி செழுமைகளை உள்வாங்கிமேலும் மேலும் பு
(ஓலை 32)

○
+ ófsrud/r 이
டயிலான தாக்கம் அவ்வளவு நெருக்கமானதல்ல. ப்பிடும் பொழுது இதனை இன்னும் தெளிவாக
புலம், கலாசாரம் இவற்றின் தனித்தன்மைகள் }தும் பண்புகளை தன்மைகளை கொண்டிருப்பதாக வங்காள திரைப்படம் போன்றவை அப்படியல்ல. ளின் அடையாளங்கள், தனித்தன்மைகள் இழை ரப்படங்களில் முக்கியமானவர் குருதத். இவரது ந்தாலும் அதற்குள் கொப்பளித்த ஜிவன் வங்காள
வான சரஸ்வதி இனத்தைச் சார்ந்தவர் என்றாலும், ரை ஒரு வங்காளியாகவே காட்டின. குருதத் ந்திரைப்படங்களின் தாக்கமும் நிறைந்திருந்தது. க்குநர்களின் படங்களில் தமிழர் வாழ்வு உள்ளதா, ) தப்பு இல்லை. தமிழ் இலக்கியப் பரிச்சயம் ள்நுழையவேண்டும். தமிழர் வாழ்வு அதன் சமூக ப்படவேண்டும். முடியுமா?
திய வரலாறு )
று பற்றிய நூல்களுள் பேராசிரியர் வி.செல்வநாயகம் முக்கியமானது. இந்நூல் 1951 இல் வெளிவந்தது.
னையிலும் இத்துறைசார் எழுத்து முறைமைக்கான 5 நூலுக்கு முக்கியத்துவம் உண்டு. இந்நூலின் குதியின் இலக்கியங்களையும் அவை தோன்றிய டய பொருள், செய்யுள் மொழி ஆகியனவற்றையும் 1. பேராசிரியர் செல்வநாயகத்தின் தமிழ் இலக்கிய றயில் முதல் நூல். அதாவது பட்டப்படிப்புக்கான ரலாறு 1940களில் அறிமுகப்படுத்தப்பட்ட போது பெற்றது.
கண்டுள்ளது. பயன்பாட்டு நோக்கில் தனது கழக நிலைப்பட்ட தமிழ் கற்பித்தலில் இவரது ‘தமிழ் இலக்கிய வரலாறு’ ‘தமிழ் உரைநடை ம. பேராசிரியரது கற்பித்தல் அனுபவம் புலமைக் ஸ்ளது. இது போன்ற புலமை, ஆற்றல், திறன், ) செழித்து மடைமாற்றம் கண்டுவளர்ச்சி அடைவது தமிழ் இலக்கிய வரலாறு பலநிலைகளில் பல பு முறையியல் சார்ந்த பின் புலங்களை நோக்கி பாடல்களும் விமர்சனக் கண்ணோட்டமும் விரிவு வெந்த புலமை மரபு சமகால அறிவுப் பிரவாகத்தின் த்தாக்கமாக மலர்ச்சி பெற வேண்டும்.
{ வைகாச் 2006

Page 10
20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ் மொழிக் குத் தொணி டாற்றிய ஈழத்துப் பெரியார்களுள் தலைசிறந்த ஒருவராகத் தமிழறிந்த மக்கள் அனைவராலும் பாராட்டப் படக் கூடியவர் ஞானப் பிரகாச சுவாமிகள் என்பதை யாவரும் ஒப்புக்கொள்வர். இற்றைக்கு 50 ஆண்டுகட்கு முன்னே அவருடைய யெளவனப் பருவத் தில் கத்தோலிக்க குருமாருக்குரிய தவக் கோலத்தோடு, கம்பீரமான தோற்றம், அருள் கனிந்த பார்வை, கத்தோலிக்க மக்களிடத்துப் பரிவுகொணி ட உள்ள மி , இத்தகைய நல்லமைவுடன் விளங்கிய அப்பெரியாரை எனது சிறு பிராயத்தில் நான் பலமுறை கண்டதுண்டு. அந்தக் காலத்தில் நல்லூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் அவர் வாசம் செய்துகொண்டு அதன் சூழலில் உள்ள ஏனைய கிராமங்களில் தேவாலயங்களைக் கட்டுவித்து, அவ்வக் கிராமங்களில் வாழ்ந்த மக்களுட் பலரைச் சமய மாற்றம் செய்வித்தார். பலவகையிலும் அங்ங்ணம் சமய மாற்றம் பெற்ற மக்களை ஆதரித்து கத்தோலிக்க
(வைகாசி 2006)
 

ப்பிரகாச சுவாமிகள்
பேராசிரியர் வி. செல்வநாயகம்
மக்களின் தொகையைப் பெருகச் செய்துவந்த வரலாற்றை நோக்கும்போது சுவாமிகளைப் போலக் கத்தோலிக்க சமயத்துக்குத் தொண்டு புரிந்து வந்த குருமார்கள் மிகச் சிலர் என்றே கூறலாம். அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஏறக்குறைய 37 கோயில்களைக் கட்டுவித்து மூவாயிரம் மக்களை மதமாற்றம் செய்தார் எனக் கூறப்படுகிறது. இத்தகையதொரு தொண்டைச் செய்யக்கூடிய ஒருவருக்கு எத் துணை ஆற்றலும் சமயப் பற்றும் தியாகநோக்கும் இருந்திருத்தல் வேண்டும் என்பதை நாம் ஊகித்தறியலாம். அவர்களு டைய சமயத்தொண்டை நினைக்கும்போது 18ம், 19ம் நூற்றாண்டுகளில் சமயப்பிரசாரம் செய்து சைவமக்களை மதமாற்றம் செய்த ஐரோப்பிய பாதிரிமார்களும் குருமார்களும் கையாணி ட வழிகள் ஞாபகத்துக்கு வருகின்றன. றொபேட் டீ நெபிலி என்ற தத்துவ போதக சுவாமிகள் தொடக்கமாக ஞானப்பிரகாச சுவாமிகள் ஈறாக மக்களிடையே மதமாற்றம் செய்வதற்கு அவர்கள் கையாண்ட முறை ஒன்றுதான். அதாவது சைவ மக்களை மதமாற்றம் செய்வதற்கு அம்மக்களுடைய மொழியை நன்கு அறிதல். அவர்கள் செய்யும் வழிபாடுகள் பற்றியும் நன்கு ஆராய்ந்தறிதல். மக்களுடைய மனநிலை, சூழல், கலாசாரம், பொருளாதார நிலை ஆகியன பற்றி நன்கு அறிந்திருத்தல். இங்ங்ணம் பெற்ற அறிவின் பயனாக அம் மக்களுடைய மொழி வாயிலாக அவர்கள் வணங்கும் தெய்வங்கள் குறித்தும், அத் தெய்வங்களுக்குச் செய்துவரும் வழிபாடுகள் குறித்தும் குறைபாடுகள் கண்டு அவற்றை அவர்கள் மொழியில் நன்கு எடுத்துக்காட்டி அவர்களுடைய பேதமைப் பணி பை உணரச் செய்தல். நல்லறிவு

Page 11
கொடுத்தது போலத் தங்கள் சமயத்தைப் போதித்து அவர்களுக்கு ஆதரவளித்து அவர் களையும் அவர்களுடைய பிள்ளைகளையும் சமய வழியில் கல்வி பயிற்றி அவர்களுக்கு வேண்டிய பொருளுதவியைச் செய்தல் . இவ்வாறு பல வழிகளைக் கையாணி டு மத மாற்றம் செய்வதில் அனுகூலம் எயப் தினார் கள் . இந்த வழியைத்தான் ஞானப்பிரகாச சுவாமிகளும் கையாண்டார். ஆகவேதான் தமிழை அவர் நன்கு கற்றார். சைவத்தைப் பற்றி நன்கு ஆராய்ந்தார். இதன் பயனாகப் பல நூல்கள், துண்டுப் பிரசுரங்கள் முதலியவற்றைத் தமிழில் எழுதி மக்களிடையே பரப்பினார். அங்ங்ணம் அவர் எழுதியவற்றுள் சில பின்வருமாறு: இரண்டு பிரதான பொய்கள், ஒரு முக்கியமான கடமை, மோட்சப் பாதை, ஆன்மா, தெய்வக் குரு, கடவுள் மனிதர் கிறிஸ்துநாதர், சமய நியாயத் தீர்ப்பு, மனச்சாட்சி பாதிரி மதத்தினர் முதலியன. இவையெல்லாம் 4 பக்கங்கள் முதல் 40 பக்கங்கள் வரை வரையப்பட்ட நூல்களும் பிரசுரங்களுமாகும். ஒவ்வொன்றும் கத்தோலிக்க குருவான தனியொருவருடைய ஆக்க முயற்சியே என்பதை உணரும் போது அவரை யாவரும் பாராட்டாமல் இருத்தல்
(Մ)ւգեւ III Ֆl.
மக்களிடையே மத போதனை செய்வதிலும் இவருக்கு ஒப்பாரும் மிக்காரும் அக்காலத்தில் இருந்திலர் என்றே கூறாம். கத்தோலிக்க குடும்பங்களின் நன்மையின் பொருட்டுக் குடும்ப வாசம் என்ற ஒரு மாதாந்தப் பத்திரிகையை ஏனைய குருமார் களின் உதவியுடன் வெளியிட்டார். கற்றறிந்த கத்தோலிக்க திருச்சபையின் சரித்திரம் பற்றியும் உரையிலும் - பாட்டிலும் பலவற்றை எழுதியுதவினார். வண. பிதா ஜனோம் கொண்செல்வ்ஸ், வண. பிதா கப்றியஸ் பச்சிக்கோ, வண. பிதா சீதானோ அன்ரோனியோ ஆகியோர் எழுதி வைத்த நூல்களைத் திருத்தி அச்சிட்டு உதவினார். வண. பிதா லெஸ்ரர் எழுதிய பிரான்சீய நூலில் அடங்கிய கருத்துக்களை ஆண்டவர் சரித்திரம் என்னும் நூலாக வெளியிட்டார். வண. பிதா

-Ꮹ9Ꭰ பிறப் பல எண் பவர் எழுதிய நூலை கிறிஸ்துநாதரின் சரித்திர ஆராய்ச்சி என்ற நூலாக எழுதி வெளியிட்டார். வண. பிதா கல் என்பவர் எழுதிய ஒரு நூலை கத்தோலிக்க திருச்சபையும் அதன் போதனைகளும் என்ற பெயரோடு வெளியிட்டார். அவர் கத்தோலிக்க மத தத்துவங்களில் மட்டுமன்றித் தமிழையும் வட மொழியையும் நன்கு கற்று இந்து மத தத் துவங்களிலும் புராண இதிகாசக் கதைகளிலும் வல்லுநராய்ச் சிறப்புற்று விளங்கினராதலின் எத்தகைய சமய வாதங்களிலும் தன் கோள் நிறுவக்கூடிய ஆற்றல் அவருக்கிருந்தது. அதனால் அவர் கத்தோலிக்க சமயத்தை வளர்ப்பதில் தனிப் பட்ட பெருமை வாய் நீதவராயப் அக்காலத்திலே விளங்கினார். அவர் சைவ மதக் கொள்கைகளையும், வழிபாடுகளையும் படித்தறிந்து தம்முடைய சமய போதனைக்கு அவற்றைப் பயன்படுத்தினார் என்பதற்கு அவர் எழுதிய தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும் என்ற நுால ஒரு சிறந்த சான்றாக விளங்குகின்றது. அந்நூலின் 61ம் பக்கத்தில் தமிழகத்தாரின் ஆதித் தெய்வங்களுள் பேய்களே தலையிடத்தை வகிப்பனவாகக் காணப்படுகின்றன. காலஞ்சென்ற கணம் போப்பையர் இனிது கூறியபடி உண்மையான பழமையையுடைய தமிழ் நூல்களிலெல்லாம் ஐயை ஆகிய பேய்களே தமிழர் போற்றிய தெய்வங்களாக விளங்குகின்றன என்று கூறியிருப்பதை நோக்கும் போது சைவ
மதத்தைப் பற்றிய தம் அறிவைக் கததோலிக்க மதப் பிரசாரத்துக்கு எங்ங்ணம் பயன்படுத்தினார் என்பதை ஒருவாறு ஊகிக்கலாம்.
மேலும் அவர் செய்த தமிழ்த் தொண்டைப் பற்றிச் சில வார்த்தைகள் கூறுவோம். 19ம் நூற்றாண்டின் மத்திய காலத்தின் பின்னர் உள்ள காலந்தான் ஐரோப்பிய அறிஞர்கள் மொழி ஆராய்ச்சிகளில் ஈடுபடத் தொடங்கிய காலம். மக்ஸ் முல்லர் முதலானோர் சமஸ்கிருதம் முதலிய பண்டைய பாஷைகள் எல்லாவற்றையும் படித்து உலகில் உள்ள மொழிகள் எல்லாம் ஒரு வகுப்பைச்
{ வைகாசி 2006 )

Page 12
GO
சேர்ந்தனவா அல்லவா என்னும் ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினார்கள். இதன் பயனாக உலக மொழிகளை நான்கு மொழிக் குடும்பங்களாக வகுத்தனர். இங்ங்ணம் வகுத்த மொழிகளிற்றான் திராவிட மொழிக் குடும்பம் என்று ஒரு தனிக் குடும்பம் இருக்கக் கண்டார்கள். ஆகவே, அக் குடும்பத்தின் மொழிகளைப் பற்றி ஐரோப்பியர்களும் தமிழர்களும் ஆராயத் தொடங்கினார்கள். இத்தகைய மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டு தமிழறிஞர்களுள் முதலில் வைத்தெண்ணத் தகுந்தவர் ஞானப்பிரகாச சுவாமிகள் என்பதிற் சிறிதும் ஐயமில்லை. எல்லா மொழிக் குடும்பங்களுள்ளும் எது மிக முந்திய மொழிக் குடும்பம். அக்குடும்பத்துள் எது முக்கிய மொழி. அது எப்படி ஆரம்பித்தது என்ற இன்னோரன்ன ஆராய்ச்சிகளிலே சுவாமிகள் ஈடுபடத் தொடங்கினார்கள். இதன் பயனாக அவர் எழுதிய நூல்கள் பல. செந்தமிழ் முதலிய பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகள் பல. அவற்றையெல்லாம் நாம் தொகுத்துப் பார்க்கும்போதுதான் சுவாமியவர்களின் தமிழ்ப் பற்று. மொழியாராச்சி வன்மை முதலியவற்றைக் கண்டறிய முடிவதோடு இந்த ஆராய்ச்சியில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாது விளங்கினார் என்பதையும் அறிகின்றோம்.
இங்ங்ணம் அவர் மொழி ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு அவருக்கு உறுதுணை யாயிருந்தது பன்மொழியறிவு . சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரான்சீய மொழி, இலத்தீன், கிரேக்கம், கீபுறு ஆகிய மொழிகளிலே போதிய புலமை பெற்றிருந்தார். அவருடைய காலத்தில் மொழியாராய்ச்சிக்கு மிக்க மதிப்பும் இருந்தது. அதனால் அவருக்குத் தமிழ் இலக்கியத் திலேயே சிறந்த அறிவிருந்த போதிலும் இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபடாது மொழியா ராய்ச்சியில் ஈடுபட்டாரெனலாம். அவருடைய மொழியா ராயப் சி சியறிவைத் தமிழ் ச் சொற்பிறப்பாராய்ச்சி தமிழ் அமைப்புற்ற வரலாறு அதாவது சொற்களின் உண்மைப் பிறப்பு முதலிய நூல்களிலிருந்து அறியலாம்.
(வைகாசி 2006)

அந்த நூல்களிலே அவர் குறிப்பிட்டுள்ள பிற ஆராயப் சி சியாளர் களினி நுால களின் பட்டியல்களை நோக்கும்போது அவருக்கு மொழியாராய்ச்சி அறிவு எத்துணை பரந்ததாக இருந்தது என்பது தெரிகின்றது. இந்த இரு நூல்களையும் குறிப்பிடும் போது அவர் செந்தமிழ் 34ம் தொகுதி 193ம் பக்கத்தில் பின்வருமாறு கூறுகின்றார்.
“மொழி நூல் வேறு இலக்கண நூல் வேறு. முன்னையது தனிச் சொற்களின் இயல்பையும் அவை தம்முள் அடையும் மாற்றங்களையும் கூறும். பின்னையது சொற்கள் ஒன்றோடொன்று கூடும்போது முன்னிலை இறுதி நிலைகளிற் கொள்ளும் விகாரங்களை எடுத்தோதும். தமிழில் தொல்காப்பியம் முதலாகப் பல இலக்கண நூல்கள் எழுந்துள்ளன. மொழி நூல்களோ சமீப காலத்தில் மட்டும் வெளிப்படத் தொடங்கியனவாகும். மாகறல் கார்த்திகேய முதலியார் இயற்றிய மொழிநூல் இந்த நிரையில் முதன் முதற் செய்த பிரயத்தனமாய் மேலும் பல திருத்தங்களுக்கு இடனாய்க் கிடக்கின்றது. எனது தமிழ் அமைப்புற்ற வரலாறு என்ற நூலும் தமிழ்ச் சொற் பிறப்பு ஆராய்ச்சி என்னும் நூலும் யதார்த்தமான மொழி நூலினுக்கு உரிய அத்திவாரங்களை யிட்டன என்று சொல்லலாம்.”
இங்ங்ணம் அவர் கூறியதை நோக்குமிடத்துத் தமிழிலே மொழி நூல் ஆராயப் ச் சிக்கு அக்காலத்தில் இருந்த தேவை ஒருவாறு புலப்படுகின்றது.
ஞானப் பிரகாச சுவாமிகள் மதப் பிரசாரத்துக்காகவே தமிழை நன்கு கற்றனர். எனினும் தமிழ் மிகவும் அவரைக் கவர்ந்து கொண்டது. தமிழின் தொன்மை யையும் அதன் சிறப்பையும் அவர் உணர்ந்து கொண்டதனால் அதன் அத்திவாரத்தைத் தோண்டி ஆராய்ச்சி செய்யத் தமிழார்வம் அவரைத் தூண்டிற்று. எனவே தமிழ் அடிகளே சுமேரியம் முதலிய பண்டைய மொழிகளுக்கும் சமஸ்கிருதம், கிரேக்கம் , லத்தீனியம் , கொதிக் கம்,
(ஓலை 32)

Page 13
சர்மானியம், பழைய் ஆங்கிலம் முதலான இந்து ஐரோப் பிய பாஷைகளுக்கும் அத்திவாரமாயின என்ற முடிபு பல அறிஞர்கள் உவந்து ஏற்றுக்கொள்ளும்படி நிலைநாட்டப் படலாயிற்று. தமிழ்ச் சொற்களுடன் கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு, கோண்டி, குறுக்கூயி, பிறாகூய் ஆகிய தமிழ்ப் பாகதச் சொற்களையும் ஒப்புநோக்கித் தமிழ் அடிகளைக் கண்டுபிடித்து அவ்வடிக்ளினின்றே இந்து ஐரோப்பிய மொழிகள் கிளைத் தெழுந்தன என்ற உண்மையை எடுத்துச் சொல்லித் தமிழரின் பழைமையை நிலை நாட்டினார்.
தமிழுக் குச் செய்த தொணி டிலே ஞானப்பிரகாசசுவாமிகள் செய்த தமிழ்ச் சொற் பிறப் பாராயப் சி சியே மிக மிகச் சிறந்ததொன்றாகும் எனக் குறிப்பிடலாம். தமிழிலே உயிரெழுத்துக்களின் தோற்றம் பற்றிய தனி னுடைய கருத்துக் களை நிலைநிறுத்தவே தமிழ்ச் சொற்பிறப்பாராய்ச்சி என்ற நூலை எழுதி வெளியிட்டார் எனலாம். சுவாமிகள் கூறிய தமிழ் உயிர் எழுத்துக்களின் ஒலித்தோற்றம் பற்றித் தற்கால மொழி நூல் ஆராயப் சி சியாளர் களிடையே கருத்து வேறுபாடுண்டு. அகரமும் இகரமும் சேர்ந்து ஐகாரமாவது என்பதும் அகரமும் உகரமும் சேர்ந்து ஒளகாரமாயது என்பதும் தற்கால மொழி வல்லுனர்களால் ஏற்பட்டதொன்று. தொல்காப்பியரும் அகர இகரம் ஐகாரமாகும் என்றும். அகர உகரம் ஒளகாரமாகும் என்றுங் கூறியுள்ளார். ஆனால் ஞானப் பிரகாச சுவாமிகள் ஆகாரமும் இகரமும் சேர்ந்த சேர்க்கையால் ஐகாரம் பிறந்தது என்றும் கூறுகின்றார். இந்த அடிப்படை வேறுபாடு மொழி நூல் அறிஞர்களால் ஏற்கப்பெறுவதில்லை. ஐகாரம் ஒலியின் தோற்றம் பற்றி ஞானப்பிரகாச சுவாமிகள் இப்படிக் கொண்ட போதும் அறிஞர் கால்டுவெல் அவர்கள் அகர இகரத்தின் சேர்க்கையால் ஐகாரம் பிறந்தது என்று சொல்லாமல் எகார இகரத்தின் சேர்க்கையால் ஐகாரம் பிறந்தது என்கிறார். அகர இகரமும்
ஒலை 32)

-GD
ஐகாரமாயின என்று தொல் காப்பியர் கொண்டதே பொருத்தமுடையதாகும்.
ஞானப்பிரகாச சுவாமிகள் சொற்களின் அடித்தோற்றம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டது மட்டுமன் றிச் சொற்கள் அமைப் புற்ற வரலாற்றிலும் ஈடுபட்டார். அவ்வாறு சொற்கள் அமைப்புறும் போது அவை கட்டப்படும் கட்டுக்களாற் சொற்கள் கருத்துக்களில் வேறு படுவதைச் சுட்டிக்காட்டுகிறார். திராவிட நாகரி கத்தின் உற்பத்தியிடமான மொகஞ்சதாரோ கரப்பா ஆகிய இடங்களில் ஆராய்ச்சியில் ஈடுபட்ட சுவாமி ஹீராஸ் அவர்களுடன் ஞானப்பிரகாச சவாமிகள் தொர்புகொண்டதால் மேல் நாட்டாரின் ஆராய்ச்சித் துறையிலும் பரிச்சயம் பெறத் தன் னைத் தயார் படுத்திக்கொண்டார். மொகஞ்சதாரோ கரப்பா நாகரிக வளர்ச்சியைப் பெற்றிருந்த நாடுகளாக சுமேரியா, பாபிலோனியா என்னும் நாடுகள் விளங்கின. இவை யாவற்றிலும் ஆறு, மலை, ஊர் என்னும் பெயர்ச்சொற்கள் இடம் பெறுகின்றன. சுமேரிய நாகரிகத்திலேயே பெறும் பெயர் களர் தானி சிந்து வெளி நாகரிகத்திலும் இடம்பெறுகின்றன. எனவே, ஆதிகாலத்திலே தமிழரின் பொதுவான இருப்பிடம் உலகெலாம் பரந்திருந்தது என நிலைநாட்டினார். செந்தமிழிலே அவர் எழுதிய பண்டை மக்களின் பொது இருப்பிடம், பண்டைத் தமிழர் என்னும் கட்டுரைகளிலே தம்முடைய கருத்துக்களை நிலை நிறுத்தியமையை தெளிவாக உணரலாம்.
ஞானப்பிரகாச சுவாமிகள் மொழியியல் ஆராயப் க்சியில் மட்டுமன் றிச் சரித்திர ஆராய்ச்சிகளிலும் சிறந்து விளங்கினார். இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் சரித்திர ஆராய்ச்சி பற்றி நிறைய எழுதியுள்ளார். சிறப்பாக யாழ்ப்பாணத்தின் சமய சமூக வரலாறுகள் அவர் கவனத்தை மிகவும் கவர்ந்தன. போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் காலங்களில் யாழ்ப்பாணச் சரித்திரம், தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும், யாழ்ப்பாணத்து வரலாற்று ஆராய்ச்சி நூல் என்பன அவரால்
வைகாசி 2006

Page 14
தமிழிலே எழுதப்பட்டவை. இலங்கையில்
கத்தோலிக்க தேவாலயங்களின் சரித்திரம் 1ம் பகுதி, யாழ்ப்பாணத்தில் அத்தியட்ச குருவின் ஆட்சிஸ்தானத்தில் 25 வருடங்களாகக் கத்தோலிக்க இலக்கியத்தின் சரித்திரம் என்பன அவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வையாகும்.
ஞானப்பிரகாச சுவாமிகளின் சிந்தனை பண்டைய நாகரிகத்தை ஆராய்வதிலும் அதன் சிறப்பைப் பிறருக்கு எடுத்துக்காட்டுவதிலும் பிற்காலத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டது பண்டைத் தமிழர்களுடைய கொள்கை களுக்கும் ஆரியரது கொள்கைகளுக்கும் வேறுபாடுகள் பல தொடக்கத்தில் இருந்தன. உதாரணமாக ஆசிரியர் இறந்த பின் சுவர்க்கப் பேறடைதலையே உயர்நிலையாகக் கொண்டி ருந்தனர். பண்டைத் தமிழரோவெனின் இறப்பின் பின்னரும் பிறப்பு உண்டு என்றும், பிற பிறப்புக்களினின்றும் விடுதலை பெறுவதே உயர்நிலை என்றும் கருதியிருக்கின்றனர். சுவர்க்கப் பேறடைவதற்கு ஆரியர் வேள்வி களைச் செய்தனர். பண்டைத் தமிழர் பிறவா நிலையை அடைவதற்குச் சரியை கிரியை யோகம் ஞானம் ஆகியவற்றைப் படிமுறையால் அனுட்டித்தனர். பிற்காலத்தில் வேறுபாடு நீங்கி பண்டைத் தமிழரது கொள்கைகள் வாழ்க்கை முறைகள் ஆகியன ஆரியர்களால் விரும்பி ஏற்கப்படலாயின. இவ்வாறே ஆரியர் முதலான பிற இன மக்களும் அன்றாட வாழ்வு முதல் அரசியல் வாழ்வு வரை எல்லா நிலைகளிலும் பண்டைத் தமிழர் வேறுபட்டவராய் மிக்க சிறப்புடையதொரு நாகரிக வாழ்க்கை நடத்தினர் என்பதைப் பல்வேறு ஆதாரங்கள் மூலம் செந்தமிழ் 43ம், 45ம் தொகுதிகளில் விரிவாக விளக்கியுள்ளார்.
சுவாமிகளுடைய வாழ்க்கைத் தொடக்
வைகாசி 2006)

கத்தில் கத்தோலிக்க சமயத்தைப் பரப்புவதிலும் பலருமறியச் செய்வதிலும் ஈடுபட்டிருந்தது. அதன் பின்னர் அவருடைய வாழ்க்கை மொழியாராய்ச்சியில் ஈடுபட்டதன் பயனாகத் தமிழின் தொன்மையை எடுத்துக்காட்டுவதிலே செலவிடப்பட்டது. அவருடைய இறுதிக்காலம் தமிழ் மக்களது நாகரிகத்தின் தனிச் சிறப்பை நிலைநாட்டுவதற்கு வேண்டிய ஆராய்ச்சித் துறையில் ஈடுபடுவதாயிருந்து பண்டைத் தமிழரின் நாரீக வாழ்விலும் சமய வாழ்விலும் நெருங்கிய ஈடுபாடுடையதாக விளங்கிற்று. இங்ங்ணம் தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்ட சுவாமிகள் தமிழிலே சொற்பிறப்பகராதி ஒன்றை அமைத்தல் வேண்டும் என்று உள்ளம் கூர்ந்து முயற்சி செய்து வந்ததின் பயனாக அவி வகராதியின் ஐந்து பகுதிகள் வெளியிடப்பட்டன. அவ்வாக்க முயற்சியை அவர் தொடர்ந்து செய்து முடிக்கும் பேறு அவருக்குக் கிடையாது போயிற் று. அவ்வேலையைத் தொடர்ந்து வணக்கத்து க்குரிய பிதா டேவிற் அவர்கள் செய்து வருகி றார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியுறு கின்றோம். இந்த ஆக்கவேலை பூரணமாகச் செய்து முடிக்கப்படுமாயின் கத்தோலிக்க மக்க ளாற் தமிழுக்குச் செய்யப்பட்ட பெருந்தொண்டு இது என்று தமிழ் உலகத்தாரால் என்றென்றும் பாராட்டப்படும் பெருமையுடையதாகும்.
நன்றி பேரா. வி. செல்வநாயகம் கட்டுரைகள், குமரன் பதிப்பகம் 2004 (21.01.68இல் இலங்கை வானொலியில் ஒலிபரப்பட்டது.)
}
—@ఐణ 32)

Page 15
வார்க்கைச் പ്രസ്ത്രം
தொல்காய்பிய
தொல்காப்பியம் யாருக்காக எழுதப்பட்டது ஈர்த்துள்ளது. தொல்காப்பியத்தில் சொல், அவை யாரை நோக்கியவை? யாருக்கு தமிழை, தமிழின் இயல்புகளை அதனுடைய இயல்புகளை எடுத்து விளக்குகின்ற ஒரு நூ செய்கின்ற முறைமையில் அதன் ஆழ அகல காணப்படுகின்றது. இலக்கண நூல்கள் சும்ம தேவை இருத்தல் வேண்டும். அத்தகைய ே
உதாரணமாக எழுத்து அதிகாரத்தை எடு மரபு, மொழி மரபு என்றே சொல்வார். அந்த என்றெல்லாம் வரும். சொல்லதிகாரத்தில் கிள வருவார்.
இவற்றைப் பார்க்கும் போது தொல்கா முற்றிலும் தமிழ்ப் பண்பாட்டைச் சேராத மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்ட ஒரு [ தொல்காப்பியர் வடமொழி இலக்கண, வ காட்டி அவற்றோடு வைத்து இலக்கண மரபு
வீரன் 6
அக்காலத்தில் வேந்தர்களும் குறுநில ம மக்களை பகைவரிடமிருந்து காக்கவும், ஈடுபட்டனர். போரில் விழுப்புண்பட்டு வீரமர6 புறமுதுகிட்டு ஓடுவதும் முதுகில் அம்பு பா புற இலக்கியங்கள் மிக அழகாக எடுத்துக்
நீள்கழல் மறவர் செல்வுமிச் வாள்போழ்ந்து அடக்கலும் உ அண்ணல் யானை அடுகளத் அருஞ்சமம் ததைய நூறிநி பெருந்தகை விழுப்புண்பட்ட

G3) சிநகினிலே,ஆ
தொகுப்பு : மூர்
по шпорезътъ?
? என்கிற வினா முக்கியமாக பல அறிஞர்களை பொருள் அதிகாரங்களை நோக்கும் போது எழுதப்பட்டவை? அப்படிப் பார்க்கிற போது
எழுத்து, சொல், இலக்கியப் பொருள் ஆகிய லாகக் காணப்படுகின்றது. அதனை அறிமுகம் ங்களை எடுத்துக் கூறுகின்ற ஒரு தன்மையாகக் ா தோன்றிவிடுவதில்லை. ஒரு அத்தியாவசியத் தவை யாது?
}த்துக் கொண்டால் தொடங்கும் போதே நூல் அடிப்படையில் தான் பிறப்பியல், சொற்புணர்ச்சி வியாக்கம் அதன் பிறகு வேற்றுமைத் திணைக்கு
ப்பியம் தமிழை நன்கு கற்றறிந்த, ஆனால் பல அறிஞர்களுக்கு அல்லது உயர் கல்வி நூலாகவே எனக்குப்படுகிறது. பல இடங்களில் டமொழி பாரம்பரியங்களைச் சமாந்திரமாகக் புகளை நோக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
பேராசிரியர் கா. சிவத்தம்பி, உங்கள் நூலகம், (மார். ஏப். 2006, பக். 19.)
என்றால்?
ன்னர்களும், இனகுழுத் தலைவர்களும் தங்கள் நாட்டை விரிவுபடுத்தவும் அடிக்கடி போரில் ணம் அடைவது பெருமையாகக் கருதப்பட்டது. ய்தலும் இழிவாகக் கருதப்பட்டன. இவற்றைப் கூறுகின்றன.
செல்கென
டய்ந்தனர் மாதோ
து ஒழிய
மாறே (புறம் 93)
{ வைகாசி 2006

Page 16
GD
என்ற பாடல் விழுப்புண்பட்டு இறத்தை இழிதகைவையும் சுட்டிக்காட்டுகிறது. ஆக சிறப்பு என்ற எண்ணம் அக்கால மக்களிட
- முனைவர் வ. ஜெயா, ‘சங்
நாகரிகம்
பழங்காலத் தமிழருடைய நாகரிகத்தை என்பதை இங்கு ஆராயலாம். நாகரிகம் பழக்கவழக்கங்கள் என்பதாகப் பொருள்படு வாழ்ந்த இடங்கள் நாட்டுக்குத் தலைநகரா புலவரும், வீரர் முதலியோரும் வாழ்ந்து செயல்களும் ஒழுக்கமும் நாகரிகத்துக்கு 6 அக்காலத்தில் உயர்ந்த நோக்கங்களைக் ெ வீரம், கொடை, கல்வி, நல்லொழுக்கம் போ நாகரிகம் என்பதற்கு அன்று சிறந்த ெ பழக்கவழக்கங்கள் மட்டுமன்றி, உள்ளப்ப வழங்கிற்று.
‘பெயக்கண்டும் நஞ்சுை நாகரிகம் வேண்டு பவர்
என்று திருவள்ளுவர் கூறும் போது, உடையவர்களையே ‘நாகரிகம் வேண்டுப6
காலப் போக்கினால் சொற்பொருள்கள் பொருளும் எவ்வளவோ மாறுபட்டிருக்கிறது நகரவாசத்தையொட்டிய போலி வாழ்க்கை. மக்கட் பண்புகள், வீண் ஆடம்பரம் ஆகியவற் வாழ்க்கையின் செம்மையையோ ஒழுக்க சிறப்பையோ சுட்டுவதற்கு நாகரிகம் என் பண்டை மக்களின் சிறப்பியல்புகளை எ பொருந்தாது. அவர்களுடைய கருத்துக்கt "பண்பாடு' என்ற சொல்லால் குறிப்பிடலா சொல்லுக்கு என்ன பொருள் கொள்ளுகிற சொல்லுக்கும் உரியது.
- அறிஞர் மு. அருணாசலம் 'புறநானூறு
(வைகாசி 2006)

லயும் வாளால் பிளந்து அடக்கம் செய்யும் வே வீரன் என்றால் போரில் மாய்வது தான் த்திலிருந்தது என்பதை இது காட்டுகிறது. கப் பெண்பாற் புலவர்களின் மொழியும் கருத்தும்" Ljáš. 4-5, 2003.
? பண்பாரு?
நக் குறித்துப் புறநானூறு என்ன கூறுகிறது ) என்ற சொல்லானது நகரத்தோடொட்டிய ம். பண்டைக் காலத்திலே, அரசர் முதலியோர் யிருந்தன. அவர்களைச் சுற்றியே அறிஞரும், து வந்தனர். இவர்களுடைய வாழ்க்கையும் ாடுத்துக்காட்டாக இருந்தன. தமிழ் மன்னர்கள் காண்டு வாழ்ந்தமையாலும், அவர்களையொட்டி ன்ற அரிய மக்களியல்புகள் வளர்ந்தமையாலும் பாருள் இருந்தது. புறத்திலேயுள்ள வெறும் ண்பின் உயர்வுக்கு நாகரிகம் என்ற சொல்
ன் டமைவர், நயத்தக்க
இத்தகைய சிறப்பான உள்ளப்பணிமை வர்’ என்ற சொற்களால் குறிப்பிடுகிறார்.
மாறுபடுகின்றன. நாகரிகம் என்ற சொல்லின் . இன்று பேச்சுவழக்கிலே, அச்சொல்லானது கேடான பழக்க வழக்கங்கள், சிறப்பில்லாத றைக் குறிக்கும் ஏளனச் சொல்லாக இருக்கிறது. த்தின் சீலத்தையோ உள்ளப் பண்புகளின் ற சொல் இன்று பொருத்தமாகாது. எனவே டுத்துக் காட்டுவதற்கும் இச் சொல் இன்று ளையும் உள்ளப்பண்பையும் ஒழுக்கத்தையும் ாம். வள்ளுவர் போன்றோர் நாகரிகம் என்ற ார்களோ அதே பொருள்தான் பண்பாடு என்ற
ம் தமிழரும்’ எனும் தொகுப்பில் ‘தமிழ் பண்பாடு’ கட்டுரை பக். 67 - 68

Page 17
இரட்டைச்
ஐம்பெருங் காப்பியம் என்று வழங்கும் நூ காப்பியம் எனப்படும் சிலப்பதிகாரமும் ம தோன்றிய பேரிலக்கியங்களில் இன்று மு இவற்றுடன் முன்பின்னாகத் தோன்றிய தகடு காவிய இலக்கணம் தமிழிலே வந்து புகுமு5 மேகலையையும் ‘காப்பியம்’ எனக் கொள்ளா தொடர்நிலை என்னும் வழக்கும் முதன் முதலி இவ்விரு நூல்களின் ஆசிரியரும் தத்தம் பணி
'சிலப்பதிகாரம் என் நாட்டுதும் யாம் ஓர் என்ற சிலப்பதிகாரமு
மாவண் தமிழ்த்திற ஆறைம் பாட்டினுள் என்று மணிமேகலைப் பதிகமும் கூறும். ே நூல்களும் கி.பி. எட்டாம் நூற்றாண்டளவி வரையுள்ள காலப்பகுதியாகிய முற்காவிய வடமொழிச் செல்வாக்கினைத் தமிழிலே கண் இங்கும் அம் முறையினைக் கடைப்பிடித்து முதலாய நூல்களுக்குக் காலத்தாற் பிற்பட் பலவழிகளில் சிறந்த ஆராய்ச்சியாளராக வி “காவியகாலம்’ என்னும் காலப் பிரிவிற்கு யாவற்றையும் அடக்க முற்பட்டதன் அ காலவாராய்ச்சிலே, நுண்ணிய உயர்ந்த பிரசித்தப்படுத்திய அப்பேரறிஞர் தமிழ்நாட் நோக்கியிருப்பாரேல் இத்தவறான முடிவிற்கு வ (சங்க காலத்தை) அடுத்த காலப்பகுதியி கருத்தையும் நிராகரித்திருக்க மாட்டார்.
மணிமேகலையைப் பற்றிக் குறிப்பிடும் காணப்படும் சமயப் பிரச்சாரத்தை விதந்து “பிற சமயங்களை இகழும் நோக்கம் கொன சாத்தனாரை விடக் கவித்துவத்திற் சிறந்து கொள்கையைப் பின்பற்றியே தனது பேரிலக்கி தத்துவங்களை இலக்கியமாக்கியுள்ளன எ6 பிற்காலத்தெழுந்த காவியங்களுக்கு இவை
G
பேரா. க. கைல

GS)
)களுள்ளே காலத்தால் முற்பட்டன இரட்டைக் னிமேகலையுமாம். வீரயுகத்திற்குப் பின்னர் ழமையாக எஞ்சியிருப்பன இவ்விரண்டுமே. யாத்திரை பெரும் பகுதி மறைந்து விட்டது. ானரே தோன்றிய காரணத்தால் சிலம்பையும் து தொடர்நிலைச் செய்யுள் என்பர். ஆயினும் லே தண்டியலங்காரத்தில் தான் காணப்படும். >டப்பைப் பாட்டு என்று கூறியமைந்தனர்.
காய்பியம்
றும் பெயரால்
பாட்டுடைச் செய்யுள்
ம்,
ம் மணிமே கலை துறவு அறியவைத் தனனென்’
பராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை இவ்விரு லே தோன்றின என்றும், 750 முதல் 1000 காலத்தைச் சேர்ந்தன என்றும் வாதிடுவர். ாடு காட்டுவதிற் பெரிதும் ஈடுபாடுடைய அவர் வடமொழிப் பரத சாஸ்திரம், பஞ்சதந்திரம் டது சிலப்பதிகாரம் எனக்காட்ட முயல்வர். lளங்கிய அன்னார் தான் வகுத்துக்கொண்ட ள் (கி.பி. 750-1200) பெருங்காப்பியங்கள் னர்த்தமே மேற்கூறிய முடிவு எனலாம். ஆழ்ந்த கருத்துக்கள் பலவற்றையும் டுச் சமூக வளர்ச்சியைச் சிறிது கூர்ந்து ந்திரார், இரட்டைக் காப்பியங்கள் வீரயுகத்தை லே தோன்றியிருத்தல் வேண்டும் என்னும்
இலக்கிய வரலாற்றாசிரியர் பலரும் அதிற் கூறியுள்ளனர். பெளத்த காப்பியமான அது Iடது” என்பர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார். விளங்கும் இளங்கோவடிகளும் சமணக் பத்தை இயற்றியுள்ளனர். இவ்விரு நூல்களும் Tபதை மறுப்பவர் இலர். அந்த வகையிற் வழிகாட்டிகள் எனலாம்.
சபதி, ‘பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்' பக். 107.108. 3ம் பதிப்பு 1999
ー வைகாசி 2006 )

Page 18
இலங்கையர்கோன்
ஈழத்து இலக்கிய வானில் சுடர் விட்டுப் பிரகாசித்த எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் இலங்கையர் கோன். இவரது இயற்பெயர் ந.சிவஞானசுந்தரம். 18 வயதிலேயே எழுத்துத் துறையிற் புகுந்த இவர் சமஸ்கிருதம், தமிழ், லத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆழ்ந்த பயிற்சியுள்ளவர். மண்வாசனை தவழும் இவரது படைய்புக்கள் ஈழத்தில் மட்டுமன்றித் தமிழகத் திலும் போற்றிய் புகழப்பெற்றவையாகும்.
ஷேக்ஸ்பியரது படைப்புக்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட இலங்கையர்கோன் அதன் உந்துதல் காரணமாக ஒற்றையங்க, தொடர் நாடகங்கள் பலவற்றை எழுதினார். பச சோந்திகள், லண்டன் கந்தையா, வீதானையார் வீட்டில், மிஸ்டர் குகதாசன், ஆதியாம் நாட கங்கள் எருத்தக் காட்டுகளாகும். இந்நாட கங்கள் பன்முறை மேடையேற்றப்பட்டு வெற்றி பெற்றன.
ஈழகேசரி, கலைச்செல்வி, ஈழநாடு, தமிழின்பம், வீரகேசரி, தினகரன் ஆகிய ஈழத்து இதழ்களிலும் கலைமகள், சூறாவளி, மணிக் கொடி, பாரதத்தாய், சக்தி, சரஸ்வதி, ஆகிய தமிழக இதழ்களிலும் இவரது படைப்புக்கள் வெளியாயின.
(வைகாசி 2006)
 

ழத்தை அறியும்
111160LiD
இவர் முப்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். 15 சிறுகதைகளைக் கொண்ட வெள்ளிப்பாதசரம் என்னும் சிறுகதைத் தொகுதி 1962ஆம் ஆண்டில் வெளியாயிற்று. IDITg56 மடந்தை மிஸ்டர் குகதாசன் நாடகங்களும் நூலுருப் பெற்றுள்ளன. இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த இலங்கையர்கோன், காரியாதிகாரியாகப் (தற்போதைய உதவி அரசாங்க அதிபர் பதவி) பணியாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராவார். அவரது படைப்புக்கள் என்றும் அவரது பெயரை நினைவூட்டும் என்பது திண்ணம்.
நன்றி : தேர்ந்த தமிழ்ச் சிறுகதைகள்
சிறுகதை மும்மூர்த்திகள் என்று போற்றப்பட்ட சம்பந்தன், இலங்கையர்கோன், வையித்திலிங்கம்என்ற மூவரில் இலங்கையர்கோனும் வையித்திலிங்கமும் வடக்கே ஏழாலை எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் உறவினரும்கூட.
இலங்கையர்கோன் என்று தனக்குய் புனைபெயர் சூட்டிக்கொண்டதன்மூலம் இராவணனை அவர்நன்கு நேசித்தது புலப்படுகின்றது. மணியகாரன் என்று அழைக்கப்பட்ட சிவஞான சுந்தரம் முற்போக்குச் சிந்தனைகொண்டவர். சாதியத்துக்கு எதிராக 1935களிலே போர்க்கொடி தூக்கியவர். மணியகாரன் என்பது தற்போதைய உதவி அரசாங்க அதிபர். பதவி வழிவந்த பட்டம் அது அவருக்கு வெள்ளிபாதசரம் 'வஞ்சம்’ ‘மச்சாள் இவரின் புகழ்பூத்த சிறுகதை களுள் சில."மச்சாள் என்ற இச்சிறுகதையை'ஒலை வாசகள்களுக்குத் தருவதில் நாங்கள் மகிழ்ச்சியடை கின்றோம். மண்வாசனை இதிலே மண்டிக்கிடக்கிறது. ஒரு கிராமத்தையே கதையில் தரிசிக்கின்றோம்.
தொகுப்பாசியர்.
-0@ఐణం 7)

Page 19
DEFE
என் எட்டு வயதின் ஆச்சர்யத்தால் அகன்ற கண்களுடன் பார்க்கும் பொழுது இருபது வயது கடந்த என் மைத்துனியைப் போல அழகான பெண் இந்த வையகத்தில் இருக்கமுடியாது என்றே தோன்றிற்று.
ஹெலன், சீதை, கிளியோப்பாற்றா முதலிய உலகப் பிரசித்தி பெற்ற அழகிகளைப் பற்றியெல்லாம் அந்த வயதிலேயே கேள்வியுற்றிருந்தேன். அவர்கள் எல்லாம் என் மைத்துனியிடம் பிச்சை வாங்க வேண்டும்; அல்லது அவர்கள் எல்லாருடைய அழகையும் வேடிக்கை பார்க்கும் ஒரு விதி சேர்த்து சமைத்துவிட்ட ரூபமோ அவள்! பளிங்குக் கன்னங்களின் மேல் பதறிச் சிறகடிக்கும் கருங்கண் இமைகள் அவைகளின் மேல் குவளையின் கருமையைச் சாறாக்கி வடித்து யாரோ ஒரு அழகுக் கலைஞன் மெல்லியதாக வளைந்து வரைந்துவிட்டது போன்ற புருவங்கள் அவைகளின் மேல் வெண்பிறை நுதல்.
நான் மெயப் மறந்து அவளையே கண்கொட்டாமல் பார்த்தபடி உட்கார்ந்து இருந்தேன். அவள் தன் நீண்ட கருங் கூந்தலை வாரிக் கொண்டிருந்தாள். சீப்பின் பற்கள் சிதறிவிடும் படி அத்தனை அடர்த்தியாகவும் இருந்தது. அவளுடைய கூந்தல்.
‘என்னடா, அப்படிப் பார்க்கிறாய்?
நான் மாங் காயப் திருடுகையில் கையுங்களவுமாய்ப் பிடிபட்ட சிறுவன்போல் அலறி அடித்துக்கொண்டு எழுந்து நின்றேன். என் சேப்பில் இருந்த கண்ணாடி "மாபிள்கள் அலங்கோலமாகச் சிமெண்ட் நிலத்தில் விழுந்து சிதறின. அத்துடன் என் கனவும் கலக்கமும் கலைந்தன.
‘ஒண்டும் இல்லை'

G17)
FI resir
பின்னை ஏன் அப்பிடி என்னை விழுங்கிற மாதிரிப் பார்த்துக் கொண்டிருந்தாய்?
'உம்மை எப்ப நான் பார்த்தனான்? அந்தச் சுவரிலை இருக்கிற பல்லியை அல்லவோ நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
‘இல்லை, என்னைத்தான் நீ பார்த்தாய்'
உம் மிலை எண் ன கிடக் குது பார்க்கிறதுக்கு ஒகோ, அப்பிடியோ உமக்கு யோசனை?
‘ஏன்டா, நான் வடிவில்லையே?
சிறுவனாகிய என்னுடன் எதுவும் பேசலாம் என்ற எண்ணம் போலும் அவளுக்கு. தான் அழகானவள் என்று அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது. அத்துடன் அதைக் குறித்து இறுமாப்பும்.
‘சொல்லேன்டா; நான் வடிவில்லையே?
“எனக்கு அதெல்லாம் தெரியுமே?
‘இந்த வயதிலை சினிமாப்படம் எல்லாம் பார்க்கிறாய். நாவல்ஸ் புத்தகம் எல்லாம் படிக்கிறாய். இது மட்டும் தெரியாமல் கிடக்கே உனக்கு? சொல்லு மச் சான்,' என்று குழைந்தாள்.
அவள் என்னைத் திடுக்கிட வைத்ததற்காக அவள்மேல் வஞ்சம் தீர்த்துக்கொள்ள முனைந்தேன்.
‘அதெல்லாம் என்னை ஏன் கேட்கிறீர்? மச்சாள், என்ரை பெரியண்ணன் இண்டைக்குப் பின்னேரம் வந்திடுவார்; அவரைக் கேளும், நீர் வடிவோ வடிவில்லையோ எண்டு. அவர் நல்லாய்ச் சொல்லுவார்?
‘போடா! குரங்கே, சனியன்! இனி அடிதான் வாங்கப் போறாய் என்னட்டை!
அவள் கன்னங்கள் சிவந்தன. நாணம்,
வைகாசி 2006)

Page 20
Gs)
கோபம் மகிழ்ச்சி, எதுவோ நான் அறிந்தேனோ? அவள் தலை சீவிக் கொணி டை போட்டுவிட்டபடியால் , கண்ணாடியை நகர்த்திவிட்டு மான் போல் துடித்தெழுந்து நின்றாள். அவள் கையிலே நீளமான தடித்த சீப்பு இருந்தது. நான் சிறிது தூரத்தில் போய் விலகி நின்று கொண்டேன். சிறுவர்களுக்கு இயல்பாக உள்ள சுபாவத்தின்படி அவள் மனத்தை மேலும் கிளறிவிட முனைந்தேன்.
‘சும்மா கணக்கு விடாதையும், மச்சாள்! அண்ணன் இஞ்சை வந்தால் அறைக்கைபோய் ஒளிச்சுக்கொண்டு யன்னற் சீலையை நீக்கி நீக்கிப் பார்க்கிறது எனக்குத் தெரியாதோ?
அவள் திடீரென்று சிரித்து விட்டாள்.
‘அட குரங்குக் குட்டி உனக்கு இதெல்லாம் எப்பிடியடா தெரியும்? சரி வா, இவ்வளவு நேரம் மாபிள் அடிச்சுக் களைச்சுப் போனாய். இனி கால் முகம் கழுவிப் போட்டு வந்து சோத்தைத்தின்’
அவள் பேச்சை மாற்ற முயன்றாலும் நான் விடவில்லை.
அதுகும் தெரியும். இன்னும் ஒரு மாதத்தையால், என்ரை அண்ணன் உம்மைக் கலியாணம் முடிக்கப் போறார் எண்டதும் தெரியும்!
‘அட குரங்கே..!"
அவளுடைய குரலில் கோபம் இல்லை. எல்லை இல்லாத ஒரு குதூகலம்தான் தொனித்தது. தனிக்கறுப்பு வளையல் அணிந்த தன் வெண்ணிறக் கை ஒன்றை மணிக்கட்டுடன் மடித்து தன் துடி இடையில் வைத்துக்கொண்டு என்னைத் தன் அகன்ற கருவிழிகளால் உற்று நெடு நோக்கு நோக்கினாள்.
உண்மையில் என்னைத்தான் நோக்கி னாளோ அல்லது தன் மனக்கண்களால் என் முகச்சாயல் கொண்டிருந்த.?
(வைகாசி 2006)-

அவள் நோக்கு எனக்குச் சங்கடமாக இருந்தது. என் கண்களைத் தாழ்த்திக் கொண்டேன்.
‘மச்சாள், எனக்குப் பசிக்குது. இப்ப சோறு தாறிரா அல்லது.
அவள் மோனம் கலைந்தது. ‘வா’ என்றாள் அன்புகனிய, "முட்டைப் பொரியலும் சோறும் தாறன்.அவள் பெயர் கர்னகை; என் பெயர்..? அது இந்தக் கதைக்குத் தேவையில்லை.
என் அண்ணாவின் பெயர் சண்முகதாஸன். சுருக்கமாக எஸ். தாஸன் என்று வைத்துக் கொண்டிருந்தார். அவர் பீ.ஏ. பாஸ் பணி னிவிட்டு அடுத்த ஊரில் ஒரு கலாசாலையில் உபாத்திமைத் தொழில் செய்து கொண்டிருந்தார்.
கர்ணகை சிறு வயதிலேயே தாயை இழந்துவிட்ட கன்னி. தந்தையின் கண்ணுட் கருமணி. அவளுக்காக அவர் மறுவிவாகமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அவர் என்னுடைய அம்மாவின் ஒரே தமையன். அவர் ஊர்ப் பள்ளிக்கூடத்தில் பயிற்றப்பட்ட ஆசிரியராகக் கடமையாற்றி வந்தார். அதிற் கிடைத்த வேதனம் அவர்கள் இருவருக்கும் போதுமானது. தன் மகளுக்கென அதில் மீதம் செய்து பத்தாயிரம் ரூபாய் பணமாக வங்கியில் போட்டுவைத்திருந்தார். அத்துடன் வீடும் வளவும் சிறிது வயல் நிலமும் அவருக்குச் சொந்தம்.
எல்லாம் தன் மகளுக்கு என்றே வைத்திருந்தார். எங்கள் வீட்டில் என் அம்மா வைத்ததுதான் சட்டம். என் தந்தை காசு தேடும் யந்திரம். அவ்வளவுதான். என் தாய் எங்கள் வீட்டை ஒரு சிற்றரசி போல ஆட்சிசெய்த படியால் சிறு வயதில் எனக்கு என் தந்தையின் அன்பு கிடைக்கவில்லை.
அவர் எனக்கு என்றும் தூரத்துப் பச்சை.

Page 21
ஏதோ காற்சட்டை, கோட், டை, சப்பாத்து, தொப்பி முதலியன காலையில் அணிவார். பிறகு மாலையில் வந்து அவைகளைக் களைந்து வைத்துவிட்டு ஒரு மலிந்த எட்டு முழ வேஷ்டியை இரண்டாக மடித்து இடுப்பில் கட்டிக்கொண்டு பத்திரிகை பார்ப்பார். சம்பள நாளன்று தம் கையிற் கிடைத்த பணத்தை என் தாய் கையில் வைத்துவிட்டு, வீட்டு விவகாரம் எதிலும் சிரத்தை இல்லாமலே இருந்து விடுவார்.
எங்களில் எல்லாமாக எட்டுச் சகோதரர்கள். பெண்கள் அறுவர். ஆண்கள் இருவர். அண்ணன் தான் எல்லாரிலும் மூத்தவர். நான் கடைக்குட்டி, இடையில் ஆறு பெண்கள். என் அக்காமார் என் காதுகளைப் பிய்த்து எடுத்து என்னைத் தங்களுடைய சேவகனாக நடத்தினார்கள். நூற்பந்து வாங்கி வா, ஊசி வாங்கி வா, சட்டைத்துணி வாங்கி வா, அது வாங்கி வா இது வாங்கி வா என்று எல்லாம் ஏவி என்னை ஒரு அடிமை போல நடத்தினார்கள்.
அதனால் தான் நான் என் கர்ணகை மச்சாளிடம் போய் அண்டுவேன்.
என்னுடைய அண்ணனுக்கும் கர்ணகை மச்சாளுக்கும் கலியாணம் நடக்கப் போகிறதே, அதன்பிறகு அவள் எங்கள் வீட்டுக்கு வந்துவிடப் போகிறாளே என்று பெரியவர்கள் சொல் லக் கேள்விப் பட்டதும் என் உள்ளமெல்லாம் மகிழ்ச்சியினால் துள்ளி, என் அக்காமாருக்கு இதனால் ஒரு பாடம் படிப்பிக்கலாம் என்று எத்தனையோ குழந்தைக் கனவுகள் எல்லாம் கண்டுவிட்டேன்.
அதற்கிடையில் என்னுடைய அண்ணன் உபாத்திமைத் தொழிலில் இருந்து ஏதோ ஒரு சோதனை பாஸ் பண்ணி ஓர் அதிகாரப் பதவிக்குப் போய்விட்டார்.
அன்றும் கர்ணகை மச்சாளிடம் ஓடினேன். அவள் அன்று அலுத்துப் போய் வந்த

-GD மாமாவுக் குத் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தாள். நான் அவளருகில் போய் அமர்ந்து கொண்டேன்.
குடிடா மச்சான், தேத்தண்ணி? ‘மச்சாள், உமக்கு ஒரு புதினம் தெரியுமா? அட குடிச்சுப் போட்டு கதையன், இன்னொரு ரஷ்யாக்காரன் சந்திர மண்டலத்திற் போய் சேர்ந்திட்டானோ அல்லது, அல்லது. என்ன இவ்வளவு அவதிப்படுகிறாய்! குடியடா தேத்தன்ைனியை
‘மச்சாள், இந்தப் புதினம் கேள்விப்பட்டீரோ? தெரியாது போலக் கதைக்கிறீர். என்ரை அண்ணன் பெரிய சோதனை பாஸ்பண்ணிப் போட்டார். அவருக்கு இனிமேல் மாமாவைப் போல வாத்தி வேலை இல்லை; இனிப் பெரிய கவுண்மேந்து உத்தியோகம்’
‘என்னடா சொல்லுகிறாய், குரங்கா.
‘இனிமேல் உம்மடை தேத் தண்ணி குடிக்கமாட்டேன். பெரியண்ணன் வந்து உம்மைக் கலியாணம் முடிச்சு எங்கடை வீட்டை கொண்டுவந்த அதன் பிறகு உம்மடை கையாலை ஒரு தேத்தண்ணி தந்தால் குடிப்பன். இப்ப அதெல்லாம் ஏலாது.
‘போடா சனி, போடா குரங், போடா மூதே! இதலே நிண்டியோ ஏப்பைக் காம்பாலை வாங்கப்போறாய் என்னட்டை!’
‘ என்ன மச்சாள் உமக்கு சந்தோஷ L56b60D6ou JIT?”
“ (BLITLT!
அவளுடைய மென்மையான கன்னங்கள் மறுபடி திடீரென்று சிவந்தன. அவள் குங்குமம் அணிந்திராவிட்டாலும் பிறைமதியொத்த அந்த நெற்றி குங்குமம் போலச் சிவந்துவிட்டது. அவள் உடனே எழுந்து என் மாமாவான தன் தந்தைக்குத் தேநீரும் பலகாரமும் கொண்டு சென்றாள்.
ー{ வைகாசி 2006)

Page 22
ᏣᎧ
வெட்கம் என்னையும் பிய்த்துத் தின்றது. நான் ஓடிவிட்டேன்.
ஆனால் அந்த மணம் நடக்கவில்லை. என் தந்தைக்கு வாய் இல்லை. என் தாய்க்குப் பணமோகம். என் அண்ணாவுக்கு ஆங்கில மோகம் . இரக் கமற்ற எண் ஆறு அக்காமாருக்கும் அண்ணனுடைய பதவிக்கு ஏற்ற பெண் வேண்டும் என்ற ஒரு மூட எண்ணம். ஆங்கிலப் படிப்பு, பவிசு.
ஒருநாள் என்னுடைய அப்பா என்னுடைய அம்மாவிடம் வாதாடினார். பேசினார். எல்லாம் முதன்முறையாகத்தான். நான் அறிந்தமட்டில்! அவர் அழுதார். என் குடும் பத்தவர் எல்லோருமாகச் சேர்ந்து அவர் வாயை அடக்கிவிட்டனர். ஏழு பெண்கள் சேர்த்து பேசும்பொழுது வயோதிபராகிய ஒரு ஆண் எம்மாத்திரம்?
அன்று நான் என் தந்தைக்காக இரங்கினேன். உடனே கர்ணகை மச்சாளிடம் ஒடினேன். அவள் அன்று குங்குமம் அணிந்திருந்தாள். தன் நீண்ட கூந்தலை வாரி முடிந்து அதிலே மணம் கமழும் மல்லிகையும் அணிந்திருந்தாள். அது ஒரு தனி அழகு. எட்டு வயதுச் சிறுவனாகிய எனக்குக் கூட அந்த அழகு புலப்பட்டது. நான் ஒரு கணம் பிரமித்து நின்றுவிட்டேன்.
யானைத் தந்தத்தால் படைக்கப்பட்ட பதுமைபோல அவள் வீட்டு வாசலிலே நின்றாள்; அந்த வீட்டை ஆளும் திருமகள் போல நின்றாள்.
ஏதோ கூறவென்று ஓடிப்போன நான் மலைத்து நின்றுவிட்டேன்.
அவள் அதிகாரமாகவே பேசினாள்.
'6T660TLIT
姆 & 9 ஒண்டுமில்லை மச்சாள்
‘என்ன என்னவோ கிளிச்சுக் கொட்டுகிறது போலை ஓடிவாறாய்! மாமி மச்சாள்மார்
வைகாசி 2006

எல்லாரும் நல்லாயிருக்கினமோ
‘ஓம் மச்சாள்! ‘என்னடா என்னவோ செத்த வீட்டுக்குச் சொல்ல வந்தவன் போலை ஒரு மாதிரிக் கதைக்கிறாய். பொறு மச்சான்; இப்ப ஐயா வந்திடுவர். நீயும் அவரோடை இருந்து கொழுக்கட்டையும் வடையும் தின்னன்.
‘ஓம் மச்சாள்.'
ஆனால் நான் சொல்ல வந்ததை எப்படிச் சொல்லுவேன், என் நா எழவில்லை. என் குழுந்தை மனம் இடிந்துவிட்டது.
“எனக்கு வீட்டிலை வேலை கிடக்குது மச் சாள்’ என்று அழாக் குறையாகச் சொல்லிவிட்டு எடுத்தேன் ஒட்டம்.
என்னுடைய அண்ணனுக்கு எங்கோ ஓரிடத்தில் கலியாணம் பேசிமுடித்து வைத்துவிட்டாள் அம்மாள்.
என்னுடைய பிறவூர் மச்சாள் வந்தாள். என்னுடைய குழந்தை மனத்திற்கு அசிங்கத்தின் சின்னமாகவே அவள் தோன்றினாள். கன்னம் கரேலென்று கொழுத்திருந்த முகத்திலே கறுத்தத் தோலை வெள்ளத் தோலாக்க முயலும் பவுடர்ப்பூச்சு, கையிலே விலை உயர் நீத ஒரு கைக்கடியாரம், கழுத்திலே ஒரு மெல்லிய தங்கச் சங்கிலி, அதிலேதான் தாலியும் கோத்துக் கிடந்தது. பின்னி முடிந்த கூந்தலிலே வைத்துத் தொடுத்த முடிமயிர் புறம்பாகத் தெரிந்தது. அவளுடைய இடையிலே மெலிவோமென்மையோ இல்லை. உடலிலே அழகில்லை. குரலிலே இனிமை இல்லை. மனத்திலே அன்பில்லை.
எனக் கு உடனே வீட் டைவிட்டு ஓடிவிடவேண்டு போலத் தோன்றியது.
எங்கே ஒடுவேன் நான்?
என் கர்ணகை மச்சாளிடம் ஓடினேன்.

Page 23
அவள் என்றும் போலச் சந்தோஷமாகவே இருந்தாள்.
யாரோ ஒரு தெய்வச் சிற்பி தன் வல்லமை எல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து நன்றாக அடுக்கிவிட்ட முத்து வரிசையை வளைத்து மாணிக்கக்கரை கட்டிவிட்டது போன்று இருந்தது அவள் புன்னகை.
எதற்கும் கலங்காத வீரத்தமிழ் மகள்போல் என்னைக் கண்டவுடன் அவள் கண்கள் சிரித்தன.
'வாடா மச்சான். இஞ்சை வந்து கொஞ்சம் கலியான வீட்டுப் பலகாரம் சாப்பிடேன்!’
* எண் ன மச் சாளர் , எனக் கெணி டே வச்சிருக்கிறீர் எங்கடை கலியாண வீட்டுப் பலகாரம் எல்லாம். என் குரல் தடைபட்டு விம்மி நின்றது.
எனக்கு அழுகை,
அதிலை என்னடா மச்சான்? நீ எண்டாலும் என்னைக் கலியாணம் முடிக்கமாட்டியோ?
பகலெல்லாம் தண்ணொளியை நல்கிவிட்டு மேல்வானில் அஸ்தமிக்கும் சூரியன் போல் அவள் முகம் செக்கர் படிந்து மங்கியது. மாவலியாறு திடீரென்று பசிய கானகமெல்லாம் பெயர்த்துப் பெருவெள்ளம் கொண்டு பாய்வது போல அவளுடைய அழகிய கருங் கண்ணிமைகள் அறுந்து சிதறும் படி கண்ணிர் ஊற்றுப் புரண்டு வழிந்தது. ஆ அவள் மறுபுறம் திரும்பிவிட்டாள்!
எடுத்தேன் ஓட்டம்! என் கண்களிலும் கண்ணிராறு ரத்த ஆறு நெருப்பாறு
என்னுடைய தாய் ஒரு நாள் என்னிடம் பேசினாள். அப்பொழுது எனக்குப் பத்து வயதாகிவிட்டது.
"ஏன் மேனே, நீ உன்ரை மச்சாளிடம் பேசிறாயில்லையாம்?
(ஓலை 32)

GD *ஆர் சொன்னது? ‘உன்ரை கொண்ணன்தான் சொல்லுறான்' ‘எந்த மச்சாள்? ‘அதென்ன கேள்வி? ஏன் கொண்ணன்ரை பெண் சாதி தான். அல்லது வேறேயும் உமக்கொரு மச்சாள் இருக்கோ? உம்முடை மூஞ்சை எனக்குப் பிடிக்கேல்லை!
ஓ! அதுவோ! அவவோடை நான் என்னத்தைப் பேசிறது? அவ தன்பாட்டுக்கு மூத்தக் காவோடை இங்கிலfசையும் பேசிக்கொண்டு திரியறா. இல்லை, கேக்கிறன் நீங்கள் எண்டாலும் யோசிச்சியளோ அம்மா, எனக்குக் கொஞ்சம் இங்கிலீசு படிப்பிச்சு வைக்கவேணும் எண்டு. அது எல்லாம் உங்களுக்குக் கவலை இல்லை. நான் எப்படித் தெரு வழிய திரிஞ்சாலும் உங்களுக்கு என்ன? அக்காமாருக்கு என்ன? நான் என்ரை அண்ணன்ரை பெண்சாதியோடை பேசேல்லை எண்டதுதான் உங்களுக்குக் குறையாய்ப் போச்சு!’
ஏன் அவ என்ன உம்மடை பவிசுக்குக் குறைஞ்சு போச்சோ, அல்லது கொப்பற்றை பவிசுக்குக் குறைஞ்சு போச்சோ! அதுதான் நீங்கள் இரண்டு பேரும் அவவோடை பேசிறயில்லை!’
‘அம்மா, எனக்கு அப்பிடி இங்கிலீசு பேசத் தெரியாது. சும்மா ஏன் தேவையில்லாத விஷயங்களைப் பற்றி எண் னட் டை கதைக்கிறியள்? என்னை என்பாட்டுக்கு விட்டிட்டால் படிச்சுக்கிடிச்சு ஒரு மாதிரி ஆளாய் வந்திடுவன். அதுவும் விருப்பமில்லையெண்டால் இப்ப சொல்லிவிடுங்கோ நான் போறன். ‘எங்கேயோ போகப் போறாராம்! "ஏன் போகப்படாது? அதற்குள் என் தாய்க்குக் கோபம் வந்துவிட்டது. அவள் அலறினாள், குளறினாள்.
{ வைகாசி 2006 }

Page 24
G2)-
என் தந்தையைக்கூட ஏசினாள், இப்படி என்னை
ஒரு தாய் சொல்லை மதிக்காத மகனாக
வளர்த்துவிட்டார் என்று!
என்னுடைய தாய் மீண்டும் பேசினாள்.
“ டேய்! பார்த்தியா, உன்ரை மச்சாள் கொண்டுவந்த சீதனத்தை! அவளின் ரை நகைப் பெட்டியை நீ எப்பவெண்டாலும் பாத்தியோ? அதுமட்டும் பெறும் ஒரு லட்சம் ரூபாய்!
‘இதெல்லாம் என்னத்துக்கு எனக்கு சொல்றியள், அம்மா?
"நீயும் அப்பிடி ஒரு பொம்பிளையை முடிக்கவேணுமெணி டதுதான் உன் ரை காலத்திலை.
'அம்மா நான் சொல்லுறன் எண்டு கோவிக்கவேண்டாம். உங்களுக்குக் காசுதானே தேவை? ஆனால் என்ரை மச்சாளின்ரை முகத்திலை இருக்கிற வயிரங்களை - வைடுரியங்களை - மாணிக்கங்களை எந்த நகைப் பெட்டியிலை காணலாம்? அல்லது அவவின்ரை கையிலை இருக்கிற கறுத்த வளையலுக் குப் போதுமோ இந்த நகையெல்லாம்.?
‘என்னடா உளறுகிறாய்?
‘அம்மா, நான் உளறவில்லை. நீங்கள் எங்களை அண்ணன் கர்ணகை மச்சாளை முடிக்கிறது எண்ட சம்மதத் தோடை இருந்துபோட்டு, கடைசியாய்ப் போய்க் காசுக்கும் காணிக்கும் நகைக்கும் ஆசைப்பட்டு வடிவும் அன்பும் இல்லாத ஒரு பொம்பிளையை வீட்டிலை கொண்டுவந்து சேத்தியளே!’
எனக்கு மறுபடி அழுகை
விம்மி விம்மி அழுதேன். என் கர்ணகை மச்சாளின் இயற்கை லக்ஷமீகரமும் அழகும் என் அண்ணனுக்கும் இந்த வீட்டிற்கும் கிட்டாமல் செய்துவிட்டாளே என் தாய் என்று!
வைகாசி 2006

அதன் பிறகு என் தாய் இரக்கமற்ற ஒரு தாடகையாகிவிட்டாள்.
‘ஓகோ! அப்படியா விஷயம்? நீரும் உம்மடை அப்பரோடை சேர்ந்தியோ? அப்படி எண்டால் அந்த கர்ணகிப் பத்தினியை ஒண்டில் நீர், அல்லது உம்மடை அப்பர் போய்க் கலியாணம் முடிச்சுக்கொண்டு வந்து இந்த வீட்டிலை வைச்சுக் கும்பிடுங்கோ! அவள் என்ரை அண்ணற்றை மேள்! ஆனால் விஷயம் இவ்வளவு தூரம் வரும் எண்டு நான் கணவிலையும் எண்ணயில்லை!
அரக்கி
எனக்குக் கண்ணிர் மாலைகள்.
‘என்ன அழுகிறீர்? ஹ" உம்முடைய மூக்கிலை சளி வடியுது! அதைப் போய் துடையடா! அதின் பிறகு முகத்தைக் கழுவிப்போட்டு இன்னும் பாக்காத சினிமாப்படம் இருந்தால் அதையும் போய்ப் பார்!’
அப்பொழுது வெளியே ஒரு மோட்டார் வண்டி வந்து நின்றது. அது அண்ண gO60)Luig.
அம்மா தன் மார் புச் சேலையைச் சரிசெய்துகொண்டு அவசரமாகத் தன் தலை மயிரையும் சரி செய்துகொண்டாள்.
அதன் பிறகு என் அண்ணன் உள்ளே வந்து, ‘என்ன கூட்டாளி அழுகிறியோ?” என்றார்.
‘ஒண்டுமில்லை ‘என்ன மாபிள் வாங்கக் காசு வேணுமோ?
வேண்டாம்.'
இனி, நீ கிறிக் கற் விளையாடிப் பழகவேணும். காருக்குள்ளை இருக்குது ‘பாட்', 'விக்கட், 'பந்து எல்லாம்!”
அதற்குள் என் அண்ணனின் மனைவியே வந்துவிட்டாள். அம்மா அவளை வினயமாகப் பற்களைக் காட்டி வரவேற்றாள். அம்மாவுக்கு
一{ ஒலை 32

Page 25
ஆங்கிலம் தெரியாது. ஆனால் பற்களை மட்டும் காட்டத் தெரியும்.
அண்ணன் என் தலையைத் தடவினார் அன்பாக!
அண்ணனின் மனைவி தமிழ் பேசுவதில்லை.
தமிழ் தெரிந்திருந்தால்தானே, அந்த இழுமென் மொழியைப் பேசுவதற்கு!
அண்ணனுடன் ஏதோ ஆங்கிலத்திற் பேசினாள். எனக்கும் அந்த மொழி கொஞ்சம் தெரிந்துதான் இருந்தது.
‘யார் மூக்குச் சிந்தி அசிங்கமாக நிற்கும் இந்தப் பையன்?
அண்ணன் மெளனம் ‘யார்? உங்கள் வீட்டு வேலைக்காரப் பையனா? ஏய், போய்!
அதற்குள் எண் மூத்த அக் கா குறுக்கிட்டுவிட்டாள் ஆங்கிலத்தில்!
அது எங்கள் தம்பி ஆக இளையவன் மச்சாள், வாருங்கள் உள்ளே.
அம்மா தன் பற்களைக் காட்டிக்கொண்டு பின் தொடர எல்லோரும் உள்ளே போய்விட்டார்கள்.
அண்ணனுடைய கார்ச் சாரதி ஏதோ ஒரு பார்சலைக் கொண்டுவந்து என் கையில் வைத்தான் ‘இது ஐயாவின் தம்பிக்கு உடனே அவரிடம் கொடுக்க வேண்டும்!
நான் உடனே அதை மூலைக்குள் எறிந்துவிட்டேன். என் மனம் வேதனைப்பட்டது. உடனே என் கர்ணகை மச்சாளிடம் ஓடவேண்டும் போல் எனக்குத் தோன்றியது; ஓடினேன்.
அவள் ஏதோ கண்ணிருக்குள் மூழ்கித் தலைவிரி கோலமாகக் கிடந்து புலம்பிக் கொண்டிருப்பாள் என்ற மனப்பதற்றத்துடன் ஒடினேன். என் கற்பனையினால் என் கண்களில்
(ஓலை 32) w

மல்கிய கண்ணிரைத் துடைத்துக் கொண்டு.
ஆனால். ஆனால்...! அரசகுமாரிகள் அழுவதில்லை. அது அவர்கள் அழகிற்கும், மேன்மைக்கும் மன வைராக்கியத்திற்கும் ஒரு இழுக்கும் போலும்! அவளுடைய கணி னுக்கு மை, கன்னத்திற்கு றுாஜ், உதடுகளுக்கு லிப்ஸ்டிக் எல்லாம் தேவை இல்லை. ஏதோ இறுமாப்பில் இவை எல்லாம் அணிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்துவிட்டாளோ என்று முதலில் யோசித்தேன்.
அருகில் சென்று பார்த்தேன் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் அவள் முன்னால் பதறி நின்றேன்.
அவள் சிரித்தாள். அத்துடன் அமையாது என் உள்ளம் எல்லாம் கூனிக்குறுகி நானும்படி என் சேட்டைப் பிடித்து இழுத்துவிட்டாள். ‘என்னடா மச்சான், அழுகிறாய்?
ஒண்டும் இல்லை! ‘இஞ்சை வா! கொஞ்சம் 'சொக்கிலேட்டுத் $65; 61st LIT
என்னை அனைத்துக்கொண்டு உள்ளே சென்று என் கைகள் நிறைய இனிய பண்டங்கள் தந்தாள்.
இப்பவே எல்லாம் திண்டு முடிக்கவேனும் என்று பணித்தாள்.
தின்றேன்.
இவ்வளவு அன்பும் அழகும் உள்ளவளை என் அண்ணனும் எங்கள் வீடும் இழந்துவிட நேரிட்டுவிட்டதே என்று எண்ணினேன்.
சுவைத்து விழுங்கிய 'சொக்கலேட்டு’ தொண்டையில் சிக்கிக்கொண்டது. அவள் என் தலையில் தட்டினான். நெஞ்சையும் முதுகையும் தடவினாள். அவள் அன்பு.
வைகாசி 2006

Page 26
G.)
மீண்டும் என் கண்களில் முத்துமாலை. ‘என்னடா மச் சான், இப்ப மாபிள் அடிக்கிறதை விட்டுக் கிறிக்கட் அடிக்கத் துவங்கிவிட்டியாம்?
அதற்குள் என் கண்ணிரைச் சமாளித்து விட்டேன்.
‘உமக்கு ஆர் இதெல்லாம் சொன்னது?
தனிக் கருவளைக்கவின் தந்த தன் வெள்ளை மணிக் கட்டை இடையில் மடக்கி வைத்துக்கொண்டு அவள் என்னைப் பார்த்தாள்.
‘ஒருதரம் இல்லை! ஆனால் பெண்கள் எதையும் கணத்தில் கேட்டறிந்துகொண்டு விடுவார்கள் என்ற உலக அநுபவம் அந்தச் சிறுவயதில் எனக்கில்லை.
என் அம்மாவுக்கு என்ன எண்ணம் வந்ததோ ஒருநாள் மாலை நான் புத்தகங்களோடு போராடிக்கொண்டிருக்கும் பொழுது என்னிடம் தனியே வந்து பேசினாள். ‘என்ன பெரிய படிப்புக் கவலைபோல இருக்குப் பிரபுவுக்கு?
‘என்ன அம்மா?
‘மச்சாளுக்குக் கல்யாணமாம்.
‘எந்த மச்சாள்?
‘ஏன் உன்ரை மச்சாளுக்குத்தான்!’ “எனக்கு எத்தனை மச்சாள்மார் இருக்கினம்; முதலில் அண்ணன் பெண்சாதி
'வாயைப் பார், வாயை! என்னட்டை அடிவாங்கப் போறாய், கண்டியோ?
“எனக்கு ஒண்டுக்கும் பயமில்லை அம்மா! நான்தான் எப்பவோ வீட்டை விட்டுப்போறன் எண் டு சொல்லிப் போட்டேனே. அற நனைஞ்சவனுக்குக் கூதல் என்ன குளிர் என்ன?
என் கண்களில் கண்ணிர் உப்பாகி கரிந்து
(வைகாசி 2006)

நின்றது. நான் வேகமாக என் புத்தகங்களின் பக்கங்களைப் புரட்டினேன்.
அம்மா, என்னுடைய மேசைமேல் சாய்ந்து நின்று என்தோள் மேல் தன் கையை வைத்தாள். விளக்கின் ஒளியில் அவளுடைய தலையிலுள்ள இடை நரைமயிர்கள் மின்னின. அவள் ஏதோ கலக்கமடைந்தவள் போல மெதுவாகக் கண்ணிர் கலந்த குரலுடன் பேசினாள்.
'நீ கோவிக்கிறது சரியடா மேனே! உன்ரை கர்ணகை மச் சாள் இந்த வீட்டுக்கு வந்திருக்கவேணும்; அந்த நேரம் என்ரை புத்தி மத்திமமாய்ப் போச்சு! அவள் வந்திருந்தால் இந்த வீட்டுக்கு ஒரு மகாலட்சுமி.
நான் பொங்கித் துளித்த கண்ணிரை அடக்க முயன்றபடி புத்தகத்தின் பக்கங்களை ஒரு பைத்தியக் காரணி போலப் புரட்டிக் ’கொண்டிருந்தேன்.
சிறிது அன்பு எத்தனை கண்ணிரை வருவித்துவிடும் என்று வியந்தேன்.
இப்பொழுது அவளுக்கு வேறை ஒரு கலியாணம் பேசி இன்னும் இரண்டு கிழமையில்
E65uJIT600TLDT bi'
எனக்குச் சிரிக்கவேண்டும் போலத் தோன்றியது. ஆனால், அழுகைதான் வந்தது. புத்தகங்களைத் தள்ளிவிட்டு வெளியே ஓடினேன்.
மங்கிய வானத்திலே மதி, மங்கித் தவழ்ந்தது. தென்னை மரங்களின் தலைகளிலே காற்றின் ஒலம்
தொலைவிலே இரட்டைக் கூகைகளின் குரல். மேள வாத்யம் ஜாம் ஜாம் என்று ஒலிக்க எங்களுடைய மாமா கூட எழுந்து நடமாடித் திரிகிறார், தன் பொங்கும் வயிற்றுக்கு மேல் ஒரு பட்டுச் சால்வையைக் கட்டிக்கொண்டு என்னுடைய அண்ணனும்

Page 27
அவருடைய மனைவியும் அவருடைய புது மோட்டார் வண்டியிலே வந்தார்கள்.
என் கர்ணகை மச்சாள் மணவறையிலே வந்து இருந்தாள். அந்த நடுத்தர வயதுள்ள மணவாளனும் அவள் அருகில் உட்கார்ந்து இருந்தான். புண்ணியத்தின் அருகில் பாவம் இருப்பதுபோல. அத்துடன் என்னுடைய அணி ணன் மனைவி தன் கையில் அணிந்திருந்த ஆயிரம் ரூபாய் மணிக்கூடு மின் வெளிச்சத்தில் பளபளக்கும்படியாக என் மச்சாளின் பின்புறமாக நின்றிருந்தாள். உதய சூரியனின் புறத்தே கார்முகில் நிற்பதுபோல. அம்மாவும் நின்றிருந்தாள் தன் நரிப் பார்வையோடு.
எனக் கு எங்காவது சென்று அழவேண்டும்போல இருந்தது.
மறுநாள் மணப்பெண்ணாகிய என் மச்சாள் ஒரு அறையில் தனியே இருந்தாள். இணைக் கூறையும் அணிந்து கொண்டு. அவள் அழுதுகொண்டிருப்பாள் என்று அஞ்சி நான் வெளியே நின்றேன். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. என்னைக் கண்டவுடன், "ஏய் மச்சான் என்று ஏதோ காணாததைக் கண்டுவிட்டது போலக் குரல் கொடுத்தாள். நான் தயங்கித் தயங்கி உள்ளே சென்றேன்.
அவள் என் வயிறு நிறையும் மட்டும் இனிய பண்டங்கள் உண்ணத் தந்தாள். என்னோடு எத்தனையோ காலம் பழகிய மச்சாளாக இருந்தும் அந்த நேரத்தில் அவளுடன் தனியே இருக்க என் மனம் சிறிது துணுக்குற்றது. ஓடிவிடலாம் என்று எழுந்தேன்.
அவள் விடவில்லை. என்னுடைய கையைப் பிடித்து இழுத்து அப்படியே தன்முன்னால் அமர்த்திக்கொண்டாள்.
ஒரு இடமும் போகயில்லை மச்சாள்! சும்மா வெளியாலை போய் விளையாடப்
@ఐణ 32)–

Gs)
'இரடா மச்சான்! நல்லாய் வயிறுமுட்டத் தின்னன்ரா!'
போறன்!’
அவளைக் கேலி செய்யவேண்டும் என்று எண்ணினேன்.
‘என்ன மச்சாள், ராத்திரி மணவறையிலை கூறைச் சீலையும் உடுத்து நகை எல்லாம் போட்டுத் தலையைக் குனிஞ்சு கொண்டு இருந்தீரே! அப்ப இந்த வாய் எல்லாம் எங்கை போச்சுது?
‘போடா குரங்கே, சனியன், மூதேசி!’
அவள் கண்கள் பளபளக்கும் வைரத்தில் பதித்துவிட்ட மரகதங்கள் போல் மின்னின. கண்ணிர்.?
ஆனால் அரசிகள் அழுவதில்லையே!
r.
ཛོད༽
எட்டுத்தொகை நூல்கள்
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ(று) ஒத்த பதிற்றுப்பத்(து) ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோ டகம்புறமென்(று)
இத்திறத்த எட்டுத் தொகை
நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை
அகநானூறு
புறநானூறு
ン ܢܠ

Page 28
நூல் மறுபதிப்பு
விலை
: யாழ்ப்பாண அகராதி
: 2006 வெளியிடுவோர் :
தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேள் தெரு, தியாகராய நகள், சென்னை. 600017,தமிழ்நாடு. சேமமடு பொத்தக சாலை, 50,52, பீப்பிள்ஸ் பார்க் கேஸ்வேக் வீதி, கொழும்பு-11, இலங்கை. இந்திய ரூபாய் (1250/-) இலங்கை ரூபாய் (3900/-)
ஒரு மொழியில் அம் மொழியின் இலக்கணக் கூறுகளை வரன்முறைப்படுத்தி வழி வகுப்பது இலக்கணம் எனப்படும். ஒரு தனிச் சொல்லின் பொருள் விரிவில் கவனங் காட்டுவது அகராதி. அதாவது காலத்துக்குக்
(வைகாசி 2006
 

காலம் மாறிவரும் சொல்லும் பொருளும் பற்றி அதிக கவனம் செலுத்துவது இதுவாகும். அகராதி என்பது நமது தமிழ்ச் சூழலுக்குப் புதியதல்ல. Dictionary என்ற ஆங்கிலப் பதத்துக்குச் சமனாக அகரநிரலில் சொல்-பொருள் பற்றிய தகவல்களைத் தரும் அகராதிகள் பல தமிழில் எழுந்துள்ளன. எனினும் நமது மரபுத் தமிழ் இலக்கண மரபிலேயே இவை பற்றிப் பிரக்ஞை பூர்வமாகக் கவனஞ் செலுத்தியுள்ளனர். தொல்காப்பியத்தில் இடையியல், மரபியல் என்ற பகுதிகளில் பொதுவாகவும் , உரியியலில் சிறப்பாகவும் இதுபற்றிப் பேசப்படுகின்றது. இவற்றின் தொடர்பு வளர்ச்சியே நிகண்டு நூல்களுக்கு வழிகோலியது. அதன் வழியாகவும் மேலைப் புலத் தாரது நவீனத்துவம் வழியாகவும் இன்றைய அர்த்தத்தில் அகராதிகள் பல நம்மிடையே எழுந்துள்ளது. ஒரு மொழி, இருமொழி, பனி மொழி அகராதிகள் எனவும், சிறப்புச் சொல் அகராதிகள் எனவும், வட்டார வழக்குச் சொல்லகராதி, தொழிற் சொல்லகராதி, கல்வெட்டுச் சொல்லகராதி, என இன்ன பிறவாக அகராதிகளின் வரவு நம்மிடையே பல்கிப் பெருகியுள்ளன.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் தான் யாழ்ப் பாண அகராதி மீளச் சுப் பெற்றிருக்கின்றது. நவீன அகராதிகள் வரிசையில் யாழ்ப்பண அகராதிக்குச் சிறப்பிடமுண்டு. அது தோன்றிய காலத்து அதன் தேவையும் , அது பல வேறு அகராதிகளின் தோற்றுவாய்க்கு ஆதாரமாக அமைந்தமையையும் நோக்கில் அதன் முதன்மை புலனாகும்.
19ஆம் நூற்றாண்டிலே யாழ்ப்பாணத்து நல்லூருக்கு வந்த சேர்ச் மிசனறியைச் சேர்ந்த ஜோப் நைற் எனும் பாதிரியார் தமிழ்- தமிழ், தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்
{@ఐణం 32)

Page 29
தமிழ் என மூவகை அகராதிகளைத்
தொகுப்பதற்கு முன் வந்தார் . நைற
பாதிரியாரின் திட்டம் புரட்டஸ்தாந்து
சங்கத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1833இல்
ஒரு செயற்குழு அமைக்கப்பட்டது. லெவி
ஸ்பேல் டிங், சாமுவெல் ஹட் சிங் ஸ்
வின்ஸ்லோ, பீற்றர் பேர்சிவல் ஆகியோ
இக்குழுவில் இடம்பெற்றனர். இலங்கையர்களான கொழும்பு கபிரியேல் திரேசா, உடுவில் சந்திரசேகர பண்டிதர், சுதுமலை கறல் விசுவநாதபிள்ளை, சங்குவேலி நெவில் சிதம்பரப்பிள்ளை, அளவெட்டி எவட்ஸ் கனகசபைப்பிள்ளை, கோப்பாய் சுவாமிநாதட் புலவர் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். தமிழ்நாட்டவர்களான முகவை இராமானுச கவிராயர், திருத்தணிகை விசாகப் பெருமாள் ஐயர், அட்டாவதானப் வீரசாமிச் செட்டியார், ஆதிமூல முதலியார் ஆகியோரும் இக்குழுவிற்கு உதவினர். எனினும் 1840இல் நைற் பாதிரியார் காலமானதைத் தொடர்ந்து, அகராதித் திட்டத்தை அமெரிக்கன் மிசன் பொறுப்பேற்றுக் கொண்டது. எனவே லெவி ஸ் பேல் டிங் பாதிரியார் , உடுவில் சந்திரசேகரப் பணி டிதர் உதவியுடன் செப்பனிட்டு மானிப்பாய் அமெரிக்கன் மிசன் SEĐëFaFaBg5g5(86d 1942 SQ6ò The Manual Dictionary of the Tamil Language 6T6örp Guu(5L65T அச்சிட்டுப் பிரசுரித்தனர். இவ்வகராதி மானிப்பாய் அகராதி அல்லது யாழ்ப்பாண அகராதி என்று வழங்கப்பட்டது. பின் நாட்களில் வின்ஸ்லோ, பீற்றர் பேர் சிவல், கெலக் விசுவநாதபிள்ளை, மேலைப்பு லோலியூர் நா. கதிரவேற்பிள்ளை ஆகியோர் வெளியிட்ட அகராதிகள் யாவும் யாழ்ப்பாண அகராதியை அடியொற்றியே எழுந்தன.
சுமார் 58,500 சொற்கள் இதில் அடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அகராதியின் மீளச்சின் நோக்கம் மிகவும் மதிக்கப்படக்கூடியது. வியாபார எல்லைகளைத் தாண்டிய தமிழ்ப்பணி என்றே
(ஓலை 32)-

-GD
இதனைக் குறிப்பிடலாம். தமிழ் மொழி வரலாற்றின் மூலாதாரங்களாக அமைந்துள்ள பல கூறுகளில் அகராதியும் ஒன்று. அத்துடன் அது மொழிவழியான பண்பாடுகளையும் அறிவதற்கு இடமளிக்கின்றது. ஒரு மொழியில் குறிப்பிட்ட ஒரு காலத்தில் அண்ணளவாக நிலவிய அல்லது வழக்கிலிருந்த சொற்கள், அவற்றுள் புதியவை, பழையவை எவை எண் பது, பிற மொழித் தொடர் பால உள்வாங்கப்பட்ட சொற்கள், அவற்றின் பண்பாட்டு, பிரயோகத்தனங்கள் என்பவை போன்ற செய்திகளை மிகவும் நுணுக்கமாக நோக்கி ஆய்வு செய்வதற்கு அகராதிகள் பெரிதும் உதவுகின்றன. இந்தப் பின்னணியில் தான் யாழ்ப்பாணத்து அகராதியின் மீளச்சின் பயன்பாடு பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. இந்த அகராதியில் வடமொழிச் சொற்கள் அதிகம் இடம்பெற்றுள்ளதனை அவதானிக்கலாம். தமிழ் மொழியில் காலத்துக்குக் காலம் கலந்துவந்த வடமொழிச் சொற்கள் தமிழ்ச் சூழலில் பெற்ற வலுவான ஏற்புடமையையே இது வெளிப் படுத்துகின்றதெனலாம் . (குறிப்பாக யாழ்ப்பாணத்து மொழிச் சூழலில் எழுத்து, பேச்சு, மக்கட் பெயர் முதலானவை வடமொழி ஆளுகைக்குட்பட்டவை என்பது தனித்தமிழ் இயக்க வழிவந்தோர் கருத்து. அதன் யதார்த்த நிலையை இவ்வகராதியில் இடம்பெற்ற வடமொழிச் சொல்லாதிக்கத்தைக் கொண்டு அறிய முடிகின்றது.) விழிப்பாய் இரு, பிறமொழிக் கலப்பு ஒரு மொழியை எப்படி விழுங்கிவிடும் பார்’ என யாழ்ப்பாண அகராதி தமிழர்களுக்கு விழிப்புணர்வூட்டுகிறது என்கிறார் கவிஞர் காசி ஆனந்தன்.
இவ்வகராதி இன்னோர் வகையில் தமிழர் பண்பாட்டுக் கூறுகளை அறிய உதவும் கருவியாக உள்ளது என்கிறார் பா. நா. சுப்பிர மணியன். அன்று யாழ்ப்பாணத் தமிழரிடையே வழக்கிலிருந்த பல பண்பாட்டுக் கூறுகளுக்குரிய சொற்களை இதில் இனங்காணலாம்.
-(வைகாசி 2006)

Page 30
Gs)
பொன்னத்துப் பெட்டி - மணமகன் தாலி, கூறை வைத்துக்கொண்டு போகும் பெட்டி.
தூசி தாங்கி - அமுக்குத் தாங்க உடையின் மேற்கட்டும் துண்டுப் புடவை. என்பவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். யாழ்ப்பாணத்து மக்களுக்கே இன்று தெரியாத வழக்கிழந்த சொற்கள் இவை. ஆயினும் நமது பண்பாட்டு நிலையின் குறிகாட்டிகள் அவை. தமிழ் மொழியானது சிங்கள மொழித் தொடர்பால் பெற்றுக்கொண்ட சொற்களையும் அவற்றின் பயன்படுத் தன்மையையும் இதனால் அறியலாம்.+ சக (கூட்டல்), -சய (கழித்தல்), அரண (பிரித்தல்), X தர (பெருக்கல்) ஆகியவை நீண்ட நாட்களாக நம்மிடையே பயின்றுவந்த எண்கணிதச் சொற்கள் ஆகும். தமிழகத்தில் சக, தர, சய என்று குறிப் பிடும் வழக்கமில்லை. ஆயின் அது யாழ்ப்பாணத் தமிழில் அணி மைக் காலம் வரை பயன்பாட்டிலிருந்தது. இவை சிங்கள மொழியிலிருந்து பெறப்பட்ட சொற்களாகலாம்
:
வாழ்த்து
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் நிதிச் செ திரு. தில்லைநாதன் கணேசராஜா (அதிபர், கொழும் அமைச்சினால் அகில இலங்கை ரீதியில் 2005ம் ஆ ‘வித்தியா விஜயரீ என்னும் பட்டம் வழங்கிக் கெளர
(வைகாசி 2006)
 

என்கிறார் சுப்பிரமணியன். இவ்வாறே, வழக்கிலுள்ளவை, வழக்கொழிந்தவை, பொதுத்தமிழுக்குரியவை, பிராந்தியச் சொல் வழக்குகள், பிறமொழிக்குரியவை, எனப் பலவாறாக வகுத்து நோக்குவதற்கான பல அரிய சொற்களஞ்சியத்தைக் கொண்டிருக் கின்றது இவ்வகராதி.
அகராதிக்குரிய உடனடித் தேவையான சொல்- பொருள் என்ற எல்லையைத் தாண்டி, வரலாறு, பண்பாடு முதலான எல்லை களையும் தொட்டு நிற்பதால் தான் இதன் முக்கியத்துவம் உணரப்பட்டது எனலாம். இதனை வெளிக்கொணர்ந்த தமிழ்மண் பதிப்பகத் தாரும், சேமமடு பொத்தக சாலையாரும் தமிழ் மக்களால் என்றும் நினைவுகொள்ளக் கூடியவர்கள்.
வ. மகேஸ்வரன்
யலாளரும், தற்போதைய நூலகச் செயலாளருமான பு விபுலானந்த மகா வித்தியாலயம்) அவர்கள் கல்வி பூண்டுக்கான சிறந்த அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டு விக்கப்பட்டார். அவரை ‘ஒலை வாழ்த்துகின்றது.
@ఐణు 32)

Page 31
கவிை
தேயிலை ர
நீலு மலைகள் வெட்டி நிறைய நாள் பதியம் வைத்து காணு களனி கட்டி கை பொத்தி வாய் பொத்தி கண்ணுக்குள் வளர்ந்தவளே ~ அடீ சிங்கார சிறுக்கி நீ வித்தாரக் கள்ளி நீ
கேடுகெட்ட பாதகியே! தேயிலை ராச்சசியே!
சின்னக்காளை பெரியக்காளை
மச்சக்காளை மருதக்காளை கண்டி மலைப் பொட்டலிலே காடழித்த மேடழித்த புல்லுவெட்டி மண்ணுவெட்டி முள்ளுக்குத்தி உரம்போட்டு இரத்தம் சிந்த வேர்வை சிந்த கண்டுகண்டு வளர்ந்தவளே! கூனி அடிச்சு வைச்ச கூட்டுக்குள் சமைந்தவளே!
கேடு கெட்ட பாதகியே! தேயிலை ராச்சசியே!
கண்டிச் சீமையிலே கண்காணா தேசத்திலே பொண்ணுண்டு பொருளுண்டு தேயிலை செடிக்கடியில்
(ஓலை 32) -

தகள்
sidddf611
தேங்காயும் மாசியுமாயுமாய் தெகட்டாத் தேட்டமுண்டு எண்ணெண்டு போய்ப் பார்த்த
என்னண்ணன் என்னானான்
என்னப்பன் எங்கு சென்றான் என் தாயை காணலியே
கேடு கெட்ட பாதகியே! தேயிலை ராச்சசியே!
முப்பாட்டன் முதகொடித்தாய் என்பாட்டன் எலும்பொடித்தாய் என் பாட்டியின் உயிரைக்கூட பஞ்சத்தால் பறித்தெடுத்தாய் என் முன்னோரை எதற்காக வஞ்சித்த வரவழைத்தாய் முக்கால் காசுக்கு முழுப்பரம்பரையை கூசாமல் அடகுவைத்தாய் கோடிலயத்தருகே இருளில் விழித்திருக்கும் ரோதமுனிப் பிசாசே
கேடு கெட்ட பாதகியே! தேயிலை ராச்சசியே!
எண் ஆத்தாவின் தளிர்க் கரத்தை அஞ்சு மணிக் கடுங்குளிரில் பெய்த பனிமழையில் விறைத்த விறகாக
- வைகாசி 2006 )

Page 32
டு)
கொழுந்தெடுக்க வைத்தவளே! அட்டைக் கடி நடுவில் பாம்புப் புற்றருகில் ஆய்ந்த அரும்புகளை நாளுமணி மடுவத்தில் நான் நிறுக்க வந்தபோத 'நாரு காம் பொடித்தாய் நாலிலையை ஏன் பறித்தாய்? வங்கி இலை கொய்தாய்' என என் நாள் பெயரை மறுத்தானே நாசமாய்ப் போனவளே!
கேடு கெட்ட பாதகியே! தேயிலை ராச்சசியே!
கட்டபுள்ள கருத்தபுள்ள கண்டாங்கி போட்டபுள்ள சாயச்சேலை மடிச்சுக்கட்டி ஒத்தக்கட றோட்டுமேல ஓடிச் சென்று நெரபுடுச்சி மச்சான் மனம் வருந்த சிட்டாய் கொழுந்தெடுத்து கட்டுடல் தேய்ந்தாளே கருகித்தான் போனாளே இத்தனை பார்த்தபின்பும் உன் இதயம் இளகலையே
கேடு கெட்ட பாதகியே! தேயிலை ராச்சசியே!
óygs 2 folo sJsöp பித்தலாட்ட சட்டம் கொண்டு இந்தியாவா இலங்கையா
ஒங்கப்பன் பொறந்தநாடு
வைகாசி 2006)

ஓங்க ஆயி வளர்ந்த நாடு பாட்டனுக்குரிய நாடு என்று
பலவாறு கேட்ட கேள்வி பஞ்சம் பொழைக்க வந்த எங்கள் பாதையை மறித்ததடி பத்தத்திரு தசாப்தங்கள் எம்மைப் பாடாய்ப் படுத்ததடி
கேடு கெட்ட பாதகியே! தேயிலை ராச்சசியே!
எங்கள் இரத்தத்தை அட்டை கொண்டு உறிஞ்ச வைத்தாய் எங்கள் வியர்வையை
ஆறாய் பெருகவைத்தாய் என் அண்ணன்களைப் பலியெடுத்தாய் என் ஆத்தாவின் உயிர் குடித்தாய் எங்கள்
எட்டுப் பரம்பரையை எதற்காக சீரழித்தாய் இதற்கு மேலும் உன்னை இப்படியே விட்டுவைத்தால் அடுத்த பரம்பரைக்கு ஆர்தான் பதில் சொல்வார் எடுத்த வாருங்கள் ~ உங்கள் கவிவாத்த கத்திகளை தாக்கி வாருங்கள் ~ உங்கள் அலவாக்கு ஈட்டிகளை
வெட்டியெறியுங்கள் ~ இக் கேடு கெட்ட பாதகியை! வேரறத்த வீசுங்கள் ~ இந்த தேயிலை ராச்சசியை
- இரா. சடகோபன்

Page 33
s9 (6úG
சிறுதீத பெருந்த பேரழிை
களிப்டெ தென்றல கடும் பு கதிகலா
L60 Lu மின்சக்தி பலியெடு
பாதகமு
Lu606ids,
வாகனழு
6D60TTB எழில் கு
ஒலை 32
(ஓலை 32)

பரியச் செய்யும்
ன், யாய் எழுகிறது! வத் தருகிறது!
0
உயிர்ப் பெடுக்க உதவும் தண்ணிர்தான், உயிர்ப்பலியும் எடுக்கிறது! உருக்குலைய வைக்கிறது!
0
டுக்க வீசும்
}தான்,
யலாய்ச் சுழல்கிறது! கச் செய்கிறது!
0
கண்சிமிட்டி ஒளிரும் விண்மீன்தான், விண்கல்லாய் விழுகிறது! வீண் தொல்லை தருகிறது!
0
ன்கள் நல்கும்
l,
}ப்பும் செய்கிறது! ம் புரிகிறது!
0
அமுதளித்து உதவும் தேனீக்கள், கொட்டத்துடிக்கிறது! கொடுக்கால் துளைக்கிறது!
d
5 உதவும்
tք,
ஆகிறது! லையச் செய்கிறது!
வைகாச் 2006 )

Page 34
வளர்த்து மதம் ெ
JT8660)6OT
பாதகத்ை
சீராட்டி சிறுபயே தாய்ப்பா
நாயாய்ச்
மனிதருச் மிருக கு
LD60)6) Ul
LD560)u
வைகாசி 2006

d
மகிழ்வடையப் பருகும்
மதுகூடி, மனநிலையைச் சிதைக்கிறது! மனிதத்தை உதைக்கிறது!
0.
வரும் யானை
காண்டு, யே மிதிக்கிறது! தெச் செய்கிறது!
0
வாலாட்டி வாழும் நாய் கூட, வளர்த்தவனைக் கடிக்கிறது! வளர்ந்த கதை மறக்கிறது!
0
வளர்த்த
5)
சம் மறுக்கின்றான்! 5குரைக்கின்றான்!
0
பாசமலர் சொரிவோர்
சிலவேளை, பசுத்தோல் அணிகின்றார்! பரிதவிக்கச் செய்கின்றார்!
d
*குள் வாழும்
ணம்,
ய் எழுகிறது! மறைக்கிறது!
ஏறாவூர் தாஹிர்

Page 35
சமூகத்தில் முன்மாதி கம்யூனிஸ்ட் &
25-06-1919 10-09-1977
உலகில் மனிதர்கள் தான் யாவற்றையும் விட உயர்ந்தவர்கள் தீர்க்கமானவர்கள். அவர்களுக்கு நிகரான வேறொரு உயிரினத்தையும் இவ் உலகில் காண இயலாது. இயற் கைதான் மனிதர்களை உற்பவித்துக் கொண்டது. அவ் இயற்கையை மனிதர்கள் எதிர்த்துப் போராடியும் இணைந்துநின்றும் வசப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வந்திருக்கிறார்கள். அத்தகைய நீண்ட வரலாற்றில் மனிதர்களது உழைப்புத் திறனும் சிந்தனை ஆற்றலும் பகுத்தறிந்து செயலாற்றும் செழுமையும் மனித குலத்தின் இன்றுவரையான வளர்ச்சியாகும்.
இவ் வளர்ச்சிப் போக்கிலே மனித சமூகத்தில் வர்க்கப் பிளவானது தோற்றம் பெற்றது. ஒரு சிலரிடம் உற்பத்திக் கருவிகளும் அதன் மூலமான தனிச் சொத்துடமை அதனைப்பாதுகாக்கும் அரசு அதிகார ஆதிக்கமும் உருவாகி அமைப்பு வடிவம் பெற்றது. அதேவேளை பெருவாரியான மக்கள் கருவிகளோ சொத்துடமைகளோ அற்ற நிலையில் தமது உடல் உழைப்பைக் கொடுத்துவிட்டு வாழ்க்கையில் பெறவேண்டியவற்றைப் பெற முடியாத நிலையில் வாழுமாறுவிடப்பட்டனர். இவ்வாறான அடிப்படை வர்க்க வேறுபாடும் பிளவும் தான் மனிதர்களிடையேயான சகல
 

-Gs)
ரியாக வாழ்ந்தவர்
கார்த்திகேசன்
சி.கா.செந்திவேல்
விதமான ஏற்றத்தாழ்வுகளுக்கும் பேதங்களுக்கும் முரண்பாடுகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் காரணமாகிக் கொண்டன.
மனிதகுல வரலாற்றில் பல்வேறு கால கட்டங்களில் சமூக அமைப்புகள் மாற்றமடைந்து வந்துள்ளனவே தவிர உழைப்பவர்களும் உழைப்பைச் சுரண்டுபவர்களும் என்ற வேறுபாடும் இடைவெளியும் தொடர்ந்து நீடித்தே வந்துள்ளது. அவற்றின் நீட்சியாகவே இன்றைய வர்க்க, இன, சாதிய, பால், நிற வேறுபாடுகள் முரண்பாடு களாகவும் ஒடுக்குமுறைகளாகவும் மட்டுமன்றி போராட்டங்களாகவும் உலகம் பூராவும் நிறைந்து காணப்படுகிறன.
இவற்றுக்கு சமூக விஞ்ஞான அடிப்படை ஊடான விளக்கம் தேடி தமது மேதைத்தன்மை வாய்ந்த சிந்தனை ஆற்றல் மூலம் கார்ல் மார்க்சும் ஃபிரடிக் றி ஏங்கல் சும் பாட்டாளி வர்க்க விடுதலைக்கான தத்துவத்தை உருவாக்கிக் கொண்டனர். அம்மார்க்சிசத்தத்துவமானது அதன் விஞ்ஞானத் தன்மையினாலும் யதார்த்த உலகத் தேவை காரணமாகும் உலகம் பூராவும் பரவிக்கொண்டது. எங்கெங்கு ஏற்றத்தாழ்வுகளும் முரண்பாடுகளும் ஒடுக்குமுறைகளும் இருந்து வந்தனவோ அங்கெல்லாம் மார்க்சிச தத்துவமும் அதன் நடைமுறைப் பிரயோகங்களும் எதிரொலித்தன. அதனைத் துணிவுடன் கையேற்று தத்தம் நாடுகளில் அடக்கப்படும் உழைக்கும் மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் சென்ற ஆரம்பகால பொதுவுடைமை இயக் க முன்னோடிகள் உருவாகினர்.
இவ்வாறு இலங்கையில் உருவாகிய பொதுவுடைமை இயக்க முன்னோடிகளில் ஒருவர் தான் கம்யூனிஸ் ட் கார்த்திகேசனாவார். வடபுலத்தைச் சேர்ந்த மு. கார்த்திகேசன் (1919. 1977) இலங் கைப் பல கலைக் கழகப் பட்டதாரியாவார். தனது பல்கலைக்கழகப் பட்டப் படிப்பை முடிக்கும்போது ஒரு பொதுவுடைமைவாதியாகி
- வைகாசி 2006

Page 36
G:D
கட்சியின் முழுநேரப் பணியினை ஏற்று செயல்பட ஆரம்பித்தார். தான் பெற்ற கல்வியாலும் ஆங்கிலப் புலமையாலும் மட்டுமன்றி நேரடியாகவே தொழிலாளர்கள் உழைக்கும் மக்கள் மத்திக்குச் சென்று அரசியல் சமூகப் பணிகளில் ஈடுபடும் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்.
கல்விப் புலமையும் மார்க்சிச சிந்தனைத் தெளிவும் செயலாற்றும் உறுதியும் கொண்ட தோழர் கார்த்திகேசன் 1945ல் கட்சிப் பணிகளுக்காக யாழ்ப்பாணம் சென்றடைந்தார். அக்காலத்தில் அவரது கல்வித் தகுதி கண்டு யாழ்ப்பாண இந்துக் கல்லூரி சற்றுத் தயக்கத்துடன் ஆசிரியர் பதவி வழங்கியது. அவ் ஆசிரியத் தொழிலில் இருந்தவாறே தோழர் கார்த்திகேசன் தனது கட்சிப் பணிகளை முன்னெடுத்து வந்தார். தோழர் கார்த்திகேசனின் வடபுலத் து வருகையுடேனே அங்கு பொதுவுடமை இயக்கம் அமைப்பு ரீதியாகவும் செயல்பூர்வமாகவும் அறிமுகமாகி செயலாற்றத் தொடங்கியது. அவருடன் பலர் இணைந்து கூட்டாகவே கட்சிப் பணிகளையும் சமூக செயற்பாடுகளையும் மேற்கொண்டனர்.
அன்றைய வடபுலத்து சமூகச் சூழல் பழைமைவாத இறுக் கம் கொணி டதாகக் காணப்பட்டது. அது நாவலர் மரபின் ஊடாக கந்தபுராண கலாசாரத்தின் உச்சாணியாக இருந்து வந்தது. சமூகநீதி சமத்துவம் என்பன பேசாப் பொருளாகவே காணப் பட்டது. சாதியும் தீண்டாமையும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் எழுதா விதிகளாகப் பின்பற்றப்பட்டன. பழைமைவாதத்தால் மூடுண்டு காணப்பட்ட யாழ்ப்பான சமூகச் சூழலை உடைத்து உட்புகுந்து ஒதுக்கப்பட்டு தாழ்த்தப்பட்ட நிலையில் இருந்து வந்த மக்களிடையே சமூக அரசியல் விழிப் புணர்வையும் போராட்ட நிலையையும் உருவாக்குவதில் கார்த்திகேசன் தலைமைத்துவ பங்களிப்பை வழங்கி நின்றார். பெயர் புகழ் சுயநலம் ஆடம்பரம் போன்றவற்றுக்கு அப்பால் சொல்லாலும் செயலாலும் வாழ்வு முறையாலும் அவர் ஒரு நேர் மையான பொதுவுடமை வாதியாக இறுதிவரை வாழ்ந்து வந்தவர்.
பல்கலைக்கழக காலத்தில் பலர் மார்க்சிசத்தின் பால் ஈர்க்கப்படுவது ஒரு நடைமுறையாகவே இருந்துவந்தது. ஆனால் பட்டம் பெற்று தொழில்
வைகாசி 2006)

حتعمختحسن
குடும்பம் வருவாய் தேடுதல் என்ற நிலைக்கு வந்ததும் இன்றைய சமூக அமைப்பின் பிரதான போக்குகளால் இழுபட்டுச் சென்று மார்க்சிசத்தைக் கைவிட்டவர்கள் பலரை சமூகம் கண்டிருக்கிறது. வேறும் சிலர் மார்க்சிசத்தை கைவிடவில்லை என்று கூறிக்கொண்டே பழைமைவாதக் கருத்தியல் களுடனும் சமூகப் பிற்போக்குத் தனங்களுடனும் சமரசம் கொண்டவர்களாகவும் இருந்து வந்திருக்கி றார்கள். ஆனால் ஒருவர் தன் வாழ்நாள் பூராவும் தானி வரித்துக் கொணி ட மார் க்சிசத்தை சொல்லாலும் செயலாலும் வாழ்வு முறையாலும் நடைமுறையில் வைத் திருப்பது என்பது இலகுவானதொன்றல் ல. இனி றைய சமூக அமைப்பும் அதன் பழைமைவாதக் கருத்தியல்களும் அவற்றின் அன்றாட வாழ்க்கை முறைகளும் விதிக்கும் பல்வேறு வகைப்பட்ட தடைகளையும் மீறி முன்செல்லும் பொதுவுடைமைவாதிகளே மார்க்சிச சிந்தாந்தத்தின் வாரிசுகளாகத் தம்மை நிலைநிறுத்தி வந்திருக்கிறார்கள். அத்தகையோரில் முன்னணியில் இருந்துவந்த முன்னோடிகளில் ஒருவர்தான் மு. கார்த்திகேசன். அவருக்கு மக்கள் அளித்த கெளரவப் பெயர் தான் 'கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்’ என்பதாகும்.
வடபுலத்துச் சமூகச் சூழலில் உருவாகிய கல்வியாளன், புதிய சமூக மாற்றத்தை வேண்டி நின்ற மார்க்சிச சிந்தனையாளர். ஒதுக்கப்பட்டு தாழ்த்தப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்ட மக்களின் மீட்சிக்காகப் பணிபுரிந்தவர். சுயநலம் பெயர் புகழ் நாடாத எளிமையான வாழ்க்கை முறையை இறுதிவரை முன்னெடுத்து வந்தவர். வாழ்க்கையில் கஷ்டங்கள் துன்பங்கள் நெருக்கடிகள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வாழ்க் கைப் பயணத்தை பொதுவாழ்வாகவே முன்னெடுத்தவர்.
அத்தகைய கார்த்திகேசன் கல்வித்துறையிலும் சமூகத்தளத்திலும் பொதுவுடைமைப் பாதுகாப்பிலும் பல முன்னணியாளர்களை உருவாக்கித் தந்தவர் என்று துணிந்து கூறலாம். நான் கார்த்திகேசனின் மாணவன் என்று பெருமிதமாகக் கூறும் ஒரு தலைமுறையினருக்கு வழிகாட்டியாக கார்த்திகேசன் இருந்தார் என்பதை வரலாறு தெளிவாகவே பதிவு செய்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
தோழர் கார்த்திகேசன் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து செயற்பட்ட அதேவேளை தனது ஆசிரியத்

Page 37
தொழிலில் நல்லாசிரியனாக மாணவர்கள் சக ஆசிரியர்கள் மத்தியில் போற்றப்பட்டார். அவர் யாழ். இந்துக் கல்லூரியில் ஆசிரியராக உப அதிபராக பின்பு அதிபராகப் பதவி வகித்தார். ஆனால் தொடர்ந்தும் அவரை யாழ். இந்தக் கல்லூரியின் அதிபராகப் பணிபுரிவதற்கு மேட்டுக்குடி கல்விச் சமூகமும் நிர்வாகமும் அனுமதிக்கவில் லை. அவரை கோப் பாயப் கிறிஸ்தவக் கல்லூரிக்கும் அதன்பின் பண்டத்தரிப்பு இந்துக் கல லுTரிக் கும் அதிபராக மாற்றிக்கொண்டனர்.
r- O O O O
கம்யூனிஸ்ட் கார்த் நேர்மை கொண்ட ஏழைகளின் தொண்ட6 நடை நேர்கொண்ட பார்வை, உண்டி சு வடபுலத்தின் கம்யூனிஸ்ட் காண்டாமணி ! ஒடித் திரவியம் சேர்த்த எம்மக்கள் சிலா உதித்த மைந்தன் இவர். மலேசிய நாட்டி கல்வியில் பட்டம் பெற்றார். ஏழைகளின் செயல்பட்டவர் இவர். மார்க்சியக் கொள் கல்வியில் சிறந்த ஆசான் இவர். பல முை மக்கள் சேவையையும் தொணி டாகக கல்விமான்களை, மார்க்சிய வாதிகளை உ வளர்த்து மக்கள் மறுமலர்ச்சி அடையக் கை தன் புண்முறுவலால் எதிரியையும் நண்பன ஏற்க வைத்ததை நாம் அறிவோம். கார்த்தி இறுதிவரை வாழ்ந்ததை நாம் அறிவோ புகையிலைச் சுருட்டும் மலையகத்து குளி இவரின் வாழ்வின் இன்பம். இன்பமும், து சமபந்தியில் வைத்ததால் இவரது புகழ் கொள்கையுடன் வாழ்ந்தவர் எம் ஆசான்.
பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி U60) puj DIT600T616i அமிர்தலிங்கம் தயாளகுணநாதன் (சமாதான
ܢ

தோழர் கார்த்திகேசனின் கல்வி, அரசியல், சமூகப் பணிக்கான காலம் வடபுலத்து சமூகத் தளத்தில் அதிர்வுகளையும் போராட்டங்களையும் வரலாற்றுத் திருப்புமுனைகளையும் கொண்ட செழுமை கொண்ட காலம் என்பதில் ஐயமில்லை. நேர்மையோடும் சமூக அக்கறையோடும் வட புலத்து வரலாற்றைப் பதிவுசெய்ய முற்படும் எவரும் தோழர் கார் தி தி கே சனையும் அவரை முன்னோடியாகக் கொண்ட பொதுவுடைமை இயக்கத்தையும் புறம் தள்ளி நிற்க முடியாது.
திகேசனின் நிஜம்
ர் கம்யூனிஸ்ட் கார்த்திகேசன். நிமிர்ந்த ருக்கிய உடல்வாகு, இவரது சுந்தரம். இவர். பண்டைய காலத்தில் திரைகடல் ரின் ஒரு துளில் சிங்காரச் சீமையில் ல் பிறந்த இவர் ஈழமணிநாட்டில் வந்து சேவையே தனது தேவையெனக் கருதி கை, கணிதத்துடன் கூடிய ஆங்கிலக் ர்னணிக் கல்லூரிகளில் பணிபுரிந்ததுடன் * கொணர்டார். ஏழைகளிலும் பல உருவாக்கினார், மார்க்சியகொள்கையை ர்டார். எதிர்ப்புக்கள்பல தனக்கிருந்தாலும் ாக்கி அவர்களையும் தன்கொள்கையை கேசன் மாஸ்டர் ஏழைகளின் தோழனாய் ம். வடபுலத்து வெய்யிலில் விளைந்த ரில் விளைந்த தேயிலையின் பானமும் ண்பமும் களியாட்டமுமின்றி சகலரையும்
ஓங்கியது. இறுதி வரை மார்க்சியக்
திவான்)
أص
(வைகாசி 2006)

Page 38
அமரர் நா. சோமகாந்தனுக்கு அஞ்ச இலத்திரனியல் ஊடகங்
&
பிறப்பு: 14.01.1934 இறப்பு: 28.04.2006 கடந்த ஏப்ரல் மாதம் 28ம் திகதி வெள்ளிக்கிழமை. அன்றைய தினம் நம்நாட்டின் கலை இலக்கியத் துறைக்கு ஒரு துயரமான நாளாக அமைந்திருந்தது. மூத்த எழுத்தாளரும் , சமய சமூக நல சேவையாளருமான நா. சோமகாந்தன் அவர்களின் திடீர் மறைவு கலை இலக்கிய ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இவர் சிறுகதை எழுத்தாளராக, நாவலாசிரியராக, கட்டுரையாளராக, பத்தி எழுத்தாளராக, திறனாய்வாளராக, வானொலி, மேடைப் பேச்சாளராக விளங்கியவர். மட்டுமன்றி கலை, இலக்கிய, சமய, சமூக நிறுவனங்களிலும் பொறுப்பான பதவிகளை வகித்தவர். அதன் ஊடாக சமய, சமூக நலத்துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கிவந்துள்ளார்.
யாழ் . மாவட்டத்திலுள்ள கரணவாய் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட அமரர் சோமகாந்தன் அவர்கள் கலை இலக்கியத் துறைக் கு கருணையுர் சோமு வாக
(வைகாசி 2006
 

S
Iகளின் இலக்கியப் பணி
- அ. கனகசூரியர்.
அறிமுகமாகி, பின்னர் ஈழத்துச் சோமுவாக நாடளாவிய ரீதியில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியிலும் பலராலும் அறியப்பட்டவர்.
கலை இலக்கியத் துறையில் காத்திரமான படைப்புகளை வழங்கியிருக்கும் ஈழத்து சோமு, தனது எழுத்துக்களின் ஊடாக இலத்திரனியல் ஊடகங்கள் மீதும் தனது கண்ணோட்டத்தைச் செலுத்தியிருக்கிறார்.
இவர் 1992ம் ஆண்டு வெளியிட்டிருந்த ‘ஈழத்து இலக்கியம்: பல்துறை நோக்கு’ என்ற நூலிலும், தினகரன் வாரமஞ்சரியில் 1996ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 1999ம் ஆண்டு நடுப்பகுதிவரை ‘காந்தனின் கண்ணோட்டம் என்ற தலைப்பில் வாரந்தோறும் எழுதிவந்த பத்தி எழுத்துக்களின் ஊடாகவும் வானொலி, தொலைக்காட்சி சேவைகளைப்பற்றிய பல பயனுள் ள தகவல் களையும் , 5560) 6) இலக்கியத்துறையில் அவற்றின் பங்களிப்பு தொடர்பான விபரங்களையும் வழங்கி யிருக்கிறார்.
தகவில் களை, பொழுது போக்கு அம்சங்களை, அறிவு வளர்ச்சிக்கான கல்வி நிகழ்ச்சிகளை பரவலாக பொதுமக்களிடம் ஒரே நேரத்தில் பரப்பும் நோக்கத்துக் காக தயாரிக்கப்பட்ட முதலாவது மின்னணுவியல் சாதனம் என்னும் பெருமை வானொலிக்கு உண்டு’ என்கிறார் இவர்.
உலகிலேயே வானொலி சேவையின் அறிமுகம் தொடர்பாக ஈழத்துச் சோமு இவ்வாறு சொல்கிறார். ' கம்பியில்லா முறையிலான தொலைபேசி முறையைப் பின்பற்றி 1901ல் வானொலிச் செய்திப் பரிமாற்றம் பரீட்சார்த்தமாக

Page 39
அட்லாந்திக் கடலையடுத்து நடத்தப்பட்டது. 1906ம் வருட நத்தார் விழாவின் போது இசையும் உரையும் கொண்ட சிறிய நிகழ்ச்சியொன்றினை ஆர்வலர்கள் சிலர் அமெரிக்காவிலுள்ள மச்சூட்ஸ் மாநிலத்தில் முதற் தடவையாக ஒலிபரப்பினார்கள். எனினும், தொழில் ரீதியான முதலாவது ஒலிபரப்பு நிலையம் 1920ம் ஆண்டின் இறுதியில்தான் பிற்ஸ்பேர்க் நகரில் தொடங்கியது. வானொலிச் சேவை அதே ஆண்டிலேயே மேற்கு நாடுகளில் மட்டுமல்லாது யப்பான் போன்ற கிழக்கு நாடுகளுக்கும் பரவிவிட்டது. எனினும் முதலாவது உலக மகாயுத்தம் காரணமாக ஒலிபரப்பு, போர் வரையறைக்கு உட்பட்டதாக கட்டுப்படுத்தப்பட்டது. அந்தவகையில் யுத்த முனைச் செய்திகளையும், அரச தகவல்களையும் மட்டுமே வழங்கும் சாதனமாகச் செயற்பட்ட வானொலி, யுத்தம் முடிந்தபின்னர் 1930 களிலேயே கலாசார எழுச்சிக்கான ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியும் என உணரப்பட்டது.
வானொலியின் வரலாற்றுத் தகவலை சொன்ன இவர், அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்னர், இலங்கை வானொலியின் இலக்கியப் பணிக்கு உதாரணமாக ஒரு சிறு நிகழ்வை எடுத்துச் சொல்லியிருக்கிறார். 1950ம் ஆண்டு காலப் பகுதி அது. கிராமத்தில் மின்சார வசதிகூட கிடைக்காத ஒருநிலை மட்டுமல்ல, வானொலிப் பெட்டிகூட பலரிடம் இருக்கவில்லை. அந்த நிலையில், யாழ்ப்பாணத்துக் கிராமமொன்றிலே 69 (b. கடையிலிருந்த வானொலிப் பெட்டியிலிருந்து ஒருநாள் ரா.பி. சேதுப்பிள்ளை, அ.ச. சீனிவாச ராகவன், சு. நடேசபிள்ளை, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை முதலிய அறிஞர்களின் குரல்கள் ஒலித்தனவாம். அது, யாழ்ப்பாணம் பரமேஸ்வரக் கல்லூரியில் சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகத்தினரால் ஏற்பாடு செய்து நடந்துகொண்டிருந்த தமிழ் விழாவின் நிகழ்வுகளை இலங்கை வானொலி நேரடியாக அஞ்சல் செய்து கொண்டிருந்ததேயாகும். வானொலியின் இலக் கியப் பணியை
@ఐణ 32)

G7)
நினைக்கின்றபோது இந்த இனிய நினைவுதான் தனது மனதில் எழுவதாக ஈழத்து சோமு எழுதுகிறார்.
இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் ஒலிபரப்பு, தொலைக் காட்சி, திரைப் படம் போன்ற துறைகளில் ஈடுபட்டவர்கள் தமது ஆரம்ப காலத்தில் இலக்கியத் துறை எண் ணும் தொட்டிலில் வளர்ந்தவர்களே என்பதாகச் சொல்லும் அவர், அதற்கு உதாரணமாக இலங்கை வானொலியின் தமிழ் நிகழ்ச்சி அதிகாரியாகப் பதவி வகித்த சோ. சிவபாதசுந்தரம் ‘ஈழகேசரி’ பண்ணையில் எழுத் தாளராக வளர் நீ து, பினி னர் அப்பத்திரிகையின் ஆசிரியராக விளங்கியவர் என்பதையும் , பின்னர் தமிழ் நிகழ்ச்சி அதிகாரியாகப் பொறுப்பை ஏற்ற நாவற்குழியூர் நடராஜன் நாடறிந்த கவிஞர் என்பதையும் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வானொலியின் நிகழ்ச்சிகளின் ஊடான கலை இலக்கியப் பங்களிப்பை பற்றி, ஈழத்துச் சோமு தனது ‘ஈழத்து இலக்கியம்: பல்துறை நோக்கு என்ற நூலில் பின்வருமாறு எடுத்துச் சொல்கிறார்.
‘ஐம்பதுகளில் 'சானா' என்ற சண்முகநாதன் நாடகத் தயாரிப்பாளராக இலங்கை வானொலியில் பணியாற்றியபோது பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் ‘உடையார் மிடுக்கு நாடகம், இலங்கையர் கோனின் தொடர் நாடகங்களான “விதானையார் வீட்டில்’ லண்டன் கந்தையா’, ‘கொழும்பில் கந்தையா என்பன ஒலிபரப்பாகின. நேயர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் செய்த நாடகங்கள் அவை, அக் காலத்தில் சிறுகதைகள் சிலவும் ஒலிபரப்பாகியுள்ளன.
அறுபதுகளிலிருந்து கவிதை நாடகங்கள், சரித்திர நாடகங்கள், கவியரங்குகள், இலக்கிய உரைகள் என்பன முக்கிய இடத்தை வகித்ததுடனர், இலக் கியத் தரமான இசையிடையிட்ட உரைச் சித்திரங்களும்
வைகாசி 2006

Page 40
ᏣᏚᎧ
ஒலிபரப் பாகி வருகின்றன. பிரபலமான எழுத்தாளர்கள் கலை, இலக்கியக் கூறுகளை பற்றிய தமது கருத்தைக் கூறும் களமாக "கலைக்கோலம்’ நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது கலை இலக்கியச் செழுமை மிக் கதாச தயாரித்தளிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி, பின்னர் 'கலைப்பூங்கா’ என்ற பெயரில் ஒலிபரப்பாகிவந்தது
புத்தக விமர்சன்ங்கள், நாடக விமர்சனங்கள் இலங்கைத் திரைப்படங்கள் பற்றிய மதிப்பீடுகள் எழுத்தாளர்களின் பேட்டிகள், இலக்கியக் கலந்துரையாடல்கள் என்பன இலக்கிய ஆர்வலர்களை உற்சாகப்படுத்தும் நிகழ்ச்சிகளாகும்
இலங்கைச் சிறுகதை ஆசிரியர் பலரின் சிருஷ்டிகள் பொருத்தமான தொனியுடனும், இசைக் குறியீட்டுடனும் ஒலிபரப்பப் பெற்றமையினால், அவற்றின் கலையம்சமும் கருத்தும் சிறப்பாகச் சென்றடைய வானொலி துணை நின்றது. வானொலிக் கவியரங்குகளில் கவிஞர்கள் தமது படைப்புகளை எடுத்துரைக்கும் முறை அநேக சந்தர்ப்பங்களில் நேயர்களைக் கவரும் தன்மை கொண்டவையாக அமைந்தன.
வெறும் சூனியத்திலிருந்து புதுமை பூக்க முடியாது. அதன் அடி அத்திவாரம் பாரம்பரியக் கலாசார செல்வங்களும் இலக்கியங்களுமே ஆகும். தமிழில் நவீன இலக்கியங்களை ஊக் குவித்ததோடு மட்டும் வானொலி நின்றுவிடாமல் பாரம்பரிய கலாசாரக் கூறுகளாக உடுக்கு, கரகம், காவடி, கூத்து, கிராமியப் பாடல்கள் முதலியவற்றையும் ஒலிபரப்பியது. வடமோடி தென்மோடிக் கூத்துக்களையும் மற்றும் கிராமிய நாடகங்களையும் வெளிக்கொணர்வதில் வானொலி பெரும் பங்களிப்பைச் செய்தது.
கர்நாடக சங்கீத வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக சிறந்த வித்துவான்களுக்கு ஒரு மணி நேரக் கச்சேரி செய்யும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. வளரும் இளம் தலைமுறை இசைக் கலைஞர்களுக்கு முப்பது நிமிடம் ஒதுக்கப்பட்டது. இலங்கைத் தமிழ் பாடல்களுக்கு மெட்டமைத்து, இனிய
(வைகாசி 2006)

இசையுடன் மெல்லிசைப் பாடல்களாக வழங்குவதற்கு எஸ்.கே. பரராசசிங்கம் போன்ற இசை நுட்பம் தெரிந்தவர்கள் முயற்சி மேற்கொண்டு வெற்றியும் பெற்றனர்.
தேசிய சேவையில் மட்டுமன்றி, வர்த்தக சேவை மூலமாகக் கூட தமிழ் இலக்கியப் பங்களிப்பு அவ்வப்போது நல்ல தொடர் நாடகங்களாக நடைபெற்றிருக்கின்றது. அ.ந. கந்தசாமியின் 'மனக் கண்‘, சில்லையூர் செல் வராசனின் ‘தணியாத தாகம்’, இளங்கீரனின் அவளுக்கு ஒரு வேலை வேண்டும் மற்றும் காவலூர் ராசதுரை, தெளிவத்தை யோசப் போன் றோ ரினி நாடகங்களும் இவ்வகையில் குறிப்பிடக் கூடியவையாகும். இவ்வாறு இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கான பங்களிப்பைச் செய்ததில் செய்து வருவதில் வானொலி வகிக்கும் முக்கிய இடத்தைச் சுட்டிக்காட்டுகிறார் ஈழத்துச் சோமு.
வானொலியைப் போலவே, ஒரு கருத்தை ஒரே நேரத்தில் ஏராளமான மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு பயன்படுத்தப்படும் வெகுஜனத் தொடர்புச் சாதனமாக தொலைக் காட்சியும் விளங்குவதாகச் சொல்கிறார் இவர். வாசிப்பதையும், காதால் கேட்பதையும் விட கணி னால் பார்த்து விடுவதில் தானி உண்மையிருக்கிறது என்ற உள்ளூர் நம்பிக்கை மனிதர் எல்லோருக்கும் இருக்கவே இருக்கிறது. இந்த வகையிலே நேயர்களின் ஆவலை நிறைவுசெய்ய தொலைக்காட்சியால் முடிகிறது. செய்தியைச் சொல்வதுடன் அதுபற்றிய காட்சிகளையும் அது வழங்குகிறது என்கிறார் ஈழத்துச் சோமு.
’ 1930 களின் ஆரம்பத்திலேயே உலக அரங்கில் தோற்றம்பெற்ற தொலைக்காட்சி சாதனம், 1979ம் ஆண்டில்தான் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டது. 1937ல் ஆறாவது
(ஓலை 32)

Page 41
ஜோர்ஜ் மன்னரின் முடிசூட்டு விழா வெகு கோலாகலமாக நடந்தபோது, பத்திரிகை புகைப் படங்களினாலும் , வானொலி வர்ணனையினாலும் அடக்கிவிட முடியாத அச்சம்பவத்தை முதற் தடவையாக தொலைக்காட்சி சாதனம் ஒளிபரப்பி பல இலட்சம் மக்களின் பாராட்டைப் பெற்றது.
வானொலியின் அம்சங்களும், சினிமாவின் அம்சங்கள் சிலவும் இணைந்து வீச்சுப்பெற்ற ஒரு ஊடகமாக தொலைக்காட்சி விளங்குகிறது. நாடக அரங்குகள் , திரைக் கூடங்கள், விளையாட்டுத் திடல்கள் எனத் தேடி அலைந்து, இடித்து மோதி, ரிக்கற் பெற்று களிப்பையும் ரசனையையும் பெறும் நிகழ்ச்சிகளை, சிரமம் எதுவுமின்றி அமைதியாக வீட்டிலிருந்தே பார்க்கக் கூடியதாகத் தொலைக் காட்சி உதவுகிறது. இந்த வசதிகள் தானி தொலைக்காட்சி சேவை நேயர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றதற்கான காரணங்களில் சில.
இரணி டாவது உலக மகா யுத் தம் முடிவடைந்த பின்னர்தான் தொலைக்காட்சி யுகம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு இச்சாதனம் துரித வளர்ச்சிபெற்றது. 1954ல் வர்ணத் தொலைக்காட்சியாக மாற்றம் பெற்றது. மக்களது வாழ்க்கையுடன் தொடர்புள்ள அனைத்து அம்சங்களைத் தழுவியும், கலாசார கூறுகளை ஊக்குவித்தும் பல நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் சேர்க்கத் துவங்கினர்.
சிறுவர்களைக் கவரும் கார்டுன்கள், சிரிப்பு நிகழ்ச்சிகள் சித்திரங்கள், இளைஞர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள், புதிர்ப்போட்டிகள், முக்கிய விஷயங்கள் பற்றிய உரைகள், கலந்துரையாடல்கள், ஜனரஞ்சக இசை வடிவங் களர் , நாட்டிய நாடகங்கள் , பல்கலைகளின் வண்ணக் கோலங்கள், நாடகம், சமகால நிகழ்வுகள் பற்றிய பின்னணியை விளக்கும் நிகழ்ச்சிகள், சமயம், நேயர் தொடர்பு, மொழிப் போதனை, பொதுமக்களுக்கான
@ఐణ 3?)

(1N Q39)
தகவல்கள், கல்வி, விவசாயம் - இவ்வாறாக தொலைக்காட்சியின் களம் ஐம்பதுகளிலிருந்து விரிவடைந்தது. சக்திமிக்க இச்சாதனத்தில் விளம்பரம் செய்வதற்கு தொழில் அதிபர்கள் போட்டியிட்டனர். இதன் மூலம் பெருமளவு வருவாயும் கிடைத்தது.
இவ்வாறு தொலைக்காட்சியின் வளர்ச்சியை எடுத்துச் சொல்லும் சோமு அவர்கள், இலங்கையில் தொலைக்காட்சி சேவையில் பணி டிகை தினங்களில் நடத்தப் படும் கவியரங்குகள் மூலம் பழம்பெரும் கவிஞர்கள் மட்டுமல்ல, புதிய கவிஞர்களும் நேயர்களுக்கு திரையூடாக அறிமுகமாகும் வாய்ப்பு ஏற்பட்டது என்பதுடன், வில்லுப்பாட்டு, பிரபல எழுத்தாளர் களின் நாடகங்கள், எழுத்தாளர்களின் இலக்கிய உரைகள், எழுத்தாளர்களின் நூல்கள் அறிமுகம் என்பவைகளை உள்ளடக்கிய கலை இலக்கிய, சமய நிகழ்வுகள் ஊடாகவும் இலங்கை இலக்கியம் பற்றிய தகவல்கள் இலக்கிய ஆர்வலர்களைச் சென்றடைந்தது என்பதையும் தெளிவாக எடுத்துச் சொல்கிறார். இலங்கையில் தமிழ் இலக்கியத் துறைக்கு தொலைக்காட்சி சாதனம் வழங் கிவரும் பங்களிப்பு, எதிர் காலத் தில் ஆழமும் அகலமும் கொண்டதாக அமையும் என இலக்கிய உலகம் நம் பிக் கையுடன் எதிர் பார்ப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
ஈழத்துச் சோமுவாக கலை இலக்கிய உலகுக்கு அறிமுகமான நா. சோமகாந்தன் அவர்கள் மறைந்தாலும், கலை இலக்கிய ரசிகர்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருப்பார் என்பது மட்டும் உண்மை.
வைகாசி 2006

Page 42
GO
سے
சங்கi
சர்வதேச மகளிர் தினம்
19.03.2006 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு செல்வி சற்சொரூபவதி நாதன் தலைமையில் நிதிய அறங்காவலரும் சமூக சேவகியுமான திரும கலந்துகொண்டார். தமிழ் வாழ்த்தினை சங்கீத ஆ சிறப்பு உரைகளை இந்துசமய அலுவல்கள் திை அவர்கள் எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே ே நற்பணியாளர் ஆசிரியை திருமதி யோகேஸ்வரி அன்றும் இன்றும் என்ற தலைப்பிலும், இந்து கt சுந்தரராஜா திருமணபந்தம் பெண்கள் தொழில் ப உரையாற்றினாகள். சிறப்பு நிகழ்வாக நீர்கொழும் பெண்ணியம் என்ற தலைப்பில் வில்லுப்பாட்டு நி திணைக்கள வரி மதிப்பீட்டாளரும் தமிழ்ச்சங்க புவனேஸ்வரி அரியரத்தினம் நிகழ்த்தினார்.
64 வது ஸ்தாபகதின விழா
23.03.2006 புதன்கிழமை மாலை 6.00 மணி தமிழ்ச் சங்கத் தலைவர் குமாரசாமி சோம விருந்தினராகச் சட்டமாஅதிபர் கே.ரி. கமல பல்கலைக்கழக கல்விப்பீட முதுநிலை வி கலந்துகொண்டனர். சங்க கீதத்தை செல் விஜயருக்ஷாயினி சந்திரசேகரமும் இசைத்தனர் திரு. த. கோபாலகிருஸ்ணன் நிகழ்த்தினார். ெ வெளியிடப்பட்டது. முதற் பிரதியை இலக்கிய கொண்டார். வெளியீட்டு உரையை இலக்கிய கு ‘தமிழிசையும் கர்நாடக இசையும் என்ற தலைப் தமிழ்ப் பல்கலைக்கழக ஒய்வுநிலை பேராசிரி நிகழ்த்தினார். தமிழ்ச் சங்க மூத்த உறுப்பின சதாசிவம் சரவணமுத்து, திரு. குருகுலசூரிய நி விருது-2006 வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்ட தாயும்’ என்ற நாடகத்தினை சோக்கல்லே நன்றியுரையினைத் துணைப் பொதுச் செயலா
(வைகாசி 2006)

6)6).
சங்கரப்பிள்ளை மண்டபத்தில் துணைத்தலைவர் நடைபெற்றது. இலங்கைச் சுகாதார நம்பிக்கை தி இராஜேஸ்வரி ரவிகுலராஜன் பிரதம அதிதியாகக் சிரியர் திருமதி சுபாஷாமினி கந்தசாமி இசைத்தார். ணக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் பெண் இளைப்பில்லை என்ற தலைப்பிலும் சமய மாணிக்கவாசகர் ‘சமூகத்தில் பெண்களின் பங்கு லாசார அபிவிருத்தி உதவியாளர் செல்வி பவானி ார்ப்பதற்கு தடையாக உள்ளதா என்ற தலைப்பிலும் பு விஜயரட்ணம் இந்து மத்திய கல்லூரி மாணவிகள் கழ்ச்சியை நிகழ்த்தினர். நன்றியுரையை இறைவரித் பரிசில் நிதிய குழுச் செயலாளருமான திருமதி
க்கு சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கொழும்புத் |சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. பிரதம )சபேசனும் சிறப்பு விருந்தினராக கொழும்புப் ரிவுரையாளர் கலாநிதி மா. கருணாநிதியும் வி கவினாளினி சிறிஸ்கந்தராசாவும் செல்வி வரவேற்புரையை இலக்கியக் குழுச் செயலாளர் காழும்புத் தமிழ் சங்க மாதாந்த இதழ் ஓலை 30 புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் பெற்றுக் 5ழு உறுப்பினர் திரு. வ. சிவஜோதி நிகழ்த்தினார். பில் சிறப்புச் சொற்பொழிவை தமிழ்நாடு தஞ்சாவூர் யர், பேராசிரியை திருமதி ஞானா குலேந்திரன் ார் திரு. சிவராமலிங்கம் செந்தில்நாதன், திரு. க்லஸ் டேவிற் பீரிஸ் ஆகியோர் சங்கச் சான்றோன் னர். குழந்தை சண்முகலிங்கத்தின் 'எந்தையும் Uா சண்முகம் குழுவினர் மேடையேற்றினர். ளர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி நிகழ்த்தினார்.
@వాణం 3)

Page 43
பேராசிரியர் ம. முகம்மது உவைஸ் நினைவுப் ே
25.03.2006 சனிக்கிழமை மாலை 5.30 கு தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் பெரியதம்பிப்பில் கலாசார சமய அலுவல்கள் அமைச்சு முன்னை: ஜமீல் ‘தமிழ் இலக்கியத்தினூடு இஸ்லாமிய பேருரையை நிகழ்த்தினார்.
இலவச மருத்துவ முகாம்
சர்வதேச லயன்ஸ் கழகம் 306 B2 வின் ஐ இணைந்து 26.03.2006 ஞாயிறு முற்பகல் 8 நடாத்தியது. இந்நிகழ்வில் நீரிழிவு நோய்ப் பரிே பொதுவைத்திய பரிசோதனை (சருமம் முதலி வழங்கப்பட்டன. கண் பரிசோதனை செய்து கt தமிழ்ச்சங்க ஆட்சிக் குழு உறுப்பினர் லயன் ஆ செய்துகொடுத்தார்.
“சுப்பிரமணியம் - மாலதி’ மண்டபம் திறப்பு விழா
30.04.2006 ஞாயிறு மாலை 4 மணிக்கு தமிழ்ச் சங்க தலைவர் குமாரசாமி சோமசுந்தரம் உறுப்புரிமைச் செயலாளர் சி. அமிர்தலிங் ஆ. குகமூர்த்தியும் நிகழ்த்தினர். ஆசியுரையை மா. சண்முகரட்ணசர்மா ஜே.பி. (கொழும்பு கப்பி பிரதம குரு) நிகழ்த்தினார். மலர் (படிக்க வெளியீட்டுரையை கலாநிதி வ. மகேஸ்வரன் திரு. ஆ.மா. சுப்பிரமணியம் - மாலதி தம்பத் மங்கையர்கழக இசை நடனக் கல்லூரி மாணவி அவர்களின் நெறியாள்கையின் கீழ் நடன நிகழ் செயலாளர் க.இ. கந்தசுவாமி அவர்கள் தெ திருமதி அ. புவனேஸ்வரியின் தமிழ் வாழ்த்து
வாராந்த மாதா
திகதி தலைப்பு
29.03.2006 புலவர் வரிசை
அந்தகக்கவி வீரராகவ முதலியார்
OS.04.2006 அறிவோர் ஒன்று கூடல்
புறநானூறு - பெருஞ் சோற்று மிகு
19.04.2006 அறிவோர் ஒன்று கூடல்
புறநானூறு - உண்டாலம்ம இவ்வுல்
26.04.2006 அறிவோர் ஒன்று கூடல்
புறநானூறு - மயக்குறு மழலைகள்

GD
மாரசாமி விநோதன் மண்டபத்தில் கொழும்புத் ர்ளை விஜயரத்தினம் தலைமையில் நடைபெற்றது. னாள் மேலதிகச் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். தமிழ் இலக்கியம்’ என்ற தலைப்பில் நினைவுப்
பருரை
ந்து கழகங்களும் கொழும்புத் தமிழ்ச் சங்கமும்
மணி தொடக்கம் பிற்பகல் 12.30 மணிவரை சோதனை (FB.S) இரத்த அழுத்தப் பரிசோதனை மியன) இடம்பெற்றன. அதற்குரிய மருந்துகள் ண்ணாடிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வுகளுக்கு , பற்குணன் அவர்கள் வேண்டிய ஒழுங்குகளைச்
(மூன்றாவது மாடி)
சுப்பிரமணியம்-மாலதி மண்டபத்தில் கொழும்புத் தலைமையில் நடைபெற்றது. தமிழ் வாழ்த்தினை கமும், வரவேற்புரையை துணைத் தலைவர் ப பிரம்மறி சிவகாமதிலகம், சிவாகம பூஷணம் த்தாவத்தை பூபால செல்வவிநாயகர் தேவஸ்தான ட்டு 2006) ஒன்றும் வெளியிடப்பட்டது. மலர் நிகழ்த்தினார். மண்டபத்தை அன்பளிப்பு செய்த நியினர் கெளரவிக்கப்பட்டனர். கொழும்பு சைவ விகள், திருமதி சந்திரிகா சூரியகலா ஜீவானந்தன் }வுகளை நிகழ்த்தினர். நன்றியுரையினை பொதுச் 5ரிவித்தார். ஈற்றில் பரிசில் நிதிய செயலாளர் டன் விழா முற்றுப்பெற்றது.
ாந்த நிகழ்வுகள்.
நிகழ்த்தியர்
பண்டிதர் சி. அப்புத்துரை
பதம் புராணவித்தகர் மு. தியாகராசா
basib புராணவித்தகர் மு. தியாகராசா
r புராணவித்தகர் மு. தியாகராசா
தொகுப்பு : ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி
{ வைகாசி 2006)

Page 44
உலகமும் உயிரினமும் மனிதனும் கடவுளின் படைப்பு என்பது கடவுள் கோட்பாடு மதங்கள் எல்லாவற்றினதும் கருத்து. ஆனால் பல கோடி ஆண்டுகள் பரிமாண வளர்ச்சி பெற்று உயிரினங்கள் தோன்றின என்பது அறிவியல் (p19.6).
ஏன் என்ற கேள்விக்கு சிந்தனை, பகுத்தறிவு, ஆராய்ச்சி போன்ற வழிகள் மூலம் பெற்ற அறிவியல் முடிவுக்கும், அப்படித்தான் என்று அறியாமையின் விளைவான நம்பிக்கையில் உணி டான விடை மதக் கருத்துக் குமி அடிப்படைகள் ஆகின்றன.
மனிதக் குரங்கிலிருந்து வந்த காட்டு மனிதன் வேட்டையாடுவதும், உணவைத் தேடுவதுமாக வாழ்ந்து கொண்டிருந்தான். திறமையும் , திட்டமிடுதலும் வேட் டையாடுவதற்கு வேண்டுவனவாக இருந்தன. அவன் தன் அனுபவத்தில் பெற்ற அறிவினால் ஆயுதங்களையும், சிறு குழுக்களாக அமைத்து வேட் டையாடிய பின் னர் , 9Ꭷ -- 6ᏈᏈᎷ 60Ꭰ 6Ꮒl குழுவினருடன் பகிர்ந்து கொண்டான். இவ்வாறு கூட்டு வாழ்வாகத் தொடங்கிய வாழ்வு காலப்போக்கில் சமூக வாழ்வாக மாறியது.
கூட்டு வாழ்க் கையின் பொருட்டு மனிதர்களுக்கு இடையில் கருத்துப் பரிமாற்றம் இடம் பெற்றது. காலம் செல்லச் செல்ல கருத்துப் பரிமாற்றங்களினால் கூட்டு வாழ்க்கை வலுப்பட்டது. வேட்டையாடுதலைத் தொடர்ந்து பயிர்த்தொழில் நடைமுறைக்கு வந்தது.
மனிதன் இவ்வாறு வளர்ச்சி அடைந்து வாழத் தொடங்கியதும் தனக்கு ஆச்சிரியமாகவும், புதுமையாகவும் தோன்றியவற்றை எல்லாம் தனக்கும் இயற்கைக் குமி அப்பாற் பட்ட சக்திகளால் உண்டாக்கப்பட்டவை என்று நம்பினான். மனிதன் மீது இயற்கை செலுத்திய ஆதிக்கம் அவனது உணர்வில் பயத்தை உணி டாக் கியது. இவ்வாறு உணர் டான நம்பிக்கை, பயம் போன்றவை மனிதனது
( வைகாசி 2006)
 

- பேராசிரியர் ச.சச்சிதானந்தம் (பிரான்ஸ்)
உணர்வில் ஏதோ ஓர் சக்தி, கடவுள் பற்றிய கற்பனை எண்ணங்களைத் தோற்றுவித்து விட்டன. சூரியன், மழை, காற்று, நெருப்பு முதலானவற்றைக் கடவுள் எனக் கருதினான். இயற்கையினி ஆற்றல் மிகு வெளிப்பாடுகளின் போது துணிவிழந்து துணை அற்றவன் ஆனான். வழக்கத்துக்கு மாறான புயலால் அவ் வாழ்வு மற்றும் உடமைகளின் அழிவுகளைக் கண்டபோது, காற்று, மழை முதலியவற்றை கடவுளின் சீற்றத்தால், வெறுப்பால் விளைந்த விளைவுகள் என நினைத்தான்.
எனவே, அவன் தன்னைத் தானே கடவுளை திருப்திபடுத்தும் முயற்சிகளில் ஈடுபடுத்திக் கொணி டான் . வழிபாடுகள் தோன்றின. பலியீடுகள், படையல்கள், வேண்டுதல்களும் தோன் றின. இவ்வாறு தானி அறிவினி பலவீனத்தால், அறியாமையால் காரண காரியம் தெரியாததால் எழுந்த பயத்தின் அடிப்படையில் கடவுள் நம்பிக்கை உருவானது. கடவுள் நம்பிக்கையினால் மதம் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வாறான எண்ணங்களே பின்னர் உண்டாக்கப்பட்ட மதக்கோட்பாடுகளுக்கு முன்னோடியாக அமைந்தன. மனிதன் தன்னால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகளில் அவன் இயற் கைக்கு மேலான சக்திகளிடம் திரும் பினான். தனி விருப்பு வெறுப்பு முயற்சிகளில் , சிலவேளைகளில் சில இயலாமைகளின் போது தன் உறுதியான எண்ணத்தாலும், எண்ண ஒருமைப்பாட்டாலும் முடிக்க முடியும் என்ற தீர்மானத்திற்கு வந்தான். மனிதன் தன் வாழ்வின் முக்கிய நிலை மாற்றங்களான பிறப்பு, பருவமடைதல், திருமணம், இறப்பு ஆகியவை கடவுளின் விருப்பத்தால் நிகழ்பவை எனவும் நினைத்தான். எனவே, கடவுளது அனைத்து செயல்களும் தூய்மையாக கொண்டாடப்பட வேண்டும் என
எண்ணினான்.
ஒலை 32

Page 45
இப்படியான எண்ணங்கள் கருத்துக்களின் விளைவாக கடவுள் நம் பிக் கையும் , மதக்கோட்பாடுகளும் இயற்கையை விளங்கிக் கொள்ளாமல், தன்னில் நம்பிக்கை இல்லாமல் இயற்கைக்கு அப்பாற்பட்டவைகளின் மீதான நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டவை.
இவ்வாறாகத் தோன்றிய மதத்தின் பெயரால் சிலர் சமூகத்தில் மதிப்பும், பெருமையும் பெற்று தங்களை வளர்த்துக் கொண்டார்கள். இதனால் மனிதனை சுரண்டி வாழும் சுகபோக வாழ்வு அந்த சிலருக்கு கிடைக் கப் பெற்றது. இக்கொள்கையை ஆதரிக்கின்ற கூட்டம் பெருகியதால் சுரண்டி ருசி கண்ட வர்க்கம் இவற்றைப் பேணிக்காத்து வந்தன. இதனால் மதம் சமூகத்தில் வலிமையான ஆதரவையும், ஆதாரத்தையும் பெற்றது.
இவ்வர்க்கத்தினர் மடலாயத் தலைவர்க ளாகவும், மதத்தலைவர்களாகவும் ஆனார்கள். இத்தலைவர்கள் சமூகத்தில் செல்வாக்கு பெற்றிருந்தமையால் அரசியலில் ஈடுபடவும், அரசுகளைத் தம் வசப்படுத்தவும் வலிமை பெற்றிருந்தார்கள். இன்னும் இவ்வாறான நிகழ்வுகள் பரவலாக உலகெங்கும் நடந்து கொண்டிருக்கின்றன.
மனிதன் தனது ஒவ்வொரு நோக்கத்திற்கும் ஒவ்வொரு கடவுள் இருக்கிறார் என நினைத்து, பல கடவுள்களை வணங்கினான். மடலாயத் தலைவர்களும், மதத் தலைவர்களும் தங்கள் அபிப் பிராயங்கள், கடவுள் மனிதனைப் படைத்தார் என்று கூறிக்கொண்டு மனிதன் கடவுள்களைப் படைப்பது முற்றுப் பெறவில்லை. காட்டு மனிதனை தேவை கூட்டு மனிதன் ஆக்கியது. கூட்டு மனிதனை சிந்தனை பகுத்தறிவு. துணிவு ஆகியன விஞ்ஞான மனிதன் ஆக்கின. மனிதனின் முன்னேற்றத்திற்கும், சமூக வளர்ச்சிக்கும் விஞ்ஞான அறிவின் பங்கு அளப்பரியது.
விஞ்ஞானம் வளர்ச்சி அடையாத நிலையில் மதங்கள் போன்ற சமுதாய இயக்கங்கள் இயற்கை அமைப்புக்களை நிகழ்ச்சிகளை, அதாவது உலகம், உயிர் தோன்றியது பற்றி தனி னுடைய இருக்கின்ற எத்தனையோ
( ஒலை 32 H

Gs)
மூடப்பழக்க வழக்கங்கள், குருட்டு நம்பிக்கைச் செயல்கள், நம்முடைய அறிவு, ஆராய்ச்சி, பணம், நேரம், முயற்சி, முற்போக்கு வளர்ச்சி முதலியவற்றை எலி லாம் அடியோடு கெடுத்துவிடுகின்றன.
உலக வரலாற்றில் மதங்களின் தோற்றத்தை நோக்கும் போது, பழைய மதங்களின் மறு மலர்ச்சியாகவே புதிய மதங்கள் தோன்றியதைப் பார்க்கலாம். மேலும், மனிதர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து அபிப்பிராய வேறுபாடுகளினால் மதங்களில் பல பிரிவுகள் ஏற்படலாயின.
ஒவ்வொரு மதக் காரனும் தன் மதம் மூலமகாத்தானி மக்கள் முழுவதும் மோட்சத்துக்குப் போக முடியும் என்றும், தன்தன் மதத் தலைவர்தான் கடவுள் அவதாரம் என்றும் அவரவர்கள் சொன்னவைகள் எல்லாம் கடவுளால் சொல்லப்பட்டவைகள் தான் என்றும் சொல்லித் திரிகின்றன. இவர்களில் யார் உண்மையானவர்களாக இருக்க முடியும் என்று கண்டுபிடிக்க முடிவதில்லை.
ஒவ்வொரு மதக் காரனும் அவனவன் மதத்தை நம்பாதவனுக்கு பாவம் என்றும், நரகம் என்றும், மோட்சம் இல்லை என்றும் சொல்லக் கேட்கிறோம். மனிதனாகப் பிறந்தவன் இந்த மதங்களுக்காக எத்தனை நரகத்திற்கு போய் வருவது?
மக்களின் நலத்திற்காக ஒழுக்கத்தைப் போதிப்பதற்காகவும், உலகத்தில் நியாயத்தை நிலைநாட்டவும் மதம் உருவானதாகவும், அவற்றிற்கு கடவுள் ஒருவர் இருக்க வேண்டும் எனவும் சொல்லப்படுகிறது. பல இனிப்பான, அழகான, செல்வாக்கான வார்த்தைகளை எடுத்துக் காட்டுகிறார்கள்.
மதவாதிகள் கூறுவது போல் சொல்கிற ஒழுக்க விதிகளின்படி யார் ஒழுகிறார்கள்? கடவுள் சொன்னபடி மதக் கோட்பாடுகளின்படி யார் நடந்து கொள்கிறார்கள்? மதங்களைப் போதிக்கிறவர்களாவது அவர்கள் கூறும் ஒழுக்க விதிகள், கட்டுப்பாடுகளின்படி வாழ்ந்திருக்கிறார்களா?
‘அன்பே சிவம்’ என்பவர்களும், 'ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு’ என்கிறவர்களும் 'அன்பே கடவுள்’ என்று
{ வைகாசி 2006)

Page 46
GD
சொல்பவர்களும் கடவுள் இல்லை என்று சொன்னதும் தன்னை இல்லை என்று சொன்ன மாதிரியான கோபத்தில் , ஊருக்கு உபதேசம் உனக்கில்லை பெண்டாட்டி என்பது போலி சீறாமல், ஆத்திரப்படாமல் இருக்கிறார்களா?
'ஒரு மனிதனின் நல்ல பண்புகள் அவன் கொண்டுள்ள மத நம்பிக்கையின் அளவுக்கு எதிர் விகிதத்தில் மாறும் தத்துவ மேதை பெர்ட்ரண்ட் ரஸ்ஸஸ் கூறியது நடைமுறையில் பலரிடம் காணக் கூடியதே.
வாழ்க் கையில் இருந்துவரும் பழக்க வழக்கங்கள், மூட பக்தி, குருட்டு நம்பிக்கைகள் போன்றவைகள் எல்லாம் மதம், கடவுள் பாவபுண்ணியம், மோட்ச நரகம் என்பவற்றை ஆதரமாகக் கொணி டே நடைபெற்று வருகின்றன.
எந்த ஒரு காலத்திலும் எவ்வளவுக் கெவ்வளவு மத உணர்ச்சி அதிக தீவிரமாகவும் மதத்தில் மக்களுடைய பிடிவாதமான நம்பிக்கை அதிகமாகவும் . இருக் கினி றதோ அவ்வளவுக்கவ்வளவு உலகில் கொடுமையும் மிகவும் மோசமான நிலையும் இருந்திருக்கின்றன இதற்கு மதக் கலவரங்களைக் கூறலாம் மதக் கலவரங்கள் இடம் பெறும் போது இழக்கப்பட்ட உயிர்களின் எண்ணிக்கையும் அழிக்கப்பட்ட சொத்துக்களின் அளவுகளும் மனிதனுக்கு மதவெறி வந்தால மனிதத்தன் மைக்கும் மனித உயிருக்கும் கொடுக்கும் மதிப்பு எவ்வளவு என்பது விளங்கும். பக்தி வந்தால் புத்தி போய்விடும் புத்தி வந்தால் பக்தி போய்விடும் என பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சொன்னது எவ்வளவு உண்மை.
ஒரு காலத்தில் மதத் தலைவர் களி சொல்வதுதான் வேதம், அவர்கள் கூறும் வேதம் தான் அறிவியல் என்றிருந்தது. ஆனால் காலப்போக்கில் மதத்தலைவர்களின் கற்பனைச் கட்டுப்பாட்டுக் கதைகள் துணிவான சில சிந்தனையாளர்களால் பொய்யாக்கப்பட்டன.
பூமி தட்டையானது என பைபிளில சொல் லப் படுகினி றது. ஆனால் பூமி உருண்டையானது. பூமி சூரியனைச் சுற்றி
(வைகாசி 2006)

வருகிறது என்று கோபெர்னிக்கசுக்கும் பிறகு வாதிட்ட கலிலியோவுக்கு வயதான கிழவர் என்றும் இரக்கப்படாமல் சிறைதண்டனை வழங்கியது இங்குயிஸிஸன் (Ingauisition) திருச்சபை.
மனிதனின் உலகத் தோற்றத்திற்கும், நடப்பிற்கும் காரணம் கண்டு பிடிக்க முடியாத நிலையில் கடவுள் என்றும், சக்தி என்றும், கடவுள் செயல் என்றும் நினைத்துக் கொள்வதும், அவற்றிற்கு காரணகாரியம் தோன்றிய பின்பு அந்த நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வரும் நிலை இக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. கொப்பளிப்பான், சின்னமுத்து நோய்கள் அம்மன் கோபிப்பதனால் வரும் நோய்கள் என்றும் சூரியக் கிரகணம் சூரியனை இராகுப் பாம் பு விழுங்குவது என்றும் , பெண்களுக்கு மாதவிலக்கு வருவது கடவுளின் சினத்தால் என்றெல்லாம் பல மாதிரியான நம்பிக்கைகள் வைத்திருந்தார்கள். (இன்னும் அவ்வாறு நம்பி வருபவர்களும் உண்டு).
அம்மை போடும் நோய்கள் வைரசுகளால் வரும் தொற்று நோய்கள் என அறிகிறபோது அம்மனுக்கு செய்யும் படையல், பொங்கல் குறைந்து விட்டன. பூமி, சூரியன் அவற்றின் இயக்கம் , அதன் கால அளவுகளைக் கண்டுபிடித்தது தெரிய வந்த பின்னர் சூரியன், கடவுளும், இல்லை. சூரியனை இராகு பாம்பு கடிப்பதில்லை எனவும் ஒரு தெளிவு ஏற்பட்டது.
மாதவிலக்கானது பெண்கள் பருவமடைந்த பின், இரு சூலகங்களிலிருந்தும் ஒன்றுவிட்ட 28நாட்களுக்கு ஒரு முறை விடும் சூல், கருக்கட்டலுக்கு உட்படாததால் அச்சூலும் அதன் கூட காணப்பட்ட பகுதியிலிருந்து சில கலங்களும் சிதைவடைந்து இரத்தத்துடன் வெளியேறுகின்றன. இதனால் மாதவிலக்கு ஏற்படுகிறது என்பதை விளங்கிக் கொண்ட பின் கடவுள் வெறுப்பல்ல அது பெண்களுக்கு இயற் கையானது எண் பதை உணர் நீ து கொள்ளப்பட்டது. அறிவும் ஆராய்ச்சியும் வளர வளர கடவுள் உணர்ச்சி குறைந்து கொண்டே போகும்.
எதற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும்.

Page 47
எனவே, அண்டத்திற்கும் ஒரு கர்த்தா இருக்க வேண்டும் , அந்தக் கர்த்தா வே கடவுள் எல்லாவற்றுக்கும் மேலான சக்தி என்றும் பல காலமாக பரவலாக காரணம் காட்டப்பட்டு வருகிறது.
உலகத்தில் உள்ள ஒவ்வொன்றும் இந்த உலகில் நாம் வாழ்வதற்கு ஏற்றதாக அமைக்கப்பட்டிருக்கிறது எனும் அமைப்புத் திட்டவாதத்தையும் மதவாதக்காரர்களும், கடவுளர் நம் பிக் கைக் காரர்களும் வாதிடுகிறார்கள். இந்த வாதம் மூக்குக் கணிணாடி போட்டுக் கொள்ளவே மூக்கு அமைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்வது போல் வேடிக்கையானது.
உயிரினங்களுக்கு ஏற்றதாக இடத்தில் நிலைமைகள் அமைவதில்லை. ஆனால், உயிரினங்கள் இடத்தின் நிலைமைக்கு தக்கவாறு வளருகின்றன. உயிரினங்கள் அவை வாழும் இடத்திற் கேற்ப உடலமைப் பு பெற்றிருக்கின்றன.
இந்த அண்டத்தில் பெருஞ் சக்திகளாக அணுக்கருச்சக்தி (Nuclear Energy), ஈர்ப்புச்சக்தி (Gravitional Engergy), fairst b5 gig (Electro Magnetic Engergy), Effud,355g digs (Radio Activity), என்பவற்றை விஞ்ஞானத்தில் குறிப்பிடுவர்.
மேலும், பொருளின் நிலையைப் பொறுத்து 3u ö85ü U60öi L|ğ göğ5 (Kinetic Energy) யாகவும் , நிலைப் பணி புச் சக்தியாகவும் (Statical Energy) ? 6ů (0)6] IT (Cb 6n 6o abu fl6ỏ, ஒவ்வொரு நிலையில் ஒவ்வொரு வடிவில் ஒவ்வொரு சக்தியும் செயற்படுகின்றன. படைப்பு என்பது இன்மையிலிருந்து உண்டாக்கப்படுதல் என்ற பொருளை உடையது ஆனால் இல்லாத ஒன்றிலிருந்து எதுவும் உண்டாக்க இயலாது என்றும், உள்ள பொருளிலிருந்து எதுவும் காலப்போக்கில் உருமாறி உருமலர்ச்சி (Evolution) பெற்றுத் தோற்றம் அளிக்கும் என்பதே அறிவியல்.
சார் ல ஸ் டார் வினின் பரிணாம கி கொள்கையின்படி ஒரு கல உயிர் கால ஒட்டத்தில் பல கலமுள்ள உயிராகி பெருகி
(ஓலை 32)

-Gs)
வளர்ந்து மென்மேலும் உயர்ந்த நிலைகளுக்கு மாறிக் கடைசியில் மனித உருவம் தோன்றியுள்ளது.
சுமார் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த மாபெரும் பெருவெடிப்பின் (Big Bang) 8 TJ 600TLDT85 g) lü (3u g 60öi LuÖ (Universe) தோன்றியது. எங்கும் பரவியிருந்த நைரசன் நெருப்புக் கோளமாக ஆகி 6) இலட்சக்கணக்கான கிலோ மீற்றர் விட்டம் கொண்டதாக அமைந்து வெப்பம் தாங்க முடியாமல் பேரொலியுடன் வெடித்துச் சிதறியது. வெடித்துச் சிதறிய துண்டங்கள் அண்டங்கள் (Galaxy) ஆகின. இவ் வணி டங் களர் நட்சத்திரங்களாகவும், நட்சத்திரக் கூட்டமாகவும் ஆகின. சூரியன் 5500 பாகை (சதம அளவு) வெப்ப நிலை உடைய ஒரு நட்சத்திரமே. சூரியனை விட பல மடங்கு பெரிய நட்சத்திரங்களாக அந்தரேஸ் (Antares), GAUGIJ6ðagn6mid (Betelgeuse) gəjäögb(b6mù (Arcturus) ஆகியன உள்ளன.
460 கோடி ஆணி டுகளுக்கு முனி நட்சத்திரங்களுக்கு இடையிலான வாயுவும் துTசியும் சுருங்கி, செறிந்து இயக்க விளைவினால் பூமி தோன்றியது. பிரம்மா பூமியைப் படைத்தார். என்றும், ஆதி நிலை தேவன் வானத் தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்றும் சொல்லப்பட்டும், நம்பப்பட்டும் வருபவை பொய்யாகின்றன.
பூமியின் போர்வையான வளி மண்டலத்தில் நைதரசன், அமோனியா, மீதென், நீராவி, முதலான மூலக் கூறுகள் ஒயாது பெய்த பெருமழையின் வாயிலாக புவியின் பரப்பில் இருந்த கடல்களில் கரைந்து கலந்தன.
இவ்வாறு கடலில் கரைந்த மூலக்கூறுகள் சூரிய வெப்பம், மின்னல் புற ஊதா கதிர் வீச்சு முதலியவற்றால் இரசாயனத்தாக்கத்திற்கு உள் ளாகி, அவற்றிலிருந்து அமினோ அமிலங்களும், அமினோ அமிலங்களிலிருந்து புரதங்களும் உருவாகி. அவை பிணி கலவுருவாகி (Protoplasm) காலப்போக்கில் ஒரு 3565 (Monocell) Duff E 6i 9, a 60T. உயிரினங்களின் உடலமைப்பியல், தொழியியல்
{ வைகாசி 2006

Page 48
ܝQ6O
அடிப்படை அலகு கலம் (Cell) ஆகும். கலங்களில் சுவாசம் நிகழ்வதினால் பல இரசாயனத் தாக்கங்கள் கலங்களில் நடைபெறுகின்றன. தொடரும் இரசாயனத் தாக்கங்களால் உயிரினங்கள் வாழுகின்றன; வளருகின்றன; பெருகின்றன.
எளிமையான அமைப்புடன் தோன்றிய உயிரினங்களில் படிப் படியாக ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாகவே புதிய உயிரினங்கள் தோன்றியுள்ளன. தற்போது காணப்படுகின்ற உயிரினங்கள் பல தொடக்க காலத்தில் இருக்கவில்லை. இவையெல்லாம்
பத்துப்
முருகுபொரு நாறு பரை பெருகு வளமதுரைக் க கோலநெடு நல்வாடை பாலை கடாத்தொடும் !
1. திருமுருகாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை முல்லைப் பாட்டு
நெடுநல்வாடை
பட்டினப்பாலை
SUNFO எனப்படும் இ சர்வதேச மகளிர் திை 25ம் திகதி பண்டாரநாய சிறப்பு வைபவத்தில் ட உழைத்துவரும் 10 மக வழங்கி கெளரவித்தது சங்கத்தின் துணைத் தன் நாதனும் ஒருவர். அவ
(வைகாசி 2006
 

காலப்போக்கில் பரிணாம வளர்ச்சியால் உருவானவையே. பரிணாம வளர்ச்சியின் உச்ச நிலையே மனிதன்.
பி.கு: இக்கட்டுரை மார்ச் (97) பாலம் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டது. (Ecole de Tamoul) ன் 5வது ஆண்டுமலரில் (84-88) நான் எழுதிய பொருளின் உருமலர்ச்சியே மனிதன் எனும் கட்டுரையின் தெளிந்த சுருக்கமே இது.
பாட்டு
னிரண்டு முல்லை ாஞ்சி - மருவினிய கோல்குறிஞ்சி பட்டினப் பத்து
. பொருநராற்றுப்படை
2
4. பெரும்பாணாற்றுப்படை 6. மதுரைக் காஞ்சி
8
குறிஞ்சிப்பாட்டு 10. மலைபடுகடாம்
வாழ்த்துகிறோம்!
லங்கை ஐக்கிய நாடுகள் நட்புறவுச் சங்கம் ாம் தொடர்பாக இவ்வாண்டு மார்ச் மாதம் க்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்திய ல்வேறு துறைகளில் மகளிர் மேம்பாட்டிற்கு ளிருக்கு சேவைநலன் பாராட்டு விருதுகளை . விருது பெற்ற இரு தமிழ் பெண்களில் லவர்களில் ஒருவரான செல்வி சற்சொரூபவதி ரை ‘ஓலை’ வாழ்த்துகின்றது.

Page 49
LDPIC36)
ஒலையின் புதுவடிவமைப்பும் அதன் செறிவும் கொண்டமைந்திருக்கிறது. 2 மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.
களஞ்சியம், முன்னோடி, நூல் ஆ அறியும் பயணம் போன்றன சிந்தனை
இவை தொடர்ந்தும் ‘ஓலையில் இட 29ஆவது இதழில் பேராசிரியர் வீ. அரசி என்பன தரமான ஆக்கங்கள்.
30ஆவது ஒலை மகளிர்தின சிறப் இனிவரும் காலங்களில் பெண் எ சேர்த்துக்கொண்டால் ‘ஓலை’ இன்னும் கருத்து.
‘ஓலை’ சஞ்சிகை தொடர்ந்தும் மக்க வாழ்த்துக்கள்.
20/9, பீரிஸ் வீதி, கல்கிசை, 27.04.2006
Z
தாங்கள் அனுப்பிய ஒலை (29, 30 மிக்க நன்றி.
ஒலையின் மெருகு இதழுக்கு இத மகிழ்ச்சி.
30வது இதழில் ’கனவு’ என்ற சிறு அதன் நடை நேர்த்தியைப் பார்த்தால் ஆழ்வாப்பிள்ளையின் கதையோ அல் எழுகிறது.
எதற்கும் தரமான கதை, கட்டுரை
தொண்டைமானாறு, 02.05.2006
ܢܬ

47
D
6)6VD
உள்ளடக்கமும் அழகும, கருத்துச் 19, 30 ஆவது 'ஒலை கிடைத்தன.
4றிமுகம், நூல் மதிப்பீடு, ஆழத்தை யை ஆழப்படுத்துகின்றன.
ம்பெறுவது வரவேற்கத்தக்கது. மேலும் னுடைய கட்டுரை, சுதர்சனின் கவிதை
|பு மலராக அமைந்திருப்பது நன்று. ழுத்தாளர்களின் ஆக்கங்களையும் ) சிறப்பாக மெருகுறும் என்பது எனது
கள் மத்தியில் வரவேற்பைப்பெற எனது
ம. கிருஷ்ணவேணி
) இரு இதழ்கள் கிடைக்கப்பெற்றேன்.
ழ் அதிகரித்து வருவதையிட்டு மிக்க
கதை பவானியால் எழுதப்பட்டிருந்தது. அது மூத்த பெண் எழுத்தாளர் பவானி லது வேறு பவானியோ என்று ஐயம்
கள் பிரசுரித்து வருவதற்கு நன்றி.
இரா. சடாட்சரதேவி
(குந்தவை)
Z
{ வைகாசி 2006 )

Page 50
Gs) / ஈழத்தில் வெளிவந்த இலக்கிய
கடந்த காலங்களில் ஈழத்தில் வெளிவ சிற்றிதழ்கள் பற்றிய விபரங்களை ஒ6 அவ்வாறான சிற்றிதழ்கள் வெளிவரத் ெ ஆசிரியர், எப்பிரதேசத்திலிருந்து வெளிவ எப்போது நிறுத்தப்பட்டது, நின்றுபோ எழுத்தாளர்கள், அவ்விதழ்களில் வெளிவ பக்கங்கள் பற்றிய விபரம் மற்றும் ஈழத்து இ தாக்கங்கள், பங்களிப்புகள் முதலிய 6 ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம். ‘ஓை சிற்றிதழ்கள் ஒவ்வொன்றின் விபரமும் தனி இலக்கிய ஆர்வலர்கள் உங்களுக்குத் ெ அத்துடன் அவ்வாறான சிற்றிதழ்களின் பt விலைகொடுத்து வாங்கவும் தயார கைவசமுள்ளவர்கள் ‘ஓலை’ யுடன் தொ
‘ஓலை’ கொழும்புத் தமி சாதாரண சந்தா விபர (அஞ்சல் செ
இலங்கை : தனிப்பிரதி ரூபா
இந்தியா: ஒரு வருடL
ஏனைய நாடுகள்: ஒரு வ( ܢܬ
/
‘ஓலை’ க்கு உதவ விரும்புவோர் தங்கள் வைப்பாக
Colombo Tamil S. கணக்கு இல Commercial Bank G66i காசுக் கட்டளையாயின் ‘செயலாளர் ெ வெள்ளவத்தை தபால் அலுவலகத்தில் கொழும்புத் தமிழ்ச் சங்க அலுவலகத்தில் ܢܠ
(வைகாசி 2006)

பச் சிற்றிதழ்களின் வரிசையில்.
ந்து நின்று போய்விட்ட ஈழத்து இலக்கியச் லை’ இதழ்களில் தர எண்ணியுள்ளோம். தாடங்கிய காலம், வெளியீட்டாளர். அதன் பந்தது. எத்தனை இதழ்கள் வெளிவந்தன, ன காரணம், அவ்விதழ்களில் எழுதிய பந்த ஆக்கங்கள், அவ்விதழ்களின் அளவு, Nலக்கிய உலகில் அவ்விதழ்கள் ஏற்படுத்திய விபரங்களை உள்ளடக்கியதான கட்டுரை லயின் ஒவ்வொரு இதழிலும் அவ்வாறான த்தனியே வெளியிடப்படும். எழுத்தாளர்கள், தரிந்த சிற்றிதழ் பற்றி எழுதி அனுப்புங்கள். ழைய பிரதிகளை ஆவணப்படுத்து முகமாக ாயுள்ளோம். அவ்வாறான பிரதிகள் டர்பு கொள்ளுங்கள்.
ஆசிரியர் குழு.
ழ்ச் சங்க மதாந்த இதழ் ம் ஒரு வருடம் (2006) Fலவு உட்பட)
30/=, ஒரு வருடம் ரூபா 500/- ம் இந்திய ரூபா 600/= ருடம் 20 அமெரிக்க டொலர்
مجیسے
நிதி அன்பளிப்புக்களை காசோலை அல்லது
angam Society Ltd.
). II 00014906
ாளத்தைக்கு அனுப்பலாம்.
காழும்புத் தமிழ்ச் சங்கம்” என்ற பெயரில் மாற்றப்படக்கூடியவாறு அனுப்ப முடியும்.
) நேரடியாகவும் செலுத்த முடியும்.

Page 51
With Best CONI
MiCJ O Te, System (,
புதிய மற்றும் உபயோகித்த கணனி விற்பனை கணனி உதிரிப்பாகங்கள் விற்பனை கணனி சேவை மற்றும் பராமரித்தல் இணையத்தள உருவாக்கம் வலைப்பின்னல்
இன்ரக்கொம் வசதிகள் தொலைபேசி வயறிங் இலத்திரனியல் உபகரணம் பழுதுபார்த்தல் இணையத்தளம் மற்றும் மெய்ல் சேவை மென்பொருட்கள் உருவாக்கம் கணனி ரைப்செட்டிங்
54, Ратап kada i MII : (), E-mail : Sales (Gillicrotecsy
Website : Inic
 
 
 
 
 
 
 
 
 
 

Pline Ts TY
Chnology
Brand-new k Used Computer Sales Corp. e." Accessories Sales Comper Service & Maitence Web Pαςe Desigηίηg
Networking PABX Systen / Intercorn System Telephone wire installation Electronic Equip vient Repairing Ir Terrie T & Errari Services Software Developing Desktop Publishing and Type setting
Lane, Colombo-6 777-37.85, S6, S. coln, 'Sjothi (Gyahoo.com
"rote CS y S. COF 77

Page 52
VVIII Best Corpi
RAMLANKAPHOTOS
DIGITAL WIDE Wedding, Birthday, Cld all PreSS
Visa & Pass
1/4 First Floor Saji Abodes 60, Rudra MW, ColombO-6
 
 

Ile IFS FT JIFT :
DIGITAL PROCESS
O & PHOTOS Pitberty Ceremony Programmes port Sittings
for Oie Information 2586()75 O773637888