கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2006.12

Page 1
மெய்பொருள் காண்பதறிவு
அஞ்சலி : சு
பட்டுக்கோட்டி ஈழத்துச் சிறு
பாரதி 125
மற்றும்.
சிறுகதை கவிதைகள்
 
 
 
 
 
 
 
 

மனோன்மணியம் சுந்தரம்பினை
பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரப்பிள்ளை
வி , வரதர் , வல்லிக்கண்ணன்
ଧାଁL
கதை வளர்ச்சி
சங்கம் வி ை30/=

Page 2
இலங்கையில் நூல்கள் வ ஏற்றுமதி, இறக்குமதி
புதியதோர்
அன்புடன் அழைக்கின்றது
CHEMAMADU BOC
Telephone : Ol 1-2472362 FOX : OTT1 -2448624 E-moil : chemomoduGDyoh
UG 49,50, People's Pork, C
தமிழ் நாட்டில் ட விற்பனைத்தறை
எமது முக
க.சச்சிதானந்தன் - காந்தளகம் சென்னை - 02. தொ.பே: 044-28414505 E-mail : tamilnool(a)dataone.in
அனைத்து வெளிரிடுகளும்
 

விநியோகம், விற்பனை,
பதிப்புத்துறையில் சகாப்தம்
சேமமரு ததகசாலை
)K CENTRE
OO. CO
Colombo - 11, Sri LonkO.
திப்புத்துறை, முன்னோடிகள், வர்கள்
கோ.இளவழகன் - தமிழ்மண் பதிப்பகம் சென்னை . 17. தொ.பே: 044-24339030 E-mail : tn-pathippagam (dyahoo.co.in
எம்மி ம் பெற்றுக்கொள்ளலாம்

Page 3
முன்னோடி :
(Lu Jiraffuur D(
சு. வில்வரத்தினம்
1.
2.
3.
4.
வரதர்
1.
2.
ஈழத்துச்
கவிஞர் சு இறுதிநேர முதலும் இ
சு.வி கவி
முத்தவரும் சிறுகதை
சிறுகதை
பட்டுக்கோட்டை க
பாரதியும் தமிழ் இ
 

னோன்மணியம் சுந்தரம்பிள்ளை
வில்வரத்தினத்தை முன்வைத்து உரையாடல்கள் நிறுதியுமான சந்திப்பு
தைகள்
ம் முன்னோடியுமான வரதர்
கற்பு
வளர்ச்சி : ஒரு மறுமதிப்பீடு
ல்யாணசுந்தரம்
லக்கணமும்
—( மார்கழி : 2006

Page 4
ஆசிரியர் பக்கம்
இருபதாம் நூற்றாண்டின் நவீன தமிழிலக்கி பங்களிப்பு ஆழமானது, அகலமானது. தப பாரதி முன்னோடி. தான் வாழ்ந்த காலத்தி ஏற்ப பாரதியின் கருத்தும் உணர்வும் பதம் அரசியல் விழிப்புக் காரணமாகச் சமுதாய - நல நாட்டமும் பெற்றார்.
“நெஞ்சு பொறுக்குதில்லையே..! ‘விடுதலை விடுதலை. ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே.”
போன்ற பாடல்களெல்லாம் இந்தத் தனிமன
மொத்தத்தில் விடுதலைப் பன்முகம்பற்றிய பாரதி வளர்ந்துவந்தார். அதைவிட காலனித் மனப்பாங்கு கொண்டிருந்தார். விடுதலை வழங்கிவந்தார். தேசிய விடுதலைப் போரா
இன்று பாரதியின் சிந்தனைகளை சமகால முடியும். விடுதலை அரசியலுக்கான சிறந் வத்திற்கு உட்பட்டிருக்கும் தமிழகம் மற் எதிர்ப்பு வடிவமாகவே இனங்காணமுடியும்
இருபதாம் நூற்றாண்டு முதல் தமிழ் சிர் இணக்கமாகவே பொருந்தி வருகின்றார். சிந்தனை முகிழ்ப்பு புது வீச்சுடன் புது வ:
பாரதியின் விடுதலைக் கருத்தியலுக்கான மரபிலும் மிகுந்த தாக்கம் செலுத்தியது. இ6 மூத்த எழுத்தாளர் வரதர், கவிஞர் சு.வில்வா வழிவரும் செல்நெறிப்போக்குகளால் ஆக பலத்துடன் இயங்கியவர்கள். அந்த பார அஞ்சலி செலுத்துவது எமது கடமை.
மார்கழிமாத ஒலை இந்த இருவரதும் மற் அமைந்துள்ளது.
ஒலைக்குப் படைப்பாளர்கள் தங்கள் பன மலரச்செய்யவும். தமிழ்ச்சிந்தனையிலும் கன் களன்களை திறந்துவிட ஒலை விரும்புகி
வாரு
ஒலை 39

C2)
பச் சூழலில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் ழ்ெ நவீனமயமாக்கலின் வரலாற்றிலும் கூட ல் ஏற்பட்ட சமூக அரசியல் நிகழ்ச்சிகளுக்கு பண்ணப்பட்டு வந்திருக்கின்றன. குறிப்பாக உணர்வும் அதன் காரணமாக தனி - மனித
ரித நல நாட்டத்தினால் ஏற்பட்டனவே ஆகும்.
சுய பிரக்ஞையும் தேடலும் மிக்க ஒருவராக துவ ஆட்சி அதிகாரத்துக்கு எதிரான புரட்சிகர க் கருத்தியலுக்கான அகல்விரிப் பரப்பை "ட்டத்திலும் ஈடுபட்டிருந்தார்.
த் தேவைகளுக்கேற்ப பொருத்தப்பாடு செய்ய த வளமாக வளர்க்கமுடியும். பின்காலனித்து றும் ஈழம் போன்ற சூழல்களில் பாரதி ஒரு
தனையிலும் தமிழர் வாழ்வியலிலும் பாரதி இருபத்தோராம் நூற்றாண்டிலும் பாரதியின் ளத்துடன் பல்கிப்பெருகி வளர்ந்துவரும்.
ஊற்றுகளும் ஓட்டங்களும் ஈழத்துத் தமிழ் ன்று எம்மிடையே வாழ்ந்து சமீபத்தில் மறைந்த ரத்தினம் ஆகியோர் இந்த பாரதி பரம்பரையின் 5ள்வழிக்கப் பட்டவர்கள். அந்தக் கருத்தியல் திவழிவரும் இந்த எழுத்தாளர்களுக்கு நாம்
றும் பாரதி 125 ஐயும் நினைவுகூருவதாகவும்
டப்புகளை அனுப்பி இதழைக் காத்திரமாக லைஇலக்கியப் பரப்பிலும் பன்முக உரையாடல் ன்றது.
ங்கள்.
-Ο ιοπίτευρ : 2006

Page 5
வணிமையுடையதொரு சொல்லி வாழ்வு பெறவிரும்பி நிற்கின்றே
கொழும்புத் 되 திருவள்ளுவர் 4
இரா.சுந்தரலிங்கம் பெ.விஜயரத்தினம் காவைத்திஸ்வரன்'
சி.இராஜசிங்கம்
பாக்டர்சிஅணுஷ்யந்தன்
நிர்வாக ஆசிரியர் : *ā山町öü主ām
கலந்தவமகேஸ்வரன்
துெ:
வெளியீடு :
கொழும்புத் தமிழ்ச்சங்கம் 7.57 வது ஒழுங்கை (உருத்திரா மாவத்தை கொழும்பு - 06. இலங்கை, slgit.eu : at 236375g, slas T-Bass : Oil 236475s SÈGU) GAUTLLğ555TTL b : www.colombotamilsangam, C. L'elit Gutshaff) : tamils angangsitnetik
படைத்தவர்களே படைப்புக்
గారు |39 H
 
 
 
 
 
 

ால் - உங்கள்
T.
- LITT ரதி
இதழ் |: 39 შენ.
மார்கழி:2006
、
---
இயக்குழு:
ஆஇரகுபதி பாலசிறிதரன் கலாநிதி.செல்விதிருச்சந்திரன் சற்சொருபவதிநாதன் சி.எழில்வேந்தன்
தா.சண்முகநாதன் (சோக்கல்லோ)
டபிள்யூ.எஸ்.செந்தில்நாதன்
:தயகுமார்
பர்கள்:
டாக்டர் ஏஜன்னாசேபுதன் குதலன்
அட்டைப்படம் : LT
அச்சுய்பதிபபு
ஹரே பிரினன்டர்ஸ் rg கொழும்பு - 06
O773.165557
தம் கருத்துக்கும் பொறுப்பு.
- LCTT58 i 2006

Page 6
போராசிரியர் மனோன்மணியம் சுந்தர
- தெ. மதுசூதனன் -
தமிழ் இலக்கிய ஆய்வுப் புலமையாளரான பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பத்தொன்பதாம நுாற்றாண்டின் இறுதியிலே பெரும் புகழ் பெற்று விளங்கிய பெரியார்களுள் - புலமையாளர்களுள் - அறுவரைச் சிறப்பாக எடுத்துச் சொல்லுவார். அவர்களாவர்: சி.வை. தாமோதரம்பிள்ளை, வி.கனகசபைப்பிள்ளை, மாயூரம் வேதநாயகம் பிள்ளை, பூண்டி அரங்கநாத முதலியார், இராஜமய்யர், பெ.சுந்தரம்பிள்ளை ஆகியோர்.
இவ் அறுவரும் ஆங்கிலம் கற்று மேனாட்டுக் கலைப் பண்பில் அறிவுத்துறையில் திளைத்துத் தம் மொழியாகிய தமிழ்மொழிக்கு ஒவ்வொரு வகையிலே வளம் சேர்த்தவர்கள். தமிழின் சிந்தனை முறையிலும் ஆய்வு முறையிலும் புதிய புதிய சாத்தியப்பாடுகளின் ஊடுபாவுக்கும், செழுமைக்கும் காரணமானவர்கள. இன்னொரு விதத்தில் தமிழாராய்ச்சியின் அறிவு நிலைப்பட்ட ஆய்வுப் பெருக் கத்துக் கும் , அதன் திசைப்படுத்தலுக்கும் காரணமாக இருந்தவர்கள். அத்தகையவர்களுள் ஒருவரான பெ.சுந்தரம் பிள்ளை குறித்துத் தான் இக் கட்டுரை கவனத்தைக் குவிக்கிறது.
சுந்தரம்பிள்ளை 1855 ஏப்ரல் 4ம் தேதியில் ஆலப்புழையில் பிறந்தார். அங்கையே தனது ஆரம்பக் கல்வியைக் கற்றார். பின்னர் திருவனந்தபுரம் வந்து அங்குள்ள உயர் தரப்பள்ளியில் படித்தார். 1871ல் மெட்றி குலேஷன் பரீட்சையிலும், 1873ல் எப்.ஏ பரீட்சையிலும் தேறினார். 1876ல் பி.ஏ. பரீட்சையில் தேறிப் பட்டம் பெற்றார்.
( ஒலை 39 )

ம்பிள்ளை
கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே உடன் பயிலும் மாணவர்களுடன் விளையாட்டுகளில் ஈடுபடாமல் ஒதுங்கியிருப்பாராம். ஆனால் எப்போதும் எதையாவது படித்துக்கொண்டிருப்பார். அறிவுத்தேடலிலும் ஆராய்ச்சிப் பாதையிலும் அவர் மனம் ஈடுபட்டது. தொடர்ந்த கற்றல் தேடல் அவருக்குள் இயங்கிய புலமையாளரை வெளிப்படுத்தியது. 1880 ஆம் ஆண்டில் தத்துவத்துறையில் எம்.ஏ பட்டம் பெற்றார். 1882 - 1885ம் ஆண்டுகளில் சட்டக்கல்வியும் பெற்றார்.
1876ம் ஆண்டில் தான் பயின்ற திருவனந்தபுரம் அரசர் கல்லூரியிலேயே ஆசிரியர் பணி ஆற்றும் வாய்ப்பு சுந்தரம்பிள்ளைக்குக் கிட்டியது. அங்கு வரலாறு, தத்துவம் உள்ளிட்ட பாடங்களை கற்பித்து வந்தார். மாணவர்களால் விரும்பத்தக்க ஆசிரியராக விளங்கினார். தாம் மறுநாள் கற்பிக்கும் பாடங்களை முதல் நாளிலேயே நன்கு படித்து ஆயத்தம் செய்து கொண்டுதான் வகுப்பறைக் குச் செல் வார். ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியே சந்தித்துப் படிப்பில் ஊக்குவிப்பார். அவர்தம் ஐயங்களை மகிழ்வோடு ஏற்று நீக்குவார்.
- Ο மார்கழி : 2006

Page 7
சுந்தரம்பிள்ளை பெயர் திருவனந்தபுரம் எங்கும் நன்முறையில் பரவலாயிற்று. நல்லாசிரியப் பண்புக்கு இலக்கணமாகத் திகழும் இவரை மாணவர்கள் நேசிக்கத் தொடங்கினார்கள். ஆனால் இவரோ தொடர்ந்து கற்றல், தேடல், ஆய்வு சார்ந்து செயற்படும் ஒருவராகவும் தன்னை வளர்த்துக் கொண்டார். சமூக மட்டங்களில் சுந்தரம்பிள்ளைக்குத் தனியான மவுசு இருந்தது. மதிப்பும் மரியாதையும் கற்றோர் மட்டங்களிலும் நிலைத்தது. தமிழ்ப் பணியில் தன்னைக் கரைத்து மேற்கிளம்பினார்.
திருநெல்வேலியில் இருந்த பொழுது எழுதத்தொடங்கிய மனோன்மணியம் (நாடகம்),
நூற்றொகை விளக்கம் ஆகியனவற்றை
திருவனந்தபுரத்தில் செம்மையாக எழுதி
முடித்தார். திருவதாங்கூர்ப் பகுதிகளில்
இருக்கும் பழைய திருக்கோயில் களில்
பாழடைந்து பாதுகாப்பற்றுக் கிடந்த கல்வெட்டுக்
களைத் தம்பொருட் செலவிலேயே சென்று
ஆராய்ச்சி செய்தார்.
இவ்வாறு ஆசிரியர் சுந்தரம் பிள்ளை பணியாற்றி வரும் பொழுது 1882ம் ஆண்டிறுதியில் மேதகு விசாகம் திருநாள் மாமன்னர் இவர்தம் கல்விப் பெருமையை நன் குணர்ந்து, தன் அரண்மனையிலேயே பிறவகை ify Tonigsst' (Commissioner of Separate Revenue) எனும் உயர் பதிவியை வழங்கி மகிழ்ந்தார். இப்பதவி 'திவான்’ பதவிக்குரிய படிக்கட்டுப் பதவியாகும். 1882 முதல் 1885 வரை இப்பொறுப்பில் தன் இயல்புக்கு மாறாய்ப் பணியாற்றி வந்தார். அப்போது சட்டக்கல்லூரியில் சட்ட நூற்களைப் படித்து வந்தார். ஆனால் சட்டத்திற்கான பட்டம் பெறவில்லை.
அப்போது அரசர் கல்லூரித் தலைவர் திரு. ராசு, தம் தாய்நாடு செல்ல நேர்ந்த பொழுது டாக்டர் ஹார்வி வகித்து வந்த தத்துவப் பேராசிரியர் பணிக்கு சுந்தம்பிள்ளையே பொருத்தமானவர் என்று முடிவு செய்து 1885இல் வழங்கிச்
ஒலை 39 )

O5D
சென்றார். சுந்தரம்பிள்ளை அப்பதவியை பெற்ற நாள் முதல் இறுதிக் காலம் வரையில் அதிலேயே நிலைத்து விட்டார். சுந்தரம்பிள்ளை வரலாறு, கல்வெட்டியல், தொல்லியல், மொழியியல், தத்தவம், இலக்கியம், கலை என பல்துறை அறிவுசார் புலங்களுடன் ஏற்பட்ட ஊடாட்டம் இவரது புலமைப் பரிமாணம் பலவாறு சிறப்புற்று விளங்கக் காரணமாயிற்று. இவரது தொல்லியல் ஆய்வுத் திறனைப் பாராட்டி இங்கிலாந்தில் உள்ள 'ராயல் ஏஷியாடிக் கழகமி தங்கள் நிறுவனத்தின் உறுப்பினராக (M.R.A.S) இவரரை நியமித்துப் பெருமைப் படுத்தியது. பின்னர் “லண்டன் வரலாற்று ஆராய்ச்சிக் கழகமி FR.H.S என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. தென்னிந்திய வரலாற்றில் இவர் செய்த சாதனைகளைக் கவனத்தில் கொண்டு அன்றைய ஆங்கிலேய அரசு "ராவ்பகதூர்” என்ற பட்டத்தை வழங்கியது.
இத்தகைய சிறப்புகள் ஒருபுறமிருக்க இவர் இயற்றிய காலக்கணிப்பு, இரணகிர்த்தியின் நடுகல்லும் வேணாட்டு வேந்தர்களின் காலக்கணிப்பும், தமிழ்த்தாய் வாழ்த்தும் இவர் கல்வியின் ஆராய்ச்சியின் பயன்கள் அன்றோ.1
சுந்தரம்பிள்ளையின் மனோன்மணியம் எனும் நாடக நூல் தமிழழைப் புதியதொரு துறைக்குத் திசை திருப்பிவிட்டது. குறிப்பாக தமிழ் / திராவிட மீட்பு வாதங்களில் தொடக்க கால முன்னோடிகளில் ஒருவராக சுந்தரம்பிள்ளை மேற்கிளம்புகின்றார். மனோன்மணியம் நூலில் இவர் எழுதிய தமிழ் வாழ்த்துப் பாடல் இதற்குச் சான்றாகும்.
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக்கு ಹಿಗ್ಗಿಸು ஒழுகும் சீராரும் வதனம் எனத் திகழ்பரத கண்டமிதில் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே பிதக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பம் உற
- - Lorriras : 2006

Page 8
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழனங்கே பல்லுயிரும் பல உலகும் படைத்தளித்துத் துடைக்கினும் ஒர் எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது போல் கண்னடமும் களிதெலுங்கும் கவிண்மலையாளமும் துளுவும் உன் உதிரத்து, உதித்து எழந்தே ஒன்று பல ஆயிடினும் ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையாஉன சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே”
இட்பாடல் பல்வேறு துறைகளில் அவர் பெற்றிருந்த கூர்ந்த அறிவினைப் பறைசாற்றி நிற்கிறது. புவியியல், தத்துவவியல், மொழியியல், வரலாற்றியல், தொல்லியல் ஆகிய பல்துறைசார் அறிஞர் என்பதை அவர் இயற்றிய இந்தப் பாடல் சுட்டுகிறது.
பழைய தமழ் இலக்கிய நூல்களிலே கடவுள் வணக்கம் அல்லது கடவுள் வாழ்த் து இன்றியமையாத ஓர் உறுப்பாக இருந்தது. இதனைத் தளமாகக் கொண்டே கடவுள் வாழ்த்து இலக்கிய மரபில் இடம் பெறுவது தவிர்க்க முடியாதாயிற்று. தண்டியலங்காரம் பெரும் காப்பியத்தின் இலக்கணங்களைச் சொல்லுமிடத்து,
"வாழ்த்து வணக்கம் உருபொருளிவற்றினொன் றேற்புடைத்தாகி முன்வரவியன்று” அமையும் என்கிறது. அதாவது வாழ்த்துதல், தெயப் வம் வணங் குதல் , உரைக் கும் பொருளுணர்த்தல் என்னும் மூன்றினுள் ஏற்புடையவொன்று முதலில் வரவேண்டும் என விதிக்கிறது.
சான்றோர் செய்யுள்களை ஆராயும் பொழுது அவற்றைப்பாடிய புலவர்கள் பாடத் தொடங்கு முன் கடவுளை வழிபட்டனர் என்பதற்குப் பல சான்றுகள் உள. இருப்பினும் காலந்தோறும் கடவுள் வாழ்ந்து மாற்றத்துக்கு உள்ளாகி வந்திருக்கிறது. இலக்கிய வழி வரலாறு நின்று பார்க்கும் பொழுது இதனைத் தெளிவாகப்
( ஒலை 39 )

C6)
புரிந்து கொள்ளலாம். இந்த இலக்கிய ஓட்டத்தில் மாற்றமடைந்து வரும் கடவுள் வாழ்த்துக்கு முற்றிலும் மாறான புதிய திருப்பத்தை உண்டாக்கியவருள் மனோன்மணயம சுந்தரம்பிள்ளை முதன்மையானவர்.
தாம் எழுதிய மனோன்மணியம் எனும் நாடகக் காப்பியத்திலே கடவுள் வாழ்த்தின் முக்கியமான பகுதியாகத் தமிழ்க் கடவுள் வாழ்த்துக் கூறினார். இது கடவுள் வாழ்த்தில் ஒரு பெரும் மாற்றத்தையே உருவாக்கிவிட்டது. இப்பாடல் களில் இலக்கிய நயம் ஒருபுறமிருக்க இவற்றில் கூறப்படும் கருத்துகள், அக்காலத்து தேசிய உணர்வின் ஊற்றுகளாக வெளிப்பட்டது. தமிழ் / திராவிட மீட்புக்கான கருத்துநிலைத் தளத்தை வழங்கியது.
பழைய கடவுள் வாழ்த்து முறை மாற்றத்துக்கு உள்ளாகி வந்த வேளையில் சுந்தரம்பிள்ளை நிகழ்த்திய புதுமை தமிழைத் தெய்வமாக்கி நூன் முகத்தில் அதற்கு வாழ்த்துப் பாடியது ஆகும். இது புதுமை மட்டுமல்ல, புரட்சியும் கூட.
1893 களில் மனோன்மணியம் நாடக நூல் கல்லூரிகளில் முதன் முதலாக பாடநூலாக வைக்கப்பட்டது. அதைவிட நீராரும் கடலுடுத்த என்னும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் இசைக்க வேண்டுமெனத் தமிழக அரசு பொதுத்துறைiன் மூலம் 1970 களில் ஆணை பிறப்பித்து இன்றுவரை நடைமுறைப் படுத்தி வருவதையும் காணலாம். அதைவிட சுந்தரம்பிள்ளை காலத்துக்குப் பின்னர் தமிழ்மொழி சார்ந்த இயக்கங்களுக்கு உந்து சத்தியாகவும் திராவிட அரசியலின் வேர் விடுகைக்கு நீராகவும் தமிழர்களுக்குக் கிளர்ச்சி ஊட்டுவதாகவும் தமிழ்க் கடவுள் வாழ்ந்து அமைந்தது. “அமர் சோனார் பங்களா” என்ற தாகூரின் வங்க தேசிய கீதம் போல் தமிழ் மக்களுக்கு ஓர் ஒப்பற்ற தேசியப்பாடல் சுந்தரம்பிள்ளையின் பாடல் தான்.
- --O Loחf86זgl : 2006 )

Page 9
சுந்தரம்பிள்ளை ஒரு புதிய முறை ஆய்வு முயற்சியில் ஈடுபட்டு ஆய்வுநெறி முறைகளை உருவாக்கும் வகையிலும் செயற்பட்டார். இங்கு "தமிழ் இலக்கிய வரலாற்றில் சில மைல்கற்கள் அல்லது திருஞானசம்பந்தரின் காலம்” எனும் நூல் குறிப்பிடத்தக்கது. இது 1895இல் நூல் வடிவம் பெற்று முதற் பதிப்பாக வெளிவந்தது. இதன் மறுஅச்சு 1909 மார்ச் 10ம் நாள் வெளியிடப்பட்டுள்ளது.
திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சியில் சமுதாய அணுகு முறை, மூலப்படிவ அணுகுமுறை இருந்தமை தெளிவாகிறது என பின்வந்த ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இதன் ஆய்வு நுட்பங்கள், அணுகுமுறைகள் இலக்கிய ஆய்வுப் பரப்பில் புதிய தன்மைகளை வெளிப் படுத்தியது எனலாம். பின்னர் தமிழ் இலக்கிய வரலாற்றில் "கால ஆராய்ச்சி” அறிவு நிலைப்பட்ட பல்துறைச்சங்கம் ஆய்வுச் செல்நெறியாகப் பரிணமிப்பதற்குக் கூட சுந்தரம்பிள்ளையின் ஆராய்ச்சி மனப்பான்மை, ஆராய்ச்சி நோக்கு ஓர் அடிப்படைக் கருத்தியல் தளத்தை வழங்கியது என்றே கூறலாம்.
இதனாலேயே அறிஞர் கா.சு.பிள்ளை "மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை இக்காலத் தமிழ் ஆராய்ச்சிக்கு அடிப்படை கோலியவர். தமிழும் தமிழரும் ஆரிய வகுப்பு முறையுட் படாத தனிப் பெருமை உடைமையை நிலைநாட்டித் தமிழ்ப் புலவர் கண்ணைத் திறந்தவர். தமிழாராய்ச்சிக் குறைபாடுகளுடைய ஐரோப்பிய - ஆரியப் புலவருடைய தப்புக் கொள்கைகளைக் கண்டொதுக்கித் தமிழ் வரலாற்றின் உண்மையை விளக்கும் பொருட்டு, இவரியற்றிய நூல் திருஞானசம்பந்தர் கால நிச்சயமென்னும் ஆங்கிலக் கட்டுரையாகும்" என்று கா.சு.பிள்ளை தனது இலக்கிய வரலாறு இரண்டாம் பகுதியில் குறிப்பிட்டுச் சொல்வது ஈண்டு நோக்கத்தக்கது.
ஒலை 39 )

○
1856 இல் கால்டுவெல் பாதிரியாரின் “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் நூல் வெளிவந்தது. இந்நூல் 1850 முதல் நடைபெற்று வரும் தமிழாராய்ச்சியின் வளர்ச்சியின் செல்நெறிப் போக்கில் மிகுந்த செல்வாக்கு செலுத்தத் தொடங்கியது. 'திராவிடமி சார்ந்த சிந்தனைப்பள்ளி அனைத்தையும் ஊடுருவி தாக்கம் செலுத்தும் கருத்துநிலைப் பாய்ச்சல் வேர்விடுகைக்கு காரணமாயிற்று. இதன் தாக்கத்துக்கு சுந்தரம்பிள்ளையும் உட்பட்டார். குறிப்பாக திராவிட மொழிக்குடும்பத்தைப் பற்றியும் அதன் தொன்மையைப் பற்றியும் அது வட மொழியினின்றும் முற்றிலும் வேறுபட்டிருப் பதைப் பற்றியும் கால்டுவெல் கூறியவையே சுந்தரம்பிள்ளையின் நோக்குக்கும் சிந்தனைக்கும் மூலமாயின. அத்துடன், பாதிரியாரின் மொழியியற கருத்துக்களுடன் சமுகக் கருத்துக்கள் சிலவும் கூட அவரது கண்ணோட்டத்தில் தாக்கம் செலுத்தியது, பார்ப்பன எதிர்ப்பு, ஆரிய திராவிடப் போராட்டம், திராவிடத் தேசியம் சமஸ்கிருத எதிர்ப்பு போன்றவற்றுகான, "தர்க்கப் பின் புலம்” “கருத்தியல் நியாயப் பாடு” என்பவற்றையும் பெற்றுக் கொண்டார்.
கால்டுவெல் தனது நூலில் வரும் திராவிட இலக் கியங்களின் பழைமை பற்றிய அதிகாரத்தில் தமிழ் இலக்கியத்தின் வரலாறு எனச்சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு எழுதும் பொழுது, அவற்றுள் (தமிழ் இலக்கியங்களுள்) கி.பி பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை எவைதானும் இல்லை என்றும், திருஞானசம்பந்தர் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் கூறியிருந்தார்.
இவ்வாறு கால்டுவெல் கூறிய கருத்தையே மேனாட்டு அறிஞர்கள் பலர் முடிவான கருத்தாக எடுத்து தமது கட்டுரைகளில் எழுதி வந்தார்கள். கி.பி எட்டாம் நூற்றாண்டு வரை தமிழ் மக்கள் இலக்கிய முடையோராய் இருக்கவில்லை. தமிழ் இலக் கியம் சமஸ் கிருத நூல் களின் திட்டவட்டமான பிரதியாகவே இருந்தது என்ற
-C Lorriras : 2006 D

Page 10
856)TÉg5 uÍT60016ól6öT (Dr. Burnell) 35(55g பிரித்தானியக் கலைக் களஞ்சியக் கட்டுை ஒன்றினுள் புகுந்துள்ளது.
சுந்தரம்பிள்ளை இப்பிரச்சினையை முக்கியமாக கொண்டு இக்கருத்துக்கு தனது வன்மையான எதிர்ப்பினை எடுத்துக் கூறியுள்ளார்.
"சம்பந்தர் காலம் சம்பந்தமாக நிலவுப குழப்பத்தை விட அதிகமான ஒரு குழறுபட நிலையைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாதென்பது நிச்சயம். திரு ரெயிலர் (Taylo! கூன் பாண்டியனையும், அவன் கூனை மாற்றிய சம்பந்தனையும் ஏறத்தாழ கி.மு 132 க்குரியவர்கள் என்கின்றார். ஆனால் கலாநித கால்டுவெல்லோ அவன் கி.பி 1292 இல் ஆட்ச புரிந்தவன் என்கின்றார். இவ்வாறாகச் சம்பந்தை கிறித்துவுக்கு முன்னும் பின்னும் வருட 1300வது வருடத்துக்குரியவர் என மிகுந்த அலட் சியத் துடன் கூறக் கூடுவது சாத்தியமாகிறது. இது நிச்சயமாக ஒரு நுாதனமாகும் . வரலாறு முழுவதிலுப இதைப்போன்ற ஒன்றைக் காண முடியுமோ என என்னால் நிச்சயமாகக் கூறமுடியவில்லை உண்மையில் தென்னிந்திய வரலாற்று காலவரிசை அறிவு இனித்தான் தொடங்கி வேண்டியுள்ளது போலும்.”
இவ்வாறு தனது திருஞானசம்பந்தர் காலி ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் இலக்கியங்களில் காலத்தை நிர்ணயிப்பதில் நடைபெற்ற விதாதத்தில் ஆய்வுத் திறன் முறைமையில் தமிழ்இலக்கிய வரலாற்றிலே சுந்தரம்பிள்ளை ஒர் முன்னோடியாகவே உள்ளார்
திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சியை பொறுத்தவரையில் மனோன்மணியம் சுந்தர பிள்ளையின் ஆய்வுத்திறன் குறித்த பேரா.ந வேலுசாமி "மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை எனும் நூலில் குறிப்பிடுவது கவனத்துக்குரியது
( ஒலை 39 )

(8)
1. தருக்க முறையிலான ஒப்பிட்டாய்வு 2. இலக்கிய மரபு தழுவிய நிலையில்
பொருள்கோள் காணுதல் 3. ஐயத்திற்கிடமான இடங்களைச் சுட்டுதல் 4. பிறமொழி, பிறநாட்டார் கருத்துகளை
ஏற்றல் - மறுத்தல் 5. பல்துறை அறிவாற்றலைப் பயன்படுத்தல்
ஆகிய திறன்களை கொண்டிருந்தமையால் திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சியை பிற்காலத்தில் வந்த பலர் ஆய்வு செய்த போதிலும் சுந்தரம்பிள்ளையின் கருத்துகளே வலுப்பெற்றன. தமிழ் இலக்கியத்தின் வரலாற்று எழுத்துகள் முழுவதிலும் பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் பங்களிப்பு ஒரு மைல்கல்லாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. நாம் இன்னும் விரிவாக சுந்தரம்பிள்ளையின் புலமை மரபை ஆராய்ச்சி திறன்களை விரிவாக நோக்க முடியும். வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.
சமுக - அரசியல் தேவைகளுக்கு இலக்கியத்தையும் இலக்கிய வரலாற்றையும் வேண்டி ஒர் முறையியலை நமக்கு அடையாளம் காட்டிய முன்னோடி பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை. 26.4.1897 வரை வாழ்ந்து நாற்பத்திரண்டு குறை ஆயுளில் நிறை வாழ்வு வாழ்ந்த ஆராய்ச்சிப் பெருந்தகை. திராவிட எழுச்சியும, தமிழ் உணர்ச்சியும், தமிழ்ப் பிரக்ஞையும் தொடர்ந்து காலமாற்றங்களுக் கேற்ப மேற்கிளம்பும் பொழுது, அவை புதிய பொருள்கோடல் சார்ந்து மையம் கொள்ளும் பொழுது, "பேராசிரியர் சுந்தரம் பிள்ளை” ஓர்மைல்கல்லாகவே இருப்பார்.
米 米 米
- -C மார்கழி : 2006

Page 11
அஞ்சலி
கவிஞர் சு. வில்வரத் முன்வைத்து.
ஈழத்து நவீன தமிழ்க் கவிதைப் பரப்பிலே கt இடமுண்டு. 1970 தொடக்கம் ‘கவி' கவிதைத்
: 蠶
臀 量驗 Lili illi lill
(1950 - 2006)
39
 

தினத்தை
விஞர் சு.வில்வரத்தினத்துக்கு தனித்துவமான துறையில் காத்திரமாக இன்றுவரை ஈடுபட்டு வந்துள்ளவள். இவர் முதளையசிங்கம் சார்ந்து வெளிப்பட்ட கருத்துநிலைத் தாக்கத்திற்கும், அதன் இயக்க முறைமைக்கும் ஆட்பட்டவர்.
சு.வி எழுதத்தொடங்கிய காலம் தமிழ்ச் சமூக அனுபவங்கள் ஒரு திருப்புமுனைக் கட்டத்துள் திசை திரும்பி இருந்த காலம். பேரினவாத ஒடுக்குமுறை அரசியலின் அராஜகம் படிப்படியாக அரச பயங்கரவாதமாக உருத்திரட்சி பெறத் தொடங்கிய காலம். இந்தக் கால நீட்சியின் விளைவாக வளர்ச்சியுற்ற தமிழ்ப் பிரக்ஞையின்’ ‘தமிழ்த்தேசியத்தின் ஆத்ம தரிசனத்தின் பாடுபொருள் கவிவெளியாக பரிணாமமும் பெற்றது. இதற்கு சு.வி யின் கவிதைகள் புதிய தடங்கள் அமைத்தது. சமூக, அரசியல், கலாசார மற்றும் ஆத்மார்த்த துயர்களின் பன்முகக் கோலங்கள், விடுதலை அரசியலின் பன்முகத்தனம கவிதை எடுத்துரைப்பின் இயங்கு தளமாயிற்று.
சு.வி யன் பார்வை வீச்சு, சமூக அனுபவம் கவிதையின் கட்டுமான இறுக்கத் தளர்வுக்கும் மொழிதல் தன்மைக்கும் உரிய சொற்களின்
- மார்கழி : 2006

Page 12
தேர்வு இயல்பான கட்டங்கள் ஆயிற்று. இவற்றை அகங்களும் முகங்களும்’ (1985)
காலத்துயர்’ (டிசம்பர் 1995) காற்றுவெளிக் கிராமம்’ (மார்ச் 1995) , “நெற்றிமண்’ (2000) உள்ளிட்ட தொகுப்புகள் நமக்கு அடையாளம் காட்டும். அதைவிட 1970 களுக்கு பின்னரான சமூக அனுபவம், அரசியல், வாழ்வியல் யாவும் இலக்கிய வழி ஆவணமாகப் பதிவு செய்யப்படும் நுட்பமும் வெளிப்படையாகவே இதனுாடு இழையோடு கின்றது. ஆனால் இது கவித்துவத்தின் செழுமையை உட்செலுத்தும் வேகத்திற்கு தடையாக இல்லாமல் . எவ்வாறாயினும் ஈழத்து நவீன தமிழ்க்கவிதைப் பரப்பில் சு.வி யின் தடங்கள் ஆழமானவை. ஆத்மீக ஈடுபாடும் சமூகப் பணிகளில் உணர்புபூர்வமான செயற்பாடும் கவிதையின் உள்ளாற்றலின் விசைப் படுத்தலாகத் தொழிற்பட்டது. இதுவே சு.வி யை ஏனைய கவிஞர்களிடமிருந்து விலத்திக் காட்டும் தனிப்பண்பாகவும் வெளிப்பட்டது.
தமிழ்க் கவிதைக்கு நீண்ட மரபு உண்டு. அதன் வளம் செழுமை ஆழமானது, அகலமானது. இந்த மரபுச் செழுமையின் செல்நெறிகளை உள்வாங்கி கடந்துவரும் ஆற்றல் சு.வி க்கு இயல்பாக இருந்தது. சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், தனிப்பாடல்கள், சித்தர் மரபு மற்றும் சிலப்பதிகாரம், கம்பராமாயணம் உள்ளிட்ட மரபுகளுடன் ஆழமான பரிச்சயம். மேலும், நாட்டுப்புறப் பாடல்கள், கூத்துப் பாடல்கள் போன்றவற்றுடனும் ஆழ்ந்த ஈடுபாடு. பாரதி வழிவரும் கவிதை மரபுகளுடனும் அவற்றின் இலக்கிய அரசியலுடனும், அழகியலுடனும் நிரம்பவே ஊடாட்டம். தொடர்ந்து தனக்குள் தேடலிலும் தத்துவ விசாரணையிலும் சதா ஈடுபாடு. இவற்றின் விளைவு தர்க்கம் படைப்பாக்கக் கூறுகளின் புதிய பண்பாட்டுத் தளத்தின் மேற்கிளம்
( ஒலை 39 )

(10)
புகைக்கு சு.வி தனிப்பாதை அமைத்தார். “உயிர்த்தெழும் காலத்திற்காக” என்ற அவரது
முழுக் கவிதைத் தொகுப்பு சு.வியின் கவி ஆளுமையின் உருத்திரட்சி எனலாம்.
ஆனால் ஈழத்தில் “கவிதை விமரிசனம்” அதற்குரிய பண்புகளுடனும் கோட்பாட்டுத் தெளிவுகளுடனும் முன்னெடுக்கப்படாத “குறைபாடுகள்’ ஒரு மரபாகவே இன்றுவரை தொடர்கிறது. இதனால் ஈழத்துத் தமிழ்க் கவிதை மாறுதல்களுக்குக் காரணமான சக்திகளை தெளிவாக அடையாளம் காட்ட முடியாமல் உள்ளது. வெறுமனே “பட்டியல்முறை” இன்றுவரை தொடர்கிறது. இதனை சு.வி தெளிவாகவும் விமரிசனபூர்வமாகவும் தெளிந்திருந்தார். இதற்கு மாற்று முயற்சி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஆங் காங்கு தனது சிந்தனைகளை பகிர்ந்துள்ளார்.
இன்று தமிழ்க்கவிதையில் புதிய சொற்களும் சொற்பிரயோகமும் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாயிற்று. அந்தத் தொடர்ச்சிக்கு சு.வி முழுமையான பங்களிப்பு செய்துள்ளார். அவரது கவிதைகளில் இழையோடிவரும் காலத்துயர், உயிர்த்துவம், அசோகவனத்துயர் குருவியின் கூச்சல், தளிரீ போன்ற இன்னும் எண்ணற்ற பெரும் குவியல்கள் உண்டு. இவை மொழியின் எடுத்துரைப்பில் அனுபவங்களின் வீச்சுக்கேற்ப சொற்களின் புதிய சேர்மானமா கின்றன. மேலும் அவை அதனளவில் தடைகள் அறுத்து உரியதாகவே மேற்கிளம்பும். இத்தகு தன்மைகள் சு.வி யின் கவிதைகளில் நிறையவே உண்டு. இதைவிட இசைலயம் மிகுந்த சொற்களின் சேர்க்கை எடுத்துரைப்பில் புதிய உணர்திறன்மிகு இசைக் கோலமாக மெல்ல மெல் ல மேற்கிளம்பும். இதனை சு.வியின் குரலால்
- - -- ( மார்கழி 2006 D

Page 13
கேட்கும் இன்பம் அலாதியானது. அந்த அனுபவங்கள் பெற்றவர்களுக்கு அது நன்கு புரியும்.
சு.வி மனிதத்தை அதன் உயிர்த்துவமாக பன்முக ரீதியில் புரிந்துகொள்ள முற்பட்டவர். இதனால் “விடுதலை முகம்’ தேடி தத்துவ விசாரணையில் ஈடுபட தன்னை வருத்தவும் தயங்கவில்லை. பாரதியின் ஆத்மவேகம், துடிப்பு சு.வி யிடம் இன்றைய சமகாலப் பண்பாகவும் சத்திய ஆவேசமாகவும் பீறிட்டது. இதற்கு சு.வியின் கவிதை இயங்குதளம் மட்டுமல்ல இதற்கீடான சிந்தனைத் தளமும் இணைந்து செயற்பட்டது.
இதனாலேயே நமக்கு சு.வி கவிஞராகக் கிடைத்தார். இதை மெய்ப்பிக்கும் அவரது
ડ્ઝોડ્ઝ
S
இயங்கிய வல்லிக்கண்ணன் உள்வாங் செயற்பட்
எல்லோர இவர்
கெளரவ இயங்கிய பேசுவது
X &
१.४° ४:४
(1920-11-12 - 2006-11-09)
“புதுக் 忠 “சிறு த் காலம்’ (
ரா.சு.கிருஷ்ணசாமி என்ற இயற்பெயர் எப்பொழு
கொண்ட வல்லிக்கண்ணன், தன் தேடலும் 86வது வயதில் சென்னையில் வாழ்க்ை காலமானார். இவர் சிறுகதை, கவிதை, இலக்கிய நாவல், கட்டுரை திறனாய்வு, ஆய்வு, மொழிபெயர்ப்பு என பல தளங்களில்
( ஒலை 39
 
 
 
 
 
 
 

(11)
கவிதை மொழி தமிழ்க்கவிதை மரபில் புதுத் தடம் காட்டுகிறது. தமிழ்க்கவிதையின் வடிவத்திலும் அமைப்பிலும் பல மாற்றங்கள் ஏற்படும் காலத்துக்குள் நாம் உள்நுழைந்து ள்ளோம். பிற கலாசாரங்களோடும் பிறமொழி இலக்கியங்களுடனும் எமது அனுபவம் விரிகிறது. இந்தப் பல்வகை அனுபவம் எமக்குரிய இலக்கிய மரபை மேலும் வளர்த்தெடுக்கும். இவை மூலமும் தமிழ் மரபு தன் இலக்கிய மரபை பன்முக ரீதியில் வளர்த்தெடுக்கும். இத்தகைய நிதானமான முயற்சிகளில் சு.வியின் ஆளுமை குறித்த பார்வைகள், மூன்றாம் உலகநாடுகளைச் சேர்ந்த பின்காலனித்துவ படைப்பாளர்களது தடத்தில் வைத்து புரிந்துகொள்வதற்கான நிலைமைகளை நாம் உருவாக்க வேண்டும்.
- மூர்
பவர். பாரதிவழிவந்த மரபின் செழுமைகளை
வ்கி தன்னளவில் உறுதியுடனும் நிதானத்துடனும் .L_6)]iT.
தும் மரியாதைக்கும் மதிப்புக்கும் உரியவராகவும்,
வாழ்ந்த வாழ்க்  ைக்யால் எல்லோரதும்
த்திற்கும் உரியவராகவும் வாழ்ந்தவர், எழுதியவர்,
பவர். பேசுவதுபோல் எழுதுவது, எழுதுவதுபோல்
என்று வாழ்ந்தவர்.
5 விதையின் தோற்றமும் வளர்ச்சியும் ” திரிகையின் தோற்றமும் வளர்ச்சியும்”“சரஸ்வதி போன்ற நூல்கள்மூலம் ஆய்வுத்துறையில்கூட இவர் ழதும் நினைக்கப்படும் மனிதராகவே இருப்பார். ), வாசிப்பும், எழுத்தும் என்பதே இவரது கயின் ஆதார சுருதி. இதுவே இலக்கியமாயிற்று. பமே வாழ்க்கையாயிற்று.
: -- *
----O மார்கழி : 2006 )

Page 14
கவிஞர் சு.வி மரணம் தொடர்பாக
இறுதிநேர உரையாடச்
(LP,
நான் அதிர்ச்சியால் ஓங்கி அறையப்பட்டேன்.
அந்தக் கோலத்தில் கவிஞர் வில் வரத்தினத்தைப் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை.
நோயின் கோரக் கௌதலுக்கு இலக்கான ஓர் ஜீவனாய் அவர் கிடந்தார்.
சதா இன்முறுவல் சிந்தி, எவரையும் அன்புடன் எதிர்கொள்ளும் கம்பீரமான அவர் தோற்றம் அலை ஒய்ந்த ஒடையாய் தேங்கிக் கிடந்தது.
ஆனால் கண்களில் மட்டும் உட்கனிந்த வித்தியாசமான சுடர்தல்
வைத்தியசாலையில் கிடந்த பதினைந்து நாட்களும் நோயோடு போராடிக்கொண்டிருந்த அதே நேரத்திலும் என்னோடு கதைப்பதில் ஓயாத வேட்கை.
இன்று ஈழத்து இலக்கிய உலகில் ஏற்பட்டுள்ள மந்தநிலையை வெளிப்படுத்தும் படைப்புகள் பற்றியும் பேசப்பட்டன.
“ஆனால் இந்த மந்தநிலை ஈழத்தில் மட்டுமல்ல, உலகெங்கும் பொதுவாக உள்ளது. கொஞ்சக் காலத்திற்கு முன்னர் பின்நவீனத்துவம், விளிம்புநிலை, கட்டவிழ்ப்பு என்று ஓர் எழுச்சி ஏற்பட்டாலும் மீண்டும் படைப்புலகில் ஒரு தொய்வும் சலிப்பும்’ நான் கூறினேன்.
( ஒலை 39 )

$கள்.
பெT
“இதற்குக் காரணம்?” சு.வி.கேட்டார்.
“இதற்குக் காரணம், இன்றைய நவீன படைப்பாளிகள் துTக்கிப்பிடித்த பின் நவீனத்துவம், அமைப்பியல், கட்டவிழ்ப்பு, விளிம்புநிலை என்பவையெல்லாம் ஆழமான கருத்தியல் கோட்பாடுகளல்ல. பெரும் மாற்றத்தைக்கோரி நிற்கும் இன்றைய கால கட்டத்திற்குப் போடப்பட்ட சோழப் பொரிகளே இவை. 12ம் , 13ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சிக்காலம் தோற்றுவித்த அடிப்படைச் சிந்தனை மாற்றமான அறிவுவாதத்தின் இறுதிவடிவந்தான் மார்க்சிஸம். இந்த மார்க்சிஸம் இன்று தனக்குள் பிளவுற்று பல கூறுகளான நிலையில் அதன் இடைநிரப்பி களாக, மிதக்கவிடப்பட்டுள்ளவைதான் பின் நவீனத்துவம், அமைப்பியல் வாதம், கட்டவிழ்ப்புவாதம் என்பவையெல்லாம் ஆழமான தேவையின் குரலுக்கு செவிமடுக்காது அரைகுறைப் புரிதல்களாக மிதப்பவைதான் இவை. இன்று மீண்டும் இன்னொரு அடிப்படைச் சிந்தனை மாற்றத்தின் வாசல் படிகளில் நின்றுகொண்டிருக்கின்றது. மனிதக் கூர்ப்புநிலை அதைப் புரிந்துகொண்டு ஒருவன் எழும்போது, நமது கலை இலக்கிய உருவங்களும் உள்ளடக்கங்களும் பெருமாற் றத்திற்குரிய பாய்ச்சல்களை ஏற்படுத்தும்’.
நான் இதைக் கூறியபோது சு.வி.யின் கண்கள் பிரகாசித்தன. அந்தப் பிரகாசம், இந்தச் சிந்தனை ஏற்கெனவே அவனுக்கு ள்ளும் உள்வெளித்திருந்ததன் அறிகுறியே. அதனால் தான் அவன் பின்வருமாறு கூறினான.
-( மார்கழி : 2006

Page 15
நீங்கள் அண்மையில் எழுதிய “வாருங்கள் திண்ணையிலோர் பேர்மனிதப் பள்ளியுண்டு” 6 இந்தச் சிந்தனையின் வெளிப்பாடுதானே? என்
நான் முறுவலித்தேன். சு.வி.என் கவிதையின் இடையிலுள்ள வரிகளை முணுமுணுத்தான்.
“வாருங்கள், கட்டவிழ்ப்பு முதல்பாடம்.
கற்றிடுவீர். தன்னை அறியாதார் அனைவரும் தலி கற்றிடுவீர், பிராமணனோ வெள்ளாளனோ உடையவனோ கடையவனோ - அவன் தன்னை அறியாவிடில்!”
இடையில் அவரது புதிய ஆக்கங்கள் பற்
தான் புதிதாக எழுதியுள்ள “விடுதலை , “குருதியில் அறையப்பட்ட தீவுகள்’ என் கவிதைகள் பற்றிக் கூறினார். ஆனால் அவற்ை எழுதிமுடிக்கா ததையிட்டு கவலை தெரிவித்த
இடையில் ஏ.ஜே.கனகரத்னாவின் மர கதை வந்தபோது, “நான் அவரைப்பற்றி ஒரு நீ எழுதியுள்ளேன். அதை மூன்றாவது மனிதனுக் எண்ணியுள்ளேன்’ என்றவர், “அதை தெளி எழுதிக்கொடுக்கவேணும்” என்றார்.
“நோய் குணமானதும் அதைச் செய்யல
லேசாக சிரித்துவிட்டு, சிறிது கட்டிலில் ர பார்த்தார். அப்பொழுது அவர் கண்களை மூ சுருக்கியது, உடல் வலியின் தீவிரத்தைக் கா
அந்நிலையில் சிறிது பேசாது கிடந்தா
அப்போது இசையெல்லாம் அடங்கி பேரியாழ் மூலையில் சாத்தப்பட்டுக் கிடப்பதுே எம்மை அறியாது ஓர் துயரினை எங்கிருந்ே போலவும் பட்டது.
ஒலை 39 )

i என் வீட்டுத் ான்ற கவிதை று கேட்டான்.
த்துக்களே!
ள் தலித்தே,
றிக் கேட்டேன்.
ஆற்றுப்படை” னும் நெடுங் ற பூரணமாக ITs.
ணம் பற்றிய ண்ட கட்டுரை $கு கொடுக்க வாக திருப்பி
Tம்’ என்றேன்.
நிமிர்ந்திருக்கப் டி முகத்தைச் ட்டிற்று.
ப்போனவோர் பால் பட்டது. நா எழுதுவது
----O
(13)
அன்றிரவு அவருக்கு நோய் திடீரெனக் கடுமை யாகியது.
ஐ.சி.வோட்டுக்கு மாற்றப்பட்டார். செயற் கையான சுவாசம் கொடுக்கப்பட்டது. ஆயினும் அவர் உயிர்தப்புவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாய்த் தெரியவில்லை. 9ம் திகதி மாலை ஐந்துமணியளவில் அவர் உயிர் பிரிந்தது.
விண்ணெழுந்து நின்ற "பீனிக்ஸ் பறவை, எங்கிருந்தோ வந்த இராட்சதக் கழுகினால் இறாஞ்சியெடுத்து செல்லப் பட்டதுபோல் பட்டது.
来 米 米
Lorras : 2006

Page 16
முதலுேம
அவரை நான் முன்பு கண்டதில்லை, கேட்ட துண்டு. அவரது கவிதைகள் என்னை ஆகர்ஷித் திருக்கின்றன. கவிதையின் வீச்சுக்கள் அலாதியானவை. சொற்கோர்வைக் குளிர் ஞம் , அர்த் தமற்ற வடசொல பிரயோகத்தினாலும் அவர்தன் கவிதைகளைச் சிறைப்படுத்தினாரல்லர். கவிதை வளம், ஆழ்ந்த புலமை, மேலாகத் தனக்கான தத்துவச்சார்பு இவற்றை அடியொற்றிய கவிதா சாமர்த்தியம் அவருடையது. அவருடைய கவிதைத் தொகுதிகளில் தலைப்புகளே அவரது கவிதை வீச்சினை இனங்காட்டுவன. அவர் பார்மகளிர் தொடர்பான தொன்மத்தை அடியொற்றி அவர் எழுதியது தமிழ்ப் புலம்பெயர் இலக்கியத்தின் முன்னோடி முயற்சி என்று கலாநிதி செ.யோகராசா
ཉ
அடிக்கடி குறிப்பிடுவார். அவரது ‘கரு பல்வேறு விதமாகக் களவாடப்பட்டதையும் அவர் வேதனையுடன் குறிப்பிடாமல் இல்லை.
அவரை அண்மையில் திருகோணமலையில் வடக்கு-கிழக்குத் தமிழ் சாகித்திய விழாவின் போதே கண்டுகொண்டேன். எவரும் அறிமுகம் செய்து வைக்காமலேயே கருத்தாடலினால் இருவரும் அறிமுகமானோம். அலைவரிசை ஒத்துப்போகவே பேசினோம். சிறுகதைபற்றி, கவிதைபற்றி அவரது பிரபஞ்சக் கருத்தியல் பற்றி ஆழ்ந்த புலமையுடனும் கணிரென்ற அட்சர சுத்தியான உச்சரிப்புடனும் அவர் பேசிய நேர்த்தி நாளெல்லாம் பேசக் கேட்டுக் கொண்டிருக்கலாம் போல இருந்தது. அடடே. இவரைத் தவறவிட்டுவிட்டேனே என்ற ஆதங்கமும் என்னுள் நிலைகொண்டது. இருந்தும் என்ன. இனித் தொடரலாம் தானே என்று. பரஸ்பரம் முகவரிகள். தொலைபேசி
ஒலை 39
 

(14.
856,565 it of.65ugular star இறுதியுமான ஒரு சந்திப்பு.
- வ.மகேஸ்வரன் -
இலக்கங்கள் பரிமாறிக் கொண்டோம். தனது “வாசிகம்’ என்ற சிறு நூலில் “அன்புடன் நண்பர் மகேசுவரனுக்கு’ என்று எழுதி அன்பளிப்பும் செய்தார். திருகோணமலை விஜயம் மிகுந்த மனநிறைவான பயணமாக அமைந்தது. வில்வரத்தினம், நந்தினிசேவியர், பூரீதேவி, திருமலை நவம், தெளிவத்தை, குணநாதன். எனப் பலருடனும் ஊடாடும் வாய்ப்பை அது ஏற்படுத்தியது. அந்தப் பசுமையான நினைவுகள் ஒயுமுன்னர். நண்பன் சிவசோதி. தொலைபேசி வழியே. அந்தத் துயரச் செய்தியை முன்மொழிந்தான். அதிர்ந்துபோனேன். நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. வில் வரத்தினம் தனது கருத்தாடலூடே வீங்கிய இரு பாதங்களையும் காட்டித் தான் கிட்ணி நோயினாலும் அவஸ்த் தைப்படுவதாகவும் டாக்டர் கொன்ஸன்ரைன் (எழுத்தாளர்) தன்னைக் கவனித்து வருவதாகவும குறிப்பிட்டிருந்தார். அந்த வருத்தத்தின் கொடுமைத்தன்மை பற்றி நான் அவருக்கு எச்சரித்துமிருந்தேன். ஆடடே என்று ஆதங்கப் படுவதற்குள் வானொலி அவரை அமரராக்கிச் செய்தி சொன்னது. எல்லாம் கனவாய் பழங் கதையாயப் மெல் லப் போனது. நினைவுகள் மாத்திரம் எச்சமாய். உவப்புத் தலைக்கூடி உள்ளப் பிரிதலோ. ஒரு நாள் பழகினாலும் நல்லோர் கேண்மை நிலைத்து நிற்கும் என்ற கூற்றோ. இங்கு நிதர்சனமானது. கனத்தையில் அவருக்கான இறுதி அஞ்சலி நிகழ்த்தக் கூடிய கூட்டத் திலிருந்து தெரிந்தது வில்வரின் மேன்மை.
நீண்ட நாட்கள் பழகாவிடினும் என்ன? அவருடன உறவாடிய கணப்பொழுதே போதும். எமக்கி டையேயான உறவை ஆயிரங்காலத்துப் பயிராக்க மரணம் என்ன செய்துவிடும்.
-- Ι -O மார்கழி : 2006 )

Page 17
சு.வி.கவிதைகள்
வேற்றாகி நின்ற வெ
வெளியாரின் வருை வேர்கொண்டவாழ்ை
மக்களெல்லாம் வெ
விடியப் பார்த்தால் வாழ்வெனும் வெள் கிராமம்
முற்றத்துச்சூரியன் முற்றத்து நிலா, முற்றத்துக்காற்றென வீட்டுமுற்றங்களுக்ே வாழ்பனுபவங்கள் ெ
வேலிகளை வெளிய வாசல் கதவுகளை
உள்ளதையெல்லாப வீடுகள் திறந்தபடிே திறந்த வாசல்களுே கதவுகளை சாத்தியு உள்ளோடி யோடி 6 உறவின்மை கண்ட வேற்றாகி நின்ற 6ெ
வெளிகொண்ட காற் வெளிகொண்ட நில வெளியை வெறிக்கி
வெளியிடை வெறித் ஏதோ மோப்பம் பிடி மெல்லெனவந்த கா விலகிச் செல்கிறது
விழிகளைப் பெயர்ச்
வேற்றான்பார்வை 6
( ஒலை 39

If
கயோடு வயும் பிடுங்கிக் கொண்டு ளியேறிய ஓரிரவிற்குப்பின்
ளம் வற்றிக்கிடந்த திடலாய்
க உரித்தான விடைபெற்றுக் கொண்டன.
பார் வெட்டிப் போட்டார்கள். உடைத்துப் போட்டார்கள். ம் கொள்ளையடித்தார்கள் ய கிடந்தன. ட நுழைந்த காற்று ம், திறந்தும், தள்ளியும் ாதையெதையோ முயன்று பின் தோற்றோடி வளியிடைத் தேய்கிறது.
T
ன்ற சூரியன்.
த பார்வையோடு நிற்கிறேன் க்குமாப்போல்
ற்று ஒரு வேற்றானைப் போல.
கிறேன் ன்னினும் தொற்றியதோ?
- Ο Lorras : 2006 D

Page 18
விலகல்
மெல்ல விலகல், விட்டு நீங்கும் க விலகி வந்தாயிற்
காற்று மோப்பம்
இதோ கப்பல் நச் கனத்துக் கிடக்கு
விலகிச்செல்லும்
வழியனுப்பவும் ெ அப்பிக் கிடந்தெ
தூரத்தே
புகார் மூட்டமென வேற்றாகி விண்ண குமைகிறது காற்
வீச்செல்லை
வாழ்தலென்பது மேய்தலெனக் கொண்டால் பூமியொரு மேய்ச்சல் தரை மட்டுந்
மேய்தல், இரைமீட்டல், வீடுதிரும்புதலெனச் சுவடகலாச் சுற்றுவட்டம் தான் நமதுமெனின் நாமும் விலங்குகள் தான்.
வண்டிக்காரன் தூங்குகிறான் ஒய்ஞ்ச சலங்கையொடு வீடு வந்து சேர்கின்றன தூங்கல் மாடுகள் மாடுகளிற்குத் தொழுவம் பின்கோ வண்டிக்காரனுக்கு முன்கோடி
( ஒலை 39

மேலும் விலகல். பற்துறை வரையும்
கடைசியாய்.
பிடித்தது சரிதான்
ர்கிறது ம் இதயச்சுமையையும் தாங்கியவாறே.
துறைமுகம் ாராதிருந்த முதியவரின் சோகத்தை
60T.
த் தெரியும் பனைகளுக்கு அப்பால் னாகி நின்ற வெளியுள்
Jl.
03:02.1995
தான்.
-----O மார்கழி : 2006
)

Page 19
தொழுவத்துக் கயிறு இழுபட்டால் மேய்ச்சல் தரை மட்டுந்தான் அறுபட்டு விடுபட்டால் மேய்ச்சல் தரைக்கப்பாலும் வாழ்வின் விரிபுலங்கள்.
இல்லையென்றால் என்ன தொழுவத்துச் சுகத்தை இரை மீட்டபடி ஈக்களை விரட்டிக்கொண்டிருக்கலாம் வாலின் வீச்செல்லைக்குள் உள்ளதுவு வாழ்வுதானெனின்.
உயிர்கொண்டு விரிகின்ற வெளி உனதே வெண்பறவாய் பயணமும் உனதே உலாப் போகுமுன் வழியில் குறுக்கிட் நானும் உனைப் போலவோர் வழிப் பயணிதா6
எனைப் போலல்ல உடல் உனக்குச் சுமையும் அல்ல கூடுனக்குச் சிறையும் அல்ல வெளியோடிசைந்த வாழ்வு வாழ்வோடிசைந்த வெளி யாவும் உனக்கு இசைந்த வண்ணம்.
பறந்து செல்ல இறக்கை வேண்டிய மட்டும் வெளி திசைகள் யாவும் திறந்த வண்ணம் இசைகள் பாடிச் செல்க உனை ஏந்தும் வெளி காதல் களிகூர
செல்லும் வழியில் எப்போதேனும் இளைப்பாறத் தோணின் இளவிருட்சம் போலும் எனது தோளில் வந்தமர்க உன்விடுதலைப் பாடலோடு அடிவேர்கள் சிலிர்ப்பெய்த
( ஒலை 39 -

10.07. 1998
-Ο மார்கழி : 2006

Page 20
ஒலை 39 )-
din I ġħgb/dħob6lfloii t
சப்பாத்துக்களை
சப்பாத்துக்களின் மிடுக்குப் பற்றிய மினுக்கிய கண் விழுகின்ற அதி:
விறைத்த சப்பா பாவங்கள் ஏதும் இவ்வதிகார முக சாதி மான்களுக் கக்கத்துள் இடுக குடிமக்களின் டெ
இதற்குச் சற்றேனு விறைப்பெடுக்குப் இறங்கி விடும்.
உயர்திணை அ. உதைபடுதிணை சப்பாத்துகளின் L உதைப்பதும் மித அவை இறக்கும
சப்பாத்துக்களின் மயங்காவிடின் அ ஒரே மொழி அதி எங்கோ வீற்றிரு இங்கே அமுல் ( சப்பாத்துகள் ஒன வேளையும் உள அதிகாரத்தின் ே கொள்ளவேண்டா மனித உரிமைக் சுதந்திர ஊடக 6 தற்காத்துக் கொ அபலைப் பெண்6 குரல் வளைய 6 கொடிய தருணம
 
 

மாழிபற்றி
பற்றிப் பேசுவோம்
மேட்டிமை பற்றியும் b னாடி மெருகிடலில் ார நிழல் பற்றியும்
துக்கள் போல
அற்ற ங்களின் முன் கு முன் சால்வையை எடுத்துக் கிக் கொள்கின்ற ளவியம் எமக்குள் தானாய் படிகிறது
றும் ஏறுமாறாயிருந்தால் ) பணியில் சப்பாத்துகள்
றிணை யாவற்றையும் யாக்கி விடும் பணியும் பாணியும் நிப்பதும்தான் என்றாகிவிட்டது தித் தரங்களாயினும்,
ஒலிபேதங்களில் புவற்றின் பின்னமற்ற காரம்தான் எனப் புரியவரும் க்கும் அதிகாரத்தை சய்யும் மொழி நடப்பு. சயெழுப்பா
எனின் அது )ானவரம்பென்று
ம்
ாப்பாளியினதோ, பியலாளரினதோ, ர்ளவியலாத
ரினதோ றி மிதித்துக் கொண்டிருக்கும் யிருக்கலாம்
-C மார்கழி : 2006

Page 21
செம்மணிகளும்
ஆயினும் அதற்கா காலடிக் கீழ் மிதிப முனகலையும் ஊத
அதை மொழி பெu அவற்றின் கீழ் நசு கணக்கு விபரங்கள் காணாமல் போனே காலடிப் பதிவுகள்
இருந்தும் என்ன? இ சப்பாத்துக்களை சி தூசிதுடைத்து முத் அவற்றின் மினுக்கத் பிறழ்வுப் பிறவிகளு சப்பாத்துக்களுக்கே தூசிப் பெறுமானம் ஆயினும் தூசிபோல் காரியஞ் சாதிக்கும் குரலும் எழுகிறது இதுவும் எம்மத்தியில்
ஆகவே நாமும் சப்
புதை குழிக்க முடியா உண்மைகளும்
கிழியக் கிழியக் கேட்பதற்கு கைவசம் உள்ளன ஆயிரம் கேள்விகை கேட்கலாம் அல்லவா? தூக்குத் தீர்ந்தவன் வாயவிழும் வரை உங்கள் குரலை எங்கே அடகு வைத்
கேட்கலாமல்லவா
கேட்கலாம்
நாக்கைப் புடுங்கிக் கொண்டுசாகுமாப் வேண்டாம் வாயை மூடிக்கொள்கிறேன்
( ஒலை 39 )

-(19)
எந்தத்தடயமும் இன்றி ட பூக்களின் விட்டு மெது நடைபயிலும்
ர்த்து அறிபவர்க்கே
கியவற்றின்
தெரியவரும்
ரின்
லனாகும்
ந்தச்
மேல் தாங்குவோரும்
5மிடுவோரும்
தில் தம் முகலட்சணம் பார்க்கும்
b உளவே
இவ்ை
தான்
ஒட்டியிருந்து வல்லமை உண்டென்ற
ல் இருந்தேதான்
பாத்துக்களின். தூ.
18.10.1998
நிழந்தீர்
போல
-C மார்கழி : 2006 )

Page 22
கிளரா உண்மைகளாய் இக்கேள்விகளையும் புதைகுழிகளுள் தூங்கவிட்டுவிடுகிறேன்
ஆனாலும் பாருங்கள்
கேள்விகளை முழுசாய்ப் புதைக்க முடிவு புதைகுழிக்க மேலாக துருத்திக் கொண்டு தெரியும் கையைப்போலவோ
காலைப்போலவோ வெளி வந்து விடுகிறது வரலாற்றின் மூடுண்ட பக்கங்களை கிழித்துக் கொண்டு.
சிலவேளை புதைகுழிமேல் குத்திவைக்கப்பட்ட கள்ளிச் செடியாக நிரந்தரமாகத் தங்கி விடுகிறது சிலவேளை புதை குழிக்கப்பட்டவரின் ஆவியாக காற்றிலேறித் தன் குரல் கிளர்த்தியலை
கிருஷாந்தி வழக்கில் தூக்கித் தீர்க்கப்பட்டவனின் தொண்டைக் குழிக்குள்ளும் இப்படித்தான் தன்குரல் திறந்தது ‘புதை குழிகளை அடையாளம் காட்டுவேன்’ என்கிறது. கணக்கீடும், காணாமல் போனோர் பட்டியலோடு ஒத்தேவருகிறது
எண்ணிக்கை.
எண்ணிக்கையிலா எல்லாமிருக்கிறது? எண்ணிக்கையின் பேரால்தானே எங்கள் உரிமைகளும் புதைக்கப்பட்டன தேசமென்பதுதானென்ன? மக்கள் திரளின் பெருக்கம் மட்டுந்தான எல்லைக்கோடுகளின் உள்ளே
( ஒலை 39 )

வதில்லை
ஓவியம் எஸ் நளி
“செம்மணி” :
)
Lorriras : 2006

Page 23
தித்தித்திணறும் சிறுபான்மையரின் தேசம் எது புதைகுழிமையமா?
சூரியகந்தை, செம்மணிகளென தேசமெல்லாம் புதைகுழிகள். புதைகுழிக்கப்பட்டவை ஒட்டுமொத்த மனித விடுதலையும், விழுமியங்களும் மகத்துவமிக்க மானுடந் தளிர்களும்தா தோண்டினால் நாறப்போவன நாட்பட்ட பிணந்தின்னி அரசியலும்தான சாத்தான் ஒதும் சமாதான வேதமும்தா தொடரப் போவதும் புதைகுழி ராச்சியந்தான் பாராளுமன்றிலும் நமக்குவாய்த்தவை இரவல் குரல்கள்தான்.
ஆயினும்
சாகும் தறுவாயிலும் நீதிமன்றில் நிமிர்ந்த மனச்சாட்சியாக தன் குரலெழுப்பி சூரிய கந்தைக்கும், செம்மணிக்கும் ஒ சுரங்கப் பாதை உண்டென்று, உண்மைசாற்றினானே அவனுக்கு மும்மணிகளினதும் ஆசீர்வாதம் கிட்டுவதாக.
“என்மக்கள் போல்கின்றீர் நீங்கள் யார் மக்கள்” நள மகாராசன்தான் கேட்டான்
நான் கேட்கமாட்டேன் இரக்கத்தை கோருமிந்த அகதிச் சிறுவனை நீ ஆர்பிள்ளை யென்று
அசுரப் பற்கள் பதித்துப் பேய்த்தாங்கிகள் கடக்குமிந்தத் தெருவிலுனைக் கை ஏந்த
Ogos. 39)

ன்
ன்
12.12.1998
2006 : (fresuחLD

Page 24
விட்டது எதுவெனத் தெரியும்
பள்ளிக்குப் போய் துள்ளி ஓடிவரும் பாலகம் இழந்த பிள்ளை கேட்டாயேடா ‘பிச்சை” என்றொரு சொல் கை நீட்டி ஈரற்குலையில் ஈட்டியைச் சொருகி.
இதயத்தைப் பிளந்து வழிகிற குருதியில் தாரை வார்த்து என் உயிரே வேண்டுமெனினும் ஈவேன் என்மகனே இந்தச் சொல்லை மட்டும் விட்டுவிடு கூடவே இரக்கத்தை யாசிக்கும் பார்வையையு
வயிற்றுக்குக் கஞ்சி வேண்டும்தான் வாழ்தலுக்கு வேண்டுமடா நிமிர்வு! 'இடுக’ என்று கேள் இடுகிறேன். இரந்து யாசித்தலை விடு சுவடெறிந்து நட உன் இறுமாந்த நடையினிலே எப்படையும் தோற்குமென
16.12.1998
காலம் இகந்த விழிச் சுடர்வாய் கல்லறை தீபம். குழிக்குள் விழித்தன பறவையின் கண்கள்.
விழிப்பூர்ந்த ஞாபக வெளியில்
பயணித்த திசைகளின் சிறகோை வெளியின்
அழைப்பா?
( ஒலை 39 )-

2006
g
COTT 3:5

Page 25
எழுந்தது பறவை
இன்னும் மேலே விண்முட்டி வழிகிற மோனவெளியிலொரு சுருதி வட்டம். காலமின்மையுள் இருமைச்சிறகுகள் ஓய்ந்த வெண்மிதப்பு.
ஒய்வா?
எனின் திறந்து கிடக்கும் கல்லறைக்கும் கடந்து சென்ற காலவெளிக்கும் இடைநின்ற அதிர்வு..?
ஒய்வுகாலச் சங்கீதமா? இன்னும் திறபடாக் கல்லறைகளின் உள்நின்ற உயிர்த்தெழலுக்கான அருட்டுணர்வா? மீட்சி விண்ணப்பமா? வெளியூடிறங்கும் பறவையின் ஆன்மாவ எது?
சிறகுதிர்த்து
விரைகிறது பறவை உதிர்சிறகின் பின்னாலேயே அலைகிறது மனது.
தொடுவானுக்குக்கப்பால் குறும் புள்ளியாகிக் கரைகிறது பறவை சிறகுதிர்க்கத் தெரியா மனப்பேடு புவியீர்ப்பின் எல்லைக்குள் இரைதேடி இன்னும் அலைகிறது.
O966 39 D - - - - - :نفس

2.12.1998
மார்கழி
2006
)

Page 26
போர் நிகழ்கின்ற களம் எனது மண். உன்னதோ என்னதோ எண்ணற்ற உயிர்கள் உதிர்வதும் எனது மண்ணிடைதான். குருதி கொப்பளித்துப் பாய்வதும் எனது கொல்லையுள்தான். பற்றி எரிகிறதே காடு அதுவும் எனது வாழ்வு சூழ் அழகு வனம்தான்
எரிகிறது என்னுயிர்ச்சோலை, தீயந்து கருகுகிற உயிரின் நெடில் தென்றலின் வாசமல்ல. st 960TTg)|LD என்னுயிர்க் காட்டினிடையேதான் காதல் கொண்டலையும் எனது ஆ
காடு!
என்னுயிர் வசந்தன் காடு! விருட்சங்கள் அரண் சூழ நின்ற வீரங்காடு! ஒவ்வோர் இலைகளும் தளிர்களும் உயிர்ப்பேறி நின்றனவே ஓடி வரும் காற்றின் கிளுகிளுப்பில். இப்போதோ உயிருதிர்ந்து சருகான வெட்டைக்கா
ஆனாலும்
உயிரிளங்குமாரர்களை குருதி சொரியச் சொரியச் தாங்கியது இந்தக் காட்டு நிலம்தானே! எனது காதல் மண்தானே! உயிர்களனைத்தினதும் இளைப்பாறலு சரம்பராகிப்போன உயிரிளங்கனவுகளின் மீள் தளிர்தலு இங்கொரு கங்கையை நாம் இறக்கி உனது கங்கைதான் திசை திரும்பாே காதலாகிக் கசிந்த கண்ணிர் கங்கை கடன் செய்தாக வேண்டும்.
ஒலை 39 )

துக்காகவும்
க்காகவும் பாக வேண்டும். தே; யினாலேனும்
- Ο மார்கழி : 2006 )

Page 27
ஏனெனில் இந்த மண் என்னுடைய காதல் சூழ் அழகு வனம். மீளமைத்தாக வேண்டும் எல்லாமும் விடுதலையில் எழுச்சியுறும் பொருட்டாக, புல்லும் பூண்டும் புதுமலரும் பொரு
குறி
குறிதப்பியதுன் அ கோணிப் போனது கோணிப் போதுன்
குவிய மறுத்த உ
அஞ்சலி
நெட்டநெடும் மருதமரம். நிழலுக்கு ஒதுங்கியவன் தன்பெயர் செதுக்க இதயம் நொந்தழுதது நெடுமரம் நீரூற்றி வளர்த்தவன் நினைவிற்கு அஞ்சலியாக.
ஒலை 39 )
 

ட்டாக.
ம்பென்றாய்
யாரின் கை? கையென்றால் -ன் மனதைத்தை.
28.01.89
16.02.99
--( மார்கழி : 2006 D

Page 28
Š X Y: Y
SSS
மூத்தவரும் முன்னோ
(1924.
ஈழத்தின் நவீன தமிழிலக்கிய வரலாற்றில் "வரதர் முக்கியமானவர். இவர் மூத்த எழுத்தாள பரம்பரையைச் சேர்ந்தவர் மட்டுமல்ல, தொடர்ந்த இலக்கியச் செயற்பாட்டினை அடுத்த அடுத்த தலைமுறைக்கு கையளிப்புச் செய்யும் வகிபாகத்தையும் வகித்தவர்.
1924 களில் யாழ்ப்பாணம் பொன்னாலையில் பிறந்து அச்சக முகாமையாளர் நூல் வெளியீட்டாளர் போன்ற தொழில்களை மேற்கொண்டவர். 1939களில் ஈழகேசரி ‘மாணவர்களுக்கான கல்வி அனுபந்தம்’ எனும் பகுதியில் கட்டுரை எழுதத் தொடங்கினார். O966. 39)
 
 
 
 
 

டியுமான வரதர் 2006)
பின்னர் 1940 ஈழகேசரி ஆண்டுமலரில் “கல்யாணியின் காதல்’ சிறுகதை மூலம் எழுத்துலகில் நுழைந்தார். தொடர்ந்து ஈழகேசரிப் பணி ணையில் வளர்ந்து வந்தார்.1943இல் தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் உருவாவதற்குக் காரணமாக அமைந்து அதன்மூலம் 1946இல் 'மறுமலர்ச்சி’ எனும் இதழைத் தொடங்கினார். தமிழில் மறுமலர்ச்சிச் சிந்தனையின் முகிழ்ப்பு வெளிப்படுவதற்கு இந்த இதழ் பங்களிப்புச் செய்துள்ளது. நவீன தமிழிலக்கியப் பயில்வில் மறுமலர்ச்சி புதுத்தடம் பாய்ச்சியது. குறிப்பாக சிறுகதை வளர்ச்சியில் மறுமலர்ச்சிக்கு —( ഥtirsഴി : 2006

Page 29
முக்கியமான இடமுணி டு. இதனால மறுமலர்ச்சிச் சிறுகதைகள்’ எனும் தொகுப்பு தெளிவாக அடையாளப்படுத்துகிறது. இவற்றுக்குப் பின்னால் வரதரின் நோக்கும் போக்கும் முறையாக வெளிப்பட்டுள்ளது.
1940களில் சிறுகதை எழுதத் தொடங்கிய வரதர் ஈழத்துச் சிறுகதை மரபில் தனக்கென்று தனித்தன்மைகள் கொண்டு இயங்கினார். கயமை மயக்கம்’ எனும் தொகுப்பு வரதரின் சுயத்துவம், தேடல், படைப்பாக்க முறைமை, சமூக அக்கறை, கதை சொல்லும் ஆற்றல் போன்ற அம்சங்களை வெளிப்படையாகவே உணர்த்துகின்றன. யாழ்ப்பாணத்தின் சமூக கலாசார பின்புலத்தின் சாயல்கள் ஆங்காங்கு கதைகளின் ஓட்டத்தினூடு பதிவுசெய்யப் பட்டுள்ள தன்மை தனித்து அவதானிக்கலாம்.
1956இல் தமிழர்கள் மீதான சிங்களவர்களின் காடைத்தனத்தின் பொழுது பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் பற்றிய கதை. தன் மனைவி மானத்தினால் கற்பிழக்கவில்லையென நம்பும் கணபதி ஐயர், அதனைத் தனது நண்பருக்கும் வெளிப்படுத்து கின்றார். இன்றுவரை பெண்கள்மீது தொடரும் "பாலியல் வன்முறை’ என்ற முக்கிய பிரச்சி னையின் ஒரு அம்சத்தை இக் கதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. காலத்தைக் கடந்தும் மனதில் பதியும் நல்ல கதைகளை வரதர் அப்பொழுதே எழுதியிருந்தார்.
மனித அவலம், சமூக நெருக்கடி பற்றிய துலங் கலுடன் இயங்கியவர் வரதர் . மனிதநேயம் கொண்டு வாழ்வை நேசித்தவர். மனித மதிப்பீடுகளுக்கு எதிராக இயங்கும் போக்குகளுடன் சக்திகளுடன் உடன்பட மறுத்தவர். அவரளவில் தனக்குள்ளே கலகத் தன்மையுடன் இயங்கியவர். இதனை அவரது படைப் புலகு மட்டுமல்ல இலக்கியச் செயற்பாடுகளும் உணர்த்துகின்றன.
வரதர் நடத்திய இதழ்கள் பல. மறுமலர்ச்சி
( ஒலை 39 }

-(27) (1946) , வரதர் புத்தாண்டு மலர் (1949) , ஆனந்தம் (1952) , தேன்மொழி (1955) , வெள்ளி (1957) , புதினம் (1961) , அறிவுக்களஞ்சியம் (1992) என பல்வேறு இதழ்களை நடாத்திவந்தார். இதன்மூலம் தமிழ் ச் சூழலில் பல்வேறு விடயங்கள் அறிமுகமாகவும் அவைசார்ந்த உரையாடல்கள் பெருகவும் காரணமாக இருந்துள்ளார். இது இவரது தனிச்சிறப்பு என்றே கூறலாம். அதைவிட 30க்கு மேற்பட்ட பல்துறைசார் நூல்களையும் வெளியிட்டுள்ளார். க.கைலாசபத எழுதிய ‘இலக்கியமும் திறனாய்வும்’ என்ற நூல் கூட வரதர் மூலமாகவே வெளிவந்தது.
எப்போதும் புதுமையை வரவேற்கும் பண்பு கொண்டவர். எதையும் அறிந்து தெளிந்து கொள்ளவேண்டுமென விரும்பியவர். அவரது படைப்பு மனம் விரிந்தது. தன்னுடைமை சாாந்த மரபுக்குள் சுருங்காமல் பல எழுத்தாளர்களது படைப்புக்களை வெளிப்படுத்துவதிலும் முனைப்பாக இருந்தவர் ஈழத்து நவீன தமிழிலக்கிய வரலாற்றின் திசைப்படுத்தலுக்கான பல்வேறு களங்களை அடையாளம் காட்டியவர். இதில் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்துள்ளார். அனைத்துக்கும் வரதரது பன்முக ஆளுமையே காரணமாக இருந்துள்ளது. இவரது தலைமுறை சார்ந்த எழுத்தாளர் களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது "வரதர்’ தனித்துவமான சிந்தனாவாதி, படைப்பாளி, செயற்பாட்டாளர். அத்தகைய தகுதிகள் உள்ளவரது இழப்பு ஈழத்துக்கு பெரும் இழப்புத்தான்.
தனது வாழ் காலத்தில் சமூகத்துக்கும் இலக்கியத்துக்கும் நிறையவே பங்களிப்புச் செய்துள்ளார். அந்தவகையில் எப்போதும் அவர் முக்கிய கவனிப்புக்கு உரியவராகவே உள்ளார்.
-C மார்கழி : 2006

Page 30
ŠàààààààààààààşN
SS § i KHJS
கறயு
மாலை நாலரை மணி. பிள்ளையார் கோயில் கணபதி ஐயர் வீட்டின் முன் விறாந்தையிலே மூர்த்தி மாஸ்டரும் ஐயரும் கதைத் துக் கொணி டிருக்கிறார்கள் . எங்கெல்லாமோ சுற்றி வந்து கடைசியில் இலக்கிய உலகத்திலே புகுந்தார்கள்.
“மாஸ்டர், நீங்கள் ‘கலைச்செல்வியைத் தொடர்ந்து படித்துவருகிறீர்களா?’ என்று கேட்டார் ஐயர்.
‘ஓமோம், ஆரம்பத்திலிருந்தே ‘பார்த்து’ வருகிறேன். ஆனால் எல்லா விஷயங்களையும் படித்திருக்கிறேனென்று சொல்லமுடியாது. ஏன், என்ன விசேஷம்?”
“கலைச்செல்வி’ பழைய பிரதி ஒன்றை இன்றுதான் தற்செயலாகப் படித்துப் பார்த்தேன். அதிலே ஒரு சிறு கதை.”
“யார் எழுதியது?”
“எழுதியவர் பெயரைக் கவனிக்கவில்லை. அநீதச் சம்பவந் தான் மனத் தை உறுத்திக்கொண்டேயிருக்கிறது,
“சொல்லுங்கள், நினைவு வருகிறதா ust friss6 stub?
“மூன்றாம் வருஷம் இலங்கையில் பெருவெள்ளம் ஏற்பட்டதெல்லவா, அந்தச் சூழி நிலையை வைத் துக் கதை எழுதப்பட்டிருக்கின்றது. குளக் கட்டை உடைத்துக் கொண்டு ஒரு கிராமத்துக்குள் வெள்ளம் பெருகி வருகின்றது; சனங்கள்
( ஒலை 39 )
 

- - (28)
- வரதர் -
உயரமான இடத்தைத் தேடி ஓடுகிறார்கள். அந்த ஊரில் ஒரு பணக்காரரின் வீட்டுக்கு ‘மேல்வீடும் இருக்கின்றது; அங்கே அவன் தனியாக இருக்கிறான்; வெள்ளத்துக்கு அஞ்சி ஒரு ஏழைப்பெண் - இளம்பெண் அந்த மேல்வீட்டுக்குச் செல்கிறாள்; பணக்காரன் அவளைப் பதம்பார்க்க முயல்கின்றான்; அவள் இசையவில்லை; அவன் பலாத் காரம் செய்தேனும் அவளை அடைந்துவிடத் துணிந்து விட்டான். அவள் உயிரைவிடக் கற்பையே பெரிதாக மதிப்பவள். மேல்வீட்டிலிருந்து கீழே குதித்து உயிரைத் துறந்தாள். கற்பைக் காப்பாற்றிக் கொண்டாள். இந்தக் கதையைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் LDIT6moLs?'
“என்ன நினைக்கிறது? புராண காலத்தில் இருந்து திருப்பித் திருப்பிப் படித்த *கருத்துத் தான். கதையை அமைத்த முறையிலும் வசன நடையின் துடிப்பிலுந்தான் இந்தக் கதைக்கு வாழ்வு கிடைக்கும். நான் படிக்கவில்லை. படித்தால் தான் அதைப்பற்றிச் சொல்லலாம்.”
“நான் கதைக்கு விமர்சனம் கேட்கவில்லை மாஸ்டர். புராண காலத்திலிருந்து படித்ததாகச் சொன்னீர்களே, அந்தக் கருத்தைப் பற்றித் தான் உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்கிறேன்.”
“எதைக் கேட்கிறீர்கள் ஐயா? தனது கற்பைக் காப்பாற்ற உயிரைத் துறந்தாளே, அதைப்பற்றியா,’ ‘ஓமோம், அதையேதான்.” “ஒரு பெண்ணின் - முக்கியமாகத் தமிழ்ப் பெண் ணினி சிறப் பே அதில தானே இருக்கின்றது! மானம் அழிந்தபின் வாழாமை இனிதென்பதல்லவா தமிழன் கொள்கை?” -----O மார்கழி : 2006 )

Page 31
ஐயர் பெருமூச்சுவிட்டார். பிறகு, “நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களா?” என்று கேட்டார்.
மூர்த்தி மாஸ்டர் திகைத்தார். தான் என்ன தவறுதலாகச் சொல்லிவிட்டாரா? இந்த ஐயர் என்ன இப்படிக் கேட்கிறார்?
ஒரு நிமிஷ நேரம் மெளனம் நிலவிற்று. ஏதோ எண்ணித் துணிந்துவிட்டவர்போல கணபதி ஐயரே மீண்டும் மெளனத்தைக் கலைத்தார்.
“மாஸ்டர், எனக்கும் என் மனைவிக்கும் மட்டும் தெரிந்த ஒரு இரகசியத்தை உங்களுக்குச் சொல்லப்போகிறேன் - உங்களுக்குச் சொல்லலாம்; சொல்வதால் ஒரு தீமையும் ஏற்படாது. இதைக் கேட்ட பிறகு ‘கற்பு பிரச்சனையைப்பற்றிப் பேசுவோம்.
米 米 来
போனவருஷம் பெரியந்தனை முருகமூர்த்தி கோயிலில் நான் பூசை செய்து கொண்டிருந்தது உங்களுக்குத் தெரியும். அங்கே தமிழர்கள் தொகை ஐம்பது பேர்கூட இருக்காது. விசேட தினங்களுக்கு மட்டும் பிற இடங்களிலிருந் தெல்லாம் வந்து கூடுவார்கள். சிங்களவர்கூடப் பலர் கோயிலுக்கு வந்து அருச்சனை செய்விப்பது வழக்கம்.
சிங்களவர் - தமிழர் கலகம் துவங்கினவுடனே அங்கே இருந்த தமிழர்களில் முக்கால்வாசிப் பேரும் யாழ்ப்பாணத்துக்கு ஓடிவந்து விட்டார்கள். நான் பூசையை விட்டுவிட்டு எப்படிப் போகமுடியும்? என்மனைவியைப் போகும்படி சொன்னேன். எனக்கு வருவது தனக்கும் வரட்டுமென்று அவள் மறுத்துவிட்டாள். சிங்களவரும் அக்கோயிலிலே கும்பிடவரும் வழக்கம் இருந்ததால் கோயில் விஷயத்தில் தலையிடமாட்டார்கள். எங்களுக்கு ஆபத்து நேராது என்ற துணிவில், அவளை மேலும்
ஒலை 39 }

-(29)
வற்புறுத்தாமல் விட்டுவிட்டேன்.
ஒரு புதன்கிழமை, அன்று பேபிநோனா என்ற சிங்களக் கிழவி - அவள் எங்களோடு நன்கு பழகியவள். கோயிலுக்கும் நாள் தவறாமல் வருகிறவள் - அவள் சொன்னாள். “நீங்கள் இனி இங்கிருப்பது புத்தியில்லை ஐயா காலியிலிருந்து சில முரடர்கள் மூன்று லொறிகளில் வருகிறார்களாம். வருகிற வழியெல்லாம் தமிழர்களை இல்லாத கொடுமை செய்கிறார்களாம். இன்றிரவோ நாளையோ இந்தப்பக்கம் வரக்கூடுமென்று கதைக்கிறார்கள். நீங்கள் இப்போதே புறப்பட்டு பொலீஸ் ஸ்டேசனுக்குப் போய்விடுங்கள். பிறகு பொலீஸ் துணையோடு கொழும்புக்குச் செல்லலாம்’ என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்ட பிறகு ‘அப்பனே முருகா! என்னை மன்னித்துக்கொள்’ என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டு கையோடு கொண்டுபோகக்கூடிய பொருட்களை இரண்டு பெட்டிகளுள் சேகரித்தோம். என் மனைவியின் நகைகளையும் நூலில் கட்டிய தாலியொன் றைத் தவிர - எல்லாவற்றையும் கழற்றிப் பெட்டியில் பூட்டினோம். இந்த ஆயத்தங்கள் செய்வதற்குள் மாலை ஐந்துமணியாகிவிட்டது. நாங்களும் புறப்பட ஆயத்தமானபோது பேபி நோனா அவசரம் அவசரமாக ஓடிவந்தாள். “ஐயா, ஐயா, சில்வாவும் வேறு இரண்டு பேருமாக வாறான்கள். அம்மாவை அவன்கள் கண்ணில் படாமல் எங்கேயாவது ஒளிந்திருக்கச் சொல்லுங்கோ! கேட்டால் நேற்றே ஊருக்குப் போய்விட்டா’ என்று சொல்லுங்கோ. நான் இங்கே நின்றால் எனக்கும் ஆபத்து; உங்களுக்கும் ஆபத்து, கவனம் ஐயா!’ என்று சொல் லிவிட் டு பேபி நோனா ஒடி மறைந்துவிட்டாள்.
சில்வாவை எனக்குத் தெரியும்; ஆள் ஒரு மாதிரி. ‘ஐயா, ஐயா’ என்று நாய்மாதிரிக் -C மார்கழி : 2006

Page 32
குழைந்து ஐம்பது சதம், ஒரு ரூபா என்று இடைக்கிடை என்னிடம் வாங்கியிருக்கிறான். ஆள் காடைத் தரவளியாதலால் நானும் பட்டும் படாமலும் நடந்து வந்திருக்கிறேன். இரண்டொருநாள் என் மனைவியை றோட்டில் தனியாகக் கண்டபோது அவனுடைய பார்வையும் சிரிப்பும் நன்றாக இருக்கவில்லை யென்று அவள் சொல்லியதுண்டு.
இப்போது அவன் வருகிறானென்றால்.
எனக்கு ஒருகணம் ஒன்றும் தோன்றவில்லை. யோசிக்கவும் நேரமில்லை. வீட்டுக்குள் உயரத்திலே பரண்மாதிரி மூன்று மரங்களைப் போட்டு அதன்மேல் சில பழைய பெட்டிகளைப் போட்டிருந்தது. என் மனைவியை நான் தூக்கி அந்த மரங்களின் மேல் விட்டு மெதுவாக அந்தப் பெட்டிகளின் பின்னால் மறைந்திருக்கும் படி விட்டேன். பிறகு எங்கள் பயணப் பெட்டிகளை எடுத்துச் சற்று மறைவாக ஒரு மூலையில் வைத்துவிட்டேன். பிறகு, முன்விறாந்தைப் பக்கம் வந்தேன். நானும் வர அந்தக் காடையர் களும் வாயிலில் நுழைந்தார்கள். எனக்கு உள்மனது நடுங்க ஆரம்பித்து விட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, “என்ன சில்வா, இந்தப்பக்கம்?” என்று சிரிக்க முயன்றேன்.
“சும் மாதான், நீங்கள் இருக்கிறீர்களா, இல்லாவிட்டால் யாழ்ப்பாணத்துக்குக் கம்பிநீட்டி விட்டீர்களா என்று பார்க்கத்தான் வந்தேன்’ என்றான்.
முருகனை விட்டு நான் எங்கேதான் போகமுடியும்?’ என்று சொன்ன என் குரலே தெளிவாக இல்லை.
“எங்களுக்குக் கொஞ்சம் தணி னிர் குடிக்கவேண்டும்” என்றான் சில்வா. நான் சரியென்று குசினிப் பக்கம் போனேன். எனக்குப் பின்னால் அவர்கள் தொடர்ந்து வருவதை
ஒலை 39 )

உணர்ந்தேன். ஆனாலும் திரும் பிப் பார்க்கவில்லை. ஒரு செம்பில் தண்ணிரை வார்த்துக்கொண்டு நிமிர்ந்தேன். எனக்கு முன்னால் அந்த மூன்று காடையர்களும் நின்றார்கள். செம்பைப் பிடித்த எனது கையில் நிதானமில்லை.
“அதுசரி ஐயா, எங்கே அம்மாவைக் காணவில்லை?”
நான் திரும்பித் திரும்பி மனத்துக்குள் ஒத்திகை பார்த்து வைத் திருந்த வசனங்களை ஒப்புவித்தேன் : "அவ நேற்றே ஊருக்குப் போய்விட்டாவே’
“பளிர்’ என்று என் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது! செம்பும் தண்ணிரும் உருண்டு சிதறிற்று. என் கண்களுக்குப் பார்வை வருமுன்பே என் மடியில் கையைப் போட்டு ஒருவன் இழுத்தான்; மற்றக் கையினால் வயிற்றில் ஒரு குத்து விட்டான்.
‘தமிழ்ப் பண்டி, பொய்யா சொல்லுகிறாய்? இன்று காலையிற்கூட உன் பெண்டாட்டியைப் பார்த்தேனே!”
மற்றவன் கேட்டான் : “சொல்லடா! அவளை யார் வீட்டில் கொண்டுபோய் ஒளித்து வைத்திருக்கிறாய்?’ எனக்கு நெஞ்சிலே கொஞ்சம் தண்ணிர் வந்தது. இந்த முரடர்கள் நான் அவளை யார் வீட்டிலோ ஒளித்து வைத்திருப்பதாக நினைத்துவிட்டார்கள். ஆகையால் இந்த வீட்டில் அதிகம் பார்க்கமாட்டார்கள். என் உயிர் போனாலும் சரி, அவள் மானம் நிலைக்கட்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
“என்னடா பேசாமல் நிற்கிறாய்?” குத்து! அடி உதை! குத்து! அடி உதை! குத்து! அடி உதை!.
-Ο மார்கழி : 2006

Page 33
நான் இயக்கமின்றிக் கீழே விழுந்துவிட்டேன் அம் மட்டிலும் அவர்கள் விடவில்லை இரண்டுபேர் என்னைப் பிடித்துத் தூக்கினார்கள்
“அவள் இருக்கிற இடத்தை நீ சொல்லமாட்டாய்வி. கடைத் தெருப் பக்கம் காலியிலிருந்து லொறியில் வந்திருக்கிறான்கள். அவன்களிடம் உன்னைக் கொண்டுபோய்க் கொடுத்தால், உன்னைத் தலைகீழாகக் கட்டித் தூக்கித் தோலை உரித்த பிறகு கீழே நெருப்பைக் கொழுத்தி சுடுவான்கள், உனக்கு அதுதான் சரி! . . வாடா! என்று சொல்லி இழுத்தார்கள் . எனினால் நடக்கவும் முடியவில்லை. அவ்வளவு அடி அகோரம். அவர்கள் என்னை இழுத்துக்கொண்டு நடு வீட்டுக்குள் வந்துவிட்டார்கள். மேலே என் மனைவி. அந்த அறையையும் கடந்து வெளியே காலை வைத்துவிட்டார்கள்.
“நில்லுங்கள்! நில்லுங்கள்!” என்ற கூச்சலோடு என் மனைவி பரணிலிருந்து குதித்தாள்.
“அவரை விட்டு விடுங்கள்!” என்று அலறிக் கொண்டே என்னிடம் ஓடி வந்தாள்.
அவர்கள் என்னை விட்டுவிட்டார்கள். ஆறு முரட்டுக் கரங்கள் அவளை மறித்துப் பிடித்தன.
பிறகு.
என்னை ஒரு மேசையின் காலோடு பின்கட்டாகக் கட்டினார்கள். அவளை - என் மனைவியை - குசினிப் பக்கம் இழுத்துக் கொணி டு போனார்கள். இரண் டொரு நிமிஷங்களில் அவளுடைய அலறல் கேட்டது. பிறகு அவள் அலறவில்லையோ, அல்லது நான்தான் இரத்தம் கொதித்து மூளை கலங்கி, வெறிபிடித்து, மயங்கிவிட்டேனா!
மறுபடி எனக்கு நினைவுவரும் பொழுது அதே
ஒலை 39 )

-(31)
மேசையடியில் யாரோ ஒருவருடைய மடியில் படுத்திருப்பதை உணர்ந்தேன். என்னை அவ்விதம் ஆதரவாகத் தூக்கி மடிமீது வைத்திருப்பது யாரென்று அறிய ஒரு ஆவல். கண்களைத் திறந்து பார்த்தேன்.
என் மனைவி
மானம் அழிந்த என் மனைவி.
எத்தனையோ நூற்றாண்டுகளாக ஊறிப்போன *கருத்து என்னைச் சித்திரவதை செய்தது. மானத்தை இழந்த என் மனைவியின் மடிமீது தலைவைத்துப் படுத்திருக்கிறேனே. . என் உடம்பு கூனிக் குறுகியது. எழுந்து வெளியே நிலத்தில் விழுந்துவிட வேண்டுமென்று மனம் உன்னிற்று.
என் முகத்திலே ஒரு சொட்டுக் கண்ணிர்; இன்னொன்று, இன்னொன்று, என் முகமும் அவள் கண்ணிரால் நனைய, மனம் சிந்திக்கத் தொடங்கியது.
மூன்று விஷப் பாம்புகள் அவளைக் கடித்து இன்பத்தை உறிஞ்சின. அவள் உடலும் உள்ளமும் வேதனையால் துடித்தன. எரிந்து போகிற உடலை யாரோ என்னவோ செய்தார்கள். மனம் சிறிதும் சம்பந்தப்படாத போது அவளுடைய மானம் போய்விடுமா? செய்யாத குற்றத்திற்கு அவள் தண்டணை அடைய வேண்டுமா? மனம் சம்பந்தப்படாத போது வெறும் உடலுக்கு நேர்ந்த தீங்கினால் மானம் அழிந்துவிடுமென்றால் பிரசவத்துக்காக டாக்டரிடம் போகும் பெண்களெல்லாம்.
என் மனத்தில் எழுந்த அருவருப்பை வெளியே இழுத்தெடுத்துத் தூர வீசினேன். பரிதாபப்பட வேண்டிய, பாராட்டப்படவேண்டிய எண் மனைவியின் பெருமை என் நெஞ்செல்லாம் நிறைந்தது. மெதுவாக அவள் கைகளைப் பற்றி என் மார்போடு அணைத்துக் கொண்டேன்.
-C LoTiras : 2006 )

Page 34
பிறகு பொலீஸ் வந்தது. பேபி நோனாதான் அந்த உதவியைச் செய்தாளென்று பின்னால் தெரிந்துகொண்டேன். என்னவோ கஷடங்க ளெல்லாம் பட்டு, அகதி முகாமில் கிடந்துழன்று எப்படியோ இங்கே வந்து சேர்ந்தோம்.
“இப்பொழுது சொல்லுங்கள் மாஸ்டர். பலாத்காரத்தினால் ஒரு பெண்ணின் உடல் ஊறு செய்யப்பட்டால் அவள் மானம் அழிந்துவிடுமா? அதற்காக அவள் உயிரையும் அழித்துவிடவேண்டுமா? . . அப்படி உயிரை விட்டவளைப் பத்தினித் தெய்வமென்று கும்பிடவேண்டுமா? கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறியவள் - அப்படிச் செய்வதே கற்புடை மகளிர் கடமை என்ற சமூகக் கருத்தினால் உந்தப்பட்டு ஏற்பட்டவள் பத்தினித் தெய்வமா, அல்லது பகுத்தறிவற்ற சமுதாயத்திற்குப் பலியான பேதையா? சொல்லுங்கள் மாஸ்டர்!...”
‘ஓலை’ கொழும்புத் தமி சாதாரண சந்தா விபர்
இலங்கை : தனிப்பிரதி ரூப இந்தியா : ஒரு வரு ஏனைய நாடுகள் : ஒரு வி
‘ஓலை’ க்கு உதவ விரும்புவோர் தங் அல்லது வைப்பாக Colombo Tamil Sangam Societ கணக்கு இல. 1100014906 Commercial Bank G616i576igs60);
காசுக் கட்டளையாயின் “செயலாளர் வெள்ளவத்தை தபால் அலுவலகத்தி கொழும்புத் தமிழ்ச்சங்க அலுவலகத்
V
( ஒலை 39 )
 
 
 

(32)
கணபதி ஐயர் உணர்ச்சி மேலிட்டால் பொருமினார்.
“என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் ஐயா! இப்படித்தான் பரம்பரை பரம்பரையாக இரத்த த்தில் ஊறிப்போன பல விஷயங்களைப்பற்றிச் சிந்திக்காமலே அபிப்பிராயம் கொண்டுவிடு கிறோம். நான்கூட எவ்வளவு முட்டாள்தனமாக அபிப்பிராயம் சொல்லிவிட்டேன். ஐயா, பகுத்தறிவு, பகுத்தறிவு என்று சொல்லிக் கொண்டு தேவையில்லாத விஷயங்களில்ெலாம வாய்வீச்சு வீசுகிற பலரை எனக்குத் தெரியும். ஆனால் உண்மையான ஒரு பகுத்தறிவு வாதியை இன்றைக்கு கண்டுபிடித்துவிட்டேன்’ என்று சொன்னார் மூர்த்தி மாஸ்டர். ஐயர் வீட்டுச் சுவரிலே இருந்த மகாத்மாகாந்தியின் படம் - அதிலே ஐயரின் சாடை தெரிவது போலத் தோன்றிற்று மூர்த்தி மாஸ்டருக்கு.
30= ஒரு வருடம் டம் இந்திய ரூபா.600/= ருடம் 20 அமெரிக்க G
கள் நிதி அன்பளிப்புக்களை காசோலை
Ltd.
க்கு அனுப்பலாம்.
கொழும்புத் தமிழ்ச் சங்கம்” என்ற பெயரில் ல் மாற்றப்படக்கூடியவாறு அனுப்ப முடியும். தில் நேரடியாகவும் செலுத்த முடியும்.
-C Lorriras) : 2006

Page 35
ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி : ஒரு மறுமதிப்பீடு
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி பற்றிய ஒரு மறு மதிப்பீட்டிற்கான அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. அண்மைக்காலங் களில் வெளிவந்த ஆரம்பகாலச் சிறுகதைத் தொகுப்புகளும் (எ-டு ' சம்பந்தன் கதைகள், மறுமலர்ச்சிக் கதைகள்) ஆய்வுகளும் (எ-டு : ஈழகேசரி காலக் கதைகள் பற்றி செங்கை ஆழியான் எழுதியவை) முனைப்புற்று வரும் பிரதேச நோக்கிலான ஆய்வுப் போக்குகளும் இதற்கு வழியமைத்துள்ளன.
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றம் பற்றி இதுவரை ஆராய்ந்துள்ளோர் பலரும் இலங்கையர்கோன், சி.வைத்தியலிங்கம், சம்பந்தன் ஆகிய மூவரையுமே முன்னோ டிகளாக முதன்மைப்படுத்தி வந்துள்ளனர். இம்மூவரதும் கதைகள் பெரும்பாலும் (i) வரலாற்று இதிகாச சம்பவங்களை அடிப்ப
டையாகக் கொண்டிருந்தன. (i) தனிமனித அவலங்களையும் உணர்வுக
ளையும் (சமூக யதார்த்தச் சூழலின்றி) வெளிப்படுத்தின. (iii) மனோரதியப் பாங்கில் அமைந்திருந்தன.
நிலைமை மேற்கூறியவாறாக, அண்மைக்கால ஆய்வுகள் மேற்கூறிய முன்னோடிகளுக்குச் சமாந்தரமாக வேறுசில எழுத்தாளர்களை
(எ-டு : “ஆனந் தனி ’ “gi uusT”) இனங்காட்டுகின்றன. இவர்களது படைப்புக்கள் சமகாலச் சமூகப் பிரச்சினைகள் சிலவற்றை வெளிப்படுத்தியுள்ளன. எடுத்துக்காட்டாக, இத்தகையவருள் ஒருவரான “ஆனந்தன்’ 1939 யிலேயே முற்போக்கான சிந்தனையோடு O966 39 )

SNA
- கலாநிதி செ.யோகராசா -
சாதிப் பிரச்சினையின் கொடுரத்தை நன்கு படம்பிடித்துக் காட்டியுள்ளார். இந்த மண்ணின் பிரச்சினையை மண்வாசனையோடு முதன்முதல் எழுதியவர் 'ஆனந்தன்” எனலாம். ஆக, இங்கு நாம் நினைவுகூர வேண்டியது யாதெனில் இலங்கையர்கோன், சி.வைத்தியலிங்கம், சம்பந்தண் ஆகியோரின் சிறுகதைப் போக்கிற்குச் சமாந்தரமாக சமூக நோக்கும் யதார்த்தப் பாங்கும் கொண்ட இன்னொரு போக்கு சமகாலத்தில் நிலவிவந்துள்ளது என்பதே.
இதே காலப்பகுதியில் முப்பதுகளளவில் மலைநாட்டிலும் சிறுகதைக்கான ஆரம்ப முயற்சியொன்று மின்னல் கீற்றுப்போல தோன்றியது. கோ.நடேசஐயர் மலைநாட்டுத் தொழிலாளர் பற்றி ஓரிரு கதைகள் எழுதியதாக அறிய முடிகின்றது. (எ-டு : திரு. இராமசாமி சேர்வையின் சரிதம்) ஆயினும் அவரது முயற்சியும் அதன் தொடர்ச்சியும் (கே.கணேஸ் ஓரிரு கதைகள் எழுதியிரு ப்பினும்) தொடர்ந்து பரந்து ஒளிவீசியதாக (இன்று வரையான ஆய்வின்படி) கூறமுடியா துள்ளது.
இனி, நாறி பதுகளுக்கு வருவோம் . மறுமலர்ச்சிக் காலகட்ட எழுத்தாளர்கள் மீண்டும் எமது கவனத்திற்குட்பட வேண்டியவர் களாகின்றனர். இவர்கள் நவீன கவிதை வளர்ச்சிக்கு ஒப்பாக ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிக்கும் முக்கியமான பங்களிப்புச் செய்தவர்களாகின்றனர். முன்னர் “ஆனந்தன்” முதலானோர் அமைத்த பாதையை
- Ο மார்கழி : 2006 )

Page 36
அகலப்படுத்தி ஆழப்படுத்தி வைக்கின்றனர். இத்தகையவர்களுள் அ.செ.முருகானந்தன், வரதர், அ.ந.கந்தசாமி, சொக்கன், தாழையடி சபாரத்தினம், கனக செந்திநாதன் என நாம் நன்கறிந்தவர்களோடு இதுவரை நன்கறியப்படாத முக்கியமான சிலரும் (எ-டு : கு.பெரியதம்பி) அடங்குவர். இவர்களது கதைகளுடாக, தமிழ்ச் சமூகம் நவீன நாகரிகத் திற்கு முகங்கொடுப்பதும் (நவீன நாகரிகத்தின் குறியீடாக மோட்டார் வண்டியின் வருகை, தேர்தல் முறை, அரச உத்தியோகம், நகர உருவாக்கம், பணத்தின் ஆதிக்கம்) சமகாலச் சமூகப் பிரச்சிகைளும் (சாதி, சீதனம், கோயில் வரி) சிறுகதைப் பொருளாகின்றன. இப்போதுதான் ஈழத்து எழுத்தாளரது சிறுகதை மெல்ல மெல்ல ஈழத்து மண்ணுடன் சுவறத் தொடங்கியது. இவ்வாறு மறுமலர்ச்சி எழுத்தாளர் அமைத்த தளமே அறுபதுகளில் முற்போக்கு எழுத்தாளர் கம்பீரமாக நடந்து செல்ல வாய்ப்பளித்தது என்பது குறிப்பிடற் பாலது.
இதுவரை கவனித்த சிறுகதை வளர்ச்சிப் போக்குகள் பிரதானமாக யாழ்ப்பாணப் பிரதேசத்தினை மையமாகக் கொண்டே காணப்படுகின்றன. இது காரணமாக ஏனைய பிரதேச இலக்கிய வளர்ச்சி அன்றைய யாழ்ப்பாண ஆய்வாளர்களினால் இருட்டடிப்புச் செய்யப்பட்டு விட்டது என்று விசனிக்கும் ஆய்வாளர் எம்மிடையே உள்ளனர். அத்தகைய விசனத்தில் அர்த்தமெதுவு மில்லை. உண்மை நிலைவேறு. ஈழத்தில் நவீனத்தன்மை (Modernity) யின் வரவ எல்லாப் பிரதேசங்களிலும் ஒரே காலத்தில் ஏற்படவில் லை. வெவ்வேறு காலப் பகுதிகளிலே ஏற்பட்டது. நவீனத்தன்மை ஏற்பட்ட பின்னர் அசமத்துவ வளர்ச்சி நிலையே காணப்பட்டது. நவீனத்தன்மை யாழ்ப்பாணத் திலே முதலில் ஏற்பட்டமையால் நவீன
( ஒலை 39 )

(34) இலக்கிய வளர்ச்சியும் அங்கே முதலில் ஏற்பட்டிருந்தது. அது பற்றிய ஆய்வுகளும் முதலில் இடம் பெற்றன. அத்தகைய ஆயப் வுகளிலே ஈடுபட்டோர் (ஏனைய பிரதேசங்களின்) அசமத்துவ வளர்ச்சிநிலை காரணமாகவும் நவீன இலக்கிய ஆக்கங்கள் பத்திரிகைகளிலே வெளிவந்தமை தவிர நூற்றொகுப்புகளாக வெளிவராத காரணத் தினாலும் ஏனைய பிரதேசம் பற்றிய ஆய்வுகளில் ஆரம்ப நிலையில் கவனஞ் செலுத்தினாரல்லர் நிற்க, நாற்பதுகளின் பிற்பகுதியிலேயே மட்டக்களப்பு பிரதேசத்தில் சிறுகதை இலக்கிய முயற்சி கால்கொள் கின்றது. முதலில் சா.இ.கமலநாதன் (வித்துவான் சா.இ.கமலநாதன்), சிவா (வ.சிவசுப்பிரமணியம் ஆசிரியர்), புரட்சிக்கமால் ஆகியோரும் (இவர்கள் சில கதைகளே எழுதியுள்ளனர்) பின்னர் அருள் செல்வநாயகம், பித்தன் ஆகியோரும் சற்றுப் பின் அப்துல்ஸமது, செ.இராசதுரை, எஸ்.பொ.நவம், அன்புமணி, தங்கன், ஆ.பொன்னுத்துரை முதலானோரும் இம் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேற்குறித்த மட்டக்களப்பு பிரதேச எழுத்தா ளருள் பித்தன், எஸ்.பொ.நீங்கலாக ஏனையோரது படைப்புக்களை நுணுகிநோக்கும் போது அவற்றிலே இருவேறு பாணிகள் இழையோடுவதை அவதானிக்கலாம். ஒன்று, “கல்கி” பாணி. மற்றொன்று திராவிட முன்னேற்றக் கழகப் பாணி. இவ்விருவகைப் பாணி சார்ந்த படைப்புக்களிலும் தமிழக, இந்தியச்சூழலே இடம்பெற்றிருந்தன. ஈழத்துப் பின்னணியிலே எழுதினாலும்கூட அவை (ஈழத்துப் பத்திரிகைக் காரரினாலே) மாற்றத்திற்குள்ளாகின. இவ்விடத்தில் அப்துல்ஸமதின் நினைவலைகள் நினைவிற்கு வருகின்றன.
-C Lorritas ĝi : 2006

Page 37
“அப்போது கதைகள் இந்தியப் பின்புலத்தில் இந்திய, தமிழ் மக்களது வாழ்க்கைப் பின்னணியில் எழுதுவதே வழக்கமாக இருந்தது. நான் இந்தக் கதை நிகழிடங்கள், கல்முனை, திருகோணமலை என்றும் நூர்ஜஹானின் தந்தை போடியார் இப்றாஹீம் என்றும் மற்றும் காரியாலயம், லிகிதர், மாவட்டம் என்ற சொற்பிரயோகங்களும் கதையில் வந்தன. ஆனால், பிரசுரமான கதையில் கதை நிகழிடங்கள் செங்கல்பட்டு, விந்தியமலை என்றும், ஜமீன்தார் இப்றாஹீம் என்றும், ஆபீஸ், குமாஸ்தா, ஜில்லா என்றும் சொற் பிரயோகங்கள் மாற்றப்பட்டன.” இலங்கைக் கதைகளின் தன்மை அப்போது எவ்வாறு இருந்தது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.
மேற்குறிப்பிட்ட மட்டக்களப்பு பிரதேச எழுத்தாளரது சிறுகதைகளுள் பித்தன் கதைகள் தனித்துவமானவை. (1948 அளவிலே எழுதத்தொடங்கிய இவரது தொகுப்பு 1994இல் வெளிவந்தமை காரணமாக ஆய்வாளரது கவனத்திற்குட்படாதவர் பித்தன். இவர் கதைகள் பற்றிய விரிவான ஆய்வு பண்பாடு - 15, 1997 இதழில் இக்கட்டுரை யாளரினால் எழுதப்பட்டுள்ளது), பின்வரும் விதங்களில் விதந்துரைக்கப்படவேண்டியவை. (அ) மட்டக்களப்பு பிரதேச மக்களது பிரச்சினைகள் முக்கியமானதொன்றான ஏழ்மை இவர் கதைகளுடாக சிறப்பாக வெளிப்படு கின்றது. (ஆ) முஸ்லிம் மக்களது வாழ்க்கைப் பிரச்சினைகள் முதன் முதலாக இவர் கதைகளுடாக தத்ரூபமாகவும் துணிகரமான முறையிலும் (எ-டு : பாதிக் குழந்தை) வெளிப்படுகின்றன. (இ) (முஸ்லிம்) பெண்களது நுண்மையான மன உணர்வுகள் திறம்பட வெளிப்பட்டுள்ளன. இவ்வாறு நோக்கும் போது யாழ்ப்பாண மறுமலர்ச்சி எழுத்தாளரது ஆரோக்கியமான போக்கு மட்டக்களப்பிலே
( ஒலை 39 )

-(35) பித் தனது எழுத்துக் களினுTடாகவே புலப்படுகின்றது எனலாம்.
எஸ்.பொ.ஈழத்தின் பல்வேறு பிரதேச மக்களது வாழ்வினையும் மண்மணம் கமழ தமது சிறுகதைகளுடாக பதிவு செய்தவர். அத்துடன் பரிசோதனை முயற்சிகளிலும் ஈடுபட்டவர்.
திருகோணமலைப் பிரதேசமும் நாற்பதுகளின் பிற்பகுதியிலேயே சிறுகதையுலகினுள் பிரவேசிக்கின்றது. வ.அ.இராசரத்தினத்தினூடாக, முதன் முதலாக மூதூர்க் கிராம விவசாயி களின் வாழ்வு இலக்கியமாகியது. தவிர, பின்வரும் விடயங்கள் விரிவான ஆய்விற் குட்படும்போது தான் இக்கட்டுரையின் நோக்கம முழுமையடையும் என்று கருதுகின்றேன்.
(அ) “ஈழகேசரி” யில் லலிதா, சாவித்திரி, ராஜேஸ்வரி, வஸந்தா, லேகினி, பிரேமா, கமலம், கோணேசப்பிள்ளை முதலான பெயர்களில் பலர் சிறுகதை உள்ளதாகத் தெரிகின்றது. இவர்களுள் பெண் எழுத்தாளா யாவர்? அவர்கள் எழுதியவை யாவை?
(ஆ)திருகோணமலையிலிருந்து நாற்பதுகளின் இறுதியளவில் அ.செ.முருகானந்தம் நடத்திய “எரிமலை’ சிறுசஞ்சிகையில சிறுகதை எழுதியோர் யாவர்?
(இ) நாற்பதுகளின் இறுதியிலே மண்டுரிலிருந்து வெளியான “பாரதி” சிறுசஞ்சிகைப் போட்டி யொன்றினை நடத்தியுள்ளது. இதில பங்குபற்றியோர் யாவர்? இச்சஞ்சிகையில் எழுதிய எஸ்.எம்.ராஜூ, பாஞ்சாலி, கிரிஜா என்போர் யாவர்?
(ஈ) நாற்பதுகளின் இறுதியளவில் புரட்சிக்கமால் எழுதிய இரு சிறுகதைகள் புரட்சிகரமான போக்குடையன. அயல்வீட்டிலுள்ள (சகோதர
-C மார்கழி : 2006 )

Page 38
முறையான) இளைஞனொருவனை சமூக எதிர்ப்பிற்கு அஞ்சாது திருமணம் செய்யும் ஒரு முஸ்லிம் பெண்ணையும், பொருந்தாத மணங்காரணமாக கணவனைக் கொலை செய்யும் ஒரு முஸ்லிம் பெண்ணையும அக் கதைகளிலே சந்திக்கின்றோம. புரட்சிக்கமால் பல சிறுகதைகள் எழுதிய தாகக் கூறப்படுகின்றது. இவை பற்றிய விபரம்?
எவ்வாறாயினும், ஐம்பதுகளின் ஆரம்பமள விலேயே ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி ஆழத்தையும் அகலத்தையும் பரவலான நிலையையும் எட்டியுள்ளமை. முற்கூறியவற்றி லிருந்து புலப்படுகின்றது. இதுவரை கூறியவற் றைத் தொகுத்து நினைவுகூரும் போது,
(அ) முப்பதுகளளவிலே இலங்கையர்கோன முதலானோரின் சிறுகதைப் போக்கிற்குச் சமாந்தரமாக இன்னொரு போக்கு நிலவி வந்துள்ளமையும்,
LLcLLLLLLLLLLLLLcLrrrLLeLeeLecLL
( ஒலை 39 )
 

3ে6>)
(ஆ)மறுமலர்ச்சிக் காலகட்ட எழுத்தாளர் ஈழத்துச சிறுகதை வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்புச செய்துள்ளமையும்,
(இ) நாற்பதுகளின் பிற் கூற்றிலேயே மட்டக களப்பு, திருகோணமலைப் பிரதேசங்களில் சிறுகதை முயற்சிகள் இடம்பெற்றுள்ள மையும்,
(ஈ) ஆய்விற்குட்பட வேண்டிய வேறு முக்கிய விடயங்கள் உள்ளமையும் தெளிவாகின்றன.
ஆயினும், ஐம்பத்தைந்தளவில் மேற்கூறிய நிலைப்படு வளர்ச்சி கண்ட ஈழத்துச் சிறுகதை பக்குவ நிலை எய்துவது அறுபதுகளிலாகும். அது ஒருபுறம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாடுகளினாலும் மறுபுறம் மு.தளையசிங்கம் போன்ற எழுத்தாளர் ஒருசிலரினாலும் ஏற்பட்டமை நினைவு கூறத்தக்கது.
SQSలైన్స్త్స్ఫ
-O மார்கழி : 2006 )

Page 39
asi.gseoir
பாட்டுத் திறந்தால் வையத்தை வாழ்வாங்
பட்டுக்கோட்டை
: 6.
சமுதாய மாற்றங்களுக்கும் உன்னத சமுதாய அமைப்பு வெற்றி காண்பதற்கும் கலை, இலக்கியம் இன்றியமையாத உயர்ந்த சாதனங்கள். மக்களின் கருத்தோட்டங்களை நல்ல முறையில் விரவி வேகமாய் உருவாக்க நாடகம் மிகச் சிறந்த கருவி என்றால் அதைவிட உயர்ந்தத கருத்தோட்டம் மிக்க திரைப்படக் கலையாகும். இவ்வாறு மலர்ந்த திரைப்படக்கலை உலகில், பேரும் புகழம் பெற்ற கவிஞர்களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்ற சமூக மறுமலர்ச்சியை உருவாக்கிய மக்கள் கவிஞரை, புதிய சமதர்ம சமுதாய இலட்சியக் கவிஞரை நாம் கண்டதில்லை.
மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், செங்கப்படுத்தான்காடு என்னும் கிராமத்தில் eleb600Tris Golbefroops! T - 6 smoortif elboLourts தம்பதிகளுக்கு இளைய மகனாகப் பிறந்தார். சதாரண உழவர் குடும்பத்தில் பிறந்த இவர் பட்டப்படிப்பு பயின்றவரல்ல சாதாரண பள்ளிப் படிப்புத்தான் பெற்றிருந்தார். மக்கள் வாழ்க்கை
( ஒலை 39 )
 

கு வாழவைத்த கவிஞர்
கல்யாணசுந்தரம்
சந்திரம் :
என்னும் அனுபவப் பள்ளியில் கற்று மக்கள் கவிஞராகத் திகழ்ந்தார். இதனால்தான் மார்க்சிம் கார்க்கியுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார் ப.ஜீவானந்தம் (e36JT).
புத்தக அறிவு புட்டிப்பால் போன்றது. அனுபவ அறிவு தாய்பாலுக்கு ஒப்பானது. பட்டுக்கோட்டை விவசாயத் தொழிலாளி, ஏழை விவசாயி, பாட்டாளி ஆகியவர்களில் ஒருவராக வாழ்ந்த அடிபட்டு அனுபவ அறிவு பெற்றவர். அடிப்படைப் பெரு மக்களின் அனுபவப் பெருஞ் செல்வனான மார்க்சிம் கார்க்கியைச் சோவியத் யூனியன் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே மக்கள் கலைஞன் என்று உச்சியில் தாக்கி வைத்த மெச்சுகிறது. அதுபோல பட்டுக்கோட்டை மக்கள் கவிஞர்' என்ற தமிழ் கூரும் நல்லுலகம் வாயாரப் புகழ்ந்த பாராட்டுகிறது என்பது ஜீவாவின் கருத்து.
தமிழ் மக்களின் அன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய கவியாய் விளங்கிய இவர் 13-04-1930 இல் பிறந்தார். கவிஞருக்கு இளம் பிராயத்திலேயே கவிபுனையும் ஆர்வம் அதிகமாக இருந்தது. தனது பத்தொன்பதாவத வயதிலேயே கவிதை இயற்றம் திறனும் படைத்திருந்தார். அதேசமயம் நாடகக் கலையில் மிகுந்த ஆர்வமும், விவசாய இயக்கத் தின்பால் அசைக்க முடியாத பற்றும் அவர் நெஞ்சில் குடிகொண்டிருந்தன.
உழவர்கள் படும் துயரத்தைக் கண்டு உள்ளம் உருகினார். நிரந்தர அனுதாபத்தை அவர்களின் மீத ஆழப் பதித்திருந்தார். இதன் பயனாய் தஞ்சை மண் தந்த வீரத்தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகிய இன்னுயிர் தோழர்களுடன் தோளுடன் தோள் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டிவளர்க்க முனைப்புக் காட்டி தீவிரமாய்ப்
-O Lorriras : 2006 )

Page 40
பங்கெடுத்தார். இதன்மூலம் தன்னை ஒரு போராட்ட வீரனாகவும் இனங்காட்டிக் கொண்டார். தோழர் பி.சீனிவராவ் தலைமையின் கீழ் சிறப்புடன் இயங்கிவந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 1955 ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் நடாத்திய மாநில விவசசாயிகள் மாநாட்டில் 'கண்ணின் மணிகள்' என்ற நாடகத்திற்கு உணர்ச்சிமிக்க பாடல்களை இயற்றிக் கொடுத்தார். அத்துடன் அதேநாடகத்தில் நடிகர் பாலசந்திரனுடன் சேர்ந்து நடித்தப் பெரும் LTJTi (656O)6Oulb Guibo Trr.
அந்நிய ஆங்கில ஆட்சியை வீழ்த்தவும், நாட்டின் அடிமை விலங்கு அறுபடவும் போராடியவர் மகாகவி பாரதி. விடுதலை வேட்கையை ஆழமாய்த் தாண்டி சிறந்த மக்கள் இலக்கியம் படைத்தார் பாரதி. நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே சுதந்திர கீதம் பாடியவர் பாரதி விடுதலை பெற்றபின் சமதர்ம கீதம் பாடியவர்கள் பாரதிதாசனும், பட்டுக்கோட்டையு மாவார். பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் பலவும் 1952க்கும் 1960க்கும் இடைப்பட்ட காலத்தில் மலர்ந்தவையாகும். மார்க்சிய சிந்தனையில் இயக்கத் தடன் சேர்ந்து வாழ்ந்தமையாலி அவருடைய கவிதைகளில் பொதவுடமைக் கருத்தக்கள் மேலோங்கி இருந்தன.
தாய்நாடு பலதியாகங்களைக் கண்டு பெற்ற சுதந்திரத்தைப் பறிக்க நாட்டின்அகமும் புறமும் சில சமூகத் துரோகிகள் திட்டமிட்டு முயன்றனர். மக்களின் வாழ்வைச் சிதைத்து, யுத்த பீதியை உண்டாக்கி, உலக சமாதானத்தைச் சீர்குலைக்கவும் அவர்கள் தயங்கவில்லை. அதே வேளை இத்தகைய நாச சக்திகளை அம்பலப்படுத்தி நல்வாழ்வுக்காகவும உலக சமாதானத்தை நிலை நிறுத்தவும் மக்கள் போராடி வந்தனர். இச் சூழலில்தான் பட்டுக்கோட்டையின பாடல்கள் தமிழ்த் திரைப்பட உலகில் இசையுடன் முழங்கியத. இதை நினைக்கும் போது மக்கள் கவிஞனின் தொண்டு எத்தனை சிறப்புடையது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். மக்கள் கவிஞர் 1959 ஆம் ஆண்டு தனது 29 வயதில் மரணத்தைத் தழுவிக் கொண்டார். பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம நம்மை விட்டுப் பிரிந்த நாற்பத்தைந்த ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் பட்டுக் கோட்டையின் கீதங்கள் தமிழ் மக்களின் வாழ்வில் பிணைந்து,
{ ஒலை 39 )

-(38)
இதய ஒலியாய்த் திகழ்ந்து, திரையிலும் மக்கள் நாவிலும் தவழ்ந்த தொடர்ந்த ஒலித்த வருகின்றன.
திருடாதே என்ற படத்தில்.
திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது
என்ற வரிகள் யதார்த்தமான நிலையை எடுத்துக் காட்டுவனவாக அமைந்திருப்பதை அவதானிக்கலாம்.
இவருடைய பாடல்கள் அரசியல், சமூகம், காதல், பல்சுவை எனப் பல்வேறு வகைப்பட்டனவாக அமைந்துள்ளன. மக்கள் கவிஞரின் இலட்சியப் பிடிப்பும் கவித்திறனும் கவிதைகள் மூலம் சிறப்பித்துக் காட்டப்படுகின்றன.
தஞ்சை மாவட்டம் கல்யாணசுந்தரம் என்ற பெயர் பூண்ட இரு பெரியார்களைத் தந்தள்ளத என்பர். ஒருவர் விகல்யாணசுந்தரனார் (திரு.வி.க) மற்றொருவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். இவர் சில ஆண்டுகளே தமிழலகை ஆண்டு சூறாவளிபோல் நம்மையெல்லாம் ஆட்டிப்படைத்தார். அத்துடன் இராமலிங்க அடிகளாரையும் கார்ல் மார்க்சையும் ஒன்றாக்கிய கருத்தோடு மக்களின் வாழ்க்கையை இயக்கினார். மேலும் பாரதி பாரதிதாசன் வழிவந்து கார்ல் மாக்ஸ் தத்தவத்தில் நிலைகொண்டு, மக்களின் இயக்கத்தைத் தமது பாட்டுத் திறத்தாலே பாலித்தார். தமிழ் மொழியிலே உழைப்பாளிகளின் குரலை, சினிமாக் கலைத் துறையில் இயக்கத்தில் வீறடையச் செய்தார். இவரிடத்தே தன்னடக்கம், எளிமை, புலமை, மக்கள் பற்ற, இயக்கத்தோடு ஒன்றிய நிலை, பொருளை விரிய ஆயும் நோக்கு, தமிழ் மொழியின் இசைநயத்தை நகர்ந்த வெளியிடும் திறன் என்பன
காணப்பட்டன.
பாட்டின் திறத்தாலே வையத்தைப் பாலிக்கப் பிறந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். மக்கள் கவியாக விளங்கி ஏழை எளிய மக்களுக்காகவே பாடிய கவிஞர். மக்கள் படைத்த எல்லாக் கலைகளும் மக்களின் மேம்பாட்டுக்கே உரியவை. உண்டு கொழுத்து வந்த ஒரு சில சுரண்டல்காரர்களின
-- Ο மார்கழி : 2006

Page 41
கைளில் அரிய உயரிய பாட்டுக்கலை சிக்கித் தவிர்த்தபோத வீராவேசத்தோடு பாரதியும் பாரதிதாசனும் மீட்டுக் கொணர்ந்த முன்னெடுத்துச் சென்றார் பட்டுக் கோட்டை அவ்வப்போது இயற்றிவந்த கருத்துச் செறிவும், கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி" பத்திரிகை மகிழ்ச்சியோடு வெளியிட்டு கவிஞருக்கு உற்சாகமூட்டி வந்தத. ஜனசக்தி அளித்த இத்தகு ஆதரவு கவிஞரைத் தமிழ்த் திரைப்பட உலகம் வரவேற்க வைத்ததெனலாம். 1951 ஆம் ஆண்டில் படித்த பெண் எனும் திரைப்படத்திற்கு முதல்முதலாகப் பாடலை இயற்றித் திரைப்பட உலகில் காலடி எடுத்து வைத் தார். தரைப் பட உலகளில் இவரது பாடல்களுக்குத் தனிப்புகழ் ஏற்பட்டு, குறுகிய காலத்திலேயே நாடெங்கிலும் அவர் பெயர் பரவத்தொடங்கியது.
தோழர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பலவித இடுக்கண்களுக்கிடையேயும் சுயமுயற்சியாலும், இலட்சியத் தெளிவாலும் திரைப்பட உலகின் வாயிலாய் உன்னத நிலையினை எட்டிப்பிடித்து முன்னுதாரணமாய் விளங்கினார். இவ்வாறு உயர்ந்த அவர், எந்நாளிலும் விவசாய இயக்கத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியையும் மறக்கவில்லை. தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது பாடுபட்டார்.
தோழர் ஜீவாவின் பாடல்கள் முற்போக்கு ஏடுகளிலும், நாடக அரங்குகளிலும் ஏறி மக்களை விழிப்புறச் செய்தன. திரையுலகப் பாடல்களோ கறைபட்டிருந்தன. அந்நேரத்தில் திரையுலகின் குறை நீங்கவும், மக்கள் நெஞ்சம் நிறைவுறவும், வியத்தகு செந்தமிழில் வெல்லத் தென்பாங்கின் வில்லோசை மிக்க ஒரு நல்லோசை எழுந்தத. அந்தச் சொல்லோசையால், வீழ்ச்சியுற்ற நெஞ்சங்கள் எழுச்சி பெற்றன. தாழ்வுற்ற தலைகள் நிமிர்ந்தன. தமிழகத்தின் ஏழை உழைப்பாளிகளும், அறிவால் உழைக்கும் இடைநிலை மக்களும் தங்களுக்காகத் திரையுலகிலே குரல் கொடுத்துத் தங்கள் வாழ்வை மேம்படுத்த முன்னின்ற ஒருவரைக் கண்டனர். அச்சிறப்புக்கு உரியவர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
ஒலை 39 )

(39) தனியுடமைக் கொடுமைகள் தீர
தொண்டு செய்யடா’
என்றும்
காயும் ஒரு நாள் கனியாகும் -நம் கனவும் ஒரு நாள் நனவாகும் காயும் கணியும் விலையாகும்'
என்று நம்பிக்கையை ஊட்டினார்.
குறுகிய நோக்கின்றிப் பரந்த உலகளாவிய நோக்கில் அவர் எண்ணம் வியாபித்திருந்தது.
உழைப்பை மதித்தப் பலனைக் கொடுத்து
உலகில் போரைத் தடுத்திடுவோம்!
அண்ணன் தம்பியாய் அனைவரும் வாழ்ந்து அருள் விளக்கேற்றிடுவோம்'
என்று அன்புணர்வோடும், உண்மையுணர்ச்சி யோடும் திரையுலகின் வழியாக உரத்த குரலை எழுப்பினார்.
"வாளும் திடமுடைய தோளும் தனையிருக்க யார்க்கும் உலகில் அஞ்சிடேன்
என்று உலகமக்கட்காகவே உணர்ச்சிப் பிழம்பானார். மறைந்த கொண்டிருந்த தமிழ்த் தென்பாங்கு, சிந்த, இலாவணி போன்ற நாட்டுப் பாடல்களின் கூட்டிசைக்குப் புத்துயிரூட்டத் திரை யுலகில தனக்குக் கிடைத்த பத்தாண்டெல்லையில மற்றவர்கள் நாற்றாண்டெல்லையில் செய்ய முடியாத சாதனையை இளம் வயதிலேயே செய்து காட்டினார்.
கருத்தப் புதமையும் - இசைப் பழமையும், காலத்தின் குரலும் இணைந்து பிணைந்த கவிஞரின திரையிசைப் பாடல்கள் ஒலித்தட்டுகளிலும் வானொலியிலும் இசைத்து, மக்களை இசைவித்தது. பட்டுக் கோட்டையாரின் கவிதைகள் ஏட்டில் சிறப்புறம் இலக்கியமாகிக் காட்டும் எண்ணத்தில் நியூ சென்சுரி புக்ஹவுஸ் 1965 மேயில் முதற்பதிப்பை வெளிக் கொணர்ந்தது. இத் தொகுப்பை
திரு.பி.இ.பாலகிருஷ்ணன் தொகுத்திருந்தார். இந்நாலின் பன்னிரண்டாம் பதிப்பு 1989இல்
-C Lorriras : 2006 )

Page 42
வெளிவந்தது. இவற்றைவிட வேறும் பலரும் பட்டுக் கோட்டையாரின் பாடல்களைத் தொகுத்து நாலாக வெளிக்கொணர்ந்துள்ளனர்.
இரண்டு துறைசார் அறிஞர்கள் பட்டுக் கோட்டையாரின் பாடல்களை ரசித்த தமத ஆய்வுகளை வழங்கியுள்ளார்கள். ஒருவர் தோழர் ப. ஜீவானந்தம் (ஜீவா) மற்றவர் குன்றக்குடி அடிகளார்.
பல்கலைச் செல்வர் தோழர் ஜீவா மக்கள் கவிஞரைப் பற்றி கூறிய கருத்தக்களை நோக்குவோம். 'கவிஞர் தமது பாட்டுத் திறத்தாலே இரண் டொரு ஆண்டுகளுக்குள் தமிழ்ப் பெருமக்களை ஆட்டிப் படைத்துவிட்டார். மக்கள் கோணத்திலிருந்து பார்த்தால் இன்ப உருவெடுப்பத கவிதை என்ற கவிமணியின் வாக்குக்குப் பட்டுக் கோட்டையின் பாடல்கள் சிறந்த எடுத்துக்காட்டு களாக விளங்குகின்றன. பாட்டின் இன்பத்தைப் பற்றி பட்டுக்கோட்டை.
எத்தனையோ இன்பம் இந்த நாட்டிலே உண்டு.
அத்தனைக்கும் பெரிய இன்பம் பாட்டிலே உண்டு இந்த இரண்டு வரிகளிலும் உணர்ச்சி பொங்கி வழிய அவர் வெளியிட்டுள்ள உண்மை, பாட்டால் அவர் அனுபவித்த இன்பத்தையும் பாட்டால் மற்றவர் அனுபவிக்க அவர் விரும் பிய இன்பத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறது. பொதுமக்கள் வாழ்வில் அவருக்குக் கிடைத்த தெள்ளிய அனுபவமும், பாட்டின் பத்தரில் அவருக்கிருந்த அழுத்தமான ஈடுபாடும் அவர் பாடல்களில் எல்லாம் உள்ளீடாக விளங்குவதைக் காணமுடியும்.
பட்டுக்கோட்டையின் பாடல்களில் நான் மிகச் சிறந்த இரண்டு கூறுகளைக் காண்கிறேன். 96ör murbmest mupü Lupub Lison (Folk Tradition). அதாவது வழிவழி மரபு. மற்றொன்று நவீன upcompulso GhousfulG56 (Modern Expression). வழிவழி மரபையம் நவீன உணர்வையும் இணைத்து பாட்டுத்திறன் காட்டுவது இன்று மிக மிக முக்கியம் மிக மிகத் தேவை. நிலப்பிரபுத்துவச் சமுதாயத்தி லிருந்து விஞ்ஞானமும் தொழில் நட்பமும் மலிந்த தற்கால நாகரிகத்திற்கு முன்னேறிச் செல்லும்
ஒலை 39 )

(40)
மக்களுக்கு இந்த வழி அதிமுக்கியமானது. நமது நாடும் - பாரதமும் தமிழகமும் - பிற்போக்கைத் தேய்த்த முன்னேற்றத்தில் வளரத் துடிக்கும் நாடுதான். இந்த வளர்ச்சி நமது இலக்கியத்திலும் முதலிடம் பெற வேண்டும் எனச் சொல்லத் தேவையில்லை.
சராசரி மனிதனின் சாதாரண விருப்பு வெறுப்புக்களையும் மன அசைவுகள் உணர்ச்சிப் பெருக்குகளையும் எளிமையாக நேர்ப்பாங்காக உயிர்த் துடிப்பாகச் சொல்லும் மரபே நாடோடி மரபு. இதில் சிக்கலான கருத்துக் களுக்கும் , உருவங்களுக்கும் இடமில்லை. எளிய விவசாய நாகரிகத்தின் அடிப்படையான உணர்வுகளை வெளியிட்டு வந்திருப்பதையே இந்த மரபில் Linii L3DITLb.
சிக்கல் நிறைந்த நிகழ்கால வாழ்க்கைத் தோற்றத்தை மிகச் சாதாரண கண்ணோட்டத்தில் வைத்துக் கூறுவதும், கேட்பவரின் நெஞ்சை உடனடியாகக் கவரும் விதத்தில் நேரான வழி வழியான ஆற்றலோடு வெளியிடுவதம் நாடோடி மரபின் இரட்டைக் கூறுகள். நம் நாட்டில் குருதேவர் தாகூரும், கவியரசன் பாரதியும், உயர்ந்த தத்தவக் கருத்துக்களை இலட்சிய நாட்டங்களை நாடோடி மரபு மணம் வீசும் விதத்தில் பொழிந்திருக்கிறார்கள். லோக்கா, பப்புலோ நெருடா, ஆல்பர்ட்டா, ஹறிக்மத் போன்ற மேல் நாட்டுக் கவிஞர் பெருமக்கள் நவீன முறையில் நாடோடி மரபை வளப்படுத்தி மக்கள் கவிஞர்களாகப் பொலிகிறாகள். பட்டுக்கோட்டை காலக்குரலின் இந்த நாடோடி மரபுக்குத் தனி முத்திரை வைத்து ஒளிவிடுகிறார், என்கிறார் ப.ஜீவானந்தம் (ஜீவா).
நாடகம், அதைவிடத் திரைப்படம் இன்று பென்னம் பெரும் நகரத்திலிருந்த, சின்னஞ்சிறு பட்டி தொட்டிவரையுள்ள மக்களில் உள்பகுதியினரையும் இழத்துக் குவிக்கும் பிரச்சாரப் பேராற்றல் வாய்ந்த கலைக்கருவி. பட்டுக்கோட்டையின் பாடல்கள் இந்தத் திரைப்பட உலகில் சுவையிலும் பாணியிலும் தன்னிகரில்லாதவையாகத் திகழ்கின்றன.
பாரதியின் மேல் கொண்டிருந்த அளவற்ற மதிப்புக் காரணமாக அவரைப் பற்றியும்
- C Lorras : 2006 D

Page 43
பட்டுக்கோட்டை பாடல்கள் தந்துள்ளார். அஞ்சா நெஞ்சனாகவும், அறிவின் பிழம் பாகவும் , எண்டிசையும் ஒலியும், எதிரொலியும் எழுப்பும் வெற்றி முரசாகவும் பாரதியைப் பட்டுக்கோட்டை கான்கிறார்.
வீரமும் நெஞ்சந்தனில் ஈரமும் வேண்டுமென்றான் வேற்றோரைக் கண்டஞ்சுவோர் வீணரென்றே புகன்றான் சோர்வகற்றி யாவரும் ஒர்முகமா யெழுந்தால் சூழம் அடிமை இருள் சொல்லாமல் ஓடும் என்றான்'
பாதகம் செய்பவரைப் பாட்டாலே உழிழ்ந்தான் பஞ்சைகளின் நிலையைப் பார்த்த உள்ளம் நெகிழ்ந்தான் பேதங்கள் வளர்ப்பவரைப் பித்தரென்றே இகழ்ந்தான் பெண்மையை, சக்தியை உண்மையைப் புகழ்ந்தான்'
அவர் பாரதிக்குப் பாமாலை சூட்டுவதன் மூலம், அவர் தமக்கு உகந்த வழி என்பதையும் நமக்குப் புலப்படுத்துகிறார்.
உழவர் பெருமக்களின் இரங்கத்தக்க நிலைமைக்கும் குறை தீர்க்கும் கோரிக்கைக்கும் கோரிக் கை வெற்றி காண் போருக்கும் பட்டுக் கோட்டை தீப்பொறி பறக்கக் குரல் கொடுக்கிறார்.
தேனாறு பாயுது செங்கதிர் சாயுது ஆனாலும் மக்கள் வயிறு காயுது மானே இந்த நாட்டில் வகையான மாறுதல் வந்தாலன்றி ஏது நீதிகள்? உழவனும் ஓயாத உழைப்பும் போல் நாமே ஒன்றுபட்டு வாழ்க்கையில் என்றுமிருப்போம்" குன்றக்குடி அடிகளார் பட்டுக்கோட்டையின் கவிதைகளை படித்துச் சுவை கண்டவர். அவர்
( ஒலை 39 )-

G11)
கூறும் கருத்துக்களை நோக்குவோம். நல்ல பல கவிஞர்கள் தோன்றி வாழ்ந்திருக்கின்றார்கள். அவ்வாறு வாழ்ந்து வரலாறு முடித்த ஒரு சிறந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், நஞ்சை கொழிக்கும் தஞ்சையைச் சார்ந்த இவர் சமுதாயத் துறையில் முற்போக்குக் கருத்தினர். எளிய வாழ்வினர், முகமன் கூறாமல் உள்ளதைச் சொல் பவர். வளங் களர் பலவற்றைச் சுவைத்தறியாதவர். இவருடைய பாடல்கள் இசைப் பாடல்களாகவே வெளிவந்துள்ளன. அதிலும், பெரும்பாலும் கிராமியப் பண்பையும், பண்ணையும் தழுவி வந்துள்ளன. உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டுகறிார். கிராமத்து சாதாரண மனிதனின் மொழியில் பேசுகிறார். பாடல்கள் எளிய நடையில் இருந்தாலும், கருத்தாலும் அவை ஆழமாக இருக்கின்றன. கவிதைகள் சிந்தனைக் கினியனவாக வாழ்வுக்கு வளமூட்டுவனவாக இருக்கின்றன. பல வேறு கவிதைகளில் வேற்றுமைகளை விலக்கி ஒற்றுமையை உருவாக்க வேண்டுமென்று வற்புறுத்த கறார். இவரது கவிதையில் உவமைநயம் இருப்பத படித்து இன்புறத்த்கத. இக்கவிஞருடைய கவிதையாற்றலால் வேதனை கலந்த வியப்புணர்ச்சி மிகுகிறது. இரைபோடும் மனிதர்க்கே இரையாகும் வெள்ளாடே இதுதான் உலகம். வீண் அனுதாபம் கண்டு நீ ஒரு நாளும் நம்பிடாதே என்கிறார். எளிய சொற்கள். ஆழமான பொருள், நினைத்து இன்புறத்தக்க உவமை - இக்கவிதை தான் பட்டுக்கோட்டையாரிடம் ஈடுபடுத்தி ஆற்றுப்படுத்தியது என்கிறார் குன்றக்குடி அடிகளார்.
தனது 29 ஆண்டுவாழ்வில் 17 தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக வெளிப்படுகின்றார். இத்தகு சிறந்த கவிஞரை தமிழன்னை பெற்றெடுத்தத காலம் விளைத்த நற்பயிராகும். தமிழ் மொழியும் உலகமும் உள்ளளவும் தவமகன் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் புகழ்நிலை காலத்தால் மறையாது என்றும் நிலைத்த நிற்கும்.
米 米 米
-C Lorriras : 2006 )

Page 44
$NNSN
நவீன தமிழிலக்கிய உலகில் பாரதியார் எல்லாத் துறைகளிலும் வழிகாட்டியாக விளங்குகின்றார்.
இதனை எவரும் மறுக்க முடியாது. குறிப்பாக தமிழ் மறுமலர்ச்சிக்குக் கட்டியங் கூறியவர் எனக் கூறலாம். இன்று பாரதியார் பிறந்து 125 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும் தமிழ் நவீனமயமாகப் பின்புலத்தில் பாரதியார் இணையாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இதற்கான தடங்கள் பன்முகரீதியில் விரிந்துள்ளன.
இன்று பாரதி ஆய்வுகள் ‘பாரதியியல்’ என்று தனித்து நோக்குவதற்கான ஒரு பெரும் ஆய்வுப் பரப்பாகவே கிளைவிட்டுள்ளது. வளர்ந்துவரும் ஆய்வுச் செல் நெறிகள் மற்றும் புதிய சிந்தனைகளின் தாக்கம் கூட பாரதியாரை பல்வேறு புதிய புதிய கோணங்களில் பல தளங்களில் பல நிலைகளில் வைத்துப் புரிந்துகொள்ளும் சந்தர்ப்பங்களை வழங்குகின்றன. பாரதி நாற்றாண்டுக்குப் பின்னர் இதில் வேகத்தையும் பல பரிமாணங்களையும்
e5ItooTerrib.
பேராசிரியர் நுஃமான் “பாரதியின் மொழிச் சிந்தனைகள் : ஒரு மொழியியல் நோக்கு’ என்ற நாலை 1984இல் வெளியிட்டார். அதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வெளியிட்டத. பின்னர் இந்நால் 1999இல் இரண்டாம் பதிப்பாக தமிழ்நாட்டில் வெளிவந்தத. பாரதி பற்றிய நோக்கரில் இந் நாலி தனித் தவமானத. மொழிச்சிந்தனைகள் என்ற அடிப்படையில் நோக்குவதற்கான முறையியல் கட்டமைப்பை முன்வைக்கின்றது. இந்த நால் பற்றி சில மட்டங்களில் விமரிசனங்கள் இருந்தாலும்
( ஒலை 39 -
 
 
 

(42)
நாலின் முக்கியத்தவத்தை ஏற்றுக்கொண்டவை யாகத்தான் அந்த விமரிசனங்களும் உள்ளன.
பாரதியை மொழிசார் சிந்தனையின் அகல்விரி தன்மைகளில் வைத்துப் பார்க்கும் போது பாரதியின் மொழி உணர்வு , பாரதியும் தமிழ் இலக்கணமும், மொழிமாற்றமும் பாரதியும், மொழி வளர்ச்சியும் பாரதியும் இந்தியாவுக்குப் பொதுப்பாஷை போன்ற தலைப்புகளில் புரிந்துகொள்வதற்கான களங்களாக விரிந்துள்ளன. இத்தகைய நோக்கு முறைமை பார்தியியல் ஆய்வுச் செல்நெறியில் புதிய திருப்பமாகவே உள்ளது.
பாரதியின் 125வது ஆண்டில் ‘பாரதியும் தமிழ்இலக்கணமும்’ பற்றிச் சிந்திப்பது மிகப் பொருத்தமாக இருக்கும். அந்த நோக்கில் இங்கு அந்தக் கட்டுரை இடம்பெறுகிறது.
-( Lorriras : 2006

Page 45
கட்டுரை
பாரதியும் தமிழ்
GuIJmreffuus :
இலக்கணம் பற்றிய பொதுக் கருத்துக்களும் பாரதியின் நோக்கும்:
ஒரு மொழியின் இலக்கணம் பற்றி, பொது வாகக் கற்றவர்கள் மத்தியில் பின்வருவன போன்ற கருத்துக்கள் நிலவுகின்றன. (அ) ஒரு மொழியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி மொழிப்புலமை மிகுந்த முன்னோர்களால் வகுத்துக் கொடுக்கப்பட்ட விதி முறைகளே இலக்கணமாகும். இக்கரு த்துப்படி இலக்கணம் என்பது மொழிக்கு வெளியே இருந்து விற் பன்னர்களால் உருவாக்கப்படும் ஒன்றாகும். இவ்வகையில் தமிழுக்கு அகத்தியர், தொல்காப்பியர், பவணந்தி முனிவர் முதலியோர் இலக்கண விதிகளை வகுத்துக் கொடுத்தனர். இவர்கள் வகுத்த விதி முறைகளை மீறுவது இலக்கண வரம்பைச் சிதைப்பதாகும் எனக் கருதப்படு கின்றது.
(ஆ) ஒரு மொழியின் இலக்கணம் என்பது அம்மொழியின் இலக்கணம் பற்றி எழுதப்பட்ட நூல்களில் காணப்படும் விபரங்களாகும். இது முதலாவது கருத்தோடு தொடர்புடையது. இதன் படி தமிழ் இலக்கணம் என்பது தொல்காப்பியம், நன்னூல், நேமிநாதம், வீரசோழியம் முதலிய நூல்களில் காணப்படும் விபரங்களாகும். தமிழ் இலக்கணத்தை இந்நூல்களில் இருந்தே நாம் அறிய முடியும்.
(இ) ஒரு மொழியின் இலக் கணம் அம்மொழியைப் பேசும் சிலருக்குத்தான் தெரியும் ஏனையோருக்குத் தெரியாது. இதுவும்
( ஒலை 39 )ー

-(43)
སྲི་རུ་རེད།རུཙིར་
இலக்கணமும்
எம். ஏ. நுஃமான்
இலக்கணம் பற்றிப் பரவலாக நிலவும் ஒரு கருத்தாகும். இலக்கணம் என்பது இலக்கண நூல்களிலிருந்து படித்தறிய வேண்டிய ஒன்று என்பதன் அடிப்படையிலேயே இது பிறந்துள்ளது.
(ஈ) சில மொழிகளுக்கு இலக்கணம் உண்டு; ஏனைய மொழிகளுக்கு இலக்கணம் இல்லை. இதுவும் ஒரு பொதுக் கருத்தாகும். எழுத்து வடிவம் பெறாத, இலக்கண நூல்கள் இல்லாத மொழிகள், திருத்தாத, இலக்கணமற்ற மொழிகள் எனப்படுகின்றன. எழுத்து வழக்குடைய மொழிகளிலும் எழுத்து மொழியே இலக்கண வரம்புடைய சுத்தமான மொழி என்றும் பேச்சுமொழி இலக்கணவரம்பற்ற கொச்சை மொழி என்றும் கருதப்படுகின்றது.
(உ)இலக்கணம் என்பது மொழி வழக்கிலே எது சரி, எது பிழை என்பதைக் கூறுவதாகும். இதுவும் பரவலாக நிலவும் ஒரு கருத்தாகும். “இலக்கண நூலாவது உயர்ந்தோர் வழக்கையும் செய்யுள் வழக்கையும் அறிந்து விகிதப்படி எழுதுவதற்கும் பேசுவதற்கும் கருவியாகிய நூலாம்’ என ஆறுமுக நாவலரும் கூறியுள்ளார்.
மொழிப்புலமை வாய்ந்த முன்னோர்களால் வகுத்துக்கொடுக்கப்பட்ட விதிமுறைகளே இலக்கணம் என்ற கருத்தே மேற்காட்டிய கருத்துக்களுக்கெல்லாம் அடிப்படையாக உள்ளது. அகத்திய முனிவரே தமிழுக்கு முதல் முதல் இலக்கணம் வகுத்துக் கொடுத்தவர் என்பது தமிழில் நிலவும் ஒரு மரபுவழிக் கருத்தாகும் . பாரதியும் -C Lחסhrasty : 2006

Page 46
இக்கருத்தையே கொண்டிருந்தான். பாரதி இதுபற்றிப் பின்வருமாறு கூறுகின்றான் : “தமிழ் பாஷைக் கோ, இலக் கணம் முதல்முதலாக அகத்தியராலும் அவருடைய சிஷயராகிய திரணதுரமாக்நி (தொல்காப்பியர்) என்ற ஆரிய முனிவராலும் சமைத்துக் கொடுக் கப் usG 56í பதும் மெயப் யே. அதனின்றும் தமிழிலக்கணம் பெரும்பாலும் சம்ஸ்கிருத இலக்கணத்தை அனுசரித்தே சமைக்கப்பட்டிருக்கிறதென்பதும் மெய்யே. எனினும் வடமொழிக் கலப்புக்கு முந்தித் தமிழுக்கு வேறுவகையான இலக்கணமிருந்து ஒருவேளை பின்னிட்டு மறைந்திருக்கக் கூடுமெனி பதற்குப் பல ஹேதுக் கள் இருக்கின்றன.’ (16 : 194) பாரதியின் மேற்காட்டிய கூற்றிலே மூன்று முக்கியமான கருத்துக்கள் புலப்படுகின்றன. 1) அகத்தியரும் தொல்காப்பியருமே முதல் முதல் தமிழுக்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்தனர். 2) தமிழ் இலக்கணம் பெரும்பாலும் சமஸ்கிருத இலக்கணத்தைத் தழுவியே அமைக்கப் பட்டது. (அகத்தியர், தொல்காப்பியர் காலத்திலே சமஸ்கிருத இலக்கணத்தைத தழுவித் தமிழ் இலக்கணம் அமைக்கும் அளவிற்கு வடமொழிக் கலப்பு ஏற்பட்டு விட்டது என்பதும் இதன் உட்கிடையாகும்) 3) வடமொழிக் கலப்புக்கு முந்தித் தமிழுக்கு வேறுவகையான இலக்கணம் இருந்திருக் கலாம்.
இவை தெளிவு படுத்தப்பட வேண்டிய கருத்துக்களாகும். இவை பற்றி இனி சிறிது நோக்கலாம்.
இலக்கணமும் இலக்கண நூல்களும்.
“தமிழ் பாஷைக்கோ இலக்கணம் முதல்
முதலாக அகஸ்தியராலும். தொல்காப்பியர்
என்ற ஆரிய முனிவராலுமே சமைத்துக்
ஒலை 39 }

(44)
கொடுக்கப்பட்டதென்பதும் மெய்யே’ என்ற பாரதியின் கூற்று, பாரதிக்கு முன்னர் நெடுங்காலமாக நிலவிவந்த கருத்தின் வழிமொழிதலேயாகும். இதுவரை கிடைத்துள்ள இலக்கண நூல்களுள் தொல்காப்பியமே காலத்தால் முந்தியது என்ற பொருளில் மட்டுமே நாம் இதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அகத்தியரும் தொல்காப்பியருமே தமிழ்மொழியின் இலக்கண அமைப்பை உருவாக்கினர்; தமிழ் எவ்வாறு பேசவும் எழுதவும் படவேண்டும் என்பதை வரையறு த்தனர்; அகத்தியருக்கு முன் தமிழ்மொழி இலக் கண மற் றே இருந்தது என்ற பொருள்படவே பலர் இவ்வாறு பேசி வருகின்றனர். தமிழை ஆதிசிவன் பெற்றுவிட அகத்தியர் அதைக்கண்டு மகிழ்ந்து நிறைவான இலக்கணம் செய்து கொடுத்ததாகக் கூறும் பாரதியின் கவிதை வரிகளும் இதே பொருளையே வெளிப்படுத்துகின்றன. (சிவன் படைத்த தமிழ் இலக்கணமற்ற தமிழ் என்று பாரதி கருதினான் போலும்.) இவையெல்லாம் இலக்கணம் பற்றிய மரபுவழி விளக்கத்தின் விளைவுகளாகும்.
ஒரு மொழியின் அமைப்புத்தான் அதன் இலக்கணம் என்பதே இலக்கணம் பற்றிய நவீன மொழியியல் நோக்காகும். மொழியின் கூறுகளான ஒலிகள், உருபன்கள், சொற்கள் முதலியவை ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறையே மொழியின் அமைப்பாகும். இலக்கண நூல்கள் மொழியின் இந்த அமைப்பையே விளக்குகின்றன. ஒரு மொழியில் இலக்கணநூல் எதுவும் இல்லாவிட்டால் அம்மொழிக்கு இலக்கணமே இல்லை என்று நாம் கூற முடியாது. பாரதியின் கருத்துப்படி அகத்தியருக்கு முன் தமிழ் இருந்திருக்க முடியாது. ஏனெனில் ஒரு அமைப்பு இல்லாமல் ஒரு மொழி இருக்க முடியாது. படிப்பு வாசனையற்ற ஒரு சாதாரண மனிதன் தனது தேவைக்கு ஏற்ப மொழியைச்
---- -{ மார்கழி : 2006 )

Page 47
சரளமாகக் கையாள்கிறான் என்றால் அவனுக்கு அம்மொழியின் இலக்கணம் நன்கு தெரியும் என்றே நாம் கொள்ள வேண்டும். அதாவது அந்த மொழியின் அமைப்பை அவன் நன்கு அறிந்திருக்கிறான். இல்லையென்றால் அவனால் மொழியைக் கையாள முடியாது. அவனுக்குத் தெரியாதது இலக்கண ஆசிரியர் அதுபற்றி என்ன எழுதிவைத்திருக்கிறார் என்பதேயாகும்.
இவ்வகையில் இலக்கணம் என்பது மொழிக்கு வெளியே நின்று யாராலோ விதித்துக் கொடுக்கப்படுவதல்ல. ஒரு மொழியைப் பேசும் மக்களே அதன் அமைப்பை உருவாக்கிக் கொள்கிறார்கள். இலக்கண ஆசிரியர்கள் செய்வதெல்லாம் இவ்வமைப்பைக் கண்டறிந்து விளக்குவதுதான். இலக்கண ஆசிரியன் இந்த அமைப்பைப் புதிதாகப் படைப்பதில்லை. அவன் ஆராயும் முன்பே அந்த அமைப்பு இருக்கின்றது. இருக்கும் அமைப்பை விளக்குவது மட்டுமே அவன் வேலையாகும். அது சிறப்பான விளக்கமா இல்லையா என்பது இலக்கண ஆசிரியனின் திறமையைப் பொறுத்தது. மொழியின் அமைப்பு காலத்துக்குக் காலம் மாறுபடுவது. இந்த மாற்றங்களைக் கண்டறிந்து அங்கீகாரத்தோடு அவற்றை விளக்குகின்றவனே சிறந்த இலக்கண ஆசிரியனாகலாம். மொழியின் உள்ளார்ந்த 960)LD 60U 93 g6 3.35600Tip (implicit grammar) என்றும் அதனைக் கண்டறிந்து இலக்கண ஆசிரியர் விதிகளாக வகுத்துக் கூறும் இலக்கண நூல்களை புற இலக்கணம் (explicit grammar) 616öĩ [[]Lô g5ịi) 5 T6ò மொழியியலாளர் வேறுபடுத்துவர்.
இலக்கணம் பற்றிய இந் நவீன நோக்கின் அடிப்படையில் அகத்தியரும் தொல்காப்பியரும் தமிழுக்கு முதல்முதல் இலக்கணம் சமைத்துக் கொடுத்தனர் என்பதைத் தங்கள் காலத்துத்
( ஒலை 39 )

(2.5
தமிழ்மொழியின் உள்ளார்ந்த அமைப்பைக் கண்டறிந்து அதனை விதிவடிவில் இலக்கண நூலாக முதல் முதல் வெளியிட்டவர்களே இவர்கள் என்ற பொருளிலேயே நாம் ஏற்றுக்கொள்ளலாம். தவிரவும் அகத்தியர் பற்றியும், அகத்தியம் பற்றியும், தொல்காப்பியர் அகத்தியரின் சீடர் என்பது பற்றியும் கூறப்படுவனவெல்லாம் கர்ண பரம்பரைக் கதைகளே தவிர அவற்றுக்கு அறிவியல் அடிப்படையிலான ஆதாரங்கள் எவையும் இல்லை. தொல்காப்பியத்திலோ, தொல்காப பியத்துக்குப் பனம் பாரனார் எழுதிய பாயிரத்திலோ அகத்தியர் பற்றியோ, அகத்தியம் பற்றியோ எவ்விதக் குறிப்புக்களும் இல்லை. கி.பி. 8ம் அல்லது 9ம் நூற்றாண்டில் இருந்தே அகத்தியம் பற்றிய குறிப்புக்கள் தமிழ் நூல்களில் காணப்படுகின்றன (41 137). அகத்தியர் என்ற பெயரில் ஓர் இலக்கண ஆசிரியர் இருந்தார் என்றும், அவருடைய பெயரில் இன்று வழங்கும் சில இலக்கணச் சூத்திரங்களைக் கவனமாகப் பரிசீலித்துப் பார்க்கும்போது அவை தொல்காப்பியத்திற்குப் பிற்பட்டவையாகவே கருதத்தக்கன என்றும், இவ் அகத்தியர் பல்லவர் கால நடுப்பகுதியில் வாழ்ந்திருக்கலாம் என்றும் தெ.பொ.மீ கூறுகிறார் (47 : 1). தொல்காப்பியர் என்ற பெயரில் இருவர் வாழ்ந்திருக்கலாம் என்றும் பிற்காலத் தொல்காப்பியரே அகத்தியரின் சீடராய் இருக்கலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிடுகிறார் (47 : 2). இது எவ்வாறாய் இருப்பினும் பழைய கர்ணபரம்பரைக் கதையையே பாரதி வரலாற்று உண்மையென ஏற்றுக் கூறியுள்ளான் என்பதே இங்கு கவனி க்கத்தக்கது.
தமிழ் இலக்கணத்தில் சமஸ்கிருதச் செல்வாக்கு. “தமிழ் இலக்கணம் பெரும்பாலும் சமஸ்கிருத இலக்கணத்தை அனுசரித்தே சமைக்கப்பட்டிரு க்கிறது” என்ற பாரதியின் கூற்றும் ஆராய்ச்சியின
-C Lomtírasy5 : 2006

Page 48
அடிப்படையில் அமைந்ததல்ல. தன் காலத்தில் பொதுவாக வழங்கிவந்த கருத்தினையே இங்கும் பாரதி வழிமொழிந்துள்ளான் என்பது வெளிப்படை. பாரதியின் இக்கூற்றுப் பற்றிக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பெ.சு.மணி பாரதியின் இக்கருத்தை மறுத்துரை க்கிறார். அவர், “பாரதியார் தொல்காப்பியப் பயிற்சிபெற முடியாத காரணத்தால், தமிழ் இலக்கணத்தின் தனித்தன்மையை, வடமொழிச்சார்பகன்றதைப் பற்றித் திட்டவட்டமாகத் தெளிவுபடச் சாற்ற முடியாமற்போயிற்று. ‘ஐந்திரம் நிறைந்த தொல் காப்பியன்’ என்னும் குறிப்பிற்கு வடமொழி இலக்கணமான ஐந்திரத்தைப் பின்பற்றித் தொல்காப்பியர் இலக்கணம் செய்தார் என வலிந்துரைத்தனர் சிலர். அக்கால ஆய்வுலகம் இக்காலத்தைப்போல் அப்பொழுதே ஒருமனதாக இந்த ஐந்திர விவகாரத்தை முற்றிலும் நிராகரித்து விடவில்லை. இதனாலும் பாரதியாருக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்” என்பர் (28 : 83, 85).
பெ.சு.மணியின் கூற்றிலே தொல்காப்பியத்தின் துாய்மையை நிலைநாட்டும் நோக்கு வெளிப்படையாகத் தெரிகின்றது. ஆயினும் பெ.சு.மணி கூறுவதுபோல் தொல்காப்பியம் முற்றிலும் வடமொழித் தொடர்பற்றது என்பதை தறி கால ஆயப் வுலகம் ஒருமனதாக ஏற்றுக்கொள்வதும் இல்லை. பாணினியின் இலக்கணம், பதஞ்சலியின் மகாபாஷ்யம், கெளடில்யரின் அர்த்த சாஸ்திரம், பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம், வாத்சாயனரின் காம சூத்திரம் போன்ற வடமொழி நூல்களின் செல்வாக்கு தொல்காப்பியத்தில் காணப்படு வதை வையாபுரிப்பிள்ளை (34 : 42 - 54), கமில் சுவலபில் (38.143 - 145) ஆகியோர் எடுத்துக்காட்டியுள்ளனர். சமஸ்கிருத இலக்கண முறையுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டபிறகே
( ஒலை 39 )

o G6)
தொல்காப்பியம் தோன்றியது என தெ.பொ.மீயும கூறுகின்றார் (47.17).
இவ்வாறு கூறுவதன் மூலம் பாரதி கருதுவது போல் தொல்காப்பியர் பெரும்பாலும் வடமொழி இலக்கணத்தை அனுசரித்தே தமிழுக்கு இலக்கணம் சமைத்தார் என்ற கருத்தை ஏற்றுக் கொள்வதாகாது. தொல்காப்பியர் காலத்தில் தமிழில் வடமொழிக் கலப்பு அவ்வளவு அபரிமிதமாக ஏற்பட்டிருக்கவும் இல்லை. தொல்காப்பியர் காலத்தில் ஓர் அகில இந்திய ஒலியனியல், இலக்கணச் சிந்த னைமுறை நிலவியது பற்றியும்; மேற்கத்தைய, சீன முறைகளுக்குப் பதிலாக தொல்காப்பியர் இவ் அகில இந்திய சிந்தனை முறையையே பின்பற்றியுள்ளமை பற்றியும் தெ.பொ.மீ. குறிப்பிடுகின்றார். இவ் அகில இந்திய இலக்கணச் சிந்தனை முறைமூலம் ஒலிகளின் உச்சரிப்பு அம்சங்கள் போன்ற மொழியியல் GuTg560) LD560) 6T (linguistic universals) தொல்காப்பியர் உள்வாங்கிக் கொண்டார் என்றும் ஆகவே அகில இந்தியச் சிந்தனை முறையைப் பின்பற்றியதன்மூலம் அவர் தமிழ்மொழியின் இயல்பான பண்புகளுக்கு எவ்வித ஊறும் விளைவிக் கவில்லை என்றும் தெ.பொ.மீ.கூறுகின்றா, (47 : 17).
வடமொழிக் கலப்பு தமிழில் அபரிமிதமாக ஏற்பட்ட பிற்காலத்திலேயே வடமொழி இலக்கணக் கோட்பாட்டைத் தழுவிய சில இலக்கண நூல்கள் தமிழில் எழுந்தன. வீரசோழியம் (11ம் நூற்றாண்டு), பிரயேக விவேகம் (17ம் நூற்றாண்டு), இலக்கணக் கொத்து (17ம் நூற்றாண்டு) என்பனவே அத்தகைய இலக்கண நூல்களாகும். (47 : 34). ஆகவே தொல்காப்பிய இலக்கணம் பெரும்பாலும் சமஸ்கிருத இலக்கணத்தைத் தழுவியது என்ற பாரதியின் கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
-O மார்கழி : 2006

Page 49
வடமொழிக் கலப்புக்கு முந்திய தமிழ் இலக்கணம் ‘வடமொழிக் கலப்புக்கு முன்னர் தமிழுக்கு வேறுவகையான இலக்கணமிருந்து ஒருவேளை பின்னிட்டு மறைந்திருக்கக்கூடும் என்பதற்கு பல ஹேதுக்கள் இருக்கின்றன’ எனக்கூறும் பாரதி, அவ் வேதுக்கள் யாவை என விளங்க வில்லை. ஆயினும் தொல்காப்பியத்திற்கு முன் வேறு இலக்கணநூல்கள் சில இருந்திருக் கலாம் என்ற பாரதியின் யூகம் வலுவானதே. தொல்காப்பியத்திற்கு முந்திய இலக்கண நூல் கருத்துக்கள் தொல்காப்பியத்தில் எடுத்தாளப் பட்டுள்ளமைக்கு தொல்காப்பியத்திலேயே சான்றுகள் உள்ளன. என்மனார், என்ப, சொல்லுப, மொழிப முதலிய கூற்றுக்கள் தொல்காப்பியத்தில் அடிக்கடி இடம்பெறுவது இதனையே காட்டுகின்றது (41 - 139). எனினும் இவை தொல்காப்பியருக்கு ஏற்புடைய இலக்கண நூல்களாகவே இருந்திருக்க வேண்டும்.
தொல்காப்பியத்திற்கு எதிரான, வலுவான தமிழ் இலக்கண சிந்தனை முறை ஒன்றும் இருந்து வருவதற்குச் சான்றுகள் உள்ளன. அவினயம் இச்சிந்தனை முறையை ஒரு வகையில் பிரதிநிதித்துவப் படுத்தியதெனினும் தொல்காப்பிய உரையாசிரியர்களால் இது பூரணமாக மறைக்கப்பட்டுவிட்டதென்றும், கற்றோர் உலகம் இப்பெருஞ் சிந்தனை முறையின் பங்களிப்பைக் கிட்டத் தட்ட மறந் துவிட்டதென்றும் விஜயவேணுகோபால் குறிப்பிடுகின்றார். (49 : 2). அவினய ஆசிரியராகக் கருதப்படுகின்ற அவிநயருடைய காலம் சரியாகத் தெரியவில்லை. தொல்காப்பியர்போல் இவரும் அகத்தியருடைய மாணவராகவே கருதப்படுகின்றார் (49 : 6 ; 47 - 10). ஆயினும் தொல்காப்பியத்துக்கு முந்திய தமிழ் இலக்கணநூல்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆகவே பாரதி யூகிப்பது போல் அவை வடமொழிச் சார்பற்றதா, இல்லையா என்பது பற்றி நம்மால் எதுவும் கூற முடியாது.
( ஒலை 39

benamunii (47)
இது எவ்வாறாயினும் “மொழிப்புலமை மிக்க முன்னோர்களால் வகுத்துக் கொடுக்கப்பட்ட விதிமுறைகளே இலக் கணம் ' என்ற இலக்கணம் பற்றிய மரபுவழிக் கருத்துடை யோர், பொதுவாக மொழி மாற்றத்தையும், புதிய வழக்குகளையும் ஏற்றுக் கொள்ளாது புகழ் பெற்ற இலக்கண ஆசிரியர்களின் விதிகளையே மொழிவரம்பாகப் போற்றுவர். பழைய விதிகளை விளக்குவதிலும் அவை பற்றிய சர்ச்சைகளில் ஈடுபடுவதிலுமே அதிக அக்கறை காட்டுவர். ஆனால் பாரதி இப் பொதுப் போக் கில் இருந்து பெரிதும் வேறுபடுகின்றான். மொழியில் புதுமைகள் புரிவதற்கு முயன்றது மட்டுமன்றி வேண்டாத இலக்கண சர்ச்சைகளை நிராகரிப்பதையும், மொழி மாற்றத்திலும் மொழி வளர்ச்சியிலும் அதிக அக்கறை காட்டுவதாயும் நாம் பாரதியிடம் காண்கின்றோம். அடுத்துவரும் பகுதிகளில் இவைபற்றிச் சற்று விரிவாக நோக்கலாம்.
பாரதியும் மரபுவழி இலக்கணக் கல்வியும் பாரதி மரபுவழி இலக்கணக் கல்வியிலும் மரபுவழி இலக்கண சர்ச்சைகளிலும் அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. நவீன சிந்தனையாளன் என்ற வகையிலே புதிய மரபுகளுக்காகப் போராடிய பாரதி, பழைய இலக்கண சர்ச்சைகளில் அக்கறை காட்டாதது மட்டுமன்றி சில வேளைகளில் அவற்றை ஏளனமாகவும் நோக்கியுள்ளான்.
அரசஞ்சண்முகனார் என்ற பிரசித்தி பெற்ற மரபுவழித் தமிழறிஞர் தேச பக்தியைப் பிரதிபலிக்கும் பாடல்கள் சில இயற்றத் தொடங்கியபோது அதனை வரவேற்று பாரதி பின்வருமாறு எழுதியுள்ளான்.
‘று அ.சண்முகம்பிள்ளை (என்ற) மற்றொரு இலக்கண வித்துவான் 'வந்தேமாதர -( upחitabu : 2006 D

Page 50
மந்திரத்தைப் பற்றிய சில இனிய பாடல்கள் எழுதியிருக்கின்றார். பூரீ அ.சண்முகம்பிள்ளை மலைபுரண்ட போதிலும் தமது கல்வியினின்றும் கருத்தை அகலவிடாத தன்மையினர். இலக்கண ஆராய்ச்சியே இவருக்கு முக்கிய தொழில். அதுவே இவருக்கு உயிர். இதைத் தவிர வேறொன்றையும் இவர் கவனிப்பது கிடையாது. இப்பொழுது பாரத தேவி இவருடைய சிந்தனையையும் மாற்றிவிட்டாள். பாரததேவியின் தெய்வீக விழிகளினின்றும் உதிரும் கண்ணிர்கள் இவரது நெஞ்சை உருக்கி எமது தாய்க்கு அடிமையாக்கிவிட்டன. இது ஆகுபெயரா? அன்மொழித் தொகையா? தொல் காப்பியத்துக்கு இவ்விடத்தில் நச்சினார்க்கினியர் கூறிய உரை பொருந்துமா? பொருந்தாதா? என்பது போன்ற இலக்கண விவகாரங்களைச் சிறிது அகற்றிவைத்துவிட்டு இந்த வித்வான்.
'வந்தே மாதரமென்னும் மந்திரத்தா லெய்தா வரமுமில்லை நந்தேய மக்களுக்கு நலந்தருவ இதுபோலெந்நாட்டு மில்லை
என்று பாட்டியற்றத் தொடங்கிவிட்டார். கல்வித்தாய்க்கு மட்டிலுமே, இதுவரை வழிபாடு இயற்றிவந்த இவர், இப்போது பூமித்தாய்க்குத் தொணி டு புரிவது அதைக் காட்டிலும் உயர்வாகுமென்பதை அறிந்து கொண்டார். இதுவெல்லாம் நமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. இதுவெல்லாம் காலமாறுபாட்டை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளக்குகின்றது. (29 169 - 170)
பாரதி, இங்கு இலக்கண சேவைக்காக அரசஞ் சண்முகனாரைப் பாராட்டவில்லை என்பது வெளிப்படை. மேற்காட்டியது போன்ற பயனற்ற இலக்கண ஆராய்ச்சிக்குள்ளேயே மூழ்கிக் கிடக்காது, கால மாற்றத்தை உள்வாங்கிக்
( ஒலை 39 -

G18) கொண்டு இலக்கண சர்ச்சையில் இருந்து விடுபட்டு தேசியப் பிரக்ஞையை வெளிக் காட்டியமைக்காகவே பாரதி அவரைப் போற்றுகின்றான். மேலும் மரபுவழி இலக்கண வித்துவான்களை ஒரளவு ஏளனத்தோடு நோக்குவதையும் நாம் இங்கு காண்கின்றோம்.
பாரதியின் காலத்திலே நிலவிய மரபுவழி இலக்கணக் கல்வியின் பயனற்ற தன்மை பற்றி பாரதி கவலை கொண்டிருந்தான் என்றும் தெரிகிறது. அன்மொழித் தொகை பற்றிக் கற்பிப்பது சம்பந்தமாக பாரதி பின்வருமாறு எழுதியுள்ளான். “நெல் எப்படி விளைகின்றது என்பதைக் கற்றுக் கொடுக்காமல் 'அன்மொழித் தொகையாவது யாது’ என்று படிப்புச் சொல்லிக் கொடுப்பதை நினைக்கும்போது கொஞ்சம் சிரிப்புண்டாகின்றது. அன்மொழித் தொகை சிலரைக் காப்பாற்றும். ஊர் முழுவதையும் காப்பாற்றாது. நெல்லுத்தான ஊர் முழுவதையும் காப்பாற்றும். அன்மொழித் தொகையைத் தள்ளிவிட வேண்டுமென்று நான் சொல்லவில்லை. ஆனால் அன்மொழித் தொகையைப் பயிர்செய்து நெல்லை மறந்து விடுவது சரியான படிப்பில்லை என்று சொல்லுகிறேன் அவ்வளவுதான் (22 : 74)
இன்றுகூட நமது பண்டிதர்கள் இத்தகைய சர்ச்சைகளில் பொழுதைக் கழிப்பது மனங்கொள்ளத் தக்கது. இத்தகைய பயனற்ற இலக்கணக் கல்வி முறை பற்றி 1916ம் ஆண்டிலேயே பாரதி இவ்வாறு எழுதியிருப்பது அவனது மொழிச் சிந்தனையின் நவீன போக்கினைப் புலப்படுத்துகின்றது எனலாம்.
米 来 米
-- Ο uDmiræus : 2006 )

Page 51
கொழும்புத்
ஏட
‘ஓலை எமது நல்வா
தரமான ஆய்வு: சிறுகதைகள், கவி தமிழ்கூறும் நல்லு பெரியார்களைப் பற் என்பவற்றை இலக்கியத்தின் அறி
வெற்றிநடைபோ(
GTD
நல்வாழ்த்
நீர்கொழும்பு விஜயரத்தின அதிபர், ஆசிரியர்கள், ம
தொபேஎண்

தமிழ்ச் சங்க
T60T
ஸ்"க்கு ழ்த்துக்கள்!
is கட்டுரைகள் விதைகள் உள்பட லுலகம் போற்றும் றிய விளக்கங்கள் த் தாங்கி வுக் களஞ்சியமாக டும் ‘ஓலை’க்கு து
ந்துக்கள்
ம் இந்துமத்திய கல்லூரி ாணவர்கள், ஊழியர்கள்.
031 - 2237047

Page 52
Buying jewellery
Wellamy atta HENRHEITHU
htկցakalկani
541, Galle Road, Colombo -06. PT TOTO
 

made easy.........
შესახეს 11И9. . . . . how to
se jeuvellery ?
is the solution
ിപ്ര LD SCHEME
= = =
Jewellery Store in Sri Lanka.