கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2007.03

Page 1
ம்ய்ப்பொருள் காண்பதறிவு
முன்னோடி
சிறுகதை
கவிதைகள்
பாலுணர்வு அரசியலும் அ
பாரதி படைப்புக்களின்
IIT LIT LITLE
 
 
 

42 பங்குனி 2007
கப்பாடல்களும்
ல் பெண்நிலைப்பாடு
ல்களில் பெண்களின் எதிர்ப்புக்குரல்கள்
1్య=

Page 2
இலங்கையில் நூல்கள் வ ஏற்றுமதி, இறக்குமதி
புதியதோர்
அண்புடன் அழைக்கின்றது
សំផ្គុំ
C
பொத்
CHEMAMADU BOO
Telephone : Oll-2472362 FOX : OTT -2448624 E-moil : chemomadu Gyoh
JG 49,50, People's Pork, C
தமிழ் நாட்டில் ப விற்பனைத்துறை
6 TIL DE LP3ES
க.சச்சிதானந்தன் - காந்தளகம் சென்னை - 02, தொ.பே: 044-28414505 E-mail : tamilnooladata one, in
அனைத்து வெளியீடுகளையும்
 
 

பிநியோகம், விற்பனை,
பதிப்புத்துறையில் சகாப்தம்
சேமமரு ததகசாலை
) K CENTRE
OO, COTT
Colombo - 1 , Sri Lonko.
திப்புத்துறை, முன்னோடிகள், வர்கள்
கோ.இளவழகன் - தமிழ்மணன் பதிப்பகம் சென்னை - 17. தொ.பே: 044-24333030 E-mail: tim-pathippagam (a yahoo.co.in
எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்

Page 3
ஆசிரியர் பக்கம்
1990களுக்குப் பிறகு தமிழில் பல்வேறு புதிய சிந்த தலித்தியம் ஆகிய சிந்தனாமுறைகள் தமிழில் ம இவை மேலும் புதிய சிந்தனைகளையும் அ ஆய்வுமுறைகளையும் முன்வைக்கின்றன.
புதிய சிந்தனைகளின் வெளிச்சத்தில் சமூக கருத்துநிலை போன்றவை மீள்வாசிப்புக்கு 2 மரபுசார்ந்த கருத்தியலும் கலாசாரமும் கட்டை இதனால் பெண்ணின் இருப்பும் பிரக்ஞையுட அரசியல்நோக்கிப் பயணிக்கின்றது.
இதுவரை “பெண்மை” என்பதைச் சமூக கலைஇலக்கியம் எவ்வாறு துணைபோயிற்று? ெ ஆதிக்கம் பெற்றது? போன்ற பன்முகக் கேள்வி ஏற்பட்டுள்ளது.
இதுவரை நாம் அறிந்த பெண்மை ஆணாதிச் என்னும்போது, நமது இன்றைய தேவை பென கண்டுபிடிப்பதாகவே இருக்கும். அதாவது பெண் பெண்மையின் புனைவுகள், கனவுகள், வேட்ை தேவைப்படுகின்றது. இந்தப் புதிய அடையாள மொழியளவிலும் கருத்து அளவிலும் உடைத்
ஆகவே இந்தப் புதிய அடையாளம் நோக்கி ந செயற்பாட்டுவாதமாகவும் நீட்சிபெறுகின்றது. ம ஈறாக யாவற்றையும் நாம் கேள்விக்குட்படுத்தே சார்ந்து பதிவாகியுள்ள அனுபவங்களை மறுத் இதற்குரிய அடையாளமாகவே இம்முறை ஒ படைப்புகள் பெண்ணியம் சார்ந்த சிந்தனை
அமைந்துள்ளன.
தொடர்ந்து நாம் சிந்திப்பதும் செயல்படுவ கருத்திற்கொண்டு எமது பயணம் தொடரட்டு
( ஒலை 42 )

○
னைகள் அறிமுகமாயின. குறிப்பாக பெண்ணியம், ற்றெல்லாவற்றையும்விட முக்கியத்துவம் பெற்றன. ணுகுமுறைகளையும் புதிய அர்த்தங்களையும்
அசைவியக்கம், பண்பாடு, கலைஇலக்கியம், உட்படுத்தப்படுகின்றன. புதிய பொருள்கோடல் மக்கும் அரசியலாக பரிமாணம் பெறுகின்றன. b பற்றிய தேடலும், மறுவாசிப்பும் அடையாள
ம் எவ்வாறு கட்டமைத்துள்ளது? இதற்குக் மொழிவழிச் செயற்பாட்டில் ஆண்மையம் எவ்வாறு பிகளை நாம் உரத்துக்கேட்கவேண்டிய கட்டாயம்
$க மொழியால் உருவாக்கப்பட்ட பெண்மையே ன்னின் மொழியை பெண்மையின் மொழியைக் மையின் மொழியால் உருவாக்கப்படும் பெண்மை, கைகளால் உருவாக்கப்படும் பெண்மை நமக்குத் ம் இதுவரையிலுமான ஆண்மைய உலகத்தை து எறியக்கூடியதாகவே இருக்கும்.
ாம் எங்கிருந்து தொடங்குவது என்ற கேள்வி ஒரு புவழிவரும் இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வண்டிய தேவை உள்ளது. ஆண்மைய உலகம் து பெண் அனுபவங்கள் மேற்கிளம்பவேண்டும். வை வெளிவருகின்றது. இதில் இடம்பெற்றுள்ள , செயல் வெளிப்பாட்டுக்கான களங்களாகவே
தும் காலத்தின் தேவையாகிறது. இதனைக்
D. . .
-C பங்குனி : 2007 )

Page 4
“பகுத்தறிவு என்பது மனிதருக் ஜீவராசிகளில் மனிதருக்கு மட்டும் எவ்வளவுக் கெவ்வளவு தாழ்ந் அவ்வளவுக்கவ்வளவு காட்டுமிரா
வெளியீடு :
கொழும்புத் தமிழ்ச்சங்கம் 7,57 வது ஒழங்கை (உருத்திரா மாவத்தை) கொழும்பு - 06. இலங்கை. தொ.பே : 01 2363759, தொநகல் : 01 2363759 66oodrugs 6T b : www.colombotamilsangam.o
LisatiroTeisefoo : tamilsangamGbsitnet.lk
படைத்தவர்களே படைப்புக்
ஒலை 42 )
 

(3)
கு ஜீவநாடி, உயிர்நாடி ஆகும். )தான் பகுத்தறிவு உண்டு. இதில் த நிலையில் இருக்கிறோமோ ண்டி என்பது பொருள். ”
- ஈ.வெ.ரா.பெரியார் -
efoLinlid : Lp&coIII
அச்சுப்பதிப்பு :
ஹரே பிரினன்டர்ஸ் )rg கொழும்பு - 06
O773165557
கும் கருத்துக்கும் பொறுப்பு.
—( பங்குனி : 2007 )

Page 5
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிந்தனையில் ஈ.வெ.ரா.பெரியார் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. அவை இன்றைய தமிழ்நாட்டு சமூக, அரசியல், பண்பாட்டு, கருத்துநிலைத் தளங்களில் கூட மிகுந்த தாக்கம் செலுத்து பவையாகவே இருந்து வருகிறது.
பெரியார் இந்தியா முழுவதும் 1921 இல் இருந்த இந்துக் கைம் பெண்களின்
எண்ணிக்கையை எடுத்துக் கூறியும், இளம் விதவைகளின் மறுமணத்தை ஆதரித்தும், காந்தி எழுதிய கருத்துகளைச் சுட்டிக் | காட்டியும்; வகுப்பு சாதி வேற்றமையை
எதிர்த்துப் போராடிய அக்கால சமூக சீர்த்திரு த்தவாதிகள் பெண்கள் பிரச்சினையைப் புறக்கணித்து வருவதை விமரிசித்து எழுதியும் பேசியும் வந்தார்.
( ஒலை 42 )
 

"அங்க அமைப்பிலன்றி அறிவின் பெருக்கிலோ வீரத்தின் மாண்பிலோ ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்றத்தாழ்வுகள் வித்தியாசம் இல்லை” விதவைத் தன்மை என்பது “எளியாரை வலியார் அடக்கி இம்சிப்ப தல்லாமல் வேறல்ல” என்றும் பெரியார் கூறி வந்தார். அவர் தானே முன்னின்று விதவை மறுமணம் நடத்தியும் வந்தார்.
"எந்தக் காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்கிற கூட்டம் ஏற்பட்டதோ, எந்தக் காலத்தில் எந்தக் கூட்டத் தார்கள் தாழ்த்தப்பட்டோருக்கு அறிவு வளர்ச்சிக்குரிய சாதனங்கள் இல்லாமல் செய்தனரோ, அக்காலத்திலேயே அந்தக் கூட்டத்தாரா லேயே பெண் மக்களுக்கும் அறிவு வளர்ச்சிக்கேற்ற சாதனங்கள் இல்லாமல்
—( பங்குனி : 2007 D
தெ.மதுசூதனன்
|

Page 6
செய்யப்பட்டுத் தாழ்த்தி அடக்கி வைக்கப பட்டிருக்கிறது” (குடியரசு 12.02.1928). இவ்வாறு பெரியார் தாழ்த்தப்பட்டோரும் பெண்களும் ஏறத்தாழ அடிமை நிலையில் இருந்தார்கள் எனக் கூறிவந்தார். இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட்டு பெண்களின் சுயமரியாதை, சுதந்திரம், விடுதலை பெற்றுவர செயற்பட்டார். பெண்கல்வியின் முக் கியத் துவத்தை பலவாறு பல நிலைமைகளில் எடுத்துரைத்து வந்தார். பெண்விடுதலைக்கு பெண்கல்வி எத்துணை முக்கித்துவமானது என்பதை அறிவார்ந்து சீர்தூக்கி எடுத்துக் காட்டினார்.
அக்காலத்தில் பெண்கள் வாழ்க்கை மிகவும் மோசமாக கொடுமையாக இருந்தது. 1920 களிலேயே பெரியார் விதவை மண ஆதரவு, பெண்களுக்குச் சொத்துரிமை, விவாகரத்து உரிமை ஆகியவற்றைத் தொடர்ந்து வற்புறுத்திப் பேசியும், எழுதியும் வந்தார். அக்காலத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய அநாதரவான பெண்களுக்கான ஒரு விடுதியும் பெரியாரால் நடத்தப்பட்டதாகவும் அறிய முடிகிறது.
தஞ்சை மாவட்ட சுயமரியாதை மாநாட்டில் சின்னராயம்மாள் என்ற 22வயது பெண்ணின் சார்பாக ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஐம்பது வயதான ஒரு ஆணுக்கு மூன்றாவது மனைவியாக வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்ட அப்பெண், கணவன் வீட்டிலிருந்து வெளியேற முயற்சி செய்தாள். ஆனால் அவளது தாயாரும் குடும்பாத்தாரும் பிறரும் சேர்ந்து கணவனின் வீட்டை விட்டு அவள் வெளியேறுவதைத் தடுத்துவிட்டனர். தனக்கு அவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துக் கொடுக்க வேண்டும் என்று அக்கணவன் நிர்ப்பந்தம் செய்து வந்தான். அவள் அவனது விருப்பத்தை நிறைவு செய்ய
( ஒலை 42 )
 
 

C5)
மறுக்கவே, அவளை விபச்சாரி போலக் கருதி கட்டாயப் புணர்ச்சி செய்ய முயன்றான். அக் காரணத்தால் அவள் அங்கிருந்து வெளியேறி பெரியார் நடத்தி வந்த சத்திரத்தில் சரண் புகுந்தாள். இந்தச் சத்திரம் அக்காலத்தில் கைவிடப்பட்ட அலி லது கொடுமைப் படுத் தப் பட்ட பெண்களுக்கான புகலிடமாக கோவை மாவட்டத்தில் பரவலாக அறியப்பட்டிருந்தது.
1928 ஆம் ஆண்டு முதல் சுயமரியாதை இயக்கம் பெண்ணுரிமை குறித்து முறைப் படுத்தப்பட்ட முழுமையான பார்வையைக் கொண்டிருந்தது. பெண்கள் சுயமாகச் சிந்திக்கவும் எழுதவும் பொதுவாழ்வில் தலையிடவும் ஒரு சமூக பண்பாட்டு தளத்தில் இந்த இயக்கம் மிகுந்த தாக்கம் செலுத்தியது. சமூக மாற்றங்களை வேண்டிய ஆளுமைகள் உருவாகத் தொடங்கினார்கள்.
இத்தகைய பின்னணியில் தான் 1940களின் இறுதியிலும் 50களின் தொடக்கத்திலும் தஞ்சை நாகைப்பகுதியின் பல சுற்றுப்புற கிராமங்களில் மணலூர் மணியம்மாள் என்பவர் தீவிரமாக இயங்கி வந்தார். விவசாய தொழிலாள மக்களிடையே புரட்சிகரச் சிந்தனைகளை விதைத்து மாற்றத்துக்கான தளம் அமைத்துக் கொடுத்துச் செயற்பட்டார். சனாதன பிராமணக் குடும்பத்தில் மூன்றாம் தாரத்தின் குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தவர் மணியம்மாள். இவரது இயற்பெயர் வாலாம்பாள் என்பதாக இருந்தாலும், செல்லப் பெயரான மணி என்பதே நின்று நிலைத்தது. அவருடைய பத்தாவது வயதில் நாகபட்டினத்தைச் சேர்ந்த செல்வந்தரான முப்பத்தைந்து வயதான குஞ்சிதபாதத்துக்கு மணி இரண்டாம் தாரமாக மண முடித்து வைக்கப்பட்டார்.
-( பங்குனி : 2007 D

Page 7
பால்ய விவாகம் செய்து வைக்கப்பட்ட மணி தன்னுடைய 27வது வயதில் விதவையாக மணலூர் வந்து தாய் வீட்டில் தங்கினார். அத்திருமணவாழ்வில் அவருக்குக் கிடைத்த ஒரே ஆறுதல், வளம் ஆங்கிலக் கல்வி. வக்கீல் தனது மனைவி மணிக்கு ஆங்கிலம் கற்பிக்க கிறித்துவ திருச்சபையில் பணிபுரிந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்மணியை ஏற்பாடு செய்திருந்தார். இந்தப் பெண்ணுடனான பழக்கம் காரணமாக கல்வியும், சீர்த்திருத்தக் கருத்துக்களும் மணியம்மாளிடம் மிகுந்த செல்வாக்குச் செலுத்தின.
மணியம்மாள் ஒர் ஆளுமை மிக்க சிந்திக்கத் தெரிந்து சுயமான முடிவுகள் எடுக்கக் கூடிய ஒருவராக வளர்வதற்கு அவர் பெற்ற ஆங்கிலக்கல்வியும் அந்தப் பெண்மணியும் காரணமாக இருந்தார்கள். மேலும் அந்தப் பெண்மணி அவ்வவ் பொழுது எழுப்பிய கேள்விகள் அவை சார்ந்த உரையாடல் தர்க்க ரீதியான சுயத்துவத்தை தேடும் நபராக மணியம்மையை உருவாக்கியது.
விதவைக் கோலத்தில் மழிந்த தலையோடு மணலூரில் பூஜை புனஸ்காரமென்று வாழ்வைக
கழிக்கத் தொடங்கிய காலத்தில்தான் கைம்பெண்ணின் வாழ்வை முடமாக்கி மகிழும் சனாதன சமூகத்தின் மீது வெறுப்பும் கோபமும் கொண்டவாராக வெளிப்பட்டார். ஏற்கனவே உள்வாங்கப்பட்ட சீர்திருத்தக் கருத்துகள் மணியை புதிதாக வார்த்தது. ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடவும் புதிய வாழ்க்கை மதிப்பீடுகளின் ஆத்மார்த்த பயணம் நோக்கியும் இவரை ஆட்படுத்தும்
"காலமும் கருத்தும்” சாதகமாக இருந்தது.
அப்பொழுது காந்தி தமிழ்நாட்டுக்கு இரண்டாம முறையாக வருகிறார். தஞ்சைக்கும் வருகை புரிந்த காந்தியை மணியம்மாள் மிகுந்த
( ஒலை 42 )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

C6)
உற்சாகத் துடண் தனது உறவினர் ஒருவருடன் கூடப்போய்ப் பார்த்தார். இந்தச் சந்திப்பு மணியம்மாளின் வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அரசியல் வாழ்வுடன் ஒன்று கலக்கும் துணிவையும் பக்குவத்தையும் கொடுத்தது. சமூகம் சார்ந்த சிந்தனையும் செயலும் அவரை புதிதாகக் கண்டு பிடித்தது. தொடர்ந்து சமூக, அரசியல், விவகாரங்களில் தீவிரமாக ஈடுபடத் தொடங் கினார். தனது இயல்பான செயற்பாட்டின் வேகத்துக்கேற்ப தனது உடை, நடை, பாவனைகளையும் மாற்றிக் கொண்டார்.
மொட்டைத் தலைக்கு முற்றுப் புள்ளி வைக்கிறார். பதினெட் டு முழுப் புடவைக்கு வரிடை கொடுக்கிறார். கிராப் வெட்டிக் கொள்கிறார், நடுவகிடு எடுத்து ஆண்கள் போல் தலை சீவரிக் கொண்டு.
ஆண் களைப் போலவே வேட் டியும் அரைக்கை ஜிப்பாவும் அணிந்து கொண்டு. செருப்பணிந்து குடைபிடித்துக் கொண்டு. மொத்ததில் பெண்ணின் உரிமை வாழ்வுக்குக் கொடியுயர்த்தி வைப்பது போன்ற கோலம் கொள்கிறார். வரவிருக்கும் பெண்ணியவாதி களுக்கு முன்னுதாரணமாக வாழ்வதற்கு தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்கிறார்.
"எனது விருப்பம் போல உடை உடுக்க, நடந்து கொள்ள எனக்கு உரிமை உண்டு, நான் பெண் என்பதாலோ விதவை என்பதாலோ - யாரும் என்னை அவமதிக்க - அடக்கி ஒடுக்கி விட முடியாது. அதை நான் அனுமதிக்கவும் மாட்டேன்” இப்படி புதுக்கோலம் பூண்டதன் மூலம் சொந்த வாழ்வில் தனது உரிமையை நிலை நாட்டத் தொடங்கினார். அதற்காகப் போராடவும் இவள் தயங்கவில்லை.
-( பங்குனி : 2007 )

Page 8
இந்தச் செயற்பாடுகள் சனாதனவாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் இவை எவற்றையும் பொருட்படுத்தாமல் தனது வழியில் உறுதியுடன் தெளிவாகப் பயணத்தை மேற்கொண்டார். தனது சிந்தனையிலும் செயற்பாடுகளிலும் நம்பிக்கை கொண்டார். சனாதனதர்மம் யார் யாரையெல்லாம் சாஸ்திரம் சம்பிரதாயம் என்ற பெயரில் - இந்துமத்தின் பெயரில் - தீண்டத்தகாதவர்களாக, பராபட்சம் காட்டி அடக்கி ஒடுக்கி வந்ததோ அந்த மக்களுடன் சேர்ந்து கொண்டார். அந்த மக்களின் நல்வாழ்வுக்காக விடிவுக்காக உழைப்பதே தனது முழுமுதற்பணியெனக் கருதினார். இதனால் சேரிக்குழந்தைகளைக் சீராட்டி பராமரிப்பதிலும் அவர்களுக்கு ஆரம்பக்கல்வி கற்றுக் கொடுப்பதிலும் ஈடுபட்டார். யாவரும் அறியாமையைப் போக்கி தாமே சிந்தித்து சுயமரியாதையுடனும் சுதந்திரத்துடனும் வாழ் வதற்கான உளவுறுதியை உருவாக்கப் பாடுபட்டார்.
மேலும் சேரி விவசாய மக்களுடன் நெருங்கிப் பழகி வந்தார். இதனால் ஊரில் உள்ள பெரும் மிட்டா மிராசுகள் விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டிய கூலியில் ஒரவஞ் சனையும் பாரபட்சமும் காட்டி அவர்களது உழைப்பைச் சுரண்டி வருவதை நேரில் கண்டார். இந்த நிலைமையைப் போக்குவது நியாயமெனக் கருதினார். முதற்காரியமாக தனது சொந்த நிலத்தில் நடுவானை நீக்கி விட்டுத் தானே விவசாய மேற்பார்வையில் இறங்கினார். தமது நிலத்தில் உழுது பயிரிடும் மக்களுக்கு அள்ளிக் கொடுத்தார். அவர்களது உழைப்பைச் சுரண்டும் கொடுமைக்கு தன்னளவில் தீர்வு கண்டார். இந்தச் செய்கை அவ்வூரின் பெரிய குடும்பங்களில் ஒன்றான பட்டாம்மணியம்பிள்ளையுடன் நேரடியாக
( ஒலை 42 )
 
 
 
 

○
முரண்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பகைமை வளர்ந்தது. இதனால் பல கஸ் டங்களையும் நெருக் கடிகளையும் மணியம்மாள் முகங்கொடுக்க நேரிட்டது.
மணியம்மாள் இவை எவற்றையும் பொருட் படுத்தாது தான் பெண் என்ற பிம்பத்தை மறுத்து தன் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதில் உறுதியாகவும் விடாப்பிடியாகவும் இருந்தார். சமூகத்தின் சனாதன முணுமுணுப்புகளையும் தூற்றல் களையும் துச்சமெனப் புறமொதுக்கி தனது வழியில் சென்றார். தனது சுயபாதுகாப்பு க்காக சேரியில் சிலம்பம் கற்றுத் தேறினார். ஒற்றைக் காளை பூட்டிய வண்டியை தானே ஒட்டிச் சென்று தனது காரியங்களை தானே பார்த்து வந்தார். எவரிலும் தங்கியிராது சுதந்திரமாகக் சிந்திக்கவும் செயற்படவும் திடவுறுதி பெற்றார்.
மணியம்மாள் புரிந்து கொள்ளப்படாமல் உற்றார் உறவினர்களிடையே பெரும் கலக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சற்றும் எதிர்பாராத நெருக்கடி உருவானது. மணலூரில் உள்ள மணியம்மாள் குடும்பத் தாருக்குச் சொந்தமான நிலபுலங்கள்யாவும் பட்டாம் மணியம்பிள்ளைக்கே குத்தகைக்கு விட வேண்டிய நிர்ப்பந்தம் (சதி) அவரது தம்பி முலம் ஏற்பட்டது. மணியம்மாளையும் தாயையும் தன்னுடன் சென்னைக்கு அழைத்துச் செல்ல தம்பி விரும்பினார். ஆனால் மணி அங்கு செல்ல மறுத்து அவ்வூரில் உள்ள புழங்கப்படாத சிறுவீட்டில் தங்கலானார். வண்டிமாடு எல்லாம் இழந்த நிலையில் தன் பயணங்களுக்கு தானே சைக்கிள் ஓட்டப் பழகிக் கொண்டு, ஒரு சைக்கிள் வாங்கி தனது பயணங்களை மேற்கொண்டார்.
—( பங்குனி : 2007 )

Page 9
மணலூர் மணியம்மாள் என்ற பெயரும் புகழும் பரந்து மிகுந்த செல்வாக்குடன் காணப்பட்டது. இவரது செயற்பாடுகள் எங்கும் விரிவு பெற்றன. விவசாய தொழிலாளர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதுடன் அவர்களை அணி திரட் டி போராட வைப்பதிலும் இவர் உறுதியாக இருந்தார். பல வேறு தொழிற் சங்கங்களை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தார். ஆனால் கட்சி அரசியல் அவரது உழைப்பை தமதாக்கியது. அத்துடன் இவருக்கான மதிப்பு, கெளரவம், பதவிகளை வழங்குவதில் ஆண் மேலாதிக்க மனோபாவத்திலேயே கட்சி விளங்கியது. காங்கிரஸ் கட்சிக்குள் புரையோடியிருந்த சனாதனப் பிடியின் இறுக்கத்தை இவர் ஆழமாகப் புரிந்து கொண்டார். விவசாய தொழிலாள மக்களின் நலன்களுக்கு எவ்வாறு முரண்பாடாக எவ்வாறு கட்சி விளங்கிறது என்பதையும் இவர் நேரிலேயே இனங்கண்டார்.
இதனால் மணியம்மாள் இடதுசாரிச் சிந்தனையின் தாக்கத்துக்குள் உள்வாங்க ப்பட்டார். 1940களிலும் 1950களின் தொடக் கத்திலும் தஞ்சை நாகைப் பகுதிகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியானது; மணியம்மாள் கட்சியென்றும், மணியம்மாவின் செங்கொடிக் கட்சி என்றுமே அறியப்பட்டிரு
க்கிறது. அப்பகுதிகளில் சுரண்டப்பட்ட ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்தின் குரலாக அவர்களது உரிமைக்காக ஒலித்த குரலாக மணியம்மா விளங்கி வந்தார். தொழிற்சங்க விவசாய மாநாடுகளிலும் பேரணிகளிலும் கம்பீரமாக மணியம்மாள் பங்கு கொண்டு வந்தார். மேலும் கட்சிப் பணிகளைப் பரவலாக்க திருவாரூரில் ஒரு சிறு அறை எடுத்து தங்கியிருந்தார். அதுவே அப்பொழுது கட்சி அலுவலகமாகவும் அமைகிறது. மணியம்மாள் வெகுசனப் போராட்டங்களை
ஒலை 42 )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

○
தேவைக்கேற்ப ஒழுங்கு பண்ணுவதில் தேர்ந்தவராகவும் இருந்தார்.
மணியம்மாளின் பணிகளை முடக்கி வைக்கும் நோக்கில் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு, கடலூர், வேலூர் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தடைவிதிக் கப்பட்டிருந்தது. இதனால் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள். பலர் தலைமறைவானார்கள் . சங்க உறுப்பினர் பலர் பொலிஸ் அராஜகத்துக்கு ஆளாயினர். கட்சிச் செயற்பாடுகள் மோசமாகப் பாதிப்படைந்திருந்தன.
மணியம்மாள் வேலூர் சிறைச்சாலையில் இருந்த பொழுது கூட அங்கு பெண் கைதிகளின் அநாதரவான குழந்தைகளைக் கொண்ட பிள்ளைக் கொட்டடியின் அவல நிலையைக் கண்டு மனம் வெதும்பினார். அதைவிட சரியான பராமரிப்பும், தக்க உணவின்றியும் பிணியால் பீடிக்கப்பட்டு குழந்தைகள் சர்வசாதாரணமாக மரணமடை வதையும் கண்டு வேதனை அடைந்தார். தானே முன்னின்று அக்குழந்தைகளைச் சிராட்டிப் பராமரித்தார். அக்குழந்தைகளுக்கு சத்துணவு கிடைக்கவும் வழி செய்தார். சிறையில் இருந்த பொழுது கூட மக்கள் நலன் சார்ந்த சிந்தனையும் செயலும் தான் இவரை வழிநடத்தியது.
வேலூர் சிறையில் இருந்து வெளிவந்த பொழுது கட்சி சின்னாபின்னாப்பட்டிருந்
ததைக் கண்டு மிகவும் வேதனையடைந்தார். அனைவரையும் ஒன்று திரட்டும் பணியில் ஈடுபடலானார். கட்சிக்கு விதிக்கப்பட்ட தடையும அப்பொழுது நீக்கப்பட்டது. இதனால் கட்சிப் பணியை இவர் மேலும் தீவிரமாக்கினார். முதிர்ச்சியும் ஆளுமையும் மிக்க தலைவராக
-O பங்குனி : 2007 D

Page 10
கட்சிப் பணியாளராக மேலும் மெருகு பெற்றிருந்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் வருகிறது. மக்கள் பிரதிநிதியாகச் செல்வதன் மூலம் மேலும் சிறப்பாகப் பணி செய்ய இயலும் என்ற நம்பிக்கையில் தேர்தலில் நிற்க இவர் விருப்பம் தெரிவிக்கிறார். ஆனால் கட்சி மேலிடம் இவரைத் தேர்ந்தெடுக்க மறுக்கிறது. இவருக்குள்ள உறுதி, மக்களிடம் உள்ள செல்வாக்கு இவை எதனையும் கருத்தில் எடுக்காமல் இவரை ஓரங்கட்டும் போக்கி லேயே கட்சி முடிவு அமைந்திருந்தது. இருப்பினும் மணியம்மாள் இத் தேர்தலில் கட்சி வெற்றி பெற தீவிரமாக உழைக்கின்றார். கட்சி வெற்றி பெறுகிறது.
ஆனால் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி மணியம்மாளை ஒரங்கட்டும் முயற்சியில்
( ஒலை 42 )
 

தீவிரமாக ஈடுபடுகிறது. ஆனால் இவை எவற்றையும் பொருட்படுத்தாது மனம் சோராது வெகுசனங்களிடையே பணியாற்று கிறார். 1953 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் மணியம்மாள் முழுமையாக ஒதுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்படுகிறது.
மாநாட்டுக்கு முதல் நாள் பூந் தாழங் குடியிலிருந்து பக்கத்து கிராமத்துப் பண்ணை விவகாரம் ஒன்றைத் தீர்த்து வைக்க கிராமத்து மக்களின் அழைப்பின் பேரில் இவர் அங்கு செல்கிறார். பேச்சுவார்த்தைக்குப் பின் விவசாயிகளிடையே விட்டுக் கொடுக்காமல் போராடும்படி உரையாற்றுகிறார். அங்கிருந்து திருவாரூர் செல்ல பேருந்துக்காக சாலையில் காத்திருக்கிறார். அச்சமயத்தில் எவரும் எதிர் பாராத வகையில் அவ்வூரில் வளர்க்கப்பட்ட கொம்பு மானொன்று பாய்ந்து வந்து அவர் முதுகில் குத்தி அவரைச் சரிக்கிறது.
இன்றுவரை இவரது மரணம் விபத்து என்றும் சதி என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவு கின்றன. மணியம்மாளின் இறுதி ஊர்வலத் துக்கு மாநாட்டுக்கு வந்த தலைவர்கள், தொண்டர்கள், தொழிலாள விவசாய மக்கள் என பலதரப்பட்டோர். திரளாக இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டார்கள்.
இருபதாம் நூற்றாண்டு கட்சி அரசியல் வரலாற்றில் அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சுரண்டப்பட்ட மக்களின் அரசியல் வரலாற்றில், வெகுசன அரசியல் மயப்படுத்தலில் மணலூர் மாணியம்மாளின் வாழ்க்கை வரலாறும் பின்னிப் பிணைந்துள்ளது. கட்சி அரசியல் ஆண்நோக்குவயப்பட்ட மேலாண்மையால் பெண்கள் பாத்திரம், அவர்களது பங்களிப்பு எப்பொழுதும் இருட்டடிப்புக்கு உள்ளாக்கப்
-C பங்குனி : 2007 )

Page 11
பட்டு "ஒடுக்கப்பட்ட வரலாறாகவே” எழுதப் பட்டு வரும் அவலம் இன்னும் தொடர்ந்து நீடிக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மணியம்மை கட்சியென்றும் மணியம்மாளின் செங் கொடிக் கட்சியென்றும் கிராம மக்களிடையே அறியப்பட்ட அந்த அம்மாவின் சுவடுகள் தமிழ்நாட்டு சமுக அரசியல் பண்பாட்டு வரலாற்றில் போற்றத்தக்கது. ஆளுமைமிக்கது. செயல்தன்மை மிகு ஆற்றல் வாய்ந்த ஆளுமையாளராகவே இவர் இன்றும் மேற்கிளம்புகின்றார்.
எந்த ஏழை விவசாய மக்களுக்காக காலமெல்லாம் போராடி வந்தாரோ அந்த மக்கள் மணியம்மையின் வரலாற்றை மறந்துவிடவில்லை. இன்னும் இவர் அந்த மக்களின் உணர்விலும் சிந்தனையிலும்
தொடர்ந்து இருப்பவர்.
கோட்ட இடிஞ்சி விழ கொடி பிடிச்சி அம்மா வந்தா சாட்டை அடிக்கும் முன்னே சாகசங்க செய்து வந்தா
 
 

C10)
மதிலுகள் சரிஞ்சு விழ மணியம்மா அங்கே வந்தா பதிலுகள் கேட்டு வந்தா பட்டமரம் தழைக்க வந்தா
ஏழைகுலம் குளிரும் எங்கம்மா பேரு சொன்னா மக்கள் குலம் விளங்கும் மணியம்மா பேரு சொன்னா
நம்பி உழைத்தோருக்கு நாயங்கள் கேட்டு வந்தா கும்பி குளிர வந்தா குரலுகளும் எழுப்பி வந்தா இவ்வாறு இன்றும் நாட்டுப்புறப் பாடல்களில் மணியம்மாளின் பெயர் எழுதப்படிக்கத் தெரியாத ஏழை எளிய மக்களால் பாடல் வரிகளால் பளிச்சிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆம்! அவரது வரலாறு அப்படிப்பட்டது தான்.
காட்டேசவிங்கள் கோபது
-C பங்குனி : 2007

Page 12
‘பாரதி படைப்புக்களில் பெண் நிலைப்பாடு என்ற தலைப்பில், ‘நிலைப்பாடு’ என்பதற்கு, கழகத் தமிழ் அகராதி ‘உறுதிப்பாடு’ என்ற விளக்கத்தை அளிக்கின்றது. தென்னிந்திய தமிழ்ச்சங்க தமிழ் ஆங்கில அகராதி bo)6)[LIT(6' 6T6 rugbibg condition, state, firmneSS என்ற பொருளைத் தருகிறது. ‘condition” என்பதற்கு நிலைமை, தகுதி, படிநிலை, பண்பு என்ற விளக்கங்களையும், ‘State என்பதற்கு வரையறுத்தல் என்ற
( ஒலை 42 )
 

முனைவர் இரா.பிரேமா
ர் பெண நிலைப்பாடு
விளக்கத்தையும் "firmness’ என்பதற்கு உறுதிப்பாடு என்ற விளக்கத்தையும், சென்னைப் பல்கலைக்கழக அகராதி தருகின்றது. எனவே, நிலைப் பாடு என்பதற்கு தகுதி வரையறுத்தல், பண்பு வரையறுத்தல் என்ற பொருள் கொண்டு, பாரதி தம் படைப்புக்களின்மூலம் பெண்களின பண்புகளாக எவற்றையெல்லாம் வரையறுக் கின்றார் என்பதை எடுத்துரைப்பதாக கட்டுரையின் போக்கு அமைந்திருக்கின்றது.
பாரதி காலம் பெண்ணடிமை மிகுந்திருந்த காலம். பெண்கள் கல்வியின்றி, மூடப்பழக்க வழக்கங்களில் சிறைப்பட்டு, சிந்திக்கும் திறனின்றி, அனைத்து நிலையிலும் ஆணைச் சார்ந்து நின்று, தனித்த இயக்கமின்றி, இல்லச் சிறையில், ‘கற்பு’ என்ற சமூக விலங்கு பூட்டப்பட்டு, சமையலறையில் முடங்கிக் கிடந்த காலம். பெண்ணடிமைத்தனம் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினராலும் உணரப்படாத காலம். குறிப்பாக பெண்கள் தாங்கள் அடிமைப்பட்டிருக்கிறோம் என்பதை உணராத காலம். நாட்டில் ஆங்காங்கே தோன்றி சீர்திருத்தவாதிகள் சிலரே, பெண்ணடிமைத்தனத்தை உணர்ந்து அச்சமூகத்தையே வேரோடு பிடுங்க முற்பட்டிருந்த காலம். இத்தகைய காலக் கட்டத்தில் பாரதியார் தம் ஆயுதமாகிய கவிதையின் மூலமாகவும், பிற படைப்பு க்களின் மூலமாகவும், பெண்ணடிமையை
—( பங்குனி : 2007 )
t

Page 13
நீக்க முற்பட்டார். பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சமூகம் விதித் திருந்த கட்டுப்பாடுகள் எங்கும் பரவியிருக்க, பெண்கள் இப்படியும் இருக்க வேண்டும் என்ற நிலைப் பாட்டை பாரதி தம் படைப்புக்கள் மூலம் வரையறுத்திருக்கிறார்.
பெண்கள் தாங்கள் அடிமைப்பட்டிருக் கின்றோம் என்ற உணர்வின்றி அடிமைத் தளையிலேயே ஆழ்ந்து கிடப்பதை உணர்ந்த பாரதியார், பெண்விடுதலை வேண்டின், முதலில் அவர்களுக்கு விழிப்பு ணர்வு ஊட்ட வேண்டுமென்ற முயற்சியை மேற்கொள்கிறார். அதுமட்டுமன்றி, பெண் விடுதலை’ என்பது பெண்களாலேயே முயற்சிக்கப்பட வேண்டும். அப்போது தான் அதற்குச் சக்தி அதிகம் என்பதைப் பாரதி புரிந்துகொண்டு, விடுதலையுணர்வுடைய பெண்களின் மூலம் அவ்வுணர்வை ஊட்டுகின்றார்.
‘இன்று தமிழ்நாட்டில் மாத்திரமேயல்லாது பூமண்டலம் முழுவதிலும் பெண் தாழ்
வாகவும் ஆணை மேலாகவும் கருதி
நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு. அது துன் பங்களுக்கெலி லாம் அஸி திவாரம் ; அநீதிகளுக்கெலி லாம் கோட்டை, கலியுகத்திற்குப் பிறப்பிடம். சகோதரிகளே! ஆறிலும் சாவு; நூறிலும் சாவு; தர்மத் துக் காக இறப் போரும் இறக்கத்தான் செய்கிறார்கள். பிறரும் இறக்கத்தான் செய்கிறார்கள். அதனால் சகோதரிகளே! பெணி விடுதலையரினி பொருட்டாக தர்மயுத்தம் தொடங்குங்கள்”
என விடுதலைப் பெண்கள் மூலம் ஆவேசக் குரலெழுப்பி அடிமைப் பெண்களை
 

ஒன்றிணைக்க முற்பட்டார். இதையே,
“பெண்ணுக்கு விடுதலை நீரில்லை என்றால் பின்னிந்த உலகினிலே வாழ்க்கை இல்லை”
(பாரதி அறுபத்தி ஆறு - 45)
என்று கவிதையின் மூலமும் எளிமையாக உணரவைக்கின்றார்.
பாரதியார் கவிதை / கட்டுரைகளோடு நின்றுவிடாமல், பெண் விடுதலை பற்றிய இயக்கச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டார். அவர், புதுச்சேரியில் தங்கியிருந்த காலகட்டத்தில் தம் வீட்டில் ‘விளக்கு பூஜை என்ற பெயரிலும், “மஞ்சள் குங்குமக் கூட்டம்’ என்ற பெயரிலும் பெண்களை அழைத்து, பூஜை செய்து முடிந்தவுடன் தம் பெண்கள் தங்கம்மா, சகுந்தலா மூலமாகவும் தம் நண்பர் மண்டலம் ஹிநிவாசாச்சாரியார் பெண் யதுகிரியம்மாள் மூலமாகவும், வ.வே.சு.அய்யரின் மனைவி பாக்கிய லட்சுமி மூலமாகவும் தாம் எழுதிக்கொடுத்த அறிக்கைகளை, அவர்கள் எழுதி வாசிப்பதைப்போல் வாசிக்கச் செய்ய வைத்தார். தங்கம்மா, ஒரு நிகழ்வின்போது,
“சகோதரிகளே! நமக்கு அநீதி செய்யும் ஆணி மக்களுடனே நாம் அணி புதி தளைகளால் கட்டுண்டிருக்கிறோம். நமக்கு அவர்கள் அணிணன், தம்பிகளாகவும் மாமன், மைத்துனர்களாகவும் தந்தை பாட்டனாராகவும் கணவர், காதலராகவும் வாய்த்திருக்கின்றனர். இவர்களே நமக்குப் பகைவர்களாக மூணி டிருக் கையிலே, இவர்களை எதிர்த் துப் போர் செயப்ய வேண்டுமென்பதை நினைக் கும் போது என்னுடைய மனம், குருச்ஷேத்திரத்தில்
-C பங்குனி : 2007 )

Page 14
போர்தொடங்கியபோது, அர்ஜூனனுடைய மனது திகைத்தது போல திகைக்கின்றது. ஆண் மக்களை நாம் ஆயுதங்களால் எதிர் தீ தல நினைக் காத காரியம் . அதுபற்றியே சாத்வீக எதிர்ப்பினால் அவர்களுக்கு நல்ல புத்தி வரும் படி செய்யவேண்டும் என்று நான் சொல்கிறேன். இந்த சாத்வீக எதிர்ப்பு முறையை நாம் அனுசரிக்கத் தொடங்க வேண்டுமெனின், இந்தக் காலமே சரியான காலம். இந்த வருஷ மே சரியான வருஷம் . இந்த மாசமே சரியான மாசம். இன்றே நல்ல நாளர் . இநீத முகூர் திதமே நல ல முகூர்த்தம் ,
(பெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள்
செய்யத்தக்கது, பாரதியார் கட்டுரைகள்)
என்று பேசுவது போல் காட்டி, பெண்ணே பெண்களக்கு வழிகாட்டுவது போலவும், துTணி டுகோலாக நின்று, உடனடி செயல்ப்பாட்டுக்கு வித்திடுவதாகவும் காட்டியுள்ளார்.
மேலும், விடுதலைப் பெண்கள் நிமிர்த்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் கொண்டு வீர சுதந்திரம் பெற்றவர்களாய், ‘அச்சமும் நாணமும் நாய்களுக்கு வேண்டும் ' என்று கூறும் நிமிர்ந்த ஞானச் செருக்குடையவர்களாக விளங்கினர். இவ்விடுதலைப் பெண்கள் பாரதியாரின் கற்பனைப் பெண்கள் அல்லர். அவர் நடப்பியலில் கண்ட பெண்கள்தான். சீனப் பெண் 'சியுசின் ', சகோதரி நிவேதிதை, திருமதி அன்னிபெஸன்ட் போன்றவர்களே விடுதலைப் பெண்கள். அவர்கள் மட்டுமல்ல வேதவல்லி அம்மையார், நீதிபதி சதாசிவ
( ஒலை 42 トー
 
 

○
அய்யரின் மனைவி மங்களாம்பிகை போன்றவர்களும் அவர் கண்ட விடுதலைப் பெண்களே. பெண் களை அடித்துக் துன்புறுத்தி மாடுகளைப் போல நடத்தும் வழக்கத்தை மாற்றி, வேதவல் லி அம்மையார் போன்றோர் பூரணசுதந்திரம் பெற்றுத் திகழ்ந்துள்ளனர். கோபாலப்யரின் மனைவி வேதவல்லி அம்மையார், வீட்டின் சமையலறையே கதியாக முடங்கிக் கிடக்காமல், புத்தகம், பத்திரிகை, சாஸ்திர ஆராய்ச்சி, பொதுக்கூட்டம் முதலியவற்றில் நாட்டமுடையவராக விளங்குகிறார். தாம் கண்ட இது போன்ற விடுதலைப் பெண்கள் நாடெங்கும் உருவாக வேண்டுமென்பதே பாரதியாரின் ஆசையாகும்.
ரூஸோ போன்ற பேரறிஞர்களும், காந்தி போன்ற பெருந்தலைவர்களும், பெண்கல்வி என்பது ஆண்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகைகளில் அமைய வேண்டும் என்று கருதினர். தத்துவம், அறிவியல் படிப்புகளெல்லாம் பெண்களுக்குத் தேவை யில்லை. சமயம், நல்லொழுக்கம், இல்ல முன்னேற்றம் இவைகளுக்கான படிப்பே பெண்களுக்குப் போதுமானது என்று நினைத்தனர். ஆனால் பாரதியாரோ பெண்கள் எல்லாத்துறையிலும் வல்லவராக விளங்க வேண்டுமென்றால், அவர்களுக் கென்று தனிக்கல்வி தேவையில்லை என்று நினைத்தார். எனவே, புதுமைப் பெண்களை அவர் படைத்தக் காட்டும்போது,
'சாத்திரங்கள் பலபல கற்பாராம், சவுரியங்கள் பலபல செய்வாராம், மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பாராம், மூடக்கட்டுக்கள் யாவுந் தகர்ப்பாராம்
என்று பாடுகிறார். -C பங்குனி 2007 )

Page 15
ஆணுக்குச் சமமான கல்வித்திறமை பெண்களுக்குப் பொதுப்படையாக ஏற்படும் வரை, ஆண்மக்கள், பெண்மக்களைத் தக்கபடி மதிக்க மாட்டார்கள். தாழ்வாகவே நடத்துவார்கள் ' என்று கூறுகிறார். அதாவது, கல்வியில் சமத்துவம் இல்லா விட்டால் மீண்டும் ஏற்றத்தாழ்வே ஏற்படும் என்று கூறும் பாரதியார், 'தமிழ்நாடு மாதர் சம்பூர்ணமான விடுதலை பெற வேண்டு வராயின் அதற்கு கல்வித்தோணியே பெருந்துணையாம். எனவே கொஞ்சம் கொஞ்சம் பல துறைகளில் பயிற்சி வாய்த்திருக்கும் தமிழ்ச் சகோதரிகள் இரவு பகலாகப் பாடுபட்டு அவ்வவ் துறைகளில் நிகரற்ற தேர்ச்சிப் பெற முயல வேண்டும்' என்கிறார்.
'பெண்கள் அறிவை வளர்த்தால் வையம்
பேதமை அகற்றிடும் காணிர்
(முரசு.10) என்று கூறும் பாரதியார், 'பெண்களுக்கும். ஆணிகளைப் போலவே உயர் தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தி யுள்ளார். 'தேசியக் கல்வி' பற்றிப் பேசும் பாரதியார்,
'இப்பொழுது ரீமதி அன்னிபெஸண்ட், திலகர், இரவீந்திரநாத் தாகூர் முதலிய மகானி கள் பலரையும் சேர்த்துக் கொண டு மீளவும் எழுப்பியிருக்கும் தேசியக் கல்வி முயற்சிகளில் ஏற்கனவே நீதிபதி சதாசிவ அய்யர், பத்தினி ரீமதி மங்களாம்மாள் முதலிய ஓரிரண்டு இந்து ஸ்திரீகள் சர்வகலா சங்கத்தில் ஆட்சி
徽 மண்டலத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால், இது போதாது.
ஒலை 42 )
 
 
 
 

-G14)
தேசியக் கலி வியிலி தமிழ் நாட்டுக் கிளையென ஒரு கிளை ஏற்பட வேண்டும். அதன் ஆட்சி மணி டலத்தில் பாதித் தொகைக் குக் குறையாமல தமிழ் ஸ் திரிகள் கலந்திருக்க வேண்டும். தமிழ் நாட்டு ஸ் திரிகளைச் சேர்த்துக் கொண்டு, அவர்களுடைய யோசனைக ளையும் தழுவி நடத்தாவிடின், அக்கல்வி சுதேசியம் ஆகமாட்டாது ' என்று உறுதியாக நம்பினார்.
பாரதியார் தம் கட்டுரைகளில் வங்கப் பெண் கவிஞர்கள் திருமதி காமினிராய், திருமதி மனக்குமாரிதேவி, திருமதி அரங்கமோகினி தேவி என்பவர்களைச் சுட்டிக் காட்டி, இவர் களின் கவிதைகள் ஆங்கில மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு, அமெரிக்க நாட்டில் போற்றப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் திருமதி பைஜிரஹிம் என்ற அம்மையார் அமெரிக்க மாதர் சங்கங்களில் சென்று உரையாற்றி யதையும் கொலம்பியப் பல்கலைக் கழகத்தில் ‘சங்கீதம்’ பற்றி உரையாற்றி யதையும் குறிப்பிட்டுள்ளார். இப்படி பாரதி கண்ட பெண்கள் கல்வியில் சிறந்தவர்களாக, அதனால் வாழ்க்கையில் உயர்ந்தோங்கி யவர்களாக விளங்கவேண்டும்.
ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்ற கொள்கை பாரதியார் கொள்கை யாவற்றிலும் உயர்ந்த கொள்கையாகும்.
'ஆடவர்க்கு ஒப்பில்லை மாதர், ஒருவன் தன் தாரத்தை வித்திடலாம் தானமென வேற்றவர்க்குத் தந்திடலாம் முற்றும் விலங்கு முறையன்றி வேறில்லை. ' என்று இருந்த காலகட்டத்தில், "ஆணுக்குப்
-{ பங்குனி : 2007

Page 16
பெண் இளப்பில்லை யென்றும், ஆண்க ளோடு பெண்களும் சரிநிகர் சமானம் , என்றும் குரலொலித்தவர் பாரதியார். பாரதியார் படைத்த,
வல்ல சகுனிக்கு மான் பிடித்த நாயகர்தாம்
என்னை முன்னேக்கூறி இழந்தாரா? - தம்மையே முன்னம் இழந்து முடித்து என்னைத் - தோற்றாரா?'
என்று சீறும் புதுமைப்பெண் திரெளபதி யாவாள். இச்சமூகத்தில் "நத்தைப் புழு வைப் போல ஆணும் பெண்ணும் கூடப்பிறக் கிறோம். உடன் பிறந்தவன் ஆண்டான்: உடன் பிறந்தவள் அடிமை. சுவாமி சுத்த அடிமை ஜனங்கள் என்று வருந்தும் பாரதியார், ஸ்திரிகளுக்கு ஐfவணி உணர் டு: மனம் உணி டு: புத்தியுண்டு: ஐந்துப் புலன்கள் உண்டு: அவர்கள் எந்திரங்கள் அல்லர். உயிருள்ள செடிகொடி களைப் போலவும் அல்லர். சாதாதரண ஆண் மாதிரியாகவே தான். புறஉறுப்புகளில் மாறுதல்கள் இருந்தாலும் ஆத்மா ஒரே மாதிரிதான். என்று அறிவற்ற மூட ஐனங்களுக்குப் பெண்களை "சக மனுவழியாக உணர்த்த முற்பட்டுள்ளார்.
ஸர்வ ஜீவ சமத்துவம் - எல்லா உயிர்களும் தம்முள்ளே நிகர் என்பதும், ஸர்வ ஜீவ ஐக்கியம் - எல்லா உயிர்களும் ஒன்றென் பதும் இந்து மதத்தின் வேர்க்கொள்கை என்று கூறும் பாரதியார், "பூரண சமத்துவம் இல்லாத இடத்தில் நாம் ஆண்மக்களுடன் வாழ மாட்டோ மென பெண்கள் உறுதி கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார். பாரதியார் தம் படைப்புக்களில் ஆண் பெண்
C ஒலை 2 D
 
 

சமத்துவத்தை மேலும் பல்வேறு விதமாக எடுத்துரைத்துள்ளார்.
கணிணம் மா என காதலி' என்ற கவிதையில்,
'பாயுமொளி நீயெனக்கு / பார்க்கும் விழி நானுனக்கு ' என்று தொடங்கி 'விரமடி நீ எனக்கு, வெற்றியடி நானுனக்கு ' என்பது ஈறாக பல நிலைகளில் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் சார்ந்து நிற்கும் சமநிலைகளாகப பாவித்து எழுதியுள்ளார். பாரதியார் காசியிலிருந்து தம் மனைவி செல்லம்மாளுக்கு எழுதிய கடிதத்தில் , ' எண் அருமை காதலி செல்லம்மாளுக்கு ' என்று தொடங்கி, 'உன் நண்பன் ' என்று முடித்துள்ளார். மனைவியைத் தோழியாகப் பாவித்த அந்த மனப்பான்மை அவருடைய படைப்புக்க
ளிலும் பிரதிபலித்துள்ளது.
பாரதியார் பெண்ணைப் பாடும் போது பல இடங்களில் அவளைத் தெய்வாம்சம் கொண்ட சக்தியாகவே காட்டுகின்றார்.
'காதல் செய்யும் மனைவியே சக்தி கண்டீர் கடவுள் நிலை அவளாலே எய்த வேண்டும்
(giud floog, 50) என்ற வரிகள் மூலம் மனைவியினால் மட்டுமே வாழ்வில் ஒருவன் உயர்நிலை எய்த முடியும், என்று உணர்த்துகின்றார். பெண்மை தமக்கு இழுக்கு நேரிடும் போதெல்லாம் பொங்கும் வெள்ளமாய், புகையும் தீயாய், குமுறும் எரிமலையாய், சக்தி வடிவமாய் வெடித்துக் கிளம்புவதாகப் பாரதியார் காட்டுகிறார். மாகாளி சக்தி / மூலமகாசக்தி உலகத்தில் மண்டிக் கிடக்கும் நோயையும்,கொலையையும், சொல்ல ஒண்ணாத பீடைகளையும்,
—( ഭദ്രങ്ങി : 2007

Page 17
சாவையும், சலிப்பையும் தீர்ப்பவள். இப்படிப்பட்ட மாசக்தி,
'ஆக்கமும் தானாவாள் - அழிவும் தானாவாள் போக்குவரவெய்தும் புதுமையெல்லாம் தானாவாள மாறிமாறிப் பின்னும் மாறிமாறிப் பின்னும் மாறிமாறிப் போம் வழக்கமே தானாவாள்
(பாஞ்.55) என்று வர்ணிக்கும் பாரதியார், பெண்ணும் இப்படிப்பட்ட புதுமையுடையவள்தான் என்று வியந்து போற்றுகின்றார். உலகத்துத் தீமைகள் மாய்ப்பவள் மாசக்தி என்றால், இல்லத் தீமையை அழித்து மாய்ப்பவள் 'தாய்' என்னும் சக்தி என்கிறார் பாரதியார். அதனால்,
'தாய்க்கு மேலே இங்கோர் தெய்வமுண்டோ "
(பாரதி - அறுபத்தாறு - 46)
எனறும,
‘சக்தி அரளாலன்றோ பிறந்தோம் பார்மேல் '
(பாரதி அறுபத்தாறு - 9) என்றும் பெண்ணின் பெருமையைப் பேசுகின்றார்.
கற்பு என்பதைப் பாரதி, பெண்கள் மீது சமூகம் பூட்டிய விலங்காக உணரவில்லை. அதை அவர், பெருமைக்குரிய ஒன்றாக, பெண்ணைத் தெய்வமாக்கும் பண்பாகப் போற்றுகிறார். அதே சமயத்தில் கற்பைப் பெண்ணுக்கு மட்டும் வற்புறுத்துவதை மட்டும் கண்டிக்கிறார்.
'கற்பென்று சொல்ல வந்தால் - அதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்" என்றும்
'ஆணெல் லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால் அப்பொழுது பெண் மையுங் கற்பழிந்திடாதோ? " என்றும் கேட்கும் பாரதியார், உலகத்து ஆடவர்களைப்
( ஒலை 42 -
 
 
 

பார்த்து, 'அடபரம மூடர்களா! ஆண் பிள்ளைகள் தவறினால் ஸ்திரிகள் எப்படி பதிவிரதைகளாக இருக்க முடியும் ? கற்பனைக் கணக்கப் போட்டுப் பார்ப்போம். ஒரு பட்டணத்தில் லட்சம் ஜனங்கள். ஐம்பதி னாயிரம் பேர் ஆண்கள். ஐம்பதினாயிரம் பேர் பெண்கள். இதில் நாற்பதாயிரம் ஆண்கள் பர ஸ்திரிகளை இச்சிப்பதாக வைத்துக் கொள்ளலாம். குறைந்த பட்சம் நாற்பதாயிரம் ஸ்திரிகள் பர புருஷர்களின் இச்சைக்கு இடமாக வேண்டும் என்று பதிவிரதை' என்ற கட்டுரையில் "ஆணுக்கும் கற்பு வேண்டும் ' என்பதை வேடிக்கையாக உணர்த்தியுள்ளார்.
பாரதியார், பெண்கள் கற்பைப் பேணும் பொருட்டு வீட்டிற்குள் அடைத்து வைக்கும் மூடப்பழக்கத்தையும் கண்டித்துள்ளார். பெண்கள், வீட்டை விட்டு, வெளியே வருவதால் கற்பு போய்விடாது என்று உணர்த்தும் அவர், கற்புடைய பெண்களால் இல்லம் உயர்வதுடன் நாடும் உயரும் என்பதை
'மாதர் தம் கற்பின் புகழினிலே உயர்நாடு
(பாதநாடு - 3)
என்ற அடியின் மூலம் எடுத்துரைக்கின்றார்
காணிநிலம் வேணி டும் " என று
தொடங்கும் பாடலில்,
'பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு பத்தினிப் பெண் வேண்டும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டு தரவேண்டும். என்று பராசக்தியிடம் வேண்டுகிறார். பெண்ணைப் பொறுத்தவரை பாரதியாரின் உள்ளம் ஆண் மைக்கு அப்பாற்பட்ட மானிடப் புதுமையாக வெளிப்பட்டு
-C பங்குனி 2007 D

Page 18
நிற்கிறது. ஆனால், கற்பைப் பொறுத்த வரையில் ' சரிநிகர் பேசினாலும், பெண்ணிடத்துக் கற்பைச் சற்று அதிகம் வலியுறுத்தி, தாம் கொண்ட நெறியிலிருந்து சற்று விலகி, ஆண்ஆதிக்க வசப்பட்டவராகத் தோற்றமளிக்கிறார்.
கற்பைப் போலவே காதலைப் பேசும்போதும பாரதி ஆணின் உணர்வுடன் அதிகம் பேசியுள்ளார். 'காதலினால் மானுடர்க்கு கல்வியுண்டாகும், கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும். ஆதலினால் காதல் செய்வீரா" என்று கூறும் பாரதியார்.
"பாதிநடுக் கல்வியிலே காதல் பேசிப்
பகலெல்லாம் இரவெல்லாம் குருவி போலே காதலிலே மாதருடன் கனிந்து வாழ்ந்தால் இன்பநிலை தானே வந்து எய்தும்
என்றும்
‘விட்டு விட்டுப் பல லீலைகள் செய்துநின்
மேனி தனைவிடல் இன்றி. முத்தம் இட்டுப் பல முத்தமிட்டுப் பல முத்தம் இட்டு உனைச் சேர்ந்திட வைத்தேன். '
(வள்ளிப்பாட்டு - 3)
என்றும், பெண்களை ஆணின் போகப்
பொருளாய்ப் படைத்துக் காட்டுகிறார்.
அத்துடன்,
t "கொஞ்சு மாதரும் கூட்டுண்ணும் கள்ளும்
இச்சகத்தினில் இனபங்க ளன்றோ
இவற்றின் நல்லின்பம் வேறொன்றும் உண்டோ?
(தனிப்பாடல்கள்-1)
என்ற அடிகள் மூலம் பெண்ணை அறிவை மயக்கும் கள்ளுடன் ஒப்பிட்டுப் பேசி, பெண்ணின்பத்தை விட நல்லின்பம் வேறு உண்டோ எனக் குதூகலித்துள்ளார்.
( ஒலை 42
 
 

○
பாரதி விடுதலைப் பெண்களுக்குச் சில சமூக உரிமைகள் வேண்டும் என்று கருத்துரைத் துள்ளார். அவற்றைப் பட்டியலிட்டும் காட்டியுள்ளார்.
* பால்ய மணம் கூடாது. பெண்களை ருது ஆனதற்குப் பின்னரே மணம் முடிக்கவேண்டும்.
* பெண்கள், தாங்கள் விரும்பியவரை மணம் செய்து கொள்ளும் உரிமைப் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் மனதிற்குப் பிடிக்காத ஒருவரை வற்புறுத்தி மணம் செய்விக்கக் கூடாது.
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்"
(பெண்கள் விடுதலைக் கும்மி-5)
எனப்பாரதி விடுதலைப் பெண்கள் பாடுவதா கக் காட்டியுள்ளார்.
* திருமணத்திற்குப் பிறகு கணவன் பிடிக்காதபோது, அவரை விட்டு விலகும் உரிமை பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் அறியாமை என்னும் பேரிருளில் மூழ்கிக் கணவர் செய்யும் கொடுமைகளை எல்லாம் சகித்துக் கொண்டு வாழ வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.
'மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில் மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார் அதை வெட்டி விட்டோ மென்று கும்மியடி’
(பெண்கள் விடுதலைக் கும்மி-12) என வீரக்குரல் கொடுக்கின்றனர் புதுமைப் பெண்கள்.
────────────────────────────────( பங்குனி : 2007

Page 19
* பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும். பெண் பெறும் பொருளாதாரச் சுதந்திரம், அவளை, இல் லத்திற்குள் சரிநிகர் சமானமாக்கும். எனவே, தந்தையின் சொத்தைப் பெண்களுக்கும் பங்கிட்டுத் தருதல் வேண்டும் என்கிறார் பாரதியார்.
* கணவனை இழந்த மகளிர்க்கு மறுமணம் செய்து கொள்ளும் உரிமை வேண்டும். அந்த விடுதலை அவர்களுக்கிருந்தால் பிற விடுதலைகளும் தானே வந்து சேர்ந்துவிடும் என்கிறார் பாரதியார். அவர், சந்திரிகையின் கதையில் அணினி கோமதி, தன் நாத்தனாரிடம் இறக்கும் தருவாயில் விதவை மறுமணம் அடாதகாரியமல்ல என்று எடுத்துரைப்பதாகச் சுட்டியுள்ளார்.
‘விசாலாட்சி. நீ விவாகம் செய்து கொள். விதவா விவாஹம் செய்யத் தக்கது. ஆணி களும் , பெணி களும் ஒருங்கே எமனுக்குக் கீழ்ப் பட்டிருக்கிறார்கள். அதனாலி ஆணி களுக்குப் பெணி களர் அடிமையில் லை. ஆணி மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுய நல சாஸ்திரத்தைக் கிழித்துப் போட்டுவிட்டு, தைரியத் துடண் சென்னைப் பட்டிணம் சென்று, கைம்பெண் விவாகச் சபையோ ரைக் கண்டுபிடித்து, அவர்கள் மூலமாக மணம் செய்து கொள் ' என்று அறிவுறுத்துகிறாள். இதன்மூலம் சாஸ்திரங்கள் என்பன ஆண்கள் எழுதி வைத்த சுயநல படிவங்கள் என்று எடுத்துரைத்துள்ளார்.
* மறுமணம் செய்து கொள்ள விரும்பாத பெண்கள் தனியே வணிகம் தொடங்கவோ கைத்தொழில் செய்து சுயமாக வாழ்வத
( ஒலை 42 ) is
 

C18)
ற்கோ உரிமைப் பெற்றிருக்கவேண்டும்.
* பெண்கள் தம் கணவரைத் தவிர அந்நிய ஆடவர்களுடன் பேசக் கூடாது, பழகக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் ஒழிந்து, பெண் சுதந்திரமாக யாருடனும் பழகவும், பேசவும் இடம் தரவேண்டும்.
* பெண்களுக்கு ஆண்களைப் போல உயர்கல்வி கற்கும் உரிமை, கல்வியின் எல் லாக் கிளைகளையும் படிக் கும் உரிமையும் நல்கப்பட வேண்டும்.
* பெண்களுக்கு அரசியலில் ஈடுபடும் உரிமை வேண்டும். சட்டரீதியாகவே அவர்கள் அவ்வுரிமையைப் பெற்றிருப்பது நலம் என்பது பாரதியாரின் கருத்தாகும். 'இந்து ஸ் திரிகள் இராஜ்ய விவகார ங்களில் தலையிட்டால் அனிபெஸண்ட்டு க்குச் சமானமாக வேலை செய்வார்கள். சரோஜினி நாயுடு எவ்வளவு தைரியமாகப் பேசுகிறார்கள்: பார்த்தீர்களா? " என்று கூறும் பாரதி, துருக்கி பெண்கள் போராடிப் பெற்ற சுதந்திரத்தையும் (படுதா போடுவதிலிருந்து விடுதலை), இங்கிலாந்து பெண்கள் பெற்ற வாக்குரிமையையும் சுட்டிக்காட்டி, இந்திய தேசப் பெண்களும் இது போன்ற விடுதலை பெற வேண்டும் என்கிறார்.
பாரதியார், பேசியுள்ள மேற்கூறிய விழிப்பு ணர்வு, பெண்கல்வி, சரிநிகர் சமானம், பெண் சக்தி, கற்பு, காதல், பெண்ணுரிமை இவைப் பற்றிய கொள்கைகளை ஆராயும் போது, பெண்களைக் கீழ்க்கண்டவாறு அவர் நிலைப்படுத்தியுள்ளார் என்ற முடிவுக்கு வர இயலுகின்றது.
—( பங்குனி : 2007 )

Page 20
* பாரதி, பெண்களை இல்லறத்தில் நிலைப்படுத்தியுள்ளார். ஆனால், காலம் காலமாக இருந்து வந்த அடிமை இல்லற வாழ்விலிருந்து பெண்களை மீட்டு, அவர்கள் சுதந்திரமாக இல்லறத்தை நல்லறமாக செயல்ப்படுத்த வழிப்படுத்தியு ள்ளார். பெண்களுக்கு காதலிக்கும் உரிமை, கணவனைத் தெர்ந்தெடுக்கும் உரிமை, கணவன் பிடிக்காத போது விட்டுவிலகும் உரிமை என்ற உரிமைகளோடு ஆடவர் களின் சகதோழியாக, காதலியாக இல்லற த்தில் நிலைநிறுத்தியுள்ளார். எனவே, பாரதியைப் பொறுத்தவரை இல்லறத்தில் சீர்திருத்த நிலைப்பாடு என்ற கருவியை எடுத்துக் கொண்டுள்ளார்.
* பாரதியின் பெண்கள் புதுமைப்பெண்கள், ஆனால் புரட்சிப் பெண்கள் அல்ல. ஏனெனில், பெண் விடுதலையைப் பொறுத்த வரை, பாரதியார் போக்கு மிதவாதப் போக்காகும். பெண்ணுக்குக் கல்வி, தொழில், அரசியல் என்ற உரிமைகள் உண்டு என்று கூறும் அவர், பெண் விடுதலையை, முன்னேற்றம், சுதந்திரம், உரிமை என்கிற மூன்று பரிமாணங்களில் நிலைப்படுத்தியுள்ளார். பெண் திருமணம் இன்றி வாழ இயலும். அவள் விரும்பினால், அவளை அப்படியே விட்டுவிடலாம் என்று ஓரிடத்தில் மட்டும் கூறும் பாரதியார், பெண்ணுக்குத் திருமணமே உகந்தது என்பதைப் பல இடங்களில் பேசியுள்ளார்.
'காதல் ஒருவனைக் கைப்பிடித்து - அவன் காரியங்கள் யாவினும் கைகொடுத்து என்ற வரிகள் பாரதியாரின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் வரிகளாகும்.
i
C pos42O
 
 
 
 
 
 

-C19)
* பாரதியார் தான் முதன் முதலில் அனைத்து நிலைகளிலும், ஆண் பெண் சமம் என்று எடுத்துரைத்தவராவார். ஒரு கட்டுரையில் வேதவல்லி அம்மையார் கூற்றின் மூலம், 'ஆணைவிடப் பெண்ணு க்குப் புத்தி அதிகம் என்றும், தைரியம் அதிகம் என்றும் பேசினாலும், கண்கள் இரண்டும் போல - ஆண் பெண் இருவரும் சமமானவர்கள் ' என்பதே பாரதியாரின் கருத்தாகும்.
* பாரதியார் பெண்களை சாத்வீகமாகப் போராடவேண்டும் என்கிறார். பெண்கள் புரட்சியென்ற பெயரில் ஆயுதத்தைக் கையிலெடுக்கக் கூடாது என்கிறார். ஆடவர்களிடத்தும் தம் உரிமையை வெளிப்படையாகப் பேசி உணரவைக்க வேண்டும் என்கிறார். எனவே பெண்ணுக்கு ஆணின் கொடுமைகளை எதிர்த்து வெளிவரும் உரிமை உண்டு என்றாலும், அவள் அதை கடைசி ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தினை அவர் கொண்டுள்ளார்.
* பதிவிரதை, பத்தினி, கற்பு என்ற கொள்கையில் பாரதிக்கு பிடிமானம் உண்டு. ஆணிடத்துக் கற்பை வலியுறுத்தினாலும், பெண் கற்பு பேணப்பட வேண்டும் என்பதை பலவிடங்களில் சுட்டிக்காட்டி, அவளைப் பண்பாட்டுத் தளத்திலேயே நிலைநிறுத்தி யுள்ளார். இதை மணி னுக் கேற்ற பெண்ணியமாக் உணரலாம். என்றாலும், பெண் வேண்டும் என்று கேட்காமல், பத்தினிப் 'பெண் வேண்டும ' என்ற அவரின் ஆணாதிக்க நிலைப்பாட்டைச் சுட்டாமல் இருக்க இயலாது. அது போல 'பெட்டைபுலம்பல் ' என்ற இடத்திலும்
-C பங்குனி : 2007 )

Page 21
அவரிடத்து ஆணாதிக்க உணர்வு தலைதுாக் கியுள்ளதைக் காணலாம்.
* பெண்ணை ஆணின் போகப் பொருளாக மட்டும் பார்க்கும் பிற கவிஞர்களிலிருந்து பாரதி விலகி வந்து பெண்ணை சக உயிரியாக நிலைப்படுத்தினாலும், அவளை ஆணின் போகப் பொருளாகப் பார்க்கும் பார்வையிலிருந்து முற்றிலும் அவர் விலகி வரவில்லை.
* பாரதி தம் படைப்புக்களில் பெண்ணை இல்லத்தில் நிலைநிறுத்திப் பார்த்த அளவு, சமூகத்தில் நிலைநிறுத்திப் பார்க்கவில்லை.
 
 
 
 
 
 
 

i
G20>
* திரெளபதி பாரதியார் பெண் நிலைப் Listiq6 LDT.gif 6.196JLDITB (Role Model) காட்சி அளிக்கிறாள். அறிவு/துணிவு/வீரம்/ பத்தினித் தன்மை/உரிமையை நிலைநாட்ட முற்படல்/ஆணுக்குச் சமமாகத் தன்னை உணர்தல்/மனக்கருத்துக்களை மறைக்காது முன்வைத்தல் என்ற அனைத்துப் பரிமாண ங்களிலும் திரெளபதி பாரதியின் புதுமைப் பெண்ணே.
* இறுதியாக, பாரதி பெண்ணை சகமனு வழியாக / உயிரியாக சுமார்80 விழுக்காடு நிலைப்படுத்தியுள்ளார் என்றாலும் அவரிட த்தும் ஆணாதிக்க நோக்கு அவ்வப்போது தலைதூக்கி, சுமார்20 விழுக்காடு பெண்ணை ஆணின் சார்பில் நிலைநிறுத்தியுள்ளார் என்பதே இக்கட்டுரை தரும் முடிபு.
பங்குனி : 2007

Page 22
நாட்டார் பாடல்களில் எதிர்ப்புக் குரல்கள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை எழுத்து மரபானது தமிழ்ச் சமூகத்தில் மிகச் சிறுபான்மையினரான உயர்குழாத் தினரிடமே காணப்பட்டது. சூத்திரர்களு க்கும் பெண்களுக்கும் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு உரிமை இருக்க வில்லை. சாதி, அந்தஸ்து, பால்நிலை காரணமாக கல்வியறிவு மட்டுப்படுத்தப் பட்டிருந்தபோது சாதாரண பாமரமக்கள், கரிராமரிய விவசாயிகள், பெண் கள் போன்றோரது இலக்கிய வெளிப்பாடுகள் வாய்மொழி ஆக்கங்களாகவே வெளிப்படு த் தப்பட்டுள்ளன. குறிப்பாக வாய் மொழிப் பாடல்களை இயற்றுவதில் பெண்கள் முக்கிய பங்கு வகித்ததால் இவ்வாய் மொழிப் பாடல்களினூடாக தமிழ்ச் சமூகத்தில் பெண்களது அந்தஸ்து, பங்கு நிலை, பெண்கள் பற்றிய சமூகக் கண்ணோட்டம் என்பவற்றை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
சாதாரண பாமர மக்களிடையே வாய் மொழியாக வழங்கிவந்த நாட்டார் பாடல்களை ஆண் களது பாடல்கள், பெண்களது பால்கள் என வேறுபடுத்தி அடையாளம் காண்பதென்பது சிக்கலான ஒன்றாகும். ஒப்பாரி, தாலாட்டுப் பாடல்களே பெண்களுக்கென்று சிறப்பாக அமைந் ததாகவும் பெண்களது படைப்புக்கள் என்பதை சந்தேகமற உறுதி செய்வ தாகவும் அமைகின்றன. எனினும் காதல, விளையாட்டு, தொழிற் பாடல் களில் பெண் களின் பங்களிப்பினை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அந்த வகையில் பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலை
( ஒலை 42 )
 
 
 
 
 
 
 

கி.வானதி:
களிலும் பெண்கள் தமது உணர்வுகள், விருப்பு வெறுப்புக்களை வாய்மொழிப் பாடல்கள்மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
எதிர்ப்புணர்வு, எதிர்ப்புக் குரல்கள் என்பன சமூகத்தில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை தம் ஆதிக்கத்திற்கு உட்படுத்தி அடக்கியாள முனையும்போது வெளிப்படு வதாகும். அந்த வகையில் சாதாரண எழுத்தறிவற்ற பெண்களும் எதிர்ப்புக் குரல் கொடுக்க முனைந்தனர். பெண் என்பவள் பெண்மை, மென்மை நிறைந்தவளாக கற்புள்ளவளாக இருக்க வேண்டும். எனவும் கணவனை எதிர்த்துப் பேசக் கூடாது எனவும் 96.6TTg, 56 foes 6T is வீட்டுவேலை, சமையல், பிள்ளைப்பேறு, குழந்தைபராமரிப்பு என்பனவே அமைந்
-C பங்குனி : 2007

Page 23
திருக்க வேண்டும் எனவும் ஆணாதிக்க நோக்கிலமைந்த கருத்து நிலைகள் வலுப்பெற்றுள்ளன.
இவ் வரையப்படாத சட்டங்கள் மூலம் பெண்களின் உரிமைகள், உணர்வுகள் அடக்கப்பட்டபோது அவை எதிர்ப்புக் குரல்களாக வெளிப்பட்டன. இவ் எதிர்ப்புக் குரல்கள் ஆணாதிக்க நோக்குடைய கணவனுக்கு எதிராக மட்டுமன்றி பெண் பிள்ளைகளை ஒரு சுமையாக நினைத்து அச்சுமையை இறக்கிவிடும் நோக்கில் கடனுக்காக மணம் முடித்துக் கொடுக்கும் பெற்றோருக்கும், புகுந்த வீட்டில் துன்பம் விளைவிக்கும் மாமி, மைத்துணி போன்ற பெண்கள், ஒரு பெண்ணின் குடும்ப வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தும் சக்களத்தி, தொழில் செய்யும் இடங்களில் வேலைக்குத் தகுந்த ஊதியம் தராத முதலாளி வர்க்கத்தினர், பாலியல், ரீதியான பலாத்காரம், சேட்டைகள் செய்ய முற்படுவோர் எனப் பலவகைப்பட்டவர் களுக்கு எதிராகவும் குரல் கொடுக்க முனைகின்றனர். இவ் எதிர்ப்புக் குரல்கள் ஆண்களுக்கு எதிரானதாக மட்டுமன்றி துன்புறுத்தும் பெண்களுக்கு எதிரான தாகவும் அமைகின்றது. இன்றைய பெண்ணிலைவாதிகள் ஆணாதிக்கத்திற்கு எதிராக முன்வைக்கும் கருத்துக்களின் சாயலை சாதாரண எழுத்தறிவற்ற கிராமியப் பெண்களின் எதிர்ப்புக் குரல்களில் காணலாம். செந்நெறி இலக்கியங்களை விட நாட்டார் பாடல்களிலேயே இவ் எதிர்ப்புணர்வு கூடுதலாக வெளிப்படுத்தப் படுகின்றது.
வீடு சார்ந்த வேலைகள் அனைத்தும் பெண்களுடையவை என்ற கருத்து பழங்காலந்தொடக்கம் நிலவி வருகின்றது. சமையல், துணிதோய்த்தல், குழந்தை பெறுதலும் பராமரிப்பும், வயோதிபர் களையும் கவனித்தல் போன்றன பெண்ணிற்குரிய இயற்கையான கடமை
( ஒலை 42 )
 

C22)
யாக கருதப்படுகின்றன. சமைக் கத் தெரியாத பெணி குடும் பத்துக்கு உகந்தவளாக கருதப்படுவதில்லை. வீடு சார்ந்த கடமைகளைச் சரிவரச் செய்யத் தெரியாத பெண்கள் புகுந்த வீட்டாரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவதுடன் கணவனின் துன்புறுத் தல களுக்கும் உள்ளாவதைக் காணலாம். இவ்வாறு துன்புறுத்தல்களுக்கு ஆளான பெண்கள் தங்கள் கணவனின் ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டு காலமெல்லாம் அடிமைப்பட விரும்பவில்லை. தங்களை அடிமையாக வாழக் கட்டாயப்படுத்திய சட்டத்தினையோ தாலியையோ பொருட்டாக மதிக்கவில்லை. பழமையான சட்டங்கள், சம்பிரதாயங்கள், அனைத்தையும் எதிர்க்கத் துணிகின்றனர். செந்நெறி இலக்கியங்களில் வடிவமைக்க ப்பட்ட பெண் பாத்திரங்கள் யாவும் பெண்மை பற்றி ஆண்கள் நிறுவியுள்ள கருத்துநிலைக் கேற்பவே படைக் கப் பட்டுள்ளன. அதாவது கணவனே கண் கண்ட தெய்வம், கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் எனக் கருதுகின்ற பெண்களாகவே பெரும்பாலும் வடிவமைக்கப்பட்டனர்.
ஆனால் நாட்டார் பாடல்களில் வருகின்ற பெண்கள் செந்நெறி இலக்கியங்களில் வருகின்ற பெண்களைப் போன்றவர்களல்ல. சாதாரண கிராமத்துப் பெண்களான இவர்கள் கணவனாலோ கணவன் வீட் டாரினாலோ துனர் பங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளானபோது செந்நெறி இலக்கியங்களில் வருகின்ற பெண்களைப் போல் பேசாமடந்தைகளாக இருந்து அடங்கி அடிமைப்பட்டுப் போகாது அவர்களுக்கு எதிராக எதிர்ப்புக் குரல் கொடுக்க முனைகின்றனர் . இத்தகைய எதிர்ப்புக்குரல்களுக்கு சிறந்த எடுத்துக் காட்டாக சேலம் மாவட்டப் பாடல்களைக் கூறலாம்.
தென்பாண்டி நாட்டில் உழவர் சாதியினரிடம்
—( பங்குனி : 2007 )

Page 24
戀事
t
இ'
அறுத்துக் கட்டும் வழக்கம் நெடு நாட்களாக இருந்து வருகின்றது. குடும் பத்தில் ஒற்றுமை, குறைவதாலோ, குழந்தை இல்லாதாலோ, ஆணோ, பெண்ணோ துர்நடத்தை உள்ளவராக இருந்தாலோ, சமூக வழக்கப்படி அவர்கள் விவாகரத்துச் செய்து கொள்ளலாம். ஆனால் மணமுறிவு கோருபவர்கள் தீர்த்துக் கட்டும் கூலி செய்து அறுப்புப் பணத்தை முதற்கணவ னுக்குக் கொடுத்துவிட வேண்டும். இதைக் கொடுக்க முடியாதவர்கள் ஏராளமாக இருப்பதால் மணமுறிவு செய்து விடுதலை பெறமுடியாத நிலையும் பெண்களுக்கு ஏற்படுகின்றது. எனவே மணமுறிவு கருத்தளவில்தான் பெரும்பாலும் உண்டு. இருப்பினும் சில பெண்கள் துன்புறுத்தும் கணவனுக்கு எதிராக குரல்கொடுப்பதோடு அவன் கட்டிய தாலியையும் துச்சமாக மதித்து அதனை அறுத்தெறிவதைக் காணலாம் . சேலம் மாவட்டத் தில் வழங்கிவரும் பாடல் ஒன்றில் திருமண மானது தொடக் கம் கணவன் தனி
மனைவியின் சமையலைக் குறை கூறி
வருகின்றான். அவள் எவ்வளவு முயன்று ஆர்வத்தோடு சமைத்தாலும் அவனுக்குக் திருப்பதி ஏற்படவில்லை. இதனால் வெறுப்புற்ற அவள், "குத்தின அரிசி உரலிலே கொளிச்ச அரிசி மொறத்திலே ஆக்கின சோத்துக்கு உண்ணாமை பேசின Obsmu-m uDTuom e-stitsm6\!"
எனத்தாலியை அறுத்தெறிகின்றாள். சட்டப் படி கட்டவேண்டிய அறுப்புப் பணத்தைக் கட்டும்படி அவன் கேட்ட போது அவள் பெண்களை அடிமையாக் வாழக் கட்டாயப்படுத்தும் பழமையான சட்டங்களையும் எதிர்த்துக் குரலி கொடுக்கின்றாள். "கச்சேரிக்கும் வரமாட்டன் போடா கட்டி இழுத்தாலும் நான் வரல்ல
ஆக்கின சோத்துக்கும் உண்ணாமை பேசின | GësrTLIT DITLon d editsT69”
( ஒலை 42 )
 

இப்பாடலினுடாக சாதாரண கிராமத்துப் பெண் ஒருத்தி தாலி பெண்களுக்கு வேலி, புனிதப்பொருள் எனக் கருதப்பட்டு வந்து பழமையான கட்டுக்கள், தாலி பற்றிய கருத்தாக்கம் யாவற்றையும் தகர்த்தெறிய முற்படுவதைக் காணலாம். தமிழ்ச் சமூகத்தில் ஒருதாரமணமே இலட்சியத் துக்குரியதாக இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் ஆண்கள் இரு பெண்களை மணம் முடிப்பதையும் தம் மனைவியரை விட வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதையும் காணலாம். ஆண்க ளுக்கான இச் சலுகை பெண் கள் விடயத்தில் இறுக்கமானதாகக் காணப்படு கின்றது. பெண் என்பவர் கற்புள்ளவளாக இருக்கவேண்டும். தனது கணவனைத் தவிர பிற ஆடவனை மனதாலும் நினைக்கக கூடாது என்ற கருத்து நிலையே காணப்படுகின்றது. பெண் சுய விருப்பமின்றி ஆணினது பலாத்காரத்திற்கு ஆளானால் கூட சமூகம் அவளையே குறை கூறுவது டன் அவளுக்குக் கடுமையான தண்டனை யையும் கொடுப்பதைக் காணலாம். ஒரு தலைப்பட்சமான, அநீதியான இந்தக் கற்பு, ஒருதாரமணக் கொள்கை பெண்ணின் பாலியலைக் கட்டுப் படுத்துவதற்கு இடமளிப்பதுடன் முதல் மனைவியின் உரிமையில் தலையிடுவதாகவும் அவளுக்கு மனிதாபிமானச் சிக்கலை ஏற்படுத்துவதாகவும் அமைகின்றது. இதனால் தன்னை அவமதித்து விட்டு கணவன் வேறொரு பெண்ணை நாடிச் சென்றதும் அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கண்ணகியைப் போல் பரத்தையிடம் சென்ற கணவனுக்குப் பொருள் கொடுக்கவோ நளாயினையைப் போல் கணவனைக் கூடையில் வைத்துச் சுமந்து பரத்தையிடம் கொண்டு செல்லவோ இச் சாதாரண கிராமத்துப் பெண்ணால் முடியவில்லை. "என்னைய விட்டுட்டு இளைய தாரம் கட்டினையே போற வழியில் உன்னைப் பூநாகம் திண்டாதோ"
—( ഭിന്ദ്രങ്ങി : 2007 )

Page 25
என கணவனுக்கு எதிராகக் குரல் கொடுக் கின்றாள். கணவனை இழந்த பெண்கள் சமூகத்தில் அனுபவிக்கும் அவலங்களை அவள் உணராத வளல்ல. எனினும் தன்னை ஒதுக்கிய கணவன் வாழ்வதை விட சாவது மேல் என நினைப்பது கணவன் மேலி அவள் கொணர் ட வெறுப்பையே காட்டுகிறது.
சமூகத்தில் ஆண் களது அந்தஸ்து, சொத்துரிமை, உடல் வலிமை காரணமாக வயதுசென்று, தாரமிழந்த ஆண்களை இளம் பெண்களுக்கு மணம் செய்து கொடுக்கும் வழக்கம் அண்மைக் காலம் வரை காணப்பட்டது. திருமணத்தின்போது பெண் ணினி விருப்பு வெறுப்புக்கு மதிப்பளிக்கும் வழக்கம் குறைந்தளவே காணப்படுகின்றது. ஒரு பெண் தன் மனதிற்குகந்தவனைக் கைப்பிடிப்பதற்கு சமூகத்தில் அவள் பல தடைகளை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. அதுவும் பொருளாதார வசதியற்ற கீழ்மட்டத்தைச் சார்ந்த பெண்ணாயின் அவளின் துன்பம் சொல்லும் தரமற்றது. சில பெற்றோர் சொத்துக்கு ஆசைப்பட்டு மகளின் விருப்பு வெறுப்புக்களைச் கருத்திற் கொள்ளாது தாரமிழந்தவனுக்கோ, வயோதிபனுக்கோ மனம் முடித்துக் கொடுக்கின்றனர். இத்தகைய சந்தர்ப்பத்தில் சாதாரண கிராமத்தில் பெண்கள் கொருந்தா மணத்தை எதிர்த்துக் குரல் கொடுக்க முனை கின்றனர்.
*தங் கதி தயரிலாவைத் தாறனெணி டு சொன்னாலும் தார மரிழந்தவனுக்கு நான் தாரமாகப் போறதல்லை.”
இப்பாடலில் தாரமிழந்தவனுக்கு வாழ்க்கை ப்பட விரும்பாத அப்பெண் திருமணத்தில் தனக்கு இவர் டமிலி லை என்பதை எடுத்துக் கூறுகின்றாள். பெற்றோரின் நிர்ப்பந்தத்தினால் இரண்டாம் தாரமாகவோ, வயோதிபனுக்கு மனைவியாவதையோ
( ஒலை 42 ) so
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெண்கள் இத்தகைய பொருந்தா மணத்தை எதிர்த்துக் குரல் கொடுப்பதையும் as Te00T6)Tib.
"நாணலுத் தட்டை போலி நரைச் ச கிழவனுக்கோ கோவைப் பழம் போல குமரி வந்து வாச்சனல்ல" 'தங்கத்தால் வேட்டி கட்டி சருகையால் சால்வை போட்டு செருப்பில் நடந்தாலும் அவரைச் சேரமனம் சொல்லுதில்லை"
இப்பாடல்கள் யாவும் பொருந்தா மணத்தை எதிர்க்கும் பெண்களின் எதிரொலிகளே.
சமூகத்தில் பெண்களுக்கு எதிரான அடக்கு முறைத் தந்திரோபாயமாக பாலியல் ரீதியான சேட்டைகள் அதாவது பெண்ணின் அந்தரங்க உறுப்புக்கள் பற்றிய கேலி, பழிப்பு, விரசவார்த்தைகளைப் பிரயோ கித்தல், பலாத்காரம் என்பன கையாள ப்பட்டு வந்துள்ளது. இதனால் பெண்கள் தங்களது பிற கடமைகளைச் செய்வதற்கு சுதந்திரமாக வெளியில் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. இந்த இம்சை ஆதிமுதல் இற்றைவரை தொடர்கின்றது. பெண்கள் வீதியிற் செல்லும்போது குனிந்த தலை நிமிராமல் செல்ல வேண்டும். ஆண்கள் எத்தகைய பழிப்புக்களையோ விரச வார்த்தைகளையோ பிரயோகித்தாலும் அவர்கள் அதைக் கண்டும் காணாதவர் களாக, கேட்டும் கேட்காதவர்களாகச் செல்ல வேண்டும் எனச் சமூகம் எதிர்பார்க்கின்றது. இதனால் பெண்களும் வாய்மூடி மெளனிகளாகவே சென்றுவிடுகி ன்றனர். ஆனால் சாதாரண கிராமியப் பெண்கள் சிலரால் இத்தகைய இம்சைக ளைப் பொறுத்துக் கொண்டிருக்க முடிய வில்லை. பாலியல் ரீதியான சேட்டைகள், விரசவார்த்தைகள் பேசும் ஆண்களுக் கெதிராகக் குரல் கொடுக்கின்றனர்.
-C பங்குனி : 2007

Page 26
வீதியால் செல்லும் ஒரு பெண்ணிடம் ஒருவன் அவளது பால் உறுப்புக்களை வர்ணித்துக் கேலி பேசுகின்றான். அதாவது
"மார்பளவு தண்ணியிலே மன்னி மன்னிப் பெண்ணே மார்புக்குக் கீழிருக்கும் மாதுளங்காய் என்னவிலை”
எனக் கேட்கின்றான். இதனால் ஆத்திர மும், அவமானமும் அடைந்த பெண்.
“மாதுளம் காயுமில்லை மருக்கலங்காய் பிஞ்சுமில்லை பாலனி குடிக் கும் பாலி மு ைலடா
Festisadi LTesTTT”
என வெப்புசாரத்துடன் கூறுகின்றார். சண்டாளன் என அவள் ஏசுவதனுடாக அவனது கொடூரத் தன்மையை எடுத்துக் காட்டித் தன் எதிர்ப்பத்ை தெரிவிக்கின்றாள்.
பெண்களுக்கெரிரான பாலியல் ரீதியான சேட்டைகள், பலாத்காரம் என்பன தொழில் செய்யும் இடங்களில் இடம்பெறுகின்றன. மலையகத் தில் கொழுந்தெடுக் கும் பெண்கள் கங்காணி, துரைமார்களினால் இத்தகைய துன்புறுத் தல களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அத்துடன் அவர்களுக்கு வேலைக் குத் தகுந்த ஊதியமும் வழங்கப்படுவதில் லை. கூலிப்பணத்தைத் தகுந்த நேரத்திலும் கொடுக்காது தாமதப்படுத்துவர். இத்த கைய சந்தர்ப்பங்களில் முதலாளிகளுக்கு எதிராகப் பெண்கள் எதிர்ப்புக் குரல்
| கொடுக்கின்றனர்.
"ஓடி ஒடி நிரைப்பிடித்து ஒரு கூடை கொழுந்தெடுத்தும் பாவி கணக்கப்பிள்ளை பாஞ்சாலமயிலே எனக்கு பத்து றாத்தல் போட்டானடி பூஞ்சோலைக் குயிலே”
( ஒலை 42 )ー
 
 

G25>
கூடுதலான நிறையில் கொழுந்து பறித்த ஒரு பெண்ணுக்கு கணக்கப்பிள்ளை சரியான நிறையைக் கணக்குப்போடாது நிறையைக் குறைத் துக் கணக்கு எழுதுகரின் றாணி . இதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தான் கொழுந்து பறிக்கப்பட்ட கஷடங்களை நினைத்துப்பார்த்த அவள் நிறைக்குத் தகுந்த கணக்கு எழுதாத கணக்குப் பிள்ளையை பாவி எனத்திட்டுகின்றாள். வேலைக்குத் தகுந்த ஊதியம் தராத கனக் குப் பிள்ளையின் மொட் டைத் தலையை வர்ணித்து கேலிபேசுவதையும் கங்காணியை "வேட்டைநாய்" என இருபொருள்படக் கூறுவதையும் நாட்டார் பாடல்களில் கண்டு கொள்ளலாம்.
பெரும்பாலான ஆண்கள் தாம் காதலித்த பெண்களுக்குத் துரோகம் செய்துவிட்டு வேறு பெண்களை விவாகம் செய்வது வழமை. சீதனம் , சாதரி, மதம் , உத்தியோகம், பொருளாதார ஏற்றத்தாழ்வு எனப் பல காரணிகள் இதில் செல்வாக்குச் செலுத்துகின்றன. காதலனால் கைவிடப் பட்ட பெண்களுக்கு சமூகத்தில் நன்மதிப்பு இல்லை. அத்துடன் அவளுக்குத் திருமண வாழ் வென்பது எட் டாக் கனியாகவே அமைந்துவிடும் . இத்தகைய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்ட பெண் ஒருத்தி தன்னை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காதலனுக்கு எதிராக எதிர்ப்புக் குரல் கொடுக்கின்றாள்.
"குமரின் நெருப்பு கொஞ்சமெண்டு எண்ணாதே பத்தி யெரிஞ்சு தெண்டால் இந்தப் பட்டணமும் தீயாகும்.
பெண்டிலும் நீயும் போய்ப்படுக்கும் வேளையிலே கட்டிலுக்குகு கீழிருந்து கருவாலை நக்குமடா"
இது பாதிக்கப்பட்ட பெண்ணின் உள்ளக் குமுறலாகும். -C பங்குனி : 2007 D

Page 27
குடிமுறை கிராமத்து மக்களின் சமுதாய அமைப்பை மையமாகக் கொணர் டு உருவாக்கப்பட்டதாகும். தாய்வழி உறவின் அடிப்படையிலேயே குடிமுறை தீர்மானி க்கப்படுகின்றது. கிராமிய சமூகத்தில் வெவ்வேறுபட்ட குடிகளைச் சேர்ந்த மக்கள் காணப்படுகின்றனர். ஒரே குடியைச் சேர்ந்தவர்கள் சகோதர சகோதரிகளாகக் கணிக்கப் படுவார்கள் . இதனால் அதிகமாகத் திருமணங்கள் ஒரே குடியைச் சார்ந்தவர்களுக்கிடையில் நடைபெறுவ தில்லை. இதனால் கிராமத்து மக்கள் மத்தியில் இடம்பெறும் திருமணங்கள் அதிகமாக வெவ்வேறு குடிகளுக்கிடையில் நடைபெறுவது வழமை. தருமபுரி மாவட்டத்தில் வழங்கிவரும் பாடல் ஒன்றில் குலமரபுப்படி ஒரே தெய்வத்தை வழிபடு கரின் ற தங்கை முறையான ஒரு பெண்ணிடம் அண்ணன் முறையுடைய ஒருவன் முறைதவறி நடக்க எத்தணிக் கின்றான்.
"மாமரந்தான் பூஞ்சோலை ஒண்டிக்கலாம் பெண்ணே" எனக்கூறுகிறார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் முறைதவறிய சகோதரனுக்கு எதிராகக் குரல் கொடுக்க முனைகின்றார்.
"பெண்ணே பெண்ணே எங்காதேடா புத்தி கெட்ட அண்ணா பூமாதேவி கண்டா ளென்றால்
புலம்பிடுவாள் இப்போ"
சமூக ரீதியாகவும் சட்டரீதியாகவும் பெண்க | ளுக்கு சொத்துரிமை வழங்கப்படவில்லை. அவளுக்கான சொத்துரிமை ஆண்குழந்தை மூலமே தொடர்கின்றது. குழந்தைப்பேற்றை வாழ்க்கையின் உயர்ந்த பேறாக் கருது வதற்கு இதுவும் காரணம். இதனால் கிராமத்திலும், கூட்டுக் குடும்பத்தில் ஆண்குழந்தையின் பிறப்பு முக்கியமான
தாகக் கருதப்படுகின்றது. பெண்குழந்தை பிறந்தால் அது பெற்றோருக்குச் சுமையாக
( ஒலை 42 D
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேபடுகின்றது. சீதனம் திருமணத்தில் முக்கிய பங்குவகிப்பதால் பொருளாதார வசதியற்ற ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பெண்களை எவ்வாறு கரைசேர் ப்பது என ஏங்கிக் கொண்டிருப்பதைப் காணலாம். இதனால் கடன் கழிக்கும் நோக்கில் ஆராய்ந்து பார்க்காது பெண்ணின் விருப்பு வெறுப்புக்கு மதிப்பளிக்காது மணம்முடித்துக் கொடுப்பதைக் காணலாம். கணவனால் துன்பப்படும் அப்பெண்கள் தம் பெற்றோருக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றனர்.
"பச்சைக் கருவேப்பிலை நானும் சிவத்தப்பிள்ளை என்னப்பன் கணக்கப்பிள்ளை எங்கள் ஆய் துலுக்கப்பிள்ளை கட்டிக் கொடுத்தாங்கோ கடனை ஒழிச்சா ங்கோ முண்டைப் பயல் வாசலிலே முள்ளுமுள் ளாய் குத்துருது ஈரொட்டுத் தண்ணியிலே இறக்கிவிட்டால் குத்தமில்லை”
தன் குடும்பம் வசதியானதாக இருந்த போதும் பணத்துக்கு ஆசைப் பட்டு விசாரித் துப் பார்க்காமல் தனக்கு
மணம்முடித்து வைத்து கடனை கழித்து
விட்ட பெற்றோருக்கு புத்தியில் படும்படியாக எடுத்துக்கூறுவது இங்கு நோக்கத்தக்கது.
தமிழ்ச் சமூகத்தில் பெண் என்பவள் சுதந்திரமான தனிப்பட்ட ஒரு நபரல்ல. அவள் வாழ்க்கையின் பல்வேறு கட்டங் களிலும் ஆணைச்சார்ந்து வாழ்பவளாகக் காணப் படுகிறாள். திருமணமாகாத, விதவையான அல்லது ஆண்குழந்தை பெறாத பெண்ணுக்கு சமூகத்தில் நன்மதிப்பு இருக்கவில்லை. ஆண்குழந்தையைப் பெற்ற பெண் ணுக்கே சொத் துரிமை தொடரும். இதனால் விதவையாகவோ மலடியாகவோ இருக்கும் பெண்களுக்கு புகுந்த வீட்டில் மதிப்பில்லை.
-C பங்குனி : 2007 )

Page 28
மாமி, மைத்துனர், மைத்துணி போன் றோரில் தங்கிவாழ வேண்டிய நிலை ஏற்படுவதுடன் அவர்களுக்குப் பணிந்து அவர்களது கடமைகளைச் செய்யும் ஒரு வேலைக் காரிபோல் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதைக் காணலாம். வேண்டாப் பெண்டாட்டி கைபட்டாலும் குற்றம் கால்பட்டாலும் குற்றம்’ என்பது போல அவளர் விடும் சிறு சிறு தவறுக ளுக்குக் கூட ஏச்சுக்களையும் பேச்சுக்க ளையும் எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்படுகின்றது. இத்தகைய துன்புறுத்தல் களுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொள்ளும் பெண்கள் அநேகம். இலங்கை யிலும் பார்க்க தென்னிந்திய சமூகத்தி லேயே இத்தகைய பரிதாப நிலையை அதிகம் காணலாம் . இவ்வாறாக புகுந்தவீட்டில் துன்பங்களுக்குள்ளானபோது சில பெண்கள் மாமி, மைத்துனர்களுக் கெதிராக குரல்கொடுப்பதைக் காணலாம். இத்தகைய எதிர்ப்புக் குரல்களுக்கு உதாரணமாக சேலம் மாவட்டப்பாடல் ஒன்றைக் கூறலாம்.
"பூமியுந்தான் நல்ல பூமி எனக்கு வாய்த்த புண்ணியரும் பத்திசாலி புண்ணியரைப் பெத்தெடுத்த பெருங்குரங்கே தொந்தரவு"
1 அடிக்கடி மாமியார் மருமகளைக் குறைகூறி அவளைத் துன்புறுத்தியபோது தனக்குச் சிறந்த கணவனி வாயப் தி தபோதும் அன்புமிக்க மாமி கிடைக் காததால் வெறுப் புற்ற பெண்ணொருத்தி தன் மாமியை பெருங் குரங்கு என வசை பாடுவது இங்கு கவனிக்கத்தக்கது.
கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதற்குக் காரணம் தன்னிலும் பார்க்க சக்களத்தி தன்னைவிட அழகாய் இருப்பதே என்றும் தன் கணவனைச் சக் களத்தி மருந்து போட்டு வசியம் பண்ணிவிட்டாள் என்றும் சில படிப்பறிவற்ற
( ஒலை 42 }
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிராமத்துப் பெண்கள் அறியாமையின் காரணமாக நினைக்கின்றனர். தனக்கே முழுமையாக வந்துசேரவேண்டிய சொத்தும் சுகபோகமும் இன்னொருத்திக்குப் பங்கு போகின்றது என்ற ஆத்திரம் சக்களத்திச் சண்டைக்கு வழிசமைத்துக் கொடுக்கின்றது.
இலங்கையில் மட்டக்களப்புப் பிரதேசம் மந்திரம் மாய வித் தைகளுக்குப் பிரசித்தமானது. கணவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு கொள்ளக் காரணம் அப்பெண் அவனை மந்திரம் மூலம் வசியம் செய்து விட்டதே எனக் கருதிய பெண்ணொ ருத்தி சக்களத்திக்குத் தன் எதிர்ப்பினை இவ்வாறு தெரிவிக்கின்றாள்.
"போறாக வன்னியனார் பொத்துவில்லப் பார்ப்பமெண்டு என்ன மருந்துகளப் போட்டு LDussailpit (867m (356 guntefr"
இவ்வாறான எதிர்ப்புக் குரலின் சாயலை தமிழ்நாட்டுப் பாடல்களிலும் காணக்கூடி யதாக இருக்கின்றது.
இவற்றையெல்லாம் தொகுத்து நோக்கும் போது சமூகத்தில் அடக்குமுறை, நெருக்கு வாரம் என்பன இடம்பெறுகின்றபோது சாதாரண கிராமத்துப் பெண்கள் செந்நெறி இலக்கியங்களில் வரும் பெண்களைப் போல் அதைச் சகித்துக் கொண்டு இருக்கவில்லை என்பதும் அவர்கள் இவ் அடக்குமுறையின் வடிவம் எத்தகையதாக அமைந்தபோதும் அதற்கு எதிராக குரல்கொடுக்க முனைந்துள்ளனர் என்பதும் தெளிவாகின்றது. இவ்வெதிர்ப்புக் குரல்கள் ஆண்களுக்கு எதிரானதாகவும் மட்டுமன்றி அடக்கியாள நினைக்கும் பெண்களுக்கு எதரானதாகவும் அமைகின்றது. அந்தவகையில் எதிர்ப்பிலக்கிய மரபு ஒன்றினை நாட்டார் பாடல்களில் கண்டு Gastefreitentib.
-C பங்குனி 2007

Page 29
வெப்பியாரம்
வர்ணாவுக்கு எதுவும் பிடிக்கவில்லை. அப்பா, அம்மாவை அடிப்பது பிடிக்கவில்லை. அவள் யாழினி, டெஸ்டுக்கு படிக்கவில்லை என்று சொல்லிவிட்டு தன்னைவிட விஞ்ஞானத்தில் ரெண்டு மார்க்குகள் கூட வாங்கினது பிடிக்கவில்லை. பள்ளிக்கூடத்தில் ரவிக்கு அடிவிழுவது பிடிக்கிவில்லை. வர்ணாவை இரண்டாம் பிள்ளையாய் ஆக்கிய தையல், சித்திரப் பாடங்கள் பிடிக்கவில்லை. மாஸ்டர் அங்கிளை துப்புரவாகப் பிடிக்கவில்லை.
ஆனால் சனி, ஞாயிறு ஸ்கொலவழிப் வகுப்பு பிடித்திருந்தது. சட்டையைத் தொட்டில் போல் பிடிக்க காந்தனும், ரவியும், யாழினியும் மரத்திலிருந்து போடும் நாவப் பழங்கள் பிடித்திருந்தன. அண்ணாவியாரிடம் கூத்துப் பழகப் பிடித்திருந்தது. வாண்டு மாமா,
ཤཱ་྾:་ཤུར་ཙཱ་:ཚུ་སྤུ་སྨ་སྙ:་སྤྱབྱ ཤཱཀྱ་:༡྾་་༦༦༦སྤུ་ཙཁྱར་ན་༅྾་྾: “ལྷ་ برج
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நட்சத்திரமாமா பிடித்திருந்தனர். உருளைக் கிழங்குக் கறி பிடித்திருந்தது. கண்ணைப் பூஞ்சிக்கொண்டு ஆரியனைப் பார்க்கவும், தொந்தரவு இல்லாது கனநேரம் தனியே இருக்கவும் பிடித்திருந்தது.
இத்தனை 'பிடித்திருந்தது இருந்தாலும் பிடிக்காதவை தான் அவளை தினமும் போட்டு உலுப்பின. ஏன் இப்படி சிலது பிடிக்காமல் போகிறது என்று தனியே யோசிப்பாள். பிடிக்காததுகளை பிடிக்கிற மாதிரி ஆக்கிக் கொண்டால் இந்தக் கரைச்சல் வராது என்று யோசனையில் வரும். இன்னுங் கொஞ்சம் யோசித்துக் கொண்டு போனால் எல்லாம் மறந்து போனமாதிரி இருக்கும். கண்ணைப் பூஞ்சி வானைப் பார்த்தபடி இருப்பாள். கண்ணில் சித்திரங்களாக, பாம்பு களாக, சக்கரங்களாக பல வர்ணக்குழம்பு களில் கோலங்கள் நெளிந்து வரும். மனம் சந்தோசத்தில் துள்ளி மகிழும். சரியான நேரத்தில் அக்கா, ‘சாப்பிடவாம்மா வர்ணா என்று குரல் கொடுப்பாள். கோலச்சித்திரங்கள் சிதறி, வர்ணங்கள் தளும்பிச் சிந்தி. எல்லாம் கலைந்து கருமேகங்களாய் ஒடும். கோபம்பொத்துக் கொண்டு வரும். அக்காவின் கெஞ்சலில் அது அடங்கி விடும். பேசாமல் சாப்பிடப் போவாள் வர்ணா.
அப்படி சாப்பிட்டுக் கொண்டிருந்த போதுதான் | முன்பகுதி அனெக்ஸில் இருக்கும் விஜயா டீச்சர் பிள்ளைபெற, நாளை யாழ்ப்பாணம்
போறதாக கதைத் துக் கொண்டனர்.
பங்குனி : 2007

Page 30
அனெக்ஸின் பிற் பகுதியில் வர்ணா குடும்பம் இருந்தது.
கதைத்தது போலவே மறுநாள் காலையில் விஜயா டீச்சர் அவளின் அம்மாவோடு யாழ்ப்பாணத்துக்கு கிளம்பிவிட்டாள். நல்லாப் படி வர்ணா. நீ கெட்டிக்காரி' என்று வாய்க்கு வாய் சொல்லியபடி கைகாட்டிப் போனாள். எல்லோரும் வழியனுப்பி வைத்தனர்.
அப்பவே ஊரில் ஊரடங்குச் சட்டம் உண்டு. ஆனால் அவள் போன சில நாட்களில் எடுத்ததுக்கு எல்லாம் ஊரடங்குச் சட்டம் அமுலில் வந்தது. ஊரே ஊமைக் கோட்டா னாய் மாறிப் போனது. எல்லோரும் நேரத்துக்குப படுத்துக் கொள்வர். நாய்கள் கூட்டமாகத் திரியாது. சில கருத்த உடை உருவங்கள் மோட்டார் சைக்கிளில் ரோந்து வரும். சில கறுவல்கள் நடந்து வரும்.
வர்ணா தன் படிப்பு நேரம் முடிந்ததும் வீட்டில் சாப்பிட்டு விட்டு விஜயா டீச்சரின் முன்பக்க அனெக்ஸிற்கு வருவாள். அங்கு மாஸ்டர் அங்கிள் தயாராய் இருப்பார். அவர்கள் இருவரும் மதில்சுவர் ஒரத்திற்குப் போய் காத்திருப்பார்கள். துாரத்தில் பளிச்சென்ற விளக்குகளுடன் மோட்டார் சைக்கிள் வரும் பொழுது கழுத்தை நீட்டி எட்டிப் பார்ப்பாள் வர்ணா. அவை கிட்ட வருகையில் மாஸ்டர் அங்கிள் தலையைக் குனியுமாறு கூறுவார். அவள் நாற்காலியில் குந்தி விடுவாள். வாகனங்கள் கடந்தபின் மீண்டும் நாற்காலில் ஏறி இருளின் நிசப்தப் போர்வையை கண் வெட்டாது உள்வாங்குவாள். எப்போதாவது தாண்டும் வெளிச் சங்களைத் தவிர குறுக்கீடுகள் எதுவும் இருப்பதில்லை.
நாற்காலியில் நின்றபடியே, அவள் போக்கில் ( ஒலை 42 )
 
 
 

விக்கிமாதித்தன் கதையில் வரும் வேதாளத்தை விதம்விதமாக வடிவமைப்பாள். அடுத்தமாத அம்புலிமாமாவில் விக்கிரமாதித்தன் பதில் சொல்லாவிட்டால் அவன் தலை சுக்கு நுாறாய் வெடிக்குமே. யாழினியிடம் இது பற்றி நாளை கதைக்க வேண்டும் என்று யோசனை விரியும் . கணக்கு செய்கை வழிகளை ஞாபகப்படுத்திப் பார்ப்பாள்.
பின்புற அனெக்ஸிலிருந்து அம்மாவின் குரல் வர்ணாவை அழைக்கும் போது மணி பத்தைத் தாண்டியிருக்கும். ‘வாறன் அம்மா என்று மாஸ்டர் அங்கிளின் கைகளை விலக்கி நாற்காலியிலிருந்து குதிக்க முற்படுவாள். ‘விடிய எழும்பி படிக்க வேணும். நாளைக்கும் வாங்கோ சரியா? மதில்ல நிண்டு மோட்ட சைக்கிள் பாப்பம் என்ன!’ என்று கூறியபடி அவளின் உடைகளை சரிப்படுத்தி அனுப்பி வைப்பார். இப்படித்தான் ஊரடங்கு இரவுகள் இதமாய்க் கழிந்தன.
சில நாட்களில் மதிலடிக்குப் போக அவளுக்கு மனம் ஒப்பாமல் இருக்கும். ஆனால் மாஸ்டர் அங்கிள் "வர்ணா, வர்ணாக்குட்டி’ என்று கூப்பிட்டபடி இருப்பார்.
"போய் என்ன என்டு கேள்’ என்பாள் அம்மா.
“எனக்கேலாது.”
“போய் என்ன என்டு கேட்டுட்டு ஓடிவா”
"அவருக்கெண்டு ஒரு பிள்ளை பிறந்த பிறகு உன்ன கூப்பிடவா போறார். போவன் மோன”
-C பங்குனி : 2007 )

Page 31
"உன்னில விருப்பத்தில தானே கூப்பிடுகிறார். பாவம்.போ’ என்று அம்மா சொல்லுவாள்.
வர்ணா போவாள். மாஸ்டர் அங்கிள் அவளை மதிலடிக்கு கூட்டிப் போவார். ‘நல்ல பிள்ளை நிண்டு ரோட்டைப் பாருங்கோ, நல்லபிள்ளை யெல்லா’ என்று அவள் ஏறி நிற்கும் நாற்காலியோடு ஒண்டி அவளோடே நிற்பார்.
மாஸ்டர் அங்கிளின் மூச்சு சத்தம் வர்ணாவின் காதில் பெரிசாய் வந்துவிழும். கைகளால் அவளின் கால்களை அழுத்திவிடுவார். "அந்தா மோட்ட சைக்கிள் வருது’ என்று தன் நெஞ்சோடு வர்ணாவின் முகத்தை அமுத்துவார். அவளுக்கு எரிச்சலாய் இருக்கும்.
“நான் போகப் போறன்’ என்பாள்.
66 y2
ஏன்?. அங்கிள் கனிவாய்ச் சிரிப்பார்.
"நித்திரை வருது”
“சரி, சரி இன்னுங் கொஞ்ச நேரம் என்ன?”
“இல்ல போகப் போறன்’
 
 

"அச்சாப் பிள்ளையெல்லா கொஞ்ச நேரம் நில்லுங்கோவன்” என்றபடி அவளோடு ஒண்டிக் கொண்டு நிற்பார். முதுகைத் தடவுவார். அவள் இருமும் போது அம்மா அவளது நெஞ்சைத் தடவி விடுவதுண்டு. அதுபோல அவரும் தடவி விடுவார். நல்ல சுகமாக இருக்கும். “உங்கட பள்ளிக்கூடத்தில உங்களுக்கு யாரைப் பிடிக் கும் ?’ என்றெல்லாம் கேட்பார்.
ஒரே இந்தக் கேள்விகளைத் தான் திரும்பத் திரும்பிக் கேட்பார். எத்தினதரம் சொன்னாலும் மறந்து போயிருவார். ‘எப்பிடி மாஸ்டர் அங்கிள், மாஸ்டர் படிப்பு படிச்சார்’ என்று வர்ணாவுக்கு புதிதாய் யோசிக்க வரும்.
அன்றைக் கு ஒரு நாள் வர்ணாவை மதிலடியில் இருந்து முன் அனெக்ஸில் உள்ள அறைக்குள் துாக்கிக் கொண்டு போனார் மாஸ்டர் அங்கிள். அவளை, தன் கட்டிலில் இருத்திவிட்டு மின் விளக்கை அணைத்து வருவதாகச் கூறி 'சுவிட்ச் இருந்த இடத்துக்குப் போனார்.
வர்ணாவுக்கு என்னவோ போலிருந்தது.
உள்ளுணர்வு அலைக்கழித்தது. அறைக்கதவு
வழியே புகுந்து முற்றத்துக்கு எட்டுக்கால் பூச்சி போல தாறுமாறாய் ஓடி வந்தாள். தன் பின் வீட்டு அனெக்ஸ் வாசலுக்கு வந்ததும் அம்மாவின் நினைப்பு வந்தது. ஒடி வருவதை அம்மா கண்டால். "ஏன் ஓடி வாறாய்? என்று துளைத்து வாயைப் பிடுங்கிவிடுவாள். அதனால் மெதுவாக நடந்து போய் மேசையிலுள்ள கொப்பிகளை அடுக்குவது
போல் அடுக்கினாள். ஓடினதில் கால் வலித்தது. கட்டிலில் சுருண்டாள்.
-O பங்குனி : 2007 D

Page 32
மறுநாள் இரவு, வீட்டில் படித்துக் கொண்டிரு ந்தபோது மாஸ்டர் அங்கிள் “வர்ணா, வர்ணாக்குட்டி” என்று முற்றத்தில் கூப்பிட்டபடி வந்தார். வர்ணா மூச்சுக்காட்டாமல் இருந்தாள். எழும்பி வரவில்லை. அவரோ அம்மாவிடம் 'அன்ரி பொம்பிளைப் பிள்ளை பிறந்திருக்கு, தந்தி வந்திருக்கு என்றார். 'அப்படியா தம்பி நல்லம் . கடவுளுக்கு நன்றி.’ என்று சொல்லிவிட்டு
வர்ணா! இனி உன்ன மாஸ்டர் அங்கிள் கூப்பிட மாட்டார். போ. உன்ர பவிசு எல்லாம் பொயிற்று சிரித்தவாறு அம்மா பகிடி பண்ணினாள்.
 

‘இனி அங்க போமாட்டன். எனக்கேலா, ஏலாதென்டா ஏலா’ வர்ணாவின் தொண்டை மூன்றாம் வீடு வரை கேட்டது.
“சீ.சீ.” “அப்படிச் சொல்லாதேங்கோ அன்ரி. நீ வாம்மா வர்ணா” என்று கைகளை நீட்டியபடி அவளைத் துாக்க வந்தார் மாஸ்டர் அங்கிள்.
வர்ணாவுக்கு எதுவும் பிடிக்கவில்லை.
(1996)
V-f

Page 33
சொற்பதங்களில் தத்துவார்த்தச் சிற அர்த்தப்பாடுடனும் பிரயோகித்தல்.
பெண்களது அனுபவத்தில் நிகழும் புறக்க இரண்டாம்பட்சநிலை போன்றவற்றை இனங்க பல வாதங்களை சில முற்போக்கு எண் முன்வைத்தனர். இதனை வரலாற்றுரீதியில் ட உளவியல், சட்டவியல் போன்றவற்றில் மேற்கி அவற்றை அணுகி ஆய்வுசெய்து வெளிக்கொ6 கருத்தியல் ரீதியிலும் கட்டமைப்பு ரீதியிலும் இ அதற்கு ஆங்கிலத்தில் Feminism எனவும் Feminists என்றும் அழைத்தனர்.
20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாரதியார், என்ற சொற்றொடரைப் பிரயோகித்தனர். அ போதுமானதாக இருந்தது. அதன்நோக்கம் ! யாழ்ப்பாணத்தில் தோன்றிய பெண்கள் ஆய சொற்றொடரைத் தேர்ந்தெடுத்தது. பேரா சித்திரலேகா மெளனகுரு போன்றோரது முய பட்டது. இதனை எம்போன்றோரும் ஏற்றுக்ெ
ஆனாலும் இந்திய எழுத்தாளர்கள் “பெண்ணி வருவதைக் காண்கின்றோம். பெண்ணிய பெண்+இயம் எனப் பிரிக்கப்படும்போதும் பு இல்லை. பெண்களை அடிப்படையாகக் கொ பெண்ணிலைவாதம் என்ற சொற்றொடர் வி என்ற சொல்லைத் தவிர்த்துக்கொண்டு பிரயோகிப்பது நல்லது என நாம் நிை சொற்றொடர்களும் சொற்பதங்களும் தரப்படு ஒலைமூலம் பெண்ணிலைவாதம் என்னும் சொ நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
( ஒலை 42 D
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்புடனும்
கணிப்புகள், அவலங்கள், நிராகரிப்புகள், sண்டு விளக்கி அவற்றை அகற்றுவதற்காக 1ணங்கொண்ட பெண்களும் ஆண்களும் மானிடவியல், சமூகவியல், இலக்கியவியல், ளம்பிய பிரச்சினைகளை மையமாக வைத்து ணர இவர்கள் முற்பட்டனர். இதன்காரணமாக வை அணுகப்பட்டு இனங்காணப்பட்டபொழுது
அவ்வாறு இனங்கண்டுகொண்டவர்களை
பாரதிதாசன் போன்றோர் பெண்விடுதலை அச்சொற்றொடர் அன்றையகாலப்பகுதிக்குப் விரிவடைந்து வியாபிக்கத்தொடங்கியபோது ப்வுவட்டமானது பெண்ணிலைவாதம் என்ற சிரியர் கைலாசபதி, ஏ.ஜே.கனகரட்ணா, பற்சியால் இச்சொற்றொடர் தேர்ந்தெடுக்கப் காண்டு பிரயோகித்துவருகின்றோம்.
பம” என்னும் சொற்றொடரைப் பிரயோகித்து ம் என்பதனை எடுத்துநோக்கும்போதும், அதன் முழுத்தாற்பரியமும் விளங்குவதாக ண்டு எழும் வாதங்களை உள்ளடக்கியதாக பிளங்குகிறது. எனவே நாம் பெண்ணியம் “பெண்ணிலைவாதம்” என்ற சொல்லை னக்கின்றோம். மொழிபெயர்ப்பின்போது த்தப்படல் வேண்டும். ஆகவே தமிழ்ச்சங்க ற்றொடரை ஏனையோரும் பிரயோகிக்குமாறு
-பெண்கள் ஆய்வு நிறுவனம்
-( பங்குனி : 2007 )

Page 34
Y్కట్కు*్కు'శిక్ష ፳፭) } ፳፻፹)
இருபதாண்டுகளுக்குப்பிறகு
இங்கு பாதச் சுவடுகள் முடிவ இங்கு நிலா ஒநாய்கள், நாய்கள், கற்கள் பாறைகளுக்கும் கூடாரங்களுக் மரங்களுக்குப் பின்னால் படுத் இங்கு நிலா தனது முகத்தை ஒவ்வொரு இ ஒரு கத்திக்காக, மெழுகுவர்த் பின்னலுக்காக, அவர்கள் மூட்டியுள்ள நெருப்ட எறியாதே ஜிப்சிகளின் விரல்களிலிருந்து கண்ணாடி மோதிரங்களைத் த அவர்கள் உறங்கினர் மீன்களும் கற்களும் மரங்களும்
இங்கு பாதச் சுவடுகள் முடிவ இங்கு நிலா பிரசவ வேதனை ஜிப்ளிகளே!
நிலாவிற்குக் கண்ணாடி மோத நீலநிற வளையல்களையும் த
பாலஸ்தீனப் பெண் கவிஞர் ஃபத்வா டுக்வான்
கருதப்படுகிறார். அறிவாளிகளும் கவிஞர்களு இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட (முன்பு ஜோர் சகோதரர் இப்ராஹரிம் முப்பதுகளிலும் ந கவிஞர்களிலொருவராகத் திகழ்ந்தார். இக்கவி snes: The Penguin Book of Women Poe
 
 
 
 
 

C33)
ஃபத்வா டுக்வான் (Fadwa Tuqvan)
5. . .
டைகின்றன;
ஆகியவற்றுடன் கும் பின்னால்
ந்துறங்குகிறது.
இரவிலும் விற்கிறது திக்காக, மழைப்
பில் ஒரு கல்லைத்துக்கி
திருடாதே
ம் உறங்கின.
டைகின்றன; யில்
திரங்களையும் ாருங்கள்.
தமிழில் : வ.கீதா
எஸ்.வி.ஆர்
அராபியநாடுகளில் மிகச்சிறந்த நவீன கவிஞராகக் நம் பிறந்த குடும்பமொன்றைச் சேர்ந்த இவர் ான் வசமிருந்த) பகுதியில் வளர்ந்தார். இவரது ாற்பதுகளிலும் மிக முக்கிய பாலஸ்தீனக் தையின் ஆங்கில மொழியாக்கம் இடம்பெற்றுள்ள 's, London, 1981
-O பங்குனி : 2007 )

Page 35
இணங்கிப்போதல்
எனது மடியில் ஒரு பெரிய நட்சத்தி
இரவு நெடுகக் கண்விழித்துக் காத் நாம் -
யாழ்கள் போலச் செதுக்கப்பட்ட பெ இரவுடன் இணங்கிப் போக விரும்
இரவுடன் இணங்கிப் போக விரும் கடவுள் பொங்கி வழிகிறார் வெகுவ
நமது இதயங்கள் குழந்தைகள் இவை இளைப்பாறலாம் இனிய க
நமது உதடுகள் முத்தமிட விரும்புக் நீ ஏன் தயங்குகிறாய்?
எனது இதயத்தை உனது இதயத்து உனது இரத்தம் எப்போதும் எனது சிவக்க வைக்கிறது
நாம் இரவுடன் இணங்கிப் போக 6 நாம் அனைத்துக் கொள்ளும் போது இறந்து விடுவதில்லை
எனது மடியில் ஒரு பெரிய நட்சத்தி
1864 இல் ஜெர்மனியில் ஒரு யூதக் குடும்பத்தில் துவக்கத்தில் ஜெர்மனியில் புகழ்பெற்றிருக்க முன்னணிப் பாத்திரம் வகித்தார். ஏராளமான நாஜிகளிடமிருந்து தப்பித்த ஸ்விட்ஸர்லாந்துக் 1945இல் ஜெருசலேம் நகரில் காலமானார். &LibQuimpeitar sites: The Penguin Book of
( ஒலை 42 D
 

C34)
எல்ஸெ லாஸ்கர் - ஷனலர் (Else Laskar-Schuler)
ரம் விழுந்துள்ளது. திருக்க விரும்புகிறோம்
ாழிகளில் ஜெபிக்க புகிறோம்
புகிறோம்
5.
ளைப்புடன்
கின்றன
துடன் இணைந்துவிடாதே
கன்னங்களைச்
விரும்புகிறோம்
நாம்
ரம் விழுந்துள்ளது. தமிழில் வகிதா
எஸ்.வி.ஆர்
பிறந்த இப்பெண் கவிஞர் இந்நாற்றாண்டின் எக்ஸ்பிரஷனிஸ்ட் இலக்கிய இயக்கத்தில் கவிதைகளை எழுதியுள்ள அவர் 1933இல் கும் பின்னர் பாலஸ்தீனத்திற்கும் சென்றார். இக் கவிதையின் ஆங்கில மொழியாக்கம் Women Poets, London, 1981
-C பங்குனி 2007 D

Page 36
( ஒலை 42 }
雞
கமலா வசுகியின் முன்று கவிதைகள்
கருக்கலைப்பு
இயந்திரத் துப்பாக்கியுள் செலுத்தி அதை அழுத்தி ஒரு குண்டை உமிழச் செய்யும் விரலின் உணர்ை மலினப்பட்டுப்போன பிரசவ வலி
இனமும் மதமும் அறியாச் செருக் கைகளை வீசி உலகை அளக்கும் பின்னும் முன்னும் அடையாளக் கு அழிப்பதற்கான நாள் வைக்கும் கு
ஆயின் கொடுப்பவனும் நானே கொல்பவனும் கருவில் நீ கொல்லற்க எனத் தை
தாயின் கரு உதித்த ஒரு பிள்ளையைத் தன்னும் கொல் இனத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும் உலகத் தலையென்ற பெயராலும் யாரும் எடுப்பரெனில்
கருவில் கரைக என் பிள்ளாய்!
போர்களை நிறுத்தியபின் கருக்களைப் பற்றிப் பேசுவோமாக!
ஏப்பிரல் 12, 2006
 
 

வ விட
குடன்
பிஞ்சின்
றிகளிட்டு
ரோதம்
ம் நானே டவிதிக்கும்.
லும் அதிகாரத்தை,
f 2
※
—( u്ദ്രങ്ങി : 2007

Page 37
தாய்க்கும் இயற்கைக்குமான தம் துரோகம் மறந்து, புதிய வரைவிலக்கணங்கள் கண்களில் வடிய, கைகள் அவை வழி கொல்லும்.
யார்க்கும் யாரிலும் அன்பற்றுப் போ
அரசுரிமை வீட்டுள்ளும் பேசத் தெ பெண் குரலின் சிறைவைப்பில் சுவைகண்ட வேலிகள் சுற்றிச் சுழ அனைத்தையும் சிறைப்பிடிக்க,
சிந்தனை விரிக்க முடியாச் சந்தே சத்தமாய் சிரிக்கவும் சந்தேகமுறும் இவையற்ற ஊரொன்று இவ்வுலகிலு உயிர்கிடந்து அவாவி
அன்றன்று வாழ்வில் மட்டும் மகிழு
கொல்லுவதற்கான காரணம் துரோகம் - புது வரைவிலக்கணம்
வாழ்வதற்காய் அன்றிப் போருள் சாவதற்காய் ஒரு பிள்ளை பெறத் துணியாப் பெண்ணுரிமை காண்போம் வாரீர்!
(8Lio 19, 2006 濠接 ( ஒலை 42 )
 

ாடங்காப்
கச் சிறையுள்
மனது ள்ளதோ என

Page 38
சூழவுள்ள அனைத்திலும் அனைவரிலும் தனித்தது என் தீவு - அதில் சாளரங்களும் அற்றுப்போக, மனதின் திசை எட்டும் என்னைச் செலுத்தும் சாரதியாய் என்
கண்கள்
பயமற்றுத் திரியும்.
செல்லத் திசையறியா மனதைப்
பிடித்திழுத்து ஒளியட்டும் - கண் பலமற்றும் போக நான் திசையற்றுப் போவேனோ?
ஜீலை 5, 2006
( ஒலை 42 )
 


Page 39
பாலுணர்வு அரசியலும் அகப்பாடல்களும்
பெண்ணியம் சார்ந்த பார்வைகள் ஆழமாக புரிவதற்குக் காரணமாக இருந்த நூலாக்க எழுதிய 'பாலுணர்வு அரசியல் (Sexual F எனக் கருதுவர். பெண்ணியல் வரலாற்றாசிரிய இயங்குகின்ற அதிகாரத் தனங்களை அதிகாரத்திற்கு அடிப்படையாக அமைவது நுட்பமாக விளக்கினார். தந்தைக்கான இந் தாழ்வானவள் கீழ்ப் படிய வேண்டியவள் என வடிவமைக்கப் பயன்படுகிறது என விளக் அமைப்பு, குடும்பத்தில் கட்டமைத்து விடுகின் அமைப்பிற்குள்ளும் நீட்சி பெற்றுப் பெண், இன்றைய நவீன உலகிலும் கூடத் தாழ்வா
இவ்வாறு தனது விவாதத்தைக் கட்டும் மி (Sex) soorooLD/Gugorsold(Gender) 6T6trap முக்கியமான வேறுபாட்டைக் கவனங்ெ பால்வேறுபாடு உயிரியல் அடிப்படையில ஆண்ம்ை/பெண்மை என்ற சமூக வேறு பின்னணியில் வந்து சேர்வது. ஒவ்வொரு ஆண்களுக்கும் பெண்களுக்குமென சி: கொள்ளுகின்றது. இவ்வாறு கற்பித்துக் கொ6 “மொழி” யாருடைய அதிகாரத்திற்குள் இரு குணங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. இதைத்
‘ஒரு பொருளுக்கு அர்த்தம் என்பது அ
இருக்கிறதோ, அவர் புனைந்து தருகிற 6T6drprasps" (Quotated by Raman Seldan,
மில்லத் வெளிப்படுத்திய மற்றெ
( ஒலை 42
 

-(38)
முனைவர்: க. பஞ்சாங்கம்
மற்றவர்களுக்குள்ளும் பரந்து விரிந்து வினை ம் பாலவற்றுள் காத் மில்லத் 1970 - இல் olitics) என்ற நூலிற்குப் பெரும் பங்குண்டு ர்கள். இவர் இந்த நூலில் குடும்ப அமைப்பில் அடையாளப்படுத்திக் காட்டியதோடு, அந்த தந்தை என்ற ஆணின் அதிகாரமே என்பதை த அதிகார அமைப்பே ஆணைவிடப் பெண் iற மனவியலைக் குழந்தைப் பருவத்திலேயே கினார். இந்தத் தந்தை சார்ந்த அதிகார ன்ற இந்தப் பண்பு உருவாக்கம்தான், சமுதாய மக்களாட்சி முறை எனச் சொல்லப்படும் 'க நடத்தப்படுகிறாள் என விரித்தெழுதினார்.
ல்லத், ஆண்/பெண் என்ற பால் பகுப்பிற்கும் சமூகப் பகுப்பிற்கும் இடையில் நிலவுகின்ற காள்ளச் செய்கிறார். ஆண்/பெண் என்ற இயற்கையாகவே அமைவது; ஆனால் பாடு அந்தந்தச் சமூகத்தின் பண்பாட்டுப் சமூகமும் தன் சமூத்தில் பிறந்து வளர்கிற v சிறப்பான குணங்களைக் கற்பித்துக் iவதில், கற்பிப்பதற்குப் பயன்படும் கருவியான க்கிறதோ அவர்களுடைய நலத்திற்கு ஏற்பக் நான் மிகயில் பூக்கோ இப்படி விளக்கினார்.
திகாரம் யாருடைய கட்டுப்பாட்டுக்குள்
மொழிதான். அப்பொருளுக்கான அர்த்தம் P.130-131)
ாரு முக்கியமான உண்மை, இப்படிக்
-( பங்குனி : 2007

Page 40
கற்பிக்கப்பட்ட குணங்களையே, அவர்கள் கொள்ளும்படிச் செய்வதோடு, சமூகவியல் அ அப்படிக் கருதிக் கொள்கிறார்களே என்ற ய அத்துடன் பெண்களும் தங்கள் பிரச்சை இதழ்களிலும்” நூல்களிலும் மேற்கண்டவா குணங்களையே தங்களின் இயற்கைக்
வேடிக்கையும் மில்லத் எடுத்துக்காட்டினார்.
இவ்வாறு குடும்பம், அதைத் தொடர்ந்து மேலாதிக்கம் நிலவுகின்ற உறவுமுறையை அவர்கள் அறியாமலேயே கீழ்ப்படிந்து போகு ஆணின் நுண் அரசியலைத் தான் மில்லத் இத்தகைய பாலுணர்வு அரசியல்தான் சங்க இயக்கம் கொண்டிருக்கிறது என்பதை வில் நோக்கமாக அமைகிறது.
மனித வாழ்க்கைக்கு எப்படியெல்லாமோ அ நோக்கில் ஒரே அர்த்தம்தான்: அதாவது ஆ தங்களைப் போல வேறு சில உடம்புகை இப்படி உடம்புகள் இணைய நேரும் ே உடம்போடு வேறு வேறான இரண்டு உள் ஏற்படுகிறது. இந்த நெருக்கடியை எத்தனை எதிர் கொண்டிருக்கின்றது: எதிர் கொண்டு இன்றுவரை தொடர்வது இந்த நெருக்கடிதா உறவு கொள்ள நேரும் போது ஏற்படுகிற ஆளப்படுவது? என்ற அதிகாரப்பிரச்சினை ஆண்/பெண் உறவிலும் எழுகிறது.
ஆண் உடம்பை நோக்கப் பெண் உடம் சக்திமிக்கதாக அமைந்துள்ளது. தன் உதிர என்கின்ற புதிய உயிரை வடிவமைத்துப் ெ மூலம் இந்தமண்ணுக்குள ஆழமாக வேர் ஆண் உடம்பு? இத்தகைய பிடிமானம் 6 அடையாளம் காண வழியின்றி, அந்தரத்தில் | இந்நிலையில் உளவியல் தேவைக்காகப் சமூகம் உருவான பிறகு தனது சொத்தைத் உரிமை கொள்ள வேண்டும் என்ற உணர்வு
( ஒலை 42
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

C39)
ரின் "இயற்கைக் குணங்களாக" கருதிக் றிஞர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்களும் தார்த்தத்தையும் வெளிக்கொணர்ந்ததுதான். னகளுக்காக நடத்தப்படும் தங்களுடைய று ஆணாதிக்கப் பண்பாடு உருவாக்கிவிட்ட குணங்களாகச் சித்தரித்துக் கொள்ளும்
சமூகமென்ற கட்டமைப்புக்களில் ஆணின் பும், அந்த மேலாதிக்கத்திற்குப் பெண்களும் நம்படியாக அமைத்து நிர்வகித்து விடுகின்ற 'பாலுணர்வு அரசியல்” எனப் பெயரிடுகிறார். இலக்கிய அகப்பாடல்களிலும் மிக நுட்பமாக ாக்க முயல்வது தான் இந்த கட்டுரையின்
அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டாலும், உயிரியல் பூண் உடம்பும் பெண் உடம்பம் இணைந்து, ள உற்பத்தி செய்துவிட்டுப் போவதுதான்: பாது மனித இனத்தைப் பொறுத்தவரை, 'ளங்களும் இணைய வேண்டிய நெருக்கடி ாயோ வகையான முறையில் மனித இனம் வருகிறது என்றாலும் அடிப்படைச் சிக்கலாக ன் ஒரு பொருள், இன்னொரு பொருளுடன் மூலாதாரப்பிரச்சனை, எது ஆளுவது? எது தான் - இந்த மூலாதாரப்பிரச்சினைதான்
, உயிரியல் அடிப்படையிலேயே படைப்பு நதைத் தனக்குள்ளேயே பாய்ச்சி, "குழந்தை” பற்றெடுத்து, பாலூட்டி வளர்த்து விடுவதன் பரப்பி நிற்கிறது பெண் உடம்பு; ஆனால் துமின்றி, தனக்குப் பிறந்தது எது என்று பாதுகாப்பற்ற ஒரு தளத்தில் தொங்குகிறது பாதுகாப்பைத் தேடியும், சொத்துடைமைச் தனக்குப் பிறகு, தனக்குப் பிறந்த வாரிசுதான் | உருவான பிறகு - தனக்குத்தான் இந்தக்
-C பங்குனி : 2007 )

Page 41
t
i ( ஒலை 42 )
குழந்தை பிறந்தது என்பதை உறுதி செ ஒருவன்” என்ற ஆணாதிக்கக் கண்டுபிடிப்பு மனத்தளவில் கொண்டு போய் நிலை நிறுத் காதல், கற்பு, தெய்வீகம் என்ற புனித புனிதங்களைக் கட்டி, எழுப்புகின்ற பணிய அவற்றிற்கான அகத்தினைக் கோட்பாடுக
சங்க இலக்கிய அகப்பாடல்கள், கற்புக் கற்பிக்கின்றன என்பதை இந்த இடத்தில் கு ப.89). சங்க இலக்கியத்தில் ஏறத்தாழ ஐ வருகின்றது. கற்றல் என்ற பொருள் உட் தொல்காப்பியர்,
"கற்பெனப்படுவது கரணமொடு
கொளற்கரி மரபின் கிழவன் கி கொடைக்குரி மரவினோர் கொ
என்று திருமணம் என்ற பொருளில், அதா என்ற பொருளில் கையாண்டாலும், நாணல செயிர்தீர் கற்பு, வடமீன் புரையுங் கற்பு, ப கற்பு, அணங்குறு கற்பு, இறந்த கற்பு, நி
கற்பு, ஆறிய கற்பு, வயங்கிய கற்பு, அறஞ்
கற்பு என்று பல அடைமொழிகளோடு வரு என்ற ஒருவனுக்கே உடலாலும் உள்ளத்
| பொருளிலியே வருகிறது என அறிய முடிகி
இவ்வாறு உண்மையாய் இருக்கும் பெண்ணி இதில் தவறுபவளை "விலைமகள்" என்று
ஒரு “கற்புடைப்" பெண்ணை உருவாக்கப் இலக்கியம்: இவ்வாறு பெண்ணின் நடத்ை
மட்டும் அளவிலா உரிமை வழங்குகிறது - வரைவின்மகளிர், ஆடற்கூத்தியர், ஆடலங்க பொருட் பொருளாளர் எனப் பலரைச் சுட்டுகிற
இவ்வாறு ஆணின் பாலுணர்வு அரசியல் கற்
நிலைநிறுத்தப்படுகின்றது. பண்பைக் கற்பி ஆணின் அதிகாரக்கட்டுமானத்திற்கு வாய்
வரை வினைபுரிந்து கொண்டிருக்கிறது.
 
 

GOD ய்து கொள்ளும் நோக்கிலும், "ஒருத்திக்கு நிகழ்கிறது: இந்த ஆதிக்கக் கண்டுபிடிப்பை தும் முயற்சிக்குக் கருவியாகத்தான் குடும்பம். க் கோட்பாடுகள் பிறக்கின்றன: இந்தப் ல்தான் சங்க இலக்கிய அகப்பாடல்களும் ரும் சமூகத்தில் பிறப்பெடுக்கின்றன.
கோட்பாட்டைப் பெண்களுக்கு மட்டுமே றித்துக் கொள்ள வேண்டும் (ர. விஜயலட்சுமி, ம்பது இடங்களில் இந்தச் சொல் பயின்று பட வேறு பொருளிலும் பயின்று வந்தாலும்,
600Ty is ழத்தியைக் டுப்பக் கொள்வதுவே"
(தொல்-கற்பியல், நூ-1) வது ஊரறிய ஒருவனுக்கே உரிமையாதல் தில்லாக்கற்பு, பொறையோடு மலிந்த கற்பு, ன் மாண் கற்பு, மறங்கடிந்த கற்பு, கடவுட் லைஇய கற்பு, வான்தருங்கற்பு, அடங்கிய சால் கற்பு, அருங் கற்பு, முல்லை சான்ற நகின்ற இந்தச் சொல்லாட்சிகள் கணவன் ந்தாலும் உண்மையாய் இருத்தல் என்ற றது.(ர.விஜயலட்சுமி,ப.83).
ணைக் "குலமகள்" "புதல்வன்தாய்" என்றும், ம் புனைகின்றன. அகப்பாடல்கள். மேலும் பல விலைமகளிரைப் படைக்கின்றது. சங்க தயைக் கட்டுப்படுத்திய சமூகம், ஆணிற்கு இற்பரத்தை, சேரிப்பரத்தை, காதற்பரத்தை, ணிகையர், விலைமகளிர், பொருட்பெண்டிர். து சங்க இலக்கியம் (ர.விஜயலட்சுமி,ப,172).
பு. மற்றும் பரத்தை சார்ந்த அகப்பாடல்களில் ப்பதில் இருக்கும் சமச்சீர் அற்ற தன்மை, பாக அமைந்து இன்றைய நவீன சமூகம்
-O பங்குனி : 2007

Page 42
அகப்பாடல்களை வடிவமைக்கும் தொல்கா கூறுகிறார். இந்த ஏழு உரிப்பொருட்களிலும் மொழியாடுவதற்கு ஆண்களுக்கே வாய்ப்பளி ஏமஞ்சாலா இடும்பை எய்தி, தன்னொடும் பெறாமல் சொல்லி இன்புறும் மொழியாடை எனவே உரிப்பொருளின் தொடக்கத்திலேே செய்வதில் தடையேற்படுகிறது. தொடர்ந்து காதலின் தொடக்ககாலப் படிமுறையி: ஆய்மயில் கொல் மாதர் கொல்” என
வழங்கப்படுகிறது. "ஐயக்கிளவி ஆடுவி தொல்காப்பியம். அகப்பாடல்களும் இதை அ
'பெருந்திணை' என்பன ஏறிய மடல்திறம், இ மிகுதிறம், மிக்க காமத்து மிடலோடு நான் இந்த நான்கு வகையான பெருந்திணை நிகழ் உரிமை வழங்கப்படுகிறது. அங்கேயும் செய்யப்படுகிறது.
அன்பின் ஐந்திணை எனப்படும் புணர்தல் ஆகியவற்றிலும் ஆணின் மேலாண்மையே தலைவியின் கூற்றுக்களாகத் தொகுக்கப்பட்டு பார்த்தால், களவுக்காலத்தில் களவு, க கவலையினால்தான் பெரும்பாலும் அனைத் ஆண் மகனின் பரத்தை ஒழுக்கத்தை எ அமைகின்றன. ஆகவே, ஆண் மகனைப்ே உணர்வுகளைச் சாராமல் குடும்பத்தைக் நோக்கியனவாக அமைகின்றன. எந்த இட ஒடுமோ, அந்த இடமான காதல் தள வரையறுக்கிறது தொல்காப்பியம்.
"தன்னுறு வேட்கை கிழவன் மு
எண்ணுங்காலைக் கிழத்திக்கு
காதல் வாழ்வின் தொடக்கத்தில் ஏற்படுகி மெலிதல், நாணம் நீங்குதல், தனக்குள்ளே போறல், மறத்தல், மயங்குதல், சாதல் முத
ஒலை 42 )
 

-C4O
ப்பியர் ஏழு வகையான உரிப்பொருட்களை முதலில் இடம் பெறும் "கைக்கிளை"யில் க்கிறார். காமஞ்சாலாத இளமையோள்வயின் அவளொடும் இணைத்துச் சொல்லெதிர் லக் "கைக்கிளை” என வரையறுக்கிறார். யே பெண்ணுக்கான மொழியை உற்பத்தி காட்சி, ஐயம், தெளிவு, துணிவு என்கின்ற லும் ஐயங்கொண்டு "அணங்கு கொல் மொழியாட ஆண்மகனுக்கே உரிமை ற்கு உரித்தே" (பொருள் -42) என்பது |ப்படியே பின்பற்றுவதைப் பார்க்க முடிகிறது.
|ளமை தீர்த்திறம், தேறுதல் ஒழிந்த காமத்து ாகு என வரையறுக்கிறார் தொல்காப்பியர். வுகளிலும் கூட மொழியாடுவதற்கு ஆணுக்கே பெண்ணுக்கான மொழி உற்பத்தி தடை
b, பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல்
வெளிப்படுகிறது. களவியலும் கற்பியலும் |ள்ள கூற்றுக்களை மொத்தமாகத் தொகுத்துப் கற்பில் முடிய வேண்டும் என்ற "ஒரே” துக் கூற்றும் நிகழ்கின்றன. கற்புக் காலத்தில் திர்கொள்வதாக அவளுடைய கூற்றுக்கள் பால அவளுடைய கூற்றுக்கள் காதலின்ப கட்டமைத்தல் என்ற சமூகக் கடமையை த்தில் மொழி வெள்ளமாகப் பெருக்கெடுத்து த்தில் பெண், மொழியாடக்கூடாது என
b கிளத்தல் இல்லை” (கள.116)
எனத் தொல்காப்பியம் வரையறுக்கிறது.
ன்ற வேட்கை, இடைவிடாது நினைத்தல், பேசுதல், நோக்குவன எல்லாம் அவையே பிய மன நிகழ்வுகள் (கள.91) இருவருக்கும்
--O LμειΘευή : 2007 D

Page 43
பொதுவானவைதான் எனக்கூறும் தொல்க விளைவான மொழிப்படுத்திச் சொல்லாடு வரையறுக்கிறார். (கள.97)
இவ்வாறு பெண்ணின் காதல் மொழியை வை அகப்பாடல்கள் பெரும்பாலும் அப்படியே பின் நடைமுறைப்படுத்தப்படுவது அதிகாரத்திற்கு வதுதான். சங்க இலக்கிய ஆண்-பெண் பாலி இது தெளிவாக வெளிப்படுகின்றது.
விலங்காக இருந்தவர்களை மனிதர்களாக உழைப்புத்தான். அந்த உழைப்புத்தான் மனிதர்களை விடுதலை செய்தது. அந்த உே கட்டமைக்கவும் வழிகோலியது. ஆனால் ம கட்டமைத்தது இந்த உழைப்பு சார்ந்: வேலைப்பிரிவினை ஆண்-பெண் உறவில்தா அகப்பாடல்களிலும் புறப்பாடல்களிலும் ஆ
வினையைச் சுட்டும் பகுதிகள், அன்றைய புலப்படுத்துவனவாக அமைந்துள்ளன.
*வினையே ஆடவர்க்கு உயிரே
மனையுறை மகளிர்க்கு ஆடவர்
என்ற குறுந்தொகைப்பாடல், வீட்டுக்குப் புறத் வேலைகளைப் பெண்ணுக்குமாகக் கற்பிக்க
"ஈன்று புறந்தருதல்” பெண்ணின் கடமை பெயர்தல்” ஆணின் கடமை என்றும் பொ பெண் உறவு உருவாக்கத்தில் பெண்ணிற் அவளை எளிதாக ஆதிக்கம் செலுத்த வழிே ஒர் உயிரின் இயங்குதளத்தை எல்லை இயங்குதளமும் தாய், குடும்பம் என்ற க உட்படுத்தப்படுகிறது.
குழந்தை உலகத்திற்கும் சுதந்திரமான விை இருக்கிறது. இத்தகைய குழந்தைப்பருவ வி பால் வேறுபாட்டிற்கு ஏற்ற விளையாட்டுக்கை இல்லம் சார்ந்தவள் பெண் என்பதால் இல்
ஒலை 42 )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

G12)
ாப்பியர், இம்மன நிகழ்வுகளின் தொடர் வதை மட்டும் ஆணுக்கே உரியது என
ரயறைப்படுத்தியுள்ள தொல்காப்பியர் மரபை, பற்றுகின்றன. அதிகார அரசியலில் முதலில்
உட்படுபவரின் மொழியைக் கட்டுப்படுத்து மியல் அரசியலிலும், மேற்கண்ட முறையில்
மாற்றிப்போட்டது மனிதர்கள் கண்டுபிடித்த இயற்கையின் கொடுரமான பிடியிலிருந்து ழைப்புத்தான் மனித சமூகம் என ஒன்றைக் னிதர்களுக்கு நடுவே ஏற்றத்தாழ்வுகளைக் த வேலைப்பிரிவினைகள் தான். இந்த ான் முதலில் வேர்விடுகிறது. சங்க இலக்கி ணுக்கும் பெண்ணுக்குமான வேலைப்பிரி
நுண்மையான ஆணாதிக்க அரசியலைப்
வாணுதல்
உயிரென” -குறுந்தொகை.
ந்தேயான வேலைகளை ஆணுக்கும், வீட்டு கிறது.
என்றும் போர்க்களத்தில் “களிறு எறிந்து
ான்முடியார் பேசுகிறார். இவ்வாறு ஆண்கான இயங்குதளம் நிர்ணயிக்கப்படுவது, யற்படுத்திக் கொடுக்கிறது. சிறை என்பதே க்கு உட்படுத்துவதுதான், பெண்ணின்
ருத்தாக்கங்களின் மூலமாக எல்லைக்கு /
ளயாட்டு உணர்விற்கும் நெருங்கிய தொடர்பு
விளையாட்டு உலகத்திலேயே ஆண்-பெண் )ள அக இலக்கியம் அறிமுகப்படுத்துகிறது. லாள் எனப்பட்டாள். அதற்கான ஆண்பாற்
- Ο με εδεση : 2007 )

Page 44
சொல் இல்லை என்பது எளிதாக கருதக்க என்றாலேயே இல்லம் சார்ந்தவள் - இல்லத்தி குழந்தைப் பருவத்திலேயே அவள் மனதில் ச பெண் குழந்தை விளையாடுகிறது. அதைக் குழந்தை(கலி.51) சிற்றில் கட்டி விளையாடு மணலாலும் பாவை செய்து அவற்றுக்கு
விளையாடுகிறது. (அகம், 370, நற்.191) தான் பாலூட்டியும் விளையாடுகிறது.(அகம். 80, ர
"உறாஅ வறுமுலை மடாஅ
உண்ணாப் பாவை யூட்டுவோலே
இத்தகைய காட்சிகளை அக இலக்கியம் தாயாகிக் குழந்தைகளைப் பேணும் குடும்ட
இவ்வாறு விளையாடி வளரந்த பெண்ணாகிய விடும் போது குடும்பத்தாலும் சமூகத்தாலும் (கண்காணித்தல் என்பதும் சிறை வாழ்வி போகாதே! வருத்தும் தெய்வம் பிடித்துக்
செய்யப்படுகிறாள். அகநாநூற்றுப்பாடல் ஒன
"முலைமுகம் செய்தன முள்ளெய தலைமுடி சான்ற தனிதழை உ அலமரல் ஆயமொடு யாங்கணு மூப்புடை முதுபதி தாக்கணங்கு காப்பும் பூண்டிசின் கடையும் ே பேதை அல்லை மேதையம் கு பெதும்பைப் பருவத்து ஒதுங்கின
தொடர்ந்து அவள் பருவமடைந்துவிடும் பொ( கட்டுப்படுத்தப்படுகிறாள். இரவுக்குறி, பகர் முதலிய துறைகளில் வரும் பாடல்கள் சந்தேகப்படும் தாய், மகளைக் கண்களால் நற்றிணை.
"அறுகாற் பறவை அளவில் மொ கண்கோளாக நோக்கிப் பண்டு இனையை யோவென வினவின
ஒலை 42 )
 
 
 
 
 
 
 

G3)
கூடிய ஒரு செய்தி அல்ல. எனவே பெண் ற்கு விளக்குப்போன்றவள் என்ற புனைவுகள் கட்டமைக்கப்பட்டு விடுகிறது. சிற்றில் கட்டிப் காலால் அழித்து விளையாடுகிறது. ஆண் வதைப் போலவே கோரையாலும் வண்டல் திருமணம செய்வித்துப் பெண் குழந்தை செய்த பாவைக்குத் தன் தாயைப் போலவே zb 45,101).
T” (gsb.80)
முன்வைப்பதன் நோக்கமே, பிற்காலத்தில் ப் பண்பைக் கட்டமைப்பதற்குத்தான் .
பேதை, பெதும்பைப் பருவத்தை அடைந்து கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறாள். ன் ஒரு கூறுதான்). "கண்டபடி வெளியே கொள்ளும்” எனத் தாயால் எச்சரிக்கை iறு இவ்வாறு காட்சிப்படுத்துகிறது.
பிறு இலங்கின
-60L60),
b LILIT 96)
$6ԾծL-Աl
LT566)
றுமகள் }ன புறத்தென" (அகம்.7)
ழது சமூகத்தாலும் குடும்பத்தாலும் பெரிதும் குறி, இற்செறிப்பு, உடன் போக்கு, அலர் இதைத்தான் காட்டுகின்றன. மகளைச் ல் கொல்வது போல் பார்த்தாள் என்கிறது
ய்த்தலிற் b si utGBu” (Bib. 55)
—( பங்குனி : 2007

Page 45
இத்தகைய சூழலில் மகளை அடித்து விட பார்க்க முடிகிறது. ஊரில் எழுந்த அலை அடிப்பதாக நற்றினைப் பாடல்(149) பதிவு உறவினர்கள் கையாளும் பெண்ணுக்கு எ அன்றே பார்க்க முடிகிறது. பெண்ணுக்கு இ வகையான வன்முறைதான் என்கிறது இன்ை என்பதைக் கூட நற்றினை (149) இவ்வாறு
"சிலரும் பலரும் கடைக்க ணோ மூக்கி னுச்சிச் சுட்டுவிரல் சேர் மறுகிற் பெண்டி ரம்பல் தூற்ற"
மேற்கண்ட இந்தக் களவுக்காட்சிகளில், மி அதிகாரம், நேரடியாகத் தந்தை மூலமாக மூலமாகவே நடைமுறைப்படுத்தப்படுகிறது. அரசியல் இது என்பதை இன்று புரிந்து கெ மகளைத் தேடித் தாய்தான் போகிறாள்: புல 271) இப்படிக் குடும்பத்தை குலையவிடாம ஏற்றிவைக்கப்படுகிறது.
திருமணம் முடிந்த கற்பு வாழ்க்கையிலும் அ பின்னப்பட்டுள்ளது. பரத்தையர் பிரிவு, ெ 1 சாட்சிகளிலும், வாயில் மறுத்தல், வாயில் நே நாடகக் காட்சிகளிலும், தலைவன் எத்தன பொறுமையாக இருந்து குடும்பத்தை கொ6 வலியுறுத்தப்படுகிறது. ஆண் கற்புத்தவறியபே காப்பதே “கடவுள் கற்பு" என்கிறது குறுந்
"நொடிய திரண்ட தோள்வளை ெ கொடிய னாகிய குன்றுகெழு நாட வருதவ தோர் காலை இன்முகம் கடவுட் கற்பின் அவனே பேணி மடவை மன்ற நீ எனக் கடவுபு துணியல் வாழி தோழி சான்றோர் புகழும் முன்னர் நாணுப பழியாங்கு ஒல்பலோ காணும் கா
| C ஒலை 42 ) --w
 
 

க்கூடிய தாயாரையும் அக இலக்கியத்தில்
க் கேட்டுத் தாய் கோபத்தால் மகளைக்
செய்கிறது. இன்று பேசப்படும் இரத்த
SymeoT 6166tQup60p60)u (domestic violence)
இழைக்கப்படும் வன்முறையில் 80% இந்த
றய புள்ளிவிவரம். அலர் எவ்வாறு பேசப்பட்டது
சித்தரிக்கிறது.
'க்கி த்தி
ல்லத் எடுத்துக்கூறும் தந்தையின் குடும்ப ச் செயல்ப்படுத்தப்படாமல், தாய்மார்கள் அகப்பால்களின் மிக நுண்ணிய பாலுணர்வு காள்ள முடிகிறது. உடன் போக்குப் போன ம்புகிறாள்: சாவைக்கூட விரும்புகிறாள் (நற். ல் கட்டமைப்பது பெண்ணின் தலைமேல்
ஆணின் அதிகார அரசியல்தான் நுட்பமாகப் பாருள்வயிற்பிரிவு முதலிய பிரிவு சார்ந்த ர்தல் முதலிய துறைகளிலும் வெளிப்படுகிற ன தவறு செய்தாலும் "புதல்வன் தாய்” ண்டு செலுத்த வேண்டும். என்ற கருத்தே ாதும் பெண் கோபம் கொள்ளாமல் பொறுமை ! தொகை.
நகிழ்த்த -ன்
திரியாது
லே” (குறுந். 252)
C பங்குனி : 2007 D-سم - حسن

Page 46
பரந்தையிடம் சென்று வருபவனைச் "சான் கூறும் பாலுணர்வு அரசியலின் குறியீடாக அ பெண்கள், தலைவனைத் தவிர பிற தெய் பெண்களால் மழையைக் கூட வரவழைக்க ( பாடல்களிலேயே (கலி. 1 மற்றும் கலி. 8)
இவ்வாறு பொறுமை காத்து, குழந்தை பெ காக்கிற பெண்ணின் கடமை, ஆண் இறந்த உணவு படைத்து, அதை உண்ட வாழும் இவ்வாறு கைம்மை (புறம். 25) நோற்கும் ெ உயவற் பெண்டிர் (புறம். 246), கழிகல ம ஆளிற் பெண்டிர் (நற். 353) எனப் பலவா கைம்மை நேன்பு நோற்காமல் கணவனே மதிக்கப்பட்டார்கள் எனத் தெரிகிறது: அத் தொல்காப்பியம்.
“நல்லோள் கணவனோடு நனிய சொல்லிடை இட்ட பாலை நிலை
கணவன் இறந்த பிறகு, பெண்களின் நிை காஞ்சி, மூதானந்தக் காஞ்சி, முதுபாலை, ! நிலைகளைப் புறப்பாடல்களின் மூலமாக சாரதாவை என்று திணை மரபு கூறினாலு பெரிதும் துணை செய்கின்றன, பெருங்கே முயல்வதைத் தடுக்கும் பெரியோரை நோக் கைம்மை நோன்பின் தன்மையையும், அை
உயர்ந்த வாழ்வு எனக் கொண்டாடுவதை
பிறகு பெண்கள் "நெய்யில்லாத உண புளிகலந்து சமைத்த வேலைக்கீரையைய நிலத்தில் படுத்தெழ வேண்டும்” என அறி பரல்களாலான பள்ளியில் படுத்து, கையில் அவலை வாயில் அடக்கிக் கொண்டு கு காட்சிகளைச் சங்க இலக்கியத்தில் காண கைம் மைக் காட்சிகளில் ஆணின் அ அமைந்துள்ளது. ஆனால் இவைகளை பு கருத்தாக்கங்கள் மூலம் பெண்களை ஏற்றுக்ெ | நுட்பமாக அமைந்துள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றோன்" எனத் தலைவி சுட்டுவது மில்லத் மைந்துள்ளது. மேலும் இத்தகைய கற்புடைய வங்களை வணங்கக் கூடாது, அத்தகைய முடியும் என்ற புனைவுகளைக் கலித்தொகைப் பார்க்க முடிகிறது.
ற்று, குடும்பமெனும் நிறுவனத்தைக் கட்டிக் பிறகும் தொடர்கிறது. இறந்த தலைவனக்கு பெண்ணைப் பார்க்க முடிகிறது. (புறம்.249) பண்களைப் பருத்திப் பெண்டிர் (புறம், 125) களிர் (புறம். 280) கழிகலமகடு (புறம், 361) று சுட்டுகிறது சங்க இலக்கியம். இவ்வாறு ாடு நெருப்பில் முழ்கும் பெண்கள் பெரிதும் தகைய பெண்ணை 'நல்லோள்" என்கிறது
pல் புகிஇேச் " - (தொல், புறம் - 19)
ல குறித்துத் தொடா அக்காஞ்சி, ஆஞ்சிக் தாபதறிலை, பாலைக்காஞ்சி எனப் பல்வேறு த்தான் அறிய முடிகிறது. அவை அகம் ம், ஆண்-பெண் உறவை அறிய இவைகள் காப் பெண்டு, தன் கணவனோடு தீப்பாய 5கி கூறுவதாக அமைந்துள்ளன. புறப்பாடல் தவிடக் கணவனோடு அதே தீயில் வீழ்வதே பும் பார்க்க முடிகிறது. கணவனை இழந்த வில் வெள்ளை எள்ளின் சாந்தையும், பும் மட்டும் உண்டு. பாயில்லாத வெறும் ய முடிகிறது. (புறம்246). கூந்தலை இழந்து ஆம்பல் தண்டினை வளையலாக அணிந்து, ரிர்ந்த நீரில் மூழ்கி நீராடி வாழ நேர்ந்த முடிகின்றது (புறம்.250,280,246). இத்தகைய ஆதிக்க அரசியல் வெளிப்படையாகவே விதம், தெய்வீகம், கற்பு, குலமகளிர் என்ற காள்ள வைத்துதான் பாலுணர்வு அரசியலின்
-C பங்குனி : 2007 )

Page 47
கெடுப்பவனாக உருவகிக்கப்படுகிறாள்.
ஆணின் உடைமைப் பொருள்தான் பெண். பாலுணர்வு அரசியல் அகப்பாடல்களில் உடன்போக்கிற்கு அனுப்பும் தோழி இவ்வா
*அண்ணாந் தேந்திய வனமுலை பொன்னேர் மேனி மணியிற் றா நன்னெடுங் கூந்தல் நரையொடு நீத்த லோம்புமதி பூக்கேழ் ஊர
பெண்மையின் இளமைதான் ஆணுக்கு 6ே இப்பாடல் மூலம் அறிய முடிகிறது. இது போ
*வேட்டார்க்கு இனிதாயின் அல்
உண்பவலோ நீருண் பவர்” (கள்
பெண்ணை குறித்த ஆணின் ஆதிக்கப்பா இது போலவே போர் என்றால், பெண்களைக் கொள்ளப்பட்டது. மன்னன் அவ்வாறு பகைவ மழித்து, அக்கூந்தலால் கயிறு திரித்து, அ நற்றிணை (270) பதிவு செய்கிறது.
இத்தகைய சூழலில் இன்று நிலவும் ஏற்றத்தாழ்வான மனப்பான்மை அன்றே உ
மூலம் அறிய முடிகிறது.
ஆண் மகனைப் பெற்ற தந்தைக்கே போரு
புறம்(312) "ஈன்று புறந்தருதல் என்தலைக்
பாடலிலும் வெளிப்படுவது ஆண் குழந்ை பயந்த புகழ்மிகு சிறப்பின் நன்ன ராட்டி” 6 அகநாநூறு (184). இது போலவே தன்னுட "புகழ்சால் புதல்வன் பிறந்த பின் வா" எ - இவ்வாறு அரசுக்கும் தாய்க்கும் குலத்தி மகன் வடிவமைக்கப்படுகிறான்.
ஆனால் பெண் மகளோ போர் ஏற்படுவத
“பகையை” அல்லவா வளர்த்திருக்கிறாள்
ஒலை 42 )
 
 

G16)
ஆணின் நுகர் பொருள் தான் பெண் என்ற நுட்பமாக அமைந்துள்ளது: தலைவியை ாறு கூறுகிறாள்.
தளரினும் ாழ்ந்த
முடிப்பினும் " (நற்.10)
வண்டும் என்ற அணுகுமுறை நிலவியதை ாலவே ஒரு தலைவன் இப்படிக் கூறுகிறான்.
லது நீர்கினிதென்று S.62)
ர்வை அப்பட்டமாக இதில் புலப்படுகிறது.
கவரந்து வருவது வீரத்தில் அடையாளமாகக் ரின் பெண்களைக் கவர்ந்து வந்து தலையை |ப்பகைவர்களின் யானையைக் கட்டியதாக
ஆண்குழந்தை/பெண்குழந்தை குறித்த உருவாகிவிட்டது என்பதையும் சங்கப்பாடல்
க்குப் போகும் உரிமை உண்டு என்கிறது கடனே" என்ற புகழ்பெற்ற பொன்மடியார் தயின் பெருமைக்குரிய இடமே "புதல்வற் ான்ற மகனைப் பெற்ற தாயைப் புகழ்கிறது. -ன் "வடக்கிருக்க" வரும் பொத்தியாரிடம் ன்றுதான் கோப்பெருஞ்சோழன் கூறுகிறான் ற்கும் பெருமை தேடித்தருபவனாக ஆண்
ற்குக் காரணமாகி ஊரின் அமைதியையே மகளை" வளர்க்கிறேன். என்று சொல்லி என்கிறது பரணரின் பாடல் (புறம் 336)
பங்குனி : 2007 )

Page 48
"மரம்பட சிறு தீப் போல அணங்கு 349) என்கிறது பாடல் - இவ்வாறு ஆண்ட் போது அவளைக் கொண்டாடுகிற சமூக வரும்போது, ஏன் பெற்றாள், பெறாமலேே பாலுணர்வு அரசியலின் உச்சக் கட்டமா பள்ளமென்ன? எங்கே ஆடவர்கள் நல்லவர் நல்லதாக இருக்குமென்று ஒரு பெண்ை விளங்குகிறது.
ஆக மொத்தத்தில் சங்க இலக்கியப்பாட நுட்பமான பாலுணர்வு அரசியலின் கட்டு வழிகளில் விளக்க வாய்ப்பிருக்கிறது காத் மி அதிகாரச் செயல்ப்பாடுகளைப் பெண்ணே
நிகழ்கலை நாடகம் போன்ற ஒரு பா அரங்கேற்றியிருக்கிற தன்மை சங்க இலக்கி இன்றுவரை சான்றாக விளங்குகிறது.
கட்டமைக்கப்பட்டுள்ளதால்த்தான் இன்று தமிழ்ப்பண்பாட்டில் ஆழமாக வேரூன்றிக்
அடிக்குறிப்புக்கள்:
1. இவர்களைக் குறித்து ர.விஜயலட்சு இவர்கள் இற் பரத்தையர், சேரிப்ப சேரிப் பரத்தையர் காதற் பரத்தையர் ராகக் கொள்ளப்பட்டனர். காதற் பரத் என அழைக்கப்பட்டனர் - இற்பரத் ப்பட்டனர் - இவர்களைத் தொல்
கொள்வர். | 2. தொடாக்காஞ்சி E66
பேய் ஆஞ்சிக் காஞ்சி 66 ԼOTսն% மூதானந்தக் காஞ்சி - 566 LIITÜës
(up$JLjmeთ6სა LT 650) 6 இறந்: தாபதநீலை 1856 წწT6). பாலை நிலை 666 LDmulei
கூறுவ
( ஒலை 42 D
 

○
ஆயினள் தான் பிறந்த ஊர்க்கே" (புறம் பிள்ளையை முன்வைத்துத் தாயைப் பேசும் ம், பெண் பிள்ளையைப் பெற்றவள் என ய இருந்திருக்கலாமே எனக் கருதுகிறது. ாக நாடென்ன? காடென்ன? மேடென்ன? களாக இருக்கிறார்களோ உலகம் அங்கே னயே ஏற்றுக் கொள்ளவைத்த தந்திரம்
ல்களில் ஆண்/பெண் உறவு என்பது மிக மானமாக அமைந்துள்ளது என்பதைப் பல ல்லத் கூறுவது போலப் பெண்ணுக்கெதிரான ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு முறையில் ாணியில் குடும்பமென்னும் மேடையில் ய அகப்பாடல்களின் இலக்கிய மேன்மைக்கு இத்தகைய இலக்கிய ஆளுமையோடு றுவரை அதன் செல்வாக்குத் தொடர்ந்து கிடக்கிறது எனக் கருதலாம்.
மி இவ்வாறு பதிவு செய்கிறார்.
ரத்தையர் எனப் பட்டனர்(வசுப மாணிக்கம்) , வரைவின் மகளிரென மேலும் இரு பிரிவின தையர் ஆடற் கூத்தியர், ஆடலங்கணிகையர் தையர் காமக்கிழத்தியர் எனவும் அழைக்க காப்பியர் "மனையோள் ஒத்தவர்களாகக்”
பன் போரில் இறந்த போது, விழுப்புண்களைப் தீண்டவிடாமல் காவல் காத்தல். வனைக் கொன்ற வேலினால், தன்னை துக் கொள்வது பனுடனேயே மனைவி இறந்து விடுவதைப ந ஏனையோர் கையறு நிலையில் புலம்புவது. லயில் செல்லும் போது கணவன் மட்டும துபட, மனைவித் தனியாய்ப் புலம்புவது. 1ன் இறந்து மனைவி தனிமைப்படும் நிலை பனை எரிக்கும் நெருப்பில் பாய்ந்து உயிரை க முயலும் போது தடுப்பவரை நோக்கிக்
ls.
—( ഭ്രൂങ്ങി : 2007 D

Page 49
பயன்பட்ட நூல்கள்:
ர. விஜயலட்சுமி, தமிழக மகளிர் (தெ வரை 1997,உலகத் தமிழாராய்ச்சி Raman Selden. A Reader' Guic
The Harvest Pl
முல நூல்கள்:
சங்க இலக்கியம் இரண் சென்ன தொல்காப்பியம் இரண்ட சென்ன
‘ஓலை’ க்கு உதவ விரும்புவோர் தங்க அல்லது வைப்பாக Colombo Tamil Sangam Society கணக்கு இல. 1100014906 Commercial Bank G616irst656025é
காசுக் கட்டளையாயின் “செயலாளர் கெ வெள்ளவத்தை தபால் அலுவலகத்தில் கொழும்புத் தமிழ்ச்சங்க அலுவலகத்தி
\
( ဏ္ဍ၈၈၈လ 42 )
 

G18)
ாடக்க கால முதல் ஆறாம் நூற்றாண்டு நிறுவனம், சென்னை. le to Contemporary Literary Theory. (1985) ess Ltd. Britain.
டாம் பதிப்பு (1981) நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ்,
6
ாம் பதிப்புரி1981) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
i
Yس-- ஸ் நிதி அன்பளிப்புக்களை காசோலை
td.
கு அனுப்பலாம்.
ாழும்புத் தமிழ்ச் சங்கம்” என்ற பெயரில் மாற்றப்படக்கூடியவாறு அனுப்பமுடியும். ல் நேரடியாகவும் செலுத்த முடியும்.
-O urissaf : 2007 )

Page 50
ـــــــــــــ
'SARA/AM
நானாவித மருந்துய்பொருட் வகைகள்
ஆசிரி, டேர்டன்ஸ், நவலோக களில் விசேட வைத்திய நிபுண கொள்ளப் பதிவுசெய்யும் e-C
.D.D , உள்நாட்டு அழைப்பு Fax வசதிகள், வீட்டிலிரு. தொடர்புகொள்ளும் Conne
போட்டோப் பிரதி, புத்தகங் உபகரணங்கள், அப்பியாசக்
குங்குமம், ஆனந்தவிகடன சுட்டிவிகடன், கோகுலம், மா தென்னிந்திய வார வெளியீடு
தரமான ஆடியோ, வீடியோ, விற்பனைக்கும்!
| தினமும் மாலையில் 5.00 மணி பார்வையிடுதலும், ஆலோசன
“சரவணாஸ் றக்ஸ்”
இலக்கம் : 7C , ஹம்ரன் லேன் கொழும்பு : 06. இலங்கை

AS DRUGS’
கள், பால்மா வகைகள், குளிர்பான
ா, ஆஷா சென்றல் வைத்தியசாலை னர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் hannelling Gas-g5!
3535 Gir, Net 2 Phone Slavopinjä5356sir, ந்தபடியே உங்கள் உறவினரைத Ct Call ouggagiri
ப்கட்டுதல், நானாவித பாடசாலை
கொப்பிகள்!
ர், அவள்விகடன், சக்திவிகடன், ங்கையர் மலர், ராணிமுத்து போன்ற
கள்!
DVD வகைகளின் வாடகைக்கும
யிலிருந்து 9.00 மணிவரை நோயாளர் னகளும் சிகிச்சைகளும்.
தொலைபேசி : +94 112 586865
தொலைமடல் : +94 112365585

Page 51
purchas
W
Here W
W M
G
" " ..."
The Largest
Wella Wyatta
t LIMITIM Jewell 541, Galle Road, Colombo -06.
W | TP: 23.63392 W
 
 
 
 
 
 
 
 
 
 
 

|||||||||||||||||||||||||||||||| W M M W W
iИg..... how to
e jeuvellery o
ി
WIWITANTINWIWIWN
Jewellery Store in Sri Lanka.
y 1000/= per month