கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2007.05-06

Page 1
இ
மெய்ப்பொருள் காண்பதறிவு
 

E იhრთქh): 100/=

Page 2
சிவத்தம்பி ஆய்வுகள்
பாரதியியல்
மொழி ஆய்வு
பக்தி இலக்கிய ஆய்வுகள்
இலக்கண உருவாக்கம்
தமிழிலக்கியத் திறனாய்வு
இலக்கிய வரலாற்றுக்கு e
பேராசிரியர் சிவத்தம்பியும்
ஓர் அவதானச் சிறுகுறிப்பு
பேராசிரியர் கா.சிவத்தம்பி
ஒரு நால் இரு பார்வை
 
 
 
 

வரலாறு
ஒரு துவக்கவுரை
நவசிந்தனைகளும்
ல சிந்தனைகள்
சில குறிப்புகள்

Page 3
தமிழ்ச் சங்கம்
ர் ஆண்டு : திபி.2037
பேராசிரியர் முனைவர் சபா ஜெய
ஆஇரகுபதி பாலசிறீதரன் சி.சிவலோகநாதன் க.சண்முகலிங்கம் முேனைவர் செல்வி திருச்சந்திரன்
பத்மா சோமகாந்தன்
தெமதுசூதனன்
ஆசிரியர் குழு :
முனைவர் வமகேஸ்வரன் டாக்டர். ஏ.ஜின்னா செரிபுதீன்
க.இரகுபரன் -- வசந்தி தயாபரன்
ஒருங்கிணைப்பு செல்வி.சற்சொரூபவதிநாதன் எஸ்.எழில்வேந்தன் ់ க.க.உதயகுமார் டாக்டர்.அனுஷ்யந்தன் 83 எஸ்.பாஸ்க்கரா
நிர்வாக ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆசிரியர் பக்கம்
இந்த இதழில் இருந்து “ஒலை” இருமாத இதழாக அதிக பக்கங்களுடன் வெளிவரு கின்றது. தமிழ்ச்சங்கம் காத்திரமான இதழை வெளியிட வேண்டுமென்ற, பல வாசகர்களின் வேண்டுகோளையும் பூர்த்தி செய்யும் நோக்கில் இனிவரும் இதழ்கள் வெளிவரும்.
இந்த இதழ் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் சிறப்பிதழாக வெளிவருகிறது. அவர் எமது சங்கத்தின் காப்பாளர் என்ற தகுதி மட்டும் இந்தச் சிறப்பிதழுக்குக் காரணம் அல்ல. மாறாக தமிழியல் ஆய்வுப் பரப்பில் கால் நூற்றாண்டுக்கும் மேலாகக் காத்திரமான பங்களிப்பு வழங்கிவரும் புலமையாளர், ஆய்வாளர், விமரிசகள் என்ற தகுதிப்பாடுகள் காரணமாகவும் இந்த இதழை வெளியிடுகி ன்றோம்.
ஒருவர் வாழும் போதே அவர் செய்த பணிகளுக்காகக் கெளரவிக்கப்படுவது சாலச்சிறந்தது. பேராசிரியர் சிவத்தம்பிக்கு இன்றுவரை பல நிலைகளில் கெளரவமும் பாராட்டும் கிடைத்துள்ளது. தொடர்ந்து அவருக்குரிய கெளரவங்கள் அவரைத்தேடி வருகின்றன. இந்த ரீதியில் நாமும் அவரைக் கெளரவிக்கும் விதத்தில் இந்தச் சிறப்பிதழை வெளியிடுவதையிட்டு மகிழ்ச்சி அடைகி ன்றோம்.

Page 4
இருபதாம் நூற்றாண்டு தமிழியல் ஆய்வுப் பரப்பில் பேராசிரியர்கள் வையாபுரிப்பிள்ளை, தெ.பொ.மீ, மற்றும் மயிலை வேங்கடாசாமி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த மரபுத் தொடர்ச்சியின் பிறிதொரு தளமாற்றமாக வெளிப்பட்டவர்கள் மார்க்சிய ஆய்வாளர்கள். இவர்களுள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, நா.வானமாமலை போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.
தமிழில் மார்க்சிய இலக்கிய விமரிசனம் ப.ஜீவானந்தம் , தொ.மு. சி. ரகுநாதன் போன்றோரால் தொடக்கிவைக்கப்பட்டது. பின்னர் பேரா.நா. வானமாமலை, நெல்லை ஆய்வுக்குழுவால் தடம் அமைக்கப்பட்டது. தமிழில் வரன்முறையான மார்க்சிய விமரிசனம் வளர்த்தெடுக்கப்பட்டமையில் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோருக்கு முக்கியமான பங்கு உண்டு. குறிப்பாக கல்விச் சூழலில் இவர்கள் இருவரும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தினார்கள்.
க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, நா.வானமாமலை என்ற பெயர் சுட்டுதல் ஒரே தளப்பார்வை கொண்டவர்களாகவே அமைந்தது. இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வுச் செல்நெறியில் இந்த மூவரும் ஏற்படுத் திய தாக்கம் மடைமாற்றம் கனதியானது. இந்த மரபுத் தொடர்ச்சியில் கா.சிவத்தம்பி இன்றுவரை தொடர்ந்து தனது ஆய்வுத் திறன்களால் விமரிசன நோக்கால் புதிய தடங்கள் அமைத்து வருகின்றார்.
பணி டைய இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையிலான அனைத்தையும் இணைத் துப் பார்க் கும் புலமை மரபு கொண்டவர் சிவத்தம்பி. இதனால் சமூகம், பண்பாடு, கருத்துநிலை, அரசியல் போன்ற களங்களின் ஊடாட்டம் சார்ந்து பார்க்கும் ஆய்வு செய்யும் ஒரு புதிய மரபை தமிழுக்கு வழங்கியுள்ளார். மேலும் ஊடகம், கலை, இலக்கியம், மொழி, இலக்கணம், பண்பாடு சார்ந்து சிவத்தம்பி வெளிப்படுத்திய பார்வைகள்

புதிய வளங்கள் கொண்டவை. தமிழியல் ஆய்வுக்குரிய அனைத்துச் சாத்தியப்பாடுகளையும் தன்னகத்தே கொண்டவை. இத்தகைய வீச்சுக் களால் சிவத் தம்பியின் ஆளுமை
பன்முகப்பாங்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பின்புலங்களை ஆய்வு ரீதியில் புரிந்து கொள்ளும் நோக்கிலேயே இந்த இதழில் கட்டுரைகள் அமைந்துள்ளன. மேலும் புலமைச் செயற்பாட்டில் எந்தவொரு நபரையும் நாம் விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும் கருத முடியாது. இதற்கு சிவத்தம்பி மட்டுமல்ல யாவரும் உட்படக்கூடியவர்கள். க.கைலாசபதி, கா.சிவத்தம்பி மரபுவழிவரும் விமரிசன நோக்கு ஆய்வுத்திறன் இதைத்தான் நமக்கு கையளித் துள்ளது. அறிகை மரபாகவும் உருப்பெற்றுள்ளது.
ஆகவே இந்த மரபுவழி நின்று பார்க்கும் பொழுது வெளிப்பட்ட சிந்தனைகளும், விமரிசனங்களும் சில கட்டுரைகளில் இழையோடி வந்துள்ளன. எவ்வாறாயினும் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் பன்முக ஆளுமை குறித்த தரிசன வீச்சுக்கான களங்கள் இங்கே அடையாளப்படுத்தப்பட் டுள்ளன. இது ஒரு தொடக்கம்தான்.
இன்று எம் மத்தியில் வாழ்பவர்கள் மத்தியில் சிந்தனையாலும் செயலாலும் மேற்கிளப்பி ஆளுமைப் பொலிவாக பேராசிரியர் சிவத்தம்பி உயர்ந்துள்ளார். தமிழியல் ஆய்வுச் செல்நெறியில் அவர் விட்டுச் சென்ற தடங்கள் ஆழமும் விரிவும் மிக்கவை. நாம் இதைக் காணாமல் அல்லது கண்டுகொள்ள முயற்சி செய்யாமல் இருப்பது அறியாமையின் பாற்பட்டதாகவே இருக்க முடியும். ‘ஓலை’ அறிவு சார்ந்த செயற்பாடுக ளுக்கும் உரையாடல்களுக்கும் களம் அமைக்க விரும்புகிறது. ஆகவே சிவத்தம்பி என்ற அறிகை மரபுக் கையளிப்பின் கனதியை உணரவும் உள்வாங்கவும், விமரிசனத்திற்கு உள்ளாக்கவும் நாம் தயாராவோம். இது எமது தார்மீகக் &L-60LDub&nl.

Page 5
சிவச்
சொற் சிவச்
நான் கரவெட்டி மேற்கைச்சேர்ந்த காலஞ்சென்ற பண்டிதர், சைவப்புலவர் தம்பர், பொன்னுச்சாமி காாத்திகேசுவினதும் அவர் மனைவி வள்ளியம் மையினதும் மகன். 1932இல் பிறந்தேன். நாங்கள் எழுவர் உடன்பிறப்புக்கள். ஐந்து சகோதரிகள் ஒரு தம்பி.
வல்வெட்டித்துறை காலஞ்சென்ற எஸ்.வி.நடராசா வினதும், அவர் தம் மனைவி மகாலட்சுமியினதும் மூத்த மகளான ரூபவதியை(விமலா) 1963 இல் திருமணம் செய்தேன். எமக்கு மூன்று பெண்கள். கிருத்திகா, தாரிணி, வர்த்தனி மூவரும் திருமணம் செய்துவிட்டார்கள்.
எனது ஆரம்பக் கல்வி பாணந்துறையில் தொடங்கி, கரவெட்டி மாணிக்க வித்தியாலய த்தில் தொடர்ந்து கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரியில்தான் ஆரம்பமாயிற்று. ஆளுமை உருவாக்கம் நடந்த காலத்திலே கரவெட்டியின் பண்பாட்டுச் சூழல் முக்கிய காரணியாக இருந்துள்ளது என்பதனைப் பின்னோக்கி உணர் கிறேன். வறுமையிற் செம்மை, தனித்துவங்களை மறவாத இயைபு, ஆர்வ
 

D களில் தம்பி
D
தம்பி
விடயங்களை வளர்த்துக்கொள்ளும் முயற்சி என்பன அந்தப்பின்புலத்தில் நாங்கள் பெற்ற விழுமியங்கள் 6T60T6M) TLD.
விக்கினேஸ்வராவில் படிப்பித்த ஆசிரி யர்கள் எல்லோரினது ஆளுமைச் செல்வாக்கு மிகுந்தது. குறிப்பாக கே.சிவப்பிரகாசம் முக்கியமானர். அவர் எம்மை நாம் கண்டு பிடித்துக் கொள்ள உதவினார்.
பின்னர் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பு கொழும்பு சாஹிறாக் கல்லூரியில். கரவெட்டியிற் பெற்ற பண்பாட்டுத் தோச்சல் கொழும்பில் முகிழ்க்கத் தொடங்கிற்று. சாஹிறா மாணவனாக இருக்கும்பொழுதே கலை, இலக்கிய ஈடுபாடு தொடங்கிற்று. அப்பொழுது வானொலி ஒரு முக்கியச் சாதனமாகிற்று.
திருவாளர்கள் கமால்தீன், சண்முகரத்தினம், அஸிஸ் என்ற ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியம். எனது சீவிய கால நண்பர்களான சிவகுருநாதன், சமீம் ஒரு கால மாணவர்கள். 1952 இலேயே கைலாசபதியுடன் தொடர்பு ஆரம்பித்தது.
1951 இல் சிவகுருநாதனும் நானும் ‘தமிழ்ஒளி' என்ற சஞ்சிகையை நடத்தினோம் (ஒரு இதழ்தான்). கொழும்புச் சூழலில் நாடகக் கல்வி வளர்ந்தது. பல்கலைக்கழகத்தில் (1952/53-56) பேராசிரியர்கள் கணபதிப்பிள்ளை, வித்தியா னந்தன் தொடர்பால் நாடகப் பயிற்சி வலுப்பெற்றது.
பல்கலைக்கழக மட்டத்தில் மார்க்சியப் பரிச்சயம் கட்டமைப்பான ஒரு தரிசனமாக முகிழ்த்து திட்டவட்டமான வாழ்க்கை நோக்கு ஆகிற்று. பொ.கந்தையாவின் தொடர்பு, மார்க்சிய நண்பர்

Page 6
களின் சூழல், மார்க்சிய எழுத்தாளர்களின் தொடர்பு ஆகியன (தொ.மு.சி.ரகுநாதன்), முக்கிய உருவாக்கச் சக்திகளாக அமைந்தன. இந்தக் கண்ணோட்டத்தில், தமிழ் இலக்கிய த்தைப் பார்ப்பதென்பது புதிய விடயங்களைக் கண்டு பிடிப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்திற்று. பல்கலைக்கழகத்தில் முதற் பட்டத்துக்குத் தமிழ், வரலாறு, பொருளியல் செய்தமை, ஒன்றுடன் ஒன்றை இணைத்துப் பார்ப்பதற்கு உதவிற்று. ஆனால், தொடக்கக் கால கலைப்பயில்வு நாடகத் துறையிலேயே இருந்தது. வானொலி நடிகனாகப் பின்னர் சானாவுடன் தொடர்ந்து சுந்தரலிங்கம் , செந்திமணி, மயில்வாகனம் ஆகியோருடன் மேடையேறினோம். பல்கலைக் கழகத்தில் முதலில் நடித்தேன். அந்தத்தொடர்பு என்னைப் ரோசிரியர்கள் கணபதிப்பிள்ளை, வித்தியானந்த னுடன் நன்கு இணையவைத்தது. கைலாசபதியும் நானும் ஒருகால மாணவர்கள்.
நாடகச் செயற்பாடு பின்னர் நாடக வளர்ச்சி யாகவும், நாடக வரலாறு பற்றிய ஆய்வாகவும் வளர்ந்தது. 1956 இல் பேராசிரியர் வித்தியானந்தன் கலைக்கழகத் தமிழ் நாடகக் குழுவைப் பொறுப் பேற்ற காலம் முதல் 1966 வரை நான் செயலாளராக இருந்தேன். கொழும்பு நிலைப் பட்ட நடவடிக்கைகளுக்கு நான் பொறுப்பாக இருக்கவேண்டிய நிலைமையிருந்தது.
1956இல் கலைமாணிப் படிப்பு முடித்துச் சாஹிறாவில் ஆசிரியராகவும், பின்னர் பாராளு மன்ற சமநேர மொழிபெயர்ப்பாளராகவும் இருந்த காலத்தில் (1956 - 61 , 1961 - 65) வித்தியானந்தனுடைய நாட்டுக்கூத்து மீள் கண்டுபிடிப்பு முயற்சியில் அவருக்குத் துணையாக நின்றோம் (கைலாசபதி, சுந்தரலிங்கம்).
இலக்கிய ஈடுபாடு 1950 களிலிருந்து தொடங் குகிறது எனலாம். 1954 முதல் முற்போக்கு இலக்கிய இயக்கத்துடன் இணைந்து தொழிற்படும வாய்ப்புக்கிட்டிற்று. எனது ஆக்கத்துறை முக்கியமாக நாடகமாக (நடிப்பு, வானொலி நாடகம் எழுதுதல்) அமைய, இலக்கியம் பற்றிய எனது ஈடுபாடு பிரதானமாக விமரிசன நிலைப்பட்டதாகவே இருந்தது. 1967- 70 இல் இங்கிலாந்தில் ரோசிரியர் ஜோர்ஜ் தொம்சனின்

ஆய்வு வழிகாட்டல் கிடைத்தது. அது புதிய தரிசனங்களைத் தந்தது. அந்தப் பயிற்சி நளநிலைக்கும் பார்வை முயற்சிகளுக்கும் ஒரு கருத்துநிலை உறுதிப்பாட்டையும், அதே வேளையில் புதியனவற்றை விளங்கி, உள்வாங்கிக் கொள்ளும் தன்மையையும் தந்தது. 1960 களில் தினகரனிலும், மரகதம், சரஸ்வதியிலும் பின்னர் 1970களில் மல்லிகையிலும் எழுதும் வாய்ப்பு கிட்டிற் று. 1965 முதல் வித்தியோதயப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரானேன். 1978 இல் யாழ்பல்கலைக்கழகம் போய்ச் சேர்ந்தேன்.
1956 முதல் இலக்கிய விமரிசனத் துறையில் எழுதி வந்துள்ளேன். 1966 முதலே எனது விமரிசன எழுத்துக்கள் நூலுருவில் வெளிவரத்தொடங்கு கின்றன.
எனது தாயார் வழிவந்த கிராமியப் பண்பாட்டுப் பரிச்சயமும், தந்தையார் வழிவந்த தமிழ் ஈடுபாடும், கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன் வழிவந்த பார்வை, செயலகற்சிகளும் கைலாசபதி முதல் ரகுநாதன் வரை (முற்போக்கு எழுத்தாள நண்பர்கள் பலர் உட்பட) கிடைத்த இலக்கிய தோழமையும், தொம்சன் வழிவந்த தரிசன விருத்தியும், முற்போக்கு நண்பர்களின் எழுத்து உந்துதல்களும், எனது மனைவியின் ஒத்துழை பும், மகள்மாரின் ஊக்கமும், நல்ல ஆய்வாளர்கள், நல்ல மாணவர்கள் சிலரின் வினாக்களும் என்னைத் தொழிற்பட வைத்துள்ளன.
பேராதனை, வித்தியோதய(ஜயவர்த்தனபுர), பர்மிங்காம், ஒக்ஸ்.போட், களனி, கொழும்பு, தஞ்சாவூர், தில்லி (JNU), சென்னை, கேம்பிறிட்ஜ், அண்ணாமலை, உப்சலா, கலிபோர்னியா போன்ற பல்கலைக்கழகங்களிலும், ஒரே கருத்து நிலையுடைய புலமையாளர் குழுக்களிலும் பெற்ற புலமைத்துவ ஊடாட்டங்கள் மனிதரையும் மனிதப் படைப்புக்களையும் விளங்கிக்கொள்வதற்கான அறிவுப்பணிவையும் ஆய்வு உந்துதலையும் தந்துள்ளன.
米米米
நானும் கைலாசும் அக்காலத்தில் முற்போக்கு அணியினரின் ‘இலக்கியப் பேச்சாளர்கள்’ என்ற வகையில் எமது அன்றைய நிலைப்பாடு பின்வருமாறு அமைந்திருந்தது.

Page 7
“சமூகத்தின் முற்போக்கான வளர்ச்சியில் இலக்கியத்துக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இலக்கியம் தனது (அந்தப்) பணியைச் செய்வதற்கான தொழிற்பாடு அவசியம்.” அன்றைய நிலையில் இந்தச் செயற்பாட்டில் நாம் இரண்டு பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. 1) இது மரபுவழி அறிஞர்களிடமிருந்து வந்தது. அவர்கள் அன்றைய நிலையில் அந்தப்பணியைச் செய்யும் இலக்கிய வடிவங்கள் தமிழ் மரபில் வந்தனவல்ல என்றும், அந்த முறையில் அன்று எழுதியவர்களில் கணிசமானோர் இலக்கியம் எழுதுவதற்கு தகுதியற்றவர்கள் என்றும் வாதிட்டனர். 2) இன்னொருபுறத்தில், புதிய இலக்கிய வகை களைக் கற்றுக்கொண்டவர்களை இலக்கியம் என்பது இத்தகைய ‘அரசியல்’ பேசக்கூடாது, அது பிரதானமாக சுவைக்கப்படுவதற்கானது என்று வாதிட்டனர். (உண்மையில் அன்றைய எழுத்தாளர் பலர் நல்ல விமர்சகர்களாகவும் இருந்தனர். உ-ம்: முருகையன், காவலூர் இராசதுரை, செல்வராசன். ஆனால் நாம் இருவருமே (கைலாசும் நானும்) தனியாகவே விமர்சர்களாகத் தொழிற்பட்டோம்).
இந்தநிலையில் நாங்கள் இரண்டு காரியங் களைச் செய்யவேண்டியிருந்தது. 1) தமிழின் வளர்ச்சிப்போக்கை விளங்கிக் கொள்ளாத மரபுநிலையாளருக்கெதிராகக் கருத்துக்கள் வைத்தல். 2) எமது அணியின் எழுத்தாளர்களின் படைப்பு க்களை, உலக, தமிழ் இலக்கிய வரலாற்றில் நின்று நியாயப்படுத்துவது. இந்த இருமுனைப் போராட்டத்தை எங்களால் இயன்ற அளவுக்குச் செய்தோம் என்றே கூறுதல் வேண்டும். இந்தப் போராட்டத்தின் முதற்கட்ட த்தில் கைலாசபதி தினகரன் ஆசிரியராக இருந்தவர். அவர் தமது பிரசுரத்திறனால் நல்ல படைப்பிலக்கியங்களை வெளிக்கொணர்ந்தார். எமது இந்த நடவடிக்கைகளில் மரபுப் போராட்டம்’ என்பது ஒரு முக்கியமான கட்டம் என்று கருதுகிறேன். அந்தப் போராட்டத்தின் பொழுது பேராசிரியர்கள் கணபதிப்பிள்ளை,

செல்வநாயகம் முதலியோர்களும் புதிய இலக்கியத் தாடனமுள்ள மரபுவழித் தமிழ்ப் புலமையாளரும் (செக்கன்) எம்பக்கம் நின்றனர். எமது வாதத்தின் பொழுது நாவலரைக் கூட நாம் காலத்தின் குரலாகவே எடுத்துக் காட்டினோம். அதுமாத்திர மல்லாமல், நாமே பழந்தமிழிலக்கியம் பற்றிய சமூக, வரலாற்று நிலைப்பட்ட விமர்சனங்களை (ஆய்வுகளை) முன்வைத்தோம்.
கைலாசபதியின் நாடும் நாயன்மாரும் , திணைக்கோட்பாடு’ பற்றிய எனது சமூகநிலை விளக்கம் ஆகியன முக்கியம் பெற்றன. இவற்றுக்கு முன்னர் நவீன தமிழிலக்கிய வளர்ச்சிகளை தமிழின் வளர்ச்சிப் பின்புலத்தில் வைத்து விமர்சித்தோம். தமிழ் நாவல் இலக்கியம் (1967), தமிழ்ச்சிறுகதையின் வளர்ச்சி (1966) பற்றிய எமது ஆய்வுகள் முக்கியமாகின. இந்த முயற்சிகளில் ஏற்கனவே ஈடுபட்டிருந்த ரகுநாதன், வானமாமலை ஆகியோருடன் இணைந்தும் தனித்தும் தொழிற்படும் வாய்ப்பிருந்தது. அந்த அளவில் அந்தக் காலகட்டத்தின் தேவைகளுக்கு, எமது ஆளுமைகளின் தனித்துவங்களுக்கு ஏற்ப முகங்கொடுத்தோம் என்றே கருதுகிறேன். அந்த ‘எதிர்ப்புக்குப் பின்னர் நாம் புதிய இலக்கியகார ரிடமிருந்து எதிர்ப்பை எதிர்நோக்கவேண்டியி ருந்தது. அவை ‘தேசிய இலக்கியம்’, யதார்த்தப் பிரயோகம் என்பன பற்றியனவாகும். இந்தக்கட்டத் திலும் எம்முடன் சில முக்கிய எழுத்தாளர்கள் இணைந்து நின்றனர். உதாரணமாக தேசிய இலக் கியம் பற்றிப் பேசிய பொழுது, ஏ.ஜே.கனகரத்தினா அது பற்றி எழுதியவை முக்கியமாகும்.
அந்தக்கட்டத்துக்கும் மேல், இன்னொரு எதிர்ப்பு
வந்தது. அது இந்த எழுத்துக்களின் அழகியல் பற்றியது. சிலர் மார்க்சியம் பழையது என்று கூறித் தம்மைப் புதிய மார்க்சிஸ்டுக்களாகக் காட்டிக்கொண்டனர். அந்தக்கருத்து வேறுபாடு களுக்கு முகம்கொடுக்கும் காலத்திலேதான் கைலாஸ் காலமானான். பின்னோக்கிப் பார்க்கும் பொழுது, கைலாசினதும் எனதும் முக்கியபணி என்று கூறத்தக்கது, நவீன இலக்கியத்தினைத் தமிழ் வரலாற்றுப் பின்னணியில் வைத்து

Page 8
நோக்கியமையும் பழைய இலக்கியங்களையே சமூக விமர்சனம் செய்யும் தன்மையும் தான்.
ஒரு விடயத்தை மீண்டும் வற்புறுத்த விரும்பு கிறேன். நாங்கள் விமர்சனத் துறையில் ‘சமமானவர்களிடையே முன்னணியாளர்களாக இருந்தோமே தவிர விமர்சனத்துறை முழுவ தையும் எமது கையில் வைத்திருக்கவில்லை. அப்படி வைத்திருக்கவும் முடியாது. அது வரலாற்று முரண்.
米米米
இன்று இலக்கிய விமர்சனம் இருநிலைப்பட்டதாக உள்ளது. முதலாவது, எழுத்தாளர்கள் மட்ட த்தில் அல்லது இலக்கியக்காரர்கள் மட்டத்தில் நடைபெறும் இலக்கிய முயற்சிகள். இது முற்றிலும் நவீன இலக்கியங்கள் பற்றியதாக, அபிப்பிராய தோரணையில் அமைவதாக உள்ளது, இரண்டாவது, பட்டதாரி மாணவர், உயர் பட்டதாரி மாணவர் நிலையிலுள்ளது. இது பயில்நிலை இலக்கியக்காரரின் கருத்துக் களை உள்வாங்கிச் செய்யப்படுகின்றது. அதே வேளையில் ஆங்கில இலக்கிய நூல்களைத் (தமிழுக்கு அவற்றின் பிரயோகப் பயன்பாடு களைப் பூரணமாக அறியாது பிரதி செய்யப்பட்ட நூல்களைத்) தழுவியும் பிரதி செய்தும் எழுதப் பட்டனவற் றையும் வேதமாகக் கொள்கினறது. இவ்விமரிசனமும் பெரும்பாலும் தற்கால இலக்கியம் பற்றியதே.
தமிழிலக்கிய விமரிசனத்தில் காணப்படும் முக்கியக் குறைபாடு, அது பெரும்பாலும் தற்கால தமிழிலக்கியத்தையும் அதற்கு முந்திய இலக்கியாப் களையும் ஒன்றுடன் ஒன்று இணையாத இரு இலக்கியத் தொகுதிகளாகக் கொள்ளும் உளவியல் எல்லைக்கோட்டு வரையறைக்குட்பட்டு நிற்பதே. தமிழிலக்கியம் முழுவதையும் பூங்குன்றன் முதல் செல்வராஜ் வரை, கபிலர் முதல் அப்துல் ரகுமான் வரை ஒன்றிணைந்த, ஆனால் காலவேறுபாடுகளால் இலக்கிய ரசனை விகற்பங்களுடைய ஒரு தொகுதியாக நோக்கும் பண்பு நம்மிடம் வளரவில்லை. தமிழ் இலக்கியக் கல்வியின்

போதாமையின் ஆங்கில இலக்கியத்தின் தாக்கமும் இதற்குக் காரணம். அத்துடன், தமிழலக்கிய வரலாற்றின் வழியாக மாத்திரம் வரக் கூடிய இலக்கிய ஒருமையுணர்வும் பலரிட மில்லை.
விமரிசனத்துறையில் மிக முக்கியமான அமிசம் ஆசிரியனது வாழ்க்கை வரலாற்றையும், அவனது ஆக்கத்தையும் காய்தல் உவத்தலின்றி, ஒளிவு மறைவின்றி ஆராயும் பண்பு. இது இன்னும் நம்மிடையே வளரவில்லை. சங்கச் சான்றோர்’ முதல் மு.வரதராசன் வரை யாவரையும் நிறைவுடைய மனிதர்களாகக் காணவேண்டுமென்ற பண்பாட்டு உந்துதல் காரணமாக நம்மிடையே விமரிசனம் ஊனப்பட்டு நிற்கின்றது. எழுதப்பட்ட நூல் சிறப்புடையது ஏனெனில் எழுதியவர் சிறந்தவர். அந்தச் சிறப்பினை அறிவது மாணவன் கடமை, அறியாது விட்டால் அது நமது குற்றமாகுது என்பது பண்டைய உரையாசிரிய மரபின், முக்கிய எடுகோள். மு. வரதராசனின் நாவல்களைப் பற்றிய ஆய்வுகள் கூட இந்த உரை மரபிலேதான் நிற்கின்றன. அகிலன், நா.பார்த்தசாரதி பற்றிய விமரிசனங்கள் கூட இந்தக் குறைபாட்டை ஒரளவு உணர்த்துகின்றன.
மேலும் நம்மிடையே பாடாந்தரத் திறனாய்வு (textual Criticism) இன்னும் தொடங்கவே இல்லை. செய்யப்படுவனவும் சங்க இலக்கியங்கள், மத்திய கால இலக்கியங்கள் பற்றியனவாகவேயுள்ளன. தற்கால இலக்கியங்களில் பாரதி, பாரதிதாசன் போன்றோரைப் பூரணமாக விளங்கிக்கொள்வத ற்குப் பாடாந்தரத் திறனாய்வு அத்தியாவசியம். இத்தகைய தள ஆய்வுகள் இல்லாது இலக்கிய விமரிசனம் வளரமுடியாது. மேலும், ஒரு சமூக உளவியற் காரணமும் உண்டு. ஊழ், விதி பற்றிய நம்பிக்கைகள் காரணமாக இருப்பதைப் போது மென்ற திருப்தியுணர்வுடன் நோக்கவேண்டுமென்ற ஒரு சமூகச் சிந்தனை மரபு நம்மிடையே உண்டு. இதன் தர்க்கரீதியான பரிணமிப்பு உண்மையான விமரிசனத்தை நாடாததைக் கூடாது என்று சொல்லும் மனத் திராணியை எம்மிடையே வளர்க்கவில்லை. கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருஷன்’ என்றும், "தாரமும்

Page 9
குருவும் தலைவிதி' என்றும் சொல்லும் சமுதாயத்தில் விமரிசனம் பெரிதாக வளர இடமில்  ைலதானே. விமரிசனம் என்ற சொல்லுக்குப் பதிலாக நாம் பயன்படுத்தும் “திறனாய்வு என்னும் சொல்லின் கருத்தே திறன்களிலேதான் அழுத்தம் செலுத்துகின்றது.
எனினும், மாறிவரும் சமூகச் சிந்தனைகளின் தாக்கம் காரணமாக விமரிசனம் வளர்ந்து வருகின்றதென்பதுண்மையே. மேற்கூறிய தடைகளை மீறி ஒரளவு செழித்து வளர்ந் துள்ளது சமூகவியல் விமரிசனமே. காரண காரியத் தொடர்போ தெரியவில்லை. இன்னும் நம்மிடையே விமர்சனப் L6)60)LD (critical scholarship) ஏற்படவில்லை. நாம் பிற விமர்சர்கள் கூறியவற்றையே அளவுகோல் களாகக் கொள்ளுகின்றோம். நமது முழு இலக்கியத்தின் வளத்தை - வரலாற்றை - அழகை - குறைவை - வரையறைகளைக் கணக்கெடுத்துத் தோன்றிய விமரிசனத் தத்துவம் எதுவும் நம்மிடயே வளரவில்லை. இதுவும் ஒரு குறைபாடு. இலக்கியங்களைச் சனரஞ்சகப்படுத்தும் முறைமையும், உண்மையான விமர்சனத்துக்குத் தடையாக உள்ளது. உதாரணமாக கம்பன் விழாவில் நடக்கும் பட்டிமன்ற விவாதங்கள். பரதனா, இலக்குவனா சிறந்த சகோதரன் பேன்றவை இலக்கிய ஆக்கம் பற்றிய அடிப்படை களையே மலினப்படுத்துபவை. இப்படியான சூழ்நிலையிலேயேதான் கதாகாலட்சேபக்கா ரர்கள் இலக்கிய அறிஞர்களாக மாறுகிறார்கள் போற்றப்படுகிறார்கள். இலக்கியம் பற்றிய விஞ்ஞானரீதியான ஒரு நோக்கு இலக்கிய மாணவரிடையே ஏற்படல் வேண்டும். அப்பொழுது தான் விமரிசனமும் வளரும்.
米米米
நான் கைலாசைச் சந்தித்தது இப்பொழுதும் ஞாபகமிருக்கின்றது. 1952இல் என்று நினைக் கிறேன். அந்த நாள் இன்றும் எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது, நாங்கள் இருவரும் இளைஞர் நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றினோம். அவர் றோயல் கல்லூரியில் இருந்தும் நான்
ஷாகிறாக் கல்லூரியிருந்தும் சென்றிருந்தேன். அதன் பின்னர் நடந்து வந்தகொண்டிருந்தோம்
நெடுந்துாரம் நடந்துவிட்டோம். கடைசி பஸ்ஸஉம்

போய்விட்டது. அதன் பின்னர் நான் கொட்டாஞ் சேனைக்கும் அவர் வெள்ளவத்தைக் கும் நடந்தேபோனோம். அன்றிலிருந்தே அவரை எனக்குத் தெரியும்.
அவரும் நானும் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் சமகாலத்தில் கல்வி கற்றோம். தமிழில் வீரயுகக் கவிதைகளைப் பற்றி ஆராச்சியை மேற்கொள்ள அவர் பேமிங்காம் பல்கலைக்கழகத் துக்குச் சென்றார். மார்க்சிஸ்ட் இயக்கத்தில் இருந்த நண்பர்கள் ஜோர்ச் தொம்சனை அறிமுகம் செய்தார்கள். தொம்சன் பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் கிரேக்கப் பேராசிரியராக இருந்தார். புராதன கிரேக்கச் சமூகத்தைப் பற்றி நூல்கள் எழுதியவர். புராதன கிரேக்கச் சமூகத்தை மார்க்சியக் கண்ணோட்டத்தில் பார்த்த ஆரம்ப அறிஞர்களில் ஒருவர். மரபு நெறிக்கு எதிரானவர். அதிஷ்டவசமாக கைலாஸ் அங்கு முதல் சென்றார். புரதான கிரேக்கத்தில் அல்லது மத்திய கால இங்கிலாந்தில் இருந்த நாடக மரபுகள் தமிழில் இருக்கவில்லை. அது ஒரு பிரச்சனையாக எனக்கிருந்தது. அப்படி ஏன் தமிழில் இருக்கவில்லை என்று நான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அது என்னைச் சமூக வரலாற்றுக்குக் கொண்டு சென்றது. ஆகவே, பேர்மிங்காமில் தொம்சனிடம் எனக்குக் கிடைத்த பயிற்சி மிகப் பயனுள்ளதாக இருந்தது.
தொம்சனிடம் கற்ற கடைசி மாணவனாக நான் இருந்தேன் என்பது ஒரு சந்தர்ப்ப நிகழ்வு. எனக்குப் பின் அவர் கற்பித்தலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அதனால், அவரைப் பற்றிய மிக நல்ல நினைவுகளை நான் தாங்கி வருகின்றேன். அவரிடமிருந்து நாம் பெற்ற பயிற்சி எங்களுக்கு நல்ல வகையில் பயனுள்ளதாக அமைந்துள்ளது. தமிழ்ச் சமூகத்தையும் வாழ்வையும, தமிழ் எழுத்தையும் தமிழ்ப் பாரம்பரியத்தையும் முன்னெப்போதும் இல்லாத புதிய கோணத்தி லிருந்து பார்ப்பதற்கு அது வழி செய்துள்ளது. அதுவே எங்கள் பலமும் பலவீனமுமாக அமைந்து விட்டது என்று நினைக் கிறேன். தமிழ்ப் பாரம்பரியத்தை ஒரு பரந்த பின்னணியில் பார்ப்பதற்கு முயற்சிக்கிறோம். நானும் கைலாசும் இதைத்தான் செய்தோம்.
புலமையைப் பொறுத்தளவில் கைலாஸ் பெரு மளவுக்கு இலக்கியம் சார்ந்தவர். நான் சமூகஞ்

Page 10
சார்ந்தவன். அது எனது முதல் பட்டப்படிப்புப் பயிற்சியையும் பெருளியல், சமூக வரலாறு, பின்பு மார்க்சிய சிந்தனைகளிலிருந்த ஆர்வம் ஆகியவற்றைப் பொறுத்தும் ஏற்பட்டது. கைலாஸ ஒப்பியல் இலக்கியப் பகுதியில் தனது ஆர்வத்தை வளர்ப்பதற்கு முயன்றார். கால ஒட்டத்துடன் அவரின் விசேடக் கற்கை நெறி ஒப்பியல் இலக்கியமாகியது. ஆனால் இருவருமே இலக்கியத்தின் சமூக விமர்சர்களா கவே ஆரம்பித்தோம். அதை சமூகவியல் 6ỉìLDữ 960ILô (Sociological criticism) 616ổi ml அழைக்கமாட்டேன். சமூகவிமர்சனம் (Social critics) என்றே சொல்வேன். அது எங்களுக்கு ஒரு பெயரைத் தந்தது. நான் ஏலவே சொன்னது போல எங்கள் இருவருக்குமிடையில் பரஸ்பர உறவு இருந்தது. அத்துடன் விட்டுக்கொடுப்புக் களும் . இருந்தன. நாங்கள் அதிகம் வேறுபடவில்லை. காரணம். மார்க்சியப் பார்வை எங்கள் இருவரையும் இணைத்தது.
米米 米
நான் விமரிசனக் கொடுங்கோண்மை என்ற பதத்தை கைலாசபதி நினைவுப்பேருரையில் பயன்படுத்தினேன். எழுபதுகளில் விமர்சனங் களைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது அந்த விமர்சகர்கள் சில நியமங்களை வைத்திருந் தார்கள். அந்த நியமங்களைக் கொண்டிருப்பவர் களை எழுத்தாளர்கள் என்றும் இல்லாதவர்களை எழுத்தாளர்களல்ல என்று ஒதுக்கினார்களென்றும் கூறினாாகள். எங்கள் நிலைப்பாட்டை அந்த வடிவில் எதிர்த்தவர்கள் நிலை நின்றுதான் விமர்சனக் கொடுங்கோண்மை என்ற பதத்தைப் பயன்படுத்தினேன். அதாவது ஒரு குறிப்பிட்ட நியம அடிப்படையினின்று எழுத்தாளர்களை நாம் புகழ்ந்ததாயும் தெரிந்ததாயும் அல்லாதவர் களைப் புறக்கணித்தோம் என்றும் ஒரு கருத்து இருந்தது. இதனைக் குறிக்கவே விமர்சனக் கொடுங்கோண்மை’ என்பதாய், தான் விதித்ததே விதி என்ற பொருளில் பார்த்தார்கள் என்பதைக் காட்டவே அவ்வாறு கூறினேன். ஆனால் என் கருத்து அப்படியில்லை. எங்களது விமர்சனம் ஒரு விமர்சனக் கொடுங்கோண்மையாக அமைய வில்லை. எங்களுடைய விமர்சனம் இரண்டு வகையிலே சென்றதெனக் கருதுகிறேன். ஒன்று எங்களுடைய இலக்கிய அரசியல் கருத்து நிலைகளுக்கேற்ப எழுதப்பட்ட ஆக்கங்களின்

இலக்கிய அரசியல் நியாயப் பாட்டினை நிலைநாட்டியவை. அவர்களுடைய எழுத்துக்கள் மரபுக்குப் புறம்பானவை என்று சொல்லப்பட்ட போதோ அவை சிறுகதை வடிவங்களுக்குள் அடங்காதெனப்பட்டபோதோ, சிறுகதையாகக் கொள்ள முடியாதென்றபோதோ, விமர்சனக் காரணங்களை எடுத்துக் காட்டி அவர்களது எழுத்துகளை நியாயப்படுத்தியிருக்கிறோம். வெறுமனே நியாயப்படுத்தவல்ல.
இன்னொரு விடயமும் நடந்தது. பொதுவாக எழுத்தாளர்கள். எவ்வெவ்வற்றைப் பற்றி எழுதலாம் என்ற விடயங்களைப் பற்றிய ஆழமான கண்ணோ ட்டமும் அந்த விமரிசனங்களிலே காணப்பட்டது. அந்த வகையான குறிப்புகளெல்லாம் விமர்சனத் திலிருந்தது. வெறுமனே விமர்சகன் கூறுவதென்றோ படைப்பாளி எழுதுவதென்றோ இல்லாமல், ஒவ்வொருவரும் தனித்தனியே போகாமல், படைப்பாளிகளுக்கும் விமர்சர்களுக்குமிடையே நெருக்கமான உறவொன்று அன்று காணப்பட்டு ள்ளது. அதாவது படைப்பொன்றை வைத்துக் கொண்டு விமர்சனத்தை எழுதுவதும் விமர்சனத்தில காணப்பட்டதை வைத்துக்கொண்டு படைப்பாளி சமூகப்பார்வையை விரித்துக் கொள்ளுகின்றதுமான ஒன்றுடன் ஒன்றான பரஸ்பர உறவு காணப்பட்டது. தமிழகத்து விமர்சன வளர்ச்சியைவிட அறுபது களில் ஈழத்தில் அதிக வளர்ச்சி காணப்பட்டது. இத்தகைய பரஸ்பர உறவாடல்களாலேதான் என்று கூறலாம். இது இலங்கையின் இலக்கிய வளர்ச்சிக்குப் பாதகமாயிருக்கவில்லை, பங்களிப்புச் செய்துள்ளதென்றுதான் கூறவேண்டும். ஆனால் இதற்கு எதிராக உள்ளவர்கள் இவ்வாறான கொடுங்கோண்மை இருந்ததாகக் கூறுவதை நாம் அவதானிக்கலாம். இதற்குக் கருதுநிலை ரீதியாகப் பார்க்கும்போது அவர்களது நிலைப்பாட்டை நாங்கள் ஏற்க முடியாது. எங்களது இலக்கியம் இவ்வாறுதான் அமையவேண்டும் என்பது எங்களது கருத்துநிலை. எங்களது நியாயப்படி, அவர்களது இலக்கியங்களை எங்களால் ஏற்க முடியாது. இந்த இலக்கியங்களை நாங்கள் விளங்கிக் கொள்கிறோம். அவை ஏன் தோன்றுகின்றன என்பதை அறிந்து கொள்கிறோம். அந்த எழுத்தாளர்களின் தனித்துவங்களைப் புரிந்துகொள்கிறோம். ஆனால் அவைதான் சரியான இலக்கியங்கள் என்று ாங்களால் நியாயப்படுத்த முடியாது. நியாயப்படு ந்தாமல் விட்டதன் காரணமாக நாங்கள்

Page 11
கொடுங்கோலர்களாக இருந்தோம் என்ற குற்றச்சாட்டு ஒன்று பின்னோக்கிப் பார்த்துக் கூறப்பட்டது.
உண்மையில் அந்தக் காலகட்ட எழுத்தாளர் களைக் கேட்டால் தெரியும். அவர்கள் ஆக்கங்க ளைக் காட்டுவார்கள். அவர்களது ஆக்க ஆளுமையை பாதிக்காத வகையில் இன்ன இன்ன அம்சங்கள் இப்படி இப்படி இருத்தல் வேண்டும். இருந்தால் நல்லது என்ற கருத்தை முன்வைப்போம். அவர்கள் தங்களது ஆளுமை களுக்கேற்ப உள்வாங்கி எழுதியுள்ளார்கள். அதற்காக அவர்கள் நாங்கள் கூறியதைக்கேட்டு எழுதினார்கள் என்றோ ஏதோ ஒரு விமர்சனம் தேவைப்பட்டது என்றோ பொருளல்ல. இருபகுதி யினருக்கும் பொதுவான குறிப்பிட்ட கருத்து நிலை உணர்வின், உறவின் வெளிப்பாடுதான் அது. அதுதான் எங்களுடைய வளர்ச்சியின் முக்கிய அம்சம் என்று கருதுகிறேன்.
米米米
முற்போக்கு இலக்கியத் தளத்தில் சிவத்தம்பியிடம இப்பொழுது தளம்பல் காணப்படுகின்றது என்று பலர் சொல்லி வருகின்றார்கள். இதற்கு நான் சொல்லுகின்ற மறுமொழி ஒன்றே ஒன்றுதான். இந்த மறுமொழியை நான் இன்றைக்குச் சொல்லவில்லை. 84ம் ஆண்டு கைலாசபதியினு டைய நினைவாக நான் யாழ்பல்கலைக் கழகத்தில் ஒரு உரையொன்று ஆற்றினேன்.
அதன் சாராம்சத்தினை நான் கூறுகின்றேன்.
முற்போக்கு இலக்கியம் என்பது மார்க்சிய அடிப்படைகளைக் கொண்டதான, ஆனால் மார்க்சியத்தை முற்றுமுழுதாக ஏற்காதவர் களையும் தன்னுடைய அந்தப் பெருத்த அணியில் உள்வாங்கிக்கொண்டு போகின்ற ஒரு எழுத்து முறைமை. புறோகிற சிவ் இது எங்களுக்கு ஆங்கிலத்திலிருந்து வந்தது. சோவியத் புரட்சிக்குப் பிறகு ஸ்பெயினில் போர் நடந்த பிறகு கொம்யூனிஸ்டுக்கள் அல்லாத வர்களையும் ஒரே அணியில் சேர்ப்பதற்காக புறோகிறகிவ் மூவ்மன்ட் தொடங்குகின்றது. அது இலக்கியத்தில் முக்கியமான இடம் பெற்றது. முல்க்ராஜ் ஆனந்த், அப்பாஸ் போன்றவர்கள் eup6)LDITE 3bbu Toig. 6) by Progressive Writers ASSociation என்ற பெயரோடு இலங்கைக்கு வந்து அதிலிருந்துதான் நாங்கள் வந்தோம்.

என்னுடைய வாதம் என்னவென்றால் முற்போக்கு இலக்கியம் என்பது தர்க்க ரீதியாக மார்க்சிய இலக்கியமாக மலர்ந்திருக்க வேண்டும். இந்த வளர்ச்சி எங்களுக்கு ஏற்படவில்லை. 50 - 60 களில் யாழ்ப்பாணத்து இலங்கையின் சமூக மாற்றங்களின்போது பொதுவுடைமைக் கட்சி சார்ந்தவர்களும் அந்தக் கட்சியைச் சாராத, ஆனால சமூக முற்போக்கு எண்ணம் உடையவர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து இந்த முற்போக்கு எழுத்துமுறையினைக் கொண்டுவந்தனர். இந்த எழுத்துமுறை படிப்படியாக எங்களை மார்க்சியத் திற்கு இட்டுச் சென்றிருக்க வேண்டும். அது மார்க்சியத்திற்கு நம்மை இட்டுச்செல்லவில்லை. நாங்கள் மார்க்சியத்திற்குப் போகவில்லை. இதுதான் என்னுடைய மிக முக்கியமான குற்றச்சாட்டு.
நாங்கள் எல்லாக் காலத்திலும் இந்த முற்போக்கு இலக்கிய இயக்கம் பொதுப்படையாக இந்த அணியைப் பெருக்குவதற்காக வருகின்ற புதிய வர்கள் எல்லோரையும் ஒன்றுசேர்த்து அவர்களை முற்போக்கு அணியில் வைத்திருப்பதற்கான முயற்சிகளைக் காட்டுகிறோமே தவிர இருக்கின்ற எழுத்தாளர்களுடைய மார் க்சிய அறிவு ஆழப்படுத்துகை, அந்த ஆழப்படுத்துவதினூடாகப் பிரச்சினைகளை மிக ஆழமாகப் பார்ப்பதற்கு நாங்கள் அவர்களைத் தயார் செய்யவில்லை. இப்படி நான் சொல்கிறபோது இதற்கு உதாரணம் இல்லாமல் நான் சொல்லவில்லை. மலையாள த்தில் அந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. மலையாளத்தில் இப்படித்தான் அது ஒரு பொது அணியாகத் தொடங்கியது. பின்னர் மார்க்சிய இயக்கமாயிற்று. தகழி சிவசங்கரப்பிள்ளை போன்ற மார்க்சிய எழுத்தாளர்களைத் தோற்றுவித் துள்ளது.
இலங்கையில் அந்தநிலை வரவில்லை. முற்போக்கு இலக்கியம் செய்திருக்கவேண்டிய, ஆனால் செய்யாத ஒன்று. அதற்கு அந்தப் பிளைக்குரிய காரணம் என்பதை நான் இப்பொழுது பேசவில்லை. நாங்கள் எந்தளவிற்கு மார்க்சிய எழுத்தாளர்களைத் தோற்றுவித்தோம்.
இன்று 50 களிலிருந்த 60 களிலிருந்த உலகமல்ல. இன்றைக்கு உலகம் மாறிவிட்டது. 50 - 60 களில் இருந்த முதலாளித்துவம் அல்ல இன்று இருப்பது.
தொடர்ச்சி. 68 ம் பக்கம்

Page 12
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி இந்நாட்டில் இன்று உயிர்வாழும் தமிழறிஞருள்
மிகவும் பிரக்தியாகி பெற்றவர். பெரும் பேரறிஞன். பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். வித்தியோதய, பாழ்ப்பாணம், கிழக்கிலங்கைப் பல கலைக் கழகங் களில
விரிவுரைகள் நிகழ்த்தி முத்திரை பதித்தவர். கேம்பிறிஜ், ஒஸ்லோ,
பேக்லி, உப்சலா, சென்னை,
தஞ்சைப் பல்கலைக்கழகங்களும், ஜவஹர்லால் நேரு, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களும் மட்டுமன்றி தமிழ்க்கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் (சென்னை), தென்ஆசிய கற்கை களுக்கான நிலையம் (அமெரிக்கா என்பனவும் இவரை அழைத்துப் பயன்பெற்றிருக்கின்றன. நாற்பத்தைந்துக்கு மேற்பட்ட நூல்களையும், பிரசுரங்களையும், ஐம்பதிற்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். வெளிநாடுகளில் நிகழ்ந்த நாற்பதுக்கு மேற்பட்ட ஆய்வு மகாநாடுகளில் கலந்துகொண்டு பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்தவர் இவர். பங்கா (Banka) விருது (இலங்கை), வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநர் விருது (இலங்கை), திரு.வி.க.விருது (தமிழ்நாடு) என்பன பெற்றுப் பெருமை பெற்றவர். இவரின் புகழ்மிகு வாழ்விலும், பெருமைமிகு உயர்விலும் இழையோடிக் கிடக்கும் முஸ்லிம் சம்பந்தங்களை இனம் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தந்தையார் பணி செய்த முஸ்லிம் சூழல் பேராசிரியர் சிவத்தம்பியின் தந்தையார் த.பொ.கார்த்திகேசு அவர்கள் ஒரு பண்டிதர்.
 

முஸ்லிம் நிழலில் மூதறிஞர்
ஏ.எம்.நஹறியா
அடுலுகம, பண்டாரகம, ஹேனமுல்ல (சரிக்கமுல்ல) போன்ற இடங்களிலே அரசினர் முஸ்லிம் பாடசாலைகளில் கற்பித்தவர். ஹேனமுல்ல அரசினர் பாடசாலையில் அவர் சிரேஷ்ட உதவி ஆசிரியராகப் பணிசெய்த போது அவரிடம் தமிழ் பயின்றவர் தான் பின்னாளில் இஸ்லாமிய இலக்கியத்துறையை இந்த நாட்டில் அறிமுகஞ்செய்து முன்னெடுத்துச் சென்ற பேரறிஞன் எம்.எம்உவைஸ்
அவர்கள். அறுபதுக்கு மேற்பட்ட நூல்களின் ஆசிரியர் இவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக இஸ்லாமியத் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் பணிசெய்து புகழ் பூத்தவர். கார்த்திகேசு பண்டிதர் அக்குறணை முஸ்லிம் வித்தியாலயத்திலும் கற்பித்ததாக அறிகிறோம். அங்கு அவர் கற்பித்த காலை முன்னாள் பதிவாளர் நாயகம் எம்.எச்.இஸட் பாறுாக் அவர்களின் தந்தையார் ரி.எம்.எஸ் ஹமீத் போன்றவர்களும் அங்கு கற்பித்ததாக அறிகிறோம். சிவத்தம்பி அவர்களின் பிற்கால வாழ்வில் இந்த செழுமை மிக்க பின்னணிக்கு மிக்க நெருங்கிய தொடர்பிருப்பதை நாமறிவோம்.
கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியின் மாணவன் (1949 - 53)
கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரியில் கற்று எஸ்.எஸ்.ஸி.பரீட்சையில் சித்தியடைந்த சிவத்தம்பி அவர்கள் சிரேட்ட இடைநிலைக் கல்வியைத் தொடர கொழும்புக்கு வந்தார். அவருடைய தந்தையாரின் தொழிலும் கொழும்பை அண்மித்த பிரதேசங்களில் இருந்தமையால் கொழும்புக்கு வரும் அவரது முடிவு அப்போது மிகப் பொரு த்தமானதாக இருந்தது. யாழ்ப்பாணத்தவரான

Page 13
எ.எம்.எ.அஸிஸ் ஸாஹிறாவைப் பொறுப்பேற்று மிகவும் உயர்நிலைக்கு இட்டுச் சென்று கொண்டிருந்த காலம் அது. ஸாஹிறாவில் எச்.எஸ்.ஸி.படிப்பதற்கு 1949இல் சிவத்தம்பி அனுமதி பெற்றார். இக்கல்லூரியில் அவர் கழித்த காலங்களும் பெற்ற உறவுகளும் அவரின் உயர்வுக்கு எந்தளவுக்கு உதவிற் றென்பதை அறிந்து கொள்வது பயனுள்ள முயற்சியாகும்.
புவியியல் பேராசிரியராக பின்னொருபோது திகழ்ந்த பேராசிரியர் சோ.செல்வநாயகம், தினகரன் ஆசிரியராகவிருந்த ஆர்.சிவகுருநாதன், கல்விப் பணிப்பாளர்களாகவிருந்த எம்.சமீம், எம்.ஷரிப், வடக்கு-கிழக்கு மாகாண கல்வி, விளையாட்டுத்துறைச் செயலாளராகவிருந்த எம்.மன்சூர், ஆய்வாளர் எம்.எம்.எம்.ம.’றுாப், சட்டத்தரணி எஸ்.எம்.ஹனிபா, எஸ்.எல்.எம். ஹனீபா, பேராசிரியர் எம்.ரி.ஏ. புர் கான், பத்திரிகையாளர் பி.பாலசிங்கம், முன்னாள் இலங்கை வானொலி முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் வீ.ஏ.கபூர், முதல் சிறுகதைத் தொகுதி வெளியிட்ட மு.மீ.சாஹஉல்ஹமீது, நாவலாசிரியர் குருசாமி, வித்தியோதய பல் கலைக் கழக உபவேந்தராக விருந்த ரியூலி.டி.சில்வா, கணக்காளர் எம்.வை. முஹம்மது, அரசியல்வாதி ஆனந்தசங்கரி, புத்தளம் ஷேகு இஸ்மாயில், ஐ.நா.சபையின் ஆலோசகராக இருந்த வழிப்ளி, காசிம், ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி அதிபராகவிருந்த ஐ.எல்.எம்.சுஜப், சட்டத்தரணி எச்.எம்.ஹாஷிம், கல்வி அதிகாரி பி.கணேசன் எம்.பத்றிஹாஷிம், எம்.எம்.பஹாவுதீன், பொறியியலாளர் பாரி, டி.ரி.டி.புளுக ஹபிடிய, டபிள்யூ.எ.டி.சரத்குமார, வைத்திய கலாநிதி பி.டி.எஸ் ஜயசிங்க, கலாநிதி.எ.எஸ்.குணசிங்கம் போன்றோ ரெல்லாம் சிவத்தம்பி கற்றுக்கொண்டிருந்த காலத்தில் ஸாஹிறாவில் எச்.எஸ்.ஸி.வகுப்பில் கற்றுக்கொண்டிருந்தவர்கள். பிரபல முற்போக்கு எழுத்தாளர் எச்.எம்.பி.முகையதின் கூட அக்கால எஸ்.எஸ்.ஸி.வகுப்பில் கற்றுக் கொண்டி ருந்தார். அமைச்சர் அலவி மெளலானா, முன்னாள பாராளுமன்ற உறுப்பினர் வெ.யோகேஸ்வரன் ஆகியோரும் இக்காலை ஸாஹிறாவில் கற்றுக் கொண்டிருந்தனர். உண்மையில் இக்காலம் ஸாஹிறாவின் வரலாற்றில் பொற்காலம்தான்.

அக்கால மாணவரின் தமிழ் உணர்வின் வெளிப் ாடாக “உதயம்” என்ற சஞ்சிகை வெளியிடப் பட்டது. அட்டை அச்சிடப்பட்டும் பக்கங்கள் றோணியோ செய்யப்பட்டும் வெளியிடப்பட்ட அச் சஞ்சிகை மூன்று இதழ்களுடன் தன் வாழ்வை முடித்துக் கொண்டது. முதலாவது இதழின் ஆசிரியராக மு.மீ.சாஸஉல் ஹமீது செயற்பட உதவி ஆசிரியராக இருந்தவர் கா.சிவத்தம்பி அவர்கள். அடுத்த இதழை சிவத்தம்பி அவர்களே ஆசிரியராக இருந்து வெளியிட்டார். மூன்றாவது இதழ் வீ.ஏ.கபூரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. அதிபர் எ.எம்.எஅஸிஸ், தமிழா சிரியர் எஸ்.எம்.கமால்தீன், ஆர்.சிவகுருநாதன், கா.சிவத்தம்பி ஆகியோரின் கட்டுரைகளுடன் மு.மீ.சா.வின் கதைகளும் இச் சஞ்சிகைகளில் இடம்பெற்றன.
இதே காலத்தில்தான் ஆர்.சிவகுருநாதன், கா.சிவத்தம்பி, குகப்பெருமாள், செ.சிவராசா (பிற்காலை பிரதி வழக்காடுநர் நாயகமாக இருந்தவர்.) ஆகியோர் தம் சொந்தப் பணத்தில் “தமிழ்ஒளி’ என்ற ஒரு சஞ்சிகையையும் வெளி யிட்டனர். இதன் ஆசிரியராக ஆர்.சிவகுருநாதனும், வெளியீட்டாளராக கா.சிவத்தம்பியும் செயற் பட்டனர். ஒரே ஒரு இதழ்தான் வெளிவந்தது. ஆயினும் இதன் இலக்கிய முக்கியத்துவம் மதிப்பீடு செய்யப்பட வேண்டிய அளவுக்கு முக்கியத்துவமுடையது.
மு.மீ.சபஸPல்ஹமீது இக்காலத்தில் தான், அதாவது 1950 இல்தான் இலங்கையின் முதலாவது சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுப் புகழ்பெற்றார். நாவலர் பேச்சுப் போட்டியில் ஸாஹிறா மாணவன் ஷிப்ளி காசிம் பரிசைப் பெற்றதும் இக்காலத்தில் தான்.
கல்லூரித் தமிழ்ச்சங்கத்தின் 1952ஆம் வருடத் திற்கான தலைவராக இருந்தவர் சிவத்தம்பி அவர்கள் . யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ்மாநாட்டிற்கு வருகை தந்திருந்த ம.பொ.சிவஞான கிராமணியார் கொழும்பு ஸாஹிறாக் கல்லூரிக்கு விஜயம் செய்தபோது சிவத்தம் பி தலைமையில் நடைபெற்ற தமிழ்ச்சங்கக் கூட்டத்தில் அவர் சொற்பொழிவு நிகழ்த்தினார். இக்கூட்டத்தில்

Page 14
தலைமையுரையாற்றிய சிவத்தம்பி மிகவும் காரசாரமான உரையொன்றை அங்கு நிகழ்த் தினார். இன்றைய அரசியல் பிரச்சினையின் அன்றைய உணர்வுப் பிரளயமாக அந்த உரை அமைந்திருந்தது. அதற்காக கல்லூரி அதிபரின் தண்டணை கிடைத்துவிடுமோ என்றுகூட சிவத்தம்பி பயந்துகொண்டிருந்தார். அதனால் அதிபர் அஸிஸை நேரில் காண்பதைக்கூடத் தவிர்த்து சிலகாலம் மறைந்து திரிந்தார். ஆயினும், அதிபரின் தாராள மனப்பாண்மை அந்த நிகழ்ச்சியை அப்படியே உள்வாங்கிக் கொண்டமை உணரப்பட்டதும் பலர் திருப்திப் பட்டனர், சிவத்தம்பி மகிழ்ச்சியடைந்தார்.
இக்காலத்தில்தான் 1950இல் ஸாஹிறாவில் இக்பால் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு இலங்கைவாழ் புத்திஜீவிகளுக்கும் உயர்மட்டத்தினருக்கும் கவிஞர் அல்லாமா இக்பால் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். வங்கக்கவி நஸ்றுல் இஸ்லாத்தைக்கூட அறிமுகம் செய்யும் கன்னி முயற்சி அஸிஸினால் இதே வருடத்தில் தான் மேற்கொள்ளப்பட்டது. இக்பால் பற்றிய பிரசுரங்கள் வெளிவந்தன. இக்பால் நினைவுச் சொற்பொழிவுகள் கல்லூரியில் அடிக்கடி நிகழ்ந்தன. இவையெல்லாம் அங்கு கற்றுக் கொண்டிருந்த இளம் சிவத்தம்பியின் உள்ளத்தில் நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி யிருக்கும். கல்லூரியில் அமைந்திருந்த பிரபல நூலகமும் அதற்குத் துணைபோயிருக்கும். பிற்காலை அவர் தங்கிநின்ற முற்போக்குச் சிந்தனையின் களமாக இந்தச் சூழல் அமைந்திருப்பதைக் கூர்ந்து நோக்குவோர் இலகுவில் அறிந்து கொள்வர். எச்.எம்.பி. முகையதின், எம்.சலீம் போன்றவர்களெல்லாம் இந்தச் சூழலினால் உருவாக்கப்பட்டவர்கள் தான். சிவத்தம்பி மட்டும் அதற்குப் புறநடையாக முடியவில்லை.
ஸாஹிறாவில் மாணவனாக இருக்கும்போது தான் சிவத்தம்பி அவர்களுக்கு வானொலியு டனான முதலாவது தொடர்பு ஏற்பட்டது. சிவத்தம்பி கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது அங்கு சிரேட்ட மாணவனாகப் படித்துக்கொண்டிருந்த வீ. ஏ. சிவஞானம் தான் இந்த வாய்ப்பை

அவருக்கு ஏற்படுத்திக்கொடுத்தார். சிவத்தம்பி ஸாஹிறாவில் எச்.எஸ்.ஸி.வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது சிவஞானம் ஸாஹிறாவின் ஆரம்பப் பிரிவில் ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருந்தார். பிற்காலை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்சேவைக் கட்டுப்பாட்டா ளராகவும் இவர் திகழ்ந்தார் என்பது கவனத்திற் கொள்ளத்தக்கது. இந்த சிவஞானம் தான் ஒரு தடவை சிவத்தம்பி அவர்களை அப்போது வானொலியில் நடைபெற்றுவந்த கிராமிய நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைப்பு விடுத்தார். வீட்டுத்தோட்டம் செய்வது சம்பந்தமாக உரைநிகழ்த்த வேண்டும் என்று அவர் கேட்கப்பட்டார். சிவத்தம்பிக்கு இந்த அழைப்பு மிக்க மகிழ்ச்சி தந்தது. அழைப்பை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டார். ச.கு.கணபதி ஐயரின் “காய்கறிப் பயிர்ச்செய்கை’ என்ற நூலை இரவோடு இரவாகப் படித்துவிட்டு தனது அனுபவத்தையும் வைத்துக்கொண்டு அந்த நிகழ்ச்சியை, தனக்குக் கிடைத்த முதலாவது வாய்ப்பை, மிகச் சிறப்பாகச் செய்துமுடித்தார். இது சிவத்தம்பி அவர்களின் வாழ்வில் மிக முக்கிய சம்பவமாக அமைந்து விடுவதை நாம் பார்க்கிறோம். ஏனெனில் இதனைத் தொடர்ந்து தான் ஒலிபரப்புத் துறையுடனான அவரது தொடர்புகள் அதிகரிக்கத் தொடங்கின. வானொலி நாடகங்களில் பங்கேற்று நடிக்கவும் தொடங்கி விட்டார். ஒருமுறை சோ.சிவபாதசுந்தரம் பொறுப்பாக இருந்தபோது ச.சண்முகநாதன் தயாரித்திருந்த நாடகமொன்றில் வி.என்.பாலசுப் பிரமணியத்துடன் சிவத்தம்பியும் நடித்தார். இவை யெல்லாமே சிவத்தம்பி அவர்கள் ஸாஹிறாவின் மாணவனாக இருந்தபோது நிகழ்ந்தவை.
பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த காலத்திலும் கூட வானொலி நாடகங்களில் பங்கேற்பதை அவர் கைவிடவில் லை. இலங்கையர்கோன் எழுதிய ‘விதானையார் வீட்டில்’ என்ற புகழ் பெற்ற தொடர்நாடகத்தில் சிவத்தம்பி பங்கேற்றுப் பிரபல்யமடைந்ததும் இதன் தொடர்பறாத நிகழ்வாகவே பார்க்கப்பட வேண்டியது.
வானொலியில் சிவத்தம்பியின் நாடகப் பங்கேற்பு தொடர்ந்து நிகழ்ந்தது. சிலவேளை காலையில்

Page 15
பேராதனையிலிருந்து புறப்பட்டு வானொலி நாடகத்தில் பங்கேற்றுவிட்டு மாலையில் புகையிரதத்தில் பேராதனைக்குத் திரும்பி விடுவார். அப்போது வானொலியின் இதற்கான கொடுப்பனவு 15/= ரூபாவாக இருந்தது. கொழும்புக்கு சிவத்தம்பி போகிறாரென்றால் நிச்சியமாக அவர் 15/= ரூபாவுடன் பின்னேரம் திரும்பிவருவார் என்பது அவரது நண்பர்களான க.செல்வரத்தினம், எஸ்.வாமதேவன் போன்றோ ருக்கு நன்கு தெரியும். பேராதனைப் புகையிரத நிலையத்தில் அவருக்காக காத்திருப்பார்கள். சிவத்தம்பி வந்திறங்கியதும் எல்லோரும் பேராத னைப் புகையிரத நிலையத்தை அண்மித்திருந்த முஸ்லிம் ஹோட்டலுக்குச் சென்று இறைச்சிக் கறியுடன் றொட்டிகளையெல்லாம் காலிபண்ணி விட்டு விடுதிக்குச் செல்வார்கள். சிவத்தம்பி பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் இது அடிக்கடி நிகழ்ந்துகொண் டிருந்தது. ஸாஹிறாவின் நிழலாகவும் அது தொடர்ந்தது.
சிவத்தம் பிக்கு அறிவுபூட்டிய ஆசிரியர் திலகங்கள்.
சிவத்தம்பி ஸாஹிறாவில் கல்வி கற்றுக் கொண்டிருந்தபொழுது எ.எம்.எ.அஸிஸ் தலை மையில் புகழ்பெற்ற ஆசிரியர் குழாமொன்று ஸாஹிறாவில் கற்பித்துக்கொண்டிருந்தது. முது தமிழ்ப் புலவர் மு.நல்லதம்பியின் மாணவன் எஸ்.எம்.கமால்தீன், நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் மகன் சோ.நடராசா, வண்ணார் பண்ணையில் பிரதிநிதி என்ற வகையில் ந.சண்முகரத்தினம் போன்றோர் அங்கு தமிழ் பயின்றனர். புஞ்சி நிலமே, அமுனுகம், எம்.எப்.எம்.எச்.பாக்கீர், எம்.எச்.எம்.ராலி போன்றோரிடம் இலங்கைச் சரித்திரத்தையும், உதுமானிடமும் பாக்கீரிடமும் ஐரோப்பிய சரித்திரத்தையும் தாஹிரிடம் அரசியலையும் சிவத்தம்பி கற்றார். தாஹிர் இலங்கை வங்கி வெளிநாட்டுக் கிளை முகாமையாளராக விருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிற்காலை இலக்கியப் பாராளுமன்றத்தின் சாபாநாயகராக விளங்கிய ஸ்டான்லி திலகரட்ண அப்போது சட்டக்கல்லூரியிலும் பயின்றுகொண்டிருந்தார். பட்டப்பின் படிப்பு டிப்ளோமா பயிற்சிக்காக வந்த வி.சதாசிவம் கூட சிறிதுகாலம் ஸாஹிறாவில்

தமிழ் கற்பித்தார். இவர் பிற்காலை பரீட்சை ஆணையாளராக இருந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
“அஸிஸ் யுகத்தின் முத்திரையுடன் முகிழ்த்த ஸாஹிறாத் தமிழ்ப் பாரம்பரியத்தின் முதல்வராக விளங்குபவர் எஸ்.எம்.கமால்தீன் அவர்களாவர். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பகட்டப் பட்டதாரிகளில் ஒருவரான இவர் ஸாஹிறாவிலே கடமையாற்றிய காலத்தில், முதலில் அஸிஸின் தமிழ்ப் பிரதிநிதியாக கூட்டங்களிலும் வைபவங் களிலும் கலந்து பின்னர் தமது பேச்சுவன்மை யாலும் தமிழறிவாலும் முஸ்லிம்களின் தமிழ் இலக்கியப் பிரதிநிதி எனப் போற்றப்படுமளவுக்கு இலங்கையிலும் இந்தியாவிலும் முக்கிய இடம் பெற்றார்; பெறுகின்றார். இக்பாலின் கருத்துக் களைப் பரப்பவென அஸிஸால் நிறுவப்பட்ட இக்பால் கழகத்தின் ஆங்கிலப் பிரசுரங்கள் பலவற்றை இவர் தமிழாக்கித் தந்துள்ளார்.
கமால்தீன் காலத்திலேயே ஸாஹிறாவில் கடமை யாற்றத் தொடங்கிப் பின்னர் உயர்வகுப்புத் தமிழாசிரியர் பொறுப்பினை ஏற்றுக் கொண்டவர் திரு.ந.சண்முகரத்தினம் அவர்கள். சென்னைப் பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர் வண்ணார் பண்ணையின் தொடர்ச்சியறாத தமிழ் இலக்கியப் புலமை மரபின் பிரதிநிதி.
கமால்தீன் - சண்முகரெத்தினம் காலத்திலே ஸாஹிறாவில் பயின்று, அவர்களது நேரடிச் செல்வாக்குக்கு உட்பட்டு, அக்காலத்திலும் அதற்குப் பின்னரும் தமிழ் இலக்கியத்துறையில் மதிக்கப்படத்தக்க ஈடுபாடுடையவர்களாகக் கொள்ளத்தக்கவர்கள் மு.மீ.சாகுல் அமீது, குருசாமி, எச்.எம்.பி.முஹிதீன், எஸ்.எம்.ஹனிபா, எம்.சமீம், வீ. ஏ. கபூர், இ. சிவகுருநாதன், பி.பாலசிங்கம், ஜப்பார், எச்.எம்.ஹாஷிம், கா.சிவத்தம்பி முதலியோராவர். இவ்வாசிரியர்கள் ஊக்குவித்த தமிழார்வம் காரணமாக மேற்கூறிய ஒவ்வொருவரும் இலங்கைத் தமிழிலக்கிய வரலாற்றில் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவர்களாகக் காணப்படுகின்றனர்.
மாணவர் ஒவ்வொருவரும் எவ்வாறு ஸாஹிறாவின தமிழ்ப்பாரம்பரியத்தைத் தேசிய மட்டத்திற்

Page 16
செயற்படுத்துகின்றனர் என்பது விரிக்கிற் பெருகும் என்று அஞ்சி விடுகின்றேன்.' என்று எழுதி தான் கற்றகாலத்தில் கமால்தீன்சண்முகரெத்தினம் ஆகியோரின் தமிழ்ப் பாசறையில் வளர்ந்து இன்று தமிழ் கூறு நல்லுலகில் பிரக்கியாதி பெற்று விளங்கும் தனது சக மாணவர்களையிட்டு சிவத்தம்பி எழுதிவைத்திருப்பதானது ஒருவகையில், தனது உயர்வுக்கு உதவிய இத் தமிழாசான்களின் பெருமையை நினைவுகூருவதாகவும் அமைகிறது.
சிவத்தம்பி காலத்தில் மூவின ஆசிரியர்களிடம் மூவின மாணவர்களும் கல்விகற்கும் தேசிய ஐக்கியத்தின் களமாக ஸாஹிரா விளங்கியது. முஸ்லிம் ஆசிரியர்களிடம் தமிழ் பயின்று உயர்வுபெற்ற தமிழ் மாணவர்களும் தமிழ் ஆசிரியர்களிடம் தமிழ்பயின்று சிறப்படைந்த முஸ்லிம் மாணவர்களும் ஸாஹிறா ஏற்படுத்தி வைத்த அந்தக் களத்தில் உருவாக்கிப் புகழ்பூத்து நிற்கின்ற சிறப்பு இன்னொரு முக்கிய அம்சமாகும்.
விபுலாநந்த அறிவுப் பாரம்பரியத்தின் சிறந்த பிரதிநிதி
சிவத்தம்பி ஸாஹிறாக் கல்லூரியில் மூதறிஞர் எஸ்.எம்.கமால்தீனிடம் தமிழ் பயின்றவர். கமால்தீன் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கற்றபோது சுவாமி விபுலாநந்தரின் மாணாக் கனாக இருந்தவர். அதுமட்டுமன்றி இவர் முது தமிழ்ப் புலவர் மு.நல்லதம்பியின் மாணவரும் கூட. இந்த முது தமிழ்ப் புலவர் ஸாஹிறாவில் தொடர்ந்து தமிழ்ப்பணி செய்ய வேண்டும் என்ற சுவாமியின் அன்புக் கட்டளையை ஏற்று அக்கல்லூரியில் தொடர்ந்து நற்றமிழ்ப்பணி செய்தவர். அவரின் மாணாக்கர் தான் கமால்தீன். அந்தவகையில், கமால்தீனிடம் கற்றவரென்ற முறையில் சிவத் தம் பி விபுலாநந்தரின் அறிவியற் பாரம்பரியத்தின் சிறந்த பிரதிநிதியாகிறார். அதுமட்டுமின்றி, ஸாஹிறாக்கல்லூரி ஏற்படுத்திக் கொடுத்த இந்தக் களத்திலிருந்து பல்கலைக் கழகத்திற்குச் சென்ற சிவத்தம்பி சுவாமி விபுலாநந்தரின் நன்மாணாக்கர்களான க.கணபதிப்பிள்ளை, சு.வித்தியானந்தன் ஆகியோரிடமும் கற்று இப்பாரம்பரியத்தின் தொடர்பறாத பிரதிநிதியாக

அடிபதிக்கிறார். ஸாஹிறாவில் அதிபர் அறிஞர் எ.எம்.எ.அஸிஸ் கூட சுவாமியின் மிக நெருங்கிய நண்பனாக இருந்தவர். அவரின் சொற்கேட்டு அரச சேவையை நீக்கி ஸாஹிறாவின அதிபர் பதவியைப் பொறுப்பேற்றவர். அந்த வகையில் ஸாஹிறாக் கல்லூரி சிவத்தம்பிக்கு ஏற்படுத்திக் கொடுத்த களம் அவரது வாழ்வில் மிக்க முக்கியத்துவ முடையது. அவரினால் இலகுவில் மறந்து விடற்கரியது.
மழைவிட்டும் தூவானம் போகவில்லை. ஸாஹிறாவிலிருந்து பல்கலைக்கழகம் சென்றவர்கள அங்கும் தங்கள் திறமையைக் காட்டத் தொடங்கினர். 1952இல் நடைபெற்ற ஜி.ஏ.கியூ பரீட்சையில் தமிழ்ப்பாடத்தில் இருவர் மட்டும் அதிவிசேட தரத்தில் (A) சித்தியடைந்தனர். அவர்கள் எம்.ஷரீபும், சோ.செல்வநாயகமும் ஆவர். இவ் விருவருமே சிவத்தம் பியுடன் ஸாஹிறாவில் கல்வி கற்றவர்கள். கமால்தீன், சண்முகரெத்தினம் ஆகியோரின் மாணவர்கள்.
1952-53ஆம் வருட பல்கலைக்கழக தமிழ்ச் சங்க மலரான இளங்கதிரின் ஆசிரியராக எஸ்.எம்.ஹனிபா செயற்பட்டார். இவரும் ஸாஹிறாவின் சிவத்தம்பி கால மாணவர்தான்.
இங்கு இன்னுமொரு முக்கிய விடயத்தையும் கூறவேணி டும் . அஸரீஸ் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு வரும் போதெல்லாம் சிவத்தம்பி உள்ளிட்ட ஸாஹிறாவின் மாணவர் அனைவரையும் அழைத்து, இரவுச் சாப்பாட்டிற்கு ஏற்பாடு செயப்து, அவர் களையெல்லாம் ஒன்றுகூட்டி, சந்தித்து, அளவளாவி மகிழ்வது வழக்கமான ஒரு நிகழ்வாக இருந்தது. இது அஸிஸின் உயர் பண்பைக் காட்டியதுடன் மழை விட்டும் தூவானம் போகவில்லை என்ற வகையில் எங்கு சென்றாலும் ஸாஹிறாவின் L560) DULT 60T எண்ணங்களைத் தொடர்பறாது பேணும் மனோநிலையை அந்த மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்திற்று. அதனாற்றான் ஸாஹிறாவில் கற்ற இம் மாணவர்கள் தாங்கள் ஸாஹிறாவில் கற்றவர்கள், அதிபர் அஸிஸின் மாணவர்கள் என்பதை இன்றும் வாயாரக் கூறி பெருமைப் படுகின்றனர். இதனாற்றான் போலும் தனது பல்கலைக்கழகக் கல்வி முடிவடைந்ததும் கண்டி

Page 17
சென்.சில்வெஸ்டர், வத்தேகம கிறைஸ்ட்சேக் கொலிஜ் போன்ற பிரதான கல்லூரிகளிலிருந் தெல்லாம் ஆசிரியர் பதவிகள் சிவத்தம்பியைத் தேடி வந்தபோதும் அதை அவர் ஏற்காது தனக்குக் கல்வியூட்டிய ஸாஹிறாவக்கே, அஸிஸின் அழைப்பை ஏற்று, ஆசிரியராக வந்து சேர்ந்தார். எம்.சமீம், சோ.செல்வநாயகம், போன்றோரும் இவ்வாறே வந்து சேர்ந்தனர். இவர்களுக்கு முன்னர் ஸாஹிறாவில் படித்த ஐ.எல்.எம்.சுஐப் , எம்.ஐ. எம் . நாளிர் , எம்.எம்.எம்.ம.’றுாப் போன்றோரும் இவ்வாறு தான் பல்கலைக்கழகக் கல்வி முடிந்ததும் மீண்டும் ஸாஹிறாவக்கே ஆசிரியர் பணி செய்யத் திரும்பினர் என்பதும் கருத்திற்கொள்ள த்தக்கது.
ஸாஹிறாவில் ஆசிரியப்பணி (1956 - 61) சிவத்தம்பியின் ஸாஹிறா மறு பிரவேசம் 1956இல நிகழ்ந்தது. அப்போது அவர் ஆசிரியராக ஸாஹிறாவில் நுழைந்தார். ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்குப் பணமில்லாத நிலை ஏற்படும்வரை சிவத்தம்பி ஸாஹிறாவில் பணி செய்தார். 1961இல் ஸாஹிறாவை அரசாங்கம் பொறுப்பேற்று, தனது அன்புக்குரிய அதிபர் அஸிஸம் ஸாஹிறாவை விட்டுப் பிரிந்தபோதுதான் சிவத்தம்பி ஸாஹிறாவை விட்டு செல்லத் தீர்மானித்தார்.
சிவத்தம்பி எச்.எஸ்.ஸி. வகுப்புகளுக்கு அரசியல், இலங்கைச் சரித்திரம் ஆகிய பாடங்களைக் கற்பித்தார். அப்போது உவைஸ் அவர்கள் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் எச்.எஸ்.ஸி.தமிழ் கற்பித்தலில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. சிவத்தம்பி தமிழ் இலக்கியத்தையும், உவைஸ் இலக்கணம், கட்டுரைகள் முதலிய பாடங்களையும் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. உவைஸ் பரீட்சைத் திணைக்களத்தில் தொழில் பெற்றுச் சென்றதும் சிவத்தம்பியே இலங்கைச் சரித்திரத்துடன் தமிழ்ப் பாடத்தையும் முழுமையாகக் கற்பிக்க வேண்டி ஏற்பட்டது. கலாநிதி ஏ.சி.எஸ்.அமீர்அலி, கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி, எஸ்.எச்.எம்.ஜெமீல், பத்திரிகையாளர் எம்தாலிப்டீன், ஏ.ஆர்.எம்.சுஹைர் போன்றோர் அப்போது சிவத்தம்பியிடம் கற்றனர். அதேவேளை குடியியல் (Civics)

பாடத்தையும் சிவத்தம் பி எஸ் .எஸ். ஸS. வகுப்புகளுக்குக் கற்பித்தாா. ஏ.எச்.எம்.பெளஸி (இந்நாள் அமைச்சர்), யு.எல்.எம்.மொஹிதீன் (எம்.பி), எம்.எம்.சுஹைர் (முன்னாள் எம்.பி), மக்கி ஹாஷிம் (தொழிலதிபர்), றஸின்சாலி (தொழிலதிபர்), ராஜபுவனேஸ்வரன், (இலங்கை வங்கி) எம்.ஹயாத்து முஹம்மது (மூதூர் ஆசிரியர் ), எச். எம் . ஷரீப் (மணி னார்) ஆகியோரெல்லாம் அவரிடம் குடியியல் படித்த மாணவருட் சிலர்.
நாளிர் (உள்நாட்டு இறைவரித்திணைக்களம்), சுஹைர் (மத்திய வங்கி), ஹமீட் (மத்திய வங்கி), பேராசிரியர் ஏ.எம். இஷாக் (தஹற் றான் பெற்றோலிய பல்கலைக்கழகம்), வைத்திய கலாநிதிகளான ஜமீல், மஜித், ஹமீத் ஆகியோரும், ஜிப்றி காரியப் பர், எஸ்.எச்.எல். அலியார் (முன்னாள் கல்விப்பணிப்பாளர், கல்வி அமைச்சு), நெளபல் ஜாபீர் (சவூதி அரேபியாவில் இலங்கைத் தூதுவர்), மரிக்கார் (பொது முகாமையாளர், அமால் இஸ்லாமிய வங்கி) போன்றவர்களும் இக் காலத்தில் ஸாஹிறாவில் வெவ்வேறு துறைகளில் கற்றுக்கொண்டிருந்தனர்.
சிவத்தம்பியின் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கூட மிகவும் பிரபல்யம் பெற்று விளங்கினர். 1961 இல் நடைபெற்ற ஜி.ஏ.கியூ. பரீட்சையில் மூவர் மட்டும் தமிழில் அதிவிசேட தரத்தில் (A) சித்தியடைந்தனர். அவர்களுள் இருவர் சிவத்தம்பியிடம் ஸாஹிறாவில் தமிழ் பயின்ற ஏ.சி.எல்.அமீர் அலியும், எஸ்.எச்.எம். ஜெமீலும் அடங்கினர். அப்பரீட்சையில் தமிழில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற ஜெமீலுக்கு பிரான்சில் freign Guff Lussib (Francis Kingsbury Prize) கிடைத்தது. 1962ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜி.எ.கியூ. பரீட்சையில் தமிழ் மொழியில் ஒரேயொருவர் மட்டும் அதிவிசேட தரத்தில் (A) சித்தியடைந்தார். அவர் எம்.எ.எம்.சுக்ரி. அவரும் சிவத் தம்பியின் மாணவன் தான் . அது மட்டுமல்லாமல் பேச்சுப் போட்டிகள் மூலம் தெரிவுசெய்யப்பட்ட இலங்கைப பல்கலைக்கழக தமிழ் விவாதக் குழு உறுப்பினர்களாகவும் சிவத்தம்பியின் ஸாஹிறா மாணவர்களான ஏ. சி. எல . அமீர் அலி, எம். ஏ. எம் . சுக் ரி, எஸ்.எச்.எம்.ஜெமீல் ஆகியோர் தெரிவுசெய்யப்

Page 18
பட்டனர். அக் காலை பல கலைக் கழக விடுதிகளுக்கிடையே நடைபெற்ற விவாதப் போட்டிகளிலும் சிவத்தம்பியின் இம்மூன்று மாணவர்களும் தலைமைதாங்கிப் புகழ் பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அருணாசலம் மண்டப விவாதக் குழுவுக்கு அமீர் அலியும், விஜயவர்த்தன மண்டபக் குழுவுக்கு சுக்ரியும் தலைமைதாங்கி விவாதங்களை நடத்தினர். சமகாலத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வு அப்போது பலரின் கவனத்தை ஈர்த்திருந்தது. இவையெல்லாம் சிவத்தம்பியின் தமிழ்க் கற்பித்தலுக்குக் கிடைத்த பெறுமதிமிக்க பரிசுகள்.
சிவத்தம்பி ஆசிரியராக இருந்த காலத்தில் கூட தனது தமிழ் நாடகத்துறைப் பங்களிப்பை விட்டு விடவில்லை. கல்லூரிச் சூழல் அவர் அதைத் தொடர்ந்தும் செய்யத் தூண்டியது. சிவத்தம்பியின நண்பர் சமீமும் ஸாஹிறாவில் பல நிருவாகப் பொறுப்புக்களை ஏற்றுச் செயற்பட்ட காலமது. ஒருமுறை 'நிழல்கள்’ என்ற பெயரில் நாடகமொன்று ஸாஹிறாவில் மேடை ஏறியது. பூரீனிவாசன் செய்த இப்சனின் Ghost என்ற நாடக மொழிபெயர்ப்பை வைத்தே சிவத்தம்பி இந்த நாடகத்தைத் தயாரித்திருந்தார். தாளையன், மன்னார் ஷரீப் முதலானோர் நடித்துப் புகழ்பெற்ற நாடகம் இது. சமீம் இந்நாடகத் தயாரிப்பில் சிவத்தம்பிக்கு உதவியாகச் செயற்பட்டார். இன்னுமொரு நாடகமும் இக் காலை மேடையேறியது. தினகரன் விழாவில் மேடையேறிய கம்பன்’ நாடகமே அது. சிவாஜி கணேசனின் முன்னிலையில் பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நிகழ்ந்த அந்த நாடகத்தில் குலோத்துங்க சோழன் பாத்திரமேற்று நடித்துப் பாராட்டுப் பெற்றார் சிவத்தம்பி. மேடை அமைப்பு உடையலங்கார வேலைகளை சமீம் செய்திருந்தார். சிவத்தம்பி மேடையில் நின்றபோது மேடைப் பலகைகள் உடைந்து விழ அவரும் விழுந்துவிட்ட நிகழ்வை இன்றும் அவரது நண்பர்கள் நினைத்து மகிழ்கின்றனர்.
சிவத்தம்பிக்குக் கிடைத்த இன்னுமொரு அதிஷ்டம் அவர் ஸாஹிறாவின் ஆசிரியராக இருந்தபோது அவரின் பல்கலைக்கழக நண்பன்

க. கைலாசபதி தினகரனின் ஆசிரியராக இருந்தமையாகும். ஆரம்பத்தில் தினகரன் வாரமஞ்சரிக்கு மட்டும் ஆசிரியராக இருந்த கைலாசபதி பின்னர் தினகரனின் பிரதம ஆசிரியரானார். அக்காலை சிவத்தம்பியின் அனேக கட்டுரைகள் தினகரனில், குறிப்பாக தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமாயின. 1962இல் கைலாசபதி தினகரனை விட்டு இலங்கைப் பல்கலைக்கழகத்திற்குத் தமிழ் விரிவுரையாள ராகச் செல்லும்வரை இந்த வசதியை சிவத்தம்பி நன்கு பயன்படுத்திக்கொண்டார்.
“ஸாஹிறா தலைநகரத்துக் கல்லூரி என்ற வகையில், தலைநகரத்து வசதிகளையும் நன்கு பயன்படுத்திக் கொண்டது எனலாம். இத்துறையில் சிறப்பாக எடுத்துக்கூறப்பட வேண்டுவது வானொலி நிலையத் தொடர்பு, பத்திரிகைத் தொடர்பு என்பனவாகும். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஸாஹிறாவின் முக்கிய தமிழாசிரியர்களுக்கும், வானொலி நிலையம், பத்திரிகை அலுவலகம் ஆகியவற்றுக்கும் தொடர்புகள் நிறைய நிலவின. இதன் காரணமாக இக்கல்லூரி மாணவர்களின் இலக்கிய ஆக்கங்களுக்கு வாயில்கள் தேடுவது சிரமமாக இருக்கவில்லை.” என்று சிவத்தம்பி கூறுவது முற்றிலும் உண்மையான கூற்று. சிவத்தம்பியைப் பொறுத்தவரை இவை மிக்க அர்த்தபுஷடியுள்ள வார்த்தைகள்.
(கரவையூற்று என்னும் நூலிலிருந்து)

Page 19
“பண்டைய தமிழ்ச் dog
“பண்டைய தமிழ்ச் சமூகத்தில் இந்நாலுக்கான ஆங்கில மூல பிப்ரவரியில் கலாநிதிப்பட்டத்தை 1981 களில் ஆங்கில நாலாக
மொழி பெயர்ப்பை அம்மன்கிளி ( இது தமிழ் நாலாக வெளிவந்த
ஜோர்ச் தோம்சன் என்ற மார்க்சிய ஆய்வாளரின் குறிப்பிடுவது போல் “இந்நாலில் நாலாசிரியர் 6 பிரயோகிக்கிறார்’ என்பது தெட்டத் தெளிவானது. இது பார்வைகளுக்கும் தடம் அமைக்கப்பட்டுள்ளது. கு 5ITL5 D60L ஒப்பிட்டு நோக்குவதற்கான சாத்திய இந்த ஆய்வு வெளியான போதும் தமிழ்வழிவந்த பு அதிகம் கவனத்தைப் பெறவில்லை. ஆனால் { வெளிவந்திருப்பதற்காக நாம் சந்தோசப்படவேண்டு அதிகம் தாக்கம் செலுத்துமென்றே எதிர்பார்க்கலாம். அகலித்து ஆழப்படுத்த விளைகிறது.
இந்நால் பேராசிரியர் சிவத்தம்பிக்கு கலாநிதிப்பட்ட ஆய்வு மூலங்கள் அணுகு முறை விமர்சனம் வரல சிறப்புகள் இந்நாலில் இழையோடியுள்ளமையை
இந்த நாலுடன் பரிச்சயம் ஊடாட்டம் கொள்ளவில்6 தொடர்புறாமல் பேராசிரியரை விமரிசிக்கும் குறுகிய உள்ளது. இதனால் இந்நாலின் முக்கியத்துவம் நடைபெறுகின்றன. இப்போக்கு ஆரோக்கியமானத
“இலக்கியமும் கருத்தநிலையும” “இலக்கியமும் கருத்தநிலையும்’ என்னும் நால வெளிவந்தத. இதன் விரிவாக்கப்பட்ட இரண்டாம் ப சுமார் 11 கட்டுரைகள் உள்ளன. இரண்டு பதிப்புக
உள்ளன.
ஒரு தேர்ந்த வாசகர் மற்றும் ஆய்வாளர் “இலக் குறித்து ஆழமான புரிதல் கொண்டிருக்க வேண்டும். பற்றிய நோக்குமுறையிலும் அணுகுமுறையிலும் 1 உருவாக்க முடியும். மார்க்சிய வழிமுறை வந்த ஆய் அதிகம் அ* ~ாmை காட்டினார்கள். இதன் வெளிப்
1980 க்கு பின்னர் தமிழ்ச் சுழலில் நவீன இலக் தளமாற்றங்கள் உருவாகியுள்ளன. பல்வேறு கரு உள்ளன. ஆகவே இந்தப் பின்னணிகளையும் உள்
(ஓலை 44 , 45 )-
 
 

கத்தில் நாடகம்’
நாடகம்” என்னும் நால் 2004 இல் வெளிவந்தது. ம் 1969 நடுப்பகுதியில் எழுதப்பட்டது. இதவே 1970 பேராசிரியருக்குப் பெற்றுக்கொடுத்தது. இது பின்னர் NCBH வெளியீடாக வெளிவந்தது. இதன் தமிழ் முருகதாஸ் தற்போது மேற்கொண்டதன் விளைவாக பள்ளது.
வழிகாட்டலில் இந்நால் எழுதப்பட்டது. தோம்சன் பாருள் முதல்வாதத்தை ஒரு புதிய தளத்திற் தனால் தமிழ் நாடகம் குறித்த புதிய தேடல்களுக்கும் றிப்பாக கிரேக்க நாடக மரபுடன் இணைந்து தமிழ் ங்களை இந்நால் திறந்த விட்டுள்ளது. 1970 களில் லமையாளர்கள் ஆய்வாளர்கள் மத்தியில் இந்நால் இன்று காலங்கடந்ததாயினும் இந்நால் தமிழில் ம். தமிழ் நாடகவியலாலர்கள் மத்தியில் இந்நால் மேலும் இந்நால் தமிழ் நாடகவியல் ஆய்வுப்பரப்பை
ததைப் பெற்றுக் கொடுத்துள்ளத. ஆகவே இவரது ாற்றைக் கட்டமைக்கும் தணிவு போன்ற பல்வேறு நோக்கலாம். நம்மத்தியில் உள்ள பலர் இன்னும் 0ல. ஆனால் இந்த ஆய்வு மரபுகள் எவற்றுடனும் அரசியல் செல்வாக்குச் செலுத்தம் ஒரு அவலநிலை
யாதென்பதை அறியாமலேயே வாதவிவாதங்கள்
D6D.
மின் முதற் பதிப்பு 1982 இல் திப்பு 2002 இல் வெளிவந்தத. ளுக்கான முன்னுரைகளும்
கியமும் கருத்து நிலையும்’ அப்பொழுதுதான் இலக்கியம் ல்வேறு புதிய தன்மைகளை வாளர்கள் இந்த முயற்சியில் பாடு இந்த நால்.
5கியம் பற்றிய புரிதலிலும் வாசிப்பிலும் பல்வேறு ந்துநிலை விவாதக்களங்கள் எமக்கு அறிமுகமாகி வாங்கியே இந்நாலை வாசிக்கப்படவேண்டும்.
( 2007 : bsofפ, , *dח6udsתי6 }-

Page 20
“பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப்
“பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோ பண்டைத் தமிழ்ச் சமூகம் குறித்த மார்க்சியப் பார்ன குறைவாகவே உள்ளது. இந்நிலையில் இந்நால் இக் கண்ணோட்டங்களை விரிவாக்க எத்தனிக்கிறது.
குறிப்பாக பண்டையத் து களத்தைத் திறந்து விடுக தேவையையும் அவசியத் வாளர் சமூக வரலாற்ற தான் தனது ஆய்வுப் விளக்கங்களைத் தர மு
பல்துறைச் சங்கம ஆ இந்நாலை ஆழ்ந்து தொல்லியல் ஆய்வாள தெறிப்புகளையும் உள் எழுதியுள்ளார். தமிழி இருக்கவேண்டிய “ஆ
என்பதை இந்நால் தெளிவுபடுத்துகிறது. ஆனால் ச ஈழத்து ஆய்வாளர்களிடையே அதிகம் கவனிக்கப்
“தனித்தமிழ் இலக்கியத்தில் அரசியற் பின்னணி”
“தனித்தமிழ் இலச் இல் வெளிவந்தது.
666 fo6555. 91 வெளிவந்தத. இரு இயக்கம் முதன்ை பிரயோகத்தில் இ6 இவ்வியக்கம் சமூ பின்புலங்களில் ை உள்ளது. இதனை
கூறலாம். தனித்த எந்தவொரு ஆய்வு கொள்ளவேண்டியே
சமகாலத்தில் கூட பார்வைக்கோணம்
கோடல் செய்வத கொண்டுள்ளது. 8 முக்கியமான இடழு வெளித் தெரியும் பு 5th Lpu 860érLITIb
(ஒலை 44 45)
 
 

புரிதலை நோக்கி.”
$கி.’ என்னும் நால் டிசம்பர் 2003 இல் வெளிவந்தது. வயிலான புரிதலைத் தரக்கூடிய ஆய்வுகள் மிகக் குறைபாட்டை ஓரளவு நீக்கி மார்க்சிய பார்வையிலான
மிழ்ச் சமூகத்தைப் பற்றிய பல புதிய புரிதல்களுக்கான கிறது. மேலும் புதிய ஆய்வு அணுகுமுறைகளுக்கான தையும் வலியுறுத்துகிறது. இலக்கிய வரலாற்றாய் ாய்வாளராக ஆய்வு மரபுக்குரிய சான்றுகள் வழியே பணத்தைத் தொடர முடியும். புதிய பார்வைகளை டியும் என்பதற்கு இந்நால் சிறந்த எடுத்துக்காட்டு.
ய்வுத் தாடனம் எத்தனை முக்கியம் என்பதற்கு வாசிக்கும் பொழுத உணர்ந்து கொள்ளமுடியும். ர் ஐராவதம் மகாதேவன் வெளிப்படுத்திய ஆய்வுத் வாங்கிய ஒரு முன்னுரையையும் பேராசிரியர் லக்கிய ஆய்வாளர், ஆசிரியர் யாவருக்கும் ய்வு நெறிமுறை” “அறிகை மரபு’ எத்தகையது 5வனிக்கப்படவேண்டியவர்கள் மத்தியில் குறிப்பாக பெறாத நால் இது.
5கியத்தில் அரசியற் பின்னணி’ என்னும் நால் 1979 இந்நாற்பொருள் முதலில் ஆங்கிலத்தில் 1977 இல் தன் தமிழ் வடிவமே மேற்குறித்த தலைப்பில் பதாம் நாற்றாண்டுக்கால வளர்ச்சியில் 'தனித்தமிழ் மையான பங்கு வகிக்கிறது. தமிழ் உரைநடைப் வ்வியக்கம் ஏற்படுத்திய தாக்கம் பெரிது. ஆகவே கம், அரசியல், பண்பாடு, கருத்துநிலை சார்ந்த வத்த அறிவுபூர்வமாக மதிப்பிட வேண்டிய தேவை
இந்தச் சிறு நால் தொடக்கி வைத்தது என்றே மிழ் இயக்கம் பற்றிய ஆய்வுகளில் ஈடுபடக்கூடிய பாளரும் இந்த நாலை நிச்சயம் பயன்படுத்திக் தவை உள்ளது.
இந்த நால் வழியே கட்டமைத்த கருத்தவிளக்கம், மதிப்பீடு யாவும் இன்னும் தல்லியமாக பொருள் ற்கான சாதகமான பண்புகளை தன்னகத்தே கவே இத்தறைசார் ஆய்வு மரபில் இந்நாலுக்கு )ண்டு. இது தமிழ் நாட்டு ஆய்வாளர்கள் மத்தியில் லமைச்சுட்டி ஆகும். இது பின்னிணைப்புக்களுடன் பதிப்புக்காண வேண்டிய தேவை இன்று உள்ளது.
-C வைகாசி , ஆனி : 2007 )

Page 21
“யாழ்ப்பாணம் : 8
“யாழ்ப்பாணம் : சமூகம் வெளிவந்தது. பேராசிரிய
இது. சுமார் 12 கட்டுரை
யாழ்ப்பாணச்சமூகம் ட மூலங்களை அடைய விளங்கிக்கொள்ளல்’ என
முன்வைக்கின்றார். இவ
தளமாற்றம் செய்து வி விருத்தி பெறக் கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. எ தொடக்கமான விமரிசன முன்னுரைக்கான பதிற்குறி முக்கியத்துவத்தை யாரும் குறைத்த மதிப்பிட்டுை பலமட்டங்களில் விரிவும் ஆழமும் பெறவேண்டும். டே திறந்துவிட்டுள்ளார்.
“தமிழ் இலக்கியத்தில் மதமும் மான
“தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும்’ என் மூன்று பதிப்புக்களைக் கண்டுள்ளது. மூன்றாம் ! மதவெளிப்பாடுகள் - மதம், மானுடம், தமிழ்ப்ப வடிவிலமைந்த நீண்ட முன்னுரையை பேராசிரிய உள்ளத. ஆக இந்த இரு முன்னுரைகளும் ஆகியவற்றுக்கிடையில அடையாளம் காட்டுகின்ற
t. தமிழிலக்கியத்தில் 2. தமிழ்க் கிறித்தவ 3. தமிழிலக்கிய வர 4. சைவசித்தாந்தம்
5. தமிழிலக்கியங்கள்
ஆகிய ஐந்து கட்டுரைகள் ஒவ்வொருவரும் படிக் சிந்தனையிலும் ஆய்வுக் திருப்பக் கூடிய தன்மை
பேரசிரியரது ஆய்வுக்கண்ணோட்டத்தின் முக் துணைசெய்யக் கூடிய நால்.
(ஓலை 44 , 45 )
 
 

மூகம் பண்பாடு கருத்துநிலை”
பண்பாடு கருத்தநிலை’ என்னும் நால் 2000 இல் ர் அவ்வப்பொழுது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு களும் ஒரு பின்னிணைப்பும் உள்ளது.
ற்றிய சமூகவியல் பண்பாட்டியல் ஆய்வுக்கான ாளம் காட்டுகிறது. “யாழ்ப்பாணச் சமூகத்தை பதற்கான ஒரு கண்ணோட்டத்தை கருத்து நிலையை ற்றுக்கு மாறாகவும் அல்லது இக்கண்ணோட்டங்களை ரித்துச்செல்லும் இன்னும் விரிவான பார்வைகளும் மது ‘புலமை’ ‘ஆய்வு மட்டங்களில் இந்நால் ஒரு களை முன்வைத்துள்ளது. இந்தfதியில் இந்நாலுக்கான விட முடியாது. விவாதங்கள் விமரிசனங்கள் இன்னும் ராசிரியர் கா.சிவத்தம்பி இதற்கான சாத்தியப்பாடுகளை
படமும”
ானும் நால் 1983 இல் வெளிவந்தது. இன்று இந்நால் பதிப்பு 2001இல் வெளிவந்தது. இப்பதிப்பில் “தமிழில் ாரம்பரியம் பற்றிய ஒரு அறிமுகக்குறிப்பு’ என்ற ர் எழுதியுள்ளார். முதற்பதிப்புக்கான முன்னுரையும்
இலக்கியம் - வரலாறு - பண்பாடு - மதம் ான ஊடாட்டம் பற்றிய பின்புலங்களை நமக்கு
ങ്ങ.
b மதங்களின் பங்கு இலக்கியப் பாரம்பரியம் லாற்றில் இஸ்லாமியத் தமிழிலக்கியங்கள் - ஒரு சமூக வரலாற்ற நோக்கு fsó LDTgollo
ர் இடம் பெற்றுள்ளன. தமிழ் இலக்கிய மாணவர்கள் கவேண்டிய நால். இலக்கிய வரலாறு பற்றிய கண்ணோட்டத்திலும் புதிய களங்கள் நோக்கி திசை களைத் தன்னகத்தே கொண்ட நால்.
கியமான செல்நெறிகளை விளங்கிக்கொள்வதற்கு
--C வைகாசி , ஆனி : 2007 )

Page 22
ஈழத்தில் தமிழ் இலக்கியம்
1978 இல் தமிழ் புத்தகாலயத்தின் முதலாம் பதிப்ப இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஈழத் பல்கலைக்கழகங்களில் நிகழ்ந்தபோது அத்தேடல்க ஆரம்பகால இலக்கிய செல்நெறிகளை அல்லது கோணத்தில் வகைமை செய்யப்பட்டு இந்நால் 6 இலக்கிய சொல்நெறிகளில் பல்வேறு திசைமுகங்கை குறிப்பாக யாழ்ப்பான இலக்கியப் பாரம்பரியம் இ
அரங்கு ஓர் அறிமுகம்.
நாடகமும் அரங்கியலும் என்ற பாடநெறி கலைத்திட் நால்களின் போதாமை உணரப்பட்ட வேளையில் இ பல்கலைக்கழக புகுமுக வகுப்பினருக்கும் பல்கை பயனளிக்கக் கூடிய வகையில் இந்நால் எழுதப்பட் தகுதியாகும். பேராசிரியர். சிமெளனகுரு, திரு.கதில அமரர். சியற்குணம் நினைவு மலர்க்குழுவினரால்
தமிழ்ப் பண்பாட்டில் சினிமா 2004ல் மக்கள் வெளியீடாக இது வெளிவந்துள்ள தொடர்பாடலாகத் தமிழ்ச்சினிமா, தமிழ்ச்சமூகமும் தமிழர் பண்பாட்டின் உருவத்திருமேனிகளுள் ஒன்ற மறைவும் கலையின் இழப்பும் மற்றும் ஓர் நேர்காண கட்டுரை 1981ல் சென்னை புக்ஸ் வெளியிட்ட The T என்ற இவரது கட்டுரையின் தமிழாக்கமாக அமைந்து சினிமாத்தனமாக நோக்காது சினிமா என்கிற பாரம்பரியம்வளர்ச்சி கண்டுள்ளது என்பது வெளிப்ட நடிகர் சினிமாவின் ஊடாக தமிழ்ப் பண்பாட்டில் ெ நிலை பேறாக்கம் பெற்றார் என்ற விடயம் சமூகப் ப எனினும் ரோசிரியரால் தமிழ்ச் சினிமா பற்றிய சமூக இல்லை.
தமிழ்ச் சமூகமும் பண்பாட்டில் மீள்
NCBH நிறுவனத்தினர் 1994 ல் வெளியிடப்பட்ட
நவீன ஆக்கம், யாழ்ப்பான சமூகத்தை விளா இடம்பெற்றள்ளன. ஒரு சமூகத்தில் ஒரு பண்பா அல்லது பண்பாடு தன்னை உறுதிசெய்வதற்கான அந்த வகையில் தான் தமிழர் சமூகத்தில் கால போது சில மீட்டுருவாக்கமும் மீள் கண்டுபிடிப்பு நிறுத்த எடுத்த முயற்சிகள் விவரிக்கப்படுகின்றன அதன் பல்பரிமான அசைவியக்கம் பற்றியும் பலவா யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் கட்
(ஓலை 44 45)

க வந்த இந்நால் NCBH நிறுவனத்தால் 1987 இல் நில் தமிழ் இலக்கியம் பற்றிய தேடல் இலங்கைப் ருக்கான ஆதாரமாக இந்நால் வெளிவந்தது. எனினும் வகைப்பாடுகளை கருத்தில் கொள்ளாது புதிய ாழுதப்பட்டுள்ளது. 19ம் , 20ம் நாற்றாண்டு ஈழத்து ளக் கோடிட்டுக்காட்டுவதாக இந்நால் அமைந்தள்ளது. தில் கவனப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டத்தில் சேர்க்கப்பட்டபோது அதற்கான உசாத்தனை ந்நாலின் வருகை மிகுந்த கவனத்திற்குள்ளானத. Dலக்கழகத்து மாணவர்க்கும் பொது வாசகருக்கும் டுள்ளது. பாடநால் என்ற அடையாளமே இதற்கான கநாதன் ஆகியோரது கூட்டுமுயற்சியுடன் எழுதப்பட்டு இது (1999) ல் வெளியிடப்பட்டுள்ளது.
ாது. முன்னுரையாகச் சில குறிப்புக்கள், அரசியல் அதன் சினிமாவும், திரை வளர்த்த கவிதை 1, 11 ாக விளங்கும் சிவாஜி கணேசன் , ஒரு கலைஞனின் ல் ஆகியவையே உள்ளன. இந்நூலின் இரண்டாவது amil Film as amedicmofpolitical Communication ள்ளது. மற்றும் திரைவளர்த்த கவிதையை வெறுமனே
கலை ஊடகத்தினுடாகவும் தமிழ்க் கவிதைப் படுத்தப்படுகிறது. மற்றும் சிவாஜி கணேசன் என்கிற வகுசன அங்கீகாரம் பெற்ற உருவத்திருமேனியாக ன்ைபாட்டுத் தளத்தில் பொதுவாக நோக்கப்பட்டுள்ளது. வியற் பாவை விசாலிப்புப் பெறுமென்பதில் சந்தேகம்
கண்டுபிடிப்பும் இந்நாலில் தமிழ்ப்பண்பாட்டின் மீள் கண்டபிடிப்பும் கிக்கொள்ளல் ஆகிய இரு நெடுங்கட்டுரைகள் டில் புற அழுத்தங்கள் நிகழ்கிறபோது அச்சமூகம் அனைத்துப் பிரயத்தனங்களையும் மேற்கொள்ளும். ீரிய மேலாதிக்கம் புற அழுத்தங்களைத் திணித்த ம் நிகழ்த்தப்பட்டு தமிழ்ச் சமூகம் தன்னை நிலை 1. இது போலவே யாழ்ப்பாணச் சமூகம் பற்றியும் று எழுதிய பேராசிரியர் அதனுடைய உட்கட்டமைப்பை டுரையினூடாக விவரிக்கின்றார்.
-C வைகாசி , ஆனி 2007 )

Page 23
இலக்கியமும் வாழ்க்கையும் இலண்டன் தமிழன் பதிப்பகத்தின் வெளியீடாக 20 ஞானம் சிற்றிலக்கிய சஞ்சிகையின் அசிரியர் திஞா தொகுப்பே இந்நாலாகும். ஞானம் சஞ்சிகையில் நே urT6ou காலம் தொடக்கம் இற்றைவரையான சக முயற்சியும் ஆர்வமும் தான் இந்த நேர்காணி பேராசிரியருடைய பன்முகப் பரிமாணங்களை 3 காணப்பட்டன. எனினும் சில சர்ச்சைக்குரிய வினாக் வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவிப்பதில் இந்நேர்க இருக்க முடியாது.
இலக்கணமும் சமூக உறவுகளும்
“இலக்கணமும் சமூக உற தனித்து நோக்கக் கூடிய சமூக உற்பத்தி உறவுகள் மலரில் வெளியானது. பின் தலைப்பில் 1982 இல் சிறு 2002 இலும் வெளிவந்தத்
தமிழ்ப் ம்பரியத்தி காரணமாக இந்நால் மாத்திரமல்ல தமிழில் பை மார்க்சிய நிலைப்பாடு து இனங்காட்டுகிறது. இை இன்னொரு பரிமாணம்
தாடனம் எவ்வாறு இவரிடம் உள்ளது என்பதையும் மரபுகளை, நன்னூல் இலக்கண மரபில் காணப் மனித உறவில் புலப்படுத்துகிற மொழி வடிவங்க அவற்றில் ஏற்பட்ட மாறுதல்களுக்கு காரணங்கள்
(ஓலை 44 , 45 )
 
 

5 ல் இந்நால் வெளிவந்தத. உண்மையில் இந்நால் ண்சேகரன் அவர்களால் நிகழ்த்தப்பட்ட நேர்காணலின் ர்காணல் தொடராக வெளிவந்தது. பேராசிரியருடைய ல ஊடாட்டங்களையும் வெளிக்கொணாவதற்கான ாலினை அடிப்படையாக அமைந்தது. இதனால் *றிந்து கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் களைக் கிளப்பி அவற்றினூடாக சில குழுவினரிடையே ாணல் முனைப்பு கொண்டத என்பதனையும் கூறாமல்
றவுகளும்’ என்னும் நால் பேராசிரியரது நாலாக்கத்தில்
நால். இது 1978 இல் “சொல்லிலக்கணம் சுட்டும் ’ என்னும் தலைப்பில் பேராசிரியர் நா.வா மணிவிழா னர் இத இலக்கணமும் சமுக உறவுகளும்’ என்னும் று நாலாக வெளிவந்தது. இந்நால் மறு அச்சாக 1999
5.
ார்க்சியக் கண்ணோட்டத்தில் விளக்கும் முறைமையின் எழுதப்பட்டது. நவீன சமகால இலக்கியத்துக்கு ன்டைய இலக்கியங்களை விளங்கிக் கொள்வதற்கும் ணைசெய்யும் என்பதை இந்நால் மிகத் தெளிவாக தவிட இந்நால் மூலம் பேராசிரியர் சிவத்தம்பியின் தலக்கமடைகிறது. தமிழ் இலக்கண மரபு பற்றிய உணர்த்துகிறது. குறிப்பாக தொல்காப்பிய இலக்கண படும் விதி மாற்றங்களோடு ஒப்பிட்டு ஆராய்கிறார். ளைத் தோந்தெடுத்து இருவேறுபட்ட காலங்களில் ளை ஆராய்கிறர்.
வைகாசி , ஆனி : 2007 )

Page 24
சிவத்தம்பி ஆய்வுகள்
“இனத்தனித்துவம், தேசியம், சர்வதேசியம் ஆகிய மூன்றினையும் இணைத்த முதல் தழிழ்க் கவிஞன் பாரதி. முதல் இந்தியக் கவிஞனும் அவனே என்பது நமக்குப்பெருமை தருவது’ என்பது பேராசிரியர் சிவதம்பியின் பாரதி மதிப்பீடு ஆகும். (மணியரசன் 1982 : 160) இதையே சற்று விரிவாக, “பாரதிக்குப்பின், தமிழிலக்கியம் அவன் தோன்றுவதற்கு முன் எப்படியிருந்ததோ அப்படியிருக்கவில்லை. தமிழ்த்தேசியம், அனைத்திந்திய தேசியம், சர்வதேசியம் ஆகிய மூன்றும் பாரதியில் சங்கமிக்கின்றன. மொழிப்பற்றும், நாட்டுப்பற்றும், உலகப்பற்றும் உருகிக்கலந்து ஒளிர்வதை தமிழிலக்கிய வரலாற்றில் முதன்முதலாகப் பாரதியிலேயே நாம் தரிசிக்கிறோம். ஆன்மீக வாதம் பேசிய ராஜகோபாலாச்சாரியார் முதல் இனவாதம் பேசிய பாரதிதாசன், பகுத்தறிவு முழங்கிய அண்ணாதுரை, பொதுவுடமைத் தத்துவத்திற்காகப் போராடிய ஜிவானந்தம் வரை அனைத்துத் தமிழ்க் குரல்களையும் ஒன்றி ணைக்கும் சக்தியாக அவன் விளங்கினான்’ என்பார். (சிவத்தம்பி 1984 : 27)
பாரதி பற்றிய ஆய்வில் பேராசிரியர் சிவத்தம்பியின் பங்கு சுருக்கமானதே என்றாலும், குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாக அமைகிறது. அவரும் அ. மார்க்கஸஉம் சேர்ந்து எழுதிய பாரதி - மறைவு முதல் மகாவி வரை என்ற நூல் பாரதியியல் ஆய்வுக்குமட்டுமன்றி 1921 - 1949 காலகட்ட த்தில் தமிழக அரசியல் - சமூக - இலக்கியச் சூழல் பற்றி அறியவும் உதவுகிறது. இதற்கு முன்னும் பின்னும் பாரதியின் இலக்கியத்திறன், அரசியல் ஈடுபாடு, சமூகநோக்கு பற்றி அறிந்து கொள்ளப் பல நூல்கள் வெளிவருகின்றன. அவற்றுள் பெ.மணியரசனும், மாவளவனும் (அ.மார்க்ஸ்) இணைந்தெழுதிய பாரதி - ஒரு சமூகவியல்ப் பார்வை கவனத்தில் கொள்ள
(ஒலை 44 , 45 )

பாரதியியல்
இராம. சுந்தரம்
வேண்டிய ஒன்றாகும். இந்நூலுக்குப் பேராசிரியர் ‘பின்னுரை ஒன்றளித்துள்ளார். பாரதியின் சமுக நோக்கில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களை அந்த உரையில் தருகிறார். தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும், தமிழில் சிறுகதையின் தேற்றமும் வளாச்சியும், ஆகிய நூல்களிலும், பாரதியின் மகாகவித்துவச்சாதனை : தமிழ் இலக்கியப் பரப்பில் பாரதி பெறும் முக்கியத்துவம் பற்றிய ஒருகுறிப்பு (இக்கட்டுரை பார்வைக்குக் கிடைக்கவில்லை) என்ற கட்டுரையிலும் பேராசிரியர் பாரதி பற்றிய தமது திறனாய்வுக் குறிப்புக்களைப் பதிவு செய்துள்ளார். இந்தப் படைப்புகளின் பின்னணியில் பாரதியைப்பற்றி அறிதல் பயனுள்ளதாகும்.
இன்றைய தமிழ் இலக்கியத்தில் பாரதியின் தாக்கம் வலுவானது என்பதில் ஐயமில்லை. பாரதி பற்றி எழுதியுள்ள பலரும் இதனைக் குறிக்கத்தவற வில்லை. பாரதி தமிழ் இலக்கியப் பரப்பை ஓரளவு அளவிட்டிருந்தான். அரசியல் செயற்பாடுகளையும் அறிந்திருந்ததோடு ஒரு காலகட்டம் வரை அதில் பங்கேற்கவும் செய்தான். தமிழ்ச்சமுதாயம், இந்திய சமுதாயம் பற்றியும் தெரிந்திருந்தான். எல்லாவற்றிற்கும் மேலாக, உலகப்போக்குக் குறித்தும் அறிந்திருந்தான். இந்தப் பன்முக நோக்கும் பலதுறை அறிவும் அவனது ஏற்ற இறக்கங்களுக்கு காரணமாயின. சிட்டுக்குருவி யாய்ப் பறந்து திரிந்த அவன். இறுதிக்காலத்தில் கூண்டுக்கிளியாய் மாறும் நிலையும் ஏற்பட்டது. ஒரு புரட்சியாளராக அறியப்பட்ட அரவிந்தர் பின்னர் ஒரு அன்மீகக் குருவாக ஒடுங்கிப் போனதை இங்கு நாம் ஒப்பிட்டுக் காணலாம். பாரதி - அரவிந்தர் நட்பு பாரதியின் பிற்கால வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்பதே பாரதியியலாளரின் கணிப்பு. முப்பது கோடி சனங்களைக்கொண்ட பாரத சமுதாயத் திற்குப் பொதுவுடமை காண விழைந்த பாரதி,
--( வைகாசி , ஆனி : 2007 )

Page 25
அந்தத் திசை வழியே மேலும் செல்ல இயல வில்லை. காரணம், அவன் ‘தன் பிற்காலத்தில் முழுமையான் ஏகாதிபத்திய எதிர்ப்பு - நிலவு டைமை எதிர்ப்புக் கண்ணோட்டம் கொண்டிருக்க வில்லை’ என்பதுதான் (கேசவன் 1987 : 187-88).
பாரதி பற்றிய ஆய்வு தமிழில் பெருகி வருகிறது. 1980 வரை பாரதி பற்றி வெளியான நூல்கள் 370. இவற்றுள் 180 நூல்கள் பாரதிபற்றிய ஆய்வு நூல்கள். 162 பதிப்பகங்கள் இந்தவெளியீடுகளில் பங்கு கொண்டிருக்கின்றன. 1980 - 2000 வரை உள்ள காலகட்டத்தில் மேலும் பலநூல்கள் வெளியாகியுள்ளன. தற்காலத் தமிழ் க் கவிஞர்களில் இந்த அளவுக்கு விரிவாக எழுதப்பட்ட கவிஞர் யாருமில்லை எனலாம். பல்கலைக்கழக ஆய்வுப்பட்டங்களுக்கான ஆய்வேடுகளில் கணிசமான அளவு பாரதி பற்றியதாகும். இதற்கெல்லாம் காரணம், நாம் மேலே கூறியது போல இவனது தாக்கமும் செல்வாக்கும் தான்.
பாரதி கவிஞனாக மட்டுமில்லாது, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, வசனகவிதை, இதழியல் துறைகளிலும் ஈடுபட்டு, தமிழ் இலக்கியத்திற்குத் தனது பங்களிப்பினைத் தந்துள்ளான். பாரதியின் சிறுகதை முயற்சி பற்றிச் சிவத்தம்பி கூறுவது:
“சுப்பிரமணியபாரதியார் பல சிறிய கதைகளை எழுதியுள்ளார். ஆனால், அவற்றைச் சிறுகதைகள என்று கூறிவிடமுடியாது. சிறுகதை வளர்ச்சிக்கு அவர் ஆற்றியுள்ள சிறந்த சேவை தாகூர் கதைகள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த் தமையேயாகும். மொழிபெயர்க்கப்பட்டுள்ள கதைகளை வாசிக்கும் பொழுது சிறுகதைக்குரிய “உணர்வுக்கவிதாநிலை’ நன்கு புலப்படுகிறது. மொழிபெயர்ப்பில் தமது உரைநடையால் எம்மைக் கவரும் பாரதியார், தாம் எழுதிய கதைகளை அந்த உருவ அமைதியுடன் எழுதாமற்போனது துரதிட்டமே. பாரதியார் எழுதிய சிறிய கதைகள் சம்பவங்களை உள்ளவாறே குறிப்பனவாக இருக்கின்றனவேயன்றிச் சம்பவங்களின் உணர்வு நிலையைக் காட்டுவனவாக இல்லை. மேலும் அவர் எழுதியுள்ள கதைகள் ‘கட்டுக்கதைகள்’
ஒலை 44 , 45)

என்று வகுக்கப்படத் தக்க முறையிலமைந்தனவே” (சிவத்தம்பி : 1967 - 19). மேலும் பாரதியின் உரைநடையை விடவும் அவரது கவிதையே சிறப்பானதாகும் எனவும் குறிப்பிடுகிறார்.
பாரதியின் கவிதை ஆற்றலைப் பலரும் ஆய்வு செய்து சீரிய கருத்துக்களை வெளிப்படுத்தி யுள்ளனர். ஆயினும், அவனது கவிதை ஆற்றலைக் குறித்து ஐயம் கொண்டவர்களும் உண்டு. இதுதான் , “பாரதி மகாகவியா?’ என்ற விவாதத்தைக் கிளப்பியது. இந்த விவாதத்தை மையப் பொருளாகக்கொண்டு 1921 - 1949 க்கு இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் நிலவிய சமூக அரசியல் சூழல்களையும் அவற்றின் பாதிப்புக்குள்ளான தமிழ் இலக்கியச் சூழலையும் சமூக வரலாற்றாய்வு மற்றும் இலக்கிய வரலாற் றாய்வு அடிப்படையில், பாரதி - மறைவு முதல் மகாகவி வரை என்ற நூல் தக்க ஆதாரங்களுடன் தனது கருத்துக்களை முன்வைக்கிறது. ஒரு கவிஞனுக்கு “மகாகவி’ என்று பட்டம் கொடுத்து பெருமைப்படுத்துவதல்ல இங்குள்ள சிக்கல். அந்தப்பட்டம் பெறுதற்குத் தகுதியுள்ள ஒரு கவிஞன் வாழ்ந்த காலச்சூழலில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளும் அவற்றின் சாதகபாதகங்களும் தான் இங்கு சிக்கலாக உள்ளன. கல்கி குழுவினரும் வ.ரா. குழுவினரும் எதிரெதிர் அணியில் நின்று இந்த விமர்சனத்தில் ஈடுபட்டு வந்தனர். அதில் வ.ரா.குழுவினர் வெற்றியும் அடைந்தனர். தேசிய எழுச்சிக்குப் பாரதி பாடல்கள் பயன்பட்டன. கல்கியே கூட, பாரதி பாடல்களைப் பயன்படுத்தி ஒரு கட்டத்தில் அவனை “மகாகவி’ என்றே அழைக்கிறார். ஆனால் டி.கே.சி, ராஜாஜி ஆகியோருடன் உறவு ஏற்பட்டதும், அவர்களது இலக்கிய, அரசியல் கோட்பாடுகளுக்கு உட்பட்ட நிலையில், பாரதியை ‘மகாகவி’ என ஏற்கக் கல்கி மறுத்துவிடுகிறார். பின்னர் பாரதிக்குத் தமிழகத்தில் செல்வாக்கு ஏற்படத் தொடங்கியதும் பாரதி ஆதரவாளராக உள்ள சத்தியமூர்த்திக்கு எதிரணியில் உள்ள ராஜாஜி தனக்கு ஆதரவு வேண்டி, பாரதியை பாராட்டவும் தொடங்குகிறார். பாரதிக்கான மணிமண்டபமும் இவர்களால் 11.10.1947 இல் திறந்து வைக்கப்படுகிறது. சந்தர்ப்பச் சூழலுக்
-Ο வைகாசி , ஆனி : 2007

Page 26
கேற்ப சாணக்கியர் ராஜாஜியும் ரசனை எழுத்தாளர் கல்கியும் எவ்வாறு செயல்ப்பட்டனர் என்பதை மிகவிரிவாக இந்த நூல் எடுத்துக் காட்டுகிறது. அதேபோல், பாரதியின் இலக்கியச் செழுமையை நிலைநாட்டி வெற்றி காண்பதில் வ.ரா.குழுவினரும் ‘மணிக்கொடி’ இதழும் செயல்பட்ட தன்மையையும் இதில் காணலாம்.
தேசியஉணர்வு, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய வற்றோடு அப்பொழுதுதான் தமிழகத்தில் தலை காட்டிக்கொண்டிருந்த சோசலிசக் கொள்கை களையும் பாரதி எவ்வாறு எதிர்கொண்டான், அவனது எதிர்கொள்ளலை ஆதரித்தும் பாராட்டியும் ஜிவா செயலாற்றி, பாரதிக்கு சிறப்பு சேர்த்ததையும் இந்த நூல் சிறப்பாக எடுத்துச் சொல்கிறது. 1940 தொடக்கத்தில் பாரதியின் பாடல்களை நாட்டுடமையாக்க வேண்டும் என்கிற குரல் முதன்முதலாக எழுகிறது. (பக்.199) அதைத் தொடர்ந்து பல முயற்சிகள். அவற்றின் விளைவாக 12.03.1949 இல் பாரதி படைப்புகள் நாட்டுடமையாக்கப்படுகின்றன (201). பாரதி வாழ்ந்த காலத்தில் அவன் சந்தித்த எதிர்ப்புக்கள் ஒருவகையானது என்றால், அவன் மறைவுக்குப் பின் அவன் மகாகவி மதிப்படையும் வரை அவனைக்குறித்து எழுந்த ஏற்புரைகளும், மறுப்புரைகளும் அவற்றின் விளைவுகளும் அன்றைய தமிழ் இலக்கியப்போக்கைத் தெளி வாகக் காட்டுகின்றன எனலாம். எந்தவொரு தமிழ்க்கவிஞனும் சந்தித்திராத நிகழ்ச்சிகளைப் பாரதி சந்திக்க நேர்ந்தது - மறைவுக்குப் பின்னும் பாரதியின் இலக்கியப் படைப்பு, அதற்குப்பின்புலமாக இருந்த சமூக அரசியல் பொருளாதாரச்சூழல், பாரதிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலமுனைகளில் இருந்தும் எழுந்த குரல்களின் அழுத்தம், அழுத்தமின்மை பற்றி இந்நூல் விரிவாகப் பேசுகிறது. தமிழுக்கு வளம் சேர்த்த பாரதியைப் பண்டிதர் உலகம் கண்டு கொள்ளாத இரங்கத்தக்க நிலையையும் இந்த நூல் வழி அறிகிறோம். “பொதியமலைப் பிறந்த மொழிவாழ்வறியும் காலமெல்லாம் புலவோர் வாயில் துதியறிவாய், அவர் நெஞ்சின் வாழ்த் தறிவாய், இறப்பின்றித் துலங்குவாயே’ என்று பாரதியால் பாராட்டப்பெற்ற உ.வே.சாமிநாதய்யர்
(ஓலை 44 , 45 )

பாரதியை ஏற்றதாகத் தெரியவில்லை. ஆயினும் 1935 இல் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பாரதி படத்தை ராஜாஜி திறந்து வைக்க அதில் பங்கேற்ற உ.வே.சா “தமிழ் பண்டிதனென்றால் மிகக் கேவலமாக நடத்தி வந்த காலம் மாறி, தமிழ்க்கவிக்குப் படபிரதிஷ்டை செய்யும் காலம் வந்ததைக்கண்டு நான் உண்மையில் மகிழ்ச்சிய டைறேன்’ என்று குறிப்பிடுகிறார்(பக்.133). இதுவும் பாரதியை பண்டிதனாகக் கருதும் குரலோசை யாகவே உள்ளது. இந்தக் குறிப்பு பாரதி மறைந்து 14 ஆண்டுகளுக்குப் பிந்திய குறிப்பு. ஆனால், பாரதியோ உ.வே.சாவின் புலமையை இனங்கண்டு 1906 இலேயே பாராட்டிப் பாடுகிறான். பாரதியின் ஆங்கிலேய எதிர்ப்பும் புரட்சிகரக் கருத்துக்களும் உ.வே.சாவின் ஆதரவைப்பெற இடம் தரவில்லை போலும். தமிழ்ப்புலமை உலகில் பாரதியின் நண்பர் சோமசுந்தரபாரதி, மு.இராகவய்யங்கர், ஏ.வி.சுப்ரமணிய அய்யர், விபுலானந்தர், வையாபுரிப்பிள்ளை ஆகியோர் பாரதியைப் பாராட்டியுள்ளனர். அதிலும் குறிப்பாக, வையாபுரிப்பிள்ளை. இவர் 1918 இல் பாரதியைத் திருவனந்தபுரத்தில் சந்திக்கிறார். பாரதியாரைப் பாடச் சொல்லிக்கேட்டு, பாட்டில் தன்னை மறக்கிறார். அவர் எழுதுவது:
‘பின்னர் ‘ஊழிக்கூத்துப் பாடலைப்பாடும்படி வேண்டினேன். இப்பொழுது நீண்ட நேரம் அவர் கண்கள் மூடியிருந்தன. முகத்திலே ஒரு துடிதுடிப்பு. சரீரம் முழுவதும் ஒரு வேகம். ‘வெடிபடும் அண்டத்திடி பல தாளம் போட' என்ற சொற்கள் கம்பீரத்தோடு வெளிவந்தன. ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு அடியும் அவரது ஆத்ம சக்தியினின்று பொருளும் ஆற்றலும் பெற்று எங்கள் மனக்கண் முன் கூத்தாடின. உலகம் தகர்வது ஊழி முடிவது. ஒன்றென்றும் கண்முன்னே நிகழ்வது பேலவே இருந்தது. பாட்டின் பொருளோடு ஒன்றுபட்டு லயித்து அவர் பாடும்போது, அவர் கண்கள் சுழன்றன. கருவிழிகள் மேலேறி மறையத் தொடங்கின. 'ஊழிக்கூத்தில் அகப்பட்டுவிட்டோம்; என்ற பீதி எங்களுக்கு உண்டாயிற்று. சங்கீதத்தின் ஆற்றலை நான் அன்று உணர்ந்தது போல் ஒரு நாளும் உணர்ந்ததில்லை” (வையாபுரிப்பிள்ளை, 1995 : 213). பாரதியாரைக் கம்பருக்கு
-O வைகாசி , ஆனி : 2007

Page 27
அடுத்தபடியிலுள்ள பெருங்கவிஞர் என்றும், இவருக்கு உருவச்சிலை அமைத்துப் போற்ற வேண்டும் என்றும். இவரது பாடல்களைப் பொதுவுடமையாக்கவேண்டும் என்றும் குறிப்பிடு கிறார். பாரதிபற்றிய வையாபுரிப்பிள்ளையின் கட்டுரைகள் பாரதியியலில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய படைப்புகளாகும். பாரதியின் தேசிய பாடல்களை நவீன கீதை' என்றும் இன்றைய தமிழ் இலக்கியகாலத்தைப் “பாரதியுகம்’ என்றும் அழைக்கவேண்டும் என்பார்.
பாரதியின் கவிதைச் சிறப்பு குறித்து சிவத்தம்பி உள்ளிட்ட பலரும் குறிப்பிட்டுள்ளனர் அவனும் தனது பாட்டுத்திறத்தால் இந்த வையத்தைக் காத்திட வேண்டும் என்பான். அவனது பாட்டு த்திறம் சிறந்தோங்கக் காரணம், அவனது கருத்துவளமும் சொல்வளமும் தான். தன்கால நிகழ்வுகளைப் புரிந்து கொள்வதோடு எதிர் காலம் பற்றிய திட்பமான கருத்துக்களையும் தெரிவிப்பவன்தான் மகாகவியாக முடியும் என்பர். அவன் தொலைநோக்குப் பார்வையுடை யவன். பாரதி பல பொருள்களைப் பற்றியும் பாடியுள்ளான், எழுதியுள்ளான். அவன் தனது கருத்துக்களைக் கற்றவரும் கல்லாதவரும் மனங்கொள்ளும் வண்ணம் மொழியைக் கையா ண்டான். இலக்கியத்தமிழ் / எழுத்துத்தமிழ் / செந்தமிழ் / ஆகியவற்றைவிட வழக்குத்தமிழ் / பேச்சுத்தமிழ் / கொடுந்தமிழுக்கு முன்னுரிமை தந்தான்.
“எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினை உடைய காவிய மொன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான்” என்றும், “கூடியவரை பேசுவது போல் எழுதுவது தான் உத்தமமென்பது என்னுடைய கட்சி’ என்றும் கூறுவான்.
சொல் புதிதாய் சுவைபுதிதாய், பொருள் புதிதாய், வளம் புதிதாய் நவகவிதை படைத்த பாரதியிடம் தமிழ் தன் ஆற்றலை நன்கு வெளிப்படுத்தியது எனலாம். மொழியின் வளர்ச்சி
(ஓலை 44 , 45 )

அதனைப் பயன்படுத்துவோரின் ஆற்றலை ஒட்டியே அமையும். அந்த வரிசையில் பாரதி தமிழை நன்கு கையாண்டு அதன் செழுமையையும் வளமையையும் கவிதையிலும் உரைநடையிலும் வெளிப்படுத்தினான். 267 தலைப்புகளில் 2576 பாடல்கள் (பத்திகள்) பாடியவன். இப்பாடல்களை ஆண்டு வாரியாகத் தொகுத்து , தமிழ்ப்பல்கலைக் கழகம் பாரதி பாடல்கள் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. இவற்றை ஒருசேர வைத்துப் பார்க்கும்போது தமிழின் வளர்ச்சிப்போக்கை காணமுடியும். “பாரதியார் தமிழ் தற்காலத்தமிழ்: தினம்தோறும் நாம் பேசும் தமிழ் உயிராற்றல் நிரம்பியிருக்கும் தமிழ்’ என்பது வையாபுரிப் பிள்ளையின் கருத்து. (1995 : 243) சில பாடல்களில் பழந்தமிழ் இருப்பினும் (எ.டு.யாண்டு, திளைத்தேம், தமியன், அறிகிலேன், நீந்துவை) பொதுவாக, அவன் வழக்குத் தமிழை. எளிய தமிழைக் கையாள்கிறான். அவனது சொல்லாக்கம, சொற்கோவை வியப்படையச் செய்வன. புரட்சி, விடுதலை, பொதுவுடமை, ஒத்துழையாமை நவீனங்கள். நிந்தனை, வந்தனை, மதுரகலைகள் எனப்பலபுதிய வழக்குகளை அறிமுகப்படுத்துகிறான். “பொங்கி வரும் பெரும் நிலவு’, ‘புன்னகையின் புது நிலவு' , 'காண்பார் நினைவழிக்கும் விழி’, 'விழிக்கோணம்’, ‘நறுமலர் வீசிய கன்னி’, ‘நீரோடும் மேனி’, ‘நெருப்போடும் கண்கள்’, ‘விழியில்மிதந்த கவிதை’, ‘நிலவூறித்ததும்பும்விழிகள்’, ‘புதுமின் போல்வார்த்தை’, ‘புல்லைநகையுறுத்தி - இப்படிப் பல தொகைகள், தொடர்கள். தனது பத்திரிகைத் தமிழில் “வெள்ளைமூர்த்திகள்’, கோட்டைக்குள்ளே குத்துவெட்டு’, ‘பரங்கிப்பத்திரிகை’, ‘கூனிப் பத்திரிகை’ என நையாண்டியுடன் எழுதுவதும் அவன் வழக்கம். சகுனி , பாஞ்சாலி ஆகியோ ரைக்குறிக்க அவன் தரும் அடைமொழிகள் அவனது தமிழ் ஆளுமைக்கு நல்ல சான்று. ‘புதுநடைச்சகுனி’, கள்ளச் சகுகுனி’, ‘அருளற்ற சகுனி’, திருகுநெஞ்சச் சகுனி , பேரழகு கொண்ட கொண்டபெருந்தவத்து நாயகி
அவனது கதாபாத்திரங்களின் இயல்பை அறிய இவ்வகை அடைமொழிகள் பெரிதும் பயன்பட்டன. சக்திவாசனாகிய அவன் ‘சக்தி' என்ற சொல்லைத் தனது படைப்புக்களில் 400 இடங்களுக்கு மேல் பயன்படுத்தியுள்ளான். எத்தனை எத்தனை
-C வைகாசி , ஆனி 2007 )

Page 28
பொருட்கள்! பாரதியின் மொழியாட்சி குறித்து பாரதிமொழி நடை (வ.ஜெயா) பாரதியின் சொல்லாட்சி (பாரதிப்பித்தன்), பாரதியின் மொழித்திறன் (இராம.சுந்தரம்), பாரதியின் மொழி: கருத்தியலும் மொழியாட்சியும் (அ.பாஸ்கர பாண்டியன்) முதலியன வெளி வந்துள்ளன.
சொந்தப்படைப்புக்களில் கையாண்டமொழி நடையையே தன் மொழிபெயர்ப்புக்களிலும் பயன்படுத்தியுள்ளான். மொழிபெயர்ப்பு எளிமையாக, தெளிவாக இருக்கவேண்டும். என்ற கருத்துடைய பாரதி , தனது மொழிபெயர்ப்பை அனைவருக்கும் புரியும் வண்ணம் வெளிப்படுத் தினான். இவனது மொழிபெயர்ப்புத் திறன் குறித்து பாரதியின் மொழிபெயர்ப்புக்கள் என்ற எனது கட்டுரையில் விளக்கியுள்ளேன். (கி.கருணாகரன் , 1986 : 85-100). கம்பனுக்குப் பிறகு தமிழை ஏவல் கொண்டவன் பாரதிதான். இந்தத் திறமை இருந்ததால் தான் தன் கருத்துக்களை ஆயிரக்கணக்கான மக்கள் புரிந்து கொள்ளும்படி இவனால் சொல்ல முடிந்தது. ‘உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே இனிமையுண்டாம்’ என்ற இலக்கணத்துக்கு இலக்கியமாகத் திகழ்ந்ததால்தான் இவனால் மகாகவியாக மலர முடிந்தது இந்த மகாகவியின் சிறப்பை அறிந்ததாலேயே இவனை மேலைநாட்டுக் கவிஞர்களோடும், கீழைநாட்டுக் கவிஞர்க ளோடும். ஒப்பிட்டு இவனது தனித்தன்மையை எடுத்துரைத்தனர். மலையாளக் கவிஞர் வள்ளத்தோளுடன் பாரதியை ஒப்பிட்ட சிற்பி பாலசுப்ரமணியன் இருவருக்கும் உள்ள வேறுபாட்டைக்காட்டுவார். பாரதி நாராயண குருவின் சமூக நீதிப் போராட்டத்தை ஆதரித்தான். உடன்கட்டை ஏறும் வழக்கத்தைக் கண்டித்தான். விதவை மறுமணத்தை ஆதரித்தும் குழந்தை மணத்தை எதிர்த்தும் எழுதினான். அறிவியல் கல்வி வளர வேண்டும் என்றான். வள்ளத்தோள் இவற்றில் எதிர்மாறான கருத்து கொண்டிருந்தார். (1991 : 279) இவனது கவிதை யாற்றலைப் புரிந்து கொண்ட பிற நாட்டவரும் தத்தம் மொழிகளில் மொழிபெயர்த்துக் கொண்டனர்.
(ஓலை 44 , 45 )

தற்காலக் தமிழக்கவிதைக் குப் பாரதியே வழிகாட்டியாக, புதுப்பாதை இட்டவனாகத் திகழ்கிறான். இவன் இல்லையேல் இக்காலத் தமிழ்க் கவிதை இவ்வாறு சிறப்படைந்திருக்காது’ என்பது கமில்சிவலபிலின் கருத்து.
பாரதியின் சமூக நோக்குப் பற்றிய மணியரசன், வளவன் நூலில் காணும் கருத்துக்களை ஏற்று, சிவத்தம்பி அளித்துள்ள பின்னுரையில் பாரதியின் மதக்கோட்பாடுகள், அவனது மார்க்சியக் பரிச்சியக்குறைவு பற்றிக்குறிப்பிடுவார். சாதி ஒற்றுமை பற்றிக் குறிப்பிட்ட அளவு சாதி ஒழிப்புப் பற்றி பாரதி குறிப்பிடவில்லை என்பதையும் இந்நூல் சுட்டிக்காட்டும்.
பாரதி இந்து மதக்கோட்பாடுகளை முற்று முழுதாக உதறித்தள்ளியவன் எனல் முடியாது. பகவத்கீதை மொழி பெயர்ப்பில் அவனது மதம், தத்தவம் பற்றிய சில கருத்துக்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. புத்தமதத்தின் மீது கண்டனக்கணைகள் தொடுக்கிறான். “சரணா கதியால் - கடவுளிடம் தீராத, மாறாத பக்தியால் - யோகத்தை எய்துவீர்கள். எல்லா ஜீவன்க ளையும் சமமாகக் கருதக்கடவீர்கள். அதனால் விடுதலையடைவீர்கள். (பகவத்கீதை - முன்னரை). இது ஒரு நிலை. மதத்தின் பேரால் நடைபெறும் மூட நம்பிக்கைகளை, மூடபக்தியைப் பாரதி விரும்பவில்லை என்பது மற்றொரு நிலை. 'ஆயிரந தெய்வங்கள் உண்டெனத் தேடி அலையும் அறிவிலிகாள்’ என்பான். மதப்போராட்டங்கள் கூடாது என்பான். அல்லா, ஏசு, கண்ணன் எல்லோரையும் ஒன்றெனக்கண்டு சமயசமரசம் காணவும் முயல்வான். பகவத்கீதையை மொழி பெயர்த்தவன் பைபிளையும் மொழிபெயர்க்க எண்ணினான். இவையெல்லாம் அவன் வாழ்ந்த காலச் சூழலின் எதிரொலிகளாகும்.
மதச்சடங்குகளை ஏற்காதவன் என்றாலும், மதமறுப்பு என்பது அவனிடம் இல்லை. ஆனால், மதத்தின் பேரால் சமூகத்தில் நடக்கும் சில அநீதிகளைக் கண்டித்தான். குறிப்பாக கற்பின் பெயரால் பெண்களை அடிமைப்படுத்துதல். “இந்தியாவில் அழித்தொழிக்க வேண்டிய
-O வைகாசி , ஆனி : 2007 D.

Page 29
சமுதாயக் கொடுமைகளைப் பட்டியல் போடும் போதெல்லாம் முலாவதாகச் சாதிக்கொடுமை களையும் இரண்டாவதாகப் பெண் அடிமைத் தனத்தையும் சுட்டிக்காட்டுவது பாரதியின் வழக்கம்” (மணியரசன் 99) கற்பு நிலை என்று சொல்ல வந்தார் அதை இருகட்சிக் கும் பொதுவில் வைப்போம்’ என்பான். “ருதுவான பிறகு, பெண்ணுடைய இஷடப்படி கல்யாணம் செய்யவேண்டும். புருஷன் கொடுமையைச் சகிக்க முடியாமலிருந்தால், ஸ்திரி சட்டப்படி அவனை த்யாஜம் செய்துவிடச் சட்டமும் இடம் கொடுக்கவேண்டும். ஊர்க்காரரும் தூஷணை செய்யக்கூடாது (103) இந்தப்பொருள் பற்றி இன்றும் நாம் சமூகரீதியில் திட்டவட்டமான ஒரு நிலைப்பாடு எடுக்கத் தயங்குகிறோம். பாரதியே 70 ஆண்டுகட்கு முன்பே இதுபற்றி அழுத்தமாக எண்ணி எழுதியுள்ளான் என்பது, அவனது தொலைநோக்குப் பார்வைக்கும் பெண்விடுதலை குறித்த ஆர்வத்திற்கும் சான்றுகளாகும். இதன் தொடர்பாக, பெண்களுக்கு கல்வி தேவை என்பதை வலியுறுத்துவான். “தேசியக் கல்வியின் தமிழ்நாட்டுக் கிளையென ஒரு கிளை ஏற்பட வேண்டும். இதன் ஆட்சி மண்டலத்தில் பாதித் தொகைக்கு குறையாமல் தமிழ்ஸ் தீரிகள் கலந்திருக்கவேண்டும்.” (109) பெண்களுக்கு அனைத்துத் துறையிலும் 33% வேண்டும் என நாம் போராடும் காலம் இது. பாரதியோ 50% வேண்டும் என்கிறான். இந்தப் பெண்ணடிமைத் தனத்தின் வேர் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பே என்பதைப் பாரதி எந்த அளவில் புரிந்து கொண்டான். என்பதில் ஐயம் ஏற்படலாம். என்றாலும், அவனது இந்தக்கருத்து அவன் காலத்தில் ஒரு புரட்சிகரமான கருத்தாகவே அமைந்திருக்கவேண்டும். அவன் வாழ்ந்த காலத்தில் பாரதிக்கு உரிய ஏற்பு கிடைக்காத தற்குக் காரணம் இந்தக் கருத்தாக்கத்தை வலுவாகப் பிடித்திருந்த சமுதாயமே ஆகும்.
கல்வி எனவரும் போது பாரதி அதில் ஒரு தெளிவானக் கருத்தைக் கொண்டிருந்தான். தமிழ் பயிற்று மொழியாக இருக்கவேண்டும்; அறிவியல் கல்வி பெருக வேண்டும்; இல்லாத புது நூல்கள் இயற்றப்படவேண்டும். அல்லது
(ஒலை 44 45)

மொழிபெயர்க்கப்பட வேண்டும். கிராமந்தோறும் பள்ளிக்கூடங்கள் வேண்டும் என்று வலியுறுத்து வான்.
“தமிழ்நாட்டில் தேசியக்கல்வி என்பதாகத் தொடங்கி அதில் தமிழ் பாஷையை பிரதானமாக நாட்டாமல் பெரும்பான்மைக்கல்வி இங்கிலீஷ் மூலமாகவும் தமிழ் ஒருவித உபபாஷையாகவும் ஏற்படுத்தினால் அது “தேசியம்’ என்ற பதத்தின் பொருளுக்கு முழுவதும் விரோதமாக முடியுமென்பதில் ஐய மில்லை.”
“நமது பள்ளிக் கூடங்களிலும் கல்விச்சாலை களிலும் இங்கிலீஷ் பாஷையை இரண்டாவது பாஷையாக சொல்லிக்கொடுப்பதில் ஆட்சேபணை இல்லைதான். எந்தப்பகுத்தறிவுள்ள இங்கிலீஷ் காரனும் இந்தச் சலுகையோடு திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியது தான் என்று நினைக்கிறேன்.” (115-116).
தமிழ்வழிக்கல்வி சிறப்படைய அறிஞர்கள் கூடி அறிவியற் பதங்களுக்குச் சரியான தமிழ்ச் சொற்கள் காணவேண்டும் என்பான். இன்றும் கூட தமிழ்வழிக்கல்வி என்பதை எதிர்ப்போர், கலைச் சொற்கள் இல்லாததை ஒரு குறையாகக்காட்டுவர். ஆனால் இது பொருந்தாக்கூற்றாகும். பாரதி காலத்திலும் அதற்கு முன்பும் கூட, பல அறிவியல் துறைசார்ந்த கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன. இலங்கையில் டாக்டர் சாமுவேல் ஃபிஷ்கிறீன் வேதியியல், மருத்துவம் தொடர்பான பல கலைச்சொற்களை உருவாக்கி, தமிழில் நூல்களை வெளியிட்டு, பல மாணவர் களைப் படிப்பித்தார். வேளாண்மை, தாவரஇயல் தொடர்பான பாடநூல்கள் தமிழகத்தில் வெளிவந்தன. பாரதி இந்தச் சிக்கலைப் புரிந்து கொண்டிருந்ததால், அதற்குத் தீர்வும் சொன்னான். கலைச்சொல் பற்றி அவன் தந்த விளக்கம் இன்றும் ஏற்புடையதாகவே உள்ளது. அதனினும் புதிதாக வேறு எதையும் யாரும் கூறிவிடவில்லை.
“பரிபாஷை, ஸங்கேதம், குழுவுக்குறி என்ற மூன்று சொல்லும் ஒரே பொருளைப் பலவகையிலே குறிப்பன. அதாவது ஒருகூட்டத்தார் அல்லது ஒரு
-C வைகாசி , ஆனி : 2007 )

Page 30
சாஸ்திரக்காரர் விசேஷார்த்தம் தோன்றும்படி உடன்பட்டு வழங்கும் பொது வழக்கமில்லாத சொல்” என்பது அவன் தரும் விளக்கம் (பாரதி: 1977 : 268-269). இதற்கு மேற்கொள்ளவேண்டிய உத்திகள் பற்றியும் தெரிவிப்பான் இந்தியப் பொதுமைக்கும் சமஸ்கிருதப் பதங்களை ஏற்காலாம் என்பது அவன் கருத்து. இதில் நமக்குக் கருத்து வேறுபாடு இருப்பினும், பாரதி தமிழில் கலைச்சொல்லாக்கம் குறித்து ஆர்வம் காட்டினான் என்பதில் ஐயம் கொள்ளத்தேவை யில்லை. இயற்கை நூல், ரஸாயனம், சரீர சாஸ்திரம், ஐந்துசாஸ்த்ரம், செடிநூல் ஆகியன முறையே "பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, அனாடமி, ஜீவாலஜி, பாட்டனி ஆகியவற்றைக்குறிக்க அவன் பயன்படுத்திய கலைச்சொற்கள். இன்று இவை முறையே இயற்பியல், வேதியியல், உடற்கூறியல், விலங்கியல், தாவரவியல் என தரப்படுத்தப்பட்டு வழங்கி வருகின்றன. தமிழில் உருவாக்கப்பட வேண்டிய சொற்கள், கடன் வாங்கத் தக்க சொற்கள் பற்றியும் ஒரு குறிப்பு தருவான்.
பிறமொழிச்சொற்களை கடன் வாங்கும்போது, அவற்றைத் தமிழில் எழுத்துப் பெயர்ப்பு (transliteration) செய்கையில் சிக்கல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அதை நீக்கவும் பாரதி அற்புதமான - அறிவியல் வழிப்பட்ட தீர்ப்பையும் வழங்குவான். மரபு வழித் தமிழ்ப் புலவர்களுக்கு இது ஏற்புடையதல்ல என்றாலும் மொழிப் பயன்பாடு என வரும்போது, இதை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை. பாரதியின் இந்த எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய கருத்தில் அவனது தோழர் வ.உ.சிக்கு கருத்து வேறுபாடு உண்டு. அதை அவர் வெளிப்படுத்த அதற்குப் பாரதி சமாதானம் சொல்லுவதையும் காண முடிகிறது. கிரந்த எழுத்துக்களான ஜ, ஷ, ஸ, ஹ, கூடி ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பான். தமிழில் இல்லாத எழுத்துக்கு ஈடாகப் புதிய எழுத்துக்களை உண்டாக்க வேண்டாம், சில குறியீடுகளைப் பயன்படுத்தினால் போதும் என்பான்.
“இங்கிலீஷ் அகூடிரத்தில் ப்ரெஞ்சு, அரபி, பார்ஸி, ஸமஸ்கிருதம் முதலிய பாஷைகளின்
(ஓலை 44 , 25

பதங்கள் சிலவற்றை எழுதுவதற்கு இங்கிலீஷ் அரிச்சுவடி இடங்கொடாததைக் கருதிச் சில புதிய குறிகள் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். எல்லா ஐரோப்பிய பாஷைகளுமே அந்நிய பாஷைகளி லுள்ள விசேஷ உச்சரிப்புகளுக்கு இணங்கும்படி சில தனிக்குறிகள் ஏற்பாடு செய்து வைத்துக் கொண்டிருக்கின்றன. நாமும் அப்படியே சில விசேஷக்குறிகள் ஏற்பாடு செய்துகொள்ளுதல் மிக அவசியமாகும்.
ஏற்கனவே நான் இந்தக் குறையை நீக்கும் பொருட்டாக மிகவும் சுலபமாக ஐந்து நிமிஷ ங்களில் யாரும் கற்றுக்கொள்ளக் கூடிய சில குறிகள் தயார் செய்துள்ளேன். இனால் இப்புதிய வழியைத் தமிழ்நாட்டுப் பத்திராதிபர்களும் பிறரும் அறியும்படி துண்டுப்பத்திரிகைகள் போட்டு வேலை செய்வதற்கு வேண்டிய செளகர்யங்கள் எனக்கு இன்னும் சில மாதங்கள் கழித்த பிறகுதான் ஏற்படும். எனது புதிய முறையை இப்போதே அறிந்து கொள்ள விரும்புவோர். கிழ்க்கண்ட என் விலாசத்திற்கு இரண்டனா தபால் முத்திரை வைத்து அனுப்பினால் அவர்களுக்கு இம்முறையை நல்ல கையெழுத்தில் தெளிவாக எழுதி அனுப்புகிறேன். (வெங்கடாசலபதி, 1994 - 125). பாரதி இதை ஞானபாநு இதழில் (ஜீலை 1915) வெளியிட்டுள்ளான். அவன் உருவா க்கிய புதிய எழுத்துக் குறியீடுகள் பற்றி இதுவரை தெரியவில்லை. எனினும் இந்த வழியில் முயன்று சில குறியீடுகளைத் தற்போது அறிமுகம் செய்துள்ளனர். (எ-டு) ; பேரியம் - Barium, GBJọu uLid - Radium (gTLD.35g5Jub, 1999 : 113)
பாரதியின் இந்த முயற்சி பற்றி அறியும் போது, மா.வளவன் கூறுவது போல நம்மனம் நெகிழ் கிறது (மணியரசன்.1982 : 118) வழக்கம் போல, நாம் நெகிழ்வதோடு நின்று விட்டோம், ஆக்கப் பூர்வமாகச் செயல்படத் தயங்குகிறோம். b, g, d முதலியவற்றுக்குப் புதிய எழுத்துக்களைக் காண்பதை விட பாரதி சொல்வது போலக் குறி யீடுகள் இட்டு எழுதுவது எளிமையாகும்.
சமுதாய வளர்ச்சி பொரளாதார வளர்ச்சியோடு தொடர்புடையதாகும். பாரதி இதையும் கவனத்தில் -C வைகாசி , ஆனி : 2007 )

Page 31
கொள்கிறான். சுதந்திரம் - சமத்துவம் சகோரத்துவம் பற்றிப்பேசும் பாரதி, லெனின் கோட்பாடுகள் பற்றியும், ருஷ்ய சமூக, பொரு ளாதார, அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும். எழுதுகிறான். `முப்பது கோடி சனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை’ எனப்புதிய பாரத சமுதாயம் பற்றியும் கனவு காண்கிறான். (1920 இல் எழுதப்பட்டது) புதிய ருஷ்யாவை வரவேற்று 1917இல் கவிதை படைத்தான். இவனது இந்த முற்போக்குச் சிந்தனை காரணமாக, தொ.மு.சி. இரகுநாதன் பாரதியை பொதுவுடமைக்காரனாகக் கண்டார். கைலாச பதியோ இவ்விதம் முத்தரை குத்துவதில் எவ்வித அடிப்படையும் இல்லை என்றார். பாரதி மகாகவியா இல்லையா என 1930-40 களில் நடைபெற்ற விவாதம் போல இந்திய விடுதலைக்குப் பிந்தைய காலகட்டத்தில் பாரதி சோசலிசவாதியா இல் லையா என்கிற கருத்துப்போர் நடந்தது. இதில் ஒரு விரிவான ஆயப் வை மேற்கொண்ட கோ.கே சவன் தமிழகத்தில் சோசலிசக் கருத்துக்களின் அறிமுகக்காலத்தில் வாழ்ந்த பெருமை பாரதிக்கு உண்டெனினும் இந்த கருத்துக்களை ஏற்ற பெருமை பாரதிக்கு கிடையாது என்பது உண்மையாகும். வரலாற்றின் திசை வழியை முன்னோக்கி நகர்த்திச் செல்லும் இத்தகைய கருத்துக்களை அறிந்தும் இவற்றை ஏற்காதது மட்டுமின்றி இவற்றைத் தம்மளவில் பாரதி மறுத்துரைத்ததும் வரலாற்றுண்மையாகும்.” (கேசவன். 1987 : 191-192) என்று கூறுவது கவனிக்கத்தக்கது.
பாரதி காலத்திலும், பாரதிக்குப் பின்னும் வாழ்ந்த பெரியார் ஈ.வே.ரா. - ருஷ்யா சென்று வந்து அங்கு நிலவும் நிகழ்வுகளை நேரில் பார்த்தும், மார்க்சிய - லெனினிய நூல்களை ஓரளவு படித்தும், தம் பொருளாதாரக் கருத் தோட்டங்களை வகுத்துக் கொண்ட பெரியார்
தொழிற்சங்கம், வேலைநிறுத்தம் பற்றியெ ல்லாம் எதிர்நிலை எடுத்தார். இந்த வசதிகள் ஏதும் இல்லாது ருஷ்யா புரட்சி அதன் பின்விளைவுகள் பற்றி மட்டும் ஓரளவு அறிந்தி ருந்த பாரதி இதில் தடுமாறியதில் வியப்பில்லை
ഉഞ്ഞ 44 45 -

என்பர் (மணியரசன் 95 - 96). இந்தத் தடுமாற்றம் காரணமாகவே, பாரதியை மார்க்சிய கண்ணோ ட்டத்தில் அணுகிய மணிரசன் “நாம் ஒருபோதும் பாரதியாரைப் பொதுவுடமைக் கவிஞர் என்று சொல்லவில்லை.” என்றார் (ஷை.77).
சோசலிச சித்தாந்தம் பாரதியை ஒரளவு பாதித்தத்து உண்மையே. காலப்போக்கில் காந்தியப் பொருளாதாரக் கோட்பாடு அவனைப் பாதித்து, தன்பக்கம் ஈர்த்திருக்கலாம். ஆயினும் பாரதி தன் இறுதிக்காலத்தில் இதில் அதிகம் கவனம் செலுத்தவில்லை என்று தோன்றுகிறது. பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டிருந்ததால் உலக நிகழ்ச்சிகளை எடுத்துக்கூறும் போது அங்குமிங்கு மாகத் தன் கருத்துக்களை அவன் தெரிவித்தி ருக்கக்கூடுமேயன்றி மார்க்சிய - லெனினிய சித்தாந்தப் பிடிப்பு அவனுக்கு ஏற்பட அந்தக் காலத்தில் வாய்ப்பில்லை என்பதே வரலாற்று நிகழ்வு. இந்தியாவில் - குறிப்பாக, தமிழகத்தில் பொதுவுடமை இயக்கம் அவன் காலத்தில் வேரூன்றி இருந்ததாகவும் சொல்ல முடியாது. பொதுவுடமை இயக்கம் வேரூன்றி, பல மாநிலங்களில் ஆட்சிக்கு வந்தபின்னும் கூட, இன்றைய நிலையில் பொதுவுடைமை இயக்கங் களில் ஏற்பட்டுள்ள தடுமாற்றம், பின்னடைவு மார்க்சிய சித்தாந்தத்தைப் புரிவதில், செயல் படுத்துவதில் ஏற்பட்டுள்ள குழப்பம் அதனால் ஏற்பட்டுள்ள சோகங்கள் - இவற்றை எண்ணிப் பார்க்கையில் பாரதியின் தடுமாற்றத்தைப் பரிவோடு பார்க்கவேண்டியதாகவே உள்ளது.
பாரதி சமூகத்தளத்திலும் அரசியல் - பொருளா தாரத் தளத்திலும் தன் காலத்திய சூழ்நிலைக்கு மேலும் ஒரு படி முன்னேறிச் சென்று பல கருத்து க்களை வெளிப்படுத்தியுள்ளமை அவனது அகன்று விரிந்த புலமையைக் காட்டுவதாகவே உள்ளது. அவனுக்குப் பின்வந்த எந்தக்கவிஞனும் இந்தளவு பரந்துபட்டதளங்களில் படைப்புகளைத் தரவில்லை. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இயக்கத்துள் நின்று கொண்டே அவர்கள் தம் கருத்துக்களை வெளிப்படுத்தக் காண்கிறோம். பாரதிபோன்ற ஒரு மகாகவியை அவனுக்குப் பின் இன்னும் நாம் பெறவில்லை. சிவத்தம்பி
--( வைகாசி , ஆனி : 2007 )

Page 32
சொல்வதுபோல இனத்தனித்துவம், தேசியம், சர்வதேசியம் ஆகிய மூன்றும் பாரதியிடம் இணைந்தது போல அவனுக்குப் பிந்தியவர் களிடம் இணையாததுதான் இந்தவெற்றிட த்துக்கு காரணமோ என்று ஐயுறலாம். குறுகிய காலமே வாழ்ந்த பாரதி செய்துள்ள சாதனை நம்மை மலைக்க வைக்கிறது. பாரதியின் குறை நிறைகளை எடையிட்டுப்பார்த்தால் நிறையே மிகுதி என்பது தெளிவு. ஸ்டாலினின் பெருமை சிறுமைகளை அளந்து பார்த்தால் பெருமையே அதிகம் என்னும் மாவோவின் வாக்கு இங்கு நினைவு கூரத்தக்கது. இந்தக் குறைகளைக் கூடத் தவிர்த்து அவன் இன்னும் மேலே செல்லவிடாது அவனது காலச்சூழல் அவனைக் கட்டிப் போட்டது போலும்! ஒரு படைப்பாளி வாழும் காலச்சூழல் அவனை எந்த அளவு பாதிக்கும் என்பதற்குப் பாரதி ஒரு நல்லசான்று. பேராசிரியர் சிவத்தம்பி இதை மனதில் கொண்டு எழுதுகிறார்
“தனது தளமாகக் கொண்டு இச்செல்வாக் குகளை உள்வாங்கிக்கொண்ட சுப்ரமணிய பாரதி மனிதனை முதன்மைப்படுத்தும் கவிதா சிந்தனையும் உலக நோக்கும் கொண்டவ
ஒலை 44 , 45

னாகவே விளங்கினான். முப்பத்தொன்பது வருடங்கள் மாத்திரமே வாழ்ந்த (1882-1921) அவனது வாழ்க்கை அவனது பூரண திறமை களையும் வெளிக்கொணர வாய்ப்பளிக்கவில்லை. இன்று பின்னோக்கிப் பார்த்து, நாம் எவ்வளவு திருப்திப்படுத்திக் கொண்டாலும் அக்காலத்து அரசியற் தலமையிலிருந்தோர் சிலர், அவனைப் பித்தனாகவே கருதியுள்ளனர் என்பது உண்மை. இதனால் அவனது மேதாவிலாசம் பெற வேண்டிய விகசிப்பினைப் பெறவில்லை. அத்துடன் அவனுடைய கொள்கைகளும் நன்கிணைந்த ஒரு தத்துவமாக முகிழ்க்க முடியவில்லை. இத்தகைய வரையறகளுக்கிடை யேயும் அவனது பாடல்களில் மானுடப் பண்பினை நன்கு காணமுடிகிறது’ (சிவத்தம்பி 1994 :169-170).
பாரதியியல் ஆய்வு மேலும் வளர்ச்சியடைய, பாரதி சொல்லடைவு / தொடரடைவு மற்றும் நூலடைவு தேவை.
முனைவர் இராமசுந்தரம்
முன்னாள் பேராசிரியர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்ஞாவுபூர்
-C வைகாசி , ஆனி : 2007 )

Page 33
அறிமுகம்
மொழியைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் வரலாற்றுக் காலம் தொட்டுத் தொடர் வதை நாம் காண்கிறோம். நம்முடைய பழைய இலக்கணங்கள் இதைப் பறைசாற்றுகின்றன. மொழியைப் புரிந்து கொள்ள வேண்டிய தேவை பல்வேறு சமூகக் காரணங்களால் எழுகிறது. முதல் நிலையில், பயன்பாட்டுத்தேவை முக்கிய பங்கு வகிக்கிறது. சான்றாக, நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்ட இலக்கியங்களை உடைய மொழி அதன் அமைப்பில் பல்வேறு மாற்றங்களை உட்கொண்டிருக்கும். ஆகையால் பல்வேறு கட்ட ங்களில் ஏற்பட்ட மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டால் ஒழிய அதனுடைய இலக்கியங் களைப் புரிந்து கொள்வதும் அவற்றைச் சுவைப் பதும் கடினமான காரியமாக அமைந்துவிடு கிறது. இலக்கியப் புரிதலும் சுவைப்பும் மொழி அமைப்பை விளங்கிக் கொள்ளவேண்டும் என்ற முயற்சியின் பின்புலமாக உள்ளன. ஆகையால் இலக்கணங்கள் இத்தகைய சமூகப் பின்னணியில் உருவெடுக்கின்றன.
ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தோடு தொடர்பு கொள்ளும்போது பல்வேறு மாற்றங்களுக்கு ஆளாகவேண்டி வருகிறது. முதலில் இரு சமூகங்களும் தொடர்பு கொள்வதில் மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு சமூகமோ இரு சமூகங்களோ இரு மொழிகளையும் அறிந்துகொள்ள வேண்டிய சமூக நிர்ப்பந்தத் திற்குத் தள்ளப்படுகின்றது. ஒரு சமூகத்தின் தாக்கம் மொழிவழியாக இன்னொரு சமூகத்தில் ஊடுருவுகிறது. மொழி, சமூக / பண்பாட்டுத் தளம், மதம் ஆகியவற்றில் இன்னொரு சமூகத்தின பாதிப்பு உண்டாகிறது. இத்தகைய சூழல்களில் சமூகத் தேவைகள் மாறுபடுகின்றன. இச்சமூகத் தேவைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் (ஓலை 44 , 45)

மொழி ஆய்வு
கி. அரங்கன்
இலக்கணங்கள் தங்கள் அமைப்பையும் பயன் பாட்டையும் மாற்றிக் கொள்கின்றன. இப்பின்ன ணியில் பார்க்கும் போது மொழிக்கும் சமூகத்தி ற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதை நாம் உணரலாம். நாம் மொழியைப் பல்வேறு கோணங்களில் நோக்கலாம். மொழியைச் சமூகத்தின் விளைபொருளாகவும் (Product of Society) மனித மனத்தின் விளைபொருளாகவும் (Product of Human Mind) 6T6)Top56f 6,6061T Gust(56TT356 b (product of History) g L-65u656 660)6T GLJT (156TT356Lib (Product of Biology) நோக்கலாம். இதில் எது சரியான அணுகுமுறை என்ற சர்ச்சை நம்முடைய நேரத்தை வீணடிப் பதற்கு இட்டுச் செல்லும்.
ஒவ்வொரு அணுகுமுறையும் மொழியின் இயல் பையும் அமைப்பையும் வெளிபடுத்த எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்பது நமக்கு நன்மை பயக்கும். இதேபோல மொழிக்கும் மற்ற துறை களுக்கும் உள்ள உறவையும் தொடர்பையும் புரிந்துகொள்ள இவ்வணுகுமுறைகள் மிக உதவியாக இருக்கும்.
மொழிக்கும் சமூகத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்துகிற மொழியியலின் UG5ß Feypab GLDTĝuîuu6ò (Sociolinguistics) 676ögO அழைக்கப்படுகிறது. சமூகத்தின் அமைப்பையும் அதன் இயக்கத்தின் போக்கையும் அறிந்து கொள்ள மொழி ஆய்வு எந்த அளவிற்குப் பயன்படும் என்பது ஒரு கேள்வி. சமூகத்தின் அமைப்பில் ஏற்படும் மாற்றம் மொழியிலும் பிரதிபலிக்கும் என்பது ஒரு அடிப்படையான கருதுகோள் (Hypothesis). இந்தப் பின்னணியில் பல்வேறு ஆய்வுகள் மொழியியலிலும் சமூகவியலும் நடைபெற்றுள்ளன. இவற்றுள் பேரா.சிவத்தம்பி —( ഞഖകt് , കൃമി : 2007

Page 34
அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளை பரிசீலி ப்பதே இக்கட்டுரையின் மையமாக அமைகிறது.
பின்னணி அவருடைய இலக்கணமும் சமூக உறவுகளும என்ற நூல் இங்கு குறிப்பிடப்பட வேண்டியது. தமிழ் மரபில் வெளிவந்த முக்கிய இலக்கண நூல்களான தொல்காப்பியம், நன்னூல் ஆகிய இருநூல்களையும் ஆய்வில் மையப்படுத்திக் கொள்கிறார். பேரா. சிவத்தம்பி அவர்கள் மார்க்சியக் கொள்கை களால்
ஈர்க்கப்பட்டவர் என்பது தமிழாய்வு
உலகம் நன்கு அறிந் ததே. இதனுடைய பிணி னணியில் இவ்விரு இலக்கணங்களையும் ஆராய் கிறார் . வரலாற்றுப் பொருள் முதல் வாதம் என்னும் மார்க்சியத் தத்துவக் கோட்பாடு இவ்வாய்வின் முதுகெலும்பாக அமைந்துள்ளது. இந்நூலின் குறிக்கோளாகப் பேரா.சிவத்தம்பி அவர்கள், “தமிழ்ச் சொல்லிக்கண அமைப்பும், அவ்வமைப்பின் வரலாறும் சுட்டி நிற்கும் சமூக, உற்பத்தி உறவுகளையும் அவற்றின் கால நிலைப்பட்ட மாற்றங்களையும் எடுத்துக்கூற முயல்வதே. நோக்கமாகும்’ (பக் 1) என்று குறிப்பிடுகிறார். இத்தகைய முயற் சிக் கு வரலாற்று இலக் கணம் அத்தியாவசியமான தாகும் என்பதை அவர் வலியுறுத்துகிறார். சமூக அமைப்பை இலக்கணங்களில் உள்ள திணை, பால், எண், (36 bpj60)LD, வினையமைப்பு ஆகியவற்றின் வகைப்பாட்டின் மூலம் புரிந்து கொள்ளும் முயற்சி இது.
மார்க்சீயக் கோட்பாட்டில் பொருளாதார அமைப்பு அடிநிலை அமைப்பாகவும் (Base Structure) மற்றும் சமூக நிறுவனங்களான அரசியல், சட்டம், இலக்கியம், மதம் அகியவை (3LD6bf606) 960LDUT356 b (Superficial Structure) கருதப்படுகின்றன. சமூக மதிப்பீடுகள், சமூகத் தினரின் மனப்பாங்கு முதலானவையும் மேல்நிலை அமைப்பைச் சார்ந்தவை.
(ஓலை 44 , 45 )
 

பொருளாதார அமைப்பின் மாற்றம் மற்ற சமூக நிறுவனங்களையும் சமூக மதிபீடுகளையும் பாதிக்கிறது. இவ்விரு அமைப்புகளில் மொழி எங்கு அடக்கப்படுகிறது என்பது சர்ச்சைக் குரியதாக இருக்கிறது. மொழியின் தன்மை மற்ற சமூக நிறுவனங்களின் தன்மையிலிருந்து வேறுபடுகின்றது. மொழி மற்ற சமூக நிறுவனங் களைப் போல மேல்நிலை அமைப்பைச் சார்ந்தது என்பது சர்ச்சைக்குரியதாக ஆக்கப்பட்டுவிட்டது. அது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திய அடிநிலை அமைப்போடோ மேல்நிலை அமை ப்போடோ சம்பந்தப்படுத்தப்பட்ட தல்ல. அது அந்தச் சமூகத்தின் முழுமைக்கும் சம்பந்தமானது. சமூ கத்தின் வரலாற்று முழுமையிலும் ஊடுருவி ஒன்றி நிற்பது. இலக்கியம் போன்று மொழியும் மேல்நிலை அமைப்போடு தொடர்பு உடையது என்பதை ஏற்றுச் சில மார்க்சிய வாதிகள் தங்கள் வாதங்களை
முன் வைத்துள்ளனர். ஆனால்
6m) LT656 (Stalin 1976) gas கருத்தை ஏற்காமல் மொழி மேல்நிலை அமைப்போடு மட்டும் தொடர்பு உடையதல்ல என்று வாதாடினார். இது ஒரு சலசலப்பை மார்க்சியவாதிகளிடையே ஏற்படுத்தியது. மொழி ஒரு வகுப்பினரால் (Class) உருவாக்கப்பட்டதும் அல்ல. அது பல தலைமுறையினரால் சமூகத்தின் வரலாற்றோடு இணைக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. மொழி அது பேசப்படும் எல்லா வகுப்பினருக்கும் சொந்தமானது.
ஸ்டாலின் அவர்களின் நூலிலிருந்து சிவத்தம்பி அவர்கள் மேற்கொள் காட்டி விளக்குகிறார். ஸ்டாலின் கூற்றுப்படி “மனித நடவடிக்கையின் சகல அம்சங்களையும் தழுவி நிற்கும் மொழியானது மேற்கட்டுமானத்தாற் சுட்டப்பெறும் நடவடிக்கைகளிலும் பார்க்க விசாலமானது” என்று சிவத்தம்பி (1999 : 9) அவர்கள் விளக்குகிறார். மொழியின் இடம் அடிநிலை மேல்நிலை அமைப்பு என்பவற்றைத் தாண்டி சமூகத்தின் பொதுவான தாகவும் வரலாறு முழுமையும் ஊடுருவுவதாகவும் உள்ளது.
-C வைகாசி , ஆனி : 2007 )

Page 35
மொழியின் தோற்றம் இதிலிருந்து மொழியின் தோற்றம் (Orign of Language) பற்றிய ஆய்வுக்கு அவர் நம்மை அழைத்துச் செல்கிறார். மொழியின் தோற்றம் பற்றிப் பேசும்போது சிவத்தம்பி அவர்கள் மொழியை மனிதரின் கூட்டுத் தொழிலினடியாக (Collective labour) Lippbg55T35ds (odb|T6ir(65ub கருத்தை மிக முக்கியமானதாகக் கருதுகிறார். ஆனால் தற்பொழுது மொழியியலில் மொழியின் தோற்றம் பற்றிய ஆய்வுகளை அதிகமாக ஊக்குவிப்பதில்லை. இன்றைய நிலையில் இவ்வாய்வுகள் அதிகமாக அறிவியல் அணுகு முறைகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. சோதனை களுக்கு உள்ளாக்கக் கூடிய அடிப்படையான தரவுகள் உள்ளனவா என்பது நம்முன் எழுந்து ள்ள கேள்வி. வரலாற்றுக்கு முந்தைய காலத் திற்கு இவ்வாய்வுகள் நம்மை அழைத்துச் செல்வதால் ஊகங்கள் அதிகமாகி விட வாய்ப்பு உண்டு. ஊகங்கள் கருதுகோள்களாக மாற நமக்குத் தேவையான தரவுகள் உள்ளனவா என்பது நம்முன் உள்ள கேள்வி.
மொழியின் தோற்றத்திற்குச் சில ஆய்வாளர்கள் குழந்தையின் மொழி வளர்ச்சி ஆய்வில் தடயங்கள் சில கிடைக் கும் என்று நம்புகிறார்கள். அதன் அடிப்படையில் சிவத்தம்பி அவர்கள் (1999 : 10) உடல்சார் நடவடிக்கை ab6flo) (Physical activities) 95a5b PFGBLIGLB குழந்தைகளின் மொழி வளர்ச்சிச் சாத்தியப்பாடு அதிகம் என்பது நிறுவப்பட்டுள்ளதாகக் குறிப்பிடு கிறார். இங்கு மொழி வளர்ச்சிக்கும் உடல்சார் நடவடிக்கைக்கும் ஒரு தொடர்பு இருப்பதாகச் சுட்டப்படுகிறது. உடல்சார் நடவடிக்கை உழைப் போடு சம்பந்தப்படுத்தப்படுகிறது. மொழியின் ஆற்றலையும் வளர்ச்சியையும் உற்பத்தி உறவுகளின் தேவைகள் நிர்ணயம் செய்கின்றன.
மொழி ஈட்டம் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி என்பது அடிப்படையானது. பிறப்பிலேயே எவ்வித உடற்குறைபாடும் மனக்குறைபாடும் இல்லாத குழந்தைகளிடம் மொழி ஈட்டம் (Language
(ஒலை 44 , 25)

Acquisition) இயல்பாகவே நடைபெறுகிறது. உடல் வளர்ச்சியும் மனவளர்ச்சியின் கூறான மொழி வளர்ச்சியும் இணைந்து வெளிப்படுகின்றன. 18 மாதக் குழந்தை சொற்களைத் தனித்தனியாக உச்சரிக்கத் தொடங்கி, சொற்களை இணைக்கக் கற்றுத் தனக்குள் ஒரு இலக்கணத்தை உருவாக் குகிறது. மெல்ல அந்த இலக்கணம் வளர்ச்சி அடைந்து அக்குழந்தையின் ஐந்தாவது வயதில் பெரியவர்களுடைய இலக்கணத்தின் குணங்களைப் பெறுகிறது. ஐந்து வயது நிரம்பிய குழந்தை மொழியைக் கற்றுவிடுகிறது. அது தன்னுடைய அனுபவங்களைத் தன்னுடைய மொழிமூலம் வெளிப்படுத்த இயலும். உடல் வளர்ச்சியோடு (Biological Development) GILDTyp 66TÍTěřáfu quid இணைந்து செயல்படுகிறது. உழைப்பு என்ற சொல்லை எந்தப் பொருளில் வைத்துப் பொருத்திப் பார்ப்பது என்பது தெளிவுப்படுத்தப்பட வேண்டியுள்ளது. உடல் வளர்ச்சி என்பது எவ்வாறு இயற்கையானதோ குழந்தைகளுக்கு மொழி FL(gplb (Language Acquisition),91616) TO 9(5 சமூகச் சூழலில் இயற்கையானது. இங்கு நிகழ்கின்ற மொழி ஈட்டம் நினைவுசார் (Conscious) நடவடிக்கை அல்ல.
மொழியும் சிந்தனையும்
ஆய்வுக்குரிய இலக்கண நூல்களை எடுத்துக் கொள்ளும் முன் மொழிக்கும் சிந்தனைக்கும் உள்ள தொடர்பைக் கோடிட்டு அவர் காட்டுகிறார். இங்கு மொழியோடு தர்க்கமும் (Logic) உளவியலும் (Psychology) உறவு கொள்கின்றன. மொழியின் இலக்கணம் தொடக்கநிலை தருக்க த்தின் பகுதியாகும். அது சிந்னைச் செயல் முறையின் பகுப்பு ஆகும்.
GuTg5 fĎ560d60T60Du uuquid (Universal thought) மொழியின் வடிவங்களையும் (Forms of Language) இணைப்பது இலக்கணத்தின் கொள்கைகளும் விதிகளும் ஆகும். யெஸ்பர்சன் அவர்கள் கருத்தைச் சிவத்தம்பி அவர்கள் (1999 : 12) முன் வைக்கிறார்.
மொழி அது பேசப்படும் குழுவின் சிந்ைைன முறைமையை உள்ளடக்கியுள்ளது என்ற
-( வைகாசி , ஆனி 2007 )

Page 36
கருத்தினை அவர் வலியுறுத்துகிறார். மேலும் இலக்கணத்துக்கும் சிந்தனைக்கும் உள்ள தொடர்பும் மொழிக்கும் உற்பத்தி, சமூக உறவு களுக்கும் உள்ள தொடர்பும் சமூக உளவியல் சிந்தனை வரலாற்றுக்கு கருவூலமாகிவிடு கின்றன. அதாவது சமூக அமைப்புக்கும் / அதனுடைய உளவியல் சிந்தனைக்கும் இலக்கணத்திற்கும் அதன்வழி வெளிவரும் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
சமூக வரலாறும் இலக்கணங்களும் சமூக வரலாற்றை அறியப் பயன்படும் அறிவுத் துறைகளுள் மொழித்துறை முக்கியமானது. இந்த அணுகுமுறை மூலம் வரலாறு மேலும் தெளிவுபடுத்தப்படும் என்ற நம்பிக்கையில் நம்முடைய தமிழ் இலக் கணங்களைப் பார்க்கலாம் என்ற முயற்சியின் விளைவுதான் இந்த நூல். முக்கியமாக, தொல்காப்பிமும் நன்னுாலும் அவற்றை ஒட்டிய உரைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. தொல்கா ப்பியம் முழுநூலாக முதலிலேயே வந்தது என்பதைவிட ‘ஏறத்தாழ கி.மு. 1 நூற்றாண்டு முதல் கி.பி. 4-5 ஆம் நூற்றாண்டுகட்குரிய னவான பல வழக்காறுகள் இருப்பதால் பல்வேறு காலகட்டங்களில் இயற்றப்பெற்று, கி.பி. 4 - 5 நூற்றாண்டில் அது இன்று கொண்டுள்ள இறுதி நிலையினைப் பெற்றிருக்கலாம் என்ற கமில் ஸ்வெலபில் அவர்களின் கருத்தைச் சிவத்தம்பி அவர்கள் (1999 - 13 -14) ஏற்றுக்கொள்கிறார். இக்கருத்தினைக் காலம் சென்ற பேராசிரியர். க.கணபதிப்பிள்ளை கூறிக் கேட்டதுண்டு என்றும் அவர் குறிப்பிடுகிறார். நன்னூலின் காலம் 13ஆம் நூற்றாண்டு என்பதில் சர்ச்சை இல்லை. இவ்விரு நூல்களும் சமண மரபில் வந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்விரு நூல்கள் மாத்திரமின்றி இவைகளுக்கு எழுதப்பட்ட உரைகளும் நன்னூலுக்குப் பின்னர் தோன்றிய இலக்கண நூல்களும் மேலை நாட்டார் தமிழுக்கு உருவாக்கிய இலக்கணங் களும் முக்கியமானவை என்பதை அவர் குறிப்பிடத் தவறவில்லை. உரையாசிரியர்கள் மொழியில் ஏற்பட்ட மாற்றங்களைக் கவனித்திரு
(ஓலை 44 , 45

க்கிறார்கள் என்பது வெளிப்படை. ஆனால் மாற்றங்களை மூல இலக்கணங்களின் வரம்பிற் குள்ளேயே விவரிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். ஒரு காலகட்டத்தில் உருவான இலக்கணம் அந்தக் காலகட்டத்தைத் தாண்டி மொழியில் ஏற்பட்ட மாற்றங்களையும் உள்ளடக்கி அது விவரிக்கும் என்பது நம் மரபின் நம்பிக்கை. ஆகையால்தான் தொல்காப்பிய இலக்கண வரம்புக்குள்ளேயே தமிழில் ஏற்பட்ட மாற்றங்களை விவரிக்கும் உரையாசிரியர்களின் முயற்சியை நாம் பார்க்கிறோம்.
திணை
திணை, பால் எண், வேற்றுமை, வினையமைப்பு என்ற இலக்கணப் பகுப்பின் மூலம் சமூக வரலாற்றுப் பின்னணியைத் தெளிவுபடுத்தச் சிவத்தம்பி அவர்கள் முயன்றிருக்கிறார். முதலில் அவர் திணை என்ற இலக்கணக் கருத்தை ஆராய முற்படுகிறார். இச்சொல் தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்திலும் பொருளதிகாரத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. திணை என்ற சொல் ஒழுக்கம், பொருள் / உள்ளடக்கம், குடி என்ற பொருளிலும் கையாளப்பட்டுள்ளதை உரையாசிரி யர்களின் உரைகளிலிருந்து சிவத்தம்பி அவர்கள் எடுத்துக்காட்டுகிறார். குடி என்பது குடும்பம், கணம், குடியிருப்பு ஆகிய பொருளைச் சுட்டுகிறது என்று அவர் கூறுகிறார். தொல்காப்பியம் கண வாழ்க்கையிலிருந்து நிலமானிய வாழ்க்கைக்குத் தமிழ்ச் சமூகம் மாறுகிற வரலாற்றுப் போக்கை நமக்குத் தெரிவிக்கிறது. ஒரு மாறும் சமூகத்தின் இயல்பைக் காட்டுவதால் தொல்காப்பியத்தில் கண வாழ்க்கைமுறைக் கூறுகளும் நிலமானிய வாழ்க்கைமுறைக் கூறுகளும் காணப்படுகின்றன என்கிறார் அவர். திணையில் மக்களை உயர் திணையாகப் பகுத்த பண்பு கண வாழ்க்கையின் முக்கியக் கூறான கூட்டுவாழ்க்கையின் நினைவு வழியாக வந்தது என்பதை அவர் (சிவத்தம்பி 1999 : 21) நன்கு விளக்கியுள்ளார். ஒரு சமூகத்தின் வரலாற்றில் நிகழும் சமூக மாற்றத்தை இலக்கணப்பகுப்பு பிரதிபலிக்கிறது என்ற கருத்து இங்கு வலியுறுத்தப்படுகிறது. நன்னூல் தமிழுக்கு இலக்கணம் வகுத்தாலும் அது இயற்றப்பட்ட காலத்தின் அமைப்பு தொல்காப்பியத்தினுடைய
-( வைகாசி , ஆனி : 2007

Page 37
சமூக அமைப்பிலிருந்து மாற்றம் பெற்றது. நிலமானிய சமூக அமைப்பு தமிழ்ச் சமூகத்தில் இறுக்கநிலை அடைந்த பின்னர் நன்னூல் இலக்கணம் தோன்றுகிறது.
மத நிலைப்பட்ட கருத்துகள் பெருமாற்றம் அடைந்த நிலையை நன்னூலில் வரும்
மக்கள் டேவர் நரக ருயர்திணை மற்றுயி ருள்ளவு மில்லவு மஃறிணை
நன். 261 என்ற சூத்திரம் காட்ட, தொல்காப்பியம் மக்களைச் சுட்டுகின்ற சொற்கள் உயர்திணை என்று குறிப்பிடுகிறது.
உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே அஃறிணை யென்மனார் அவரல பிறவே ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே
தொல்.சொல்.1
சேனாவரையர், மக்களை யென்று கருதப்படும் பொருளை ஆசிரியர் உயர்திணையென்று சொல்லுவர்’ என்றும் "ஈண்டு மக்கள் என்றது மக்கள் என்னும் உணர்வை’ என்றும் (தொல். சொல். 1959 : 3-4) கூறுகிறார். மேலும் மக்களாக இருப்பினும் மக்களென்று கருதப்படா விட்டால் அவர்களைக் குறிக்கும் சொற்கள் அ.'றிணையாகக் கருதப்படும் என்றும் அவர் இக்கருத்தை விவரிக்கிறார். இப்பாகுபாடு பகுத்தறிவின் அடிப்படையில் அமைந்துள்ளது. இது வளர்ந்த சமூகத்திற்குப் பொருந்தும். ஆனால் இலக்கணம் அது தோன்றிய காலத்திற்கு மட்டுமின்றி அச்சமூக / பல்வேறு பொருளாதார அடித்தளங்களினது வரலாற்றுக் காலம் முழுவதையும் தழுவி நிற்கிறது. குழுநிலை வாழ்க்கைக்குப் பொருந்துமாறு மக்களை உயர்திணையாகவும் மக்கள் தவிர்த் தவற்றை அட்றிணையாகவும் தொல்காப்பியம் பகுத்துள்ளது என்று சிவத்தம்பி அவர்கள் (1999:19) கருதுகிறார்
Li mo6û
திணையோடு தொடர்புடைய பால், எண் ஆகிய இலக்கணப் பிரிவுகளை அவர் ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறார். உயர்திணையில் ஒருமை/
(ஒலை 44 , 45)ー

பன்மை பாகுபாடு கொள்ளப்பட்டு ஒருமையில் ஆண் / பெண் பாகுபாடு செய்யப்படுகிறது. பலர்பாலில் ஆண் / பெண் வேறுபாடின்றி இரு பாலுக்கும் பொதுவானதாக உள்ளது. ன ஆண் பாலையும் ள பெண்பாலையும் ர், ப, மாா ஆகியவை பலர் பாலையும் சுட்டுவதாகத் தொல்காப்பியம் (சொல்.5-7) கூறுகிறது. எண்ணில் ஒருமையைச் சுட்டும் ன் என்பதும் ள் என்பதும் திணையையும் பாலையும் இணைத்தே சுட்டு கின்றன. அதேபோல் ர் என்பதும் ப என்பதும் மார் என்பதும் (உயர்) திணையையும் (பலர்) பாலையும் ஒட்டு மொத்தமாகவே குறிக்கின்றன. ஒவ்வொரு விகுதியும் மூன்று செய்திகளைத் தெரிவிக்கின்றன.
gif ir ர்,ப,மார் + உயர்திணை உயர்திணை + உயர்திணை + உயர்திணை - ஆண்பால் 0 பால் - பன்மை - பன்மை + பன்மை
அ.றிணையில் பால் வேறுபாடு என்பது ஒருமை / பன்மை என்பதோடு சுருங்கிவிடுகிறது. ஆண் / பெண் வேறுபாடு அட்றிணையில் இல்லை. பால் என்ற சொல்லுக்குப் பகுப்பு / பிரிவு என்ற பொருளை ஒதுக்கி ஆண் / பெண் என்ற பகுப்பைக் கொண்டால் அ.றிணையில் பால் பாகுபாடு இல்லை. ஒருமை / பன்மை என்ற பாகுபாடு மட்டும் காணப்படுகிறது. து, று, டு என்பவை அ.'றிணையில் ஒருமையையும் அ, ஆ, வ என்பவை பன்மையையும் குறிக்கின்றன.
துறு,டு ل6,والي , إك - உயர்திணை - உயர்திணை - பன்மை + பன்மை
உயர்திணையில் ஒருமையில் மடடும் ஆண் / பெண் பால் வேறுபாடு காணப்படுவதற்கும் பன்மையில் பால் பொதுவானதாக இருப்பதற்கும் சமூக வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் நிலவிய சமூக நிலையே காரணம் என்று சிவத்தம்பி அவர்கள் கூறுகிறார். அவர் (சிவத்தம்பி 1999 : 27), “மக்களின் தனிப்பட்ட உறவுகளின் போதே, சம்பந்தப்பட்டவர்களின் பால் வேறுபாடு முக்கியமா னதாக அமைகின்றது. மக்களைத் தொகுதியாக
-( வைகாசி , ஆனி : 2007 D

Page 38
நோக்கும் போது அப்பால் வேறுபாடு முக்கிய மற்றதாகின்றது” என்று கூறுகிறார். குழுநிலை விவாகம் என்ற வரலாற்றுக் கால கட்டத்திற்குப் பின்னர் தனிமனிதத் தொடர்புகள் தவிர்த்த மற்றைய சமூகப் பொதுவான உறவுகளில் அவனும் அவளும் பொதுவாகி பால் வேறு பாடற்ற பலர்பாலாகி விடுகிறார்கள். மேலும் காலப் போக்கில் சமூகத்தில் ஏற்பட்ட உயர்வு / தாழ்வு என்று மக்களைப் பிரிக்கும் போக்கு மொழியில் மரியாதை / மரியாதையில்லாமை என்று வெளிப்படுத்தும் கூறுகளாக மொழி அமைப்பில் உருவாகின. பன்மையைக் குறிக்கும வடிவம் ஒருமையில் மரியாதையைச் சுட்டும் கூறாக மாற்றம் பெறுவதை நாம் மொழியில் காண்கிறோம். அதனைத் தொல்காப்பியம்,
ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி னாகிய உயர்சொற் கிளவி இலக்கண மருங்கின் சொல்லா றல்ல
தொல். சொல்.27
என்ற கூறுகிறது. பன்மைக்குரிய வடிவத்தை ஒருமையைக் குறிக்கப்பயன்படுத்தும் போது அது மரியாதையைக் குறிப்பதாக மாறிவிடுகிறது. பன்மைக்குரிய வடிவமும் மாற்றம் பெறுகிறது. சமூக நிலையில் ஏற்பட்ட வேறுபாடுகள் மொழியின் அமைப்பிலும் அதன் முத்திரையைப் பதித்துவிடுகிறது. மரியாதை நிமித்தமாகப் பன்மையைப் படுத்தாத நிலையும் இருந்திரு க்கலாம் என்பதற்குத் தொல்காப்பியப் பெயரியல் சூத்திரங்கள் (186, 187) சுட்டுவதாகச் சிவத்தம்பி (1999:31) அவர்கள் குறிப்பிடுகிறார். பேச்சுத் தமிழில் கிராம / அடிமட்ட நிலையில் வாழ்வ தாகக் கருதப்படும் மக்களிடம் மரியாதை / மரியாதையற்ற நிலை என்ற வேறுபாடு காணப் படுவது இல்லை. கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் ஒருமையில் குறிப்பி டுவதை நாம் பார்க்கலாம். மத்திய வர்க்கக் குடும்பத்திடம் தான் இவ்வேறுபாடு பற்றிய பிரக்ஞை கூடுதலாக உள்ளது.
வேற்றுமை வேற்றுமை என்ற கருத்து நம்முடைய இலக்க
(ஒலை 44 , 45 )

ணங்களில் முக்கிய இடத்தை வகிக்கிறது. பெயர் எழுவாயாகச் செயற்படும் போது எவ்வித வடிவ வேறுபாடின்றி இயல்பாக உள்ளது. ஆனால் செயப்படு பொருள், கருவி, நீங்கல், கிழமை முதலாய வேற்றுமைப் பொருள்களை உணர்த்தும் போது பெயருடன் சில வேற்றுமை உருபுகள் இணைக்கப்படுகின்றன. தமிழில் எட்டு வேற்று மைகள் உள்ளதாக மரபிலக்கணங்கள் குறிக் கின்றன. வேற்றுமை உருபுகளின் அடிப்படை யிலோ வேற்றுமை உறவுகளின் அடிப்படையிலோ இலக்கணங்கள் கூறும் வேற்றுமைகளின் எண்ணிக்கை தமிழின் இயல்புக்குப் பொருந்தி வரவில்லை என்று கால்டுவெல் கூறியதைச் சிவத்தம்பி அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்.
வேற்றுமைகளால் குறிக்கப்படும் உறவுகள் சமூக அமைப்பின் நிலையோடு நெருக்கமானவை என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது. சான்றாக, கருத்தா என்பது இருவகையாகப் பிரிக்கப்பட்டதில் சமூகநிலை பிரதிபலிக்கப்படுவதை நாம் காண முடிகிறது. ஏவுதற் கருத்தா, இயங்குதற் கருத்தா என்ற கருத்துநிலைப் பிரிவு சமூகத்தில் தொழில் புரியும் குழுவும் அதனை மேற்பார்வையிட்டு அப்பணியைப் புரியும்படித் தூண்டக் கூடிய குழுவும் என இருவகைப் பிரிவுகள் உழைப்பின் மேல் கட்டப்பட்டன. சமூகத்தில் இத்தகைய பிரிவுகள் உழைப்பின் அடிப்படையில் சமூக ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டதை நமக்குக் காட்டு கின்றன.
வேற்றுமையை அடுத்து வினையமைப்பின் தன்மையை சிவத்தம்பி அவர்கள் ஆராய்கிறார். வினையைப் பொதுவாக முற்றுவினை / தெரிநிலை 6,60601 (Finite Verb) 61601 Olib (gol60601 (Appellative Verb) 6T6irplb bib 36) is35600T/E1356i தமிழில் உள்ள வினைகளை மேல்நிலையில் வகைப்பாடு செய்கினறன. வினையின் இன்னொரு முக்கியக் கூறு கால இடைநிலைகளை ஏற்பது. அதேபோல் பெயர் வேற்றுமை உருபுகளை ஏற்க வினை வேற்றுமை உருபுகளை ஏற்காது. வினையில் மூன்று பகுதிகள் உள்ளன. (1) செயலைக் குறிக்கும் பகுதி, (2) காலத்தைக் காட்டும் இடைநிலைகள் ; (3) எழுவாயாகச்
-( வைகாசி , ஆனி : 2007 )

Page 39
செயற்படும் பெயரின் திணை, பால், எண் ஆகியவற்றைக் குறிக்கும் விகுதி காலத்தை அடுத்து வரும். திராவிட மொழியியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள அறிஞர்களுள் சிலர் தொல் திராவிட மொழியில் திணை, பால், எண் ஆகியவற்றைச் சுட்டும் விகுதிகள் வினையோடு இல்லாத நிலையில் இருந்தது என்றும் பின்னர் படிப்படியாக இத்தகைய விகுதிகள் வினையோடு தோன்றின என்றும் கருதுகின்றனர். சிக்கல் இல்லாத எளிய பழங்குடி மக்களின் சமூக அமைப்புக்கும் அச்சமூகத்தால் பயன்படுத்தப் படும் மொழியின் எளிய அமைப்புக்கும் தொடர்பு உள்ளதை அவர் வலியுறுத்துகிறார். சங்க கால மொழியின் வினையமைப்பு இன்றைய மொழியின வினையமைப்பைப் போல சிக்கலானது அல்ல
என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
வினை
இலக்கணங்கள் வினைகளைத் தன்வினை / பிறவினை என்று வகைப்பாடு செய்துள்ளன. வரதராசன் போன்றோர் இதனைத் தன்வினை, பிறவினை, இயக்குவினை என மூன்றாகப் பகுப் பார்கள். பிறவினை என்ற வகைக் குள்ளேயே இயக்குவினையையும் அடக்கலாம் என்று வேலுப்பிள்ளை (1966) போன்றோர் கருதுகிறார்கள். சமூக அமைப்பு நிலையில் உழைக்கும் குழு என்ற ஒன்றும் சொத்துரிமை யால் உழைப்பை வாங்கும் குழு என்ற ஒன்றும் உருப்பெறத் தொடங்கிவிட்டன என்ற சமூக வரலாற்றை இப்பாகுபாடு பதிவு செய்துள்ளது. இது சமூக வரலாற்றின் ஒரு முக்கியக் கட்டம்.
செய்வினை, செயப்பாட்டுவினை என்ற வகைப் பாட்டைச் சிவத்தம்பி அவர்கள் எடுத்துக் கொள்கிறார் செயற்பாட்டுவினை என்ற பிரிவு தமிழில் பழங்காலத்தில் இல்லை என்று கால்டுவெல் போன்ற அறிஞர்கள் கருதியதாகக் தெரிகிறது. ஆனால் செயப்பாட்டுவினை வாக்கியம் வெளிப்படுத்தும் சில கூறுகளை வேறுவகை வாக்கியம் உணர்த்தும் என்பதைத் தொல்காப்பியம் (சூத்.246) சுட்டுகிறது.
செயப்படு பொருளைச் செய்தது போலத்
தொழிற்படக் கிளத்திலும் வழக்கியன் மரபே
தொல்.சொல்.246. (ஓலை 44 , 45)

பாறை உருண்டது, வங்கி நாளை திறக்கும் போன்ற வாக்கியங்களை இதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். தொழிலின் பயனை உறும் பொருள் இங்குத் தொழிலைச் செய்யும் கருத்தாவைப் போலச் செயற்படுகிறது. இத்தகைய வாக்கியங்களுக்கும் செயற்பாட்டுவினை வாக்கியங்களுக்கும் பொருண்மை அடிப்படையில் ஒரு உறவு இருப்பதை நாம் உணரலாம்.
தற்காலத் தமிழில் செயப்பாட்டுவினை வாக்கி யங்கள் ஆட்சித்துறைகளில் அதிகம் பயன்படுத்தப் படுவதை நாம் காணலாம். குறிப்பாக, இது ஆங்கிலத்தின் தாக்கம் என்று கருதப்படுகிறது. பேசுபவனுக்கோ கருத்தாவுக்கோ முக்கியத்துவம் தரப்படாமல், ஒரு தொழிலின் பயனை உறுபவ னுக்கும் செயலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது.
இத்தகைய மொழிப்பயன்பாடு ஆட்சித்துறை களிலும் அறிவியல் துறைகளிலும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இத்தகை மொழிப் பயன்பாடு “நிர்வாக அமைப்புகளினால் மக்களுடன நேரடித் தொடர்பற்ற, தனிமனித உறவழிந்த (Impersonal) சமூகச் சூழ்நிலையை’ சித்தரிக்கிறது (சிவத்தம்பி 1999:50). செய்பவன் / தொழில் புரிபவன் (கருத்தா) செயலிலிருந்து பிரிக்கப் படுகிறான். இதேபோல் கூட்டுவினைகள், துணை வினைகள் ஆகியவை புதிய செயற்பாடுகளை. சமுதாயச் சிந்தனைகளை - இயல்பாகவும் எளிதாகவும் எடுத்துக் கூற இவ்வினையாக்கங்கள் உதவுகின்றன என்று சிவத்தம்பி அவர்கள் (1999:51) குறிப்பிடுகிறார்.
நிறையும் குறையும்
மொழியின் உறுப்புகளையும் அவை சொல்லிலும் தொடரிலும் வாக்கியத்திலும் அமைந்து கிடக்கிற முறையை விவரிப்பது மொழியியல் என்று கூறுகிற வரையறை குறுகியது. ஆனால் அது மொழியி யலின் அடிப்படையான மையமான வரையறை. அது தர்க்க ரீதியில் முதன்மையானது. மொழியியல் இந்தச் சுருங்கிய எல்லைக்குள் அடங்காமல் சமூக/மனித ஒட்டுமொத்த நடவடிக்கைகளோடு இணைக்கபட வேண்டியது. மொழி பண்பாடு,
-C வைகாசி , ஆனி 2007 )

Page 40
வரலாறு, சமூகம், இலக்கியம் ஆகியவற்றோடு பின்னிப் பிணைந்தது. மொழியின் தரவுகள் எவ்வாறு பண்பாட்டையும் சமூக அமைப்பையும் சமூக வரலாற்றையும் புரிந்துகொள்ளப் பயன் படுத்தபடலாம் என்பது மொழியியல் ஆய்வின் தளத்தை விரிவுபடுத்தும் முயற்சியாகும். மொழியியலில் சமூக மொழியியல் என்ற பிரிவு சமூகத்திற்கும் மொழிக்கும் உள்ள நெருங்கிய தொடர்பைக் காட்டுகிறது. சமூக அமைப்பின் மாற்றங்கள் மொழியில் பிரதிபலிக்கின்றன. அறிவியலாலும் தொழில்நுட்பத்தாலும் மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தின் பாதிப் பைத் தமிழ் மொழியிலும் நாம் காணலாம். புதிய புதிய சொற்கள் தமிழில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அறிவியல் உண்மைகளை வெளிப்படுத்தும் தனித்தன்மை வாய்ந்த நடை ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. தமிழ் பயன்படுத்தப்படும் எல்லைகள் விரிந்து கொண்டிருக்கின்றன. மொழிப் பயன்பாட்டின் எல்லை விரிவாக்கம் மொழி அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது. சமூக மாற்றமும் மொழி மாற்றமும் நெருக்கமாக உள்ளன. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, சிவத்தம்பி அவர்களின் ஆய்வு பாராட்டப்பட வேண்டியது. சமூக வரலாற்றைப் புரிந்துகொள்ள எவ்வாறு இலக்கணங்கள் துணைநிற்கின்றன என்பதை இவ்வாய்வு நன்கு வெளிப்படுத்துகிறது. தமிழ் மொழி ஆய்வில் மார்க்சியத்தின் வரலாற்றுப் பொருள் முதல்வாத அணுகுமுறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு முன்னோடியான நல்ல எடுத்துக்காட்டு. இதற்காகச் சிவத்தம்பி அவர்கள் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்.
இத்தகைய ஆய்வில் சில பிரச்சனைகளையும் நாம் எதிர் நோக்க வேண்டியுள்ளது. முதலாவது மொழியின் தோற்றம் பற்றிய கருத்து. நாம் முன்பு குறிப்பிட்டுள்ளது போல இங்கு ஊகங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றை நிறுவுவதற் குரிய மொழித் தரவுகளும் மற்றைய சான்று களும் (வெவ்வேறு துறைகளிலிருந்து) தேவைப் படுகின்றன. இங்கு முன்வைக்கப்படும் கருது கோளை எவ்வாறு பொய்ப்பிப்பது (falsity) என்பது
(96ba 44, 450

தெளிவாக விளங்கவில்லை. எத்தகைய தரவுகள் இத்தகைய கருதுகோளைப் பொய்ப்பிக்கும் என்ற அணுகுமுறை தெளிவு பெறாமல் உள்ளது.
குழு வாழ்க்கை நிலையிலிருந்து நிலமானிய வாழ்க்கை முறைக்குத் தமிழ்ச் சமூகம் மாறிக் கொண்டிருக்கும் நிலையைத் தமிழின் திணை பால் வகைப்பாடு பிரதிபலிக்கிறது என்ற கருத்தை நிறுவ மற்ற மொழிகளில் இத்தகைய பாகுபாடு மேலே சுட்டிய சமூக அமைப்பின் மாற்ற வரலாற்றுக் கட்டத்தில் செய்யப்பட்டது என்பது தகுந்த சான்றுகளின் மூலம் நிறுவப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பின் மாற்றமும் அம்மொழி அமைப்பின் வகைப்பாடும் நெருக்க மானவை என்பதை உறுதிசெய்ய உலகின் / இந்தியாவின் மற்ற மொழிகளிலிருந்து தரவுகளைக கொண்டு நிரூபிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இல்லையென்றால், நாம் ஊகம் செய்யும் நிலையில் இருக்கிறோம் என்று பொருள் படும்.
வினையமைப்பில் பிறவினை / இயக்குவினை என்ற பாகுபாடு உழைப்போர் / உழைப்பைப் பெற இயக்குவோர் என்ற சமூக வேறுபாடு தோன்றி சமூக வரலாற்றுக் காட்டத்தைச் சுட்டுகிறது என்ற வாதத்திற்கு எதிர் நிலையில்
1) குழந்தை சோறு உண்டது 2) அம்மா குழந்தைக்குச் சோறு ஊட்டினாள் 3) தேர்வு நடந்தது
4) நாய் ஒடியது 5) பையன் நாயை ஒட்டினான்
போன்ற வாக்கியங்களை நாம் முன்வைக்கலாம். சமூக வாழ்க்கையை ஒட்டி மட்டுமன்றி நம்முடைய இயல்பான வாழ்க்கையில் சந்திக்கும் சூழல் களைக் குறிப்பதற்குக் கூட இயக்குதற் கருத்தா என்ற பாகுபாடும் பிறவினை/ இயக்குவினை என்ற பாகுபாடும் தேவைப்படுகின்றன. சமூக அமைப்போடு ஒட்டிய பாகுபாடுகள் மட்டுமன்றி தனிமனித / குடும்பச் சூழல்களை ஒட்டிய தேவைகளும் மொழியின் அமைப்பில் வேறுபாடுகளை உண்டாக்கக் கூடிய சாத்தியம் உள்ளது. மேலே கூறிய மீறும் அளவுக்குத் தேவையான சான்று
-C வைகாசி , ஆனி : 2007

Page 41
களைத் தமிழிலிருந்தும் மற்ற மொழிகளி லிருந்தும் கொண்டுவந்து இந்நிலைப்பாட்டையும் அணுகுமுறையையும் பலப்படுத்த வேண்டும். மேலே கூறியவை எதிர்கால ஆய்வுகள் எதிர் கொள்ள வேண்டிய சவால்கள். இருப்பினும், சிவத்தம்பி அவர்கள் புதிய தடத்தையும் அணுகுமுறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ் மொழி ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்.
来米来米
குறிப்பு 1. இன்றும் கிராம மக்களிடையே கணவன் மனைவியை நீ என்று ஒருமையில் கூறுவதும அதே போல் மனைவி கணவனை நீ’ என்று ஒருமையில் கூறுவதும் பேச்சுவழக்கில் சாதார ணமாகக் காணப்படுகின்ற நிகழ்வு. நகர மக்களிடை கூட பொருளாதாரத்தில் பின்தங்கிய அடிமட்ட மக்களின் பேச்சுவழக்கில் இவ்வேறு பாடு காணப்படுவது இல்லை.
2. “Tamil grammatians, in following the order of the Sanskrit cases, have also adopted or imitated the Sanskrit mode of denominating them.... They have fixed a number of each case in the same order as in Sanskrit first case, &c., to eighth ease.” (Caldwell 1913:255).
3. “தமிழ் முதலிய திராவிட மொழிகளில், பெய ர்ச்சொற்கள் திணை பால் பாகுபாடற்ற நிலை யிலிருந்து இருதிணை ஐம்பாற் பகுப்பு படிப் படியே வளர்ந்து அமையப் பெற்றுள்ளன எனலாம்”. (வேலுப்பிள்ளை 1966:135). இம் மேற்கோள் சிவத்தம்பி அவர்களின் (199925) நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
“It may, indeed, bestated as a general ruleniuns are destitute of gender, and that every nounot pronoun in which idea of gender is formally expressed, blingacompoundword, is necessarily oflater origin than the umcompounded primitive” (Caledwell 1913:220).
பேரா. தெ. பொ. மீனாட்சிசுந்தரம் அவர்களும் இதே கருத்தைக் கொண்டிருந்தார். தெ.பொ.மீ. அவர்களின் கருத்தை அறிய அரங்கனின் (2001) கட்டுரையைப் பார்க்கவும்.
(ஓலை 44 , 45 )

4. “The Dravidian verb is entirely destitute of a passive voice, propperly so called, nor is there
any reson to suppose that it ever had a passive” (Caldwell 1913:263).
5. சமீப காலமாக, அறிவியல்தமிழ் என்ற தொடர் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. தமிழ் மொழி அறிவியல் செய்திகளைத் தெரிவிக்க எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதை இத்துறையைச் சார்ந்தவர்கள் ஆராய்கிறார்கள். கலைச்சொற்கள் குறித்த ஆய்வு இப்பிரிவில் அடக்கப்படுகிறது. அறிவியல் தமிழ்த்துறை என்ற துறையே தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தனியே இயங்குகிறது.
நோக்கீடு தொல்காப்பியம்: சொல்லதிகாரம் (சேனாவரையம்) தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் சென்னை (மறுபதிப்பு 1959).
அரங்கன், கி. (2001) “திராவிட மொழிகளில் பாலும் எண்ணும்: தெ.பொ.மீ.யின் கோட்பாடு’ பேரா. கி. கருணாகரன் மணிவிழா மலர் பக். 12-17. பார்க் டிரஸ்ட்: திருப்பூர்.
சிவத்தம்பி, கா. (1999) இலக்கணமும் சமூக உறவுகளும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் ; சென்னை (முதல் பதிப்பு 1982).
தாமோதரன், அ. (பதிப்பாசிரியர்) (1999) நன்னூல் மூலமும் விருத்தியுரையும் உலகத் தமிழாய்ச்சி நிறுவனம்: சென்னை.
வேலுப்பிள்ளை, ஆ. (1966) தமிழ் வரலாற்றிலக்
கணம், சென்னை.
Caldwell, R. (1913) Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages. Kegan Paul, Treneh, Trubner & co., Ltd. London (Third edition).
Stalin, J.V. (1976) Marxism and Problems of Linguistics Foregin Languages Press: Peking (First edition 1972).
முனைவர் கி. அரங்கன்
முன்னாள் பேராசிரியர்
தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூா
—( ഞഖകt് , കൃങ്ങി : 2007

Page 42
தமிழ் இலக்கிய பெரும்பரப்பின் பெரும்பகுதி யினை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பக்தி இலக்கியங்களே நிறைத்து வந்துள்ளன. தமிழலக்கிய ஆய்வாளர் எவரும் புறந்தள்ளிவிட முடியாத பகுதி இதுவாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் ‘தமிழ் இதழ் உலகம்’ என்ற ஒன்று உருவான போது இலக்கிய ஆய்வுகளுக்கான வித்துக்கள் அங்கங்கே ஊன்றப்பட்டன. தமிழ் உரைநடை கட்டுவிடத் தொடங்கிய அக்காலத்தில்தான் ஆங்கிலேயரின் சமயம் சார்ந்த, சமயம் சாராத உரைநடை நூல்கள் பல வெளிப்பட்டன. சைவ வைணவப் பழந்தமிழ் இலக்கியங்களும் உரைநூல்களும் பனை ஓலைகளிலிருந்து அச்சு ஊடகத்தை நோக்கி நகர்த்தன. தமிழ்ச் சிற்றிலக்கிய மரபினைப் பின்பற்றிய இசுலாமியர் களின் சிறு சிறு முயற்சிகள் அங்கங்கே வெளிப் பட்டன. ஒருவர் மதம் சார்ந்த இலக்கியங்களை மற்றவர் படிப்பதும் அதனை மறுப்பதுமான கட்டுரைகள் பல தமிழ் இதழ்களில் வெளிவரத் தொடங்கின. இது சுபக்கம் x பரபக்கம் என்ற பெயரில் தன்மதம் கூறிப் பிறர் மதம் மறுத்தல்’ என்னும் சமய மரபுகளின் தொடர்ச்சியாகும். இவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை. ஈழத்துத் தமிழறிஞர்களின் சைவசமயச் சார்பும் அதற்கு எதிர்வினையான ஈழத்துக் கத்தோலிக்கக் கிறித்துவர்களின் எழுத்துக்களுமாகும். இந்த இரு போக்குகளின் பிரதிநிதிகளாக யாழ்ப் பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரையும் யாழ்ப்பாணத்து சுவாமி ஞானப் பிரகாசரையும் அடையாளம் காட்டலாம். இந்த வகையில் யாழ்ப்பாணம் காசிவாசி செந்திநாதையரை நாவலரின் வழித்தோன்றலாகக் கருதலாம். அவர் ‘தேவாரம் வேதசாரம்” “சைவ வேதாந்தம் என்ற இரண்டு நூல்களை எழுதினார். சைவ பக்தி இலக்கியமான தேவாரத்தை வேதச் சிமிழுக்குள்ளும் வேதாந்தத்திற்குள்ளும் அடைப்பதே அவரது நோக்கமாக இருந்தது.
(ஓலை 44 , 35)-

பக்தி இலக்கிய ஆய்வுகள்
தொ.பரமசிவம்
1916 டிசம்பரில் பிராமணரல்லாதோார் அறிக்கை (Non-Brahmin Manifesto) G66floubify mois LT6) செந்திநாதையர் வகையறா’ விற்கும் இரட்ச ணிய சேனை (Salvation Army) அமைப்பிற்கும் இடையே நடந்த எழுத்து மோதல் தமிழ்ச் சமூகத்தைப் படுகுழியில் தள்ளியிருக்கும்
இந்தக் காலப்பகுதியில் நமக்கு ஆறுதலைக் தருகிற நிகழ்வுகளாக இரண்டினைக் குறிப்பி டலாம். ஒன்று தான் இளவயதில் காலமாவதற்கு முன்னர் மனோன்மணியம் சுந்தரனார் திருஞான சம்பந்தரின் காலத்தினைக் கணித்து ஜே. எம். நல்லுசாமிப்பிள்ளை நடத்திய ‘சித்தாந்த தீபிகா’ என்னும் ஆங்கில இதழில் எழுதிய கட்டுரை யாகும். மற்றொன்று பாண்டித்துரைத் தேவர் 1904-ல் தொடங்கிய “செந்தமிழ்’ இதழில் இரா. இராகவையங்காரும் மு. இராகவையங்காரும் ஆசிரியராக இருந்தபோது வெளிவந்த சைவ, வைணவ, சமண, பெளத்த இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளாகும். இந்த இதழில் தமிழ்நாட்டு, ஈழத்து அறிஞர்களின் கட்டுரைகள் பல வெளிவந்தன. என்ன காரணத்தினாலோ 1925 - க்குப் பின்னர் தமிழ்நாட்டு - ஈழத்து அறிஞர்களின் கருத்தூடாட்டம் நின்று போயிற்று.
ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப் பின்னர் 1960களின் இறுதிப் பகுதியில் தமிழ்நாடு - ஈழ அறிவுலகத் தொடர்பைப் புதுப்பித்த நன்றிக்குரிய வர்கள் பேரா. க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகியோர் இருவரும்தான் ‘ஒன்றையே நோக்கிப் புக்கான்’ என்பதற்கு மாறாகச் சங்க இலக்கியம் தொடங்கிப் புதுமைப்பித்தன் வரையிலான தமிழிலக்கியப் பரப்பில் தங்கள் ஆய்வு முயற்சி களை உண்மையோடும் நேர்மையோடும் செய்திருக்கின்றனர். இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதல்வாதப் பின்னணியில் தமிழ் ஆய்வுலகிற்குப் புதிய வெளிச்சம் தந்தவர்கள் இவர்கள் ஆவர்.
வைகாசி , ஆனி : 2007
D

Page 43
தமிழ்ப் பக்தி இலக்கிய ஆய்வுகளிலும் இந்த இரண்டு அறிஞர்களும் முன்னடி எடுத்து வைத்தனர். கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாகச் சமய இதழ்கள் பல தமிழ்நாட்டில் வெளிவந்துள்ளன. ஆனாலும் தம் சமய சித்தாந்தத்தை ஆய்வுக்குட்படுத்தும் ஒரு நெறி தமிழ்நாட்டில் முளைவிடவில்லை. உயர்கல்வி நிறுவனங்களிலும் இந்த நிலை மிக அண்மைக் காலமாகத்தான் தொடங்கியுள்ளது. எனவே,
தமிழகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் வரலாற்றில் மதம் (அல்லத மதங்கள்) வகித்து வந்த இடம் பற்றிய ஆய்வுகள் அதிகம் இடம்பெறவில்லை. பேராசிரியர் நா.வானமாமலை, க.கைலாசபதி பேன்றவர்கள் (இந்நாலாசியர் உட்பட) சில சமூக மத
ஆய்வுகளைச் செய்திருந்தனர்
என்று தன்னையும் உட்படுத்திப் பேராசிரியர் கா.சிவத்தம்பி வருந்திக் கூறுவது உண்மையே யாகும். தங்கள் சமயம் குறித்தோ பிற சமயம் குறித்தோ பலர் எழுதிய எழுத்துக்களும் “விளக்கக் கட்டுரை” என்ற எல்லையினைத் தாண்டி வராமல் போய்விட்டன.
எனவே மார்க்சியச் சார்புடையவர்கள் என்று அறியப்பட்ட மேற்குறித்த பேராசிரியர் மூவருமே இந்தத் துறையில் முதலானவர்களாகக் கால் பதித்தனர். இந்த இடத்தில் மரபுவழித் தமிழ்ப் புலமை மற்றுமொரு கேள்வியினை முன்னெடு த்தது. ‘தெய்வ நம்பிக்கையில்லாத மார்க்சீய வாதிகள் எந்த வகையில் மதம்சார்ந்த பக்தி இலக்கிய ஆய்வுகளை முன்னெடுத்தனர்
(ஒலை 44 , 45 )
 

என்பதே அது. பேராசிரியர் சிவத்தம்பி அதற்கான விடையினையும் முன்வைக்கிறார்.
“நம்மிற் பலர் நினைப்பது போன்று மார்க்சியம் மதத்தை முற்றாக நிராகரிக்கவில்லை. மார்க்சியம் மதத்தக்கான (மெய்யியல்) எடுகோள்களை நிராகரிக்கின்றது. ஆனால் மதம்’ என்பது ஒரு முக்கியச் சமூக நிறுவனம்
என்பதை மார்க்சோ, ஏங்கல்சோ நிராகரிக்கவில்லை’
சமய இலக்கிய ஆய்வுகளைப் பொருத்தமட்டில் அவை தமிழ் நாட்டில் வளரவில்லையென்பது ஒரு வருந்தத்தகுந்த செய்தியே ஆனாலும் அதற்குரிய காரணங்களை நாம் கணித்தறிய வேண்டும். பகுத்தறிவு இயக்கத்தின் எழுச்சி அதற்கான ஒரு காரணம் என்பதை நாம் மறுக்க இயலாது. பேராசிரியர் அவர்களும் இக் காரணத்தைப் பதிவு செய்துள்ளார். அத்துடன்,
“திராவிட இயக்கங்களைச் சார்ந்தவர்கள் மாத்திர மல்லாமல் மார்க்சிய இயக்கங்களைச் சார்ந்தவர்களும் கூட இந்நிலையினராகவிருந்தனர் என்பதற்கு
3לל
உதாரணங்கள் உண்டு
என்றும் எழுதிச் செல்கிறார்.
பேராசிரியர் இவ்வாறு எழுதிய பின்னருங்கூட கோ.கேசவன், பொ.வேல்சாமி போன்ற ஒன்றிருவர் மட்டுமே இந்தத் துறைக்கு வந்துள்ளனர். பக்தி இலக்கியங்களை - அவை எந்த மதத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும் அவற்றை-இசைப் பாடல்களாக மட்டுமே தமிழர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அவை வழிபாட்டு உணர்வுடன் பாடவும், கேட்கவும் மட்டுமே பிறந்தவை என்பது அவர்களுடைய நினைப்பாகும். எனவே அவை இலக்கியமாகக் கருதப்பட்டு காலப் பின்னணியிலும் களப் பின்னணியிலும் ஆராயப்பட வேண்டியன என்ற உணர்வின்மையே ஆய்வுக்குத் தடையாகப் போய்விட்டது. பகுத்தறிவு இயக்கம் சற்றுத் தளர்ந்த பின்னரும் கூட இந்த உணர்வு தலையெடுக கவில்லை என்பதற்கு இதுவும் காரணமாகும்.
எல்லாச் சமயங்களும் தமிழ் மொழியைக் கொண்டாடுகின்ற போக்கினைச் சுட்டிக்காட்டுகின்ற பேராசிரியர் இதன்வழியாக,
-C வைகாசி , ஆனி : 2007 )

Page 44
“தமிழ்ப் பண்பாடு எனும் மொழிவழிக் கோட்பாடு (35TGörmigugsig (Language of Culture Concept) எடுப்பதற்கு காரணமாக அமைந்தது”
என்று சரியாகவே தன் பார்வையினை முன்நிறுத் துகின்றார்.
பேராசிரியருக்கு மட்டுமன்று, தமிழ்ப் பக்தி இயக்க ஆய்வாளர்கள் அனைவருக்கும் முன்னி ற்கும் மிகப்பெரிய தடை ஒன்றுண்டு அதாவது, 1925 - 1965 காலத்தில் தமிழ்நாட்டு ஆய்வாளர்க ளுக்கும் மிகச்சிறிய தூர இடை வெளியே இருந்தாலும் ஆய்வுலக உறவுகள் ஏதும் நிகழவே இல்லை. அதற்கு அடிப்படையான சமய ஊடாட்டங்களும் நிகழவில்லை. யாழ்ப் பாணத்துத் தமிழ்ச்சைவம் கத்தோலிக்கத்தை எதிர்கொண்ட முறை வேறு. தமிழ்நாட்டுக் கிறத்தவம், சைவத்தோடு கொண்ட உறவுநிலை வேறு. ஈழத்துக் கத்தோலிக்கர்கள் வீரமா முனிவரின் “பெரிய நாயகி’ என்னும் பேரிலமைந்த கன்னிமேரித் தெய்வத்தைத் தமிழ்நாட்டுச் சூழலில் உணரவில்லை. வைணவம் என்னும் மதம் குறித்து ஈழத்து ஆய்வாளர்களுக்குப் புரிந்கொள்ள வாய்ப்பே இல்லாமல் போயிற்று. ஈழத்தில் தமிழ்நாட்டு வைணவத்திற்கு வேர் எதுவும் இல்லை. எனவே ஆழ்வார்களின் பாசுரங்களும் அவற்றிற்கான உரை விளக்கங்களும் மணிப்பிரவாள நடையில் அமைந்த தத்துவ நூல்களும் அவற்றின் நிகழ்காலச் சடங்கியல் வாழ்வும் தமிழக எல்லையைத் தாண்டி வடக்குநோக்கிப் பாய்ந்த பின்னரும்கூட (கிருஷ்ணதேவராயரின் 'ஆமுக்த மால்யதா' ஆண்டாளைப் பாடும் தெலுங்கு நூலாகும்) ஈழத்தைச் சென்றடைய வில்லை.
“வைணவத்தின் தமிழலக்கியப் பாரம்பரியத்தை, அவ்விலக்கியப் பாரம்பரியத்தின் சமூகத்தளத்தை ஆயும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். ஆய்வுக் கட்டுரையாக வடிப்பதற்கான தயார் நிலை இன்னும்
ஏற்படவில்லை”
என்கிறார் பேராசிரியர்.
பேராசிரியரின் தயக்கத்தை நியாயப்படுத்தும் ஒரு சான்றினை இந்த இடத்தில் எடுத்துக்
(ஓலை 44 , T5)

காட்டலாம். ‘திருவாசகம் காட்டும் மணிவாசகர்’ என்னும் கட்டுரையில் “திருவாசகப் பாடல்களில் உணர்ச்சி வெளிப்பாடு இரு வகைப்பட்டு நிற்பதைக் காணலாம்.
(6. கற்பித்த உணர்ச்சி நிலையிற் பாடப் பெற்றவை හි%. தன்மை நிலையிற் பாடப் பெற்றவை
“கற்பித உணர்ச்சி நிலை அகத்துறையில் வரும் உணர்வு நிலைகளாம்’
என்று வகைப்படுத்துகிறார் பேராசிரியர். இந்த வகைப்பாடு சரியானதே.
பக்திப்பாடலை ஆக்கும் கவிஞன் எப்பொழுது தானாக நின்று பாடுகின்றான். எப்பொழுது பெண்ணாக (அன்புக்கு ஏங்கும் காதலியாக ! தாயாக) மாறிப்பாடுகின்றான் என்பது ஒரு அடிப்படையான கேள்வியாகும். நம்மாழ்வாரின் அகத்துறைப் பாசுரங்களை முன்னிறுத்திக்கொண்ட 14ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வைணவ உரை யாசிரியர் இந்தக் கேள்விக்கான விடையினை நமக்குத் தருகின்றார். அழகியமணவாளப் பெருமாள் நாயனார் என்ற வைணவ ஆசாரியார். "ஆசார்ய ஹருதயம்’ (மாறன் மனம்) என்ற தன்னுடைய, மணிப்பிரவாள நடையில் அமைந்த தத்துவநூலில்,
“ஞானத்தில் தன் பேச்சு பிரேமத்தில் பெண் பேச்சு”
என்று பகுத்துக் காட்டுகின்றார்.
அறிவு தலையெடுக்கும்போது கவிஞனின் பேச்சு ஆண் பேச்சாகவும், அன்பு பெருக்கெடுக்கும்போது பெண் பேச்சாகவும் அமைகின்றது என்பது எளிமையும் ஆழமும் சேர்ந்த விளக்கமாகும்.
வைணவத்தைக் குறித்துத் தயக்கத்தோடு பேசினாலும் தெளிவான முடிவாகப் பேராசிரியர் “சித்தா நீ தக் கொள் கைக்கு ஆதாரமாக அமைகின்ற சைவமரபினை நோக்கும்பொழுது, அதில் இராமானுசர் நிலைநிறுத்திய அளவு, சமூக நெகிழ்ச்சி காணப்படவில்லையெனினும், பிராமணியம் வற்புறுத்தும் வருணாசிரம தருமம் இறுக்கத்துடன் போற்றப்படவில்லை என்பது உண்மை” என்று கூறுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியும்.
வைகாசி , ஆனி : 2007 )

Page 45
தமிழ்ப் பண்பாட்டிற் கிறித்துவம் (ம.க.கட்டுரை எண்), தமிழிற் கிறித்தவ இலக்கியப் பாரம்பரியம் (ம.மானு கட்டுரை எண். 2) என்ற இரு கட்டுரை களும் தமிழ் ஆய்வுலகத்திற்குப் பேராசிரியர் தந்துள்ள பெரிய பங்களிப்பாகும். தமிழ் கிறித்துவ இலக்கிய ஆய்விற்கு இதனை அடிப்படையாகக் கொள்ளலாம். 18ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலிருந்து தமிழ்நாட்டுக் கிறித்தவர்கள் அம்மானை, வழிநடைச் சிந்து, கண்ணி, கும்மி, கீர்த்தனை ஆகிய சிற்றிலக்கிய வகைமைகளில் படைத்தளித்த நூற்றுக்கணக்கான இலக்கியங் களை காணவும், பேணவும், ஆராயவும் இந்த இரு கட்டுரைகளும் உந்துசத்தியாகும். இசுலா மியத் தமிழிலக்கியங்கள் பற்றிய ஆய்வுகள் மிக அண்மைக் காலமாகத் தமிழ்நாட்டில் ஊக்கத்துடன் முன்னெடுக் கப்படுகின்றன. இசுலாமியத் தமிழிலக்கியப் பாரம்பரியம் தொடக்க காலத்தில் நாட்டார் மரபுகளோடு உறவுகொண் டிருப்பதனைப் பேராசிரியர் மிக நுட்பமாகத் தன் கட்டுரையில் எடுத்துக் காட்டுகின்றார்.
கிறிஸ்தவம், இசுலாம் பற்றிய பேராசிரியரின் இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் இன்றைய தமிழ்நாட்டுச் சூழலில் மிகமிக அடிப்படைத் தேவையாகின்றன. ஏனென்றால் இவ்விரண்டு மதங்கள் குறித்த ஊடகப் பெருஞ் சொல்லாடல் களுக்கு இவை மாற்றாகவும், மருந்தாகவும் அமைகின்றன.
பேராசிரியரின் சமய இலக்கிய ஆய்வுகள் இன்ற ளவும் தமிழ்ச் சூழலில் இவ்வகை ஆய்வுகளின் போதாமையினையும் அவற்றின் தேவையினையும நமக்கு உணர்த்துகின்றன. இவற்றோடு சைவ, பக்தி இயக்கம் குறித்த பல நுட்பமான கேள்வி களைச் சிந்திக்கத் தூண்டுகின்றன.
“அருணகிரியாரின் பாடல்களில் காணப்படும் மிதமிஞ்சிய பாலியல் திளைப்பு எனும் அமிசமும் அவரை விளங்கிக் கொள்வதற்கு முக்கியமான ஒன்றாகும்.’
என்கிறார் பேராசிரியர். இசுலாமியப் படையெடுப் பினால் மிகச் சில காலம் கோயில்கள் நெருக் கடிக்கு உள்ளாயின. மூத்துப்போன தந்தைத் தெய்வத்தை விட்டுவிட்டு இளமையும் காதலும்
(ஓலை 44 , 25

வீரமும் நிறைந்த மகன் (முருகன்) தெய்வத்தை அன்றையச் சமூக உளவியல் விரும்பி நின்றதே காரணமாகும். இதனை மேலோட்டமாக, ஆனால் நுட்பமாகப் பதிவு செய்கிறார் பேராசிரியர்.
இவ்வகையான விளக்கங்களோடும் நமக்கு நிறையக் கேள்விகள் எஞ்சுகின்றன. திருமந்திரம் சாத்திர நூலா? தோத்திர நூலா? தேவாரப் பாடல்களுக்கும் திருவாசகப் பாடல்களுக்கும் ஆன சிந்தனைத்தளம் ஒன்றுதானா? தேவாரம் கட்ட விரும்பிய சைவமும், மெய்கண்டாரின் சித்தாந்த சைவமும் ஒரே அடிப்படையில் அமைந் தவைதாமா? வாலை, மனோன்மணி, பராபரை, சக்தி ஆகிய திருமந்திரச் சொல்லாடல்களை மட்டும் கலகமரபுச் சித்தர்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டனர் என்பனவெல்லாம் அவற்றில் சில.
பேராசிரியர் எழுதுவதற்கு முன்னரும் ஏன், பின்னரும்கூடப் பக்தி இலக்கிய ஆய்வுகள் மிக மிகக் குறைவே. ஒரு மிகப்பெரிய ஆடுகளம் ஆடுவாரின்றி வெற்றிடமாகக் கிடப்பதைப் பேராசி ரியர் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றார். இந்தச் சுட்டிக்காட்டலும் வழிகாட்டலுமே அவரது சமய ஆய்வுக் கட்டுரைகளின் பெரும் பங்களிப்பாகும்.
குறிப்புகள் 1) கா.சிவத்தம்பி, (மூன்றாம் பதிப்பு) முன்னுரை,
தமிழிலக்கியத்தில் மதமும் மானுடமும், ப. 14
2) மேலது., ப.17.
3) கா.சி., ‘இலக்கியமாகப் பக்திப்பாடல்கள் மதமும்
கவிதையும். (மக்கள் வெளியீடு), ப.90.
4) கா.சி., “தமிழ்ப் பண்பாட்டிற் கிறிஸ்தவம்’ மதமும்
கவிதையும், ப.67.
5) கா.சி., (முதற் பதிப்பு) முன்னுரை, தமிழ்.
மானுடமும், ப.35.
6) கா.சி., திருவாசகம் காட்டும் மணிவாசகர்,
மதமும் கவிதையும், ப.54
7) கா.சி., 'சைவசித்தாந்தம் - ஒரு சமூக வரலாற்று
நோக்கு, தமிழ் மானுடமும், ப.115.
8) கா.சி, தமிழின் இரண்டாவது பக்தியுகம்’
மதமும் கவிதையும், ப.39.
முனைவர் தொ.பரமசிவம்
தமிழ்ப்பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி.
-C வைகாசி , ஆனி : 2007 )

Page 46
ஒரு ஆசிரியர் எந்தப் பொருளுக்கு (பொருள் தேர்வு) எப்படிப்பட்ட தரவுகள் அடிப்படையில் (தரவுத்தேர்வு) இலக்கணம் எழுதியுள்ளார் என்று முதலில் பார்க்கவேண்டும். அடுத்து அவருடைய கால இலக்கியப் பின்னணி - அரசியல், சமூக பண்பாட்டுச் சூழல் ஆகியவற்றுக்கும் - அந்தக் கால இலக்கியத்துக்கும், இலக்கணத்துக்குமுள்ள உறவையும் ஆராயவேண்டும். அப்போதுதான் அவருடைய அறிவுணர்வையும் சமூகப்பண்பாட் டுணர்வையும் புரிந்துகொள்ளமுடியும்.
இங்கு இலக்கிய வரலாற்றின் ஆய்வில் ஏற்பட்ட முன்னேற்றம் இலக்கண வரலாற்றுக்கும் பொருந்தும் என்றே நினைக்க வேண்டி யிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இலக்கியம் பற்றிய நோக்கே காரணம். இலக்கியம் அது எழுதப்பட்ட காலச் சமூகப்பண்பாட்டுச் சூழலைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்ற கருத்தோடு அந்தமொழிச் சமூகத்தின் வரலாறு, சமூக பண்பாட்டுச் சூழலாலும் உருவாக்கப்படுகிறது என்ற கருத்தும் இப்போது வலியுறுத்தப்படுகின்றது. இந்தக் கருதுகோள் அடிப்படையில் இலக்கிய 6JJ6IOATOJ (History of Literature), 6däsafŝulgjöß6ÖT 6), 6 J6)T(0) (Liteary History) 966)gs (History in Literature) 6d3baŝuljögâ6ð 6J6IOATAMO என்ற இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது. (சிவத்தம்பி, 1988). அதுபோல மொழியிய லாளரும் அண்மைக்காலமாக இலக்கணத்துக்கும அது எழுந்த மொழிச் சமூகத்தின் வரலாற்று, பண்பாட்டுச் சூழலுக்கும் தொடர்பு இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
“பழையகால வடமொழி இலக்கண ஆசிரியர் களோ அல்லது பிறமொழி இலக்கண ஆசிரியர்களோ அவர்கால அரசியல், சமூக பண்பாட்டுச் சூனியத்தில் வாழ்வதில்லை, இலக்கணத்தின் பல பகுதிகள் இலக்கண
(ஒலை 44 , 45)

இலக்கண உருவாக்கம்
செ.வை.சண்முகம்
ஆசிரியர்கள் வாழ்ந்த காலத்து அரசியல், சமூகபண்பாட்டுச் சூழலில் வைத்துப்பார்த்தால்தான் புரிந்துகொள்ளமுடியும்’.
என்று தேஷ்பாண்டே (1979 xli) கருத்து எல்லா மொழி இலக்கண நூலுக்கும் பொருந்தும். அப்படியே மொழியியல் வரலாறும் சமூக வரலாற்றுக்கும் பயன்படும் என்பார் வாட்சன் (1981).
மொழியியல் வரலாறு என்பது மொழி நூலாருக்கு மட்டும் உரிய பொருள் அல்ல; அது சமூக வரலாற்றின் ஒரு முக்கியப் பகுதியாக அமையும்: (John Edwards 1985: 1. EJT6565(bbgol 61 (63.35 பட்டது) என்பார். எனவே, இலக்கிய வரலாற்றைப் போலவே இலக்கண வரலாற்றையும். இலக்கண வரலாறு, இலக்கணத்தின் வழிவரலாறு என்று இரண்டு நிலையில் நோக்கலாம். இந்த நோக்கில் பார்க்கும்போது பக்தி இலக்கிய காலத்தில் அகப்பொருளுக்கும் புறப்பொருளுக்குமே இலக் கணங்கள் எழுதப்பட்டது பழமைமீட்சி வாதமாகக் கருதாமல் சமூக நன்மைக்காகவும் எழுதப்பட்ட தாகக் கொள்ளலாம் என்பது புலனாகும்.
இலக்கண உருவாக்கத்தின் இன்னொரு பரிமாணம் நூலாக்கம். நூலாக்கம் என்பதை இலக்கணத்தைப் பொறுத்தவரையில் சூத்திரம், இயல், படலம் அல்லது அதிகாரம் என்று மூன்று கூறுகளால் ஆனதாகக் கொள்ளலாம். சூத்திரம் மிகச் சிறிய அலகு: சூத்திரங்களால் ஆனது இயல், இயல்களால் ஆனது படலம் அல்லது அதிகாரம்.
சூத்திரம் செய்வதிலும் இயல், அதிகாரம் ஆகியவை அமைப்பதிலும் ஆசிரியருடைய அறிவுணர்வோடு மொழி உணர்வும் புதைந்திருக்கும்.
சிவத்தம்பி (1982 50 தொ.) வினைக்குத் தொல்காப்பியரும் பவணந்தியாரும் கொடுத்த வரைவிலக் கணங்கள் சமூக உணர்வின் வெளிப்பாடு என்று விளக்கியுள்ளார்.
-( வைகாசி , ஆனி : 2007 )

Page 47
தொல்காப்பியர் (சூ 683) வினைச்சொல் வேற்றுமை உருபை ஏற்காது கால விருத்தியோடு தோன்று பவை என்றும் நன்னுாலார் செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செயப்படுபொருள் ஆகிய ஆறு பொருளையும் தருவது வினை என்றும் (சூ. 3.20) விளக்கியுள்ளார்கள். இந்த வரைவிலக்கணத்தைச் சமூகவியல் நோக்கில் சிவத்தம்பி விளக்குவதைப் பார்ப்பதற்கு முன்னால் மொழியியல் நோக்கிலும் எப்படி மாறுபட்டது என்பதைப் பார்ப்போம்.
தொல்காப்பியரின் வரைவிலக்கணம் சொல்லியல் நோக்கில் அடுக்குநிலை உறவு அடிப்படையில் (Paraddigmatic relation) 960LD55gs 616 pub நன்நூலாரின் இலக்கணம் தொடரியல் நோக்கில் Gg5T LÄTÉ660d6M) SD 06) (Syntagmatic relation) அடிப்படையில் அமைந்தது. இருந்தாலும் தொல்காப்பியரே “தொழில் முதனிலை” என்ற இதே கருத்தை வேற்றுமை மயங்கியலில் விளக்கியுள்ளார் (விளக்கத் துக்கு சண்முகம், 1992, பார்க்கவும்), அதாவது நன் நூலார் கூறும் கருத்து தொல்காப்பியருக்குத் தெரிந்தது தான். ஆனால் அதை வரை விலக்கணமாகக் கூறவில்லை. மேலும் இரண்டு வரைவிலக் கணமும் துணைநிலையானது. (Complementary) சிவத்தம்பியின் விளக்கம் (ப. 50. தொ). வருமாறு.
“செயல் பற்றிப் பிறப்பதை வினையென்றும், பொருளின் தன்மை சுட்டி வருவதைக் குறிப்பு என்றும் இவை இரணி டும் வினைச் சொலி என்றும் தொல காப்பியர் கொண்டிருக்கிறார் போலத் தெரிகிறது. தொல்காப்பியர் குறிப்பு வினை என்னாது
“குறிப்பு” என்று சொல்வதை நோக் கலி வேணி டும் . இதனைக் கூர்ந்து நோக்கும்போது “குறிப்பு என்பதன் மூலம் தொல்காப்பியர் ஆகி நிற்குப் நிலையினைக் குறிக்கின்றார். அதனைச செயல் போன்ற வினைத்தன்மை உடைய
தாகக் கூறுகிறார் என்பதும் தெரியவருகிறது
ஒலை 44 , 45
 

இங்கு (நன்னூலில்) காலத்தை வெளிப்படை யாகக் காட்டுவனவும், குறிப்பாகக் காட்டுவனவும் என்ற பாகுபாடே என்று எடுத்துக் கூறப்படு கினிறது. பிற் காலத்தில் வினைமுதலுக்கு அதாவது தொழிலை செய்பவனுக்கே அழுத்தம் கொடுக்கும் வகையில் விளக்கம் அமைந்திருக் கின்றது.
முந்தைய நிலையில் “சாதனை” அல்லது செயலி நிலை பெரிதும் வற்புறுத் தம் பட பிற் காலத்தில செயலி , செய்பவனோடு
இணைத்து நோக்கப்படு வதைக் காணலாம்.
உற்பத்தி முறைமைகளும் அதன் காரணமாக தொழில் உழைப்பு முறைமைகளும் ஊதிய முறைமைகளும் சமுதாய அமைப்பு மாற மாற வினைகளின் தன்மையும் அவை இயற்றப் படும் முறைமையும் மாறுவது இயல்பே. இம்மாற்றம் காரண மாக வினைப் பொருள் உணர்தி தப்படுகிறது. இதனால் வினைச் சொற்கள் படிப்படியாக மாறத் தொடங்குகின்றன”.
என்பது அவரது வாசகம், இது மார்க்சிய பார்வையில் தரப்பட்ட விளக்கம். மொழிமாற்றம், இலக்கண விளக்க மாற்றம் ஆகியவை சமூக மாற்றத்தை ஒரு வகையில் பிரதிபலிப்பவை என்பதுதான் இங்கு நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது.
இயல் அமைப்பு, இயல்களின் வரிசை, ஆகியவை களிலும் சமூக உணர்வு அடங்கியுள்ளது. இலக் கணம் யாருக் கு எழுதப்பட்டுள்ளது என்பதும் இயல் மாற்றத்திற்கு ஒரு காரணமாக அமையும். தமிழ் இலக்கணங்களில் தமிழர் எழுதிய இலக்கணத்துக்கும் வெளிநாட்டவர் (வீரமா முனிவர்) எழுதிய இலக்கணத்துக்கும் எழுத்ததிகார இயல் வைப்பு ஒரு பெரிய மாறுபாடு காணப் படுகிறது. (சண்முகம் 1980). முன்னவர்கள் பிறப்பியலை எழுத்ததிகாரத்துக்குள் இடைப் பகுதியில் -( வைகாசி , ஆனி : 2007 )

Page 48
வைக்கவும் பின்னவர் எழுத்ததி காரத்தின் முதல் இயலாக வைத்துள்ளார். இந்த வேறுபாடு தொல்காப்பியம் முதலிய இலக்கணம் தாய் மொழியாளர்களுக்கு எழுதப்பட்டவை, தொன்னுரல் விளக்கம் பிறநாட்டவருக்கு பிறநாட்டவரால் எழுதப் பட்டது என்ற உணர் மை யைப் புலப்படுத்துகிறது.
பொருளதிகார வளர்ச்சி பற்றிமேலே ஓரளவு விளக்கப்பட்டது. அங்கு யாப்பியலுக்குள் பாட்டியலை அடக்கும் முறையும் பாட்டியலு க்குத் தனி இடம் கொடுக்கும் முறையும் காணப்படுவது சுட்டிக் காட்டபட்டது. இது அவரவர்கள் அறிவுணர்வும், ஓரளவு சமூக உணர்வும் அதாவது புதிய இலக்கிய வகைக்குக் கொடுக் கும் முக்கியத் துவ உணர்வும் புதைந்துள்ளதைப் புலப்படுத்துகிறது.
இலக்கணத்தைப் பொறுத்தவரையில் கலைச் சொல்லாக்கும் முறையும் இலக்கண ஆசிரியர் களின் இலக்கணக் கோட்பாட்டைப் புலப்படுத்த வல்லது. புதிய சொற்கள் படைப்பது புதிய அறிவு வளர்ச்சியைக் காட்டும் என்பது மேலே காட்டப்பட்டது. அதற்கேற்ப இலக்கணக் கலைச் சொற்களின் வளர்ச்சியை ஆராயலாம்.
நன்னூலார் சொல்லியல் ஆய்வைத் தீவிரமாகக் கொண்டதால் “பதவியல்’ என்ற புதிய இயல் அமைத்தார். அங்கு பகுபதம், பகாப்பதம், பகுதி, விகுதி என்ற புதிய கலைச்சொற்களைப் படைத்தே தனி னுடைய கருத்துகளை விளக்கியுள்ளார். அப்படியே தொல்காப்பியர் ஒரு வினையடியாகப் பிறந்த வந்தவன், வருபவன், வரவு, வருதல் போன்ற சொற்களையெல்லாம் தொழிற்பெயர் என்றே குறிப்பிட்டுச் சொல்கிறார். ஆனால் நன்நூலாரோ வந்தவன், வருபவன் போன்றவைகளை வினையாலணையும் பெயர் என்றும் ஏனையவைகளைத் தொழிற்பெயர் என்றும் குறிப்பிடுகிறார். ஏனெனில் இரண்டுக்கும் சொல் லமைப் பிலும் செயற்பாட்டிலும் வித்தியாசம் இருக்கிறது.
அதே சமயத்தில் ஒரு பொருளைக் குறிக்கும் கலைச்சொல்லின் பொருளும் இலக்கணக்
(osos 44 , 45)

கோட்பாட்டைப் புலப்படுத்தவல்லது என்பது சுட்டிக்காட்டத் தகுந்தது. தொல் காப்பியர் “மொழிபுணர் இயல்பு’ (887) என்று கூறிய கருத்தையோ நன்நூலார் ‘பொருள்கோள்’ என்று கூறியிருக்கிறார் என்பது சரிதான். ஆனால் அந்தக் கலைச் சொல் இலக் கணக் கோட்பாட்டில் வேறுபாட்டையும் எண்ணிக்கையில் வேறுபாட் டையும் ஏற்படுத்தியுள்ளது.
“மொழிபுணர் இயல்பு’ என்பது தொடரியல் நோக்குடையது. அதாவது தொடரியல் மூலமே நாம் பொருளைப் புரிந்துகொள்கிறோம் என்பது கருத்து. மொழி அமைப்பில் தொடரியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து தொடரியலை உரைப்படுத்துவதன் மூலம் (Intepretation) பொருள் விளங்குகிறது என்பது உண்மை. இப்படிப்பட்ட பொருண்மையில் விளக்கப் பொருண்மையியல் (Interpretative Semantics) 6T60TLIGLib LDTDITE பொருளே முக்கியமானது. அந்தப் பொருள் எப்படி தொடரியல் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது என்பது இன்னொரு வகை. இது பொருண்மை ujuu6) (Generative Sematics) 6T6 O 960.pdabiu டுகிறது.
“மொழியுணர் இயல்பு’ என்பது விளக்கமுறை பொருண்மையியலையும் ஒத்துள்ளது. பொருள் கோள்’ என்பது உற்பத்திப் பொருண்மையிய லையும் ஒத்துள்ளது. இதற்கு ஏற்ப இயல்பான தொடரியல் அமைப்பு உடைய கிளவியின் பொருள் விளக்கம் தொல்காப்பியரால் தனிவகை யாகக் கருதப்படவில்லை. நன்நூலாரோ “யாற்று நீர் (ஆற்றொழுக்கு) என்ற புதிய பொருள் கோளைக் குறிப்பிட்டுள்ளார். பொருளே முக்கியத்துவம் பெறும்போது அது எப்படி யெல்லாம் தொடர் அமைப்பில் வெளிப்படும் என்று விளக்கவேண்டியிருப்பதால் ஆற்றொழுக்கும் ஒருவகையாகக் கருதவேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. (செ.வை.சணி முகம் எழுதிய இலக் கண உருவாக்கம் என்னும் நூலிலிருந்து).
முனைவர் செ.வை.சண்முகம்
முன்னாள் பேராசிரியர், மொழியியலாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
-C வைகாசி , ஆனி : 2007 )

Page 49
“இலக்கியம் என்பதும் வெறும் கருத்துக் கோன கருத்தாழமற்ற ஆனால் கலையழகுள்ள ஓர் கலையழகற்ற கருத்தாழமுள்ள ஆக்கம் இலக்கி இருந்தே கலை இலக்கியத்தில் அழகியல் வா செல்வாக்குச் செலுத்தும் எழுத்தாற்றல் பெற்று
இவர்க்கு முன்பிருந்த மார்க்சியத் திறனாய கோட்பாடுகளுள் ஒன்றாகக் கொள்ளப்படும் அ இலக்கியங்கள் மேல்தளத்தைச் சார்ந்தவை என உறவுகளைச் சார்ந்து வாழ்பவை என்றும் க இலக்கியங்கள் பொருளாதார உறவையே ச வளர்ச்சிப்போக்கில், ஒன்றையொன்று பாதித்து விளங்குகின்றன என்றும் விளக்கினர். கார்த்திகேசு கலை இலக்கியங்கள், தங்களுக்காகத் தனியே இ விளங்குகின்றன என்று கலை இலக்கியங்களு வகையில் கா.சிவத்தம்பியின் மார்க்சியத் திறன மார்க்சியச் சார்பாளர்தான் கல்வியாளர்தான் எ கலை இலக்கியப் பிரச்சினைகளைக் குழுவாத இவரால் விவாதிக்க முடிந்திருக்கிறது. காழ் வேறுபாடுகளை விவாதத்தின் அடிப்படையில் பு எல்லாவற்றிற்கும் மார்க்சியத்தில் தீர்ப்பு இருக்க கவனமாக இலக்கிய உலகத்திற்குள் நடமாடத் ெ தோற்றமும் வளர்ச்சியும்’, ‘நாவலும் வாழ்க்கை திறனாய்வு நூல்களில் “திறனாய்வுப் புலமை’ தி.சு.நடராசன், கைலாசபதியை ஆய்வுநெறித்
ஆனால் அத்தகைய திறனாய்வாளராகத் சிவ இலக்கியப் புலமையும் ஒன்றிணைந்து இயங்கு
தமிழ் இலக்கியத்தில் தவறுவதை எடுத்து பெண்மைக் கோட்பாட்டையே, தமிழ் நாவல் நாவல் படைத்துள்ளனர் என்று தமிழ்ப் பெண் கூறும்போதும்93 சிவத்தம்பியின் திறனாய்வுப் சமூகத் தேவையுடனும், தற்காலச் சமூக அை அவர் காட்டியுள்ள தனிக்கவனம் அவர் எழுத் (தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு எனும் நூல
(ஓலை 44 , 石5丁)

தமிழிலக்கியத் திறனாய்வு
வரலாறு
க.பஞ்சாங்கம்
வயன்று. அது அழகுணர்ச்சியுடன் சம்பந்தப்பட்டது. ஆக்கம் இலக்கியமாகக் கருதப்படலாம். ஆனால் பமாகாது என்று மார்க்சிய இலக்கிய வட்டாரத்தில் தத்திற்கு அழுத்தம் தந்து பேசியவர்களுள், நின்று |ள்ள கார்த்திகேசு சிவத்தம்பி ஒருவர் ஆவார்.
ப்வாளர் பலரும் மார்க்சியத்தின் அடிப்படைக் டித்தளம் - மேல்தளம் என்ற கோட்பாட்டில், கலை வும், அடித்தளமான சமூகப் பொருளாதார உற்பத்தி ருதினார். இன்னும் சிலர், தொடக்கத்தில் கலை ார்ந்து நின்றன என்றாலும், சமூக வரலாற்றின் து இயங்கக்கூடிய இயங்கியல் உறவு கொண்டு சிவத்தம்பி, நுட்மான், தமிழவன், ஞானி முதலியோர், யங்குகின்ற உள்ளார்ந்த கலை விதிகளைக்கொண்டு நக்குத் தனிப்பெரும் இடத்தை வழங்கினர். இந்த ாய்வு தனித் தன்மையுடன் விளங்குகிறது. இவரும் ன்றாலும் மேற்கண்ட பார்வைமாற்றம் காரணமாகக் தத்திற்கு அரசியல் சார்பிற்கு - அப்பால் நின்றும் ப்புணர்வற்ற திறந்த மனோபாவத்துடன் கருத்து ரிந்துகொள்ள முயலும் பக்குவம் வெளிப்படுகிறது. கிறது என்ற நிறுவனப் பார்வை இல்லாமல், மிகவும் தரிந்திருப்பதால், இவருடைய “தமிழில் சிறுகதையின் 5யும்”, “இலக்கியமும் கருத்து நிலையும்” முதலிய என ஒன்று வெளிப்படுவதைக் காண முடிகிறது. gp60TTul6hT6Tir (Scholar critic) 6T601& Jill (63 pts. த்தம்பியைத்தான் சுட்டவேண்டும். கல்வி அறிவும் கின்றன இவர் எழுத்தில்.
க்காட்டும் போதும், ஆண்மை, இலக்கியமயப்படுத்திய ஆசிரியைகளும் தமது கோட்பாடாகக் கொண்டு எழுத்தாளர்கள் படைப்பின் சாரத்தை மதிப்பிட்டுக் புலமை புலனாகிறது. திறனாய்வைத் தற்காலச் மப்பின் குணத்துடனும் இணைத்து விளக்குவதில் திற்குத் திறனாய்வுப் புலமையைச் சேர்க்கின்றது. பிலிருந்து)
முனைவர். க.பஞ்சாங்கம்
தமிழிப்பேராசிரியர் பாண்டிச்சேரி -( வைகாசி , ஆனி : 2007 )

Page 50
சிறப்பு ஆய்வாளர் டாக்டர் சிவத்தம்பி பல தலைப்புக்களில் அறிஞர் கருத்தையறியும் தருத்தரங்கிற்குப் பதிலாக தமது கருத்தைப் பிற அறிஞர் மதிப்பீடு செய்யும் கருத்தரங்கு ஒன்றால் தமது சிந்தனைகளைத் தெளிவாக்க இருக்கிறார். இலக்கிய வரலாறு, வரலாற்றி லக்கிடம் ஆகிய கருத்துச்களை அவர் தேளிவா க்கும் போது பார்வையாளர் சிந்தனையை ஒரு முகப்படுத்துவதோ அல்லது பிறழச் செய்வதோ என் நோக்கமன்று. ஆனால் கருத்தரங்கின் முதற்பொருளோடு தொடர்புடைய ஒன்றிரண்டு கதிர்களை மட்டும் நான் சுட்ட விரும்புகிறேன்.
உலக மொழிகளில் கிரேக்க இலக்கியம் மிகப் பழமையானது. கி.மு 1600 முதல் என்று கனக் கிடப்பட்டுள்ளது. அதனை அடுத்து இலத்தின் இலக்கியம், இதில் கிரேக்க அம்சங்கள் பல கலந்துள்ளன. இவை ஏறத்தாழ கி.மு. நாநூறு ஆண்டுகளுக்கு முன்தோற்றம் பெற்றன. இந்தோ ஈரானிய இலக்கியமாகிய ஆவணப்தா ஏறத்தாழ கி.மு. 1600 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது என்பர். தமிழ்ச்சங்க இலக்கியம் கி.மு. இரணி டTம் நூற்றாண்டு முதல் துவங்கியது எனக் கூறுவதற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன.
இந்த ஐந்து மொழி இலக்கியங்களிலும் மூன்று வகையான படைப்புக்கள் இடம் பெற்றுள்ளன. (1) தனிக் கவிகள் செப்த படைப்புக்கள்: ஹோமர் , வியாசர் , சரத் துதிர் ரஷ் டா (அவனப்தாவின் ஆசிரியர்} . இளங்கோ இவர்கள் தனி மனிதக் கவிகள். (?) சமுதாயத்தின் பல நிலைகளில் வாழ்ந்த கவிஞர்கள் கூட்டாகவோ அல்லது பலர் செய்ததைத் தொகையாகவோ செப்த தனி மனித சமூகக் கவிதை, (3) பாடியவர்கள் பெயர் அறியப்படாத சமுதாயக் கவிதைகள் - நாட்டுப் பாடல்கள், இது மூன்றாவது பிரிவைச்சாரும்,
எல்லா இலக்கியப் படைப்புக்களின் தொடக்கம் சமுதாயக் கவிதைகள் - நாட்டுப் பாடல்கள்
is , 45H

49 இலக்கிய வரலாற்றுக்கு ஒரு தவக்கவுரை
வி. அப்.சுப்பிரமணியம்
என்று சொல்ல இயலாது. ஏனெனில் ரிக்குவேதம் போன்றவை, படித்த மத குருக்கள் நெட்டுருச் செய்த மந்திரங்கள் ஆகும். ரிக்கு வேதத்தின் எட்டு மண்டப்ங்களில் இரண்டாவது மண்டலம் முதல் ஏழாவது வரை தனித்தனி ரிஷிகளோ அல்லது ரிஷிக் குடும்பங்களோ தோற்றுவித்து மனப்பாடம் செய்து வந்தனவற்றைப் பின்னர் தொகுத்ததாக ஆய்வாளர் கூறுகின்றனர். எனவே படித்த பு)ே 1 கிதர் களிற் சிலர் செயத முதலிலக்கியம் என்று ரிக்கு வேதத்தைக்கூற இயலும்,
கிரேக்க இலக்கியம் துவக்கத்தில் சமூக இலக்கியமாக, பின்னர் ஹோமர் முதலிய தனி புனிதக் கவிஞர்களால் ஆரம்பித் து பெருங்காப்பியமாக்கப்பட்டது. சமுதாயக் கவிதை தனியார் கவிதையாக பின்னர் உருப்பெற்றது.
இலத்தினில் தனியார் படைப்புக்கள் தாம் ஆரம்ப முதலே தலை தூக்கி நின்றன, எல்லா கிரேக்க, இலத்தின் இலக்கியங்களிலும் செய்யுளும், உரை நடையுமுன்டு. வேதங்களில் ஒன்றான யசுர் வேதம் உரைநடை கலந்தது. ஏனையவை பாவுருவில் அமைந்துள்ளன. சரத்துதிர்ஸ்டா செய்த அவுஸ்தா ITவுருப்பெற்ற உரை நடையால் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழர்களின் சங்க இலக்கிங்கள் பாவுருவில் ஏறத்தாழ 449 புலவர்கள் 150 வருடங்களாகப் புனைந்த கவிதைத் தொகுப்பின் கூட்டமாகும். அவர்கள் அனைவரும் சமுதாயத்தின் பலப் நிலையைச் சார்ந்தவர்கள், பல தொழில் செய்து வாழ்ந்த புலவர்கள், அரசர்களும் வணிகர்களும் உழவர்களும், சோதிடர்களும், ஆடவரும் பெண்டிரும் சங்க இலக்கியப் புலவர்களாக இருந்திருக்கின்றனர்.
சங்க இலக்கியத்தின் அடித்தளம் நாட்டுப் ாடல்களாக இருந்திருக்கலாம் என்று ஊகிக்கி ன்றவர்கள் சிலர் உண்டு. ஆனால் நாட்டுப்பாடல் 5ளில் காணப்படும் வட்டார மேழி வேற்றுமையும்,
-( வைகாசி ஆணி" 2007 )

Page 51
தொழிற்பாடல்களும் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. இதை நாம் மறந்துவிடலாகாது.
மொழி தரம் பெறுவது எழுத்துருவால். கிரேக்க இலக்கியம் எழுத்துருவால் தரம் பெற்றது. மனப்பாடம் செய்து தரம்பெறுவது மற்றொரு முறை. இம் முறையால் ரிக்கு முதலிய வேதங்கள் தரப்பட்டன. உச்சாரணப் பிசகு ஒரு குழுந்தையைக் கொலை செய்வது போன்றது என்று கருதினர். எனவே எழுத்துரு, மத ஈடுபாட்டால் மனப்பாடம் ஆகிய தரம்பெறும் இரண்டு முறைகளில் கிரேக்கர்கள் பின்பற்றிய முதல் நெறியைத் தமிழர் பின்பற்றியிருக்க வேண்டும். ஆனால் கிரேக்க இலக்கியங்கள் ஒன்றிரண்டு மையங்களில் மட்டும் உருவெடுத் தவை. தமிழகத்தின் பல மூலை முடுக்குகளி லிருந்தெல்லாம் இன்றுள்ள கேரளம், தென் கர்நாடகம், ஆந்திரப் பிரதேசத்திலுள்ள நெல்லூர் வரையிலும் பரவியிருந்த புலவர்கள் மொழி நிலையில் குறைந்த அளவே வேறுபாடு களுடன் பாடியிருக்கின்றனர். பல தொழில் செய்வோர், பல சாதியினர், ஆண்பாலர், பெண்பாலர், குழந்தைகள், முதியவர்கள் அனைவரும் தரமான தமிழ் நடையில் பாடியிருப்பது உலக விந்தைகளில் ஒன்று என்று கூறத் தோனறுகின்றது.
போக்கு வரவு வசதிகள் குறைந்த காலத்தில் இந்த தரமான கவிதை அகன்ற நிலப்பரப்பில் உருவெடுத்திருக்கின்றது. மொழி இவ்வாறு தரப்படுத்தற்கு சங்கங்களாகப் புலவர் கூடிய ஆய்ந்தது ஒரு காரணமாக இருக்கலாம். சிந்து நதி முதல் கங்கை வரை - அதாவது லஷ்மணபுரி முதல் கல்கத்தா வரை சமஸ்கிருதம் தரப்படுவதற்கு மதச்சார்பும், புனிதத்தன்மையும் காரணங்களாக இருந்தன. ஆனால் சங்க இலக் கியம் மதச்சார்பற்றது. ஒரு கூட்டத்தினருக்கு மட்டும் உரித்தானது அன்று. எனவே சங்க அமைப்பும் எழுத்துருவும் தமிழ் இலக்கியத் திற்குக் காரணமாக அமைந்தன என்று ஊகிக்க இயலும். தனிமனித சமுதாயத்தின் படைப்பு சங்க இலக்கியம் என்பதையும் மறந்து விடலாகாது.
மார்க்சியக் கொள்கை இந்த நூற்றாண்டில் தலை தூக்கியதும் சோவியத் இரஷ்யாவில் மார்க்சீய சிந்தனை அடிப்படையில் அரசு உருவானது. இதன் விளைவாக மக்கள் சமுதாய ஆய்வு வரலாற்றிலும், இலக்கிய
ஒலை 44 , 45)

படைப்புக்களிலும், மொழியிலும் முக்கிய இடம்பெற்றது. சமுதாய மொழியியல் முதலில் உருப்பெற்றது அமெரிக்காவில் அன்று, சோவியத் நாடுகளில் என்பதை மொழியிய லாளர் அறிவார்கள். அலிகட்டுப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியார் ஹபீப் தலைமையில் புதுமை 6) Jourt bp Taffluijab6ft 3in Llb (NeO-historians) அரசர் வரலாற்றையும், போர் நிகழ்ச்சி களையும் ஆராயாது மக்கள் சமுதாய முன்னேற் றத்தை மாறுபாட்டை, பரிணாமத்தை ஆராய முற்பட்டதும் பல வரலாற்றாசிரியர்களை உருவாக் கியதும் மார்க்சிய சிந்தனையின் விளைவாகும்.
ஒப்பிலக்கணத்தின் தந்தையாகிய கிரிம் (Grimm) பேச்சுவழக்கை மொழியாய்விற்கு முதன்முதலில் பயன்படுத்தினார். இலக்கிய வழக்கை அவர் கண்ட முடிவுகளை உறுதிசெய்யப் பயன்படுத்தினார். அவருடைய உடன்பிறப்பிறப்பாளர் மக்கள் இலக்கியத்தைப் பத்தொன்பதால் நூற்றாண்டில், ஜெர்மனியில் திரட்டினார். அதன் விளைவாக ஐரோப்பா முழுவதிலும் மக்கள் இலக்கியத்தைத் திரட்டும் இயக்கம் பரவியது. சமுதாயத்தை இந்த படைப்புக்களிலிருந்து அறியும் ஆழந்த ஆய்வு மார்க்சிய சிந்தனையால் ஐரோப்பாவில் முதலிலும், பின்னர் ஏனைய நாடுகளிலும் பரவின.
இதனால் தனிமனித காவியத்தில் காணும் உயர்வு நவிற்சி, உருத்திரிபு, மறைவு முதலியவற்றை நீக்கி, சமுதாய இலக்கியத்தில் காணும் உண்மையான மனித இயல்புகள் வரையறை பெற்றன. இலக்கிய அடிப்படையில் காணப்பட்ட சமுக இயலைவிட நாட்டுப் பாடல்களில் காணும் சமூக இயல் நம்பகமானதாக மதிப்பிடப்பெற்றது. சங்க இலக்கியங்கள் தனிமனித சமூக இலக்கியமாகையால் அவற்றிற் காணும் தனிமனித இயல்புக ளும், சமுதாய வர்ணனைகளும் உயர்வு நவிற்சி இன்றி பிற இலக்கியங்களைவிட உண்மைத தெளிவுடன் படித்தற்குத் துணை நிற்கின்றன.
டாக்டர் சிவத்தம்பி தனிமனிதர், தனிமனித சமுதாயம் , சமுதாயம் ஆகிய மூன்று நிலைகளிலும் வரலாற்றைப் பார்க்கிறார் என்று நம்புகிறேன். அதற்கு என் துவக்கவுரை அனுசரணையாக இருக்கும் என்றும் கருதுகிறேன்.
முனைவர். வி.அய்.சுப்பிரமணியம் முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்
—( வைகாசி , ஆனி : 2007 )

Page 52
நினைவுகளில் பேராசிரியர்
தமிழ் ஆய்வுலகம் இன்று தன்னி டையே வாழும் அதன் தலை மகனுக்குத் தன் மரியாதையையும், அன்பையும், நன்றிகளையும் தெரிவிக்கும் ஒரு திருவிழா போல இரண்டு நாட்களாக இந்நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆய்ாளர்கள் மட்டுமன்றி பேராசிரியரின் குடும்பத்தினர், மாணவர்கள், நண்பர்கள் என்பதாகத் திரண்டுள்ள இவ்வரங்கில் பேராசிரியருக்கும் எனக்குமான சில தனிப்பட்ட நெருக்கங்களைப் பகிர்ந்து கொள்ளாதிருக்க இயலவில்லை. வகுப்பறையில் நான் அவரிடம் கேட்டவனில்லை யாயினும் தஞ்சைத் தமிழ்ப் பல்கைைலக் கழகத்தில் ஆய்வுப் பணிக்காக அவர் வந்திருந்த ஆறு மாத காலமும் கிட்டத்தட்ட ஒரு குருகுல வாசம் போலப் பழகிய அனுபவம் எனக்குண்டு. ‘பாரதி மறைவு முதல் மகாகவி வரை’ எனும் நூலை அவருடன் இணைந்து எழுதும் வாய்ப்பும் எனக்கு கிட்டியது. அநேகமாக இத்தகைய வாய்ப்பு எனக்கு மட்டுமே கிட்டிய ஒன்று என்றே கருதுகிறேன். தரவுகளைச் சேகரித்தல், தொகுத்தல், பகுப்பாய்வு செய்தல், இறுக்கமாக எழுதுதல், செப்பம் செய்தல் என்கிற நூலெழுது முறைனையினை நான் அறிந்து சொல்வதற்கு அவ்வனுபவம் பேருதவியாக அமைந்தது. ரஷிய வழி மார்க்சிய நூற்கள், கிறிஸ்டபர் காட்வெல், ஜார்ஜ் லூகாக்ஸ் ஆகியவற்றோடு நின்றிருந்த
(ஓலை 44 , 45)ー
 

பேராசிரியர் சிவத்தம்பியும் நவ சிந்தனைகளும்
அ.மார்க்ஸ்
எங்கள் படிப்பை விசாலப்படுத்தியது அவருடைய நட்பு குறிப்பாக டெர்ரி ஈகிள்டன், ரேமன்ட்வில்லியமஸ் ஆகியோரின் எழுத்துக்கள் அவர் மூலம் பரிச்சயமாயிற்று.
தஞ்சையிலுள்ள சரபோஜி மன்னர் காலத்திய சத்திரங்களை நிர்வகிக்கும் அரசுத்துறை நடத்துகிற ராஜா ரெஸ்ட் ஹவுஸ்’ எனும் ஒரு எளிய விடுதியில் தங்கியிருந்த பேராசிரியரைத் தினசரி கல்லூரி முடிந்தவுடன் நேராகச் சென்று சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நண்பர் வேல்சாமி கடையை மூடிவிட்டு இரவு எட்டு மணி போல வருவார். பேசிக்கொண்டே இருப்போம். இடையில் வெளியே சென்று ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, தஞ்சை வீதிகளில் வண்டிகளில் விற்கும் வாழைப்பழத்தை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு, பேரூந்து நிலையத்தை ஒட்டி எப்போதும் ஒலி பெருக்கியில் ஒலித்துக் கொண்டிருக்கும் லாட்டரிச் சீட்டு விளம்பரத்தை ரசித்துக் கொண்டே அறைக்கு வருவோம். நல்ல சிலோன் தேயிலை வைத்திருப்பாா பேராசிரியர். பாலில்லாமல் தேநீர் அருந்துவதும் எங்களுக்குப் பழக்கமாயிற்று.
புலமை சார்ந்த விடையங்கள் தவிர வேறு சில உயர் பண்புகளையும் நாங்கள் அவரிடமிருந்து கற்றுக் கொண்டோம். இடதுசாரிக் கட்சிகளுடன் அடையாளம் காணப்பட்ட அவரைச் சந்திக்கவென கிராமப் பகுதிகளிலிருந்து சில நேரங்களில்
-C வைகாசி , ஆனி : 2007 )

Page 53
கட்சித் தோழர்கள் கூட வருவர். எந்நேரமா யினும், எத்தனை முக்கிய வேலை இருந்த போதிலும் அவர்களுடன் நீண்ட நேரம் g) i 60DUTuLITL59 மகிழ்வார் பேராசிரியர். அவர்களிடம் சொல்வதற்கு மட்டுமின்றி அவர்களிடமிருந்து அறிந்து கொள்வதற்கும் பேராசிரியருக்குச் செய்திகள் இருக்கும்.
பேராசிரியர் தஞ்சையில் இருந்த காலத்தில் தான் எங்களுக்கு இன்னொரு முக்கிய நட்பும் வாய்த்தது. தோழர் டானியல் அவர்களும் "பஞ்சமர் நூல் வெளியீட்டிற்காக அதே நேரத்தில தஞ்சையில் தங்கியிருந்தார். அரசியல் ரீதியாகவும், வர்க்க அடையாளத்தினடியாகவும் எங்களின் சாய்வு டானியலின் பக்கமே அதிகமிருந்தது. டானியலும் பேராசிரியரும் இடதுசாரி அரசியலில் வேறு வேறு அணியில் இருந்தவர்கள். முன்னவர் சீனச் சார்புடையவர். பின்னவர் ரஷியச் சார்புடையவர். தவிரவும் பேராசிரியரின் தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து முற்றாக விலகியவர் டானியல். எங்ககளுடனான உரையாடல்களில் சிவத்தம்பி அவர்களை குறிக்குமிடத்து டானியல் மிகவும் இயல்பாகத் ‘திரிபுவாதி’ என்பார். எங்களுக்கு மிகவும் வியப்பாக இருக்கும். ஏனெனில் இங்கே அது அரசியல் எதிரிகளைத் திட்டப் பயன் படுத்தும் சொல். திட்டும் நோக்கிலன்றி அரசியல் ரீதியாக அடையாளப்படுத்தும் நோக்கிலேயே டானியல் பேராசிரியரைத் ‘திரிபுவாதி’ என்பார். இருவருக்குமிடையே நல்லதொரு நட்பு நிலவி யதை எங்களால் அனுமானிக்க முடிந்தது. அத்தகைய ஒரு நட்பைப் பேராசிரியர் கைலாசபதி அவர்களுடன் டானியல் கொண்டிருக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும கைலாசபதி ஏதோ ஒரு வகையில் சீனச் சார்பு நிலை எடுத்தவர்.
பேராசிரியரின் மாணவன் என இங்கே என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அது எனக்குப் பெருமை. ஆனால் பேராசிரியர் அவர்களுக்கு இது எந்த அளவிற்குப் பெருமை சேர்க்கும் என எனக்குத் தெரியாது. ஏனெனில் நாங்கள் செய்து வரும் பல காரியங்கள் இன்று
ഞെ, 44 45

பேராசிரியருக்குக் உவப்பளிக்கக் கூடியதாக இருக்காது என்பதை நானறிவேன். எனினும் சிவத்தம்பி அவர்களுக்கு நான் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளேன். பேராசிரியரின் “கல்விசார் வாழ்வும் பணியும்’ என்கிற தலைப்பில் இங்கே அளிக்கப்பட்டுள்ள சிற்றேட்டைப் புரட்டும் யாருக்கும் மலைப்பு ஏற்படவே செய்யும். எத்தனை அனுபவங்கள், எத்தனை விரிவான தளங்களில் அவரின் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை எல்லாம் அறியும் போது பிரமிப்பு மேலிடுகிறது. பேராசிரியர் நவீன சிந்தனைகளை எதிர்கொண்டுள்ள விதம் என்பதாக அன்றி அவரது பிறதுறைப் பங்களிப்புகளில் ஏதொன்றையாவது நான் தேர்வு செய்திருந்தேனெனில் எனது நன்றிக் கடனைச் செலுத்துவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்திருக்குமே என்கிற ஆதங்கத்தோடு எனது தலைப்பினுள் நுழைகிறேன்.
1. மரபில் வேர் கொண்ட பேராசிரியர் வரலாற்றுப் பொருள் முதல்வாத அணுகல் முறை என்பது மிகவும் வரட் டுத் தனமாகப் பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருந்த தழிழ்ச் சூழலில் அதனைச் சற்றே நெகிழ்த்தி லூயி அல்துஸ்ஸர், டெர்ரி ஈகிள்டன், பியர் மாசெறி ஆகியோர் முன்வைத்த கருத்தியல்’ என்கிற கருத்தாக்கத்தின் அடிப்படையில் மார்க்சிய அணுகல் முறையைச் செழுமையாக்கியவர் பேரா. சிவத்தம்பி. வரலாறு எழுதியல், இலக்கிய வழி வரலாறு எழுதுதல் ஆகியன குறித்துத் தமிழ்சூழல், குறிப்பாகக் கல்விச் சூழலில் பிரக்ஞை உருவாக்கியவர் அவர். திணைக் கோட்பாடு குறித்த அவரது கட்டுரை இங்கு ஏற்படுத்திய சலசலப்பு குறிப்பிடத்தக்கது. உயர் இலக்கியங்களுடன் தன் ஆய்வைச் சுருக்கிக் கொள்ளாமல் சனரஞ்சகக் கலாச்சாரம் (popular culture) குறித்த விமர்சனங்களையும் அவர் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். புதிய செய்திகளைச் சீரணிக்க முயற்சிக்கும் போக்கு அவரிடம் இன்றுவரை உள்ளதை யாரும் மறுத்துவிட இயலாது.
இன்றைய கொண்டாட்டங்கள் அனைத்திற்கும், சிவத்தம்பி அவர்கள் தகுதியானவர்தான் என்ற
-( வைகாசி , ஆனி : 2007 )

Page 54
போதிலும் இத்தகைய முயற்சிகள் அவரை ஒரு திரு உரு (icon) வாக்கும் ஆபத்தை நாம் சுட்டிக்காட்டாதிருக்க முடியாது. இப்படியான திருஉருக்களை உருவாக்குவதென்பது ஆய்வு வளர்ச்சிக்கு இடையூறாக மாறிவிடுகிற ஆபத்து உண்டு. இந்த எச்சரிக்கை குறித்த உணர்வுடன் என் உரை அமைகிறது.
பேராசிரியர் ஒரு பன்பாட்டு அறிஞர் (international Scholar). அவரது ஆய்வுகளும் விரிந்த பரப்புடையது. அவரது புலமை குறித்து இருபதிவுகளைச் செய்தல் அவசியம்.
1. விரிந்த புலமையும் கல்வியியல் தகுதிகளும் உள்ள போதும் நோம் சோம்ஸ்கி போல அவர் 6(b Public Intellectual (LDis356i 95.6bit) 96.6 off. சமகால அரசியல் குறித்து அவர் பேசியிருந்த போதிலும் ஈழத் தேசிய அரசியலில் சில சந்தர்ப்பங்களில் அவர் பெயர் குறிப்பிடப்பட்டி ருந்த போதிலும் அவரை ஒரு Public Intellectual எனக் கூற இயலாது. தம் மக்களின் உரிமைகள் மீறப்படுதலை விருப்பு வெறுப்பின்றி அவர் கண்டித்தோ, அவற்றிற்கு எதிரான செயற்பாடு களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டதோ, வீதி இறங்கியதோ கிடையாது.
2. அவருடைய சர்வதேசப் புலமைக்கு அப்பால் அவரிடம் வேர்கொண்டுள்ள உள்ளுர்த் தன்மை (localism) கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியின் பெருமைக்குரிய மாணவரான சிவத்தம்பி அவர்களின் ஐயா (தந்தையார்) கார்த்திகேசு அவர்கள் யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாசாபிவிருத்திச் சங்கப் பண்டிதர், சைவ சித்தாந்தக் கழகத்தின் சைவப் புலவர். குமாரசாமிப் புலவர், நவநீதி கிருஷ்ண பாரதி, சோமசுந் தரப் புலவர், மகாலிங் கசிவம் ஆகியோரிடம் பாடம் கேட்டவர், கட்டுரையாளர், சோதிட ஆய்வாளர், முருக பக்தர். வெருவல், செல்வச் சன்னிதி பற்றிப் பாடல்கள் இயற்றியவர். இத்தகைய பாரம்பரியத்தில் தோன்றிய நம் பேராசிரியர் எந்நாடுகள் சுற்றிய போதிலும் தன்னாட்டில் மய்யம் கொண்டவராக, அதன்
(ஓலை 44 , 45

பண்பாடுகளிலும், மரபுகளிலும், அரசியலிலும் ஆழ வேர் பாய்ச்சியவராக இருந்து வந்துள்ளார். புலமைப் பணிகளுக்காக மட்டுமே (தற்காலிகப்) புலப் பெயர்வுகளை மேற்கொண்டவர் அவர். ராகுல சாங்கிருத்தியாயன் போல ஒரு நாடோடி அல்லர். கரவெட்டி, வல்வெட்டித்துறை முதலான அடையாளங்கள் அவரிடமிருந்து தரிக்க இயலாதவை.
இந்தப் புலம் பெயரா மாண்பு அவரை மிகவும் மரபு வழிப்பட்ட புலமையாளராக உருவாக்கியு ள்ளது. மார்க்சியம் பேசிய போதும், பின் நவீனத்துவத்தைச் சொல்லாடிய போதும் அவர் இந்த மரபின் எல்லையைத் தாண்டியதில்லை. இதன் விளைவாகவே இறுக்கமான மரபு வழிப்பட்டவர்களாலும் அவர் ஏற்றப்படுகிறார். இன்று தமிழலகம் முழுமையாக எழுந்து நின்று அவரைப் போற்றுவதற்கும் அதுவே காரணம்.
மரபில் இவ்வாறு வேர் பாய்ச்சி நின்றமை இத்தகைய பெருமைகளை அவருக்கு ஈட்டித் தந்திருந்த போதிலும் அவரது ஆய்வில் சில எல்லைகளை ஏற்படுத்தவும் செய்தன. சில அம்சங்களில் குறுகிய வட்டத்திற்குள் அவரை முடக்கின. நிரப்ப இயலாத சில இடைவெளிகளை அவை ஏற்படுத்தின. சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சிறுகதை, நாவல் முதலான நவீன இலக்கியங்கள், திரைப்படம் , தொலைக் காட்சித் தொடர் குறித்தெல்லாம் விரிவாய்ப் பேசிய பேராசிரியர் மணிமேகலை, சிந்தாமணி, பெருங் கதை முதலான பேரிலக்கியங்கள் குறித்து ஒன்றும் பேசியதில்லை. திருக்குறளில் காணப்படும் சமணக் கூறுகளுக்கு அழுத்தம் கொடுத்ததில்லை. பர்ட்டன் ஸ்டெய்னின், இடைக்கால வரலாறு குறித்த ஆய்வுகளை விளக்கும் பேராசிரியர் களப்பிரர் காலத்தை இருண்ட காலமாய்ச் சித்தரிக்கும் தமிழ் மரபு குறித்து சீனி வெங்கடசாமி போல உறுதியான கருத்தும் பகர்ந்ததில்லை
பக்தி இயக்கம் குறித்த மரபு வழிப்பட்ட விமர்சனமற்ற பார்வையே பேராசிரியரிடம் வெளிப்பட்டது. வணிக வர்க்கத்திற்கு எதிரான
--O வைகாசி , ஆனி : 2007 )

Page 55
நிலவுடமையினர்களின் எதிர்ப்புணர்வாகப் பக்தி இயக்கத்தை விவரித்து வந்த பேராசிரியர் பின்னாளில் இக்கூற்றிற்கு அதிக அழுத்தம் கொடுக்கவில்லையாயினும் அதனை விதப்பதைக குறைத்தாரில்லை.
“தமிழ்நாட்டில் சைவ வைணவப் பாரம்பரியங் களின் மிக முக்கியமான பலம் பக்தி நிலையே. பக்திநிலை என்பது வழிபடு கடவுளோடு ஒரு ஆள்நிலைப்பட்ட (Personal) உறவு கொள்வது
ஆகும்” (நேர் காணல்கள், பக்.202).
என்பது பேராசிரியரின் கூற்று. அகில இந்திய LD6015606) (indian Psyche) g5Lôp 96) is furt, களில் வெளிப்படுவது குறித்த கேள்வி எழுப்பப் படும்போது,
“இந்திய மனநிலை தமிழ் நாவல்களில் வரவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ஒன்று, இந்திய மனநிலை வேறு எந்த வகையிலும் தெரியாத வகையில் தமிழ் இலக்கியத்தில் வந்துள்ளது. மாணிக்க வாசகர், நம்மாழ்வார் போன்றோரின் கவிதைகள், அது இந்திய மனநிலைதான், கடவுளோடு உள்ள உறவுதான், அவதார ங்கள் பற்றிய நினைவுகள் தான், தெய்வங்கள் பற்றிய கோட்பாடுதான், பக்தி பற்றியது தான். அது மாணிக்கவாசகர், நம்மாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார்கள் போன்ற வர்களின் சொந்த வாழ்க் கையாகவே இருந்தது. தமிழ் இலக்கியத்திற்கு இன்றுள்ள பெரிய பலன்களில் ஒன்று இது. இந்தியப் பக்தி இலக்கியத்திற்கான மிகப்பெரிய உதாரணமே தமிழ் இலக்கியங்களில் இருப்பவைதான்” (நேர்காணல்கள், பக்.214)
என்கிற பேராசிரியரின் கூற்றைக் கூர்ந்து கவனித்தோமானால் இந்திய மனநிலையாக அவர் கருதுவது சைவ, வைணவ மனநிலை, அதாவது இந்து மனநிலையே என்பது விளங்கும். பவுத்த, சமணக் கருத்து நிலைகளை அவர் இந்திய மனநிலையாகக் கருதவில்லை. அவதாரங்களின் நினைவுகளை ஏந்தும்
(ஓலை 44 , 45)

கம்பனும், வில்லிப்புத்தூராருமே அவருக்கு இந்திய மனநிலையைப் பிரதிபலித்தவர்கள். இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப வளங்கெழு கூலவணிகன் சாந்தனாராற் செய்யப்பட்ட மணிமேகலையும், கொங்குவேளிரால் பாடப்பட்ட தொடர்நிலைச் செய்யுளும் பேராசிரியரின் நினைவில் எடுத்துக்காட்டுக்களாய் எழவில்லை. தவத்திறம் பூண்டு, அறவணரிடம் தருமம் கேட்டுப் ‘பவத்திறம் அறுப்பேன்’ என நோற்றுபாரோர் பசிப்பிணி அகற்றித் திரிந்த அன்னை மணிமேக லையும் அவருரைத்த பவுத்த சீலங்களும் இந்திய மனநிலைக்கு எடுத்துக்காட்டுக்கள் இல்லை எனில் வேறு எதுதான் இந்திய மனநிலை? அவதார நினைவுகள் மட்டுந்தானா?
பேராசிரியர் விரித்த ஆய்வுக் களத்தில் மணிமேக லைக்கும் இதர சமணக் காப்பியங்களுக்கும் இடமில்லாமற் போனது வெறும் விபத்தன்று. அவரிடம் வேரோடி நின்ற சைவ மனநிலையே அதற்குக் காரணம்.
சமண, பெளத்த, வைதீக மதங்களில் பக்திக்கு முக்கியமில்லை. முக்தி என்ற கருத்தாக்கம் வைதீகம், அவைதீகம் இரண்டிற்கும் பொதுவான துதான் என்ற போதிலும் வேள்வி வேட்டல், சுயதர்மம் பேணுதல், பக்தி செய்தல் ஆகியவற்றின் மூலம் முக்தி அடைதலை வற்புறுத்தியது வைதீகம். மாறாக பஞ்சசீலம், எண் வழிப்பாதை என அறவாழ்க்கை மூலம் மட்டுமே முக்தி அடைதலைக் கூறியது அவைதீகம். வைதீகம் இறைமயப்படுத்தியதை (Theologise) அவைதீகம் அறமயப்படுத்தியது (Ethicise). திருக்குறள் முதலான அற இலக்கியங்களும், பசிப்பிணி அகற்றுதல், பல்லுயிரோம்புதல், சிறைக் கோட்டங்களை அறக்கோட்டங்களாக மாற்றுதல் எனச் செழித் தோங்கிய அறச் சூழலை அழித்தொழித்து பக்தி இயக்கம் அறம்சார்ந்த வாழ்வைக் காட்டிலும் பிள்ளையை வெட்டிக் கறி சமைக்கின்ற மனைவியைக் கூட்டி அனுப்புகிற கண்மூடித்தனமான பக்தியை வற்புறுத்திய இலக்கியங்களைத் தமிழன் பெருமையாகக் கருதுவது எங்ங்ணம்?
-( வைகாசி , ஆனி : 2007 )

Page 56
பக்தி இயக்கம் வன்முறையாகப் பவுத்த, சமண மதங்களை அழித்தொழித்த உண்மையை அடக்கி வாசிப்பதையும் பேராசிரியரிடம் காண இயலும். இது குறித்த கேள்வி ஒன்றை கல்பனாதாசன் எழுப்பும்போது,
“பவுத்தமும் சமணமும் பொருள் முதல் வாதம் பேசிய மதங்கள் அல்ல. பவுத்தத் தையும் சமணத்தையும் அழித்ததாகச் சொல்கிறீர்கள். நாங்கள் அவற்றை உள்வா ங்கிக் கொண்டோம். யாழ்ப்பாணத்தில் சைவச் சாப்பாடு என்பது சமண உணவு. எங்களுக்கு மிகப்பெரிய இலக்கணங்களை எழுதியது சமணமும் பவுத்தமும்தான். எங்கே அழித்தோம்?”
எனப் பதிலுரைப்பார். திருஞானசம்பந்தர் சமணர்களைக் கழுவில் ஏற்றிய வரலாற்றைப் பேட்டி எடுப்பவர் நினைவூட்டுகையில் ‘அது வரலாறல்ல, வெறும் எங்கே இல்லை இத்தகைய சண்டைகள் என்கிற ரீதியில் பேசி நழுவுவார் பேராசிரியர் (நேர்காணல், பக்.180). hageography எந்த மதமும் பொருள் முதல் வாதம் பேசியிருக்க முடியாது என்பதை நாம் அறியலாம். ஆனால் நான் சற்று முன் குறிப்பிட்டது போல பவுத்த, சமண மதங்களில், குறிப்பாகப் பவுத்தத்தில் இறைவனை மய்யப் படுத்திய செயற்பாடுகள் குறைவு. பிக்கு என்பவர் மக்களுக்கு அறம் உரைப்பவர் மட்டுமே. பிரமாணர் போல இறைவனுக்கும் மக்களுக்கும் இடைத்தரகர் அல்ல. இந்த கூறுகளின் விளைவாகவே பெரியார் போன்ற இறை மறுப்பாளர்களும், ராகுல்ஜி போன்ற மார்க்சியர்களும் பவுத்தத்தின் பால் ஈர்க்கப் பட்டனர். மறைந்த தோழர் கே.டி.கே.தங்கமணி அவர்கள் தான் உயிருடன் இருந்த வரைக்கும் ஏதேனும் ஒரு இதழுக்குக் கட்டுரை எழுதச் சொன்னால் மணிமேகலை பற்றி மட்டுமே எழுதி வந்தார் என்பதும் இங்கே நினைவு கூறத்தக்கது.
“பவுத்தத்தையும் சமணத்தையும் நாங்கள் உள்வாங்கிக் கொணி டோம்” என்கிற பேராசிரியரின் கூற்று ஆர்.எஸ்.எஸ் (ராஷ்ட்ரிய
(ஓலை 44 , 45 )

சுயம்சேவக் சங்) அமைப்பின் முன்னுரிமைப் பணிகள் குறித்த அடல் பிகாரி வாஜ்பேயின் கட்டுரை ஒன்றை எனக்கு நினைவூட்டுகிறது (UITsidds : Sangh My Soul, Organiser, May 7, 1995. பா.ஜ.க விண் இணையதளத்திலும் இக்கட்டுரையைக் காணலாம்). ஆர்.எஸ்.எஸ்ஸின் பணிகளாக அவர் கூறுவன: 1) இந்துக்களை அமைப்பாக்குவது (Organising) 2) முஸ்லிம்களை உட்கொள்வது (assimilation). மாற்று மரபுகளை அவற்றின் அடையாளங்களை அழித்து உட்செரி க்கிற இந்துத்துவ மாண்பை விதப்பதில் பேராசிரியா வாஜ்பேயுடன் இணைய நேர்கிற புள்ளி கவலைக் குரிய ஒன்று.
சங்க இலக்கியங்கள் குறித்துப் பேராசிரியர் நிறைய எழுதியுள்ளார். மிக ஆழமான ஆய்வுகள் பலவற்றைச் செய்துள்ளார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என முழங்கிய சங்க இலக்கியத் தொகுப்பு குறிஞ்சி, முல்லை முதலான ஐவகை நிலங்கள், திணைகளை வற்புறுத்தியதன் மூலம் (Contextual Sensitiveness) injugby Lib g5(p65u Q(b. 6nfgFT 6ĵgå g5 Li Tri 60) 6. 60) uu (Universalism) முழுமையாக வெளிப்படுத்த இயலாமற் போனதை ஏ.கே.ராமானுஜம் போன்றோர் சுட்டிக் காட்டுவதும் இங்கே சிந்திக்கத்தக்கது. மரபில், சூழலில் வேர் பாய்ச்சுதல் என்பது பிரபஞ்ச விசாலிப்பிற்குத் தடையாகவே அமையும்.
2. அறியப்பட்ட மார்க்சியத்தின் மீதான பேராசிரியரின் விமர்சனங்கள்: எண்பதுகளின் இறுதி தொடங்கித் தொண்ணுா றுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அறியப்பட்ட மார்க்சியத்தின் மீதும், மக்களால் தூக்கி எறியப்பட்ட சோசலிசக் கட்டுமானங்கள் குறித்தும் பல விரிவான விவாதங்களுக்கு வழிவகுத்தன. கட்சிகளுக்குள் இந்த விமர்சனங்கள் ஆழமாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்ளப்படாதது ஒரு குறைதான் என்ற போதிலும் புதிய நூற்றாண்டின் தொடக்கத்தில் இடதுசாரிக் கட்சிகள் கருத்தியல் அளவிலும் நடைமுறைகளிலும் பாரிய மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதை யாரும் மறுத்துவிட இயலாது,
-( வைகாசி , ஆனி : 2007 )

Page 57
சோசலிசக் கட்டுமானத்தின் இலக்கிய வெளிப்பாடாகிய சோசலிச எதார்த்தவாத அணுகல் முறையைக் கைவிடுவதாகத் தமிழின் முக்கிய இடதுசாரி விமர்சகரான தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் 1990 களின் தொடக்கத்தில் அறிவித்தார். என்.சி.பி.எச். நூல் வெளியீட்டு நிறுவனம் நடத்திய கருத்தரங்கொன்றில் (திருநெல்வேலி, செப்டம்பர் 29, 30, 1990) அவர் சமர்ப்பித்த வழிகாட்டு உரையில் இதை அவர் அறிவித்தார். இதற்கும் முன்னதாகவே 1988ல் வெளிவந்த தனது நூலொன்றில் சோசலிசக் கட்டுமானத்தின் கருத்தியல் அடிப்படைகளான பிரதிபலிப்புக் கொள்கை, அடித்தள - மேற்கட்டு மானக் கோட்பாடு ஆகியவற்றின் மீதான விமர்சனத்தைப் பேராசிரியர் சிவத்தம்பி (தமிழில் இலக்கிய வரலாறு, பக். 12-13, 37) முன் வைத்தார். இத்தகைய விமர்சனங்களைக் கட்சி சாராத மார்க்சியர்கள் (எஸ்.வி.ராஜதுரை, ஞானி, நு. மானி முதலானோர் ) பல ஆண்டுகட்கு முன்பே வைத்து வந்த போதிலும் ரஷ்யச் சார்பு மார்க்சியர்களான சிவத்தம்பியும் ரகுநாதனும் இதை வெளிப்படையாக அறிவிக்க நேர்ந்ததற்குப் பின்னணியாக இருந்தது கோர்பசெவின் பிரெஸ்தோரிகா” மற்றும் 'கிளாஸ்நாஸ்ட்’ (1985-1991) செயற்பாடுகள்.
1999 இறுதியில் அளித்த பேட்டி ஒன்றில். “நான் ஆறு வருடகாலத்திற்கு மேலாக சோசலிச எதார்த்தவாதத்தை நாம் பேசியிரு க்கக்கூடாது என என் மனக்குறைகளைச் சொல்லி வந்திருக்கிறேன். நாங்கள் விமர்சன எதார்த்த வாதத்தைப் பேசியிருக்க வேண்டும்” (நேர்காணல்கள், பக்.23)
எனக் கூறிய பேராசிரியர் தொடர்ந்து, “அதிலே பின்னோக்கிப் பார்க்கும்போது சில தவறுகள் ஏற்பட்டிருக்கிறது என்பதனை நாம் ஏற்றுக் கொள்கிறோம்” என்பார். அங்காவது புரட்சிக்குப் பிந்திய அரசைத் தக்க வைப்பதற்காக அப்படி எழுத நேரிட்டது. இங்கு சோசலிச எதார்த்த வாதத்தின் தேவை என்ன என்றும் ஒரு கேள்வியை முன் வைப்பார். இதன்மூலம் சோவியத் நாட்டில் சோசலிச எதார்த்தவாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது சரிதான் என்கிற
(ஓலை 44 , 45 )

முடிவுக்கு அவர் வருவதையும் , இங்கு இவ்வணுகல் முறை பாவிக்கப்பட்டதனால் விளைந்தது சிறு தவறுகளே என்று அவர் கருதுவதையும் நாம் கவனிக்க வேண்டும். எனினும் காலம் தாழ்த்தியேனும் சோசலிச எதார்த்தவாதம் குறித்த ஒரு விமர்சனத்தை அவர் முன்வைக்க நேர்ந்தது வரவேற்புக்குரியதே.
சோசலிசக் கட்டுமானத்தின் மீது விமர்சனங்களை வைக்கும் மார்க்சியர்களைப் பலவாறாக நாம் அடையாளம் காணலாம். லெனின் வரைக்கும் எல்லாம் சரியாக இருந்ததென்போர். ஸ்டாலின் வரைக்கும் சரியாக இருந்தது. குருஷ்சேவ் தான் கெடுத்தார் என்போர். குருஷசேவ், பிரஷ்னேவ் எல்லாம் கூடச் சரிதான், கோர்பசேவ்தான் எல்லாவற்றையும் குட்டிச்சுவராக்கியது என்போர். இப்படி சிவத்தம்பி இதில் இரண்டாம் வகையில் நிற்கிறார். அதாவது லெனின் வரை OK ஸ்டாலினிடம் தான் பிரச்சனை துவங்குகிறது.
“ஸ்டாலினியத்தின் குறை லெனின் காலத்திய உள்கட்சி விவாதம் இல்லாமற் போனதே.
லெனின் போன்ற ஒரு ஜனநாயகவாதி எல்லாக் கட்டங்களிலும் ஜனநாயகச் சூழலைப பேணுகிற சிந்தனைத் திறமுள்ள தீட்சண்ய மான ஒரு பார்வையுள்ள ஒரு தலைவர் இருக்கிற வரையில் பிரச்சனை இல்லை”
(நேர்காணல்கள், பக்.250)
என்பதே பேராசிரியரின் கருத்து. லெனின் காலம் தொடங்கி ரசியாவில் மேற்கொள்ளப்பட்ட சோசலிசக் கட்டுமான முறைமீதே விமர்சனங்கள் உண்டு. சென்ற நூற்றாண்டின் முக்கிய மார்க்கியச் சிந்தனையாளர்களின் ஒருவரான மாசேதுங் இது குறித்து வைத்துள்ள விமர்சனங்கள் புகழ்பெற்றவை. சிவத்தம்பியின் மார்க்சியத்தில் மாவோவுக்கு இடமில்லை என்பது குறிப்பிடத் தக்கது. மாவோ குறித்த பிரக்ஞை அவரிடம் இருந்ததற்கான அடையாளமே அவரது எழுத்தில் கிடையாது.
சோவியத் கட்டுமானத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து நான் மிக விரிவாக எழுதியுள்ளேன்
--O வைகாசி , ஆனி : 2007 )

Page 58
(பார்க்க மார்க்சியத்தின் பெயரால், விடியல் பதிப்பகம், 1995). இங்கு அதனை மீண்டும் விரித்து, எழுதுவது தேவையில்லை. தனிச் சொத்துக்களை ஒழித்தல், பாட்டாளி வர்க்கக் கட்சியை ஆட்சி பீடத்தில் ஏற்றுதல் இந்த இரண்டு அம்சங்களே சோசலிசக் கட்டுமானத் திற்குப் போதுமானவை என்று லெனினியம் - போல்ஷவிசம் கருதியது. மற்றபடி அரசு வடிவம். நீதி வழங்கு முறை, சட்ட ஒழுங்கு நிலைநாட்டல், கல்வி, மருத்துவம் குறித்த நடைமுறைகள், தொழில்நுட்பம் ஆகியவற்றில் முதலாளித்துவ நடைமுறைகளைப் பின்பற்று வதில் தவறில்லை என்கிற கருத்தை அது கொணி டிருந்தது, பாட்டாளி வர் க் கச் சர்வாதிகாரம் என்கிற கருத்து, முதலாளியச் சனநாயகமும் கூட மக்களுக்கு மறுக்கப்படு வதற்கு ஏதுவானது. சுருக்கமாகச் சொல்வதா னால் உள்ளடக்கம் (தனிச் சொத்தின்மை, பாட்டாளி வர்க்க ஆட்சி) மாறினால் போதும் வடிவங்கள் அப்படியே இருக்கலாம் என்பதே லெனினிய சோசலிக் கட்டுமானக் கொள்கை. இதன் இலக்கிய வெளிப்பாடே சோசலிச எதார்த்தவாதம் (சோசலிசம் என்கிற உள்ளடக்கம் + எதார்த்தவாதம் என்கிற முதலாளிய வடிவம்). சோவியத் + மின்சாரம் = சோசலிசம் என்கிற சூத்திரங்களை எல்லாம் லெனின் பயன்படுத்தினார்.
லெனின் காலத்தில் உட்கட்சி விவாதத்திற்கு முழுமையாக இடமிருந்தது எனப் பேராசிரியர் சொல்வதை நாம் ஏற்க முடியாது. தொழிற் சாலைகளை லாபகரமாக நடத்துவதற்கு நிர்வாகங்களை மீண்டும் முதலாளிகளின் கையிலேயே கொடுத்துவிடலாம் என்கிற முடிவும் லெனின் காலத்திலேயே எடுக்கப்பட்டது. இதனை எதிர்த்து “தொழிற்சாலை கவுன்சில்’ என்கிற கருத்தை முன் வைத்த ஒசின்ஸ்கி போன்றோர் லெனினாலேயே ஒரங்கட்டப்பட்டனர். படிப்படி யாகப் பெரும்பான்மையின் அடிப்படையில் முடிவெடுப்பது என்கிற நடைமுறையும் முடிவுக்கு வந்தது. இதன் உச்சகட்டமாக ஸ்டாலினியம் அமைந்தது.
(ஓலை 44 , 45 )-

மார்க்ஸ் முன்வைத்த “பண்டமாயை' என்பதற் GasTg55 Gay Tg5g LDT60)u (Property fetishism) க்கு போல்ஷ்விசம் பலியாகியது. அதாவது தனிச் சொத்து ஒழிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை. அரசு உதிர்வதற்குப் பதிலாக அரசு 66 (oup) D. Feyd ELDIT 35 (Statist Society) சோவியத் சமூகம் மாறியது. இந்தியா போன்ற நாடுகளிலுள்ள “ஹேபியாஸ் கார்பஸ்’ உரிமை கூட சோவியத் மக்களுக்கு இருந்ததில்லை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அரசியல் சிவத்தம் பியின் பார்வையில் இத்தகைய சிந்தனைகளுக்கு இடமில்லை என்பதால், சோவியத் சமூகத்தின் சிக்கல் வெறுமனே ரொட்டிக்குக் கியூ’ நிற்கும் பிரச்சனையாக மட்டுமே அவருக்குப்பட்டது.
“இவற்றினுடாக (அங்கு) ஒரு சமத்துவம் 3(5b5g). Social democracy 305b5gs. GLJ6051856ir சமத்துவம் போற்றப்பட்டது. உழைப்பாளிக்கு உண்மையான சமூக கவுரவம் இருந்தது” (நேர்காணல்கள், பக்.258)
என்கிற பேராசிரியரின் கூற்றில் ஒவ்வொரு அம்சத்தையும் மறுக்க வேண்டியவர்களாக இருக்கி றோம் அய்யா, அங்கே சமத்துவம் இருக்கவில்லை, சமூக ஜனநாயகம் இருக்கவில்லை, பெண்கள் சமத்துவம் போற்றப்படவில்லை. உழைப்பாளி களுக்கு உண்மையான சமூக கவுரவம் இருக்கவில்லை. அதிகாரமனைத்தும் கட்சி அதிகார வர்க்கத்திடமே குவிந்திருந்தது. அதன் விளைவாகவே மக்களாலேயே அவ்வரசுகள் தூக்கி எறியப்பட்டன. எனவே சோசலிசக் கட்டுமானத்தின் அடிப்படைகளையே நாம் விமர்சிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். ஜனநாயகம் குறித்த ஆழமான விவாதங்களே இன்றைய தேவை. அவற்றை விட்டுவிட்டு சோசலிசத்தை முகாமை (manage) செய்ததில் நேர்ந்த சிறு தவறுகளாகப் பிரச்சினைகளைப் பார்த்துவிட இயலாது.
சீன சோவியத் முரண்பாடு அடிப்படையில் சோலிசக் கட்டுமானம் குறித்த இரு போக்குகளுக் கிடையே ஏற்பட்ட ஒன்று. பெத்தலஹேம், பால்
-C வைகாசி , ஆனி : 2007 )

Page 59
ஸ்வீஸி, சமிர் அமீன் முதலானோர் இதுகுறித்து விரிவாக எழுதியுள்ளனர். சோவியத் பொருளா தாரம் குறித்த மாவோவின் விமர்சனத்தையும் இதுதொடர்பான 'மாபெரும் விவாதத்தையும்’ அப்படியே ஒதுக்கிப் போட்டுவிட்டு,
“அது (சீன-சோவியத் முரண்) உண்மையில் அரசுகளில் முரண்பாடு. அது மார்க்சியத்தின் முரண்பாடென்று நான் எடுக்கமாட்டேன்” (நேர்காணல்கள், பக்.259)
எனப் புறந்தள்ளுவதற்குப் பேராசிரியர் துணிவ தென்பது சோலிசக் கட்டுமானம் குறித்த அவரது ரஷ்யப் புரிதலின் விளைவே.
சோசலிச நாடுகளில் அதிகாரங்கள் உருவா னமை குறித்த மனந்திறந்த விமர்சனங்களின் விளைவாகவே இன்றைய நவீன சிந்தனைகள் உருப்பெற்றுள்ளன. இவை குறித்த ஒரு மூடிய பார்வையுடன், மார்க்சிய வாசிப்பில் சுய விமர்சனத்தின் இடம் குறித்தும், பரந்துபட்ட மார்க்சிய வாசிப்பு குறித்தும் பேராசிரியர் பேசும் போதும் (நேர் காணல், பக்.270), “மார்க்சியம் என்பது மேலே மேலே பாயும் நதி. அது பின்னோக்கிப் பாய்வதில்லை’ என்று முழக்கமிடும் போதும் அவை வெற்றுப் பிரகடனங்களாகவே நம் காதில் ஒலிக்கின்றன.
3. மார்க்சியத்திற்குப் பிந்திய சிந்தனைகளும் பேராசிரியரும்:
தமிழ்ச் சூழலில் அமைப்பியல், பின் நவீனத்துவம் தொடர்பான நூல்களெல்லாம் 1980கள் தொடங்கிவர ஆரம்பித்தன. இவை ஏற்படுத்திய சிந்தனை உசாவல்களும், விவாதங்களும் குறிப்பிடத்தக்கவை. இலக்கியவாதிகள், சிறு பத்திரிகைகள் என்கிற மட்டங்களைத் தாண்டி அரசியல் இயக்கங்களும் கூட இப்புதிய சிந்தனைகள் மற்றும் ஆய்வு முறைகள் பற்றி மாற்றுக் கருத்தை முன் வைக்கும் சூழலும் இங்கிருந்தது. 1970, 80களில் இங்கு எல்லோரையும் கவர்ந்திருந்த மரபு வழிப்பட்ட மார்க்சிய அணுகல்முறை சற்றே பின்னடைவுக் குள்ளாகி, ‘வித்தியாசம்’ ‘பெருங்கதையாடல்
(ஓலை 44 , 45 )-

களில் சிதைவு, ‘கட்டவிழ்ப்பு முதலான கருத்தாக்கங்கள் மேலுக்கு வந்தன. இளைஞர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்திய இச்சிந்தனைகள் ஏற்கனவே தம்மை நிறுவியிருந்த அறிவு ஜீவிகள் மத்தியில் சற்றே அச்சத்தையும் ஏற்படுத்தின.
இக்காலகட்டத்தில் மிகத் தீவிரமாகத் தமிழ் ஆய்வுக்களத்திலும் கல்விக் களத்திலும் சர்வதேச அளவில் புகழுடன் இயங்கி வந்தப் பேராசிரியர் சிவத்தம்பி 1999 இறுதி வரை இச்சிந்தனைகள் குறித்து ஒரு இறுக்கமான மவுணத்தையே கடைபிடித்து வந்தார். இப்புதிய சிந்ைைனகள், விவாதங்கள் குறித்த உங்களுடைய கருத்து தான் என்ன? என்கிற கேள்வி ஈழச் சூழலில் இளைஞர்கள் மத்தியில் உருவானபோது வேறு வழியின்றி 1999 இறுதியில் பின் நவீனத்துவம் முதலான சிந்தனைகளின் மீது பேராசிரியர் தன் கருத்துக்களைச் சொல்லத் தொடங்கினார். (பார்க்க: ‘நேர்காணல்கள்’ மற்றும் ‘நவீனத்துவம் - தமிழ் - பின் நவீனத்துவம்’, மக்கள் வெளியீடு, 2001). 1997ல் ‘தமிழில் பின் நவீனத்துவம் பற்றிப் பேசப்படுவதற்கு முன் என்றொரு கட்டுரையைத் ‘தழல்’ இதழில் அவர் எழுதியுள்ள போதிலும் அதில் பின்நவீனத்துவம் வந்துவிட்டதா என்பது குறித்த ஒரு உசாவலாகவே அக்கட்டுரை அமைந்தது.
முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டமொன்றில் (கோவை, மே 1999) பின் அமைப்பியவாதம் ஆகியன குறித்துப் பேசக்கூடாது எனத் தான் தடுக்கப்பட்டது குறித்து நினைவு கூறுமிடத்து,
“மார்க்சியவாதிகளான நண்பர்கள் தோழர்கள் பலர் அமைப்பியல்வாதம், பின் அமைப்பியல் வாதம், பின் நவீனத்துவம் அகியன பற்றிப் பேசுவதே பாவச் செயல் எனக் கருதுகி றார்கள். இது ஒரு தவறான அணுகுமுறை. இது மார்க்கியத்தை மதவெறியாக்கும் LDL60) LD'
எனச் சிவத்தம்பி குறிப்பிடுகிறார். ‘நவீனத்துவம், தமிழ், பின் நவீனத்துவம்’ என்கிற தலைப்பிட்ட
-( வைகாசி , ஆனி : 2007 )

Page 60
ஒரு நூலின் முன்னுரையில் (பக்.15) அவர் இவ்வாறு குறிப்பிடும்போது நாம் சற்றே நிமிர்ந்து உட்காருகிறோம். ஆர்வமுடன் நூலைப் புரட்டுகிறோம். ஆனால் இந்நூலிலுள்ள கட்டுரையையும், ‘நேர்காணல்கள் தொகுப்பில் உள்ள இது தொடர்பான அவரது கருத்துக் களையும் படித்து முடிக்கும்போது நமக்குப் பெரும் எமாற்றமே எஞ்சுகிறது. இந்தக் கருத்துக்களைக் கண்டு எதற்காக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் அஞ்சினர் என்கிற வியப்பும் மேலெமுகிறது.
“பின் நவீனத்துவத்தைப் புறங்காண்பதற்கான வழி அதன் இயல்புக்கான காரணத்தை அறிவதுதான் ’ என் கிற கூற்றிலிருந்து (நவீனத்துவம். பக். 178) மார்க்சியத்திற்குப் பிந்திய சிந்தனைகளைப் புறங்காணப்பட வேண்டியவைகளாகவே கருதிக் கவச குண்டலங்களுடன் அவர் களமிறங்கிவிட்டது நமக்கு விளங்குகிறது.
பின் நவீனத்துவம், பின் அமைப்பியல்வாதம் தொடர்பாகவும், இச்சிந்தனைகளுக்கெதிராகவும் பேராசிரியர் முன்வைக்கும் வாதங்களைக் கிழ்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம்.
* பின் நவீனத்துவம் என்பது இப்போது மேற்குலகச் சிந்தனை மரபில் வந்துள்ள ஒர் எண்ணக்கரு. 1970ல் பிந்திய மேநாட்டு ஐரோப்பிய அமெரிக்கப் பண்பாட்டையும், பண்பாட்டு நடவடிக்கைகளையும் குறிப்பிடுவத ற்குப் பயன்படும் தொடர். பின் அமைப்பியல் வாதத்துக்குச் சமாந்திரமாக அமையும் கலை பண்பாட்டு நிலையைக் குறிக்க இத்தொடர் பயன்படும். (நவீனத்துவம். பக்.160)
* பின் நவீனத்துவம் கலையின் செல்
நெறிகள் பற்றியது. பின் நவீனத்துவம் ஒரு சிந்தனைச் செல் நெறியாகும். (நவீனத்துவம். udi.179)
* பின் நவீனத்துவம் வந்துவிட்ட நாடுகள் அனைத்தும் மேற்குலக நிலைப்பட்டவையே.
(ஓலை 44 , 45 )

உலகினி பெரும்பாலான நாடுகளிலும் நவீனத்தன்மை முற்று முழுதாகத் தனது ஒட்டத்தை முடித்துக் கொண்டுவிட்டது என்று சொல்ல முடியாது. (நவீனத்துவம் . U bë. 213)
* பின் நவீனத்துவம் என்பது முற்று முழுதான ஒரு எதிர்மறை வாதமே. அது நவீனத்துவ த்தின் செல் நெறிகளை, ஈட்டங்களை மறுதலிக்கிறதே தவிர இந்த அதிர்ப்பு நிலைக்குப் பின் மேற்கொள் ளப்பட வேண்டிய செயற்பாட்டு முறைமை யாது என்பதை அது வற்புறுத்தவில்லை. (நேர்காணல்கள் 204)
* அது சுட்டும் அரசின் அதிகாரங்களை முற்று முழுதாக ஒழித்துவிடக் கூடியதா எண் பதைப் பற்றிய தெளிவு அதறி கு இல்லை. அது குறிப்பிடும் நுண் அரசியல் அதிகாரங்களை ஒரங்களில் கடிப்பதாக இருக்குமேயொழிய அழிப்பதாக அது இராது. (நவீனத்துவம். பக்.204)
* உண்மை பற்றிய மறுதலிப்பு பின் நிற்கும் முதலாளித்துவத்தைப் பார்க்க மறுத்துவிடு கிறது. (நவீனத்துவம் பக்.204, 205)
* பகுத்தாய்வு நோக்கினை எதிர்க்கிறது. அறிவியலையே எதிர்க்கிறது. (நவீனத்துவம், Luis.204, 205)
§ද
மறுதலிப்பு முகத்தை காட்டுகிறதே ஒழிய மேலே சென்று அவற்றைக் களைவதற்கான வழிமுறைகள் பற்றிய சிந்தனைக்கு நம்மை இட்டுச் செல்வதில்லை.
* பின் நவீனத்துவத்தில் எனக்குள்ள சிக்கல் இதுதான். என்னவென்று சொன்னால் it doesn't end there. Differentiation is there. seggs difference (வித்தியாசத்திற்கு) அப்பால் என்ன? So What? அதற்கு அப்பாலே எங்கே போகிறோம்?
பேராசிரியரின் மேற்குறித்த கருத்துக்கள் யாவும் கடந்த பத்தாணி டுகளாகப் பின் நவீனச் - வைகாசி , ஆனி : 2007 )

Page 61
சிந்தனைகளை எதிர்த்த கட்சிகாரர்களும், மற்றவர்களும் முன் வைத்தவையே. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் பேராசிரியரின் வாதங்கள் யமுனா ராஜேந்திரனின் ரேஞ்சைத் தாண்டாதவை. இது ஒரு மேலைத் தத்துவம், இங்கே பொருந்தாது, எல்லாவற்றையும் விமர்சிக்குமே ஒழிய தீர்வைச் சொல்லாது, உண்மை / பகுப்பாய்வு ஆகியவற்றை மறுதலி ப்பது என்பவற்றிற்கு அப்பால் பேராசிரியர் வேறெதும் சொல்லவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். இத்தகைய கேள்விக ளுக்குப் பலமுறை பதில்கள் சொல்லியாயிற்று. அவற்றையும் பேராசிரியர் கணக்கில் எடுத்துக் கொண்டு, அவற்றில் போதாமை என எதை யாவது அடையாளம் கண்டு அதைச் சுட்டிக் காட்டி இருந்தால் விவாதத்தை மேற்கொண்டு செல்ல நமக்கு ஏதுவாக இருந்திருக்கும். துரதிர்ஷ்டவசமாகப் பேராசிரியர் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை.
பேராசிரியர் மேற்கோள் காட்டும் நூற்களில் யாதார்த்தின் நூலொன்றைத் தவிர பிற அனைத்தும் இரண்டாம் நிலை நூற்கள் (நவீனத்துவம், பக்.210). தெரிதா, 'பூக்கோ, பாத்ரிலா, ல்யோதார்தின் பிற நூற்கள் ஆகியவற்றைப் பேராசிரியர் படித்ததற்குச் சான்றில்லை. போஸ்ட் மார்டனிச ரீடர் களையும் பின் நவீனத்தை எதிர்த்து எழுதிய டெர்ரி ஈகிள்டனின் இரண்டாம் தரமான நூலையும் மட்டும் வைத்துக் கொண்டு புதிய சிந்தனை களைப் ‘புறங்காண முயற்சித்தால் நியாயமாக இராது என்பதை நாம் பேராசிரியருக்கு விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. (டெர்ரி ஈகிள்டனின் நூலைப் படித்தவுடன் தனக்கு ஏற்பட்ட இன்பச் சிலிர்ப்பை ஒரு குழந்தை போல அவர் வெளிப்படுத்துவதைக் காண்க: நேர்காண ல்கள், பக்.267)
பின்நவீன நிலைச் சிந்தனைகளுக்கு மேற்குலக முத்திரை குத்துகிறார் சிவத்தம்பி. உலகம் ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்ட ஒரு சூழலில் இந்த விவாதம் எந்த அளவிற்குப் பொருத்தமாக இருக்கும்? மார்க்சியம், தேசியம் இவைகளெ
(ஒலை 44 , 45 )

ல்லாம் மேற்குலகச் சிந்தனைகள் இல்லையா? ஏகப்பட்ட பல்கலைக் கழகங்களில் பாடத்திட்ட ங் களை உருவாக்கும் பொறுப்பிலுள்ள பேராசிரியர் தனது கல்விசார் செயற்பாடுகளில் மேற்குலகப் பங்களிப்புகளைப் பின்பற்றுவதில் லையா? நாவல், சிறுகதை, பதிப்பு நுணுக்கங்கள், ஒப்பியலாய்வு இவை எல்லாம் மேற்குலகிலிருந்து இங்கே வரவில்லையா? உங்கள் முனைவர் பட்ட ஆய்விற்கு நீங்கள் பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸனை நாடிச் செல்லவில்லையா?
சனநாயகம், மனித உரிமைகள், கருத்துச் சுதந்திரம், பண்பாட்டுப் பன்மைத்துவம், அறிதல் முறைகள் ஆகிய சமகாலப் பிரச்சினைகள் நுணுக்கமான தத் துவார்த்த தளத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை. இந்தியத் தத்துவ மரபோ நவீனத்துவத்தையே எட்டாத ஒன்று. ஆதி சங்கரனுடனும் சைவ சித்தாந்தனுடனும் தேங்கிப் போனவர்கள் நாம். ‘விமர்சன எதார்த்தவாதம் பேசியிருக்க வேண்டும்’ என இன்று நீங்கள் புலம்புகிறீர்கள்? கான்ட்டையும், ஹஜுஸ்ஸரலையும், ஹெய்டெகரையும் பயிலாமல் இதை நாம் எப்படிச் செய்திருக்க முடியும்? ஹெகலையும், மார்க் ஸையும் கூடத்தான் இங்கே நாம் ஒழுங்காகப் பயின்றோமோ? இத்தகைய ஆழ்ந்த படிப்புகளின்றி எளிய சூத்திரங்களை வழங்கியது என்பதால் தானே நாம் சோசலிச எதார்த்தவாதத்தில் திருப்திப்பட்டோம்?
நவீனத்துவமே தனது ஓட்டத்தை முடித்துக் கொள்ளாத நாடுகளில் பின் நவீனத்துவத்தின் தேவை என்ன என்று கேட்கிறார் பேராசிரியர். முதல் தொடக்கம் மட்டுமே முந்தையதின் ஒட்டம் முடிந்தபின் தொடங்குகிறது. அடுத்தடுத்த தொடக்கங்கள் அப்படிக் காத்திருப்பதில்லை. 'அல்லோபதி மருத்துவ முறை முதலாளியக் கட்டத்தின் வெளிப்பாடு என்கிறோம். "அல்லோபதி அறிமுகப்படுத்தப்பட்ட நாடுகளில் எல்லாம் முதலாவது வளர்ச்சியடைந்த பின்புதான் அது நிகழ்ந்ததா? உலகப் பொதுவான தொழில்நுட் பங்கள், இசை வடிவங்கள், திரைப்படங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு காலச் சூழலில் ‘இங்கு பொருந்தாது’ என்பது என்ன நியாயம்?
-( வைகாசி , ஆனி : 2007 )

Page 62
இன்றைய தத்துவார்த்தப் பிரச்சினைகளை எல்லாம் சைவ சித்தாந்தத்தில் நின்று தீர்த்துவிட இயலும் எனச் சொல்லுகிறீர்களா அய்யா?
“வித்தியாசம் / வேறுபாடு என்பதும் மற்றது என்பதும் பண்பாடுகளின் பன்முகப்பாட்டை வற்புறுத்தின. இதுவரை பேரெடுத்துரைப் புகளின் முழுமை நோக்கினுள் விடப்பட்ட மற்றதுகளும் வித்தியாசங்களும் முக்கியப் படுத்தப்பட்டன. பெண் நிலை வாதம் இந்த நோக்கரினால் முனைப் புப் பெற்றது. சமூகங்களில் கவனிக் கப்படாதிருந்த குழுமங்கள் முக்கியப்படுத்தப்பட்டன” (நவீனத்துவம், பக்.203)
எனப் பின் நவீன நிலைச் சிந்தனைகளின் சாதனைகளைப் பட்டியலிடுகிறீர்கள். மகிழ்ச்சி. இப்படி இதுகாறும் புறக்கணிக்கப்பட்ட மற்றது களை இனங்காணவும் உரிய முக்கியத்துவம் அளிக்கவும் நவீனத்துவம் தன் ஒட்டத்தை முடிக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டுமா?
வித்தியாசம், வித்தியாசம் என்றால் அதன் முடிவுதான் என்ன? - என்றொரு கேள்வியை எல்லோரையும் போல நீங்களும் எழுப்பு கிறீர்கள். ஆமாம், அதற்கு முடிவே இல்லை. முடிவு வந்துவிட்டதாக எப்போது நினைக்கி றோமோ அப்போது சனநாயகமே முடிவுக்கு வந்துவிடுகிறது. அதிகாரம் நிலைநாட்டப் படுகிறது. முதலாளி X தொழிலாளி என்பதோடு வித்தியாசங்கள் முடிந்துவிட்டதாகக் கருதியது தான் சோசலிசக் கட்டுமானங்கள் இறுகியதற்குக் காரணம் . இன வேறுபாடுகளும் , சாதி வேறுபாடுகளும், புறக்கணிக்கப்படுவதற்கு அது ஏதுவாகியது. பாலியல் வேறுபாடுகள் என்றால் அது ஆண் X பெண் என்பதோடு முடிவதில்லை. மூன்றாவது பால், நான்காவது பால் என்றெ ல் லாம் பார்க்க வேணி டியிருக்கிறது. எல்லாவற்றிற்குள்ளும் சிறுபான்மையினரின் நலனை நாம் பேச வேண்டியிருக்கிறது. மதச் சிறுபான்மையினதைப் போல, பாலியல் சிறுபான்மையினர். இப்படி. சாதி வித்தியாங்கள் தலித்களோடு முடிவதில்லை. தலித்களுக் குள்ளும் தலித் பெண்ணியம் பேச வேண்டியிரு
(ஓலை 44 , 45 )

க்கிறது. அருந்ததியருக்குத் தனி இட ஒதுக்கீடு கோர வேண்டியிருக்கிறது. வித்தியாசங்களால் ஆனது இவ்வுலகம், வித்தியாசங்களுக்கு முடிவேது? பின் நவீனச் சிந்தனைகள் வற்புறுத்தும் பன்முகப் பார்வைகளைப் பற்றிச் சொல்ல வரும்போது, ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைகளின்பால் போய், 'சிக்கிப் போய்விடாமல், அதற்குள் போக முடியாதவைகளாக மாறிவிடாமல் எங்கோ ஒரு இடத்தில் சந்திக்கிற Point (புள்ளி) ஆக இருக்க வேண்டும். போஸ்ட் மார்டனிசத்திலை நான் காணுவது அதுதான்” (நேர்காணல்கள், LIă.267)
என்கிறார். ஆக எல்லாம் சந்திக்கிற ஒரு புள்ளி, முடிவு, இறுதி நிலை ஒன்று இருந்தாக வேண்டும். ஆதியில் குழப்பம் இருந்தபோதிலும் இறுதியில் ஒழுங்கு அமைய வேண்டும். அந்த இறுதிப் புள்ளி என்ன? முக்தியா, இறைமையா? மறுமையா?
எல்லாம் சந்திக்கிற புள்ளியைத் தேடும் இந்த Reconcilation (சமரசப்படுத்தும்) மனோபாவம் சனநாயக விரோதமானது. கருத்து வேறுபாடுகள் சமரசமாவதென்பது ஏதோ ஒரு கருத்தை மற்றதன் மீது திணிப்பதாகவே ஆகும். சில அம்சங்களின் கருத்தொருமிப்பு (Coneeses) தேவை என்பது உணி மைதான் . ஆனால் அது கருத்து வேறுபாடுகளை (dissention) உள்ளடக்கியதாகவே இருக்க முடியும். கருத்து வேறுபாடுகளை அழித்தொழிப்பதாக அது இருக்கக்கூடாது. கருத்து வேறுபாடுகளுக்கு இடையேயான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். சனநாயகமும், பன்மைத்துவமும் முற்றுப் பெறுகிற விஷயங்கள் அல்ல. அவை கையளிக்கப்படக் கூடியனவோ, வந்து முடிவனவோ அல்ல. அதன் வருகை எப்போதும் நிகழவில்லை. ஒரு தேவதூதனின் வருகைக்காகக் காத்திருப்பதைப் போல நாம் அதற்காகக் காத்திருக்க வேண்டும். போராடிக் கொண்டிருக்க வேண்டும். சனநாயகத் நிற்கான போராட்டங்கள் எந்நாளும் எந்நிலை பிலும் முற்றுப் பெறுவதில்லை.
பின் நவீனம் வற்புறுத்தும் ஒரு முக்கியமான ĐịLô ở Lô -incommenSurality- Q95T (95 ủ LÎì6ởi
-C வைகாசி , ஆனி : 2007

Page 63
சாத்தியமின்மை. எல்லாவற்றையும் தொகுத்துச் சுருக்கிவிடுதல் இயலாது. அவற்றிற்கான இடங்கள் அவ்வவ்வற்றிற்கு அளிக்கப்பட்டே ஆதல் வேண்டும்.
பல்வேறு மேலைநாட்டுச் சிந்தனையாளர்கள் எல்லாம் மேற்கோள்காட்டும் பேராசிரியரின் பட்டியலில் இடம் பெறாாத இரு முக்கிய பெயர்கள்: பால் 'பெய்ரா பாண்ட், தாமஸ் குன். பெரும் ஆய்வறிஞரான சிவத்தம்பி அவர்கள் ஆய்வு முறையியல் குறித்த முக்கிய சிந்தனைகளை வழங்கிய இவ்விருவரை நமக்கு அறிமுகப்படுத்தாமற் போனது வியப்பு. சென்ற நூற்றாண்டில் மிக அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூற்களில் ஒன்று தாமஸ்குன்னு டைய விஞ்ஞான ஆய்வுச் சட்டங்கள் (Scientific Paradigm) தொடர்பானது என்பர். அறிதல் முறை களை இரண்டாகப் பகுத்தார் பெய்ராபாண்ட். 1) 3üL 9(pÉl(35 ep656b (p600 (Law & Order Method) 2) ஒழுங்கவிழ்ப்பு அறிதல் முறை (Anarchist Method) முந்திய கருத்தமைவுகளுடன் இணைந்து போவது சட்ட ஒழுங்கு அறிதல். (p61601605 LDO)5g) 6T(upg|6.lgs (Counter Inductive approach) ஒழுங்கவிழ்ப்பு அறிதல். எல்லா அறிவியற் கண்டுபிடிப்புகளும் முன்னதை மறுத்தே எழுந்துள்ளன என நிறுவுவார் 'பெராபாண்ட். ஒரு அறிதல் சட்டத்திற்கும் (Paradigm) புதிய அறிதல் சட்டத்திற்கும் இடையேயான தொகுப்புச் சாத்தியமில்லா மையே தாமஸ் குன்னிடமிருந்து நாம் பெறுகிறோம்.
ஆனால் முன்னதான சட்டங்களுடன் தொகுப்புச் சாத்தியமுடையவற்றை மட்டுமே ஏற்றுக் கொள்பவராகவே நமது பேராசிரியர் உள்ளார். மரபில் ஆழவேர் பாய்ச்சியவர் பின் எப்படி இருக்க முடியும்? மார்க்சியத்தையும் தமிழ் மரபையும் தொகுத்துச் சாமர்த்தியம் பண்ணியதாலேயே அவர் இரு தரப்பினராலும் போற்றப்பட்டவராக உள்ளார் என்பதையும் நாம் இங்கே நினைவு கூர்தல் அவசியம்.
“நான் அண்மையில் பின் நவீனத்துவத்தைப் பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதியுள்ளேன். அதில் நான் பின் நவீனத்துவத்தை மார்க்சியக
(ஓலை 44 , 45 )

கண்ணோட்டத்தில் தான் பார்த்தேன். ஆனால் அதற்காக நான் பின்நவீனத்துவம் ஒன்று இல்லை என்று சொல்லமாட்டேன். அது முட்டாள்தனம். (நேர்காணல்கள், பக்.287)
என்று கூறும்போது பின்நவீனத்துவத்தை ஏற்றுக் கொண்டதற்காக நாம் அவருக்கு நன்றி பாராட்டியபோதும் மகிழ்ச்சி கொள்ள முடியாது. மார்க்சியத்தையும் பின் நவீனத்துவத்தையும் RecOncile பண்ணுகிற முயற்சியாலேயே அது அமைகிறது. ஒரு சட்டகத்தை வைத்து இன்னொரு சட்டகத்தை அளக்கும் முயற்சி இது. இதன் விளைவாவே பின் நவீனம் குறித்த அவரது விமர்சனங்கள் அனைத்தும். புறங்காணுதலைப் பற்றிப் பேசியவர்தான் இந்த Reconciation முயற்சியில் இறங்குகிறார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஏதேனும் ஒன்றைப் புறங்காணும் முயற்சியாகவே Reconcilation களும் அமைந்து விடுகின்றன.
இரு சட்டகங்களும் வேறு வேறு என்பதோடு சரி. இவற்றில் எது சரி எனச் சொல்ல இயலாது. மார்க்சியம் எழுப்புகிற பிரச்சினைகள் முக்கியமான வையே. அவற்றிற்கும் பின் நவீனம் பதிலளிக்க இயலாது. பின் நவீனம் எழுப்புகிற பிரச்சினைகள் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. மார்க்சியம் எழுப்புகிற பிரச்சினைகளைப் போலவே இவையும் முக்கியமானவையே. எந்தவொரு சட்டகமும் மற்றெல்லாவற்றையும் அளக்கும் Universal Frame Work ஆக இருக்க முடியாது. அப்படியான ஒரு Universal Paradigm ஆக மார்க்சியத்தைக் கருத்தில் கொண்டு விட்டோமேயானால் பின் நவீன நிலைச் சிந்தனைகளுடன் உரையாடல் சாத்தியமில்லை. பின் நவீனம் அப்படியான ஒரு Universal சட்டகமும் அல்ல. அப்படிக் கருதி எல்லாப் பிரச்சினைகளுக்குமான தீர்வுகளையும் அதனிடம் எதிர்பார்ப்பது சரியாகாது.
அதிகாரங்களை முற்றிலும் ஒழிக்காமல் ஓரத்தில் கொறிப்பதாக பின் நவீனத்துவத்தைக் குறைச் சொல்வார் பேராசிரியர். எல்லா அதிகாரங்களை யும் அழிக்கும் சூத்திரங்களைக் கொண்டதல்ல பின் நவீனம். நுண் அதிகாரங்களையே அது பேசுகிறது. நுண் அதிகாரங்களை விட்டுவிட்டுத் தனிச்சொத்தை அழித்தால் எல்லா அதிகார
-Ο σοσια πά , εισοί : 2007 )

Page 64
ங் களும் அழிந்துவிடும் என்று கூறிய மார்க்சியத்தின் விளைவு என்ன என்று யோசிக்க வேண்டும். சோவியத் அதிகாரமும், கட்சி அதிகாரமும் முதலாளித்துவ அதிகாரங்களை விடக் கொடுமையாக இருந்ததை நாம் மறந்து விடக் கூடாது. மார்க்சியத்தைக் கருதியதைப் போலவே எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கும் நிவாரணியாகப் பின் நவீனச் சிந்தனைகளையும் கருதுதலின் விளைவே இத்தகைய குற்றச் சாட்டுகள்.
1960 களில் பிரான்சில் ஏற்பட்ட இளைஞர் போராட்டம் சமீப கால வரலாற்றில் முக்கியமான ஒன்று. உலகெங்கிலும் எதிர்ப்பியக்க ஆர்வலர்களால் வியர்ந்து பாராட்டக்கூடிய ஒன்று. உலகெங்கிலும் அதை ஒட்டி எழுச்சிகள் ஏற்பட்டன. அது குறித்து,
*1963, 68ல் பிரான்சில் ஒரு இளைஞர் கிளர்ச்சி எழுந்தது. அது ஒரு கட்டத்தில் பிரெஞ்சு அதிகார அமைப்பையே உடைக்கும் போலத் தோன் றியது. பின்னர் அது எத்தகைய வெற்றியும் ஈட்ட முடியாமற் பிசுபிசுத்துப் போயிற்று.” (நவீனத்துவம். Lua. 185)
என்கிற பேராசிரியரின் மதிப்பீடு மிகவும் பிழையானது. பிணி னாளில் வரலாறு எழுதுபவர்கள் இப்படியான ஒரு மதிப்பீட்டைச் சோலிச முயற்சிகளின் மீதும், அதனடியாக மார் க் சியத் திணி மீதும் வைத்துவிட முடியும் தானே. சோசலிசக் கட்டுமான முயற்சியில் இன்று தோற்றுப் போயிருக்கலாம். மார்க்சியம் பின்னடைவுக்குள்ளாகி இருக்கலாம். ஆனால் அது ஏற்படுத்திய தாக்கங்களும், விளைவுகளும் காலத் தால் அழிக் க முடியாதவை. ஜனநாயகம், மனித உரிமை, மக்கள் அதிகாரம் குறித்த அனைத்து விவாதங்களும் மார்க்சியத்தின் மேல் நின்றே இனி நடைபெறும். அது போலவே 1968 எழுச்சி இதை ஒட்டி உலகெங்கிலும் உருவான anti systemic move-ments 9|Jfu6ů 56ITögloů மட்டுமன்றி சிந்தனைத்தளத்திலும் ஏற்படுத்திய தாக்கங்கள் பல. இன்றைய பின் நவீனநிலைச் சிந்தனைகளையே கூட இதன் விளைபொரு
(ஓலை 44 , 45 )

ளாகச் சொல்ல இயலும். (இதே போலத்தான் இன்று மார்ச்-2006ல் பிரான்சில் உருவாகியுள்ள இளைஞர் எழுச்சியையும் மதிப்பிட வேண்டும். உலகமயச் செயற்பாடுகள் மேனாடுகளில் இதுகாறும் இருந்து வந்த சமூகப் பாதுகா ப்பைத் தகர்க்கத் தொடங்கியிருப் பதற்கான முதல் எதிர்பாக இதை நாம் காண முடியும்).
கட்டவிழ்ப்பைப் பற்றிச் சொல்ல வரும்போது அதை ஒரு மெய்யியற் பிரச்சினை எனச் சரியாகவே இனம் காணும் பேராசிரியார் தொடர்ந்து,
“இந்தப் பின்னணிகள் தமிழில் தெளிவுபடுத்தப்படா மலேயே இந்தக் கொள்கைகள் எடுத்துச் செல்லப் படுகின்றன. தமிழ் நாட்டில் முனைப்பான போக்குகள் இடம்பெற்றாலும் அவர்களிடையேயும் தெளிவாக உணரப்படவில்லை என்கிற குறை இருக்கிறது”. (நேர்காணல்கள், பக்.242) என்பார். குறைகள் இருக்கலாம். ஆனால் தத்துவார்த்தப் பின்னணி சுட்டப்படவில்லை என்பது தவறு (பார்க்க அ.மார்க்சின், பின் நவீனத்துவம், இலக்கியம், அரசியலில், விடியல் பதிப்பகம், 1997).
4. பேராசிரியரும், தலித்தியமும் வேறு யாரைக் காட்டிலும் சாதிப் பிரச்சினையைக் கணக்கில் எடுத்துக் கொண்டவர் என்கிற பாராட்டுக்குரியவர் பேராசிரியர் சிவத்தம்பி. மறைந்த பேராசிரியர் கைலாசபதியைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் சாதி குறித்த ஒரு உரையாடல் சாத்தியமுள்ளவர் எனச் சிவத்தம்பி குறித்து டானியல் அவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். வேளாள ஆதிக்கமுள்ள யாழ்ப்பாணத்தில் கரையார் வகுப்பைச் சேர்ந்த பேராசிரியர் கல்வித்துறையில் சில பாதிப்புகளுக்கு உள்ளா னார் என்றும் கூட டானியல் சொல்வதுண்டு. ஈழத்து இலக்கியங்கள் பற்றி எழுத வரும்போதெ ல்லாம் டானியல் முதலான தலித் எழுத்தாளர் களுக்கு உரிய இடத்தை அளிக்கும் பழக்கத்தைப் பேராசிரியர் கொண்டிருப்பதையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
எனினும் பேராசிரியரின் எழுத்துக்களைக் கூர்ந்து வாசிக்கும்போது தலித்திய எழுத்துக்களை அவர் முற்போக்கு எழுத்துக்களின் ஒரு கூறாகவே காண்பது புலப்படும். தலித்தியத்தின் தனித்துவத்தை -C வைகாசி , ஆனி 2007 )

Page 65
ஏற்காத மனப்பாங்கில் சிவத்தம்பியும் மறைந்த கேசவனும் ஒரே நிலையில் உள்ளனர். தலித் எழுத்துக்களை தலித் மட்டுமே படைக்க முடியும் என்கிற கருத்தாக்கத் தையும் சிவத்தம்பி மறுக்கிறார் (நேர்காணல்கள், பக்.249). இந்தியச் சூழலில் தலித் இலக்கியம் உருவான காரணம் குறித்த ஒரு கேள்விகளை அவர் நேரடியாக எதிர் கொள்ளும்போது,
'இந்தியாவில் தலித்துகளுக்கு மேல் நிலையில் உள்ளவர்களுடான தொடர்புகளுக்கோ அல்லது அவர்களுக்கு அண்மையில் போவதற்கான வாசமோ வாய்ப்போ இல்லை. கும்பிடும் தெய்வங்கள் கூட வேறு வேறு. அதனால் தங்களுடைய தனித்தவத்தைப் பேண முற்பட்டனர்.அங்குள்ள (அதாவது இந்தியாவில் அ.மா) உள்ள சாதி அமைப்பு போன்று இங்கில்லை. இங்கு தொழிலை வைத்துக் கொணர்டுதானர் Caste ஐ பார்த்தார்கள். தொழிலை விட்டுவிட்டால் caste ன் பெயர் இல்லை. வெளிப்படையான அடையாளத்தை மறைத்து விட்டால் சரி இங்கு (அதாவது ஈழத்தில் - அ.மா) போராட்டம் வித்தியாசம், இங்கு தீண்டாமை போராட்டமென்பது கோயில் பிரவேசம். ஏனென்றால் கோயில் பிரவேசம் மட்டும்தான் இங்கு பிரச்சினையானது. மற்றபடி அவர்களின் சமூக முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லை. இற்தியாவில் இந்நிலை இல்லை. அவன் வாழும் சூழல் எல்லாவற்றிலும் வித்தியாசம் ' (நேர்காணல்கள், பக்.249)
என்று கூறுவது வியப்பாக இருக்கிறது. ஈழத்திலும் இந்தியாவிலுமுள்ள சாதிய அமைப்புகளிடையே சில வேறுபாடுகள் உண்டுதான். இந்தியாவைப் போல பார்ப்பன ஆதிக்கம் இங்கு கிடையாது. ஆனால் அதனினும் கொடிய அளவில் வேளாள ஆதிக்கம் ஈழத்திலுண்டு. மற்றபடி சாதிப்படி நிலையில் மேல் நிலையில் உள்ளவர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையேயான உறவில் பேராசிரியர் சுட்டுவது போல பாரிய வேறுபாடுகள் ஏதுமில்லை. ஈழத்துச் சாதிய அமைப்பு குறித்த ஆய்வுகளில் இருந்தும் டானியல் போன்றோரின் எழுத்துக்களில் இருந்தும் இதனை நிறுவ இயலும்.
(ஓலை 44 , 45 )

ஈழத்தில் தொழிலை வைத்துத்தான் சாதி இருந்தது என்றும் தொழிலை விடும் போது சாதி போய்விடுகிறது என்றும் பேராசிரியர் கூறுவது அப்பட்டமான பொய். இன்று புலம் பெயர்ந்து பழைய தொழில்களை விட்டுவிட்டு ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக வாழ்கிற ஈழத்தமிழர் களிடையே சாதி உணர்வுகள் இல்லையா? சாதி அடையாளங்கள் பார்க்கப்படவில்லையா? திருமணத் தொடர்புகளில் இறுக்கமான சாதி அடையாளங்களை அவர்கள் பேணுவது பேராசிரியரின் கவனத்தில்பட்டதில்லையா? புலம் பெயர்ந்து வாழ்ந்த போதிலும் ஒரு தலித் இளைஞனுக்கு வேளாளச் சாதியினர் பெண் கொடுக்கும் சூழல் வளர்ந்துள்ளது எனப் பேராசிரியர் கூற இயலுமா?
தீண்டாமைப் போராட்டங்கள் தொடர்பாக அவர் சுட்டுகிற வித்தியாசங்களையும் நாம் ஏற்க முடியாது. அங்கும் ஆலயப் பிரவேசத்திற்கான போராட்டங்கள் நந்நன் காலம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. வெளிநாட்டுப் படிப்பு முடித்து இந்தியா வந்து தீண்டாமை எதிர்ப்புச் செயற்பாடுகளைக் கையிலெடுத்தபோது அண்ணல் அம்பேத்கார் கோயில் (நாசிக்) நுழைவு, குளத்தில் (செளதார்) நீரெடுத்தல் முதலான போராட்டங் களைத்தான் தொடங்கினார். இன்றும் புதிய தமிழகம் என்கிற தலித் அமைப்பு கண்டதேவி ஆலயத்தில் தேர் வடம்பிடிப்பதற்காக உரிமை கோரி ஆண்டு தோறும் போராட்டங்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறது.
இந்தியாவில் தலித்களின் சமூக முன்னேற்றம் தடைப்பட்டது. இலங்கையில் அப்படியில்லை. என்றெல்லாம் பேராசிரியர் சொல்வதற்கு நியாயங்கள் இல்லை. இத்தகைய தவறான கருத்தோட்டங்களின் அடிப்படையில் ஈழத்தில் தலித் இலக்கிய விகசிப்பு ஏற்படாததை நியாயப் படுத்துவதை நாம் ஏற்க இயலாது. தமிழ்த் தேசியத்தை நியாயப்படுத்த வேண்டி தலித் நியாயப்பாடுகளைப் புறங்கணிப்பது என்ன ஆய்வு நேர்மை?
அய்யா, ஒரு தந்தைபோல என் எதிரே நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். உங்கள் மாணவன் எனச் சொல்வதில் பெருமை கொள்பவன் நான்.
- Ο σοσισιπί , οισοί : 2007 )

Page 66
"டானியலுடைய எழுத்துக்களில் தலித் இருப்ப தைவிட கிறிஸ்தவ மனிதாபிமானம் இருப்பதையே நான் காண்கிறேன்” (நேர்காணல்கள், பக்.249) எனத் தாங்கள் கூறுவதைப் படிக்கும்போது மனம் பதறுகிறது. காலமெல்லாம் தீண்டாமைக் கொடுமைகளை மட்டுமே எதிர்த்து எழுதியும், களத்தில் இறங்கிப் போராடியும் வந்த டானியலுக்கு நீங்கள் நியாயம் இழைக்கத் தவறி விட்டீர்கள். உங்கள் மீதுள்ள அனைத்து மரியாதைகளுடனும் சொல்லுகிறேன். டானிய லுக்கு அவருக்குரிய தலித் அடையாளத்தை வழங்காமல், கிறிஸ்தவச் சிமிழுக்குள் அடைக்க முயல்வதில் உங்களின் சர்வதேசப் புலமை வெளிப்படுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணச் சைவக் குசும்புதான் வெளிப்படுகிறது.
நிறைவாக நான் தொடக்கத்தில் குறிப்பிட்டது போலப் பேராசிரியரின் புலமைப் பங்களிப்புகளை மறுப்பது என் நோக்கமன்று. நவீன சிந்தனைகளைப் பேராசிரியர் எதிர் கொண் டமை குறித்த தலைப்பாகவன்றி பிற பங்களிப்புகளைப் பற்றிப் பேச நேர்ந்திருந்தால் என் நன்றிகடனைச் சிறந்த முறையில் செலுத்தியிருக்க இயலும்.
இது ஈன்ஸ் டின் நூற்றாண்டு. நான் ஒரு இயற்பியல் ஆசிரியர். சென்ற ஆயிரமாண்டின் மிகச் சிறந்த அறிவியல் அறிஞரான ஈன்ஸ்டினின் மூன்று முக்கிய ஆய்வுகள் ஒரே ஆண்டில் (1905) வெளிப்படுகின்றன. பிறகு நீண்ட காலம் அவர் உயிருடன் வாழ்கிறார். அக்காலக்கட்டத்தில் இயற்பியலில் மிக முக்கியமான பல கண்டு பிடிப்புகள் உருவாகின. ஆனால் அவற்றில் ஈன்ஸ்டினுக்குப் பங்கில்லை. 1905 க்குப் பிந்திய காலத்தில் பொதுச் சார்பியல் பற்றிய கண்டுபிடிப்பு ஒன்று மட்டுமே அவரது ஒரே பங்களிப்பாக இருந்தது. அதிலும் பின்னாளில் அவரே வருத்தப்படும் படியான முக்கிய தவறுகளும் இருந்தன.
உலக முழுமைக்குமான சர்வ வியாபகமான உண்மை என ஏதும் கிடையாது. அனைத்தும் சார்பானவையே என்கிற தத்துவ முக்கியத்துவம் வாங்கிய ஒரு கண்டுபிடிப்பை உலகிற்கு அளித்த ஈன்ஸ்டின் தொடர்ந்து வந்த குவாண்டம் கொள்கைக் கருத்தாக்கங்களைக் செரிக்க
(ஓலை 44 , 45 )

இயலாமற் போனார். எதுவும் முற்றுண்மையான தல்ல எனச் சொல்லத் துணிந்த ஈன்ஸ்டின் “எதுவும் உறுதியானதல்ல என்கிற ஹெய்சன்பர்கின plbuisitSOLDi QabsT6i503560)u (Uncertainty Principle) எள்ளி நகையாடினார். என்ன சொல்கிறீர்கள்? கடவுள் என்ன மனிதனுடன் தாயமா (dice) விளையாடுகிறார்? என்று கேட்டார். எதுவும் சாத்தியம் (probable) என்பதை அவரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. பொருட்களின் இரட்டைத் 356T60)LD, ambiguous nature gelduj6) libó0D 961) (T6) செரித்துக் கொள்ள இயலவில்லை. விளைவு? இயற்பியல் வளர்ந்து கொண்டு சென்றது. ஈன்ஸ்டின் தேங்கிப் போனார்.
ஒரு கட்டத்திற்குப் பிறகு இத்தகைய தேக்கம் பலரது வாழ்விலும் ஏற்படுகிறது. பேராசிரியரிடம் இதையே நாம் காண்கிறோம். புதிய சிந்தனைகள் முன் வைத்த கேள்விகளைப் பேராசிரியரால் பொறுக்க இயலவில்லை. தனது அளவுகோலைப் புதியவற்றுடன் Reconcileபண்ணும் முயற்சியாகவே அவரது எஞ்சிய செயற்பாடுகள் அமைந்தன. எனவே அவரால் எந்தப் புதிய பங்களிப்புகளையும் செய்ய இயலவில்லை. தேக்கம் தவிர்க்க இயலாமல் அவரைச் சூழ்ந்தது. ஆனால் சிந்தனை மாற்றங்களை யாரும் தேக்கி நிறுத்த இயலாது. அது அதன் போக்கில் மாறிக் கொண்டே போகும்.
(இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வு: பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் வகிபாகமும் திசை வழிகளும் என்கிற தலைப்பில் சென்ற 2006 டிசம்பர் 12, 13, 14 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தமிழ்ப் பரப்பில் மேலெழுந்து வந்த நவீன சிந்தனைகளைப் பேராசிரியர் எதிர் கொண்ட விதம் குறித்து அ. மார்க்ஸ் ஆற்றிய உரை இங்கு முழுமையாக வெளியிடப்படு கிறது. டொரொன்டோ பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையும் இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். அ. மார்க்ஸின் இவ்வுரை அடங்கிய அரங்கிற்குத் தலைமை ஏற்ற தமிழவன், ‘இதுவரை முன் வைக்கப்பட்ட கருத்துக்களிருந்து மாறுபட்டு ஒலிக்கும் ஒரே குரல்” என்பதாக இதனை மதிப்பிட்டது குறிப்பிடத்தக்கது). அ.மார்க்ஸ் பேராசிரியர். மாநிலக் கல்லூரி, சென்னை.
-C வைகாசி , ஆனி : 2007 )

Page 67
தமிழியலாய்வி
கலாநிதி வ.
தமிழ் ஆய்வுச் சூழல் என்பது நிறுவனமயப் படுத்தப்பட்டபோது பல்கலைக்கழகங்களின், பல்கலைக்கழகக்கல்லூரிகளின் பங்கு மிகவும் வேண்டப்பட்டதாகியது. இந்திய (குறிப்பாகத் தமிழ்நாடு) இலங்கைப் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் இது தொடர்பான பிரக்ஞையுடன் செயலாற்றின. தமிழ்மொழி, தமிழ்இலக்கிய மீட்டெ டுப்பே இந்நிறுவனங்களின் ஆரம்ப காலப்பணி களாயின. பேராசிரியர்கள் சுவாமி விபுலானந்தர், எஸ்.வையாபுரிப்பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, மு.வரதராசன் முதலானோரது தமிழியல் ஆய்வு முயற்சிகளைக் கூர்ந்து கவனிக்கில் இவ்வுண்மை புலப்படும். இவர்கள் தமிழ்மொழியின் தொன்மை, தமிழ் இலக்கியங்களின் சிறப்பு முதலான விடயங் களிற் பெரிதும் கவனஞ் செலுத்தினர். சுவாமி விபுலானந்தர் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, ஆகிய இருவரும் மிகுந்த கனதியான ஆய்வு நோக்குடையவர்களாகையால் அவர்களது மீட்டெடுப்புப்பணி வேறாக அமைந்தது. சுவாமி விபுலானந்தரது “யாழ் நூல் இந்த மீட்டெப்பின் வெளிப்பாடே. பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் தமிழச்சுடன் மணிகள் எனும் நூலைப் படிப்போர்க்கு அவரது ஆய்வுத் தளம் எவ்வகையான மீட்டெடுப்பு முயற்சி கொண்டது என்பது புலனாகும். ஆரம்ப காலங்களில் தமிழின் தொன்மையை புனைவுகள் வாயிலாகக் கட்டமைத்த மு.வரதராசன் பின்நாட்களில் மேலைத்தேய ஆய்வு நெறி முறைகளையும் விமரிசன முறையியலையும் தமிழிற்கு அறிமுகம் செய்து வைக்கும் பெரும் பணியை மேற்கொண்டார். (இலக்கிய மரபு, மொழிநூல் முதலியன).
மேற்குறித்த பீடிகையுடன் இலங்கைப்பல்கலைக் கழகங்களில் நிகழ்ந்த அல்லது நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளையும் அவற்றின் போக்குகளையும் இனங்காண்பதும் அப்பணிகளை முன்னெடுத்தவர் களில் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் இயங்கு தளம் பற்றி உசாவுவதுமான பிராரம்ப முயற்சியே இக்கட்டுரையாகும்.
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் தமிழியல் ஆய்வு முயற்சிகள் சுவாமி விபுலானந்தருடன் ஆரம்பமாகியமையால் தான் அதனுடைய நீட்சியும் வளர்ச்சியும் இன்றுவரை கனதியுள்ளதாக நிலை பெற்றுள்ளது எனலாம். சுவாமி அவர்களது யாழ் நூல் மீட்டெடுப்புப் பணியென்பது ஆய்வு முறையியலின் சகல பண்புகளையும் உள்ளடக
(ஓலை 44 , 45 )

ல் சிவத்தம்பி
Dகேஸ்வரன்
கியது. அவ்வாறானதோர் அத்திவாரமே ஈழத்துத் தமிழ் இயல் ஆய்வின் திசைகாட்டியானது. சுவாமி விபுலானந்தருக்குப் பின்வந்த பேராசிரியர் க. கணபதிப பிள்ளை, பேராசிரியர் வி.செல்வநாயகம் ஆகியோரது ஆய்வுகளும் மீட்டெடுப்புச் சாந்தவையே. பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் ஆய்வுகள் பண்பாட்டு மீட்டெப்பின் வகையைச் சார்ந்தவை. குறிப்பாக ஈழத்தமிழரது பண்பாட்டுப் பாரம்பரியங்களை, நடை, உடை பாவனைகளை அவர் தமது ஆய்விலும், ஆக்க இலக்கியங்களிலும் பதிவு செய்தார். மேலாகக் கல்வெட்டுக்களின் வாசிப்பிலும் விபரிப்பிலும் வரலாறு, பண்பாட்டு வேர்களை இனங்காட்டினார். பேராசிரியர் வி. செல்வநாயகம் உதிரியாகப் பல ஆய்வுக்கட்ரைகள் எழுதினாரேனும் அவரது ‘தமிழ் இலக்கிய வரலாறு’ ‘தமிழ் உரைநடை வரலாறு' என்ற இரு நூல்களும் இன்றுவரை தமிழியல் ஆய்வின் சிறந்த குறிப்பான்களாக நிலை பெற்றுள்ளன. பேராசிரியர். சு. வித்தியானந்தனும் தமது முன்னோர் போலவே தமிழியல் ஆய்வுகளைப் பண்பாட்டின் மீட்டெடுப் பாகவே இனங்கண்டார். அவரது நாட்டுக்கூத்து மீட்டுருவாக்க முயற்சிகள் இதற்குத் தக்க சான்றாகும்.
இவ்வாறானதொரு பின்புலத்திலே பேராதனையி லிருந்து பேராசிரியர்கள் கா. சிவத் தம்பி, க.கைலாசபதி ஆகியோர் வெளிவருகிறார்கள். இவர்களது ஆரம்பகால தமிழியல் ஆய்வு முயற்சிகள் உற்று நோக்குவோர் இவர்களும் தமது மூதாதையர்கள் சென்ற ஆய்வுத்தடத்திலேயே தாமும் கால வைத் தமையை நண் கறிவர் (சிவத்தம்பியினது தமிழ் நாடகம் பற்றிய ஆய்வோடும், கைலாசபதியினது வீரநிலைக்கவிதை களும் இதனையே குறித்து நிற்கின்றன.)
பேராசிரியர் கா. சிவத்தம்பியினது ‘தமிழ்ச்சிறு கதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூல் அவர் அவ்வாறான விபரிப்பு, மீட்டெடுப்புப் பணியிலான ஆய்வுகளையே ஆரம்பத்தில் நிகழ்த்தினார் என்பதைப் புலப்படுத்தும். ஆயின் இவர்களது முன்னோர்கள் ஒரு கோட்பாட்டின் வழி இயங்கவில்லை. இவர்களுக்கு இது வாய்த்தது. எனவே மார்சிய சித்தாந்தக் கோட்பாடுகளை உள்வாங்கிக் கொண்ட இவர்கள் ஒரு இலக்கியக் (Ideology) கோட்பாட்டியலின் அடிப்படையில் தமது ஆய்வுகளை நிகழ்த்தினர். அவர்களுக்கான ஈழத்து -( வைகாசி , ஆனி 2007 )

Page 68
அறிஞர் தந்த கல்விப் பின்புலமும், அவர்களுக்கு மேலை நாடுகளில் வாயப் த த ஆயப் வு நெறியாளர்களது வழிகாட்டல்களும், அவர்களது தனிப்பட்ட ஆர்வங்களும் அவர்களைப் புது மடைமாற்றிகளாகக் கட்டமைத்தன எனலாம். பேராசிரியர் சிவத்தம்பியினது 'தமிழ்ச் சிறுகதை யின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற ஆய்வு முறையியலில் இருந்து தமிழ் சமூகம் பண்பாட்டின மீள் கண்டு பிடிப்பு மதமும் மானிடமும் என்ற நூல்கள் வரை உற்று நோக்கும் போது இந்த மாற்றம் புலப்படும். பேராசிரியர் க. கைலாசபதி யினது 'அடியும் முடியும் என்ற நூல் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ச்சுடர்மணிகள் என்ற நூலின் ஆய்வுத் தளத்திலிருந்து சற்று உயர்ந்து சமூகவியல் ஆய்வு நெறிசார்ந்ததாகவிருந்தது. ஆய்வின் அவரது மடைமாற்றம் பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாட்டிலும் தெளிவாகப் புரிந்தது.
கைலாசபதி, சிவத்தம்பி ஆகிய இருவருமே ஒரு இயங்குதளத்தில் நின்று செயற்பட்டனர் என்பதை அவர்களது ஆய்வுகள் புலப்படுத்தும். சங்க இலக்கியத்தில் இருந்து நவீன இலக்கியம் வரை அவர்களது பார்வை விரிந்தது. எனினும் சமதளமாக இருவரது ஆய்வுகளும் நிகழ்ந்தன. இவர்களது சங்க இலக்கியம் பற்றிய ஆய்வுகள், நவீன இலக்கியம் பற்றிய ஆய்வுகள், மேலும் ஈழத்து இலக்கியம் பற்றிய ஆய்வுகள் என்பவை அவர்களைச் சமாந்தரமான ஆய்வுப் புலமையா ளர்கள் என நிலைநிறுத்தியது. மேலாக மார்க்சிய சித்தாந்தக் கோட்பாட்டியலின் அடியான இவர்களது விமர்சன முறைமைகள் நவீன இலக்கி யத்தை வெகுவாகப் பாதித்தன. அவை ஈழம் கடந்து தமிழகத்திலும் அவர்களை நிலை நிறுத்தின.
நவீனத்துவம், மார்க்சியம் முதலான கோட்பாடுகள் தமிழ்ச்சூழலில் நிலை கொண்ட போது இவர்கள் அதனைச் சரியாகப் பயன்படுத்தினர். இதனால் எதிர்ப்புகளையும் அவர்கள் எதிர் கொள்ளாமல் இல்லை. மரபுப்பண்டிதர்கள், மு.தளையசிங்கம், எஸ்.பொ, வெங்கடசாமிநாதன், கா. நாசு முதலியோர் இவர்களுக்கான இலக்கிய, கோட்பாட்டியல் எதிர்வினையாளர்களாக நின்றனர். இவர்களது எதிர்வினை சிவத்தம்பியை விட கைலாசபதியையே அதிகளவில் மையங் கொண்டிருந்தது. அந்த எதிர்வினைகளுக்கு கைலாசபதி நேரடியாகவும் தனது மாணவர்கள் மூலமாகவும் எதிர்வினையாற்றினர் இது எதிர் கருத்து நிலைகள் ஆயினும் இலக்கியக் கோட்பாடுகள் பற்றிய ஆக்கபூர்வமான கருத்தாடல்
(ஓலை 44 , 45 )-

களுக்கான களமாக அமைந்தது என்பதை மறுபத்திற்கில்லை.
கைலாசபதியினுடைய ஆய்வுகள் பின்னால் வந்த விமரிசன இஸங்களை மனங்கொள்ளவில்லை. மார்க்சிய விமரிசன அணுகுமுறைகளினூடாக, நவீனத்துவ சிந்தனை மரபுகளை அவர் உள்வாங்கி அவற்றைப் பிரயோகித்தார். அது தொடர்பான கருத்தியலில் நிலைத்துநின்று வாதப்பிரதி வாதங்கள் செய்தார். எதிர்வினை செய்தார். சிவத்தம்பிக்கு பின்னாட்களில் பல வாய்ப்புகள் ஏற்பட்டன. தமிழ்ச் சுழலில் பல இஸங்கள் உள்நுழைந்தன. இவற்றை யெல்லாம் ஒரு வாசகனாக, ஒர் அறிகையாளனாக அவற்றை உள்வாங்கிக் கொண்டார். அவை தொடர்பான தீவிர ஆதரவாளனாக அவர் விளங்காத போயியும் அவற்றுடன் சமரசம் செய்து கொண்டார். பல்துறை ஆய்வுச்சங்கம ஒழுங்கு என்ற கருத்தியலை அவர் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டார். அதன் வழி தன்னை இற்றைப்படுத்து வோனாக (Updated) நிலைநிறுத்திக் கொண்டு தனது ஆய்வுகளையும் விமரிசனங்களையும் முன்வைத்தார். அண்மைக் காலங்களில் “மக்கள் வெளியீட்டகத்தி னுாடாக வெளிவந்த அவரது பல நூல்களை இந்த வட்டத்துக்குள் அடக்கலாம்.
மொழி, இலக்கியம், சமூகம், இஸங்கள், விமரிசனம், சினிமா, அரசியல், வரலாறு, அகழாய்வு, கல்வெட்டியல் எனச் சகல நெறிகளிலும் அவரது கவனம் பரந்ததை அந்நூல்கள் வழி அறியலாம். (இவ்வாறான அகலித்த அறிவு நோக்கு மிகவும் அசாதாரணமானது எனினும் நுனித்து நோக்கல் என்ற கருத்தியலை அது புறந்தள்ளிவிடக் கூடிய அபாயங்களும் உண்டு) இதனால் அறிவுஜிவிகள் மட்டத்தில் அவருக்கான புலமைத்துவ அங்கீகாரம் பலமானதாகவும், விரிவானதாகவும் இருப்பதை மறுத்தலிக்க முடியாது. எந்த விடயம் பேசுவதாக விருப்பினும் அது பற்றிய அறிகையும், அதுபற்றி விபரிக்கும் திறனும், மொழியாற்றலும் அவரது குரலை ‘அதிகாரக் குரலாக்கியது' என்பதை மறுத்துரைக்க முடியாது.
சமகால அரசியல் குறித்த கருத்துநிலையிலும் பேராசிரியர் சிவத்தம்பிக்கான வகிபாகம் பலவுண்டு இடதுசாரி அரசியல் தத்துவ வழியாகவே இவரும், கைலாசபதியும் அரசியலுள் நுழைந்தனர். இடது சாரிகளுடனானதும், இடதுசாரி அரசியலாளர் களுடனானதுமான ஊடாட்டம் இருவருக்கும் இருந்தது. எனினும் பேராசிரியர் சிவத்தம்பிக்கு இலங்கை இனத்துவ அரசியல் மாற்றங்களையும்
-C வைகாசி , ஆனி 2007 )

Page 69
முகங்கொள்ள நேர்ந்தது. அவர் யாழ்ப்பாணப் பிரசைகள் குழுத் தலைவர் என்ற பதவி நிலையில் இருந்து பீஷ்மர் என்ற அரசியல் ஆய்வாளர் வரையில் அது நீடிக்கின்றது. ஆயின் இவ்விடைக் காலத்தில் ஈழத்தில் எழுந்த இலக்கியங்கள் பற்றிய கருத்து நிலையை அவர் கவனத்தில் எடுத்துக் கொண்டது குறைவென்றே குறிப்பிட வேண்டும் இலக்கியச் செல் நெறிகளை இனங்காட்டியளவிற்கு அவ்விலக்கியங்கள் பற்றிய (ஒரு சிலவற்றைத் தவிர) கருத்து நிலையில் அதிக ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. மாறாக தமிழ் பேசு நல்லுலகம் என்ற பெரு வட்டத்து மாறுதல்களிலேயே அவர் அதீத கவனங்கொண்டதாகத் தெரிகின்றது.
இறுதியாக அவரது வெகுஜன ஊடாட்டத்தையும் அதன் பாதிப்புகளையும் இவ்விடத்தில் குறிப்பி டுதல் வேண்டும். அவர் யாரையும் தூரத்தில்
10ம் பக்கத் தொடர்ச்சி. உலக முதலாளித்துவத்தின் தன்மை மாறிவிட்டது. 50 - 60 களில் இருந்த சோசலிச நாடுகள் இன்று இல்லை. உலகளவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. முன்பு 50 களில் நாங்கள் ஏகாதிபத்தியவாதம் என்பதை ஒரு நாட்டுக்குரிய பண்பாகக் கருதினோம். இன்று அப்படியல்ல. இன்று பல நாடுகளினுாடே போகின்ற முதலாளித்துவம். இது பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்தக் காலகட்டத்தில் முற்போக்கு இலக்கியத் தினுடைய தேவைகள் என்ன? முற்போக்கு இலக்கியம் அல்லது மார்க்சிய இலக்கியம் எவற்றை நோக்க வேண்டும்? இன்று இலங்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் என்ன? இலங்கையில் நாங்கள் 60 களில் பேசிய தேசியம் என்தற்கு இலங்கை முழுவதையும் ஒரு நாடாக, ஒரு தேசமாகக் கொண்டு அதற்குள்ளே உள்ளவர்களைப பேசினோம். அப்பொழுது நாம் தேசிய ஒற்றுமை, சிங்கள தமிழ் ஒற்றுமையை நாம் பேசினோம். அதில் நியாயமிருந்தது. அதை நான் இன்றும் மறுக்கவில்லை. நாம் அன்று பேசியது சரி. ஆனால் இலங்கையின் வரலாறும் அந்தத் தேசியத்தை இன்று இல்லாமல் செய்துவிட்டது. இன்று Ethnic Problem என்று சொல்லப்படுகின்ற இனக்குழுமப் பிரச்சினை இலங்கையின் பிரதான பிரச்சினையாக உள்ளது. நான் இன்றைக்கும் தேசியம் என்று
(ஒலை 44 , 45 )-

வைத்ததில்லை. நாடிச் சென்றோரை பாத்திரம் நிரப்பாமல் விட்டதுமில்லை. அதுதான் அவரது பலம். பலவீனமும் கூட, அவரிடம் ஆர்வமுடன் செல்லும் ஒரு மாணவன் மனதில் சில வினாக்களை அவர் எழுப்பும் வகையில் தூண்டுதல் இருக்கும். அதை இப்படிப்பார்க்கலாம். இதை இவ்வாறு நோக்கலாம் என்ற வகையில் ஒரு மடைமாற்றத் தையே நிகழ்த்துமளவிற்கு அந்த உசாவல் இருக்கும். வயிறு நிறைந்த பிள்ளைக ளாகவே அவரது வீட்டு வாசற்படி தாண்ட வேண்டி வரும். அந்தத் தாண்டல் மாணவனிடத்து (ஆதரித்தோ, எதிர்த்தோ) துங்கலாக விரியும். இது எல்லோருக்கும் வாய்க்காத தனித்துவம் இற்றைவரையான உசாவல், வாசிப்பு, கேள்வி, உரையாடல், அவதானம் எனத் தன் கவனத்தைப் பல துறைகளில் திசைமூகப்படுத்தி, தமிழியல் ஆய்வை-மடைமாற்றி ஈழத்தமிழ் ஆய்விற்கு தனித்துவம் தேடித்தந்த அவர் நமது பலம், நமது திசை அறிகருவி.
சொல்லுகின்றபோது அந்தத் தேசியத்தைப் பற்றித்தான் பேசவேண்டும் என்றுசொன்னால் அது சொல்லுகிறவனுக்கு ஏதோ பிரச்சினை இருக்கும். அல்லது எனக்கும் ஏதோ பிரச்சினை இருக்க வேண்டும்.
இப்பொழுது இந்தக் காரணங்களினால் முற்போக்கு இலக்கியம் என்பதற்கான இனி றைக் குரிய வரைவிலக்கணத்தைக் காணுவதில் நான் இந்தக் காலத்தின் தேவைகளுக்கேற்ப உலக மாற்றங்களுக்கு ஏற்ப, இலங்கையின் மாற்றங்களுக்கு ஏற்ப முற்போக்கு இலக்கியம் என்பது இங்கு மீள் வரைவிலக்கணம் செய்யப்பட வேண்டும். திரும்பிப் பார்க்கப்பட வேண்டும். அது பலருக்கு தளம்பலாக இருக்கலாம். எனக்கு அதைப்பற்றிக் கவலை யில்லை. நான் 5 வயதில் போட்ட சட்டையை 50 வயதில் போடமுடியாது. 5 வயதில் போட்ட சட்டை நல்ல பெறுமதியான சட்டை. ஆனால் அதற்காக அதை 50 வயதில் போடமுடியாது. 50 வயதில் 50 வயதுக்கேற்ற சட்டையைத்தான் போடமுடியும்.
மார்க்சியத்தினுடைய மிகச்சிறப்பான அம்சம் எதுவெ ன்றால் அது காலமாற்றத்தோடு காலமாற்றத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நிலைப்பாட்டை நான் எடுப்பது பலருக்கு தளம்பல் என்று தெரிந்தால் அவர்களையிட்டு நான் கவலைப்படுகின்றேன்.
தேர்வும் தொகுப்பும் : மூர் -C வைகாசி , ஆனி : 2007 )

Page 70
பேராசிரியர் சிவத்தம்பி
துரை.
எம் மத்தியில் வாழும் பேராசிரியர்களுள் கா.சிவத்தம்பி தனித்துவமானவர், வித்தியாச மானவர் கனதியானவர். இவர் வெறுமனே தமிழ்ப் பேராசிரியராக மட்டும் அறியத்தக்கவரல்லர். தமிழ்ச்சமூகம், தமிழ்ப்பண்பாடு பற்றிய சமூகவியல சார்ந்த ஆய்வு மரபுகள் உருவாவதற்கும் காரணமாக இருந்தவர், இருந்து வருபவர்.
பேராசிரியர் சிவத்தம்பி புலமை மட்டங்களில் இன்னும் முழுமையாக சரிவர புரிந்து கொள்ளப்படவில்லை, உள்வாங்கப்படவில்லை. இதானால் அவரது ஆய்வுகள் நூல்கள் மீதான ஊடாட்டம் ஆழமாக இல்லை. அவரது பன்முகப் பரிமாணம் புரிந்துகொள்ளப்படாமல் உள்ளது. தமிழக கல்வியாளர்கள் மத்தியில் சிவத்தம்பி புரிந்துகொள்ளப்பட்ட அளவிற்கு ஈழத்து கல்வியா ளர்கள் மத்தியில் அந்தளவிற்குப் புரிந்துகொள்ள ப்படவில்லை.
ஒரு சாரார் மத்தியில் சிவத்தம்பி வெறும் துதிபா டலுக்கு உரித்தானவராக மட்டுமே உள்ளார். இது கலாசாரமாகக் கையளிக்கப்பட்டுள்ளது. இங்கு சிவத் தம் பியை பாராட்டுபவர்கள் புகழ்கிறவர்கள் அவரது புலமை மரபுகளுடன் உறுதியான தொடர்ச்சியான ஊடாட்டம் மிக்கவர் களாக இல்லை. இவர்கள் ஆழமான வாசிப்பு அகன்ற வாசிப்பு இவை எதுவும் இல்லாமல் ஒரு பக்திவயப்பட்ட பார்வையின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். இது ஒரு கட்டத்தில் சிவத்தம்பிக்கே - மனிதருக்கே - உரிய சில பலவீனங்களை குறைகளை இனங்காணும் போது மிக மோசமான மனிதராக அவரை சித்தரிக்கும் பாங்கு, திட்டித்தர்க்கும் அவசரக் கோலங்களை வெளிப்படுத்துகின்றனர். சிவத்தம்ப இத்தகையவர் களால் தருக்க பூர்வமற்று விதைக் கப்படும் கருத்துகளாலும் மாசுபடுத்தப்பட்டுள்ளார். இந்தப் போக்கு பல மட்டங்களில் பல நிலைகளில் செல்வாக்கு செலுத்துகிறது எனலாம்.
இன்னொருபுறம் சிலர் அவரை தீண்டத்தகாத ஒரு பேர்வழி என்னும் அடிப்படையில் வன்மம் பாராட்டுபவர்களும் உள்ளார்கள். இவர்கள் தாம் நம்பும் அரசியல் கருத்து நிலை நலன்களுக்குள் மட்டும் அவரைப் பொருத்திப் பார்க்க விரும்பு கிறார்கள். அதற்குள் சிவத்தம்பி மடங்க மறுக்கும் போது அவர் மோசமான நபராக எதிராளியாக, துரோகியாக அடையாளப்படுத்தப்படுகிறார். இவர்கள் தரப்பில் சிவத்தம்பி எழுதிய எந்தவொரு
(ஓலை 44 , 45 )

: சில சிந்தனைகள்
D6
நூலும் முழுமையாக வாசிக்கட்பட்டு அந்த நூல்களில் இழையோடும் தருக்கங்களை கருத்துநிலையை ஆய்வு முறையியலை விவாதிக்கும் உரையாடும் கலாசார மரபு வழிவரும் உணர்திறன் அறிவுக் கண்ணோட்டம் சார்ந்து சிவத்தம்பியை மதிப்பிடும் சனநாயக நடைமுறைகள் கடைப் பிடிக் கப்படுவதாக இல்லை. இதனால் சிவத்தம்பி வெறும் திட்டித்தீர்க்கும் நபராகவே சிலருக்கு உள்ளார்.
இத்தகைய நடைமுறைகள் சிவத்தம்பி போன்ற புலமையாளர்களை தெட்டத்தெளிவாக புரிந்து கொள்ள முடியாத நிலைமைகளாக நீட்சிபெற்று ள்ளன. இது எதார்த்தமாகவும் உள்ளது. சிவத்தம்பி தெய்வாம்சம் பொருந்தியவரல்ல. பலம் பலவீனங்கள், குறை நிறைகள் உள்ள மனிதராகத்தான் உள்ளார். அவ்வாறுதான் அவர் பார்க்கப்பட வேண்டும். இந்த ரீதியில் அவர் விமரிசனத்துக்கு உள்ளாக்கப்படக் கூடியவர். ஆனால் எமது தமிழ் புலமைச் சூழல் ஆய்வுச் சூழல் தனக்கான அறிகை மரபை புறவயப்பட்ட நோக்கில் கட்டமைக்கவில்லை. அவ்வாறு வளர்த்தெடுக்கவில்லை. இதற்கு பேரா.சிவத்தம்பியும் பொறுப்புத்தான். இவர்கள் விட்ட மாபெரும் தவறுகள் இவர்களுக்கே பெரும் சவாலாக மாறியுள்ளது. இது ஒரு நோய்க் கூறாகவே பல்கிப் பெருகியுள்ளது.
நாம் இந்தப் பின் புலத்தையும் விளங்கிக் கொண்டு தான் சிவத்தம்பியை புரிந்து கொள்ளவேண்டும். கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக தமிழியல் ஆய்வுப் பரப்பில் அவர் ஏற்படுத்தியுள்ள சலனங் களை, தடங்களை, வளங்களை, மடைமாற்றங்களை பலவாறு நோக்கும் பொழுது தான் சிவத்தம்பியின் தளமும் வளமும் எமக்குத் தெளிவாகும்.
சிவத்தம்பியின் தனிப்பட்ட பலவீனங்கள் குறைபாடுகள் அதாவது அவரது நடத்தைத் துலங்கல்கள் பண்புகள் சிவத்தம்பியின் புலமையை மதிப்பிடு வதற்கு அவரைப் பார்ப்பதற்கு தடைகளாக இருக்கக்கூடாது. இது அவருக்கு மட்டுமல்ல அனைத்து புலமையாளர்களுக்கும் பொருத்தக் கூடியது.
இந்த நாகரிகம் ஒரு கலாசாரக் கையளிப்பாக எமக்குக் கையளிக்கப்பட்டிருந்தால் அல்லது அதுவே ஒரு கலாசாரமாக இயக்கம் கொண்டிரு ந்தால் சிவத்தம்பியின் பன்முக ஆளுமை அறிவுக் கையளிப்பில் அவர் ஏற்படுத்திய மடைமாற்றம் யாவும் நன்கு தெட்டத்தெளிவாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கும்.
வைகாசி , ஆனி : 2007 D

Page 71
தமிழில் மார்க்சிய விமரிசன மரபு வரன்முறையாக வளர்ச் சியடைவதற்கு பேராசிரியர்கள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, நா.வானமாமலை போன்றவர்களின் பங்களிப்பு ஆழமானது அகலமானது. இந்த மரபுத் தொடர்ச்சியில் தான் தமிழில் “மார்க்சிய விமரிசனம்”“மார்க்சிய ஆய்வு முறையியல்’ முனைப்புடன் புதுப் பரிமாணம் கண்டு வளர்ச்சியடைந்துள்ளது. இதனை ஆய்வுலகம் ஒத்துக் கொள்ளும் . இந்தத் தொடர்ச்சியில்தான் சிவத்தம்பி நோக்கப்படவேண்டும்.
米米米
நவீன இலக்கியம் சார்ந்த சிவத்தம்பியின் வாசிப்புத் தேடல் சில மட்டுப்பாடுகள் கொண்டது. க.நா.சுவை பட்டியல்போடும் விமரிசகர் எனக் கூறிக் கொள்வது போல் சிவத்தம்பியும் இத்தகைய பட்டியல் போடுபவர்தான். சிலரை மட்டும் முன்னிறுத்தி பேசுபவர். குறிப்பாக எண்பது களுக்குப் பிறகு ஈழத்துத் தமிழ்க் கவிதைப் போக்குகள் என்று பேசும் பொழுது கவிஞர் சேரனை மட்டுமே மையப்படுத்திப் பேசுவார். இந்தப் பேச்சு ஈழத்துத் தமிழ் கவிதையின் போக்குகள் பற்றிய முழுத்தரிசனத்துக்கான சிந்தனைக்கட்டமைவை கருத்துநிலை முகிழ்ப்பை பல நிலைகளில் திசைப்படுத்தும் தொடர்ச்சியாக இருக்காது. அந்தந்தக் கால மனனழுச்சி மனித உறவாடல் சார்ந்த தன்மைகள்தான் இங்கே விமரிசன அளவு கோல்களாக வெளிப்பட்டுள்ளன. இது புதுவை இரத்தினதுரை பற்றிப்பேசும்போது கூட முன்னைய தொடர்ச்சிகளிலிருச்து பேசுவதை விட ஒரு திடீர்ப் பாச்சலாகப் பேசுவார். இதுபோல் தான் ரஞ்சகுமாரைப்பற்றியும் பேசுவார். நவீன இலக்கியம் பற்றிய தொடர் பேச்சு காலகட்ட மாறுதலுக்கு ஏற்ப அவற்றை இணைத்துப்பார்க்கும் ஆற்றல் ஒரு கோட்பாட்டாக்கமாக விருத்தி பெறவில்லை. இதனாலே சேரன், ரஞ்சகுமார் என்ற அடையாள இறுக்கம் படைப்பாக்க முறைமையின் அனைத்துச் சாத்தியப்பாடுகள் தேடிய அனுபவம் அறிவுசார் உந்துதல்களில் சேர்மானமாக உருப் பெறுவதில்லை.
இலக்கியமும் கருத்து நிலையும்’ என்னும் எண்ணக்கரு சார்ந்த கோட்பாட்டாக்கம் நவீனத்துவ அறிதல் முறைமைத் தொடர்ச்சியின் பண்புக் கூறுகளால் புதிய அடியெடுப்புகளை வழங்கக் கூடிய கோட்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வில்லை. இந்தத் தொடர்ச்சி பேரா.சிவத்தம்பியிடம் வெளிப்பட்டிருந்தால் நவீன இலக்கியம் கலை பற்றிய புதிய சிந்தனைக் கட்டமைவுகள் தேடல்கள் பெருகியிருக்கும். இலக்கிய வரலாறு எழுதுதல் பற்றிய புதிய பார்வைக்கும் வித்திட்டி ருப்பார். ஆனால் பேராசிரியர் இந்த இடத்தில் (ஒலை 44 , 45)

தேங்கிவிட்டார். இதனாலேயே இவர் புதிய சமூக அனுபவம் பற்றி குறிப்பிட்டிருந்தாலும் அவற்றுக்கான மாறுதல்களை, களங்களை, இயங்கியலை நுண்ணியதாக நோக்கமுடியாமற் போய்விட்டது. அதற்கு மேல் கணிப்பிற்குரிய படைப்பு படைப்பாளர் பற்றிய தொடர் அவதானங்களையும் செலுத்த முடியாமல் போய்விட்டது. வெறுமனே சில பெயர்களை மட்டும் உதிர்த்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
எண் பதுகளுக்குப் பின்னர் தமிழ்ச் சூழலில் ஏற்பட்டுள்ள ஏற்பட்டு வரும் மாற்றங்களை புதிய போக்குகளை கடந்த கால சிந்தனை முறைமையில் இருந்து மட்டும் புரிந்து கொள்ள முடியாது. மாறாக அந்த கடந்த கால சிந்தனை முறைமையில் இருந்து விடுபட்டு சிந்திக்கும்பொழுதுதான் புதிய அனுபவம் புதிய சூழல் குறித்தான வேறுபட்ட புதிய பார்வைகள் பிறக்க முடியும். புதிய பொருள்கோடல் மரபுக்கான தடங்களை அடையாளம்காண முடியும். இந்த புள்ளிகளை சிவத்தம்பி தொடவில்லை இதனால “கூறியது கூறல்” “சிலரது பெயர்கள் உதிர்த்தல்” “சொல் விளையாட்டுகள்” (இந்தச், சொல் சரியா? அந்தச்சொல் சரியா? என்பதில் மட்டுமே கவனம்) இவை தான் வெளிப்பட்டன. அதற்கு மேல் நிலைக்குத்தான தளப்பெயர்வுக்கு உரிய புதிய சூழல் கருத்துவெளி உருவாக்கிக் கொடுக்கப்படவில்லை.
இந்தத் தன்மைகளால் சிவத்தம்பி தலைமுறைக்கு அடுத்து வந்த தமிழ்நாட்டு விமரிசகர்கள் ஆய்வாளர்கள் பலர் நவீனத்துவ விமரிசனத்தின் மற்றும் அதன் அறிதல் முறையின் பண்புகளை தமிழ்ப்படுத்தும் பெரும் பணியில் ஈடுபடத் தொடங்கினார்கள். புதிய போக்குகள் புதிய களங்கள் உருவாகக் காரணமாக இருந்தார்கள். இந்தப் பின்னணியை சிவத்தம்பி தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லை. அல்லது இந்த தொடர் ஓட்டத்தில் பின்வாங்கிவிட்டார்.
குறிப்பாக நவீனத்துவ விமரிசன மரபுக்கான எழுத்துச் செயற்பாடு எண்பதுகளுக்குப் பின்னர் சிவத்தம்பியிடமிருந்து உருவாகவில்லை. எழுத்து ஒரு சமூகத்தின் மனச்செயற்பாடு. அது மொழியை இயக்கத்தில் வைக்கும் தளம் ஆகும். இங்கு பேராசிரியரது மனச் செயல்பாட்டுக்கும் எழுத்து க்கும் இடையில் பெரும் இடைவெளி நிலவிவந்து ள்ளது. ஆனால் இவை குறித்து ஆழமான கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தால் விவாதங்கள் தூண்டப்பட்டிருந்தால் எமது விமரிசனச் செயற் பாடு இன்னும் ஆழ அகலப்படுத்தப்பட்டிருக்கும். ஈழத்து நவீன விமரிசனச் சூழல் பற்றிய புதிய கேள்விகள் பிறந்து கொண்டிருக்கும். நாமும் விடைதேட தொடர்ந்து பயணப்பட்டிருப்போம்.
-C வைகாசி , ஆனி : 2007 )

Page 72
இந்த இடத்தில் நாம் இன்னொரு புரிதலுக்கும் செல்ல வேண்டும். அதாவது அமைப்பியல் பின்னமைப்பியல், பின்னவீனத்துவம், நவமார்க் சியம் போன்ற சிந்தனை வளங்களின் உள்வாங்கல் புதிய மொழிக்கட்டமைப்பு சார்ந்த சிந்தனை அறிகை மரபு பேராசிரியரின் எழுத்து நடையில் முகிழ்க்கவில்லை. தி.சு.நடராஜன் போன்ற ஆய்வாளர்களது கட்டுரை ஆக்கத்தில் இழையோடிய தெளிவு, புரிதல் இவரது நவ சிந்தனைகளின் வெளிப்படவில்லை. இதனால் ஈழத்துத் தமிழ்ச்சிந்தனை மரபில் இவரது புதிய சிந்தனை உதிர்ப்புக்கள் பெரும் தாக்கம் செலுத்தவில்லை என்றே கூறலாம்.
ஆனால் இலக்கிய ஆக்கம் பற்றி, கலை வரலாறுபற்றி இவர் வெளிப்படுத்தியதான நுண்ணியதான ஆய்வுக் களங்கள், சிந்தனை முகிழ்ப்புக்கள் பெரும் பரப்பாகவே இன்னும் உயிர்ப்புடன் உள்ளன என்பதை நாம் மறுத்துவிட முடியாது. கவிதையியல் பற்றிய அவரது நோக்கும் போக்கும் தமிழ்கவிதை மரபுக்கே புது வளம்சேர்ப்பவை. அதுபோல் தொல்காப்பியம், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் போன்ற இலக்கிய வகைமைகள் குறித்தான இவரது பார்வையும் ஆய்வுத் துலங்கலும் புதிய பார்வைகளை எமக்குத் தருகின்றன.
1960களிலிருந்து பேராசிரியரது ஆய்வு முறைமையியலில் பல்வேறு மடைமாற்றங்கள் உள் ளன. அந்த மடை மாற்றங்களின் மேற்கிளம் புகையில் தான் பேராசிரியர் புரிந்துகொள்ளப்பட வேண்டும். 80 களுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்களை மட்டும் வைத்துக் கொண்டு பேராசிரியரது ஆய்வுத் தடங்களை நாம் மதிப்பிட முடியாது. அப்படி மதிப்பீட்டிற்கு உள்ளாக்கும்பொழுது கூட அவரது சிந்தனை ஆய்வு ஒரு இறுக்கமான ஒரு நிலையியல் பார்வை கொண்டதல்ல. பல்வேறு புதிய சிந்தனை முறைகளுடன் கூடிய உரையாடல் களம் அவரிடம் தாராளமாகவே இருந்துவருகின்றது. இதனால் தான் புதிய தலைமுறை ஆய்வாளர்கள், புலமையாளர் களுடன் சமமாக இருந்து அவர்களுடன் உரையாட முடிகின்றது. பணியாற்ற முடிகின்றது. இது அவரிடம் இருக்கும் பலமான அமிசம்.
水米来
பேராசிரியர் எப்பொழுதும் உறுதியான நிலைப்
பாட்டிலிருந்து கருத்து வெளிப்படுத்துபவர் அல்லர். இந்தக் குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. எந்தக்
(45", 44 (ooهo )

கருத்துநிலை சார்ந்த முகாம்களுடனும் உறவு கொண்டிருப்பவர். இதனால் இவருடன் எவரும் உரையாட முடியும், உறவாட முடியும். மார்ச்சிய கருத்து நிலை நோக்கு எப்பொழுதும் இவரிடம் செல்வாக்கு மிகுந்த செல்வாக்குச் செலுத்தும் எனக் கூற முடியாது. "இது தான் மார்க்சியம் என்று நம்பும்” சிலரால் இவர் துாற்றப்படுகின்றார். பேராசிரியரை தூற்றுபவர்கள் ஒன்றும் தெளிவான அரசியல் நிலைப்பாட்டிலிருந்து தான் விமரிசிக் கிறார்கள் என்று கூற முடியாது. பேராசிரியரை விமரிசிக்கும் அளவுக்கு இவர்கள் கனமானவர்கள் என்றும் கூற முடியாது. இருப்பினும் பேராசிரியர் வந்து கொண்டிருக்கும் பாதை அவரது உள்ளுணர் வையும் மீறிய கருத்துநிலைத் தேட்டத்தையும் கடந்த இழுநிலை தளம்பல் அசைவு கொண்டது. இது பல்வேறு குத்துக்கரணங்களுக்கு ஆட்படாது எனக் கூறமுடியாது. இதுவே இவரது பலமும் பலவீனமும் கூட. இது அவரவர் பார்வைக்கு ஏற்ப பேராசிரியர் ஏற்கப்படுவார், தூற்றப்படுவார். இது பேராசிரியருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும். அவ்வாறு நம்பமறுத்து அடம்பிடிப் பவர்கள் பற்றி நாம் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
தூற்றுபவர்களின் செயற்பாடுகளுடன் பேராசிரியரது செயற்பாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது பேராசிரியர் மேல் நோக்கித்தான் உள்ளார். இந்த வயதிலும் சமூகப் பிரக்ஞையுடன் வாழ்பவர். தொடர்ந்து புலமைச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர். அனைவருடனும் சகஜமாக சமமாக பழகக்கூடியவர் யாரும் அவரை இலகுவாக பற்றிப் பிடிக்க முடியும்.
இதை விட தமிழியல் ஆய்வுப்புலத்துடன் பேராசிரியர் பற்றிப்பிடித்திருப்பது இன்னும் இன்னும் அதிகம். இதைப் புரிந்து கொள்ளவும் கற்கவும் நாம் திறந்த மனதுடன் பேராசிரியரை அணுக வேண்டும். அவரை முழுமையாக வாசிக்க வேண்டும். மறுவாசிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அப்பொழுது பேராசிரியர் சிவத்தம்பியின் புலமை மரபு, ஆய்வு மரபு எத்தகையது என்பது தெட்டத் தெளிவாகும். அவர் நமக்கு விட்டுச்செல்லும் புலமைப் பாரம்பரியம், அறிகை மரபு எத்தகையது என்பது நமக்குத் தெளிவாகும்.
பேராசிரியரைப் புரிந்துகொள்ளல் என்பது கால் நூற்றாண்டு தமிழியல் ஆய்வுமரபை புரிந்துகொள்ளலாகவும் உள்ளது.
-C வைகாசி , ஆனி : 2007 )

Page 73
(BLIJ Ifffuus கார்த்தி “யாழ்ப்பாணச் சமூகத்ை நூல் பற்றிய ஓர் அ
அரங்க விெ
சமூகம் என்பது மிகுந்த சிக்கல் பொருந்தியதும், பல்வேறு இடைவினைகளையும், இடைத்தாக்கங் களையும் கொண்டதுமான ஒரு பெரும் முரண் பாட்டுத் தொகுதியாகும். இந்நிலையில் சமூகம் பற்றிய ஆய்வை “ஒற்றை வழி’ ஆய்வு முறைக்குள் கொண்டு வருதல் அபத்தம் என்பது மார்க்சியத்தின் பலமான அறிகை முறைமை. மார் க்சிய ஆய்வுமுறை என்பது ஒரு கனங்காத்திரமான முறையியல் (Methodology) பிற ஆய்வு முறைகளால் அறிகை கொள்ளப் படாத விடயங்களை அல்லது பரிமாணங்களை வெளிக்கொண்டுவரும் அறிகைப் பலமும் விசையும் மார்க்சிய முறையியலுக்கு உண்டு. இந்த அய்வு முறையைப் பயன்படுத்திய திறன் பேராசிரியர்கள் க.கைலாசபதி, வானமாமலை, மற்றும் கா.சிவத்தம்பி ஆகியோரின் தமிழியல் ஆய்வுகளை உச்சங்களுக்கு மேற்கிளம்பிச் சென்றது.
பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் தமிழிய லுக்குள் மட்டும் தம்மை வரித்துக் கொள்ளாது, சமூகவியலுக்குள் நுழைந்தமை அவரது பட்டப்படிப்புடன் இணைந்த செற்பாடு மட்டுமன்று அவரிடத்து நிறைவு பெற்றிருந்த மார்க்சிய அறிகையே சமூகவியல் நோக்கிய வியாபக த்துக்கு விசையாக அமைந்தது. தமக்குரிய மார்க்சிய நோக்கில் யாழ்ப்பாணத்துச் சமூகத்தை அவர் பின்வரும் தலைப்புக்களில் அமைத்து ஆராய்ந்தார்.
(1) யாழ்ப்பான சமூகத்தை இனங்கண்டு
கொள்ளல்
(2) யாழ்ப்பாண சமூகத்தின் உருவாக்கம் நிலைபேறு தொடர்ச்சியின் சின்னமாக தேசவழமைச் சட்டம் அமையுமாறு.
(3) யாழ்ப்பாண சமூகத்தின் இயல்புகள்
சிலவற்றை நோக்கல்
(ஓலை 44 , 45)- audeaucra

கேசு சிவத்தம்பியின் த விளங்கிக் கொள்ளல்” வதானச் சிறுகுறிப்பு.
ற்றிவேந்தர்
(4) இச்சமூகத்தின் பண்பாடும் கருத்து
நிலையும்.
(5) இச்சமூகத்தின் சமகால அசைவியக
கத்தின் தன்மைகள் சில.
(5) நிறைவுரை
பேராசிரியர் கா.சிவத்தம்பியின் இந்நூல் 1993 ஆம் ஆண்டில் (தர்சனா பிரசுரம்) வெளிவந்தது. இந்நூலுக்கு ஒர் எதிர்வினையாக அல்லது எதிாப் L!60) 601(3æ, T6T Tæ (ANTITHESIS) & 6us! Égó வே.இராமகிருஷ்ணனின் “யாழ்ப்பாணக் கலாசாரம் - தத்துவப் பின்னணி என்ற நூல் (தங்கோடை, காரைநகர் 2001) வெளிவந்தது என்று கூறலாம், அல்லது கூறத்துணியலாம்.
இதிலே சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மேற்கூறிய இரண்டு ஆக்கங்களும் மறைந்த பேராசிரியர் சோ.செல்வநாயகம் அவர்களது நினைவுப் பேருரைகளை அடியொற்றி முகிழ்த் தெழுந்த நுT ல் களாகும் . கலாநிதி வே.இராமகிருஷ்ணன அவர்களும் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களைப் போன்று பேராதனை அனுபவம், இந்திய அனுபவம், பிரித்தானிய அனுபவம், மாாக்சிய அனுபவம், சைவசித்தாந்த அனுபவம் முதலியவற்றைக் கொண்டவர் என்பது அறிகைக்கு குறிப்புக்குரியது. யாழ்ப்பாணம் என்ற “Feypab bsT6ólu uggläg” (SOCIAL TEXT) G66 வேறு வாசிப்புக்கள் இருவராலும் தரப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணப் பண்பாட்டைப் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் சாதிய அறிகை வழியும் கலாநிதி வே.இராமகிருஷ்ணன் அவர்கள் சைவ சித்தாந்த வழியும் கருத்து வினைப்பாடு (DISCOURSE) Gauldigip60Ts.
பேராசிரியர் கா.சிவத்தம் பி, கலாநிதி வே.இராமகிஷ்ணன் அவர்களும் முறையே
-C வைகாசி , ஆனி 2007 )

Page 74
சாதியம் மற்றும் சைவ சித்தாந்தாந்தம் ஆகிய ஆய்வுக்கணியங்களை "அதீத நிலையிலே” பயன்படுத்தியுள்ளனர் என்ற திறனாய்வு உண்டு. அதீத நிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த மீயூட்டல் (OVERDOSE) ஆய்வுத்தருக்கத்தோடு இணைந்து நோக்கப்பட வேண்டியுள்ளது. கலைப் புனைவுகளிலே பயன்படுத்தப்படும் இவ்வாறான மியூட்டல்களை ஆய்வுகளுக்கும் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி மாணவர்களாகிய எங்களிடத்து எழுகின்றது.
தேசிய இனப்பிரச்சனை யாழ்ப்பாணச் சமூக த்தில் ஏற்படுத்திய தாக்கங்களை நுண்பாக நிலையிலும் பெரும்பாக நிலையிலும் பலபரி மான ஆய்வுகளுக்கு உட்படுத்தும் பொழுது தான் சமூகப்புலக்காட்சி மேலும் விரிவடையும்.
யாழ்ப்பாணச சமூகப் பரிமாணங்களில் சாதியம் முக்கியத்துவம் பெறுவதாக இருப்பினும் அது மட்டும் ஒரே பரிமாணமாகாது. சாதியம் பற்றிய பரிமாணத்தை எழுச்சி (AFFECTIVE) நிலையில் ஆராய்வதன் வாயிலாக சமூகம் பற்றிய நடப்பு நிலவரங்களைக் கண்டறிய முடியாது. சாதியத்தைப் பிற சமூகக் காரணிகளுடன் தொடர்புபடுத்தித் தருக்க வழிநோக்குதல் வேண்டும். மேலைப்புலக்கல்வி நடவடிக்கைகள் யாழ்பாணச் சாதிய ஏறு நிரலமைப்பை மீள வலியுறுத்தியே வந்தது. சாதியம் உள்ளிட்ட சமூக ஏறு நிரலமைப் பில் தாயப் மொழிக்கல்வியின் எழுச்சியே அதிர்வுகளை ஏற்படுத்தியது சாதியநிலை அடித்தளமக்களை
(ஓலை 44 , 45 )

அறிகை நிலையில் எழுச்சி பெறச் செய்ய தாய் மொழிக்கல்வி உதவியது.
யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி இயக்கங்களின் கருத்து வினைப்பாடு கள் ஒரு வகை நுண்மதி சார்ந்த பயிற்சிகளாகவே (INTELLECTUAL EXERCISES) g(b.bg,607 (36) ju66ls) அடித்தளத்த மக்களை மேல்நோக்கி நிலைக் குத்தாக அசையவைக்கவில்லை. மேலும் மத்திய தர வகுப்பினரிடத்து நிரவல் கொண்டிருந்த சுய நலப்போக்கும் சந்தர்ப்பவாதமும் தேசிய இனப் பிரச்சனைகள் கூர்ப்படையும் பொழுது வெளிப்பாடு கொள்ளத் தொடங்கின. தாய்மொழிக்கல்வியின் எழுச்சியும், தேசிய இனப்பிரச்சனையின் கூர்ப்பும் ஒன்றினைந்து ஏற்படுத்தி வருகின்ற தாக்கங்கள் நிலைக்குத்து நிலையிலும், பக்கநிலையிலும் அசைவுகளை ஏற்படுத்தின. இவற்றோடிணைந்த ஒரு முக்கிய நிகழ்ச்சி நாடு நீங்கிய புலப்பெயர்ச் சிகளும் அவற்றோடிணைந்த சமூகத் தாக்கங்களு மாகும். தாய்மொழி வழிக்கல்வியும், தேசிய இனப்பிரச்சனையின் கூர்ப்பும் குடும்பம் என்ற சமூக அலகிலும் சாதியத்திலும் பெண்நிலை வகிபாகம் என்ற பாரம்பரியமான பரிமானத்திலும் தாக்க ங்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்தச் சமூகப் பரிமானங்களை “ஒற்றைவழி” வாய்ப்பாடுக்குள் அடக்கிவிட முடியாது. ஆகவே நாம் பேராசிரியர் சிவத்தம்பி மற்றும் இராமகிருஷ்ணர் போன்றோரின் அறிகைவழி கிளம்பும் யாழ்ப்பாணச் சமூகம் பற்றிய இன்னும் பல்பரிமான நோக்கு முறை மைக்கு நாம் செல்ல வேண்டும்.
-( வைகாசி , ஆனி : 2007 )

Page 75
பேராசிரியர் 8 அவர்களின்
சில குறி
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தமிழ் இலக்கியத்திறனாய்வு புது நெறியிற் செல்லலாயிற்று. அவற்றுக்கு வழிகோலிய முக்கியஸ்தர்களுள் பேராசிரியர் கா.சிவத்தம்பியும் ஒருவராவர். பல்கலைக்கழகப் படிப்பை முடித்தபின் முதலில் ஆசிரியராகவும் பின்னர் பல் கலைக் கழக விரிவுரையாளராகவும் பேராசிரியராகவும் கடமையாற்றி பத்து வருடங் களுக்கு முன்னர் ஒய்வுபெற்றார். ஒய்வுபெற்ற பின்னரும் ஒய்வில்லாது ஆய்வுசெய்து வருபவர். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக அளப்பரிய ஆய்வுகளைச் செய்துள்ளார். தள்ளாத வயதிலும் நடமாடமுடியாத நிலையிலும்கூட கருத்தரங்குகள் பலவற்றில் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கி வருகின்றார். இலங்கையிலும் தமிழகத்திலும் மட்டுமன்றி உலகெல்லாம் பரந்துவாழும் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் மத்தியிலும் அதிகம் சிலாகித்துப் பேசப்படும் ஓர் ஆய்வாளராக விளங்குகின்றார்.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மார்க்சிய நெறிநின்ற இலக்கியத் திறனாய்வு முயற்சிகளை இலங்கையிலும் தமிழகத்திலும் முன்னெடுத்துச் சென்றவர்கள் பலராவர். அவர்களுள் இலங்கையைச் சேர்ந்த இரட்டையர்கள் எனப் போற்றப்படும் அமரர் பேராசிரியர் கைலாசபதியும் பேராசிரியர் சிவத்தம்பியும் மிக முக்கியம் பெற்று விளங்குகின்றனர்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கியஸ்தர்களுள் ஒருவராகச் செயற்பட்ட சிவத்தம்பி அவர்கள் முற்போக்குச் சிந்தனை களைப் பரப்புவதிலும் ஆய்வுகளைச் செய்வதிலும ஓயாது உழைத்தார். சங்க இலக்கியங்கள் தொடக்கம் தமிழ்ச்சினிமா வரை அவரது ஆய்வுமுயற்சிகள் பரந்து விரிந்து சென்றன. அவரது ஆங்கிலமொழிப் புலமையும் அரசியல்,
(ஓலை 44 , 45 )

1.சிவத்தம்பி
ஆய்வுகள்:
ப்புகள்
பேராசிரியர் க.அருணாசலம்
சமூக, பொருளாதாரத் துறைகளில் அவர் பெற்றிருந்த அறிவும் தெளிந்த வரலாற்றுக் கண்ணோட்டமும் மேலைத்தேய இலக்கியங்களிற் கொண்டிருந்த பரிச்சயமும் தமிழ் இலக்கிய, இலக்கணப் பரப்பில் அவர் பெற்றிருந்த பரந்த அறிவும் சமூகவியற் பார்வையும் அவரது திறனாய்வு முயற்சிகளுக்குத் தனிச் சிறப்பை அளிக்கச் செய்தன.
பல்கலைக்கழகத்தில் மாணவனாகப் பயின்று கொண்டிருந்தபேதே நாடகங்களில் நடித்தார். பின்னர் தமது கலாநிதிப் பட்டத்திற்காக “பண்டைய தமிழ்ச்சமூகத்தில் நாடகம்” என்னும் தலைப்பில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து இலங்கைத் தமிழ்நாடகங்கள் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை எழுதினார்; நாடகங்கள் சிலவற்றைப் பதிப்பித்தார். இவ்வகையில அவரது முயற்சிகள் அவரின் பின் ஆய்வில் ஈடுபட்டவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலே தமிழ்ச் சிறுகதைகள் தொடர்பாக 1970ஆம் ஆண்டுக்கு முன்னரே சில நூல்கள் வெளிவந்திருந்தபோதும் அவற்றில் முழுமையோ செம்மையான வரலாற்று நோக்கோ காணப்பட வில்லை. இந்நிலையில் தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் நூல் இவரால் 1967ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தமிழ்ச் சிறுகதையின் தோற்றம், வளர்ச்சி ஆகியன தொடர்பாகப் பெருமளவு முழுமைத்தன்மையையும செம்மையான வரலாற்று நோக்கையும் இந்நூலிற் காணமுடிகின்றது. “இந்நூல் தமிழ்ச்சிறுகதையா சிரியர்களின் பட்டியல் அன்று. இது சிறுகதை என்னும் இலக்கியவகை வளர்ந்த முறைமையைக் கூறுவது, சிறுகதையின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் தொண்டாற்றியவர்களே இத்தகைய வரலாற்றில் இடம்பெறுவர். இலக்கிய வடிவங்களின்
-C வைகாசி , ஆனி : 2007 )

Page 76
வரலாறு தெரிந்தோர் இதனை ஏற்பர்’. எனத் தனது முன்னுரையிற் குறிப்பிட்டுள்ளமை மனங்கொளத்தக்கது. பின்னாளில் சிறுகதை பற்றிய ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்டவர்களுக்கு இந்நூல் முன்மாதிரியாக விளங்கலாயிற்று.
இவற்றின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாக ஈழத்தில் தமிழ் இலக்கியம், நாவலும் வாழ்க்கையும் இலக்கியத்தில் முற்போக்குவாதம், இலக்கியமும் கருத்துநிலையும் முதலிய நூல்கள் வெளிவர லாயின.
அவரது ஆய்வுகளில் வரலாற்று அடிப்படையும் சமூகவியல் நோக்கும் பண்பாட்டு விளக்கமும் முனைப்புப் பெற்று விளங்குவதை அவதானிக் கலாம். இவ்வகையில் தமிழ்ப்பண்பாட்டின் மீள் கண்டு பிடிப்பும் நவீனவாக்கமும் மேற்குலகின் பங்கும் பணியும், யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல்; அதன் உருவாக்கம், இயல்பு, அசைவியக்கம் பற்றிய ஒரு பிராரம்ப உசாவல் முதலிய நூல்கள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை.
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழிலக்கியத் திறனாய்வாளர்கள் என்ற வகையில் தமிழகத்தில் அதிகம் செல்வாக்குப் பெற்றவர்கள் இருவர். ஒருவர் பேராசிரியர் கைலாசபதி, மற்றையவர் பேராசிரியர் சிவத்தம்பி ஆவார். அடிக்கடி தமிழகத்திற்கு விஜயம்செய்து ஆய்வுகள் பலவற்றை நிகழ்த்தியவர். அவற்றின் பயனாக வெளிவந்த நூல்களுள் அ.மாகஸ் என்பவருடன் சேர்ந்து எழுதிவெளியிட்ட பாரதி மறைவு முதல் மஹாகவிவரை, தமிழில் இலக்கிய வரலாறு முதலியவை முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை. தமிழிலக்கிய வரலாறு தொடர்பாகப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அந்நூல்களைக் கூர்ந்து அவதானித்து அவற்றிலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி புதிய முறையில் எழுதப்பட்டதே அவரது தமிழில் இலக்கிய வரலாறு என்னும் நூலாகும்.
தமிழ் இலக்கிய விமர்சனத்திற் காணப்படும் முக்கிய குறைபாடுகளை அவதானித்த பேராசிரியர் இலக்கியமும் கருத்து நிலையும்

என்னும் நூலில் பின்வருமாறு கூறியுள்ளமை அவதானிக் கத்தக் கது, “தமிழ் இலக்கிய விமர்சனத்திற் காணப்படும் முக்கிய குறைபாடு, அது பெரும் பாலும் தற் காலத் தமிழ் இலக்கியத்தையும் அதற்கு முந்திய தமிழ் இலக்கியங்களையும் ஒன்றுடன் ஒன்று இணையாத இரு இலக்கியத் தொகுதிகளாகக் கொள்ளும் உளவியல் எல்லைக்கோடு வரையறைக்கு உட்பட்டு நிற்பதே தமிழ் இலக்கியம் முழுவதையும் பூங்குன்றன் முதல் செல்வராஜ் வரை கபிலர் முதல் அப்துல் ரகுமான்வரை ஒன்றிணைந்த, ஆனால் கால வேறுபாடுகளால் இலக்கிய ரசனை விகற்பங்களுடைய ஒரு தொகுதியாக நோக்கும் பண்பு நம்மிடம் வளரவில்லை.
தமிழின் அனைத்திந்திய முக்கியத்துவமே அதன் தொடர்ச்சியில் தான் தங்கியுள்ளது. இந்தியாவில் இன்று பேச்சு வழக்கிலுள்ள மொழிகளுள் மிகப் பழமையான இலக்கியத் தொடர்ச்சியுடைய ஒரேயொரு மொழி தமிழ்தான். அதற்காகப் பழமையைப் போற்ற வேண்டுமென்பதன்று வாதம். தமிழ் புதுமையை எவ்வாறு ஏற்று வந்துள்ள தென்பதைத் தெரிந்திருக்க வேண்டும் என்பது மாத்திரமே இங்கு வற்புறுத்தப்படுகின்றது. தமிழின் தொன்மையன்று முக்கியம். அதன் தொடர்ச்சியே முக்கியம்’.
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த்திறனாய்வு உலகில் இலங்கையின் இரட்டையர்கள் எனப் பெயர் பெற்ற கைலாசபதி, சிவத்தம்பி ஆகிய இருவரையும் 1960 களிலேயே தமிழகம் சரியாக இனங்கண்டு கொண்டது. மாக்சியநெறிநின்ற அவர்களது திறனாய்வு முயற்சிகள், எழுத்து சஞ்சிகையில் இடம்பெற்ற உருவமா? உள்ளட க்கமா? வாதப்பிரதிவாதங்கள், பண்டிதமரபுக் கெதிராக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், இழிசனர் இலக்கியம், தேசிய இலக்கியம், முற்போக்கு வாதம் முதலியன பற்றிய வாதப்பிரதிவாதங்கள் முதலியவற்றில் இருவரும் தீவிர பங்குகொண்டு உழைத்தனர்; மரபுவாதிகளின கடும் எதிர்ப்புகளுக்குள்ளாகினர். ஆயினும் அவர்கள் காட்டிய புதுநெறி வெற்றிவாகை சூடலாயிற்று.
-C வைகாசி , ஆனி : 2007 )

Page 77
1982 ஆம் ஆண்டில் கைலாசபதி மறைந்தார். அதன்பின் உலக அரங்கிலும் இலங்கையிலும் பெரும் மாற்றங்கள் நிகழலாயின. உலக அரங்கில் மாக்சியவாதிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய சோவியத் யூனியன் சிதறுண்டபோது பொதுவுடைமைக் கெதிரான வர்கள் குதூகலித்தனர். மாக்சியவாதிகள் மனம்நொந்தனர்.
இலங்கையில் தமது உரிமைகளைப் பெறுவதற் காகச் சிறுபான்மை மக்கள் நடாத்திவந்த அஹிம்சை வழியிலான போராட்டம் 1980 களின் ஆரம்பத்திலிருந்து ஆயுதப்போராட்டமாகப் பரிணமிக்கலாயிற்று. இதனால் ஏற்பட்ட
தனிப்பிரதி சந்தா ஒரு வரு
‘ஓலை’ க்கு உதவ விரும்புவோர் தங்க அல்லது வைப்பாக Colombo Tamil Sangam Society கணக்கு இல. 1100014906 Commercial Bank G6J6irón 6.15605
காசுக் கட்டளையாயின் “செயலாளர் ெ வெள்ளவத்தை தபால் அலுவலகத்தில் கொழும்புத் தமிழ்ச்சங்க அலுவலகத்த
N
(ஒலை 44 , 45 )-
 
 
 

நிலைமைகளால் தேசிய ஒற்றுமை என்பது கானல்நீராகியது. பொதுவுடமையை வற்புறுத் தியவர்களையும் தேசிய ஒற்றுமையை நிலைநாட்ட முயன்றவர்களையும் பார்த்து ஏனையோர் எள்ளி நகையாடினர். எனினும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் இவற்றைக் கண்டு துவண்டு விடாமல் தனது பாதையில் ஓர்மத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றமை வியக்கத்தக்கது.
தமிழ்த்திறனாய்வு உலகில் அவருக்கு நிரந்தர மானதோர் இடமுண்டு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அவரது ஆய்வுகள் எதிர்காலத்தில் செம்மையான முறையில் மதிப்பிடப்படுவது
அவசியமாகும்.
96)
ரூபா.100/= டம் ரூபா 1000/=
ள் நிதி அன்பளிப்புக்களை காசோலை
tod.
கு அனுப்பலாம்.
5ாழும்புத் தமிழ்ச்சங்கம்” என்ற பெயரில் மாற்றப்படக்கூடியவாறு அனுப்ப முடியும். ல் நேரடியாகவும் செலுத்த முடியும்.
للير.
-C வைகாசி , ஆனி : 2007 )

Page 78
தமிழில் ஒரு தடம்
- அபூசாலி -
பேராசிரியர் சிவத்தம் “ஈழத்துத் தமிழ் இல் விமர்சனங்களும்” எ நூல்களுள் முக்கிய கூறலாம். அதற்குரிய சுட்டலாம்.
முதலாவது இந்நூ6 ஈழத்து இலக்கியப்ப
மாற்றங்களைப் பற்றிட்
பேசும்போது, அவை ப துலக்கமுறுகிறது. இதன்மூலம் இவரது எதிர்ப்பாளர் இடத்தில் ஒவ்வொன்று கதைப்பவர்”, “காலத்திற்கு குற்றஞ்சாட்டு வதற்கெல்லாம் இவை பதில் அளி
இரண்டாவது மார்க்சியத்தை ஒரு இயங்கியலாக பார்த்த பார்வையே மார்க்சியத்தின் முற்போக்கு சமூக கலை இலக்கியத்திலும் சரி, மழுங்கடிக்க கட்டுரைகளில் தெளிவாக்கப்படுகின்றது. இந்த ம ஒரு மார்க்சிய எதிர்ப்பாளராக இவர்களால் பார்க்
தெளிவாகின்றது.
மூன்றாவது இந்நூல் மூலம் சந்தர்ப்பவாதிகள் தம்ை ஒரு முற்போக்கான பொது முன்னேற்றத்தின்
வித்தியாசத்தைக் காட்டுவது அவரது கருத்தியல் ஒவ்வோர் நிலைப்பாட்டையும் அதன் வியாக்கி வெளிச்சத்திலேயே பார்த்துள்ளார் என்பதற்கும் மேலும் இதனால்தான் இந்நூலாசிரியர் தான் (இந்த வெளிச்சம் தரும் பலத்தினாலேயே) ஏற்று
அதனால் தான் இந்நூலாசிரியர் பின்வரு
(ஒலை 44 , 45 )
 

ஒரு நூல் இரு பார்வை
யின் அண்மைக்கால வெளியீடுகளில் ஒன்றான க்கியத் தடம் - 1980 - 2000 - பார்வையும் ன்னும் நூல், நிச்சயமாக அவர் வெளியிட்ட இடத்தை வகிக்கப்போகிறது என்று துணிந்து
முக்கியமான காரணங்களாக பின்வருவனவற்றைச்
மில் இடம்பெறும் கட்டுரைகள் 1960க்குப் பின் ரப்பில் ஏற்பட்டுள்ள, ஏற்பட்டு வருகின்ற பேசுவனவாய் உள்ளன. அப்படி அவைபற்றிப் ற்றிய ஆசிரியரின் கருத்தியல் ரீதியான சிந்தனை ர்கள் இவரை “ஒரு நழுவல் பேர்வழி” ஒவ்வோர் க் காலம் தன்கொள்கையை மாற்றுபவர்’ என்று
ப்பதாய் உள்ளன.
கப் பார்க்காமல் ஒரு தேங்கிய குட்டையாகப் க் குணாம்சம் இலங்கை அரசியலிலும் gFীি, பட்டதற்குரிய காரணம் என்பது பேராசிரியரின் ழுங்கடிக்கப்பட்ட பார்வையே பேராசிரியரையும்
ப்படக் காரணமாகிறது என்பதும் இவை மூலம்
வளர்த்துக்கொள்ளக் கூறுகின்ற மாற்றத்திற்கும், நோக்கில் முன்வைக்கும் மாற்றத்திற்குமுரிய சிந்தனையே. இந்நிலையில் சிவத்தம்பி தனது ானங்களையும் இன்றைய அறிவுலகு தந்த ன்பதற்கும் இந்நூல் உதாரணமாக உள்ளது. டந்துவந்த பாதையில் விட்ட தவறுகளையும் கொள்பவராகவும் நிற்கிறார்.
ாறு கேட்கிறார். -C வைகாசி , ஆனி : 2007 )

Page 79
“இந்தக் கட்டத்தில் இலக்கியப்பணி யாது? இன்று அவை ஏற்படுத்தும் உணர்வு நிலைகளையும் உள் அவற்றின் தோற்றம் வளர்ச்சிக்கான காரணங்களை போல் அவற்றைப் புறக்கணிப்பதா? இந்த நட இவை பெற்றுள்ள உருவும் பொருளும் எந்த அ எவ்வாறு அத்துணைப் பிரபல்யத்தை பெறுகின்றன இல்லாமல் "ஆக்குவதற்கான போராட்டமா? அ போராட்டமா? அதாவது இந்த நடவடிக்கைக6ை அன்றேன் ஆக்கபூர்வமான ஒரு புதிய நிலைக்கா குறிப்பிடும் இலக்கியங்கள் இப்புதிய சூழ்நி6ை இனங்கண்டு கொண்டுள்ளனவா? (புதிய சவால்க
இத்தகைய கேள்விகளை இன்றுள்ள சகல கல் எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை உள்: தத்துவார்த்த பலமுள்ள கருத்தியல் முதிர்வு நம் “கருத்தியல்’ என்ற போர்வையில் பல முற்ே
நிராகரிக்கும் என்பது வெளிப்படை.
இதனால் தான் இந்நூலாசிரியர் பின்வரு
“ஈழத்தில் முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் முற்போக்கு இலக்கிய இயக்கத்தினரால், பின்னர் ஒரு நிலைமையையும் 1980 - 2000 வரைக்காலப் அறிவின்மையை மன்னிக்கலாம். தாம் எழுதிய எவ்வாறு மன்னிப்பது, இது தனிப்பட்டவர்களின் இயக்கம் அதற்குரிய தர்க்க ரீதியான வளர்ச்சி
:
இந்நூலிலே முன்னுரையோடு - முன்னுரையும் - 15 விடயங்கள் அடக்கப்பட்டுள்ளன. ஒவ்வெ வந்த கலை இலக்கிய சமூக, அரசியல் ஆய்வுக்கெடுப்பவையாக உள்ளன. இவற்றில் மு புதிய எழுத்துக்கள்” , “ஈழத்துத் தமிழ் இல “உயிர்ப்புகளின் உயிரைத்தேடி” , “சேரனின் க சூழலில் தமிழ்தேசியம்”, “தலித், “தலித் இலக்கிய “புலம்பெயர் தமிழர் வாழ்வு” , இலங்கை ம ஆகிய கட்டுரைகள் பல விஷயங்களை முன்
எதிர்வினை போன்றவற்றுக்கும் ஆற்றுப்படுத்த
(ஓலை 44 , 45 )

ரத்தியட்சமாகவுள்ள அரசியல் நிகழ்வுகளையும் ாது உள்ளவாறே ஏற்றுக் கொள்வதா? அன்றேல் ஆராய்வதா? இப்பிரச்சினைகள் இல்லையென்பது டிக்கைகளின் மனிதநிலை வேர்கள் யாவை? ாவுக்கு இயைபானவை? இந்த நடவடிக்கைகள் இந்நடிவடிக்கைகள் இருக்கும் சில அநீதிகளை ல்லது புதிய ஒரு சமுதாய முறைமைக்கான எதிர்நிலை நடவடிக்கைகளாகக் கொள்வதா? ன நடவடிக்கையாகக் கொள்வதா? இவைபற்றிக் )களைத் தோற்றுவிக்கும் சக்திகளைச் சரிவர ள், புதிய பிரக்ஞைகள், புதிய எழுத்துக்கள்)
லை, இலக்கிய கர்த்தாக்களும் தம் ஆய்வுக்கு வாங்கி எதிர்கொள்வதற்கான சமூக அரசியல் எழுத்தாளர்களுக்குத் தேவை. இத்தேவையானது பாக்காளர் அழுத்தும் கட்டுப்பெட்டித்தனங்களை
மாறு தனது முன்னுரையில் கூறுகிறார்.
வரலாறும் அதன் சாதனைகளும் önl, அந்த வந்த கோச வாய்ப்பாடுகளால் மறுதலிக்கப்படும் பிரிவிலே காணக்கூடியதாக உள்ளது. சமூகவியல் தைத் தாங்களே நிராகரிக்கும் அறியாமையை அவலம் அல்ல. ஈழத்து முற்போக்கு இலக்கிய
யைப் பெறவில்லை என்பது தான் உண்மை’.
帐米
ரு கட்டுரைக்கான தாக்கத்தைக் கொண்டுள்ளது. ன்றும் கடந்த தசாப்தங்களில் ஈழத்தில் ஏற்பட்டு )ாற்றங்களையும் அவற்றின் போக்குகளையும் க்கியமாக “புதிய சவால்கள், புதிய பிரக்ஞைகள், கியத்தில் முற்போக்குவாதத் தொழிற்பாடுகள்’ , தைகள் பற்றிய விமர்சனம்”, “இலங்கை அரசியற் ம் என்ற வகைப்பாடு இலங்கைக்குப் பொருந்துமா?” லயகத் தமிழரின் பண்பாடும் கருத்து நிலையும்” வப்பதோடு, வாசிப்பவரை பல்வகைச் சிந்தனை,
பல்லனவாய் உள்ளன.
-C வைகாசி , ஆனி : 2007 )

Page 80
தமிழ்த் தேசியம்’ சம்பந்தமாக சிவத்தம்பி ஒரு என்பவர்களுக்கும் “மார்க்சீயம் பற்றி அவருக்க பழைய அவரது அணியினர் (டொமினிக் ஜீவா ே
புதிய எழுத்துக்கள்’ ‘ஈழத்துத் தமிழ்இலக்கி “தலித் இலக்கியம்” என்ற வகைப்பாடு” போன்ற
இவை நீங்கலாக இவர் ஈழத்து இலக்கியம் ப முன்வைக்கின்றார். எனினும், இவ்விலக்கிய முய பற்றிக் குறிப்பிடும்போது, எல்லாவற்றுக்குள்ளும் இ திரும்பச் சுட்டுகின்ற போக்கிலுள்ள தவறுபற் அண்மைக்கால இலக்கி கர்த்தாக்கள் பற்றிப்
வரதராஜன், சேரன் ஆகியோர் பற்றி மட்டு ஆய்வுக்குரியதெனச் சொல்ல முடியாது. இவரது
“ஈழத்தில் தமிழ் இலக்கியம் - 1965 - 1989 க என்றே கூறவேண்டும். இக்காலகட்டமே பல்வ தோற்றுவித்ததோடு அவற்றிலிருந்து இன்னொரு இதற்குத் துணைபுரிந்த எழுத்தாளர்கள், கலைஞ கனதியான ஆய்வை மேற்கொண்டிருந்தால் மிக பங்களிப்பும் அவற்றின் இயக்க ஒட்ங்களும் தெரிய போனதற்குக் காரணம் இது ஒரு மேலோட்டமா இவ்வாறே “அழகியல் மார்க்சீயமும் மார்க்சீய
போதாத் தன்மைகளோடு முடிவுறுகிறது. இவ்விவ ஆகியோர் சிந்தித்தவை பற்றி நாம் கவனத்தில்
இவை நீங்கலாக இந்நூல் பல மட்டங்களில் 1
வைத்து ஆற்றுப்படுத்துவதாய் இருக்கும் என்பதி முன்னின்ற மூன்றாவது மனிதன் வெளியீட்டாளர
(ஓலை 44 , 45 )

வகை ‘நழுவல்” போக்கையே கொண்டுள்ளார் Iருந்த தெளிவுகள் ஆட்டங்கண்டுவிட்டன” என ான்றவர்கள்) வைக்கின்ற குற்றச்சாட்டுகளுக்கும் தசியம்” , புதிய சவால்கள், புதிய பிரக்ஞைகள், யத்தில் முற்போக்குவாதத் தொழிற்பாடுகள்’
ஆய்வுரைகள் பதில் அளிப்பனவாய் உள்ளன.
]றிப் பேசும்போது சில சரியான விஷயங்களை ற்சிகளின் பின்னின்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள் ரண்டொரு தெரிந்த எழுத்தாளர்களையே திரும்பத் றி நாம் குறிப்பிட வேண்டும். உதாரணமாக பேசும்போது தெணியான், ரஞ்சகுமார், உமா மே குறிப்பிட்டுச் செல்லும் போக்கு அகன்ற ஆய்வின் போதாமையின் வெளிப்பாடே இது.
ட்டுரை ஆழமான ஆய்வை உள்ளடக்கவில்லை கைப் பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் கட்டத்தை நோக்கி முன்னகர்ந்த காலமுமாகும். ஞர்கள், கவிஞர்கள் யார், யார் என்பவை பற்றி மிக வெவ்வேறு கருத்துடைய எழுத்தாளர்களின் பவந்திருக்கும். இக்கட்டுரை இவைபற்றி கூறாமல் ான கட்டுரையாக இருப்பதே என்றும் கூறலாம். அழகியலும்” பற்றிப்பேசும் கட்டுரையும் பலவித யம் பற்றி ஏ.ஜே.கனகரத்னா, றெஜி சிறிவர்த்தன கொள்ள வேண்டும்.
Iல்வகைச் சிந்தனை ஓட்டங்களை ஊற்றெடுக்க
ல் சந்தேகமில்லை. இந்நூலை வெளிக்கொணர
Tன எம்.பெளஸர் பாராட்டப்பட வேண்டியவரே.
சரிநிகர், இதழ் : 215, டிசம்பர் 2000
வைகாசி , ஆனி : 2007

Page 81
கொஞ்சம்
- வண்ண
சிவத்தம்பியின் பார்வை கரடுதட்டிப் போன
தமிழிலக்கியத்திற்கு ஈழமும் கணிசமான பங்களிப் பிறகு இந்தியாவிலும் இலங்கையிலும் முற முன்வைக்கப்பட்டன. இதையொட்டி பத்திரிகைகள் எழுந்தன. இந்த அணியின் குறிப்பிடத்தக்க வி கா.சிவத்தம்பி என்ற கார்த்திகேசு சிவத்தம்பியை
நூலின் காலத்தை 1980 - 2000 என்று ஆசிரிய காலகட்டங்களைப் பற்றியும் சிவத்தம்பி தனிக் க முற்போக்கு அல்லாத பிற போக்குகளும் இரு சிவத்தம்பி நகர்கிறார். ஆனால், முற்போக்கு இல முன்வைத்த மு.தளையசிங்கத்தின் பங்களிப்பு சொல்லாமல் ஈழத்தின் தமிழிலக்கயத் தடம் நி
மகாகவியின் புதல்வரான சேரன் மிக முக்கிய போன்றவர்களும் கணிசமான பங்களிப்புச் செய்து உள்ளது. பிற கவிஞர்களைப் பற்றிய குறிப்புக் மற்றக் கவிஞர்களைப் பற்றியும் விரிவாக எழு
தமிழ் பேசும் இலங்கை மக்கள் என்பது பல்வேறு திரிகோணமலை, வன்னி, யாழ்ப்பாணம், மன்னா போன்ற பல்வேறு பகுதி மக்களை உள்ளடக்கி கணக்கில் எடுத்துக்கொண்டுதான் பேசுகிறார். கருத்தையும் ஆசிரியர் முன்வைக்கிறார். எந்தத யாழ்ப்பாணத் தேசியமா, மலையகத்தமிழ்த் போகாது. புலம்பெயர் தமிழர் வாழ்வை அற்புத கட்டுரையாகவே எழுதியுள்ளார். தமிழகத்திலி ஏறத்தாழ இதே நிலையில்தான் உள்ளது. விரிe நூல் நெடுகிலும் காணப்படுகின்றன. கரடு தட்டி
கூறுகளைக் கொண்டவராக ஆசிரியர் இருப்பது
(ஓலை 44 , 45 )

விடுதல்கள்
நிலவன் -
நல்ல
புச் செய்துள்ளது. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் போக்கு இலக்கியம் குறித்த கருத்துக்கள் வெளிவந்தன. படைப்புக்களும் விமர்சனங்களும் மர்சகர்கள் என்று மறைந்த கைலாசபதியையும்
பயும் குறிப்பிடலாம்.
ர் வரையறை செய்திருந்தாலும் 80 க்கு முந்திய ட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார். அக்காலங்களில், ந்தன என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு க்கியத்திற்கு எதிராக சர்வோதய அடிப்படைகளை
மிகப்பெரியது. மு.தளையசிங்கத்தைப் பற்றிச் றைவுபெறாது.
மான கவிஞர்தான். ஆனால் வ.ஐ.ச.ஜெயபாலன் துள்ளார்கள். சேரனைப் பற்றித் தனிக் கட்டுரையே கள் தான் போகிற போக்கில் சொல்லப்படுகிறது.
தப்பட்டிருக்கலாம்.
கலாச்சார வேறுபாடுகளைக் கொண்ட மட்டக்களப்பு, ர், மலையகம், மேற்குக் கரையோரம், தென்பகுதி பது. இந்தக் கலாச்சார வேறுபாடுகளை ஆசிரியர் ஆனால் அதே சமயம் “தமிழ்த்தேசியம்” என்ற தமிழ்த்தேசியம்? மட்டக்களப்பு தமிழ்த்தேசியமா, தேசியமா என்ற கேள்வி வாசகனுக்கு எழாமல் மான விமர்சன நோக்குடன் ஆசிரியர் ஒரு தனிக் நந்து சென்ற தமிழர்களின் புலம்பெயர் வாழ்வும் ான பல கட்டுரைகளுக்கான கருத்துச் சிதறல்கள் போன மார்க்ஸியராக அல்லாமல் வளர்ச்சிக்குரிய
நூலில் பல இடங்களில் பதிவாகியுள்ளது.
(இந்தியா டுடே 2002 மார்ச் 20)
-( வைகாசி , ஆனி : 2007 )

Page 82
ܢܠ
இலங்கையில் நூல்கள் வ ஏற்றுமதி இறக்குமதி
புதியதோர்
அன்புடன் அழைக்கின்றது
CHEMAMADU BOO
Telephone: 011-2472362 FOX : 011-2448624 E-moil : chemomoduGyaho
UG 49.50, People's Pork, C.
தமிழ் நாட்டில் பத் விற்பனைத்துறை ( எமது முக
க.சச்சிதானந்தன் - காந்தளகம் சென்னை - 02. தொ.பே: 044-28414505 E-mail: tamilnooladataone.in
அனைத்து வெளியீடுகளையும் எ
 

நியோகம், விற்பனை,
பதிப்புத்துறையில் Fகாப்தம்
lessIDID(b நதகசாலை
K CENTRE
O.CO
Dlombo - 11, Sri Lonko.
ப்ெபுத்துறை, Dன்னோடிகள், ர்கள்
கோ.இளவழகன் - தமிழ்மண் பதிப்பகம் சென்னை - 17. தொ.பே: 044-24339030
E-mail : tn-pathippagam (alyahoo.co.in
மிடம் பெற்றுக்கொள்ளலாம்