கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தங்கத் தலைவி

Page 1


Page 2

தங்கத் தலைவி
கோகிலா மகேந்திரன்
வெளியீடு:
கலை இலக்கியக் களம்
Gj66L6)
2OOO

Page 3
THANGA THA AV
by - KOHILA MAHENDRAN
Puplishers & Copyright: Lyceum of Literary & Aesthetic Studies, Tellippa llai.
Date of Publication: 7th January 2000
Printers:
Bharathy Pathippakam K. K. S. Road, Jaffna.
Page; 47 -- VIII
Price: 50/-

எழுத்துத் துறையிலும் நாடகத்துறையிலும் நான் சில பணிகள் செய்யத் தேவையான ஆதாரக் கல்வியை எனக்களித்த ஆசான் அமரர் கவிஞர் செ. கதிரேசர்பிள்ளை அவர்களின் திருவடிகளில்
இச் சிறு நூல்
6 cost UU.6007

Page 4

பதிப்புரை
கலை இலக்கியக் களத்துக்கு இப்பொழுது வயது பதினான்கு. இந்த இளம் வயதில் அது சாதித்தவை பல, பலரது ஆளுமைகளை அது பதிவு செய்துள்ளது. பல அரிய சிந்தனைகளுக்கு அது வித்திட்டுள்ளது. புதிதாக உருவாகி வரும் தலைமுறைக்கு ஒரு திசைகாட்டியாக அது திட்ட மிட்டுச் செயற்பட்டு வருகின்றது. இவ்வாறான செயன் முறையில் ஒரு கட்டமாக இந்த வெளியீடு உங்கள் முன் மலர்கின்றது.
இந்த வெளியீட்டின் உரிப்பொருளாகத் தி கழும் *ஆளுமைக்கு அறிமுகம் அவசியமில்லை. தமிழர் வாழும் நிலமெங்கும் சிவம் பேசித் தவம் வளர்க்கும் அன்னைக்கு அறிமுகம் தருவதற்கு நாங்கள் யார் ? இந்த நானிலத் தைத் தன் நாவால் வென்றெடுத்த அந்த அன்னை பற்றிய எங்கள் மனப்பதிவுகளின் ஒரு பகுதி மட்டுந்தான் இந்த DITG).
சமயம் என்பது ஒரு வாழ்க்கைமுறை. அது அன்பில் முளைகொள்வது; அரவணைப்பில் வள ர் வது; பிறர் துன்பம் துடைப்பதில் முன்னிற்பது. இது பலருக்குத் தெரிவதில்லை. அதனால் புறநிலையான சடங்குகளிலும் புரிந்து கொள்ளமுடியாத தத்துவச் சிக்கல்களிலும் மட்டும் சமயம் பற்றிய தேடலை மேற்கொள்பவர்களாகப் பலர் நம்மத்தியில் உளர். அன்னை சிவத்தமிழ்ச் செல்வியின் சிந்தனையும் சொல்லும் செயலும் சமயத்தை அதன் இயல்பான வடிவில் - அன்பு, அரவணைப்பு, துன்பம் துடைக்கும் தொண்டு ஆகிய வடிவங்களில் - தரிசிப்பன: விளக்குவன; செயற்படுத்துவன. எனவே அவர் சமயம் அறிந்தவர்; தெளிந்தவர்.
அன்னை துர்க்கா துரந்தரியின் இவ்வாறான ஆளு மையை உடனடியாக முழுமையாக எழுத்தில் வடிப்பது எம் இன்றைய நிலையில் சாத்தியமற்றது. ஆனால் எதிர் காலத்தில் அவருக்கு வரலாறு சமைக்கும் முயற்சிக்கு

Page 5
அடிப்படையாக ஒரு பதிவையாவது மு டி ந் த வ  ைர முன்வைக்க வேண்டும் என்பது எம் ஆர்வம். இந்த ஆர்வத் தின் வெளிப்பாடு இந் நூல்.
இவ்வாறான படைப்பொன்றை ஆக்கு வ தற் குக் கோகிலா மகேந்திரன் அவர்கள் மிகப் பொருத்தமானவர் என்பதை இந் நூல் அமைந்த முறைமையே பறைசாற்றும். கோகிலா அவர்கள் நம் களத்தினர். அதனால் அவரைப் பற்றி நாம் பேசுவது சுயவிளம்பரமாகி விடலாம். ஆனால் கோகிலாவின் ஆளுமையின் முக்கிய கூறு அவர் மனிதர் களை மதிப்பிடும் முறைமையாகும். உளவியல் நோக்கில் ஒரு வரைக் கணிக்கும் வகையில் அவர் தம்மை வளர்த் துக் கொண்ட முறைமையே அவர் இன்றைய ஈழத்தமிழ் எழுத்துலகில் முதல் வரிசையில் நிற்பதற்கான அடிப்படை யாயிற்று என்பது எமது கணிப்பு. அவர் அன்னையைத் தரிசித்த முறையை அவருக்கேயுரிய தனி அணுகு முறை எனலாம். சிவத்தமிழ்ச் செல்வியின் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு இயங்குநிலையும் அவரால் தரிசிக்கப்பட்டுள் ளன. அவரது தலைமைத்துவம் சார்ந்த அனைத்துக் கூறுக ளும் துல்லியமாக இனங்காணப்பட்டுள்ளன.
இந்த நூலிலே சிவத்தமிழ்ச் செல்வியை மட்டுமா நாம் தரிசிக்கிறோம்? இல்லை. கடந்த அரை நூற்றாண்டு கால ஈழத்துத் தமிழரின் - சைவத்தமிழரின் - பண்பாட்டு இயங்கு நிலையையும் கூடத்தரிசிக்கிறோம்.
சிவத்தமிழ்ச் செல்வி எங்கள் புரவலர். பவளவிழாக் காணும் அவருக்கு இது எம் காணிக்கை.
கோகிலா மகேந்திரன் நம்முள் ஒருவர் (செயலாளர்).
அவரது எழுத்துலகச் செயற்பாட்டில் இது ஒரு வளர்ச்சிக் கட்டம். இனி இந் நூல் வாசகர்களாகிய
உங்கள் கரங்களில் .
தெல்லிப்பழை. பேராசிரியர் நா. சுப்பிரமணியன் 19-12-99 தலைவர் - கலை இலக்கியக் களம்
(தமிழ்த்துறை, யாழ், பல்கலைக்கழகம்)

வாழ்த்துரை
நாடறிந்த எழுத்தாளரான திருமதி கோகிலா மகேந் திரன் அவர்கள் சமூக நலன்களை மிக ஆழமாக நோக்கு பவர். அவரது உள்ளப் பதிவுகளின் வெளிப்பாடாகத் தங்கத் தலைவி என்ற இச் சிறு நூல் வெளிவருகிறது.
தங்கத் தலைவியான கலாநிதி தங்கம்மா அப்பாக் குட்டி அவர்களின் தலைமைத்துவப் பண்புகள் இந்நூல் ஊடாக விபரிக்கப்படுகின்றன. ஆன்மீகம், கல்வி, மருத் துவம், உளவியல், அழகியல், சமூக மேம்பாடு, பொருளி யல் போன்ற பல துறைகளிலும் இவரது தலைமைத்து வச் சிறப்புக்களின் தாக்கங்களை உணரக் கூ டி யதா க உள்ளது.
வெந்து தவிக்கும் உள்ளங்களுக்கு அமைதி கூறக் கூடிய ஆலயமொன்றை நடத்தி வருபவர், தனது தலை மைத்துவச் சிறப்பால் ஏனைய துறைகளிலும் குன்றின் தீபமென ஒளி விட்டுத் திகழ்கின்றார்.
"அன்பே சிவம்" அன்பினால் உலகை ஆள முடியும் என்ற உணர்வுக்குட்பட்டுத் தஞ்சம் கோருபவர்களுக்குப் புகலிடம் தரும் இவரது தலைமைத்துவப் பண்புகள் உல கம் அறிந்தவை. அதனால் தான் அவரது பல் து  ைற சார்ந்த சேவைகளுக்கு அனைத்துச் சமூகமும் உறுதுணை யாக நிற்கிறது.
பொருத்தமான நேரத்தில் இப்படி ஒரு நூல் வெளி வருவது குறித்து மகிழ்கிறேன். நூலாசிரியரை வாழ்த்து கிறேன்.
மருதனார்மடம், 6. Sy TG) fur aircrafts, b. கல்விப் பணிப்பாளர்
வலிகாமம் கல்வி வலயம் 201 2-ᏭᏭ

Page 6
துர்க்கா ஆலயத்தின் தேவஸ்தானப் பரிபாலன சபையின் தலைமைப் பொறுப்பை இவர் 1976 இல் ஏற்றபோது, அவர் மனதில் ஒரு நீண்டகால இலக்கும் அதற்குப் பொருத்தமான பல குறுகிய கால இலக்கு களும் தோற்றம் பெற்று விட்டன. முட்டாள் தனமான வேறு பல தலைவர்களைப் போல், வெறுமனே ஒரு அதி காரம் நிறைந்த பதவியில் தான் அமர்வதாக அவர் கருத வில்லை. பல அறப் பணிகளையும், ஆலயப் பணிகளை யும், சமூகப்பணிகளையும் செய்யக்கூடிய ஒரு இடத்திற் குப் போவதைத் தனது மனக் கண்ணில் தெளிவாகக் -5 600 L-i TIT ,
ஓங்கி உயர்ந்த கோபுரத்தோடும், ஏராளமான பக்தர் களோடும் சிறந்து விளங்கும் ஒர் ஆலயம், சமூக அறப் பணிகளில் நிறைவாக ஈடுபடும் காட்சி ஒரு நீண்டகால இலக்காக அவர் மனதில் எழிலாடுகிறது. இந்த இலக்கு அவ்வப்போது பல சிறிய குறுகிய கால இலக்குகளாகப் பிரிக்கப்பட்டு ஈடேற்றப்பட்ட முறை ஒரு நல்ல தலை மைத்துவத்தின் தனிச் சிறப்பாகும்.
பெளதீக வளங்கள் தொடர்பாகச் சில குறுகிய கால இலக்குகள் நிறைவேற்றப்பட்ட ஒழுங்கைப் பாருங்கள்;
உட்பிரகாரக் கொட்டகை -76 9 7 ܚ தேர்முட்டி - 1977 சித்திரத் தேர் -س-- I 978 பொது அலுவலகம் -1978 -س சண்டேசுரர் கோயில் -79 9 1 س ஞான சுரபி மண்டபம் - 1980 இராஜ கோபுரம் - 98. அலங்கார நுழைவாயில் - 1981 அன்னபூரணி மண்டபம் - 198 துர்க்கா புஷ்கரணித் தீர்த்தத் தடாகம் ー I 933 அன்னபூரணி கல்யாண மண்டபம் - I 983 தீர்த்த மண்டபம் - 1983

சுற்று மதில் - 1985
மகளிர் இல்ல மாடிக்கட்டிடம் - 1986 செங்கழுநீர்த் தொட்டி - 1986 குழாய்க் கிணறு 6 8 9 1 سمبس அகதிகள் வெளிமண்டபம் --7 8 19 س நூலகம், வெளிவீதிவாகன சாலை
பணியாளர் விடுதி -صحس- il 9 88 புதிய அன்னதான மண்டபம் 1991 سے நல்லூர் துர்க்கா சிறுகுடில் مـ I 99 7 நல்லூர் துர்க்கா மணிமண்டபம் - 1998 அன்னையர் இல்லம் - 1999
1988 வரை பெரிய தடங்கல்கள் எதுவுமில்லாமல் நிறைவேற்றப்பட்டு வந்த குறுகியகால இலக்குகள் போர்ச் சூழலாலும், இடப் பெயர்வாலும் பாதிக்கப்பட்டு இருந்த போதிலும், செல்வி அவர்களின் வலிமையான ஆளுமை மீண்டும் 1997 முதல் சொந்த இடம் திரும்பிச் செயற் படத் தொடங்குவதை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
இங்கே குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு குறுகியகால இலக்குகளும் ஒரு சாதாரண மனிதனைப் பொறுத்த வரை மிகக் கடினமான நீண்டகால இலக்குப் போல இருப்பதையும் பார்க்கலாம். உதாரணமாக இராஜகோபு ரத்தையோ, தீர்த்தத் தடாகத்தையோ ஒரு வகையில் குறுகியகால இலக்காகக் கொள்ள முடியாது.
மகளிர் இல்லம், அன்னையர் இல்லம் போன்ற விடயங்கள் கட்டிட ரீதியாக ஒரு வருடத்தில் அமைத்து முடிக்கப்பட்டாலும், அதன் செயற்பாடுகள் ஒவ்வொரு நாளும் கவனிக்கப்பட வேண்டியவை என்பதை மறந்து போய்விட முடியாது. ஒரு மகளிர் இல்லத்தை அமைத்து நடத்துவதை ஒருவர் தன் வாழ்நாளுக்கான முழு இலக் காகக் கொண்டாலே அது போற்றுதற்குரியது. அம்மை யாரோ அதைத்தன் மொத்தத் திட்டத்தில் ஒரு கூறாக்கி யுள்ளார்.
3.

Page 7
எமது சமூகத்தில் ஒரு சமய விழிப்புணர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற நீண்ட கால இலக்கிற்கு அநுசரணை யாகப் போடப்பட்ட குறுகிய காலவெளியீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட அழகைக் கவனியுங்கள்.
சித்திரத் தேர்ச் சிறப்பு மலர் - 1978
தேவஸ்தான வெளியீடு மகா கும்பாபிஷேக மலர் - 1981
தேவஸ்தான வெளியீடு மகா கும்பாபிஷேக வெளியீடு 8 9 1 حس l
சிவத்தமிழ்ச் செல்வி துர்க்காதேவி அந்தாதி - 1981
சைவப் புலவர் பா. வேல்முருகன் சைவசித்தாந்த மாநாட்டுப் பவளவிழா மலர் - 1981
தேவஸ்தான வெளியீடு அன்னை துர்க்கா திருப்பள்ளி எழுச்சி - 1982
கவிஞர் செ. கதிரேசர்பிள்ளை தடாகப் பிரதிட்டைமலர் - 1982
தேவஸ்தான வெளியீடு அபிராமி அந்தாதி - 1983
தேவஸ்தான வெளியீடு பெரிய புராண வசனம் (மறுபதிப்பு) -حس |Il 9 83
தேவஸ்தான வெளியீடு துர்க்கா துதி - 1983
க. பூgதரன் W துர்க்கா திருவந்தாதி -ܚ- T 9 84
அருட்கவி சீ. விநாசித்தம்பி அரியவும் பெரியவும் பகுதி 1 一 丑984
பண்டிதர் மு. கந்தையா சைவபோதம் 1 ம் புத்தகம் 834 19 سے
தேவஸ்தான வெளியீடு
4.

சிவத்தமிழ்ச் செல்வி மணிவிழா நூல்
தேவஸ்தான வெளியீடு கூட்டு வழிபாட்டுப் பாமாலை (தொகுப்பு)
சிவத்தமிழ்ச் செல்வி அம்பாள் தோத்திரம்
தேவஸ்தான வெளியீடு அபிராமி அந்தாதி
தேவஸ்தான வெளியீடு அரியவும் பெரியவும் பகுதி 11
பண்டிதர் மு. கந்தையா கந்தபுராணச் சுருக்கம்
தேவஸ்தான வெளியீடு இராமதாஸ் அருளுரைகள்
தேவஸ்தான வெளியீடு பூரீ லலிதா சகஸ்ரநாம தோத்திர நூல்
தேவஸ்தான வெளியீடு இந்து இளைஞர் சங்க வெள்ளிவிழா மலர்
இந்து இளைஞர் வெளியீடு சைவக் கிரியைகளும் விரதங்களும்
தேவஸ்தான வெளியீடு வெள்ளி விழா மலர்
தேவஸ்தான வெளியீடு தங்கம்மா நான்மணிமாலை கவிஞர் வி. கந்தவனம் துர்க்கா மகளிர் இல்லம்
மகளிர் இல்ல வெளியீடு பத்துச் சொற்பொழிவுகள்
சிவத்தமிழ்ச் செல்வி கந்தபுராணச் சொற்பொழிவுகள்
சிவத்தமிழ்ச் செல்வி
I985
I985
1985
I 985
1986
1988
1989
1989
1989
1991
1991
1997
1997
1998
1999

Page 8
தனிமனித வளர்ச்சிக்கும் குழு வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாததான இலக்கைத் தீர்மானித்தலை அம் மையார் திறம்படச் செய்தது மட்டுமன்றி, அவற்றை நிர் வாக சபைத் தீர்மானங்களாக்கி எழுதியும் வைத் து க் கொண்டார். இதனால் அவருக்கும் அவரைச் சார்ந்த குழுவினருக்கும் செய்ய வேண்டியது என்ன என்பது தெளி வாகத் தெரியலாயிற்று. அதனால் அவர்கள் எல்லோரும் தமது நடவடிக்கைகளை இந்த இலக்குக்கு ஏற்றபடி மாற்றிக் கொண்டனர்.
இத்தகைய வாழ்வு முறையில் பழக்கப்பட்டுவிட்ட பலரும் தமது சொந்த வாழ்வில் நல்ல இ லக் கு க  ைள த் தீர்மானிக்கக் கூடியோர் ஆயினர். இதற்கு நல்ல உதார ணங்களாகத் திரு. கா. சிவபாலன் அவர்கள் தனது ஆன் மீக வளர்ச்சி என்ற நீண்டகால இலக்குக்கான ஒரு செயன்முறையாக ஞாயிற்றுக்கிழமை தோறும் மெளன விரதம் காப்பதும், அருட்சகோதரி ஜதீஸ்வரி தனது ஆன் மீக வளர்ச்சி என்ற நீண்டகால இ ல க்கு க் கா ன ஒரு செயன்முறையாக தனது உடையில் தூய எளிமை காப்ப தும் குறிப்பிடப்படலாம்.
சாதாரண மனிதர்கள் எல்லோரது வாழ்விலும் ஏராளமான ஆசைகள் இருக்கின்றன. ஆனால் ஒருசிலர் தான் அவற்றை இலக்குகளாக மாற்றிக் கொள்கிறார்கள். ஒரு பெரிய சமுதாய இலக்கு எப்படிச் சிறுசிறு துண்டுக ளாக உடைக்கப்பட்டு, செயற்படுத்தப்படக் கூடியவை யாக மாற்றப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதைப் படிப்பதற்கு அம்மையாரும் அவரது நிறுவனமும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.
அம்மையாரின் இலக்குகள் எல்லாம் மிகவும் குறிப்பா னவையாக இருந்தமையால், அவை எப்போது எவ்வாறு நிறைவேற்றப்பட்டன என்பதை எல்லோராலும் அறிந்து கொள்ள முடிகிறது. அவை சொற்களில் விபரிக்கக்கூடிய
6

இலக்குகள், ஆன்மீக நிறுவனம் ஒன்றில் செயற்படுத்தப் பட்டாலும், மனிதர்களால் நிறைவேற்றப்படக்கூடிய இலக்குகள். நடந்து முடியும் போது அளவிடப்படக்கூடிய இலக்குகள். இலக்கைத் தீர்மானித்தவர்களுக்கு விருப்பமான இலக்குகள். மனிதர்களால் கட்டுப்படுத்தக்கூடிய இலக் குகள் . இக்காரணங்களால் வெற்றி பெறும் இலக்குகளா கவும் இருக்கின்றன.
இலக்குகளைப் பொதுவாகப் பின்வரும் ஐந்து பிரிவு களில் அடக்கலாம்.
1. தனிமனித இலக்கு
. குடும்பம் சார்ந்த இலக்கு 3. உத்தியோகம் சார்ந்த இலக்கு 4. சமயம் சார்ந்த இலக்கு 5. சமூகம் சார்ந்த இலக்கு
1970 களின் பிற்பகுதியில் இருந்து அம்மையார் குடும் பம் சார்ந்த இலக்குகளில் இருந்தும் உத்தியோகம் சார்ந்தஇலக்குகளில் இருந்தும் தன்னை முழுமை யாக விடுவித்துக்கொண்டு ஏனைய மூன்றிலும் கூடியி கவனம் செலுத்தி வெற்றி கண்டார்.
இந்த இலக்குகளை வெற்றி கொள்வதில் அம்மையார் மேற்கொண்ட படிமுறைகளை இ னிப் பார் ப் போ ம், அவற்றை நாமும் பின்பற்றலாம்.
1. இலக்கை மற்றவர்களுடன் கலந்து தீர்மானித்தல்.
2. தீர்மானிக்கப்பட்ட இலக்கைத் தெளிவாக எழுதிக்
கொள்ளல்.
3. இலக்குகளை அளவிடக்கூடியவையாக மாற் றிக்
கொள்ளல்.

Page 9
4. இலக்கை அடையும் தொழிற்பாட்டில் தன்னை முழு
மையாக அர்ப்பணித்துக் கொள்ளல்.
5. இலக்கை அடைவதற்குப் பயன்படுத்தக் கூடிய வளங்
களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளல்.
6. எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் படிப்படியாக
வரையறுத்துக் கொள்ளல்.
7. நல்ல முகாமைத்துவச் சூழல் ஒன்றை ஏற்படுத்திக்
கொள்ளல்.
8. சில விடயங்களை நடைமுறைப்படுத்த முடியாத போது மாற்று ஏற்பாடுகளைப் பற்றிச் சிந்தித்தல்.
9. ஒவ்வொரு படிமுறையும் முடிவடையும் போது
அதனை மதிப்பீடு செய்து கொள்ளல்.
19. இறுதி இலக்கை அடையும் வரை தொடர்ந்து
வேலை செய்து கொண்டே இருத்தல்.
இத்தாலியின் பிரபல ஒவியர் மைக்கேல் ஏஞ்சலோ ஒரு முறை பின்வருமாறு கூறினார் "ஒவ்வொரு பெரிய மாபிள் திட்டுகளிலும் நான் ஒரு அழகிய சிலையை மிகத் தெளிவாகக் காணுகிறேன். அது நிறைவாகச் செம்மை யாக்கப்பட்டே இருக்கிறது. அத் தோற்றத்தை மறைத்துக் கொண்டிருக்கிற பகுதிகளை மட்டும் அகற்றி மற்றவர் களும் அத் தோற்றத்தைக்காணச் செய்வதே எனது பணியாகும்”
ஆம் சமுதாயத்தில் தான் காணுகிற மிகச்செம்மை யான தோற்றத்தை நாம் காணுமாறு செய்ய முனை கிறார் இந்தச் சிவத்தமிழ்ச் சிற்பி.

2. சேவை செய்தல்
ஒருவருடைய சால்பு என்பது அவர் வாழ்வு பற்றிக் கொண்டிருக்கும் நோக்கையும் வாழும் முறைகளையும் அவை சமூகத்திற்குப் பயன்படுமாற்றையும் அடிப்படை யாகக் கொண்டே மதிப்பிடத் தகுந்தவை என்பது அறிஞர் கருத்து.
சான்றோர் அருகிவிட்ட இன்றைய எமது தலை முறையில் வாழ்வின் நோக்கம் சமூகத்திற்குப் பயன் படுதலே என்ற வாக்கியத்தைத் தமது தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் அம்மையார் சான்றோருக்கு உரிய பண்புகளுடனும் ஒரு சமுதாய மதத் தலைவிக்குரிய இயல்புகளுடனும் காணப்படுவது அதிசயம்.
மனிதர்கள் எல்லோரும் எந்த விதிவிலக்கும் இல்லாமல் சேவையைப் பெறுவதற்கு அருகதை உடையவர்கள் என்ற கருத்தை மட்டும் ஒருவர் கொண்டு விட்டால் அவர் அந்தக் கணம் முதலே உயர்ந்தவராகி விடுகிறார்.
மனிதர்கள் கூடாதவர்கள் என்ற எண்ணமே எம்மைக் சேவையில் இருந்து விலக்கி வைக்கிறது. உள்ளத் தூய்மை உள்ளவர்கள் மனிதர்களைக் கடவுளின் குழந்தைகளாகவே காணுகிறார்கள்.
'ஒரு மனிதன் எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் அவன் தன்னைக் கெட்டவனாகப் பார்ப்பதில்லை என்பதே மிக முக்கியமான விடயம்" என்று டெயில் கார்னேகி கூறுவார்.
மனிதர்கள் துன்பப்படும்போது அத்துன்பத்துக்கான காரணங்களைத் தேடி, அது குறித்து அவர்களைப் பற்றிக் குறை சொல்வதையே சிலர் தொழிலாகக் கொண்டிருக்க
9

Page 10
ஒரு சிலர் மட்டும் அவர்களுக்கு உதவப் புறப்பட்டு விடு கிறார்கள். இவர்களே சிறந்த தலைமைத்துவப் பண்புள்ள சேவையாளர்கள் ஆகிறார்கள்.
ஏபிரகாம் லிங்கன் ஆரம்பத்தில் பலரையும் கடுமை யாக விமர்சிப்பவராக இருந்தார். இது ஒரு முறை அவரது உயிருக்கே ஆபத்துத் தரும் நிலையைத் தோற்றுவித் திருந்தது. அந்த அனுபவத்தின் பின் அவர் விமர்சனத்தை நிறுத்திக் கொண்டார். மற்றவர்களுக்கு உதவுவதில் அக்கறை காட்டத் தொடங்கினார். கறுப்பின மக்களை அடிமைகளாக வைத்திருப்பதற்கு எதிராகச் செயற்பட்டு வெற்றி கண்டார். அக்காலத்தில் அவரது பேச்சுக்களில் அடிக்கடி வரும் ஒரு வாசகம் "தீர்ப்பிடாதே. அப்போது தான் நீயும் தீர்ப்பிடப்பட மாட்டாய்" என்பதாகும். திருமதி லிங்கனும் மற்றவர்களும் நாட்டின் தெற்குப் புறத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றிக் குறையாகப் பேசி னால் உடனே லிங்கன் இப்படிக் கூறுவாராம் 'அவர் களைக் குறை கூறாதீர்கள். அந்த நிலைமையில் நாங்கள் இருந்திருந்தால் நாங்களும் அப்படித்தான் நடந்திருப் -GBurtub””
ஆம் "நாங்கள் அவர்களுடைய இடத்தில் இருந் திருந்தால், நாங்களும் இப்படித்தான் இருந்திருப்போம்" என்ற தூய எண்ணந்தான் துர்க்கா மகளிர் இல்லம் ஆரம்பமாகக் காரணமாய் இருந்தது. 03-02-1982 இல் தோற்றம் பெற்ற துர்க்காபுரம் மகளிர் இல்லம், சிவத் தமிழ்ச் செல்வி அவர்களின் சேவை மிகத் துலக்கமாய்த் தெரியும் இடமாகும்.
"நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடுப் கோயில் பரமர்க்கங்காமே?”
என்ற திருமந்திர வாக்கு அவரை இந்த இலக்கை நோக்கித் திருப்பியிருக்கலாம். எவ்வுயிரும் தன்னுயிர்போல எண்ணி இரங்க வேண்டும் என்ற சமயக் கோட்பாடு அவரைத்
10

தொழிற்படத் தூண்டியிருக்கலாம். எப்படியிருப்பினும் கடந்த பதினேழு ஆண்டுகளாக அறுநூறுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற் சிறுமிகள் அம்மாவின் சேவையை வாழ்வு முழுமைக்குமாய்ப் பெற்றிருப்பது, அவரது தலைமைத் துவச் சிறப்பின் மகுடமாக விளங்குகிறது.
04-03-1985 நள்ளிரவு பதினொரு மணிக்கும் ஒரு மணிக்கும் இடைப்பட்ட வேளையில் கொளளைச் சம்பவம் நடைபெற்ற போதும், 31-5-1992 இல் விமானக் குண்டு வீச்சு நடைபெற்ற போதும், 29-08-1993 இல் ஷெல்வீச்சு இடம்பெற்ற போதும், 30-10-1995 இல் பெரும் இடப் பெயர்வின் போதும் மகளிர் இல்லக் குஞ்சுகளையும் ஏனைய ஆலயப் பணியாளர்களையும் ஒரு தாய்க் கோழி தன் குஞ்சுகளை இறக்கையுள் அணைத்துக் காப்பது போல இடமிடமாகக் கொண்டு சென்று காப்பாற்றிய அன்பு மனித சேவையின் உச்ச நிகழ்வாகும். இக்கால கட்டத்தில் - மனித உயிர்களெல்லாம் மிக இலகுவாகக் காற்றில் பறந்து கொண்டிருந்த நேரத்தில் தன் சொந்தக் குழந்தையையே தொட்டிலில் விட்டு விட்டு ஓடிப்போன தாய்மாரும் இருந்தனர் என்பதோடு ஒப்பு நோக்கப்படு மிடத்து அன்னையின் சேவையின் உயர்வு புலப்படும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஏராளமான தேவைகள் உள்ளன. அவை உணவு, உடை, நீர் போன்ற அடிப்படை உடலியல் தேவைகள், பாதுகாப்புத் தேவை, அன்புத் தேவை, கணிப்புத் தேவை, சுயதிறன் நிறைவுத் தேவை எனப் பலவாறாக விரியும். மாஸ்லோவின் தேவைக்கூம்பு மூலம் உளவியல் இதனைத் தெளிவாக எடுத்துக் காட்டும் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் மற்றொரு மனித னுடைய தேவையை நிறைவு செய்யும்போது ஏற்படும் திருப்தி - அதனால் வரும் இன்பம் - மிகப்பெரியது என்பது தெரிந்தவர்களுக்குத் தெரியும், சிவத்தமிழ்ச் செல்விக்கு இது நன்றாகவே தெரிந்துள்ளது.

Page 11
நீங்கள் உங்கள் சகோதரர்களுக்குச் சேவை செய்யும் போது உங்கள் இறைவனுக்கே சேவை செய்கிறீர்கள் என பைபிள் கூறுகிறது. உண்மையில் சேவை நோக்கைக் கொண்டு இயங்கும் ஓர் நிறுவனம் வெற்றிபெற்ற நிறு
வனமேயாகும்.
07-01-1990 இல் ஆரம்பிக்கப்பட்ட கிவத்தமிழ்ச் செல்வி பிறந்ததின அறநிதியம் வருடந்தோறும் பல சேவைகள் செய்யப்படுவதற்கு உதவி வருகிறது.
காலந்தோறும் எம் மண்ணில் அகதிகளாக்கப்பட்டு வீடு இழந்து தொழில் இழந்து தவித்து நிற்கும் மக்களுக்கு அவ்வப்போது உணவு, உடை, உறையுள் உதவி ஆதரித்து வந்த சிறப்பை இந்நாடு அறியும். 1987ம் ஆண்டில் இந்திய இராணுவத்தினரின் தொல்லைகளுக்குள்ளான ஐந்நூற்றுக் கும் மேற்பட்ட அகதிகளை ஆதரித்துப் புகலிடம் அளித் தது இக் கோயில். 1991 இல் அகதிகள் பராமரிப்புக் கெனத் தனி மண்டபமே அமைக்கப்பட்டது. 1995 இ ன் பெரும் இடப்பெயர்வு வரை ஏராளமான இடம் பெயர்ந்த மக்களின் துன்பங்களைத் தன் கையில் சுமந்து வந்தார் அன்னை.
பல ஆண்டுகளுக்கு முன்னரே ஊனமுற்றோருக்கு வேண்டிய பண உதவி புரிந்து ஆதரித்தது இந்த ஆல யம். குருநகர்ப் படுகொலையினால் பாதிக்கப்பட்ட குடும் பங்களுக்கும், மட்டக்களப்புப் பாதிப்பினால் எரியுண்ட வீடுகளைத் திருத்தவும், (1987, 88) மன்னார், முல்லைத் தீவு, கிளிநொச்சியில் இடம்பெயர்ந்த அகதிகளின் புனர் வாழ்வுக்கும் அப்பகுதிக்குப் பொறுப்பானவர்களிடம் அள்ளி வழங்கித் தன் சேவையை விஸ்தரித்திருந்தது இந்தத் தேவஸ்தானம்.
மேலும் விழிப்புலனற்றோர், முடமானோர், புற்று நோயாளர், அநாதைச் சிறுவர், முதியோர் ஆகியோரின் வதிவிட வசதிகளை ஏற்படுத்தும் நிறுவனங்களுக்கும்
2

யாழ். அரசினர் வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரி வினருக்கும், தெல்லிப்பழை அரச வைத்தியசாலை, கூட்டுறவு வைத்தியசாலை ஆகியவற்றுக்கும் கணிசமான அன்பளிப்புச் செய்து தன் சேவை பலன் தரும் எல்லையை விரிவாக்கிக் கொண்டார் துர்க்கா துரந்தரி அவர்கள்.
அவ்வப்போது வசதியற்ற பாடசாலைகள், கோயில் கள் , கலை இலக்கிய அமைப்புக்கள் ஆகியவற்றுக்கும்
அள்ளி வழங்கும் கை துர்க்கா துரந்தரியின் கை.
நான் தெல்லிப்பழை சைவப்பிரகாச வித்தியாசாலை அதிபராய் இருந்த காலத்தில் எமது சிறிய பாடசாலை யின் பரிசளிப்பு விழா, வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி ஆகியவற்றுக்கு இந்த வள்ளலின் பண உதவி யைப் பெற்றுள்ளேன். என்னைப் போலவே பல அதிபர் களும் இவரது சேவையைப் பெறுவது பலருக்கும் தெரிந்த இரகசியம் .
தெல்லிப்பழைக் கலை இலக்கியக் களத்தில் சிவத் தமிழ்ச் செல்வி அவர்களின் அன்னையார் திருமதி தை அப்பாக்குட்டி அவர்களின் நினைவாக ஒரு நிரந்தர வைப்பு உள்ளது. அந்த வைப்பின் வட்டி காலத்துக்குக் காலம் சிறிய இலக்கிய முயற்சிகளுக்கு உதவி வருகிறது.
இப்படியே நினைக்க நினைக்கப் பெருகும் அவர் சேவையின் எல்லைகள். பண்டிட் ஜவகர்லால் நேரு, சட்டையில் ரோஜா குத்திக் கொண்டிருந்ததால் மக்கள் அவர் பால் ஈர்க்கப்பட்டு விடவில்லை, அவரே ஒரு ரோஜாவாக இருந்தார் என்று சொல்லுவார்கள். அதே போல அம்மையாரின் சேவை மட்டும் எங்களை அவர் பால் ஈர்த்து விடவில்லை. அவரே சேவைக்கு உயிர் தந்த உருவம் ஆக வாழ்கிறார்.
3

Page 12
3. தலைவராய் இருக்கும் தன்மை
நிலவு உதித்ததைப் போல முகத்திலே ஒரு நிறைவு. அந்த நிறைவுடன் துர்க்கா துரந்தரி தனது அதிகாரத் தைத் தன்னைச் சூழ்ந்துள்ள பல இடங்களிலும் பரப்பு கிறார். அளவிட முடியாத அன்பு, தூயஅறிவு, மென்மை, இரக்கம் ஆகியவற்றால் இது சாத்தியமாகிறது.
நிலைமைகள் மாறும்போது தலைவர்கள் தமது தலை மைத்துவப் பண்பை மாற்ற வேண்டி இருக்கும். ஒரு தலைவர் எதிர் கொள்ளும் மிகப்பெரிய சவால் எப்போ தும் ஒரே விதமான தலைமைத்துவ முறையைப் பின் பற்ற முடியாதிருத்தலேயாகும். தேவைக்கும் அப்போதைய நிலைமைக்கும் பொருத்தமாகத் தலைமைத்துவ முறையை மாற்றி அமைத்துக் கொள்வதே நல்ல தலைவருக்குரிய பண்பு.
பணிக்கும் இயல்பு. . திணிக்கும் இயல்பு.
கலந்தாலோசிக்கும் இயல்பு. இணையும் இயல்பு.
ஆகிய நாலு வகைத் தலைமைத்துவ முறைமையையும் சிவத்தமிழ்ச் செல்வியிடம் பொருத்தமான சந்தர்ப்பங் களில் அவதானிக்க முடியும்.
:
யாழ்ப்பாணக் குடா நா ட் டி ன் மிகப் பெரிய இடப் பெயர்வின் பின் தெல்லிப்பழைக்கு வரவும், கோயிலைத் திருத்தவும், கும்பாபிஷேகம் செய்யவும் பொருத்தமான் சூழ்நிலை உருவாகவில்லை என்று கூறிப் பலர் தடுத்தார் கள். இராணுவத்தினரின் வடக்குப்புற இறுதி எல்லை. இன்னும் கஷ்டங்கள் வரக்கூடும் என்று கூறினார்கள்.
14

ஆயினும் துர்க்கா துரந்தரியோ ஒரு மறத்தமிழ்ப் பெண் ணுக்குரிய துணிவுடனும், நல்லதையே எதிர்பார்க்கும் உள வலிமையுடனும் கோயில் வேலைகளை முடித்து 1997 இல் கும்பாபிஷேகம் செய்தார். அந்த முடிவு சரி யானதே என்று இப்போது பலரும் கருதுகிறார்கள்.
பல சமயங்களில் இவர் ஒரு ஜனநாயகத் தலைவி யாக இருப்பார். மற்றவர்களின் கருத்துக்களுக்குப் போதிய முக்கியத்துவம் தருவார்.
29-08-99 அன்று - ஆலயத்தில் சப்பரத் திருவிழா ! கோயில் கலகலப்பாகவும் பக்தி பூர்வமாகவும் இயங்கிக் கொண்டிருந்த நேரம் ! பலாலியில் இருந்து ஏவப்பட்ட ஷெல்கள் கோயில் எல்லைக்குள் வீழ்ந்து வெடிக்கின்றன. அன்னதான ஆயத்தம் நடந்து கொண்டிருந்த இடத்தில் ஷெல்! பலர் காயமடைகின்றனர். எங்கும் ஒரே அச்சம், பரபரப்பு!
"எந்த வழி தரை கடல் வான் இவற்றினுாடு எமை நோக்கி யமன் வருவான் என்று பார்த்து நொந்தவர்கள் நாங்கள் . ** அல்லவா?
கோயிலுக்குள்ளே குருக்கள் ஐயா தான் செய்து கொண்டிருந்த பூஜையை விடாது செய்து கொண்டிருக் கிறார். ஏனைய பக்தர்கள் எல்லோரும் பெருங்குரலில் கதறுகிறார்கள். அன்றைய திருவிழாவைச் சந்தோஷமாக நிறைவு செய்ய முடியாமல் போய் விட்டது!
அடுத்த நாள் தேர்த்திருவிழா! தேர்த்திருவிழா நடைபெறுமா? நடைபெறாதா? என்று மக்கள் மத்தியில் பெருங்குழப்பம். குட்ாநாட்டின் பல பாகங்களிலுமிருந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொள்ளுகிற நாள், ஷெல் வீச்சு நடைபெற்றாலோ பெரும் உயிர்க் சேதம் ஏற்படும்.
15

Page 13
செல்வி தங்கம்மா மாவிட்டபுரம் சண்முகநாதக் குருக் களுடன் கலந்துரையாடினார். அவருடைய ஆலோச னையோ திருவிழாவை நடத்த வேண்டும். ஆகம விதிப் படி ஆரம்பிக்கப்பட்ட உற்சவத்தை ஒரு போதும் இடை யில் நிறுத்தக் கூடாது என்றே அமைந்தது. "நடப்பது நடக்கட்டும் நன்மைக்கே" என்று அந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்டார் அன்னை. தேர்த்திருவிழா நடை பெறும் என்று எல்லோருக்கும் அறிவித்தார். தானே முன்னின்று தேரை இழுக்கச் செய்தார். துர்க்காதேவியின் கருணையினால் எந்தப் பிரச்சினையும் இன்றி அன்றைய வைபவம் நடைபெற்று முடிந்தது.
கண்டிப்பான நிர்வாகத்தில் தேவையான போது மிகுந்த கனிவு காணப்படும். மகளிர் இல்லப் பிள்ளைகள் யாருக்காவது வருத்தம் என்றால், விடி காலைப் போதில் தானே எழுந்து விடுவார். வேறு சிலரையும் எழுப்பி விடு
Θ Ι Π. ΓΓ
"அந்தப் பிள்ளைக்கு வருத்தம் அல்லவா? போய்ப் பார்த்துத் தேநீர் போட்டுக் கொடுங்கள்" என்று சொல் லுவார். அதில் தாமதம் காணப்பட்டாலோ, “நானே போய்ப் போடுகிறேன்" என்று புறப்பட்டு விடுவார். அந்த வேகம் மற்றவர்களையும் விரைவாகச் செயற்படத் தூண்டிவிடும்.
இப்போது பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் படித்துக் கொண்டிருக்கும் மகளிர் இல்லப் பிள்ளை தவ னேஸ்வரியின் தாயார் வன்னியில் கால மா ன போது, ஐ. சி. ஆர். சி செய்தி அம்மாவுக்குக் கிடைத்தது. "பெரி யம்மா" தவனேஸ்வரியை மெதுவாக அழைத்து 'பிள்ளை உங்கடை அம்மாவுக்கு வருத்தமாம்" என்று சொன்னார். பாஸ் எடுப்பதற்குத் தேவையான ஆயத்தங்கள் எல்லா வற்றையும் தானே செய்தார். நேரம் கொஞ்சம் போன பிறகுதான், "அவ காலமாகி விட்டா' என்ற செய்தியைக்
6

கூறினார். தானே பிள்ளையை அ  ைழ த் துக் கொண்டு விமானப்பயணம் வரை சென்றார். அன்று கடும் மழை பெய்து கொண்டிருந்தது. விமானப் பயணமும் சரிவர வில்லை. திரும்பி வந்து அடுத்த நாளே போக முடிந்தது. இறுதி வரையில் சிவத்தமிழ்ச்செல்வி பிள்ளையுடன் உடன் இருந்து ஒத்துணர்வும் ஆறுதலும் கொடுத்தார். இந்த அன்புக்குப் பிள்ளைகள் அடிமைகளாகி விடுகிறார்கள்.
பொதுவாகத் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கெல் லாம் ஒரு மதிப்பும் சுதந்திரமும் கொடுத்து நடந்து கொள் ளும் தலைமைத்துவப் பாணியினால், (Free Reign leader) இவரின் சொல்லை மீற முடியாது, கட்டுண்டு போனவர் களாய்ப் பலரும் காணப்படுகிறார்கள்.
அம்மாவுக்கு இடையிடை கோபம் வரும். கோபம் மனிதனுடைய மிக இயல்பான ஒரு உணர்வு என்பதும் அது வரும், வரலாம், வரவேண்டும் என்பதும் அம்மா வுக்குத் தெரியும். கோபத்தை அவர் ஒரு போதும் உள் ளுக்குள் புதைத்துக் கொள்ள மாட்டார். ஏதோ ஒரு வகையில் பெரும்பாலும் சொற்களில் அதைக் காட்டிக் கொள் வார். ஆனால் அந்தக் கோபம் யாரையும் கோபித் துக் கொண்டு போக இடம் அளித்ததில்லை. யாராவது தனது சொற்களால் மனம் நொந்து போனதாக அறிந்தால் உடனே அவர்களைக் கூப்பிட்டுச் சமாதானப்படுத்தி விடு வார். ஆகவே தனிப்பட அம்மாவுடனோ அல்லது கோயி அலுடனோ யாருக்கும் பகைமை இல் லா த ஒரு நிலை பேணப்படுகிறது.
தன்னுடன் இருப்பவர்கள் துன்பப்படுவதை அம்மா வால் ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது. 1985ம் ஆண்டில் கோயிலில் களவு நடைபெற்ற போது கொள்ளை யர் இரவு 11.00 மணிக்கு வந்து எல்லோரையும் துப்பாக்கி முனையில் வெருட்டி அந்ததந்த இடத்தில் இருத்தி விட்
17

Page 14
டார்கள். கோயில் திறப்பு சிவபாலனிடமே இருப்பதாக அறிந்திருந்தர்கள், திறப்பைத் தருமாறு கேட்டுச் சிவ பாலன் அவர்களை அடித்த போது அம்மாவால் ஒரு கண மும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
'சிவபாலன் திறப்பைக் கொடு. அவர்கள் எடுப்பதை எடுக்கட்டும்” என்று சொல்லி விட்டார்.
அந்தக் கொள்ளையர் கூட்டம் திறப்பை வாங்கித் திறந்து உள்ளே நுழையும் போது, அவர்களில் ஓரிருவர் கூடக் கால் கழுவிக் கோயிலுக்குள் திருட நுழைந்தது விளக்கம் தர முடியாத - அதே சமயம் உணர்வு பூர்வமான் காட்சி
அம்பாளின் நகைகளை எல்லாம் எடுத்து உரப்பையில் போட்டுக் கட்டிக் கொண்டு அவர்கள் வாகனத்தில் ஏறித் தெற்குப் புறமாகச் சென்று மறைந்து விட்டார்கள். அப்போதுதான் அம்மாவின் இதயம் இதுவரை அறிந்தி ராத ஒரு கதியில் சில் வண்டின் சிறகாகப் படபடத்துக் கொண்டது. குரல் உடைந்து துக்கம் வெளிப்பட்டது.
* அம்பாளுக்கு இல்லாத நகை எனக்குத் தேவை யில்லை" " என்று தனது நகைகளை எல்லாம் தூர வைத்து விட்டார். சோர்வும் துக்கமும் புரட்டி எடுக்கத் தொடர்ந்து வந்த இரவுகளில், அழவும் முடியாமல், ஆத்திரமும் வராமல், அம்பாளே! என்று துவண்டு, அவளை மனமுருகி வேண்டி நித்திரையின்றிக் கழித்தார்.
ஏதோ நடைபெற்றிருக்க வேண்டும். என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. சரியாக ஒரு வருடத்தின் பின் நகைகள் எல்லாம் உரைப்பையில் கட்டியபடி வீதியில் வீசப்பட்டிருந்தன்.
காலையில் வீதியைக் கூட்டுவதற்காகச் சென்ற மகளிர் இல்லப் பிள்ளைகளே இந்த உரப்பையை முதன் முதலில் கண்டனர். அதற்குள் குண்டு ஏதும் இருக்கக் கூடும் என்ற பயத்தினால் யாரும் அதைத் தொடவில்லை.
18

சற்று நேரத்தின்பின் துர்க்கா துரந்தரியின் பணிப்பின் பேரில் திருமுறை மடத்தடியில் வைத்துச் சில இளத் தொண்டர்களின் உதவியுடன் திறந்த போது தான் அது கொள்ளை போன கோயில் நகை என்று தெரிந்தது. அதிலும் மீளவைக்க முடியாமற் போன ஒரு கோயில் நகைக்காக அதே அளவு பெறுமதி உள்ள வேறொருதொகுதி நகைகள் வைக்கப்பட்டிருந்தன.
**இது யார் வீட்டுச் சொத்தோ?, என்று கருத்துத் தெரிவித்த அம்மையார் அதனை அம்பாளுக்குச் சாத்த வில்லை. அவற்றையெல்லாம் உற்று நோக்கியபோது கத்தோலிக்க மதச் சின்னங்கள் நசைகளில் காணப்பட்டன. அவற்றை பாஷையூரில் அமைந்த மத நிறுவனத்திடம் ஒப்படைத்தார்.
இந்தக் கோயில் நிர்வாகத்தை நடத்தி வந்த பாதை எப்போதும் ரோஜாப்படுக்கையாக இருக்கவில்லை. இந்தப் பாதையில் ஷெல்வீச்சு, விமானக் குண்டு வீச்சு, கொள்ளை, இடப்பெயர்வு என்று பல துன்பங்களும் நீண்ட கஷ்டங்களும் இருந்துதான் இருக்கின்றன. ஆனாலும் செல்வி தனது இலக்கை நோக்கிய பயணத்தை ஒரு போதும் தளர விட்டு விடவில்லை.
Nothing is good or bad. But thinking makes it sol
அறத்தின் வழிநில், அஞ்சவேண்டாம். உன் இலட்சியமெல்லாம், உன் தேசத்தை, உன் கட வுளை, உண்மையைப் பற்றியதாகவே இருக்கட் டும். அங்ங்ணமாயின் நீ வீழ்ந்தாலும் பாக்கியம் பெற்றுத் தியாகியாகவே வீழ்வாய்.
- ஷேக்ஸ்பியர்
19

Page 15
4. தொடர்பாடல் திறன்
நிறுவனமொன்றின் ஊழியர்களை அல்லது ஒரு சமூ கத்தை நெறிப்படுத்துவதில் முக்கிய பங்கு பெறும் ஒரு கருமமே தலைமைத்துவம் எனப்படுகிறது. ஒரு கருமத்தை ஒருவர் எவ்வாறு ஆற்ற விரும்புகிறாரோ அதே போல ஏனையோரையும் தொழிற்படவைக்கும் இக் கருமத்தில் தனது நேர்க்கணிய செல்வாக்கைச் செலுத்துவதற்காகப் பலருடனும் தொடர்புகொள்ள நேரும். இத் தொடர் பாடல் எவ்வளவு சிறப்பானதாகவும் வினைத்திறன் மிக்க தாகவும் அமைகிறதோ அவ்வளவுக்குத் தலைமைத்துவம் சிறக்கும்.
சிவத்தமிழ்ச் செல்விக்குப் பிறப்பிலேயே இத்திறன் விளைந்ததோ எனப் பலரும் கருதுவர். ஏனெனில் சிறுமி தங்கம்மாவே தனது தொடர்பாடல் திறன்களால் ஊர் முழுவதையும் ஈர்த்தவர்.
" "திருமாலின் - தங்கையே மண்ணில் தவழ்ந்தன்ன செல்வி தங்கம்மா தான் பிறந்தார்’ எனக் கவிஞர். வி. கந்தவனம் கூறுவார்.
இவரது வீடும், படித்த பாடசாலைகளும், வாழ்ந்த சூழலும் கூட இவரது ஆளுமையில் தொடர்பாடல் திறன் விருத்திக்குப் பெருமளவு உதவியுள்ளன.
சிவத்தமிழ்ச் செல்வியின் அம்மாவின் தந்தையார் சின்னப்பா. அவரது துணைவியார் பெயர் தங்கச்சிப் பிள்ளை, பேரனார் சின்னப்பா சிறுமி தங்கம்மாவைத் தங்கச்சிப்பிள்ளை என்றே செல்லமாக அழைப்பார். சின்னப்பா அவர்களுக்குத் தெல்லிப்பழையில் உள்ள பல பெரியவர்களின் நட்பு இருந்தது. அவர்களுடன் எல்லாம்
20

தங்கம்மாவுக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. சிறுமி தங்கம்மா கோகிலமாகப் பாடக் கூடியவர். பேரினார் பெரியவர்கள் முன்னிலையில் தங்கம்மாவைப் பாடும்படி அடிக்கடி கேட்
பார். ஒரு பாட்டைத் தெளிவாகவும் அழகாகவும் பாடி னால் இரண்டு சதமோ மூன்று சதமோ கொடுப்பார். ஆகவே பாட்டுப் பாடுதலும் காசு பெறுதலும் அடிக்கடி நிகழும்.
அந்தப் பொழுதுகளிலேயே சபைக் கூச்சம் அற்ற நிலையும், தெளிவாகத் தொடர்பாடும் நிலையும் அரும் பத் தொடங்கிவிட்டன.
** நீ நல்லாய்ப்படி முன்னேற வேணும்' என்றே பேரானார் அடிக்கடி தங்கம்மாவிற்குக் கூறுவார். இவரும் நன்றாகத்தான் படித்தார். வகுப்பிலே எப்போதும் முத லாம் பிள்ளைதான்!
மல்லாகம் அ. மி. த. க. பாடசாலையில் 5 ம் வகுப்பு வரையிலும் பின்னர் மல்லாகம் விசாலாட்சி வித்தியா சாலையில் 8 ம் வகுப்பு வரையிலும் கற்ற தங்கம்மா விடம் அளவெட்டியைச் சேர்ந்த ஆசிரியர்கள் நாகரத்தினம் தம்பிமுத்து போன்றோருக்கு நல்ல பிடிப்பு. மல்லாகம் விசாலாட்சி வித்தியாசாலையில் ஒழுங்கான வரவுக்கு ஒரு பரிசு இருக்கும். சுத்தமாக வருதலுக்கு ஒரு பரிசு இருக்கும். இந்தப் பரிசுகள் எல்லாம் பாடத்துக்கான பரிசுகளுடன் சிறுமி தங்கம்மாவிற்கே கிடைக்கும். பாட சாலையின் இந்த உற்சாகப்படுத்தல் இவரிடம் ஒரு பெரிய தன்னம்பிக்கையை வளர்த்து விட்டிருக்கிறது.
1933 ம் ஆண்டிலே தயாரிக்கப்பட்ட" குமணன்' என்ற பாடசாலை நாடகத்தில் பெருந்தலைச் சாத்தனாராக நடித்து எல்லோருடைய ஒருமித்த பாராட்டையும் பெற் றுக் கொண்ட இவர் வாய்மொழி மூலமாக மட்டு மன்றி pl |6v GODITyf up GOLDAT 35 Gayub (Non i Verbal Message) தொடர்பாடல் திறனை விருத்தி செய்து கொண்டார்.
21

Page 16
சிறுமி தங்கம்மா வாழ்ந்த சூழலில் இன்ஸ்பெக்டர் தியாகராஜாவின் குடும்பம் இருந்தது. திருமதி சிவநாயகி தியாகராஜா, அவரது சகோதரி அருந்தவநாயகி ஆகி யோர் நல்ல கல்வி அறிவு பெற்றவர்கள். அருந்தவநாயகி தமது இல்லற வாழ்வுக்குள்ளே ஒரு தூய துறவு மனோ நிலையுடன் வாழ்ந்தவர். இந்தக் குடும்பத்திற்குப் பல பண்டிதர்கள், ஞானவான்களுடன் தொடர்பு இருந் தது. யோகர்சுவாமிகள் கூட இந்த இல்லத்திற்கு இடை யிடையே வந்து போவார். இந்தக் குடும்பத்துடன் சிறுமி தங்கம்மாவுக்கும் நல்ல உறவு இருந்தது. தனது வாழ்வின் இலக்குக்கு அருந்தவநாயகி ஒரு அருட்டுணர்வு கொடுத் தார் என்று சிவத்தமிழ்ச் செல்வி கூறுகிறார்.
இத்தகையதொரு விரிவான பின்னணியில்தான் இன் றைய துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவி கலாநிதி தங் கம்மா அப்பாக்குட்டி அவர்களின் தொடர்பாடல் திறனை உற்றுநோக்க வேண்டும்.
சிவத்தமிழ்ச் செல்வி அவர்களின் தொடர்பாடல் திறன்களில் முதன்மையானது யாரைக் கண் டா லும் மலர்ந்த முகத்துடன் இன்சொல் கூறி வரவேற்கும் பண் பாகும். அந்த வரவேற்பில் ஒரு தனிக் கவனம் இருக்கும்.
எப்படி இருக்கிறியள்?' 'அம்மா எப்படி?’ ‘மகன் என்ன செய்யிறார்?" போன்ற சிறு நலன் விசாரிப்புகள் தனிக் கலையுடன் தொனிக்கும்.
நல்ல விடயங்களில் கலந்து கொண்டு பாராட்டுதல், நோய்வாய்ப் பட்டிருப் போரைப் பார்த்து ஆறுதல் கூறு தல், கஷ்டமான நேரங்களில் நேரில் வந்து அனுதாபம் தெரிவித்தல் போன்ற சமுதாய உறவு பேணும் நடவடிக் கைகளை அன்னை பவளவிழாக் காணும் இன்றைய காலம் வரை செம்மையாகச் செய்து வருகிறார்.
22

சமுதாய ஏணியின் மிக உச்சியில் இருக்கும் இவர் என்னைப் போன்ற ஒரு சாதாரண பிரஜை. நோய்வாய்ப் படும்போது வந்து பார்ப்பதும் சுக துக்க நிகழ்வுகளில் கலந்து கொள்வதும் எப்படிச் சாத்தியமாகிறது என்று பல சந்தர்ப்பங்களில் நான் வியந்ததுண்டு. ஆனால் அந்த எளிமையில் ஒரு தலைமைத்துவ நுட்பம் அடங்கியிருப்பதை யாரும் உணர்வர்.
தீபாவளி, வருடப்பிறப்பு, விளக்கீடு, அவரது பிறந்த நாள் போன்ற விசேட தினங்களில் அவரைக் காணச் செல்பவர்கள் எல்லாம் ஒரு பிரசாதப் பொதியைப் பெற் றுக் கொள்ளாமல் திரும்புவது கடினம். வருடப்பிறப்பை ஒட்டிக் கோயில் நிர்வாகத்துடன் சம்பந்தப்பட்ட அனை வருக்கும் கைவிஷேஷமும் விசேட அன்பளிப்புகளும் இருக் கும். எந்தவித விசேடமும் இல்லாத ஒரு சாதாரண நாளிலும்கூட அவரைக் காணச் செல்பவர்களுக்கு ஒரு தேநீர் உபசாரம் இருக்கும். இவை எல்லாவற்றையும் விடத் தனிக் கவனம் பெறுவது அவரது உளமார்ந்த வார்த்தை உபசாரந்தான்.
எனது தனிப்பட்ட அநுபவம் ஒன்று. ஒரு மழை நாளில் அம்மையாரைக் காணச் சென்றிருந்தேன். திரு. சிவபாலன் அவர்களுடன் கதைப்பதற்காகத் திருமுறை மண்டபத்தின் வெளி வராந்தாவில் அமர்ந்து கொண் டேன். பெரியம்மா சொன்னார்.
'கோகிலா கால் வைக்கிற இடம் ஈரமாயிருக்கு ஒரு சாக்குக் கொணர்ந்து காலுக்குக் கீழே போடு பிள்ளை'
உண்மையில் இந்த அன்புக்கு யாரும் அடிமையாகாமல் இருப்பது கஷ்டமே !
23

Page 17
துர்க்காதேவி தேவஸ்தானச் சூழலில் ஒரு வருடத்தில் பல விழாக்கள் நடைபெறும். கோயில் உற்சவத்தைத் தவிர மகளிர் இல்ல விழாக்கள் , நூல் வெளியீடுகள், பாராட்டு விழாக்கள், பெண்கள், தொண்டர் சபை சார்ந்த விழாக்கள் என இவை பலவாறாக விரியும். இந்த விழாக்களுக்கெல்லாம் சமூகத்தின் பல வேறு தளங்களில் இருப்பவர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்படும். பல சந்தர்ப்பங்களில் பத்திரிகை மூலமான பொது அழைப்பு களும் இருக்கும். திரும்பத் திரும்ப அழைக்கப்படுகிற ஒரு இடத்திற்குப் போகாதிருப்பது கடினம் என்பது எளிய உளவியல் உண்மை. பல்லாயிரக் கணக்கில் இந்த ஆலயத் திற்கு மக்கள் வருவதில் என்ன ஆச்சரியம்?
தொடர்பாடல் நுட்பங்களில் மிகவும் வலிமை வாய்ந் ததான உற்றுக் கேட்கும் திறன் அம்மாவிடம் சிறப்பாக வாய்க்கப் பெற்றுள்ளது. செய்தி சொல்ல வந்தவருடன் கூட இருந்து, அவரைப் பார்த்து, அவரை நோக்கி மெல்லச் சரிந்து, ஒத்துணர்வுப் பதில்களைக் கூறி இவ்ர் கேட்கும் முறை அலாதியானது. ஒரு பயிற்சி பெற்ற சீர்மியர் தோற்றுப் போவார் போங்கள்!
கோயில் சூழலில் கடலை விற்கும் சாதாரண தொழி லாளர் தரப் பெண்கள் متبامعنی தங்கள் *இட்டல் இடைஞ்சல்" களை அம்மாவுக்குக் கூறி ஆறுதல் பெறுவர்.
கடிதங்களுக்குப் பதில் எழுதும் தொடர் பாடல் முறையில் போராசிரியர் சு. வித்தியானந்தனைப் போல இருக்க வேண்டும் என்பது துர்க்கா துரந்தரியின் ஆசை. அதாவது "அன்று வந்த கடிதத்திற்கு அன்றே பதில் எழுதல்" என்ற கொள்கை. இந்தக் கொள்கை அம்மை யாரின் தலைமைத்துவப் புலத்தில் இத்தனை வருடங் களாக மீறப்படாமல் பாதுகாக்கப்படுகிறது. இரவு பத்து மணிக்கு ஆயினும் கடிதத்திற்குப் பதில் எழுதப்பட்டதை உறுதி செய்த பிறகுதான் அம்மா படுக்கைக்குப் போவார் என்று அருட்சகோதரி ஜதீஸ்வரி கூறுகிறார்.
24

கோயிலில் இருந்து வெளியிடப்படுகிற அறிக்கைகள் எல்லாம் கோயிலுக்கு அன்பளிப்புச் செய்வோர் அனை வருக்கும் அனுப்பப்படும். வருடம் ஒருமுறை வெளியிடப் படும் கணக்கறிக்கை பொது நிறுவனங்களுக்கும் அனுப் படுகிறது. நிதி விடயங்கள் எல்லாம் திறந்த புத்தகமாக வைக்கப்பட்டிருப்பதால் சமுதாயத்தின் நம்பிக்கை பெறப் பட்டுள்ளது.
பொது மக்களிடமிருந்து ஃபாக்ஸ் மூலம் வரும் செய்திகளுக்குப் பதில் ஃபாக்ஸ் மூலமே அனுப்பப்படு கிறது. தொலைபேசி அழைப்புகளுக்குப் பெரும்பாலும் அம்மா நேரில் பதில் கூறுவார். அம்மா இல்லாத நேரங் களில் பொறுப்பான அலுவலர்கள் பதில் கூறுவார்கள்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவும் மகளிர் இல்லப் பிள்ளைகளுக்கு அம்மையார் விசேட கூட்டம் நடத்து வார். ஒரு சிறந்த வாழ்வு எப்படி வாழப்பட வேண்டும் என்பது பற்றிய குறிப்பான அறிவுரைகள் யாவும் இக் கூட்டத்தில் பேசப்படும். வாரந்தோறும் திரும்பத் திரும்ப இதைக் கேட்டு வரும் பிள்ளைகள் அற வாழ்வில் இருந்து திசை திரும்ப முடியாது.
தனிப்பட்ட ஒவ்வொரு பிள்ளையுடனுமான உரை யாடல் எப்போதும் எங்கேயும் நடக்கலாம். அது நேர அட்டவணைக்குள் அடங்காது.
செவ்வாய்க்கிழமைதோறும் ஆலயத்தில் நடைபெறுகிற பகல் பேச்சில் பொது மக்களுக்கான பல வேறு அறிவுரை களும் வழங்கப்படும், ஒவ்வொரு மாதத்திலும் வரும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் தேவஸ்தானத்தின் நிர்வாக சபைக் கூட்ட மும் கருத்துப் பரிமாறல்களும் இடம்பெறும். இக்கூட்டத்தில் கணக்கறிக்கை வாசிக்கப் படுவதோடு அன்பளிப்புச் செய்தோர் விபரங்களும் அறிவிக்கப்படும்.
25

Page 18
அம்மையார் இல்லாத வேளைகளில் தேவஸ்தான அலுவலகத்திற்கு வரும் செய்திகளைத் திரு. கா. சிவபாலன் அவர்கள் எழுதி வைத்துக்கொள்கிறார். எழுதப்பட்ட செய்தி இவரது பார்வைக்கு வரும்.
ஆகவே சரியான தொடர்பாடல்கள் மூலம் சிவத் தமிழ்ச்செல்வி, சமூக த் தி ன் குரலைக் "கேட்கிறார், விளங்கிக் கொள்கிறார், அதனை மதிப்பீடு செய்கிறார், பின்னர் தனது பிரதிபலிப்பைக் காட்டுகிறார்.”*
இந்த உறவாடலில் ஒரு ஒத்துணர்வு காட்டப்படு கிறது. உதவிக்கரம் நீட்டப்படுகிறது. யாரும் தீர்ப்பிடப் படவில்லை. மாறாகப் புரிந்து கொள்ளப்படுகிறார்கள். மிகவும் சந்தோஷமானதும், அமைதியானதுமான சூழலில் ந  ைட பெறும் இத் தொடர்பாடல் எமது உயிரை மகிழ்விக்கிறது.
ஆகவே எம் துயர் க ள் வெ யி ல் முன் பணியென் றகலாவோ?
ஒருவனுக்கு எவ்வளவுக்கெவ்வளவு அநுபவம் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அறிவு பெறுகிறான் என்பது உண்மையல்ல. அவனுக்கு அநுபவம் பெறுவதற்குரிய திறமை எவ்வள்வோ அதற்கேற்றதே அவன் பெறும் அறிவு.
| — 6фт.
26

5. பொது மக்களுக்கு உரையாற்றல்
எனது ஆசிரியர் த. சண்முகசுந்தரம் அவர்கள் சிவத்தமிழ்ச் செல்வம் என்ற தனது நூலில் பின்வருமாறு எழுதுகிறார், ஒரு நாள் உ  ைர யா ட லி ன் போது பண்டிதமணி, சித்தாந்தசாகரம், இ லக் கி ய கலாநிதி சி. க ண ப தி ப் பிள்  ைள அவர்கள் வினா ஒன்றைத் தொடுத்தார். "* யாழ்ப்பாணத்து நல்லூர் சாமிநாதத் தம்பிரானுடைய கதாப் பிரசங்கமும், சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் சொற் பொழி வும் ஏன் தமிழ் நாட்டில் எடுபடுகின்றன?’’ இப்படியாக அவர் வினவும் வேளையில் விடை சொல்லாது வாயை மூடி வைத்திருப்பது நல்ல செயல் என்பதைப் பண்டிதமணியை நன்கு அறிந்தோர் அறிவர். தன்னுடைய தா டி  ைய ச் சற் று ஒதுக்கிக் கொண்டு, பண் டி த ம ணி த ரா னே தொடர்ந்து விடை அளித்தார். ‘முதலாவது இவர்கள் பேச்சின் பொருளை ஒழுங்குபடுத்திப் பேசுதல், இரண்டா வது கால நேரத்தை உணர்ந்து கட்டுப்பட்டுப் பேசுதல், மூன்றாவது யாழ்ப்பாணத்துத் தமிழின் சிறப்பு, நான்கா வது ஒரெ ழு த்  ைத யும் சிதைக்காது விழுங் கா து உச்சரித்தல்."
துர்க்காதுரந்தரியின் உரைச் சிறப்புக்கான காரணங் கள் இவ் வாறு பண் டி த ம ணி அ வர் க ளா லேயே விதந்துரைக்கப்பட்டுள்ளன. -
'தசம்" அவர்கள் தனது கருத்தை இவ்வாறு கூறு கிறார், 'சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவாற்றும் போது ஆடாமல் அசையாமல், கண்களை உருட்டாமல்
மி ர ட் டா மல் உடல் செயலற நின்று உள் ளத் தால்
27

Page 19
பேசுவார். அப்போது கேட்போர் பேசுவோர் என்ற பேதம் கழன்று விடும். ஒருமைப்பட்டு அறிவானந்தத்தைத் துய்ப்பார்கள். இந்தப் பாங்கு சிவத்தமிழ்ச் செல்வி யிடத்தும் அமைந்திருக்கிறது.”*
நல்ல தலைவர்கள் எ ல் லா ரு மே பொதுவாக நல்ல உரையாளர்களாகவே அமைந்து விடுகிறார்கள் தன்னைத் தெளிவாக வெளிப்படுத்திக் கொள்ள முடிகிறவனால் மற்றவர்களை எளிதில் வெற்றி கொண்டு விட முடிகிறது.
கூட்டம் பெரிதோ சிறிதோ கேட்பவரின் மனதைத் தொடுகிற மாதிரிப் பேசுவார் துர்க்கா துரந்தரி. ஆலயத் தில் நிறைந்துள்ள கூட்டம் எவ்வளவு பெரிதாக இருக் கிறதோ அவ்வளவுக்குச் சிறப்பாகப் பேசுவார். பேச்சின் ஊடே அவர் சென்று கொண்டிருக்கிறபோது கேட்டுக் கொண்டிருப்பவர்களை ஒப்புக் கொள்கிற மாதிரிச் செய்து விடுவார். வார்த்தைகளின் வேகம், மக்களை மெள்ள மெள்ளக் கரைத்து உணர்ச்சிகளைத் தூண்டி விடும். பேச்சின் வேகமும், அழுத்தி ஒலிக்கின்ற இனிமையான குரலும் "ஒ இது தான் உண்மை’ என்று சபையை நினைக்கச் செய்து விடும். பிறகென்ன? வெற்றிதான்! **இந்த அம்மா தனக்காகப் பேசவில்லை. நமக்காகவே பேசுகிறார்" என்று மக்கள் ஐயமின்றி முடிவு செய்வர். சிவத்தமிழ்ச் செல்வியைத் தமது தலைவியாக மனதார ஏற்றுக் கொள்வர். அவர்களுடைய கை தட்டலை என் றும் தனக்கு நிரந்தரமாக்கிக் கொள்வார் இவர்.
நல்ல பேச்சின் முதுகெலும்பு ஆயத்தம் செய்தல்! தியோடோர் றுாஸ் வெல்ற் தனது பேச்சுக்களை ஆயத்தம் செய்ய நீண்ட நேரம் செலவிடுவாராம். அவர் ஒரு முறை இப்படிக் கூறி இருக்கின்றார் "கவனமான திட்டமிடலும் நேரகாலத்துடனேயே கடுமையாக உழைத்தலுமின்றி நான் எதையும் பெற்றுக் கொண்டதில்லை!"
28

அம்மையார் அவர்களும் தமது சொற்பொழிவுகளை மிகக் கவனமாக ஆயத்தம் செய்துள்ளார் என்பதைப் பத்துச் சொற்பொழிவுகள், கந்தபுராணச் சொற்பொழி வுகள் போன்ற தொகுப்பு நூல்களை ஆழ்ந்து படிக்கும் எவரும் உணர்வர். இந்த ஆயத்தம் அவரிடத்து ஒரு தன்னம்பிக்கையைத்தர ஆரம்பத்திலேயே மிக உற்சாகத் துடன் தமது பேச்சைத் தொடங்குவார்.
ஆயத்தம் செய்வது என்பது வெறுமனே நூல்களை வாசிப்பதில்லை. வாசித்த பல விடயங்களும் ஒருவருக் குள்ளேசமிபாடு அடைந்து உறிஞ்சப்பட்டு அவரது ஆளுமை பின் கூறுகள் ஆகிவிட வேண்டும். பின்னர் சொந்தக் கருத் துக்கள் போல வெளிவர வேண்டும்.
ஏபிரகாம் லிங்கன் தனது அன்றாட வாழ்வில் சிறு சிறு விடயங்களைச் செய்யும் போது மனதில் தோன்றும் கருத்துக்களை பழைய என்பலப்பின் மூலைகள், சிறு காகி தங்கள் போன்றவற்றில் எழுதிக் கொண்டு தன் தொப்பி யில் செருகி வைத்துக் கொள்வாராம். பல நாட்களின் பின் தொப்பியுடன் ஒரு இடத்தில் அமர்ந்து ஆங்காங்கு குறித்து வைத்த விடயங்களை ஒழுங்கு படுத்தி மீள எழுதிக் கொள்வாராம். இந்த ஆயத்தம் அவரைச் சரித் திரத்தில் ஒரு நல்ல பேச்சாளர் ஆக்கிற்று.
சிவத்தமிழ்ச் செல்வியின் சிறப்பான சமயப்பேச்சாற் றலை ஈழத்திருநாடு மட்டுமல்ல, தமிழ்நாடும், மலேசி யாவும், லண்டனும் கூட அறிந்து மகிழ்ந்தன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னை நாள் பதிவாளர் உயர்திரு. வி. என். சிவராஜா அவர்கள் இவ்விடயத்தை இப்படிக் குறிப்பிடுவார்.
” “Selvi Thangammah Appakutty’s contribution through discourses covers a wider area as coin pared to that of Navalar from Colombo to Malaysiya and London''
29

Page 20
சிவத்தமிழ்ச் செல்வியின் பேச்சாற்றலைப் பற்றிக் குறிப்பிடும் ஆர். என். சிவப்பிரகாசம் ஐயா அவர்கள், 'Silver Tongued Oratory'' atgirgaortii. 1965 b gait G). டிசம்பர் மாதம் அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கோகலே மண்டபத்தில் நிகழ்ந்த விழாவில் அம்மையாரின் உரையைக் கேட்ட பேராசிரியர் சோ. சுப் பி ர மணி ய பிள்  ைள
அவர்கள்
**இங்கே பேசியவர் ஈழத்துத் தங்கம். ஈழத்துத் தங்க மென்றால் மிகுந்த மதிப்புடையது. இருபத்திரண்டு கரட் பெறுமதி உடையது, நம்பிக்கைக்குரியது, இந்தத் தங்கத் தின் விளக்கத்தை நீங்களும் கண்டீர்கள். ஈழத்துத்
தங்கம்மா, 'செயல் வல்லள், சோர்விலள், அஞ்சாள். இவளை இகல் வெல்லல் எனக்கும் அரிது . என்று' பாராட்டினார்.
சமயம் என்பது வாழ்வுக்கு அர்த்தம் தருவது; பாது காப்பு உணர்வைத் தருவது, மனித நடத்தைகளைச் சரியானது, தவறானது எனத்தீர்ப்பிட உதவுவது; சமூகத்தின் மற்றைய மனிதர்களுடனான பொதுப் பண் புகளை வளர்க்க உதவுவது; சமூகத்தில் இவ்வாறு பல நன்மைகளைச் செய்கின்ற சமயத்தை வளர்ப்பதிலும் அதன்மீது நம்பிக்கை கொள்ளச் செய்வதிலும் அன்னை அவர்களின் பேச்சுக்கள்பெரும் செல்வாக்குச் செலுத்துவன.
ஒரு ஆலயத்திற்கு உரையாற்றச் செல்லும் போது அம்மையாரின் நோக்கம் மிகத் தூய்மையாகத் தெரியும்,
*" சொற்பொழிவுகளுக்கும் மற்றும் நிகழ்ச்சிகளுக்கும் இவ்வளவு பணம் உதவ வேண்டும் என்ற கோரிக்கை யோடு தான் இந் நாட்டுக்கு அறிஞர் பலர் வருகிறார்கள். ஆனால் சிவத்தமிழ்ச் செல்வி அவர்கள் எந்த ஒரு கோரிக் கையையும் முன் வையாது தனது சைவப் பிரசாரப் பணியையே முன் வைத்து எமது நாட்டுக்கு வருகை தந்த
30

பெருமைக்குரியவர் என்பதை எடுத்துக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று கூறும் இலண்டன் - பூரீ முருகன் கோயில் செயலர் எஸ். கே. கணபதி அவர்களின் கூற்று இந்தத்தூய நோக்கத்திற்கு வெளிப்படையான சாட்சி
ஆகும்,
நாவலருக்குப் பின் தங்கம்மா எனப்பத்திரிகை ஒன்று விதந்துரைத்ததில் வியப்பென்ன?
அன்னை அவர்கள் உரையாற்றத் தொடங்கினால், அந்த உரையிலே திருக்குறள் எடுத்தாளப்படும், நாயன்மார் கூற்றுக்கள் தாராளமாய் உலாவரும். தமிழ் இலக்கியங்களும் புராணங்களும் பற்றிய தெளிந்த அறிவு கூர்மையாகப் புலப்படும். இவை எல்லாம் சேர்ந்த ஒன்றிலே ஒரு தனிப் பட்ட ஒழுங்கும் அழகும் காணப்படும். பெரும்பாலும் ஒரு அருமையான தேவாரத்துடனேயே பேச்சு ஆரம்பமாகும்.
இவருடைய தமிழ்நடையிலே ஓர் அழகும் ஆற் றொழுக்கான டோக்கும் இருக்கும். இப்பகுதியைப் பாருங் கள்
“முருகனது திருநாமத்தை மனமுருகிச் சொல்லும் போதே அடியவர்களின் உள்ளத்தில் அவன் புகுந்து விடுகின்றான். அங்கே எழுதரிய அறுமுகத்தைக் காணலாம், மணி நுதலைக் காணலாம், பன்னிரு கருணை விழி மலரைக் காணலாம்; ஆறிருதடந் தோளைக் காணலாம்; செங்கை வேலைக் காணலாம்; திருவடியிணையைக் காண லாம்; கோல மயிலைக் காணலாம்; அருணகிரிநாதர் போன்ற அடியவர்கள் இத்தகைய அழகுக் கோலத்தைப் புறத்திலும், அகத்திலும் கண்டு வழிபட்டனர்"
சிவத்தமிழ்ச் செல்வியின் பேச்சின் இடையிடையே மேற்கோள்களாகப் பாட்டுக்கள் இடம்பெறும். அந்தப் பாட்டுக்களை மிகவும் இனிமையாகப் பாடுவார். ஒரு முறை அன்னை அவர்களின் சொற்பொழிவு முடிந்த பின்னர்
3

Page 21
இசைச் சொற்பொழிவாளர் ஒருவரின் சொற்பொழிவு நடக்க இருந்ததாம். துர்க்காதுரந்தரி மேடையில் ஏற ஆயத்தமானராம். புகழ் பெற்ற அந்த இசைச் சொற் பொழிவாளர் சிவத்தமிழ்ச் செல்வியைப் பார்த்து.
** நல்ல காலம் நீங்கள் கதாப்பிரசங்கத் துறைக்கு வராதது. நீங்கள் கதாப்பிரசங்கம் செய்தால் எம் போன் றோருக்கு இடமே இருந்திருக்காது" எனப் பாரட் டினாராம்.
பெரிய மக்கள் கூட்டத்தில் பேசுகிறவர்கள் அவர்களை
ஈர்ப்பதற்காக அடிக்கடி பல்வேறு வகைப்பட்ட நகைச் சுவைத்துணுக்குகளைக் கையாளும் போக்கு இப்போது பரவலாகக் காணப்படுகிறது. அம்மையார் ஒரு போதும் இத்தகைய நிலைக்கு இறங்கியதில்லை. ஆரம்பம் முதல் இறுதிவரை இவரது பேச்சு மிகச் செறிவாயும் காத்திர மானதாயுமே அமைந்திருக்குமாயினும் சபை அதற்குள் ஈ ர் க் கப் பட் டி ரு க் கும். இந்த வல்லமை இவருக்கு எப்படிக் கை வந்தது என்பது வியப்பானதே.
எப்படித் தனது பேச்சை ஒரு தேவாரத்துடன் ஆரம் பிப்பாரோ அப்படியே பொருத்தமான ஒருபாடலுடன் தனது உரையை நிறைவு செய்வார். அந்த முடிப்பு முறை
மிக அருமையாக அமையும்.
உலகத்தைப் பற்றிக் கவலைப்பட்டால், நம் கவலை தானகக் குறையும்.
- Lails (p. al.
32

6. அன்பு செய்தல்
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார். உற் சாகத்தின் அடிப்படையே அன்புதான். ஒரு விளக்கிலி ருந்து ஓராயிரம் விளக்குகள் ஏற்றப்படுவதைப் போல அன்பைத் தருபவர் பலரது அன்பைப் பெறுகிறார். அன்பு தான் நம்பிக்கையையும் தாராள சிந்தையையும் மற்றவர்க ளிடம் வளர்க்கிறது. அது உண்மையானது. மென்மையா னது. பெருந்தன்மையானது.
எதிலும் நல்லதையே காண்பது அன்பு. எல்லாவற் றிலும் அது வெளிச்சப் பக்கங்களையே பார்க்கிறது. நீங் கள் அன்புக்காக எந்தவிலையும் கொடுக்கப்போவதில்லை. ஏனெனில் அன்பு விலை மதிப்பற்றது. அதற்காக ஒருவர் அநுபவிக்கிற வருத்தமும் சந்தோஷமானது. விடுகின்ற கண்ணிரும் இனிமையானது.
ஒரு சிறுமி பற்றிய கதை இது. அவளை அறிந்திருந்த எல்லோருக்குமே அவள் பிடித்தமானவள் 'பெண்ணே எப்படி எல்லாரும் உன்னிடம் இத்தனை பிரியம் வைத் திருக்கிறார்கள்?' என்று கேட்டார் ஒருவர். சிறுமி சொன்னாள் "நான் எல்லோரிடமும் பிரியமாய் நடந்து கொள்கிறேன். அதனால் தானோ என்னவோ?’’
சிறுமி தங்கம்மாவிடமும் எல்லாரும் அன்பு காட்டி னார்கள் ,
சிறுமி தங்கம்மா வாழ்ந்த வீட்டிற்குப் பக்கத்தில் தம்பிமுத்து என்று ஒரு புகையிலை வியாபாரி இருந்தார். அவர் தான் சாப்பிடும் நேரங்களில் எல்லாம் சிறுமி தங் கம்மாவை உடன் வைத்துக் கொள் வார். சிறுமிக்குச் சட்டைகள் தைப்பித்துக் கொடுப்பார். அயல் வீடுகளில்
33

Page 22
எல்லாம் கெட்டிக்காரச் சிறுமி தங்கம்மாவைப் பற்றி ஒரே பாராட்டுத்தான்! நல்ல தூய உள்ளம் படைத்த கிராமத்து மனிதர்களின் பாராட்டே தன்னை இப்படி உயர்த்தியதாகத் தங்கம்மா அப்பாக்குட்டி அ வ ர் க ள் இப்போது கூறுகிறார். உண்மையில் சிறுமியின் பெற்றோர் களும் அயலவர்களும் ஆசிரியர்களும் சிறுமியிடம் காட்டிய அன்பு வித்து இன்று அவரிடம் பெரும் கருணை என்னும் ஆலமரமாக விஸ்வரூபம் பெற்றுள்ளது.
தம்பிமுத்து அவர்கள் சந்தைக்குப் போனால் நிறையச்
சில்லறைக்காசு கொண்டு வருவார். அவற்றை எண்ணு வதற்குச் சிறுமி தங்கம்மாவைத் தேடிப்பிடித்துக் கொள் வார். ஒரு சதமும் இரண்டு சதமுமான சில்லறைகளை எண்ணிக் கொடுப்பதற்குப் பரிசாகத் தங்கம்மாவிற்கு இரண்டு சதம் தருவார். அது சிறுமி தங்கம்மாவிற்குக் கறுவா வாங்கப் பயன்படும். சிறுமிக்குக் 'கறுவா’ என்றால் உயிர்தான்!
சிறுமி தங்கம்மாவின் வீட்டில் வறுமைதான். ஆனாலும் தீபாவளி, வருடப் பிறப்புப் போன்ற பெரு நாட்களில் பணக்காரவீட்டுப் பிள்ளைகளுக்கு ஒரு புதுச் சட்டை என்றால் சிறுமிக்கு மூன்று நாலு புதுச் சட்டை கிடைத்து விடும். வீட்டில் பெற்றோர் எப்படியோ கஷ்டப்பட்டே னும் ஒரு சட்டை தைத்துக் கொடுப்பார்கள். அயலவர் தம்பிமுத்து கட்டாயம் கெட்டிக்காரச் சிறுமிக்கு ஒரு சட்டை தைப்பித்துக் கொடுப்பார். அயலவர்கள் சேர்ந்து, * "பாவம் தங்கம்மா படிக்கக் கூடிய பிள்ளை' என்று ஒரு சட்டை எடுத்துக் கொடுப்பார்கள். சிறுமிக்கென்ன! கொண்டாட்டந்தான்!
மல்லாகம் விசாலாட்சி வித்தியாசாலையின் ஆசிரியர் சின்னத்தம்பி உபாத்தியாயர் இவருக்குப் புத்தகங்கள் எல் லாம் இலவசமாகக் கொடுப்பார். இவ் வித்தியாசாலை யில் ஏழாம் வகுப்புத் தேர்வில் ஆறு முதற் பரிசுகளை இவர் தட்டிக் கொண்டார். அத்துடன் திருவாசக-திருச்
34

சதகம் நூறு பாடங்களையும் மனனம் செய்து ஒப்புவித்துச் சிறப்புப் பரிசிலையும் பெற்றுக் கொண்டார். வீட்டில் இருந்து காலையில் பாடசாலைக்கு நடந்து போகும் போதும் பின்னர் பாடசாலையில் இருந்து வீடு திரும்பும் போதும் திருவாசகம் மனனம் செய்து கொள்வார்.
கனிட்ட பாடசாலைத் தராதரப் பத்திரத் தேர்வு எனப்படும் எட்டாம் வகுப்புத் தேர்வுக்கு எந்தப் பாட சாலையில் சேருவது என்றொரு கேள்வி! இராமநாதன் கல்லூரியில் சேருவதானால் அதிக செலவு ஏற்படும் என்ப தனால் அளவெட்டி சதானந்தா வித்தியாசாலையில் சேரும்படி மங்களேஸ்வரி ஆசிரியை கூறிய ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப் பாடசாலை தனிப்பட்ட முகாமையாளரால் நடத்தப்பட்டு வந்தது. அந்த முகா மையாளரின் குடும்பத்தினர் அனைவருக்குமே சிறுமி தங் கம்மாவிடம் ஏகப்பட்ட பிரியம். முகாமையாளர் சிறுமி யிடம் கூறுவார், 'அம்மா வரட்டாம்' என்று "அம்மா” என்பது அவரது மனைவியைக் குறிக்கும். பக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றால், முகாமையாளர் மனைவி அன்னம்மா சாப்பாடும் கொடுத்து அன்பும் கொடுப்பார். சிறுமி அங்கேயே இருந்து ஆறுதலாகப் படித்துவிட்டு மாலை நாலு மணிக்குப்பின் வீடு திரும்புவாள்.
கனிட்ட பாடசாலைத் தராதரப்பத்திரத் தேர்வின் விண்ணப்பத்திற்கு ரூபா ஐந்து செலுத்த வேண்டும். அந் தக் காலத்தில் அது பெரிய தொகை அல்லவா! திருவா ளர் நாகலிங்கம் அவர்களே அந்தப் பணத்தைச் செலுத் தினார். சிறுமியோ அப்பரீட்சையில் முதற் பிரிவில் சித் தியடைந்ததோடு, அவ்வருடம் விவேகானந்த சபையினர் நடத்திய சமய அறிவுப் போட்டியிலும் முதலாமிடம் பெற்றாள்.
இப் பரீட்சையில் முதலாம் பிரிவில் சித்தி பெற்ற மையால் சிரேஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திரத் தேர்வுக்கு ஒரு வருடத்தில் தோற்றும் வாய்ப்பினைக்
35

Page 23
கல்வித்திணைக்களம் வழங்கியது. 1940 ஆம் ஆண்டில் இத் தேர்வுக்குத் தோற்றிய தங்கம்மா அவர்கள் அதி விசேட சித்தியைப் பெற்றார் என்பது மிகவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் ஆகிறது. ஆசிரியர் கலா சாலைப் பிரவேசப் பரீட்சைக்கு அவ்வருடம் 150 பேர் தோற்றினார்கள். அவர்களுக்குள்ளே 13 பேர்தான் தெரிவு செய்யப்படுவார்கள் என்பதை அறிந்து அப் பரீட்சைக்குத் தன்னை அவதானமாகத் தயார் செய்த செல்வி தங்கம்மா அவர்களுக்குத் தெல்லிப்பழை அந்தணர் பிரம்ம பூரி வ. குக சர்மா அவர்கள் கஷ்டமான பாடங்களைச் சொல்லிக் கொடுத்து உதவினார்.
இளமையில் வறுமை கொடியது என்று ஒளவையார் சொன்னார். ஆனால் சிறுமி தங்கம்மாவைச் சூழ இருந்த நல்ல சமூகம் அவர்மீது அன்பைச் சொரிந்து அந்தத் துன்பத்தை நீக்கியது.
*"அன்பின் முடிவு இன்பதுன்பமல்ல, அன்பின் முடிவு அன்பேதான்' என்றார் தாகூர். ஆம். சிறுமி தங்கம்மா பெற்ற அன்பின் முடிவுதான் இன்று தங்கமான ஒரு தலை மைத்துவத்தில் அன்பாக விரிந்துள்ளது.
"அன்பு எப்பொழுதும் எதையும் கேட்பதில்லை. ஆனால் கொடுக்கிறது. அன்பு எப்பொழுதும் கஷ்டத்திற்கு ஆளாகிறது. ஆனால் அதற்காக அது வருந்துவதுமில்லை. பழிக்குப்பழி வாங்குவதுமில்லை" என்பது மகாத்மா காந்தியின் எண்ணம்.
எரிக் எரிக்சன் (Erikson) என்ற உளவியலாளரின் கொள்கை வழி நின்று பார்க்கும் போது, அன்னை மிகச் சிறு குழந்தையாக இருக்கும் போது தாய் தந்தையர் கொடுத்த அன்பு இவரது ஆளுமையில் நம்பிக்கையை ஏற் படுத்தியுள்ளது. ஒரு வயதுக்கும் மூன்று வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் குழந்தை தங்கம்மா பெற்ற அன்பும் பாதுகாப்பும் இவரிடம் ஒரு சுதந்திர உணர்வை
36

ஏற்படுத்தியுள்ளன. அதற்குமேல் பாடசாலைப் பருவத்தில் சிறுமி தங்கம்மாவிடம் பெற்றோரும், அயலவரும், ஆசிரி யர்களும் காட்டிய அன்பு இவரது ஆளுமை உருவாக்கத் தில் ஒரு காரியத்தைத் தயக்கமின்றி முன்னெடுக்கும் தன்மை, தன்னைச் சரியாக அடையாளங் காணும் தன்மை, ஊக்கமுனைப்புடன் செயற்படும் தன்மை ஆகிய இயல்புகளைத் தோற்றுவித்ததனால் இவர் இத்தகு வியக் கத்தக்க நிலைக்கு உயர்ந்தார்.
அவருடைய அன்பு இன்று கருணையாக விரிந்திருக் கும் எல்லைகள் சிலவற்றை முன்னர் குறிப்பிட்டுள்ளேன். தனது மணிவிழாக் காலத்திற்கு முன்னரே நல்லை ஞான சம்பந்தர் ஆதீனம், கொழும்பு சாரதா சமித்தி, யாழ்ப் பாணம் இளங்கலைஞர் மன்றம் போன்ற சமூகத்திற்குப் பயன்தரு நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கியுள்ளார். தெல்லிப்பழையிலுள்ள காசி விநாயகர் பாலர் ஞானோ தய சபைக்கு ஒரு கட்டிடம் வழங்கி உதவினார்கள்.
கீரிமலைச் சிவநெறிக் கழகத்திற்கும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கும், சென்னை சைவ சித்தாந்த மகா சமாசத்திற்கும், யாழ் பல்கலைக்கழகச் சிந்தனை நூல் வெளியீட்டுக்கும் அறக்கட்டளை நிதி வழங்கினார்கள். யூனியன் கல்லூரிக்கு வழங்கிய அறக்கட்டளை அக் கல் லூரியில் சைவத்தில் முதன்மை பெறும் உயர்தர வகுப்பு மாணவருக்குப் புலமைப் பரிசாகவும் சென்னை சைவ சித்தாந்த சமாசத்திற்கு வழங்கிய அறக்கட்டளை புதிய சமய நூல் வெளியீட்டுக்காகவும் வழங்கப்பட்டவை. இவற் றினூடாகச் செய்யும் அன்பு பல்லாயிரக்கணக்கான தமிழ்க் குழந்தைகளை மறைமுகமாகச் சென்றடைதல் வெள்ளிடைமலை.
03-02-1982 இல் ஆரம்பிக்கப்பட்ட மகளிர் இல்லத் தில் வாழும் பிள்ளைகளிடத்தே இவரது அன்பு ஊற் றெடுத்துப் பாய்வதை அவதானிக்க முடியும்,
37

Page 24
அன்னை அவர்களுக்குச் சுகவீனமாக இருக்கும் நாள் களில் அவருக்கென்று தனியாக ஒரு கறி வைத்தாலும் அவர் அதை ஏற்றுக்கொள்வதில்லை என்று மகளிர் இல் லத்தில் சமயலுக்குப் பொறுப்பாக இருக்கும் பெண்கள் கூறுகிறார்கள். ஒரு நாள் இவ்வாறு வைக்கப்பட்ட ஒரு விசேட கறியை எடுத்துச் சாம்பாருக்குள் ஊற்றிவிட்டா ராம் அன்னை. அதைத் தயாரித்தவர்கள் இது குறித்து வேதனைப்பட்டாலும், மகளிர் இல்லப் பிள்ளைகளுக்கு இல்லாத ஒரு விசேட ஏற்பாடு தனக்குத் தேவையில்லை என்பதே சிவத்தமிழ்ச் செல்வியின் கருத்து.
பல சந்தர்ப்பங்களில் மகளிர் இல்லப்பிள்ளைகளும் விசேட விருந்தினர்களும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது அனைவருக்கும் அன்னை அவர்களே பரிமாறுவதை நான் நேரில் பார்த்து மகிழ்ந்து வியந்திருக்கிறேன்.
மகளிர் இல்லத்திலிருந்து திருமணம் செய்து வெளி யேறிய பிள்ளைகள் கூட அவ்வப்போது அம்மாவிடம் வந்து தமது க ஷ் ட ந ஷ் ட ங் க" ைள க் கூறி உதவி பெற்றுச் செல்வர். மகளிர் இல்லத்தின் உணவு வகை களைத் தயாரிக்கும்போது அரிசி பிடைத்தல், தூள் இடித் தல் போன்ற முன்னாயத்த வேலைகள் இருக்கும். இந்த வேலைகளை மகளிர் இல்லப் பெண்கள் செய்வதை அம்மா பெரும்பாலும் அநுமதிப்பதில்லை.
**வெளியே இருந்து சில பெண்களை அழைத்து இந்த வேலைகளைச் செய்தால், மேலும் சில பெண்களுக்கு நாம் சம்பளத்துடன் வேலை கொடுத்தவர்களாவோம்' என்று சொல்லுவார்.
அன்புக்குரியவர்கள் கொழும்பில் இருந்தால், இங்கி ருந்து கொழும்புக்குப் போகிறவர்கள் மூலம் அவர்களுக்கு ஒடியல் புழுக்கொடியல், பனங்கட்டிப் பார்சல் எல்லாம் போகும். இத்தகைய ‘குடும்ப அன்பை அன்னை அவர் களூடாகப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்
38

துர்க்கா துரந்தரி அவர்களின் அன்பைப் பெற்று துர்க்கா தேவஸ்தானத்தின் பெண்கள் தொண்டர் சபை யில் சேர்ந்து கொண்ட பெண்கள் பலர் தமது குடும்ப வாழ்விலும் ஒரு மாறுதலையும் செழிப்பையும் கண்டார் கள். இவர்களில் பலர் எதுவித வற்புறுத்தலும் இன்றி மிக இயல்பாகவே மாமிச உணவு உண்பதைக் கைவிட்டு விட்டார்கள். குடும்பத்திலே கணவரை நன்கு பேணி ஒற்றுமையுடனும், அன்புடனும் வாழத் தலைப்பட்டார் (95 of
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறை யில் பயிலும் மாணவர்கள் சிலர் அன்னையை அணுகித் தமது பொருளாதாரப பிரச்சினை பற்றி எடுத்துக் கூறிய தால் மாதாந்தம் உதவி பெறும் நிலையில் உள்ளார்கள்.
அம்மா அவர்களின் பவளவிழா ஆண்டில் வறுமைக் கோட்டின் எல்லைக்குக் கீழ் வாழ்கின்ற கல்வியில் திறமை சாலிகளான எழுபத்தைந்து மாணவர்களுக்கு அம்மா அன்புக்கரம் நீட்டுகிறார்.
இவ்வாண்டில் திறக்கப்படும் சிவத்தமிழ்ச் செல்வி அன்னையர் இல்லம் முதிய பெண்கள் பலருக்குப் புகலி டம் அளிக்கப் போகிறது.
அன்பு செய்தல் என்ற தலைமைத்துவப் பண்பு அம்மா விடம் நல்ல முறையில் வாய்க்கப் பெற்றுள்ளதால், தன்னு டன் தொடர்பு கொள்ளும் எல்லா மனிதர்களிடத்திலும் இவர் அதிகரித்த அன்பைக் காட்டுகிறார். இதனால் தான் தலைவராய் இருப்பது பற்றிய ஒரு அச்சத்திற்குச் சிறிதும் இடம் இல்லாமல் போகிறது. மற்றவர்களிட மிருந்து தன்னை நோக்கி வருகின்ற அன்பையும் அடை யாளம் காண்கிறார். ஏற்றுக் கொள்கிறார்.
மனிதர்கள் எல்லோருமே அன்பு செய்யப்படுவதை விரும்புகிறார்கள்-யாரோ ஒருவர் தன்னைக் குறித்து அக் கறைப்படுகிறார் என்று உணர்வதற்காக-தனது முக்கியத்
39

Page 25
துவத்தை அறிவதற்காக - தான் பாராட்டப்படுவதாக உணர்வதற்கு பயமின்றி வாழ்வதற்கு - பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த - தன்னுடன் சேர்ந்து வேலை செய்வதற்கு மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர் வதற்கு - தான் செய்யும் வேலைகள் அவசியமானவை தான் என்று அறிவதற்கு - உண்மையான உன்னத மகிழ்வை அனுபவிப்பதற்கு - மதிப்பையும், கெளரவத்தை யும் பெற்றுக்கொள்வதற்கு - தனக்கு உதவ ஒருவர் இருக் கிறார் என்று உணர்வதற்கு - தனக்கு ஒரு கணிப்பு இருப் பதை அறிவதற்கு - தனது வளர்ச்சிக்கு - ஆத்மார்த்தமான உறவு ஒன்று இருப்பதை உணர்வதற்கு - வாழ்வின் அர்த் தத்தைப் புரிந்து கொள்வதற்கு - எமது இலக்கினை நோக் கிப் பயணிப்பதை ஊக்குவிப்பதற்கு..
மனிதர்களின் இந்தத் தேவைகளை நன்குணர்ந்த துர்க்கா துரந்தரி அவற்றைத் தனது அன்பு செய்தல் மூலம் நிறைவேற்றித் தான் ஒரு உயர்ந்த இடத்தில் அமருகிறார்.
நான் அதிகமாகச் சுற்றச் சுற்ற என் வாய் மிக மிக அடங்கிவிட்டது. நான் குறை கூறு வதற்கு இவ்வுலகில் ஒன்றுமே இல்லை.
- விவேகானந்தர்
40

7. நேரமுகாமைத்துவம் செய்தல்
எமது வாழ்நாளில் நாம் நேரத்தை எவ்வாறு முகாமை செய்கிறோம் என்பதிலேயே எமது சந்தோஷமும் வெற்றி யும் தங்கி உள்ளன.
ஒவ்வொரு மனிதனுக்கும் வா ழ் வில் ஒரேயளவு நேரமே வழங்கப்பட்டுள்ளது. சிலர் தமது நேரங்களை மிகப்புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்வதா லேயே மற்றைய சிலரை விட அதிகம் வெற்றி பெறுபவர்க ளாகவும் அதிகம் பேசப்படுபவர்களாகவும் அதிகம் நிறை வாக வாழ்பவர்களர்யும் உள்ளனர்.
ஒரு நல்ல தலைவர் தனது நேரத்தைத் திறமையாகப் பாவிக்கும் தகைமை உள்ளவராய் இருப்பதோடு தனது குழுவினரின் நேரங்களையும் பயனுறப் பயன்படுத்த வழி காட்டுபவராய் இருப்பார். நேரத்தை இவ்வாறு திட்ட மிட்டு நல்ல முறையில் பயன்படுத்தும் போதுதான், மனித குலத்திற்குச் சேவை செய்வதற்கான நேரம் ஒதுக்கப்பட முடியும்.
மாணவர்கள் மட்டுமா தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்யாதிருப்பதற்கு, ‘நேரம் இல்லை" என்று சொல்கிறார்கள்? மிகப் பெரிய பொறுப்பான பதவி களில் இருக்கும் மனிதர்களும் கூடத்தான் தாங்கள் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யாதிருப்பதற்கு “நேரம் கிடைக்கவில்லை. இல்லாவிட்டால் செய்திருப்பேன்" என்று சாட்டுச் சொல்கிறார்கள் ! ஆனால் ஒரு நாளில் இருபத்து நாலு மணிநேரமே எல்லாருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அப்படியானால், ஒரு சிலர் மட்டும் எப்படித்தாம் செய்ய வேண்டிய பல வேலைகளையும் ஒழுங்காகச் செய்து
4.

Page 26
முடித்து விடுகிறார்கள் ? எப்படி அவர்களுக்கு மட்டும் நேரம்கிடைக்கிறது? சிவத்தமிழ்ச் செல்விக்கு மட்டும் இவ்வளவு பொறுப்பான வேலைகளையும் ஒழுங்காகச் செய்து முடிக்க எங்கிருந்து நேரம் மேலதிகமாக வழங்கப் பட்டது?
ஆங்கிலத்தில் இப்படி ஒரு பழமொழி உள்ளது 'ஒரு முக்கியமான வேலையை நேரத்தோடு செய்விப்பதற்குப் பல வேலைகளையும் செய்கின்ற வேலைப்பழுவுள்ள ஒரு வரையே நாடுங்கள்’’. உண்மைதான். அதனால்தான் பெஞ் சமின் பிராங்கிளின் சொன்னார் "நீங்கள் வாழ்வதற்கு விருப்ப முள்ளவர்களா ? அப்படியானால் நேர த்  ைத விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் வாழ்வு என்பது நேரத் தாலேயே ஆக்கப்பட்டது"
மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதோடு மட்டும் பிராங்கிளின் திருப்தி அடையவில்லை. தனது வாழ்விலும் அதனைச் செயற்படுத்தினார். அவருடைய புத்தக விற் பனை நிலையத்துக்கு ஒரு முறை ஒரு பிரமுகர்வந்தார். ஒரு நூலை எடுத்து " " பையா இதன் விலை என்ன?" என்று விற்பனையாளனைக் கேட்டார்.
**ருை டொலர்" என்றான் பையன் .
ஒரு محي
‘ஒரு டொலரா? ஏன் அவ்வளவு விலை? கூப்பிடு முத லாளியை!** என்றார்.
பிராங்கிளின் வந்தார்
""மிஸ்டர் பிராங்கிளின்! இந்தச் சின்னப் புத்தகம் ஒரு டொலராமே?*
"இல்லை அதன் விலை ஒன்றரை டொலர்!" என்று சிரித்தார் பிராங்கிளின்,
42

" என்ன இது ? பையன் ஒரு டொலர் என்றாள் அதுவே அதிகம் என்று உங்களைக் கூப்பிட்டால் நீங்கள் ஒன்றரை டொலர் என்கிறீர்கள் ! என்ன அர்த்தம் இது??? சினந்தார் சீமான்.
* 'இப்போது அதன் விலை இரண்டு டொலர்'
கனவானுக்குக் கோபம் எல்லை மீறிவிட்டது.
*" என்ன விளையாடுகிறீர்? அக்கிரமம் செய்வதற்கும் ஒரு அளவு இருக்க வேண்டும்! " என்று கத்தினார்.
பிராங்கிளின் மிக அமைதியாகப் பதிலளித்தார்.
**ஆரம்பத்தில் அதன் விலை ஒரு டொலராக இருந்தது உண்மை தான். ஆனால் இப்போது அதன் விலை இரண்டு டொலர் என்பதையும் மாற்ற முடியாது. ஏன் தெரியுமா? எனது நேரம் பொன் போன்றது ... !!”*
வந்தவர் மறு பேச்சின்றி இரண்டு டொலர் கொடுத்து நூலை வாங்கிச் சென்றார்.
இப்போதெல்லாம் சிவத்தமிழ்ச்செல்வி தலைமை தாங்கி நடத்தும் கூட்டங்களைப் பார்க்கவேண்டும். தலை வர் மேசையில் ஒரு மேசைமணிக்கூடு வைத்துக்கொள் வார். கூட்டத்தில் பேசிக்கொண்டிருப்பவர்கள் தமக்குரிய நேரத்தை மீறிவிட்டால் அந்த மேசைமணிக்கூட்டைத் திரும்பிப்பார்த்துத் தனது கருத்தைக் குறிப்பால் உணர்த் துவார்.
தான் ஒழுங்கு செய்து நடத்தும் கூட்டங்களுக்குப் பிரதம விருந்தினர்தான் தாமதமாக வந்தாலும் அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் கூட்டத்தைக் குறித்த நேரத்திற்கு ஆரம்பித்து விடும் வழக்கமும் அவரிடம் உண்டு. நேரவிரயம் செய்வதில்லை என்ற கொள்கையில் உலகின் பல வேறு தலைவர்களைப் போலவே துர்க்கா துரந்தரியும் மிகக் கவனமாக இருப்பார்.
43

Page 27
*. வெ. ரா பெரியார் நெடுங்காலம் தொடங்கித் தமது இறுதி நாள் வரையும் தாடியுடன் வாழ்ந்தார். அவரது அரசியல் எதிரிகள் அவரைக் கஞ்சன் என்று கிண்டல் செய்வதுண்டு. ஒரு சமயம் முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. அவர்கள் பெரியாரிடம் தாடியின் காரணம் பற்றி விசாரித்த போது கிடைத்த பதில் ‘தினசரி சவரம் செய்து கொள்வதற்குச் சுமார் பத்து நிமிடங்கள் செலவா கும். மாதம் முந்நூறு நிமிடம் அதாவது ஐந்து மணி நேரம். வருடத்தில் அறுபது மணித்தியாலங்கள் ! அந்த நேரத்தை மக்கள் நலனுக்காகச் செலவழிக்கலாம்" என் பதாகும்.
துர்க்கா துரந்தரி அவர்கள் ஒரு ஆலயத்திற்குப் பேசச் சென்றாலும் அந்தப் பேச்சுச் சரியாக ஐம்பது நிமிடம் நீடிக்கும். மணிக்கூடு பார்க்காமலேயே அது சரியாக நிகழும். லண்டன், மலேசியா போன்ற இடங்க ளில் மக்கள் அவதியான வாழ்வு வாழ்பவர்கள் என்பதை யுணர்ந்து தனது பேச்சின் நேரத்தை யாரும் கேட்டுக் கொள்ளாமலே நாற்பது நிமிடம் அல்லது முப்பது நிமிட மாகக் குறைத்துக் கொள்வார் அன்னை.
ஒரு வேளை ஏதாவதொரு முக்கிய காரணத்தினால் குறிப்பிட்ட நிகழ்வொன்றில் தன்னால் கலந்து கொள்ள முடியாது போனால் ஒரு போதும் நிகழ்வு ஏற்பாட்டாளர் களைத் தனக்காகக் காத்திருக்க வைக்கமாட்டார். வர முடியாத தனது நிலை பற்றிக் கட்டாயமாக முன்னறி வித்தல் கொடுத்து விடுவார்.
அம்மா அவர்கள் யூனியன் கல்லூரியில் ஆசிரியையாக இருந்த காலத்தில் ஒரு கோயில் கும்பாபிஷேகத்திற்குத் திடீரென வர முடியாமல் போய்விட்டதாம். அது பற்றி அவர் ஒரு தந்தி கொடுத்திருந்தார். பின்னர் உரை தொடங்க வேண்டிய நேரத்தில் அன்னைக்கு ஒரு சந்தேகம் “ஒரு வேளை தந்தி உரிய நேரத்தில் கிடைக்காவிட் டால்.. * உடனே அப்போது யூனியன் கல்லூரி மாண
44

வனாக இருந்த திரு. குணபாலசிங்கம் அவர்களிடம் ஒரு கைத்துண்டு எழுதி அனுப்பினாராம். ஆனால் கோயில் முகாமையாளருக்குத் தந்தி முன்னரே கிடைத்திருந்த தாம். இப்படி "நேரம் பற்றி இருமுறை கவனிக்கும் பண்பு அவரிடம் மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது.
ஒரு முறை தெல்லிப்பழை சைவப்பிரகாச வித்தியா சாலையின் புதிய கட்டிடத் திறப்பு விழாவிற்கு நாலைந்து பிரமுகர்களை விசேடமாக அழைத்திருந்தோம். அவர்க ளில் குறித்த நேரத்திற்கு வருகை தந்தவர் அம்மா ஒரு வரே என்பதால் அவரே பாடசாலைக் கொடியையும் ஏற்றி மண்டபத்தையும் திறந்து வைக்கும் பாக்கியம் பெற்றோம்.
ஒரு மனிதன் நேரத்தை வினைத்திறனுடனும் விளை திறனுடனும் கையாளக் கூடிய எல்லா நடை முறைகளை யும் தலைவி அவர்கள் பின்பற்றுகிறார். தான் அண்மைக் காலத்தில் செய்ய வேண்டிய விடயங்களை அவற்றின் முக்கியத்துவ ஒழுங்கில் எழுதி வைத்துக் கொள்கிறார். அந்த ஒழுங்கில் அவற்றைச் செயற்படுத்துகிறார்.
தனது நாள் ஒவ்வொன்றையும் நேர காலத்துட னேயே ஆரம்பித்து விடுகிறார். தனக்கு உதவுவதற்கு எத்தனை பேர் இருந்த போதிலும் தானே பல விடயங் களையும் செய்து கொள்கிறார். ஆயினும் தேவையான நேரங்களில் தேவையான இடத்தில் மற்றவர்களின் உதவி யைப் பெற்றுக் கொள்கிறார். சமூகத்திற்கும் மனிதர்க களுக்குத் தனிப்படவும் பயனுள்ள வேலைகளை மட்டுமே செய்கிறார். சிந்திக்க வேண்டிய மூளைக்கு வேலைதருகிற விடயங்களைக் காலையிலே கவனிக்கிறார். களைத்திருக் கும் வேளைகளில் வழக்கமான பழக்கமான வேலைகளைச் செய்கிறார். மாலையில் ஒரு குட்டித் தூக்கம் போடுவதன் மூலம் அந்தி நேரத்தை வினைத்திறனுடன் செயற்படும் நேரமாக்கிக் கொள்கிறார். தன்னால் முடியாத விடயங் களை "முடியாது' என்று நேர்மையாகச் சொல்லிவிடு
45

Page 28
கிறார். ஒவ்வொரு நாளையும் அதன் மூலம் பல வருடங்க ளையும் செம்மையாகத் திட்ட மி ட் டு க் கொள்கிறார். இரவில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் ஒரு போதும் விழித்திருப்பதில்லை. இவை அனைத்தும் நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்த விரும்புகிற அனைவரும் பார்த்துப் பின் பற்றக் கூடிய விடயங்கள்.
கோயில் திருவிழாக்களின் போது உபயகாரர் நேரத் திற்கு வந்து விடவேண்டும். அப்படி வராவிட்டால் யாரோ அங்கு நிற்கிற நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் தர்ப்பை போட்டுக் கொள்வார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆகவே நேரம் தவறி வரும் உபயகாரர் குறை விளங்க முடியாது.
கூட்டங்களை அம்மா அவர்கள் அவசியமான போது மட்டுமே கூட்டுகிறார். கூட்டத்தினுடைய நோக்கத்தை ஆரம்பத்திலேயே தெளிவாகச் சொல்லி விடுகிறார். அல்லது தலைமை தாங்குபவரைக் கொண்டு சொல்ல வைதது விடுகிறார். கூட்டம் கட்டாயமாகக் குறிப்பிட்ட நேரத்திற் குத் தொடங்கி விடுகிறது. கூட்டத்தில் ஒரு நிகழ்வு ஒழுங்கு (Agenda) பேணப்படுகிறது. சிவத்தமிழ்ச் செல்வி அவர்கள் கூட்டும் கூட்டங்களில் ஒரு போதும் ஒரு நேரத் தில் இருவர் கதைக்க மாட்டார்கள். கூட்டத்தில் தேவை யற்ற விவாதங்கள் இருப்பதற்கு அநுமதிக்க மாட்டார். கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துத் தேவையற்றது எனத் தெரிந்தால் "அதை விடுவம்’ என்ற ஒரிரு சொல் லுடன் அந்த விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துக் கூட்டத்தை நகர்ந்து கொண்டிருக்க வைப்பார். கூட்டத் தின் தீர்மானங்கள் எழுத்தில் எடுக்கப்பட்டு அவை செயற் படுத்தப்படுவதை உறுதி செய்வார். கூட்டத்தில் ஆராயப் படவேண்டிய பிற விடயங்கள் கூட எவை எவை என்பது பற்றிக் குறிப்பாக நினைவு கொள்வார். கூட்டம் எதிர் பார்க்கப்பட்ட நேர்த்திற்கு முடிவதை நிச்சயப்படுத்திக் கொள்வார்.
46

தன்னுடன் இணைந்து செயற்படுபவர்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்புக்களை உரிய முறையில் ஒப்படைத்து அதற்கு வேண்டிய அதிகாரத்தையும் கொடுத்து விடுவார். அவர்கள் செய்ய வேண்டிய வேலைபற்றி மிகத் தெளிவா கவும் விரிவாகவும் கூறியிருப்பார். அவை செம்மையாகச் செய்து முடிக்கப்படும் போது அவர்களைப் பாராட்டி மகிழ்விப்பார். இதன் மூலம் குழுவினர் செய்ய வேண்டிய வேலைகளும் குறிப்பிட்ட நேரத்தில் முடிவடைய வைத்து விடுகிறார்.
நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர்தொடர்பு
-என்றான் வள்ளுவன்.
சிவத்தமிழ்ச் செல்வியுடன் சமகாலத்தில் வாழ்ந்து அவருடன் உறவு கொள்ளப் பேறு பெற்ற நாங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள் !
கற்பகப் பூவை யெல்லாம் கவனமாய்க் கிள்ளிவந்து "வானவில்லில் நார் கிழித்து வகை வகையாய் மாலைகட்டி சொல்லரசி நாம் உமக்குச் சூட்டிவிட விரும்புகிறோம்
மனிதன் திருந்துவது எண்ணத்தால்! படகைத் திருப்புவது சுக்கான், செயலைத் திருப்புவது எண்ணம்.
- டால்ஸ்டாய்
47

Page 29