கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூவானம் கவனம்

Page 1


Page 2

தூவானம் $ରା ୩ it
கோகிலா மகேந்திரன்
`ጵ”
கலை இலக்கியக்கள வெளியீடு - 2

Page 3
I
r)
"OOVANAM KAVANAM A novel in Tamil By KOHl LA MAHENDRAN [C] K. MAHENID, RARAJAH First edition Feb. 988 Published by lyceum of Literary
and Aesthetic Studies - Tellippalai Printed at Kugan Press, Tellippalai Cover Design - Srithar Pichchaiappah Offset Plates Kalaimagal Printograph, Jaffna Cover Printed at St. Joseph's Catholic Press, Jafna Price Rs. 35/-

Floin 1600
கலை இலக்கியக் களக் காப்பாளர் பேராசிரியர், கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களுக்கு

Page 4

பதிப்புரை
கல் இலக்கியத் துறைகளில் உயர்தர இரசனை யைப் பேணுதல், தகுதிவாய்ந்த கலை இலக்கியவாதி களைக் கெளரவித்தல், புதிய தலைமுறைக் கலை இலக்கி யகாரரை வளர்த்தெடுத்தல் ஆகிய நோக்கங்களை முன்வைத்து தெல்லிப்பழையில் 1986-09-05 அன்று கலை இலக்கியக்களம் என்ற இந்நிறுவனம் தோற்றுவிக் கப்பட்டது. மத்தியகுழு உறுப்பினராகப் பன்னிருவ ரைக் கொண்டமைந்த இக்களத்துக்கு (அண்மையில் அமரரான) பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன் சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, திரு Goumr. சிவஞானசுந்தரம் (முன்னுள் வட்டாரக்கல்வி அதிகாரி) ஆகியோர் காப்பாளர்களாக அமைந்து ஆச் கமும் ஊக்கமும் அளித்தனர். வலிகாமம் வடக்குப் பல நோக்குக் கூட்டுறவுச்சங்க சமாஜம், மாவை ஆதீனம் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம் ஆகிய நிறு வனங்களும், வர்த்தகப்பிரமுகர்களும் கலை இலக்கிய ஆர்வலர்களும் மனமுவந்து நல்கிய நிதியுதவி, ஆதரவு என்பவற்ருல் இக்களம் கடந்த இரண்டரை ஆண்டு களாகத் தனது நோக்கங்களைச் செப்பமான முறையில் நிறைவேற்றி வருகின்றது. இயல், இசை, நாடகம் ஆகிய முத்துறைகளிலும் எல்லாமாகப் பத்தொன்பது நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 1988-07-17 அன்று நிகழ்த்தப்பட்ட "சிறுகதைநாள்" நிகழ்ச்சி யாழ் மாவட்ட இலக்கியவாதிகள் பலரதும் காத்திரமான பங்களிப்புடன் அமைந்து களத்திற்குத் தனிக் கணிப் பைப் பெற்றுத்தந்தது.
இக்களம் மேற்சுட்டிய நோக்கங்களின் ஒரு கூருக
நூல்களை வெளியிடும் முயற்சியிலும் ஆர்வம் செலுத் தத் தொடங்கியுள்ளது. இவ்வகையில் முதல்முயற்சியாக

Page 5
அறுபது இபது இளைஞர் கலைப்பேரரசு என்ற சிறு பிரசுரம் கடந்த ஆண்டில் வெளிவந்தது. களத்தின் இணைச் செயலாளர்களில் ஒருவரும் நாடகக் குழுத் தலைவருமான க3லப்பேரரசு ஏ.ரி. பொன்னுத்துரை அவர்களின் மணிவிழா நிகழ்வை ஒட்டி 1988-04-30 அன்று அந்நூல் வெளியிடப்பட்டது. அதனை அடுத்து இப்போது களத்தின் இரண்டாவது வெளியீடாகக் களத்தின் மற்ருெரு இணைச்செயலாளரான கோகிலா மகேந்திரன் அவர்களின் தூவானம் கவனம் என்ற இந் நூல் வெளிவருகிறது.
கோகிலா மகேந்திரன் அவர்கள் ஈழத்தின் இன் றைய படைப்பாளிகளுள் முதல்வரிசையில் திகழ்பவர். கடந்த ஏறத்தாழப் பதினைந்தாண்டுக்காலப் பகுதியில் இலக்கியத்துறையில் அயராது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர். நான்கு சிறுகதைத் தொகுதிகளையும் ஒரு நாவலையும் வெளியிட்டு நூற்பிரசுர முயற்சியிலும் தனது ஆளுமையை வெளிப்படுத்தி நிற்பவர். அண் மையில் நோர்வே தமிழ்ச்சங்கம் ஈழத்து எழுத்தாளர் கட்கு நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசினைப் பெற்றதன் மூலம் தமது படைப்பாற்றலுக்கு அனைத் துலக ரீதியான கணிப்பை ஈட்டிக் கொண்டவர். ஈழத்து எழுத்தாளர்களுள் இவருக்கு உரிய தனிப் பண்பை இனங்காட்டும் வகையில் G8ugrr6urř சு. வித்தியானந்தன் அவர்கள்,
"குறிப்பாகச் சமூக நிகழ்ச்சிகளையும் அவற்றினடி யாக நிகழும் உணர்ச்சி முனைப்புக்களையும் சித்தி ரிப்பதைவிட, அவற்றுக்கு அடிப்படையான உளவி யற் காரணிகளை விமர்சிப்பதே கோகிலாவை

ஏனையவர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டும் முக் கிய அம்சமாகும். நோய்தீர்க்கும் மருத்துவர் ஒரு வர் நோயாளியைப் பகுப்பாய்வு செய்து, நோயின் மூலத்தை இனங்காண முயல்வது போலக் கோகி லா அவர்கள் சமூக நோய்களுக்கான காரணிகளை உளவியல் அடிப்படையில் பகுப்பாய்வு செய்பவ ராக அமைகிருர்."
எனக் குறிப்பிட்டுள்ளமை பொருத்தமான மதிப்பீடn கவே அமைந்துள்ளது. (பார்க்க பின்னிணைப்பு) இத்த்கு கணிப்பைப் பெற்ற கோகிலாவின் முதல் நாவல் துயி லும் ஒருநாள் கலேயும் சிவன் கல்விநிலைய வெளியீடாக 1986 இல் வெளிவந்தது. இந்த இரண்டாவது நாவல் கலை இலக்கியக் கள வெளியீடாக மலர்கின்றது.
இந்த நாவலின் கதையம்சம், அந்நிய நாடுகளின் தொடர்பால் எமது நாட்டுக்கு எதிர்காலத்தில் ஏற்ப டக் கூடிய பேரபாயங்களில் ஒன்றைச் சுட்டிக்காட்டும் தொனிப்பொருள் கொண்டது. பிறநாடுகளிலிருந்து இங்கு இறக்குமதியாகக்கூடிய எயிட்ஸ் முதலிய பயங் கர நோய்களே தூவானம் என்ற சொல்லால் சுட்டப் படுகின்றன. சமகாலத்தில் பேரினவாத ஒடுக்குமுறை என்ற பெருமழையில் சிக்கித்தவிக்கும் நாம் இம்மழை ஓய்ந்த பின்னரும் தொடரக்கூடிய மேற்படி தூவானங் கள் பற்றியும் எச்சரிச்கையாக இருக்கவேண்டும் என்ற எண்ணக்கருவில் முகிழ்ந்த கதை வடிவம் இது. கல்வி யறிவும் கலையுணர்வும் காதலும் நிறைந்த ஒரு குடும் பத்தை மையமாக வைத்துப் புனையப்பட்ட இக்கதை யின் சம்பவச் சூழல் 1987 ஜூன் மாதத்திற்கு முற் பட்ட ஐந்தாறு ஆண்டுக்கால யாழ்ப்பாணக் கிராமி

Page 6
யக்களத்தைப் பகைப்புலமாகக் கொண்டது. பேரினவா திகளின் இனக்கொலை நிகழ்ச்சிகளின் மத்தியில் கதை நிகழ்கிறது.
சமூக - குடும்பப் பிரச்சினைகள் பலவற்றையும் அறிவுபூர் வமாக அணுகும் திறனும் கலையுணர்வும் மிக்க வீணு என்ற குடும்பப்பெண்ணின் நினைவுகளுடாகவே கதைவ ளர்த்துச் செல்லப்படுகிறது. பாடசாலையொன்றில் நிக ழும் விளையாட்டுப் போட்டியின் தொடக்கம் முதல் நிறைவுவரையான சிலமணிநேர கால எல்லைக்குள் அவ ளது நினைவுகளில் கதைவிரிகிறது. அந்நினைவுகள் சில ஆண்டுகள் பின்னுேக்கிச் சென்று பழையவற்றை மீட்ப தோடு சில ஆண்டுகள் முன்னேக்கி 1991ஆம் ஆண்டு வரை சென்று எதிர்காலத் தளத்திலும் உலாவுகின்றன.
இந்நாவல் முதலில் ஈழநாடு இதழில் தொடராக வெளிவந்து வாசகர் பலரது கவனத்தை ஈர்த்தது. இப்பொழுது நூல்வடிவம் பெறும் இது ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றில் தனிக்கணிப்பைப் பெறும் என நம்புகிருேம். இதனைச் செப்பமான முறையில் அச்சேற் றித் தந்த தெல்லிப்பழைக் குகன் அச்சகத்தினருக்கும் அழகிய அட்டை வரைந்துதவிய ஓவியர் பூரீதர் பிச்சை யப்பா அவர்களுக்கும் எம் நன்றி என்றும் உரியது. எமது கலை இலக்கியப் பணிகள் மேலும் தொடர வாச கர்களின் அன்பையும் ஆதரவையும் நாடிநிற்கிருேம்.
தெல்லிப்பழை கலை இலக்கியக் களத்தினர்
1989 - 0.2 - 06

சமுதாய ஓவியம்
"ஓவியத்துககு புகைப்படத்துக்கும் என்ன வித்தி ፱ ሀባróዎ ህb.....”
“புகைப்படம் வெளித்தோற்றத்தை மட்டும் காட்டும். ஓவியம் மன நிலை உள்ள உணர்வுகளையும் சாட்டும்”
(விடை சொன்னவள் விஞ) - "தூவானம் கவ னம்” என்ற இந் நாவலின் முக்கிய பாத்திரம்.
கேள்வி கேட்டவன் வீணுவின் கணவனுக வரப்போ கிற - பின்னல் ஆகிவந்த ஜீவன் - நாவலில் உக்கியபாத் &m b. )
சிறுகதை, குறுநாவல், நாலல் என்கிற பeயிடப் பிலக்கிய ஆக்கங்களில் பல. அதி நவீன எலெக்ட்ரோ னிக் சாதனங்களுடன் மிகத் துல்லியமாகப் பெறப்படும் புகைப்படம் போன்றவை சிஸ் , ஓவியம் போன்றவை இச் சில, வெளித் தோற்றத்தைக் காட்டுவது மட்டு மன்றி, உள்ளாந்தரங்கங்களையும் துல்லியமாகக் காட்டி நிற்பவை.
கோகிலா மகேந்திரன் அவர்களுடைய ஆக்கங்கள் இவ் விரண்டாம் வகையைச் சார்ந்தவை.
“ஒரு நல்ல நடன இசை நாடகத்தி& இருப்பது
போலே ஒரு கல்ல ஓவியத்திலேயும் ஒரு லயம்
இருக்கும்” - ஜீவன், கோகிலாவின் ஆங்கங்களிலே ஒரு லயம் லயித்திருப்பதை உணர முடிகிறது.
அபூர்வ நிகழ்வுகளைக் கருத்தூன்றி நோக்குவதும், அவற்றின் தொடர்வுகளைத் தொடர்ந்து அவதானிப்பதும்

Page 7
மனித இயல்பு. கடந்த சில ஆண்டுகளாகக் கோகிலா மகேந்திரனின் சிறுகதைகள், நாவல் என்பவற்றில் அபூர்வங்கள் பல கண்டு வியப்புற்றேன்.
படைப்பிலக்கியங்களில் சமுதாயப் பிரக்ஞை இருக்க வேண்டும் என்பது இன்றைய தார்க மந்திரம். சமுதாயப் பிரக்ஞை என்பது ஏழை-பணக்காரன் - முதலாளி - தொழிலாளி - சாதி - சமயம் - இனம் மொழி என்பவற்றின் முரண்பாடுகளோடு எம்மிற் பலரிடம் நிறைவு பெற்று விடுகிறது. சமுதாயம் என்ற விசுவத்தை நல்ல கண்ணுடியில் விம்பமாக மேற்கண்ட அம்சங்களிற் காட்ட நாம் தவறவில்லை,
சமுதாயம் என்பது இந்த அம்சங்களில் முழுமை யாக அடங்கிவிட்டதா? சமுதாயத்தை - சமுதாய வளர்ச்சியை - சமுதாய மேம்பாட்டை - சமுதாய ஆரோக்கியத்தைக் கட்டி அமைக்குங் காரணிகள் இவை ud-Ouent?
கோகிலா மகேந்திரனின் சிறுகதைகள், நாவல்களில் அவர் சமுதாயத்தைத் தம் எழுத்து என்ற சக்தி வாய்ந்த தொலைநோக்கியால் ஆர்ாய்ந்து தமது தரிச னங்களை எமக்கு ஒவியமாகத் தருகிருர்,
சமுதாயம், உயிரியல் - சமூகவியல் - அரசியல் - பொருளியல் - தொழினுட்பவியல் - மொழியியல் . உளவியல் - பாலியல் போன்ற பல்வேறு அறிவியல் துறை சார்ந்த காரணிகளாலும் பாதிக்கப்படுவது கோகிலா மகேந்திரன்ரின் ஆக்கங்களில் முன்குறித்த அம்சங்களும், இங்கு குறித்த அம்சங்களும் விரவி, சமுதாயப் பிரக்ஞை என்பது நிறைவு பெறுவதைக் காணுகிருேம். இவ்வாருக நிறைவு பெற்றசமுதாயப்

பிரக்ஞையோடு எழுதுகிற எழுத்தாளருள் கோகிலா மகேந்திரன் முதலாமவர். இரண்டாமவர் இனித்தான் வெளிவர வேண்டும் என எண்ணுகிறேன்.
"தூவானம் கவனம்" என்ற இந் நாவலின் கதை இன்றைய எமது சமுதாயத்தின் கதை. ப்ல இயல்" ரீதியாகவும் சமுதாயத்தை நாம் இங்கு தரிசிக்க முடிகிறது. ஜனரஞ்சக எழுத்து எதுவும் தொட்டும் பார்க்க முடியாத அம்சங்கள் இந் நாவலில் மிகத் துணிச் சலாக - மிக லாவகமாக அமைக்கப் பட்டுள்ளன.
கதையைத் தொடங்குகிற - முடிக்கிற உத்தி அபாரம். கோகிலா மகேந்திரன் இங்கு கையாளும் நனவோடை உத்தி இறந்த காலத்துள் ஒரு கட்டத் திலும், எதிர்காலத்துள் வேருெரு கட்டத்திலும் ஓடிப் பாய்கிறது. இது துணிச்சல் மிக்க புதிய ஒருபரிசோதனை.
கதையம்சங்களைக் காட்டி, நாவலில் வரும் உயி ரோட்டமான இடங்களைத் தொட்டு விமரிசனம் செய் வது இங்கு நோக்கமல்ல. ஆயினும் படிப்பு, பணம், பதவி, கல்விக் கூடங்களில் ஓநாய்கள், மனிதநேயம் - - விசுவாசம் என்பது பற்றிய கோகிலா மகேந்திரனின் அணுகல் - கணிப்பீடு - காட்டுகை என்பவற்றை ஒர் அனைத்துலக எழுத்தாளருக்குரிய இலட்சணங்களாகக் காண்கிறேன் என்பதைக் கூருமலிருக்க முடியவில்லை.
கோகிலா மகேந்திரன் ஈழத்தழிழ் இலக்கிய உலகில்
தோன்றி விட்ட ஒர் ஒளிமிக்கதாரகை. அத் தாரகை
அகில உலகிலும் பிரகாசிக்கும். அதற்கான காலம்
பிறந்து விட்டதற்கான அறிகுறிகள் பல; இந் நாவல்
அவற்றுள் ஒன்று
வாழ்த்துகிறேன்
திருநெல்வேலி
19 - 02 - 12 இராஜநாயகன்

Page 8
நன்றி
ஈழநாடு வாரமலருக்கு ஒரு நாவல் வேண்டும் எனப் பலதரம் என்னே வற்புறுத்தி நாவலை எழுதத் தூண் டியதோடு, அது பிரசுரமாகி வந்த காலத்தில் உரிய ஆலோசனைகளும் உற்சாகமூட்டல்களும் தந்து வழி காட்டிய புலவர் ம. பார்வதிநாதசிவம் அவர் களுக்கும் நாவலை நல்ல முறையில் பிரசுரித்த ஈழநாடு நிறுவ னத்துக்கும் புதிய உத்தி முறைகளை நாவல்களில் கையாள்வது பற்றிய சிந்தனைகளுக்கு வலுவூட்டி, நாவல் ஈழ நாட் டில் பிரசுரமான பின்னர் முழுவதையும் சிரத்தை யோடு வாசித்துப் பல குறை நிறைகளைக் கூறித் திருத் தச் செய்த பன்மொழிப் புலவர் பண்டிதர் க. உமா மகேஸ்வரன் அவர்களுக்கும் அருமையான அணிந்துரை வழங்கிய எழுத்தாளர், பரமரசிகர், நல்ல விமர்சகர் சு. இராசநாயகன் அவர் களுக்கும் தகுந்த ஆலோசனைகள் வழங்கி, நாவலை முகத்துக்கு நேரே விமர்சித்துப் பதிப்புரையும் வழங்கிய கலை இலக்கியக் களத் தலைவர் கலாநிதி நா. சுப்பிரமணி யன் அவர்களுக்கும் கலை இலக்கியக் கள வெளியீடாக இந்நூலே வெளியிட அநுமதி தந்து, வெளியீட்டு விழாவையும் நடத்துகிற கலை இலக்கியக் களத்தின் மத்திய குழுவினருக்கும் வெளிநாட்டு வாழ்வு பற்றிய தகவல்களை நாவல் எழு துவதற்கெனச் சரியான முறையில் தந்து உதவிய நில அளவையாளர் திரு. ஆ. மகாலிங்கசிவம் அவர் களுக்கும் அட்டைப்பட ஓவியத்தை அருமையாய் வரைந்து அன்பளிப்புச் செய்த பூரீதர் பிச்சையப்பா அவர் களுக்கும் அட்டைப்பட ஓவியத்தைப் பெறுவதில் உதவிய புலோலியூர் ஆ. இரத்தினவேலோன், திரு. எஸ். ஜெகதீசன் ஆகியோருக்கும் அட்டைப்படம் அச்சிடுவதில் உதவிய கத்தோலிக்க அச்சகத்தினருக்கும், கலைமகள் பிரின்ரோகிருப் நிறுவ னத்தாருக்கும் நூலை உரிய நேரத்தில் அழகாக அச்சிட்டு உதவிய தெல்லிப்பழை குகன் அச்சக்த்தாருக்கும் என் அன்பு நிறைந்த நன்றிகள்.
1989-2-14 கோகிலவ மகேந்திரன்

கோகிலா மகேந்திரன்
மழை பெய்துகொண்டிருக்கும்போதே சுள்ளென்று வெயிலடிக்கும் ஒரு கலவை மனஉணர்வு வீணுவுக்குள் ஏற்பட்டது.
பசும்புல் நிறைந்த மைதானத்தைச் சுற்றிக் கல்லூரி மாணவர்களின் அணிநடை அழகுப் பவனியாக நடை பெறுவதைக் கண்டு மனம் அமைதி பெற்றுக் குதூ கலிக்கிறது. உள்ளே இருந்து ஒலிக்கும் இசையின் தாளத்திற்கு ஏற்றபடி ஒன்றின் பின் ஒன்ருக நாலு இல்லங்கள் “லெப்ற் றைற்' **லெப்ற் றைற்' "லெப்ற்’ என்று லயம் தவருமல் கால் வைத்துக் கையை வீசி வரும் காட்சி மனதை அள்ளுவதாகவே இருக்கிறது. ஆனல்...?
17-6-86
முன்னல் வருவது பச்சை இல்லம். அந்த இல்லத் தின் தலைவர் பச்சைக்கொடியை ஏந்தியபடி முன்னல் கம்பீரமாக வர அவரைத் தொடர்ந்து முப்பத்தி ரண்டு ஆண்களும், அதேயளவு எண்ணிக்கை ” கொண்ட பெண்களும் கொண்ட அணி பச்சை பாஜ், பச்சைறிபன், பச்சை"பெல்ற் போட்டு வெள்ளை நிறச் சீருடையில் நடந்துவருவது
துவானம் கவனம்

Page 9
2 கோகிலா மகேந்திரன்
மிகஅருமையான காட்சியாக இருக்கிறது. இவள் முன்பு இந்தக் கல்லூரியில் படித்தபோது பச்சை இல்லந்தான்!
பழைய மாணவி என்ற முறையில்தான் இவளை மெய் வல்லுநர் போட்டியில் அறிவிப்பாளராக அழைத்திருக் கிர்ேகள். பச்சை நிறத்தைத் தொடர்ந்து நீலம், பிறகு சிவப்பு. இறுதியாக மஞ்சள்!
பிரதம விருந்தினர் ஏறி நிற்கும் மேடைக்கு அரு கில் வந்ததும் 'ஐஸ்றைற் சொல்லி அவர்களைக் கடக் கும்வரை தலையைத் திருப்பிக் கைகளை அசைக்காது மரி யாதை செலுத்தி நடந்து அணி அவர்களைக் கடந்து முடிந்தவுடன் மீண்டும் முன்போல நடந்துசெல்சிடு" கள்.
திடீரென அந்த மாணவர்கள் எல்லாம் "யூனிபோம்" அணிந்த போர்வீரர்களாகிக் கைகளில் துப்பாக்கி களுடன் அணிநடையில் செல்வதுபோல் மனக்கண்ணில் ஒரு தோற்றம். நிராகரிக்க முடியாத ஏதோ ஒன்று தன்னை அவ்வாறு சிந்திக்க வைப்பதை வீணு உணர்ந் தாள்!
கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டு பார்க்கிற போது நான்கு இல்லங்களும் மைதானத்தைச் சுற்றி வந்து மைதான நடுப்பகுதிக்குச் சென்று "கிளாஸ் ஹோல்ற் சொல்லிக் கவனமாய் நிற்கிருர்கள். பச்சைத் தரையில் 'சொக்ஸ்" மட்டும் போட்ட வெள்ளைப் பாதச்சுவடுகள் படிய அவர்கள் நிற்பது பசுமைதான். அவர்களுக்கு ‘இலகுவாய் நில் கட்டளை கொடுக்கப்படு கிறது.
இவளுக்கு மனதினுள்ளே இலகுவாய் நிற்க முடிய வில்லை! 'இப்போது முதன்மை விருந்தினர் அவர்கள்
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 3
கல்லூரிக் கொடியை ஏற்றி வைப்பார்' என்று தேனி *றும் இனிய குரலில் இவள் அறிவிப்புச் செய்ததைத் தொடர்ந்து முதன்மை விருந்தினர் அதிபர் அருகில் நடந்துவர, கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்துக் கொடியைப் பறக்கவிடுகிருர், சாரணர் தலை வன் உதவி செய்கிருன்,
உள்ளேயிருந்து கொடிப்பாட்டுப் பாடப்படுகிறது!
"கொடி பறக்குது கொடி பறக்குது கொடி பறக்குது பாரடா. கோலமிக்க கோ லில் எங்கள் கொடி பறக்குது பாரடா' எல்லோரும் எழுந்து நின்று கொடிக்கு மரியாதை செய்கின்றனர்.
எப்போதோ ஒருநாள் 'தனிநாட்டின் கொடி’ இவ் வாறு பறக்க விடப்படுகையில் தானும் அதில் கலந்து மகிழவேண்டும் என்ற விருப்பம் தோன்றிய அதே கணத்தில் ‘என்னுடைய வாழ்வும் இப்படித்தான் கொடி கட்டிப் பறக்கும் என்று கனவு கண்டேன்." என்ற நினைவு உள்ளுக்குள் வருவதையும் தவிர்த்த முடியவில்லை.
அவன் ஏன் அப்படி மாறினன்? மாற்றம் என்பது உலகின் மறுக்க முடியாத விதியா? அல்லது நியதியா? மனிதனின் சிந்தனைகளும் செயற்பாடும்கூட LprTQpuodi இருக்க முடியாதா?
மனித வாழ்வு எப்படியும் நூறு வருடங்களுக்கு மேல் அமையப்போவதில்லை. அதிலும் இன்றைய சூழ் நிலையில் திட்டமிடப்பட்டு ஒரு இனம் அழிக்கப்பட்டு வருகின்ற நிலையில்..அந்த வயது இன்னும் குறைந்து விடுகிறது, இந்த எண்ணம் இவளுக்குள் ஒரு தற்காலிக 2.ணர்வைத் தோற்றுவித்தது. அதற்குத்தான் எத்தனை
தூவானம் கவனம்

Page 10
4 கோகிலா மகேந்திரன்
போராட்டங்கள்?
எப்போதிருந்து ஜீவனிடம் மாற்றம் ஏற்படத் தொடங்கியது என்று நினைத்துப்பார்க்க முயன்ருள். மனதுக்குள் காரணம் தெரியாத ஏகாந்த உணர்வு சுழன்றது.
அவனும் அவளுமாகச் சங்கரின் மகன் 'தினேஷ்’ உடைய நான்காவது பிறந்ததின விழாவிற்குப் போயி ருந்தபோதே முதன்முதலில் அந்த மாற்றம் அவனுக் குள் பிரசவமாகியிருக்கலாம். அல்லது அதற்கு முன்பே மனதிற்குள் உருவாகி அன்றுதான் வெளியேற முயன்றி ருக்கலாம். அல்லது அதற்கும் முன்பே குடும்பத்தில் கடைசிப்பிள்ளையாய்ப் பிறந்துவிட்ட காரணத்தால் மிகச் சிறுவயதிலிருந்தே...?
சங்கர் அந்த விழாவிற்குப் பத்தாயிரம் ரூபா வரை செலவழித்திருப்பான்.
‘* பிறந்த நாள் கேக் டிசைன்’ ‘வீணை வடிவத்தில் அமைந்த அதன் ஐசிங்' அது பற்றியே பல விமர் சனங்கள்! அதற்கு மட்டுமே தனியாகப் பல புகைப் ! זIL-Big56h_ו
வெளியே முற்றத்தில் போடப்பட்டிருந்த அலங் கார வளைவில், மோகன நிலவின் வருவிழிப்பில் பாண்ட் வாத்தியக்கோஷ்டியின் பாடல்கள்! அரை மணி நேரத் திற் கொன்ருக ஒவ்வொரு புதிய உடைகளில் தோன் றிய தினேஷின் முகத்தில் அன்று உலக செளந்தர்யங் கள் யாவும் ஒன்றுசேர்ந்துவிட்ட நிறைவு! விழாவிற்குப் போயிருந்த குழந்தைகளுக்கெல்லாம் பந்தும் பலூனு மாகப் பரிசுப் பொருள்கள்!
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 5
பல கமெராக்களின் "கிளிக் கிளிக்” படமெடுப்பு களுக்கு மேலாக வீடியோ படமெடுப்பு! பிறகு எடுத்த படத்தை அதிலேயே போட்டுக்காட்ட ஒவ்வொருவரும் தன்னைப் பார்த்து மகிழும் பூரிப்பு!
தமிழர் கலாசாரங்களையே குழிதோண்டிப் புதைக் கும் ஆட்டங்கள் ! ஒரு ஏகாந்த சோகம் இவளுக்குள் அப் போது அனுபவமானதுதான்!
அந்த விழாவிற்குப் போயிருந்த பபியோ அல்லது பாப்பாவோ ‘எங்களுக்கு ஏன் அப்பா இப் படி *பேர்த்டே" கொண்டாடுறேல்லை?" என்று கேட்க வில்லை. கேட்காவிட்டாலும் அவர்கள் மனதிற்குள் ளாவது நினைத்து மறுகக்கூடும் என்ற நினைவு ஜீவ னின் சமநிலையைக் குழப்பிவிட்டதா?
ஆனல் அவன் அதைக் கலந்துரையாடித் தீர்த்தி ருக்கலாம். அவ்வாறு செய்யவில்லை. வழக்கம்போலவே உணர்ச்சிவசப்பட்டுவிட்டான். இம்முறை சற்று அதிக மாகவே!
பணம் நிறையவே குவிந்துபோயிருக்கும் சங்கர் வீட்டில் ஒரே ஒரு ஆண்பிள்ளையும், இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் வந்து அமைந்ததே ஒரு தவருே? அதையும்கூட யார் தீர்மானித்தார்கள்? ஜீவனுடைய நிற மூர்த்தங்கள் தானே தீர்மானித்தன? இவள் என்ன செய்ய முடியும்!
சிவப்பும் கறுப்பும் கலந்த புள்ளி இறகுகளைக்கொண்ட பெரிய வண்ணத்துப்பூச்சி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து, அறிவிப்பாளர் மேசையில் வைக்கப்பட்டிருந்த பூச்சாடிப் பூ ஒன்றில் அமர முயன்றது. அமருவதும்
தூவானம் கவனம்

Page 11
6 கோகிலா மகேந்திரன்
உடனே பறந்து செல்வதும் மீண்டும் வந்து அமிர முயல்வதுமாய்ச் சிறிது நேரம் போராடிற்று.
இந்த வண்ணத்துப் பூச்சியின் குஞ்சுப்பூச்சி ஆணுக இருக்குமோ அல்லது பெண்ணுக இருக்குமோ என்பதைத் தீர்மானிப்பது தாய்ப்பூச்சியின் புணரிக்கலந்தான் என்ற நினைவு வந்தபோது 'நல்ல காலம் மணிசரிலை அதுஆண் புணரியாலை தீர்மானிக்கப்படுறது. இல்லாட்டி அந்தப் பிழையும் என்னிலை பொறிஞ்சிருக்கும். ,' என்று நினைத்து ஆறுதல் பட்டுக்கொண்டாள் இவள்.
பபியினுடைய முதலாவது பிறந்தநாளைத்தானும் பெரிதாகக் கொண்டாட இவர்களின் பொருளாதார நிலை இடம் கொடுக்கவில்லை. ஜீவனின் அக்காவின் திரு மணத்திற்குக் கொடுத்த அதிக அளவு பணம். இவளி டம் நகைகூட அதிகம் இல்லாத நிலை! (புன்னகை தவிர) பாரிடமும் எந்த ஆபத்திலும் கடன் வாங்குவதில்லை என்ற ஜீவனின் கொள்கை (அல்லது வக்கிர உணர்வு) வேறு!
அன்று.
தினேஷின் பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்து வீடு திரும்பிய அந்த இரவு! திரும்பும்போதே வீதியை இருள் முற்ருக ஆக்கிரமித்திருந்தது. ஆங்காங்கே கண் சிமிட்டும் ஓரிரு சாலை விளக்குகள் தவிர, வானிலே தேய்பிறை.
வீடு திரும்பிய பிறகும் ஒரே புழுக்கமாக இருந் தது. திடீரென்று காற்றில் எப்படி இவ்வளவுக்கு ஈரப் டதன் அதிகரித்துப்போனது? காற்று வீச மறந்த, கடல் பேசாமல் இருந்த, ஈரப்பதன்நிரம்பிய நிலையை அடைந்து விட்ட புழுக்கமான அந்த இரவு!
துாவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 7
ஜீவனின் முகம் மாறியிருந்தது. வழக்கம்போல ஏதோ கீறிக்கொண்டிருந்தான்.
ஒவியம், நாடகம் இவை இரண்டிலுமிருந்து ஜீவ
னைப் பிரிக்க முடியாது. இவள் கேட்டாள்,
*ஏன் உங்கடை முகம் ஒரு மாதிரி இருக்கு?’’ 'ஒண்டுமில்லை"
‘என்னட்டை மறைக்கிறதாலை பிரச்சினை தீராது. சொல்லுங்கோவன் என்ன பிரச்சினை?"
அவன் மீண்டும் பேசாமலே இருந்தான்.
'ரெட் பக்சண்டலே சொல்வதுபோல,
"ஒரு குடும்பத்தில் இளைய பிள்ளையாக வளருகிற போது,
அந்தக் குழந்தை காலம் முழுவதும் சில விடயங்களில் பாதிக்கப்படும். அப்பிள்ளையின் சிந்தனைகள் அக்குடும் பத்தில் ஒருபோதும் காத்திரமாகக் கணிக்கப்பட்டிருக் காது. சிலவேளை அந்தப் பிள்ளையின் கருத்துக்கள் புறக் கணிக்கப்பட்டிருக்கும் அல்லது தவருக விளங்கிக் கொள்ளப்பட்டிருக்கும். ஆகவே அக்குழந்தை இயல் பாகவே தன் சிந்தனைகளைக் கலந்துரையாடித் தீர்த்துக் கொள்வதைவிட எழுதி அல்லது கீறியே வெளிப்படுத்தப்
பார்க்கும். . ."
என்பது ஜீவனைப் பொறுத்தவரை மு ற் ரு கப் பொருந்திவிட்டதோ?
அவளின் பலதர வற்புறுத்தலின்பின்
தூவானம் கவனம்

Page 12
8 கோகிலா மகேந்திரன்
**நீங்கள்தானே எல்லாத்தையும் கெஸ் பண்ணுவிங் கள். இதையும் ‘கெஸ் பண்ணுங்கோவன்...' என்ருன்.
அந்த நிலையிலும் அவன் அவளுக்குக் கொடுத்து வந்த 'நீங்கள்’’ என்ற சமமரியாதை குறைந்துபோக
"'என்னுடைய ஊகங்கள்தான் உங்கடை கவலைக்குக் 3. TJ 6007l DfT?''
'நீங்கள் ஊகம் செய்யிற ஊகம் செய்யாத எல் லாக் காரணமும்தான்...' அவனுடைய குரலில் முதன் முறையாக ஒரு விரக்தி கலந்த வெறுப்புணர்வினை அவள் உணர்ந்தாள்.
'எனக்குத் தெரியும். எங்கட பபிக்கு நாங்கள் பெரிசா ஒண்டும் செய்யேல்லை...'
'உங்கடை மனச்சாட்சிக்கு எல்லாம் தெரியிறது, பெரிய காரியம் எண்ட அளவிலை திருப்திப்படவேண் டியதுதான்.
அவன் நீண் ட பெருமூச்சை விட்டுக்கொண்டு எழுந்துபோய்ப் படுத்தான்.
‘இதுக்கும் என்ரை மனச்சாட்சிக்கும் என்ன தொடர்பு’’ தலையணையில் தளர்ந்து கிடந்த அவனது கைகளைப் பிடித்து அவள் கனிந்த குரலில் கேட்டாள்.
** சங்கரின்ரை மணிசிக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசமெண்டு நினைச்சுப் பார்த்தால் தெரியும்...”*
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 9
அவள் முகத்தில் ரத்தம் குப்பெணப் பிரவாகித்தது.
ஒ! சங்கரின் மனைவி நாலு இ லட் சம் இனும் கொணர்ந்த பெரிய பணக்காரி! அதுவா? அதையா சொல்கிருர் இவர்! அதையேதானு? அதைச் சொல்ல வேண்டிய தேவை வந்துவிட்டதா?
*காசு குடுத்தும் ஒரு பெண்ணை நான் அடைய விரும்பமாட்டன். காசு வாங்கியும் ஒரு பெண்ணை அடைய விரும்பமாட்டன்’ என்று சொன்ன ஜீவன், அந்த வேறுபாட்டை நினைக்கவேண்டியகாலம் வந்து விட்டதா? பணம் உண்மையில் அவ்வளவு முக்கிய மானதுதானு?
அவனது கரத்தைப் பிடித்திருந்த கைகள் தானகத் தளர்ந்து விலகின!
ஆம்! அன்றிலிருந்துதான் அவன் புறத்தில் வேறு படத் தொடங்கினன்.
வேறுபடத் தொடங்கினன் என்றுகூடச் சொல்ல முடியாது. அவனும் ஒரு சாதாரண மனிதனுக மாறத் தொடங்கினுன் என்றுதான் சொல்லலாம்!
‘'இப்போது பச்சை இல்லத்தின் தலைவர் தமது இல்லக்கொடியை ஏற்றிவைப்பார்.’’ என்ற இவளது அறிவிப்பைத் தொடர்ந்து அந்த இல்லத் தலைவர் கம் பீரமாக நடந்துவந்து, செங்கோணமாக வெட்டித் திரும்பித் தமது இல்லக்கொடியைக் கம்பத்தில் ஏற்றப் பச்சைஇல்ல மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய் கிருர்கள்.
துராவ T sorr &ä a so ti

Page 13
10 கோகிலா மகேந்திரன்
பச்சைக்கொடி கம்பீரமாகக் காற்றில் அசைகிறது.! பச்சை ஒரு துணை நிறமாக இருந்தபோதிலும்கூட மன துக்கு மிக இனிய நிறம். குளிர்மையும் புத்துணர்வும் ஊட்டுகிற நிறமென்று “அலக்ஸ்சாண்டர் ஸ்ரொடாட்” சொல்வார். ஜீவனுக்குக்கூடப் பச்சை நிறத்தில் மிகப் பிரியம். அவர்களின் திருமண எழுத்தின்போதுகூட அவன் ஒரு அழகிய மென்பச்சைநிறக் காஞ்சிபுரம்தான் பரிசாகக் கொண்டுவந்தான்.
'பச்சை, நீலம், கறுப்பு நிறங்கள் மங்கள காரி யத்துக்கு எடுக்கப்பிடாது தம்பி.’’ என்று அவனின் தாயார் எவ்வளவோ சொல்லியும் அவன் பிடிவாத மாக அதனையே கொண்டுவந்தான்.
"உலகத்திலை தாவரங்களிலை பச்சையம் இருக்கிற தாலைதான் நாங்கள் எல்லாரும் உயிர் வாழிறம். உயிர் வாழ்வுக்கு மூலாதாரமான நிறம் பச்சை! உளவியல் ரீதியாக மனதுக்கு நிறைவு தாறநிறம் பச்சை. நாடக மேடைகளிலும் நாங்கள் பச்சையையும் நீலத்தையுமே குளிர் நிறங்களாகப் பாவிக்கிறம். அன்பு, வசந்தம் கோடை ஓய்வு இதுகளைப்போலை அற்புதமான விஷயங் களைக் காட்டவே நாங்கள் மேடையிலை பச்சை ஒளியைப் பயன்படுத்திறம் பிறகு அது எப்படி அமங்கலமான நிறமாகும்?' என்பது அவனது வாதம்! பிடிவாதமும் தான்!
"அவனது வாதங்களை எவ்வளவு ரசிக்கலாமோ அவ் வளவு அவனது பிடிவாதங்களால் ஒருவர் பாதிக்கவும் படலாம்!, என்பதை ஜீவன் எப்போதும் உணர்ந்ததாய் இல்லை. அப்படியான ஒரு பிடிவாதத்தில்தான் சவூ திக்கும் போயிருக்கிருன். அவளையும் இரண்டு வயது
துவ ானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 11
கூட நிரம்பாத பபியையும் மூன்றரை வயதான பாப்பாவையும் விட்டுப்பிரிந்து...!
அங்கு போய்ச் சில காலத்தின்பின்னர் இவர்களை யும் அழைத்துக்கொள்வதாய்க் கூறினன். ஆனல்...?
...இப்போது நீல இல்லத்தின் தலைவர் தமது இல் லக்கொடியை ஏற்றிவைப்பார்...”*
அவளது அறிவிப்பு ஒலிபெருக்கி ஊடாக வெளி யில் உரப்பாகக் கேட்கிறது.
Us Al MT AUT id as SA GT tid

Page 14
கோகிலா மகேந்திரன்
Da நேரங்களில் பபியையும் பாப்பாவையும் வைத்து வீட்டில் "தாக்காட்ட முடியவில்லை என்ருல் கீரிமலைக் கடற்கரைக்கு அழைத்துப்போவாள். மிக அரு கில் போக முடியாது! அந்தியேட்டி மடத்திற்கு இந்தப் பக்கம் நின்றுகொண்டு கடலைக் காட்டுவாள்.
பபிக்கு ஒரே குதூகலமாக இருக்கும்! "அம்மா என்னம்மா?" என்று கேட்பாள்.
'இதுதான் கடல்.கடல். "என்ன நிறம் அம்மா என்ன நிறம்" "கடல் நீல நிறம் பபி நீலம்'
"ஏனம்மா நீலம் ஏனம்மா?*
சூரிய ஒளியின் ஏழு நிறங்களில் அதிகம் சிதறும் நிறம் நீலம் என்ற விளக்கத்தை இவளுக்குச் சொன் ல்ை இவள் புரிந்துகொள்வாளா என்று ஒரு கணம் சிந்திப்பாள். பிறகு சொல்வாள்.
"ஆகாயம் நீலம் அப்ப கடலும் நீலம்' T i
ஆகாயத்தை காட்டியவுடன் பபி சொல் வாள்,
"பிளேன் அப்பா ஓ !' கைகள் இரண்
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 13
டையும்விரித்துக் காட்டிச் சிரிப்பாள். அப்பா பிளேனில்
ஆகாயம் வழியாகப் போயிட்டாராம்!
"நாங்களும் கெதியிலை அப்பாட்டைப் போவம்...”* என்று அவளை அணைத்துக்கொண்டு கொஞ்சுவாள் வின.
"நாங்கள் எப்ப போறம்?' என் கேட்டாள்
த f Ա! r ttur.
'இப்போது சிவப்பு இல்லத்தின் தலைவர் தமது இல்லக்கொடியை ஏற்றிவைப்பார்.'
சிவப்பு வீரத்திற்கும் வெற்றிக்கும் உரிய நிறம்!
அபாயமான நிறமுந்தான்; சிவப்பு விளக்குப் பிர தேசம் ஒருவரின் வாழ்வையே அபாயத்தில் தள்ளுகிற பிரதேசம்!
ஜீவன் வெளிநாட்டில் எப்படி இருப்பான்?
இங்கே இருந்த காலங்களில் ஒருநாள் கூட இவள் பக்கத்தில் படுக்காவிட்டால் உறக்கம் வராது என்று சொல்லுகிற ஜீவன்!
அவன் புறப்படும்போது வி மா ன நிலையத்தில் வைத்து இவள் பயத்துடன் கேட்டாள்.
‘இஞ்சை ஒரு நாள்கூட என்னை விட்டிட்டுப் டுக்கமாட்டீங்கள், அப்ப அங்கை போய் என்ன
செய்யப்போlங்கள் ???
அது எல்லாம் பழக்கத்தானே ? உங்களைப் பார்த் தால்தான் மனம் அப்படிப் பறக்கும். நீங்கள் இல்லாத
தூவானம் கவனம்

Page 15
14 கோகிலா மகேந்திரன்
இடத்திலை எல்லாம் சரியாகிடும்'
மெதுவாய்ச் சிரித்தான் அவன்.
சவூதி நாட்டுப் பெண்களின் முகத்தையே பார்க்க முடியாது அங்கே! இங்கிருந்து சவூதிக்கு வேலைக்குப் போகிற பெண்களையும் சந்திப்பது கஷ்டம். சவூதியில் சட்டப்படி ஒழுக்கக்கேடுகள் எதுவும் நிகழமுடியாது. இவை வீணுவுக்கு நிம்மதியைக் கொடுத்தாலும்கூட மனதிற்குள் ஏதோ ஒரு பெரும் பயம் இருந்து கொண்டே இருந்தது.
மீண்டும் அவள் கவனம் அந்தச் சிவப்புக் கொடிக்குத் திரும்பியது.
எமது உணர்வுகள் எல்லாவற்றையும் தட்டி எழுப்பும் நிறம்இரத்தத்திலகம் இடும்போது எமக்குள் பொங்குகிற வீரம். உணவு விடுதியின் சிவப்புச் சுவர்களினல் எமக் குள் வெடித்துக் கிளம்புகிற பசி, சூடான நிறந்தான் ! பிரமுகர்களுக்குச் சூடான வரவேற்புக் கொடுப்பதென் முல் செங்கம்பள வரவேற்பு சிவப்பு வெளிச்சங்களின் கீழ் வெடித்துப் பாய்கிற சீ அப்படியெல்லாம் ஜீவனைப் பற்றிப் பயப்படக்கூடாது! பயப்படச் சந்தர்ப்பமும் வராது சவூதியில்...
ஆணுலும் விரைவில் சவூதிக்குப் போய்விடுவதே நல்லது. நிம்மதியுந்தான்.
யாழ்ப்பாணத்தைவிட்டு இந்த நேரத்தில் புறப்படு வது உண்மையில் வீணுவுக்கு விருப்பமில்லாவிட்டாலும் கூட அவளது குடும்பம் குலைந்து போகாமல் இருப்ப தற்காகப் போகவேண்டும். ஒப்பந்த காலம் முடிந்த வுடன் ஜீவனையும் அழைத்துக்கொண்டு திரும்பிவிட வேண்டும்.
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 15
ஆணுல்!
சவூதிக்குப் போன புதிதில் வாரம் இரு கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்த ஜீவன் பின்னர் சில காலம் ஒன்ருவது எழுதியவன் இப்போது மாதம் ஒன்ருய்க் குறைந்துவிட்டதை எப்படி விளங்கிக்கொள்ளலாம்?
அவள் எதிர்பார்ப்புக்கள் யாவும் இதழ் உதிர்ந்த காம்பாக வெறுமைப்பட்டு நின்றது ஏன்?
'உங்களை எல்லாம் விரைவில் அழைத்துவிடுவேன்' என்று ஆரம்பத்தில் எழுதியவன் இப்போது அதுபற்றி எதுவும் எழுதாமலே விட்டுவிடுவது பற்றி.?
அன்பும், பாசமும், அருமையுங்கூடத் தூரத்தினல் பாதிக்கப்படுகிறதா? நிதமும் கண்டு பேசிப் பழகாத ஒருவரிடம் அன்பு வைப்பது கடினந்தான? அல்லது..?
நாடகப் பயித்தியமான ஜீவன் இறுதியாக நடித்த 'வீரத்தீ" என்ற நாடகத்தில் பெரிய போர் ஒன்று நடைபெற்று அதனல் ஏற்பட்ட அழிவுகளை சிவப்பு ஒளியில் உறை நிலையில் காட்சியாக்கியது வீணுவின் மனதில் படமாகியது.
"இறுதியாக மஞ்சள் இல்லத் தலைவர் தமது இல் லக் கொடியை ஏற்றுகிருர், அவரது கொடி கடைசி யாக ஏறினுலும் கூட இதுவரை நடைபெற்ற முடிவு களின்படி மஞ்சள் இல்லமே முதலிடத்தில் நிற்கிறது. இதோ அவ்வில்லத்தின் கம்பீரமான தலைவர்' "
பணத்தின் அளவில் இறுதியில் இருக்கிற குடும்பங் கள் கூட வாழ்க்கையின் வெற்றி என்கிற ஏணியில் முதலிடத்தை அடையலாம்; அடைந்திருக்கின்றன.
sg/Tag Tast to sa sa ib

Page 16
16 கோகிலா மகேந்திரன்
அதற்கு எத்தனையோ முறைகள் இருக்கின்றன. ஜீவனும் அதை எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தவன் தான். . .
ஆனல் இறுதியில்...!
ஊமை அழுகையாய் அழத் தொடங்கிவிட்டிருந்த உள்ளத்தைத் திருப்பி நிகழ்வுகளில் கவனம் செலுத்தி ஞள் வீணு,
பிரதம விருந்தினர் மூன்று வெள்ளைச் சமாதானப் புருக்களைப் பறக்கவிட்டார். கல்லூரி விளையாட்டுக்குழுத் தலைவனுன மாணவன் முன்னுல் வந்து பிரதம விருந்தி னர், அதிபர் ஆகியோர் முன்னிலையில் 'தோல்வி வெற்றிகளைச் சமணுக மதித்து நேர்மையுடன் விளையாடு வோம்" என உறுதி உரை எடுத்துக்கொண்டான்.
திருமணம் என்பதும் இப்படித்தான் - இருவரும் வாழ்விலும் தாழ்விலும் ஒன்ருகச் செ ல் வோம் என்று உறுதியுரை எடுத்துக்கொள்ளும் ஒரு சடங்கு !
குடும்பத்தில் மூத்த பிள்ளையாகப் பிறந்த வீணு வும் கடைசிப் பிள்ளையாகப் பிறந்த ஜீவனும் ஒத்து வாழ்வது உண்மையில் கடினமானதா?
விடிகாலைக்குளிரின் இங்கிதமான சூழ்நிலையில் யாரோ பணிபுலராத ரோஜாப் பூக்களைப் பறிப்பது போல...அவர்களது திருமணம் மிக இனிமையாகத் தான் நடந்தது. காதலிப்பவர்கள் எல்லாம் கலியாணம் செய்துகொள்வதில்லை. மனதிலே வித்திட்டு மனதிலே வளர்ந்து கனவுகளாய்ப் பூத்து, நினைவுகளாய்ப் பழுத்து மனதிலேயே கருகிப் போகின்ற காதல்தான் எமது நாட்டில் சாதாரணம் ! அப்படிக் கருகிப் போவதற்கு
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 17
காரணமாய் சாதி, சமயம், அந்தஸ்து, சீதனம், பெற் ருர் விருப்பம் என்று எத்தனையோ சங்கதிகள் தலை நீட்டும்!
அந்தச் சங்கதிகளை எல்லாம் கடந்து காதல்
வெற்றி பெறுவது ஒரு இன்ப நிகழ்வுதான்! அந்த நிகழ்வு இவளுக்கும் நடந்தது.
ஒரு நாடகம் பார்த்தால் அதைப் பார்த்து முடிய ஒரு அமைதியும், நிம்மதியும், தளர்நிலையும், திருப்தி யும் பார்வையாளனுக்கு ஏற்படவேண்டுமே ஒழிய திணறலும் அமைதியின்மையும், பரபரப்பும், பயமும் ஏற்படக்கூடாதென்று ஜீவன் அடிக்கடி சொல்வான். அதுவே நாடகத்தின் வெற்றி என்பான்.
அதேபோல... காதல் திருமணத்தில் முடிந்ததென் ருல் அதைத் தொடர்ந்து அ வ ள் வாழ்வில் ஒரு அமைதியும் நிம்மதியும் தளர் நிலையும் வந்திருக்க வேண்டுமே?
ஆணுல் தொடர்ந்து அந்த உணர்வில் காலூன்றி நிற்க முடியாமல் இது என்ன?
மேலோட்டமான உணர்வுகள் உள்ள பலருக்கு நடுவே ஆழமான உணர்வுள்ள ஒருவனுக - ஒருத்தியாக வாழ்ந்து அவர்களிலிருந்து மனதால் மட்டும் விலகி வாழ்வது மிகக் கடினந்தான். மேலோட்டமான் உணர்வுள்ள பலர்தான் அவனை மாற்றிவிட்டனரா ? அவர்களில் முக்கியமானவர் ஜீவனின் மூத்த அண்ண ரான திலகர்!
ஒரு நாள் !
துவ 6 ut a6 SA 63 tid

Page 17
18 கோகிலா மகேந்திரன்
மேற்கு வானிலே செம்மைக் கவிப்புத் தெரிந்த "மைம்மல்" நேரம்! இவளது சினேகிதி லதா வந்திருந் தாள். இவள் வீட்டின் முன்புறத் தோட்டத்திலிருந்து லதாவுடன் கதைத்துக்கொண்டிருக்க, ஜீவன் உள்ளே "ஹொற் பிளேற்றில் தேநீருக்கு நீர் கொதிக்க வைத்து விட்டு வெளியே வருகையில் திலகர் வந்தார்.
அவருடைய பார்வையே ஒரு கேள்வி - அல்ல பல கேள்விகள் கேட்டன.
"'என்ன? மனுசியைக் காலுக்குமேலை கால் போட் டுக்கொண்டு கதைக்க விட்டிட்டு நீ தேத்தண்ணி வைக் கிறியோ?" என்பதே அவர் கேட்காத அந்தக் கேள்வி.
அதற்கு முன்னரும் பல தடவைகளில் அவர் ஜீவ னுக்கு ஆலோசனைகள் கூறியதை அவனே வந்து வஞ் சகமில்லாமல் இவளிடம் சொல்லியிருக்கிருன்.
‘இனி உங்களுக்கு இரண்டு பொம்பிளைப் பிள்ளை யளும் பிறந்திட்டுது. வேறை வேலையளை விட்டுட்டுக் காசு சேர்க்கிற வழியளைப் பார்க்கவேணும்"
* 'இலட்சியங்களும் புதுமையஞம் பேச்சுமேடைக் கும் ஒவியத்துக்கும் நாடகத்துக்கும் சரிவரும். வாழ்க் கைக்குச் சரிவராது.'
“பொம்பிளை வீட்டு அலுவல்களைப் பாக்கவேணும். நீ உழைக்கவேணும். நீ பெட்டைச்சி மாதிரி வேலை டாக் கிறது பெரிய அவமானம்.ஒ’’
""நாளைக்கு அடுத்த பிள்ளைக்கு உன்னைப் பால் குடுக்கச்
சொல்லிக் கேட்டாலும் கேப்ப. அப்ப அதுக்கும் விடப் GB u IT Gurr? 6. . . ” ”
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 19
"மெய்யே அடுத்த பிள்ளை நீயே பெறப் போருய்!" இப்படி அன்றன்று பலப்பல ஆலோசனைகளும் கிண்டல் பேச்சுக்களும்!
பேச்சற்ற பெரு மெளனமே அப்போதெல்லாம் இவ வின் அணிகலனுக இருந்திருக்கிறது. இவற்ருல் எல்லாம் ஜீவனை அசைக்கமுடியாது என்ற நம்பிக்கையுந்தான்.
ஆனல் ?
"குடும்பத்தில் மூத்த பிள்ளையின் திறமைகளைத் தான் ஒருபோதும் எட்டிப்பிடிக்க முடியாது என்ற உணர்வைக் குடும்பத்தின் கடைசிப் பிள்ளை பல தடவை பெற்றிருக்கும். ஆகவே திறமைகளை மதிப்பீடு செய்யும் உண்மையான சோதனைகளை அது எப்போதும் தவிர்த்தே வாழப் பார்க்கும்' என்று எங்கோ படித்த நினைவு!
ஜீவனும் இந்தச் சோதனையை நேரே முகங் கொடுக்கமுடியாமல்தான் சவூதிக்குப் போனன? "பணம் சேர்த்தல்" என்பது வெறும் வெளிக்காரணமா? அப்படி யும் இருக்கலாம்!
*காசில்லாமல் எங்கடை இலட்சியத்தைக்கொண்டு எப்படி நாங்கள் பறக்கிறது?"
திருமணம் செய்யு முன்னரே பல தடவை இப்படி இவள் ஜீவனிடம் கேட்டிருக்கிருள்.
* நாங்கள் பறக்கிறதெண்டு தீர்மானிச்சிட்டால் மேகங்களே எங்களுக்குச் சிறகாயிடும் வீணு.’’ என்று பேசிய ஜீவனைத் திலகர்தான் படிப்படியா மாற்றி விட்டாரா? அல்லது அவனது பதில் உண்மையில் கவி தைக்கும் கற்பனைக்கும் நாடகத்திற்கும் மட்டுந்தான் பொருத்தமானதா?
தூவானம் கவனம்

Page 18
20 கோகிலா மகேந்திரன்
மாணவர்கள் இப்போது ‘எபவுட்றேன்" கட்டளைக் குத் திரும்பி அணி கலைந்து தமது இல்லங்களை நோக்கி ஒடுகிறர்கள்.
தமது வாழ்வும் அணிகலைந்துவிடுவோ அல்லது அணி கலையாமற் காப்பாற்றிவிடலாமோ என்பதே
இவளுக்குள்ளே பெரியதோர் கேள்வியாக எழுந்து விரிகிறது.
உலக மாந்தர் முழுப்பேரினது கண்களும் திடீரென ஒரு பெரிய கண்ணுக மாறித் தமது வாழ்வையே பார்த்துக்கொண்டிருப்பது போன்ற ஒரு கற்பனை!
இவர்களுக்குத் திருமணமான புதிதில் கைலாசபதி அரங்கில் நடைபெற்ற நாடகம் ஒன்றுக்கு ஜீவன் இவளை அழைத்துப் போன்ை. அங்கே அரங்கின் பின் திரையில் ஒரு தனிக்கண் கீறப்பட்டிருந்தது.
'உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது' என்பதை அவர்கள் அப்படிக் காட்டுகிருர்கள் என்று ஜீவன் விளக் கம் சொன்னன். அப்படி ஒரு கண் இவர்களைப் பார்ப் பதுபோல...!
பக்கத்து வீட்டுப் பொன் தில்லையின் வாழ்வு இப் படி முடிந்துவிடவில்லையா? அவனும் காதலித்துத்தானே திருமணம் செய்துகொண்டான் ! பத்துப் பதினைந்து வருடமாய் மணவாழ்வு என்ற வண்டியை ஒட்டிக் கொண்டுவந்து, மூன்று குழந்தைகளும் பெற்றுக் கொண்டபிறகு.அவன் வேலை செய்யும் இடத்திற்குப் பக்கத்தில் ஒரு இருபது வயது இளம் பெண்ணுேடு
வாழப் போய்விட்டானே?
மனைவியும் மூன்று பிள்ளைகளும் நடுத்தெருவில்
துரவ IT 6T no as Tid

கோகிலா மகேந்திரன் 21
நின்று கதறிக்கொண்டிருக்கிருர்கள்!
தமிழ்ச் சமுதாயத்தின் குடும்பங்கள் ‘ஒருவன் ஒருத்திக்கு’ என்று திடமாகவும் ஒழுக்கமாகவும் வாழ்ந்த காலம் மலையேறி விடப்போகிறதா? விரும்பிய இடத்தில் விரும்பிய நேரத்தில் “ஃபிறீ செக்ஸ்’ என்ற மேற்கு நாடுகளின் கொள்கை இங்கும் பரவ முயலு கிறதா?
மேற்கு நாட்டில் ாேழுதப்பட்ட "பெலிக்கன் புக் சீறிஸ்" ஒன்று "செக்ஸ்’ பற்றிச் சொல்வதை இவள் நினைவில் கொண்டாள்.
நவீன மனிதனுடைய அறிவு, நுண்மதி ஆகியவை அவனது இயல்பான உடல் தேவையுடன் யுத்தம் செய்கின் றன. அதனல் அவனுக்குள் பல மனத்தடைகள் ஏற்படு கின்றன. இன்னும் விஞ்ஞானபூர்வமாகச் சொல்வதானுல் மூளை முண்ணுணுடன் யுத்தம் செய்கிறது. இதனல் ஆரோக்கியமான பாலியல் தெறிவினைகள் தொழிற்பட (pliquiunt LD6i) தயங்கிப் பயப்படுகின்றன. இந்தப் பயமே தவறுகளுக்கு இடமளிக்கிறது.
இப்படியெல்லாம் போதித்ததோடு இப்படியெல் லாம் நடந்தும் வந்த அசிங்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தானே இறைவன் 'எய்ட்ஸ்’ என்ற தண் டனையை மனிதனுக்கு வழங்கியிருக்கிருன்.
பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்ட தமது பிள்ளை எதிர்ப்பால் நண்பர்கள் பலருடன் தொடர்பும் உறவும் கொள்ளாவிட்டால் அப்பிள்ளை ஏதோ குறைபாடு உடைய பிள்ளை எனக் கருதிச் கவலையுற்ற மேற்கு நாடுகளின் பெற்ருேர் இப்போதுதான் மெதுவாகக்
தூவானம் கவனம்

Page 19
22 கோகிலா மகேந்திரன்
கீழைத்தேசப் பண்பாடுகளைப் பற்றி அறிய விரும்பு கிருர்கள். இப்போது பொன் தில்லை போன்ற பலர்!
* 'இன்றைய மெய்வல்லுநர் போட்டியில் முதல் நிகழ்வாக நுாறு மீற்றர் ஓட்டங்கள் இடம்பெற இருக்கின்றன. முதலில் பதின்மூன்று வயதின்கீழ் ஆண் களுக்கான நூறு மீற்றர் ஒட்டம்! இதில் பங்கு பற்றும் இலக்கங்கள் பதின்மூன்று ஏழு, இருபத்தாறு, நாற்பத்து மூன்று, ஐம்பத்தாறு, எழுபத்தெட்டு. ஒட்ட வீரர்கள் உடனே ஆரம்ப ஸ்தானத்திற்கு அழைக்கப்படுகிரு?ர்கள். '
இவ்வாறு அறிவித்துவிட்டுத் தொடர்ந்து அறிவிக்கு
மாறு இவளுக்குச் சைகைசெய்கிருர் அருகில் இருக்கும் ஆண் அறிவிப்பாளர் வரதன்.
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன்
G.
இந்த நூறு மீற்றர் ஓட்டங்களின் தொடக்குந ராகத் திரு. எஸ். நடராஜா அவர்களும், தீர்ப்பாள ராகத் திரு. எம். முத்துவேல் அவர்களும் நடுவர் களாகத் திரு. ஏ. ஆனந்தராஜா, திரு. ஆர். இராஜ நாயகம், திரு. சி. சுப்பிரமணியம் ஆகியோரும் காலக் கணியராக திரு. வி. வைரமுத்து அவர்களும் கடமை புரிவர்.’’ என்று இவள் அறிவித்ததைத் தொடர்ந்து நூறு மீற்றர் ஒட்டங்கள் ஆரம்பமாகின்றன.
குதிக்கால் நிலத்தில் LuL—-fTLfDGôi) நுனிக்காலை வைத்து ஒடுகிற மாணவர்கள் காற்ருய்ப் பறக்கிருர் கள். முழுக்காலும் நிலத்தில்பட ஓடுகிறவர்கள். பின் தங்கி விடுகிறர்கள், வாழ்க்கையிலும்...?
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், நாடக அரங்கக்கல் லூரி ஆகியவற்றின் சூழல்களில் ஜீவனைக் காதலித்த நேரங்களில் வாழ்க்கை ஒட்டத்தில் தன் சிநேகிதிகள் பலரையும் விடத்தானே மிக முன்னுக்கு ஒடுவதாய் இவள் உணர்ந்திருக்கிருள்.
இப்போதும்கூட அந்த நினைவுகள் நினைக் குந்தோறும் நினைக்கும்தோறும் இனிப்பாகவே 3 இருக்கின்றன.
காலைச்சூரியனின் மஞ்சள் கிரணங்கள்
தூவானம் கவனம்

Page 20
24 கோகிலா மகேந்திரன்
தார்ரோட்டைக் கவிந்துகொண்டிந்த ஒரு காலைப்பொழு தில் நாச்சிமார் கோவிலடிச் சந்தியில் இறங்கி இவள் கிழக்கு நோக்கிப் பல்கலைக்கழகம் சென்ருள்.
அதே பஸ்ஸில் வந்து இவளைத் தொடர்ந்து இறங்கி இவளுக்குப் பின்னே நடந்துவந்த ஒரு வாலிபன்!
ஆனந்தகுமாரசாமி விடுதிக்கு முன்னல் இருவரும் சந்தித்தபோது, இ வ ள் த ன்னை விஞ்ஞானபீட மாணவியாக அறிமுகம் செய்ய, அவன் தன்னை ஒரு எஞ்சினியர் என்று கூறிக்கொண்டான். சாதாரண அறி முகம்தான். . . . . l
அந்த அறிமுகத்தை அவள் மறந்தும் விட்டிருந்த போது ஒருநாள்.
பச்சென்று தீப்பிடித்து எரிகிறமாதிரி ஒரு முகம். தனக்கு மிகவும் தெரிந்தது போன்ற ஒரு முகம். நாடக அரங்கக் கல்லூரியின் நாடகப் பட்டறை வகுப் பில் தனக்கு அருகில் நின்று குரல் எழுப்புவதை இவள் திடீரென்று உணர்ந்தாள்.
சட்டென்று நினைவு வந்தது!
ஒரு நாள் பல்கலைக்கழகத் தெருவில் ஆனந்தகுமார சாமி விடுதிக்கு முன்னுல் எனக்கு அறிமுகமான முகம். பெயர் ஜீவன்! ஒரு எஞ்சினியர்!
ஆனல் தான் நாடக அரங்கக்கல்லூரி வகுப்பிற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாய் அன்று அவன் சொல்ல வில்லையே? கடந்த ஓரிரு வகுப்பில் இவனைக் காணவும் இல்லை.
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 25
தாகணந்தரி.ததிகிணதொந்தரி. தாகணந்தரி.ததிகின தொந்தரி. முதலில் வலது காலை உயர்த்தித் தூக்கி முன்னல் வைத்துப் பின்னர் இடதுகாலை அதேபோல உயர்த்தி முன்னுல் குறுக்கே வைத்து, அடுத்த இரண்டு தாளத் திற்கும் அக்கால்களைப் பின்னே வைத்து.
தாகணந்தரி, ..ததிகின தொந்தரி. தாகணந்தரி.ததிகின தொந்தரி. நாட்டுக் கூத்துக்களில் போர் வீரன் ஒருவன் மேடைக்கு வருகிற பாணியை எல்லோரும் பட்டறையில் பயிலு கின்றனர்,
பயிற்சியை நடத்துகிற கனகசிங்கம் சொல்லுகிருஜர்,
"எல்லாரும் ஒரேமாதிரிச் செய்யாமல், 'கொன் பிரிக்ற்’ வ ரத் தக் கதா ச் செய்யுங்கோ. கரக்ரர் போமேசன்...ஆ..எங்கை...'
இவ்வளவையும் உரப்பாக ஒரு சர்வாதிகாரிக்குரிய மிடுக்குடன் கூறியவர் திடீரென்று குரலை இறக்கி,
"ஒ.கொன்பிளிக்ற் எண்டால் முரண்பாடு, இந் தச் சந்தர்ப்பத்தை, விட்டால் எனக்கும் இங்கிலீசு தெரியுமெண்டு எப்படிக் காட்டிறது. ஆ..செய்யுங்கோ எல்லாரும் தாகணந்தரி, ததிகிணதொந்தரி. . .'
எனும்போது இவள் பக்கத்தில் நின்று ஆடிக்கொண் டிருந்த ஜீவன் சிரித்தான். உடல் முழுவதும் சிரித்தது!
மனத்தடையற்ற முறையில் இவரால் எப்படி இவ் வளவு சந்தோஷமாகச் சிரிக்க முடிகிறது?
தூவானம் கவனம்

Page 21
26 கோகிலா மகேந்திரன்
அவளும் சிரித்தாள்.ஆனல் அது உதடு விலகாத வெறும் புன்சிரிப்புத்தான். அவனது அந்தச் சிரிப்புத் தான் இவளை முதலில் கவர்ந்தது என்று சென்னுல் தவறில்லை.
அதற்குப் பிறகு, நாடக அரங்கக் கல்லூரியின் ஒவ்வொரு நாடகப் பட்டறை வகுப்பிலும் இவளது பிரக்ஞை அவனை நோக்கி விழித்துக்கொண்டேயிருந்தது என்பதில் சந்தேகமில்லை.
ஒருநாள் "அரங்கு என்பது என்ன?" என்பது பற்றி விரிவுரை நிகழ்த்திக்கொண்டிருந்த விரிவுரையாளர் சொன்னுர்,
"ஆங்கிலப் படத்தை ஒருபோதும் இரண்டு தரம் பார்க்க முடியாது. ஆணுல் தமிழ்ப்படம் எவ்வளவு மோசமாக இருந்தாலும், அதன் குறைகளைச் சொல் லிக்கொண்டே, கமராவின் நிழல் படத்தில் விழுவதை யும் சகித்துக்கொண்டே நாங்கள் இரண்டு முறை பார்க்கவில்லையா? ஏனென்ருல் நாங்கள் அதில் ஒரு பகுதி. அது எங்கள் கதை. அது எங்கள் மொழி...”*
எல்லாரும் அமைதியாக இருந்து குறிப்பெடுத்துக் கொண்டிருக்கையில்,
"என்ருலும் நாங்கள் அத்தகைய மோசமான படங் களை மூன்று தரம் பார்ப்பதால்தான் அவை போன்ற பல தொடர்ந்து வருகின்றன. நாங்கள் தரமற்றதைப் பார்க்கமாட்டோம் என்று பகிஷ்கரிப்புச் செய்ய வேணும்...'
என்று ஒரு குரல்! எல்லோரும் திரும்பிப்பார்க்கின்றனர்? இவளுந்தான்!
தூவானம் கவனம்

கோகீலா மகேந்திரன் 27
ஜீவன்!
அந்த "கொன்பிளிக்ற்" கதையோடு இவளை நெருங் கிய ஜீவன்!
"ஒரு நாடகத்திலை கட்டாயம் ஒரு முரண்பாடு இருக்கவேணும். அது ஒரு தனி மனிதனுக்கும் இன் ஞெரு தனி மனிதனுக்கும் இடையிலை ஏற்படலாம். ஒரு தனி மனிதனுக்கும் அவன் வாழிற சமூகத்துக்கும் இடையிலை ஏற்படலாம். அல்லது ஒரு சமூகத்திற்கும் இன்னுெரு சமூகத்திற்குமிடையிலை ஏற்படலாம்.'
என்று சொல்லுகிற ஜீவன் தனக்குள் தானே முரண்படும் இயல்புள்ளவனுய் இருந்திருப்பதைப் புரிந்துகொள்ள அவளுக்கு நீண்ட காலம் எடுத்திருக் கிறது!
'சிறை உடைக்கும் குயில்கள்" என்ற மகளிர் அமைப்பொன்றின் மாவட்டச் செயலாளராக அவள் அப்போது இருந்தாள். அந்தக் குழுவில் இருந்த அத் தனை பெண்களும், "சீதனம் கொடுத்துத் திருமணம் செய்வதில்லை" என்று பிரதிக்ஞை எடுத்துக்கொண்டார் கள்.
முதல்நாள் ஜீவனேடு ஆறுதலாகக் கதைக்கச் சந் தர்ப்பம் ஏற்பட்டபோதே அதை அவள் அவனிடம் சொல்லியிருந்தாள். பட்டறை வகுப்பில் மதிய இடை வேளை வந்தது. களப்பயிற்சிப் பொறுப்பாளர் சொன்ஞர்.
"இந்த இடைநேரத்திலை நீங்கள் மு ன் பி ன் அறிமுகமில்லாத ஒரு பயிலுநரை முற்ருக அறிஞ்சு கொள்ளலாம். அவரோடை Niuės Groot. &F frua urru".GS). பகிர்ந்துகெள்ளலாம். பயிற்சி முடிஞ்சு வெளியேறேக்கை ஒருத்தரை ஒருத்தர் சகோதர உணர்வே3 டை புரிஞ்ச நிலையிலை வெளியேற அது உதவும்'
தூவானம் கவனம்

Page 22
28 கோகிலா மகேந்திரன்
அந்த நேரத்தில் ஜீவன் இவளைத் தேடி வந்தான். இவளுக்கு அருகில் தளர்நிலையில் சப்பாணி கொட்டி அமர்ந்துகொண்டான்.
'உங்களைப்பற்றி எனக்கு என்ன சொல்லப்
போநீங்கள்?' என்று அவன் கேட்டபோது அவள் சொன்ன விடை இதுதான்.
"நான் பல்கலைக்கழகத்திலை இறுதி வருஷம் படிச்சுக் கொண்டிருக்கிறன். அதோடை 'சிறை உடைக்கும் குயில்கள் அமைப்பிலை செயலாளராய் இருக்கிறன். இது இரண்டிலையுமிருந்து நீங்கள் என்னை அறிஞ்சுகொள்ள லாம். வேறை எதுவும் சொல்லத் தேவையில்லை . '
உடனே அவன் "ஒ" என்று பெரிதாகச் சிரித்தான். "அப்படியெண்டால் நீங்கள் சீதனம் குடுக்காமல்
தான் கலியாணம் செய்வியளா?" என்று கேட்டான்.
இவள் மிகத்திடமாக 'ஓம் அதிலை என்ன சந் தேகம்?" என்ருள்.
"ஒரு ஆம்பிளையஞம் அப்படி உங்களைக் கலியா ணம் செய்ய விரும்பாட்டில்..?"
"நாங்கள் கலியாணம் செய்யாமல் இருப்பம்.'
அவன் புன்னகைத்தான்.
அப்போது அவன் அவளது அந்த இலட்சியத்தைச் சரி என்று ஏற்றுக்கொண்டானு இல்லையா என்று அவ ளால் அறிய முடியவில்லை. கண்களில் ஒரு இறுக்கம் மட்டும் தெரிந்தது.
இடையில் அவன் எப்படி எப்படி எல்லாம் மாறி
துாவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 29
பெண் நிலைவாதத்திற்காகவே பெரிதாகப் பாடுபட்டு. சீதனமின்றியே அவளைத் திருமணம் செய்து மற்ற ஆண்களுக்கோர் முன்னுதாரணம் காட்டி. வீட்டிலே எல்லா விடயத்திலும் அவளுக்குச் சமஉரிமை தந்து,
அப்போதெல்லாம் நிராகரிக்க முடியாத ஏதோ ஒன்று தன்னை மிக இறுக்கமாக அவன்பால் ஆகர்ஷிப் பதை அவள் உணர்ந்திருக்கிருள்.
இறுதியில். அந்த பேர்த்டே பாட்டிக்குப் போய் வந்து
'சங்கரின்ரை மனுசிக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் எண்டு நினைச்சுப் பாத்தால் தெரியும்."
என்று சொன்னபோதுதான் அவன் இவ்வளவு காலமும் தனக்குள்தானே முரண்பட்டு நின்றது தெளி வாய்த் தெரிந்தது. கண்களில் அப்போது அந்தப் பழைய இறுக்கமும் தெரிந்தது!
"சங்கரின்ரை மனுசிக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் எண்டு நினைச்சுப் பாத்தால் தெரியும்.'
மீண்டும் மீண்டும் செவியில் அந்த வார்த்தைகள் ஆவர்த்தனமாகி மனதை அலைக்கழித்துக்கொண்டிருந் தன.
அப்படியானுல் இவ்வளவு காலமும் அவனுக்குள் அவன் இறந்து வாழ்ந்தாளு? இதுதான் ஜீவனின் சுய ?זfפ6uuש)-מ:
அந்த அதிர்ச்சி அவளைப் பயங்கரமாகத் தாக்கிய போது அவள் தனக்குள்தான் இறந்ததுபோல் உணர்ந் தாள்.
Tal FT uT dib asai GT dib

Page 23
30 கோகிலா மகேந்திரன்
இன்னும் அதே இறந்த நிலைதான்!
கனவில் தெரியும் தோற்றம்போலக் கல்லூரி மைதானமும் அதில் விளையாடிக்கொண்டிருக்கும் பிள்ளை களும் தெரிகிருர்கள். மப்பும் மந்தாரமும் நிறைந்து ஒருவித அசாந்திக்கு ஆட்பட்டிருக்கும் அவள் நெஞ்சம் போலவே அந்த மைதானமும்
இப்போது இருநூறு மீற்றர் ஓட்டங்கள் ஆரம்ப யாகின்றன. அதற்கான அறிவிப்பை அவளுக்கு அருகில் இருக்கும் அறிவிப்பாளர் வரதன் செய்துகொண்டிருக் கிறர். இருநூறு மீற்றர் ஒட்டத்தில் பங்கு பற்றுவோ ருக்கு அவர்களின் ஓட்ட நீளங்கள் சமஞய் இருப்பதற் காக வளைவான ஒரு பாதையின் ஆரம்ப ஸ்தானத்தில் *டிஃபீற் கொடுக்கப்படுகிறது.
மனிதர்களின் வாழ்க்கை ஒட்ட நீளங்கள் யாவும் சமமானவையா? மனிதர்களின் வாழ்க்கை ஒட்டச் சுவடுகள் யாவும் சமதடைகள் கொண்டவையா? சில ரது ஒட்டப்பாதைகள் சீராகவும், சிலரது ஒட்டப் பாதைகள் கல்லு முள்ளு நிறைந்ததாயும் இருக்கும் போது யார் வாழ்வில் வெற்றி பெறுகிருர் என்று கணிப்பது அடிப்படையிலேயே தவறு அல்லவா?
யாழ்ப்பாணத்தில் மிக அரிதாகவே நடைபெறும் புகைப்படக்கண்காட்சி ஒன்று அப்போது நடைபெற்றது.
ஒரு ஞாயிறு மாலை!
நாடகக் களப் பயிற்சி முடிந்த பின்னர் ஒரு குழு வினர் அந்தப் புகைப்படக் கண்காட்சிக்குச் சென்றிருந் தனர்.
உடலில் உடைகள் எதுவுமின்றி குந்திக்கொண்டி ருக்கும் ஒரு யாழ்ப்பாணக் குழந்தையின் கண்களில்
துரவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 31
தெரிந்த அந்தப் புதிய உணர்வு.அது என்ன வேத னையா, விரக்தியா, ஆத்திரமா, அழுகையா, என்ன வென்று புரிந்துகொள்ள முடியாத ஒரு கலவை உணர்வு. பெரும்பாலும் எழுபதுகளின் இறுதியில் தோன்றியிருந்த அந்தப் புத்துணர்வு. அந்தப் புகைப்படமும் அதன்கீழ் எழுதியிருந்த ஒரு புதுக்கவிதையும் இவர்களை வெகு வாகக் கவர்ந்தன. ஜீவன் கேட்டான்.
‘வீன ஓவியத்துக்கும் புகைப்படத்துக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்கோ பாப்பம்"
இவள் சொன்னுள்.
'புகைப்படம் வெளித்தோற்றத்தை மட்டும் காட் டும். ஒவியம் மனதிலை உள்ள உணர்வுகளையும் காட்டும்'
'இன்னும் விளக்கமாச் சொல்லுங்கோ'
ஒருவர் தனக்குள்ளை தானே முரண்படுகிற மனிதர் எண்டால், அந்த இயல்பு அவற்றை புகைப்படத்திலை தெரியாது. ஆனல் ஒரு சிறந்த ஒவியன் அவரைப் படத்திலை தீட்டுறபோது சிவப்பும் கறுப்பும் சேத்து ஒண்டை ஒண்டு வெட்டிற கோடுகளாலே அவற்றை உடுப்பை வரைஞ்சு அந்த இயல்பைப் படத் தி லை கொணந்திடுவான்."
இப்படி அவள் சொன்ன கணத்தில் ஜீவனே தனக் குள் தான் முரண்படுகிறவனுக இருப்பான் என்று நினைக்கவில்லை.
"உங்களுக்கு ஒவியத்திலை நல்ல விளக்கம் இருக்கு கீறவும் வருமோ??
என்று அவன் ஆச்சரியப்பட்டுப் போய்க் கேட்
தூவானம் கவனம்

Page 24
32 கோகிலா மகேந்திரன்
டான், அரை மதிலைத் தாவி ஆடி வந்த மென்காற்றை ஈசித்தபடியே.
' வராது" என்ருள் வீணு.
"ஒரு நல்ல நடன இசை நாடகத்திலை இருப்பது போல, ஒரு நல்ல ஒவியத்திலையும் ஒருலயம் இருக்கும் "
"ஆனபடியால் நாடகம் தெரிஞ்சவை ஒரு புகைப் படத்தை அல்லது ஒவியத்தை நல்லா ரசிக்க முடியும் "
'ஒரு நல்ல ஒவியன் தான் நாடகத்திலை நல்ல ஒப் பனையாளஞ அல்லது காட்சியமைப்பாளனு வருவான் "'
"மனித வாழ்க்கையிலை இயல்பாகவே ஒரு லயம் இருக்கு. நாங்கள் நடக்கேக்கை பாருங்கோ.இயல் டாகவே இரண்டு காலுக்கும் இடையிலை சம இடை வெளிதான் வரும். ஒட் - க் கா ர ன் ஒடேக்கை பாருங்கோ , அவன்ரை கால் நிலத்திலே படுற நேர இடைவெளி ஒரே சீராத்தான் இருக்கும் "
வெளியில் எங்கும் சொல்லத் தோன்ருத ஒரு அபூர்வ பிடிப்பு அவனது உரையாடல்களில் அவளுக்கு ஏற்பட்டமைக்கு இப்படியான உரையாடல்களே கார ணம் மோகன ராகத்தைச் செவிமடுப்பதிலுள்ள ஒரு லியம் போல
அந்த உரையாடலை நினைத்தபடியே வீணு இரு நூறு மீற்றர் ஓடிக்கொண்டிருக்கும் மாணவிகளின் கர்ல் இடைவெளியைப் பார்த்தாள். சமநேர இடை வெளிகளில்தான் அவை நிலத்தில் பதிந்துகொண்டிருந் ஆன. அப்படியானுல் வாழ்வில் எப்போது இந்த லயம் தவறிப்போகிறது? சமுதாயம் எந்த மூலையில் லயம் தவறி அழுகிப் போய் இருக்கிறது?
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன்
அடுத்து ஞாயிறு விரிவுரைகள் தொடங்க முன் னரே வகுப்பிற்கு வந்துவிட்ட ஜீவன்,
*" என்னமாதிரி ஒவியத்திலை லயம் இருக்கிறதெண்டு காட்டிறன் பாருங்கோ’’ என்று சொல்லி ஒரு வெண் கட்டியை எடுத்துக் கரும்பலகையில் கீறத்தொடங்கினன்.
*தாம்’ என்று சொல்லி ஒரு கோடு,
*தி' என்று சொல்லி இன்னெரு கோடு.
"தாம்’ என்று அதை முறித்து வேருெரு கோடு
இப்படியே நாலு முறை ‘தாம் தி தாம், தெய் த தெய்' என்று சொல்லிச் சொல்லிப் போட்ட கோடு
* ósir (pl. L-u ..
கரும்பலகைக் கோடுகள் ஒரு கண்டிய நடனக்கார குனுகி இருந்தன. ஜீவன் ஒரு சிறந்த நாடகக் கலைஞனுக மட்டுமன்றி நல்லதொரு ஒவியனுகவும் இருந்தது அவளை அதிகம் கவர்ந்தது என்று சொல்லவேண்டிய தில்லை. அந்த உயர்ந்த கலைஞனைப் பற்றி அவள் கண்ட கனவுகள் ஆயிரம் 1 இன்று எல்லாம் காய 1டைந்த கனவுகளாகப் போய்விட்டனவா ? 4
“அடுத்து நடைபெற இருக்கும் பதினேழு
தூவானம் கவனம்

Page 25
34 கோகிலா மகேந்திரன்
வயதின்கீழ் பெண்களுக்கான நீளம் பாய்தல் நிகழ்வில் பங்குபற்ற இருக்கும் மாணவிகள் மைதானத்தின் தென் கிழக்கு மூலையில் உள்ள மணற்பிரதேசத்திற்குச் செல்லு மாறு அன்புடன் வேண்டப்படுகிறீர்கள் ‘
வீணுவின் வாழ்வு என்ற ஒட்டப்பாதையில் ஒரு பெரிய நீளம் பாய்தல் தான் அவள் ஜீவனைத் திரு மணம் செய்த நிகழ்வு. அதில் எதுவித சந்தேகமு மில்லை. நாடகக் கலைஞன், ஓவியன் என்பதெல்லாம் போகட்டும். ஒரு என்ஜினியர் மாப்பிள்ளை ஒரு சதமும் சீதனமின்றி ஒரு தமிழ்ப் பெண்ணுக்குக் கிடைப்பது நீளம் பாய்தல் அன்றி வேறென்ன?
இன்னுெரு நாள் நாடகப் பயிற்சி வகுப்பிலே கருத்தூன்றலுக்கான பயிற்சி கொடுக்கப்பட்டது.
இரு பெண்கள் அல்லது இரு ஆண்கள் ஒருவருக்கு முன் மற்றவர் தளர்நிலையில் அமர்ந்து ஒருவரின் கண்ணை மற்றவர் இமைக்காமல் பார்த்தபடி அமர்ந்தி ருக்கும் பயிற்சி! வீணுவுக்கு முன்னே பாமா.அருகில் ஜீவனுக்கு முன்னே மோகன்!
‘வாழ்க்கையில் மனச்சாட்சிக்குத் தவறு செய்யாது நடப்பவன் எப்போதும் மற் ற வ னின் கண்ணைப் பார்த்தே கதைப்பான். பிழை செய்தவன் எப்பவும் நிலத்தைப் பார்த்துக் கதைப்பான். உங்கடை மனங் களின்ரை "பியூரிட்டியை, “ரெஸ்ற் பண்ணவும் இது ஒரு பயிற்சி! எங்கடை ஊரிலையும் சொல்லிறவை..." எங்கை ஒருக்கா என்ரை முகத்தைப் பார்த்துச் சொல்லு பார்ப்போம் எண்டு. பாருங்கோ... எவ்வளவு நேரம் உங்களாலே மற்றவரின்ரை கண்ணை நேருக்கு நேர் பாக்க முடியுதெண்டு பாப்பம்."
துர வானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 35
நல்ல தமிழில் சொல்லத் தொடங்கிப் பழக்க தோஷத்தால் பேச்சுத் தமிழில் முடித்தார் பயிற்சி u Ir Gorri .
திடீரென ஜீவன் தன் கண்களை மோகனின் கண் களில் இருந்து விலக்கி வீணுவின் கண்களைப் பார்க்கத் தொடங்கினன். அவன் அப்படிப் பார்க்கிருன் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் அது தனக்கு விடுக்கப்பட்ட ஒரு சவால் போல வீணு உணர்ந்தாள். உடனே தானும் தனது கண்களைப் பாமாவின் கண்களிலிருந்து விலக்கி ஜீவனைப் பார்க்கத் தொடங்கினுள்,
பார்த்துக்கொண்டே இருந்தாள்! கண் இமைக்க வில்லை! கண்களைத்துக் கண்ணீர் பெருகி முதலில் கண் களை விலக்கிக்கொண்டது ஜீவன்தான்!
அன்று மாலைதான் அவன் அவளிடம் சொன்னன். 'நீங்கள் என்னை வின் பண்ணிட்டீங்கள் வீணு...' 'என்னுடைய லட்சியங்கள்...?’’ இவள் சிரித் தாள்.
“அவை எல்லாத்துக்கும் நான் பணிஞ்சு போயிடு றன்...”*
தான் அன்று கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் ஒரு போராட்டமாகவே ஜீவன் அவளுடன் வாழ்ந் தான் என்று இப்போது தோன்றுகிறது. அதை நினைக் கிறபே7துதான் காலின் கீழ் பூமி விலகிவிட்டது போல வீணு உணர்ந்தாள்,
இவர்களது காதலைப்பற்றி அறிந்தபோது ஜீவனின் வீட்டில் அதை உக்கிரமாக எதிர்த்தவர் அவரது மூத்த அண்ணர் திலகர்தான்.
துவானம் கவனம்

Page 26
36 கோகிலா மகேந்திரன்
"சினிமாவிலை பிழை விட்டால் திருப்பி எடுக்க லாம். நாடகத்திலை பிழைவிட்டால் எடுக்கமுடியாது. ஆனபடியால் நாடகக் கலைஞன் வாழ்க்கையிலையும் பிழைவிடமாட்டான். பிழைவிட விரும்பமாட்டான். ஒரு பெண்ணைக் காதலிச்சு அவளைக் கைவிட்டுப் பிறகு இன்னுெருத்தியை அடையிற கோழைத்தனம் siggs விட்டை இருக்காது' என்று திலகருத்கு நேரே கூறி அவன் நிமிர்ந்தபோது திலகரும் இறங்கி வந்து ஒற் றுமையாக அவர்களின் திருமணத்தை நடத்தியது உண்மைதான்.
ஆணுல் அதற்குப் பிறகு...வாழ்வில் பெரும்பாலும் ஜீவன் பொறுப் பு எடுத்துக்கொள்ளாதவனுகவே வாழ்ந்து வந்தான். பபிக்கோ, பாப்பாவுக்கோ வருத் தம் வரும் நேரங்களில்கூட ‘எந்த வைத்தியரிடம் கொண்டுசெல்லவேண்டும்’ என்பது போன்ற முக்கிய தீர்மானங்களை வீணுவே எடுக்கவேண்டும். அவன் இன் னும் குடும்பத்தின் கடைசிப் பிள்ளையாகவே இருந்து விட விரும்பினுன்.
வீணுவின் வாழ்வு ஒரு போராட்டமாய் அமைந்த தற்கு அதுவும் ஒரு காரணமா?
ஒவ்வொருவருடைய வாழ்வுமே அவர்கள் அவர் களின் “இமேஜ்ஜை'க் காப்பாற்றிக்கொள்ளும் ஒரு போராட்டந்தாளு?
எப்போதோ கேட்ட இலங்கை வானுெலி நாடகம் ஒன்று வீணுவுக்கு இப்போது நினைவுக்கு வருகிறது.
ஒரு விதவை! சமுதாயத்தில் மிக ஒழுக்கமாக வாழ்ந்து வரும் விதவை!
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 37
"செக்ஸ்" பற்றி அதிக சிந்தனை இல்லாமலே வாழ்ந்துவிடக்கூடியவள்தான். சிறிது காலத்தின் பின் அவள் மனதில் மெல்லிய மாற்றம் ஏற்படுகிறது. தான் மறுமணம் செய்துகொள்வதில் பிழை இல்லை என நினைக்கிருள்.
இந்த நினைப்புச் சமுதாயத்திற்குத் தெரியவருகிற போது சமுதாயம் அதை வரவேற்கவில்லை.
'நல்லது தானே அவளது மனம் இப்படி மாறியது!! என்று கூறவில்லை. மாருக,
**அவளா? அவனா இப்படி that if மாறினுள்?’’
*அவளா திருமணம் செய்ய விரும்புகிருள்?"
'அவள் தன் முந்திய கணவனை மறந்தே போய் விட்டாளா?' என்று பல கேள்விகளை எழுப்புகிறது. சமுதாயத்தில் தனது "இமேஜ்" உடைந்துவிடப்போசி றதே என்று பயந்த அந்த விதவை மீண்டும் தனது ஒட்டிற்குள் புகுந்துகொள்கிருள்.
ஆக, ஒவ்வொரு வாழ்வும் இந்த இமேஜைக் கட்டிக் காக்கும் போராட்டந்தான?
“அவை எல்லாவற்றிற்கும் நான் பணிந்துவிடு
கிறேன்' என்ற ஜீவனின் வார்த்தையைக் கேட்டதி லிருந்து அவளுக்கு ஒரு புதிய வாழ்வு அறிமுகமாயிற்று.
கொதிக்கும் வெய்யில்கூடக் குளிர்மழையாய் விழும் பொழிவு! உலகத்துப் பூக்கள் யாவும் வீணுவின் முகத் தில் நிறைந்துவிட்டது போன்ற ஒரு மலர்வு! ஒவ்வொரு நாளும் அவள் புதிதாக இருந்தாள்.
‘'நாங்கள் வடிவென்று சொல்வது யாரை? எங் களைப் போன்ற இன்னுெருவரை! ஒருபோதும் இன்
தூவானம் கவனம்

Page 27
38 கோகிலா மகேந்திரன்
னெரு நாட்டவரிடத்தில் நாம் அதிக வடிவைக் காண் பதில்லை. அதுபோலத்தான் நாடகமும், அது எமது வாழ்வைக் காட்டவேண்டும். அப்போதுதான் அதில் எமக்குத் திருப்தி வரும்...'
விரிவுரையாளர் சொல்லிக்கொண்டே போகிருர், 'நீங்கள் இதுவரை சந்திச்ச பெண்களிலை யாரை அதி கம் அழகு எண்டு சொல்லுவீங்கள்?' வீணு ஜீவனிடம் கேட்டாள்.
"அதைச்சொன்ன நீங்கள் பொருமைப்படுவீங்கள்.'
* 'இல்லை. நிச்சயமா நான் பொருமைப்படமாட் டன். சொல்லுங்கோ!'
"தாவரங்கள் கூடப் பொருமை அடையுமாம். தெரியுமோ உங்களுக்கு? தாவரங்களோடை ‘கல்வனே மானி என்ற உபகரணத்தை இண்ைச்சு வைச்சுவிட்டு ஒரு தாவரத்துக்குப் பக்கத்திலை நிண்டு, 'அழகாய் இருக்கிருய்’ எண்டு சொல்லிவிட்டு இன்னுெண்டுக்குப் பக்கத்திலை போய் நிண்டு 'நீ வடிவில்லை' எண்டு சொன்னல் இரண்டாவது தாவரத்தோடை இணைக்கப் பட்ட கல்வனுேமானியிலை ஒரு கூர்மையான “சிக்னல்" விழும். தெரியுமே உங்களுக்கு?
அவள் உண்மையில் வியந்துதான் போஞள். ஒரு விஞ்ஞான மாணவியாக இருக்கும் தனக்குத் தெரியாத, தான் கேள்விப்பட்டேயிராத பல விடயங்கள் எஞ் சினியரான அவனுக்குத் தெரிந்திருப்பது குறித்து அவள் வெட்கப்பட்டாள்.
அதனல் அவனிடத்தில் இவளுக்கு ஒரு ‘ஹீரோ வோர்ஷிப்" ஏற்பட்டது என்றும் சொல்லலாம்.
தூவானம் கவனம்

கோலோ மகேந்திரன் 39
‘இவரைப்போலை நானும் அறிவுபெற வேணும்.' அவள் மனதிற்குள்ளே சபதமெடுத்துக்கொண்டது
காற்றுக்குக் கேட்டிருக்கும்.
என்ன முணுமுணுக்கிறியள்?"
* 'இல்லை. இதை எங்கை வாசிச்சீங்கள் எண்டு யோசிக்கிறன்...”*
**எ ங்  ைக யே ர வ ர சி ச் ச ன். a furt ஞாபகமில்லை. பக்ஸ்ரர், சோவின், ஜப்பானிய ஹசி மோட்டா எண்டு பல விஞ்ஞானியள் இதைப்பற்றி ஆராஞ்சிருக்கினம்...”*
ஒரு தாவரத்தை அழித்தால் அருகில் உள்ள மற்றத் தாவரம் அதிர்ச்சியைக் காட்டும் என்பது தெரிந்தவருக்கு. தன்னை வளர்க்கும் மனிதன் அதிக சந்தோஷம் காட்டினுல் அது தாவரத்திற்குத் தெரியும் என்பது தெரிந்தவருக்கு. தனக்குத் தண்ணிர் தரப்படு வது தான் புதிய இடத்திற்கு மாற்றப்படுவது எல்லாம் தாவரத்தினுல் உணரப்படும் என்பது தெரிந்தவருக்கு.. தனது மனைவியும் பிள்ளைகளும் எவற்றை எப்படி உணர்வார்கள் என்று தெரியாமல் போய்விட்டதா?
* 'நாடகத்திலை எப்பவும் நடிகன் டி. சி யிலை நிக்கி றதுதான் நல்லது. அப்ப அவனை எல்லோருக்கும் தெரியும். அதைப்போல வாழ்க்கையிலையும் அவன் மறைச்சுச் செய்யிறதுக்கு எதுகும் இருக்காது...”* என்று சொல்லுகிற ஜீவன் இப்போது எதையோ அவளி டம் மறைக்க முற்படுகிருன? இல்லாவிட்டால் இவர் களைச் சவூதிக்கு அழைப்பது பற்றி ஏன் இப்படி மெளனம் சாதித்து மறைந்துகொள்ள வேண்டும்?
‘'இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நீளம் பாய்தல் நிகழ்வு முடிவடைந்ததும் இடைவேளை தொட
தூவானம் கவனம்

Page 28
40 கோகிலா மகேந்திரன்
ரும். இடைவேளையின் முடிவில் வினுேத உடைப்போட்டி நிகழும்...' என்ற அறிவிப்பைத் தொடர்ந்து பார்வை யாளர் பலர் எழுந்து சென்றனர்.
** என்ன பிள்ளை வீணு எப்பிடி சுகநயங்கள்?’’ என்று கேட்டபடி ஆசிரியர் நல்லையா அருகில் வந்தார். அந்தக் கல்லூரியில் யாரை மறந்தாலும் நல்லையா மாஸ்டரை மறக்கமுடியாது.
ஆரும் வகுப்பில் அவளுக்கு வகுப்பாசிரியராக இருந்தவர். வசதிக்கட்டணங்களே அப்போது வகுப் பாசிரியரே சேர்த்துக் கிளாக்கிடம் கட்டுவது வழக்கம்.
இவளது காசு உட்பட வகுப்பில் பல மாணவர் களின் வசதிக்கட்டணங்களே வாங்கி விழுங்கி ஏப்பம் விட்டவர் இவர்!
பற்றுச்சீட்டை உடனே கேட்டுப் பெறவேண்டும் என்ற விபரம் புரியாத ஆரும் வகுப்புப் பருவம்!
அடுத்த தவணை அதிபர் கொப்பியுடன் வந்து இவர்களை எல்லாம் ஏழுப்பி,
'ஏன் போன தவணைக்காசு கட்டேல்லை!' என்று கேட்டபோது இவள்,
'அது சேரிட்டைக் கொடுத்திட்டம்' என்முள். நல்லையர் மிகச் சாதாரணமாக அதிபரிடம் சொன்
'இந்தப் பிள்ளையன் இப்படித்தான் சேர். எல்லாம் பொய்யும் பித்தலாட்டமும். இனி என்ன செய்கிறது? இரண்டு அடியைப் போட்டிட்டு விடுவம்...' என்று கூறி அவளுக்கு இரண்டு அடி வாங்கித் தந்த நிகழ்வு! அவ்வளவு சுலபமாக மறக்கப்படத்தக்க நிகழ்வு அல்ல!
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 41
அண்மையில் நல்லையா மாஸ்டரின் மூத்த மகன் கொழும்பில் தற்கொலை செய்துகொண்டதாய் இவள் கேள்விப்பட்டிருந்தாள். எவ்வளவு நேர்மையற்ற மனித ணுக அவர் இருந்தபோதிலும் அவருக்கு ஒரு துன்பம் நேர்ந்தபோது துன்பம் விசாரிப்பதே மனிதப்பண்பு என்று நினைத்துக்கொண்டு இவள் கேட்டாள்.
‘சேர். உங்கடை மகன்ரை விஷயம் அறிஞ்சு கவலைப்பட்டன். என்ன பிரச்சினை? என்ன நடந்தது Gg fi. . . ?''
**அது.அதா..சரியாத் தெரியாது பிள்ளை... அவன் கொஞ்சம் தீவிரமான ஆள். ஆரும் சிங்கள ஆக்கள் தான் ஏதும் செய்திருப்பினம்."
இவள் ஒருகணம் அதிர்ந்தாள் தற்கொலை செய்த மகனைப் பற்றி. இவர் ஏன் இப்படி? ஒ...! இதிலும்கூட உண்மையை மறைத்துத் தன் மகனைத் திடீர்த் தியாகியாக்க முனைகிருரா மாஸ்டர்?
உண்மை அன்பும் விசுவாசமும் இல்லாதவர்களிடத் தில் துக்கம் விசாரிப்பதுகூடத் தேவையற்றது என்று திடீரென்று தோன்றியது இவளுக்கு சில நிமிட நேரம் நடிக்கும் தொந்தரவை ஏன் அவர்களுக்குத் தர வேண்டும்?
நல்லையா மாஸ்டரை ஒரு விநாடி கண்ணுக்குள் பார்த்தாள். ஒரு விநாடிதான்! ஒரே ஒரு விநாடிதான்! அது, “சீ...நீ ஒரு மனிதனு?’ என்று அவரைக் கேட்டி ருக்கலாம். பின்னர் தன் பார்வையை விலக்கி அப்பால் சென்ருள்.
இடைவேளைத் தேநீர் முடிவடைந்த பின்னர் மீதி
தூவானம் கவனம்

Page 29
42 கோகிலா மகேந்திரன்
யாக உள்ள இடைவெளி நேரத்தை அலங்கரிப்பதற்காக ஒவ்வொரு இல்லத்திலும் இருந்து மும்மூன்று விநோத உடைப் போட்டியாளர்கள் வருகிருர்கள். அவர்களில் பலர் இயல்பான ஒப்பனையே செய்திருக்கிறர்கள்.
வேலாயுதத்துடன் தோன்றும் அழகான முருகன்
ஆத்திசூடி பாடி வரும் ஒளவைப்பாட்டி.
"சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என முழக்கமிட்டு முறுக்கிய மீசையுடன் கம்பீரமாக வரும் பாரதி.
ஒரு பாதி ஆணும் மறுபாதி பெண்ணுமாக நேர்த்தி யாக ஒப்பனை செய்யப்பட்ட அர்த்தநாரீஸ்வர வடிவம்.
இவர்கள் எல்லாரையும்விட அடுத்து குறியீட்டு ஒப்பனையுடன் வந்து கொண்டிருந்த இரு உருவங்கள் வீணுவின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தன.
அந்தக் குறியீட்டு ஒப்பனைகளை மதனராஜா மாஸ் டர்தான் செய்திருப்பார்.
நல்ல ஒப்பனையாளர் என்ற முறையில் ஜீவனையும் மதனராஜா மாஸ்டருக்குத் தெரியும்.
ஜீவனுடன் இவளை அவர் சந்தித்த பல வேளை களில் இவளைப் பார்த்துச் சிரிக்க முயன்றும் இவள் சிரிக்காமலே விலகிவிட்டதுபோன்று இன்றும் கல்லூரி யில் இவள் அவரைப் பார்க்காதது போலவே இருந்து விட்டாள். அவரது பார்வை வெளியிலும் இவள் முகத்திலுமாக ஊஞ்சலிட்டதை உள்ளுணர்வாக இவள் உணர்ந்தாள்.
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன்
சிவூதி நாட்டு "பீச்'சின் நெடுமணற்பரப்பில் அமர்ந்திருந்தான் ஜீவன்.
நீலக்கடலில் சங்கமித்து நிற்கும் தொடுவான் விளிம்பின் மங்கிய காட்சி அருமையாகத்தான் இருந்தது.
**காய்த்த குலையோடீஞ்சு காற்றில் நடமாடும்...”*
இந்த வரியும் யாரோ ஒரு இலங்கைக் கவிஞர் எழுதிய வரிபோல் இருக்கிறது. அதற்குமேல் ஒரு வரி யும் மனதில் இல்லை.
சவூதிக்கு வந்து ஓவியமும் நாடகமும்தான் போய்
விட்டன என்ருல்...ஒருவரி கவிதை எழுதத் தமிழுமா வராமல் போகவேண்டும்?
17 - 1 - 87
தனக்குள்தானே எல்லாவற்றையும் மெதுமெதுவாக இழந்து வருவதுபோல் ஒரு உணர்வு.
*" மோகன்..மனச்சாட்சி உள்ளவனுக்கு. தொடர்ந்து தவறு செய்யிறது தானடா தண்டனை...' திடீரென ஜீவன் இவ்வாறு சொல்வதைப் புரிந்துகொள்ளாமல் அவனை !
தூவானம் கவனம்

Page 30
44 கோகிலா மகேந்திரன்
நிமிர்ந்து பார்த்தான் மோகன்.
சில மாதங்களாகவே ஜீவன் மகிழ்வற்றிருப்பது மோகனுக்குத் தெரியும். அவனுக்கும் அதேநிலைதான்.
சொந்த வீட்டை, சொந்த மண்ணை, சொந்த முகங்களை விட்டுப் பிரிந்திருக்கும் சோகம் உண்மையில் பெரியதுதான்!
வீட்டிலிருந்து கடிதம் வரும்போதும் ஆயிரம் றியால் சம்பளம் வாங்கும்போதும் ஏற்படும் மகிழ்வு இந்த அடிப்படைச் சோகத்தை அசைக்காது.
இந்த அடிப்படைச் சோகம் மட்டுந்தான் சோகம் என்பதுமில்லை. இன்னும் எத்தனையோ சோகங்கள்!
வீணுவின் விருப்பத்தை மீறிக் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்து "குவெய்த் ஏயர்வேய்ஸ்"இல் ஏறி அமரும்போதுகூட இப்படியான சோகங்களை எல் லாம் அவன் எதிர்பார்க்கவில்லை!
ஆங்கிலமும் அராபிய மொழியும் பேசுகிற-நீல நிறத்தில் அவர்களது நாட்டுச் சின்னம் பொறிக்கப் பட்ட உடை அணிந்த விமானப் பணிப் பெண்களின் உப சாரம்கூட அவன் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை!
இருக்கையின் "பெல்ற்றுக்களைப் பூட்டிக்கொள்ள வும் தளர்த்திக்கொள்ளவும் தெரியாத, விமானத்தின் ‘பாத்ரூமை உள்ளிருந்து பூட்டவும் திறக்கவும் தெரியா மல் அறைக்கு வெளியே இன்னுெரு பயணியைக் காவல் வைக்கிற, விமானம் மேல் எழுகையிலும் கீழ் இறங்கை யிலும் கூடச் சிகரெட் குடித்துக்கொண்டிருக்கிற. .பல தரப்பட்ட இலங்கைப் பயணிகளைப் பார்த்துப்
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 45
பார்த்து.அவர்களிடத்தில் ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகவே.. பணிப்பெண்களின் உபசாரம்கூடக் குறைந்துவிட்டதை உணர அவனுக்குச் சற்று நேர மெடுத்தது.
இவனது இரு க் கை க் கு அருகிலிருந்த ஒரு தமிழ்ப்பெண் , தான் சவூதிக்கு "ஹவுஸ் மெயிட்டாகப் போவதாகத் தன்னை அறிமுகம் செய்துகொண்டாள்.
"என்ரை பேர் பவானி...நீங்கள்...?"
"நான் ஜீவன்.என்ஜினியர். ஜாக் கொம்பனியிலை வேலை கிடைச்சுப்போறன்’
* ‘அங்கே போய் ‘லிக்கர் இல்லாமல் இருக்கிறது உங்களுக்குக் கஷ்டமாயிருக்கும்...'
'இல்லை நான் இங்கேயே குடிக்கிறதில்லை...'
ஒரு என்ஜினியர் குடிக்காமல் இருப்பதை நம்ப முடியாது என்பதுபோல் வினேதமாகப் பார்த்தாள் பவானி.
இயந்திரத்தனமான இந்தச் சவூதி வாழ்விலும் இது போன்ற சம்பவங்களை நினைத்துப் பலமுறை சிரிக்க முடியும்.
இங்கு வந்து வாழத் தொடங்கிய பிறகுதான் ஒரு உண்மை தெரிந்தது.
இங்கு குடிப்பது சட்டப்படி குற்றந்தான். ஆனல் இங்கு யாருமே குடிப்பதில்லை என்றும் சொல்லமுடியாது.
வெள்ளையர்கள் பலர் குடிப்பார்கள். அது கண்டும் காணுததுபோல் மறைக்கப்பட்டுவிடும். ஆனல் கறுப்பர் கள் யாரும் குடிப்பது காணப்பட்டால் குற்றமாகக் கொள்ளப்படும்.
தூவானம் கவனம்

Page 31
46 கோகிலா மகேந்திரன்
'வெள்ளையணுக்கு ஒரு நீதி கறுப்பனுக்கு இன் னெரு நீதி’ என்ற தன்மையே ஒரு சோகந்தான்.
இது ஜீவனை எந்த வகையிலும் தனிப்படப் பாதிக் காதபோதிலும் இந்த அநீதியைப் பார்க்க அவனுள் கிணம் பொங்கும்.
இலங்கையில் மட்டுந்தான் சிங்களவனுக்கு ஒரு நீதி தமிழனுக்கு ஒரு நீதி என்பதல்ல. எங்குமே இப் பிரச்சினை உண்டு. இது ஜீவனைப் பாதிக்காதசோகம்!
அவனைப் பாதித்த சோகங்கள் இந்நாட்டில்பல!
ஆம்! இப்போது ஜீவனின் இதயப்பூவணையில் ஆழ் துயிலில் இருந்த சோகக் குழந்தைகள் பல ஒவ்வொன் முய்க் கண்மலர்ந்து தேம்பித் தேம்பி அழ ஆரம்பிக்கின் றன.
அவன் அந்த வெண்மணற்பரப்பில் நீட்டி நிமிர்ந்து படுக்கிருன். சவூதியின் விமான நிலையத்தில் அவன் இறங்கியபோது 'ஜாக்” என்று பெரிதாக எழுதப்பட்ட அட்டையுடன் காணப்பட்ட ஒருவன் இவனை உடனே கம்பனிக்கு அழைத்துச் சென்ருன்.
அங்கே ஒருவெள்ளைக் கடதாசியை இவனிடம் நீட் டிக் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொண்டனர். இவன் முதலில் தயங்கினன். அவர்கள் வற்புறுத்தினர். நாட்டி லிருந்து இவ்வளவு தூரம்வந்து கம்பனியுடன் கொழுவிக் கொண்டுதிரும்பமுடியாதென நினைத்து அவன் கையெ ழுத்திட்டுக்கொடுத்தான்.
'எனக்கு ஃபமிலி அக்கொமடேசன் தாறதாக் கொழும்பிலை புரொமிஸ் பண்ணினவை...' இவன் பண் புடன் ஆங்கிலத்தில்கேட்டான்.
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 47
'தருவம், கொஞ்சம் வெயிற்பண்ணுங்கோ...'
கம்பனிக்குச் சொந்தமான குவாட்டர்ஸ் இல் இவ னுக்கு ஒரு அறை வழங்கப்பட்டது. அதுவும் கூடத்தனி அறை அல்ல. மோகனுடன் அதைப் பங்கிட வேண் டியிருந்தது.
ஆனல் வேறு யாருடனும் ஷெயர் பண்ணுவதை விட மோகனுடன் ஷெயர் பண்ணுவது பரவாயில்ல்ை.
மூன்று அடிநீளம் மட்டுமே கொண்ட அறைகளில் தமிழ் இளைஞர் பல ர் இரு க் கும் நேரத்தில். தனக்கு இது பரவாயில்லை என்று நினைத்தபோது சிரிப்பு வந்தது உண்மைதான்.
கொழும்பில்வைத்து இரண்டாயிரத்து ஐநூறு றியால் சம்பளம் தருவதாய் வாக்குப் பண்ணியவர்கள் ஆயிரம் றியாலுக்கு ஒப்பந்தம் எழுதவே தன்னிடம் வெள்ளைக் கடதாசியில் கையொப்பம் வாங்கினர் என்று தெரிந்தபோது. இவனுக்குவெடித்த உணர்வைவிபரிப் பது கடினம்! ஆனுலும் அவன் அந்தச்சோகத்தை மன திற்குள்ளேயே தாங்கிக்கோள்ளவேண்டியிருந்தது.
பண்டா-செல்வா ஒப்பந்தம் போல்தான் இதுவும்...?
வீணவுக்கும் எழுதமுடியாது!
அவள் ஆரம்பத்திலேயே "நாட்டை விட்டுட்டுப் போகாதேங்கோ’ என்று கூறியவள்! மணலில் நடந்து வந்து மீண்டும் மோகனுக்கு அருகில் அமர்ந்தான்.
**வியட்னும் சீன நாடக அரங்குகளில் நடிகர்கள் வட்டமாக நடந்து வந்நால் அடுத்தகாட்சி ஆரம்பமாக இருப்பதாகக் கருதப்படும்.’’ என்று தனக்குள் நினைத் துக்கொண்டான்.
தூவானம் கவனம்

Page 32
48 கோகிலா மகேந்திரன்
அவன் மனதிற்குள் அடுத்த சோகக்காட்சி உருவா யிற்று. முதல்நாளே அவன் கேட்ட "ஃபமிலி அக்கொம டேசன் அவனுக்கு இன்னும் வழங்கப்படவில்லை, எப் போதும் ஏதோசாட்டுச் சொல்லி சொல்லித் தள்ளிப் போட்டுக்கொண்டுபோகிறது கம்பனி! இந்த அவனது நிலையை வீணு நம்பவில்லைப் போல் இருக்கிறது. அவளது கடிதங்களில் இப்போதெல்லாம் முந்தியளவு அன்பில்லை. இதனுல் அவனும் கடிதம் எழுதுவதைக் குறைத்துக் கொண்டான். இது ஜீவனை உள்ளுக்குள்ளே மிகவும் சோகப்படுத்தியது!
விடுதான் இல்லை. சொந்தவாகனமாவது கொடுத்தார் களோ என்ருல் அதுவும் இல்லை.
கம்பனி வாகனம் காலையில் வந்து அவனை அழைத் துப்போய் வேலைத்தளத்தில் விடும். சூழல் வெப்பநிலை 48°C ஆகஇருந்தாலும் சரி 5°Cஆக இருந்தாலும்சரி இவன் மாலைவரை வேலைத்தளத்தில் நிற்கவேண்டும்.
இவனைப் போன்ற தராதரம் உடைய வெள்ளையன் சிமித். 'அமெரிக்கன் பாஸ்போட் வைத்திருப்பதால் மாதம் பத்தாயிரம் றியால் சம்பளம் எடுக்கிருன், அவ னுக்குச் சொந்தமாக வாகனமும் ஒன்று கொடுக்கப்பட் டிருக்கிறது,
மூன்று வேலைத்தளங்கள். அவன் மூன்றில் எதிலும் காணப்படமாட்டான். அவனைப் பிடிக்கமுடியாது.
ஜீவன் ஒருநாள் வேலைத்தளத்தில் நின்ற போது திடீரென மணற்புயல் வீசத்தொடங்கியது. வனந்தரங் களில் இருந்து காற்று அள்ளிக்கொட்டிய மணலில் இருந்து தப்ப எதுவித பாதுகாப்பும் இல்லை. அப்போது தான் அவன் நினைத்தான்.
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 49
‘கஞ்சியைக் குடிச்சாலும் சொந்த நாட்டிலை இருக் கிறது நல்லதுதான். பபி, பாப்பாவோடை கதைக் கிற சந்தோஷமாவது கிடைச்சிருக்கும்'
காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை வேலை. இன்னும் ஒரிரு மணி நேரம் அதிகம் ஷேன் செய்தால் ஒவர்ரைம்' கிடைக்கும். அதையும் செய்து கொள்வான் ஜீவன். வந்ததே காசுக்காக! பிறகு அதைச் சேர்ப்பதில் ஏன் குறை வைக்கவேண்டும்?
குவாட்டர்ஸுக்குத் திரும்ப இரவு எட்டு மணி யாகிவிடும். இவ்வளவு யந்திர வாழ்க்கையின் பின் அறையில் வந்து விரும்பியபடி ஒரு கறி வைத்தாவது சாப்பிடலாம் என்ருல் அதுவும் முடியாது.
அஐை பழுதடைந்துவிடும் என்று ஹீ ற் ற ரி ல் சமைக்க விடமாட்டார்கள். கன்ரீனில் தான் சாப்பிட லாம்.
ஆணுல் மோகன் ஏதும் களவாகச் சமைத்துவிடு வான். அதில் இவனுக்கும் கிடைக்கும்.
உண்மையில் சவூதி ஒரு திறந்த வெளிச் சிறைச் சாலை என்றே சொல்லலாம்.
தனிமை. , , தனிமை. தனிமை !
மனிதனைக் கொல்ல இது ஒன்றே போதும்!
இந்தத் தனிமைத் துயரில் இருந்து விடுபடச் சற் றேனும் உதவுகிறவன் மோகன்தான்.
பவானி ஒருநாள் "ஃபோன்' பண்ணினுள். விம! னத்தில் சந்தித்த தன்னை நினைவிருக்கிறதா என்று கேட்டாள். குறிப்பிட்ட ஒரு இடத்தில் தன்னைச் சந்
தூவானம் கவனம்

Page 33
50 கோகிலா மகேந்திரன்
திக்கும்படி சொன்னுள். தனது உடன்பிறந்த சகோதரர் என்று சொல்லித்தான் தன் எஜமானிடம் அனுமதி பெற்றிருப்பதாயும் கூறினுள்.
'போகலாமா? விடலாமா? ஜீவசூறல் தீர்மானிக்க முடியாதிருந்தது. ஆனல் அன்று அவன் போகவில்லை,
மோகன் சொன்னன்.
'நீ நினைப்பதுபோலை இது தவறன அழைப்பாகத் தான் இருக்கவேணுமெண்டதில்லை. ஹவுஸ் மெயிட்ஸ்க்கு இஞ்சை எத்தனையோ பிரச்சினை. அதுகள் தெரியாமல் வந்து மாட்டிக்கொள்ளிறது. சிக்கல்களில் இருந்து விடுபட உண்மையிலை உன்னட்டை ஏதும் உதவி கேக்கவும் பவானி உன்னைக் கூப்பிட்டிருக்கலாம்'.
இப்படி மோகன் சொன்ன பிறகு ஜீவனுக்குப் பவானியிடம் ஒரு பரிதாப உணர்வும் தோன்றியிருந் தது. ஆனுல் அவன் அன்று போகவில்லே,
இன்று போகலாம் என்று மோகன் செ7 ல்கிறன். "தானும் வருகிறேன்" என்கிருன்.
இன்று வெள்ளிக்கிழமை ஒய்வு நாள் ஒவர் ரைம்' செய்யவும் போகலாம். இருவரும் "பீச்சுக்கு வந்திருக் கிருர்கள்.
*பவாணிக்கு என்ரை ரெலிபோன் நம்பர் எப்படித் தெரிஞ்சுது?’’ திடீரென்று கேட்டான் ஜீவன்.
இது பெரிய விஷயமே! யாரும் உன்னைத் தெரிஞ்ச யாழ்ப்பாணத் தமிழ் ஆக்கள் சொல்லியிருப்பினம், இஞ்சை எத்தனை பேர் இருக்கினம்...”*
தூவான tit a in sab tifri

கோகிலா மகேந்திரன் 31
*"அவளுக்கு அப்படி என்னபிரச்சினை வந்திருக்கும்?'
எனக்குத் தெரியுமே? சும்மா சொல்லிறன்.
இஞ்சை ஹவுஸ் மெயிட்ஸுக்கு வருத்தம் வந்தால் டொக்ரரிட்டைப் போறதே கஷ்டம்...”*
மோகன், ஜீவன் வர ஒரிரு வருடங்களுக்கு முன் னரே வந்தவன். அவனுக்கென்று இப்போது ஒரு வாகனமும் கொடுத்திருக்கிழுர்கள். பெரும்பாலும் அந்த வாகனத்தில் ஜீவனையும் அழைத்துச் செல்வான்.
சிறிது நேரம் பேசாமல் இருந்த ஜீவனைப் பார்த்து மோகன் மீண்டும் கேட்டான்.
‘அப்ப வா,'காரிலை அப்படியே.போட்டுவருவம்...' **இந்த நேரம் காரிலை உந்த ருேட்டுகளிலை போறதே பயம், , ,' ஜீவன் மீண்டும் தயங்கினுன்.
சவூதியில் விபத்துக்கள் அதிகம் நடப்பது உண்மை தான். சில வாகனங்கள் இருநூறு மைல் வேகத்தில் பறந்துகொண்டிருக்கும். அத்துடன் அரேபியர்கள் பொதுவாக வீதி ஒழுங்குகளையும் கவனிப்பது குறைவு என்றே சொல்லவேண்டும்.
வீதி ஒழுங்கைக் கவனிக்கும் பொலிசார் வீதியில் நின்றுகொண்டிருப்பார்கள். ஆனல் பெரும்பாலும் அதீத வேகம் பற்றி அதிக அக்கறை கொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.
உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று ஜீவன் சொன்னது உண்மையேயாயினும் அவன் வேறும் எதற்கோ பயப்படுவதாய்த் தோன்றியது.
‘மோகன், . உனக்குத் தெரியுமே.,நான் ஒரு நாடக
துரவானம் கவனம்

Page 34
52 கோகிலா மகேந்திரன்
நடிகன். நாடகம் என்றது சில சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு விளையாடுற ஒரு விளையாட்டு. அந்தச் சட்டதிட்டங்களை என்ரை வாழ்க்கையிலையும் போட்டும் கொண்ட நடிகன் நான்...”*
மோகன் பெரிதாகச் சிரித்தான்.
**உப்படிச் சொன் ன  ைவ கனபேர்.எனக்குத் தெரியும். பிறகு படிப்படியா மாறிவிடுவினம். என்ன செய்யிறது? மனிதனுக்கு இயல்பாக வாற உணர்ச்சி யளை எப்படி வர விடாமல் பாக்கிறது?"
கதைத்துக்கொண்டே வாகனத்தை ஸ்ராட் செய தான் மோகன். பொதுவாக மோகனின் ஆளுமைக்குள் அடங்கிப்போவதே இங்கு வந்தபின் ஜீவனின் இயல் பாக இருக்கிறது. வீன இல்லாததால் ஏற்பட்ட வெறுமையை நீக்க மோகன் சிறிது உதவினுன் என்றும் சொல்லலாம்.
காரினுள் ஏறிக்கொண்டே ஜீவன் கேட்டான்.
மேற்கு நாடுகளிலை மனிசன் தனிச்சுப்போயிட்ட படியாலைதான் அங்கை நாடகம் ஒரு வலிமையான கலையாக இருக்கிறதாய்ச் சொல்லுவினம். அதைப் போலை நாங்களும் இஞ்சை தனிச்சுப் போயிட்டம். அடுத்த மாதம் இஞ்சை இருக்கிற தமிழ் ஆக்கள் எல் லோரும் சேர்ந்து ஒரு நாடகம் போடுவமே?”
"ஓ அதுக்கென்ன? அதிலை ஏதும் பெண் பாத்திரம் வந்தால் பவானிக்குக் குடுப்பம்."
ஒரு வீட்டில் ஹவுஸ்மெயிட்டாக இருக்கும் பெண் இவர்களுடன் சேர்ந்து நாடகம் நடிப்பது சாத்திய
துரவானம் கவனம்

கோகிலா மந்ேதிரன் 53
மில்லை என்பது இருவருக்கும் தெரிந்திருந்தும்கூட மோகனின் அந்தப் பதில் அவன் இன்னும் ஆழமாகப் பவானியைப் பற்றி அக்கறைப்படுதலைச் சுட்டியது.
நாடகப் பட்டற்ை வகுப்பிலே ஒவ்வொரு குழுவின ரும் சேர்ந்து ஒரு விடயத்தைக் காட்சியாக்கும்போது ஜீவனும் வீனுவும் ஒரே குழுவில் வந்து அமைந்தால் பொதுலக விணுதான் அதை நெறிப்படுத்துவாள்.
வீணுவின் நினைவு ஜீவனுக்குள்ளே பூதகாரமாய் எழுந்து ஆடி!!து.
: Sagt ti, 26 a Ffio

Page 35
கோகிலா மகேந்திரன்
கிளைத்துவிழுந்து மாலை ஐந்து மணியளவில் வேலை பில் இருந்து திரும்பிய வீணுவை ஒரு விநாடி மென்மை யாகப் பார்த்தாள் அம்மா. அன்புகள் எல்லாவற்றி லும் தாய் அன்பு பெரியதுதான்! அதனுல்தான் அந்த மென்மையான பார்வை!
குழந்தை பபியைத் தன்னருகில் இருத்தி வைத்துக் கொண்டு தன் இளமைக்காலம் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள் அம்மா.
11 - 2 - 87
‘அப்ப கோவிந்தசாமிப்பிள்ளை என்றவர் பிரபல மான நடிகர். அவர் "மேக்அப்' அறைக்குள்ளே நுழைஞ்சு கொஞ்ச நேரம் "டிங்கினனே." எண்டு ஆலாபனம் செய்வார். சபையிலை இருக்கிற சனம் ஒண்டும் விளங்கா மேல் 'ஆ' வெண்டு கேட்டுக்கொண்டிருக்கும். கொஞ்சம் "மேக்அக்" முடி ஞ் சாப்பிறகு.பிடுங்கினனே. எண்டு பாடுவார். பேந்தும் ஒரு அரை மணித்தியாலம் பொறுத்து. மலையைப் பிடுங்கினனே என்ற பாட்டுக் கேக்கும். கடைசியிலை 'மேக்அப்"பும் முடியT அவர், அனுமான் மலையைப் பிடுங்கினனே 6
rண்டு பாடிக்கொண்டு மேடைக்குவர அரை
1ாசிச்சனம் நித்திரையாப்போடும். ... * *
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 55
அம்மாவின் காலத்தில் நாடகம் நடைபெறும் முறையை இப்படி அம்மா சொல்ல பபியும் பாப்பா வும் சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
'அம்மம்மா...இன்னுெண்டு கதை. அம்மம்மா’’ என்று அம்மாவின் நாடியைப் பிடித்துக்கொண்டு செல்லமாகக் கேட்டாள் பபி.
‘ஒருக்கா ஒரு நாடகத்தைப்பற்றி நோட்டீஸ் அடிச்சுவிட்டினம். அதிலை கடைசியிலே "கதிரை ஒரு ரூபா எண்டு அடிச்சினம். நாடகம் பார்க்கப்போன ஒருவர் நாடகம் முடியக் கதிரை எல்லாத்தையும் வண்டில் கொண்டுபோய் ஏத்தத் தொடங்கியிட்டா
TITLE,
‘என்னண்ணை ஏன் கதிரை ஏத்திறியள்?’ எண்டு
நாடகக்காரர் போய்க் கேட்க, ‘நான் கதிரை இவ் வளவும் வாங்கப்போறன். நல்ல மலிவான விலை
f* g ரூபா...' எண்டாராம் . அதுக்குப்பிறகு அவை நோட்
டீஸ் அடிக்கேக்கை கதிரையில் இருந்து பார்ப்பதற்கு ஒரு ரூபா எண்டு அடிப்பினமாம்"
அம்மா அடுத்த கதை சொல்லி முடித்துச் சிரிக்க பபியும் பாப்பாவும்கூடச் சேர்ந்து சிரிக்கிருர்கள்.
வீணு உடை மாற்றிக்கொண்டு தேநீர் வைக்கப் போனள். அம்மாவும் குசினிக்குள் வந்தாள்! ஒரு விநாடி சிந்திய மென்மையான பார்வை இப்போது மாறியிருந்தது.
தன் வழமையான முறையீடுகளைச் சொல்லத் தொடங்கினுள். வயது போய்விட்ட இயல்புதான்!
‘'எனக்கு இண்டைக்குப் பழையபடி கைகால் எல்
தூவானம் கவனம்

Page 36
56 கோகிலா மகேந்திரன்
லாம் நடுங்குது. என்னுலை சமைக்கவும் முடியேல்லை. எல்லாம் அப்பிடி அப்பிடியே கிடக்குது. அதுதான் நான் தேத்தண்ணியும் போடேல்லை."
வீணு இதற்குப் பதில் சொல்ல முதலே அம்மா அடுத்த முறைப்பாட்டிற்குத் தாவினுள்.
*உன்ரை பிள்ளையஸ் ரண்டும் என்னைப் படுத்திற பாடு...ஒண்டு கிணத்தடிக்கு ஓடுது எண்டு பின்னுலை போறதுக்கிடையிலை மற்றது கிளாசைப் போட்டு உடைச்சுப்போட்டு நிக்குது...!"
வீணு போட்டு முடித்த தேநீரைக் கோப்பைகளில் ஊற்றி எடுத்துச்சென்று குழந்தைகளிடம் கொடுத்து விட்டு வந்து நிலத்தில் குந்திக்கொண்டு அடுத்த பிரச்சினையைச் சொன்னுள் அம்மா.
*"அதுசரி..,ஹெலியிலை வந்து சடுபுடு எண்டு சுட்டுத்தள்ளுற நேரம். நான் என்னெண்டு இந்தக் குஞ்சு குருமானுகளைக் காப்பாத்திறது? நீ போடுவாய். உனக்கென்ன? இதுகளுக்கு ஒண்டு நடந்தால் பழி என்னிலை. கடவுளே மத்தியானம் நான் பட்டபாடு.'
இதையும் சொல்லி முடித்து மீண்டும் எழுந்து சென்று தனது மருந்துக் குளிகைகளையும் தேநீரையும் எடுத்துக்கொண்டு வந்து அடுத்த முறைப்பாட்டைச் சொல்ல அம்மா ஆயத்தமானுள்.
அநேகமாக இது தினமும் நடைபெறும் நிகழ்வு என்பதால் வீணு உணர்ச்சிவசப்படவில்லை.
அம்மாவுக்கு மனதில் நிறைவில்லை. வீணுவுக்கு பத்து வயதாக இருக்கையில் நல்ல பதவியிலிருந்த
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 57
அப்பா திடீரென ஒரு நாள் இதயநோய் தாக்கி மரண மானதில் இருந்தே அம்மா உளவியல் சமநிலையை இழந்துவிட்டிருந்தாள் என்று சொல்லலாம்.
அப்பா இருக்கும்போது அம்மா வெறும் பொம்மை தான்! வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பான சிந்தனைகள் தீர்மா னங்கள் யாவும் அப்பாவாலேயே எடுக்கப்படும். அப்பாவின் தீர்மானங்களை அப்படி அப்படியே நிறை வேற்றுகிற வெறும் ‘கட்டுப்பெட்டி அம்மாவாக இவள் இருந்தாள்.
பெண் விடுதலை பற்றி உரப்பாகச் சிந்திக்கிற வீணு போன்றவர்களுக்கு அம்மாவின் நிலைப்பாடு கசப்பாக இருக்கலாம். ஆணுல் அம்மாவைப் பொறுத்தவரை அது மிகச் சுலபமாக இருந்தது என்றே சொல்லவேண் டும். ‘மனத்தாக்கம் எதுவுமற்ற நிம்மதியான வாழ்வு,
பிள்ளைகளுக்கு வருத்தம் வரட்டும், பணப்பிரச்சினை உருவாகட்டும். அல்லது உலகமே அழியட்டும். , .அம்மா அதுபற்றிக் கவலைப்பட்டதே கிடையாது. எல்லாம் அப்பா சரியாகச் செய்துமுடிப்டார் என்று அம்மா நம்பினுள். ஆகவே தளர்நிலையில் *அமைதியும் மகிழ்வு’. மாக இருந்தாள்.
அப்பா இறந்தபின் அம்மாவினுல் "அட்ஜஸ்ட்” பண்ணமுடியவில்லை என்று சொல்லலாம்.
'இண்டைக்குக் காலமை என்ன சாப்பாடு சமைக்
கிறது." என்பது போன்ற சின்ன அலுவல்கள் முதல் 'வீணுவுக்கு எப்படிச் சீதனம் சேர்க்கிறது?" * 'வீணுவுக்கு எங்கை மாப்பிள்ளை தேடுறது?' '' வீண
வின் தம்பி கோபியை என்னத்துக்குப் படிப்பிக்கிறது?’’
தூவானம் கவனம்

Page 37
58 கோகிலா மகேந்திரன்
போன்ற பெரிய விடயங்கள் வரை எல்லாமே அம்மா வுக்குத் தீர்க்கமுடியாத சிக்கல்களாய் மனதை அரிக்கத் தொடங்கின.
ஆனல் அந்தச் சிக்கல்களில் பெரியவை பல அம்மா சற்றும் எதிர்பார்க்காமலே தாமாக விடுவிக்கப்பட்டன்.
வீணு ஜீவனைக் காதலித்துச் சீதனம் எதுவும் இன் றியே திருமணம் செய்துகொண்டாள். 'கோபியை எப்படிப் படிப்பிக்கிறது?’ என்று சிந்திப்பதற்கான சிரமத்தை வைக்காமலே அவன் ஏ.எல்.படித்துக்கொண்டி ருக்கும்போதே பாதையை மாற்றிக்கொண்டான்.
ஜீவன் வெளிநாடு போனபின் வீணுவின் பிள்ளைகள் இருவரையும் பகல் நேரத்தில் பார்த்துக்கொள்ளவேண் டிய பொறுப்பும், பாப்பாவை நேசரிக்குக் கூட்டிக் கொண்டு போய்த் திரும்ப அழைத்து வரும் பொறுப்புப் அம்மாவின் தலையில் விழுந்தன. அம்மாவினல் அதைச் சீராகச் செய்யவும் முடியவில்லை. செய்யாமல் விடவும் முடியவில்லை.
வீணு விரும்பியிருந்தால் ஒரு வேலைக்காரனையோ அல்லது வேலைக்காரியையோ அமர்த்தியிருக்கலாம். ஆனல் அம்மா புறுபுறுத்தாலும் கூட, சின்னப்பிள்ளைகளை நம்பி ஒப்படைப்பதற்கு முன்பின் தெரியாத ஒரு புது முகத்தை விட அம்மா திறம் என்றே வீணு நம்பினுள்.
ஆனல் அம்மாவின் கஷ்டங்களும் மனுேநிலைகளும் வயதினுல்வரும் தொல்லைகளும் வீணுவுக்குப் புரியும். அதனல் அம்மா எவ்வளவு சத்தம் போட்டாலும் வீணு எதுவும் கதைப்பதில்லை. தானே கொட்டி ஒயட்டும் என்று விட்டு விடுவாள்.
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 59
இன்றும் அப்படியே அம்மா கொட்டியவற்றை மெளனமாக உள்வாங்கிக் கொண்டு பபியையும் பாப் பாவையும் அழைத்துக்கொண்டு குளிர் நிழலை ஈகின்ற தென்னை மரங்களின் கீழே சாய்கதிரைகளைப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள்.
காலையில் வந்திருந்த ஜீவனின் கடிதத்தை அம்மா கொண்டு வந்து கொடுத்தாள்.
'அப்பாவின்ரை லெட்டர் வந்திருக்குப் பாப்பா...' * உடைச்சு வாசியுங்கோ அம்மா’’ . . . கடிதத்தை உடைத்துப் படித்தாள். 'நீங்கள் அதிகமாய் நினைப்பதுபோல் சவூதி முழுவ தும் பாலைவனம் அல்ல. இங்கு அப்பிள் , பீற்றுட்போன்ற மாங்கள் நன்கு வளரும் , யூலை, ஆகஸ்ட் மாதங்களில் வீசும் அனல் காற்று மட்டுந்தான் ஒரு பாலைவனத்தில் வீசுவது போலச் சூடாக இருக்கும்.'
* 'இங்கும் ஈழவிடுதலைக்காகக் காசு சேர்க்கிருர்கள். காசு சேர்த்துக்கொடுக்கும் முக்கிய வேலையை என் அறை நண்பன் மோகனே செய்கிருன். நானும் இம்மா தம் ஒரு கணிசமான தொகை இதற்காகக் கொடுத்தேன்.
என்னுடைய “பாஸ் போட்டை கம்பனி வாங்கி வைத்திருக்கிறது. ஆகவே நான் நினைத்தவுடன் நாடு திரும்பமுடியாது' போன்ற விடயங்கள் கடிதத்தில் இருந்தன. அந்தக் கடிதம் சில தகவல்களைத் தருகின்ற ஒரு புதினப் பத்திரிகைபோல் இருந்ததேயன்றி ஒரு கணவனிடமிருந்து மனைவிக்கு அல்லது ஒரு அன்புத் தந்தையிடமிருந்து பிள்ளைகளுக்கு எழுதப்பட்ட உணர்வு பூர்வமான கடிதமாய் அமையாதது வீணுவுக்குப் பெரும் ஏமாற்றமாய் இருந்தது.
தூவானம் கவனம்

Page 38
60 கோகிலா மகேந்திரன்
அவளை அவன் காதலித்த வேளைகளில் 'மேற்கு வான நங்கையின் பஞ்சுப் பாதங்களின் எழிலார்ந்த விரல்கள் மீது கதிரவனின் செம் பஞ்சுக் குழம்பு நீந்தி நிற்கும் வேளையில் நாம் சந்திப்போம் வீணு” 'நீலமணிப் புருவத்தின் கீழ் நெடு வேலும் வாளுமாய் அமைந்த உன் நீள்விழிகள் என்னைக் குத்திப் பரிதவிக்க வைத்துவிட்டனவே...' என்றெல்லாம் கவிதை போல் எழுதிய ஜீவன். . . இப்போது பத்திரிகை எழுதுகிருன்.
கடிதத்தை மடித்து உறையில் இட்டாள். அந்தி சாயும் வேளையில் நீலவானம் மப்பும் மந்தா ரமுமாய்த் தொங்கித் துயின்றது.
'அம்மா. அணில். அம்மா. அணில் அங்கை. பபி தென்னை மரத்தின் மேலிருந்த அணிலைக் கண்டு விட்டாள்.
'அணில் என்ன செய்யுது பபி?" 'இளநி குடிக்குது.' **ஆ. இளநி குடிக்குது... என்ன? வேறை என்ன இருக்குது தென்னை மரத்திலை?
'வண்டுகள் கணக்க இருக்குது அம்மா...' என்ருள் பாப்பா.
**வண்டுகள் என்ன செய்யுது?’ * 'பாட்டுப்பாடுது...”* பபி இப்படிச் சொன்னவுடன் வீணுவுக்குத் தாள் அண்மையில் வாசித்த காரை சுந்தரம்பிள்ளை அவர்களின் கவிதை வரிகள் சில நினைவு வந்தன.
துவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 61
* சரி அப்ப. . . நாங்களும் பாடுவம்...' * “ஓம் அம்மா. . . பாடுவம்...”* ‘'இளநீரை உண்கின்ற அணில் தாளம் போடும். ‘இனிதானவரிவண்டிராகங்கள் பாடும்...' நல்ல மோகன ராகத்தில் இப்பாடலை அமைத்து வீணு சொல்லிக்கொடுக்க பபியும் பாப்பாவும் குதூக வித்துக் கைதட்டிப் பாடிஞர்கள்.
சிறிதுநேரம் போனவுடன் பபிக்கு அலுத்துவிட்டது.
'அம்மா கதை சொல்லுங்கோ. கதை. அம் மம்மா சொன்ன மாதிரிக்கதை' குழந்தைகள் பொது வில் எவ்வளவு விரைவாக ஒரு நிகழ்வுடன் ஒன்றி விடுகிமுர்களோ அவ்வளவு விரைவாக அதிலிருந்து விடுபட்டும் விடுவார்கள்.
'சரி நானும் உங்கடை அம்மம்மா காலத்திலே நடந்த ஒரு நாடகக் கதை சொல்லுறன்...' என்ருள் வீணு.
அவர்கள் இருவரும் சந்தோஷமாக ஆமோதித்தனர்.
‘அப்ப நாடக நடிகர்கள் ஒவ்வொரு ஆக்கள் ஒவ்வொரு ஊரிலை இருந்து வருவினமாம். அரிச்சந் திரா நாடகம் எண்டால் அரிச்சந்திரன நடிக்கிறவர் அச்சுவேலியிலை இருந்து வருவார். சந்திரமதிக்கு நடிக் கிறவர் மாணிப்பாயிலை இருந்து வருவார். ஒத்திகை பாக்காமலே நடிப்பினம். அப்பவிரும்பினபடி வசனங் கள் சொல்லலாம்...”*
‘அந்தக் காலத்திலை சாதித்தடிப்புகளும் கனக்க... சிலவேளை மேடையிலை வைச்சே சாதியைச் சொல்லிச்
தூவானம் கவனம்

Page 39
62 கோகிலா மகேந்திரன்
சண்டை பிடிப்பினம். வேடிக்கையா இருக்கும்.'
"எப்பிடி என்று பாப்பா கேட்கும்வரை யோசித்துக் கொண் டிருந்த பபி.
'சாதி எண்டால்...?" என்றுகேட்டாள்.
பபியின் கேள்விக்குப் பதில் சொல்லாமலே வீணு தொடர்ந்தாள்.
'ஒருக்கா ஒரு நடிகர் மற்றவருக்கு வசனம் பேசி ஞராம். நானெல்லே ராத்திரி ஒரு தொன்னை தச் சன் எண்டு. பின்னை மற்றவர் விடுவரே,. அவர் சொன்னுராம். உன்ரை கைக்குள சித்திரம் எனக்குத் தெரியுந்தானே. . . ஒ. எண்டு. . .'
சொல்லிவிட்டு வீணு மெதுவாகச் சிரித்தாள்.
பின்னர் ‘எப்பிடி இந்தக் கதை?' என்று கேட் டாள். ஆணுல் இக் கதையின் ரசனை குழந்தைகளுக்கு அவ்வளவு பிடிபட்டதாய்த் தெரியவில்லை.
'அம்மம்மா சொன்னதுதான் நல்ல கதை' என் முர்கள் அவர்கள். பபிக்கும் கதைகேட்டு அலுத்துப் போய் விட்டது.
"அம்மா கடல் பார்க்கப்போவம். அம்மா கடல் பார்க்க...' என்று கரைச்சல் கொடுத்தாள்.
கீரிமலைக் கடற்கரைக்குப் போகின்ற சூழ்நிலை இப் போது இல்லை என்பது பபிக்குப் புரியாமல் இருக்க லாம். நேற்று மாதகல் கடற்கரைப் பக்கம் ஹெலி தாழப் பறந்து சுட்டிருக்கிறது. ஆணுலும் குழந்தைகள் எந்நேரமும் வீட்டில் அடைபட்டுக் கிடப்பதை வெறுக்
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 63
கிருர்கள் என்றும் வெளியே போய்வர விரும்புகிருர்கள் என்றும் வீணு உணர்ந்தாள்,
* ‘சரி வெளிக்கிடுங்கோ. கொஞ்சநேரம் எங்கை பும் போய் உலாத்திக்கொண்டு வருவம்...' என்று கூறி அவர்களுக்கு உடை மாற்றித்தானும் உடை மாற்றிக்கொண்டு புறப்பட்டாள்.
தான் கற்ற கல்லூரிக்கே குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு போனள். கறுப்புத்தார் ரோட்டில் ஆறு பாதச்சுவடுகள் பதிந்து நடந்தன.
* 'இதுதான் அம்மா படிச்ச பள்ளிக்கூடம், பபி பாப்பாவும் இங்கைதான் படிக்கிறது. என்ன சரி தானே? " என்று அறிமுகம் செய்து உள்ளே போஞள்.
சென்றவருடம் விளையாட்டுப் போட்டிக்கு வந்து இடையில் ஒடியபின் இன்றுதான் அவள் இக் கல்லூரி யின் உள்ளே வருகிருள்.
அந்த நினைவுகள்...!
எப்போதுமே இந்த மதனராஜாவிடம் இவளுக்கு எந்தவிதமான மரியாதையும் கிடையாது. கல்லூரியில் எப்போதும் அவரைச் சுற்றி ஒரு மாணவியர் கூட்டம் நிற்கும். அவர்களோடு,
‘'என்னடி. உன்னை நேற்றுச் சந்தியிலை கண்டன். என்ன சுருட்டே வாங்கினணி கடையிலை.?' என்பது போல் செல்லம் கொட்டியபடி நிற்கும் அவர்!
இவரது பலவீனத்தை நன்கு பயன் படுத்திக் கொள்ள விரும்பும் சில மாணவியர், அவர் ஏதும்
தூவானம் கவனம்

Page 40
64 கோகிலா மகேந்திரன்
சொன்னவுடன், வாயை நீட்டிக் கண்ணை உருட்டி, நெளித்துச் சிரித்து,
'சேருக்கு ஆகலும்...' என்று சிணுங்குவதைப் பார்க்க இவளுக்கு எப்போதுமே கோபம் மிக உயர்
வுப் புள்ளிக்கு ஏறும்.
படிக்கும் காலத்திலேயே அவரைச் சுற்றி நிற்கும் கூட்டத்தில் இவள் நிற்கமாட்டாள்.
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன்
வகுப்பில் இவளுக்கு மதனராஜா மாஸ் . ان له . في டர் தமிழ் கற்பித்தபோது ஒரு நாள் இவளது கட்டு ரைக் கொப்பியைத் திருத்திவிட்டுத் திருப்பிக் கொடுக் கும்போது இவளது கையில் அவரது கைபட்டது தற் செயல் நிகழ்வாக இவளுக்குத் தோன்றவில்லை.
கண்களிலும் முகத்திலும் இவளுக்கு அதீத கோபம் தெரிந்ததை அவர் அன்றே கவனித்திருக்கலாம். அதன் பிறகு கல்லூரி வாழ்வுக்காலத்தில் எப்போதுமே வீன வுக்கும் 10தனராஜா வுக்கும் நல்லுறவு இருந்ததென்று Ժռ.00ւքւգեւ1 frg/,
'அரசன் கூடக் கலைஞனுக்கு வெத்திலை மடிச்சுக் குடுக்கிறபண்பு பாண்டிய மன்னன் காலத்திலே தமிழ் நாட்டிலே இருந்தது. திரும்பவும் அந்த நிலையை நாங் கள் வரச் செய்ய வேணும்..' என்று ஒரு நாள் ஜீவன் சொன்னபோது இவள் மதனராஜா மாஸ்டரையே நினைத்துக் கொண்டாள்.
"'கலைஞன் மதனராஜா மாஸ்டரைப்போலை இருந்தா அரசன் வெத்திலை மடிச்சுக் குடுக்கிறதுக்குப் ” பதிலா பொலிடோல் போட்டு மடிச்சுக் குடுக்க வேணும். ' என்று இவள் சொன்ன 7 போது,
தூவானம் கவனம்

Page 41
66 கோகிலா மகேந்திரன்
**உங்கடை மனம் கொடுமையான மனம்' என்ருன் ஜீவன். அப்படியானல் ஜீவனுக்கும் மதனராஜா மாஸ் டர் மீது ஒரு பரிதாப உணர்வு இருந்திருக்கின்றது. ஏன்?
ஒரு மாணவன் வெறும் காற்சட்டையுடன் உடல் முழுவம் கறுப்புப் பூசி, அதன் மேல் வெள்ளைப் * பெயின்ற் இனல் முள்ளுக்கம்பி போன்ற சதுரக் கோடுகளை வரைந்து கொண்டு வந்தான்.
இரு கைகளையும் பக்கத்தில் அசையாது வைத்துக் கொண்டு முகத்தையும் அசைக்காமல் அவன் மெது வாக நடந்து வந்த முறை. . . இந்த ஒப்பனையுடன் சேர்த்துப்பார்க்கையில் எந்தவித சுதந்திரமுமற்று ஏதோ ஒரு சிறையில் அடைபட்டுப் போன மனிதன் என்பதைத் தெளிவாக வெளிக்காட்டிற்று.
அன்றைய ஒவ்வொரு தமிழனின் நிலையையும் அது மிக அற்புதமாகச் சித்தரித்ததால் அந்த மாணவன் பார் வையாளர் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தான்.
இவனுக்கு அருகில் இன்னெருவன் உடலில் எலும் புகள் வெளித் தெரியும் பகுதிகளை எல்லாம் வெள்ளை மையினல் பூசி, ஏறத்தாள ஒரு எலும்புக்கூடு போலத் தோற்றமளிக்க வந்தான். அவனது உடல் வறுமையை. பொருளாதார வறுமையை - உள வறுமையை எல்லாம் அந்த எலும்புக்கூடு தெளிவாக உணர்த்துவது போலி ருந்தது.
இயல்பான ஒப்பனைகள் எவ்வளவு சிறப்பாக அமைந்த போதிலும்கூட இந்த இரு குறியீட்டு ஒப் பனையாளர்களும் சுலபமாகப் பரிசைத்தட்டிக்கொண்டு போகப் போகிருர்கள் என மனதில் நினைத்த வீணு,
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 67
இவர்களைப் பற்றிய சுவாரசியமான வர்ணனைகளை அறி விப்புச் செய்யலாம் என எண்ணி ஒலி வாங்கியை நோக்கித் திரும்பியபோது தான்,
ஒரு ஹெலிகொப்டர் திடீரென வடக்குப் புறமிருந்து பேரிரைச்சலுடன் வந்தது. அது மைதானத்தைக் கடந்து செல்லும் என அவள் எதிர் பார்த்திருக்கை யில் தாழப் பதிந்து பறந்து வந்தது. திடீரெனப் படபடவெனச் சுடத் தொடங்கியது,
மைதானத்தில் நின்ற மாணவர் ஆசிரியர் பெற் ருேர் எந்தப்பக்கம் ஒடுவது என்று தெரியாமல் தலை தெறிக்கத் திசை கெட்டு ஓடினர்கள்.
அவன் மைதானத்தில் ஏதோ பயிற்சி நடைபெறு வதாய் நினைத்துப் பயந்திருப்பான். பாம்பும் பயந்து தான் கடிக்கிறதாம்!
வீணுவும் வீட்டை நோக்கி ஓடினள், தலைக்கு மேலே சன்னங்கள் பறந்தன. அவள் தொடர்ந்து ஒடினுள்! அன்று ஹெலியின் சூடு பட்டு மூன்று கல்லூரி மாணவிகள் மரணித்தது மறக்கமுடியாத நிகழ்வு!
அதன் பிறகு இன்றுதான் கல்லூரிக்குள் வருகிருள்! கல்லூரியின் உள்ளே பல மாற்றங்கள் தெரிந்தன. பாடசாலை நேரத்தில் ப்டைகள் ஹெலிகொப்டர் மூலம் வந்து மைதானத்தில் இறங்கிப் பாடசாலையில்
நிற்கும்பல நூற்றுக்கணக்கான பிள்ளைகளையும் ஆசிரியர் களையும் பணயம் வைத்துக்கொண்டு மினிமுகாங்களை
துரங்ானம் கவனம்

Page 42
68 கோகிலா மகேந்திரன்
அமைக்க முயற்சிக்கலாம் என்ற அச்சம் காரணமாகப் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
முக்கியமாக வகுப்பறைகளுக்கு முன்னுல் திறந்த பதுங்கு குழிகள் வெட்டப்பட்டிருந்தன. சில பதுங்கு குழிகள் ஆழம் குறைவாய் இருந்தன. சில மிக ஆழ மாக இருந்தன. ஆழம் குறைந்த பதுங்கு குழிகளின் முன்னுல் இருந்த வகுப்புகள் பாலர் வகுப்புகளாய் இருக்க வேண்டும்.
'இந்தப்பக்கம் தான் நீங்கள் முதல் படிக்கிற வகுப்புகள்...' என்று பபிக்கும் பாப்பாவுக்கும் சுட்டி ஞள் வீணு, சில குழிகள் "ரி’ வடிவில் இருந்தன. சில “எல்’ வடிவில் இருந்தன. இன்னும் சில டபிள்யூ வடி வில் அமைந்திருந்தன. ஒன்றிரண்டு மூடப்பட்ட குழிக ளாயும் இருந்தன.
மைதானத்தின் நடுவில் விழுந்து வெடித்துச் சித றும் ஷெல் துண்டுகளால் காயம் அடையும் மாணவர் எண்ணிக்கையை இத்தகைய குழிகள் மிகவும் குறைத்து விடும் என்று வீணுவிற்குப் புரிந்தது.
'நாங்களும் இப்பிடி வீட்டிலை கட்டாயம் வெட்ட வேணும் என்னம்மா’’? என்ருள் பாப்பா.
பபிக்கு இவை இன்னும் தெளிவாகப் புரியாத வயது! வீட்டில் பதுங்கு குழி ஒன்று நிச்சயம் அம்ைக் கத்தான் வேண்டும். இப்போது ஓரிரு வாரங்களாய்
இரவில் படும் "ஷெல் அடிச்சித்திரவதையை இன் னும் தொடர்ந்து பல காலம் அநுபவிக்கமுடியாது.
ஆனல் பதுங்கு குழி வெட்டுவது யார்?
தூவானம் as ant før if

கோகிலா மகேந்திரன் 69
நேற்றும்கூட. காரிருள் உலகைக் கெளவிக் கொண்டவுடன் தொடங்கிய ஷெல் அடிகள் விடிய விடிய நடக்கும் பழைய கால நாட்டுக்கூத்துகள் போலவே இரவிரவாய்த் தொடர்ந்தன.
'அந்தக்காலத்திலை கீரிமலைச் சிவன்கோயில் மேற்கு வீதியிலை இரவிரவாக வசந்தன் கூத்து நடக்குமாம். முன்னுக்குச் சின்னச்சின்ன நடிகர் மாரெல்லாம் வந்து நடிக்சுப் போகும்வரைக்கும் சனம் பாயைப் போட்டு நல்ல நித்திரை கொள்ளுமாம்"
‘பெரிய நடிகர்கணேசையர் வாற காட்சி வந்த உடனை அவருக்குச் சொல்லுவினமாம். அவர் அதுக் கும் பிறகு இராகஆலாபனை செய்து கொண்டு 'மேக் அப்" அறைக்குப் போவாராம். அவர் இராகம் பாடிக் கொண்டே இருக்க அவருக்கு "மேக் அப் நடக்குமாம், ஒரு அரை மணித்தியாலம் போக அவரின் ரை ஆலாப னையும் முடிய "மேக் அப்" பும் முடியுமாம். அதுக்குப் பிறகு அவர் பெரியதொரு சத்தத்திலை 'வந்தேனே." எண்டு பாடிக்கொண்டு மேடை அதிர வரச்சனமெல் லாம் முழிச்சிடுமாம். தேத்தண்ணி குடிக்கக் கடைக்குப் பேtrணவையெல்லாம் திரும்பி வந்திடுவினமாம்."
அம்மா வீணுவுக்கும் கூட இவள் சிறுகுழந்தை யாய் இருக்கையில் இப்படிக் கதைகள் சொல்லியிருக்கி ருள்.
‘'இப்போது அதேமாதிரித் தூரத்தில் கேட்கும் மெல்லிய ஷெல் அடிகளுக்கெல்லாம் நித்திரை செய்து விட்டு பக்கத்தில் ஒரு சத்தம் பெரிதாகக் கேட்டவுடன் துள்ளி எழுந்து குந்திக் கொள்ளும் பழக்கம் எங் களுக்கு வந்து விட்டது. இது முன்பு கூத்துப் பார்த்த
தூவானம் கவனம்

Page 43
70 கோகிலா மகேந்திரன்
பழக்கந்தான். ஏனெனில் மனித செயற்பாடுகளுக்கும் பரம்பரை இயல்புகளுக்கும் நிறையத்தொடர்பு உண்டு’ இப்படியெல்லாம் விசித்திரமாக நினைத்துக் கொண்டாள் வீணு. வீணுசென்றவருடம் விளையாட்டுப் போட்டி நடை பெற்ற அந்தப்பெரிய மைதானத்தைப் பார்த்தாள்.
மைதானம் முழுவதும் மூங்கில் மரங்கள் நாட்டப் பட்டிருந்தன. இடையிடையே பெரிய பனங்குற்றிகளும் தென்னங்குற்றிகளும் செங்குத்தாக நிறுத்தி நாட்டப் பட்டிருந்தன். மேலே ஹெலியில் பறக்கும் போது *யாழ்ப்பாணத்திலை இப்ப ஒரு பள்ளிக்கூடத்திலையும் மைதானம் இல்லாமல் செய்து போட்டாங்கள்.” என்று அவர்கள் நினைப்பார்கள் என்று நினைக்க வீணு வுக்குச் சிரிப்பு வந்தது.
பொம்பர் விமான ஒட்டிகளும் 'ஹெலிசொப்டர். ஒட்டிகளும் தமக்குள் கதைப்பதை கீழே இருந்து ‘ராப்' பண்ணி எஃப். எம் மீற்றரில் கேட்கலாமென்று சில மாணவர்கள் சொல்ல அவள் கேள்விப்பட்டாள். அப்படி ஒருநாள் கேட்டுப் பார்க்க வேண்டும். என்றும் நினைத்தாள்.
தம்பி கோபி இருந்தால் இவையெல்லாவற்றையும் உடனுக்குடன் செய்வான்.
இவ்வருடம் இந்த மைதானப் பிரச்சினையால் ஒரு பாடசாலையிலும் விளையாட்டுப் போட்டி நடைபெருது என நினைத்தாள். உடற்பயிற்சிப் போட்டிகளும் இது வரை நடக்கவில்லை என்பது நினைவு வந்தது.
'போனவருடம் விளையாட்டுப் போட்டி நடக்கத் தானே இஞ்சை ஏதோ பயிற்சி நடக்கெண்டு நினைச்சுச் சுட்டவை. இந்த வருடம் ஒரு இடமும் விளையாட்டுப்
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 71
போட்டிநடக்கேல்லை எண்டால் எங்கட உடல் வலி மையை வளர்க்கிற கன விஷயங்களை நிப்பாட்டிப் போட் டம் எண்டதிலை அவைக்கும் ஒரு திருப்தி வரலாம்.”
'உண்மையாப் பெடியங்கள் பயிற்சி எடுக்கிற இடங்களிலை ஹெலி ஒருநாளும் சுட்டதாய்த் தெரி யேல்லை. அவர்களுக்கென்ன வாண விளையாட்டு மாதிரி ஆரோ குடுத்த வெடியள்ை கண்டபடி சுட்டுத்தள்ள வேண்டியதுதானே.”
*மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் எண்டதுபோலை அவங்களுக்குக் கண்டதெல்லாம் பூத மாக்கிடக்கு இப்ப, றேட்டுகளிலை அம்புலன்ஸ் வண்டி யளைக் கண்டா பெடியள்தான் காய்ப்பட்டுப் போ முன்கள் எண்டு நினைச்சு, கலைச்சுக்கலைச்சுச் சுட்டு பெற் ருேல் பொம்பும்போட்டு எரிப்பினம். ஏதோ யாழ்ப் பாணத்திலை வேறை ஒரு நோயாளிகளும் அம்புலன்சிலை போறதில்லை எண்ட மாதிரி...'
**ஆஸ்பத்திரி எதையும் கண்டா (அதுகும் எல்லா ஆஸ்பத்திரிக் கூரையிலும் இப்ப "றெட்குருேஸ்’ போ டிருக்கிறதால்ை பார்த்த உடனை ஆஸ்பத்திரி எண்டு @մ ւգ, வாத்தெரியும்) அதுக்குள்ள காயப்பட்ட பொடியள் தான் படுத்திருக்கிருங்கள் எண்டு நினைச்சு. நெருப்பு ஷெல்அடி நடக்கும். ஏதோ யாழ்ப்பாணத்திலை வேறை ஒருத்தருக்கும் வருத்தம் வாறத்தில்லை. வரக்கூடாது எண்ட மாதிரி.”
'கொழும்புக்குப் போறவாற வழியிலை உடம்பில்ை காயம் வந்து மாறின அடையாளத்தோடை ஓராளைக் கண்டால் அவரின் ரை கதி அதோ கதி தான். இஞ்சை ஒருத்தருக்கும் முந்தி ஒருநாளும் ஒரு காயமும் வந்து
தூவானம் கவனம்

Page 44
72 கோகிலா மகேந்திரன்
மாறியிருக்க முடியாது எண்ட மாதிரி..."
மேல்மாடியின் கீழ் தெற்குப் பக்கமாகக் கன்ரீனுக்கு அருகில் உள்ள வகுப்பறைக்கு அருகில் வந்த போது வீணு தனக்குத் தானே சொல்லிக்கொண்டு வந்த சிந்தனை தொடர்ச் சங்கிலி அறுந்தது.
'இதுதான் நான்கடைசிவருடம் ஏ. எல். படிச்ச வகுப்பறை' என்று பபிக்கும் பாப்பாவுக்கும் ஒரு வகுப்பறையைக் காட்டினுள்,
'அப்ப ஆர் உங்கடை கிளாஸ் ரீச்சர்?’ பாப்பா கேட்டாள்.
"அப்ப நாலுபேர் . நாலுபாடம் படிப்பிச்சவை. அதில் ஃபிசிக்ஸ் படிப்பிச்சவர் நடராஜா மாஸ்ரர் எண்டு ஒருத்தர். அவர்தான் கிளாஸ் ரீச்சர்.” என்ருள் வீணு.
நடராஜா மாஸ்ரர் பற்றி மீதியாக மனதில் வந்த எண்ணங்களைப் பிள்ளைகளிடம் சொல்லவில்லே.
அப்போது எஸ்.எஸ். நவரத்தினம் தான் அதிபர் பிரின்சிப்பல்" என்ற சொல் குடாநாட்டில் சிறப்பா அவரைத்தான் குறிக்கும். அந்த அளவுக்கு நிர்வாகத் திறமை மிக்கவர். பாடசாலை வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருந்தவர்.
"பிரின்சிப்பல்" ஒருநாள் வகுப்பிற்குவந்தார். சோத னைக்கு இன்னும் சில வாரங்களே இருந்தன.
"எப்பிடி? எல்லாப் பாடமும் போர்ஷன் முடிஞ் சுதா? சோதினைக்கு எல்லாரும் ஆயத்தமோ?’ என்று கேட்டார்”
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 73
வீணுதான் அப்போது ‘மொனிற்றர்.” துடுக்கான பயந்த சுபாவமற்ற மாணவியுந்தான். அவள் துணிந்து எழுந்தாள்.
‘எல்லாப் பாடமும் ஆயத்தம் சேர் ஃபிசிக்ஸ் தவிர...” என்ருள்.
'ஏன் ஃபிசிக்ஸ் ஆயத்தமில்லை?” அதிபர் ஆங்கி லத்தில் கேட்டார்.
'நடராஜா மாஸ்டர் போர்ஷன் முடிக்கேல்லை".’ அதிபரின் முகம் திடீரென மாறியது.
"ஏன் முடிக்கேல்லை? இரண்டு வருஷமா என்ன செய்தனிங்கள்?"
அந்தக் காலத்தில் 'பிறைவேற் ரியூசன்’ எடுக்கும் வழக்கமும் இல்லை. எந்த ஒரு பாடத்திற்கும் மாண வர்கள் முற்முகக் கல்லூரி ஆசிரியர்களை நம்பியே இருப்பர். அதிபரிடம் உண்மையைக் கூறினல் அடுத்த வருட மாணவர்களுக்காவது விடிவு கிடைக்கும் என நம்பிய வீணு,
"அவர் அதிகமா வகுப்புக்கு வாறFல்லை. வந்தா லும் ஊர்ப்புதினம் கதைக்கிறதில்ை நேரம் போயி டும்.**** என்று சொல்லிவிட்டாள்.
அடுத்தநாள் நடராசா மாஸ்டர் உருத்திர மூர்த்தி அவதாரமெடுத்து - அவதாரமெடுத்தென்ன - உருத்திர மூர்த்தியாகவே மாறி வகுப்பிற்குள் வேகமாய் நுழைந் தார்.
“ ‘நான் வகுப்புக்கு வாறேல்லையெண்டு ஆர் பிரின் சிப்பலிட்டைச் சொன்னது?”
தூவானம் கவனம்

Page 45
74 கோகிலா மகேந்திரன்
மாஸ்ரரின் உடல் முழுவதும் மயிர்க்கால்கள் குத் திட்டு நின்றன. வீணு நன்முகவே பயந்து விட்டாள். பயத்தில்ை உடல் நடுங்கியது, வீணுவுக்கு மட்டுமல்ல! வகுப்பில் எல்லாருக்குந் தான். ஆணுல் ஒருவரும் வாய் திறக்கவில்லை. அவர் மீண்டும் உறுமினர்.
‘என்ன.. ஆர் சொன்னது? எல்லாக் கழுதைய ளும் பேசாமல் இருந்தால் கண்டுபிடிக்க மாட்டன் எண்டு நினையாதையுங்கோ. எனக்கு ஆளைத்தெரியும். அந்தாள் உண்மை சொல்லுதோ எண்டு பார்க்கத் தான் கேக்கிறன்.""
அவரது கண்கள் கொவ்வைப்பழமாகச் சிவந்துவிட் டன! குடியினல் வழமையாகவே சிவந்திருக்கும் கண் கள் இன்று குடியும், கோபமும் இணைந்துவிட்டால்...?
அதிபர் போய் இவரிடம் வீணுதான் சொன்னது என்று சொல்லிப் போட்டார் போலிருக்கிறதே விசர் அதிபர்!
அப்படித்தான் தற்செயலாக அவருக்கு இப்போது யார் என்று உண்மையில் தெரியாவிட்டாலும் வகுப்பு மாணவர்கள் ஒருவரும் ஒருபோதும் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள் என்பதற்குப் பூரண உத்தரவா தம் இல்லை.
ஆகவே வீணு பதுங்கிப் பதுங்கித் தயங்கித் தயங்கி மெதுவாக எழுந்தாள்.
'ஒகோ! நீதானு?. நான் நினைச்சனன். உனக் குத்தான் இவ்வளவு திமிர் இருக்கு எண்டு. அது சரியாப் போச்சு. ஏதோ பெரிய கெட்டிக்காறி எண்ட நினைப்பு அதால்ை வந்தகொழுப்பு.’
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 75
அவர் ஏதோவெல்லாம் பேசினர். அதைவிட அவர் அவளை அடித்திருந்தால் ஒருவேளை அது பற்றி இப் போது மறந்திருப்பாள். இது ஒருபோதும் மறக்க முடியாத வடுவாக மனதின் ஆழத்தில் பதிந்து விட்டது.
இதையெல்லாம் பபி, பாப்பாவிடம் கூறினுல்...?
ஒருநாள் கூறத்தான் வேண்டும். இப்படியும் ஆசிரி யர்கள் இருந்தார்கள், இருக்கிறர்கள், இருப்பார்கள் என்று அவர்கள் நிச்சயம் அறியத் தான் வேண்டும். ஆனல். இப்போது வேண்டாம்.தக்க வயது வரட் டும்.
மீண்டும் ஒருமுறை விளையாட்டு மைதானத்தை மூவரும் சுற்றி வந்தனர்.
'இதுதான் பள்ளிக்கூடக் கோயில், இங்கை பூஜை பண்ணுகிற குருக்களுக்குத் தான் அண்டைக்கு ஷெல் விழுந்தது...”*
வீணு ஒவ்வொன்முகச் சொல்லிக்கொண்டு வந் தாள்.
திடீரென ஒருநினைவு !
து வானம் கவனம்

Page 46
கோகிலா மகேந்திரன்
அதிகாலையில் வசந்தகாலக்குயில் ஒன்று நீண்ட நேரமாகக் கூவுவதுகேட்டே கண்விழித்தாள் வீணு. அது ஏன் இவ்வளவு நேரமாய்க் கூவுகிறது? எதிர்ப் பாலைக்கவர்ந்திழுக்கவா? உடலில் எஞ்சிய சக்தியை வெளியிடவா? அல்லது தனது ஆட்சிக்குட்பட்ட பிர தேசத்தை வழமைபோல உறுதிப்படுத்திக்கொள்ளவா? வெகுநேரம் இதைப்பற்றிச் சிந்தித்தபடியே பாயில் கிடந்தாள்.
இன்று வேலைக்குப் போவதில்லை என்ற முடிவினுல் ஏற்பட்ட சோம்பல் என்றும் கூறலாம்.
அம்மாவைப்போல். வெறும் அடிமை வாழ்வு வாழமுடிந்திருந்தால் எவ்வளவு இலகுவாக இருந்திருக் கும் அந்த இலகுவான வாழ்வை ஏன் ஏற்றுக்கொள்ள உள்மனம் மறுக்கிறது?
இரவு நேரத்தில் காய்ந்துபோன துவாய் ஒன்று காற்றில் படபடவென ஆடும் சத்தம்கூட மனதில் வேதனை செய்கிறது.
யாய் நிற்கும் சமுதாயம் இதைப்போன்ற
விடிவே வேண்டும் என்று விடாப்பிடி 8 JG) கஷ்டங்களைத் தாங்கவேண்டியது
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 77
தான். ஆனுல் இந்த வேதனை தாங்கமுடியாத எல் லைக்கு வந்துவிட்டால்...”*
இதன் தாங்கக்கூடிய அதிஉயர்புள்ளி எங்கே? அவள் மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தாள். முதல்நாள் இரவு கூட. வீணுவின் மடியில் மெதுவாக உறங்கும்நிலைக்கு வந் திருந்த பபி ஷெல் சத்தம் ஒன்று கேட்டுத் துடித் துப் பதறி எழுந்து அழத்தொடங்கினுள்!
17 - 4 - 87
பதுங்குகுழி இன்னும் வெட்டவில்லை.
ஆகவே இருபிள்ளைகளையும் ஆதரவுடன் அழைத்துச் சென்று உணவூட்டிப் பின்னர் குசினியின் புகைக்கூட்டுக் குக் கீழே விறகு போடுவதற்காகக் கட்டப்பட்ட பிளாற்றின் கீழ் பாயைப்போட்டுப் படுக்கச்செய்தாள்.
**பபி இண்டைக்கு இரவு பாயிலை சிச்சிவிடாட்டா நாளைக்குக் காலமை ஐஞ்சு ஸ்ரிக்கர் வாங்கித்தரு வேன்.” என்று பபிக்கு உளவியல் ரீதியான உற்சா கம் கொடுத்து இருவரையும் அருகிலிருந்து பாட்டுப் பாடி நித்திரையாக்கினள்.
கல்லூரிக்கு அவர்களைக் கூட்டிப்போன அன்று.
பாடசாலை மைதானத்தில் இரவு நேரத்தில் சில வேளை சி. ஐ. டி. உலாவுவது வழக்கமென்பதும், சில நாளுக்கு முன்னர்தான் அப்படி உலாவிய ஒருவனை மாணவர் பிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர் என்பதும் திடீரென நினைவுவந்தது.
அகால நேரத்தில் அவசியமின்றிப் பாடசாலைச் சூழலில் அதிகநேரம் காணப்பட்டால், தன்னிலும்
தூவானம் கவனம்

Page 47
78 கோகிலா மகேந்திரன்
யாரும் சந்தேகப்படக்கூடும் என்ற எண்ணம் திடீரெனத் தோன்றவே பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வீணு வீடுதிரும்பினள்.
வீட்டிற்குவந்து உடைமாற்றிப் பிள்ளைகளுக்கு உண வும் கொடுத்துவிட்டு மீண்டும் தென்னஞ்சோலைக்கு அழைத்துச் சென்ருள்.
வாடைக்காற்று, தென்னமரங்களை மோதி அடித்து மூச்சுத்திணறச் செய்து கொண்டிருந்தது.
'வாடைக்காற்றே! பொறு பொறு. உன் முற்று கைக்குள் மூச்சுத்திணறும் மரங்களை ஒருநாள் தென்றல் வந்து தத்தெடுக்கும்.’’ என்று பிள்ளைகளுக்கும் கேட் கும்படி கூறிக்கொண்டே மீண்டும் தென்னைகளின் கீழ் அமர்ந்தாள்.
மின்மினிப்பூச்சிகள் ஒரு சில தென்னஞ்சோலையைச் சுற்றித் திரிந்தன.
"அம்மா... என்னம்மா.. மின்னுது... என் னம்மா?’ மடியில் அமர்ந்திருந்த பபி கேட்டாள்.
அதா.. அதுதான் மின்மினிப்பூச்சி.” 'அதுக்கு எங்காலை வெளிச்சம்..? "அது வாலிலை "ரோச் லைற் கட்டியிருக்குது’’ பாப்பா இதைக் கூறிவிட்டுக் கைகொட்டிச் சிரித்தாள். வீணவும் சேர்ந்து சிரித்தாள். பிறகு சொன்னள். 'இல்லை. அதின்ரை உடலிலை வெளிப்படுற சக்தியிலை ஒரு பகுதி வெளிச்சமா மாற்றப்படுகுது. அது இரவிலை
இரைதேடுற பூச்சியெண்டபடியா. அதுக்கு இந்தவெ ளிச்சம் உதவியாயிருக்கு."
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 79
*அப்ப எங்கடை உடம்பிலை ஏன் வெளிச்சம் வாறேல்லை?’ பாப்பாவின் கேள்வி நாலரை வயதுப் பிள்ளையின் கேள்வியாயினும் அவளுக்குக் கடினமாக இருந்தது.
**நாங்கள் இரவிலை இரை தேடுறவிலங்குகள் இல் லைத்தானே? அப்ப எங்களுக்கு வெளிச்சம்தேவையில்லை. எங்கட உடம்பிலை ஓரளவு சக்தி வெப்பமா வெளிவி டப்படுகுது...'
• • • Dاه • •
பாப்பா இந்தப் பதிலால் அதிகம் திருப்தியடைந் தவளாய்த் தோன்றவில்லை.
திடீரென்று பெரியதோர் ஷெல் அருகில் விழுந்து வெடித்தது போலக் கேட்டது. பாப்பா வந்து தாயை இறுக அணைத்துக்கொண்டாள். பபியின் கால்பட்ட இடம் குளிர்ந்தது போல் இருந்தது. ப்பியைத்தூக்கி ணுள் வீணு. அவள் சிறுநீர்கழித்திருந்தாள்.
பபிக்குச் சிறுநீர்கழித்தலில் பூரணகட்டுப்பாடு வந்து பல மாதங்களின் பின் அன்றுதான் முதல்முறை அப்படி நடந்தது. அதன் பின் அதிகமாய் ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கை நனைக்கும் பிள்ளையாகவே அவள் இருக்கிருள்! அவள் அப்படி இருப்பதற்கு அவளது உளநிலைப்பாதுகாப்பின்மையே காரணம் என்பது வீணு வுக்குப் புரியும்!
நாட்டிலே சிறியோர் முதல் பெரியோர்வரை எல் லாருக்குமே பாதுகாப்பின்மை உளச்சமநிலையைப் பெரு மளவில் குழப்பிவிட்டிருக்கிறது. நாள் தோறும் காதில் விழும் இந்தப்பெரிய ஒலிகளே போதும். ப்பிக்கு அதை
தூவானம் கவனம்

Page 48
80 கோகிலா மகேந்திரன்
விட மேலதிகமாக ஒன்று. குடும்பத்தில் தந்தை இல் லாததால் வந்த பாதுகாப்பின்மை. ஜீவன் இவற்றை எல்லாம் யோசித்திருக்கலாம்! ஜீவனுக்கு இவற்றைக் கட்டாயம் எழுதத்தான் வேண்டும்!
இரவு பத்து மணிக்கு மேல் ஷெல் சத்தங்கள் ஒரளவு ஓய்ந்துவிட்டன. அம்மாவும் குழந்தைகளும் ஆழ்ந்த நித்திரை. வீணுவால் உறங்க முடியவில்லை. இரவு கழிந்து இரவி எழும் நேரம் வரை எப்படிக் கழியப் போகிறது என்பதை நினைத்தபோது விசர் வரும் போல் இருந்தது.
பிள்ளைகளைக் காப்பாற்றும் பொறுப்பு, அந்த 'ரென் சின், தற்செயலாக ஒரு காயமேனும் ஏற்பட்டுவிட் டால். தான் தனித்து என்ன செய்வது என்ற பதை ப்பு." அதற்கு மேல் ஜீவனைப் பிரிந்து வாழும் தனிமை. எல்லாம் சேர்த்துத் தன்னையும் ஒரு ஒரு மன நோயாளி நிலைக்குத் தள்ளி விடுமோ என்று நினைத்த போது தாங்க முடியாத பெரும் பாரம் ஒன்று நெஞ்சை அழுத்துவது போல் இருந்தது.
சில மாதங்களுக்கு முன்பெல்லாம் சற்றுத் தூரத் தில் ஷெல் சத்தங்கள் கேட்கும் போது, அது விழுந்து வெடிக்கும் ஒலி மட்டுமே கேட்கும், இப்போது சில தினங்களாய்.
அடுத்தடுத்து மூன்று ஷெல்கள் முகாமிலிருந்து புறப்படும் மெல்லிய சத்தமும், அவை மூன்றும் விழுந்து அடுத்தடுத்து வெடிக்கும் சத்தமும் பெரும் இடி யோசை போல் மனிதரை நடுங்க வைக்கின்றன. 'ஆட் லரிஷெல்" என்று சொல்கிருர்கள்!
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 81
அவசரமாக இந்தக் கணத்தில் ஜீவன் தனக்குத் தேவைப் படுவது போல் ஒரு உணர்வு வீணுவுக்குள்
இப்படி ஒரு உணர்வு ஜீவனுக்குள்ளும் ஏற்பட்டிரு க்குமா? ஏற்பட்டிருந்தால் அவர் என்ன செய்வார்? தன்னைப் போலவே அந்த உணர்வை உணர்வாகவே மனதினுள் புதைத்துவிட்டுத் தன் கடமைகளைச் செய் வாரா? அல்லது. . .?
ஜீவன் போய் ஒன்றரை வருடமாகிறது! இரண்டு வருடத்துடன் முதலாவது ஒப்பந்தகாலம் முடியும்" ஆணுல். அப்போது கூட அவன் வருவான் என்று இப்போது நம்பமுடியாதிருக்கிறது.
இரண்டு நாளுக்கு முன் வந்திருந்த ஜீவனின் கடி தத்தில்... மேலும் தனது ஒப்பந்த காலத்தை நீடிக்க முடியுமென்ருல், ஒரேயடியாக இன்னும் இரண்டு வரு டம் உழைத்துக் கொண்டு வந்தால் இரண்டு வீடு கட்டவும், பிள்ளைகளுக்குச் சீதனம் கொடுக்கவுமான பணம் சேர்ந்து விடுமென்றும், அதன் பின்தான் வந்து வாழ்வு முழுவதும் கவலையின்றி ஈசிச்செயரில் இருந்தே வாழ்வு நடத்தலாம் என்றும் எழுதப்பட்டிருந்தது.
அவனது அந்த முடிவை முற்றிலும் மாற்றி அமைக்கக் கூடியதாய், உயிரும் உளச்சமநிலையும் இழ க்கப்பட்ட பின் ஒருவருக்குப் பணம் எந்த வகையிலும் உதவப் போவதில்லை ள்ன்ற உண்மையைத் தெளிவாகத் தனது கடிதத்தில் எழுத வேண்டும் ' என்று வீணு நினைத்தாள்.
அத்துடன் தனக்கு ஜீவனின் துணை இந்த இக்கட் டான நேரத்தில் அவசியமாகத் தேவைப்படுவதையும்
தூவானம் கவனம்

Page 49
82 கோகிலா மகேந்திரன்
கூட மனம் திறந்து விரிவாக எழுத வேண்டும்.
இவற்றின் அடிப்படையில் அமையும் தனது கடிதம் ஜீவனை உடனே நாடு திரும்புமாறு வற்புறுத் துவதாய் இருக்க வேண்டும்.
மூன்று நாளுக்கு முன் ஒரு அந்திப் பொழுதில். வீணுவும் பிள்ளைகளும் முற்றத்தில் இருந்த போது "ஆட்லரி ஷெல் வெடித்தது.
அம்மா வெளி விருந்தையில் சேலைத்தலைப்பை விரித்து விட்டுப் படுத்திருந்தாள்.
'அம்மா தித்திரையே?' 'ஓ.. நித்திரை தான். நல்ல நித்திரை! இந்தளவு ஷெல் அடிக்குள்ளை நித் திரை கொள்ள நான் என்ன ராட்சதப் பிறப்பெண்டெ நினைக்கிறியள்?" என்று புறுபுறுத்துக் கொண்டே அம்மா எழுத்தாள்.
ஜீவன் வெளிநாடு போகாமல் வீணுவின் குடும் பமும் இனிமையாக வாழ்ந்து, அப்பாவும் இருந்து, தம்பி கோபியும் இருந்திருந்தால் அம்மா இப்படி மாறியிருக்க மாட்டாளோ?
பதுங்குகுழி ஒன்று பாதுகாப்புக்கு வெட்டவேண்டும் என்று பலநாள் நினைத்து அதை இன்றுவரை செய்ய முடியாமல் போனதன் இயலாமையை எண்ணி வீணு வெதும்பினுள். ஒரு ஆண் மகன் இல்லாத வீடு இப்ப டித்தான் இருக்கும் என்பதற்கு இந்த வீடு உதா ரணமாக இருக்கிறதா?
ஊரில் அநேகமாக எல்லா வீடுகளிலும் துங்குகுழி வெட்டிவிட்டார்கள்.
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 83
‘விளம்பரப் போஸ்டர்களில் அழகாகக் கவர்ச்சி யாகத் தோற்றமளிப்பதற்கு மட்டும்தான பெண் பயன் பட வேண்டும்?’
“ஒரு ஆணுக்கு வெறும் போகப் பொருளாக, வெறும் பிள்ளைபெறும் இயந்திரம்ாக மட்டும் தான பெண் உபயோகமாக வேண்டும்?"
இவ்வாறெல்லாம் 'கிறை இடைக்கும் குயில்கள்’ அமைப்பிலிருந்து செயற்பட்ட காலங்களில் அவள் விவாதித்ததுண்டு. இவற்றை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்த வேண்டும் என்று உரப்பாகச் சிந்தித்ததுண்டு.
ஆனல் இப்போது..?
இந்த வீட்டில் ஒர் ஆண் செய்ய வேண்டிய வேலை கள்,பெண் செய்ய வேண்டிய வேலைகள் எல்லாவற்றை யுமே அவள் செய்யவேண்டி இருந்த போது, அது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்று நினைக்க்ையில் அவளுக்குச் சிரிப்பும் வந்தது.
நெஞ்சு தனக்குள்ளே புலம்பப் புகைக்கூட்டுக்கு வெளியே புழுதியில் படுத்துறங்கிய அந்த இரவில் மேலும் பல நினைவுகள் அவளுக்குள்ளே எழுந்தன.
உலகில் எழுத்த பல இலக்கியங்களில் "இடிபஸ் த றெக்ஸ்’ என்ற கிறேக்க நாடகம் மிகச் சிறந்த அவலச்சுவை நாடகமாகக் கருதப்படுகிறது. அந்த நாடகத்தின் கதாநாயகனுக இடிபஸ்’ தான் மனதார ஒரு தவறும் செய்யாத போதும் வாழ்வில் விடுவிக்க முடியாத சிக்கல்களுக்குள் அகப்பட்டு வருந்துவதாலேயே வாசகர் மனதில் அந்த அவலச்சுவை தோற்றுகிறது.
தூவானம் கவனம்

Page 50
84 கோகிலா மகேந்திரன்
அப்படிப் பார்க்குமிடத்துத் தானும் ஒரு சிறந்த அவலச்சுவைப் பாத்திரம் என்று நினைத்தாள் வீணு,
எப்படியும் கூலியாட்களேப் பிடித்து ஒரு பதுங்கு குழி மறுநாள் அமைக்க வேண்டும். அதற்காக லீவு போட்டுவிட்டு நிற்போம். என்றெல்லாம் நினைத்துக் கொண்டு, கண்ணிர்ப்பூக்கள் புழுதியை நனைத்த நிலை யில் விடிகாலைப் பொழுதில் தான் சிறிது கண்ணயர்ந் திருந்தாள்.
இவற்றையெல்லாம் காலையில் மீண்டும் நினைவில் கொணர்ந்து படுக்கையில் புரண்டு கொண்டிருந்தபோது மீண்டும் ஷெல் அடி பயங்கரமாக ஆரம்பமாகியது.
முன் சந்திக் கந்தையர் கடையில் காய்கறி வாங் கச் சென்ற அம்மா விழுந்தடித்து ஓடிவந்தாள்.
"இப்ப அடிச்ச ஷெல் உதிலை ஆறுமுகத்தார் வீட் டுவளவிலே அல்லே விழுந்திருக்கு! நல்லகாலம். ஆறு முகத்தார் வீட்டுக்கும் கந்தசாமி வீட்டுக்கும் இடை யிலை விழுந்ததாலை ஒருத்தருக்கும் காயம் ஏற்படேல்லை"
அம்மாவுக்குப் பெரிதாக மூச்சு வாங்கியது.
“அவையெல்லாம் துணிமணியளைக் கொஞ்சம் எடுத்துக்கொண்டு மேற்குப் பக்கம் ஓடினம்...'
வீணுவுக்கு என்னசெய்வது என்று புரியவில்லை. ஷெல் இவள் வீட்டில்தான் விழும் என்பதற்கான நிகழ்தகவு மிகவும் குறைவானதே என்று அறிவு சொல்லிற்று. ஆயினும்
திருமணக் கோலத்துடன் - தாலிகட்டிய அரைமணி நேரத்திற்குள்ளேயே ஒரு மாப்பிள்ளை இறந்துவிட்ட
துவானம் கவனம

கோகிலா மகேந்திரன் 85
சம்பவமும் ஆஸ்பத்திரியில் படுத்திருந்த இருதய நோயாளிகள் ஷெல்பட்டு மரணித்த சம்பவமும் நிறை மாதக் கர்ப்பிணியான தாயின் வயிற்றுக்குள்ளே இருந்த குழந்த்ை ஷெல்பட்டுத்துடித்து தாயின் வயிற் றைக் கிழித்துக்கொண்டு வெளியேறிய சம்பவமும் நடந்திருக்கும் குடாநாட்டில். உணர்வுபூர்வமாக “எதுவும் நடக்காது’ என்று நம்பியிருக்க முடியவில்லை. ஏதோ அக்ப்பட்டதை அள்ளிச், சில துணிமண்ணிகளும் சிலநகைகளும் சிறிதளவு காசுமாக ஒரு பையில் போட் டுக் கொண்டு 'புறப்படுவோம்’ எனநினைக்கையில்,
வாசலில் “கேற்’ திறக்கப்படும் ஒலி கேட்டது. எட்டிப் பார்த்தாள், அவளுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. தம்பி கோபி வந்து கொண்டி ருந்தான்.
'அம்மா. அம்மோய். இஞ்சை வந்து பாருங் கோ. கோபி வாருன்...”
'இப்ப என்ரபேர் கோபி இல்லை. உங்கடை கோபி இந்த வீட்டாலை வெளிக்கிட்ட அண்டைக்கே போராளி "கேசவன்’ ஆக மாறிட்டான்." என்று, சொல்லிச் சிரித்துக் கொண்டே வந்த கோபியைப் படுத்திருந்த அம்மா எழுந்தோடிச் சென்று அணைத்துத் கொண்டாள்.
"என்ரை ராசா. ஏன் மோனை மூண்டு வரியமா எங்கடை நினைப்பில்லை?”
*நாங்கள் எவ்வளவு கயிட்டப் பட்டம் தெரியுமே? கொப்பர் இல்லை எண்டால், கொத்தானும் வெளிநாடு போட்டார். நீயும் எங்களுக்கு உதவாமல் போனுய் தம்பி...!" தாயின் முறையீட்.ை அமைதியாகக்கேட்ட
ஆாவானம் கவனம்

Page 51
86 கோல்லா மகேந்திரன்
அவன் சொன்னுன், 'கஷ்டத்தை கண்னெதிரிலை வைச் ஈக் கொண்டால் கண்ணையே மறைக்கும். சற்றுத்தூர நிறுத்தினுல் சின்னணுய்த் தெரியும்’
கடந்த மூன்று வருடங்கள் கோபியை நிறையவே மாற்றியிருக்கின்றன என்பதை அவன் உடல் மட்டு மல்ல இந்தப் பதிலும் தெளிவாக்கியது.
"இஞ்சை எல்லா வீடுகளிலும் பதுங்கு குழியள் வெட்டிட்டினம். எங்களுக்கு அது செய்யக்கூட ஒரு ஆம்பிளை இல்லை. நேற்றிரவு நடந்த பயங்கரச் ஷெல்ல டியிலை நாங்கள் எல்லாம் செத்துப் போயிருப்பம் எண்டு பாக்கவே வந்தனி?*
வீளுவின் வெப்பியாரம் முழுவதும் அவனிடம் கொட்டப்பட்டது.
துவான்ம் கவனம்

கோகிலா மகேந்திரன்
பிரக்கிளைகள் முற்றத்தின்மேல் கைகோத்து ஆட் டம் போட்டதில் சருகுகள் கீழே உதிர்ந்தன.
வீணுவின் விழிகளைக் கோபியின் விழிகள் வேண்டு மென்றே தவிர்த்தன. தவிர்த்துக்கொண்டு அவன்கேட் டான். மெதுவான கேள்வி.
"அத்தானை ஏன் வெளிநாடு போகவிட்டனீங்கள்?"
'நீ எங்களைக் கேட்டுக்கொண்டே போனனி. அதைப்போலத்தான் அவரும். ஒவ்வொருத்தரும் தாங் கள் தாங்கள் நினைச்சது.”
இதற்குக் கோபி பதில் சொல்லவில்லை.
முற்றத்தில் கிடந்த ஒருசிறிய குரும்பட்டி' யைத் தூக்கிச் சுவரை நோக்கி எறிந்தான். அது சுவரிற்பட்டுத் தெறித்துப்பின் தனக்கேயுரிய ஜடத்தனத்துடன் திரும் பிவந்தது. அதைப்பார்த்து அவன் இதழ் விரியாமல் சிரித்தான். பிறகு சொன்னன்.
"சுவர் ஒரு ஜடப்பொருள். அதைநோக்கி நான் எறிஞ்ச குரும்பட்டியே என்னைநோக்கித்திரும் பிவருகுது. உயிருள்ள மனிசரை நோக்கித் 9
தாங்கள் எவ்வளவு அதிகமாச் ஷெல் அடிக்கி னமோஅவ்வளவுக்குத் தங்களைநோக்கி எதிர்ப்
தூவானம் கவனம்

Page 52
88 கோகிலா மகேந்திரன்
பும் ஆவேசமும் அதிகரிக்கும் எண்டதை அவங்கள் புரிஞ்சு கொள்ளாமல் இருக்கமுடியாது." -
பலநிலைகளிலும் அவனிடத்தில் தெளிவு ஏற்பட்டி ருந்ததை வீண அவதானித்தாள். முன்பெல்லாம் ஏ.எல்.
படிக்கும்போது. ஒருஅமைதியான - யாருடனும் அதி கம் கதைக்கத் தெரியாத. பயந்த சுடாவமுடைய ‘பெடியன்’
சூழல் காரணிகள் ஒரு மனிதனை எவ்வளவு தூரம் மாற்றியமைத்துவிடுகின்றன. நீலக்கோடு போட்ட சார மும் பிளேன் நீலநிறத்தில் சேட்டும் போட்டிருந்தான். வியட்னுமிய சீன அரங்குகளில் நீலம் துணிவைக்குறிக் கப் பாவிக்கப்படும் நிறம் என்பது மிகப்பொருத்தமா கவோ அல்லது சற்றேனும் பொருத்தமின்றிய்ோ வீணு வுக்கு நினைவுவந்தது.
'இப்ப எங்களுக்கு அரசியல் தேவையில்லை. அவங் களைப்பற்றியும் கவலையில்லை. நாங்கள் சாகப்போறம். உன்னலை அதுக்கு என்ன செய்யமுடியும் எண்டு சொல்லு' அம்மா அவசரப்படுத்தினுள்,
"சரி சரி. நான் இண்டைக்கு வேறைசில பெடியளை யும் கூட்டிவந்து உங்களுக்கு ஒரு குழி வெட்டித்தாறன்' "சரி. உள்ளைவந்து இரு. முட்டைக்கோப்பி போட்டுத்தாறன். உன்ரைபாடுகள் எப்பிடி?*
வீணு இப்போதுதான் அவனைப்பற்றிச் சிந்தித்தாள்.
மனிதர் யாவருக்கும் eொதுவான சுயநல இயல் பும் உயிர்காக்கும் தன்மையும் முன்னுக்குத் தலை நீட்டி ஞலும் சிலநிமிடங்களில் அம்மாவும் தாய்ப்பாசம் கொண்டாள்.
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 89
‘இந்தளவு நாளும் சாப்பாடு துணிமணி நித்திரை அதுகள் என்ன மாதிரி மோனே? நல்ல சாப்பாடு தருவி 6B Biomr?” ”
அவன் மீண்டும் சிரித்தான்.
'நல்ல சாப்பாடு. நல்ல உடற்பயிற்சி. என்ர உடம்பு நல்லாய்த்தான் இருக்கு. அதோடை என்ர மனதிலையும் ஒருமாற்றம் ஏற்பட்டிருக்கு. நான் முந்தி இஞ்சை இருக்கேக்கை பாக்கிறமாதிரி இப்ப அவ்வளவு துணுக்கம் பாக்கிறேலை. மனுசன் சாப்பிடுறத்துக்கு வாழி றதில்லை. வாழிறத்துக்காகத்தானே சாப்பிடுறம்..”*
அவன் சொல்வதை அரைகுறையாக காதில் வாங்கிக் கொண்டே அம்மா எடிந்து சபைக்கச் சென் ருள்,
ஷெல் அடியினுல் ஏற்பட்ட பயம் வெளியேறும் எண்ணம் ஆகியவை Grtйг нg 18றைந்தன என்று சொல்லமுடியாது.
சில வீடுகள் தள்ளி அமைந்திருந்த தோட்டக் காணிகளில் இருந்துவந்த குளிர்காற்று குபிரென்று அவர்களிற்பட்டது.
கோபி வீட்டை விட்டுப் போகும் போது பபியுள் டாப்பாவும் மிகச்சிறிய குழந்தைகள்.
**இது ஆர் தெரியுமே? கோபி மாமா...' என்று அவர்களை அழைத்து வந்து காட்டினுள் வீணு.
அவர்களால் அவனுடன் திடீரென ஒன்றிக்கொள்ள முடியவில்லை. அவர்கள் அவனே விட்டுவிலகி தமது விளேயாட்டில் ஈடுபட,
துவான மி கவனம்

Page 53
90 கோகிலா மகேந்திரன்
‘'நீ இப்ப எந்தக் காம்பிலை இருக்கிருய்? என்ன வேலையள் செய்யிருய்?" என்று கேட்டாள் வீணு.
‘'இப்ப இஞ்சை கிட்டடியிலை தான் இருக்கிறன் . போனகிழமை இரண்டு ‘காம்ப்" அடிச்சதுக்கு நான் தான் வீட் பண்ணிப் போனணுன்...”
தான் இருக்கும் இடத்தைச் சரியாகக் குறிப்பிடாத அவனது கவனத்தைக் கவனித்த நிலையில் அவன் செய்த வேலையை நினைக்க வினவுக்கு மெய் சிலிர்த் திது.
பலரை உயிருடன் சிறை பிடித்த ஒரு சாதனை வரலாற்று நிகழ்வுக்கும் இருபத்தைந்துக்கும் மேற்பட் டோரை நேரடிப் போரில் கொன்று குவித்த இன் னுெரு நிகழ்வுக்கும் தலைமை தாங்கிச் சென்றிருக்குப் கோபி. இல்லை கேசவன் அவனை நினைக்கையில் ஒரு மகிழ்வாகத்தான் இருந்தது.
ஜீவன் கூடப் பணத்தான் பெரிதென்று இப்படி வெளிநாட்டில் போய் மறைந்து இருப்பதை விட இப் படி ஒன்றைச் செய்துவிட்டு வந்து தன்னிடம் சொல்லி யிருந்தால் ஆன்மனம் மிகவும் நிறைந்து போயிருக்குமே என்று அவள் எண்ணத் தவறவில்லை.
கோபிக்கு முன்னே ஒப்பிட்டுப் பார்க்கையில் ஜீவன் மிகக் கட்டையாகக் கொச்சைப் பட்டுப் போன வணுக... எவ்வளவு பணம் அனுப்பிய போதிலும். ஏதோ ஒரு வகையில் தாழ்ந்து போய் விட்டவஞ , ஒரு தோற்றம்!
அக்காவின் சாந்தமான g2. GonTuuli T.-i) கோபி யின் மனதுக்கு மிக இதமாக இருந்தது. தனது
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 9
செயற்பாடுகள் சமூகத்தினல் மட்டுமல்ல, தனது குடு ம்பத்தினலும் மனதுக்குள்ளே பாராட்டவே படுகின் றன என்று தெரிந்த போது மிக இயல்பாக மனத் தடையற்ற முறையில் அவன் சம்பவங்களை விபரிக்கத் தொடங்கினன். வீணு மிக ஆர்வமாய்க் கேட்டாள்!
ஒரு சிறுகதையிலோ, நாவலிலோ அல்லது நாட கத்திலோகூடச் சில பகுதிகள் தெளிவாகப் புரியாமல் இருக்க வேண்டும். புரியாமலிருக்கும் அந்தப் பகுதி தான் படிக்கிறவரின் அறிவுக்கேற்ப அவரின் கற்பனை யைத் தூண்டும் என்று இலக்கியவாதிகள் சொல் GT (S) .
வீணு மிக ஆர்வமாகக் கேட்ட கேள்வி ஒன்றுக்கு,
"எங்கடை மனத்துணிவு தன் காரணம். வேறை ஒண்டுமில்லை" என்றன் கோபி. அவளுக்குத் தெளி வாகப் புரியவில்லை. அதுபற்றி மீண்டும் கேட்பதற்கி டையில் அம்மா முட்டைக் கோப்பி கொணர்ந்து கொடுத்தாள்.
இப்போது சற்றுத் தொலைவில் இன்னுெரு ஷெல் சத்தம் கேட்டது. அந்தச் ஷெல்லினுல் அதிகம் பாதிக் கப்படாதவள் போல, ஏதோ ஒரு துணிவு திடீரென வந்து நிறைந்து விட்டவள் போல விஞ) தொடர்ந்து கதை கேட்டாள்.
விளையாடிக் கொண்டிருந்த பபியும் டாப்பாவும் அப்போது இங்கு வந்து மாமாவைச் சுற்றி அமர்ந்து கொண்டே அவன் கழுத்தில் தொங்கும் கறுப்புக் கயிற்றை விடாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
கதை சொல்லிக் கொண்டிருந்தவன் திடீரென்று
தூவானம் கவனம்

Page 54
92 கோகிலா மகேந்திரன்
எழுந்து எங்கோ போனுன், தம்பியின் பேச் சிலும் செயலிலும் நடத்தையிலும்கூடப் பல பகுதிகள் தனக்குத் தெளிவாகப்புரியாமல் இருப்பது வீணுவுக்குப் புரிந்தது. ஆணுல் அப்படிப் புரியாமல் இருப்பதே ஒரு மகிழ்வையும் தந்தது,
"எங்கை போழுப் தம்பி?’ என்று வீணுவோ அம்மாவோ கேட்கவில்லை. கேட்க முடியவில்லை !
ஏதோ தேவை இருப்பதால் தான் போகிருள் என்பதை நிச்சயமாக உணர்த்தியது ஒரு உள்ளுணர்வு!
முன்பு போல அவன் நிச்சயமாய் வாசிகசாலைக்கு முன்னே போய் நின்று ஊர் வம்பு பேசமாட்டான்.
சந்தி மதிலில் போய்க் குந்திக்கொண்டு அந்த வழியாகப் போய்வரும் டெண்களைப் பார்த்து ஏதும் *கொமென்ற் அடிக்க மாட்டான்!
ஆகவே அவனை “எங்கை போரூய்?’ என்று கேட் கவேண்டியது அவசியம் இல்லை.
வளர்ந்து விட்டதன் காரணமாய், படித்துவிட்ட தன் காரணமாய் முரண்பாடுகளின் குவியலாய் மாறிப் போய் விட்ட ஜீவனுக்கும், இவனுக்கும் எவ்வளவு வித்தியாசம் என்று எண்ணிப் பார்த்தாள் வீணு.
இவன் பல்கலைக்கழகம் புகவில்லை என்று தான் கவ லேப்பட்டதும், பல்கலைக்கழகம் புகக்கூடிய திறமையு டன் படிக்கவில்லை என்று அம்மா அவனைத் திட்டியதும் வீண் என்பது போல் மனதுக்குள் உணர்ந்தாள்.
**படி...படி..?’ என்ற அம்மாவின் கரைச்சல் தாங்
துரவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 93
காமலே அவன் வீட்டை விட்டு போனுன் என்று அப்
பொழுது நினைத்ததுண்டு. ஆனல் இப்போது பார்க் தால் ...!
பல்கலைக்கழகம் போய் படித்துக் கொட்டிப் பட் டம் பெற்ற அவளும் ஜீவனும் என்ன கொட்டிக் கிழித்து விட்டார்கள் ?
கோபி ஒருவேளை மரணித்தாலும்கூட அது இந்த மண்ணில் மதிப்புள்ள மரணமாகும். வரலாறு அவனைத் தன் ஏட்டில் பொறிக்கும், அவள் ஷெல் பட்டு இறந் தால்...? ஒரு புழுகூட அதைப்பற்றி நினைக்காது!
திருமணம் முடித்துப் பிள்ளைகளும் பிறந்து விட்ட தல்ை ஏற்பட்ட சில கஷ்டங்கள் காரணமாய்தான் * சிறை உடைக்கும் குயில்கள் அமைப்பில் இருந்து விலகி விட்டது தவறே என்று மயங்கினுள்.
சூரியன் நல்ல நெருப்புக் கோளமாய் மேற்கில் மறைந்து சில நிமிடங்களின் பின் மீண்டும் வந்தான் Gairl.
இப்போது தன்னுடன் ஐந்து வாவிபர்களையும் அழைத்து வந்திருந்தான். வந்தவர்களைத் தாய்க்கோ வீணுவுக்கோ அறிமுகம் செய்து வைக்கவில்.ை அது அவசியமில்லை என்பது போல...!
அவர்கள் அனைவரும் கோபியுடன் தங்கள்விடு போலவே மிகச் சுதந்திரமாய் வளவுக்குள் நுழைந்த னர். தமக்குள் ஏதோ கதைத்துத் தீர்மானித்து, இர ண்டு மாமரங்கள் அடர்த்தியாய் வளர்ந்து நின்ற வீட் டின் மேற்குப்புறப் பகுதிக்குச் சென்றனர்.
வீட்டின் சுவர் இடித்து விழுந்தாலும் அந்த இடம்
தூவானம் கவனம்

Page 55
94 கோகிலா மகேந்திரன்
வரை வராது என்பதை உறுதி செய்து கொண்டபின் னர் அதில் “ரி" வடிவில் ஒரு குழி அமைக்கக் கோடு போட்டனர். மண்வெட்டியை எடுத்துக்கொண்டுவந்து விரைவில் வேலையை ஆரம்பித்து விட்டனர்.
அம்மா கோப்பி கொண்டு போய்க் கொடுத்தபோது அம்மாவின் கைவிரல் படும் உணவுகளைப் பெரிதும் விரும்பியவன்போல. அம்மாவின் கைகளைச் சேர்த்துப் பிடித்துக் கோப்பியை வாங்கிக் குடித்தான் கோபி. அம்மா கண்கள் பனிக்கத் திரும்பி வந்தாள்.
சற்று நேரத்தில் அங்கு வந்த வீணு சொன்னுள்.
**நீ அங்கையும் எத்தினையோ கஷ்டமான வேலையள் செய்து களைச்சிருப்பாய். இஞ்சையும் வந்து ஏன் இப் பிடிக் கஷ்டப்படுருய்...? அம்மா ஏதோ கவலையிலை சொல்லிட்டா. நான் ஆரையும் பிடிச்சுக் கூலிகுடுத்து வெட்டிப்பன். நீ எப்பன் ஆறுதல் எடன்.""
களைப்பு, களைப்பில்லை என்பவற்றை எல்லாம் யார் தீர்மானிப்பதென்பதுபோல் அவன் முறுவலித்தான். தொடர்ந்து வேலை செய்வதை நிறுத்தாமலே நண்பர் களுக்குச் சொன்னன்.
"கிட்டடியிலைநடந்தஇரண்டு பெரிய தாக்குதல்பற் நித்தான் அக்கா சொல்லுரு.’
இதனைக் கேட்டவுடன் நண்பர்களும் அதுபற்றி அறிய ஆவல் கொண்டனர்.
கோபி விபரித்த சம்பவங்கள் பலவற்றைக் கேட்க வீணுவுக்கு மயிர்கூச்செறிந்தது!
இத்தனைக்கும் நடுவில் நிமிர்ந்து நிற்கும் தைரியம் இவனுக்கு எப்படி வந்தது? உயிரைப் பாதுகாக்கும்
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 95
கடைசி முயற்சியில் இதயத்துடிப்பு வேகம்கூடி, சுவாமி வேகம் கூடி, சுலபத்தில் நம்ப முடியாத ஒரு வலிமை யாருக்கும் வரலாம் என்பது விஞ்ஞானிகள் கண்ட உண்மை.
இன்று அத்தகைய ஒருநிலை எமது சமுதாயத்திற்கு ஏற்பட்டிருக்கிறதா ?
எமக்கெல்லாம் எமது அரசே மரணதண்டனை வழங்கிவிட்டது. திகதி தான் நிர்ணயிக்கப்படவில்லை’ என்ற நிலையில் பலருக்கு ஒரு அசாத்தியத் துணிவும் வலிமையும் வந்துதான் இருக்கின்றன!
திடீரென அம்மா குலுங்கிக் குலுங்கி அழுதாள். “ “ a Töresar bLor?” ” * 'இல்லை இவ்வளவு நாளும் உயிரைக் குடுத்த பெடி யங்களிலை இவனும் ‘ஒருத்தணு இருந்திருந்தால். எண்டு நினைச்சிட்டன்."
"எந்தக் கணத்திலையும் அப்படி ஒரு சம்பவம் எனக்கும் நடக்கலாம். நான் அதுக்குப் பயப்பி டேல்லை...”
கோபி சிரித்தான்! அவனுல் சிரிக்க முடிகிறது! வாலிபர் வாயில் சிகறெற்றும் வணிதையர் வாயில் விடுப்புமாகத் திரிந்த தமிழர் கூட்டம். இன்று...!
எல்லார் . வாயிலும் இந்த வீரக்கதைகள்! இவர்கள் வாழ்வில் மந்த மாருதம் வீசவில்லை என்று எப்படிச் சொல்லலாம்? இந்த நிறைவு ஒன்றே இவர்களுக்குப் பெரும் மந்த மாருதமாய் இருக்கும்.
இவன் இந்த மயிர்க்கூச்செறியும் சம்பவங்களை விபரிக்
தூவானம் கவனம்

Page 56
96 கோகிலா மகேந்திரன்
கையில் இனிய நற்பேரொளி எங்கும் பரந்தது போன்ற மகிழ்வு இவளுக்குள்ளேயே ஏற்படுகையில் அவனுக்குள் எவ்வளவு திருப்தியாய் இருக்கும்?
அந்தத் திருப்தியை உணர்ந்தவர்களால் மட்டுமே அதைரசிக்க முடியும் மகாத்மா காந்தியின் உள்ளத்தில் - பாரதியின் உள்ளத்தில் - ஏபிரகாம்லிங்கனின் உள் எத்தில்... ஏற்பட்டிருக்கக்கூடிய நிறைவு போல...!
குழியின் ஆழம் ஐந்தடிக்கு மேற்பட்டுவிட்டது. வேகமான வேலைதான்!
மாமரங்களைத் தழுவி வந்த காற்றை நிறையவே சுவாசித்துக்கொண்டு அவர்கள் மண்வெட்டிகளை வைத் துவிட்டுக்குந்தியிருந்து ஒய்வெடுக்கையில் வீணு கேட் டாள்.
'தம்பியவை. எல்லாரும் வந்து சாப்பிட்டிட்டுப் பிறகுமிச்சத்தைப் பாருங்கோ' தமிழ் மண் ஒட்டிக் கொண்ட கை, கால்களைக் கழுவிக் கொண்டு வந்து எல்லாரும் சாப்பிட அமர்ந்தார்கள்.
கண்ணிர்ப் பூக்கள் தம்பியின் சாப்பாட்டினை மெது வாக நனைத்ததை வீணு கவனித்தாள்.
இந்த நிறைவான மகிழ்விலும் அவன் கண்ணீர் சிந்துகிருன்! செயற்பாட்டில் வீரம் தோன்றி விட்டா லும் மனம் முன்போலவே மென்மையாக இருக்கிறதா?
இழந்த தன் தோழர்களை நினைத்தான? அம்மாவின் கை பட்ட உணவை எத்தனை வருடம் கழித்து இன்று உண்பதை நினைத்தான? அல்லது,
ஆண்துணை இன்றிப் பயந்து அக்காவும் அம்மாவும்
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 97
அகழியில் வாழ்கையில் தான் கூட இருக்க முடியாமல் போனதை நினைத்தான?
எதை நினைத்தான் என்று வீண கேட்கவில்லை.
*அத்தானைக் கெதியா வரச் சொல்லி எழுதப்போ Ᏹ றன். இந்தநிலையிலை என் ஞ லே தனிய இருக்கமுடியாது...'
தம்பியைப் பார்த்து மெதுவாகச் சொன்னள்.
**அத்தானைப் போலை நல்லாப் படிச்சவை, அறிவு ஜீவிகள் இப்ப எங்களுக்கு அவசியமாத் தேவை. அவை வெளிநாட்டிலை இருந்தா ஒருவேளை தனிப்பட உங்கடை குடும்பத்தின்ர்ை பொருளாதாரப் பிரச்சினை தீரலாம். ஆனல் சமுதாயப் பிரச்சினையள் பெருகும். சமுதாயம் பிரச்சினையோடை இருந்தால். அதுக்குள்ளை எந்தத் தனி மனுசனும் சந்தோஷமா வாழமுடியாது. ஆனபடி யால் கட்டாயம் அத்தானை வரச்சொல்லிஎழுது...'
சிறிது தாமதித்தவன் தொடர்ந்து சொன்னன்.
“எழுது, ஆனல் அத்தான் கட்டாயம் வருவர் எண்டு நம்பியிருக்காதை வெளிநாட்டிலை வாழ்ந்து பழகினவைக்கு இஞ்சை வாறது. கஷ்டம். ஆனபடியா is உன்ரை மனதிலை தைரியத்தை வளர்த்துக்கொள். அப்பதான் பிள்ளையஞம் L11ப்பிடாமல் இருக்கும்.'
அவன் தெளிவாய்க் கறிக்கொண்டே கைகழுவ எழுத்து சென் முன், பக்கத்து விட்டுக் கிழவியின் டொக் டொக்" எனும் வெற்றிலே உரல் சத்தம் அந்த, இரவின் மெளனத்தை ஆழமாக்கிக் கொண்டிருந்தது.
தூவானம் கலனம்

Page 57
கோகிலா மகேந்திரன்
1ங்க முடியாத வியர்வையாக இருக்கிற ܀ - தென்று வீட்டின் வெளி விருத்தையில் படுத்திருந்தாள்
மரங்களைப் பார்க்கக் காற்று வீசுவது போல்தான் இருந்தது. ஆனல் காற்று egal 6 g/ 26
"சோபை இழந்து போன என்முகத்தில் விழிக் காமல், எனக்குச்சொல்லாமல் என்னுடன் கதையாமல் போக விரும்புகிறது காற்றும் என எண்ணினுள்.
கடந்த ஒரு வார காலமாக அவள் வேலைக்கும்
செல்லவில்லை. மெடிக்கல் அல்லாத * மெடிக்கல் லீவில்’ நிற்கிருள்.
சென்றவாரத்தில் ஒருநாள் இவள் வேலைக்குப் போகவென்று வெளிக்கிட்டு ஆயத்தமாக நிற்கையில் தான் வானில் ஹெலிச்சத்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தாள்.
ஹெலியைத் தொடர்ந்து உயரத்தில் முகில்களுக்குமேலே ஒரு பொம்பர். பிறகு இன்னென்று. அதனைத் தொடர்ந்து மற் O முென்று. இறுதியாக இன்னுெரு ஹெலி...! !
~~~~
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 99
எல்லாம் தெற்கு நோக்கி ஊர்வலம் போல் சென் றன. தெற்குப்புற வானில் வட்டமாய்ச் சுற்றி வந் தன. அவள் பார்த்துக் கொண்டு நிற்கவே பொம்மர்க ளில் ஒன்று திடீரெனக் கீழிறங்கி வந்தது. காது பிளக் கும் சத்தம்!
**ஒ பொம்மர் குண்டு போடுருன்’’ அதை உண்ரவே அவளுச்குச் சில விநாடிகள் எடுத்தது போலிருந்தது.
பபி பாப்பாவை அழைத்துக்கொண்டு பதுங்கு குழிக்குப் போனள். அம்மாவும் பின்னல் ஓடி வந்து விட்டாள்!
தம்பி கோபி அமைத்துத் தந்த பதுங்கு குழியில் ஒரு மணி நேரத்திற்கு மேல் இருக்க நேர்ந்தது.
சிலநாள்களுக்கு முன் அவன் வந்து இதைச் செய்து தந்திருக்காவிட்டால். சத்தங்களைக் கேட்டே உயிர்பிரிந்திருக்கும்!
குழியினுள்ளே இறங்குவது ஐந்து படிகள்! படிகள் உள்ள பக்கத்தில் இரண்டு அடி தூர இடைவெளி மட்டும் விட்டு மிகுதியைத் தென்னங் குற்றி அடுக்கி மூடியிருக்கிருர்கள்.
அன்று..!
பக்கத்து வெட்டைக் காணியில் நீண்ட காலம் காய்க்காது நின்ற ஐந்தாறு தென்னைகள் படப. வென்று வெட்டி வீழ்த்தப் பட்டதும், துண்டு போடப் பட்டதும் கயிறு உரல் உலக்கை இவற்றைப் பாவித்து மிக இலகுவான முறையில் தறித்த குற்றிகளைக்
தூவானம் கவனம்

Page 58
100 கோகிலா மகேந்திரன்
குழிக்கு அருகே தூக்கி வந்ததும், விஞ்ஞானப் பட்ட தாரி பட்டம் பெற்ற தனக்குப் புரியாத நெம்புகோல்த் தத் துவங்கள் எல்லாம் வேலையை எளிதாக்கல் என்ற தேவைக்காக் அவர்களின் கைகளில் தவழ்ந்து விளை யாடியதும். எல்லாம் அவளுக்கு விறுவிறென்று நினைவு வந்தன.
குழிவெட்டி வெளியே போடப் பட்டிருந்த மண்ணே உரப்டைகளில் நிரப்பிக் கட்டித் தென்னங்குற்றி களுக்கு மேல் மூன்று மூடை அகலத்திற்கு அடுக்கியிரு க்கிறர்கள். வெட்டி விழுத்திய தென்னேலைகளில் கிடுகு பின்னி அக்கிடுகுகளால் மண் மூடைகளை ஒழுங்காக மறைத்துக் கூரை போட்டிருக்கிருர்கள்.
பெருமழை பெய்தாலும் அந்த மழைநீர் மண் மூடைக்குமேல் விழாது வழிந்து ஓடக்கூடிய முறையில் அந்தக் கிடுகுக்கூரை அமைக்கப் பட்டிருக்கிறது.
அன்றிரவு வேலைகள் முற்ருக முடிந்தபோது இரவு பன்னிரண்டு மணிக்குமேல் இருக்கலாம். நண்பர்கள் தேநீர் அருந்திவிட்டுத் தம்பியிடம் விடைபெற்றுப் போன பின்னர் தம்பிக்கு ஒரு கட்டில் அமைத்துக்கொ டுத்தாள்வீணு,
கட்டில், மெத்தை, தலையணை இதெல்லாம் எனக் குத் தேவையில்லை. வெறும் மண்ணில் படுத்தாலும் தல்லா நித்திரை வரும்’ என்று கூறிச் சிரித்தவன் ஏறிப்படுத்துக்கொண்டான்.
அவனுடைய கட்டிலுக்குக் கீழே நிலத்தில் வீணு வும்பிள்ளைகளும். கட்டில் கால்மாட்டில் விரிக்கப்பட்ட
இன்னெரு பாயில் அம்மா!
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 191
** அத்தான் இதுவரைக்கும் எவ்வளவு காசு அனுப் பிப் போட்டார்?’ திடீரென்று கேட்டான் கோபி,
“இரண்டு லட்சம் இருக்கும்.”
'அந்தக் காசை என்ன செய்யப்போருய்?*
‘'இப்ப பாங்கில இருக்கு. எடுக்கிறது கஷ்டம். எடுக்கக் கூடியதா வர... எடுத்துத் தம்பசிட்டிக்கா னிக்கை ஒரு வீடுகட்டலாமெண்டு யோசிக்கிறன்."
6 4. தம்பசிட்டி அவ்வளவுபாதுகாப்டான இடமில்லை. அவங்கள் பொம்மராலை "அற்ருக்' பண்ணத்தொடங்: கின. எந்த வீடு உடையும் எது தப்பும் எண்டு சொல்லேலாது."
** அப்ப என்ன செய்யச்சொல்கிருய்?"
"இப்ப வீடுகட்ட வேண்டாம். கொஞ்சக் காசு பாங்கிலை இருக்கட்டும், கொஞ்சத்தைப் பவுணுய் மாத்தி நிலத்துக்குக் கீழை புதைச்சு வை. ஒருவேளை ஒரு காலத்திலை கிண்டி எடுக்கலாம். இன்னும் கொஞ் சத்தை யாருக்கும் கடனுக்குடு. சிலவேளை அதுதான் ஒரு அவசர நேரத்திலை உதவும். இன்னும் கொஞ்சத் தை.’-தயங்கினுன்.
**சொல்ன்ை...”*
‘எங்கடை ஆக்கள் பவுண் கேட்டு வரேக்கை. தாராளமாய்க்குடு. நாங்கள் நல்ல முறையிலை அதைப் பாவிப்பம். நீங்கள் குடுக்கிற ஒவ்வொரு சதமும் எங்கடை விடிவை விரைவுபடுத்தும்.”
வீணு பேசாமல் இருந்தாள். அவனது வாயில் திடீரென ஒரு கூர்மை வந்திருப்பதுபோல் உணர்ந்தாள்.
தூவானம் கவனம்

Page 59
102 கோகிலா மகேந்திரன்
அவனது ஆலோசனையை அவள் முற்ருக ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவன் நினைத்திருக்கலாம். கதையை வேறுதிசைக்கு மாற்றினன்.
*எரிபொருள் தட்டுப்பாடு உங்களை எவ்வளவுபா திக்குது?"
"எங்களுக்கு அதாலை அவ்வளவு பிரச்சினை இல்லை மண்ணெண்ணை அடுப்பு இப்ப நான் பாவிக்கிறேல்லை. ஆணு. விறகின்ரை விலையும் கூடிட்டுது,. கமக்காரர் தான் இறைப்புக்குச் சரியாகக் கஷ்டப் படினம். மூளை வீட்டு மூத்தர் மாமா கத்தரிக்கு இறைக்க முடியாமல் நிக்கிருர்."
**நாங்கள் சக்தி விரயத்தைக் கூடிய அளவு குறைக்க வேணும். உமிஅடுப்பு. மரத்தூள் அடுப்பு எண்டு திறன்கூடின அடுப்புகளைப் பாவிக்க வேணும். ஆடு மாட்டுக் கழிவுகளிலை இருந்து பெருமளவிலை உயிர்வாயு செய்ய வேணும். அதிலிருந்தே, கறண் டும்’ எடுக்கலாம்.”
நித்திரையின்றிச் சிவந்த கண்களும் சுட்டிய விரலு மாய் அவனது திட்டங்கள் பெரிதாக இருந்தன,
தான் எரிந்து நாட்டைக் குளிர்விக்க வேண்டும் என்று நினைப்பவன் என்ன சொல்கிருன் என்று பார்க்க விரும்பி வீணு வேண்டுமென்றே சொன்னுள்.
*அதெல்லாம் சரி உனக்கும் வயதாகுது அம்மா வும் தான்சாகமுதல் உனக்கும் நல்ல விஷயம் பாக்க வேணும் எண்டு விரும்புரு?...'
அந்த நடுநிசியில் அவன் வாய்விட்டுப் பெரிதாகச்
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 103
சிரித்தான். ‘எங்கடை தேச வானிலை நேசமேகங்கள் கருக் கொள்ள மறக்குது. என்ன செய்ய?’ என்றன்.
பிறகு தொடர்ந்து சொன்னன்.
‘எங்களுக்கு விடுதலை வந்தாப் பிறகு நான் உயி ரோடை இருந்தால் எல்லாம் பாப்பம். இல்லாட்டி இந்தத் தமிழ் மண்ணை நான் விரும்பித் திருமணம் செய்து அவளோடை சங்கமித்து விட்டதாய் நினைச்சு நீங்கள் சந்தோஷப் படவேண்டியதுதான்.'
கண்களில் அந்த அருமையான "ரீன்ஏஜ்’ வெட்ட லும், சிரிப்புமாய்க் கூறியவன் சிறிது நேரத்தில் நித்தி ரையாகிப்போனன்.
மேலும் பல்வேறுபட்ட சிந்தனைகளின் பின் நித்திரை பாகிப் போன வீண விழிக்கும் போது நன்ருகவே விடிந்திருந்தது. பபியும், பாப்பாவும், அம்மாவும் கூட இன்னும் எழுந்திருக்கவில்லை,
தம்பியின் கட்டிலை அவசரமாய்ப் பார்த்தாள் வீணு. அது வெறுமையாக இருந்தது.
ஆஞலும் அவன் அமைத்துக்கொடுத்து விட்டுப் போன பதுங்குகுழி ...!
இப்போது ஐந்துநாளாய் அதற்குள்ளேயே பொழு தின் பெரும்பகுதி கழிந்துபோய்விடுகிறது.
வெளியில் இருந்தால்கூட. வானத்தையே பார்த் துக்கொண்டு எப்போது “பொம்மர்” தோன்றிக் காட்சி கொடுக்கும் என எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டு.
முதல்நாள் பொம்மர் போட்ட குண்டு மூன்ருவது வீட்டில் செல்லத்துரையின் மூன்று வயது மகளை மூளை சிதறி இறக்கவைத்த கொடுமை !
தூவானம் கவனம்

Page 60
104 கோகிலா மகேந்திரன்
அந்தப் பயத்தில் நேற்று வானத்தில் பொம்மர் தோன்றியதைக் கண்டவுடனேயே இருதய நோயாளி யான கருணுகரர் மயங்கிவிழுந்து இறந்த நினைவு மன தில் பூதமாய் உருக்கொள்கிறது.
கந்தையா, சுப்பிரமணியம், யோகநாதன் பலரின் வீடுகள் தரைமட்டம்!
அவர்கள் எல்லாம் இவளின் குடும்பம்போலவே எந்நேரமும் பதுங்குகுழியில் இருந்ததில் உயிர் தப்பினர். இந்த நிலையில் இவள் எப்படி வேலைக்குப் போக முடி யும்? ஹாஷ்யம், சிருங்காரம், அச்சம், அருவருப்பு, வெகுளி, வீரம், அற்புதம், சாந்தம், அழுகை என வாழ்வின் சுவைகள் ஒன்பது என்பர்.
தமிழ்மண்ணில் இன்று இவை அச்சம் அழுகை என இரண்டாகக் குறைந்து விட்டனவோ?
ஜீவனிடமிருந்து நீண்டநாட்களாய்க் கடிதம் வர வில்லை. யாழ்ப்பாணத்தில் ஐந்து நாட்கள் தொடர்ந்து விமானத்தாக்குதல் நடைபெறுவது அவனுக்குத் தெரிந் திருக்குமோ இல்லையோ? தெரிந்திருந்தால் அவன் என்ன உணர்வைப் பெற்றிருப்பான்?
26-4-87
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விமானத்தாக்குதல் நடைபெற்றதாய் பி. பி. ஸி. அறி வித்ததைக் கேட்டபடியே படுத்திருந்தான் ஜீவன்.
போராளிகளின் தளங்கள் மீதே குண்டுகள் போடப் பட்டதாய் வானெலிச் செய்தி கூறியபோதிலும், போராளிகளின் வாழிடங்கள் பொதுமக்கள் வாழிடங்
தூவானம் கவனம்

கோகீலா மகேந்திரன் 103
களில்இருந்து பிரிக்கமுடியாதிருக்கும் என்பதும் போடப் படும் குண்டுகள் பொதுமக்களின் வீடுகளைக் கட்டாயம் தாக்கும் என்பதும் ஜீவனுக்குத் தெரியும். விமானத் தாக்குதல் நடைபெற்றதாய் அறிவிக்கப்பட்ட கிராமங் களில் அவனது கிராமத்தின் பெயரும் சொல்லப்பட்ட
போது முற்றுப்பெருத முதல் காதல் ஒன்று ஏற்படுத் தும் வேதனை போல் விபரிக்க முடியாததோர் வேதனை
அவனுக்குள் எழுந்தது.
சிறிய குழந்தைகள் இருவர், வயதான தாய், இவர் களுடன் வீணு எவ்வளவு கஷ்டப்படுகிருளோ?
தான் இங்கே வந்து அமைதியாகப் படுத்திருக்கும் குரூரம் தனக்கே பயமாய் இருப்பது போல் ஒரு உணர்வு!
பதுங்கு குழியாவது அமைத்தார்களோ இல்லையோ? கட்டாயம் பதுங்கு குழி அமைத்திருப்பார்கள் - எதிர் பார்ப்புகள் இன்னும் காத்திருந்தன. நம்பிக்கைகள் முற் முகச் சாகவில்லை.
அடுத்த கணமே அந்த நம்பிக்கைகள் கடல் துரைக் குமிழிகளாக அழிந்து போகும் நினைப்பு:
ஒருவேளை இதுவரையில் அவர்களுக்கு ஏதும் நடந் திருக்குமோ? இப்படி நினைத்த போது அவனுக்குள் ஏற்பட்டிருந்த வேதனை ஒரு பட படப்பாய் மாறியது.
பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த மோகனைத்தட்டி எழுப்பினுன்.
*"கிரேக்க நாடகம் ஒண்டிலை அகமெம்னன் எண்ட அரசன்தனதுநாட்டின்ரை வெற்றிக்காகத் தன்ாைமகளைக்
துவானம் கவனம்

Page 61
106 கோகிலா மகேந்திரன்
களப்பலி குடுக்கிருன். அவன் போர் முடிஞ்சு நாடு திரும்பேக்கை அவன்ரை மனைவி என்ன செய்யிருள் தெரியுமே?*
திடீரென்று ஜீவன் இவ்வாறு கதைக்கத் தொடங் கவே மோகனுக்கு நித்திரை விசரில் ஒன்றும் விளங்க மல் இருந்திருக்கும் என்றலும் சமாளித்துக்கொண்டு அவன் சொன்னன்.
**தெரியும். மனைவி அகமெம்னனைக் கொன்று விடுரு ஸ். 99
"அதிலை அகமெம்னன் செய்தது பிழையோ.. அல் லாட்டி மனைவி செய்தது பிழையோ... நீ என்ன நினைக் கிருய் மோகன்?’’
'நீ ஏன் இப்ப திடீரெண்டு இப்பிடி ஒரு ஆராய் ச்சியிலை இறங்கி நிக்கிருய்?"
'இல்லை அந்த அகமெம்னனுக்கு நடந்ததைப் போலை. நாங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போகேக்கை, எங்கடை மனிசிமாரே எங்களைக் கொலை செய்தாலும் செய்வினம் எண்டு நினைச்சன்...”*
* ஏண்டாப்பா..? உன்ரை சிந்தனையள் இண் டைக்கு வித்தியாசமாய் இருக்கு?”
*யாழ்ப்பாணத்திலை ஐஞ்சு நாள் தொடர்ந்து விமானத்தாக்குதல் நடக்குதாம். எங்கடை ஊரி லையும் குண்டு போட்டிருக்கிருங்கள். அதுகள் அங்கை என்ன கஷ்டப்படுதுகளோ தெரியாது. எல்லாம் முடிஞ் சாப் பிறகு நாங்கள் அங்கை போஞல்... எங்களைப் பாக்கக் கோபம் வருமோ இல்லையோ?”
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 107
நீ சும்மா தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் கவலைப்படு. நாங்கள் என்ன இஞ்சை சும்மாவே இரு க்கிறம்? கஷ்டப் பட்டு உழைக்கிறம், காசு அவைக்குத்
தானே! இருக்கிறவரைக்கும் சந்தோஷமாயிருக்க வேணும். ஒரு கிளாஸ் தரட்டே... நிம்மதியா இருக் கும்.”
"ஐயோஎனக்குவேண்டாம். நீ களவு வேலையள் செய்து வீணு அம்பிடப்போருய்...".
*உனக்கு எதைத்தான் அநுபவிக்கத் தெரியும்? பவானிசுட உன்னைத்தான் முதலிலே கூப்பிட்டாள், நீஏதோ பயந்து நடுங்கிப் பின்வாங்கிட்டாய், நான் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொள்றன்.”
** நீ உண்மையிலை பவானின்ரை சகோதரன் இல்லை பெண்டு தெரிய வந்தால் என்ன செய்வியோ எனக்குத் தெரியாது.”*
"எங்களுக்கு மூளையைக் கடவுள் ஏன்டா தந்த வர்? தேவையான இடத்திலை கவனமாய்ப் பாவிக்கத் தானே...?”
"எனக்கு உதெல்லாம் சரிவராது. வீணு என்னை உடனை வரச் சொல்லி எழுதினதுக்கு நான் பதில்எழு தேல்லை. அதுக்குப்பிறகு அவளும் எழுதேல்லை. எனக் கும் "ரென்சனுய்" இருக்கு. இவங்கள் போக விடாங் கள். என்ன செய்வம் சொல்லு.”*
"சும்மா விசர்க்கதை கதையாதை, யாழ்ப்பாணத் திலை பொம்மர் குண்டுபோட்டு அங்கை எல்லாரும் சாகினமே? ஆரும் ஒரு பத்து இருபதுபேர் செத்திருப் பினம். அது உன்ரை வீடாயே இருக்கப்போகுது? வந்த
தூவானம் கவனம்

Page 62
108 கோகிலா மகேந்திரன்
நாங்கள் ஒரளவு உழைச்சுக்கொண்டு போவம். அதுக் குள்ளை அந்தரப்பட்டு.'
** அவையெல்லாம் செத்திட்டினமெண்டால். நாங் கள் கொண்டு போற காசு என்னத்துக்கு?".
* சரி ஒரு கதைக்கு.அவைசாகினம் எண்டே வைப்பம்.அதுக்காக நாங்களும் வில்லங்கமாய்ப் போய்ச் சாகவேணுமோ? எத்தனை சனம் அங்கை வெளி நாடுவரத் துடிக்குது. தெரியுமோ?”
*அவைசாக நாங்கள் சாகாமயிருந்து என்ன செய் யிறது?
‘என்ன செய்யிறதோ? விசரா,புருஷன் செத்தா . பெண்சாதிஉடன்கட்டை ஏறிறதுசுடப்போன நூற்முண் டிலை, தற்செயலாய்த்தான் அவை செத்திட்டா.. வேறை கலியாணம் செய்யேலாதே...?
இதற்குமேல் ஜீவனுல் தொடரமுடியவில்லை. மனத் திற்கு ஆறுதலாய் இருக்குமென்று மோகனுடன் கதைக் கப் போய் அவன் மனதை மிகவும் குழப்பி.
மோகனைக்கூடாதவன்என்று முற்ருக ஒதுக்க முடி யாது! நல்ல,தேர்மையான நண்பன், துன்பத்தில் உடனே உதவக்கூடிய மனம்! ஆனல் அவன் வாழ்க்கையைப் பார்க்கும் கோணம் வேறு!
எப்போதும் மகிழ்வாகவே இருப்பான்!
சிறிய விடயங்கள் அவன் மனநிலையைக் குழப்பு வதில்லை!
சூழலோடு விரைவில் ஒன்றி விடுவான்!
துவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 109
சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் முகத்தைக் குத் திக்கொண்டு படுத்திருந்த ஜீவன்.
** எனக்கு மனம் அமைதிப்படுதில்லை. எங்க.ை நாடகத்திலை நீயும், நானும் வாறகாட்சியை ஒருக்காச் செய்வமே?’ என்றன்.
*அதிலை அண்டைக்கு ‘றியேசல்லை" என்ரை நடிப்பு GTL, Suq?””.
‘'நீ கொஞ்சம் “ஓவர் அக்ரிங்" தான், நடிகன் மேடையிலை ஒரு பொய்மையைத்தான் உருவாக்கிரு:ன். ஆனல் அந்தப் பொய்யிலே ஒரு நம்பத்தக்க தன்மை இருக்கவேணும்.”
‘சரி. நான் கொஞ்சம் நச்சுரலாச் செய்யிறன். இப்ப. உன்ரை மனநிலை நாடகம் நடிக்கிறதாலை மாறும் எண்டு நான் நினைக்கேல்லை. கொஞ்ச நேரம் சந்தோஷமாய்ப் படுப்பம்.”
தனது இடத்திலிருந்து எழுந்த ஜீவனை அணைத்துக் கொண்டான் மோகன்.
தூவானம் கவனம்

Page 63
கோகிலா மகேந்திரன்
இன்னும் சில மணித்துளிகளில் விடிவு இன்னும் சில மணித்துளிகளில் விடிவு. என்று மணிக்குமணி எதிர்பார்த்திருந்த மக்கள் அந்த விடிவைக் கண்டுவிட் டார்கள்!
"வட கரையின் முத்துமணல் வருவோரைக் கவ ரும்" என்று ஒரு கவிஞர் பாடினர். சில வருடங்களின் பின் மீண்டும் கீரிமலைச் சிவன் கோவிலின் அருகில் அமைந்த கடற்கரையில் அந்த முத்து மணலின்மீது சுதந்திரமாக அமர்ந்திருக்க முடிந்திருக்கிற நினைவு அவளுக்குள் பெரியதோர் மகிழ்வை ஏற்படுத்தினுலும், அந்த மகிழ்வை முற்ருக அனுபவிக்க முடியாத நிலையில் அவள் மனம் தவிக்கிறது.
17 - 12 - 90
கோவிலைச் சுற்றிவர உள்ள மரஞ்செடிகளெல்லாம் குளித்து முழுகிப் பூத்துக் குலுங்கிப் புதுமைக்கோலம் காட்டுகின்றன. அந்த நிலை தமிழ் மக்களிடத்திலும் பலரிடத்தில் காணப்படுகிறது.
முழத்துக்கொன்ருய் நிறுவப்பட்டிருந்த முகாங்கள்எல்லாம் அகன்றுவிட்டன. “இர வில் தலையில் ஷெல்விழும். பகலில் பொம் 1. பர் வந்து குண்டு போடும்" என்ற பயங்க
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 11
ளிலிருந்து மக்கள் விடுபட்டுவிட்டார்கள். "அவ்ரோ" எறிந்த குண்டுகளால் எரிந்துபோன கட்டிடங்கள் பல புதுப்பிக்கப்பட்டுவிட்டன. ஆனல்.
ஜீவன் வந்து பலாலி விமான நிலையத்தில் இறங் கிய நாள் வீணுவின் நினைவில் பசுமையாய் நிழலாடு கிறது! அவன் வருகிருன் என்றதும் அவளுக்கு ஏற்பட்டி ருந்த மன விரிசல்களெல்லாம் அகன்று விடுகின்றன. எத்தனை மகிழ்வுடன் பபியும் பாப்பாவும் அவளும் விமானநிலையம் சென்று ஜீவனை ஆரத்தழுவி அர வணைத்துக் கூட்டி வந்தனர்!
அவன் அவளுக்கு மிக அவசியமாய்த் தேவைப் பட்ட, வாழ்வின் மிகச் சிக்கலான - மிகத் துன்பமான புள்ளிகளில் எல்லாம் அவன் இல்லாவிட்டாலும்கூட அவள் எப்படியோ சமாளித்துவிட்டாள். பபியும் பாப்பாவும்கூட அவள் எதிர்பார்த்ததைவிட விரை விலேயே அவனுடன் இணைந்துகொண்டனர்.
ஜீவன் கொண்டுவந்த ரொபி, சொக்ளேற், பிஸ் கட், மணிக்கூடு, உடைப் பொதிகளில் அவர்களுக்குப் பரம திருப்தி. சும்மா சொல்லக்கூடாது.அவன் கொண்டுவந்த பணத்தில் வீணுவுக்கும் திருப்திதான்.
"நாங்கள் முந்தி நடிச்ச ஒரு நாடகத்திலை. நாட கம் தொடங்கிறபோது. மேடையிலை ஒரு மரம் வளரத்தொடங்குது. நாடகம் முடிய அது ஒரு பெரிய மரமாய் மேடை முழுதும் பரந்து நிக்குது. . அதைப் போலை நான் சவூதிக்குப் போகேக்கே. வளரத் தொடங்கின - சுதந்திரமரம் இண்டைக்கு நான் திரும்பி வரேக்கே...பெரிய மரமாய் வளந்து பூத்துக் குலுங்கி நிக்கிறதைப் பாக்க எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி
தூவானம் கவனம்

Page 64
112 கோகிலா மகேந்திரன்
தெரியுமே?" என்று ஜீவனும் நிறைந்திருந்தான்.
ஜீவனுடைய குறைபாடுகளும்.அவன் கடிதங்களி "ல்ை ஏற்பட்ட மனக்குறைகளும் வீணுவின் மனதி லிருந்து முற்ருக மறைந்துவிடுகின்றன. "அவன் வந்து விட்டான்" என்ற நிறைவு பெரிய பூதமாய் மற்றக் குறைகளை எல்லாம் விழுங்கிவிடுகிறது.
இந்த நிறைவு அந்தக் குடும்பத்தில் இரண்டு வாரங்கள் நீடிக்கிறது.
இரண்டுவார முடிவில்...ஒரு சனிக்கிழமை இரவு.
ஜீவனுக்குத் திடீரென்று காய்ச்சல் வருகிறது. வழக் கம்போல இரண்டுநாள் பனடோல் போட்டுக்கொண்டு படுத்தும் காய்ச்சல் இறங்காதுபோகவே அவர்களின் குடும்ப வைத்தியரான சிதம்பரநாதன் டொக்டரைச் சந்திக்கிருன். "அவருக்கு வெளிநாட்டிலை எக்செஸ் ஸன் இருந்திருக்கும். அதாலை உடம்பு "வீக் ஆயிட்டுது. இனி சில வருஷங்கள் கழிச்சு வந்திருக்கிறதாலை. கிளைமேற்சேஞ். அதாலை ஃபுளு வந்திருக்கு. பயப்பிட ஒண்டுமில்லை." என்று கூறி மீண்டும் பனடோலும் அன்ரிபயோற்றிக்கும் இருமல் கலவையும் கொடுக்கிருர் . ஒரிரு நாள் காய்ச்சல் விட்டிருக்கிறது. பழைய நண்பர் களின் வீடுகளுக்குப் போயும் வருகிருன். கலகலப்பாக இருக்கிருன்.
மீண்டும் ஒரு வாரம் போக மறுபடியும் காய்ச்சல் வருகிறது. இம்முறை காய்ச்சலுடன் வயிற்ருேட்டமும் இருக்கிறது. "ரைபோயிட்டாக" இருக்குமோவென்று வீனு நினைக்கிருள். அப்படியொன்றும் இல்லை என்று டொக்டர் சிதம்பரநாதன் சொல்லிவிடுகிருர்,
அதன்பின் தனக்கு அடிக்கடி மூச்சடைப்பும் களைப்
வானம் கவனம் து

கோகிலா மகேந்திரன் 113
14ம் ஏற்படுவதாய் ஜீவன் கூறுகிருன். இரவில் மின் விசிறி வேகமாய்ச் சுழன்றுகொண்டிருக்கும்போதும், எழுந்திருந்து தனக்கு அதிகமாய் வியர்ப்பதாக ஜீவன் சொல்வது இவளுக்கு விளங்கமுடியாத புதிராக இருக்
சவூதியில் இருந்து வந்த இந்த ஒன்றரை மாதத்தில் உடல் மிக நன்முக மெலிந்து போயிருக்கிறது. இப் போது இரண்டு நாளாய் காதின் கீழ்ப்புறத்திலும் அக்குளிலிலும் காணப்படும் நிணநீர்க் கணுக்கள் வீங்கி வேதனை கொடுப்பதாய்ச் சொல்கிருன்.
"அப்ப.நாளைக்குப் பெரியாஸ்பத்திரியிலை கொண்டு போய்க் காட்டுவம். என்னப்பா?*
*ம்.’’ அவன் பெருஞ்சிந்தனையோடு பேசாதிருக் இன்ருன். பிறகு, ‘நான் உழைச்ச காசு பபியையும் பாப்பாவையும் கஷ்டமில்லாமல் வளத்துப் படிப்பிச்சுக் கலியாணம் சேய்து குடுக்கக் காணுமே?*
என்று கேட்கிருன். உதட்டைக் கடித்து உணர்ச்சி ளை விழுங்கிக்கொள்கிறன். அந்தக் கேள்வியின் அர்த் கம் புரியாமல் அவள் அவனை விழித்துப் பார்க்கிருள்.
"நான் இல்லாட்டிலும்..இவ்வளவு நாளும் சமா எரிச்சமாதிரி நீங்கள் சமாளிப்பீங்கள்தானே என்ன?”
அவன் ஏன் இப்படிக் குத்தலாகக் கேட்கிருன் ?
தான் இல்லாத வருடங்களில் வீணுவின் தன்னிமை யைச் சந்தேகிக்கிருனே?
‘'நீங்கள் இல்லாமல் நான் எவ்வளவு தரம் கஷ் டப்பட்டன் எண்டு எத்தனையோ தரம் உங்களுக்கு
தூவானம் கவனம்

Page 65
114 கோகிலா மகேந்திரன்
எழுதியிருக்கிறன். சொல்லியுமிருக்கிறன். இரவிரவா அவங்கள் ஷெல் அடிச்ச நாட்களிலை..பகல்பகலாக அவங்கள் குண்டு போட்ட நாட்களிலை உங்களை எனக்கு அவசியம் தேவைப்பட்டுது."
மார்கழி மாதத்துப் பணிச்சாரல் உடலை ஊசி யாய்த் தைக்கிறது.
'வந்தது வந்திட்டன். இனி ஒரு மிக்க இருந்து பல்லைக் கடிச்சுக்கொண்டு உழைச்சுக்கொண்டு போவம் எண்டு தான் இருந்தனன். இப்ப உழைச்சது மட்டும் தான் மிச்சம்..வேறை ஒண்டுமில்லை...”*
அவனின் குரல் விரக்தி நிரம்பி வழிகிறது.
* அப்பா. கப்பல்..அழகான கப்பல்... !'
தூரத்தில் வரும் வள்ளங்களைக் காட்டினுள் பபி. அவளது விழிகள் துள்ளித் துள்ளிப் பாய்ந்தன. ஜீவன் பபியைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டான். அதி லும் ஒரு தயக்கம் இருப்பதுபோலத் தெரிகிறது.
சூரியக் குஞ்சுகள் பல சுழன்று ஒடுவதுபோலத் தூயமணல்மீது இராவணன் மீசை வித்துக்கள் சில ஒடித்திரிகின்றன. அவற்  ைற த் துரத்திக்கொண்டு பாப்பா ஒடுகிருள்.
மணலோரக் கரையில் அவள் கால்கள் அமிழ்ந்து மிதக்கின்றன. ஆழ்கடல்கூட அமைதியாக இருக்கிறது. "ஆமிக்காறன், நேவிக்காறன்’ எல்லாம் வெளிக்கிட்ட தில் இருந்து கடலுக்கும் நிம்மதி. பீரங்கிச் சத்தங்கள் ಫ್ಲಿ; அந்த அமைதியைப்பெற வீணுவுக்கு ஏன் முடிய வில்லை?
உப்புக்கடலில் ஊதிய காற்றை அதிக நேரம்
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 118
சுவாசிப்பதும் ஜீவனின் உடல் நிலைக்குக் கெடுதியாக லாம் என்று கருதி விரைவில் கடற்கரையைவிட்டு எழுந்துவிடுகிறது அக்குடும்பம்!
26 - 2 - 90
வைத்தியச் சோதனையின் முடிவை எதிர்பார்த்து ஜீவனின் கட்டிலருகே நிற்கிருள் வீணு.
படுக்கையில் சோர்ந்து கிடக்கும் ஜீவனுக்கு நடுக்கம், கடுமையான வயிற்ருேட்டம், புலம்பல், மறதி எல்லாம் உருவாகி இருக்கின்றன. அவனுக்கு ‘எலிஜா...' குருதிச்சோதனை செய்யப்படுகிறது.
"டொக்டர்' ஜீவனின் கட்டில் அருகில் வரும் போதே அவரது முகம் சரியாக இல்லை. ஜீவனுடன் எதுவுமே கதைக்காமலே வீணுவை அழைத்துப்போய்ச் சற்றுத் தூரத்தில் வைத்துக்கொண்டு மிக மெதுவாகச் சொல்கிருர்.
"உங்கடை மிஸ்டருக்கு “எயிட்ஸ்’ ஆக இருக்க லாம் எண்டு நான் சஸ்பெக்ட் பண்ணினன். எலிஜா ரெஸ்ற் அதை உறுதிப்படுத்திறமாதிரி இருக்கு...”*
அவர் சொன்னது உண்மைதான் என்று மூளையில் பதிக்கவே வீணுவுக்கு நீண்ட நேரம் எடுத்தது.
மூளையில் பதிந்தவுடன் வயிறு கல் விழுந்தாற் போலக் கணக்கிறது!
"டொக்டர் அடுத்து இன்னெரு கேள்வியும்
கேட்டார்.
துவானம் கவனம்

Page 66
116 கோகிலா மகேந்திரன்
"அவர் சவூதியிலை இருந்து வத் து எவ்வளவு sintas bo”
'இரண்டு மாதம் இருக்கும்...' உங்களையும் நாங்கள் எலிஜா சோதனைக்கு உட் படுத்திறது அவசியம் எண்டு நினைக்கிறீங்களா?*
அவர் நாகரிகமான முறையில் கேட்டாலும் அவ ரது கேள்வியின் அர்த்தம் வீணுவுக்குப் புரிந்தது.
"எனக்கு அவசிட்டை இருந்து. . . எயிட்ஸ் கிருமி தொற்றியிருக்கலாம். ஆணு நான் நிச்சயமா ஒரு காவி யாக இருக்கமாட்டன். ஆகவே நீங்கள் என்னைப் பற்றிப் பயப்பிடத் தேவையில்லை...' என்ருள் வீஞ.
"சரி பார்த்துச் செய்யலாம்” என்று கூறிவிட்டு அவர் அகன்றபின் வீணு ஜீவனின் கட்டிலுக்கு அருகில் வந்தாள்.
நிதர்சன உலகின் விகாரங்கள் அவளுக்குள்ளே பெருவலியைத் தந்துகொண்டிருந்தன.
"இரவு நேரத்திலே கணவன் கூத்தாடுறதுக்கு வசதியா-மனைவி. வீடுகளிலே போய்ச் சேலை வாங்கி வந்து குடுப்பாள்’ என்று பழைய காலக் கூத்துப் பற்றி இவள் நாடகப்பட்டறை வகுப்பில் படித்த துண்டு ,
அதேபோலவே தானும் ஜீவனின் ஆட்டத்திற்கு வசதியாய் அவனைச் சவூதிக்கு அனுப்பினேனுே என்று நினைக்கிருள்.
‘நீங்கள் சவூதியிலே வீட்டையும் வேலைத் தலத்தை யும்விட வேற இடங்களுக்கும் போவியளோ?*
து வானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 117
சுய இரக்கத்தைத் துடைத்தவுடன் ஆத்திரமாய்ப் பீறிட்ட கோபம் எவ்வளவோ மறைத்தும் குரலில் தொனிக்கத்தான் செய்கிறது.
"போவன்." மெதுவான குரலில் பதில் கொடுத்த ஜீவன் இவள் ஏன் கேட்கிருள் என்பதைப் புரிந்து கொண்டவன்போல் அவளை நேருக்குநேர் பார்க்காது தலையைக் குனிந்துகொள்கிருன்.
* எத்தினை பெண்களோடை தொடர்பு வைச்சிருந் நீங்கள்?"
கேட்கக்கூடாது என்று நினைத்தாலும் அவளால் கேட்காதிருக்க முடியவில்லை.
"ஒருத்தரோடையும் இல்லை ...”
அவன் கீழே பார்த்தபடியே கூறுகிருன்.
அவளுக்குள்ளே பெருஞ்சினம் மூண்டது. விழி களில் அனல் மழை பெய்தது.
'இவ்வளவும் நடந்தபிறகு...உங்கடை வருத்தம் “எயிட்ஸ்” எண்டும் தெரிஞ்சபிறகு ஏன் பொய்சொல்லு
நீங்கள்?"
அவள் குரல் சற்று உயர்ந்திருக்கிறது. ஆஸ் பத்திரி என்பதையும் மறந்து!
**இல்லை வீணு. என்னை நம்பு. நான் எந்தப் பெண்ணுேடையும் தொடர்பு வைச்சிருக்கேல்லை. சத்தியமாத்தான் சொல்லுறன்.ஆனல் எனக்கு எயிட்ஸ் எண்டது ஒருவேளை உண்மையாயிருக்கலாம்’
‘என்ன விசர்க்கதை? தொடர்பில்லை என்றியள் பிறகு எயிட்ஸ் ஆக இருக்கலாம் எண்டும் சொல்லு றியள்?"
தூவானம் கவனம்

Page 67
118 கோகிலா மகேந்திரன்
அவள் கண்கள் நிறையக் குளம் கட்டி நிற்கிறது.
"பவானி எண்டொரு ஹவுஸ் மெயிட்டோடை என்ரை அறை நண்பன் மோகன் சிநேகிதமாயிருந் தான். ,.'
தொடர்ந்து சொல்ல முடியாமல் வார்த்தைகளை விழுங்கிக்கொள்கிருன் ஜீவன். அவளதுவிழிகள் அவனைத் துகிலுரிந்து பார்ப்பதுபோல். ,
"எயிட்ஸ்" நோயின் "எச். ஐ. வி. வைரசு தன் னினச்சேர்க்கைமூலம் பரவுதலை இவள் முன்னர் பத் திரிகைகளில் வாசித்திருக்கிருள்.
"நீங்கள் கொணந்த பெருஞ்செல்வத்தை எனக்கும் தந்திருப்பியள் எண்டு டொக்டர் என்னையும் சோதிக்க வேணும் எண்டு சொல்லுருர். இதைவிட அவமானம் வேறை என்ன இருக்கு?*
அவளது குரல் அமானுஷிகத் தன்மையுடன் தழு தழுத்தது. அவனை நீங்கள் என்று பன்மையில் அழைப் பதுகூட மிகை என்று தோன்றியது.
"என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கோ வீணு,.." முன கியபடியே திரும்பிப்படுத்துக் கண்களை மூடிக்கொள்கி முன் அவன்.
சக்தி வாய்ந்த சிந்தனைகள் "வோட் பிக்சர்" போல் இருக்கும் என்று சொல்வார்கள். வாழ்வில் எல்லாமே முடிந்துவிட்டதுபோன்ற இந்தக் கணத்தில் பழைய நினைவுகள் பல அப்படித்தான் வீணுவுக்குள் எழுகின்றன. தேக்கி வைத்திருந்த நினைவுக் கங்கை மீறிப் புறப்பட்டு நெஞ்சமெல்லாம் பரவுகிருள்!
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 119
மனிதனின் நாகரிகம் மொழி, மொழியின் நாகரிகம் கவிதை!
அவன் வீணவுக்கு அருகில் நின்று நாடகப் பட் டறை வகுப்பில் ஈடுபடும்போது...இடையில் தான் ஏதும் கவிதை சொல்வான். இவள் அதைத் திருப்பிச் சொல்வாள். பிறகு இவளைப் புதிதாய் ஒரு கவிதை சொல்லும்படி கேட்பான்.
அப்போது அவள் சொன்ன கவிதை ஒன்று: ‘மலையிலே துள்ளும் நதி மங்கை சமவெளிக் கணவனை அடைந்தபின் நடையிலே எத்தனை மாற்றங்கள்?’
இப்போது இந்தக் கட்டிலில் உரித்தகோழிபோல் படுத்திருக்கும் ஜீவனுக்கு. நடையில் எத்தனை மாற்றங் கள்!
நம்பிக்கையின் சிதைவுகளுக்கிடையில் இருந்துதான் மனிதஞானம் பிறக்கிறதா? எல்லா நம்பிக்கைகளும் சிதைந்த நிலையில் அவனும் அவளும்!
பபி, பாப்பாவின் எதிர்காலம்..? எங்கும் ஒரே இருளாக இருக்கிறது.
அவளால் அவனை முற்ருக வெறுக்கவும் முடிய வில்லை. ஏன்?
மனங்களின் இரகசிய வேதனைகளைப் புறக்கண்களால் காணமுடியாது என்று சொல்வார்கள். ஆனல் இந்தப் படுக்கையில் ஜீவனின் வேதனை பல சமயங்களில் அவன் முகத்தில் தெரியவே செய்தது.
'மோகனேட நான் பழகாமல் இருந்திருக்கலாம்.
தூவானம் கவனம்

Page 68
120 கோகிலா மகேந்திரன்
மோகன் இடையிலை ஒருக்கா சாம்பியாவுக்கும் போய் வந்தவன்...”*
மனதுக்குத்தானே சொல்லிக்கொள்பவன்போல் முணுமுணுத்தான் ஒருமுறை.
தவறு ஒன்றைச் செய்துவிட்டுத் தவறு என்று ஏற்றுக்கொள்வது ஜீவனுக்கு வழக்கமில்லை. தான் செய்தது சரி என்றும் மற்றவரே பிழை என்றும் நிரூ பிப்பதே பெரும்பாலும் அவன் வழக்கம். அது குடும் பத்தின் கடைசிப் பிள்ளையாக வளர்ந்த குணம்.
கோபம் வந்தால் உடனே பலமாகக் கத்துவான். "நீங்கள் ஏன் இப்பிடிக் கத்திறியள்? என்று கேட் டால்கூட,
'நான் கத்துவன். நீ விரும்பினுல் கத்தாத ஆம் பிளை ஒராளைப் பிடிச்சிருக்கலாம்’ என்று மீண்டும் கத்துவானே ஒழியத் தன் தவறை உணர்ந்துகொள்ள ! DsTl: -l-fT6ðf•
இப்போதும்கூட நேர்ந்த தவறை அவள்மீது சுமத்தியிருக்கலாம்
"நான் போறபோதே நீயும் என்னுேடை வந்தி ருக்கலாம். வந்திருந்தால் இப்பிடி ஒண்டும் நடந்திருக் காது. கொம்பனியும் ஒரு வீடு தந்திருக்கும்.’’ என்று சொல்லியிருக்கலாம்.
ஆனல் அவன் அப்படி ஒன்றும் சொல்லாமல் ‘என்னை மன்னிச்சிடுங்கோ வீஞ" என்று சொல்லி விட்டுச் சோர்ந்து கிடப்பது. இவளை அவன்மீது அனு தாபம் கொள்ளவைத்தது.
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 121
எந்தஒரு சிறு விடயத்தை எடுத்துக்கொண்டாலும் அதைச் சரியாகச் செய்துமுடிக்க நினைக்கும் பண்4 வீணுவுடையது. அது குடும்பத்தில் மூத்த பிள்ளையாக வளர்ந்த பண்பாக இருக்கலாம். தன்னைப்போலவே கணவனும் பிள்ளைகளும் இருக்கவேண்டுமென அவள் எதிர்பார்த்தாள். அப்படி அமையாதபோது அவள் பெரும் ஏமாற்றம் அடைவதுண்டு.
இது மிகப் பெரிய ஏமாற்றமாய்.இறுதி ஏமாற்ற மாய்...! வாழ்வில் ஒழுக்கம் பேணுதல் என்ற சட்டம் வினுவிடம் கண்டிப்பாய் அமைந்திருந்தது. அது ஏன் ஜீவனிடம் அமையாமல் போயிற்று?
குறுகியகர்ல நட்புக்களைத் தேடிக்கொள்ள அவ ளால் ஒருபோதும் முடிந்ததில்லை. அவளது நண்பர்கள் எல்லாம் நீண்டகால நண்பர்களாகவே இருந்தார்கள். அப்படியான நண்பர்கள் நட்புக்குத் துரோகம் செய்ய மாட்டார்கள் - கல்யாணிபோல.பூரணிபோல.
ஜீவன் திடீரென உண்டாக்கிக்கொள்ளும் நட்டம் - பிறகு கவலையின்றி அவர்களைப் பிரியும் இயல்பும். கடைசியில் அவனுக்கே காலணுகிவிட்டனவே!
எல்லாம் ஒரு "கண்ணும்பூச்சி’ நாடகம்போல் இருந்தது வீணுவுக்கு!
தூவானம் கவனம்

Page 69
கோகிலா மகேந்திரன்
விணுவை நம்பி வாழ்விலே ஒரு பொறுப்பைத் தரலாம். அதைச் சரியாக நிறைவேற்றும் பொறுப்பு ணர்ச்சி கட்டாயம் அவளிடம் அனளிடம் இருக்கும்.
உண்மையில் வாழ்வை மிக "சீரியஸ் ஆக எடுத்துக் கொண்டு ஒய்வு கொள்ளப் பிரச்சினைப்படுவதே இவ ளின் வாழ்வுப் பண்பாக இருந்து வந்தது.
எதிலும் நிச்சயமற்ற தன்மையை அவள் விரும்பிய தில்லை. எதைச் செய்யப்போகிருேம். எப்போது செய் யப் போகிருேம் என்பதில் நிச்சயத்தை அவள் எப்போதும் விரும்பியதுண்டு.
எந்த ஒரு விடயத்திலும் பொறுப்பெடுத்துக் கொள்பவள் இவளாக இருக்க விலகிக்கொள்பவனுக ஜீவன் இருத்ததுண்டு.
30 - 2 - 91
இறுதியில் வாழ்வின் முழுப் பாரத்தையும் அவள் மீது கொட்டிச் சுமத்திவிட்டுத் தான் விலகிக்கொள் பவன்போல மரணப்படுக்கையில் இருக்கிருன் , இன்னும் ஒரிரு நாள்களில் எல்லோருமே எதிர்பார்த் TT திருக்கும் அந்த மரணம் நிகழ்ந்துவிடலாம்: புழுத்துடிப்பாக அவளின்உள்ளம் துடித்தது; 1 2
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 123
மலர்ந்து மணம் வீசும் சோஷலிச தமிழ் ஈழத்தைவர்க்கபேதமற்ற அதன் செம்மையான வாழ்வை - வேல் இல்லாப்பிரச்சினை என்பதே தலை காட்டாத அதன் செழிப்பை - பெரிய தொழில்களுக்கும் சிறிய தொழில் களுக்கும் பெருமளவு சம்பளபேதம் அற்ற அதன் உயர்வை - எல்லாம் பார்த்துக் களிக்கும் வாய்ப்பு ஜீவ னுக்குக் கிடைக்காமல் போகப்போறது. இதுதான் ஒழுக்கக்கேட்டுக்கு அவன் கொடுத்த விலை.
வீணுவின் கண்களில் குளம்! கண்களைமூடிக்கொண்டு ஜீவனின் கட்டிலுக்குப் பக்கத்தில் இவள் அமர்ந்திருக் கையில் கோபி வந்தான்.
புதிய பூமியில் அவன் 'மீதேன் உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராய் இருக்கிருன்.
வரும்போதே 'சுக்தி வரச் சகதி எண்டால் எட்டி அடி வைப்பதெங்கே?” என்று சொல்லிக் கொண்டு வந்தான்.
இவள் ஒன்றும் புரிய்ாமல் தலையை நிமிர்த்தி விழித்தாள். அவனே விளக்கமளித்தான்,
*எந்த வீட்டிலை பாத்தாலும் வெளிநாட்டாலே வந்து நிக்குதுகள்.இதுகள் எல்லாம் போராட்டம் நடக் கிற காலத்திலை தங்கடை உயிர் பவுண் - மற்றவையின்ரை உயிர்கிள்ளுக்கீரை எண்டு நினைச்சுக்கொண்டு வெளிநாடு களுக்கு ஒடித்தப்பினதுகள். அங்கை போய்ப் பணக் காற அகதிகளாய் இருந்ததுகள். இஞ்சை நாங்கள் எத்தினை ஆயிரம் உயிரைப் பலி குடுத்து அவங்களை முகாம்களை விட்டுக் கலைச்சு அவங்களே அரசுக்கு எதி ராச் சதி செய்து எத்தனை கஷ்டப்பட்டுச் சுதந்திரம்
தூவானம் கவனம்

Page 70
! 24 கோகிலா மகேந்திரன்
வாங்கினுப் பிறகு மொசு மொசுவெண்டு வந்து இறங்கி நிக்குதுகள்...”*
*"அதிலே உனக்கு என்ன நட்டம்?" "என்ன நட்டமோ? சும்மா வந்தாலும் காரிய
மில்லை. எயிட்ஸ் எண்டொரு பெரிய செல்வத்தையும் கொண்டெல்லே வரினம்!”
அவன் நக்கலாப் பதிலளித்தான்.
அவர்தான் மரணதண்டனை விதிக்கப்பட்ட நோயாளி யாய்ப் படித்திட்டார். பிறகு நீ ஏன் குத்திக் காட்டி முய்?"
*"அவள் அழத் தயாராக இருந்தாள்போலிருந்தது. இன்னும் சில மணித்தியாலங்களில் பிரிந்துவிடப்போகும் ஜீவனின் உயிரில் கருணை கொள்வது ஒரு பெண்ணின் இயல்பு என்றே கூறலாம்.
**இவையள் ஒருத்தரையும் இனி நாட்டுக்கையே வரவிடக்கூடாது. இவை வந்து இஞ்சை மண்டையைப் போடுறது. மட்டுமில்லை. அடுத்த பரம்பரைக்குமெல்லே இதைக் கொடுத்திட்டுப் போயினம்.'
கோபியின் மனதில் ஜீவனுக்காக ஒரு துளிதானும் ஈரம் உண்டாகவில்லை. உண்டாகவேண்டும் என்று எதிர்பார்க்கவும் முடியாதுதான்.
கோபி இதைச் சொன்னபோதுதான் இவளுக்குத் திடீரென்று நினைவு வந்தது. தனக்கு இறுதியாக மாதச் சுகயினம் ஏற்பட்டு நாற்பது நாள் கடந்துவிட்டது: என்பது! ஆஸ்பத்திரிக்கும் வீட்டிற்குமாக அலைந்து திரிந்ததில் அவள் இதுவரை அதுபற்றிச் சிந்திக்கவே யில்லே. அப்படியானுல்...?
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 125
வீணுவுக்கும் எயிட்ஸ் தொற்றியிருக்கலாம் என்பது மட்டுமல்ல. .அவளது வயிற்றில் தோன்றியிருக்கும் குழந்தையும் பிறக்கும்போதே எயிட்ஸ் உடன் பிறக்கக் கூடும் என்பதற்கு ஐம்பதிற்கு ஐம்பது வீதச் சந்தர்ப்ப முண்டு.
இதை நினைத்தபோது அவளுக்குத் திடீரென்று தீயை மிதித்ததுபோல் இருந்தது. முகத் தசை கோணி உதடு நடுங்கிற்று. குரல் உடைந்து வந்த அழுகையை இப் போது அடக்க முடியாமலே போய்விட்டது.
இங்கே நடக்கும் எந்தவிதமான சங்கதிகளுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லாததுபோன்ற ஒரு நிலையில் ஜீவன் கட்டிலில் கிடந்தான்.
* நீ இண்டைக்கு வேலைக்குப் போகேல்லையா?* வீன. கோபியைக் கேட்கிருள் அழுதுகொண்டே 'இல்லை. அத்தானுக்குக் கடுமை எண்டு அம்மா
ராத்திரி வந்த சொன்னு. . .அதுதான் ஒருக்கால் பாப் பம் எண்டு வந்தனன்.”
இவன் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கையில் பபியும், பாப்பாவும், அம்மாவும் ஆஸ்பத்திரியினுள் நுழைந்தனர்.
அம்மாவைக் கண்டவுடன் ஒடிச்சென்று கட்டி யணைத்து வீரிட்டுக் குளறி அழுகிருள் வீணு.
ஜீவனின் இறுதி நிமிடம் நெருங்கிக்கொண்டிருப் பதை உணர்ந்த அழுகை அது என்றுதான் அம்மா நினைத்திருப்பாள்.
"எயிட்ஸ்’ உடன் ஒரு உயிர் தனக்குள்ளும் உரு
தூவானம் கவனம்

Page 71
126 கோகிலா மகேந்திரன்
வாகியிருப்பதை உணர்ந்த ஒரு பெரும் சோகம் அது என்பது அம்மாவுக்குப் புரிந்திருக்காது.
ஆம். அது நினைக்க முடியாத பெருஞ்சோகம்தான்!
தாங்கள் செய்த தவறினல் தாங்கள் தண்டிக்கப் பட்டு அனுபவிப்பது மட்டுமல்ல...ஒரு தவறும் செய் யாத, ஒரு பாவமும் அறியாத குழந்தை ஒன்றுக்குப் பிறக்கும்போதே தண்டனை கொடுப்பது.மனச்சாட்சி உள்ள எவராலும் தாங்கமுடியாத பெரும் சோகம்!
சோபோ கிளிசின் கிரேக்க நாடகங்களைவிட அதிக அவலச்சுவை கொண்ட நாடகம்!
அம்மாவும், பபியும், பாப்பாவும் வந்து கட்டி லுக்கருகில் ஜீவனின் முகத்தைப் பார்த்துக்கொண்டி ருக்கையில்,
அவனது முகத்தில் திடீரென ஒரு மந்தகாசம் தோன்றுவதுபோல் இருக்கிறது.
எங்கோ வெகு தொலைவில் ஆர்ப்பரித்த கடல் ஒன்று கரையிலே மோதி உதிர்வதுபோன்ற சத்தம் வீளுறவுக்குள் கேட்கிறது,
அமீபா என்ற உலகின் முதல் உயிர் இனப்பெருக் கம் செய்யும்போது, இரு கூற்றுப் பிளவு முறையிலேயே இனப்பெருக்கம் செய்தது. அப்போது "இறப்பு’ என் பது இருக்கவில்லை. ஒவ்வொரு உயிரும் இரண்டாகப் பிரிவதும் பிறகு அது வளர்வதுமாகவே இருந்தது. உலகம் அப்படியே இருந்திருக்கலாம்!
அதன்பின் "செக்ஸ் ஆரம்பமாயிற்று. எப்போது "செக்ஸ்" உம், ஆண் பெண் வேறுபாடும் புணர்ச்சியும்
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 127
ஆரம்பமாயிற்ருே.அன்றுதான் இறப்பும் ஆரம். மாயிற்நு. புணர்ச்சி காரணமாக எப்போது புதிய உயிர் உண்டாயிற்றே அப்போதே தாய், தந்தை என்ற பழைய உயிர்கள் இறப்பதும் அவசியமாயிற்று.
இத்தகைய கூர்ப்பு நடைபெருமலே விட்டிருக்க லாம் என்று மட்டும் வீணு நினைத்தாள்.
அத்தானின் இறப்பைப் பார்த்துக்கொண்டு நின்ற கோபி,
*பொம்மர் குண்டு வீச்சும், ஷெல் அடியும், ஹெலித்தாக்குதலும், பெற்ருேல் குண்டு வீச்சும், எரிப் பும் முடிஞ்சு சுதந்திரம் வந்த உடனை நாங்கள் பெரு மழை பெய்து விட்டிட்டுது எண்டுதான் நினைச்சம். ஆனல் இப்பதான் தெரியுது...பெரிய மழைக்குள்ள நனயலாம். ஒண்டும் செய்யாது.ஆனல் அந்த மழைக்குப்பிறகு வாற தூவானத்தைப்பற்றி நாங்கள் மிச்சம் கவனமாய் இருந்திருக்கவேணும். தூவானத் திலை நனைஞ்சால் கட்டாயம் நோய் வரும். தடுக்கே லாது."
என்று தனக்குத்தானே சொல்பவன்போல் சொல்லிக் கொண்டு ஆஸ்பத்திரியைவிட்டு அகன்ருன்.
சடலத்தை வீடு கொண்டுசெல்வதற்கான ஆயத் தங்கள் செய்யவே அவன் செல்கிருன் என்பது வீணு வுக்குப் புரிந்தது.
தான் தவறு செய்யத் தொடங்கிய முதல்நாள் மனச்சாட்சி மிகப் பலவீனமாகத் தன்னுள் ஒலித்தது என்றும் அது தனக்கே அடையாளம் தெரியாத மிகச்
தூவானம் கவனம்

Page 72
128 கோகிலா மகேந்திரன்
சன்னமான குரலாக இருந்ததென்றும் முதல்நாள் இரவு இவளிடம் ஜீவன் கூறியது அவள் மனதில் மீண்டும் வந்து எதிரொலிக்கிறது.
சவூதிக்குப் போவதற்கு முன்னர்கூட.இவளுடன் வாழ்கையில்...திடீரென்று உடை மாற்றிக்கொண்டு சைக்கிளையும் எடுத்துக்கொண்டு வெளியே போவான். எங்கே போகிருன் என்பது வீணுவுக்குத் தெரிந்திருச் காது. ‘எங்கே போகிறேன்?” என்று சொல்லிக்கொள் வது அவன் வழக்கமில்லை. அதுபோலவே இறுதியில் ‘எங்கே போகிறேன்?’ என்று சொல்லாமலே போய் விட்டான்.
"அப்பா செத்துப் போயிட்டாரா அம்மா?’
ஏதோ விளங்கியும் விளங்காத நிலையில் பாப்பா இவளிடம் வந்து மெதுவாகக் கேட்டாள்.
'இல்லை. அப்பா நித்திரை என்னம்மா?’ என்ருள் பபி.
அவர்கள் இருவரையும் நெஞ்சத்தோடு அணைத்துக் கொண்டே, ‘நான் இருக்கிறன், அம்மம்மா இருக் கிரு. கோபி மாமா இருக்கிருர்.’’ என்று அவள் மறைமுகமான பதிலாகக் கூறியபோது, அவளது கால் கள்கூடத்தான் துணிமாதிரித் துவண்டன.
வீட்டிலே தற்செயலாக ஒரு அட்டை காணப்பட் டால் அதை வீட்டிற்கு வெளியே நூறு மீற்றர் தூரத் திற்குமேல் தட்டிக்கொண்டே போவான் ஜீவன். அவ் வளவு அருவருப்பு அந்த அட்டைமீது, ‘‘அட்.ை அழகு குறைந்த உயிர். சரிதான். ஆனல் அதில் அரு
தூவானம் கவனல்

கோகிலா மற்கேந்திரன் 129
வருப்பதற்கு என்ண் இருக்கிறது?"என்று கேட்பாள் வீஞ. அப்படியான்வன்-இறுதி நேரத்தில் சமுதாயம் முழுவதாலும் அருவருத்து ஒதுக்கப்படும் நிலைக்கு வந்து விட்டrனே!
கோபியோடு கூடவந்த மினிவான் சாரதி இவன் எயிட்ஸ் நோயாளி என்று தெரிந்தவுடன்.அவனைத் தொட்டுத் தூக்கக்கூடத் தயக்கம் காட்டியபோது விணு இவ்வாறு நின்த்தாள்.
"சறுக்குப்பாறை எண்-து வழுக்கிக்கொண்டே இருக்கும். விழாமல் இருக்கவேணுமெண்டால் மிக அதிகப்படியான கவனம் தேவை. இல்லாட்டி விழுந் தெழும்பவேண்டியதுதான். அப்படிப்பட்ட ஒரு சறுக்குப் பாறைதான் இந்த வெளிநாட்டுப்பயணம்."
பக்கத்துக் கட்டிலில் இதய நோய்க்காக அநுமதிக் கப்பட்டிருந்த ஆசிரியர் இவ்வாறு யாரிடமோ சொல் வது கேட்கிறது.
சவூதியில் இருந்து வந்த பிறகுகூட. காய்ச்சல் வருவதற்குமுன்..பொருள்களை எடுத்து இடம்மாற்றி வைத்தல் அவனது ஒரு இயல்பு!
ஹாலின் நடுவில் இருக்கும் ரீப்போவின் வடக்குப் பக்க மூலையில்தான் வீணு எப்போதும் பூச்சாடி வைப் பாள். ஒரு பொருளுக்கு இடம் ஒதுக்கப்பட்டால் இறுதிவரை அந்தப் பொருள் அந்த இடத்திலேயே இருக்கவேண்டும், வீளுவுக்கு மிக அவசிய தேன்ய ஏற் ப்ட்டால் ஒழிய.அப்பொருளின் இடத்தை மாற்ற
6.
துர்வானம் கவனம்

Page 73
130 கோகிலா மகேந்திரன்
ஆஞல். ஜீவன் வந்த மறுநாளே. அந்தப் பூச் சாடி அலுமாரிக்குமேல் ஏறி நின்றது. அடுத்தநாள் ரீப்போவின் தெற்குப் பக்கத்தில் குத்தியிருந்தது. செருப்போ பத்திரிகையோ நெருப்புப்பெட்டியோ ஜீவ னின்பாவனையில் உள்ள பொருள்கள் யாவும் ஒருநாள் ஒரு இடத்தில் வீற்றிருக்கும். இறுதியில். தனது உடலை யும் இடம்மாற்றி வைத்ததன் விளைவு இது! அடுத்த பிறவி என்று ஒன்று இருந்து.அதில் இவை எல்லாம் நினைவு வந்தால்..நிச்சயமாய்ப் பொருள்களை அடிக்கடி இடம்மாற்றி வைப்பவர்களுடன் பழகக்கூடாது. அவர் 3ள ஒருபோதும் காதலிக்கக்கூடாது. என்று விரக் தியுடன் நினைக்கிருள் வீணு.
மேடை நாடகங்கள்ல் இந்தச் சமுதாயத்தை, வியாக்கியானம் செய்த வேளைகளில் இது "சுயநலங் களும் சுரண்டல்களும் நிறைந்த அகழி' என்று ஜீவன் கூறியதுண்டு. இன்று அந்தச் சமுதாயமே அப்படித் தன்னை வர்ணித்தவனைப் பார்த்துச் சிரிக்கும் நிலை ஆகி விட்டது.
பிள்ளைகளுக்குப் பெரிதாய் பிறந்தநாள் கொண் டாட்டங்களைச் செய்யமுடியவில்லை என்று விரக்தி அடைந்து சவூதிக்குச் சென்றவன் திரும்பி வந்து.
"இந்தமுறை பபியின்ரை பேர்த்டேக்கு.இந்த இது.செய்யவேணும்.என்முன்."
அவனது கதைகளில் "இந்த இது." என்பது அடிக் கடி வரும். அதை வீன நகைச்சுவையுடன் கூறி
தாவனம் கவனம்

கோகில மகேந்திரன் 13
"இந்த இது.எண்டால்.எந்த எது.?" அவள் சிரித்துக்கொண்டே கேட்டாள்
அப்போது அவனும் சிரித்துக்கொண்டே ஒன்றும் பேசாமல் எழுந்து சென்றுவிட்டான்.
பபிக்கு ஏதோ செய்யவேணும் என்று நிக்னத் தானே ஒழிய “என்ன செய்யவேணும்" என்பதில் அவன் நிச்சயமாகவில்லை என்பதை அச்சம்பவம் விஞ வுக்கு உணர்த்தியது.
எதிலுமே நிச்சயமற்ற சிந்தனை கொண்டிருந்த அவன் வாழ்வு.நிச்சயமற்ற வாழ்வாய் நிம்மதியின்றி இளமையில் முடிந்து போயிற்று.
வீணு நெடுமரமாய் நெடிது நின்ருள்,
துவானம் கவனம்

Page 74
32 கோகிலா மகேந்திரன்
கீட்டிலில் படுத்திருந்தாள் வீணு. சொந்த ஊரில் இருந்து பதினைந்து மைல் தொலைவில் உள்ள ஒரு ஆரசில்.உள்ளே இருந்த கட்டிலில் காற்று வரு கிறது. ஆனுலும் இறுக்கமாயிருந்தது.
உடம்பெல்லாம் ஒரே அலுப்பாய்க் களை கட்டி யிருந்தது. "கால் தசைகள் “விண்விண்’ என வலித்தன.
காரணம் தெரியாமல் ஒரு அச்சம் மாத்திரமல்ல சுய இரக்கமும்கூட அவளுக்குள் வந்திருந்தது.
கட்டிலில் படுத்திருந்தபடியே மேற்கையும் கிழக்கை யும் பார்த்தாள் பார்த்துக்கொண்டே சிரித்தாள். மேற்குப் புறம் பபி, கிழக்குப்புறம் பாப்பா அவளை
அணைத்தபடி...!
8 - 6 - 87
கடந்த இரவு விசித்திரமான இரவு? நித்திரை யின்றிக் கழித்துவிட்ட பல இரவுகளில் ஒன்--- றுதான்! ஆணுலும் வித்தியாசமானது. புதிய ; 13 இடத்தில் பயங்கரச்சத்தங்கள்ள துவும் கேட் கவில்லை - ஆனல் பயங்கரச்சிந்தனைகள்.அவள் J விரும்பாமலே வந்துவோன சிந்தனைகள்!
திர்ைனேல் நயனம்

கோலோ மகேந்திரன் 139
தொண்ணுாரும் தொண்ணுற்ருேராம் ஆண்டுகள் பற்றித் தன்மனதில் இப்படியாக வந்துபோன சிந்தவுை கள்கூட.சுயஇரக்கத்தின் வெளிப் பாடே என்று நினைத்தாள்.
பவானி, மோகன் ஆகியோரைப் பற்றிச் சென்ற கடிதத்தில் ஜீவன் எழுதிய சில விரும்பத்தகாத விட யங்கள் தன் சிந்தனையை எப்படிக் குழப்பியிருக்கிறது என்று வியந்தாள்.
கடந்த சில மாதங்களில் வெய்யிலில் காய்ந்த வாழைப்பழத்தோல்போல் உடம்பு ஆகிவிட்டது. உடம் பின் தோற்றம்கூட உளவியல் காரணிகளால் எவ்வளவு unt Said, ப்பட்டுவிடுகிறது
**கணவன் வெளிநாட்டில் மாதந்தோறும் இலட்சக் கணக்கில் உழைக்கிருர்’ என்ற விம்பத்தினல் மட்டும் என்ன பயன்?
வயதுபோன அம்மாவையும் இரண்டு பச்சைக் குழந்தைகளையும் கொண்டு சொந்த வீட்டைவிட்டு அகதியாக ஓடிவரும்படி ஆகிவிட்டது! ܖ
வழக்கமாக ஒளி ஈட்டிகளை எய்து எய்து உதிக்கும் சூரியன் நேற்று ஷெல் குண்டுகளை எறிந்து எறிந்து உதித் தான். அவளது ஊரில் இருக்கும் மக்களைக் காலை ஒன்பது மணிக்குள் வெளியேறிக் குறிப்பிட்ட கோயில் களுக்கு சென்றுவிடும்படி யாழ்ப்பான வானுெலி அடிக் கொரு தடவை அறிவிப்புச் செய்தது.
காற்றுக்கு நறுமணம் பூசி அனுப்பும் முற்றுத்துப் பவளமல்லிகைப் பூக்கள் தேற்றுக் காலே வெடிமருந்து மணம் பூசி அனுப்பின.
வானம் கவனம் gif

Page 75
134 கோகிலா மகேந்திரன்
பனியில் முகம் கழுவி மலர்ச்சியில் சிரிக்கும் பூக்கள் எல்லாம் நேற்றுப் பீப்பாக்குண்டு நெருப்பில் முகம் கழுவிக் கருகி அழுதன.
தம்பி கோபி அமைத்துத் தந்த பதுங்கு குழிகூடப் பயனற்றுப் போய்விட்டது இறுதியில்,
"குழியிலை இருக்கிறவையைக் கண்டா அதுக்குள் ளேயே குழி தோண்டிப்போடுவங்கள் படுபாவியள் ."
"அவை சொல்லுற கோயிலுக்கை போயிருந்தா. அந்தக் கோயிலுக்கும் குண்டு போடுவங்கள்."
வடமராட்சியின் முன் அனுபவங்களைக்கொண்டு வீணுவின் ஊர்மக்கள் பொதுவில் செய்துகொண்ட முடிவுகள் இவை.
எட்டு மணிக்கு முன்னரே ஊர் வெறிச்சோடி விட்டது. வானுெலி அறிவிப்பினுல் காதுகள் இரண்டும் காயங்களாக, ..இதயத்தில் கொஞ்சம் ரத்தம் சொட்ட. ஒரு குழந்தை நடக்க மறு குழந்தையைத் தூக்கிக் கொண்டு. பின்னர் சிறிது தூரம் மறுகுழந்தை ஓடி ஒடி நடக்க ஒரு குழந்தையைத் தூக்கிக்கொண்டு. அடைவிடமோ முடிவிடமோ தெரியாமல் நடந்தாள் வீணு.
நகைகளும் கைச்செலவுக்கு வைத்திருந்த சிறிதளவு பணமும் ஒவ்வொரு மாற்றுடுப்புக்களும் மட்டுமே எடுத்துக்கொண்டாள்!
வீதி நிறைய மனிதர்கள் பிதுங்கிவழிந்துகொண்டி ருந்தார்கள். வான்கள், பஸ்கள் எதுவும் ஒடவில்லை. ஆங்காங்கு அருமையாக ஓடிய ஒரிரு தனிப்பட்ட
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 133
வாகனங்களில் சிறிலங்காவின் புத்திரர்களும் புத்திரி களும் புளியாக மாறியிருந்தார்கள். சைக்சிள்களில் சிலசமயம் நால்வர்.சில சமயம் ஐவர்!
தொலை வில் நாய் கள் பல கு ரை க்கின்றன. யாரையோ கூட்டாகத்திட்டுவது போல் இருக்கிறது. திட்டட்டும். நன்ருக! திட்டவேண்டியவர்கள் எல்லா ரையும் திட்டட்டும் ஜீவனையும் கூடத்தான்! தெரு வெ ல் லா ம் மனிதர்கள் ஏதேதோ பேசிக்கொண்டு போகிறர்கள் - பேசுகிருர்கள் - திட்டுகிருர்கள் . அழுகி ரூர்கள் - சபிக்கிருர்கள்.
எல்லாம் வீணவின் காதில் விழுவதுபோல் இருக்கி
றது. ஆனல் ஒன்றும் விழவில்லை.
உள்ளுக்குள்ளே இருந்து ஒரு வீணு கேட்டாள்.
இப்போது நீ எங்கை போருய்?" வெளியே நடந்துகொண்டிருந்த வீன சொன்னுள்.
"பதினஞ்சு மைல் தள்ளி என்ரை பழைய சினே
கிதி ஒருத்தி இருக்கிருள் அங்கை போவம்."
அவ்வளவு தூரமும் நடந்தோ?” வேறை வழி..?”
*உன்ரை ஜீவன் இப்ப சவூதியிலை தனிவாகனத் திலை வேலைக்குப் போவர். இஞ்சை நீ.'
உள்ளேயிருந்த வீணு புறு புறுத் துக்கொண்டிருந்
தாள். வெளியே நடந்துகொண்டிருந்த வீணு மெளன மாய் நடந்தாள்.
தூவ Tsot to ass) or is

Page 76
136 கோகிலா மகேந்திரன்
அவள் தனியாகவல்ல! நொடிப்பொழுதில் கலைந்து சிதைந்த் ஊர்முழுதும் நடந்துகொண்டேயிருந்தது.
நடந்து, நடந்து, நடந்து,... கால் ஒயும்வரை நடந்து. தூரத்துக் கிளையில் குர்ல் தீட்டிக் குரல்திட் டிக் கூவுகிற குயிலின் குரலில் அவளது சிந்தனை தடைப்படுகிறது.
விழித்துக் கொண்டாள். "அம்மா. வீட்டை போவம்." குழந்தைகள் புதிய இடத்தில் இசை வாக்கம் பெறுவது கடினந்தான் என்று வீணு நினைத்தாள்.
"போக ஏலாது பபி. எங்கத்டை வீட்டுப்பக்கம் எல்லாம் நேற்றுப் பின்னேரம் அவங்கள் வந்திட்டாங் களாம். வீடு இருக்கோ இல்லையோ தெரியாது."
"அப்ப் இனி நாங்கள் இஞ்சையே இருக்கிறது?” இந்தக் கேள்வியைப் பாப்பா கேட்ட பின்தான். பாப்பாவும் விழிப்பு என்று தெரிந்தது.
'அம்மா எனக்குப் பால்?" பபியின் அடுத்த கேள்வி. படுக்கையிலிருந்து எழுந்தவுடனேயே பால் குடிப்பது வீட்டில் பபியின் பழக்கம். அகதிகள் என் டதன் அர்த்தம் அவர்களுக்குப் புரியுமா?
"இஞ்சை பால் இல்ல. அம்மா பிளேன்ரீ தாறன் குடியுங்கோ.”
"எனக்குப் பால்தான் வேணும்."
"நல்ல குஞ்சு பிளேன்ரீ குடியுங்கோ.”
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 137
“எனக்கு ஒண்டும் வேண்டாம் போ..."
மறுபுறம் திரும்பிப் படுத்தாள் பபி. வீளுவுக்கு நெஞ்சம் சுட்டது.
நேற்று முழுவதும் நடந்து நடந்து களைத்துப் போன குழந்தைகள்! இன்று அவர்களுக்குப் பால் கூடக் கொடுக்க முடியாத நிலையில் உள்ள வீணு வெளிநாட்டில் லட்சம் லட்சமாய் உழைக்கிற ஜீவன்! இவர்கள் எல்லாம் ஒரு குடும்பம்!
அவள் வந்து சோந்திருக்கும் புதிய ஊரின் சந்திஅந்தச் சந்தி முழுநாளும் இருள் உறையக் காரண மாய் இருக்கும் வாகை - அந்த வாகைமரத்தோடு ஒட் டியபடி இவளது பழைய சினேகிதி பூரணியின் வீடு.
பூரணி புதிதாக வாங்கியிருக்கும் அந்த வீட்டில் பூரணியும் அவளது நான்கு வயது மகனுந்தான் அந்த வீட்டில் வீணுவுக்கு எல்லா வசதியும் இருந்தது. ஆனலும். சொந்த வீட்டின் சுதந்திரம், நிம்மதி..?
"என்ரை பிள்ளையஞக்குப் பால் வேணும்’ எண்டு எப்படிப் பூரணியைக் கேட்பது?
சைக்கிளில் எதிர் எதிராக வந்த இருவர் வாகை மரத்தின் கீழ் நின்று கதைப்பது கேட்டது. முன் வீட்டு முத்தர் மாமாவின் மகன் ஒருவன் என்று தெரிந்து வீணு வெளியே வந்தாள்.
** என்ன தம்பி எங்கடை ஊர்ப்பக்கம் என்னவாம் புதினம்?"
*நான் இப்ப அங்கதான் போயிட்டுவாறன். அங்கை என்ன, ஊருக்குள்ள் இறங்கேலாது. நெருப்
தூவானம் கவனம்

Page 77
138 கோகிலா மகேந்திரன்
புச் ஷெல்லடி நடக்குது. காலமை ஆடு, மாடு பார்க் கப் போன மூண்டு பேர் சரியாம்.’
**இவை ஒருக்கா வெளிக்கிட்டு வந்தாப் பிறகேன் போறவை? கண்டறியாத ஆடும் மாடும்."
"உங்கடை வீட்டிலேயும் ஒரு ஷெல் விழுந்ததாக் கதைச்சினம். உண்மை, பொய் தெரியாது. நான் போய்ப் பாக்கேல்லை."
சந்தி இருள் உறையக் காரணமாய் இருக்கும் அந்த வாகை மரத்தின்கீழ் நெஞ்சைப் பிடுங்குகிற இருண்ட ஏக்கம் - சூன்யத்தில் வாழ்வதுபோன்ற உணர்வு திடீரென உள்ளே ஓடினுள்.
"அம்மா...எங்கடை வீட்டிலே ஷெல் விழுந்திட்டு
தெண்டு முத்தர் மாமா மகன் சொல்லுருன். நான் ஒருக்காப் போய்ப் பாத்திட்டு வரட்டே?”*
என்ன செய்வதென்று தெரியாத அந்தர உணர்வு மனதினுள்.
'உனக்கென்ன விசரே? நடந்துபோகப்போறியே திரும்பி.” அம்மா இரைந்தாள்.
'முத்தர் மாமான்ரை மகனைக் கேப்பம், சைக்கிளை
ஒருக்காக் கொண் டுபோகச்சொல்லி.”
இவர்கள் கதைத்த ஒலியினை வாங்கிக்கொண்டு பூரணி வெளியே வந்தாள்.
'ஏதோ நல்ல காலம்! நீங்கள் உயிருக்குச் சேத மில்லாமல் குழந்தையளோடை வந்து சேந்தது.
இனி.போறது போகட்டும். மிஞ்சிறது மிஞ்சட்டும். அங்கை போய் வாங்கிக்கட்டவேண்டாம்..”*
தூவானம் கவனம்

கோலைா மகேந்திரன் 139
என்று சொல்லிக்கொண்டே கையில்கொண்டு வந்த தேநீரை வீணவிடம் கொடுத்தாள்.
"உனக்குத்தான் நான் பெரிய கஷ்டம் தாறன் ...”
* எனக்கொரு கஷ்டமும் இல்லை. நீ இஞ்சை வந்த திலை எனக்குச் சந்தோஷமெல்லோ. நானும் மகனும் தனிய.மொட்டுமொட்டெண்டு இருக்கிற வீடு. இப்ப பள்ளிக்கூடமும் நடக்கிறேல்லை. நீ இதை உன்ரை வீடு மாதிரியே நினைச்சுக்கொள். கொஞ்சநாளைக்கு இரன்...”
நிறைந்து வந்த சிரிப்பைப் புன்சிரிப்பாக அழுத்திக் கொண்டு கூறிய பூரணியின் சொற்கள் வீணுவின் புண் பட்ட மனதுக்குப் பெருத்த ஆறுதலைத் தந்தன.
"பன்மை, தள்ளி வைக்கும் பேச்சு...ஒண்டும் இல்லாமல் நீ முந்தியைப் Gurtaa ' is” Gr6ö76 சொல்றதே ஒரு நிறைவாய் இருக்கு."
பபி தேநீரை வாங்கிக் குடித்தாள். குடிக்கும் போது தற்செயலாய் சிறிதளவு நிலத்தில் ஊற்றப் பட்டுவிட்டது. "சொந்த வீடு" என்ருல் வீணு அதைப் பற்றிக் கவலையே படுவதில்லை. ஆனல் இது பூரணியின் புது வீடு. புது நிலம். தேநீர்க்கறை. பழந்துணி எடுத்து நனைத்துத் துடைக்கவேண்டியிருந்தது. பூரணி, * "அது பரவாயில்லை" என்று சொன்னலும்கூட. அந் நியம் அந்நியந்தான். சொந்தம் சொந்தந்தான்.
பூரணியின் மகனுடன் பபியும், பாப்பாவும் விளை யாடப் போய்விட்டனர். குழந்தைகள் ஒன்றிக்கொள் வதும் விரைவில் சண்டை பிடிப்பதும் விரைவில்!
தூவானம் கவனம்

Page 78
140 கோகிலா மகேந்திரன்
* வீட்டிலை ஷெல் விழுந்ததைப்பற்றிக் கனக்க யோசிக்காதை வீணு ஜீவன் வந்தாப்பிறகு புதுவிடு கட்டிறதுதானே!”
பூரணியைப் பார்க்காத பார்வையுடன் வீணு இருந்தாள்.
"ஜீவன் எப்ப வருவார்?..."
*நான்உடன வரச்சொல்லி இரண்டு கடிதம் போட்டிட்டன் .."
**காயிதங்கள் இப்ப வாற தும் இல்லையாக்கும். இனித் துப்பரவா வராது"
“எனக்குள்ளை ஏதோ வரக்கூடாத கற்பனையளும் வருது பூரணி."
தன் இளமைக்காலச் சிநேகிதியுடன் மனம் திறந்து பேசினள் வீணு. "எயிட்ஸ்" பற்றிய தன் பயத்தையும், பயத்திற்கான காரணங்களையும்கூடக் கூறினுள்.
‘'நீ ஏன் அப்பிடி எல்லாம் வீணுகப் பயப்படு முய்? அப்பிடி ஒண்டும் நடவாது.”*
'நானும் ஜீவனும் மனதாலை நிறையத் தூரம் விலகிப் போயிட்டம், நெஞ்சம் மட்டும் கலக்கிற கலவி இனி எங்கடை வாழ்க்கையிலை சாத்தியமில்லைப்போலத் தெரியுது...”
பூரணிக்கு வீணுவை இளமையிலையே தெரியும். இப்போதுதான் "கோப்பி" குடித்ததுபோல் எப்போதும்
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 141
ஒரு உற்சாகம் ஒரு அமளியுடன் காணப்படுகிற ஒருத்தி. இன்று..?
'உனக்கு நடக்கக்கூடும் எண்டு நீ பயப்படுகிற திலை ஆகக் கெடுதியானதை ஏற்றுக்கொள் மனதாலை. வீடு இல்லையெண்டு நினைச்சுக்கொள். ஜீவன் இனி வரமாட்டார் எண்டே நினைச்சுக்கொள், உள்மனம் ‘வோஸ்ற்றை அக்செப்ற் பண்ணிட்டால் பிறகு எது நடந்தாலும் சந்தோஷந்தான். உளவியல் ரீதியாகச் சக்தியைச் சேமிக்கிற முறை இதுதான்...”*
வீணுவைத் தோளில் பிடித்து ஆதரவுடன் குசினிக்கு அழைத்துச்சென்ருள் பூரணி.
உண்மை நட்பின் மென்மையான வருடல் தோளில் மட்டுமல்ல வீணுவின் உள்ளத்திலும் விழுந்தது.
‘வாழ்க்கை என்றது ஊஞ்சலிலை உட்கார்ந்து ஊஞ்சல் ஆடுவதல்ல. புயலுக்கு நடுவி ைபடகைச்
செலுத்திறது மாதிரியானது எண்டு காண்டேகர் சொல்லிருர்.உனக்குத் தெரியுந்தானே.”
"தத்துலங்கள் வாசிக்க நல்லாத்தான் இருக்கும். வாழ்க்கையிலை வரேக்கை." என்று இழுத்தாள் வீணு.
"இரண்டு பேருமாகச் சேர்ந்து சமைப்பம். இந்தா, இந்தத் தேங்காயைத் திருவு."
குசினிக்குள் அழைத்துச் சென்று தேங்காயும் துருவு பலகையும் கொடுத்தாள் பூரணி.
"என்னல உனக்கு எவ்வளவு கரைச்சல்..."
தூவானம் கவனம்

Page 79
142 கோகிலா மகேந்திரன்
"சும்மா திருப்பித் திருப்பிச் சொல்லாதை. நான் என்னுடைய மகனுக்காகச் சந்தோஷமா வாழேல்லையா? நீயும் உன்ரை இரண்டு பிள்ளையஞக்குமாகச் சந்தோ ஷமா இருக்கவேணும். முறிஞ்ச குடும்பத்திலை. பிரிஞ்ச குடும்பத்திலை, மனஒற்றுமை இல்லாத குடும் பத்திலை வளந்த நெறிபிறழ்ந்த பிள்ளையளா அவையள் வளர இடம் குடுக்கப்படாது.”
பபியும் பாப்பாவும் எங்கே என்று பார்த்தாள் வீணு. எங்கிருந்தோ வெள்ளை மணல் அள்ளிக்கொண்டு வந்து கொட்டி, மணல் வீடு கட்டி விளையாடிக்கொண்டு விளையாட்டின் நடுவே மூன்று குழந்தைகளும் பெரி தாகச் சிரிப்பது கேட்கிறது.
அந்த மாதிரிச் சிரிப்புக்காகவே சிரிக்கிற சிரிப்பைப் பார்த்து எத்தனை நாளாயிற்று?
தேங்காய் துருவத் தொடங்கினுள் வீணு.
தூவானம் கவனம்

கோகிலா மகேந்திரன்
66
சிடுத்து நடைபெற இருக்கும் நிகழ்ச்சி தடை தாண்டி ஓட்டம். இங்கே பல்வேறு தடைகள் மைதா னத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தடை களைப் போட்டியாளர்கள் ஒவ்வொன்ருய்த்தாண்டி ஒடவேண் டும். மனத் தைரியத்துடன் எல்லாத் தடைகளையும் தாண்டி முதலில் ஓடுபவர் வெற்றி பெற்றவராகக்கரு தப்படுவார்.”
சகோதர அறிவிப்பாளர் வரதன் இவ்வாறு அறி வித்தார்.
7-9-87
முதலாவது தடையாக ஒரு பலூன் இருக்கிறது. அதனை ஊதி உடைக்க வேண்டும். ஒருவரும் குறுக்கு வழிகளைக் கையாளமுடியாது. ஊசியால் குத்தி உடைக்க முடியாது. 14
கையால் நெரித்து உடைக்க முடியாது. ஊதியே உடைக்க வேண்டும். '
m-m-
தூவானம் கவனம்

Page 80
144 கோகிலா மகேந்திரன்
'அடுத்து கோதுமை மாவினுள்ளே ஒரு இனிப்பு மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அதனை ஊதி எடுத்து உண்ணவேண்டும். கைகளைப் பின்னே கட்டிக்கொள்ள வேண்டும்"
**அதன்பிறகு அடுத்த மேசையில் வைக்கப்பட் டுள்ள் ஊசியில் நூலைக் கோத்து வைக்கவேண்டும். அவசரமும் பதற்றமும் உள்ளவர்கள் இந்த தடையைத் தாண்ட முடியாது . நிதானமும் கவனமும் உள்ளவர் களே இதனை விரைவில் தாண்டுவர்."
**இறுதியாக அங்கே வைக்கப்பட்டுள்ள சாக்கி லுள்ளே கால் விட்டு நடந்து பேற்றுக்கோட்டை அடைதல் வேண்டும்..”*
இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றும் இலக்கங்கள் இருபத்தாறு. நூற்றுப்பன்னிரண்டு, இருநூற்றுநாற் பத்தேழு, அறுபத்து மூன்று, ஐந்து.'
அறிவிப்பாளராகக் கடமையாற்றும் வீணு இந்த வருடத்தில் இந்தக் கல்லூரியில் இப்படி ஒரு விளை யாட்டுப் போட்டியை நடத்தமுடியும் என்று கனவிலும் கருதவில்லை.
பூரணி வீட்டில் ஏறத்தாழ ஒரு மாதம் தங்கி யிருக்கவேண்டி ஏற்பட்டுவிட்டது. பூரணி அடிக்கடி சொல்லிவந்ததுபோல் வாழ்வில் நடைபெறக்கூடிய மிக மோசமான விடயங்களை மனம் ஏற்றுக்கொண்டு விட்டது. இனிமேல் எது நடந்தாலும் மகிழ்வுதான்.
சக்திச் சேமிப்பத்தான். சக்திச் செலவு இல்லை. அத்தகைய ஒரு மகிழ்வு கடந்தவாரம் ஏற்பட்டது. ஆண் காகம் ஒன்று நெல்லிமரக் கிளையில் அமர்ந்து
பெட்டைத் தலையைப் பிரியமாய்க் கோதுவதை இவள்
தூவானம் கவனம்

கோலோ மகேந்திரன் 145
பார்த்துக்கொண்டிருந்த ஒரு காலைப்பொழுதில் ஜீவனின் கடிதம் வந்தது.
இங்கு நடைபெற்ற நிகழ்வுகளை எல்லாம் வானெலி மூலம் கேட்டுத்தான் அதிர்ச்சியடைந்ததாய்க் குறிப் பிட்டிருந்த அவன் தான் விரைவில் நாடு திரும்புவதற் கான ஆயத்தங்களைச் செய்து வருவதாயும் எழுதி யிருந்தான்.
ஜீவன் வந்தா...எங்களுக்குள்ளை என்ன பிரச்சனையள் வந்தாலும் நான் "அட்ஜஸ்ற் பண்ணிப்போகவேனும் நான் குடும்பத்திலை மூத்த பிள்ளையாப் பிறந்தஞன். அவர் கடைசிப் பிள்ளையாப் பிறந்தவர். ஆனபடியா நான் ஒரு தாய்போலை பொறுப்போடை இருந்து அவரை என்ரை மூத்தபிள்ளை போலை பாத்துக் கொள்ளவேணும். அவர் எங்களை விட்டிட்டு இனி ஒரு இடமும் போகவிடப்படாது. குடும்பம் முறிஞ்சு போகக் கடைசிவரையும் விடப்படாது."
தடை தாண்டி ஓட்டங்கள் முடிந்து நனுாறு மீற் றர் ஓட்டங்கள் ஆரம்பமாகின்றன. அதில் ஆரம்பத் தில் வேகமாக ஓடியவர்கள் இறுதியில் பிந்திக்கொள்ள ஆரம்பத்தில் நிதானமாகக் களைப்பின்றி ஓடியவர்கள் இறுதியில் வெற்றி பெறுகிறர்கள்.
தன்னுடைய வாழ்வும் இடையில் தொய்த்துபோயி ருந்தாலும் இறுதியில் தான் வெற்றிபெறக்கூடும் என்ற நம்பிக்கை வீணுவுக்குள் துளிர் விடுகிறது.
பூரணி வீட்டில் இருந்த காலத்தில் ஒரு நாள் Lðrrða முற் றத் தி ல் அமர்த்திருக்கையில் பூரணிை சொன்ஞள்.
yra v syn til ák a 63 )

Page 81
146 கோகிலா மகேந்திரன்
'நீ ஜீவனேடை வெளிநாட்டுக்குப் போயிருக்ச லாம். போயிருந்தா ஒரு பிரச்னையும் வந்திருக்காது’
"போயிருக்கலாம் எண்டுதான் நானும் சிலவேளை நினைக்கிறஞன் - ஆனல் இப்ப என்ரை நினைப்பு முற்ருச மாறிவிட்டுது உனக்குத் தெரியுமே. எங்களோடை படிச்ச சருே. சருேவின்ரை அப்பா தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊத்திக் கொளுத்தினவர் அவற்றை பிள்ளையஸ் எல்லாம் வெளிநாட்டிலை நல்லா இருக்குது கள். அதுக்குப்பிறகு அம்மாவைப் பக்கத்திலே இருந்து கவனிக்கவேணும் எண்ட நினைப்பும் வந்திட்டுது. எல் லாம் நன்மைக்குத்தான் நடக்கிறது. நான் இல்லாட்டி அம்மா இந்தப் பிரச்:ை க்கு என்ன செய்திருப்பா. சொல்லு."
இப்போது நாலு தர நூறு மீற்றர் அஞ்சல் ஒட் உங்கள் ஆரம்பமாகின்றன. ஒட்டவீரர்களுக்கிடையில் குறுந்தடிகள் மாற்றம் செய்யப்படும்போது ஒருவர் குறுந்தடியை நிலத்தில் போட்டு விடுகிமுர். அவர் திரும்பிவந்து, அந்தத்தடியை எடுத்துக்கொண்டு போவ தற்கிடையில் மற்ற மூன்று இல்லங்களும் அவரை முந்தி விடுகின்றன.
இதைக்கண்டு தத்தமது இல்லங்களின் உள்ளே அமர்ந்திருந்த மாணவர்கள் எல்லாம் தம்மை மறந்து இல்லங்களை விட்டுவெளியேறுகிருர்கள், மைதானத்தின் ஓடுபாதைகளுக்கு அருகில் வந்து கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகம் கொடுக்கிருர்கள்.
"“கம் ஒன்... கம்ஒன். றன் ஃ பாஸ்டர்..." என்று ஒரே குதூகலச் சத்தம் தன்னைச் சுற்றியுள்ள உலகம் முழுவதுமே நம்பிக்கையுடன் இருப்பதாய் வீணுவுக்குத் தோன்றுகிறது.
தூவானம் கவனம்

கோவிலா மகேந்திரன் 147
தொடர்ந்து பழைய மாணவர் ஓட்டம் ஆரம்பமா கிறது.
'நீங்கள் போய் நிகழ்ச்சியிலை பங்குபற்றுங்கோ. , தான் அறிவிக்கிறன்.
வீணுவை மைதானத்திற்கு அனுப்பி விடுகிருர் சக அறிவிப்பாளர் வரதன்.
'அடுத்து நடைபெற இருக்கும் நிகழ்ச்சி பழைய :ாணவர் ஓட்டம். பழைய மாணவர்கள் கட்டிளமைப் பருவத்தைத் தாண்டியவர்கள். தனிவாழ்வு ஒன்றை அமைத்துக் கொண்டவர்கள், அல்லது விரைவில் அமைக்க இருப்பவர்கள். அவர்களுக்குச் சமநிலையும் மிக அவசியம். ஆகவே பழைய மாணவர்களே, உங் களுக்கு ஒரு சோடாப் போத்தல் நீர் நிரம்பிய நிலையில் தரப்படும் நீங்கள் அதைத் தலையில் வைத்துக்கொண்டு நடந்து செல்லவேண்டும்."
"ஆம் ஆண்கள் யோசிக்கவேண்டாம். உங்களுக்கும் அதே போட்டிதான்! பெண்களைவிட உங்களுக்குத்தான். இந்தச் சமநிலை மிகவும் முக்கியமானது.’
"போத்தல் இடைவழியில் விழுந்துவிட்டால் அந்த வீரன் அல்லது வீராங்கன மீண்டும் ஆரம்ப ஸ்தா னத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும்.”
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பல பழைய மாணவர்கள் போத்தல்களுடன் ஆரம்ப ஸ்தானத்தில் நிற்கிருர்கள்.
தொடக்குநர் விசிலை ஊதுகிமுர்.
வீணு மிக மெதுவாகவே நடக்கிருள். அவளுக்கு முன்னே பலர் வேகமாகப் போகிடிர்கள் வேகமாகப்
yra FT SJT tid sa G5 io

Page 82
148 கோகிலா மகேந்திரன்
போனவர்கள் பலர் ஒவ்வொருவராகப் போத் தல் விழுத்திக்கொண்டு திரும்பி வருகிருர்கள். வீணு தொடர்ந்து மிக மெதுவாகவே நடக்கிருள்.
இப்போது அவளுக்கு முன்னே செல்வோரின் எண் ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.
பேற்றுக்கோடு அண்மிக்கிறது. வீணுவுக்கு முன்னே சென்றுகொண்டிருந்த பெண்ணும் திரும்பிவிட்டாள்.
ஆம் ! பழைய மாணவருக்கான ஓட்டத்தில் வீணு முதலிடம் பெற்றதாக வரதன் அறிவிக்கிருர், பபியும் பாப்பாவும் அம்மம்மாவுக்கு அருகில் இருந்து,
"அம்மாவுக்கு பிறைஸ் குடுப்பினமோ?’ என்று கேட்கிருர்கள்.
"குடுப்பினம். வீட்டைபோய் வாங்சிப் பாப் பம்." என்று அம்மம்மா சொல்ல அவர்கள் மனம் நிறைந்து சிரிக்கிருர்கள்.
அன்றைய மெய்வல்லுநர் போட்டியின் இறுதி நிகழ்ச்சியான கயிறு இழுத்தலுக்கான அறிவிப்புச் செய்யப்படுகின்றது.
கயிறு இழுத்தலில் பங்கு பெறும் இரு இல்லங் களும் வெளியேவந்து கயிற்றைப் பிடித்துக்கொள்கிருர் கள்.
சமபருமன் உள்ள இருவிசைகள், ஒரு புள்ளியில் எதிர்த்திசைகளில் பிரயோகிக்கப்படும்போது அப்பொ ருள் சமநிலையில் இருக்கும். ஒருவிசையின் பருமன் அதிகரிக்கும்போது பொருள் அத்திசையில் நகரும்
துரவானம் கவனம்

கோகிலா மகேந்திரன் 149
என்ற பெளதிகவியல் உண்மையை எடுத்துக் காட்டும் நிகழ்வு!
கயிறு இழுத்தலில் பங்கு பெறும் இரு இல்லங் களும் முதலில் தேவர்களும் அசுரர்களுமாய்த் தோன் றுகிருர்கள் வீணுவுக்கு.
பின்னர் அறமும் மறமுமாகத் தோன்றுகிறர்கள. அடக்கப்பட்ட மக்களும் கொடுங்கோல் அரக மாய்த் தோன்றுசிருர்கள்.
அவள் தேவர்களாய் கற்பனை செய்த இல்லத்தின் பக்கமே கயிறு மெதுவாக அசைந்து செல்லுகிறது.
அறமே வெற்றிபெறுகிறது.
இறுதியில் பிரதமவிருந்தினர் அவர்களின் பாரி யார் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்கு ଔଏy|if..
வீணு பரிசுபெறும்போது பபியும் பு:சப்பாவும் 9icis கில் நின்று சிரிக்கிருரர்கள். .
'அம்மா கெட்டிக்காரி.'
5 m au IP aan tid höAJ ar id

Page 83
tෆිණී6of ඊශ්‍යා') { யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர், பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களின்,
முதன்மை விருந்தினர் உரையில் இருந்து
கல்வி, கலை, இலக்கியம் என்பன பண்பாட்டு வளர்ச் சிக்கான பயன் மிகு சாதனங்களாகும். அவை மனித உள் ளத்தை விரிவு படுத்துவதோடு மனித நேயம் எனப் படும் உயரிய பண்பை வளர்ப்பவை. எனவே இத்துறை களில் பணியாற்றுபவர்கள் பண்பாட்டு வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்வோர் ஆகிருர்கள். இவர்களுட் பலர் மேற்படி துறைகளில் ஒன்றை மட்டும் கவனத்திற் கொள் பவர்கள். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் ஈடு பாடு கொள்பவர்கள். இன்று இங்கு தம ; இலக் கிய வெளியீடுகளை நிகழ்த்தும் திருமதி கோகில்ா மகேந் திரன் அவர்கள் ஒரு ஆசிரியை என்ற வகையிலும், நாடகத் துறையில் ஈடுபாடு கொண்டிருப்பவர் என்ற வகையிலும், மேற்கூறிய கல்வி, கலை, இலக்கியம் எனப் படும் முத்துறைகளிலும்பண்பாட்டுப்பங்களிப்புச் செய்து வருபவராகிருர். அத்தகையவரின் இலக்கியத் துறைப் பணி சார்ந்த இன்றைய இந் நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராகக் கல்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி யடைகிறேன்.
திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களைக் கடந்த ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக - அவர் செல்வி கோகிலா சிவசுப்பிரமணியம். ஆகத் திகழ்ந்த காலத்தி லிருந்து - அவதானித்து வந்துள்ளேன். மகாஜனுக் கல்லூரியின் உயர் வகுப்பு மாணவியாகத் திகழ்ந்த காலப் பகுதியில் நாடக நடிகையாக மேடைகளில் தோற்றம் தந்தவர் அவர். இலங்கைக் கலைக் கழக நாடகப் போட்டிகளில் மகாஜனு முதலிடங்களைப் பெற் ரத் திகழ்ந்த அக்காலப் பகுதியில் அவ் வெற்றிகளுக்குக் காரணகர்த்தாக்களாகத் திகழ்ந்தவர்களில் செல்வி கோகிலாவும் ஒருவர்.

கல்லூரி வாழ்க்கையின் பின்னர், பல்கலைக்கழகத் திலே மருத்துவத் துறையில் அவர் பயின்ற வேளையில் புனை கதைத்துறையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கி யிருந்தார். பின்னர் ஆசிரியப் பணியில் ஈடுபட்ட காலப் பகுதியில் இருந்து தொடர்ந்து புனை கதைகள் படைத்து வரும் இவர், இன்றைய ஈழத்தின் முதல் வரிசைப்படைப் பாளிகளுள் ஒருவராகக் கருதத் தகும் தகுதியை ஈட்டிக் கொண்டுள்ளார். ஏற்கெனவே மூன்று சிறுகதைத் தொகுதிகளே வெளியிட்டுள்ள அவர், இன்று இந்த ஒரே மேடையில் நாவலும் சிறுகதைத் தொகுதியுமாக இரு நூல்களை வெளியிட்டுச் சாதனை புரிகிமுர் LLLL0L LLLLL0L LL LL0L L0LL LLL0 LL LSL LLLL0 LLLLLSLLLLLL எழுத்துத் துறையில் ஈடுபட விழையும் ஒருவர் முதலில் சிறுகதை எழுதி, அதன் மூலம் பெற்ற அநுபவத்தால் நாவல் படைக்க முயல்வது வழக் கம். கோகிலா மகேந்திரன் அவர்களும் முதலில் சிறு கதைத் துறையில் கவனம் செலுத்தி அதில் பெற்ற அநுபவ முதிர்வால் நாவல் படைப்பதில் ஈடுபாடு காட்டி புள்ளார். இவ்விரு புனைகதைத் துறைகள் மூலமும் இவர் எமது சமகால சமுதாயத்தின் பல்வகைப் பிரச் சினைகளுக்கும் எழுத்துருவம் தர முயன்றுள்ளார். அவை தொடர்பான தனது அநுபவங்கள், உணர்வோட்டங் கள் என்பவற்றை எமக்கு உணர்த்த முயன்றுள்ளார். இம்முயற்சியில் அவர் குறிப்பிடித்தக்க வெற்றியும் பெற்றுள்ளார் என்றே கூறலாம். . . ஈழத்துப் பெண் எழுத்தாளர் வரிசையிலே கோகிலா அவர்கள் தமக்கெனத் தனிப் பண்புகளுடன் வேறுபட்டுத் திகழ் வதை அவரது படைப்புகள் எமக்குப் புலப்படுத்தி நிற்கின்றன, குறிப்பாகச் சமூகநிகழ்ச்சிகளையும் அவற்றி னடியாக நிகழும் உணர்ச்சி முனைப்புக்களையும் சித்திரிப் பதைவிட, அவற்றுக்கு அடிப்படையான உளவியற் காரணிகளை விமர்சிப்பதே கோகிலாவை ஏனையவர்களிட மிருந்து வேறுபடுத்திக் காட்டும் முக்கிய அம்சமாகும். நோய் தீர்க்கும் மருத்துவர் ஒருவர் நோயாளியைப் பகுப்பாய்வு செய்து, நோயின் மூலத்தை இனங்காண முயல்வதுபோலக் கோகிலா அவர்கள் சமூக நோய்

Page 84
களுக்கான காரணிகளை உளவியல் அடிப்படையில் பகுப்பாய்வு செய்பவராக அமைகிருர் . . . . . ...மருத்துவத்துறையில் இவர் பெற்ற ஆரம்பக் கல்வியும், அவர் தாமே ஈட்டிக்கொண்ட உளவியல் அறிவும் அவரது இவ்வகை நோக்குகளுக்கு, நோய் தீர்க்கும் மருத்துவர் நிலையிலான பார்வைக்கு 16.5ayth giae, tyiii.316ir GT60......... . . . . . . . . . . . . is - ... .நவீன இலக்கியப் படைப்பிலே முதன்மை பெறும் அம்சங்களில் ஒன்று சமூக மாந்தரின் பேச்சு மொழி வழக்கு. கதை மாந்தரை உள்ளபடியே நாம் தரிசிப்பதற்கு இப்பேச்சு மொழி நடை மிக அவசிய மானது. கோகிலா அவர்களுக்கு எமது பிரதேசப் பேச்சு மொழி மிகவும் கை வந்துள்ளது. அவரது எல்லாப் படைப்புகளிலும் ஆசிரியர் கூற்ருக அமையும் இடங்க 2ளத் தவிர உரையாடல் பகுதிகளில் கதை மாந்தரின் சமூக, கல்வித் தரங்களுக்கு ஏற்பப் பேச்சு மொழி நன்கு பயன்படுத்தப்பட்டுள்ளது . . . . . . தரமான படைப்புக்களைத் தந்து வரும் கோகிலா அவர்கள் கடந்த பத்தாண்டுக் காலப் பகுதி பில் இடைவிடாது எழுதி வருபவர் என்ற வகையிலும் தனிக் கவனத்துக்கு உரியவர் ஆகிருர். ஈழந்துப் பெண் எழுத்தாளர்களிலே மிகவும் அதிகம் எழுதியவர் என்று கூட அவரைக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. எனினும் இது ஆய்வு பூர்வமாக நிறுவப்பட வேண்டிய தொன்ருகும். ஆணுல், சுயமாக நூல்க*ள வெளியிடு வோர்களில் அவர் முதல் வரிசையில் நிற்கிருர் என்பதில் ஐயமில்லை. எழுதுவதில் மட்டுமல்லாமல் அதனை விலைப் படுத்துவதிலும் அவர் சாதனை புரிந்துள்ளார். . . .ஈழத்து இலக்கியத்திற்கும் அதனூ டாக எமது பண்பாட்டுக்கும் அவரது தொடர்ந்த பணி புதிய வளங்களைச் சேர்க்கும் என நம்புவோம்.
(கோகிலா மகேந்திரனின் துயிலும் ஒரு நாள் கலை பும் நாவல், பிரசவங்கள் சிறுகதைத் தொகுதி வெளி பீட்டு விழாவில் ஆற்றிய உரை.)
8-05-1986.


Page 85
----
游
:
 

m