கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விழி முத்து

Page 1

·, , , , , ! :·|-!|- !!!!!*: so:重燃 , ! :

Page 2

மெழுகாய்த் தான் உருகி நான் வெளியே சுடர் விடக்
காரணமான என் அன்பு அன்னையின் பாத கமலங்களில் இச்சிறு மலரைச் சமர்ப்பிக்கிறேன்.
-65 d56) D6 syGir

Page 3

விழிசிட்டி திருமதி செல்லமுத்து சிவசுப்பிரமணியம்
coautiny: உதிர்வு: 1914-12-01 1999-08-2
திதி வெண்பா
ஆண்டு பிரமாதியிலே ஆர்ந்தமதி ஆவணியிற் பூண்டதிதி பூர்வ தசமியிலே - நீண்டபுகட் செல்லமுத் தென்னும் திருவாட்டி சீக்கிரமாய்ப் புல்லினளே பூரணனைப் போய்.

Page 4

தண்ணளி தந்து ஆண்ட தாய்
- பேரன் ம. பிரவீணன் நெருப்பு!
உன்னை அக்கினி விழுங்கிக் கொண்டிருக்கிறது!
**செந் நெருப்பினைத் தகடு செய்து பார் செய்தது ஒத்த** மயான பூமியிலே, சோழகக் காற்றிற் சுடர் விட்டு எரிகின்ற செந் தீயிலே, இறுதியாக. அம்மம்மா! நீ எரிந்து கொண்டிருக்கிறாய். நான் வெறுமனே பார்த்துக்கொண்டு.
கொழுத்துகிற வெயிலில் விரிந்து கிடக்கின்ற தோட்ட வெளி போலவே. என்னுடைய மனதிலும் வெறுமை.
என்னுடைய குழந்தைப் பருவ நினைவுகள், "அம்மம்மா’’வில் இருந்தே ஆரம்பமாகின்றன.
உன்னுடைய ஒரே பேரனைப், பத்து வயது வரை, தானாக ஒரு வாயாவது சாப்பிட நீ விடவில்லை. மடியில் இருத்தி, பிசைந்து பிசைந்து மூன்று வேளையும் ஊட்டுவதில் உனக்கோர் நிறைவு!
**பின் தள' வேளைகளிலே, கிழக்காலி மாமாவோடு நீ ஊர்ப் புதினங்களை அலசிக்கொண்டிருக்க, உன்னுடைய மடியில் படுத்து, நித்திரையானதாக நடித்துக் கொண்டு, அவற்றைக் கேட்பதில் எனக்கு அலாதி மகிழ்ச்சி.
அப்புவோடு ஒரு நாள், ஏதோ ஒரு காரணத்திற்காக அடிபட்டு "நான் கீரிமலை மடத்திலை போய் இருக்கப் போறன்' என்று நீ சொன்னபோது, அம்மா அப்பாவையும் மறந்து விட்டு "நீ போகாதை அம்மம்மா. இல்லாட்டி நானும் வாறன்’ என்று உன்னு டைய கைகளைப் பிடித்து அழுதேனே! “ ‘நான் தம்பியை விட்டுட் டுப் போகமாட்டன் ராசா' என்று நீ என்னுடைய கன்னத்தைத் தடவியதை மறத்து விட்டாயா?
நீ மறந்திருக்க மாட்டாய். உன்னுடைய இறுதி நாட்களிலும் உன் நினைவுகள் அங்கே நின்றிருக்கும்.
1

Page 5
தொண்ணுறாம் ஆண்டு இடம்பெயர நேரிட்டபோது, நாங்கள் மூவரும் முதலில் அளவெட்டியில் வந்து தங்கினோம். நீ வீட்டை விட்டு வர மனமின்றி விழிசிட்டியில்! அந்த நேரம் நான் அம்மா விடம், "அம்மம்மாட்டைப் போப்போறன்’ என்று எத்தனை தரம் அழுதிருப்பேன்! நீ சைக்கிளில் இருக்க மாட்டாய். எங்கள் சொந்தக் கிராமத்தில் இருக்கவே முடியாத நிலை எய்தியபோது, "றொக்கி" யையும் உன்னுடைய வீட்டையும் கைவிட்டுப், பித்தம் வெடித்த காலுடன், அப்புவோடு அளவெட்டிக்கு நடந்தே வந்து சேர்ந்தாய். அன்றைக்கு உன்னுடைய வீட்டைப் பார்க்கும்போது, வாழ் நாளில் அதன் பின்னர் அதைப் பார்க்கப்போவதில்லை என்று உனக்குத் தெரியுமா அம்மம்மா?
நீ எப்போதுமே பிடிவாதக்காரி. **கார்த்திகையிற் கார்த்திகை, சரியான பாஷாணக் கட்டை’’ என்று உன்னுடைய குணத் தை நீயே சொல்லுவாய். அளவெட்டியிலும் ஒரு சிறு பிரச்சினையால் ஒரு வாரம் சாப்பிடாமலே இருந்துவிட்டாயே! உன்னுடைய இறுதி நாட்களிலும், எனக்குச் சோதனை முடியும் வரை நீ பிடிவாதமாகத் தான் யமனோடு போகாமல் இருந்தாயா?
உன்னுடைய இறுதிக் காலம் எண்ணப்படத் தொடங்கியது எப்படி என்று எண்ணிப் பார்க்கிறேன். 97 ஆம் ஆண்டு தமிழ்த்தினப் போட்டிக்கு நானும் அப்பாவும் திருகோணமலைக்குச் செல்லு கிறோம். **கப்பலிலே போகிறோம். எந்த ஆபத்துமில்லை** என்று உனக்கு விளக்கி விட்டுத்தான் புறப்பட்டேன். அன்றிரவு இணுவிலில் கடுங்காற்று வீசியது. ** தம்பி கப்பலிலை போட்டான். காத்தடிக்குது நீ பேசாமல் இருக்கிறாய்" என்று நீ அம்மாவைப் பேசினாயாம். அம்மாவும் சின்னம்மாவும் சொன்ன விளக்கங்களெதுவும் உனக்கு ஏறவில்லை. கடலில் அன்றிரவு எந்தக் குழப்பமும் இல்லை என்ப தையோ, இருந்தாலும் படகுபோலக் கப்பல் கவிழ்ந்து விடாது என்பதையோ புரிந்து கொள்ளாமல், அப்பாவி அம்மம்மா, நீ அடுத்த நாள் காலையிலேயே எனக்காகப் 'பராலிசிஸ்’ சைவாங்கிக் கொண்டாய். 97 ஆம் ஆண்டுத் தமிழ்த் தினப் போட்டி எனக்குத் தந்தவை அனுபவமும் புகழும் தங்கப்பதக்கங்களும் மட்டுமல்ல, உன்னுடைய மரணத்தின் முதற்படியும் தான்.
உன்னுடைய இறுதி நாட்களிலே, உனக்கு என்னை எப்போதும் பார்க்க வேண்டும் என்ற ஆசை. எனக்கோ சோதனை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உன்னிடம் வர நேரமில்லை. என்னை அடிக்கடி கூப்பிடுவதற்காகவே எத்தனையோதரம் எல்லோரிடமும் நீ பேச்சு வாங்கியிருப்பாய் .

*ஒரு நாளைக்கு ஒருக்கா எண்டாலும் வந்து கண்டு கொண்டு போ தம்பி** உன்னுடைய பரிதாபக் குரல் இன்றும் என் காதில் ஒலிக்கிறது. நான் என்ன செய்ய? காலையில் உன்னிடம் வந் தாலும், மத்தியானம் உன்னைப் பார்க்க வரும் ஆசையம்மாவிடம், *அவனை ஒரு கிழமையாய்க் காணேல்லை" என்று “பொய்' சொல்லுவாய். ஆசையம்மா என்னைக் கூப்பிட்டதும், "விடியவும் போன நான், அவவுக்கு மறந்து போச்சு' என்று கூறிக்கொண்டே எழுந்து வருவேன். என்னைக் கண்டதும் உன்னுடைய பூமுகத்தில் என்ன சந்தோஷமான ஒரு சிரிப்பு செயலிழந்த ஒற்றைக் கையை மடி யில் வைத்துக் கொண்டு மற்றக் கையால் என் கையைப் பிடித்து
முத்தம் இடுவாயே அம்மம்மா! “ இந்தக் கிழவியின் அன்புக்கு ஈடாக நான் என்ன செய்யப் போகிறேன்?’ என்று அப்போதே
நான் எண்ணியதுண்டு. ஆனால். எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது வரை:
'சோதனை முடிஞ்சாப் பிறகு வந்து உனக்குப் பக்கத்திலேயே இருக்கிறன். சொல்லுறது எல்லாத்தையும் சொல்லு.’’ இப்படி எத்தனை தரம் உனக்குச் மlசாலலியிருப்பேன். அதற்குப் பிறகு உனக்குச் செய்ய வேண்டிய பணிவிடை எதுவென்றாலும் நானே செய்வது என்றும் நினைத்திருந்தேன். ஆனால், நீ உன்னுடைய அன்புப் பேரனுக்கு அந்தச சிரமத்தை வைக்க விரும்பவில்லையோ? ஒரேயொரு நாள் வெவளிமட்டும் உனக்குப் பக்கத்தில் இருக்கின்ற வாய்ப்பை எனக்குத் தந்துவிட்டு, வெள்ளி இரவில் விழிமூடினாய், -9 LDLOIT! v
மூன்று மாதம், ஒரு மாதம், இரண்டு வாரம், ஒரு வாரம் . என்று என்னைச் சோதனை நெருங்கிக் கொண்டிருந்தபோது, உன்னை பும் மரண தேவன் நெருங்கிக்கொண்டிருந்ததை உணர்ந்ததாலோ என்னவோ, அக்காலத்தில் நான் அடிக்கடி, "ஏதோ விசராய் இருக்கு’ என்று சொலலிக் கொண்டிருந்தேன்.
மூன்று பாடம் முடிந்துவிட்ட நிலை ! சில நாள்களாகவே திண்ம உணவு உண்ண முடியாத நிலையில் இருந்த நீ " "தம்பி எங்கை' என்று உன்னுடைய பலவீனமான குரலிலே கேட்டதாக அம்மா சொல்ல, நான் உன்னிடம் வருகிறேன். நீ ஏதோ சொல்கி றாய். என்னால் எதையும் கிரகிக்க முடியவில்லை "பாலைக் குடி ! நாளைக்குச் சாப்பிடு, அப்ப தான் வருத்தம் மாறும், எழும்பி இருக்கலாம்" என்று நான் சொல்ல, நீ பெரிதாகச் சிரிக்கிறாய். அதே பழைய மலர்ந்த சிரிப்பு!
ஆனால், அடுத்த நாள் காலையே, நீ அறவே பேசவோ சிரிக் கவோ முடியாத நிலைக்குச் சென்று விட்டாய். வியாழக் கிழமை
3

Page 6
கெமிஸ்ற்ரி முடிந்ததும், "முதல் வேலையாக அம்மம்மாவிடம் போய், "சோதினை முடிஞ்சுது " இனி உனக்குப் பக்கத்திலேயே இருப்பன், என்று சொல்லவேணும் என்று நினைத்துக் கொண்டு வந்த என்னால், நெற்றி நிறையத் திருநீறு பூசப்பட்டு, மரணத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்த உன்னைத் தான் காண முடிந்தது! “சோத னைக்கு எத்தினை நாள் கிடக்கு' என்றே அடிக்கடிகேட்கும் நீ சோதனை முடிந்த பிறகு, என்னோடு ஒரு வார்த்தையும் பேசாமலே, வெள்ளி இரவு அந்த நகுலேஸ்வரரிடமே போய்விட்டாய்.
வெள்ளிக் கிழமை பகற்போதில், உனக்குப் பக்கத்தில் அமர்ந் திருந்து, உன்னுடைய கிராமத்துக் காற்றிலே வைர வர் கோயிலில், இருந்து புறப்பட்டு மாலை தோறும் பரவுகிற கோளறு பதிகத்தை இசைத் தட்டிலே போட்ட படி, மின்சாரம் நின்று ஃபான் ஓய்ந்து விடும் வேளைகளிலே விசிறியால் வீசிக் கொண்டிருந்தது தான் இறுதியாக உனக்கு என்னாற் செய்ய முடிந்தது.
தேவாரம் அன்றி வேறொன்று ஒதாத, நாதசுரத்திற் கூடத் தேவாரமன்றி வேறு பாடல் வாசிக்க அனுமதிக்காத விழிசிட்டிப்பா ரம் பரியத்திலே வாழ்ந்தவள் நீ.
**ஆன சொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர், ஆணை நமதே" ஞானசம்பந்தரின் வாக்குறுதியை நம்பித்தான் அன்று இரவே புறப்பட்டாயோ அம்மம்மா?
இருளுகின்ற வேளையிலே வந்த டாக்டர், நீ உன் இறுதி மணித் தியாலங்களைக் கடந்து கொண்டிருப்பதாகச் சொல்வி விட்டார். நீ மரணத்தை எதிர் நோக்கிக் கொண்டிருக்க, உன்னுடைய வாயிலே பாலை விடுகிறோம்.
ஒவ்வொரு முறையும் பால்விட்ட பிறகு உனக்குக் கஷ்டம் அதிக மாக இருப்பதைப் பார்க்க எனக்குப் பாலை விடவும் மனம் இல்லை. ஆனால், விட்ட பாலையெல்லாம் நீ ஆவலோடு விழுங்கியதால், நானும் உன்னுடைய வாயிலே பாலை விடுகிறேன்.
உன் அசைவுகள் குறைந்து கொண்டு வருகின்ற போது, உன் காலைத் தொட்டு வணங்கி உன் ஆத்மாவுக்காக நான் இறைவனை இறைஞ்சுகிறேன்.
Lih...... இறுதியிலே, நடு நிசி 12.30 மணிக்கு. நான் அதை எழுதவிரும்பவில்லை.
காலை, பறை முழங்கத் தொடங்குகிறது. சிவந்த தமிழ் மண் ணிலே வாழ்ந்து, யுத்த பேரிகை முழக்கமே கேட்டுப் பழகிய காதுக ளிற் சாப்பறை முழக்கம் அறைகிறது. நானோ, அறைக்குள்ளே பேப்போல் அலைகிறேன்.

கண்களில் ஒரு துளியும் ஈரம் இல்லை. ஏனோ ? ‘அம்மம்மா , அம்மம்மா’’ என்று உரத்துக்கத்த வேண்டும் போல, எனக்குள் ஒரு வெறி. வெளியிலே கேட்காத படி குரலை அமுக்கிக் கொண்டு அவ் வாறே கத்துகிறேன்.
சுண்ணம் இடிக்கிறார்கள். தேவாரம் முதலியன படிக்கிறார்கள்.
**ஐவருங்கைவிட்டு மெய்விடும் போதுன் னடைக்கலமே'
மெய்விடும் போது மாத்திரமல்ல, வாழ்வின் ஒவ்வொரு கண முமே சிவனடி மறவாச் சீர்மை உன்னுடையது.
மயானம். பெரிய மாமா உனக்கு இறுதிக் கடனைச் செய்கிறார்.
நீ அணிந்திருந்த நகைகளைக் கழற்றி என்னிடம் தருகிறார் கள். " " கவனமாகக் கொண்டு போங்கோ”*
எனக்குச் சிரிப்பாயுமிருக்கிறது. ஆளே போய்விட்ட பிறகு நகை, தானா பெரிது ?
நான் விலகி வந்து நின்று சிதையைப் பார்க்கிறேன். Lå " யமனுக்குரிய தென் திசையிலிருந்து வீசிய காற்றிலே, செந்தீ
ஓங்கி எழுகிறது.
பிரபஞ்சம் முழுவதும் சக்தி மயமென்று சொல்லுவார்கள். எங் கள் குடும்பத்தை இயக்கியதும் 'சிவம் அல்ல. அந்த விழிசைச் சிவத் துக்குச் சக்தியாக இருந்த நீ தான். எங்கள் குடும்பம் மட்டுமா? விழிசிட்டிக்கே விளக்காக இருந்தவள் நீ !
குடும்பத்தில் வந்துதித்த ஒவ்வொருவரது உயர்ச்சிக்காகவும் மெழுகாய் உருகியவள். ஒவ்வொருவரையும் உன் கையினாலே வளர்த்து ஆளாக்கியவள். உதவியென்று வந்தவருக்கு, உள்ளது உதவி டும் பெருந் தன்மையினால் உயர்ந்தவள். பாசம் என்கிற பாசத் தால் அனைவரையும் பிணித்து வைத்திருந்தவள். தண்ணளியாலும் அன்பாலும் ஓர் அரசி போல இருந்து அனைவரையும் ஆண்டவள்"
ஐயோ! சிவந்த நெருப்பு, உன்னுடைய பூ முகத்தைத்தழுவுகிறது! *தருக் கண்ணிலும் குளிர்ந்த தண்ணளி தந்தாண்ட திருக் கண்ணிலும் சுடுமோ தீ. ? ?
இந்த வரிகள் நினைவில் வருகிற போது, மனித வாழ்க்கையின்
முடிவிற்குச் சான்றாய் எரிகிற தீயில் இருந்து அடிக்கிற வெப்பத்தை யும் மீறி, என்னுடைய கண்களில் ஈரம்.
5

Page 7
அக்காவின் கூரு
அக்கா. o
மழலையாய் உங்கள் மடியிலிருந்த ஞாபகம். கோவில்கள் தோறும் உங்களால் சுமந்து செல்லப்பட்ட நினைவுகள்.
இன்னும் எத்தனை. எத்தனை.
அன்று முதல் என்னைப் பரிவுடன் வளர்த்தெடுத்துப் பாசமுடன் பிடிக்க வைத்து என் வாழ்விற்கு ஒளி ஏற்றி வைத்த என் அன்புத் தெய்வம். எனக்கு மட்டுமன்றி எங்கள் குடும்பத்திற்கே ஆலமரமாய் இருந்து நிழல் பரப்பினிர்கள். என்னை மட்டுமன்றி என் இரு குஞ்சு களையும் பிறந்த நாள் முதலாய் மிகுந்த சிரத்தையுடன் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வளர்த்தெடுத்த பேருமை இன்றும் கூட உறவினர் அயலவர்களால் நினைவு கூரப்படுகின்ற வேளையில் என் மன ஓட்டங்களை யாரிடம் சொல்லியழ!
என் வீட்டு வேலைகளையும் உங்கள் தலையிலே அள்ளிப் போட்டு நீங்கள் ஒழுங்காகச் செய்தமையாற்றான் நான் என் பாடசாலைக் கடமைகளைக் கண்ணும் கருத்துமாய்ச் செய்ய முடிந்தது. நீங்கள் செய்த உதவிகள் எல்லாம் இன்றும் என் கண்முன் நிலைத்து நிற் கின்றன. என் கடமைகளை எப்படித் தீர்க்கப் போகின்றேன், எனத்
தெரியாமல் தவிக்கின்றேன்.
உங்கள் தயவில் ஒரு கூட்டில் வாழ்ந்த குருவிகள் நாங்கள். இன்று கூடு குலைந்து பறப்பதா அன்றி வீழ்வதா எனத் தெரியாமல் தவிக் கிறோம். இவ்வேளையில் நகுலேஸ்வரப் பெருமானின் பாதார விற் தங்களை அடைந்த நீங்கள் அங்கிருந்து கொண்டும் எமக்கு வழி காட்டியாய் உற்றதுணையாய் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் நிமிடங்களை யுகங்களாகக் கழித்துக் கொண்டிருக்கிறோம்.
என்றோ ஒரு நாள் சந்திப்போம் என்ற நினைவுடன் வாழும்
அன்புத் தங்கை தங்கம்மா. சண்முகநாதன்

புன்னகை சிந்தும் பெரியப்பாச்சி
பெரியப்பாச்சி!
வெண்தலை, வெண்ணிறனிந்த நெற்றி, புன்னகை சிந்தும் முகம், பையன நடை. இவர் தான் எமக்குத் தெரிந்த பெரியப்பாச்சி.
மார்கழி மாதம் திருவெம்பாவைக் காலத்தில் வைகறைப் பொழு தில் துயிலெழுந்து நீராடிக் குளிர் நிறைந்த அக்காலைப்பொழுதில் சீதாவலையூடு, ஆச்சியுடன் கீரிமலைக்குச் சென்ற அந்த நாட்கள்.
புல்லெடுக்க நிறையப் புலம் சென்று வரும் போது "அன்னவுண் ணாப் பழம் பிடுங்கித் தந்த நாட்கள்;
1984-12-18 தெல்லிப்பழை ஐக்கிய வைத்தியசாலையில் "இதோ உன் தங்கை** எனத் தங்கையைக் காட்டிய நாள்.
இவ்வாறாக எங்கள் நினைவுகளில் உங்களது வரவுகள் பற்பல
* கடமையைச் செய் பலனை எதிர் பாராதே" என்ற கீதோப தேசத்திற்கு இணங்க வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து நகுலேஸ் வரப் பெருமானது திருவடியடைந்த உங்களது ஆத்மா சாந்தியடை யப் பிரார்த்திக்கிறோம்.
சதீஸ் பாலமுருகன் பாலநிதி

Page 8
அம்மா
- கோகிலா மகேந்திரன்
1. அம்மாவின் கிராமம்
தாவரங்களில் இலைகள், பூக்கள் எதுவும் அசையாமல் அப் படியே நின்றது போல் ஒரு புழுக்கம் நெஞ்சு முழுதும் நிரப்பிப் போய் இருக்கிறது. வீட்டின் மேற்குப் பக்கம் போகிற போதெல் லாம் கண்கள் அந்தக் கட்டிலையும் அம்மாவையும் தேடுகின்றன. அம்மா அங்கு இல்லை என்று அறிவு சொன்னாலும், பக்கத்தில் உள்ள அப்பாவின் அலுமாரியில் ஒரு புத்தகம் தேடுகிற சாட்டில் கால்கள் அடிக்கடி என்னை அங்கு அழைத்துச் செல்கின்றன. ஆயினும் அம்மா அங்கு இல்லையே இல்லை.
தனது இறுதி நாள்கள் தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண் ணாகிய விழிசிட்டியில் கழிய வேண்டும் என்ற அம்மாவின் ஆசை நிராசையாகவே போய்விட்டது. கிராமத்து வாழ்வு பற்றி உளவியல் உயிரியல், சமூகவியல் போன்ற பல்வேறு துறைகளிலும் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. கிராமத்தின் மாசடையாத சூழலும், இயற்கை யின் அழகும், கோயில்களும், மாசறியா மனம் கொண்ட மனிதர் களும், அங்கு வாழ்பவர்களின் வாழ்வுக் காலத்தைக் கூட்டும் காரணி கள் என ஆய்வுகள் தெரிவிக்கும் போது, இந்த ஆய்வுகளைப் பற்றி எதுவுமே அறியாத அம்மா ஏதோ ஒரு காரணத்தால் அந்த வாழ் வைப் பெரிதும் விரும்பியிருந்தார்.
காலம் குறிப்பிட்டுச் சொல்ல முடியாததோர் ஆதி நாளில் எங்கள் கிராமத்தில் வாழ்ந்த ஒரு பெரியாருக்குக் கண் பார்வை குறைந்து போயிற்றாம். அவர் எங்களுர் வயிரவப்பெருமானை மெய்யன் போடு வணங்கி வர அவரது கண் பார்வை பழைய நிலை க்கு மீண்டதாம். அதனால் எங்கள் கிராமத்தின் வயிரவப் பெருமானுக்கு விழிதீட்டி ஞான வயிரவர் என்ற பெயர் வழங்கலாயிற்று. விழிதீட்டி யும் விழிசிட்டியும் ஒரே கருத்துடைய பெயர்களே என்று அப்பா கூறுவார். "ஞான வயிரவ சுவாமி பேரில் முன்னோர் பாடி வைத்த திருவூஞ்சற்பாக்களில் தெல்லி நகர் விழிதீட்டிப்பதி எனக் குறிப் பிடப்பட்டிருப்பதும், அம்பலச் சட்டம்பியார் ஆரம்பித்து நடத்தி வந்த பாடசாலையின் பெயர் விழிசிட்டிச் சிவஞான வித்தியாசாலை என்றிருந்ததும் நோக்கற் பாலனவாம்’ என்றும் தன் கட்டுரை ஒன் றில் அப்பா எழுதியுள்ளார்.
8.

பன்னாலை, தையிட்டிப்புலம் ஆகிய கிராமங்களுக்கிடையில் வடக்குத் தெற்காக ஒடுங்கி, கிழக்கு மேற்காக அதிக தூரம் நீண் டிருந்தது எங்கள் கிராமம். கிழக்கே வன்னியசிங்கம் வீதி எனப் பின்னாளில் அழைக்கப்பட்ட கொல்லங்கலட்டித் தெருவில் இருந்து மேற்கே நகுலேஸ்வர வீதி எனப்படும் கீரிமலை அளவெட்டித் தெரு வரை விழிசிட்டிக் கிராமத்தவரின் காணிகள் இருந்தன. அந்தி ரானை, சிலும்பிலாவளை, பங்கிலிட்டி, சித்திலாவத்தை என்று எங்கள் ஊரின் காணிப் பெயர்களே அழகானவை. அம்மாவுக்கு இந்தக் காணிப் பெயர்கள் எல்லாம் அத்துபடி, ""பிள்ளை, அந்தப் பங்கிலிட்டி மொந்தல்லை நிண்டால் வசு வரும். ஏறிப் போ மேனை. வெயிலுக்குள்ளை நடக்காதையனை" என்று கூறும் அம்மாவின் குரல், இந்தக் கணத்திலும் எனக்குள் நிதர்சனமாய்க் கேட்கிறது .
வெற்றிலை, இன வாழைப் பழங்கள், பலாப்பழம், தோடம் பழம், மாதுளம்பழம், இராசவள்ளிக் கிழங்கு, செந்தினை, வரகு, நெல் ஆகியவற்றை வாங்குவதற்குப் பலரும் எங்கள் கிராமத்தைத் தேடி வருவதுண்டு. வெற்றிலை அடுக்குவதிலும் இன வாழைப் பழங்களுக்குப் புகையூட்டிப் பழுக்க வைப்பதிலும் பாலைக் கடைந்து வெண்ணெய் எடுத்துச் சேர்த்து அதை நெய்யாக்குவதிலும் அம்மா வுக்குக் "கலைமாணி" பட்டம் வழங்கலாம். அடுக்கப் படுவது எங்கள் வீட்டு வெற்றிலை என்றா நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை! கிழக்கு மாமா தங்கள் தோட்டத்தில் கொய்த வெற் றிலையைக் கடகத்துடன் கொணர்ந்து எங்கள் வீட்டு முற்றத்தில் கொட்டி, ""பெரியக்கா இதை ஒருக்கா அடுக்கி விடுங்கோ. விடியப் பறம் சந்தைக்குப் போகவேனும்’ என்று சொல்வார். இரவு சாப் பாடு முடிந்த பின் வெற்றிலை அடுக்கல் ஆரம்பமாகும். அம்மா, ஆசையம்மா, சின்னம்மா, கிழக்கு மாமாவின் மகள் தேவி என்று எல்லோரும் வட்டமாக இருந்து வேலையில் ஈடுபடுவார்கள். பத்து, பதினொண்டு, பன்ரண்டு என்று வாய் உள்ளுக்குள் முணுமுணுக்க வெற்றிலை எண்ணி அடுக்கப்படும் அதே சமயத்தில் ஊர்ப் புதினங் களும் அலசி ஆராயப்படும். புதினம் எவ்வளவு தான் ருசியாய் இருந்தாலும், எண்ணல் பிழைக்காது. நூறு நூறாய் அடுக்கி வைக்கக் கிழக்கு மாமா அவற்றில் எட்டுப் பிடியைச் சேர்த்து வாழை நாரில் கட்டாக்கி விடிய நாலு மணிக்குச் ச ந் தை க்கு ச் செல்லும் காட்சி அற்புதமானது,
எங்கள் வீட்டின் தெற்குப்புறம் ஒரு மாஞ்சோலை. ஏதேதோ பாடல்களை எல்லாம் மனதுக்குள் பாடிப்பார்த்துச் சிறகடிக்கும் பல வகைப் பறவைகள் தினந்தோறும் இந்தச் சோலைக்கு வரும். அம்மா தன் பேரனை (என் மகனை)த் தூக்கிக் கொண்டு மாலை நேரங்களில் அந்தச் சோலைக்குள் போய் விடுவார்.
9

Page 9
"அம்மம்மா! அது என்ன குருவி?"
"அதுதான் செண்பகம். செண்பகமே சிறுச் சுளகே, மாமி வாறா மறைஞ்சு நில்லு'
" Lorruf) GTš605 GJIT prir?”
**அது தம்பின்ரை மாமி இல்லை. செண்பகத்தின்ரை மாமி’
"செண்பகத்தின்ரை மாமி எப்பிடி இருப்பா?* " "செண்பகத்தைப் போல சிவப்பா இருப்பா'
*சிவப்பெண்டா எப்பிடி?" மகனுடைய கற்பனைக்குள் செண்பக் மாமி வரும் வரை அவனும்
தொடர் கேள்வியாய்க் கேட்டுக் கேட்டுத்துளைப்பான். அம்மா ஒரு போதும் சலித்துக் கொள்ளமாட்டா.
பிறகு, மகன் பறவைகளைத் துரத்தி விளையாட, அம்மா காணிக்குள் முசுட்டை பறிக்க . . அந்த மாலைகள் எவ்வளவு இனிமையானவை!
எங்கள் வீட்டின் கி ழ க் கு ப் புற ம் வாழைத்தோட்டமும், வெற்றிலைத் தோட்டமும் வெற்றிலைத் தோட்டம் எப்போதும் இறைத்து ஈரமாக இருக்கும். வெற்றிலைக் கொடிக்கு ஆதாரமாக நடப்படும் முள் முருக்கு மரங்களின் குளிர்மை நெஞ்சை அள்ளும். வாழைத் தோட்டத்தில் இருந்து வாழைப் பொத்திகள் வீட்டுக்கு வந்து மதிய உணவுக்கு வறையாகும். அம்மா வறைக்கு வாழைப் பொத்தி அரிவது ஒரு தனிக் கலை, குதிக்காலில் குந்தியிருந்து, வலது முழங்கால் தெரியும்படி சேலையை இழுத்துவிட்டுப் பொத்தியை வலது முழங்காலோடு இடது கையால் அணைத்துப் பிடித்துக் காம்புச் செத்தகத்தைத் தீட்டி அரியத் தொடங்கினால் ஐந்து நிமிடத்தில் இழே உள்ள ஒலைத் தட்டு நிரம்பிவிடும். பிறகு அதற்குள் உப்புத்தூள் போட்டுக் கும்மிப் பிழிந்து . வாழைப் பொத்தியை இப்படி இவ்வளவு வேகமாய் அரியும் கலையை நான் இறுதிவரை பெற்றுக் கொள்ளவேயில்லை.
தமிழறிவிலும், சமயாசாரங்களிலும், புராணபடனத்திலும், தேவாரங்களைப் பண்ணோடு பாடுதலிலும், பாட்டுக்கள் இயற்றுவ திலும் சிறந்த பல அறிஞர்கள் எமது கிராமத்தில் வாழ்ந்தார்கள். இவர்களிற் பலர் ஏதோ ஒரு வகையில் அம்மாவின் உறவினர்கள்.
O

அம்பலச் சட்டம்பியார், காசிச் சட்டம்பியார், கணபதிச் சட்டம்பி யார், அருணாசல உபாத்தியாயர், டாக்டர் பொன்னையா, சி. முருகேசு, (C C S) பெளராணிகர் ஆறுமுகம், பண்டிதர் வே. சங் கரப்பிள்ளை எ ன் று இப்பட்டியல் நீளுமாயினும் பண்டிதர் சி. கதிரிப்பிள்ளை இங்கு முக்கியமானவர். அவர் அம்மாவின் தாய் மாமன். "பப்பா" என்று உறவினர்களால் அன்பாக அழைக்கப்பட் டவர். விழிசிட்டி ஞானவைரவர் சுவாமி ஆலயத்துக்கு வடக்குத் திசையில் இருந்த தாளங்காய்ச்சிப் பலாவடி என்ற காணியில் பாட சாலை கட்டிக் கல்வி கற்பித்தவர். அவரது வீட்டில் அம்மா அதிக நேரத்தைச் செலவிடுவதுண்டாம். அதனால் பாடசாலை ஒன்றிலி ருந்து அம்மா பெற்றுக் கொண்ட கல்வியை விட விழிசிட்டிச் சூழ லில் இருந்து பெற்றது அதிகம். பண்டிதர் சி. கதிரிப்பிள்ளை அம்மா வுக்கு வைத்த செல்லப்பட்டப் பெயர் " சின்னக்குட்டி. '' தான் சிறு பிள்ளையாக அவர் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் “ “gračit னக்குட்டீ, எப்பிடிச் சுகம்?" என்று பப்பா கேட்பது பற்றி அம்மா எனக்கு நிறையவே கதைகள் சொல்லுவா, பப்பாவை விடச் சற்று வயது குறைந்த ஒரு கூட்டம் அம்மாவை "பெரியாங்கச்சி ". என அழைக்கும். “சின்னக்கான்ரை இத்தா (அம்மாவின் பெரிய தாயாரை நாங்கள் இப்படித்தான் அழைப்போம்) எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவா. படலையில் வரும்போதே "பெரியாங் கச்சீ எனக் குத் தேத் தண்ணி போட்டிட்டியோ?** என்று கேட்டுச் சிரிக் கும் கடுக்கன் போட்ட முகம் என்னுள் பசுமையாய்த் தெரிகிறது.
அம்மாவை விட வயதில் சற்றுக் குறைந்த எமது உறவினரான அடுத்த ஒரு பரம்பரைக்கு இவ "பெரியக்கா' பெரியக்காவிடம் எந்த உதவியையும் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என்று எல்லா ருக்கும் தெரியும் என்பதால் நாள்தோறும் அவவைத் தேடி யாரோ சிலர் வருவார்கள். கிழக்கு மாமா, ஆசையம்மா, ஆசையப்பு போன்ற சிலர் ஒவ்வொரு நாளும் அவவிடம் வருவார்கள். எமது உறவினர் அல்லாதோராய் எமது ஊரில் வாழ்ந்த மற்றைய சில ருக்கு இவ "வாத்தியார் பெஞ்சாதி” காசு கடன் பெறுதல் (வட்டி எதுவும் இன்றி) நல்ல கருமங்களுக்கு நாள் வைத்தல் போன்ற தேவைகளுக்கெல்லாம் அவர்கள் இவவிடம் வருவார்கள். இன்னும் சிலர் இவவை "நாச்சியார்’ என்று அழைப்பார்கள். சின்னவன் வந்து முற்றத்துப்படியில் குந்தியிருப்பார்
என்ன சின்னவி யோசனை? அம்மா கேட்பா.
"ஒண்டுமில்லை நாச்சியார், கிட்டின உருத்துக்குள்ள பெட் டைக்கு ஒரு சம்மந்தம் வந்திது. அதைப்பற்றி யோச்சுக்கொண்டு கிடக்கப் பல்லி சொல்லுது. அதுதான் எழும்பித் தங்களிட்டை வந்தன்"
1

Page 10
保护
'பல்லி எப்ப சொன்னது? எங்கை சொன்னது? எண்டு சொன் னாலெல்லோ நான் ஏதும் சொல்லலாம் ??"
· s to
நேத்து, வெள்ளிக்கிழமை மம்மல் நேரம் - உறப்பிலை இருந்து தான் சொல்லுது'
**பேந்தென்ன - உச்சத்துப் பல்லிக்கு அச்சமில்லை எண்டு எத் தினை தரம் நான் சொல்லியிருப்பன். அதெல்லாம் நல்ல மாதிரி நடக்கப் போகுது. நீ ஒண்டுக்கும் யோசியாதை. இப்பென்ன காசு, கீசு ஏதும் தேவையோ?
'ஐம்பது, நூறு இருந்தாத் தரவன்"
"உனக்குக் கட்டாயம் தரத்தானே வேணும். கடைசியிலை கொப்பிலாவடைக்கை (எமது சுடலைப் பெயர்) நீ தானே உதவி** என்று சொல்லிச் சிரித்து அம்மா காசு கொண்டுவந்து கொடுப்பா சின்னவன் இரண்டு கையாலும் பெற்றுக்கொண்டு " "அப்ப வாறன் நாச்சியார்' என்று சிரித்துச் செல்லும் காட்சி மனம் உள்ளவரை மறக்க முடியாத காட்சி. ஆனால் சின்னவன் அம்மாவை முந்திக் கொண்டு காலமாகி விட்டார். அம்மாவுக்கு இறுதி நேர உதவி சின்னவன் மூலம் கிடைக்கவில்லை. புலம்புதலையும் விம்முதலை யும் எனக்குச் சீதனமாய்த் தந்து அம்மா இணுவில் மண்ணில் மறைந்து போனார்.
எங்கள் கிராமத்தில் ஞானவயிரவ சுவாமி கோயில், வீரபத் திர சுவாமி கோயில், சிவகுருநாத சுவாமி கோயில் ஆகிய மூன்று கோயில்கள் இருக்கின்ற்ன. வீட்டுக்கு மேற்கே பொற்கலம் தம்பை வயிரவர் கோயில். வீட்டில் நின்ற தென்னைகளிற் பாதி, கோயில் தென்னைகள். அதாவது கோயிலுக்கு நேர்த்தியாக விடப்பட்ட தென்னைகள். அவற்றிலிருந்து பெறப்படும் தேங்காய்களை அம்மா அந்தக் கோயிலுக்குக் கொடுத்து விடுவா. அல்லது அவற்றை விற்று வரும் பணத்தைக் கோயிலுக்குக் கொடுப்பா. தங்கம் வீட்டுக்கு வருவா,
"பெரியக்கா, தேங்காய் இருந்தால் ஒண்டு தாங்கோவன் புட் டுக்குப் போட”*
**குப்பையடியிலை கிடக்கிற தேங்காயில ஒண்டை இரண்டை. எடுத்துக்கொண்டு போ தங்கம். கோயில் தேங்காய் வேறையாய் விறகம்பாரத்துக்குப் பக்கத்திலை குவிச்சிருக்கிறன், அதில முட்டிப் G3Luf.ru__nr60)3g5” ”
12

" எனக்குத் தெரியுந்தானே பெரியக்கா. உங்கடை கோயில் மரத்தான் ஒண்டு நேத்து ஒழுங்கையிலை விழுந்து கிடந்து நான் தூக்கி வேலிக்கு மேலாலை போட்டிட்டுப் போன்னான்"
**சரி, நீ மூண்டு தேங்காய் எடு. மேன் பற்றரிக்குப் போகேக்கை வடிவாய் புட்டை அவிச்சுக்குடு. பாவம், கஷ்ரப்பட்டு வேலை செய்யிற பிள்ளை"
தங்கம் போய்விடுவா.
பொற்கலந்தம்பை வயிரவர் கோயிலுக்குக் கொடுக்கவேண்டிய தேங்காய்க் காசு என எழுதப்பட்ட "என்வலப்பில் ஐந்நூறு ரூபா இன்னும் அம்மாவின் சூட்கேசுக்குள் இருக்கிறது. அந்தக் கோயிலில் மீண்டும் பூஜைகள் ஆரம்பிக்குமாயின் தேங்காய்க் காசு கொடுக்க ப்படும் என்று அம்மா நம்பியிருப்பா. ஆனால், அது எப்போது நடை பெறப்போகிறது?
ஈயும் இலையானும் இன்னும் குறையவில்லை" என்று மகாகவி யால் சொல்லப்பட்ட இடம் ஒன்றும் எங்கள் கிராமத்தில் இருந்தது. ஆனால், அம்மா ஒருபோதும் அந்தச் சங்கக்கடைக்குப் பொருள் வாங்கச் சென்றதில்லை. இது போன்ற ஒரிரு நடத்தைகளில் "வாத் தியார் பெண் சாதி என்ற தன் அந்தஸ்தைக் காப்பாற்ற அம்மா முனைந்ததுண்டு. என்னையும் போக விடமாட்டா “பொம்பிளைப் பிள்ளையன் கண்ட கடையஞக்கெல்லாம் போகப்படாது”* என்று சொல்லுவா. எனக்குச் சுயமாகச் சிந்திக்க வயது வந்த பின் னர் ஒரிரு தடவை இந்தக் கடைக்குச் சென்றதுண்டு.
'கடைக்குப் போவதால ஒருவரது சுய கெளரவம் குறையாது. ஏபிரகாம் லிங்கன் தன்னுடைய சப்பாத்தைத் தானே தான் துடைப் பாராம். எங்கடை வேலையளை நாங்களே செய்ய வேணும்”* என்று நான் சொன்னால்,
** அப்பாவைப் போலை நீயும் படிச்சிட்டாயெல்லே. இனி அப்ப டித்தான் சொல்லுவாய். நான் படியாத மனுஷி விடுங்கோ’’ என்று சொல்லுவா.
அம்மாவை மாற்ற நாங்கள் முனைந்ததில்லை. எங்களை மாற்றி அம்மா முனைந்ததுமில்லை. நாங்கள் எல்லோரும் நாங்கள் விரும்பிய
மாதிரியே இருந்து ஆளுக்காள் அன்பு செய்தோம்.
3

Page 11
தெல்லிப்பழை என்ற கிராமத்தில் கொல்லங்கலட்டி, அம்பனை பன்னாலை, விராங்கொடை, குரும்பசிட்டி, கட்டுவன், வீமன்காமம் விழிசிட்டி, தையிட்டிப்புலம், பொற்கலந்தம்பை, மாத்தனை, புதுத் தோட்டம், வறுத்தலைவிளான் என்று பல குட்டிக் கிராமங்கள். தந்தை செல்வாபுரம், துர்க்காபுரம், வித்தகபுரம் என்ற சில கிராமங் கள் அண்மையில் புதுப் பெயர் பெற்றுள்ளன. விழிசிட்டி இப் போது மக்கள் யாரும் வசிக்காத வித்தகபுரம்" கிராமசேவகர் பிரி வாக மாறியுள்ளது. விழிசிட்டி ஒரு குட்டிக் கிராமமாக இருந்த போதிலும் இங்கு நடைபெறும் சுபா சுப கருமங்களுக்குத் தேவை யான தொழிலாளர்கள் அனைவரும் இங்கு வாழ்ந்தது ஒரு சிறப்பு. கோயிற் பூசை செய்யும் அந்தணர், சிரார்த்தம் செய்யும் அந்தணர், மாலை கட்டுவோர், பிரேதம் சுமப்போர், விறகு தறிப்போர் அனை வரும் இங்கு நல்லுறவுடன் வாழ்ந்தனர். அம்மா இவர்கள் அனை வருடனும் ஆழ்ந்த உறவு கொண்டிருந்தார்"
1987 இல் நிழல் சொரியும் மரமெல்லாம் நெருப்பள்ளிச் சொரிய ஆரம்பித்த பிறகு, எங்கள் கிராமம் நிலைகுலைந்தது. 1990 இல் அது முற்றாகவே சிதறிப் போயிற்று. வீட்டில் இருந்து ஒரு குட்டி ராச்சியமே நடத்திக்கொண்டிருந்த அம்மாவுக்கு இந்த இடப்பெயர்வு பேரிடியாய் அமைந்தது.
"பிள்ளை எழும்புவம், போவம், சருவக்குடத்தையும் குத்து விளக்கையும் எடுப்பம்" போன்ற சொற்கள் உயிர் பிரிவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்னும் அவவிடம் இருந்து வந்தன.
அவ கேட்டபடி அவவின் கிராமத்திற்கு அவவைக் கொண்டு போக முடியாத பாவியாய் நான். !
4

2. அம்மாவின் கோயில்
இழப்பு, துக்கம், அறுபடல், தனிமை, அதிர்ச்சி, இவை எல் லாவற்றுக்கும் சாம்பல் பூசிக் குழைத்துப் பூசியதான ஒரு உணர் வுடன் இருக்கும் என்மனம், அம்மா தன் மனத்தை அமைதியாய் வைத்திருக்க உதவிய கோயிலைப் பற்றிச் சிந்திக்கிறது.
எங்களூரில் மூன்று நாலு கோயில்கள் இருந்த போதும், அம்மா வின் கோயில் என்று கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தையே குறிப் பிடலாம். அதற்குக் காரணங்கள் உண்டு. ** இரிமலைச் சிவன் கோயில் என வழங்கும் நகுலேஸ்வரர் ஆலயத்துக்கு அடியேன் எனது இளமைப் பருவம் தொடக்கம் இடையிடையே போய் வந்ததுண் டாயினும் இல்வாழ்க்கையிற் புகுந்த 1933 ஆம் ஆண்டின் பின்னரே அதிகமாகப் போகத் தொடங்கினேன். அக்காலத்தில் பிரம்மபூரீ . தி. குமாரசுவாமிக் குருக்கள் அவர்கள் கோயிலின் ஆதீனகர்த்தாவாக வும் பிரதம குருக்களாகவும் விளங்கினார்கள். அவர்களது அறிவுரைப் படி மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலுக்குச் சென்று பூசையும் அர்ச்சனையும் செய்வித்து வழிபட்டு வந்தோம் " என்று அப்பா, தான் எழுதிய நகுலகிரிப் புராண உரை நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
அப்பா எழுதியுள்ள இந்த விடயத்தைப் பற்றி அம்மா பல நூறு தடவை பல நூறுபேருக்குக் கதை கதையாகச் சொன்னதுண்டு எனக்குந்தான் - என் மகனுக்கும் கூட! மகனுக்குப் பின்னாளில் சொல்லும் கதை ஏறத்தாழ இப்படி அமையும் "அப்பு என்னை மேல் வகுப்புப் படிக்க விடேல்லை. எனக்கு அடுத்துப் பிறந்த குழந்தை யளைப் பாக்கிறதுக் கெண்டு என்னை மறிச்சுப் போட்டா. நான் படிக்காமல் நிண்டு அதுகளைப் பாத்தும் அதுகள் ஐஞ்சாறு வருத் தம் வந்து அடுக்கடுக்காய்ச் செத்துப் போச்சுது. ஆறு பிள்ளையளை அடுத்தடுத்துச் சாகக் குடுத்த அப்பு செய்த ஒரு நல்ல விஷயம் என்னைப் பதினெட்டு வயதிலை கலியாணம் செய்து வைச்சது. என்ரை கலியாணத்தோடை நரலுக்கை இருந்து எங்கடை குடும்பம் கொஞ்சம் விடுபட்டுது.
எண்டாலும் எனக்குப் பிள்ளை உண்டாகேல்லை. "பூக்கட்டிப் பாப்பம் எண்டு குமாரசாமிக் குருக்களிட்டைக் கேட்டன். அவர் GooFr Girgorr i - கடவுளிட்டை வரம் கேக்க நினைச்சால் ஐமிச்சம் வரக் கூடாது. முழு நம்பிக்கையோடை. ஒவ்வொரு முதல் ஞாயிறும் அர்ச்சனை செய்யச் சொல்லி.
15

Page 12
நான் அதைச் செய்தன். ஒரு நாள் இரண்டு நாளல்ல. ஒரு வரி யம் இரண்டு வரியமல்ல - பதினேழு வரியம் தவம் இருந்தன். கடை சியா 1950 ம் ஆண்டு தை மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை நான் நடேசர் வாசல்லை அழுதழுது கும்பிட்டுக் கொண்டு நிண்டன். தலைக்கு மேலை பல்லி ‘வெற்றி எண்டு சொல்லிச்சுது. கார்த்திகை மாதம்கொம்மா பிறந்திட்டா !
அம்மாவின் கோயில் கீரிமலை ஆகியதற்கு இந்தச் சம்பவம் முக்கிய காரணம். இதற்குப் பிறகு அம்மா உள்ளே துவண்டு போக நேர்ந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கீரிமலைத் தெய்வத்தைச் சிக்கெனப் பிடித்துக் கொள்வா - நம்பிக்கை அப்பழுக்கில்லாமல் நூறு வீதம்!
1962 இல் அம்மாவுக்கு வாதநோய் வந்தது. ஆள் நடக்கவே மாட்டாத நிலை . " " ஊரிலை எந்தப் பொம்பிளையின்ரை காப்பும் என்ரை கைக்குப் போகாது" என்று அவவே சொல்லிச் சிரிக்கிற மிகப் பருமனான உடல்! அப்பா யாரோ ஒரு சாத்திரியாரிடம் சாத்திரம் கேட்டு அம்மா போயேவிடப் போகிறா என்று பயந்து அழுதே விட்டார். அம்மா அஞ்சவில்லை. டாக்டர். வெற்றிவேலி டம் மருந்து - அதற்கு மேலாக நகுலேஸ்வரரிடம் தஞ்சம்; அம்மா விரதங்கள் பிடிக்க ஆரம்பித்தார். வாழ்வின் ஒவ்வொரு பிரச்சி னைக்கும் ஒவ்வொரு விரதம் ஆரம்பிக்கப்படும். சோமவார விரதம், வெள்ளிக்கிழமை விரதம், சிவராத்திரி விரதம், நவராத்திரி விரதம், அமாவாசை விரதம், பூரணை விரதம். புரட்டாதிச் சனி விரதம், ஆவணி ஞாயிறு விரதம் என்று அம்மா விரதம் இருக்காத நாளே இல்லை என்றாயிற்று. வாத நோய், வந்த வழி தெரியாமலே போய் விட்டது மட்டுமல்ல,பூசினிக்காய் போல இருந்த அம்மாவின் உடல் பயிற்றங்காய் ஆகிவிட்டது.
முதுமை அடைதல் பற்றி மிக அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று, உடலுக்குள்ளே எடுக்கப்படும் கலோரி அளவு குறையும் போது வாழ்வுக்காலம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கிறது. இந்த ஆய்வுபற்றி நிச்சயமாக அம்மாவுக்கு அப்போது யாரும் சொல்லி யிருக்க முடியாது. ஆனால் விரதம் கலோரி அளவைக் குறைத்து அவவை எண்பத்து நாலு வயது வரை வாழ வைத்துவிட்டது.
தெல்லியம் பதியின் மேல் பாற் றிகழ் விழிசிட்டி யூரான் பல்கலை பயின்று பள்ளித் தலைவனாம் பணி புரிந்தான் நல்லருள் நூல்களெல்லாம் நவின்று நன் நெறியில் வாழ்வான் மல் கெழிற் றிரு வெண்ணிறே பொருளென மதிக்கும்
L DIT GõOT INTGör
6

எனப் பண்டிதர் இ. நமசிவாயம் அவர்களால் பேசப்பட்ட அப்பா, அம்மாவின் இந்தப் பக்தி வாழ்விற்கு எப்போதும் உறுதுணையாக இருந்தார்.
அப்பா வேகமாக நடக்கக் கூடியவர் - (இளமையில்). அம்மா வுக்கோ நடை "பறியாது’ ஆனால் எங்கள் வீட்டில் இருந்து புறப் பட்டு வடமேற்காக நடந்து, எங்கள் நிறையப் புலம் காணியைக் குறுக்கறுத்து, கொப்பிலாவடைச் சுடலைக்குப் பக்கத்துப் பனைக் கூடாகச் சென்று, சின்னத்தம்பரின் சூத்திரக்கிணற்றில் நீர் பாய்ச்சும் மாடுகள் சுற்றி நடப்பதை ரசித்து, நகுலேஸ்வராப் பள்ளிக் கூடத் தடியில் ரோட்டில் மிதக்கும் வரை நின்று நின்று அப்பா அம்மாவை அழைத்துச் செல்லும் அன்பு - எல்லாப் பெண்களுக்கும் கிடைக்கக் கூடியதில்லை.
"முசுகுந்தச் சக்கரவர்த்தி, இராம்ர், சுசங்கிதன், நளமகாராசன், அருச்சுனன் முதலிய பலர் நகுலேசுவரத்துக்கு வந்து நகுலேச தீர்த் தத்தில் ஸ்நானஞ் செய்து நகுலாம் பிகா சமேத நகுலேசுவரப் பெருமானைப் பக்தி சிரத்தையோடு வழிபட்டு இட்ட சித்திகளைப் பெற்று உய்ந்தார்கள்" என்று கீரிமலைச் சிவன் கோயில் வரலாறு பேசுகின்றது. இருபதாம் நூற்றாண்டில் - கலியுகத்தில் அப்படி யாரும் இல்லையா என்ற அர்த்த முள்ள கேள்விக்கு அம்மா பதிலாக அமைந்தார்.
கீரிமலைச் சிவன் கோயில் மாசி மாதத்தில் கொடி ஏறினால் நாலாம் திருவிழா விழிசிட்டியாரின் உபயம். எங்கள் உறவினரான
ஆறேழு குடும்பத்தினர் நடத்தும் பூஜை.
அந்த நாள்களில் அம்மாவைப் பார்க்க வேண்டும். திருவிழா பற்றிய நினைவுகள் இனிப்பாய் அவவின் மனதுக்குள் நுழைந்து விடும். பனிப்புஷ்பங்களை அள்ளிச் சொரிந்தாற்போல் உள்ளமும் முகமும் குளிர்ச்சி அடைந்து விடும்.
குருக்களிடம் பட்டோலை வாங்கி வரச் சொல்லி அப்பாவுக்குக் கட்டளை பிறக்கும். சுன்னாகம் சந்தையில் வாங்க வேண்டிய பொருள்கள் எல்லாம் பட்டியற் படுத்தப்பட்டு கிழக்கு மாமாவிடம் கொடுபடும். ஆசையம்மாவின் உதவியுடன் ஊரில் வாழைக்குலை காணப்படும் இடங்கள் எல்லாம் துப்பறியப்படும். பிறகு அவை ஒவ் வொன்றாக வெட்டி வருதல், பழுக்கப் போடுதல் ஆகியவற்றில் கனகசபை அண்ணா, மகாலிங்கண்ணா போன்றோரின் நிபுணத்துவ உதவி பெறப்படும். சின்னவன், காஞ்சியன், அர்ச்சுனன் ஆகியோ ருக்கு ஆள் அனுப்பி இளநீர்க் குலைகள் எல்லாம் இறக்கப்படும்.
17

Page 13
"அர்ச்சுனன், வெள்ளைக் கெளளியிலை (தென்னை) ஏறப் போறாய் கவனம். உயரி மரம் - கொஞ்சம் சரிஞ்சும் போய் நிக்குது. சின்னப் பெடியன் நீ - உலைச்சுப் போடாதை எங்களை"
சிறிய சிறிய விடயங்களிலும் அம்மாவின் தனிப்பட்ட கவனம்
இருக்கும்.
இந்த முறை "தெற்பை" போடுறது ஆர்?, என்பதைத் தீர் மானிப்பதில் இருந்து, "மேளகாரருக்கு என்ன சாப்பாடு கொடுப் பது?" என்பது வரை தீர்மானம் எடுத்தல் அம்மாவின் கையிலேயே இருக்கும். திருவிழாவில் பஜனை இருக்கும். சைவப் பிரசங்கம் இருக்கும். நல்ல மேளக்கச்சேரி இருக்கும். வேறு விடயங்கள் - கோஷ்டி அல்லது சின்ன மேளம் - இருக்காது. பதினோரு மணி பன்னிரண்டு மணிக்குத் திருவிழா முடியும் போது, குருக்களிடம் மாலை, வாங்குவதற்கும் பஞ்சாமிர்தம் சாப்பிடுவதற்கும் சிறிசுகள் எல்லாம் அடிபடும் காட்சியில் அமிர்த மழை பொழியும். குருக்களி 1-ம் திருநீறு வாங்கி, அவரை விழுந்து கும்பிட்டு நிமிரும் போது தனது திட்டமிடலின் வெற்றி பற்றிப் பெருமிதமும் திருப்தியும் அம்மாவின் முகமெல்லாம் வழியும். பிறகென்ன வாழைக்குலை ஏற்றிச் சென்ற வண்டியில் பெண்களும் குழந்தைகளும் ஏற. ஆண்கள் நடக்கத் தொடங்குவர். சுடலையடிக்கு வரும்போது, "என்னவோ சிவப்பாத் தெரியுது" என்று ஒன்று வெருட்டும். "ஐயோ, பேயாக் கும்’ என்று மற்றது கத்தும்.
"சும்மா இருங்கோ, பேயும் இல்லை, பிசாசும் இல்லை. கோயி லுக்குப் போய் வாறவையிட்டை அது கிட்ட வராது’’ என்று அம்மா கதையை முடிப்பா.
இந்தப் பதிலில் பேய் இருப்பதை ஏற்றுக்கொள்ளும் பண்பும், ஏற்றுக்கொள்ளாத முரணும் இருப்பதை ரசித்து நான் கொடுப்புக் குள் சிரித்துக் கொள்வேன். எல்லா நேரத்திலும் புத்திசாலியாய் இருப்பது என்பது ஒருவருக்கு மிகவும் அயர்ச்சி தருவது தான்.
1990 ஆம் ஆண்டு நாம் விழிசிட்டியில் இருந்து இடம்பெயர்ந்த பின் அம்மா கீரிமலைக்குப் போகவில்லை. பாயைச் சுருட்டிக் கொண்டு அம்மா அளவெட்டிக்கு வந்தாவோ இல்லையோ - அவவின் மகிழ்வையும் யாரோ சுருட்டிக்கொண்டு போய்விட்டார்கள், கோயில் வழிபாட்டைப் பொறுத்தவரை அம்மாவின் கற்பு விசித்திர மானது. அளவெட்டியில் நாங்கள் இடம் பெயர்ந்திருந்தபோது அம் மாவின் உடல் நலம் நன்றாக இருந்தது, நாங்கள் இருந்த வீட்டு
18

"அங்கிளும் அன்ரியும்” அடிக்கடி கும்பிழாவளைக்கும் போவார்கள். அவர்களுடன் போய்வரச் சொல்லி அம்மாவுக்குச் சொன்னால் "எங்கடை கீரிமலை இல்லையாம். பிறத்தி ஊர்க் கோயில் என்னத் துக்கு?’ என்று சொல்லி மறுத்து விடுவா. இறுதி மூச்சுவரை அவவேறு கோயிலுக்கும் போகவே இல்லை.
போரின் கொடுமையும் இடப்பெயர்வு என்ற நெருக்கீடும் அம் மாவைப் பாரிசவாதம் என்ற நிலைக்குத் தள்ளின. நோயிலிருந்து சற்றுத்தேறி இணுவிலில் இருந்த போது கீரிமலை நகுலேஸ்வரக் குருக்கள் வீட்டுக்கு வந்த இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் அவருக் குத் தெட்சணை கொடுத்து அவரை வணங்கி ஆசிபெற்று மகிழ்ந்த தில் அம்மாவுக்கு அரைவாசி வருத்தம் மாறியே விட்டது.
1997 ஆடியில் அம்மாவைப் பாரிச வாதம் பீடிக்கும் வரை தான் பெற்றுக் கொண்ட சிவதீட்சையின் அடையாளமாய் நாள் தோறும் நித்திய கருமம் செய்து பஞ்சாட்சரம் ஜெபிக்க அம்மா தவறியதே இல்லை.
இறுதியான ஒரிரு நாள்களில் கூட படுக்கையில் வைத்துக் காலையில் நான் முகம் கழுவித் துடைத்துவிட, அப்பா திருநீற்றைக் கொணர்ந்து நெற்றியில் பூச, முகத்தில் ஒரு சிறு சிரிப்பு மலரும்.
தேவாரங்கள், பிரசங்கம், கதாகாலட்சேபம் புராணபடனம் தொடர்பாக அம்மா பரமரசிகை. கீரிமலைக்குப்போய் விட்டு வந்தால்,
"சுவாமி ஈசான மூலையிலை வரேக்கை நமசிவாயம் (மாமா) ஒரு தேவாரம் பாடிச்சுது. நான் கண்ணிர் விட்டிட்டன்"
என்று விமர்சனம் வரும்.
கிருபானந்த வாரியார் இங்கு வந்து பிரசங்கம் செய்யும் காலங் களில் அந்தக் கோயிலைத் தேடி அப்பாவையும் அழைத்துக் கொண்டு அம்மா போயே தீருவா.
இறுதியில் படுக்கையில் இருந்த காலங்களையும் எம்மைத் தேவாரம் பாடச் சொல்லிக் கேட்பா. அவவின் ஆசை தீர நல்ல பண்ணிசையாளர்களால் பாடப்பட்ட தேவார திருவாசகங்கள். திருப்புகழ் ஆகியவற்றின் ஒலி நாடாக்களை எடுத்து, வானொலிப் பெட்டியில் போட்டு மெதுவாக இசைக்கவிட்டு அம்மாவின் கட்டி,
லில் வைத்திருந்தோம்.
அன்று பகல் கூடத்தாராளமாய்த் திருப்புகழ் கேட்டுக் கொண்டே படுத் ந்தா.
டுத்திருந் 19

Page 14
மாலை ஆறுமணிக்கு "அபகார நிந்தை பட்டுழலாதே" போய்க் கொண்டிருந்தபோது,
"பால் கொஞ்சம் குடிப்பமா அம்மா?’ என்று நான் கேட்டேன். அம்மா கண்ணைத் திறந்து பார்த்தா. நான் வாயில் விட்ட பாலைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குடித்தா. ஆறரை மணி வரை யில் அம்மா மூச்சுவிடக் கஷ்டப்பட்டது மாதிரி இருந்தது. வழமை யாக வந்து பார்க்கிற டாக்டரை வரவழைத்தோம். ஏழு மணிக்கு வந்தவர் நாடியைப் பார்த்துவிட்டு முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டார். நான் வெளியே வந்து, "என்ன டொக்ரர்?" என்று கேட்டேன்.
**அவவை இனிக் கஷ்டப்படுத்தாதேங்கோ. அப்பிடியே படுக்கட் டும்" என்று சொல்லி விட்டுப் போனார். துரை வீதியில் வசிக்கும் ஆசையம்மாவை வரச் சொல்லி அனுப்பினோம். அவ வந்து பார்த்து விட்டு எங்கள் எல்லோரையும் ஒவ்வொரு கரண்டி பால் கொடுக் கும்படி சொன்னா. அப்பா, நான், தம்பி, மகன், சின்னம்மா பாப்பா எல்லோரும் கொடுத்த ஒவ்வொரு கரண்டி பாலையும் அம்மா மறுக்காமல் குடித்து விட்டா.
திருப்புகழ் போய்க்கொண்டே இருந்தது. கையில் துடிப்புத் தெரியவில்லை. கழுத்தில் தெரிந்தது. சுவாசம் வந்து கொண்டே இருந்தது.
எனக்குப் பக்கென்று வயிற்றில் பயம் பந்தாய்ச் சுழன்றடித்தது:
நெஞ்சில் ஏதோ அடைக்க, துயரம் அதை உடைக்கக் கண்களில் நீர் நிறைந்தது.
அம்மா அமைதியாகப் படுத்திருக்கிறா. சரியாகப் பன்னிரண்டரை மணிக்கு 'இனிமேல் நான் திருப் புகழ் கேட்க மாட்டேன்' என்றுசொல்வது போல் வாயைத் திறந்தா. அவ்வளவுதான்! எனக்குக் கிடைத்து வந்த ஒப்புவமை இல்லாத அன்பு ..?
இது ஒரு தமிழ்ப் படக் கதாநாயகிக்கு நடந்திருந்தால் . குறைந்தபட்சம் பத்து வீணைகள் பின்னணிச் சோகம் கொடுத்திருக் கும். நான் ஒரு சாதாரண மனுஷி!
எனக்குத் துணை நின்றது கண்ணிர் மட்டுமே!
20

3. அம்மாவின் சீர்மியம்
நான் ஒரு சீர்மியர். அதற்கென்று ஒரு வருடம் சாந்திகத்தில் பயின்று பட்டம் பெற்றேன். என்னிடம் பலர் தங்கள் பிரச்சினை களைக் கூற வருவதுண்டு.
அம்மாவுக்குச் “சீர்மியம்" என்ற சொல்லே தெரியாது. அவ உளவியல் நூல்கள் எதையும் நிச்சயமாக வாசித்ததில்லை. ஆனால் எங்கள் கிராமத்தின் பெண்கள் பலரும் சில சமயங்களில் ஆண்களும் கூடத் தங்கள் பிரச்சினைகளைக் கொண்டு அம்மாவிடம் வருவர். அம்மா அவர்களை உள்ளே அழைத்து வரமாட்டா. எங்கள் விழி சிட்டி வீட்டில் தெற்குப் புறமாக ஒரு அகலமான படிக்கட்டு - வீட்டு நீளத்திற்குப் - போகும். அந்தப் படிக்கட்டில் அம்மா அவர்களைத் தனிமையாக அமர்த்தித் தானும் அமர்ந்து கொள்வா. அம்மாவுடன் கதைத்து முடிந்து எழும்பும் போது மனதெல்லாம் சாரலடித்தது மாதிரி ஒரு தெளிவு அவர்கள் முகத்தில் தோன்றுவதை நான் அவ தானித்துள்ளேன். அம்மா நிச்சயமாக என்னை விடச் சிறந்த சீர்மியர் என்றே இப்போதும் நான் கருதுகிறேன். அந்தப் பண்பு அவவின் ஆளுமையில் மிக இயல்பான ஒரு கூறாக இருந்தது.
கிழக்கு மாமா அநேகமாக ஒவ்வொரு நாள் மாலையிலும் வரு வார். மகள் தேவியுடன் தனக்கு ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளையும் விஸ்தாரமாகக் கூறுவார். அம்மா எல்லாவற்றையும் "...ஓ . ଡ୍ର
** என்று சொல்லிக் கேட்பா. இடையிடை ஒத்துணர்வுப்
பதில்கள் கொடுப்பா.
"உங்களுக்கும் இந்தப் பிள்ளையாலை சரியான மனக் கஷ்டம் தான்.""
என்பது போல அம்மாவின் பதில்கள் அமையும் மாமா மணிக் கணக்கில் கதைத்து விட்டுச் சுருட்டையும் பத்திக் கொண்டு எழுந்து போவார்.
அடுத்த நாள் காலையில் தேவிவருவா. ‘மாமி நான் சொல்லு றதைக் கேளுங்கோவன்' என்று தொடங்குவா. அம்மா சமையலில் ஈடுபட்டிருக்கும் போதே தேவி குசினிக்கு முன் உள்ள சிறு "ஹொறி டோரில்" இருந்து கதைப்பா. அம்மா அதையும் "ஒ. ஒ. ஒ. " என்று கேட்பா.
21

Page 15
*அவர் விட்ட பிழையளாலை உங்கள் எல்லாருக்கும் துன்பம்" என்று சொல்வா.
இப்படியான நேரங்களில் இரு தரப்பினரும் வாக்கு மூலமளித் துச் சென்றபின் நான் அம்மாவிடம் கேட்பேன்,
‘இதென்னம்மா உங்கடை நடிப்பு. அவர் சொல்லேக்கை அதுவும் சரி. இவ சொல்லேக்கை இதுவும் சரி. s s'
**பிள்ளை இதிலை சரி, பிழை முக்கியமில்லை. அதுகள் என்ன நீதவான் எண்டே என்னட்டை வாறது? ஒரு மன ஆறுதலுக்குத் தானே வருதுகள். அப்ப அதைச் சரியெண்டு தானே கேக்க வேணும்'
அப்போது அம்மாவின் கூற்று எனக்கு விளங்கியதில்லை. இப் போது எண்ணிப்பார்க்கிறேன். ஒரு படியாத மனுஷியின் வாயில் இருந்து வந்த எவ்வளவு ஆழமான கருத்துள்ள கூற்று!
ஆம். உடனிருத்தலும், உற்றுக் கேட்டலும், ஒத்துணர்வுப் பதில் களைக் கூறுதலும் அம்மாவிடம் வெகு இயல்பாக வாய்க்கப் பெற் றிருந்தன.
சில சமயங்களில் இப்படியும் நிகழும். செளந்தரம் மச்சாள் எங்கள் வீட்டுக்கு வருவா. அவவேறு ஏதும் கதைத்துக் கொண்டிருந் தாலும்,
“உங்களுக்கு ஒருநாளும் மாறாத கவலையைத் தந்திட்டு அவன் G3. urri LLEr68ir” ”
என்று அம்மா மகாவிங்கண்ணா இறந்த இடத்தைத் தொடுவா. மச்சாள் பிறகு கதைக்கத் தொடங்கி அழுது தீர்க்க, இவ இறுதி யில் ஆறுதல் சொல்லி அனுப்புவா,
"இவஷக்கேன் இந்த வேலை?** என்று நான் ஆத்திரப்பட்ட துண்டு.
"மறந்து போனவர்களையும் மறக்க விடமாட்டா இவ" என்று எனக்குள் ஏசியதும் உண்டு.
ஆனால் அது ஒரு ஆழ்ந்த அதி ஒத்துணர்வு (advanced empathy) என்று இப்போது புரிகிறது.
மக்களை நேசிக்ரும் மானிடத்தைத் தேடுவதில் திக்கெல்லாம் ஒரு பயணம் மெளனமாய் நடந்துகொண்டிருக்கையில், அம்மா ஒரு நட்சத்திரமாய் மினுங்கினா.
22

4. அம்மாவின் பிள்ளை
மேற்கு வானத்தில் மூழ்க இருந்த சூரியனைத் தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் தன்னைக் காயப்படுத்திச் செந்நீரால் அபிஷேகிக் கப்பட்டிருந்த வானம், தன் சுய முயற்சியில் தோல்வி கண்டு கறுப்புப் போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கத் தொடங்கிவிட்டது.
20-08-99 வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணி! வாரந்தோறும் வெளளிக்கிழமை வந்தது. இந்த வெள்ளியோ அம்மாவைக் கொண்டு போவதற்காய் வந்தது. டாக்டர் கை விரித்த நேரம்!
முகவரி புரியாத ஒரு மூலைக் கிராமத்தில் வாழ்ந்த அம்மா மற்றொரு வெள்ளிக்கிழமையில் தான் தன் பிள்ளையைப் பெற் றெடுத்தார். இல்லை! சிசேரியன் அறுவைச் சிகிச்சை அரிதாய் இருந்த காலத்தில் தன் கருப்பையை அரிந்து தன் பிள்ளையை வெளியே கொண்டு வரச் செய்தா, ஜோன் அம்மா இணுவில் ஆஸ்பத்திரியில் தனக்கு ஒப்பரேஷன் செய்த கதையை நீளம் நீளமாய் அம்மா சொல்லி ஆனந்தித்த நாள்கள் அநேகம். கடைசி நேரத்தில் தனக்குப் பிறெஸ் ஸர் அதிகமாய் இருந்ததாம்.
"பயப்படுறிங்களோ?' என்று ஜோன் அம்மா கேட்டாவாம்.
"என்ன பயம்? நான் செத்தாலும் காரியமில்லை. பிள்ளையைக் கவனமா எடுத்து அவரிட்டைக் குடுத்திடுங்கோ’ என்று சொல்லித் தான் ஒப்பரேஷனுக்கு கையெழுத்து வைத்தாவாம். ஒன்று, இரண்டு, மூன்று. என்று எண்ணச் சொல்லிச்சொல்லிப் போட்டு மயக்க மருந்து தந்தினமாம். தான் எட்டு எண்ணமுந்தியே மயங்கிப் போனனாம். இது தான் என்ரை கடைசிப் படுக்கை எண்டு நினைச்சுக் கொண்டு படுத்தனாம். பிறகு பாத்தா. கொஞ்ச நேரத்தாலை கண் முழி படுதாம். மயக்கமாத்தானாம் கிடக்கு. எண்டாலும் கஷ்டப்பட்டு முழிச்சுப்பாத்தா கிளி போலை ஒரு பிள்ளை பக்கத்திலை படுத்தி ருக்காம். இந்தச் சந்தோசம் காணும் சீவியத்துக்கு. எண்டு நினைச் சுக் கொண்டு மற்றப்பக்கம் திரும்பி நித்திரையாகிட்டனாம்"
கிளிபோல படுத்திருந்த அந்தப் பிள்ளையை அம்மா இறுதி வரைக்கும் ஒரூ கிளிக்குஞ்சைப் பாதுகாப்பது போலத்தான் பாது காத்து வந்தா,
23

Page 16
அம்மாவின் வயிற்றில் பிறந்தது ஒரு பிள்ளையாயினும் அம்மா வளர்த்த பிள்ளைகள் பலர். சின்னம்மாவை ஆரம்பத்திலிருந்தே தன் பிள்ளை போல வளர்த்துப் படிப்பித்துத் திருமணமும் செய்து வைத்தா. ஆசையம்மாவின் மகன் அண்ணாவையும் பல நாள் எங்கள் வீட்டிலேயே வைத்து வளர்த்தா , சின்னம்மாவின் மகன் ஜனாவை வளர்த்தா. பாப்பாவை முழுப்பொறுப்பும் ஏற்று வளர்த் தெடுத்தா. பாப்பா கனகாலம் இவவையே "அம்மா" என்றும் தன் தாயைக் "கண்டி அம்மா" என்றும் அழைத்து வந்தாள். இறுதியில் தன் பேரனையும் தான் நினைத்தபடி வளர்த் தெடுத்துக் கண்ணை மூடிக்கொண்டா.
அம்மாவின் குண்டு உடம்பில் (அப்போது) கைத்தறிச் சேலை உடுத்த மடியில் படுப்ப தென்றால் எல்லாருக்கும் விருப்பந்தான். தன்பிள்ளையை மடியில் வைத்துத் தாலாட்டிய அதே பாடலை அம்மா தன் பேரனுக்கும் படித்ததால் அப்பாடல்கள் இன்னும் எனக் குத் தெளிவாகக் கேட்கின்றன.
கண்ணேகண் மணியே ஆர் அடித்து நீர் அழுதீர்? அம்மா அடிச்சாவோ அமுத மொழிக் கண்ணனுக்கு ஆச்சி அடிச்சாவோ ஆல மரக் குருத்தாலை மாமா அடிச்சாரோ மாதுளம் பூக் கம்பாலை மாமி அடிச்சாவோ மருந்து செய்யும் கரத்தாலை
என்று இது நீளமாய்த் தொடரும். இப்பாட்டின் சிலவரிகள் அம்மாவாலேயே ஆக்கப்பட்டவையாகவும் இருக்கும்.
எனது முதல் ஆசிரியை அம்மாவே. அப்பா ஆசிரியராகவும் நீண்டகாலம் அதிபராகவும் இருந்த காரணத்தால் வீட்டில் நிற்கும். நேரம் குறைவு. வீட்டு நிர்வாகமும் பிள்ளை வளர்ப்பும் முழுதாக அம்மா கையிலேயே அம்மாவின் வளர்ப்பு முறையே என்னைக் கற்பதற்காகக் கற்கப்பழக்கியது. அம்மாவுக்கு ஏராளமான நொடி களும் விடுகதைகளும் தெரியும். அவற்றுக்கான விடைகளைத்தான் சொல்லமாட்டா. என்னையே கண்டு பிடிக்க விட்டு விடுவா. நான்
24

சரியான விடையைச் சொன்னால், "என்ரை பிள்ளை கெட்டிக் காரிதானே' என்று சொல்வா. பிள்ளையின் விரும்பத்தக்க நடவடிக் கையை அடையாளம் கண்டு ஊக்குவித்தல் என்று இப்போது பேசப்படுகின்ற Positive Reinforcement முறையை அப்போதே கையாண்டு வெற்றி பெற்றார் அம்மா.
தன் பிள்ளை வேறு வீடுகளுக்குச் சென்று விளையாடுவதை அம்மா அதிகம் ஊக்குவிக்கமாட்டா. கிராமத்துப்பிள்ளைகளை எல்லாம் எங்கள் வீட்டிற்கு வரச் செய்துவிடுவா. மாலை நேர மெல்லாம் ஒரேவிளையாட்டுத்தான். எல்லா விளையாட்டுக்களும் அம்மாவின் மேற்பார்வையில் நடைபெறும்.
மூன்று குழி தோண்டி மாபிள் அடித்தல் ஒருநாள் விளையாடப் படும். ஒரு மாபிளை மறு மாபிளால் சுண்டி அதிகதூரம் அனுப்பு பவர் அதில் வெற்றிபெற வாய்ப்புண்டு. அது உள இயக்க விருத் திக்கான நல்லதோர் விளையாட்டு என்று (Psy Chomotor develop ment) இப் போதெல்லாம் எனக்குப்புரிகிறது. மற்றொரு நாள் அம்மா கமுகம் மடல் சேகரித்து வைத்திருப்பார். அதில் ஒருவரை இருத்தி மற்றவர்கள் இழுத்துச் செல்வோம். அவர் நிலத்தில் முட் டாமல் இருக்கவேண்டும். விளையாடவருபவர்களில் நான்தான் சிறு பிள்ளை என்பதால் அநேகமாக என்னையே வைத்து இழுப்பார்கள். இந்த விளையாட்டு உடல் சமநிலையைப் பேணி உடல் விருத்தியை ஏற்படுத்துவதற்கு ஏற்ற விளையாட்டு என்று இன்று நான் முன் பள்ளி ஆசிரியர்களுக்குக் கற்பிக்கிறேன். அம்மாவுக்கு யார் இதை எல்லாம் சொல்லிக்கொடுத்தார்கள்?
வேறொருநாள் வன்னி வாழை வெட்டுத் திருவிழாவைப் "போலச் செய்து விளையாடுவோம். வீட்டு வளவில் ஒரு குட்டி வாழையைத் தெரிவு செய்து. உண்மையாகவே வெட்டுத்தான்! இரண்டு வெட்டில் மூன்று துண்டு! சுவாமியைத் தூக்கிக் கொண்டு ஒடுவது - சுவாமிக்குப் பின்னால் பஜனை, முன்னால் நாதஸ்வரக் கச்சேரி. எல்லாம் புதிதளித்தலாக நிகழ்த்தப்படும். இத்தகைய விளையாட்டுக்களே என்னைப் பின்னாளில் 'நாடகமும் அரங்கி யலும் துறையில் முன் செல்ல வைத்தது என்று எண்ணும்போது, ! என் தாயை நான் எப்போது மறப்பது ?.
எங்கள் வீட்டின் வடக்குப்புறத்தில் ஒரு நாவல் நின்றது. அதன் கிளையில் ஒரு ஊஞ்சல். அம்மாவின் பிள்ளையின் விளையாட்டுத் தோழர்களுக்கு ஊஞ்சலிலும் ஒருவிளையாட்டு. ஒருவர் ஊஞ்சலில் ஏறினால் அவரை எல்லோரும் சேர்ந்து ஆட்டுவோம், ஏறியவர் பாடவேண்டும். ஒரு பாடல்தான்! பாடல் முடிய இறங்கிவிட
25

Page 17
வேண்டும். பாடலின் ஒருவரியை ஒரேமாதிரி இரு முறை பாடமுடியாது. ஆகவே ஊஞ்சலில் நீண்ட நேரம் ஆடுவதற்காக நாங் கள் ஒவ்வொருவரும் நீளமான பாடல்களை மனனம் செய்து கொள் வோம். ஒரேவரியைப் பல மாறுதல்களுடன் பாடப்பயின்று கொள் வோம். இதற்கெல்லாம் நடுவர் அம்மாதான். நடு நிலைமையில் ஒரு போதும் பக்கக் கோடல் இருந்ததில்லை.
கொய்யா மரத்தில் ஏறிக் கொய்யாப்பழம் பறித்தல், வியாபார நிலையம் நடத்துதல், மாங்கொட்டை போடுதல், றைற் ஓர் றோங் விளையாட்டு. இப்படிப்பல விளையாட்டுக்கள்.
அம்மாவின் பிள்ளை நேர்சரிக்குப் போகவில்லை. அப்போது நேர்சரி இருக்கவில்லை. பாடசாலைக்கு அம்மா இத்தாவுடன் அனுப்புவா, தோடம்பழம் கரைத்துப் போ த் த லி ல் ஊற்றித். தந்துவிடுவா. "அரிவரி"யில் பிள்ளைபல மாதங்கள் வகுப்பிலே இருந்ததேயில்லை என்றால் யாரும் நம்பமாட்டார்கள். விழிசிட்டி சிவஞான வித்தியாசாலையில் (இதுவே இப்போது பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலை என வழங்கப்படுவது) அப்போது பண் டிதர். வே. சங்கரப்பிள்ளைதான் அதிபர். அவர் எங்கள் உறவி னர். நானும் தம்பி பரமேஸ்வரனும் அதிபர் அறையிலும் பாடசாலை வளவிலும் ஒடித்திரிந்து விளையாடிவிட்டுத் தோடம்பழச்சாற்றைக் குடித்துவிட்டு வீடு திரும்புவதே எனக்கு நினைவு. அம்மாவும் பாட சாலையில் என்ன படித்தாய் என்று கேட்டதில்லை. சண்முகநாத உபாத்தியாயரும் என்னை வற்புறுத்தி வகுப்பில் இருத்தியதில்லை. ஒருநாள் “இன்ஸ்பெக்டர் வருகிறார் என்று என்னை வகுப்பில் இருத்தி, கரும்பலகையில் எழுதிய நாலு கணக்கில் (பத்துக்குள் கூட்டல்) இரண்டு கணக்குப் பிழையாகச் செய்தது நல்ல நினைவு. அப்போதும் என்னை யாரும் கண்டிக்கவில்லை. பாடசாலைக்குப் போவதை விருப்பமான விடயமாக்கியதில் அம்மாவுக்கு நிறையவே பங்களிப்பு இருந்தது.
பிள்ளை இடையிடை அம்மாவுக்குப் பொய் சொல்லி இருக்கும். ஆனால்அம்மாவோ சிறுவயதில் இருந்து தன் கடைசி நாள் வரை என்னிடம்ஒரு போதும் எந்த விடயம் தொடர்பாகவும் பொய் சொன்னதில்லை என்பது - என் ஆளுமை விருத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய விடயம்!
பிள்ளை சிறுவயதில் சரியான குளப்படி . ஒரு இடத்தில் நிற்க மாட்டாள், எப்போதும் ஒட்டந்தான். இரண்டு வயதில் முற்றத் தில் ஓடி ஆசையம்மாவின் புல்லுக் கடகத்தில் தடுக்கி விழுந்து கண் அருகில் காயப்பட்டாள்.
26

நாலு வயதில் - கல்வீடு கட்டப்பட்டபோது பத்திரிப்பில் ஏறிக் குதித்து - விழுந்து முழங்காலில் காயம். வயது வந்த பிறகும் . அம்மா சொல்வதைக் கேளாமல் தான் நினைத்த படி பல விடயங்களைச் செய்து முடித்திருப்பாள். ஆனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அம்மா பிள்ளையை அடித்ததில்லை என்பது மட்டுமில்லை - மனம் புண்படும் படி ஒரு வார்த்தை பேசியதுமில்லை. அம்மாவின் பிள்ளை வளர்ப்பு அற்புதமானது.
பாரிசவாதம் வந்து படுக்கையில் இருந்த 98 ம் gg ம் ஆண்டு களில் கூட, காலையில் நான் அவவின் படுக்கையடிக்குச் சென்றால்,
* 'இன்று என்ன கிழமை???
என்று கேட்பா.
"“ஞாயிற்றுக்கிழமை"
* 'இண்டைக்கும் கருத்தரங்கு இருக்கோ?*
"ஒம் அம்மா போகப் போறன்??
ஞாயிற்றுக்கிழமையாவது தன்னுடன் பக்கத்தில் இருந்து கதைக்க வேண்டும் என்பதே அவவின் விருப்பம் என்று எனக்குத் தெரியும். ஆனாலும், “போக வேண்டாம்' என்று ஒரு போதும் என்னைத் தடுத்ததில்லை. சந்தனக் கட்டையாய்த் தான் தேய்ந்து தான் வெளியே மணம் பரப்பக் காரணமாக இருந்தா. 1995 இன் பெரும் இடப் பெயர்வு வரை - தனது 80 வயது வரை - எமது வீட்டின் சமையல் பொறுப்பை அவவே ஏற்றுக் கொண்டிருந்தா என்பதை இன்று நினைத்துப் பார்த்தால் பெரிய மலைப்பாக இருக்கிறது.
அம்மாவிடம் ஒரு சில மூட நம்பிக்கைகளும் இருந்தன. அதனால் தான் இடையிடை எனக்கும் அவவுக்கும் கருத்து வேற்றுமை வரும். மாதவிடாய் வரும் காலங்களில் தண்ணிர் குடிக்க விடம. தண்ணீர் குடித்தால் 'வயிறு வைக்கும்" என்று சொல்லுவா "அது அப்படியில்லை" என்று எவ்வளவு சொன்னாலும் ஏற்றுக் கொள்ள LDTll-ft.
** முன்னையிலாக்கள் அப்பிடித்தான் செய்தவை" என்று பிடி வாதமாய் இருப்பா. நானோ சுடுநீர்ப் போத்தலில் இருந்து போதிய தேநீரைக் குடித்து விட்டு அம்மாவிடம் அகப்பட்டுக் கொள்வேன்.
* உன்னைக் கொலீஜ்ஜிலை படிக்க விட்டதாலை வந்த பிழை" என்று கூறுவா,
அப்ப நிப்பாட்டுங்கோவன்" என்று நான் சொல்லக் கோபம் வந்து விடும்.
27

Page 18
ஆனால் அந்தப்பிள்ளை பெரிய பிள்ளை ஆகிய பிறகு அம்மா மகாஜனாவுக்குக் காரில் தான் அனுப்பினா என்பது கவனிக்க வேண்டிய விடயம். முத்துச்சாமியின் கார் மாதம் பத்து ரூபா தான்! காலை எட்டு மணிக்கு வீட்டில் வந்து ஏற்றிச் செல்லும் கார், மாலை ஐந்து மணிக்குத் திருப்பிக் கொண்டுவந்து விடும். அதற்கிடையில் பாடசாலையில் படிப்புடன் கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், பேச்சு, நடனம், விளையாட்டு என்று எல்லாத் துறையிலும் ஈடுபடும் அம்மாவின் பிள்ளை. யூன் மாதம் 24 ம் திகதி பரிசளிப்பு விழாவுக்கு அம்மா வந்திருந்து பார்ப்பா! அவவுக்கு வலு திருப்திதான். ஆனாலும் அன்று இரவு அப்பாவுக்கு இப்படி ஏச்சுவிழும்.
'நீங்கள் அவளுக்கு ஒண்டும் சொல்லிக் குடுக்கிறேல்லை. உங் களுக்குப் பள்ளிக்கூடம், ஐக்கிய நாணயசங்கம், சனசமூகநிலையம் காணும். அவள் ஏதோ தன்ரை பாட்டுக்குச் செய்து இவ்வளவு பரிசு எடுக்கிறாள். சொல்லிக் குடுத்தால் இன்னும் எவ்வளவு எடுப்பாள். உங்களுக்குக் கவலையில்லை.”*
அப்பா ஒரு புன்சிரிப்புடன் போய் விடுவார். அந்தச் சிரிப்பில் "தானாகப் படிப்பதே படிப்பு என்பது தொனிக்கும். え
பேராதனை மருத்துவக் கல்லூரியில் இருந்த காலத்தில் ஒரு முறை "மயக்கம் வந்து "ஹெல்த் சென்ரர்" இல் அனுமதிக்கப்பட் டிருந்தேன். சிநேகிதி ஒருத்தி இந்தத் தகவலை வீட்டுக்கு அறிவித்து விட்டா. அப்பாவுடன் அடிபட்டு அவரை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு அன்றிரவே ரயில் ஏறி விட்டா அம்மா. இவர்களைப் பேராதனையில் காண எனக்கோ ஒரே ஆச்சரியம்.
"அவசரமில்லை என்று சொன்னா இவ கேட்டால் தானே' என்று அப்பா குறைப்பட்டார்.
வெண்பனியின் தூறல் மறந்து வானம் நீலமாய் விரிந்து வெய்யில் வழிந்ததோர் இதமான நாளில் நான் மருத்துவக் கல்லூரிப் படிப்பை இடைநிறுத்தி ஆசிரியத் தொழிலில் சேர்ந்துகொள்ளத் தீர்மானித்து நியமனக் கடிதத்தையும் பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். அம்மா என்னைக் ஏசக் கூடும் என்று எதிர்பார்த்தேன். அம்மா அப்பாவிடம் சொன்னா,
"பொலிகண்டிப் பள்ளிக்கூடத்திலை ரீச்சராப் போட்டிருக்கி றாங்கள். தனியப் போகமாட்டாள். கூட்டிக்கொண்டு போய்க்
காட்டிப் பிறின்சிப்பலோடையும் கதைச்சு விட்டிட்டு வாங்கோ .'
28

ஒரு அசாதாரண உற்சாகத்துடனும், ஆழமறியா ஆர்வத்துட னும், அதீத சந்தோஷப் பீறிடலுடனும், ஒருவகையில் விரக்தியுட னும் என்னால் செய்யப்பட்ட முடிவை அம்மா அவ்வளவு அமைதி யாய் ஏற்றுக்கொண்டது அதிசயமே. ஏனெனில் பிள்ளை டாக்டராய் வரவேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டியது அம்மாவேதான். அன்று தொடக்கம் அம்மா மற்றொரு புதிய விரதம் பிடிக்கத் தொடங்கினா. தனது பிள்ளை ஏதோ ஒரு துறையில் முன்னுக்கு வரவேண்டும்" என்று வரம் கேட்டிருப்பா. கடவுள் அவ கேட்ட வரங்களைக் கொடுக்க ஒருபோதும் தவறியதில்லை. (நான் கேட்ட வரங்களைக் கடவுள் தராத படியால். நான் இப்போது அவரிடம் எதுவுமே கேட்பதில்லை என்பது வேறுவிடயம்)
1987 இல் இந்திய இராணுவம் குடாநாட்டை ஆக்கிரமித்த போது மிகக் கசப்பான அநுபவங்கள். டிசம்பர் மாதம் 5ஆம் திகதி பொற்கலந்தம்பை வைரவர் கோயிலில் ஊர் மக்கள் எல்லாம் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தார்கள். எனது ஆறு வயது மகன் மடியில் படுத்து அழுகிறான். கோயில் முற்றத்தில் இளைஞர்கள் பலர் வதை செய்யப்படுகிறார்கள். அம்மா மிகுந்த மனத் தைரியத்துடன் இருப்பா. எங்களையும் பயப்பட விட மாட்டா, நாங்கள் வீட்டை விட்டு ஒடிய பல சந்தர்ப்பங்களிலும்,
* நான் கிழவி வீட்டிலை இருப்பன். வீட்டுக்குப் பாதுகாப்பு. நீங்கள் பாதுகாப்பான இடத்துக்குப் பிள்ளையைக்கொண்டு போட்டுப் பிறகு நிலைமை சரிவர வாருங்கோ’ என்று சொல்லுவா,
1987 முதல் 1996 வரையான காலப்பகுதியில் விழிசிட்டியிலும் , அளவெட்டியிலும், இணுவிலிலும் பின்னர் கரவெட்டியிலும் நாங் கள் பங்கருக்குள் ஒடி ஒளித்து விளையாடிய நாங்கள் பல. கிபீர் விமானத்தின் சத்தம் தூரத்தில் மிக மெலிதாகக்கேட்கத் தொடங்கி னாலே போதும். நான் மகனைக் கூட்டிக் கொண்டு முதல் ஆளாகப் பங்கருக்குள் இறங்கி விடுவேன். ஷெல் தாக்குதலுக்குப் பயந்து மகனை இரவிரவாக பங்கருக்குள் நித்திரை செய்ய விட்டு அருகில் குந்தியிருந்த நாட்களும் உண்டு. எங்கள்ைத் தொடர்ந்து பாப்பா பங்கருக்கு வந்து விடுவாள். ஏனைய குடும்ப அங்கத்தவர்களும் மிகக் கடுமையான் பிரச்சினை என்றால் பங்கருக்குள் இறங்கி விடு வார்கள். அம்மாவோ ஒரு போதும் பங்கருக்கு வரமாட்டா.
* நடக்க வேண்டியது, நடக்க வேண்டிய நேரத்திலை நடக்கும்.
ஒருத்தராலையும் தடுக்க முடியாது’ என்று சொல்லி விட்டுக் குசினி யில் மிக அமைதியாகத் தனது வேலைகளைச் செய்து கொண்டிருப்பா.
29

Page 19
யதார்த்தத்தை மிக இயல்பாய் ஏற்றுக் கொள்ளும் பண்பு அம்மா விடம் எப்போதும் இருந்தது. எதற்கும் பதற்றப்படமாட்டா, பதக ளிப்பு அடையமாட்டா. இறுதிக் காலத்தில் மரணத்தையும் கூட மிக அமைதியாய் இயல்பாய் ஏற்றுக்கொண்டா. இறுதி ஒரிரு நாள்களில் அவவின் வாயிலிருந்து வந்த சொற்கள் இவைதான்.
'தம்பி எங்கை??* ** சோதினை முடிஞ்சுதே' *எழும்புவம்
* ( Gurir 6 ti ””
தன் பேரன் சோதனை முடிந்து வந்து தன் பக்கத்தில் ஆறுத லாய் அமரவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதை அவன் நிறைவேற்றிவிட்டான். வியாழக்கிழமை இரசாயனவியல் பகுதி 11 முடிந்தது. வெள்ளிக்கிழமை பகல் முழுவதும் அவன் அமமம்மாவுடன் இருந்தான். அந்தத் திருப்தியுடன் அம்மா வெள்ளிக்கிழமை இரவு தன் நீண்ட முடிவில்லாப் பயணத்தை ஆரம்பித்து விட்டா,
*எழும்புவம்,” “போவம்' என்ற சொற்றொடர்கள் விழிசிட்டிக் குப் போய் எங்கள் வீட்டிலேயே தன் மரணம் சம்பவிக்க வேண்டும் என்ற விருப்பத்தைக் காட்டின. அந்த விருப்பத்தை அம்மாவின் பிள்ளையால் நிறைவு செய்ய முடியாமல் போய் விட்டது. தன் இறுதி நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு அம்மா என்னிடம் இப்படிக் கேட்டா.
**பிள்ளை ஒருக்கா வீட்டை போய் எங்கடை குடத்தையும் குத்துவிளக்கையும் எடுத்துக்கொண்டு வாவன்"
எங்கள் வீட்டிற்குச் செல்லமுடியாது என்பதோ, சென்றாலும் குடமும் குத்துவிளக்கும் நாங்கள் விட்டுவந்தபடி அப்படியே இருக்கப் போவதில்லை என்பதோ அம்மாவுக்குப் புரிந்திருக்கவில்லை. இந்த இடத்திலும் அம்மாவின் பிள்ளை அம்மாவுக்குப் பொய் கூறியது.
"அது அம்மா, போனகிழமையெல்லே ஒராளை விட்டு எல்லாம் எடுத்துப்போட்டம்.""
"எடுத்து எங்கை மேனை வைச்சிருக்கிறாய்?"
* "இஞ்சைதான், சாமி அறைக்கை கிடக்குது'
30

அம்மா அமைதியாகிவிட்டா. தனது மரண வீட்டுக்குத் தான் விழி சிட்டியில் பாவித்த தனது குடமும் குத்துவிளக்கும் பாவிக்கப்பட வேண்டும் என்று அம்மாவின் நனவிலி மனம் விரும்பியிருக்கிறது. பொய் சொல்லி அவரை ஏமாற்றியதுதான் அம்மாவின் பிள்ளை செய்த வேலை! நான் சொல்லிய பொய் கழுத்திலும் முதுகிலும் வியர்வைப் பிரகாசமாய் வழிந்து இறங்குகிறது பல நாளாய்!
அம்மா படுக்கையில் இருக்கிறா. அம்மாவுக்கு நீளமான முடி மயிர் வைத்துக் கொண்டை முடிவதே விருப்பமானது. ஆயினும் தலையைச் சுத்தமாக வைத்திருப்பதை இலகுபடுத்துவதற்காகத் தலைமயிரைக் குட்டையாக வெட்டிவிடுகிறேன் - வளரும் தானேஎன்ற நம்பிக்கையுடன்! ஆனால் அம்மாவோ, "பொப்” தலையுட னேயே எனக்கு "டட்டா" சொல்லிவிட்டா!
நான் எதிர்பார்க்கவில்லை. எங்கள் வீட்டில் இரவுக்குத் துணை
நிற்கும் பயங்கர நிசப்தம். என் மனதுக்குத் துணைவர யாரும் இல்லை. எதுவும் இல்ல்ை.
3

Page 20
5. அம்மாவின் நிர்வாகம்
வைக்கோல் நிறத்தில் காலை வெயில் பரவி நிற்கும். வீட்டு முற்றத்தில் அம்மா சாணம் தெளித்திருப்பா. மார்கழி மாதம் பிறந்து விட்டாலோ மாக்கோலம் போட்டுப் பிள்ளையார் வைக்கும்படி அம்மா எனக்குக் கட்டளை இடுவா. கோலம் போடுவது எனக்குப் பிடிக்கும். ஒவ்வொரு நாளும் புதுப்புதுக் கோலமாய்த் தேடிப் போடு வேன். இடப் பெயர்வோடு இந்த வழக்கம் எல்லாம் விடுபட்டுப் போயிற்று.
தெல்லிப்பழை சைவப்பிரகாச வித்தியாசாலையின் நிர்வாகத்தில் அப்பா கவனமாக இருந்ததால், வீட்டு நிர்வாகம் முழுமையாக அம்மா கையிலேயே இருந்தது. சம்பளத்தைக் கொண்டு வந்து அப்பா அம்மா கையில் கொடுத்தால், பிறகு எல்லாமே அம்மா தான்.
மாரிகாலம் வரும். கம்பளிப் பூச்சிகள் சிவப்புச் சிவப்பாய் விழி சிட்டி முற்றத்தில் உலாவித்திரியும். மின்மினிப் புழுக்கள் ஜாலம் காட்டும். பொற்கலந்தம்பை வயிரவர் ஆலயக் குளத்தில் இருந்து தவளைகளின் "குரோ குரோ" இரவில் தாலாட்டும். பகலில் பிச்சைக் காரர் பலர்வருவர். அதில் வழமையாக வரும் சில பிச்சைக்காரரை அம்மாவுக்குப் பிடிக்கும். அவர்களுக்குக் காசு மட்டுமல்ல, உணவும் தேநீரும் கொடுப்பா. நயினாதீவில் இருந்து ஒரு ஐயா வருவார். நாகபடம் வைத்திருப்பார். அவரைக் கட்டாயம் மறித்து மதிய உணவு கொடுத்து அனுப்பும் போது, அம்மாவின் முகத்தில் கவிதை பொழியும்.
*"நாகபூஷணி எங்களைக் கைவிடமாட்டா' நான் அம்மாவிடம் கேட்பேன்.
**ஏன் சில பேருக்கு ஐம்பது சதம் மட்டும் குடுத்து அனுப்பிப் போட்டு, வேறை சில பேருக்கு அரிசியும் குடுத்துக் காசும் குடுத்துச் சாப்பாடும் குடுக்கிறீங்கள் ?*
"அது பிள்ளை அவனவன்ரை முகத்தைப்பாக்கத் தெரியும். சில பேர் கள்ளர். பிச்சை எடுத்துக் குடிக்கிறது -சில பேர் அப்பிடியில்லை. பிச்சை எடுத்துக் கோயிலுக்குக் குடுக்கிறது. எண்டாலும் கையை நீட்டிப் பிச்சை எண்டு கேட்டா ஏதும் குடுக்கத்தான் வேணும்.
ஐயமிட்டுண் எண்டு கிழவி சொல்லியிருக்கு
32

இல்லற வாழ்வு புற்றிய ஆம்மாவின் விளக்கங்கள் தெளிவா
66es
அம்மாவின் வீட்டு நிர்வாகம் சிறப்பாக இருந்தமைக்கு ஒரு காரணம் அவவின் உற்றுக் கேட்கும் பண்பு. வீட்டில் உள்ளவர்கள் உறவினர்கள் கிராமத்தவர் யார் வந்து எதைச் சொன்னாலும் அம்மா கேட்பா. தனக்கு யாரை யாவது பிடிக்காமல் போனால் விலகி இருப்பாவே தவிர அவர்களுக்கு ஒரு போதும் தீங்கு செய்ய நினைக்கமாட்டா. அப்பாவின் உறவினர்களில் ஒரு சிலரை அம்மாவுக் குப் பிடிக்காது. அப்பாவைப் படிப்பித்து விட்டதற்காக அவரது காணிகளை எல்லாம் எழுதி வாங்கிக் கொண்டார்கள் என்று அவர் கள் மேல்கோபம்.
**நரகத்து முள்ளுகள். எங்களுக்கு ஒரு பொம்பிளைப்பிள்ள்ை பிறந்த பிறகும் காணியை எழுதுவிச்சுப் போட்டாங்கள்’’ என்று சொல்லுவா,
*’ ஒரு காணி : வாழ்வைத் தீர்மானிக்கப் போற தில்லை' என்று நான் சொல்லுவேன்.
"அதுகும் சரிதான்' என்று சமாதானப்படுவா.
அம்மா மற்றவர்களுக்குக் கொடுக்கும் செய்திகளும், மற்றவர் கடளி மிருந்து பெற்றுக் கொள்ளும் செய்திகளும் எப்போதும் தெளிவாகவே இருக்கும்.
‘விடிய முதல் பஸ்ஸுக்குப் போகவேணும்" என்று வீட்டில் யாராவது சொன்னால், "எத்தனை மணிக்குச் சரியா வீட்டிலை இருந்து வெளிக்கிடவேணும்? எங்கை போறது? பிறகு எத்தினை மணிக்குத் திரும்பிவாறது ? " எல்லாம் சரியாகத் தெளிவாகக்கேட்டு வைத்திருப்பா. யாராவது ஐந்து மணிக்குப் புகையிரதத்துக்குப் புறப்படுகிறார்கள் என்றால் அம்மா, அலாரம் வைக்காமலே சரியாக மூன்றுக்கு எழுந்து காலை உணவு செய்து மதிய உணவும் கட்டி முடித்திருப்பா. இந்த விடயத்தில் அப்பாவுக்கு, எனக்கு, என் கணவ ருக்கு, சின்னம்மா குடும்பத்தினருக்கு எல்லாருக்கும் ஒரே நீதிதான்
அம்மாவுக்குக் கோபம் வந்தால், வாயிலிருந்து வார்த்தைகள் நெருப்புப் புழுதியாகக் கொட்டும். அப்போதும் நிதானம் தவறாது. வரக் கூடாத சொற்கள் ஒரு போதும் வராது. வீட்டு வேலைகளைப் புறக் கணித்து விட்டு அப்பா, சமூக சேவையில் ஈடுபடுவது பற்றிக் குறிப்பாக அம்மாவுக்கு இடையிடை கோபம் வரும்,
"நாங்கள் நாசமாப் போனாப் பறவாயில்லை. நீங்கள் ஊரையும் உலகத்தையும் துரக்கி விடுங்கோ’ என்று அம்மா பொரிந்து தள்ளுவா
33

Page 21
"இல்வாழ்வான் என்பான் இயல்புண்டய மூவர்க்கும்
நல்லாற்றில் நின்ற துணை'
என்று அப்பா ஏதோ ஒரு இலக்கியப் பாடலைச் சிரித்து க் கொண்டு சொல்வார். அம்மாவுக்கு இன்னும் கோபம் ஏறிவிடும்.
"நான் படியாதவள். நீங்கள் பிறிஞ்சிப்பல்! எனக்கு உந்தப் பாட்டும் பயனும் ஒண்டும் விளங்காது எண்டு நினைச்சுக்கொண்டு தான் நீங்கள் எப்பவும் பாட்டுச் சொல்லுறியள் பாட்டு. தனக்குக் கண்டு தானம் வழங்கு எண்டும் சொல்லியிருக்கு
அம்மாவின் தொனி ஏற, அப்பா ஒன்றும் பேசாமல் நழுவி விடுவார். ஆனால் அவரும் ஒரு போதும் தனது வாழ்க்கை முறையை மாற்றியதில்லை. எனக்குத் திருமணம் ஆனபோது, சீதனம் கொடுப் பதற்கு அப்பாவிடம் ஒரு சதமும் இருக்கவில்லை. அம்மாவின் கோபம் நியாயமானது என்று அப்போது நான் நினைத்ததுண்டு. ஆனால் இப்போது என் வாழ்வு சிறப்பாகவே இருப்பதை நினைத்துப் பார்த்தால், அப்பாவின் கொள்கையும் சரியானதே என்று புரிகிறது. இத்தனைக்கும் அப்பாவிடம் எந்தக் கெட்டபழக்கங்களும் இல்லை. மது, சிகரெட், வெற்றிலை, புகையிலை, மாமிசம் எதையும் அப்பா ஒரு போதும் தொட்டதில்லை. கோயில், பாடசாலை, தானதர்மம் ஆகியவற்றில் கொட்டிச் செலவு செய்து விடுவார். இன்றும் கூட அப்பாவின் வங்கிக் கணக்கில் நூறு ரூபா ஐம்பது சதம் மட்டுமே உள்ளது. அவருக்கு அது பற்றி எ ந் த க் க வ  ைல யும் இல்லை : அம்மாவோ சொல்ல வேண்டிய விடயத்தைச் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டிய ஆளுக்கு உறுதியாகச் சொல்லியே விடுவா. அது அவவின் நிர்வாகச் சிறப்பு.
அம்மா மனிதர்களை நன்றாக அளந்து வைத்திருப்பா. ஒரு முறை - அந்த ஒரே ஒரு முறைதான் - எங்கள் விழிசிட்டி வீட்டில் அப் பாவின் சைக்கிள் களவு போயிற்று, அம்மா ஆளை அறிந்து விட்டா. இடையிடை எங்கள் வீட்டிற்கு வந்து போகிறவர்தான். களவு போய் ஒரு வார க்ாலம் ஆள்வரவில்லை. பிறகு ஒரு நாள் வந்தார். அம்மா GoFntairGarmr,
* நீ இனிமேல் எங்கடை வீட்டை வரவேண்டாம். வெத்திலைக் கொடிக்கு நான் இறைப்பன்'
அவ்வளவு தான் - அம்மா கொடுத்த தண்டனை. அந்த மனிதன் அதற்குப் பிறகு இறக்கும் வரை எங்கள் வீட்டு முற்றத்துக்கு வரவேயில்லை!
34

குடும்பத்தினரைக் கூட்டாகக் கட்டி எழுப்பி, ஒருவர் ஒருவருக் கிடையில் பிரச்சினைகள் ஏற்படாமல் காக்கும் ஒரு இயல்பும் அம்மாவிடம் இருந்தது. சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் தான் ஒரு நல்ல நடுவராக இருந்து தீர்த்து வைப்பா. கடைசி இரு வருடங்கள் படுக்கையில் இருந்தா அல்லவா! அப்போது கூட எனக்குக் கட்டளை வரும.
"பெரிய மாமா வருத்தமாய் இருக்கிறாராம். ஒருக்காப் போய்ப் பாத்திட்டு வா??
** பிள்ளை, அந்தச் செத்த வீட்டுக்குப் போனணியோ?*
**அண்டைக்கு அந்தக் கலியான வீட்டுக்குச் சொன்னவை எல்லே! நீ போகேல்லையோ!"
பல தடவைகளில் நான் இந்தக் கட்டளைகளை மறுத்துப் பின் வருமாறு கூறியுள்ளேன்.
"அம்மா, எனக்குச் சுகமில்லை. என்னாலை நடந்து போக முடி யாது. என்னைச் சைக்கிளிலை கொண்டு போக ஆள் இல்லை. கார் பிடிச்சு இதுக்கெல்லாம் போகக் காசு இல்லை. நீங்கள் வேணு மெண்டா எழும்பிப் போயிட்டு வாங்கோ. நான் தடையில்லை”
என்று கூறிவிட்டு நான் பாடசாலைக்குப் போய் விடுவேன். இறுதிக் காலம் வரை மனித உறவுகளைப் பேணுவதில் அம்மாவுக்கு இருந்த ஆர்வம் மிக உண்மையானது. அம்மா விரும்பியபடி எல்லாச் சமூக நிகழ்வுகளிலும் கலந்து கொள்வது நல்லது தான் என்று எனக் குப் புரிந்தாலும், எனது வேலையும் வீட்டுப் பொறுப்பும், தனிப் பட்ட வேறு கடமைகளும் இப்போதெல்லாம் எந்தச் சமூக நிகழ் விலும் கலந்து கொள்ள முடியாத நெரூக்கத்தில் வைத்துள்ளன.
அம்மாவின் நேர முகாமைத்துவம் அவ காசு கொடுக்கும் தேதி களில் துல்லியமாகத் தெரியும். தையிட்டிப்புலம் இளையதம்பி அண்ணை வீட்டில் பால் வாங்குவோம். ஒவ்வொரு மாதமும் 30 ம் அல்லது 31ம் தேதி இரவு பாலுக்குக் கொடுக்க வேண்டிய காசைப் பேப்பரில் மடித்து வைத்துவிடுவா. 1ம் திகதி காலை பால் தருபவர்களுக்குக் கட்டாயம் காசு கொடுக்கப்படும். இந்த முறையில் இருந்து அம்மா வழுவியது அருமை. என்னிடம் இந்தப் பழக்கம் ஒரளவு தொற்றிக் கொண்டாலும் அம்மா அளவு திருத்தம் என்னி டம் இல்லை என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.
35

Page 22
அம்மாவின் திட்டமிடல் செத்தவீடு, கலியாணவீடு, திவசம், திருவிழா போன்ற பெரிய விடயங்களில் எல்லாம் தெளிவாகப் புலப் படும். மாரி காலம் வருவதற்கு ஒரிரு மாதத்திற்கு முன்பே Gil டின் மேற்குப் புறத்தில் இரண்டு அல்லது மூன்று விறகம்பாரம் அடுக்கி விடுவா. ஒவ்வொரு நாளும் மாலையில் நிறையப்புலம் போய் வெட்டிச் சேர்த்த விறகுகள் .
எங்கள் வீட்டில் மாத்திரமல்ல, ஊரில் கூட ஒரு "அந்தரம் ஆபத்துக்கு" யாரும் அம்மாவிடம் காசு மாறலாம். கற்பூரப் பெட்டி யில் எப்போதும் கொஞ்சக் காசு வைத்திருப்பா. 'அந்தரம் ஆபத் துக்கு" உதவும் என்பா.
அம்மாவின் நிர்வாகத்தில் நிழல்விடும் அன்பு பற்றி எழுதப்புறப் பட்டால் பெரிய நாவல்கள் எழுதலாம். என்னைப் பொறுத்த வரையில் எதுவித எதிர்பார்ப்பும் இன்றி என்மீது உயிராய் அன்பு செலுத்திய ஓர் உயிரை நான் இழந்து விட்டேன். இதற்கு ஈடான வேறொரு அன்பு எனக்கு ஒருபோதும் கிடைத்ததில்லை. கிடைக் கப் போவதுமில்லை என்று நிச்சயமாய்த் தெரியும். என் உணர்வு கள் அனைத்தும் முடமாகிப் போய்விட்டதாய் உணர்கிறேன். சில இரவுகளில் நித்திரை வராதிருக்கும்போது “அம்மா" என்று பலமா கக் கத்த வேண்டும் போல இருக்கிறது. நானாகிய எனது இருப்பு அதைத் தடுத்து விடுகிறது. இட் விரும்புவதை எல்லாம் செய்ய ஈகோ விட்டால் தானே! அம்மாவின் அன்பு இல்லாத இடத் தில், மற்றவர்களுடன் கதைத்துப் பயனில்லை என்று அப்பா தன் * கதையை இழந்து விட்டார். அம்மா தரும் சாப்பாட்டைச் சாப் பிடாத கையினால் பயனில்லை என்று தனது வலக்கையையும் சுருக்கிக் கொண்டார். நானோ உள்ளத்தால் இறுகிப்போய் மன துக்குள் ஒலமிடுகிறேன்.
வித்தகபுரத்துக்கு நாங்கள் போகலாம் என்ற செய்தி பத்திரி
கையில் வந்த பிறகாவது அம்மா என்னிடம் பிரியாவிடை பெற்றி ருக்கக் கூடாதா?
36

ஊனுக்கு உயிர் ஊட்டிய அன்னை
பிறந்த நாள் முதலாய் ஆறு வருடங்கள் உங்கள் அன்பான அரவணைப்பில் ஆனந்தமாய்க் கழிந்தன. நீங்களும் பெரியப்பாவும் எனக்குப் பெற்றோராயிருந்து என் ஒவ்வொரு தேவைகளையும் மிக வும் கரிசனையுடன் நிறைவேற்றினீர்கள். எவ்விதம் என்னை அன்' பாய்ப் பேணி வளர்த்தீர்கள் என்பதை உறவினர்கள் கதைகதையாய்ச் சொல்வார்கள் "உம்மை வளர்த்து ஆளாக்குவதில் பெரியம்மாவின் மங்கு முக்கியமானது; முதன்மையானது; '' - இது அவர்களால் நினைவு கூரப்படும் நிகழ்வுத் துளிகள். உங்களோடு வாழ்ந்த நாட் கள் என் வாழ்வின் வசந்தகாலங்கள்.
நீங்கள் வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் உங்களால் இயன்ற உதவிகள் செய்து அவர்களை யும் சிறப்பாக வாழ வழி வகுத்து உங்கள் குழந்தைகளின் வாழ்வு கண்டு களிப்புற்றபடியே இறைவன் தாள் சேர்ந்து விட்டீர்கள். எங்கள் மத்தியில் உங்கள் ஸ்தானம் மீள நிரப்பப்பட முடியாத வெற்றிடம் தான்.
உங்கள் ஆத்மா சாந்திபெற எல்லாம் வல்ல நகுலேஸ்வரப் பெருமானின் பாதார விந்தங்களை இறைஞ்சுகிறோம்.
உங்கள் ஆத்மா என்றும் எங்களை ஆசிர்வதிக்கும்!
பெறாமகள்,
கெளசிதகி
37

Page 23
நீங்காத நினைவுகள்
பாடசாலை விட்டு வீடு வந்து சேர்ந்தால் எனது தகப்பனாரும் தாயாரும், வயலுக்கும், தோட்டத்திற்கும் போய் விடுவார்கள் சூடான சுவையான உணவு அன்புடன் தந்து அரவணைத்து ஆறுதல் தருவீர்கள். நான் கல்விகற்று முன்னேற பல வழிகளில் உதவினிர்கள். உங்களது மகனாக என்னைப் பேணி வளர்த்த உங்களது மறைவு மனச்சஞ்சலத்தைத் தருகிறது.
எனினும், மரணம் என்பது இயற்கையின் நியதி என்பதனை யுணர்ந்து உங்களது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.
பெறாமகன் முருகையா
38


Page 24
நன்றி
அம்மாவின் உடல் விடுத்தே இல்லம் வந்து எம்மைத் தேற்றிே அம்மா நோயுற்றிருந்த போது மருந்துகள் தந்து உதவியவர் டா இறுதிச் சடங்கிலன்றும் அதன் ருந்து ஒத்துணர்வு காட்டியோர்
பத்திரிகை மூலமும், தந்தி, தோர் பலர்.
மலர் வளையம், மாலை ம
திருமுறை பாடித் தெய்வீக !
உடன் பிறந்தார் போலப் ப படுத்தியோர் பலர்.
அந்தியேட்டிக் கிரியைகளில்
*விழிமுத்து நினைவு நூல் சிலர் ,
எல்லோருக்கும் நாங்கள் பொ
கே. கே. எஸ். வீதி, இணுவில்
பாரதி பதிப்பகம், 430, கே.

நவிலல் உயிர் பிரிந்த சேதி கேட்டு உடன் Lun ni Luauri.
து அடிக்கடி வந்து பார்த்து அரிய க்டர் நா. சக்திவேல் அவர்கள். ள் பின்பும் எம்மிடம் வந்து உடனி பலர்.
தபால் மூலமும் அஞ்சலி தெரிவித்
யாதை செய்தோர் பலர். மணம் கமழச்செய்தோர் சிலர். ல வகையிலும் எம்மை ஆறுதல்
கலந்து கொண்டோர் பலர்.
சிறப்பாக வெளியிட உதவியோர்
தும் கடமைப்பாடு உடையோம்.
கணவர், மகள் , மருமகன், பேரன்
சகோதரிகள் பெறாமக்கள்.
கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.