கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2000.07

Page 1

防
க்கியச் சஞ்சிகை

Page 2
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்.
m
அன்புள்ள இலக்கிய நெஞ்சங்களே.
வணக்கம்,
ன்று, மக்கள் விலைவாசி உயர்வால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். நாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் அதிகரித்தவண்ணமே இருக்கின்றன. மக்கள் வாழ்க்கைச் செலவின் பழுவைத் தாங்கமுடியாது திணறுகின்றனர். அன்றாடம் பலவிதமான பிரச்சனைகளுக்கும் அவர்கள் முகம் கொடுக்க வேண்டிய நிலைமை சங்கிலித் தொடர்போல் வந்து கொண்டிருக்கிறது. போரும், அன்றாட இருப்பைப் பற்றிய பயமும் மக்களைப் பீதி கொள்ளச் செய்கின்றன.
இப்படியான ஒரு காலகட்டத்தில் ஒரு கலை இலக்கிய சஞ்சிகையை வெளிக்கொணர்வது எத்தகை ஏற்புடையதென முதலில் நாம் சிந்தித்ததுண்டு. ஆனால், சஞ்சிகை வெளிவந்ததும் அதன் முதல் இதழுக்குக் கிடைத்த பெருவரவேற்பு எமக்குப் பெரிதும் உற்சாகமளிப்பதாய் அமைந்தது.
ஒலி ஒளி ஊடகங்கள், பத்திரிகைகள், ஞானம் சஞ்சிகையின் வரவைப்பற்றிய செய்திகளை வெளியிட்டன. பல கல்விமான்கள், புத்திஜீவிகள், படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் கடிதம் மூலமும், தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டு எமக்கு உற்சாகமூட்டினர்; ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கினர். இவற்றையெல்லாம் பார்க்கும் போது எத்தகையதொரு சூழ்நிலையிலும், இக்கட்டான காலகட்டத்திலும் தமிழ் இலக்கிய நெஞ்சங்கள் தளர்வதில்லை என்ற பேருண்மை புலனாகிறது. ஞானம் சஞ்சிகை வியாபார நோக்குடன் வெளிவருவதில்லை என்பதை யாவருமே அறிவர். இதன் அமைப்பும் உள்ளடக்கமும் அதற்குச் சான்றாகவுள்ளன. இதன் இருப்பு படைப்பிலக்கியவாதிகளின் பங்களிப்பிலும், தரமான சுவைஞர்களின் ஆதரவிலுமே தங்கியிருக்கிறது என்பதை வலியுறுத்தி, தொடர்ந்தும் உங்களது பேராதரவினை நல்கவேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம்.
- ஆசிரியர்
 
 

6քoւյն ֆԱշgքլ: பெறுவது
ஞானம்
பிரதம ஆசிரியர்: தி.ஞானசேகரன் இணை ஆசிரியர்கள்: ந.பார்த்திபன் ஞா.பாலச்சந்திரன்
ஞானம் சஞ் சரிகையரில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடை
வர்கள்.
தொடர்புகளுக்கு.
தி.ஞானசேகரன் 197, பேராதனை வீதி, கண்டி. தொ.பே. - 08-234755
ՈT7-30ճ506 E-Mail-gnanamskandyan.net
கட்டுரைகள்
மட்டக்களப்புப் பிரதேச நாடக வளர்ச்சி - 09 - அன்புமணி
இரா.கனகரத்தினம் - 14 - ந.பார்த்திபன்
ஓ.கே.குணநாதனின் முன்று கதைகள் - 18 - கே.எஸ்.சிவகுமாரன்
நான் பேச
நினைப்பதெல்லாம்.26
கலாநிதி துரை.மனோகரன்
ಜ್ಞ##éff
é aría:áip frior..... 25
h
つー。 புதிய நூலகம் - 29
கவிதைகள்)
ஒருநாள் - 12 எஸ்.சிவஞானசுந்தரம் தோற்றம்! - E3 லலிதா
உன் மெளனம் - 24 லோ.சுதர்மன்
சதியான சரித்திரம்-31 ஏ-தாரிக்
மாமிக்கு வேண்டிய மறுருதிகள் - 31 கலைமகள் ஹிதாயா
கருவறையிலிருந்து
ஓர் கதறல். - 3 திவி
Fix 08-234755
முகப்புச் சிதிதிரர்
நா.ஆனந்தன் ノ

Page 3
KUNAS. ஜமுனா
(8ì
0 o έ α 5. இக் .டிக்.”
விரல்களைச் சொடுக்கெடுத்துக் கொள்கிறேன். எல்லா விரல்களும் இசைய மறுக்கின்றன. காலையிலிருந்து எத்தனை முறைதான் சொடுக்கெடுப்பது? அவை ஓய்ந்து விட்டனபோலும். ஆனால் மீண்டும் Nமீண்டும் முயற்சித்துக்கொண்டே இருக் ஐகின்றேன். விரல்களுடன் போட்டியிட வேண்டும் என்பது நோக்கமல்ல. மனதுடன் போட்டியிடவேண்டும் என்பதே மறைமுக நோக்கம். என் மனதில்
༔
குடியேறியுள்ள பயத்தை. LILLILÜ 6D . . . . . . . . துன்பத்தை. ஏதோ ஒன்றை. எனக்குச் சரியாக இனங்
காட்டத் தெரியவில்லை. அல்லது, நான் நினைக்கிறேன், என் இருபது ஆண்டுகால வாழ்க்கையில் சந்தித்திராத அல்லது சந்தித்து பிரித்தறியத் தெரியாத ஒருவித உணர்ச்சி என் மனதை ஆட்டிப்படைத்துக்
சொடுக்கெடுப்பதன் மூலம் வடிகாலைத் தேடிக்கொள்கிறேன்.
இன்று என்னைப் பெண் பார்க்க வருகிறார்களாம். அதனால்தான் வீட்டில் இத்தனை ஆர்ப்பாட்டம். அண்ணா வேலைக்குச் செல்லவில்லை; தம்பி பாடசாலைக்குப் போகவில்லை; மனைவி இருக்கத்தக்கதாக சாய்வு நாற்காலியை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட அப்பா, அவளிடம்கூட இன்று அணுக வில்லை. அம்மாவும் அண்ணியும் மாத்திரம்
வேலைக்கு மட்டம் போடாமல் அடுப்புடன்
கண்டி
LL LSLS S L SLS LS LL LSL LSL LSL L S S L L SLSLS LLLLL S LLLL S SLLSLS LS SSLS S L L SLLSLLS LLS 0L SYS LL0SLLSLLSL0 S LSSLLSYSYSSLLL SLSLSSLSLSSLSLSSLLSYSYSSLLS S LSSLS0LS SLLLLSSSSYSSSSSLL SL S SL S LSS0LS SLLL
போராடிக் கொண்டிருக்கிறார்கள். நான் மனதுடன் போராடிக் கொண்டிருக்கிறேன்.
来 来 来 米 米
காலையிலிருந்தே எப்படி Reactions காட்டுவது என்பது சிரமமாயுள்ளது. முன்னர் இவற்றுக்கெல்லாம் தேவையில்லாமல் தலையை உடைத்துக்கொள்ளமாட்டேன். குளித்தவுடன் அம்மா தலைசீவி விட்டாள். இதற்கு முன்னரும் பல தடவைகள் செய்துவிட்டிருக்கிறாள். மெளனத்தைக் கரைப்பதற்காக.
‘என்னம்மா நானின்னுஞ் சின்னக் குழந்தையா?
என்று கேட்டேன். அவ்வளவுதான். எதிர்பார்க்காத தாக்குதல் எதிர்பார்க்காத திசையிலிருந்து கிடைத்தது.
'கல்யாணம் முடிஞ்சு ஒரு குழந் தையைப் பெத்தாலும் நீ எனக்குக் குழந்தைதான்
மெளனியாகிவிட்டேன். பெண் பார்க்கத்தானே வருகிறார்கள், கல்யாணம் முடிந்த மாதிரியல்லவா புலம்புகிறாள். நான் வருகிறவனைப் பார்க்கவேயில்லை. எனக்கு அவனையும் அவனுக்கு என்னையும் பிடித்தாலல்லவோ கல்யாணம் பற்றி யோசிக்கலாம்.
இதற்குப் பின் அம்மாவுடன் என்ன பேசுவது என்று புரியவில்லை.
அண்ணி என்னைக் காணும்போ தெல்லாம் ஒரு மாதிரிச் சிரித்தாள். (எனக்கு அப்படித் தெரிந்ததோ என்னவோ) எனக்கு
 

எனர் ன செய்வது என்று விளங்கவில்லை. முன்னர் இப்படியான சந்தர்ப்பங்களில் என்ன செய்தேன் என்றும் ஞாபகம் வரவில்லை. நானும் அவளைக் காணும் போதெல்லாம் சிரித்தேன். எனக்கே தெரிந்தது அசடு வழிகிறேன் என்று.
米 米 米 米 米 A
*அனேகமா இன்னம் கொஞ்ச நேரத்தில மாப்பிள வந்திடுவார்"
அப்பா பொருத்தமில்லா மல் சிரித்துக் கொண்டு, மருமகளிடம் கூறிக்கொண் டிருக்கிறார். அதை ஏன் இவப்வளவு சத்தமாகக் கூறவேணடும்! அல்லது நான்தான் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டே (867m....... எரிச்சலாக இருந்தது. சங்கடத்திலிருந்து தப்புவதற்காக, விரைவாக Bath room (Spg56it G56ig) கதவைச் சாத்திக் கொள் கிறேன்.
பலமாகக் கத்தவேண் டும் போலிருக்கிறது; இந்தBath room மே உடைந்து விழுமளவிற்கு கத்தவேண்டும் போலிருக்கிறது. உயரமான நீர்த் தொட்டியின் அடியில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக, நீர் பீறிட்டு வெளியேறி இறுதியில் அமைதி நிலவுவதுபோல், என் மனவுணர்வெல்லாம் வேகமாக வெளிக் கிளம்பி மனம் வெறுமையுற வேண்டும் போன்ற அவஸ்தை ஏற்படுகிறது. ஆனால் மனதை சலனமற்றதாக்க இயலவில்லை.
கடந்த ஒரு வாரமாக மனதைக் குடைந்துகொண்டிருந்த கேள்வி மீண்டும் எழுந்து கொள்கிறது.
je zie k zie ik
இன்று வாறவனைப் பிடிக்கிறதா,
இல்லையா என்று எவ்வாறு தீர்மானிப்பது? உருவத்தைக் கொண்டா. முகத்தைக் கொண்டா. குரலைக் கேட்டா. அல்லது சிரிப்பைப் பார்த்தா. (ஒரு வேளை சிரிக்காவிட்டால்). எதனைக் கொண்டு தீர்மானிப்பது? பெண்பார்க்க
R வருகிறார்கள்" என்று 2) கூறியதிலிருந்து தொடங்கிய நமைச்சல் இன்னம் நீங்க வில்லை.
வாழ்ந்த இருபது ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கவே திகைப்பாயுள்ளது. எத்தனை விதமான மனிதர் * கள், எத்தனை விதமான தி அநுபவங்கள், எத்தனை தி யெத்தனை விருப்புக்கள், வெறுப்புக்கள். நினைத்துப் பார்க்கையில் தொடர் சங் கிலியாய் வந்துகொண்டே Y. இருக்கிறது. எவ்வளவு காலம் * வாழ்ந்து விட்டோம் 1. திருமணத்தில் பிடிக்காத வரைக் கரம்பிடித்துவிட்டால் நீண்டு கிடக்கும் எதிர்காலத்3 தைக் (அற்பாயுளில் போகாவிடில்) 3 கடக்கும்போது ஏற்படும் மனவுணர்வுகளை சிந்தித்துப் பார்க்கவே தைரியமில்லை.
'கல்யாணமே வேண்டாம்' என்றேன். அம்மா ஒப்பாரி வைக்கத் தொடங்கி விட்டாள். 'எல்லாப் பெண்களும் ஆரம்பத் தில் இப்படித்தான் சொல்லுவார்கள்; அப்பா தீர்ப்புக் கூறினார்.
'எனக்கு இப்போது கல்யாணம் வேண்டாம்” எனக் கூறிப் பார்த்தேன். வீட்டில் ஒருகணம் அமைதி நிலவியது. இதைக் கேட்டு ஏனோ அண்ணி உஷாராகி விட்டாள்; என்று அவள் முகம் காட்டியது. அப்பா, அம்மாவின் முகங்களில் பயம்
தெரிந்தது.

Page 4
நீ. Ulst 60DT........ UIT6) gil....... y உடைந்துபோன குரலில் அம்மா கேட்டாள். “சீ. போங்கம்மா; நான் ஒன்றும் அப்படிச் செய்யமாட்டேன்’ என்றுகத்திவிட்டு ஒதுங்கிக்கொண்டேன்.
இப்பொழுது நினைத்துப் பார்க்கை யில் வியப்பாயிருக்கிறது. நான் எவ்வாறு காதலிக்கமாட்டேன் என்று வாக்கு கொடுத்தேன். ஏன் கொடுத்தேன்? காதலிக்கக்கூடாதா..? அல்லது காதலிப் *பது தரங்குறைவான விடயமா..? சிரிப்புத் தான் வந்தது. சிரிப்பு மாத்திரமல்ல படிக்கும் காலத்தில் வகுப்பில் துடிப்பாய்த் திரிவதுடன் என்னிடம் அடிக்கடி Notes கொப்பி வாங்கும் ரியாஸையும் ஞாபகம் வந்தது. எனக்கே தெரிகிறது ரியாஸிடம் நான் S வைத்திருந்தது காதலில்லை. (காதலைப் 8 பற்றி நிறைய தெரிந்தவள் போல் பிதற்றுகிறேனோ?.) அவனிடம் நிறைய கதைத்ததாகவும் நினைவில்லை. என்னிடம் மட்டுமா அவன் கொப்பி கேட்டான்? என்னைப் பற்றி அவன் என்ன நினைத் திருப்பான்? இப்பொழுது என்ன நினைப் பான்? அல்லது மறந்திருப்பானோ?. ஒன்றும் எனக்குத் தெரியவில்லை. தெரியவும் முயற்சிக்கவில்லை.
இதுவரைக் காணாத ஒரு பொரு ளைக் கண்டவுடன் மனம் பதிவதைப் போன்றுதான், ரியாஸ் எனக்கு இருந் தான்; என்று இப்பொழுது உணரமுடிகிறது. முதன்முதலில் ஒரு வெளி ஆண் பழகியதும் ஏற்பட்ட Attraction தான் அவனிடம் ஏற்பட்டிருந்தது. ஆனால் என்னவோ. கடந்த இருவருட காலத்தில் அடிக்கடி என்மனதில் அவன் தோன்றுவதை என்னால் தவிர்க்க இயலவில்லை.
அம்மாவின் அழுகை ஆர்ப்பாட்டங் களுக்குப்பின் இன்று பெண்பார்க்கும் படலம் என்று நிச்சயமாயிற்று.
米 米 米 来 米
இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடப்
போகிறார்கள். என்ன வென்று முடி வெடுப்பது? வியர்வையால் உடம்பு பிசுபிசுக்கத் தொடங்கிவிட்டது.
தொட்டியினுள் நீரைத் திறந்துவிடு கிறேன். “சர். ” என்ற சத்தத்துடன் நீர் விழுந்து குமிழிகளை உண்டாக்கி உடைத்துக் கொண்டிருக்கிறது.
朱 米 米 米 米 பொதுவாக சந்திக்கும் மனிதர்களில் பெரும்பாலானோரை எனக்குப் பிடிப் பதில்லை. கருத்து முரண்பாடு, உருவ அமைப்பு, குரல், பார்வை, இனந்தெரியாத காரணங்கள் என்று ஏதாவதொன்றால் பிடிக்காமல் போய்விடுகிறது. பிடிப்பவர் களைக்கூட அவர்களை மீறி அவர்கள் வெளிப்பட்டு தலைகுனியும்போது, அவர்க ளையும் பிடிக்காமல் போய்விடுகிறது. இவற்றையும் மீறி என்மனதில் தலை நிமிர்ந்து நிற்பவர்கள் எவ்வளவு காலம் நிலைப்பார்கள் என்று கூற இயலாது.
காலத்தின் போக்குடன் எமது அறிவு, 脏 த்திறன், அநுபவங்கள் மா ல் முடிவுகள், கொள்கைகள், பிடித்தவை, பிடிக்காதவை எல்லாமே மாறிக்கொண்டே போகின்றன.
இவ்வளவு ஏன், என்னையே எனக்குப் பிடிக்கிறதா? என்ற கேள்வி எழுப்பப்படு மாயின் நானும் குற்றவாளியாகிவிடு கிறேன்.
Ego, மற்றவர்கள் மத்தியில் என்னைப்பற்றி நல்ல அபிப்பிராயம் ஏற்படவேண்டும் போன்ற பல காரணங் களினால் சமூகத்தில் வேஷங்கள் போடுகிறேன். வேஷங்கள் கிழிந்த என் முகத்தை என்னுடைய Sub conscious mind இனங்காட்டும்போது வெட்கிப் போகிறேன். இறுதியில் சலிப்பு, வெறுப் பேற்படுத்தக்கூடியவை, புதிய பொருளைக் கண்டவுடன் ஏற்படும் வியப்பு, அநுபவிக்காத உணர்ச்சிகளை அநுபவிப்பதற்கான பயணம், சுயஇன்பம் போன்றன. இதை
 
 

உணர்ந்தும் கூட மீண் டும் மீண்டும் இவற்றில் விழுவதை எணர்னி ஒடுங்கிப் போகிறேன்.
என்னால் தாங்க முடியவில்லை. மன வுணர்வுகளினால் Sub conscious mind söGtó conscious mind sið (ég5 Lò இடையில் ஏற்படும் பிச்சுப் பிடுங்கலை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஏன் எனக்கு மட்டும் இப்படி ஏற்படுகிறது. அல்லது எல்லோருக்கும் இந்த மாதிரி பிரச்சினை இருக்குமா? அப்படி இருப்பதாகத் தெரியவில்லையே. நான்தான் பெரிதுபடுத்துகிறேனோ. எல்லாவற்றிக்கும் மனதை பழக்கப்படுத்தி வாழ வேண்டுமோ? அல்லது மனம் பழகும் வரை காத்திருக்க வேண்டுமோ..? என் தந்தையுடன் எனக்குள்ள
உறவுமுறைதான் உண்மையான வாழ்க்கை
T. ...................... 9
எனக்கு இன்னமும் ஞாபகம் இருக் கிறது. எனக்கப்பொழுது ஏழு வயது. பாடசாலை முடிந்து வீட்டிற்கு வருகிறேன். என் வரவை அப்பா ஞாபகத்தில் கொண்டு வர மறந்து விட்டார் போலும். நான் செல்லும் போது அவரும் நான் பிறந்ததி லிருந்து என்னை வளர்த்த (பேச்சு வழக்கில் வேலைக்காரி) தேவி அக்கா 6ւրք..............
சின்ன வயதில் இவற்றையெல்லாம் பெயர் கொடுத்துப் பிரிக்கத் தெரியாது. ஆனால் ஏதோ கூடாத" விடயம் என்று மட்டும் உணர முடிந்தது. மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் இந்த விடயத்தைத் தொடர்ந்து காவவும் முடியாமல் ஒரு நாள் கோவில்
சந்நிதானத்தில் ‘அப்பா நல்லவர் அப்பா(0)
கெட்டவர் என்று குலுக்கலில் தெரிவு செய்யக்கூட விளைந்திருக்கிறேன்.
இப்பொழுது அறிவு ரீதியாக அப்பா செய்தது பிழையில்லை, என்று என்னால் வாதிட முடிகிறது. இது மனிதர்களுக் கிடையே நடக்காத புதிய விடயமாகத் தெரியவில்லை. அவருக்குத் தேவை யிருந்தது; நிறைவேற்றிக் கொண்டார். 8 ஆனால் ஏனோ உணர்வு ரீதியாக3 என்னால் உணர முடியவில்லை.
அன்றிலிருந்து இன்றுவரை ೨೩ಖ್ರಹ್ಮಜ್ಜಿ காணும்போதெல்லாம் இச்சம்பவம் ஞாபகம் வரும். ஆனாலும் அவருடன் நான் வாழ்ந்துே கொண்டுதான் இருக்கின்றேன். கதைக் கின்றேன், வாதிடுகின்றேன், அபிப்பிராயம் கேட்கின்றேன். என்னவிருந்தாலும் 岳 என் அப்பா என்று மனதிற்குப் பழக்கப் படுத்திவிட்டேன். நி
ஒருவேளை உலகிலுள்ள எல்லா உறவுகளும் இப்படித்தான் நிலைக் கின்றனவோ. அவர் என் கணவன், அவன்
என் தம்பி, அவள் என் நண்பி. என்ற காரணத்தினால் தொடர்ந்து அவர்களுடன் பழகுகின்றோமோ. 2

Page 5
அப்படியானால் இன்று என்னைப் பார்க்க வாறவனை. என்ன வென்று தீர்மானிப்பது?
கல்யாணம் முடிக்காமலே இருந்து விடுவோமா? பிறகு ஒருவேளை அந்த வாழ்க்கையில் சலிப்பேற்பட்டால். திருத்தமுடியாமல் போய்விடுமே. d................. என்ன வாழ்க்கை யிது.
米 米 米 米 米
"டொக் . டொக்.
கதவு தட்டப்படும் ஓசை,
தொட்டியில் நீர் நிரம்பி வழிந் தோடிக் கொண்டிருக்கிறது. குழாயை முடுகிறேன்.
"உங்க என்ன செய்து கொண் டிருக்கிற. அவையளெல்லாம் வந்திட்டினம், சுருக்கா வா. s
அம்மாவின் குரலில் மகிழ்ச்சி தெரிகிறது.
率 米 冰 冰 率
நிலவு காய்ந்துகொண்டிருக்கிறது. அவர்கள் எல்லோரும் போய்விட் டார்கள். என்னை அவர்களுக்குப் பிடித்து விட்டதாம். பார்த்தவுடனேயே அவருக்கும் பிடித்துவிட்டதாம். என்னை இரண்டொரு முறை மாப்பிள்ளையை பிடித்திருக்கிறதா? என்று கேட்டார்கள். அந்நேரத்தில் என்னை யும் மீறி என் உதட்டில் ஒரு புன்சிரிப்புத் தவழ்ந்தது இப்பொழுது ஞாபகம் வருகிறது. அதன்பின் நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறித்துவிட்டு போய்விட்டார்கள்.
எனக்கு. அவரைப் பிடித்திருக் கிற.தா..? இந்தக் கேள்வியை பல தடவைகள் மனதிற்குள் கேட்டுப்பார்த்தேன்.
ஏனோ இந்தக் கேள்வி எழுப்பப்படும் போதெல்லாம் ஒருவித படபடப்பு, உதட்டோரத்தில் ஒரு நளினப் புன்னகை (கணர்ணாடியைப் பார்த்தபொழுது அப்படிதான் இருந்தது) உண்டாகிவிடுகிறது. கட்டிலில் படுத்து அயர்ந்து உறங்க வேண்டும் போன்ற எண்ணம். மனச்சுமை குறைந்த மாதிரி உணர்வு. மேலும். மேலும். என்னவோவெல்லாம்.
ஒருவேளை. ஒருவேளை. என்ன ஒருவேளை, அநேகமாக. சி. அதுவும் இல்லை. நிச்சயமாக. அவரை. எனக்குப். பிடித்துள்ளது.
இதை எப்படி எதைக் கொண்டு என் மனம் தீர்மானித்தது?
வானத்தில் நட்சத்திரம் கனன் சிமிட்டிக் கொண்டிருக்கிறது. இல்லை சிமிட்டியது. எத்தனையோ ஆண்டுகளுக்குமுன் நட்சத்திரம் உண்டாக்கிய ஒளிதான் நான் இப்பொழுது பார்ப்பது. இன்று அந்நட் சத்திரம் உண்டாக்கும் ஒளி இன்னும் எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பூமியை வந்தடையப்போகிறது. இந்தவுண்மை முன்னமே எனக்குத் தெரியும். ஆனாலும் இப்பொழுதுகூட நட்சத்திரம் நிகழ் காலத்தில், ஒரே நேரத்தில் என்னைப் பார்த்து கண்சிமிட்டுவது போன்ற உணர்வு. மனம் ஏனோ உண்மையை ஒதுக்கி மறுத்துவிட்டது.
இதுதான் வாழ்க்கையோ. 2 உணர்விற்கும் அறிவிற்கும் இடையிலான போராட்டங்களில் உணர்வுகள் அறிவை நசுக்கி அதிகமாக வெற்றிகளைப் பெற்றுக் கொள்கின் p60766 it......... 2
米 米 米 米 来
மனிதனை கெட்டவனாகச் சித்தரிப்பது ரொம்பச் சுலபம். அதேபோல் மனிதனை மகாத்மாவாகச் சித்தரிப்பதும் சுலபம். ஏனெனில் இரண்டிலும் உண்மையைவிட வாழ்க்கையைவிட நமது கருத்துக்கள் வலுப்பெற்று வாசகரை ஏதாவது ஒரு பக்கம் தள்ளிவிடும். இந்நிலையில் யதார்த்தமான பாத்திரப் படைப்பு சுலபமானதல்ல.
- ஜெயகாங்
 
 
 
 
 

மட்டக்களப்புப் பிரதேச நாடக வளர்ச்சி
“အံ့နှိုး 令 :সু:
"நாடகம்" என்ற வடிவம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வந்தது என்றே பலர் எழுதியும் பேசியும் வருகின்றனர். ஆனால் சங்க காலத்தில் தமிழில் மேடை நாடகம் இருந்தது என்பதற்குச் சான்றாகப் பல நாடக இலக்கண நூல்கள் பற்றிய விபரங்கள் கிடைத்துள்ளன. இவைபற்றி சுவாமி விபுலானந்தர் தனது 'மதங்க சூளாமணி” என்னும் நூலில் மிக விளக்கமாகக் கூறியுள்ளார்.
அவ்வாறாயின் அந்த நாடக நூல்கள் கிடைக்காமற் போனதேன் என்ற கேள்வி எழுகிறது. இக்கேள்விக்கான பதில் தெளிவானது. சங்க மருவிய காலத்தில் கலைகள் ஒழுக்கக் கேடானவை என்ற தப்பபிப்பிராயத்தால் சில நூல்கள் அழிக்கப்பட்டன. இன்னும் சில நூல்கள் காலத்தால் அழிந்தன என்பது வரலாற்றுண்மை.
நாடக நூல்கள் பற்றி "மதங்க சூளாமணி” எழுதிய சுவாமி விபுலா னந்தர் வாழ்ந்த மட்டக்களப்புப் பிரதேசத்தில் அந்தக்காலம் முதல் மேடை நாடகங்கள் அரங்கேறியுள்ளன. சுவாமி விபுலானந்தரின் நண்பரான வித்துவான் ஆ.சரவணமுத்தன் ஒரு சிறந்த நடிகர். அவர் அக்காலத்தில் மட்டக்களப்பில் புகழ் பெற்றிருந்த “சுகிர்த விலாச நாடக சபை" மூலம் பல நாடகங்களை எழுதியும், நெறிப்படுத்தியும் நடித்தும் வந்தார். "இலங்கா தகனம்","இராமர் வனவாசம்”, “பாதுகா பட்டாபிஷேகம்", என்பன இவர் எழுதிய நாடகங்கள். "கண்டிராசன்", "சீதா கல்யாணம்” முதலியன இவர் கதாநாயகனாக நடித்த நாடகங்கள்.
சுகிர்த விலாச சபையில், வித்துவான் சரவணமுத்தனுவுடன்3 ஆம்ஸ்றோங் வில்சன் பப்பா, டேவிட், மரியசெல்வம், தம்பிராசா, செல்லத்துரை,... ராமர் உடையார் முதலியோர் நடிகர்களாக இருந்தனர்.
" அருணகிரி தவப்புதல்வன், இளமை முதல் எனக்கன்பன் அமுதமன்ன8 பொருளழகு திகழ்தமிழின் கலை பலவும் தனியாய்ந்தோன்.” என சுவாமி விபுலானந்தரே இவரது கலைத்திறமை பற்றிப் பாடியுள்ளார். பிற்காலத்தில் இவர் சுகிர்த விலாச நாடக சபையின் தலைவராக இருந்து பல " நாடகங்களை அரங்கேற்றினார். இந்நாடகங்கள் மட்டக்களப்பு வில்காசிம் ஹோலில்g அரங்கேறின. இம்மண்டபம் பின்னால் லட்சுமிஹோல், இம்பீரியல் தியேட்டர் 8 எனவும் தற்போது "சுபராஜ் தியேட்டர்" எனவும் அழைக்கப்படுகிறது.
வித்துவான் சரவணமுத்தனுக்குப் பின், 1940களில் "சுதேச வாலிப சபா" என்னும் நாடக மன்றம் உருவாகியது. இம்மன்றம் ‘வேதாள உலகம்” "கண்ணகி” போன்ற நாடகங்களை அரங்கேற்றியது. இதில் வேதாரண்யம், வைரவப்பிள்ளை, கணபதிப்பிள்ளை , குமரையா முதலியோர் முக்கிய நடிகர்களாக இருந்தனர்.
அதன் பின்னர் "மீனலோசனி பால சற்குண சபா" என்னும் இந்திய நாடகக்குழுவினர் மட்டக்களப்பில் நாடகங்களை அரங்கேற்றினர்."வேதாள உலகம்", "சத்தியவான் சாவித்திரி", "ருக்மாங்கதன்", "அல்லி அர்ஜுனா", "ஞான

Page 6
செளந்தரி", அரிச்சந்திரன்" முதலிய நாடகங்கள் இச்சபையால் அரங்கேற்றப்பட்டன.
அதைத் தொடர்ந்து மீண்டும் மட்டக்களப்பு இளைஞர்கள் சிலர் சேர்ந்து "முனைத்தெரு நாடகக்குழு" என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கி நல்ல தங்காள்", "ஞான சவுந்தரி” முதலிய நாடகங்களை அரங்கேற்றினர். அதன் பின்னர் "மட்டக்களப்பு வாலிபர் சபா" என்ற நாடக மன்றம் தோன்றியது. இந்நாடக மன்றத்தில் மயில்வாகனம், நொயல் ஜோசப், பி. வி. ஜோசப் முதலியோர் நடிகர்களாக இருந்தனர். இவர்களும் பல 'விலாச நாடகங்களை மேடையேற்றிப் புேகழ்பெற்றனர். இவை யாவும் மட்டக்களப்பு நகரத்தில் இடம்பெற்றன. g இதே காலப்பகுதியில் - அதாவது 1945 முதல் - ஆரையம்பதி என்னும் 5.கிராமத்தில், விலாச நாடகங்கள் பல அடுத்தடுத்து அரங்கேறின. இவ்வூரில் புகழ் பெற்றிருந்த சங்கீத மாஸ்ரரான திரு. கந்தையா ஆசிரியர் தனது சுயமுயற்சியால், ஆரையம்பதி இளைஞர்களைக்கொண்டு பல நாடகங்களைப் பழக்கி அரங்கேற்றினார். அவற்றுள் "அல்லி அர்ஜுனா", "பவளக்கொடி","துருவன்" ஜ்முதலிய நாடகங்கள் பல தடவை மேடையேறின. திறந்த வெளியில் நிறுவப்பட்ட 2 பெரிய அளவிலான நாடகக்கொட்டகைகளில் இந்நாடகங்கள் விடிய விடிய நடைபெற்றன. மக்களும் விடிய விடிய விழித்திருந்து இந்நாடகங்களைப் பார்த்து Sமகிழ்ந்தனர். 용 1950 முதல் மட்டக்களப்பு நாடக உலகில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. சினிமாத் தாக்கம் கொண்ட நாடகங்களும் சினிமாக் கதையைத் தழுவிய நாடகங்களும் அதிக அளவில் இடம் பெறுகின்றன.
"அந்தமான் கைதி’ (அருளானந்தம் குழுவினர்) "சங்கிலியன் (செ.இராசதுரை குழுவினர்) “முதல் முழக்கம்” (எஸ்.பொ. குழுவினர்) “கடல் கண்ட கனவு" (மட். வின்சன்ட் மகளிர் கல்லூரி) "இரண்டு லட்சங்கள்” (காசி ஆனந்தன் குழுவினர்) "துரோகிகள்” (பேராதனைப் பல்கலைக்கழகம்) "சரிந்தது கொற்றம்” (நடமாடி குழுவினர்) “முல்லைக்குமரி” (திமிலை நளின கலாமன்றம்) "திரைகடல் தீபம்’ (அன்புமணி குழுவினர்) “காசியப்பன்” (தேனமுத இலக்கிய மன்றம்) நீறுபூத்த நெருப்பு” (ஆரையூர் இளவல் குழுவினர்) முதலிய நாடகங்கள் 1950 - 1960 காலப்பகுதில் அரங்கேறின.
இக்காலகட்டத்தில், ஆரையம்பதி கவின்கலை மன்றம் (அன்புமணி குழுவினர்) முத்தமிழ் நாடக மன்றம் (நடமாடிக் குழுவினர்) மட்டக்களப்பு தமிழ் கலாமன்றம் (நவரத்தினம் குழுவினர்) திமிலைநளின கலாமன்றம் (திமிலைத் துமிலன் குழுவினர்) தேனமுத இலக்கிய மன்றம் (திமிலை மகாலிங்கம் குழுவினர்) வளர்மதி இலக்கிய மன்றம் (கணேசானந்தம் குழுவினர்) மட்டுநகர் இளங்கதிர் நாடக மன்றம் (ஆரையூர் இளவல் குழுவினர்) மட்டக்களப்பு கலாசாரப் பேரவை என்பன தொடர்ச்சியாகப் பல நாடகங்களை அரங்கேற்றின.
இக்காலகட்டத்தில் மட்டக்களப்பு நகரை அண்மிய அமிர்தகழி, ஆரையம்பதி, சிலாமுனை, சித்தாண்டி, ஏறாவூர், கன்னங்குடா, திமிலைத் தீவு, முதலிய கிராமங்களில், திறந்தவெளி கொட்டகைகளில் பல நாடகங்கள் அவ்வப்போது அரங்கேறின. இவை ஆலய உற்சவங்களை ஒட்டியும், புதுவருடம், சித்திரைப் புத்தாண்டு முதலிய விசேட தினங்களை ஒட்டியும் அரங்கேறின. அந்த வகையில் 1960 - 1970 காலப்பகுதி மட்டக்களப்பு நாடக வரலாற்றில் ஒரு பொற்காலம் எனலாம். மட்டக்களப்பு வரலாற்றில் அதிகமான நாடகங்களை
s
 
 
 

எழுதியும் தயாரித்தும் நாடகநிலைக்கு செழுமை சேர்த்தவர் திரு. ஆரையூர் இளவல் அவர்கள். சுமார் அறுபது நாடகங்களுக்கு மேல் இவர் எழுதித் தயாரித்துள்ளார். பிரமாண்டமான காட்சி ஜோடனைகள் இவர் தயாரிக்கும் நாடகங்களில் சிறப்பம்சமாகும்.
நீறுபூத்த நெருப்பு", "தர்மம் தலைகாக்கும்", "வெற்றித் திருநகர்", "வினை தீர்க்கும் விநாயகன்" முதலிய பல நாடகங்கள் பல ஊர்களில் பல தடவைகள் மேடையேறியவை . நாடகத்துக்குக் கீயூவில் நின்று டிக்கற் பெற வேண்டிய நிலையை இவரது நாடகங்கள் ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. பல நிறுவனங்களின் நிதியுதவிக்காட்சிகளாகவும் இவரது நாடகங்கள் அரங்கேற்றம் பெற்றன.
இவரது பல நாடகங்களுக்குப் பரிசுகளும் பாராட்டுகளும் கிடைத் துள்ளன." சேவை செய்தாலே வாழலாம்"என்ற சமுக நாடகத்துக்கு ஜனாதிபதியின் தங்க மயில் பரிசு கிடைத்தது. "மண் சுமந்த மகேசன்"(மாணிக்க வாசகர் கதை) என்னும் முன்னோடி வீடியோப் படத்தைத் தயாரித்த பெருமையும் இவருக்குண்டு. கிழக்கிலங்கையில் தயாரான முதலாவது வீடியோப் படம் இது என்பது குறிப் பிடத்தக்கது.
மட்டக்களப்புப் பிரதேசத்தைப் பொறுத்தவரை எம். எஸ். பாலு, அன்புமணி, ஆரையூர் இளவல், செ. குணரத்தினம், திமிலைத் துமிலன், திமிலை மகாலிங்கம், நவரட்ணம், ஐ. சிவசுந்தரம், ரீஸ்கந்தராசா முதலியோர் மேடைநாடகங்கள், வானொலி நாடகங்கள் மூலம் இப்பிரதேச நாடக வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர்.
அண்மைக்காலமாக கலாநிதி மெளனகுரு, வெ. தவராசா, பாலசுகுமார் முதலியோர் நவீன நாடக உத்தியில் பல நாடகங்களை மேடையேற்றியுள்ளனர். இந்த வடிவத்தில் கலாநிதி சி. மெளனகுரு "சங்காரம்” முதலிய பல நாடகங்களை எழுதித் தயாரித்தும் மேடையேற்றியும், நடித்தும் புகழ் பெற்றவர். அந்த வகையில் மரபு நாடகத்திலிருந்து ஒரு திசை திருப்பத்தை ஏற்படுத்தியவர் கலாநிதி சி3 மெளனகுரு என்பது குறிப்பிடத்தக்கது. CN
நவீன நாடகத்தின் வரவால் மட்டக் களப்பின் மரபு நாடக வளர்ச்சி பாதிக்கப்பட்டதா என்ற ஆய்வு சுவாரஸ்யமானது. தொலைக்காட்சியின் வரவால் திரைப்படம் பாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு "ஆம்" என்ற திட்டவட்டமான பதிலைக் கூறமுடியும். ஆனால் மரபு நாடகங்களைப் பொறுத்தவரை அவ்வாறு ծռ{D(Լpւջեւ IIT5].
மரபு நாடக வளர்ச்சி தளர்ந்துள்ளது உண்மையெனினும் முற்றாக இல்லாமல் போய்விடவில்லை. அதன் தளர்ச்சிக்கான காரணங்கள் பல. 905ਛੇ சிலவற்றை இங்கே குறிப்பிடுதல் தகும். bm
(1) நவீன நாடகங்கள் தயாரிப்பதைவிட மரபு நாடகங்கள் தயாரிப்பதற்கு தி அதிகமான செலவும் உழைப்பும் தேவை.
(11) முன்புபோல ஆலய நிகழ்வுகளை ஒட்டி திறந்த வெளி அரங்குகளில் நாடகம் நடாத்தக்கூடிய வாய்ப்பு இப்போது இல்லை.
(111) நல்ல முறையில் தயாரித்து மேடை ஏற்றக்கூடிய மரபு நாடக எழுத்துப் பிரதிகள் குறைவாக உள்ளமை.
தமிழகத்திலும் கொழும்பிலும் மரபு நாடகங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. ஈழத்தில் தமிழ்த்தின விழாப்போட்டிகளில் ஓரங்க நாடகங்கள்
KI)

Page 7
இடம்பெறுகின்றன. அதற்கமைவாக மட்டக்களப்பிலும் அவ்வாறான நாடகங்கள் தயாரிக்கப்படுகின்றன. கிராமப்புறங்களில் அவ்வப்போது மரபு நாடகங்கள் மேடையேற்றப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில் அல்பியன் குழுவினர் "றோமியோ ஜுலியற்","ஹாம்லெற்” முதலிய ஆங்கில நாடகங்களை அரசடி தேவநாயகம் மண்டபத்தில் மிக அருமையாக மேடையேற்றினர். இந்தக் குழுவினர் இளைஞர்கள். மிகச் சிறப்பான முறையில் இதைச் செய்கின்றனர்.
நவீன நாடகங்கள் புதிய வரவு என்பதால், இளைய தலைமுறையினர் அதில் ஈடுபாடு கொள்வது இயல்பே. ஆனால் அதன் காரணமாக மரபு நாடகங்கள் இநிராகரிக்கப்படவேண்டுமென்றோ புறக்கணிக்கப்படவேண்டுமென்றோ கூறுவது திபொருத்தமற்றது. LSL S S0 S SS SSSS LSL SSSSSLSSS LL மரபு நாடகங்களுக்கான தேவை இன்றும் இருக்கிறது என்பதற்குச் சிலமுக்கியமான காரணங்களைக் கூறலாம்.
(1) நவீன நாடகங்கள் தோன்றுவதற்கான அடித்தளம் மரபு நாடகங்களே. (2)இன்றும் மரபு நாடகங்களை நாடிச் சுவைப்போர் ஏராளமாக உள்ளனர். (3)நவீன நாடகங்களின் நுட்பங்களைப் புரிந்து சுவைப்போர் புத்திஜீவிகள் 2 மட்டத்திலான ஒரு சிலரே. ஆனால் மரபு நாடகங்கள் சமூக மட்டத்தில்
பெருந்தொகையினரைச் சென்றடைகிறது. 注 (4)நவீன நாடகங்களைவிட மரபு நாடகங்கள்மூலம் வெளிப்படும் செய்தி 3(Message) மக்கள் இதயங்களில் இலகுவாகப் பதிகிறது. அது பிரசார வாடையின்றி
வெளியாகிறது.
(5)கலை இலக்கியம் மக்களுக்காக என்பதற்கமைய மக்கள் விளங்கிக்
கொள்ளும் வகையில் மரபு நாடகங்கள் அமைகின்றன.
( ஓடுநாள் )
அடித்திடுவார் பிரட்டுச் சங்கு அவசரமாய் எழுந்திடணும் ஆக்கிவச்ச பழைய கூழு அவதியோடு குடிச்சிடணும் இருட்டு நேரம் வெளுக்கும் முன்பே பிரட்டுக் களம் போயிடனும் எந்த மலைத்துண்டு என்று பிரட்டில் நின்று வாங்கிடணும் தொடர்ந்து அடிக்கும் காட்டு மழையில் அடர்ந்து நிரை பிடிச்சிடணும் தொணதொணத்த கங்காணியுடன் தொல்லைப் பட்டுச் சாகிடணும் முழுப் பேரு போடு முன்னே மூச்சி நின்னு வாங்கிடணும் இந்த நாள் கழிந்தபோதும் எந்தநாளும் இப்படித்தான்
(6)நவீன நாடகங்களைவிட மரபு நாடகங்களில் உணர்ச்சி வெளிப்பாடும் நடிப்பும் இயல்பாக அமைகின்றன.
(7) மரபு நாடகங்கள் ஜனரஞ்சகமாக அமைவதால் சாதாரண மக்களை அவை பெரிதும் கவர்கின்றன.
இவ்வாறு நோக்கும்போது மரபு நாடகமும் வேண்டுவதே இம் மானிலத் தே எனர் பதை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
மட்டக்களப்புப் பிரதேசத்தில் நாடகங்கள் - குறிப்பாக மரபு நாடகங்கள் எதிர்நோக்கும் சில பிரச்சனைகளை பின்வருமாறு வகுக்கலாம்:
(1) நெறியாள்கை நுட்பங்கள் இன்மையால் கலையம்சம் பிரதி பலிக்காத தயாரிப்புகள்.
(2) காட்சி அமைப்புகளில்
 
 
 

போதிய கவனம் செலுத்தாமை.
(3) சினிமாத்தாக்கத்தினால் நடிப்பிலும் உரையாடலிலும் ஏற்படும் செயற்கைத்தனம்.
(4) போதிய வசதிகள் உள்ள மேடைகள் இல்லாமை. (5) பொருத்தமான ஒலி, ஒளி அமைப்பு வசதிகள் இன்மை. (6) அவசரத் தயாரிப்புகளும் அரைகுறைத் தயாரிப்புகளும். (7) மரபு நாடகத் தயாரிப்புக்கான பயிற்சி நெறிகள் இன்மை. (8) ஆண்களும் பெண்களும் சேர்ந்து நடிப்பதிலுள்ள சமுகப் பிரச்சினை. (9) ஒத்திகைகளுக்கான வசதிக்குறைவு. (10) போதிய ஒத்திகைகள் இல்லாமல் நாடகங்களைத் தயாரிப்பது. (11) பணம் கொடுத்து நாடகம் பார்க்க விரும்பாத சுவைஞர்கள். (12) உள்ளுர் நாடகங்களைவிட வெளியூர் இசை நிகழ்ச்சிகளைப் பணம் கொடுத்துப் பார்க்க விரும்பும் மக்கள்.
இன்றுவரை நாடகங்களுக்கான டிக்கட்டுகளை - அது மரபு நாடகமாக இருந்தாலும்சரி, நவீன நாடகமாக இருந்தாலும்சரி மக்களைத்தேடிச்சென்று அவர்களின் தலைகளில் கட்டியே அவர்களை நாடகத்துக்கு வரவழைக்க வேண்டியுள்ளது. இந்த நிலை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. கடந்த ஐம்பது வருடங்களாக இந்த நிலைமை நிலைத்திருக்கிறது. நமது மக்கள் இலவசமாகப் பார்ப்பதென்றால் பார்ப்பார்கள் இல்லையென்றால் ஒதுங்கிக் கொள்வார்கள். பிரச்சனைகளைக் கூறினால் அதற்குத் தீர்வுகளும் கூறவேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. ஆனால் மட்டக்களப்பின் கலை இலக்கிய முயற்சிகளைப் பொறுத்தவரை இது கொஞ்சம் சங்கடமான காரியமே.
மட்டக்களப்பில் நாடகக் கலைக்கு மட்டுமல்ல, நூல்வெளியீடு, சஞ்சிகை வெளியீடு முதலிய இலக்கிய முயற்சிகளுக்கும் இதே பிரச்சினைகள் உள்ளன. தீர்வுகள் கானல் நீராகவே உள்ளன.
Supply and Demand 676ip GasT LIT going Demand 676ip 9053 நிலைப்பாடு ஏற்படாதவரை, மட்டக்களப்பின் நாடக வளர்ச்சி, இன்றுள்ளR நிலையிலிருந்து மீட்சி பெறுவது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
ஆனாலும் - 6 நாடகக் கலையில் ஆர்வம் உள்ளவர்கள் நாடகங்களைத் தயாரிப்பதும், அரங்கேற்றுவதும் தொடரவே செய்யும். நாடகக் கருத்தரங்குகள் மூலம் புத்திஜீவிகள் மத்தியில் நாடக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளும் தொடரவே செய்யும். இவற்றின் பயன்பாடுகள் பற்றியும் பெறுபேறுகள் பற்றியும் அறியக்கூடிய Feed - Back வசதிகள் இருப்பின், நமது முயற்சிகளின் தாக்கங்களைத் தெரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். 4 + 3 + 4 + 4 + 4 + 4 + 4 + 4 + i + i + 4 + 4 + 4 + 4 + i + i + 4 + 4 + 4 + 4 + 5.
аь өрп656
எம்.பி. நுஃமான்

Page 8
ஆவணவூானி, நடமாடும் தமிழியக்கம்
இரா. கனகரத்தினம்
*வரலாற்றைப் பதிவு செய்து வையகத்தில் தலை நிமிர்வோம்’ என்ற வைராக்கியத்தைத் தாரக மந்திரமாக g s வரித்துக்கொண்டு அமைதியாக ஆனால் ஆழமாகப் பணி 8 யாற்றிக்கொண்டிருக்கிறார் குரும்பசிட்டி கனகரத்தினம். நாற்பதாண்டு காலமாகத் 9தன் அர்ப்பணிப்பைத் தமிழுக்கும், தமிழ் இனத்திற்கும் வழங்கிக்கொண்டிருக்கும் இவர் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கப் பொதுச் செயலாளராகவும், உலகத் தமிழர் ஆவணக்காப்பகப் பொறுப்பாளராகவும் செயற்பட்டு வருகிறார். தமிழுக்காக 9集 உயிர் கொடுப்பதைவிட தமிழுக்கு உயிர் கொடுப்பது அவசியமென உணர்ந்து தனது விடாமுயற்சியினால் எண்ணாயிரத்திற்கு மேற்பட்ட தகவல்களைத் திரட்டி பக்குவமாய் சேமித்து வைத்துள்ளார். தனிமனித சேமிப்புகள் தமிழருக்கு நிரந்தரமான Sஆவணக்காப்பகமாகத் திகழும் என்று தீர்க்க தரிசனத்துடன் அன்று செயற்பட்ட 3இவரது முயற்சியைப் பார்த்த தமிழ் அறிஞர் மு. கருணாநிதி தமிழினத்திற்கு
ஒரு புதையல்” இவரெனப் பாராட்டியுள்ளமை அர்த்தம் நிறைந்தது.
இன்று முன்மாதிரியாகத் திகழ வேணர்டிய கல்வித்துறையில் இலங்கைத்தமிழ் மக்களது வரலாறு இருட்டடிப்புச் செய்யப்படுகிறது. இலங்கையின் வரலாறு என்பது சிங்கள மக்களின் வரலாறே என்ற ரீதியில் பாட நூல்களில் காட்டப்படுகிறது. இலங்கையில் முதலில் குடியேறியவர்கள் சிங்களவர்களே என்று வரலாறு கூறுவதாக எழுதப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இரா. கனகரத்தினத்தின் தேடல்களும் பதிவுகளும் எத்துணை முக்கியமான தடயங்கள் என்பதை தமிழபிமானிகள் உணர்ந்து கொள்வது அவசியம். 1974ல் உலகத்தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடந்தபோது இவரது காப்பகத்தின் உருப்படிகளைப் பார்வையிட்ட தந்தை செல்வநாயகம் வரலாற்றுப் பதிவுகளைச் சுமந்து நிற்கும் சுமை தாங்கி இரா. கனகரத்தினம்" என்று கூறியதையும் இங்கு நோக்குவது சிறப்பானதாகும் இன்னும் வரலாற்றைத் திரித்து, தேசிய ஆவணக் காப்பகத்தில் தமிழுக்கு உரிய இடம் கொடுக்கப்படாத நிலையில் இரா. கனகரத்தினம் அவர்களது உலகத்தமிழர் காப்பகமானது விடிவெள்ளியாகத் திகழ்கிறது. இந்நிலையை உணர்ந்துகொண்ட கவிஞர் கண்ணதாசன் "வழிகாட்டும் ஒளிக்கற்றைகள்” என இவரது பங்களிப்பைப் புகழ்ந்துள்ளார்.
தமிழினத்தின் ஆரம்ப கால வரலாற்றைத்தான் பதிவுசெய்யாமல் விட்டு விட்டோம், நிகழ்கால வரலாற்றையாவது பதிவு செய்து எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்குவோம். என்ற நல்லெண்ணமே 1956ல் ஆவணக் காப்பகத்தை அறிமுகம் செய்ய இவரை ஊக்குவித்தது. பள்ளிப் பருவத்திலே சரித்திர ஆசிரியர் ஒருவர் ஆதங்கத்துடன் வரலாறற்ற இனமாகிவிட்ட தமிழினமெனக் குறிப்பிட்டபோது இவரது பிஞ்சு மனத்தில் அது ஆழமாகப் பதிந்து விட்டது. அன்றிலிருந்து சஞ்சிகைகள், ஆண்டுமலர்கள், கையெழுத்துப் பிரதிகள், இன்றைய மொழி பண்பாட்டு நிலைமைகளைப் பிரதி பலிக்கும் புகைப்படப் பிரதிகள், ஒலிப்பதிவு நாடாக்கள், சிறப்பாக நீண்டகாலப் பத்திரிகைகள் முதலிய பயன்மிக்க
 
 
 

தகவல்களைச் சேகரித் துள்ளார் இந்த ஆவண ஞானி. உணர்மையிலே
தானே சென்று தேடித்
தெரிந்து ஒழுங்குபடுத்தி ஆய்வாளர்களுக்கும் - படிப் பாளர்களுக்கும் கணனி போன்று தகவல்களைத் தெரிவிப்பதைப் பார்க்கும் போது நடமாடும் தமிழ் நூலகம்’ எனவும் பாராட்டி
யது தகும் எனக் கூறத்
தோன்றுகிறது. வெளிநாடு களில் தமிழும் தமிழினமும் அழிந்துகொண்டு போகின்
றன. அங்கு பெயர்தான் தமிழாக இருந்ததே தவிர
அந்தப் பெயரைத் தாங்கியவரோ வேறுமொழி பேசி (தமிங்கிலம்) வேறு கலை கலாசாரங்களுக்குத் தன்னை அர்ப்பணித்து வரு கிறாரென இந்த ஆவண
ஞானியும் கலிங்கித்தான் போகிறார். இந்நிலையிலும் உலகத் தமிழரின் பாது காப்பை உருவாக க உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தை ஸ்தாபித்து
அதன் பொதுச் செயலாள் ராகப் பணியாற்றுகிறார். இன்றைய செய்தி நாளைய வரலாறு என்ற அநுபவத் தோடும், ஆசியாவின் தலை சிறந்த நூலகமாகத் திகழ்ந்த யாழ் நூலகத்தின் ( நீதி
தேவனின் அகால மரணம்) அழிவின் தாக்கத்தினாலும் இனி இப்படியொரு இழி நிலை வரக்கூடாதென முன் னேற்பாட்டோடு நுண் படச்
di (56i ( Micro film 5. என்னும் நவீன தொழிநுட்ப முறையை மேற்கொண்டுள் 6mrf,
ஒ. கே. குணநாதனின் மூன்று கதைகள் கே. எஸ். சிவகுமாரனர்
சுதந்திரம்/வீரஆனந்தன் - ஓ.கே.குணநாதன் 64, கதிர்காமர் விதி, அமிர்தகழி, மட்டக்களப்பு-1995
"சுதந்திரம் என்பது ஒரு இனத்துக்கோ, மனிதருக்கோ மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகளுக்கும் தேவை. அநீதியும் அட்டுழியமும் அழிந்து, நீதியான சுதந்திரம் என்னும் விடுதலை இலக்கை அடையும் வரை ஓயோமல்லோம்.” என்று "சுதந்திரம்” என்ற கதையில் வரும் இரு பாத்திரங்கள் கூறவதாக ஆசிரியர் கதையை முடித்திருக்கிறார். ஆசிரியர் ஓ.கே. குணநாதனின் எண்ணமும் இதுதான் எனலாம். சிறுவர்க்கான கற்பனைக் கதை எனினும், வனவிலங்குப் பாதுகாப்பையும், அச்செல்வங்களின் பாதுகாப்பையும் வலியுறுத்தும் கதையாக ஆசிரியர் புனைந்திருக்கிறார். கற்பனை அதீதமாக அமைந்த போதிலும், சிறுவர்களின் கற்பனை விழிப்புக்கு இக்கதையும் உதவுகிறது.
இதேபோன்று, "வீர ஆனந்தன்" கதையையும் விபரிப்பது பொருத்தமானது. சிறுவர்கள் இது போன்ற
கதைகளைத் தமது இளமைக்காலத்தில் விரும்பி ரசிப்பது
இயல்பு. அவர்கள் முழுக்க முழுக்க யதார்த்தம் சார்ந்த கதைகளைப் பின்னரே தேர்ந்தெடுப்பர். ஆரம்பக் கட்டங்களில் வாசிப்புப் பழக்கத்தை அவர்களிடையே ஏற்படுத்த இத்தகைய கதைகள் உதவுபவை.
எஸ். எதிர்மன்னசிங்கம் கூறியிருப்பதுபோல, "இச்சிறுவர் நூல் சமுதாயத்தைத் திருத்தவேண்டும்3 மக்களை நல்வழிப்படுத்த வேண்டுமென்ற பெருவிருப்பைR உள்ளடக்கியது” மாயக்கிழவி - 1996 6 "உலகில் கள்ளச் சந்தை பெருகி இன்று சிறுவர்களின்தி கண்கள், சிறுநீரகங்கள்கூட கள்ளச் சந்தையில் 28 விலைபோகின்றன. அப்படியான அநியாயம் செய்யும் மனிதர்களும் எம்மத்தியில் வாழத்தான் செய்கிறார்கள். ' அந்த மனித இரக்கமற்ற இராட்சத இதயங்கொண்டவர்.e களின் கையில் அகப்பட்ட சிறுவர்களின் கதைதான் 5 இக்கதை என்கிறார் ஆசிரியர் ஓ.கே. குணநாதன்.
ஆசிரியர் பல பரிசுகளைப் பெற்ற உற்சாகமுள்ள9 ஓர் எழுத்தாளர். மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இவர் மெய்வல்லுனருடன், சமூக சேவகருமாவர். இளைஞர்
சேவைகள் மன்ற அலுவலர்.
இவருடைய மாயக்கிழவி', சிறுவர் மிகவும் விரும்பும் வீரதீரச்செயல்கள் நிரம்பியது. மிகவும் சுவாரஸ்யமாக ஆசிரியர் கதையைத் துரிதமாக எடுத்துக் கூறுகிறார். ஆசிரியரின் ஆற்றல் பல இடங்களில் தென்படுகிறது.
(5)

Page 9
இ ல் தி.ஞானசேகரன்
།ས། س/5
| * இலக்கியமே தனது மூச்சாக கடந்த ஐம்பத்து மூன்று வருடங்களாக
இயங்கிவரும் ஈழத்தின் மூத்த தலைமுறைப் படைப்பாளி.
8| * சாதியத்திற்கு எதிராகவும், உழைப்பாளி வர்க்கத்தின் உயர்விற்காகவும்
3 தனது பேனாவைப் பயன்படுத்திய ஓர் இலக்கியப் போராளி. இலங்கை
巴 முற்போக்கு அணியின் மிகவும் முக்கியம் வாய்ந்த உறுப்பினர். மனித
Nd நேயமிக்க பணியாளன்.
3 x முதன்முதலாக இலங்கை சாகித்திய மண்டலத்தின் பரிசினை (தனது
C) தண்ணிரும் கண்ணிரும் என்ற சிறுகதைத் தொகுதியிற்குப்) பெற்றவர்
மிென்ே
6. சந்திப்பு: :
என்ற பெருமைக்குரியவர். * முப்பத்தைந்து வருடங்களாக மல்லிகை சஞ்சிகை மூலம் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியதோடு எழுத்தாளர் பலர் அதில் உருவாகி வளர்வதற்கும் களம் அமைத்துக் கொடுத்தவர் * மல்லிகைப்பந்தல் என்ற நூல் வெளியீட்டு நிறுவனத்தின் மூலம் ஈழத்துப்
படைப்பாளிகள் பலரின் நூல்களை வெளிக்கொணர்ந்தவர். * இலங்கை இந்திய இலக்கியப் பாலமாக இருந்து ஈழத்து
இலக்கியத்திற்காக குரல் கொடுத்த இலக்கியப் பிரசாரகர். * இவரது சிறுகதைகள் பல சிங்கள, ஆங்கில, ரஷ்ய, செக் மொழிகளில் \ மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 4ހ
சமகால ஈழத்துப் படைப்புகள் பற்றிய தங்களது கணிப்பு என்ன? டொமினிக் ஜிவா:
இரண்டு விதமான ஈழத்துப் படைப்புகள் என்று நான் பார்க்கிறேன். ஒன்று 60 70களுக்கு உட்பட்ட படைப்புகள். மற்றது 60-70க்குப் பின் வந்த படைப்புகள். மூன்றாவதாகவும் ஒன்றை நாங்கள் சேர்த்துக் கொள்ளலாம். அது புலம் பெயர்ந்த இலக்கியப்படைப்பு.
60-70 காலப் போராட்டம் என்பது எங்களது காலப் போராட்டம். அது இந்த நாடு, எங்களது ஈழத்துத் தனித்துவ இலக்கியம், மண்வாசனை, எங்களுடைய பாத்திரங்கள், சம்பவங்கள், எங்களுடைய வாழ்க்கைமுறை எங்களுடைய படைப்பில் வரவேண்டும். அதுதான் மண்வாசனைப் போராட்டம் என்று முற்போக்கு எழுத்தாளர்கள் குறிப்பிடுவது. அடுத்தது தேசிய இனங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாட்டால் ஒரு வகையான இனவாதத் தன்மைகள் வந்த ஒரு காலகட்டம். அதில் சரியும் இருக்கிறது, பிழையும் இருக்கிறது. நம்முடைய மொழி, நம்முடைய கலாசாரம், நம்முடைய தேசத்தின் இருப்பு
 

போன்றவைகளை நிலை நிறுத்துவதற்கான ஒரு தேசிய சிறுபான்மை இனப்போராட்டம் ஒரு பண்பு.
இன்னொரு வகை தேசிய இனப் போராட்டம் என்ற வகையிலே பேரின வாதமும் சிற்றின வாதமும் மோதிக்கொள்கிற ஒரு பண்பு. இந்தப் பேரின வாதம் செய்கிற அதே தவறைத்தான் சிற்றின வாதமும் இனவாதமாகச் செய்கிறது. சிற்றினவாதம் நசுக்கப்பட்டது, சிற்றன வாதத்திற்குக் கஷ்டம் இருந்தது, சிற்றின வாதத்திற்குப் பிரச்சனை இருந்தது. ஆனால் பரஸ்பரம் துஷேத்தை வளர்த்து, பரஸ்பரம் எதிர்ப்பை வளர்த்து , பரஸ்பரம் காறித்துப்பி நாங்கள் இந்த நாட்டில் ஒரு புதிய சமுதாயத்தை ஏற்படுத்த முடியாது. இதில் இந்த இரண்டாவது விதமான ஆளுமைக்கு உட்பட்டவர்கள் 70-80களில் வந்தவர்கள். இவர்கள் தமிழ் உணர்வு மிக்கவர்கள். தமிழுக்கு ஏற்பட்ட அநீதிக்கு, அக்கிரமங்களுக்கு எதிராகப் போராடவேண்டும் என்ற மனவலிமை மிக்கவர்கள். அதைத் தமது பேனாவால் செய்தார்கள். ஆனால் அவர்களுக்குத் தத்துவப் பார்வை இல்லை. இந்த உணர்வுகள், இந்த வெறியான ஆவேசங்கள் ஒரு குறிப்பிட்ட கால கட்டம் வரையும்தான் உயிர்வாழும். படைப்பு என்பது காலம் காலமாக உயிர்வாழ வேண்டும். உதாரணமாக திராவிட நாடு என்ற கோரிக்கையை பெரியார் வைத்தார்; அண்ணாத்துரை கொண்டுவந்தார். அதில் வெறிபிடித்த மாதிரியான இளைஞர்கள், கவிஞர்கள், சினிமாத் தயாரிப்பாளர்கள் எல்லாம் முன்வந்தார்கள். திடீரென திராவிட நாடு எங்கள் கோரிக்கை அல்ல என்றவுடன் அவ்வளவும் வத்திப்போச்சு. ஏனென்றால், இந்திய நாட்டு அரசியல் சூழ்நிலையில் அதற்குமேல் அவர்களால் கொண்டுசெல்ல முடியவில்லை. இங்கும் இனவாதம் நீண்ட காலத்திற்குத் தாக்குப்பிடிக்காது. ஏனென்றால் இனவாதத்தில், தமிழ் இனவாதத்திலும்சரி சிங்கள இனவாதத்திலும்சரி எந்தவிதமான ஆரோக்கியக் கூறுகளும் இல்லை. ஆனால் தமிழ் இனவாதத்தில் ஒரு அலையாத நியாயம் இருக்கிறது. நாங்கள் நசுக்கப்பட்டவர்கள், அடக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள். எப்படி தலித்துக்கள் தாங்கள் ஒடுக்கப்பட்டபோது போராடினார்களோ அதுமாதிரி தமிழர்கள் இந்த நாட்டில் நசுக்கப்படும்போது போராடுவது நியாயம் போராடுவது எழுத்தாளனது கடமை. ஆனால் மிக நுட்பமாக அந்தப் பிரச்சனையை முன்னுக்குக் கொண்டு செல்லவேண்டும். இல்லையென்றால் அவனது படைப்பு வெறும் துவேஷப் படைப்பாக இருக்குமே தவிர ஒரு ஆரோக்கியமான படைப்பாக இருக்காது. தி. ஞா: சிங்களம் மட்டும் தேசிய மொழியாக இருக்கும் நமது நாட்டில் தமிழில் தேசிய இலக்கியம் படைப்பது எத்துணை சாத்தியமானது? டொமினிக் ஜிவா:
இந்த நாட்டில் உயிர்ப்புள்ள ஒரு இனம் இருக்குமட்டும் ஒரு மொழியை அழிக்கமுடியாது. காலத்துக்குக் காலம் அரசியல்வாதிகள் தங்களுடைய மொழியை, தங்களுடைய கலாசாரத்தை, எங்கள்மேல் திணித்தார்கள். எங்களை மூன்று பேர் ஆட்சி; செய்தார்கள். போர்த்துக்கீசர், டச்சுக்காரர், வெள்ளைக்காரர் இந்த மூவரும் தங்களது: மொழியை மாத்திரமல்ல, கலாசாரத்தை மாத்திரமல்ல, தங்களது மதத்தைக்கூட எங்கள்மேல் டு திணித்தார்கள். ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு விடுதலை கிடைக்குமென்று நம்பி கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள். ஆனால் காலப்போக்கில் மதம் மாறியவர்களே அந்தச் சாதி அமைப்பிற்குள் உட்படுத்தப்பட்டார்கள். இந்த நாட்டில் கடந்த முன்னூறு வருடங்களில் ஏற்பட்ட நிகழ்ச்சி இது. அரசாங்கங்கள் சட்டங்களைக் கொண்டுவருவதால் ஒரு மொழி அழியுமென்றால் அந்த மொழி வீரியமற்ற மொழியாக இருக்கவேண்டும். எங்களுடைய மொழி பல்வேறு கொடுமைகளையும் அநீதிகளையும் அக்கிரமங்களையும்
()
33

Page 10
தாங்கிப் பிடித்து வந்த மொழி ஆனபடியால் இந்தச் சட்டங்களால் எங்களுடைய மொழியை அழித்துவிட முடியாது. ஆனால் போராட வேண்டும். இந்த நாட்டில் எங்களுக்கு உரிமை இருக்கிறது, மொழிக்கு உரிமையிருக்கிறது, எங்களுடைய மொழிக்கு அந்தஸ்த்து இருக்கிறது, என்று போராட வேண்டும். சட்டங்களால் ஒரு மொழியை அழிக்கவும் முடியாது. ஒரு எழுத்தாளனை அமுக்கவும் முடியாது என நான் நினைக்கிறேன். தி ஞா: புகழ் பெற்ற எழுத்தாளர்கள் பலர் முற்போக்கு எழுத்தாளர்களாக அரும்பி பின்னர் மாறுவதன் காரணமென்ன? உதாரணம், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, கிே. ராஜநாராயணன், எஸ். பொ.
டொமினிக் ஜிவா: 5. முற்போக்கு என்பது ஒரு இரும்புச் சட்டகமல்ல. ஒரு அடைப்புக்குள்ளேதான் ஒரு சிந்தனையாளனின் எண்ணம் இருக்கவேண்டுமென்பதல்ல. உலக முற்போக்கு எழுத்தாளர்கள் பலர் பலவிதமான கருத்தோட்டங்களைத் தங்களுடைய வளர்ச்சிக்காலத்திலும், தங்களுடைய சமூக மாற்றக் காலத்திலும் பல அடிப்படையான ஜ் விஷயங்களில் கொண்டிருந்தார்கள். முற்போக்கு என்பது ஒரு சட்டத்துக்குள்ளே 2நிற்பதென்றால் இலக்கியம் வளராது, சிந்தனை வளராது, கருத்து வளராது. ஆனால் முற்போக்கு என்கிற அடிப்படைக் கருத்துக்களை மீறுகின்றவர்கள் என்னசொன்னாலும் Sமுற்போக்கு இயக்கத்துக்குள் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. 용 இரண்டாவது, முற்போக்கிலிருந்து இரண்டு விதமானவர்கள் வருவார்கள். முற்போக்குக் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்பவர்கள் ஒருசாரார். மற்றவர்கள் முற்போக்குக் கருத்துக்களைக் கொச்சைப் படுத்துபவர்கள்; நளினப்படுத்துபவர்கள்; நக்கல் செய்பவர்கள். இவர்கள் தங்களுடைய வளர்ச்சியையே நிராகரிப்பவர்கள். தங்களுடைய ஆரம்பகால நண்பர்களை, ஆரம்ப கால இலக்கியத்தை, மறந்தவர்கள். தாங்கள் பிறந்து வளர்ந்த சமுகத்தை, இன சுற்றங்களை, அவர்கள் செய்த போராட்டங்களை மறந்தவர்கள். அவர்களுடைய உழைப்பில் வாழ்ந்து, படித்து , அதில் இருந்து மாறுதல் அடைந்ததாக பெரும் மனிசனாகக் காட்டிக்கொள்கின்ற போலித்தனம் இலக்கியப் போலித்தனம்; சத்தியம் இல்லாதது. இவர்கள் தன்னை வெளிப்படுத்தாமல், தன்னைத் தெரியப்படுத்தாமல், தான் யாரென்று சொல்லாமல், தான் பிறந்த குலத்தில் இருக்கும் சிந்தனையாளர்களை நிராகரிப்பவர்கள். அந்தச் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்பவர்களை நிராகரிப்பவர்கள் டானியல் போன்றவர்களை கிண்டல்படுத்துபவர்கள், நக்கல் படுத்துபவர்கள். இவர்களுடைய முற்போக்கு இத்தகையதுதான். வேறுபட்ட கருத்துக்களால் மாறுபட்டால் பரவாயில்லை. மாறுதல் என்பது இரண்டு விதமானது. ஒன்று, ஆரோக்கியமான திசையை நோக்கித் தன்னை வளர்த்துக் கொள்வது. அதற்கு முற்போக்கு ஈடு கொடுக்கும். மற்றது முற்போக்கைக் கொச்சைப் படுத்துவது. இது, தான் வளர்ந்த பாதையையே நச்சுப் படுத்துகிறது. இப்படிப்பட்டவர்களின் போக்கு, தன்னைப் பெற்ற தாயையே பொது இடத்தில் தாயில்லை என்று சொல்வதற்குச் சமமானது. தி ஞா: டானியல், சாதி அமைப்பில் ஒடுக்கப்பட்டோர் அநுபவித்த இன்னல்களை, ஒருகாலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை பின்னொரு காலகட்டத்திற்கு உரியனவாக தெளிவற்ற நிலையிலே எழுதினார் எனக் கூறப்படுகிறதே. இதுபற்றி சாதியத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? டொமினிக் ஜிவா:
டானியல் என்பது டானியல் என்ற தனிமனிதனல்ல. டானியல் ஒரு பாரம்
 

பரியத்தில் ஒரு பரம்பரையில் வந்து, முகிழ்ந்த ஒரு பேனா பிடித்த கலைஞன். இப்படிப் பார்க்கும் போது நாங்கள் வாழ்கிற அந்தக் காலகட்டமல்ல முக்கியம். இது ஒரு வகையான டானியலைக் கொச்சைப் படுத்துகின்ற கருத்து. எங்களுக்கு இன்றைக்கல்ல, தமிழுக்கு எப்படி இரண்டாயிரம் வருடப் பாரம்பரியம் இருக்கிறதோ அவ்வாறே தலித்துகளுக்கும் ஒரு இரண்டாயிரம் வருட வரலாறு இருக்கிறது. எனவே பாரம்பரியத்தைச் சொல்லித்தான் வரவேண்டும். உதாரணம் இன்றைய தமிழ்நாட்டு எழுத்தாளர்கள், சுதந்திரம் பெற்று ஐம்பது வருடங்கள் கழிந்தபின்பும், அவர்கள் சுதந்திரம் கிடைத்த பின் பிறந்திருப்பினும், சுதந்திரப் போராட்டத்தைத் தமது கதைகளில் கவிதைகளில் கொண்டுவருகிறார்கள். மொழி இனம் கலாசாரம் என்று பார்க்கும்பொழுது தலித்துகள் ஒரு பாரம்பரியத்தைக் கொண்டவர்கள். நாங்கள் நந்தனாரில் இருந்து தொடங்குகிறோம். நந்தன்தான் எங்களது மதக் குறியீடு. அப்படிப் பார்க்கும்போது டானியல் பழசைக் கூறும்போது, பழசினுடைய அடியாதாரமாகத்தான் எங்களுடைய போராட்டங்கள் முகிழ்ந்தன என்று சொல்லுகிறாரே தவிர அவர் காலத்தைக் குழப்பவில்லை. அவர் தனது சிறுகதைகளிலோ நாவல்களிலோ அந்தச் சம்பவங்கள் அறுபதுகளில் நடந்தன என்று குறிப்பிடவில்லை. அவர் கொண்டுவரும் ஞானமுத்து என்ற பாத்திரம் சுவாமி ஞானப்பிரகாசரைக் குறிக்கும் பாத்திரம். ஞானப்பிரகாசர், டானியல் எழுதிய காலத்திலிருந்து எண்பது வருடகாலத்திற்கு முன்பு வாழ்ந்தவர். அப்பொழுது கிறிஸ்தவ மதம் எப்படித் தமிழர்கள் மத்தியில் ஊடுருவியது என்று சொல்லும்போது அதனை முப்பதுகளின் பின்னணியிலேதான் சொல்லலாம். இப்படி முப்பதுகளின் பின்னணியில் தெளிவாகச் சொல்லியதை, டானியல் காலத்தைப் புரட்டுகிறார் என்று கூறமுடியாது. தி.ஞா: புதுக்கவிதை பூடகமாக எழுதுவதுதான் சிறப்பு என்ற நிலைபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? டொமினிக் ஜிவா:
இது எங்களுடைய சரக்கு அல்ல. எங்களுக்கு ஒரு நீண்ட கால மரபு இருக்கிறது. திருவள்ளுவர் காலத்திலிருந்து வந்து, நாவலர் காலத்துத் தமிழில் வந்தவர்கள் நாங்கள். இப்போது தென் அமெரிக்க நாடுகளிலிருந்து ஒரு புதுவிதமான கருத்து இங்கு வந்திருக்கிறது. எந்தக் கருத்தும் தமிழுக்கு வரட்டும். அது பிழையல்ல. மொழி வளரும்போது: கருத்துகள் வரும். ஆனால் அடிப்படைக் கருத்து மாறக்கூடாது. ஏனென்றால் யாருக்கு எழுதுகிறோம், எவர் விளங்க வேண்டும், எவர் விளங்கினால் நல்லது விளங்கிறவர்களுடைய வாழ்க்கை முறை எப்படி மாறும், வாழ்க்கைமுறை மாறினால் அவருடைய சமுதாயத்தில் இலக்கியத்திற்குரிய பங்கு என்ன என்றெல்லாம் சிந்தித்துத்தான் எழுத வேண்டும். இந்த, பூடகமாக எழுதுகிறவர்கள் புதுவிதமாக விளையாட்டுக் காட்டுகிறார்கள். இவர்கள் மக்களை மறந்ததுபோல மக்களும் இவர்களை மறந்துவிடுவார்கள். இதுதான் விளங்காத எழுத்து எழுதுகிறவர்களுக்கு நான் சொல்லுகிற பதில்.

Page 11
(3)
R
தி.ஞா: எண்பதுக்குப்பின் வெளிவந்த ஈழத்து இலக்கிய முயற்சிகள் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு மதிப்பீடுகளும் விமர்சனங்களும் புத்திபூர்வமாக மேற்கொள்ளப்படவில்லை. விமர்சகர்கள் ஒரு சில படைப்பாளிகளின் பெயர்களையே ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? டொமினிக் ஜீவா:
சமீபத்தில் நான் தமிழ் நாட்டுக்குச் சென்றபோது எனக்கு ஒரு கருத்துச் சொல்லப்பட்டது. "உங்களுடைய நாட்டில் ஒரு மிகப் பெரிய அபாயகரமான நிலைமை உருவாகிக்கொண்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் அதைப்பற்றி நீங்கள்
5.சந்தோஷப்பட்டிருக்கலாம். ஆனால் பிற்காலத்தில் அதனால் ஏற்படுகின்ற விளைவுகளை
நீங்கள்தான் அநுபவிக்க வேண்டிவரும். மேலும், நீங்கள் புளிய மரம் ஒன்றை வளர்க்கிறீர்கள். இது ஆரம்பத்தில் சின்னமரமாக இருக்கும்போது உங்களுக்குச் சந்தோஷமாக இருக்கும். ஆனால் பிரமாண்டமாக வளர்ந்தால் அதற்குக் கீழே எந்த மரக் குருத்துகளும் வெளிவராது; அழிந்து போகும். அது மாதிரி நீங்கள் மிகப் பிரபலமான விமர்சகர்களை இலங்கையில் திரும்பத் திரும்பச் சொல்லி உற்சாகப் படுத்துகிறீர்கள். அதற்குக் காரணம் தமிழ் நாட்டை முறியடிப்பதற்கு, அல்லது தமிழ்நாட்டைவிட உங்களிடம் அறிஞர் குழாம் இருக்கிறது, தமிழ் நாட்டைவிட உங்களிடம் விமர்சகர்கள் இருக்கிறார்கள் என்கிற சுயதிருப்திக்காகச் சொன்னாலும்கூட, உலகத்தில் வேறு எங்கும் நடக்காத ஒரு அதிசயம் இலங்கையில் நடக்கிறது. விமர்சகர்கள் முன்னிருத்தப்படுகிறார்கள். இதில் வெகு கவனமாக இருக்க வேண்டும். அதிலும் இந்த விமர்சகர்கள் பட்டம் பதவியோடு வரும்போது உங்களுக்கு இரண்டு ஆபத்துக்கள் வரும். பட்டம் பதவியோடு வருபவன்தான் சிறந்தவன் என்றும், விமர்சகன்தான் உயர்ந்தவன் என்றும் வரும்போது, படைப்பாளி பின் தள்ளப்படுகிறான். படைப்பாளி பின்தள்ளப்பட்ட மொழி எப்பொழுதுமே பின்தள்ளப்பட்ட ஒரு மொழியாகத்தான் இருக்கும். எந்த மொழியிலும் படைப்பாளிதான் முன்னுதாரணமாகக் கவர்கிறான். இது இலங்கை இலக்கிய உலகில் இன்று காணப்படும் மிகப் பெரிய பலவீனங்களில் ஒன்று” என்று கூறினார்கள்.
இதற்கு நாங்களும் உடந்தையாகத்தான் இருந்து வந்திருக்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள் விமர்சகர்களாகவோ, கல்விமான்களாகவோ எங்களிடம் வந்தவர்கள் அல்ல. அவர்களும் சமகாலத்தில் எங்களோடு நின்று போராடி, எங்களோடு அடிபட்டு, கூழ்முட்டை அடிச்சு இப்படியெல்லாம் வந்தவர்கள்தான். ஆனால் இன்றைக்குப் பார்க்கும்போது, இந்த விமர்சன அதீத ஆதிக்கம் எங்களை ரெம்பவும் பலவீனப்படுத்துகிறது என்று நான் நினைக்கிறேன். ஆனபடியால் இந்த நிலைமையை முறியடிப்பதற்கு எழுத்தாளர்கள் தெளிவாக இருக்கவேண்டும். தி.ஞா: அப்படியானால், நம்நாட்டு இன்றைய விமர்சகர்கள் பற்றி நீங்கள் எவ்வாறு கணிக்கிறீர்கள்?
 
 
 

டொமினிக் ஜூவா:
நான் ஒரு காலத்தில இந்த விமர்சகர்களை ரெம்பவும் மதித்தவன். காரணம், எங்களைப் போன்ற பின்தள்ளப்பட்ட, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, பகுதியிலிருந்து வந்தவர்களை, அவர்கள் எங்களுடைய சமகாலத்தவர் என்ற முறையில் எங்களுக்கு ஒரு முக்கியமான பாதுகாப்புக் கவசமாக இருப்பார்கள் என நான் எண்ணினேன். அது கைலாசபதியின் மரணத்துடன் எனக்கு அற்றுப்போய்விட்டது. இன்றைய விமர்சகர்களைப் பார்க்கும்பொழுது இப்படியானவர்களுடன்தானா நாங்கள் போராட்டம் நடத்தினோம் என்று அதிசயமாய் இருக்கிறது. தங்களுடைய தளத்தையும், பார்வையையும், வீச்சையும் மாற்றத்தின் உட்பார்வை என்று சொல்லிக்கொண்டு வந்த இவர்கள், யாழ்ப்பாணத்தில் ஒரு கருத்து, மட்டக்களப்பில் ஒருகருத்து, கொழும்பில் சிங்களக் கலைஞர்கள் மத்தியில் ஒருகருத்து, சென்னையில் ஒரு கருத்து , சிங்கப்பூரில் ஒரு கருத்து, இலண்டனில் ஒரு கருத்து, அங்காலை கனடாவில் ஒரு கருத்துக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியான தடம்புரண்ட, தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள முடியாத அளவுக்குக் காலத்துக்குக் காலம் இடத்துக்கு இடம் தமிழருக்குத் தமிழராய், சிங்களவருக்குச் சிங்களவராய் இங்கிலிஸ்காரனுக்கு இங்கிலிஸ் காரனாய், மட்டக்களப்பானுக்கு மட்டக்களப்பானாய் தடம்புரளுகிறவர்களைப் பார்க்கும்போது அவர்கள்மேல் பரிதாபம்தான் வருகிறது. மனிதன் வளரவேண்டும், சிந்தனை வளர வேண்டும், விமர்சனம் வளரவேண்டும், விமர்சனப்பார்வை விரிய வேண்டும். அதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் சம்பந்தப் பட்டவர்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது இவர்கள் வெடிச்சுப்போன பட்டாசு என்றுதான் நான் நினைக்கிறேன். சரக்கு இல்லை. இந்த அளவுக்குத்தான் இவர்களைப் பற்றிய மதிப்பீடு எனக்கு இருக்கு. தி. ஞா: ஒரு எழுத்தாளன் ஒரு அணியைச் சார்ந்திருப்பதால் அவனுக்கு அந்த அணியின் ஆதரவும் உடனடியான ஒரு வாசகர் கூட்டமும் கிடைத்துவிடுகிறது. இப்படியாகத் தனது எழுத்துக்கு அங்கீகாரம் பெறுவது சரியானதா அல்லது அணிசேராது தனது எழுத்தின் பலத்தால் வாசகர் மத்தியிலே அங்கீகாரம் பெறுவது சரியானதா? டொமினிக் ஜிவா: en
இரண்டுவிதமாக இதனைப் பார்க்கலாம். அணியென்பது ஒன்று. தத்துவார்த்த நெருக்குவாரம் என்பது இன்னொன்று. யதார்த்த வாழ்க்கையில் பார்த்தால் ஓர் உண்மைே தெரியும். நமக்கு நெருக்கமானவர்கள் யாரென்றால் நம்மோடு ஒத்துப் போகிறவர்கள்தான். s அணி என்பது ஒரு கூட்டு; குழு. தத்துவார்த்த இணைப்பு என்பது ஒரு சங்கமம். அணியும் சங்கமமும் ஒன்றல்ல. நான் சொல்கிறேன், முற்போக்கு இயக்கம் 60, 70, 80 களில் செய்த சாதனைகள்தான் இந்தக் கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்கவைக்கிறது. இல்லையெனில் கல்கி குமுதம், ஆனந்தவிகடனைப் பற்றித்தான் கேட்டுக் கொண்டிருப்பீர்கள் மல்லிகைக்கு வந்திருக்க மாட்டீர்கள். இன்று நீங்கள் நாவலாசிரியராக இருக்கிறீர்கள் என்றால், அதற்குக் காரணம் இதுதான். சாகித்திய மண்டல நாவல், சிறுகதை, கவிதை பரிசுகள் வழங்கப்படுகிறதென்றால் அதற்கான போராட்டத்தை நடத்தியவர்கள் நாங்கள். கிராமம் கிராமமாய் நாங்கள் இலக்கிய இயக்கம் நடத்தியவர்கள். வெறும் பேனாக்களை வைத்து நாங்கள் விளையாடவில்லை. ஒவ்வொரு ஊருக்கும் கல்லூரிக்கும் வாசிகசாலைக்கும் போனவர்கள் நாங்கள். எங்களுக்கு வாகனம் இருக்கவில்லை; "சைக்கிள் தடி' மாத்திரம்தான். அதில் ஊர் ஊராய் திரிஞ்சனாங்கள். ஒன்றை நீங்கள் நம்ப வேண்டும், நாங்கள் இயக்கத்தில் இருந்தாலும் யாரையும் புறந்தள்ளி விடவில்லை. மனித இனத்துக்குச் சேவை செய்கின்ற, எங்களுடைய பலவீனங்களையும் களைந்து நாங்கள் முன்னுக்குப் போகின்ற,
(2)

Page 12
எங்களுடைய நாட்டு இலக்கியத்தை உலக நாட்டு இலக்கிய தரத்திற்கு உயர்த்துகின்ற, அந்த உணர்ச்சி இருந்தால் நாங்கள் அத்தனைபேரும் ஒன்றுசேரலாம். தி. ஞா: புரிந்துகொள்ளச் சிரமமாக இருக்கும் ஆக்கங்களைத் தாங்கி வரும் சஞ்சிகைகளே தரமான சஞ்சிகைகள் என்ற ஒரு நிலைமை இன்று உருவாகி வருகிறதா? டொமினிக் ஜீவா:
அப்படியொன்று இருக்கிறதுதான். அதுமட்டுமல்ல, புரியமுடியாமல் எழுதுகின்ற பல்கலைக்கழக விமர்சனம்தான் உலகத்து முக்கியம் என்ற நிலைமையும் இருக்கிறது. இஇது ஒரு பம்மாத்து. இதிலே ஒரு விசேஷம் இருக்கு, இதிலே ஒரு அற்புதம் இருக்கு, து இதிலே ஒரு நுணுக்கம் இருக்கு' என்று எண்ணவைக்கிற பம்மாத்து. நீ யாருக்காக 5.எழுதுகிறாயோ அது அவனுக்கு விளங்க வேண்டும். சில சஞ்சிகைகள் இன்று வருகின்றனதான். நான் அதுகளைத் தட்டிப்பாப்பன். ஆனால் அதில் ஈடுபாடு இல்லை. ஏனென்றால் நீ யாருக்கோ எழுதுகிறாய், நீ படிக்கிறாய், நீ வைத்திருக்கிறாய், அதனை $ நீயே வைத்துக்கொள் . இதுதான் எங்களுடைய பதில். 3 தி. (65пт: 2 இன ஒடுக்கு. இன ஒழிப்பு நிகழ்வுகளுக்கு எதிரான போராட்டங்கள் பற்றிய படைப்புகளுக்கு மல்லிகையில் உரிய இடம் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு n ஐநிலவுகிறதே. 8டொமினிக் ஜிவா:
மற்றவர்கள் நினைக்கிற போராட்டம் அல்ல என்னுடைய போராட்டம் என்னுடைய பார்வை தனியானது, விசேஷமானது , முக்கியமானது. நான் முழு ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவில் தமிழ்மக்களின் விடிவைப் பாக்கிறேன். சகல உழைப்பாளி மக்களின் விடிவிலேதான் எங்களுடைய விடிவு இருக்குமென்று நான் நினைக்கிறேன். அதற்கு ஏற்றவகையிலே எனது தத்துவார்த்தப் பார்வை அமைந்திருக்கிறது. மல்லிகையின் பார்வை, சர்வ தேசப் பார்வை மாதிரி ஒரு சர்வ இலங்கைப்பார்வை. "சுடுகுது மடியைப் பிடி’ என்று இலக்கியம் படைக்க இயலாது. நேற்று நடந்ததை இன்று எழுதமுடியாது. நாங்கள் அதனை முதலில் சீரணிக்க வேண்டும். நேற்று நடந்ததை இன்று எழுதவில்லை. ஏனென்றால் இது முப்பது வருடங்களுக்குப் பிறகும் படிக்க வேண்டிய மல்லிகை. மல்லிகை முப்பது வருடங்களுக்குப் பிறகு பல்கலைக் கழகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சஞ்சிகை. அதில்வரும் ஒவ்வொரு பக்கமும் சத்தியம் நிரம்பிய பக்கமாய் இருக்க வேண்டும்; வெறும் உணர்ச்சிப் பத்திரிகையாய் இருக்கக் கூடாது. தி. ஞா: எந்த யாழ்ப்பாண மக்களுக்காக நீங்கள் ஐம்பது வருடங்களுக்கு மேலாக இலக்கியம் படைக்கிறீர்களோ, எந்த மண்ணிலிருந்து மல்லிகை முப்பத்தைந்து வருடங்களாக மணம் பரப்பியதோ, அந்த மண்ணையும் மக்களையும் விட்டு விட்டு இக்கட்டான இன்றைய காலகட்டத்தில் வெளியே வந்து இருக்கிறீர்கள் என்ற அபிப்பிராயம் பற்றி. டொமினிக் ஜிவா:
நான் வெளியில் வந்து இருக்கிறேனே தவிர வெளிநாட்டுக்கு ஓடவில்லை. மல்லிகையைத் தொடர்ந்து நடத்த வேண்டுமென்றால், நான் என்னை நிலைப்படுத்த வேண்டும். எனக்குப் பென்ஷன் வருகிறதா?, வாழ்க்கைப் பாதுகாப்பு இருக்கிறதா?, மாதா மாதம் வருமானம் வருகிறதா?, என்னுடைய பிள்ளைகள் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புகிறார்களா? இவையொன்றும் எனக்கு இல்லை. இந்த நிலையில் நான்
(2)
 

யாழ்ப்பாணத்தில் இருந்தால் பிச்சைக்காரனாகத்தான் இருக்கவேண்டும்.
என்னை வளர்க்கிறது மாத்திரமல்ல மல்லிகை தொடர்ந்து வரவேண்டும். மற்றது, நான் அந்த மண்ணைவிட்டு வந்தாலும் அந்த மண்ணின் மக்களோடுதான் இங்கு தொடர்புகளைப் பலப்படுத்திக்கொண்டு இருக்கின்றேன். மண்ணைவிட்டுப் பிரிந்தாலும் என்னுடைய கருத்தை விட்டுப் பெயரவில்லை. இப்படி என்மேல் குற்றம் சுமத்துகிறவர்கள் கடந்த காலத்தில் மல்லிகைக்கு என்ன செய்திருக்கிறார்கள்? பொருளாதார ரீதியாகவோ, உழைப்பு ரீதியாகவோ, ஆன்மீக ரீதியாகவோ, கருத்து ரீதியாகவோ எனக்கு என்ன செய்தார்கள்? என்னுடைய தொடரை, என்னுடைய வேலைத் திட்டத்தை என்னுடைய மக்களுக்காக நான் தொடர்ந்து செய்கிறேன் என்றுதான் பார்க்கவேண்டும். அங்கிருந்து வந்து நான் வசதி படைத்து, வேறு அலுவல் பார்த்தால் அந்தக் குற்றச்சாட்டு சரியானது. ஆனால் சகலரும் விரும்பக் கூடிய அளவுக்கு நான் பெருமைப்படக் கூடியதாக மல்லிகை முப்பத்தைந்தாவது ஆண்டுமலரை வெளிக்கொணர்ந்திருக்கிறேன் என்றால் இதனை யாழ்ப்பாணத்திலிருந்து செய்ய முடியுமா? தி. ஞா: புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் தமிழ் இலக்கியத்தில் சாதனை புரிவார்கள் என்று நீங்கள் நம்புகின்றீர்களா? டொமினிக் ஜீவா:
எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. புலம்பெயர்ந்த ஒரு காலகட்ட எழுத்தாளர்கள் சாதனை புரிகிறார்கள். சோபா சக்தி, கருணாகர மூர்த்தி, அ.முத்துலிங்கம், கலாமோகன் போன்றோர் மிகவும் ஆழமாகச் சிறப்பாக இலக்கியம் படைக்கிறார்கள். ஆனால் இது நீண்ட காலம் நிலைக்குமோ அடுத்த தலைமுறைக்கு நிலைக்குமோ என்பது சொல்ல முடியாது. எங்களைப்போல் இலக்கியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோவார்களோ என்று கூறமுடியாது. ஏனென்றால் அவர்கள் வாழும் நாடு, மொழி, சுற்றாடல், படிப்பு, வாழ்க்கைமுறை எல்லாம் வித்தியாசமானவை. ஆனால் ஒன்று, இந்தியப் பூர்வீகக் குடிகள் எப்படி இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ சுவீடனிலோ வாழக்கூடிய மக்கள் நோபல் பரிசைப் பெற்றார்களோ, அதேபோன்று சர்வ தேச மொழிகளில் தமிழன் பெறுவதாக இருந்தால், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழன் பெறுவான். தி. ஞா: நூல் வெளியீட்டுத் துறையில் நீங்கள் சாதித்தவை பற்றியும் நமது நாட்டில் இதனை மேம்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்
பற்றியும் சொல்லுங்கள்.

Page 13
டொமினிக் ஜிவா:
நூல் வெளியீடு என்பது ஒரு அசுர சாதனை. அது முழுநேர உழைப்பு. அதுதான் வாழ்க்கையாக இருக்கிறவனாலேதான் அதனைச் சாதிக்க முடியும். இன்று ஒவ்வொரு வாரமும் தமிழ்ப் புத்தக வெளியீடுகள் நடக்கின்றன. அத்தகைய வியாபகம் வந்திருக்கிறது. இந்த வியாபகம் வந்த அளவுக்கு நூல் கொள்வனவு இல்லை. வடகீழ் மாகாணம், நூலக சேவை, உயர் கல்வி அமைச்சு போன்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பால் சில நூல்கள் விற்கக் கூடியதாக இருக்கிறதே தவிர வேறு வழியில்லை. ஒரு எழுத்தாளனுடைய இருநூறு புத்தகங்கள்தான் விரும்பி வாங்கப் படுகிறது. மற்றது திணிக்கப்படுகிறது. திணிக்கப்படுவது எதுவும் படிக்கப் படுவதில்லை. இது அந்த எழுத்தாளனுக்குத் தோல்வி பணம் முக்கியம் அல்ல. அவனது நூல் மக்களால் படிக்கப்
. படுவதும் பரவுவதும் முக்கியம் . படிக்கப் படாதது பரவப்படாது, அந்த எழுத்தாளனின்
சிந்தனை பரவாது. இப்படியான ஒரு பிரச்சனை எல்லா எழுத்தாளர்களுக்கும் உண்டு. இலங்கையில் இருக்கக்கூடிய நூலகங்கள் உயர் கல்வி நிலையங்கள் எங்களுக்கு உபதேசம் செய்கின்றனவே தவிர எங்களுடைய நூல்களை வாங்குவதில்லை. இந்திய நூல்களை வாங்குவதையே இவை முக்கியத்துவப் படுத்துகின்றன. எங்களுடைய நாட்டுப் பணத்தை என்ன காரணம் கொண்டும் அந்நியனுக்கு நாங்கள் இழக்க முடியாது. எங்களிடம் தகுதி இருக்கிறது, தராதரம் இருக்கிறது, ஆற்றல் இருக்கிறது. இவர்கள் இப்படிச்செய்வதனால் இந்த நாட்டு எழுத்தாளர்களை நட்டப் படுத்துகிறார்கள். ஒரு புதிய படைப்பு வருவதை இவர்கள் பின்தள்ளப் படுத்துகிறார்கள். இன்று இலங்கையில் இருக்கும் எழுத்தாளர்கள் தங்களுடைய புத்தகங்களைச் சிரமத்துக்கு மத்தியிலே வெளிக் கொண்டுவரும் போக்கு நிலவுகிறது. சந்தைப்படுத்துவதற்கு ஒரு நெருக்கமான உறவான அமைப்பு வேண்டும். இந்த அமைப்பின் மூலம்தான் எமது நுல்களை முக்கியமான பிரதேசங்களுக்குக் கொண்டு செல்லலாம்.
本 米 水 米 水 米 来 来 米 本 米 米 米 冰 米 米 米 率 来 米 来
来 米 米 米 米 米 米 * * * * * * * * * *
蔔籲
佐汽县 எழுத, எழுத, எழுத வாழ்க்கை ܐܘܚܝܟ . ரொம்ப செளஜன்யமாய், சுகமாய்
D66TD எனக்கு மிகவும் இருப்பது மாதிரித்தான் தோன்றுகிறது. பிடித்திருக்கிறது! படபடப்பும், பரபரப்பும் குறைந்து ஒரு உன் நிதானம் ஏற்படுகிறது மனசுக்குள். மெளனம் தன்னைப் பற்றிய தெளிவும், மனித வார்த்தைகள் போல் மனதைப் பற்றிய அணுகுமுறை ဓါးရီးဒီ့နှံ့လဲဓာလ கை வந்த மாதிரி பிரமையும் ஏற்படுகிறது. கோபங்கள் குறைந்து,
ர்ேத்தைகளால் ஆத்திரம் அடங்கி, பொறாமை வலி தருவதை விட பொடித்துப்போய் என்னிலிருந்து పి நானே விடுதலையான உணர்வு
ది: அதிகரிக்கிறது. எனக்கு மிகவும் - பாலகுமாரன பிடித்திருக்கிறது - லோ.சுதர்மனி
(2)
 
 
 

பேசுகிறார்.
தகவல்களை நாடும் எனக்கு சித்தி அமரசிங்கம், எஸ் பொன்னுத்
கலாநிதி துரை. மனோகரனின் பத்தி, அந்தனி ஜீவாவின் நூலறிமுகம், இக்பால் அலியின் கவிதை, புதிய தகவல்களைத் தந்தன. ix...
- கே. எஸ். சிவகுமாரன்.
தங்கள் சஞ்சிகையின் முதல்
இதழ் கிடைக்கப் பெற்றேன். நல் முயற்சி, திறமையான ஆக்கங்கள் நன்றே இலக்கியப்பணி தொடரட்டும். எனது நல்லாசிகள். ళ
- அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர்.
பாரளுமன்ற உறுப்பாளரும் எதிர்க்கட்சியின் பிரதிக் கொரடாவும்.
ஞானம் முதல் இதழ் நம்பிக்கை”
இனிவரும் இதழ்கள் தரமானதாக அமையும் என்பதற்குக்
யூட்டுவதாக,
கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது.
- புலோலியூர். க. சதாசிவம்.
முத்த எழுத்தாளர்களை முன் னோடிகளை மகிமைப்படுத்தும் வகை யில் எஸ்.பொ.வின் நேர்காணலுடன் டொமினிக் ஜீவாவின் நேர்காணலும் இடம்பெறுவது பொருத்தமானதே. வித்தியாசமான அணுகுமுறையில் ஆக்கங்களைச் சேர்த்துள்ளீர்கள்.
- அன்புமணி, மட்டக்களப்பு s' அனைதது அம சங்களும சிறப்பாக இருந்தன. "ஸ்திரி இலட் சணம்’ சிறுகதை இலக்கிய ரசனை
: (மேலதிகச் செயலாளர் 'கல்வி, உயர்கல்வி அமைச்சு)
யோடு வாசிப்பதற்கு இனிமையாக இருந்தது. ஆயினும் அது இன்றைய சமுதாயத்திற்கு ஏற்புடையதாகாது. ஒரு மனோகரி ஒழுக்கங் கெட்டவள் என்பதற்காக ஊரில் உள்ள பெண்கள் யாபேரும் அப்படி நடப்பார்கள் என்று கணிப்பது தப்பு. கதையில் வரும் நாயகிக்கு கணவனும் பிள்ளையும் உழைத்துக் கொடுப்பதால் ஏனைய பெண்களுக்குத் தொழிலே தேவை யில்லை என்று கதாசிரியர் கூறுவதில்
எவ்வித நியாயமும் இல்லை.
- வட்டகொட
சஞ்சிகையின் தரம். நன்றா
*இருப்பதால், தயவுசெய்து பாராட்டு
களை ஏற்றுக்கொள்ளுங்கள். பணி சிறக்க வாழ்த்துக்கள். *
ஐ. எஸ். தில்லைநடராஜா
ஞானம் இதழ் கிடைக் கப் பெற்றேன். பல தீவிர வாதங்களுக்கு மத்தியிலும் ஒரு மத்திம இதழாகத் " திகழக்கூடிய சாத்தியக்கூறுடன் ஞானம்g வெளிவந்திருப்பதனையிட்டு மிக்க 8 மகிழ்ச்சியடைகிறேன். 5
- லெனின் மதிவானம் -
விரிவுரையாளர், கொட்டகலை
ஞானம் கிடைத்தது. இலக்கியதரம் தெரிகின்றது. இனிவரும் இதழ்களில் அதைத் தக்கவைப்பது உங்கள் முயற்சியிலேயே தங்கியுள்ளது.
- திருமலை சுந்தா.

Page 14
Aà
|நான் பேச நினைப்பதெல்லாம்.
(கலாநிதி துரை.மனோகரன்)
எனது ஆசிரியர்கள்
மெக்கு எத்தனையோ ஆசிரியர்கள் கல்வி கற்பித்திருப்பார்கள். அவர்களிற் பலபேர் மனதில் நிலைபெறு வதில்லை. சில பேர் மாத்திரம் நெஞ்சைவிட்டு அகலா நினைவு களில் நிரந்தரமாக இடம் பெற்றிருப்பார்கள். இலங்கையில் என் மனதில் நிலைபெற்றிருக்கும் எனது ஆசிரியர்கள் சிலரை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
சிறுவயதில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியா சாலையில் கற்றபோது, எனக்குக் கல்வியூட்டியவர்களில் ܝܼ. `ஃ~ஆசிரியமணி அ.பஞ்சாட்சரம், இராசையா மாஸ்டர் ஆகியோர் Sஎன் மனதில் இடம் பெற்றவர்கள். எனக்கு கசப்பாக இருந்த கணித பாடத்தை 8கண்டிப்புடன் கற்பித்தவர், பஞ்சாட்சரம் அவர்கள். எனக்கு எப்போதும் கரும்பாக °இனிக்கும் தமிழ்ப் பாடத்தை இனிமையுடன் கற்பித்தவர் இராசையா மாஸ்டர். ஐந்தாம் வகுப்பை கண்டி இந்து சிரேஷ்ட பாடசாலையில் நான் கற்றபோது, அப்போது என்னிடம் இலேசாகத் துளிர்விடத் தொடங்கிய எழுத்தார்வத்தை கவனித்து நாடகம், பேச்சு ஆகிய துறைகளில் என்னை ஊக்கிவிட்ட அப்போதைய பாடசாலை அதிபர் சண்முகதாஸன், ஆசிரியர்களான தங்கராஜா, நவரத்தினம் போன்றோர் என் நெஞ்சம் நிறைந்தவர்கள். பத்து வயதில் நானும் எனது வகுப்புத் தோழன் ஒருவரும் சேர்ந்து எழுதிய சிறிய ஒரு நாடகத்தை (மன்னிப்பு கேட்ட மகாராஜா என்பது நாடகத்தின் பெயர்) எம் போன்ற மாணவரைக் கொண்டு நடிப்பித்து, தயாரித்து, பாடசாலை நிகழ்ச்சியொன்றில் அவர்கள் மேடை யேற்றினார்கள். அந்த இனிய ஆசிரிய நெஞ்சங்களை இப்போது நினைத்துப் பார்த்தாலும், இதயம் பூரிக்கிறது.
என்னை வளர்த்துவிட்ட உரும்பிராய் இந்துக்கல்லூரியின் சில ஆசிரியர்கள் இன்னும் என் மனதில் நிலைத்துள்ளனர். அப்போதைய அதன் அதிபர் அ. வைத்தியலிங்கம், பண்டிதர் இ. நவரத்தினம், க. பொன்னம்பலம், வ. மகாலிங்கம், வ. இளையதம்பி, இ. ஐயாத்துரை, தங்கலட்சுமி போன்றோர் எப்போதும் என் மனதில் நிறைந்தவர்கள். எனது எழுத்தார்வத்தை இனங்கண்டு ஊக்கமுட்டி வளர்த்தவர்கள் இவர்கள். உயர் வகுப்பிற் கற்றுக்கொண்டிருந்தபோது நான் எழுதிய 'பாவையின் பரிசு என்ற நாவலைக் கல்லூரியிலேயே அரங்கேற்றியும், நாடகத்துறையிலும் பிற துறைகளிலும் என்னை ஊக்கியும் ஊக்கமளித்தவர்கள் இவர்கள்.
பேராதனைப் பல்கலைகழகம் எனது வளர்ச்சிக்கு இன்னொரு அடித்தளமாக அமைந்தது. பேராசிரியர் வி. செல்வநாயகம் அவர்கள் விமர்சனப் பாங்குடன் கற்பிக்கும் ஆற்றல் வாய்ந்த ஓர் ஆசான். அவரை விமர்சிப்பவர்கள்கூட அவரது கற்பித்தல் திறனைக் குறை கூறியதை நான் இதுவரை கண்டதில்லை. பேராசிரியர் வித்தியானந்தன் கனிவுடன் சுவை ததும்பக் கற்பிப்பதில் வல்லவர்.
 
 
 
 
 

மாணவனின் திறன் கண்டு ஊக்குவிக்கும் இயல்பு கொண்டவராக அவர் விளங்கினார். பேராசிரியர் தில்லைநாதன் அவர்களின் விரிவுரைகள் வாயிலாக எனக்குள் இருந்த விமர்சகனை நான் வளர்த்துக் கொண்டேன். என்னைப் புதிய சிந்தனைத் தளத்திற்குத் தமது விரிவுரைகள் மூலம் இட்டுச்சென்றவர் தில்லைநாதன் அவர்களே. பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களின் இனிய குரல்வளம் கேட்டார்ப் பிணிக்கும் சக்தி வாய்ந்தது. பேராசிரியர் வேலுப்பிள்ளை அவர்களின் கற்பித்தல் என்னைக் கவராவிடினும் அவரது நூல்களால் நான் அதிக பயன் பெற்றேன். பேராசிரியர் தனஞ்செயராசசிங்கம் மொழியியல் சார்ந்த அறிவை நான் பெற்றிடக் காரணமாக அமைந்தார். பேராசிரியர்கள் நா. சுப்பிரமணியன், க.அருணாசலம் ஆகியோரும் எனது மதிப்பிற்குரிய ஆசிரியர்களே. பெண் விரிவுரையாளர்களில் தமது கற்பித்தல் திறமையால் எனது மனதில் நிலைபெற்றிருப்பவர் கலையரசி அவர்களே. தமிழ்த் துறைக்கு வெளியே பேராசியர்கள் சி. பத்மநாதன், கா. இந்திரபாலா, கலாநிதிகள் வா. கணபதிப்பிள்ளை, செ. குணசிங்கம், ஹ"ஸைன்மியா, குலோத்துங்கம் ஆகியோரும் எனது நெஞ்சம் மறக்காத சிறந்த ஆசிரியர்கள் ஆவர். அதிகம் பேசப்படாத ஒரு நாவலாசிரியர்
இலங்கையிற் பிறந்து வளர்ந்து, தற்போது தமிழ்நாட்டில் வாழ்ந்துவருகின்ற ஓர் எழுத்தாளர் தேவகாந்தன். இதுவரையில் உயிர்ப்பயணம், விதி, கனவுச்சிறை, வினாக்காலம் ஆகிய நாவல்களையும் எழுதாத சரித்திரங்கள், திசைகள் ஆகிய குறுநாவல் தொகுப்புகளையும் நெருப்பு என்ற சிறுகதைத் தொகுதியினையும் அவர் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டு வாசகர்களுக்கு பரிச்சயமான தேவகாந்தன் இலங்கை வாசகர்களால் அதிகம் பேசப்படாத எழுத்தாளராக விளங்குகின்றார். அண்மையில் அவரது கனவுச்சிறை, வினாக்காலம் ஆகிய நாவல்களைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. இந்நாவல்கள் 1981 முதல் 2001 வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் இனப்பிரச்சினைப் பின்னணியில் அமைந்த ஐந்து பாகங்களைக் கொண்ட ஒரு பெருநாவலின் இரு பாகங்களாகும். கனவுச்சிறை 1981 முதல்3 1983 வரையான காலத்தையும், வினாக்காலம் 1985 முதல் 1987 வரையிலானN காலகட்டத்தையும் கொண்டு விளங்குகின்றன. 1998இல் இவை வெளிவந்துள்ளன. மற்றைய பாகங்கள் இனிமேல்தான் வெளிவரவேண்டும். ஒரு பெரு நாவலின் இரு பாகங்களாக அமைந்த கனவுச்சிறையும் வினாக்காலமும் தம்மளவில் தனித்தனி நாவல்களாகவும் விளங்கக்கூடிய அமைப்பைக் கொண்டிருப்பது, அவற்றின்ே சிறப்பாகும். இலங்கையின் இனப்பிரச்சினைப் பின்னணியில் ராஜி, சுதன், மகேஸ்வரி, ! திரவியம், சுந்தரலிங்கம் போன்ற பாத்திரங்களை இயங்கவிட்டு நாவல்கள்.g பின்னப்பட்டுள்ளன. நாவல்கள் தமக்குரிய கனதியைக் கொண்டிருப்பதோடு, வாசகனின் சுகமான வாசிப்புக்கும் ஏற்றவகையில் அமைந்துள்ளன. "அரசியலை நான் தனியாகப் பார்க்கவில்லை. வாழ்வியல் சிந்தனைத் தளங்களின் 9 சமூகத்தளங்களின் பிரதியாகவே பார்க்கிறேன். இன்னொரு வகையில் இதுவும் விதியின் - சமூகவிதியின் - விசாரணைதான்” என நாவலாசிரியர் தமது பார்வையைக் கனவுச்சிறையின் "என்னுரை' மூலம் இனங்காட்டுகின்றார். 1981இல் நயினாதீவி லிருந்து கனவுச்சிறையின் கதை தொடங்கி, இனக்கலவரம், போர், இயக்கப் போராட்டங்கள், வாழ்க்கை அவலங்கள், புலப்பெயர்வுகள், அகதி வாழ்க்கை, குடும்பச் சிதைவுகள், உறுதியற்ற பொருளாதார நிலை முதலியவற்றை இனங் காட்டி, வினாக்காலம் என்ற பாகத்தினூடாக வளர்ந்து செல்கிறது. ஒரு
(7)

Page 15
நாவலாசிரியர் என்ற முறையில் தேவகாந்தனின் எழுத்தாற்றல் குறிப்பிடத்தக்கது. இலங்கையைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க எழுத்தாளராக அவர் இருந்தபோதிலும், இலங்கை விமர்சகர்களால், வாசகர்களால் அதிகம் பேசப்படாத ஓர் எழுத்தாளராகவே அவர் விளங்குகின்றார். கலாநிதி செ. யோகராசா மாத்திரம் தேவகாந்தனின் கனவுச்சிறை பற்றிய சிறு குறிப்பொன்றைத் தமது கட்டுரை யொன்றில் சேர்த்துள்ளார். வானொலி அரட்டையும் அறுவையும்
இப்போது இலங்கை வானொலியோடு தனியார் வானொலி நிலையங் இகளும் நாளொரு அலைவரிசையும் பொழுதொரு நிகழ்ச்சியுமாகப் பெருகி வந்துள்ளன. தனியார் வானொலி நிலையங்களில் பெரும்பாலும் தொலைபேசி 5.அலட்டல்களாகவே நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன. இலங்கை வானொலி வர்த்தகசேவையும் தவிர்க்கவியலாத முறையில் இத்தகைய போக்கைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது. தொலைபேசி நிகழ்ச்சிகளை அறிவிப்பாளர்கள் நடத்தும் முறை 弱 மிக வேடிக்கையாக இருக்கும். அருமையான அரட்டை - அறுவை நிகழ்ச்சிகளுக்கு 8 அவை உதாரணங்களாக விளங்குகின்றன. பாடத் தெரியாதவர்களையெல்லாம் 2 பாடவைக்கும் முயற்சிகள், நேயர்கள் வாழும் பிரதேசங்களின் சுவாத்திய விசாரிப்புகள் ("உங்கள் பிரதேசத்தில் மழை எப்படி? வெப்பம் எப்படி?” என்பன ஐபோன்றவை), குறிப்பிட்ட நேயரின் அருகிலுள்ளவர்களையும் வில்லங்கமாக 5அழைத்து குசலம் விசாரித்தல்கள், பெண் நேயர்களாக இருந்தால் மேலும் அதிகமான நேரம் எடுத்து அதிவிஷேச விசாரிப்புகள், தங்களது அறியாமையை வெளிப்படுத்தும் அற்புதமான கேள்விகள் போன்ற நிகழ்ச்சிகள் தொலைபேசி உரையாடல்களில் இடம்பெறுவதுண்டு. தொலைபேசி நிகழ்ச்சிகளின்போது நேயர்களின் அறிவின்திறத்தையும், நிகழ்ச்சியின் சுவையின் தரத்தையும் அதிகரிப்பதற்குப் பெரும்பாலான அறிவிப்பாளர்கள் முயற்சி செய்வதாக தெரியவில்லை. மிகமிகத் தரங்குறைந்த, மிகமிகச் சாதாரணமான கேள்விகளையே பெரும்பாலும் அறிவிப்பாளர்கள் நேயர்களிடம் கேட்டு நேரத்தை வீணாக்குகின்றனர். பதிலளிக்கும் நேயர்களும் தாமும் அறிவிப்பாளர்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்களில்லை என்பதை நிரூபிக்குமுகமாக ஏதேதோ கூறி, எப்படி யெல்லாமோ பாடி, தமது உறவினர், நண்பர்களின் நீண்ட பெயர்ப் பட்டியலையும் சமர்ப்பித்துத் தமது தமிழ்ப் பணியைப் பூர்த்திசெய்து மகிழ்வர்.
米 米 米 米 米 米 来 米 米 米 米 米 米 米 水 来 米 米 米 本 来 米 米 米 米 冰 米 米 米 本 来 来 米 米 米 米 米 米 米 米 米 米
அனிபார்ந்த வாசகர்களே.
ஞானம் சஞ்சிகை தொடர்ந்து கிடைக்க வேண்டுமாயின் உங்களது சரியான
முகவரியை எமக்குத் தெரியப்படுத்துங்கள்.
இந்த இதழ் பற்றிய கருத்துக்களையும் சஞ்சிகையின் தரத்தை மேம்படுத்த
உங்களது ஆலோசனைகளையும் அறியத்தாருங்கள்.
ஆக்க இலக்கிய கர்த்தாக்களே.
உங்களது படைப்புகளின் மூலம் ஞானம் சஞ்சிகையின் இலக்கிய தரத்தை மேம்படுத்துங்கள்.
- ஆசிரியர்
 

விழியோரத்துக் கனவுகள்
எழுதியவர்: திருமலை சுந்தா முதற்பதிப்பு மார்கழி 1995 வெளியீடு: கல்வி பணி பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு, திருகோணமலை. விலை. ரூபா 75/ - திருமலை சுந்தாவின் விழியோரத் துக் கனவுகள் சிறுகதைத் தொகுதி நல்லதொரு படைப்பாகும். மண்வாச னையை எடுத்துக் கூறும் பலகதைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
சு. தியாகராஜா, மதிப்புரையில்
நாளையைத் தேடும் மனிதர்கள்
(சிறுகதைத் தொகுதி) எழுதியவர்: திருமலை சுந்தா முதற் பதிப்பு: தை 1999. வெளியீடு : அம்மா பதிப்பகம் 172,பிரதானவீதி, திருமலை விலை: ரூபா 100 /. திருகோணமலை மணர்ணிலும், ஈழத்திலும் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளராக விளங்கும் நண்பர் சுந்தா இவ்வெளியீட்டில் வரும் சிறு கதைகளை சமயத்தை மையமாக வைத்து தன் எண்ணங்களைத் தான் படைத்த பாத்திரங்கள் மூலம் உணர்ச்சி பூர்வமாக எடுத்துச் சொல்லும் பாணி தனிச்சிறப்பானதாகும்.
செ. சிவஞானசுந்தரம், மதிப்பரை.
அம்மா (கவிதைகள்) தொகுப்பாசிரியர்:
திருமலை சுந்தா
முதற் பதிப்பு: தை 1998. வெளியீடு: அம்மா பதிப்பகம் 172, பிரதான வீதி, திருமலை மொழி மீது கவி எழுதிய என்னருமைக் கவிஞர்களின் அம்மாவின் கவிதைகள் இனி உங்களுக்கு
- திருமலை சுந்தா
THE LEARNER'S DIGEST
Monthly English Educational and
Literary Magazine
PRICE. R.S. 15 / Editor. M. Y. M. MEEADH A 13/3, MAHIR MANZIL DUMBULU WAWA HEMMATHIAGAMA
யாத்திரா - 2
கவிதைகளுக்கான காலாண்டிதழ் ஆசிரியர் : அஷ்ரஃப் சிஹாப்தீன் ஏப்ரல் 2000 தொடர்புகள்: 37, தன்கனத்தரோட் மாபொல, வத்தளை. பக்ஸ்: 01-939239 இலக்கிய உலகில் சஞ்சிகைகள் எவையும் இலாபத்துக்காகப் போராடு வன அல்ல, இருப்புக்காகவே போராடு3 கின்றன. என யாத்திரா கூறிக்கொள்R கிறது. கவிதையை நேசிப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய இதழ்.
s பெண் - 3 8
சூரியா பெண்கள் அபிவிருத்தி , நிலையத்தின் சஞ்சிகை.
கெளரவ ஆசிரியர் : சுல்பிகா 'S இந்த இதழின் சிறப்புப் பொருளாக “பெண்களை மீள மையப் படுத்தும் முயற்சியும் பெண்கள் இயக்கமும் அமைகிறது” இக்கருத்தினை முன் வைக்கும் நோக்குடனேயே அட்டைப் படம் அமைக்கப் பட்டுள்ளது. கட்டுரை களும் ஏனைய விடயங்களும் இப் பொருளைச் சார்ந்தே தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளன
(ஆசிரியர் குறிப்பிலிருந்து)

Page 16
மூன்றாவது மனிதன் -8 மே - ஜூலை 2000, ஆசிரியர்: எம். பெளனர் தொடர்பு:53,வொக் ஷோல் வீதி, கொழும்பு -2. இந்த இதழில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர் செ. யோகநாதனின் நேர்கானல் பயனுள்ள தகவல்களைத் g தருகிறது. சிறுகதை, கவிதை, மொழி து பெயர்ப்பு, விவாதம், ஓவியம், நாடகம் g.எனப் பன்முகப் பார்வை கொண்ட சஞ்சிகையாக மூன்றாவது மனிதன் சஞ்சிகை வந்துள்ளது
அச்சாக்குட்டி
எழுதியவர் வீணைவேந்தன் முதற்பதிப்பு 01. 03, 2000. விலை: ரூபா 23 " வெளியீடு : ஈழத்து இலக்கியச்
சோலை
21, ஒளவையார் வீதி, திருகோணமலை. சித்தி அமரசிங்கம் எனும் சிறந்த மனித நேயன் சித்தம் நிறைந்த ஆர்வத்தினால் தீந்தமிழ் யாத்த அசசாககுடடி ஆனைககுடடி அடடகாசக கதையை மெச்சிப் படித்து மகிழ வடிவமைத்துத் தந்தார்.
- கேணிப்பித்தன்.
மஹாகவியின் ஆறுகாவியங்கள் பதிப்பாசிரியர்: எம்.ஏ. நுஃமான் முதற் பதிப்பு: மார்ச் 2000 வெளிய"டு தேசிய கலை இலக்கியப் பேரவை
வசந்தம், 44, 3ம் மாடி கொழும்பு மத்திய சந்தைத் தொகுதி, கொழு-11
விலை: ரூபா 250 Y.
இப்பொழுது முதனி முதலாக மஹாகவியின் காவியங்கள் அனைத்
தும் ஒரு தனித்தொகுதியாக வெளிவரு கின்றன. கல்லழகி, சடங்கு, ஒரு
சாதாரன மனிதனது சரித்திரம், கணி
மணியாள் காதை, கந்தப்ப சபதம் ஆகியவையும், மஹாகவியும் முருகை பனும் இணைந்து எழுதிய தகனமும் இத்தொகுதியில் இடம்பெறுகின்றன.
பொண்விழா கண்ட சிங்களச் சினிமா எழுதியவர்தம்பியையா தேவதாஸ் முதற் பதிப்பு: ஜனவரி 2000 வெளியீடு: வித்தியா தீபம்
பதிப்பகம்
ப்ெ',ெ புதுச் செட்டித் தெரு கொழும்பு - 13
விலை: ரூபா 200 "
சிங்களத் திரையுலகம் பற்றிய செய்திகளை இந்நூலில் நாம் படிக்கும் போது, நமது மொழி பேசும் கலைஞர் கள் எத்தகைய பங்களிப்புகளைச் சிங்கள சினிமாவிற்குச் செய்து பார்த் துள்ளார்கள் என்ற வியப்பே ஏற்படு கிறது.
முன்னுரையில்
கே.எனப், சிவகுமாரன்
மனத்தூறல் (சிறுகதைத்தொகுதி) எழுதியவர்: ந.பார்த்திபன் முதற் பதிப்பு: ஆகளிப்ட் 1999 வெளியfடு: ம க கனர் கலை இலக்கிய ஒன்றியம்
13'13, பூரனவத்தை, கனன்டி.
LITT 100,V- இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள அனைத்துச் சிறுகதைகளும் ஒவ்வொரு வகையில் சமுதாய அடிப்படை கொண் டனவாக விளங்குகின்றன. அவர் தமது சிறுகதைகளில், சமுதாயத்தில் இயல் பாகவே கானத்தக்க பல்வேறு மாந்தர் களைப் பாத்திரங்களாகப் படைத் துள்ளார்.
முன்னுரையில்
கலாநிதி துரை.மனோகரன்
புதிய நூலகத்தின் நீங்கள் எழுதிய நூல்களின் விபரங்களும் இடம்பெற வேண்டுமாயின் நூல்களின் இரவிர் டு பரிரதிகளை அனுப்பரி வையுங்கள்
 

மாமிக்கு வேண்டிய ம(று)ருமகள்
- கலைமகள் ஹிதாயா றிஸ்வி அழகுக்கு ஓருருவாய் அவனியிலே
அமையவேண்டும் எனக்குமோர் மருமகளே! பழக்கத்தில் பெருந்தன்மை சொலிக்க வேண்டும்;
பண்பாட்டை மறவாது நடத்தல் வேண்டும்!
கற்றறிந்த பெண்மகளாய் இருத்தல் வேண்டும் கணவன்
றிந்து விருந்தளிக்கத் தெரிய வேண்டும்! பற்றோடு குடும்பத்தைப் பேண வேண்டும் _
பப் குலமானம் காக்க வேண்டும்!
சண்டையோடு சச்சரவைத் தவிர்க்க வேண்டும்
சாடை, கோள் விலக்க வேண்டும் தன்னொளிரும் வெண்ணிலவாய்த் திகழ வேண்டும்
தன் பதியை உயிரென மதிக்க வேண்டும்
குணத்திலுயர் குன்றாக நிற்க வேண்டும்
குற்றங்கள் தனை பொறுக்குமுள்ளம் வேண்டும் பனமிருந்தும் திமிரிவிலா திருக்க வேண்டும்
பாசமலர் இதயம்) மனம் வீச வேண்டும்
பெண்மையதன் குணமனைத்தும் ஒருங்கே வேண்டும்
பேரழகுப் பேரர்களைத் தரவும் வேண்டும் மண்ணகத்தில் எனக்கேற்ற மறுருமகளாய்
மாமி யென்னைத் நன்தாயாய் மதிக்க வேண்டும்!
S S S S SSS S SSS :* ಕ್ ஐந்கெடுப் 용 ஊர்வலம் வரவில்லை தி EART
slotDatgyLUT
ந்திருதி பொடியாகிப்போனது 궁 :". நிழலானபோது s
蠶。 蠶
5_¬ ஏதாரிக்ட்ள்ளங்கவீத்திருக்க e கூட்டிக்கொண்டு aspbel TITU FIsfestsr தே ::::ಜ್ಜಿನ್್' இழந்து கிடக்கிறது to BILLE KE-67
அநாதையாக நின்று. சுமங்கஜிகளிசில் தரဝှိုမှိကြီး
ந்ெந்தியில் பொட்டுமில்லை சிவப்புச்சாயம் கசிகிறது ஓ, இவர்கள் விதவைகளாம்!

Page 17
கருவறையிலிருந்து
ஒர் கதறல்.
பிறக்காத நானும் s
இறக்க எண்ணுகிறேன்.
ஒன்பது மாதங்களுக்கு முன் அம்மாவிற்கே தெரியாத அப்பாக்கள் என்னை உருவாக்கி.
இரண்டு
இனங்களின்
மரபணுக்களினால் மலர்த்தப்பட்டவன் நான்.
மரபணுக்களால் இனங்களா. இனங்களினால் மரபணுக்களா.
எதுவாயிருந் தாலென்ன. பெறப்போகிறவள் தமிழச்சிதானே.
பிறகென்ன ஒளிவு, ஓட்டம், பங்கர், அகதி எல்லாம் பழகிவிடும்.
* LuSOTLT 555 556&IT GL5ETIT........ செல்வாவைக் கண்டேனா.
விழுதுக்குள்ளே விஷத்தை விதைக்கும் விந்தை தேசம்.
இன்னும் பிறக்காத நானும் இறக்க எண்ணுகிறேன்.
 
 

T. GNANASEKARA 19/7, ...,