கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2000.09

Page 1

〔才
'GOTD
லக்கியச் சஞ்சிகை
சிசப்டெம்பர்
0)

Page 2
努 雪 婷 ல்ே ஞானம்
கலை இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயினர்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்.
அன்புள்ள இலக்கிய நெஞ்சங்களே.
வணக்கம், "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்ற பாரதியின் கனவு நனவாகும்வண்ணம் தமிழ் இனி 2000 உலகத்தமிழ் இலக்கிய அரங்கு தமிழகத்தில் செப்டெம்பர் 1,2,3 திகதிகளில் நடைபெறவுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தவத்திரு. தனிநாயகம் அடிகளார் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமொன்றைத் தோற்றுவித்தார். உலகின் பல்வேறு நகரங்களிலும் தமிழறிஞர்களை அழைத்து நான்கு ஆண்டுகளுக்கொரு முறை தமிழாய்வு முயற்சிகளை மேற்கொள்ளுதல் இதன் பணியாக இருந்தது. பெரும்பாலும் பழந்தமிழ் இலக்கியங்களில் இதன் செயற்பாடுகள் அமைந்திருந்தன. ஆக்க இலக்கியத்துறையிலும் இத்தகையதொரு சர்வதேசிய நோக்கு இருக்கவேண்டும் என்ற எண்ணம் காலக்கிரமத்தில் பெரிதும் உணரப்பட்டது. இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் சில மேற்குலக நாடுகளிலும் தமிழிலக்கிய மாநாடுகள் கடந்த காலங்களில் நடத்தப்பட்டபோதிலும் அவை சர்வதேச ரீதியாக தமிழ் ஆக்க இலக்கியவாதிகளின் பங்களிப்பினைக் கொண்டிருக்களில்லை என்றே கூறலாம்.
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து பூமிப்பந்தெங்கும் சிதறுண்டு வாழும் எமது படைப்பாளிகள் தமிழிலக்கியத்திற்குப் புதிய பரிமாணங்களை அளித் துள்ளார்கள். தற்காலத் தமிழிலக்கியத்தில் இவர்களின் பங்களிப்பும், பாதிப்பும் முக்கியமானவையாகும். அவற்றின் வெளிப்பாடாக தமிழ் இனி 2000 மாநாட்டில் புகலிடப் படைப்பாளிகள் பலர் கலந்துகொண்டு கருத்துரைகள் வழங்குவது சிறப்பம்சமாக அமையும் என எதிர்பார்க்கலாம். இவர்களோடு தமிழகத்தின் சிறந்த படைப்பாளிகளும், இலங்கையிலிருந்து ஐம்பதிற்கும் மேற்பட்ட படைப்பாளிகளும் சிங்கப்பூர் மலேசியப் படைப்பாளிகளும் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பிக்க இருக் கின்றனர்.
இருபதாம் நூற்றாண்டு தமிழிலக்கியத்தில் அபார படைப்புச் சாதனைகள் நிகழ்ந்துள்ளன. தமிழ் இனி 2000 இலக்கிய விழா இச்சாதனைகள் சார்ந்த ஒரு சர்வதேசிய நோக்கினை வெளிக்கொணரும் என எதிர்பார்க்கலாம்.
இவ்விழாவின் ஏற்பாட்டாளர்களின் முயற்சிகளை நாம் மனதாரப் பாராட்டு கிறோம். விழா சிறப்புற வாழ்த்துகிறோம்.
- ஆசிரியர்
 

| శ్లో
R FERRÀ
பகிர்தலின் மூலம்
விரிவும் ஆழமும் பெறுவது
ஞானம்.
பிரதம ஆசிரியர்: தி.ஞானசேகரன் இனை ஆசிரியர்கள்: ந.பார்த்திபன் ஞா.பாலச்சந்திரன்
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடை பவர்கள்.
தொடர்புகளுக்கு.
தி.ஞானசேகரன் 1977, பேராதனை வீதி,
கண்டி, தொ.பே. - 08-234755
077-305505
FA) 8-23755
நேர்கானல் - 14 செ. யோகநாதன்
சிறுகதை ஒற்றைக்கூவல் - 04 டிலாண் ஜெயந்தன்
கட்டுரைகள் சமூக மாற்றத்திற்கான மரபு சார்ந்த கலைப் புனரமைப்புக்களின் அவசியம் -07 சின்னத்தம்பி குருபரன் நான் பேச நினைப்பதெல்லாம் - 11 கலாநிதி துரை. மனோகரன் அன்புமணி இரா. நாகலிங்கம் - 23 ந. பார்த்திபன்
கவிதைகள் வராத வீடு - 31 சோலைக்கிளி என்று தணியும் - 10 அஷ்ரஃப் சிஹாப்தீன் தெருவில் ஒரு தேசம் - 24 வாகரைவாணன நச்சு மரம் - 22 வில்லியம் பிளேக் ‘விருது நகர் வியாபாரிகள்' - 26 பொன். பூபாலன் சமாதானம் - 32 லலிதா
புதிய நூலகம் - அந்தனிஜீவா - 29
வாசகர் பேசுகிறார் - 27
அட்டைப்படம் - டிராட்ஸ்கி மருது

Page 3
ஒற்றைக் கூவல்
டிலான் ஜெயந்தன் தி/இ.கி.மி. பூர் கோணேஸ்வரா இந்துக் கல்லூ
"கூ. čjih......... éh........ sy தவப்புதல்வனைத் தூக்கியெடுத்து இலையுதிர் காலம் முற்றுப் உச்சிமோர் கின்றேன். “செல்லம் கவனமா ஸ்கூலுக்குப் போயிட்டு
பெற்று வசந்த காலத்தின் வருகையை வரவேற்கும் அந்த வேப்பமரக் குயி முடிஞ்சொடனே வீட்டுக்கு வந்திடனும்" லின் கூவல் என் செவியை அடைய அவனை அனுப்பிவிட்டு என் மளிகைக் வும், நான் கண் விழிக்கவும் சரியாக கடையைக் கவனிக் கின்றேன். இருந்தது. வானொலியிலே தவழ்ந்து “சரவணா ஸ்டோர்ஸ்’ என் கடையின்
வந்த சுப்ரபாதம் இன்று வெள்ளிக் முகப்பை அலங்கரித்த அவ்வாசகங் கிழமை என்று நினைவூட்ட, விரைந் களை யாழ்நகரில் அறியாதோர் தெழுந்து குளித்துக் கோயிலிற்குச் எவருமில்லை.
நேரம் பணி னிரணி டை எட்டியிருக்கும் “டமீர்” காதுகளைச் செவிடாக்கும் வண்ணம் அந்த ‘பொம் மரின் குண்டுகள் வீழ்ந்து வெடிக் கின்றன. நான் என் மனைவியையும் மகளையும் அணைத்த படி பங்களிற்குள் புகு கின்றேன். "இஞ்சே ரப்பா ஸ்கூல் பக்கம் தான் சத்தம் கேக்குது ஒருக்காப் போய்ப் பார்த்திட்டு வாங்கோவனப்பா" பெற்ற
செல்ல ஆயத்தமாகின்றேன். மண் சுவரில் தொங்கியிருந்த என் மூத்த மகனின் மழலைமாறாத அந்தச்சிரிப்பு அவன் இறந்து ஐந்து வருடங்கள் உருண்டோடியதைக் கோடிட்டுக்காட்ட
கமலம் கமலம்' 1999ல் நடைபெற்ற வடகிழக் வன்னிவனத்தில் * மாகாண மட்டத் தமிழ் னை மணம முடிதத மொழித்தின 4ம் பிரிவுச் ஒரேயொரு காரணத் சிறுகதைப் போட்டியில் திற்காய் சீதையாய் முதற்பரிசு பெற்ற சிறுகதை இன்னற்படும் என் பத் தினியை அழைக்கின்றேன். கண்ணிர்
மண்தரையை ஈரமாக்கியபடி சுவரின் உள் ளத்தின் பதைபதைப் பை மூலையிலே குந்தியிருந்த கமலம் தன் உணர்ந்து என் உயிரையும் பொருட் இயலாமையைக் கண்ணிரில் வெளிக் படுத்தாமல் விரை கினி றேன் . காட்டியபடி. நெஞ்சை உலுக்கிய பாடசாலையை அடையமுன்னமே என் அந்தக் கோரசம்பவம் என் கண் மனத்தின் பதைபதைப்பை உறுதி முன்னே நிழலாடுகின்றது. செய்யும் படி எழுந்த ஒலங்கள்
"அப்பா இண்டைக்கு எனக்கு நெஞ்சில் எஞ்சியிருந்த வைராக்கியத் விளையாட்டுப்போட்டி"என் கன்னங் தையும் உறிஞ்சிவிட.
களை முத்தமழையால் நனைத்த என் பாடசாலை மைதானம்
04
 
 
 
 
 

மாணவர்களின் உயிரற்றதும் குற்று யிருமான உடல்களைச் சுமந்து கொண்டு குருஷேத்திர போர்க்களத் தையும் விஞ்சிநின்றது. அங்கே. அங்கே.
என் மகன் இரத்தவெள்ளத் தில். குற்றுயிராய். அள்ளி அணைத்துக் கொண்டு மருத்துவ சாலைக்கு விரைகின்றேன். விடயத் தைக் கேள்வியுற்ற மனைவி கதற லுடன் ஓடிவந்து என்னை அணைத்துக் கொள்ள. எத்தனை பெற்றோர்கள் தங்கள் எதிர்பார்ப்புகள், எதிர் காலங்கள் வீணடிக்கப்பட்டுவிட்டன என்ற ஆற்றாமையில். வேதனை யில். கல்லையும் கதறவைக்கும் கதறல்களுடன் அந்த மருத்துவமனை யில். சாவித்திரியின் கதறலிற்குக் கண்திறந்த இயமன் என் மனைவியை ஏமாற்றிவிட்டான். மருத்துவர்கள் கையை விரித்தபடி அகல.
“யாழ்ப்பாணத்தை விட்டு இருபத்து நான்கு மணித்தியாலங் களில் மக்கள் வெளியேறும்படி வேண்டப்படுகிறார்கள்"
என் மனைவியையும் , மகளையும் அணைத்தபடி பெட்டி படுக்கைகளுடன் விரைகின்றேன். அன்பைக் கொட்டி வளர்த்த மகன் அனாதரவுப் பிணமாய் வைத்திய சாலையில். என்ன செய்வது? எங்கே செல்வது? வன்னியை அடைந்து ஐந்து வருடங்களாயிற்று.
"அப்பா டொக் கடரிட்ட போகவேனும் அம்மாவுக்கு காச்சல் காயுதாம்" ஆம் அதுவரை அந்த,
போயிருந்த என்னை நனவுலகிற்கு இட்டு வந்த என் மகளின் வேண்டு கோளை ஏற்று அவளையும் ஏற்றியபடி துவிச்சக்கர வண்டியை மிதிக்கிறேன்.
05
என் சட்டைப் பையிலிருந்த நூறு ரூபா நாளை கூலி வேலைக்கு எங்காவது போயாக வேண்டும் எனற நிர்ப்பந் தத்தை அளித்தது. மருந்தையும் மதிய உணவையும் கடையில் வேண்டி விட்டுப் பக்கமாக கரும்புகை வானைத் தொட்டுநிற்கின்றது. சற்று முன்னால் கேட்ட வெடிச்சத்தத்தை அசட்டை செய்த எனக்கு உள்மனம் ஏதோ விபரீதம் நிகழ்ந்ததை உணர்த்தியது. "அப்பா நல்ல வடிவாப்புகை வருது என்ன" பழகிப்போன அனர்த்தங்களை உணரமுடியாத பாலகியின் வார்த்தை களை செவிமடுத்தபடி விரைவாக என் துவிச்சக்கர வண்டியின் பெடல்களை மிதிக்கின்றேன்.
"ஐயோ கமலம் எங்களை யெல்லாம் விட்டிட்டுப் போயிட்டியே” சிதைந்து உருக்குலைந்து போயிருந்த என் வீட்டுக்குள் இருந்து ஒலித்த பக்கத்துவிட்டு மூதாட்டியின் ஒப்பாரி

Page 4
நிகழ்ந்ததை உணர்த்த. சைக்கிளைப் போட்டுவிட்டு விரைகின் றேன். என் கவலைகளில், நிமிடங் களில் என்னைத் தேற்றிய என் மனைவியின் திருவதனம் உருவிழந்து சிதறிப்போய்க்கிடக்கின்றது. என் மகள் தன் அம்மாவைக் கட்டியணைத்து அழ முடியாதவளாய் சிதைந்துபோன உடலை வெறித்துப்பார்க்கிறாள். போரின் கொடுமைகளால் எத்தனை யோ பிஞ்சுகளின் மனங்களிற் படிந்த மாறாத வடுக்கள் அவர்களை சித்த சுவாதீனமற்றவர்களாய் மாற்றிவிடும் கொடுமைகளாக இம் மணி னில் புதைந்து புரையோடிப்போன அவலங் களில் என் மகளும் பங்கெடுப்பாளோ என்கின்ற பேரச்சம் என் மனதை ஆட்கொண்டது.
மனைவியின் இறுதிக்கிரியை களுக்கு இம்மியளவும் கையில் பணமற்ற நிலை. உறவினர்களிடமும், நண்பர்களிடமும் என் நிலமையினைக் கூறியபொழுது ஐந்தும் பத்துமாக ஏதோ தொகை சேர்ந்தது. அந்தக்கால கட்டத்தில் என் மளிகைக்கடையில் கடன் வேண்டி என் கடைக்கண் பார் வைக்குத் தவம் கிடந்தவர்கள் கூட என்னை ஆதரிக்கவில்லையே என்ற பொழுது எனக்கு அவர்கள் மேல் சினத்திற்குப் பதிலாக அனுதாபம்தான் பிறந்தது. "போரின் வெறித்தனத்தால் உணவையும், உடையையும் உறை யுள்களையும் இழந்த சமுதாயத்தின் மனிதர்கள் எனக்கு எவ்வாறு உதவ முடியும்? வள்ளுவரின் வாக்கொன்றை சிறு வயதில் படித்த ஞாபகம். இறுதிக் கிரியைகள் முடிந்துவிட்டன. உறவு களும் என் இயலாமையை எடை போட்டு என்னை விட்டு அகன்று விட்டன.
இரண்டாண்டுகள் ஓடிக்
06
கழிந்து விட்டன. எனக்கு கட்டிலை விட்டு நகர முடியாத இயலாமை 'பாரிச வாதம் என்பது இதுதான் என்ப தற்கு உதாரண மனிதனாக இன்று நான். "அப்பா நீங்க கவலைப்படா தேங்கோ. நான் அப்பம் சுட்டாவது உங்களைக் காப்பாத்துவன்" பத்து வயது மகளின் அறிவுபூர்வமான அன் புரையை ஏற்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலை எனக்கு.
என் பிஞ்சின் உழைப்பில் வாழ்க்கையை ஒட்டும் என் வாழ்க் 6086...... இது தேவைதானா. 863)LD தாங்க வேண்டிய நாங்களே சுமை யாகிய அவலம். இது இந்த செம்மண் மாத்திரம் கண்ட வரலாறு. கறையான் களாக இச்சமூகத்தை போரும் அதன் விளைவுகளும் அரித்துக் கொண் டிருக்கும் குருதியுண்ணும் பூமி இது. "அப்பா போயிட்டு வாறன் கவனமா இருங்கோ” என்னிடம் என் மகள் விடைபெற்றுச் செல்லவும் "கூ. கூ. in . . . . . அந்தக் குயிலின் கீதம் செவியை அடையவும் சரியாக இருந்தது. ஆம், சமுதாயத்தில் சிதைய வுள்ள எத்தனையோ குடும்பங்கள் இன்னமும் தோற்றம் பெறப்போ கின்றன என்றும், உறவிழந்து, அன்பிழந்து, கல்வியையுமிழந்து தனியர்களாய் எம் இளம் பிஞ்சுகள் போரின் சன்மானங்களாய் அதற்கு முகம் கொடுக்கும் யுகபுருஷர்களாக இந்த மண்ணில் மீண்டும் மீண்டும் அவதரிக்கப் போகின்றனர் என்றும், துணையற்றுக் கூவிக் கொணி டிருக்கும் அந்த வேப்பமரக்குயிலின் ஒற்றைக் கூவல் எனக்கு உணர்த்திக் கொண்டிருந்தது. கூ. éfa-••••••••••••
th. . . . . . . . . . . . . .
(யாவும் கற்பனை)

சமூக மாற்றத்திற்கான மரபு சார்ந்த
கலைப் புனரமைப்புக்களின் அவசியம்
- சின்னத்தம்பி குருபரன்
உலக நாடுகளில் ஏற்படும் விஞ்ஞான தொழிநுணுக்க மாற்றம் சகல துறைகளையும் பாதித்துள்ளது. உலகம் சுருங்கி ஒரு கிராமமாகும் காலம் வெகு தொலைவில் இல்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வெகுசனத் தொடர்பு சாதனங்கள், தொடர்பாடல், போக்குவரத்தின் வளர்ச்சி ஆகியன கருமங்களை இலகுபடுத்தியுள்ளன. செயற்பாடுகள் நுணுக்கமாகவும், திறமையாகவும் நடைபெறுவதற்கு அவற்றின் பங்களிப்பு அவசியமாகின்றன. இவ்வாறு தினம்தினம் நிகழும் மாற்றங்களுக்கு அல்லது தாக்கங்களுக்கு மனிதனும் உள்ளாகிக் கொண்டிருக்கின்றான். இம்மாற்றங்கள் அவன் போற்றிப் பேணி வளர்க்கும் கலைகளிலும் தாக்கத்தினை விளைவிக்கின்றன. முற்போக்குச் சிந்தனை உருவாகி புதுமைகளும் புத்தாக்கங்களும் ஏற்படுகின்றன. கலை வளர்ச்சிக்கு வெகுசனத் தொடர்புசாதனங்கள், தொடர்பாடல், போக்குவரத்து ஆகிய துறைகளும் பங்களிப்புச் செய்கின்றன. இவ்வாறு எங்கும் எதிலும் புதுமை நிகழ்ந்துகொண்டிருக்கும்போது கலைப் படைப்புக்களிலும் நவீனத்துவம் ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகின்றது. இன்று சமூகவியல், இலக்கியவியல், நாட்டாரியல் சார்ந்த ஆய்வாளர்கள் மத்தியில் புதிய உற்சாகம் பிறந்துள்ளதை அவதானிக்கலாம். சமூகவியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்கள் பாரம்பரிய கலாசாரம் பற்றிய ஆய்வுகளை முடக்கி விட்டிருக்கின்றனர். பண்டைய நாட்டார் இலக்கியங்கள், கலைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து பேணும் மரபு நன்கு வளர்ந்து வருவதை அவதானிக்கலாம். சுவடிகள் சேகரித்தல், ஆவணப்படுத்தல், புதிப்பித்தல் அவற்றை நவீனத்துவத்துடன் மக்கள் முன்கொண்டு செல்லல், ஆகியனவும் வளர்ந்து வருகின்றன. ஈழத்தில் இத்தகைய மரபொன்று உருவாவதற்கு கால்கோளாய் இருந்தவர், சுவாமி விபுலானந்தர் என்றே கூறலாம்.
சுவாமி விபுலானந்தர் உருவாக்கி வைத்த மரபு 1940 களில் இருந்து பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் கைபட்டு புத்துருவாக்கம் பெற்றுள்ளது. அவரால் நன்கு புடம்போட்டு வளர்க்கப்பட்ட கலை வடிவம் சமகாலத்தில் கலையரசு சொர்ணலிங்கம். நடிகமணி, வைரமுத்து ஆகியோராலும் புது வடிவம் பெற்றுள்ளது. பின்னர் பேராசிரியர் சு. வித்தியானந்தனின் சாதனைமிக்க முயற்சியால் புதுப்பொலிவு பெற்று கலாநிதி மெளனகுரு, குழந்தை சண்முகம், தாஸிஸியஸ், சுஹைர் ஹமிட், சிதம்பரநாதன், பாலேந்திரா ஆகியோரின் முயற்சியால் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது. இருந்தும் சில பிரதேசங்களில் பாரம்பரிய கலைப்படைப்புக்கள் புத்தாக்கம் பெறவில்லை என்றே கூறலாம்.
நாட்டார் வழக்காற்றியலில் நாட்டுபுற மக்களின் கலை, இலக்கிய வடிவங்களைப் போற்றிப் பேணும் மரபு கற்றோர் மத்தியில் வலுப்பெற்று வருகின்றன. இத்தோடு அவை, தொடர்புபட்ட ஆய்வுகள் பரவலாக்கப்பட்டும் வருகின்றன. பிரதேச ரீதியாகக் காலாங்காலமாக கலை, கலாசார, இலக்கிய வடிவங்கள்
07

Page 5
புத்தாக்கம் பெற்று ஓரளவு மக்களைச் சென்றடைகின்றன.
நாட்டுப்புற மக்கள் இத்தகைய கலை இலக்கிய வடிவங்களை இரசனை உணர்வோடு உருவாக்கிப் பேணிக்காத்து வந்தனர். இன்று, நாட்டுப்புற மக்களை மட்டுமன்றி நகர மக்களையும் இவை ஈர்த்தெடுக்கும் கலை வடிவங்களாக மாறியுள்ளன. கற்றோர் மத்தியில் புத்துருவாக்கம்பெறும் கலையாக மாறியுள்ளமை சமூகத்தின் இரசனை உணர்வை வெளிப்படுத்துகின்றது.
நாட்டார் வழக்கினை புலநெறி, செல்நெறி வழக்கு என்றெல்லாம் அழைப்பதுண்டு. இவ்வழக்கு எளிமை, இனிமை, சுவை, இரசனை, வண்ணம், நிறைவு, பக்திச்சுவை ஆகியன கொண்டனவாகும். கிராமத்து மக்கள் ஓய்வை பயனுடையதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் ஆக்கிக்கொள்ள இத்தகைய கலை வடிவங்களைப் பயன்படுத்தினர். அறுவடை முடித்து விதைப்புக் காலம் வரையுள்ள காலப் பகுதியில் பயனுடைய பல கிராமியக் கலைகள் அரங்கேறும்.
படிப்பறிவு குறைந்த பாமர மக்கள் இத்தகைய கலை அம்சங்களை உயிரோடு கலந்த உறவாக மதிப்பர். இரத்ததோடு கூடிய உணர்வாகப் பேணுவர். உண்டு, குடித்து, கூடிக்குலாவி மகிழ்வர். இத்தகைய மக்கள் மத்தியில் உருவாகிய கலைவடிவம் கட்டுக்கோப்பு, இறுக்கமான உடன்பாடு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பேணிக் காக்கப்பட்டு வந்தனவாகும். இத்தகைய மக்கள்
"பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் தானறியேன் ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை தானறியேன் ஏட்டிலே எழுதவில்லை எழுதி நான் படிக்கவில்லை வாயிலே வந்தபடி வகையுடன் நான் படிப்பேன்." எனப் பாடிய பாடல்கள்தான் இன்று நாட்டார் பாடல்களாக நம்முன் திகழ்கின்றன.
கிராமிய கலை அம்சங்கள் பல்வகைப்பட்ட சமூகப் பரிமாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவன. அவையாவன
01. சமூக அமைப்பைப் பேணுதல். 02. சமூக, சாதி ஒருமைப்பாட்டினைப் பேணுதல். 03. சமூக சமநிலையைப் பேணுதல் 04. கல்வி, பண்பாட்டு அம்சங்களை ஊக்குவித்தல். 05. பொழுதுபோக்கு அம்சம். 06. அழகியல், உளவியல் அம்சங்கள் நிறைவேற்றப்படல். இத்தகைய சமூக பரிமாணங்களையும் கூட்டுப் பொதுமை பற்றியும் பேராசிரியர் கா. சிவத்தம்பி கூறுகையில் "சமூக நிலைப்பட்ட பலத்துக்கான, அதன் சனரஞ்சகத்திற்கான காரணம் அதன் வரலாற்றிலே தங்கியுள்ளது" என்றார். நாட்டார் இலக்கியங்கள் மக்களின் வாழ்வியல் அம்சங்களோடு தொடர்புபட்டனவாகும். நாட்டுப்புற மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வாய்மொழி இலக்கியங்களாக அவை உள்ளன. கிராமங்கள் நாட்டு மக்களின் கலைப்பீடமாகும். மக்களின் நாளாந்த வாழ்க்கை, அவர்களின் தொழில், சமய, கலாசார அம்சங்கள் ஆகியவற்றை பாடுபொருளாக கொண்டனவாக நாட்டுப்புற இலக்கியங்கள் அமைந்துள்ளன.
ஈழத்தில் நாட்டுப்புற இலக்கியங்கள் இனம், மதம், மொழி, பிரதேச
08

அடிப்படையில் பாகுபடுத்தப்பட்டுள்ளன. சிங்கள மக்கள் மத்தியில் தொவில் (களிப்பு), மஹாபிரித் எனப்படும் களிப்பு, கோலம் (வசந்தன்), சொக்கரி (மகுடி), பாவைக்கூத்து (சூரன்போர்), பசான் (பாசுக்க நாடகம்), மடுவ (கமத்த) நாடகம (கூத்து) ஆகியன பாரம்பரிய கலை வடிவங்களாகும். இவற்றுள் சொக்கரி என்ற மகுடியில் இருந்து மடுவ, கமத்த ஆகியன பிறந்தனவாகும். இவையாவும் தமிழர்களின் பாரம்பரிய நாட்டுக்கூத்து கலை வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு தோன்றியவை என பேராசிரியர் எதிரி வீர சரத்சந்திரா குறிப்பிடுகிறார். மேலும் மனமே எனும் நாடகம் தமிழ் நாட்டுக்கூத்து மரபை ஆராய்ந்து தயாரிக்கப்பட்டதென அவரே குறிப்பிடுகின்றார்.
ஈழத்தமிழ் மக்களிடையே வழங்கிவரும் நாட்டுப்புற இலக்கிய வடிவங்களை கலாநிதி சி. மெளனகுரு தமது பழையதும் புதியதுமென்ற நூலில் பின்வருமாறு அட்டவணைப்படுத்திக் காட்டுகின்றார். 01. யாழ்ப்பாணம் - தென்மோடிக் கூத்து, வடமோடிக்கூத்து, கந்தன்கூத்து, வசந்தன் கூத்து, இசை நாடகம் 02. முல்லைத்தீவு - காத்தான் கூத்து, கோவலன் கூத்து (தென்மோடி)
கிறிஸ்தவ பாரம்பரிய தென்மோடி, குடமுதன் கூத்து,
மகிடிக் கூத்து
03. வவுனியா - மகிடிக் கூத்து
04. மன்னார் - கிறிஸ்தவ பாரம்பரிய தென்மோடிக் கூத்து, வடபாங்குக்
கூத்து, தென்பாங்குக் கூத்து, வசாப்பு
05. சிலாபம் - வடமோடிக்கூத்து, கிறிஸ்தவ பாரம்பரிய தென்மோடிகூத்து
06. தம்பலகாமம் - தென்மோடிக்கூத்து, வடமோடிக்கூத்து, மகிடிக்கூத்து 07, மட்டக்களப்பு - வடமோடிக் கூத்து, தென்மோடிக்கூத்து, வசந்தன் கூத்து,
மகிடிக்கூத்து, பிறைமேனக் கூத்து, காத்தான் கூத்து 08. மலைநாடு - அருச்சுனன் தபசு, காமன்கூத்து, பொன்னர் சங்கர்,
வீரபத்திரன் ஆட்டம் ஆகியனவும் காணப்படுகின்றன. இவற்றைவிட யாழ்ப்பாணத்தில் போர்த்தேங்காய், சிதறுதேங்காய் அடித்தல் ஆகிய கலை அம்சங்களும், மட்டக்களப்பில் கொம்பு விளையாட்டு, போர்த்தேங்காய் அடித்தல், கும்மி, கோலாட்டம் ஆகிய பாரம்பரிய கலை வடிவங்களும் பேணிக்காக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய கலை வடிவங்கள் மக்கள் வாழ்க்கையோடும்,
கிராமப்புறங்களிலுள்ள கோயில்கள் கலைகளை வளர்க்கும் பீடங்களாக விளங்குகின்றன. கோவில் உற்சவகாலங்களில் இத்தகைய கலைகள் அதிகம் அரங்கேறுவதைக் காணலாம். இன்னும் சில தேவைகருதியும் அரங்கேறுகின்றன. அமைதி, சாந்தம், அப்பழுக்கற்ற மனநிலை, தூய சிந்தை இத்தகைய உள்ளங்களிலிருந்து பிறக்கும் கவியும் கூடத் தூய்மையானதாக இருக்குமென்பதில் ஐயமில்லை. எழுத்தறிவு, படிப்பறிவு குறைந்த பாமர மக்கள் மத்தியில் உருவான இத்தகைய வாய்மொழி இலக்கியங்கள் பல அழிந்துவிட்டன. ஏடுகளிலும், சுவடிகளிலும் எழுதிப் பேணிப் பாதுகாக்கப்பட்டவைகள், இன்று எம்முன் அச்சுருவில் திகழ்கின்றன. இன்னும் சில ஏறாமலும் இருக்கின்றன. இத்தகைய கலைகளை
09

Page 6
ஒன்று திரட்டி மாற்றத்தை விரும்பி உள்வாங்கி அநுபவிக்கும், அநுபவிக்க எத்தனிக்கின்ற மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொரு கலைஞர்களினதும் கடமையாகும்.
முன்பெல்லாம் குழந்தை அழும்போது அன்னை தாலாட்டு பாடிக் குழந்தையை மகிழ்வித்து, உறங்க வைப்பாள். இன்றைய நவீன சமூகத்தில் குழந்தையை மகிழ்விக்கவும் உறங்கவைக்கவும் காட்சிப் பொருட்கள் அதனிடத் தைப் பிடித்துவிட்டன. தாலாட்டுப் பாடல்கள் அருகிக் கொண்டு போகின்றன. இவ்வாறுதான் ஏனைய கலை இலக்கியங்களும் மக்கள் மத்தியிலிருந்து மறைய எத்தனித்துக் கொண்டிருக்கின்றன.
ஆகவே, நாட்டுப்புற பாமர மக்கள் மத்தியில் காணப்பட்ட கலைகள் அருகிவிடாது புதுவடிவம் பெறவேண்டும். இவை இன்றைய சந்ததியினர் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டும். இதற்கு அழகுணர்ச்சியும், ஆர்வமும் உள்ளவர்களின் பங்ளிப்பு தேவை. இத்தகைய கலைகள் இன்றைய மக்களின் தேவையுணர்ந்து புதுப்பொலிவு பெறவேண்டும். அப்போதுதான் அவை வாழும்கலையாக மாற்றமடையும். இதற்கு கற்றவர்களின் பங்களிப்பு அவசியமாகும்.
தாய்ப்பாலில் கிடையாது தாய் மண்ணின் மீதுாறும் தண்ணீரிலுமித் தன்மையில்லை என்று தணியும் வெறுப்புமிழ்ந்து'எனைப்பார்க்கும்
. . இவ்வித்தை நீ கற்றதெங்கு - அஷரஃப் சிஹாப்தின்
சந்தனமும் திருநீறும் சாபமென நீ நினைத்துச் சறுக்கிய நாளொன்றில் சரித்திரத்தில் இரத்தத்தாள்
நாயிழுத்துப்போட்டு நக்கிப் புரட்டி நாறடித்த சட்டியென நாடாயிற்று
காற்றெழும்ப நாறும் நமது கதை திசைதோறும் பேசும் படியாய் போயிற்று உலகத்தார் வியந்து நமைப்பார்த்து விக்கித்து நிற்கின்றார்
சாந்தி சொல்லுவதும் சகவாழ்வு பேசுவதும் பொழுதுபோக்காக புறாக்கள் விட்டுப் புகைப்படங்கள் எடுப்பதுமாய் வாழ்பவர்க்கேது வருத்தங்கள்
பேதங்கள் பெருமை தரா வேற்றுமைகள் யாவும் வேரறுந்து போதல் வரை அழகுத் திருநாட்டின் அமைதி தொலைதூரம்
சோதரனே உணர்க இதை நெஞ்ச வெறுப்புக்கு நெருப்பள்ளிப் போட்டெரிக்க
அதுவரையில் ஆளை விடு
வெடித்த குண்டுச் சப்தங்களில் ܀. ܊
நானிழந்த காலத்தை நினைத்து கசிந்துருகி வாய்விட்டுக் கதறியழ
10
 

நான் பேச நினைப்பதெல்லாம்.
(கலாநிதி துரை.மனோகரன்)
வாழ்க நீ அம்மா! இலங்கையில் பேரினவாதிகள் பட்டியலில் சில கலைஞர்களும் இணைந்து பேரினவாதத்துக்கு தீனி போட்டு வருவதும் நாடறிந்த உண்மை. அதேவேளை இதிலிருந்து விதிவிலக்குகளாக / / J விளங்குபவர்களும் இலங்கையில் இருக்கிறார்கள் என்பது எமக்கு ” صمسرحيله ..." * உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. அண்மையில் லண்டனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி இதனை நிரூபிக்கிறது. லண்டனில் இலங்கையரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசைநிகழ்ச்சியொன்றில் இலங்கையின் இசைக்கலைஞர்கள் சிலர் கலந்துகொண்டனர். அவர்களுள் பாடகி நந்தா மாலினியும் ஒருவர். அந்நிகழ்ச்சியில் அவர் பாடிய பாடல்களுள் ஒன்றாக மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் பாடலொன்றின் சிங்கள மொழிபெயர்ப்பும் இடம் பெற்றிருந்தது. அப்பாடல் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தமது தாய்நாட்டுக்காகத் தம்மை அர்ப்பணித்த வீரர்கள் தொடர்பானதாக அமைந்திருந்தது. அந்த பாடலால் உற்சாகமடைந்த சில பார்வையாளர்கள், இனவாத ரீதியிலான பாடல்களை நந்தாமாலினி பாடவேண்டுமெனக் கேட்டுக்கொண்டனர். குறிப்பாக “மே சிங்கள அப்பகே ரட்டய் (இது சிங்களவரான எமது நாடு) என்னும் பாடலைப் பாடுமாறு வற்புறுத்தினர். ஆனால் நந்தாமாலினி அப்பாடலை பாட மறுத்து, இலங்கையின் வடக்கையும் தெற்கையும் இணைத்து, இன ஒற்றுமையை விளக்கும் பாடலொன்றைப்பாடி, தாம் ஓர் இலங்கைக் கலைஞர் என்பதை எடுத்துக் காட்டி னார். சபையில் இருந்த இனவாதிகள் பலத்த ஏமாற்றத்தை இலவசமாகப் பெற்றனர். நந்தாமாலினி போன்ற மனிதநேயம் படைத்த கலைஞர்களின் சேவையே இந் நாட்டுக்குத் தேவை. நந்தாமாலினிமீது ஏற்கனவே எனக்கிருந்த மதிப்பு, அவரது இச்செயலைப் பத்திரிகைகள் வாயிலாக அறிந்தபோது மேலும் உயர்ந்தது. வாழ்க (s elbLDT! 'யானை பார்த்த குருடர்கள் கதை - புதிய பதிப்பு
ஓர் இருள் அடர்ந்த காட்டில் புதிதாக ஒரு யானை காணப்பட்டது. அந்த யானை புதிதாக அந்தக் காட்டுக்கு வந்திருந்தமையால், பலரும் அதுபற்றிக் கேள்வியுற்று, அந்த யானையைப் பார்க்க வந்தனர். இவ்வாறு அந்த யானையைப் பார்க்க வந்தவர்களில் பல குருடர்களும் இருந்தனர். சிலர் உண்மையான குருடர்களாகக் காணப்பட்டனர். சிலர் குருடர்கள் போல நடித்தனர். பார்வையுள்ளவர்கள், குருட்டுத்தன்மை கொண்டவர்கள், குருடர்கள்போல் நடித்தவர்கள், எனப் பலரும் அந்த யானையைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தனர்; தொட்டுத் தொட்டுப் பார்த்தனர். யானை அசையாமல் அப்படியே நின்றது. சில
11

Page 7
நாட்களின்பின் நல்ல பார்வையுள்ளவர்களுக்கு அந்த யானை பற்றிச் சந்தேகம் ஏற்படத் தொடங்கியது. அவர்கள் சற்றே விலகித் தூர நின்று, அந்த யானையை அவதானித்துக் கொண்டிருந்தனர். குருடர்களும் குருடர்களைப் போன்று நடித்தவர்களும் அந்த யானைக்கு மிகமிக அருகில் நின்றுகொண்டு, ஒருவருக்கொருவர் உரத்து இரைந்து பேசிக்கொண்டிருந்தனர். குருடர்களில் அரசியல்வாதிகள், கல்விமான்கள், எதையும் நம்பும் மக்கள் எனப்பல தரத்தவர்கள் இருந்தனர். நடிப்புக் குருடர்களில் குருமார்கள், அரசியல்வாதிகள், கல்விமான்கள், சட்டத்தரணிகள், சில விளையாட்டு வீரர்கள் முதலியோர் இருந்தனர். இந்த யானை பற்றிக் கேள்வியுற்று, வெளிநாடுகளிலிருந்தும் சில குருடர்கள் விமானமேறிக் காட்டுக்குள் நுழைந்து ஆரவாரம் செய்தனர். அவ்வாறு வந்த குருடர்களில் சென்னை 'ஹிந்து பத்திரிகையைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். யானையைத் தொட்டுப்பார்த்த உண்மைக் குருடர் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக அந்த யானையைப் பற்றி புகழ்ந்தனர். "அதன் தும்பிக்கையைப் பாருங்கள்! என்ன அழகாக இருக்கிறது! தனது தும்பிக்கையினால் எங்களுக்கு வேண்டிய உணவு, தண்ணிர் யாவற்றையுமே அந்த யானை கொண்டுவந்து தரும்” என்றார் ஒரு குருடர். இன்னொரு குருடர் "அதன் வால் இப்போது சிறிதாக இருந்தாலும், காலப்போக்கில் அந்த வாலை இன்னும் நீளமாக வளர்க்க வாய்ப்பு இருக்கின்றது. கவலைப்படத் தேவையில்லை" என்று சொன்னார். பிறிதொரு குருடர் யானையின் கொம்புகளைத் தொட்டுப் பார்த்துவிட்டு “அதன் கொம்புகள் யாரையும் குத்தாது. அவை கூர்மை போலத் தோன்றினாலும் பயப்படத் தேவையில்லை” என்று ஆறுதல் மொழிகள் கூறினார். வேறொருவர் "இந்த, யானையின் விசிறி போன்ற செவிகளைக் கவனித்தீர்களா? அவை அசைந்தால் எங்களுக்கு நல்ல காற்று வரும். இனிமேல் சுவாசிப்பதற்கு பிராணவாயுவைத் தேடி எங்கும் அலையவேண்டியதில்லை" என்று ஆரோக்கிய வாழ்விற்கான அறிவுரைகள் பகர்ந்தார். வேறு சிலர் மத்தியில் அந்த யானையின் காலினது பலத்தைப் பற்றிய விவாதம் தொடங்கியது. ஒருசிலர் சொன்னார்கள் "யானையின் கால்கள் அப்படித்தான் இருக்கும். ஆனால், இந்த யானை யாரையும் மோதி மிதிக்காது" அந்தக் காட்டுப்பகுதியிலிருந்து அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்றுவரும் கோட்டு சூட்டுகழற்றாத ஒரு குருட்டு கனவான் சொன்னார்: "இந்த யானையைப் போன்ற ஒரு சிறந்த யானையை இனி இந்தக்காட்டுப் பகுதியில் நாம் காணப்போவதில்லை. இதுதான் கடைசிச் சந்தர்ப்பம்" மேலும் சிலர் “இதன் பெருமை தெரியாது, சிலர் தூரத்தில் நின்றுகொண்டிருக்கின்றனர். இந்த யானையின் முகத்தில் சில புள்ளிகள் இருக்கலாம். காலப்போக்கில் நாங்கள் கைகளால் தேய்த்து, அவற்றை அழித்துவிடலாம்” என்றனர். “இந்த யானையைக் கட்டி வளர்ப்பது இந்தக் காட்டில் வாழும் எங்கள் அனைவரதும் கடமை. இல்லையேல், பிறகு இதற்காக வருத்தப்பட நேரிடும்” என்றும் குருடர்களிற் சிலர் தெரிவித்தனர். "இந்த யானையை நல்ல யானை என்று ஏற்றுக்கொள்ளாதவர்கள் நல்ல கட்புலன் அற்றவர்கள்" என்று குருடர்கள் பக்கத்தைச் சேர்ந்த சில கல்விமான்கள் கூறினர். மொத்தத்தில் எல்லாக் குருடர்களும் சேர்ந்து, தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அந்த யானையைப் பற்றி ஒகோவென்று புழுகித் தள்ளிக்கொண்டிருந்தனர். இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது
12

யானைப்பாகன் வந்தான். "இது நான் வளர்த்த யானை. இதைவிட சிறந்த யானையை யாராலும் வளர்த்துவிட முடியாது. நான் இந்த யானையை விற்கப் போகிறேன். விருப்பம் இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று எல்லோருக்கும் பொதுவாக இறுமாப்போடு சொன்னான். அதேவேளை, நடிப்புக் குருடர்கள் அனைவரும் சேர்ந்து, உண்மைக் குருடர்களுக்கு எதிராகக் கோஷமிடத் தொடங்கினர். “இந்த யானையை நாம் இந்தக் காட்டுக்குள் அநுமதிக்க முடியாது. இந்த யானை காலப்போக்கில் எங்களைக் கொன்றுவிடும். நீண்ட காலமாக இந்தக் கரிய, விஷம் நிறைந்த, அடர்ந்த காட்டை ‘அழகாக வைத்துக்கொண்டிருப்ப வர்கள், நாங்கள். தேவையில்லாமல் இந்த யானையைக் கொண்டுவந்து, இந்தக் காட்டையே இந்தக் குருடர்கள் பாழடிக்கப் பார்க்கிறார்கள். இவர்கள் காட்டுத் துரோகிகள். எங்களைக் கேட்காமல் எந்தப் புதிய யானையையும் யாரும் இந்தக் காட்டுக்குள் கொண்டுவரமுடியாது. அதை நாங்கள் அநுமதிக்கப் போவதில்லை என்று தொண்டை கிழியக் கத்திக்கொண்டிருந்தார்கள். சில நடிப்புக் குருடர்கள் “யானையை அசைய விடமாட்டோம்” என்று கூறிக்கொண்டு, அதற்கு முன்னால் படுத்துத் தூங்கிவிட்டார்கள். அப்போது ஒரு சிறுவன் அந்தக் காட்டுவழியால் வந்துகொண்டிருந்தான். அந்த யானையைப் பார்த்ததும் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆவலுடன் ஓடிப்போய் தனது பிஞ்சுக்கரங்களால் அந்த யானையைத் தள்ளிவிட்டான். அவ்வளவு நேரமும் உண்மைக் குருடர்களுக்கும் நடிப்புக் குருடர்களுக்கும் விவாதப் பொருளாக இருந்த அந்த யானை அப்படியே படார் என்று வீழ்ந்துவிட்டது. விழுந்த வேகத்தில், அதுவரை காற்றடைக்கப்பட்டிருந்த அந்தப் பொம்மை யானையின் காற்று வெளியேறிவிட்டது. உண்மைக்குருடர்கள் வாயடைத்து நின்றனர். நடிப்புக் குருடர்கள், அந்த யானையை காட்டுக்குள் அநுமதிக்காதது தமது வெற்றியே என்று களிப்படைந்தனர்
திருகோணமலையில் “ஞானம் முதற்காலாண்டு இதழ்கள் பற்றிய இலக்கியக் கலந்துரையாடல்
ஞானம் முதற்காலாண்டு இதழ்கள் பற்றிய ஓர் இலக்கியக் கலந்துரை யாடல் 06-08-2000 அன்று காலை 10 மணியளவில் திருகோணமலை கலாசார மண்டபத்தில் பிரபல எழுத்தாளர் திருமலை சுந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முத்தமிழ் வளர்கலை மன்றத்தின் ஆதரவில் நடைபெற்ற இக்கலந் துரையாடலில் பல இலக்கியவாதிகள், தமிழறிஞர்கள், விமர்சகர்கள், அரசியல் வாதிகள், இலக்கிய ஆர்வலர்கள், கல்விமான்கள் கலந்து கொண்டனர்.
கலாவினோதன் சித்தி அமரசிங்கம், திருமலை முன்னாள் நகரமுதல்வர் திரு.பெ.சூரியமுர்த்தி, கே.எஸ்.சிவகுமாரன், கவிஞர் புரட்சிபாலன், எஸ்.சந்திரகாந்தி, திரு.கனகசபை தேவகடாட்சம், அ.சிவபாலன், க.ஜயந்தன், அதிபர்.சி.தண்டாயுத பாணி, டாக்டர்.ஆர்.தர்மராஜா, ஆயதீந்திரா, தி.கிருஷ்ணாநந்தன், தி.சாமிநாதன், ச. அருளானந்தம், சி.காளிராசா, முத்த பத்திரிகையாளர் சின்னையா குருநாதன், சட்டத்தரணி கா.சிவபாலன், சி. கமலகாந்தன் ஆகியோர் ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கினர். ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் திஞானசேகரன், இணையாசிரியர் ந.பார்த்திபன் ஆகியோர் சஞ்சிகையின் சார்பில் கலந்துகொண்டு பதிலுரை வழங்கினர்.
13

Page 8
C3 O óldr. Gulllösbllgö60!
6 சந்திப்பு:
ல் தி.ஞானசேகரன்
நாற்பது வருடங்களுக்கு மேலாகச் சளைக்காது எழுதிவரும் முற்போக்கு Y * ܁/
எழுத்தாளர் செ. யோகநாதன்.
* நாவல், குறுநாவல், சிறுகதை, குழந்தை இலக்கியம், மொழிபெயர்ப்பு, திறனாய்வு, திரைப்படத்துறை, வாழ்க்கை வரலாறு ஆகியதுறைகளில் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பவர். * தமிழக அரசின் சிறந்த படைப்பாளிக்கான விருதை மூன்று தடவைகள் பெற்றதுடன் இருபதிற்கும் மேற்பட்ட தமிழக, இந்திய கலை இலக்கிய நிறுவனங்களின் பரிசுகளைப் பெற்றவர். * இலங்கை சாகித்திய மண்டலத்தினால் மூன்று தடவைகள் சிறந்த
நாவலாசிரியராக விருதளிக்கப்பட்டு கெளரவம் பெற்றவர். * இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளின் குழந்தை எழுத்தாளர் மகாநாட்டில் தமிழக அரசின் பிரதிநிதியாகப் பங்குகொண்டு கட்டுரை வாசித்தவர். * இந்திய மொழிகள் பலவற்றிலும், ருஷ்ய, ஜேர்மன், ஆங்கில, சிங்கள மொழிகளிலும் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ン ܢܠ
தி. ஞா - உங்களது எழுத்து முயற்சிகளுக்கு ஆதர்சமாக விளங்கிய படைப்பாளிகள் யார்?
செ. யோ - மகாகவி பாரதி என்னை மிகவும் பாதித்தவர். இன்னும் அவனைப் படிக்கையில் நான் வியப்பும், புதுமையும், மகிழ்ச்சியும் காண்கிறேன். கு. அழகிரிசாமி, புதுமைப்பித்தன், ஆரம்பகால ஜெயகாந்தன், ஆர். சூடாமணி, பிரபஞ்சன், பா. செபப்பிரகாசம், இலங்தையர கோன், செ. கதிர்காமநாதன் இவர்களோடு மார்க்சிம் கோர்க்கி, சரத்சந்திரர், தகழி, பாரப்புரத்து, அலன்பேடன், கேசவதேவ், இலியா எ.ட்ரன்பேர்க், நிக்கலாய் ஒஸ்ரோவொஸ்கி, சினு அச்சுபே, விபூதி பூஷன் பந்தோபத்யாய, தாராசங்கர் பானர்ஜி, தாகூர், டால்ஸ்டாய், லூசூன் ஆகியோர். இவர்களோடு கம்பனும். இந்தியாவில் வெளியான எல்லா மொழி ராமாயணங்களையும் நான் படித்திருக்கின்றேன். வால்மீகி, துளசி, பவபூதிக்கு எவ்வளவோ உயரத்திலே ஒப்பற்ற சிகரமாய் நிற்கிறான் கம்பன். காவிய அமைப்பிலும் சொல் வளத்திலும் பாத்திரப் படைப்பிலும் புதுமைகள் செய்திருக்கிறான் கம்பன். பலமொழி தெரிந்த அறிஞர்கள் கம்பனைப் படித்தால்
14
 

கைவிரலுக்குள் அடங்கும் உலக மகாகவிகளில் ஒருவனாக நிச்சயம் அவன் வருவான்.
தி. ஞா - தமிழகத்தில் ஒரு தசாப்தத்துக்கு மேலாக முழுநேர எழுத்தாளராக வாழ்ந்திருக்கிறீர்கள். அந்த அநுபவங்களைக் கூறுங்கள். செ. யோ - பதினான்கு ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்தேன். அறுபது நூல்கள், நாவல், குறுநாவல், சிறுகதை, குழந்தை இலக்கியம், மொழிபெயர்ப்பு, திரைப்படம், ஆகிய துறைகளில் வெளிவந்தன. என்னுடைய பல நூல்கள் முதலில் நூலாகவும் பின்னர் பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் சிறந்த படைப்பாளிகள், பதிப்பாளர்களின் அன்பையும், நட்பையும் பெற்றேன். பொன்னீலன், பிரபஞ்சன், போன்றோரோடு அறை நண்பராக இருந்தேன். ஒரே வேளையில் எழுதினோம். சூரிய தீபன், பாவைச்சந்திரன், அறிவுமதி, ட்ராஸ்க்கி மருது, வீர சந்தானம், ஆதிமூலம், பாவண்ணன், சுப்ரபாரதிமணியன், மா. பாலசுப்ரமணியம், அருண்மொழி, கிள்ளிவளவன், மாலன், ஆர். சூடாமணி, திருப்பூர் கிருஷ்ணன், வல்லிக்கண்ணன், தி.க.சி. மகேந்திரன், தயானந்தன், வெ. கிருஷ்ணமூர்த்தி, வாஸந்தி, கோமல், இளையபாரதி, வீயெஸ்வி, இராஜமார்த்தாண்டன், பொற்கோ, சுப. வீரபாண்டியன், இப்படி இன்னும் பலரோடான உறவு எனது தமிழக இருப்பிற்கு பெருமை தந்தது. நர்மதா ராமலிங்கம் எனது நூல்களை முதலில் வெளியிட்டு தமிழகம் முழுவதும் அறிமுகம் செய்தார். சிறந்த மனிதர். "இரவல்தாய்நாடு, 'தேடுதல்', 'சுந்தரியின் முகங்கள், அவளுக்கு நிலவென்று பேர், என்பன அவர் வெளியிட்ட தொகுதிகள். பின்னவை இரண்டும் தமிழக அரசின் பரிசு பெற்றவை. தமிழோசை, திருமகள், கண்மணி, அநுராகம், கலைஞன், என்சிபிஎச், காந்தளகம், மணியம், குமரன், செண்பகா, சரவணபாலு, திவ்யா இன்னும் நினைவிலிருந்து நழுவிப்போன பதிப்பகங்கள் எனது நூல்களை வெளியிட்டன. இவற்றின் பெரும்பாலான நூல்களை நானே வடிவமைத்தேன். இதற்காக நான் பயின்றதும் அறிந்ததும், எனக்கு பெருஞ்செல்வம். இந்த அநுபவங்களோடு நானே 'சத்தியபாரதி பதிப்பகத்தை ஆரம்பித்து பத்து நூல்களை வெளியிட்டேன். இந்த நூற்றாண்டின் ஈழத்து சிறுகதைத் தொகுதிகளான "வெள்ளிப்பாதசரம்', 'ஒரு கூடைக் கொழுந்து' என்ற 1000ம் பக்கங்களுக்கு மேற்பட்ட தொகுதிகளை வெளியிட்டேன். இதோடு 'நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே’ என்ற நாவல்த் தொடரும் வெளியாகி 'இலக்கியசிந்தனை, 'கலை இலக்கியப் பெருமன்றவிருதுகளைப் பெற்றது. மூன்றாம் உலக நாடுகளின் பெரிய அவலமான ஏற்றுமதி ஆடைத்தொழிற் சாலையை மையமாக வைத்து தமிழிலே முதல் நாவலாக தனியாக ஒருத்தியை எழுதினேன். இந்தத்துறைப் பெண்களும், தொழிற்சங்கங்களும் பாராட்டிய இந்தநூல் தமிழக அரசின் பரிசைப் பெற்றது. சென்னையிலுள்ள சிறந்த புத்தககடைகளுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் செல்வேன். அவை அருமையான விளைவுகள் தந்தன. குறிப்பாக குழந்தை இலக்கியங்கள். இவை வியப்பும் ஏக்கமும் கொள்ளவைத்தன. அலையன் பிரான்சஸ், மாக்ஸ்முல்லர் பவன் என்பன புதிய வெளிச்சத்தைக் காட்டின. "குழந்தைகள் கதைக்களஞ்சியம், சூரியனைத் தேடியவன், "காற்றின் குழந்தைகள், 'சின்னஞ்சிறு
15

Page 9
கிளியே' என்பவை குழந்தை இலக்கிய உருவ, உள்ளடக்கம் எப்படி அமைய வேண்டுமென்பதற்கு இந்த நூல்கள் அடையாளங்களாக அமைந்தன. வீர. சந்தானம், ட்ராஸ் கி மருது, மணியம் செல்வன் ஆகியோரின் ஓவியங்களும், பாலுமகேந்திராவின் அட்டைப்படங்களும் இந்த நூல்களைப் புத்தக கலாசார உச்சத்திற்கு கொண்டுசென்றன. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா 'குழந்தைகள் கதைக்களஞ்சியம் ஒவ்வொரு நூலகத்தில் இருக்க வேண்டு மென்றதும், குழந்தை எழுத்தாளர் சங்கப்பரிசுகளை நானும், எனது மகனும் ஒரே மேடையில் பெற்றுக்கொண்டதும் பசுமையான நினைவுகள். ரத்னபாலா', 'இளந்தென்றல், தினமணியின் 'இளந்தளிர் என்பவற்றிக்குப் பொறுப்பாயிருந்த காலத்தில் நிறையக் குழந்தை எழுத்தாளரோடு தொடர்பு உண்டாயிற்று. இது நல்ல அநுபவம். குறுந்திரையில் 'முப்பது கோடி முகங்களுக்கு 'ஸ்கிரிப்ட் எழுதினேன். பி. லெனின் என்ற சிறந்த மனிதர் இதன் இயக்குநர். இளையராஜா இசை, சிறந்த நடிக நடிகையர் நடித்தனர். தயாரிப்பாளர் பாவைச் சந்திரன். பாலுமகேந்திரா என் வளரிளம் பருவ நண்பர். இருவர் நட்பும் தமிழகத்தில் வளர்ந்தது. அவருடைய எல்லாத் திரைப்பட முயற்சிகளிலும் சம்பந்தப்படுத்தினார். அவரோடு உதவி இயக்குநராக இயங்கியது திரைப்பட விருப்பால் அல்ல. திரைப்படம் பற்றிய முழுமையான தமிழ்நாவலை எழுதத்தான். அதற்கான குறிப்பு, ஒற்றைவரி (One line), 616tu607 Lig55TLDITass 6ft 611607. (Day for the night) (3J656,of6) 6.05ub பகல் என்ற அந்த நாவலை இன்னும் எழுதாமைக்கு காரணங்கள் உள்ளன. அதை எழுதுவேன். சரத்சந்திரன் என்ற மலையாள இயக்குநருக்காக ‘கண்ணாடி வீட்டினுள்ளிருந்து ஒருவன் 'ஸ்கிரிப்பிட் எழுதிப் படமாயிற்று. தமிழகத்தின் அனேகமான எல்லா இலக்கியப் பரிசுகளையும் பெற்றிருக்கின்றேன். "கதாவிருது' என்னை மிகவும் பெருமையடைய வைத்தது. நேஷனல் புக் டிரஸ்ட், கலைஞன், தீபம், எம். எஸ் ராமஸ்வாமியின் 100 தமிழ்க்கதைகள் என்ற ஆங்கிலத் தொகுதிகளுட்பட பல தொகுதிகளில் என் கதைகள் இடம் பெற்றுள்ளன. நான் இதயநோய்க்குட்பட்டபோது, பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு அங்குள்ள சுகாதார அமைச்சரால் அநுமதிக்கப்பட்டேன். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஆர். நல்லக்கண்ணு, தோழர்கள் மகேந்திரன், வெ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இதன் காரணஸ்தர். சிகிச்சை, அறுவைச் சிகிச்சை என்று மாறி எம்.ஜி.ஆர் மருத்துவமனைக்கு வந்தபோது சு. சமுத்திரம், பாவைச் சந்திரன், அ.மா.சாமி ஆகியோர் பேருதவி செய்தனர். தமிழகத்தின் நாலு எழுத்தாளர் சங்கமும், தரமான படைப்பாளிகளும் சேர்ந்து மருத்துவச் செலவை ஏற்றனர். ' எனது இரத்தப்பிரிவு "0" நெக்கட்டிவ். அபூர்வமானது. வானொலி, தொலைக்காட்சி பத்திரிகைகள் என் பெயர் கூறி இரத்ததானம் கேட்டன. நிறையப் பேர் அதற்காக வந்தனர். எனது வாசகர்களான தாயும் மகளும் அவர்களில் இருந்தனர். இது என்னை மிகவும் நெகிழச் செய்தது. இந்த வேளையில் எனக்காக மிக வேண்டுகோள் விடுத்த தி.க.சி, பாவைச்சந்திரன், பொன்னீலன், கவிஞர் பழமலய், தயானந்தன் போன்ற பலரை என்றும் என்னால் மறக்க முடியாது. இதுபோலவே என் பெயர் கூறி பல தகிடுதத்தங்கள் செய்து என் அன்பர்களையே எனக்கு எதிராகத்
16

திருப்பமுயன்ற எமது படைப்பாளி ஒருவரையும் /F Y என் மனதிலிருந்து தூக்கி எறிய முடியவில்லை. ஞானம் ༽ இராமச்சந்திரா மருத்துவமனைக்கு பேராசிரியர் வா. செ. குழந்தைசாமி, கவிஞர் அப்துல் ரகுமான், மு. மேத்தா, ஞானராஜசேகரன், க்ருஷாங்கிணி, விச்வநாதன், இங்குலாப் உட்பட (தபாற்செலவு உட்பட) பலர் வந்து அருகிருந்தனர். ஆனந்தவிகடன், சந்தா காசோலை அக்னி, சக்தி, சிங்கப்பூர் ஆர்வலர் நிதி மூலமாகவோ மணியோடர் அனுப்பினர். மருத்துவமனையில் பேராசிரியர் சி. மூலமாகவோ அனுப்பலாம். தணிகாசலம், டாக்டர்கள் மூர்த்தி, மல்லிஸ்வரன் அனுப்பவேண்டிய பெயர், என்னைக் கண்னெனக் காத்து புத்துயிர் தந்தனர். முகவரி - இதற்காகத் தமிழகத்திற்கு எனது தலைமுறையே | TGNANASEKARAN
சந்தா விபரம் தனிப்பிரதி: ரூபா 15/- வருடச்சந்தா: ரூபா 180/-
நன்றியுள்ளது. 19/7, PERADENTYAROAD, இன்னொரு அருமையான அநுபவம், மைசூரில் | KANDY. உள்ள "த்வன்ய லோகனன் ங்காளர்
தவ எனற எழுததாள அமைப ܔ- D
பிற்குச் சென்றது. பேராசிரியர் நரசிம்மையா இதன் தலைவர். உலகிலும், இந்தியாவிலுமுள்ள சிறந்த 8 படைப்பாளிகள் ஆண்டுக்கு 2 மாதகாலம் இங்கு அழைக்கப்படுவர். அருமையான நூலகம். எல்லா வசதிகளும் நிறைந்த தங்குமிடம். இலக்கிய விவாதங்கள். விரும்பிய 2 துறையில் எழுதலாம். சினு அச்சுபே, ஆர்.கே. நாராயணன், சிவராமகரந்த், எதிரிவீரசரத்சந்திரா என்போர் ஏற்கனவே அங்கு வந்த ஞானவான்கள். தமிழில் க.நா.சு. அசோகமித்திரன், கா. கந்தசாமி, விட்டல்ராவ் இவர்களோடு நான். இங்கு வைத்து நியாயப்படுத்தப்பட்ட கொலைகள் நாவலையும் ஜவஹர்லால் நேரு மொழிபெயர்ப்பையும் செய்தேன். நியாயப்படுத்தப்பட்ட கொலைகள் தினமணியில் வெளியாகி உடனே நூலுருப் பெற்று, பல பதிப்பைக் கண்டது. மகாராஜபுரம் சந்தானம் என்னை மிகவும் கவர்ந்த மேதை. அவரின் மரணம் என்னை மோசமாக நொருக்கிற்று. "காற்றும் சுழிமாறும் அவரைப்பற்றிப் பேசி நூலாகி அவரது குடும்பத்தவரையே நெகிழவைத்தது. இப்படி இன்னும் எத்தனை வளமான அநுபவங்கள்.
தி.ஞா: முற்போக்கு இலக்கியகாரரான நீங்கள், தமிழகம் சென்றதும் வணிகப் பத்திரிகைச் சூழல்களில் சிக்கிக் கொண்டீர்கள் என்பது சரியா? செ.யோ: அபத்தம். எந்த ஊடகத்துக்கென்றும் குறிப்பிட்டு நான் எழுதுவதில்லை. நான் என் படைப்பு எதுவென்பதைத் தீர்மானித்து எழுதுகின்றேன். பிறகு சஞ்சிகைகளுக்கு அனுப்பு கிறேன். வணிக சஞ்சிகையென்று நீங்கள் குறிப்பிடும் பத்திரிகைகள் எழுதிக்கேட்டே என்னிடம் ஆக்கங்களை வாங்கி வெளியிடுகின்றன. இதில் எங்களுக்கிடையே எந்தச் சமரசமும் இருந்ததில்லை. எனது ஆக்கங்களின் ஒரு புள்ளிளைக் கூட எடுக்கக்கூடாது என்பதில் நான் தீர்மானமாக எப்போதும் இருந்திருக்கிறேன், அது மீறப்பட்டதில்லை. பல வணிக இதழ்கள் என்னை மாத நாவலுக்கு அணுகியிருக்கின்றன. நான்கு
17

Page 10
மாத நாவல்கள் எழுதி இலேசாக முப்பது ஆயிரமும் 'பிரபலமும் சம்பாதிக்க என்னால் முடிந்திருக்கும். சாதாரணமாக வணிகத்தன்மை வாய்ந்த எழுத்தால் மாதத்துக்கு நாற்பதாயிரத்துக்கு மேலாக நான் சம்பாதித்திருக்கலாம். தமிழில் வெளியான ஒரே நாவலினை நானே எழுதினேன்’ என்று கூறிய ஒருவரைப்போல புனைப் பெயரில், வணிகப்பத்திரிகைகளில் நான் எழுதினதில்லை. வணிகப் பத்திரிகைகளுக்கு வசப்பட்டதுமில்லை.
என் எழுத்து மக்களுக்கானது. மக்களைச் சிந்திக்கவைப்பது. அவர்களை மேன்மைப் படுத்துவது. அன்றிலிருந்து இன்றுவரை இந்த நிலைப்பாடே எனது எழுத்தின் ஆதார சுருதியாய் உள்ளது.
தி. ஞா- உங்களது புனைக்கதைகளுக்கான கருக்கள் எவ்வாறு உங்களுக்குள் தோன்றி உருப்பெறுகின்றன? செ. யோ- வாழ்வின் அநுபவசாரமும், படிப்புமே ஒரு படைப்பாளியை ஆற்றலும் திறமையும் உள்ளவனாக்குகின்றன. இவையிரண்டும் தெளிவான சிந்தனையை படைப்பாளியிடம் உண்டாக்கும். நான் பின்தங்கிய கிராமத்தில் பிறந்தவன். எனது பன்னிரண்டாவது வயதுக்குப் பின்னரே எனது கிராமத்துக்கு பஸ் வந்தது. தபால் பெட்டியும் கிராமபோன், றேடியோவும் வந்தன. பல்கலைக்கழக மாணவனாக நான் தெரிவான பின்னரே சப்பாத்தையும் லோங்சையும் அணிந்தேன். பிறகு அழகும் விசாலமும் பசுமையும் பொங்கிப் பிரவகிக்கும் கங்கையும் நீலமலைகளும் வண்ணப்பூக்களும் கண்ணெல் லாம் நிறையும் பேராதனை வாழ்வு தொங்குபாலம். பிளிறும் யானைகள். காதில் விழும் இன்னொரு மொழி, அவர்களோடு நெருக்கமான பழக்கம். பட்டம் பெற்றதும் ஆசிரியத் தொழில். முல்லைத்தீவு, முள்ளியவளை, கண்டி உடத்தலவின்னையில். பிறகு இலங்கை நிர்வாக சேவைக்குத் தெரிவாகின்றேன். உதவி ஆணையாளராக கொழும்பில். உதவி அரசாங்க அதிபராக வாகரை, மட்டக்களப்பு, பொத்துவில், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, கிளிநொச்சி, பூநகரி பின்னர் 14 ஆண்டுகால தமிழக வாழ்வு. எழுத்தாளனாய், சஞ்சிகை ஆசிரியனாய், பதிப்பாளனாய், திரைப்படத்துறையோடு தொடர்புள்ளவனாய், புத்தகப்பித்தனாய். நான் பல துறைகளினால் வாழ்வையும், அறிவையும், அநுபவசாரத்தையும் எவ்விதம் பெற்றேனென்பதை எனது சுருக்கமான வரலாறு சொல்லும். இதைவிட நான் படிப்பதில் எவ்வளவு ஆர்வங்கொண்டவனென்பதை வார்த்தைகளுள் அடக்கமுடிய வில்லை. படிப்பு என் சுவாசம். எத்தனைவிதமான மனிதர்களைச் சந்திக்கமுடிந்தது. நிறையச் சம்பவங்கள் பாதித்தன. இவையெல்லாம் எனது படைப்பின் வீரிய விதைகளாயின. நான் என்னைப்பாதிக்கும் விஷயங்களையே படைப்பாக்குகின்றேன். அதை என் மனதில் உள்வாங்குவேன். யோசிப்பேன். மெல்ல மெல்ல வடிவங்கொடுப்பேன். அந்தக்கதையை எங்கிருந்து எப்படித் தொடங்கி, தொடர்ந்து முடிப்பது என்பதை ஒழுங்குபடுத்துவேன். பின்னர் மனதினுள் அதை வரிவரியாக எழுதுவேன். குறியீடுகளும் வைப்பேன். இறுதியாக ஒரு மூச்சிலேயே அடித்தல் திருத்தலின்றி எழுதிவிடுவேன். அதுவரை அந்தப்படைப்பைப் பற்றிய யோசனையும் அழுத்தமும்
18

மட்டுமே மனதினை நிறைந்திருக்கும். அதை எழுதி முடித்ததன் பிறகு மனம் இலேசாகி விடும்.
என் அநுபவசாரத்தில் பாதியைக்கூட நான் படைப்பாக்கவில்லை என்பதை நான் உணருகின்றேன். நான் எழுதிய 20 ஆயிரம் பக்கங்களில் எழுதப்படாத பல இடைவெளிகள் உள்ளன. என்ன செய்யலாம், எழுதக்கூடிய வரையில் எழுதுவேன்.
தி. ஞா:- ஒரு படைப்பை உருவாக்குவது பற்றிய தங்கள் கருத்து பொதுமை шталыт? செ. யோ:- அப்படியல்ல. நான் என்னுடைய முறையைத்தான் கூறினேன். நான் பழகியவர்களில் கலைஞர் மு. கருணாநிதியும், பிரபஞ்சனும் ஒரேதரத்தில் அடித்தல் திருத்தலின்றி அழகாகவும் தெளிவாகவும் எழுதுவார்கள். கா. கந்தசாமி, பல முறை எழுதி அடித்துத் திருத்தி புதிதாக எழுதுவார். இன்னும் சிலர் ஒரு படைப்பை எழுதப் பல ஆண்டுகாலம் செல்லும். இளங்கீரனும், கே.டானியலும்,பொன்னிலனும் தொடர்ச்சியாய் இரவுபகல் பாராமல் எழுதி முடிப்பார்கள். ஒவ்வொரு படைப்பாளியும் தமக்கென இந்தமுறையை வகுத்தாலும், இதுதான் சரியென்று எதையும் சொல்லமுடியாது.
தி. ஞா:- சிறுபத்திரிகைகள் பற்றிய உங்களது கணிப்பு என்ன? செ. யோ: தரமான இலக்கிய ஆக்கவளர்ச்சிக்கு சிறுபத்திரிகைகள் பெரும் பங்களிப்புச் செய்கின்றன என்பது தமிழிற்கு மட்டுமன்றி உலகமொழிகளுக்கும் பொருந்தும். ஆனால் தமிழில் சிற்றேடுகளையும் (LITTLE JOURNAL) சிறுபத்திரிகை அல்லது சிறுசஞ்சிகைகளையும்(LITTLEMAGAZINE) போட்டுக் குழப்புகிறார்கள். சிற்றேடு ஒரு கருத்துக் கொண்டவர்களது வெளிப்பாடான குறுகியதளம். சிறுசஞ்சிகை தரமான ஆக்கங்களின் தளம்; வணிக இதழ்களுக்கு எதிர்க்குரலும், படைப்பாளியின் சுதந்திரமும் கருதும் எல்லைகளுக்குட்பட்ட ஊடகம், தமிழ்ப் படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு சிறு சஞ்சிகைகளின் ஒத்தாசை பெரிதும் காரணமானது, அன்றும் இன்றும்.
தி. ஞா:- பல இலங்கள் கடந்த சில வருடங்களாகப் பேசப்படுகின்றதே. இதுபற்றிய தங்கள் அபிப்பிராயம் என்ன? இதனால் யதார்த்தவாதம் தனது நிலைப்பாட்டினை இழந்து விடுகிறதா?
செ. யோ- நீங்கள் கூறிய இஸங்கள் மேனாட்டுத்தளத்தில் எழுந்தவை. அதற்கான வரலாற்று நெருக்கடி இருந்தது அத்தோடு தனிமனிதக் குமுக்களின் விரத்தி நிறைந்த புலம்பல்கள் இவை. தோன்றிய இடங்களிலேயே வலுவின்றி இவை கருகிப்போய்விட்டன. இவை விளிம்பு மனிதர்களென மனநிலை பிறழ்ந்தவர்கள், விபசாரிகள் என்போரைக் குறித்து அவர்கள் வாழ்க்கையையும், தற்காமம், தன்னினச்சேர்க்கை பற்றியும் எழுதுவதைப் பிரகடனப்படுத்துகின்றன. இப்படிக் கூறுபவர்களும், எழுதுபவர்களும் சர்வதேசரீதியாக இதே குணங்களால் பாதிக்கப்பட்டவர்களெனத் திறனாய்வாளர்கள் கூறுவர். மனித இன உடலமைப்பு ஆண், பெண் உறவுக்கானது மட்டுமல்ல இன விருத்திக்கும் வழி செய்வது. பிறழ்நிலை உளவியலுடையோர் தன்னினச் சேர்க்கையாளராயிருப்பது சிறிதளவே.
19

Page 11
இதை இயல்பென தனிமனித சுதந்திரமென்று பின் நவீனத்துவவாதிகள் சொன்னால் இவர்கள் யார்?
மனிதகுல வாழ்வை மேம்படுத்துவதே படைப்பாளியின் கடமை. எனவே யதார்த்தவாதம் என்றைக்கும் உரியது. பல எல்லைகளைத் தொட்டு முன்னேறுவது.
தி. ஞா - இந்தச் சேதாரத்துக்கான பின்னணி, மாற்று என்ன?
Gar. GuHr :- சர்வதேச ரீதியான இலக்கிய வளர்ச்சியை நெறிப்படுத்திய முற்போக்கு இலக்கியப் போக்கின் சேதாரம் இந்தப்பின்னடைவிற்கு காரணமாயிற்று. சர்வதேச மட்டத்தில் கம்யூனிச நாடுகளின் தடுமாறல்கள், மோசமான அரசியல் சித்தாந்திகளால் தத்துவ வீழ்ச்சியாக அடையாளங்காட்டப்பட்டன. முற்போக்கு எழுத்தே காலாவதியானதெனக் கூறி, ஏற்கனவே தோல்வி கண்ட பின்நவீனத்துவம் போன்ற கோட்பாடுகள் தூக்கி நிறுத்தப்பட்டன. அடிப்படையில் இவை மனித விரோத சித்தாந்தங்கள். இவர்கள் மானிட நலம் விரும்பும் விஞ்ஞான தத்துவத்தை வீழ்ச்சியடைந்ததாகக் கூறுவதும் எழுதுவதும் அபத்தம். அதுவும் இங்கு ஒரு இலக்கியப்போக்காய் தலையெடுக்க முயல்கிறது. பிணத்தோடு புணர்தல், தற்காமம், மனோவியாதிக்காரரை மனிதராகக் காணல் என்பனவே இவர்களின் எழுத்து வாய்ப்பாடு. இந்தப் போக்கை எதிர்த்து நிற்கவேண்டியது படைப்பாளிகளின் கடன், தேவை. ஆனால் இப்போது இளந்தலைமுறையினர் சிலர் இங்கே குழம்பிப்போயிருக் கின்றனர். நவீன போக்கென பின்நவீனத்துவத்தை கருதி வக்கிரங்களாகக் கிறுக்குகின்றனர். இவர்களைப் போலவே முன்னர் நன்றாக எழுதிய சிலரும் குழம்புகின்றனர். பின்நவீனத்துவம் மேற்கில் எப்போதோ நிராகரிக்கப்பட்டது. தோல்வியுற்றது. இதைவிட மக்கள் இலக்கியத்திற்காக குரல் கொடுத்த வெகுசிலர் அற்ற குளத்து அறுநீர்ப்பறவைகளாக புதிய இலக்கிய வியாக்கியானங்கள் செய்வது கவலைக் குரியது. தங்களை படிப்பாளிகளாகக் காட்டமுனையும் இவர்களை காலம் சிறு தூசியென உதறி எறியும்! இப்போது மேலே கூறிய சந்தியில் நாம் நிற்கிறோம். ஆனால் இது தற்காலிகமான குழப்பம். தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரனாக முடியாது.
தி. ஞா:- விமர்சகர்கள் பற்றிய கணிப்பீடு என்ன? "செவிட்டுத்தனமும் காழ்ப் புணர்வும் கொண்ட - விமர்சகர்கள் என்று தம்மைத்தாமே முடிசூடிக்கொண்ட சிறுமதிகள்” என்று துன்பக்கேணி நாவல் முன்னுரையில் குறிப்பிட்டுள் ளிர்கள்.
செ. யோ:- முதலில் விமர்சகர்கள் என்பவர்கள் யாரென்று பார்க்கவேண்டும். அவர்கள், தாம் விமர்சிப்பதைப்பற்றி ஞானம் உள்ளவராக இருக்கவேண்டும். தமது துறைபற்றிய பயிற்சி, புதிய கருத்து, இலக்கியப்பின்புலம் என்பது இதனுள்ளே அடக்கம். இத்தகைய விமர்சகர்களாக, பூரணம் பெற்றவர்களாக பேராசிரியர் கைலாசபதி, நா.வானமாமலை, போன்றோருடன் பேராசிரியர் சிவத்தம்பி, வல்லிக்கண்ணன், தி.க.சி போன்றோரை நான் கண்டிருக்கின்றேன். ஒரு
20

படைப்பாளியைப் பற்றிய திறனாய்வு அவனைப்பற்றிய முழுமையான வாசிப்பிற்குப் பிறகே செய்யப்படவேண்டும். இங்கு அது நடக்கவில்லை. ஆப்பிள் பழங்களுடனும் எழுதிய புத்தகத்துடனும் செல்லும் படைப்பாளி விமர்சகரால் தரமான படைப்பாளியென பத்திரிகையில் குறிப்பிடப்படும் கேவலம் நிகழ்கின்றது. தனது நூலை நான் சிலாகிக்கவில்லை என்பதால், நான் தொடக்கத்தில் எழுதிய சிறுகதையே இன்றுவரை தரமானது என்று சொல்கிறார் யாழ்ப்பாணத் தமிழ்த்துறைப் பேராசிரியர். "நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே நாவலைப் பல வருஷ முயற்சியின் பின் எழுதினேன். என் கிராமமும் மக்களுமே அதன் தளம். 'இலக்கிய சிந்தனை, 'கலை இலக்கியப் பெருமன்றப் பரிசு ஒரே ஆண்டில் பெற்றது. எல்லாவற்றையும் விட, இதை அதற்குரியவர்களே பெருமிதத்தோடு ஏற்றார்கள். அந்நிய ஏகாபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை சைவர்கள் நடத்தியதென்பது அடிப்படை வரலாறு. ஆனால் பேராசிரியர் நு.'மான், இந்தத்தளத்தையோ, மக்களின் வாழ்வையோ ஏன் பேச்சுவழக்கையோகூட அறியாதவர். ஆனால் இந்த நாவலுக்கு பரிசு வழங்கக்கூடாததற்கான காரணங்களைக் கூறி பரிசு வழங்கியவர்களை அனுதாபத்துக்குரியவர்களாக்குகிறார். இதனோடு தொடர்பான மேலும் பல விஷயங்களை நாகரிகம் கருதி நான் குறிப்பிட்ட விரும்பவில்லை. இது அவருக்கு நாவலாகத் தெரியவில்லை. அறிவிலித்தனமான, விடலைத்தனமானவர்களின் கருத்துகளை என்றும் நான் கணக்கெடுத்ததில்லை. இவர்கள் பத்துவரியைக்கூட இருபது முறை திருத்தி எழுதுகிறவர்களென்பதால், இவர்களைத் திறனாய்வாளர்க ளெனக் கொள்ள வேண்டியதில்லை. %ன்சார்ந்த ------ ஆரோக்கியமான விமர்சனம், படைப் வாசகர்களே. பாளியை செம்மைப்படுத்தும். உற்சாகப் ஞானம் சஞ்சிகை தொடர்ந்து படுத்தும் . அவர் விதத்தில் நாம் கிடைக்க வேண்டுமாயின் உங்களது வறியவர்களே. இங்கு லெனின் சரியான முகவரியை எமக்குத் மதிவானம் போன்றோர் வரவும், கே.எஸ். தெரியப்படுத்துங்கள். * சிவகுமாரன், இரத்தினவடிவேலோன், இந்த இதழ் பற றிய கே. விஜயனி, ரியகுமாரி பத்தி கருதிதுசிகளையும் சஞ்சிகையின்
33 (35 கு தத CB
«» 46 தரத்தை மேம்படுத்த உங்களது எழுததுககளுமபாலைவனப பசுநதரை, றியத் களாயுள்ளன இப்போது. گی, t o 6მ)T uւյԼD -Փlfplս 15
தாருங்கள.
தி. ஞா- நீங்கள் மார்க்சிய சித்தாந்தம் ஆக்க இலக்கிய சார்ந்தவர். தேசிய இனப் பிரச்சினை கர்த்தாக்களே. பற்றியும் எழுதுகிறீர் இது உங்களது படைப்புகளின் முரன பாடானது எனற கருத ಶ மூலம் ஞானம் சஞ்சிகையின் நிலவுகிறதே. இலக்கிய தரத்தை மேம்படுத்துங்கள். செ. யோ;~ எனது முதல் நாவல் ஞாயிறும்! - ஆசிரியர் எழுகின்றது. 1958 கால அரசியல் V பின்னணியில் தமிழ்மக்களின் பிரச்சினை Y- - - - - - - - ---ص பற்றி எழுதியது. மார்க்சியம் சகல ஒடுக்குமுறைகளையும் எதிர்ப்பதோடு, தேசிய இனப்பிரச்சினை பற்றி சரியான தீர்வையும் முன் வைக்கிறது. நடைமுறையில் பல சீர்கேடுகள் நடந்தன. அது மார்க்சியமென்ற அறிவியல் சிந்தாந்தத்தின்
21

Page 12
தவறல்ல. தமிழ்மக்களின் அவலம், ஏக்கம், கனவு, எதிர்காலவாழ்வு என்பன பற்றி நான் நிறைய எழுதி, பல மொழிகளுக்கு சென்றிருக்கின்றன. "இரவல் தாய்நாடு அகதி நிலை பெறுவதற்கான ஆவணமாக மாறி பல பதிப்புகளைக் கொண்டிருக்கிறது. எனவே எனது நிலைப்பாடு சரியானது. தர்க்கரீதியான போக்கு. அதைவிட இன்று என்னைப் பாதித்துள்ளது இந்த விஷயந்தான். இதை எழுவது என் அவசியம்.
தி. ஞா:- புதிய உத்திகள், நடை பற்றி. செ. யோ:- இவை எதுவாயிருப்பினும் கருத்துவலுவும், எளிமையும் தெளிவும் மக்கள் நெஞ்சைச் சிக்கலின்றி அடையும் தன்மையும் உடையனவாயிருக்கவேண்டும். சொற்சிலம்பம், குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடுகின்ற வக்கிரநடை, ஆபாசம் என்பனவற்றை இவை சொல்லுமாயின், நிச்சயமாக ஆபரணங்கள் பூணப்பட்ட பிணங்களாகவே அமையும்.
தி. ஞா:- இப்போது என்ன திட்டம். செ. யோ:- குழந்தைகள் கலைக்களஞ்சியம், அசுரவித்து நாவல்த் தொடர், இளைஞர் அறிவியல் நூல்வரிசை, கிட்டியின் மூன்றாம் பாகம், இளைஞர்களுக்கான அகராதி, ஈசாப் கதைகள் முழுமையாக, சிறுகதைத் தொகுதி ஒன்று. தமிழ்ப்பதிப்புத்துறை ஆசிரியனாக நூல்களை வெளியிட்டுக் கொண்டே இந்தத்திட்டத்தையும் செயற்படுத்த உழைக்கவேண்டியுள்ளது. இந்த உழைப்பு உற்சாகத்தையும் ஆனந்தத்தையும் மனநிறைவையும் தருகின்றது.
LSS SSS S SSS SSS SSS SSS SSS S SSS SSS SSS----------------
566 DyuD ஆங்கிலமூலம்: வில்லியம் பிளேக்
தமிழில்: எம். வை. எம். மீஆத் கோபமுற்றேன் என் நண்பனோடு கோபத்தை உரைத்தேன், எண் கோபம் முடிந்தது.
கோபமுற்றேன் எண் பகைவனோடு அதனை நான் நவிலவில்லை, எண் கோபம் வளர்ந்தது.
அச்சத்தில் அதற்கு நீரூற்றினேன். இரவிலும் காலையிலும் எனது கணிணிர்களால் அதற்கு கதிரவனொளி ஊட்டினேன் எனது புன்னகைகளால்,
மிருதுவான சூது நிறைந்த துஷ்டங்களால்.
பகலும் இரவும் அது வளர்ந்தது. பிரகாச அப்பிள் அது பெற்றெடுக்கும் வரை அது ஒளிவீசுவதை எனது பகைவன் நோக்கினான். அது என்னுடையது என்பதை அறிந்தான்.
இரவு துருவத்தை திரையிட்டிருந்தவேளை எனது தோப்பினுள் களவாக நுழைந்தான். காலையில் களிப்புடன் காணர்கிறேன், எனது பகைவன் கால் நீட்டிக் கிடக்கிறான் மரத்தின் கீழே.
22

இலக்கியப் பணியில் இவர்.
அன்புமணி இரா. நாகலிங்கம்
மீன்பாடும் தேனாடு ஈன்றெடுத்த இலக்கியச்சுடர் அன்புமணி இரா. நாகலிங்கம், அன்புமணி எனும் அழகான - அர்த்தமுள்ள பெயருக்கேற்ப இலக்கிய வாதிகளின் அன்புக்கும் இலக்கியத்தில் மணியான கருத்துக்கும் சொந்தமான
முத்த எழுத்தாளர் - விமர்சகர் - வெளியீட்டாளர். O O
எழுத்தாளர் செ. குணரத்தினம் குறிப்பிட்டது ந.பார்த்திபன் போல “ 'மலர்சஞ்சிகை தந்த அன்புமணி - மட்டக்
களப்பின் தமிழ்ப் பணி” என்பதும், "புனைபெயருக்கு முற்றிலும் பொருத்தமான அற்புதமான மனிதர் என்று கூறுவது பொருத்தம்” என்பதும் மனங்கொள்ளத்தக்கது. 1970இல் 'மலர்' என்ற சஞ்சிகை மட்டக்களப்பிலிருந்து வெளிவந்ததை இலக்கிய அபிமானிகள் அறிவர். மலர் சஞ்சிகையின் வாசகரான எஸ். எல். எம். ஹனிபா (மக்கத்துச் சால்வை தந்தவர்)"முற்றிலும் தீயசக்திகள் புடைசூழ - பவித்திரமான - புனிதமான இலக்கியமாக 'மலர் பூத்துக் குலுங்குவதென்பது எத்துணை சிரமமான காரியமென்பது ஈழத்தில் இலக்கியப் பத்திரிகை என ஆரம்பித்து, அது பெற்றுத்தந்த அநுபவங்களுக்குள்ளாகிய அனைவருக்கும் தெரிய வரும்” என்றும் "இந்நிலையிலும் இலக்கிய ஓர்மத்துடனும், இலட்சிய நோக்குடனும் மலர்ந்த உங்கள் பத்திரிகையின் வளர்ச்சி” என்றும் குறிப்பிட்டது (இது ஈழத்தின் சிறு சஞ்சிகை முயற்சிகளுக்கு என்றும் பொருந்தும்) அன்புமணி அவர்களின் இலக்கியப் பணிக்குச் சான்று.
1953இல் ‘கிராமபோன் காதல்’ என்ற சிறுகதையைக் 'கல்கியில் பிரசுரித்ததன்மூலம் இவர் எழுத்துலகில் பிரவேசித்தார். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக இலக்கியப் பணியில் ஒய்வின்றியி(இ)ரா நாகலிங்கமாகத் திகழ் கின்றார். முதற் கதையே பிரபலமான காத்திரமான 'கல்கி சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட உத்வேகத்தோடு இவரது பணிதொடர்கிறது. மகாவித்துவான் FXCநடராசா அவர்கள், "அன்புமணி என்று பலர் புகழ ஞாயிறுபோல் திகழ்ந்தவர்" எனவும், எழுத்தாளர் செ. குணரத்தினம் அவர்கள் "இன்று எழுத்துலகில் மின்னுகின்ற பல இளம் எழுத்தாளர் - கவிஞ நட்சத்திரங்களை பெளர்ணமி நிலவுகளாக உலாவச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஓர் உயர்ந்த இலட்சியவாதி” எனவும் குறிப்பிட்டமை, அன்புமணி ஓர் இலக்கியரணி என்பதற்குச் சான்றா தாரங்களாகும்.
மலர்' என்ற மாதாந்தச் சஞ்சிகையையும், மலர் என்ற வெளியீட் டகத்தையும் உருவாக்கி வளரும் எழுத்தாளர்களை ஊக்குவித்து வாசகர்களுக்கு இனங்காட்டிய இலக்கிய நெஞ்சமும் உயர் குணமும் கொண்டவர் இவர். இன்று புகழ் பூத்த எழுத்தாளர்களான செ.யோகநாதனின் ஒளி நமக்கு வேண்டும், முல்லை மணியின் அரசிகள் அழுவதில்லை, அருள் சுப்பிரமணியத்தின் அவர்களுக்கு வயது வந்துவிட்டது ஆகிய குறுநாவல் தொகுதி, சிறுகதைத் தொகுதி, நாவல் என்பவற்றை வெளியிட்டு அவர்களுக்கு வாய்ப்புகளையும் மலர் வெளியீட்டு நிறுவனத்திற்குச் சிறப்பையும் தேடிக் கொண்டார். மேலும் மண்டுர்ப் பிள்ளைத் தமிழ், சந்நதிச் சுவடுகள் முதலிய வெளியீடுகளையும் வெளியிட்டார். இன்னும் மட்டக்களப்பில் வெளிவந்த நூல்களினை(காலத்தால் முற்பட்டவையாக இருந்தால்) மறுபதிப்புச் செய்ய வேண்டும் என்ற தமிழபிமானத்தின் உந்துதலால் மறுபதிப்புத் துறையிலும் கவனம் செலுத்தினார். சீமந்தினி புராணம், பூரி மாமாங்க விநாயகர் பதிகம், சனி வெண்பா என்பன இவரின் கைவண்ணத்தால்
23

Page 13
மறுபதிவும் புதுப்பொலிவும் பெற்றன.
1960இல் மட்டக்களப்பு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கி அதன் செயலாளராக மிக நீண்டகாலம் பணிபுரிந்தார். புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப் பணிமன்றத் தலைவராகவும், விபுலானந்த நூற்றாண்டு விழாச்சபை செயற்குழு உறுப்பினராகவும் மட்டக்களப்பு கலாசார பேரவையின் நீண்டகால உறுப்பினராகவும், மட்டு இந்து இளைஞர் மன்ற செயற்குழு உறுப்பினராகவும் பல்வேறு பணிகளை ஆர்ப்பாட்டமின்றிச் செய்து வருகிறார். "மட்டக்களப்பின் கலை, சமூக , ஆத்மீக முயற்சிகள் யாவற்றிலும் தம்மைப் பிணைத்துக் கொள்ளும் இயல்பினராய், தம்மாலியன்ற பங்களிப்பினை மனதார நல்கி வருகிறார்” என சுவாமி ஜீவானந்தாஜி மகராஜ் அவர்கள் குறிப்பிட்டதும், "கடந்த ஐம்பது வருட எழுத்தால் தமிழ்த்தாய்க்கு அணிசெய்தவர் அன்புமணி’ என்று அதிபர் ஆர். துரைராசசிங்கம் அவர்கள் குறிப்பிடுவதும் இவருடைய இலக்கியப் பணியைப் புரிந்திட உதவும்.
மனிதநேயமே இலக்கியத்தின் பண்பும் - பயனும் ஆகும். இதுவே
புனைகதைகளின் அடிப்படைத் தத்துவம் - சமுதாயத்தேவை என்றும், மனிதம் பற்றி, மனித விழுமியங்கள்பற்றி பேசும் கதைகளைப் படைக்க வேண்டும் என்றும் மண்வாசனையைவிட மனவாசனையே சிறுகதைக்குச் சிறப்புச் சேர்க்கும். சிறுகதைகளை வாசித்தால் மட்டும்போதாது. நேசிக்கவும் வேண்டும். அப்போதுதான் அவற்றின் ஆத்ம தரிசனம் சித்திக்கும். சிறுகதை எத்தகைய வார்ப்பாக இருந்தாலும் எழுத்தாளன் தன் அநுபவத்தை வாசகனிடம் தொற்றிக் கொள்ளச் செய்ய வேண்டும் என்றும் கூறும் இவர் 'இல்லத்தரசி "வரலாற்றுச் சுவடுகள் என்ற சிறுகதைத் தொகுதிகளையும் ஒரு தந்தையின் கதை' என்ற நாவலையும் திரைகடல் தீபம்’ என்ற நாடக நூலையும் தந்துள்ளார். மேலும் தரமான விமர்சகனாய் நின்று வளரும் எழுத்தாளர்களின் படைப்புகளை ஆதரித்து தன் விமர்சனத்தையும் முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. எழுத்தாளனின் படைப்பு நூலுருவானால் வரலாற்றுப் பதிவையும் விமர்சனப் பார்வையையும் பெறும் என்று நூலாக்கம் பற்றிய கருத்தைக் குறிப்பிடும் இவர் நாடக ஆசிரியர், குணசித்திர நடிகர், திறமையான இயக்குனர், புகைப்படப் பிடிப்பாளர், கேலிச்சித்திரக்காரர், ஓவியர்
g6) JIFTIT.
தெருவில் ஒரு தேசம்
தெருவில் DTLTui காற்று ஒரு தேசம் கழுதையாய் மழையைக் கண்டு திண்டாடுகிறது. 99gl கலங்குகிறது.
மெளனத்தில் மரநிழலின் கீழ் நடக்கிறது. பாவம், அதற்கு .நல்ல பசி ا9g மண்டியிடுகிறது. குடிசைகளிலும்
முகாம்களிலும் இரு கை ஏந்துகிறது. முட்டை குந்துகிறது. இடுவார் யாரோ? முடிச்சுகளெல்லாம் அதன் முதுகில் - வாகரைவாணன
24

ஆ. மு. சி. வேலழகன் எழுதிய
உருவங்கள் மானிடராய் (கவிதை நூல்)
- கே.எஸ்.சிவகுமாரன்
(குறிஞ்சி வெளியீடு, 129/25 ஜெம்பட்டா வீதி, கொச்சிக் கடை கொழும்பு - 13. விலை ரூபா 30/-)
'திருக்குறள் மீது அதிக பற்றுக் கொணர்ட கிழக்கிலங்கை (திருப்பழுகாமம்) கவிஞர் எழுதிய கவிதை நூல் இது. ஐம்பதுகளிலிருந்தே திராவிட இயக்கக் கருத்தோட்டங்களில் மனதைப் பறிகொடுத்து வந்தவர். சமுக சேவையாளர். “உருவத்தில் மானுடராயும் உள்ளத்தில் வேறாயும் மனிதர் பலர் உள்ள நிலைகண்டு அதிருப்தியுற்று, மனம் குமைந்து, கிண்டல் பண்ணும் கவிஞனின் உணர்வோட்டங்களைக் கொண்டுள்ளது.” என முன்னுரை எழுதிய பேராசிரியர் சி.சந்தானம் கூறுவது சரியே. ஈரோடு தமிழன்பன் வேலழகனின் கவிதைகள் பற்றித் தெரிவித்துள்ள மதிப்பீடும் இங்கு எடுத்துரைக்கத்தக்கது.
இயல்பு, எளிமை, இனிமை - இம்முன்றும் கலந்த கலையழகில் கவிதைகள் இவரிடம் வெளிவருகின்றன. யாப்புக்குள் இவரும் - இவருக்குள் யாப்பும் திணறாத வகையில் சொற்கள் கவிதைகளை இப்படியெல்லாம் நம் நெஞ்சங்களில் தூவிச்செல்கின்றன. முடிவில் சொற்கள் மிஞ்சாமல், கவிதைகள் தரும் கருத்துக்களும், உணர்வுகளும் மிஞ்சுவதை, இந்நூலின் வெற்றி எனலாம். இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய கா. வேழ வேந்தன் கவிதை பற்றி விபரிப்பது புதுப் புனைவாக அமைகிறது:
“நெஞ்ச வானிலே அவ்வப்போது கிளர்தெழும் நெடிய கருத்து மின்னல்களே கவிதைகள் என்பேன். அந்தச் சிந்தனை ஒளிப்பிழம்புகளைச் சிறைப்பிடித்து வந்து விரல் வழியே சொல்லோவியமாக்கிக் காட்டுவதே இலக்கியக்கலை”
கிழக்கு மாகாணத்திலும், வடமேல் மாகாணத்திலும், மலையகத்திலும், தென்மாகாணத்திலும் திறனாற்றலுடைய பலகவிஞர்களும், எழுத்தாளர்களும் இலைமறை காய்போல் ஒளியிழந்து நிற்கின்றனர். நமது திறனாய்வாளர்கள் இவர்களைப்பற்றி அதிகம் அறிந்திராதது எனது மனதை வாட்டுகிறது.
ஆ.மு.சி. வேலழகன் இந்நூலில் 24 சந்தக் கவிதைகளைத் தந்திருக்கிறார். இவற்றுள் பல சம்பிரதாயமான உள்ளடக்கத்தை - பொருள்களைக் - கொண்டிருந்தாலும், சில கருத்துக்கள் உலகளாவிய முற்போக்கான கவிதைகளாக அமைவது பாராட்டத்தக்கது. உதாரணமாக, தமிழரானோம்’ என்ற கவிதையில் வரும் சிலவரிகள் சிந்திக்க வைப்பவை:
"நமது கலை, கலாசார, விழுமியங்கள் நமது பெறுமானத்தின் முத்திரைகள்! சுமையான நாகரிக சகவாசத்தின் சுவைமயக்கில் நம்மை நாம் இழப்போமாயின் அமைவான இனப்பாங்கு சிதறிச்சோர அந்நியமாம் பாழுக்குள் தனிப்போம்; மேலும் இமைத்தல் முதல் செயலாயும் காலதேவன் எண்ணத்தில் சோரர்களாய் இழிந்து போவோம்”
25

Page 14
சிசுவுக்குப் புட்டிப்பால் கொடுக்கும் தாய் பற்றியும் இவர் எழுதுகிறார்:
"மார்க்கச்சை மருவாது, முந்தானைக்குள் மாதனையே காய்க்காது ஆண்பார்வைக்குப் போர்த்தேங்காய் பொலியாது எனவே ஈன்றாள் புட்டிப்பால் சிசு நுனைக்கப் பூரிக்கின்றாள்” போர் முகத்தில் புறங்காட்டி வந்தோன், உண்ட மார் திருகி எறிந்தாள் மரபுக்காரி பேர்தாயாய் நிற்கின்றாள் இவளின் பிள்ளை பிழைபட்டால் எதைத் திருகி எறிவாள் அண்ணே?”
இவருடைய இன்னொரு கவிதை இவ்வாறு முடிவடைகிறது:
* மனத்திடை மாசிலா வாழ்வை மலர்விக்கும் சத்திய தெய்வமே தேவை இனத்துக்குள் ஆயிரம் சாதி இரண்டு முகங்கொண்ட சுரண்டலின் நீதி சனத்திடை அறியாமைப் போதம் சழப்பிடும் தரித்திரச் சாமிகள் வேதம் அண்டாத மானிட தர்மம் அருள்கின்ற நாதனை அடைதலே கர்மம்"
அகதிகள் உணவில் கூட அள்ளிப் பிடி பிடித்தேன்! அன்புமணி என்றார்கள், அரவணைத்துக் கொண்டார்கள்!
என்னை விடக் கொம்பன் அவனியிலே இல்லை என்றேன்! அறிவுமனி என்றார்கள்; அவையிலேற்றி விட்டார்கள்!
-· - --
ee > கன்றை மட்டும் தின்றுவிட்டு سمبر
பொன்.பூபாலன் N கறவையைக் கை தொழுதேன்!
N éí560ōII၇ ރ/ அருள்மணி என்றார்கள்,
!உயிர் தழுவி நின்றார்கள் ---> - - – – אל י
பேதை அகதிப் பெண்ணை பாலியல் வதை வதைத்தேன்! பாசமணி என்றார்கள், பாலூட்டி வளர்த்தார்கள்!
அறுத்துப் புதைத்துவிட்டேன்! செம்மணி என்றார்கள், சிறகடித்துப் பறந்தார்கள்!
26

ஒருநாள் என்ற தலைப்பில், ஜுலை இதழில் நான் எழுதிய கவிதையை, மலையக நாட்டார் பாடலொன்றைச் சொற்கள் மாற்றி இடைச்செருகல் போன்ற திருத்தங் களுடன் எழுதியதாக திரு.மு.சிவலிங்கம் குற்றம் சாட்டியிருந்தார்; இது தவறாகும். இவ்வகையான ஒரு பாடல் எமது கண்டிப்பிரதேச மலையகப் பகுதியில் படிக்கப் படவில்லை. அத்துடன் இதுவரை வெளியான பல்வேறு மலையக நாட்டார் பாடல் தொகுதிகளிலும் காணப்படவில்லை. இது எனது சொந்த ஆக்கம் என்பதையும் உறுதிசெய்ய விரும்புகிறேன். - எஸ்.சிவஞானசுந்தரம்.
நேர்காணல் மிக அவசியமான பகுதி. முக்கியமான விடயங்கள் நீண்டிருப்பது ஒன்றும் குறையல்ல; அவசியமும்கூட. - கண. மகேஸ்வரன், மட்டக்களப்பு.
ஞானத்தின் ஆகஸ்ட் இதழ் கண்டேன் அருமை. கைலாசபதி பதித்த இலக்கியதடம் - சில குறிப்புகள் பல தெரியாத விடயங்களை எமக்குத் தந்தது. வளர்க உங்கள் இலக்கிய பணி - எஸ். சீவரத்தினம்,
அதிபர், யூரீ முத்துமாரியம்மன் தமிழ் மகா வித்தியாலயம், கம்பளை.
ஞானம், இலக்கிய ஞானம் உள்ளவர்கள் மட்டுமல்ல எல்லோரும் படித்து
பயனடைய வேண்டிய பொக்கிஷம் என்பதில் சந்தேகமேயில்லை.
* கலாநிதி மு. கதிர்காமநாதன், கொழும்பு.
பல சுவாரசியமான விடயங்களுடனும் விரிந்த தளத்தினாலான இலக்கிய முயற்சிகளுடனும் ஒரு முற்பேர்க்கு சஞ்சிகையாக ஞானம் மலர்வதையிட்டு மகிழ்ச்சி. துரை. மனோகரனின் ஹாசியத்துடன் நான் பேச நினைப்பதெல்லாம், மற்றும் புதிய நூலகமென்பன எமக்கு:பயனுள்ள பலவற்றையும் உள்ளடக்கியிருக்கின்றன. பாராட்டுக்கள், ” - பாலைநகர் ஏ.எச்.ஜிப்ரி.
நேர்காணல் விடயம் சிறப்பாக உள்ளது. புதுப்புது கருத்துக்களையும் எண்ணங் களையும் அறிய முடிகிறது. சி.வி.வேலுப்பிள்ளையின் சிறுகதையை இன்றைய வாசகர் அறியக்கூடியதாக உள்ளது. இதேபோல் பழைய எழுத்தாளர்களின் சிறுகதையையும் போடலாமே? இதனால் இன்றைய வாசகர்களுக்கு அன்றைய சிறுகதைகளை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். - ராஜ. தர்ாராஜா
முன்னோடிகள் கலை இலக்கிய விமர்சனகுழு, திருமலை.
தமிழகத்து சிறு சஞ்சிகைகளைப்போல ஒரு நல்ல சஞ்சிகையாக ஞானமும் வளர்ந்து ஓங்குவதற்கான பல நல்ல தன்மைகளை அதன்முதல் மலரிலேயே கண்டு மகிழ்ந்தேன். எஸ்.பொ.வினது எழுத்துக்களை போலவே அவரின் பேட்டியும் சூடாகவே இருக்கிறது. கலாநிதி துரை. மனோகரன் எழுதும் நான் பேச நினைப்பதெல்லாம் என்ற பகுதி தொடராக வெளிவந்தால் நன்றாக இருக்கும். புதிய நூலகம் பகுதியில் நூல்களை அறிமுகம் செய்யும் முறையும் சற்று வேறுபாடாகவும் நன்றாகவும் உள்ளது. - பொ. கமலரூபன், கரவெட்டி.
27

Page 15
ஞானம் இதழ் படித்தேன். எனது இலக்கிய அன்பர்கள் - நண்பர் எஸ்.பொ, அவரின் நற்போக்கு வட்டத்தில் நான் இருந்தேன்; மதிப்பிற்குரிய டொமினிக் ஜீவா அவர்கள்; மூதூர் வ.அ.அரசரத்தினம்; அன்பு எம். ஏ. நுஃமான்; நண்பர் துரை. மனோகரன்; என் மதிப்பிற்குரிய ஐயா வ.இராசையா; நண்பர் மு.சிவலிங்கம்; நான் மறவா அந்தனிஜீவா, மதிப்பிற்குரிய கே.எஸ்.சிவகுமாரன், ஆகியோருடன் பேசிக்கொள்ளக்கூடியதாக இருந்தது. இந்த மூத்த எழுத்தாளர்களுடனும் இளைய எழுத்தாளர்களுடனும் உரையாடினேன். என்னின் கடந்த காலம் பற்றி எண்ணிப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்ததை பாக்கிமாக எண்ணுகிறேன்.
- ஏ.பி.வி.கோமஸ், மாத்தளை.
அன்புள்ள ஆசிரியருக்கு
"ஞானம் மூன்றாவது இதழில், இலங்கைத் தமிழ் விற்பன்னர்களில் ஒருவரான பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.நு."மான் அவர்களை நேர்கண்டதில் அதிக தகவல்கள் கிடைத்துள்ளன.
நிதானமான பேராசிரியர் எம்.ஏ.நு.மான் அவர்கள் மஹாலஷ்மி கவிதையில் நிதானத்தை விட்டுவிட்டாரா? என எண்ணத் தோன்றுகின்றது. பேராசிரியர் எம்.ஏ. நுட்மான் அவர்கள் எப்படி மஹாகவியுடன் நட்புடையவரோ அவ்விதம் நானும் 1959 தொடக்கம் சில்லையூர் செல்வராசனுடன் நட்புடையவன். இந்திய எழுத்தாளர் களை மையமாகக் கொண்ட ‘வீரகேசரியில் உதவி ஆசிரியராக இருந்த செல்வராசன், ஆசிரியர் லீவில் சென்றபோது, தற்காலிக ஆசிரியராகப் பதவியேற்ற காலத்தில், மஹாகவியின் கவிதைகளும், கல்வயல் முருகையனின் கவிதைகளும் தேங்கிக்கிடப்பதைக்கண்டு, மேலே எடுத்து இலக்கிய உலகுக்கு இவர்களை அறிமுகப்படுத்திய சங்கதியிலிருந்து, பல்கலை வேந்தன் என ஊரவர் உலகறியப் பாராட்டிய கதையின் உள்ளகம் வரை என்னிடம் கதைத்திருக்கின்றார்.
1954களில் வீரகேசரியில் 'மாதருக்கு மாத்திரம் பகுதியை கொண்டு நடத்திய சில்லையூர் செல்வராசன், தனது தமக்கையின் மகளான "சுசிலாவின் பெயரையே பயன்படுத்தினார். அதில், பெண்கள் பற்றிய விவாதம் தொடங்கியபோது, முதல் கவிதையை மஹாகவியிடம் பெற்றே தொடங்கினார். அக்கவிதைக்குப் பதில் வராத காரணத்தால், அப்பகுதியைச் சூடாக்க சில்லையூர் செல்வராசனே மஹாலஷ்மி எனும் பெயரில் "ஐயா மஹாகவி.." எனத் தொடங்கும் கவிதையை எழுதினார். அதைத் தொடர்ந்து முருகையன் எழுதினார். முருகையனுக்குப்பின் அழகேஸ்வரி எழுதினார். அதன்பின், பரிமளா ராசதுரை எழுதினார். இறுதியாக வி.கி.இராசதுரை எனும் ராஜபாரதி எழுதினார். விவாதத்தை முடித்து இறுதியாக எழுதிய சில்லையூர் செல்வராசன், இன்னும் அதிக கவிதைகள் புனைப் பெயர்களில் குவிந்துள்ளன. அக்கவிதைகளில் சரியான விலாசமில்லாததால், அவற்றைப் பிரசுரிக்க முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.
சில்லையூர் செல்வராசனுடன் இறுகிய தொடர்புடைய நான், அவரது வீட்டில் சிலவேளைகளில் தங்கி நிற்பேன். அப்போதெல்லாம், அவரது எழுத்து நறுக்குகளைப் படிப்பதிலும், அவற்றைப்பற்றிய விபரமறிவதிலும் அதிக அக்கறை காட்டுவேன். அக்காலத்தில் அறிந்த சங்கதிதான் இது.
இதிலுள்ள முக்கியம் என்னவெனில், இவ்விரு கவிதா மேதைகளும் கவிதைப் பஞ்சமுடையவர்களல்ல. பூரணமாக ஆராயாமல் இம்முடிவுக்கு வந்தமை இலக்கிய வல்லமையுடைய விரிவுரையாளரும், தமிழ் விமர்சகரும், ஆக்க இலக்கிய வல்லாளருமான எம்.ஏ.நு."மான் அவர்களின் தகுதிக்கு உகந்ததல்ல என்பதே எனது அபிப்பிராயம். இங்ங்ணம்,
ஏ. இக்பால் 28

எக்ஸில் - 09 (நவம்பர்-மார்ச் 2000) காத்திரமான இலக்கியச் சஞ்சிகை Gg5TLil Jabl” (g5: EXIL, B.P-204 92604 ASNIER E S CEIDEX FRANCE
கவிஞர் ஸ்பைர்
(நினைவு மலர்) தொகுப்பாசிரியர்: எஸ்.எம்.ஹனிபா முதற்பதிப்பு: மே 2000 வெளியீடு:- தமிழ்மன்றம், கல்ஹின்னை. அரை நூற்றாண்டு காலமாக இலக் கியவானில் சுடர் விட்டு மிளிர்ந்த ஒரு வரை நன்றியுடன் நினைவுகூரும் வகையில் கவிமணி ஸ"பைர் பற்றிய பல கட்டுரைகள் மலரில் இடம் பெற்றுள்ளன.
மறுமலர்ச்சிக் கதைகள் தொகுப்பாசிரியர்:- செங்கைஆழியான் க. குணராசா. முதற்பதிப்பு:- டிசம்பர் 1997 வெளியீடு:- கல்வி பணி பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு, திருகோணமலை. மறுமலர்ச்சிக் காலகட்டத்துச் சிறுகதை களில் சிறப்பானவையென நான் கருதி யவை இச்சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இவற்றை எழுதிய காலகட்டம் 1946/1948 என்பதையும் எழுதியவர்கள் தமது இளம் வயதில் இவற்றை ஆக்கியுள்ளனர் என் பதையும் இச்சிறுகதைத் தொகு தியை படிப்பவர்கள் நினைவிற்
29
கொள்ளல்வேண்டும். முன்னுரையில் - செங்கை ஆழியான்
தேன்மலர்கள் (கவிதைத் தொகுதி) எழுதியவர்:- கலைமகள் ஹிதாயா றிஸ்வி முதற்பதிப்பு: ஏப்பிரல் 2000 விலை: ரூபா 80/- வெளியீடு:- சிந்தனை வட்டம் 14. உடத்தலவின்னை மடிகே உடத்தலவின்னை, 20 802 இந்தத் தேன்மலர்கள் கடல் போல் விரிந்து பரந்து விரிந்த கவிதைப் பூ வனத்தில் கடுகு போன்றொரு இளம் பெண் கவிஞை பதித்துக் கோர்த்த சின்னஞ் சிறிய மாலையாகும். கலைமகள் ஹிதாயா றிஸ்வி
மனந்திறந்து.
புதிய சுதந்திரப் புலர்வின் முன் ஈழத்துச் சிறுகதைகள் (திறனாய்வு) எழுதியவர்: புலோலியூர்ஆ.இரத்தினவேலோன் முதற்பதிப்பு- 25-12-1999 விலை: ரூபா 125/- வெளியீடு:- மீரா பதிப்பகம் 191/23, ஹைலெவல் வீதி, கிருலப்பனை, கொழும்பு - 06. ஈழத்தில் வெளியாகும் நூல்கள் பற்றிய விபரங்கள் பலவற்றையும், ஈழத்தின் படைப்பாளிகள் பற்றிய விபரங்கள் பலவற்றையும், ஈழத்தின் வரலாற்றின் முக்கியமான விடயங்கள் பற்றிய சில விபரங்களையும் இந்நூல் கொண்டிருக்கிறது.
ரஞ்சகுமார் முன்னுரையில்.
விடைக்குள் வராத வினாக்கள் எழுதியவர்:- தர்காநகர் ஸபா முதற்பதிப்பு: நவம்பர் 1999 விலை:- ரூபா 75/- வெளியீடு: படிப்பு வட்டம் 69, டாக்டர் செய்க் பாஸி மாவத்தை, தர்கா நகர். 12 090

Page 16
இந்தக் கவிதைத் தொகுப்பின் முக்கிய நோக்கம் ஒரு கால் நூற்றாண்டு காலமாய் ஆக்கப்பட்ட கவியாக்கங் களை ஒன்று திரட்டி ஒரு பதிவுக் காகப் பத்திரப்படுத்துவதுதான். தவிர, "மாஸ்லோ"வின் தத்துவம் எதுவும் இதற்குள் இல்லை.
தர்காநகர் ஸபா திறப்புரையில்.
பிரசுரம் பெறாத கவிதைகள் எழுதியவர்: ஏ. இக்பால் முதற்பதிப்பு: ஜனவரி 2000 விலை: ருபா 80 வெளியீடு- படிப்பு வட்டம், ஒஎஸ்.எப் மாவத்தை, தர்காநகர். 12 090 எனது மனவுணர்வு, நான் வாழ்ந்த கால உலகப் பின்னணியில் மிகவும் நனைந்து விட்டது. அந்த ஈரந்தான் இந்தக் கவிதைகள். இக் கவிதை களைப் பற்றி நான் சிலாகிப்பதைவிட நீங்கள் உணர்வதையே அதிகம் விரும்புகிறேன்.
ஏ. இக்பால் முன்னுரையில்.
எதிர்ப்பு இலக்கியமும்
எசமானர்களும்
எழுதியவர்:- சி. சிவசேகரம் முதற்பதிப்பு: மே 2000 வெளியீடு:- தேசிய கலை இலக்கியப் பேரவை, 8.44, 3வது மாடி, மத்திய கூட்டுச்சந்தைத்தொகுதி, கொழு- 11 சமகால தமிழ் இலக்கிய இயக்கத் துடன் இணைந்து செயல்படும் ஒருவ ராகப் பேராசிரியர் சி.சிவசேகரம் விளங்குவதனால் மக்கள் கலை இலக்கியக் கோட்பாட்டினைக் கண்டறி வதற்கான தேடுதல் முயற்சியின்
தொடர்ச்சியை இந்நூலில் நாம்
தரிசிக்கலாம்.
தேசியகலை இலக்கியப் பேரவையின்
பதிப்புரையிலிருந்து.
மலையக இலக்கியம்
தோற்றமும் வளர்ச்சியும் நூலாசிரியர்: சாரல் நாடன்
3D
முதற்பதிப்பு: ஜூலை 2000 வெளியீடு:- சாரல் வெளியீட்டகம் - கொட்டகலை, அறுபதுகளுக்குப் பிறகு மலையக மண் கமழும் இலக்கியங்களை வெகு வாகப் படைத்தளிக்கும் இலக்கியகர்த் தாக்கள் தோன்றியிருக்கிறார்கள். அது காலத்தின் நியதியாயிருந்தது. அதில் கண்டுண்டு வந்தவர்கள் அதிகம். அப்படி ஓர் இலக்கியப் பிரவாகம் தோன்றுவதற்கு அம்மக்களிடையே ஓர் இலக்கியப் பாரம்பரியமிருந்தது.
முன்னுரையில் சாரல் நாடன்.
非 中 中 事 冲 非 # 非 中 事 + 非 + 事 * 蚌 + + 非 中
புதிய நூலகம் (நூற்பெயர்க் கோவை)
அன்புள்ளங் கொண்டவர்களே, புதிய நூலகம் என்ற பெயரில் கடந்த 10 ஆண்டுகளாக (1990-1999வரை) வெளிவந்த இலங்கை எழுத்தாளர் களின் நூல்களைப் பற்றிய நூற் பெயர்க்கோவை ஒன்றினை வெளி யிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். புதிய நூலகம் என்ற இந்த நூற் பெயர்க்கோவையில் நூலாசிரியர், நூலின் பெயர், வெளியிடப்பட்ட இடம், வெளியீட்டாளர், பதிப்பித்த ஆண்டு, பக்கங்கள், விலை போன்ற விபரங் கள் இடம்பெறுவதுடன் நூலின் முன் னுரை, அணிந்துரை, பதிப்புரை ஆகிய வற்றில் இடம்பெற்ற மிக முக்கியமான நூலின் உள்ளடக்கம் பற்றிய குறிப்பும் இடம்பெறும். எனவே நூலாசிரியர்களோ அல்லது வெளியீட்டாளர்களோ நூலின் பிரதி ஒன்றினை
WTFILONY WEEFVA PO BOY32, KANDX: SRNLANKA என்ற முகவரிக்கு 25.10.2000 திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
- அந்தனிஜீவா

வராத வீடு
- சோலைக்கிளி
தலைசீவிக் கொண்டது விதி நல்லவர்கள் நடந்தால் முள்ளும் பஞ்சாகும் பெய்யும் நெருப்பில் தன் முகம் உருக்கி பாதங்கள் விழுங்காமல் தார் மெத்தை இருந்தது
நான் வந்தேன் இப்போது படித்தவர்கள் கொஞ்சம் அறிவு துளிர்த்தவர்கள் யோக்கியர்கள் என்று நாலுபேர் நிலம்வாங்கி குடியேறி சிறப்பு ஓங்கியதால் இதுவும்
கல் மனன் என்ற நிலை
மேவி அன்பொழுக
வாய்பேசாவிட்டாலும் நிழல் கொள்ளும் குளிர் முகத்தால் பேசியது, எங்கே உன்
இடுப்பு மண்ணி
காற்றே குறிப்பெடுத்தல் போதும் பேனையை மூடு உன் கோப்பியினால் இரண்டு
தடவைகள் விசு அது இருந்தாலா கிலுங்கும் எனக்கும் தூக்கம் வரும் இப்போது ஒரே விழிப்பு மணி கழன்ற சனங்கள்தான் பினங்கள்
நடந்து
இன்னும் வீடு வரவில்லை

Page 17
சமாதானம்!
Iടി, நாட்டின் சமாதானத்துக்காக சகோதர நாட்டில் வாங்கிய பறவைகள் "Hilլիir" புறாக்கள்!
லலிதா புன்னாலைக்கட்டுவன் இரும்புச் சிறகின் உறுமல் ஒலியில் கறங்காய் சுழன்று பிச்சிய எச்சங்கள்!
அப்பாவி மனிதரின்
மரண அவலம்!
ஓடினர், ஒளிந்தனர், அலறினர், விழ்ந்தன குருதிப் புனலில்
தோய்ந்து மடிந்தனர்.
தணிக்கை வீதியில், ஒலி ஒளி முழக்கம்
இசைந்து இணங்கும் பத்திரிகை நர்த்தனம்!
ஓய்ந்த, உயிர்களின் கூட்டல் பெருக்கல்! எஞ்சியது -
வீரப் பிரதாபங்கள்!
வாங்கிய பறவைகள் நாட்டின் செலவில். விழ்ந்த,
உயிர்களோ வரவுக் கணக்கில் சம்பந்தப்பட்டோர் அடைந்தனர் - சமாதானம்!
 
 

T.GNANASEKARAN 19/7, Peraldervsya, Rowdy,
Kovovdy, Srí Lavovkov.