கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2000.10

Page 1

Jů).
), Jélt LI ஞ் yo

Page 2
புகைக்குள்ளும்
பார்த்திருக்கப் போகிறது காலம் அது பறக்கின்றபோது கிளம்பும் புகைக்குள் நிலா கூடக் கறுத்து வழிகின்ற பாலுக்குள் தூசி இரவுகளில் வெளியில் வருதல் கவனம் தும்மல் வரும்
வளவில் நிற்கின்ற மரம் குடைபிடித்து நிற்கத்தான் பார்க்கிறது அடி குட்டி இடவில்லை இன்னும் இட்டிருந்தால் தடிமலுக்கு தலை ஊன்றிக் கொள்வதற்கு ஆள் உண்டு என்ற தெம்பு வந்திருக்கும்
குடையும் சரியில்லை வருவதெல்லாம் போலி
கை பிடித்திருக்க மழை ஒழுகும் பிறகெதற்கு, பூ சொல்லும்
எங்களுக்கும் துனை குறைவு நானும் அவளும்தான் எப்போதும் பகல் வெளிச்சம் இரவும் வருவதில்லை அவளே எனக்கு மின்னுகின்ற விண் மீன் இருந்தாலும் எங்கள் பழக்கத்தின் நிமிர்த்தம்
கை நெட்டி முறிப்பதற்கும் முண்டுக்கல் உருண்டு வரும்
அழைக்காமல் பெரும் கடல் அழைத்தும் வராதது தன் கரைக்குத் துணையாக யாரோ தூக்கிவந்து நிர்ப்பந்தம் பண்ணி போட்ட கோபத்தில் கொஞ்சம் கொஞ்சம் அசைந்து உயிர் கொண்டு இந்த அளவுக்கு விதிக்கு வந்தது
 

ஞானம்
ஒளி-01 占L而-05
பகுதிதலின்
upao
விரிவும் ஆழமும் பெறுவது
குானம்
பிரதம ஆசிரியர்: தி.ஞானசேகரன் இனை ஆசிரியர்கள்: ந.பார்த்திபன் ஞா.பாலச்சந்திரன்
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதி
ஆசிரியர்களே பொறுப்புடை பவர்கள்.
தொடர்புகளுக்கு.
தி.ஞானசேகரன் 19/7, பேராதனை வீதி, கண்டி, தொ.பே. - 08-234755
077-305506
உள்ளே.
நேர்கானல் - 13 வ.அ.இராசரத்தினம்
சிறுகதை மீண்டும் நளாயினி - 04 ராணி சீதரன்
கட்டுரைகள் நான் பேச நினைப்பதெல்லாம் - 10 கலாநிதி துரை மனோகரன் நானும் என் கவிதைகளும் - 22 கே.எஸ்.சிவகுமாரன்
கவிதைகள் புகைக்குள்ளும் - 02 சோலைக்கிளி கண்ணி - 21 ஜேம்ஸ் ஸ்டீபென்ஸ் குலமகள் குணங்கள் - 21 புரட்சிபாலன் மாற்ற முடியாத மரபு - 31 ஏ. இக்பால் இழப்புகள் - 32 த. ஜெயசீலன்
வாசகர் பேசுகிறார் - 25
புதிய நூலகம் - அந்தனிஜீவா - 29
அட்டைப்படம் - கருணா நன்றி: 'இன்னுமொரு காலடி
TIL S-55
*ーイ
(சித்திரை 1998)
O3.

Page 3
மீண்டும் நளாயினி
s1 m m m u m m m un
ராணி சீ தரன்
W திருகோணமலை M
கதவு பூட்டப்பட்டிருந்தாலும் யன்னல் திறந்து இருந்ததைக் கொணர் டு உள்ளே நளாயினி நித்திரையாக இருக்கவேண்டும் என நினைத்த ரம்மியா கதவில் மெதுவாகத் தட்டி "நளா” என்று குரல் கொடுத்தாள். ஒரு ஓரமாகச் சுருண்டு கிடந்த நாய் எழும்பி வந்து அவளை மணந்து பார்த்து வாலை ஆட்டித் தமக்கிடையே இருக்கும் நட்புறவை வெளிப்படுத் தியது.
கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது.
"நேரம் மூன்று மணி இன்னமும் நித்திரையோ? உனக்கென்ன கொடுத்து வைச்சனி”
நளாயினிக்குச் சொல்வதாக நினைத்து ரம்மியா சொன்ன கதையைக் கேட்டுச் சிரித்துக் கொண்டு முன்னே நின்றவன் அவள் கணவன் சங்கர்.
"ரம்மியா! வாங்க உள்ளே. நளாயினி இப்பதான் போனவ. மகளை *ரியுசன் கிளாசில் விட்டுப்போட்டு துணிக்கடைக்குப் போகவேணும். யாருக்கோ பிறந்த நாள் என்றவ. இப்பவருவா; இருங்க."
சொல் லிக் Gas Tsosi (3L நெற்றியில் இருந்த மயிரை ஒரு கையால் ஒதுக்கியவாறு முன்னாலே போன சங்கர் கதிரையைக் காட்டி இருக்கும்படி சைகை செய்து விட்டு அறைக்குள் போனான்.
*சேர்ட் போடாத வெறும் மேலுடன் ஒரு அந்நிய ஆடவனுடன் தனிமையில் இருந்து கதைக்க அவளுக்கு என்னவோ போலிருந்தது. தானுண்டு, தன் குடும்பமுண்டு என்று இருக்கும் சங்கர் நளாயினியின் நெருங்கிய சிநேகிதி என்பதாலோ, என்னவோ தனிப்பட்ட மரியாதையும் அன்பும் கொண்டு பழகுவது அவளுக் கும் தெரியும். என்றாலும் நேரம் கெட்ட நேரம் நளாயினியும் இல்லை. அமைதி, தனிமை. வேறொரு நேரம் வருவோம் S 6 நினைத் து ரம் மரியா எழும்பியபோது, "என்ன எழும்பி நிற்கிறீர்கள்?இருங்கோ."
‘சேர்ட்'டின் கையை அளவு பார்த்து மடித்துக் கொண்டே, "ஒரே வெக்கையா இருக்கு."
'யான் சுவிச்" ஐத் திருகினான் சங்கர்.
"சங்கர், நாளையின்றைக்கு பிள்ளையின் நான்காவது பிறந்தநாள். தகப்பன் வடிவாய் செய்து 'வீடியோ எடுத்து அனுப்பட்டாம்."
நளாயினியும் நீங்களும்தான் முன்னுக்கு நின்று எல்லாம் செய்ய வேண்டும். எழும்பி அவனருகே வந்து அழைப்பிதழை நீட்டியபோது, அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை அவளின் கையைப் பற்றிப் பிடித்தபடி அவளது முகத்தை ஒருவித ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவனை "சங்கள்!
 

என்ன இது, கையை விடுங்கோ” உள் மனது அடித்துக் கொண்டாலும் அதனை வெளிக்காட்டாது நிதானமா கவே சொன்னாள் ரம்மியா.
“ரம்மி உங்களை எட்டு வருசத் துக்கு முதல் கண்டபோது அழகான இளம் மஞ்சள் நிறச்சீலையும் கனகாம் பரச் சரமும் கண்ணிற்குப் பூசிய மையிலே அந்தக் கருவிழிகள் இரண்டும் பிரகாசத்தோடு படபடக்க, அந்தக் கணத்திலே என் மனதிலே உங்கள் உருவம் அப்படியே பதிந்து. இன்றுவரை அப்படியே தான். உங்களைக் காணும் போதெல்லாம் எனக் குள்ளே இனநீ தெரியாத உற்சாகம் ஏற்படுகிறது. அதற்காக உங்களை அடைய வேண்டும் என்ற ஆசையோ, வெறியோ எனக்கு இல்லை.”
அவன் அப்படியே அவளது கையைத் தனது கண்களில் ஒற்றிக் கொண்டு தன் பிடியிலிருந்து விடுவிக் கிறான். “கொஞ்சம் இருங்கோ ரம்மியா. உங்களுடன் மனம் விட்டுக் கதைக்க வேண்டும்."
எவ்வளவு நம்பிக்கைக்குரிய வனாக நினைத்த சங்கள் அதுவும் எனது நண்பியின் புருசன். எனது வீட்டு நிகழ்வில் முன்னுரிமை கொடுக்க நினைக்கும் இவன். ரம்மியாவிற்கு நடப்பது கனவோ என்றுகூடத் தோன்று கின்றது.
ஒரு பெண்ணிடம் நல்ல அபிப் பிராயத்தைப் பெற்றுத்தான் நினைத் ததைச் சாதிக்க நினைக்கும் பலவீன மான ஆண்களிற்குள்ள தந்திரபுத்தி யுடன்தான் இவன் பேசுகிறானோ இப்படி எத்தனை பெண்கள் நாசமாகி இருப்பார்கள்? எத்தனை குடும்பங்கள் நடுத் தெருவிற்கு வந்திருக்கும்? மதுரையை எரித்த கண்ணகியின்
சீற்றம் அடிவயிற்றில் இருந்து பந்தாய் உருண்டு வந்து தொண்டையில் சிக்கிக்கொள்ள மெளனமாக அவனை நோட்டமிட்டாள் ரம்மியா. வேதனை கலந்தது போன்ற அந்தச் சிரிப்பும், என்னை நம்பமாட்டாயா? என்று கேட்பது போன்ற ஏக்கப் பார்வையும் அவள் உறுதியையும் ஆட்டங்காணச் செய்தது. என்றாலும் அவளுக்குள் ஒரு குரல் நம்பாதே நம்பாதே! என ஓலமிடத் தொடங்கியது.
"சங்கர் எனக்கு என்ன சொல்வ தென்றே தெரியவில்லை. ஒருவேளை நீங்கள் ஆத்மார்த்தமான அன்பு வைத்திருக்கலாம். இல்லையென்று சொல்லவில்லை. அல்லது இது ஒரு சபலமாகவும் இருக்கலாம். பின் விளைவுகளை எண்ணிப் பார்த்தீர் assm?"
"ரம்மியா! நீங்கள் என்னை விளங்கிக் கொள்ளவில்லை. நான் கூடாத நோக்கத்துடனோ, உங்களை அடைய வேண்டுமென்ற ஆசையுடனோ பழகியிருந்தால் நீங்கள் தனிமையில் இருப்பதைப் பயன்படுத்தி தொடர்பை வளர்த்திருக்கலாம். நான் அப்படி யெல்லாம் செய்ய விரும்பவில்லை.”
"அப்ப எதை விரும்புகிறீர்கள்?" சிலவேளைகளில் தான் நினைத்ததைச் சாதிக்கமுடியாத ஆண்மகன் பல சமாதான வழிகளில் சரண் புகுந்து தன்னைப் புடம்போட்ட தங்கமாகக் காட்டிக்கொள்ள முனைவதுண்டு. இவன் எந்த ரகம் என்று அவளுக்குப் புரியவில்லை.
"நீங்கள் தவறாகப் புரிந்திருக் கிறீர்கள் என்பது விளங்குகின்றது
அவன் வார்த்தையை முடிக்க வில்லை "என்ன சரி என்ன தவறு” கேட்டுக்கொண்டே, "அப்பாடா நெருப்பு

Page 4
வெயிலி கொழுத்துகிறது. ஓ! ரம்மியாவா எப்ப வந்தனி? கனநேரமே?
கடைக்குப்போனனான். பிள்ளையின்
பேர்த்டே பெரிசாய் செய்யிறியோ?” பதில் சொல்லவிடாமல் கேள்வியை அடுக்கிக் கொண்டு வந்த நளாயினி கையில் கொண்டுவந்த பொருட்களை ஒரு பக்கமாக வைத்துவிட்டு கதிரையில் சாய்ந்திருந்தாள்.
“ஓம். நளாயினி பேர்த்டே" உங்கட பொறுப்புத்தான். “இன்வி ரேஷன் சங்களிடம் கொடுத்திருக்கு. எனக்கும் நிறைய வேலை இருக்கு. போகப் போறேன்." ரம்மியா எழும்பி னாள்.
“ஒன்றும் குடிக்காமல் போறியே. இரு ரம்மி"
"குடிக்காத வீடே. பிறகு ஆறுத லாக வருகிறன்." அவள் எழும்பிய போது மடியிலிருந்து நழுவிக் கீழே விழுந்த லேஞ்சியைப் பற்றிக் கவனமில்லாது ரம்மியா முன்னே நடக்க அவளைத் தொடர்ந்து வாசல் வரை அனுப்புவதற்கு நளாயினி சென்றாள்.
சங்கர் குனிந்து லேஞ்சியை எடுத்து முகத்தருகில் கொண்டு போன போது, மெல்லிய வாசனை அவன் இதயத்தில் ரம்மியமான உணர்வை ஏற்படுத்தியது.
அவளுடன் தனிமையில் மனம் விட்டுக் கதைப்பதற்கு காத்திருந்து அதுவும் கைநழுவிப் போய்விட்டதும் அவள் அரையும் குறையுமாகத் தன்னைப் பற்றி என்ன நினைத்திருப் பாளோ என்பதும் மனவருத்தத்தைத் தந்தது.
நளா(நி)யினி இல்லையேல் நான் தனி என்று கவிதைபாடி, பைத்தியமாய் அவள் பின்னே திரிந்து திருமணஞ் செய்த நளாயினியை
அவன் வெறுக்கவில்லை. அவளின் இடத்தில் வைத்து இன்னொரு பெண்ணைப் பார்க்கும் தைரியமும் அவனுக்கில்லை. ஆனால். கன்னக் குழி விழும் அந்தச் சிரிப்பு. ஒரு
கோடிக் கதைசொலி லும் கரு”
விழிகள். பூரிப்பான அங்கங்கள். கருகருவெனச் சுருண்டு நெளிந்த கூந்தல். ஒட்டு மொத்தமாகவே அவளிடம் அவன் மனதைப் பறிகொடுத்தது உண்மை தான். தன்னையும் மீறி அலையும் மனதை இழுத்து நிறுத்தி, நளாயினியிடம் இல்லாத என்னதான் இவளிடம் இருக்கிறது? எத்தனை தரம் கேட்டிருக் கிறான். முனிவர்களும். ஞானிகளும் இடறுப்பட்டதும் இந்த விடயந்தானே எனத் தேற்றிக் கொள்வதும் உண்டு. இவ்வளவு காலமும் மனதிற்குள் வைத்திருந்த சலனத்தை மனதோடு இருக்கவிட்டிருக்கலாம்.
அவள் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாள்? சிலவேளை தன் உயிர் நண்பியான நளாயினியிடமே தன் நடத்தை பற்றிச் சொல்லி விட்டால்..? நளாயினி எப்படி அதனை ஏற்றுக் கொள்ளுவாள்?
சங்கர் உங்களுக்கு என்ன குறை விட்டனான்? இப்படி இன் னொருத்தியின் உறவுக்கு அலை
கிறியளே? ரம்மியா! நீ இனிமேல் இங்கே வராதே! இப்படியெல்லாம் சொல்லிவிட்டால். நினைத்தவன்
தன்னையறியாமல் 'சிக்' 'உஸ்" என்று ஏதோவெல்லாம் செய்து அவதிப் ULT6.
"அப்பா! என்ன குழம்பிப்போன மாதிரி இருக்கிறியள்? சுகமில்லையே?” அவளின் முகத்தை நிமிர்ந்து பார்க்கத் திரானியற்றவனாய் ஒன்று மில்லை வெக்கையாயிருக்கு என்றான்.

ரம்மியா கட்டிலில் விழுந்து நன்றாக அழுதாள். தன்னை நினைக்க அருவருப்பாகவும் ஆத்திரமாகவும் இருந்தது. நான் புருசனைப் பிரிந்து தனியே இருப்பதால் சந்தர்பத்திற்கேற்ப என்னை மாற்றிவிடலாம் என்றுதானே சங்கர் நினைத்திருக்கிறார். அல்லது நான் எப்படியானவள் என்று அறிந்து பார்த்திருக்கிறாரா? ஏன் அப்படி நடந்து கொண்டார்?
அவளுக்கு விடை கிடைக்க வில்லை. ஆனால் சங்கர் செய்த செயல் அடிக்கடி கணி முன்னே தோன்றிப் பல காட்சிகளாக விரியும். ஆண்களையே நம்பக்கூடாது. எல்லோருமே ஒரே ரகம் தானா? அவர்களின் சலனம் தவறாகிப் போய் விட அப்பாவிப் பெண்களுக்கு அதுவே சரித்திரமாகிவிடுகிறதே. நினைவுகள் தொடர்ந்து துரத்த குறிப்பிட்ட எல்லைக்குள்ளே சுற்றிச். சுற்றி. எனக்கு என்ன பிடித்தது? ஏன் அதையே நினைத்துக்கொண்டு. அதிலிருந்து விடுபட நினைத்தாலும் அந்த நினைவுகள் ரம்மியாவை விடுவதாக இல்லை.
என் னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்படியானவள் நானில்லை என்பதை அவனுக்குச் சொல்லிவிட வேண்டும்.
O7
என்று காத்திருந்த ரம்மியாவிற்கு அப்படியொரு சந்தர்ப்பம் ஏற்படவும் இல்லை. ஏற்பட்டாலும் அவசரமாகக் கதையைத் தொடக்கி கூறிமுடிக்கும் திறமையும் அவளுக்கில்லை.
குற்றமுள்ள மனம் குறுகுறுப் பது போல இருவரும் எதிர்ப்படும்போது இனந்தெரியாத ஏதோ ஒன்று. வெட்கமா? வேதனையா..? ஏன் இப்படி? நான் என்ன பிழை செய்தேன்? அமைதியான நீரின் மீது விழுந்த கல்லு அடுக்கடுக்காக வளையங்களை உருவாக்கி அவை விரிந்து செல்வது போல ஆயிரம் கேள்விகள் அவளுள் எழுந்தன.
நளாயினி மட்டும் தூய்மையான உள்ளத்தோடு பழைய மாதிரியே கலகலப்பாகப் பழகினாள். மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயம் இருக்க.
பிள்ளையின் பிறந்தநாள்
மிகவும் சிறப்பாக நடந்து முடிந்து
விட்டது. சங்கரும் நளாயினியும் விட்டுக்கு வரும்போது இரவு எட்டுமணி.
"அப்பா ! ரம் மியாவிற்கு அலுப்பாக இருக்கும் பாவம். சாப்பாடும் செய்யவில்லை. இதைக் கொடுத்து விட்டு வாங்கோ." அவசரமாகப் புட்டும் கிழங்குப் பொரியலும் செய்து 'பார்சல் கட்டி எடுத்துவந்து கணவனிடம் நீட்டினாள் நளாயினி. அவளை அர்த்தம் நிறைந்த பார்வையால் அளந்தான் சங்கர். இவளுக்கு எண் மேலி சந்தேகம் ஏற்படுவ தேயில்லையா? அல்லது எனக்கு அவள் மீது நாட்டம் இருக்கிற தென்பதை அறிந்துதான் நடக்கிறாளா?
எட்டு வருட குடும்பவாழ்வில் நளாயினி தன்னைப் புரிந்து வைத் திருக்கிற அளவுக்கு தான் அவளைப் புரிந்து கொள்ளவில்லையே என்ற

Page 5
வருத்தம் அவனுக்கு ஏற்பட்டது. இரவின் அமைதி. பாதையில் போவோர் வருவோரும் குறைவு. சில வீடுகளில் பிள்ளைகள் படிக்கும் சத்தம் அழும் சத்தம் இவற்றுக்கிடையில் சாப் பாட்டைக் கொடுத்துவிட்டு உடனே திரும்புவதா? அல்லது உள்ளே போவதா? என்ற கேள்வியும் அவனுள் எழுந்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.
ரம்மியா! உரிமையோடும் ஆசையோடும் அந்தப் பெயரை உச்சரித்தான்.
அவள் குரலை இனங்
கண்டிருக்க வேண்டும். கதவைத்திறந்து தலையை நீட்டி "சங்கரே? என்ன இந்த நேரம்?” அவள் உள்ளே அவனை அழைக்கவில்லை. கதவின் எல்லைக் குள் இருந்து உடலையும் வெளியில் எடுக்கவில்லை.
“நளாயினி சாப்பாடு தந்து விட்டவ. இந்தாருங்கோ".
"அவளுக்கு விசர், இந்த நேரம்
உங்களையும் அலைச்சுக் கொண்டு.
எனக்குச் சாப்பிடவும் விருப்பமில்லை". சாப்பாட்டுப் பார்சல் கைமாறிய போது ஏற்பட்ட ஸ்பரிசம் அவளுக் குள்ளே மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற ஒரு அதிர்ச்சியை உண்டாக்கு கிறதே அது என்ன? கண நேர உணர்வுகளுக்குள் அடிமைப்பட்டு. சி கூடாது.
“சரி, சங்கர் நளாயினி தேடுவாள், போயிட்டு வாங்கோ"
“ஓம், ரம்மியா. நான் போறன்.
நீங்கள் என்னைப் பற்றி நான் சொன்
னதைப்பற்றி என்ன நினைச்சனிங்கள்? "பிறகு ஆறுதலாக அதைப்
பற்றிக் கதைப்பம். எனக்கு சரியான
தலையிடியாக இருக்கு."
"நேரம் போகுது, கவனமாப்
போங்கோ. "குட்நைட்" சொல்லிவிட்டு
கதவை அடித்துச் சாத்தினாள் ரம்மியா. சில சந்தர்ப்பங்களை நாங்களே உருவாக்கி. அதிலே நாங்களே நாசமாகி. absofilău (56)LuIT85 மனம் குழம்பிப் போயிருந்தது அவளுக்கு.
கடிவாளம் இல்லாத குதிரை யாக மனம் அடிக்கடி சங்கரிடம் தாவியது. நானும் பத்தினி வேஷம் போடுகிறேனா? எனக்கு என்ன நடந்தது? மனம் விசித்திரமானது என்பது இப்பொழுது தான் அவளுக்குப் புரியத் தொடங்கியது. வண்ணப் பூங்காவாக இருக்கும் நளாயினியின் குடும்பத்தில் புயலாக நான் புகுந்து விடுவேனோ? எனத் தன் மனதையே கேட்டுப்பார்த்தாள். பயன் பூச்சியம். மனக்குரங்கு அவளை ஏமாற்றிவிட்டுத் தன்பாட்டில் தாவத் தொடங்கியது.
காசு பணம் மட்டுமிருந்து என்ன செய்வது? காலம் இப்படி வீணாய்ப் போக. இனிமேல அவரை வெளியில் போகாது தடுக்கவேண்டும். அல்லது என்னையாவது வெளியில் எடுக்கச் சொல்லவேண்டும் என்ற தீர்க்கமான முடிவை எடுத்தாள் ரம்மியா.
“ஹப்பி பேர்த் டே ரூ யூ" கழுத்தைக் கட்டிக்கொண்டு இது என் பரிசு என்று முத்தம் கொடுத்த நளாயினி இன்று நாற்பத்தைந்து வயது பூர்த்தியாகிறது. "எனக்கு என்ன ஸ்பெசல் தரப்போகிறீர்கள்?" என்று கணவனிடம் கேட்டபோது,
“நானே ‘ஸ்பெசல் தானே." என
சங்கர் சிரித்துக் கொணர் டே சொன்னான்.
“சரி நீ எனக்கு என்ன தரப்போ கிறாய்?
“உங்களுக்கா? வித்தியாசமான பரிசு. என்ன தெரியுமா, ரம்மியா.” அவள் சொல்லி முடிக்க முதலே

s)6 66i தோளிலி ஊர் நீத எறும்பொன்றைப் பிடித்து நல்லகாலம். இப்ப இது உங்களைக் கடித்திருக்கும். சின்னப் பிள்ளைபோலக் கலகலவெனச் சிரித்தாள் நளாயினி. சங்கருக்கு ரம்மியா என்று சொன்னது மட்டுந்தான் கேட்டது. பிறகு சொன்னவை எதுவும் அவனுக்கு விளங்கவில்லை. பொறி கலங்கிப் போய் இருந்தான். புதிர் போட்டது மாதிரி இப்படியொரு குண்டைத் தூக்கிப் போட்டுவிட்டு சிரித்துக் கொண்டு நிற்கிறாளே என அவள் மீது கோபமாகவும், மிகுதியைக் கேட்டுவிட வேண்டும் என்ற ஆவலா கவும் இருந்தாலும் கவனிக்காத மாதிரியும், காதில் விழாத மாதிரியும் மெளனமாக இருந்தான். பொறுமை மேலும் பொறுக்க முடியாத நிலைக்குப் போய்விடவே "சரி நீ எனக்கு என்ன தரப்போகிறாய், சொல்லேன்"
"இருந்து பாருங்கோவன்" நளாயினி சொல்லிக் கொண்டே ‘ரிசீவரை எடுத்து காதில் வைத்துக் கொண்டு எண்களை அழுத்தினாள். ஒவ்வொரு முறை அழுத்தும் போதும் அது அவனின் இதயத்தில் ஓங்கிக் குத்துவதுபோல இருந்தது.
“ஹலோ! ரம்மியாவா? இன்று முழுக்க எங்களோட இருக்கவேணும். சாப்பாடும் எங்கட வீட்டில்தான்"
*விஷேசமோ?" "வாவன், வந்தால் தெரியும் தானே..!"
ஓம், சங்கருக்கு நாற்பத் தைந்து"
“சரி, ஒகே." தொடர்பைத் துண்டித்துவிட்டு அவனிடம் வந்தாள். "என்ன அப்படிப் பார்க்கிறீர் assir?”
குற்றவாளிக் கூண்டில் ஏற்றி
வைத்து ஆயிரம் கேள்விகள் கேட்பது
போலவும், தண்டனையாக சாட்டை அடி விழுவது போலவும் உறைந்து போயிருந்தான் சங்கர்.
"அப்பா ! உங்களுக்குப் பிடிச்சது, பிடிக்காதது விரும்பியது விரும்பாதது எல்லாமே எனக்குத் தெரியும். உங்களுக்கு ரம்மியாவை மிகவும் பிடிச்சிருக்கு என்பதும் எனக்குத் தெரியும். அதால உங் களுக்கு விருப்பமான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருவது நல்லது என்று நினைச்சன்."
அன்றும் இப் படித் தானி நளாயினி புருசனைக் கூடையில் சுமந்து கொண்டு போயிருப்பாளே. இவளும். அதே பணியா? அல்லது வித்தியாசமானதா?
தமிழ்ப் பண்பாட்டுக்கே தனித்து வமாக விளங்கும் இல்லற தர்மம், உடல் மனம் என்பவற்றையும் கடந்து வெறும் சம்பிரதாயமாகவோ, சடங்கா கவோ மாறிவிட்டால் நாம் அதனை எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்வது? நாளைக்கு இவள் வேறொருவனுடன் வந்து எனக்கு இவரை ரொம்பவும் பிடிச் சிருக்கு என்று சொன்னால் அதைத் தாங்கும் மனப்பக்குவம் எனக்கு இருக்குமா? "நளாயினி வேண்டாம் என்று சொல்ல வாயெடுத்தவன் கன்னத்தில் இரண்டு கைகளையும் ஊன்றிக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தான். நளாயினி எதுவித சலனமு மில்லாது 'பார்த் ரூமில் குளித்துக் கொண்டிருந்தாள். அவளது பாடல் ஒலி அவனது காதில் ஓங்கி அறைந்தது போல ஒலித்தது.
瓮 壳 余

Page 6
நான் பேச நினைப்பதெல்லாம்.
(கலாநிதி துரை.மனோகரன்)
ஒரு வித்தியாசமான பாடகி
தமிழ்த்திரையுலகம் பல சிறந்த பின்னணிப் பாடக, பாடகிகளை இனங்கண்டு வந்துள்ளது. சிறந்த ஆற்றல் வாய்ந்த பின்னணிப் பாடகிகளுள் ஒருவராக விளங்குபவர் எஸ். ஜானகி 1957ம் ஆண்டு முதலாக இற்றைவரை சிறந்த பின்னணிப் பாடகிகளுள் ஒருவராக திகழும் அவர், தெலுங் .ޗި“ · • கைத் தாய் மொழியாகக் கொண்டவர். ஜானகியின் திறமையை முதன்முதலில் சிறப்பாகப் புலப்படுத்திய பாடல், கொஞ்சும் சலங்கை என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற "சிங்கார வேலனே தேவா" என்பதாகும். நாதஸ்வர மேதை காருக்குறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வர இசையுடன் இணைந்துவரும் ஜானகியின் இனிய குரல், அந்தப் பாடலுக்கு மிகுந்த புகழை ஏற்படுத்திவிட்டது. நீண்ட காலமாகத் திரைப்படங்களில் அவர் பின்னணி பாடி வந்துள்ளபோதிலும், அவரது முழுத்திறமையையும் வெளிக்கொணர்ந்த இசையமைப்பாளர் இளைய ராஜாவே ஆவர். அன்னக்கிளி படத்தின் மூலம் இளையராஜா மீளக் கண்டுபிடித்த ஓர் அருமையான பாடகியாக ஜானகி விளங்குகின்றார். இளையராஜாவின் இசை யமைப்பிலேயே ஜானகியின் மறைந்திருந்த திறமைகள் அனைத்தும் வெளிப்படத் தொடங்கின. ஜானகியின் பழைய குரலைவிட, இளையராஜாவின் இசையமைப்பிற் பாடத் தொடங்கியபின் அவரது குரல் புதிய மெருகு பெற்றுள்ளது. பாத்திரத்துக்கு ஏற்ற முறையிற் பின்னணிக்குரல் வழங்குவதில் ஜானகி கைதேர்ந்தவர். பாத்திரத்துக்கு ஏற்ற பாவனையைத் தமது குரல் வாயிலாகத் துல்லியமாகப் புலப்படுத்தும் திறமையை அவர் தம்மகத்தே கொண்டுள்ளார். குழந்தைப் பாத்திரங்களுக்குக் குரல் கொடுக்கும்போது, குழந்தைப் பிள்ளைகளின் மனோ நிலைக்கும், மழலைப் பேச்சுக்கும் ஏற்பத் தமது குரலை மாற்றி வழங்குவார். (பின்னணிப் பாடகி எம். எஸ். ராஜேஸ்வரியும் இவ்வகையிற் குறிப்பிடத்தக்கவர்.) கதாநாயகிகளுக்கு பின்னணி வழங்கும்போது, காதல் வசப்பட்ட இளம்பெண்களின் குறும்புத்தனமும், குதூகலமும், உணர்ச்சி வேகமும் குழைந்த முறையில் சுவை ததும்பப் பாடுவார். தாய்ப்பாசத்தை வெளிப்படுத்தும்போதும் அந்தப் பாவனையைத் தத்ரூபமாகப் புலப்படுத்துவார். கிழவிப் பாத்திரங்களுக்குக் குரல் வழங்கும்போது, அதற்கேற்பக் குரலில் மாற்றம் செய்து வழங்குவார். இத்தகைய பல திறமைகளை தம்மகத்தே கொண்ட பின்னணிப் பாடகியாக ஜானகி விளங்குகிறார். ஓரிரு திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்தும் உள்ளார். திறமை வாய்ந்த ஜானகியிடம் ஒரு குறையும் இருக்கத்தான் செய்தது. ஆரம்ப காலங்களில் அவர் தமிழ்ப் பாடல்களைப் பாடும்போது உச்சரிப்புச் சுத்தம் சரியாக அமையாமல் போனதும் உண்டு. காலப்போக்கில் உச்சரிப்பு விடயத்தில் ஓரளவு ஜானகி தம்மைத் திருத்திக் கொண்டார் என்று கூறலாம், அனைத்துக்கும் மேலாக,
1.
 

ஜானகியிடம் காணப்படும் சிறந்த அம்சம், பிற கலைஞர்களை மதிக்கும் அவரது உயர்ந்த பண்பாகும். இளங் கலைஞர்களை ஊக்கி உற்சாகப்படுத்தி உயர்த்துவதில் ஜானகிக்கு நிகர் ஜானகியேதான். அண்மையில் இத்தகைய திறமையும், உயர்ந்த உள்ளமும் கொண்ட அவருக்குச் சென்னையிற் பாராட்டு விழாவொன்றும் நடந்ததாகத் தெரிகிறது. புத்தரும் பேரினவாதிகளும்
இலங்கையை ஒரு பெளத்த சிங்கள நாடு என்று கொண்டாடுவதற்காகப் பேரினவாதிகள் அல்லும் பகலும் வியர்வை சிந்தாமல் உழைத்து வருகின்றனர், இவர்களில் பெளத்த குருமார், பல்கலைக்கழக கல்விமான்கள், சட்டத்தரணிகள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் முதலியோரும் அடங்குவர். இவர்களின் மாபெரும் இலட்சியம், தமிழ்பேசும் மக்களுக்கு உரிமைகள் எவையும் வழங்கப்படக்கூடாது என்பதே. இதனை வெளிப்படையாகத் தெரிவிப்பதற்கு அவர்களது "கெளரவம் குறுக்கே நிற்கிறது. அதேவேளை, சிறுபான்மை மக்களுக்கு எதிரான தங்களது போக்கை மறைப்பதற்காக ஓர் அடையாளமும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அந்த அடையாளமாக அவர்கள் பயன்படுத்திக்கொள்வது, புத்தரின் நாமத்தையே புத்தருக்கும், பேரினவாதிகளின் இலட்சியத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆயினும், அவர்கள் தாம் பேசுவது பேரினவாதம் அல்ல என்று காட்டுவதற்காக, மனித சமுதாயத்திற்கு உண்மையையும் ஞானத்தையும், அகிம்சையையும் போதிக்க வந்த ஒரு மாபெரும் மகானின் பெயரைப் பயன்படுத்தி, தம்மை அரியாமலே அவரின் பெயரையும், பெளத்த மதத்தையும் இழிவுபடுத்துகின்றனர். புத்தரின் பெயரைப் பயன்படுத்துபவர்கள் இயல்பாகவே சமாதானத்தின் மீது அக்கறை கொண்டவர்களாகவே இருக்கவேண்டும். ஆனால், இலங்கையில் பேரினவாதிகள் அவரின் பெயரை போருக்காகவே பயன்படுத்து கின்றனர். போருக்கும், புத்தருக்கும் தொடர்பில்லை. ஆனால் போர் விரும்பிகள்தான் அதிகமாக அந்த மகானின் பெயரைப் பயன்படுத்துகிறார்கள். பேரினவாதிகளின் இத்தகைய போக்கினைச் சில இலங்கைத் தமிழ் கவிஞர்கள் தத்தம் கவிதைகள் மூலம் புலப்படுத்தியுள்ளனர். எம்.ஏ.நு."மான், சு.வில்வரத்தினம், ஹம்சத்வனி, சாருமதி, எம்.எச்.எம். அஷ்ரப் முதலானோர் பேரினவாதிகளாற் புத்தருக்கு ஏற்படும் களங்கத்தைத் தமது கவிதைகளில் இனங்காட்டியுள்ளனர். ஓர் உருவகக் கதை
இலங்கையின் தரமான உருவகக் கதை எழுத்தாளருள் ஒருவராக விளங்குபவர், ஸி.எம்.ஏ.அமீன். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் என்னோடு ஒன்றாகக் கல்வி பயின்றவர் அவர். ஹிந்தி மொழியிலும் பாண்டித்தியம் பெற்ற அவர், அம் மொழியிலிருந்தும் பல படைப்புகளை நேரடியாகத் தமிழுக்குப் பெயர்த்துள்ளார். இனிய சுபாவமும் படைப்பாற்றலும் கொண்ட அமீனின் சிறை என்ற உருவகத் தொகுதி இவ்வாண்டில் வெளியாகியுள்ளது. பல சிறந்த உருவகக் கதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் அதிகார வெறி என்ற உருவகக் கதையின் சில பகுதிகளை இங்கு தருகிறேன்.
பகலுணவின் பின்னர் ஒரு வீட்டு முற்றத்தில் அவ்வீட்டு நாய் சற்று கண்களை முடி இன்பசுகத்தை அநுபவித்துக் கொண்டிருந்தது.
11

Page 7
எஜமான் சொல்லாமலே செய்யும் வேலைகளில் அதற்கு மிகுந்த ஈடுபாடுண்டு. அவ்வேலைகள் எல்லாம் எஜமானின் அதிகாரத்தில் அதற்குரிய பங்கை நீரூபிக்கும் காட்சிகள். அதனால்தான் தெரு நாய்கள் இத்தகைய நாய்கள் கவனம் என்ற இரட்டைப் பொருள்தரும் விளம்பரத்துக்குள் வசிக்கும் நாய்களை 'ஏவல் நாய்கள் என அழைக்கின்றன.
பரம்பரை ஊர்சுற்றி நாய் ஒன்று மெல்ல எங்கோ இருந்துவந்து அவ்வீட்டு வளவுக்குள் நுழைந்துவிட்டது. அரவம் கேட்டவுடன் வீட்டு நாய் மின்னலெனத் துள்ளியெழுந்து ‘வள் வள் எனக் குரைத்தபடி அதனை நோக்கி ஓடிற்று.
ஊர்சுற்றி நாய் எதையோ சொல்ல விரும்பியும், அதற்கு அவகாசம் கிடைக்கவில்லை. எனவே அதுவும் சண்டைக்கு ஆயத்தமாகிவிட்டது.
சற்றுநேரம் சண்டை நடந்தது. எஜமான் வீட்டுச் சாப்பாடுதான் வேலை செய்திருக்க வேண்டும், ஊர்சுற்றி நாய் முக்கி முனங்கியபடி ஓடி மறைந்தது.
வீட்டு நாய் வாலை ஆட்டியபடி தனது வீரப்பிரதாபத்தை எஜமானுக்கு காட்ட முயற்சிசெய்து கொண்டிருந்தது.
மறுநாளும் அதே நாய் அங்கு வந்தது. இதனைக் கண்ட வீட்டு நாய் "அற்பப் பதரே! இவ்வீட்டு வளவுக்குள் ஏன் நுழைந்தாய்?” என்று கேட்டது.
ஊர் சுற்றி நாய் பயப்படவில்லை. "உன்னைப் போன்ற மனிதனின் ஏவலாளிகளை மீட்பதற்கு” என்று தைரியமாகப் பதிலளித்தது. சண்டைக்குத் தயாராகிவிட்டது வீட்டு நாய்.
"உனதே இனத்தவனான என்னை விரட்டியடித்து நீ மட்டும் சுகமாக வாழ்வதுதான் உனது தர்மமா?”
"தர்மம், அதர்மம் இப்போது சுயநலவாதிகளின் சொற்களாகிவிட்டன. எனது எஜமானுக்கு விசுவாசமாக உழைப்பது எனது தர்மம், எனது எஜமானுக்குள்ள அதிகாரத்தில் எனக்கும் பங்குண்டு தெரியுமா?”
"அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, உனது இனத்தவர்களையே எதிரிகளாக்கி, அவர்களின் வீழ்ச்சியே உனது வெற்றியாக இருக்குமென்றால், நீ ஒரு நீசப் பிறவியே என்பதில் ஐயமில்லை. உனது இனத்தவர்களையே நீ அடக்கியொடுக்கி, இழிவுபடுத்தி அதன்மீது நீ எழுப்பும் உன் சுகவாழ்வுக்குரிய மாளிகையானது நிலையானது என்று எண்ணாதே காற்று இப்போது உனக்குச் சாதகமாக அடிக்கிறது. எப்போதும் அப்படியே இருக்கும் என நம்பி ஏமாந்து போகாதே!” என்று சொல்லிவிட்டு தெருநாய் திரும்பிப் பார்க்காது ஓட்டம் பிடித்தது.
00 SYS S 0LS q 0 S L0 S M S L S L0L S 0L S 0 L S S0LS SLLSLS zS z S L S S0 0LL S0LS S 0S SLLLL S LLLLL LL LL SLLSL SLLSL S S LSL S LS S LSLS S LSL S SLLSLS L S S S LS S SLLSS SLLLS S S LS SLSLS S SLLSLS LS S LSL S L S S SSS S LSS S S S S LS SLLS S LSLS SL LS L LS S S qqSq S L S S S 0LS SLS S LSL S L LSL S L SLLLS LLL LL LS S 0L LSLL LLL
தனிப்பிரதி: ரூபா 15/-
வருடச்சந்தா: ரூபா 180/-
(தபாற்செலவு உட்பட)
சந்தா காசோலை மூலமாகவோ மனியோடர் மூலமாகவோ
அனுப்பலாம்.
அனுப்பவேண்டிய பெயர், முகவரி ;-
TGNANASEKARAN
19/7, PERADENTYAROAD, KANDY.

வ.அ.இராசரத்தினம்
சந்திப்பு:
நே f
S
6.
ல் தி.ஞானசேகரன்
/.* நவீன இலக்கிய கர்த்தாக்களில் பவளவிழாக் கண்ட ஒரே படைப்பாளிN
யாக விளங்கும் திரு. வ.அ. ஐம்பத்திரண்டு வருடங்களாகச் சளைக்காது எழுதி வருபவர்.
சிறுகதை, கவிதை, நாவல், மொழிபெயர்ப்பு, விமர்சனம், கட்டுரை ஆகிய துறைகளில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.
* இவரது தோணி (சிறுகதைத் தொகுதி), மண்ணிற் சமைந்த மனிதர்கள் (நாவல்) ஆகியன அகில இலங்கை சாகித்தியப் பரிசினைப் பெற்றன.
* கொழுகொம்பு (நாவல்), கிரெளஞ்சப் பறவைகள் (நாவல்), ஒரு வெண்மணற் கிராமம் காத்துக்கொண்டிருக்கிறது (நாவல்), ஒரு காவியம் நிறைவு பெறுகிறது (சிறுகதைத் தொகுதி), இலக்கிய நினைவுகள் (கட்டுரைகள்), பொச்சங்கள் (கட்டுரைகள்), மூதூர் புனித அந்தோனியார் கோயிலின் பூர்வீக வரலாறு (சரித்திரம்), திருக்கரசைப்புராணம் (சளித் திரம்), பூவரசம் பூ (மொழிபெயர்ப்புக் கவிதை) ஆகியன இவரது ஏனைய படைப்புகளாகும்.
* ஈழநாகன், கீழைக்கரை தேவநேயப் பாவாணர், வியாகேச தேசிகர் என்பன இவரது புனைபெயர்கள். ノ ܢܠ
தி.ஞா - ஐம்பத்திரண்டு வருடங்களாகச் சிறுகதைத்துறையில் ஈடுபட்டுள்ளீர்கள். இன்றைய சிறுகதை உலகம் எப்படி இருக்கிறது? வ.அ. * ஆரம்பத்தில் வ.வே.சு.ஐயர் சிறுகதைகள் எழுதியபோது அதில் கற்பனைகள் அதிகமாக இருந்ததாகச் சொல்லப்பட்டது. பின்னர் அந்த வடிவங்கள் மாறிமாறி புதுமைப்பித்தன் காலத்தில் ஒரு யதார்த்த நிலைக்கு வந்தது. அதன் பின்னர் வந்தவர்களில் ஜெயகாந்தனைச் சொல்லலாம். அவரது ஆரம்பக்காலச் சிறுகதைகளில் யதார்த்தம், சோஷலிச யதார்த்தம் காணப்பட்டது. பின்னர் வந்த கதைகளில் அவற்றைக் காணவில்லை. அவர் வியாபாரத்திற்காக ஆனந்தவிகடன் முத்திரைக்கதைகள் எழுதியபோது அதிலே முதலிருந்த கதைகளின் தாக்கத்தை, வேகத்தை காணமுடியவில்லை. அதற்கு பிறகு வந்தவர்களில் நா. பார்த்தசாரதி, நல்ல கதாசிரியர் என்று சொல்கிறார்கள். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பின்னர் சிறுகதை 'கோணங்கியில் வந்து நிற்கிறது. கோணங்கியின் மூன்று சிறுகதைத் தொகுதிகளை நான் படித்தேன். சத்தியமாக எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஏன் இந்தக் கதைகளை எழுதுகிறார் என்று எனக்குப் புரியவில்லை. கோணங்கி நல்ல எழுத்தாளர் என்று கூறுவதில் சிலர் பம்மாத்துப்
13

Page 8
பண்ணுகிறார்கள். இது எப்படி என்றால், டேனிஸ்காரனுடைய கதையில் வருகின்ற 'இராசாவும் சட்டையும்’ மாதிரி, அவர் சொல்வது எனக்கு விளங்கவில்லை என்று நினைக்கிற மாதிரி இருக்கிறது. நான் விளங்கிக் கொள்ளவில்லையென்றால், நானொரு முட்டாள் என்று மற்றவர்கள் எண்ணுவார்கள் என்ற பயம் போலவும் இருக்கிறது. இப்படிப்பார்த்தால் கடைசியில் மிஞ்சி நிற்பது சோஷலிச யதார்த்தம் போலத்தான் எனக்குப் படுகிறது. ஆனாலும்கூட இந்தச் சோஷலிச யதார்த்தம் மேல்நாட்டில் வழக்கொழிந்து போயிருக்கிறது. இலங்கையிலேதான் இதைத் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் நல்ல கதைகள் எழுதுபவர்களாக உமாவரதராசன், திருக்கோயில் கவியுகன், மருதூர்க் கொத்தனின் மகன் ரவூஃப், ஓட்டுமாவடி அரபாத் போன்றவர்களைக் கூறலாம். சோஷலிச யதார்த்தத்தை நீக்கிவிட்டு புதிதாக எழுதுபவர்களில் இவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்னமும் சிறுகதை தென்பாண்டி நாட்டுக்குள்ளேதான் இருக்கிறது என்பது எனது திட்டவட்டமான அபிப்பிராயம். வண்ணநிலவன், தோப்பில் மிரான் போன்றவர்கள் நன்றாக எமுதுகின்றார்கள். - தி.ஞா - தோணி சிறுகதை உங்களது மனக்கிடங்கில் நான்கு வருடங்கள் கிடந்து உருவாகியதென்று குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களது சிறுகதைகள் எவ்வாறு கருக்கொண்டு பிரசவிக்கின்றன? வ.அ. :- சில கதைகள் நான்கு வருடங்கள் அல்ல அதற்குமேல் இருபது முப்பது வருடங்கள்கூட எனது மனதில் இருந்திருக்கின்றன. சந்தர்ப்பம் வரும்போது அவற்றை கதையாக்குகிறேன். உதாரணமாக நியதி என்றொரு கதை. 1940ல் எனது மைத்துனன் ஒருவன் இருபது வயதில் இறந்தான். அந்தத் தாக்கம் என்னுள் நீண்ட காலம் இருந்தது. 1964ல் முதுரில் நடந்த தமிழ் விழாவிற்காக வீரகேசரி ஒரு மலரை வெளியிட்டபோது அந்த மலருக்கு ஒரு கதை எழுத வேண்டியிருந்தது. அந்தக் கதையிலே இறந்துபோன எனது மைத் துனனை - செல்லனை கொண்டுவந்தேன். ஏறத்தாழ 24 வருடங்கள் என் மனதிலே இந்த நிகழ்வு இருந்து கதையாகியது. இப்படிக் கனகாலம் நினைவுகள் இருக்கவேண்டுமென்பது கட்டாயமில்லை. சிலவேளை நினைவுகள் மனதில் இருந்தாலும் அந்த நினைவுகளை உடனடியாக எழுதுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் இருக்கலாம். இதைவிட உடனடியாகவும் சில கதைகளை எழுதியிருக்கிறேன். ஆனாலும் மனதில் பதிந்து, ஊறாத, பண்படாத எந்தச் சம்பவமும் நல்ல கதையாக வராது என்பது எனது அபிப்பிராயம். தி.ஞா - உங்களது மீனவக் கதைகளில் - தோணி, ஓர் ஆமைக் கதை, துணிச்சல், கடலின் அக்கரை போனாரே, வலை, போன்றவற்றிலி அதிக கலைத்துவமும் நுட்பமும் காணப்படுகின்றனவே. இதற்கு பிரத்தியேகக் காரணங்கள் ஏதும் இருக்கின்றனவா? வ.அ. :- நான் கடலோரத்தில் பிறந்தவன். எனது முன்னோர் திருகோணமலைக்கும் முதுாருக்கும் இடையில் வத்தை ஒட்டியவர்கள். அதுமட்டுமல்ல, தெற்கே அக்கரைப்பற்றுக்கும் வடக்கே பருத்தித்துறைக்கும் வத்தை ஒட்டினார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். 1948ம் ஆண்டுவரையும் வத்தைதான் எங்களது முக்கிய போக்குவரத்துச் சாதனமாக இருந்தது. சிறுவயதில், மத்தியானம் பாடசாலை முடிந்தபின் நானும் எனது மைத்துனனும் கடற்கரைக்கு வந்துவிடுவோம். மூன்று மணிபோல திருகோணமலையிலிருந்து முதுரை நோக்கி ஆறு வத்தைகள் வரும். அவைகளில் ஒரு சானன் அளவில் பாய்மரம் தெரியும்போதே நானும் எனது மைத்துனன் செல்லனும் அது எங்களுடைய அப்பாவின் வத்தை, இது மாமாவின் வத்தை என்றெல்லாம் கண்டுபிடித்துவிடுவோம். இது எங்களுக்கு பொழுதுபோக்கு, அதிகமான நேரங்களில் நாங்கள் கடற்கரையிலேதான் தங்குவோம். இப்படியாகக்
14

கடலோரத்தில் பழகிப்பழகிக் கடலோரக் கதைகளை எழுதுவது எனக்கு ஒரு வாலாயமாகிவிட்டது. அந்தக் கடலோரத்திலுள்ள காதலாலி நாணி அகப்பொருளிலக்கியத்தில் நெய்தல் பாடல்களை விரும்பிப் படிப்பேன். நீங்கள் குறிப்பிட்ட கதைகளில், தோணியைத் தவிர மற்றவற்றுள் ஏதோ ஒரு அகப்பொருள் பாடலொன்று வந்திருக்கும். இந்த நெய்தல் நிலக்கதைகளில்தான் நான் பழந்தமிழ்ப் பாடல்களைக் கொண்டுவந்திருக்கிறேன். கடற்கரையில் பிறந்த நான், கடற்கரையைக் கண்ட நான், கடற்கரையை அநுபவித்த நான் கடலோரக் கதைகளை எழுதும்போது அதிக கலைத்துவம் மிளிர்கிறது. தி.ஞா - பிரஞ்சு, ஆங்கில, ரவுர்ய சிறுகதைகள் பலவற்றை நீங்கள் மொழிபெயர்த்துள்ளீர்கள். இந்த அநுபவம் உங்களது சிறுகதை ஆக்கத்திற்கு துணை புரிந்திருக்கிறதா? வ.அ. :- நிச்சயமாக, மொறட்டுவாவில் ஆசிரியனாகப் பணியாற்றிய காலத்தில் நான் ஒவ்வொரு மாதமும் பதினைந்து இருபது ரூபாவிற்கு புத்தகங்கள் வாங்குவேன். அந்தக் காலத்தில் Penguin Edition ஒவ்வொன்றும் ஒன்றரை அல்லது இரண்டு ரூபா. நான் மாப்பசானைப் பற்றி ஏதோவொரு பத்திரிகையில் படித்தேன். உடனே மாப்பசானின் ஐந்தாறு சிறுகதைத் தொகுதிகளையும் சில நாவல்களையும் வாங்கினேன். அவற்றைப் படித்துவிட்டு வானொலியில் மாப்பசானைப் பற்றி ஒரு பிரசங்கம் செய்தேன். மாப்பசானில் இருக்கும் ஓர் அழகு என்னவென்றால் அவன் எத்தனையோ படுமோசமான காமரசம் சொட்டுகின்ற, கதைகளை எழுதியபோதிலும் அவனிடத்தில் மனிதாபிமானமும் இருக்கிறது. சில நல்ல முடிவுகளும் அவனது கதைகளில் உண்டு. அவன் பிறந்த இடம் பிரான்சின் வடபகுதியில் உள்ள 'நோர்மண்டி' அவன் நோர்மண்டி மக்களின் வாழ்க்கையை எழுதியிருக்கிறான். அதன் காரணமாகவும் அவன் என்னைக் கவர்ந்தான். அவன் நோர்மண்டி மக்களின் வாழ்க்கையை எழுதியதுபோல புதுமைப்பித்தன் திருநெல்வேலி மக்களின் வாழ்க்கையை எழுதினான். நான் மூதூர் மக்களின் வாழ்க்கையை எழுதினேன். ஆனாலும் என்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளன் அன்டன்செக்கோவ். அவனிடம் உள்ள கலையழகு மிகவும் பிரமாதம். அவனது Darling என்ற கதையை நான் 'கண்மணி என்று மொழிபெயர்த்தேன். மொழிபெயர்க்கும்போது பல அநுபவங்கள் ஏற்பட்டன. சிலவற்றை மொழிபெயர்க்க முடியாமல் இருந்தது. உதாரணமாக ஒஸ்கர் வைல்ட் எழுதிய A woman ofno importance என்ற கதையை நான் "எவளோ ஒருத்தி என்று மொழிபெயர்த்தேன். இதுவே சரியான மொழிபெயர்ப்பு என்பது எனது அபிப்பிராயம். 25, 30 கதைகளை நான் மொழிபெயர்த்துள்ளேன். இந்த மொழிபெயர்ப்புகள் என்னை வாசிக்கத் தூண்டின. உலக இலக்கியங்களை எனக்குத் தெரியப்படுத்தின. இப்படித்தான் நானும் எழுத வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தின. அதனால் மொழிபெயர்ப்புகள் எனக்கு பெரிதும் துணைபுரிந்தன என்று நான் நிச்சயமாகக் கூறுவேன். தி.ஞா - தோணி என்ற உலக தரத்துக்கொப்பான சிறுகதையைத் தந்த நீங்கள் அதன் பின் சிறுகதைத்துறையில் ஒரு பாய்ச்சலைக் காட்டும்வண்ணம் சிறுகதைகளைப் படைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுப் பற்றி என்ன கூறுகிறீர்கள்? வ.அ. :- தோணி நல்ல கதையாக இருக்கலாம். ஆனால் தோணிக்கு பிறகு வந்த எல்லாக் கதைகளையும் எல்லாரும் படிக்கவில்லை; கண்டுகொள்ளவில்லை. அதுவொரு காரணமாகலாம். தோணிக்குப்பிறகு ஒரு ஆலமரத்தின் கதை' என்ற கதை, எனது ஐம்பது சிறுகதைகள் அடங்கிய தொகுதியில் உள்ளது. அது 1990ல் முதுரரில் நடந்த சண்டையின் கதை. அதுபோல துணிச்சல் மிக நல்ல கதை, பழைய இலக்கியங்களை வைத்துக் கொண்டு சில கதைகளை எழுதினேன். பட்டினத்தாரின் கதையைப்போல சில கதைகளை எழுதினேன். இவற்றை நல்ல
15

Page 9
கதைகள் இல்லை என்று சொன்னால் நான் என்ன செய்வது? தொடர்ந்தும் நான் நல்ல கதைகள் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். தி.ஞா - பழந்தமிழ் இலக்கியப் பரிச்சயம் இல்லாதவர்களுக்கு புதுஇலக்கியம் படைக்கும் உரிமை இல்லை என்று கூறும் உங்களது இலக்கிய முயற்சிகளுக்கு பழந்தமிழ் இலக்கியப்பரிச்சயம் எந்தளவிற்கு உதவிபுரிகிறது? வ.அ. :- எனது அதிஷ்டம் 1948ல் நான் இலங்கையர்கோனைச் சந்தித்தது. அவரொரு பாலபண்டிதர் எனபது பலருக்குத் தெரியாது. அவரை நான் சந்தித்த முதல் நாள் சொன்னார், 'ஆனந்த விகடன் கல்கியை மட்டும் படித்துவிட்டு சிறுகதை எழுதக்கூடாது. ஐங்குறுநூறிலுள்ள ஐந்நூறு பாடல்களும் ஐந்நூறு சிறுகதைகள், பழ்ந்தமிழ் இலக்கியம் கட்டாயம் படிக்கவேண்டும், படித்துவிட்டுத்தான் புதுஇலக்கியம் சிருஷ்டிக்க வேண்டும்’ என்று. அந்தக் குரு வாக்கை நான் கடைசிவரைக்கும் கடைப்பிடித்து வருகிறேன். மற்றது இந்த உலகத்தில் எல்லா இனத்தவரும் பொறாமைப்படும் அளவுக்கு நமக்கு ஒரு செழுமையான இலக்கியம் இருக்கிறது. அதன் சொந்தக்காரர்கள் நாங்கள் என்ற அந்த மமதை அந்தக் கர்வம் எங்களை நல்ல இலக்கியம் எழுதத்துரண்டுகிறது. நான் சோடைபோன இலக்கியம் எழுதினால், அது நம் முன்னோர் சம்பாதித்துவைத்த பெருமைக்கு நான் செய்த துரோகம் ஆகிவிடும். ஆனபடியால் பழந்தழிழ் இலக்கியத்தில் காலூன்றி நின்றுகொண்டுதான் புதிதைச் சிருஷ்டிக்கவேண்டும் என்று நான் அபிப்பிராயப்படுகிறேன். நான் திருகோணமலையில் ஆசிரியராக இருந்த காலத்தில் அருட்திரு ஹினி என்ற அமெரிக்கரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் சொன்னார் “உங்களது மொழியில் இரண்டாயிரம் ஆண்டு பழமைவாய்ந்த இலக்கியம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். எங்களிடத்தில் அது இல்லை. எங்களது இலக்கியத்துக்கு வயது நூற்றைம்பது வருடம் தான் என்றார். நான் ஆச்சரியம் அடைந்தேன். அவர் விளக்கமளிக்கும் வகையில், "ஆங்கில இலக்கியத்தை நான் சொல்லவில்லை. அமெரிக்க இலக்கியத்தையே சொல்கிறேன். நாங்கள் ஆங்கிலத்தில் எழுதினாலும் எங்கள் இலக்கியம் அமெரிக்க இலக்கியம், ஜெப்பர்சனின் சுதந்திரப்பிரகடனம் தான் எங்களது மிகப்பழைய இலக்கியம்” என்றார். அவர் பேச்சால் 'ஈழத்து இலக்கியம்’ என்ற கோட்பாடு என்னுள் வலுவடைந்தது. அவரிடம் தேசிய இலக்கியக் கோட்பாட்டை நான் படித்ததால்தான், தேசிய இலக்கியக் கோட்பாட்டில் நின்று எழுதும்போது என்னுள்ளே ஒரு பெருமை ஏற்படுகிறது. நான் எழுந்தமானமாக வந்து சேரவில்லை. நான் பெரிய இலக்கியத்துக்குச் சொந்தக்காரன். அதன் வாரிசு. அப்படியானால் நான் நல்லதைத்தான் எழுதவேண்டும். அதை மறந்தேனானால் அதில் அர்த்தம் இல்லை. தி.ஞா:- உங்களது கதைகள் சித்திரிக்கும் மனிதர்களும் அவர்களது வாழ்க்கைப் போராட்டங்களும் யதார்த்தப்பண்புடன் முற்போக்கு எழுத்தாளர்களின் போக்கைப் பெரிதும் ஒத்திருக்கின்றன. எனினும் நீங்கள் முற்போக்கு அணியில் சேர்ந்து கொள்ளவில்லை இதற்கு ஏதாவது பிரத்தியேகக் காரணிகள் இருக்கின்றனவா? வ,அ- எழுத்தாளன் எப்போதும் முற்போக்குவாதியாகத்தான் இருக்கவேண்டும்; இருப்பான். உதாரணமாக ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் அவர்கண்டிர் யாம் வணங்கும் கடவுளாரே என்று தேவாரம் பாடியவரும் ஒரு முற்போக்குவாதிதான். நானும் இப்படியானவற்றைத்தான் எழுதுகிறேன். அதனால் ஒரு முற்போக்குக்காரன் என்றுதான் என்னை நம்பினேன். நான் எழுதத்தொடங்கிய காலத்தில் முற்போக்கு என்ற வார்த்தையே வரவில்லை. 1956ம் ஆண்டு பண்டாரநாயக்கா ஆட்சிக்காலத்தில் வந்ததுதான் இந்த முற்போக்கு. அறுபதாம் ஆண்டிலேதான் அது காலூன்றியது. அதற்கு முன்னரே இந்த முற்போக்கு எழுத்தாளர்கள் சொல்கின்றவற்றை எல்லாம் நான் எழுதிவிட்டேன். நீங்கள்
16

முற்போக்கு என்று சொல்வதெல்லாவற்றையும் நான் எப்போதோ எழுதிவிட்டேன்’ என்று எனது தோணி சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தேன். அது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள்தான் முதலில் சொல்லவேண்டும் அதன்பின்புதான் மற்றவர்கள் சொல்லவேண்டும்’ என்பதுதான் அவர்களுடைய எண்ணம். அப்படியென்றால் நான் அவர்களுடன் ஒட்டுறவாக இருக்கமுடியுமா? இருக்கமுடியவில்லை. எஸ். பொன்னுத்துரைக்கு நடந்ததும் இதுதான். பொன்னுத்துரைக்கும் எனக்கும் எத்தனையோ அபிப்பிராய பேதங்கள் இருந்தன. இருந்தாலும்கூட நான் அவருடைய மேதையை மதிக்கின்றேன். அதனால் நான் அவரோடு நண்பனாக இருக்கின்றேன். முற்போக்காளர்கள் இரண்டு மூன்று கலாநிதிகளை வைத்துக்கொண்டு "சில்விட்டான்களை மேய்க்கிறார்கள். அப்படியான மேய்ச்சலுக்கு நாங்கள் எடுபடவில்லை. அதனால் அவர்கள் கோபித்துக்கொண்டார்களே தவிர நான் அவர்களோடு கோபப்படவில்லை. தி.ஞா:- முற்போக்கு அணியினர் தேசியம், மண்வாசனை, யதார்த்தம் பற்றிப் பேகம் முன்னரே ஈழத்தில் இக்கோட்பாடுகளை உள்ளடக்கிய சிறந்த கதைகளை நீங்கள் எழுதியதாகக் கூறுகிறீர்கள். இவ்வாறாக வேறுயாரும் அக்காலப் பகுதியில் இத்தகைய கதைகளைப் படைத்துள்ளனரா? வ.அ;- பலர் எழுதியிருக்கிறார்கள். இலங்கையர்கோன், “முதற்சம்பளம், 'வெள்ளிப்பாதசரம்', 'தாழையடி நீழலில் போன்ற கதைகளை எழுதியிருக்கிறார். சி.வைத்திலிங்கம் பாற்கஞ்சி போன்ற கதைகளை எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்துக் கதைகளில் கே.வி நடராஜன், கனக செந்திநாதன், ‘கசின் போன்றவர்கள் நாற்பதுகளிலேயே முற்போக்குக் கதைகளை எழுதியுள்ளார்கள். முற்போக்குக் கோஷம் அறுபதுகளிலே வந்தபின்புதான் இலக்கியம் பிறந்தது, சிறுகதை வந்தது என்று முற்போக்காளர்கள் சொன்னால் நாங்கள் அதை ஒப்புக்கொள்ள முடியுமா? தி.ஞா:- எஸ்.பொ. உங்களது நண்பர் என்று கூறுகிறீர்கள். அவர் முன்வைத்த நற்போக்குக் கோட்பாடு பற்றிய உங்களது நிலைப்பாடு என்ன? வ.அ;~ எஸ்.பொ. அவர்கள் முன்வைத்த நற்போக்குக் கோட்பாடு ஒரு தற்செயலான நிகழ்வுதான். 1963ம் ஆண்டில் நான் சாகித்தியப்பரிசு வாங்கச் சென்ற கூட்டத்தில், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில், முற்போக்குக்காரர் முட்டை அடித்தார்கள். டொக்டர்.சதாசிவம், FXC நடராஜா, புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை போன்றவர்கள் எல்லோரும் முட்டையடி வாங்கி சேட் எல்லாம் ஒழுகியபடி நின்றார்கள். எனக்குப் படவில்லை; ஏனோ படவில்லை. வேணுமென்றுதான் எனக்கு முட்டை அடிக்காமல் விட்டார்களோ தெரியவில்லை. முட்டை அடித்தவர்கள் ஓடிவிட்டார்கள். சிறிதுநேரத்தின்பின் முட்டை அடித்த கோஷ்டிக்கு எதிரான கோஷ்டி ஒன்று அங்கு வந்தது. "யாரடா இங்கு முட்டை அடித்தது.? இது சைவப் பள்ளிக்கூடம், மச்சமாமிசம் புழங்காத பள்ளிக்கூடம்" என உரத்த குரலில் கூறியபடி ஒரு பட்டாளம் போல் அவர்கள் வந்தார்கள். அதற்குத் தலைமை வகித்தவர் ஒருகாலத்தில் முதுரில் DR.Oஆக இருந்த பூரீநிவாசன், நடத்துங்கள் கூட்டத்தை, நாங்கள் வருகிறதைப் பார்த்துக் கொள்கின்றோம்" என்று அவர்கள் சொன்னார்கள். கூட்டம் தொடங்கியது. சு. நடேசபிள்ளை அதற்குத் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமை உரையில், "இலக்கியம் முற்போக்காக இருக்கட்டும் அல்லது எப்போக்காகவும் இருக்கட்டும். ஆனால் அது நற்போக்காக மட்டும் இருந்தால் நல்லது” என்று கூறினார். அந்த நற்போக்கு’ என்ற சொல்லை எஸ்.பொ. பிடித்துக்கொண்டார். இலக்கியத்துக்கு நற்போக்கு எனும் சொல்லைத் தந்தவர் சு. நடேசபிள்ளை. பின்னர் நான் பொன்னுத்துரையிடம் கதைத்தபொழுது கூறினேன் "என்ன நற்போக்கு? முற்போக்கு மாதிரித்தான் இதுவும் இருக்கிறது. இதில் எனக்கு பிடிப்பு இல்லை. CLASSIC என்று சொல்வது போல் தமிழில் மரபு' என்று வைத்துக்கொள்வோம் அதுதான் எனக்குப் பிடித்தமானது" என்று
17

Page 10
கூறினேன். எஸ்.பொ. தற்செயலாக நற்போக்கைப் பிடித்துக் கொண்டாரே தவிர நற்போக்கு என்ற பெயரை வைக்கவேண்டுமென எந்தக்காலத்திலும் அவர் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இப்பவும்கூட நற்போக்கு இலக்கியம் இருக்கிறதா என்பது எனக்குச் சந்தேகமே. நற்போக்கு என்று ஒரு இலக்கியம் இருந்ததாக நம்புவதும் சொல்வதும் பிழையானது. தி.ஞா:- டானியல் தலித் இலக்கியத்தின் முன்னோடி என்று கூறப்படுகிறது. தலித் இலக்கியம் பற்றி உங்களது பார்வை என்ன? வ.அ;~ தலித்’ என்ற சொல் தமிழ்ச் சொல் அல்ல. மராட்டிச் சொல் என நினைக்கிறேன். ஒடுக்கப்பட்டவர்கள் பற்றிச் சொல்லும் இலக்கியத்தைத் தலித் இலக்கியம் என்று சொல்கிறார்கள். டானியல் அவர்களும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை எழுதினார். அதனைத் தலித் இலக்கியம் என்று அவர் எண்ணவில்லை. அவர் எழுதியகாலத்தில் தலித் என்ற வார்த்தை இருக்கவில்லை. பின்னால் வந்தவர்கள் டானியலின் எழுத்துக்களைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு தலித் இலக்கியத்தை நாங்கள்தான் முதலில் எழுதினோம் என்று சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் தலித் என்ற வார்த்தையே டானியலுக்கு தெரியாது. தமிழிலே நந்தன் கதையை தலித் இலக்கியம் என்று சொல்லலாமா? நான் சொல்லுகிறேன் அது தலித் இலக்கியம்தான். முற்போக்குக் காரர்கள் புதுப்புதுச் சொற்கள் வந்தவுடன் தாங்கள்தான் அதனை முதன்முதலில் செய்தோம் என்று சொந்தம் கொண்டாடுவார்கள். அதிலே அவர்களுக்கு ஒரு ஆறுதல். ஒரு சுயதிருப்தி, தான் தலித் இலக்கியம் படைத்ததாக டானியல் ஒருபோதும் நினைக்கவில்லை. டானியல்தான் முதன்முதலில் தலித் இலக்கியம் படைத்தார் என்று தூக்கிப்பிடிப்பது, டானியலைப் பகிடி பண்ணுகிறது மாதிரி இருக்கும். தி.ஞா:- உங்களது மண்ணில் சமைந்த மனிதர்கள் என்ற நாவலின் முன்னுரையில் விமர்சகர்கள் பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள் இது பற்றி. வ.அ- 1940 களில் நான் எழுதத் தொடங்கியபோது, தமிழ்நாட்டில் வெளிவரும் அத்தனை நூல்களையும் ஈழகேசரி பத்திரிகை விமர்சிக்கும். அது நியாயமான விமர்சனமாகவும் இருக்கும். அந்த ஈழகேசரி விமர்சனத்துக்கு தமிழ்நாட்டில் நல்ல மதிப்பு. ஈழகேசரி விழுந்தபிறகு முற்போக்கு எழுத்தாளர்களின் காலம் தொடங்கியது. அவர்கள் கோஷ்டி சேர்ந்துகொண்டு தங்களுக்கு வேண்டிய ஆட்களைத் தூக்கிப்பிடித்தார்கள். மற்றவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டார்கள். முற்போக்கு எழுத்தாளர்களால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டவர்களில் கவிஞர் மஹாகவியும் ஒருவர். மஹாகவி பற்றி அவர்கள் நல்லதும் சொல்லவில்லை கூடாததும் சொல்லவில்லை. இப்படிச் செய்தால் மஹாகவி அடங்கிவிடுவார் என அவர்கள் நினைத்தார்கள். பாரதிக்கு பிறகு தமிழுக்கு வந்த நல்ல கவி மஹாகவிதான். கலாநிதி நுட்மான் இல்லாவிட்டால் மஹாகவி பற்றி எதுவும் வந்திருக்காது. கண்டுகொள்ளாமல் விடுகின்ற குணம் முற்போக்கு எழுத்தாளர் களில் அதிகமாக இருந்து வந்திருக்கிறது. கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் சமீபத்தில் 2000ஆம் ஆண்டுக்கு முற்பட்ட ஈழத்து இலக்கியங்கள் பற்றி சில புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ஆனால் எதிலுமே அவர் என்னைப் பற்றிக் குறிப்பிடவில்லை. நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஈழத்து விமர்சகர்கள் வரிந்து கட்டிக்கொண்டு கட்சியை வளர்க்கப் பாடுபட்டார்கள். இதில் நல்லகாரியம் என்னவென்றால் முற்போக்குக் கட்சி இப்போது சேடம் இழுத்துக்கொண்டிருக்கிறது. பழைய ஆட்கள் எல்லோரும் போய்விட்டார்கள். இப்போது டொமினிக் ஜீவாவும் இரண்டொரு பையன்களும் இருக்கிறார்கள். பேராசிரியர் சிவத்தம்பியை மட்டும் வைத்துக்கொண்டு எதையாவது செய்வம் என்ற நிலையில் இருக்கிறார்கள். தினகரன்
8

பத்திரிகை அவர்களுக்கு ஒரு சாதகமான பத்திரிகை. இலங்கையிலேதான் இப்படியான ஒரு நிலை. இந்திய முற்போக்கு எழுத்தாளர்களில் இத்தகைய கண்டுகொள்ளாமல் விடுகின்ற குணம் இல்லை. அவர்கள் எல்லோரையும் விமர்சனம் செய்வார்கள். கூடாததைக் கூடாதது என்று சொல்வார்கள். வேறொரு பகுதியில் இருந்து நல்லவை வந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள். அந்தப் பண்பாடு அவர்களிடம் இருக்கிறது. இங்கு இத்தகைய நேர்மையான விமர்சனம் இல்லை, இந்த அயோக்கியத்தனம் நமது நாட்டு விமர்சகர்களிடம் இருக்கிறது. அதைச் சகிக்கமுடியாது. தி.ஞா:- அனேகமான படைப்பாளிகளைப் போலவே நீங்களும் கவிதைகள் எழுதியுள்ளிர்கள். இன்றைய புதுக்கவிதைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன? வ.அ. 'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில’ என்பது நன்னூல் இலக்கணம். புதியன வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒரு கவிதையில் சீர், தழை, மோனை இருந்தால் மனனம் செய்வதற்கு மிகவும் இலகுவாக இருக்கும். பழந்தமிழ்ப் பாடல்கள் எமது மனதில் இருப்பதற்கு அதுதான் காரணம். புதுக்கவிதைகள் மனதிலே நிற்பதில்லை; காற்றோடு போய்விடும் போல் இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் வருகின்ற இறைச்சிப்பொருள் போன்றவைகள் படிமம் என்ற பெயரில் புதுக்கவிதைகளில் வருகின்றன. சில புதுக்கவிதைகளில் ஆழமான கருத்துக்கள் இருக்கின்றன. எங்களது ஊரவரான தர்மு சிவராமுவின் புதுக்கவிதைகள் எல்லாவற்றையும் நான் படித்தேன். அவற்றில் முக்கால்வாசிக் கவிதைகள் எனக்கு விளங்கவில்லை. விளங்காமல் எழுதுவதும் கூட புதுக்கவிதையோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. யாப்பமைதி இல்லாதது புதுக்கவிதை என்று சொல்கிறார்கள். அதில் எனக்கொரு கேள்வி பிறக்கிறது. கவிதையில் யாப்பமைதி இல்லை, இலக்கணம் இல்லை என்று சொல்பவர்கள் இலக்கணம் தெரிந்து கொண்டுதான் அதனைச் சொல்லவேண்டும். இவர்களுக்கு இலக்கணமே தெரியாது. பின்பு இவர்கள் இலக்கணம் இல்லையென்று எப்படிச் சொல்லமுடியும். சில புதுக் கவிதைக்காரர்கள் நல்ல கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். நண்பர் சி. வைத்தீஸ்வரன், பேராசிரியர் இன்குலாப் போன்றவர்கள் இலக்கணம் நன்கு தெரிந்து கொண்டு புதுக்கவிதை எழுதுகிறார்கள். ஆனால், இலங்கையில் இலக்கணம் துப்புரவாகத் தெரியாதவர்களே இலக்கணம் மீறிய கவிதைகளை எழுதுகிறார்கள். புதுக்கவிதைகளில் காலத்தை வென்று எத்தனை கவிதைகள் நிற்கப்போகின்றன? கம்பனின் இராமாயணம் நிற்கிறமாதிரி வாலி ஆனந்த விகடனில் எழுதும் இராமாயணம் நிற்குமா? இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்’ என்று சொல்வார்கள். சிலவேளை ஒரு காலத்தில் புதுக்கவிதைக்கு இலக்கணம் எழுதலாம். ஆனால் இப்போது உள்ள நிலைமை குழப்பமாக இருக்கிறது. இந்தக் குழப்பம் காரணமாக புதுக்கவிதை நீண்டகாலம் வாழுமா என்று எண்ணத் தோன்றுகிறது. தி.ஞா:- சங்ககால நிகழ்வுகளை சிறுகதைகளாக்கி அவற்றுக்கு நேரான சங்கச் செய்யுளிர்களையும் தந்து ‘ஐந்தினைக் கதைகள்" என தமிழி சிறுகதைத்துறையில் ஒரு புதிய முயற்சியைச் செய்துள்ளீர்கள். இதற்கான எண்ணக்கரு எவ்வாறு ஏற்பட்டது? வ,அ- நான் கொழும்புக்கு அடிக்கடி சென்று வாசிப்பதற்கென புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் வாங்கி வருவது வழக்கம். ஒரு சந்தர்ப்பத்தில் ஆறுமாத காலம்வரை என்னால் கொழும்புக்குச் செல்லமுடியாத நிலை இருந்தது. அதனால் எனக்கு வாசிப்பதற்குச் சஞ்சிகைகளோ புதிய புத்தகங்களோ இருக்கவில்லை, அதன் காரணமாக என்னிடமிருந்த பழந்தமிழ் இலக்கியங்களை மீண்டும் எடுத்துப் படித்தேன். அவ்வாறு மீண்டும் படிக்கும்போது புதுப்புதுக்கருத்துக்கள் தோன்றின. நயந்தோறும் நூல் நயம் என்று சொல்வார்கள். பழந்தமிழ் இலக்கியங்களிலே
19

Page 11
நல்ல சிறுகதைகள் இருப்பதுபோல் எனக்குத் தோன்றியது. உதாரணமாக நற்றிணையில் நாற்பத்தியெட்டாம் பாடலில் ஒரு காட்சி வருகிறது. அழகான மீனவப்பெண் ஒருத்தி கருவாட்டைக் காவல் காத்துக்கொண்டு இருக்கிறாள். அவளுக்குப் பக்கத்தில் வேறோரு வயது வந்த பெண்ணும் இருக்கிறாள். அவள் அநுபவப்பட்டவள். அந்த இளம் பெண்ணில் மையல் கொண்டு, அவளைத்தேடி ஒருவன் கடற்கரைக்கு வருகிறான். அவனது எண்ணப்போக்கை அந்த வயோதிபப் பெண் அறிந்து கொண்டாள். அவனைப்போன்ற ஆடவர்கள் அங்கு வந்து அங்குள்ள பெண்களை ஏமாற்றி தவிக்கவிட்டுச் செல்வதையும் அவள் அறிந்திருந்தாள். இத்தகைய ஒரு நிலைமையை அவள் தடுக்க எண்ணி அவனிடம், "எம்மனோரில் நல்லரும் உள்ளரே என்று சொன்னாள். எங்களிடம் இவளுக்கு ஏற்ற மாப்பிள்ளை இருக்கிறான். நீ இங்கு வந்து மினக்கடாதே என்ற கருத்துப்பட அவள் சொன்னாள். இது ஒரு அருமையான கதைபோல எனக்குத் தெரிந்தது. நான் இந்தக் கதையை கல்முனைக் கடற்கரைச் சூழலில் பொருத்தி எழுதினேன். அந்தக் கடற்கரையில் காவல் காக்கும் பெண் ஒருத்தியைப் பாத்திரம் ஆக்கினேன். அந்தக் கதை நன்றாக அமைந்தது. அதன் பிறகு நற்றிணையிலிருந்து ஆறு சிறுகதைகளை நெய்தல் திணையில் எழுதினேன். அதுபோல் அகநானூறில் முல்லைக்கதைகள் ஆறும், ஐங்குறுநூறில் மருதக் கதைகள் ஆறும், குறுந் தொகையில் குறிஞ்சிக்கதைகள் ஆறும், கலித்தொகையில் பாலைக்கதைகள் ஆறும் எல்லாமாக முப்பது கதைகளை ஆறுமாத காலத்தில் எழுதிமுடித்தேன். இக்கதைகள் எல்லாம் சமகாலத்துக்குப் பொருந்தக் கூடிய கதைகள். யுத்தகாலச் சூழலை வைத்தும் கதைகளை எழுதியுள்ளேன். 'போரில் கிடைத்தபொருள். அகநானுறில் ஒரு பாடல் வருகிறது. முல்லை நிலத்தில் இருந்து ஒருத்தன் வீட்டுக்குத் திரும்புகிறான். திரும்பிச் செல்லும்போது அந்நிய நாட்டைப்பிடித்து அதில் கொள்ளை அடித்த பொருட்களையும் கொண்டு செல்கிறான். இவ்வாறான ஒரு சம்பவம் தொண்ணுறாம் ஆண்டில் எங்கள் ஊரில் நடந்ததை நான் கண்ணால் கண்டேன். அதை நான் கதையாக எழுதியிருக்கிறேன். பழந்தமிழ் இலக்கியத்தை வைத்துக் கதை எழுதலாம் என நினைத்தவன் நான்தான். இது தமிழ் இலக்கியத்தில் ஒரு புது முயற்சி என நான் நினைக்கிறேன். தி.ஞா:- நவீன இலக்கியப் படைப்பாளிகளில், ஈழத்தில் பவள விழாக்கண்ட ஒரே படைப்பாளி நீங்கள். இலக்கியத்தில் உங்களது பங்களிப்பு உங்களுக்குத் திருப்தி தருகிறதா? எதிர்காலத் திட்டமென்ன? வ.அ. பங்களிப்பு நிச்சயமாக எனக்குத் திருப்தியைத் தருகிறது. நான் எழுதத் தொடங்கியபோதே எனக்குத் தெளிவான ஒரு இலட்சியம் இருந்தது. எங்களுர் மக்களை, எங்களது மண்ணை, எங்களுர் பிராந்திய வனப்பை, எங்களுர் மக்களின் வாழ்க்கையை நான் எழுத வேண்டுமென நினைத்தேன். அதை நான் சரியாகச் செய்திருக்கிறேன். மற்றவர்கள் பொறாமைப்படுமளவுக்கு நான் செய்திருக்கிறேன். முதுரைப்பற்றிக் கதைகள் வந்த அளவுக்கு இலங்கையில் வேறெந்த ஊரைப்பற்றியும் அத்தனை கதைகள் வெளிவரவில்லை. இதன் மூலம் என்னுடைய கிராமத்து மக்களுக்கு நான் ஒரு சர்வதேச அந்தஸ்தைத் தேடிக் கொடுத்திருக் கிறேன். என்னுடைய கிராமத்து மக்கள் மூலமாகத்தான் நான் உலகத்தையே பார்க்கிறேன். நிச்சயமாக உலகத்துச் சிறந்த சிறுகதைகளுக்கு ஈழத்தின் பங்காக இருக்கக்கூடிய நான்கைந்து கதைகளை நான் எழுதியிருக்கிறேன். அந்த அளவுக்கு நான் திருப்தி அடைகிறேன். எனது எதிர்காலத் திட்டம் என்னவென்று கேட்டால், வாசிப்பதும் எழுதுவதும் என்னுடன் ஒட்டிய விடயங்கள். அவை இல்லாமல் என்னால் இருக்க முடியாது. நான் ஒரு காவியம் எழுதவேண்டுமென யோசித்திருக் கிறேன். இதனைச் சாதிக்கலாம் என்று நினைக்கிறேன்; நம்பிக்கை இருக்கிறது.
20

கணிணி o
திடீரென ஒரு வேதனைக் குரல் கேட்கிறேன் VNஒரு கண்ணியில் முயலொன்று சிக்கித் தவிக்கிறது இப்போது அந்தக் குரல் மீண்டும் கேட்கிறேன் ஆனால் அது எங்கிருந்து என்றுரைக்க முடியாதிருக்கிறேன்
ஆனால் அது எங்கிருந்து என்றுரைக்க முடியாதிருக்கிறேன் அம்முயல் உதவி தேடி அழைக்கிறது! அச்சம் நிறைந்த சூழலில் குரலெழுப்பி அனைத்தையும் பீதியூட்டுகிறது!
மூலம்:- ஜேம்ஸ் Qಯಾ அனைத்தையும் பீதி யூட்டுகிறது (தமிழில்:- எம்.வை.எம். மீஆத். உதவிக்காக கூக்குரலிடும் போது தன் சின்ன வதனத்தைச் சுருக்கிக் கொள்கிறது அந்த இடத்தை கண்டுகொள்ள முடியாதிருக்கிறேன்
அந்த இடத்தைக் கண்டுகொள்ள முடியாதிருக்கிறேன் 後 அங்கு அதன் கால்விரல்கள் கண்ணியில் சிக்கியிருக்கின்றன சின்னஞ் சிறியதே ஒ சின்னஞ் சிறியதே நான் உன்னை எல்லா இடங்களிலும் தேடுகிறேன்.
குலமகள் குணங்கள் அன்பிலாப் பெண்டிர் இட்ட அன்னம்
அமுதல்ல அரவத்தின் கொடுவிஷமாம்; நெகிழ்ந்து இன்முகம் காட்டா விருந்தோம்பல் இனிமைதரு
இல்லற வாழ்க்கைக் குதவாப் பண்பாம்; கன்மனதோடு பிறர்மனம் வாடச்சுடு சொல்லெறிதல்
கருவளர் குழந்தையை அழித்திடல் போலாம்; பொன்நகை ஆயிரம் இருப்பினும் பெண்டிர்க்கு
பொங்கிவரு புன்னகை யொன்றே எழல்நகையாம்!
கொண்டவன் குணமறிந்து வாழாப் பெண்டிர்
கொடிமர மில்லாக் கோயிலைப் போலாம்;
உண்டி சுருங்கிடா துலவிடும் மாதரோநீர்
ஊறிடா துலர்ந்திடும் கிணற்றினைப் போலாம்;
அண்டி வாழ்வோர்க் குதவிடா அரிவையர்
அடவிவாழ் விலங்கிலே கொடும்புலி போலாம்;
சண்டித் தனமுடன் முண்டிநிற்கும் பெண்டிரோ
சாவோலை கொண்டுவரும் தென்புலத்தான் போலாம்!
கவிஞர் புரட்சிபாலன் திருகோணமலை 21

Page 12
நானும் என் கவிதைகளும்
- கே. எஸ். சிவகுமாரன்
அறியாமையினால் பேதமை என்ற அர்த்தமுள்ள பிரயோகத்தை அண்மையில் திறமைசால் எழுத்தாளர் செ.யோகநாதன் பிரயோகித்தார். வாசிப்புப் பழக்கமின்றியும், சுயதேடல் முயற்சியின்றியும் கிண்டலாக எழுதுவதே விமர்சனம் எனத் தீவிரமாக நம்பும் ஒரு கூட்டத்தினர் தமது எழுத்துக்கள் மூலம் தமது போதாமையையும், அறியாமையையும் வெளிப்படுத்திவருவது கண்கூடு. இத்தகையோர் ஏனையோரின் படைப்புகள் பற்றியறிந்திராது, திரிபாக இலக்கிய வரலாற்றைப் பார்ப்பது பெரும் அநீதியாக உள்ளது. இதனை நிவர்த்தி செய்யவும், சரியான தகவல்களைத் தரவும், பாதிக்கப்பட்டவர்களே, தமது சுயசரிதையின் சில சில பகுதிகளையாகுதல் இந்த "விமர்சகர்"களின் பார்வைக்குக் கொண்டு வருதல் அவசியமாகிறது.
நான் சிறுகதை (சிவகுமாரன் கதைகள்', 'இருமை ஆகியன எனது சிறுகதைத் தொகுப்புகள்) கவிதை, பிறமொழியாக்கக் கவிதை ஆகியனவற்றையும் எழுதியிருக்கிறேன்.
‘கவிதை என்ற பெயரிலே சில முயற்சிகளை மேற்கொண்டேன். இது 1960களின் முற்பகுதியிலாகும். அப்பொழுது ‘புதுக்கவிதை' என்ற பிரயோகம் அதிகமாக இடம் பெற்றது. தமிழ் நாட்டிலும், ஈழத்திலும் புற்றிசல்போல் பரவிய ‘புதுக்கவிதை என்ற கவர்ச்சி தரும் இலக்கிய வடிவத்தைப் பிரபல்யப்படுத்தும் நோக்கத்தை நானும் கொண்டேன்.
தமிழ்நாட்டு சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து, விஜயபாஸ்கரனின் "சரஸ்வதி, ஈழத்து இராஜ அரியரத்தினத்தின் ‘சிந்தாமணி, ஆர். சிவகுருநாதனின் 'தினகரன்' (நாளிதழ், வாரமஞ்சரி) ஆகிய பத்திரிகைகளில் ‘புதுக்கவிதை பற்றி நிறைய எழுதினேன். மேனாட்டு ‘நியூ பொயட்ரி பற்றிய அறிமுகங்களைச் செய்தேன். சில கவிதைத் தொகுப்புகளைப் பகுப்பாய்வு செய்து 'பத்திக் கட்டுரைகளை எழுதினேன்.
‘புதுக் கவிதை, பின்னர் வெறும் சுலோகங்களாக உருப்பெறத் தொடங்கியதும், தமிழில் ‘புதுக்கவிதை என்ற பெயரில் எழுதப்படும் உருப்படிகளை வெறுக்கத் தொடங்கினேன். இக்கால கட்டத்திலே, மறைந்த பேராசிரியர் கனகசபாபதி கைலாசபதி தமிழ்நாட்டிலிருந்து வெளியாகிய வானம் பாடி என்ற ஏட்டை படித்துப் பார்க்கும் படியும், அவ்விதழ்கள் பற்றிய எனது மதிப்பீட்டை எழுதும் படியும் கேட்டுக்கொண்டார்.
மேஹற்தா(மேத்தா), மீராடுராஜேந்திரன்), அப்துல் ரஹற்மான் போன்றோர் எழுதியவற்றைப் படித்துப் பார்த்தபொழுது, அவ்வெழுத்துக்களில் ‘கவிதையை நான் காணவில்லை. இவர்களை நல்ல கவிஞர்களாக இன்றும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது. அதே வேளையில், சிற்பி, பாலசுப்பிரமணியம் போன்றோர் ஆக்கங்களில் கவிதை நயத்தை நான் கண்டேன். பெரும்பாலான "வானம் பாடிக் கவிஞர்களும், ஈழத்தில் மறைந்த எச்.எம்.பி.முகைதீன் தொகுத்த 'பத்திகளிலும் எழுதியவர்கள் சொல்சிலம்பங்களையும், சிதறிய சுலோகங்களையும், வார்த்தை மயக்கங்களையும், பொருத்தமற்ற படிமங்களையும் பொழிந்து எழுதினர். எனக்கு மனச்சோர்வு ஏற்பட்டது.
‘புதுக்கவிதை என்ற வகையில் நானும் கவிதைகள் எழுதியுள்ளேன் என மேமன்கவி, செ.யோகநாதன்(கருணையோகன்), பேராசிரியர் துரை மனோகரன், சாரல் நாடன் போன்றோர் குறிப்பிட்டிருப்பது உண்மையே. அதே வேளையில், தமிழ் இலக்கிய உலகிலும் புகுந்துள்ள எந்திரப் பொறியியல் பேராசிரியரும் மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளரும் அரசியல் கட்டுரையாளருமான சி.சிவசேகரம் (இன்று ஈழத்தின் தலை சிறந்த கவிஞர்களில் ஒருவர்) புதுக்கவிதை
22

எழுதியவர்கள் பட்டியலில் எனது பெயர் இடம்பெற்றிருப்பதை(துரை மனோகரனின் நூல் ஒன்றை 'ஆய்வு செய்தபொழுது) ஆட்சேபிக்கும் விதத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அது அவருடைய "விமர்சனநோக்கு. புலமையும், விபர அறிவும், பகுத்தாயும் பண்பும் திறனாய்வாளனுக்கு வேண்டும் பண்புகளல்லவா?
‘புதுக்கவிதை என்று நான் அன்று எழுதியவற்றை இன்றைய இளம் 'ஆய்வாளர்கள் படித்திருக்க மாட்டார்கள்தான். படிக்காமலே ஆய்வு செய்பவர்கள் அல்லவா இவர்கள்?
இவர்களுடைய நலன்கருதி, தனித் தலைப்புகளின்றி, ‘வார்த்தைகள்' என்ற பொதுத்தலைப்பிலே, நான் எழுதிய சில வரிகளை இங்கு தருகிறேன்.
1966 நவம்பர் 18ம் திகதி வெளியாகிய ‘வீரகேசரி வாரவெளியீட்டில் இது வெளியாகியது. நான் திருமணம் செய்து சில மாதங்களின்பின் இதனை எழுதினேன்.
கவிதை முகந்த துஞ்சும் கணிகள் பாடின பேசின பாடின நயனங்கள் மிஞ்சின விலோச்சனங்கள் விதிர்ந்தன கவிதை பரிறக்கவில்லை கவிதை பிறக்கவில்லை காதல் ஒளிர்ந்தது மெளனம் ஓர் இசைவு அசையிலும் ஆசை கொழிக்குமா? இல்லை நேர்கொண்ட பார்வை பார்வையிலும் தோரணை தொனிக்குமாமே? தோரணை பரிசகிற்று சலனம் நிரடிற்று அனுசரணையாயிற்று காதல் முகந்த கணிகள் கவிதை பிறக்கவில்லை கணிகள் காட்டின அடங்கிய மூச்சுக்கு ஒளி - சுடர் லயம் தடம் புரண்டது. லாவணர் யம் மிஞ்சியது கவிதை பரிறக்கவில்லை. கண்டியிலிருந்து 60களின் மத்தியில் செய்தி என்ற வாரப் பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. அப்பத்திரிகையில் பின்வரும் இரு ஆக்கங்களும் வெளி வந்தன.
சருகு சன்னாயமுடன் சர்மர்கள் ருத்திரர் பீலித் தண்டுடன் வயிரவர் வேதாள இலுப்பையிலேகர் கருமகள் சாரர் சிள்ளுப் புள்ளென்று சீறிடினும் சருகுப் புகட்டில் வெருகு ஒன்றே நிந்தை நிந்தையென்று நதுக்கினாலும் நாமகள் வாணிபதம் நமக்குண்டு நணுகாதீர்! *செய்தி பத்திரிகையிலே ‘வேதாளம்’, ‘பயிரவர்” போன்ற புனை பெயர்களிலே எனது நண்பர்கள் ( காசிநாதன், ஜோர்ஜ் சந்திரசேகரன், மு.தளையசிங்கம் போன்றோர்) என்னை நையாண்டி பண்ணி எழுதினர். நானும், அப்பத்திரிகையிலே, ‘சருகுகள் என்ற தலைப்பிலே வாராந்தம் ஒரு பத்தியை
23.

Page 13
எழுதி வந்தேன். என்னை மட்டந்தட்டும் தோரணையில் இவர்கள் ஆரம்பத்தில் எழுதிவந்தாலும், பின்னர் தவிர்க்கமுடியாமல் என்னையும், ஓர் எழுத்தாளனாக ஏற்றுக் கொண்டனர். நண்பர்களாயினர். இவர்களுக்கு எனது ஆற்றலைச் சுட்டிக்காட்டும் முகமாகவே மேற்சொன்ன கவிதையை எழுதினேன்.
அடுத்த கவிதை, ஆழமான தத்துவநோக்கைக் கொண்டது என எண்ணி எழுதினேன்.
காலக் கிழவி சாலையின் ஒரம் குமரியோட்டம் காலமெது கிழவியெது சாலையெது குமாரியெது? மாயத்திரையில் மனமேது, அறிவேது, உணர்வேது? சீலத் தெழிற் பிறப்பு சுயம்புவா? சும்மாவா? அடுத்துவரும் ஆக்கங்கள் 'தினகரன் வாரமஞ்சரியில் வெளியானவை. 1960களின் முற்பகுதியிலே இவை பிரசுரமாகின. அக்காலத்திலே தத்துவம், திறனாய்வு, கலை, கவிதை, தார்மீகம் போன்றவை தொடர்பாக நான் கொண்டிருந்த கருத்துக்களை இவை பிரதிபலிப்பவை. இன்று என் பார்வைகள் மாறுதலடைந்தமை இயற்கையின் நியதியன்றோ?
கலைமெருகு எண் பார் கற்பனையெனர் பார் கருத்தோவியமுந்தான் எண் பார் கக்கியது என்ன என்றால் கடைத்தெடுத்த துய்மைத் தமிழ்க் காப்பு என்கிறார்.
வார்த்தை ஒரு ஜாலம் ஜாலம் ஒரு மலைப்பு மலைப்பு ஒரு மருட்சி மருட்சி ஒரு மயக்கம் மயக்கம் ஒரு பாடம் அதற்கு ஒருவிளக்கம் விமர்சனமாம் அதன் பெயர்.
கணி சிமிட்டி மின் வெட்டுடல் ஒளிர்க்கதிர்ப் பரிமாணம் உந்தல் உந்தல் பல்லாக்குத் தூக்குவாரும் பரிமாணக் கருவியாகும் சொல்லல், சொல்லல் : சூனியம்
மானம் ஓர் இருட் குகை மனம் ஓர் ஒளிப் பிழம்பு இருந்தும் என்ன? ஓ ஒ மனமோர் இருட் குகை மானமொரு ஒளிப்பிழம்பா?
ருந்தும் என்ன? லம் நடுத்தெரு, இப்பொழுது, ‘புதுக்கவிதை, "மரபுக்கவிதை ஆகிய பிரயோகங்களை நான் பாவிப்பதில்லை. கவிதை, கவிதைதான். அண்மைக்காலங்களில் எழுதப்படும் கவிதைகளை 'அண்மைக்காலக் கவிதைகள்' என அழைக்கிறேன்.
எனது சுயசரிதையின் பிற கூறுகளைப் பின்னர் எழுதவேண்டும் என விரும்புகிறேன். வரலாற்றுத் திரிபுகளைச் சீர்படுத்த இவை உதவுமென நம்புகிறேன்.
24

nЈmofбr
சுகிறார்.
ஞானம் இதழில் கலாநிதி நுஃமான் அவர்களின் பேட்டி பிரசுரமாகியிருந்தது. அதில் குறிப்பிடப்படும் மஹாகவி, சில்லையூரர் கவிதை சர்ச்சை பற்றிய எனது கருத்தைத் தர விரும்புகிறேன். இருவரும் வாய்மொழி மூலம் கூறிய கருத்தாகவே உரிமை கோருபவர்கள் கூற்று வருகின்றது. அதன் நியாயப்பாடு பற்றி கருத்துக் கூறக் கூடியவர் கவிஞர் இ. முருகையன் அவர்கள் மட்டுமே. அவரும் மெளனம் சாதிக்கக் காரணம் இருக்கிறது. காலம் பதில் சொல்லட்டும் என்று காத்திருக்கலாம். ஐநாழ் இனிச் செய்யக்கூடியது ஒன்று உண்டு. இரு கவிஞர்களுடையதும் கிள் ய்ாரும்.ஒரு சில ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட வேண்டும். இந்த ஆய்வின் அடிப்ப்டிையில் சர்ச்சைக்குரிய கவிதை யாருடைய படைப்பு என்பதை ஊகிக்க முடியும். - மாவை வரோதயன், றாகம.
ஞான்ம் சஞ்சிகையில் உள்ளடக்கியுள்ள அனைத்து விடயங்களுமே மிகச் சிறப்பு:ாக அமைந்துள்ளன. மிகவும் கனதியர்ன சஞ்சிகை. நேர்காணல் பகுதி மிதwம் நன்று. பக்கங்க்ளைகுறைக்க் வேண்டிய அவூதியூமே முழுமையாகவும், சுதந்திரம்ாகவுழ்xக்
றிர்கள். ・
நேர்காணல் அனைத்தையும் தொகுத்து நூல்ாக்குவி ; : - யூோகேஸ்வரிசி)
சைம்கால இல்க்கிய இஸங்கள் பற்றிய சிந்தனை வ.கொண்டது. கலாநிதி துரை. ஸ்னேர்கரனின் ாலினி பற்றிய குறிப்பு மனித
வாழ்க நீ அம்மா! என்ற தலைப்பிலான்”நந் நேயத்துடன் கூடிய கருத்தாக இங்கு.பிரவூரி கொண்டுள்ளது. *இவ்வாறே திரு.அந்தனிஜீவாவின் புதிய நூலக பகுதியும்*பல நூல்கள் பற்றிய கனமான தகவல்களை வெளிக்கொணர்கின்றது. . லெனின் மதிவானம்.
ஞானம் கிடைத்தது. நல்ல சிறப்பான அம்சங்களுடன் பெரியார்களையும் நேர்கண்டு
சஞ்சிகை சுவையுடன் மிளிர்கிறது. சிறுகதை, இலக்கிய கட்டுரை, கவிதை
என்பன தொடர்ச்சியாக வெளிவருவது சஞ்சிகையை உயர்த்தும்.
- அ.முதலித்தம்பி, இளைப்பாறிய அதிபர், புன்னாலைக்கட்டுவன்.
ஞானம் இதழ்கள் இனங்காட்டும் முதிர்ச்சி மகிழ்வைத் தருகின்றது. நேர்காணல் அம்சங்களில் காத்திரமான செய்திகள் முன்வைக்கப்படுகின்றன. வேறுபட்ட பரிமாணங்களில் விரிவடைந்து செல்லும் இவ்வம்சம் உசாத்துணைக்குரியதாகி மொத்த சஞ்சிகைகளையும் தேடத்தக்க ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகிறது.
- புலோலியூர் ஆ. இரத்தினவேலோன்.
25

Page 14
இரண்டு குறிப்புகள் கலாநிதி.எம்.ஏ.நு.மான் 1. கழிவிரக்கப்படுதல்
செ.யோகநாதனின் பேட்டி படித்தேன் (ஞானம் இதழ் - 4). வழக்கம்போல தமிழ் இலக்கிய உலகின் சக்கரவர்த்தியாக முடிசூடிக் கொண்டு, இலக்கிய சிம்மாசனத்தில் அவர் கொலுவீற்றிருக்கும் காட்சி அற்புதமாக இருக்கிறது. இலங்கை இலக்கிய உலகில் வெற்றிக்கொடி நாட்டியபின், தமிழகத்துக்குப் படைகொண்டு சென்று அதனையும் வெற்றிகொண்டு 14 ஆண்டுகள் தன் ஆட்சியை அங்கும் நிலைநாட்டி, தாயகம் மீண்டு இங்குள்ள பத்திரிகைகளிலெல்லாம் தன் சிம்மாசனத் தின் புகழ் ஒளியை வீசிக்கொண்டிருப்பவர் அவர்.
அறுபதுக்கும் அதிகமான புத்தகங்கள் - இருபதாயிரம் பக்கங்கள் எழுதிக்குவித்திருக்கிறார். இது அசுர சாதனை இல்லையா? இச் சாதனைக்காக ‘தமிழகத்தின் அனேகமாக எல்லாப் பரிசுகளையும் பெற்று', ஈழத்திலும் எத்தனையோ பரிசுகளையும் விருதுகளையும் வென்று, தன் யுத்த தந்திரங்களால் இன்னும் எத்தனையோ பரிசுகளையும் விருதுகளையும் வெல்வதற்கான தாகத்துடன் காத்திருப்பவர் அவர். உலகில் அதிக விருதுகள் வென்ற எழுத்தாளர் என்று அவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட இருக்கிறது.
இத்தகைய பெருமைக்கும் புகழுக்கும் உரிய எழுத்துலகச் சக்கரவர்த்தியை, அவரது எழுத்தின் மகிமையைப் புரிந்துகொள்ளாது 'நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே என்ற, ஏற்கனவே தமிழகத்தில் இருபெரும் விருதுகள் பெற்ற, அவரது மகத்தான நாவலுக்கு இலங்கையில் கிடைக்கவிருந்த பரிசை, "அந்த நாவலின் தளத்தையோ, அந்த மக்களின் வாழ்வையோ, அவர்களின் பேச்சு வழக்கையோ கூட அறியாத" அறிவிலித்தனமான, விடலைத்தனமான அற்ப விமர்சகனான நான் தடுத்திருக்கிறேன். இது எத்தகைய படு பாதகச் செயல்
இலங்கையில் "ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தைச் சைவர்களே நடத்தினார்கள்" என்ற அடிப்படை வரலாற்றை அறியாத நான், பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்துக்கு எதிராக - வெள்ளைக்காரன் யாழ்ப்பாணத்தில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட புகையிரதப் பாதை அமைத்ததிற்கு எதிராக - கிராமப்புறத்து சைவத் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தாங்கிப் போராடினார்கள் என்ற அடிப்படை வர லாற்றை அறியாத நான், நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஆட்சியாளரின் அடக்கு முறை காரணமாக யாழ்ப்பாணக் கிராமப்புறத்து இளைஞர்கள் அனைவருமே தங்கள் வீடுகளைத் துறந்து அயலூர்களிலும் காடுகளிலும் அன்னிய நாட்டிலும் தலைமறைவு வாழ்க்கை வாழ நேர்ந்த சரித்திரம் பற்றி எதுவும் அறியாத நான், யாருக்கும் அடங்காத காளை மாட்டைத் தன் உடற்பலத்தாலும் நெஞ்சுரத்தாலும் அடக்கி, காதலுக்கு அஞ்சித் தயங்கும் இளைஞன் ஆறுமுகத்தை வலுக்கட்டாய மாக கொவ்வம் பற்றைக்குள் இழுத்துச் சென்று அவனைப் புணர்ந்து மகிழும் ருக்குமணி போன்ற பதின்மூன்றே வயதுச் சிறுமிகள் வாழும் யாழ்ப்பாணக் கிராமப் பண்பாடு பற்றி ஏதும் அறியாத நான் இவற்றையெல்லாம் உண்மைக்கு உண்மையாகச் சித்திரிக்கும் "உண்மையான வரலாற்று நாவலின் மகிமையைப் புரிந்து கொள்ளாது, அதைக் காமமும் வன்முறையும் கொண்டு பின்னப்பட்ட போலி வரலாற்றுப் புனைவு என்றும் அதனால் அது பரிசுக்குத் தகுதியற்றது என்றும் தீர்ப்பு வழங்கியதும், தமிழகத்தில் அதற்குப் பரிசு வழங்கியவர்களை அனுதாபத்துக்குரியவர்களாக்கியதும் எவ்வளவு வெட்கக்கேடு! இதைவிடக்

கொடுமை, இந்த எழுத்துலகச் சக்கரவர்த்தியின் 500 பக்க மகத்தான நாவலைப் புறக்கணித்து, நேற்று எழுதத் தொடங்கிய, ஊர்பேர் தெரியாத தாமரைச் செல்வியின் 93 பக்கங்களையே கொண்ட மிகச்சிறிய தாகம் நாவலைப் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுத்தது. அதுமட்டுமன்றி வளவளா என்று எழுதும் சிரேஷ்ட எழுத்தாளர்கள் தாமரைச்செல்வியிடம் கற்றுக்கொள்வதற்கு அதிகம் உண்டு என்று விடலைத் தனமாகக் குறிப்பும் எழுதியது. இவ்வாறு அறிவிலித்தனமாக, விடலைத்தனமாக விமர்சித்து ஈரேழு பதினாலு உலகத்திலும் வெற்றிக்கொடி நாட்டிய எழுத்துலகச் சக்கரவர்த்தியின் மனதைப் புண்படுத்தி அவரது வெஞ்சினத்துக்கும் ஆளாகி விட்டேனே என்று இப்போது கழிவிரக்கப்படுகிறேன். எழுத்துலக வேந்தர் யோக நாதனின் 'பெருமைகளை எல்லாம் நன்கறிந்த தமிழ் இலக்கிய உலகு என்னை மன்னிக்குமாக.
(விசயம் தெரியாத வாசகர்களுக்காக ஒரு மேலதிகக் குறிப்பு: விபவி சுதந்திர இலக்கிய விழா தொடர்பாக 1993ல் வெளிவந்த ஈழத்து நாவல்களுள் பரிசுக்குரியதைத் தெரியும் நடுவர் குழுவில் நானும் ஒருவனாகச் செயற்பட்டேன். இன்னும் ஒருவர் சித்திரலேகா மெளனகுரு. 1993ல் வெளிவந்த நாவல்களுள் தாமரைச் செல்வியின் தாகம் பரிசுக்குரியதென நடுவர் குழு ஏகமனதாக தெரிவு செய்தது. செ.யோகநாதனின் "நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே நாவல் தெரிவு செய்யப்படவில்லை. நடுவர் குழுவின் அறிக்கையை நானே எழுதினேன். அது விழாவில் வாசிக்கப்பட்டது. பின்னர் சரிநிகளிலும் (1994) வெளிவந்தது. 1993ல் வெளிவந்த நாவல்கள் பற்றிய மதிப்பீடு அந்த அறிக்கையில் உண்டு. செ.யோ.வின் நாவல்பற்றிய சுருக்கமான விமர்சனமும் அதில் உண்டு. சுயகாதலில் (Narcissism) மூழ்கியுள்ள நண்பர் செ.யோ.வின் கோபம் புரிந்து கொள்ளத்தக்கதே) 2. மஹாலட்சுமி யாருடைய புனைபெயர்?
'மஹாகவியின் ஆறு காவியங்கள் நூலுக்கு நான் எழுதிய முன்னுரை யிலும், ஞானம் மூன்றாவது இதழில் வெளிவந்த எனது பேட்டியிலும் 'மஹாலட்சுமி என்ற புனைப்பெயரில் வெளிவந்த "ஐயா மஹாகவி என்ற கவிதையின் ஆசிரியர் பற்றி நான் எழுதியுள்ள குறிப்பைச் சரியாகப் படித்துப் பார்க்காமல் நண்பர் இக்பால் என்னைக் குறை கூறியிருக்கிறார். அக்கவிதையை எழுதியவர் மஹாகவி என்பது நான் ஆராய்ந்து கண்டுபிடித்த உண்மையல்ல. மஹாகவியே என்னிடம் நேரில் கூறியது. இதன் அடிப்படையிலேயே அன்னம் வெளியிட்ட மஹாகவி கவிதைகள் (1984) நூலுக்கு எழுதிய முன்னுரையிலும் 'மஹாலட்சுமி என்பது மஹாகவியின் புனைபெயர்களுள் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளேன். இப்போது நண்பர் இக்பால் கூறுவது ஒரு புதிய செய்தி. சில்லையூர் செல்வராசனுக்கும் இக்பாலுக்கும் இடையில் இருந்த நெருங்கிய உறவு எனக்குத்தெரியும். எனினும் இக்கவிதை வெளிவந்த காலகட்டத்தில் (1954/55) இக்பாலுக்குச் சில்லையூருடன் நேர்ப்பழக்கம் இல்லை என்றே நினைக்கிறேன். பிற்காலத்தில், என்னிடம் மஹாகவி சொன்னது போல் மஹாலட்சுமி என்ற புனைப்பெயரில் அக்கவிதையைத்தானே எழுதியதாகச் சில்லையூரார் தன்னிடம் கூறினாரா என்பது பற்றி இக்பால் வெளிப் படையாகக் குறிப்பிடவில்லை. எனினும் அவ்வாறு கூறியிருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. அப்படியென்றால் மஹாலட்சுமி என்ற புனைபெயரில் எழுதிய கவிதைக்கு மஹாகவி, சில்லையூர் செல்வராசன் இருவருமே உரிமை கோரியிருக்கிறார்கள் என்று ஆகின்றது. இது மிகுந்த சங்கடமான நிலைமை. ஒன்று மஹாகவி என்னிடம் பொய்சொல்லி இருக்கவேண்டும்; அல்லது சில்லையூர் இக்பாலிடம் பொய்சொல்லி இருக்கவேண்டும். இவ்வாறு பொய் சொல்லவேண்டிய தேவை அவர்கள் இருவருக்குமே இல்லை என்பதுதான் என் எண்ணம். இப்பிரச்சினையை எவ்வாறு

Page 15
தீர்ப்பது? நான் எனது பேட்டியில் குறிப்பிட்டதுபோல இதுபற்றி மேலும் தகவல் தரக்கூடிய ஒருவர் கவிஞர் முருகையன். அவர் இதனைத் தீர்த்து வைக்கக் கூடும். இதுபற்றி அவருடன் தொடர்பு கொள்ள முயன்றுள்ளேன்.
இது எவ்வாறாயினும் நான் எழுதியதைச் சரியாகக் கிரகித்துக் கொள்ளாது எனது நிதானம், ஆய்வு நேர்மை, தகுதி என்பன பற்றி நண்பர் இக்பால் கேள்வி எழுப்புவது கவலைக்குரியது. மேலும் மஹாகவி, முருகையன் இருவரையும் சில்லையூரே இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தினார் என இக்பால் எழுதுவது (சில்லையூரே அவரிடம் அவ்வாறு கூறியிருந்தாலும்) வேடிக்கைக்குரியது.
ஞானம் முதற் காலாண்டு சஞ்சிகைகள் தொடர்பான கலந்துரையாடல் - தொகுப்பு: ந.பார்த்திபன் 27.03.2000 - ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பருத்தித்துறை அறிவோர் கூடல் நிகழ்வில். முத்த எழுத்தாளர் தெணியான் ஞானம் சஞ்சிகை தொடர்பான அறிமுகத்தை செய்தார். அவரின் அறிமுக உரையில் விடயங்கள் மிகச் சிறப்பாய் அமைந்துள்ளன என்றும், கலாநிதி துரை.மனோகரன் எழுதும் நான் பேச நினைப்பதெல்லாம். என்ற தலைப்பு மாறினால் நல்லதெனவும் குறிப்பிட்டார். ஆசிரியர் இரகுவரன் தனது கருத்தில் துரை.மனோகரன் போன்ற கலாநிதி - சிரேஷ்ட விரிவுரையாளரின் இத்தொடர் இன்னும் கனதியாக வரலாமெனக் குறிப்பிட்டார்.
எழுத்தாளர் புலோலியூர் செகந்தசாமி நூல் அறிமுகம் பகுதிக்கு நூலில் குறிப்பிட்ட கருத்துக்களைத் தவிர்த்து ஞானம் ஆசிரியர் குழு புதிய கருத்துக்களைக் குறிப்பிடுவது நல்லதென அபிப்பிராயம் தெரிவித்தார். ஆசிரியர் இராகவன் கருத்து தெரிவிக்கும்போது விளம்பரங்கள் எதுவுமில்லாது, வர்த்தக ரீதியாகச் செயற்படாது தரமான இலக்கியச் afiei க வருவது மனமகிழ்வைத் தருகிறது எனக் குறிப்பிட்டார். பொதுவாக நேர்காணல் எல்லாச் சஞ்சிகையிலும் - பத்திரிகைகளிலும் வருவது வழக்கமானபோதும் வினாக்களின் தரத்தினால் விடைகள் பயனுள்ளதாகவும், இன்றைய இலக்கிய தேவைகளைச் சுட்டுவதாகவும் அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
கடந்த மூன்று சஞ்சிகைகளிலும் சில குறிப்பிட்ட விடயங்கள் மாத்திரந்தான் (பேட்டி, சிறுகதை, கவிதைகள்.) இடம்பெறுவதுபோல் தெரிவதாக சிலர் அபிப்பிராயப் பட்டனர். கவிதைகள் தரத்திலும் இன்னும் கவனம் எடுக்க வேண்டுமென குறிப்பிடப் பட்டது. முத்த எழுத்தாளர்களின் சிறுகதை ஒன்றும் இடம்பெற்றால் நன்று எனவும் குறிப்பிட்டார்கள். பேட்டி இலக்கிய ஈடுபாடு உள்ளவர்களிடம் மாத்திரமன்றி பல்வேறு கலைஞர்களுடனும் காண்பது சஞ்சிகைக்கு அவசியம் என்றனர். யாழ்ப்பாணத்தில் சஞ்சிகைகள் குறிப்பிட்ட காலத்தில் கிடைக்காததையும், தொடர்பு கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதையும் சிலர் குறிப்பிட்டனர்.
ஞானம் இணையாசிரியர் பதிலுரை வழங்கும்போது மூத்த எழுத்தாளர்களுடன் தொடர்பு கொண்டபோதும் போதிய ஆக்கங்கள்: குறிப்பாக சிறுகதைகள் கிடைக்கவில்லை என ஆதங்கத்துடன் குறிப்பிட்டார். தரமான ஆக்கங்கள் போதியளவு உரிய நேரத்தில் கிடைக்காமையே இன்றுள்ள பிரச்சினை எனவும் தெரிவித்தார். சமீபத்திய இதழ்களில் நூல் ஆய்வு (விமர்சனம்), இலக்கியத் துணுக்குகள் போன்றன சேர்க்கப்படுவதாகவும் வாசகர்களிடம் அபிப்பிராயங்களும், ஆக்கங்களும் தொடர்ந்து கேட்கப்படுவதால் இனிவரும் இதழ்களில் பல்வேறு விடயங்கள் இடம்பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் குறிப்பிட்டார். ஆசிரியர் சிவனேசன், உதவி விரிவுரையாளர் கமலரூபன், அதிபர் சதானந்தன், திரு. பஞ்சலிங்கம் (உதயன் புத்தகசாலை), போன்றள வழமையான அறிவுகூடல் அரங்கத்தவர்கள் கலந்து ஞானம் சஞ்சிகையின் வளர்ச்சிக்கு உதவுவதாகக் குறிப்பிட்டனர். 28

புதுவிசை (ஆகஸ்ட் 2000) (கலாசார காலாண்டிதழ்) அஞ்சல் பெட்டி எண் 66 டெலிகாம் குடியிருப்பு ஓசூர் - 635109 பதிப்பாசிரியர்: எஸ்.மீனாவதி ஆசிரியர்:- ஆதவன்
கனவு
34/ஜூன் 2000 தொடர்புக்கு:- சுப்ரபாரதிமணியம் 8/707C பாண்டியன் நகர் திருப்பூர் 641602
காலம் 13-2000 வாழும் தமிழ் சிறப்பிதழ் ஆசிரியர்: செல்வம் வெளியிடுபவர்:- குமார் மூர்த்தி KALAM - P.O.BOX 7305 509 StCLAIRAUE. W TORONTOION, M6C ICO, CANADA
இயல்பினை அவாவுதல் அமரதாஸ் கவிதைகள் முதற்பதிப்பு: டிசம்பர்1999 வெளியீடு:- தேடல் 257 ஸ்கந்தபுரம் - கிளிநொச்சி தேடல்களும், துயர்களும், நெருக்கடி களும் இந்த வாழ்க்கையும் இயற்கை
யும் எனக்கு நிறையக் கற்றுத்தருகின்
றன. எனது அனுபவங்களும், தரிசனங் களும் அவ்வப்போது படைப்புகளா கின்றன. ஒரு நீண்ட பயணத்தின் இடையில் நின்று திரும்பிப் பார்க்கும் போது எனது முக்கிய தடயங்களாக
29
எனது படைப்புகள் இருப்பதைக் காண்கிறேன்.
- அமரதாஸ் - சிறுகுறிப்புகள்.
கசின் சிறுகதைகள் (சிறுகதைகள்) எழுதியவர்: கசின் தொகுப்பாசிரியர்: ஆனந்தலிங்கம் முதற்பகுதி: ஏப்ரல் 1999 வெளியீடு: யாழ். இலக்கிய வட்டம், யாழ்ப்பாணம்.
விலை: 125/- இச்சிறுகதைத் தொகுதியிலுள்ள சிறு கதைகளை மீண்டும் ஒருமுறை படிக் கும்போது உடனடியாக மனதில் தோன் றுகின்ற இலக்கிய மதிப்பு, ஆசிரியர் நல்ல வினைத்திறன் வாய்ந்த படைப் பாளியாகவுள்ளார் என்ற கணிப்பே. செங்கை ஆழியான் அணிந்துரையில்
அவனும் சில வருடங்களும் எழுதியவர்:
ராஜேஸ்வரிபாலசுப்பிரமணியம் முதற்பதிப்பு: ஜூலை 2000 வெளியீடு: குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை - 26 புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் நீண்ட காலம் வாழநேரும் தமிழர்கள் ஆங்கி சிந்திக்கவும் பழகிக் கொள் வதால் இவர்கள் தமிழ் எழுத உட் காரும்பொழுது ஆங்கிலம் மூலமாகவே தமிழை அணுக முடிகிறது. இந்த விதேசிவாடை வீசும் தமிழ் தான் ராஜேஸ்வரிக்கும் நிகழ்ந்திருக்கிறது.
பாலுமகேந்திரா முன்னுரையில்.
இவர்கள் வித்தியாசமானவர்கள் எழுதியவர்: அந்தனிஜீவா முதற்பதிப்பு: 2000 வெளியீடு- பூபாலசிங்கம் புத்தகசாலை 340, செட்டித்தெரு, கொழும்பு - 11 இவருடைய பதிவுகள் வித்தியாச மானவை. பெரும்பாலும் தனக்கு நேரடி யாகப் பழக்கமாவர்களை பதிவு செய் திருக்கிறார். தன்னுடைய அந்த உறவின் ஊடாக அவர்களுடைய

Page 16
ஆளுமைகளை, சாதனைகளை, சிறப்பு அம்சங்களை, நல்லியல்புகளை, ஏன் குறைகளையும் ஏக்கங்களையும் கூட ரசிக்கும் வண்ணம் பதிவு செய்துள் கிளார். - பொன்னீலன் முன்னுரையில்.
நெற்றி மண் எழுதியவர்: சு.வில்வரத்தினம் முதற்பதிப்பு: 21-04-2000 வெளியீடு: கூடல் பதிப்பகம் 1982 கீழை விதி உவர்மலை - திருகோணமலை விலை: 100 பக்கங்கள்: 78 இந்திய அமைதிப்படையின் காலத் தவை போல முதலாம் இரண்டாம் மூன்றாம் எனக் கட்டம்கட்டமாக விரித்து ஈழப் போரின் அவல நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் கலாரீதியான முயற்சிகளான எனது கவிதைகள் பலவும் முழு அளவில் வெளிவரும் போது சமகால வரலாற்றின் பன்முக தரிசனம் வெளிப்படலாம். ஆவணப் படுத்தல் என்பதை விடவும் மண்ணின்
யதார்த்த சித்தரிப்புகள் என்பதை விடவும். மண்ணின் ஆத்மார்த்தக் குரலாபப் அவை ஒலிக்கின்றன.
என்பதே எனக்கு திருப்தி தரும்
ஒன்றாகும். அதன் நெற்றிமுகம் காட்டும்
தரிசனமே இத்தொகுப்பு.
சு.வில்வரத்தினம் முன்னுரையில்.
போது (இரண்டாவது ஆண்டு சிறப்புமலர்) வைகாசி - ஆனி 2000 ஆசிரியர் வாகரை வாணன் வெளியீடு: கலை பண்பாட்டுக்களரி இல 1A மேல்மாடி வீதி - மட்டக்களப்பு (ELIT 9.6 THE BUD மட்டக்களப்புப் பிரதேசத்தில், சமயம் சார சங்ககாலத் தமிழ்நாடு, வானமே. வானமே. அந்நிதம், இந்திரவிழா, குடும்பம் ஒடு, ஒன்றாய் ஆடுங்கள், புதினங்கள், ஏரூர், சின்னச்சின்ன செய்திகள், பாரதியும் புலவர் மணியும்.
ஆகிய தலைப்புகளில் விடயங்கள்
3O
இடம் பெற்றுள்ளன.
சின்னச் சின்னப்பாட்டு (சிறுவர் பாடல்கள்) எழுதியவர்: ச. அருளானந்தம் முதற்பதிப்பு:- 01-01-2000 வெளியீடு: அருள் வெளிபபீடு 377 மத்திய வீதி உவர்மலை - திருகோணமலை, பள்ளிச்சிறுவர்களுக்கான பாடல்களை இயற்றுவதில் வல்லவர் கவிஞர் ச.அருளானந்தம். ஏற்கனவே அவர் இயற்றி வெளிவந்த பாடல்கள் சிறுவர் களின் மனதில் புத்துணர்ச்சியையும் புது மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதோடு வேகமாக சிந்திக்கவும் செயற்படவும் வைத்துக் கொனர் டு இருப்பதை எல்லோரும் நன்கு அறிவோம்.
தில்லைநடராஜா அணிந்துரையில்.
வரலாற்றில் தமிழும் தழிழரும் எழுதியவர்:திக்கவயல்
சி.தர்மகுலசிங்கம் முதற்பதிப்பு ஒகளிப்ட் 1999 வெளியீடு:- மட்டக்களப்பு மாவட்ட அரச சார் பற்ற நிறுவனங்களின் ஒன்றியம், 09. பெர்னாண்டோ மட்டக்களப்பு இலக்கியத்திலும் வரலாற்றிலும் தமிழர் வரலாற்றியல் சம்மந்தமாக சில தகவல்களைத் தருவதும் இது சம்மந்தமாக இனிவரும் ஆய்வாளர் களைத் தூண்டுவதுமே இந்நூலின் நோக்கமாகும்.
திக்கவயல் என்னுரையில்.
[85u Egi --
புதிய நூலகத்திலி நீங்கள் எழுதிய நூல்களின் விபரங்களும் இடம்பெற வேண்டுமாயின் நூல்களின் இரண்டு பிரதிகளை அனுப்பரி வையுங்கள்
 
 
 

வெள்ளப் பெருக்கு
வெளியேற முடியாமல் மாற்ற முடியாத மரபு!
கம்மென்ற நீர் நிலையுள் கட்டுண்டு கிராமம் - கவிஞர் ஏ.இக்பால்
காட்சி பளிப்பதைப் பார்!
நீரை வெளியேற்றும் நிலைமை தெரியாது ஊரெல்லாம் சேர்ந்து உரத்துக் குரல் கொடுக்கக் கூரைமீ தேறி நின்றொருவன் குரல் ஓவென் றலறியது!
இராப்பகலாப் ஓபாமல் ஒழுகி மழை கொட்டியதால் திராப்பழியாக வந்த வினையிதுவே! திருப்பி இந்த நீரைபெல்லாம் ஊராரே சேர்ந்து ஒன்றித்து உரத்ததனை மேற் தள்ளித் தாராளமாக வந்தவழி அனுப்பிடுதல் தகுந்த வழி குரல் விடுத்தான்
அன்டப் புழுகர்களை அறிஞரெனக் கூறி நிற்கும்
to List fitti, பார்த்திந்த போசனையைத் தந்தவனை அறிஞனென்று சான்றிதழே கொடுத்துவிட்டார்!
விந்தை மனிதர் விழுந்தாலும் மீசையிலே மன்னொட்டவில்லை என்றொதுங்கும் மேதாவிலாசத்தார் இங்கதிகம் எப்போதும்
இது மரபு மரபை மாற்றும் வழிதேட வேரன்டாம்!

Page 17
குமையும் மனம். குமுறும்! ஆசை நிராசையாக இமை அணையை உடைத்துப் பெருக்ெ கனன் நதி. எம் இயலாமையைச் சொல்லும்! எதிர்ப்பதற்கோ,
தப்புதற்கோ, தயைகாட்டா விலங்கு: தாளடியில் புை பயத்தை விதைத்துப் பயன் விளைக்கும் தத்துவங்கள். பாதுகாப்பைக் "காக்க ஊமையாக்கும் தந்திரங்கள். தலைமேலே சுற்றும் தரித்திரங்கள். நமதிழப்பு செலவுப்பக்கத்தில்! வரவினிலோ மரண கச்சணிந்த முலைகளென. விரிவதற்கு காத்திருந்த மொட்டுக்களைக் கசக்க முசுகிற பேய்க் மலரத் துடிப்பவற்றை மலடாக்கும் போர்வேட்டு. துயரினிலே ஊறிப் புளித்தபடி நம்கனவு வெளிப்புதனைக் கொண்டுவரும் "கதிரைக் கலைப்பதற்கு முகில்களது படையெடுப்பு முற்றுகைகள் நீடிப்பு இப்படியா இருந்ததிந்த எழில்நாடு? இன்று. சேய்கள்
வாழ்வதற்கும். அஞ்ச வைக்கிறதே
ாபநாடு தாய்நாடு த. ஜெயசீலன்
நல்லூர்
Printed at GREEN LEAF PRINT HO
 

9n 조 그 - ~
ངེ་ཅི་དྲི་འབྲི་
ご" ご
ha
* 義
ha
- سمي لج
སྐྱེ་
羲器
ha
கடுக்கும் ご
தகுழிகள்!
Iங்கள்!!
காற்று.
JSE, 85/A, Katugastuta Rai, Kandy.