கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2000.11

Page 1

சஞ்

Page 2
1. நேற்றிரவு உன் பிணத்தைக் கண்டேனர்
நேற்றிரவு உன் பினத்தைக் கனன்டேன் எகிப்தியப் பெண் கவிஞ
நீ என் கைகளில் நிர்வாணமாக, ஈரமாக இருந்தாய் ஜொய்ஸ் மண்சூர்
உன் மண்டை ஓட்டை நான் பார்த்தேன் தயங்கும் ஒரு சூரியனின் கீழ் வெள்ளை மணலில்
HITE) 6125, EFLEllToo filiéFLIl III – உன் எலும்புகளை நான் பார்த்தேன் உன் தசைக்காக நண்டுகள் சண்டையிட்டன உன் புடைத்த மார்பகங்களில் எதுவும் மிஞ்சவில்லை இருப்பினும் என் மலரே உன்னை நான் அப்படி விரும்பினேன்
பிரஞ்சு மூலத்திலிருந்து
ஆங்கிலம் வழி தமிழில் எம்.ஏ.நுஃமான்
2. அவள் தனது கட்டிலில் இருந்து.
அவள் தன் கட்டிலில் இருந்தாள் கால்களை அகலத் திறந்து. அவள் எதிரே ஒரு கோப்பை கண்கள் உணவைத் தேடுகின்றன ஆனாடில் ஒன்றுமே இல்லை ஈக்கள் தின்ற கண் இமைகளோடு ஒரு பெண் முண்கினாள் ஈக்கள் ஜன்னலுடு உள்ளே வந்தன கதவால் வெளியேறின அவளது கோப்பைக்குள் சென்றன சிவப்புக் கண்கள் கறுத்த ஈக்கள் சாப்பிட ஒன்றையும் காணாத ஒரு பெனன்னால் தின்னப்பட்டன
(ஜொய்ஸ் மன்சூர்(1928) எகிப்து நாட்டவர். லண்டனில் பிறந்த இவர் சிறிது காலமே எகிப்தில் வாழ்ந்தார். பின்னர் 1986ல் மரணிக்கும் வரை நீண்ட காலம் பாரிஸில் வாழ்ந்தார். பாரிஸில் சமகால சர்ரியலிச இயக்கத்தில் பிரதான உறுப்பினராகச் செயற்பட்டார். இவரது 6 கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. உலகப் பெண் கவிஞர்களின் தொகுப்புகள் பலவற்றில் இவரது கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகள் இரண்டும் The Heinemann Book of African Women's Poetry, edited by Stella and Frank Chipasula Giorgi நூலிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டன.)
 
 

உள்ளே.
பகிர்தலின்
மூலம்
விரிவும் ஆழமும் பெறுவது
குானம்
பரதம ஆசிரியர் : தி.ஞானசேகரன் இணை ஆசிரியர்கள்: ந.பார்த்திபன் ஞா.பாலச்சந்திரன்
ஞானம் சஞ்சிகையிட் ரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடை
fu far, var
தொடர்புகளுக்கு.
தி.ஞானசேகரன் 1977, பேராதனை விதி,
கண்டி. G.Gu. - 08-234755
ՈTT-ՅՈՃ5DE IN - 8-23.4755
சிறுகதை
உதவி நிதி - 04 திக்குவல்லை கமால்
கட்டுரைகள் மாற்கு மாஸ்டர் - 08 தT. ஆனந் தன் நான் பேச நினைப்பதெல்லாம் கலாநிதி துரை மனோகரன் அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ.ஹலன் - 13 ந.பார்த்திபன் ஓர் ஆரம்பகால மலையக நாவலும் இன்றைய அரசியல் நிலைமைகளும் - 18 தெளிவத்தை ஜோசப் கடந்த நூற்றாண்டின் ஈழத்து தமிழ் மார்க்சிய இலக்கியம் - 24 நந்தினி சேவியர்
-
கவிதைகள் 01-நேற்றிரவு உன் பிணத்தைக் கண்டேன் 02-அவள் தனது கட்டிலில் இருந்து-02 ஜொய்ஸ் மண்சூர் அதிசயம் - 16 இக்பால் அலி
உனதான வெற்றியும் எனதான தோல்வியும் - 31 திக்குவல்லை ரதிமோ அவலமாய்ப் பற்றும் அனல் - 32
த.ஜெயசீலன்
நூல் மதிப்புரை - சி.சிவசேகரம் 22
புதிய நூலகம் - அந்தணிஜிவா 29
வாசகர் பேசுகிறார். 22
HMil -
LINNENLIn Moeslf niet. Ik
அட்டைப்படம் - ஜெ. உலகநாதன் நன்றி: காலச்சுவடு (இதழ் -19)

Page 3
திக்குவல்லை கமால்
பள்ளிவாசலுக்கும் வீட்டுக்கு மிடையில் அதிக தூரமில்லை. ஹஸ்ரத் திடம் சொல்லிவிட்டு பத்துமணிக் கெல்லாம் ஸாதிக் மோதினார் வீட்டுக்குப் புறப்பட்டார்.
இப்படி எத்தனை வருஷமாய் போய்வந்துகொண்டிருக்கிறார்.
மகளும் மனைவியும் அவர் வரவை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். அப்படியே அமர்ந்து கொஞ்சநேரம் அவர்களோடு கதைத்துக் கொண்டிருந் தால் மனதிற்கு இதம் போலிருந்தது.
"பத்துமணி பிந்தி, பெய்த்துச் சோறு தின்னுங்கொ” மனைவி ருமைஸா அவரை அங்கே அமரவிடவில்லை.
கூடவே வந்த மகள் சாப்பாட்டு மேசையை தயார் படுத்தினாள்.
இடியப்பமும் மீன்குழம்பும். விருப்பத்தோடு ருசித்துச் சாப்பிட்டார்.
"நாங்க ரெண்டு பேரும் திண்ட மிச்சம் வைக்காம மீனியள வெளிசாக்கிப் போடுங்கொ” - முன்னாலிருந்து மனைவி சத்தமிட்டுச் சொன்னாள்.
“இவ்வளவு காலமும் திண்டது மட்டுந்தான் மிச்சம்' - அவர் தனக்குள் சொல்லிக்கொண்டார்.
பூசப்படாத சுவர்களும் தகரக் கூரையுமான வீட்டை ஒருமுறை நோட்டம் விட்டார். பழைமை பேசும் மேசை கதிரைகளைப் பார்த்தார். அவரும்தான் அறுபதைத் தாண்டியாகி விட்டார். இனியெங்கே விடிவு.?
கையைத் துடைத்துக்கொண்டு முன்வாங்கில் வந்தமர்ந்தார் மோதினார். கொஞ்சம் இனிமையாக அந்தப்
04
பொழுதைக் கழிக்கும் எண்ணம் அவருக்கு.
"தெரீமா செய்தி? படிச்சிய புள்ளயஞக்கு ஒதவி செய்தாமென்டு நீங்களியள் எழுதிப்போட்ட நெனவிக்கா" மனைவி புதிய புராணமொன்றைத் தொடங்கினாள்.
"ஓ. ஓ." தனது ஞாபகப் பெட்டகத்தை தூசு தட்டியபடி சொன் னார்.
“ரிகாஸாக்கு காயிதம் வந்தீக் 5Tõ"
"ரிகாஸான்டா அம்ஜது நானட LD&6Is....?
"அதென்டா காரியமில்ல. எங்களப்போல ஏழ பலாயியள்."
“இது பெரியோரு அநியாய மெலியன். இல்லாத மனிசருக்கேன் ஒதவி செய்யோனும்"
"எங் கடவளுக்கு எப்படீம் கெடக்குமென்டுதான் நான் நெனச் சிக்கோ நின்ட, பாருங்க பாக்க, உள்ள வங்களுக்கு எவளவீந்தாலும் நபுல? உடுகியல்லேன்" - தனது ஏமாற்றத்தை அள்ளிக் கொட்டினாள் ருமைஸதாத்தா. "ம். இத உடப்படாது. எனத்தி யென்டு அறியோணும்." என்றவாறே எழுந்தார் மோதினார்.
"ம். இந்த ஜாமத்தில எங்க பொகவன். வெளணக்கி பாக்கேலேன்" - தடுத்து நிறுத்தினாள் அவருடைய மனைவி.
உண்மைதான் பதினொருமணி தாண்டியிருந்தது. என்ன செய்வது, தூக்கத்தைக் கோட்டை விடவேண்டியது
 

தான். W
பெண்சாதியும் மகளும் உள்ளே ஏதோ குசுகுசுப்பது கேட்டது. மோமி யாரும் பாயை விரித்துப் புரண்டார்.
ஒரே மகள் ஸியானா படித்துப் பெரிய நிலைக்கு வரவேண்டுமென்று எந்தக் கனவுமே அவர் கண்டது கிடையாது.
அவள் கட்டம் கட்டமாக வளர வளர ஒரு சுமை தன் தலைமீது படிப்படியாக ஏறிவருவதாகவே அவர் உணர்ந்தார். அவளுக்குப் பொருத்த மான மாப்பிள்ளை தேடிக் கட்டிக் கொடுக்கவேண்டிய காலம் நெருங்கி நெருங்கி வந்து அவரது கழுத்தைப் பிடித்து நெரிப்பதாக உணர்ந்தார்.
மகளும் சோதனை எழுதியதாக ஒரு மெல்லிய நினைவு மட்டுமே அவருக்கிருந்தது.
அன்று பாடசாலையில் மட்டு மல்ல ஊரெல்லாம் பெரும் ஆரவாரமாக இருந்தது. பள்ளிவாசலிலும் கதைத்துக் கொண்டது அவர் செவியையும் தொடாம லில்லை.
"முனு புள்ளையஸ் கெட்டித் தனமா பாஸாகிக்காம்”
"தாருசரி படிச்சி முன்னுக்கு வரட்டு. ஊருப்புள்ளையஸ்தானே.” இப்படித் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்து விட்டார்.
05
ளுஹர் தொழுதுவிட்டு சாப் பாட்டுக்காக வீடு வந்தபோதுதான் அந்த மூன்றிலொன்று தன் மகளும் தான் என்பதை தெரிந்து திடுக்கிட்டார். உண்மையில் அவருக்கு அதுவொரு புதுப்பிரச்சினையாகிவிட்டது.
"கெட்டித்தனமா பாஸாகிக்கிய புள்ளய எப்பிடிச் சரி படிப்புட்டுங்கொ" காண்பவர்களெல்லாம் இப்படி உற்சாக மூட்டத் தொடங்கிவிட்டார்கள்.
ஒரு நாள் இரண்டு வாலிபர்கள் அவரைத் தேடிவந்து கொழும்பில் ஒரு நிறுவனம் மேற்படிப்புக்கு உதவிசெய்ய விண்ணப்பம் கோரியிருப்பதாகவும் அதற் கான தகுதி மகளுக்குண்டென்றும் விண் ணப்பப் படிவமொன்றைக் கொடுத்து விட்டுச் சென்றார்கள்.
அதை அடுத்த நாளே பூரணப் படுத்தி விட்டாார் மோதினார். தனது நிலைப்பாட்டை அறிந்து நிச்சயம் உதவு வார்களென்று அவர் உறுதியாக நம்பி யிருந்தார்.
அந்த நம்பிக்கையின் மீது பேரிடியாக இந்தச் செய்தி.
எங்கோ நாய்கள் குரைத்தன. நடுநிசி நகர்ந்து கொண்டிருந்தது. அவருக்கு இன்னுந்தான் தூக்கம் வரவே யில்லை.
本 来 本 冲率
பாங் கோசை வழமையான ராகத்தோடு எழவில்லை.
அம்ஐது நானாவின் வரவை ஆவலோடு எதிர்பார்த்தும் அவர் கண் களில் சிக்கிக்கொள்ளவில்லை.
கோப்பிக் கோப்பையையும் மறந்து நேரே அம் ஐது நானாவின் வீட்டுக்கே விரைந்தார்.
"ஆ. வாங்கொ வாங்கொ. மகேள் வாப்பா பேசு. இனி எனத்தியன் செய்தி. அப்பிடி இரீங்கொளே”
மோமியார் முன் படிக்கட்டில் அமர்ந்து மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங் கினார்.
"நானும் நேத்து ராவுதான் கேள்விப்பட்ட இடிபுழுந்த மாதிரிந்த.

Page 4
tib..... எனக்கு முந்தி நீங்களே வந்திட்ட" அம்ஜது நானா மனக்கிலேசத்தைக் கக்கினார்.
“கோப்பி கொஞ்சம் குடிங்கொ மோமியார். பள்ளிலிந்து நேரே வந்திக்கி போல”
ஆதிக தாத்தாவின் அவதானம் மிகச் சரியாகவிருந்தது. நன்றியோடு கோப்பையை எடுத்தார் மோமியார்.
"பாருங்கொ எவளவு கூட்டாளித் தனமாயிந்தும் அந்தக்குட்டி செல்லில் லேன். காயிதம் வந்து ஒரு கெழமை
யாம். பிரின்சிபல் கேட்டாப்பொறகுதான்
ஓவென்டிக்கி" ஆதித தாத்தா இன்னு மொரு போடு போட்டார்.
“ஹறிக்குமத்தான மொறக்கித் தான் வேலவெட்டியெல்லாம், மத்த மனிசரத் தலதூக்க உடுகியல்ல. ம். சரி இப்ப நாங்க எனத்தியன் செய்த. th........ நீங்க பென்சன் சம்பளத்தோட காலம்போற மனிசன். ஏன்ட புள்ளக்குச் சரி ஒங்கட புள்ளக்கிச்சரி கெடச்சீந்தா மனசாறியேன்”
"மோரியார். எதுக்கும் நாங் கொருக்காப் பெய்த்துப் பாக்கோமா?”
"நல்ல யோசின அம்ஜது நானா” *செல் லரிச் செல் லக் காம நாளக்கே ரெடியாகிப் போங்கொ" இடையில் குறுக்கிட்டு ஆதிக தாத்தா உற்சாகமூட்டினார்.
"அதுதான்" - இருவரும் ஒரேயடி யாகச் சொன்னார்கள்.
அடுத்தநாள் ஸஉபஹ” தொழுது விட்டு பயணிப்பதாக இருவரும் முடிவு செய்தனர்.
*k >k ik zijk ze அந்த சமூக நிறுவனத்தைத் தேடிக்கொள்வதில் பெரிய சிரமம் எதுவும் அவர்களுக்கு ஏற்படவில்லை. கொட்டை எழுத்தில் பளிச்சென்று பெயர்ப்பலகை தெரிந்தது.
இன்னும் கேற் திறக்கப்பட வில்லை.
"எப்பிடிம் ஒம்பது மணியாகும்" அம்ஜது நானா ஊகித்துச் சொன்னார்.
06
இருபது வருடங்கள் காவலாளி யாக விவசாயக் காரியாலயத்தில் வேலை பார்த்த அநுபவசாலி அவர்.
“தேத்தண்ணி குடிச்சிட்டு வரோம்" மோமியாரின் அழைப்பு.
நீண்ட இடைவெளிக்குப் பின் நாற்பது மைல் தூரப் பயணம். அதுவும் காலைக் குளிருக்குள்.
பெட்டிக் கடை வாங்கில் இருவரும் அமர்ந்து கொண்டனர்.
பச்சைமிளகாய், வெங்காய மெல்லாம் குதப்பி மணக்க மணக்க சுட்டுத்தள்ளும் ரொட்டி இரண்டைக் கடித்துச் சுவைத்தனர். இஞ்சிப் பிளேன் ரி வேறு. மனத்திருப்தியோடு எழுந்தனர் இருவரும்.
மீண்டும் வரும்போது கதவுகள் விரிந்திருந்தன. உள்ளே இரண்டொரு வரின் நடமாட்டம்.
சம்பந்தப்பட்டவர்கள் வரும்வரை யில் சிற்றுாழியர் சொன்ன இடத்தில் இருவரும் அமர்ந்து கொண்டனர். சுவர் மணிக்கூடு ஒன்பது ஐந்தைச் சுட்டியது. நவீன வசதிகளெலி லாம் கொண்ட பெரிய கட்டிடம்.
சவூதி போன்ற அரபு நாடுகளி லிருந்து பெருந்தொகையான உதவி குவிவதாக யார்யாரோ சொல்லத்தான் செய்தார்கள்.
பல்வேறு தொழிற்பயிற்சிகளுக்கு ஆள் சேர்ப்பதாக அறிவித்தலொன்று காணப்பட்டது.
இதற்கிடையில் ஒரு பெண்மணி உட்பட இன்னும் நாலைந்துபேர் வந்து சேர்ந்துவிட்டார்கள்.
அப்போதுதான் ஒரு “தொர' ஃபைல்களோடு முன்னறைக்குள் வந்து புகுந்தார். பியோன் பையன் ஏதோ கடிதங்களோடு அங்குமிங்கும் ஓடினான். அப்படியும் இப்படியுமாக ஒன்பதரையாகி விட்டது.
அழைப்பு அவர்களுக்குதான். இருவரும் உள்ளே புகுந்தனர். சில்லென்ற குளிர்ச்சி.
“எனா விஷயம்? அவர்தான்

கேட்டார்.
"படிக்கிய புள்ளைகளுக்கு ஒதவி கேட்டு நாங்களும் எழுதிப்போட்ட தொர” அம்ஜது நானா சொல்ல வெளிக்கிட்டார். அவர் முகத்தைச் சுளித்து ஒன்றும் விளங்கவில்லை என்பதை வெளிக்காட்டினார்.
மோதினார் தன்னிடமிருந்த ..போட்டோ கொப்பியை எடுத்து நீட்டினார்.
அதைப் பார்த்ததுமே அவருக்கு விஷயம் விளங்கிவிட்டது.
"இதெல்லாம் குடுத்து முடிஞ்சி” அவரைப் பொறுத்தவரையில் இது தொடர் தலையிடிபோலும். பத்துப் பேருக்கு கொடுத்தால் மற்ற தொண் ணுாறு பேரும் விழுந்தடித்துக் கொண்டு வருவதும், அவர்களை சமாளித்து அனுப் புவதும் அவரது அன்றாட அநுபவம்.
“எங்களுக்கு காயிதம் வரல்ல தொர” மீண்டும் அம்ஜது நானா
*அவர் வாய்விட்டுச் சிரித்த படியே ஒரு ஃபைலை எடுத்து விரித்தார். "எப்ளிகேசனியளப் பாத்து போட் எடுத்த முடிவுதான். ம். ஓங்கடுரில ஒருத்தருக்குத்தான் குடுத்திக்கி."
இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.
“எம். ஐ. எம். ஸாதிக். மோதியாராக வேல செய்றிங்க. ம். ஓங்கட பேரு”
"ஏ.ஆர்.எம்.அம்ஐது" ஒற்றைகளை படபடென்று புரட்டி நிறுத்தினார்.
"ம். ஓங்களுக்கு பென்ஷன் கிடைக்கிது. சரிதானே. எம். ஐ.எம். தாஹிர். தெரிமா அவர"
"ஊரு மனிசனத் தெரியவா. தாஹிர் ஹாஜா ரு” - மோமியார் டக்கென்று சொன்னார்.
"ஆ." - என்றவாறு நிமிர்ந்தவர் சில கணங்கள் மெளனித்து நின்றார்.
"எத்தின ஹாஜிமாரு இன்டக்கி தின்னேம் வழில்லாம திரீதாங்க. அப்படி ஒத்தராயிக்கும்'
07
:مجھن... véb• • • • • அவருக்கு தொழிலில் லயாம் . அவரட மகளுக்குதான் குடுத்தீக்கி. சரி அடுத்தாள வரச் செல்லுங்கொ"
அதற்குமேல் எப்படி அங்கே நிற்பது இருவரும் வெளிவரும்போது ஒரு பெண் மணி உள்ளே புகுநீ தார். எதிர்பார்ப்புகளோடு இன்னும் ஏழெட்டு பேர் வரிசையாக நின்றனர். ":
சோர்ந்து போனவர்களாக இருவரும் நடந்து கொண்டிருந்தனர்.
"ம். தாஹிர் ஹாஜாரட முத்தமகன் இரும்புக்கட செய்த எளய மகன் பொடவக்கட செய்த. அவருக்கு தொழிலிலி லதானே" கோபமும் நையாண்டியுமாக மோமியார் சொன் eof.
d
"ஓ வேனுக்கும் டைவர் போட்டிக்கி, ஊட்டிலேம் வேலவெட்டிக்கு ஆளிக்கி. பாவம் அந்த மனிசன் "சும்மதானே நிக்கிய" அம்ஜது நானாவும் விடுவாரா?
இருவரும் பிரைவட் ஸ்டான்டை நெருங்கிக் கொண்டிருந்தனர்.
"குடுக்கியவன் பாத்துக் கேட்டுக் குடுக்கோணும். எடுக்கியவன் ஞாயம் பாத்து எடுக்கோணும். ம். எல்லாம் இப்பிடித்தான். ஆகிரஸ்ஸமான் காலம்" - பெருமூச்சோடு முத்தாய்ப்பு வைத்தார் மோதியார். மினிபஸ் மிகுந்த மரியாதை யோடு இருவரையும் உள்வாங்கிக் கொண்டது.
米 水 来 非 事

Page 5
ஈழத்து நவீன ஓவிய, சிற்பங்களின் முன்னோடி மாற்கு மாஸ்டர்
ஒரு மாணவனின் மனதிலிருந்து.
நா.ஆனநதன.
மனித சமுதாயத்தின் மேம்பாட்டுக்கும், மன எழுச்சிக்கும் எத்தனையோ கலைகள் உள்ளன. அவற்றுள் ஒவிய சிற்பக் கலைகளும் அடங்கும். உலகளாவிய ரீதியில் தங்கள் ஓவியக்கலை மூலம் மக்களைக் கட்டிப் போட்ட ஓவியர்கள் ஏராளம்.
அந்த வகையில் ஈழத்து ஓவியத்திற்கும் சிற்பத்திற்கும் புது வடிவம் கொடுத்தவர் மாற்கு மாஸ்டர் என்றால் அது மிகையாகாது. ஈழத்து ஓவியக் கலை ஏனைய கலைகள் போன்று எழுச்சி பெறாது சோர்ந்து வாய்ப்பற்று தேடுவா ரின்றி இருந்த காலப்பகுதியில் 1933ம் ஆண்டு யாழ்ப்பாணம் குருநகரில் பிறந்த "மார்க்கு என்ற 'மாற்கு மாஸ்டர் சிற்ப ஒவியத்திற்குப் புத்துயிர் கொடுத்தார். "wyg
தனது ஒன்பதாவது வயதிலேயே களிமண்ணில் பொம்மைகள் செய்து தனது சிற்பக்கலையைத் தொடங்கி, பின் இருபதாவது வயதில் அரசாங்க நுண் கலைக்கல்லூயில் 5 வருடங்கள் பயின்று திறமையான “ஸ்கொலர்ஷிப்புகளை பெற்று, “டேவிற் பெயின்ரனின் வழிகாட்டலில் மரபு ரீதியிலான ஒவியங்களிலிருந்து விலகி தனித்துவமான அந்தந்தக் கால நிகழ்வுகளின் உணர்வுகளின் பிரதிபலிப்பு களை நவீன ஓவியங்களை தனக்கே உரித்தான பாணியில் வரையத் தொடங் கினார்.
ஈழத்தில் சிற்பமும் ஓவியமும் 80 களில் பொலிவிழந்த வேளையில், ஒவியர் சிவப்பிரகாசம் ஆசிரியருடன் இணைந்து ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி புதிய புதிய மாணாக்கர்களைத் தோற்று வித்தார்.
இவர்களின் துணையோடு 1986ல் பற்பல கண்காட்சிகளை ஊரெங்கும் நடத்தி சிற்ப ஓவியக்கலைக்கு ஓர் எழுர்ச்சிதனை ஏற்படுத்தினார்.
ஒவியத்தின் மீதும் சிற்பத்தின் மீதும் அளவற்ற வேட்கையால் இரவும் பகலும் உழைத்து 135 பக்கங்களைக் கொண்ட "தேடலும் படைப்புலகமும்' என்ற நூலை வெளியிட்டார். V
ஓவியர் மாற்கு எத்தனையோ அற்புதமான படைப்புகள் படைத்த போதிலும் இவருக்கு சமூக அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனையிட்டு அவள் வேதனையோ, கவலையோ அடையவில்லை. தன்னைப் போற்ற வேண்டும், கெளரவிக்க வேண்டும் என்ற எண்ணம் துளிகூட இல்லாத பெருந்தகையாளர்.
ஹாட்லிக் கல்லூரி, சென்பற்றிக்ஸ் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி என்பவற்றில் ஆசிரியராகக் கடமையாற்றி பற்பல இளம் ஓவியர்களை உருவாக்கினார். 1958ல் கொழும்பு கலாபவனத்தில் இவரது ஓவியக்கண்காட்சி இடம்பெற்றது. இன, மத, மொழி வேறுபாடின்றி எல்லா மக்களது பாராட்டையும் பெற்றார். இதன் காரணமாக சிங்கள சகோதரர்களும் இவரை மானசிகக் குருவாக நினைத்து இவர் பாணியில் பற்பல ஒவியங்களை வரையத் தொடங்கியது ஓவியக் கலைக்கு எழுச்சியைக்
08
 

கொடுத்தது என்றே கூறவேண்டும்.
இவருடன் கதைப்பதே ஒரு தனி சுக அநுபவம். இவர் தனித்துவம், ஆளுமை, கற்பனை விலாசம் கொண்ட கலைஞர். ஒவிய சிற்பக்கலைக்கென்றே தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார் என்றே கூறவேண்டும். ஏன். ஒவ்வொரு விநாடியையும் அக்கலைக்கென்றே செலவு செய்தார். அதற்கு ஓர் உதாரணம், "நான் இரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது மனதில் தோன்றும் உணர்வுகளுக்கு உருவம் தோன்றும்போது உடனே கண்விழித்து அதனை வரைந்த பிறகே மீண்டும் உறங்குவேன்" என்பார். அத்தோடு தன் குரு டேவிற் பெயின்ரன் கூறிய வார்த்தைகளான “நீ காண்பதையெல்லாம் வரை, உனது அநுபவ உணர்வுகளை ஓவியத்தின் மூலம் வெளியே கொண்டுவா, ஒவ்வொரு ஓவியமும் தன்னை தன் ஒவியத்தின் மூலம் பிரதிபலித்துக் காட்ட வேண்டும், புகைப்படம் போன்று வரைவதை விடு, உருவத்தின் பரிணாமத்தை வரைந்தாலே நீ ஓவியனாகி விடுவாய்” போன்றவற்றைத் தன் தாரக மந்திரமாகக் கொண்டுள்ளதாக அடிக்கடி Bagshifts.
சிறுவர்களுக்கான ஒவியங்களை மேம்படுத்துவதற்காக தனது இல்லத் தையே கலைக்கூடமாக மாற்றியமைத்தார். சுவர்களில் அழகிய படைப்புக்களைப் படைத்தார். கதவுகளில் புடைப்புச் சிற்பங்களை தோண்டினார். விம்போத்தல், டின்பால் பேணி, மருந்துப் போத்தல்கள், செங்கட்டி, பனங்கொட்டை, களிமண், தொங்கும் பூஞ்சாடிகளில் தனது கைவண்ணத்தைக் காட்டி சிறுவர்களை மாத்திர மன்றி பெரியவர்களையும் மெய்சிலிர்க்க வைத்தார். சவர்க்காரக் கட்டிகளை சிறு கத்திகளால் தோண்டி அழகிய சிற்பங்களைப் படைத்தார். இதில் சிறந்த தேர்ச்சியும் பெற்றார். சிறுவர்களிடம் ஒரு வெற்றுத் தாளைக் கொடுத்து நீங்கள் கண்களை மூடிக்கொண்டு உங்கள் இஷ்டம் போல் கிறுக்குங்கள் என்பார். பின் அதனை வர்ணம் தீட்டச் சொல்லி தூரத்தில் பிடித்துப் பார்த்து அதனுள் ஒளிந்திருக்கும் உருவத்தினை கறுப்புச் சோக்கால் வெளியே கொணர்வார். இது சிறுவர்களுக்கு ஒவியத்தில் நாட்டம் வளர அவர் கையாண்ட ஒரு யுத்தி. t
இவ்வாறகப் பல அற்புதப் படைப்புகளைப் படைத்த மாற்கு அவர்கள் இன்று நம் மத்தியில் இல்லை. 26.09.2000 அன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியைக் கேட்டு மனம் பெரிதும் வேதனையடைந்தது. இருப்பினும் 'மாற்கு என்ற மாக்ஸ் மாஸ்டர் ஈழத்து நவீன ஓவியங்களிலும் சிற்பங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். “படைப்பாளிகள் என்றும் இறப்பதில்லை.
ஞானம் - I அர்ைபார்ந்த வாசகர்களே.
ஞானம் சஞ்சிகை தொடர்ந்து சந்தா விபரம் கிடைக்க வேண்டுமாயின் உங்களது
தனிப்பிரதி ரூபா 15/- வருடச்சந்தா: ருபா 180/- (5 EFTp(a F6.6 s) - LIL)
சந்தா காசோலை மூல மாகவோ மணியோடர் மூலமா கவோ அனுப்பலாம். அனுப்பவேண்டிய பெயர்,
சரியான முகவரியை எமக்குத் தெரியப்படுத்துங்கள்.
இந்த இதழ் பற்றிய கருத்துக் களையும் சஞ்சிகையின் தரத்தை மேம்படுத்த உங்களது ஆலோசனை களையும் அறியத்தாருங்கள். ஆக்க இலக்கிய கர்த்தாக்களே.
முகவரி 2- உங்களது படைப்புகளின் முலம் TIGNANASEKARAN ஞானம் சஞ்சிகையின் இலக்கிய 19/7, PERADENIYA ROAD, தரத்தை மேம்படுத்துங்கள்.
KANDY,
- ஆசிரியர்
O
9

Page 6
நான் பேச நினைப்பதெல்லாம்.
(கலாநிதி துரைமனோகரன்
துணிச்சலின் மறுபெயர்
இலங்கை இப்போது ஓர் இளம்பெண்மணியை வாயாரப் புகழ்ந்து கொண்டிருக்கிறது; வரவேற்பு உபசாரங்களை நடத்தி மகிழ்ந்து கொண்டிருக்கிறது. ஐம்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், வாராதிருந்த மாமணிபோல் வந்ததொரு பதக்கத்துக்குத்தான் இந்த மாலையும் மரியாதையும். அதேவேளை, இந்தப் பதக்கத்துக்குரிய பெண்மணி இலங்கை யின் ஜனநாயகவாதிகளாற் பட்ட துன்பங்கள், முகங்கொண்ட இடையூறுகள் அனந்தம். விளையாட்டுத் துறையிலிருந்தே இந்த பெண்ணைத் தூக்கியெறிந்துவிட நடந்த முயற்சிகள் பல. இத்தனைக்கும் முகங்கொடுத்து, தமது அசையாத மனவுறுதியினாலும், தளராத முயற்சியினாலும் திடமான துணிச்சலினாலும் ஒலிம்பிக் போட்டியிற் பதக்கமொன்றை வென்று கொண்டார், சுசந்திகா. அவர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை வென்றதைவிட என்னை மிகவும் கவர்ந்த விடயம், எத்தகைய எதிர்ப்பையும் பொருட்படுத்தாது மஞ்சள் பட்டி அணிந்துகொண்டு அவர் அப்போட்டியில் ஓடியதாகும். இலங்கையில் சில கோமாளிகளும், ஞானசூனியங் களும் சுசந்திகா மஞ்சள் பட்டி அணிந்து ஓடியதை கண்டித்தன; விதம்விதமாக வியாக்கியானங்கள் செய்தன. ஆனால், இந்த இளம் பெண்மணி, தமக்குச் சரியென்று பட்டதைத் துணிந்து செய்தார். மஞ்சள் பட்டி பற்றி குறைகூறிய ஞானசூனியங்களுக்கு அளிக்காத மாபெரும் வரவேற்பை, மக்கள் கசந்திக்காவுக்கு அளித்தனர். இலங்கையில் ஜனநாயகத்தைச் சாகடிக்கப் பலர் முயன்றிருந்த போதிலும், அது இன்னும் சாகவில்லை என்பதை மக்கள் அவ்வப்போது எடுத்துக் காட்டி வருவதுண்டு. தமது திறமையால் உலகப்பதக்தை வென்று, தமது மனச்சாட்சி யின்படி ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்த சுசந்திகா பெரும்மைப் படுத்தப்படவேண்டிய பெண்மணி, துணிச்சலின் மறுபெயர் சுசந்திகா. இலங்கை வானொலி தமிழ்சேவை - வாழ்த்தும் விமர்சனமும்.
இலங்கை வானொலி தமிழ்ச்சேவை அண்மையில் தனது பவளவிழாவை அமர்க்களமாகக் கொண்டாடியது. இலங்கையில் மிகப்பழைய வானொலி என்ற பெருமையை அது தன்னகத்தே கொண்டுள்ளது. உண்மையில் வாழ்த்துக்குரிய பணிகளை அது ஆற்றிவந்துள்ளது. இலங்கை வானொலியின் இரு தமிழ் சேவைகளுள் தேசிய சேவை தரமான பல நிகழ்ச்சிகளை வழங்கிவந்திருப்பினும், வர்த்தகசேவைதான் புகழை அதிகமாகத் தட்டிக் கொண்டுள்ளது. அதற்கு வர்த்தக சேவையின் சில அறிவிப்பாளர்களும் முக்கிய காரணகர்த்தாக்கள் ஆவர். நாள் முழுவதும் சினிமாப் பாடல்களை விதம்விதமான நிகழ்சித் தலைப்புகளில் வழங்கிவருகின்ற வர்த்தகசேவையின் அறிவிப்பாளர்கள் சற்று சுறுப்பானவர்கள் என்றே சொல்லவேண்டும். சில 'விதிவிலக்குகளும் உண்டு. தேசிய சேவை தரமான பல நிகழ்ச்சிகளை வழங்கிவந்தபோதிலும், அதன் அறிவிப்பாளர்கள் சிலர் தூக்கக்கலக்கத்தில் அறிவிப்புச் செய்பவர்களைப் போன்று நடந்து கொள்கிறார்கள். வர்த்தகசேவை அறிவிப்பாளர்களைப் போன்று சற்றுச் சுறுசுறுப்பாக 10
 

அவர்களும் நடந்துகொண்டால், தேசியசேவை மேலும் பிரகாசிக்க வாய்ப்புண்டு. வர்த்தகசேவையும் இயன்றவரை சில தரமான நிகழ்ச்சிகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்துள்ளது. முன்னர் இடம்பெற்ற ‘முத்துவிதானம்’ என்னும் நிகழ்ச்சி குறிப்பிடத்தக்கதாக விளங்கியது. ஆனால், குழந்தைகள் கையில் கிடைத்த விளையாட்டுப் பொருளைப் போலச் சில அறிவிப்பாளர்கள் அந்த நிகழ்ச்சியைப் போட்டு உடைத்து விட்டார்கள். ஒருசிலர் மாத்திரமே அதன் தாரதம்மியம் உணர்ந்து, இயன்றவரை நன்றாகச் செய்தனர். வர்த்தக சேவையில் காலைவேளைகளில் இடம்பெறும் “பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சி, கடந்த ஆண்டில் (1999) தனக்குரிய பண்பை இழந்து, இரு அறிவிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு அலட்டும் அறுவை நிகழ்ச்சியாக இருந்தது. தற்போது மீண்டும் அது தன் பழைய பொலிவைப் பெறத்தொடங்கியுள்ளது. 'ரதம் ஏறும் புதுராகம் அந்திநேரச் சிந்துகள் போன்ற புது நிகழ்ச்சிகள் ஜனரஞ்சகமானவையாகவும், இயன்றவரை தரமானவையாகவும் விளங்குகின்றன.
இலங்கை வானொலியே இன்று பழைய பாடல்கள், பழைய நிகழ்ச்சிகள் பலவற்றின் களஞ்சியமாகவும் விளங்குகிறது. ஆயினும், அவற்றின் முழுப் பயன்பாடும் இன்னும் வானொலி ரசிகர்களுக்கு முழுமையாகக் கிட்டவில்லை என்றே கருதுகிறேன். மேலும், இலங்கை வானொலிக்குப் புதிதுபுதிதாகப் பல அறிவிப்பாளர்கள் வந்து கொண்டிருக்கின்ற போதிலும், சாதனை படைத்த அதன் பழைய அறிவிப்பாளர்களை மறப்பதற்கில்லை.
இப்போது பல்வேறு வானொலி நிலையங்களும் நாளொரு அலைவரிசையும் பொழுதொரு நிகழ்ச்சியுமாகப் பெருகிவருகின்றன. இருந்தபோதிலும், நான் இன்னும் பெரிதும் விரும்பிக் கேட்பது இலங்கை வானொலியையே. திருத்தக்கூடிய சில குறைகள் இருந்தபோதிலும், இலங்கை வானொலி எப்போதும் தனது தரத்தை இயலுமானவரை தக்கவைத்து வந்துள்ளது. தமிழத்திரைப்படங்களில் நகைச்சுவை
நமது தமிழ்த் திரைப்படங்களில் இடம்பெறும் நகைச்சுவைக்காட்சிகளைப் பொறுத்தவரையில், பழைய திரைப்படங்களிலேயே தரமான நகைச்சுவையை அநுபவிக்க முடிகிறது. காளி.என்.ரத்தினம்- ராஜகாந்தம், என்.எஸ்.கிருஷ்ணன்மதுரம், சாரங்கபாணி - செல்வம், கொத்தமலம் சுப்பு - சுந்தரிபாய், தங்கவேலு - சரோஜா போன்ற ஜோடிகளும், சந்திரபாபு, நாகேஷ் போன்றோரும் தத்தமது பாணிகளில் அநுபவிக்கத்தக்க நகைச்சுவையை அள்ளி வழங்கினார்கள். இவர்களைவிட எம்.ஆர்.ராதா, ரி.எஸ்.பாலையா போன்றவர்கள் குணசித்திரம் வில்லத்தனம் போன்ற அம்சங்களுடன் இணைந்து நகைச்சுவை அளித்தார்கள். சோ வித்தியாசமான முறையில் அரசியற் கிண்டல்பானியில் தமது நகைச் சுவையைச் சொரிந்தார். இவர்களோடு ஏ.கருணாநிதி, ரி.ஆர்.ராமச்சந்திரன், காக்கா ராதாகிருஷ்ணன், சுருளிராஜன், குலதெய்வம் ராஜகோபால், எம்.ஆர்.ஆர்.வாசு, எஸ்.எஸ்.சந்திரன், மணிவண்ணன், வையாபுரி, சார்லி, தாமு உட்படப் பலர் அவ்வப்போது சுவைக்கத்தக்க நகைச்சுவையை வழங்கிவந்துள்ளனர். நடிகைகளில் முத்துலட்சுமி, அங்கமுத்து, ராகினி, மனோரமா, குமாரி சச்சு, கோவை சரளா முதலியோர் தனியாக நகைச்சுவை வழங்கி வந்துள்ளனர். இவர்களில் மனோரமா குணசித்திரம் கலந்த நகைச்சுவையை வழங்குவதில் வல்லவர். இவர்கள் அத்தனைபேரின் நகைச்சுவையையும் எம்மால் ரசிக்க முடிந்தது; இன்னும் ரசிக்க முடிகிறது. ஆனால், காலப்போக்கில் தமிழ் திரைப்படங்களில் இடம்பெறும் நகைச்சுவை மிகத்தரம் தாழ்ந்துவிட்டது. தமிழ் திரைப்படங்களின் நகைச்சுவைத் 11

Page 7
தரத்தை மிக்க கீழிறக்கிச் சாதனை புரிந்தவர்கள கவுண்டமணியும், செந்திலும் விளங்குகின்றனர். படத்தைப் பார்ப்பவர்கள் முகஞ்சுழிக்கும் முறையில் மிகவும் அருவருப்பான நகைச்சுவையையே இருவரும் வழங்கி வந்துள்ளனர். கவுண்டமணி - செந்தில் நகைச்சுவை தமிழ் திரைப்படங்களுக்கு ஏற்பட்ட சாபக்கேடு. இன்றைய நிலையில், வடிவேலும் விவேக்கும் திரைப்பட நகைச்சுவையில் முன்னணி வகிக்கிறார்கள். இவர்களில் விவேக் அண்மைக்காலமாக ஓரளவு சமுதாய விமர்சனப்போக்கில் தமது நகைச்சுவையை வெளிப்படுத்தி வருகிறார். குணசித்திரம் கலந்த தரமான நகைச்சுவையை வழங்குபவராக ஜனகராஜ் விளங்குகிறார். சில திரைப்படங்களிலேயே நகைச்சுவை கதையோடு இணைந்து, காட்சிகளுக்குப் பொருத்தமாக இயல்பாக அமைந்துள்ளது. பல படங்களில் நகைச்சுவை கதையோடு ஒட்டாமல், தன்னிச்சையாகச் செயற்படுகிறது. சுப்பிரமணிய பாரதியாரின் விலாசம் என்ன?
ஜோர்ஜ் சந்திரசேகரன் இலங்கை வானொலியின் முன்னாள் ஒலிபரப்பாளர், எழுத்தாளர், கலைஞர். அவர் தமது வானொலி, கலையுலக அநுபவங்களை ஒரு சருகுக்குள் கசியும் ஈரங்கள் என்ற பெயரில் இரு பாகங்களைக் கொண்ட இரு நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் வானொலியும் நானும் என்னும் இரண்டாவது பாகத்தைக் கொண்ட நூலில் இருந்து ஒரு பகுதியைத் தருகிறேன். 1982ம் ஆண்டு தமிழக அரசால் பாரதி நூற்றாண்டாகப் பிரகடனப்படுத்தப் பட்டிருந்தது என் ஞாபகத்திற்கு வரவே, "பாரதியின் ‘குயில்பாட்டை நாடகமாகச் செய்வோம்” என்றேன். கலைஞர்களின் பெயர்கள் எழுத்தாளனின் பெயர், அவரது விலாசம், ஒலிப்பதிவுத் திகதி ஆகியவற்றைக் குறித்துவைப்பதற்கான ஒரு புத்தகத்தை நான் தயாரித்து வைத்திருந்தேன். இதில் நாடகத்தின் பெயர் என்றிருந்த பகுதியில் ‘குயில்பாட்டு என்று எழுதிவிட்டு எழுதியவரின் பெயர் என்ற இடத்தில் சுப்பிரமணிய பாரதியார் என்று எழுதினேன். அதன்பின் கலைஞர்களின் பெயர்களை எழுதி இலிகிதரிடம் கொடுத்தேன். சற்று நேரத்திற்குப் பின் "வவுச்சர்களை எழுதத்தொடங்கிய இலிகிதர், புத்தகத்துடன் என்னிடம் வந்தார். சுப்பிரமணிய பாரதியார் என்று எழுதியிருக்கிறீர்கள். அவரது விலாசத்தை எழுதவில்லையே, எப்படி வவுச்சர் எழுதுவது என்று கேட்டார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. இவரைப் போல ஒருவர் பாரதி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருந்தால் பாரதியாருக்கு எவ்வளவு உபயோகப்பட்டிருப்பார் என்று எண்ணுவதைத் தவிர வேறொன்றும் என்னால் நினைக்கமுடியவில்லை.
அப்போது வசந்தா நடராஜன் என்றொரு தயாரிப்பாளர் எம்முடன் வேலை செய்து வந்தார். அவரைக் காட்டி "வசந்தாவிடம் கேட்டுப்பாரும். அவரது நிகழ்ச்சிகளுக்குத்தான் பாரதி போன்றோர்கள் வருவார்கள். ஒரு வேளை அவர்களுக்கு தெரிந்திருக்கலாம்" என்றேன்.
இலிகிதர் வசந்தாவின் முன்னால் போய் நின்றார். "சுப்பிரமணிய பாரதியாரின் விலாசம் தெரியுமா?” என்றார் இலிகிதர். வசந்தா திகைப்புடன் என்னைப் பார்த்தார்.
'ஏதாவது சொல்லி விடுங்கள் என்பதைப் போல கண்ணால் சைகை காட்டி விட்டேன். "எட்டயபுரம் என்று எழுதும் போதும்" என்றார் வசந்தா.
இருபதாம் நூற்றாண்டிலும் சுப்பிரமணிய பாரதியாரைத் தெரியாத தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது எனக்கு வெட்கமாக இருந்தது. அதுவும் கலைகளை வளர்க்கும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இருக்கிறார் என்பதை எண்ணும்போது மிகுந்த வேதனையாக இருந்தது.
12

கலாபூஷணம், கலைமணி, கன்சுல் உலூம் அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ.ஹஸன்
மலையகத்தில் முதலாவது சாகித்தியப் பரிசு பெற்ற இவர் பன்னூலாசிரியர், சிறந்த பேச்சாளர், வானொலிக் கலைஞர், காத்திரமான விமர்சகர் என இலக்கியத் துறையில் முழுநேர உழைப்பாளராய்ச் செயற்பட்டு பூரண நிலவாய்ப் பரிணமிப்பவர். கலாநிதி பதியுத்தீன் மஹமுத் வாழ்க்கைச் சுருக்கம், அருள்வாக்கி அப்துல் காதிர்ப் புலவர் வரலாறு, நான் கண்ட பண்டார நாயக்க (மொழிபெயர்ப்பு), நெஞ்சத் தாமரையின் இன்ப நினைவுகள் (பயணக் கட்டுரை), கம்பன் கவியமுதம், யசஹாமி (சிறுவர் குறுநாவல்), அமெரிக்க கறுப்பு இன முஸ்லிம்கள், வைத்தியர் திலகம் அப்துல் அசீஸ், அல்லாமா இக்பால் ஓர் அறிமுகம் ஆகிய பதின்மூன்று நூல்களை இலக்கிய உலகிற்கு அளித்து இலக்கியப் பணி புரிந்துவரும் சிறப்புமிக்கவர்.
மொழிபெயர்ப்புத் துறையில் பாண்டித்தியம் பெற்றவரான இவர் நான் கண்ட பண்டாரநாயக்க, அமெரிக்க கறுப்பு இன முஸ்லிம்கள், அல்லாமா இக்பாலின் இதயப் புதையல் ஆகிய நூல்களை மொழி பெயர்த்து தனது மொழிபெயர்ப்புத் துறை தொடர்பான ஆற்றலை வழங்கி எம்மையும் பல விடயங்களை அறிய வழிவகுத்துத் தந்துள்ளார். “பாரஸிக மொழியிலிருந்து ஆங்கிலத்துக்காக தமிழில் வரும் போது மூலத்திலிருந்து எப்படி வருமோ? (இன்றைய மொழி பெயர்ப்புகளில் காணப்படும் பெருங் குறைபாடு தொடர்பான ஆதங்கம் இது) என்ற எண்ணம் குவிந்த போதும் அல்லாமா இக்பாலை அறிவுபூர்வமாக உணர்ந்து ஹஸன் நிதானமாக நின்று கவிஞரின் கருத்தை உணர்ந்தாற்போல் உறுதியாக இந்நூலை தமிழில் பெயர்த்துள்ளார் என்பதைவிட ஆக்கித் தந்துள்ளார் என்பது சிறப்பாகும்.” என இவரது இதயப் புதையல் நூலுக்கு முன்னுரை வழங்கிய கவிஞர்ஏ.இக்பால் கூற்று இவரது மொழிபெயர்ப்புச் சிறப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
அடுத்து இவரது இலக்கியபணிக்கு; வாழ்க்கை வரலாற்றை எழுதித்தரும் செயற்பாட்டைக் குறிப்பிடலாம். சமய,இலக்கிய,கல்வி,வைத்திய துறைகளுக்கு பயனுள்ள பங்களிப்பை வழங்கிய பலரது வாழ்க்கை வரலாற்றை எழுதி, வளரும் இளந்தலைமுறையினருக்குக் கொடுத்து வருகிறார். இலக்கியப் பணிகளையும், வாழ்க்கை விபரங்களையும் பல செய்யுட்களின் ஆதாரத்துடனும், செய்திகளின் இணைப்புடனும் தொகுத்துத் தருகின்றார். "வாழ்க்கை வரலாற்றைத் தரும்போது அவர்களது இலக்கியப் புலமையை வேறுபடுத்திக் காட்டுவதுடன் வாசக அன்பர்கள் சுவைத்து இன்புறத் - தக்கவகையில் அதனைத்தருகின்றார் ஹசன்” எனப் பேராசிரியர் ம.மு.உவைஸ் கூறுவதையும், மேலும் "விபரங்களை பொறுமையோடு முயன்று சேகரிப்பவர் என்பதற்கும், தமிழைச் சரளமாக எழுதும் திறமையுடையவர் என்பதற்கும் இவர் எழுதிய அருள்வாக்கி அப்துல் காதிர்ப் புலவர் என்ற நூல் வரலாற்றை அறிவதற்கு மட்டுமன்றி, வாசகர்களுக்கு இலக்கிய ஆக்கங்களில்
13

Page 8
ஈடுபாடு ஏற்படுவதற்கும் துணை செய்கிறது” எனப் பேராசிரியர் சிதில்லைநாதன் கூறுவதையும் படிக்குமிடத்து இவரது ஆளுமையை நாம் உணர்கிறோம். இந்த ஆளுரமயின் காரணமாக இவருடைய கலாநிதி பதியுதீன் முஹமத் என்ற நூல் சாகித்தியப் பரிசினைப் பெற்றுக் கொண்டது.
1946களில் எழுதத் தொடங்கிய இவர், ஆசிரியராக, அதிபராக, ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராக, கல்வி அதிகாரியாக, பிரதம கல்வி அதிகாரியாக, ஒறாபி பாஷா நிறுவனப் பணிப்பாளராக எனப் படிப்படியாக பல்வேறு படிநிலைகளில் கல்வித்துறையில் காலடி பதித்து முன்னேற்றம் கண்டவர். இந்த அநுபவவெளிப்பாடு 1987ல் தரமான நூலகமாக, தொழிநுட்ப பயிற்சிகள் வழங்கும் நிலையமாக, இலக்கிய ஒன்று கூடல்கள் நிகழும் கூடமாக, மாறிவந்துள்ளது. இன்று மேலும் ஒருபடி சென்று பதிப்புத் துறையிலும் அகலக்கால் பதித்து புத்தகங்களைத் தந்து நிற்கின்றது. வைத்திய திலகம் அப்துல் அசீஸ், அல்லாமா இக்கால் ஓர் அறிமுகம் ஆகிய நூல்கள் ஒறாபி பாஷா கலாசார நிலையத்தின் வெளியீடுகளாகத் திகழ்கின்றன. வளரும் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டின் அரைவாசிப் பகுதியை ஏற்றுக்கொள்வார்களாயின் இந்நிறுவனம் மிகுதியைப் பொறுப்பேற்று நூல் வெளியீட்டினையும் செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் ஹசன்.
முதுதமிழ்ப்புலவர் மு.நல்லதம்பி என்பவரிடம் கற்ற தமிழ் அறிவும், இலக்கிய நாட்டமும் இவரிடம் ஆழப்பதிந்து கொண்டன. 1946 காலப் பகுதியில் தினகரனில் கட்டுரையுடன் தொடங்கி, சிறுவர் பகுதியில் நீண்ட காலம் எழுதி, அக்காலகட்டத்தில் முஸ்லிம் எழுத்தாளர்கள் குறைவாகக் காணப்பட்ட போதும் அந்தக் குறையை ஈடுசெய்யும் வகையில் அதிகமாக எழுதியுள்ளார். தொடர்ந்து சுதந்திரன், வீரகேசரி என்பவற்றில் எழுதி தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்துள்ளார். வீரகேசரியில் வெள்ளிதோறும் ஒவ்வொரு வாரமும் இஸ்லாமியக் கட்டுரைகள், கலை - இலக்கிய நிகழ்வுத் தகவல்கள் என்பவற்றை எழுதியுள்ளார். 1958லிருந்து 1964வரை கண்டிமாவட்ட நிருபராகவும் கடமையாற் றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதே. 1958ல் நிகழ்ந்த இனக்கலவரத்தின் பின்னர் மலையகத்தில் இருந்து தகவல்கள் செய்திகள் சேகரித்து அனுப்ப யாரும் முன்வராத நிலையில ஹசன் அவர்களது பங்களிப்பு அவரை கண்டி நிருபராக உயர்த்தியது என்பதை நாம் கவனத்தில் கொண்டால் இவரது துணிச்சலையும், தமிழ்ப் பற்றையும் நாம் உணர்ந்திடலாம்.
இவர் நடமாடும் ஓர் இலக்கிய இயக்கமாகச் செயற்பட்டவர். 1964களில் சுதந்திரனில் முஸ்லிம்களின் தாய் மொழி தமிழா? சிங்களமா? என்ற சர்ச்சையும் போதனாமொழி சிங்களமாக இருக்கவேண்டும் என்ற கோரிக்கையும் ஒருசில முஸ்லிம்களால் எடுக்கப்பட்டபோது எதிர்வாதம் புரிந்து முஸ்லிம்களின் தாய்மொழி யும், போதனாமொழியும் தமிழாகவே இருக்கவேண்டும் என்ற கோஷத்தைத் தெரிவித்து அதனை நிலைநாட்டிய துணிச்சல் மிக்கவர் ஹசன். இதேபோல் 1966ல் ஆறுமுகநாவலர், அநகாரிக தர்மபாலா, அருள்வாக்கி அப்துல் காதிர்ப் புலவர் ஆகிய மூவருக்கும் கெளரவிப்பாக முத்திரை வெளியிடப்படவேண்டும் என்று கருத்தை இவரும் குழுவினரும் முன்வைத்தபோது ஒருசில இஸ்லாமியரே அருள்வாக்கி இந்தியர் அவரைக் கெளரவித்து முத்திரை அச்சிடத் தேவையில்லை என்று அசட்டுத்தனமாகக் கருத்துரைத்தனர். இந்நிலையில் அருள்வாக்கி அப்துல்காதிர் புலவரின் வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்து எழுதியதோடு
14

அவருக்கு நூற்றாண்டு விழாவினை இலங்கை பூராவும் நிகழ்த்த கால்கோள் இட்டவர் ஹசன் என்றால் அது மிகையல்ல.
ஹசனது இன்னொரு சிறப்புப் பணியாக 1955லிருந்து வானொலியில் முதன்முதல் பங்களிப்புச் செய்ததோடு தொடர்ந்தும் முஸ்லிம் நிகழ்ச்சி, கலைக்கோலம், இலக்கிய மஞ்சரி போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபற்றியுள்ளார். குறிப்பாக இலக்கிய மஞ்சரி என்ற நிகழ்ச்சியை 1977,1978, 1979 காலங்களில் தயாரித்து வழங்கும் பாரிய பணியையும் செய்துள்ளார். கலைக்கோலம் நிகழ்ச்சியில தமிழ்க்கலைகள் பற்றியும், கண்டியில் நிகழும் கலை நிகழ்ச்சிகள் பற்றியும் எழுதி அனுப்பும் பணியினை பலகாலமாக மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்திய அறிஞர்கள் இலங்கை வரும் வேளைகளில் கண்டிக்கு அழைத்து (தற்போது பட்டிமன்றத்துக்கு மாத்திரம் அழைக்கப்படுகின்றனர்) இலக்கியக் கூட்டங்கள் நடத்தி அவர்களைக் கெளரவித்ததுடன் மலையகத் தமிழ் மக்களுக்கு இலக்கிய இன்பத்தையும் - சிந்தனையையும் பெற உறுதுணை புரிந்துள்ளார். 1950-1975 காலப் பகுதிகளில் மிகத் தீவிரமாக இயங்கி இலக்கிய இயக்கமாக நடாத்தி வந்துள்ளார். இக்காலங்களில் புரட்சிக் கமால் போன்ற கவிஞர்களின் கவிதைகளைச் சேகரித்து நூலுருவாக்க உதவியமை போன்ற பல இலக்கிய பணிகளை மேற்கொண்டுள்ளார். இவ்வாறான இலக்கியப் பணி புரிந்து பல்வேறு துறைகளிலும் தன்னை இனங்காட்டிக் கொண்டதனால் 1975ல் தேசிய சாகித்திய பரிசும், அந்தப் பரிசு பெற்றமைக்காக முஸ்லிம் கலாச்சார அமைச்சின் வாழ்வாரை வாழ்த்துவோம் என்ற தலைப்பில் கன்சுல் உலாம் என்ற பட்டமும், கெளரவிப்பும், 1976ல் கலைமணிப்பட்டமும், 1998ல் கலாபூஷணம் பட்டமும் வழங்கி தமிழ் இலக்கிய உலகம் தன்னைக் கெளரவித்துக் கொண்டது.
இறுதியாக “இன்றுள்ள எழுத்தாளர்கள் இலக்கிய வரலாற்றை அறிந்து அதன் ஆரம்ப கர்த்தாக்களை கெளரவித்து, இனிவரும் சமுதாயத்திற்கும் அவை பயன்படச் செய்யவேண்டும். உதாரணமாக கனக செந்திநாதன் ஒரு காலத்தில் செய்த சிறந்த முயற்சிபோல் எனக் கூறும் இவர் இலக்கியம் பற்றிப் பேசும் போது இன்றும்கூட இன்னும் இளமையாகவே காணப்படுகிறார்.
1999ல் வெளிவந்த ஞானம்லுவிழக்ளுக்கு
356TU6)in "ஞானம் பதிப்பகத்தாரின் வெளியீடான அந்தனிஜிவா எழுதிய "அக்கினிப் பூக்கள்" நாடக நூலுக்கு தேசிய சாகித்தியப் பரிசும், மத்திய மாகாண சாகித்தியப் பரிசும் கிடைத்துள்ளன.
மற்றுமொரு "ஞானம் வெளியீடான தமிழ்மணி கே.வெள்ளைச்சாமி எழுதிய “குறிஞ்சி நாடன் கவிதைகள்' நூலுக்கு மத்திய மாகாண சாகித்தியப் பரிசு கிடைத்துள்ளது.
திருமதி ஞானம் ஞானசேகர ஐயர் எழுதிய "இந்துமதம் என்ன சொல்கிறது? என்ற நூலுக்கு இந்துசமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பரிசு கிடைத்துள்ளது.
பரிசு பெற்ற எழுத்தாளர்களுக்கு எமது பாராட்டுக்கள்.
15

Page 9
ஒன்றும் அறியாப் பச்சைப் பாலகர்களுக்கு
கறைபடிந்த அழியாக் காவியமொன்று உலகப் பாட நெறியில் கலப்படமாகின்றது.
துள்ளித் துள்ளி ஓடும் பள்ளிச் சூரியன் முள்ளில் பட்டு தலைகீழாய் நிற்கிறது.
காமத் தூசிகள் பள்ளித் திண்ணைக்குள் முழு அர்ப்பணிப்போடு நுழைந்து தும்முகின்றன.
இளம் பிஞ்சுகள் காய்க்கு முன்னே காயவைத்து அழிப்பதற்காய் மகரந்தச் சேர்க்கை திட்டமிட்டு நடக்கின்றது.
சின்னஞ் சிறுசுகளின் குடல்வெளித் துவாரம் கிழிந்து இரத்தம் கசியக் கசிய ஒட - ஈன இரக்கமற்ற காம வெறியர்களின் அந்தரங்கம்
வேற்றுக் கற்பனையோடு
உலாவரும் ஒழுக்கக் கோட்பாட்டின் திரைகளுக்கு கெட்ட சாயம் பூசும்.
இந்த கற்பித்தற் கலையினால் பிஞ்சு உள்ளங்களில் புகுத்திய நஞ்சு விந்து மருத்துவத்தில்
*ళా* *. *. *. **
மருந்தே இல்லா நோய்க்குறி போல நித்தம் நித்தம் தைத்துக் கொண்டிருக்கிறது. கொடுமைகள் பேசும் பிரக்ஞை வெளியில் படைமுகாமைச் சுற்றியுள்ள கம்பி முள்ளில் சிக்கிய சின்னஞ் சிறுசுகளின் கற்பின் மின்னல்கள் இடியோடு கருகி அடியோடு சாம்பலாகி விழுகின்றன.
காமவெறி நாய்
கெளவிக் கடித்து
பதறப் பதற குதறிச் சப்பித் துப்பும் கன்னியாகா கன்னிமொட்டுக்களின் பூவிதழ் கயவர்களின் காலடியில்.
இன்னும் செல்வந்தனின் சிறைச்சாலையில் வறுமையின் வெயிலில் வெந்து வாடி வதங்கி செத்து மடியும் பள்ளிச் சூரியன் கொடிய வேதனைப் பழுவால்
 
 
 
 

இரவு விடியாமல் உள்ளது. விரைந்தெழக் கூடாதா?
இந்தத் தெருக்களில் கேள்விக்கணைக்குள் ஆரவாரமாய் கேட்கும் சிக்குண்ட பள்ளிச் சூரியனே போர் முழக்கம் முகிழ்ந்து நிற்கும் உன் உலகத் தாய் பள்ளிச் சூரியனே கைதியாகி உன்னை அரவணைக்கத் உள வளங்குன்றி தவறிவிட்டாள். எயிட்ஸின் பாசறையில் அதனால்தான் உருண்டு பிறழ்கின்றான் பிரமையில். உன் வாழ்க்கை நெறி
குப்பைக்குள்
புதையுண்டு கிடக்கிறது.
உன்னைப் பெற்றவர்கள் திருந்தாத வரை - நீ திருந்த மாட்டாய்
பாதாள கோஷ்டியின் எனினும்
நீரோட்டத்தில் மிதக்கும் உன்னைப் பெற்றவர்களைத் கடதாசிக் கப்பல்களாய் திருத்துவதற்காவது - நீ கை வீசும் தென்றலாய் திருந்திக்கொள் பவனி வருகின்றன உன்னால் பாவப்பட்ட பள்ளிச் சூரியன். உலகிலொரு அதிசயம் தோன்றும்.
9..... urt6Gd ஒரு பாவமே புரியாத பாலகர்களுக்கு பாலியல் வன்முறைகள் பலாத்காரம் மோசடிகள் எனும் அக்கிரமங்களின் பாதைகளில்
பாத அணியே ரிஷி மூலங்களாகும்.
இந்த நிலை நிரந்தரமாய் புதையுண்டு கிடப்பது நியாயமா?
பள்ளிச் சூரியனை கையிலே எடுத்து அழகிய சிற்பமாய்ச் செதுக்கி பார்போற்றும் பாலகனாய் மாற்றும் பாவலனே - நீ கண்மூடித் தூங்குவது நீதியா? விடிவென்னும் வாசலில் அழகிய கோலம் பூண்டு

Page 10
ஒர் ஆரம்பகால மலையக நாவலும்
இன்றைய அரசியல் நிலைமைகளும் (தெளிவத்தை ஜோசப்) ‘சோமாவதி அல்லது இலங்கை இந்தியர் நட்பு என்னும் நாவல் எச். நெல்லையா என்பவரால் 1930களின் பிற்பகுதியில் எழுதப்பட்டு 1940ல் நூலாக வெளிவந்திருக்கிறது.
யார் இந்த எச்.நெல்லையா என்று பார்க்கையில் அவர்தான் வீரகேசரியின் ஸ்தாபக ஆசிரியர். திருநெல்வேலியைச் சேர்ந்தவர். வீரகேசரியின் வளர்ச்சிக்காகப் பெரிதும் பாடுபட்டவர். வாசகர்களைக் கவர்ந்திழுப்பதற்காக வீரகேசரியில் நாள்தோறும் இரண்டு மூன்று கொலம் தொடர்கதை எழுதியவர்.
விறுவிறுப்பான நடையும் அடுத்து என்ன நடக்குமோ என்று வாசகர்கள் திகைக்கும் இடத்தில் 'தொடரும் போட்டு அடுத்த நாளுக்காகக் காத்திருந்து வீரகேசரி வாங்கப் பண்ணும் யுக்தியும் கொண்ட தொடர்கதைகள் நெல்லையாவினு டையவை. இந்த எழுத்தின் குறிக்கோள் பத்திரிகை விற்பனை என்பது மட்டுமே. ஆகவே யதார்த்தவியலுக்குப் பதிலாக அதீத கற்பனைகள் கொண்டவைகளாகவே இவைகள் இருந்துவிட்டதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
* சந்திரவதனா அல்லது காதலின் வெற்றி (1934) * காந்தாமணி அல்லது தீண்டாமைக்கு சாவு மணி (1938) * சோமாவதி அல்லது இலங்கை இந்தியர் நட்பு (1940) * பிரதாபன் அல்லது மகாராஷ்டிர நாட்டு மங்கை (1941) என்பவை அவர் எழுதிய நாவல்கள்.
வாசகர் பெருக்கத்துக்காக, வீரகேசரியின் விற்பனைக்காக, அதீத கற்பனைகள் கொண்டவைகளாக மட்டுமே நெல்லையாவின் நாவல்கள் இருந்திருக்குமாயின் அவர் என்றோ மறக்கப்பட்டவராக மாறியிருப்பார். ஆனால் ஓர் அறுபது வருஷத்துக்குப் பிறகு இன்றும் நாம் அவரை நினைவுகூர்கின்றோம் என்றால் அது அவருடைய சோமாவதி அல்லது இலங்கை இந்தியர் நட்பு என்னும் நாவலுக்காகத்தான்.
முப்பதுகளை, அந்தக் காலத்தின் யதார்த்தங்களுடன் பதிவு செய்து வைத்திருக்கின்றார் நாவலாசிரியர் இந்தச் சிறு நாவல் மூலம்,
சிங்கள உயர் குழுவினரைத் திருப்திப் படுத்துவதற்காக இந்தியர்களின் வாக்குரிமையை கட்டுப்படுத்திய டொனமூர் ஆணைக்குழுவினர் இலங்கையில் செயலாற்றத் தொடங்கிய காலம் அது.
ஏ.இ.குணசிங்கவுடன் இணைந்து செயற்பட்ட நடேசய்யர் குணசிங்கவின் இந்திய எதிர்ப்புப் பிரசாரங்களால் கோபப்பட்டு அவரைவிட்டு விலகி மலையகம் நோக்கிப் புறப்பட்ட காலம் அது.
இந்தியத் தமிழர்களால் தாங்கள் விழுங்கப்பட்டு விடுவோம் என்று சிங்கள அரசியல் வாதிகள் சந்தேகப்பட்டு அதற்கான எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்ட காலம் அது.
அப்படியானதொரு காலகட்டத்தில்தான் இந்த நாவல் விெவந்திருக்கிறது. "சமீப காலங்களில் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் மனக்கசப்பு
18

ஏற்பட்டிருப்பதை எல்லோரும் அறிவீர்கள். விரும்பத்தகாத இம்மனஸ்தாபத்தை நீக்கி இரண்டு நாடுகளையும் அன்பினால் இணைப்பதற்கு முயற்சிகள் மேற் கொள்ளப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில் நான் இந்தச் சிறுகதையை வெளி யிட்டுள்ளேன். இந்திய இலங்கைத் தொடர்பு, அன்பு நிறைந்த சினேகிதமாகத்தான் இருக்கமுடியும் என்னும் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் வரையப்பட்டுள்ள இக்கதையைப் பற்றியும் அதில் காணப்படும் கருத்துகள் பற்றியும் இங்கு நான் எழுதவிரும்பவில்லை. அவற்றை வாசக நேயர்களாகிய உங்களின் பரிசீலனைக்கே விட்டுவிடுகின்றேன் என்று இந்த 120பக்க நூலின் முன்னுரையில் குறிக்கின்றார் திரு எச். நெல்லையா.
கண்டியைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவரின் தங்கையான சோமாவதி என்னும் சிங்களப்பெண் சந்திரசேகரன் என்னும் இந்திய - பணக்கார - இளைஞனைக் காதலிக்கின்றாள். பெண்ணின் பெற்றோருக்கும் அண்ணனுக்கும் கூட இது உடன்பாடானதாகப் படவில்லை; எதிர்ப்புக் கிளம்புகிறது.
'கண்டி நகருக்கருகாமையில் உள்ள ஒரு அழகிய கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வரும் சோமாவதி உயர்ந்த சிங்கள் வம்சத்தில் பிறந்தவள். அவளது தந்தை பெரும் செல்வந்தர். அகன்ற விளைநிலங்களும் தோட்டங்களும் அவருக்கிருந்தன. அப்பகுதியில் அவருக்கு விசேஷசமான செல்வாக்கிருந்தது. கிராமவாசிகள் அவர் சொற்படியே நடப்பார்கள். ஓரளவு படித்தவர். இலங்கை இராஜ்ய விவகாரங்களில் அவருக்கு அவ்வளவு ஞானம் கிடையாது. ஆனாலும் மிகப்பெரிய அரசியல்வாதியைப்போல் பேசுவார். நடந்துகொள்வார். சிங்களவர்கள் ஆரியர் என்றும் மிகவும் உயர்ந்தவர்கள் என்றும் தமிழர்களும் இந்தியர்களும் தாழ்ந்தவர்கள் என்றும் செருக்குடன் பேசுவார். அவருக்கு ஒரு மகனும் இருந்தான். சோமாவதிக்கு மூத்தவன். அவனுக்குத் தமிழ்த் துவேசம் அதிகம். அந்நியத் தமிழர்கள் பற்றியும் மிக சுதேசிகளான சிங்களவர்கள் பற்றியும் மிக உருக்கமாகப் பேசுவான். எதிர்காலத்தில் இலங்கையின் புகழ்பெற்ற மந்திரியாகத் திகழப்போ கிறவன் என்று பலரும் அவனையிட்டுப் பேசிக்கொண்டார்கள்.
நாவலின் முக்கிய பாதிரங்களான சோமாவதியின் குடும்பத்தினரை நாவலாசிரியர் அறிமுகப்படுத்தும் விதம் இது. (பக்கம் 10-11)
புகழ்பெற்றதொரு அரசியல்வாதி ஆவதற்கான தகுதி இலங்கையைப் பொறுத்தவரை எதில் தங்கியிருக்கிறது என்னும் நெல்லையாவின் கூற்று கவனத் துக்குரியது. காலத்தாலோ மனித நாகரிக வளர்ச்சியாலோ மாற்றப்பட முடியாத இந்தச் சாபக்கேடுகள் நமக்கு கற்பனைகள் அல்ல.
சோமாவதியின் காதலன் சந்திரசேகரன் கண்டியில் வியாபாரம் செய்து வருகின்றான். அவனது முன்னோர் பரம ஏழைகளாகப் பிழைப்புத் தேடி மலையகம் வந்தவர்கள். இரண்டு தலைமுறை முடிந்தபின் மூன்றாவதன் ஆரம்பத்தில் அவன் ஒரு நல்ல நிலைக்கு வந்திருந்தான். இன்டோ லங்கா வர்த்தக சாலை அவனு டையது. ஆங்கிலம், தமிழ், சிங்களம், இந்தி என்று நான்கு மொழி வல்லவன். எப்படியோ காலம் அவர்களைக் காதலர்களாக்கிவிட்டது. அவர்களுடைய போதாத காலம் டொனமூர் அரசியலமைப்பு அச்சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு அளிக்கப்பட்டது. இத்துடன் கூடவே சமூகத்துவேஷமும் வெறுப்பும் இலங்கையில் இறக்குமதியாகின (பக்கம் 12)
19

Page 11
சோமாவதியின் தாய் ஜெயந்தி நேரம் சென்று வீட்டுக்கு வரும் மகளைக் கண்டிக்கிறாள். சோமாவதி நீ எங்கே போயிருந்தாய்; வெளியில் போனால் இவ்வளவு நேரமா? .'〉
அண்ணன் விஜயரட்ன கூறுகின்றான், ‘சந்திரசேகரனுடைய கடைக்குப் போயிருப்பாள். அதுதான் இத்தனை தாமதம். சோமாவதி திடுக்குற்றாலும் பின்னர் சமாளித்ததுக் கொள்ளுகின்றாள்.
'ஏன் போனாலென்ன என்கின்றாள். நம்மினத்தைச் சேர்ந்த சிங்களவர்களின் கடைகள் கண்டியில் இல்லையா? அவற்றில் ஒன்றில் உனக்குத் தேவையான சாமான்களை வாங்கக் கூடாதா? அந்நியனான ஒரு இந்தியத் தமிழனுடைய கடைக்கா நமது பணத்தைக் கொடுக்கவேண்டும்!
‘அண்ணா நீ சிங்கள் சபையின் கொறடாவாயிருக்கின்றாய் என்பதை மறந்துவிட்டேன். கொழும்பு டவுன்கோல் கூட்டத்தில் நீ இமிகிறேஷன் பிரச்சினை பற்றிப் பேசியதை நானும் பேப்பரில் படித்தேன்.(பக்கம் 17-18)
இது போன்ற இனத்துவேசச் செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பிவிட அவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கும் பத்திரிகைகள் இன்றுமட்டுமல்ல அன்றும் இருந்திருக்கின்றன என்பதையும் இவ்வரிகள் உணர்த்துகின்றன.
இந்தியத் துவேசமும்; மலையகத் தமிழர்களை ஒரு விரோதியாகவே பார்க்கும் மனப்பான்மையும் இன்றுநேற்றுத் தோன்றியதல்லவென்பதையும், அரசியல் வாதிகளின் இனக்குரோதப் பேச்சுக்களே இத்துவேச உணர்வை ஊதி ஊதிப் பற்றவைக்கின்றன என்பதையும் இந்நாவல் மூலம் சித்திரிக்கின்றார் நெல்லையா. "இங்கிலீஷ்காரர்களின் கையிலிருந்து இலங்கையின் ஆட்சியதிகாரம் இந்தியர்களின் கைகளுக்கு மாற்றப்படுவதை நாம் அனுமதிக்கப்போவதில்லை என்னும் டி.எஸ். சேனனாயக்காவின் தொடர்ச்சியான வாதங்களும் பிரஜா உரிமைச்சட்டங்களும் இவைகளின் உச்சங்கள். நேரு கொத்தலாவலை - சிரிமா சாஸ்திரி - சிரிமா இந்திரா ஒப்பந்தங்கள் அவற்றின் தொடர்ச்சிகள்.
சோமாவதி தன் காதலில் மூர்க்கமாகவே இருந்தாள். அண்ணனுக்கும் பெற்றோர்களுக்கும் அவள் அடங்கிப்போவதாக இல்லை.
கோபம் கொண்ட அண்ணன் உடனடியாகவே தனது செயல்களைக் காட்டத் தொடங்கிவிட்டான். ‘அடுத்த நாளிலேயே சமூகத்துவேஷம் நிறைந்த தனது பகிஷ்காரப் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டான். பொறுப்பற்ற உஷ்ணமான வார்த்தைகளைக் கேட்பதற்கென்றால் பெருங்கூட்டங்கள் கூடிவிடுவது நமது இயல்பல்லவா?
அடுத்து வரவிருந்த தேர்தலில் பாமர மக்களுடைய ஒட்டுக்களைப் பெறுவதற்கு சுலபமான வழி இந்தியத் துவேஷப் பிரச்சாரமே என்பதை உணர்ந்து செயல்பட்டான்.
கணக்கிலடங்காத் துண்டுப்பிரசுரங்களை அவனும் அவனுடைய சகாக்களும் வெளியிட்டார்கள். அநேகமாக ஒவ்வொரு நாளும் கண்டியில் கூட்டங்கள் நடந்தன. இந்தியத் தமிழர்களை மனம்போனபடியெல்லாம் பழித்துப் பேசினான்.
2O

இந்தியர்கள் இலங்கையைக் கொள்ளையடிக்கிறார்கள் என்றும் சுரண்டுகிறார்கள் என்றும் இலங்கையில் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு இந்தியரே ஜவாப்தாரி என்றும் எட்டுஇலட்சம் இந்தியர்கள் வந்து முப்பத்தாறு லட்சம் சிங்களவரின் பிழைப்பைக் கெடுத்துவிட்டார்கள் என்றும் ஆவேசத்துடன் பேசினான்.
ஒரு சதம் விலையில் ஒரு சிங்களப் பத்திரிகையையும் நடத்தினான். இதோ நமது கண்டி நகரைப்பாருங்கள். நமது முன்னோர்கள் செழிப்புடன் இருந்து சேங்கோலாச்சிய பூமி. இன்றைக்கு எவ்வாறிருக்கிறது. ஆதியில் இங்கு இந்தியரா வர்த்தகம் செய்தார்கள். சிங்களவர்கள்தான் வணிகத்தை நடத்தி வந்தார்கள். இன்றைக்கோ சகோதரர்களே நீங்கள் தரித்திரராக இருக்கின்றீர்கள். அந்நியனான இந்தியனோ நமது பணத்தைக்கொண்டு கொழுத்திருக்கின்றான்.
திரும்பும் இடங்களில் எல்லாம் இந்தியர். கால்வைக்கும் இடத்தில் எல்லாம் இந்திய வியாபாரிகள். நம்மைச் சுற்றி நாலாபக்கங்களிலும் இந்தியத் தொழிலாளிகள். சீச்சீ இதென்ன கேவலம். என்னருமைச் சிங்கள வீரர்களே நாட்டையும் பிழைப்பையும் இழந்து நீங்கள் நாணி நிற்கப் போகின்றீர்கள மடிந்து போகப் போகின்றீர்களா. உங்களுக்கு மானமில்லையா. ரோஷம் இல்லையா. வெட்கமில்லையா. உங்களது வீரம் எங்கே. தைர்யம் எங்கே. ஆண்மை எங்கே. இதோ பாருங்கள் இன்டோ சிலோன் வர்த்தக சாலையை நடத்தும் சந்திரசேகரனை நோக்குங்கள். அவன் யார். அவனுடைய பாட்டன் அதோ அந்த தேயிலைத் தோட்டத்தில் 25 சதம் நாட்கூலிக்கு வந்தவன். இவன் இன்றிருக்கும் நிலை என்ன. லட்சாதிபதி கால் நடையாகச் சுற்றித் திரிந்தவனின் மகன் இன்று காரில் பவனி வருகிறான். 4.
இதெல்லாம் ஏது. இந்தியாவிலிருந்தா கொண்டுவந்தான். இல்லவே இல்லை. நம்முடைய பணம். அதைக் கொள்ளையடித்து அவன் சுகபோகம் அனுபவிக்கின்றான்.
தோழர்களே அவனுடைய கடைக்குச் சிங்களவர்கள் போகலாமா! அவனையும் அவன் இனத்தாரையும், அவர்களது கடைகளையும் பகிஷ்கரி யுங்கள். அப்படிச் செய்வோமென்று சத்தியம் செய்யுங்கள். (பக்கம் 26 - 28) தன்னுடைய தங்கை ஒரு தமிழ் வாலிபனுடன் உறவு கொண்டிருக்கிறாள் என்னும் ஒரு குடும்ப விஷயம் அரசியலாக்கப்பட்டு ஒரு தேசியப் பிரச்சினையாக உருக்கொள்ளும் கொடுரங்கள் அந்த முப்பதுகளில் மட்டுமா நடந்தன. அறுபது எழுபது ஆண்டுகளுக்குப் பிறகும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இன்றும்கூட அரசியல் மேடைகளில் இதுபோன்றும் இதை விடவும் மோசமானதுமான இனத்துவேசக் குரல்கள் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. எந்த ஒரு காலகட்டத்திலும் அந்தக் காலக்கட்டத்தின் யதார்த்த வாழ்வினை பிரதிபலிப்பவையாகவே கலை இலக்கியங்கள் இருக்கவேண்டும் என்னும் நியதிக்கொப்ப நியாயத்தின் பக்கம் நின்று காலத்தைப் பதிவு செய்துள்ள கம்பீரம் இந்த நாவலுக்குமிருக்கிறது.
2

Page 12
இயல்பினை
அவாவுதல்
- அமரதாஸ் கவிதைகள்
சி.சிவசேகரம்
இயல்பினை அவாவுதல், அமரதாஸ் கவிதைகள், தேடல் வெளியிட்டகம், 257 ஸ்கந்தபுரம், கிளிநொச்சி, 1999 டிசம்பர், பக்கம் - 48, ரூபா 70/.
அரச கட்டுப்பாடு இல்லாத தமிழ்ப் பகுதிகளிலிருந்து வரும் படைப்புக் களைக் கட்டுப்பாடு உள்ள பகுதிகளிற் பெறுவது கடினம். அண்மையில் அங்கிருந்து கிடைக்கப்பெற்ற சில நூல்களில் ஒன்று அமரதாஸின் கவிதைத் தொகுதி. இக் காரணத்தாலும் இளங் கவிஞரும் நுண்ணுணர்வு மிக்க ஒரு நிழற்படக் கலைஞரு மான ஒருவரது ஆக்கங்கள் என்ற வகையிலும் இந்நூலை அறிமுகப்படுத்த மகிழ்வடைகிறேன்.
இத்தொகுப்பிற்கு விமர்சனம் எழுத என்னைத் தயங்கச் செய்த கவிதை ‘புத்தகம் பற்றி எனும் தலைப்பிலானது. விமர்சனங்களை ஏற்பதில் நமது படைப்பாளிகள் நடுவே உள்ள தயக்கத்தை அது எனக்கு மீண்டும் நினைவூட்டியது. மாற்றுக் கருத்துக்களை அவை எவ்வளவு தவறானவையாயினும், தாங்கும் திரானியற்ற படைப்பாளிகள் தங்கள் நண்பர் வட்டங்கட்குள்ளேயே அரங்கேற்றி விட்டுப் போகலாம். வட்டத்திற்கு வெளியில் வரும்போது அது அந்த வியூகத்தின் பாதுகாப்பில்லாமலே வருகிறது. குறைபாடான படைப்பு போலவே குறைபாடான விமர்சனமும் தன்னை அம்பலப்படுத்திக் கொள்கிறது. போலித்தனங்களைப் படைப்பாளியும் விமர்சகனும் தோலுரித்துக் காட்டுவது சரியானதே. ஆயினும் அச்சில் வராத ஒரு கருத்தை அச்சில் மறுக்கும்போது அதற்கான சில நடத்தை நெறிகள் பேணப்பட வேண்டும் என நினைக்கிறேன்.
படைப்பாளியை மனித உன்னதங்களில் ஒன்றாக, அது மட்டுமன்றிச் சமூகத்தினின்று வேறு பட்டு ஓங்கி நிற்கும் பிறவியாகக் காட்டும் போக்கு உள் ளூரிற் சில குழுக்களிடையிலும் அதிலும் பரவலாக தமிழகத்திலும் உள்ளது. அமரதாஸ் தன்னைச் சூழ உள்ள சமூகத்தை நொந்து கொள்கிற விதம், தன்னை அவர் சமூகத்தின் ஒரு பகுதியாகக் காண மறுக்கும் முனைப்பையே சுட்டுகிறது.
கவிதைகளின் பாரிய பலவீனம், சொற்பிரயோகத்தின் இறுக்கமின்மை என்பேன். எடுத்துக்காட்டாக "காதலியின் கடிதம் 01’ எனும் கவிதையில், வரும்
"உன் திருவுருவ தரிசனத்திற்கான என் பிரயத்தனங்கள் அனைத்தும் விரயமாகிப் போகின்றன” என்ற வரிகள் வலிந்து புனையப்பட்ட பாங்கில் உள்ளன. அதைவிட, முனைப்பு, நினைப்பு, இருப்பு, காத்திருப்பு, உயிர்ப்பு, கீற்று, காற்று, சத்தியமோ, வருமோ என்று வரிகளின் இறுதியில் வரும் எதுகைப்பாங்கான சொற்கள் தரக்கூடிய ஓசை நயம் கவிதை வரிகளின் சந்த ஒழுங்கின்மையினால் இல்லாது போய்விடுகின்றது.
தமிழகத்துச் சொற்பிரயோகங்கள் சில கவிஞரின் மொழிநடையுடன் இசைவு காணாமல் துருத்திக் கொண்டு நிற்கக் காண்கிறோம். கவிதையில் வலிந்து
22
 

புகுத்தப்படும் சொற்கள் அதனை வலுவிலக்கச் செய்யலாம் என்பதும் கவிஞரின் கவனத்திற்குரியது.
“கிழக்குச் சூரியன் எழுச்சி கொள்ளும் வேளைகளில் இருண்ட திரை சுருண்டழிந்து வெளுக்கிறது வானம்,
விதவிதமாய் விண்ணிலேறிப் பறக்கும் அழகிய பறவைகள் அற்புதமாய் ஒளிர்கின்றன ஒளிர்கின்றன.
ஆகா!
( ஒளிரும் பறவைகள் பக்கம் 36 ) ஒளிர்கின்றன என்ற சொல்லின் மீள் பிரயோகமும் அற்புதமாய் எனும் சொல்லும் ஒரு நிழற்படக் கலைஞரின் செய்நேர்த்தியுடன் தரப்படும் காட்சியைக் களங்கப்படுத்துகின்றன. "ஆகா” என்ற இறுதிவளி சித்திரத்தையே சிதைத்து விடுகிறது. கவிஞரின் ஊரும் உலகநோக்கும் சார்ந்த ஒரு சித்தரிப்பாக நாம் வாசிக்கக்கூடிய "குளம் பற்றி என்ற கவிதை அவரது நேர்த்தியான படைப்பாற்றலுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அவ்வாறே காட்சி என்ற குறுங்கவிதையையும் சொல்ல லாம். (இதை அவர் ஒரு ஹைக்கூவாக எண்ணி எழுதவில்லை என நம்புகிறேன். “அலையடித்து நொறுங்கிப் போகிறது குளக்கரையில் உதித்தொளிர்ந்த அழகிய நிலவு" வேறுஞ் சில இடங்களில் இத்தகைய செய்நேர்த்தியை நாம் காணலாம். காதல், ஆன்மிகம் பற்றிய அருட்டுணர்வு, இன ஒடுக்கலுக்கு எதிரான போர் என்பனவற்றாற் கட்டப்பட்டுள்ளதான அமரதாஸின் கவிதை உலகம் தனிமனிதவாதச் சிந்தனையின் வயப்பட்டது. அது காலத்துடன் விரிவடையும் என்பது. என் எதிர்பார்ப்பு. விரிவான வாசிப்பும் விமர்சனங்களை ஏற்கும் மனப் பக்குவமும் அதற்கு உதவும். ஈழத்துக் கவிதைகளின் வலிமை சார்ந்த பண்புகளை அவரது கவிதைகள் உள்வாங்கி மேலும் செழுமை பெற இடமுண்டு. மஹாகவி முதல் முன்னுரையாளர் பேர் குறிப்பிடத் தயங்கும் முருகையன், நுஃமான் போன்ற நுண்ணுணர்வு மிக்க கவிஞர்களையும் சமூகக் கொடுமைகளைச் சாடும் போர்க்குணமிக்க கவிதைகளை வழங்கிய பசுபதி, சுபத்திரன் போன்ற கவிஞர் களையும் மலையகத்தில் முகிழ்ந்தெழும் புதிய போராட்டக் கவிதைக் குரல் களையும் அவர் மேலும் அறிய வேண்டும். தமிழ்க் கவிதை மரபுடன் நெருங்கிய உணர்வு பூணுவதும் அவரது கவிதைக்கு உரமூட்டும்.
'தன்னில் தானே வாழுதல்' என்பதே அமரதாஸின் கவிதைகளிற் தொனிக்கும் சாரம் எனவும் "இந்தத் தொனிப்பே மெய்யாகவும் மனிதனின் உண்மை முகமாகவும் இருக்கின்றது எனவும் கூறுகிற முன்னுரையாளரின் முதலாவது கூற்றுடன் நான் உடன்படுகிறேன். பின்னயது பற்றி ஐயங்கள் மிகுதி. அமரதாஸின் உலகம் விரியும்போது அவரது உண்மையின் இருப்பிடமும் இடம்பெறும் என எதிர்பார்க்கிறேன். நாம் அறிந்து வரவேற்க உகந்த ஒரு கவிஞர் இயல்பினை அவாவிவருகிறார். இருகரம் நீட்டி அவரை வரவேற்போமாக.
23

Page 13
கடநத நூறறாணடின ஈழத்துத் தமிழ் மார்க்சிய இலக்கியம்
- நந்தினி சேவியர் கடந்த நூற்றாண்டின் மத்திய பகுதியிலே மார்க்சிய இலக்கியப் பரிச்சயம் ஈழத்தவர்கள் மத்தியில் ஏற்படுகிறது.
இலங்கையின் முதல் இடதுசாரி கட்சியான சமசமாஜக் கட்சியின் ஆரம்பத்துடன் 1915ல் மார்க்சியச் சிந்தனையின் உருவாக்கம் ஏட்பட்டு பின்னர் 1941ல் ஐக்கிய சோசலிசக் கட்சியாகவும் 1943ல் இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியாகவும் மார்க்சிய இயக்கம் வளர்ந்தது.
பொன்னம்பலம் கந்தையா, அவைத்திலிங்கம் போன்றோரும் பின்னர் கார்த்திகேசன், வி.பொன்னம்பலம், நா.சண்முதாசன் போன்றோரும் தமிழர் மத்தியில் மார்க்சியச் சிந்தனையை ஊட்டியவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாகும்.
மறுமலர்ச்சிக்கால எழுத்தாளர்களில் இடதுசாரிச் சிந்தனையால் கவரப்பட்ட அ.ந. கந்தசாமியும், சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக எம்.சி.சுப்பிரமணியன் தலைமையில் உருவான சிறுபான்மை தமிழர் மகா சபையைச் சேர்ந்த டானியல், ஜீவா, எஸ். பொன்னுத்துரை, என்.கே.ரகுநாதன் போன்றவர்களுமே இலக்கிய வாதிகள் மத்தியில் மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவர்களாக அறியப்பட்டார்கள். தன்னை ஆரம்பக்காலம் முதலே ஒரு மார்க்சிய எழுத்தாளராக இனம் காட்டிக்கொண்டவர் செ.கணேசலிங்கனாவார்.
ஆரம்பத்தில் சமசமாஜக் கட்சியினுடைய ஆதரவாளராக இருந்த சு.இராஜ நாயகன் தனது படைப்புகளில் தன்னை ஒரு மார்க்சியவாதியாக வெளிப் படுத்தவில்லை.
நீர்வை பொன்னையன் ஐம்பதுகளின் பின் தோன்றிய ஒரு மார்க்சிய எழுத்தாளராகும்.
1954ல் கே. கணேஷ் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட முற்போக்கு எழுத்தாளர்சங்கம் இலங்கையின் சகல பாகங்களிலும் தனது கிளைகளை உரு வாக்கி இருந்தது. இடதுசாரிச் சிந்தனையை மார்க்சியத்தை ஏற்றுக்கொண்ட மேற்குறித்த எழுத்தாளர்களுடன் மார்க்சியவாதிகள் அல்லாத வ.அ.இராசரத்தினம், அ.ச.அப்துஸ்சமது, மருதூர் கொத்தன் போன்றவர்களும் அங்கத்தவர்களாக இருந்துள்ளனர்.
தேசிய இலக்கியம் என்ற கோட்பாடு வலுப்பெற்றிருந்த காலத்தில் க.கைலாசபதி தினகரன் பத்திரிகை ஆசிரியராகச் சேர்ந்து கொண்டார். அவரது பத்திரிகையில் முற்போக்கு படைப்புகளுக்கு மிகுந்த ஆதரவு வழங்கினர்.
தேசிய இலக்கியக் கோட்பாட்டை வலியுறுத்திய முற்போக்கு எழுத்தாளர் அணியைச் சேர்ந்தவர்கள் மரபுவாதிகளான பண்டிதர்களுடன் பத்திரிகைப் போர் நடத்தியதும், மண்வாசனை, பேச்சுவழக்கு போன்ற இலக்கியங்களை இழிசனர் இலக்கியங்களென பண்டிதர்வர்க்கம் சமர்புரிந்த காலகட்டமும் இதுவேதான்.
முற்போக்கு அணியில் கைலாசபதி, சிவத்தம்பி, ஏ.ஜே.கனகரட்னா, அ.ந. கந்தசாமி, இளங்கீரன் போன்றவர்கள் முக்கிய பத்திரிகைப் போராளிகளாக விளங்கினர். இளங்கீரனின் மரகதம் பத்திரிகை இவ்விவாதங்களில் முக்கிய பங்கு 24

வகித்தது.
1960ல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சீனச் சார்பு, ரசியச் சார்பு எனப் பிளவு பட்டபோது க.கைலாசபதியுடன் இளங்கீரன், டானியல், என்.கே.ரகுநாதன், செ.கணேசலிங்கன் போன்ற எழுத்தாளர்களும் யாழ்ப்பாணக் கவிராயர், சுபத்திரன், முருகையன், சில்லையூர் செல்வராஜன் போன்ற கவிஞர்களும் சீனச் சாப்பில் நிற்க சிவத்தம்பி, ஜீவா, அகஸ்தியர் போன்றவர்கள் ரசியச் சார்பு அணியில் செயற்பட்டனர். ...
க.கைலாசபதி அவர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பதவியேற்ற பின்னர் எழுத்துலகில் அறிமுகமாகிய செ.கதிர்காமநாதன், செ.யோகநாதன், மெளன குரு போன்றவர்கள் முற்போக்குச் சிந்தனையாளர்களாகவே அறியப்பட்டனர்.
இவர்கள் காலத்தைச் சேர்ந்த யோ.பெனடிக் பாலனும் மார்க்சியத்தை ஏற்றுக்கொண்ட ஒரு முற்போக்கு எழுத்தாளரே.
1960 களின் பின்னர் வசந்தம், மல்லிகை போன்ற முற்போக்குச் சஞ்சிகைகள் வெளிவரத் தொடங்கின. இவற்றில் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளாத வர்களும் எழுதினார்கள்.
முற்போக்கு அணியினரால் வெளியேற்றப்பட்ட எஸ்.பொன்னுத்துரை நற்போக்கு அணியை உருவாக்கினார், சாகித்திய மண்டலப் பரிசுகள் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்ட காலகட்டமும் இதுவாகும். மு.தளையசிங்கம் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியை இதன் பிறகே எழுதினார்.
யாழ்ப்பாணத்தில் பாராளுமன்றப் பாதைக்கு எதிரான சக்திகள் வலுப்பெற்று வளர்ந்து வந்தபோது அவர்களால் உருவாக்கப்பட்ட தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கச் செயற்பாடுகளினால் போராட்ட இலக்கியங்கள் பல உருவாகின.
டானியலின் பஞ்சமர், செ.கணேசலிங்கனின் போர்க்கோலம், சுபத்திரனின் இரத்தக் கடன் போன்ற நூல்கள் இக்காலகட்டத்தில் வெளிவந்தன.
சமூக அடக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் அடித்தள மக்களின் எழுச்சியைக் கூறும் இலக்கியங்கள் முற்போக்கானவையாக மார்க்சிய இலக்கியங் களாக விமர்சகர்களால் அடையாளம் காணப்படுகின்றன.
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாடுகளில் அதிருப்தியுற்ற வர்களால் செம்மலர்கள், இலக்கியவட்டம், தேசியக் கலை இலக்கியப் பேரவை, திருகோணமலை முன்னோடிகள் போன்றவை எழுபதுகளின் ஆரம்பத்தில் உருவாக் கப்பட்டன. இவை போன்ற இயக்கங்கள் கல்முனை, மன்னார் போன்ற பிரதேசங் களிலும் உருவாயின. குமரன் சஞ்சிகை செ.கணேசலிங்கனால் ஆரம்பிக்கப்பட்டதும் இக்காலகட்டத்தில்தான்.
பிரச்சார இலக்கியங்கள் என அக்காலத்தில் வெளிவந்த இலக்கியங்கள் விமர்சிக்கப்பட்டபோது இளந்தலைமுறைக் கலைத்துவப் பாங்கான இலக்கியங்களை உருவாக்க முனைப்புக் கொண்டன. கலை இலக்கியம் பற்றிய மா.ஓவின் யெனான் கருத்தரங்கு உரை இவர்களுக்கு ஒரு ஆதர்சமாக இருந்தது.
முன்னோடி மார்க்சிய எழுத்தாளர்களாகக் கருதப்பட்ட செ.கணேசலிங்கன், டானியல் போன்றோரின் படைப்புகளை இவர்கள் விமர்சனம் செய்ய புறப்பட்டனர். சீனாவில் ஏற்பட்ட கலாசாரப் புரட்சியின்போது நிகழ்ந்தவற்றின் எதிரொலி ஈழத்தையும் பாதித்தது. சீனாவில் இருந்து திரும்பிய மாதகல் வ.கந்தசாமி,
25

Page 14
பாரதியாரின் கவிதைகளையே தீவிரமாக விமர்சிக்கும் போக்கை எடுத்தார். காலக்கிரமத்தில் அவர் தனது கொள்கையை மறுபரிசீலனை செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டது.
1983ன் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மாற்றம் மிக முக்கியமானதாகும். தேசிய ஐக்கியத்தை வலியுறுத்திய முற்போக்கு எழுத்தாளர் பலர் தவிர்க்க முடியாதபடி தமிழ் மக்களது பிரச்சினைகளை எழுத வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகினார்கள்.
இந்த நிலைப்பாடு சிலரால் நகையாடப்பட்டாலும் கடந்த காலத்தில் முற்போக்காளர்கள் தாம் விட்ட தவறுகளிலிருந்து தம்மைத் திருத்திக் கொண்ட ஒரு வளர்ச்சிக் கட்டமாகும். இனிவரும் நூற்றாண்டில் எழுதப்படப் போகும் மார்க்சிய இலக்கியங்கள் தமிழருடைய தேசிய இனப்பிரச்சினையைத் தவிர்த்து எழுதப்படப் போவதில்லை என்பது வரலாறு கூறப்போகும் ஒரு உண்மையாகும். (தமிழ் இனி 2000 மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் சுருக்கம்.)
இலக்கிய இஸங்கள்
சமீப காலங்களில், விமர்சகர்கள் சிலர் எழுத்தாளர்களின் படைப்புக்களை, இந்த இஸ்ம் எனும் ஒரே உரைகல்லினை வைத்து உரைத்துப் பார்க்கத் தொடங்கியதோடு, ஆங்கிலப் பரிச்சயம் இல்லாத இளம் படைப்பாளிகளை மிரட்டியும் வருவது புரிகிறது. இஸங்களை முன்னிறுத்தி எழுதுவதே நல்ல படைப்பு என்று இவர்கள் வாதிடுகிறார்கள். இது ஒரு அபாயகர மான போக்கு. இது கலை கலைக்காக என்பதற்கு இட்டுச் சென்றுவிடும்.
இஸங்களே இலக்கியமல்ல. இலக்கியத்தின் கதிப் போக்கின் - திசையைக் காண உதவும் ஒரு சாதனம். எவ்வாறு தொல்காப்பியம், நன்னூல், காரிகை, தண்டியலங்காரம் மட்டும் கற்றுவிட்டால் கவிதை எழுத முடியாதோ அவ்வாறே இஸங்களைக் கரைத்து குடித்து விட்டால் மட்டுமே நல்ல இலக்கியம் படைத்திட ஏலும் என்று நம்புதலும் நம்ப வைக்க முயற்சித்தலும் உண்மையாகா. நியாயமு
OS.
என்றாலும் பல இஸங்கள் வெளிவந்துவிட்டன. சில இஸங்கள் செல் வாக்கும் பெற்றுவிட்டன. நவீன இயக்கத்தில் கலந்து மேம்பாடடைய உதவும் உத்திகளை சுவீகரித்துக் கொள்ளல் தவிர்க்க முடியாதது. எனவே இவைகளைத் தெரிந்துகொள்ளல் அவசியம். பயன் உடைத்துமாம்.
படைப்புகளைச் சில வகைமைக்குள் உட்படுத்தி, தெளிவாகப் படைப்புப் பொருளை வாசகனுக்குப் புலப்படுத்த இஸங்கள் பயன்படும். தரமான வாசகன் உருவாக, தரமான படைப்புக்களை இனங்கண்டுபிடிக்க, படித்துச் சொல்ல இஸங்கள் துணை நிற்கும். தமிழ் விமரிசனம் படைப்பு நிலை எட்ட வேண்டுமெனில் விமரிசகன் தன்னை அந்த அளவுக்குத் தயார் படுத்திக் கொள்ள இலங்கள் பற்றிய அறிவும் அவனுக்குத் தேவை. (இலக்கிய இலங்கள் நூலின் தொகுப்பாசிரியர் உரையில் - இ.எஸ்.தேவசிகாமணி)
26

aningfair பேசுகிறார்.
தி.ஞானசேகரன் வெளியிடும் கலை இலக்கிய சஞ்சிகை மிகச் சிறப்பாக உள்ளது. டொமினிக்ஜீவா தன் பேட்டியில் கூறும் கருத்து என் உள்ளத்தில் ஆழமாகச் சென்று தைத்தது - "மாறுதல் என்பது இருவகையானது. ஒன்று, ஆரோக்கியமான திசையை நோக்கி தன்னை வளர்த்துக் கொள்வது. அதற்கு முற்போக்கு ஈடு கொடுக்கும். மற்றது, முற்போக்கைக் கொச்சைப்படுத்துவது. இது, தான் வளர்ந்த பாதையையே நச்சுப்படுத்துகிறது." பேராசிரியர் செ.போத்திரெட்டி, தமிழ்நாடு.
வ.அஇரரசுரத்தினம் அவர்களின் நேர்காணலில் கோணங்கியின் எழுத்துக்கள் தனக்குப் புரியன்ல்லையென்ற..அவரின் நிஜத்தன்மை பாராட்டத்தக்கது.
மேத்தா, மீரா, அப்துல் ரகுழான் ஆகியோர் எழுதுவது கவிதைகள் அல்ல என்றும், இவர்கள் கவிஞர்கள் என”தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது என்றும் கேஎஸ்.எஸ் எழுதியிருப்பன்திப் பார்க்கும்போது, அவரது விமர்சனப்போக்கு வழமைபோலவே கேள்விக்குள்ள்ாக்கப்படுவது தவிர்க்க இயலாதுதான். இதற்குள் தான்*புதுக்கவிதை எழுதியுள்ளதை சிவசேகரம் ஆட்சேபித்திருப்பதை, கே.எஸ்.ஜீஸ் . . . ன்ப்தை மீன்டும் அவரே உற்று நோக்குவது, விமர்சகர்ான
W...
ஞானம் ஒரு இதழை முற்று மு வந்துநிற்கிறது. நேர்காணல்கள்
D றப்பாக இருந்தன. உங்களது உட்ழைப்பையும் ஈடுபாட்டையும் கண்டு ஆனந்திக்கும்.அதேவேரை தி. ஞானசேகரன் ஏனும் ஒரு இலக்கியப் படைப்பாளனை ஞானம் இல்லாமல் இதப்துவிடுமோ என்னும் ஆதங்கமும் ஏற்படுகிறது. e.
** தெளிவத்தை ஜோசப், வத்தளை.
“பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்' என்ற உங்கள் இதழ்க் கொள்கை எனக்கு ரெம்பப் பிடித்துப்போய்விட்டது. இலக்கியப் பகிர்வு - ஞானத்தில் ஆரோக்கியமாக உள்ளது. இந்தப் பகிர்தலில் ஆர்வத்தைத் தூண்டும் விமர்சனங்களும் எதிரொலிகளும் நம்பிக்கை தருகின்றன. முதுபெரும் எழுத்தாளர் வ.அ.இ. நேர்காணல் சுவையாக உள்ளதுடன் விரிவான பல விடயங்களை சுருக்கமாக அறியவும் வாய்ப்பளித்துள்ளது. நமது இலக்கியச் சூழல் எப்போதும் மாற்றுக் கருத்துக் களை உள்வாங்கி ஜீரணித்துக் கொள்ளத்தக்கதாய் அமைய வேண்டும். நம்மிடம் உள்ள மகத்தான குறை இதுதான் என்பது என் கருத்து. நாம் விமர்சனங்களுக்கு அஞ்சுபவர்கள் நம்மைப்பற்றி யாரும் எதுவும் சொல்லிவிடக்கூடாது என்பதில் மிகுந்த குறியாய் உள்ளவர்கள். இத்தகைய அபாயகர சூழலை ஞானம் ஓரளவு உடைத்துக் கொண்டு கருத்துச் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கிறதுபோல் தெரிகிறது. இது பாராட்டத் தக்க அம்சம் மட்டுமன்றி ஓர்மமான விசயமும்தான். ஓட்டமாவடி அறபாத்.
27

Page 15
மூன்று குறிப்புகள் சி.சிவசேகரம் - பேராதனைப் பல்கலைக்கழகம்
நுஃமான் இரண்டு குறிப்புக்கள் எழுதினார். எனவே நான் மூன்று எழுதப்போகிறேன்.
1-நான் அப்பவே சொன்னேன், இந்த நேர்காணலை வைத்து பத்திரிகையை நடத்தாதீர்கள் என்று. கேட்டிர்களா? ஜீவா, செ.யோ, இப்போ வ.அ.இ, எல்லாரும் தங்கள் மன அவசங்களைக் கொட்டித் தீர்கக்த்தான் நேர்காணலை பாவிக்கிறார்கள். எவரும் ஒரு பெரிய படைப்பாளியென்று தன்னை விளம்பரப் படுத்தும் தேவை, தனது படைப்பாற்றல் பற்றிய சந்தேகம் எழும்போதே உருவாகிறது என்பது என் எண்ணம்.
2-மஹாலஷ்மி என்றபெயரில் எழுதியவர் யார் என்ற தீர்ப்பை முருகையனிடம் விடுவது பற்றி நுட்மானும், மாவை வரோதையனும் எழுதியுள்ளனர். முருகையனின் மெளனம் பற்றியும் கேள்வி எழுந்துள்ளது. முருகையன் எழுதிவிட்டுப் போனதை மஹாகவியும் சில்லையூர் செல்வராசனும் உரிமை கொண்டாடினார்களா என்ற சந்தேகம் இன்னும் யாருக்கும் ஏன் எழவில்லை? முருகையன் மகா குறும்புக்காரர். அதை விட 'ம' வரிசையில் அவர் பேர் தொடங்குகிறது. மஹாகவி உண்மையில் உருத்திர மூர்த்தி. சில்லையூர் பெயரிலோ ம இல்லையே இல்லை. எனவே நமது ஆய்வாளர்கள் மெல்லுவதற்கு மேலும் ஒரு சட்டி நிறைய அவல் உள்ளது. முருகையன் மேலும் மெளனம் காத்து விவாதத்தை வளர்க்க உதவவேண்டுகிறேன்.
03 - கே.எஸ்.சிவகுமாரன் குறிப்பிட உகந்த கவிஞர் அல்ல என்ற என் கருத்தை ஆதரித்து மேலும் ஏழு காரணங்களை வழங்கியதற்கு அவருக்கு என் நன்றிகள். நகைச்சுவை உணர்வுக்கும், கனதியான விமர்சனத்துக்கும் மிகுந்த உறவு உண்டு என்பதையும் அவர் உறுதிப்படுத்த முனைவது பற்றி என் மகிழ்ச்சி.
演 次 案 冀
சில்லையூர் செல்வராசனுக்கோ, மஹாகவிக்கோ வக்காலத்துவாங்கவேண்டிய அவசியம் எனக்கில்லை. இவர்களது சமகாலத்தவர்கள் இன்றும் உயிருடன் இருக்கிறார்கள். இலக்கிய தாகம் விடாததால் தெரிந்தவற்றை கூறவேண்டிய கடமை என்னில் இருந்ததால் எழுதினேன். கவிஞர்.ஏ.இக்பால்
次 s * * t நான், கடந்த வாரம் ஞானம் சஞ்சிகையின் முதல் ஐந்து இதழ்களையும் ஒன்றாக வைத்து ஒரே தொடராகப் படித்துப் பார்த்தேன். அது பெரும்பாலும் எனக்கு இரண்டாவது வாசிப்பு. இதில் ஞானம் சஞ்சிகையின் பொருட்செறிவும் இலக்கியத் தரமும் எனக்கு மேலும் புதிய இலக்கிய அநுபவத்தைத் தந்தன.
ஞானம் சஞ்சிகையில் வந்துள்ள நேர்காணல், சிறுகதை என்பனவற்றின் தர மேம்பாடு என்னை மிகவும் கவர்ந்தது. நேர்காணலென்பது பசுவில் பால் கறப்பது போன்ற ஒரு செயற்பாடு. நீங்கள் இந்த நேர்காணல்களில் வெகு பக்குவமாகவும் சாமர்த்தியமாகவும் வினாக்களைத் தொடுத்து, கறக்க வேண்டிய இலக்கியக் கருத்துக்களை எல்லாம் கறந்து எடுத்திருக்கிறீர்கள். இவற்றுள் சில பேட்டிகள் மீண்டும் படித்துப் பார்க்க வேண்டியவை.
ஞானம் சிறுகதைகளில் நயத்தகு வித்தியாசம் தென்படுகிறது. கருவில் புதுமை; உணர்வு வெளிப்பாட்டுச் சிறப்பு, உருவ நேர்த்தி - இவை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. கலாநிதி துரை.மனோகரனது சிந்தனைச் சரம் நன்றாக இருக்கிறது. நூல் மதிப்புரைகளின் நீளம் ஒரு பக்கத்துள் அடங்க வேண்டுமென்று வரையறை செய்து கொள்ளல் நல்லது.
ஞானம் சஞ்சிகை இலக்கிய ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதை நன்கு உணர முடிகிறது. ஞானத்திற்குச் சிறந்த எதிர்காலமுண்டு
- வ.இராசையா - கொழும்பு - 06
28

அந்தனிஜிவா
இலக்கியச்சரம் எழுதியவர்: அகளங்கன் முதற்பதிப்பு: 01.01.2000 வெளியீடு: முத்தமிழ்க் கலா மன்றம், பம்பைமடு, வவுனியா. விலை: ரூபா 200 பக்கம்: 259
இந்நூலில் சங்க இலக்கியம் முதல், இன்றைய திரையிசைப் பாடல்கள் வரை யிலான தேனூறும் கவிதைகளில் உள்ள் ஓசை இன்பம், சொல் இன்பம், கற்பனை
இன்பம் என்பவற்றை தமக்கே உரிய
பாணியில் சுவைபட ஆய்ந்து சுட்டிக் காட்டி படிப்பவர்களைத் தாமாகவே
இலக்கிய இன்பத்தையும், சுவையையும்.
தேடிச் சுவைக்கச் செய்துள்ளார். முத்தமிழ்க் கலா மன்றம்
- வெளியீட்டுரையில்.
ஈழத்தமிழர் கிராமிய நடனங்கள் எழுதியவர்: கலாநிதி சபா.ஜெயராசா முதற்பதிப்பு: 2000 வெளியீடு: பொஸ்கோ பதிப்பகம், நல்லூர் யாழ்ப்பாணம். விலை: ரூபா 100 பக்கம்: 115 இந்நாட்டின் கலைச்செல்வங்களில் சிறப்பு பெற்று விளங்கும் கிராமிய நடனங்
களை முதியோர் வாய் கேட்டும், கள
ஆய்வுகள் செய்தும் இந்நூலாக்கம் மேற் கொள்ளப்பட்டுள்ளது. எமது கிராமிய நடனங்களையும் அவற்றோடு தொடர் புடைய பண்பாட்டு பரிமாணங்களையும் அறிவுக் கையளிப்பினையும் நூலாசிரியர் தெளிவாகத் தொகுத்துள்ளார்.
பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை
29
மாங்கல்யம் தந்து நீயே. எழுதியவர்: ராணி சீதரன் முதற்பதிப்பு: செப்ரெம்பர் 99 வெளியீடு: 136 மத்திய விதி, திருகோணமலை. விலை: ரூபா 80 பக்கம்: 84
இச்சிறுகதைத் தொகுப்பு பத்து சிறுகதைகளைக் கொண்ட சிறுநூல் எனினும் அவை பத்தும் தரம் மிக்க கதை களாகவே விளங்குகின்றன. நாகராணி சிறந்த ஆசிரியர். அவர் பணியாற்றிய காலங்களில், தான் பெற்ற அநுபவங்
களின் வெளிப்பாடுகளாகவே இச்சிறு
கதைகள் விளங்குகின்றன.
சி.து.இராஜேந்திரன் அணிந்துரையில்,
ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை எழுதியவர்: எஸ்.எம்.கோபாலரத்தினம் முதற்பதிப்பு: 03.08.2000 வெளியீடு; வேல்ட் வோய்ஸ் பப்ளிகேசன் 7, எல்லை வீதி தெற்கு, மட்டக்களப்பு. விலை: ரூபா 150 பக்கங்கள்: 170
அமைதிப்படையாக இலங்கை வந்த இந்தியப் படை பகைப்படையாக மாறி ஈழத்தமிழரை வதைக்கும் பணியில் தானும் பங்கெடுத்துக் கொண்டது. 1987, 88 காலப்பகுதியில் இரு பெரும் பத்தி ரிகை நிறுவனங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. இந்தக் காலப்பகுதியில் தலைமறைவாக இருந்து ஈழமுரசு பத்திரிகையை வெளியிட அரும்பாடு பட்டவர் கோபு. இவர் இந்தியப் படை யால் கைது செய்யபட்டு சிறை வைக்கப் பட்டார். . . "
சிறை அநுபவத்தையும் தான் கண்டு கேட்டவற்றையும் விடுதலை செய்யப் பட்ட பின் அவற்றுக்கு எழுத்து வடிவம் கொடுத்திருக்கிறார்.
மனோ ராஜசிங்கம்
பதிப்புரையில்.

Page 16
யாகம் எழுதியவர்: முல்லை அமுதன் முதற்பதிப்பு: ஆகஸ்ட் 2000 வெளியீடு: ரிஷபம் பதிப்பகம், 31/45, இராணி அன்ைனாநகர், Gigଶୋiଙ୍t 78.
"பாகம்" இறுக்கமான தலைப்பு. இனப்பிரச்சினையை சுற்றி பின்னப்பட்ட கதை, நடையிலும் கதை சொல்லும் ஆற்றலிலும் முல்லை அமுதன் அவர் களின் ஆளுமை சந்தேகத்திற்கு இடமில் லாதது. வாசிப்புத்தளத்தில் 'யாகம் வேகமும், அர்த்த வியாபகமும் கொண் டதுதான். சமகால ஈழத்து இலக்கிய வெளியில் நம்பிக்கைக்குரிய படைப்பாளி கள் ஒருவர்.
தேவகாந்தன் முன்னுரையில்.
அப்பாவும் மகனும் எழுதியவர்: எஸ்.பொ. முதற்பதிப்பு: பெப்ரவரி 1999 வெளியீடு: மித்ர வெளியீடு, (சிட்னி,
சென்னை, மட்டக்களப்பு) "ஒரு மாமாங்கத்திற்கு மேலான ஒரு காலப்பகுதியில் வெளிவரும் புதிய தமிழ் காவியம் இதுவாகும். மரபுக்கவிதை களும் புதுக்கவிதை பரம்பலிலே சிரத் தை ஊன்றும் புதியவர்களும், தமிழ் இலக்கிய சுவைஞரும், இனி தமிழை அணி செய்யவிருக்கும் காவிய முனைப் புக்களின் பூபாளமாக இதனை வரவேற் றுச் சுவைத்தின்புறுவார்களென நான் நம்புகிறேன்.
டாக்டர் பொன்.அநுர பதிப்புரையில்.
கவின் கவி எழுதியவர்: வயலற் சந்திரசேகரம் முதற்பதிப்பு: ஜனவரி 2000 வெளியீடு: திருமதி சந்திரசேகரம் 11 30 1ம் ஒழுங்கை, அழுத்வத்த, சிலாபம்
சிறார்களுக்கேற்ற எளிய முறையில் கவிவடிவில் "கவின் கவி அதாவது அழகுக்கவி என முன்வைக்கிறேன்.
30
இங்கு அழகு (கவின்) என்பதன் பொருள் அழகே ஆகும். இப்பாடல்களை சிறு வர்கள் பாடலாகப் பாடின் மனதிற் பதிவதுடன் எதிர்காலத்தில் சிறந்த பிரஜைகளாக வாய்ப்புண்டு.
ஆசிரியர் முன்னுரையில்.
அந்த ஆவணி ஆறு எழுதியவர்: ச.அருளானந்தம் முதற்பதிப்பு: 24.01.2000 வெளியீடு: அருள் வெளியீடு, 37", மத்திய விதி, உவர்மலை,
திருகோணமலை, பாடசாலையில் கல்வி கற்கின்ற காலத்திலேயே சிறுகதை எழுதுவதில் ஆர்வங்கொண்டு நீண்ட காலமாக அத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ள கேணிப்பித்தன் தமது சிறுகதைகள் சில வற்றை இப்பொழுது ஒரு தொகுப்பாகத் தந்துள்ளமை வரவேற்கக்கூடிய விட பமே. கலாநிதி.செ.யோகராசா முன்னுரையில்
அங்கையன் கதைகள் எழுதியவர்: அங்கையன் கைலாசநாதன் முதற்பதிப்பு: 2000 வெளியீடு: அங்கையன் பதிப்பகம் 412 அரசாங்க தொடர்மாடி, கொழு-04
இலங்கை தமிழ் எழுத்தில் இரண்டு வெளிச்சங்கள் அரும்பி பிரமிப்பை ஊட்டிக்கொண்டிருக்கையில் சட்டென்று அணைந்து போயின. ஒருவர் செகதிர் காமநாதன். மற்றவர் அங்கையன் கைலா சநாதன். அறுபதுகள் தற்கால இலக்கியத் திற்கு செழுமையான வரவுகளைத் தந்ததென்பது வரலாற்றின் பதிவு அங்கை யனின் எழுத்துக்கள் அதை நம்பிக்கை யோடு உறுதி செய்கின்றன.
செ.யோகநாதன் முன்னுரையில்.
புதிய நூலகத்திலி நீங்க எழுதிய நூல்களின் விபரங்களும் இடம்பெற வேண்டுமாயின் நூல்களின் இரணர் டு பிரதிகளை அனுப்பி
வையுங்கள்

உனக்கான வெற்றி வெற்றியும் அல்ல; எனதான தோல்வி தோல்வியும் அல்ல;
本 非 非 事 率
உனதான வெற்றி பேராசை அழுக்கு; ஆணவத்தின் வடுக்கள்; பொய்மையின் முட்கள் அறியாமை இருள்; புத்தியில் திருட்டு; எல்லாவற்றினதும் கூட்டுத்தொகை
j: = :: :: IE
எனதான தோல்வி வெற்றியின் ஏணிப்படி
at . . . .
அதனால் = தன் உனதான வெற்றிக் கரங்களில் துயர ரேகை; முகம் புன்னகையில் அகத்தின் போலி, ஒரு பொய் மனக்க அநுபவங்களும் அவஸ்தைகளும்;
非率 非率 李
துவண்டு விடுவதும் துண்டு விழுதலும் எனக்கில்லை; மனக் கேணியில் நிறைவுத் தண்ணீர் நிரம்பியிருப்பதால்;
率 事 非 体 丰
உனதான வெற்றியும்
எனதான தோல்வியும்
- திக்குவல்லை ரதீமா
3.
உனதான வெற்றியும் எனதான தோல்வியும் நிதியும் நிஜமும் மரணித்தது தான்! என்னாலும் என்ன? வெற்றிக் கனி பறிக்க நான் - நீ யாக மாட்டேன்.
事 事 事 事 事
உனது விருப்பமே எனது விருப்பமாக உனது செயலே எனது செயலாக நாம் கருத்தொருமித்த சதிபதி அல்ல;
率 率 事 窜 窜
உனது வெற்றி வாழ எனது உரிமைகளை நீ தூக்கிலிட முடியாது உன் வெற்றி தடைக்கு நான் தரையாக முடியாது;
事 丰 率 丰 中
உனக்கும் - எனக்கும் இடையிலே குறுக்கிடுவது - வைராக்கியத் தூண்களில் கோப முட்கம்பியடித்த அச்சுறுத்தல் வேலி அல்ல; சிந்தனைத் தூண்களில் மரியாதைக் கம்பியடித்த எச்சரிக்கை வேவி!

Page 17
அவலமாய்ப் பற்றும்
தோட்டாச் சுமை ஈன்று "துவைக்க நி குண்டு சுமக்கும் குருவிகளே! ஒரே தரத்தில் நாற்பது எறிகணைகள் துப்பி நகைத்து அரை மைல் பரப்பை அழிக்கும் எமக்குழல்காள்! உங்களது தாகம், குண்டோதரப் சி. தணிக்க எம்ஈமவிடப் பேபர் எவரும் கிடைக்க
சண்டை நின்ற வேளையிலே ஓய்வெடுத்துத் தூங்குமுன்பு கன்திறந்து பாருங்கள். கருகிய ம
தாயிழந்த பிஞ்சு, தகப்பன் இல்லாக் குஞ்சு, தாலி இழந்த குமர், மகனைத் தொலைத்த மனம், பேதலித்த தாய்கள், பிரமை பிடித்த சோதரத்தை மறந்தவர்கள், ஊனமுற்ற சொர்க்கங்கள்,
கன்திறந்து பாருங்கள் கருகிய மனித புண்ணுண்ட வாழ்வைப் புரியங்கள்!! நீங்களெல்லாம் "எதையோ மீட்பம்" என்றா எழுந்துவர தாயினையும்,
தாலியையும்,
தனையரையும், "மீண்டும் உயிருடனே வேனும்" என ஜீவன்களின் துடிப்பை மீட்டருள வ நீங்களொன்ன மீட்பர்கள்? நீங்களா பெரியாட்கள்? பாருங்கள் அவலத்தை. இரும்பு இ ஈரங்கள் கொள்ளுங்கள்! இல்லாட்டி. இழப்புகளின் தீக்கொழுந்தில் நீங்களெல்லாம் துரும்பு
த.ஜெயசீலன் நல்லூர்
Printed at GREEN LEAFPR

அனல்
ற்கும் துவக்குகளே!
'n x In H - 5 S $ 3.8 שיף וג 13- ப "آئے トー 。ト"; حت اT " تذة التي ,ހ .s S< Pau ت=
༈ բիյելի | | | |
பூே حت Sة 愛 விதத்தை
قلبی"
।
சத்தால் - - - - - -
ந்து கொக்கரித்தீர்?
ாக் கேட்கின்ற க்கில்லாத
தயத்தில்
ாய்த்தான் தீப்வீர்கள்.
ITHISE,85'A, Faugstial, Fa di.